Search This Blog

20.8.12

பெரியார்கட்சிக்கண்ணோட்டத்தோடாபிரச்சினைகளை அணுகினார்?

திருச்சி தீர்மானம்

18-8-2012 சனியன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் காலத்திற்குத் தேவையான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னையில் ஆகஸ்டு 12 ஆம் தேதி டெசோ சார்பில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்று, அவற்றைச் செயல்படுத்துவதற்கான அழுத்தங்களைத் தொடர்ந்து கொடுப்பது என்பது முக்கிய மானதோர் தீர்மானமாகும்.

மாநாட்டைத் தொடர்ந்து நாடெங்கும் விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநாட்டுத் தீர்மானங்கள் அய்.நா.வுக்கு அனுப்பி வைக்கவும் பட்டுள்ளன.

மத்திய அரசு இத்தீர்மானங்கள் பற்றிப் பரிசீலனை செய்து கொண்டு இருப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். மத்திய அரசும் இலங்கைத் தமிழர் நலனில் அக்கறை காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இப்பொழுது ஈழத் தமிழர்களுக்காக உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய உதவிகள், உரிமைகள் முக்கியமானவையாகும். இத்திசையில் டெசோ மாநாடு உலக அளவில் நல்ல அளவு அலைகளை ஏற்படுத்தி இருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தி யுள்ளது.

அதே நேரத்தில் இலங்கையில் ஆட்சியில் உள்ளவர்கள் மத்தியில் மாறுதலான - திருத்தமான சிந்தனை ஏற்பட்டு இருப்பதாகத் தெரியவில்லை.  பழைய பாணியிலேயே அவர்களின் போக்கு இருப்பது வருந்தத்தக்கது.

டெசோ மாநாட்டுக்கு வருவதாக இருந்த ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் இலங்கை அரசால். இது இலங்கை அரசின் தமிழின வெறுப்பு என்ற வெறியைத்தான் வெளிப்படுத்து கிறது. அதைப்பற்றிக் கண்டித்தும் டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து பெரும் அளவில் அழுத்தத்தைக் கொடுப் பதைத் தவிர வேறு வழியில்லை.

அய்.நா. மாமன்ற அரசியல் குழுவின் மூத்த அதிகாரியும் தென்கிழக்கு நாடுகளின் தலைமை அதிகாரியுமான  ஹிட்டோடென் அவர்களை தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சந்தித்து (27-6-2012) உரையாடுகையில் அவ்வதிகாரி கூறிய கருத்து முக்கியமானது. மற்ற மற்ற நாடுகள், அமைப்புகள் என்னதான் அழுத்தம் கொடுத்தாலும், இந்திய அரசு இந்தப் பிரச்சினை மீது கொடுக்கும் அழுத்தம்தான் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளது  கவனிக்கத் தக்கதாகும்.

டெசோ மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லையானாலும், அந்த அமைச்சர்கள் சார்ந்த கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் பங்கு கொண்டு, ஈழத் தமிழர்களின் பிரச்சினையில் இந்திய அரசு அக்கறை காட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே செய்தனர்.

எனவே ஈழத் தமிழர்ப் பிரச்சினையை ஒரு கட்சிப் பிரச்சினையாகக் கருதாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும், அனைத்துத் தலைவர் களும், அமைப்புகளும்  இந்திய அரசே, ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் மேலும் அழுத்தம் கொடு! அழுத்தம் கொடு!  என்ற ஒருமித்த குரல் எழுப்புமேயானால் அதற்கு நிச்சயம் நிறைந்த பலன் கிடைக்கும் என்பதில் அய்யமில்லை.

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகப் போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றலாம். அதே நேரத்தில் நமக்குள் ஒருவரை ஒருவர் விமர்சிப்பது இந்தப் பிரச்சினையைப் பலகீனப்படுத்தும்  என்பது நமது தமிழ்நாட்டுத் தலைவர்களுக்குத் தெரியாதா?

நாமக்கல் வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சொன்னது போல, நமக்கு நண்பர் யார்? பகைவர் யார்? என்பது தெரிந்திருக்க வேண்டாமா?

பொதுப் பிரச்சினைகளில்கூட தமிழர்களின் ஓற்றுமைச் சிதைவு நமக்கு எதிர்விளைவைத்தானே ஏற்படுத்தும்?

தந்தை பெரியார் அவர்கள் கட்சிக் கண்ணோட் டத்தோடா பிரச்சினைகளை அணுகினார்? நான் கட்சிக்காரன் அல்ல. கொள்கைக்காரன்! என்று தமிழினத்தின் ஒட்டு மொத்த தலைவரான தந்தை பெரியார் கூறிய கருத்தைத் தமிழர்கள் - தலைவர்கள் உள்வாங்கிக் கொண்டு செயல்படு வார்களாக!

                      -----------------"விடுதலை”தலையங்கம் 20-8-2012

14 comments:

தமிழ் ஓவியா said...

உலக அளவிலும், அயர்லாந்திலும் மதநம்பிக்கை வீழ்ச்சி! வளர்ச்சியை நோக்கி நாத்திகக் கொள்கை

அயர்லாந்திலும், உலக அளவிலும் நாத்திகக் கோட்பாடு வளர்ந்து வருகிறது என்றும் மதநம்பிக்கை வீழ்ந்து, குறைந்து வருகிறது என்றும் உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்விலிருந்து தெரிய வருவதாக செய்தி ஒன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளச் செய்தியை சிகாகோ பெரியார் பன்னாட்டு நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் சோம. இளங் கோவன் அனுப்பி வைத்துள்ளார். அதன் தமிழாக்கம் இங்கே தரப் பட்டுள்ளது.

அண்மைக் காலத்தில் உலகையே உலுக்கிய கத்தோலிக்க தேவாலயப் பாதிரியார்களின் மீதான பாலியல் புகார்கள் மற்றும் சரியான வழி காட்டுதல் அளிக்கும் தலைமை இல்லாத நெருக்கடி போன்ற கார ணங்களால், அயர்லாந்து குடி அரசில் உள்ள கத்தோலிக்க தேவா லய அமைப்பு தனது உறுப்பினர்களை நம்பிக்கை இழக்காமல் தக்கவைத் துக் கொள்ளப் போராடி வருகிறது.

இந்த வாரத்தில் வெளியான உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட மத நம்பிக்கை பற்றிய ஓர் ஆய்வின் முடிவுகளில் இருந்து, அயர்லாந்து நாட்டில் மதநம்பிக்கையில் ஏற்பட் டுள்ள சிக்கல்கள் முன்பு நினைத் ததை விட மோசமானதாக இருக்கக் கூடும் என்று தெரியவருகிறது.

அனைத்துலக வின்காலப் நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய் வில், உலக அளவில் மதநம்பிக்கை குறைந்து வரும் நிலையில், பாரம் பரியமான கத்தோலிக்க மத நம் பிக்கை மிகுந்த அயர்லாந்து நாட்டில் மத நம்பிக்கை அதிக அளவில் குறைந்து வருவது தெரிய வருகிறது.

57 நாடுகளில்

57 நாடுகளில் தேர்ந்தெடுக்கப் பட்ட 50,000 மக்களிடம் மேற்கொள் ளப்பட்ட அந்த ஆய்வில், மதவழி பாட்டுத் தலத்துக்கு நீங்கள் செல் கிறீர்களா - இல்லையா என்பதைக் கடந்து, நீங்கள் மதம் சார்ந்தவர் களாக அல்லது மதம் சாராதவர் களாக அல்லது நாத்திகர்களாக உங்களை நீங்கள் அடையாளப் படுத்திக் கொள்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

2005 இல் இது போன்று எடுக் கப்பட்ட ஆய்வின்போது 69 விழுக் காடு அயர்லாந்து மக்கள் தங்களை மதம் சார்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டார்கள். ஆனால் இந்த ஆய்வின்போது இந்த எண்ணிக்கை 22 புள்ளிகள் குறைந்து 47 விழுக் காடாக ஆகியுள்ளது. மேலும், 10 விழுக்காட்டு மக்கள் தங்களை நாத் திகர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

உலக அளவில் அதிக அளவு மதநம்பிக்கை இழந்த மக்கள் கொண்ட நாடு வியட்நாம்தான். மத நம்பிக்கை கொண்டவர்களின் எண் ணிக்கை 53 விழுக்காட்டிலிருந்து 23 புள்ளி குறைந்து 30 விழுக்காடாக இப்போது உள்ளது.
அயர்லாந்து, வியட்நாம் இரண்டு நாடுகள் மட்டுமே இந்த விஷயத்தில் ஈடுஇணையற்றதாக இருப்பதாகக் கூற முடியாது.

உலக அளவில் தங்களை மதநம்பிக்கை கொண்டவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்களின் எண் ணிக்கை தற்போது வெறும் 59 விழுக்காடாக மட்டுமே உள்ளது. 2005 இல் இருந்து தற்போது இது 9 புள்ளிகள் குறைந்துள்ளது. அத் துடன் 13 விழுக்காட்டு மக்கள் தங் களை நாத்திகர்கள் என்று அடை யாளப்படுத்திக் கொண்டனர். இது 4 விழுக்காட்டிலிருந்து 7 விழுக் காடாக உயர்ந்துள்ளது.

2005 ஆம் ஆண்டுக்குப் பின் மத நம்பிக்கை கொண்டவர்களின் எண் ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்த 10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
மதத்துடன் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 13 புள்ளி குறைந்து 60 விழுக்காடாக ஆகியுள்ளது. மேலும், 5 விழுக்காட்டு அமெரிக்கர்கள் தங்களை நாத்திகர்கள் என்று அறிவித் துள்ளனர்; 2005 இல் இருந்ததை விட இது 4 புள்ளிகள் அதிகமாகும்.

என்றாலும், உலக அளவில் மத நம்பிக்கை குறைந்து வரும் நிலையில், இந்த நேரத்தில் மதவாதிகளின் கவனம் எல்லாம், கத்தோலிக்க மதத்தில் ஒரு நீண்ட, வளமான பாரம்பரியம் கொண்ட அயர்லாந்தின் மீதே குவிக்கப்பட்டுள் ளது.

அயர்லாந்தில்...

ஆய்வு முடிவுகள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது முதல், அயர்லாந்தில் மத உணர்வு குறைந்து வருவது பற்றி பலர் புலம்புவதுடன், அயர்லாந்து மக்களின் மத நம்பிக்கையைச் சுட்டிக்காட்டும் ஓர் ஒருங்கிணைந்த குறியீடாக இந்த புள்ளி விவரங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கின்றனர்.

இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட மொழி தவறாக வழிகாட்டுவதாக இருந்திருக்கக்கூடும் என்று பெல்பாஸ்ட் டெலிகிராஃப் பத்திரிகைக்கு கத்தோ லிக்க கடிதத் தொடர்பு அலுவலகத்தின் செய்தியாளர் ஒருவர் கூறியதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

அய்ரிஷ் மக்களைப் பொருத்தவரை, ஆன்மிகம் என்ற சொல்லை விரும்பி பயன்படுத்துபவர்கள் ஆவர்; ஆனால் அந்த ஆய்வு வினாத்தாளில் மதம் சார்ந்த என்ற சொல்லுக்கு முக்கியத் துவம் அளிக்கப்படாமல் மிகவும் சாதா ரணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, மதம்சார்ந்தவராக இருப்பது என்பது மிகுந்த பொருள் கொண்ட ஓர் அளவு கோலாகும். என்று அவர் கூறினார்.

அயர்லாந்து நாட்டில் தவிர்க்க இயலாததாக இருக்கும் கத்தோலிக்க மதக் கோட்பாட்டின் சீரழிவைப் பற்றி கார்டியன் இதழின் எழுத்தாளர் ஒருவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். மேலும், பாரம்பரியமான மதக் கட்டமைப்புகள் பலவீனமாக இருக்கக்கூடும் என்றாலும், மக்களிடையே பலமான நம்பிக்கை இன்னமும் மிச்சம் இருக்கக்கூடும்.

எவ்வாறாயினும், அயர்லாந்தின் கத்தோலிக்க மத தேவாலயம் எதிர் கொண்டிருக்கும் சவால்களை இந்த உலகளாவிய ஆய்வுப் புள்ளி விவரங்கள் அய்யமற்ற முறையில் எடுத்துக்காட்டு கின்றன என்று டப்ளின் ஆர்ச் பிஷப் டயார் முய்ட் மார்டின் கூறியுள்ளார்.

நம்பிக்கை தளர்கிறது

நம்பிக்கை என்பது ஒரு தலைமுறை யினரிடமிருந்து அடுத்த தலைமுறையின ருக்குத் தாமாகவே சென்று அடையும் என்றோ அல்லது தங்கள் சொந்த தேவாலய உறுப்பினர்கள் முழுமையான நம்பிக்கையுடன் வாழ்வார்கள் என்றோ கத்தோலிக்க தேவாலயம் தாங்களாகவே, தங்கள் பங்குக்கு, ஊகித்துக் கொள்ள முடியாது என்று பெல்பாஸ்ட் டெலி கிராஃப் இதழுக்கு அவர் கூறியுள்ளார்.

இந்த அய்ரிஷ் ஆய்வினை நடத்திய நிறுவனத்தின் உதவி மேலாண்மை இயக்குநர் சினீட் மூனி அயர்லாந்து நாட்டு மக்களின் மதநம்பிக்கை குறிப் பிடத்தக்க அளவில் குறைந்து போனதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன என்று ராய்டர்ஸ் செய்தி அமைப்புக்குக் கூறி யுள்ளார். கடந்த காலத்தில் தேவாலயம் முழுவதிலும் அனைத்து வகையான ஊழல்களும் பெருமளவில் நடந்துள்ளன என்பது வெளிப்படையாக அனைவரும் அறிந்த செய்தியே என்று கூறிய அவர், மேலும், நாடுகள் வளம் பெறப் பெற, ஓரளவு மத உணர்வினை அவை இழக் கவே செய்கின்றன. அத்தகைய ஒரு கால கட்டத்தின் தொடக்கத்தில்; நாம் வளம் பெறத் தொடங்கினோம் என்று கூறினார்.

இந்த ஆய்வின்படி ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட உலகின் பகுதி ஆப்பிரிக்கா என்று தெரிய வருகிறது. கானா நாட்டில் 96 விழுக்காடு மக்களும், நைஜீரியாவில் 93 விழுக்காடு மக்களும், மாசிடோனியாவில் 90 விழுக்காடு மக்களும் தங்களை மதநம்பிக்கை கொண்டவர்கள் என்று அடையாளப் படுத்திக் கொண்டனர் என்று ராய்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

தகவல்: டாக்டர் சோம. இளங்கோவன், சிகாகோ

தமிழில்: த.க.பாலகிருட்டினன்.20-8-2012

தமிழ் ஓவியா said...

வேதாரண்யம் மீனவர்கள்மீது இலங்கை கடற்படையினர் தாக்குவதா? தி.மு.க. தலைவர் கலைஞர் கண்டனம்



சென்னை, ஆக.20- தமிழக மீனவர்கள் இலங் கைக் கடற்படையின ரால் தாக்கப்பட்டதற் குக் கண்டனம் தெரி வித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கோடியக்கரை அருகே 18-8-2012 அன் றிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதா ரண்யம் பகுதி மீனவர் களை இலங்கைக் கடற் படையினர் கடுமை யாகத் தாக்கியிருக்கின் றனர். மீனவர்கள் வைத் திருந்த மீன்கள், டீசல் உள்ளிட்ட பொருள் களைக் கைப்பற்றிச் சென்றுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலில் தமி ழக மீனவர்கள் நிலை குலைந்து போய் கதறி யுள்ளனர். இந்தத் தாக்குதலில் வெள்ளப்பள்ளம் கிரா மத்தைச் சேர்ந்த குப்பு சாமி என்பவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவருடன் சென்ற மீனவர்கள் மகாலிங்கம், அன்பு மற்றும் பிற படகுகளில் சென்ற மீனவர்களையும் இலங்கைக் கடற்படை யினர் கயிறு மற்றும் கட்டைகளால் தாக்கி யிருக்கிறார்கள். மேலும் வானவன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த முரு கேசன், அவருடைய தந்தை நாகப்பன், சுந்தர மூர்த்தி உள்ளிட்ட மீன வர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்கள். அதில் ஒன்பது மீன வர்கள் காயமடைந்து மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுள் ளார்கள்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு என்னுடைய கடும் கண்டனத்தைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

தொடர் கதையா!

மேலும் தமிழர்கள் இவ்வாறு அவ்வப் போது தாக்கப்படுவதும், உடனே தமிழக அரசின் சார்பில் அதைப் பற்றி மத்திய அரசிடமும், பிர தமரிடமும் முறையிடுவ தும், அவர்கள் நம்மை சமாதானப்படுத்துவதற்காக இலங்கை துதுவரி டமோ, இலங்கை அரசி டமோ அதைப் பற்றி தெரிவிப்பதும்; அவர் களும் இந்திய அரசிடம் இனிமேல் இவ்வாறு நடைபெறாது என்று உறுதி கூறுவதும்; ஆனால் அதற்கு இரண் டொரு நாட்களிலேயே இலங்கைக் கடற்படை யினர் நமது மீனவர் களைத் தாக்குவதும் என் பதும் தொடர்கதையாக நீண்டு கொண்டே இருக் கிறது என்பது தான் உண்மை.

இதுவரை நடை பெற்ற இந்திய மீனவர் கள் மீதான இலங்கை கடற்படையினர் தாக்கு தல் என்ற புள்ளி விவரத்தைப் பார்க்க வேண்டுமென்றால் 1991 முதல் 2011 வரை மீனவர் கள் மீது தாக்குதல் 167; 85 பேர் இறந்துள்ளனர்; 180 பேர் காயமடைந் துள்ளனர்; 2006 முதல் 2011 வரை 146 படகுகள், இலங்கை கடற்படை யினரால், பறிமுதல் செய்யப்பட்டும், 746 மீனவர்கள் சந்தேக அடிப்படையில் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இதில் 131 படகுகள் மற்றும் 741 பேர் விடுவிக்கப்பட் டுள்ளனர்.

டெசோ மாநாட்டுத் தீர்மானம்

அண்மையில் நடைபெற்ற டெசோ மாநாட்டிலே கூட இந்திய மீனவர்களின் இந்தக் கொடுமைகளை விவரிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கைத் தமிழர் களுக்கு பாதுகாப்பை யும், நிவாரணத்தையும் உறுதி செய்யும்போது, இலங்கைக் கடற்படை யினால் இந்திய மீனவர் கள் மீது தொடுக்கப் படும் கொடுமைகளி லிருந்து அவர்களைப் பாதுகாப்பது நமது இன்றியமையாக் கட மையாகிறது. இலங்கை கடற்படையால் நிராயுத பாணிகளாக இருக்கும் அப்பாவித் தமிழக மீனவர்கள் ஈவிரக்க மின்றித் தாக்கப்படுகின் றனர்; கைது செய்யப் படுகின்றனர்; சுட்டுக் கொல்லப்படுகின்றனர்; அவர்களது மீன்பிடிப் படகுகள் மூழ்கடிக் கடிக்கப்படுகின்றன; தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படை யினரால் மனிதாபி மான மற்ற முறையில் நடத் தப்படுகின்றனர்.

இந்தியாவின் நிர்வாக எல்லைக்குட்பட்டி ருந்த கச்சத் தீவு இலங்கை அரசு வசம் ஒப்படைக் கப்பட்டதால், மீனவர் கள் அந்தப் பகுதிக்குச் சென்றாலே இலங்கை கடற்படையினர் அவர் கள் மீது தாக்குதல் நடத்தித் துன்புறுத்து கிறார்கள். இந்தக் கொடுமைக்கொரு முடிவுகட்ட, கச்சத் தீவை இந்தியா மீண்டும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதோடு தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் இந்தியக் கடற்படைத் தளம் ஒன்றை இந்திய அரசு நிறுவ வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று சொல்லியிருக்கிறோம்.

இந்தத் தீர்மானத்தை நாம் நிறைவேற்றி ஒரு வார காலத்திற்குள் ளாகவே மீண்டும் நமது மீனவர்கள் தாக்கப் பட்டுள்ளார்கள்.

எனவே இதற்கொரு நிரந்தர முடிவு காண நமது இந்திய அரசு தான் முனைப்போடு செயல்பட வேண்டும். இலங்கை அரசிடம் முறைப்படி ஒரு வேண்டு கோள் விடுத்து, அவர்கள் நமக்கொரு சமாதானம் அளிப்பது என்பதோடு இந்தப் பிரச்சினை முடிந்து விட்டால், இனியொரு முறை இந்திய மீன வர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படாமல் இருப்ப தற்கு உறுதியானதொரு நிரந்தர வழிவகையைக் காண வேண்டுமென்று மத்திய அரசை தி.மு. கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்

தமிழ் ஓவியா said...

சமூக நீதித் திசையில் நமது அடுத்த கட்ட செயல்பாடு தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்பதே! பொத்தனூரில் தமிழர் தலைவர் அறிவிப்பு




நாமக்கல் வட்டார மாநாட்டில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் திராவிடர் கழகக் கொடியை ஏற்றினார் (பொத்தனூர், 18.8.2012)

பொத்தனூர், ஆக. 20- கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடு, தனியார்த் துறைகளிலும் இட ஒதுக் கீடு என்பதை நோக்கியே என்று அறிவித்தார் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

பொத்தனூரில் நேற்று (19-8-2012) நடைபெற்ற நாமக்கல் வட்டார மாநாடு மற்றும் பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவனத் தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிற்கு தலைமை ஏற்று உரையாற்றிய திரா விடர் கழகத் தலைவர் கி.வீர மணி அவர்கள் தம் உரை யில் குறிப்பிட்டதாவது;



பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரை கழகத் தலைவர் வெளியிட, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் அறக்கட்டளை நிருவாகக் குழு உறுப்பினர் ராஜகிரி கோ.தங்கராசு அதனைப் பெற்றுக்கொண்டார் (19.8.2012)

இந்தப் பொத்தனூர்ப் பகுதியும், பொத்தனூர் க. சண்முகம் அவர்களின் இல்லமும் எங்களுக்கெல் லாம் ஒரு காலத்தில் ஓய்வுக் கூடமாகும். பல நாட்கள் இங்கே தங்கி சுற்றுப் பகுதி களில் கழகப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டுள்ளோம். தந்தை பெரியார் அவர்களும் இங்கு வந்து தங்குவார்.

பழைய நண்பர்களை எல்லாம் இங்கு நான் இப் பொழுது சந்தித்தேன். அவர் களைப் பார்க்கும் போது நமக்கும் வயதாகிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றி யது. சிலர் மிகவும் உடல் நலிவுற்றிருந்தனர்.


தமிழ் ஓவியா said...

கொள்கைப் பற்று, நாண யம், ஒழுக்கம் என்பது கழகத்தின் உயிரோட்ட மாகும். இதற்கு இலக்கண மாக உள்ளவர் நமது விழா நாயகர்.

பெரியார் சொத்துக்களுள் விலை மதிக்க முடியாத சொத்து பொத்தனூர் க.சண்முகம்

பெரியாரிடம் ஏராள மான சொத்து இருக்கிறது என்று பலர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். உண்மை தான். ஏராளமான அள வில் இருக்கிறது. இந்தச் சொத்துக்களுள் விலை மதிக்க முடியாத சொத்து தான் நமது க.ச. அவர்கள். (பலத்த கைதட்டல்) எங்க ளுடைய கழகத் தோழர்கள் எல்லாம் அசையும் சொத் துகள்!

அந்தக் காலத்திலேயே இன்டர்மீடியட் படித்தவர். திருச்சி நேஷனல் கல்லூரி என்றால், அது முழுக்க முழுக்கப் பார்ப்பனர்களின் கல்லூரி. நமது சண்முகம் அவர்கள் பெரியார் கொள் கையாளர் என்ற காரணத் தால் அவரைத் தேர்வில் வெற்றி பெறவிடாமல் செய் தார்கள். தடைகளைக் கடந்து இறுதியில் வெற்றி யும் பெற்றார்.

எனது திருமணத்தில்...

1958இல் எனது திரு மணம் திருச்சியில் பெரியார் மாளிகையில் நடந்தது. அப்போது நன்கொடை அளித்தவர்களின் பெயர் களை எல்லாம் எழுதி அந் தப் பட்டியலை திருமணத் தின்போது கடைசியில் படித்தவரே நமது பொத் தனூர் சண்முகம் அவர்கள் தான் (கரஒலி!).

ஒரு முறை கோபப்பட்டார்

இங்கே பேசியவர்கள் எல்லாம் சண்முகம் அவர் களுக்குக் கோபமே வராதா என்றனர். என் விஷயத்தில் அவர் ஒரு முறை கோபப் பட்டுள்ளார்.

நான் விடுதலை ஆசி ரியராகப் பொறுப்பேற்ற நேரம். நமது விழா நாயகர் க.சண்முகம் அவர்களும், இரட்டையர் போல இருந்த இன்னொரு கு.சண்முகம் அவர்களும் என்னைப் பார்ப்பதற்கு பிஸ்கட்டு களை வாங்கி வந்தனர்.

அதனை நான் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன். நான் விடுதலை ஆசிரியர் பொறுப்பு ஏற்றபோதே எந்தவித அன்பளிப்புகளையும் பெற்றுக் கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.

தமிழ் ஓவியா said...


எவ்வளவோ அவர்கள் சொல்லியும் நான் பிடிவாதமாக இருந்துவிட்டேன். கோபத்தோடு இருவரும் சென்று கோபமாகக் கடிதமும் எழுதினார்கள். அந்தப் பிரச்சினை அய்யா வரை சென்றது. அய்யா கூட என்னிடம் சொன்னார். இதில் என்னப்பா இருக்கிறது? இதில் ஏன் பிடிவாதம் என்று சொன்னார்.

அதற்குப் பிறகுதான் நானும் என் இணையரும் பேசி முடிவு செய்தோம். இதில் மற்றவர்களின் உணர்வு என்ற ஒன்று இருக்கிறது. அதனைப் புரிந்து கொள்ள வேண்டும் - மதிக்க வேண்டும் என்ற முடிவினை எடுத்தோம்.

ஓர் இலட்சியவாதியின் சிந்தனை

இந்த மலரில் நமது விழா நாயகர் ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார்.

நான் எனது எஞ்சிய காலத்தை நமது பொத்தனூர் பகுதியில் கழகப் பணியில் ஏற்பட்டுள்ள தொய்வைச் சரி செய்து மீண்டும் நமது பகுதி கழகக் கோட்டையாக மாறவும், விரைவில் எனது 90 ஆவது வயது முடிவதற்குள் தந்தை பெரியார் அவர்களின் சிலையை பொத்தனூரில் நிறுவவும் உறுதி ஏற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதான் ஓர் இலட்சியவாதியின் சிந்தனையும் செயலுமாக இருக்க முடியும் என்று குறிப்பிட்ட கழகத் தலைவர் அவர்கள் நமக்கு முன் உள்ள நாட்டுப் பிரச்சினைகள் பற்றி பேசினார்.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாடு - அது நடைபெற்ற விதம், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்துப் பேசினார்.

சிலர் தேவையில்லாத விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். நமக்கு எதிரி யார் கலைஞரா? டெசோவா? ராஜபக்சேவா? என்பதைச் சிந்திக்க வேண்டும். மாநாட்டை நடத்துபவர்கள் யார் என்பதா முக்கியம்? தயவு செய்து பிரச்சினையைப் பாருங்கள்.

பொது எதிரிகளை வீழ்த்த முன்வாருங்கள்.

சமூக நீதியில் அடுத்த கட்டம்

சமூக நீதிப் பிரச்சினையில் அடுத்த கட்ட கடமைகள் - பணிகள் நம் முன் உள்ளன. மண்டல் குழு பரிந்துரையின்படி வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைத்துள்ளது. அதிலும் கூட இன்னும் 6 சதவிகித இடஒதுக்கீடு முறையாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைக்க வில்லை.

பார்ப்பனர் ஆதிக்கம்!

இப்பொழுது பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் துறைகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் பெருகி வருகின்றன. இவற்றில் எல்லாம் பார்ப்பனர்கள்தான் மேல் மட்ட அதிகாரிகளாக, இயக்குநர்களாக, மேலாளர்களாக இருக்கின்றனர்.

இதன் காரணமாக பார்ப்பனர்கள் இத்துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். எனவே, தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்பதில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.

பதவி உயர்விலும் இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைத்தாக வேண்டும்.

மத்திய அரசுத் துறைகளில், கல்வியில் இட ஒதுக்கீடு என்பது ஏனோதானோ என்றுதான் இருந்து வருகிறது. சட்டப்படியான உரிமையை நாம் இன்னும் எட்டவில்லை.

நமது அடுத்த கட்டப் பணி சமூக நீதியான இட ஒதுக்கீட்டில் தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்பதை முன்னெடுத்துச் செல்லுவோம் என்றார் கழகத் தலைவர்.

பொத்தனூர் க.சண்முகம் ஏற்புரை

இந்த விழா இருமுறை தள்ளி வைக்கப்பட்டு இப்பொழுது நடைபெறுகிறது. கழகத் தலைவர் அவர்களின் உடல் நலன்தான் முக்கியம். எனது பிறந்த நாள் விழா முக்கியமல்ல என்றுகூட சொன்னேன். இதை மய்யப்படுத்தி ஒரு பிரச்சார மாநாடு நடக்க வேண்டும் என்பதால்தான் இதனை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்தப் பகுதியில் நமது கழகம் வலுவுடன் இருந்து வந்தது. இடையில் சில அரசியல் மோகங்கள்! இந்த இயக்கத்தில் சேர்வது கொள்கையின் அடிப்படையில். இதன் கொள்கைகள் கசப்பு மருந்து போன்றவை. எளிதில் யாரும் வந்துவிடமாட்டார்கள். என்றாலும் எனது எஞ்சிய காலத்தை இந்தப் பகுதியை மீண்டும் கழகத்துக்கு வலிவுள்ள பகுதிகளாக மாற்றுவதற்காக செலவழிப்பேன். தந்தை பெரியார் சிலையை எனது தொண்ணூறாம் ஆண்டு நிறைவதற்குள் இங்கு திறக்க முயற்சி செய்வேன்.

என்னை நமது தலைவர் அவர்களும், பெரு மக்களும் அதிகமாகவே பாராட்டியுள்ளனர். அதற்குரிய தகுதி உள்ளவனாக நான் என்னை ஆக்கிக் கொள்ள முயற்சிப்பேன்.

தலைமைக் கழகமே அத்தனைப் பேர்களும் இங்க வந்து பாராட்டியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி - பெருமை. அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.

(விழா மேடையிலேயே தந்தை பெரியார் சிலை திறக்க நிதிகள் குவிய ஆரம்பித்தன.)

தமிழ் ஓவியா said...

பொத்தனூரில் நடைபெற்ற இரு பெரும் விழாக்கள்! நமது சிறப்புச் செய்தியாளர்



முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கே.பி.குழந்தை அவர்களுக்குச் சால்வை அணிவித்து உடல் நலம் விசாரித்தார் கழகத் தலைவர். (பொத்தனூர், 19.8.2012)

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் - முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் 90ஆம்ஆண்டு பிறந்தநாள் விழாவும், நாமக்கல் வட்டார திராவிடர் கழக மாநாடும்- நாமக்கல் மாவட்டம் பொத்தனூரில் 19.8.2012 காலை 9 மணிக்கு திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசை யுடன் வெகு சிறப்பாக தொடங்கப்பட்டது.

இருபெரும் விழாக்களையொட்டி ஊரெங்கும் கழகக் கொடி தோரணங்கள் அலங்கரித்தன. சாலையின் இருமருங்கிலும் கழகக் கொடிகள். கம்பங்களில் கட்டப்பட்டு, விழாக்களுக்கு வருவோர்க்குத் தலைய சைத்து வரவேற்புக் கூறிக்கொண்டிருந்தன.

திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் சனியன்று முடிந்து மறுநாள் காலையில் திருச்சியிலிருந்து புறப்பட்ட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் 9.45 மணியளவில் சாலை வழியாக பொத்தனூர் வந்தடைந்தார்.



பொத்தனூர் கழகத்துக்கு நன்கொடையாக ஒரு சென்ட் நிலம் கொடுத்த மூதாட்டி காவேரி அம்மையாருக்குக் கழகத்தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டினார்.

வீட்டு வாசலில் விழா நாயகர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் சால்வை அணிவித்துத் தமிழர் தலைவரை வரவேற்றார். திருவாரூர் ஆர்.பி.சுப்பிர மணியம் மற்றும் கழகத் தோழர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருமக்கள் கழகத் தலைவர் அவர்களுக்கும், பொத்தனூர் சண்முகம் அவர்களுக்கும் ஏராளமான சால்வைகளை அணிவித்த வண்ணமே யிருந்தனர். மத்திய குடும்ப நலம் சுகாதாரத்துறை இணையமைச்சர் செ.காந்திசெல்வன் கழகத் தலை வருக்கும், பொத்தனூர் க.சண்முகம் அவர்களுக்கும் சால்வை அணிவித்தார்.

பொத்தனூர் என்பது கழகத் தோழர்களின் கழக சொற்பொழிவாளர்களின் பாசறையாக இருந்த ஊராகும். தந்தை பெரியார் அவர்கள் பொத்தனூர் அய்யா சண்முகம் வீட்டில் பல முறை தங்கியதுண்டு. மாணவர் கழகப் பிரச்சாரத்தின்போது பல நாள்கள் அவர் வீட்டில் தங்கி இருந்ததை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார். கழகத் தலைவருக்கும், அவர் இணையர் வீ.மோகனா அவர்களுக்கும் புத்தாடைகள் அளித்து குடும்பத்தினர் அன்புடன் வரவேற்றனர்.



பொத்தனூர் மாநாட்டில் சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தைத் திறந்து வைத்தார் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு. (19.8.2012)

சுந்தராம்பாள் சண்முகம் நினைவரங்கில் இருபெரும் நிகழ்ச்சிகளும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் காலை 10.30 மணி அளவில் தொடங்கப்பட்டது.

தலைமைச் செயற்குழு உறுப்பினரும், சேலம் மண்டல திராவிடர் கழகத் தலைவருமான பழநி - புள்ளை யண்ணன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். 90ஆம் ஆண்டில் 75 ஆண்டுகள் கழகப் பணியாற்றிய பெருமகன் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் என்று அவர் தம் வரவேற்புரையில் புகழாரம் சூட்டினார்.

ஏ.பி.காமராசர் பி.ஏ., பி.எல்.,(விடுதலை வாசகர் வட்ட தலைவர்)

கரூரையடுத்த தவிட்டுப்பாளையத்தில்தான் முதன் முதலாக திராவிடர் கழகக் கொடி ஏற்றப்பட்டது. ஏற்றியவர் கழகத் தோழர் இரத்தினம் என்பதை நினைவூட்டினார். அந்த மாநாட்டிலேயே பங்கு கொண்டவர் நமது விழா நாயகர் பொத்தனூர் க.சண் முகம். நீதிக்கட்சி திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட மாநாட்டிலும் 1944இல் கலந்துகொண்டு இருக்கிறார் என்பதை எடுத்து ரைத்தார். 1990இல் இவ்வூரில் நடைபெற்ற ஜாதி சண்டை பற்றியும் குறிப்பிட்டார். யார் சமாதானம் சொல்லியும் நடக்கவில்லை. கடைசியில் இரு தரப்பினரும் பொத்த னூர் க.ச. அவர்களின் தலை யீட்டை விரும்பினார்கள்.

சேலம் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் பேசப் பட்டது. (ஞநுஹஊநு ஊடீஆஆஐகூகூநுநு) காவல்துறையினர் வாக னத்தை அனுப்பியிருந்தனர். ஏற மறுத்துவிட்டார். ஜாதிக் காரர்கள் இரு தரப்பினரும் வாகனத்தில் அழைத்துச் செல்ல வந்த நேரத்திலும் அவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் பேருந்து மூலம் சேலத்திற்குச் சென்றவர் பொத்தனூர் அய்யா சண்முகம் என்று அவர் சொன்ன பொழுது பலத்த கரஒலி!



பொத்தனூர் மாநாட்டில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு 75 கிலோ அரிசியும், 250 தேங்காய்களும் நன்கொடையாக அளிக்கப்பட்டன. (பொத்தனூர் 19.8.2012)

இந்தப் பகுதியில் சர்வ கட்சி தலைவர் என்றால் அது அய்யா சண்முகம் அவர்கள்தாம். இன்று தந்தை பெரியார் நம்மிடம் இல்லை. ஆனால் தந்தை பெரியார் நமக்குத் தேவை. அந்தப் பணியைச் செய்திட ஆசிரியர் அவர் களும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று நெகிழ்ச்சி யுடன் கூறினார். பரமத்திவேலூர் வழக்கு ரைஞர் சங்க செயலாளர் வழக்குரைஞர் ப.இளங்கோ அவர்கள், பொத்தனூர் க.சண் முகம் மிசா கைதியாக ஓராண்டு சிறையில் இருந்த நிகழ்வைக் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

கந்தசாமி கவுண்டர் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் முனைவர் தங்க. கந்தசாமி அவர்கள் உரை யாற்றும்போது பெரியார் உலகுக்குச் சொந்தம்; அது போலவே க.ச. அய்யா அவர் கள் எங்களுக்குச் சொந்தம் என்று பெருமிதமாகக் குறிப் பிட்டார்.

எளிமையும், நேர்மையும் கொள்கைப்பற்றும் கொண்ட பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த் தினார் டாக்டர் பிறைநுதல் செல்வி.

திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி தமது உரையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஊறிப்போயிருந்த ஜாதி ஆதிக்கத்தை ஒற்றை இராணுவமாக எதிர்த்துப் போர் புரிந்த தந்தை பெரியார் அவர்களின் படையில் தம்மை இணைத்துக் கொண்டவர் அய்யா பொத்தனூர் க.சண்முகம் அவர்கள்.

இந்தியாவிலேயே ஒரு பெரும் சமூக மாற்றம் இங்கு நடந்தது. அதனை மீண்டும் புரட்டி அடிக்கும் சக்திகள் தலைதூக்க பார்க்கின்றன. உலகிலேயே பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நாடுகளின் பட்டியலில் இந் தியா முதல் இடத்தில் இருக்கிறது. மாநிலம் விட்டு மாநிலம் மக்கள் விரட்டப்படுகிறார்கள். இந்த நிலைகள் எல்லாம் நீங்கிட, சமத்துவ சமயம் காண எல்லாவற்றிற்கும் பெரியார் தேவைப்படுகிறார் என்று குறிப்பிட்டார்.

மாண்புமிகு செ.காந்திசெல்வன் (மத்திய குடும்ப நலம், சுகாதாரத்துறை இணை அமைச்சர்)

இந்தியாவின் வரை படத் திலே பொத்தனூர் என்ற ஊர் பேசப்படும் என்றால் அதற்குக் காரணம் நமது பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் ஆவார் கள். மனிதநேயம் என்பதற்கும் எடுத்துக்காட்டானவரும் அவரே என்றும் கூறினார்.

இந்தியத்துணைக் கண்டத்தில் எந்தக் கட்சி ஆரம்பிக்கப் பட்டாலும் அதன் முதல் கொடி பறக்கக்கூடிய இடம் பொத்தனூர் என்று அமைச்சர் அவர்கள் குறிப்பிட்ட போது நகையொலி எங்கும்.

சு.அறிவுக்கரசு (கழக செயலவைத் தலைவர்)

சுயமரியாதைச் சுடரொளிகள் உருவப்படத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையில் சு.அறிவுக்கரசு அவர்கள் குறிப்பிட்டதாவது:

தாம் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு நிகரானது வேறு எதுவும் இல்லை என்ப தால் அந்தக் கொள்கையை ஏற்று அதன்படி வாழ்ந்துகாட்டி வருபவர் பொத்தனூர் க.சண் முகம் என்று பாராட்டினார்.

உணவு விடுதிகளில் பார்ப்பனர் அல்லாத மாணவர் கள் சென்று அமர்ந்து சாப்பிட முடியாத நிலையான, ஒரு காலகட்டம் இந்நாட்டில் இருந் துள்ளது. அத்தகு நேரத்தில் பார்ப்பனர் அல்லாதாருக்கு என்று மாணவர்கள் விடு தியைத் திறந்தவர் திராவிடர் இயக்கத்தின் முன்னோடி யான டாக்டர் சி.நடேச முதலி யார் என்றும் திராவிடர் இயக் கத்தின்சாதனையைத் தொட்டுக்காட்டினார்.

தமிழ் ஓவியா said...


பிறந்தநாள் மலர்!

பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட மலரை கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன - அறக்கட்டளை நிருவாகக் குழு உறுப்பினர் ராஜகிரி கோ.தங்கராசு அதனைப் பெற்றுக்கொண்டார். உலகத்திலேயே தனி சிறப்பான பெருமை வாய்ந்தது அறக்கட்டளை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்பது. அதன் தலைவராக இருக்கும் பெருமைக்குரியவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் என்று புகழாரம் சூட்டினார் ராஜகிரி கோ.தங்கராசு அவர்கள்.

கலி.பூங்குன்றன் (திராவிடர் கழகத் துணைத் தலைவர்)

எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெருமகனாரை- எங்கள் இயக்கத்தைச் சேராத பெருமக்கள் பலரும் பெருமையாகப் பேசியது கண்டு நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.

இந்தியாவில் ஆண்களின் சராசரி வயது 68. பெண்களின் சராசரி வயது 71. நமது விழா நாயகர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் கடவுள் மறுப்பாளர் - முழு நாத்திகவாதி - 90 ஆண்டுகள் வாழ்ந்து காட்டியதன் மூலம் நம் கொள்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார் என்று குறிப்பிட்ட கழகத்தின் துணைத் தலைவர் - கழகத்தின் அடுத்த கட்டப்பணி தனியார்த் துறைகளில் இடஒதுக்கீட்டைப் பெறுவதுதான் என்று குறிப்பிட்டார்.

வழக்குரைஞர் கோ.சாமிதுரை (திராவிடர் கழகப் பொருளாளர்)

நமது விழா நாயகர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களுக்கு வயது 90 என்றால் யாரேனும் நம்பு வார்களா? இவரிடம் கோபம் வந்து யாரேனும்தான் பார்த்ததுண்டா? என்று வினவினார் கழகப் பொருளாளர். டெசோ மாநாட்டைப் பற்றிக் குறிப்பிட்ட கழகப் பொருளாளர் அந்த மாநாட்டைத் தடை செய்ய முதல் அமைச்சர் ஜெயலலிதா முயற்சித்தது சரியா?

தமிழ் ஓவியா said...

தேர்தல் நேரத்தில் தனியீழத்தைப் பெற்றுத் தருவேன் என்றாரே! தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பீடத்திலே அமர்ந்துவிட்டாரே! தனியீழம் பெற்றுத்தர ஏன் முயற்சிக்க வில்லை என்று அவரைப் பாராட்டும் தோழர்கள் கேட்ட துண்டா? என்ற வினாவை எழுப்பினார்.

தமிழ் ஓவியா said...

மாநாட்டில் திராவிடர் கழக கொடியை திராவிடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் ஏற்றினார்.

மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சிந்தாமணியூர் கவிஞர் சுப்பிரமணியன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.எஸ்.மூர்த்தி, உரத்தநாடு இரா.குணசே கரன் ஆகியோரும் பாராட்டுரை, வாழ்த்துரை வழங்கினர்.

மண்டல தலைவர் வை.நடராசன் நன்றி கூறினார்.

மாநாட்டு வரவேற்புரையை நாமக்கல் மாவட்டக் கழக செயலாளர் அ.கு.குமார் ஆற்றினார்.

பெரியார் பெருந்தொண்டர்களின் உடற்கொடை

நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வெங்கரை எம்.பழனியப்பன், பொத்தனூர் தங்கவேலு, ஈரோடு மண்டல திராவிடர் கழகத் தலைவர் ராசா கவுண்டன்புதூர் வை.நடராசன் ஆகியோர் தம் மறைவிற்குப் பிறகு மருத்துவமனைக்கு உடற்கொடை அளிக்கும் உத்தரவாத படிவத்தை கழகத் தலைவரிடம் அளித்தனர். கழகத் தலைவர் அவர்களைப் பாராட்டினார்.


பொதுக் குழுவில் அறிவிப்பு

கும்பகோணம் மாவட்டம்

தலைவர் : வை.இளங்கோவன் - தாராசுரம்

செயலாளர்: குடந்தை குருசாமி

திண்டிவனம் மாவட்டம்

பொதுக்குழு உறுப்பினர் செ.பாலசுப்பிரமணியன்

(திருச்சி - திராவிடர் கழகப் பொதுக்குழுவில் கழகத் தலைவர் அறிவிப்பு - 18.8.2012)

சந்தாக்கள்

நாமக்கல் வட்டார திராவிடர் கழக மாநாட்டில் நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் விடுதலை சந்தாக்களுக்காக ரூ.35 ஆயிரமும், ஆத்தூர் மாவட்ட கழகத்தின் சார்பில் 10 விடுதலை சந்தாக்களும் கழகத் தலைவரிடம் அளிக்கப்பட்டன.

திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு மாநாட்டின் சார்பாக 75 கிலோ அரிசியும், 250 தேங்காய்களும் கழகத் தலைவரிடம் அளிக்கப்பட்டது.









பாராட்டு

இருபெரும் நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறு வதற்கு அல்லும் பகலும் அயராதுழைத்த நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆங்கரை பழனியப்பன், மண்டலத் தலைவர் நடராசன், மண்டல செயலாளர் ஈரோடு சண்முகம் ஆகியோருக்குக் கழகத் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார். மற்றும் பாடுபட்ட தோழர்களுக்கும் பயனாடை அணிவித்துச் சிறப்பு செய்யப்பட்டது.

தமிழ் ஓவியா said...

இந்தியாவின் மாபெரும் தலைவர் அண்ணல் அம்பேத்கர் - 2 கோடி பேர் வாக்களிப்பு!

டெல்லி: மகாத்மா காந்திக்குப் பின் சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் யார் என்பது குறித்து மக்களிடம் நடத்திய வாக்கெடுப்பில், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் முதலிடம் பெற்றுள்ளார்.

அவருக்கு 2 கோடி பேர் வாக்களித்து, நாட்டின் ஒப்பற்ற தலைவர் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆன்லைன், கள ஆய்வு மற்றும் நடுவர் வாக்குகள் அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.

இவற்றில் அண்ணல் அம்பேத்கருக்கு 2 கோடி வாக்குகள் கிடைத்தன. தேசத்தின் ஒப்பற்ற தலைவர் அவரே என்பது பெருவாரியான மக்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கரை ஒரு தலித் சமுதாய தலைவராக, பிரதிநிதியாகப் பார்க்கக் கூடாது என்றும், அவர் இந்த நாட்டைக் கட்டமைத்த ஒப்பற்ற சிற்பி என்பதை ஒவ்வொரு இந்தியரும் மனதில் கொள்ள இது ஒரு வாய்ப்பு என்றும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

தேசத்தின் தந்தைக்கு நிகரானவர், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என்றெல்லாம் அம்பேத்கருக்கு புகழ் மாலை சூட்டியுள்ளனர் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள்.

இந்த தேர்வில் முதல் பத்து இடங்களைப் பிடித்த தலைவர்கள் மற்றும் பிற துறையினர்...

1. பாபாசாகேப் டாக்டர் பிஆர் அம்பேத்கர்

2. டாக்டர் அப்துல்கலாம்
3.வல்லபபாய் படேல்
4.ஜவஹர்லால் நேரு
5.அன்னை தெரசா
6.ஜேஆர்டி டாடா
7.இந்திரா காந்தி
8.சச்சின் டெண்டுல்கர்
9. அடல் பிகாரி வாஜ்பாய்
10. லதா மங்கேஷ்கர்
-----------http://tamil.oneindia.in/news/2012/08/18/india-dr-br-ambedkar-the-greatest-indian-159839.html

தமிழ் ஓவியா said...

தா.பா.



மகன்: டெசோ மாநாட் டின் எதிரொலிதான் இன்றைக்குக் காலை யில்கூட மீனவர்கள் தாக்கப்படுகின்றனர் என்று சி.பி.அய். செய லாளர் தோழர் தா.பாண்டியன் கூறியுள்ளாரே, அப்பா!

அப்பா: இப்படிப் பேசு பவர்கள் இருக்கும் வரை தமிழக மீனவர் கள் மட்டுமல்ல, தமி ழர்களும் தாக்கப்பட்டுக் கொண்டேதான் இருப் பார்கள், மகனே! 22-8-2012

தமிழ் ஓவியா said...

உருப்படுமா நாடு?



அரசுப் பணத்தை (ரூ.17.5 கோடி) இப்படி அறிவியலுக்கு முரணான வகையில் செலவழிக்கலாமா? சட்டப்படி இது சரியானதுதானா?

ஆடிட்டர் ஜெனரல்களின் கண்களுக்கு இவையெல்லாம் படவே படாதா? இப்படிப்பட்ட நாட்டில் முதன்மையான தேவை பகுத்தறிவு விழிப்புணர்வுதானே? தந்தை பெரியாரின் இயக்கம் இந்தக் காலகட்டத்தில் உலகுக்கே தேவை என்பது விளங்கவில்லையா?

நாற்பத்திரெண்டு வருடங்களில் இல்லாத வறட்சி, இந்த வருஷம் கருநாடக மாநிலத்துக்கு. மழையே இல்லை! அதனால் கருநாடகம், 35,000 கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்தப் போகிறது.

செலவு? 17.5 கோடி! இந்த யாகத்துக்காக பெங்களூருவுக்கு வரவழைக்கப்பட்ட இளம் புரோகிதர்கள் முன்பு தரையில் விழுந்து வணங்குபவர் வேறு யாரும் இல்லை; கருநாடக சுற்றுலா அமைச்சர் ஆனந்த் சிங்!

(26.8.2012, கல்கி)22-8-2012