Search This Blog

5.8.12

இலங்கையில் நடப்பது இனப் பிரச்சினையா? வர்க்கப் பிரச்சனையா?

டெசோ சிந்தனை: சி.பி.எம். பார்வைக்கு... இலங்கையின் இன்னொரு பக்கம்

இந்தத் தலைப்பை விடுதலை கொடுக்கவில்லை. தீக்கதிர் ஏட்டில் (19.7.2012) தோழர் டி.கே. ரெங்கராஜன் எம்.பி. கொடுத்த தலைப்பு.

அந்தக் கட்டுரையில் என்ன கூற விரும்புகிறார்? டெசோ மாநாட்டில் தனியீழம் பற்றிய தீர்மானம் இடம் பெறவில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சியும் இதைத் தானே கூறி வருகிறது. இதற்காக தி.மு.க. உள்ளிட்ட தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்று கூறிய கட்சிகள் வசைமாரி பொழிந்துள்ளன என்று ஆதங்கப்படுகிறார் தோழர் டி.கே. ரெங்கராஜன்.

சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவுவது என்பார்கள். அதனைத் தான் இவர்களும் செய்கிறார்கள்.

டெசோ சார்பில் நடக்க இருக்கும் மாநாட்டில் தனியீழம் பற்றிய தீர்மானம் இடம் பெற வில்லையே தவிர, தனியீழம் தேவையில்லை என்று என்றைக்கும் சொல்லவில்லை. மாநாட்டின் கருத்துருவை செய்தியாளர்களிடம் வெளியிட்ட நேரத்தில்கூட டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தனி யீழம் தான் எங்கள் நிலைப்பாடு என்பதைத் தெரிவிக்கவும் தவற வில்லை.
உண்மை இவ்வாறு இருக்க, சி.பி.எம். எடுத்த நிலைப்பாட்டை டெசோ ஏற்றுக் கொண்டு விட்டது என்ற தன்மையில் கட்டுரை எழுது வது நல்லதோர் நகைச்சுவையே!


தனியீழம் தேவை என்பதைத் தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய தி.க. தி.மு.க. போன்ற அமைப்புகள் எதனையும் திணிக்கவில்லை.

இந்த முடிவை எடுத்தவர்கள் பாதிக்கப்பட்ட இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள்தான் என்பதை தீக்கதிர் ஏனோ மறந்தது அல்லது மறைக்கிறது?
சிங்களமே இலங்கையின் ஆட்சி மொழி என்று இலங்கையில் 1956இல் சட்டம் இயற்றப்பட்டபோது அதனை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் வெறும் உண்ணாவிர தம் தான் நடத்தப்பட்டது. அத னையே அனுமதிக்கவில்லை சிங் கள இனவெறியர்கள். உண்ணா விரதம் இருந்தவர்களை அடித்துத் துவைக்கவில்லையா? பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் பலரையும் தூக்கி எறியவில்லையா?

எல்லா வகையிலும் அறப்போர், ஜனநாயக வழியாக சட்டமன்ற பிரவேசம் எல்லாவற்றையும் நடத்திப் பார்த்துவிட்டுத் தான் - இனி ஒன்றி வாழ்வது என்கிற பேச்சுக்கே இட மில்லை என்று அனைத்து அமைப் புகளும் வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் ஒன்றுகூடி தனியீழம்தான் ஒரே வழி என்று தீர்மானம் செய்தனர்.


இந்த வரலாற்றை எல்லாம் நுணுக்கமாக கருத்தில் கொள்ளாமல், ஏதோ தி.க. - தி.மு.க. மற்றும் சில தமிழ் அமைப்புகள்தான் தனி யீழம் கோருகின்றன என்று சொல்லுவது நேர்மையான கருத்தாகாது. இன்னொன்றையும் புதிதாகக் கண்டுபிடித்து கூறியுள்ளார் தோழர் டி.கே.ஆர். இனப் பிரச்சினையையும் கடந்து இலங்கையில் வருக்கப் போராட்ட மும் நடந்து கொண்டுள்ளதாம். அப்படியா சேதி? ஈழத் தமிழர்களும், சிங்களவர்களும் வருக்கப் பார்வை யோடு ஒன்றிணைந்து  எந்தெந்த போராட்டங்களை நடத்தியுள்ளனர்? பட்டியல் போட்டுக் காட்டுமா சி.பி.எம்? இலங்கையில் நடப்பது இனப் பிரச்சினையா? வர்க்கப் பிரச்சனையா? வறட்டுப் பிடிவாதத் தோடு எழுதுகோல் பிடித்தால் இப்படிப்பட்ட தடுமாற்றம்தான் ஏற்படும்.

இலங்கையில் உள்ள கம்யூனிஸ் டுக் கட்சிகூட அதனைச் சுட்டிக் காட்டியதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் மார்க் ஸியம் பேசும் இலங்கை ஜெ.வி.பி. (ஜனதா விமுக்தி பெரமுனா) என்ற அமைப்புதான் சிங்கள இனவாதத் தின் முழு வடிவம் கொண்டதாகும்.

இந்த ஜெ.வி.பி. பற்றி இலங்கை யின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இந்து ஏட்டுக்கு (9.11.2005) அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

ஜனதா விமுக்தி பெரமுனா (ஜெவிபி) ஜாதிகா ஹெவர் உருமயா மற்றும் சிங்கள உருமயா ஆகிய கட்சிகளுடன் ராஜபக்சே கூட்டணி வைத்திருப்பது - அடால்ஃப் ஹிட்லருடன் கூட்டு வைப்பதற்குச் சமம் என்று கூறினாரே! ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தப் படி வடக்கு - கிழக்கு மாகாணம் இணைக்கப்பட வேண்டும் என்று சரத்து இடம் பெற்றிருந்ததல்லவா - அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத் தில் வழக்குத் தொடுத்து தங்களுக் குச் சாதகமான தீர்ப்பைப் பெற்றது - இதே மார்க்ஸிஸ்டு கட்சியான ஜெ.வி.பி.தான்.

இந்தக் கட்சியின் பிரதிநிதி களைத்தான் இந்தியாவில் மார்க் ஸிஸ்டு கம்யூனிஸ்டு நடத்தும் மாநாடுகளுக்குச் சிறப்பு விருந்தி னர்களாக அழைத்து, பொன்னாடையும் போர்த்துகின்றது.

ஈழத்தில் சிங்களப் பேரினவாத அரசு மிகப் பெரிய இனப்படு கொலையை நடத்தியதற்குப் பிறகும், முதலாளித்துவ நாடுகள் கூடக் கண்ணீர் சிந்தும் நிலையில், பொதுவுடைமை பேசும் நாடுகள், தேசிய இனவுரிமை பற்றிப் பேச வேண்டியவர்கள் இலங்கை இனவாத அரசின் பக்கம் நிற்பது பரிதா பத்துக்குரிய சறுக்கலே! இந்தி யாவில் உள்ள ஒரு கம்யூனிஸ்டுக் கட்சி கல்லானாலும் கணவன் புல் லானாலும் புருசன் எனும் போக்கில் பழம் பத்தாம் பசலித்தனமாக, இணைந்து வாழுங்கள் என்று இதோபதேசம் செய்வதும் 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய தலைக் குனிவாகும்.

டெசோ சார்பில் நடத்தப்படும் மாநாடு உடனடியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட அழுத்தங்களை கொடுக்கக் கூடியது தான்! அதே நேரத்தில் தனியீழம் என்பது டெசோவிலே இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்!

----------------------- கலி. பூங்குன்றன் அவர்கள்  5-8-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

31 comments:

தமிழ் ஓவியா said...

மண்டையில் தேங்காய் உடைப்பதைத் தடை செய்க!

கரூர் கோயிலில் தேங்காய் உடைக்கப்பட்ட 50 பேர்களுக்கு படுகாயம்! தையல் போடப்பட்டுள்ளது!
நரம்பியல் மருத்துவர் என்ன கூறுகிறார்?


- நமது சிறப்புச் செய்தியாளர்



கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மேட்டு மகாதானபுரத்தில் மகாலட்சுமி கோயில் வளாகத்தில் ஆண்கள், மற்றும் பெண்கள் வரிசையாக உட்கார்ந்து இருப்பவரின் தலையில் தேங்காய் உடைக்கும் கோயில் பூசாரி.

கரூர், ஆக. 5- பக்தியின் பெயரால் கோயில்களில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் மூடப் பழக்கம் உள்ளது. கரூரையடுத்த கிருஷ்ணராயபுரம் கோயிலில் பூசாரி தேங்காய் உடைத்ததில் 50 பக்தர்களுக்குப் படுகாயம் - ரத்தம் பீறிட்டுக்கிளம்பியது. அவர்களின் தலையில் தையல் போடப்பட்டது.

மதுரையில் குழிமாற்றுத் திருவிழா என்ற பெயரில் குழந்தைகளை மண்ணுக்குள் புதைத்ததைத் தடை செய்தது போல பக்தர்களின் தலையில் தேங்காய் உடைப்பதையும் தடை செய்ய வேண்டாமா? மண்டையில் தேங்காய் உடைக்கப்படுவதைக் குறித்து நரம்பியல் மருத்துவர்கள் எச்சரித்துள்ளதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மேட்டு மகாதானபுரத்தில் மிகவும் பழைமையான மகாலட்சுமி கோயில் உள்ளது. இந்தியாவிலேயே மகாலட்சுமிக்கு கோயில் மும்பைக்கு அடுத்து இங்குதான் உள்ளதாம். இந்த ஆண்டு ஆடி 19 அன்று மொட்டைத் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியில், சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோயில் வளாகத்தில் ஆண்கள், மற்றும் பெண்கள் வரிசையாக உட்கார்ந்து இருப்பவரின் தலையில் கோயில் பூசாரி பெரியசாமி பல்லைக் கடித்துக் கொண்டு வெறித்தனமாகத் தேங்காயை எடுத்து உடைத்தார். அப்போது 50-க்கும் மேற்பட்டோர் தலையில் ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. ரத்தம் வருபவரின் தலையில் சாம்பல், மஞ்சள் ஆகியவை போடப்பட்டன. (என்னே கொடுமை!)

மண்டை உடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை மற்றும் தையல் போடப் பட்டது. இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்டோர்க்கு தையல் போடப்பட்டது என சிறப்பு மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த முகாமில் முதலில் தையல் போடப் பட்ட வளர்மதி என்பவர் (வயது 40) பேட்டவாய்த் தலையிலிருந்து வந்த இவர் தலையில் 10 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர் கூறும்போது நான் கடந்த நான்கு ஆண்டுகளாக தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டதாகவும், இந்த வருடம் கோயில் பூசாரி கண்ணை மூடிக்கொண்டு தேங்காய் உடைத்தார். எனது மண்டை உடைந்தது எனவும் கண்ணீர் மல்க கூறினார். தையல் போடப்பட்ட பின் சிறிது நேரம் மயக்கம் அடைந்த இவருக்கு பழச்சாறு வாங்கிக் கொடுத்து பின்னர் அவருடைய மகனுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.



மணி என்பவர் (வயது 30). ஊர் சேங்கள். இவர் மூன்று ஆண்டுகளாக மண்டையில் தேங்காய் உடைத்துக் கொண்ட பக்தராம். தேங்காய் உடைக்கும் போது பூசாரி பெரியசாமி நிதானம் இல்லாமல் உடைத்தார். எனது மண்டை உடைந்தது என தெரிவித்தார். இதனால் இவ ருக்கு 6 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விஜயலட்சுமி என்பவர் வயது 27. இவர் கரூரைச் சேர்ந்தவர். முதல் முதலாகத் தேங்காயை உடைத்துக் கொண்டார். இவருக் குத் தேங்காய் உடைத்தவுடன் ரத்தம் கொட்ட ஆரம்பித்து விட்டது. சிறப்பு முகாமில் 4 தையல்கள் போடப்பட்டு அவ ருடைய கணவருடன் சென்றார்.

இதே போல் பலர் மண்டை உடைந்தாலும் சிகிச்சைக்கு வராமல் வீட்டிற்குச் சென்றனர். வந்து முதலுதவி பெற்றால் சாமி குத்தம் எனக் கருதி பலபேர் சொல்லிக் கொள்ளாமல் ஊருக் குச் சென்றனர். இந்த மூட நம்பிக்கை நிகழ்ச்சி 750 ஆண்டு களாக நடைபெறுகிறதாம்.

நரம்பியல் மருத்துவர் என்ன கூறுகிறார்?

சென்னையின் பிரபல நரம் பியல் மருத்துவர் என்.திலோத் தம்மாள் M.D., D.C.H., D.M., (Neurology) M.Ph., (USA) அவர்கள் மருத்துவ ரீதியான உடல் நல பாதிப்பு பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

தேங்காயைக் கையில் உடைக்கும்போது எலும்பு சதை மட்டும்தான் உடைந்து பாதிப்பு ஏற்படும். ஆனால் தலையில் உடைக்கும் பொழுது மூளை பாதிக்கும். அதனால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கராத்தே பயிற்சியில் கையில் உடைப்பது போல் செய்யலாமே என்று கேட் கலாம். தலையில் உள்ள எலும் புடன் மட்டும் சிக்கல் நிற்காது. உள்ளே மிகவும் மிருதுவான ஜெல்லி மாதிரி இருப்பதுதான் மூளை. ஒரு குழந்தையை குலுக் கினாலே கூட மூளை ஆடலாம். அதனால் பிரச்சினை வரலாம். மூளையில் இரண்டு மூன்று வகை உண்டு. அதில் நான் சொல்வது அதிர்ச்சி Concussion அடுத்து, அடிபட்டு கன்னிப் போதல் Contussion மூன்றாவது Nuronal Damageï Oxonol Damageï Oxonal என்பதுதான் அடிப்படை செல். அதாவது நரம்புகள் சிதறி போவது பிய்ந்து போவது குத்துச் சண்டையில் பத்து அடி அடித்த வுடன் பார்த்தால் அடி வாங்கி யவர் தள்ளாடி தள்ளாடிப்போய் குடிகாரர் மாதிரி மயக்கமாகி விழுவார். இதே சூழ்நிலை தேங்காய் உடைக்கும் போதும் வரலாம். ஒரு முறை தேங்காய் உடைக்கும் போது தேங்காய் இரண்டாக உடைந்தால் சரி, அப்படி இல்லாமல் இரண்டு மூன்று தடவை உடைத்தால் தலையில் காயம் ஏற்படும். தலையில் எந்த இடத்தில் உடைக்கிறார்கள் என்பது தான் மிக முக்கியம். தலை யின் மேல்பக்கம் புடைத்த மாதிரி உள்ள இடத்தில்தான் தேங்காய் உடைப்பபார்கள். அந்த இடம் கனமாய் இருக் கும். அப்படி அடிக்கும்போது கூட தேங்காயைப் பொறுத்து அடிக்கும் வேகத்தைப் பொறுத்து தலையில் பாதிப்பு ஏற்படலாம். இந்த மாதிரி மூன்று விதத்திலும் எது மாதிரியும் உடையலாம். இது பிரைமரி டேமேஜ் ஆகும். இத னால் உள்ளே இருக்கும் ரத்தக் குழாய் உடைந்து கட்டி ஏற்பட லாம். இது உடனேயும் நடக்க லாம். தாமதமாகவும் ரத்தக் கட்டி வரலாம். ஹெமட்டோமா மூளை யில் உள்ளேயும் இருக்கலாம். வெளியேயும் இருக்கலாம். அதன் அழுத்தம் அதிகரித்து மூளை நசுங்க ஆரம்பிக்கும். அதனாலே யும் தொந்தரவு ஏற்படும்.

தமிழ் ஓவியா said...

மூளையின் செயல்திறன் குன்றும்



ஒவ்வொரு ஆண்டும் இதையே அடிக்கடி செய்தாலும் அவர்களுக்கும் உறுதியான மூளையின் செயல் திறமை மங்கிப் போகும். உதாரணம் சொல்லவேண்டுமானால் குதிரை ஓட்டுபவர்கள் குதித்து குதித்து அடிக்கடி கீழே விழுவார்கள். அப் போது அவர்களுக்கு நினைவில்லாமல் மறதி அதிகமாகவும், மூளையின் வேலைத் திறனும் குறைந்து போகும். யாராவது வந்தால் அவர் யார் என்று தெரி யாது. ஏதாவது பொருளை வைத்துவிட்டு எங்கே வைத்தோம் என்பது மறந்து போகும். இதனை நினை வற்ற தன்மை என்று சொல்லுவார்கள். ஒரு விதமான குழப்பம் எனவும் கூறலாம். மூளையின் செயல் திறன் குறைந்து சுருங்கி ஒரு குழந்தை மாதிரி ஆகிவிடு வார்கள். இதை குத்துச் சண்டை மற்றும் குதிரை ஓட்டிகளை ஆய்ந்தபோது கண்ட றிந்துள்ளார்கள். இந்த ஒரு சூழ்நிலையும் இவர்களுக்கு ஏற்பட வாய்ப்புண்டு. காலந் தாழ்ந்த நிலையில் கை, கால் செயல்படாமல்போகலாம். இதற்கு சம்டியூரல் ஹெமட் டோமா DH, EDH (Extra Durai Hema toma) என்று பெயர். ஒரு உதாரணம் சொல்லுகிறேன். ஒரு வயதானவர் சாலையில் விபத் தில் அடிபட்டவர் உடனே எழுந்துவிடலாம். ஆனால் ஒரு மாதம் இரண்டு மாதம் கழித்து மருமகள் சாப்பாடு போடும்போது திரு திரு என்று விழிப்பார். சாப்பிட்டுவிட்டு, சாப்பிட வில்லையே என உளறுவார். அப்புறம் நடக்கும்போது கொஞ் சம் இழுத்து நடக்க ஆரம்பிப் பார். SDH, EDH இருந்தால் ரத்தக் கசிவு அதிகரித்துப் போய் மூளையின் அழுத்தத்தினா லேயே கை கால் விளங்காமல் போகலாம். டிமென்சியாவும் பரவலாம், வலிப்பு வரலாம்.(Fits) இந்த மூன்றும் பரவ லாம். மூன்றில் ஏதாவது ஒன்றும் வரலாம். அதுவும் உடனடியாகத் தெரியாது. 3, 4 மாதம் கழித்து வரும். இந்த மாதிரி வரும் சமயம் நாங்கள் கேட்பது, கீழே விழுந் தார்களா? தலையில் அடிபட் டதா? உங்களை அறியாமல் கீழே விழுந்தது உண்டா? உனக் கேட்போம். ஸ்கேன் எடுத்து பார்த்த பிறகுதான் ளுனுழ, நுனுழ இருப்பது தெரியும். இதனால் காலம் போகப் போக (பிட்ஸ்) வலிப்பும் பரலாம். SDH, EDH காரணங்களினால் கை, கால் விளங்காமல் போகலாம். வாதம் மாதிரி வரலாம். தலையில் தேங்காய் உடைத்துக் கொள்ப வர்களை அந்தக் கிராமத்திற்குப் போய் பார்த்துப் பேசி அழைத்து வந்து CT ஸ்கேன் எடுத்துப் பார்த் தால் இது தெரிந்து போகும்.

வயதான பெண்களாக இருப் பவர்கள் தலையில் தேங்காய் உடைத்தால் உடனே எலும்பு உடையும் அபாயம் நேரும். எலும்பு சற்று லோசாக இருந்தாலும் உடனே உடைந்து விடும். இதில் உடனடியாக ரத்தக்குழாய் உடைப்பு ஏற்படலாம். மூளை மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு இரும்புப் பெட்டியைப் போல் தலை அமைந்துள்ளது. இருதயத் திற்குக் கூட இந்தப் பாதுகாப்பு இல்லை! வேறு எந்த ஒரு உறுப் புக்கும் உடலில் இந்த மாதிரி பாதுகாப்பு கிடையாது. எனவே மூளை உயிர்த்தலம் போன்றது. அதனைப் பாதுகாப்பது அவசி யம் என மருத்துவ ரீதியாக உடல் நலப் பாதிப்பு ஏற்படுவது குறித்து மருத்துவர் எஸ். திலோத்தம்மாள் விளக்கினார்.

(செய்தி தகவல்: அலக்ஸ்) 5-8-2012

தமிழ் ஓவியா said...

இது என்ன புதிய சேதி?

காரில் இருந்து வெளி யேறும் நச்சுப் புகையில் ஒரு சிறிய அளவு இதய நோயைக் குணப்படுத்துகிறது என்று ஒரு பன்றியின் மீது சோதனை செய்து பார்த்த இங்கி லாந்து நாட்டு மருத்துவ இயல் ஆய்வாளர்கள் கூறு கின்றனர் என்று டெய்லி மெயில் பத்திரிகை தெரி விக்கிறது.

ஹைலேண்ட்ஸ் மற்றும் அய்ஸ்லேண்ட்ஸ் பல்க லைக் கழக வேதியியலா ளர்கள் உடலில் உள்ள ரத்த நாளங்களை விரிவுபடுத் தவும், ரத்தம் உறைவதைத் தவிர்க்கவும் கார்பன் மோனாக்சைடையும், நைட் ரிக் ஆக்சைடையும் பயன் படுத்துகின்றனராம். கார் பன் மோனாக்சைடு, கார் புகையில் இருப்பதால் அது வும் மருத்துவத்திற்கு ஓர ளவு பயன்படுகிறது போலும்.

அதே போல, இதயத் தின் மின் செயலாற்றலை அறிவதற்காக செய்யப்படும் ஈ.சி.ஜி.(Electro Cardio Gram) சோதனையானது, இதய நோய் ஏற்படும் ஆபத் தைப் பற்றி அறிய மருத் துவர்களுக்கு உதவுவ தில்லை என்றும் அமெரிக்க அரசினால் நியமிக்கப்பட்ட ஒரு குழுவின் பரிந்துரை களில் கூறப்பட்டுள்ளது. இதய நோய் ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்து கூறு வதற்கு இந்த சோதனை மருத்துவர்களுக்கு உதவுவ தில்லையாம். இதய நோய் பற்றி எந்த அடையாளமும் இல்லாதபோது, புகைப் பிடிப்பது, ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள கொழுப் பின் அளவு எந்த அள வுக்கு மருத்துவருக்கு உத வுகிறதோ அந்த அளவுக் குத்தான் இந்த ஈ.சி.ஜி. சோதனையும் உதவுகிறது.

இதய நோய் ஏற்படக் கூடிய வாய்ப்பு அதிக அள வில் உள்ள நோயாளிக ளைக் கண்டறிய இந்த சோதனை உதவினால் மிக நன்றாக இருக்கும் என்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிஸ் கூறுகிறார்.

இந்த ஈ.சி.ஜி. சோதனை செய்யப்படுவதற்கு எதிராக இந்தக் குழு Annals of International Medicine என்ற ஓரிதழில் அறிக்கை ஒற்றை வெளியிட்டுள்ளது. இதய நோய் ஏற்படும் ஆபத்து அதிக அளவில் உள்ளதா இல்லையா என்று தீர்மா னிக்க இந்த சோதனை உதவவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.5-8-2012

தமிழ் ஓவியா said...

கூடாரத்தில் குத்து வெட்டு! அன்னா ஹசாரே பதாகையை எரித்து ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுடில்லி, ஆக 5- சமூக சேவகர் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான வழவான லோக்பால் மசோதா நிறை வேற்றக் கோரி ஆதரவாளர்களுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் 10 நாட்கள் பட்டினிப்போராட்டம் இருந்தார். அவருடன் பேச்சு நடத்த மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளாததால் பல்வேறு ஒருநிலையாளர்கள் பட்டி னிப்போராட்டத்தை கைவிடக் கேட் டுக் கொண்டனர். அவர்கள் காங்கிர சுக்கு மாற்றாக புதிய அரசியல் கட்சி தொடங்குமாறு யோசனை தெரிவித் தனர். இதை ஏற்ற அன்னா ஹசாரே இணைய தளம் மூலம் ஆதரவாளர் களிடம் கருத்து கேட்டு வருகிறார். அரசியல் கட்சி தொடங்கு வதற்கு அன்னா ஹசாரே ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். நேற்று ஜந்தர் மந்தர் பட்டினிப்போராட்டத்தில் கலந்து கொண்ட ஆதரவாளர்கள் கூறும் போது அரசியல் கட்சி தொடங்க கூடாது, தொடர்ந்து அறவழியில் போராடி புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்றனர். பெரும்பாலான ஆதரவா ளர்கள் இதே கருத்தை தெரி வித்தனர். இதற்கிடையே அன்னா ஹசாரே அரசியல் கட்சி தொடங்கும் முடிவை எதிர்த்து குஜராத் மாநிலம் சூரத் நகரில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அன்னா ஹசாரே உருவப் படத்தை யும், ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற வாசகம் அடங்கிய பதாகையையும் தீவைத்து எரித்தனர். அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரி வால் கூறும் போது, மக்கள் தங்கள் விரும்பும் வேட்பாளரை தேர்ந் தெடுக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனவே அரசியல் கட்சி தொடங்க வேண்டும். புதிய கட்சிக்கு என்ன பெயர் சூட்டுவது என்பது பற்றி மக்களிடம் ஆலோசனை பெறப்படும் தேர்தலில் போட்டியிடும் வேட்பா ளரை மக்களே தேர்வு செய்வார்கள். அதன் பிறகு தேர்தலில் போட்டியிடு வார் என்றார். அன்னாஹசாரே கூறு கையில் நான் அரசியல் கட்சி தொடங்க மாட்டேன், தேர்தலில் போட்டியிட வும் மாட்டேன், ஆனால் இந்த நாட் டில் மாற்று சக்தி உருவாக்க வேண்டும் அதற்கு ராணுவ தளபதி வி.கே.சிங் போன்றவர்கள் எங்களை ஊக்கப் படுத்தி வருகிறார்கள். இதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் கருத்துக்கள் கேட்பேன் என்றார். அன்னா ஹசாரே பட்டினிப் போராட் டத்தை கைவிட்டதற்கு சுவாமி அக்னி வேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் பட்டினிப்போராட் டத்தின் நோக்கத்தை முறியடித்து விட்டார். பட்டினிப்போராட்டம் தான் கடைசி ஆயுதம். அதை அவர் கைவிட்டது தவறு. அது ஒரு கறுப்பு நாள். காந்தியார்தான் அகிம்சையில் போராடும் பட்டினிப்போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். அன்னா
ஹசாரே தமது முடிவுக்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.5-8-2012

தமிழ் ஓவியா said...

இணையத்தில் விடுதலையின் போராட்டம்


- தமிழ் ஓவியா மாரிமுத்து

விடுதலை இதழ் எனக்கு 1980 களின் இறுதியில் அறிமுகமாகிப் படித்து வந்தாலும்,1983 முதல் தினந்தோறும் படித்து வந்த எண்ணற்ற வாசகர்களில் நானும் ஒருவன்.நான்கு பக்கங்கள் கொண்ட விடுதலை இதழில் தொடங்கிய எனது பயணம் தற்போது இணைய இதழ் (VIDUTHALAI E-PAPER) மூலமாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. 25 ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி வரும் விடுதலை இதழை நிறுத்தி விடலாமா? என்று பெரியார் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் 1962 ஆம் ஆண்டு முதல் பொறுப்பேற்று நடத்தி,கடந்த சில ஆண்டுகளாக பல வண்ணங்களில் 8 பக்கங்களுடன் வெளிவருவது மட்டுமல்லாது. தினந்தோறும் இதழ் அச்சாகும் அதே வேளையில் இணைய இதழாகவும் (VIDUTHALAI E-PAPER) மலர்ந்து வருவதைப் பார்க்கும் போது தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யாவின் உழைப்பின் பெ(அ)ருமையை என்னவென்று சொல்வது?. 2004 ஆம் ஆண்டு முதல் எனக்கு கணினி அறிமுகமாகி டயல் அப் (VIDUTHALAI E-PAPER) என்ற முறையில் இணைய இணைப்பின் மூலம் இ-மெயில் மற்றும் ஒரு சில பணிகளைச் செய்து வந்தேன். 2007 ஆம் ஆண்டு (broad band) அகலவரிசை இணைய இணைப்புக் கிடைத்த போது நண்பர் ஒருவரின் உதவியால் தமிழ் ஓவியா (thamizhoviya.blogspot.com) வலைப்பூ தொடங்கி அதில் பெரியார் கருத்துகள் மற்றும் விடுதலை இதழில் வளிவரும் கட்டுரைகள், செய்திகளை வெளியிட்டு வந்தேன்.

எல்லா இடத்திலும் தன் ஆதிக்கக் கொடுக்கைப் பரப்பியிருந்த பார்ப்பனியம் இணையதளத்திலும் தனது விஷ(ம)க் கொடுக்கை அங்கிங்கென்னாதபடி எங்கும் பரப்பியிருந்தது.

வலைப்பூவில் பெரியாரின் கருத்துகளை பதிவிட்டபோது வந்த எதிர்ப்பு இருக்கிறதே! யப்பப்பா... சொல்லி மாளது. தந்தைபெரியாரையும், பெரியாரியலை உலகமயமாக்க ஓயாது உழைத்து வரும் தமிழர்தலைவரையும் கொச்சைப்படுத்தி வந்த பின்னூட்டங்கள் எண்ணிலடங்கா? பார்ப்பனர் களின் கொச்சையான அனைத்து விமர்சனங் களையும் நயத்தக்க நாகரிகமாக,பெரியார் தத்துவப்படியும், தமிழர்தலைவரின் கருத்துக்களின் துணையுடனும் அதை எதிர்கொண்டு விளக்கமளித்தேன்.

படிக்கும் வாசகர்களும் பார்ப்பனியத்தின் உண்மைத்தன்மையை உணர்ந்து இன்று 343 பின்பற்றுபவர்களுடன் (FOLLOWERS) மற்றும் 5,81,241 பேர் படித்துக் கொண்டிருக்கும் வலைப்பூவாக தமிழ் ஓவியா (thamizhoviya.blog spot.com) வளர்ந்து கொண்டிருக்கிறது. 22-.7.-2012 நிலவரப்படி தமிழ்மணம் திரட்டியில் 7 ஆவது இடத்தில் உள்ளது தமிழ் ஓவியா. இதற்கு முழு முதற்காரணம் விடுதலை இதழை இணையத்தில் கொண்டு வந்து பெரியாரை உலகமயமாக்கும் முயற்சியில் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களே. ”உண்மை” ஆகஸ்ட் 1-15 2012

Anonymous said...

ஈழப் பிரச்சனை வர்க்க ரீதியானதாக இருக்க வாய்ப்பில்லை ஏனெனில். தமிழர்களில் பெரும்பாலானோர் பொருள் முதல் வாத கொள்கையாளர்களே !! சிங்களவர் மத்தியிலேயே மார்க்சிய சிந்தனையாளர்கள் அங்கு அதிகம் .. இங்கு வர்க்கங்களை தாண்டி மதங்களை தாண்டி சிங்களம் - தமிழ் என்று தான் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.

தமிழ் ஓவியா said...

2014 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி ஆட்சியைப் பிடிக்காது அத்வானி ஒப்புதல் வாக்குமூலம்


புதுடில்லி, ஆக.6- 2014-ம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி., வெற்றி பெற்று ஆட் சியைப் பிடிக்காது என் பதை ஒப்புக் கொண் டார் பி.ஜே.பி.யின் மூத்த தலைவரான எல்கே. அத்வானி.

அதே நேரத்தில் காங் கிரசுக்கும் வாய்ப் பில்லை என்றும் இந்த இரு கட்சிகளையும் சாராத ஒருவர் பிரதம ராக வருவார் என்றும் தனது வலைதளத்தில் எழுதியுள்ளார் அத் வானி.

அடுத்த நாடாளு மன்ற தேர்தலுக்கு இன் னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற நிலையில், பிரதமர் பதவி யாருக்கு என்பது குறித்து இப்போதே விவாதங்கள் தொடங்கிவிட்டன. 2014 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தனது வலைத் தளத்தில் எழுதி இருப்பதாவது:-

நெருக்கடி நிலையை அமல்படுத்திய நிலையில் காங்கிரஸ் கட்சி 1977-ஆம் ஆண்டு அடைந்த தோல்விதான் மிக மோசமான தோல்வி என்று மக்கள் நம்புகின் றனர். 1952-க்கு பிந்தைய காலக்கட்டத்திலேயே மோசமான வரலாற்று தோல்வியாக, வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் தோல்வி காங்கிரசுக்கு அமையும்.

கடந்த மாதம் பதவி நிறைவு செய்த குடியரசு தலைவர் பிரதீபா பட்டீ லுக்கு பிரதமர் மன் மோகன்சிங் அளித்த விருந்தின்போது, அதில் பங்கேற்ற 2 மூத்த அமைச்சர்கள், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெறு கிற அளவுக்கு காங் கிரசோ, பாரதீய ஜன தாவோ ஒரு கூட்டணியை அமைக்க முடியாது என கருத்து தெரிவித்தனர்.

அடுத்த தேர்தலில் மூன்றாவது அணி அரசு அமைக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் இது இந்திய அரசியலின் நிலைத் தன்மைக்கும், நாட்டு நல னுக்கும் நல்லதல்ல. காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆதரவு இல் லாமல் எந்தவொரு அர சும் நிலையான ஆட்சி நடத்த முடியாததை 25 ஆண்டு கால அரசியல் நிலவரம் எடுத்துக்காட் டுகிறது. எனவே மூன்றா வது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை.

அதே நேரத்தில் காங் கிரஸ் அல்லது பாரதீய ஜனதா அல்லாத ஒருவர் பிரதமர் ஆவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த காலத்திலும் இது நடந் திருக்கிறது. சரண்சிங், சந்திரசேகர், தேவேக வுடா, குஜ்ரால் ஆகி யோர் காங்கிரஸ் ஆதர வுடனும், வி.பி.சிங் பார தீய ஜனதா ஆதரவுட னும் பிரதமர் பதவி வகித்துள்ளனர். ஆனால் அந்த அரசுகள் நீண்ட காலம் தொடர வில்லை.

காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா பிரத மரை கொண்ட அரசுகள் தான் உறுதித் தன்மை கொண்டிருந்தன. இவ்வாறு அதில் அத் வானி எழுதி உள்ளார்.6-8-2012

தமிழ் ஓவியா said...

டெசோ சிந்தனை: டெசோ மாநாட்டுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் வாழ்த்து!



ஆஸ்திரேலியா, ஆக. 6- சென்னை யில் நடைபெறவுள்ள டெசோ மாநாடு குறித்து; ஆஸ்திரேலிய நாடாளு மன்ற உறுப்பினர் மைக்கேல் ரோலண்ட், கலைஞர் அவர்களுக்கு தொலைப் பதிவி மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பி யுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில்; ``இலங்கையில் நல்லிணக்கத்தையும் நீண்ட அமைதியையும் உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம்! தற் போது அங்கு ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண் டும். இதில் எல்லோரும் இணைந்து பணியாற்றிடுவோம்! இந்தியாவில் நடைபெறவுள்ள `டெசோ மாநாடு வெற்றிபெற வாழ்த்துகிறேன்! என்று மைக்கேல் ரோலண்ட் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-

இந்தியாவில் இவ்வாண்டு நடை பெற விருக்கும் `டெசோ மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்!

ஆக்கப்பூர்வமான பொருள் நிறைந்த வழியில், தமிழ் உறவுகள் மற்றும் தமிழர்களுக்கான சமூக நீதியை நாம் உறுதியாக முன் நகர்த்தும் பணி களில் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கையில் நல்லிணக்கத்தையும் நீண்ட அமைதியையும் உருவாக்குவ தில் அங்கு நடை பெற்றவைகளுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிதல், மிக இன்றியமையாத பங்கு வகிக் கின்றது.

இதன் காரணமாகவே, இலங்கை மீதான போர்க் குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் குறித்து, சுயேச்சை யான, வெளிப்படையான புலனாய்வு தேவை என நான் மிக அழுத்தமாக வாதிடுகின்றேன்.

இலங்கையில் நிகழ்ந்த அரசியல் பகை மற்றும் வெறுப்பு காரணமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆஸ்தி ரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். எனவே இலங்கையின் நிலைத் தன்மை யும் அமைதியும் ஆஸ்திரேலியாவிற் கும் பயன் அளிக்கும்.

அண்மையில் அய்.நா. மனித உரி மைக் குழுவில் தன்னிச்சையான புல னாய்வை வலியுறுத்தி அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்திற்கு ஆஸ்தி ரேலிய நாடாளுமன்றம் அளித்த ஆத ரவு, தமிழ்த் தலைவர்களின் ஈடுபாட் டிற்கும், அர்ப்பணிப்புக்கும் ஒரு சான் றாகும். - இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 6-8-2012

தமிழ் ஓவியா said...

மோசம் அடைந்து வருகிறது ஈழத்தமிழ் மக்களின் நிலை: அய்.நா. கூறுகிறது!



நியூயார்க், ஆக. 6- இலங்கையில் போரினால் பாதிக் கப்பட்ட மக்கள் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளனர் என்று அய்.நா. கூறியுள்ளது.
போர் முடிந்து 3 ஆண்டுகளில் வடகிழக்கில் இலங் கையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை பார்வையிடச் சென்ற, அய்க்கிய நாடுகள் அவையின் மனிதாபிமான பணிகளுக்கான இணைப்பு அலுவலகத்தின் செயல்திட்ட இயக்குநர் ஜான் கிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

முகாம்களில் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்

பல நாடுகளைப் பார்க்கும் போது போரின் பின்னர் நடந்த காலகட்டத்தில் ஒப்பீட்டளவில் இலங்கையின் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றாலும், இன்னமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் மோசமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். மீள் குடியேறியவர்களின் நிலையும் அதே போன்று மோசமாகவே உள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

வடகிழக்கு பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்டு அரசால் மீள் குடியமர்த்தப்பட்டவர்களின் வாழ்க் கையை மீண்டும் கட்டியெழுப்ப கூடுதலான உதவிகள் தேவைப்படுகின்றன.

அடிப்படை தேவைகள் கிடைக்காத நிலை

போரினால் வாழ்க்கையை இழந்த மக்கள் மீண்டும் கவுரவமாக வாழ்ந்து தங்களது வாழ்க்கையை கட்டியெழுப்ப அய்.நா.வின் தமது அலுவலகமும், இதர பன்னாட்டு மனிதாபிமான அமைப்புகளும் இலங்கை அரசுடன் இணைந்து வேலை செய்ய விரும்புவதாகக் கூறும் அவர் வட பகுதியில் மக்கள் குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்காத நிலை யில் இருக்கிறார்கள்.

எனவே இப்படியான நிலையில் மீள் குடிய மர்ந்தவர்கள் தங்களது தற்போதைய நிலை குறித்து திருப்தி அடைய முடியாது, அவர்கள் திருப்தி அடையக் கூடாது, நாமும் திருப்தி அடையக் கூடாது.

இந்த நிலை மாறி அவர்களின் வாழ்வாதாரம் மேம் பட வேண்டும் என்றால், கொடையாளி நாடுகள் தமது உதவிகள் மற்றும் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் எனவும் அய்.நா.வின் தமது அலுவலகம் கோருகிறது.

வட மாகாண மக்களின் முன்னேற்றத்துக்கு தேவை யான நிதியுதவியில் 20 சதவீதம் மட்டுமே கிடைத் துள்ளது என்றும் சர்வதேச நிதியுதவியில் 80 சதவீதம் குறைந்த நிலையில், அதன் காரணமாக மக்கள் பெரும் துன்பத்தை தேவையில்லாமல் எதிர்கொள்கி றார்கள்.

எனினும் அரசிடம் சில செயல்திட்டங்கள் இருக் கின்றன எனவும் அவை நடைமுறைபடுத்தப்படும் என்கிற நம்பிக்கை தனக்கு இருக்கிறது என்று ஜான் கிங் கூறினார். 6-8-2012

தமிழ் ஓவியா said...

நமது கேள்வி: சதயம், பூரட்டாதியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?

இப்படியெல்லாம் இதழ்கள் கட்டுரைகளை எழுதித் தள்ளுகின்றனவே - இந்த நட்சத்திரங்கள் எவ்வளவுக் காலமாக இருந்து வருகின்றன? இந்த நட்சத்திரங்களில் எவ்வளவு காலமாக எவ்வளவு மக்கள் பிறந்திருக்கிறார்கள்?

அப்பொழுதெல்லாம் இவர்கள் எதைப் படித்தார்கள்? இப்பொழுது மட்டுமே படிக்க முடிவதற்கு யார் கரணியம் எது காரணம் பார்ப்பனர்கள் மட்டும் படிக்கக் கூடிய ஒரே நட்சத்திரத் தில் பிறந்தார்களா?

ஒரு பெரியாரும், ஒரு காமராசரும், ஒரு திராவிடர் இயக்கமும் பாடுபட்ட பிறகுதானே நம் மக்களுக்குப் படிப்பு வந்தது? இதழ் நடத்தும் முதலாளிகளே! எம்மக்கள் உங்களுக்கு என்ன கேடு செய்தார்கள்? ஏன் அவர்களை இன்னும் வஞ்சிக்கிறீர்கள்? 6-8-2012

தமிழ் ஓவியா said...

ஆசிரியர்களா இவர்கள்?

ஆசிரியர்கள் இனத்துக்கே தலைகுனியும் ஒரு வேலையில் நாமக்கல் மாவட்டத்தில் 77 தலைமை ஆசிரியர்கள் ஆதித் திராவிடர் நலத்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியில் பெரும் ஊழல் செய்துள் ளனர். முறைப்படி அவர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மிக உயர்ந்த கல்வித் தொண்டு செய்யக் கடமைப்பட்டுள்ள ஆசிரியர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த மாணவர்களுக்கு அரசு அளிக்கும் உதவித் தொகையில் கை வைக்க எப்படித்தான் மனம் வந்ததோ! அதுவும் சாதாரண ஆசிரியர்கள் அல்லர்; தலைமை ஆசிரியர்கள்.

நேர்மையும், கடமை உணர்வும் இல்லாத வர்கள் ஆசிரியர் பணியில் ஈடுபட்டால் அவர்களால் உருவாக்கப்படும் மாணவர்கள் எந்தத் தகுதியில் இருப்பார்கள் என்பதற்கு ஆராய்ச்சிகள் தேவைப்படாது. மாணவர்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் சீரழிவுக் கலாச்சாரம் வகுப்பறையிலிருந்தே தொடங்கி விடுகிறதோ என்று கவலைப்பட வேண்டி யுள்ளது.

ஒரு வகையில் பக்குவப்படாத பகுத்தறிவுக் குச் சம்பந்தமே இல்லாத பாடத் திட்டங்கள்; சொல்லிக் கொடுப்பதற்கு நேர்மையும், ஒழுக்கமும் அற்ற ஆசிரியர்கள் என்று அமைந்து விட்டால் அந்தச் சமூகமே ஒரு சிறைக் கூடம் என்ற நிலைக்கு அல்லவா தள்ளப்படும்?

ஒடுக்கப்பட்ட, ஏழை - எளிய மாணவர் களின் தலைகளில் கை வைத்த ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்தக் கையாடல் வெறும் ஆசிரியர்கள் மட்டத்தில் மட்டும்தான் நடத்துள்ளதா? தலைமை ஆசிரியர்களுக்கு மேற்பட்ட அதி காரிகள், அலுவலக அலுவலர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதை உரிய முறையில் விசாரிக்க வேண்டும். அப்படி அவர்களும் சம்பந்தப்பட்டு இருந்தால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆதி திராவிடர் வளர்ச்சிக்கு என்று ஒதுக்கப்படும் நிதி அத்துறைக்கு முழுமை யாகச் செலவு செய்யப்படுவதில்லை; வேறு துறைகளுக்கு அது திருப்பி விடப்படுகிறது என்கிற ஆழமான குற்றச்சாற்று ஒரு புறத்தில் இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் அவர் களுக்காகச் செலவு செய்யப்படும் நிதியிலும் கையாடல் என்றால் - இது என்ன கொடுமை!

ஒடுக்கப்பட்ட மக்கள் என்று வருகிறபோது என்னென்ன வகைகளில் எல்லாம் சுரண்டப் படுகின்றனர்! பாரபட்சமாக நடத்தப்படுகின் றனர் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

இது ஏதோ நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் தான் நடந்துள்ளதா? வேறு மாவட்டங்களிலும் இதன் நிலை என்ன என்பது துருவி ஆராயப்பட வேண்டும்.

பொதுவாக இது போன்ற நிதி உதவி ஆதி திராவிடர் மாணவர்களுக்கு சட்டப்படியாக அளிக்கப்படுவதை அரசு நல்ல வகையில் விளம்பரப்படுத்தவும் வேண்டும்.

எது எதற்கோ விளம்பரங்களைத் தந்து அரசு பணத்தை வீணடிக்கும் அரசாங்கம், இது போன்ற பொது மக்களுக்குத் தெரிய வேண்டிய தகவல்களையும் விளம்பரமாக வெளியிட வேண்டும். பொது மக்களும், பெற்றோர்களும், மாணவர்களும் இவற்றைப் பற்றி தெரிந் திருக்கும்பட்சத்தில், இதுபோன்ற தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கும்.

கல்வி வளர வேண்டும்; அதே நேரத்தில் ஒழக்கழும், பகுத்தறிவும் வளர வேண்டும்.

குறிப்பாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் இவை இரண்டும் பெற வேண்டியது மிகவும் அவசியமாகும். மாணவர்களைப் பயிற்று விக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கம் - நேர்மை உள்ளவர்களாக இருக்க வேண்டாமா? 6-8-2012

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள்


சென்னை, ஆக.7- ஆகஸ்டு 12ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ள டெசோ மாநாட் டில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து டெசோ தலை வர் கலைஞர் அவர்கள் விளக்கியுள்ளார். அறிக்கை வருமாறு:

இந்த மாநாட்டில் நாம் நிறைவேற்றவுள்ள தீர்மானங்கள் எல்லாம் போரினால் பாதிக்கப் பட்டும், இடம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர் களின் வாழ்வாதாரங் களை வளப்படுத்தி உயர்த்துவதற்கும், ஜன நாயக உரிமைகளோடு கண்ணியத்துடன் வாழ்வதற்கும், அதற்கு தாய்த் தமிழகத்திலே உள்ள நாமும், இந்திய அரசும் எந்த வகையில் எல்லாம் உதவிட முடி யும் என்பதை வலியுறுத் துவதற்காகவுமான முயற்சியிலே ஈடுபட்டுள் ளோம்.

ஈழத்தில் தொடர்ந்து வாழ்வதற்கு வழியில்லாமல் உலகில் உள்ள பல்வேறு நாடு களில் குடியேறி புலம் பெயர்ந்த தமிழர்கள் என்ற பெயராலும், அக திகள் என்ற பெயராலும் அல்லாடிக் கொண்டி ருக்கும் நமது தமிழ் இனத்தவர் மீண்டும் இலங்கை திரும்பி அமைதியானதும், உரி மையுடன் கூடியதுமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச நிறுவ னங்களின் மூலம் என் னென்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியும் இந்த மாநாட்டின் ஆய் வரங்கில் நாம் கலந்து பேசி முடிவெடுக்கவுள் ளோம்.

இலங்கையில் சிங் களவர்களின் ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் காயங்க ளுக்கும் - அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும் மருந்து போடுகின்ற மாநாடு தான் டெசோ மாநாடு! இந்த மாநாட் டிற்கான மய்ய நோக் கத்தைப் புரிந்து கொண்டு அனைவரும் பங்கேற்க வேண்டுமென உன் அண்ணன் அழைக் கின்றேன் என்றார்.7-8-2012

தமிழ் ஓவியா said...

போராளிகளே தவிர பயங்கரவாதிகள் அல்லர்!

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் அறிவுரை கூறுவதாக, கருத்துக் கூறுவதாக நினைத்துக்கொண்டு பலரும் அவரவர் பாணியில் இஷ்டத்துக்குக் கருத்துகளைக் கூறிக் கொண்டிருக் கிறார்கள்.

(1) இரு தரப்பாரும் போரை நிறுத்தவேண்டும் என்று இதோபதேசம் செய்து வருகிறார்கள்.


போராளிகள் அங்கு போராடுவது அவர்களின் மக்களைக் காப்பாற்றுவதற்காக - அந்த மக்களும் தங்களின் வாழ்வுரிமைக்காக, மானவாழ்வுக்காக உயிரைத் துச்சமாகக் கருதி 24 மணிநேரமும் களத்தில் நிற்பவர்கள் போராளிகள்தான் என்ற உண்மையில் உண்மையாகவே இருக்கிறார்கள் - உறுதியாகவும் உள்ளனர்.

ஈழத் தமிழர்கள் தங்களுக்காகப் போராடும் போராளிகளின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாலும், நல்லெண்ணத்தாலும் - உண்மையிலே போராளிகள் போராடி வருவதாலும், விடுதலைப்புலிகளையும், ஈழத் தமிழ் மக்களையும் பிரிக்கவே முடியாது என்ற உண்மையான கண்ணோட்டத்தைப் புரிந்துகொண்டால், விடுதலைப்புலிகள்மீது பழி சுமத்துவது அபாண்டமே என்பதைப் புரிந்துகொள்வர்.

(2) போரை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை என்றும், அரசியல் தீர்வு காணப்படும் என்றும் கதைக்கின்றனர்.

நார்வேயின் முயற்சியால் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் நின்றிருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை முதலில் மீறியவர்கள் யார்? தன்னிச்சையாக இலங்கை அரசுதானே போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பின் வாங்கியது? இந்த நிலையில், விடுதலைப்புலிகளையும், சிங்கள அரசையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது குற்றமேயாகும்.

(3) விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தால்தான் பேச்சுவார்த்தை என்பதும் முன்வைக்கப்படுகிறது.

ஏதோ விடுதலைப்புலிகள் போர் வெறிகொண்டு சிங்கள இராணுவப் படையைத் தாக்குவதாக நினைத்துக்கொண்டு இதுபோன்ற நிபந்தனையை முன்வைக்கின்றன.

உண்மை என்னவென்றால், இலங்கையில் தமிழர்கள் எடுத்த எடுப்பிலேயே எந்த ஆயுதத்தையும் தூக்கிக்கொண்டு முன்வரவில்லை.

ஈழத் தந்தை என்று மதிக்கப்பட்ட செல்வநாயகம் அவர் களின் தலைமையில் நடத்தப்பட்ட அறவழிப் போராட்டத்தை அலட்சியப்படுத்தியோடு அல்லாமல், அந்த அகிம்சைவாதிகளை அரசின் அதிகாரபலம் கொண்டு அடித்துத் துவைத்தனர் என்ற அரிச்சுவடி தெரியாதவர்கள்தான் தன் மனம் போன போக்கில் விடுதலைப்புலிகளால் தான் பிரச்சினை என்று பொறுப்பற்ற முறையில் கருத்துகளைக் கூறிக்கொண்டு திரிகின்றனர்.

(4) தமிழுக்கு ஆட்சி மொழித் தகுதி பறிக்கப்பட்டதிலிருந்து தமிழ் மாணவ - மாணவிகளுக்குக் கல்வியில் பாரபட்சம் காட்டியதுவரை எடுத்துச் சொன்னால், அது ஒரு பெரிய தொகுதியாகவே நீட்சி அடையும்.


ஈழத் தமிழ்த் தலைவர்கள் சாத்வீகப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற தமிழ் நூலகம் சிங்கள வெறியர்களால் கொளுத்தப்பட்டு சாம்பலாக்கப்பட்டது என்கிற விவரம் எல்லாம் தெரியாமல், வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்ற முறையில், வெறுப்பு நஞ்சைக் கக்கும் வகையில் வஞ்சகமாகப் பேசுகின்றனர் - எழுதியும் வருகின்றனர்.

தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்ட நிலையிலும், சிறையில் இருக்கும் தமிழர்களுக்குக் கூடப் பாதுகாப்பு இல்லை என்ற கொடுமையான சந்தர்ப்பத்திலும், தமிழ்ப் பெண்கள், மானம், மரியாதையோடு வாழ முடியாது - சிங்கள வெறித்தனத்தின் உடல் பசிக்கு தமிழ்ப் பெண்களின் உடல் இரையாக்கப்படுகிறது என்ற கொடுமையான காலகட்டத்தில்தான் அங்கே போராளிகள் உருவாகவேண்டிய நிலையும், ஆயுதங்களைத் தூக்கவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது என்பதை மறந்துவிட்டு, நாட்டுரிமைக்காகப் போராடும் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பது சிறுபிள்ளைத்தன மானதாகும்.

இந்தப் பிரச்சினையில் பார்ப்பனர்களும், ஜெயலலிதாக்களும், காங்கிரஸ்காரர்களும், குறிப்பிட்ட இடதுசாரிகளும் போராளிகள்மீது அபாண்டம் பேசுவது கண்டிக்கத் தக்கதாகும்.

-----------------------நன்றி:-"விடுதலை" தலையங்கம் -

தமிழ் ஓவியா said...

அறுத்துச் சமைத்த கோழி உயிர் பெறுமாம்!

முருகனுக்கு அறுபடை வீடுகளாம். அதில் ஒன்று திருத்தணியாம். வருடா வருடம் முருகன் கோயிலுக்குப் பக்தர்கள் காவடி எடுத்துப் போவார்கள் - மொட்டை போடுவார்கள். அறுத்த கோழி உயிர் பெறும் என்பார்கள். (அவனே மொட் டையன்தானே!)

ஒரு முறை தந்தை பெரியாரும், அவர்களின் நண்பர்களான சென்னை மாநில முதல் மந்திரியாக இருந்த முனுசாமி நாயுடு, சி.எஸ். இரத்தினசபா பதி முதலியார் ஆகியோர் பழனி சென்றனர். (1936 இல்)

பெரியார் மலை அடிவாரத்தில் இருந்து கொண்டு, மற்ற இருவரும் மலைக்குச் சென்று கீழே இறங்கினர்.

மலையின் அடிவாரத்தில் ஒரு விபூதி கடைக்காரன் இரண்டு சேவல்களைத் தன் கடையின் முன் கட்டி, அதன் மீது மஞ்சள், குங்குமம் தெளித்து, வெற்றிலைப் பாக்கை முன்னால் வைத்து, ஒரு உண்டியலையும் வைத்திருந்தான். அங்கு ஜனங்கள் கூட்ட மாக நின்று சேவல்களைக் கும்பிட்டு, உண்டில் கலத்தில் காசு போட்டுக் கொண்டிருந்தனர்.

பெரியார் என்ன என்று கேட்டார். அதற்கு அந்தக் கடைக்காரன் பெரியாரையும் ஒரு பக்தர் என்று நினைத்துக் கொண்டு, இந்தச் சேவல்கள் நேற்று வந்த சோதனைக் காவடியின் அருள் என்று சொன்னான். அதாவது அறுத்துச் சமைத்து காவடி கட்டிக் கொண்டு வந்த சேவல்கள். கடவுள் சன்னதியில் உயிர் பெற்றுவிட்டன என்று விளக்கினான்.

தன்னோடு வந்த இரு நண்பர்களிடமும் பெரியார் விளக்கினார். இப்படிப் பட்ட ஆட்கள்தான் உங்கள் பிரச்சாரத்திற்கு அனு கூலம் செய்துவிடுகிறார்கள் என்றும், நாங்கள் இதையெல்லாம் நம்பமாட் டோம் என்று சொல்லிச் சிரித்தார்.
(ஆதாரம் குடிஅரசு 19-1-1936)

இப்படிப் பித்தலாட்ட மாக மக்களை ஏமாற்றிடத்தான் திருத்தணி உள்ளிட்ட முருகன் கோயில்கள்.

மக்கள் மத்தியில் பக்தி மூட நம்பிக்கை உள்ளவரை - இது போன்ற சுரண்டல் தொழில்களும் ஜாம் ஜாமென நடக்கத்தான் செய்யும்.

மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டுகளுள் தலையானது மூடநம்பிக்கை ஒழிப்புப் பணி மட்டுமே!

அறிவிருந்தும் அதனை முடக்கச் செய்யும் அமைப்பு முறைதான் கோவில்களும், விழாக்களும் என்ற பிரச்சார யுக்திகள்

அறிவைக் கெடுப்பாருக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கூறுகிறார் என்றால், அதன் பொருள் - பகுத்தறிவின் மீது அவர் வைத்திருக்கும் மதிப்பு எத்தகையது என்று விளங்கும்.

-------------------"விடுதலை” 26-8-2011

தமிழ் ஓவியா said...

இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வு: சரியான நேரத்தில் டெசோ மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா வரவேற்பு


புதுடில்லி, ஆக. 8- ஈழத் தமிழர்களின் வாழ்வுரி மைக்காக, நல்வாழ்வுக் காக மிகச் சரியான கால கட்டத்தில் டெசோ சார் பாக மாநாடு நடத்தப் படுவதாக மத்திய மரபு சாரா புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரி சக்தித் துறை அமைச்சரு மான பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் களின் வாழ்வுரிமைக் காக தி.மு.க. தலைவர் கலைஞர் சரியான தரு ணத்தில் டெசோ மாநாட்டை நடத்துகி றார் என, மத்திய அமைச் சர் பரூக் அப்துல்லா பாராட்டியிருக்கிறார். உலகத் தமிழர்கள் எதிர் பார்க்கும் அளவுக்கு இலங்கைத் தமிழர் பிரச் சினைக்குத் தீர்வு காண டெசோ மாநாடு உதவி புரியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

டெசோ அமைப் பின் சார்பாக ஈழத் தமி ழர் வாழ்வுரிமைப் பாது காப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. மைதானத்தில் வரும் 12 ஆம் தேதி நடைபெறு கிறது. இந்த மாநாட்டில் தேசிய மாநாட்டுக் கட் சித் தலைவரும் மத்திய மரபுசாரா புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் துறை அமைச்சருமான பரூக் அப்துல்லாவும் பங் கேற்கிறார். டெசோ மாநாடு பற்றி நேற்று டில்லியில் பேட்டிய ளித்த பரூக் அப்துல்லா, தி.மு.க.தலைவர் கலைஞர் மிகச் சரியான நேரத்தில் டெசோ மாநாடு நடத்துகிறார் எனப் பாராட்டு தெரி வித்தார்.

மேலும் அவர் கூறிய தாவது:

இந்த மாநாட்டிற்கு தி.மு.க. ஏற்பாடு செய் திருக்கிறது. நமது அண்டை நாட்டில் போராடும் தமிழர்க ளுக்காக இம்மாநாடு நடக்கிறது. இது சரி யான தருணம். தி.மு.க. மற்றும் தி.மு.க. தலை வர் கலைஞரின் அறி வார்ந்த முடிவு என்றே கருதுகிறேன். இலங் கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக இந்நாட்டில் உள்ள மக்கள் மட்டுமன்றி உல கெங்கும் உள்ள தமிழர் களிடையே இது எழுச் சியை ஏற்படுத்தும்.

உலகத் தமிழர்கள் எழுச்சி கொள்ளவும் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவும் இது சரியான நேரம். அவர்கள் இன்னும் முகாம்களில் வாடுகி றார்கள். வீடுகளுக்குச் செல்ல இயலவில்லை. இலங்கை அரசு அத்து மீறலைக் கைவிட்டு தமிழர்கள் பூர்வீக இடங்களுக்குத் திரும்ப உதவி செய்ய வேண்டும். தமிழர்கள் அமைதியா கவும் இணக்கமாகவும் இலங்கையில் வாழ நட வடிக்கை எடுக்க வேண் டும்.

-இவ்வாறு மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கூறினார் 8-8-2012

தமிழ் ஓவியா said...

தமிழன் என்றாலே துவேஷம்தானா?

கேள்வி: தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் ஏழாவது மணல் திட்டில் இலங்கைக் கடற்படையின் புதிய முகாம் அமைக்கப்பட்டுள்ளதுபற்றி?

- மு. பெரியசாமி, விட்டுக்கட்டி

பதில்: அங்கிருந்துதான் இலங்கைக் கடல் பகுதியின் எல்லை ஆரம்பிக்கிறது. ஆறாவது திட்டு வரை இந்தியாவின் கடல் எல்லை. நமது எல்லையில் ஒரு பாதுகாப்பு அரணும் இல்லை. தன் எல்லையைப் பாதுகாத்துக் கொள்வதில் இலங்கை முனைப்புடன் இருப்பதில் தவறில்லை. ஆனால், இந்திய மீனவர்களை அச்சுறுத்தக் கூடாது. காலம் காலமாக இருந்துவரும் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு எதையுமே சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்பதுதான் பரிதாப நிலை.

(கல்கி, 12.8.2012)

ஈழத் தமிழர்கள் பிரச்சினையாக இருந்தாலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையானாலும் இந்தப் பார்ப்பனர்கள் எதிரிகளின் பக்கம் நின்றுதான் வெண்சாமரம் வீசுவார்கள். நம் வீட்டுக் கச்சத் தீவைத் தூக்கிக் கொடுத்துவிட்டு, இப்படித் தொங்க வேண்டியுள்ளதே என்பதுபற்றி ஒரே ஒரு வரி எழுதமாட்டார்கள்.

எதிரிகளோடு சேர்ந்துகொண்டு துப்பாக்கியை நம் பக்கம் திருப்புவார்கள் - தமிழர்கள் என்றால் அவ்வளவுத் துவேஷ நஞ்சு இந்தப் பார்ப்பனர் களுக்கு! 8-8-2012

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாடு: ஹாங்காங்கிலிருந்து வாழ்த்து

ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாது காப்பு மாநாடு வெற்றி பெற ஹாங்காங் வாழ் தமிழர்களின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித் துக் கொள்கிறேன். ஈழத் தமிழர் களுக்கு மறுவாழ்வு கிடைக்கவும், இப்பிரச்சினையில் உலக நாடு களின் கவனத்தைக் கவரவும் இந்த மாநாடு வழிவகுக்கும் என நம்புகிறேன். நன்றி! அன்புடன்



ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங்

குறிப்பு: விடுதலை ஆசிரியருக்கு அனுப்பப்பட்ட செய்தி.

தமிழ் ஓவியா said...

செய்திகளும் சிந்தனைகளும்

செய்தி: கறுப்புப் பணத்தை மீட்க வலி யுறத்தி பாபாராம்தேவ் அடுத்த கட்ட உண்ணா விரதப் போராட்டத்தை டில்லியில் இன்று துவக் குகிறார்.

சிந்தனை: இவர் மீதே வரி ஏய்ப்புக் குற்றம் என்ற வாள் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த லட்சணத்தில் ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் ஒரு கேடா?

செய்தி: பெண்ணிடம் திருமணம் செய்து கொள் வதாகக் கூறி தவறாக நடந்து கொண்ட பாதிரி யார், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் கைது!

சிந்தனை: பாவ மன்னிப்பு என்ற ஒன்று இருக்கும்வரை எந்தப் பாவத்தையும் செய்ய யார் தான் தயங்குவார்கள்?

செய்தி: குடிதண்ணீர் பிரச்சினைக்காக சென்னை - பெரம்பூரில் கத்தியால் அண்ணனைக் குத்திக் கொன்றான் தம்பி.

சிந்தனை: மூன்றாவது உலக யுத்தமே தண்ணீருக் காகத்தான் வரும் என் கின்றனர்.இது அதற்கு முன்னோடியோ!

செய்தி: அரசியல்வாதி களைத் திட்டுவதே அன்னாஹசாரே குழுவின் குறிக்கோள்.- சிவசேனா தலைவர் பால்தாக்கரே

சிந்தனை: இவர் மற்றவர்களைத் திட்டாத திட்டா? சிறுபான்மையின மக்களை என்ன பாடுபடுத் தினார்? ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை ஒன்று போதாதா?

செய்தி: நண்பர்களுக் கும், உறவினர்களுக்கும் ரக்ஷாபந்தன் நாளில் ராக் கிக் கயிறைக் கட்டுவார் கள். பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமாரோ மரங்க ளுக்கு ராக்கி கட்டினார்.

சிந்தனை: மனிதர்கள் தான் மரங்களாகி விட் டனர்; மனிதர்களுக்கு நல்லது செய்யும் மரங் களுக்கு ராக்கிக் கட்டு வது சிறப்பானது என்று நினைத்திருக்களாம். 9-8-12

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் நலமுடன் தாயகம் திரும்பினார்


அமெரிக்கப் பயணத்தில் எதிர்பாரா வகையில் உடல் நலம் பாதிக் கப்பட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரிய மருத் துவ உதவி பெற்று இன்று விடியற்காலை நலமுடன் தாயகம் திரும்பினார். மேலும் அவருக்கு ஓய்வு தேவை என்பதால் தோழர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாடு: இலங்கை அரசின் கூற்றுக்கு டெசோ தலைவர் கலைஞர் மறுப்பு



சென்னை, ஆக. 9- டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கை அரசின் அறிக்கையும், இலங்கை அமைச்சர் கூறி இருப்பதும் கற்பனையான குற்றச் சாட்டின் அடிப் படையில் புனையப்பட்ட ஒன்றாகும். இலங்கைத் தமிழரின் வாழ்வாதாரங் களை உயர்த்துவதற்காகத்தான் இந்த டெசோ மாநாடு. இலங்கை அரசின் தவறான பிரச்சாரத்தை இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர் களோ, உலகத் தமிழர்களோ யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :-

இலங்கை அரசின் சார்பாக 6.8.2012 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் டெசோ மாநாடு இலங்கைக்கு எதிரான விஷயம் என்றும், இந்த மாநாட்டிலே கலந்து கொள்ளும் இலங்கையர்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும், இந்த மாநாட்டினை இலங்கை அரசு வன்மையாகக் கண்டிக்கின்றது என்றும் தெரி வித்திருப்பதாகவும், அந்த அரசின் சார்பில் ஊடகத் துறை அமைச்சர் ஒருவர் இந்த மாநாட் டில் பங்கேற்போர் மீது அரசு கவனம் செலுத்தி யுள்ளதாகக் கூறியிருப் பதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.

கற்பனையான குற்றச்சாற்று

இலங்கை அரசின் அறிக்கையும், இலங்கை அமைச்சர் கூறியிருப் பதும் கற்பனையான குற்றச்சாட்டின் அடிப் படையில் புனையப்பட்ட ஒன்றாகும். இலங்கைத் தமிழரின் வாழ்வாதாரங் களை உயர்த்துவதற்காகத்தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது கவலையைத் தருகிறது. இலங்கைத் தமிழர் நலன் பேணும் முயற்சிகளை இம்மாநாடு முன்னெடுத்துச் செல்லும். அதற் காகவே இந்த டெசோ மாநாடு நடை பெறு கிறது. இலங்கை அரசின் சார்பில் செய்யப் பட்டுள்ள இந்தத் தவறான பிரச்சாரத்தை இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர் களோ, உலகத் தமிழர்களோ நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் தமது அறிக் கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாடு: இலங்கை அமைச்சருக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி கண்டனம்


சென்னை, ஆக.10- இலங்கை அமைச்சர் ஒருவர் டெசோ மாநாடுபற்றி பேசியது சரியல்ல. அடுத்த நாட்டில் நடக்கும் ஒரு மாநாட்டை மற்றொரு நாடு கண்காணிப்போம் என்று கூறுவது வரம்பு மீறிய செயல் என்று அமைச்சர் நாராயண சாமி தெரிவித்துள்ளார். மத்திய இணை அமைச்சர் நாராயண சாமி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தார். விமான நிலை யத்தில் அவர் செய்தி யாளர்களிடம் கூறிய தாவது:

டெசோ மாநாடு திமுக கூட்டுவது அவர் களுடைய தனிப்பட்ட விவகாரம். திமுக எங்கள் கூட்டணியில் இருந் தாலும் அவர்கள் தனிக் கட்சி. அந்த அடிப் படையில் அவர்கள் டெசோ மாநாடு நடத்து கின்றனர். டெசோ மாநாட்டில் என்ன பேசுகிறார்கள்? என்ன நடக்கிறது என் பதை உன்னிப்பாக கவனிப் போம் என்று இலங்கை அமைச்சர் ஒருவர் பேசியுள்ளது சரியல்ல. அடுத்த நாட்டில் நடக் கும் ஒரு மாநாட்டை மற்றொரு நாடு கண் காணிப்போம் என்று கூறுவது வரம்பு மீறிய செயல். அவ்வாறு அமைச்சர் பேசியிருந் தால் அதை ஏற்க முடி யாது.

லோக்பால் மசோதா நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனையில் உள்ளது. எதிர்க்கட்சியி னர் சிலர் வெட்டு தீர்மானங்களை கொடுத் துள்ளனர். எனவே அவர் களுடன் கலந்து பேசி ஆலோசிக்க வேண்டி யுள்ளது.

எனவே நாடாளு மன்ற தற்போதைய கூட் டத் தொடரில் லோக் பால் மசோதா நிறை வேற்ற வாய்ப்பில்லை. ராம்தேவ் கறுப்பு பண பிரச்சினைக்காக போராட்டம் நடத்தப் போவதாக கூறுவது தன் னுடைய சுய விளம்பரத் துக்காகவும் மக்கள் கவ னத்தை திசை திருப்பவும் நடத்தும் நாடகம். இவ்வாறு அவர் கூறி னார். 10-8-2012

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாடு: தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் வாழ்த்து



சென்னை, ஆக.10- ஈழத்தந்தை செல்வா அவர்களின் புதல்வரும், சென்னையை தலைமை யகமாகக் கொண்ட புரோடெக் எனும் மனித நேயத் தொண்டமைப் பினை நடத்து பவரு மான சா.செ.சந்திரகாசன் அவர்கள், கலைஞர் அவர் களுக்கு மடலொன்று அனுப்பியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதம் வருமாறு: பேரணிகள், ஆய்வரங்கு கள், மாநாடுகள் எனத் தமிழின், தமிழ் இனத் தின் நலன் நாடி பல நூறு களங்கண்டவர் நீங்கள். தமிழ்த் தாயின் தலைமகனே! புறங் கூறுபவர்களைப் புறந் தள்ளுங்கள்.

இடம், பொருள், ஏவல் இலக்கணம் கண்ட தமிழ் கூறும் தத்துவம் உணர்ந்த தெளிவு நிறை தமிழ்த் தலைவர் நீங்கள்.

ஓரணி திரளாது, ஈழத் தமிழரின் கருத்துருவை ஒருமுகப்படுத்தாது செயல்படும்வரை ஈழத் தமிழர் வாழ்வில் விடி யல் எப்படி? என்று நாளும் ஆதங்கப்படு பவர் நீங்கள். அதனால் தான் உண்மை உணராது உங்களை வெறுத்து நிற்கும் ஈழத் தமிழர் களைக்கூட வையாது வாழ்வாங்கு வாழ்பவர் நீங்கள். உங்களை நாம் அறிவோம். எமது நல் வாழ்வுக்காய் ஏங்கும் உங்கள் எண்ணங் களையும் நாமறிவோம்.

கட்சியின் தலைவன், அரசியல் வழிகாட்டி, பல்வேறு இனங்கள் வாழும் கூட்டாட்சி நாட்டின் குடிமகன் என்ற பல்வேறு கயிறு களால் கட்டப்பட்டு நிற்கும்போதும், இன உணர்வால் ஈழத் தமிழர் மீது நீங்கள் காட்டும் அன்பே அவ்வப்போது உங்களுக்கெதிராக திரும்பி அம்பெனக் குத்தும்போதும், வலிபொறுத்து எம்மை அரவணைக்கும் செய லுக்கு என்றும் நன்றிகள் கோடி.

பெருமகனே! தமிழர் தலைமகனே! நெளிவு, சுழிவுகளும், உள்ளக நிலையும் தெளிவுறத் தெரிந்தவர் நீங்கள். மீண்டும் நீங்கள் அறை கூவிக் கூட்டியுள்ள டெசோ மாநாடு ஈழ மண்ணின் இரத்தக் கள ரிக்கும், ஈழத் தமிழர் களின் விரும்பத்த காத உயிரிழப்புகளுக்கும் முடிவு கட்டி அவர்தம் வாழ்வின் அமைதிக்கும், வளமான எதிர்காலத் திற்கும் பொருத்தமான வழியினைக் காட்ட வேண்டும் என்பதே என்னைப் போன்ற ஈழத் தமிழர்களின் விருப்பம்.

எனவே குவலயம் முழுக்கப் பரந்து வாழும் ஈழத்தமிழர்களின் வாழ் வுரிமைப் பாதுகாப்பு மாநாடாக உருவெடுத்து நிற்கும், சென்னையில் கூடும் டெசோ மாநாடு மகத்தான வெற்றி யுடன் உரிய இலக்கை அடைய உளமார்ந்த வாழ்த் துக்கள்.

இவ்வாறு சா.செ.சந் திரகாசன் அவர்கள், கலைஞர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மீண்டு(ம்) வந்துள்ளேன் உழைப்பதற்கு! தமிழர் தலைவர் தம் உருக்கமிகு அறிக்கை


புதியதோர் உலகு செய்ய புத்தாக்கத்துடன் பயணிப்பதற்கு மீண்டு வந்துள்ளேன், மீண்டும் வந்துள்ளேன் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கழகக் குடும்பத்தவர்களே, நலம் விரும்பும் நமது இன உணர்வாளர்களான நண்பர்களே,

அன்பு வணக்கம். நேற்று (9.8.2012) வியாழன் காலை சென்னை வந்து சேர்ந்தோம். பயணக் களைப்பு, இரு வேறு பகுதிகளின் கால மாற்றத்தினால் ஏற்படும் சோர்வு - இவை காரணமாக வீட்டில் நன்றாக உறங்கி ஓய்வு எடுத்து, பணிகளுக்கு ஆயத்தமாகி உள்ளேன்.

இந்த நாள்...

இன்று (10.8.2012) என்னை விடுதலை ஆசிரியர் பொறுப்பில் நியமித்து, மற்றவர் களுக்குத் தராத சுதந்தரத்தை - அவரது ஏகபோகத்தில் விடுதலை நாளேட்டை விட்டு விடுகிறேன் என்று அறியாத இளைஞனாக இருந்த என்மீது நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் வைத்த நம்பிக்கையைச் சுமந்து, அளவுக்கு மீறிய பொறுப்புணர்ச்சியையும், கடமை உணர்வையும் காட்டவேண்டும் என்ற மன உறுதியை மேற்கொண்டேன்.

எம்மைச் செயல்பட வைப்பது...

பெரியார்தம் ஒளி எம்மை தடம் மாறாமல் செயல்பட வழிகாட்டியது. அன்னை மணியம்மை யாரின் அன்பும், ஆதரவும், பாசமும், கழகக் குடும்பத்தினரின் உற்சாகமும், ஊக்கமும் என்னை கடந்த 50 ஆண்டுகளாக அலுப்பு அயர்வின்றி செயல்படுத்தி வருகிறது. நம் ஆசான் உருவாக்கிய வழிகாட்டும் நெறிமுறை கள் எனக்குத் தக்கதோர் புரசிஜர்கோட் (Procedure Code) ஆகி இருக்கின்றன.

இதைத்தான் எனக்குப் பெரியார் தந்த புத்தி போதும்; சொந்த புத்தி தேவையில்லை என்று கூறி வருகிறேன். இதை ஆழமாகப் புரிந்துகொள்ளத் தெரியாத சிலரின் அரைவேக் காட்டு விமர்சனங்களைத் தூசி தட்டிவிட்டு பணியைத் தொடருவோம்.

கழகப் பெருமக்களின் மறைவு!

அமெரிக்கப் பயணத்தின்போது இழக்கப் படக் கூடாத சமூக விஞ்ஞானிகளைப் போன்ற நம் இயக்கச் சுயமரியாதைச் சிங்கங்கள், கொள்கைத் தங்கங்கள் பலரது மறைவு எம்மை மிகவும் வருத்தியது; வாட்டி மனவேதனையை அடையச் செய்தது!

என்ன செய்வது! இயற்கையின் கோணல் புத்தி அது!

லட்சிய வீரர்கள் திருவாரூர் மண்டலத் தலைவர் மானமிகுவாளர்கள் எஸ்.எஸ். மணியம், மூத்த பெரியார் பெருந்தொண்டர் எஸ்.கே. சின்னப்பன், மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோமல் நடராசன், சட்ட எரிப்பு வீரர் எடகீழையூர் து. கண்ணுசாமி, காஞ்சிபுரம் கழக ஆர்வலர் டாக்டர் இராகவன், வாஞ்சைமிகு தஞ்சை ப. நாராயணசாமி, நாஞ்சில் ஆறுமுகம் மற்றும் பெரியார் விருது பெற்று, கணினித் துறையில் புதுமைகளைப் புகுத்திய ஆண்டோ பீட்டர்.... முதலியவர்கள் இழப்பு ஈடு செய்ய இயலாதது. அவர்களுக்கு நமது வீர வணக்கங்கள்!

என்னிடம் ஏற்படுத்திய நம்பிக்கை

துன்பமும், இன்பமும் கலந்து மாறி மாறி வருவதுதானே வாழ்க்கை என்பது! அதன்படி நான் தமிழ்நாட்டில் இருக்காமல், அமெரிக் காவில் பல கல்விப் பல்கலைக் கழகங்கள் நடப்பதை அறிந்தும், இதய நெருக்கடி காரண மாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதால் ஏற்பட்ட கால நீட்டத்தில் நாளும் விடாமல் இணையத்தின்மூலம் கழகச் செய்திகளையும், பிரச்சாரக் களங்கள்பற்றியும், விடுதலை சந்தா சேர்க்கும் கடமையாற்றுவதில் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மாவட்ட மற்றும் அனைத்துக் கழகப் பொறுப்பாளர்கள் காட்டிய ஆர்வம், கடமை உணர்வு மிகுந்த என்னுள் நம்பிக்கையை ஏற்படுத்தின.

மீண்டு(ம்) வந்துள்ளேன்!

அமெரிக்க மருத்துவமனைக்குள்ளே சென்று மிகவும் அபாயத்தை உள்ளடக்கிய ஒரு இதய சிகிச்சைக்கு ஆயத்தமானபோது, அய்யாவும், அம்மாவும், கழகத் தோழர்களும் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றிய நிம்மதி எனக்குத் துணிவினை, வலுவினைத் தந்தது.

மீண்டு வந்துள்ளேன்!

மீண்டும் வந்துள்ளேன் - உழைப்பதற்கு!!

இனி என் கடன் என்றும்போல் பணி செய்து கிடப்பதே!

பயணங்கள் முடிவதில்லை - பாதைகள் செப்பனிடப்படுகின்றன.

விடுதலை பரவாத கிராமம் - வீடு இல்லை என்ற அளவுக்கு - புதுப்புது உத்திகள் - புதுப்புது முயற்சிகளை உருவாக்கி ஆசானின் கொள்கைகளை அகில உலக மயமாக்குவோம்!

அதற்கு அய்யா தந்த அறிவாயுதம் கூர்மழுங்காது; வாளின் வலிமையைவிட இந்த ஏட்டின் வல்லமை அதிகம்!
புதியதோர் உலகு செய்வோம்!

புதியதோர் உலகு செய்ய, புத்தாக்கத்துடன், புத்தெழுச்சியுடன் பயணிப்போம்!

உடனடியாக சென்னையில் டெசோ நடத்தும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் சந்திப்போம்!
வாருங்கள் தோழர்களே, தோழியர்களே!

நன்றி! நன்றி!! நன்றி!!!


கி.வீரமணி,
ஆசிரியர், விடுதலை 10-8-2012

தமிழ் ஓவியா said...

உலகில் எந்தவொரு அமைப்பிலும் செய்யாத அளவுக்கு விஷயங்களைச் சேகரித்து வைக்கும் கருவூலமாக வீரமணி திகழ்கிறார்

நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடைய அரும்முயற்சி இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு திராவிட இயக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ள - தந்தைபெரியாரைப் பற்றி தெரிந்துகொள்ள - அண்ணாவைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கெங்கு இருந்து ஆதாரங்கள் திரட்டப்பட்டன, எப்படியெல்லாம் நம்முடைய வரலாறு முன்னால் இருந்தது, பின்னால் அமைந்தது என்பதையெல்லாம் இன்னும் நூறாண்டு களுக்குப் பிறகு தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும், அதற்கான கருவூலமாக நம்முடைய வீரமணி அவர்கள் விளங்குகிறார்கள் என்று சொன்னால்,அதை யாராலும் மறுக்க முடியாது.

இதோ என் கையிலே உள்ள இந்தப் புத்தகம் செங்கல்பட்டு முதல் தமிழ்மாகாண சுயமரியாதை மாநாடு, 1929-ஒரு வரலாற்றுத் தொகுப்பு. நான் நிச்சயமாகச் சொல்கிறேன் அவர் மாத்திரம் இன்றைக்கு திராவிடர் கழகத்திலே தந்தை பெரியாருடைய வழித் தோன்றலாக அமையாமல் இருந்திருப்பாரேயானால், இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்திருக்காது (கைதட்டல்).

இதிலே உண்மைகள் வரலாற்றுச் சான்றுகள், இங்கே நடைபெற்ற மாநாடு, அந்த மாநாட்டிலே கலந்து கொண்டவர்கள், அவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவும் எனக்குக் கிடைத்திருக்காது. இதிலே சவுந்தரபாண்டிய னாருடைய உருவத்தைப் பார்க்கிறேன். வி.வி.ராமசாமி நாடார் உருவப் படத்தைப் பார்க்கிறேன், அவ்வளவு ஏன்? இதே செங்கல்பட்டிலே இருந்த வேதாசலம் முதலியார் படத்தையும் அதிலே பார்க்கிறேன். வேதாசல முதலியார் உங்களுக்குத் தெரியும்.

வேலைக்காரி படத்திலே அறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம். அந்த வேதசால முதலியார் அந்த மாநாட்டிலே கலந்துகொண்டார். ஒரு முக்கிய பொறுப் பேற்றார் என்கின்ற இந்தச் செய்தியெல்லாம் எங்கள் சிந்தனையைச் செதுக்கச் செய்கின்ற செய்திகளாகும்.

விஷயங்களை சேமித்து வைப்பதிலே வீரமணி யிடத்திலே பாடம் படிக்க வேண்டும்.

இந்தச் செய்திகள் எல்லாம் காணாமல் போயிருக்கும். இப்படிப்பட்ட புத்தகத் தொகுப்பு மாத்திரம் இல்லாவிட்டால், நான் உலகத்தில் உள்ள எல்லாக் காட்சிகளையும் ஒப்பிட்டு இப்படிச்சொல்ல வேண்டுமே யானால், அவர் என்னைப் பாராட்டியதற்காக, நான் அவரை பாராட்டுவதாக அர்த்தமல்ல. உலகத்திலே உள்ள எல்லா கட்சி அமைப்புகளைப் பற்றியும் சொல்ல வேண்டுமேயானாலும், எந்த ஒரு அமைப்பிலும் இவ்வளவு விஷயங்களை சேகரித்து வைத்து, அதை எதிர்காலத்திற்குத் தரக்கூடிய இந்த ஆற்றல், நம்முடைய வீரமணியாருக்கு இருப்பதைப் போல வேறு யாருக்கும் இருப்பதாக நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.

அவரிடத்திலே எங்களைப் போன்ற கட்சிகளெல்லாம் இதற்காகப் பாடம் படிக்க வேண்டும் என்று எங்க ளுடைய முன்னோடிகள்கூட இங்கே வந்திருக் கிறார்கள். மூத்த தம்பிமார்களெல்லாம் வந்திருக் கிறார்கள். அவர்களெல்லாம்கூட இன்று முதல் பயிற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அடக்கத்தோடு அவர்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். --கலைஞர்

தமிழ் ஓவியா said...

சிந்தனைப்பூக்கள்



நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திருதராஷ்டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப் பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயிருக்கின் றது என்றால் உடனே கோபித் துக் கொள்ளுகின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.

மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதாயுகத்து கெய்டைப் பார்த்து, கலியுகத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென்கின்றோம்.

பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

மேல்நாட்டானுக்கு பொருளாதாரத்துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத் தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.

அரசியல் இயக்கம், முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால், சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

பார்வதி - பரமசிவன் முத்தக் காட்சி!

திருவாக்குஞ் செய்கருமங்

கை கூட்டுஞ் செஞ்சொற்

பெருவாக்கும் பீடும்

பெருக்கும் - உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆணை முகத்தானைக் காதலாற் கூப்புவர்தங் கை

விநாயகக் கடவுளை வணங்கிக் காரியங்களைத் தொடங்கினால் நல்லது என்று கூறும் பண்டாரச் சன்னதிகளே! வேழ முகத்தானின் வாழ்க்கை வரலாற்றினைப் பாரீர்.

கசமுகாசுரன் என்பவன் தவம் செய்து, தான் மனிதராலும், விலங்குகளாலும், பிறவற்றாலும் காலமெல்லாம் இறவாதிருக்க வேண்டும் என்று வரம் பெற்றான். அந்த வரம் பெற்றமையால் அவன் தேவர்களைத் துன்புறுத்தினான்.

தேவர்கள் சிவபெருமானை வேண்ட சிவன் விநாயகனை உண்டாக்க வேண்டும் என்று எண்ணினான். அதனால் தன் துணைவி சக்தி யோடு தோட்டத்திலே வீற்றிருந்தார். அப்பொழுது அங்கே ஓர் ஆண் யானை, பெண் யானையைப் புணர்தல் கண்டு, சக்தி பெண் யானை வடிவங் கொள்ள, சிவன் ஆண் யானை வடிவங் கொண்டு புணர்ந்தார். அவர்கட்கு யானை முகமும் மனித உடலுமாக ஒரு குழந்தை தோன்றியது. இதுதான் இன்று ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கும் கரியின் முகவன் கதை, இதற்கு ஆதாரமாக, திருஞான சம்பந்தர் தனது தேவாரத்தில்-

பிடியத னுருவுமை

கொளமிகு கரியது

வடிகொடு தனதடி

வழிபடு மவரிடர்

கடிகண பதிவர வருளினன்

மிகு கொடை

வடிவினர் பயில்வலி

வலமுறை யிறையே

என்று பாடியுள்ளார். இப்படிக் காமத்தின் விளைச்சலால் மக்கள் பிறவியிலிருந்து, விலங்குப் பிறவியெடுத்து இணைந்த பிண்டங்களின் சதைக்கலப்பில் விளைந்த விநாயகன் வணங்க வேண்டிய கடவுளா? இதோடு மட்டுமல்ல, தன்னை ஈன்ற தாயும் தந்தையும் காமக் காய்ச்சல் மிகுதி யினால் உதட்டுச்சுவை பருகும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தாராம், நெற்றிக் கண்ணனார் பெற்ற மகன்.

மும்மைப் புவனம்

முழுதீன்ற முதல்வி

யோடும் விடைப்பாகன்

அம்மை தருக

முத்தமென அழைப்ப

வாங்கே சிறிதகன்று

தம்மின் முத்தங்கொள

நோக்கிச் சற்றே

நகைக்கும் வேழமுகன்

செம்மை முளரி

மலர்த்தா ளெஞ்சென்னி

மிசையிற் புனைவாமே

மூன்று உலகங்களையும் பெற்ற சக்தியிடத்து, எருதுவை ஊர்தியாக உடைய சிவபெருமான், அம்மையே முத்தம் தருக எனச் சொல்லி அழைக்க அவர்களுக்கு இடையே இருந்த விநாயகன் சிறிது நீங்கிட, சிவனும், பார்வதியும் ஒருவரையொருவர் முத்தமிட்டு கொள்ள அதனைக் கண்டு புன்னகை செய்யும் யானை முகனது சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை எமது தலையின் மேல் அணிந்து கொள்வோம் என்று கூறுகிறது நந்திக் கலம்பகம் எனும் நூல்.

பெற்றவர்கள் முயங்கும் போது உற்றுப்பார்த்து மகிழ்ந்திடும் காமவல்லி பெற்ற திருக்குமரன் விநாயகக் கடவுளை வீரமரபில் வந்த தமிழினம் வணங்க வேண்டியதுதானா? புராணப் புரட்டர் களின் மூளைச் சுரப்பிலிருந்து உதயமான ஆபாசக் கடவுளுக்கு ஆற்றங்கரையில் சிலை ஏன்? இந்த வெட்கங் கெட்ட உறவில் விளைந்த யானை முகத்தானுக்கு தேங்காய் உடைப்பும், நைவேத் தியமும் ஒரு கேடா? தமிழினமே! சிந்தித்துச் செயல்படு!

- பெரியகுளம் அருளாளன்

தமிழ் ஓவியா said...

உண்மை


உண்மைதான் உலகத் தின் அறிவுச் செல்வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம்.

உண்மையே இன்பத்தின் தாய். உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மை யைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான். ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவினாலும் உண்மையைக் கண்டு பிடிக்க முடியும். துணிவு பெற்றவனால்தான் உண்மை யோடு நடக்க முடியும்.

கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, இரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும்.

உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத்தைக் காட்டுபவன் ஆவான்.

-ஆர்.ஜி.இங்கர்சால்

தமிழ் ஓவியா said...

தவறைக் கண்டிக்க உரிமை வேண்டும்


உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றிய பொதுமக்கள் கருத்துத் தெரிவிப்பது, கோர்ட்டை அவமானப் படுத்துவதாகும் என்ற பூச்சாண்டியை இனியாவது அம்பலப் படுத்தவேண்டும். உயர்நீதிமன்றத்து நீதிபதிகளும் மனிதப் பிறவிகளாதலால், ஆசாபாசங்களுக்கும், சமுதாய உணர்ச்சி களுக்கும், தவறுகளுக்கும் கட்டுப்பட்ட வர்கள். இவர்களை நியமிக்கின்ற இந் தியக் குடியரசுத் தலைவரையும் அவருக்கு அடுத்தபடியாக உள்ள இந்திய தலைமை அமைச்சரையும் கண்டிக்கவும், கொடும்பாவி கட்டிக் கொளுத்தவும், இவர்கள் எல்லோருக்கும் மேம்பட்டதாகக் கூறப்படுகின்ற இந்திய அரசியல் சட்டம் என்பதையும்,அதற்கும் மேம்பட்டதாகக் கூறப்படுகிற தேசியக் கொடி என்பதையுமே கிழித்துப் போட்டுத் தீ வைக்கவும், ஜனநாயக சமூகத்தில் உரிமையிருக்கும்போது, சாதாரண சர்க்கார் உத்தியோகஸ்தர்களில் ஒருவரான நீதிபதியின் தீர்ப்பைத் தவறு என்று கண்டிப்பதற்கு மக்களுக்கு உரிமையிருக்க வேண்டாமா?

- 6-11-1956 விடுதலை தலையங்கத்தில் தந்தை பெரியார் கருத்துரை

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர்பற்றி விடுதலை ஆசிரியர் இறையாண்மை பாதிக்கப்படாதா?

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றிருப்பதை இந்தியா மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு முன்பு இலங்கை உள் நாட்டுப் பிரச்சினையில் தலையிடமாட்டோம்; இலங்கை இறையாண்மையில் தலையிடமாட்டோம் என்று இந்தியா சொல்லிக் கொண்டிருந்தது. இந்தியா இலங்கைக்குச் செய்த எல்லா வகையான உதவிகள் பற்றியும் எல்லோருக்கும் தெரியும். இலங் கைக்கு, இந்தியா செய்த இராணுவ உதவி எல் லோருக்கும் தெரியும்.

இலங்கைக்காரர்களுக்கு, இந்தியாவில், இராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்டதே. அவர்களுக்கு எதற்கு இங்கே இராணுவப் பயிற்சி கொடுக்க வேண்டும்?

இலங்கையின் இறையாண்மையை இந்தியாவில் அடகு வைத்துதான் பயிற்சி கொடுக்கப்பட்டது. தேவைப்படும்போது மட்டும் இறையாண்மை என்ற குல்லாயை மாட்டிக் கொள்வார்களோ! வங்க தேசத்தை உருவாக்கிக் கொடுத்ததே இந்தியாதானே? அப்போது அடுத்த நாட்டு இறையாண்மை பற்றி நினைவு வரவில்லையா? எனவே, இந்தியா இப்பொழுது இலங்கைக்கு எதிராக எடுத்த முடிவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நாடாளுமன்றத்திலேயே சமீபத்தில் பிரதமர் இலங்கைப் பிரச்சினைக்குப் பதில் அளித்துப் பேசும் போது, ஒரு செய்தியை மிகத் தெளிவாகச் சொன்னாரே.

இலங்கையில் உள்ள தமிழர்கள் சமூக நீதியுடன், சுய மரியாதை உணர்வுடன் வாழ்வதுதான் அர்த்தமானது என்று சொல்லியிருக் கின்றார். அதைத்தான் நாங்கள் தனி ஈழமாக வலியுறுத்துகிறோம். இலங்கையில் உள்ள தமிழர்கள், நாங்கள் இங்கு மகிழ்ச்சியாக வாழ்கிறோம். எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை தனி நாடு வேண்டாம் என்று சொல்லி விட்டால், தனி ஈழத்தை வற்புறுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

தமிழ் ஓவியா said...

டெசோ சிந்தனை: ஈழத் தமிழர் பற்றி விடுதலை ஆசிரியர்


கேள்வி: இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண் பதில் வடநாட்டுக்காரர்கள் சிலர் எதிர்க்கிறார்களே?

தமிழர் தலைவர்: வடநாட்டுக்காரர்கள் என்ன? தமிழ்நாட்டிலே இருக்கின்ற சுப்பிரமணிய சாமிகளும், சோ ராமசாமிகளும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரி மைக்கு ஒரு நல்ல விடியல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை வைத்து விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அவர்களை அழிக்கவேண்டும் என்று சொல்லி, தமிழ் ஈழத்தை, தமிழின உணர்வாளர்களைக் கொச்சைப் படுத்துபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்கவேண்டும் என்று சொன்னவர்களும் இவர்கள்தான். ஆகவே, தமிழின உண்மையான உணர்வுள்ளவர்கள் யார்? தமிழின உணர்வுகளுக்கு எதிரானவர்கள் யார்? என்பதை இதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்க வாருங்கள்

கேள்வி: இலங்கைப் பிரச்சினையில் அரசியல் கட்சியினர் எல்லோரும் ஒரே அணியில் வருவார்களா?

தமிழர் தலைவர்: ஈழத்தமிழர் பிரச்சினையில் எல்லோரும் ஒரே அணியில் சேர வேண்டும் என்று சொல்லுகிறோம். அவரவர் களுக்கு பல அரசியல் நிலைப்பாடுகள் இருக்கலாம். இருந்தாலும் ஈழத்தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை தேவையில்லாமல் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

எந்தவித சுருதி பேதமும் இந்தப் பிரச்சினையில் இருக்கக் கூடாது. இதய சுத்தியோடு வர வேண்டும் இவர் இதற்கு முன் என்ன சொன்னார்? அவர் இதற்கு முன் என்ன சொன்னார் என்ற விமர்சனங்கள் கூடாது. டெசோ போன்ற ஓரமைப்பைத் திராவிடர் கழகம் மீண்டும் துவக்க வேண்டும் என்று கருதுகிறோம். திராவிடர் கழகம்தான் அதற்கு தலைமை தாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை திராவிடர் கழகம் அமைப்பாளராக இருக்கும். ஈழத்தமிழர் பிரச்சினை யில் எல்லோரும் ஒன்றாக வரவேண்டும் என்பதுதான் தாய்க்கழகத்தின் வேண்டுகோளாகும். இப்பொழுது ஒரு நல்ல சூழல் உருவாகியிருக்கிறது.

இராஜபக்சேவின் தோல்வி

இலங்கையில் இனப்படுகொலைகள், மனித உரிமைகள் மீறப்பட்ட பிறகு இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலகத் தமிழர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள், பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன் தலைமையில் திராவிடர் கழகத்தின் சார்பாக தலைமை நிலையச் செயலாளர் போன்றோர் எல்லாம் அய்.நா. மன்றத்தின் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் 18.5.2011 அன்று நடத்தினர். எனவே, உலகத் தமிழர்களிலிருந்து தமிழகத் தலைவர்கள் வரை இலங்கையின் மனித உரிமை மீறல்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததற்கு தற் பொழுது ஒரு நல்ல பயன் கிடைத்திருக்கிறது. உலக நாடுகளில் 24 நாடுகள் இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து வாக்களித்து அய்.நா. தீர்மானத்தை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.

அமெரிக்க நாட்டின் வெளியுறவுத் துறையின் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் அவர்களே இலங்கை நாட்டின் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறியிருக்கிறார். இந்தத் தீர்மானம் செயலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ராஜபக்சே வின் அனைத்து முயற்சிகளும் இப்பொழுது தோல்வி கண்டுள்ளன.

சென்னை பெரியார் திடலில் 24.3.2012 அன்று காலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியவை