Search This Blog

10.8.12

கடவுள் அவதாரமென்கிற கிருஷ்ணன் யார்? எப்படிப்பட்டவன்?

கொலைக்கார கிருஷ்ணன்


ஆரியப் பார்ப்பனர்களால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் எல்லாப் பண்டிகைகளிலும் மிகவும் ஆபாசமானதும் தமிழர்களுக்கு மானக் கேடானதுமான பண்டிகையே தீபாவளி.

தமிழனை ஆரியன் ஆடக்கியாண்டதை நினைவுபடுத்துவதாகுமிது. இதற்கான கற்பனைக் கதையில் முக்கிய பாத்திரமாக வரும் ஆரியக் கடவுளின் கொலைகாரத் தன்மையை மக்கள் நன்கு படித்து உணர வேண்டும்.
தீபாவளிப் பண்டிகையின் தத்துவம் மகாவிஷ்ணுவான கடவுள் கிருஷ்ணன் என்கிற அவதாரமெடுத்து உலகுக்கு வந்து, நரகாசுரன் என்கின்ற ஓர் அசுரனைக் கொன்றான் என்பதாகும்.

நரகாசூரன் என்பவன் ஒரு திராவிடன், ஆரியக் கொள்கைகளை எதிர்த்தவன். ஆகையால்தான் அவனை ஆரியப் பாதுகாவலனான கிருஷ்ணன் தன் மனைவி சத்தியபாமா உதவியுடன் கொன்றான்.

ஆனால், இந்தக் கடவுள் அவதாரமென்கிற கிருஷ்ணன் யார்? எப்படிப்பட்டவன் என்பதைத் தமிழர்கள், திராவிடர்கள் உணர வேண்டாமா?
கிருஷ்ணன் அற்ப சொற்ப ஆசாமியல்ல. சாட்சாத் மகா விஷ்ணுவின் அவதாரமாகும்.

ஏசுநாதர் கிருஸ்துவ மதத்தை உண்டாக்கியவர், இவரைப் பற்றிய கதை என்ன சொல்கிறது? இவர் தம்மைத் தாமே வருத்திக் கொண்டார். எதிரிகளின் தாக்குதலுக்கும் தூற்றுதலுக்கும் ஆளானார். இறுதியில் சிலுவையில் அடித்துக் கொல்லப்பட்டார்.
இதுபோல் முகமது நபியும் பல தியாகங்களுக்கு உள்ளானார். எதிரிகளின் கல்லடிக்கும் சொல்லடிக்கும் ஆளானார் என்பதுதான் அவரைப் பற்றிய கதை.

ஆனால், இன்று விழா கொண்டாடப்படுகின்ற கிருஷ்ணøன்ப பற்றிய கதை என்ன சொல்கிறது? குழந்தைப் பருவத்தில் பூதனை, சகடாசூரன், திருணாவர்த்தன் முதலியவர்களைக் கொன்றான்.
கன்றுருவத்துடன் வந்த வற்சாசுரனை விளாமரத்தில் மோதிக் கொன்றான்.
கொக்கு உருவத்துடன் வந்த பகாசுரன் வாயை பிளந்து கொன்றான்.
மலைப்பாம்பு உருவில் வந்த அகாசுரனின் வாயில் புகுந்து கொன்றான்.
குதிரையுருக் கொண்டு வந்த கேசியைக் கொன்றான்.
வியாமுரசுரனின் கழுத்தை நெரித்துக் கொன்றான்.
கம்சனின் பட்டத்து யானையின் கொம்பை முறித்துக் கொன்று அதன் பாகனையும் கொன்றான்.
மற்போருக்கு வந்த சானூரனைக் கொன்றான்.
சபலன், கோசனை ஆகிய இருவரையும் காலால் மோதிக் கொன்றான்.
தன் மாமனாகிய கம்சனைப் படுக்கையிலிருந்து இழுத்துத் தள்ளி கொன்றான்.
பஞ்சகன் என்பவனைக் கடலில் சென்று கொன்றான்.
சராசந்தனின் சேனைகளையெல்லாம் கொன்றான்.
முராசுரனையும் அவனது குமாரர்களையும் கொன்றான்.
நரகாசுரனைக் கொன்றான்.
வாசுதேவனுக்குத் துணையாக வந்த பவுண்டரகனையும் சுதட்சணையையும் கொன்றான்.
சாளுவனைக் கொன்றான்.
சிசுபாலனைக் கொன்றான்.
துரியோதனனின் சிங்காதனத்தின் கீழிருந்த அரக்கர்களைக் கொன்றான்!
இவ்வளவுதான் இவனது படுகொலைகள் என்று கருதாதீர்கள்! இன்னும் பலவுள்ளன இங்கு எழுத இடமில்லை.
இப்பேர்ப்பட்ட கொலைக்காரனைத்தான் சிலர் போற்றுகிறார்கள்.

 “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நான நன்னயஞ் செய்து விடல்'' என்ற உயர கருத்து பரவியிருந்த தமிழகத்தில் கொலைக்காரக் கிருஷ்ணன் கதையைப் புகுத்தி விட்டார்கள் தமிழகத்தில் புகுந்த அன்னியர்.
கிருஷ்ணன் கொலைக்காரன் மட்டுமா? இல்லை! கற்பிற்கு அணிகலன்(?) நல்லொழுக்கத்தின் சிகரம் (?) எப்படியெனில் – குளித்துக் கொண்டிருந்த பெண்களுடைய சேலைகளையும் ரவிக்கைகளையும் தூக்கிக் கொண்டு போய் மரத்தின் மேல் ஏறிக் கொண்டான்; நிர்வாணமாகத் தண்ணீரில் நின்ற அப்பெண்கள் தங்கள் இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி கும்பிட்டால்தான் தருவேன் என்று கூறி அவ்விதமே செய்ய வைத்துக் கண் குளிரப் பார்த்தான்!

ராதை, ருக்மணி, சத்தியபாமை, சாம்பவதி, காளிந்தி, மித்திர, விந்தை, சத்தியவதி, பத்திரி, லட்சுமணை, நப்பின்னை, சோபை, பிரனை, சாந்தி, க்ஷமை ஆகிய பெண்களை மணந்து கொண்டான்.
பிறகு சில்லரையாக நரகாசூரன் பட்டணத்திலிருந்து கொண்டு வந்து 16,000 பெண்களையும் மணந்து கொண்டான்.
இவர்களும் போதாமல் பகதத்தனின் நகரத்திற்குச் சென்று அங்கு சிறையிலிருந்த 1160 இராசக் கன்னிகைகளையும் மணந்து கொண்டான்.
இவர்களைத் தவிர பல்லாயிரக்கணக்கான கோபிகாஸ்தீரிகளுடன் லீலைகள் புரிந்தான்.
கொலையும் விபசாரமும் மட்டுமல்ல, கொலை செய்யவும் தூண்டினான் கீதையின் மூலமாக!

கொலை செய்யப்பட்டவர்களெல்லாம் அசுரர்கள் (திராவிடர்கள்) என்று கூறலாம். அப்படினால் அக்கிரகாரத்தார் மட்டுந்தானே இவனைப் புகழ வேண்டும்? மற்றவர்கள் புகழலாமா? கொண்டாடலாமா?
கடவுள் தன்மைக்குப் பொருந்துமா?

உண்மையான கடவுள் தனக்கு எதிரியான அசுரனைப் படைப்பானேன்? அதன் பிறகு அவனைக் கொல்வதற்காக அவதாரமெடுப்பானேன்? இது கடவுள் தன்மைக்கு அவரின் சர்வ வல்லமைக்குத் தயாபர குணத்துக்குச் சிறிதாவது பொருந்துமா?

பிற மதக்காரர்களும் மதமற்ற பகுத்தறிவாளர்களும் விஞ்ஞானிகளும், பேரறிஞர்களும் இப்பேர்ப்பட்ட ஆபாசக் கற்பனைக் கதையை ஏற்றுக் கொள்வார்களா? காறித் துப்ப மாட்டார்களா?

கடவுள் என்றால் – கடவுள் அவதாரம் என்றால் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அல்லவா இருக்க வேண்டும்? ஒருவனுக்கு இரண்டு மனைவிகளே இருக்கக் கூடாது என்று சட்டமிருக்கும் போது, கண்டவளையெல்லாம் தன் மனைவியாக்கிக் கொண்டவனை மானள்ள பெண்கள் கும்பிடலாமா? அவன் சம்பந்தப்பட்ட தீபாவளியைக் கொண்டாடலாமா?

ஆத்திரப்படாமல் சிறிது பொறுமையாக ஆலோசித்துப் பாருங்கள். பக்தர்களே ஆபாசக் கடவுள்களை ஒழித்துத் தலைமுழுகுங்கள்!

இம்மாதிரிக் கடவுள்களைக் கண்டு வெட்கப்பட்டுத் தானே லட்சக்கணக்கான மக்கள் பிற மதங்களைத் தழுவியிருக்கிறார்கள்.

ஆகவே மானமுள்ள பகுத்தறிவுள்ள தமிழர்கள் திராவிடர்கள் கொலைக்காரக் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட தீபாவளியைக் கொண்டலாமா? கண்டிப்பாய்க் கூடாது.

சிந்தித்துப் பாருங்கள் தமிழர்களே! தமிழர்களே!


             ---------------------------குத்தூசி குருசாமி -"விடுதலை' 27.10.1958

18 comments:

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாடு: இலங்கை அமைச்சருக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி கண்டனம்


சென்னை, ஆக.10- இலங்கை அமைச்சர் ஒருவர் டெசோ மாநாடுபற்றி பேசியது சரியல்ல. அடுத்த நாட்டில் நடக்கும் ஒரு மாநாட்டை மற்றொரு நாடு கண்காணிப்போம் என்று கூறுவது வரம்பு மீறிய செயல் என்று அமைச்சர் நாராயண சாமி தெரிவித்துள்ளார். மத்திய இணை அமைச்சர் நாராயண சாமி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தார். விமான நிலை யத்தில் அவர் செய்தி யாளர்களிடம் கூறிய தாவது:

டெசோ மாநாடு திமுக கூட்டுவது அவர் களுடைய தனிப்பட்ட விவகாரம். திமுக எங்கள் கூட்டணியில் இருந் தாலும் அவர்கள் தனிக் கட்சி. அந்த அடிப் படையில் அவர்கள் டெசோ மாநாடு நடத்து கின்றனர். டெசோ மாநாட்டில் என்ன பேசுகிறார்கள்? என்ன நடக்கிறது என் பதை உன்னிப்பாக கவனிப் போம் என்று இலங்கை அமைச்சர் ஒருவர் பேசியுள்ளது சரியல்ல. அடுத்த நாட்டில் நடக் கும் ஒரு மாநாட்டை மற்றொரு நாடு கண் காணிப்போம் என்று கூறுவது வரம்பு மீறிய செயல். அவ்வாறு அமைச்சர் பேசியிருந் தால் அதை ஏற்க முடி யாது.

லோக்பால் மசோதா நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனையில் உள்ளது. எதிர்க்கட்சியி னர் சிலர் வெட்டு தீர்மானங்களை கொடுத் துள்ளனர். எனவே அவர் களுடன் கலந்து பேசி ஆலோசிக்க வேண்டி யுள்ளது.

எனவே நாடாளு மன்ற தற்போதைய கூட் டத் தொடரில் லோக் பால் மசோதா நிறை வேற்ற வாய்ப்பில்லை. ராம்தேவ் கறுப்பு பண பிரச்சினைக்காக போராட்டம் நடத்தப் போவதாக கூறுவது தன் னுடைய சுய விளம்பரத் துக்காகவும் மக்கள் கவ னத்தை திசை திருப்பவும் நடத்தும் நாடகம். இவ்வாறு அவர் கூறி னார். 10-8-2012

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாடு: தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் வாழ்த்துசென்னை, ஆக.10- ஈழத்தந்தை செல்வா அவர்களின் புதல்வரும், சென்னையை தலைமை யகமாகக் கொண்ட புரோடெக் எனும் மனித நேயத் தொண்டமைப் பினை நடத்து பவரு மான சா.செ.சந்திரகாசன் அவர்கள், கலைஞர் அவர் களுக்கு மடலொன்று அனுப்பியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதம் வருமாறு: பேரணிகள், ஆய்வரங்கு கள், மாநாடுகள் எனத் தமிழின், தமிழ் இனத் தின் நலன் நாடி பல நூறு களங்கண்டவர் நீங்கள். தமிழ்த் தாயின் தலைமகனே! புறங் கூறுபவர்களைப் புறந் தள்ளுங்கள்.

இடம், பொருள், ஏவல் இலக்கணம் கண்ட தமிழ் கூறும் தத்துவம் உணர்ந்த தெளிவு நிறை தமிழ்த் தலைவர் நீங்கள்.

ஓரணி திரளாது, ஈழத் தமிழரின் கருத்துருவை ஒருமுகப்படுத்தாது செயல்படும்வரை ஈழத் தமிழர் வாழ்வில் விடி யல் எப்படி? என்று நாளும் ஆதங்கப்படு பவர் நீங்கள். அதனால் தான் உண்மை உணராது உங்களை வெறுத்து நிற்கும் ஈழத் தமிழர் களைக்கூட வையாது வாழ்வாங்கு வாழ்பவர் நீங்கள். உங்களை நாம் அறிவோம். எமது நல் வாழ்வுக்காய் ஏங்கும் உங்கள் எண்ணங் களையும் நாமறிவோம்.

கட்சியின் தலைவன், அரசியல் வழிகாட்டி, பல்வேறு இனங்கள் வாழும் கூட்டாட்சி நாட்டின் குடிமகன் என்ற பல்வேறு கயிறு களால் கட்டப்பட்டு நிற்கும்போதும், இன உணர்வால் ஈழத் தமிழர் மீது நீங்கள் காட்டும் அன்பே அவ்வப்போது உங்களுக்கெதிராக திரும்பி அம்பெனக் குத்தும்போதும், வலிபொறுத்து எம்மை அரவணைக்கும் செய லுக்கு என்றும் நன்றிகள் கோடி.

பெருமகனே! தமிழர் தலைமகனே! நெளிவு, சுழிவுகளும், உள்ளக நிலையும் தெளிவுறத் தெரிந்தவர் நீங்கள். மீண்டும் நீங்கள் அறை கூவிக் கூட்டியுள்ள டெசோ மாநாடு ஈழ மண்ணின் இரத்தக் கள ரிக்கும், ஈழத் தமிழர் களின் விரும்பத்த காத உயிரிழப்புகளுக்கும் முடிவு கட்டி அவர்தம் வாழ்வின் அமைதிக்கும், வளமான எதிர்காலத் திற்கும் பொருத்தமான வழியினைக் காட்ட வேண்டும் என்பதே என்னைப் போன்ற ஈழத் தமிழர்களின் விருப்பம்.

எனவே குவலயம் முழுக்கப் பரந்து வாழும் ஈழத்தமிழர்களின் வாழ் வுரிமைப் பாதுகாப்பு மாநாடாக உருவெடுத்து நிற்கும், சென்னையில் கூடும் டெசோ மாநாடு மகத்தான வெற்றி யுடன் உரிய இலக்கை அடைய உளமார்ந்த வாழ்த் துக்கள்.

இவ்வாறு சா.செ.சந் திரகாசன் அவர்கள், கலைஞர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மீண்டு(ம்) வந்துள்ளேன் உழைப்பதற்கு! தமிழர் தலைவர் தம் உருக்கமிகு அறிக்கை


புதியதோர் உலகு செய்ய புத்தாக்கத்துடன் பயணிப்பதற்கு மீண்டு வந்துள்ளேன், மீண்டும் வந்துள்ளேன் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கழகக் குடும்பத்தவர்களே, நலம் விரும்பும் நமது இன உணர்வாளர்களான நண்பர்களே,

அன்பு வணக்கம். நேற்று (9.8.2012) வியாழன் காலை சென்னை வந்து சேர்ந்தோம். பயணக் களைப்பு, இரு வேறு பகுதிகளின் கால மாற்றத்தினால் ஏற்படும் சோர்வு - இவை காரணமாக வீட்டில் நன்றாக உறங்கி ஓய்வு எடுத்து, பணிகளுக்கு ஆயத்தமாகி உள்ளேன்.

இந்த நாள்...

இன்று (10.8.2012) என்னை விடுதலை ஆசிரியர் பொறுப்பில் நியமித்து, மற்றவர் களுக்குத் தராத சுதந்தரத்தை - அவரது ஏகபோகத்தில் விடுதலை நாளேட்டை விட்டு விடுகிறேன் என்று அறியாத இளைஞனாக இருந்த என்மீது நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் வைத்த நம்பிக்கையைச் சுமந்து, அளவுக்கு மீறிய பொறுப்புணர்ச்சியையும், கடமை உணர்வையும் காட்டவேண்டும் என்ற மன உறுதியை மேற்கொண்டேன்.

எம்மைச் செயல்பட வைப்பது...

பெரியார்தம் ஒளி எம்மை தடம் மாறாமல் செயல்பட வழிகாட்டியது. அன்னை மணியம்மை யாரின் அன்பும், ஆதரவும், பாசமும், கழகக் குடும்பத்தினரின் உற்சாகமும், ஊக்கமும் என்னை கடந்த 50 ஆண்டுகளாக அலுப்பு அயர்வின்றி செயல்படுத்தி வருகிறது. நம் ஆசான் உருவாக்கிய வழிகாட்டும் நெறிமுறை கள் எனக்குத் தக்கதோர் புரசிஜர்கோட் (Procedure Code) ஆகி இருக்கின்றன.

இதைத்தான் எனக்குப் பெரியார் தந்த புத்தி போதும்; சொந்த புத்தி தேவையில்லை என்று கூறி வருகிறேன். இதை ஆழமாகப் புரிந்துகொள்ளத் தெரியாத சிலரின் அரைவேக் காட்டு விமர்சனங்களைத் தூசி தட்டிவிட்டு பணியைத் தொடருவோம்.

கழகப் பெருமக்களின் மறைவு!

அமெரிக்கப் பயணத்தின்போது இழக்கப் படக் கூடாத சமூக விஞ்ஞானிகளைப் போன்ற நம் இயக்கச் சுயமரியாதைச் சிங்கங்கள், கொள்கைத் தங்கங்கள் பலரது மறைவு எம்மை மிகவும் வருத்தியது; வாட்டி மனவேதனையை அடையச் செய்தது!

என்ன செய்வது! இயற்கையின் கோணல் புத்தி அது!

லட்சிய வீரர்கள் திருவாரூர் மண்டலத் தலைவர் மானமிகுவாளர்கள் எஸ்.எஸ். மணியம், மூத்த பெரியார் பெருந்தொண்டர் எஸ்.கே. சின்னப்பன், மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோமல் நடராசன், சட்ட எரிப்பு வீரர் எடகீழையூர் து. கண்ணுசாமி, காஞ்சிபுரம் கழக ஆர்வலர் டாக்டர் இராகவன், வாஞ்சைமிகு தஞ்சை ப. நாராயணசாமி, நாஞ்சில் ஆறுமுகம் மற்றும் பெரியார் விருது பெற்று, கணினித் துறையில் புதுமைகளைப் புகுத்திய ஆண்டோ பீட்டர்.... முதலியவர்கள் இழப்பு ஈடு செய்ய இயலாதது. அவர்களுக்கு நமது வீர வணக்கங்கள்!

என்னிடம் ஏற்படுத்திய நம்பிக்கை

துன்பமும், இன்பமும் கலந்து மாறி மாறி வருவதுதானே வாழ்க்கை என்பது! அதன்படி நான் தமிழ்நாட்டில் இருக்காமல், அமெரிக் காவில் பல கல்விப் பல்கலைக் கழகங்கள் நடப்பதை அறிந்தும், இதய நெருக்கடி காரண மாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதால் ஏற்பட்ட கால நீட்டத்தில் நாளும் விடாமல் இணையத்தின்மூலம் கழகச் செய்திகளையும், பிரச்சாரக் களங்கள்பற்றியும், விடுதலை சந்தா சேர்க்கும் கடமையாற்றுவதில் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மாவட்ட மற்றும் அனைத்துக் கழகப் பொறுப்பாளர்கள் காட்டிய ஆர்வம், கடமை உணர்வு மிகுந்த என்னுள் நம்பிக்கையை ஏற்படுத்தின.

மீண்டு(ம்) வந்துள்ளேன்!

அமெரிக்க மருத்துவமனைக்குள்ளே சென்று மிகவும் அபாயத்தை உள்ளடக்கிய ஒரு இதய சிகிச்சைக்கு ஆயத்தமானபோது, அய்யாவும், அம்மாவும், கழகத் தோழர்களும் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றிய நிம்மதி எனக்குத் துணிவினை, வலுவினைத் தந்தது.

மீண்டு வந்துள்ளேன்!

மீண்டும் வந்துள்ளேன் - உழைப்பதற்கு!!

இனி என் கடன் என்றும்போல் பணி செய்து கிடப்பதே!

பயணங்கள் முடிவதில்லை - பாதைகள் செப்பனிடப்படுகின்றன.

விடுதலை பரவாத கிராமம் - வீடு இல்லை என்ற அளவுக்கு - புதுப்புது உத்திகள் - புதுப்புது முயற்சிகளை உருவாக்கி ஆசானின் கொள்கைகளை அகில உலக மயமாக்குவோம்!

அதற்கு அய்யா தந்த அறிவாயுதம் கூர்மழுங்காது; வாளின் வலிமையைவிட இந்த ஏட்டின் வல்லமை அதிகம்!
புதியதோர் உலகு செய்வோம்!

புதியதோர் உலகு செய்ய, புத்தாக்கத்துடன், புத்தெழுச்சியுடன் பயணிப்போம்!

உடனடியாக சென்னையில் டெசோ நடத்தும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் சந்திப்போம்!
வாருங்கள் தோழர்களே, தோழியர்களே!

நன்றி! நன்றி!! நன்றி!!!


கி.வீரமணி,
ஆசிரியர், விடுதலை 10-8-2012

தமிழ் ஓவியா said...

சிந்தனைப்பூக்கள்நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திருதராஷ்டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப் பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயிருக்கின் றது என்றால் உடனே கோபித் துக் கொள்ளுகின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.

மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதாயுகத்து கெய்டைப் பார்த்து, கலியுகத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென்கின்றோம்.

பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

மேல்நாட்டானுக்கு பொருளாதாரத்துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத் தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.

அரசியல் இயக்கம், முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால், சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

பார்வதி - பரமசிவன் முத்தக் காட்சி!

திருவாக்குஞ் செய்கருமங்

கை கூட்டுஞ் செஞ்சொற்

பெருவாக்கும் பீடும்

பெருக்கும் - உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆணை முகத்தானைக் காதலாற் கூப்புவர்தங் கை

விநாயகக் கடவுளை வணங்கிக் காரியங்களைத் தொடங்கினால் நல்லது என்று கூறும் பண்டாரச் சன்னதிகளே! வேழ முகத்தானின் வாழ்க்கை வரலாற்றினைப் பாரீர்.

கசமுகாசுரன் என்பவன் தவம் செய்து, தான் மனிதராலும், விலங்குகளாலும், பிறவற்றாலும் காலமெல்லாம் இறவாதிருக்க வேண்டும் என்று வரம் பெற்றான். அந்த வரம் பெற்றமையால் அவன் தேவர்களைத் துன்புறுத்தினான்.

தேவர்கள் சிவபெருமானை வேண்ட சிவன் விநாயகனை உண்டாக்க வேண்டும் என்று எண்ணினான். அதனால் தன் துணைவி சக்தி யோடு தோட்டத்திலே வீற்றிருந்தார். அப்பொழுது அங்கே ஓர் ஆண் யானை, பெண் யானையைப் புணர்தல் கண்டு, சக்தி பெண் யானை வடிவங் கொள்ள, சிவன் ஆண் யானை வடிவங் கொண்டு புணர்ந்தார். அவர்கட்கு யானை முகமும் மனித உடலுமாக ஒரு குழந்தை தோன்றியது. இதுதான் இன்று ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கும் கரியின் முகவன் கதை, இதற்கு ஆதாரமாக, திருஞான சம்பந்தர் தனது தேவாரத்தில்-

பிடியத னுருவுமை

கொளமிகு கரியது

வடிகொடு தனதடி

வழிபடு மவரிடர்

கடிகண பதிவர வருளினன்

மிகு கொடை

வடிவினர் பயில்வலி

வலமுறை யிறையே

என்று பாடியுள்ளார். இப்படிக் காமத்தின் விளைச்சலால் மக்கள் பிறவியிலிருந்து, விலங்குப் பிறவியெடுத்து இணைந்த பிண்டங்களின் சதைக்கலப்பில் விளைந்த விநாயகன் வணங்க வேண்டிய கடவுளா? இதோடு மட்டுமல்ல, தன்னை ஈன்ற தாயும் தந்தையும் காமக் காய்ச்சல் மிகுதி யினால் உதட்டுச்சுவை பருகும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தாராம், நெற்றிக் கண்ணனார் பெற்ற மகன்.

மும்மைப் புவனம்

முழுதீன்ற முதல்வி

யோடும் விடைப்பாகன்

அம்மை தருக

முத்தமென அழைப்ப

வாங்கே சிறிதகன்று

தம்மின் முத்தங்கொள

நோக்கிச் சற்றே

நகைக்கும் வேழமுகன்

செம்மை முளரி

மலர்த்தா ளெஞ்சென்னி

மிசையிற் புனைவாமே

மூன்று உலகங்களையும் பெற்ற சக்தியிடத்து, எருதுவை ஊர்தியாக உடைய சிவபெருமான், அம்மையே முத்தம் தருக எனச் சொல்லி அழைக்க அவர்களுக்கு இடையே இருந்த விநாயகன் சிறிது நீங்கிட, சிவனும், பார்வதியும் ஒருவரையொருவர் முத்தமிட்டு கொள்ள அதனைக் கண்டு புன்னகை செய்யும் யானை முகனது சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை எமது தலையின் மேல் அணிந்து கொள்வோம் என்று கூறுகிறது நந்திக் கலம்பகம் எனும் நூல்.

பெற்றவர்கள் முயங்கும் போது உற்றுப்பார்த்து மகிழ்ந்திடும் காமவல்லி பெற்ற திருக்குமரன் விநாயகக் கடவுளை வீரமரபில் வந்த தமிழினம் வணங்க வேண்டியதுதானா? புராணப் புரட்டர் களின் மூளைச் சுரப்பிலிருந்து உதயமான ஆபாசக் கடவுளுக்கு ஆற்றங்கரையில் சிலை ஏன்? இந்த வெட்கங் கெட்ட உறவில் விளைந்த யானை முகத்தானுக்கு தேங்காய் உடைப்பும், நைவேத் தியமும் ஒரு கேடா? தமிழினமே! சிந்தித்துச் செயல்படு!

- பெரியகுளம் அருளாளன்

தமிழ் ஓவியா said...

கண்மணி வீரமணியின் அரும்பணி!


பனிமொழி பகர்ந்து தனி அன்பினைக் கலந்து என்றும் எனை வரவேற்கத் தவறாத என் ஆருயிர் இளவல், இன்று தன்மானத் தோழர்களால் தமிழர்க் குத் தலைவரென அழைக்கப்படும் வீரமணியாரின் தீரம் மிக்க திறனால் போற்றிப் பாதுகாக்கப்படும் தந்தை பெரியார் தந்து விட்டுச் சென்ற மாட மாளிகை அல்ல; கூட கோபுரம் அல்ல; அவற் றையும் மிஞ்சும் வண்ண மிகு எண்ணங்கள் - தமிழ் வசீகர வளாகத்தைக் கண்டேன்; ஆங்கமைந்த கலைவாணர் அரங்கம் ஒன்றில் ஓங்கு கதிர் சூரியனாம் உண்மை ஒளிர் தலை வனாம் உலகம்போற்றும் பெரியாரை, ஒவ்வொரு இளங்கலைஞர்களின் இசை யில், நடனத்தில், ஆட்டத்தில் அனைத் திலும் அடியேன் கண்டு ஆனந்தப் பரவசமுற்றேன்.

அருவியில் குளித்தோர்க் கும் அந்த இன்பம் கிடைப்பதில்லை. அடாத அரசியல், கொடும் வெயிலில் காய்ந்திடும எனக்கு அந்த அருவிச் சோலையில் கிடைத்த புத்துணர்ச் சியைத்தான் என்னென்று புகழ்வேன்?

இருபது ஆண்டின் முன்னே இளவல் வீரமணி எனையழைத்து, அங்கே சோலை நடுவே அய்யாவின் சிலையை நாட்டச் சொன்னார். அந்த சிலை இன்றைக்கும் அங்கேயிருந்து என்னை அருகணைத்து உச்சி முகர்ந்தது போல் கண்ட உணர்வு எத்துணை மகிழ்ச்சியானது! எப்படி என் உடலைச் சிலிர்க்க வைத்தது?

அய்யாவுக்குப் பிறகு அவர் ஆரம்ப காலந்தொட்டு சேர்த்து வைத்த ஆஸ்தி, பாஸ்தி, கட்டிவைத்த கட்டடங்கள், அறிவுக் கூடங்கள், விட்டுச் சென்றுள்ள கொள்கை கள், வீரம் மிக்க அறைகூவல்கள் இத்தனையை யும் கட்டிக் காக்க, யாருளர் என்று நமக்கெலாம் எழுந்த அய்யப்பாட்டை, இதோ நானிருக்கிறேன் என்று எடுத்துக்காட்டி ஏறுபோல் நம்மை நிமிர்ந்து பார்க்கின்ற என்னரும் இளவல், பெரி யாரின் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடர், தன் மான முரசு வீரமணியார். என் கண்ணிலும் அவர் கண்ணிலும் நீர் துளிக்க, அது ஆனந்தப் பன்னீராக இருக்க, ஒருவரையொருவர் தழுவிக்கொண்டோம். உமது முயற்சிகள் வெல்க! இங்கு வளரும் பூங்கொடி கள், பூஞ்செடிகள், புதுமை மணம் பெறுக! இன்றுபோல் என்றென்றும் இது பகுத்தறிவுப் பண்ணையாகத் திகழ்க! என்று வாழ்த்தினேன். அவரும் வாழ்த் தினார்.

அறிவுப் பணி, அதற்குத் தேவையான அமைப்புப் பணி, அதிலும் ஒரு கட்டுப் பாட்டுப் பணி என இப்படி கடமைப் பணியாற்றுகிற சுயமரியாதை இயக்கக் கண்மணியாம் வீரமணியாரின் நிருவாகப் பணியை நேரிலே காணும் வாய்ப்பு இனியும் பலமுறை இந்த வாய்ப்பு எனக்குக் கிட்ட வேண்டும் என பேராவலுடன் விடை பெற்றுக்கொண்டேன்.

ஆங்கொரு நூலகத்திற்கு விழா மேடையில்இறுதிக் கட்டமாக ஓர் அறிவிப்பு: கலைஞர் கருணாநிதி நூலகம் என்று அது அழைக்கப்படும் என்று! திணறிப்போனேன். தேன்குடத்தில் தூக்கிப் போட்டுவிட்டார்களேயென்று!

பெரியாருக்குக் காலணியாய் இருப்பது போல், பெரியார் பெயரில் அமைந்துள்ள அந்தப் பூங்காவில் நூலகம் என்ற ஒரு நுண்ணிய கொடியாக இருந்துவிட்டுப் போகிறேன். அது எனக்கு பிறவிப் பெரும் பயன்தான்.

(முரசொலி 15-10-2008, திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி நூலகத் திறப்பு விழாவில் - முதலமைச்சர் கலைஞர்.)

தமிழ் ஓவியா said...

உண்மை


உண்மைதான் உலகத் தின் அறிவுச் செல்வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம்.

உண்மையே இன்பத்தின் தாய். உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மை யைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான். ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவினாலும் உண்மையைக் கண்டு பிடிக்க முடியும். துணிவு பெற்றவனால்தான் உண்மை யோடு நடக்க முடியும்.

கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, இரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும்.

உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத்தைக் காட்டுபவன் ஆவான்.

-ஆர்.ஜி.இங்கர்சால்

தமிழ் ஓவியா said...

தவறைக் கண்டிக்க உரிமை வேண்டும்


உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றிய பொதுமக்கள் கருத்துத் தெரிவிப்பது, கோர்ட்டை அவமானப் படுத்துவதாகும் என்ற பூச்சாண்டியை இனியாவது அம்பலப் படுத்தவேண்டும். உயர்நீதிமன்றத்து நீதிபதிகளும் மனிதப் பிறவிகளாதலால், ஆசாபாசங்களுக்கும், சமுதாய உணர்ச்சி களுக்கும், தவறுகளுக்கும் கட்டுப்பட்ட வர்கள். இவர்களை நியமிக்கின்ற இந் தியக் குடியரசுத் தலைவரையும் அவருக்கு அடுத்தபடியாக உள்ள இந்திய தலைமை அமைச்சரையும் கண்டிக்கவும், கொடும்பாவி கட்டிக் கொளுத்தவும், இவர்கள் எல்லோருக்கும் மேம்பட்டதாகக் கூறப்படுகின்ற இந்திய அரசியல் சட்டம் என்பதையும்,அதற்கும் மேம்பட்டதாகக் கூறப்படுகிற தேசியக் கொடி என்பதையுமே கிழித்துப் போட்டுத் தீ வைக்கவும், ஜனநாயக சமூகத்தில் உரிமையிருக்கும்போது, சாதாரண சர்க்கார் உத்தியோகஸ்தர்களில் ஒருவரான நீதிபதியின் தீர்ப்பைத் தவறு என்று கண்டிப்பதற்கு மக்களுக்கு உரிமையிருக்க வேண்டாமா?

- 6-11-1956 விடுதலை தலையங்கத்தில் தந்தை பெரியார் கருத்துரை

தமிழ் ஓவியா said...

டெசோ சிந்தனை: ஈழத் தமிழர் பற்றி விடுதலை ஆசிரியர்


கேள்வி: இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண் பதில் வடநாட்டுக்காரர்கள் சிலர் எதிர்க்கிறார்களே?

தமிழர் தலைவர்: வடநாட்டுக்காரர்கள் என்ன? தமிழ்நாட்டிலே இருக்கின்ற சுப்பிரமணிய சாமிகளும், சோ ராமசாமிகளும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரி மைக்கு ஒரு நல்ல விடியல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை வைத்து விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அவர்களை அழிக்கவேண்டும் என்று சொல்லி, தமிழ் ஈழத்தை, தமிழின உணர்வாளர்களைக் கொச்சைப் படுத்துபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்கவேண்டும் என்று சொன்னவர்களும் இவர்கள்தான். ஆகவே, தமிழின உண்மையான உணர்வுள்ளவர்கள் யார்? தமிழின உணர்வுகளுக்கு எதிரானவர்கள் யார்? என்பதை இதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்க வாருங்கள்

கேள்வி: இலங்கைப் பிரச்சினையில் அரசியல் கட்சியினர் எல்லோரும் ஒரே அணியில் வருவார்களா?

தமிழர் தலைவர்: ஈழத்தமிழர் பிரச்சினையில் எல்லோரும் ஒரே அணியில் சேர வேண்டும் என்று சொல்லுகிறோம். அவரவர் களுக்கு பல அரசியல் நிலைப்பாடுகள் இருக்கலாம். இருந்தாலும் ஈழத்தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை தேவையில்லாமல் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

எந்தவித சுருதி பேதமும் இந்தப் பிரச்சினையில் இருக்கக் கூடாது. இதய சுத்தியோடு வர வேண்டும் இவர் இதற்கு முன் என்ன சொன்னார்? அவர் இதற்கு முன் என்ன சொன்னார் என்ற விமர்சனங்கள் கூடாது. டெசோ போன்ற ஓரமைப்பைத் திராவிடர் கழகம் மீண்டும் துவக்க வேண்டும் என்று கருதுகிறோம். திராவிடர் கழகம்தான் அதற்கு தலைமை தாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை திராவிடர் கழகம் அமைப்பாளராக இருக்கும். ஈழத்தமிழர் பிரச்சினை யில் எல்லோரும் ஒன்றாக வரவேண்டும் என்பதுதான் தாய்க்கழகத்தின் வேண்டுகோளாகும். இப்பொழுது ஒரு நல்ல சூழல் உருவாகியிருக்கிறது.

இராஜபக்சேவின் தோல்வி

இலங்கையில் இனப்படுகொலைகள், மனித உரிமைகள் மீறப்பட்ட பிறகு இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலகத் தமிழர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள், பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன் தலைமையில் திராவிடர் கழகத்தின் சார்பாக தலைமை நிலையச் செயலாளர் போன்றோர் எல்லாம் அய்.நா. மன்றத்தின் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் 18.5.2011 அன்று நடத்தினர். எனவே, உலகத் தமிழர்களிலிருந்து தமிழகத் தலைவர்கள் வரை இலங்கையின் மனித உரிமை மீறல்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததற்கு தற் பொழுது ஒரு நல்ல பயன் கிடைத்திருக்கிறது. உலக நாடுகளில் 24 நாடுகள் இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து வாக்களித்து அய்.நா. தீர்மானத்தை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.

அமெரிக்க நாட்டின் வெளியுறவுத் துறையின் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் அவர்களே இலங்கை நாட்டின் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறியிருக்கிறார். இந்தத் தீர்மானம் செயலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ராஜபக்சே வின் அனைத்து முயற்சிகளும் இப்பொழுது தோல்வி கண்டுள்ளன.

சென்னை பெரியார் திடலில் 24.3.2012 அன்று காலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியவை

தமிழ் ஓவியா said...

தோளில் துண்டுப் போடுவது


தோளில் துண்டு போடுகிற கலாச்சாரம், இடுப்பில் துண்டு கட்டுகிற கலாச்சாரத் திற்கு எதிராக வந்தது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத உயர்ஜாதிக்காரர்களைத் தவிர, வேறு யாரும் சட்டை அணியக் கூடாது. தோளில் துண்டுப் போடக்கூடாது, அப்படியே போட்டாலும் உயர் ஜாதிக்காரர்களை கண்டால் அந்தத் துண்டை எடுத்து இடுப்பில் கட்ட வேண்டும் என்று இருந்த அநீதியை எதிர்த்து பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம் கடுமையாகப் போராடியது.
ஒடுக்கப்பட்

ட இசை வேளாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த நாதஸ்வரம், தவில் வாசிக்கிற கலைஞர்கள், தோளில் துண்டுபோடக்கூடாது, என்று இருந்த ஜாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து, பெரியாரின் போர்வாளான பட்டுக்கோட்டை அழகிரி தொடர்ந்து போராடி, அவர்களுக்கு அந்த உரிமையை பெற்றுத் தந்தார்.
இன்று கூட தோளில் துண்டு

போடுகிற பழக்கம் அரசியல் கட்சிகளில் அதிகம் இருப்பது திமுகவிடம்தான். அதற்குக் காரணம் பெரியார் மூலம் ஏற்பட்ட பழக்கமே. தோளில் துண்டு போடுகிற இந்தப் பழக்கம், திராவிட இயக்கங்களின் பழக்கம் என்பதினால்தான் பார்ப்பன பத்திரிகைகள் அரசியல்வாதிகள் பற்றியான நகைச்சுவைகளில், கார்ட்டூன்களில் தோளில் துண்டு போட்ட உருவங்களையே வெளியிடுவார்கள். அரசியல்வாதிகள் தோளில் துண்டு போட்டுக் கொள்வது உங்களுக்கு எந்த வகையில் இடைஞ்சலாக இருக்கிறது? நீங்கள் ஏன் எரிச்சல் அடைகிறீர்கள்? தோளில் துண்டு போடுவது அநாகரிகமல்ல, சுயமரியாதை. தோளில் பூணூல் போடுவதுதான் அநாகரிகம்.
2007 ஆம் ஆண்டு எழுதியது.. வழக்கறிஞர்

கு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு மாத இதழுக்ககாக ஜூலை 2007 ஆம் ஆண்டு எழுதியது. எஸ்.என்.சிவசைலம், சேலம்.

தமிழ் ஓவியா said...

ஆண்டுகள் ஐம்பது போயின


நாத்திகத்தின் போர்வாளை
கூர் தீட்டும் பணியில் உங்கள் வாழ்வில் ஐம்பதாண்டுகள் போயின
பரம்பரை எதிரிகளின்
பாசாங்கு மொழிகளை
திராவிடருக்கு
எடுத்து இயம்பும் பணியில்
ஆண்டுகள் ஐம்பது கழிந்தன
தங்கள் வாழ்வில் ஒவ்வொரு வீட்டின்
முற்றத்திலும் முரசு அறைந்து சொல்வது போல்
தந்தை பெரியாரின் கொள்கை ஒலிக்கும்
விடுதலைக்கு ஆசிரியராய்
உங்கள் வயதில் ஆண்டுகள் ஐம்பது போயின

வண்ண அச்சா கூடுதல் பக்கங்களா இன்னும் ஒரு பதிப்பா அதுவும் திருச்சியிலா இணையத்திலும்
உலகெங்கும் விடுதலையை
உடனுக்குடன் படிக்க
ஏற்பாடா எனக் கேட்போர் வியக்க வளர்ச்சியை
நோக்கியே வலம்வரும் நாத்திக விடுதலையின்
நயம் மிக்க ஆசிரியரே !
எங்களின் திசைகாட்டியே !

ஐம்பது வயதைத் தொட்டாலே அலுத்துக்கொள்வோர் ஏராளம் என்ன இருக்கிறது இனி
என அவர்கள் விடும் ஏக்கப் பெருமூச்சுகள்
தாராளம்

அல்ல ! அல்ல !
ஐம்பதுக்குப் பின் என்
சாதனைகள் பாரீர்
எனப் பட்டியலிடும் அணிவகுப்பாய்
எழுத்துக்களும் பேச்சுக்களும்
எண்ணிலடங்கா இயக்க செயல்பாடுகளும் ...

பெரியார் என்னும் சகாப்தத்தின் தொடர்ச்சியாய் தொடர்ந்திடும் தங்கள் தொண்டு தொடர்ந்திடவே
துணை நிற்போம் என்றும்.

முனைவர் வா. நேரு, தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்.

தமிழ் ஓவியா said...

போக்குவரத்தைக் கவனித்த முதல்வர் காமராசர்


கல்வி வள்ளல் - பச்சைத் தமிழர் கர்மவீரர் என்று புகழப்படும் காமராசர் அவர்கள் இரவு நீண்ட நேரம் விழித்து கடமை ஆற்றிய முதல்வர் என்பது எத்தனை சரியோ அத்தனை சரியான விசயம் எங்கும் படுத்தவுடனே அவர் தூங்கி விடுவார். காரில் எங்காவது நெடுங்தூரப் பயணம் என்றால் காரின் பின் சீட்டில் அப்படியே சுருட்டி படுத்து விடுவது அவரது வழக்கம் -_ வெளியூர் சுற்றுப் பயணம் முடித்து அவர் அப்படித் திரும்பிக் கொண்டிருந்தார் ஒரு சமயம். ஒரே இடத்தில் நீண்ட நேரம் தனது கார் அப்படியே நிற்பதும் ஏராளமான கார்களின் ஆரன்கள் ஒலிப்பதும் அவரை விழிப்படையச் செய்தன. எழுந்து வெளியே பார்த்தார் காமராசர் சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் (அப்போது மர்மலான் பாலம்) டிராபிக் ஜாம் ஆகியிருந்தது முன்னால் பார்த்தார். காமராசர் நடுப் பாலத்தில் ஒரு லாரி பிரேக் டவுன் ஆகியிருந்தது ஒரே ஒரு டிராபிக் போலீஸ்காரர் போக்குவரத்தை சரிபடுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

தான் ஒரு முதலமைச்சர் என்பதை எல்லாம் மறந்து விட்டு உடனே காரை விட்டு இறங்கி தானும் அந்தப் போலீஸ்காரரோடு உதவியாக இருந்து போக்குவரத்தை சரிப்படுத்திவிட்டே மறுபடியும் காரில் ஏறினார் காமராசர். அது மட்டுமல்ல. பொறுப்போடு சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் போய் அது போன்ற இடங்களில் இன்னொருவரைக் கூடுதலாகப் போட்டால் என்னண்ணேன் என்று கண்டித்து விட்டும் வந்தார். ம். இப்படியெல்லாம் தமிழகத்தில் முதல்வர் இருந்தார்கள். அது ஒரு காலம்.

தகவல்: மு. அன்புக்கரசன், பெரியகுளம்

தமிழ் ஓவியா said...

பிள்ளையார் ஊர்வலங்கள்


பிள்ளையார் என்ற இந்து மதக் கடவுளுக்குப் பல நாமகரணங்கள் உண்டு என்றாலும், அதனைப் பெரிது படுத்தி விளம்பரம்செய்து இந்தியத் துணைக் கண்டத்தின் தேசியத் திருநாள் போல பிள்ளையார் சதுர்த்தியைப் பெரிதுபடுத்தி யுள்ளனர்.

இதனை முக்கியப் புள்ளியாக வைத்து இந்துத்து வாவுக்கு ஒரு புதிய உந்து சக்தியை உண்டாக்குவதற்கான வகையில் மூளையைச் செலுத்தியவர் மகராஷ்டிரப் பார்ப்பனரான பாலகங்காதரத் திலகர்.

பிள்ளையார் என்பதற்கு இன்னொரு பெயர் வினாயகர் என்பதாகும். கவுதம புத்தருக்கு இந்தப் பெயர் உண்டு. இந்தப் பெயரை உருட்டல் புரட்டல் செய்து, எங்கெங்கெல்லாம் புத்தர் உருவச் சிலைகள் இருந்தனவோ அந்த இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளை அப்புறப்படுத்தி விட்டு, இந்த விநாயகனாகிய பிள்ளையாரின் சிலை களைச் செய்து வைத்துவிட்டனர்.

ஆரியப் பார்ப்பனர்களின் மனப்பான்மையைத் தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமாக இருக்காது.

பொம்மைகளைக் கோயில்களில் கடவுள் களாக்கி, அவற்றின் ஏஜென்டுகளாகப் பார்ப்பனப் பெருச்சாளிகள் புகுந்து கொண்டு மக்களின் அறியாமை, அச்சம், பேராசை இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தங்களைப் பிறவி முதலாளிகளாக ஆக்கிக் கொண்டு, சுரண்டல் வேலையை அதிகார பூர்வமான தொழிலாக செய்து கொண்டவர்கள் இந்தப் பார்ப்பனர்கள்தாம்.

விநாயகன் என்ற கடவுளின் உருவத்தைப் பார்ப்பவர்களுக்கு இப்படி ஒரு மிருகமே இருக்க முடியாது என்கிறபோது எப்படி கடவுளாக இருக்க முடியும் என்ற கேள்வி எழாமல் போகாது.

உருவமற்றவர் கடவுள் என்று ஒரு புறத்தில் ஓதிக் கொண்டு, இவ்வளவு ஆபாசமாக ஒரு கடவுளை ஆரியப் பார்ப்பனர்கள் உருவாக்கியுள்ள பித்தலாட்டத்தை என்ன சொல்ல!

எந்த அளவுக்கு விநாயகனைப் பயன்படுத் தினார் திலகர் என்றால், இரண்டு ஆங்கில அதிகாரிகளை படுகொலை செய்யும் அளவுக்கு வெறியை ஊட்டினார்.

புனேயில், பிளேக் நோய் பரவியதால், அந்த நோய்க்குக் காரணமான எலிகளை வேட்டையாட ஆங்கிலேயர் ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டு, செயல்படுத்தவும் பட்டது.

அந்தத் தருணத்தில் இந்த திலகர் என்னும் பார்ப்பனர் - கிறிஸ்தவர்களாகிய வெள்ளைக் காரர்கள் நமது கடவுளான விநாயகரின் வாகனத்தைக் கொல்லுகிறார்கள். இதனை அனுமதிக்கலாமா என்ற ஆவேச வெறியைக் கிளப்பினார்.

இதன் காரணமாக இந்துத்துவா வெறியர்கள் இரு ஆங்கிலேய அதிகாரிகளைச் சுட்டுக் கொன்றனர். இதன் காரணமாக திலகர் தண்டிக்கப்படவும் செய்தார்.

அந்தக் காலந்தொட்டு நாடு தழுவிய அளவில் பிள்ளையார் ஊர்வலங்களை சிறுபான்மையினரி டம் கலகம் விளைவிக்கும் ஒருயுக்தியாக மேற் கொண்டனர். இந்த அனுபவம் சென்னையிலும் உண்டு.

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண் டும் என்றால் வீட்டுக்குள் கொண்டாடிக் கொண்டு தொலையலாம். வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள கிணறுகளிலும், குளங்களிலும் பிள்ளையார் சிலைகளைக் கரைக்கலாம். (அப்படித்தான் நடந்து வந்தது;) திலகரின் திட்டத்துக்குப் பிறகுதான் வீதிகளில் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று கடலில் கரைக்கும் கைங்கர்யம் நடைபெறத் தொடங்கியது.

நீர்நிலைகளில் கரைக்கப்படும் பிள்ளையார் பொம்மைகளில் வண்ணம் தீட்டப்பட்டு இருக்கக் கூடாது. இராசயனக் கலவையான வண்ணம் தீட்டப்பட்டிருந்தால் அது தண்ணீரை நஞ்சாக்கும், சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டுத் துறை எச்சரிக்கிறது.

அது குறித்து எந்தவித மதிப்பையும் கொடுக் காமல் பல வண்ணப் பிள்ளையார்களை ஊர்வல மாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக் கிறார்கள்.

குறிப்பிட்ட அடி உயரத்திற்கு மேல் பிள்ளையார் பொம்மைகள் எடுத்துச் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டும், அதை இந்துத்துவவாதிகள் பொருட்படுத்துவதில்லை. இந்த முறையாவது காவல்துறை என்ன செய்யப்போகிறது என்பதை யும் பார்ப்போம்! 11-8-2012

தமிழ் ஓவியா said...

50 ஆண்டுகளுக்கு முன்....


அறிவுடையார் எல்லாம் உடையார். அறிவினைப் பெறும் வழிகல்வி இப்படி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்வள்ளுவர் அறுதியிட்டுக் கூறினார். ஈ.வெ. ராமசாமி தம் வாழ்நாள் முழுவதும் எடுத்துரைத்து வந்தார்.

பெரியார் பொது வாழ்க்கைக்கு வந்த காலத்தில், எத்தனையோ பள்ளிக் கூடங்களில், ஆதி திராவிடர் பிள்ளைகளை சேர்க்கவே மாட்டார்கள். ஆகவே அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட் டவர்கள் சிலராவது படித்தால் தான், பள்ளிக்கூடம் அங்கீகரிக்கப்படும் என்று அரசு ஆணையிட நேர்ந்தது. அது பல்லாண்டு ஏட்டளவில் நின்றது ஏன்? சிற்றூர்களில் ஆதிதிராவிடப் பிள்ளைகள் மற்றவர்களோடு இருந்து படிக்க முயன்றால், பல பகுதிகளில் மற்ற சாதிக்காரர்கள் தாழ்த்தப்பட் டவர்களை பலவகையான துன்பங்களுக்கு ஆளாக்குவார்கள்.

ஆசிரியர்கள், சில வேளை சில ஆதி திரா விடர்களை பதிவேட்டில் எழுதி வைப்பார்கள். ஆனால், பள்ளிக்கு வர விடுவதில்லை. ஆய்வாளர், ஆண்டு தணிக்கைக்கு வரும்போது, அப்பிள்ளை களை கொண்டு வந்து யாரும் தொடாமல் ஒரு மூலையில் உட்கார வைத்து அனுப்பி விடுவார்கள். பெரும்பாலான ஆய்வாளர்கள் அதற்கு உடந்தை யாக இருப்பார்கள்.

பார்ப்பனரால் விளைந்த கேடு!

கோவைக்கு அருகிலுள்ள சிங்காநல்லூரிலும், இருங்கூரிலும் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட பிள்ளை களை 1930ஆம் ஆண்டு தொடக்கம் வரையில் சேர்க்காமல் இருந்தார்கள். பிறகு, கோவை சமூகத் தொண்டு சங்கத்தாரின் தலையீட்டால், சில பிள்ளைகள் சேர்ந்தார்கள். பார்ப்பனர்கள், உள்ளூர் பார்ப்பனரல்லாத காவல்துறை சப்-இன்ஸ் பெக்டரை வசப்படுத்திக் கொண்டு, பார்ப்பனத் தெரு வழியே பிள்ளைகள் போகக் கூடாதென்று விரட்டினார்கள். திரு. ஆர்.கே.சண்முகம் எம்.எல்.ஏ., சிங்கா நல்லூர் சென்று சப்-இன்ஸ்பெக்டரிடம் பேசினார். பலனில்லை, கோவை டெப்டி சூப்பிரன் டெண்டை அழைத்து வந்து ஆணையிடச் செய்தார். இருப் பினும் பழமை தொல்லை கொடுத்தது.

திரு.ஆர்.கே. சண்முகம் கட்டி வந்த நூற்பாலை கட்டுமான வேலைக்கு ஆள் போகாதபடி கட்டு திட்டம் செய்தார்கள். மீண்டும் ஆர்.கே.சண்முகம் சிங்காநல்லூருக்கு வந்தார். பார்ப்பனத் தெருவில் தீண்டப்படாதவர்கள் நடந்ததற்காகச் செய்யப்படும் கட்டுப்பாட்டால் நீங்கள் கூலி இழந்து பட்டினி கிடக்கப் போகிறீர்களே ஒழிய, எந்தப் பார்ப்பன னாவது தன் வேலையை விட்டு விட்டு சும்மாயிருக்க போகி றானா? என்று ஆர்.கே. சண்முகம் கேட்டார். அப்புறம் பார்ப்பனரல்லாதாருக்குத் தெளிவு ஏற்பட்டது; வேலைக்கு வந்தார்கள்.

தொடக்கப்பள்ளியில் ஆதி திராவிடர்களை சேர்ப்பதற்கு இத்தனைப்பாடு! இந்திய சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கே.சண்முகமே தலையிட்டு சேர்க்க வேண்டிய நிலை.

நீதிக்கட்சியின் குரல்

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், தாழ்த்தப் பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நசுக்கப்பட்டவர்களுக்கும் முதலில் குரல் கொடுத் தது, நீதிக் கட்சியாகும்.

அக்கட்சித் தலைவர்கள், இவரைத் தொடலாம், அவரை தொடக்கூடாது என்னும் மனப்பான்மையில் இருந்து விடுபடத் தொடங்கிய முன்னோடிகள் ஆவார்கள்.

உயர்திரு. நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் தீட்டிய புரட்சியாளர் பெரியார் என்ற நூலிலிருந்து, பக்கம் 53-55

தமிழ் ஓவியா said...

1939ஆம் ஆண்டிலேயே...
எழுத்துரு அளவு
ஈழத் தமிழர் பிரச்சினை - இன்று - நேற்றல்ல, 1939ஆம் ஆண்டிலேயே பற்றி கழகம் அக்கறை செலுத்தியுள்ளது. இதோ ஆதாரம்:

தீர்மானத்தை இதே படிக்கிறேன்:

ஈழத் தமிழர் இன்னல்

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் நிருவாகக் கமிட்டிக் கூட்டம் 10-8-1939 அன்று ஈரோட்டில் பெரியார் மாளிகையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத் தியதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப் படுத்த ஏற்பாடு செய்வதையும் கமிட்டி கண்டிப்ப தாகவும், அதற்கு ஈ.வெ.ராமசாமி, ராவ்பகதூர் சாமியப்ப முதலியார், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், ஊ.ப.அ. சவுந்தரபாண்டியன் ஆகியோர்களை இலங்கைக்குச் சென்று அவர்களது நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டுமாய் இக்கமிட்டி கேட்டுக் கொள்கிறது என்பதாக முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விடுதலை, 11.8.1939

தமிழ் ஓவியா said...

கிறிஸ்து மதமும் பணச் செலவும்

அமெரிக்க சர்வ கலாசாலையொன்றில் பேராசிரியராக திகழும் இந்திய தோழர் டாக்டர் சுதந்திரபோஸ் பிரபுத்த பாரத என்ற பத்திரிகையில், கீழ் நாட்டில் கிறிஸ்துவ பாதிரிகள் செய்யும் வேலையை பற்றி எழுதியுள்ள குறிப்பின் சாராம்சம் வருமாறு:-

அமெரிக்கா யுனைடெட் ஸ்டேட்ஸ் பிராட்டஸ்டான்ட் சர்ச்சானது வெளிநாடு களில் தன் மதத்தை பரப்புவதற்காக மதப் பாதிரிகளை அனுப்பி வைக்கின்ற செலவு 4 கோடி டாலர்கள் ஆகின்றது. அதாவது சுமார் 12 கோடி ரூபாய்களாகும்.

ரிப்பப்ளிக் நாடான சைனாவில் புராடஸ்டான்ட் மதத்தைச் சார்ந்தவர்களில் 120 பிரிவுகளுக்குமேல் இருக்கின்றார்கள். இதுவரையில் அந்த நாட்டில் மாத்திரம் அரை லட்சம் கோடி டாலர்கள் செலவு செய்திருக்கிறார்கள்.

சில வருஷங்களுக்கு முன்பு வரையிலும் சைனா நாட்டில் உள்ள 700 நகரங்களில் 8000 பிராட்டஸ் டான்ட் மிஷினரிகள் இருந்து வந்தார்கள். ஆனால் இன்றைய தினமோ 5000 மிஷினரிகள்தான் 400 நகரங்களில் மாத்திரம் வசித்து வருகிறார்கள். கத்தோலிக் கிறிஸ்துவ பாதிரி மிஷினரிகளோ, சில வருஷங்களுக்கு முன்பு 4000 பேர்கள் இருந்தவர்கள் இன்றைய தினம் 200, 300 மிஷினரிகளுக்கும் குறைவாகவே இருந்து வருகிறார்கள்.

அய்க்கிய அமெரிக்க நாட்டின் லுதர்ன் சர்ச் பொருளாளரான டாக்டர் கிளாரன்ஸ் இ.மில்லர் சமீபத்தில் தெரிவிக்கிறதாவது:-

ஒரு சைனாக்காரரை கிறிஸ்துவர் என்ற மதமாற்றத்திற்கு கொண்டு வருவதற்கு ரூ.1300 வீதம் செலவாகி வருகிறது. இந்த கணக்குப்படி இயேசு நாதரின் பெயரை சைனா நாட்டில் நிலை நிறுத்த வேண்டுமானால் 175 லட்சம் கோடி டாலர்கள் ஆக்க வேண்டும். இதிலிருந்து கோடிக்கணக்கான டாலர்களை மதத் தின் பேரால் செலவு செய்யும். கிறிஸ்துவ மதமாகட்டும். அன்றி வேறு எந்த மதமாகட்டும் முன்னேறுவதற்கு வழியின்றி சிதைந்து வருவது ஏன் என்று மக்கள் ஆலோசித்து பார்ப்பார்களாக.

- 30.7.1933 குடிஅரசு

தமிழ் ஓவியா said...

ஆவணி அவிட்டம் பூணூல் புதுப்பித்தலாம்!

ஆரியர் உருவாக்கிய பொருளற்ற மூட விழாக்களில் பூணூல் விழா குறிப்பிடத்தக்கவொன்று பார்ப்பான் வாழ்வின் நான்கு கட்டங்களில் முதன்மையான பிரமச்சரியத்திற்குத் தொடர்புடையது இது.

திருமணமாகாத மாணவர் பருவத்தில் பார்ப்பன இளைஞன் வேதங்களை முழுமையாகக் கற்றுக் கொள்ளுவதற்கெனத் தன் குருவுடனேயே தங்கி வாழக் கடமைப்பட்டவன்.

அவன் கருவான காலத்திலிருந்து ஆசானிடம் கற்று முடித்துத் திரு மணம் பண்ணிக் கொள்ளும் வரை யிலான பிரமச்சரியக் கட்டத்தில், அவனின் பெற்றோரிடமிருந்து அவன் மீது படியும் பாவக் கறையினைக் கழுவிக் கொள்ளும் வண்ணம் கீழ்க்கண்ட 12 தூய்மைப்படுத்தும் சடங்குகள் வற்புறுத்தப்படுகின்றன.

கர்ப்பதானம், புண்சவனம், சீமந்தோநயனம், ஜாத கர்மம், நாமகரணம், நிஷ்க்கரணம், அன்னப்ராசனம், சுத கர்மம், உபநயனம், சமாவர்த்தனம், கேசந்தம், விவாஹம்.

இவற்றுள் சட்டக் கட்டாயமாகக் கருதப்படும் முகாமையான இரண்டு சடங்குகள் சுதகர்மமும் உபநயனமும் ஆகும். இவ்விரண்டிலும் ஒரு சிறு குடுமியை விட்டு வைத்து, தலையில் நடுவட்ட மழிப்பு நிகழ்த்தும் சுதகர்மத்திற்கும் மேலாக உபநயனம் என்னும் பூணூல் அணியும் சடங்கு மதிக்கப்படுகிறது. பூணூல் அணியும் முன்பு வரை அவன் சூத்திரத் தன்மையுடன் இருப்பதாயும், அணிந்தவுடன் அவன் இரண்டாம் முறையாகப் புதிய பிறப்பு எடுப்பதாயும் தத்துவம் கற் பிக்கப்படுகின்றது. இதை அச் சிறுவ னின் எட்டாம் அகவையிலேயே நடத்தி விடலாம்.

பருத்தி நூல்கள் மூன்றினை ஒன்றாகச் சுருள் செய்து மாலை வடிவ மாக்கிப் பார்ப்பனச் சிறு வனின் இடது தோளிலிருந்து வலது இடுப்பு வரையிலும் குறுக்கே அணிவிக்கப் படும் முப்புரி நூலுக்கு யக்ஞோப விதா எனப் பெயர்.

இச்சடங்கின் தொடக்கத்தில் பார்ப்பனச் சிறுவன் சூரியனுக்கு எதிரே நின்று மும்முறை தீ வலம் வரவேண்டும். பிறகு குரு காயத்ரி மந்திரத்தைப் பத்து முறை ஓதி யக்ஞோபவிதா முப்புரிக்குத் தெய்வத் தன்மை ஏற்றிவிட்டு, அதனைப் பையனை மாட்டிக் கொள்ளச் செய்வார். பூணூலணிந்த புதிய பிறவி, தனக்கும் தன் ஆசானுக்கும் தேவையான உணவுக்கென்று விழா வில் வந்து குழுமியுள்ள கூட்டத்தினரிடம் பிச்சை கேட்டுக் கையேந்து வான்.

பின்னர் சாவித்ரி ஜெபம் பண்ணுமாறு குரு அவனைப் பயிற்றுவித்து, வேதமோதி சமயச் சடங்குகளை நிறைவேற்றும் தகுதியை அவனுக்கு உண்டாக்குவார். இறுதியாக அவனுடைய இடையில் மூஞ்சைப் புல்லாகிய அரைஞாண் கட்டப்பட்டு பூணூலணியும் உபநயனச் சடங்கு முடிக்கப் பெறுகிறது.

காலப் போக்கில் க்ஷத்திரியரும், வைசியரும் தங்களை முப்புரிநூல் அணியும் சடங்கிற்கு உட்படுத்திக் கொண்டு இரு பிறப்பாளர் பட்டியலில் இணைந்து கொண்டாலும், இன்று நடைமுறையில் இவ்விரு வர்ணத்தாரும் சூத்திரராகவே பாவிக் கப்படுகின்றனர். எனவே இவர்களின் பூணூல் மாட்டும் செயலுக்குச் சிறப்பேதும் கிடையாது.

பார்ப்பனர்களைப் பார்த்து ஆசாரியாரும், பத்தரும், செட்டியாரும் கூடப் பூணூல் போட்டுக் கொள்வதுண்டு. விசுவ பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால் சாத்திரத்தில் இதற்கு இடம் உண்டா என்றால் அதுதான் இல்லை.

இந்த மாதம் 24 ஆம் தேதி (ஆவணி 8) பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பித்துக் கொள்ளப் போகிறார்களாம். இட ஒதுக்கீட்டில் இன்னும் ஜாதி ஏன்? ஜாதி வாரி கணக்கெடுப்பு கூடாது என்கிற பார்ப்பனர்கள்தான் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டத்தன்று பூணூலைப் புதுப்பித்துக் கொள்கின்றனர். 20-8-2010

தமிழ் ஓவியா said...

உலகின் உச்சிக்கே சென்ற சிறப்பு!

டெசோ சார்பில் மாநாடு நடத்தப்படும் என்ற தகவல் வெளிவந்த நாள் முதல் பல்வேறு வகையான விமர்சனங்கள் - எதிர் விமர்சனங்கள் ஊடகங்களை ஆக்ரமித்துக் கொண்டன.

மாநாடு நடக்குமா? அப்படியே நடந்தாலும் அம் மாநாட்டில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்களா? என்ற வினாக் கணைகளும் முன் வைக்கப்பட்டன.

இவை எல்லாம் முறியடிக்கப்பட்டு, மாநாட்டுக் கான அழைப்பிதழ்களும், விளம்பரங்களும் வெளிவந்து, மாநாட்டுக்கான பந்தல் போன்ற அடிப்படைப் பணிகள் நிறைவுற்று, தமிழ்நாடு, இந்திய நாடு என்கிற எல்லைகளையும் கடந்து பெரும் எதிர்பார்ப்பு என்கிற கட்டத்தை அடைந்த நிலையில்,

தமிழ்நாட்டில் நடைபெறும் அ.இ.அ.தி.மு.க. அரசு - அரசு என்ற நிலைப்பாட்டையும் தாண்டி, காழ்ப்புணர்ச்சியுடனும், அரசியல் உள்நோக்கத் துடனும், இந்த மாநாடு நடைபெற்றால் அதன் பலன் அரசியலில் தமக்கு எதிராக உள்ளவர் களுக்குப் போய்விடுமோ என்ற அச்சத்துடன், மாநாட்டுக்குக் காவல்துறை அனுமதி இல்லை என்கிற சிறுபிள்ளைத்தனமான ஒரு செயலில் இறங்கியது வேதனைக்குரியது.

நீதிமன்றம் வரை செல்லவேண்டிய ஒரு நிலை - மாநாடு நடைபெற்ற நேரத்திற்கு மூன்று மணிக்கு முன்பு வரைகூட எந்த இடத்தில் மாநாடு நடைபெறும் என்ற கேள்விக்குறி செங்குத்தாக மக்கள் மத்தியில் எழுந்து நின்றது.

இது - இதற்கு முன்பு எங்கும் கேள்விப்படாத ஒரு நிலையாகும். என்றாலும் இறுதி வெற்றி யாருக்கு? இறுதியாகச் சிரிப்பவர்கள் யார்? என்ற கேள்விக்கு - நியாயத்தின் பக்கமும், உண்மையின் பக்கமும்தான் என்ற விடை சென்னை உயர்நீதி மன்றத்தின் மூலம் கிடைத்து விட்டது.

அதற்குப் பிறகும் உச்சநீதிமன்றம் வரை சென்று அதன் கதவுகளைத் தட்டினார்கள் என்றால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெப்பம் எத்தனை டிகிரி என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாநாட்டை நடத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் வாயு வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இல்லை, இல்லை - ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திட லிலேயே நடத்திக் கொள்ளலாம் என்று உயர்நீதி மன்றத்தின் ஆணையை ஏற்று மூன்றே மணி நேரத்தில் மாநாட்டுப் பந்தலில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள், இமாலய சாதனை என்றே சொல்ல வேண்டும்.

தோழர்களிடையே ஒரு வெறி உணர்வுடன் கூடிய உற்சாகம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த அரசியல் சக்திகள் - அதிகாரப் பீடங்கள், தம் மனப்போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுமா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஊடகங்கள் ஓர் ஆரோக்கியமான திசையில் தம் பயணத்தைத் தொடங்கினால் கூட நல்லதுதான்.

மாநாடு திட்டமிட்டபடி அதே இடத்தில் நடந்தது என்பது உட்பட மாநாட்டின் ஒவ்வொரு நட வடிக்கையும் கண்ணில் ஒத்திக் கொள்ளத் தக்கதாக, கண்ணியமான ஒளியுடன், மிகுந்த கட்டுப்பாட்டோடு, நீதிமன்றத்தின் கட்டளை களையும் இன்னொரு பக்கத்தில் கவனத்தில் கொண்டு, எடுத்துக்காட்டான மாநாடாக நடை பெற்றதை வரலாறு என்றென்றும் சிறப்பான வகையில் பாடம் சொல்லிக் கொண்டே இருக்கும் என்பதில் அய்யமில்லை.

நேற்று காலை நடைபெற்ற ஆய்வு அரங்கம், மாலையில் நடைபெற்ற மாநாடு - இவற்றில் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள், நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் மாநாட்டின் தகுதியையும், மாண்பினையும் உலகத்தின் உச்சி மேட்டுக்கே கொண்டு சென்றுவிட்டன என்று சுருக்கமான சொற்களில் சொல்லலாம். தடைகளையெல்லாம் தாண்டி பல்லாயிரக் கணக்கான மக்கள் குவிந்தது சாதாரணமானது அல்ல - மக்களின் இந்த மனக் கண்ணாடியைப் பார்த்தாவது மனமாற்றம் அடைய வேண்டியவர்கள் மனமாற்றம் அடைவார்களா? எங்கே பார்ப்போம்! 13-8-2012