Search This Blog

10.8.12

கி.வீரமணி அவர்களுக்கு வயது 80. இதில் 50 ஆண்டு விடுதலை ஆசிரியர் பணி


ஆசிரியர் அய்ம்பது!

ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு வயது 80. இதில் 50 ஆண்டு என்பது விடுதலை ஆசிரியர் பணி.

தமிழ்நாட்டின் அனைத்து வகை விடுதலைக்கும் விவேகப்போர் புரியும் ஓர் ஏட்டுக்கு அரை நூற்றாண்டு காலம் ஆசிரியர் என்பது  ஆச்சரியந்தான்! அதிசயந்தான்! அரிய சாதனைதான்!

ஒவ்வொரு நாள் விடுதலையும் ஒரு போரின் அணி வகுப்புதான் - தளைகளை - களைகளை - தடைகளைத் தகர்க்கும் போர்ப் பணிதான்.

இந்தப் பணியால் பலன் பெற்றோரிடமிருந்து வரும் நன்றிக்கும் முந்திக்கொண்டு நம் மீது எதிரிகள் அசிங்கங்களையும், ஆபாசங்களையும் ஆத்திரத்தோடு அள்ளி வீசிட முந்திக் கொண்டு நிற்பார்கள். நமது எதிரிகள் அவ்வளவு அகங்காரக்காரர்கள் - ஆணவ நரிகள்!


நன்றியை எதிர்பாராத் தொண்டுதான் - நமது அறிவு ஆசான் நமக்குச் சொல்லிக் கொடுத்த, உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும்.

எத்தனை எத்தனை போராட்டங்கள் - எத்தனை எத்தனைத் தடைகள்! அரசு அதிகாரங்களின் ஆணவ நடவடிக்கைகள் - ஜாமீன் தொகைக் கேட்புகள்!

வெள்ளித் தோட்டாக்களை அள்ளித் தாரீர் என்று விடுதலை ஏடு அறிக்கை வெளியிட்டால் வந்து குவிந்து விடும்! போதும் நிறுத்துக! தேவையான நிதி வந்து சேர்ந்து விட்டது என்று விடுதலையைப் போல அறிக்கை வெளியிட்ட ஏட்டைக் காட்டமுடியுமா?


ஜாதி ஒழிப்பு
மூடநம்பிக்கை ஒழிப்பு
பெண்ணடிமை ஒழிப்பு
இந்தி எதிர்ப்பு
ஆரிய ஆதிக்க எதிர்ப்பு
வடவர் ஆதிக்க எதிர்ப்பு
சுரண்டல் ஒழிப்பு
என்ற அழிப்பு, ஒழிப்புப் பணிகள் மூலம் இந்நாட்டு மக்களுக்கு ஆக்கப் பணி புரிந்த ஆசான் அல்லவா விடுதலை.


சமூக நீதிக் களத்திலே அதன் தோள்கள் எப்படி எல்லாம் விளையாடின? ஒடுக்கப்பட்ட மக்களை ஒரு குடையின் கீழ் அணி செய்ய அப்பப்பா விடுதலை பட்ட பாடு கொஞ்ச நஞ்சமா?

விடுதலையின் தாக்கம் இல்லாத ஒரே ஒரு வெற்றி உண்டா? ஒரே ஒரு உரிமை மீட்பு உண்டா? 69 விழுக் காடு இட ஒதுக்கீடு என்னும் பரந்துபட்ட பாதுகாப்பு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசமைப்புச் சட்ட ரீதியாக இன்று நமக்குக் கிடைத்தது என்றால் அதில் விடுதலை யின் வீறுமிக்க பங்குப் பாகம் அசாதாரணமானதாயிற்றே!


ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு ஈட்டி முனையாகப் பாடுபட்டதை மறுக்கமுடியுமா?

ஆட்சிகளின் அரவணைப்புகள் பெரும்பாலும் இல்லை. விளம்பர ஒத்தடங்கள் எளிதில் கிடைக்காது.

சினிமாவையும், ராசி பலன்களையும் வைத்து வயிறு வளர்க்கும் மக்கள் சந்தையில் இவற்றைத் தூ என்று தூர வீசியெறிந்துவிட்டு பளபளக்கும் பகுத்தறிவுப் போர் வாளை அல்லவாவிடுதலை சுழற்றுகிறது?

தமிழன் வீடு என்பதற்கு அடையாளம் விடுதலை என்று காவியுடை அடிகளார் கறுப்பு உடை விடுதலைக்கு ஒரு முகப்படாம் தந்தார்.

தமிழர்கள் முற்றும் இதனை உணர்ந்துவிட்டனர் என்று சொல்ல முடியாது. என்றாலும் நமது ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலை ஆசிரியர் பொறுப்பேற்று 50 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது என்பதைக் காரணப்படுத்தி 50 ஆயிரம் சந்தாக்கள் என்னும் வெற்றியை ஈட்டி கட்சி ஏடுகள் நடத்தும் பலரையும் வியக்க வைத்தோம்.

அந்தப் பணியைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறோம். இது நாம் ஏற்றுக் கொண்ட வாழ்நாள் பணி!!


இதே நாளில் (10-8-1962) வரவேற்கிறேன் என்று தலைப்பிட்டு நமது ஆசான் அய்யா அவர்கள் நமது கடலூர் மானமிகு கி.வீரமணி அவர்களை விடுதலை ஆசிரியர் என்ற ஆசனத்தில் இரு தோள்களையும் அழுத்தி அமர வைத்தார்கள்! அடடே! இந்தப் பெருமையைப் பெற்ற ஒரே தலைவர் நமது ஆசிரியர் அன்றோ! அதனால்தான் தமிழ் நாட்டில் ஆசிரியர் என்றால் அது விடுதலை ஆசிரியரை மட்டுமே குறிக்கும்.

விடுதலையின் வடிவை வனப்பாக்கி, காலத்தின் மாறுபாட்டைக் கணக்கில் கொண்டு, அறிவியல் வளர்ச்சிகளை இதன்பால் ஏற்றி, நான்கு பக்கங்களை எட்டு பக்கங்களாக்கி, திருச்சிராப்பள்ளியில் இன்னொரு பதிப்பை ஏற்படுத்தி, இன்றையதினம் வணிக ஏடுகளை மிஞ்சும் ஏற்றத்துடன், ஏறு நடைபோட வைத்த அத்தனை பெருமையும், சாதனையும் நமது ஆசிரியர் பெருந்தகை மானமிகு கி.வீரமணி அவர்களையே சாரும்!

திராவிடர் இயக்க நூற்றாண்டில் திராவிடர் இயக்க ஏட்டில் அரை நூற்றாண்டு ஆசிரியர் பணி என்பது இவருக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு.

எல்லைகளைக் கடந்த தமிழர்களும், பகுத்தறி வாளர்களும், மனித நேயர்களும் எத்தனை நன்றிகளைக் குவித்தாலும் விடுதலைக் குழுமம்  தனது சிறப்பு மிக்க நன்றியையும், வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் ஆசிரியர் அவர்களுக்குக் குவிக்கிறது!

வாழ்க விடுதலை ஆசிரியர்!


                                 -------------------------"விடுதலை” தலையங்கம் 10-8-2012

69 comments:

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாடு: இலங்கை அமைச்சருக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி கண்டனம்


சென்னை, ஆக.10- இலங்கை அமைச்சர் ஒருவர் டெசோ மாநாடுபற்றி பேசியது சரியல்ல. அடுத்த நாட்டில் நடக்கும் ஒரு மாநாட்டை மற்றொரு நாடு கண்காணிப்போம் என்று கூறுவது வரம்பு மீறிய செயல் என்று அமைச்சர் நாராயண சாமி தெரிவித்துள்ளார். மத்திய இணை அமைச்சர் நாராயண சாமி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தார். விமான நிலை யத்தில் அவர் செய்தி யாளர்களிடம் கூறிய தாவது:

டெசோ மாநாடு திமுக கூட்டுவது அவர் களுடைய தனிப்பட்ட விவகாரம். திமுக எங்கள் கூட்டணியில் இருந் தாலும் அவர்கள் தனிக் கட்சி. அந்த அடிப் படையில் அவர்கள் டெசோ மாநாடு நடத்து கின்றனர். டெசோ மாநாட்டில் என்ன பேசுகிறார்கள்? என்ன நடக்கிறது என் பதை உன்னிப்பாக கவனிப் போம் என்று இலங்கை அமைச்சர் ஒருவர் பேசியுள்ளது சரியல்ல. அடுத்த நாட்டில் நடக் கும் ஒரு மாநாட்டை மற்றொரு நாடு கண் காணிப்போம் என்று கூறுவது வரம்பு மீறிய செயல். அவ்வாறு அமைச்சர் பேசியிருந் தால் அதை ஏற்க முடி யாது.

லோக்பால் மசோதா நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனையில் உள்ளது. எதிர்க்கட்சியி னர் சிலர் வெட்டு தீர்மானங்களை கொடுத் துள்ளனர். எனவே அவர் களுடன் கலந்து பேசி ஆலோசிக்க வேண்டி யுள்ளது.

எனவே நாடாளு மன்ற தற்போதைய கூட் டத் தொடரில் லோக் பால் மசோதா நிறை வேற்ற வாய்ப்பில்லை. ராம்தேவ் கறுப்பு பண பிரச்சினைக்காக போராட்டம் நடத்தப் போவதாக கூறுவது தன் னுடைய சுய விளம்பரத் துக்காகவும் மக்கள் கவ னத்தை திசை திருப்பவும் நடத்தும் நாடகம். இவ்வாறு அவர் கூறி னார். 10-8-2012

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாடு: தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் வாழ்த்து



சென்னை, ஆக.10- ஈழத்தந்தை செல்வா அவர்களின் புதல்வரும், சென்னையை தலைமை யகமாகக் கொண்ட புரோடெக் எனும் மனித நேயத் தொண்டமைப் பினை நடத்து பவரு மான சா.செ.சந்திரகாசன் அவர்கள், கலைஞர் அவர் களுக்கு மடலொன்று அனுப்பியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதம் வருமாறு: பேரணிகள், ஆய்வரங்கு கள், மாநாடுகள் எனத் தமிழின், தமிழ் இனத் தின் நலன் நாடி பல நூறு களங்கண்டவர் நீங்கள். தமிழ்த் தாயின் தலைமகனே! புறங் கூறுபவர்களைப் புறந் தள்ளுங்கள்.

இடம், பொருள், ஏவல் இலக்கணம் கண்ட தமிழ் கூறும் தத்துவம் உணர்ந்த தெளிவு நிறை தமிழ்த் தலைவர் நீங்கள்.

ஓரணி திரளாது, ஈழத் தமிழரின் கருத்துருவை ஒருமுகப்படுத்தாது செயல்படும்வரை ஈழத் தமிழர் வாழ்வில் விடி யல் எப்படி? என்று நாளும் ஆதங்கப்படு பவர் நீங்கள். அதனால் தான் உண்மை உணராது உங்களை வெறுத்து நிற்கும் ஈழத் தமிழர் களைக்கூட வையாது வாழ்வாங்கு வாழ்பவர் நீங்கள். உங்களை நாம் அறிவோம். எமது நல் வாழ்வுக்காய் ஏங்கும் உங்கள் எண்ணங் களையும் நாமறிவோம்.

கட்சியின் தலைவன், அரசியல் வழிகாட்டி, பல்வேறு இனங்கள் வாழும் கூட்டாட்சி நாட்டின் குடிமகன் என்ற பல்வேறு கயிறு களால் கட்டப்பட்டு நிற்கும்போதும், இன உணர்வால் ஈழத் தமிழர் மீது நீங்கள் காட்டும் அன்பே அவ்வப்போது உங்களுக்கெதிராக திரும்பி அம்பெனக் குத்தும்போதும், வலிபொறுத்து எம்மை அரவணைக்கும் செய லுக்கு என்றும் நன்றிகள் கோடி.

பெருமகனே! தமிழர் தலைமகனே! நெளிவு, சுழிவுகளும், உள்ளக நிலையும் தெளிவுறத் தெரிந்தவர் நீங்கள். மீண்டும் நீங்கள் அறை கூவிக் கூட்டியுள்ள டெசோ மாநாடு ஈழ மண்ணின் இரத்தக் கள ரிக்கும், ஈழத் தமிழர் களின் விரும்பத்த காத உயிரிழப்புகளுக்கும் முடிவு கட்டி அவர்தம் வாழ்வின் அமைதிக்கும், வளமான எதிர்காலத் திற்கும் பொருத்தமான வழியினைக் காட்ட வேண்டும் என்பதே என்னைப் போன்ற ஈழத் தமிழர்களின் விருப்பம்.

எனவே குவலயம் முழுக்கப் பரந்து வாழும் ஈழத்தமிழர்களின் வாழ் வுரிமைப் பாதுகாப்பு மாநாடாக உருவெடுத்து நிற்கும், சென்னையில் கூடும் டெசோ மாநாடு மகத்தான வெற்றி யுடன் உரிய இலக்கை அடைய உளமார்ந்த வாழ்த் துக்கள்.

இவ்வாறு சா.செ.சந் திரகாசன் அவர்கள், கலைஞர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மீண்டு(ம்) வந்துள்ளேன் உழைப்பதற்கு! தமிழர் தலைவர் தம் உருக்கமிகு அறிக்கை


புதியதோர் உலகு செய்ய புத்தாக்கத்துடன் பயணிப்பதற்கு மீண்டு வந்துள்ளேன், மீண்டும் வந்துள்ளேன் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கழகக் குடும்பத்தவர்களே, நலம் விரும்பும் நமது இன உணர்வாளர்களான நண்பர்களே,

அன்பு வணக்கம். நேற்று (9.8.2012) வியாழன் காலை சென்னை வந்து சேர்ந்தோம். பயணக் களைப்பு, இரு வேறு பகுதிகளின் கால மாற்றத்தினால் ஏற்படும் சோர்வு - இவை காரணமாக வீட்டில் நன்றாக உறங்கி ஓய்வு எடுத்து, பணிகளுக்கு ஆயத்தமாகி உள்ளேன்.

இந்த நாள்...

இன்று (10.8.2012) என்னை விடுதலை ஆசிரியர் பொறுப்பில் நியமித்து, மற்றவர் களுக்குத் தராத சுதந்தரத்தை - அவரது ஏகபோகத்தில் விடுதலை நாளேட்டை விட்டு விடுகிறேன் என்று அறியாத இளைஞனாக இருந்த என்மீது நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் வைத்த நம்பிக்கையைச் சுமந்து, அளவுக்கு மீறிய பொறுப்புணர்ச்சியையும், கடமை உணர்வையும் காட்டவேண்டும் என்ற மன உறுதியை மேற்கொண்டேன்.

எம்மைச் செயல்பட வைப்பது...

பெரியார்தம் ஒளி எம்மை தடம் மாறாமல் செயல்பட வழிகாட்டியது. அன்னை மணியம்மை யாரின் அன்பும், ஆதரவும், பாசமும், கழகக் குடும்பத்தினரின் உற்சாகமும், ஊக்கமும் என்னை கடந்த 50 ஆண்டுகளாக அலுப்பு அயர்வின்றி செயல்படுத்தி வருகிறது. நம் ஆசான் உருவாக்கிய வழிகாட்டும் நெறிமுறை கள் எனக்குத் தக்கதோர் புரசிஜர்கோட் (Procedure Code) ஆகி இருக்கின்றன.

இதைத்தான் எனக்குப் பெரியார் தந்த புத்தி போதும்; சொந்த புத்தி தேவையில்லை என்று கூறி வருகிறேன். இதை ஆழமாகப் புரிந்துகொள்ளத் தெரியாத சிலரின் அரைவேக் காட்டு விமர்சனங்களைத் தூசி தட்டிவிட்டு பணியைத் தொடருவோம்.

கழகப் பெருமக்களின் மறைவு!

அமெரிக்கப் பயணத்தின்போது இழக்கப் படக் கூடாத சமூக விஞ்ஞானிகளைப் போன்ற நம் இயக்கச் சுயமரியாதைச் சிங்கங்கள், கொள்கைத் தங்கங்கள் பலரது மறைவு எம்மை மிகவும் வருத்தியது; வாட்டி மனவேதனையை அடையச் செய்தது!

என்ன செய்வது! இயற்கையின் கோணல் புத்தி அது!

லட்சிய வீரர்கள் திருவாரூர் மண்டலத் தலைவர் மானமிகுவாளர்கள் எஸ்.எஸ். மணியம், மூத்த பெரியார் பெருந்தொண்டர் எஸ்.கே. சின்னப்பன், மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோமல் நடராசன், சட்ட எரிப்பு வீரர் எடகீழையூர் து. கண்ணுசாமி, காஞ்சிபுரம் கழக ஆர்வலர் டாக்டர் இராகவன், வாஞ்சைமிகு தஞ்சை ப. நாராயணசாமி, நாஞ்சில் ஆறுமுகம் மற்றும் பெரியார் விருது பெற்று, கணினித் துறையில் புதுமைகளைப் புகுத்திய ஆண்டோ பீட்டர்.... முதலியவர்கள் இழப்பு ஈடு செய்ய இயலாதது. அவர்களுக்கு நமது வீர வணக்கங்கள்!

என்னிடம் ஏற்படுத்திய நம்பிக்கை

துன்பமும், இன்பமும் கலந்து மாறி மாறி வருவதுதானே வாழ்க்கை என்பது! அதன்படி நான் தமிழ்நாட்டில் இருக்காமல், அமெரிக் காவில் பல கல்விப் பல்கலைக் கழகங்கள் நடப்பதை அறிந்தும், இதய நெருக்கடி காரண மாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதால் ஏற்பட்ட கால நீட்டத்தில் நாளும் விடாமல் இணையத்தின்மூலம் கழகச் செய்திகளையும், பிரச்சாரக் களங்கள்பற்றியும், விடுதலை சந்தா சேர்க்கும் கடமையாற்றுவதில் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மாவட்ட மற்றும் அனைத்துக் கழகப் பொறுப்பாளர்கள் காட்டிய ஆர்வம், கடமை உணர்வு மிகுந்த என்னுள் நம்பிக்கையை ஏற்படுத்தின.

மீண்டு(ம்) வந்துள்ளேன்!

அமெரிக்க மருத்துவமனைக்குள்ளே சென்று மிகவும் அபாயத்தை உள்ளடக்கிய ஒரு இதய சிகிச்சைக்கு ஆயத்தமானபோது, அய்யாவும், அம்மாவும், கழகத் தோழர்களும் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றிய நிம்மதி எனக்குத் துணிவினை, வலுவினைத் தந்தது.

மீண்டு வந்துள்ளேன்!

மீண்டும் வந்துள்ளேன் - உழைப்பதற்கு!!

இனி என் கடன் என்றும்போல் பணி செய்து கிடப்பதே!

பயணங்கள் முடிவதில்லை - பாதைகள் செப்பனிடப்படுகின்றன.

விடுதலை பரவாத கிராமம் - வீடு இல்லை என்ற அளவுக்கு - புதுப்புது உத்திகள் - புதுப்புது முயற்சிகளை உருவாக்கி ஆசானின் கொள்கைகளை அகில உலக மயமாக்குவோம்!

அதற்கு அய்யா தந்த அறிவாயுதம் கூர்மழுங்காது; வாளின் வலிமையைவிட இந்த ஏட்டின் வல்லமை அதிகம்!
புதியதோர் உலகு செய்வோம்!

புதியதோர் உலகு செய்ய, புத்தாக்கத்துடன், புத்தெழுச்சியுடன் பயணிப்போம்!

உடனடியாக சென்னையில் டெசோ நடத்தும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் சந்திப்போம்!
வாருங்கள் தோழர்களே, தோழியர்களே!

நன்றி! நன்றி!! நன்றி!!!


கி.வீரமணி,
ஆசிரியர், விடுதலை 10-8-2012

தமிழ் ஓவியா said...

னோரமா இயர் புக் கில் மானமிகு கி.வீரமணி

ஆண்டுதோறும் பொது அறிவுத் தகவல் நூலாக மனோரமா என்ற தொகுப்பு நூலை மலையாள மனோரமா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. 1991இல் வெளியிடப்பட்ட இந்த நூலில் தமிழிலும், ஆங்கிலத் திலும் மண்டல் குழுப் பரிந்துரைகள் பற்றி வெளி வந்துள்ள கட்டுரையில் மானமிகு கி.வீரமணி அவர்களின் கருத்தை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் (ஆங்கில நூல் பக்கம் 701 :)

Tamil Nadu was the first state to introduce reservation in the state government service as early as 1927, when a certain percentage of posts were reserved for backward classes. In 1952, the reservation was fixed at 25 percent and was enhanced to 32 percent in 1971. In 1980, it washiked to 50 percent and in 1989 a special reservation of 20 percent within the 50 percent was provided for the most backward classes.

The state with nearly 30 lakhs in the live registers of employment exchanges has over 82 thousand unemployed doctors, engineers and postgraduates.

The strong supporter of reservation, Mr.K.Veeramani General Secretary of the Dravidar kazhagam, refuted that reservation could lead to mediocrity in services. He said administration in Tamil Nadu, where there had been reser vation for the past to years, was one of the best and efficient in the country.

தமிழில் வெளிவந் துள்ள மனோரமாவில்:

தமிழ்நாட்டில் பிற் படுத்தப்பட்டவருக்கு 30 சதவிகிதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 20 சதவிகிதமும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவிகிதமும், பழங்குடியினருக்கு ஒரு சதவிகிதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒதுக்கீட்டுக் கொள்கையை செயல்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். ஒதுக்கீட்டுக் கொள்கைகளினால் நிர்வாகம் சீர்கெடுமா என்று வினவியதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு களுக்கும் மேலாக ஒதுக்கீடுகள் இருந்தபோதிலும் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த நிர்வாக அமைப்பைப் பெற்றிருக்கிறது என்றார். (பக்கம் 19)

தமிழ் ஓவியா said...

உலகில் எந்தவொரு அமைப்பிலும் செய்யாத அளவுக்கு விஷயங்களைச் சேகரித்து வைக்கும் கருவூலமாக வீரமணி திகழ்கிறார்

நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடைய அரும்முயற்சி இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு திராவிட இயக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ள - தந்தைபெரியாரைப் பற்றி தெரிந்துகொள்ள - அண்ணாவைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கெங்கு இருந்து ஆதாரங்கள் திரட்டப்பட்டன, எப்படியெல்லாம் நம்முடைய வரலாறு முன்னால் இருந்தது, பின்னால் அமைந்தது என்பதையெல்லாம் இன்னும் நூறாண்டு களுக்குப் பிறகு தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும், அதற்கான கருவூலமாக நம்முடைய வீரமணி அவர்கள் விளங்குகிறார்கள் என்று சொன்னால்,அதை யாராலும் மறுக்க முடியாது.

இதோ என் கையிலே உள்ள இந்தப் புத்தகம் செங்கல்பட்டு முதல் தமிழ்மாகாண சுயமரியாதை மாநாடு, 1929-ஒரு வரலாற்றுத் தொகுப்பு. நான் நிச்சயமாகச் சொல்கிறேன் அவர் மாத்திரம் இன்றைக்கு திராவிடர் கழகத்திலே தந்தை பெரியாருடைய வழித் தோன்றலாக அமையாமல் இருந்திருப்பாரேயானால், இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்திருக்காது (கைதட்டல்).

இதிலே உண்மைகள் வரலாற்றுச் சான்றுகள், இங்கே நடைபெற்ற மாநாடு, அந்த மாநாட்டிலே கலந்து கொண்டவர்கள், அவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவும் எனக்குக் கிடைத்திருக்காது. இதிலே சவுந்தரபாண்டிய னாருடைய உருவத்தைப் பார்க்கிறேன். வி.வி.ராமசாமி நாடார் உருவப் படத்தைப் பார்க்கிறேன், அவ்வளவு ஏன்? இதே செங்கல்பட்டிலே இருந்த வேதாசலம் முதலியார் படத்தையும் அதிலே பார்க்கிறேன். வேதாசல முதலியார் உங்களுக்குத் தெரியும்.

வேலைக்காரி படத்திலே அறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம். அந்த வேதசால முதலியார் அந்த மாநாட்டிலே கலந்துகொண்டார். ஒரு முக்கிய பொறுப் பேற்றார் என்கின்ற இந்தச் செய்தியெல்லாம் எங்கள் சிந்தனையைச் செதுக்கச் செய்கின்ற செய்திகளாகும்.

விஷயங்களை சேமித்து வைப்பதிலே வீரமணி யிடத்திலே பாடம் படிக்க வேண்டும்.

இந்தச் செய்திகள் எல்லாம் காணாமல் போயிருக்கும். இப்படிப்பட்ட புத்தகத் தொகுப்பு மாத்திரம் இல்லாவிட்டால், நான் உலகத்தில் உள்ள எல்லாக் காட்சிகளையும் ஒப்பிட்டு இப்படிச்சொல்ல வேண்டுமே யானால், அவர் என்னைப் பாராட்டியதற்காக, நான் அவரை பாராட்டுவதாக அர்த்தமல்ல. உலகத்திலே உள்ள எல்லா கட்சி அமைப்புகளைப் பற்றியும் சொல்ல வேண்டுமேயானாலும், எந்த ஒரு அமைப்பிலும் இவ்வளவு விஷயங்களை சேகரித்து வைத்து, அதை எதிர்காலத்திற்குத் தரக்கூடிய இந்த ஆற்றல், நம்முடைய வீரமணியாருக்கு இருப்பதைப் போல வேறு யாருக்கும் இருப்பதாக நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.

அவரிடத்திலே எங்களைப் போன்ற கட்சிகளெல்லாம் இதற்காகப் பாடம் படிக்க வேண்டும் என்று எங்க ளுடைய முன்னோடிகள்கூட இங்கே வந்திருக் கிறார்கள். மூத்த தம்பிமார்களெல்லாம் வந்திருக் கிறார்கள். அவர்களெல்லாம்கூட இன்று முதல் பயிற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அடக்கத்தோடு அவர்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். --கலைஞர்

தமிழ் ஓவியா said...

விஞர் வாலியின் பார்வையில் தமிழர் தலைவர்


நாத்திகவாதியான வீரமணிக்கும், தங்களுக்கும் இடையிலான நட்பின் கெமிஸ்ட்ரி என்னவோ?

சேலம் செத்த போது - ஈரோடு ஈம வனம் வரை சென்று - ஒரு குழந்தை போல் குலுங்கிக் குலுங்கி அழுததைக் குவலயம் அறியும்.

ஈரோடு - குன்றகுடிக்குச் சென்று அடிகளாரோடு அளவளாவியதை அகிலம் அறியும்.

கல்கி மகள் செல்வி ஆனந்தியின் கல்யாணம். தன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முனைந்த தம்பதியை இருங்க! என்று தடுத்தி நிறுத்தி - விபூதியும் குங்குமமும் கொண்டுவரச்சொல்லி -மணமக்கள் நெற்றியில் இட்டது, தந்தை பெரியாரின் தகவல்லவா!

தந்தை பெரியாரின் தடக்கை விரல் பற்றி நடந்தவர் திரு.வீரமணி அவர்கள்-

என்னளவில் பெரியாரின் நகல். மாற்றுக் கருத்துடையோரையும் ஏற்றுக்கொள்ளும் மாண்பு மிக்கவர்.

நான் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு அப்பல்லோவில் இருந்த போது - எனக்கு நம்பிக்கை தந்து நல்வாழ்த்துச் சொன்னவர்.

நீங்களும் உங்கள் உள்ளக் குடுவையில், அய்ம்பது விழுக்காடு அன்பு; மற்ற அய்ம்பது விழுக்காடு பண்பு; பரிவு; பாசம் - எனப் போட்டு உலுக்குங்கள்.

எனக்கும் திரு.வீரமணிக்கும் உள்ள கெமிஸ்ட்ரி உங்களிடமும் உண்டாகும். இதில் ஏதுமில்லை மிஸ்ட்ரி; இதுதான் காலம் பதிவு செய்யும் ஹிஸ்ட்ரி!

நன்றி : ஆனந்தவிகடன் 1.8.2012

தமிழ் ஓவியா said...

பாராட்டுகிறார்கள்

விடுதலையின் நீண்டகால வாசகன் நான். ஒரு நாள் படிக்கா விட்டால் எதையோ இழந்தது போன்ற உணர்வு ஏற்படும்.

வேறு எந்த ஏடுகளிலும் இடம் பெறாத அரிய செய்திகள். நாளேடு என்பதைவிட நல்ல பல தகவல்களை நாளும் தரும் அறிவிப்பாக விடுதலையை உணர முடிகிறது.

ஆசிரியர் எழுதிவரும் வாழ்வியல் சிந்தனைகள் புதிய வாசகர்களைக் கொண்டு வந்துள்ளது என்பது எனது அனுபவம்.

சினிமா, சோதிடம் விளம்பரங்கள் இல்லாமல் கொள்கையோடு ஒரு ஏட்டை நாள்தோறும் நடத்துவது சாதாரணமானதல்ல.

50 ஆண்டுகள் கொள்கை ஏடு ஒன்றுக்கு ஆசிரியர் என்பது இமா லயச் சாதனைதான். தமிழர்கள் இன்னும் முழுமையாக இதன் அரு மையை உணரவில்லையே என்பது தான் எங்களைப் போன்றவர்களின் ஏக்கம்.

வீட்டுக்கு வீடு கொண்டு சேர்ப் பதில் நாம் வெற்றி பெற்றால் நாடே விடுதலை அடையும் என்பதிலும் அய்யம் உண்டோ!

- மயிலை நா.கிருஷ்ணன், (தலைவர் பெரியார் நூலக வாசகர் வட்டம்).

தமிழ் ஓவியா said...

பாராட்டுகிறார்கள்

விடுதலையின் நீண்டகால வாசகன் நான். ஒரு நாள் படிக்கா விட்டால் எதையோ இழந்தது போன்ற உணர்வு ஏற்படும்.

வேறு எந்த ஏடுகளிலும் இடம் பெறாத அரிய செய்திகள். நாளேடு என்பதைவிட நல்ல பல தகவல்களை நாளும் தரும் அறிவிப்பாக விடுதலையை உணர முடிகிறது.

ஆசிரியர் எழுதிவரும் வாழ்வியல் சிந்தனைகள் புதிய வாசகர்களைக் கொண்டு வந்துள்ளது என்பது எனது அனுபவம்.

சினிமா, சோதிடம் விளம்பரங்கள் இல்லாமல் கொள்கையோடு ஒரு ஏட்டை நாள்தோறும் நடத்துவது சாதாரணமானதல்ல.

50 ஆண்டுகள் கொள்கை ஏடு ஒன்றுக்கு ஆசிரியர் என்பது இமா லயச் சாதனைதான். தமிழர்கள் இன்னும் முழுமையாக இதன் அரு மையை உணரவில்லையே என்பது தான் எங்களைப் போன்றவர்களின் ஏக்கம்.

வீட்டுக்கு வீடு கொண்டு சேர்ப் பதில் நாம் வெற்றி பெற்றால் நாடே விடுதலை அடையும் என்பதிலும் அய்யம் உண்டோ!

- மயிலை நா.கிருஷ்ணன், (தலைவர் பெரியார் நூலக வாசகர் வட்டம்).

தமிழ் ஓவியா said...

மனம்

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய ஆசிரியர் பெருந்தகை அவர் களுக்கு வடலூர் கிருஷ்ணமூர்த்தி யின் வணக்கம்.

தாங்கள் கடந்த மாதம் அமெ ரிக்கா சென்றபோது ஓய்வு எடுக்கத் தான் சென்றதாக நினைத்தேன். சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து தாங்கள் விடுத்த அறிக்கை முதலில் என்னை அதிச்சி அடையச் செய்தது. நல்லவேளை, சிறப்பானதொரு சிகிச்சையை புத்தம் புதிய முறையில் (டயவநளவ) மருத்துவம் பெற்று உடல்நலம் தேறிவருவதை அறிந்து பெருமகிழ்ச்சி யடைகிறேன். தாங்கள் வெகு நீண்ட காலம் வாழ வேண்டும் என்றும், எங் களுக்கெல்லாம் (தமிழ்மக்கள் அனை வருக்கும் மட்டு மின்றி அனைத்துலக ஏழை, எளிய மக்களுக்கும்) உயிர்த் துணையாக இருந்து பெண்கள் உள்பட சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் முக்கியமாக மனிதநேயம் முதலியவற்றை அனைவரும் பின்பற்றும்வகையில் எழுதி, பேசி, வாழ்வியல் வழிகாட்டி, ஏற்றமுறச் செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறேன். அது நேர்மை, ஒழுக்கம்,அன்பு, அமைதி, அனு பவம், அறிவு, ஆற்றல் மிகுந்த தங்களைப் போன்றவர்களால்தான் முடியும் என நான் உறுதியாக நம்பு கிறேன்.

அய்யா, தங்களுக்கு உள்ளத்திலே வலிவும், பொலிவும், அறிவும், தெளிவும், அதை எடுத்தியம்பும் வல்லமையும், எழுதிக்காட்டும் ஆற்றலும், நடந்து காட்டும் நடைமுறையும், நல்ல பல கருத்துகளும் ஏராளமாக இருக்கின்றன. உடம்பிலே மட்டும் சிறிது நலிவும் தெரிகிறது. மிகப்புதுமையான சிகிச் சையை, சிறப்புமிக்க கைதேர்ந்த மருத் துவர்களைக் கொண்டு, எல்லா வசதி களும் நிறைந்த சிறந்த மருத்துவனையில் பெற்றுக்கொண்டுவரும் தாங்கள் இன்னும் சில காலம் தேவையான அளவாவது ஓய்வு எடுத்துக்கொண்டு வரக்கூடாதா? டெசோ மாநாட்டில் தாங்கள் சொல்லவேண்டிய கருத்துகளை சிறுபுத்தகம் மூலம் அச்சேற்றி அனை வருக்கும் இனாமாக வழங்கக்கூடாதா? அதற்குண்டான அல்லலை அருகே அழைத்துக்கொள்ளலாமா?

மற்ற அனைவரின் நல்வாழ்வைப் பற்றி சிந்திக்கும் தாங்கள் தங்களுடைய உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டாமா? தயவு செய்து தேவையான அளவு ஓய்வு எடுத்துக்கொள்ள வேண் டுகிறேன். நன்றி வணக்கம்.

தங்கள் அன்பு நன்றி மறவாத

நல்ல.கிருட்டிணமூர்த்தி, (வடலூர்)

தமிழ் ஓவியா said...

விடுதலை வாசகரின் மனம் திறந்த பாராட்டு

முதன் முதல் விடுதலை பத்திரிகையை படிக்கச் சொன்னவர்களில் முதன்மை யானவர் ஆலந்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மிசா ம.ஆபிரகாம் அவர்கள் தொடர்பின் காரணமாக பெரியார் திடலில் நடக்கும் வாசகர் வட்டம் மற்றும் சகல நிகழ்ச்சிகளையும் கேட்டு தெளிவு பெற வைத்தவர். விடுதலை , உண்மை போன்ற இதழ்களை வாசிக்கத் தூண் டிவர். இன உணர்வுச் சிந்தனையை ஊட்டியதோடு நில்லாமல் (எம்.ஜி.ஆர் ஆட்சி நேரத்தில்) இலங்கைத் தமிழர்களுக்காக இவர் தலைமையில் போராட்டம் நடத்தியதில் அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாத காலம் கடலூர் கேப்பர் மலை சிறைச்சாலையில் இருக்கும் பாக்கியமும் மற்றும் மன்னார்குடி நவ இந்தியா சீனிவாசன் அவர்கள் கடலூர் கேசவன் அவர்கள். ஆதம்பாக்கம் திரு வள்ளுவர் பாடசாலை நிறுவனர் எம். நடராசன் போன்றவர் களின் தொடர்பினால், படிக்கவும், சிந்திக்கவும் அய்யாவின் கருத்துகளை பல தரப்பினரோடு விவாதம் செய்யவும். நானும் என் குடும்பமும் அய்யா பெரியாரின் சிந்தனைக்குப்பட்டு பிள்ளைகளை சுயமரியாதை உணர்வோடு வளர்த்து இரண்டு பெண் பிள்ளைகளை ஆசிரியர் தலைமையில் இணையேற்பு விழா நடத்தவும். மகனுக்கு கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் தலைமையில் இணையேற்பு விழா நடத்தவும் வழி கோலிய ஆசிரியர் அவர்கள், மேலும் 50 ஆண்டுகள் விடுதலை வாயிலாக தினமும் பாடம் நடத்தவும், விடுதலை இல்லா வீடே இல்லை என்ற பணிக்கு என்னுடைய சிறு பங்கு (16 விடுதலை ஆண்டு சந்தா) உண்டு என்றும், மேலும் தொடரும் என்று சபதம் ஏற்று எதிர் நீச்சல் பணியின் மகிழ்வாக ரூ.அய்ந்தாயிரத்தை விடுதலை வைப்பு நிதியாக அளித்து மகிழ்கிறேன்.

எழுதப்பட்ட கட்டுரை விடுதலை ஞாயிறு மலரில் 4.8.2012 அன்று மின்சாரம் அவர்கள் எழுதிய டெசோ வீரன் வருகிறான் பராக்! பராக்!! என்ற கட்டுரை மிகவும் சரியான தருணத்தில் அருமையான ஆதாரங்களோடு எதிர்ப்போரின் முகமூடியை கிழிக்கும் வண்ணம் வந்துள்ளது. அனைவரும் ஊன்றிப் படித்து உண்மையை உணர வேண்டியது அவசியம்.

நாளை மறுநாளே தனி ஈழத்தைப் பறித்துத் தரக்கூடிய பெரும் வல்லமையும், பேராற்றலும் இருக்கு மானால், தாராளமாகவே அதனை சாதித்துக்காட்டி இப்பிரச்சினையில் முதல் பரிசைத்தட்டிச் செல்லட்டும் - யார் வேண்டாம் என்று கூறியது?

எதிரி யார்? நண்பர் யார்? என்று அடையாளம் காண்பதிலேயே தடு மாற்றம் இருந்தால் துப்பாக்கிக் குண்டுகள் தவறான மார்புகளில் தான் பாயும் என்பது பால பாடமாகும் என்பன போன்ற மின்சாரத்தின் மின்னல் வரிகள் சிந்தித்து சீர் தூக்கிப் பார்க்க வேண்டியதாகும்.

நடுநிலையோடு, தமிழின உண்மை உணர்வோடு இக்கட்டு ரையை படிப்பவர்கள் தெளிவு பெறு வார்கள் என்பது உறுதி. வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு!

தி.க பாலு, திண்டுக்கல்.

தமிழ் ஓவியா said...

ராமன் இராஜாஜியும் - இராவணன் காமராசரும் ஆசிரியர் கி.வீரமணியின் விடுதலைப் பார்வை



வழக்குரைஞர் கி.வீரமணி - கடலூர் வழக்குரைஞர் கி.வீரமணி எம்.ஏ., பி.எல்., புதிய பொறுப்பேற்ற நாள் 10.8.1962. ஆம்! விடுதலை ஆசிரியராக - வருவாய் பெரிதும் ஈட்டிய வழக்குரைஞர் தொழிலில் இருந்து விடுபட்டு விடுதலை ஆசிரியர் கி. வீரமணி எம்.ஏ., பி.எல், என்று ஆன நாள். அன்று ஆசிரியர் என்று திராவிட நல் இதயங்கள் அழைத்த பெயர்.

இன்று அவர் தமிழர் தலைவராய் உயர்ந்து, தமிழினப் போராளியாய் உயர்ந்து, தமிழனத்திற்குத் தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் ஆகியோருக்குப் பின் ஆன பின்னும் ஆசிரியர் கி. வீரமணி என்று அழைப்பதிலே திராவிட நெஞ்சங்கள் பெருமகிழ்வு கொள்கின்றன.

எண்ணிப் பார்த்திருப்பாரா?

அன்று அவர் எண்ணிப் பார்த்தே இருக்கமாட்டார். தாம் ஒரு வரலாற்றுச் சாதனைக்கு உலகிலேயே எவரும் சாதித்திடாத இனிமேலும் முறியடிக்க முடியாத சாதனைக்குக் கால் கோள் செய்கிறோம் என்று. திராவிடன் பத்திரிகைத் துறையிலும் தொடர்ந்து கால் பதித்துச் சாதிப்பான் என்று காட்டிய ஆசிரியர் வீரமணியின் பத்திரிகை ஆசிரியர் பொறுப்பு கடநத அய்ம்பதாண்டுக்காலப் பொறுப்பு என்பதற்காக அல்ல, சமுதாய மாற்றத்திற்கான வாளினைத் துருப்பிடித்துப் போகாமல் பட்டை தீட்டிப் பளபளக்கச் செய்வதற்காக.

எத்தனை எத்தனைப் பிரச்சினைகள்!

அய்ம்பது ஆண்டுகால விடுதலையை 1962 முதல் ஒரு வரலாற்று ஆய்வாளன் என்ற அடிப்படையில் புரட்டிப் பார்க்கையில் எத்தனை எத்தனை மாற்றங்கள் - அவருடைய எழுதுகோல் முனையிலிருந்து கிளம்பிய தீப்பொறி பரப்பிய சமூக சீர்திருத்தம், சமுதாய மாற்றம், பார்ப்பனீய எதிர்ப்பு, பகுத்தறிவுப் பிரச்சாரம் எனும் காட்டுத் தீ கனன்று கொண்டிருக்கிறது. அணைக்க முடியாமல் எதிர்முகாம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அன்று பெரியார் வைக்கம் போராட்டத்தின்போது சிறையிலிருந்தபோது ஆரியக் கூட்டம் அவரை அழிக்க ஏதோ வேள்வி நிகழ்த்தினார்களாம். அந்த வேள்வித் தீ பகுத்தறிவுப் பகலவனைச் சுட்டெரிக்காமல், ஏவிவிட்டவர்கள் ஏமாந்து போகும்படி திருவனந்தபுரம் மன்னர் இறந்து போகப் பகுத்தறிவு விழி திறக்க வகை செய்தது.

தீர்த்துக்கட்டப் பார்த்தனரே!

அதுபோல் ஆத்திரம் கொண்ட பார்ப்பனக் கூட்டம் பகை முரசு கொட்டி ஆரிய அடிமைகளை ஏவி ஆசிரியரை திருவில்லிபுத்தூரிலும், சென்னையிலும் தீர்த்துக் கட்டப் பார்த்தனரே, இதற்குக் காரணம் அவர் இயக்கிய விடுதலை என்னும் கையெறி குண்டு வீச்சு அல்ல, பீரங்கிக் குண்டுகள் வீச்சுத்தான். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆசிரியரின் பொறுப்பில் விளைந்த மாற்றங்களைக் குறித்து ஆண்டுக்கு ஓர் ஆய்வேடு என்று அய்ம்பதாண்டுகளுக்கு அய்ம்பது ஆய்வேடுகள் தயாரிக்கலாம். குறைந்தது அய்ம்பது பேர் ஆய்வுப் பட்டம் பெறலாம்.

தமிழ் ஓவியா said...

காலத்தின் கண்ணாடி!

விடுதலை என்பது சமூக சீர்திருத்த ஏடு மட்டுமல்ல. பகுத்தறிவுக் கண்ணாடி மட்டுமல்ல. காலத்தின் கண்ணாடி. தமிழக வரலாற்றில் பார்ப்பனத் தலைவர் ராஜாஜி இரண்டு முறை அரசோச்சியிருக்கிறார். மாநிலத்தில் - மய்யத்தில் தலைமை ஆளுநர் எனும் கவர்னர் ஜெனரல் பதவி - துறை இல்லாத அமைச்சர் பதவி என்று பல பதவிகளை வகித்தவர். பார்ப்பனர்கள் பார்வையில் பெரிய ராஜதந்திரி.

ஆனால், காமராசர் 1954 ஆம் ஆண்டிலிருந்து 1962 வரை 9 ஆண்டுகள்தான் தமிழகத்தின் முதலமைச்சர். பச்சைத் தமிழர் என்று நம் பகுத்தறிவுப் பகலவனால் பாராட்டப் பெற்றவர். பள்ளிப் படிப்பை முழுமையாக நிறைவு செய்யாதவர். பார்ப்பனர்களுக்குப் படியாதவர். திராவிடர்களுக்குப் படியாத மேதை என்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது விடுதலையின் வீச்சால். இன்று பார்ப்பனர்களுக்குக்கூடக் காமராசர் ஆட்சி திராவிடர்களின் பொற்கால ஆட்சி என்று விடுதலை ஏட்டின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் புரிகிறது, விளங்குகிறது. அதுதான் ஆசிரியர் கி. வீரமணியின் சாதனைத் தொப்பியில் செருகப்பட்ட மயிலிறகுத் தோரணம்.

எத்தனை எத்தனை விளக்கங்கள். எவ்வளவு புள்ளி விவரங்கள். எங்கெங்கு தேடித் திரட்டினாரோ என்று வியக்க வைக்கிறது விவரச் சுவடிகள். ஆங்கில நூல்களில், ஆங்கில ஆதாரங்களில் இருப்பவற்றை அள்ளிக் குவித்துப் பார்! பார்! குல்லுகப் பட்டரின் பார்ப்பனீய ஆட்சியை, பார்ப்பனீயத்திற்குப் பாடுபடும் ஆட்சியை என்று காட்டுகிறார் ஆசிரியர்.

மருத்துவ இயக்குநரும் - விடுதலையும்!

பார்ப்பனீயம் எனும் நச்சரவம் தலைதூக்கும் போதெல்லாம் ஆசிரியரின் பேனா முனை ஈட்டி முனையாக மாறி அதைக் குத்திச் சாய்க்கத் தவறியதே இல்லை.

5.1.1963 விடுதலை தலையங்கம்

ஒரு சாம்பிள்: (மாதிரி)

மருத்துவப் படிப்புக்குரிய இயக்குநர் என்ற ஒரு பதவிக்கு (Director of Medical Education) ஒருவரை நியமிக்கப் போவதாக அறிகிறோம். நிபுணர்களான தமிழர்களை நியமிப்பதன்மூலமே நீதி கிடைக்கச் செய்ய முடியும்.

தமிழர்களில் நிபுணர்களுக்குப் பஞ்சமேயில்லை.

திருவாளர்கள்: டாக்டர் ரத்தினவேலு சுப்பிரமணியம், டாக்டர் ஆர்.ஜி. கிருஷ்ணன், டாக்டர் கோவிந்தராஜன், டாக்டர் டி.ஜெனார்த்தனம், டாக்டர் கே. இராமச்சந்திரா போன்ற பலர் இருக்கிறார்கள். அக்கிரகாரத் திருமேனிகளைக் கொண்டு வந்து அந்த இடத்தில் வைத்தால் அவ்வளவுதான். ஆட்டு மந்தைக்கு ஓநாயைக் காவல் வைத்தது மாதிரிதான்.

மேற்குறிப்பிட்ட அனைவரும் மருத்துவத் துறையிலும், நிருவாகத்திலும் தலைசிறந்த நிபுணர்கள் என்று பெயர் எடுத்துள்ளவர்கள் என்பதைப் பார்ப்பனர்களால் கூட மறுக்க முடியாதே!

தற்போது சென்னை மருத்துவக் கல்லூரியில் டீனாக (தலைவராக) இருந்து ஓய்வு பெறப்போகும் அய்யங்கார் ஒருவரை அப்பதவியில் அமர்த்த பகீரதப் பிரயத்தனம் நடைபெறுகிறதாம்.

தமிழ்நாட்டிலிருந்து டில்லி சென்றுள்ள அய்யங்கார் மந்திரி ஒருவரும், தமிழ்நாட்டு அரசாங்கத்திலே மருத்துவத் துறை காரியதரிசியாக உள்ள அய்யங்கார் ஒருவரும் இம்முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனராம். நுட்பமாகத் தலையங்கத்தில் ஆசிரியரின் விடுதலை அன்றே இவ்வாறு வாதிட்டிருப்பதைக் காணும்போது சபாஷ் போடத் தோன்றுகிறது. பலே! பலே! என்று உரக்கக் கூவத் தோன்றுகிறது.

நிருவாகத் திறமையும், மருத்துவ அறிவும் மேம்பட்டு விளங்கும் தமிழர்களைக் காட்டினால் அவர் ரிட்டயரானவ ராயிற்றே என்று கூறும்போது பார்ப்பனர்களுக்கும்கூட அவ்விதி பொருந்தவேண்டுமே! ஆச்சாரியார் ஆட்சியில் ரிட்டயரானவர்களை மூன்று, நான்கு முறை பதவி நீட்டிப்புக் கொடுக்கவில்லையா? 12 ஆண்டுகளுக்குமுன் ரிட்டயரான வருக்கு மறு பிறப்புத் தரவில்லையா?

தமிழ் ஓவியா said...

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி தலைமைப் பதவி, சென்னை மருத்துவக் கல்லூரி தலைமைப் பதவி, மருத்துவ இலாகா டைரக்டர் மருத்துவப் படிப்பு டைரக்டர் போன்ற பெரும் பதவிகளில் தெரிந்தோ தெரியாமலோ பார்ப்பனர்களைக் கொண்டு வந்து உட்கார வைத்தால், நெசவாளி பக்கத்தில் குரங்கை உட்கார வைத்தது போலத்தான்!

காமராசர் ஆட்சியின் சாதனை

காமராசர் ஆட்சியின் பலன்கள் என்ற இழைகளை அந்தப் பார்ப்பன அதிகாரிகளான இராமதாசர்கள் பிய்த்து எரிந்துகொண்டேதான் இருப்பர்! இத்துறைகளில் கவனஞ்செலுத்தி காமராசர் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் என்பதை உறுதிப்படுத்திவிட வேண்டு மென்பதே நம் ஆசை!

இன்றைக்குப் பொறியியல், மருத்துவக் கல்லூரி வேளாண்மை முதலிய படிப்புகளுக்கு உயர்ஜாதிக்காரர்கள் பயன்பெறும் வகையில், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குழிதோண்டும் முறையில் அமைந்த நுழைவுத் தேர்வை ஒழித்ததுபோல், இன்றைக்கு அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் பள்ளி இறுதித் தேர்வு எழுதுமுன் வடிகட்டும் முறை என்ற கொடிய முறை இருந்தது. அதை எதிர்த்துக் குரல் கொடுத்து அந்த முறையை ஒழிக்கத் தந்தை பெரியார் வழியில் குரல் கொடுத்தது ஆசிரியரின் பொறுப்பில் இருந்த விடுதலை!
பன்னாடை முறையும் பக்தவத்சலனாரும்!

தமிழ் ஓவியா said...

கல்வி அமைச்சராக விளங்கிய பக்தவத்சலம் அவர்கள் வடிகட்டும் முறைக்காக வாதாடும் வக்கீல்களான அக்கிர காரத்தவர்களின் வக்கிரபுத்திக்குச் சாட்டையடி கொடுப்பது போல் பேசிய கீழ்க்கண்ட அவருடைய பேச்சை 15.1.1963 தலையங்கத்தில் பன்னாடை முறையும் பக்தவத்சலனா ரும்! என்று அருமையான தலையங்கம் தீட்டியது விடுதலை.

தேர்வுப் பரீட்சை நடத்தி மாணவர்களை வடிகட்டுவதால் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கு ஆஜராகும் ஒரு சந்தர்ப்பம் போய்விடுகிறது. மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தேர்வும், பரீட்சையும். சிலர் அதில் போதிய மார்க் வாங்கவில்லையானால், அவர்களைப் பிரத்யேகமாகக் கவனித்துப் படிக்கச் செய்யவேண்டும். அதுதானே பள்ளிகளின் கடமை. தேர்வு பரீட்சையில் தேறி எஸ்.எஸ்.எல்.சிக்குப் போகிறவர்கள் எல்லோரும் தேறி விடுகிறார்களா? அதுபோல் வடிகட்டப் பட்டவர்கள் பரீட்சைக்கு அனுப்பப்பட்டால் இடையே உள்ள மாதங்களில் மாணவர்கள் நன்றாகப் படித்துத் தேற முயற்சிக்கமாட்டார் களென்று சொல்ல முடியுமா? மேலும் எவ்வளவு ஏழைகள் உள்ளனர். அந்த மாணவர்களை நிறுத்தி வைத்து வீணாக்குவதில் பயனில்லை.

தமிழ் ஓவியா said...

திராவிடத்தால் வீழ்ந்தோமா?

இன்றைக்குத் திராவிடத்தால் வீழ்ந்தோம் ஏகடியம் பேசும் தோழரே! எத்தனை தாழ்த்தப்பட்ட தோழர்கள் தேர்வு பரீட்சை (Selection Exam) என்னும் படுகுழியில் விழுந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத முடியாமல் வாழ்க்கை வீணாகப் போயிற்றே. அதைத் தடுத்து நிறுத்தியது தந்தை பெரியார் அல்லவா? தமிழர் தலைவர் கி. வீரமணி அல்லவா? அய்ம்பது ஆண்டுகளுக்குமுன் விடுதலை அல்லவா? எத்தனை எத்தனை வீடுகளில் தேர்வுப் பரீட்சை தொடர்ந்திருந்தால் கல்வி விளக்கு அணைந்து போயிருக்கும். இதை எண்ணிப் பார்த்தாவது நாக்கில் பல்லைப் போட்டுத் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று தண்ணீர்ப் பாம்புகளைத் தூக்கிப் போட்டு மிரட்டிப் பார்க்காதீர்கள்.

விடுதலை எழுதியது, விழிகளைத்திறக்கச் செய்தது.

பள்ளி இறுதித் தேர்வில் இப்படி ஒரு பன்னாடை முறையை முன்பு புகுத்தியதன் நோக்கமே தமிழ்ப் பிள்ளை களுக்குக் கல்வியறிவு ஏற்படக் கூடாது என்ற அடிப் படையில்தான். பார்ப்பனர்களது இவ்வித சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட தந்தை பெரியார் அவர்களும், தமிழர் களது கேடயமான விடுதலையும் இடைவிடாமல், அதைக் கண்டித்து வந்திருப்பதோடு, இப்பன்னாடை முறை அறவே ஒழிக்கப்படவேண்டும் என்றும் எழுதியும், பேசியும் வந்தனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்குமுன்பு கூட நாம் பன்னாடை முறையை ஒழிப்பதன் அவசியம் பற்றி ஒரு தலையங்கம் எழுதியிருந்தோம்.

தெள்ளத் தெளிவாக காமராசர் ஆட்சியில் கல்வி பரவாத கிராமங்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டு, பத்து வயதுவரை இலவசக் கல்வி என்கிற வசதியினாலும், பள்ளிகள் இல்லாத ஊர்களே இல்லை என்பதாலும், படிக்கும் மாணவர் தொகை பல மடங்காகப் பெருகியுள்ளது. இதைத் தடுத்து கல்வி பரவாமல் நிறுத்துவதன்மூலம் மனு(அ)தர்மத்தைக் காப்பாற்ற வழியேற்படும் என்பதே இந்நாட்டுப் பார்ப்பனர்களது எண்ணமாகும்.

ஒழுங்கு கட்டுப்பாடு முதலிய காரணங்களைத் தவிர்த்து வேறு காரணங்களுக்காக மாணவர்களை வடிகட்ட வேண்டாம். எல்லோரையும் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுத அனுப்புங்கள் என்று தமிழகக் கல்வித் துறை இயக்குநர் உயர்நிலைப் பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பினார் என்றால், ஆசிரியரின் விடுதலை அன்றைய நாள் மேற்கொண்ட போராட்டத்தின் வெற்றி அது.

இதைப் பொறுக்காத இந்து, மெயில், இந்தியன் எக்ஸ் பிரஸ், பல பார்ப்பன ஏடுகள் ஏதோ ஆபத்து நிகழக்கூடாதது - நிகழந்ததுபோல் உரத்த குரலில் ஓங்கிச் சப்தமிட்டன. கல்வித் துறை இயக்குநரைக் கிண்டலும், கேலியும் பண்ணும் அளவிற்குத் தலையங்கங்களும், கேலிச் சித்திரமும் தீட்டித் தங்கள் ஆத்திர எல்லைகளை விரிவுபடுத்தினர்.

பன்னாடை முறையால் ஒரு பார்ப்பான் பாதிக்கப்பட்டதுண்டா?

பன்னாடை முறையினால் ஒரு பார்ப்பன மாணவர்கூட பாதிக்கப்படுவதே கிடையாது என்பதால்தான் அதை ஒழிக்கக் கூடாது என்று பார்ப்பனர் வரிந்து கட்டி நின்றனர்.

விடுதலை ஏடு அரசுக்கு அரணாக விளங்கியதோடு மலிவான விளம்பரமும் பெருமையும் பெறுவதைவிட மகத்தான எதிர்ப்பிருந்தாலும் நல்ல காரியங்களை வருங்காலச் சந்ததியும், வரலாறும் வாழ்த்தும்படியான காரியங்களை ஆற்றுவதே ஆளும் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களது கண்ணோட்டமாக இருக்கவேண்டும் என்று அறிவுரை கூறியது.

16.3.1963 முதல் 22.4.1963 வரை தினமும் மனு(அ)நீதியே காக்கும் ஆச்சாரியார் ஆட்சி வந்தால் என்று ஒரு பக்கமும் காமராசரின் நீதி ஆட்சியில் என்று மறுபக்கமும் தினமும் புதிய புதிய செய்திகள் வந்தன. ஆச்சாரியார் ஆட்சி பூணூல் ஆட்சி என்பதை ஆதாரத்தோடு எடுத்துக் கூறியதோடு, காமராசரின் ஆட்சியில் மக்கள் பசி, பட்டினி நிலை மாறி வருகிறது. உணவுப் பொருள் உற்பத்தி இருமடங்கு ஆக அதிகரித்துள்ளது என்று புள்ளி விவரத்தோடு எடுத்துக் கூறிய பாங்கு இன்றும், என்றும் பாராட்டக் கூடியது.

இராவணன் ஆண்டால்...

24.4.1963 முதல் ஏறத்தாழ ஒரு மாத காலம் இராமன் ஆண்டால்... என இராஜாஜி ஆண்டபோது நடைபெற்ற அக்கிரமங்களையும், இராவணன் ஆண்டால் என்று தமிழரின் ரட்சகர் காமராசர் (இராவணன்) ஆட்சியில் என்று பல்வேறு புள்ளி விவரங்கள், ஆங்கில ஏடுகள் அளித்த தகவல்கள் உருகி வந்த வெண்ணெய் நெய் போல ஊற்றி மணக்க மணக்கச் சாப்பிடுவதுபோல் கொடுத்த பாங்கு நினைந்து நினைந்து பாராட்டத்தக்க பாங்கு.

அய்ம்பது ஆண்டுகள் கடந்தபோதும் ஆசிரியர் அளித்த கூர்மையான ஆயுதம் ஆசிரியரின் கையில் அய்யா ஒப்படைத்த விடுதலை நான்கு பக்க விடுதலை; எட்டுப் பக்கமான விடுதலை; வண்ணப் பக்கமான விடுதலை - அய்ம்பது ஆண்டுகளுக்குப் பின் அல்ல - அதற்குப் பின்னும் பேசப்படும். விடுதலை சாதனை ஏடு!

சரித்திரக் கல் பதித்த கண்ணாடி!

------ந.க.மங்களமுருகேசன்

தமிழ் ஓவியா said...

வீரமணிக்கு நம் துணையுண்டு!


இந்த அளவிற்கு நாமெல்லாம் பெரியவர்களாக அமர்ந்திருக்கின்றோம். தலைவர்களாக அமர்ந்திருக் கின்றோம் என்று சொன்னால், அதற்குப் பெரிய பொறுப்பு பெரியார் அவர்கள் இந்த சமுதாயத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் பெருமை யாருக்குப் போய்ச் சேரும் என்றால் அது அய்யா அவர்களுக்குத் தான் போய்ச் சேரும் வேறு யாருக்கும் போய்ச் சேராது.

இங்கு வந்து இந்தக் கல்லூரிகளைப் பார்த்தால் தான் தெரியும். மனதைத் தொட்டுப் பார்த்தால்தான் தெரியும். சுற்றிப் பார்க்காதவர்களும் ஒரு வேளை வீரமணி துட்டு அடிக்கிறாரோ என்று யாராவது பேசக்கூடும். ஆனால், இங்கு வந்து பார்த்தால் தெரியும். அவர் எவ்வளவு சிரமப்படுகிறார். எந்த அளவுக்கு சமுதாயத்தில் நல்ல மாறுதல்கள் ஏற்படுத்த வேண்டும். அந்த மாறுதல்கள் சமுதாயத்திற்கு எப்படிப் பயன்பட வேண்டும் என்பதற்காக, தன்னை வீரமணி அவர்கள் அர்ப்பணித்துக் கொள்கிறார்.

அய்யா அவர்களுடைய பாதையில் மாறாமல் அதே நிலையிலிருந்து நல்ல பணிகளை செய்து கொண்டு வருகின்ற அவருக்கு நம்முடைய துணை, பாராட்டுகள் நிச்சயம் உண்டு. புதிய நூற்றாண்டிலே அவருடைய முயற்சிகள் வெற்றி பெறட்டும்!

(22-1-2000 அன்று வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரி விழாவில் ஜி.கே. மூப்பனார் ஆற்றிய உரையிலிருந்து.

தமிழ் ஓவியா said...

விடுதலை ஆசிரியர் பணியில் 50 ஆண்டுகள் நிறைவு: தமிழர் தலைவருக்கு வாழ்த்து


சென்னை, ஆக.10- உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழான விடுதலை யின் ஆசிரியர் பணியில் 50 ஆண்டுகள் நிறைவையொட்டி தமிழர் தலை வருக்கு விடுதலை பணியாளர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வேண்டுகோளை ஏற்று விடுதலையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட திராவிடர் கழகத் தலைவரும் தமிழர் தலைவருமான மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலை ஏட்டினை பல தடைக் கற்களைத் தாண்டி வெகு சிறப்பாக நடத்தி வருகிறார்.

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று (9.8.2012) அதிகாலை சென்னை திரும்பிய தமிழர் தலைவர் இன்று (10.8.2012) பெரியார் திடலுக்கு வந்தவுடன் திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம், கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு, வரியியல் அறிஞர் சா. இராசரத்தினம், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்கள் உரத்தநாடு இரா. குணசேகரன், துரை. சந்திரசேகரன், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் நல். இராமச்சந்திரன், பெரியார் வீரவிளையாட்டு கழக தலைவர் ப. சுப்பிரமணியன், பெரியார் திடல் மேலாளர் ப. சீதாராமன், விடுதலை அச்சகப் பிரிவு மேலாளர் க. சரவணன், பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன், திராவிட எழில், தஞ்சை மாவட்டச் செயலாளர் த. ஜெகநாதன், இளவ ரசன் மற்றும் பெரியார் திடல் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், செந் தில், சுரேஷ் உள்ளிட்ட பணியாளர் கள் அனைவரும் தமிழர் தலைவரை வரவேற்று சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர். அவர்கள் அனை வருக்கும் தமிழர்தலைவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்.

விடுதலை செய்திப் பிரிவில் தமிழர் தலைவருக்கு வாழ்த்து

பின்னர் விடுதலை செய்திப் பிரிவுக்கு வருகை தந்து இருக்கையில் அமர்ந்த ஆசிரியருக்கு, தமிழர் தலைவருக்கு விடுதலை செய்திப் பிரிவு பணியாளர்கள் அனைவரின் சார்பாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பாசிரியர் கவிஞர் கலி. பூங்குன்றன் சால்வை அணிவித்தார். விடுதலைப் பணி மனையில் பணியாற்றுவோர் தமிழர் தலைவரை சந்தித்து தமது வாழ்த்து களையும், பாராட்டுகளையும் தெரி வித்துக் கொண்டனர். அனைவருக் கும் தமிழர் தலைவர் இனிப்புகளை வழங்கி, விடுதலை மேன் மேலும் இன்னும் சிறப்பாக வெளி வரவும், அடுத்த விடுதலை மூன்றாம் பதிப்பு விரைவில் வெளிவரும் என்ற மகிழ்ச் சியான தகவலையும் தெரிவித்தார்.

.

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வீ. குமரேசன், வழக்குரை ஞர் த. வீரசேகரன், வழக்கறிஞர் துரை. இளையராஜா ஆகியோர் தமிழர் தலைவருக்கு சால்வை அணி வித்து சிறப்பு செய்தனர். திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினரும் பெரி யார் பெருந் தொண்டருமான வந்த வாசி வேல். சோமசுந்தரம், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி இரா. பரஞ்ஜோதி, தலைமை செயலாளர் குழு உறுப்பினர் ச. இன்பலாதன், கோ. கருணாநிதி, (ஏ.அய்.ஓ.பி.சி.), உ. பலராமன், பார்த்தசாரதி (ஏ.அய். ஓ.பி.சி.), கழக மகளிர் க. பார்வதி, ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், கு. தங்க மணி, திருமகள் இறையன், வெற்றிச் செல்வி பூங்குன்றன், பெரியார் சாக்ரடீஸ், எமரால்டு ஒளி வண்ணன், சென்னை மண்டல தலைவர் ரத்தினசாமி, மண்டல செயலாளர் ஞானசேகரன், தாம்பரம் முத்தையன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன்னாள் செயலாளர் மா. செல்வராஜ், பெரியார் திடலில் உள்ள திராவிடன் நலநிதியின் சார்பில் மேலாளர் அருள்செல்வன், வெங்க டேசன், அன்புசெல்வன் ஆகியோர் தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த் துத் தெரிவித்தனர். நேற்று (09.08.2012) பிறந்த நாள் கண்ட திராவிடர் கழக தலைமை நிலைய செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களுக்கு விடுதலை பணியாளர்கள் வாழ்த்துத் தெரிவித் தனர். தமிழர் தலைவரிடம் கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தா தொகை மொத்தம் சந்தா தொகை ரூ.59,440/-மும், நாகம்மை யார் இல்லத்திற்கு ரூ.500/-மும், துணைப் பொதுச் செயலாளர் உரத்த நாடு குணசேகரன் மூலம் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தா தொகை, நாகம்மையார் இல்ல நிதி மொத்தம் ரூ.91,360/-, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச. இன்ப லாதன், விடுதலை வைப்பு நிதியாக ரூ.10,000-மும், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி இரா. பரஞ்ஜோதி நாகம்மை யார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/-மும், வேல். சோமசுந்தரம் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.100/-, விடுதலை சந்தாவுக்கு ரூ.600/- மு. சென்னியப்பன் ரூ.50/-, செம்மொழி மணி ரூ.100/- கடலூர் மாவட்டத்தின் சார்பில் அருள்ராஜ் 100 விடுதலை சந்தாக்களையும், சிதம்பரம் மாவட் டத்தின் சார்பில் கா. கண்ணன் 100 விடுதலை சந்தாக்களையும், வடலூர் நல்ல கிருஷ்ணமூர்த்தி, வழங்கிய 30 விடுதலை சந்தாக்களை (முடி திருத்தும் நிலையங்களுக்கு) துரை. சந்திரசேகரனும், தாம்பரம் மாவட் டத்தின் சார்பில் தாம்பரம் முத்தை யன் 20 விடுதலை சந்தாக்களை யும் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

தாம்பரம் மாவட்டத்தின் சார்பில் தமிழர் தலைவர் 50ஆவது ஆசிரியர் பணியையொட்டி 50 பேர் உடல் தானம் செய்கிறோம் என தமிழர் தலைவரிடம் மண்டல தலைவர், செயலாளர் ஆகியோர் தெரிவித்தனர்

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வீ. குமரேசன், வழக்குரை ஞர் த. வீரசேகரன், வழக்கறிஞர் துரை. இளையராஜா ஆகியோர் தமிழர் தலைவருக்கு சால்வை அணி வித்து சிறப்பு செய்தனர். திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினரும் பெரி யார் பெருந் தொண்டருமான வந்த வாசி வேல். சோமசுந்தரம், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி இரா. பரஞ்ஜோதி, தலைமை செயலாளர் குழு உறுப்பினர் ச. இன்பலாதன், கோ. கருணாநிதி, (ஏ.அய்.ஓ.பி.சி.), உ. பலராமன், பார்த்தசாரதி (ஏ.அய். ஓ.பி.சி.), கழக மகளிர் க. பார்வதி, ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், கு. தங்க மணி, திருமகள் இறையன், வெற்றிச் செல்வி பூங்குன்றன், பெரியார் சாக்ரடீஸ், எமரால்டு ஒளி வண்ணன், சென்னை மண்டல தலைவர் ரத்தினசாமி, மண்டல செயலாளர் ஞானசேகரன், தாம்பரம் முத்தையன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன்னாள் செயலாளர் மா. செல்வராஜ், பெரியார் திடலில் உள்ள திராவிடன் நலநிதியின் சார்பில் மேலாளர் அருள்செல்வன், வெங்க டேசன், அன்புசெல்வன் ஆகியோர் தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த் துத் தெரிவித்தனர். நேற்று (09.08.2012) பிறந்த நாள் கண்ட திராவிடர் கழக தலைமை நிலைய செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களுக்கு விடுதலை பணியாளர்கள் வாழ்த்துத் தெரிவித் தனர். தமிழர் தலைவரிடம் கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தா தொகை மொத்தம் சந்தா தொகை ரூ.59,440/-மும், நாகம்மை யார் இல்லத்திற்கு ரூ.500/-மும், துணைப் பொதுச் செயலாளர் உரத்த நாடு குணசேகரன் மூலம் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தா தொகை, நாகம்மையார் இல்ல நிதி மொத்தம் ரூ.91,360/-, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச. இன்ப லாதன், விடுதலை வைப்பு நிதியாக ரூ.10,000-மும், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி இரா. பரஞ்ஜோதி நாகம்மை யார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/-மும், வேல். சோமசுந்தரம் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.100/-, விடுதலை சந்தாவுக்கு ரூ.600/- மு. சென்னியப்பன் ரூ.50/-, செம்மொழி மணி ரூ.100/- கடலூர் மாவட்டத்தின் சார்பில் அருள்ராஜ் 100 விடுதலை சந்தாக்களையும், சிதம்பரம் மாவட் டத்தின் சார்பில் கா. கண்ணன் 100 விடுதலை சந்தாக்களையும், வடலூர் நல்ல கிருஷ்ணமூர்த்தி, வழங்கிய 30 விடுதலை சந்தாக்களை (முடி திருத்தும் நிலையங்களுக்கு) துரை. சந்திரசேகரனும், தாம்பரம் மாவட் டத்தின் சார்பில் தாம்பரம் முத்தை யன் 20 விடுதலை சந்தாக்களை யும் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

தாம்பரம் மாவட்டத்தின் சார்பில் தமிழர் தலைவர் 50ஆவது ஆசிரியர் பணியையொட்டி 50 பேர் உடல் தானம் செய்கிறோம் என தமிழர் தலைவரிடம் மண்டல தலைவர், செயலாளர் ஆகியோர் தெரிவித்தனர்

தமிழ் ஓவியா said...

விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் - ஒரு பார்வை


வாழ்வு வளம்பெற வழிகாட்டும் வாழ்வியல் சிந்தனைகள்

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலை நாளிதழில் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

முதல் பாகம் ஈகையால் வரும் புகழையும், பகிர்ந்துண்ணுவதால் பெறும் பயன்களையும், கோபத்தால் விளையும் பேராபத்தையும், அன்றாடச் சிக்கல்களைத் தீர்க்கும் வழிவகைகளையும், மருந்துகளால் வரும் தீங்கு களையும், அறிவியல் சிந்தனைகளால் நிகழும் அதிசயங் களையும் கூறிடும் அரிய களஞ்சியமாகும்.

இரண்டாம் பாகம் முதிர்ச்சியின் இலக்கணத்தையும், புகைப்பழக்கத்தால் வரும் கேடுகளையும், குழந்தை வளர்ப்பு முறைகளையும், கூடி வாழும் கோட்பாடுகளையும், சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்திகளையும், மருந்துக்கு மாற்றான மாமருந்தையும், நயத்தக்க நாகரிகத்தையும், பொல்லாத நோய்பற்றிச் சொல்லாத உண்மைகளையும் கொண்ட அரிய களஞ்சியமாகும்.

மூன்றாம் பாகம் அறிவியல் கொடையையும், மரங்களால் மலர்ந்த மனிதத்தையும், சீனத்துப் பெரியாரின் சீலங் களையும், அன்பெனும் பிடியுள் அகப்படும் மாமலையையும், பிணமேடையாகும் மணமேடையைத் தவிர்க்கச் சில யோசனைகளையும், மனத்தின் செயல்தான் எல்லாமென்ப தையும் உணர்த்திடும் உயரிய நூல்.

நான்காம் பாகத்தில் அறியாமையைப் போக்கும் முறைகளும், மன அழுத்தத்திற்கான மாற்றுப் பாதையும், சிரிப்பால் வரும் பயன்களும், மருத்துவப் பரிசோதனையின் அவசியமும், முதுமை உணர்த்தும் எச்சரிக்கைகளும், பண்பால் மலரும் பாசங்களும், அறிவார்ந்தவர்களின் அடக்கங்களும், உள்ளத்தை உருக்கும் நோயை மாய்க்கும் முறைகளும் கூறப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...

அய்ந்தாம் பாகம் உயர்ந்த மனிதராக உன்னத வழிகளையும், சோதிடத்தை வெல்லும் மனோதிடத்தையும், தற்கொலைச் சிந்தனையைத் தவிர்க்கும் முறைகளையும், சில நேரங்களில் சில மனிதர்களையும் பற்றி எடுத்துரைக்கிறது.

ஆறாம் பாகம் தொலைக்காட்சியின் தொல்லைகளைத் தவிர்க்கச் சில யோசனைகளையும், ஆசிரியர் - மாணவர்களின் உறவுப் பாலத்தையும், வளர் இளம் பருவத்தில் எழும் சிக்கல்களுக்குத் தீர்வுகளையும், இதயம் காக்கும் முறைகளையும், நாளும் சிந்திக்க நல்ல வழிகளையும், நல்வாழ்வுக்கு உரியவைகளையும் கூறுகிறது.

ஏழாம் பாகத்தில் நடைப்பயிற்சியின் லாபங்களைப் பற்றியும், காலை உணவே நமது காவலனாக உள்ளதை விளக்கியும், தூக்கம் என்பது எவ்வாறு மருந்தாக விளங்கு கிறது என்பதையும் விளக்குகிறது. மற்றும், அண்ணா அவர்களைப்பற்றி அரிய தகவல்களைக் கொண்டுள்ள சில நூல்களைப் பற்றியும், கிரேக்கத் தத்துவ ஞானியான சாக்ரட்டீஸ் அவர்களைப் பற்றிய தகவல்களும் குறிப்பிடப் பட்டுள்ளன. மேற்கண்ட ஏழு தொகுதிகளும் ஏராளமான பதிப்புகள் வெளிவந்து சாதனை படைத்து வருகின்றன.

தொடர்ந்து ஆதரவளிக்கும் வாசக பெருமக்களுக்குப் பதிப்பகத்தாரின் நன்றிகள்! தற்போது, ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுதலையின் ஆசிரியர் பொறுப்பேற்று 50 ஆண்டு நிறைவு பெறும் (10.08.2012) மகிழ்வான நிலையில், அவரது 80 வயதினைக் (02.12.2012) குறிக்கும் வகையில், அவரால் விடுதலையில் எழுதப்பட்ட வாழ்வியல் சிந்தனைகளின் எண்பது கட்டுரை களைத் தொகுத்து எட்டாம் பாகமாக வெளிவந்துள்ளது.

இத்தொகுதியில் மாரடைப்பு வருமுன் காக்க எளிய வழியைப்பற்றியும், உண்டபின் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் பலன் பற்றியும், ஓய்வறியா உழைப்பாளியாய் நம் உடலில் இயங்கும் இதயத்தைக் காக்கும் வழிகளைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. மற்றும், சிங்கப்பூர் புத்தக விழா உள்ளிட்ட தகவல்களும், கன்பூசியஸ், அலெக்சாண்டர், அரிஸ்டாட்டில், எழுத்தாளர் சின்னக்குத்தூசி ஆகியோர் பற்றிய அரிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

அறிஞர்கள் பார்வையில் வாழ்வியல் சிந்தனைகள்

நல்ல படைப்பு.

உங்களுக்கு என் வாழ்த்துகள்.

- டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்

தமிழ் ஓவியா said...

மேதகு இந்திய குடியரசுத் தலைவர் (புதுடில்லி- 21.4.2004)

தமிழர் தலைவரால் உருவாக்கப்பட்ட இந் நூல், சமூகப் பார்வையோடு, சாதாரண பள்ளி மாணவர் படித்தாலும் புரிந்து கொண்டு செயல்படும் வகையில் எழுதப்பட்ட சிறப்பான நூல் இது. இங்குள்ள தமிழர்கள் அனைவரும் தங்கள் இல்லத்தில் இந்த நூலின் பிரதிகளைப் பெற்றுப் பயனடைய வேண்டும்.

- நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன்

உச்ச நீதிமன்ற நீதிபதி, (புதுடில்லி - 8.4.2004)

ஆசிரியர் வீரமணி அவர்களால் எழுதப்பட்ட இந் நூல், ஞானப் பெட்டகம் - அறிவுக் களஞ்சியமாகும். இந் நூலைப் படித்ததில் மன நிறைவைப் பெற்றேன். துன்பமயமான வாழ்வை இன்பமயமானதாக மாற்றி அமைப்பது எப்படி என்பதுதான் இந்த நூலின் அடி நாதமாகும். பள்ளம் இருக்கிறதா பயப்படாதே! அதனைப் பதுங்கு குழியாக மாற்று என்கிறார் ஆசிரியர் வீரமணி அவர்கள். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அவரவர் மொழியிலே படிக்க வேண்டிய நூல் வாழ்வியல் சிந்தனைகளாகும்.

- குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார்

(திருச்சி - 28.3.2004)

தமிழ் ஓவியா said...

வாழ்வியல் சிந்தனைகள் நல்லதொரு வெளியீடாக வந்துள்ளது. தந்தை பெரியார் எந்த மனித நேயத்தை விரும்பினாரோ, அதை நூல்கள் வாயிலாக, பிரச்சாரத்தின் வாயிலாக நம் ஆசிரியர் வீரமணி பரப்பிக் கொண்டிருக்கிறார். இந் நூல் சிந்தனை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையாக உருவாக்கப்பட்டிருக்கின்றது.

- இரா. செழியன் (சென்னை-5.3.2004)

வாழ்வியல் சிந்தனைகள் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பலவற்றை நாங்கள் விடுதலையில் முன்பே படித்தவை எனினும் மீண்டும் படிப்பது பயனுள்ளதாகவே அமையும். பல அலுவல்களுக்கு இடையே இப்படிப்பட்ட பங்களிப்புக்கும் நேரம் ஒதுக்க முடிந்தது பாராட்டத்தக்கது.

- டாக்டர் வா.செ. குழந்தைசாமி (சென்னை-28.3.2004)

இந் நூலில் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதிலிருந்து ஃபோனில் பேசுவது வரை வீரமணி அவர்கள் எழுதி இருக்கின்றார். நெல்சன் மண்டேலாவிலிருந்து அய்ன்ஸ் டீன் உள்ளிட்டு புஷ் வரை எழுதி இருக்கிறார். இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக, வழி காட்டிகளாகத் திகழ வேண்டும். பேசுவதில், விமர்சிப்பதில், ஊக்கப்படுத்துவதில், பாராட்டுவதில், என்னென்ன சீரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்கலாம்; அவ்வாறு கடைப்பிடிக்க ஒரு சமூகப்படை உருவாகுமானால் அவற்றிற்கு இவை தேவைப்படும்.

- தா.பாண்டியன் மாநிலக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. (தஞ்சாவூர் - 24.3.2004)

இந்த நூலில் எனக்குப் பிடித்தது எதையும் எளிமையாக எழுதியதுதான். டி.வி., போன்ற சாதனங்கள் ஏற்படுத்திய கேடுகள் - மாணவர்களாக இருக்கட்டும், புகழ் போதையில் புரள்பவர்களாக இருக்கட்டும். அனைவருக்குமே இந்த நூல் பயன்படும். அந்த வகையில் டில்லித் தமிழ்ச் சங்கத்தில் இந்த நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

- ஜி. பாலச்சந்திரன் அய்.ஏ.எஸ்.,டில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர், மத்திய அரசுத்துறை செயலாளர் (புதுடில்லி - 8.4.2004)

நண்பர் வீரமணி எழுதிய இந்த நூல் சுத்தமான அறிவு, சுத்தமான அனுபவம் இவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. நெடி ஏதும் இல்லாதது - எல்லாத் தரப்பினரும் படிக்க வேண்டிய நூல் இது.

- த.ஜெயகாந்தன் (மதுரை - 11.4.2004)

தலைவர் வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் கருத்துகள் புடம் போட்ட தங்கமாக ஒளிர்கிறது. அறிவியல் அடிப்படையில் எவரும் பின்பற்றக்கூடிய அளவில் இந் நூலை எழுதி இருக்கிறார்.

- மணவை முஸ்தபா (சென்னை - 5.3.2004)

ஒரே நாளில் தங்கள் சிந்தனைகள் முழுவதையும் படித்துப் பேரானந்தம் கொண்டேன். தங்கள் பாசமலர் இன்னொரு விவிலியமாக எனக்குத் தெரிகிறது. மிகச்சிறந்த நூல். என் உளமாரப் பாராட்டுகள்.

- டாக்டர் கே. வெங்கடசுப்பிரமணியன் மத்திய திட்டக்குழு உறுப்பினர் (புதுடில்லி - 12.4.2004)

படிக்க - திரும்பத் திரும்ப ஆழ்ந்த - அடிகோடிட்டுக் கொள்ள - விவாதிக்க - விடைபெறும் நண்பர்களுக்கு இன்னொரு நண்பனாய் அறிமுகப்படுத்த,வாழ்வியல் சிந்தனைகள் உகந்ததாக இருந்தன. - ரா. பார்த்திபன்

திரைக் கலைஞன் (சென்னை - 25.4.2004)

இந்நூல் பல்கலைக் கழகங்களில் பாடத்திட்டத்தில் வைக்கப்பட வேண்டும்.

- பேராசிரியர் கே. நிலாவுதீன் (திருச்சி - 28.3.2004)

தமிழ் ஓவியா said...

முதலில் வாழ்வியல் சிந்தனைகள் என்ற தலைப்பிற்குப் பாராட்டுகள். அடுத்து, குற்றால அருவிபோல எழுத்து நடை சலசலவென்னும் கருத்துகள் ஓட்டம். சிலுசிலுவென்றும் படிக்க, ரசிக்க, ஆனந்தமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசியும், பல ஆண்டுகளாக எழுதியுள்ள எண்ணற்ற மனிதர்களையும் சந்தித்தவர் அல்லவா? மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்?

- அ. ராஜ்மோகன் அய்.பி.எஸ்., (ஓய்வு) முன்னாள் காவல்துறைத் தலைவர் (சென்னை - 7.3.2004)

மன அழுத்த நோயால் பலரும் அவதிப்படுகின்றனர். சிலர் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வு தற்கொலையாக இருக்க முடியாது - இத்தகைய மனச் சோர்வுகளுக்கு மா மருந்தாக இந் நூல் பயன்படும்.

- பேராசிரியர் அருணன் (மதுரை - 11.4.2004)

வாழ்வியில் சிந்தனைகள் நூல் ஆசிரியர் வீரமணி அவர்களின் சமுதாயப் பணியில் பிறிதொரு அத்தியாயம். வாழ்க்கையில் முன்னேற முனைகின்ற ஒவ்வொருவரும் தங்கள் கையில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் இது. ஒவ்வோர் அத்தியாயமும் மருத்துவர்கள் முதற்கொண்டு பாமர மக்கள் வரை அவரவர்களின் வாழ்க்கையை - தொழிலை முறைப்படி செம்மையாக வெற்றி நோக்கி அழைத்துச் செல்லக் கூடிய வழிகாட்டியாக அமைந்த நூல். தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார் என்ற ஆசிரியர் வீரமணி அவர்களின் உயர்ந்த பண்பினைப் போற்றுகின்றேன்.

- டாக்டர் நா. மோகன்தாஸ்

தலைமை சிறுநீரக மருத்துவர் (தஞ்சாவூர் - 24.3.2004)
இந் நூல் ஒவ்வோர் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல். தங்களின் எழுத்திற்கு இது ஒரு மணி மகுடம். இது வெறும் வார்த்தை இல்லை. உள்ளத்து உணர்வு.

- டாக்டர் ராஜு எம்.டி., (சேலம் - 23.4.2004)

மனிதனுக்கு வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் உன்னதமான சொல் விளக்காக (தீபமாக) அமைந்திருந்தது. 100 விதமான சிந்தனைகளையும் படித்துவிட்டு, அவன் அப்படியே நடந்துவிட்டால், அவனுக்கு அதுவே வசந்த காலமாக அமையும் என்பது உண்மையே!

- கவிஞர் சூரியன் (வத்தலக்குண்டு - 4.5.2004)
இந்த நூலை நிச்சயமாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும். உலகம் முழுவதும் இந்த நூல் பரவ வேண்டும். அந்தப் பணியை தமிழர் தலைவர் அனுமதித்தால், விரும் பினால் இந்த நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்பதை பணிவுடன் கூறிக் கொள்கிறேன். சிறந்த இலக்கியத்திற்கு நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. வாழ்வியல் சிந்தனை ஒரு தலைசிறந்த இலக்கியம்.

இந்த நூல் நோபல் பரிசு பெறவேண்டும். அந்தக் காலம் வரும். வந்தே தீரும்.

- முன்னாள் நீதியரசர் பெ.வேணுகோபால், சென்னை உயர்நீதிமன்றம் (சென்னை - 29.6.2005)

தமிழ் ஓவியா said...

படிக்கின்ற ஒவ்வொரு கட்டுரையிலும் பாடம் இருக்கும். ஆசிரியர் சிறப்பாகப் பணியாற்றக்கூடியவர். அவரை வடமொழிச் சொல்லில் சொல்ல வேண்டு மானால், அஷ்டாவதானி என்று சொல்லுவார்கள். ஏனென்றால் அவர் சொல்லாத விசயமே இல்லை.

இன்னொரு தரம் இந்த நூலைப் படிக்கும்பொழுது வேறு மாதிரியான கருத்துகள் தோன்றுகின்றன. எனக்கு நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் படிப்பது வழக்கம்.

- வருமான வரியியல் அறிஞர் ச.இராசரத்தினம்(சென்னை - 29.6.2005)

அய்யா அவர்களுடைய நூல் எப்படி இருக்கின்றது என்று சொன்னால், இனிமை தருகின்ற நூல். இன்பம் தருகின்ற நூல்.

பல நூல்களைப் படித்து தன்னுடைய வாழ்க்கை அனுபவத் தையும் இணைத்து ஒரு தேனடையாக இந்த வாழ்வியல் சிந்தனைகள் நூலைக் கொடுத்திருக்கின்றார். இனிமை ஒரு பக்கம்; எளிமை ஒரு பக்கம்; கருத்தருமை ஒரு பக்கம். இந்த மூன்றும் இணைந்த ஒரு நூலாக அய்யா வீரமணி அவர்களுடைய இந்த நூல் வெளி வந்திருக்கிறது. வாழ்வியல் சிந்தனைகள் நூலின் மொழிநடை எளிமையான மொழிநடை.

- பேராசிரியர் சுப.திண்ணப்பன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் (சென்னை - 29.6.2005)

ஆசிரியரைப் பொறுத்த அளவில் அவர் ஓர் அற்புதமான சுரங்கம். ஆசிரியர் அவர்கள், குடும்பத்திற்குத் தேவையான கருத்துகளை இந்த நூலில் சொல்லியிருக்கின்றார். மேலும் இந்த கருத்துகளெல்லாம் எனக்காக எழுதியிருக்கிறேன் என கூறியுள்ளார்கள். இந்தக் கருத்துகளெல்லாம் திராவிடர் கழகத்துக்காரர் களுக்கு மட்டும் சொந்தமல்ல. சிறுவர் முதல் பெரியவர் வரை, பாமரர் முதல் படித்தவர் வரை, மாணவன் முதல் ஆசிரியர் வரை, தொழிலாளி முதல் முதலாளி வரை, நோயாளி முதல் மருத்துவர் வரை, சமுதாயத்திலிருக்கின்ற அத்தனை பேரும் படித்துப் பயன் பெறத்தக்க வகையில் சிறப்பாக எழுதியிருக்கின்றார்.

தமிழின உணர்வுக்கு இங்கே கருத்து உள்ளது. தமிழின விழிப்புக்கு கருத்து இருக்கிறது. தமிழர்கள் வாழ்க்கைக்கு கருத்து இருக்கிறது. உளவியல் ரீதியாக, அத்தனைக்கும் இந்நூலில் கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

- முனைவர் ஏ.இராமசாமி, அழகப்பா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர்(காரைக்குடி - 29.7.2005)

தமிழ் ஓவியா said...

ஒவ்வொரு சிந்தனைக்கும் முத்தாய்ப்பாக தலைப்புக் கொடுத்து இருக்கிறார் அல்லவா? அந்த ஒவ்வொரு தலைப்பும் கட்டுரையும் அவ்வளவு பொருத்தமானது. அவ்வளவு அழகானது. அவ்வளவு ஈர்ப்புக் கொண்டது. ஆகவே, இந்த தலையங்கங்களை வைத்துக் கொண்டே உள்ளே இருக்கின்ற விஷயங்கள் எவ்வளவு ஆழமானது என்று நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்த சிந்தனைகளெல்லாம் நம் ஆசிரியருடைய மனதிலே எப்படி வந்தது என்றால், ஒவ்வொரு சிந்தனையும் அவருக்கு முன்னதாக நூற்றுக்கணக்கிலே நின்று கொண்டு என்னைப் பற்றி எழுது, என்னைப் பற்றி எழுது, என்னைப் பற்றி எழுது என்று கெஞ்சி இருக்க வேண்டும். இவர் தான் பொறுத் திருங்கள்,

முதல் வருடத்தில் நூறு பேரைப் பயன்படுத்தினேன். அடுத்த வருடத்தில் நூறு பேரைப் பற்றி பேசுகிறேன் என்று தேர்ந்தெடுத்து எழுதுகின்ற அளவிற்கு ஆற்றல் படைத்த, ஞானம் படைத்த ஒரு பெரிய மனிதராக நம்மிடத்திலே இருக்கின்றார்.

- ஜார்ஜ் அடிகளார் நிறுவனர், திருச்சி கலைக்காவிரி(திருச்சி - 23.7.2005)

ஆசிரியரின் சிந்தனை என்பது கடல் போன்றது. அந்தக் கடலிலிருந்து 200 முத்துகள் எடுத்து இரண்டு மாலைகளாக கட்டியுள்ளார்.

அய்யா வீரமணி அவர்கள் வாழ்வியல் சிந்தனைகள் எழுதியதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கையாக வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கின்றார்.

மனத்தை உழுதுதான் வாழ்க்கையைச் செம்மைப்படுத்த வேண்டும். அந்த உழவிற்கான அரிய கருவி அறிவுக் கருவூல நூலிலிருந்து சிறந்த முறையில் பெருமைப்பட, பாராட்டுப்பட ஏராளமான கருத்துகளை எழுதி உள்ளார்கள். இந்த வாழ்வியல் சிந்தனைகள் அத்தனையும் நமக்கு அறிவுக் கருவூலங்கள்.

- டாக்டர் வீகேயென் கண்ணப்பன்(திருச்சி - 23.7.2005)

உளவியல்தான் எவ்வளவு பெரிய படிப்பு. அவர் ஓர் ஒரேசியஸ் ரீடர். அவர் புத்தகப் பிரியராக இருக்கவில்லை. புத்தக வெறியராக இருந்து இருக்கிறார். அந்த அளவிற்கு ஆழ்ந்த ஈடுபாட்டோடு படித்த எல்லாவற்றையும் தந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தோடு இந் நூலைப் படைத்து இருக்கிறார்.

ஒரு பக்கத்தில் தமிழ்ப் பண்பாட்டு வரலாறு. மறு பக்கத்திலே உலக வரலாறு. இன்னொரு பக்கத்திலே சமூகவியல் அடிப்படையை நோக்கியே அறிவியல் வரலாறு ஆக, எல்லாவற்றையும் கொண்டு, ஆனால், தேவையற்ற ஒரு சொல்கூட இல்லை என்பது மிக முக்கியமானது.

- டாக்டர் மன்சூர்துணை முதல்வர், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி(திருச்சி - 23.7.2005)

ஆசிரியர் எழுதியிருக்கின்றார். ஒரு மனிதனுடைய உடம்பில் இரத்த ஓட்டம் இருக்கும்“Blood Pressure” இருக்க வேண்டும். அது 120/90 ஆக இருக்க வேண்டும். பிளட் பிரஷர் ஏறினாலும் (High Pressure) கஷ்டம். அது லோ பிரஷர் (Low Pressure) ஆனாலும் கஷ்டம். அதுபோல பணம் அதிகமாக இருந்தால் அது ஹை பிரஷர். பணம் குறைவாக இருந்தால் அது லோ பிரஷர். நார்மலாக இருப்பதுதான் ஆரோக்கியம் என்று சொல்லியிருக்கின்றார். அய்யா இதை எந்த பல்கலைக் கழகப் பேராசிரியரும் கற்றுத் தரவில்லை, உங்களைத் தவிர.

இந்த வாழ்வியல் சிந்தனைகள் நூலைப் படித்தவுடன் எனக்கு உலகத்தைச் சுற்றி வந்த அனுபவம் ஏற்பட்டது.

எப்படி இவற்றை ஆசிரியர் பெருந்தகை அவர்கள் படித்தார்கள்? அதுவும் கம்ப்யூட்டர் வந்த பிறகு பார்க்கின்ற பழக்கம் உண்டே தவிர, படிக்கின்ற பழக்கம் கிடையாது.

- பேராசிரியர் டாக்டர் தி.இராசகோபாலன்(சென்னை - 29.6.2005)

இதழ்கள் பார்வையில் வாழ்வியல் சிந்தனைகள்

அடிப்படையான மகிழ்ச்சி எது என்பது தொடங்கி நமக்குள் உள்ள தடைகளும், நலம் காணவேண்டிய விடைகளும் 100 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள சுய முன்னேற்றக் கட்டுரைகளின் தொகுப்பு. (குமுதம் - தீராநதி மே, 2004)

வாழ்வியல் சிந்தனைகள் நூல் வீரமணி அவர்களுடைய கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களும், உடன்படாதவர்களும் கூட விரும்பிப் படிக்கத்தக்க ஓர் அருமையான அறிவார்ந்த நூல்... எல்லாக் குடும்ப விழாக்களிலும் இந் நூலை அன்பளிப்பாக வழங்கி மகிழலாம்.

(தமிழ் போஸ்ட் வாரஇதழ் (மும்பை) மார்ச் 27, 2004)

சுய முன்னேற்ற நூல்களில் காணக் கிடைக்கும் கருத்துகளிலே இந் நூலிலும் கிடைக்கின்றன. கட்டுரைகளின் எளிமை படிக்கத் தூண்டும்.

(இந்தியா டுடே 21.4.2004)

தமிழ் ஓவியா said...

வாழ்வியல் சிந்தனைகள் - நூலிலிருந்து....

இந்த செல் நாகரிகம் மிகவும் கொடுமையானது, பொது நிகழ்ச்சிகளுக்கு வருவோர் செல்போன்களைக் குறிப்பிட்ட நேரத்திற்கு அதை நிறுத்தி-விடுவதுதான் பண்பு, அது இல்லையே! மேடையில் அலறுகிறது அருகில் அமர்ந்து வி.வி.அய்.பி. அதைக் காதில் வைத்து, சிலர் ஒரு தனி பிரசங்கம் நிகழ்த்துகிறார். கூட்டங்களில் முன்பெல்லாம் குழந்தைகள் அழும். அது வெகுவாகக் குறைந்துவிட்டது. அந்த இடத்தை அலறும் செல்போன்கள் அல்லவா பிடித்து அருவருப்பான நிலையை உருவாக்கி வருகின்றன! செல் சென்று பேசித்திரும்புக என்று ஒவ்வொரு கூட்ட அரங்குகளில், மண்டபங்களில், மேடைகளில் புகைக்குத் தடைபோல செல்லுக்கும் தடைபோட வேண்டிய நிலை வேகமாக வளர்ந்து வருகிறது!

(தினமணி 8.3.2004.)

தமிழ் ஓவியா said...

மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ் போன்ற நூல்களை மதவாதிகளே எழுதுவதிலிருந்து கடவுள் நம்பிக்கையோடு, தனி மனித மனப்பயிற்சியும் அவசியம் என்று அவர்களே நம்புவதாகத் தெரிகிறது. அப்படியெனில், பகுத்தறிவுவாதி களும் தங்கள் கண்ணோட்டத்திலிருந்து இத்தகைய நூல்களை எழுதுவது நல்லது. தி.க., தலைவர் வீரமணி அவர்கள் இந்த வகையில் ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்து இருக்கிறார். வாழ்வியல் சிந்தனைகள் என்கிற அவரின் நூல், வாழ்வை எதிர்கொள்ளும் மனத்தெம்பையும் உளவியல் நுணுக்கங்களையும் கூறுகிறது.

(செம்மலர் ஏப்ரல் 2004)

நன்கு உலர்த்தப்பட்ட நான்கு அத்திப்பழங்களை நாள்தோறும் உண்டு வந்தால், அது இரும்புச் சத்தின்மையைப் போக்கி, ரத்தச் சோகையைத் தடுக்கும் தாதுக்களைக் கொடுத்துக் காப்பாற்றிவிடும்! போன்ற மருத்துவ டிப்ஸ்களை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் இருந்து யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. வாழ்வியலுக்குத் தேவை யானவற்றைத் தன் வாழ்க்கையில் இருந்தே உதாரணமாக எடுத்து, எளிமையாகப் புரியும் விதத்தில் சொல்லியிருக்கும் விதம் மிக அருமை. பழங்களின் மேன்மையை சொல்லிக் கொண்டே வருபவர், தொண்டு செய்து பழுத்த பழம் என்று பெரியாரையும் இணைத்துக் கொள்கையையும் விளக்குவது ரசிக்கத் தக்கது.

(ஆனந்தவிகடன், 18.9.2005)

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதிய 100 கட்டுரைகள் கொண்ட நூல். இது திராவிடர் கழகத்தின் பிரசார புத்தகம் அல்ல. வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர் களுக்கு வழிகாட்டும் கட்டுரைகளும், பிரச்சினைக்குத் தீர்வு காண உதவும் கட்டுரைகளும், சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. சீன மருத்துவம் பற்றிய கட்டுரையும் உண்டு!

(தினத்தந்தி - 3.8.2005)

பகுத்தறிவுக் கருத்துகளை பேச்சாலும் எழுத்தாலும் பரப்பி, தமிழ்ச் சமூக மக்களின் விழிப்புணர்வுக்குப் பாடுபட்டு வரும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறந்த உளவியல் கட்டுரையாளராகவும் பரிணமிக்கிறார்.
தக்க உவமைகளுடனும், துணுக்குகளுடனும் கட்டுரை களைச் செழுமைப்படுத்தியிருக்கிறார்.

உடலைப் பேணுவது குறித்தும் சளியைத் தடுக்க சீன மருத்துவம் ஒன்றையும், சர்க்கரை நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்தும் மிக இயல்பான நடையோட்டத்தில் கருத்துகளைச் சொல்லியிருப்பது அருமை.

(புத்தகம் பேசுது - செப்டம்பர் 2005)

சமூகப் பிரச்சினைகளைப் பற்றி மட்டும் பேசுவது ஒரு தலைவரின் கடமையல்ல; தனி மனிதனின் தன்னம்பிக்கை யையும், ஆளுமையையும் உயர்த்துவதும் கடமைதான் என்று வாழ்வியல் சிந்தனைகள் மூலம் உணர்த்தியிருக்கிறார்.
நூலிலிருந்து ஒரு பொன்மொழி: குற்றம் குறையில்லா நண்பனைத் தேடி அலைபவன் நண்பனில்லா வாழ்க்கையைத் தான் வாழ்ந்து தீரவேண்டும்.

(த சண்டே இண்டியன் 30 அக்.- 5 நவ. 2006)

தமிழ் ஓவியா said...

வீரமணி ஒரு விமர்சனம்



மூத்த எழுத்தாளர் சோலை - அவர்களால் எழுதப்பட்ட நூல் வீரமணி ஒரு விமர்சனம் என்பதாகும். இதன் வெளியீட்டு விழா சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்றது. தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் இம்மாதம் 2ஆம் தேதி (தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் 79ஆம் ஆண்டு பிறந்தநாள்) சென்னைப் பெரியார் திடலில் இந்நூலை வெளியிட்டார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்நூல் பற்றிய அறிமுக விழாவும் நடத்தப்பட்டது. முதல் பதிப்பு மூவாயிரம் நூல்கள் உடனே விற்றுத் தீர்ந்து விட்டன. உடனடியாக இரண்டாம் பதிப்பு அச்சிடப்பட்டு வெளி வந்துள்ளது.

டிசம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் உடல் நலக் குறைவு காரணமாக மூத்த எழுத்தாளர் சோலை அவர்களால் கலந்து கொள்ள முடியாத நிலையில், நேற்று சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பாக காலை 10.30 மணியளவில் எழுத்தாளர் சோலை அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந்நூலின் சிறப்புகள் குறித்து, திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் எடுத்துக் கூறினர்.

ஆசிரியரின் நன்றி தெரிவிப்பு

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அப்பொழுது குறிப்பிட்டதாவது:

இந்தப் பாராட்டு சோலை அவர்கள் விரும்பாத ஒன்று. இந்த நூலில் சில தகவல்களைக் கேட்பதற்காக என்னைச் சந்திக்க வந்தார். சந்தேகம் கேட்க வந்த இடத்தில் அவரைப் பிடித்துக் கொண்டோம்.

உண்மையைச் சொல்லப் போனால் இது பாராட்டுவதற்காகத் திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகூட அல்ல; நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி.

நான் சோலையில் உலவிப் பழக்கப்பட்டவன் அல்லன்- ஆனால் நமது சோலை அவர்கள் தமது பேனா முனையால் என்னை சோலையில் உலவ விட்டுள்ளார்.

கோடையில் இளைப்பாறக் கிடைத்த சோலையாக இருக்க அவரின் இந்த நூல் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த நூலினை அவர் எழுதியபோது அதில் எந்தவிதக் குறுக்கீட்டையும் நான் செய்யவில்லை. இன்னும் சொல்லப் போனால் நூல் வெளிவந்த பிறகேதான் நான் படித்தேன்.

வாலைப் பருவம் காளைப் பருவம் தொட்டு நான் ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியாரே!

அந்தத் தலைவரின் கொள்கைகள் உலகமயமாக வேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதே எனது இலட்சியம்.

நான் அயர்ந்து விடாமல், ஓய்ந்து விடாமல் மேலும் மேலும் ஓடிக் கொண்டிருக்க, தந்தை பெரியார் பணிகளைச் செய்து கொண்டிருக்க இது போன்றவை மூலம் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

தை மாதம் முதல் நாள் பொங்கல் விழாவைக் கொண்டாடுகிறோம். இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுகிறோம்.

மாட்டுப் பொங்கலன்று மாடுகளின் கொம்புகளைச் சீவி வண்ணம் தீட்டி மாலைகள் சூட்டுகிறோம். இது ஏதோ ஜீவ காருண்ய எண்ணத்தால் அல்ல. மேலும் அந்த மாடு உழைக்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம்.

அதேபோல இந்த மாடு உழைத்துக் கொண்டே இருக்கும். மாட்டுப் பொங்கலின்போது மாட்டுக்கு மணி கட்டுவீர்கள். இப்பொழுது இந்த வீரமணிக்கு மணி கட்டி விட்டுள்ளீர்கள்.

மூத்த எழுத்தாளர் சோலை அவர்களுக்கும் நன்றி! உங்களுக்கும் நன்றி! என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

மூத்த எழுத்தாளர் சோலை அவர்களை தனி நாற்காலியில் உட்கார வைத்து, அவருக்குச் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார் தமிழர் தலைவர். சோலை அவர்கள் தனது உரையில் ரத்தினச் சுருக்கமாக நான் எனது கடமையைத் தான்

செய்தேன்! என்று குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் அய்ம்பது!


தமிழ் இலக்கியங்களின் பெயர்களாக அகநானூறு, புறநானூறு, அய்ங்குறு நூறு, ஏர் எழுபது என்று இலக்கியங்கள் இருப்பதை அனைவரும் அறிந்திருக் கிறோம். அதைப்போல மானமிகு கி.வீரமணி அவர்கள் தொடர்ந்து நமது விடுதலை நாளேட்டின் ஆசிரியராக அய்ம்பது ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்கள். ஆகவே இக்கட்டுரைக்குத் தலைப்பு ஆசிரியர் அய்ம்பது!

திராவிடர் இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் காலம் இது! அதில் நமது விடுதலை நாளேடோ 75 -ஆண்டுகளை நிறைவு செய்து நாள் தோறும் அறிவாயுதம் ஏந்தி வெளிவந்து கொண்டு இருக்கிறது.

விடுதலை திராவிடர் இயக்கத்தின் அதிமூத்த நாளேடு. அந்த நாளேட்டின் ஆசிரியர்களாக டி.ஏ.வி.நாதன், அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி, மணியம் மையார் போன்றோர் பணியாற்றி இருக்கிறார்கள். இவர்களெல்லாம் நீண்ட காலம் பணியாற்றுகின்ற வாய்ப்பை பெறவில்லை. மானமிகு கி.வீரமணி அவர் கள் மட்டுமே அய்ம்பது ஆண்டுகள் விடுதலையின் ஆசிரியராக பணியாற் றிய பெருமைக்குரியவராகத் திகழுகிறார்; தொடருகிறார்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில் பெரியார் என்றால் அய்யாவைத்தான் குறிக்கும்; அண்ணா என்றால் தி.மு.க.வைத் தோற்றுவித்த அறிஞர் அண்ணாவைக் குறிக்கும்; கலைஞர் என்றால் தி.மு.கழகத்தின் இப்போதைய தலைவரைக் குறிக்கும்; இப்படி நாம் தலைவர்களின் மீது அன்பும், மதிப்பும் செலுத்தி பெரு மிதத்தோடு அவர்களின் இயற்பெயரைக் குறிப்பிடாமல் அழைக்கின்றோம். அதே போல்தான் ஆசிரியர் என்றால் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களைத்தான் குறிக்கும்.

ஆசு+இரியர் = ஆசிரியர். குற்றத் தைப் போக்குபவர்; மாசை நீக்குபவர்; நெறிப்படுத்துபவர் என்று பொருள். நமது ஆசிரியருக்கு இப்பொருள் எல்லா வகை யிலும் பொருந்தி வருகிறது. ஆசிரியர் அவர்கள் அய்யாவால் தேர்ந்தெடுக்கப் பட்டவர். 1962 முதல் அவர் விடுதலை நாளேட்டின் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். முதன்முதலாக விடுதலை மலர்களை வெளியிட்டு அறிமுகப்படுத் தியவர் ஆசிரியர் அவர்கள்தான்! கடந்த 75 ஆண்டுகளில் விடுதலை நாளேடு நாட்டில் எத்தனையோ சமுதாய, அரசியல், பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு இருக்கிறது.

அதற்கென்று பல்வேறு முகப்பு, செய்தி உள்கட்டு அமைப்புகள் என்று இருந்து வந்து இருக்கின்றன. இப்போது காலத்திற்கு ஏற்ற நிலையில் விடுதலை யில் முகப்பு, கட்டமைப்பு, செய்திகள், கட்டுரைகள், வரலாற்றுச் சுவடுகள், அய்யாவின் கேள்வி - பதில்கள் என பல்வேறு தலைப்புகள் - சில சமயங்களில் வண்ணத்தில் அருமையான முறையில் வெளியிடப்பட்டு வருகிறது.

திராவிடர் கழகத்தின் பணி என்பது தமிழர்களின் சுயமரியாதைக் காப் பாற்றி அவர்களுக்குக் கல்வி, பதவி, அர சியல், அதிகாரம் போன்றவை மேன்மை யுற வழி அமைத்தல் ஆகும். அவ்வழி யில் வரும் எதிரிகளை இனங்கண்டு அடையாளப்படுத்தி அப்புறப்படுத்துவ தாகும். இதற்குத் திராவிடர் கழகத் திற்கோ, அதன் உறுப்பினர்களுக்கோ எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. பெரியாருக்குப் பிறகு, மணியம்மை யாருக்குப் பிறகு இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாறுதலும் இன்றி ஆசிரியர் செயலாற்றி வருகின்றார். விடுதலையும் அவருக்குக் குத்துவாளாக, போர்வாளாக இருந்து வருகிறது.

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் அவர்கள் மேடை அனு பவம் மிக்கவர்கள். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் எப்பொருள் பற்றியும் தங்கு தடையின்றி பேசக் கூடியவர்கள். ஒரு பொருளைப் பற்றி பேசுகிறபோது ஆதியோடு அந்தமாய் ஆதாரத்தோடு பேசுவார். மொழி ஆளுமை உடையவர். எதிரிகளை தமது கருத்தால் பந்தாடியவர். பேசுவது போலவே ஆசிரியர் எழுத்தாற்றல் கைவரப் பெற்றவர். படிப்பதில் பேரார்வம் உடையவர். எடுத்துக்காட்டிற்குச் சொல்வதானால் ஆசிரியர் விடு தலையில் எழுதிவந்த வாழ்வியல் சிந்தனையைச் சொல்லலாம். இவை நூல்களாகி உள்ளன. அதில்தான் அவர் எவ்வளவு செய்திகளை எடுத்துக் கூறு கிறார் என்பதை எண்ணிப் பார்க்கிற போது ஒரு மலைப்பு உண்டாகிறது.

திராவிடர் இயக்க நூற்றாண்டு பற்றி கலைஞர் தொலைக்காட்சியில் ஆசிரியர் அவர்கள் ஒரு மாதம் வகுப்பெடுத்தார். ஆன்மிகத் துறையினர், இயக்கத் துறையினர் தொலைக்காட்சியைப் பயன்படுத்துவதற்கும் ஆசிரியர் அதைப் பயன்படுத்தியதற்கும் உள்ள வேறு பாட்டை நாம் இதனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆசிரியர் அவர்கள் 80 வயதை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறார். ஓயாமல் சுற்றுப்பயணம், மேடைதோறும் சுயமரியாதைச் சூறாவளி, எதிரிகளின் விமர்சனங் களுக்குப் பதில்கள், இடைவிடாத படிப்பு, பத்திரிகை செய்திகளின் கவனிப்பு, அறிக்கைகள், கட்டுரைகள் எழுதுவது என இப்படி ஆசிரியர் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

சில சமயங்களில் பொதுக்கூட்ட மேடைகளிலே கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே விடுதலை நாளேட்டிற்கான எழுத்துப் பணிகளை செம்மையாக செய்து முடிப்பார்.

தமிழர் தலைவர் ஒரு நாளேட்டின் ஆசிரியர் மட்டுமல்ல, அவர் பெரியார் இயக்கத்தின் தலைவர். பெரியார் இயக்கம் என்பது சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகம். இதன் கொள்கையை ஒருவர் உடனடியாக ஏற்றுக் கொண்டு அதன்மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுவிட முடியாது. அரசியல் அதிகாரம் பார்ப்பனர்களின் கையில் சிக்கிவிடாமல் காக்கும் காவல்காரர் ஆசிரியர். இதை நான் மிக எளிதாக எழுதிவிடுகிறேன். அதில்தான் எத்தனை துன்பங்கள், மக் களேபோல் கயவர்கள் இவற்றையெல் லாம் கடந்து பணியாற்ற வேண்டும்.
நாளும் கற்பதும், கற்பிப்பதும் ஆசிரியர் பணி. அதனை விடுதலை நாளேட்டின் மூலம் கடந்த அய்ம்பது ஆண்டுகளாகச் செய்து வருகிறார் ஆசிரியர்; அவர் நூறாண்டு நலத்தோடு வாழ வேண்டும் என விருப்பத்தைப் பதிவு செய்கிறேன்.

தமிழ் ஓவியா said...

அரை நூற்றாண்டுக் காலம் ஆசிரியர்! கவிஞர் கலி. பூங்குன்றன்



உண்மையைச் சொல்லுகிறேன். தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி, வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய் திருந்தேன் என்று எழுதினார் தந்தை பெரியார் (விடுதலை - 10.8.1962).

விடுதலை நாளேட்டைப் பெருமையாகப் பேசுவோர் யாராக இருந்தாலும் அதன் சாதனைகளைப் பட்டியலிடுவோர் எவராக இருந்தாலும், விடுதலையின் பணியால் நாங்கள் நலம் பெற்றோம் நாடு செழிப்புற்றது என்று நா மணக்கக் கூறுவோரும்கூட தலைதாழ்ந்த நன்றியை ஒருவருக்குத் தெரிவிக்க வேண்டு மென்றால் அவர் வேறு யாருமல்லர் நம் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்குத் தான்!

தமிழ் ஓவியா said...

நடுத்தரக் குடும்பம் பொருளாதாரச் சுமை களை ஏற்று ஏற்று, அங்குலம் அங்குலமாகத் தம் கல்விக் கடமையைக் கண்ணும் கருத்துமாக முடித்து, இல்லற வாழ்விலும் அடியெடுத்து வைத்து, கற்ற கல்வி மூலம் வருவாய் ஈட்டியே தீரவேண்டும் என்ற நெருக்கடியில் இருந்த ஒருவர், எல்லாக் கனவுகளையும் கலைத்து விட்டு, ஊதியம் எதிர்பாராத் தொண்டில் தன்னைப் புதைத்துக் கொண்டார் என்பது சாதாரணமானதல்ல.

இதனைத் தந்தை பெரியார் அவர்களே குறிப்பிட்டுள்ளார்.

வீரமணி அவர்கள் வக்கீல் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாட்களுக்குள் மாதம் ஒன்றிற்கு ரூ.200, ரூ.300 என்கிற கணக்கில் வருமானமும், அதிகாரிகளின் பாராட்டுதலும், மதிப்பும் பெறத்தக்க நிலையை அடைந்து விட்டார்.

அவரது இயக்க சம்பந்தமில்லாத நண்பர் களும், வக்கீல் தோழர்களும் அவருக்கு எவ்வள வோ ஆசை ஏற்படும்படியான எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லித் தடுத்தும், அதை ஏற்காமல் துணிந்து முழுநேரப் பொதுத்தொண்டுக்கு இசைந்து முன்வந்தது குறித்து நான் அதிசயத் தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன் மனைவி, குழந்தை குட்டி இல்லாத வாலிபப் பருவத்தில் பொதுத் தொண்டு உற்சாகம் பலருக்கு ஏற்படுவது இயற்கை.

ஆனால், மனைவி, குழந்தை, குடும்பப் பொறுப்பு, நல்ல எதிர்காலம், தொழில் ஆதரவு ஆகிய இவை உள்ள நிலையிலும் நாளைக்கு அவர் (வீரமணி) ஒப்புக் கொள்வதானால் (எம்.ஏ., பி.எல். என்பதனாலும் பரீட்சையில் உயர்ந்த மார்க் வாங்கி இருக்கும் தகுதியினாலும்) மாதம் ஒன் றிற்கு ரூ.250க்குக் குறையாத சம்பளமுள்ள அரசாங்க அல்லது ஆசிரியர் பதவி அவருக்குக் காத்திருந்து ஆசைகாட்டிக் கொண்டிருக்கும் போது, அவைகளைப் பற்றிய கவலை இல்லாமல் முழுநேரப் பொதுத்தொண்டில் இறங்குவ தென்றால் இது இயற்கையில் எப்படிப்பட்ட மனிதனிடமும் எளிதில் எதிர் பார்க்க முடியாத விஷயமாகும் என்று அறிக்கை யாகவே தந்தை பெரியார் கோடிட்டுக் குறிப் பிட்டுக் காட்டிய பின் எந்தவிதக் கணிப்பும் அவ ரைப் பொறுத்த வரை தேவையில்லாத ஒன்றே!

முத்தாய்ப்பாக தந்தை பெரியார் கூறும் ஓரிடம் ஆசிரியரின் பெருமைக்கும் புகழுக்கும் தொண்டுக்கும் அக்மார்க் முத்திரையே.

வீரமணி அவர்கள் எம்.ஏ.,பி.எல். பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ., பி.எல். பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ.400 வரும்படி வரத்தக்க அளவுக்குத் தொழிலில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ.500, ரூ. 1,000 தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில் அவர் சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது, எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்று உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும்.

தமிழ் ஓவியா said...

அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நமது இயக்கத் தலைமைப் பிரச்சாரகராகவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்து விட் டேன். விடுதலை பத்திரிகையை நிறுத்தாததற்கு இதுதான் காரணம் (விடுதலை 6.6.1964) என்று காரண காரியத்தோடு கண்களில் ஒன்றிக் கொள்ளும் சொற்களைக் கையாண்டு நமது ஆசிரியரை உச்சத்தில் வைத்துப் பாராட்டியவர் பகுத்தறிவுப் பகலவன் என்பதை மறக்கக் கூடாது.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில் ஆசிரியர் என்றால் ஒரே ஒருவரைக் குறிக்கிறது அவர்தான் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

இந்த நிலைக்குக் காரணம் என்ன? ஆசானாக இருந்து தமிழ்நாட்டு மக்களுக்குப் போதிக்க வேண்டியதைப் போதித்து வழிகாட்ட வேண்டி யவைகளை வழிகாட்டி, கைப்பிடித்து அழைத்துச் செல்வது விடுதலையன்றோ அதனால்தான் இந்த மகுடம்!

தந்தை பெரியார் தன்மீது வைத்திருந்த மதிப்பு எதிர்பார்ப்பு இவற்றை ஆழமாகக் கண்டு நமது ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அந்தக் காலந்தொட்டு தனக் கென்று உள்ள அனைத்து விடுதலைகளையும் இழந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

விடுதலைக்குச் சந்தா சேர்ப்பதற்காக அவரே பல மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற் கொண்டார்.

தந்தை பெரியார் காலத்தில் இருந்த விடுதலை யின் பொலிவு வேறு. கால மாற்றத்தோடு வலிமையாகப் பயணிக்க வேண்டியதன் அவசியத்தைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு நவீனமயத்தின் முழு அரவணைப்போடு விடுதலையை வீறுநடை போடச் செய்திருக்கிறார் மானமிகு வீரமணி அவர்கள்.

பல நாளேடுகளை அச்சிட்டுக் கொடுக்கும் அளவுக்கு விடுதலை அச்சகம் தலைநகரில் பெயர் பெற்று விளங்குகிறது.

இணையதளத்தில் முதன்முதலாக வெளி வந்த ஏடு விடுதலை என்ற பெருமையும் உண்டு.

1962இல் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவ்வாண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலரை விவேகம் வனப்பு என்ற தண்டவாளங்களில் பயணிக்கும் வகையில் கொண்டு வந்து சாதனை புரிந்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் மலரை பக்கம் பக்கமாகப் புரட்டிப் பார்த்து, படித்து குழந்தை போல் மகிழ்ந்து துள்ளும் தந்தை பெரியாரின் அந்தச் செயலைப் பார்த்தவர்கள்தான் அனுப விக்க முடியும்.

ஆம்! விடுதலை அய்யா மலர் வெகுமக்களால் ஆண்டுதோறும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை உருவாக்கப்பட்டது. விடுதலை பொன் விழா, பவள விழா மலர்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...

50 ஆண்டுகள் விடுதலை ஆசிரியராகப் (1962 - 2012) பொறுப்பேற்ற பெரும் சாதனை அசா தாரணமானது.

சமூக நீதித் திசையில் வருமான வரம்பு ஆணை ரத்து, அதன் காரணமாக பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு 31 சதவிகிதத் திலிருந்து 50 சதவிகிதமாக உயர்வு.

மண்டல் குழுப் பரிந்துரைகள் அமலாக்கம் இதன் பயன் தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல இந்தியத் துணைக் கண்டம் முழுமைக்கும் ஆணை நுழைவுத் தேர்வு ஒழிப்பு!

பெண்ணுரிமைக் களம், பண்பாட்டுத் தளம் வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டுக்கான எதிர்க்குரல் இன்னோரன்னவை விடுதலை வீரனின் மார்பில் பொறிக்கப்பட்ட பதக்கங்கள்.

விடுதலையின் 77 ஆண்டு தொடர் ஓட்டத் தில் 50 ஆண்டு காலம் அதன் சேவகனாகவும், சேவகராகவும் விளங்கும் பெருமைக்குச் சொந்தக்காரரான ஆசிரியருக்கு நாம் காட்டும் கைம்மாறு என்ன? நன்றிக் காணிக்கை என்ன?

பொன்னா, பொருளா, புகழ் மாலையா? அல்ல, அல்ல. 50 ஆண்டு பணியாற்றியவருக்கு 50 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் அளிப்பது என்ற தீர்மானம் கொள்கைப் பார்வையில் நிறைவேற்றப்பட்டதாகும். (திருச்சிராப்பள்ளி திராவிடர் கழகப் பொதுக்குழு 11.9.2011).

இதற்கான களப்பணிகள், செயல் திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கருஞ் சட்டைத் தோழர்கள் களத்தில் கம்பீரமாகத் தேனீக்களாகப் பறந்தும், பம்பரமாகச் சுழன் றும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 50 ஆயிரம் சந்தாக்கள் என்பது தமிழர்களின் மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைந்ததாயிற்றே!

தமிழ் ஓவியா said...

விடுதலையால் பலன் பெற்ற தமிழர்கள், விடுதலையால் பகுத்தறிவு பெற்ற தமிழர்கள், பலன் அனுபவித்த அரசுப் பணியாளர்கள், உரிமை பெற்ற பெண்கள் இந்த அளவுக்குக்கூட இருக்க மாட்டார்களா?
தமிழர்களின் கதவுகளைத் தட்டித் தட்டிக் கேட்போமே!

நம்மால் முடியாதது யாராலும் முடியாது; யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்கிற தன்னம்பிக்கையையும் நமக்குக் கொடுத்தது நமது தலைவர்தானே!

அவரிடம் 50 ஆயிரம் சந்தாக்களை அளிப் பதற்கான ஆயுதத்தை அந்த வகையிலும் அவர் நமக்குக் கொடுத்தார் என்று எடுத்துக் கொண் டோம் - சாதித்தும் காட்டினோம் - தொடர்ந் தும் கொண்டும் இருக்கிறோம். சந்தா சேர்ப்பது என்கிறபோது குடிஅரசு இதழுக்குச் சந்தா சேர்க்கை பற்றி தந்தை பெரியார் எடுத்துக் கூறியதை இந்நேரத்தில் நினைவூட்டுவது மிகவும் பொருத்தமாகும். குடிஅரசு

புது ஆண்டு சன்மானம்

1926ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது; ஆண்டுப் பிறப்பிற்காக குடிஅரசு

பத்திரிகைக்கு என்ன சன்மானம்

செய்யப் போகிறீர்கள்?

ஒன்று,

குடிஅரசுக்கு அதன் நண்பர்கள்

ஒவ்வொருவரும் 3 சந்தாதாரர்களைச்

சேர்த்துக் கொடுங்கள்;

அல்லது

நமது சமூகத்துக்கே கேடு சூழும்படியான

பிராமணப் பத்திரிகைகளின் ஒரு

சந்தாதாரரையாவது குறையுங்கள்.

இதை நீங்கள் செய்தால் குடிஅரசுக்கு

மாத்திரமல்லாமல், நாட்டுக்கும்,

பிராமணரல்லாத சமூகத்துக்கும்

விடுதலை அளிக்க உங்கள்

கடமையைச் செய்தவர்களாவீர்கள்.

தந்தை பெரியார்

(குடிஅரசு 27.12.1925).

இது விடுதலைக்கும் பொருந்துமே!

தமிழ் ஓவியா said...

சிந்தனைப்பூக்கள்



நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திருதராஷ்டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப் பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயிருக்கின் றது என்றால் உடனே கோபித் துக் கொள்ளுகின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.

மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதாயுகத்து கெய்டைப் பார்த்து, கலியுகத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென்கின்றோம்.

பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

மேல்நாட்டானுக்கு பொருளாதாரத்துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத் தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.

அரசியல் இயக்கம், முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால், சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

கண்மணி வீரமணியின் அரும்பணி!


பனிமொழி பகர்ந்து தனி அன்பினைக் கலந்து என்றும் எனை வரவேற்கத் தவறாத என் ஆருயிர் இளவல், இன்று தன்மானத் தோழர்களால் தமிழர்க் குத் தலைவரென அழைக்கப்படும் வீரமணியாரின் தீரம் மிக்க திறனால் போற்றிப் பாதுகாக்கப்படும் தந்தை பெரியார் தந்து விட்டுச் சென்ற மாட மாளிகை அல்ல; கூட கோபுரம் அல்ல; அவற் றையும் மிஞ்சும் வண்ண மிகு எண்ணங்கள் - தமிழ் வசீகர வளாகத்தைக் கண்டேன்; ஆங்கமைந்த கலைவாணர் அரங்கம் ஒன்றில் ஓங்கு கதிர் சூரியனாம் உண்மை ஒளிர் தலை வனாம் உலகம்போற்றும் பெரியாரை, ஒவ்வொரு இளங்கலைஞர்களின் இசை யில், நடனத்தில், ஆட்டத்தில் அனைத் திலும் அடியேன் கண்டு ஆனந்தப் பரவசமுற்றேன்.

அருவியில் குளித்தோர்க் கும் அந்த இன்பம் கிடைப்பதில்லை. அடாத அரசியல், கொடும் வெயிலில் காய்ந்திடும எனக்கு அந்த அருவிச் சோலையில் கிடைத்த புத்துணர்ச் சியைத்தான் என்னென்று புகழ்வேன்?

இருபது ஆண்டின் முன்னே இளவல் வீரமணி எனையழைத்து, அங்கே சோலை நடுவே அய்யாவின் சிலையை நாட்டச் சொன்னார். அந்த சிலை இன்றைக்கும் அங்கேயிருந்து என்னை அருகணைத்து உச்சி முகர்ந்தது போல் கண்ட உணர்வு எத்துணை மகிழ்ச்சியானது! எப்படி என் உடலைச் சிலிர்க்க வைத்தது?

அய்யாவுக்குப் பிறகு அவர் ஆரம்ப காலந்தொட்டு சேர்த்து வைத்த ஆஸ்தி, பாஸ்தி, கட்டிவைத்த கட்டடங்கள், அறிவுக் கூடங்கள், விட்டுச் சென்றுள்ள கொள்கை கள், வீரம் மிக்க அறைகூவல்கள் இத்தனையை யும் கட்டிக் காக்க, யாருளர் என்று நமக்கெலாம் எழுந்த அய்யப்பாட்டை, இதோ நானிருக்கிறேன் என்று எடுத்துக்காட்டி ஏறுபோல் நம்மை நிமிர்ந்து பார்க்கின்ற என்னரும் இளவல், பெரி யாரின் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடர், தன் மான முரசு வீரமணியார். என் கண்ணிலும் அவர் கண்ணிலும் நீர் துளிக்க, அது ஆனந்தப் பன்னீராக இருக்க, ஒருவரையொருவர் தழுவிக்கொண்டோம். உமது முயற்சிகள் வெல்க! இங்கு வளரும் பூங்கொடி கள், பூஞ்செடிகள், புதுமை மணம் பெறுக! இன்றுபோல் என்றென்றும் இது பகுத்தறிவுப் பண்ணையாகத் திகழ்க! என்று வாழ்த்தினேன். அவரும் வாழ்த் தினார்.

அறிவுப் பணி, அதற்குத் தேவையான அமைப்புப் பணி, அதிலும் ஒரு கட்டுப் பாட்டுப் பணி என இப்படி கடமைப் பணியாற்றுகிற சுயமரியாதை இயக்கக் கண்மணியாம் வீரமணியாரின் நிருவாகப் பணியை நேரிலே காணும் வாய்ப்பு இனியும் பலமுறை இந்த வாய்ப்பு எனக்குக் கிட்ட வேண்டும் என பேராவலுடன் விடை பெற்றுக்கொண்டேன்.

ஆங்கொரு நூலகத்திற்கு விழா மேடையில்இறுதிக் கட்டமாக ஓர் அறிவிப்பு: கலைஞர் கருணாநிதி நூலகம் என்று அது அழைக்கப்படும் என்று! திணறிப்போனேன். தேன்குடத்தில் தூக்கிப் போட்டுவிட்டார்களேயென்று!

பெரியாருக்குக் காலணியாய் இருப்பது போல், பெரியார் பெயரில் அமைந்துள்ள அந்தப் பூங்காவில் நூலகம் என்ற ஒரு நுண்ணிய கொடியாக இருந்துவிட்டுப் போகிறேன். அது எனக்கு பிறவிப் பெரும் பயன்தான்.

(முரசொலி 15-10-2008, திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி நூலகத் திறப்பு விழாவில் - முதலமைச்சர் கலைஞர்.)

தமிழ் ஓவியா said...

குடிவாழ நீ வாழி!
-----கவிஞர் கலி. பூங்குன்றன்


அடேயப்பா,

அரை நூற்றாண்டா?

ஆச்சரியக் குறிகூட

அடிமாறி நிற்குமே!

புரட்சி ஏடாயிற்றே!

புள்ளிகளுக்குக்கூட

புலியின் வேகம் உண்டே!

எழுத்தாளர் இல்லையென்று

இரசாயனக் கலவைகளை

ஏட்டில் கொட்டிய

ஈரோட்டாரின் கைத்தடியை

எழுதுகோலாகப் பெற்ற

ஆசிரியரல்லவா நீங்கள்!

அதனால்தான்

இந்தச் சாதனையின் உயரம்!

அறிக்கைகளா அவை?

ஆரிய நஞ்சினை முறிக்கும்

மூலிகைத் தோட்டம்!

பேச்சுகளா அவை?

பூகம்ப நாக்கின்

போர் முரசம்!

பேட்டிகளா அவை?

பீரங்கி நதிகளின்

பெரும்பாய்ச்சல்!

வஞ்சிக்கும் (அ) வாள்

வட்ட மிட்டால்

வாலறுக்கும் சிப்பாய் நீ

வடவருக்கும் துப்பாக்கி!

ஆரியத்தின் சூட்சமக்

கருவறுக்கும் கலையைக்

கச்சிதமாய்க் கற்றதனாலே

காலத்தின் திசையைச்

சாட்டை அடி கொடுத்து

திசை மாற்றம் செய்வித்து

வெற்றி முகட்டில்

வீர மணிக் கொடியை

முதலில் ஏற்றிய

முதல் டென்சிங் நீயே!

அரசியல் பதவி மோகினி

அண்டாப் பெருநெருப்பு

அதனாலே நீ பெற்ற தெல்லாம்

அசலின் முழுத் தொகுப்பு!

இரு நான்கு பக்கமாக்கி

எதிரிகள் கோட்டைகளை

எண்டிசையும் எரித்தாய்!

இந்த அழிவுப் பணியால்

எம்மின இழிவை ஒழித்தாய்!

சமூகநீதி என்னும்

சரிநிகர் சத்துணவை

சமபந்தி வைத்துப் பரிமாறினாய்

பெட்டை என்று பெண்ணைப்

பேசும் நாக்குகளின்

பட்டையை உரித்து

பெண்ணே நீ பீரங்கி!

வெடித்துக் கிளம்பு என்ற

வீரத்தைப் பூட்டி

வேங்கை யாக்கினாய்

மூட நம்பிக்கையின் முப்பாட்டன்

ஊருக்கே சென்று

மூலத்தை யழித்து

முழுப் பகுத்தறிவு நிலவு

முத்தம் பொழிந்தாய்!

சுரண்டலின் சூலறுக்கும்

சுணையும் நீயே!

மண் பரப்பு முழுதும்

மனித நேயத் தென்றலும்

சமத்துவ மணமும்

பயிர் செய்ய வந்த

பாட்டாளியும் நீயே!

உறிஞ்சும் வேர்களுக்கு

வேலையில்லை

உழைப்பும் சமம்

ஊதியமும் சமம்

நுகர்வும் சமம்!

விடுதலையே! உன் வேர்வைப்

பாசனத்தின் விளைச்சல் இந்தப் பூமி!

விடுதலையே நீ

விடியலின் பூபாளம்!

உமது ஆசிரியர்

உயர் எண்ணங்களின்

வீரத்தைச் சுவாசிக்கும்

விவேகப் பூக்களின்

மகரந்த சேர்க்கை!

காலத்தால் நாம் பெற்ற

காவிய அறிக்கை!

முப்பதில் உன்னைச் சுமந்த

தோளுக்கோ வயது எண்பது!

நூறிலும் உம்மைச் சுமப்பார்!

நீ வாழ அவரும்

அவர் வாழ நீயும்

எம் குடி வாழ

நீவீர் இருவரும்

வாழிய வாழியவே!

தமிழ் ஓவியா said...

குடிவாழ நீ வாழி!
-----கவிஞர் கலி. பூங்குன்றன்


அடேயப்பா,

அரை நூற்றாண்டா?

ஆச்சரியக் குறிகூட

அடிமாறி நிற்குமே!

புரட்சி ஏடாயிற்றே!

புள்ளிகளுக்குக்கூட

புலியின் வேகம் உண்டே!

எழுத்தாளர் இல்லையென்று

இரசாயனக் கலவைகளை

ஏட்டில் கொட்டிய

ஈரோட்டாரின் கைத்தடியை

எழுதுகோலாகப் பெற்ற

ஆசிரியரல்லவா நீங்கள்!

அதனால்தான்

இந்தச் சாதனையின் உயரம்!

அறிக்கைகளா அவை?

ஆரிய நஞ்சினை முறிக்கும்

மூலிகைத் தோட்டம்!

பேச்சுகளா அவை?

பூகம்ப நாக்கின்

போர் முரசம்!

பேட்டிகளா அவை?

பீரங்கி நதிகளின்

பெரும்பாய்ச்சல்!

வஞ்சிக்கும் (அ) வாள்

வட்ட மிட்டால்

வாலறுக்கும் சிப்பாய் நீ

வடவருக்கும் துப்பாக்கி!

ஆரியத்தின் சூட்சமக்

கருவறுக்கும் கலையைக்

கச்சிதமாய்க் கற்றதனாலே

காலத்தின் திசையைச்

சாட்டை அடி கொடுத்து

திசை மாற்றம் செய்வித்து

வெற்றி முகட்டில்

வீர மணிக் கொடியை

முதலில் ஏற்றிய

முதல் டென்சிங் நீயே!

அரசியல் பதவி மோகினி

அண்டாப் பெருநெருப்பு

அதனாலே நீ பெற்ற தெல்லாம்

அசலின் முழுத் தொகுப்பு!

இரு நான்கு பக்கமாக்கி

எதிரிகள் கோட்டைகளை

எண்டிசையும் எரித்தாய்!

இந்த அழிவுப் பணியால்

எம்மின இழிவை ஒழித்தாய்!

சமூகநீதி என்னும்

சரிநிகர் சத்துணவை

சமபந்தி வைத்துப் பரிமாறினாய்

பெட்டை என்று பெண்ணைப்

பேசும் நாக்குகளின்

பட்டையை உரித்து

பெண்ணே நீ பீரங்கி!

வெடித்துக் கிளம்பு என்ற

வீரத்தைப் பூட்டி

வேங்கை யாக்கினாய்

மூட நம்பிக்கையின் முப்பாட்டன்

ஊருக்கே சென்று

மூலத்தை யழித்து

முழுப் பகுத்தறிவு நிலவு

முத்தம் பொழிந்தாய்!

சுரண்டலின் சூலறுக்கும்

சுணையும் நீயே!

மண் பரப்பு முழுதும்

மனித நேயத் தென்றலும்

சமத்துவ மணமும்

பயிர் செய்ய வந்த

பாட்டாளியும் நீயே!

உறிஞ்சும் வேர்களுக்கு

வேலையில்லை

உழைப்பும் சமம்

ஊதியமும் சமம்

நுகர்வும் சமம்!

விடுதலையே! உன் வேர்வைப்

பாசனத்தின் விளைச்சல் இந்தப் பூமி!

விடுதலையே நீ

விடியலின் பூபாளம்!

உமது ஆசிரியர்

உயர் எண்ணங்களின்

வீரத்தைச் சுவாசிக்கும்

விவேகப் பூக்களின்

மகரந்த சேர்க்கை!

காலத்தால் நாம் பெற்ற

காவிய அறிக்கை!

முப்பதில் உன்னைச் சுமந்த

தோளுக்கோ வயது எண்பது!

நூறிலும் உம்மைச் சுமப்பார்!

நீ வாழ அவரும்

அவர் வாழ நீயும்

எம் குடி வாழ

நீவீர் இருவரும்

வாழிய வாழியவே!

தமிழ் ஓவியா said...

வரவேற்கிறேன் தந்தை பெரியார்


என் உடல் நிலை எனக்கு திருப்தி அளிக்கத்தக்கதாய் இல்லை. இப்போது போல் சுற்றுப்பிரயாணம் செய்ய என்னால் இனி முடியாது. கழகம் நல்லபடி இயங்க வேண்டுமானால் பிரசாரமும் பத்திரிகையும் மிக்க அவசியமாகும். இந்த இரண்டு காரியத்திற்கும் தகுதியான தன்மையில் தான் நான் இருந்து வந்தேன்.

எப்படி என்றால் நான் ஒருவன்தான் இவற்றிற்கு முழு நேரத் தொண்டனாகவும் கழகத்தில் ஊதியம் எதிர் பார்த்து வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியமில்லாத வனாகவும் இருந்து வந்தேன்; வருகிறேன். இன்று கழகத்தின் மூலம் ஊதியம் எதிர்பார்த்து வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியமில்லாத தோழர்கள் கழகத்தில் ஏராள மான பேர் இருந்து நல்ல தொண்டு ஆற்றிவருகிறார்கள்.

ஆனால் கழகத் தொண்டுக்கு முழுநேரம் ஒப்படைக்கக் கூடிய தோழர்கள் இல்லை. பிரசாரத்திற்கும் அப்படிப்பட்ட தோழர் இதுவரை கிடைக்கவில்லை. பத்திரிகைக்கும் அப்படிப்பட்ட தோழர் கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் கழக விஷயமாய் நான் நீண்ட நாளாகப் பெருங்கவலைப்பட்டுக் கொண்டு இருந்தேன். இதற்கென்றே இரு தோழரை வேண்டினேன். அவர்களில் ஒருவர் தோழர் ஆனைமலை நரசிம்மன் பி.ஏ. ஆவார்கள். மற்றொருவர் தோழர் கடலூர் வீரமணி எம்.ஏ., பி.எல்., அவர்கள். இதில் தோழர் நரசிம்மன் அவர்கள். எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு தனது எஸ்ட்டேட்டை மக்களுக்கு ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, வீட்டை விட்டே வந்து விட்டார். அதனாலேயே அவரை கழக மத்திய கமிட்டிக்கு தலைவராகத் தேர்ந்து எடுக்கலாம் என்று கருதி, முதலில் கழகப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கச் செய்தேன்.

தமிழ் ஓவியா said...

தோழர் வீரமணி அவர்களைக் கேட்டுக் கொண்டபோது அவர் சென்னையில் வக்கீலாக தொழில் நடத்திக் கொண்டு கழக வேலையையும், பத்திரிகை வேலையையும் கவனித்துக் கொள்வதாகச் சொன்னார். அது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. என்றாலும் அந்த அளவுக்கு ஆவது கிடைத்த அனு கூலத்தை விடக் கூடாது என்று கருதி அவரை கழக துணைப் பொதுக்காரியதரிசியாக தேர்ந்தெடுக்கச் செய்தேன்.

இந்த நிலையில் தோழர் நரசிம்மன் அவர்களுக்கு ஒரு சங்கடமான நிலை ஏற்பட்டது. அதாவது அவர் எஸ்டேட்டை குடும்ப நிர்வாகத்தை, கவனித்து வந்த அவரது மூத்த மகன் - வயது சுமார் 25 உள்ள சங்கருக்கு உடல் நோய்ப் பட்ட தோடு அது ஒரு அளவு மூளைத் தாக் குதலுக்கு ஆளாகிவிட்டதால், குடும்ப நிர்வாகத் திற்கும் எஸ்டேட் கவனிப்புக் கும் சிறிது காலத்திற்காவது அவர் (நரசிம்மன்) ஆனைமலையில் இருந்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. அதன் பயனாக இன்னும் சில நாளைக்கு அவரது முழு நேரத் தொண்டுக்கு இட மில்லாமல் போய் விட்டது.

இந்த நிலையில் தோழர் வீரமணி அவர்கள், நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் இணங்க, கழகத்திற்கு முழு நேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து பத்திரிகைத் தொண்டையும் பிரசாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக் கொண்டு தொண்டாற்ற ஒப்புக் கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கே வந்து விட்டார்.

இது நமது கழகத்திற்கு கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி திரு. வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...

வீரமணி அவர்கள் வக்கீல் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாட்களுக்குள் மாதம் 1-க்கு ரூ.200. ரூ.300 என்கிற கணக்கில் வருமானமும், அதிகாரிகளின் பாராட்டுதலும் மதிப்பும் பெறத்தக்க நிலையை அடைந்துவிட்டார்.

அவரது இயக்க சம்பந்தமில்லாத நண்பர்களும், வக்கீல் தோழர்களும் அவருக்கு எவ்வளவோ ஆசை ஏற்படும்படியான எதிர்காலத்தைப்பற்றி சொல்லித் தடுத்தும், அதை ஏற்காமல் துணிந்து முழு நேரப் பொதுத் தொண்டுக்கு இசைந்து முன்வந்தது குறித்து நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன்.

மனைவி, குழந்தை குட்டி இல்லாத வாலிபப் பருவத் தில் பொதுத் தொண்டு உற்சாகம் பலருக்கு ஏற்படுவது இயற்கை. ஆனால் மனைவி, குழந்தை, குடும்பப் பொறுப்பு, நல்ல எதிர்காலம், தொழில் ஆதரவு ஆகிய இவை உள்ள நிலையிலும், நாளைக்கும் அவர் (வீரமணி) ஒப்புக் கொள்வதானால் (எம்.ஏ., பி.எல்.,) என்பதனாலும் பரீட்சையில் உயர்ந்த மார்க்கு வாங்கி இருக்கும் தகுதியாலும்) மாதம் 1-க்கு ரூ.250-க்கு குறையாத சம்பளமுள்ள அரசாங்க அல்லது ஆசிரிய பதவி அவருக்கு காத்திருந்து ஆசை காட்டிக் கொண்டிருக்கும் போதும், அவைகளைப்பற்றிய கவலையில்லாமல் முழு நேரப் பொதுத் தொண்டில் இறங்குவதென்றால் இது இயற்கையில் எப்படிப்பட்ட மனிதரிடமும் எளிதில் எதிர்பார்க்க முடியாத விஷயமாகும்.

உண்மையைச் சொல்கிறேன். தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன்.

எனக்கு திருச்சியிலும் தாங்க முடியாத பளு ஏற்பட்டு விட்டது.

ஆண்கள் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியுடன் பெண்கள் பயிற்சிப் பள்ளி; அனாதைப் பெண்கள் பள்ளி; எலிமெண்டரி பள்ளி ஆகியவை ஆஸ்ட்டல் உடனும் நடைபெற்று வருவதோடு அனாதைப் பிள்ளைகளுக்கு சாப்பாடு போட்டு, கைத்தொழில், தச்சு, தையல், அச்சு எழுத்து சேர்த்தல் (கம்போசிங்) வேலையும் ஒரு 100 பிள்ளை களுக்குக் கற்றுக் கொடுக்கத் திட்டமிட்டு அதற்காக முன் ஏற்பாடு வேலையும் நடந்து வருகிறது. இந்த பெரிய பொறுப்புகளில் பெரும் அளவு திருமதி மணியம்மையார் மேற்போட்டுக் கொண்டு பார்த்துவருவதால் என்னாலும் இந்த அளவுக்கு ஆவது சமாளிக்க முடிகிறது.

கழகத் தொண்டிற்கு ஆதரவளிக்கவும் தொண்டாற் றவும் இன்று பல தோழர்கள் இருந்தாலும், முழு நேரத் தொண்டர்களாக இன்னும் சில பேர் வேண்டி இருக்கிறது. இப்போது தோழர் இமயவரம்பன் (புலவர் பரீட்சை பாஸ் செய்தவர்) மாதம் 150 ரூபாய் வரை சம்பள வருவாயை விட்டு, தனது குடும்ப பெரிய சொத்து நிர்வாகத்தையும் விட்டு, மற்றும் பல பணத்தோடு வரக்கூடிய சவுகரியத் தையும் தள்ளிவிட்டு, வீட்டிலிருந்து பணம் தருவித்து செலவு செய்து கொண்டு கழகத்துக்கு ஒரு வேலை ஆளாக 3,4 ஆண்டாக தொண்டாற்றி வருகிறார்.

இந்த நாட்டில் சொந்த சுயநலம் கருதாமலும், பொது பயனுள்ளதுமான தொண்டாற்றிவரும் கழகம் திராவிடர் கழகம் ஒன்றுதானே இருந்து வருகிறது? இக்கழகத்தில் இருப்பவர்கள்தான் சுயநலமில்லாமல் பாடுபடுகிறார்கள். மற்ற கழகங்கள், கழகத்தால் சுயநலம் பயன் அடையக் கருதி பாடுபடுபவை. அதுவும் பயனற்ற. உண்மையற்ற, காரியத்திற்கு பாடுபடும் கழகங்களாகத்தானே இருக் கின்றன? ஆகையால் மற்றும் முழு நேரத் தொண்டர்கள் கிடைத்தால் ஆவலோடு வரவேற்க காத்திருக்கின்றேன். ஆண்கள் வந்தாலும் சரி; பெண்கள் வந்தாலும் சரி; உடை, உணவு பெறலாம்.

(விடுதலை 10.8.1962)

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் எனும் நூல் பற்றித் தீக்கதிர் வண்ணக் கதிரின் (23.3.2003) விமர்சனம் இது.)

பிரிட்டிஷார் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் ஒரு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்துக்கு வெள்ளைக்கார துரை வந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்து வரவேற்றார். அவருக்கு அடுத்தபடியாக ஒரு அர்ச்சகர் வந்தார். மாவட்ட ஆட்சியர் அவர்காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார் - என்று ஒரு கர்ண பரம்பரைக் கதைஉண்டு. வருணாசிரம தருமம் இப்படித் தான் வெகுபலமாகப் பாதுகாக்கப்பட்டது.

இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிப்பவர் களே மேல்தட்டு பிராமணர்கள்தான் என்கிற எண்ணம் ஆழமாக வேரூன்றிக் கிடந்த காலகட்டத்தில் சிறந்த தேசபக்தரும் விடுதலைப் போராட்ட வீரரும், கல்விமானும், இலக்கியவாதியுமான வ.வே.சு.அய்யரையும் அது எப்படி கவ்விப் பிடித்திருந்தது என்ற பழைய விஷயங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறது சேரன்மாதேவி குருகுலப் போராட்ட வரலாற்றுச் சுவடுகள் என்ற நூல்.

திராவிடர் கழக வெளியீடாக வந்துள்ள இந்த நூலில் வ.வே.சு அய்யர் நடத்திய குருகுலப் பள்ளி பற்றிய எதிரும்புதிருமான கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பள்ளியில் இரண்டு பிராமண குல மாணவர்களுக்குத் தனியாக உணவு பரிமாறப்பட்ட சிறு பொறி எவ்வளவு பெரிய தீயாகப் பரவி ஒரு இயக்கமே உருவாகக் காரணமானது என்பதைப் படிக்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினையை மய்யமாகக் கொண்டு கருத்துப் போராட்டம் நடத்திய தந்தை பெரியாருடன் சமாதானம் பேச வந்த மகாத்மா காந்தியடிகளின் உரையாடல் அதே வடிவில் தொகுத்து தரப் பட்டிருப்பது இந்த இருபெரும் தலைவர்களின் சிந்தனைச் சார்பைப் புரிந்துகொள் உதவு கிறது.

பாரத கலாச்சாரம் என்பது என்ன? வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் வருணப் பாகுபாடும் ஜாதிப்பாகுபாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. வேத விதி முறைப் படிதானே அய்யர் நடந்து கொண்டிருக்கிறார். இதிலே என்ன தவறு?

குருகுலப் பள்ளி தொடர்பான இருதரப்பு கருத்துகளையும் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

பாரத கலாச்சாரம் பற்றி அந்நாளில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் நடந்த விவாதத்தில் ஒரு உறுப்பினரின் கருத்தாக இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நாளில் பாரத கலாச்சாரம் பேசுவோரின் கருத்தும் இதுதான் என்பதை நாம் இதன் மூலம் உணர்ந்துகொள்ளலாம்.

ஆங்கிலக் கல்வியின் தீமையை மேடையில் பேசிக்கொண்டே தங்கள் வீட்டுக் குழந்தைகளைக் கான்வென்டுக்கு அனுப்பும் இக்காலத் தமிழர் தலைவர்கள் போலில்லாமல் தன் பிள்ளையைப் பாரத கலாச்சார முறைக் கல்வி பயில குருகுலத்தில் சேர்த்து விட்டார் என்று ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பற்றி குறிப்பிடுகிறார் நூலாசிரியரும் திராவிடர் கழகப் பொதுச்செயலாளருமான கி.வீரமணி. தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்பதுபோல பல தமிழர்தலைவர்களை இந்தக் கருத்து சுடக்கூடும். இதனால் வருத்தம் வரலாம், திருத்தம் வருமா என்பது கேள்விக்குறியே.

வருணாசிரம தருமத்தை நிலை நாட்டு வதை வெறித்தனமாகப் பற்றி நிற்போரோடு அனைத்து பிராமணர்களையும் ஒட்டுமொத்த மாகச் சேர்த்துவிட வேண்டுமா என்ற கேள்வி அன்றும் எழுந்தது. இன்றும் எழுகிறது. இதற்கு இந்த நூலின் ஒரு பகுதியே சிந்திக்க வேண்டியதாயிருக்கிறது.

வைக்கம் என்ற ஊரின் கோயிலைச் சுற்றி யுள்ள தெருக்களில் ஈழவர்கள், புலையர்கள் நடக்கக் கூடாது என வைதீகர்களும் நம்பூதிரி பார்ப்பனர்களும் திருவாங்கூர் மகாராஜாவும் கூறினர் என்று முதல்வரியிலும் இதனை எதிர்த்து சிறைசென்ற முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் குரூர் நீலகண்டன் நம்பூதிரி என்று அடுத்த வரியி லும், இந்த சத்தியாக்கிரகத்தை வலுவிழக்கச் செய்ய எண்ணியது திவான் ராகவய்யா என்ற பார்ப்பனரை ஆலோசகராக் கொண்ட அங் குள்ள திருவிதாங்கூர் சமஸ்தான அரசர் ஆட்சி என்று மூன்றாவது வரியிலும் இந்த நூலில் கூறப்பட்டுள்ளது.

இதற்குள் பின்னிக் கிடக்கும் முரண்பாடுகளைச் சிந்திக்க வேண் டும். அப்போதுதான் சாதீயக் கண்ணோட் டத்தை மிஞ்சிய வர்க்கக் கண்ணோட்டம், அரசியல் கண்ணோட்டம் ஏற்படும். வரலாற்றுச் சுவடுகளில் இந்த ஓர் உதாரணம் மட்டுமல்ல பல உதாரணங்கள் உண்டு.

இப்படி ஒரு சில நெருடல்கள் இருந்தாலும் வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருக்கும் இந்த நூலினை படிப்பது பாதுகாப்பது அவசியம்.

-சாமுபா
(தீக்கதிர் - வண்ணக்கதிர் 23.3.2003)

தமிழ் ஓவியா said...

தவறைக் கண்டிக்க உரிமை வேண்டும்


உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றிய பொதுமக்கள் கருத்துத் தெரிவிப்பது, கோர்ட்டை அவமானப் படுத்துவதாகும் என்ற பூச்சாண்டியை இனியாவது அம்பலப் படுத்தவேண்டும். உயர்நீதிமன்றத்து நீதிபதிகளும் மனிதப் பிறவிகளாதலால், ஆசாபாசங்களுக்கும், சமுதாய உணர்ச்சி களுக்கும், தவறுகளுக்கும் கட்டுப்பட்ட வர்கள். இவர்களை நியமிக்கின்ற இந் தியக் குடியரசுத் தலைவரையும் அவருக்கு அடுத்தபடியாக உள்ள இந்திய தலைமை அமைச்சரையும் கண்டிக்கவும், கொடும்பாவி கட்டிக் கொளுத்தவும், இவர்கள் எல்லோருக்கும் மேம்பட்டதாகக் கூறப்படுகின்ற இந்திய அரசியல் சட்டம் என்பதையும்,அதற்கும் மேம்பட்டதாகக் கூறப்படுகிற தேசியக் கொடி என்பதையுமே கிழித்துப் போட்டுத் தீ வைக்கவும், ஜனநாயக சமூகத்தில் உரிமையிருக்கும்போது, சாதாரண சர்க்கார் உத்தியோகஸ்தர்களில் ஒருவரான நீதிபதியின் தீர்ப்பைத் தவறு என்று கண்டிப்பதற்கு மக்களுக்கு உரிமையிருக்க வேண்டாமா?

- 6-11-1956 விடுதலை தலையங்கத்தில் தந்தை பெரியார் கருத்துரை

தமிழ் ஓவியா said...

சமூக நீதியில் விடுதலை ஆசிரியரின் பங்களிப்பு!


உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழான விடுதலையின் ஆசிரியராகத் தொடர்ந்து 50 ஆண்டுகள் பணியினை நிறைவு செய்யும் நமது மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர் களின் காலகட்டத்தில் சமூகநீதிக் கொள்கை யிலும், விடுதலையின் பொலிவிலும் நிறைய மாற்றங்கள் நேர்ந்துள்ளதை என்னால் உணர முடிகிறது. தந்தை பெரியாரின் காலகட்டத்தில் வகுப்புவாரிக் கொள்கை நீதி மன்றத்தால் முடக்கப்பட்டதை எதிர்த்து, பெரியார் நிகழ்த்திய மக்கள் போராட்டத்தால் அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் ஏற்பட்டது.

எம்.ஜி.ஆரின். வருமான வரம்பு

அது போது, விடுதலையில் வந்த கட்டு ரைகள் போல, தமிழகத்தில் திரு. எம்.ஜி.ஆர். அவாகள் முதல்வராக இருந்து 1979 இல் கொண்டு வந்த ரூ. 9000 வருமான உச்ச வரம்பு, சமூக நீதிக்கு எதிரானது என்பதற்கான மக்கள் போராட்டத்தை துவக்கிய முதல் ஏடு விடு தலைதான். பல்வேறு அரசியல் கட்சித் தலை வர்களும் அரசின் ஆணைக்கு தங்கள் கருத்தினை வெவ்வேறு திசையில் கூறி வந்த நிலையில், தமிழர் தலைவர் அவர்கள் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒருங் கிணைத்து உண்மை நிலையை தெளிவுடுத்தி, ஒருமுகமான போராட்டக் களத்தை உருவாக் கினார்.

தமிழ் ஓவியா said...

அதற்கு விடுதலையில் வந்த கட்டு ரைகள், தலையங்கங்கள் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எம்.ஜி.ஆர். அரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆணையினை எதிர்க்கும் ஆற்றலை வளர்த்தது என்பதில் எவ்வித அய்யமும் இல்லை. பின்னர் எம்.ஜி.ஆர். ஆணையை திரும்பப் பெற்றுக் கொண்டதோடு அல்லாமல், 31 விழுக்காடு இருந்த இட ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தி ஆணை பிறப்பித்தார் என்பது வரலாறு. எம்.ஜி. ஆரின் சிந்தனையை மாற்றிய பெருமை தமிழர் தலைவரின் அறிக்கைகள், அதனைத் தாங்கி வந்த விடுதலைக்கே உரியது.

மண்டல் குழு பரிந்துரை - விடுதலையின் பங்கு!

அந்த நிலையில் 1980 ஆம் ஆண்டு மண்டல் குழு பரிந்துரை வெளியானது. அரசியல் சட்டத்தின் 340 பிரிவின்படி அமைக்கப்பட்ட அந்த குழுவின் அறிக்கையை நாடாளுமன் றத்தில் உடனடியாக தாக்கல் செய்யாமல் காலம் கடத்தியது இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு. மண்டல் குழுவின் அறிக்கையைத் தாக்கல் செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் நடத்திய போராட்டம், மாநாடு என அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திய விடுதலையின் கட்டுரைகள் தனி மலராக வரவேண்டியது அவசியம். தற்போது மண்டல் குழு பரிந்துரையின்படி இட ஒதுக் கீட்டினை அனுபவித்துவரும் இளைய தலை முறையினர் அந்த கட்டுரைகளையும் செய்தி களையும் தெரிந்து கொண்டால்தான் கடந்து வந்த பாதையை எவ்வாறு விடுதலை செப்பனிட உதவியது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இரண்டு ஆண்டுகள் கழித்து மண்டல் குழு பரிந்துரையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விவாதம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அரசால் நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதற்கு விடுதலையில் கட்டுரைகள், தலையங் கங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. பின்னர் 1990 இல் வாராது வந்த மாமணி போல, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் அரசு பணிகளில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்த நேரத்தில், அதனை எதிர்த்து வட மாநிலங்களில் எதிர்ப்புக் குரல், வடநாட்டு, பார்ப்பன பத்திரிகைகள் கண்டனக் கட்டுரைகள் எழுதிய நேரத்தில், அதற்கு பதிலடி கொடுத்து விடுதலையில் கட்டுரைகள் வெளி வந்தன. இட ஒதுக்கீடு பற்றிய பல்வேறு சந்தேகங்கள் தீர்ந்திடும் வகையில் வெளிவந்த கட்டுரைகள் தான் தமிழகத்திலே கூட நம்மில் பலருக்கு மண்டல் குழு பரிந்துரையைப் பற்றிய ஓர் தெளிவு ஏற்பட உதவியது.

69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது எப்படி?

பின்னர் 1993-94 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் நிலவி வந்த 69 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டிற்கு எதிரான நீதிமன்ற ஆணை வந்த நேரத்தில், மீண்டும் விடுதலையில் தொடர்ந்து கட்டுரைகள், தலையங்கங்கள் வெளியிடப் பட்டன. தமிழர் தலைவரின் நுண்ணிய அறி வாற்றல் 69 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டிற்கு 31- சி-யின்படி அரசின் சட்டம் இயற்றிட வழி வகுத்து அது பாதுகாக்கப்பட்டது. இன்றளவும் 69 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை எதிர்த்து பல முறையீடுகள் வந்தாலும் அரசின் சட்டம், 9 ஆவது அட்டவணையில் ஏற்றப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றமும் அதற்கு தடை செய்ய வாய்ப்பில்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான ஓர் நிலை ஏற்பட்டுள்ளது. 2005 இல் மத்திய அரசின் கல்வி மசோதா, அதனைத் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு என பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களுக்கான சமூக நீதிப் போராட்டத்தில் விடுதலையின் பங்கு மகத்தானது; அளத்தற்கரியது.

தமிழர் தலை வரின் அன்றாட செயல்பாடுகளைக் காணக் கூடிய வாய்ப்பு சில ஆயிரம் மக்களுக்கு உண்டு என்றால் அதனை உலகிற்கு எடுத்துச் சென்று பல லட்சம் மக்களும் அறிந்து கொள்ளக்கூடிய ஓர் சாதனமாக விடுதலைதான் விளங்கி வருகிறது. தமிழர் வீடு என்பதன் அடையாளம் விடுதலை ஏடு அங்கே தவழ்வதுதான் என்றார் குன்றக்குடி அடிகளார். அதனைச் சற்று திருத்தி ஒடுக்கப்பட்டோர் அனைவரது கரங்களிலும் அவர்தம் உரிமைக்கான கேடயமாக விளங்கு வது விடுதலைதான் எனக் கூறுவது இன்றைய காலகட்டத்தில் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

பத்திரிகைத் துறையில் ஆசிரியர் என்றால் நமது தமிழர் தலைவரைத் தான் குறிக்கிறது என்பதே அவர்தம் சிறப்பு மிகு பணிக்கு ஓர் அங்கீகாரமாகும். இன்றைக்கு விடுதலை ஒரு புதிய பொலிவோடு, பலரும் பாராட்டும் வண்ணம் வருவது கண்டு சமூக உணர்வுள்ள அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். 50 ஆண்டுகள் பகுத்தறிவு நாளேட்டின் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நமது ஆசிரியர், தமிழர் தலைவர் அவர்களுக்கு எமது அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் கூட்ட மைப்பின் சார்பாக வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறோம். விடுதலை இன்னும் பல சமூக மாற்றங்களை தமிழர் தலைவரை ஆசிரியராகக் கொண்டு தொடர்ந்து ஏற்படுத் தும்; வாழ்க விடுதலை!

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் பற்றி இந்து ஏட்டின் கணிப்பு

தமிழ்நாடு இடஒதுக்கீடு மசோதாவுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது பற்றி அ.இ.அ.தி.மு.க.வி.இல் நியாயமான மனநிறைவோடு கூடிய மகிழ்ச்சி நிலவுகிறது. இப்பொழுது அது சட்டமாகிறது. ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பாரின் நலன்களைப் பெறுவதில், அ.இ.அ.தி.மு.க. அரசின் இடர்நிறைந்த முயற்சிகள் முடிந்துவிடவில்லை எனக் கூர்மையான நோக்கர்கள் கருதுகிறார்கள்.
மற்ற கட்சிகள் எல்லாம் பொதுவாகக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலை வரவேற்றுள்ள நிலையில், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் திரு.கி.வீரமணி மட்டும் வரக்கூடிய ஆபத்தை உணர்ந்துள்ளார் என்றும், அதன் காரணமாக இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களின் அடுத்த நடவடிக்கை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அதை முறியடித்து நிலையான பாதுகாப்புப் பெறுவதற்கு அரசமைப்புச்சட்டத்திருத்தம் ஒன்று கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் இந்த நோக்கர்கள் கூறுகிறார்கள்.
நன்றி: தி இந்து 23 ஜூலை 1994

தமிழ் ஓவியா said...

என்றும் ஆசிரியர்! எல்லார்க்கும் நல்லாசிரியர்!


உலகின் முதல் ஆசிரி யர் சாக்ரடீஸ் என்றால், தென்நாட்டின் முதல் ஆசி ரியர் தந்தை பெரியார் எனலாம். அந்த அறிவு ஆசான் தந்தை பெரியார் கண்டெடுத்த ஆசிரியர் தான் விடுதலை ஆசிரி யர் அன்புக்குரிய டாக் டர் கி.வீரமணி அவர்கள்!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் முதல் மாணவரா கத் தேர்வு பெற்று, தங்கப் பதக்கமும் பரிசுகளும் பெற்றார்; சட்டக்கல்லூரியிலும் சிறப்பாக தேர்வு பெற்று, கடலூரில் வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கி முத்திரை பதித்தார். வழக்குரைஞராகவே அவர் தமது வாழ்க்கையைத் தொடர்ந்திருந் தால், தமிழ் நாட்டின் தலைசிறந்த வழக்குரைஞராகவும், புகழ்மிக்க நீதியரசராகவும் கூட உயர்ந்திருப்பார்.

பெரியார் கட்டளைக்குக் கீழ்ப்படிந்த ராணுவ வீரர்

தமிழ் ஓவியா said...

ஆனால், இராணுவத் தளபதியின் கட்டளைக்குக் கீழ்படியும் ஒரு போர் வீரனைப் போல், தந்தை பெரியாரின் அன்பழைப்பை ஏற்று, தன்னுடைய சொந்த வாழ்க்கையை ஓரந்தள்ளி விட்டு, பொது வாழ்க்கையை மனமு வந்து ஏற்றுக் கொண்டவர்தான், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்! வழக்குரைஞர் தொழிலில் வருமான இழப்பு, குடும்ப வாழ்க்கை புறக் கணிப்பு என்று இன்னல்களை இன் முகத்தோடு ஏற்றுக் கொண்டவர்தான் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!

விடுதலை ஆசிரியர் என்பது மிகவும் பொறுப் பான பணி; அதை மிகக் கவனமாக ஆற்ற வேண்டுமே என்ற அக்கறை யோடும், அதே நேரத்தில் ஆர்வத் தோடும் ஏற்றுக் கொண்டவர்தான் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!

பெரியாரின் கணிப்பு

இது நமது கழகத்திற்குக் கிடைக்க முடியாத ஒரு நல்ல வாய்ப்பு என்று கி.வீரமணி அவர்கள் விடுதலையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன்வந்ததை பெரியார் வரவேற்பதுடன் அல்லாமல், உண் மையைச் சொல்லுகிறேன்.

தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண் டிற்கு இசையாதிருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி வாரப் பத்திரி கையாகத் திருச்சி அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன், என்றும் பிரகடனப்படுத்தினார். அந்த அள விற்கு அய்யா அவர்கள் ஆசிரியரிடம் முழு நம்பிக்கை வைத்திருந்தார். அதனால்தான் கலைஞர் அவர்கள், மூடப்படும் நிலையிலிருந்த விடுதலை இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று, வளர்த்து பெரியாரின் பாராட்டு களைப் பெற்றவர் என்று புகழ்மாலை சூட்டினார்.

டாக்டர் கி.வீரமணி அவர்கள் விடுதலையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று இன்றைக்கு அய்ம்பது ஆண்டு கள் ஆகிவிட்டன. ஒரு பத்திரிகையின் வரலாற்றில் இது ஒரு நெடும்பயணம் தான்! விடுதலையின் பய ணப் பாதையில் கல்லும் முள்ளும்தான் கிடந்தன; கனியும் மலரும் அங்கு இல்லை. உண்மையில், இந்த அய்ம்பது ஆண்டு கால கட்டத்தில் விடு தலை நாளிதழ் தீயைத் தாண்டியிருக்கிறது; தென் றலை தீண்டியதில்லை! எனலாம்.

தொழுநோயாளிகளின் கொட்டடியில் நமது ஆசிரியர்

தமிழ்நாட்டில் வெளிவரும் மிகப் பெரிய நாளிதழ்கள் எல்லாம் விளம்பரங்களில்தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், விளம் பரங்கள் கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையிலும் விடுதலை இதழ் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக் கிறது. நெருக்கடி நிலை காலக்கொடு மை களை மறக்க முடியுமா? விடுதலை ஆசிரியர் கி.வீரமணி கைது செய்யப் பட்டு, சிறைச்சாலையில் தொழு நோயாளிகள் அடைக்கப்படும் கொட்டடியில் அடைக்கப்பட்டார்.

கல்நெஞ்சக்காரக் காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். இந் நிலையில் விடுதலை நாளிதழ் வெளி வர வேண்டும். எவ்வளவு பெரிய சோதனை!

காலையில் தணிக்கை அதிகாரி யின் கனிவான பார்வைக்கு விடுதலைச் செய்திகளை வைத்துக் காத்திருக்க வேண்டும். அதிகாரி அனுமதி எதற்குத் தருவார்? எதற்கு தரமாட்டார்? என்றெல்லாம் தெரியாது. அவர் அனுமதி தந்தபின் விடுதலையைத் தயாரித்து மறுநாள் வெளியிட வேண்டும். இத்தனை சோதனைகளை யும் தாண்டித்தான், நெருப்பில் சுடப் பட்ட தங்கமாக, நெருக்கடி நிலை யிலும் ஒளிவீசிக் கொண்டு விடுதலை வெளிவந்தது.

50 ஆண்டு விடுதலைப்பணி

பத்திரிகை என்றால் - பயனுள்ள செய்திகளைத் தோழர்களுக்குத் தர வேண்டும்! பதிலடியை எதிரிகளுக்குக் கொடுக்க வேண்டும் இந்த இரண்டை யுமே விடுதலை சரியாகச் செய்து வந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம், சமூக நீதிப் போராட்டம், மண்டல் குழு அறிக்கை நிறைவேற்றக் கோரி நடத்தப் பெற்ற போராட்டம், பெண் ணுரிமைப் போராட்டம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என் பதை வலியுறுத்தும் போராட்டம் என்று நடைபெற்ற பல உரிமைப் போராட்டங்களைப் பற்றி இந்த அய்ம்பது ஆண்டுகள் காலத்தில் ஆசிரி யர் கி.வீரமணி அவர்கள் விடுதலை யில் வெளியிட்ட அறிக்கைகள் அனைத்தும் வரலாற்றுச் சாசனங்கள்!

எனவே, விடுதலை வெறும் நாளிதழ் மட்டுமல்ல; ஒரு வரலாற்றுப் பெட்ட கம்! என்றும் ஆசிரியர்! எல்லார்க்கும் நல்லாசிரியர்! என்று திகழும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கைவண்ணத் திலும், கருத்து வண்ணத்திலும் விடு தலை மேலும் பல வெற்றிச் சாதனை களைக் குவிக்கட்டும்! ----------பேரா.அ.இராமசாமி

தமிழ் ஓவியா said...

டெசோ சிந்தனை: ஈழத் தமிழர் பற்றி விடுதலை ஆசிரியர்


கேள்வி: இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண் பதில் வடநாட்டுக்காரர்கள் சிலர் எதிர்க்கிறார்களே?

தமிழர் தலைவர்: வடநாட்டுக்காரர்கள் என்ன? தமிழ்நாட்டிலே இருக்கின்ற சுப்பிரமணிய சாமிகளும், சோ ராமசாமிகளும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரி மைக்கு ஒரு நல்ல விடியல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை வைத்து விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அவர்களை அழிக்கவேண்டும் என்று சொல்லி, தமிழ் ஈழத்தை, தமிழின உணர்வாளர்களைக் கொச்சைப் படுத்துபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்கவேண்டும் என்று சொன்னவர்களும் இவர்கள்தான். ஆகவே, தமிழின உண்மையான உணர்வுள்ளவர்கள் யார்? தமிழின உணர்வுகளுக்கு எதிரானவர்கள் யார்? என்பதை இதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்க வாருங்கள்

கேள்வி: இலங்கைப் பிரச்சினையில் அரசியல் கட்சியினர் எல்லோரும் ஒரே அணியில் வருவார்களா?

தமிழர் தலைவர்: ஈழத்தமிழர் பிரச்சினையில் எல்லோரும் ஒரே அணியில் சேர வேண்டும் என்று சொல்லுகிறோம். அவரவர் களுக்கு பல அரசியல் நிலைப்பாடுகள் இருக்கலாம். இருந்தாலும் ஈழத்தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை தேவையில்லாமல் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

எந்தவித சுருதி பேதமும் இந்தப் பிரச்சினையில் இருக்கக் கூடாது. இதய சுத்தியோடு வர வேண்டும் இவர் இதற்கு முன் என்ன சொன்னார்? அவர் இதற்கு முன் என்ன சொன்னார் என்ற விமர்சனங்கள் கூடாது. டெசோ போன்ற ஓரமைப்பைத் திராவிடர் கழகம் மீண்டும் துவக்க வேண்டும் என்று கருதுகிறோம். திராவிடர் கழகம்தான் அதற்கு தலைமை தாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை திராவிடர் கழகம் அமைப்பாளராக இருக்கும். ஈழத்தமிழர் பிரச்சினை யில் எல்லோரும் ஒன்றாக வரவேண்டும் என்பதுதான் தாய்க்கழகத்தின் வேண்டுகோளாகும். இப்பொழுது ஒரு நல்ல சூழல் உருவாகியிருக்கிறது.

இராஜபக்சேவின் தோல்வி

இலங்கையில் இனப்படுகொலைகள், மனித உரிமைகள் மீறப்பட்ட பிறகு இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலகத் தமிழர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள், பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன் தலைமையில் திராவிடர் கழகத்தின் சார்பாக தலைமை நிலையச் செயலாளர் போன்றோர் எல்லாம் அய்.நா. மன்றத்தின் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் 18.5.2011 அன்று நடத்தினர். எனவே, உலகத் தமிழர்களிலிருந்து தமிழகத் தலைவர்கள் வரை இலங்கையின் மனித உரிமை மீறல்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததற்கு தற் பொழுது ஒரு நல்ல பயன் கிடைத்திருக்கிறது. உலக நாடுகளில் 24 நாடுகள் இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து வாக்களித்து அய்.நா. தீர்மானத்தை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.

அமெரிக்க நாட்டின் வெளியுறவுத் துறையின் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் அவர்களே இலங்கை நாட்டின் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறியிருக்கிறார். இந்தத் தீர்மானம் செயலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ராஜபக்சே வின் அனைத்து முயற்சிகளும் இப்பொழுது தோல்வி கண்டுள்ளன.

சென்னை பெரியார் திடலில் 24.3.2012 அன்று காலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியவை

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் பற்றி ஏடு, இதழ்கள்

ஆனந்தவிகடன் பார்வையில் வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றவர் பேசும்போது குறுக்கே பேசமாட்டார். கவனமாக சில சமயம் தன் கைகளைக் கட்டிக் கொண்டு கூர்மையாக கேட்பார். வயதில் சின்னவர்களை கூட வாங்க போங்க என்றுதான் சொல்வார்.

நன்றி: ஆனந்த விகடன், 22.5.1983

சிந்தனைத் தெளிவும், கொள்கை நெறியும் பிசகாது மலிவான விமர்சனங்களில் இறங்காது தொய்வு தட்டாமல் பேசக்கூடிய நா. வல்லர்களில் மூன்று நான்கு பேர்களில் வீரமணியும் ஒருவர்.

நன்றி: சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு 1983

பிராமணர்கள் மனிதர்களாகத்தான் இருக்க வேண்டும்; தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகக் கருதக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகிறார்.

நன்றி: இந்தியா டுடே, ஜனவரி 15, 1983

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் கி.வீரமணி- தந்தை பெரியார் கண்டெடுத்த நல்மணி!

1944 ஆம் ஆண்டு ஆகத்து 27ஆம் நாள் சேலம் மாநகரில் எழுச்சியோடும், தந்தை பெரியாரே எங்கள் தலைவர் என ஏழை எளியோர் ஏராளமாகக் கூடிய நீதிக் கட்சி 16ஆம் மாநாடு சிறப்புடன் நடந்தேறியது.

இயக்க வரலாற்றில் திருப்புமுனையாக நீதிக்கட்சி என்ற பெயரை நீக்கித் திராவிடர் கழகம் என மாற்றுப் பெயரைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றியதற்குப் பிறகு மக்கள் இயக்கமாக மலைக்கத் தக்கவகையில் வளர்ந்து ஓங்கியது.

திராவிட இயக்க வரலாற்றில் 1944 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்களிடையே ஏற்பட்ட புதிய எழுச்சியும்,புத்துணர்ச்சியும் குறிப்பிடத்தக்கவை.

திராவிடர் கழகம் முழுக்க முழுக்க ஏழை, எளிய, பாட்டாளிகளும், பாமர மக்களும் நிரம்பிய கட்சி என்ற பெயர் ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல், இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் பெரியார் அண்ணா பேச்சுகளால் ஈர்க்கப்பட்டுக் கழகத்தில் வந்து சேரலாயினர்.

பேரறிஞர் அண்ணா அவர்களைக் கல்லூரிகள் போட்டி போட்டுக் கொண்டு அழைக்கத் தொடங்கின. மேடைப் பேச்சிலே அண்ணா பாணி என்ற ஒன்று ஏற்பட்டது. அந்தப் பாணியிலேயே மாணவர்களெல்லாம் பேசத் தலைப்பட்டனர்.

திராவிடர் கழகத்திற்கு நாவன்மை மிக்க ஒரு பேச்சாளர் பட்டாளமே கல்லூரிகளிலிருந்து வெளிப்பட்டது.

திராவிட இயக்க உணர்ச்சியும் எழுச்சியும் தமிழகத்தில் பொங்கி வழியத் தொடங்கின. அது ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். அப்போதுதான் முளைவிட்டுச் செடியாக வெளிவந்தது. வீரமணி என்னும் ஒரு வீர விதை. அந்தச் செடிக்கு நீரூற்றி உரமிட்டு வளர்த்தவர் கடலூர் ஆ.திராவிடமணி என்பவர் ஆவார்.

பள்ளி ஆசிரியரான ஆ.திராவிடமணி அவர்கள் சாரங்கபாணி என்னும் மாணவ மணிக்கு வீரமணி எனத் தனித்தமிழ் பெயர் சூட்டி நாடெங்கும் அழைத்துச் சென்று கொள்கை மணம் கமழச் செய்தார்.

பன்னிரண்டு வயதுச் சிறுவன் வீரமணி பேச்சைக் கேட்க வாரீர்! என்று அந்தக் காலத்தில் துண்டறிக்கைகளை அச்சடித்து விளம்பரம் செய்வார்கள். சிறுவன் வீரமணி வீர முழக்கமிடுவதைக் கேட்க ஒவ்வோர் ஊரிலும் மக்கள் கூடுவார்கள்.

அந்தக் காலகட்டத்தில் எங்கள் ஊரான திருக்காரவாசலுக்கு அருகில் உள்ள ஆலத்தம்பாடி என்னும் ஊரில் அந்த ஊரைச் சேர்ந்த சேஷைய ராசு, ஆசிரியர் சண்முகம், தையற்கடை வைத்திருந்த அப்பாண்ட ராஜன் ஆகியோருடன் நானும் சேர்ந்து வீரமணியை அழைத்து கழகப் பொதுக் கூட்டம் நடத்தினோம்.

1946ஆம் ஆண்டு சனவரி 7 ஆம் நாள் அந்தக் கூட்டம் நடைபெற்றது. அன்றைக்கு முந்திய நாள் காலை திருத்துறைப்பூண்டியில் தஞ்சை மாவட்ட மாணவர் கழக மூன்றாவது மாநாடும், பிற்பகல் முதலாவது கருஞ்சட்டை மாநாடும் நடைபெற்றன.

அந்த மாநாட்டில் கலந்துகொண்ட காஞ்சி கலியாணசுந்தரம், கடலூர் ஆ.திராவிடமணி, கடலூர் வீரமணி, கவிஞர் கருணாநந்தம் ஆகியோரை ஆலத்தம்பாடிக்கு அழைத்து வந்து அந்தக் கூட்டத்தை நடத்தினோம்.

அன்று மாலை தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப்படத்தை ஏந்தியவாறு கால்நடையாக ஊர்வலம் நடத்தினோம். எங்களுடன் அந்த ஊர்வலத்தில் சிறுவன் வீரமணியும் நடந்துவந்தார்.

அன்று அந்தச் சிற்றூர் மக்களெல்லாம் சிறுவன் வீரமணியின் வீர முழக்கம் கேட்டு வியந்தும் மகிழ்ந்தும் பாராட்டினர்.

அன்று அவர் பந்தலிலே பாகற்காய் என்னும் குட்டிக் கதையை உவமையாக எடுத்துச் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்தார்.

அதாவது, ஓர் இழவு வீட்டில் ஒப்பாரி வைத்துப் பெண்கள் அழுது கொண்டிருந்தபோது அந்தத் துக்கத்தில் கலந்துகொள்ள இரண்டு பெண்மணிகள் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டின் உள் முற்றத்தில் பாகற்காய் நிறைய காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த அந்தப் பெண் மணிகளில் ஒருவர் தமது ஒப்பாரியோடு ஒப்பாரியாகப் பந்தலிலே பாகற்காய் பந்தலிலே பாகற்காய் என்று பட ஆரம்பித்தார். அதைக் கேட்டு மற்றொரு பெண்மணி போகும் போது பார்த்துக்கலாம் போகும் போது பறிச்சுக்கலாம் என்று ஒப்பாரியோடு சேர்த்துப் பாடினாராம்.

இப்படிப் பல குட்டிக்கதைகளையும் அடுக்கடுக்கான உவமைகளையும் சொல்லி மேடையில் சிறுவன் வீரமணி ஆற்றிய உரை பாமர மக்களின் உள்ளத்திலெல்லாம் நமது கொள்கையைப் பதியம்போடச் செய்தது என்றால் மிகையாகாது.

பவள விழா கண்ட வீரமணியும், அவர்தம் வாழ்க்கைத் துணைவியார் திருமதி மோகனா வீரமணி அவர்களும், அவர்தம் பிள்ளைச் செல்வங்களும் பல்லாண்டு பல்லாண்டு எல்லா நலமும் இனிதே பெற்று வாழ்க என முத்துவிழா கண்ட நான் வாழ்த்தி மகிழ்கிறேன்.

அன்று பன்னிரண்டு வயது சிறுவனாக நான் பார்த்த வீரமணிதான் என்னுடைய 80 ஆவது பிறந்தநாள் விழாவிலும் 81 ஆவது பிறந்தநாள் முத்து விழாவிலும் கலந்துகொண்டு என்னை வாழ்த்திச் சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(கடந்த 2.12.2010 அன்று தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் 78 ஆம் ஆண்டு பிறந்தநாள்.)

(நன்றி: மீண்டும் கவிக் கொண்டல் - டிசம்பர் 2010)

தமிழ் ஓவியா said...

தமிழர்தலைவரின் பன்முகம்!

தமிழர் தலைவரின் பணியில் பல்வேறு முகங்களைக் காணலாம். கழகப் பொறுப்பாளர்கள் காண வரும் போது அவர்களிடம் அந்தந்த பகுதி பெரியார் தொண்டர்களின் நலம் விசாரிப்பு முதல் கழகத் தோழர்களின் பணி, எந்த பகுதி தோழர் இயக்கப் பணி ஆற்றாமல் நிகழ்ச்சிக்கு மட்டும் தலைகாட்டுகிறார் போன்றவற்றை கடகடவென இரண்டு நிமிடங்களில் விசாரித்து முடிப்பார். கல்வி யாளர்கள் வரும் அடுத்த நொடியே பல்வேறு நூல்களில் வந்துள்ள தகவல்களைச் சுட்டிக் காட்டி, இதற்கெல்லாம் நீங்கள் ஆதாரபூர்வ மாக மறுப்பெழுத வேண்டுமென தகவல் அளிப்பார்.

அமெரிக்கா போன்ற வெளிநாட்டு அழைப்புகளில் பேசும்போது, பன்னாட்டு தோழர்களையும் நலம் விசாரித்தும், இணைய தளத்தில் வரும் செய்திகளை பற்றி கலந்துரை யாடல், வெளிமாநிலங்களி லிருந்து வரும் இ-மெயில் களுக்கு உடனுக்குடன் பதில் அனுப்புதல்- பல்கலைக்கழக துணை வேந்தர்கள் சந்திக்கும் போது வரலாற்றில் உள்ள தகவல்கள் பற்றி விவாதம், முதல்வர் கலைஞரைச் சந்திக்கும் போது சமுதாய மறுமலர்ச்சிக்கும், ஏழை எளிய மக்களுக்குமான - சமூக நீதிக்கான உரையாடல்கள், பள்ளி, கல்லூரி மாணவர் களைச் சந்திக்கும் போது, முதலில் படிப்பு எனக் கூறி அவர்களிடம் பகுத்தறிவு சிந் தனை வளர்த்தல், அறிவியல் மனப்பான் மையை வளர்க்க பல்வேறு அரங்கங்கள், இப்படி எத்தனையோ இருக்கின்றன. சில மட்டும் இங்கே- சிந்தனைக்கு. இன்னும் பல்லாண்டு வாழ்க; பல கோடி தமிழர்கள் வாழ்க்கை உயர!

பா.சிவகுமார், ஒளிப்படக் கலைஞர் 1-12-2010

தமிழ் ஓவியா said...

ஆ.திராவிடமணி

குருவும் - சீடரும் பிறந்த நாள் டிசம்பர் 2 என்றால் ஆச்சரியமாகத்தான் இருக் கும். அதுதான் இந்நாள். குருவாகிய ஆ.திராவிடமணி பிறந்த ஆண்டு 1914; சீடர் பிறந்த ஆண்டு 1933.

இயக்கத்துக்கு, தமிழி னத்துக்கு நமது தலைவரைப் புறந்தந்த இந்தக் குருநாதரை மிகுந்த நன்றி உணர்ச்சி யுடன் வீர வணக்கம் செலுத்தி இந்நாளில் நினைவு கூர்வோமாக!

பொன்னேரியை அடுத்த ஆசான்புதூர் தான் அவர் சொந்த ஊர் என்றாலும், பணியின் நிமித்தம் கடலூர் வந்தவர் - இயற்பெயர் சுப்பிர மணியம்.

தொடக்கத்தில் இஸ்லா மிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து, பிறகு கடலூர் மணிலா மார்க்கெட்டிங் சொசைட்டியில் பணியில் சேர்ந்தவர். அவருடன் சகப் பணியாளராக இருந்தவர் தான் ஏ.கோவிந்தசாமி ஆவார்கள்; பிற்காலத்தில் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராகவும், அமைச்சராகவும் விளங்கி யவர்.

ஆசிரியர் ஆ. திராவிட மணி தங்கும் இடம் ஒரு மடமாகும். இராமலிங்க பக்த ஜனசபை என்பது அதன் பெயராகும்.

மாலை நேரத்தில் மாண வர்களுக்கு இலவசப் பாடம் (டியூசன்) சொல்லிக் கொடுப் பார். பாடத்தோடு தந்தை பெரியார் அவர்களின் பகுத் தறிவுக் கொள்கைகளையும் சேர்த்து ஊட்டுவார். குடிஅரசு, திராவிட நாடு இதழ்களில் சந்தாதாரராகிய அவர், அவற்றை மாணவர் களிடத்திலும் கொடுத்துப் படிக்கச் சொல்லுவார்.

அப்படித் தயாரிக்கப்பட்ட போது அவர் கண்டு எடுத்த மாமணிதான் சாரங்கபாணி - அந்தப் பெயரை வீரமணி என்று மாற்றிக் கொடுத்த மாணிக்கமும் திராவிடமணி அவர்களே (அண்ணாவின் கலிங்கராணியில் வரும் கதாபாத்திரம்தான் வீரமணி).

துடிப்புமிக்க இந்த இளை ஞரை அடையாளம் கண்டு, எழுதிக் கொடுத்து, மனப் பாடம் செய்யச் சொல்லி, பேச்சுப் பயிற்சி அளித்தார். வெகுவிரைவில் அதில் சுட்டி யாகி, திராவிடர் கழக மேடை களில் முழங்கும் முன்னணிப் பேச்சாளர் ஆனார். மேசை மீது ஏற்றி விடுவது தான் தாமதம் கணீர் கணீர் என்ற வெண்கல நாதம் ஒலிக்க ஆரம்பித்துவிடும்.

அந்தச் சின்ன வயதி லேயே வெளியூர்களுக்கெல் லாம் சென்று கழகப் பொதுக் கூட்டங்களிலும், மாநாடுகளி லும் பேசும் அளவுக்கு அவ ரின் கீர்த்தி நாலாத் திசை களிலும் பரவியது. தொடக் கத்தில் மேடைகளில் கழகப் பாடல்களையும் பாடியிருக் கிறார் சிறுவன் வீரமணி.

ஆசிரியர் ஆ. திராவிட மணி செயல்பாட்டினை அறிந்த தந்தை பெரியார் அவர்கள் அவரை ஈரோட் டுக்கும் அழைத்துக் கொண் டதுண்டு. பிற்காலத்தில் திரா விடர் கழகத்தின் கூட்டுப் பொதுச்செயலளராகவும் இருந்து பணியாற்றியுள்ளார்.

பெரியார் திடலில் அவரை அழைத்துப் பொன் னாடை போர்த்தி தன் குருவுக்கு உரிய சிறப்புகளை ஆசிரியர் செய்ததுண்டு.

சீடருக்குப் பிறந்த நாள் விழா எங்கெங்கெல்லாம் இன்று கொண்டாடப்படு கிறதோ அங்கெங்கெல்லாம் அதன் ஊடே ஆ. திராவிட மணியும் ஓசைபடாமல் இருக் கிறார் என்பதில் அய்ய மில்லை.

வாழ்க ஆசிரியர் ஆ. திராவிடமணி.

- மயிலாடன்2-12-2010

தமிழ் ஓவியா said...

கண்மணி வீரமணியின் அரும்பணி!

பனிமொழி பகர்ந்து, தனி அன்பினைக் கலந்து, என்றும் எனை வரவேற்கத் தவறாத என் ஆருயிர் இளவல் இன்று தன்மானத் தோழர்களால் தமிழர்க்கு தலைவரென அழைக்கப்படும் வீரமணியாரின் தீரம்மிக்கத் திறனால் போற்றிப் பாதுகாக்கப்படும் தந்தை பெரியார் தந்து விட்டுச்சென்ற மாடமாளிகை அல்ல; கூட கோபுரம் அல்ல; அவற்றையும் மிஞ்சும் வண்ணமிகு எண்ணங்கள்-தமிழ் வசீகர வளாகத்தைக் கண்டேன்; ஆங்கமைந்த கலை வாணர் அரங்கம் ஒன்றில் ஓங்கு கதிர் சூரியனாம் உண்மை ஒளிர் தலைவனாம் உலகம் போற்றும் பெரியாரை, ஒவ் வொரு இளங்கலை ஏர்களின் இசையில், நடனத்தில், ஆட்டத்தில் அனைத்திலும் அடியேன் கண்டு ஆனந்தப் பரவசமுற்றேன். அருவியில் குளித்தோர்க்கும் அந்த இன்பம் கிடைப்பதில்லை. அடாத அரசியல், கொடும் வெயிலில் காய்ந்திடும் எனக்கு அந்த அருவிச் சோலையில் கிடைத்த புத்துணர்ச்சியைத்தான் என்னென்று புகழ்வேன்?

இருபது ஆண்டின் முன்னே இளவல் வீரமணி எனை யழைத்து, அங்கே சோலை நடுவே அய்யாவின் சிலையை நாட்டச் சொன்னார். அந்தச் சிலை இன்றைக்கும் அங்கே யிருந்து என்னை அருகணைத்து உச்சி முகர்ந்தது போல் கண்ட உணர்வு எத்துணை மகிழ்ச்சியானது! எப்படி என் உடலைச் சிலிர்க்க வைத்தது!

அய்யாவுக்குப் பிறகு அவர் ஆரம்ப காலந்தொட்டு சேர்த்துவைத்த ஆஸ்தி, பாஸ்தி, கட்டி வைத்த கட்டடங்கள், அறிவுக் கூடங்கள், விட்டுச்சென்றுள்ள கொள்கைகள், வீரம்மிக்க அறைகூவல்கள் இத்தனையும் கட்டிக்காக்க, யாருளர் என்று நமக்கெலாம் எழுந்த அய்யப்பாட்டை, இதோ நானிருக்கிறேன் என்று எடுத்துக்காட்டி ஏறுபோல் நம்மை நிமிர்ந்து பார்க்கின்ற என்னரும் இளவல், பெரியாரின் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடர், தன்மான முரசு வீரமணியார். என் கண்ணிலும் அவர் கண்ணிலும் நீர் துளிக்க, அது ஆனந்தப் பன்னீராக இருக்க, ஒருவரை யொருவர் தழுவிக்கொண்டோம். உமது முயற்சிகள் வெல்க! இங்கு வளரும் பூங்கொடிகள், பூஞ்செடிகள், புதுமை மணம் பெறுக! இன்றுபோல் என்றென்றும் இது பகுத்தறிவுப் பண்ணையாகத் திகழ்க! என்று வாழ்த்தினேன். அவரும் வாழ்த்தினார்.

கலைஞர்

அறிவுப்பணி, அதற்குத் தேவையான அமைப்புப்பணி, அதிலும் ஒரு கட்டுப்பாட்டுப் பணி என இப்படி கடமைப் பணியாற்றுகிற சுயமரியாதை இயக்கக் கண்மணியாம் வீரமணியாரின் நிருவாகப் பணியை நேரிலே காணும் வாய்ப்பு இனியும் பலமுறை இந்த வாய்ப்பு எனக்குக் கிட்ட வேண்டும் என பேராவலுடன் விடைபெற்றுக்கொண்டேன்.

ஆங்கொரு நூலகத்திற்கு, விழா மேடையில் இறுதிக் கட்டமாக ஓர் அறிவிப்பு: கலைஞர் கருணாநிதி நூலகம் என்று அது அழைக்கப்படும் என்று! திணறிப் போனேன். தேன்குடத்தில் தூக்கிப் போட்டு விட்டார்களேயென்று!

பெரியாருக்குக் காலணியாய் இருப்பதுபோல், பெரியார் பெயரில் அமைந்துள்ள அந்தப் பூங்காவில் நூலகம் என்ற நுண்ணிய கொடியாக இருந்துவிட்டுப் போகிறேன். அது எனக்கு பிறவிப் பெரும்பயன்தான்.

(முரசொலி,

15.11.2008, திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி நூலகத் திறப்பு விழாவில் முதலமைச்சர் கலைஞர்)

தமிழ் ஓவியா said...

தோளில் துண்டுப் போடுவது


தோளில் துண்டு போடுகிற கலாச்சாரம், இடுப்பில் துண்டு கட்டுகிற கலாச்சாரத் திற்கு எதிராக வந்தது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத உயர்ஜாதிக்காரர்களைத் தவிர, வேறு யாரும் சட்டை அணியக் கூடாது. தோளில் துண்டுப் போடக்கூடாது, அப்படியே போட்டாலும் உயர் ஜாதிக்காரர்களை கண்டால் அந்தத் துண்டை எடுத்து இடுப்பில் கட்ட வேண்டும் என்று இருந்த அநீதியை எதிர்த்து பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம் கடுமையாகப் போராடியது.
ஒடுக்கப்பட்

ட இசை வேளாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த நாதஸ்வரம், தவில் வாசிக்கிற கலைஞர்கள், தோளில் துண்டுபோடக்கூடாது, என்று இருந்த ஜாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து, பெரியாரின் போர்வாளான பட்டுக்கோட்டை அழகிரி தொடர்ந்து போராடி, அவர்களுக்கு அந்த உரிமையை பெற்றுத் தந்தார்.
இன்று கூட தோளில் துண்டு

போடுகிற பழக்கம் அரசியல் கட்சிகளில் அதிகம் இருப்பது திமுகவிடம்தான். அதற்குக் காரணம் பெரியார் மூலம் ஏற்பட்ட பழக்கமே. தோளில் துண்டு போடுகிற இந்தப் பழக்கம், திராவிட இயக்கங்களின் பழக்கம் என்பதினால்தான் பார்ப்பன பத்திரிகைகள் அரசியல்வாதிகள் பற்றியான நகைச்சுவைகளில், கார்ட்டூன்களில் தோளில் துண்டு போட்ட உருவங்களையே வெளியிடுவார்கள். அரசியல்வாதிகள் தோளில் துண்டு போட்டுக் கொள்வது உங்களுக்கு எந்த வகையில் இடைஞ்சலாக இருக்கிறது? நீங்கள் ஏன் எரிச்சல் அடைகிறீர்கள்? தோளில் துண்டு போடுவது அநாகரிகமல்ல, சுயமரியாதை. தோளில் பூணூல் போடுவதுதான் அநாகரிகம்.
2007 ஆம் ஆண்டு எழுதியது.. வழக்கறிஞர்

கு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு மாத இதழுக்ககாக ஜூலை 2007 ஆம் ஆண்டு எழுதியது. எஸ்.என்.சிவசைலம், சேலம்.

தமிழ் ஓவியா said...

ஆண்டுகள் ஐம்பது போயின


நாத்திகத்தின் போர்வாளை
கூர் தீட்டும் பணியில் உங்கள் வாழ்வில் ஐம்பதாண்டுகள் போயின
பரம்பரை எதிரிகளின்
பாசாங்கு மொழிகளை
திராவிடருக்கு
எடுத்து இயம்பும் பணியில்
ஆண்டுகள் ஐம்பது கழிந்தன
தங்கள் வாழ்வில் ஒவ்வொரு வீட்டின்
முற்றத்திலும் முரசு அறைந்து சொல்வது போல்
தந்தை பெரியாரின் கொள்கை ஒலிக்கும்
விடுதலைக்கு ஆசிரியராய்
உங்கள் வயதில் ஆண்டுகள் ஐம்பது போயின

வண்ண அச்சா கூடுதல் பக்கங்களா இன்னும் ஒரு பதிப்பா அதுவும் திருச்சியிலா இணையத்திலும்
உலகெங்கும் விடுதலையை
உடனுக்குடன் படிக்க
ஏற்பாடா எனக் கேட்போர் வியக்க வளர்ச்சியை
நோக்கியே வலம்வரும் நாத்திக விடுதலையின்
நயம் மிக்க ஆசிரியரே !
எங்களின் திசைகாட்டியே !

ஐம்பது வயதைத் தொட்டாலே அலுத்துக்கொள்வோர் ஏராளம் என்ன இருக்கிறது இனி
என அவர்கள் விடும் ஏக்கப் பெருமூச்சுகள்
தாராளம்

அல்ல ! அல்ல !
ஐம்பதுக்குப் பின் என்
சாதனைகள் பாரீர்
எனப் பட்டியலிடும் அணிவகுப்பாய்
எழுத்துக்களும் பேச்சுக்களும்
எண்ணிலடங்கா இயக்க செயல்பாடுகளும் ...

பெரியார் என்னும் சகாப்தத்தின் தொடர்ச்சியாய் தொடர்ந்திடும் தங்கள் தொண்டு தொடர்ந்திடவே
துணை நிற்போம் என்றும்.

முனைவர் வா. நேரு, தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்.

தமிழ் ஓவியா said...

போக்குவரத்தைக் கவனித்த முதல்வர் காமராசர்


கல்வி வள்ளல் - பச்சைத் தமிழர் கர்மவீரர் என்று புகழப்படும் காமராசர் அவர்கள் இரவு நீண்ட நேரம் விழித்து கடமை ஆற்றிய முதல்வர் என்பது எத்தனை சரியோ அத்தனை சரியான விசயம் எங்கும் படுத்தவுடனே அவர் தூங்கி விடுவார். காரில் எங்காவது நெடுங்தூரப் பயணம் என்றால் காரின் பின் சீட்டில் அப்படியே சுருட்டி படுத்து விடுவது அவரது வழக்கம் -_ வெளியூர் சுற்றுப் பயணம் முடித்து அவர் அப்படித் திரும்பிக் கொண்டிருந்தார் ஒரு சமயம். ஒரே இடத்தில் நீண்ட நேரம் தனது கார் அப்படியே நிற்பதும் ஏராளமான கார்களின் ஆரன்கள் ஒலிப்பதும் அவரை விழிப்படையச் செய்தன. எழுந்து வெளியே பார்த்தார் காமராசர் சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் (அப்போது மர்மலான் பாலம்) டிராபிக் ஜாம் ஆகியிருந்தது முன்னால் பார்த்தார். காமராசர் நடுப் பாலத்தில் ஒரு லாரி பிரேக் டவுன் ஆகியிருந்தது ஒரே ஒரு டிராபிக் போலீஸ்காரர் போக்குவரத்தை சரிபடுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

தான் ஒரு முதலமைச்சர் என்பதை எல்லாம் மறந்து விட்டு உடனே காரை விட்டு இறங்கி தானும் அந்தப் போலீஸ்காரரோடு உதவியாக இருந்து போக்குவரத்தை சரிப்படுத்திவிட்டே மறுபடியும் காரில் ஏறினார் காமராசர். அது மட்டுமல்ல. பொறுப்போடு சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் போய் அது போன்ற இடங்களில் இன்னொருவரைக் கூடுதலாகப் போட்டால் என்னண்ணேன் என்று கண்டித்து விட்டும் வந்தார். ம். இப்படியெல்லாம் தமிழகத்தில் முதல்வர் இருந்தார்கள். அது ஒரு காலம்.

தகவல்: மு. அன்புக்கரசன், பெரியகுளம்

தமிழ் ஓவியா said...

பிள்ளையார் ஊர்வலங்கள்


பிள்ளையார் என்ற இந்து மதக் கடவுளுக்குப் பல நாமகரணங்கள் உண்டு என்றாலும், அதனைப் பெரிது படுத்தி விளம்பரம்செய்து இந்தியத் துணைக் கண்டத்தின் தேசியத் திருநாள் போல பிள்ளையார் சதுர்த்தியைப் பெரிதுபடுத்தி யுள்ளனர்.

இதனை முக்கியப் புள்ளியாக வைத்து இந்துத்து வாவுக்கு ஒரு புதிய உந்து சக்தியை உண்டாக்குவதற்கான வகையில் மூளையைச் செலுத்தியவர் மகராஷ்டிரப் பார்ப்பனரான பாலகங்காதரத் திலகர்.

பிள்ளையார் என்பதற்கு இன்னொரு பெயர் வினாயகர் என்பதாகும். கவுதம புத்தருக்கு இந்தப் பெயர் உண்டு. இந்தப் பெயரை உருட்டல் புரட்டல் செய்து, எங்கெங்கெல்லாம் புத்தர் உருவச் சிலைகள் இருந்தனவோ அந்த இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளை அப்புறப்படுத்தி விட்டு, இந்த விநாயகனாகிய பிள்ளையாரின் சிலை களைச் செய்து வைத்துவிட்டனர்.

ஆரியப் பார்ப்பனர்களின் மனப்பான்மையைத் தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமாக இருக்காது.

பொம்மைகளைக் கோயில்களில் கடவுள் களாக்கி, அவற்றின் ஏஜென்டுகளாகப் பார்ப்பனப் பெருச்சாளிகள் புகுந்து கொண்டு மக்களின் அறியாமை, அச்சம், பேராசை இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தங்களைப் பிறவி முதலாளிகளாக ஆக்கிக் கொண்டு, சுரண்டல் வேலையை அதிகார பூர்வமான தொழிலாக செய்து கொண்டவர்கள் இந்தப் பார்ப்பனர்கள்தாம்.

விநாயகன் என்ற கடவுளின் உருவத்தைப் பார்ப்பவர்களுக்கு இப்படி ஒரு மிருகமே இருக்க முடியாது என்கிறபோது எப்படி கடவுளாக இருக்க முடியும் என்ற கேள்வி எழாமல் போகாது.

உருவமற்றவர் கடவுள் என்று ஒரு புறத்தில் ஓதிக் கொண்டு, இவ்வளவு ஆபாசமாக ஒரு கடவுளை ஆரியப் பார்ப்பனர்கள் உருவாக்கியுள்ள பித்தலாட்டத்தை என்ன சொல்ல!

எந்த அளவுக்கு விநாயகனைப் பயன்படுத் தினார் திலகர் என்றால், இரண்டு ஆங்கில அதிகாரிகளை படுகொலை செய்யும் அளவுக்கு வெறியை ஊட்டினார்.

புனேயில், பிளேக் நோய் பரவியதால், அந்த நோய்க்குக் காரணமான எலிகளை வேட்டையாட ஆங்கிலேயர் ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டு, செயல்படுத்தவும் பட்டது.

அந்தத் தருணத்தில் இந்த திலகர் என்னும் பார்ப்பனர் - கிறிஸ்தவர்களாகிய வெள்ளைக் காரர்கள் நமது கடவுளான விநாயகரின் வாகனத்தைக் கொல்லுகிறார்கள். இதனை அனுமதிக்கலாமா என்ற ஆவேச வெறியைக் கிளப்பினார்.

இதன் காரணமாக இந்துத்துவா வெறியர்கள் இரு ஆங்கிலேய அதிகாரிகளைச் சுட்டுக் கொன்றனர். இதன் காரணமாக திலகர் தண்டிக்கப்படவும் செய்தார்.

அந்தக் காலந்தொட்டு நாடு தழுவிய அளவில் பிள்ளையார் ஊர்வலங்களை சிறுபான்மையினரி டம் கலகம் விளைவிக்கும் ஒருயுக்தியாக மேற் கொண்டனர். இந்த அனுபவம் சென்னையிலும் உண்டு.

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண் டும் என்றால் வீட்டுக்குள் கொண்டாடிக் கொண்டு தொலையலாம். வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள கிணறுகளிலும், குளங்களிலும் பிள்ளையார் சிலைகளைக் கரைக்கலாம். (அப்படித்தான் நடந்து வந்தது;) திலகரின் திட்டத்துக்குப் பிறகுதான் வீதிகளில் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று கடலில் கரைக்கும் கைங்கர்யம் நடைபெறத் தொடங்கியது.

நீர்நிலைகளில் கரைக்கப்படும் பிள்ளையார் பொம்மைகளில் வண்ணம் தீட்டப்பட்டு இருக்கக் கூடாது. இராசயனக் கலவையான வண்ணம் தீட்டப்பட்டிருந்தால் அது தண்ணீரை நஞ்சாக்கும், சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டுத் துறை எச்சரிக்கிறது.

அது குறித்து எந்தவித மதிப்பையும் கொடுக் காமல் பல வண்ணப் பிள்ளையார்களை ஊர்வல மாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக் கிறார்கள்.

குறிப்பிட்ட அடி உயரத்திற்கு மேல் பிள்ளையார் பொம்மைகள் எடுத்துச் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டும், அதை இந்துத்துவவாதிகள் பொருட்படுத்துவதில்லை. இந்த முறையாவது காவல்துறை என்ன செய்யப்போகிறது என்பதை யும் பார்ப்போம்! 11-8-2012

தமிழ் ஓவியா said...

வாழ்க தமிழர் தலைவர் மலைபோல் அரணாய்


நூற்றாண்டு காணும் திராவிடர் இயக்கத்திலே

என்பதாண்டை எட்ட இருக்கும் ஏந்தலே

என்பதாண்டில் எழுபதாண்டு பொது வாழ்வே

நாற்பத்தைந் தாண்டில் தலைமையேற்ற தலைமகனே

முப்பதாண்டில் விடுதலை ஏட்டின் ஆசிரியரே

பத்தாண்டில் முழங்கிய பகுத்தறிவு போர் முரசே

எட்டாண்டில் ஈரோட்டுப் பாலுண்ட பாலகனே

இப்பாரில் உனக்கினை ஒருவரை காண்கிலேனே

இருக்காது இயக்கம் என்றோர் மருண்டிடவே

இயங்காது இயக்கம் என்போர் மிரண்டிடவே

தயங்காது இயக்கத்தை நடத்திடும் மாலுமியே

உறங்காது இயக்கத்தை காத்திடும் உத்தமரே

அய்யா அளித்திட்ட அருட்கொடை விடுதலைக்கு

அய்யா ஆணையிட்ட ஆசிரியர்தான் வீரமணியார்

அய்ம்பதாண்டாய் ஆசிரியர் இவர்போல் பிறர்யார்

அகிலம் வியக்கும் உலக சாதனைக் குரியார்

அவர்தான் திராவிடர் கழக தலைமைப் பணியார்

வாழ்க தமிழர் தலைவர் மலைபோல் அரணாய்.

அன்புடன்

அதிரடி. க. அன்பழகன்

தமிழ் ஓவியா said...

50 ஆண்டுகளுக்கு முன்....


அறிவுடையார் எல்லாம் உடையார். அறிவினைப் பெறும் வழிகல்வி இப்படி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்வள்ளுவர் அறுதியிட்டுக் கூறினார். ஈ.வெ. ராமசாமி தம் வாழ்நாள் முழுவதும் எடுத்துரைத்து வந்தார்.

பெரியார் பொது வாழ்க்கைக்கு வந்த காலத்தில், எத்தனையோ பள்ளிக் கூடங்களில், ஆதி திராவிடர் பிள்ளைகளை சேர்க்கவே மாட்டார்கள். ஆகவே அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட் டவர்கள் சிலராவது படித்தால் தான், பள்ளிக்கூடம் அங்கீகரிக்கப்படும் என்று அரசு ஆணையிட நேர்ந்தது. அது பல்லாண்டு ஏட்டளவில் நின்றது ஏன்? சிற்றூர்களில் ஆதிதிராவிடப் பிள்ளைகள் மற்றவர்களோடு இருந்து படிக்க முயன்றால், பல பகுதிகளில் மற்ற சாதிக்காரர்கள் தாழ்த்தப்பட் டவர்களை பலவகையான துன்பங்களுக்கு ஆளாக்குவார்கள்.

ஆசிரியர்கள், சில வேளை சில ஆதி திரா விடர்களை பதிவேட்டில் எழுதி வைப்பார்கள். ஆனால், பள்ளிக்கு வர விடுவதில்லை. ஆய்வாளர், ஆண்டு தணிக்கைக்கு வரும்போது, அப்பிள்ளை களை கொண்டு வந்து யாரும் தொடாமல் ஒரு மூலையில் உட்கார வைத்து அனுப்பி விடுவார்கள். பெரும்பாலான ஆய்வாளர்கள் அதற்கு உடந்தை யாக இருப்பார்கள்.

பார்ப்பனரால் விளைந்த கேடு!

கோவைக்கு அருகிலுள்ள சிங்காநல்லூரிலும், இருங்கூரிலும் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட பிள்ளை களை 1930ஆம் ஆண்டு தொடக்கம் வரையில் சேர்க்காமல் இருந்தார்கள். பிறகு, கோவை சமூகத் தொண்டு சங்கத்தாரின் தலையீட்டால், சில பிள்ளைகள் சேர்ந்தார்கள். பார்ப்பனர்கள், உள்ளூர் பார்ப்பனரல்லாத காவல்துறை சப்-இன்ஸ் பெக்டரை வசப்படுத்திக் கொண்டு, பார்ப்பனத் தெரு வழியே பிள்ளைகள் போகக் கூடாதென்று விரட்டினார்கள். திரு. ஆர்.கே.சண்முகம் எம்.எல்.ஏ., சிங்கா நல்லூர் சென்று சப்-இன்ஸ்பெக்டரிடம் பேசினார். பலனில்லை, கோவை டெப்டி சூப்பிரன் டெண்டை அழைத்து வந்து ஆணையிடச் செய்தார். இருப் பினும் பழமை தொல்லை கொடுத்தது.

திரு.ஆர்.கே. சண்முகம் கட்டி வந்த நூற்பாலை கட்டுமான வேலைக்கு ஆள் போகாதபடி கட்டு திட்டம் செய்தார்கள். மீண்டும் ஆர்.கே.சண்முகம் சிங்காநல்லூருக்கு வந்தார். பார்ப்பனத் தெருவில் தீண்டப்படாதவர்கள் நடந்ததற்காகச் செய்யப்படும் கட்டுப்பாட்டால் நீங்கள் கூலி இழந்து பட்டினி கிடக்கப் போகிறீர்களே ஒழிய, எந்தப் பார்ப்பன னாவது தன் வேலையை விட்டு விட்டு சும்மாயிருக்க போகி றானா? என்று ஆர்.கே. சண்முகம் கேட்டார். அப்புறம் பார்ப்பனரல்லாதாருக்குத் தெளிவு ஏற்பட்டது; வேலைக்கு வந்தார்கள்.

தொடக்கப்பள்ளியில் ஆதி திராவிடர்களை சேர்ப்பதற்கு இத்தனைப்பாடு! இந்திய சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கே.சண்முகமே தலையிட்டு சேர்க்க வேண்டிய நிலை.

நீதிக்கட்சியின் குரல்

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், தாழ்த்தப் பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நசுக்கப்பட்டவர்களுக்கும் முதலில் குரல் கொடுத் தது, நீதிக் கட்சியாகும்.

அக்கட்சித் தலைவர்கள், இவரைத் தொடலாம், அவரை தொடக்கூடாது என்னும் மனப்பான்மையில் இருந்து விடுபடத் தொடங்கிய முன்னோடிகள் ஆவார்கள்.

உயர்திரு. நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் தீட்டிய புரட்சியாளர் பெரியார் என்ற நூலிலிருந்து, பக்கம் 53-55

தமிழ் ஓவியா said...

1939ஆம் ஆண்டிலேயே...
எழுத்துரு அளவு
ஈழத் தமிழர் பிரச்சினை - இன்று - நேற்றல்ல, 1939ஆம் ஆண்டிலேயே பற்றி கழகம் அக்கறை செலுத்தியுள்ளது. இதோ ஆதாரம்:

தீர்மானத்தை இதே படிக்கிறேன்:

ஈழத் தமிழர் இன்னல்

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் நிருவாகக் கமிட்டிக் கூட்டம் 10-8-1939 அன்று ஈரோட்டில் பெரியார் மாளிகையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத் தியதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப் படுத்த ஏற்பாடு செய்வதையும் கமிட்டி கண்டிப்ப தாகவும், அதற்கு ஈ.வெ.ராமசாமி, ராவ்பகதூர் சாமியப்ப முதலியார், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், ஊ.ப.அ. சவுந்தரபாண்டியன் ஆகியோர்களை இலங்கைக்குச் சென்று அவர்களது நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டுமாய் இக்கமிட்டி கேட்டுக் கொள்கிறது என்பதாக முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விடுதலை, 11.8.1939

தமிழ் ஓவியா said...

கிறிஸ்து மதமும் பணச் செலவும்

அமெரிக்க சர்வ கலாசாலையொன்றில் பேராசிரியராக திகழும் இந்திய தோழர் டாக்டர் சுதந்திரபோஸ் பிரபுத்த பாரத என்ற பத்திரிகையில், கீழ் நாட்டில் கிறிஸ்துவ பாதிரிகள் செய்யும் வேலையை பற்றி எழுதியுள்ள குறிப்பின் சாராம்சம் வருமாறு:-

அமெரிக்கா யுனைடெட் ஸ்டேட்ஸ் பிராட்டஸ்டான்ட் சர்ச்சானது வெளிநாடு களில் தன் மதத்தை பரப்புவதற்காக மதப் பாதிரிகளை அனுப்பி வைக்கின்ற செலவு 4 கோடி டாலர்கள் ஆகின்றது. அதாவது சுமார் 12 கோடி ரூபாய்களாகும்.

ரிப்பப்ளிக் நாடான சைனாவில் புராடஸ்டான்ட் மதத்தைச் சார்ந்தவர்களில் 120 பிரிவுகளுக்குமேல் இருக்கின்றார்கள். இதுவரையில் அந்த நாட்டில் மாத்திரம் அரை லட்சம் கோடி டாலர்கள் செலவு செய்திருக்கிறார்கள்.

சில வருஷங்களுக்கு முன்பு வரையிலும் சைனா நாட்டில் உள்ள 700 நகரங்களில் 8000 பிராட்டஸ் டான்ட் மிஷினரிகள் இருந்து வந்தார்கள். ஆனால் இன்றைய தினமோ 5000 மிஷினரிகள்தான் 400 நகரங்களில் மாத்திரம் வசித்து வருகிறார்கள். கத்தோலிக் கிறிஸ்துவ பாதிரி மிஷினரிகளோ, சில வருஷங்களுக்கு முன்பு 4000 பேர்கள் இருந்தவர்கள் இன்றைய தினம் 200, 300 மிஷினரிகளுக்கும் குறைவாகவே இருந்து வருகிறார்கள்.

அய்க்கிய அமெரிக்க நாட்டின் லுதர்ன் சர்ச் பொருளாளரான டாக்டர் கிளாரன்ஸ் இ.மில்லர் சமீபத்தில் தெரிவிக்கிறதாவது:-

ஒரு சைனாக்காரரை கிறிஸ்துவர் என்ற மதமாற்றத்திற்கு கொண்டு வருவதற்கு ரூ.1300 வீதம் செலவாகி வருகிறது. இந்த கணக்குப்படி இயேசு நாதரின் பெயரை சைனா நாட்டில் நிலை நிறுத்த வேண்டுமானால் 175 லட்சம் கோடி டாலர்கள் ஆக்க வேண்டும். இதிலிருந்து கோடிக்கணக்கான டாலர்களை மதத் தின் பேரால் செலவு செய்யும். கிறிஸ்துவ மதமாகட்டும். அன்றி வேறு எந்த மதமாகட்டும் முன்னேறுவதற்கு வழியின்றி சிதைந்து வருவது ஏன் என்று மக்கள் ஆலோசித்து பார்ப்பார்களாக.

- 30.7.1933 குடிஅரசு

தமிழ் ஓவியா said...

ஆவணி அவிட்டம் பூணூல் புதுப்பித்தலாம்!

ஆரியர் உருவாக்கிய பொருளற்ற மூட விழாக்களில் பூணூல் விழா குறிப்பிடத்தக்கவொன்று பார்ப்பான் வாழ்வின் நான்கு கட்டங்களில் முதன்மையான பிரமச்சரியத்திற்குத் தொடர்புடையது இது.

திருமணமாகாத மாணவர் பருவத்தில் பார்ப்பன இளைஞன் வேதங்களை முழுமையாகக் கற்றுக் கொள்ளுவதற்கெனத் தன் குருவுடனேயே தங்கி வாழக் கடமைப்பட்டவன்.

அவன் கருவான காலத்திலிருந்து ஆசானிடம் கற்று முடித்துத் திரு மணம் பண்ணிக் கொள்ளும் வரை யிலான பிரமச்சரியக் கட்டத்தில், அவனின் பெற்றோரிடமிருந்து அவன் மீது படியும் பாவக் கறையினைக் கழுவிக் கொள்ளும் வண்ணம் கீழ்க்கண்ட 12 தூய்மைப்படுத்தும் சடங்குகள் வற்புறுத்தப்படுகின்றன.

கர்ப்பதானம், புண்சவனம், சீமந்தோநயனம், ஜாத கர்மம், நாமகரணம், நிஷ்க்கரணம், அன்னப்ராசனம், சுத கர்மம், உபநயனம், சமாவர்த்தனம், கேசந்தம், விவாஹம்.

இவற்றுள் சட்டக் கட்டாயமாகக் கருதப்படும் முகாமையான இரண்டு சடங்குகள் சுதகர்மமும் உபநயனமும் ஆகும். இவ்விரண்டிலும் ஒரு சிறு குடுமியை விட்டு வைத்து, தலையில் நடுவட்ட மழிப்பு நிகழ்த்தும் சுதகர்மத்திற்கும் மேலாக உபநயனம் என்னும் பூணூல் அணியும் சடங்கு மதிக்கப்படுகிறது. பூணூல் அணியும் முன்பு வரை அவன் சூத்திரத் தன்மையுடன் இருப்பதாயும், அணிந்தவுடன் அவன் இரண்டாம் முறையாகப் புதிய பிறப்பு எடுப்பதாயும் தத்துவம் கற் பிக்கப்படுகின்றது. இதை அச் சிறுவ னின் எட்டாம் அகவையிலேயே நடத்தி விடலாம்.

பருத்தி நூல்கள் மூன்றினை ஒன்றாகச் சுருள் செய்து மாலை வடிவ மாக்கிப் பார்ப்பனச் சிறு வனின் இடது தோளிலிருந்து வலது இடுப்பு வரையிலும் குறுக்கே அணிவிக்கப் படும் முப்புரி நூலுக்கு யக்ஞோப விதா எனப் பெயர்.

இச்சடங்கின் தொடக்கத்தில் பார்ப்பனச் சிறுவன் சூரியனுக்கு எதிரே நின்று மும்முறை தீ வலம் வரவேண்டும். பிறகு குரு காயத்ரி மந்திரத்தைப் பத்து முறை ஓதி யக்ஞோபவிதா முப்புரிக்குத் தெய்வத் தன்மை ஏற்றிவிட்டு, அதனைப் பையனை மாட்டிக் கொள்ளச் செய்வார். பூணூலணிந்த புதிய பிறவி, தனக்கும் தன் ஆசானுக்கும் தேவையான உணவுக்கென்று விழா வில் வந்து குழுமியுள்ள கூட்டத்தினரிடம் பிச்சை கேட்டுக் கையேந்து வான்.

பின்னர் சாவித்ரி ஜெபம் பண்ணுமாறு குரு அவனைப் பயிற்றுவித்து, வேதமோதி சமயச் சடங்குகளை நிறைவேற்றும் தகுதியை அவனுக்கு உண்டாக்குவார். இறுதியாக அவனுடைய இடையில் மூஞ்சைப் புல்லாகிய அரைஞாண் கட்டப்பட்டு பூணூலணியும் உபநயனச் சடங்கு முடிக்கப் பெறுகிறது.

காலப் போக்கில் க்ஷத்திரியரும், வைசியரும் தங்களை முப்புரிநூல் அணியும் சடங்கிற்கு உட்படுத்திக் கொண்டு இரு பிறப்பாளர் பட்டியலில் இணைந்து கொண்டாலும், இன்று நடைமுறையில் இவ்விரு வர்ணத்தாரும் சூத்திரராகவே பாவிக் கப்படுகின்றனர். எனவே இவர்களின் பூணூல் மாட்டும் செயலுக்குச் சிறப்பேதும் கிடையாது.

பார்ப்பனர்களைப் பார்த்து ஆசாரியாரும், பத்தரும், செட்டியாரும் கூடப் பூணூல் போட்டுக் கொள்வதுண்டு. விசுவ பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால் சாத்திரத்தில் இதற்கு இடம் உண்டா என்றால் அதுதான் இல்லை.

இந்த மாதம் 24 ஆம் தேதி (ஆவணி 8) பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பித்துக் கொள்ளப் போகிறார்களாம். இட ஒதுக்கீட்டில் இன்னும் ஜாதி ஏன்? ஜாதி வாரி கணக்கெடுப்பு கூடாது என்கிற பார்ப்பனர்கள்தான் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டத்தன்று பூணூலைப் புதுப்பித்துக் கொள்கின்றனர். 20-8-2010

தமிழ் ஓவியா said...

உலகின் உச்சிக்கே சென்ற சிறப்பு!

டெசோ சார்பில் மாநாடு நடத்தப்படும் என்ற தகவல் வெளிவந்த நாள் முதல் பல்வேறு வகையான விமர்சனங்கள் - எதிர் விமர்சனங்கள் ஊடகங்களை ஆக்ரமித்துக் கொண்டன.

மாநாடு நடக்குமா? அப்படியே நடந்தாலும் அம் மாநாட்டில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்களா? என்ற வினாக் கணைகளும் முன் வைக்கப்பட்டன.

இவை எல்லாம் முறியடிக்கப்பட்டு, மாநாட்டுக் கான அழைப்பிதழ்களும், விளம்பரங்களும் வெளிவந்து, மாநாட்டுக்கான பந்தல் போன்ற அடிப்படைப் பணிகள் நிறைவுற்று, தமிழ்நாடு, இந்திய நாடு என்கிற எல்லைகளையும் கடந்து பெரும் எதிர்பார்ப்பு என்கிற கட்டத்தை அடைந்த நிலையில்,

தமிழ்நாட்டில் நடைபெறும் அ.இ.அ.தி.மு.க. அரசு - அரசு என்ற நிலைப்பாட்டையும் தாண்டி, காழ்ப்புணர்ச்சியுடனும், அரசியல் உள்நோக்கத் துடனும், இந்த மாநாடு நடைபெற்றால் அதன் பலன் அரசியலில் தமக்கு எதிராக உள்ளவர் களுக்குப் போய்விடுமோ என்ற அச்சத்துடன், மாநாட்டுக்குக் காவல்துறை அனுமதி இல்லை என்கிற சிறுபிள்ளைத்தனமான ஒரு செயலில் இறங்கியது வேதனைக்குரியது.

நீதிமன்றம் வரை செல்லவேண்டிய ஒரு நிலை - மாநாடு நடைபெற்ற நேரத்திற்கு மூன்று மணிக்கு முன்பு வரைகூட எந்த இடத்தில் மாநாடு நடைபெறும் என்ற கேள்விக்குறி செங்குத்தாக மக்கள் மத்தியில் எழுந்து நின்றது.

இது - இதற்கு முன்பு எங்கும் கேள்விப்படாத ஒரு நிலையாகும். என்றாலும் இறுதி வெற்றி யாருக்கு? இறுதியாகச் சிரிப்பவர்கள் யார்? என்ற கேள்விக்கு - நியாயத்தின் பக்கமும், உண்மையின் பக்கமும்தான் என்ற விடை சென்னை உயர்நீதி மன்றத்தின் மூலம் கிடைத்து விட்டது.

அதற்குப் பிறகும் உச்சநீதிமன்றம் வரை சென்று அதன் கதவுகளைத் தட்டினார்கள் என்றால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெப்பம் எத்தனை டிகிரி என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாநாட்டை நடத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் வாயு வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இல்லை, இல்லை - ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திட லிலேயே நடத்திக் கொள்ளலாம் என்று உயர்நீதி மன்றத்தின் ஆணையை ஏற்று மூன்றே மணி நேரத்தில் மாநாட்டுப் பந்தலில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள், இமாலய சாதனை என்றே சொல்ல வேண்டும்.

தோழர்களிடையே ஒரு வெறி உணர்வுடன் கூடிய உற்சாகம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த அரசியல் சக்திகள் - அதிகாரப் பீடங்கள், தம் மனப்போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுமா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஊடகங்கள் ஓர் ஆரோக்கியமான திசையில் தம் பயணத்தைத் தொடங்கினால் கூட நல்லதுதான்.

மாநாடு திட்டமிட்டபடி அதே இடத்தில் நடந்தது என்பது உட்பட மாநாட்டின் ஒவ்வொரு நட வடிக்கையும் கண்ணில் ஒத்திக் கொள்ளத் தக்கதாக, கண்ணியமான ஒளியுடன், மிகுந்த கட்டுப்பாட்டோடு, நீதிமன்றத்தின் கட்டளை களையும் இன்னொரு பக்கத்தில் கவனத்தில் கொண்டு, எடுத்துக்காட்டான மாநாடாக நடை பெற்றதை வரலாறு என்றென்றும் சிறப்பான வகையில் பாடம் சொல்லிக் கொண்டே இருக்கும் என்பதில் அய்யமில்லை.

நேற்று காலை நடைபெற்ற ஆய்வு அரங்கம், மாலையில் நடைபெற்ற மாநாடு - இவற்றில் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள், நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் மாநாட்டின் தகுதியையும், மாண்பினையும் உலகத்தின் உச்சி மேட்டுக்கே கொண்டு சென்றுவிட்டன என்று சுருக்கமான சொற்களில் சொல்லலாம். தடைகளையெல்லாம் தாண்டி பல்லாயிரக் கணக்கான மக்கள் குவிந்தது சாதாரணமானது அல்ல - மக்களின் இந்த மனக் கண்ணாடியைப் பார்த்தாவது மனமாற்றம் அடைய வேண்டியவர்கள் மனமாற்றம் அடைவார்களா? எங்கே பார்ப்போம்! 13-8-2012

தமிழ் ஓவியா said...

எங்கள் இயக்கத் தோழர்களுக்கு ஈடு இணை யார்?



இலட்சியத்தையே சுவாசக் காற்றாகக் கொண்ட கருஞ்சட்டைத் தோழர்களுக்கு நிகர் யார்?

தான் வாழ்கிற போதும் கொள்கைக் கோட்பாடுகளையே கால்களாகக் கொண்டு நடக்கின்றனர். தனது மரணத்திற்குப் பிறகும் தாம் சுவாசித்த கொள்கைக் காற்றில் எந்த வித மாசும், மாற்றமும் வந்து சேர்ந்துவிடக் கூடாது என்னும் தன்மையில் மரணசாசனம் எழுதி வைத்து விட்டல்லவா மறைகின்றனர்?

இப்பொழுது இன்னும் ஒரு படி மேலே! சத்தை இழந்து செத்துப் போகும் இந்த உடல் மண்ணுக் கும் நெருப்புக்கும் இரையாவதை விட ஏன் பிறருக்குப் பயன்படக்கூடாது என்று சிந்திக்க எத்தனைப் பேர்களால் முடியும்?

மரணம் என்றாலே பெரும் அச்சத்தில் உறையும் மக்கள் மத்தியிலே தந்தை பெரியார் இயக்கத்தில் தம்மை ஒப்படைத்துப் பக்குவப்பட்ட கறுஞ்சட்டைத் தோழர்கள் தனது உடலை மருத்துவக் கல்லூரி களில் ஒப்படைக்க முன்வர ஆரம்பித்து விட்டார்கள்.

மருத்துவம் பயிலும் இரு பால் மாணவர் களுக்குப் பயன்படவேண்டும் என்று கருது கிறார்கள். உயிரோடு இருக்கும்போதே சம்பந்தப் பட்ட மருத்துவ மனைகளில் பதிவு செய்தும் வைத்துள்ளார்கள்.

இதோ ஒரு பெரியார் பெருந்தொண்டர்: கரூர் நகர திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவர் மானமிகு கு.முருகேசன் அவர்கள் (வயது 87), அவருடைய பிறந்த நாள் கடந்த பத்தாம் தேதி.

அதனை ஒரு விழாவாகக் கூட எடுத்துக் கொள்ள வில்லை. அந்த நாளில் அவர் என்ன செய்தார் தெரியுமா?

எண்ணிப் பார்த்தால் அணுக்கள் எல்லாம் சிலிர்க்கின்றன! தனது மரணத்துக்குப் பின் தம் உடலை மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கும் பத்திரத்தில் கையொப்பமிட்டு கரூர் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் மானமிகு மு.க. இராசசேகரனிடம் அளித்தார்.

அத்துடன் நிறுத்திக் கொண்டாரா? தான் மட்டுமா? தன் குடும்பமே அந்தக் கொள்கைத் தடத்தில் பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தனை பேர்களால் சாத்தியப்படக்கூடியது? தன் இணையர் மருதாம்பாள், மகன் சித்தார்த்தன் ஆகியோரும் தங்கள் உடல்களை தங்கள் மரணத்துக்குப் பின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒப் படைக்கும் பத்திரத்தில் கையொப்பமிட்டு அளித் தனர்.

சிறிய அளவில் வீட்டு அளவில் எளிமையான நிகழ்ச்சியாக அமைந்தது இது. அவருக்குக் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பற்றி எழுத்தாளர் சோலை அவர்களால் எழுதப்பட்ட வீரமணி - ஒரு விமர்சனம் என்ற நூலை மாவட் டக் கழகத் தலைவர் அளித்துப் பாராட்டினார்.

இதற்கு ஒத்துழைப்புத் தந்த முருகேசனார் குடும்பத்தைச் சேர்ந்த மகள் மலர்க்கொடி, மகன் சித்தார்த்தன், அழகிரி, இணையர் மருதாம்பாள் ஆகியோருக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இதன் மகிழ்வாக பெரியார் பெருந்தொண்டர் முருகேசனார் விடுதலை வளர்ச்சிக்கு ரூ நூறு நன்கொடையையும் அளித்தார்.

இப்பொழுது சொல்லுங்கள். திராவிடர் கழகத் தோழர்களுக்கு ஈடும் இணையும் இந்தத் தரணி யிலும் உண்டோ?