Search This Blog

31.8.12

பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் ‍- 8

ஸ்திரீகளும் ஸ்ரீ கிருஷ்ணரும்
வாருங்கள் விரதசீலகளான சுந்தரவதிகளே! நான் இந்த ஸ்ரீ நந்தவ்ரஜத்தில் ஆவிர்ப்பவித்த நாள் முதல் உங்களுடன் விருத்தியடைந்து கொண்டிருக் கின்றேன். இதுவுமன்றி எனது நிசாம்சத்தாலும் உங்களுடைய சம்பந்தத்தாலும் உங்களுள்ளும் புறம்புமாக வியாபித்துக் கொண்டிருக்கின்றேன். உங்களிடத்தில் நானறியாத தர்மங்களுண்டோ? உங்கள் மனோவாக்குக் காய முதலிய சரீர குண தர்மங்களுக்கு நான் அன்யனோ? ஆகையால் நீங்கள் நன்றாயோசித்துப் பாருங்கள். என் விஷயத்தில் நாணிக் கூசத்தக்க வியவகாரம் எவ்வளவுமில்லை. மேலும் நீங்கள் யாவரும் விரத நிஷ்டைகளில் அன்புடையவர்களாயிருந்து, சாஸ்திரோக்த விதிக்கு வேறுபாடாக வஸ்திர ஈனமாய் இம்மகா புண்ய நதியில் இறங்கி ஸ்நானஞ் செய்யத் தகுமோ? ஆதலால் நீங்கள் தெரியாமல் நடந்ததைக் குறித்து பிராயச்சித்தமாக யாவருமிரண்டு கைகளை யுமெடுத்து அஞ்சலி செய்து உங்கள் வஸ்திரங்களை வாங்கி யுடுத்திக் கொள்ளுங்ளென்றார்.
இவ்விதமாகச் சொல்லிய ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய வசனங்களைக் கேட்டு, இந்தக் கோபிகா ஸ்திரீகள் யாவரும் பிரணாமஞ்செய்ய வொப்புக்கொண்டு ஸ்வாமியினுடைய ஆக் கினைக்கு வித்யாசம் நேரிடுவதைத் தங்களுக்குள் யோசியாமல் வந்தனக் கிரமத்தை யுணராமல் ஒருகையினால் தங்கள் மர்மாவயங்களை மறைத்து மற்றொரு அஸ்தத்தைச் சேவிக்கத்தக்கதாகக் காட்டினார்கள். அப்படி கையைக் காட்டிய மாத்திரத்தில் ஸ்ரீ பகவான் கோபகன்னிகைகளைப் பார்த்து உங்கள் மனோரதங்கள் ஸ்பலமாகும் படிக்கும், விரதம் பங்கமில்லாமல் நிறைவேறப் பிராயச்சித்தத்தின் பொருட்டுஞ் சேவிக்கச் சொன்னதற்கு இன்னுமதிக குற்றமுண்டாகவே யொரு ஹஸ்த மெடுத்தீர்கள். அப்படி ஒரு கையெடுத்ததனால் ஸ்ரீ பாகவதபசாரம் உண்டாகும். இதற்கு விதி யாதொருத்தன் ஸ்ரீ பகவானைத் தரிசனஞ் செய்யும்போது வஸ்திரானனாகியும் அல்லது ஏகவஸ்திரனாகியும் அரையில் வஸ்திரத்தின்மேல் வஸ்திரத்தை யிறுக்கிக் கட்டாதவனாகியும் இருக்கிறானோ அவனுஞ், சிரத்தையற்று ஒரு கையைக் காட்டி எவன் வந்தனஞ் செய்கின்றானோ அவனும், மகா அபராதியாவர் களென்றும் எவனாவது ஒருவன் ஒருவேளை ஒருகை காட்டி வந்தனஞ் செய்வானாகில் அவனைத் தர்ம நிர்ணயம் அந்த ஹஸ்தத்தை அறுக்கும்படி சொல்லியிருக்கின்றது. நீங்கள் அது தெரியாமல் செய்தீர்கள். ஆதலால், அதிக அபராதிகளான நீங்கள், இந்த அபராதங்களெல்லாம் நிவாரண மாகும் பொருட்டு இரண்டு கரங்களையும் உயரவெடுத்துக்கொண்டு சீக்கிரமாகத் தண்டன் சமர்ப்பியுங்களென்று சொன்னார்.
அதைக் கேட்டு தம்மைத் தரிசித்தவர்களுக்கு தானென்கிற அகங்காரம் விடும்படிச் செய்து, ஆட்கொள்ளத்தக்க ஸ்ரீ கிருஷ்ண பகவானைப் பார்த்து, அவருடைய கடாக்ஷத்தினால் அகங்காரத்தை விட்டவர்களாய், சிறிதும் பற்றில்லாதவர்களுக்கே தமது நிஜஸ்வருப தரிசனந் தந்தருளத்தக்க  ஸ்வாமியைக் குறித்து, இந்தக் கோபகன்னிகைகளும் அந்த ஸ்வாமியினுடைய நியமனப்படியே, பயபக்தி விசுவாசத்துடன் தங்களிரண்டு கரங்களையுஞ் சிரசின்மீது உயரவெடுத்துப் பக்தி பரவசர்களாய் ஸ்ரீ கிருஷ்ணா! சரணமென்று தண்டன் சமர்ப்பித்து ஸ்ரீ பகவானுடைய கிருபாமாத்திர பிரசன்னத் வங்களைப் பெற்று, தங்கள் ஆடைகளையும் வாங்கியுடுத்திக் கொண்டு திருப்தியுள்ள மனமுடையவர்களாய் ஸ்ரீ கிருஷ்ணபகவானைப் பார்த்தாவென்கிற இச்சையுடையவர்களாய்ச் சலியாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தச் சமயத்தில் ஸ்ரீ பகவானானவர் வாருங்கள் விரத நிஷ்டைகளை அநுஷ்டித்த மகா லட்சணவதிகளே! நீங்களே சொல்லாவிடினும் உங்கள் மனோரதங்கள் இன்னவையென்று எனக்கு நன்றாய்த் தெரியும்; நீங்கள் என்னைப் பார்த்தாவாக வரித்து, எனக்கு அடியார்களாய் எனது சாரூப்பியத்தை யடைந்து, சுகிகளாய்த் தனுகரண போகங்களையடைந்து அநந்தவிதவுபசார கைங்கர்யங்களைச் செய்ய வேண்டுமென்று கோரி, விரதத்தை யநுஷ்டித்தீர்கள். ஆகையால், சத்யமாகப் பலகாக்ஷியை இச்சித்து, மகா காமிய தேவதையாகிய அம்பிகா தேவியைக் குறித்து விரத மநுஷ்டித்ததற்குப் போகங்களும், என்னைச் சரணமடைந்ததற்குத் தேகாந்தரத்தில் முக்தியும், உங்களுக்கு ஸபலமுமாகும். நீங்கள் யாவரும் என்னைத் தியானித்துக் கொண்டு உங்கள் கிருகங்களுக்குச் செல்லுங்கள். இன்று முதல் அவரவர்கள் காலாநுகுணமாய் ஏகாந்த சமயங்களில் தியானித்து நினைக்குந்தோறும் நான் பிரசன்னனாய் உங்கள் இஷ்டங்களை திருப்தியடையச் செய்கின்றேனென்று கிருபையாகச் சொல்லி விடை கொடுத்தருளினார்.
அப்போது அந்தக் கோபகன்யா ஸ்திரீகளும் அவ்வண்ணமே மஹத்தாகிய சந்தோஷ முடையவர்களாகி, ஸ்ரீ பகவான் வஸ்திர அபகாரத்தினால் நாணம் விடும்படிச் செய்து பரிகாசமாகப் பேசினது முதலிய செய்கைகள் தங்களுக்கு விரத பங்கமில்லாமல் சிக்ஷபூர்வமாக நிறைவேறச் செய்து தமது மனோபீஷ்டங்களை பரிபாலித்து இரக்ஷிக்கின்றதின் நிமித்தமேயன்றி வேறில்லை யென்று நினைத்து, திருப்தியான மனதுடையவர்களாகி, யாவரும் சாஷ்டாங்கமாகத் தண்டன் சமர்ப்பித்து ஸ்ரீ பகவானை விட்டுப் பிரிய மனமில்லாதவர்களாய் ஸ்ரீ பகவதாக்கினையினால் சம்பூர்ண இச்சைகளையடைந்து, அந்த ஸ்ரீ கிருஷ்ணபாதார விந்தங்களைச் சலனமில்லாத பக்தியுடன் தியானஞ் செய்துக் கொண்டு, தங்கள் சர்வேந்திரியங்களும் ஸ்ரீ கிருஷ்ண சௌந்தர்யங் களிற் செல்லத் தங்கள் தங்கள் கிருகங்களுக்கு வந்து சேர்ந்தார்கள்.
பிறகு ஸ்ரீ கிருஷ்ண பகவானானவர் முன்போலவே தமது இஷ்டஜனங்களாகிய கோபாலர் களுடன் கூடி, இவ்வுபவனத்தைக் கடந்து சென்று, வெகுதூரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்ற ஸ்ரீ பலராமரிடத்திற் சேர்ந்து அவருடனே அந்தப் பிருந்தாவன தூரப்பிரதேசங் களில் பிரவேசித்து, பசுக்கூட்டங்களை மேய்த்துக் கொண்டு சந்தோஷமாய் விளையாடினார்.
ஸ்ரீ சுகர் வாக்கியம்
ஹே ராஜபுருஷ சிரேஷ்டனே! சகல லோக சிகாமணியாகிய ஸ்ரீ கிருஷ்ண பகவான் தமது துணைவர்களாகிய கோபாலர்களுடன் புண்ய வசனங்களைப் பேசிக்கொண்டு சந்தோஷ சித்தராய், இலை, கனி முதலியவைகளால் விருத்தியடைந் திருக்கின்ற விருக்ஷங்களின் நிழலில் சஞ்சரித்துக் கொண்டு யமுனா நதி தீரத்தில் சகல கோபால கோகண சமேதராய் வந்து சேர்ந்தார். ஸ்ரீ பலராமகிருஷ்ண சகிதர்களான இந்தக் கோபாலர்கள் அந்த யமுனாநதியில் பிரவாகிக்கின்ற நிர்மலமாகியும், அதி சீதளமாகியுமிருக்கின்ற தீர்த்தத்தைப் பசுக் கூட்டங்களுக்குப் பானம் செய்வித்துத் தாங்களுமதிலிறங்கி மிகவுஞ் சந்தோஷத்துடன் ஸ்ரம நிவாரனமாகக் குளித்துத் தாபந் தீரத் தீர்த்தபானஞ்செய்து, அந்த நதியின் சமீபத்தில் ஒரு குளிர்ந்த தோப்பில் பசுக்களை மேயவிட்டு எல்லா கோபாலர்களும் பசியினால் பீடித்தவர்களாய், அவ்விருக்ஷங்களின் நிழல்களில் சஞ்சரித்து, ஓரிடத்தில் சுகாசனர்களாயிருக்கின்ற ஸ்ரீ பலராம கிருஷ்ண மூர்த்திகளைப் பார்த்து மகாவீர்யதேஜோ ஜயசாலிகளான ஸ்ரீ பல ராம கிருஷ்ணர்களே! நாங்கள் மிகவும் பசித்திருக்கின்றோம். எங்கள் பசிக்குச் சாந்தஞ் செய்து ரக்ஷிக்கக் கடவீர்கள் என்று பிரார்த்தித்த மாத்திரத்தில், ஜகதீஸ்வரராகிய ஸ்ரீ  பகவானானவர் கம்ஸ மகாராஜனுக்குப் பயந்து குடும்ப சமேதர்களாய் அந்தப் பிருந்தாவனத்தின் ஒரு சார்பில் வந்து வானப்பிரஸ் தாசிரமிகளைப் போல வாசஞ் செய்துகொண்டு, சொர்க்க விச்சை யுள்ளவர்களாகி நல்ல கர்மங்களை வேதோக்த கிரமமாகவும், ரகசியமாகவும் செய்து கொண்டிருக்கின்ற பிராஹ்மணர் களினுடைய பத்னீ சமூகங்கள் தம்மிடத்தில் வைத்திருக்கிற பக்தி யதிசயங்களைக் குறித்துத் தாம் பிரசன்னராய், அவர்கள் இஷ்டங்களை திருப்தியடையச் செய்ய மனமுவந்து அந்தக் கோபாலர்களைப் பார்த்து சொல்லுகின்றார்.
------------------ கி.வீரமணி  அவர்கள் ஆகஸ்ட் 16-31 2012 “உண்மை” இதழில் எழுதிய கட்டுரை

16 comments:

தமிழ் ஓவியா said...

செவ்வாய்க் கிரகத்தின் மீத்தேன் வாயு குறித்து அறிய அடுத்த ஆண்டு இந்தியா விண்கலத்தை செலுத்தும் இஸ்ரோ முன்னாள் தலைவர் தகவல்

செவ்வாய்க்கிரக ஆராய்ச் சிக்காக மார்ஸ் ஆர்பிட் டர் என்ற விண்கலத்தை இந்தியா அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் விண் ணில் செலுத்துகிறது. ரூ.450 கோடி செலவில் இந்த திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. இந்த விண்கலம் பி.எஸ். எல்.வி; எக்ஸ்.எல். ராக் கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்தியாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டம் குறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் மூத்த விண்வெளித்துறை விஞ்ஞானியுமான யு.ஆர்.ராவ் கூறியதாவது:

இந்தியாவின் செவ் வாய்க் கிரக ஆராய்ச்சி திட்டத்தின் முக்கிய நோக்கமே செவ்வாய் கிரகத்தின் மீத்தேன் வாயு சந்தேக முடிச்சு களை அவிழ்ப்பதுதான். சந்திரயான்-1 திட்டத்தை நாம் முதலில் தொடங் கியபோது சந்திரனில் தண்ணீர் இருப்பதை நாம் கண்டுபிடிக்கப் போகிறோம் என்று நமக்கு தெரியாது. இன் னும் சொல்லப்போ னால் சந்திரன் பற்றிய ஆராய்ச்சியை நாம் தாம தமாகவே தொடங்கி னோம் என்றாலும் சந் திரனில் தண்ணீர் இருக் கிறது என்ற அரிய உண்மையை நாம்தான் முதலில் கண்டு பிடித்த வர்களானோம்.

அந்த வகையில் தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச் சிக்கான குறிக்கோளை யும் நாம் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் வாயு உள்ளது. இந்த வாயு எப்படி உரு வாகிறது. எது இந்த மீத்தேன் வாயுவை உரு வாக்குகிறது என்ற சந் தேக முடிச்சை அவிழ்ப்ப துதான் நமது மார்ஸ் ஆர்பிட்டரின் நோக்கம் ஆகும். செவ்வாய் கிரகமும் பூமிக்கு அருகே உள் ளது.

இருந்தாலும் அதன் வளிமண்டலம் என்பது மிகக்குறைவாகவே உள்ளது. ஆக்சிஜனும் இங்கு குறைவாகவே உள் ளது. செவ்வாய் கிரகம் முழுவதும் காந்தப் பொருட்கள் பரவி உள் ளன. இருந்தாலும் அங்கு காந்த வயல்கள் இல்லை. அது ஏன்? என்பது மிகப் பெரிய கேள்வியாக உள் ளது. இவ்வாறு விஞ்ஞானி யு.ஆர்.ராவ் கூறினார். 31-8-2012

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்
வழி கேட்டால்...

செய்தி: குஜராத் மக்களிடையே ஊட்டச் சத்து குறைபாடு இருக்கிறதே?

மோடி பதில்: ஆரோக்கியத்தைவிட பெண்கள் அழகுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சிந்தனை: பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு தூக்கு எட்டணா என்ற கதையாக அல்லவா இருக்கிறது!

தமிழ் ஓவியா said...

பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கோயிலா? அரசு நடவடிக்கை எடுக்குமா?தருமபுரி மாவட்டம் அலமேலுபுரம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஜாதி மதங்களைக் கடந்து மக்கள் சமத்துவமாக வாழ கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள குடியிருப்பில் அரசின் விதிமுறைகளுக்கு மாறாக கோவில் கட்டப்பட்டுள்ளது. அரசு நடவடிக்கை எடுக்குமா? 31-8-2012

தமிழ் ஓவியா said...

பெண்கள் அழகு பொருள்களா? வாய்க்கொழுப்பு மோடி மறுபடியும் சிக்கினார்!

புதுடெல்லி, ஆக.31- நடுத்தர குடும்பத்து பெண்கள், ஆரோக் கியத்தை விட அழகுக்குத்தான் முக்கியத்துவம் தருகின்றனர் என்று நரேந்திர மோடி கூறிய தற்கு மத்திய அமைச்சர்களும், பல்வேறு கட்சியினரும் கண் டனம் தெரிவித்துள்ளனர்.

(மேல் தட்டுப் பெண்கள் விதி விலக்கோ! இதில்கூட வருணப் பார்வைதானா?)

குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி, ஒரு வெளிநாட்டு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது, `குஜராத் மக்களிடையே ஊட் டச்சத்து பற்றாக்குறை அதிகமாக காணப் படுவது ஏன்?' என்று நிருபர் கேட்டார்.

அதற்கு மோடி கூறியதாவது:-

குஜராத் மாநிலம் நடுத்தர வர்க்கம் நிறைந்த மாநிலம். நடுத்தர குடும்பத்தினர், ஆரோக் கியத்தை விட அழகுக்குத்தான் முக்கியத்துவம் தருகின்றனர். ஒரு தாய், பால் குடிக்குமாறு தன் மகளிடம் சொன்னால், அங்கு சண்டைதான் வரும். `பால் வேண்டாம். அதை குடித்தால் நான் குண்டாகி விடுவேன்' என்று மகள் மறுத்து விடுவாள். அது தான் இந்த நிலைமைக்கு காரணம்.

- இவ்வாறு மோடி கூறினார்.

அம்பிகாசோனி கண்டனம்

தமிழ் ஓவியா said...

அம்பிகாசோனி கண்டனம்மோடியின் இக்கருத்துக்கு மத்திய அமைச்சர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது:-

உலகிலேயே சிறந்த நிர்வாகி என தன்னை கூறிக் கொள்ளும் மோடி, இத்தகைய குழந்தைத் தனமான கருத்தை தெரிவித்துள்ளார். அவருடைய அமைச்சர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வரும் வேளையில், அவர் இதுபோன்ற மென்மை யான பிரச்சினைகளில் `பிசி'யாக இருக்கிறார்.

பெண்கள், தங்கள் குடும்பத்துக்காக சாப்பாட்டை துறந்து உழைத்து வருவது அவருக்கு தெரியாது போலும். அதனால்தான், அழகுக்காக பெண்கள் சாப்பிடாமல் இருப் பதாக கூறுகிறார். அவர் மீண்டும் முதல் அமைச்சராக போட்டி யிடவே தகுதி இல்லை.

- இவ்வாறு அம்பிகா சோனி கூறினார்.

தமிழ் ஓவியா said...

கிருஷ்ணா திரத்மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணா திரத் கூறிய தாவது:-

மோடியின் கருத்து தவறானது. அழகில் அக்கறை செலுத்த ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமை உண்டு. அதற்கு மாறாக யாராவது நினைத்தால், அவருக்கு அறிவு இல்லை என்றே அர்த்தம்.

- இவ்வாறு அவர் கூறினார்.

லாலுபிரசாத் யாதவ் கண்டனம்

தமிழ் ஓவியா said...

லாலுபிரசாத் யாதவ் கண்டனம்ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் கூறிய தாவது:-

பாசிச சக்திகள் இப்படித்தான் பேசும். பா.ஜனதா ஆளும் பீகாரில் கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரு கின்றன. குஜராத் கலவர வழக்கில் மோடியின் அமைச் சர் சிக்கி உள்ளதால், மோடி பதவி விலகி மன்னிப்பு கேட்க வேண் டும்.

- இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் எம்.பி. கிரிஜா வியாஸ் கூறுகையில், `ஊட்டச் சத்து பற்றாக்குறையை மறைக்க முயற்சிப்பதுடன், பெண்களை கேலி செய்திருக்கிறார், மோடி. பெண்கள், அழகில் அக்கறை செலுத்தினால் என்ன தவறு?' என்றார்.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் அன்வர் கூறுகையில், `சுகாதார துறையில் ஏற் பட்ட தவறை மறைக்க மோடி இப்படி பேசி இருக்கிறார். இது ஒரு முதல் அமைச்சருக்கு அழகல்ல' என்றார்.

இந்த குற்றச்சாட் டுகள் குறித்து பா.ஜனதா செய் தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

காங்கிரசுக்கு `மோடி போபியா' பீடித்து இருக்கிறது. அதனால்தான், மோடியின் பெயரை கேட்டாலே விமர்சிக் கிறது. அரசியல் சம்பந்தப் படாத விஷயங்களுக்கு கூட மோடியை விமர்சிக்கும் அள வுக்கு மோடியை நினைத்து பயப்படுகிறது.

- இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

குழந்தைகளுக்குப் புத்தகங்களைப் பரிசளிப்போம்!

எங்கள் அடுக்ககத்தில் குடியிருந்த ஒரு குடும்பத்தினர் சூழ்நிலை காரண மாக குமரி மாவட்டத்திலுள்ள சொந்த கிராமத்திற்குக் குடிபெயர்ந்து சென்றனர். அவர்களை வழி யனுப்பும் நாளன்று பள்ளியில் படிக்கும் அந்தக் குடும்பத்தின் பெண் குழந்தைகள் இருவருக்கும் அய்யாவின் சிந்தனைகள் அடங்கிய நூல் இரண்டினையும் நினைவுப் பரிசாக அளித்தேன். அவர்கள் ஊருக்குச் சென்று ஒரு ஆண்டு கடந்துவிட்ட நிலையில் சென்ற வாரத்தில் ஒரு நாள் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பு கிட்டியது.

அப்பொழுது அவர் கூறிய செய்திகளை உங்க ளுடன் பகிர்ந்து கொள்ளவே இதனை எழுதுகிறேன். அவர்களின் மூத்த பெண் 12ஆம் வகுப்பிலும், இளைய பெண் 9ஆம் வகுப்பிலும் படித்துக் கொண்டிருக்கி றார்கள். வகுப்பில் பாடத்திலும் மற் றும் பேச்சு, கட்டுரைப் போட்டிகளி லும் நல்ல முறையில் வெற்றிபெறுவ தாகக் கூறிய மூத்த பெண் தான் கட்டுரை எழுதியதற்காக மிகவும் பாராட்டப்பட்டதாகவும், அதற்கு எனக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினாள்.

என்ன எழுதினாய் விளக்கமாகச் சொல் என நான் வினவிய பொழுது அவள் எனக்கு துணைப் பாடப் பகுதியில் கதை ஒன்று தரப் பட்டு அதனை எங்கள் கற்பனையுடன் உருவாக்கும் பயிற்சி தந்தார்கள். அந்தக் கதையில் வேறு ஜாதியைச் சேர்ந்த ஏழைப் பெண் ஒருவரை காதல் மணம் செய்து கொண்ட தனது மகன் செயல் பிடிக்காத ஒரு தாய் மருமகளை அன்பற்று மிகவும் கொடுமைப்படுத்தியதாக இருந்தது. அந்த மாமியார் மனமாற்றம் அடைந்து அந்த மருமகளை அன் புடன் நடத்துவதாகவும், அதற்கு தகுந்த காரணங்கள் கூறியிருக்க வேண்டும் என்பதே எங்களுக்கான பயிற்சி.

மற்ற மாணவர்கள் எல்லோரும் விபத்தில் காயமடைந்த மாமியாரை மருமகள் அன்புடன் கவனித்துக் கொண்டதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட மாமியாருக்கு அன்புடன் பணிவிடை செய்ததனால், அம்மாவின் செயலினால் ஆத்திர மடைந்த மகன் முதியோர் இல்லத் திற்கு அம்மாவை அனுப்ப முடிவு செய்தபொழுது மருமகள் தடுத்து காப்பாற்றியதால் என பல காரணங்களை எழுதியபொழுது நான் மட்டும் நீங்கள் எனக்களித்த பெரி யாரின் பெண்ணுரிமைச் சிந்தனை கள், பெண் ஏன் அடிமையானாள்?

ஆகிய நூல்களை படித்திருந்தமை யால், அந்த மாமியார் பெண்களுக்காக வெளிவரும் வார, மாத இதழ்கள் படிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தார். ஒரு நாள் தற்செயலாக தந்தை பெரியாரின் சிந்தனைகள் என்ற நூலினைப் படிக்கும் வாய்ப்பு பெற்றார். தந்தை பெரியார் ஜாதி, மத பேதமற்ற சமுதாயம் அமைய வேண்டும் என்பதற்காக பாடுபட்டார் என்பதனையும், பெண்கள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தையும், திருமணம் என்ற பெயரால் பெண்கள் அடிமைப் படுத்தப் படுவதையும், சுயமரியாதைத் திருமணம் என்ற முறையினால் பெண்கள் தலைநிமிர்ந்து வாழக்கூடிய நிலை ஏற்படும் என்பதையும் படித்து உணர்ந்து கொண்ட அந்த மாமியார் மனமாற்றம் அடைந்து கருவுற்றிருந்த தன் மருமகளிடம் மிகவும் அன்புடன் நடந்து கொண்டார் என்றும் எழுதி, முடிவில் இதிலிருந்து நான் அறிந்து கொண்ட செய்திகளாக பெண்கள் கல்வி பெறுவதுடன், அனைத்து உலக செய்திகளையும், தலைவர்கள் அவர்களின் சிந்தனைகள் போன்ற வற்றை அறிந்து கொள்வது அவ சியம் என்றும், தந்தை பெரியார் பெண் எந்த நிலையிலும் அடிமை யாக இருக்கக் கூடாது, ஜாதிகளற்ற சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்பதற்காகத் தன் வாழ் நாள் முழுவதும் உழைத்துள்ளார் என்பதனையும் எழுதி முடித்தேன்.

எங்கள் பள்ளியில் இதுவரை கட்டுரை பயிற்சிக்காக பத்துக்கு ஏழு (7/10) தான் முதல் மதிப்பெண்ணாக வழங்குவார்கள். நானும் இதுவரை எழுதிய கட்டுரைகளுக்கு 7/10 என்ற மதிப்பெண்தான் வாங்கினேன். ஆனால் இந்தக் கட்டுரைக்காக எனக்கு 9லு/10 மதிப்பெண் அளித் தது மட்டுமல்லாமல் வகுப்பில் தமிழாசிரியை என்னை மிகவும் பாராட்டினார்கள் என்று மகிழ்ச் சியுடன் கூறி முடித்தாள்.

என் அப்பா, அம்மா இருவருமே உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளில், குறிப்பாக குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குவார்கள். அதன் காரணமாகவே எனக்கும் அந்த நல்ல செயல் பழக்கமாகி விட் டது. அதனால் உண்டாகும் நல்ல பயன் பற்றிய ஒரு நிகழ்வையே நான் பகிர்ந்துள்ளேன். நீங்களும் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடித்து மகிழ்ச் சியடையுங்களேன்!

-- இறைவி

தமிழ் ஓவியா said...

மோடிகள் பேசலாமா?

காங்கிரஸ் தலைமையில் அமைந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004,2009 பொதுத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்று குஜராத் மாநில முதல் அமைச்சர், உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று அர்ச்சனை செய்யப்பட்ட நரேந்திரமோடி கூறியுள்ளார்.

மத்தியில் பி.ஜே.பி. ஆண்டதுண்டே; அந்தக் கால கட்டத்தில் பிஜேபி காப்பாற்றிய வாக்குறுதி கள் என்ன, சாதனைகள் என்ன என்று பட்டியல் போட்டுக் காட்ட மோடி தயார்தானா?

அயோத்தியில் பிஜேபி சங்பரிவார்க் கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பையிலும் கலவரம் ஏற்பட்டதே! அந்தக் கலவரத்திற்குக் காரணம் சிவசேனா - சங்பரிவார் என்று கூறப்பட்டதே - அது குறித்து நியமிக்கப் பட்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் அளித்த அறிக்கையின் பேரில் சிவசேனா பி.ஜே.பி. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

ஒற்றை வரியில் அந்த ஆணையத்தின் அறிக்கையை நிராகரிக்கிறோம் என்று அவ்வாட்சி நிராகரித்து விட்டதே! அதற்குப் பின் அமைந்த காங்கிரஸ் ஆட்சி நடவடிக்கை எடுக்க முனைந்தபோது பால்தாக்கரே நீதிமன்றத் திற்குச் சென்றபோது அந்தக் கூட்டம் பெரும் கலவரத்தில் ஈடுபடவில்லையா? இன்றுவரை அந்த வழக்கின் நிலை என்ன? யாருக்குத் தெரியும்?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கட்டியார் உள்ளிட்டோர் மீதான வழக்கு என்னவாயிற்று?

சாதனைகள் ஒருபுறம் இருக்கட்டும் - சட்ட விரோதமான செயல்பாடுகளில் ஈடுபட கொஞ்சம் கூடத் தயங்காதவர்கள் சவால் விடலாமா?

சட்ட விரோத ஆட்சியை, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள சங்பரிவார் கும்பலுக்கு அதிகாரம் வழங்கிய மோடி அரசியல் சவால்களை வெளியிடுவது வெட்கக் கேடானதாகும்.

சர்தார் சரோவர் அணைத் திட்டத்தை 2010இல் முடிப்பதாக பிஜேபி வாக்குறுதி அளித்ததே! இதுவரை முடிக்கப்பட்ட துண்டா?

விவசாயத்திற்கான மின் இணைப்பு விண்ணப் பங்கள் 3 லட்சம் நிலுவையில் உள்ளன என்பது தான் மோடி அரசின் சாதனையா?

கிராமங்களில் வறுமையை ஒழிப்போம் என்றாரே மோடி. நிலைமை என்ன? வறுமைக்குட்பட்ட குடும்பங்கள் ஆறு லட்சம் குஜராத் கிராமங்களில் உள்ளன என்பதற்கு என்ன பதில்?

பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத் தாமல் மக்களைத் திசை திருப்பும் வழியில் மத வாதத்தின் பக்கம் கவனம் திருப்பப்பட்டது; எந்த அளவுக்குச் சென்றது குஜராத் பிஜேபி ஆட்சி?

குஜராத்தில் ஒரு கிராமத்திற்குள் நுழையும் போது நீங்கள் இந்து ராஷ்டிரத்தில் நுழை கிறீர்கள் என்ற அறிவிப்புப் பலகை உங்களை வரவேற்கும். இதுதான் பிஜேபி ஆட்சியின் விளம்பரப் பலகை சாதனை!

பொய்யான வாக்குறுதிகளை அளித்திட சற்றும் கூச்சப்படாதவர்கள், டில்லியில் 2008 ஜூலையில் முஸ்லிம் பெண்கள் மாநாட்டினை நடத்தி என்னென்ன வாக்குறுதிகளைக் கொடுத்தனர்? உண்மையில் முஸ்லீம்கள்மீது நன்னம்பிக்கை பிஜேபிக்கு இருந்தது உண்டா?

பாபர் மசூதியை இடிக்க மாட்டோம், வெறும் கரசேவை, பஜனை மட்டும் செய்வோம்; - மசூதிக்குத் தொல்லை கொடுக்க மாட்டோம் என்று நீதிமன்றத்தில் பிஜேபியின் உத்தரபிரதேச முதல் அமைச்சர் வாக்குறுதி கொடுத்தாரே. அதுபோல நடந்து கொண்டாரா?

மசூதியைத் தரைமட்டமாக்கினார்களே! அதன் காரணமாக உ.பி. முதல் அமைச்சர் நீதிமன்றம் கலையும்வரை நின்றுகொண்டே இருக்கவேண்டும் என்று தண்டனை கொடுக்கப்பட்டதே - இதன் பொருள் என்ன?

வாய்மைக்கும் நடப்புக்கும் அறவே சம்பந்த மில்லாத கட்சி பி.ஜே.பி.யே! வரவேற்கிறோம் 31-8-2012

தமிழ் ஓவியா said...

யாரால் அனுப்பப்பட்டார்கள்?

ஆழ்வார்கள், அவதார புரு ஷர்கள், நாயன்மார்கள், நபி கள், தேவகுமாரர்கள் என்ப வர்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய்யர் கள், திருடர்கள், கொலை காரர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்கிறவர்கள், வன் னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப் பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப் பட்டவர்கள்?

(குடிஅரசு, 27.8.1949)

தமிழ் ஓவியா said...

பார்ப்பனப் பெண் மொட்டை அடிப்பதுண்டா?ஆண்களும், பெண்களும் கோவில்களுக்கு சென்று தலை மொட்டை அடித் துக் கொள்வ தும், காவடி கட் டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணிய காரியம் என்கிறார்கள். எந்த பார்ப்பனராவது, பார்ப்பனப் பெண் ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?

தமிழ் ஓவியா said...

பார்ப்பானைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி என்ன?இன்றைய தினம் அரசியலில் இருக்கிற அயோக்கியர்கள், அரசியல் சட்டம் செய்த காலத்தில், நம்மை எல்லாம் தாசி மக்கள் என்று சொன்னார்கள். இதற்குமேல் என்ன வேண்டும்? கிறிஸ்தவன், முஸ்லிம், பார்சி தவிர, மற்றவன் எல்லாம் இந்து. நூற்றுக்கு மூன்று பேர் பார்ப்பானைத் தவிர, பாக்கி 97 பேர் தேவடியாள் மக்கள் என்று சட்டத்திலே எழுதி வைத்து இருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? திருப்பி சொல்லாத காரணம். பார்ப்பானைக் கண்டால், வாப்பா தேவடியாள் மகனே! எப்ப வந்தே? என்று கேட்க வேண்டும். ஏண்டா அப்படி கேட்கிறாய் என்றால், நீ எழுதி வைத்ததடா, என்னை தேவடியாள் மகள் என்று! எனவே, உன்னை தேவடியாள் மகன் என்று கூப்பிடுகிறேன் என்று சொல்ல வேண்டும்; என்ன தப்பு?

(தந்தை பெரியாரின் மரண சாசனம், 19.12.1973 தியாகராயர் நகர் பேச்சில்)

தமிழ் ஓவியா said...

மிழன் கடமை என்ன?


கடவுளுக்கு உருவம் உண்டா? கோவில்களில் இருக்கும் கல் உருவச் சிலைகள் கடவுள்களா?

கல் சிலை உருவம் உள்ள இடங்கள் கர்ப்ப கிரகங்கள் என்பவற்றில் கடவுள் இருக்கிறதா? கடவுள் இருக்கும் இடத்தில் கர்ப்பகிரகத்தில் மனிதன் சென்றால் கடவுளுக்கோ இடத்திற்கோ தீட்டு (அசுத்தம்) ஏற்பட்டு விடுமோ?

தீட்டு ஏற்பட்டு விடும், அசுத்தம் ஏற்பட்டு விடும், புனிதம் கெட்டு விடும் என்பது தமிழனாகிய உன்னை கீழ் மகனாக கீழ் ஜாதியானாக ஆக்கப் பயன்படுத்துவ தல்லாமல் அதில் வேறு உண்மை ஏதாவது இருக்கிறதா? ஆகவே, தமிழா உன் கடமை என்ன?

(விடுதலை, 26.1.1969)

தமிழ் ஓவியா said...

குத்தறிவுப் பகலவனின் வினாக்கள்! நீங்கள் என்ன செய்ய வேண்டும்?நந்தனார் சரித்திரத்தால் தீண்டாமை ஒழியுமா, நிலைக்குமா? யோசித்து சொல்லுங்கள். பார்க்கலாம்!

கிருஷ்ண லீலையால் விபச்சாரத்தனம் வளருமா? குறையுமா? சொல்லுங்கள், பார்க்கலாம்!

திருவிளையாடல் புராண சிவலீலையால் ஒழுக்க ஈனங்களும், அயோக்கியத்தனங்களும் வளருமா? குறையுமா? என்று கூர்ந்து பாருங்கள்.

இராமாயணத்தினால் அடிமைத்தனமும், சூழ்ச்சி களும் வளருமா? குறையுமா? என்று பாருங்கள்.

இப்படிப்பட்ட புராண சம்பந்தமான கதைகளின் நடிப்பு ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்குப் பயன் படுகிறதா என்று கேட்கிறேன்.

இப்படியே ஒவ்வொரு புராணக் கலையிலும் கேடு இருப்பதோடு, நாட்டுக்குப் பெருத்த நட்டமும், முன்னேற்றத்தடையும் இருந்து வருகின்றன. வாலிபர் கள் ஆண்களும், பெண்களும் முன்வந்து இந்தக் கேட்டை ஒழிக்க வேண்டும்.

நாடகங்களில் போய் உட்கார்ந்து கொண்டு இப்படிப்பட்ட காதல் வரும் சந்தர்ப்பங்கள் வரும்போது, வெட்கம், வெட்கம்.

அறிவும், மானமும் உள்ளவன் இதைத் திருத்தத்தான் முற்படுவான் என்று சொல்ல வேண்டும்.

அதுபோலவே, இசையரங்குகளிலும் பஜனைப் பாட்டுகள் வரும்போது அவை காதுகளில் கேட்காதபடி யாயா... யாயாயா என்று கூப்பாடு போட்டு, அந்தச் சப்தம் மற்றவர்கள் காதுகளில் கேட்காமல் இருக்கும்படிச் செய்ய வேண்டும்.

யுத்தத்தின் காரணமாக நமது சர்க்கார், ரேடியோவில் ஜப்பான், ஜெர்மன் பேச்சுக்கள் வரும்போது வேறு யாரோ ஒருவன் அப்பேச்சுகள் நம் காதுகளில் விழாமல் இருப்பதற்காக யாயா.... யாயாயா என்று சொல்லச் செய்கிறார்கள் அல்லவா அதுபோலத்தான் நானும் சொல்கிறேன்.

(குடிஅரசு, 26.2.1944)

தமிழ் ஓவியா said...

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் அமைப்புச் சட்ட தகுதி மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல்


புதுடில்லி, ஆக 31: தேசிய பிற்படுத்தப்பட் டோர் ஆணையத்திற்கு அரசியல் அமைப்பு சட்டப்படியான அந் தஸ்தும், அதிகாரங் களும் அளித்து பலப் படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கும் அறிக்கையை பிற்படுத் தப்பட்டோர் நலனுக் கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் திரு. வி.ஹனுமந்தராவ் அவர்கள் 27-8-2012 அன்று மாநிலங்களவை யில் தாக்கல் செய்தார்.

பரிந்துரை: பிற்படுத் தப்பட்டோர் நலனுக் காக நாடாளுமன்றக் குழுவின் கூட்டம் 24-7-2012 அன்று கூடி கீழ்க் குறிப்பிட்ட தீர்மா னத்தை ஒருமித்த கருத் துடன் நிறைவேற்றியது.

தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத் திற்கு அரசியல் அமைப்பு சட்டப்படியான அந்தஸ்து அளித்து, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் தேசிய ஆணையத்திற்கு அளிக் கப்பட்டுள்ள அதிகாரங் களுக்கு இணையான அதிகாரங்களை வழங்கி, பலப்படுத்தத் தேவை யான அரசியல் அமைப்பு சட்டத்திற்கு திருத்தம் கொண்டு வரு வதற்கான நடவடிக்கை களை உடனே மேற் கொள்ள வேண்டும் என்ற உறுதியான கருத்தை பிற்படுத்தப் பட்டோர் நலன்களுக் கான நாடாளுமன்றக் குழு கொண்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோரைப் பொறுத்த இதற்கான அதிகாரங்களின் தன்மை மற்றும் எல் லைகள் அரசமைப்புச் சட்டத்தின் 338 (5) பிரிவில் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்கள் பிற் படுத்தப்பட்டோரைப் பொருத்த வரை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டுமே அன்றி, தேசிய தாழ்த்தப்பட் டோர் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படக்கூடாது.

இதற்கு, அரசமைப்பு சட்டத்தின் 338 (10) ஆவது பிரிவு நீக்கப் பட்டு, தேசிய பிற்படுத் தப்பட்டோர் ஆணை யம் உருவாக்குவதற்காக, 338 (பி) என்ற ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட வேண்டும். இந்த அரச மைப்புச் சட்ட திருத்தத் தில் தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத் திற்கு தற்போது உள்ள, பிற்படுத்தப்பட்ட பிரிவு களின் பட்டியலில் சேர்ப்பதற்கும், நீக்குவ தற்குமான அதிகாரங் களையும் அளிப்பது டன், அத்தகைய பட்டி யலைத் திருத்தும் போது இந்திய அரசு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தைக் கலந்து ஆலோசிக்க வேண் டியது கட்டாயம் என் பதையும் உறுதி செய் யப்படவேண்டும்.

தேசிய தாழ்த்தப்பட் டோர் ஆணையம் தாழ்த்தப்பட்டோர் விவகாரங்களை அதிக அளவில் கையாள வேண்டியிருப்பதால், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான செயல் பாடுகளை, கடமை களை நிறைவேற்ற இய லாத நிலையில் உள்ளது என்று இந்தக் குழு கருதுகிறது. எனவே, புகார்கள், குறைகள் உள் ளிட்ட பிற்படுத்தப் பட்டோர் நலனைப் பற்றிய அனைத்துப் பிரச் சினைகடைளயும் தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையமே கையாள அனுமதிக்கப்பட வேண் டும் என்று இந்தக் குழு பலமாக பரிந்துரைக் கிறது. இந்திய அரச மைப்புச் சட்டத்தைத் திருத்துவதன் மூலமாகத் தான் இதனைச்செய்ய முடியும்.

இந்தத் தகவலை அனைத்திந்திய பிற்படுத் தப்பட்டோர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு கோ. கருணாநிதி தெரி வித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


ஓய்வு?மகன்: கிரிக்கெட்டிலி ருந்து ஓய்வு பெறுவது இப்போதைக்கு இல்லை என்று டெண் டுல்கர் சொல்லியுள் ளாரே, அப்பா!

அப்பா: ஆமாம்! அரசு ஊழியர் ஓய்வுக்கு வயது 58 அல்லவா - அதுவரை ஆடுவார் கிரிக்கெட் பணம் காய்ச்சி மரமாயிற்றே மகனே! 31-8-2012