Search This Blog

2.8.12

பார்ப்பனர்கள் வாழை இலைகள் திராவிடர்கள் முட்செடிகள்



அனுதினமும் பார்ப்பனர்கள்தான் திராவிடர்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்களே ஒழிய, திராவிடர்களல்ல. பார்ப்பனர்களுக்குத் தொல்லை கொடுத்து வருவது என்பதை எல்லா மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பார்ப்பனர்கள் வாழை இலைகள் திராவிடர்கள் முட்செடிகள், வாழையிலை முள்ளின்மீது மோதினாலும், முள் வாழை மீது மோதினாலும் வாழையிலை தான் அழிந்து விடும். அதுபோல் பார்ப்பனர்கள் திராவிடர்கள் மீது மோதினால் தாம்தான் அழிவார்கள். திராவிடர்கள் பார்ப்பனர்களை மோத ஆரம்பித்தார்களோ அப்புறம் பார்ப்பனப் பூண்டே இந்நாட்டில் இருக்காது. இதை பார்ப்பனர்கள் உணர வேண்டும்.


---------------பெரியார் - “குடிஅரசு” 29.5.1948

******************************************************

இவ்வளவு அக்கிரமம் நீங்கள் செய்து கொண்டு, புல்லேந்தும் கை வாளேந்தும் என்று கூறுகிறீர்களே, அடுக்குமா, இந்த ஆணவம் உங்களுக்கு?

வாங்கோ! தம்பிகளே வெளியில் இப்படி நீங்கள் நேரில் வெளிவர வேண்டும் என்றுதானே இவ்வளவு காலம் பொறுத்திருந்தோம். எவ்வளவு சீக்கிரம் வெளி வருகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் எங்களுக்கு நலமாயிற்றே! அவ்வளவு சீக்கிரத்தில் எங்கள் இழிவும் ஒழிந்து போகுமே. நீங்கள் இருப்பது 100-க்கு 3 பேர்.

நாங்கள் இருப்பது 100-க்கு 97 பேர். எங்களில் ஒரு ஆள் உங்களில் ஒரு ஆளைக்கூடவா வெற்றி கொள்ள மாட்டான்? நாங்கள் 97-க்கு 3 பேர் அழிந்தால் பரவாயில்லை. மிச்சம் இருக்கும் 94 பேராவது இழிவு நீங்கி மனிதர்களாய் வாழ்வார்கள். உங்களில் 3-க்கு 3 பேர் மாண்டால் அப்புறம் சைபர்தான் இருக்கும்.

புல்லேந்தியவர் வாளேந்தினால் வாளேந்தியவர் என்ன ஏந்துவார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். விரல் உரல் ஆனால் உரல் என்னவாகும்? அப்புறம் உங்கள் கதி என்ன ஆகும்?

-------------------- பெரியார் - “குடிஅரசு” 29.5.1948

14 comments:

தமிழ் ஓவியா said...

மோடியின் முகத்திரை கிழிந்து வருகிறது

குஜராத் மோடி ஆட்சியில் 2002 இல் நடைபெற்ற மதக்கலவரம் - வரலாறு உள்ளவரை பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்.

கோத்ரா ரயில் நிலையத்தில் ஒரு ரயில் பெட்டி எரிந்ததால் ஏற்பட்ட உயிரிழப்புக்குக் காரணம் முஸ்லிம்கள்தான் என்று முத்திரை குத்தி பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட இந்து மக்கள் மத்தியில் வெறியை ஊட்டி மதக் கலவரத்தை நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியே தலைமை தாங்கி நடத்தியது என்பது மாபெரும் வெட்கக்கேடு!

கோத்ராவில் எரியுண்டு மாண்டவர்களின் சடலங்களை அவரவர்கள் ஊர்களுக்குக் கொண்டு செல்லுவது என்று தொடக்கத்தில் முடிவு செய்யப்பட்டது. முதல் அமைச்சர் நரேந்திர மோடி சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து பார்த்த பிறகுதான் பிரச்சினை திசை திரும்பியது. சடலங்களை ஒட்டு மொத்தமாக ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று முதல் அமைச்சர் மோடி ஆணையிட்டதால், திட்டம் தீட்டிக் கொடுத்ததால், மக்கள் மத்தியில் குரூரமான வெறியுணர்வு தூண்டப்படுவதற்கு வசதி செய்து கொடுக்கப் பட்டது.

எரியுண்ட சடலங்களை ஒரே நேரத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றால் எத்தகைய விபரீத விளைவுகளை அது ஏற்படுத்தும் என்பது எல்லோராலும் எளிதாகப் புரிந்து கொள்ளப்படக் கூடியதாகும்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முசுலிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர். காவல்துறையும் சேர்ந்து கொண்டு கொலை வெறியாட்டம் போட்டது. வழக்குகள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை.

உச்சநீதிமன்றம் தலையிட்டதன் காரணமாக வழக்குகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. இப்பொழுதுதான் நீதிமன்றம் கொலையாளிகளுக்குத் தண்டனை கொடுக்கத் தொடங்கியுள்ளது. மெஹ்சானா மாவட்டம் விஸ்நகரில் தீப்தா தர்வாஜா பகுதியில் இரண்டு பச்சிளம் குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர்கள் வன்முறைக் கும்பலால் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்பட்டனர்.

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், நகராட்சித் தலைவர்கள் உட்பட 85 பேர்கள் மீது வழக்கு தொடரப் பட்டது. இதில் 21 பேர்களுக்கு ஆயுள் தண்டனையும் கடமை தவறிய காவல்துறை அதிகாரி ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது.

மோடி அரசு ஒழுங்காக வழக்கை நடத்த விரும்பாத நிலையிலேயே தண்டனைகள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன என்றால், எந்த அளவுக்குக் குற்றங்கள் - வன்முறைகள் அங்கு கொம்பு முளைத்துக் கூத்தாடி யிருக்கும் என்பதை எளிதில் உணரலாமே. பெஸ்ட் பேக்கரி வழக்கும் அப்படியே!

உச்சநீதிமன்றத்தின் இன்னொரு தீர்ப்பும் மிக முக்கியமானது. தகர்க்கப்பட்ட சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு குஜராத்தின் பி.ஜே.பி. அரசு நட்ட ஈடு கொடுக்கவேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதனை எதிர்த்து குஜராத் மாநில அரசு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றமோ குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

இப்படி தொடர்ந்து நீதிமன்றங்கள் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் பி.ஜே.பி. அரசுக்கு எதிராகத் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த வலியைப் பொறுக்க முடியாமலும், தாம் அம்பலப்படுத்தப் பட்டு வருகிறோம் என்ற நிலையில் ஆத்திரப்பட்டும், உணர்ச்சி வயப்பட்டுமேதான் நரேந்திர மோடி நான் குற்றம் செய்திருந்தால் என்னைத் தூக்கில் போடுங்கள் என்று கத்துகிறார் - கதறுகிறார்.

இவ்வளவு மோசமான ஒருவரை இந்தியாவில் உள்ள உயர்ஜாதி ஊடகங்கள் அடுத்த பிரதமருக்கான வேட்பாளராகத் தூக்கிப் பிடிக்கின்றன. காற்றடித்து வண்ண வண்ண பலூன்களாக உயரப் பறக்க விடுகின்றன என்றால் இந்த நாட்டில் உயர்ஜாதி மனப்பான்மை என்ற ஒரு தீய சக்தி படமெடுத்து ஆடும் ஆபத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

குஜராத் கலவரம் நடந்த ஒரு கால கட்டத்தில், அப்பொழுது பிரதமராக இருந்த அடல்பிகாரி வாஜ்பேயி என்ன சொன்னார் என்பதையும் இந்த இடத்தில் மறக்காமல் நினைவு கூர்வது மிகவும் பொருத்த மானதாகும்.

எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடு செல்லமுடியும்? என்ற அவரது வினாவையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டாமா உயர்ஜாதி ஊடகங்கள்?

இன்னும் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஒவ்வொன்றாக வரும் தீர்ப்புகள் குஜராத் மோடி அரசின் முகத் திரையை முற்றிலும், கிழிக்கும் என்பதில் அய்யமில்லை. 2-8-2012

தமிழ் ஓவியா said...

சட்டி சுட்டதடா - கைவிட்டதடா! அன்னா அசாரே குழுவின் பரிதாபம்

டில்லி, ஆக.3-ஊழ லுக்கு எதிராகவும், வலு வான லோக்பால் மசோதா வேண்டியும் நேற்றோடு 9 நாட்களாக தொடர் பட்டினி போராட்டம் இருந்து வரும் அன்னா குழுவினர் இன்று மாலை 5 மணி யுடன் தங்களது பட் டினிப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

ஊழலுக்கு எதிராக வும், வலுவான லோக் பால் மசோதா வேண்டும் என்று கூறி அன்னா அசாரே, குழுவினர் கடந்த 25ஆம் தேதி முதல் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கால வரையற்ற பட்டினிப் போராட்டம் இருந்து வருகின்றனர். அன்னா ஹசாரேவும் கடந்த 29ஆம் தேதி முதல் கால வரையற்ற பட்டினிப் போராட்டம் இருந்து வருகிறார். 9 நாட்களாக தொடர்ந்து பட்டினிப் போராட்டம் இருந்து வரும் அன்னா குழு உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால், கோபால் ராய் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

அவர்களை பட்டி னிப் போராட்டத்தை கைவிட்டுவிட்டு மருத் துவமனையில் சேரு மாறு டில்லி காவல் துறை வலியுறுத்தியும் அவர்கள் அதை கேட்க வில்லை. லோக்பால் மசோதா நிறைவேறும் வரை பட்டினிப் போராட்டத்தை கை விடும் பேச்சுக்கே இட மில்லை என்று அடம் பிடித்தனர். அவர்கள் என்ன தான் அடம் பிடித்தாலும் மத்திய அரசு அவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை.

இதையடுத்து மத்திய அரசுடன் போராடு வதை விட தாங்களே கட்சி துவங்கலாம் என்று அன்னா குழு வினர் திட்டமிட்டுள்ள னர். அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ள அவர் கள் தங்களின் கால வரையற்ற பட்டினிப் போராட்டத்தை இன்று மாலை 5 மணியுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

பட்டினி போராட் டம் இருந்து நம் முடைய மூச்சும், ஆவி யும்தான் போகின்றதே தவிர கோரிக்கையை மத்திய அரசு கேட்கக் கூடத் தயாராக இல்லை என்பதை உணர்ந்த அன்னா குழு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலுக்கு வரலாமா? மக்களிடம் கருத்து கேட்கிறது அன்னா குழு

இந் நிலையில் அன்னா அசாரே குழு வினர் சமூக வலைத்தளமான டிவிட் டரில் மாற்று அரசியலை முன்னெடுப்பது பற்றி மக்களிடம் பொது கருத்து கேட்டு வருகின் றனர்.

"நாட்டின் மாற்று அரசியல் சக்தியாக அசாரே களம் இறங்க வேண்டிய தருணம் இது தானா? என்று அன்னா குழு சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இதேபோல் மற்றொரு இணையதளப் பக்கத் தில்,

- தற்போதைய அரசி யல் கட்சிகள் மீது உங் களுக்கு நம்பிக்கை இருக் கிறதா?

- நாட்டின் மாற்று அரசியல் சக்தியை அன்னா அசாரே முன்னெடுக்க வேண்டுமா?

என்று இரு கேள்வி கள் கேட்கப்பட்டிருக் கின்றன. 3-8-2012

தமிழ் ஓவியா said...

இந்நாள்... இந்நாள்....



‘‘Not only a secretary But also a very sincere Person’’ என்று தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப்பட்ட என்.வி. நடராசன் அவர்களின் நினைவு நாள் இந்நாள்! (3.8.1975)

தமிழ் ஓவியா said...

புனே குண்டுவெடிப்பு வன்முறையின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாதிகளா? விசாரிக்கிறது மகாராட்டிரா அரசு

புனே, ஜூலை 3- புனேயில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னணி யில் இந்துத்துவா பயங்கர வாத அமைப்புகளுக்குத் தொடர் பிருக்கிறதா என்பது குறித் தும் மகாராட்டிரா அரசு விசாரணை நடத்தும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.

புனேயில் அடுத்தடுத்து 4 இடங்களில் நேற்றுமுன் தினம் இரவு குண்டு வெடித் தது. இவை சக்திவாய்ந்தவை இல்லை என்பதால் உயிரி ழப்பு ஏதும் ஏற்படவில்லை. இக்குண்டு வெடிப்பு சம்ப வத்தில் இருவர் படுகாயம டைந்திருந்தனர்.

புனே குண்டு வெடிப்பு பற்றி கருத்து தெரிவித்த மத்திய அரசு, தீவிரவாத செயல் இல்லை என்று கூறியிருந்தது.

இந்நிலையில் நேற்று குண்டுவெடித்த இடங் களை நேரில் பார்வையிட்ட ஆர்.ஆர்.பாட்டில், பயங்கர வாதிகளின் சதியா என்பது குறித்து பயங்கர வாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர் இந் துத்துவா பயங்கரவாதிக ளின் சதியாக இருக்குமா? என்று கேட்டதற்கு எல்லா வகையான கோணங்களி லும் இருந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியிருக்கிறார்.

தயானந்த பாட்டீல் யார்?

இதனிடையே குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது காயமடைந்தவர் களில் ஒருவ ரான தயானந்த பாட்டீல் என்பவர் புனே அருகில் உள்ள உருளி கஞ்சன் கிரா மத்தைச் சேர்ந்தவர். குண்டு வெடிப்பு சம்பவம் நடை பெற்ற இடங்களில் ஒன்றான பல்கான்தார்வா திரை யரங்கு முன்பாக அன்னா ஹசாரே குழுவினர் அண்மையில் போராட்டம் நடத்திய போது அப்பகுதியில் அவர் நடமாடியதாக கூறப்படு கிறது. நேற்று முன்தினம் அப்பகுதிக்கு சென்ற தயானந்த பாட்டீல் அங்கு தமது கைப்பையை இறக்கி வைத்து விட்டு சென்ற பிறகே குண்டு வெடித்தது என்று கூறப் படுகிறது. இந்த தயானந்த பாட்டீலின் பின்புலம் பற்றி இப்போது மகாராஷ்டிரா அரசு குடைந்தெடுத்து வருகிறது.

மலேகான் குண்டுவெடிப்பு

ஏற்கெனவே இதே மகா ராட்டிரா மாநிலம் மலே கானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இந் துத்துவ அமைப்பைச் சேர்ந்த சாத்வி பிரக்யா உள் ளிட்டோர் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திட்டமிடப்பட்ட சதி

இந்நிலையில் டில்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை செய லாளர் ஆர்.கே.சிங் கூறுகை யில், 500 மீட்டர் தொலை வுக்குள் 45 நிமிட நேரத்தில் நன்கு ஒருங்கிணைக்கப் பட்டு இத்தாக்குதல் நடத்தப்பட் டது.

இத்தாக்குதல் திட்ட மிட்டு நிறைவேற்றப்பட்டுள் ளது என்றார்.

மேலும் வெடிக்காத இரண்டு குண்டுகள் கைப் பற்றப்பட்டு ஆய்வு செய் யப்பட்டு வருவதாகவும் தேசிய பாதுகாப்பு படை யினர் மற்றும் மத்திய தடயவியல் துறை யினர் புனே சென்று அது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் சிங் கூறினார்.3-8-2012

தமிழ் ஓவியா said...

தோழர் வீரமணியின் சேவை!



வீரமணி அவர்கள் எம்.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்தி கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ.பி.எல். பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ. 400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ. 500, 1000 என்பதான வரும்படி வரும் நிலையில் தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர்.

இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக்க் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்துவந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்வித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர், வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும்.

அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரசாரகராகவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்து விட்டேன்.

விடுதலை பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம். இனி விடுதலைக்கு உண்மையான பிரசுரகர்த்தா வாகவும் ஆசிரியராகவும், வீரமணி அவர்கள்தான் இருந்துவருவார். - ஈ.வெ.ராமசாமி

(விடுதலை-07.06.1964

தமிழ் ஓவியா said...

அய்யா - ஆசிரியர் உறவு




கேள்வி: அய்யா வாழ்ந்த காலத்தில், 1962 முதல் 1973 வரை விடுதலை பொறுப்பு, இயக்கப் பொறுப்புகளில் இருந்துள்ளீர்கள். (தந்தை பெரியார் அவர்களின் நேரடிப் பொறுப்பில்); இந்தக் காலகட்டத்திலோ, வேறு காலகட்டத்திலோ தந்தை பெரியார் தங்களிடம் வருத்தப்படவோ, குறை காணவோ ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டா?

பதில்: 1962இல் முந்தைய ஆசிரியர் குத்தூசி குருசாமி அவர்கள் விலகிய நிலையில், விடுதலையை நாளேடாகத் தொடர இப்படி ஒருவர் தேவை என்று விரைந்து என்னை சென்னை மருத்துவமனையில் அய்யா அவர்கள் இருந்தபோது அழைத்துப் பேசியதும், எனது வாழ்விணையர் மோகனாவுடன் கலந்து ஆலோசித்து இருவரும் இணைந்து முடிவு எடுத்து சென்னைக்கு வந்தோம். எங்கள் குடும்பச் செலவுப் பொறுப்பை என் மாமனார் மாமியார் ஏற்றுவிட்டதால், எனது முழுநேர உழைப்பு கவலையின்றித் தொடர, என் வாழ்விணையர் எனக்கு முழு ஒத்துழைப்பைத் தந்து இல்லத்துக் கவலையை, பொறுப்பை ஏற்றவராகியே வாழ்ந்துவிட்டார். நான் இயக்கத்தின் முழு நேரத் தொண்டனாகத் தொடர்கிறேன்.

ஒளிவு மறைவின்றி நினைத்துப் பார்க்கிறேன்...! விடுதலை பொறுப்பாசிரியராக இருந்த காலத்திலும் இயக்கப் பொறுப்புகளில் இருந்தபோதும் சரி, அய்யா அவர்கள் என்னிடம் வருத்தப்படவோ, குறைகாணும்படியோ நான் எப்போதும் நடந்து கொண்டதே இல்லை என்பதுதான் நான் அய்யாவிடம் பெற்ற பெரும் சிறப்பூதியம்.

நான் பொறுப்பு ஏற்பதற்கு முன் மிகவும் அச்சப்பட்டேன். சில நேரங்களில் விடுதலையில் அய்யாவின் அறிக்கையாக வரும் தலையங்கத்தில் எழுதப்பட்ட கருத்து என் கருத்தல்ல. அது எனக்கு உடன்பாடனவை அல்ல என்று அய்யா கையொப்பத்துடன் மறுப்பு விளக்கம் வந்த காரணத்தால், அதை எண்ணி நாம் மிகவும் எச்சரிக்கையுடன் எழுதவும், செயல்படவும் வேண்டும் என்று உணர்ந்து எனது கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றி வந்தேன்.

கூட்டங்களில் அய்யாவை வைத்துக் கொண்டு பேசும் நிகழ்ச்சிகளில்கூட, அவர் நிறுத்துங்கள் என்று தடியைத் தட்டவோ, ஜாடை காட்டிடும் நிலைமையோ எனக்கு என்றுமே ஏற்பட்டதில்லை. மாறாக, சில கூட்டங்களில் மேலும் பேசுங்கள் என்று கட்டளையிட்டு மகிழ்ந்துள்ளார்.

சில, பல செய்திகள் பற்றி தலையங்கங்கள் எழுதுங்கள் என்று சுற்றுப் பயணத்தில் இருக்கும் தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள்; கடிதம் எழுதுவார்கள்; அதுதான் அய்யா தலையங்கமாக அச்சாகி இருக்கிறது. அதையே நான் எழுதியுள்ளேன் என்று பதில் அளித்ததைக் கேட்டு அய்யா மகிழ்ந்துள்ளார்; அதுதான் என் ஆசிரியப் பணிக்குக் கிடைத்த முறையான அங்கீகாரம்!

கவிஞர் கலி.பூங்குன்றன் கேள்விகளுக்கு ஆசிரியர் கி.வீரமணி அளித்த பதிலில்...

(ஆசிரியர் கி.வீரமணி பவள விழா மலர்)

தமிழ் ஓவியா said...

அன்னா ஹசாரேயின் பட்டினிப் போராட்டம் கொள்கை இலக்கு அற்றது!


வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அன்னா ஹசாரே இது வரை பலமுறை பட்டினிப் போராட்டத்தை நடத்திவிட்டார். மகாத்மா காந்தி செய்ததைப் போல், ஓர் ஆக்கபூர்வமான செயல்திட்டத்தின் பலத்துடன் பெருமளவு மக்களின் ஆதரவைத் திரட்ட இந்த இயக்கத்தினர் முயலவில்லை என்றே தோன்றுகிறது என்று அரசியல் நோக் கர்கள் கருதுகின்றனர். அகிம்சைப் போராட்டம் என்ற ஆயுதக் கிடங்கில் பட்டினிப்போராட்டம் என்பது கடைசி யாகப் பயன்படுத்தும் ஓர் ஆயுதம். அதனை அடிக்கடி பயன்படுத்துவது அதன் கூர்மையை மழுங்கடித்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த பட்டினிப்போராட்டம் என்ற ஆயுதத்தை உருவாக்கிய காந்தி அவர் கள், அத்துடன் வேறு பல ஆயுதங் களையும், குறிப்பாக ஆக்கபூர்வமான செயல்திட்டம் என்னும் ஆயுதத்தையும் உருவாக்கியிருந்தார். ஆனால் பொது மக்களை ஒன்றாகத் திரட்டுவது அல்லது சமூக மறுகட்டமைப்பு போன்ற காந்தியின் ஆயுதங்கள் ஹசாரேயிடம் இல்லை.

பட்டினிப் போராட்டத்தை யார் மேற் கொண்டாலும் அதில் சிறிது நாடகத் தன்மையும், என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பும் இருக்கவே செய்யும். அதனால்தான் அது இந்த அளவுக்குப் பொதுமக்களின் கவனத்தைக் கவர்கிறது. ஆனால் பட்டினிப் போராட்டம் என்னும் இந்தக் கண்ணாடியின் மூலம் மட்டுமே நாட்டு மக்களின் ஒட்டு மொத்த கவனத்தைக் குவிக்க முனைவது, போராட்டக்காரர்களை ஒரு நாடகக் குழுவினர் என்ற அளவிற்கு தரம் தாழ்த்திவிடுவதுடன், சமூக மாற்றம் - விழிப்புணர்வை ஏற்படுத்தும் தெரு நாடகம் என்ற அளவிற்கு அந்தப் போராட்டம் ஆக்கப்பட்டுவிடுகிறது.

இந்தியாவில் ஊழலுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் மேற்கொண்ட போராட்டத்தைப் பற்றி தனது நூலில் எழுதியுள்ள வி.எஸ். நைபால், புரட்சி என்பது மக்களின் கோபத்தையும், ஆட்சி அதிகாரத்தை நிராகரிக்கும் அவர்கள் உணர்வையும் வெளிப் படுத்துவதாகும். ஆனால் சரியான சிந்தனைகள், கொள்கைகள், இலக்குகள் அற்ற புரட்சியே அது. உணர்ச்சி வசப்படுவதால் வெளிப்படும் கோபம் அது. . . சகதியில் விழுந்து புரள்வது போன்றது அது. இந்தியாவை அது எந்த வழியிலும் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லாது என்று குறிப்பிட்டுள்ளார். அதன் தொனியும் கருத்தும் கடுமையானதாக இருந்தாலும், இந்த விமர்சனம் ஒரு ஆற்றல் மிகுந்த செய்தியைத் தெரிவிக்கிறது.

சுதந்திர இந்தியாவில் மேற்கொள் ளப்பட்ட ஆற்றல் மிகுந்த போராட்ட இயக்கம் ஜெயப்பிரகாசரின் இயக்கம் தான் என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது. நாட்டில் பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்பும் எதிர்கால புரட்சியாளர்கள், சீர்திருத்தக் காரர்களுக்கு அது முக்கியமான பாடங்களை விட்டுச் சென்றுள்ளது. ஒரு புரட்சி வெற்றி பெறவேண்டுமானால், ஒருபுரட்சிகரமான அமைப்பும் அதற்கு ஒரு புரட்சிகரமான தலைவரும் தேவை என்று ஜெயபிரகாசரே எழுதியுள்ளார். ஆனால், அதற்கு ஒரு புரட்சிகரமான செயல் திட்டமும் வேண்டும் என்பதைக் குறிப்பிட அவர் மறந்துவிட்டார்.

தமிழ் ஓவியா said...

அவரது இயக்கத் தில் ஒரே ஒரு அம்சம் மட்டும், அதாவது புரட்சிகரமான தலைமை மட்டுமே இருந்தது. அந்தத் தலைமைக்கு உதவி செய்ய ஒருபுரட்சிகரமான அமைப்போ, மாற்றத்திற்கு அழைத்துச் செல்லும் பாதையை விவரிக்கும் ஒரு படத்தைக் கொண்ட புரட்சிகரமான செயல்திட்டமோ உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட வில்லை. ஜெயப்பிரகாசரின் இயக்கம் இறுதியில் தோல்வியடைந்ததில் வியப் பேதும் இருக்க முடியாது. அகில இந்திய அளவில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்ட ஜெயப்பிரகாசருக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய இயக்கம் ஹசாரேயுடைய இயக்கம்.

என்றாலும், காந்தியின் போராட்டங்கள் மற்றும் ஜெயப்பிரகாசர் இயக்கம் ஆகியவற்றிலிருந்து ஹசாரே இயக்கம் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அன்னாவின் இயக்கத்தில் பல குறைபாடுகள் உள்ளன. ஊழலை ஒழிப் பதை வலியுறுத்திப் போராடும் குழு என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டி ருந்தால் ஹசரேயின் இயக்கத்தில் இந்த குறைபாடுகள் தோன்றி இருக்காது. ஹசாரேயின் பசி அடங்காதது போல தோன்றியது.

கடந்த ஆண்டு மேற் கொண்ட பட்டினிப் போராட்டத்தை முடித்துக் கொள்ளும்போது, முழு புரட்சிக்கும் குறைவான எதுவும் தனது இலட்சியம் இல்லை என்று அவர் கூறியது, அவரது குழுவை ஒரு மாறுபட்ட கண்ணோட்டத் தில் காட்டியதுடன் தேசத்தின் பசியை மேலும் தூண்டிவிட்டது.

இந்த இயக்கத்தின் நோக்கம் நிறைவேறவேண்டுமானால், இந்த இயக்கம் மேலும் தூய்மையானதாக ஆக்கப் படவேண்டும். நாட்டின் மேம்பாட் டிற்கும், உயர்வுக்குமான ஓர் ஆக்கபூர்வ மான செயல்திட்டத்திற்கான பார்வையும், பாதையும் இந்த இயக்கத்திற்குத் தேவை. அத்துடன் அகிம்சையில் முழுமையான நம்பிக்கை கொண்ட ஒரு புரட்சிகரமான அமைப்பும் உருவாக்கப்படவேண்டும்.

தமிழ் ஓவியா said...

(ஆனால் இந்த இயக்க ஆதரவாளர் கள் செய்வது என்ன? மத்திய அமைச் சர்களின் வீடுகளின் முன் வன்முறை தர்ணா போராட்டங்களை மேற்கொள் கின்றனர்; பத்திரிகையாளர்களைத் தாக்குகின்றனர். இதற்காக ஹசாரே மன்னிப்பு கேட்கிறார். இது போன்ற நேரங்களில் காந்தி என்ன செய்தார்?

தனது இயக்கப் போராட்டங்களில் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டால், காந்தி அந்தப் போராட்டத்தையே கைவிட்டுவிடுவார். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஹசாரேயின் இயக்கத்தை ஆதரிப்பவர்கள் தங்கள் இலக்கு என்ன, அகிம்சை வழி போராட்டம் என்றால் என்ன என்பதை உணராத உணர்ச்சி வசப்பட்ட கூட்டமாகவே இருப்பதைக் காணலாம்.) அது மட்டுமல்ல. இந்தப் போராட்டமே ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எதிராகவும், குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த தனிப்பட்ட வர்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப் படுவது போன்ற தோற்றத்தையே அளிப்பதாக உள்ளதேயன்றி, ஊழல் புரியும் அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராக இருப்பதான தோற்றத்தை அளிக்கவில்லை.

இந்த வகையில் ஹசாரேயின் இயக்கம், ஒரு குறிப்பிட்ட அரசியல்கட்சியின் தேர்தல் வெற்றி வாய்ப்புகளைக் கெடுக்கும் நோக்கத் தையும், அதே அளவுக்கு ஊழலில் திளைத்துள்ள பல மாநிலங்களில் ஆளுங்கட்சியாக உள்ள மற்றொரு கட்சிக்கு உதவி செய்யும் நோக்கத் தையும் கொண்டதாகவே தோற்றமளிக் கிறது. இந்தத் தோற்றம் ஹசாரே இயக்கத்தின் ஒழுக்கத் தரத்தை சீர் குலைப்பதாகும். அத்துடன், தலை மையைத் துதிபாடும் இரண்டாம் நிலைத் தலைவர்களைக் கொண்டிருக்கும் இந்த இயக்கம் விரிவாக்கப்படுவதுடன், தகுதி யுள்ள பொறுப்பாளர்கள் ஒரு வெளிப் படையான நடைமுறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டைக் கூறலாம். ஆங்கிலேய அதிகாரியான ஹ்யூமினால் தொடங்கப்பட்ட காங்கிரஸ் அமைப்பு நாளடைவில் அதிக அளவில் பொது மக்கள் பங்கேற்கும் ஓர் இயக் கமாக வளர்ந்ததுடன், மக்களாட்சி முறையில் நடத்தப்பட்ட உட்கட்சித் தேர்தல்களில் பல்வேறுபட்ட மக்கள் பல்வேறு சமயங்களில் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளனர் என்பதைக் காணலாம்.

இவற்றையெல்லாம் ஹசாரேவின் குழுவினர் விரைவில் புரிந்து கொள்வது நாட்டிற்கும் அவர்களுக்கும் நன்மை பயப்பதாகும்.

(நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா 1.8.2012 தமிழில்: த.க.பாலகிருட்டினன்)

தமிழ் ஓவியா said...

மரியாதை இல்லை!

பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமை யான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.

பெரியார்(விடுதலை, 22.6.191973)

தமிழ் ஓவியா said...

மத குருக்கள் பெண்களைக் கற்பழிக்க மாட்டார்களா? - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு



பெண்களைக் கற்பழித்த மத குருவுக்கும், அவரது சீடருக்கும் உச்ச நீதிமன்றம் தண்டனை அளித்துத் தீர்ப்புக் கூறியது.

மராட்டிய மாநிலத்தில் விருந் தவன், மங்கத்து ஆகிய இடங் களில் ஆசிரமங்களை நடத்தி வரும் திரிபாலு மகராஜ் என்னும் மத போதகர் ஒருவர் தாம் கிருஷ்ண பகவானின் மறு அவதாரம் எனக் கூறி பெண்களை ஏமாற்றி, மயக்கி, கற்பழித்த குற்றத்திற்காக கைது செய்யுமாறு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. சீடர்களுக்கும், மேற்கண்ட மத குருவுக்கும் எதிராக கீழ்க் கோர்ட் டில் வழங்கிய தீர்ப்பை பம்பாய் உயர்நீதி மன்றத்தில் உள்ள பெஞ்சு (அமர்வு) நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து மராட்டிய மாநில அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு.வி.என்.ரே, திரு.ஜி.டி. நானாவதி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும், அதன் அடிப் படையில் குற்றவாளியை விடுவித்தது தவறானது என்றும் சுட்டிக் காட்டினர்.

சாமியார் மகராஜ் ஒரு வயது முதிர்ந்த துறவி என்பதையும், உலகம் எங்கும் பல சீடர்கள் அவருக்கு உள்ளனர் என்பதையும் கருத்தில் கொண்டு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு - அடிப்படையில் தவறானது என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது போல் இவ்வகைச் சாமியார்கள் எல்லாம் தவறான செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. எத்தனையோ மத குருமார்கள் இளம் கன்னிகளை தம் காம இச்சைக்குப் பயன்படுத்தி உள்ளனர் என்பதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.

தன்னுடைய மதப்பிரிவைச் சார்ந்த எந்த ஒரு மதப் பிரச்சாரகருடன் ஒரு மத குரு உடலுறவு கொள்ள மாட்டார் என உயர்நீதிமன்றம் கூறியது பொய்யானது என்பதை அந்த மத குருவால் கற்பழிக்கப்பட்ட மூன்று இளம்பெண்கள் அளித்த வாக்குமூலம் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
(ஆதாரம்: தி இந்து 12-3-1997)

தமிழ் ஓவியா said...

அலகு குத்துவது - தீ மிதிப்பது



கேள்வி: அலகு குத்துபவர்கள் தீக்குழியில் நடப்பவர்களுக்கு வேதனை தெரியாமல் இருப்பது தெய்வ சக்திதானே?

பதில்: இல்லை. வலி என்பது நரம்பு மூலமாக அனுப்பும் செய்தி அந்த நரம்பை மரக்கடித்து விட்டால் எந்த வலியையும் தாங்க முடியும். அதற்குத் தான் தீ மிதிக்கிறவர்களும், அலகுக் குத்திக் கொண்டவர்களும் பழகியிருக்கிறார்கள்.

-சுஜாதா (குமுதம், 5.10.2005

தமிழ் ஓவியா said...

உண்மையைச் சொன்ன புத்தகத்திற்கு 22 லட்சம் டாலர்!



நம் பேரண்டம் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தி உலகத்தைக் குலுக்கியவர் விண் அறிவியலாளர் கோப்பர் நிகஸ். பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறதேயன்றி சூரியன் ஒன்றும் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கவில்லை என்பதைச் சொல்லி பழம் பஞ்சாங்கங்களுக்கு அடி கொடுத்தவர் அவர்.

கோப்பர் நிகஸ் தமது அந்த அதிரடி ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்ட புத்தகத்தின் முதல்பதிப்பு நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்டது.

தொன்மைப் பொருள் ஆர்வலர்கள் குவிந்திருந்த அந்த ஏல விற்பனையில், கோபர் நிகஸ் புத்தகத்திற்கு எவ்வளவு விலை கிடைத்தது தெரியுமா? 22 லட்சம் டாலர்கள்! கிட்டத்தட்ட 90 லட்சம் ரூபாய்.

டி ரிவொல்யூசனிபஸ் ஆர்பியம் கொயலெசியம் (விண்ணக வட்டாரங்களின் சுழற்சி குறித்து) என்ற அந்த புத்தகம் 1543ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டதாகும்.

தமிழ் ஓவியா said...

வள்ளுவர் - பெரியார் பார்வையில் மருத்துவர் சி. நடேசனார்

- புலவர் குறளன்பன்



வாழ்க்கை அளவுகோல்: வாழ்க்கை என்றால் என்ன? ஒருவ ருடைய வாழ்க்கை சிறந்தது என்ப தற்கு என்ன அடையாளம்? அதற்கு அளவுகோல் உண்டா?

அளவுகோல் உண்டு. அந்த அளவு கோலை நமக்கு அறிமுகப்படுத்திய வர்கள் இருவர். ஒருவர் வான்புகழ் வள்ளுவர். மற்றொருவர் தந்தை பெரியார்.

வள்ளுவர்: வாழ்வாங்கு வாழ அறம் செய்ய வேண்டும் என்று அழுத்தமாக அறிவித்தவன் வள்ளுவர். அப்படிச் சொன்ன யீவர் அறஞ் செய்வானுடைய வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் அறி வுறுத்தி இருக்கிறார்.

அறஞ்செய்வானுடைய வாழ்க்கை பிறர் பழிக்கக் கூடியதாய் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது அவரு டைய அறிவுரை,

அறனெனப் பட்டதே இவ்வாழ்க்கை; அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று -குறள் -49.

வள்ளுவரின் அளவுகோலின்படி அறஞ்செய்தும், பிறர் பழிப்பிற்கு ஆளாகாமல் வாழ்ந்தும் காட்டியவர் நம்முடைய மருத்துவர் சி. நடேசனார் ஆவார்.

தந்தை பெரியார்: ஒருவருடைய வாழ்க்கையால் பிறர் நன்மை அடைந் தார்கள். மற்றவர்கள் சுகங்கண்டார் கள் என்று அமைய வேண்டும்
- விடுதலை 20.03.1956

தந்தை பெரியார் அளவுகோலின் படி தன்னலமில்லாமல் பிறர் நன்மையும், நலமும் பெறுமாறு வாழ்ந்து காட்டியவர் நம்முடைய மருத்துவர் நடேசனார் என்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.

பிற்படுத்தித் தாழ்த்தப்பட்டு பார்ப்பனரால் பறிபோன கல்வி, அலுவல், ஆட்சி மீட்பு உரிமைக்காக முதன் முதலில் முன்னின்று நமக் காகப் போராடிய பெருமகனும் அவரேஆவார்.

அறமும் திறமும்: தருமமிகு சென்னையில் இருந்த பார்ப்பனக் கூட்டம் பிற்படுத்தித் தாழ்த்தியதோடு மட்டும் நில்லாமல் நம்முடைய பார்ப்பனர் அல்லாத மாணவர்களை படாதபாடுபடுத்தித் தவிக்க விட்டது.

பயன் தரும் கல்வி, வேலை, ஆட்சி வாய்ப்புப் பறிக்கப்பட்டது. விடுதியில் இடம் தராமல் வீதியில் அலைய விட்டது.

வாடிய பார்ப்பனர் அல்லாத மாணவர்களை பார்த்து வாடி வருந்திய மருத்துவர் நடேசனார் புதிய வள்ளலர்ராய் நம்மவர்க்கு வாழ்வு அளிக்க முன்வந்தார்.

தாழ்த்திப் பிற்படுத்தப்பட்ட பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் செலவில்லாமல் தங்கிப் பயில திராவிடர் இல்லத்தைத் தொடங் கினார். (1916).
கட்டணம் இல்லாமல் நடேசனார் தொடங்கி நடத்திய திராவிடர் இல்லத்தில் தங்கிப் பயின்றவரகளில் நடுவண் அரசின் முன்னைய நிதிய மைச்சர் சர்.ஆர்.கே. சசண்முகனார் என்பவர் குறிப்பிடத்தக்கவராவார்.

பணியும் பயனும்: வகுப்புவாரி ஒதுக்கீடு, கூட்டுறவு சங்க கூட்டம், சென் னைப் பல்கலைக் கழகப் புனரமைப்புச் சட்டம், அரசு கைத் தொழில் உதவிச் சட்டம், குடியிருப் போர் பாதுகாப்புச் சட்டம் போன்ற வலிமையான மக்கள் நலப் பணிகளின் வாயிலாக மருத்துவர் நடேசனார் நம்மவர் வாழ்வினை மலர வைத்தார்.

நூற்றாண்டு நோக்கு: வள்ளுவர் பெரியார் வழி நின்று வாழ்ந்து காட்டி வென்று வாழும் மருத்துவர் நடேசனாரின் வாழ்க்கை நாளைய தலைமுறையினர் கைக்கொள்ளத் தகுந்த நல்ல வாழ்க்கையாகும்.

திராவிட இயக்க நூற்றாண்டுக் காலத்தில் வாழ்ந்து வரும் நாம் நடேசனாரின் நற்பணிகளை நெஞ்சில் நிறுத்தி அவர் போலும் நம் இளை யரைச் செயற்படச் செய்வோமாக. 4-8-2012