Search This Blog

18.8.12

தமிழ்த் தேசியமும் - பார்ப்பனத்தன்மையும்

திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்ட தீர்மானங்கள்

சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்துக!
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்துவோம்!
டெசோ மாநாட்டுத் தீர்மானங்களுக்கு வரவேற்பு!
அடுத்த கட்ட செயல்பாடுகளுக்கு அழுத்தம் கொடுப்போம்!
திராவிடர் கழகத்தின் தீவிரப் பிரச்சாரத் திட்டம்!

சிறப்புத் தீர்மானம் உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!




(திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார்)

 திராவிடர் கழகத்தின் தீவிரப் பிரச்சாரத் திட்டங்கள் உட்பட பதி னொரு முக்கிய தீர்மானங்கள் திருச்சிராப் பள்ளியில் இன்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

18-8-2012 சனிக்கிழமை காலை 10 மணிக்கு, திருச்சிராப்பள்ளி புத்தூர் பெரியார் மாளிகை டி.டி.வீரப்பா நினைவரங்கில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் மானமிகு ராஜகிரி கோ. தங்கராசு அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத் தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள்.

இரங்கல் தீர்மானம் 1 : (3ஆம் பக்கம் காண்க)

தீர்மானம் எண். 2 :   புலம் பெயர்ந்துள்ள அகதிகளின் நல்வாழ்வு

முன்மொழிந்தவர்:  கி.வீரமணி,                        தலைவர், திராவிடர் கழகம்.

(அ)  இலங்கை அரசின் இனப்படுகொலை காரணமாகவும் அங்குள்ள சிங்களப் பேரினவாத அரசின் ஈழத் தமிழரின் வாழ்வுரிமைப் பறிப்பு காரணமாகவும், புலம் பெயர்ந்து தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டின் இதர பூபாகங்களுக்கும் அகதிகளாய் அரசுகளால் புகலிடம் தந்து பராமரிக்கப்பட்டு வருகிறவர்களுக்கு மேலும் பல வசதிகள், மேற்கல்வி வாய்ப்புகள் உட்பட அனைத்தும் அவர்கள் இருக்கும் வரை நமது அரசுகள் தரவேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

(ஆ) அப்படிப் புலம் பெயர்ந்து வந்துள்ள அகதிகளை ஈழத் தமிழ் சகோதர, சகோதரிகள் அந்த முகாம்களை விட்டு வெளியேறி, வேறு வெளி நாடுகளுக்குச் சென்று தங்கள் வருங்கால வாழ்வை அமைத்துக் கொள்ள விரும் பினால் அதை சட்டப்படி அனுமதிப்பதுதான் நியாயமாகும்.

அவர்களை ஏதோ சிறைக் கைதிகள் போல வெளியேறுபவர்களை நமது காவல்துறை மீண்டும் பிடித்துக் கொண்டு, முகாம்களுக்குக் கொண்டுவரும் போக்கு விரும்பத்தக்கதல்ல. இந்தப் போக்கை அரசுகள் மாற்றிக் கொண்டு, விரும்பி வெளியேற அவர்களுக்கு உரிமை தரத் தயங்கக் கூடாது என்று இக்குழு நமது அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண். 3 : டெசோ சார்பில் சென்னையில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டுத் தீர்மானங்களுக்கு வரவேற்பு


முன்மொழிவோர்: சாமி. திராவிடமணி (த.செ.கு.உ)

12-8-2012 அன்று சென்னையில் டெசோ சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட் டில் காலங்கருதி நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களையும் இப்பொதுக்குழு வரவேற்று, அவற்றைச் செயல்படுத்துவ தற்கான அழுத்தங்களைத் தொடர்ந்து கொடுப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண். 4 : பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் கோவில் கட்டத் தடை விதித்திடுக!

முன்மொழிவோர்: பழனி புள்ளையண்ணன் (த.செ.கு.உ)

மானமிகு கலைஞர் அவர்களின் ஆட்சியில் நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவப் புரங்கள் உருவாக்கப்பட்டன. ஜாதி ஒழிப்பு, சமத்துவக் கண்ணோட்டம், மதச் சார்பின்மை இவற்றைப் பேணிக் காப்பதற்கான முன்னேற்றத் திட்டமாகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெரியார் நினைவு சமத்துவப்புரங்களில் எந்த வித மதத் தொடர்பான வழிபாட்டுச் சின்னங்களும் (கோயில்கள், சர்ச்சுகள், பள்ளிவாசல்கள் உட்பட) இருக்கக் கூடாது என்கிற விதி தெளிவாக, திட்டவட்டமாக இருந்தும், சில இடங்களில் கோயில்களைக் கட்டும் வேலையில் இறங்கி இருப்பது - தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தப்படு வதோடு, பெரியார் நினைவு சமத்துவப்புரத்தின் நோக்கத்திற்கு மாறாக இத்தகைய முயற்சிகளில் ஈடுபடு வோர்களை பெரியார் சமத்துவபுரக் குடியிருப்பு களிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் தமிழ் நாடு அரசை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது. மேலும் பெரியார் நினைவு சமத்துவப்புரங்களை நாடெங்கும் மேலும் உருவாக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசை திராவிடர் கழகப் பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 5 : சேது சமுத்திரத் திட்டம் - செயல்படுத்துக!

முன்மொழிவோர்: ச. இன்பலாதன் (த.செ.கு.உ)

அ) தமிழ்நாட்டின் நீண்ட காலக் கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை புராணக் கற்பனைக் கதாநாயகன் ராமன் கதையை முன்னிறுத்தி முடக்குவது மதச்சார்பற்ற தன்மைக்கும், விஞ்ஞான மனப்பான்மைக்கும் விரோதம் என்பதை இப்பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தப் பிரச் சினையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை இப்பொதுக் குழு வரவேற்கிறது.

ஏறக்குறைய 75 விழுக்காடு பணிகள் முடிந்த நிலையில் இந்தத் திட்டத்தின் வழித்தடத்தை மாற்றுவது கால விரயமும், மக்களின் வரிப் பண விரயமும் ஆகும் என்பதையும் இப்பொதுக்குழு சுட்டிக் காட்டுவதோடு, ஏற்கெனவ் நீரி என்ற தொழில் நுட்ப நிறுவனம் ஆய்வு செய்து தெரிவித்த அந்த 6 ஆவது வழித் தடத்திலேயே விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்திருக்கும் அண்ணா தி.மு.க. அண்ணாவின் கொள்கைக்கே விரோதமாக ராமர் பாலம் என்று சொல்லி, அதனை இடிக்கக்கூடாது என்றும், அதனை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறுவது பொருத்தமற்றதும், அண்ணாவின் பெயரைக் கொச்சைப் படுத்துவதும் ஆகும் என்பதையும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

பிரச்சினையை விஞ்ஞான மனப்பான்மையோடு  அணுக வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தி உள்ளதையும் (51A (h) ) இப்பொதுக்குழு அனைவருக்கும் சுட்டிக் காட்டுகிறது.

ஆ) காவிரி நீர், முல்லைப் பெரியாறு நீர்ப்பாசனப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் பிடிவாதத்தோடு தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைக் கிடைக்காமல் செய்து வரும் கருநாடகம், கேரள மாநில அரசுகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசையும், நீதிமன்றங் களையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

இ) நதி நீர் இணைப்பு எனும் பிரச்சினையில் குறைந்த பட்சம் தென்னக நதிகளை இணைக்கும் திட்டம் ஒன்றைத் தயாரித்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 6 : பிள்ளையார் ஊர்வலங்களும், மதக் கலவரங்களும்

முன்மொழிவோர்: க.பார்வதி  (த.செ.கு. உறுப்பினர்) இந்துத்துவா சங்பரிவார்க் கூட்டத்தினர் சிறுபான்மையினருக்கு எதிராக மதக்கலவரங்களை உண்டாக்க பிள்ளையார் ஊர்வலத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அரசு விதிக்கும் நிபந்தனைகளுக்கு மாறாக 40 அடி, 100 அடி உயரத்திற்குப் பிள்ளையார் பொம்மைகள் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படு கின்றன.

இரசாயனக் கலவையால் வண்ணங்கள் தீட்டப்பட்ட பிள்ளையாளர் பொம்மைகளைக் கடலிலும், நீர் நிலைகளிலும் கரைப்பதால் நீர் மாசு, சுற்றுப்புறப் பாதிப்பு ஏற்படுவதால் அரசு விதிக்கும் விதிகளை மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்  என்றும், கூடுமானவரை, இது போன்ற மதக் கலவரங்களை விளைவிக்கும் மத ஊர்வலங்களுக்கு அரசு அனுமதி கொடுக்கக்கூடாது என்றும் இப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 7 : தமிழ்த் தேசியமும் இதன் பார்ப்பனத்தன்மையும்

முன்மொழிவோர்: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்)

திராவிடர் இயக்கத்தையும் தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிடர் இயக்கத் தலைவர்களையும் கொச்சைப் படுத்தியும், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தும் வரும் தமிழ்த் தேசியம் என்று சொல்லி பார்ப்பன எதிர்ப்பை மழுங்கடிக்கும் சக்திகளிடம் விழிப்பாக இருக்க வேண்டும் என்று திராவிடர் பெருமக்களை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. பார்ப்பனர் எதிர்ப்புதான் பார்ப்பனர் ஆதிக்கத்தைத் தகர்த்து, பார்ப்பனர் அல்லாத மக்கள், தாழ்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர், பெண்கள் முதலானோர் கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிமைகள் பெறவும், முன்னேறவும் முடிந்ததற்கு அடிப்படை முக்கியக் காரணமாக இருந்தது - இருந்தும் வருகிறது. பார்ப்பனரல்லாத மக்கள் இத்துறைகளில் மேலும் முன்னேற வேண்டிய ஒரு காலகட்டத்தில் பார்ப்பனர் எதிர்ப்பைப் பலகீனப்படுத்த முயலுவது என்பது ஒடுக்கப்பட்ட மக்களைக் காட்டிக் கொடுக்கும் துரோகம் என்பதையும் இப்பொதுக்குழு தெளிவு படுத்துகிறது.
பார்ப்பனர் பின்னணியோடு நடமாடும் தமிழ்த் தேசியம் எனும் முகமூடி அணிந்து வருபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும், திராவிடர்களாகிய தமிழர்களை (இரண்டும் ஒன்றுதான் என்றாலும் வரலாற்றுக் கண்ணோட்டதோடு ஆரியப் பார்ப்பனர் என்பதற்கு எதிரிடையான வரலாற்றுச் சொல் திராவிடர் என்பதே!)  இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது. இந்த வகையில் மக்களிடம் கருத்தரங்கம் உட்பட தீவிரமாகப் பிரச்சாரம் செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண். 8 : சமூக நீதி

முன்மொழிவோர்: திருமகள் (தலைமை செயற்குழு உறுப்பினர்)

சமூக நீதி பெறுவதில் ஜாதியை அடிப்படை அலகாகக் கொள்வது பல்வேறு சமூக வரலாற்றுக் காரணங்களால் என்பதை மறந்து, மருந்தில் குறிப்பிட்ட அளவுக்கு விஷம் கலக்கப்படுவதற்கு ஒப்பானது அது என்பதையும் புரிந்து கொள்ளாமல், ஜாதிதான் எங்களின் முக்கிய அடையாளம் என்று முழுமைப்படுத்தி, ஜாதிய பெருமைகளைப் பேசி கட்சிகளைக் கட்டும் போக்கு . . . . பார்ப்பனீயம் விதைத்த வருணாசிரம தர்மத்துக்கு உரம் ஊட்டி வளர்ப்பதாகும் என்பதை இப்பொதுக்குழு திட்ட வட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது. வேறு ஜாதியில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது- அப்படி செய்து கொண்டால் வன்முறையால் அது தடுக்கப்படும் என்று சிலர் கூற முற்படுவது அசல் பிற்போக்குத் தனமும், பின்னோக்கிச் சமூகத்தை இழுத்துச் செல்லும் கேவலமும் ஆகும் என்பதை இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

பார்ப்பனிய இந்துத்துவ வருணாசிரம தன்மையில் பார்ப்பனர்களைத் தவிர்த்த அத்தனை ஜாதியினரும் சூத்திரர்கள்தான் என்பதை உணர்ந்து (மனுதர்ம சாஸ்திரப்படி சூத்திரன் என்றால் விபசாரி மகன் என்பது உட்பட ஏழு கேவலமான பொருள்களைக் கொண்டதாகும்). அதனை ஒழிக்கப்பாடுபடாமல் ஜாதி பெருமையைப் பேசி, ஜாதியைக் கட்டிக் காப்பதன் மூலம் சூத்திரத் தன்மையை ஏற்றுக் கொள்ளும் கேவலம்தான் மிஞ்சும்  என்பதை உணருமாறு சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர் களை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்ளுகிறது.

தீர்மானம் எண். 9 : சுற்றுச் சூழல் பாதுகாப்பு

முன்மொழிவோர்: சிவ.வீரமணி (புதுச்சேரி மாவட்ட தலைவர்)

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோர்களுக்குப் பிறந்தநாள் விழாவை எடுக்கும் கழகத் தோழர்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மரக் கன்றுகளை நடவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். புவி வெப்பம் என்ற அச்சுறுத்தல் எதிர் காலத்தையே கேள்விக் குறியாக்கி வருவதால் சமுதாய அறிவியல் இயக்கமான திராவிடர் கழகம் இதில் முக்கிய கவலை எடுத்துக் கொள்வது அவசியமாகும். நாட்டின் கனிம வளம், ஆற்று மணல் கொள்ளை என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இவற்றை அரசுடைமை ஆக்கி தனியார் கொள்ளைகளைத் தடுக்க வேண்டும என்று மத்திய, மாநில அரசுகளை இப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண். 10 : சமூக நீதியின் தற்கால நிலை

முன்மொழிவோர்: ப.சங்கரநாராயணன் (குமரி மாவட்ட தலைவர்)

சமூக நீதிப் பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து பல குளறுபடிகளைச் செய்து வருகிறது. பிற்படுத்தப் பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு என்று ஆணையிருந்தும் மத்திய அரசு துறைகளில் இன்னும் 6 சதவிகிதத்தைக் கூடத் தாண்ட முடியாத நிலை.

அதே போல கல்வியில் 27 விழுக்காடு இடம் என்று சட்டம் இயற்றப்பட்டு மூன்றாண்டுகளில் ஆண்டுக்கு 9 விழுக்காடு என்ற வகையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டு, அந்தக் காலத்தை மேலும் நீட்டித்துக் கொண்டே போவது நாட்டின் பெரும்பான்மையினரான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி, உரிமை மீறல் என்பதை இப்பொதுக் குழு மிகுந்த வேதனையோடு சுட்டிக் காட்டுகிறது. உடனடியாக மத்திய அரசின் கல்வித் துறையில் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான 27 விழுக்காடு அளிக்கப் பட்டு சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட  வேண்டும் என்றும் இப்பொதுக் குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

பல மாநிலங்களில் நுழைவுத் தேர்வு அறவே இல்லை என்ற நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த முடிவு செய்திருப்பதைக் கைவிடவேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. மத்திய அரசின் தன்னந்தனியான முடிவுகளும், அவ்வப்பொழுது இது போன்று எடுக்கும் முடிவுகளும் மத்திய - மாநில அரசுகளுக்கிடையே மோதல் போக்கை உருவாக்கும் காரணத்தால், கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டத்திருத்தம் மேற்கொண்ட பிறகும், உத்தரப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றால் அம்மாநிலத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இதன் பிரதிபலிப்பாக நாடாளு மன்றமே கொந்தளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உறுதி செய்யப்படும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வருமாறு மத்திய அரசை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 11 : கழகப் பிரச்சாரத் திட்டங்கள்

முன்மொழிவோர்: டெய்சி மணியம்மை (மாநில மகளிர் பாசறை தலைவர்)

தொலைக்காட்சிகளும், ஏடுகளும், இதழ்களும் விஞ்ஞானம் பெற்றெடுத்த குழந்தைகள் என்பதை மறந்து விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமாகப் பச்சையாக, அருவருக்கத் தக்க மூடநம்பிக்கைகளை மக்கள் மத்தியில் நாள்தோறும் பரப்பி வருவது சமுதாயத்துக்கு இழைக்கப் படும் மாபெரும் துரோகமாகும். இவற்றை முறியடிக்க மக்கள் மத்தியில் ஜாதி ஒழிப்பு,  பகுத்தறிவுச் சிந்தனை, மனிதநேயம், ஒப்புரவு, சமத்துவ எண்ணம் இவற்றை மேம்படுத்தும் வகையில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை முடுக்கி விடுவது என்று தீர்மானிக்கப் படுகிறது. மாவட்ட  வாரியாக சிறப்புப் பிரச்சாரத் திட்டம் (Package Scheme)

(1) மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சி
(2) அறிவியல் கண்காட்சி
(3) புத்தகச் சந்தை
(4) தெருமுனைக் கூட்டம்
(5) உறுப்பினர் சேர்க்கை
(6) ஏடுகளுக்குச் சந்தா சேர்த்தல்

இத்தகு ஒருங்கிணைந்த திட்டங்களை மாவட்டம் ஒன்றுக்குக் குறைந்த பட்சம் 5 நாட்கள் ஒதுக்கி அலை வீச்சு போல பிரச்சாரம் செய்வது என்று தீர்மானிக்கப் படுகிறது.

இளைஞர்களை இயக்கத்தின்பால் ஆற்றுப் படுத்தும் பணிக்கு முன்னுரிமை அளிப்பது என்று தீர்மானிக்கப் படுகிறது.

அ) கரும்பலகைப் பகுத்தறிவுப் பிரச்சாரம்
ஆ) பெரியாரியல் பயிற்சி முகாம் இவற்றை விரிவுபடுத்துவது
(ஈ) பெரியார் வீர விளையாட்டுக் கழகங்களை விரிவு படுத்துவது
(உ) வாய்ப்புள்ள இடங்களில் பெரியார் படிப்பகங்களை உருவாக்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
(ஊ) மாணவர் விடுதிகளில் மாணவர் கழகக் கிளைகளை அமைப்பது, மாணவர் அணி, இளைஞர் அணிகளுக்குத் தனித் தனியே  உறுப்பினர்கள் சேர்க்கை.
(எ) மகளிருக்குப் பேச்சுப் பயிற்சி - மகளிர் தனிப் பிரச்சாரம் ஏற்பாடு

இத்திட்டங்களை ஒழுங்குபடுத்த - செயல்படுத்த தனி மேற்பார்வை அமைப்பு (Package Scheme)  ஒன்றை உருவாக்கிச் செயல்படுத்துவது என்றும் தீர்மானிக்கப் படுகிறது.

சிறப்புத் தீர்மானம்

முன்மொழிவோர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (பொதுச் செயலாளர்)

தன்னலம் பாராமல், தமிழர்களின் மேம்பாட்டிற் காகவே உழைத்துக் கொண்டிருக்கும் நம் தமிழர் தலைவர் ஆசிரியர்  மானமிகு கி.வீரமணி அவர்களின் உடல் நிலையைப் பேணிக் காப்பது நம் ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். அதனை முன்னிட்டு அதற்காக ஒரு நிதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நம் எண்ணத்தை தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களிடம் வெளிப்படுத்திய போது அதனை நம் தலைவர் அவர்கள்  ஒப்புக் கொள்ளவில்லை. இசைவு தரவில்லை. அவரை மேலும் வற்புறுத்தியதன் பேரில், அப்படியானால் அவ்வமைப்பு தனக்கு மட்டும் அல்லாமல் மற்ற தகுதியுள்ள (Deserving) திராவிடர் கழகத் தோழர்களின் உடல் நலம் பேணுவதற்கும் அந்நிதி பயன்படவேண்டும் என்று கூறினார். தனிக்குழு தேர்வு செய்து உள்ளபடியே வசதியற்ற, தேவைப்படும் கழகத்தவர்க்கு உதவிட,  வாய்ப் பினை  ஏற்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

மேற்கண்ட தீர்மானத்தை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் முன்மொழிய ஒரு மனதாக திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
*****************************************************************

கழக பொதுக் குழுவில் தமிழர் தலைவர் அறிவிப்பு

திருச்சி பெரியார் மாளிகையில் இன்று (18.8.2012) காலை 10 மணியளவில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவித்ததாவது:

திராவிடர் கழகத் துணைத் தலைவர்: கவிஞர் கலி. பூங்குன்றன்

செயலவைத் தலைவர் :  சு. அறிவுக்கரசு

நான்கு பொதுச் செயலாளர்கள் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழர் தலைவர் அறிவித்தார்.
*********************************************************************************
                                      ---------------"விடுதலை” 18-8-2012

32 comments:

தமிழ் ஓவியா said...

வடமாநிலத்தவர்களை விரட்ட நினைப்பது எவ்வகையிலும் நியாயமில்லை; வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று



மதவெறி பல ரூபங்களில் அதன் விஷமத்தைச் செய்கிறது: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி

தவறாகப் பரப்பப்படும் வதந்திகளால் கருநாடக, மராட்டியம், பிகார், தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து வட மாநிலத்தவர்கள் தன் சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர். இவ்வதந்திகளைப் பரப்பியது ஒரு மதவாத அமைப்பு என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனைக் கண்டறிவும், தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதை வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

கடும் நடவடிக்கை

தென் மாநிலங்களான கருநாடகம், தமிழ்நாடு போன்ற வட மாநிலங்களிலிருந்து (குறிப்பாக, பீகார், வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும்) வந்து மாணவர்களாவும், பணியாளர்களாகவும் பணிபுரியும் அந்த மக்களை கருநாடகாவில் அச்சுறுத்தலை - கைத்தொலைப்பேசி மற்றும் வதந்திகள்மூலம் பரப்பிட்டதன் விளைவாக, அப்படி வந்த பலரும் குடும்பம் குடும்பமாக பல்லாயிரக்கணக்கில் பெங்களூருவிலிருந்து தனி ரயில்களில் புறப்பட்டுச் செல்வது குறித்து மத்திய அரசும், பிரதமரும், நாடாளுமன்ற அனைத்துக் கட்சி உறுப்பினர்களும், உள்துறை அமைச்சர் ஆகியோர் நேற்று கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது

தமிழ்நாட்டில் அப்படி எந்த வதந்தியும் பரவியதாகத் தெரியவில்லை. தமிழக முதல்வரும் யாரும் அச்சப்படத் தேவையில்லை; அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

வந்தவர்கள் ஒன்று கல்வி பெறுவதற்காக; மற்றொன்று பணியாற்றுவதற்காக (பெரும்பாலும் கட்டுமானப் பணி போன்ற பணிகளுக்காக) வந்தவர்கள்.

அவர்கள் சுரண்ட வந்தவர்கள் அல்ல; அவர்கள் செய்யும் பணிகளுக்கு நம் நாட்டில் போதிய ஆட்கள் கிடைப்பதில்லை என்ற நிலையிலேயே அவர்கள் பணி தேவைப்படுவதாகும்.

நாகர்கள் என்பவர்கள் திராவிடர்களே!

கலாச்சார ரீதியாகவே அவர்கள் பூர்வீக திராவிடர் இனத்தவர்களே; நாகர்கள் என்பவர்கள் திராவிடர்களே என்று டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அவரது அரிய ஆராய்ச்சி நூல் ஒன்றில் (Who are untouchables, whe they are untouchable) தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, அவர்களை அச்சுறுத்தவோ, அவர்களை விரட்டவோ முனைவது எவ்வகையிலும் நியாயமல்ல; வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

மதவாத கட்சி ஒன்றினால்தான்...

கருநாடகத்தில் தான் இப்படி வதந்தி கிளப்பிவிடப்பட்டது. இதற்கு மூலகாரணமான குற்றவாளிகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் கண்டறிந்து தண்டிக்கவும், உடனே நடவடிக்கை எடுக்கவும் தவறக்கூடாது; மதவாத கட்சி ஒன்றுதான் இந்த திருப்பணி செய்த அமைப்பு என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி மத்திய அரசின் உளவுத்துறை கண்டறிந்து, தெளிவான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடவேண்டும்.

முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்

மனிதநேய அடிப்படையிலும் நாம் அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பது அவசர, அவசியமாகும். மதவெறி பல ரூபங்களில் அதன் விஷமத்தைச் செய்கிறது; இதனை முளையிலே கிள்ளி எறிய அரசுகள் முன்வரவேண்டியது முக்கியமாகும்.


கி. வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம். 18-8-2012

தமிழ் ஓவியா said...

செய்திகளும் - சிந்தனைகளும்

காவல்துறையின் தரம்!



திருவண்ணாமலை பச்சையம்மன் கோயிலில் போலீசார் சிறப்பு பூஜை நடத்தினர். இதையொட்டி பொங்கல் வைக்கும் இடத்தில் காத்திருந்த போலீசார்.

திருவண்ணாமலை வேலூர் சாலையில் உள்ள ஒரு கோயில் பச்சை யம்மன் கோயில். ஆடி மாதத்தில் பொங்கல் இட்டுப் படைப்பார்கள். இதில் என்ன விசேடம்? இருக்கிறது, இருக்கிறது! திருவண்ணாமலை மாவட்ட தனிப் படைக் காவலர்கள் இங்கு சிறப்புப் படையல் போட் டுள்ளனர். ஆடுகள் வெட்டிக் களே பரமாக விசேஷ பூஜைகள் நடந் துள்ளன.

குடும்பத்தோடு காவல் துறையினர் குவிந்துள்ளனர். எதற்காகவாம் இந்தக் கூத்து?

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமான கொலை, கொள்ளை, திருட்டு, சாலை விபத்துகள் நடக் கின்றனவாம். இவற்றைத் தடுக்கத்தான் இந்தச் சிறப்புப் பூஜை சமாச்சாரங் களாம்!

(மாலை முரசு 16.-7.-2012 பக்கம் 5 வேலூர் பதிப்பு)

எப்படி இருக்கிறது இந்தத் தெருப் புழுதி. கொலை, கொள்ளை, திருட்டைக் கண்டுபிடிக்க வக்கில் லாதவர்களுக்கு எதற்குக் காக்கிச் சட்டை, மாதச் சம்பளம் எல்லாம்?

குற்றங்களைக் கண்டுபிடிப்புகளில் திறமையைக் காட்டுவதை விட்டு விட்டு குழவிக் கல்லுக்குப் பூஜை செய் வதால் என்ன ஆகிவிடப்போகிறது?

இதில் இன்னொன்று முக்கிய மானது. கொலை, கொள்ளை, திருட்டுகளைத் தடுக்கும் சக்தி இந்தக் கடவுளுக்கு இருப்பது உண்மை என்றால், இவை எல்லாம் நடப்பதற்கும் இந்தக் கடவுள்தான் காரணம் என்பது விளங்கவில்லையா?

அதனால்தானே இந்தக் கடவு ளிடம் அவ்வாறு நடக்க வேண்டாம் என்று வேண்டிக் கொள்கின்றனர்.

கொலை, கொள்ளை, திருட்டுகளை அனுமதிப்பதற்குப் பெயர்தான் கடவுளா? வெட்கக்கேடு!

தமிழ் ஓவியா said...

மடிப்பிச்சை கேட்கும் பெண்கள்



போச்சம்பள்ளி பகுதியில் இரண்டு ஆண் குழந்தைகள் பெற்ற பெண்களிடம் ஒரு மகன் உள்ள தாய்மார்கள் மடியேந்தி பணம் பெற்றனர். அந்த பணத்திலிருந்து வாங்கிய சேலையை கோயிலில் வைத்து பூஜை செய்தனர். (உள்படம்) மடிப்பிச்சை பெற்ற பெண்.

தடுக்கி விழுந்தவன் அரிவாள் மனையில் விழுந்தது மாதிரி, தப்பித் தவறிக் கூட மக்கள் அறிவு பெற்று விடக் கூடாது என்பதிலே பக்தி வியா பாரிகள் ஒரே குறியாக இருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச் சம்பள்ளி பகுதியில் ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டுள்ளனர்.

ஒரு ஆண் குழந்தை உள்ள பெண்கள் இரண்டு குழந்தைகள் பெற்ற பெண்களிடம் மடியேந்தி பணம் பெறவேண்டும். அந்தப் பணத்தைக் கொண்டு புதுச் சேலை வாங்கி அருகில் உள்ள மாரியம்மன் கோயில் அல்லது விநாயகர் கோயிலில் சேலையை வைத்துப் பூஜை செய்ய வேண்டும். சாமிக்குச் சேலையை சாத்திவிட்டு பின் ஒரு குழந்தை பெற்ற தாய் அந்தச் சேலையைக் கட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால், அந்தப் பெண்ணின் மகனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்குமாம்.

திருவயலூர், கோனனூர், குள்ளனூர், தாதம்பட்டி மாவத்தூர் பகுதிகளில் இந்தத் தெருப்புழுதியாம்.

இதில் கூட பெண் குழந்தை என் றால் மட்டம். ஆண் குழந்தை என் றால் உசத்தி என்கிற ஆண் ஆதிக்கப் புத்தி குடி கொண்டு இருப்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

குழந்தை பிறப்பது எப்படி என்கிற சாதாரண அறிவு இருந்தால் இந்த மாதிரி மூடத்தனத்துக்குப் பலியா வார்களா?

ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று முடிவு செய்வது ஆணின் உயிர் அணுக்களில் உள்ள குரோ மோசோமைப் பொறுத்தது என்பதை அறியாததால் ஏற்பட்ட அடி முட் டாள்தனம்தானே இந்த மூடத் தனத்துக்கு அப்பன்?

குழந்தையே பிறக்க முடியாத நிலையில் மலட்டுத் தன்மை உள்ள ஒரு பெண் இது போல செய்தால் குழந்தை பிறக்குமா?

புடவை வியாபாரி எவனோ ஒருவன் அவிழ்த்து விட்ட கரடியாக இது இருக்கும்.

இது போன்றவையெல்லாம் சில நாட்கள் தோன்றி அடுத்த சில நாட்களில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகிறதே ஏன்?

ஓ, கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்தானே!

தமிழ் ஓவியா said...

துக்ளக்கின் வக்கிரப்புத்தி

கேள்வி: சில்லறை வியாபாரத்தில் அன்னிய முதலீடுகளை அனுமதிக்காத தால் என்ன நடக்கும்? (கூடவே கூடாது என்றும், உள்ளூர் வியா பாரிகள் நசிந்துவிடுவார்கள் என்றும் குருமூர்த்தி கூறுவது உண்மையா?)

பதில்: ஏற்கெனவே இது பற்றி என் கருத்தை நான் தெரிவித்திருக்கிறேன். கன்ஸ்யூமர்கள் கோணத்திலிருந்து இதை நான் வரவேற்கிறேன். இதன் மூலம் இந்திய சில்லறை வர்த்தகத்தின் தரமும் உயர்ந்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தைச்சந்திக்கும் என்பது சோவின் பதில்.

உபயோகிப்பவர்கள் தான் மனிதர்கள். பிழைப்புக்காக சிறுசிறு வியாபாரங்களை நடத்துபவர்கள் இவரின் பார்வையில் மனிதர்களே யல்லர்! அப்படித்தானே?

இந்தியாவில் ஒரு நாள் வருவாய் 20 ரூபாய் மட்டுமே பெற்றிருப்பவர்கள் 70 சதவிகிதத்திற்கு மேல் உள்ளனர் என்று ஒரு பக்கத்தில் சொல்லப் படுகிறது. வேலையில்லாத் திண் டாட்டம் என்பது பெரும் பிரச் சினையாக உள்ளது. அரசு வேலை வாய்ப்பு என்பது ஒரு சதவிகிதம்தான். இந்த நிலையில் சிறுசிறு கடைகளை வைத்து வியாபாரம் செய்து பிழைப்பு நடத்துபவர்களின் வயிற்றில் மண்ணை வாரிப்போடுவது பற்றி பார்ப்பனர் களுக்கு என்ன கவலை காகத்தையும் படைத்து, கல்மனப் பார்ப்பானையும் ஏன் படைத்தாய் என்ற புரட்சிக் கவிஞரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

கேள்வி: பெண்களைப் பற்றிய உங்கள் கருத்தில், எழுத்தில் எனக்கு ஆட்சேபணை கிடையாது. அது 80 சதவிகிதம் சரியானதே! சந்தோஷமா?

பதில்: சந்தோஷம் இல்லை, 80 சதவிகிதம் தானே ஏற்கிறீர்கள்! அதில் முழுமையில்லை. இருபது குறைகிறதே? சந்தோஷம் என்பதில் சந் போய் தோஷம் தான் மிஞ்சுகிறது.

இப்படி ஒரு பதில். நூற்றுக்கு நூறு பெண்கள் திருவாளர் சோ ராமசாமி கண்ணோட்டத்தில் மோசம், உதவாக்கறைகள், அப்படித்தானே?

நூற்றுக்கு நூறு என்றால் தன் வீட்டு மனைவி, மகள்கள் உட்பட அப்படித்தான் என்று கருதுகிறார். என்று முடிவு செய்யலாம் விதிவிலக்காக ஒருக்கால் செல்வி ஜெயலலிதா அவர்களை ஏற்றுக் கொள்கிறாரோ என்னவோ!

(கேள்வி -_ பதில்கள் இடம் பெற்ற துக்ளக் 8-.8.-2012)

தமிழ் ஓவியா said...

மதப் பிரச்சாரமா?



கிறிஸ்தவ மத பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கரை கண்டித்து, திருப்பூர் புஷ்பா ஜங்ஷனில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அய்.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் திருப்பூரில் நடைபெற்ற கிறிஸ்தவர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த இடத்தில் இந்து முன்னணியினர் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய தகவலை, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பா. இரகுநாத் தெரிவித் துள்ளார்.

அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் மதத் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பது சட்டப்படி தவறுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மைக் கொள்கைக்கு எதிரானதுதான்; அதே நேரத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் வெளிப்படையாக மத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது. அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடுவது தேர்வாணையக் குழுவின் தலைவராக இருக்கக் கூடிய ஒருவர் இந்து ஆன்மீகக் கணக்காட்சி நடத்தும் குழுவுக்குத் தலைமை வகித்து நடத்துவதையும் கவனத்தில் கொள்ள வேண்டாமா? இந்து முன்னணிக்கு இவையெல்லாம் கண்ணுக்கு தெரியாதா?

எந்தமதச் சடங்குகளில் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டாலும் அவற்றை திராவிடர் கழக கடுமையாக எதிர்க்கிறது -_ கண்டிக்கிறது.

தமிழ் ஓவியா said...

நமது தவறுக்குக் கடவுள் எப்படி பொறுப்பாவார்?

ஒரு ஆஸ்ரமத்தில், வேதாந்த பாடம் நடத்திக் கொண்டிருந்த குரு, உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் கடவுளின் அம்சம், என்று போதித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பசு தோட்டத்தில் உள்ள பயிர்களைத் தின்று கொண்டிருந்தது. சிஷ்யர்களின் கவனம் பசுவின் மீது செல்லத் தொடங்கியது.

ஆத்திரமடைந்த குரு, பசுவை தடியால் பலமாக அடித்தார். அந்த இடத்திலேயே பசு இறந்து போனது. பசுவின் உரிமையாளர் குருவிடம் வந்து நஷ்ட ஈடு கேட்டார். அதற்கு குருவோ, பசுவும் பிரம்மம். நானும் பிரம்மம். உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் பிரம்மம் (கடவுள் அம்சம்). பிரம்மத்தைப் பிரம்மம் அடித்தது. பிரம்மம் பிரம்மத்திடம் சென்றுவிட்டது. அவ்வளவுதான். என்று பதில் அளித்தார்.

பதிலைக் கேட்ட பசுவின் உரிமையாளர் செய்வதறியாமல், வழியில் சென்ற துறவி ஒருவரை அழைத்து குருவிடம் நியாயம் கேட்கும்படி வேண்டினார்.

துறவி குருவிடம், இங்கே பாடம் நடத்துவது யார்? என்றார்.

நான்தான் என்றார் குரு.

இந்த தோட்டம், ஆஸ்ரமம் இவற்றை எல்லாம் பராமரிப்பவர் யார்?

அதற்கும், நான் தான் என்றார் குரு.

சந்நியாசி குருவிடம், இதற்கெல்லாம் பதில் நான் என்றால் பசுவைக் கொன்றதும் தாங்கள் தானே! என்றார்.

தவறை உணர்ந்த குரு, பசுவின் உரிமையாளருக்கு நஷ்டஈடு தர ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டார்.

ஒருவர், தான் செய்த தவறை, கடவுள் தான் செய்ய வைத்தார் என்று சொல்லி காரணம் கற்பிக்கக் கூடாது, புரிகிறதா!

- தினமலர் - ஆன்மிக மலர்

மிகச் சாமர்த்தியமாகப் பதில் சொல்லி விட்டதாக நினைப்போ! பசுவின் உரிமையாளரிடம் அந்தக் குரு ஆரம்பத்தில் சொன்னாரே, அதையே திருப்பிச் சொல்லி விட வேண்டியது தானே! நான் என்றால் வேறு யாருமல்ல - நான் என்பது பிர்மம்தான். பிர்மம் பிர்மத்தை அடித்து விட்டது என்று கறாராகக் கூறிட வேண்டி யதுதானே! மேலும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்று ஒரே வரியில் சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே! அவன் அடிக்கச் சொன்னான் - நான் அடித்தேன் என் றால் கதை முடிந்தது! ஏமாற்று வேலையும், தந்திரமான பேச்சும், குழப்பமான வார்த்தைகளும் அடங்கியதுதான் அர்த்தமுள்ள(?) இந்துமதம்!
18-8-2012

தமிழ் ஓவியா said...

அமெரிக்காவின் பகுத்தறிவு மேதை இங்கர்சால்



செய்யாறு
இர. செங்கல்வராயன்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் எங்ஙனம் இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் இந்து மதக் கொடுமைகளையும், மூடப் பழக்க வழக்கங்களையும் எதிர்த்து ஓய்வில்லாமல் பிரச்சாரம் செய்து வந்தாரோ அதைப் போலவே அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிறித்துவ மதத்தின் மூடநம்பிக்கைகளை எதிர்த்து நாற்பது ஆண்டு காலம் தீவிர எதிர்ப்புக்கிடையே பிரச்சாரம் செய்து வந்தார்.

தமிழகத்தில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் எங்ஙனம் மூடநம்பிக்கையாளர்களிடம் தீவிர எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியி ருந்ததோ, சிறந்த சொற்பொழிவாள ராக இங்கர்சால் அமெரிக்காவில் கிறித்தவ மதவெறியர்களிடம் இருந்து தீவிர எதிர்ப்பைச் சந்திக்க வேண்டி இருந்தது. முட்டாளே! நாளை முதல் நீ மேடை ஏறினால், உன் தலை அட் லாண்டிக் பெருங்கடலில் மிதக்கும்.

மதததை நீ கண்டித்துப் பேசினால் உன் வீட்டிற்குத் தீ வைத்து உன் னையும் உன் குடும்பத்தையும் சாம்பலாக்கி விடுவோம்.

தமிழ் ஓவியா said...

கிறித்துவ மதவெறியர்களின் எதிர்ப்பைத் துச்சமாக மதித்து அமெரிக்காவில் சிறிய பெரிய நகரங்களில், பட்டி தொட்டிகளில் அவரது பகுத்தறிவுப் பிரச்சாரம் தங்கு தடையின்றி நடந்தது.

ஜான் இங்கர்சால் என்ற பாதிரி யாருக்கும் மேரி லிவிங்ஸ்டன் என்ற அம்மையாருக்கும் 1833 ஆகஸ்ட் 11 ஆம் நாள் நியூயார்க் மாநகரத்தில் திரிஸ்டன் என்ற ஊரில் ராபர்ட் கிரீன் இங்கர்சால் பிறந்தார்.

தந்தையாரின் வேத நூலான பைபள் மகனின் பாடபுத்தகமாக சிறு வயதில் விளங்கியது! ஆனால் மத நூல்களைப் படித்ததனால் இளமை யிலேயே இங்கர்சால் பிஞ்சு உள்ளத் தில் கிறித்தவ மதக் கொள்கைகளில் அவநம்பிக்கை ஏற்படத் தொடங் கியது!

தந்தை பெரியாரின் ஈரோட்டு இல்லத்தில் வைணவ மத பிரச் சாரகர்கள் பொய்யான புராணக் கதைகளைப் பரப்பினர். பெரியார் சிறு பையனாக இருந்தபோதே இந்து மதப் புராணக் கதைகளைப் பற்றி கேள்விகள் எழுப்பத் தொடங்கினார் இங்கர்சாலைப் போல. இங்கர்சால் மத நம்பிக்கை அற்ற முறையில் பேசி வருவதைக் கேட்டு அவர் தந்தையார் ஜான் கவலை அடைந்தார்.

மகனை அறியாமை இருள் கவ்விக் கொண்டிருப்பதாக எண்ணி இருந்த ஜான் நாளடைவில் இங்கர் சாலின் பகுத்தறிவுக் கருத்துக்களைக் கேட்கக் கேட்க தான்தான் மூட நம்பிக்கை எனும் இருளில் தத் தளிப்பதாக உணரத் தொடங்கினார். வாழ்க்கையின் இறுதி நாட்களில் ஜான் ஒருபுது மனிதராகத் தன் மகனால் மாற்றப் பட்டுவிட்டார்!

இங்கர்சால் தன் இளமைக் காலத்தில் இலினாய்ஸ் மாநிலத்தில் மவுண்ட் வெர்னான் என்ற ஊரிலும் பின்னர் மெட்ரோபோலிஸ் என்ற ஊரிலும் ஆசிரியராக வேலை பார்த் தார். அவர் தங்கியிருந்த வீட்டில் சில மத போதகர்களும் தங்கியிருந்தனர். ஒரு நாள் மத போதகர்கள் ஞானஸ்நானம் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார்கள்.

ஞான ஸ்நானத்தை விட சோப்புக் குளியல் நல்லதென்பதே என் கருத்து என்று இங்கர்சால் கூறினார்.

மதவெறியர்கள் இங்கர்சாலை ஒரு நாத்திகர் என்று ஊர் முழுதும் பிரச்சாரம் செய்தனர். பாடசாலை அதிகாரிகள் இங்கர்சாலை உடனே ஆசிரியர் வேலையில் இருந்து நீக்கிவிட்டனர்.

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் வேலையிலிருந்து நீக்கப் பட்டதும் இங்கர்சால் சட்டப்படிப்பு படித்து வழக்குரைஞர் ஆனார். வழக்குரைஞர் ஆன சில ஆண்டு களிலேயே தன் அறிவாற்றலாலும், உழைப்பாலும் இலினாய்ஸ் மாநில அரசின் தலைமை வழக்கறிஞராக (அட்வகேட் ஜெனரல்) நியமிக்கப் பட்டார். 1878 இல் அவர் தன் குடும் பத்தை தலைநகர் வாஷிங்டனுக்கு மாற்றிவிட்டார். வாஷிங்டனில் ஏழு ஆண்டுகள் வாழ்ந்த பிறகு 1885 இல் தன் குடும்பத்தை நியூயார்க்குக்கு மாற்றிவிட்டார்.

1864 ஆம் ஆண்டு ஆப்ரகாம் லிங்கனின் குடியரசுக் கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநில ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்டார். ஜனநாயகக் கட்சியில் இருந்த மத வெறியர்கள் இங்கர்சால் ஒரு தீவிர நாத்திகர்; அவருக்கு வாக்களிக்காதீர் என்று மாநிலம் முழுதும் பிரச்சாரம் செய்து அவரைத் தேர்தலில் தோற் கடித்தனர். பிறகு அவர் அரசியலில் இருந்து விலகி தன் கடைசி முப்பது ஆண்டுகளில் பகுத்தறிவுப் பிரச் சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

கிரேக்க மொழிக்கு சாக்ரடீஸ் என்ன செய்தாரோ, தமிழ் மொழிக்கு பெரியார் என்ன செய்தாரோ, அதையே ஆங்கிலத்திற்கு இங்கர்சால் செய்தார். பெரியார் எப்படி தான் மறைவு எய்திய 24-12-1973 வரை ஓயாது பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தாரோ (தியாகராயநகரில் 19-12-1973 அன்று இறுதிப் பேருரை ஆற்றினார்.) அதைப் போலவே இங்கர்சால் தான் இயற்கை எய்திய 1899 ஜூலை 20 வரை சுமார் நாற்பது ஆண்டு காலம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார்.

இங்கர்சாலின் பகுத்தறிவுச் சொற்பொழிவுகளில் சில முக்கியமான பொன்மொழிகளைக் கீழே தருகி றோம்.

மனிதன் வாழவேண்டுமானால், மனிதன் முன்னேற வேண்டுமானால் மதத்தை அழித்தாக வேண்டும்.
உண்மைதான் இந்த உலகின் அறிவுச் செல்வம்.
உண்மை முன்னேற்றத்தின் அடித்தளம்; சுவர்கள்; அழகிய கட்டடம்.
உண்மை இன்பத்தின் தாய். உண்மை மனிதனை நாகரிகமாக்கு கிறது; தூய்மையாக்குகிறது. மனிதனுக்கு தைரியம் அளிக்கிறது.
உண்மைதான் பகுத்தறிவுவாதி யின் வாளும், கேடயமும்.
சிந்தனையில் மலரும் உண்மை யான எண்ணத்தை யார் யார் வெளி யிட மறுக்கிறார்களோ, மறுக்கப் படுகிறார்களோ, அவர்கள் மனித நாகரிகத்தின் எதிரிகள்; முன்னேற் றத்தின் பகைவர்கள்.
அறிவாற்றலால் தீர்க்கப்படாத எந்தப் பிரச்சினையும் வன்முறையால் தீர்க்க முடியாது என்பதை உலகம் உணர வேண்டும்.
மூடநம்பிக்கை மனித ரத்தத்தைச் சிந்தச் செய்கிறது; விஞ்ஞானம் அறிவு வெளிச்சம் தருகிறது.
சகோதர மனிதர்களை நாம் நேசிக்க வேண்டும். சலிப்பு காட் டாமல உழைக்க வேண்டும். நாம் தைரியமாக இருக்கவும், இன்பமாக வாழவும் பழகிக்கொள்ள வேண்டும்.
கல்வி மனிதனுக்கு உண்மை யான அறிவையும், ஆராய்ச்சித் திறமையையும் தருவதாக இருக்க வேண்டும்.
குழந்தைகளின் மனத்தினுள் எவ்விதமான மூட நம்பிக்கையும் புகவிடக்கூடாது.

குழந்தைகளுக்கு நம்ப அல்ல; சிந்திக்கக் கற்றுக் கொடுக்க வேண் டும்.
மதவாதிகள், மந்திரவாதிகள், குறி சொல்வோர்கள் ஆகியோரை உங்கள் குழந்தைகளை நெருங்க விடாதீர்கள்.
இதுவரை மனித சமுதாயம் செய்துள்ள கோடானு கோடி பிரார்த்தனைகளில் ஒன்றுக்காவது ஆண்டவன் விடை அளித்ததாக உலக வரலாற்றில் சான்று உண்டா?
பகுத்தறிவாளர்களாகிய நாம் தந்தை பெரியார், அறிஞர் இங்கர்சால் ஆகியோரின் பொன்மொழிகளை உள்ளத்தில் பதிய வைத்து வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்வோமாக! 18-8-2012

தமிழ் ஓவியா said...

பொத்தனூரில் பூத்த கொள்கை மலர் மானமிகு க. சண்முகம்



பிறப்பு நாள் : 02-07-1923

உடன் பிறப்பு : மூத்த சகோதரி ஒருவர் சவுந்திரம்

தந்தை : க.வீ. கருப்பண்ணன்

தாய் : ரங்கம்மாள்

படிப்பு : 4- ஆம் வகுப்பு வரை மேலூர் கந்தசாமிக் கண்டர் துவக்கப்பள்ளி, 8-ஆம் வகுப்பு வரை குளித்தலை அரசு உயர்நிலைப் பள்ளி, 10- ஆம் வகுப்பு வரை திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளி, இன்டர்மீடியேட் வரை திருச்சி தேசியக் கல்லூரி

திருமணம் : 03-06-1946 வாழ்விணையர் சுந்தராம்பாள் தமிழ் அறிஞர் உலக ஊழியர் தலைமையில்

குழந்தைகள் : தமிழரசி - வாழ்விணையர் விவேகானந்தன் திருமணம் பொத்தனூரில் தந்தை பெரியார் தலைமையில். தவத்திரு குன்றக்குடி அடிகளார் மற்றும் அறிஞர்கள் கலந்து கொண்டனர். மலர்க்கொடி - வாழ்விணையர் திருவாரூர் சோ. ரவீந்திரன் திருமணம் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி தலைமையில் மானமிகு அன்பில் தர்மலிங்கம் மற்றும் அறிஞர் பலர் பெரியார் மாளிகை திருச்சியில் கலந்து கொண்டனர்.

பொத்தனூர் பேரூராட்சியில் 1957 முதல் 1976 வரை துணைத் தலைவராகவும், தலைவராகவும் பொறுப்பு. எங்கள் காலத்தில் சாதிப் பெயரைக் குறிக்கும் கடைகளுக்கோ, உணவு விடுதிகளுக்கோ அனுமதி வழங்கப்பட மாட்டாது என்ற தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. அதற்காக விடுதலை நாளேட்டில் பாராட்டி தலையங்கம் எழுதப்பட்டது. ஏன் உங்கள் பஞ்சாயத்தைக் கலைக்கக்கூடாது என்று அரசிடமிருந்து தாக்கீது வந்தது.

கட்சிப் பணி : 1944 - இல் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றப் பட்ட நீதிக்கட்சி மாநாட்டில் திருச்சி கல்லூரியில் இருந்து சென்று கலந்து கொண்டேன்.


தமிழ் ஓவியா said...

: 1944 - டிசம்பரில் பொத்தனூரில் திராவிடர் கழக கிளை துவங்கப்பட்டது. காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை மாநாட்டைப் போல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தந்தை பெரியார், நாவலர் நெடுஞ்செழியன், டார்பிடோ சனார்த்தனம், தவமணிராசன், கவிஞர் கருணாநந்தம், சி.பி. சிற்றரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொறுப்புகள் : பொத்தனூர் நகர தி.க. தலைவர் நாமக்கல் மாவட்ட தி.க. தலைவர், சேலம் மாவட்ட தி.க. தலைவர், நாமக்கல் பிரிந்த பின் நாமக்கல் மாவட்ட தி.க. தலைவர், சேலம் மண்டல தி.க. தலைவர், ஈரோடு மண்டல தி.க. தலைவர், 1964 - இல் நீடாமங்கலத்தில் நடந்த முதல் திராவிடர் மாணவர் கழக மாநில மாநாட்டில் அமைக்கப்பட்ட மாநில திராவிடர் மாணவர் கழகத்திற்கு திருச்சி மாவட்டப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டேன்.

: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தில் உறுப்பினராக, துணைத் தலைவராக, தற்போது தலைவராக பொறுப்பில் உள்ளேன்.

மாநாடுகள் : 1945 - இல் திருச்சியில் நடைபெற்ற வட மண்டல திராவிடர் மாணவர் கழக மாநாட்டை வரவேற்புக் குழு தலைவராக இருந்து நடத்தினேன். மானமிகு டார்பிடோ ஜனார்த்தனம் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் தந்தை பெரியார், தவமணிராசன், மு.கருணாநிதி, ஈ.வெ.கி. சம்பத், டி.கே.சீனிவாசன், சிறுவன் வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். : 1957 -இல் வேலூர் காவேரிப் பாலத்தின் அருகில் ஆற்று மணலில் நாமக்கல் கரூர் வட்ட தி.க. மாநாடு. நாமக்கல் வட்ட தி.க.தலைவர் நானும், கரூர் வட்ட தி.க.தலைவர் தவிட்டுப்பாளையம் வெங்க டாசலமும் சேர்ந்து நடத்தினோம். தந்தை பெரியார், குத்தூசி குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

: நாமக்கல் திராவிடர் கழக இளைஞர் மாநாடு பேராசிரியர் அன்பழகன் தலைமையில் நடத்தினோம்.

: சேலத்தில் மாவட்ட, மாநில மாநாடுகள் நடத்தப்பட்டன. ஆத்தூர், மேட்டூர், ஓமலூரில் கழக மாநாடுகள் நடத்தப்பட்டன.

கழகத்தில் 1944-இல் சேர்ந்தது முதல் தலைமை அறிவித்த ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள், போராட்டங்கள் எல்லாவற்றி லும் கலந்து கொண்டுள்ளேன். பிள்ளை யார் உடைப்பு, ராமன்பட எரிப்பு, தேசப்பட எரிப்பு, இராவணலீலா, மனுதர்ம எரிப்பு, இரயில் நிலையங்களில் இந்தி எழுத்து அழிப்பு, மண்டல் குழு பரிந்துரையை அமுலாக்கக் கோரி அஞ்சலகம் முன் மறியல், உச்சநீதிமன்ற ஆணை எதிர்ப்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உரிமை கோரி இந்து அறநிலைய அலுவலகங்கள் முன் மறியல் போராட்டங்களில் கலந்து கொண்டேன். இவைகளில் சிலவற்றில் மணிக் கணக்கிலும், நாள் கணக்கிலும், சிறை சென்றாலும், 01-02-1976 முதல் 23-01-1977 வரை சுமார் ஓராண்டு சேலம் சிறையில் மிசா கைதியாக இருந்துள்ளேன். ( 19-07-2012 அன்று பொத்தனூரில் க.ச. அய்யாவுடன் ஒரு நேர்காணல் நிகழ்ச்சி. ஈரோடு மண்டலச் செயலாளர் தோழர் த.சண்முகம் அவர்களும் உடன் இருந்தார். ஏறக்குறைய எழுபது ஆண்டுகள் இயக்கத்தோடு, ஒன்றிப் பழகிய அன்றிலாய், வாழ்ந்த க.ச. அய்யாவிடமிருந்து பல செய்திகளைத் தெரிந்து கொண்டோம்.

ப.காளிமுத்து: அய்யா, உங்களுக்கு திராவிடர் இயக்க உணர்வு எப்படி வந்தது?

க.சண்முகம்: நான் குளித்தலை உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண் டிருந்த போது என் பள்ளிக்கு எதிரிலேயே மாநாடு ஒன்று நடந்தது. தந்தை பெரியார், அஞ்சாநெஞ்சன் அழகிரி, கே.எம்.பாலசுப்பிரமணியம், சுல்தான்பட்டாதி ஆகியோர் அந்த மாநாட்டில் உரையாற் றினார்கள். இவர்களுடைய சொற்பொழிவுகளைக் கேட்ட நாளிலிருந்து இன்று வரை அதே உணர்வுடன் இருக் கிறேன். குளித்தலைதான் என்னைத் திராவிடர் இக்கத் திற்கு அழைத்துச் சென்ற இடம்.


தமிழ் ஓவியா said...

ப.கா: அதன் பின்னர் திருச்சிக்கு வந்து என்ன செய்தீர்கள்?

க.ச.: திருச்சியில் நான் தங்கியிருந்த அறைக் குப் பக்கத்தில் கூத்தப்பார் என்ற ஊரைச் சேர்ந்த பரமசிவம் என்ற நண்பர் குடிஅரசு இதழ்களை வாங்கி வந்து கொடுத்து என்னைப் படிக்கச் செய்தார். அவரோடு சேர்ந்து மாலையில் நடக்கும் பொதுக்கூட்டங்களுக்கும் போனேன். நம்முடைய இயக்கத் தலைவர்களின் அறிவார்ந்த பேச்சும் அணுகுமுறையும் என்னை அவர்கள் பால் ஈர்த்தன.

ப.கா: குடிஅரசு, திராவிடநாடு இதழ்களின் அருமைப்பாட்டைப் பற்றிச் சொல்லுங்களேன்.

க.ச. : குடிஅரசு, திராவிட நாடு ஒவ் வொன்றிலும் இரண்டு இதழ்கள் வாங் குவேன். ஒன்று படிப்பதற்கு, இன்னொன்று பைண்டு செய்து பாதுகாத்து வைப்பதற்கு. நான் பைண்டு செய்து வைத்திருந்த இதழ்களையெல்லாம் புலவர் இமயவரம்பன் அவர்கள், சென்னையில் உள்ள பெரியார் திடல் நூலகத்திற்கு வேண்டும் என்று எடுத்துச் சென்றுவிட்டார். இவை இரண்டு இதழ்களும் பெரும் புரட்சியை ஏற்படுத்திய இதழ்கள்.

ப.கா : இன்டர்மீடியட் வகுப்பை எப் போது முடித்தீர்கள்?

க.ச : என்னைக் கட்சிக்காரன் என்று அடையாளம் கண்டு இன்டர்மீடியட் செல்லமுடியாதவாறு செய்துவிட்டார்கள். பார்ப்பன ஆசிரியர்கள். பின்னர் அடுத்து வந்த செப்டம்பரில் தேர்வெழுதி 1946 இல் வெற்றி பெற்றேன்.

ப.கா : 1944 சேலம் மாநாட்டில் கலந்து கொண்டீர்களா?

க.ச. : திருச்சி பொன்மலை அப்போது நம்முடைய கோட்டையாக இருந்தது. பொன்மலைத் தோழர்களோடு நான் நெருங்கிப் பழகினேன். அவர்கள்தான் என்னைச் சேலம் மாநாட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். சேலம் கல்லூரியில் படித்த எங்கள் ஊர் நண்பர்களின் அறையில் தங்கியிருந்தேன். அந்த மாநாட்டில்தான் திராவிடர் கழகம் என்று அய்யா பெயர் மாற்றம் செய்தார். நம்முடைய வரலாற்றில் அந்த மாநாடு ஒரு திருப்பு முனையாக அமைந்துவிட்டது.

ப.கா.: தந்தை பெரியாரை நேருக்கு நேராக எப்போது சந்தித்தீர்கள்?

க.ச. : 17-12-1944 இல் பொத்தனூரில் கூட்டம் போட வேண்டும் என்று ஈரோட்டில் தங்கியிருந்த அய்யாவைச் சந்தித்துக் கேட்டோம். அய்யாவும் ஒப்புக் கொண்டார். கோவை ஜி.டி. நாயுடுவிடம் நாவலர் நெடுஞ்செழியன் அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரும் வருவதாக ஏற்பாடு. அய்யாவுக்கு வழிச் செலவுத் தொகை அய்ந்து ரூபாய். நாவலர் கோவையிலிருந்து வரவேண்டும். அதனால் அவருக்குப் பத்து ரூபாய் கொடுத்தோம். கோவையில் இருந்து ரயில் மூலம் புகலூர் வந்து, அங்கிருந்து குதிரை வண்டியில் தவிட்டுப்பாளையம் வந்து சேர்ந்து, அங் கிருந்து பரிசல் மூலமாகக் காவிரியைக் கடந்து இக்கரைக்கு நாவலரையும் மற்றவர்களையும் அழைத்து வந்தோம்.

அன்று மாலை 4 மணியளவில் கண்டர் உயர்நிலைப் பள்ளியில் அய்யா மாண வர்களிடையே உரையாற்றினார். தமிழ் மறவர் பொன்னம்பலனார் இங்கே பணியாற்றினார். அவருடைய ஏற்பாடு இது. அவர் எனக்கு ஆசிரியர். அந்தப் பள்ளியில் அய்யா மூன்று மணி நேரம் பேசினார்.

இரவு பொத்தனூரில் பொதுக்கூட்டம், அய்யா பேசினார். இந்த நிகழ்ச்சிகளின் போதுதான் அய்யாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ப.கா. : கல்லூரி வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி

க.ச. : கல்லூரியில் படிக்கும்போதே நம் இயக்க இதழ்களுக்கெல்லாம் நான் தான் பொத்தனூர் முகவர் (ஏஜன்ட்). அதற்கென்று சில தோழர்களை நியமித்து இதழ்களைப் பரப்பி வந்த நிகழ்ச்சி.

தமிழ் ஓவியா said...

ப.கா.: கல்லூரிப் படிப்பு முடிந்த பின்பு? க. ச.: இன்டர்மீடியட் வரைதான் படிக்க முடிந்தது. அதன் பின்னர் உழவுத் தொழிலைக் கவனித்துக் கொண்டு இயக்க வேலைகளைப் பார்த்துக் கொண்டி ருந்தேன். கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறேன். மிசாவில் ஓராண்டு காலம் சேலம் சிறையில் இருந்தேன்.

ப.கா.: அய்யா உங்கள் திருமணம் யார் தலைமையில் நடந்தது?

க. ச.: உலக ஊழியனார் தலைமையில் 1947 இல் நடந்தது. சுயமரியாதை முறைப் படி, எனக்குத் தெரியாமல் என் பாட்டனார் (அப்பாவின் அப்பா) அய்யரை அழைத்து விட்டார். நான் அய்யரை வெளியேற்றுங்கள் என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன். என் பாட்டனார் வந்து, உன் கால்களை வேண்டுமானாலும் பிடிக்கிறேன். அய்ந்தே அய்ந்து நிமிடம் அய்யர் முன்னால் அமைதியாக உட்காரப்பா என்றார். நீங்கள் அய்யருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்து விட்டு அவரை வெளியேற் றுங்கள் என்று பிடிவாதமாகச் சொன்ன பிறகு அய்யரை வெளியேற்றினார்கள்.

ப.கா.: உங்கள் மகள் திருமணம் யார் தலைமையில் நடந்தது?

க. ச.: தந்தை பெரியார் தலைமையில் தான். என் தோட்டத்தில் பெரிய களம் அமைத்து மிகப் பெரிய அளவிற்குப் பந்தல் போட்டு அய்யாவின் தலைமையில் சிறப்பாக நடத்தினேன். எல்லோர்க்கும் நல்ல விருந்து. திருமணத்தை முடித்து விட்டுச் சில நாட்கள் கழித்து அய்யாவைத் திருச்சியில் போய்ப் பார்த்தேன். அய்யா கேட்டார்.

திருமணம் சிறப்பாக முடிந்ததா?

முடிந்ததுக் அய்யா

ஆமா. அவ்வளவு பெரிய பந்தல் எதற்கப்பா?

சாப்பாடு போடவேண்டும். அதனால் தாங்க அய்யா!

எல்லோர்க்கும் சாப்பாடு போடணு மாப்பா?

ஆமாங்கய்யா

இவ்வாறு உரையாடல் நடந்தது. சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு அய்யா சொன்னார். நம்ம ஆட்களே என் பேச்சைக் கேட்கவில்லைன்னா மற்றவங்க எப்படிக் கேட்பாங்க என்றார்.

நான் அதிர்ந்து போய்விட்டேன். நம்ம ஆட்களே என்ற சொற்களைக் கேட்டவுடன் நான் நிலை குலைந்து போனேன். அய்யா நம் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று எண்ணிப் பார்த்தேன். இன்றும் அதை நினைக்கும்போது (க.ச. அய்யாவின் குரல் நடுங்கியது. எழுதிக் கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். க.ச. அய்யாவின் கண்களில் நீர்த்துளிகள் நிறைந்திருந்தன. எப்பேர்ப்பட்ட தொண்டர்களைத் தந்தை பெரியார் உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதை எண்ணி வியந்தேன்.)

ப. கா.: பெரியார் மணியம்மை திருமணத்தைப் பற்றி நீங்கள் என்ன

க.ச. : என் உறவினர் ஒருவருடைய கடையில் உட்கார்ந்து பேசிக் கொண் டிருந்தேன். ஒரு நண்பர் செய்தித் தாள் ஒன்றை எடுத்துக் கொண்டு வேகமாக என்னிடம் வந்தார். என்னங்கய்யா, பெரியார் இந்த வயதில் மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டாராமே! என்றார். நான் கேட்டேன், அய்யாவா அப்படிச் செய்தார், ஆமாங்கய்யா, இதோ பாருங்கள். இந்தத் தாளில் இருக்கிறது என்றார் அவர். நான் உடனே சொன்னேன். அய்யா செய்திருந்தால் அது சரியாகத் தானிருக்கும் என்று. வந்தவர் பேசாமல் எழுந்து போய்விட்டார். அய்யா எது செய் தாலும் சமுதாய நலன் கருதியே செய்வார். ஆதலால் அவர் எது செய்தாலும் சரியாகத்தானிருக்கும்.

ப.கா.: அய்யாவுக்கு அன்பு நிறைந்த வணக்கம். அய்யாவின் நூற்றாண்டு விழாவை நாங்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். உடல் நலத்தோடும் வளத் தோடும் நீங்கள் பல்லாண்டுக் காலம் வாழ்ந்து எங்களுக்கு வழி காட்ட வேண் டும் என்று கூறி, க.ச. அய்யாவிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு இருவரும் ஈரோட்டுக்குப் புறப்பட்டோம்.

முனைவர் பேராசிரியர் ப.காளிமுத்து, திராவிடர் கழகம், ஈரோடு 18-8-2012

தமிழ் ஓவியா said...

வ.உ.சி.யின் இனப்பற்று



(திருச்சியில் 3.5.1936ல் கூடிய பார்ப்பனரல்லாதார் மாநாட்டுக்கு தூத்துக்குடியிலி ருந்து கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்அவர்கள் எழுதி அனுப்பிய வேண்டு கோள் கடிதம்).

அய்யன்மீர்,

நமது சென்னை மாகாணம் சம்பந்தப்பட்டமட்டில், அதிலும் முக்கியமாக தமிழ்நாடு சம்பந்தப் பட்டமட்டில், பெருந்தொகையினர் களாகிய பார்ப்பனரல்லாதார்கள் பல துறைகளிலும் சிறு தொகையினராகிய பார்ப்பனருடைய ஆதிக்கத்துக்குட் பட்டு, பின்னிலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது நடுவு நிலைமையுடையார் யாரும் மறுக்க முடியாத உண்மை.

அதைப்பற்றி நான் பெரிதும் கவலை அடை கின்றேன். பார்ப்பனருடைய ஆதிக் கத்தை உதறித் தள்ளிவிட்டு பார்ப் பனரல்லாதார்கள் முன்னிலைக்குச் செல்லத் தொடங்கும் நன்னாளின் வரவை நான் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.

மீட்சிக்கு ஒரு வழி

பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலி ருந்து பார்ப்பனரல்லாதார்கள் வெளிப்படுவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அவ்வழியாவது: பார்ப்பன ரல்லாதார் ஜஸ்டிஸ் கட்சியினரா யினும், சுயமரியாதைக் கட்சியினரா யினும், சுயேச்சைக் கட்சியினராயினும், காங்கிரஸ் கட்சியினராயினும், காங் கிரஸ் முன்னேற்றத்திலும் பிராமண ரல்லாதார்கள் முன்னேற்றத்திலும் சம அபிமானமுள்ள என் போன்றவர் களாயினும், பார்ப்பனர் ஆதிக்கத்தை வெறுத்து, காங்கிரசைவிட்டு விலகி நிற்கும் எனது நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றவர் களாயினும் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டியில் பார்ப்பனருக்குள்ள ஆதிக்கத்தை ஒழித்து, பார்ப்பன ரல்லாதார்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கு உழைக்க வேண்டும்.



தமிழ் ஓவியா said...

அவ்வாறு உழைக்க முற்படுங்கால் பார்ப்பனரல்லாதார்களுக்குள் இருக்கிற மேற்கூறிய ஜஸ்டிஸ் கட்சியினர், சுயமரியாதைக் கட்சி யினர் முதலிய பல கட்சியினர்களும் தத்தம் கட்சிக்குரிய சொந்தக் கோட்பாடுகளை ஏனைய கட்சி யினர்க்குள் புகுத்தவோ, எனைய கட்சியினர்கள் அங்கீகரிக்கும்படிச் செய்ய முயலவோ கூடாது.

ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு கோட் பாட்டைக் கொண்டிருக்கலாம்; தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டியில் பார்ப்பனரல்லாதார்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயத்தில் எல்லாக் கட்சியினர் களும் ஒன்று சேர்ந்து உழைக்கலாம். இவ்வாறு செய்வதில் முரண்பாடு ஒன்றும் இல்லை.

பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்வார்கள்!

தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டியைக் கைப்பற்றுவதற்கு பார்ப்பனரல்லாதார்கள் முயற்சி செய்கின்றார்கள் என்று தெரிந்தவுடனே, பார்ப்பனர்கள், அரசாங்க உத்தியோகஸ்தர்கள், அரசாங்க உத்தியோகஸ்தரல்லாதார் கள், வைதீகர்கள், வைதீகரல்லா தார்கள் - எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு சூழ்ச்சி செய்வார்கள்.

அச்சூழ்ச்சியாவது: பார்ப்பனரல்லா தார்களில் உலக அனுபவம் இல்லாத இளைஞர்களையும், வயிற்றுப் பிழைப்புக்கு வழியில்லாத வறிஞர் களையும், கோடாரிக் காம்புகள் போன்றவர்களையும் பார்ப்பனர்கள் பொய்யுபதேசம், பொருள் கொடுத்தல் முதலியவற்றால் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டியுள் இழுத்து சில பதவிகள் கொடுத்து, அவர்களைக் கொண்டு பார்ப்பனரல்லாத உண்மையான தேசாபிமானிகளைப் பிரசங்கங்கள் வாயிலாகவும், பத்தி ரிகைகள் வாயிலாகவும், துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவும் நிந்திக்க வும், தேசத் துரோகிகள் என்று பறைசாற்றவும் முற்படுவார்கள்.

அப்போது அவ்விளைஞர்களையும், அவ்வறிஞர்களையும், அக்கோடாரிக் காம்புகளையும் பார்ப்பனரல் லாதார்களுடைய வழிக்குத் திருப்புவது அசாத்தியமான காரியம். அவர்கள் பிரசாரங்களுக்கெல்லாம் ஒற்றிக்கிரட்டியாக பார்ப்பனரல்லா தார்கள் தங்கள் சொல்லுக்குட்பட்ட இளைஞர்களையும், வறிஞர்களையும் கொண்டு எதிர் பிரசாரங்கள் செய்ய வேண்டும். முன்வைத்த காலைப் பின் வைக்கலாகாது. எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு

வேற்றுமைகளை மறப்பீர்!

பார்ப்பனரல்லாத சகோதரர்களே! சாதி வேற்றுமை, மத வேற்றுமை, கட்சி வேற்றுமை, கோட்பாடு வேற்றுமை முதலியவற்றையெல்லாம் விடுத்து, நீங்களெல்லோரும் ஒன்று சேர்ந்து பார்ப்பனரல்லாதார்கள் சமூகத்தை முன்னிலைக்கும், நன்னிலைக்கும் கொண்டு வருவீர்களாக.

உங்கள்மீதுஅன்புள்ள,
- வ.உ. சிதம்பரம்பிள்ளை

ஆதாரம்: குடிஅரசு 17.5.1936

தமிழ் ஓவியா said...

இராமாயணம் ஒரு கட்டுக்கதை!

சம்பூகன் வதம் ஆரிய திராவிட போராட்டம்! இராமாயணம் ஒரு கட்டுக்கதை' என்று தந்தை பெரியார் அவர்கள் பல ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிவித்துள்ளார்.

இராமாயணம் என்ற நெடுங்கதையே (இதிகாசம்) பலகாலமாக சிறுகதை களாக கூறப்பட்டு; பல பகுதிகளில் பலவாறாக விரிவாக்கம் செய்யப்பட்டு தொகுக்கப்பட்ட கதை நூலேயாகும். இராமாயணங்களுக்கான மூலக்கரு இருக் வேதத்திலிருந்து எடுக்கப்பட் டுள்ளது என்று தெரிகிறது. ''இருக் வேதத்தில் (இருக் வேதம் -457) சீதையென்னும் பெண் வயல் நிலங் களுக்கு தெய்வமாகவும் உழவு காலமாகவும் சொல்லப்படுகிறாள்; மழைக் கடவுளாகச் சொல்லப்படும் இந்திரன் சீதையின் கணவனாக அங்கே சொல்லப் படுகிறான்.வால்மீகி இராமாயணத்தில் உழவுச் சாலின் முனையில் நிலத்திலிருந்து சீதை பிறந்தாள் என்றும், முடிவில் நிலத்தில் புகுந்து மறைந்தாள் என்றும் சொல்லப்படுகிறது.

(சீதை என்றாலே ஏர் கலப்பை என்று தான் பொருள்).

'ராம்' என்ற சொல் இந்திரனுக்குரிய ஒரு பெயராகவே இருக் வேதத்தில் (இருக் வேதம்- 110, 151, 152) பல இடங் களில் காணப் படுகிறது.''

(கேம்பிரிட்ஜ் இந்திய வரலாறு -தொகுப்பு 1 -பக்கம் 223- ஆக்ஸ்ஃபோர்டு- இந்திய வரலாறு-பக்கம் 118). ["விடுதலை'' அசுரன் மலர் 2006, பக்கம்- 16] ''உலக அனுபவத்தை வைத்து ஆராய்ந்து யோசித்தால், வால்மீகி ரிஷியானவர் இராமாயணத்தை பாடியதற்கு முன்னமேயே, அதாவது புராதன காலந்தொட்டே சீதா ராமசரித்திரம் மக்களிடை எழுத்து வடிவம் பெறாமலே பல நூற் றாண்டுகள் வாய்வழிக் கதையாக வழங்கி வந்திருப்பதாகத் தோன்றுகிறது.

கர்ண பரம்பரையாக முன்னமேயே இருந்த ராம சரிதத்தை எடுத்துக் கொண்டு, அதற்கு வால்மீகி பகவான் நூல் வடிவம் கொடுத்தார்போல் தோன்றுகிறது. அதனாலேயே கதையில் பல சிக்கல்கள் ஏற்பட்டதென்றும் ஊகிக்கலாம்'' என்று இராஜாஜி கூறு கிறார். [இராமாயணம்-வால்மீகியும் கம்பரும், பக்கம் -15]

புத்த மதத்தினரின் ஜாதகக் கதை களில் (போதிசத்துவரின் கதைகள்) வரும் இராமாயணம் தான் முதல் முதலாக வழங்கப்பட்ட இராமாயணம் என்று தெரியவருகிறது. தந்தை பெரியார் அவர்கள் கூறு வது போல், வால்மீகி இராமாயணத்தில் புத்தரைப் பற்றி வருவதால் புத்தர் காலத்திற்கு பின் (2500 ஆண்டு களுக்குள்) தான் வால்மீகி இராமா யணம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

வால்மீகி இராமாயணம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். சுமார் 50க்கும் மேற்பட்ட இராமா யணக் கதைகள் நாட்டில் உலவி வருகின்றன. காளிதாசரின் இரகு வம்சம் என்கிற காவியத்திலும் இராமாயணக் கதை வருகிறது;

அதிலும் சம்பூகன் வதம் பற்றி வருகிறது. அதில் சம்பூகன் என்கிற சூத்திரன், நான்காம் வருணத்தவன், தலைகீழாக மரத்தில் தொங்கிக் கொண்டு இராம ராஜ்ஜி யத்தில் தவமிருப்பதால் வருணதர்மம் கெட்டு, பார்ப்பன சிறுவன் இறந்து விட்டதாகவும்; இதை கேட்ட இராமன் புஷ்பக விமானத்தில் சென்று, சம்பூ கனை வாளால் வெட்டிக் (தலையை சீவி) கொன்று வருணதர்மத்தை காத் தான் (16வது சருக்கம்) என்று உள்ளது.

இராமாயணம் கட்டுக்கதை என் றாலும், பார்ப்பனர்கள் புராணங்களை யும், வேதங்களையும், சாஸ்திரங்களையும் தனக்கு சாதகமாக அமைத்துக் கொண்டு தான் வாழவும், மற்றவர்களை அழிக்கவும், தாழ்த்தவும், இழிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர்; இதனால் எழுந்தது தான் ஆரிய திராவிட போராட்டம்.

தகவல்: செ.ரெ. பார்த்தசாரதி, சென்னை
18-8-2012

தமிழ் ஓவியா said...

சிந்தனை துளிகள்

சந்தேகம் விவேகத்தின் தொடக்கம், முடிவல்ல.
ஒரு வினாடி நாம் செய்யும் தவறு வாழ்க்கை முழுவதும், வேதனைகளை தேடித் தருகிறது.
துருப்பிடித்து தேய்வதைவிட உழைத்துத் தேய்வது மேலாகும்.
கருணையும், இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்றழைக்க முடியாது.
சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன.
பலவீனருடைய பாதையில் தடையாயிருக்கும் கல், பலமுள்ளவர்களின் பாதையில் படிக்கல்லாய் இருக்கும்.

தமிழ் ஓவியா said...

வெப்பமானி எப்போது முதலில் உருவாக்கப்பட்டது..?



செயலுக்குரிய வெப்பமானி உடலின் வெப்பத்தை அளக்க பதினாறாவது நூற்றாண்டு முடியுமுன் இத்தாலிய வான்கணிப்பாளர் (astronomet) கலிலியோவால் (Galileo) முதன் முதலாக உருவாக்கப் பெற்றது.

அது முதல் வளி வெப்பமானியாய் (air thermometer) சூட்டையும் தணிப்பையும் (heat & cold) குத்து மதிப்பாக அடையாளம் காட்டிற்று. பின்பு வளிக்குப் பதிலாகச் சாராய வகையைப் பயன்படுத்தி அவர் அதனுடைய கணிப்புத் திறனை மிகுதிப்படுத்தினார்.

பெரும்பாலான வெப்பமானிகள் வேலை செய்வதற்கான கோட்பாடு என்னவெனில், ஒழுகு பொருள் அல்லது வளி பயன்படுத்தப்பட்டு வெப்பநிலை மாற்றங்கட்கேற்ப அதன் கொள்கலனாகிய கண்ணாடியை விட விரைவாக விரிவடைந்து அல்லது குறைந்து நின்று அளந்துகாட்டித் தெரியப்படுத்துவதாம். எனவே வண்ண ஒழுகுபொருள் குறுகலான இலேசான கண்ணாடிக் குழாய்க்குள் அமைந்து, விரிவின் வேறுபாட்டை ஒழுகுபொருள் படிப்படியான எண்ணிட்ட அளவுகோலில் எங்கு நிற்கிறது என அறிவித்து வெப்ப அளவைத் தெரிவிக்கும்.

ஏறத்தாழ 1714இல் ஜெர்மானிய அறிவியலார் கேபிரியல் டேனியல் பேரன்ஹீட் (Gabriel Daniel Fahrenheat) ஒரு வெப்பமானியை வடிவமைத்து முதன்முதலாகப் பாதரசத்தை (mercury) அளக்கும் இயக்கியாகப் பயன்படுத்தினார். அத்துடன் தன் பெயரால் அழைக்கப்பட்ட 32 டிகிரியை தண்ணீர் உறைநிலை அளவாகவும் 212 டிகிரியை கொதிநிலை அளவாகவும் கொண்ட அளவுகோலை அறிமுகப்படுத்தினார். பாதரசம் பெரும்பாலான வெப்பமானிகளில் இன்றும் பயன்படுத்தப் படுகிறது. ஏன் எனில் பாதரசத்தின் கொதிநிலை 674 டிகிரி ஆகவும் கீழ் உறைநிலை -83 டிகிரி ஆகவும் இருப்பதாலேயே ஆகும்.

சாராய வகை வெப்பமானி இன்றும் சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏறத்தாழ 1731 ஆம் ஆண்டில் ரேனேடே(rene de Reaumur) என்ற பிரெஞ்சு இயற்கையறிவு நிபுணரால் இது கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும். அதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்வீடிஷ் வான் கணிப்பாளர் அண்டர்ஸ் செலிசியஸ்(Anders Celsius) என்பவர் நூற்றியல் அளவைக் கொண்ட நூற்றியல் வெப்பமானியை முதலாவதாகப் பயன்படுத்தினார் உறை நிலை அளவு 0 டிகிரி ஆகவும் கொதிநிலை 100 டிகிரி ஆகவும் இதில் அளவுகள் அமைந்துள்ளன. 18-8-2012

தமிழ் ஓவியா said...

ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் மூத்த மகளும் - மருமகனும் எழுதியுள்ள கடிதம்



இடமிருந்து வலம்: அன்பெழில், வெங்கடேஷ், டாக்டர் ஜெப்ரே, டாக்டர் சுஜாதா, தமிழர் தலைவர், ஜெயன், ரேகா, டாக்டர் நாகம்மாள் வெங்கடேசன்.

Nagu and Venkatesh
4521 Sherman Oaks Avenue, # 1A
Sherman Oaks, CA 91403
nvenk0823@aol.com
August 16, 2012

Dear Professor Veeramani:

It indeed was a pleasure and privilege to have had the opportunity to see you last week. Our daughter's family was truly impressed by the legacy of our grand uncle Periyar. They greatly appreciated your life long dedication in maintaining and propagating that legacy. But for you, the movement of social justice and reform would not have survived, since most of our so called leaders are politicians and therefore, are highly compromised. Needless to say, they are motivated by power and the resulting material gain. Periyar Thidal is an intellectual oasis amidst a vast and what seems to be an endless desert of ignorance and greed. Reading the inscriptions adorning the path to the torch of enlightenment, gives us hope and optimism; makes us believe that finer aspects of human life such as altruism and rationalism do exist. Our grandson Jayan was born on September 17, 2002. He read every plaque and understood almost all. His IQ is high and goes to the gifted and talented program in school. But, the most impressive aspect of the young boy is his genuine nature, extreme modesty and incomparable goodness. When asked, "What was the most attractive statement among the inscriptions?", his reply was "There is No god!". There was no hesitation. Maybe the message is written in his genes! It is a quintessential example of the premise that character, nature and intelligence are prewired in individuals. Having said that, we also believe that nature can only do so much, it is nurture of the right kind that shapes human beings. We, like you, attribute the malfunctioning of humanity in general, to defective nurturing.

Once again thank you for taking the time to talk to us and we look forward to seeing you again in the near future. We spend our time between Los Angeles and Austin, Texas. If you are in or near Los Angeles or Austin, please let us know, so that we can meet.
With best regards
Nagu and Venkatesh

தமிழ் ஓவியா said...


ஆங்கிலத்தின் தமிழாக்கம்:
கடந்த வாரம் தங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததை எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதி மகிழ்ச்சி அடைகிறேன்.

தந்தை பெரியார் அவர்களின் கொள்கை மாண்பினால் எனது மகளின் குடும் பத்தினர் உண்மையில் கவர்ந்து ஈர்க் கப்பட்டுள்ளனர். அந்தக் கொள்கை, கோட்பாடுகளைப் பரப்புரை செய்யும் பணியைத் தங்களின் வாழ்நாள் கடமையாக ஏற்றுக் கொண்டிருப்பதை அவர்கள் பெரிதும் போற்றிப் பாராட் டுகின்றனர். உங்களது பெருமுயற்சி இல்லாமல் போயிருந்தால், சமூக நீதி இயக்கமும், சமூக சீர்திருத்த இயக் கமும் நிலைத்திருக்கவே முடிந் திருக்காது. நமது தலைவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளே என்ப தால், அவர்கள் தங்கள் கொள்கை, கோட்பாடுகளில் தங்களுக்குத் தேவையானபோதெல்லாம் சமரசம் செய்து கொள்வதற்குத் தயங்குவதே யில்லை. அரசியல் அதிகாரம், பொருளாதார லாபம் ஆகியவையே அவர்களின் குறிக்கோளாக இருக் கிறது என்பதை கூறத் தேவையில்லை. அறியாமை, பேராசை என்னும் ஒரு நீண்ட, எல்லையற்ற பாலைவனத் தினிடையே உள்ள ஒரு நுண்ணறிவுப் பசுஞ்சோலையாக விளங் குவது பெரியார் திடல்.

அங்கிருக்கும் விழிப்புணர்வுச் சுடருக்குச் செல்லும் பாதையின் இரு மருங்கையும் அழகு படுத்தும் வகையில் பொறிக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் அவர்களின் பொன் மொழிகளைப் படிப்பதே நமக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஆக்க பூர்வமான உணர்வையும் அளிப்பதுடன், பகுத் தறிவுக் கோட்பாடு மற்றும் பிறர் நலன் பேணும் பண்பு ஆகிய அருமையான அம்சங்களும் நமது வாழ்க்கையில் இருக்கவே செய்கின்றன என்று நம்மை நம்பச் செய்கின்றது.

எனது பேரன் ஜெயன் 2002 செப்டம்பர் 17 அன்று பிறந்தவன். அங்கிருந்த அனைத்துப் பொன்மொழிகளையும் படித்து அவன் புரிந்து கொண்டான். மிக உயர்ந்த அளவினதாக உள்ள அவனது நுண்ண றிவுத் திறன் பள்ளியில் திறமை மிகுந்த செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற் கான வாய்ப்பை அளித்துள்ளது. என்றா லும் இச் சிறுவனிடம் அமைந்துள்ள, எவரையும் மிகுந்த அளவில் கவரக் கூடியவை உண்மையாகவும் இயல்பாக வும் இருப்பது, மிகுந்த அடக்க உணர்வு, ஈடு இணையற்ற நற்தன்மை ஆகிய அவனது பண்புகள்தாம்.

நீ படித்த தந்தை பெரியார் அவர்களின் பொன்மொழிகளில் உன்னை மிகவும் கவர்ந்தது எது என்று அவனிடம் கேட்ட போது, கடவுள் இல்லை என்பதுதான் என்று உடனே சற்றும் தயங்காமல் பதில் கூறினான். ஒரு வேளை அந்தச் செய்தி அவனது மரபணுவிலேயே இருப்பதோ என்னவோ!

குணநலன், இயல்பு மற்றும் நுண் ணறிவு ஆகிய பண்புகள் தனிப்பட்ட மனி தர்களுள் பிறப்பிலேயே இணைக்கப்படு கின்றன என்ற எண்ணத்துக்கு, கருத் துக்கு இது ஒரு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும். இவ்வாறு கூறுவதோடு, ஓரளவுக்குத்தான் இயற்கை இதனைச் செய்ய முடியும் என்பதிலும், மிகச் சிறந்த பண்புகள், குணநலன்கள் கொண்டவர் களாக அவர்களை வடிவமைப்பது மிகச் சரியான முறையில் அவர்களை வழிகாட்டி நடத்திச் செல்வதுதான் என்பதிலும் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். பொதுவாக மனிதர்கள் தவறான செயல் களில் ஈடுபடுவதற்கு அவர்களை வளர்க்கும், வழி நடத்தும் முறையில் உள்ள குறைபாடுகளே காரணம் என்பதை உங்களைப் போலவே நாங்களும் கருதுகிறோம். எங்களுடன் பேசுவதற்கு நீங்கள் தங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கியதற்கு மறு படியும் நாங்கள் எங்களது நன்றி யினைத் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் உங்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். எங்களது நேரத்தை லாஸ் ஏஞ்சல் சுக்கும் ஆஸ்டினிலும் நாங்கள் செலவழித்தோம். லாஸ் ஏஞ்சல்ஸ் அல்லது ஆஸ்டினுக்கு வரும் வாய்ப்பு இருந்தால், தயவு செய்து எங்களுக்குத் தெரிவிக்கவும். நாங்கள் வந்து உங்களை சந்திக்கிறோம்.

மிக்க அன்புடனும், மிகுந்த மரியாதையுடனும்

நாகு மற்றும் வெங்கடேஷ்

(மறைந்த ஈ.வெ.கி. சம்பத் அவர் களின் மூத்த மகள் நாகு என்ற டாக்டர் நாகம்மை - அவரது இணை யர் டாக்டர் வெங்கடேஷ், உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டீஸ் ஏ. அழகிரிசாமி அவர்களது மகன் ஆகியோர் எழுதிய கடிதம் இது)
18-8-2012

தமிழ் ஓவியா said...

முதலில் படியுங்கள்!

திராவிடர் இயக்கத்தின் சாதனைகள் என்பவை அடிப்படையானவை - மேலோட்டமாக அதனைப் பார்க்கக் கூடாது. எடுத்துக் காட்டாக கல்லூரிப் படிப்பைப் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றால் சென்னைக்குத் தான் வரவேண்டும் என்ற நிலை.

சென்னைக்கு வந்தால் எங்கே தங்கிப் படிப்பது. விடுதிகள் எல்லாம் பார்ப்பனர்களிடத்தில். பார்ப்பனரல்லாதார் அங்குத் தங்கி உணவருந்த முடியாது. வேண்டுமென்றால் எடுப்புச் சாப்பாடு வாங்கிக் கொள்ளலாம். இந்த நிலையில்தான் டாக்டர் சி. நடேசனார் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக திராவிட சங்க விடுதி (னுசயஎனையை ஹளளடிஉயைவடி ழடிளவநட) என்ற பெயரில் விடுதியைத் தொடங்கினார். (1916)

இன்றைக்கு அதன் அருமையை உணர முடியாமல் இருக்கலாம். அந்தக் கால கட்டத்தில் பாலை வனத்தில் ஒரு சோலைவனம் என்றே அதனைச் சொல்ல வேண்டும். டாக்டர் நடேசனார் அன்று தோற்றுவித்த திராவிடர் சங்கம், ஆண்டுதோறும் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற பார்ப்பனர் அல்லாத மாணவர்களை அழைத்துப் பாராட்டியது.

டாக்டர் டி.எம்.நாயர், ஆர்.கே.சண்முகம் போன்றவர்கள் எல்லாம் அத்தகு கூட்டங்களில் பங்கு கொண்டு பார்ப்பனர் அல்லாத மாணவர்களைப் பாராட்டுவார்கள் - ஊக்கப்படுத்துவார்கள்.

டாக்டர் டி.எம். நாயர் ஒரு முறை மாணவர்களைப் பாராட்டியபோது கீழ்க்கண்ட உணர்ச்சி மிகு சொற்களைப் பயன்படுத்தினார்.

“Awake, Arise or Be For Ever Fallen”

விழித்துக் கொள்ளுங்கள்! எழுச்சி பெறுங்கள்!! இன்றேல் என்றும் நீவிர் வீழ்ந்து பட்டோராவீர்!!!

என்பதுதான் அந்த எழுச்சியூட்டும் வீரம் செறிந்த வரிகள்.

டாக்டர் நடேசனார் அவர்களால் உண்டாக்கப்பட்ட விடுதியில் படித்த மாணவர்கள்தாம் - பிற்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக வந்த எஸ்.ஜி.மணவாள ராமானுஜம், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார் போன்றவர்கள்.

திராவிடர் இயக்கம் என்ன செய்து சாதித்துக் கிழித்தது என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உளறும் பொறுப்பற்றவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு சமூகமும் முன்னேற வேண்டுமானாலும் அந்தச் சமூகத்திற்குக் கல்வி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதனைச் செய்து கொடுத்தது திராவிடர் இயக்கம். (சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக்கூடாது என்று பார்ப்பனர்கள் சாத்திர மயமாக்கி வைத்திருந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.)

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) இரு முறை ஆட்சிக்கு வந்த போதும் செய்த முதல் செயல் என்ன? 1937-1939 இல் 2,500 கிராமப் பள்ளிகளை மூடினார் என்றால் அதன் தன்மை என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டாமா?

ஒரு காலத்தில் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றால் மாணவர்களைத் தேர்வு செய்து சேர அனுமதிக்கும் அதிகாரம், உரிமைகள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்களுக்குத் தான் உண்டு. அந்தக் கால கட்டத்தில் பார்ப்பனர்கள்தான் பெரும்பாலான கல்லூரிகளின் முதல்வர்களாக இருந்ததால் பார்ப்பனர் அல்லாதார் கல்லூரி களுக்குள் கால் பதிக்க முடியாத நிலை இருந்தது.

இந்த ஆதிக்கக் கதவடைப்பிலிருந்து பார்ப்பனர் அல்லாத மாணவர்களை மீட்டெடுக்க கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்குக் குழுக்களை நீதிக்கட்சி ஆட்சி ஏற்படுத்தியது.

பிற்காலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ராஜாஜி அத்தகைய குழுக்களைக் கலைத்துவிட்டார்.

இப்படி பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டக் களமாகத்தான் கல்வித் தளம் அமைந்திருந்தது.

முரசொலி மாறன் அவர்களால் எழுதப்பட்ட திராவிட இயக்க வரலாற்று நூலில் ஏராளமான தகவல்கள் தாராளமாகக் கிடைக்கும்.

தமிழ்த் தேசியம் பேசுவோர் இது போன்ற நூல்களை முதலில் படிக்கட்டும்! 18-8-2012

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

செல்களுக்குத் தேவை உணவு,பிராணவாயு, நீராதாரப் புறச்சூழ்நிலை. இவை இருந்தால் தான் செல்கள் இருக்க முடியும். உணவு, மற்றும் தண்ணீரை உடலில் உள்ள ரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் வழங்கு கின்றன, இவைதான் கழிவுகளை யும் வெளியேற்றுகின்றன. செல் களுக்குத் தேவையான ரசாயனங் கள் மற்றும் உணவுப் பொருட் களை தாங்கியுள்ளது ரத்தமாகும்.
நீருக்குள் வாழும் உயிரி னங்கள் உதாரணமாக மீன் போன்ற உயிரினங்களுக்கு மனிதர்களுக்கு இருப்பது போல் நுரையீரல்கள் கிடையாது. மூச்சு உறுப்பாக அவற்றிற்கு இருப்பதன் பெயர் 'கில்ஸ்' என்று அழைக்கப் படுகிறது. தண்ணீரிலிருந்து ஆக்சி ஜனை இவை எடுக்க முடியும்.
நமது ஜீரண அமைப்பு என்பது ஒரு நீளமான டியூப் போன்ற அமைப்பாகும். வாயின் உட்பகுதியிலிருந்து துவங்கி ஆசனாவாய் வரை நீண்ட டீயூப் ஆகும். பெரியவர்களுக்கு இது நீளமானது இதனால்தான் உணவுப்பொருட்கள் இதன் வழியாகச் செல்ல 10 முதல் 20 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும்.
நாம் தினமும் 3 லிட்டர் தண்ணீரை உடலிலிருந்து இழக்கிறோம், அதாவது சிறுநீர், வேர்வை, நமது மூச்சின் மூலமும் இழக்கிறோம். மேலும் வேர்வையி ல் கூடுதல் உப்பையும் இழக் கிறோம். அதே போல் நாம் மூச்சை வெளியே விடும்போது கரியமிலவாயுவின் வேஸ்ட்டை வெளியேற்றுகிறோம்.
குளிரெடுக்கும்போது நம் உடல் நடுங்குகிறதன் காரணம் தெரியுமா? மூளைக்கு அடியில் இருக்கும் 'ஹைபோதலாமஸ்' என்ற ஒன்று உஷ்ணம் குறைவாக இருப்பதை உணர்கிறது. உடனே தைராய்டு சுரப்பிக்கு செய்தி அனுப்புகிறது. உடனே தைராய்டு சுரப்பி மெடபாலிக் விகிதத்தை அதிக்ரிக்கிறது. உடனே உடற் தசைகள் சுருங்கி விரிகிறது. இதன் மூலம் உஷ்ணம் உருவாக்கப்படு கிறது. நரம்புகள் உடனே சருமத்திற்கு செய்தி அனுப்புகிறது.உடனே சருமத்தின் துளைகள் சுருங்குகிறது, இதன் மூலம் உஷ்ணத்தை உடலுக்குள் பாது காக்கிறது. 18-8-2012

தமிழ் ஓவியா said...

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றக்கோரி குமரி மாவட்ட கழகத்தினர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்


குமரி மாவட்ட தோழர்கள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

கன்னியாகுமரி, ஆக.18- கன்னியாகுமரி மாவட் டத்தில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் இருக்கும் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும், மத விழாக்களில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப் படும் அலங்கார வளைவு களை அனுமதிக்கக் கூடாது. அதுபோல மத விழாக்களில் வழிபாட் டுத்தலங்களுக்கு வெளியே ஒலிபெருக்கி களை அனுமதிக்கக் கூடாது ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன்,மாவட்ட அமைப்பளார் ஞா. பிரான்சிஸ், பொதுக் குழு உறுப்பினர் ம.தயா ளன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாவட்ட மாணவரணி அமைப் பாளர் இல.செந்தமிழ், மாவட்ட இளைஞரணி செயலாளர் த.சுரேஷ், மாவட்ட மகளிரணி தலைவர் ச.ச.மணிமே கலை, நாகர்கோவில் நகர இளைஞரணி தலைவர் மு.சேகர், கழக தோழர்கள் கோட்டார் ச.ச.கருணாநிதி, கராத்தே மாஸ்டர் தலக்குளம் ஆ.சிவக்குமார், பள்ளம் லார்சன் பின்றோ, மந் தாரம்புதூர் மா.ஜான் மதி, கழக ஆதரவாளர் வி.இக்னேசியஸ் ஆகி யோர் 16.8.2012 அன்று காலை 11.30 மணிக்கு நாகர்கோவிலில் இருக் கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஸ்குமாரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொடுத்த மனுவின் நகலை குமரி மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் போன்றோருக்கு நடவடிக்கைக்காக மாவட்ட செயலாளர் அனுப்பிவைத்துள்ளார். 18-8-2012

தமிழ் ஓவியா said...

மாற்றம், நமக்குள் தேவை

தோழர்களே!

மனிதனுக்கு வெட்கமும் ரோஷமும் ஏற்படு வதற்காகவே சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு சமூகப் புரட்சியில் ஏற்பட வேண்டியதே யொழிய சிரிப்பு, விளையாட்டில் ஏற்படக் கூடியதில்லை. இதற்காக அநேக தொல்லைகளை அனுபவிக்க வேண்டி வரும்.

அநேக காரியங்கள் மற்றவர்களால் நாம் துன்பமும் இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும், கீழ் நிலைமைக்கும் ஆளாகி வருகின் றோம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல், நமக்குள் ஒரு பெரிய மன மாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைதல் என்பது ஒரு நாளும் முடியாத காரியமாகும்.

சமூகத்தில் மேல் சாதி, கீழ் சாதி, அடிமை சாதி என்பவர்கள் இருப்பதோடு ஆண், பெண் தன்மை களில் உயர்வும் தாழ்வும் இருந்து வருகின்றது. இவை தவிர ஏழை - பணக்காரன், முதலாளி - தொழிலாளி தன்மைகளும் இருந்து வருகின்றன.

இவற்றுள் சில இயற்கையாக ஏற்பட்டவை யாகவும், இவ்வளவுக்குக் காரணம் மனிதன் அல்ல வென்றும், சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும் பொருந்திய கடவுளால் ஏற்பட்டவை என்றும் சொல்லப்படுகிறது. இவற்றையே மேல்நிலையில் உள்ளவனும், கீழ் நிலையில் உள்ளவனும் நம்பிக் கொண்டிருக்கிறான். மூடநம்பிக்கைகள்தாம் வெகுகாலமாக மனித சமூகத்தில் எந்தவித மாறு தலும் ஏற்படுவதற்கில்லாமல் தடுத்துக் கொண்டு வருகின்றன. சாதி வித்தியாசங்களுக்கும் சாதிக் கொடுமைகளுக்கும் கடவுள்தான் காரணம் என்று எண்ணிய பிறகு யாரால்தான் பரிகாரம் செய்ய முடியும்?

எந்த மனிதனும் மற்ற சாதியைப் பற்றிச் சந்தேகப்பட்டாலும், தன் சாதியைப் பற்றி நம்பிக்கையாகவும் மேன்மையாகவும் கற் பித்துக் கொண்டு, மற்றவர்களைத் தாழ்த்திப் பெருமையடைகிறான். இந்தக் குணம் பார்ப்பானிடத்தில் மாத்திரமல்ல, எல்லா சாதியாரிடமும் இருந்து வருகின்றது. சாதி பேதம் ஒழிவதை இழிவாய்க் கருதுகிறான்; சாதிக் கலப்பை விபச்சாரித்தனமாக எண்ணுகிறான்! இந்த மனப்பான்மை சாதி ஒழிப்புக்கு எமனாய் இருக்கிறது.

அஸ்திவாரத்தில் கையை வைத்துச் சாதிகளை ஒழிப்பதற்கு இன்று இந்த நாட்டில் சுயமரியாதை இயக்கம் தவிர வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள்.

திருவள்ளுவர், கபிலர், இராமானுஜர் முதலிய புராணக்காரர்களும், பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் முதலிய மத சம்பந்தமான சில புதிய முயற்சிகளும் எல்லாம் உண்மையறியாமலும், உலகமொப்புக்கும் தனிப்பட்ட சமூக சுயநலத்தை முன்னிட்டும் செய்யப்பட்ட காரியங்களே தவிர, மனித சமூகத்தில் பிறவியின் பேரால் உள்ள சாதி பேதம் அடியோடு ஒழியத்தக்க மாதிரிக்கோ, ஒழியும்படியாகவோ செய்த காரியங்கள் அல்ல. ஆதலால், சாதியை அடியோடு ஒழிக்க எவரும் முயற்சித்ததில்லை. மற்ற பல சாதி மக்களின் முயற்சிகள் எப்படி இருக்கின்றன என்று பார்த் தாலோ, அவைகளும் தாங்கள் எப்படியாவது மேல் சாதிக்காரர்கள் என்று மதிக்கப்பட வேண் டும் என்கிற முயற்சிகளாகவே இருக்கின்றன.

சாதியில்லாதவர்களும் கலப்பு சாதிக் காரர்களும் தாங்கள் ஒரு கலப்பற்ற சாதியைச் சொல்லிக் கொள்ள முடியாமல் போய்விட்டதே என்று வெட்கப்படுகிறார்களேயொழிய, தங்களைப் பொறுத்த வரை சாதியொழிந்ததே என்று யாரும் திருப்தியடைவதில்லை. இந்தத் தொல்லைகள் அடியோடு ஒழிய வேண்டு மானால் சுயமரியாதை இயக்கத்தில்தான் இட மிருக்கிறது; சுயமரியாதை இயக்கத்தால்தான் முடியும். மற்றபடி எப்படிப்பட்ட சீர்திருத்தவாதி யானாலும் காரியத்திற்கு உதவ மாட்டான்.

- பெரியார்
(பட்டுக்கோட்டை உரை, ‘குடிஅரசு’ 5.4.1936)

தமிழ் ஓவியா said...

பெரியாரின் இலட்சியங்கள்! - ஜி.டி.நாயுடு



பெரியார் செய்யும் பணிகள் அநேகர் எண்ணுகின்றபடி அரசியலில் ஈடுபட்டதல்ல. மக்களுக்கு பகுத்தறிவை உபயோகிக்கக் கற்றுக் கொடுக்கும் அறிவுப்பிரச்சாரம் தான். எனக்கும் எந்த அரசியல் கட்சிகளில் சேர்ந்தாலும் அதிக நன்மை செய்யக் கூடும் என்ற நம்பிக்கையில்லை. அதனாலே பெரியாரால் வகுக்கப்பட்ட அநேக கொள்கைகளை வெகுகாலமாக ஆதரித்து சில கொள்கைகளை நடைமுறையில் அவரை விட அதிவேகத்தில் கடைப்பிடித்தும் வந்திருக்கின்றேன்.

இவருடைய லட்சியங்களில் அநேகம் நம்நாட்டிற்கு அவசியம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. வயதிலும், அறிவிலும் மிகப் பெரியவர். மிக்க இளவயதுள்ள முறுக்கமான வீரனைப்போல் தைரியத்தோடு தீவிரமாகச் செல்கின்றார். இவருடைய லட்சியங்களை எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள் என்பதற்கு அறிகுறியாகவே இன்று அரசாங்கம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்தும் கூட பெரியாருக்கு எந்த எதிர்ப்பும் இன்றி அமோகமான வரவேற்போடு ஊராண்மைக் கழகம், நகராண்மைக் கழகங்கள் முதலிய பல கழகங்கள் அழைத்துக் கொண்டிருப்பதே சான்றாகும்.

(4.7.54-இல் வேலூர் நகரமன்றத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து ஜி.டி.நாயுடு அவர்கள், விடுதலை 6.7.1954)

தமிழ் ஓவியா said...

பெரியார் மாளிகைக்குத் தீ வைக்க முயற்சி!



1953-இல் தந்தை பெரியார் அவர்கள் பிள்ளையார் (உருவச்சிலை) உடைப்புப் போராட்டத்தினை நடத்திய நேரத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்தும், அதன்வழி இயக்கத்தவர் பெற வேண்டிய பாடம் குறித்தும் 30.5.1953 விடுதலையில் முக்கிய அறிக்கையாக தலையங்கத்தில் அய்யா அவர்கள் எழுதியுள்ளதாவது:

... நான் 28ஆம் தேதி (28.5.1953) பிற்பகல் திருச்சிக்கு 55 மைல் தூரமுள்ள பாபநாசத்தை அடுத்த கோவில் தேவராயம்பேட்டைக்கு கழகக் கிளை திறப்பு விழாவிற்குச் சென்றுவிட்டு, அன்று இரவு சுமார் 10.30 மணிக்கு திருச்சிக்கு - என் ஜாகைக்கு வரும்போது கழகக் காம்பவுண்டிற்குள் சுமார் 1000பேர்கள் வரை தடிகள், கத்திகளுடன் இருந்து உற்சாகமாக ஆத்திரப் பேச்சுகள் பேசிக் கொண்டிருந்தனர். நான் குழப்பத்துடன் வண்டியை நிறுத்தினேன். ஆனால் - பெரியார் வாழ்க என்ற ஆரவாரத்திற்கிடையே என்னை வரவேற்றனர். என்ன விஷயம் என்று கேட்டேன்.

ஒரு வாலிபனை இழுத்துக் காட்டி, அவனிடமிருந்த நெருப்புப் பற்றவைக்கத் தக்க ஒரு நெருப்புப் பந்தத்தைக் காட்டினார்கள். விஷயம் என்னவென்றால் - என் மாளிகையை கொளுத்த ஒரு கூட்டம் திட்டமிட்டு வந்ததாகவும், அந்தச் செய்தி நம் மக்களுக்கு எட்டி, ஊர் திரண்டு வந்ததாகவும், அப்போது சிலர் ஓடிவிட்டதாகவும், இந்த வாலிபனை ஓடிப்பிடித்ததாகவும் சொல்லியவுடன், போலீசாருக்குத் தகவல் தெரியப்படுத்தியிருப்பதாகவும் சொன்னார்கள். இது ஒரு பார்ப்பன மிராசுதார் ஏற்பாடு என்றும், சில பார்ப்பன வக்கீல்களின் மூளை வேலையென்றும் கூறி என்னை, உடனே மாடியில் படுத்துக் கொள்ளும்படி தட்டிக் கொடுத்து அனுப்பி விட்டனர்.

பின்னர் போலீஸ் வந்தவுடன், அவர்களை வைத்து எதிரிகள் ஓடிய வழியை, எதிர் காம்பவுண்டுக்குள் போய் பார்த்தனர். எதிர் காம்பவுண்டு சுவரின் உட்புறம் மற்றும் 2, 3 பந்தங்களும் ஒரு பாட்டில் பெட்ரோலும் இருக்கக் கண்டு எடுத்தார்கள். போலீசார் அந்த வாலிபரை அழைத்துக் கொண்டு, இவைகளையும் எடுத்துப் போய் விட்டனர்.

தமிழ் ஓவியா said...

எது தம்பி வேண்டும்?



(ஒரு தோழர், இந்தக் கொள்கை சிறந்ததா, அந்தக் கொள்கை சிறந்ததா? எந்தக் கட்சி உயர்ந்தது? என்று பலப்பல பிரச்சினைகளைப் பற்றிய விளக்கம் விசாரிக்கும் முறையில் புரட்சிக்கவி பாரதிதாசனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
கவிஞர், அக் கடிதத்தை கண்டார். தம்பி, ஏதேதோ பிரச்சினைகளை எண்ணித் தவிப்பதையும் தடுத்து, எது முக்கியமான பிரச்சினை என்பதையும் விளக்கி, அதன் மூலமாகவே தமது கருத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்து, ஒரு கவிதைக் கடிதம் தீட்டி அனுப்பினார். அது இது.)
கொல்லையிலே ஒரு சிட்டு - நல்ல கூட்டினிலே ஒரு கிள்ளை
சொல்லும் இவற்றினில் யாது - ஒரு துன்பம் இல்லாதது கூறு.
முல்லையிலே ஒரு வண்டு - பணமூட்டையின் மேல் ஒரு செல்வன்
இல்லை என்னாத நல்வாழ்வை நீ - இந்த இரண்டினில் விளக்கு
கோயில் பார்ப்பனர் வேதம் - குப்பை கூட்டிடுவாள் தமிழ்ப்பேச்சு
தூயதுயாது சொல் தம்பி - அன்றித் தொல்லை விளைப்பது யாது?
வாயிலிலே கொஞ்சும் ஏழை - சிலைவார்க்குந் திருப்பணியாளன்
ஈய நினைத்திடும்காசை - நீ யாருக்குநல்குவாய் தம்பி.
ஊருக்கு உழைத்திடக் கேட்டார் - உனை யோகம்புரிந்திடச் சொன்னார்
யாருக்கு உடன்பட எண்ணம்நீ - உரை இந்தப்பேர் வையகத்துக்கே.
கார்விதைக்கும் தொழிலாளன் - நேர் கைலையை வேண்டிடும் சைவன்
யாரப்பனே நலம் செய்வோன் - உரை இந்தப்பேர் வையகத்துக்கே.
கற்சிலை செய்தகற்றச்சன் - இருகைதொழும் கோயிலின் வேலன்
நற்கலை ஈபவன் யாவன் - நீ நன்கு விளக்கிடு தம்பி.
முற்றும் இசைத் தொழிலாளி - வாய்மூடி அருள்செய்யும் கண்ணன்
நற்சுவை தந்தவன் யாவன் - நீ நன்றி செலுத்துதல் யார்க்கு?
கடவுள் அணிந்திட்ட மாலை - பூங்காவிற் சிரிக்கின்ற முல்லை
உனதுபட்ட நெஞ்சத்தில் தம்பி - நல்ல உயிர்கொண்டு சேர்ப்பது யாது?
படைகொண்ட மன்னவன் செங்கோல் - சிறுபண்ணையில் பொதுத்தன்மை எடைபோட்டு நீ கூறுவாயோ - இங்கு எது நன்மை எது தீமை, தம்பி.
நெய்தான் பிழையான் புதுநூல் - பிறர் நூல்கண்டு செய்திட்ட பெருநூல்
வையத்தில் எது தம்பி வேண்டும் - நீ வாய்விட்டு விள்ளுவாய் தம்பி.
உய்யும் புரோகிதத் தந்தை - அவன், உத்யோகம் பார்க்கும் மைந்தன்
செய்யும் திருத்தொண்டு இரண்டில் - தம்பி, செம்மையாம் ஒன்றினைக் கூறு
நைகின்ற பெண்டாட்டி பிள்ளை - தெருநடுவிலே தள்ளாடும் கிழவன்
அய்யோ எனச் சொன்னபோது - நீ யாருக்கு முன் உதவவேண்டும்?
திராவிட நாடு - 14.4.1946, பக்கம்-1

எது தம்பி வேண்டும்?



(ஒரு தோழர், இந்தக் கொள்கை சிறந்ததா, அந்தக் கொள்கை சிறந்ததா? எந்தக் கட்சி உயர்ந்தது? என்று பலப்பல பிரச்சினைகளைப் பற்றிய விளக்கம் விசாரிக்கும் முறையில் புரட்சிக்கவி பாரதிதாசனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
கவிஞர், அக் கடிதத்தை கண்டார். தம்பி, ஏதேதோ பிரச்சினைகளை எண்ணித் தவிப்பதையும் தடுத்து, எது முக்கியமான பிரச்சினை என்பதையும் விளக்கி, அதன் மூலமாகவே தமது கருத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்து, ஒரு கவிதைக் கடிதம் தீட்டி அனுப்பினார். அது இது.)
கொல்லையிலே ஒரு சிட்டு - நல்ல கூட்டினிலே ஒரு கிள்ளை
சொல்லும் இவற்றினில் யாது - ஒரு துன்பம் இல்லாதது கூறு.
முல்லையிலே ஒரு வண்டு - பணமூட்டையின் மேல் ஒரு செல்வன்
இல்லை என்னாத நல்வாழ்வை நீ - இந்த இரண்டினில் விளக்கு
கோயில் பார்ப்பனர் வேதம் - குப்பை கூட்டிடுவாள் தமிழ்ப்பேச்சு
தூயதுயாது சொல் தம்பி - அன்றித் தொல்லை விளைப்பது யாது?
வாயிலிலே கொஞ்சும் ஏழை - சிலைவார்க்குந் திருப்பணியாளன்
ஈய நினைத்திடும்காசை - நீ யாருக்குநல்குவாய் தம்பி.
ஊருக்கு உழைத்திடக் கேட்டார் - உனை யோகம்புரிந்திடச் சொன்னார்
யாருக்கு உடன்பட எண்ணம்நீ - உரை இந்தப்பேர் வையகத்துக்கே.
கார்விதைக்கும் தொழிலாளன் - நேர் கைலையை வேண்டிடும் சைவன்
யாரப்பனே நலம் செய்வோன் - உரை இந்தப்பேர் வையகத்துக்கே.
கற்சிலை செய்தகற்றச்சன் - இருகைதொழும் கோயிலின் வேலன்
நற்கலை ஈபவன் யாவன் - நீ நன்கு விளக்கிடு தம்பி.
முற்றும் இசைத் தொழிலாளி - வாய்மூடி அருள்செய்யும் கண்ணன்
நற்சுவை தந்தவன் யாவன் - நீ நன்றி செலுத்துதல் யார்க்கு?
கடவுள் அணிந்திட்ட மாலை - பூங்காவிற் சிரிக்கின்ற முல்லை
உனதுபட்ட நெஞ்சத்தில் தம்பி - நல்ல உயிர்கொண்டு சேர்ப்பது யாது?
படைகொண்ட மன்னவன் செங்கோல் - சிறுபண்ணையில் பொதுத்தன்மை எடைபோட்டு நீ கூறுவாயோ - இங்கு எது நன்மை எது தீமை, தம்பி.
நெய்தான் பிழையான் புதுநூல் - பிறர் நூல்கண்டு செய்திட்ட பெருநூல்
வையத்தில் எது தம்பி வேண்டும் - நீ வாய்விட்டு விள்ளுவாய் தம்பி.
உய்யும் புரோகிதத் தந்தை - அவன், உத்யோகம் பார்க்கும் மைந்தன்
செய்யும் திருத்தொண்டு இரண்டில் - தம்பி, செம்மையாம் ஒன்றினைக் கூறு
நைகின்ற பெண்டாட்டி பிள்ளை - தெருநடுவிலே தள்ளாடும் கிழவன்
அய்யோ எனச் சொன்னபோது - நீ யாருக்கு முன் உதவவேண்டும்?
திராவிட நாடு - 14.4.1946, பக்கம்-1

தமிழ் ஓவியா said...

எனக்கு விடுதலை கிடைக்கும் வரை என் பணி விடுதலைக்கே! - தமிழர் தலைவர்

திருச்சியில் நடைபெற்ற தி.க. பொதுக்குழு - ஒரு கண்ணோட்டம்

நான் ஒன்றரை மாதம் இங்கு இல்லாத கால கட்டத்தில் நமது இயக்கத்தில் அரும் பெரும் செல்வங்களாய் ஒளி வீசிய கழகச் செம்மல்கள் ஏராளம் பேர் மரணம் அடைந்தது எனக்குப் பெரும் துயரத்தைத் தந்தது.

கழகத் தோழர்களின் இழப்பு!

நூறு வயதைக் கடப்பார் என்று எதிர்ப்பார்த்திருந்த அய்யா திருவாரூர் எஸ்.எஸ். மணியம், பல ஆண்டு காலம் மாவட்டத் தலைவராக இருந்து அரும் பணியாற்றிய தரும்புரி எஸ்.கே. சின்னப்பன், மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக இருந்த அருமைத் தோழர் கோமல் மு. நடராசன் போன்ற தோழர்கள் எல்லாம் மறைந்துள்ளனர். இன்னும் ஏராளமான தோழர்கள், வீராங்கனைகள் மறைந்துள்ளனர்.

வீரவணக்கம் செலுத்துகிறேன்!

தமிழ் ஓவியா said...

அவர்களின் தன்னலமற்ற தொண்டுக்கெல்லாம் வீர வணக்கம் செலுத்தி என் உரையைத் தொடங்குகிறேன் என்று தம் உரையைத் தொடங்கினார் தமிழர் தலைவர்.

திராவிடர் கழகத் தோழர்கள் மறைவது சமுதாய விஞ்ஞானிகள் மறைவதற்கு ஒப்பானது தானே! தன் வீட்டுச் சோற்றைத் தின்று விட்டு ஊருக்கு உழைக்கும் ஒப்பற்ற இலட்சியவாதிகள் ஆயிற்றே! தன்னை அழித்து உலகுக்கு ஒளியூட்டும் கறுப்பு மெழுகுவர்த்திகள் அல்லவா!

வீரர்களை இழந்த படைத் தலைவர்

அத்தகைய இயக்கத்தின் தலைவர்தம் படை வரிசை வீரர்களை இழக்கும் பொழுது ஏற்படும் உணர்வைத்தான் தலைவரின் வார்த்தைகள் பிரதிபலித்தன.

இன்னொரு முக்கிய நடப்பு கழகத் தலைவரைப் பெரிதும் ஈர்த்திருக்கிறது. அதனை அவரின் வாயாலேயே கேட்போம்!

நான் இல்லா விட்டாலும்....

நான் வெளிநாடு சென்றிருந்தபோது அந்த ஒன்றரை மாதங்களில் தமிழ்நாட்டில் நமது இயக்க நடவடிக்கைகள் பிரச்சாரக் கூட்டங்கள், விடுதலை சந்தா சேர்க்கும் பணிகள், புத்தகச் சந்தைகள் என்று அலை அலையாகப் பணிகள் நடைபெற்றதை விடுதலை இணையதளம் மூலம் படித்தபோது மிகவும் பெருமிதப்பட்டேன்! எத்தகைய இயக்கத்தை ஏற்படுத்தி, எந்த அளவு பக்குவப்பட்ட தொண்டர்களை உருவாக்கும் தன்மையைத் தந்தை பெரியார் நமக்கு ஊட்டிச் சென்றுள்ளார் என்பதை விளக்கினார் தமிழர்தலைவர்

கழகம் கொடுத்ததும் - தொண்டர்கள் தந்ததும்

இந்த இயக்கம் தோழர்களுக்குத் தன்மானத்தைக் கொடுத்தது. தன்மானத் தொண்டர்களோ தங்களையே இந்த இயக்கத்திற்குக் கொடுத்துவிட்டனர் என்றார் கழகத் தலைவர்.

இது எனக்குப் பெரிதும் நம்பிக்கையை அளிக்கிறது என்று கூறியது இயக்கத் தோழர்களின் பணிகளுக்கு ஓர் அங்கீகாரம் போன்றதாக அமைந்திருந்தது.

யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இயக்கம் லட்சிய பாதையில் வேகமுடன் செயல்படும் என்பதை முத்தாய்ப்பாகக் கூறினார்.

தந்தை பெரியார் மறைந்தபோது, அம்மா அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது சிறு சலசலப்பு ஏற்பட்டதுண்டு. அந்த நேரத்தில் இதே பெரியார் மாளி கையில் நாம் எடுத்த உறுதிமொழியை நினைவூட்டினார் கழகத் தலைவர்

அந்த உறுதிமொழி

தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை, அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எந்தவிதச் சபலங் களுக்கும் ஆளாகாமல் சென்று முடிப்போம்! என்று எடுத்த உறுதிமொழியை நாம் நாளும் பின்பற்றி வரு கிறோம் என்று சொன்னார். இதன் காரணமாக எப்பொ ழுதாவது சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் அவை எல்லாம் நமக்கு ஒரு பொருட்டாக அமைந்ததில்லை என்று கழகத் தலைவர் சொன்னது நூற்றுக்கு நூறு சரியே!

பலப்பட்டு வரும் கழகம்

நாளுக்கு நாள் கழகம் பலப்பட்டு வருவது உண்மையே என்றார். இப்பொழுதெல்லாம் எங்கு சென்றாலும் கழகத்தில் இளைஞர்களின் பெருக்கத்தைக் காண முடிகிறது. ஒரு காலத்தில் திராவிடர் கழகத்தைப்பற்றி சிலர் கணிக்கும் பொழுது ஒன்றைச் சொல்லுவார்கள்.

Elderly and Olderly People என்று சொல்லுவதுண்டு. அது உண்மைதான் என்றாலும் அதே கட்டுப்பாட்டுடன் ராணுவச் சிப்பாய்கள்போல இளைஞர்கள் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு வருவதைக் காண முடிகிறது.

தமிழ் ஓவியா said...

நமது திட்டங்கள் பலன் அளித்தன

பெரியாரியல் பயிற்சி முகாம்களும், கல்வி நிறுவனங்கள் முன் வாயிற் கூட்டங்களும், இயக்க வெளியீடுகளும் இத்திசையில் பெரும் பங்கு வகிக்கின்றன.

பாலிமர் தொலைக்காட்சி சார்பாக எடுக்கப்பட்ட பேட்டியில், தாம் சொன்ன கருத்தை நினைவூட்டினார். கேள்விகள் இடக்கு முடக்காகத்தான் இருக்கும் இருந்தது. கழகத் தலைவர் தெளிவாக, அமைதியாக சொன்ன பதில்கள் பேட்டியாளரையே வியக்கச் செய்தது!

ஒரு கேள்வி: உங்கள் இயக்கப் பணிகள் சிறப்பாக இல்லை என்ற ஒரு கருத்துள்ளதே!

பதில்: அது உண்மையாக இருந்தால் ஒரு மணி நேரம் என்னைச் சந்தித்துப் பேட்டி எடுப்பீர்களா? என்று கேள்விக்கு கேள்வியிலே பதில் சொன்னதை எடுத்துச் சொன்னபோது பெரும் வரவேற்பு கைதட்டல்!

அமெரிக்க முதலாளிகளும், இந்தியப் பார்ப்பனரும்

அமெரிக்கா சென்று இருந்தபோது Price of Equality என்ற நூல் ஒன்றைப் படித்தேன். அதில் ஒரு சதவிகித அமெரிக்க முதலாளிகள் நூறு சதவிகித மக்களை ஆட்டிப் படைக்கிறார்கள் என்று எழுதப்பட்டு இருந்தது.

அதைப் படித்தபோது மூன்று சதவிகித பார்ப்பனர்கள் 97 சதவிகித மக்களை இங்கு ஆதிக்கம் செலுத்துவது பற்றி நினைத்துப் பார்த்தேன் என்றார்.

எழுந்து நின்று வரவேற்ற தீர்மானம்

தமிழர் தலைவரின் உடல் நலம் பேணும் மருத்துவ உதவிக்கான நிதி - மற்றும் கழகத் தோழர்களுக்கான மருத்துவ நிதி உதவி குறித்த சிறப்புத் தீர்மானம் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்களால் முன்மொழியப்பட்டது. எழுந்து நின்று கழகத் தோழர்கள் அனைவரும் பலத்த கரவொலி எழுப்பி வழிமொழிந்தனர் - ஆதரித்தனர்.

தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு

சமூகநீதிக்காக நாம் உழைத்ததால் பார்ப்பனர் அல்லாத மக்கள், ஒடுக்கப்பட்டோர் அரசுத் துறைகளில் உரிய இடங்களைப் பெற முடிந்தது. இப்பொழுது தனியார்த் துறைகள் வளர்ந்துவிட்டன அங்கே பார்ப்பனர்கள் குடிகொண்டு விட்டனர். இட ஒதுக்கீட்டைப் பெற்றே தீருவது என்று ஓர் இயக்கத்தை நடத்துவோம் என்றார்.

தமிழர் தலைவரின் இந்தக் கருத்து தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே தேவைப் படக்கூடியதாகும். மண்டல் குழு பரிந்துரைகளை செயல்படுத்த கழகம் பாடுபட்டு, இந்தியா முழுமைக்கும் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடங்களைப் பெற்றுத் தந்தது. அதே மண்டல் குழு பரிந்துரைகளில் தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் மண்டல் குழு பரிந்துரைகளின் தொடர்ச்சியாக தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்பதைக் கழகம் முன்னெடுத்துச் செல்லும் என்பதற்கான கருத்துருவாக அதனைக் கொள்ள வேண்டும்.

அன்று வி.பி.சிங் சொன்னார்

டில்லியில் மாவ்லங்கர் மண்டபத்தில் 19.9.1995 அன்று நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் பங்கு கொண்ட முன்னாள் பிரதமர் சமூக நீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் கூறிய கருத்து இந்த இடத்தில் நினைவூட்டத் தகுந்ததாகும்.

மண்டல் குழு பரிந்துரைகளில் எஞ்சிய பரிந்துரைகளைச் செயல்படுத்த வைக்க அகில இந்திய அளவில் தலைமை தாங்கிடத் தகுதியானவர் வீரமணி என்று கூறியதை இப்பொழுது நினைவு படுத்திக் கொண்டால், தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்பதைப் பெறுவோம் என்று தமிழர் தலைவர் திருச்சி பொதுக் குழுக் கூட்டத்தில் கூறிய கருத்தின் பொருள் விளங்காமற் போகாது. வெளிநாட்டுக்காரர்கள் நமது கல்வி நிறுவனங்களை நேரில் பார்த்து வியந்து பாராட்டி உள்ளதையும் எடுத்துக் கூறினார் ஆசிரியர். தோழர் ஈ.வெ.கி. சம்பத் குடும்பத்தினர் பாராட்டு

குறிப்பாக மறைந்த ஈ.வெ.கி. சம்பத் அவர்கள் மூத்த மகள் டாக்டர் நாகம்மையார் (நாகு என்று பொதுவாக அழைப்பார்கள்) அவருடைய இணையர் டாக்டர் வெங்கடேஷ் (உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அழகிரிசாமி அவர்களின் மகன்), மகள், பேரன், பேத்தி பெரியார் திடலுக்கு வருகை தந்து பெரியார் நினைவிடம், அருங்காட்சியகம், நூலகம் முதலியவற்றைச் சுற்றிப் பார்த்துவிட்டு அமெரிக்கா திரும்பியவர்கள் கழகத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தினைப் படித்துக் காட்டினார் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

(விடுதலை 18-8-2012 இரண்டாம் பக்கம் காண்க)

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு அவர்களின் கொள்கைகளை எடுத்துச் செல்லும் பாங்கினை அவர்கள் அந்தக் கடிதத்தில் பாராட்டி இருந்தார்கள். தனது பெயரன் - பெரியார் நினைவிடத்தில் எழுதப் பட்டுள்ள வாசகங்கள் ஒவ்வொன்றையும் உன்னிப்பாகப் படித்தான். இவற்றில் உனக்கு எது பிடித்து இருந்தது என்று கேட்டபோது, சூடி ழுடின, சூடி ழுடின என்பது பிடித்திருந்தது என்று சொன்னதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தனர். கழகத் தலைவர் அவர்கள் ஆங்கிலத் தில் எழுதப்பட்டு இருந்த அந்தக் கடிதத்தைப் பற்றி எடுத்துச் சொன்ன போது அதற்குப் பலத்த வரவேற்பு இருந்தது.

பெரியார் உலகமயம்!

நமது இயக்கப் பணியில் மிக முக்கியமானது பெரியார் கொள்கை உலகமயமாக்கப்பட வேண்டும் என்றார் கழகத்தலைவர். மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று நமது இயக்கப் புரட்சிக் கவிஞர் கூறியதை நனவாக்க வேண்டாமா?

என் பணி விடுதலைக்கே!

50 ஆண்டுகள் விடுதலை ஆசிரியர் பணி என்பதற்காக என்னைப் பாராட்டினீர்கள். எனக்கு விடுதலை கிடைக்கும் வரை என் பணி விடுதலைக்கே! என்று முத்தாய்ப்பாய் திருக்குறள் போல தம் குரலால் பேசினார்! (கரஒலி அடங்க வெகு நேரம் பிடித்தது.)

நன்றி

எனது பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள், உதவியாளர்கள், ஓட்டுநர்கள் ஆகியோ ருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

பொங்கலின்போது மாட்டுக்கு மாலை சூட்டி பொங்கலோ பொங்கல் என்று கூறுவது போல என்னை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். நான் அதற்கு உண்மை யாக இருப்பேன்.

கடனைத் தீர்ப்பேன்!

நீங்கள் காட்டும் அன்புக்கு, ஆதரவுக்கு, உதவிக்கெல்லாம் இறுதி மூச்சு அடங்கும் வரை தொண்டு செய்து கடனைத் தீர்ப்பேன் என்றார். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோருக்குப் பிறகு இந்த இயக்கத்தைக் கம்பீரமாக எடுத்துக் கட்டி வழிநடத்திச் செல்லும் தமிழர் தலைவர் அவர்கள் உருக்கமாகவும், அதே நேரத்தில் உணர்வு பூர்வமாகவும் சிலை வடித்தது போல் அமைந்திருந்தது கழகத் தலைவரின் உரை!

என் பணிகள் எப்படி

இனி என் பணிகள் வாரத்திற்கு 2 நாள்கள் சுற்றுப் பயணம் - பிரச்சாரம். மாதத்திற்கு எட்டு நாள்கள் இந்த வகையில். மாதத்திற்கு நான்கு நாட்கள் கல்வி நிறுவனப் பணிகள்.

மீதி நாட்களில் படிப்பது நிறைய எழுதுவது என்பவற்றில் அதிக கவனம் செலுத்துவேன்

(18-8-2012) -திருச்சி பொதுக்குழுவில் கழகத் தலைவர்



அறிவிப்புகள்

திருவாரூர் மாவட்டம்: மண்டலத் தலைவர்: குடவாசல் வீ. கல்யாணி

மண்டல செயலாளர்: முருகையன், ஆயக்காரன்புலம்

ஈரோடு மண்டலம்:

மண்டலத் தலைவர்: வை. நடராசன், மோகனூர்

மண்டல செயலாளர்: ஈரோடு சண்முகம்

தருமபுரி மாவட்டம்:

தலைவர் : புலவர் வேட்ராயன்

செயலாளர் : வீ. சிவாஜி

பொதுக்குழு உறுப்பினர்கள்:

1) இரா. சாந்தா ராமமூர்த்தி

2) ஏ. தீர்த்தகிரி

3) அ. தமிழ்ச்செல்வன்

மயிலாடுதுறை மாவட்டம்:

தலைவர்: எஸ்.எம். செகதீசன், சீர்காழி

செயலாளர்: கி. தளபதிராஜ், மயிலாடுதுறை

தூத்துக்குடி மாவட்டம்:

தலைவர் : கனகராசு

செயலாளர்: இ.சக்திவேலு

புதுச்சேரி

தலைவர் சிவ.வீரமணி

செயலாளர் : கி. அறிவழகன்

பொதுக்குழு உறுப்பினர்: அன்பரசன்

நிகழ்ச்சி

திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம் திருச்சி பெரியார் மாளிகை டி.வி. வீரப்பா அரங்கில் 18-8-2012 சனியன்று காலை 10.30 மணிக்கு, கழகச் செயலவைத் தலைவர் ராஜகிரி கோ. தங்கராசு அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டது. திராவிடர் கழக மகளிர் பாசறைத் தலைவர் டெய்சி மணியம்மை கடவுள் மறுப்புக் கூறிட, லால்குடி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் ஆல்பர்ட் வரவேற்புரை ஆற்றினார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் சிறப்புத் தீர்மானத்தை முன்மொழிந்து தொடக்க உரையாற்றினார்.

தலைமை நிலைய செயலாளர் வீ. அன்புராஜ் கடந்த பொதுக் குழுவுக்கும் (2011 டிசம்பர் 24) இப்பொதுக் குழுவுக்கும் இடைப்பட்ட காலத்தில் கழகத்தின் செயல்பாட்டை விளக்கிக் கூறினார்.

திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.சேகர் நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாட்டின் தீர்மானம் மத்திய அரசு பரிசீலனை மத்திய அமைச்சர் நாராயணசாமி தகவல்



சென்னை, ஆக.19- டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலனை செய் கிறது என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித் தார்.

மத்திய இணை அமைச்சர் நாராயண சாமி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். அவர், விமான நிலையத்தில் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

நிலக்கரி ஒதுக்கீட் டில் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள தாக குறிப்பிட்டுள்ளது சரியானது அல்ல. தலைமை தணிக்கை குழு அதிகாரி, தனது வரம்பை மீறி செயல்படு கிறார். ஏல முறையில் அமல்படுத்தி இருந்தால், பொதுமக்கள் பாதிக் கப்படுவார்கள். இப் போது, மத்திய அரசு எடுத்த முடிவினால் கூடு தல் மின்சாரம் தயாரிக் கப்பட்டுள்ளது.

அசாம் உள்பட வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு முழு பாதுகாப்பு அளிக்கும். வதந்தி பரப்பும் விஷமி கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும். அதற்காக துணை ராணுவ படையின் உதவியை மாநில அரசு கோரினால் உடனடி யாக அனுப்பி வைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது.

டெசோ மாநாட்டில் திமுக நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலனை செய்கிறது. மத்திய அரசும் இலங்கை தமி ழர்கள் நலனில் மிகுந்த அக்கறை காட்டி வரு கிறது. எனவே அந்த தீர்மானத்தை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக் கப்படும். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.