Search This Blog

25.8.12

ஒவ்வொரு பார்ப்பனரையும் நெஞ்சில் கைவைத்துப் பார்க்கும்படி வேண்டிக்கொள்கிறேன்

உருப்போட்டு மார்க் வாங்குவது தகுதி திறமை ஆகிவிடுமா?

சர்க்கார் பரீட்சை தேர்வு முடிவுகளைத் தெரிவிக்கும் சர்ட்டிஃபிகேட் (நற்சான்று பத்திரங்)களில் சர்க்கார் (முடிவை வெளியிடும்) இலாகாதாரர்கள் - பாஸ் ஃபெயல் (Pass - Fail) தேர்வு பெற்றார் - தேர்வு பெறவில்லை என்பதான இரண்டு சொற்களில் ஒன்றைத்தான் எழுதுவேண்டுமே ஒழிய மார்க்கு (குறியீடு) எண்களைத் தெரிவிக்க வேண்டியதில்லை என்பதாக அரசாங்கத்தார் ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமாகும்.

சில பரீட்சைகளில் (தேர்வுகளில்) அப்படித்தான் சர்டிஃபிகேட்களில் குறிப்பிடப்படுகின்றன.

இப்போது சர்க்கார் பார்ப்பனருக்கு விரோதமாக முடியும் என்கிற கருத்தின்மீது உத்யோக அபேட்சை விண்ணப்பங்களில், தொழில் கல்லூரி அபேட்சை விண்ணப்பங்களில் தெரிந்தெடுப்பவருக்கு தெரியாமல் இருக்க வேண்டுமென்பதற்கு ஆகவே ஜாதிப்பெயர்இருக்கக்கூடாது என்று உத்தரவு போடவில்லையா? சர்க்கார் தெரிந்தெடுக்க ஒரு மாணவனுக்கு வேண்டியது குறிப்பிட்ட பரீட்சையில் தேர்வு பெற்றானா?  இல்லையா? என்பதும், நேர்ப் பார்வையில் போதிய அறிவு உடையவனா, இல்லையா என்பவை மாத்திரமே கவனிக்கப்பட வேண்டுமே ஒழிய, மற்றவை பற்றிய கவலை எதற்கு என்றுதான் கேட்கிறேன்.

மார்க்குகளைப் பார்ப்பதில் ஒரு மாணவன் தமிழில், ஆங்கிலத்தில் 42 மார்க்கு வீதம் வாங்கி தேர்வு பெற்றிருக்கிறான்; மற்றொரு மாணவன் 85 மார்க்கு வீதம் வாங்கினதாலும் முதல் வகுப்பில் வெற்றி பெற்று இருக்கிறான். இந்தப்படி மொத்தம் 170 மார்க் அதாவது 86 மார்க்குகள் அதிகம் வாங்கி தமிழிலும், ஆங்கிலத்திலும் முதல் வகுப்பில் பாஸ் செய்துவிட்டதால் இந்தப் பையன் எப்படி வைத்தியத்திற்கும், பொறியியலுக்கும் வேண்டிய உயர்ந்த யோக்கியதாம்சமுடையவனாகிவிடுவான்? தேவையான அளவுக்கு 42+42=84 மார்க்கு வாங்கிய பையன் எப்படி தாழ்ந்த யோக்கியதாம் சமுடையவனாகிவிடுவான்? மனிதனுடைய அறிவுசக்தி, திறமை சக்தி வேறு, உருப்போடும் புரோகித சக்தி வேறு என்பதை எந்த அறிவாளியும் ஒப்புக்கொண்டே தீர்வான்.

உருப்போடுவது என்பது ஒரு வித்தை. அதை பொது அறிவிலும் பொது யோக்கியதாம்சத்திலும் சேர்ப்பது சுத்த மதியீனம்; அல்லது சூழ்ச்சி_தந்திரம் என்றுதான் சொல்லவேண்டும். உருப்போடுவதில் ஞாபசக்தியில் திறமை உடைய அஷ்டாவதானிகள், சதாவதானிகள், வேதபாராயண புரோகிதர், புலவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் பொது அறிவில் மேம்பட்டவர்கள் ஆகிவிடுவார்களா? எனவே பரீட்சைத் தேர்வுப்பத்திரங்களில் மார்க்கு எண்களைக் குறிப்பிடுவதும் அந்த அளவை யோக்கியதாம்சத்தில் சேர்ப்பதும் தகுதி திறமையைப் பாழாக்கிவிடும் என்றே கூறுவேன். உருப்போடுவதில் தேர்ந்தவன் எல்லாம் ஒழுக்கம், நாணயம், வேலைத்தகுதி உடையவன் ஆகிவிடுவானா என்பதை உருப்போடும் திறமையை யோக்கியதாம்சமாய் எடுத்துக்கொள்ள வாதாடும் ஒவ்வொரு பார்ப்பனரையும் நெஞ்சில் கைவைத்துப் பார்க்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.
                             ----------------- ஈ.வெ.ராமசாமி 7.10.1962
    *************************************************************
  டெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்!

டெல்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி என்கிற பண்டிகையின் போது தீண்டாதவர்கள் என்கிறவர்களை எல்லாம் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு பத்திரிகையில் காணப்படுகிறது.  புராணங்களின் படி கிருஷ்ணன் என்பதாக ஒரு சுவாமியோ, ஆசாமியோ இருந்ததாக நாம் ஒப்புக் கொள்வதானால் அது ஒரே சாமியாகத்தான் இருந்திருக்கலாமே தவிர, டெல்லிக்கு ஒரு கிருஷ்ணனும், தமிழ்நாட்டுக்கு ஒரு கிருஷ்ணனும், இருந்திருக்க முடியாது.
அப்படியிருக்க, டெல்லி கிருஷ்ணன் தீண்டாதவர்கள் கோவிலுக்குள் போனால் ஓடிப்போகாமல் கோவிலுக்குள்ளாகவே தைரியமாக உயிருடன் இருக்கும்போது, நமது தமிழ்நாட்டு கோவில்களில் உள்ள கிருஷ்ணன் மாத்திரம் தீண்டாதவர்கள் உள்ளே போனால் கோவிலை விட்டு ஓடிப்போவதோ, அல்லது ஒரே அடியாக செத்துப்போவதோ ஆனால், இந்த மாதிரி கிருஷ்ணனை வைத்துப் பூஜை செய்வதால் நமக்கு என்ன பலன் அவரால் உண்டாகக் கூடும்.  ஒரு மனிதன் உள்ளே வந்தால் தாக்குப் பிடிக்காத கிருஷ்ணன் யாருக்கு என்ன செய்ய முடியும்? ஆதலால் நாம் தமிழ்நாட்டுக் கிருஷ்ணனைத் தூக்கி விட்டு இனிமேல் டெல்லி கிருஷ்ணனைத் தான் தருவித்துக் கொள்ள வேண்டுமேயல்லாமல், இந்த மாதிரி சக்தியில்லாத, கிட்டப் போனால் ஓடிப் போகிற கிருஷ்ணன் இனி நமக்கு அரை நிமிஷங்கூட கண்டிப்பாய் உதவவே உதவாது.
                   -----தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் எழுதிய கட்டுரை-"குடிஅரசு" 28.8.1927

44 comments:

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டின் பொக்கிஷம் என் மாணவர் வீரமணி - உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் எஸ்.மோகன்

பெரியார் இல்லாவிட்டால் நாம் எல்லாம் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வர முடியுமா? - உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் ஏஆர்.இலட்சுமணன்

பெரியார் அன்பால் கட்டப்பட்ட செல்லப்பிள்ளை-ஆசிரியர் வீரமணி - மா.நன்னன்
விடுதலை ஆசிரியரின் 50 ஆண்டு பணி பாராட்டு விழாவில் பெருமக்கள் புகழாரம்
நான் பெரியாரின் நகல் அல்ல; உலகில் பெரியார் ஒருவரே! - ஆசிரியர் கி.வீரமணி


விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 50 ஆண்டுகள் நிறைவுப் பெரு விழா மேடையில் சிறப்பு விருந்தினர்கள்.

சென்னை, ஆக.25- விடுதலை ஆசிரியராக கி.வீரமணி அவர்கள் 50 ஆண்டுகள் பணியாற்றியமைக் காக நடத்தப்பட்ட விழாவில் பெரு மக்கள் பாராட்டி மகிழ்ந்தனர் (25.8.2012).
நீதியரசர் எஸ். மோகன்

உலகிலேயே மிகப் பெரிய தலைவர் தந்தை பெரியார் ஒருவர்தான்; பெரியார் திடலுக்கு நான் இங்கே வந்தபோது பெரும் உணர்ச்சிக்கு ஆளானேன். நான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்றவுடன் முதலாவதாகப் பெரியார் திடலுக்கு வந்து என் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் அய்யா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தேன் (பலத்த கரவொலி) .

1948இல் தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் என் அண்ண னோடு நான் பங்கேற்றேன்.

இந்த விழா மகிழ்ச்சிக்குரிய விழா! எனது மாணாக்கர்களில் தலைசிறந்த சிறப்பான மாமணி ஆசிரியர் வீரமணி, தமிழ்நாட்டின் சிறந்த பொக்கிஷம்! விடுதலை ஆசிரியர் பொறுப்புக்கு வராவிட்டால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகக்கூட வீரமணி ஆகி யிருக்கக் கூடும். ஆனால் அதைவிட நாட்டுக்காக, நம் இன மக்களுக்காக நீதியை வழங்கிக் கொண்டு இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

நீதியரசர் ஏ.ஆர். இலட்சுமணன்

வல்லத்தில் நான் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்த நாளை மிகப் பெருமையாகக் கருதுவதேன். என் சக நீதிபதிகள்கூட என்னை இதுபற்றிக் கேட் டார்கள். அப்பொழுது அவர் கூட்டத்தில் நான் சொன்னேன். பெரியார் என்ற ஒரு மாமனிதர் இல்லாவிட்டால் நாம் எல்லாம் எங்கே இருந் திருப்போம்?

தமிழ் ஓவியா said...

இந்தப் பதவிகள் எல்லாம் நமக்குக் கிடைத்திருக்குமா என்று பதில் சொன்னேன். (பலத்த கைதட்டல்).

சதா மக்களைச் சந்திப்பது - பேசுவது - படிப்பது - எழுதுவது - கல்வி நிறுவனங்களை நிருவகிப்பது என்று சதா உழைத்துக் கொண்டே இருப்பவர் ஆசிரியர் வீரமணி. அவருக்குத் தூங்க நேரம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
விடுதலை ஆசிரியர்தான் என்றாலும் அவருக்கு மட்டும் விடுதலை இல்லை என்று பாராட்டினார்.

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா. நன்னன்

தமிழ்நாட்டில் ஆசிரியர் என்றால் ஒரே ஒருவரைத்தான் குறிக்கும்; அவர்தான் நம் ஆசிரியர் வீரமணி அவர்கள்.

விடுதலையை வீரமணியின் ஏக போகத்தில் ஒப்படைக்கிறேன் என்று பெரியார் சொன்னார் என்றால், இது நம் ஆசிரியருக்கு மட்டும்தான். வேறு எவரிடமும் இத்தகைய நம்பிக்கையை பெரியார் வைத்திருந்தார் என்று சொல்ல முடியாது. பெரியாரிடம் செல்லப் பிள்ளையாக வந்து ஏவுகணையாக வளர்ந்தார் (பலத்த கரவொலி). நமது ஆசிரியர் அவர்கள் சிறுவராக இருந்த அந்தக் கால கட்டத்தில் நானும் அவருடன் இருந்து பிரச்சாரம் செய்திருக்கின்றேன்.

நமது ஆசிரியர் அவர்களை பெரியார் அவர்கள் தேர்ந்தெடுத்தது. எத்தகைய கூர்த்தமதி? தன் அன்பினாலே ஆசிரியரை தந்தை பெரியார் கட்டிப் போட்டார். ஆசிரியருடைய நலம் என்பது சமுதாய நலமாகும். அவர் உடல் நலனை நன்கு பேண வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.



விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 50 ஆண்டு நிறைவு விழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு. எஸ். மோகன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.






விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 50 ஆண்டுகள் நிறைவுப் பெரு விழாவில் காலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சான்றோர்கள். (25.8.2012 - பெரியார் திடல்)

ஆசிரியர் ஏற்புரை

நீதியரசர்கள், எனக்குச் சரியான தண்டனையை கொடுத்து விட்டனர். ஒருவரை உட்கார வைத்துக் கொண்டு, அவரைப் பாராட்டுவது, அதனை சம்பந்தப் பட்டவர் கேட்டுக் கொண்டு இருப்பதைவிட வேறு தண்டனை உண்டா? அதுவும் நீதியரசர்களே இங்கு அந்த அன்புத் தண்டனையை அளித்து விட்டனர்.

என்னை இங்கு பெரியாரின் நகல் என்று சொன் னார்கள்; பாராட்டுவதற்காக அப்படி சொல்லியிருக் கலாம். உலகில் பெரியார் ஒருவரே. அவருக்கு ஈடு, இணை உலகில் எவருமே கிடையாது.

நம் இனத்தைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக வர மாட்டார்களா என்று எழுதிய கை என் கை; இப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்தவர்களே பெரியார் திடலுக்கு வந்து, விடுதலையின் பணியினைப் பாராட்டுகிறார்கள் என்றால், இதைவிட விடுதலை யின் பணிக்கு வெற்றிக்குச் சான்று வேறு எதுவாக இருக்க முடியும்?

விடுதலையின் வெற்றிக்கும், சாதனைக்கும் பொறுப்பு நான் மட்டுமல்ல; தனி மனிதனின் சாதனையல்ல - கூட்டு முயற்சியின் வெற்றியாகும்.

விடுதலையில் பணியாற்றும் என் சகத் தோழர்கள் ஊதியத்துக்காகப் பணியாற்றக் கூடியவர்கள் அல்லர்; கொள்கைக்காக தங்களை ஒப்படைத்துக் கொண்ட தொண்டுள்ளம் கொண்டவர்கள் என்றுரைத்தார் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நீதியரசர் எஸ்.மோகன் அவர்கள் ஆசிரியருக்கும், அவரது இணையருக்கும் நாட்டுக்காக உழைக்கும் இவர்களுக்கு உங்கள் சார்பில் இந்தப் பொன்னா டையைப் போர்த்துகிறேன் என்று குறிப்பிட்டார். நீதியரசர் ஏஆர். இலட்சுமணன் அவர்கள் ஆசிரியருக்குப் பேனா ஒன்றைப் பரிசாக அளித்தார். ஏராளமான கழகத் தோழர்களும் பல்துறை பெரு மக்களும் சால்வைகளைப் போர்த்தினர். சந்தாக் களையும் அளித்தனர். பிற்பகல் 1.15 மணிக்கு நிகழ்ச்சி முடிவுற்றது. அனைவருக்கும் மதிய விருந்தளித்து உபசரிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

அதோ வருகிறான் பார் அரிமா மீது



- கவிஞர் கலி.பூங்குன்றன்


சினிமா மசாலா
ஏதுமில்லை
சிந்தித்துப் பார்த்தால்
சினிமாவை விடு
சிலம்பத்தை எடு என்பது
இதன் தாரக மந்திரம்!

சோதிடம் ராசி பலன்
சுத்தமாக இல்லை
யோசித்துப் பார்த்தால்
இவற்றைப் பாடை கட்டி
சாவூருக்குத் தூக்கிச் செல்லும் சுமைதாங்கி
இதன் தோள்கள்.

கேளிக்கை கலாட்டா
கவர்ச்சிகள் கிடையாது
கேள்விகள் இருக்கும்
கிளர்ச்சிகள் வெடிக்கும்

எரிமலை துடிக்கும்
எழுத்துகள் இருக்கும்
எதிரிகளின் காட்டை
எரித்துச் சிரிக்கும்
மூடக்காட்டின மூச்சை
முடிக்கும்

சுரண்டல் கடையாம்
சூது மதத்தின்
சூட்சமப் புள்ளியை
சொடுக்கி அழைத்து
கொடுக்கை நறுக்கும்

முற்போக்குக் குதிரை மீது வருவான்
பிற்போக்கு நரிகளை
மிதித்து எழுவான்!
சமூக நீதியாம்
சாட்டையினை
சுழற்றுவான்!
பாலியல் நீதிப் பாடலை
மீட்டுவான்! மீட்டுவான்! சுருக்கமாகச் சொன்னால்
சூரியன் பெரியார்
கர்ப்பத்தில் தரித்தவன்!

சூழ்ச்சிக் கண்ணி
வெடிகளைத் தகர்ப்பவன்!

சமத்துவ சமூக
உழவுக்காரன்
சரிநிகர் வாழ்வின்
சமையற்காரன்

அதோ, வருகிறான் பார்
கம்பீரமாய், கம்பீரமாய்!
அரிமா மீது
அரிமாமீது!

அவன்தான்
அவன்தான்
விடுதலை எனும் விடுதலை எனும்
மகாவீரன், மகாவீரன்!

அந்த மகாவீரனின்
ஆசிரியருக்கு அகவை அய்ம்பது ஆண்டுகள்
அய்ம்பது ஆண்டுகள்
அந்தக் கின்னஸ் சாதனை
அடலேறுக்குத்தான்
அடலேறுக்குத்தான்

அழகான விழா
அழகான விழா!
அறிவார்ந்த விழா
அறிவார்ந்த விழா!
கொள்கை மணம்
கொழிக்கும் விழா!

இன்று ஒரு சூளுரை
எடுப்போம், எடுப்போம்!
தமிழன் இல்லக் கதவுகளை
தட்டித் தட்டி
சேர்ப்போம், சேர்ப்போம்!
விடுதலையைச் சேர்ப்போம்!

அப்பொழுதுதானே
அப்பொழுதுதானே
அது தமிழனில்லம்!
தமிழனில்லம்!
அதைத்தானே, அதைத்தானே
தவத்திரு அடிகளார்
சொன்னார், சொன்னார்.

சூளுரை சரிதானே
சரிதானே!
சூட்டோடு புறப்படு
சூட்டோடு புறப்படு!
சூரியன் மறைவதற்குள்
அந்திப்
பொழுது வருவதற்குள்
சுமந்து வருவோம்
சுமந்து வருவோம்!
சந்தா மூட்டைகளைச்
சுமந்துவருவோம்!
புறப்படு தோழா
புறப்படு!

தமிழ் ஓவியா said...

ஊடக உலகின் சாதனைச் செம்மல்



தமிழர் தலைவரின் மீண்டு வந்தேன் - மீண்டும் வந்தேன் என்ற வரிகளைப் படித்து நெஞ்சம் நெகிழ்ந்தேன். கண்கள் பனித்தன. இருமுறை நெஞ்சக அறுவை சிகிச்சை செய்து கொண்டும் ஓய்வின்றி பயணித்து உழைக்கும் ஆசிரியர் அவர்கள் அயல் மண்ணிலிருக்கும்போதே அவசர சிகிச்சை தேவைப்பட்டதே. அதிலிருந்து முழுமையாக மீளுமுன், மருத்துவர்களின் ஆலோசனைகளையும் மீறி டெசோ மாநாட்டுக்காக ஓடோடிவருகிறாரே! இந்தக் கடமை வீரன் காலமெல்லாம் வாழ வேண்டும் என எண்ணியபடி கண்களை மூடினேன்.

என்னையறியாமலேயே திடீரென வாழ்வார் வாழ்வார் என உரக்கக் கூறி விட்டேன். அருகிருந்த என் வாழ்விணையர் என்ன என்ன என்று பதைத்தார்கள். தமிழர் தலைவரின் அறிக்கையைக் காண்பித்தேன். என்னை உணர்ந்த அவர், உணர்ச்சி வயப்படாதீர்கள்! அவரைவிட 5 திங்கள் மூத்த உங்கள் வாயிலிருந்து வந்த சொற்கள் உங்கள் உள்ளக்கிடக்கை தலைவர் வாழ்வார் பல்லாண்டு என என்னைத் தேற்றினார்கள்.

ஆம்! இந்தியப் பத்திரிகை உலகிலே எந்த ஒரு எழுத்தாளனும் 50 ஆண்டுகள் ஆசிரியராக ஒரே நாளிதழில் தொடர்ந்து பணியாற்றியதுமில்லை - தொட்ட நாள் முதல் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு ஊறுநேராமல் அந்தக் கொள்கையையும் பார்த்து, நாளிதழையும் வளர்த்து நிலைப்படுத்திய சாதனைச் செயலர் ஊடக உலகிலேயே நம் தமிழர் தலைவர் வீரமணியார் ஒருவர்தான் நிலைத்த கொள்கைக்காகவே தொடங்கி நடத்தப்படும் நாளிதழ் விடுதலை தவிர வேறில்லை.

தமிழ் ஓவியா said...

இன்னும் சொல்வதனால், தந்தை பெரியார் அவர்கள் தன்னிகரற்ற சிந்தனையாளர் தடம்புரளாத கடமை வீரர். ஆனால் அவரால் முடியாததையே சாதித்துக் காண்பித்தவர் நம் ஆசிரியர் வீரமணியார். பட்டம் பதவிகளைத் துறக்க வேண்டும் என்ற சேலம் மாநாட்டு ஒரு தீர்மானத்தைக் கண்டே மிரண்டு ஒடினார்கள் நீதிக்கட்சியின் மிட்டா, மிராசுகளும் கோடீஸ்வரர்களும். அடுத்த 9ஆம் ஆண்டு பட்டம் பதவிதேடி தேர்தலுக்கு போட்டியிடும் கட்சியல்ல திராவிடர் கழகம் என்றவுடன் கண்ணீர்த் துளிகளை சிந்திய வண்ணம் பிறந்தது தி.மு.கழகம் போனால் போகட்டும் போடா என்று, ஒரு கையில் தன் மூத்திரப்பையையும் மறுகையில் தன் கைத்தடியையும் தாங்கியபடி நாடெங்கும் அலைந்து திரிந்து கொள்கைக் கோமானாக 94 வயதுவரை வாழ்ந்தார் பெரியார் என்றால் அவரை வாழ வைத்த பெருமைக்குரியவர்கள் அன்னை மணியம்மையாரும் அயராத கடமைவீரர் ஆசிரியர் வீரமணியாரும்தான்.

தேர்தல் காலக் காளான்களாக முளைக்கும் கட்சியிலேகூட உடனுக்குடன் உறுப்பினர் அட்டைபெற்று, காவல் நிலையத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும், மருத்துவமனைகளிலும் அதிகாரம் செலுத்தத் துடிக்கும் தரகர்கள் நிறைந்த இன்றைய சூழலில்கூட, ஆட்சி அதிகாரப் பொறுப்பெதற்கும் ஆசைப்படாத கருஞ்சட்டை மெழுகுவர்த்திகளை உருவாக்கியுள்ளாரே ஆசிரியர் வீரமணியார் அவருக்கு ஈடுண்டா? இணையுண்டா? பதவி சுகம், பணம், சலுகை என்று எந்த சபலத்திற்கும் ஆளாகாத தொண்டர்களைக் கொண்ட இயக்கம் திராவிடர் கழகம் தவிர வேறுண்டா உலகிலேயே? இதைச் சாதிப்பதற்கு அவருக்கிருந்த ஒரே ஆயுதம் விடுதலை என்ற இந்த நாளிதழ்தானே! அந்த ஒரு ஆயுதத்தை வைத்தே அவர் சாதித்தவை இன்னும் ஏராளம் உண்டு.

அய்யா பெரியாரின் மறைவுக்குப்பின் பெரும் இருள்சூழ்ந்ததே தமிழகத்தில்! அய்யா மறைந்த நிலையில் காமராசர் மறைவு; அதற்கடுத்த மாதம் கலைஞரின் ஆட்சி கலைப்பு! எவ்வளவு பெரும் சோகம்! பேரிடி! அதிலிருந்து தமிழர்களை மீளச் செய்தது விடுதலையும் ஆசிரியர் வீரமணியாரும்தான் என்பதை யாரே மறுக்க முடியும்? தந்தை பெரியாரின் கொள்கையறியாத நடிகரின் ஆட்சியில் இடஒதுக்கீட்டுக்கு ரூ.9000/- ஆண்டு வருமானம் என்றோர் சிக்கல் வந்ததே; அதைத்துணிந்து எதிர்த்து வாபஸ் பெற வைத்தவர் ஆசிரியர் வீரமணியார்தானே! நான் பார்ப்பனத்திதான் என சட்டப் பேரவையிலேயே தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவரின் ஆட்சியிலேயே, இடஒதுக்கீட்டுக்கு புதிய சட்டமும் அதை அரசமைப்பு சட்ட 9ஆம் அட்டவணையில் சேர்க்கவும் செய்த ஆசிரியரின் சாதனை சாதாரணமானதா?

அரசியல் அரங்கில் தி.மு.க.வின் நிலைப்பாடு எப்படியிருந்தாலும், அய்யாவின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்க, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் என்ற சட்ட முன்வடிவுக்கு இன்னும் துணைநிற்பது உள்ளிட, தந்தை பெரியார் போட்டுக் கொடுத்த சுயமரியாதைப் பாட்டையிலிருந்து ஒரு அங்குலம்கூட விலகாமல் நடைபோட்டு, கழகத்தை, இயக்கத்தை தமிழர் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருப்பவர் கடமை வீரரான கொள்கைக்குன்று ஆசிரியர் வீரமணியார் தான்.

அவர் ஆசிரியப் பொறுப்பேற்ற பொன் விழா ஆண்டை தனித்தனியே பாராட்டி, பேசியும், எழுதியும், போக்கியதைவிட அவருடைய ஆணையான வீட்டுக்கு வீடு விடுதலை என்பதை நிறைவேற்ற உறுதி எடுத்துக் கொள்வோம்.

இவ்வளவு உயரிய சாதனையாளரை நாம் பாராட்டுவது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் சாதனையாக இருக்க வேண்டும். அடுத்த திங்கள் 17ஆம் நாள் அய்யா அவர்களின் பிறந்த நாள். அன்று எந்த நேரத்தைக் குறித்து நம் துணைத் தலைவர் கலி. பூங்குன்றனார் அறிக்கை விடுகிறாரோ அந்த நேரத்தில் தமிழகத்தின் சிற்றூர், பேரூர், நகர், மாநகர், தலைநகர் அனைத்திலும் கருஞ்சட்டையினர் கூடி நின்று இந்த சாதனைச் செம்மலை வாழ்த்தி அய்ந்து நிமிடம் ஒலி முழக்கம் செய்து கலையலாம் என்பது எளியேனின் ஆசை. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தமிழர்கள் வாழும் இடமெங்கும் 17.9.2012 அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கடமை வீரர் வீரமணியார் வாழ்க!

கொள்கைக் குன்று வீரமணியார் வாழ்க!

ஆரியத்தை நடுங்கச் செய்யும் வீரமணியார் வாழ்க!

என்பதுபோன்ற பொதுச் செயலாளர் அறிவிக்கும் ஒலி முழக்கங்களை அய்ந்தே அய்ந்து நிமிடங்கள் ஒலித்துக் கலைந்தாலே கின்னசில் ஆசிரியரையும் இடம் பெறச் செய்து கருஞ்சட்டை மெழுகுவர்த்திகளும் இடம் பெறுவர்.
பொதுச் செயலாளரின் அறிக்கையை எதிர்நோக்கும்.

அன்பார்ந்த
நாகூர் தி. சோமசுந்தரத் தேவர் 25-8-2012

தமிழ் ஓவியா said...

தோழர் வீரமணியின் சேவை



- தந்தை பெரியார்

வீரமணி அவர்கள் எம்.ஏ., பி.எல். பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக் காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ., பி.எல்., பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கிய வுடன் மாதம் ரூ.300, ரூ.400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ.500, 1000 தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர்.

இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவ ராகவும் இருந்து வந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற் றொருவர். வந்தார் வருகிறார் வரக் கூடும் என்று உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்க படி பயன்படுத்திக் கொள்ளாவிட் டால் அது நம்முடைய அறியாமை யாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலை மைப் பிரச்சாரகராகவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன் படுத்திக் கொள்ள முன்வந்து, அவ ருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடு தலையை ஒப்படைத்துவிட்டேன்.



தமிழ் ஓவியா said...

விடுதலை பத்திரிகையை நிறுத்தி விடாததற்கு இதுதான் காரணம்.!

இனி விடுதலைக்கு உண்மையான பிரசுரகர்த்தாவாகவும் ஆசிரியராகவும், வீரமணி அவர்கள் தான் இருந்து வருவார்.

எந்த நிலையில் வீரமணிஅவர்கள் இந்த பொறுப்பை ஏற்கிறார் என்றால் விடுதலையை நான் நிறுத்திவிடப் போவதை அறிந்த சிலர் விடுதலை பத்திரிகை காரியாலயத்தையும் அச்சு இயந்திரங்களையும் மாதம் 1--_க்கு 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வாடகைக்குக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், அதை வாடகைக்கு கொடுப்பதைவிட நிறுத்திவிடுவதே மேல் என்று நம்முடைய நண்பர்கள் எல்லோரும் நமக்கு வேண்டுகோளும் அறிவுரையும் விடுத்துக் கொண்டி ருக்கும் நிலையில், இயக்க நலத்தையே குறியாகக் கொண்டு பொறுப்பேற்க முன்வந்தார். ஆகவே விடுதலையின் 25ஆம் ஆண்டு துவக்கத்தில் லட்ச ரூபாய்களை விடுதலை நடப்புக்கு ஆக செலவிட்டு நஷ்டமடைந்த நிலையில் ஏற்க முன்வந்த வீரமணி அவர்களது துணிவையும் தியாகத் தையும் சுயநலமற்ற தன்மையையும் கருதி விடுதலையை வீரமணி அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இதற்கு பொது மக்கள் இல்லா விட்டாலும், ஏன் இப்படிச் சொல்லு கிறேன் என்றால், நம் மக்களிடம் எந்தக் குணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நன்றி காட்டுகிற குணம் என்பது பெரிதும் கிடையாது. கிடையவே கிடையாது. அது இல்லாவிட்டாலும் நம்பிக்கைத் துரோகம். செய்யாமலாவது இருப்பது என்பது அரிது. மிக மிக அரிது. ஆதலால் விடுதலைக்குப் பொது மக்கள் ஆதரவு பெரிதும் இருக்காது என்பதோடு மேலும் வரவும் கூடும். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. இது எனக்கு அனுபவம்.

இயக்கத் தோழர்கட்கு வேண்டுகோள்

ஆனால், இயக்கத் தோழர்களை, எனது இயக்கத்தில் இருந்து மனி தர்கள் ஆகி எனக்கும், இயக்கத்துக்கும் கத்தி தீட்டும்; தீட்டி வெளியேறிய தோழர்களைத் தவிர்த்து, மற்ற இன்று இயக்கத்தில் இருக்கும் அதுவும் இயக்கத்தால் தங்கள் நலனுக்கு எந்தவிதப் பலனும் அடையாமல் அவர்களது பணத்திலேயே வாழ்ந்து கொண்டு அவரவர்கள் நேரத்தைச் செலவு செய்து கொண்டு பல கஷ்ட நஷ்டங்கள் அடைந்து இயக்க வளர்ச்சிக்கு இரவும் பகலும் பாடு படும் உண்மைத் தொண்டர்களான இயக்கத் தோழர்களை வேண்டிக் கொள்ளுகிறேன்.

விடுதலை பத்திரிகை நண்பர் வீரமணி அவர்கள் ஏகபோக நிர்வாகத்தின்கீழ் நல்ல நிலையில் நஷ்டமில்லாத நிலையில் வாழ்ந்து வர வேண்டுமானால், இப்போது இருப்பதைவிட இன்னும் குறைந்தது 2,500 சந்தாதாரர்கள் இரண்டு மாதத்தில் சேர்க்கப்பட்டு ஆக வேண்டும். இதற்குப் பெரிதும் தஞ்சை மாவட்டத்தையே நம்பி இருக்கிறேன். ஓர் ஆண்டுக்குள் மேலும் 5,000 சந்தா பெருகி ஆக வேண்டும். அது 2 மாதத்திற்கு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இப்போது உடனடி யாக 2 மாதத்தில் 2,500 சந்தா அதிக மாகச் சேர்க்கப்பட்டு ஆக வேண்டும்.

இன்று நமது இயக்கம் இதுவரை இருந்த அளவை விட உச்ச நிலையில் இருக்கிறது. இது உண்மை என்பது மெய்ப்பிக்க வேண்டுமானால் இது தான் பரீட்சை. ஆதலால், நான் வீரமணி அவர்களைப் பாராட்டி இந்த முயற்சியோடு இந்த ஆசை யோடு, விடுதலையின் 25ஆவது ஆண் டில் அதை மறுபிறவி எடுக்கும்படி அவரிடம் ஒப்புவிக்கிறேன்.

இயக்கத் தோழர்கள் இந்த வேண்டுகோளை நிறைவேற்றி, எங் களைப் பெருமைப்படுத்தி விடு தலையை வாழ வைத்த வீரமணி அவர்களையும், உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நாளை முதலே தோழர்கள் இந்தக் காரியத்தில் இறங்கிச் செயல்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்கு ஆக, ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மாவட்டத்தில் இத்தனை இத்தனை சந்தா சேர்த்துத் தருகிறோம் என்பதாக எனக்கு உறுதி வார்த்தை ஒரு வாரத்தில் அளிக்க வேண்டுமாய் வேண்டிக் கொள் கிறேன்.

விடுதலையின் சேவையை எடுத்து விளம்புங்கள்!

நமது இயக்கம், நமது பத்திரிகை செய்துள்ள பணிகளை மக்களிடம் சொல்லுங்கள். இது மறைந்தால் என்ன ஆகும் என்பதை விளக் குங்கள்.

அதிகாரிகளை, அரசாங்க சிறிய உத்யோகஸ்தர்களை, வியாபாரிகளை விவசாயப் பொது மக்களை தைரிய மாய் அணுகுங்கள். வெட்கப்படா தீர்கள். தமிழ்நாட்டு மக்கள் இன உணர்ச்சியையும், சமுதாய நலன் உணர்ச்சியையும் பரீட்சை பார்ப்ப தில் நமக்கு கவுரவக் குறைவு நேர்ந்து விடாது.

ஆண்டு மாத காலம் 60 நாட்களில் 2500 சந்தா, தினம் 42 சந்தா, 13 மாவட் டங்களில் 13 மாவட்டத்தில் 100 வட் டங்கள் (தாலுகாக்கள்) பொதுவாக ஒரு மாவட்டத்திற்கு 200 சந்தாவீத மாகும் இதுகூட நம் கழக முயற்சிக்கு விடுதலை மறுபிறப்புக்கு கைகூட வில்லை என்றால், நம் நிலை என்ன என்பதை தோழர் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டுமென்று வேண்டி, இந்த வேண்டுகோளை விண்ணப்ப மாகத் தமிழ்நாட்டு மக்களிடம் சமர்ப் பிக்கிறேன்.

(விடுதலை 6.6.1964)

தமிழ் ஓவியா said...

பாராட்டுகிறார்கள்

தந்தை பெரியார்



ஒழுக்கக் கேடானதும், மூடநம்பிக்கை களை வளர்க்கக் கூடியதும், தமிழ் மக்களுக்கு சமுதாயத்திலும், அரசியலிலும், உத்தியோகத் துறையிலும் கேடு அளிக்கக் கூடியதுமான காரியங்களை வெளியாக்கி, அக்கேடுகளைப் போக்குவதற்காகப் பாடுபடும் பத்திரிகை விடுதலை. விடுதலை பத்திரிகை இல்லாதிருந்தால் மேற்கண்ட துறைகளில் ஏற்படும் கேடுகளை ஏன் என்று கேட்க நாதியில்லாமல் போயிருக்கும். (விடுதலை 16.6.1964).

அறிஞர் அண்ணா



தனது இனத்தைத் தட்டி எழுப்ப - தன் இனத்தின் இழிவைப் பேக்க தன் இனத்தார் அகப்பட்டுள்ள வஞ்சக வலையைத் கிழித் தெறிய பாடுபடும் ஒரே தினசரி விடுதலையே!

தமிழ் ஓவியா said...

கலைஞர்



நான் முதலில் படிக்கும் ஏடு விடுதலையே! அறியாமையிலிருந்து விடுதலை ஆதிக்க வெறியிலிருந்து விடுதலை. விடுதலைக் காக களத்தில் வாளேந்தி கடும போர் புரிந்து வரும் விடுதலையே!

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தமிழன் வீடு என்பதற்கான அறிவிப்புப் பலகை - விடுதலை

எஸ்.ஏ.டாங்கே



கம்யூனிசக் கொள்கைகளைப் பரப்பும் - உண்மையான தலைவர் பெரியாரும், விடுதலையுமே!

ஏ.கே. கோபாலன்



கம்யூனிஸ்டுக் கட்சி அடக்குமுறைக்கு உட்பட்டபோது ஜனநாயக உரிமைக்காக நிமிர்ந்து நின்று கிளர்ச்சி செய்தது திராவிர் கழகத் தோழர்களும், விடுதலையுமே!

கி.ஆ.பெ. விசுவநாதம்



விடுதலை நேர்மை உள்ளவர்களுக்கு நீலோற்ப மாலை, விஷமக்காரர் களுக்கு விரியன் பாம்புக்குட்டி!

மூத்த பத்திரிகையாளர் சோலை



ரஷியய் புரட்சி கண்ட மாமேதை லெனினுக்குப் போர் வாளாக இருந்தது இஸ்காரா (தீப்பொறி). சமுதாயப் புரட்சி கண்ட தந்தை பெரியாருக்குக் கேடயமாக இருந்தது - இன்றும் இருப்பது - விடுதலை



விடுதலை ஏற்ற விழுப்புண்கள்

1937இல் ராஜாஜி சென்னை மாநிலப் பிரதமராக இருந்தபோது விடுதலைக்கு ஜாமீன் தொகையாக ரூபாய் ஆயிரம் விதிக்கப்பட்டது.

1939இல் விடுதலையில் வெளிவந்த ஒரு கட்டுரைக்காக 124 ஏ பிரிவின்படி விடுதலை வெளியீட்டாளர் ஈ.வெ.கிருஷ்ணசாமி (பெரியாரின் அண்ணன்), ஆசிரியர் பண்டித முத்துசாமிப்பிள்ளை ஆகியோருக்கு ராஜாஜி ஆட்சியால் ஆறுமாத காலம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.

1948 - 1949

பெரியாரும், குத்தூசி குருசாமியும் எழுதிய கட்டுரைக்காக ஜாமீன் தொகையாக ரூ. 2000; அடுத்து மேலும் 10 ஆயிரம் பொறுப்புப் தொகை கட்டப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப் பட்டதும், தமிழர்கள் 15,000 ரூபாய் வாரி வழங்கி, தங்கள் ஆதரவைக் காட்டினர். இப்படி எத்தனை எத்தனையோ விழுப்புண்கள்!

19.1.1955 - விடுதலையில் இளந்தமிழா புறப்படு போருக்கு என்னும் கட்டுரையை நெடுமாறன் என்ற நடராசன் எழுதியதற்காகவும் அபராதம் விதிக்கப்பட்டது. விடுதலை ஆசிரியர் என்ற முறையில் மணியம்மை யார் அபராதம் கட்ட மறுத்து சிறை சென்றார்.

தணிக்கை

நெருக்கடி காலத்தில் 1976இல் விடுதலைக்குத் தணிக்கை முறை கொண்டுவரப்பட்டது. பெரியாரை தந்தை (தந்தை பெரியார்) என்று கூடப் போடக் கூடாது என எச்சரிக்கை - மீறி தந்தை பெரியார் என்றே வெளியிட்டது விடுதலை. எதிர்நீச்சல் என்பது விடுதலையின் ரத்த வோட்டம்!

சாதனைச் சுவடுகள்...

தீண்டாமை ஒழிப்பு

ஜாதி ஒழிப்பு

பெண்ணடிமை ஒழிப்பு

மூடநம்பிக்கை ஒழிப்பு

சமூக நீதி

சமதர்மம்

சமத்துவம்

சுயமரியாதை

அரசியல் தெளிவு

பகுத்தறிவு

புரட்சி - திசைகளில் விடுதலை பதித்த கல் வெட்டுகள் காலவெள்ளத்தால் அழிக்கப்பட முடியாதவை - கலங்கரை விளக்கைப் போன்றவை!

தந்தை பெரியார் அவர்களின் போர் வாளாக அன்றும் சரி, இன்றும் சரி சுழன்று, சழக்குகளை ஆணிவேரோடு சாய்த்து வெற்றி முரசு கொட்டி வருகிறது.

தந்தை பெரியாரின் போர்வாளாகச் சுழன்று கொண்டிருக்கும் விடுதலை ஏடு சோதனைகள் என்னும் அமில ஆற்றைக் கடந்து சாதித்த சாதனைகள் சாதாரணமானவையல்ல.

தீண்டாமை ஒழிப்பு

பொது வீதிகளில் நடக்கும் உரிமை உட்பட இரயில்வே நிலையங்களில் பிராமணாள் இதரவாள் சாப்பிடும இடம் என்கிற பேத ஒழிப்பு உட்பட இதன் சாதனைச் சிகரங்கள் பற்பல.

ஜாதி ஒழிப்பு

ஜாதிகளைப் பாதுகாக்கும் வேதம், இதிகாசம், புராணம், சாஸ்திரங்களை மட்டுமல்ல; ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்பு சட்ட எரிப்புப் போராட்டம் உட்பட விடுதலை நிகழ்த்திய சமர்கள் அனேகம்.

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கை ஒழிப்பு

கடவுள், மதம் இவற்றில் பெயரால் மக்கள் மத்தியில் மங்கிக் கிடக்கும் மூடநம்பிக்கை இருளை ஆணிவேரோடு வீழ்த்த வீரப்போர் புரிந்தது விடுதலை. பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு என்பதோடு, மக்கள் மத்தியில் பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தூண்டும் வகையில், பிரச்சாரம், மந்திரமல்ல தந்திரமே நிகழ்ச்சி, அறிவியல் கண்காட்சி, தீக்குண்டம் இறங்கிக் காட்டுதல் ஆகிய இவற்றைப் பற்றிய பிரச்சாரப் பாடங்களும், பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மையைத் தூண்டும் பாதையில் விடுதலை ஆற்றியிருப்பது அளப்பரிய பணிகளாகும்.

தமிழ் ஓவியா said...

பெண்ணடிமை ஒழிப்பு

பெண் என்றால் ஆணின் அடிமை என்ற அநீதியை ஆணிவேரோடு வீழ்த்தி, பெண்களுக்குக் கல்வி உரிமை, வேலைவாய்ப்பு, சொத்துரிமை, விதவைத் திருமணம், விவாகரத்து உரிமை, ஆணுக்கு நிகராக அனைத்து உரிமைகளும் பெண்களுக்கு கிட்டவும் - பழமைகளைச் கிழித்தெறிந்து, பெண்களைப் புதிய முற் போக்குச் சிந்தனையில் நடை போடவும் நடை பாவாடை விரித்தது விடுதலையே!

சமூகநீதி

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று ஆணி அடித்து உருவாக்கப்பட்ட வருணாசிரம சமூக அமைப்பில், கடும் போராட்டங் களை நடத்தி, கல்வி, வேலைவாய்ப்பில் மக்கள் தொகைக்கேற்ப இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற போராட் டத்தில் புதிய மைல் கற்களைத் தோற்றுவித்தது விடுதலையே!

மனுதர்ம சிந்தனையின் அடிப்படை யில் ராஜாஜி அவர்கள் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைக் குழிதோண்டி புதைத்ததிலும், கல்வி நீரோடையில் ஆரிய முதலைகளை விரட்டியதிலும் புது சகாப்தம்! இந்தியாவிலே 69 சதவிகித இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் தான் என்ற நிலையை உறுதிபடுத்தியதிலும் உறுதி யாய்ப் பாடுபட்டதிலும் விடுதலை ஏட்டுக்கு இணை விடுதலையே சமதர்மம் -

சமத்துவம்

பேதம் எந்த வடிவத்திலும் அனுமதிக் கப்பட முடியாது. சமூகம், அரசியல், பொருளாதாரம் அனைத்துத் துறைகளி லும், அனைவருக்கும் அனைத்தும் என்ற அடிப்படையில் அயராது பாடுபட்டு வருவது விடுதலை நாளேடே!

முதலாளி - தொழிலாளி என்ற சொற் களே கூடாது. தொழிலாளி தொழிற்சாலை யில் பங்குதாரர் ஆகவேண்டும், பொதுவு டைமை என்றால், பொதுவுரிமை என்றால் என்ன? சொத்துரிமையே ஒழிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட உயர் எண்ணங்கள் பூக்கும் பொதுமைச் சோலையாக மிடுக்காக மிளிர்வது விடுதலையே!

சுயமரியாதை

தந்தை பெரியார் உருவாக்கிய இயக்கத்திற்குப் பெயரே சுயமரியாதை இயக்கம்தான். ஒரு மனிதனை சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாக காணப் படுகிறதோ, அவைகளை யெல்லாம் மாற்றுவதுதான் சுயமரியாதை என்ற கருத்து சூரியக்கதிராக இருந்து ஒளிவீசும் ஒப்பற்ற ஏடுதான் விடுதலை!

தமிழ் ஓவியா said...


அரசியல் தெளிவு

நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டமல்ல; ஆரியர் - திராவிடர் போராட்டமே! என்று யாரும் கூற அச்சப்படும உண்மையை வெளிச்சமாகத் தெளிவித்து, மக்கள் மத்தியில் இனவு ணர்வைப் பாதுகாத்து வளர்க்கும் பெரும் பணியைத் தன் தோளின் மேல் போட்டுக் கொண்டு சுழன்று பணியாற்றும் சிப்பாய் விடுதலையே!

பகுத்தறிவு

மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது பகுத்தறிவின்படி மக்களை நடக்கச் செய்வதும், சிந்திக்கச் செய்வதும்தான் என்ற தந்தை பெரியார் தத்துவத்தைத் தலைமேல் தாங்கி பகுத்தறிவுக்கு முரணானது எதுவாக இருந்தாலும் அதை ஆணிவேர்வரை சென்று அழிக்கும் அழிவு வேலைக் காரனாம் அறிவாயுதமே விடுதலை!

மனிதநேயம் - ஒழுக்கம்

மனிதனுக்கு அழகு மனிதநேயம் அவனிடம் குடிகொள்வதே! அதுபோல ஒழுக்கம் பொதுச்சொத்து - பக்தி தனிச்சொத்து என்று மக்களிடம் விளக்கி ஒழுக்கக்கேட்டுக்கு காரணமான கோயில் அமைப்பு முறை, பிராயச்சித்தம், பாவமன்னிப்பு - இவற்றை நிர்மூலமாக்கி, மனிதனின் சிந்தனையை ஒழுக்கத்தின் உறைவிடமாக உயர்த்தும் ஒரு பெரும் பணியை மேற்கொண்டு வரும் ஆசான் விடுதலையே!

மனிதன் மூளையில் பூட்டப்பட்ட பழம் பாசிகளையெல்லாம் அடியோடு துடைத் தெறிந்து மனித அறிவைத் துலக்கி, உயர்ந்த சீலங்கள் என்னும் ஜன்னல் களைத் திறந்துவிட்டு, மனிதநேயப் பகுத்தறிவு, சமத்துவம் உள்ளிட்ட மேலான காற்றினை சுவாசிக்கும் - சமத்துவ - சமதர்ம - சுயமரியாதை சமூ கத்தைப் படைக்கும் ஒப்பரிய பணியில் இணையற்ற வீரனாக பணியாற்றும் விவேகமிக்க ஏடு விடுதலையே!

பேதங்களை ஒழித்து, ஒப்புரவு சமூகத்தைப் படைக்கும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் ஒரு நாட் டுக்கோ, ஒரு இனத்துக்கோ மட்டும் சொந்தமானதல்ல; உலக மானுடத்திற்கே தேவையானவைதான்.

இவற்றை நம் சுவாசக் காற்றாகக் கொண்டு ஒவ்வொரு நொடியையும் அதற்காகவே அர்ப்பணிக்கும் விடுதலை உலகிற்கே தேவைப்படும் உன்னத ஏடு.

மண்டைச் சுரப்பை உலகு தொழும் - என்றார் புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் - தந்தை பெரியார் அவர்களைப் பற்றி!

அந்த உலகத் தலைவரின் கொள்கை பரப்பும் விடுதலை ஏடு உலகிற்கே தேவைப்படும் வழிகாட்டி! உலகத்திலே நாத்திகக் கொள்கையைப் பரப்பும் நாளேடு விடுதலை ஒன்றே!

விடுதலை வாங்குவீர்!

விடுதலை பெறுவீர்!

நாளையும் அதன் வீச்சுத் தேவைப் படுகிறது. விடுதலை வாங்குவோம், விடுதலை பெறுவோம்!

தமிழ் ஓவியா said...

பத்தரைமாற்றுத் தங்கத்தைப் போற்றிடுவோம்



ஈரோட்டுப் பெரியாரின் இணையற்ற மாணாக்கர் வீரமணிப் பெருமகனார் தமிழ்நாட்டு வரலாற்றின்
பேரேட்டில் தடம்பதித்துப் பெரும்புகழைப் பெற்றுள்ளார்; அயர்வில்லாப் பேருழைப்பால் அய்யாவின் பகுத்தறிவுத்
தேரோட்டித் தெருவெல்லாம் முழங்குகின்றார் இருளகற்றித் தன்மானச் சுடர்பரப்பி இனஇழிவைத் துடைத்தெறிந்தே
சீராட்டித் தமிழினத்தின் மறுமலர்ச்சி வளர்க்கின்றார் பொன்னான பெருமகனின் பொன்விழாவைப் போற்றிடுவோம்!

அய்யாவின் அடிச்சுவட்டில் அருஞ்செயல்கள் பலபுரிந்தே மெய்யாகத் தமிழினத்தின் மேன்மைக்காய் உழைக்கின்றார்.
பொய்யாகப் பலபுனைந்த போக்கிலிகள் புன்செயல்கள் பெருந்தன்மை மிளிர்ந்திடவே மன்னிக்கும் இவர்மாண்பைப்
பாட்டினிலே பதிந்திடுவோம்! காவியங்கள் படைத்திடுவோம்! பண்பாட்டில் அய்யாவைப் பதிந்துவைத்த பெருந்தகையாம்!
ஏட்டினிலே எழுத்தினிலே பேச்சினிலே இவர்போன்றே இணையற்ற தலைவர்யார்? உண்மைதான் புகழ்ச்சியில்லை!

நித்திரையை மறந்துநிதம் துன்பமுறும் ஈழத்தார் தன்னுரிமை பெற்றிடவும் தன்மானம் காத்திடவும்
இத்தரையில் இணையற்ற இனஎழுச்சி மீட்பராக இங்குமங்கும் இன்னலுறும் தமிழினத்தின் காவலராய் புத்தரைப்போல்
அறிவுதந்த பெரியாரின் மறுபதிப்பாய் மொத்தமான பொறுப்பனைத்தும் தன்தோளில் தான்சுமந்தார்!
பத்தரைமாற் றுத்தங்கம் பகுத்தறிவுச் சிங்கமன்றோ அயர்வின்றி உழைக்கின்றார் நலம்வாழப் பாடுகின்றோம்!


- மறைமலை இலக்குவனார்

தமிழ் ஓவியா said...

விடுதலைபற்றி விடுதலை ஆசிரியர் விடுதலை ஏடு எனும் பெரியார் போர்வாளுக்குப் பவள விழா!


தந்தை பெரியாரின் போர்வாளான விடுதலை ஏட்டின் பவள விழா தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டிலே வரும் 24 ஆம் தேதி நடை பெற உள்ளது. அவ்விழா வில் அனைவரும் பங்கேற் குமாறு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அழைப்பில்,

நமது அறிவு ஆசான், பாருக்கெல் லாம் பகுத்தறி-வுப் பகலவனாகத் திகழ்ந்த தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் இயக்கத்திற்குத் தந்த போர்வாள் விடு-தலை நாளேடு!

பவள விழா காணும் விடுதலை

அந்நாளேடு, பகுத்-தறிவு, சுயமரியாதை, சமூக-நீதி, பெண்ணுரிமை, மூட நம்பிக்கை ஒழிப்பு இவை-களை முன்னிறுத்தி தொடர் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தலை தாழாது _ ஆயிரமா-யிரம் இன்னல் கள், தடை-கள் _ இவைகளுக்கு இடையேயும் தனது லட்சி-யப் பயணத்தை, தடம் புர-ளாமல் நடத்திக் கொண்டே வந்து, 75 ஆம் ஆண்டில் _ பவள விழாவினைக் கண்டுள்ளது இவ்வாண்டு.

அது தொடங்கப்பட்டது ஜூன் 6, 1935 ஆம் ஆண்டு _ அதுவும் பெரியார் பிறந்த மண்ணில், ஈரோட்-டிலிருந்து பல ஆண்டு-கள் வெளிவந்தது! (3.7.1937 முதல் 19.9.1943 வரை).

அதன் முதல் பவள விழாக் கொண் டாட்டத்தை தஞ்சைக் கழகக் குடும்-பங்களின் இடையறாத வற்புறுத்தலால் அங்கே மிகவும் சீரும் சிறப்புடனும் நடத்தினோம்!

கழகத்தின் நஞ்சையாம் தஞ்சை பூமியில் அது நல்ல தொடக்கத்தினைப் பெற்றது!



தமிழ் ஓவியா said...

நாடெங்கும் உள்ள தமிழ்ப் பெரு மக்களின் ஒத்துழைப்பு இதற்கு வற்-றாது கிடைத்து அதன்-மூலம் வளர்ந்து வருகிறது!

இணைய தளத்தில் வெளிவந்த முதல் ஏடு

இணைய தளத்தில் முதன்முதலாக வந்த தமிழ் நாளேடும் இது தான்! இதன் காரணமாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் உடனடியாக, உள்நாட்ட வர்கள் படிக்கும் முன்பேகூட - படித்து முடித்து விடுகின் றனர். சுமார் 37 நாடு-களுக்குமேல் உள்ள தமிழர்கள் விடுதலை இணைய தளப் பதிப்-பினை இடையறாது படித்-துப் பாராட்டிச் சீராட்டு-கின்றனர்.

அவ்வப்போது ஆக்க ரீதியான ஆலோசனை-களையும் வழங்கத் தவறு-வதில்லை.

விடுதலையை 8 பக்-கமாக்கி, இன்றுள்ள காகி-தம் மற்றும் அச்சுப் பொருள் விலையேறிய நிலையிலும், பழைய தொகைக்கே _ நன்-கொடை பெற்று, தொடர்ந்து அய்யா உருவாக்கிய அறக்கட்-டளையின் அடிக்கட்டு-மானத்தின் பலத்தால் பொருள் நட்டத்தையும் பொருட்படுத்தாது, இலட் சிய இலாபம் ஒன்றையே முக்கியமாகக் கருதி அதன் பவள விழாவை தமிழ்நாட்டின் பற்பல பகுதிகளிலும் நடத்திடத் திட்டமிட்டோம்.

அதன்படியே, ஈரோட்டு மண்ணில் தமிழ்-நாட்டின் நம்பிக்கை ஒளி-யான துணை முதல்வர் செயல்திறன் செம்மல் டாக்டர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமை விருந்தினராக வந்து கலந்துகொள்வது அவ்-விழாவிற்குத் தனிப் பெருமை சேர்ப்பதாகும்.

அறிஞர் அண்ணா ஆசிரியராக இருந்து ஒளியேற்றிய நாளேடு

அறிஞர் அண்ணா-வின் நூற்றாண்டு நிறைவு பருவம் இது! அறிஞர் அண்ணா அவர்கள் அய்-யாவின் விருப்பத்திற்கேற்ப அவர்தம் அன்புக் கட்-டளை ஏற்று, விடுதலை நாளேட்டின் ஆசிரியராக 70 ஆண்டுகளுக்கு முன்பு தனது எழுத் தோவியங்-களைத் தந்து தொண்டறம் புரிந்த வரலாறு, திராவிடர் இயக்க வரலாற் றின் ஒரு பொலிவு பூத்த அத்தியா-யமாகும்!

அந்நகரில் இம்-மாபெரும் விழா!

சிறப்புக்குரிய விருந்தினர் பெருமக்கள் பங்கேற்பு

விடுதலை 75 ஆம் ஆண்டு சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா நமது கொள்கைப் பண்-ணையத்தில் விளைந்த கதிர் நெல்லாகி, முதல்வர் கலைஞர் தம் ஆணை-யேற்று, மத்திய அமைச்-ச-ரவையில் தொலைத்-தொடர்பு _ தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகி, அணி செய்-யும் மானமிகு மாண்புமிகு ஆ. இராசா அஞ்சல் உறையை வெளியிட,

தமிழ்நாட்டின் பொற்-கால ஆட்சியின் துணை முதல்வர் அடக்கத்தின் உருவ மாகவும், ஆற்றலின் கொள்கலனாகவும் உள்ள நமது துணை முதலமைச்-சர், பதவியேற்றும் அண்ணா பல்கலைக்கழகத்-தின் முது முனைவர் பட்-டம் பெற்றும், முதன் முதல் ஈரோட்டிற்கு வருகிறார் _ தாய்க் கழக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள _ கழகம் ஒரு குடும்பம் _ கொள்-கைக் குடும்பம் என்பதை குவ-லயத்திற்கே எடுத்து-ரைக்-கும் பிரகடனமாகும்.
தமிழகமேதிரள்க!

தமிழ் ஓவியா said...

துள்ளிவரும் இனப் பகையை எள்ளி நகை-யாடியே விரட்டிடும் விழா-வாக இவ்விழா ஈரோட்டு மண்ணில் _ எந்தை யினை எமக்களித்த பெருமைமிகு பொன்னைவிட மேலான தலைவன் விளைந்த மண்-ணில் நடைபெறும்போது,
கழகக் குடும்பங்கள் அக்காட்சி மாட்சிகளைக் கண்டு களிக்காமல் இருக்-கலாமா? இருக்க முடி-யுமா? ஈரோடு மாவட்டத்-தின் கழகப் பொறுப்பாளர்-கள்_ கொங்கு மண்டலத்-துக் கொள்கை மாவீரர்கள் அனைவரும் தஞ்சையை மிஞ்சும் வகையில் சந்தா அளிப்பு முதல் விழாச் சிறப்புவரை நடத்திக் காட்டிட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்-றனர்!

கழகக் குடும்பங்களின் சங்கமமாக ஈரோடு அன்று (24.8.2009) காணப்பட-வேண்டும். கருங்கடல் பொங்கட்டும்! விடுதலை பவள விழா வரலாறு படைக்-கட்டும் ஈரோடு!

விடுதலை 21-_8_2009 பரம்பரை யுத்தம் இன்னும் முடிந்துவிடவில்லை! தந்தை பெரியார்தம் இலட்சி யங்கள் நிறை வேறிட ஊரெங்கும் விடுதலை பரவிட வேண்டும்; இலட்சம் சந்தாக்களைச் சேர்க்க வேண்டும். அதற்காக உழைக்க உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

32 ஆண்டுகளுக்குமுன் (16.3.1978) அருமை அன்னையார் (மானமிகு ஈ.வெ.ரா. மணியம்மையார்) அவர்கள் உடலால் மறைந்து உணர்வால் பெரியார் தொண்டர்கள் உள்ளத்தில் உறைந்தார் கள்.

முடிந்தவரை உழைத்து வருகிறேன்!

அய்யாவின் விருப்பப்படி, அம்மா வின் ஆணைப்-படி கடமையாற்றிடும் தொண்டினை, இந்த எளிய தோள்களில் சுமந்து, (18.3.1978 முதல்) முடிந்தவரை உழைத்து வருகிறேன்.

மலைபோன்ற எதிர்ப்பு, புயல் போன்ற துரோகம், அலை அலையாக நெருப்புக் கனல் வீச்சுகளால் நெருங்-கிட முடியாத நெருப்பாற்றுப் பயணம் _ இவைகளே எனக்குக் கிடைத்த வாய்ப்புகள்!

எல்லாவற்றையும் சந்திக்கும் துணிவு!

எல்லாவற்றையும் சந்திக்கும் துணிவு _ எமது அறிவு ஆசானின் பயிற்சியால் கிடைத்த உளப்பாங்கு ஆகும்.

எவ்வளவு ஏச்சுப் பேச்சு, இழி சொற்கள், அரு-வருக்கத்தக்க அவ தூறுகள் _ இவைகளைத் தாங்கி, தளராது நடைபோட்டு இலட்சியங்களை நோக்கிப் பயணம், எம் அன்னையாரிடமிருந்து வரித்துக்கொண்ட வாரிசுரிமை!

சுகமான பயணம்

தொடுவானத்தை நோக்கிய பயணம் செய்வோன் எவ்வளவு தொய்வின்றி நடந்தாலும், ஓடினாலும் தொட்டுவிட முடியுமா அதனை?

அதுபோலத்தான் நம் இயக்கப் பணியும்!

இவ்வளவு பெரிய சுமையைப் பொதி சுமைப்பது-போல் சுமந்து செல்லும் பாதையில் சுயநலம் குறுக்-கிடாமல் பார்த்துக் கொள்வதால் அது சுகமான பயணமாகிறது.
பனிபோல் உருகி விடும்!

எதனையும் சுமக்கும் பொறுப்பினைத் தாங்கிட, எண்ணற்ற எம் தோழர்கள், தோழியர்கள் பல்லாயிரக்-கணக்கில் இருப்பதால், எதிர்ப்புகளும், துரோகங் களும் மலைபோல் தெரிந்தாலும், அவை பனிபோல உருகி ஓடிவிடு கின்றன!

இயக்க வளர்ச்சியில் இளைஞர்கள் பங்கு, மாணவர் பட்டாளத்தின் படையெடுப்பு _ வாலிபர்களின் வருகை, முதிய இளைஞர்களின் முதிர்ச்சி முத்திரை இவை-யெல்லாம் நம் இயக்கம் ஈடு இணையற்ற ஒரு சமுதாய புரட்சி இயக்கம் என்பதை உலகுக்கு அவ்வப் போது பறைசாற்றுகிறது!

தமிழ் ஓவியா said...

பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம்

பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் இரண்-டாண்டு_ வளரும் பருவத்தில் அது செய்துள்ள சாதனை, வளர்ச்சி கண்டு பொறுக்காத பெரு உள்ளத்துக்குரியோர் அதனை சோத னைக்குத் தள்ளி உள்ளனர்!

தடைக்கற்களைத் தாண்டி அது வீர காவியம் _ கல்வித் துறைப் புரட்சியைப் படைக்கும் என்பது உறுதி _ நியாயத்தின் அடிப்படையில்.
காரணம், அது ஒரு மக்கள் பல் கலைக்கழகம். அத-னால் வழக்கு என்று வம்பு தொடர்ந்தாலும், பல்கலைக் கழகத்தினை வாரியணைப்பது, காப்பது எமது கடன் என்று பெற்றோர்கள், தோழர் பன்னீர்செல்வம், அய்யனார் போன்றவர்கள்மூலம் உலகுக்குப் பறைசாற்றி நமக்கு உரமூட்டுகிறார்கள்!

சாண் ஏறினால் முழம் சறுக்கல்

சமூகநீதிக் களத்தில் சாண் ஏறினால் முழம் இறங்குவதுபோல, உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்-பட்டோருக்கு முன்பு லேசாகத் திறக்கப்பட்ட கதவு மீண்டும் இரட்டைத் தாழ்ப்பாள் போடும் அளவுக்கு மூடும் மோசடியின் அரங்கேற்றம் மத்திய கல்வித் துறை-யில் முக்காடு இன்றி முழு வீச்சில் தொடங்கி-விட்டது!

மீண்டும் கல்வி ஓடையில் நம் பிள்ளைகள் இறங்க முடியாத முதலைகள் ஆக்கிரமிப்பின் அபாயம்.

மகளிர் இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மகளிருக்கு ஒதுக்கீடு இன்றி அமைந்தால் மீண்டும் அது நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதைபோல் _ சமூகநீதிக் கொடி இறக்கப்படும் கொடு-மையை நாம் காணும் நிலை ஏற்பட்டுவிடும்!

பரம்பரை யுத்தம்

தமிழ்நாட்டில் சாதனைமேல் சாதனை குவிக்கும் சரித்திரம் படைக்கும் கலைஞர் ஆட்சியை மாற்றிடலாம் என்று சாணக்கியப் பரம்பரை ஏதேதோ சதுரங்க விளையாட்டை ஆடிப் பார்க்க ஆயத்தமாகிறது!

பரம்பரை யுத்தம் _ தேவாசுரப் போரின் முக்கிய கட்டம் மீண்டும் நடத்திக் காட்டினாலும், நமது பொறுப்பு எப்படிப்பட்டது என்பதை நம் தமிழர்களுக்கு உணர்த்திட வேண்டிய கடமை நமக்கு உண்டு.

ஈழத்தில் மலர்ந்த உணர்வை மந்திகள் மலரைப் பிய்த்து எறிவதுபோல் செய்த நிலை இங்கே பாய்ந்துவிடக் கூடாது!

தமிழ் ஓவியா said...

கலைஞரின் ஆட்சிக் கோட்டை

நமது கலைஞர் தலைமையில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி சாதனைப் பாறைகளால் கட்டப்பட்ட கோட்டை என்றாலும், அதில் ஏமாந்த காலத்தில் ஏற்றங் காணத் துடிக்கும் எதிரிகளுக்குக் கதவு திறக்கப்பட்டுவிடக் கூடாதல்லவா?

எனவே, அருமை இயக்கப் பாசறை வீரர்களே, நம்-முன் உள்ள நன்றி பாராட்டாத (Thankless Job) பணி-யின் பரிமாணம் வெகு கனமானது என்பதைக் கவனத்-தில் கொண்டு, களைப்பின்றி களம் காண துடிப்போடு வருக!

இனி தேதி வாங்க வருவோர்!

விடுதலையின் பவள விழா முடிந்துவிடவில்லை. மறவாதீர்!

அதனை இலட்சம் பிரதிகள் _ ஜோதிடமில்லாமல், சினிமா இல்லாமல், ஒரு இலட்சிய நாளேடு என்பதை வளர்த்து, இலட்சியப் பயணத்தில் இனி ஓய்வு, உறக்கம் இல்லை _ அந்த இலக்கு அடையும்வரை என்று உறுதியோடு செயல்படுங்கள்.

இனி நாளைமுதல் எம்மிடம் தேதி வாங்க வருவோர் குறைந்தபட்சம் 10 விடுதலை சந்தாக்கள் (5 ஒரு ஆண்டு; 5 அரையாண்டு) சேர்த்து முன்னதாகவே கொடுத்தால் மட்டுமே நிகழ்ச்சிக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

விடுதலை விருது

நமது கழகப் பொறுப்பாளர்கள், நமது இயக்கப் பேச்-சாளர்கள் அனைவரும்கூட அவர்தம் பிரச்சாரக் கூட்-டங்-களையொட்டி விடுதலை சந்தா சேர்ப்பு சாதனை நிகழ்த்தி விடுதலை விருது பெறத் தகுதியுள்ள-வர்களாக்கிட வேண்டும்.

கொள்கைத் தங்கங்களே!

தங்கம் தந்த எமது கொள்கைத் தங்கங்களே! நீங்கள் நினைத்தால் எதுதான் முடியாது? புது முறுக்கோடு புது முயற்சியில் இறங்கி _ புதிய சாதனை செய்து வெல்லுவோம்!

இயக்கப் பிரச்சாரம் பலப்படட்டும்!

கூட்டுக்குழு (Team) என்ற மனப்பான்மையோடு இணைந்-தால் நமது வெற்றி எளிதாக அடைவதாக அமையும்.

மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் மானமிகு பவுன்ராசா என்னைப் பார்க்கும்போது வணக்கம் என்று கூறுமுன் விடுதலை சந்தா தந்துவிட்டுத்தான் கூறுவார்.

தேத்தாக்குடி தோழர் ஆசிரியர் சித்திரவேலு தொடர்ந்து கூடும் கூட்டங்களில் எல்லாம் சந்தாக்களைத் தந்து கொண்டே இருப்பார்.

இந்த எளிய தோழர்களை _ எம் ஈடற்ற உறவு-களை, மற்ற உறவுகளே நீங்களும் பின்பற்றி இயக்கப் பிரச்சாரத்தைப் பலப்படுத்தி, காவி வியாபாரிகளின் முகமூடி கிழித்து, புதியதோர் உலகு செய்ய புத்தாக்கம் காண வாரீர்! வாரீர்!!

விடுதலை 18-_3_2010

கழகத்தின் அனைத்து அணியினரும் களத்தில் இறங்கிடுக!

விடுதலைக்கு சந்தா சேர்க்கும் பணியில் முழுமூச்சுடன் கழகத்தின் அனைத்து அணியின ரும் களம் இறங்குமாறு கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:- நமது இயக்கத்தின் முன் உள்ள பணிகள் ஏராளம்! ஏராளம்!! நமது இயக்கத் தோழர்கள், தோழியர் களின் உற்சாகம் எப்போதும்போல் கரைபுரண்டு ஓடும் வெள்ளமாகவே உள்ளது!

எதிர்ப்புகளோ, ஏளனங்களோ, நம் எஃகு கோட்டையை ஓட்டையாக்கிட முடியாது! விடுதலை சந்தித்த சுனாமிகள்! விடுதலை நாளேடு நேற்றுவரை சந்தித்த சோதனைகளும், சூறாவளிகளும், சுனாமிகளும் கொஞ்ச நஞ்சமல்ல!

அவை தான் நம் கொள்கைப் பயிர்க்கு இயற்கையும், நம் இன எதிரிகளும், இட்ட நல்ல உரங்கள்! செழித்தோங்கும் - இனி நம் விளைச்சல்! கழகக் குடும்பத்தவர்கள் மட்டுமல்ல - இன உணர் வாளர்கள் உள்பட பலரும் விடுதலை சந்தாக்களை துப்பாக்கியை அழுத்தினால் கிளம்பும் தோட்டாக்கள் போல் தந்து ஊக்கமும் உற்சாகமும் வழங்குகின்றனர்!

பிரச்சாரப் பணிகள்

பிரச்சாரப் பணிகள் தொய்வின்றி நடைபெறுகின்றன.

மேலும் பகுத்தறிவுப் பிரச்சாரமாக, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரமாக அடை மழைபோல் பெய்ய வேண்டும்.

ஜூன் மாதம் 15 முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை எங்கும் - நகர்ப்புறம் தொடங்கி கிராமப்புறங்கள் வரை நடக்கட்டும் பிரச்சாரங்கள்.

சந்தா சேர்க்கும் பணி!

மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை, தொழிலாளர் அணி உள்பட அனைத்து கழகச் செயல் வீரர்களும் தோழியர் களும் மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றிடும் நிலையில், சந்தாக்கள் சேர்ப்பை மிகவும் முன்னுரிமைப் பணியாக ஏற்றுத் தொண்டாற்ற முன் வந்து, சாதனைகளை செயலில் காட்டிட வேண்டு மெனக் கேட்டுக் கொள்கிறேன்.

விடுதலை 18.6.2011

தமிழ் ஓவியா said...

இமயமாய் இலங்கும் இணையிலா இதழாசிரியர் வீரமணி - வீ. குமரேசன்



மானிடராய் பிறப்பவர் பலரும் தான், தன் குடும்பம், அவர்தம் சுற்றம் சார்ந்த வாழ்வியல் மேம்பாட்டின் அடையாளமாகவே வாழ்ந்து வருகிறார்கள். பொது நல நோக்கம் பற்றிய மேலான எண்ணங்கள் உள்ளத்தில் இருந்தும் பொது நல வாழ்வில் ஓரளவாவது தம்மை உட்படுத்திக் கொள்ளாத மனப்போக்கையே பெரும்பாலோரிடம் காணமுடிகிறது. இது இன்றைய நடப்பு மட்டுமல்ல.

கடந்த கால நிலவரமும் கூட. பொது வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டு ஓரளவு சமுதாயப் பணி ஆற்ற விரும்பு பவர்கள் மிகச் சிலரே. இப்படி பொது வாழ்வில் விருப்பம், ஈடுபாடு என்பது என்னவென்றே அறியாத வயதில் சமுதாயப் பணிக்கு வந்த தனிச் சிறப்பு மிக்கவர், இன்றைய திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆவார்கள். 80வயது தொடங்க இருக்கின்ற நிலையில் 71 ஆண்டு கால பொது வாழ்க்கை அர்ப்பணிப்பிற்குச் சொந்தமான அவரது தனித்துவம் மகத்தானது.

பொது வாழ்வோடு இணைந்து பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு - படிப்பு நிலையிலும் சிறப்புடன் தேர்ச்சி; பொருள் வளமில்லாக் குடும்பச் சூழலில் வளர்ந்து வந்தாலும், பொருள் ஈட்டலைப் புறந்தள்ளி , பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியாரின் விருப்பத்திற்கிணங்க முழுநேர சமுதாயப் பணியாற்ற வந்த வரலாற்றுக்குச் சொந்தமானவர்- பெரியார் இயக்கத்தின் தன்னிகரில்லாத தகைமையாளர் தமிழர் தலைவர் வீரமணி. படித்துப் பட்டம் பெற்றபின், வருவாய் ஈட்டிடும் பணி ஆற்றல் நிரம்பப் பெற்ற வேளையிலும், ஊதியம் எனும் வாழ்வாதாரப் பரிமாணத்தில் நாட்டம் காணாத ஆசிரியர் வீரமணி, ஓய்வறியாத உன்னதத் தலைமையின் உண்மை வடிவமாக திகழ்கிறார்.

பகுத்தறிவு, சுயமரியாதை, மனிதநேயம்

பொது வாழ்வில் சிறந்திட, சரியான சிந்தனை, முறையான கொள்கையில் ஈடுபாடு, அமைப்பு சார்ந்த செயல்பாடுகள் அவசியம். இவைகளைக் கொண்ட தலைமைப் பண்பாட்டின் செயல்பாட்டுக் கூறுகளான விளங்கும் கொள்கை சார்ந்த பேச்சு, எழுத்து மற்றும் செயல் எனும் மூவகைத் தளங்களில் முத்திரை பதித்திடும் போக்கு எல்லாத் தலைமையிடமும் அமைந்துவிடுவதில்லை. இந்த மூவகைச் செயல்தளங் களில் முத்திரை பதித்து பகுத்தறிவு, சுயமரியாதை, மனிதநேய இயக்கத்திற்கு ஒப்பில்லாத ஆக்கம் கூட்டியவர் - கூட்டி வருபவர் தமிழர் தலைவர் வீரமணி.

கொள்கை சார்ந்த எழுத்துப் பிரச்சாரத்தின் நீடித்த, நிலைத்த வழிமுறை என்பது இதழியல் பணியில் பொறுப்பினைச் சுமந்து இதழ் ஆசிரியராகப் இருப்பது தான். இதழுக்கு ஆசிரியர் என்பது தலைமைப் பண் பாட்டிற்கும், புத்தாக்க உணர்விற்கும் கூடுதல் மதிப்பீடு (value addition) அளிக்க வல்ல ஆற்றல் தளமாகும்.


தமிழ் ஓவியா said...

சாரங்கபாணி என பெற்றோர் வைத்த பெயரிலிருந்து கொள்கை சார்ந்த பெயருடன் வீரமணி என பொது வாழ்வில் பரிணாமம் பெற்று, இதழாசிரியர் எனும் பொறுப்பின் காரணமாக ஆசிரியர் வீரமணி எனும் அடைமொழியுடன் அழைக்கப்பட்டு, அன்பர்களால், இயக்கத் தோழர்களால் அடைமொழி யுடன் மட்டும் ஆசிரியர் என அடையாளப்படுத்தப் படும் நிலைகள், தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் தலைமைப்பண்பாட்டின் வளர்ச்சிக் கூறுகளாய் விளங்குகின்றன.

தலைமைப் பண்பிற்கான இலக்கணக் கூறுகள் பலவற்றை இலக்கியமாக்கி வரும் ஒரு தலைவர் தான் ஏற்றுக்கொண்ட இதழாசிரியர் பொறுப்பின் காரணமாக ஆசிரியர் எனும் அடை மொழியுடன் அழைக்கப் பெறுவது உலக அரசியல், சமூக, இதழியல் வரலாற்றில் ஒப்புவமை சொல்ல இயலாத சிறப்புகளாகும். இச் சிறப்பு தனிநபர் சிறப்பு என்பதை விட இனத்தின் - தமிழ் இனத்தின் சிறப்பாகும். காரணம் இன மீட்சியை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் இதழுக்கு - ஏட்டிற்கு ஆசிரியராய் வீரமணி அவர்கள் இருப்பதே உண்மை நிலையாகும்.

வீரமணி அவர்களுக்கு ஆசிரியர் எனும் அடைமொழி அழைப்பினை வழங்கிய ஏடு - பகுத்தறிவுப் பேராசான், சுயமரியாதை உணர்வூட்டிய திராவிடர் இனத்தின் ஒளிவிளக்கான தந்தை பெரியார் நிறுவிய ஏடான விடுதலை ஆகும். விடுதலை ஏட்டின் ஆசிரியராக தந்தை பெரியாரால் பொறுப்புடன் கூடிய ஏகபோக உரிமையினை பெற்று இயக்க ரீதியில் வழிநடத்துபவராக விளங்குபவர் தமிழர் தலைவர் வீரமணி ஆவார். 1935 இல் தோற்றம் கொண்ட விடுதலை ஏடு 77 ஆம் ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த வரலாற்றில் 1962 ஆம் ஆண்டில் விடுதலை ஏட்டின் ஆசிரியராகப் பொறுப் பேற்று ஏற்றமுடன் 50ஆம் ஆண்டில் தடம் பதித்து இதழியல் பயணத்தின் எழுத்துப் போராளியாகத் திகழ்ந்து வருபவர் தமிழர் தலைவர் வீரமணி. 77 ஆண்டு கால ஏட்டின் வரலாற்றில் 50 ஆண்டு காலம் அந்த ஏட்டின் ஆசிரியர் பொறுப்பு உலகில் வேறெங்கும் காட்ட இயலாத உன்னதப் பெருமை அல்லவா இது! ஒரே நாத்திக - மனித நேய ஏடு!

உலகில் வெளியிடப்படும் ஒரே நாத்திக, மனிதநேய நாளிதழ் விடுதலை மட்டுமே. இது தமிழ் மொழியில் வருவது தனிச்சிறப்பு. மொழி இனத்தின் அடையாளம். தமிழ் இனத்தின் பண்பாடு பகுத்தறிவு மனிதநேய வெளிப்பாடாக விளங்குவதால் தமிழில் நாத்திக மனிதநேய நாளிதழ் வெளிவருவது இயல்பே. தமிழ்ச் சமூகத்தின் இயல்பு நிலை, பண்பாட்டுப் படையெடுப் பின் முரண்பாட்டு முடிச்சில் சிக்கித் தவித்து வந்த சூழலில் கருத்துப் பிரச்சாரம் செய்திட களம் புகுந்த ஏடு விடுதலை.

தமிழ் ஓவியா said...


இதழியல் பணியின் பொதுவான இன்னல்களை, விவரங்கள் தெரிந்த பலரும் அறிவர். சீரிய கொள்கை விளக்கத்துடன், சமூகப் புரட்சிக்கான கருத்துகளைத்தாங்கி எதிர் நீச்சல் போட்டு வரும் விடுதலை ஏட்டின் செயல்பாட்டுக்கு இன்னல்கள், ஏளனங்கள், எதிர்ப்புகள் ஏராளம். இவை அத்தனை யையும் தாண்டி கருத்துப் பொலிவு, பதிப்புப் பொலிவுடன் பீடுநடை போட்டு சமுதாயப் பணி ஆற்றி வரும் ஏடு விடுதலை.

இதன் ஆசிரியராக 50 ஆண்டுகள் சேவை என்பது எவ்வளவு பொறுப்பு மிக்க, பணி என்பதை எழுத்து, இதழியல், வாசிப்புக் கண்ணோட்டம் கொண்டோர் அறிந்திடுவர். மேலும் இயக்கக் கருத்துகள் மற்றும் அணுகுமுறையினைத் தாங்கி வரும் ஏடாகும் இது. பொதுப் பிரச்சினைகளில் மக்கள் நலனைப் பாதிக் கக்கூடிய நிலைமைகள், சில நேரங்களின் முன்னெடுப் பான (pro-active) கருத்துகள், நடவடிக்கைகள், தேவைப்படின் அதற்கான போராட்ட அணுகுமுறைகள் என பல்வேறு வகை நிலைப்பாடுகளை தாங்கிய ஆசிரியரின் அறிக்கைகள், தலையங்கங்கள், இயக்கத் தோழர்கள் அறிந்து கொள்ள கழகக் களங்கள், இயக்கத்திற்கு அப்பாற்பட்ட பொதுப்படையான வாசகர்களுக்கான உலகச் செய்திகள், வணிகச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள் என பலதரப்பட்ட கோணங்களில் இதழுக்கான இடு பொருள்களைத் தாங்கி பொலிவுடன் விடுதலை வெளிவருகிறது.

தமிழ் ஓவியா said...

மேலும் ஒவ்வொரு நாளும் சிறப்புச் செய்திகளைத் தாங்கிய வண்ணம், 8 பக்கத்தில் ஏறக்குறைய ஒரு பக்க அளவில் திங்கள் - மருத்துவத் தகவல்கள், செவ்வாய் - மகளிர் அரங்கம், புதன் - இளைஞர் அரங்கம், வியாழன் - அறிவியல் அரங்கம், வெள்ளி-பகுத்தறிவுக் களஞ்சியம், சனி - வரலாற்றுச் சுவடுகள் மற்றும் ஞாயிறு மலர் என பல்வகை செய்திப் பொலிவுடன் ஆசிரியர் வீரமணி அவர்களின் சீரிய வழிகாட்டுதலில் வெற்றி நடைபோட்டு வருகிறது. வெற்றி எனும் பொழுது வணிக அளவில் லட்சக் கணக்கில் வருவாய் ஈட்டாவிடினும் லட்சியக் கணக்கில் வருவாய் ஈட்டிவரும் வல்லமை, வலிமை வாய்ந்தது விடுதலை ஏடு என்பதை ஆசிரியர் கி.வீரமணி பெருமையுடன் கூட்டங்களில் உரையாற்றும் பொழுது குறிப்பிடுவார்.

மேலும் வளர்ந்து வரும் கணினி தொழில்நுட்ப முன்னேற்றத்தில் தமிழ் நாளிதழ்களுள் முதன் முதலில் மின் இதழாக (e-paper) வெளி வந்தது விடுதலை ஏடு என்பது இதன் சிறப்புகளுள் ஒன்று. கணினி தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடுத்த வளர்ச்சி நிலையாக விடுதலை (i-pad) மூலம் வர உள்ளது. கருத்துச் செறிவு, செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதில் புத்தாக்க அணுகுமுறை,தொழில் நுட்பம் சார்ந்த இதழாக்கம் என, கால வெள்ள ஓட்டத்தில், கரைந்துபோகாத இதழியல் பயணத்தில் விடுதலை பொலிவுடன் திகழ்வது தமிழர் தலைவரின் 50 ஆண்டு கால ஆசிரியர் பொறுப்பின் தனித்துவத்தின் விளைவாகும். சென்னையிலிருந்து மட்டும் வெளிவந்து கொண்டிருந்த விடுதலை ஏடு, திருச்சி பதிப்பாக வெளிவருவது - இதழியல் வளர்ச்சியில் ஒரு மைல்கல் சாதனையாகும்.

புத்தக வாசிப்பு

காலப்போக்கோடு சேர்ந்துவரும் சவால்களை நேர்கொள்ளும் ஆசிரியர் வீரமணி அவர்களின், கருத்துச் செறிவிற்கு அடிப்படை அவரது பரந்து பட்ட புத்தக வாசிப்பே. A teacher ceases to be a teacher if he/she denies to be a student (மாணவத் தன்மையினை மறுக்கும் ஒவ்வொரு நிலையிலும் ஒருவர் தனது ஆசிரியத் தன்மையை இழக்கிறார்) எனும் ஆங்கில அடைமொழிக்கு ஏற்ப பலதரப்பட்ட செய்திகளை, கருத்துகளை, நாட்டு நடப்புகளை படித்துத் தெரிந்து கொள்ளும் மாணவ மனப்பான்மையினை (studious mentality) நிரந்தரமாகக் கொண்டவர் ஆசிரியர் வீரமணி.

விடுதலை ஏடு மட்டுமின்றி உண்மை, (மாதமிருமுறை வாழ்வியல் ஏடு), பெரியார் பிஞ்சு (குழந்தைகளுக்கான மாத இதழ்), The Modern Rationalist (ஆங்கில மாத இதழ்) என பல்வகைப்பட்ட தாளிகைகளுக்கும் (magazines) ஆசிரியராகப் பொறுப்பேற்று சிறப்பித்து வருகிறார். இதழியல் வரலாற்றில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக ஆசிரியர் பொறுப்பில் இருப்பது மாபெரும் சாதனை ஆகும்.

இதற்கும் மேலாக பல்வேறு இதழ்களின் ஆசிரியராகவும் விளங்கி வருகிறார். ஓர் இயக்கத்தின் தலைவராக இருந்து கொண்டு சுற்றுப் பயணம், மக்கள் சந்திப்பு, போராட்டக் களமிறங்குதல், முனைப்புடன் சிறைபுகுதல், கல்வி நிலையங்களின் நிருவாக மேலாண்மை என பரபரப்பாக இயங்கி வரும் ஒரு தலைவர், இதழியல் துறையில் இத்தகைய சாதனை புரிந்து வருவது உன்னதங்களின் உன்னதமாகும்.

விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவர் வீரமணி அவர்களுக்கு 80 வயது தொடங்க உள்ளது. பொது வாழ்க்கைப் பயணத்தின் முழுக் கனிவு முகிழ்த்து பட்டறிவின் முதிர்ச்சி முளைத்து, கொள்கை சார்ந்த இயக்கத்தினை வழி நடத்தும் முதன்மை நிலை உருவாகியுள்ளது. பன்முக ஆற்றல் மிக்க தமிழர் தலைவரின் 80 வயதைத் தாண்டிய பொது வாழ்வின் பெரும் பகுதி எழுத்து, கருத்து வெளிப்பாடு நிறைந்ததாக நிலவிடும் சூழல் பெருகிட வேண்டும்.

அவரது இதழியலாளர் ஆற்றலின் ஏற்றமிகு வெளிப்பாட்டின் முழுமை நிலை இனி வரும் காலங்களில் பல சிகரங்களை எட்ட வேண்டும் என்பது அன்பர்கள், பொதுநலம் விரும்புபவர்கள், கொள்கையாளர்களின் விருப்பம். வேண்டுகோளும் 50 ஆண்டு இதழாசிரிய நாயகரிடம் உள்ளது.

தமிழர் தலைவர் அவர்கள் இதழியல் துறையில் மேலும் ஒரு முத்திரை பதிக்கவேண்டும் . தந்தை பெரியாரின் சிந்தனைகளுக்குக் கொள்கைச் சட்டம் போட்டு, பெரியாரியலாக வார்த்து எடுத்த தமிழர் தலைவர் பெரியாரியல் கொள்கை தத்துவ விளக்கத்திற்காக மட்டும் ஒரு தனித்துவ ஏட்டினை தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்திட வேண்டும். பெரியாரை உலகமயமாக்கும் பணி பெரியாரியலை உணர்ந்தோர், அறிந்தோர் மென்மேலும் அதன் தத்துவ நிலையில் செழுமை அடைவதற்கும், ஒத்தக் கருத்துள்ள தோழமையினர்க்கும் பெரியாரியலின் பரிமாணத்தை போதிக்கும் தத்துவ இதழாக அது திகழ வேண்டும்.

பெரியாரை உலக மயமாக்கும் (Globalisation of Periyar) உன்னதப் பணியின் கருத்துப் பிரச்சாரக் கருவியாக அந்தத் தத்துவ இதழ் வெளிவரவேண்டும் என்பதே பெரியார் பற்றாளர்களின் வேண்டுகோள். இதழியல் ஏந்தல் தமிழர் தலைவர் வாழ்க! இதழியல் வரலாற்றில் அவர் தம் சாதனைச் சிகரங்கள் உயர்ந்திடுக! பெரியாரியலின் பெருமை பெருகிடுக! பகுத்தறிவு, மனிதநேயம் பரந்துபட்டு மலர்ந்திடுக!

தமிழ் ஓவியா said...

பெற்றோர்களே...

குழந்தைகள் கண்டனங்களோடு வாழ்ந்தால், வளர்ந்தால், அவர்கள் எதையும் அலட்சியப்படுத்தி கண்டிக்கக் கற்றுக் கொள்ளுகிறார்கள்.

குழந்தைகள் பகைமை உணர்ச்சியோடு வாழ்ந்தால், வளர்ந்தால், அவர்கள் மற்றவர்களோடு சண்டை பிடித்தே வாழ்வார்கள்.

குழந்தைகள் பய உணர்வுடன் வாழ்ந்தால், வளர்ந்தால், அவர்கள் அச்சத்துடன்தான் வாழ்கிறார்கள்.

பெற்றோர்களின் வாழ்வு - வளர்ப்பு எப்படியோ அப்படியே குழந்தைகள் அச்சுபோல வளருவார்கள் என்பதுதான். எனவே, பெற்றோர்களே, குழந்தைகளைப் பெறுவது முக்கியமல்ல, அவர்களைச் செம்மைப்படுத்தி வளர்த்து, வாழ வைப்பது மிகவும் முக்கியம்.

கி.வீரமணி
`விடுதலை`, 9.9.200

தமிழ் ஓவியா said...

துணிவைத் துறக்காதீர்!

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் துணிவு மிகவும் தேவை. அந்தத் துணிவை, தைரியம் என்றும் கூறலாமெனினும், `தைரியம் என்பதைவிடத் `துணிவு என்று கூறும்போது அதன் தனித்துவம் மிளிரவே செய்கிறது!

துணிவினால் எதனையும் அடைய முடியும் எவராலும்; `துணிவு என்று சொல்லும்போது, எந்தத் தொல்லைகள், துன்பங்கள், கஷ்ட நஷ்டங்கள் இவற்றை எளிதில் எதிர்கொண்டு வாழ்க்கையில் ஏறுநடை போடத் தேவையான ஒன்று அது என்பதை ஒருவர் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

கி.வீரமணி
விடுதலை, 24.7.2006

தமிழ் ஓவியா said...

புகழ்



மனிதர்களுக்குப் பணமும், பதவி அதிகாரமும் எவ்வளவு இருந்தாலும் அவர்கள் இன்னொன்றுக்காக வாழ்வில் ஏங்குகிறார்கள். தன்னை மற்றவர் மதித்துப் பாராட்டும் அளவுக்கு தனது பெயர் வெளியே உலா வர வேண்டும். கூட்டமான அறையில் நுழைந்தால் மற்றவர்கள் உரையாடல், தானே நின்று போகும் அளவுக்கு, தான் ஒரு மிக முக்கிய மனிதராக சமூகத்தில் பேசப்பட வேண்டும் என்பதை விரும்புவதுதான் புகழ் விரும்புவது என்பதாகும்!

இது தவறல்ல. அதனை அடைவதற்கென்றே தவறான வழிமுறை களில் செல்வது தான் தவறு.

கி.வீரமணி
`விடுதலை`, 30.8.2006

தமிழ் ஓவியா said...

விடுதலை ஆசிரியர் கி.வீரமணி எழுதிய முதல் தலையங்கம்



நிலைமையில் அபிவிருத்தி காணவேண்டுமானால் வரி போடவேண்டும், கடன் வாங்க வேண்டும். கடனும் வாங்காதே, வரியும் வாங்காதே என்றால் அது நடைமுறைக்கு ஒத்ததாக இருக்கமுடியுமா? என்று பேசியுள்ளார் தமிழ்நாட்டு

முதலமைச்சர் திரு.காமராசர் அவர்கள்.

எந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தபோதிலும், அரசாங்கத்தை நடத்த நிதி தேவை. நிதியைப் பெருக்க பெரும்பாலும் நான்கு வழிகள்தான் உள்ளன.

1. வரி

2. கட்டண வருமானம் (ரயில், தபால், ரிஜிஸ்டிரேஷன் மூலம் வருவது)

3. கடன்

4. நோட்டு அச்சடித்தல்

தமிழ் ஓவியா said...

நமக்குத் தெரிந்தவரையில் இதைத்தவிர வேறு வழிகள் கிடையாது என்றே கருதுகிறோம். இந்த உண்மை எதிர்க்கட்சி நாற்காலியில் உள்ள தலைவர்களுக்குத் தெரியாது என்று நாம் சொல்ல மாட்டோம். தெரிந்தும் மறைத்து, திரித்துக் கூறினால் தான் ஆளுங்கட்சியை வீழ்த்த முடியும் என்பது அவர்களது முடிவு.

சென்ற நூற்றாண்டில் அரசாங்கம் என்றால் உள்நாட்டுக் கலவரங்களிலிருந்தும் வெளிநாட்டுப் படையெடுப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும், சட்டம், ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும், உடைமைகளைக் காப்பதற்குமே என்ற கருத்து நிலவி வந்தது. ஆனால் இந்நூற்றாண்டில் அக்கடமைகளோடு, மக்கள் நலனைப் பெரிதும் பெருக்கக்கூடிய சமுதாய நல்வாழ்வுத் திட்டங்களை அமுல் செய்து எல்லார்க்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்ற அடிப்படையில் பல கடமைகளும் பெருகி உள்ளன.

இந்நிலையில் அரசாங்க வருமானத்தைப் பெருக்காமல் எந்த அரசாங்கம் தான் மக்களுக்கு நன்மை செய்யமுடியும்?

தனி மனிதனின் பட்ஜெட் என்பது வரவுக்கேற்ப செலவை அமைத்துக் கொள்வதாகும். அரசாங்க பட்ஜெட் என்பது செய்ய வேண்டிய செலவினங்களைக் கணக்கிட்டு அதற்கேற்ப வருமானத்தைப் பெருக்குவது என்பதாகும். இது பொருளாதார தத்துவத்தின் பால பாடம்.

கொடுமை, கொடுமை, தாள முடியாத வரிக்கொடுமை என்று பிரசாரம் செய்யும் கோயபெல்ஸ் கூட்டத்தார்க்கு இதுகூடவா தெரியாது? உதாரணத்திற்கு ஒன்று காட்டுவோம்.

தமிழ்நாட்டின் கல்வித்துறை வளர்ச்சி பிரமிக்கத்தக்க அளவில் வளர்ந்து வந்திருக்கிறதென்பதை கல்விக்காக ஆண்டுதோறும் செலவான கணக்கைப் பார்த்தால் தெரியும்.

சென்னை ராஜதானியில் (24 ஜில்லாக்கள் இருந்த காலத்தில்)

கல்விக்கான செலவு

ரூ. 1 கோடியே 33 லட்சம் 1921-22இல் செலவு - ரூ. 1 கோடி 33 லட்சம் 1922-23இல் செலவு - ரூ. 1 கோடியே 54 லட்சம் 1923-24இல் செலவு - ரூ. 1 கோடிய 63 லட்சம் 1924-1924இல் செலவு ரூ. 1 கோடியே 73 லட்சம்

பிறகு ஜஸ்டீஸ் ஆட்சியின் போது கட்டாய இலவசக் கல்வி புகுத்தியதால் 2 கோடியே 25 லட்ச ரூபாய் செலவழித்தனர்.

(ஆச்சாரியார் 1935-37 ஆட்சியிலும் ரூ. 2 கோடியே 52 லட்சம்; 1952-54இல் 11 கோடி ரூபாய் கல்விச் செலவை கணிசமாகப் பெருக்கவில்லை)

இன்று தமிழ்நாட்டின் மற்ற மொழிப் பகுதிகள் பிரிந்த நிலையில் (சுமார் 12 ஜில்லாக்கள் உள்ள நிலையில்) கல்விக்கான செலவு சமீபத்தில் மலையென உயர்ந்து இந்த ஆண்டு சுமார் 25 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.

கல்வித்துறையில் இந்த அதிசயிக்கத்தக்க சாதனையை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை. இன்னும் மென்மேலும் பெருகிக்கொண்டே போகும். இந்த ஒரு துறையின் செலவினமே இப்படி என்றால் ஊர்தோறும் மருத்துவமனைகள், சாலை வசதிகள், முதலியவை பெருகுவதால் எவ்வளவு செலவு அதிகரிக்கும் என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாமே!

வரியை உயர்த்தாமல் எப்படி இதைச் செய்ய முடியும்? பஸ் முதலியவற்றை அரசாங்கமே எடுத்து நடத்தினால் வரி தேவையிருக்காது என்று கூறுகின்றனர். அவற்றை எடுத்துக் கொண்டால் பல நூறு கோடி ரூபாய்களை நஷ்ட ஈடாகத்தர வேண்டுமே! அரசாங்கத்தின் ஆண்டு வருமானமே 113 கோடி ரூபாய்தானே?

அதோடுகூட, அத்துறைக்கு அதிகாரிகளுக்குப் பயிற்சியளித்து அவர்களைத் திறமையாக நடத்தச் செய்யும் பிரச்சினை வேறு உள்ளதே?

எல்லா உடமைகளையும் தேசியமயமாக்கி உள்ள சோவியத் ரஷ்யா போன்ற நாடுகளிலே வரியே வசூலிக்கப்படுவதில்லையா?

தேசீய மயமாக்குதலே சர்வரோக நிவாரண சஞ்சீவி என்று கூறும் கொலம்பஸ்கள் கவனத்திற்கு இவை ஏன் வரவில்லை?

சென்னை நகர கார்ப்பரேஷனில் நிர்வாகப் பொறுப்பேற்றுள்ள ஒரு கட்சியின் தலைவர், கார்ப்பரேஷனில் நீங்கள் வந்தவுடன் பாலும் தேனும் பெருக்கெடுத்தோடும் என்று கூறினீர்கள், அரசாங்கத்தின் வரி உயர்வைக் கண்டிக்கும் உங்களது நிர்வாகத்தில் சுமார் 1 கோடிக்கு மேல் வரியை உயர்த்தியுள்ளீர்களே என்று சென்னை வாழ் மக்கள் கேட்டால், வயலுக்கு வரப்பு போல, வேட்டிக்குக் கரை போல ஆட்சிக்கு வரி என்று உவமைகாட்டிப் பேசினார்.

இந்த ஞானோதய ஒளி ஏன் இவர்கள் சென்னை கோட்டையில் இருக்கும்போது வருவதில்லை? ரிப்பன் கட்டடத்தில் ஒரு மனப்பாங்கும், கோட்டையில் மற்றொரு மனப்பாங்கும் இருக்கலாமா?

மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்பதுதானே இது?

நிஷ்காமிய கர்மயோகியான திரு.ஆச்சாரியாரின் வரி எதிர்ப்பின் ரகசியமும் இதே தத்துவத்தைக் கொண்டதுதான்.

அவர் முதலமைச்சராக இருந்தபோது வரி கொடுப்பதைப் பற்றி குறிப்பிடுகையில் நல்ல காரியத்திற்காக நீங்கள் ஆண்டவன் சந்நிதியில் பக்தன் பயபக்தியோடு காணிக்கை செலுத்துவதுபோல் செலுத்தி வரவேண்டும் என்றார்.

அவர் ஏன் இப்போது வரியைக் கண்டிக்கிறார் என்கிறீர்களா? அதற்குப் பெயர்தான் அரசியல்! அரசியல்!! அரசியல்!!!

தமிழ் ஓவியா said...

புரிகிறதோ...

கேள்வி: சுமார் ஆறு லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் - 2 தேர்வு வினாத் தாள் வெளியானதால், ரத்து செய்யப்பட்டது நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளைக் காட்டுவதாகக் கொள்ளலாமா?

பதில்: பங்கு மார்க்கெட்டின் உயர்வும், வீழ்ச்சி யும் ஒரு சிலருக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாகவே தெரிகிறது; பட்ஜெட்டில் வரப் போகிற சில அம்சங்கள் சில நிறுவனங்களுக்கு முன் கூட்டியே தெரிகிறது; சில தீர்ப்புகள் கூட சிலரால் முன் கூட்டியே அறியப்படுகின்றன. இவற்றையெல்லாம் எந்தக் கோளாறில் சேர்ப் பீர்கள்? மொத்தமாகச் சொல்வதானால் கோளாறு நம் நாட்டுப் பிரஜைகளாகிய நம்மிடையே இருக் கிறது. நம்மில் பலர் தலைவர்களாக இருக்கிறார் கள். அது மிகப்பெரிய கோளாறாக இருக்கிறது.

- துக்ளக், 29.8.2012

எவ்வளவு சமத்தான பதில் பார்த்தேளா? சர்வீஸ் கமிஷன் தலைவர் அவாள் ஆத்துக்காரர் என்றவுடன் எப்படி எல்லாம் சுற்றி வளைப்பு!

சர்வீஸ் கமிஷன் தலைவர் பார்ப்பனர் அல்லா தாராக இருந்திருந்தால் இந்த சோ பேனாவாலா எழுதுவார்? பூணூல் விஷ மையால் அல்லவா எழுதுவார்!

ராஜாவைப் பற்றி கலைஞர் எழுதினால் ஊழலுக்கு என்ன ஜாதி வேண்டிக்கிடக்கு என்பார். நடராஜ் அய்யர் என்றவுடன் மாத்திரம் ஜாதி வந்துவிட்டதே! 25-8-2012

தமிழ் ஓவியா said...

உங்களை மற்றவர்கள்...

நாம் கூடிப் பணியாற்றும் போதோ அல்லது குடும்பம் நடத்தும்போதோ ஒருவருக்கொருவர் ஒத்துப் போதல் என்பது இருந்தால் ஒழிய நமக்கு நிம்மதியும், நிறைவும் கிடைக்காது!

அடுத்தவர் இதைச் செய்து காட்டுவார்கள் என்று எண்ணி நாம் நமது பங்கைச் செலுத்தாமலிருந்தால், ஏமாற்றமே மிஞ்சும்!

நண்பர்கள் ஒருவருக்கொருவர் சிரித்துப் பழகுவதன்மூலம் - இருவருக்கும் உள்ள இடைவெளி மிகவும் குறைந்துவிடும்! புண் படுத்தும் நகைச்சுவை, கேலி, கிண்டல் எதிர்விளைவையே உண்டாக்கும் என்பதை மறவாதீர்!

உங்களை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட, நீங்கள் மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் பழக்கத்தையே வளர்த்துக் கொள்ளுங்கள்.

`விடுதலை`, 3.10.2006
(வாழ்வியல் சிந்தனைகள் என்ற புகழ்பெற்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் எழுதப்பெற்ற கட்டுரைகளிலிருந்து)

தமிழ் ஓவியா said...

விடுதலைபற்றி விடுதலை ஆசிரியர் விடுதலை ஏடு எனும் பெரியார் போர்வாளுக்குப் பவள விழா!





தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் போர்வாளான விடுதலை ஏட்டின் பவள விழா தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டிலே வரும் 24 ஆம் தேதி நடை பெற உள்ளது. அவ்விழா வில் அனைவரும் பங்கேற் குமாறு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அழைப்பில்,

நமது அறிவு ஆசான், பாருக்கெல் லாம் பகுத்தறி-வுப் பகலவனாகத் திகழ்ந்த தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் இயக்கத்திற்குத் தந்த போர்வாள் விடு-தலை நாளேடு!

பவள விழா காணும் விடுதலை

அந்நாளேடு, பகுத்-தறிவு, சுயமரியாதை, சமூக-நீதி, பெண்ணுரிமை, மூட நம்பிக்கை ஒழிப்பு இவை-களை முன்னிறுத்தி தொடர் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தலை தாழாது _ ஆயிரமா-யிரம் இன்னல் கள், தடை-கள் _ இவைகளுக்கு இடையேயும் தனது லட்சி-யப் பயணத்தை, தடம் புர-ளாமல் நடத்திக் கொண்டே வந்து, 75 ஆம் ஆண்டில் _ பவள விழாவினைக் கண்டுள்ளது இவ்வாண்டு.

அது தொடங்கப்பட்டது ஜூன் 6, 1935 ஆம் ஆண்டு _ அதுவும் பெரியார் பிறந்த மண்ணில், ஈரோட்-டிலிருந்து பல ஆண்டு-கள் வெளிவந்தது! (3.7.1937 முதல் 19.9.1943 வரை).

தமிழ் ஓவியா said...

அதன் முதல் பவள விழாக் கொண் டாட்டத்தை தஞ்சைக் கழகக் குடும்-பங்களின் இடையறாத வற்புறுத்தலால் அங்கே மிகவும் சீரும் சிறப்புடனும் நடத்தினோம்!

கழகத்தின் நஞ்சையாம் தஞ்சை பூமியில் அது நல்ல தொடக்கத்தினைப் பெற்றது!

நாடெங்கும் உள்ள தமிழ்ப் பெரு மக்களின் ஒத்துழைப்பு இதற்கு வற்-றாது கிடைத்து அதன்-மூலம் வளர்ந்து வருகிறது!

இணைய தளத்தில் வெளிவந்த முதல் ஏடு

இணைய தளத்தில் முதன்முதலாக வந்த தமிழ் நாளேடும் இது தான்! இதன் காரணமாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் உடனடியாக, உள்நாட்ட வர்கள் படிக்கும் முன்பேகூட - படித்து முடித்து விடுகின் றனர். சுமார் 37 நாடு-களுக்குமேல் உள்ள தமிழர்கள் விடுதலை இணைய தளப் பதிப்-பினை இடையறாது படித்-துப் பாராட்டிச் சீராட்டு-கின்றனர்.

அவ்வப்போது ஆக்க ரீதியான ஆலோசனை-களையும் வழங்கத் தவறு-வதில்லை.

விடுதலையை 8 பக்-கமாக்கி, இன்றுள்ள காகி-தம் மற்றும் அச்சுப் பொருள் விலையேறிய நிலையிலும், பழைய தொகைக்கே _ நன்-கொடை பெற்று, தொடர்ந்து அய்யா உருவாக்கிய அறக்கட்-டளையின் அடிக்கட்டு-மானத்தின் பலத்தால் பொருள் நட்டத்தையும் பொருட்படுத்தாது, இலட் சிய இலாபம் ஒன்றையே முக்கியமாகக் கருதி அதன் பவள விழாவை தமிழ்நாட்டின் பற்பல பகுதிகளிலும் நடத்திடத் திட்டமிட்டோம்.

அதன்படியே, ஈரோட்டு மண்ணில் தமிழ்-நாட்டின் நம்பிக்கை ஒளி-யான துணை முதல்வர் செயல்திறன் செம்மல் டாக்டர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமை விருந்தினராக வந்து கலந்துகொள்வது அவ்-விழாவிற்குத் தனிப் பெருமை சேர்ப்பதாகும்.

அறிஞர் அண்ணா ஆசிரியராக இருந்து ஒளியேற்றிய நாளேடு

அறிஞர் அண்ணா-வின் நூற்றாண்டு நிறைவு பருவம் இது! அறிஞர் அண்ணா அவர்கள் அய்-யாவின் விருப்பத்திற்கேற்ப அவர்தம் அன்புக் கட்-டளை ஏற்று, விடுதலை நாளேட்டின் ஆசிரியராக 70 ஆண்டுகளுக்கு முன்பு தனது எழுத் தோவியங்-களைத் தந்து தொண்டறம் புரிந்த வரலாறு, திராவிடர் இயக்க வரலாற் றின் ஒரு பொலிவு பூத்த அத்தியா-யமாகும்!

தமிழ் ஓவியா said...


அந்நகரில் இம்-மாபெரும் விழா!

சிறப்புக்குரிய விருந்தினர் பெருமக்கள் பங்கேற்பு

விடுதலை 75 ஆம் ஆண்டு சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா நமது கொள்கைப் பண்-ணையத்தில் விளைந்த கதிர் நெல்லாகி, முதல்வர் கலைஞர் தம் ஆணை-யேற்று, மத்திய அமைச்-ச-ரவையில் தொலைத்-தொடர்பு _ தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகி, அணி செய்-யும் மானமிகு மாண்புமிகு ஆ. இராசா அஞ்சல் உறையை வெளியிட,

தமிழ்நாட்டின் பொற்-கால ஆட்சியின் துணை முதல்வர் அடக்கத்தின் உருவ மாகவும், ஆற்றலின் கொள்கலனாகவும் உள்ள நமது துணை முதலமைச்-சர், பதவியேற்றும் அண்ணா பல்கலைக்கழகத்-தின் முது முனைவர் பட்-டம் பெற்றும், முதன் முதல் ஈரோட்டிற்கு வருகிறார் _ தாய்க் கழக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள _ கழகம் ஒரு குடும்பம் _ கொள்-கைக் குடும்பம் என்பதை குவ-லயத்திற்கே எடுத்து-ரைக்-கும் பிரகடனமாகும்.
தமிழகமேதிரள்க!

துள்ளிவரும் இனப் பகையை எள்ளி நகை-யாடியே விரட்டிடும் விழா-வாக இவ்விழா ஈரோட்டு மண்ணில் _ எந்தை யினை எமக்களித்த பெருமைமிகு பொன்னைவிட மேலான தலைவன் விளைந்த மண்-ணில் நடைபெறும்போது,
கழகக் குடும்பங்கள் அக்காட்சி மாட்சிகளைக் கண்டு களிக்காமல் இருக்-கலாமா? இருக்க முடி-யுமா? ஈரோடு மாவட்டத்-தின் கழகப் பொறுப்பாளர்-கள்_ கொங்கு மண்டலத்-துக் கொள்கை மாவீரர்கள் அனைவரும் தஞ்சையை மிஞ்சும் வகையில் சந்தா அளிப்பு முதல் விழாச் சிறப்புவரை நடத்திக் காட்டிட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்-றனர்!

கழகக் குடும்பங்களின் சங்கமமாக ஈரோடு அன்று (24.8.2009) காணப்பட-வேண்டும். கருங்கடல் பொங்கட்டும்! விடுதலை பவள விழா வரலாறு படைக்-கட்டும் ஈரோடு!

விடுதலை 21-_8_2009 பரம்பரை யுத்தம் இன்னும் முடிந்துவிடவில்லை! தந்தை பெரியார்தம் இலட்சி யங்கள் நிறை வேறிட ஊரெங்கும் விடுதலை பரவிட வேண்டும்; இலட்சம் சந்தாக்களைச் சேர்க்க வேண்டும். அதற்காக உழைக்க உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

32 ஆண்டுகளுக்குமுன் (16.3.1978) அருமை அன்னையார் (மானமிகு ஈ.வெ.ரா. மணியம்மையார்) அவர்கள் உடலால் மறைந்து உணர்வால் பெரியார் தொண்டர்கள் உள்ளத்தில் உறைந்தார் கள்.

முடிந்தவரை உழைத்து வருகிறேன்!

அய்யாவின் விருப்பப்படி, அம்மா வின் ஆணைப்-படி கடமையாற்றிடும் தொண்டினை, இந்த எளிய தோள்களில் சுமந்து, (18.3.1978 முதல்) முடிந்தவரை உழைத்து வருகிறேன்.

மலைபோன்ற எதிர்ப்பு, புயல் போன்ற துரோகம், அலை அலையாக நெருப்புக் கனல் வீச்சுகளால் நெருங்-கிட முடியாத நெருப்பாற்றுப் பயணம் _ இவைகளே எனக்குக் கிடைத்த வாய்ப்புகள்!
எல்லாவற்றையும் சந்திக்கும் துணிவு!

எல்லாவற்றையும் சந்திக்கும் துணிவு _ எமது அறிவு ஆசானின் பயிற்சியால் கிடைத்த உளப்பாங்கு ஆகும்.

எவ்வளவு ஏச்சுப் பேச்சு, இழி சொற்கள், அரு-வருக்கத்தக்க அவ தூறுகள் _ இவைகளைத் தாங்கி, தளராது நடைபோட்டு இலட்சியங்களை நோக்கிப் பயணம், எம் அன்னையாரிடமிருந்து வரித்துக்கொண்ட வாரிசுரிமை!

சுகமான பயணம்

தொடுவானத்தை நோக்கிய பயணம் செய்வோன் எவ்வளவு தொய்வின்றி நடந்தாலும், ஓடினாலும் தொட்டுவிட முடியுமா அதனை?

அதுபோலத்தான் நம் இயக்கப் பணியும்!

இவ்வளவு பெரிய சுமையைப் பொதி சுமைப்பது-போல் சுமந்து செல்லும் பாதையில் சுயநலம் குறுக்-கிடாமல் பார்த்துக் கொள்வதால் அது சுகமான பயணமாகிறது.

பனிபோல் உருகி விடும்!

எதனையும் சுமக்கும் பொறுப்பினைத் தாங்கிட, எண்ணற்ற எம் தோழர்கள், தோழியர்கள் பல்லாயிரக்-கணக்கில் இருப்பதால், எதிர்ப்புகளும், துரோகங் களும் மலைபோல் தெரிந்தாலும், அவை பனிபோல உருகி ஓடிவிடு கின்றன!

இயக்க வளர்ச்சியில் இளைஞர்கள் பங்கு, மாணவர் பட்டாளத்தின் படையெடுப்பு _ வாலிபர்களின் வருகை, முதிய இளைஞர்களின் முதிர்ச்சி முத்திரை இவை-யெல்லாம் நம் இயக்கம் ஈடு இணையற்ற ஒரு சமுதாய புரட்சி இயக்கம் என்பதை உலகுக்கு அவ்வப் போது பறைசாற்றுகிறது!

பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம்

பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் இரண்-டாண்டு_ வளரும் பருவத்தில் அது செய்துள்ள சாதனை, வளர்ச்சி கண்டு பொறுக்காத பெரு உள்ளத்துக்குரியோர் அதனை சோத னைக்குத் தள்ளி உள்ளனர்!

தடைக்கற்களைத் தாண்டி அது வீர காவியம் _ கல்வித் துறைப் புரட்சியைப் படைக்கும் என்பது உறுதி _ நியாயத்தின் அடிப்படையில்.

தமிழ் ஓவியா said...

காரணம், அது ஒரு மக்கள் பல் கலைக்கழகம். அத-னால் வழக்கு என்று வம்பு தொடர்ந்தாலும், பல்கலைக் கழகத்தினை வாரியணைப்பது, காப்பது எமது கடன் என்று பெற்றோர்கள், தோழர் பன்னீர்செல்வம், அய்யனார் போன்றவர்கள்மூலம் உலகுக்குப் பறைசாற்றி நமக்கு உரமூட்டுகிறார்கள்!

சாண் ஏறினால் முழம் சறுக்கல்

சமூகநீதிக் களத்தில் சாண் ஏறினால் முழம் இறங்குவதுபோல, உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்-பட்டோருக்கு முன்பு லேசாகத் திறக்கப்பட்ட கதவு மீண்டும் இரட்டைத் தாழ்ப்பாள் போடும் அளவுக்கு மூடும் மோசடியின் அரங்கேற்றம் மத்திய கல்வித் துறை-யில் முக்காடு இன்றி முழு வீச்சில் தொடங்கி-விட்டது!

மீண்டும் கல்வி ஓடையில் நம் பிள்ளைகள் இறங்க முடியாத முதலைகள் ஆக்கிரமிப்பின் அபாயம்.

மகளிர் இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மகளிருக்கு ஒதுக்கீடு இன்றி அமைந்தால் மீண்டும் அது நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதைபோல் _ சமூகநீதிக் கொடி இறக்கப்படும் கொடு-மையை நாம் காணும் நிலை ஏற்பட்டுவிடும்!

பரம்பரை யுத்தம்

தமிழ்நாட்டில் சாதனைமேல் சாதனை குவிக்கும் சரித்திரம் படைக்கும் கலைஞர் ஆட்சியை மாற்றிடலாம் என்று சாணக்கியப் பரம்பரை ஏதேதோ சதுரங்க விளையாட்டை ஆடிப் பார்க்க ஆயத்தமாகிறது!

பரம்பரை யுத்தம் _ தேவாசுரப் போரின் முக்கிய கட்டம் மீண்டும் நடத்திக் காட்டினாலும், நமது பொறுப்பு எப்படிப்பட்டது என்பதை நம் தமிழர்களுக்கு உணர்த்திட வேண்டிய கடமை நமக்கு உண்டு.

ஈழத்தில் மலர்ந்த உணர்வை மந்திகள் மலரைப் பிய்த்து எறிவதுபோல் செய்த நிலை இங்கே பாய்ந்துவிடக் கூடாது!

கலைஞரின் ஆட்சிக் கோட்டை

நமது கலைஞர் தலைமையில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி சாதனைப் பாறைகளால் கட்டப்பட்ட கோட்டை என்றாலும், அதில் ஏமாந்த காலத்தில் ஏற்றங் காணத் துடிக்கும் எதிரிகளுக்குக் கதவு திறக்கப்பட்டுவிடக் கூடாதல்லவா?

தமிழ் ஓவியா said...

எனவே, அருமை இயக்கப் பாசறை வீரர்களே, நம்-முன் உள்ள நன்றி பாராட்டாத (Thankless Job) பணி-யின் பரிமாணம் வெகு கனமானது என்பதைக் கவனத்-தில் கொண்டு, களைப்பின்றி களம் காண துடிப்போடு வருக!

இனி தேதி வாங்க வருவோர்!

விடுதலையின் பவள விழா முடிந்துவிடவில்லை. மறவாதீர்!

அதனை இலட்சம் பிரதிகள் _ ஜோதிடமில்லாமல், சினிமா இல்லாமல், ஒரு இலட்சிய நாளேடு என்பதை வளர்த்து, இலட்சியப் பயணத்தில் இனி ஓய்வு, உறக்கம் இல்லை _ அந்த இலக்கு அடையும்வரை என்று உறுதியோடு செயல்படுங்கள்.

இனி நாளைமுதல் எம்மிடம் தேதி வாங்க வருவோர் குறைந்தபட்சம் 10 விடுதலை சந்தாக்கள் (5 ஒரு ஆண்டு; 5 அரையாண்டு) சேர்த்து முன்னதாகவே கொடுத்தால் மட்டுமே நிகழ்ச்சிக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

விடுதலை விருது

நமது கழகப் பொறுப்பாளர்கள், நமது இயக்கப் பேச்-சாளர்கள் அனைவரும்கூட அவர்தம் பிரச்சாரக் கூட்-டங்-களையொட்டி விடுதலை சந்தா சேர்ப்பு சாதனை நிகழ்த்தி விடுதலை விருது பெறத் தகுதியுள்ள-வர்களாக்கிட வேண்டும்.

கொள்கைத் தங்கங்களே!

தங்கம் தந்த எமது கொள்கைத் தங்கங்களே! நீங்கள் நினைத்தால் எதுதான் முடியாது? புது முறுக்கோடு புது முயற்சியில் இறங்கி _ புதிய சாதனை செய்து வெல்லுவோம்!

இயக்கப் பிரச்சாரம் பலப்படட்டும்!

கூட்டுக்குழு (Team) என்ற மனப்பான்மையோடு இணைந்-தால் நமது வெற்றி எளிதாக அடைவதாக அமையும்.

மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் மானமிகு பவுன்ராசா என்னைப் பார்க்கும்போது வணக்கம் என்று கூறுமுன் விடுதலை சந்தா தந்துவிட்டுத்தான் கூறுவார்.

தேத்தாக்குடி தோழர் ஆசிரியர் சித்திரவேலு தொடர்ந்து கூடும் கூட்டங்களில் எல்லாம் சந்தாக்களைத் தந்து கொண்டே இருப்பார்.

இந்த எளிய தோழர்களை _ எம் ஈடற்ற உறவு-களை, மற்ற உறவுகளே நீங்களும் பின்பற்றி இயக்கப் பிரச்சாரத்தைப் பலப்படுத்தி, காவி வியாபாரிகளின் முகமூடி கிழித்து, புதியதோர் உலகு செய்ய புத்தாக்கம் காண வாரீர்! வாரீர்!!

விடுதலை 18-_3_2010

கழகத்தின் அனைத்து அணியினரும் களத்தில் இறங்கிடுக!

விடுதலைக்கு சந்தா சேர்க்கும் பணியில் முழுமூச்சுடன் கழகத்தின் அனைத்து அணியின ரும் களம் இறங்குமாறு கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:- நமது இயக்கத்தின் முன் உள்ள பணிகள் ஏராளம்! ஏராளம்!! நமது இயக்கத் தோழர்கள், தோழியர் களின் உற்சாகம் எப்போதும்போல் கரைபுரண்டு ஓடும் வெள்ளமாகவே உள்ளது!

எதிர்ப்புகளோ, ஏளனங்களோ, நம் எஃகு கோட்டையை ஓட்டையாக்கிட முடியாது! விடுதலை சந்தித்த சுனாமிகள்! விடுதலை நாளேடு நேற்றுவரை சந்தித்த சோதனைகளும், சூறாவளிகளும், சுனாமிகளும் கொஞ்ச நஞ்சமல்ல!

அவை தான் நம் கொள்கைப் பயிர்க்கு இயற்கையும், நம் இன எதிரிகளும், இட்ட நல்ல உரங்கள்! செழித்தோங்கும் - இனி நம் விளைச்சல்! கழகக் குடும்பத்தவர்கள் மட்டுமல்ல - இன உணர் வாளர்கள் உள்பட பலரும் விடுதலை சந்தாக்களை துப்பாக்கியை அழுத்தினால் கிளம்பும் தோட்டாக்கள் போல் தந்து ஊக்கமும் உற்சாகமும் வழங்குகின்றனர்!

பிரச்சாரப் பணிகள்

பிரச்சாரப் பணிகள் தொய்வின்றி நடைபெறுகின்றன.

மேலும் பகுத்தறிவுப் பிரச்சாரமாக, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரமாக அடை மழைபோல் பெய்ய வேண்டும்.

ஜூன் மாதம் 15 முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை எங்கும் - நகர்ப்புறம் தொடங்கி கிராமப்புறங்கள் வரை நடக்கட்டும் பிரச்சாரங்கள்.

சந்தா சேர்க்கும் பணி!

மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை, தொழிலாளர் அணி உள்பட அனைத்து கழகச் செயல் வீரர்களும் தோழியர் களும் மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றிடும் நிலையில், சந்தாக்கள் சேர்ப்பை மிகவும் முன்னுரிமைப் பணியாக ஏற்றுத் தொண்டாற்ற முன் வந்து, சாதனைகளை செயலில் காட்டிட வேண்டு மெனக் கேட்டுக் கொள்கிறேன்.

விடுதலை 18.6.2011

தமிழ் ஓவியா said...

50 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் திருச்சி பொதுக் குழுவில் சிறப்புத் தீர்மானம்

50 ஆண்டுகள் விடுதலை ஆசிரியராக சிறப்புடன் பணியாற்றி முத்திரை பொறித்த விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களைப் பரிசாக அளிப்பது என்று திருச்சியில் (11.09.2011) நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் சிறப்புத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

சிறப்புத் தீர்மானம்

நமது ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் அன்புக் கட்டளையை ஏற்று, கடலூரில் தாம் மேற்கொண்டு சிறப்பாகப் பணியாற்றிய வழக்குரைஞர் தொழிலை சற்றும் தயக்கமின்றி விடுத்து, விடுதலை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். (10.8.1962)

வேறு எந்த சந்தர்ப்பத்திலும் வேறு யாருக்காகவும் இந்த அளவுக்குப் பெருமிதமாகக் குறிப்பிடாத வகையில் விடுதலை, பத்திரிகையை வீரமணி அவர்களின் ஏகபோக ஆதிக்கத்தில் ஒப்படைத்து விட்டேன். (விடுதலை 6.6.1964) என்று கையொப்பமிட்டு அறிவித்தார் தந்தை பெரியார்.

உண்மையைச் சொல்கிறேன். தோழர் வீரமணி இந்த முழுநேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி, வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன். (விடுதலை - 10.8.1962) என்று தந்தை பெரியார் அறிக்கை விடுத்தார் என்றால், நமது ஆசிரியர் அவர்களின் ஒப்புவமையற்ற பொதுத்தொண்டான பெரும்பணியின் மாட்சியை அறிந்துகொள்ள முடியும்.


தமிழ் ஓவியா said...


இன்று விடுதலை நமக்குச் கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணம் நமது மரியாதைக் குரிய ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்தாம்.

விடுதலை தமிழினத்திற்குக் கிடைக்காது போயிருந் தால், அதன் விளைவு எவ்வளவு கடுமையானதாக இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பதற்கே நெஞ்சம் படபடக்கிறது - இதயவோட்டமே நின்று விடும் நிலை ஏற்படுகிறது!

தமிழுலகம் அதற்காக நமது ஆசிரியர் அவர்களுக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டுள்ளது.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் மறைவிற்குப் பிறகு, விடுதலையை எட்டு பக்கங்களாக விரிவுபடுத்தியதோடு அல்லாமல், திருச்சியிலும் இன்னொரு பதிப்பையும் (17.9.2007) தொடங்கி, நவீன கணினி அச்சுக்கோப்பு, நவீன அச்சு இயந்திரங்கள் ஏற்பாட்டின் காரணமாக, வணிக ரீதியாக நடத்தப்படும் ஏடுகள், இதழ்களுக்கு இணையாக புதுப் பொலிவோடு புத்தம் புதிய மணமாய் நாளும் வெளி வந்துகொண்டு இருக்கிறது. இணையதளம் மூலம் உலகெங்கும் வாசகர்களை சிறப்பாக - ஆர்வமாக ஈர்க்கும் நிலையை எட்டியுள்ளது விடுதலை.

விடுதலை ஆசிரியராக தாம் பொறுப்பேற்ற ஆண்டு முதல் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா விடுதலை மலர் என்னும் வரலாற்று அறிவுப் பெட்டகத்தை ஒவ்வொரு ஆண்டும் படைத்து வருகிறார்.

அத்தகைய நமது ஆசிரியர் பெருமகனார் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுதலைக்கு ஆசிரியர் பொறுப் பேற்று 2012ஆம் ஆண்டில் அய்ம்பதாண்டு காலம் ஆகிறது.

தமிழ் ஓவியா said...

இப்படி ஆசிரியர் பொறுப்பில் பொன்விழா காணும் ஒரே தலைவர் நமது ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தான். 50 ஆண்டு காலம் ஒரு ஏட்டுக்கோ, இதழுக்கோ ஆசிரியராக இருப்பது என்பது நமது ஆசிரியர் அவர்களுக்கு மட்டுமே உரிய தனிப்பெரும் சாதனையாக அமைந்திருக்கிறது. அதுவும் எதிர்நீச்சல் போடும் புரட்சிகரமான ஒரு ஏட்டுக்கு ஆசிரியராக இருந்து சாதனை படைப்பது என்பது சாதாரணமான தன்று.

விடுதலை என்னும் பகுத்தறிவு - இனமான - சமதர்ம - சமத்துவ - சமூகநீதி - பாலியல் நீதி இவற்றுக்காகப் போராடும் முற்போக்கு போர்வாள் மூலம் சாதித்துக் கொடுத்திருக்கும் வெற்றியின் குவியல்கள் அசாதாரண மானவை!

அத்தகு சாதனைமிகு மானமிகு ஆசிரியருக்கு அவர்களின் தொண்டுக்கு எந்த வகையிலும் இணையாக கைம்மாறு செய்ய முடியாது என்பது உண்மையே!

எடைக்கு எடை தங்கம் கொடுத்ததை விட வேறு என்ன நம்மால் செய்ய முடியும் என்ற கேள்வி எழலாம். அந்தத் தங்கம் டில்லி பெரியார் மய்யமாக தகத்தகாய சூரியனாக ஜொலிக்கிறது.

அந்தப் பரிசையும் தாண்டி, நம்மால் சாதித்துக் கொடுக்க முடிவது ஒன்று இருக்கவே செய்கிறது. அதுதான் 50 ஆண்டு விடுதலை ஆசிரியர் பணிக்கு நாம் அளிக்கும் விடுதலை சந்தாக்கள் ஆகும். நமது ஆசிரியர் அவர்கள் முழு மன நிறைவு அடைவது என்பது இதன் மூலமாகத்தான் இருக்க முடியும்.

அந்த இமாலய முயற்சியைக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் மேற் கொண்டால் நிச்சயமாய் சாதித்துக் காட்ட முடியும்.

2012 ஆண்டுக்குள் பல தவணை களாக 50 ஆயிரம் சந்தாக்களை திரட்டித் தருவது, அதற்காக ஒவ்வொரு நொடி யையும் பயன்டுத்தி திட்டமிட்டவகையில் உழைப்பது - சாதிப்பது என்ற சூளுரையை திராவிடர் கழகப் பொதுக்குழு மேற்கொள் கிறது. தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் பணிமுடிப்போம்!

முன்மொழிந்தவர் : கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர்

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை அனைவரும் எழுந்து நின்று கரஒலி எழுப்பி மிகுந்த உணர்ச்சியுடன் ஒருமனதாக நிறைவேற்றிக் கொடுத் தனர். இந்தத் தீர்மானத்தின்மீது உரை யாற்றிய கழகத் தோழர்கள் மிகுந்த ஆர்வத் துடன், எப்பாடு பட்டேனும் 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களை சேர்த்தே தீருவது என்றும் 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களை சேர்ப்பது மூலம் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள், இலட்சியங்கள் மக்கள் மத்தியில் சிறப் பாகச் சேரும் - சமுதாய மாற்றத்துக்குப் பெரும் துணை புரியும் என்று தோழர்கள் எடுத்துரைத்தனர்.

தமிழ் ஓவியா said...

நாம் என்ன செய்யப் போகிறோம்?



உலகம் முழுவதும் உள்ள கருஞ் சட்டைத் தோழர்கள் பெருமை யுடனும், பெரும் மகிழ்ச்சியுடனும், கர்வத்துடனும் இரும்பூது எய்தும் நாள் ஆகஸ்டு 10! ஆம்; தமிழர் தலைவர், தமிழகத்திற்கே ஆசிரியர், திராவிடர் இயக்கத்தின் திருஞான சம்பந்தர், மானமிகு வீரமணி அய்யா அவர்கள் விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்று அய்ம்பது ஆண்டு கள் நிறைவு செய்த நாள் இந்நாள்! (10-8-2012) திராவிட இயக்கத்தின் நூறாம் ஆண்டில் அவ்வியக்கத்தின் முக்கிய போர்வாளாம் விடுதலை நாளேட்டின் ஆசிரியராக 50 ஆண்டுகள் ஒருவரே பணியாற்றி சாதனை புரிந்த நாள் இந்நாள்! அது மட்டுமா?

1938 இல் அய்யாவின் கைக்கு வந்து, நாளேடாக மாறிய (அதற்கு முன் 1935 இல் திரு. டி.ஏ.வி. நாதன் அவர்களால் வார ஏடாக நடத்தப்பட்டு வந்தது.) விடுதலையின் 74 ஆண்டு வாழ்க்கையில், 50 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து அரும் சாதனையை நம் தலைவர் படைத்த நாள் இந்நாள்! உலகில், பத்திரிகைத் துறையில் எங்குமே நிகழ்ந்திராத பேரதிசயம் அன்றோ இது! கின்னஸ் சாதனை நிகழ்த்திய நம் ஆசிரியர் அய்யா அவர்களின் இச் சாதனை நாள் நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும், கட்டுக் கடங்கா மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தும் நாளன்றோ இந்நாள்!

தமிழ் ஓவியா said...

இந்த நிலையில் தோழர் வீரமணி அவர்கள், நான் உள்பட பலரது வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் இணங்கி, கழகத்திற்கு முழுநேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து, பத்திரிகைத் தொண்டடையும், பிரச்சாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக் கொண்டு, தொண்டாற்ற ஒப்புக் கொண்டு, குடும்பத்துடன் சென்னைக்கே வந்துவிட்டார்.

நமது கழகத்திற்குக் கிடைக்க முடியாத ஒரு பெரும் நல் வாய்ப்பு என்றே கருதி, திரு.வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு, கழகத் தோழர்களுக்கு இந்த நற்செய்தியை தெரிவித்துக் கொள் கிறேன் என்று 10.-8.-1962-_ல், நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள், விடுதலையை, நம் ஆசிரி யர் அய்யா அவர்களிடம் ஒப் படைத்தார். அன்றிலிருந்து இன்று வரை, அய்யாவின் நம்பிக்கைக்கு நட்டமேற்படாமல், விடுதலையைக் காப்பாற்றி, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பெரி யாரின் பெருமையையே பேசி வரும் ஏடாக, உலகின் அறிவார்ந்த ஒரே நாத்திக ஏடாக மிளிரச் செய்த பெருமைக்குரியவரன்றோ நம் தலைவர் ஆசிரியர் அவர்கள்!

கருஞ்சட்டைத் தோழர்களான நம் அனைவருக்கும் அவரே குடும்பத் தலைவர். நம் வீட்டுப் பெரியவர்களை விட, அவரையன்றோ நம் வீட்டுப் பெரியவராக நினைக்கின்றோம். நம் ஊனோடும், உணர்வோடும் ஒன்றி விட்ட அவரை நாம் வாசிப்பதோடு விட்டுவிடவில்லை! அவரையே சுவாசித்துதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் இல்ல நிகழ்வுகளை அதனால்தான் அவ ரின்றி நாம் நடத்த விரும்புவதிலலை! அவரும் அதைத் தவிர்க்க நினைப் பதிலலை! ஆனால் இன்று என்ன நிலைமை? உணர்ச்சிகளுக்கு உட்படாமல் அறிவுக்கு முன்னுரிமை கொடுத்து, கருஞ்சட்டைத் தோழர் களை சற்று சிந்திக்க வேண்டுகிறேன்.

தமிழ் ஓவியா said...

நாளை டெசோ மாநாடு! 19 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் இதே போன்ற ஒரு டெசோ மாநாடு! அதில் ஒரு உணர்ச்சி மயமான உரையாற்றி திரும்பிய இரவு, நம் தலைவருக்கு மாரடைப்பு ஏற் பட்டது. உடன் கோவை கே.ஜி. மருத்துவமனையில் தீவிர மருத்துவப் பிரிவில் சேர்க்கப்பட்டார். மரு. பக்தவத்சலம் அவர்களின் மேற் பார்வையில் ஓரளவு உடல் தேறினார். பின் அமெரிக்கா சென்று, உலகின் தலை சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணரான மரு. டட்லி ஜான்சன் அவர்களிடம் மருத்துவம் செய்து கொண்டார்.

இதயத் தமனி மாற்றுவழி மருத்துவம் (Coronary Arterty Byepass Grafting) செய்து கொண்டதால்தான் அவருக்கு 15 ஆண்டுகள் நம்மோடு வாழும் வாய்ப்பு உண்டானது. அலுக்காமல், சளைக்காமல் இயக்க நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்ச்சிகள் என்று கலந்து கொண்டு நம்மை எல்லாம் பெரு மகிழ்ச்சியில், பெருமையில் திளைக்க வைத்தார். பழுதாகி, சீரான இதயம் எத்தனை நாள்தான் செம்மையாக இயங்கும்? மீண்டும் லேசாகத் தொல்லைகள் துவங்கின. தொல் லைகள் தொடர் கதையாகி, இதயம் தொய்வடைந்த நிலையிலும், இயக்கப் பணிகளோ, இயக்கத் தோழர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலோ தொய்வு ஏற்பட வில்லை. ஒரு கட்டத்தில் மருத்துவம் கட்டாயத் தேவையானது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டா. இதயத் தமனி விரிவாக்க மருத்துவம் (Angio Plasty) அவருக்கு செய்யப்பட்டது. அது நிகழ்ந்தும் 4 ஆண்டுகள் கழிந்து விட்டன. மருத்துவர் மேத்யூஸ் குரியன் என்ற உலகப் புகழ் பெற்ற மருத்துவர்தான் இம்மருத்துவத்தைச் செய்தார்.

அதற்குப் பின் மீண்டும் வழக்கமான பணிச் சுமைகள், அலைச்சல். முதல் நாள் சென்னை, அடுத்த நாள் நாகர்கோயில், அடுத்த நாள் வேலூர், அடுத்த நாள் தூத்துக்குடி என்று தொடர் ஓட்ட (மாரத்தான்) பயணம். உலகத்திலேயே தந்தை பெரியார்தான் அதிக தூரம் பிரச்சாரப் பயணம் மேற் கொண்டவர். அதற்குச் சற்றும் சளைக்காத பயணமல்லவா நம் ஆசிரியர் பயணம். பயணத்தின் பொழுது தூங்கிக் கொண்டு வருவார். திடீரென விழித்துப் பார்த்து, சன்னல் வழித் தெரியும் புளிய மரத்தைப் பார்த்தே ஊரினைச் சொல்வார். அந்த அளவிற்கு தமிழகத்தின் சாலைகளும், ஊர்க ளும் அத்துப்படி. பத்து வயதில் துவங்கிய பயணமல்லவா அது? இன்று வயது 80. 70 ஆண்டுகள் ஓடி, ஓடி செய்த பிரச்சாரப் பயண மன்றோ அது? எவ்வளவு அலைச்சல்? எவ்வளவு உழைப்பு?

இயக்கப் பணிகள், கல்வி நிறுவனப் பணிகள், படிப்பது, எழுதுவது, போதாக் குறைக்கு இனத் துரோகிகள், எதிரிகள் கொடுக்கும் தொல்லைகள்! வம்படி வழக்குகள்! அப்பப்பா; நினைக்கும் பொழுதே நம் நிலை தடுமாறுகிறதே! ஆனால் அவரோ, நிலை தடுமாறாதது மட்டுமல்ல, நிலைத்து நின்று செயலாற்றினாரே. அதன் விளைவு இதயத்தில் மீண்டும் குழப்பம்! நாடித்துடிப்பு சீரின்மை (Missed Beats) ஏற்பட்டது. அவர் மனமும், மதியும் இளமையாக இருந்தும், வயதும், இதயமும் மூப்பாகி விட்டதே! அமெரிக்காவில், மரு. ஸ்டீபென்ஸன் என்ற உலகின் தலைசிறந்த மருத்துவரால் இதயத் துடிப்பு சீராக்கும் மருத்துவம் செய் யப்பட்டது.

மரு.பக்தவத்சலம், மரு.டட்லி ஜான்சன், மரு.மேத்யூஸ் குரியன், மரு. ஸ்டீபென்சன் போன்ற மருத்துவர்கள் ஆசிரியரின் இதயத் திற்குள்ளேயே ஊடுருவிச் சென்று, அவரின் நோயைச் சீராக்கி, நம்மிடம் அளித்துள்ளார்கள். அவர்கள் கடமையை அவர்கள் செவ்வனே செய்து விட்டார்கள். இனி நம் கடமை என்ன என நாம் சிந்திக்க வேண்டாமா? அவரை மீண்டும் நாம் அலைய வைக்கப் போகிறோமா? புதுமனை புகுவிழா, வாழ்க்கை ஒப்பந்தம், கொடியேற்றம், படத் திறப்பு என அவரைப் படுத்தப் போகிறோமா? அவருக்கு ஏதாவது ஒன்று என்றால்அது அவருக்கா இழப்பு?

அது நமக்குத்தான் இழப்பு, நம் இனத்திற்கு இழப்பு; ஏன், உலகத் தமிழர் ஒவ்வொருவருக்கும் இழப்பு! நாம் எல்லோரும் பூஜ்யங்கள்தான். ஒன்று எனும் ஆசிரியர் நமக்கு முன்னால் இருந்தால்தான் நமக்கு மதிப்பு! அவர் இல்லை என்றால் நமக்கு விடிவில்லை, வாழ்வில்லை, நம் இனத்திற்கு மீட்சியில்லை. நாம் வாழவேண்டும், நம் இனம் வாழ வேண்டும், அறிவு ஆசான் பெரியார் அய்யாவின் கருத்துக்கள் உலக மயமாக வேண்டும் என்பதற்காக வாவது, அந்த சுயநலத்திற்காகவாவது அவர் நீண்ட நாள் வாழவேண்டும். அவர் வாழ்வதும், நமக்காக உழைப்பதும் இனி நம் கையில்தான்!

நாம் என்ன செய்யப் போகிறோம்?

(பி.கு. மரு. சோம இளங்கோவன், தோழர் அசோகன், தோழர் அன்பு ராஜ் மற்றும் ஆசிரியருக்கு மருத் துவம் செய்ய உதவிய அனை வருக்கும் நம் மனமார்ந்த நன்றி! நன்றி.

தமிழ் ஓவியா said...

சிறுவர் வீரமணி... சில துளிகள்...!

12.05.1944 அன்று பழைய பட்டினம் செட்டிக்கோவில் திடலில் (கடலூர்) திராவிட மாணவர் சுற்றுப் பயணக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எம்.எஸ்.சக்கிரியா, சிறுவன் கி.வீரமணி, காஞ்சி கல்யாண சுந்தரம், மா.பீட்டர் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தமிழன் முன்னேற்றம் என்ற தலைப்பில் கி.வீரமணி பேசினார்.

13.05.1944 அன்று மஞ்சக்குப்பம் மைதானம், கடலூரில் திராவிட மாணவர் சுற்றுப்பயணக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் து.பால கிருட்டிண சங்கரய்யா, காஞ்சி கல்யாணசுந்தரம், சிறுவன் கி.வீரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

14.05.1944 அன்று கடலூர் மாலுமியார்பேட்டை என்ற இடத் தில் நடைபெற்ற திராவிட இளைஞர் கழகம் திறப்புவிழாவில் ஆசிரியை நாகம்மையார், மா.பீட்டர், காஞ்சி கல்யாணசுந்தரம், சிறுவன் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

17.6.1944 இதழ் குடிஅரசு வார ஏட்டில் ஒரு சிறு ஒற்றைக் காலச்செய்தி வெளியாகியது. அது கீழே தரப்படுகிறது.

11.6.1944 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குக் கடலூர் மாலு மியார்பேட்டையில் காவேரிப் பட்டிணம் மாரிமுத்துப் படையாட்சி புதல்வி ஞானாம்பாளுக்கும், மாலுமியார்பேட்டை கோவிந்தசாமி படையாச்சி புதல்வன் சின்னத் தம்பிக்கும் தோழர் வை.சிதம்பர நாதன் அவர்கள் தலைமையில் தமிழ்த் திருமணம் நடந்தேறியது. தோழர்கள் பி.தியாகராஜன், வை.சிதம்பரநாதன், மா.பீட்டர் பி.ஏ., ஆ.திராவிடமணி பி.ஏ., கி.வீரமணி ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.

நடன அரசு, அழகரசன், இளவழகன் ஆகியோர் சீர்திருத்தப் பாக்கள் பாடினர்.

18.06.1944 அன்று கடலூரில் நடைபெற்ற திராவிட இளைஞர் கழகக் கூட்டத்தில் து.பால கிருட்டிண சங்கரய்யா, கி.தியாக ராசன், ஆ.திராவிடமணி, சிறுவன் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் அவர்களின் எண்ணப்படி அமைந்த வாரிசு! - கலைஞர்



ஆருயிர் இளவல் திரு. வீரமணி அவர்கள், தந்தை பெரியார் அவர்கள் எண்ணியபடி அமைந்த அவரது வாரிசு ஆவார். தந்தை பெரியார் அவர்கள் கல்லடியும், சொல்லடியும் தாங்கி, மான அவமானங்களைப் பொருட்படுத்தாது தமது பகுத்தறிவுக் கோட்பாடு வெற்றி பெறுவதன் மூலமே, தமிழகத்தில் மனிதன் மனிதனாகத் தன்மானத்துடன் வாழ முடியும் என்று கருதி, அதற்காகவே அல்லும் பகலும், அலுப்பும் சலுப்புமின்றிப் பாடுபட்டார்.

அப்படிப்பட்ட பெரியார் அவர்களிடம் வாரிசு குறித்துக் கேள்வி எழுந்தபோது, அதற்குப் பதிலாகச் சிவகங்கையில் 10.4.1965 அன்று நடைபெற்ற கூட்டத்தில்,

எனக்குப் பின், என் புத்தகங்களே வழிகாட்டும். இந்தத் தொண்டும், பிரச்சாரமும் அறிவை மட்டும் சேர்ந்ததல்ல; உணர்ச்சியையும் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால், அவன் அடுத்துத் தலைமை ஏற்க வருவான்.

அதுவரை யார் என்றால், இந்தப் புத்தகங்கள்தான். வேறு யாரும் வரக்கூடாது என்பதல்ல என் கருத்து. அந்தப் பக்குவம் உள்ளவனிருந்தால் அவன் வருவான். முகமது நபியைப் பார்த்து, உங்களுக்குப் பின் யார்? என்று கேட்டதற்கு, அவர், எனக்குப் பின் வேறு யாருமில்லை என்று கூறிவிட்டார். நான் அப்படிக் கூற விரும்பவில்லை.

அறிவும், உணர்ச்சியும், துணிவும் உள்ள யார் வேண்டுமானாலும் வரலாம்

என்று கூறினார். தந்தை பெரியார் அன்று கூறியபடியே அவர் எண்ணிய அந்த அறிவையும், உணர்ச்சியையும், துணிவையும் கொண்டவராகத் திகழும் அன்பு இளவல் திரு.வீரமணி அவர்கள். இன்று அவரது வாரிசாக விளங்குகிறார்.

- தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007

தமிழ் ஓவியா said...

கேட்பதற்கே இனிக்கிறது



அறியாமையிலிருந்து விடுதலை!

ஆதிக்க வெறியிலிருந்து விடுதலை!

இழிவு செய்யும் கொடுமையிலிருந்து விடுதலை!

ஈனச் செயல் புரியும் மத வெறியிலிருந்து விடுதலை!

உடைமை அனைத்தும் தனக்கென

உறுமுவோரிடமிருந்து விடுதலை!

ஊரையடித்து உலையிலே போடும்

உன்மத்தர்களிடமிருந்து விடுதலை!

இத்தனை விடுதலைகளுக்காகவும்

களத்திலே வாளேந்தி

பல ஆண்டுக் காலமாக கடும்போர் புரிந்து வரும்

விடுதலையின் இரண்டாம் பதிப்பு திருச்சியில் தொடக்கம்!

கேட்பதற்கே இனிக்கிறது!

வார்த்தைகளை கோப்பதற்கும்

வாழ்த்துக்களைக் குவிப்பதற்கும்

அந்த இலட்சிய இதழின் நீண்டகால வாசகன் என்ற நிலையில்

பெருமையடைகிறேன். வாழ்த்துகிறேன்.

சென்னை,
17.9.2007

அன்புள்ள, மு.கருணாநிதி