Search This Blog

18.8.12

உண்ணாவிரதத்தின் மூலம் ஏற்பட்ட பலன் என்ன? -பெரியார்

உண்ணாவிரதப் பலன்

திரு. காந்தியவர்கள் உண்ணாவிரதமிருந்ததன் பலனாகத் தாழ்த்தப் பட்டோர்க்கு ஏற்பட்டிருந்த தனித்தொகுதித் தேர்தல் முறை ரத்து செய்யப் பட்டுவிட்டது. புனாவில் இந்துத் தலைவர்கள் என்பவர்களும், தாழ்த்தப்பட்ட வகுப்புத் தலைவர்கள் என்பவர்களும் கூடிச் செய்து கொண்ட சமரச முடிவை பிரிட்டிஷ் பிரதம மந்திரியவர்கள் ஆட்சேபணையின்றி ஒப்புக் கொண்டு விட்டார். திரு. காந்தியும் தனது உண்ணா விரதத்தை முடித்து விட்டார்.

திரு. காந்தியவர்கள் உண்ணாவிரதமிருந்ததனாலும், தலைவர்கள் என்பவர்கள் சமரச மகாநாடு கூடி ஒப்பந்தஞ் செய்து கொண்டதனாலும், அவ் வொப்பந்தத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் அங்கீகரித்துக் கொண்டு, தாழ்த்தப் பட்டவர்களின் தனித் தொகுதித் தேர்தல் முறையை ரத்து செய்ததனாலும் உண்டான பலன் என்ன என்பதை மாத்திரம் பார்ப்போம்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பின்படி, தாழ்த்தப்பட்டோர்க்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மகாணச் சட்டசபை களுக்கும் ஏற்பட்டிருந்த மொத்த ஸ்தானங்கள் எழுபத்தொன்று. இந்த எழுபத் தொன்று ஸ்தானங்களுக்கும் தெரிந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் அனை வரும், அந்த வகுப்பினரின் ஓட்டுக்களாலேயே தெரிந்தெடுக்கப் படுவார் களாகையினால், அவர்கள் யாருடைய தயவுக்கும், தாட்சண்யத்திற்கும் கட்டுப்படாமல் தங்கள் சமூக நன்மைக்கு உண்மையாகவும், உறுதியாகவும், தைரியமாகவும் போராடலாம். தங்கள் சமூகத்திற்கு எதிராக உள்ள வேறு கூட்டத்தாரின் தயவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுடைய தயவு தாட் சண்யங்களுக்கும் கட்டுப்பட்டிருக்கும் நிலையில் உள்ள நூற்றுக்கணக்கான பிரதிநிதிகளைவிட, யாருடைய தயவையும் பொருட்படுத்தாமல் சுயேச்சை யாகத் தமது சமூக உரிமைக்குப் போராடும் நிலையில் உள்ள சில பிரதிநிதிகள் இருந்தாலும் போதும் என்பதே நமது அபிப்பிராயம். இதனாலேயே நாம் ஆதி முதல் தாழ்த்தப்பட்டார்க்குத் தனித்தொகுதித் தேர்தல் முறைதான் வேண்டு மென்றும் கூறி வந்தோம். அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இவ்வாறே கூறிவந்தார்கள். ஆனால் திரு. காந்தியவர்கள் பட்டினி கிடந்ததன் பலனாகத் தாழ்த்தப்பட்டார்க்கு ஏற்பட்டிருந்த இந்தச் சௌகரியம் பலிகொடுக்கப்பட்டு விட்டது.

இனி இப்பொழுது ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். இவ்வொப்பந்தப்படி, இந்தியா முழுவதுமுள்ள எல்லா மாகாண சட்டசபைகளுக்கும், பொதுத் தொகுதியின் மூலம் தேர்ந்தெடுக்கப் படும் மொத்த ஸ்தானங்களில் எண்ணிக்கை நூற்றுநாற்பத்தெட்டாகும். இந்த நூற்று நாற்பத்தெட்டு ஸ்தானங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படும் நூற்று நாற்பத்தெட்டு பிரதிநிதிகளும் இந்துக்கள் ஓட்டினாலும் தாழ்த்தப்பட்டார் களின் ஓட்டினாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதில் ஒவ்வொரு ஸ்தானங்களுக்கும் அபேட்சகராக நான்கு பிரதிநிதிகளே முன்வரலாம். இந்த நான்கு பிரதிநிதிகளும் முதலில் தாழ்த்தப்பட்ட வகுப்பு ஓட்டர்களால் மாத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டு பிறகு அவர்கள் பொதுத் தொகுதியில் போட்டி போட வேண்டும்.

இவ்வாறு தாழ்த்தப்பட்டாருக்கு முன்னிருந்ததைக் காட்டிலும் இரண்டு பங்கு ஸ்தானங்களுக்கு மேல் அதிகமான ஸ்தானங்கள் ஏற்பட்டு விட்ட தனாலும் பூர்வாங்கத் தேர்தல் முறை ஏற்பட்டிருப்பதனாலும் தனித் தொகுதியை விட அதிக சௌகரியம் ஏற்பட்டு விட்டதென்றும் தேசீயப் பத்திரிகைகள் என்பன வெல்லாம் ஒரேயடியாக ஆர்ப்பாட்டம் புரிகின்றன. ஆனால் உண்மையில் எவ்வளவு ஸ்தானங்கள் அதிகப்பட்டாலும் இதனால் தனித்தொகுதியை விட அச்சமூகத்திற்கு ஒன்றும் நன்மையுண்டாகி விட வழியில்லை என்பதில் சந்தேகமில்லை. டாக்டர். அம்பெட்காரின் பிடிவாதத் தினால் பூர்வாங்கத் தேர்தல் முறை ஏற்பட்டிருப்பது ஒன்றுதான், சிலராவது அச்சமூகத்தினரின் நம்பிக்கைக்குப் பாத்திரமுள்ள பிரதிநிதிகள் தேர்ந்தெடுக் கப்பட்டலாம் என்று எண்ண இடமிருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களில் வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை அளித்தாலும் கூட, உயர்ந்த ஜாதி இந்துக்களின் ஓட்டர்கள் தொகையே அதிகமாக இருக்கும். இந்நிலையில் தாழ்த்தப்பட்டவர்களாலேயே பூர்வாங்க மாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொதுத் தொகுதியில் நிறுத்தப்படும் நான்கு அபேட்சகர்களில் யார் உயர்ந்த ஜாதி இந்துக்களின் நம்பிக்கைக்குப் பாத்திர மாயிருக்கிறார்களோ அவர்கள் தான் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட முடியும். முற்றும் தாழ்த்தப்பட்டார் உரிமைக்கு அஞ்சாமல் போராடும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படமுடியாது. உதாரணமாக, ஒரு ஸ்தானத்திற்கு நடைபெற வேண்டிய பூர்வாங்கத் தேர்தலில், ராவ் பகதூர், சீனிவாசன், டாக்டர் அம்பெட்கார், திரு. வி. ஐ. முனிசாமி பிள்ளை, ஒரு வெற்றிவேலு இன்னுஞ் சிலர் போட்டிப் போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். இவர்களில் முதல் மூவரும், அவ்வகுப்பினரின் மெஜாரிட்டியான ஓட்டர்களால் தெரிந் தெடுக்கப்படுவார்கள் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை. நான்காவதாக, உள்ள வெற்றிவேலு என்பவரிடம் அச்சமூக மக்களுக்கு நம்பிக்கையில்லாவிட்டாலும், இந்து சமூகத்தைச் சேர்ந்த பெரிய மிராசு தார்கள், அய்யர், அய்யங்கார்கள் முதலியவர்களின் முயற்சியால் அவர் நான்காவது அபேட்சகராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். இவ்வாறு பூர்வாங்கத் தேர்தலில், தாழ்த்தப்பட்ட சமூகத் தாரின் முழு ஆதரவோடும் முதன்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராவ் பகதூர் சீனிவாசன், டாக்டர் அம்பெட்கார் திரு. வி. ஐ. முனிசாமி பிள்ளை ஆகியவர்கள் இந்து மிராசுதாரர்கள் அய்யர், அய்யங்கார்கள் ஆகியவர் களின் சொல்லுக்குத் தாளம் போடும் வெற்றிவேலு ஆகிய நால்வரும் ஒரு ஸ்தானத்திற்கும் போட்டி போடுவார்களானால் இவர்களில் யார் தேர்ந்தெடுக் கப்படுவார்கள் என்று கேட்கின்றோம். பணக்கார மிராசுதார்களின் சொல்லை யும், அய்யர், அய்யங்கார்களின் சொல்லையும், கைகட்டி, வாய்பொத்திக் குனிந்து நின்று கேட்டு அதன்படி நடக்கத் தயாராக இருக்கும் வெற்றிவேலு என்பவரே தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை யார் மறுக்க முடியும்? ஆகவே இத்தகைய பிரதிநிதிகளாகவே சட்டசபைக்கு வந்து சேர்வார்களாயின் அவர் களால் அச்சமூகத்திற்கு என்ன நன்மை உண்டாகிவிட முடியும்? இத்தகைய பிரதிநிதிகளின் எண்ணிக்கை எவ்வளவு இருந்தால் என்ன?

இப்படி யில்லாமல் பூர்வாங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் நான்கு பிரதிநிதிகளும் அச்சமூகத்தின் நம்பிக்கைக்கும் பாத்திரமுடைய பிரதிநிதிகளாகவே தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் பொதுத்தொகுதியில் போட்டிப் போட்டு வெற்றி பெறும் பிரதிநிதி அச்சமூகத்தின் உண்மையான பிரதிநிதியாக இருக்க முடியும். இவ்வாறே இந்த 148 ஸ்தானங்களுக்கும் பூர்வாங்கத் தேர்தல் நடத்தினாலும் அவைகளுக்கு அபேட்சகர்களாக நின்று வெற்றி பெறும் 592 அபேட்சகர்களும் அச்சமூகத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமுடையவர்களாகத்தான் இருப்பார்களென்று கூற முடியாது. ஆகை யால் புதிய தேர்தல் முறையின்படி, தாழ்த்தப்பட்டோர் சமூகத்தின் உண்மை யான பிரதிநிதிகளாக ஒரு சில பிரதிநிதிகளாவது தேர்ந் தெடுக்கப்படு கிறார்களோ இல்லையோ என்பது சந்தேகம் என்றுதான் கூறுவோம். இக் காரணங்களால் தான் தனித் தொகுதி தேர்தல் முறையைவிட கூட்டுத் தொகுதி தேர்தல் முறை எந்த வகையினும் சிறந்ததல்ல என்று கூறுகின்றோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் கூறுகின்றார்கள்.

ஆயினும் பூர்வாங்கத் தேர்தல் முறையை ஏற்படுத்தியிருப்பதன் மூலம் உண்மையுடன் போராடக் கூடிய சில பிரதிநிதிகளாவது சட்டசபைக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கைக்கு இடமாக இவ்வொப்பந்த மாவது ஏற்பட்டது பற்றிச் சிறிது ஆறுதலடைகின்றோம். இதன் மூலம் திரு. காந்தியவர்களின் பிராணத்தியாகத்தைத் தடுத்த டாக்டர் அம்பெத்கார், சர். சாப்ரூ, திரு. ஜெயகர் முதலியவர்களின் முயற்சியையும் பாராட்டுகின்றோம். ஆனால் திரு. காந்தியவர்களின் பட்டினியின் மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சட்டசபை பிரதிநிதித்துவத்தில் ஏற்பட்டிருந்த நன்மையில் முக்கால் பாகம் நாசமாக்கப் பட்டது என்பதையும் கூறாமல் இருக்க முடியவில்லை.

அடுத்தபடியாக இவ்வுண்ணாவிரதத்தின் மூலம் ஏற்பட்ட பலன் என்ன என்பதைப் பார்ப்போம். திரு. காந்தியவர்கள் எதைச் செய்தாலும், எதைப் பேசினாலும் “கடவுள் கட்டளை” “கடவுள் அபிப்பிராயம்” என்ற பாடம் படிக்கின்றனவர் என்பது நமக்கு புதிய விஷயமல்ல. நமது நாட்டில் வாழும் குருட்டு நம்பிக்கையுள்ள பாமர மக்களையெல்லாம் ஏமாற்ற வேண்டு மானால், “கடவுளை”யும், “மதத்தை”யும் இழுத்தால் தான் முடியும் என்பது திரு. காந்தியவர்களுக்கு நன்றாய் தெரிந்த விஷயம். மனிதனுடைய செய்கைக் கும், அபிப்பிராயத்திற்கும் மதிப்பு கொடுக்கும் அறிவு இன்னும் நமது மக்களுக்கு உண்டாகவில்லை. ஆகையால் “எனது செய்கை” “எனது அபிப் பிராயம்” என்று சொல்லி யார் எதைச் செய்தாலும், சொன்னாலும், அவைகள் எவ்வளவு உண்மையாயிருந்தாலும், நன்மையுண்டாக்கக் கூடியவைகளா யிருந்தாலும், அவைகளுக்கு நமது தேசத்தில் கௌரவம் ஏற்படுவதில்லை. ஆகையால் தான் திரு. காந்தியார் எதையும் கடவுள் தலையில் போட்டுப் பாமர மக்களை ஏமாற்றுகிறார் என்பதில் கடுகளவு சந்தேகமில்லை. ஆகவே, வழக்கப்படி உண்ணா விரதத்திற்கும் “கடவுளை” இழுத்து விட்டார்.

அன்றியும், தமது உண்ணாவிரதத்தின் நோக்கமும் தனித் தொகுதியை ரத்து செய்வது மாத்திரமன்று, தாழ்த்தப்பட்டார்க்குத் தற்போதுள்ள சமூகத் தடைகளையெல்லாம் ஒழித்து அவர்களையும் இந்து சமூகத்துடன் ஒன்றுபடச் செய்ய வேண்டும் என்று நன்றாக வற்புறுத்திக் கூறினார். இதனால், பலர் அச்சமூகத்தார்க்குக் கோயில் பிரவேச உரிமை அளிக்கவும், மற்றும் குளம், கிணறு, பள்ளிக் கூடம் முதலியவைகளில் சமஉரிமை அளிக்கவும் முயற்சி செய்தனர். இம்முயற்சியும் தீவிரமாக நடந்தது வடநாட்டிலேயாகும். தென் னாட்டில் அவ்வளவு மும்முரமாக நடைபெறவில்லை. ஆனால் பல விடங்களில் உபவாசங்களும், கோயில்களில் பூசைகளும், கூட்டங்களில் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன. இவைகளின் மூலம் பாமர மக்களை, “உபவாசம்” “பூசை” “பிரார்த்தனை” முதலியவைகளில் தெய்வத் தன்மை யிருப்பதாகவும், அவைகளின் மூலம் காரிய சித்திகள் உண்டு என்பதாகவும் நம்பச் செய்யப்பட்டன. இத்தகைய முட்டாள் தனந்தான் நமது மக்களை இன்று சோம்பேறிகளாகவும், மூடர்களாகவும், அடிமைகளாகவும் ஆக்கி வைத்திருக்கின்றன என்பதை அறிந்திருந்தும், காந்தி பக்தர்கள் இப்பிரசாரம் பண்ணியது அயோக்கியத்தனத்தைத் தவிர வேறல்ல என்றே கூறுவோம். ஆகவே திரு. காந்தியின் விரதத்தால் நமது நாட்டுக்குக் கிடைத்த இரண்டா வது பலன் “உபவாசம்” “பூசை” “பிரார்த்தனை” என்னும் சோம்பேரித் தனப்பிரச்சாரமும், முட்டாள் தனப்பிரச்சாரமும், குருட்டு நம்பிக்கைப் பிரச் சாரமும் செய்யப்பட்டதுதான்.

திரு. காந்தியின் விருப்பத்தின் படியும், திரு. ராஜகோபாலாச்சாரியின் அறிக்கையின் படியும், உபவாசமும், பிரார்த்தனையும் செய்த நமது நாட்டுப் பார்ப்பனர்களில் யாராவது தீண்டாதார்க்கு என்ன உபகாரம் பண்ணினார்கள் என்று கேட்கின்றோம். திரு. காந்தி இந்து மதத்தைக் காப்பாற்றப் பாடுபடுகிறார் என்னும் எண்ணத்துடன் அவர் பொருட்டு உபவாசமும் பிரார்த்தனையும் செய்தார்களேயொழிய தீண்டாதார் துயரம் அகல வேண்டும் என்னும் கருத்துடன் இவைகளைச் செய்த பார்ப்பனர் ஒருவரேனும் நமது நாட்டில் உண்டா?

தனித் தொகுதியை ஒழிக்கும் விஷயத்தில் உயிரைவிடத் துணிந்த திரு. காந்தியின் பொருட்டு நாடெங்கும், பத்திரிகைகளும் காந்தி பக்தர்களும் பிரசாரமும், விளம்பரமும் பண்ணியதில் பதினாயிரத்தில் ஒரு பங்காவது, தீண்டாமையை ஒழிக்க உண்ணாவிரதமிருக்கும் திரு. கேளப்பன் பொருட்டுச் செய்யப்படுகிறதா என்று பாருங்கள். குருவாயூர் கோயிலில் தாழ்த்தப்பட் டோரை அனுமதித்தாலொழிய தனது உண்ணா விரதத்தை நிறுத்துவ தில்லையென்று சென்ற 20 - 9 - 32 முதல் திரு. கேளப்பன் அவர்கள் உண்ணா விரதமிருந்து வருகிறார். இதற்காக எத்தனை பேர், உபவாசமும் பிரார்த் தனையும் செய்யப் போகிறார்கள்? இதைக் கொண்டே தீண்டாமையை உண்மையாக விலக்கும் விஷயத்தில் நமது நாட்டு உயர்ந்த சாதி மக்களுக்கு எவ்வளவு கவலையிருக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் திரு. காந்தியவர்கள், உண்ணா விரதத்தை முடித்தபின் கூறியுள்ள அபிப்பிராயத்திலும் அதற்குமுன் குறிப்பிட்டது போலவே, “தீண்டாமையை குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள் மும்முரமாக வேலை செய்து ஒழிக்காவிட்டால் மீண்டும் உண்ணாவிரத்தை கைகொள்ளுவேன்” என்று கூறியிருக்கிறார்.

இவ்வாறு உண்ணாவிரதமிருப்பாரானால், அப்பொழுது, தற்சமயம், திரு. கேளப்பன் அவர்களின் உண்ணாவிரதத்தின் பொருட்டு நமது நாட்டு பார்ப்பனர்களும், காந்தி பக்தர்களும் எவ்வளவு கவலை எடுத்துக் கொள்ளு கிறார்களோ அவ்வளவு கவலைதான் எடுத்து கொள்ளுவார்கள் என்று உறுதியாகக் கூறுகின்றோம்.

நாம் சென்ற வாரத்தில் குறிப்பிட்டிருந்தது போலவே ஒரு பார்ப்பன ராவது திரு. காந்தியிடம் அனுதாபங் காட்டமாட்டார் என்பது உண்மை. இப்பொழுதே தீண்டாமை விலக்குக்கு எதிர்ப் பிரசாரங்களும் கண்டனங்களும் புறப்பட்டு விட்டன இன்னும் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆகையால் இனி திரு. காந்தியை எந்த பார்ப்பனரும் லட்சியம் பண்ண மாட்டார்கள் என்பது நிச்சயம்.

ஆகையால் உண்மையிலேயே தீண்டாதார்க்கு விமோசனம் உண்டாக வேண்டுமானால் அவர்கள் இந்துக்களை நம்பியிருப்பதனாலாவது அவர்களோடு சேர்ந்திப்பதனாலாவது முடியாது என்பதை அறிய வேண்டும்.

கேவலம் கோயில் பிரவேசத்தால் மாத்திரம் அவர்கள் நன்மை யடைந்து விட முடியாது. கோயில்களின் மேல் பக்தி கொண்டு நம்பிக்கை வைத்துக் கொண்டு அவைகளில் பிரவேசிக்கும் உரிமை மாத்திரம் பெறுவார் களாயின் நன்மைக்குப் பதிலாகத் தற்பொழுது இருப்பதை விட அவர்களுக்கு இன்னும் அதிக தீமையையே உண்டாகும் என்பதில் தடையில்லை கொஞ்சம் நஞ்சம் சம்பாதிக்கும் பொருளையும் கோயில் உற்சவங்களுக்குச் செல்லுவதன் மூலமும் ‘அர்ச்சனைகள்’ ‘பூஜைகள்’ என்பவைகளின் பெயரால் செலவழிப்பதன் மூலமும் இன்னும் வறுமையடையவார்களென்பது திண்ணம். ஆகையால் ‘பொதுச் சொத்தாகிய கோயிலில் நமக்கும் செல்ல உரிமையிருக்க வேண்டும்’ என்னும் எண்ணத்துடன் மாத்திரம் கோயில் பிரவேசத்தை ஆதரிக்க வேண்டும் என்றுதான் நாம் தாழ்த்தப்பட்ட சமுகத் தார்க்கு எச்சரிக்கை செய்கின்றோம்.

நிற்க திரு. காந்தியின் உண்ணாவிரதத்தின் மூலம் தீண்டாமை விலக்கு விஷயத்தில் வெற்றி ஏற்பட்டதா என்று பார்த்தால் நமது தமிழ்நாட்டை பொறுத்த வரையிலும் ஒன்றுமில்லை என்று தான் சொல்ல வேண்டி யிருக்கிறது.

இனி திரு. காந்தியின் வெற்றி என்று எல்லோரும் பிரசாரம் பண்ணு வதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா? என்று பார்ப்போம். அவர் இதற்கு முன் தாழ்த்தப்பட்டார்களும் பொதுத் தொகுதியின் மூலம் போட்டிபோட்டுச் சட்ட சபைகளுக்கு வரவேண்டும் என்று கூறினாரே யொழிய பொதுத் தொகுதியில் ஸ்தானங்கள் ஒதுக்கி வைப்பதைக் கூட ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் இப்பொழுதோ, பொதுத் தொகுதியில் ஸ்தானங்கள் ஒதுக்கி வைப்பதையும் அதற்கும் கூடத் தனித் தொகுதித் தேர்தல் போலவே பூர்வாங்கத் தேர்தல் நடத்தும் முறையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆகவே இதில் திரு. காந்தியின் கொள்கைக்கு வெற்றி ஏதாவது இருக்கிறதா? என்று பாருங்கள். தனித் தொகுதித் தேர்தல் முறையை ரத்து செய்த வெற்றியை அவர் கடவுள் சக்தியால் பெற்றார் ‘ஆத்ம சக்தி’யால் பெற்றார் என்று கூறுவதும் புரட்டு என்று சொல்வோம். “கடவுள் சக்தி”யும் ‘ஆத்ம சக்தியும்’ இருந்தால் இவர் ஏன் பட்டினி கிடந்து பிடிவாதம் பண்ண வேண்டும்? பட்டினி கிடந்து பிடி வாதம் பண்ணினால் தான் ‘கடவுள் சக்தி’யும் ‘ஆத்ம சக்தி’யும் தன்னுடைய அதிகாரத்தைச் செலுத்துமா? ஆகையால் ‘கடவுள் சக்தி’ ‘ஆத்ம சக்தி’ என்று பிரசாரம் பண்ணுவதெல்லாம் மக்களை ஏமாற்ற வேண்டிச் செய்யப் படும் பிரசாரம் என்றே சொல்லுவோம்.


ஆகையால் திரு. காந்தியின் உண்ணாவிரதத்தால் நமது நாட்டுக்கு ஏற்பட்டபலன் தீண்டாதார்களின் சட்டசபைப் பிரதிநிதித்துவம் பாதிக்கப் பட்டதும் ‘உபவாசம்’, ‘பிரார்த்தனை’ முதலிய மூட நம்பிக்கைகளைப் ‘பிரசாரம்’ பண்ணப்பட்டதும் தான் என்று அறியலாம்.

      ------------------தந்தைபெரியார் -”குடி அரசு” - தலையங்கம் - 02.10.1932

18 comments:

பேராவூரணி-சேதுபாவாசத்திரம் ஒன்றிய நகர திராவிடர் கழகம் said...

http://periyar-rationalist.blogspot.in/ இந்த பேராவூரணி - சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார் இங்கு நடக்கும் நிகழ்வுகளையும், நமது இயக்க கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறோம். தாங்கள் தளத்தைப் பார்வையிட்டு சரியென்று உங்களுக்கு தோன்றினால் . உங்கள் தளத்தில் எங்கள் தளத்தைப் பற்றி அறிமுகம் செய்து வைத்து கருத்துக்கள் பரவ உதவி செய்யுங்கள். அல்லது இணைப்புக்கொடுங்கள். உங்கள் உதவி எங்களுக்கு தேவை.

பேராவூரணி-சேதுபாவாசத்திரம் ஒன்றிய நகர திராவிடர் கழகம் said...

http://periyar-rationalist.blogspot.in/ இந்த பேராவூரணி - சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார் இங்கு நடக்கும் நிகழ்வுகளையும், நமது இயக்க கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறோம். தாங்கள் தளத்தைப் பார்வையிட்டு சரியென்று உங்களுக்கு தோன்றினால் . உங்கள் தளத்தில் எங்கள் தளத்தைப் பற்றி அறிமுகம் செய்து வைத்து கருத்துக்கள் பரவ உதவி செய்யுங்கள். அல்லது இணைப்புக்கொடுங்கள். உங்கள் உதவி எங்களுக்கு தேவை.

தமிழ் ஓவியா said...

வடமாநிலத்தவர்களை விரட்ட நினைப்பது எவ்வகையிலும் நியாயமில்லை; வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று



மதவெறி பல ரூபங்களில் அதன் விஷமத்தைச் செய்கிறது: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி

தவறாகப் பரப்பப்படும் வதந்திகளால் கருநாடக, மராட்டியம், பிகார், தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து வட மாநிலத்தவர்கள் தன் சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர். இவ்வதந்திகளைப் பரப்பியது ஒரு மதவாத அமைப்பு என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனைக் கண்டறிவும், தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதை வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

கடும் நடவடிக்கை

தென் மாநிலங்களான கருநாடகம், தமிழ்நாடு போன்ற வட மாநிலங்களிலிருந்து (குறிப்பாக, பீகார், வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும்) வந்து மாணவர்களாவும், பணியாளர்களாகவும் பணிபுரியும் அந்த மக்களை கருநாடகாவில் அச்சுறுத்தலை - கைத்தொலைப்பேசி மற்றும் வதந்திகள்மூலம் பரப்பிட்டதன் விளைவாக, அப்படி வந்த பலரும் குடும்பம் குடும்பமாக பல்லாயிரக்கணக்கில் பெங்களூருவிலிருந்து தனி ரயில்களில் புறப்பட்டுச் செல்வது குறித்து மத்திய அரசும், பிரதமரும், நாடாளுமன்ற அனைத்துக் கட்சி உறுப்பினர்களும், உள்துறை அமைச்சர் ஆகியோர் நேற்று கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது

தமிழ்நாட்டில் அப்படி எந்த வதந்தியும் பரவியதாகத் தெரியவில்லை. தமிழக முதல்வரும் யாரும் அச்சப்படத் தேவையில்லை; அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

வந்தவர்கள் ஒன்று கல்வி பெறுவதற்காக; மற்றொன்று பணியாற்றுவதற்காக (பெரும்பாலும் கட்டுமானப் பணி போன்ற பணிகளுக்காக) வந்தவர்கள்.

அவர்கள் சுரண்ட வந்தவர்கள் அல்ல; அவர்கள் செய்யும் பணிகளுக்கு நம் நாட்டில் போதிய ஆட்கள் கிடைப்பதில்லை என்ற நிலையிலேயே அவர்கள் பணி தேவைப்படுவதாகும்.

நாகர்கள் என்பவர்கள் திராவிடர்களே!

கலாச்சார ரீதியாகவே அவர்கள் பூர்வீக திராவிடர் இனத்தவர்களே; நாகர்கள் என்பவர்கள் திராவிடர்களே என்று டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அவரது அரிய ஆராய்ச்சி நூல் ஒன்றில் (Who are untouchables, whe they are untouchable) தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, அவர்களை அச்சுறுத்தவோ, அவர்களை விரட்டவோ முனைவது எவ்வகையிலும் நியாயமல்ல; வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

மதவாத கட்சி ஒன்றினால்தான்...

கருநாடகத்தில் தான் இப்படி வதந்தி கிளப்பிவிடப்பட்டது. இதற்கு மூலகாரணமான குற்றவாளிகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் கண்டறிந்து தண்டிக்கவும், உடனே நடவடிக்கை எடுக்கவும் தவறக்கூடாது; மதவாத கட்சி ஒன்றுதான் இந்த திருப்பணி செய்த அமைப்பு என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி மத்திய அரசின் உளவுத்துறை கண்டறிந்து, தெளிவான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடவேண்டும்.

முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்

மனிதநேய அடிப்படையிலும் நாம் அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பது அவசர, அவசியமாகும். மதவெறி பல ரூபங்களில் அதன் விஷமத்தைச் செய்கிறது; இதனை முளையிலே கிள்ளி எறிய அரசுகள் முன்வரவேண்டியது முக்கியமாகும்.


கி. வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம். 18-8-2012

தமிழ் ஓவியா said...

செய்திகளும் - சிந்தனைகளும்

காவல்துறையின் தரம்!



திருவண்ணாமலை பச்சையம்மன் கோயிலில் போலீசார் சிறப்பு பூஜை நடத்தினர். இதையொட்டி பொங்கல் வைக்கும் இடத்தில் காத்திருந்த போலீசார்.

திருவண்ணாமலை வேலூர் சாலையில் உள்ள ஒரு கோயில் பச்சை யம்மன் கோயில். ஆடி மாதத்தில் பொங்கல் இட்டுப் படைப்பார்கள். இதில் என்ன விசேடம்? இருக்கிறது, இருக்கிறது! திருவண்ணாமலை மாவட்ட தனிப் படைக் காவலர்கள் இங்கு சிறப்புப் படையல் போட் டுள்ளனர். ஆடுகள் வெட்டிக் களே பரமாக விசேஷ பூஜைகள் நடந் துள்ளன.

குடும்பத்தோடு காவல் துறையினர் குவிந்துள்ளனர். எதற்காகவாம் இந்தக் கூத்து?

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமான கொலை, கொள்ளை, திருட்டு, சாலை விபத்துகள் நடக் கின்றனவாம். இவற்றைத் தடுக்கத்தான் இந்தச் சிறப்புப் பூஜை சமாச்சாரங் களாம்!

(மாலை முரசு 16.-7.-2012 பக்கம் 5 வேலூர் பதிப்பு)

எப்படி இருக்கிறது இந்தத் தெருப் புழுதி. கொலை, கொள்ளை, திருட்டைக் கண்டுபிடிக்க வக்கில் லாதவர்களுக்கு எதற்குக் காக்கிச் சட்டை, மாதச் சம்பளம் எல்லாம்?

குற்றங்களைக் கண்டுபிடிப்புகளில் திறமையைக் காட்டுவதை விட்டு விட்டு குழவிக் கல்லுக்குப் பூஜை செய் வதால் என்ன ஆகிவிடப்போகிறது?

இதில் இன்னொன்று முக்கிய மானது. கொலை, கொள்ளை, திருட்டுகளைத் தடுக்கும் சக்தி இந்தக் கடவுளுக்கு இருப்பது உண்மை என்றால், இவை எல்லாம் நடப்பதற்கும் இந்தக் கடவுள்தான் காரணம் என்பது விளங்கவில்லையா?

அதனால்தானே இந்தக் கடவு ளிடம் அவ்வாறு நடக்க வேண்டாம் என்று வேண்டிக் கொள்கின்றனர்.

கொலை, கொள்ளை, திருட்டுகளை அனுமதிப்பதற்குப் பெயர்தான் கடவுளா? வெட்கக்கேடு!

தமிழ் ஓவியா said...

மடிப்பிச்சை கேட்கும் பெண்கள்



போச்சம்பள்ளி பகுதியில் இரண்டு ஆண் குழந்தைகள் பெற்ற பெண்களிடம் ஒரு மகன் உள்ள தாய்மார்கள் மடியேந்தி பணம் பெற்றனர். அந்த பணத்திலிருந்து வாங்கிய சேலையை கோயிலில் வைத்து பூஜை செய்தனர். (உள்படம்) மடிப்பிச்சை பெற்ற பெண்.

தடுக்கி விழுந்தவன் அரிவாள் மனையில் விழுந்தது மாதிரி, தப்பித் தவறிக் கூட மக்கள் அறிவு பெற்று விடக் கூடாது என்பதிலே பக்தி வியா பாரிகள் ஒரே குறியாக இருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச் சம்பள்ளி பகுதியில் ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டுள்ளனர்.

ஒரு ஆண் குழந்தை உள்ள பெண்கள் இரண்டு குழந்தைகள் பெற்ற பெண்களிடம் மடியேந்தி பணம் பெறவேண்டும். அந்தப் பணத்தைக் கொண்டு புதுச் சேலை வாங்கி அருகில் உள்ள மாரியம்மன் கோயில் அல்லது விநாயகர் கோயிலில் சேலையை வைத்துப் பூஜை செய்ய வேண்டும். சாமிக்குச் சேலையை சாத்திவிட்டு பின் ஒரு குழந்தை பெற்ற தாய் அந்தச் சேலையைக் கட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால், அந்தப் பெண்ணின் மகனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்குமாம்.

திருவயலூர், கோனனூர், குள்ளனூர், தாதம்பட்டி மாவத்தூர் பகுதிகளில் இந்தத் தெருப்புழுதியாம்.

இதில் கூட பெண் குழந்தை என் றால் மட்டம். ஆண் குழந்தை என் றால் உசத்தி என்கிற ஆண் ஆதிக்கப் புத்தி குடி கொண்டு இருப்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

குழந்தை பிறப்பது எப்படி என்கிற சாதாரண அறிவு இருந்தால் இந்த மாதிரி மூடத்தனத்துக்குப் பலியா வார்களா?

ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று முடிவு செய்வது ஆணின் உயிர் அணுக்களில் உள்ள குரோ மோசோமைப் பொறுத்தது என்பதை அறியாததால் ஏற்பட்ட அடி முட் டாள்தனம்தானே இந்த மூடத் தனத்துக்கு அப்பன்?

குழந்தையே பிறக்க முடியாத நிலையில் மலட்டுத் தன்மை உள்ள ஒரு பெண் இது போல செய்தால் குழந்தை பிறக்குமா?

புடவை வியாபாரி எவனோ ஒருவன் அவிழ்த்து விட்ட கரடியாக இது இருக்கும்.

இது போன்றவையெல்லாம் சில நாட்கள் தோன்றி அடுத்த சில நாட்களில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகிறதே ஏன்?

ஓ, கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்தானே!

தமிழ் ஓவியா said...

துக்ளக்கின் வக்கிரப்புத்தி

கேள்வி: சில்லறை வியாபாரத்தில் அன்னிய முதலீடுகளை அனுமதிக்காத தால் என்ன நடக்கும்? (கூடவே கூடாது என்றும், உள்ளூர் வியா பாரிகள் நசிந்துவிடுவார்கள் என்றும் குருமூர்த்தி கூறுவது உண்மையா?)

பதில்: ஏற்கெனவே இது பற்றி என் கருத்தை நான் தெரிவித்திருக்கிறேன். கன்ஸ்யூமர்கள் கோணத்திலிருந்து இதை நான் வரவேற்கிறேன். இதன் மூலம் இந்திய சில்லறை வர்த்தகத்தின் தரமும் உயர்ந்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தைச்சந்திக்கும் என்பது சோவின் பதில்.

உபயோகிப்பவர்கள் தான் மனிதர்கள். பிழைப்புக்காக சிறுசிறு வியாபாரங்களை நடத்துபவர்கள் இவரின் பார்வையில் மனிதர்களே யல்லர்! அப்படித்தானே?

இந்தியாவில் ஒரு நாள் வருவாய் 20 ரூபாய் மட்டுமே பெற்றிருப்பவர்கள் 70 சதவிகிதத்திற்கு மேல் உள்ளனர் என்று ஒரு பக்கத்தில் சொல்லப் படுகிறது. வேலையில்லாத் திண் டாட்டம் என்பது பெரும் பிரச் சினையாக உள்ளது. அரசு வேலை வாய்ப்பு என்பது ஒரு சதவிகிதம்தான். இந்த நிலையில் சிறுசிறு கடைகளை வைத்து வியாபாரம் செய்து பிழைப்பு நடத்துபவர்களின் வயிற்றில் மண்ணை வாரிப்போடுவது பற்றி பார்ப்பனர் களுக்கு என்ன கவலை காகத்தையும் படைத்து, கல்மனப் பார்ப்பானையும் ஏன் படைத்தாய் என்ற புரட்சிக் கவிஞரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

கேள்வி: பெண்களைப் பற்றிய உங்கள் கருத்தில், எழுத்தில் எனக்கு ஆட்சேபணை கிடையாது. அது 80 சதவிகிதம் சரியானதே! சந்தோஷமா?

பதில்: சந்தோஷம் இல்லை, 80 சதவிகிதம் தானே ஏற்கிறீர்கள்! அதில் முழுமையில்லை. இருபது குறைகிறதே? சந்தோஷம் என்பதில் சந் போய் தோஷம் தான் மிஞ்சுகிறது.

இப்படி ஒரு பதில். நூற்றுக்கு நூறு பெண்கள் திருவாளர் சோ ராமசாமி கண்ணோட்டத்தில் மோசம், உதவாக்கறைகள், அப்படித்தானே?

நூற்றுக்கு நூறு என்றால் தன் வீட்டு மனைவி, மகள்கள் உட்பட அப்படித்தான் என்று கருதுகிறார். என்று முடிவு செய்யலாம் விதிவிலக்காக ஒருக்கால் செல்வி ஜெயலலிதா அவர்களை ஏற்றுக் கொள்கிறாரோ என்னவோ!

(கேள்வி -_ பதில்கள் இடம் பெற்ற துக்ளக் 8-.8.-2012)

தமிழ் ஓவியா said...

மதப் பிரச்சாரமா?



கிறிஸ்தவ மத பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கரை கண்டித்து, திருப்பூர் புஷ்பா ஜங்ஷனில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அய்.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் திருப்பூரில் நடைபெற்ற கிறிஸ்தவர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த இடத்தில் இந்து முன்னணியினர் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய தகவலை, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பா. இரகுநாத் தெரிவித் துள்ளார்.

அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் மதத் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பது சட்டப்படி தவறுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மைக் கொள்கைக்கு எதிரானதுதான்; அதே நேரத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் வெளிப்படையாக மத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது. அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடுவது தேர்வாணையக் குழுவின் தலைவராக இருக்கக் கூடிய ஒருவர் இந்து ஆன்மீகக் கணக்காட்சி நடத்தும் குழுவுக்குத் தலைமை வகித்து நடத்துவதையும் கவனத்தில் கொள்ள வேண்டாமா? இந்து முன்னணிக்கு இவையெல்லாம் கண்ணுக்கு தெரியாதா?

எந்தமதச் சடங்குகளில் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டாலும் அவற்றை திராவிடர் கழக கடுமையாக எதிர்க்கிறது -_ கண்டிக்கிறது.

தமிழ் ஓவியா said...

நமது தவறுக்குக் கடவுள் எப்படி பொறுப்பாவார்?

ஒரு ஆஸ்ரமத்தில், வேதாந்த பாடம் நடத்திக் கொண்டிருந்த குரு, உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் கடவுளின் அம்சம், என்று போதித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பசு தோட்டத்தில் உள்ள பயிர்களைத் தின்று கொண்டிருந்தது. சிஷ்யர்களின் கவனம் பசுவின் மீது செல்லத் தொடங்கியது.

ஆத்திரமடைந்த குரு, பசுவை தடியால் பலமாக அடித்தார். அந்த இடத்திலேயே பசு இறந்து போனது. பசுவின் உரிமையாளர் குருவிடம் வந்து நஷ்ட ஈடு கேட்டார். அதற்கு குருவோ, பசுவும் பிரம்மம். நானும் பிரம்மம். உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் பிரம்மம் (கடவுள் அம்சம்). பிரம்மத்தைப் பிரம்மம் அடித்தது. பிரம்மம் பிரம்மத்திடம் சென்றுவிட்டது. அவ்வளவுதான். என்று பதில் அளித்தார்.

பதிலைக் கேட்ட பசுவின் உரிமையாளர் செய்வதறியாமல், வழியில் சென்ற துறவி ஒருவரை அழைத்து குருவிடம் நியாயம் கேட்கும்படி வேண்டினார்.

துறவி குருவிடம், இங்கே பாடம் நடத்துவது யார்? என்றார்.

நான்தான் என்றார் குரு.

இந்த தோட்டம், ஆஸ்ரமம் இவற்றை எல்லாம் பராமரிப்பவர் யார்?

அதற்கும், நான் தான் என்றார் குரு.

சந்நியாசி குருவிடம், இதற்கெல்லாம் பதில் நான் என்றால் பசுவைக் கொன்றதும் தாங்கள் தானே! என்றார்.

தவறை உணர்ந்த குரு, பசுவின் உரிமையாளருக்கு நஷ்டஈடு தர ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டார்.

ஒருவர், தான் செய்த தவறை, கடவுள் தான் செய்ய வைத்தார் என்று சொல்லி காரணம் கற்பிக்கக் கூடாது, புரிகிறதா!

- தினமலர் - ஆன்மிக மலர்

மிகச் சாமர்த்தியமாகப் பதில் சொல்லி விட்டதாக நினைப்போ! பசுவின் உரிமையாளரிடம் அந்தக் குரு ஆரம்பத்தில் சொன்னாரே, அதையே திருப்பிச் சொல்லி விட வேண்டியது தானே! நான் என்றால் வேறு யாருமல்ல - நான் என்பது பிர்மம்தான். பிர்மம் பிர்மத்தை அடித்து விட்டது என்று கறாராகக் கூறிட வேண்டி யதுதானே! மேலும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்று ஒரே வரியில் சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே! அவன் அடிக்கச் சொன்னான் - நான் அடித்தேன் என் றால் கதை முடிந்தது! ஏமாற்று வேலையும், தந்திரமான பேச்சும், குழப்பமான வார்த்தைகளும் அடங்கியதுதான் அர்த்தமுள்ள(?) இந்துமதம்!
18-8-2012

தமிழ் ஓவியா said...

இராமாயணம் ஒரு கட்டுக்கதை!

சம்பூகன் வதம் ஆரிய திராவிட போராட்டம்! இராமாயணம் ஒரு கட்டுக்கதை' என்று தந்தை பெரியார் அவர்கள் பல ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிவித்துள்ளார்.

இராமாயணம் என்ற நெடுங்கதையே (இதிகாசம்) பலகாலமாக சிறுகதை களாக கூறப்பட்டு; பல பகுதிகளில் பலவாறாக விரிவாக்கம் செய்யப்பட்டு தொகுக்கப்பட்ட கதை நூலேயாகும். இராமாயணங்களுக்கான மூலக்கரு இருக் வேதத்திலிருந்து எடுக்கப்பட் டுள்ளது என்று தெரிகிறது. ''இருக் வேதத்தில் (இருக் வேதம் -457) சீதையென்னும் பெண் வயல் நிலங் களுக்கு தெய்வமாகவும் உழவு காலமாகவும் சொல்லப்படுகிறாள்; மழைக் கடவுளாகச் சொல்லப்படும் இந்திரன் சீதையின் கணவனாக அங்கே சொல்லப் படுகிறான்.வால்மீகி இராமாயணத்தில் உழவுச் சாலின் முனையில் நிலத்திலிருந்து சீதை பிறந்தாள் என்றும், முடிவில் நிலத்தில் புகுந்து மறைந்தாள் என்றும் சொல்லப்படுகிறது.

(சீதை என்றாலே ஏர் கலப்பை என்று தான் பொருள்).

'ராம்' என்ற சொல் இந்திரனுக்குரிய ஒரு பெயராகவே இருக் வேதத்தில் (இருக் வேதம்- 110, 151, 152) பல இடங் களில் காணப் படுகிறது.''

(கேம்பிரிட்ஜ் இந்திய வரலாறு -தொகுப்பு 1 -பக்கம் 223- ஆக்ஸ்ஃபோர்டு- இந்திய வரலாறு-பக்கம் 118). ["விடுதலை'' அசுரன் மலர் 2006, பக்கம்- 16] ''உலக அனுபவத்தை வைத்து ஆராய்ந்து யோசித்தால், வால்மீகி ரிஷியானவர் இராமாயணத்தை பாடியதற்கு முன்னமேயே, அதாவது புராதன காலந்தொட்டே சீதா ராமசரித்திரம் மக்களிடை எழுத்து வடிவம் பெறாமலே பல நூற் றாண்டுகள் வாய்வழிக் கதையாக வழங்கி வந்திருப்பதாகத் தோன்றுகிறது.

கர்ண பரம்பரையாக முன்னமேயே இருந்த ராம சரிதத்தை எடுத்துக் கொண்டு, அதற்கு வால்மீகி பகவான் நூல் வடிவம் கொடுத்தார்போல் தோன்றுகிறது. அதனாலேயே கதையில் பல சிக்கல்கள் ஏற்பட்டதென்றும் ஊகிக்கலாம்'' என்று இராஜாஜி கூறு கிறார். [இராமாயணம்-வால்மீகியும் கம்பரும், பக்கம் -15]

புத்த மதத்தினரின் ஜாதகக் கதை களில் (போதிசத்துவரின் கதைகள்) வரும் இராமாயணம் தான் முதல் முதலாக வழங்கப்பட்ட இராமாயணம் என்று தெரியவருகிறது. தந்தை பெரியார் அவர்கள் கூறு வது போல், வால்மீகி இராமாயணத்தில் புத்தரைப் பற்றி வருவதால் புத்தர் காலத்திற்கு பின் (2500 ஆண்டு களுக்குள்) தான் வால்மீகி இராமா யணம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

வால்மீகி இராமாயணம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். சுமார் 50க்கும் மேற்பட்ட இராமா யணக் கதைகள் நாட்டில் உலவி வருகின்றன. காளிதாசரின் இரகு வம்சம் என்கிற காவியத்திலும் இராமாயணக் கதை வருகிறது;

அதிலும் சம்பூகன் வதம் பற்றி வருகிறது. அதில் சம்பூகன் என்கிற சூத்திரன், நான்காம் வருணத்தவன், தலைகீழாக மரத்தில் தொங்கிக் கொண்டு இராம ராஜ்ஜி யத்தில் தவமிருப்பதால் வருணதர்மம் கெட்டு, பார்ப்பன சிறுவன் இறந்து விட்டதாகவும்; இதை கேட்ட இராமன் புஷ்பக விமானத்தில் சென்று, சம்பூ கனை வாளால் வெட்டிக் (தலையை சீவி) கொன்று வருணதர்மத்தை காத் தான் (16வது சருக்கம்) என்று உள்ளது.

இராமாயணம் கட்டுக்கதை என் றாலும், பார்ப்பனர்கள் புராணங்களை யும், வேதங்களையும், சாஸ்திரங்களையும் தனக்கு சாதகமாக அமைத்துக் கொண்டு தான் வாழவும், மற்றவர்களை அழிக்கவும், தாழ்த்தவும், இழிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர்; இதனால் எழுந்தது தான் ஆரிய திராவிட போராட்டம்.

தகவல்: செ.ரெ. பார்த்தசாரதி, சென்னை
18-8-2012

தமிழ் ஓவியா said...

சிந்தனை துளிகள்

சந்தேகம் விவேகத்தின் தொடக்கம், முடிவல்ல.
ஒரு வினாடி நாம் செய்யும் தவறு வாழ்க்கை முழுவதும், வேதனைகளை தேடித் தருகிறது.
துருப்பிடித்து தேய்வதைவிட உழைத்துத் தேய்வது மேலாகும்.
கருணையும், இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்றழைக்க முடியாது.
சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன.
பலவீனருடைய பாதையில் தடையாயிருக்கும் கல், பலமுள்ளவர்களின் பாதையில் படிக்கல்லாய் இருக்கும்.

தமிழ் ஓவியா said...

வெப்பமானி எப்போது முதலில் உருவாக்கப்பட்டது..?



செயலுக்குரிய வெப்பமானி உடலின் வெப்பத்தை அளக்க பதினாறாவது நூற்றாண்டு முடியுமுன் இத்தாலிய வான்கணிப்பாளர் (astronomet) கலிலியோவால் (Galileo) முதன் முதலாக உருவாக்கப் பெற்றது.

அது முதல் வளி வெப்பமானியாய் (air thermometer) சூட்டையும் தணிப்பையும் (heat & cold) குத்து மதிப்பாக அடையாளம் காட்டிற்று. பின்பு வளிக்குப் பதிலாகச் சாராய வகையைப் பயன்படுத்தி அவர் அதனுடைய கணிப்புத் திறனை மிகுதிப்படுத்தினார்.

பெரும்பாலான வெப்பமானிகள் வேலை செய்வதற்கான கோட்பாடு என்னவெனில், ஒழுகு பொருள் அல்லது வளி பயன்படுத்தப்பட்டு வெப்பநிலை மாற்றங்கட்கேற்ப அதன் கொள்கலனாகிய கண்ணாடியை விட விரைவாக விரிவடைந்து அல்லது குறைந்து நின்று அளந்துகாட்டித் தெரியப்படுத்துவதாம். எனவே வண்ண ஒழுகுபொருள் குறுகலான இலேசான கண்ணாடிக் குழாய்க்குள் அமைந்து, விரிவின் வேறுபாட்டை ஒழுகுபொருள் படிப்படியான எண்ணிட்ட அளவுகோலில் எங்கு நிற்கிறது என அறிவித்து வெப்ப அளவைத் தெரிவிக்கும்.

ஏறத்தாழ 1714இல் ஜெர்மானிய அறிவியலார் கேபிரியல் டேனியல் பேரன்ஹீட் (Gabriel Daniel Fahrenheat) ஒரு வெப்பமானியை வடிவமைத்து முதன்முதலாகப் பாதரசத்தை (mercury) அளக்கும் இயக்கியாகப் பயன்படுத்தினார். அத்துடன் தன் பெயரால் அழைக்கப்பட்ட 32 டிகிரியை தண்ணீர் உறைநிலை அளவாகவும் 212 டிகிரியை கொதிநிலை அளவாகவும் கொண்ட அளவுகோலை அறிமுகப்படுத்தினார். பாதரசம் பெரும்பாலான வெப்பமானிகளில் இன்றும் பயன்படுத்தப் படுகிறது. ஏன் எனில் பாதரசத்தின் கொதிநிலை 674 டிகிரி ஆகவும் கீழ் உறைநிலை -83 டிகிரி ஆகவும் இருப்பதாலேயே ஆகும்.

சாராய வகை வெப்பமானி இன்றும் சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏறத்தாழ 1731 ஆம் ஆண்டில் ரேனேடே(rene de Reaumur) என்ற பிரெஞ்சு இயற்கையறிவு நிபுணரால் இது கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும். அதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்வீடிஷ் வான் கணிப்பாளர் அண்டர்ஸ் செலிசியஸ்(Anders Celsius) என்பவர் நூற்றியல் அளவைக் கொண்ட நூற்றியல் வெப்பமானியை முதலாவதாகப் பயன்படுத்தினார் உறை நிலை அளவு 0 டிகிரி ஆகவும் கொதிநிலை 100 டிகிரி ஆகவும் இதில் அளவுகள் அமைந்துள்ளன. 18-8-2012

தமிழ் ஓவியா said...

முதலில் படியுங்கள்!

திராவிடர் இயக்கத்தின் சாதனைகள் என்பவை அடிப்படையானவை - மேலோட்டமாக அதனைப் பார்க்கக் கூடாது. எடுத்துக் காட்டாக கல்லூரிப் படிப்பைப் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றால் சென்னைக்குத் தான் வரவேண்டும் என்ற நிலை.

சென்னைக்கு வந்தால் எங்கே தங்கிப் படிப்பது. விடுதிகள் எல்லாம் பார்ப்பனர்களிடத்தில். பார்ப்பனரல்லாதார் அங்குத் தங்கி உணவருந்த முடியாது. வேண்டுமென்றால் எடுப்புச் சாப்பாடு வாங்கிக் கொள்ளலாம். இந்த நிலையில்தான் டாக்டர் சி. நடேசனார் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக திராவிட சங்க விடுதி (னுசயஎனையை ஹளளடிஉயைவடி ழடிளவநட) என்ற பெயரில் விடுதியைத் தொடங்கினார். (1916)

இன்றைக்கு அதன் அருமையை உணர முடியாமல் இருக்கலாம். அந்தக் கால கட்டத்தில் பாலை வனத்தில் ஒரு சோலைவனம் என்றே அதனைச் சொல்ல வேண்டும். டாக்டர் நடேசனார் அன்று தோற்றுவித்த திராவிடர் சங்கம், ஆண்டுதோறும் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற பார்ப்பனர் அல்லாத மாணவர்களை அழைத்துப் பாராட்டியது.

டாக்டர் டி.எம்.நாயர், ஆர்.கே.சண்முகம் போன்றவர்கள் எல்லாம் அத்தகு கூட்டங்களில் பங்கு கொண்டு பார்ப்பனர் அல்லாத மாணவர்களைப் பாராட்டுவார்கள் - ஊக்கப்படுத்துவார்கள்.

டாக்டர் டி.எம். நாயர் ஒரு முறை மாணவர்களைப் பாராட்டியபோது கீழ்க்கண்ட உணர்ச்சி மிகு சொற்களைப் பயன்படுத்தினார்.

“Awake, Arise or Be For Ever Fallen”

விழித்துக் கொள்ளுங்கள்! எழுச்சி பெறுங்கள்!! இன்றேல் என்றும் நீவிர் வீழ்ந்து பட்டோராவீர்!!!

என்பதுதான் அந்த எழுச்சியூட்டும் வீரம் செறிந்த வரிகள்.

டாக்டர் நடேசனார் அவர்களால் உண்டாக்கப்பட்ட விடுதியில் படித்த மாணவர்கள்தாம் - பிற்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக வந்த எஸ்.ஜி.மணவாள ராமானுஜம், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார் போன்றவர்கள்.

திராவிடர் இயக்கம் என்ன செய்து சாதித்துக் கிழித்தது என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உளறும் பொறுப்பற்றவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு சமூகமும் முன்னேற வேண்டுமானாலும் அந்தச் சமூகத்திற்குக் கல்வி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதனைச் செய்து கொடுத்தது திராவிடர் இயக்கம். (சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக்கூடாது என்று பார்ப்பனர்கள் சாத்திர மயமாக்கி வைத்திருந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.)

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) இரு முறை ஆட்சிக்கு வந்த போதும் செய்த முதல் செயல் என்ன? 1937-1939 இல் 2,500 கிராமப் பள்ளிகளை மூடினார் என்றால் அதன் தன்மை என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டாமா?

ஒரு காலத்தில் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றால் மாணவர்களைத் தேர்வு செய்து சேர அனுமதிக்கும் அதிகாரம், உரிமைகள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்களுக்குத் தான் உண்டு. அந்தக் கால கட்டத்தில் பார்ப்பனர்கள்தான் பெரும்பாலான கல்லூரிகளின் முதல்வர்களாக இருந்ததால் பார்ப்பனர் அல்லாதார் கல்லூரி களுக்குள் கால் பதிக்க முடியாத நிலை இருந்தது.

இந்த ஆதிக்கக் கதவடைப்பிலிருந்து பார்ப்பனர் அல்லாத மாணவர்களை மீட்டெடுக்க கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்குக் குழுக்களை நீதிக்கட்சி ஆட்சி ஏற்படுத்தியது.

பிற்காலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ராஜாஜி அத்தகைய குழுக்களைக் கலைத்துவிட்டார்.

இப்படி பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டக் களமாகத்தான் கல்வித் தளம் அமைந்திருந்தது.

முரசொலி மாறன் அவர்களால் எழுதப்பட்ட திராவிட இயக்க வரலாற்று நூலில் ஏராளமான தகவல்கள் தாராளமாகக் கிடைக்கும்.

தமிழ்த் தேசியம் பேசுவோர் இது போன்ற நூல்களை முதலில் படிக்கட்டும்! 18-8-2012

தமிழ் ஓவியா said...

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றக்கோரி குமரி மாவட்ட கழகத்தினர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்


குமரி மாவட்ட தோழர்கள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

கன்னியாகுமரி, ஆக.18- கன்னியாகுமரி மாவட் டத்தில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் இருக்கும் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும், மத விழாக்களில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப் படும் அலங்கார வளைவு களை அனுமதிக்கக் கூடாது. அதுபோல மத விழாக்களில் வழிபாட் டுத்தலங்களுக்கு வெளியே ஒலிபெருக்கி களை அனுமதிக்கக் கூடாது ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன்,மாவட்ட அமைப்பளார் ஞா. பிரான்சிஸ், பொதுக் குழு உறுப்பினர் ம.தயா ளன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாவட்ட மாணவரணி அமைப் பாளர் இல.செந்தமிழ், மாவட்ட இளைஞரணி செயலாளர் த.சுரேஷ், மாவட்ட மகளிரணி தலைவர் ச.ச.மணிமே கலை, நாகர்கோவில் நகர இளைஞரணி தலைவர் மு.சேகர், கழக தோழர்கள் கோட்டார் ச.ச.கருணாநிதி, கராத்தே மாஸ்டர் தலக்குளம் ஆ.சிவக்குமார், பள்ளம் லார்சன் பின்றோ, மந் தாரம்புதூர் மா.ஜான் மதி, கழக ஆதரவாளர் வி.இக்னேசியஸ் ஆகி யோர் 16.8.2012 அன்று காலை 11.30 மணிக்கு நாகர்கோவிலில் இருக் கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஸ்குமாரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொடுத்த மனுவின் நகலை குமரி மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் போன்றோருக்கு நடவடிக்கைக்காக மாவட்ட செயலாளர் அனுப்பிவைத்துள்ளார். 18-8-2012

தமிழ் ஓவியா said...

பெரியாரின் இலட்சியங்கள்! - ஜி.டி.நாயுடு



பெரியார் செய்யும் பணிகள் அநேகர் எண்ணுகின்றபடி அரசியலில் ஈடுபட்டதல்ல. மக்களுக்கு பகுத்தறிவை உபயோகிக்கக் கற்றுக் கொடுக்கும் அறிவுப்பிரச்சாரம் தான். எனக்கும் எந்த அரசியல் கட்சிகளில் சேர்ந்தாலும் அதிக நன்மை செய்யக் கூடும் என்ற நம்பிக்கையில்லை. அதனாலே பெரியாரால் வகுக்கப்பட்ட அநேக கொள்கைகளை வெகுகாலமாக ஆதரித்து சில கொள்கைகளை நடைமுறையில் அவரை விட அதிவேகத்தில் கடைப்பிடித்தும் வந்திருக்கின்றேன்.

இவருடைய லட்சியங்களில் அநேகம் நம்நாட்டிற்கு அவசியம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. வயதிலும், அறிவிலும் மிகப் பெரியவர். மிக்க இளவயதுள்ள முறுக்கமான வீரனைப்போல் தைரியத்தோடு தீவிரமாகச் செல்கின்றார். இவருடைய லட்சியங்களை எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள் என்பதற்கு அறிகுறியாகவே இன்று அரசாங்கம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்தும் கூட பெரியாருக்கு எந்த எதிர்ப்பும் இன்றி அமோகமான வரவேற்போடு ஊராண்மைக் கழகம், நகராண்மைக் கழகங்கள் முதலிய பல கழகங்கள் அழைத்துக் கொண்டிருப்பதே சான்றாகும்.

(4.7.54-இல் வேலூர் நகரமன்றத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து ஜி.டி.நாயுடு அவர்கள், விடுதலை 6.7.1954)

தமிழ் ஓவியா said...

பெரியார் மாளிகைக்குத் தீ வைக்க முயற்சி!



1953-இல் தந்தை பெரியார் அவர்கள் பிள்ளையார் (உருவச்சிலை) உடைப்புப் போராட்டத்தினை நடத்திய நேரத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்தும், அதன்வழி இயக்கத்தவர் பெற வேண்டிய பாடம் குறித்தும் 30.5.1953 விடுதலையில் முக்கிய அறிக்கையாக தலையங்கத்தில் அய்யா அவர்கள் எழுதியுள்ளதாவது:

... நான் 28ஆம் தேதி (28.5.1953) பிற்பகல் திருச்சிக்கு 55 மைல் தூரமுள்ள பாபநாசத்தை அடுத்த கோவில் தேவராயம்பேட்டைக்கு கழகக் கிளை திறப்பு விழாவிற்குச் சென்றுவிட்டு, அன்று இரவு சுமார் 10.30 மணிக்கு திருச்சிக்கு - என் ஜாகைக்கு வரும்போது கழகக் காம்பவுண்டிற்குள் சுமார் 1000பேர்கள் வரை தடிகள், கத்திகளுடன் இருந்து உற்சாகமாக ஆத்திரப் பேச்சுகள் பேசிக் கொண்டிருந்தனர். நான் குழப்பத்துடன் வண்டியை நிறுத்தினேன். ஆனால் - பெரியார் வாழ்க என்ற ஆரவாரத்திற்கிடையே என்னை வரவேற்றனர். என்ன விஷயம் என்று கேட்டேன்.

ஒரு வாலிபனை இழுத்துக் காட்டி, அவனிடமிருந்த நெருப்புப் பற்றவைக்கத் தக்க ஒரு நெருப்புப் பந்தத்தைக் காட்டினார்கள். விஷயம் என்னவென்றால் - என் மாளிகையை கொளுத்த ஒரு கூட்டம் திட்டமிட்டு வந்ததாகவும், அந்தச் செய்தி நம் மக்களுக்கு எட்டி, ஊர் திரண்டு வந்ததாகவும், அப்போது சிலர் ஓடிவிட்டதாகவும், இந்த வாலிபனை ஓடிப்பிடித்ததாகவும் சொல்லியவுடன், போலீசாருக்குத் தகவல் தெரியப்படுத்தியிருப்பதாகவும் சொன்னார்கள். இது ஒரு பார்ப்பன மிராசுதார் ஏற்பாடு என்றும், சில பார்ப்பன வக்கீல்களின் மூளை வேலையென்றும் கூறி என்னை, உடனே மாடியில் படுத்துக் கொள்ளும்படி தட்டிக் கொடுத்து அனுப்பி விட்டனர்.

பின்னர் போலீஸ் வந்தவுடன், அவர்களை வைத்து எதிரிகள் ஓடிய வழியை, எதிர் காம்பவுண்டுக்குள் போய் பார்த்தனர். எதிர் காம்பவுண்டு சுவரின் உட்புறம் மற்றும் 2, 3 பந்தங்களும் ஒரு பாட்டில் பெட்ரோலும் இருக்கக் கண்டு எடுத்தார்கள். போலீசார் அந்த வாலிபரை அழைத்துக் கொண்டு, இவைகளையும் எடுத்துப் போய் விட்டனர்.

தமிழ் ஓவியா said...

எது தம்பி வேண்டும்?



(ஒரு தோழர், இந்தக் கொள்கை சிறந்ததா, அந்தக் கொள்கை சிறந்ததா? எந்தக் கட்சி உயர்ந்தது? என்று பலப்பல பிரச்சினைகளைப் பற்றிய விளக்கம் விசாரிக்கும் முறையில் புரட்சிக்கவி பாரதிதாசனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
கவிஞர், அக் கடிதத்தை கண்டார். தம்பி, ஏதேதோ பிரச்சினைகளை எண்ணித் தவிப்பதையும் தடுத்து, எது முக்கியமான பிரச்சினை என்பதையும் விளக்கி, அதன் மூலமாகவே தமது கருத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்து, ஒரு கவிதைக் கடிதம் தீட்டி அனுப்பினார். அது இது.)
கொல்லையிலே ஒரு சிட்டு - நல்ல கூட்டினிலே ஒரு கிள்ளை
சொல்லும் இவற்றினில் யாது - ஒரு துன்பம் இல்லாதது கூறு.
முல்லையிலே ஒரு வண்டு - பணமூட்டையின் மேல் ஒரு செல்வன்
இல்லை என்னாத நல்வாழ்வை நீ - இந்த இரண்டினில் விளக்கு
கோயில் பார்ப்பனர் வேதம் - குப்பை கூட்டிடுவாள் தமிழ்ப்பேச்சு
தூயதுயாது சொல் தம்பி - அன்றித் தொல்லை விளைப்பது யாது?
வாயிலிலே கொஞ்சும் ஏழை - சிலைவார்க்குந் திருப்பணியாளன்
ஈய நினைத்திடும்காசை - நீ யாருக்குநல்குவாய் தம்பி.
ஊருக்கு உழைத்திடக் கேட்டார் - உனை யோகம்புரிந்திடச் சொன்னார்
யாருக்கு உடன்பட எண்ணம்நீ - உரை இந்தப்பேர் வையகத்துக்கே.
கார்விதைக்கும் தொழிலாளன் - நேர் கைலையை வேண்டிடும் சைவன்
யாரப்பனே நலம் செய்வோன் - உரை இந்தப்பேர் வையகத்துக்கே.
கற்சிலை செய்தகற்றச்சன் - இருகைதொழும் கோயிலின் வேலன்
நற்கலை ஈபவன் யாவன் - நீ நன்கு விளக்கிடு தம்பி.
முற்றும் இசைத் தொழிலாளி - வாய்மூடி அருள்செய்யும் கண்ணன்
நற்சுவை தந்தவன் யாவன் - நீ நன்றி செலுத்துதல் யார்க்கு?
கடவுள் அணிந்திட்ட மாலை - பூங்காவிற் சிரிக்கின்ற முல்லை
உனதுபட்ட நெஞ்சத்தில் தம்பி - நல்ல உயிர்கொண்டு சேர்ப்பது யாது?
படைகொண்ட மன்னவன் செங்கோல் - சிறுபண்ணையில் பொதுத்தன்மை எடைபோட்டு நீ கூறுவாயோ - இங்கு எது நன்மை எது தீமை, தம்பி.
நெய்தான் பிழையான் புதுநூல் - பிறர் நூல்கண்டு செய்திட்ட பெருநூல்
வையத்தில் எது தம்பி வேண்டும் - நீ வாய்விட்டு விள்ளுவாய் தம்பி.
உய்யும் புரோகிதத் தந்தை - அவன், உத்யோகம் பார்க்கும் மைந்தன்
செய்யும் திருத்தொண்டு இரண்டில் - தம்பி, செம்மையாம் ஒன்றினைக் கூறு
நைகின்ற பெண்டாட்டி பிள்ளை - தெருநடுவிலே தள்ளாடும் கிழவன்
அய்யோ எனச் சொன்னபோது - நீ யாருக்கு முன் உதவவேண்டும்?
திராவிட நாடு - 14.4.1946, பக்கம்-1

தமிழ் ஓவியா said...

எது தம்பி வேண்டும்?



(ஒரு தோழர், இந்தக் கொள்கை சிறந்ததா, அந்தக் கொள்கை சிறந்ததா? எந்தக் கட்சி உயர்ந்தது? என்று பலப்பல பிரச்சினைகளைப் பற்றிய விளக்கம் விசாரிக்கும் முறையில் புரட்சிக்கவி பாரதிதாசனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
கவிஞர், அக் கடிதத்தை கண்டார். தம்பி, ஏதேதோ பிரச்சினைகளை எண்ணித் தவிப்பதையும் தடுத்து, எது முக்கியமான பிரச்சினை என்பதையும் விளக்கி, அதன் மூலமாகவே தமது கருத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்து, ஒரு கவிதைக் கடிதம் தீட்டி அனுப்பினார். அது இது.)
கொல்லையிலே ஒரு சிட்டு - நல்ல கூட்டினிலே ஒரு கிள்ளை
சொல்லும் இவற்றினில் யாது - ஒரு துன்பம் இல்லாதது கூறு.
முல்லையிலே ஒரு வண்டு - பணமூட்டையின் மேல் ஒரு செல்வன்
இல்லை என்னாத நல்வாழ்வை நீ - இந்த இரண்டினில் விளக்கு
கோயில் பார்ப்பனர் வேதம் - குப்பை கூட்டிடுவாள் தமிழ்ப்பேச்சு
தூயதுயாது சொல் தம்பி - அன்றித் தொல்லை விளைப்பது யாது?
வாயிலிலே கொஞ்சும் ஏழை - சிலைவார்க்குந் திருப்பணியாளன்
ஈய நினைத்திடும்காசை - நீ யாருக்குநல்குவாய் தம்பி.
ஊருக்கு உழைத்திடக் கேட்டார் - உனை யோகம்புரிந்திடச் சொன்னார்
யாருக்கு உடன்பட எண்ணம்நீ - உரை இந்தப்பேர் வையகத்துக்கே.
கார்விதைக்கும் தொழிலாளன் - நேர் கைலையை வேண்டிடும் சைவன்
யாரப்பனே நலம் செய்வோன் - உரை இந்தப்பேர் வையகத்துக்கே.
கற்சிலை செய்தகற்றச்சன் - இருகைதொழும் கோயிலின் வேலன்
நற்கலை ஈபவன் யாவன் - நீ நன்கு விளக்கிடு தம்பி.
முற்றும் இசைத் தொழிலாளி - வாய்மூடி அருள்செய்யும் கண்ணன்
நற்சுவை தந்தவன் யாவன் - நீ நன்றி செலுத்துதல் யார்க்கு?
கடவுள் அணிந்திட்ட மாலை - பூங்காவிற் சிரிக்கின்ற முல்லை
உனதுபட்ட நெஞ்சத்தில் தம்பி - நல்ல உயிர்கொண்டு சேர்ப்பது யாது?
படைகொண்ட மன்னவன் செங்கோல் - சிறுபண்ணையில் பொதுத்தன்மை எடைபோட்டு நீ கூறுவாயோ - இங்கு எது நன்மை எது தீமை, தம்பி.
நெய்தான் பிழையான் புதுநூல் - பிறர் நூல்கண்டு செய்திட்ட பெருநூல்
வையத்தில் எது தம்பி வேண்டும் - நீ வாய்விட்டு விள்ளுவாய் தம்பி.
உய்யும் புரோகிதத் தந்தை - அவன், உத்யோகம் பார்க்கும் மைந்தன்
செய்யும் திருத்தொண்டு இரண்டில் - தம்பி, செம்மையாம் ஒன்றினைக் கூறு
நைகின்ற பெண்டாட்டி பிள்ளை - தெருநடுவிலே தள்ளாடும் கிழவன்
அய்யோ எனச் சொன்னபோது - நீ யாருக்கு முன் உதவவேண்டும்?
திராவிட நாடு - 14.4.1946, பக்கம்-1

தமிழ் ஓவியா said...

சாதி ஒழிப்புக்கு அய்யாவின் திட்டங்கள்
எழுத்துரு அளவு

1. சாதியைக் குறிக்கும் பெயர்களை (முதலியார், பிள்ளை, கவுண்டர்) சட்டத்தின் மூலம் தடை செய்ய வேண்டும்.
2. புதிதாகத் திருமணம் புரிந்துகொள் வோர் கலப்புமணம் செய்யுமாறு சட்டமியற்ற வேண்டும்.
3. ஒரே சாதியில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அரசாங்க உதவிகள் தரக்கூடாது.
4. சாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி போன்ற சின்னங்களைச் சட்டவடிவத்துடன் தடுக்க வேண்டும்.
5. உயர்ந்த பதவிகளை, காவல்துறைப் பதவிகளைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தரவேண்டும்.
6. தாழ்த்தப்பட்டவர்களை அக்கிரகாரத் தில் குடியிருக்க செய்ய வேண்டும்.
7. தீண்டாமையைப் பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும்.
8. தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி இருப்பதை ஒழிக்க வேண்டும்.
தந்தை பெரியார் (விடுதலை 10.1.1947