Search This Blog

4.8.12

டெசோ வீரன் வருகிறான் பராக்!பராக்!!டெசோ வீரன் வருகிறான் பராக்!பராக்!!

வரும் 12ஆம் தேதி சென்னையில் டெசோ மாநாடு! இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்ல; உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

சிங்கள இனவாத அரசு நடத்திய இனப்படுகொலைக்குப் பிறகும் எஞ்சி வாழும் தமிழர்களின் வாழ்வுரிமை என்பது கேள்விக்குறி என்ற நிலைதான் இன்றுவரை.


நம்முடைய இலட்சிய நோக்கு தனியீழம்தான் என்றாலும், அது கிட்டும்வரை நம் மக்களுக்கு வாழ்வுரிமையும், அடிப்படைத் தேவைகளும் கிட்டுகின்ற வகையிலே பல முயற்சிகளை மேற்கொண்டுதான் தீர வேண்டும் - அதற்கான அழுத்தங் களைக் கொடுத்தே தீர வேண்டும்.

தனியீழம்பற்றித் தான் பேச வேண்டும்; அதற்காக மட்டுமே போராட வேண்டும் குரல் கொடுக்க வேண்டும்; மற்றபடி அம்மக்களை அன்றாடம் பாதிக்கும் பிரச்சினை களைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவது  ஒரு வகையான சிறுபிள்ளைத்தனமே!


இந்த உண்மையை உணர்ந்த நிலையில்தான் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெரும் மக்களும் டெசோ மாநாட்டில் பங்கேற்க வருகின்றனர்.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் (2.8.2012 அன்று) விடுத்துள்ள வேண்டுகோள் விவேக மானது -_ தேவை யானது.

டெசோ அமைப்பின் சார்பில் நடத்தப்படும் மாநாட்டுக்கு ஒத்துழைப் புக் கொடுக்கும் மனம் இருந்தால் கொடுக் கட்டும்; கொடுக்க மனம் இல்லையென்றால் அவரவர்கள் வழியில் அவரவர்கள் தாராள மாகப் போராடலாம் _ குரல் கொடுக்கலாம் _ பயணிக்கலாம் அதில் நாம் யாரும் குறுக்கே படுக்கப் போவதில்லை.

நாளை மறுநாளே தனியீழத்தைப் பறித்துத் தரக் கூடிய பெரும் வல்ல மையும், பேராற்றலும் இருக்குமானால், தாராளமாகவே அதனைச் சாதித்துக் காட்டி இப்பிரச்சினையில் முதல் பரிசைத் தட்டிச் செல்லட்டும் - _  யார்  வேண்டாம் என்று கூறியது?

எதிரி யார்? நண்பன் யார்? என்று அடையாளம் காண்பதிலேயே தடுமாற்றம் இருந்தால் துப்பாக்கிக் குண்டுகள் தவறான மார்புகளில்தான் பாயும் என்பது பாலபாடமாகும்.

ஆகஸ்டு 12இல் நடைபெற விருக்கும் மாநாடு குறித்து நம் இனப் பகைவர்கள் எப்படியெல்லாம் எழுதுகிறார்கள்? துக்ளக் தினமலர் வகையறாக்கள்! கண்ணோட்டத்தில் இம்மாநாடு பற்றி கணிப்பு என்ன என்பதைத் தெரிந்த பிறகாவது வார்த்தைகளைக் கொட்டுவதில் கொஞ்சம் அடக்கம் இருக்க வேண்டாமா?

யார் சொன்னாலும், சொல்லா விட்டாலும், யார் ஏற்றாலும், ஏற்கா விட்டாலும், இனப்படுகொலை நடந்து முடிந்த நிலையில், உலகளவில் ஈழ  பிரச்சினை தொடர்பாக நடத்தப்படும் மிகப் பெரிய எழுச்சியூட்டும் நிகழ்ச்சி நடக்க இருக்கும் டெசோ மாநாடே!

இலங்கையின் சிங்கள அரசு உன் னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கும். உலக நாடுகள் கூர்மையாகக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கும். அய்.நா. மன்றம் உட்பட இம்மாநாட்டின் முக்கியத்துவத்தை உணராமல் போகாது.

முள்வேலிகளுக்குள் முடங்கிக் கிடக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த வீடுகளையும், நில புலன்களையும் பறி கொடுத்துக் கைப்பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள் இந்த மாநாட்டின் மூலம் ஒரு விடிவு பிறக்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டுதான் இருப் பார்கள்.

தெரிய வேண்டியவர்களுக்குத் தெரியும், புரிய வேண்டியவர்களுக்கும் புரிகிறது. ஆனால் இதில் நல்லெண் ணத்தைக் காட்ட கடப்பாடு உடைய சில தலைவர்களுக்கும் சில அமைப்புகளுக்கும் மட்டுமேதான் தடுமாற்றம்!

ஈழப் பிரச்சினை என்பது எங்க ளுக்கே உரித்தானது -_ இதனை யாரும் கையில் எடுக்க உரிமை இல்லை என்று ஏகபோகம் கொண் டாடுவோர்க்குத்தான் மூக்கின்மேல் கோபம் எகிறிக் குதிக்கிறது.

பிரச்சினையின் மீது கவலை உள்ளவர்கள் யாரும் இந்த நிலைக்கு ஆளாக மாட்டார்கள்.

ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு கால கட்டத்தில் சில அணுகுமுறை களை நிலைப்பாடுகளை எடுத்தவை தான் _ இல்லை என்று மறுக்க முடியுமா!


இதே வைகோ அவர்களேகூட எனக்கும் விடுதலைபுலிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை; ஆனால் அதே நேரத்தில் தனியீழத் துக்கு ஆதரவு அளிக்கிறேன் (தினமணி 14.10.1993 பக்கம் _ 1) என்று சொல்லவில்லையா?

1996 தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்காக அக்கட்சி வைத்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈழத் தமிழர் பிரச்சினையை முன் வைக்க மாட்டோம் என்று மதிமுக கட்டுப்பட்டுப் போகவில்லையா?

தேர்தலில் சில இடங்களைப் பெறுவதற்காக, தமது இலட்சியம் என்று பறைசாற்றிக் கொண்டிருந்த முக்கிய பிரச்சினையையே கைவிடத் தயாராக இருந்தவர்கள் எல்லாம் டெசோ மாநாட்டை நடத்த இவர்களுக்குத் தகுதி உண்டா என்று கேட்கலாமா?

ஈழத் தமிழர்பற்றி பேசியதற்காக பொடா சட்டத்தில் சிறைக் கொட்டடி யில் பூட்டிய செல்வி ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் கூறிய சந்தர்ப்ப வாத வெற்று வார்த்தைகளை நம்பத் தயாராக இருக்கக் கூடியவர்கள் -_ டெசோ மாநாடுபற்றி விமர்சனம்  செய்வதை நினைத்தால் ஒரு வகை யில் வேதனை என்றாலும் இன்னொரு பக்கத்தில் விலா நோகச் சிரிப்பைத் தான் ஏற்படுத்துகிறது.

போரை நிறுத்த வேண்டும் என்ப தன் மூலம் கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற் கான முயற்சியில் தற்போது ஈடுபட் டிருக்கிறார் - இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல (அ.இ.அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேடான dr. நமது எம்.ஜி.ஆர். 16.10.2008) என்று எதிர்க் கட்சித் தலைவராக இருந்த செல்வி ஜெயலலிதா கூறவில்லையா?

இந்தக் கூற்றுக்குப் பதவுரை, பொழிப்புரை கூற வேண்டுமா?


போரை நிறுத்தச் சொல்லுவது ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக அல்லவாம்! அப்படியென்றால் போரை நடத்தச் சொல்லுவது ஈழத் தமிழர் களை காப்பாற்றுவதற்காகவா? பதில் சொல்லட்டும் பாஷ்ய கர்த்தாக்கள்.

விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறார் துணை போகிறார் என்று காரணம் காட்டி தமிழர் தேசிய இயக்கத்தையே தடை செய்த ஒருவரை ஏற்றுக் கொள்ள முடிகிறது; ஈழத் தமிழர் பிரச்சினைக்காக இரண்டு முறை ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆளான கலை ஞரை -_ ஏற்றுக் கொள்ள வேண்டாம் _ குறைந்தபட்சம் கண்டனம் செய்யாமலாவது இருக்கக் கூடாதா?

இதில்கூட மனுதர்மப் பார்வை தானா? இந்தப் பார்வை இதுவரை பார்ப்பனர்களிடத்தில் இருந்து வந்தது - அது பரிதாபத்திற்குரிய நம் சூத்திர மக்களுக்கு வந்தது எப்படி?

டெசோ மாநாடு நடந்து முடிந்த நிலையில் வெகு மக்களின் கண்கள் அகலமாகவே திறக்கப் போகின்றன! உலகளவில் புதிய திருப்பத்திற்கான புத்தொளி கிடைக்கத்தான் போகிறது.

நம் கவனமும், கவலையும் அவற்றை நோக்கித்தான்! விமர்சனங் கள் நம் பணியை வேகப்படுத்தும் - வெற்றியை நோக்கி விரைவு படுத்தும்.
வேலையைப் பார்ப்போம் _ வாருங்கள் தமிழினப் பெருமக்களே!

------------ மின்சாரம் அவர்கள் 4-8-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

15 comments:

தமிழ் ஓவியா said...

எது பைத்தியகாரத்தனம்?கடந்த 20.7.2012ஆம் தேதி விடுதலையில் முதல் பக்கத்தில் குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒரு பக்தர் திருப்பதி தேவஸ்தானத்திடம் கேள்வி கேட்டதாகவும் அதற்கு இது பைத்தியக் காரத்தனம் என்று கோவில் நிர்வாகி பதில் அளித்ததாகவும் கண்டுள்ளது. கேள்வி கேட்டவர் ஒரு பக்தர். எனவே அவருக்கு முறையாக மனநிறைவு ஏற்படும்படி பதில் அளிக்க வேண்டியது கோவில் நிர்வாகி/ஆன்மீகவாதி/சங்கராச்சாரி/பண்டாரங்கள் கடமை. கேள்வி புரியவில்லை என்றால் விளங்கவில்லை என்றும் எனவே விளக்கமாக கேட்கும்படி வேண்டுகோள் விட்டிருக்கலாம். அதை விடுத்து கேள்வியே பைத்தியக்காரத்தனம் என்று மழுப்பலாக பதில் அளிப்பது கோயில் நிர்வாகிக்கு அழகல்ல. எனவே கோயில் நிர்வாகி முதல் அனைத்து ஆன்மீக வாதிகளும் புரியும்படி கீழ்க்கண்ட கேள்விகளை மேற்படி பக்தர் மீண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேள்வி கேட்பாராக.

1. குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் எந்த வருடம், மாதம், தேதி கடன் வாங்கினார்?

2. எவ்வளவு கடன் வாங்கினார்?

3. கடன் வாங்கியதற்கு ஏதாவது எழுத்து மூலம் ஆதரவு (ஞிஷீநீனீஸீமீ) அதாவது கடனுறுதிச் சீட்டு உண்டா?

4. கடன் கொடுத்ததற்கும் கடன் வாங்கி யதற்கும் ஏதாவது சாட்சி உண்டா?

5. கடன் எங்கு கொடுத்தார்? பூலோ கத்திலா அல்லது குபேர புரியிலா?

6. அப்பொழுது புழக்கத்திலிருந்து நாணயத்தின் பெயர் என்ன?

7. நாணயம் எத்தகையது? அதாவது நோட்டா? தங்கம், வெள்ளி, பித்தளை அல்லது வேறு உலோகத்திலானதா?

8. குபேரன் எங்கு நாணயம் அடிக்கும் மிஷன் (விவீஸீவீஸீவீஸீரீ விணீநீலீவீஸீமீ) வைத்திருந்தார்?

9. நாணயத்தில் என்ன உருவம் பொறிக்கப்பட்டிருந்தது?

10. இன்று வரை வட்டிக்கு மட்டும் செல்வதாக சொல்வதனால் என்ன விகிதத்தில் வட்டிக்கு வாங்கினார்?

11. பல்வேறு அரசர்கள் ஆண்ட காலத்தில் பல்வேறு விதமான நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. குறிப்பாக முகம்மதிய ஆட்சிக் காலத்திலும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் அந்தந்த மத அரசர்கள் உருவம் பொறித்த நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. இந்துக் கடவுளான ஏழுமலையான் வட்டியாக செலுத்திய முகம்மதியர், ஆங்கி லேயர் கால நாணயங்களை குபேரன் பெற்றுக் கொண்டாரா? அவைகளை எங்கு மாற்றி குபேர புரிக்கு கொண்டு சென்றார்.

மேற்கண்ட கேள்விகளுக்கு சம்பந்தப் பட்டவர்கள் நியாயமாகவும், நேர்மை யாகவும் பதில் அளிப்பார்களா?

பக்தர் கேட்ட கேள்வி பைத்தியக் காரத்தனமானதல்ல. அவர் கேட்ட கேள் விகளுக்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து நியாயமானதும், நேர்மையானதுமான பதில் வரும் என்று எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனமாகும்.

- ஆர்.டி. மூர்த்தி
வழக்குரைஞர், புத்தூர், திருச்சி --_ 17
4-8-2012

தமிழ் ஓவியா said...

திராவிட மொழிகள் பேசுவோர் வாழும் இடங்கள்திராவிடக் குடும்ப மொழிகள் தென்னகத்தில் உள்ள (ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு) ஆகிய நான்கு மாநிலங்களிலும் யூனி யன் பகுதிகளாகிய லட்சத் தீவுகள், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் மட்டும் பேசப்படவில்லை. வடமாநி லங்களிலும் பேசப்படுகின்றன. சிறப்பாக குஜராத், மஹாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம், பீஹார் ஆகிய பகுதிகளில் வாழும் பழங்குடியினரும் திராவிட மொழிகளைப் பேசு கின்றார்கள். வடநாட்டிலுள்ள மாநிலங்களில் வாழும் பழங்குடியினரில் ஏறக்குறைய 65 விழுக்காட்டினர் ஏதேனும் ஒரு திராவிட மொழியைப் பேசுகின்றனர். இந்தியாவில் நான்கு பேரில் ஒருவர் திராவிட மொழி பேசுபவராவார். சில திராவிட மொழிகள் இந்தியாவிற்கு வெளியே வாழும் பழங்குடியினரா லும் பேசப்படுகின்றன. எடுத்துக்காட் டாக பிராஹி மொழி பாகிஸ்தானில் நான்கு லட்சம் பேராலும், ஆப் கானிஸ்தானத்தில் ஒரு லட்சம் பேராலும், ஈரானில் நாற்பதாயிரம் பேராலும், அன்றைய சோவியத் ரஷ் யாவின் தெற்குக் கோடியிலும் யுகோஸ்லோவேகியாவிலும் சில ஆயிரம் பேராலும் பேசப்படுகின்றன.

திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த டாங்கர் (Dangar) என்ற மொழியை நேபாளத்திலுள்ள பத்தா யிரம் பழங்குடி மக்கள் பேசுகின் றார்கள். பர்மா, மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடு களிலும் தூரக்கிழக்கு நாடுகளிலும் ஆப்பி ரிக்கா நாடுகளிலும் நடுக் கிழக்கத்திய நாடுகளிலும் திராவிட மொழி களைப் பேசுவோர் நாடு பெயர்ந்து வந்து தங்கி திராவிட மொழிகள் பேசுகின்றார்கள் என்ற எல்லோ ருக்கும் அறிமுகமான செய்தியை இங்கு நினைவுக்குக் கொண்டு வரலாம். இங்கிலாந்துக்கும் யு.எஸ். எஸ்.ஆர். கனடா ஆகிய நாடு களுக்கும், வளை குடா நாடுகளுக்கும் குடி பெயர்ந்து சென்றவர்களும் குறைந்த அளவின ரல்லர்.

திராவிடத்தின் பரந்த செல்வாக்கு

1856ஆம் ஆண்டிலேயே ராபர்ட் கால்டுவெல் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் உள்ள வரலாற்றுக் காலத்திற்கு முந்திய தொடர்புகளை எடுத்துக்காட்டி உள்ளார். செனிகால் அதிபர் செங்கோர் சென்னையில் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் ஆப்பிரிக் காவுக்கும், திராவிடத்திற்கும் இருந்திருக்கக் கூடிய தொடர்புகளை எடுத்துக் காட்டினார். ரஷ்ய கடல் ஆய்வு அறிவியலாளர் அலெக்சாண் டர் கொண்ட்ரோடோவ் ஆப்பிரிக் காவையும் ஆஸ்திரேலியாவையும் தென்னிந்தியா வுடன் ஒரு நிலப் பாலம் இணைந்திருந்ததற்கான ஆதாரத்தை எடுத்துக்காட்டினார். அதுமட்டுமின்றி, இம்மூன்று கண்டங்களிலும் இருந்த மக்கள் அவர்தம் மொழிகள் இவற்றிற் கிடையே இருந்த உறவுகளையும் எடுத்துக்காட்டினார். திராவிட மொழிகளுக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மொழிகளுக்கும் உள்ள தொடர்புகளை வி.ஆர். மகராங்கோ தெளிவு படுத்தி உள் ளார். புத்தமதம் சார்ந்த அறிஞர்கள் காஞ்சிபுரம் வழியாகச் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் சென்றமைபற்றியும் ஜப்பானிய மொழி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களை அடியொற் றியவை என்பதுபற்றியும் டாக்டர் லோகேஷ் சந்ரா குறிப்பிட்டுள்ளமை திராவிட மொழிகளின் தாக்கம் தூரக்கிழக்கு நாடுகளில் ஏற்பட்டி ருந்தமையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. மேலும் மேற்கு வங்காளம், பீஹார், ஒரிஸ்ஸா, மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரம், குஜராத் ஆகிய வட இந்திய மாநிலங்களில் பழங்குடியினரால் பேசப்படும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் குறித்து அவை நசிந்து போவதற்கு முன் முழுமையான கணக்கு எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் உலக அளவிலும் இந்திய அளவிலும் திராவிட மொழிகள் குறித்து ஆய்வு பரந்த பொருள் ஆழம் மிக்கதாக உள்ளது.

நன்றி: “International School of Dravidian Linguistics’’

தமிழில் தருபவர்: முனைவர் பு. இராசதுரை
4-8-2012

தமிழ் ஓவியா said...

டெசோவுக்கு ஒரு நற்செய்தி!

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கிறோம்!

இலங்கை இனப்படுகொலை பற்றி சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் நியூசிலாந்து நாட்டில் போர்க்குரல்!ஆக்லாந்து, ஆக. 4- சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற ஈழத் தமிழர் களின் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று நியூசிலாந்து நாட்டின் பசுமைக் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் மெடிரியா டூரி என்ற பெண்மணி கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று ஆக்லாந்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறினார். அவரது கருத்தை எதிரொலித்து மரியாதைக் குரிய பிரபல மனித உரிமை ஆர்வ லரான ஜான் மின்டோ பேசுகையில், உங்களின் சுயநிர்ணய உரிமையை தொடர்ந்து நீங்கள் வெளிப்படுத்திக் கொண்டு வருவதை நான் அறிவேன். உங்கள் உரிமைகளை அங்கீகரித்து, மதிக்காத ஒரு நாட்டில் நீங்கள் வாழ் வது என்பது முடியாது என்பதால், உங்களது சுயநிர்ணய உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று கூறினார்.

ஒரு கருத்தரங்கம் போன்று நடை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் சிவ வசந்தன் அவர்கள் தலைமை தாங் கினார். இலங்கை அரசால் மேற் கொள்ளப்படும் நடவடிக்கைகளை அய்க்கிய நாடுகள் நேரடியாக மேற்பார்வையிட்டுக் கண்காணிக்க வேண்டும் என்று அவர் கோரினார். தமிழர்- சிங்களவரிடையே நல்லிணக் கத்தை தற்போதைய இலங்கை அரசு ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு வீணானதே என்று ஏ.தேவராஜன் பேசும்போது குறிப்பிட்டார்.

இனப்படுகொலை, கலாச்சார சீரழிப்பு, புதிதாக உருவாகி வரும் போக்குகள், நீதி பெறவேண்டும் என்ற தணியாத தாகம், ஒரு தலைமுறை மக்களே அழிக்கப்பட்ட கொடுமை என்ற தலைப்புகளில் ஜானகி பாஸ்கரன், தருணி அகோ, ஆர். தானிஷா ஆகியோரும் மற்றும் இதர தமிழ் ஈழப் பிரதிநிதிகளும் தங்களது கட்டுரைகளை இந்த கருத்தரங்கில் படித்தனர்.

தேவை சர்வதேச விசாரணை!

அக்கூட்டத்தில் பேசிய தொழி லாளர் கட்சி நாடாளு மன்ற உறுப் பினரும், அயல்துறை நிழல் அமைச் சருமான பில் கோஃப் அவர்கள் பேசும்போது இலங்கையில் நடை பெற்ற போர்க் குற்றங்களைப் பற்றி ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண் டார். போர்க் குற்றவாளியாக குற்றம் சாற்றப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவுக் கான சிறீலங்காவின் தூதரை வெளி யேற்ற ஆஸ்திரேலியாவின் பசுமைக் கட்சியினருடன் இணைந் துப் பணியாற்ற தனது கட்சி உறுதியாகத் தீர் மானித்துள்ளது என்று நியூசிலாந்து பசுமைக் கட்சித் தலைவி அறிவித் தார்.

தமிழ் ஓவியா said...

நாடாளுமன்ற உறுப்பினர் மெடிரியா டூரி ஆக்லாந்த் நாடாளு மன்ற பசுமைக் கட்சித் தலைவியும், அக்கட்சி யின் கூடுதல் தலை வருமான மெடிரியா டூரி பேசியதாவது:

உங்கள் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றி ணைந்து தொடர்ந்து நீங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை நாங் கள் நெருக்கமாக கவ னித்துக் கொண்டு வரு கிறோம். இந்த விஷயத் தில் மிக உறுதியாகவும், திடமாகவும், சோர்வில் லாமலும் நீங்கள் செய லாற்றி வருகிறீர்கள். அத னால்தான் சிறீலங்காவில் உள்ள பிரச்சினைகள் பற்றி நாங்கள் நன்கு அறிந்தவர்களாக இருக் கிறோம். அய்க்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளரால் அமைக் கப்பட்ட நிபுணர் குழு வினர் தங்களது அறிக் கையில் தெரிவித்துள்ள படி இலங்கையில் நடை பெற்ற போர்க் குற்றங் கள், மனிதத் தன்மைக்கு எதிரான குற்றங்கள் மற் றும் மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச சட்டங்களின் கீழ் ஒரு சுதந்திரமான சர்வதேச தீர்ப்பாயத்தால் வெளிப் படையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றஉலகளாவிய கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்.

அத்துடன் மற்றொரு அறிவிப்பையும் நான் வெளியிடுகிறேன். சிறீலங்காவின் கடற் படையில் முன்பு பணி யாற்றிய, தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு சிறீலங்காவின் தூதுவ ராக இருக்கும் திசாரா சமரதுங்கேயை வெளி யேற்ற, ஆஸ்திரேலியாவின் பசுமைக் கட்சியின ருடன் இணைந்து, தக்க அழுத்தம் கொடுக்க நாங்கள் உறுதி பூண்டுள் ளோம்.

ராஜரீக உறவு, நடை முறைகளில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த நன்னெறிக் கோட் பாடுகள், ஒழுங்குமுறை களை மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களில் தொடர் புடைய ஒருவர் சீரழிப் பதை நாங்கள் ஒரு போதும் அனுமதியோம்.
-இவ்வாறு மெடிரியா டூரி பேசினார்.

மனித உரிமை ஆர்வலர் ஜான் மிண்டோ நியூசிலாந்து நாட் டைச் சேர்ந்த புகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலரான ஜான் மிண்டோஅவர்கள் பேசியதாவது:

அனைத்து மக்களின் உரிமைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உலகின் எந்த பகுதியி லும் இருக்கும் பூர்வக் குடி மக்களின் உரிமை களுக்கு நாங்கள் குரல் கொடுக்கிறோம். உரிமை கள் என்பது உலகளா வியது; அனைத்து மக்க ளுக்கும் சமமானது. பெரும்பான்மையினரின் உரிமைகள், சிறுபான் மையினரின் உரிமைகள் என்று எதுவும் கிடை யாது.பெரும்பான் மையினரின் கொடுங் கோன்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாது.

உங்களின் சுயநிர்ணய உரிமையை தொடர்ந்து நீங்கள் வெளிப்படுத்திக் கொண்டு வருவதை நான் அறிவேன். அய்க் கிய நாடுகளின் பிரக டனங்களில் அளிக்கப் பட்டிருக்கும் உங்கள் உரிமைகளை அங்கீ கரித்து, மதிக்காத ஒரு நாட்டில் நீங்கள் வாழ் வது என்பது முடியாது என்பதால், உங்களது சுயநிர்ணய உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம் அய்க்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்ட நிபு ணர் குழுவினர் தங் களது அறிக்கையில் தெரிவித்துள்ளபடி இலங்கையில் இழைக் கப்பட்ட போர்க் குற் றங்கள், மனிதத் தன் மைக்கு எதிரான குற்றங் கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச சட்டங்களின் கீழ் ஒரு சுதந்திரமான சர்வதேச தீர்ப்பாயத் தால் வெளிப்படையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது- இவ்வாறு ஜான் மிண்டோ பேசினார்.

அயல்துறை நிழல் அமைச்சர் பில் கோஃப் ஆக்லாந்து அரசின் அயல்துறை நிழல் அமைச்சரும் நாடாளு மன்ற உறுப்பினருமான பில் கோஃப் பேசிய தாவது:

சிறீலங்காவில் தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து இழைக்கப் பட்டுவரும் கொடுமை கள் பற்றி நாங்கள் விரிவாக அறிந்து கொள்ள, நீங்கள் மேற்கொண்டு வரும் தொடர்ந்த முயற் சிகளும் செயல்பாடு களும் உதவின.

போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனித இனத்துக்கு எதி ரான குற்றங்கள் ஆகி யவை அனைத்துலக சட் டங்களின் கீழ் முறை யான விசாரணை இன்றி தவிர்க்கப் படுவதை எந்த நிலையிலும் அனுமதிக்க முடியாது.

முதலில் இழைக்கப் பட்ட கொடுமைகளுக்கு நீதிவழங்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான போதுமான இழப்பீடுஅளிக்கப் படாத வரை எந்த வித சமாதானமும் எட்ட இய லாது. ஆனால், இது வரை இது போன்ற சமா தானத்தை எட்டும் முயற்சி எதுவும் இலங்கை யில் மேற்கொள்ளப்படவில்லை; வெறும் சொற்களில் மட்டுமே இது பேசப் பட்டு வருகிறது.
-இவ்வாறு பில் கோஃப் பேசினார்.

(தகவல்:டாக்டர் சோம. இளங்கோவன்
4-8-2012

தமிழ் ஓவியா said...

வரலாற்று இருட்டடிப்பு

1889ஆம் ஆண்டு சுதேசமித்திரன் நாளிதழ் வெளி வந்தது. அதன் பின்னர் திராவிடன் 1917ஆம் ஆண்டில் நாளிதழாக வந்துள்ளது. திராவிடன் இரண்டாவது தமிழ் நாளிதழ் என்ற சிறப்பினை பெறுகிறது அதே 1917ஆம் ஆண்டில் திரு.வி.கவை ஆசிரியராக கொண்டு தேசபக்தன் வெளிவந்ததாக வரலாறு கூறுகிறது.

ஆனால் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் சுதேசமித்திரனுக்கு அடுத்து தேசபக்தன் மட்டுமே வந்ததாக வரலாறு புனையப்பட்டு திராவிடனை அன்றே மறைக்க ஏற்பாடு நடந்துள்ளது.

திராவிடன் நாளிதழை பற்றிய குறிப்பு அரசாங்க வெளியீடான ழளைவடிசல டிக ஐனேயை துடிரசயேடளைஅ என்ற நூலிலும், புனாவில் உள்ள தேசிய செய்தி நிறுவன வெளியீடான ழுரனைந வடி ஐனேயை ஞநசடினஉயடள என்ற நூலிலும் திரு.ஏ.என். சிவராமன் (தினமணி ஆசிரியர்) எழுதிய கூந எநசயேஉரடயச டயபேரயபந சூநறளயீயயீநச என்ற கட்டுரையிலும் தமிழ் கலைக் களஞ் சியத்தின் இதழ்கள் பற்றிய விளக்கப் பகுதியிலும்- ஆக மொத்தம் 5 முக்கிய இடங்களில் திராவிடன் இதழை பற்றிய குறிப்புகள் இல்லை. திட்டமிட்டு அன்றே நீக்கப்பட்டுள்ளது.
அதையும் மீறி ழுரனைந வடி ஐனேயை யீநசடினஉயடள என்ற நூலில் டுளைவ டிக ரஉடயளளகைநைன யீநசடினஉயடள என்ற நூலில் குடிடடடிறபே யீநசடினஉயடள உடிரடன டிவ நெ உடயளளகைநைன னரந வடி ளேரககஉநைவே டயவந சநஉநயீவ டிச டி- சநஉநயீவ டிக கேடிசஅயவடி என்ற குறிப்போடு, திராவிடன் இடம் பெற்றுள்ளது. இங்குதான் பார்ப்பனர் சூழ்ச்சியை புரிந்துகொள்ள வேண்டும். திராவிடன் இடம்பெறாமைக்கு மேலே சொல்லிய 5 முக்கிய நூலின் தொகுப்பாசிரியர்களின் விளக்கமும் ஏற்கத் தக்கதில்லை காரணம் அது சவுண்டி பாப்பாரப் பயல்களின் சூழ்ச்சி.

இவ்வளவு சூழ்ச்சியும் தாண்டி வரலாற்றில் திராவிடன் இடம் பெற்றுள்ளது. திரு.வி.க.வாழ்க்கை குறிப்புகள் என்ற நூலில் திராவிடன் இதழைப் பற்றி பயனுள்ள குறிப்புகள் காணப் பெறுகிறது அது மக்களின் செல்வாக்கு பெற்று விளங்கியது என்ற சான்றும் உள்ளது.

இதிலிருந்து திராவிடர் இயக்கம் எத்தனை இன்னல்களை தாண்டி வந்துள்ளது என்று நினைக்கையில் மேனி புல்லரிக்கிறது.

(ஆதாரம்: திரு. இளங்கோ எழுதிய இதழியல் நோக்கு)

தமிழ் ஓவியா said...

புரட்சிக் கவிஞர் வெடித்தார்நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க ஒருமுறை அவ்வை துரைசாமி அவர்கள் துவைக்கு வந்திருந்தார். கூட்டத்தில் புரட்சிக் கவிஞர் அமர்ந்திருந்தார். புரட்சி கவிஞர் அவ்வைக்கு முன் அறிமுகம் ஆனவர் அல்ல. புரட்சிக் கவிஞரின் பாடல்கள் அவருக்குப் பிடிக்கவும் பிடிக்காது. அவர் பேசும்போது,

ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்

காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லி

காகிதம் போட்டாண்டி வெள்ளைக்காரன்

என்ற பாடலைக் குறிப்பிட்டுவிட்டு, இதைப்போன்ற டப்பாங்கூத்துப் பாடலைத் தானே பாரதிதாசன் எழுதுகிறார் என்று புரட்சிக் கவிஞரைச் சாடினார். உடனே புரட்சிக் கவிஞர் கூட்டத் தலைவருக்கு ஒரு துண்டுச் சீட்டு அனுப்பினார். சிறிது விளக்கம் அளிப்பதற்கு என்னை அனுமதி யுங்கள் என்று அதில் எழுதப்பட்டிருந்தது. தலைவர் அனுமதித்தார். புரட்சிக் கவிஞர் பேசத் தொடங்கினார். அவ்வை தன்னைத் தாக்கி பேசியதற்குப் பதில் சொல்லவில்லை கவிஞர். ஆனால் அவர் கூறிய பாடலுக்கு விளக்கம் தந்தார்.

சிறிது நேரத்திற்கு முன் இவர் கூறிய பாடல் சாதாரணப் பாடல் அன்று. பாமரர்கள் நெஞ்சினிலே விடுதலை வேட்கையைக் கிளறச் செய்கின்ற பாடல். இங்கேயுள்ள ஒருவன் வெள்ளரிக்காய் பயிரிடுகிறான். எங்கோ இருக்கும் வெள்ளைக்காரன் அதற்கு விலை கட்டுப்பாடு செய்கின்றான் என்ற மனக் கொதிப்பை வெளியிடும் பாடலென்ன நையாண்டிப் பாடலா? கவிதையைத் திறனாய்வு செய்வதற்குத் தனி மனப் பான்மை வேண்டும். அதை விட்டுவிட்டு ஒன்றும் புரியாத நிலையில் உரிமை உணர்வைப் பாய்ச்சுகின்ற இதைப்போன்ற பாடல்களைக் கொச்சைப்படுத்துவது அடாத செயல்.

புயல் அடித்து ஓய்ந்ததுபோல் இருந்தது அரங்கத்தில். கவிதையைத் திறனாய்வு செய்யும் முறையை இன்றுதான் நான் கற்றுக் கொண்டேன் என்று உணர்வு மல்கிட கூறினார் அவ்வை. அன்றிலிருந்து எந்தக் கூட்டமானாலும் புரட்சிக் கவிஞர் பாடல் ஒன்றுக்கு விளக்கம் சொல்லாமல் அவ்வை, தம் பேச்சை முடிக்கமாட்டார்.
நன்றி: உதயக்கதிர்
4-8-2012

தமிழ் ஓவியா said...

நாத்திக கவிஞன் ஷெல்லி (1792-1822)இங்கிலாந்து நாட்டுக் கவிஞர் ஷெல்லி, கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் போதே நாத்திகத்தின் தேவை என்ற தலைப்பில் கவிதை எழுதிப் பரப்பியதற்காக கல்லூரியி னின்றும் விலக்கப்பட்டார். திருமணம் என்பதை மதத்தினின் றும் முழுமையாய் பிரித்து விட வேண்டும் என்றார். இங்கிலாந்தின் தலைசிறந்த நாத்திகக் கவிஞரான ஷெல்லியின் கவிதைகளுக்கு அவர் வாழ்ந்த காலத்தில் உரிய மதிப்பளிக்கப்படவில்லை. ஷெல்லி யின் கவிதை சிறப்பைக் கூறும் இன்றைய இலக்கிய வாதிகள் கூட அவர் ஒரு நாத்திகக் கவிஞர் என் பதைக் கூறாமல் இருட்டடிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
(ஆக. 4ஆம் தேதி ஷெல்லி பிறந்த நாள்)

ராவணன் said...

நான் ஏதாவது சொல்லப்போக...
அமெரிக்காவில் இருக்கும் வருண பகவான் அதை எடுத்து என்னை கேள்வி கேட்க..?

இது எனக்குத் தேவையா?

எழவு வீட்டில் ஓரமாக நின்று மவுன அஞ்சலி செலுத்திவிட்டு வந்துவிடுவது நல்லது.

சத்தமாக ஒப்பாரி வைத்து என் இருப்பைக் காட்ட நான் என்ன கருணாநிதியா....இல்லை வீரமணியா?

unknown said...

சர்க்காரியா குழுவால் விஞ்ஞான பூர்வமாக பணம் பண தெரிந்தவர் என பாராட்டை பெற்றவர்
டெசோ -வை நடத்தினால் அருமையாய் தானே இருக்கும்.?????

தமிழ் ஓவியா said...

இணையத்தில் விடுதலையின் போராட்டம்


- தமிழ் ஓவியா மாரிமுத்து

விடுதலை இதழ் எனக்கு 1980 களின் இறுதியில் அறிமுகமாகிப் படித்து வந்தாலும்,1983 முதல் தினந்தோறும் படித்து வந்த எண்ணற்ற வாசகர்களில் நானும் ஒருவன்.நான்கு பக்கங்கள் கொண்ட விடுதலை இதழில் தொடங்கிய எனது பயணம் தற்போது இணைய இதழ் (VIDUTHALAI E-PAPER) மூலமாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. 25 ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி வரும் விடுதலை இதழை நிறுத்தி விடலாமா? என்று பெரியார் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் 1962 ஆம் ஆண்டு முதல் பொறுப்பேற்று நடத்தி,கடந்த சில ஆண்டுகளாக பல வண்ணங்களில் 8 பக்கங்களுடன் வெளிவருவது மட்டுமல்லாது. தினந்தோறும் இதழ் அச்சாகும் அதே வேளையில் இணைய இதழாகவும் (VIDUTHALAI E-PAPER) மலர்ந்து வருவதைப் பார்க்கும் போது தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யாவின் உழைப்பின் பெ(அ)ருமையை என்னவென்று சொல்வது?. 2004 ஆம் ஆண்டு முதல் எனக்கு கணினி அறிமுகமாகி டயல் அப் (VIDUTHALAI E-PAPER) என்ற முறையில் இணைய இணைப்பின் மூலம் இ-மெயில் மற்றும் ஒரு சில பணிகளைச் செய்து வந்தேன். 2007 ஆம் ஆண்டு (broad band) அகலவரிசை இணைய இணைப்புக் கிடைத்த போது நண்பர் ஒருவரின் உதவியால் தமிழ் ஓவியா (thamizhoviya.blogspot.com) வலைப்பூ தொடங்கி அதில் பெரியார் கருத்துகள் மற்றும் விடுதலை இதழில் வளிவரும் கட்டுரைகள், செய்திகளை வெளியிட்டு வந்தேன்.

எல்லா இடத்திலும் தன் ஆதிக்கக் கொடுக்கைப் பரப்பியிருந்த பார்ப்பனியம் இணையதளத்திலும் தனது விஷ(ம)க் கொடுக்கை அங்கிங்கென்னாதபடி எங்கும் பரப்பியிருந்தது.

வலைப்பூவில் பெரியாரின் கருத்துகளை பதிவிட்டபோது வந்த எதிர்ப்பு இருக்கிறதே! யப்பப்பா... சொல்லி மாளது. தந்தைபெரியாரையும், பெரியாரியலை உலகமயமாக்க ஓயாது உழைத்து வரும் தமிழர்தலைவரையும் கொச்சைப்படுத்தி வந்த பின்னூட்டங்கள் எண்ணிலடங்கா? பார்ப்பனர் களின் கொச்சையான அனைத்து விமர்சனங் களையும் நயத்தக்க நாகரிகமாக,பெரியார் தத்துவப்படியும், தமிழர்தலைவரின் கருத்துக்களின் துணையுடனும் அதை எதிர்கொண்டு விளக்கமளித்தேன்.

படிக்கும் வாசகர்களும் பார்ப்பனியத்தின் உண்மைத்தன்மையை உணர்ந்து இன்று 343 பின்பற்றுபவர்களுடன் (FOLLOWERS) மற்றும் 5,81,241 பேர் படித்துக் கொண்டிருக்கும் வலைப்பூவாக தமிழ் ஓவியா (thamizhoviya.blog spot.com) வளர்ந்து கொண்டிருக்கிறது. 22-.7.-2012 நிலவரப்படி தமிழ்மணம் திரட்டியில் 7 ஆவது இடத்தில் உள்ளது தமிழ் ஓவியா. இதற்கு முழு முதற்காரணம் விடுதலை இதழை இணையத்தில் கொண்டு வந்து பெரியாரை உலகமயமாக்கும் முயற்சியில் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களே. ”உண்மை” ஆகஸ்ட் 1-15 2012

தமிழ் ஓவியா said...

நமது கேள்வி: சதயம், பூரட்டாதியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?

இப்படியெல்லாம் இதழ்கள் கட்டுரைகளை எழுதித் தள்ளுகின்றனவே - இந்த நட்சத்திரங்கள் எவ்வளவுக் காலமாக இருந்து வருகின்றன? இந்த நட்சத்திரங்களில் எவ்வளவு காலமாக எவ்வளவு மக்கள் பிறந்திருக்கிறார்கள்?

அப்பொழுதெல்லாம் இவர்கள் எதைப் படித்தார்கள்? இப்பொழுது மட்டுமே படிக்க முடிவதற்கு யார் கரணியம் எது காரணம் பார்ப்பனர்கள் மட்டும் படிக்கக் கூடிய ஒரே நட்சத்திரத் தில் பிறந்தார்களா?

ஒரு பெரியாரும், ஒரு காமராசரும், ஒரு திராவிடர் இயக்கமும் பாடுபட்ட பிறகுதானே நம் மக்களுக்குப் படிப்பு வந்தது? இதழ் நடத்தும் முதலாளிகளே! எம்மக்கள் உங்களுக்கு என்ன கேடு செய்தார்கள்? ஏன் அவர்களை இன்னும் வஞ்சிக்கிறீர்கள்? 6-8-2012

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாடு: ஹாங்காங்கிலிருந்து வாழ்த்து

ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாது காப்பு மாநாடு வெற்றி பெற ஹாங்காங் வாழ் தமிழர்களின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித் துக் கொள்கிறேன். ஈழத் தமிழர் களுக்கு மறுவாழ்வு கிடைக்கவும், இப்பிரச்சினையில் உலக நாடு களின் கவனத்தைக் கவரவும் இந்த மாநாடு வழிவகுக்கும் என நம்புகிறேன். நன்றி! அன்புடன்ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங்

குறிப்பு: விடுதலை ஆசிரியருக்கு அனுப்பப்பட்ட செய்தி.

தமிழ் ஓவியா said...

செய்திகளும் சிந்தனைகளும்

செய்தி: கறுப்புப் பணத்தை மீட்க வலி யுறத்தி பாபாராம்தேவ் அடுத்த கட்ட உண்ணா விரதப் போராட்டத்தை டில்லியில் இன்று துவக் குகிறார்.

சிந்தனை: இவர் மீதே வரி ஏய்ப்புக் குற்றம் என்ற வாள் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த லட்சணத்தில் ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் ஒரு கேடா?

செய்தி: பெண்ணிடம் திருமணம் செய்து கொள் வதாகக் கூறி தவறாக நடந்து கொண்ட பாதிரி யார், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் கைது!

சிந்தனை: பாவ மன்னிப்பு என்ற ஒன்று இருக்கும்வரை எந்தப் பாவத்தையும் செய்ய யார் தான் தயங்குவார்கள்?

செய்தி: குடிதண்ணீர் பிரச்சினைக்காக சென்னை - பெரம்பூரில் கத்தியால் அண்ணனைக் குத்திக் கொன்றான் தம்பி.

சிந்தனை: மூன்றாவது உலக யுத்தமே தண்ணீருக் காகத்தான் வரும் என் கின்றனர்.இது அதற்கு முன்னோடியோ!

செய்தி: அரசியல்வாதி களைத் திட்டுவதே அன்னாஹசாரே குழுவின் குறிக்கோள்.- சிவசேனா தலைவர் பால்தாக்கரே

சிந்தனை: இவர் மற்றவர்களைத் திட்டாத திட்டா? சிறுபான்மையின மக்களை என்ன பாடுபடுத் தினார்? ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை ஒன்று போதாதா?

செய்தி: நண்பர்களுக் கும், உறவினர்களுக்கும் ரக்ஷாபந்தன் நாளில் ராக் கிக் கயிறைக் கட்டுவார் கள். பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமாரோ மரங்க ளுக்கு ராக்கி கட்டினார்.

சிந்தனை: மனிதர்கள் தான் மரங்களாகி விட் டனர்; மனிதர்களுக்கு நல்லது செய்யும் மரங் களுக்கு ராக்கிக் கட்டு வது சிறப்பானது என்று நினைத்திருக்களாம். 9-8-12

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் நலமுடன் தாயகம் திரும்பினார்


அமெரிக்கப் பயணத்தில் எதிர்பாரா வகையில் உடல் நலம் பாதிக் கப்பட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரிய மருத் துவ உதவி பெற்று இன்று விடியற்காலை நலமுடன் தாயகம் திரும்பினார். மேலும் அவருக்கு ஓய்வு தேவை என்பதால் தோழர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாடு: இலங்கை அரசின் கூற்றுக்கு டெசோ தலைவர் கலைஞர் மறுப்புசென்னை, ஆக. 9- டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கை அரசின் அறிக்கையும், இலங்கை அமைச்சர் கூறி இருப்பதும் கற்பனையான குற்றச் சாட்டின் அடிப் படையில் புனையப்பட்ட ஒன்றாகும். இலங்கைத் தமிழரின் வாழ்வாதாரங் களை உயர்த்துவதற்காகத்தான் இந்த டெசோ மாநாடு. இலங்கை அரசின் தவறான பிரச்சாரத்தை இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர் களோ, உலகத் தமிழர்களோ யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :-

இலங்கை அரசின் சார்பாக 6.8.2012 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் டெசோ மாநாடு இலங்கைக்கு எதிரான விஷயம் என்றும், இந்த மாநாட்டிலே கலந்து கொள்ளும் இலங்கையர்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும், இந்த மாநாட்டினை இலங்கை அரசு வன்மையாகக் கண்டிக்கின்றது என்றும் தெரி வித்திருப்பதாகவும், அந்த அரசின் சார்பில் ஊடகத் துறை அமைச்சர் ஒருவர் இந்த மாநாட் டில் பங்கேற்போர் மீது அரசு கவனம் செலுத்தி யுள்ளதாகக் கூறியிருப் பதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.

கற்பனையான குற்றச்சாற்று

இலங்கை அரசின் அறிக்கையும், இலங்கை அமைச்சர் கூறியிருப் பதும் கற்பனையான குற்றச்சாட்டின் அடிப் படையில் புனையப்பட்ட ஒன்றாகும். இலங்கைத் தமிழரின் வாழ்வாதாரங் களை உயர்த்துவதற்காகத்தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது கவலையைத் தருகிறது. இலங்கைத் தமிழர் நலன் பேணும் முயற்சிகளை இம்மாநாடு முன்னெடுத்துச் செல்லும். அதற் காகவே இந்த டெசோ மாநாடு நடை பெறு கிறது. இலங்கை அரசின் சார்பில் செய்யப் பட்டுள்ள இந்தத் தவறான பிரச்சாரத்தை இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர் களோ, உலகத் தமிழர்களோ நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் தமது அறிக் கையில் தெரிவித்துள்ளார்.