Search This Blog

3.8.12

ஆடிப்பெருக்கும் அய்தீகமும்


ஆடிப் பெருக்கு ஆடிப் போச்சே!

ஆற்றில் பதினெட்டுப் படியும் நீர் வழிந்தோடும். புதுமணத் தம்பதிகள் நீராடுவர், தாலி பிரித்துக் கட்டுவர்! அப்படிச் செய்தால் கல்யாணம் ஆகாத பெண்களுக்குச் சீக்கிரம் கல்யாணம் நடக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு விரைவில் அந்தப் பாக்கியம் கிட்டும். எல்லாம் இந்த ஆடிப் பெருக்கில்!Align Left

ஆடிப் பெருக்குச் சமயத்தில் ஆற்றில் புது வெள்ளம் பெரும் அளவில் நுரை தள்ளி வருவதால் அந்தத் தருணத்தில் காவிரித்தாய் கர்ப்பிணி என்பது அய்தீகமாம்.

(யாராவது கேள்வி கேட்டுவிடுவார்கள் என்பதற்காக இப்படி சொற்களைத் தயாராக வைத்திருப்பார்கள்! என்பது அய்தீகம்... என்பது நம்பிக்கை என்று சொல்லித் தப்பி விடுவார்கள்).

கர்ப்பிணிப் பெண்ணான காவிரியின் சகோதரர்தாம் சிறீரங்கத்தில் இருக்கும் ரெங்கநாதராம். இந்த நாளில் தன் தங்கை காவிரிக்குச் சீர்வரிசை செய்வாராம். அதன்படி கர்ப்பிணிப் பெண்கள் விரும்பி உண்ணும் சித்ரான்னங்களான புளியோதரை, மாங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் மற்றும் வெல்லமும் தேங்காயும் சேர்ந்த வெல்ல சாதம் முதலிய வற்றை காவிரித் தாய்க்கு நிவேதனம் செய்து அனைவரும் உண்டு களிப்பர்.

ரெங்கநாதரின் சீர்வரிசையாக முறம் ஒன்றில் வெற்றிலை, பாக்கு, தேங்காய் பழம், பூ ரவிக் கைத் துணி, கருகமணி, திரு மாங்கல்ய சரடு என்று ஒரு பெண் விரும்பி ஏற்கும் அனைத்தையும் வைத்து, தேங்காய் உடைத்து மற்றொரு முறத்தால் மூடி, தீபங்களை ஒரு வாழை மட்டையில் வைத்து முறத்துடன் ஆற்றில் (காவிரித் தாய் அல்லவா!) மிதக்க விடுவார்களாம்.

இந்தச் சீரைத் தன் தங்கைக்கு செய்வதற்காகவே ரெங்கநாத பெருமாள் அம்மாமண்டபத்தில் காலையில் எழுந்தருளி (ஆமாம் தூக்கிக் கொண்டு வருவார்கள்) மாலைவரை அங்கு இருந்து அருள் பாலிப்பாராம்! (பிறகு தூக்கிக் கொண்டு கோயி லுக்குள் வைப்பார்கள்)

- இப்படி ஆடிப் பெருக்கு என்று கூறி அய்தீகத்தை சந்துக்குச் சந்து புனைக் கதைகளை வைத்து அக்கப் போர் செய்கிறார்களே - ஆன்மீக இதழ்களில் அளந்து கொட்டுகிறார்களே அவர்களை நோக்கி ஒரே ஒரு கேள்வி - அதிகம் தேவைப்படாது.

ரெங்கநாதரே அம்மா மண்டத்தில் வந்து தங்குவதாக அய்தீகம் சொல்கிறீர்களே நேற்று நடந்த அந்த ஆடிப் பெருக்கு விழாவில் காவிரித் தாய் அலை புரண்டு வந்தாளா? பதினெட்டுப் படிகளிலும் வழிந்து ஓடினாளா? வெட்ட வெளியிலே சிலம்பமா! வெட்கம் கெட்ட ரெங்கநாதன் குத்துக்கல்லாகக் குந்த வைக்கப்பட்டதல்லாமல் அவர் அருள்பாலித்துக் கிழித்தது என்ன?

அவரின் அரும்பெரும் சக்தியால் காவிரியில் கரை புரண்டு தண்ணீரை ஓட வைக்க முடியவில்லையே - ஏன்? பழம், பூ, தேங்காய் சகலத்தை முறத்தில் வைத்து எந்தத் தண்ணீரில் மிதக்க விட்டார்கள்? - ஆற்று மணலிலா?

வெட்கப்பட வேண்டாமா? யாரை ஏமாற்றுகிறீர்கள்? உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் அவ்வளவு தானே!

கருநாடகத்துக்காரன் காவிரிக்குத் தண்ணீரை திறந்து விட்டால் தானே உங்கள் ஆடிப் பெருக்கின் அமர்க்களம் எல்லாம்!

உங்கள் ரங்கநாதர் கருநாடகத் துக்காரனுக்கு நல்ல புத்தியைக் கொடுத்துத் தண்ணீரைத் திறந்து விடச் செய்வதுதானே!

அல்லது அவனின் அற்புத சக்தியால் காவிரியில் தண்ணீரை ஓட வைப்பதுதானே!

இப்படியெல்லாம் எங்கே இருந்து சிந்திக்கப் போகிறீர்கள்? பக்தி வந்தால்தான் புத்தி போய் விடு கிறதே!

சின்ன வயதில் விளையாடும் பொம்மை விளையாட்டு, பெரியவர்கள் ஆனாலும் உங்களை விட்டுப் போகவில்லையோ!
---------------------"விடுதலை” 3-8-2012

13 comments:

தமிழ் ஓவியா said...

சட்டி சுட்டதடா - கைவிட்டதடா! அன்னா அசாரே குழுவின் பரிதாபம்

டில்லி, ஆக.3-ஊழ லுக்கு எதிராகவும், வலு வான லோக்பால் மசோதா வேண்டியும் நேற்றோடு 9 நாட்களாக தொடர் பட்டினி போராட்டம் இருந்து வரும் அன்னா குழுவினர் இன்று மாலை 5 மணி யுடன் தங்களது பட் டினிப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

ஊழலுக்கு எதிராக வும், வலுவான லோக் பால் மசோதா வேண்டும் என்று கூறி அன்னா அசாரே, குழுவினர் கடந்த 25ஆம் தேதி முதல் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கால வரையற்ற பட்டினிப் போராட்டம் இருந்து வருகின்றனர். அன்னா ஹசாரேவும் கடந்த 29ஆம் தேதி முதல் கால வரையற்ற பட்டினிப் போராட்டம் இருந்து வருகிறார். 9 நாட்களாக தொடர்ந்து பட்டினிப் போராட்டம் இருந்து வரும் அன்னா குழு உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால், கோபால் ராய் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

அவர்களை பட்டி னிப் போராட்டத்தை கைவிட்டுவிட்டு மருத் துவமனையில் சேரு மாறு டில்லி காவல் துறை வலியுறுத்தியும் அவர்கள் அதை கேட்க வில்லை. லோக்பால் மசோதா நிறைவேறும் வரை பட்டினிப் போராட்டத்தை கை விடும் பேச்சுக்கே இட மில்லை என்று அடம் பிடித்தனர். அவர்கள் என்ன தான் அடம் பிடித்தாலும் மத்திய அரசு அவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை.

இதையடுத்து மத்திய அரசுடன் போராடு வதை விட தாங்களே கட்சி துவங்கலாம் என்று அன்னா குழு வினர் திட்டமிட்டுள்ள னர். அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ள அவர் கள் தங்களின் கால வரையற்ற பட்டினிப் போராட்டத்தை இன்று மாலை 5 மணியுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

பட்டினி போராட் டம் இருந்து நம் முடைய மூச்சும், ஆவி யும்தான் போகின்றதே தவிர கோரிக்கையை மத்திய அரசு கேட்கக் கூடத் தயாராக இல்லை என்பதை உணர்ந்த அன்னா குழு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலுக்கு வரலாமா? மக்களிடம் கருத்து கேட்கிறது அன்னா குழு

இந் நிலையில் அன்னா அசாரே குழு வினர் சமூக வலைத்தளமான டிவிட் டரில் மாற்று அரசியலை முன்னெடுப்பது பற்றி மக்களிடம் பொது கருத்து கேட்டு வருகின் றனர்.

"நாட்டின் மாற்று அரசியல் சக்தியாக அசாரே களம் இறங்க வேண்டிய தருணம் இது தானா? என்று அன்னா குழு சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இதேபோல் மற்றொரு இணையதளப் பக்கத் தில்,

- தற்போதைய அரசி யல் கட்சிகள் மீது உங் களுக்கு நம்பிக்கை இருக் கிறதா?

- நாட்டின் மாற்று அரசியல் சக்தியை அன்னா அசாரே முன்னெடுக்க வேண்டுமா?

என்று இரு கேள்வி கள் கேட்கப்பட்டிருக் கின்றன. 3-8-2012

தமிழ் ஓவியா said...

இந்நாள்... இந்நாள்....‘‘Not only a secretary But also a very sincere Person’’ என்று தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப்பட்ட என்.வி. நடராசன் அவர்களின் நினைவு நாள் இந்நாள்! (3.8.1975)

தமிழ் ஓவியா said...

புனே குண்டுவெடிப்பு வன்முறையின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாதிகளா? விசாரிக்கிறது மகாராட்டிரா அரசு

புனே, ஜூலை 3- புனேயில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னணி யில் இந்துத்துவா பயங்கர வாத அமைப்புகளுக்குத் தொடர் பிருக்கிறதா என்பது குறித் தும் மகாராட்டிரா அரசு விசாரணை நடத்தும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.

புனேயில் அடுத்தடுத்து 4 இடங்களில் நேற்றுமுன் தினம் இரவு குண்டு வெடித் தது. இவை சக்திவாய்ந்தவை இல்லை என்பதால் உயிரி ழப்பு ஏதும் ஏற்படவில்லை. இக்குண்டு வெடிப்பு சம்ப வத்தில் இருவர் படுகாயம டைந்திருந்தனர்.

புனே குண்டு வெடிப்பு பற்றி கருத்து தெரிவித்த மத்திய அரசு, தீவிரவாத செயல் இல்லை என்று கூறியிருந்தது.

இந்நிலையில் நேற்று குண்டுவெடித்த இடங் களை நேரில் பார்வையிட்ட ஆர்.ஆர்.பாட்டில், பயங்கர வாதிகளின் சதியா என்பது குறித்து பயங்கர வாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர் இந் துத்துவா பயங்கரவாதிக ளின் சதியாக இருக்குமா? என்று கேட்டதற்கு எல்லா வகையான கோணங்களி லும் இருந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியிருக்கிறார்.

தயானந்த பாட்டீல் யார்?

இதனிடையே குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது காயமடைந்தவர் களில் ஒருவ ரான தயானந்த பாட்டீல் என்பவர் புனே அருகில் உள்ள உருளி கஞ்சன் கிரா மத்தைச் சேர்ந்தவர். குண்டு வெடிப்பு சம்பவம் நடை பெற்ற இடங்களில் ஒன்றான பல்கான்தார்வா திரை யரங்கு முன்பாக அன்னா ஹசாரே குழுவினர் அண்மையில் போராட்டம் நடத்திய போது அப்பகுதியில் அவர் நடமாடியதாக கூறப்படு கிறது. நேற்று முன்தினம் அப்பகுதிக்கு சென்ற தயானந்த பாட்டீல் அங்கு தமது கைப்பையை இறக்கி வைத்து விட்டு சென்ற பிறகே குண்டு வெடித்தது என்று கூறப் படுகிறது. இந்த தயானந்த பாட்டீலின் பின்புலம் பற்றி இப்போது மகாராஷ்டிரா அரசு குடைந்தெடுத்து வருகிறது.

மலேகான் குண்டுவெடிப்பு

ஏற்கெனவே இதே மகா ராட்டிரா மாநிலம் மலே கானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இந் துத்துவ அமைப்பைச் சேர்ந்த சாத்வி பிரக்யா உள் ளிட்டோர் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திட்டமிடப்பட்ட சதி

இந்நிலையில் டில்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை செய லாளர் ஆர்.கே.சிங் கூறுகை யில், 500 மீட்டர் தொலை வுக்குள் 45 நிமிட நேரத்தில் நன்கு ஒருங்கிணைக்கப் பட்டு இத்தாக்குதல் நடத்தப்பட் டது.

இத்தாக்குதல் திட்ட மிட்டு நிறைவேற்றப்பட்டுள் ளது என்றார்.

மேலும் வெடிக்காத இரண்டு குண்டுகள் கைப் பற்றப்பட்டு ஆய்வு செய் யப்பட்டு வருவதாகவும் தேசிய பாதுகாப்பு படை யினர் மற்றும் மத்திய தடயவியல் துறை யினர் புனே சென்று அது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் சிங் கூறினார்.3-8-2012

தமிழ் ஓவியா said...

மதுரை மாவட்டம் பேரையூரில் முத்துக்குழி மாரியம்மன் கோயிலில் குழி மாற்றுத் திருவிழா நேற்று நடைபெற்றது. குழி மாற்றுத் திருவிழாவில் குழந்தைகளை மண்ணில் புதைக்கும் விழாவிற்கு அரசு தடை விதித்துள்ளது. அதனால் குழந்தைகளை மண்ணில் புதைக்காமல் தரையில் படுக்க வைத்து இவ்விழாவை நடத்தியுள்ளனர்.

அய்தீகம் என்றால் மண்ணுக்குள் புதைப்பதுதானே! சட்டம் தடுக்கும் பொழுது சம்பிரதாயம் மாறி விடுமோ! சட்டத்தையும் மீற முடியவில்லை. சம்பிரதாயத்தையும் விட முடியவில்லை - என்ன செய்வது? புத்தி வேலை செய்யவில்லை - அவ்வளவுதான்! 3-8-2012

தமிழ் ஓவியா said...

தோழர் வீரமணியின் சேவை!வீரமணி அவர்கள் எம்.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்தி கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ.பி.எல். பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ. 400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ. 500, 1000 என்பதான வரும்படி வரும் நிலையில் தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர்.

இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக்க் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்துவந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்வித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர், வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும்.

அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரசாரகராகவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்து விட்டேன்.

விடுதலை பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம். இனி விடுதலைக்கு உண்மையான பிரசுரகர்த்தா வாகவும் ஆசிரியராகவும், வீரமணி அவர்கள்தான் இருந்துவருவார். - ஈ.வெ.ராமசாமி

(விடுதலை-07.06.1964

தமிழ் ஓவியா said...

அய்யா - ஆசிரியர் உறவு
கேள்வி: அய்யா வாழ்ந்த காலத்தில், 1962 முதல் 1973 வரை விடுதலை பொறுப்பு, இயக்கப் பொறுப்புகளில் இருந்துள்ளீர்கள். (தந்தை பெரியார் அவர்களின் நேரடிப் பொறுப்பில்); இந்தக் காலகட்டத்திலோ, வேறு காலகட்டத்திலோ தந்தை பெரியார் தங்களிடம் வருத்தப்படவோ, குறை காணவோ ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டா?

பதில்: 1962இல் முந்தைய ஆசிரியர் குத்தூசி குருசாமி அவர்கள் விலகிய நிலையில், விடுதலையை நாளேடாகத் தொடர இப்படி ஒருவர் தேவை என்று விரைந்து என்னை சென்னை மருத்துவமனையில் அய்யா அவர்கள் இருந்தபோது அழைத்துப் பேசியதும், எனது வாழ்விணையர் மோகனாவுடன் கலந்து ஆலோசித்து இருவரும் இணைந்து முடிவு எடுத்து சென்னைக்கு வந்தோம். எங்கள் குடும்பச் செலவுப் பொறுப்பை என் மாமனார் மாமியார் ஏற்றுவிட்டதால், எனது முழுநேர உழைப்பு கவலையின்றித் தொடர, என் வாழ்விணையர் எனக்கு முழு ஒத்துழைப்பைத் தந்து இல்லத்துக் கவலையை, பொறுப்பை ஏற்றவராகியே வாழ்ந்துவிட்டார். நான் இயக்கத்தின் முழு நேரத் தொண்டனாகத் தொடர்கிறேன்.

ஒளிவு மறைவின்றி நினைத்துப் பார்க்கிறேன்...! விடுதலை பொறுப்பாசிரியராக இருந்த காலத்திலும் இயக்கப் பொறுப்புகளில் இருந்தபோதும் சரி, அய்யா அவர்கள் என்னிடம் வருத்தப்படவோ, குறைகாணும்படியோ நான் எப்போதும் நடந்து கொண்டதே இல்லை என்பதுதான் நான் அய்யாவிடம் பெற்ற பெரும் சிறப்பூதியம்.

நான் பொறுப்பு ஏற்பதற்கு முன் மிகவும் அச்சப்பட்டேன். சில நேரங்களில் விடுதலையில் அய்யாவின் அறிக்கையாக வரும் தலையங்கத்தில் எழுதப்பட்ட கருத்து என் கருத்தல்ல. அது எனக்கு உடன்பாடனவை அல்ல என்று அய்யா கையொப்பத்துடன் மறுப்பு விளக்கம் வந்த காரணத்தால், அதை எண்ணி நாம் மிகவும் எச்சரிக்கையுடன் எழுதவும், செயல்படவும் வேண்டும் என்று உணர்ந்து எனது கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றி வந்தேன்.

கூட்டங்களில் அய்யாவை வைத்துக் கொண்டு பேசும் நிகழ்ச்சிகளில்கூட, அவர் நிறுத்துங்கள் என்று தடியைத் தட்டவோ, ஜாடை காட்டிடும் நிலைமையோ எனக்கு என்றுமே ஏற்பட்டதில்லை. மாறாக, சில கூட்டங்களில் மேலும் பேசுங்கள் என்று கட்டளையிட்டு மகிழ்ந்துள்ளார்.

சில, பல செய்திகள் பற்றி தலையங்கங்கள் எழுதுங்கள் என்று சுற்றுப் பயணத்தில் இருக்கும் தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள்; கடிதம் எழுதுவார்கள்; அதுதான் அய்யா தலையங்கமாக அச்சாகி இருக்கிறது. அதையே நான் எழுதியுள்ளேன் என்று பதில் அளித்ததைக் கேட்டு அய்யா மகிழ்ந்துள்ளார்; அதுதான் என் ஆசிரியப் பணிக்குக் கிடைத்த முறையான அங்கீகாரம்!

கவிஞர் கலி.பூங்குன்றன் கேள்விகளுக்கு ஆசிரியர் கி.வீரமணி அளித்த பதிலில்...

(ஆசிரியர் கி.வீரமணி பவள விழா மலர்)

தமிழ் ஓவியா said...

டெசோ சிந்தனை: ஹாங்காங்கும் -ஈழமும்!

ஹாங்காங் என்றால் டைமண்ட் வியாபாரம்தான் எல்லோருக்கும் தெரியும். பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த இந்த நகரம் குத்தகைக் காலம் முடிந்து 1997இல் சீனாவசம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனாலும் ஹாங்காங் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாகும். இப்பொழுது அங்கும் ஒரு பிரச்சினை! திபேத்தைப் போல ஹாங்காங்கையும் தன் கைக்குள் கொண்டுவர வல்லரசாகிய சீனா திட்டமிட்டு விட்டது போலும்! ஹாங்காங்கின் உள் விவகாரத்தில் சீனா தன் தலையை நீட்டும் வேலையில் இறங்கியது. ஹாங்காங் கல்விக் கூடங்களில் வரும் செம்டம்பர் முதல் சீனாபற்றிய தேசப் பக்தி வகுப்புகள் தொடங்கப்படத் திட்டமிடப் பட்டுள்ளதாம். இது ஹாங்காங் மாணவர்கள் மூளையிலே சீனக் கலாச்சாரத்தைத் திணித்து மூளைச் சலவை செய்யும் செயல் என்று ஹாங்காங் மாணவர்கள் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

எந்த ஒரு சிறு இனமாக இருந்தாலும், அதன்மீது மாற்று இனம் தன் மொழி, கலாச்சாரப் பண்பாடுகளைத் திணிக்க முனைந்தால் (அது பெரும்பான்மை உடையதாக எண்ணிக்கையில் இருந்தாலும்) அதனை ஏற்றுக் கொள்ளாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் ஹாங்காங் மக்கள் வீதிக்கு வந்து போராடும் செயலாகும். சீனா உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட மிகப் பெரிய வல்லரசு நாடாக இருக்கலாம்., அதற்காக அதன் ஆட்டத்தை சின்னஞ்சிறு நகரமான ஹாங்காங் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

இது உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தக் கூடியதாகும். குறிப்பாக இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தக் கூடிய தாகும். 1956இல் அங்கு ஒரு சட்டம் இயற்றப்பட்டது. சிங்களம் மட்டும்தான் ஆட்சி மொழி என்ற சட்டம் அது. பின்னர் நீதித்துறைகளிலும் சிங்களம் மட்டுமே என்ற நிலை பிறந்தது.

சிங்கள மொழியின் ஆதிக்கம், தமிழ் மொழிக்குரிய உரிமைப் பறிப்பு - இவற்றை எதிர்த்துத்தான் தொடக்கத் தில் ஈழத் தந்தை செல்வநாயகம் போராட்டத்தைத் தொடங்கினார் (1956 ஜூன் 5) அதுவும் காந்தியார் காட்டிய அந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத்தான் தொடங்கினார். அதைக்கூட சிங்கள வெறியர்கள் பொறுத்துக் கொள்ள வில்லை. அடித்துத் துவைத்தனர். சிலரைப் பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் தூக்கியும் எறிந்தனர்.

அந்த ரத்தக் களறியோடு நாடாளுமன்றத்திற்குச் சென்றபோது பிரதமர் பண்டார நாயகா ஏளனமாகச் சிரித்தார் எதற்காக இப்படி அடி வாங்கிச் சாகிறீர்கள்? சிஙகளவர்கள் கொஞ்சம் முரடர்கள். பேசாமல் கலைந்து செல்லுங்கள். தமிழ் என்றெல்லாம் பேசாதீர்கள், இனிமேல் சிங்களம் மட்டும்தான் ஆட்சிமொழி என்று சொன்னாரே!

அதன்பின் 1987இல் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் சிங்கள மொழியோடு தமிழும் ஆட்சி மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்று சரத்தும் சேர்க்கப் பட்டதே - இதுவரை அது நடைமுறைப்படுத்தப்பட்டதா? இந்திய அரசுதான் தட்டிக் கேட்டதுண்டா?

இலங்கையின் இறையாண்மைக்குச் சேதாரம் இல்லாமல் இரு இனங்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்று இதோபதேசம் செய்யும் கட்சிகள் - குறிப்பாக மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியினர் இதற்கு என்ன பதிலை வைத்துள்ளனர்?

வரலாறு காட்டும் படிப்பினை பற்றியும் லெனினின் தேசிய இன உரிமைப் பற்றியும் பாடம் நடத்துபவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினை என்று வந்தால் மட்டும் ஒதுங்கிக் கொள்வது ஏன்?

மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் ஏன் பிரிந்தது? கம்யூனிஸ்டு நாடான செக்கோஸ்லோவேகியா இரு கூறுகளாகப் பிரிய வேண்டிய அவசியம் ஏன்? 15 மாநிலங்களைக் கொண்டு செயல்பட்ட சோவியத்து ஒன்றியம் தனித்தனியாகப் பிரிந்து சென்றது - ஏன்?

இந்த நிலை மற்ற எந்த இன மக்களைவிட இலங்கைத் தீவில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்துமே! அவர்களின் தாய்மொழிக்கு ஆட்சிமொழி தகுதி கிடையாது.

சிங்களவர் ஒருவர்தான் அந்நாட்டின் குடியரசுத் தலைவராக வர முடியும் - அதுவும் அவர் புத்த மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

இந்த ஒரு சார்பு நிலை போதாதா - சிங்களத்திட மிருந்து தமிழ் தனியாகப் பிரிந்து தனி நாடாக மலர்வதற்கு?

செர்பியாவிலிருந்து விடுதலை பெற்றதாக கொசாவா 2008 டிசம்பரில் பிரகடனப்படுத்தியதை நெதர்லாந்தில் உள்ள சர்வதேச ஹேக் நீதிமன்றமும் அங்கீகரித்ததே! அதனைத் தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட உலக நாடுகள் அதனை அங்கீகரித்தனவே!

அதே நிலை கிட்டத்தட்ட இப்பொழுது ஈழத்திற்கு நெருங்கி வந்திருக்கிறது. இந்த வகையில் டெசோ சார்பில் ஆகஸ்டு 12இல் சென்னையில் நடைபெற விருக்கும் மாநாடு - அதற்கான நெருக்கத்தைக் கொடுக்கும் என்பதில் அய்யமில்லை.

தீர்மானம் என்ற ஒன்றுக்கு இடம் இல்லாமலேயே அந்தத் திசை நோக்கி நகர்த்திட சென்னை மாநாடு உந்து சக்தியாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. 3-8-2012

தமிழ் ஓவியா said...

மரியாதை இல்லை!

பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமை யான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.

பெரியார்(விடுதலை, 22.6.191973)

தமிழ் ஓவியா said...

அலகு குத்துவது - தீ மிதிப்பதுகேள்வி: அலகு குத்துபவர்கள் தீக்குழியில் நடப்பவர்களுக்கு வேதனை தெரியாமல் இருப்பது தெய்வ சக்திதானே?

பதில்: இல்லை. வலி என்பது நரம்பு மூலமாக அனுப்பும் செய்தி அந்த நரம்பை மரக்கடித்து விட்டால் எந்த வலியையும் தாங்க முடியும். அதற்குத் தான் தீ மிதிக்கிறவர்களும், அலகுக் குத்திக் கொண்டவர்களும் பழகியிருக்கிறார்கள்.

-சுஜாதா (குமுதம், 5.10.2005

தமிழ் ஓவியா said...

உண்மையைச் சொன்ன புத்தகத்திற்கு 22 லட்சம் டாலர்!நம் பேரண்டம் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தி உலகத்தைக் குலுக்கியவர் விண் அறிவியலாளர் கோப்பர் நிகஸ். பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறதேயன்றி சூரியன் ஒன்றும் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கவில்லை என்பதைச் சொல்லி பழம் பஞ்சாங்கங்களுக்கு அடி கொடுத்தவர் அவர்.

கோப்பர் நிகஸ் தமது அந்த அதிரடி ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்ட புத்தகத்தின் முதல்பதிப்பு நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்டது.

தொன்மைப் பொருள் ஆர்வலர்கள் குவிந்திருந்த அந்த ஏல விற்பனையில், கோபர் நிகஸ் புத்தகத்திற்கு எவ்வளவு விலை கிடைத்தது தெரியுமா? 22 லட்சம் டாலர்கள்! கிட்டத்தட்ட 90 லட்சம் ரூபாய்.

டி ரிவொல்யூசனிபஸ் ஆர்பியம் கொயலெசியம் (விண்ணக வட்டாரங்களின் சுழற்சி குறித்து) என்ற அந்த புத்தகம் 1543ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டதாகும்.

தமிழ் ஓவியா said...

மகாலட்சுமி குடியிருக்கும் இடம்!

பிரம்ம தேவன் உபதேசித்த மோகினி கவசம் பவிஷ் யோத்ர புராணத்தில் உள்ளது.

கரௌ மஹாலயா ரக்ஷேதங்குளிர் பக்த வத்ஸலா

வைஷ்ணவீபாது ஜங்கேச மாயா மேட்ரம் குதம் தாதா

பொருள்: மஹாலய தொடைகளையும் வத்ஸலா கை விரல்களையும் வைஷ்ணவி ஆடு தசைகளையும், மாயா ஆண், பெண் குறியையும்

மலத்துவாரத்தையும் காத்து ரட்சிக்க வேண்டும்.

ஆரண்யே ப்ராந்தரே கோரே ஸத்ரு ஸங்கே மஹாஹவே

ஸஸ்த்ர காதே விஷே பீதே ஜபன் ஸித்தி மாவப்னுயாத்

பொருள்: பிராமணர்களுக்கு யார் சாப்பாடு போட்டு ஆதரிக்கிறார்களோ அவர்களது இல்லத்தில் மகாலக்ஷ்மி நிரந்தரமாக குடியிருக்கிறாள்.

ஆதாரம்: பொன் பாஸ்கர மார்த்தாண்டன் எழுதிய தேவி தரிசனம் க்ஷிமிமிமி சோட்டானிக்கரை பகவதி அம்மன்.
4-8-2012

தமிழ் ஓவியா said...

மதம்

இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் துணை அட் டார்னி ஜெனரல் குர்ஷித் கான், பஞ்சாப் பொற் கோயிலுக்குச் சென்று பக்தர்களின் செருப்பு களைத் துடைத்தார். (அந்தக் கோயிலில் அது வழக்கம் - இந்தியாவின் குடியரசுத் தலைவரையே அவ்வாறு செய்ய வைக்க வில்லையா?)

இது இஸ்லாம் மார்க் கத்துக்கு விரோதம் என்று கூறி அவர் வகித்த துணை அட்டார்னி ஜெனரல் பதவியை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் பறிமுதல் செய்தது. பகுத்தறிவுக் கண்ணோட்டத்தால் இது ஒன்றும் நடந்துவிடவில்லை.

சீக்கிய மத சம்பந்தப் பட்ட சம்பிரதாயத்தை ஒரு முஸ்லீமானவர் எப்படி கை கொள்ளலாம் என்பதுதான் இதன் பின்னணியில் உள்ள இரகசியம்.

உலகம் முழுவதும் இருப்பவர் ஒரே கடவுள் என்று ஒப்புக்குச் சொல்லிக் கொண்டாலும், ஒரு மதத் துக் கடவுளை இன்னொரு மதத்துக்காரர் ஒப்புக் கொள்வதில்லை. (அந்த வகையில் ஒப்புக் கொள் ளாதவர் இன்னொரு மதக் கண்ணோட்டத்தின் படி நாத்திகர் தானே!)

இன்னொரு மதக் கட வுளையே ஏற்றுக் கொள் ளாதவர்கள்; இன்னொரு மதத்தின் சம்பிரதாயங் களை ஏற்றுக் கொள் வார்களா?

ஒரு மதத்துக் கடவு ளுக்கு ஒரு உருவம் மட்டு மல்ல; ஓராயிரம் உருவங்கள் உண்டு. இன்னொரு மதத் துக் கடவுளுக்கு உருவம் கிடையாது.

உருவ வழி பாட்டைக் காபீர் என்று கூறி வெறுத்து ஒதுக்கி விடுவார்கள்.

ஒருபடி மேலே சென்று ஒரு மதக்காரன் இன் னொரு மதத்தின் கடவுளை உடைத்துத் தூள் தூளாக் குகிறான் (நாத்திகர்கள் இந்த வேலையைச் செய்வ தில்லை)

இந்து மதம் போன்ற மதத்துக்குள்ளேயே ஏகப் பட்ட முரண்பாடுகள் உண்டு. நாமம் போட்ட வரைப் பார்ப்பதே பாவம் என்பான், திரு நீற்றுப் பட்டைக்காரன்.

நாமதாரி கூட்டத்துக் குள்ளேகூட குத்து வெட்டு உண்டு. பாதம் வைத்த நாமக்காரன் (வடகலை) பாதம் வைக்காத நாமக் காரனான தென் கலைக் காரனை நேரில் பார்த்து விட்டால் சுவரில் போய் முட்டிக் கொள்வான் - இதற்குப் பெயர் கண்டு முட்டு!

வடகலை, தென்கலைக் காரர்களிடையே ஒருவரைப் பற்றி இன்னொருவர் காதால் கேட்டாலே பாவம் என்று கூறி சுவரில் போய் முட்டிக் கொள்வான். இதற்குப் பெயர் கேட்டு முட்டு!

மதங்களின் யோக்கி யதைகளே இப்படித்தான் இந்த வள்ளலில் மதம்தான் மக்களை நல்வழிபடுத்து கிறதாம்.

வாயால் சிரிக்க முடியுமா?

மதம் யானைக்குப் பிடித் தாலே ஆபத்து - மனித னுக்குப் பிடித்தால் கேட் கவா வேண்டும்? - மயிலாடன் 4-8-2012

தமிழ் ஓவியா said...

நமது கேள்வி: சதயம், பூரட்டாதியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?

இப்படியெல்லாம் இதழ்கள் கட்டுரைகளை எழுதித் தள்ளுகின்றனவே - இந்த நட்சத்திரங்கள் எவ்வளவுக் காலமாக இருந்து வருகின்றன? இந்த நட்சத்திரங்களில் எவ்வளவு காலமாக எவ்வளவு மக்கள் பிறந்திருக்கிறார்கள்?

அப்பொழுதெல்லாம் இவர்கள் எதைப் படித்தார்கள்? இப்பொழுது மட்டுமே படிக்க முடிவதற்கு யார் கரணியம் எது காரணம் பார்ப்பனர்கள் மட்டும் படிக்கக் கூடிய ஒரே நட்சத்திரத் தில் பிறந்தார்களா?

ஒரு பெரியாரும், ஒரு காமராசரும், ஒரு திராவிடர் இயக்கமும் பாடுபட்ட பிறகுதானே நம் மக்களுக்குப் படிப்பு வந்தது? இதழ் நடத்தும் முதலாளிகளே! எம்மக்கள் உங்களுக்கு என்ன கேடு செய்தார்கள்? ஏன் அவர்களை இன்னும் வஞ்சிக்கிறீர்கள்? 6-8-2012