சர்க்கார் (அரசு) விடுமுறை நாள்கள்
இரு நூறு ஆண்டுகளாக நாம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். நம்முடைய அடிமைத்தளையை எந்த மதமும் அறுக்க வில்லை. பார்த்துக் கொண்டுதான் இருந்தன, எப்படி? உன்னுடைய தலை விதி, நீ அடிமையாக இருக்கும்படி நேரிட்டது என்று கூறுவதுபோல் இருந்தது. மதம் ஏற்படுத்திய அந்தத் தலை விதியை, நாட்டின் நலிவை தலைவர்கள், தங்கள் உழைப்பால் மண்டையில் அடித்து நொறுக்கினார்கள். தலை நொறுங்கவே - தளை அறுபட்டது. அடிமைநிலை மாறிற்று. சுதந்திரம் கிடைத்தது. ஆனால், ஓயா, உழைப்பின் பயனாகவும், பல உத்தமர்களின் தியாகத்தினாலும் பெற்ற சுதந்திரத்தை ஏற்று நடத்திய மறக்க முடியாத ஒரு சரித்திர நிகழ்ச்சியை, மதக் கோட்பாட்டின்படி நாள் கோள் பார்த்தே நடத்தினர் என்றால் - அதிலும் ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாட்டின்படி நல்ல நாள் பார்த்து சுதந்திர அரசாங்கத்தைத் தொடங்கினர் என்றால், மதக் கலப்பற்ற அரசியலையே இவர்கள் நடத்துகிறார்கள் என்று எப்படிக் கூற முடியும்? மதமா நமக்குச் சுதந்திரத்தை வாங்கித் தந்தது? மக்களின் உழைப்பன்றோ இன்று நாம் சுதந்திரமாக வாழ்வதற்கு அடிகோலித் தந்தது. இதனை மறந்து மதங்களின் பெயரால் ஏற்படுத் தப்பட்ட ஆவணி அவிட்டத்தையும், கிருஷ்ண ஜெயந்தியையும், விநாயக சதுர்த்தியையும், மஹாளய அமாவாசையையும், ஆயுத பூசையையும், பக்ரீத்தையும், மொகரத் தையும், தீபாவளியையும், வைகுந்த ஏகாதசியையும், சிவராத்திரியையும் அரசின் விடுமுறை நாள்களாகக் கொண்டாடலாமா?
மத சம்பந்தமான நாள்களை அரசு விடுமுறை நாள்களாக்கிக் கொண்டாடுவது, இருநூறு ஆண்டுகளாக நாங்கள் அடிமைப்பகுதியில் வீழ்ந்து கிடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த மதமே! எமது அரசியல் விடுதலைக்கு உதவி புரியாத மதமே! சமுதாய ஒற்றுமையைக் குலைத்து எங்களுக் கிடையே ஒட்ட முடியாத பிளவை உண்டாக்கிய மதமே இருக்கின்ற சிறி தளவு ஒற்றுமையையும், அரசியலில் நுழைந்து குலைத்து விடாதே! அரசியலை விட்டுச் சற்று விலகியிருப்பதே நீ எங்களுக்குச் செய்யும் பேருதவியாகும் என்று கூறி அதனை அரசியலோடு பிணைக்காமலும் அரசியலின் பெயரால் அதற்கு விடுமுறை நாள்களை ஏற்படுத்தி மீண்டும் அரசியல் நெருக்கடிகளை உண்டாக்கி, அரிதில் பெற்ற விடுதலையை இழக்காமல் இருப்பதையுமே மத அடிப் படையின்மீது எழுப்பப்படாத இன்றைய அரசாங்கம் தன்னுடைய கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றோம்.
------------------------------ அறிஞர் அண்ணா - " திராவிட நாடு" இதழ்-23.5.1948
7 comments:
இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வு: சரியான நேரத்தில் டெசோ மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா வரவேற்பு
புதுடில்லி, ஆக. 8- ஈழத் தமிழர்களின் வாழ்வுரி மைக்காக, நல்வாழ்வுக் காக மிகச் சரியான கால கட்டத்தில் டெசோ சார் பாக மாநாடு நடத்தப் படுவதாக மத்திய மரபு சாரா புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரி சக்தித் துறை அமைச்சரு மான பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர் களின் வாழ்வுரிமைக் காக தி.மு.க. தலைவர் கலைஞர் சரியான தரு ணத்தில் டெசோ மாநாட்டை நடத்துகி றார் என, மத்திய அமைச் சர் பரூக் அப்துல்லா பாராட்டியிருக்கிறார். உலகத் தமிழர்கள் எதிர் பார்க்கும் அளவுக்கு இலங்கைத் தமிழர் பிரச் சினைக்குத் தீர்வு காண டெசோ மாநாடு உதவி புரியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
டெசோ அமைப் பின் சார்பாக ஈழத் தமி ழர் வாழ்வுரிமைப் பாது காப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. மைதானத்தில் வரும் 12 ஆம் தேதி நடைபெறு கிறது. இந்த மாநாட்டில் தேசிய மாநாட்டுக் கட் சித் தலைவரும் மத்திய மரபுசாரா புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் துறை அமைச்சருமான பரூக் அப்துல்லாவும் பங் கேற்கிறார். டெசோ மாநாடு பற்றி நேற்று டில்லியில் பேட்டிய ளித்த பரூக் அப்துல்லா, தி.மு.க.தலைவர் கலைஞர் மிகச் சரியான நேரத்தில் டெசோ மாநாடு நடத்துகிறார் எனப் பாராட்டு தெரி வித்தார்.
மேலும் அவர் கூறிய தாவது:
இந்த மாநாட்டிற்கு தி.மு.க. ஏற்பாடு செய் திருக்கிறது. நமது அண்டை நாட்டில் போராடும் தமிழர்க ளுக்காக இம்மாநாடு நடக்கிறது. இது சரி யான தருணம். தி.மு.க. மற்றும் தி.மு.க. தலை வர் கலைஞரின் அறி வார்ந்த முடிவு என்றே கருதுகிறேன். இலங் கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக இந்நாட்டில் உள்ள மக்கள் மட்டுமன்றி உல கெங்கும் உள்ள தமிழர் களிடையே இது எழுச் சியை ஏற்படுத்தும்.
உலகத் தமிழர்கள் எழுச்சி கொள்ளவும் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவும் இது சரியான நேரம். அவர்கள் இன்னும் முகாம்களில் வாடுகி றார்கள். வீடுகளுக்குச் செல்ல இயலவில்லை. இலங்கை அரசு அத்து மீறலைக் கைவிட்டு தமிழர்கள் பூர்வீக இடங்களுக்குத் திரும்ப உதவி செய்ய வேண்டும். தமிழர்கள் அமைதியா கவும் இணக்கமாகவும் இலங்கையில் வாழ நட வடிக்கை எடுக்க வேண் டும்.
-இவ்வாறு மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கூறினார் 8-8-2012
சீயோன் பள்ளிகளை இழுத்து மூட வேண்டுமா?
தாம்பரம் அதன் சுற்றுப் பகுதிகளிலும் சீயோன் என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்பள்ளி நிருவாகத்தில் உள்ள பேருந்து ஒன்றில் ஓட்டை வழியாகச் சிறுமி விழுந்து மரணம் அடைந்தது மிகவும் வருந்தத்தக்கது. அந்த நிகழ்வுக்கும் பிறகு பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டன. பள்ளிகளும் சில நாட்கள் மூடப்பட்டன. 5000 மாணவ - மாணவிகளுக்கு மேல் கல்வி பயிலும் சீயோன் கல்வி நிறுவனங்களை நிரந்தரமாக மூடவேண் டும் என்று இந்து முன்னணி சுவரொட்டிகள் மூலமாகவும், துண்டு வெளியீடுகள் மூலமாகவும் பிரச்சாரம் செய்வது ஏன்? இதன் பின்னணி என்ன? சட்டப்படியான நடவடிக் கைகள் ஒரு பக்கம் மேற்கொள்ளப்படட்டும்! அதற்காக பள்ளிகளை இழுத்து மூடச் சொல்லுவது ஏன்? இதில் இந்து முன்னணி ஆர்வம் காட்டுவது ஏன்? கல்விக் கண் களைக் குத்தும் மனுதர்மப் பாதையா?
கும்பகோணத்தில் சிறீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக சின்னஞ்சிறு மலர்கள் கருகினவே - அதற்குப் பின் அப்பள்ளி இழுத்து மூடப்பட்டதா? 8-8-2012
தமிழன் என்றாலே துவேஷம்தானா?
கேள்வி: தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் ஏழாவது மணல் திட்டில் இலங்கைக் கடற்படையின் புதிய முகாம் அமைக்கப்பட்டுள்ளதுபற்றி?
- மு. பெரியசாமி, விட்டுக்கட்டி
பதில்: அங்கிருந்துதான் இலங்கைக் கடல் பகுதியின் எல்லை ஆரம்பிக்கிறது. ஆறாவது திட்டு வரை இந்தியாவின் கடல் எல்லை. நமது எல்லையில் ஒரு பாதுகாப்பு அரணும் இல்லை. தன் எல்லையைப் பாதுகாத்துக் கொள்வதில் இலங்கை முனைப்புடன் இருப்பதில் தவறில்லை. ஆனால், இந்திய மீனவர்களை அச்சுறுத்தக் கூடாது. காலம் காலமாக இருந்துவரும் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு எதையுமே சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்பதுதான் பரிதாப நிலை.
(கல்கி, 12.8.2012)
ஈழத் தமிழர்கள் பிரச்சினையாக இருந்தாலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையானாலும் இந்தப் பார்ப்பனர்கள் எதிரிகளின் பக்கம் நின்றுதான் வெண்சாமரம் வீசுவார்கள். நம் வீட்டுக் கச்சத் தீவைத் தூக்கிக் கொடுத்துவிட்டு, இப்படித் தொங்க வேண்டியுள்ளதே என்பதுபற்றி ஒரே ஒரு வரி எழுதமாட்டார்கள்.
எதிரிகளோடு சேர்ந்துகொண்டு துப்பாக்கியை நம் பக்கம் திருப்புவார்கள் - தமிழர்கள் என்றால் அவ்வளவுத் துவேஷ நஞ்சு இந்தப் பார்ப்பனர் களுக்கு! 8-8-2012
கிருஷ்ண ஜெயந்தியாம்...
அவதாரமா? ஆதிக்கடவுளா?
பிரம்மவைவர்த்த புராணம் என்றொரு ராஸிக புராணம் புளுகி வைத்திருக்கிறார்கள். வைவர்த்தம் என்றால் பரிணாம வளர்ச்சி எனப் பொருள். பிரம்மனின் உருமலர்ச்சிப் புராணமாகும் இது. சூத முனிவன் நைமிகாரண்யத்தில் பிற முனிவர் களுக்கு இப்புராணத்தைக் கூறினாராம். இதன் மூன்றாம் காண்டம் கிருஷ்ண அவதாரம், கிருஷ்ண லீலைகள் பற்றிக் கூறுகிறது.
பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்தபோது சொர்க்க லோகமும் அழிந்துவிட்டதாம் இவை இரண்டிற்கும் இடைப்பட்ட புவர்லோகம் அழிந்துவிட்டதாம். வைகுந்தமும் சிவலோகமும் காலியாகிவிட்டனவாம். (குடியிருந்தவர்கள் குளோஸ்) ஆனால், கிருஷ்ணனின் கோலோகம் பிரளயத்தின் போது எவ்வித மாற்றமும் இல்லாமலே இருந்ததாம்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கிருஷ்ணனை விஷ்ணுவின் அவதாரம் என்கிறார்கள். ஆனால், வைகுந்தம் வேறு - கிருஷ்ணனின் கோலோகம் வேறு என்கிறார்கள். ஒருபடி மேலே போய்ப் பரப்பிரம்மமே விஷ்ணுவல்ல, கிருஷ்ணனே என்கிறது! பீம்சிங்! இது என்ன புதுக் குழப்பம்? துக்ளக் சோ விளக்கவேண்டும்.
விஷ்ணு இன்னும் எப்படிக் கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது பாருங்கள்! கிருஷ்ணனின் வலது புறத்தில் நாராயணன் தோன்றியதாம். கிருஷ்ணனைப் போற்றி புகழ்ந்து எதிரில் உட்கார்ந்ததாம் நாராயணன். கிருஷ்ணனின் இடது புறத்தில் சிவன் தோன்றியதாம் பிரம்மா, யமன், சரசுவதி, மகாலட்சுமி, துர்க்கை, சாவித்திரி மன்மதன், ரதி என கடவுள் பட்டாளமே கிருஷ்ணன் உடலிலிருந்தே தோன்றினவாம்.
விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணன் எனக்கூறி அவனுக்குக் காமக் களியாட்டங்களைக் கற்பித்துக் கடைசியில் ஜேரா என்னும் வேடன் விட்ட அம்பால் காலில் காயம்பட்டு (டெட்டனஸ் எனும் விறைப்பு நோயால்) இறந்து போனான் என்று பாகவதம் கூறுகிறது.
எதை ஏற்பது? எதன் அடிப்படையில் கிருஷ்ண ஜெயந்தி? விளக்குவார்களா? விளங்கிக் கொள்ளாமலே, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடலாமா? பக்தர்களே, புத்தி மீதி இருந்தால் சிந்தித்துப் பாருங்களேன்!
-----------------------நன்றி:- "விடுதலை" 4-8-2008
கோகுலாஷ்டமியா?
இன்று கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம். பிறப்பு இறப்பு அற்றவர் உருவம் அற்றவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் வாய்ப்பறை கொட்டுவோர் அதற்கு நேர் எதிராக அறிவு நாணயமற்ற முறையில் கடவுள் பிறந்தார் என்றும், இந்த உருவத்தில் உள்ளார் என்றும், அந்தக் கடவுளுக்கும் பெண்டாட்டிகள், வைப்பாட்டிகள், பிள்ளை குட்டிகள் உண்டு என்றும் கூறும் அபத்தத்தை ஆபாசத்தை என்னவென்று சொல்ல!
கடவுள் சண்டை போட்டார்; கொலை செய்தார் விபச்சாரம் செய்தார்; சூழ்ச்சி செய்தார்; தந்திரம் செய்தார் என்றெல்லாம் கடவுள்கள் இந்து மதத்தில் கற்பிக்கப்பட்ட திலிருந்து இந்து மதத்தின் சாக்கடை நாற்றத்தையும் இவ்வாறெல்லாம் தெருப்புழுதியாக எழுதி வைத்துள்ள ஆசாமிகளின் ஆபாச சேட்டைகளையும் ஆறறிவுள்ள மனிதர்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?
இன்றைக்குக் கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுகிறார்களே இந்தக் கிருஷ்ணன் எப்படிப் பிறந்தானாம்?
தேவர்கள் எல்லாம் போய் உலகில் அதர்மம் அதிகமாகிவிட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்கவேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயினவாம் இவ்வாறு கூறுவது இந்து மதத்தின் அபிதானகோசம்தான்.
எவ்வளவுக் காட்டுமிராண்டித்தனத்தில் கடவுளின் கீழ்த்தர உற்பத்தி நடந்திருக்கவேண்டும்?
கடவுள்தானே தேவர்களையும், ராட்சதர்களையும் படைத்தான் என்கின்றனர். அப்படி இருக்கும்போது கடவுளால் படைக்கப்பட்ட ராட்சதன், கடவுளால் படைக் கப்பட்ட இன்னொரு தேவர்களை எப்படித் துன்புறுத்துவான்? கடவுளின் வளர்ப்பு சரியில்லையா?
எந்த அவதாரம் எடுத்தாலும் ராட்சதனைக் கொன்றான் ராட்சதனைக் கொன்றான் என்று எழுதி வைத்துள்ளார் களே, அந்த ராட்சசன் வம்சம் அழிந்து போய்விட்டதா அல்லது தொடர்கிறதா?
வரலாற்று ஆசிரியர்கள் எல்லாம் பார்ப்பன பி.டி. சீனிவாசய்யங்கார் உள்பட, இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று விநியோகம் செய்து வந்த விவேகானந்தர் வரை ராட்சதர்கள் என்று இதிகாசங்களிலும், வேதங்களிலும், புராணங்களிலும் சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று எழுதியுள்ளார்களே இதன் பொருள் என்ன?
திராவிடர்களை இழிவுபடுத்த, மட்டந்தட்ட, கொன் றொழிக்க, இட்டுக்கட்டி எழுதப்பட்ட சரக்குகள்தான் இவை என்பது விளங்கவில்லையா?
நாட்டில் நடப்பது ஆரியர் திராவிடர் போராட்டம் என்று தந்தை பெரியார் சொன்னதும் தேவர்கள் அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை என்று சி. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) 18.9.1953 அன்று திருவொற்றியூரில் பேசியதும் இதனை நிரூபிக்கின்றனவே!
பார்ப்பனர்களுக்காகப் போரிட்டவர்களுக்கு விழா கொண்டாடும்போது அவர்களை எதிர்த்துப் போரிட்ட திராவிடர்கள் என்ன செய்யவேண்டும்? அந்தக் கடவுள் களை வீதிக்கு வீதி போட்டுக் கொளுத்தவேண்டாமா?
தந்தை பெரியார் இராமன் படத்தை எரிக்கச் சொன்னதும், பிள்ளையார் பொம்மைகளை வீதிகளில் போட்டு உடைக்கச் சொன்னதும் இந்த அடிப்படையில் தானே?
புத்த மார்க்கத்தை ஒழிக்கத்தான் கிருஷ்ண அவதாரம் கற்பிக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.
புத்தர் ஒழுக்க நெறிகளைப் போதித்தார் கட்டுப் பாடுகளை, நியதிகளை வரையறுத்தார். ஆரியர்களின் யாகங்களை எதிர்த்தார். அவர்கள் வகுத்த வருணாசிரம அமைப்பை நிர்மூலப்படுத்தினார்.
அந்த ஒழுக்க நெறிகளுக்கு மாறாக ஆபாச உணர்வையும், விபச்சாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் ஒரு கதாபாத்திரத்தை (கிருஷ்ணனை) உருவாக்கி கவர்ச்சியைக் காட்டி மக்களை மதிமயங்கச் செய்த ஏற்பாடுதான் இது.
சினிமாக்காரர்களைக் காட்டியும், பாலுணர்வைத் தூண்டும் சமாச்சாரங்களை ஒளிபரப்பியும் மக்களை இப்பொழுது திசை திருப்பவில்லையா? மதி மயக்கம் செய்யவில்லையா? இந்த ஒழுக்கங்கெட்ட விவகாரங்களை இந்து மதத்தின் கிருஷ்ணாவதாரத்திலிருந்து கற்றுக் கொண்டவர்கள்தான் இவர்கள்.
குளிக்கும் பெண்களின் ஆடைகளைத் திருடிச் செல்வதும், நிர்வாணமாகக் கரைக்கு வந்து இரு கைகளையும் உயரே தூக்கிக் கும்பிட்டால்தான் ஆடைகளைக் கொடுப்பேன் என்று அடாவடித்தனம் செய்ததும் தான் கிருஷ்ணக் கடவுளின் சிறப்பாம்.
இந்தக் கேவலமான கடவுளின் பிறந்த நாள் என்று கூறி அரசு விடுமுறை வேறு விடுகிறது. செல்வி ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த இந்த விடுமுறை இப்பொழுதும் தொடர்வது நியாயந்தானா?
--------------------"விடுதலை” தலையங்கம் 1-9-2010
இரு கிருஷ்ணர்கள்!
டில்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி என்கிற பண்டிகையின் போது தீண்டாதவர்கள் என்கிறவர்களை எல்லாம் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பத்திரிகையில் காணப்படுகிறது. புராணங்களின்படி கிருஷ்ணன் என்பதாக ஒரு சுவாமியோ, ஆசாமியோ இருந்ததாக நாம் ஒப்புக் கொள்வதனால் அது ஒரே சாமியாகத்தான் இருந்திருக்கலாமே தவிர, டில்லிக்கு ஒரு கிருஷ்ணனும், தமிழ்நாட்டுக்கு ஒரு கிருஷ்ணனும் இருந்திருக்க முடியாது.
அப்படியிருக்க டில்லி கிருஷ்ணனை "தீண்டாதவர்கள் கோவிலுக்குள் போனால் ஓடிப்போகாமல் கோவிலுக்குள்ளாகவே தைரியமாய் உயிருடன் இருக்கும்போது, நமது தமிழ்நாட்டிக் கோவில்களில் உள்ள கிருஷ்ணன் மாத்திரம் தீண்டாதவர்கள் உள்ளே கோவிலை விட்டு ஓடிப்போவதோ அல்லது ஒரே அடியாய் செத்துப் போவதோ!
ஆனால், இந்த மாதிரி கிருஷ்ணனை வைத்து பூஜை செய்வதால் நமக்கு என்ன பலன் அவரால் உண்டாகக் கூடும். ஒரு மனிதன் உள்ளே வந்தால் தாக்குப் பிடிக்காத கிருஷ்ணன் யாருக்கு என்ன செய்ய முடியும்.
ஆதலால், நாம் தமிழ்நாட்டு கிருஷ்ணனைத் தூக்கிவிட்டு இனிமேல் டில்லி கிருஷ்ணனைத் தான் தருவித்துக் கொள்ள வேண்டுமெயல்லாமல் இந்த மாதிரி சக்தியில்லாத கிட்டப் போனால் ஓடிப்போகிற கிருஷ்ணன் இனி நமக்கு அரை நிமிஷங்கூட கண்டிப்பாய் உதவவே உதவாது.
-------------"சித்திரபுத்திரன்" என்னும் புனை பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதியது – "குடிஅரசு" 28-08-1927.
அவதாரமா? ஆதிக்கடவுளா?
பிரமவைவர்த்த புணம் என்றொரு ராஸிக புராணம் புளுகி வைத்திருக்கிறார்கள். வைவர்த்தம் என்றால் பரிணாம வளர்ச்சி எனப் பொருள். பிரம்மனின் உருமலர்ச்சிப் புராண மாகும் இது. சூத முனிவன் நைமிகாரண்யத்தில் பிற முனிவர் களுக்கு இப்புரணத்தைக் கூறினாராம். இதன் மூன்றாம் காண்டம் கிருஷ்ண அவதாரம், கிருஷ்ண லீலைகள் பற்றிக் கூறுகிறது.
பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்தபோது சொர்க்க லோகமும் அழிந்துவிட்டதாம் இவை இரண்டிற்கும் இடைப் பட்ட புவர்லோகம் அழிந்துவிட்டதாம். வைகுந்தமும் சிவ லோகமும் காலியாகிவிட்டனவாம். (குடியிருந்தவர்கள் குளோஸ்) ஆனால், கிருஷ்ணனின் கோலோகம் பிரளயத்தின் போது எவ்வித மாற்றமும் இல்லைமலே இருந்ததாம்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கிருஷ்ணனை விஷ்ணுவின் அவதாரம் என்கிறார்கள். ஆனால், வைகுந்தம் வேறு - கிருஷ்ணனின் கோலோகம் வேறு என்கிறார்கள். ஒருபடி மேலே போய்ப் பரப்பிரம்மமே விஷ்ணுவல்ல, கிருஷ்ணனே என்கிறது! பீம்சிங்! இது என்ன புதுக் குழப்பம்? துக்ளக் சோ விளக்கவேண்டும்.
விஷ்ணு இன்னும் எப்படிக் கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது பாருங்கள்! கிருஷ்ணனின் வலது புறத்தில் நாராயணன் தோன்றியதாம். கிருஷ்ணனைப் போற்றி புகழ்ந்து எதிரில் உட்கார்ந்ததாம் நாராயணன். கிருஷ்ணனின் இடது புறத்தில் சிவன் தோன்றியதாம் பிரம்மா, யமன், சரசுவதி, மகாலட்சுமி, துர்க்கை, சாவித்திரி மன்மதன், ரதி என கடவுள் பட்டாளமே கிருஷ்ணன் உடலிருந்தே தோன்றினவாம்.
விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணன் எனக்கூறி அவனுக்குக் காமக் களியாட்டங்களைக் கற்பித்துக் கடைசியில் ஜேரா என்னும் வேடன் விட்ட அம்பால் காலில் காயம்பட்டு (டெட்டனஸ் எனும் விறைப்பு நோயால்) இறந்து போனான் என்று பாகவதம் கூறுகிறது.
எதை ஏற்பது? எதன் அடிப்படையில் கிருஷ்ண ஜெயந்தி? விளக்குவார்களா? விளங்கிக் கொள்ளாமலே, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடலாமா? பக்தர்களே, புத்தி மீதி இருந்தால் சிந்தித்துப் பாருங்களேன்!
---------------- நன்றி: "விடுதலை" 20-8-2008
Post a Comment