நான் காங்கிரசில் சேர்ந்து விடப் போகிறேன் என்பதாக பலர் எனக்குப் பரிகாசக் கடிதங்களும், சில துர் எண்ணங்கள் கற்பிக்கிற கடிதங்களும் எழுதி வருகிறார்கள். நான் காங்கிரசில் சேருவதாக வைத்துக் கொண்டு பார்த்தாலும், காங்கிரசுக்கு மகத்தான செல்வாக்கும், பெருமையும் இருக்கின்ற காலத்தில் நான் அதில் சேருவதானால் எனக்கு உள் எண்ணம் ஏதாவது கற்பித்தால் அதற்கு அர்த்தமுண்டு.
இன்று அப்படி ஒன்றும் இல்லை. அது எப்படி இருக்கின்றது என்றால் ஜஸ்டிஸ் கட்சியானது 1926ம் முடிவில் எப்படி கடைசி மூச்சு வாங்கும் நிலையில் ஜீவநாடிகள் எல்லாம் விழுந்து போய் எடுத்துப் புதைப்பதற்கும் ஆளில்லாத ஸ்திதியில் இருந்ததோ, அந்த நிலையில் அதைவிட மோசமான நிலையில் கொள்கையற்று, தலைவர்களற்று, மானமற்று, நாணையமற்று, அழுவாரற்று சாகும் தருவாயில் இருக்கும் காங்கிரசில் நான் போய் சேருவதாய் இருந்தால் அதில் எனக்கு என்ன லாபம் அல்லது உள் எண்ணம் இருக்க முடியும் என்று எனது தோழர்களைக் கேட்கின்றேன்.
ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கும் போது கூட எனக்குப் பலவித துர் எண்ணம் கற்பித்தார்கள். ஜஸ்டிஸ் கக்ஷி உச்சஸ்தானத்தில் சுயமரியாதையோடு உயர் நிலையில் வாழ்ந்த காலத்திலும் அதன் தலைவர்களும் அரசாங்க (கேப்நிட்) மெம்பர்கள் முதல் மந்திரிகள் வரை என்னிடத்தில் "மரியாதையும், பக்தியும்" இருப்பதாய் காட்டிக் கொண்டிருந்த காலத்திலும் கூட அக்கக்ஷியால் ஒரு காதொடிந்த ஊசி கூட நான் எனது சொந்தத்திற்கு எதிர் பார்க்கவில்லை. பெறவும் இல்லை. அதனால் நான் எவ்வித பெருமையும் அடைந்து விடவுமில்லை என்பது எனது எதிரிகளுக்கும் தெரியும் என்று நினைத்திருக்கிறேன். (டாக்டர் சுப்பராயன் அவர்கள் காலத்திலாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயமாயும் தீண்டாமை விஷயமாயும் சில காரியங்கள் சாதித்துக் கொள்ள முடிந்தது என்னலாம்) மேலும் நான் என் சொந்த முறையில் அவர்களுக்காக பட்ட கஷ்டமும், நஷ்டமும் எனது நண்பர்களுக்குத் தெரியும் என்றும் நினைக்கிறேன்.
அப்படி இருக்க காங்கிரசில், அதுவும் உயிருக்கு மாத்திரமல்லாமல் அது செத்தால் சுடுவதற்கும் இடமில்லாமல் மயானத்துக்கும் ஊசலாடும் இக்காலத்தில் காங்கிரசினிடமிருந்து நான் என்ன எதிர்பார்த்துக் கொண்டு அதனிடம் நேசம் கொள்ள முடியும் என்பது எனக்கே விளங்கவில்லை. மனித சமூக நன்மையை அதிலும் தாழ்த்தப்பட்ட, ஏழ்மைப்பட்ட பாமரமக்களின் நன்மைக்காக காங்கிரசு மாத்திரமல்ல, இன்னும் எக்கட்சியின் நேசம் கொண்டாலும் கொள்வேனே ஒழிய மற்றபடி எனது ஜீவனோபாயத்துக்கோ வாழ்க்கை உபாயத்துக்கோ எக்கட்சியிலும் சேரமாட்டேன் என்றும், சேரவேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
--------------------------ஈ.வெ.ரா."பகுத்தறிவு" அறிக்கை 23.09.1934
34 comments:
ழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க 14 தீர்மானங்கள்
ஈழத் தமிழர்கள் தாங்கள் விரும்பும் அரசியலை தாங்களே முடிவு செய்து கொள்ளுவதற்கான முழு உரிமை வழங்கப்பட வேண்டும்!
இலங்கைத் தமிழர்களிடம் அய்.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்
ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க 14 தீர்மானங்கள்
ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் (சென்னை - 12.8.2012)
சென்னை, ஆக.13- ஈழத் தமிழர்கள் தாங்கள் விரும்பும் அரசியலைத் தாங்களே முடிவு செய்து கொள்வதற்கான முழு உரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற தீர்மானம் உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நேற்று (12.8.2012) சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் டெசோ சார்பில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
முதல் மூன்று தீர்மானங்களை தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. அவர்களும், அடுத்த மூன்று தீர்மானங்களை (4 முதல் 6 வரை) மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளரும், விழுப்புரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் க. பொன்முடியும் 7 முதல் 9 வரையிலான தீர்மானங்களை திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும், மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளருமான கலி. பூங்குன்றன் அவர்களும் 10 முதல் 12 வரையிலான தீர்மானங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளருமான இரவிக்குமார் அவர்களும், 13,14 ஆகிய தீர்மானங்களை மாநாட்டு வரவேற்பு குழுச் செயலாளர் அசன் முகம்மதலி ஜின்னா அவர்களும், முன்மொழிந்தனர் பலத்த கரவொலிக்கிடையே தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1 :
இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்து அய்க்கிய நாடுகள் அவையின் வல்லுனர் குழு, 2011 ஏப்ரல் மாதத்தில் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அய்.நா. மனித உரிமை ஆணையத் தால் விவாதிக்கப்பட்டு, 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதர வாக வாக்களித்த நாடுகளுக்கு இம்மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளவாறு இலங்கை அரசு நடவடிக்கைகளை உறுதியுடன் மேற்கொள்கிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு அய்.நா. மனித உரிமை ஆணையம் ஒரு மேற் பார்வைக் குழுவை நியமித்திட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
போர்க் குற்றங்கள் வெளியுலகுக்கு தெரிந்துவிடாமல் தடயங்களை அழிக்கும் முயற்சி!
தீர்மானம் 2:
2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட் டனர். பாதுகாப்பு வளையங்கள் (ளுயகநவல ஷ்டிநேள) என அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும், மருத்துவமனை களிலும்கூட, குண்டுகள் வீசப்பட்ட கொடூரம் உலகின் வேறெந்தப் போரிலும் நடை பெற்றிராத அரச பயங்கரவாதம் என்றே கூற வேண்டும். அந்தப் போர்க் குற்றங்கள் வெளியுலகுக்குத் தெரிந்து விடாமல் தடயங்கள் அனைத்தையும் அழிக்கும் முயற்சிகளும் நடைபெற்றுள்ளன.
இத்தகவல்கள் அனைத்தையும், அய்.நா. அவைப் பொதுச்செயலாளர் பான் கீ மூன் அவர்களால் அமைக்கப் பெற்ற, இந்தோனேஷியாவைச் சேர்ந்த தரூஸ்மான் தலைமையிலான மூவர் குழு தன் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
2011 ஏப்ரலில் பான் கீ மூன் அந்த அறிக்கையை வெளியிட்டுள் ளார்.
அவ்வறிக்கை வெளியாகி ஓராண்டு கடந்த பின்னரும், அங்கு நடந்த போர்க் குற்றங்களை ஆராய்வதற்குச் சுயேச்சையான சர்வதேசக் குழு அமைக்கப்படவில்லை.
பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து நிற்கும் உலகத் தமிழினம் உரத்த குரலில் நீதி கோரும் கட்டத்திற்கு இன்று வந்துள்ளது.
அய்.நா. அவையின் மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அங்கு நடைபெற்ற போர்க் குற்றங்கள் கண்டறி யப்பட்டு, போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு அய்.நா. அவையை வலியுறுத்துகிறது.
தமிழ் இனத்தின் பண்பாட்டுக் கூறுகளை அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு
தீர்மானம் 3:
தமிழ் இனத்தின் பண்பாட்டுக் கூறுகளை அழித்து, அவற்றின் வேர்களையும் சிதைக்கும் கொடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு, அவர்களுடைய பூகோள அடிப் படையிலான வாழ்க்கை நெறிகளையும் அழிக் கும் முயற்சிகளை வேகப்படுத்தி வரும் இலங்கை அரசின் திட்டங்களில் ஒரு பகுதிதான் சிங்கள மக்களை ஈழப் பகுதிகளில் குடியமர்த்தும் முயற்சியாகும்.
ஈழத் தமிழர்களின் கல்விக் கூடங்கள், பெரும்புகழ் பெற்ற யாழ் நூலகம் ஆகியவை இலங்கை ராணுவத் தினரால் அழிக்கப்பட்டன. ஈழத் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களான இந்துக் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றையும் அழித்து வருவதோடு, தமிழர்களின் மொழி அடையாளமும் சிதைக்கப்பட்டு வருகிறது.
தமிழில் எழுதப்பட்டிருந்த கடைகள், நிறுவனங்கள், மற்றும் சாலைகளின் பெயர்கள் சிங்கள மொழியில் எழுதப் பட்டு வருகின்றன. இப்போக்கின் தொடர்ச்சியாக ஊர்ப் பெயர்களும் சிங்கள மயமாக்கப்படும் சூழல் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து சிங்களவர்கள் அங்கு குடியேறுவதற்கேற்ற வகையில் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான கட்டமைப்புகளை வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை அரசு உருவாக்கி வருகிறது.
ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் சிறப்புரை (சென்னை - 12.8.2012)
இந்தியாவில் இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கக்கூடாது!
இதன் மூலம் இலங்கையில் பன்னெடுங் காலமாகத் தங்கள் தனித் தன்மையைப் பாதுகாத்து வாழ்ந்து வந்த தமிழர்களுக்கு ஆங்கிலேய ஏகாதி பத்திய அரசு செய்யத் துணியாத வன்செயலை ஒரு ஜனநாயக அரசு என்று வாய்ப்பறை கொட்டும் இலங்கை அரசு செய்து வருவது கண்டிக்கத்தக்க தும் உலகத்தால் ஏற்றுக் கொள்ள இயலாததும் ஆகும். இலங்கை அரசின் இத்தகைய கொடுஞ் செயல்களை உலக நாடுகளின் பிரதிநிதியாக விளங்கும் அய்.நா.மன்றம் உடனடியாகத் தடுத்து நிறுத்திட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. சமத்துவமும் அமைதியும் நிறைந்த வாழ்வு ஏற்பட இந்திய அரசு முனைந்து செயல்பட வேண்டும்.
ஈழத் தமிழர்களே முடிவு செய்ய வேண்டும்
தீர்மானம் 4 :
அண்டை நாடான இலங்கையில் அமைதியும் சமத்துவமும் நிலவுவதற்கு உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடமையும் உரிமையும் பொறுப்பும் இந்தியாவிற்கு உள்ளது.
பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், மொழிகள் ஆகியனவற்றை உள்ளடக்கி ஜனநாயக மரபுகளைப் பாதுகாத்துவரும் இந்திய அரசு அண்டை நாடான இலங்கையில் இந்த நிலைக ளுக்கு எதிரிடையாக நடைபெறும் நிகழ்வுகளைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி தமிழர் நெஞ்சங்களில் எழுந்துள்ளதை இம்மாநாடு இந்திய அரசுக்குச் சுட்டிக்காட்டுகிறது. எனவே, இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் மாறி, ஈழத் தமிழ்மக்கள் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு உரிமைகளை மீட்டெடுத்து சமத்துவ மும் அமைதியும் நிறைந்த வாழ்வை மேற்கொள்ள இந்திய அரசு முனைந்து, முழுமூச்சுடன் செயல்பட வேண்டும்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு அய்.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டு மென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
ஈழப் பகுதிகளில் தமிழ் மக்களின் நிலங்கள் வன்பறிப்புக்கு உள்ளாகியுள்ளது
தீர்மானம் 5 :
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்கள் அடிப்படை வசதிகள் எவையும் இல்லாது மரத்தடியிலும் திறந்த வெளிகளிலும் அவர்கள் உறவினர்களின் தயவிலும் முடங்கிக் கிடக்கின்றனர். முகாம்களை விட்டு வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு அளிக்கப் படும் உதவித் தொகை மிக மிகக் குறைவாக உள்ளது. அக்குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளுக்கே போராட வேண்டியுள்ளது. செய்வதற்கு வேலை ஏதும் கிடைக்காததால், மறு குடியமர்த்தப்பட்ட தமிழர்கள் வாழ வழியின்றி நரக வேதனை அனுபவிக்கின்றனர்.
ஈழப்பகுதிகளில் தமிழ் மக்களின் நிலங்களும் வீடுகளும் வன்பறிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சம்பூர், மன்னார், வவுனியா போன்ற பகுதிகளில் தமிழர் களுக்கு உரிமையான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, வழி வழியாக வாழ்ந்து வந்த பகுதிகளில் தமிழ் ஈழ மக்கள் நிலங்களைப் பறிகொடுத்த நிலையில் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் கொடுமைக்கு முடிவு கட்டும் முயற்சிகளை அய்.நா.
மன்றம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
இராணுவ ஆதிக்கம்
தீர்மானம் 6 :
இன்றைய இலங்கையில் ஜனநாயக ஆட்சி முறைக்குப் பதிலாக இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இராணுவம், அதன் நடவடிக்கைகளுக்காக, தமிழர் பகுதிகளில் தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகளை கையகப்படுத்திக் கொண்டுள்ளது. காலியாக உள்ள வீடுகளைத் தன் கட்டுப்பாட்டில் மேற்கொள்ளும் இராணுவம், அவற்றைக் காலி செய்ய மறுக்கிறது. இராணுவத்தின் அனுமதியின்றி வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழர்களின் வீடுகளில் எந்த சமூக நிகழ்ச்சிகளும் நடத்த முடியாது.
இலங்கை ராணுவத்தின் வன்முறையால் தமிழர்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர் இராணுவத் தினரே அங்கு மாவட்ட ஆட்சியராகவும் அரசு நிருவாகிகளாகவும் நியமிக்கப்படுகின்றனர். இன் றையத் தமிழ் ஈழம் ஓர் இராணுவ முகாம் போலக் காட்சியளிக்கிறது.
ஜனநாயக அடிப்படையிலான உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் அங்குள்ள தமிழர் களுக்குத் தங்களது குறைகளை எடுத்துக் கூறவும், பேசவும், அமைதியான முறையில் போராடவும் வழியில்லை. அவர்கள் எப்போதும் பெரும் பீதியில் உறைந்து கிடக்கின்றனர். தமிழீழப் பகுதியிலிருந்து ராணுவத்தை இலங்கை விலக்கிக்கொள்ள அய்.நா. நடவடிக்கை! தமிழ் இளைஞர்கள் பலர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர்.
பலர் சித்திர வதை முகாம்களில் சொல்லொணாத வேதனைக்கும், துயரத்துக்கும் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்ப் பெண்கள், இராணுவப் படையினரால் பாலியல் வன்முறை உள்ளிட்ட பல கொடுமைகளுக்கு ஆளாக் கப்படுகின்றனர். தமிழ்க் குழந்தைகள் துப்பாக்கி களைப் பார்த்துக் கொண்டு, இராணுவப் படையினர் கட்டவிழ்த்து விடும் வன்முறையால் பாதிக்கப்பட்டு, முடிவில்லாத அச்சத்துடன் வாழ்கின்றனர்.
போரின் பின் விளைவாக ஏறத்தாழ 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாக ஆக்கப்பட்டுள் ளனர் என்று இங்கிலாந்து அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் 2011ஆம் ஆண்டு அறிக்கை கூறுகின்றது. இருண்டு கிடக்கும் அவர்களின் எதிர் காலத்தை மேலும் அச்சுறுத்தும் வகையில், அவர் களின் மீது சிங்கள இராணு வத்தினர் பாலியல் வன் முறைகள் உள்ளிட்ட பல் வேறு சித்திரவதைகளைச் செய்து வருகிறார்கள்.
எனவே தமிழீழப் பகுதிகளிலிருந்து உடனடி யாக இராணுவத்தைச் சிங்கள அரசு விலக்கிக் கொள் வதற்கு அய்க்கிய நாடுகள் அவையும் உலக நாடுகளும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டு மென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இராணு வத்தைத் திரும்பப் பெறுவதை நேரடியாகக் கண்காணிப்பதற்கு, அய்க்கிய நாடுகள் அவை ஒரு பன்னாட்டுக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
ஈழத் தமிழர்களின் தொழில், வணிகம் சிங்களவர்களிடம் சிக்கித் தவிக்கிறது
தீர்மானம் 7 :
ஈழத் தமிழர்களின் தொழில், வணிக வாழ்வு முழுமையாகச் சிங்கள தலையீட்டில் சிக்கித் தவிக்கிறது. இராணுவம், குடிமக்கள் வாழ்க்கையில் அனைத்துப் பகுதிகளையும் ஆக்கிரமித்து, மொத்தப் பொருளாதாரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. வேளாண்மை, காய்கறி விற்பனை, விடுதிகள், உணவகங்கள் மற்றும் முடிதிருத்த கங்கள் கூட இராணுவத்தினரால் நடத்தப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் ஏ-9 நெடுஞ்சாலையில், முன்பு தமிழர்களின் பெட்டிக் கடைகள் பல இருந்தன;
விற்பனை செய்வோரும் இருந்தனர். தற்போது அவை அனைத்தும் சிங்கள முன்னாள் இராணுவப் படைவீரர்களால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளன. நல்லூர் கந்தசாமிக் கோயில் உள்ள பகுதிகளில் கூட, சிங்களவர் கடைகள் அமைந்துள்ளன. தமிழீழப் பகுதியில் உள்ள தமிழர் களின் மூலவளங்கள் சுரண்டப்படுகின்றன. வடக்குப் பகுதியில் ஏராளமாகக் கிடைக்கும் சுண்ணாம்புக் கற்களைச் சிங்களர்கள் சுரண்டி எடுத்துச் செல் கின்றனர்.மணல் வளம் மற்றும் வனவளம் அனைத் தும் வடக்கு, கிழக்குப் பகுதிகளி லிருந்து தெற்கு நோக்கிச் செல்கின்றன.
இயற்கை தந்துள்ள கனிமவளங்களின் மீதான மண்ணின் மைந்தர்களின் உரிமைகள் இவ்வாறு மிகக் கடுமையாக மீறப்பட்டு வருகின்றன.
பன்னெடுங்காலமாகத் தமிழ் மீனவர்கள் வாழ்ந்து வந்த வடக்கு, கிழக்குக் கடலோரப் பகுதிகளில் சிங்கள மீனவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாகத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வலிந்து குடிய மர்த்தப்பட்டுள்ள சிங்களர்களை உடனே அப்பகுதி களிலிருந்து திருப்பி அனுப்புவதோடு, மீண்டும் தமிழர்கள் தங்களின் தொழில், வணிக மற்றும் மூலவள ஆதாரங்களின் மீது உரிமை கொண்டோ ராய் அறிவிக்கப்பட வேண்டும். தமிழர்களின் வாழ்வில் இயல்பு நிலை ஏற்படுத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள, அய்.நா. அவை இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 8 :
ஈழப் பகுதிகளில் நடைபெற்ற இராணுவத்தினரின் கொடூரத் தாக்குதல்களுக்கு அஞ்சி இலங்கையி லிருந்து வெளியேறி, பல்வேறு நாடுகளில் அகதி களாக அல்லலுறும் தமிழர்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் சொந்த நாட்டைவிட்டு வெளியேறியதால் பிறநாடுகளில் கைதிகளாகச் சிறையில் வாடும் ஈழத் தமிழர்களை உடனடியாக, ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகளுக்கான ஆணையரிடம் (United Nations High Commissioner for Refugees) ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கை களை அய்.நா. மன்றம் மேற்கொள்ள வேண்டும்.
அவர் களுக்குத் தேவையான பொருளாதார உதவி களையும் பயண உரிம ஆவணங்களைப் பெற்றுத் தரும் பணியினையும் அய்க்கிய நாடுகள் அவையின் அகதிகளுக்கான ஆணையர் (UNHCR) மேற் கொள்ள வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக் கொள் கிறது.
இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்
தீர்மானம் 9 :
ஈழத்திலிருந்து வெளியேறி இந்தியாவில் அகதி களாக வாழும் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏதுவாக, மத்திய அரசு அனைத்து இலங்கை அகதிகளுக்கும் இந்தியக் குடியுரிமை அல்லது நிரந்தரமாக இந்தியாவில் வாழ்பவர் என்ற நிலை வழங்க வேண்டும் என்று இம்மாநாடு இந்திய அரசை வலியுறுத்துவதுடன், அகதிகள் தொடர் பான அய்க்கிய நாடுகள் மன்றத்தின் ஒப்பந்த ஆணை இந்தியாவில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் இந்த மாநாடு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 10 :
ஈழப் பகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கு அனைத்து அடிப்படை வாழ்வுரிமைகளும், ஜன நாயக உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படு வதற்கு முடிவு கட்டாதவரை இலங்கைத் தமிழர் களின் மறுவாழ்வு என்பது வெறும் கண்துடைப் பாகவும், தொலைதூரக் கனவாகவும் இருக்கும் என்று இம்மாநாடு கருதுகிறது. எனவே பின்வரும் செயல்பாடுகளே, ஈழத் தமிழர்களைச் சுயமரியாதை யோடும் உரிமையோடும் வாழவைக்கும் என்று இம்மாநாடு உறுதியாக நம்புகிறது.
இலங்கைத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
(1) இலங்கைத் தமிழர்களிடம் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும். அது தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சினையாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.
(2) கலாச்சாரத்தை இழந்து, எந்த இனமும், மக்களும் வாழவோ, தமது மொழியையும், அடை யாளத்தையும் பாதுகாக்கவோ முடி யாது. இலங்கை அரசு தமிழர் கலாச்சாரமும், மொழியும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். ஆனால் இலங்கை அரசு, அவற்றை அழிப்பதற்கான அனைத்து முயற்சி களையும் மேற்கொண்டு வருகிறது என்பதே வருந்தத்தக்க உண்மையாகும். ஓர் ஆட்சி மொழிக்கு உரிய தகுதி தரப்படாமல், தமிழ் வலுவிழக்கச் செய்யப்பட்டு வருகிறது. தமிழர் களின் பாரம்பரியத்தை அழிக்க அனைத்து முனை களிலும் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.
(3) ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறை பிடிக்கப் பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக் கப்பட் டுள்ளனர். அவர்கள் அனை வரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
(4) தங்களது நாட்டை விட்டு உயிருக்குப் பயந்து, பாரம்பரியமான தங்களது வாழ்விடங் களை விட்டு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் குடியேறி வாழும் இலங்கைத் தமிழர்கள், தங்களது தாய் நாட்டுக்கு எவ்விதத் தடையுமின்றிப் பாதுகாப்பாக வந்து போக அனுமதிக்கப்பட வேண்டும்.
(5) தமிழ்க் குழந்தைகளின் எதிர்காலம் வளம் பெற; தமிழர் பகுதிகளில் கல்வி அறிவை மேம்படுத் துதல், வடக்கு - கிழக்கு மாவட்டங் களில் முழுமை யாகச் செயல்படக் கூடிய பள்ளிகள் மற்றும் பல் கலைக் கழகங்கள் நிறுவுதல் மற்றும் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புதல் ஆகியவை முக்கியத் தேவை களாகும்.
(6) போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சேவைகளுடன் சிறப்பு மருத்துவ வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும். குறிப் பாக, கண்முன்னே நடந்த போரினாலும், குடும்பங்களுக்கு நேர்ந்த இழப்பாலும் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மனரீதியான அழுத்தங்கள் சரிசெய்யப்பட வேண் டும்.
(7)இலங்கை இராணுவத்தினரின் தாக்குதல் களால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் குடி யிருப்புகள், கடைகள், வணிக வளாகங் கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சாலைகள் போன்ற வற்றைச் செப்பனி டவும், சீர் செய்யவும் உதவிடும் வகையில் இந்திய அரசு, ஈழத் தமிழர் மறுவாழ்வு நிதியாக வழங்கியுள்ள ரூ.500 கோடி மேற்காணும் பணிகளுக்காக உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
இத்தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா தன் முதன்மைப் பங்கினை ஆற்ற வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றனர்
தீர்மானம் 11 :
இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பையும், நிவாரணத்தையும் உறுதிசெய்யும்போது, இலங்கைக் கடற்படையினால் இந்திய மீனவர்கள்மீது தொடுக்கப்படும் கொடுமைகளிலிருந்து அவர் களைப் பாதுகாப்பது நமது இன்றியமையாக் கடமையாகிறது. இலங்கை கடற்படையால் நிராயுதபாணிகளாக இருக்கும் அப்பாவித் தமிழக மீனவர்கள் ஈவிரக்கமின்றித் தாக்கப்படுகின்றனர்; கைது செய்யப்படுகின்றனர்; சுட்டுக் கொல்லப் படுகின்றனர்;
அவர்களது மீன்பிடிப் படகுகள் மூழ்கடிக் கப்படுகின்றன; அவர்கள் பிடித்த மீன்கள் கைப் பற்றப்படுகின்றன. தமிழ் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மனிதாபிமான மற்ற முறையில் நடத்தப்படுகின்றனர். இந்தியாவின் நிர்வாக எல்லைக்குட்பட்டி ருந்த கச்சத் தீவு இலங்கை அரசு வசம் ஒப்படைக் கப்பட்டதால், மீனவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்றாலே இலங்கை கடற்படையினர் அவர் கள் மீது தாக்குதல் நடத்தித் துன்புறுத்து கிறார்கள்.
இந்தக் கொடுமைக்கொரு முடிவுகட்ட, கச்சத் தீவை இந்தியா மீண்டும் தனது ஆளுகை யின் கீழ் கொண்டு வருவதோடு தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் இந்தியக் கடற் படைத் தளம் ஒன்றை இந்திய அரசு நிறுவ வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இலங்கை அரசின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது
தீர்மானம் 12 :
இலங்கைத் தமிழர்களைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பயிற்சி கொடுப்பதை இந்த மாநாடு ஏற்க இயலாது என்பதோடு, இனி அப்படிப் பட்ட பயிற்சிகள் அளிப்பதை அறவே தவிர்க்க வேண்டுமென்றும் மத்திய அரசை இந்த மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 13 :
ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்புக் காகத் தாய்த் தமிழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டினைச் சட்டவிரோதமானது என்றும், இந்த மாநாட்டிலே கலந்து கொள்வதற்காக, இலங்கை யிலிருந்து செல்பவர்கள்மீது கவனம் செலுத்தப்படும் என்றும் இலங்கை அரசின் சார்பில் மிரட்டலாக அறிவித்துள்ளனர். இலங்கை அரசின் இந்த ஜனநாயக எதிர்ப்புத் தன்மையை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அ.தி.மு.க. அரசின் தமிழீழ எதிர்ப்புப் போக்குக்கு கண்டனம்
தீர்மானம் 14 :
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எப்போதுமே விரோதப் போக்கினைக் கடைப்பிடிக்கும் அ.தி.மு.க. வும், அ.தி.மு.க. ஆட்சியாளர்களும் - அதன் தொடர்ச்சியாக இப்போதும் நாம் நடத்த ஏற்பாடு செய்த - ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்புக் காக இலங்கை மற்றுமுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள், ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டை சென்னையில் நடத்துவ தற்குத் தடையாக பல்வகையானும் இடையூறு களைச் செய்தனர். மேலும் காவல் துறையின் மூலம் அனுமதி மறுத்து, நீதிமன்றம் சென்றே அனுமதி பெற வேண்டும் என்னும் நிலையினை உருவாக்கிய தமிழக அ.தி.மு.க. அரசின் தமிழீழ எதிர்ப்புப் போக்கினை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக் கிறது.
- இவ்வாறு மாநாட்டில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
எங்கள் இயக்கத் தோழர்களுக்கு ஈடு இணை யார்?
இலட்சியத்தையே சுவாசக் காற்றாகக் கொண்ட கருஞ்சட்டைத் தோழர்களுக்கு நிகர் யார்?
தான் வாழ்கிற போதும் கொள்கைக் கோட்பாடுகளையே கால்களாகக் கொண்டு நடக்கின்றனர். தனது மரணத்திற்குப் பிறகும் தாம் சுவாசித்த கொள்கைக் காற்றில் எந்த வித மாசும், மாற்றமும் வந்து சேர்ந்துவிடக் கூடாது என்னும் தன்மையில் மரணசாசனம் எழுதி வைத்து விட்டல்லவா மறைகின்றனர்?
இப்பொழுது இன்னும் ஒரு படி மேலே! சத்தை இழந்து செத்துப் போகும் இந்த உடல் மண்ணுக் கும் நெருப்புக்கும் இரையாவதை விட ஏன் பிறருக்குப் பயன்படக்கூடாது என்று சிந்திக்க எத்தனைப் பேர்களால் முடியும்?
மரணம் என்றாலே பெரும் அச்சத்தில் உறையும் மக்கள் மத்தியிலே தந்தை பெரியார் இயக்கத்தில் தம்மை ஒப்படைத்துப் பக்குவப்பட்ட கறுஞ்சட்டைத் தோழர்கள் தனது உடலை மருத்துவக் கல்லூரி களில் ஒப்படைக்க முன்வர ஆரம்பித்து விட்டார்கள்.
மருத்துவம் பயிலும் இரு பால் மாணவர் களுக்குப் பயன்படவேண்டும் என்று கருது கிறார்கள். உயிரோடு இருக்கும்போதே சம்பந்தப் பட்ட மருத்துவ மனைகளில் பதிவு செய்தும் வைத்துள்ளார்கள்.
இதோ ஒரு பெரியார் பெருந்தொண்டர்: கரூர் நகர திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவர் மானமிகு கு.முருகேசன் அவர்கள் (வயது 87), அவருடைய பிறந்த நாள் கடந்த பத்தாம் தேதி.
அதனை ஒரு விழாவாகக் கூட எடுத்துக் கொள்ள வில்லை. அந்த நாளில் அவர் என்ன செய்தார் தெரியுமா?
எண்ணிப் பார்த்தால் அணுக்கள் எல்லாம் சிலிர்க்கின்றன! தனது மரணத்துக்குப் பின் தம் உடலை மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கும் பத்திரத்தில் கையொப்பமிட்டு கரூர் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் மானமிகு மு.க. இராசசேகரனிடம் அளித்தார்.
அத்துடன் நிறுத்திக் கொண்டாரா? தான் மட்டுமா? தன் குடும்பமே அந்தக் கொள்கைத் தடத்தில் பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தனை பேர்களால் சாத்தியப்படக்கூடியது? தன் இணையர் மருதாம்பாள், மகன் சித்தார்த்தன் ஆகியோரும் தங்கள் உடல்களை தங்கள் மரணத்துக்குப் பின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒப் படைக்கும் பத்திரத்தில் கையொப்பமிட்டு அளித் தனர்.
சிறிய அளவில் வீட்டு அளவில் எளிமையான நிகழ்ச்சியாக அமைந்தது இது. அவருக்குக் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பற்றி எழுத்தாளர் சோலை அவர்களால் எழுதப்பட்ட வீரமணி - ஒரு விமர்சனம் என்ற நூலை மாவட் டக் கழகத் தலைவர் அளித்துப் பாராட்டினார்.
இதற்கு ஒத்துழைப்புத் தந்த முருகேசனார் குடும்பத்தைச் சேர்ந்த மகள் மலர்க்கொடி, மகன் சித்தார்த்தன், அழகிரி, இணையர் மருதாம்பாள் ஆகியோருக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இதன் மகிழ்வாக பெரியார் பெருந்தொண்டர் முருகேசனார் விடுதலை வளர்ச்சிக்கு ரூ நூறு நன்கொடையையும் அளித்தார்.
இப்பொழுது சொல்லுங்கள். திராவிடர் கழகத் தோழர்களுக்கு ஈடும் இணையும் இந்தத் தரணி யிலும் உண்டோ?
டெசோ மாநாடு - ஒரு கண்ணோட்டம்! எதிரி யார்? கலைஞரா? டெசோவா? ராஜபக்சேவா? - தீர்மானியுங்கள்!
டெசோ அமைப்பின் சார்பில் சென்னையில் நேற்று காலை (12-8-2012) ஓட்டல் அக்கார்டில் நடைபெற்ற ஆய்வரங்கத்திலும் சரி, மாலை சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.திடலில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டிலும் சரி ஆற்றப்பட்ட உரைகள், தெரிவிக்கப்பட்ட கருத்துகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் நுணுக்கமானவை, ஆழமானவை, தொலை நோக்கு, உடனடி நோக்கு இவைகளை உள்ளடக்கமாகக் கொண்டவை.
தமிழ்நாட்டு அளவில் நமது இயக் கங்கள் செயல்பட்டு வரும் தன்மை, இயக்கத்தால் வெளிப்படுத்தப்பட்ட கருத் துகள், தீர்வுகள் இந்திய எல்லைகளையும் தாண்டி உலகச் சிந்தனையாளர்களையும், ஆய்வாளர்களையும் ஈர்த்துத்தான் உள்ளன என்பது மனநிறைவைத் தரக் கூடியதாகும்.
உள்நாட்டு ஊடகங்களாகிய பூனை கள் தங்கள் கண்களை மூடிக் கொண்டு, பூலோகமே இருண்டு கிடக்கிறது என்று நினைத்திருந்த - செயல்பட்டு வந்த மமதைக்கு - ஆணவத்திற்கு இதன் மூலம் சரியான சவுக்கடி கிடைத்துவிட்டது.
ஏதோ தமிழர்கள் ஏதோ ஒரு உணர் வால் (சிலரது பார்வையில் வெறியால்) ஈழப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு, சோம்பல் முறிக்கின்றனர் அல்லது சிலம்பம் ஆடுகின்றனர் என்று மெத்த அறிந்த மே(ல்)தாவிகள் போல சண்டப் பிரசண்டம் செய்து வந்தார்களே - அவர்கள் யாராக இருந்தாலும் சரி - காலை, மாலை இரு நிகழ்ச்சிகளிலும் வெளிநாட்டுப் பேராளர்கள் வெளிப் படுத்திய கருத்துகள், உணர்வுகள், தெரிவித்த தகவல்கள், இலங்கைத் தீவில் இனப்படுகொலை நடை பெற்றுள்ளது உண்மைதான்; பேரினவாதம் என்னும் மதம் கொண்ட சிங்கள இனவாதத்தோடு அரசு பயங்கர வாதத்தில் அவ்வரசு ஈடுபட்டு இருப்பது உண்மையே.
போர்க்குற்றம் என்பது அதிகமாகவே நடை பெற்றுள்ளது; அதற்குக் காரண மானவர்கள் நீதிமன்றத்தில் கண்டிப் பாகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். (லைபீரிய முன்னாள் அதிபர் சார்லஸ் டெய்லர் உள்நாட்டுச் சண்டை யின்போது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வர்கள் கொல்லப்பட்டனர் என்ற நிலை யில், போர்க் குற்றவாளியாக அறிவிக்கப் படவில்லையா? அய்.நா. வால் அமைக்கப் பட்ட சிறப்பு நீதிமன்றம் கடும் தண்ட னையை அளிக்கவில்லையா?)
இலங்கைத் தீவில் நிலவும் இனவாத, மதவாத ஆட்சியமைப்பின் கீழ், இன் னொரு இனமான அத்தீவின் பூர்வ குடிகளான தமிழர்கள் தன்மானத்துடன், தேசிய இனத் தனித் தன்மையுடன் மொழி, பண்பாடு என்னும் அடையாளத் துடன் மனித உரிமை என்னும் தடத்தில் கால் பதிக்கும் தன்மையுடன் வாழ்வதற்கு வாய்ப்பே இல்லாத நிலையில், தனி ஈழத்தில்தான் இவையெல்லாம் காப் பாற்றப் படமுடியும் என்பதை நாடு, மொழி, இனம் கடந்த அறிஞர் பெருமக்கள் எடுத்துச் சொன்னதைப் பார்த்த பிறகாவது இந்தியாவில் உள்ள சில கட்சிகளும், அவற்றின் தலைவர்களும், குறிப்பாக இந்திய அரசும், இன்னும் சரிவரப் புரிதலின்றித் தவிக்கும் சில வெளிநாட்டவர்களும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கான வெளிச்சத்தை டெசோ நடத்திய மாநாடு வாரி வழங்கி இருக் கிறது.
இலங்கை, சிங்களவரான இடதுசாரித் தலைவர்
குறிப்பாக இடதுசாரித் தலைவராகக் கருதப்படும் இலங்கையைச் சேர்ந்தவரும், இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் ராஜபக்சேயை எதிர்த்துப் போட்டியிட்ட வருமான விக்ரமபாஹூ கருணாரத்ன மாநாட்டில் வெளியிட்ட கருத்தினைப் பார்த்த பிறகாவது கபோதிகள் தங்கள் கண்களைத் திறந்து கொள்ள வேண்டும். கபாலத்தைத் திறந்து மூளைக்குள் செலுத்த வேண்டும்.
தமிழர்கள் பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு என்று ஒரு நன்மையையும் அதிபர் ராஜபக்சே செய்துவிடவில்லை. இலங்கை விவகாகரத்தில் இந்தியா மேற்கொண் டுள்ள நிலை முற்றிலும் தவறானது. தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுப் பதில் இந்திய அரசு ஈடுபட வேண்டும். மாநாட்டில் கலந்து கொள்ளவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வர்களுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே மிரட்டல் விடுத்தது சரியல்ல என்று முத்திரை பொறிக்கப்பட்ட கருத்துக்களை அவரிடமிருந்து தெரிந்து கொண்ட பிறகாவது கண்களைக் கட்டாயமாக மூடிக்கொண்டிருக்கும் இந்தியாவில் உள்ள இனத் துவேஷப் புத்திரர்கள் கொஞ்சம் இமைகளைத் திறக்க வேண்டும்.
சிங்களவரான இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி, சரத் என் சில்வா முள்வேலிகளுக்குள் முடங்கிக் கிடந்த ஈழத் தமிழ் அகதிகளைப் பார்த்துக் கண்ணிர் சிந்தி வெளியிட்ட கருத்துகள் இந்த இடத்தில் எண்ணிப் பார்க்கத் தகுந்தவையாகும்.
நமது நாட்டின் சட்டத்தின்மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழர்களின் துயரங்கள் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப் படவில்லை. இலங்கையில் சிறுபான்மை யினர் பெரும்பான்மையினர் என்ற இரண்டு இனம் இல்லை; ஒரே இனம் என்று நாம் சொல்லிக் கொண்டிருப்ப தெல்லாம் பச்சைப் பொய்கள்.
இவைகளை நான் பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறேன். இந்நிலை நீடித்தால் விடுதலைப்புலிகளின் போர் மீண்டும் வெடிக்கலாம் இப்படிச் சொன் னதன் மூலம் இலங்கை அதிகாரி களால் தான் தண்டிக்கப்படலாம்; கவலையில்லை என்றார் இலங்கை தலைமை நீதிபதி இதற்குப் பிறகும் யாரேனும் தூங்கினால் அவர்கள் பாசாங்கு தூக்கக்காரர்கள் தானே!
தனியீழம்
தனியீழம் பற்றிய தீர்மானம் மாநாட்டில் இல்லையே என்று ஒரு பிரச்சினையைக் கிளப்பி, மாநாட்டின் வீரியத்தை நசுக்கப் பார்த்தனர் சிலர். தனியீழம் என்பதில் உள்ள ஆர்வத்தை விட, எதையாவது காட்டி மாநாட்டைப் பலகீனப் படுத்திக் காட்ட வேண்டும் என்ற உள்ளக் கிடக்கை - உள் நோக்கம் என்னும் நச்சுக் கொடுக்கு இதற்குள் பதுங்கி இருக்கிறது
மாநாட்டுக்கு விடுதலைப் புலிகள் வருவார்கள் - அவர்களின் ஊடுருவல் நடக்கப்போகிறது - நாட்டுக்கு ஆபத்தோ ஆபத்து என்று சொல்லி மாநாட்டைத் தடை செய்ய வேண்டும், நடத்திட அனும திக்கக்கூடாது என்று நீதி மன்றத் திலேயே கூறும் மனப்பான்மை படைத்த ஓர் அரசு நாட்டில் தற்போது உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டால், மாநாட்டில் தனியீழம் பற்றித் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று சொல்லியிருந் தால், அது ஒன்று போதாதா வெறும் வாயை மெல்லும் ஆட்சியாளர்களுக்கு?
செவ்வாய்க் கிரகத்தில் ஒரு நீதி மன்றத்தை ஏற்படுத்தி, அதனிடம் தடை கோரும் மனுவைத் தூக்கிக் கொண்டு ஓடியிருப்பார்கள் என்பது கோலி விளை யாடும் சிறுவனுக்கும் தெரிய வேண்டிய சாதாரண தகவலாகும்.
அதே நேரத்தில் மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களைக் காழ்ப் புணர்ச்சிக் கண்ணோட்டத்தைக் கழற்றி வைத்துவிட்டுக் காண்பது நல்லது.
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வைத் தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில், அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு அய்.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்று இம் மாநாடு வலியுறுத்துகிறது (தீர்மானம் எண்.4)
இலங்கைத் தமிழர்களிடம் அய்க்கிய நாடுகள் மன்றத்தின் மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அது தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சினைக்காக முன்னிலைப்படுத்தப் பட வேண்டும். (தீர்மானம் எண். 10 (1))
இந்தத் தீர்மானங்களுக்கான பொருள் என்ன என்பதை அழுக்காறு என்னும் அழுக்கை நீக்கி அறிவைத் துலங்கச் செய்து, திறந்த மனத்துடன் அணுகட்டும். விடயம் பளிச்சென்று பற்றிக்கொள்ளுமே!
தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்
திரிபுவாதத்தில் சேற்றை மறைத்து வைத்து வீசும் நண்பர்களுக்குத் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வைத்த வேண்டுகோள் முக்கியமானது.
தோழர்களே - சகோதரர்களே! தேவையற்ற விமர்சனங்களைத் தவிருங்கள்! பொது எதிரி யார் என்பதில் கவனம் செலத்துங்கள்!
கலைஞரா?
டெசோவா?
ராஜபக்சேவா?
கலைஞர்தான் உங்களுக்கு எதிரி என்றால் தாராளமாக ராஜபக்சேயின் தோளில் ஏறி சவாரி செய்யுங்கள்! என்றாரே தமிழர் தலைவர்!
தாய்க் கழகத்தின் தலைவர் தரும் இந்த விண்ணப்பத்தில் விகற்பங்கள் கிடையாது. விளையாட்டுக்குக் கூட உள்நோக்கமும் கிடையாது.
இறந்த தமிழர்கள் ஒரு பக்கம்! இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு உதவி என்னும் குருதிக் கொடை கொடுப்போம் வாருங்கள்! வாருங்கள்!!
பக்குவப்பட்ட தலைவர்களாக முதிர வேண்டாமா? மக்களுக்கு வழி காட்டும் தலைவராக மலர வேண்டாமா?
அரசியல் காழ்ப்புணர்ச்சி என்னும் நஞ்சை தமிழர் நலன் எனும் உணவில் கலக்க ஆசைப்படலாமா?
தமிழர் தலைவர் அழகாகச் சொன் னாரே - எங்களை விட இன்னும் தீவிர மாக நீங்கள் செயல்பட முடியுமானால் தாராளமாக அதனைச் செய்யுங்கள் - நாங்கள் குறுக்கே நிற்கமாட்டோம் என்றாரே! தாய்(கழகம்) சொல்லுகிறது. தட்டாதீர் பிள்ளைகாள்!
உலகின் உச்சிக்கே சென்ற சிறப்பு!
டெசோ சார்பில் மாநாடு நடத்தப்படும் என்ற தகவல் வெளிவந்த நாள் முதல் பல்வேறு வகையான விமர்சனங்கள் - எதிர் விமர்சனங்கள் ஊடகங்களை ஆக்ரமித்துக் கொண்டன.
மாநாடு நடக்குமா? அப்படியே நடந்தாலும் அம் மாநாட்டில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்களா? என்ற வினாக் கணைகளும் முன் வைக்கப்பட்டன.
இவை எல்லாம் முறியடிக்கப்பட்டு, மாநாட்டுக் கான அழைப்பிதழ்களும், விளம்பரங்களும் வெளிவந்து, மாநாட்டுக்கான பந்தல் போன்ற அடிப்படைப் பணிகள் நிறைவுற்று, தமிழ்நாடு, இந்திய நாடு என்கிற எல்லைகளையும் கடந்து பெரும் எதிர்பார்ப்பு என்கிற கட்டத்தை அடைந்த நிலையில்,
தமிழ்நாட்டில் நடைபெறும் அ.இ.அ.தி.மு.க. அரசு - அரசு என்ற நிலைப்பாட்டையும் தாண்டி, காழ்ப்புணர்ச்சியுடனும், அரசியல் உள்நோக்கத் துடனும், இந்த மாநாடு நடைபெற்றால் அதன் பலன் அரசியலில் தமக்கு எதிராக உள்ளவர் களுக்குப் போய்விடுமோ என்ற அச்சத்துடன், மாநாட்டுக்குக் காவல்துறை அனுமதி இல்லை என்கிற சிறுபிள்ளைத்தனமான ஒரு செயலில் இறங்கியது வேதனைக்குரியது.
நீதிமன்றம் வரை செல்லவேண்டிய ஒரு நிலை - மாநாடு நடைபெற்ற நேரத்திற்கு மூன்று மணிக்கு முன்பு வரைகூட எந்த இடத்தில் மாநாடு நடைபெறும் என்ற கேள்விக்குறி செங்குத்தாக மக்கள் மத்தியில் எழுந்து நின்றது.
இது - இதற்கு முன்பு எங்கும் கேள்விப்படாத ஒரு நிலையாகும். என்றாலும் இறுதி வெற்றி யாருக்கு? இறுதியாகச் சிரிப்பவர்கள் யார்? என்ற கேள்விக்கு - நியாயத்தின் பக்கமும், உண்மையின் பக்கமும்தான் என்ற விடை சென்னை உயர்நீதி மன்றத்தின் மூலம் கிடைத்து விட்டது.
அதற்குப் பிறகும் உச்சநீதிமன்றம் வரை சென்று அதன் கதவுகளைத் தட்டினார்கள் என்றால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெப்பம் எத்தனை டிகிரி என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாநாட்டை நடத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் வாயு வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இல்லை, இல்லை - ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திட லிலேயே நடத்திக் கொள்ளலாம் என்று உயர்நீதி மன்றத்தின் ஆணையை ஏற்று மூன்றே மணி நேரத்தில் மாநாட்டுப் பந்தலில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள், இமாலய சாதனை என்றே சொல்ல வேண்டும்.
தோழர்களிடையே ஒரு வெறி உணர்வுடன் கூடிய உற்சாகம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த அரசியல் சக்திகள் - அதிகாரப் பீடங்கள், தம் மனப்போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுமா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஊடகங்கள் ஓர் ஆரோக்கியமான திசையில் தம் பயணத்தைத் தொடங்கினால் கூட நல்லதுதான்.
மாநாடு திட்டமிட்டபடி அதே இடத்தில் நடந்தது என்பது உட்பட மாநாட்டின் ஒவ்வொரு நட வடிக்கையும் கண்ணில் ஒத்திக் கொள்ளத் தக்கதாக, கண்ணியமான ஒளியுடன், மிகுந்த கட்டுப்பாட்டோடு, நீதிமன்றத்தின் கட்டளை களையும் இன்னொரு பக்கத்தில் கவனத்தில் கொண்டு, எடுத்துக்காட்டான மாநாடாக நடை பெற்றதை வரலாறு என்றென்றும் சிறப்பான வகையில் பாடம் சொல்லிக் கொண்டே இருக்கும் என்பதில் அய்யமில்லை.
நேற்று காலை நடைபெற்ற ஆய்வு அரங்கம், மாலையில் நடைபெற்ற மாநாடு - இவற்றில் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள், நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் மாநாட்டின் தகுதியையும், மாண்பினையும் உலகத்தின் உச்சி மேட்டுக்கே கொண்டு சென்றுவிட்டன என்று சுருக்கமான சொற்களில் சொல்லலாம். தடைகளையெல்லாம் தாண்டி பல்லாயிரக் கணக்கான மக்கள் குவிந்தது சாதாரணமானது அல்ல - மக்களின் இந்த மனக் கண்ணாடியைப் பார்த்தாவது மனமாற்றம் அடைய வேண்டியவர்கள் மனமாற்றம் அடைவார்களா? எங்கே பார்ப்போம்!
ஈழத்தமிழர் பிரச்சினை - தனிமனிதரால் அல்ல எல்லோரும் சேர்ந்து சுமப்போம் வாருங்கள்! டெசோ நடத்திய மாநாட்டில் மாநாட்டுத் தலைவர் கலைஞர் அழைப்பு
சென்னை, ஆக. 13 - ஈழத்தமிழர் பிரச்சினையில் நாம் எல்லோரும் சேர்ந்து பாடுபடுவோம் வாரீர் என்று பொது அழைப்பை விடுத்தார் தி.மு.க. தலைவரும், மாநாட்டின் தலைவருமான கலைஞர் அவர்கள். சென்னையில் இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எழுச்சியோடு நடைபெற்ற டெசோ மாநாட்டில் தலைமையுரையாற்றிய தலைவர் கலைஞர் அவர்கள் `` இலங்கைத் தமிழர்களின் அல்லல் தீர, `டெசோ மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை அனைவரும் ஒன்றி ணைந்து வலுப்பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வு பெற அனைவரையும் ஒருங்கிணைத்து தொடர்ந்து போராடுவேன் என்றும் குறிப் பிட்டார்.
டெசோ அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாது காப்பு மாநாட்டில் கலைஞர் அவர்கள் ஆற்றிய தலைமையுரை வருமாறு:-
கழகத்தின் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களே, இந்த மாநாட்டினுடைய திறப்பு விழாவை நடத்தி வரவேற்புரை ஆற்றிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே, லோக் ஜன சக்தி கட்சித் தலைவர், என்னுடைய நீண்டநாள் நண்பர், திரு.ராம்விலாஸ் பஸ்வான், எம்.பி., அவர்களே, தேசிய மாநாட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர், திரு.எஸ்.டி.ஷாரிக், எம்.பி., அவர்களே, தேசியவாதக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. கோவிந்தராவ் அடிக் அவர்களே, இலங்கையில் உள்ள நவ சமா சமாஜா கட்சியின் தலைவர் டாக்டர் திரு.விக்ரம பாகு கர்ணரத்தினே அவர்களே, டெசோ அமைப்பின் உறுப்பினர் களான, தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர், இளவல் திரு. கி.வீரமணி அவர்களே,
விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தம்பி திரு.தொல்.திருமாவளவன், எம்.பி., அவர்களே, பேராசிரியர் தம்பி சுப.வீரபாண்டியன் அவர்களே, திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களே, உலகின் பல நாடுகளிலிருந்தும் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர் லாந்து, சுவீடன், நைஜீரியா, நார்வே, மொராக்கோ, துருக்கி, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ள விருந்தினர்களே, கற்றறிவாளர்களே, புலம் பெயர்ந் துள்ள ஈழத் தமிழர்களே, இந்தியத் தமிழர்களே, நன்றியுரை ஆற்றவுள்ள சென்னைமாவட்டக் கழகச் செயலாளர் தம்பி ஜெ.அன்பழகன் அவர்களே, பெரியோர் களே, தாய்மார்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே, ஈழத் தமிழர்களின் இனிய விடியலைக் காண் பதற்காக களத்தில் நின்றும், தியாக வேள்விகள் புரிந்தும், உயிர் விட்டு கல்லறைகளாக மாறி விட்ட மாவீரர் களாம், தியாகத் தங்கங்களுக்கு என் வீர வணக்கத்தைச் செலுத்தி இந்த என் உரையைத் தொடங்குகிறேன்.
இலங்கைத் தமிழர்களை ஆதரித்து...
1956ஆம் ஆண்டிலேயே தீர்மானம்! 1956ஆம் ஆண்டு சிதம்பரம் நகரில் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்ற கழகப் பொதுக் குழுவில் இலங்கைத் தமிழர்களை ஆதரித்தும், அவர்களைப் பாதுகாப்பதற்கு வழி வகுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும் தீர்மானத்தை நான் முன்மொழிந்து, பூவாளூர் பொன்னம்பலனார் வழிமொழிந்து நிறைவேற்றி னோம். அந்தக் காலந்தொட்டே கழகத் தலைவர் களும், பேச்சாளர்களும், குறிப்பாக மறைந்த நண்பர் என்.வி.நடராசன் போன்றவர்களும் அடிக்கடி இலங்கைக்குச்சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வரலாறு நமக்கு உண்டு.
அதற்கு முன்பே தமிழகத்திலிருந்து பல இசை வாணர்களும், கலைஞர்களும் இலங் கையில் உள்ள கதிர்காமம் போன்ற கோவில் களுக்கு கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இலங்கை செல்வதும், அங்கே இசைப் பயிற்சி அளிப்பதும், அதைப் போலவே அங்கேயுள்ள கலைஞர்கள் தமிழகத்திற்கு வருவதும் தொடர்ந்து நடந்த சம்பவங்களாகும். இன்னும் சொல்லப் போனால் இலங்கையிலே உள்ள இலட்சக் கணக் கான தோட்டத் தொழிலாளர்கள் எல்லாம் தமிழகத்திலிருந்து அங்கே குடியேறியவர்கள்தான். இப்படிப்பட்ட பலநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த பாரம்பரிய வரலாறு இலங்கைத் தமிழர் களுக்கு உண்டு.
தந்தை செல்வநாயகம்
இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் பல உரிமை கள் வேண்டுமென்பதற்காக - சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவு அமைவதற் காக - ஒரே நாட்டின் குடிமக்கள் என்ற வகையில், சிங்களவர்களுக்கு உள்ள அதிகார உரிமைகள் இலங்கைத் தமிழர்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதற்காக - ஈழத் தமிழர் தலைவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பினார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்க மூத்த தலைவர்களில் ஒருவரான தந்தை செல்வ நாயகம் அவர்களும், அவருக்குத் துணையாக அமிர்தலிங்கம் போன்றவர்களும் இருந் தார்கள். இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக கருத்த ரங்குகள், சிறப்பு மாநாடுகள் போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி எழுச்சியை உருவாக்கி னார்கள்.
சுதந்திரம், சமத்துவம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தாமல், சொன்னதைக் கேட்டுக் கொண்டு சுகவாசிகளாகவும், சோற்றால் அடித்த பிண்டங்களாகவும் தமிழர்கள் இருக்க வேண்டு மேயல்லாமல், மொழி உரிமை, சமூக உரிமை போன்ற உணர்வுகளைப் பெறுவதையும், அவற்றைக் காப்பாற்ற அதிகார ரீதியாக, அங்கீகார உரிமை கோருவதையும் சிங்களவர்கள் ஏற்றுக் கொள் ளாதது மட்டுமல்ல, அந்த உணர்வுகள் அறவே மங்கிப் போகவேண்டும் என்று செயல்பட்டார்கள். இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற
தமிழகத்தில் அனைவரும் ஆதரவு தந்தனர்! அதன் விளைவாக தமிழர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, அதன் உச்சகட்டமாக வரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப் பல்கலைக் கழகத்து தமிழ் நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட துயரச் சம்பவம் நடை பெற்றது. அதன் தொடர்ச்சியாக உரிமைக் குரல் கொடுத்தவர்களை வெலிக்கடை சிறையிலே பூட்டி சித்ரவதை செய்தும் - தமிழர் மாமிசம் இங்கே கிடைக்கும் என்று விளம்பரங்களை வைத்தும் - வியாபார நிலையங்களில்கூட தமிழர்கள் இரத்தம் சிந்தவுமான நிலைமைகள் அங்கே தோன்றின.
இவ்வாறு இலங்கையில் தமிழினம் பற்றி எரிவதைத் தாய்த் தமிழகத்தால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. இலங்கைக் கொடுமைகளுக்கு எதிராக அறவழியில் போராடிய தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றவர்கள் இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் உதவியை வேண்டிக் குரல் கொடுத்தனர். நேரடியாகவே தமிழகத்திற்கு வந்து இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்களை யெல்லாம் எடுத்துரைத்தார்கள். கட்சி சார்பின்றி தமிழகத்தில் உள்ள தலைவர்களும், தொண்டர் களும் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற ஆதரவுக் கரம் நீட்டினார்கள்.
துரதிருஷ்டவசமாக அந்த நேரத்தில் அறப் போராட்டத்தை அண்ணல் காந்தி அடிகளின் வழியில் நடத்தி வெற்றி காண்பதற்கு வழியில்லாமல் தந்தை செல்வா அவர்கள் மறைந்து விட்டார்கள். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் உறவை வலுப் படுத்துவதற்குப் பதிலாக கச்சத் தீவு போன்ற பிரச்சினைகள், மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தமிழகத்திலே அடிக்கடி தலை தூக்கவே, இலங்கையில் உள்ள தமிழர்கள் செத்து மடிவதுதான் பிரச்சினைக்கு தீர்வு போலாயிற்று.
இந்திய அரசு அவ்வப்போது எழுகின்ற இலங் கைத் தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கு அவர் களுடைய குரலைக் கேட்டு உதவி புரிய முன் வந் தாலும், சிங்கள ஆதிக்கச் சக்திகள் அதற்கு வழி விடாமல் குறுக்கே நின்று விட்டதாலும் தமிழர் களுடைய கோரிக்கைகளின் குரல் வளையை நொறுக்கி விட்டதாலும், அறப்போராட்டத்தை விடுத்து ஆயுதப் போராட்டத்தை இலங்கைத் தீவு சந்திக்க நேரிட்டது. அந்தப் போராட்டத்தின் விளைவுகள் இலங்கையில் தமிழ் குலத்தையே சூறையாடி சுக்குநூறாக்கி விட்டது. இலங்கைத் தமிழர்களுக்கு
வாழ்வாதாரத்தை மீட்க `டெசோ மாநாடு
அந்தப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகுதான் தமிழகத்தின் சார்பில் கொடுத்த குரல் எல்லாம் காற்றோடு கலந்து விட்டது. உச்சகட்டத்தில் இரு தரப்பினரும் போரை நிறுத்திக் கொள்ள வேண்டு மென்று தமிழ்நாட்டில் தமிழர்கள் விடுத்த வேண்டு கோளை நிறைவேற்றுவது போல் நடித்த இலங்கை அரசு போர் முடிந்த பிறகும், அங்கே தமிழினம் பூக்காமல், காய்க்காமல் போகட்டும் என்று இராணுவ நடவடிக்கைகளால் பயங்கர போர்க் கருவிகளால் தமிழ் மக்களை அடியோடு நசுக்கி அழிப்பதற்கு, எடுத்த முயற்சியில் பெரும் பகுதி நிறைவேற்றப்பட்டு போர் நிறுத்தம் செய்கிறோம் என்று இந்தியாவுக்கு பொய்யான வாக்குறுதி அளித்துவிட்டு - தான் நினைத்தவாறே ஈழத் தமிழர் களின் வாழ்வில் இருட்டையே நிரந்தரமாக்கி விட்டது.
பூண்டற்று போன நிலத்தை சீர்செய்து மீண்டும் வாழ்வாதாரத்தினை ஈழத் தமிழர்களுக்கு மீட்டுத் தரும் குறிக்கோளோடுதான் இந்த மாநாடு டெசோ அமைப்பின் சார்பில் நடைபெறுகிறது. டெசோ என்றால் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு - Tamil Eelam Supporters Organisation. அன்று 1985இல் தொடங்கிய டெசோ ஈழத் தமிழர்களின் துயரங்களை பிற நாடுகளிடம் எடுத் துரைத்து, குறிப்பாக, தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத் துரைத்து இந்திய நாட்டுக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் பல பணிகளை ஆற்றி வந்தது. அந்தப் பணியில் அப்பொழுது நானும், நம்முடைய பேராசிரி யரும், இளவல் வீரமணியும், அய்யணன் அம்பலமும், நெடுமாறனும், முரசொலி மாறன், வைகோ போன்ற வர்களும் ஈடுபட்டிருந்தோம்.
அறவழியில் ஈழத் தமிழர்களைக் காப்பதற்காக திட்டங்களைத் தீட்டுவதுதான் அன்றைய டெசோவின் வேலை யாக இருந்தது. இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே அந்தத் தமிழ் மக்களுக்கு, அந்த அபலைகளுக்கு, அநாதை களாக விடப்பட்டவர்களுக்கு, ஏழையெளியவர் களாக, எலும்புக் கூடுகளாகத் திரிந்து கொண்டிருப்பவர் களுக்கு, கற்பிழந்தவர்களாக கண்ணீரும் கம்பலையு மாக தெருவோரத்தில் கிடப்பவர்களாக இருக்கின்ற மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை - ஒரு சகோதரன், சகோதரிக்கு - ஒரு தாய் தன்னுடைய பிள்ளைக்கு, பெண்ணுக்கு செய்வதைப்போல அந்தக் கடமையைச் செய்ய தமிழ்நாட்டு மக்கள் தயாராக இருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டத்தான் இதுபோன்ற மாநாடுகளை நாம் நடத்துகிறோம்.
இந்த மாநாடு நடக்குமா என்ற கேள்வி எழுந்த போது, நேற்று நான் விடுத்த அறிக்கையில் பத்து நாட்கள் தொடர்ந்து டெசோ தலைப்பில் நம் முடைய கழகத்திலே உள்ள தோழர்களும், டெசோ அமைப்பிலே உள்ள நண்பர்களும், கூட்டங் களிலே பேசவேண்டும், பத்து நாட்கள் தமிழகம் முழு வதும் சென்று எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். நல்ல வேளையாக இன் றைக்குக் காலையில் ஆய்வரங்கம் நடைபெற்று நிறைவுறுகிற நேரத்தில் வந்த செய்தி நம்மை யெல்லாம் மகிழ்விக்கின்ற செய்தியாக, தடை நீங்கியது, போலீசாரால் போடப் பட்ட தடை நீங்கியது என்று நிம்மதியான செய்தி கிடைத்தது.
உடனடியாக ஏற்பாடுகளைச் செய்து இந்த மாநாட்டை இங்கே நாம் நடத்திக் கொண் டிருக்கிறோம். இதன் தொடர்ச்சியாக பத்து நாட் கள் தமிழகத்தின் எல்லா இடங்களிலும், பட்டி தொட்டிகள், பட்டினக்கரைகள் என்று எல்லா இடங்களிலும் நம்முடைய டெசோ அமைப்பிலே இருக்கின்ற தோழர்கள், செயலாளர்கள், சொற் பொழிவாளர்கள் இவர்கள் ஊருக்கு ஊர் சென்று ஆங்காங்கு நடைபெறுகின்ற பொதுக் கூட்டங் களில் ஈழத் தமிழர்களின் அவலங்களை - அவர் களுக்கு நாம் தர வேண்டிய பாதுகாப்பு, நாம் நீட்ட வேண்டிய உதவிக்கரம் இவைகளைப் பற்றி யெல்லாம் பேசி, தமிழ் மக்களுடைய பேராதரவை அவர்களுக்குப் பெற்றுத் தர வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
நாம் இந்தியாவை வலியுறுத்த வேண்டும், வற்புறுத்த வேண்டும் என்று இங்கே பேசிய தலை வர்கள் எல்லாம் பேசினார்கள். காலையிலே பேசிய தலைவர்களும், வெளிநாட்டிலிருந்து வந்த நண்பர் களும் எடுத்துரைத்தார்கள். மாலையிலே இங்கே பேசிய தம்பி திருமாவளவன் இலங்கை பிரச்சினை யில் இந்திய அரசு தன்னுடைய அழுத்தத்தைக் காட்ட வேண்டும் என்று பலமுறை இங்கே எடுத்து ரைத்தார். நான் அவருக்குச் சொல்வேன். ஈழத் தமிழர்களின் உரிமைகளை மீட்க இந்திய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்.
இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்ற தீர்மானம்!
முழு உரிமை வழங்க வேண்டும் என்பது எதற்கு? இலங்கையிலே உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை, தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்க இந்திய அரசு ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சொல்லி யிருக்கி றோமே, இதை விட வேறு என்ன அழுத்தம் வேண்டு மென்று எனக்குப் புரியவில்லை. இது தானே சரியான அழுத்தம் என்று சொன்னால் அதை ஏற்றுக் கொண்டு இந்தத் தீர்மானத்தை மேலும் வலுவான தாக ஆக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆனால் இந்தத் தீர்மா னத்தை வைத்துக் கொண்டே இந்திய அரசுக்கு நம்மால் அழுத்தம் கொடுக்க முடியும். இந்தத் தீர்மானமே இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக் கின்ற தீர்மானம்தான் என்பதை என்னுடைய அருமைத் தம்பி திருமாவள வன் அவர்கள் உணருவார்கள், இங்கே பேசிய நண்பர்களும் மிக நன்றாக அதை உணர்வார்கள் என்று நான் கருது கிறேன்.
தீர்மானம் வலுப்பெற்றால் இலங்கையில் தமிழர்களின் அல்லல் தீரும் ஆகவே இன்றைக்கு இலங்கைத் தமிழர்கள் நிம்மதியான, அமைதியான வாழ்வு பெற இன் றைக்கு இடுகாட்டுச் சாம்பலை பூசிக் கொண்ட வர்களைப் போல வாழுகின்ற வாழ்விலேயிருந்து விடுபட, நம்முடைய இளவல் வீரமணி அவர்கள் இங்கே எடுத்துக்காட்டியதைப் போல - நம்முடைய நண்பர்கள் எல்லாம் எடுத்துச் சொன்னதைப் போல - இந்த மாநாட்டின் வெற்றி - இந்த மாநாட்டிலே எவ்வளவு பேர் கூடினார்கள் என்பதல்ல, இந்த மாநாடு எத்தனை நாள் நடை பெற்றது என்பதல்ல, எவ்வளவு மணிநேரம் நடை பெற்றது என்பதல்ல, இந்த மாநாட்டின் வெற்றி உலகம் முழுதும் இருக்கின்ற தமிழர்கள் மாத்திர மல்ல, தமிழரல்லா தாரும், அரசியல்வாதிகளும், அனைவரும் அறிந் துணர்ந்து நாம் நிறைவேற்று கின்ற தீர்மானங்களின் மூலம் ஒவ்வொருவரும், தமிழிலே ஆர்வம் படைத்த அத்தனை பேரும், ஈழத்தமிழர்கள்பால் அன்பு கொண்ட அத்தனை பேரும், இரக்கம் கொண்ட அத்தனை பேரும் அழுத்தம் கொடுத்து இந்தத் தீர்மானத்தை வலுப் பெறச் செய்வார்களேயானால், நாம் காணுகின்ற கனவு நிச்சயமாக நிறைவேறும்.
இலங்கையிலே இருக்கின்ற அல்லல் விரைவில் தீரும். ஏன் ஈழநாடு உடனடியாகப் பெறவேண்டி யிருக்கிறது என்று கேட்பீர்களேயானால் நான் அவர் களுக்குச் சொல்கின்ற ஒரேயொரு சமாதானம், முதலில் அங்கே காயம்பட்டு கிடப்பவர்களை ரணத்தை ஆற்ற, காயத்தை ஆற்ற, அவனை உயிர் பிழைக்க வைக்க முதல் உதவி செய்வதைப் போல டெசோ மாநாட்டின் மூலமாக தேவையான முதல் உதவிகளையெல்லாம் இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களுக்கு நாம் செய்ய வேண்டும். செய்யத் தொடங்கியிருக்கிறோம்.
அதைத் தொடர்ந்து நான் அடிக்கடிச் சொல்வதைப் போல என்னுடைய வாழ்நாளில் நான் கண்டு கொண் டிருக்கின்ற நிறைவேறாத கனவு இருக்கிறதே, அந்தக் கனவு நிறைவேறுகின்ற வகையிலே உங்களை யெல்லாம் அரவணைத்துக் கொண்டு போராடு வேன், நிச்சய மாக போராடுவேன் என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி, கடந்த ஒரு வாரக் காலமாக இந்த மாநாட் டிற்கு உழைப்பை நல்கி - நம்முடைய தோழர் களிடத்தில் எல்லாம் பணிபுரிகின்ற வாய்ப்பை அவர்களுக்கு வழங்கி, அவர்களோடு ஒத்துழைத்து அவர்களிலே நானும் ஒருவனாக இருந்து, பணி யாற்றியதன் காரணமாக இன்று மாலை நிகழ்ச்சி களிலே கூட நான் தாம தமாக வந்தது ஏன் என்பது என்னைச் சார்ந்த வர்களுக்குத் தெரியும். என்னை நெருங்கியிருப்பவர் களுக்குத் தெரியும்.
எல் லோருக்கும் தெரியாது. அவர்கள் எல்லாம், என் றைக்கும் இப்படி தாம தமாக வராத கருணாநிதி, இன்றைக்கு ஏன் வந்தார் என்ற அந்தக் கேள்விக்கு பக்கத்திலே இருப்ப வர்களை அணுகி பதிலைப் பெற்று எல்லோரும் சேர்ந்து இந்தப் பொறுப்பிலே நம்மை அர்ப் பணித்துக் கொண்டிருக்கிறோம் என் பதை உணர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத் துக்கு மாத்திரமல்ல, இந்த டெசோ இயக்கத்திலே தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்ற எல்லா கட்சிகளுக்கும், எல்லா இயக்கங்களுக்கும், எல்லா தமிழர்களுக்கும் இந்தக் கடமை உண்டு என்கிற உணர்வோடு பாடுபட வேண்டும், பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டு இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். -இவ்வாறு டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.
எல்லோரும் சேர்ந்து சுமப்போம்!
அகில இந்தியத் தலைவர்களான அடல் பிகாரி வாஜ்பாய், என்.டி. ராமாராவ், எச்.என். பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, அப்துல் ரஷீத் காபூல், ஜஸ்வந்த் சிங், ராச்சையா, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணியம் சுவாமி, தினேஷ்கோசுவாமி போன்ற தலைவர்கள் எல்லாம் அந்த டெசோ மாநாட்டிற்கு வருகை தந்து ஒற்றுமையோடு, ஒரே உள்ளத்தோடு, ஒரே அணியில் நின்று நீங்கள் குரல் கொடுத்தால், இந்தப் போரை நடத்தினால் வெற்றி நிச்சயம் என்று சொன்னார்கள். அது நடைபெறவில்லை.
அதை ஆழ்ந்து சிந்தித்து, கண்களை மூடிக் கொண்டு சிந்தித்த நாங்கள் - கண்களைத் திறந்து பார்த் தால் என்ன மிச்சம் என்று எங்களுக்கு நாங்களே ஒருவருக் கொருவர் பார்த்து கண்ணீர் சிந்தக் கூடிய நிலைமையிலே தான் இலங்கையில் போர் முடிவுற்று, இலங்கை எரிந்த வீடாக ஆக்கப்பட்டு விட்டது. அப்படிப்பட்ட இலங்கையில் விடிவு காண நம்முடைய தம்பி திருமாவளவன் சொன்னார். உன்னால்தான் முடியும் என்று என்னைப் பார்த்துச் சொன்னார். நம்பிக்கையோடு சொன்னார்.
அவர் கொண்ட நம்பிக்கையிலே எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அவர் சொன்ன சொல்லை, எண்ணிப் பார்க்கிறேன். நாங்கள் எல்லோரும் உன்னிடத்திலே இந்த உரிமையை அளிக்கிறோம், நீ இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வைப் பெற்றுக் கொடு, உன்னால்தான் முடியும் என்று சொன்னார்.
நான் அதைப் பெருமையாகக் கூட ஏற்றுக் கொள்ளலாம். இவ்வளவு பெரிய கூட்டத்தில் தம்பி திருமாவளவன், இவ்வளவு பெரிய நாட்டில், எத் தனையோ பெரிய தலைவர்கள் எல்லாம் இருக்கும் போது, யாராலும் முடியாது, நீ தான் செய்வாய் என்று சொல்லியிருப்பது பெருமைக்குரியதுதான், என்னை உற்சாகப்படுத்தக்கூடியதுதான்.
ஆனால் அதை நான் எப்படி ஏற்றுக் கொள்கிறேன் என்றால் - ஒரு கிராமப் பகுதியில் ஒரு மைதானத்தில் ஒருவனைக் கொண்டு வந்து நிறுத்தி, இவர் மனிதர் அல்ல, மாமனிதர், வீராதி வீரர், இவர் மலையை தலை யிலே தூக்குவார் என்றெல்லாம் சொன்னதும், ஊர் மக்கள் ஆச்சரியத்தோடு அவரைப் பார்க்க அகல விழிகளை விழித்ததும், அந்த மனிதரும், ஆமாம், என்று தலை அசைத்து, ஊர் மக்களுடைய பாராட்டுகளைப் பெற ஆவலாக இருந்தார்.
இலங்கைத் தமிழர்க்கு மறுவாழ்வு கிடைக்க எல்லோரும் சேர்ந்து செயல்படவேண்டும்!
ஊர் மக்கள்கூடி நின்று மலையைத் தூக்குகின்ற காட்சியைப் பார்ப்பதற்காக தங்களைத் தயார்படுத்திக் கொண்டு நின்றார்கள். அப்போது இந்த நபர் சொன்னார். இப்போது மலையைத் தூக்குகிறேன், பாருங்கள் என்றார். எல்லோரும் ஆசையோடு பார்த்தார்கள். ஏ, அப்பா! அவர் மலையைத் தூக்கப் போகிறார், ஒரு மனிதரால் மலை யைத் தூக்க முடியுமா என்று பார்த்தபோது அவர் சொன்னார்.
இங்கே இருக்கிற எல்லோரும் சேர்ந்து, மலையை தூக்கி என்னுடைய தலையிலே வைத்தால், நான் தூக்கத் தயார் என்றார். (கைதட் டல்) அதைத்தான் நான் தம்பி திருமாவளவனுக்குச் சொல்வேன். மலையைத் தூக்குகின்ற ஆள் தான் நான், எல்லோரும் சேர்ந்து மலையைக் கொண்டு வந்து என் தலையிலே வைப்பீர்களேயானால் (கைதட்டல்) நான் அதைத் தூக்கத் தயாராக இருக்கிறேன். எல்லாம் என்னால் முடியும் என்று சொல்கிற அகந்தைக்காரன் அல்ல. இறுமாப்பு பிடித்தவன் அல்ல.
அவ்வளவு அகங்காரம் கொண்டவன் அல்ல என்பது நீண்டகாலமாக என்னோடு பழகிக் கொண்டிருக்கின்ற தம்பி திருமாவளவனுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே எல்லோரும் சேர்ந்து நடத்த வேண்டிய காரியம்தான். - ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் கலைஞர்
டெசோ மாநாட்டு ஆய்வரங்கம் கலைஞர் தலைமையில் பன்னாட்டு பிரதிநிதிகள் பங்கேற்பு மாநாட்டுத் தீர்மானம் குறித்து இறுதி வடிவம்
சென்னை, ஆக. 13- இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்தி உயர்த்திடவும் - ஜனநாயக உரிமைகளோடு கண்ணியத்தோடு அவர்களை வாழ்விக்கவும் தாய்த்தமிழகத்தில் உள்ள நாமும், இந்திய அரசும் எந்த வகையில் எல்லாம் உதவிட முடியும் என்பதை வரையறுத்திட வாய்ப்பாகவும் அதற்கு வழிகாட்டும் வகையிலும் - தீர்மானங்களை நிறைவேற்றிட சென்னை - அக்கார்ட் ஓட்டலில் நேற்று காலை ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு ஆய்வரங்கம் மிகுந்த சிறப்புடன் நடை பெற்றது.
டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வரங்கில் பன்னாட்டு அறிஞர்கள் - பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கி னார்கள்.
மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங் களுக்கு ஒரு சில திருத்தங்கள் குறிப்பிட்டு, இறுதி வடிவம் அளித்தனர்.
நீண்ட நெடுங்காலமாக ஈழத்தமிழர் வாழ்வில் உற்ற இன்னல்கள் எல்லாம் களையப் பெறும் வகையில் இங்கே வரைந்தளிக்கப்பட்ட தீர்மானங் கள், ஈழத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்திடும் எனின் அது மிகையல்ல!
போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்தி உயர்த்துவதற்கும், ஜனநாயக உரிமை களோடு கண்ணியத்துடன் அவர்கள் வாழ்வதற் கும், அதற்கு தாய்த் தமிழகத்திலே உள்ள நாமும், இந்திய அரசும் எந்த வகையில் எல்லாம் உதவிட முடியும் என்பதை வலியுறுத்து வதற்காகவுமான முயற்சி யிலே கலைஞர் அவர்கள் தலைமை யிலான `டெசோ அமைப்பு ஈடுபட்டுள்ளது. அகதிகள் எனும் பெயரால் அல்லலுறுவோர் வாழ்வில் அமைதி திரும்பிட...
ஈழத்தில் தொடர்ந்து வாழ்வதற்கு வழி யில்லாமல் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் குடியேறி புலம் பெயர்ந்த தமிழர்கள் என்ற பெயராலும், அகதிகள் என்ற பெயராலும் அல்லாடிக் கொண்டிருக்கும் நமது தமிழ் இனத்தவர் மீண்டும் இலங்கை திரும்பி அமைதி யானதும், உரிமையுடன் கூடியதுமான வாழ்க்கை முறையை மேற்கொள் ளுவதற்கு அய்க்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச நிறுவனங்களின் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி கலந்து பேசி முடிவெடுத்திட நேற்று (12.8.2012 - ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னை - தியாகராயர் நகரிலுள்ள அக்கார்ட் ஓட்டலில் ஆய்வரங்கு (Coclave) நடைபெற்றது.
இந்த ஆய்வரங்கினையொட்டி ஹோட்டல் அமைந்த சாலையில் - அலங்காரக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. மாநாட்டினால் விளையப் போகும் அமைதியான தீர்வினை, அது அழகுறப் பறை சாற்றிப் பட்டொளி வீசிப் பறந்தது.
காலை 9.00 மணிக்கெல்லாம் `டெசோ மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவ ரான கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகை தந்தார்.
மாநாட்டிற்கு வருகை தந்த பன்னாட்டுப் பிரதிநிதிகளையும், தலைவர்களையும், தளபதி மு.க. ஸ்டாலின், கவிஞர் கனிமொழி எம்.பி. மற்றும் மாநாட்டுக் குழுவினர் அன்போடு வரவேற்றார்கள்.
காலை 9.50 மணியளவில் கலைஞர் அவர்கள் வருகை தந்தார்கள்.
டெசோ தலைவர் கலைஞர் அவர் களை `டெசோ மாநாட்டுக் குழுவினரும், `அக்கார்ட் ஓட்டலின் உரிமையாளர் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரும் வரவேற்று - அரங்கிற்கு அழைத்துச் சென்றார்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆய்வரங்கு தொடங்கியது
ஆய்வரங்கிற்கு வந்திருந்த பன் னாட்டுப் பிரதி நிதிகள் அனைவரும் எழுந்து நின்று கலைஞருக்கு வணக்கம் கூறி வரவேற்றார்கள்.
காலை சரியாக 10.00 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆய்வரங்கு தொடங்கியது.
ஆய்வரங்கில் பங்கேற்றோருக்கு மாலை - பொன்னாடை அணிவித்து தளபதி கவுரவித்தார்
மாநாட்டில் முதல் நிகழ்வாக - ஆய்வரங்கிற்கு வந்திருந்த கலைஞர் உள்ளிட்ட அனை வருக்கும் - `டெசோ அமைப்பின் சார்பில் கழகப் பொரு ளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், - மாலையும் பொன்னாடையும் அணி வித்து - விழாவின் நினைவாகப் பரிசு வழங்கினார்.
ஆய்வரங்கில் அனைவரையும் கவுரவப்படுத்திய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு - துரை முருகன், ஜெகத்ரட்சகன் ஆகியோர் மாலையும் பொன்னாடையும் அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினர்.
பின்னர், ஆய்வரங்கில் - துரைமுருகன் அவர்கள், வருகை தந்துள்ள பெரு மக்கள், தங்களை அறி முகம் செய்து கொள்ளுமாறு வேண்டிட, அனை வரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டார்கள்.
தீர்மானங்கள் மீது விவாதம்! திருத்தங்கள் - சேர்ப்புகள் ஏற்பு!
அதனைத் தொடர்ந்து - மாநாட்டில் நிறைவேற் றப்படவுள்ள தீர்மானங்களின் வரைவினை `டெ சோஅமைப்பின் உறுப்பினரும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் படித்தார்.
அதன் பின்னர், அத்தீர்மானங்களின் மீது விவாதம் நடைபெற்றது. ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்களும், பன் னாட்டுப் பிரதிநிதிகளும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து உரையாற்றினார்கள். ஒரு சில தீர்மானங் களில் திருத்தங்கள் கூறினர். அவைகள் அனைத் தையும் தலைவர் கலைஞர் அவர்களும் - `டெசோ அமைப்பு நிருவாகிகளும் கூர்ந்து கேட்டு - திருத்தங்களை ஏற்றுக் கொண்டார்கள்.
மேலும் இயற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் என்ற வகையிலும் கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன. அவைகளும் மறுப்பேதுமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஈழத்தமிழர்களின் துன்பதுயரங்களுக்கு மருந்திடும் வகையில் தீர்மானங்கள்
இலங்கையில் சிங்களவர்களின் ஆதிக்க வெறி யினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக் கப்பட்ட ஈழத்தமிழர்களின் காயங்களுக்கும் - அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப - துயரங் களுக்கும் மருந்து போடுகின்ற வகையில் ஆய் வரங்கில் தீர்மானங்கள் வடித்தெடுக்கப்பட்டன எனின் அது மிகையல்ல!
(அத்தீர்மானங்கள் அனைத்தும் மாலையில் இராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. மைதானத்தில் நடை பெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் படிக்கப்பெற்று - மாநாட்டில் திரண்டிருந்த பல்லாயிரவரின் பலத்த கர வொலியின் மூலம் நிறைவேற்றப்பட்டது, இவ் விடத்தே குறிப்பிடத்தக்கதாகும்.)
நன்றி தெரிவித்து கலைஞர் உரை!
ஆய்வரங்கின் நிறைவாக - தலைவர் கலைஞர் அவர்கள், வருகை தந்த பெரு மக்கள் அனை வருக்கும் `டெசோ அமைப்பின் சார்பில் தமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு உரையாற்றினார்.
கலைஞர் அவர்கள் ஆற்றிய நன்றி உரை வருமாறு:-
நண்பர்களே,
உங்கள் அனைவருடைய மதிப்புமிகு கருத்துரைகளுக்கு நன்றி! உங்கள் ஆலோ சனைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டன. அவை மாலையில் நடைபெற வுள்ள மாநாட்டில் நிறைவேற்றிட வைக்கப்படும்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்காக உங்களது ஆழமான கவலை களை, அக்கறைகளும் வரலாற்றில் இடம் பெறும். உங்களுடைய பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கின்றேன். இந்த ஆய்வரங்கினை பெரும் வெற்றி பெற வைத்த மைக்காக மீண்டும் நன்றி தெரிவிக்கின்றேன்.
- இவ்வாறு கலைஞர் அவர்கள் குறிப் பிட்டார்கள்.
திராவிடர் கழகத் தலைவரும் `டெசோ அமைப் பின் உறுப்பினருமான திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
ஆய்வரங்கு, இங்ஙனம் மிகுந்த நேர்த்தியுடன் நிறைவுற்றது.
மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் - பன்னாட்டு அறிஞர்கள் விவரம் வருமாறு:-
கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர்
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,
முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் எம்.பி., (தலைவர் லோக் ஜனசக்தி)
`டெசோ வரவேற்புக்குழுவின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்,
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி,
கழக துணைப் பொதுச் செயலாளர் துரை முருகன் எம்.எல்.ஏ.,
கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு,
மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன்,
கவிஞர் கனிமொழி எம்.பி.,
முனைவர் க.பொன்முடி, எ.வ.வேலு எம்.எல்.ஏ.,
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்,
திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன்,
தொல்.திருமாவளவன் எம்.பி.,
கழக அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், பெ.வீ.கல்யாணசுந்தரம்,
கவிஞர் கலி பூங்குன்றன்,
டி.ரவிக்குமார்
(`டெசோ வரவேற்புக்குழு)
வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,
வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா,
ஆனந்த் குருசாமி (தேசிய இயக்குனர்,ஆம்நெஸ்டி இன்டெர்நெஷனல்),
கெமால் இல்திரிம்ஸ், (தூதர், பன்னாட்டு மனித உரிமை ஆணையம்)
டாக்டர் விக்ரம பாகு கர்ண ரத்தினே (கொழும்பு)
எஸ்.டி.ஷாரிக் எம்.பி., (பொதுச் செயலாளர், தேசிய மாநாட்டுக் கட்சி),
கோவிந்தராவ் அடிக் (நேஷனலிஸ்ட் காங்கிரஸ் கட்சி)
நஸீம் மாலிக் எம்.பி., (சுவீடன்)
மூசா அகமது (தூதர், பன்யாரா கிட்டாரா கிங்டம், தலைவர், வேல்டு ஆர்ட் கேம்ஸ், நைஜீரியா)
அப்துல் ரசாக் மோமோ எம்.பி., (நைஜீரியா)
அஃபெகோ முபாரக் (தலைவர், தேசிய உண்மை (ம) நீதி ஆணையம், மொராக்கோ)
யுஸ்மாடி யூசுஃப் எம்.பி., (மலேசியா)
குகதாசன் குகசேனன், (இங்கிலாந்து)
என்.சிவானந்த சோதி, (இங்கிலாந்து)
நரசிம்மன், (சிங்கப்பூர்)
தமிழ்மணி, (மலேசியா)
- உள்பட பன்னாட்டு அறிஞர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
டெசோமாநாடு - வெற்றி! டெசோ தலைவர் கலைஞர் நன்றி அறிவிப்பு அறிக்கை
சென்னை, ஆக.13- டெசோ மாநாட்டு வெற்றி குறித்து டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
12-8-2012 அன்று சென்னையில் மாலையில் நடைபெற்ற டெசோ மாநாடு - அதனை யொட்டி காலையில் நடைபெற்ற ஆய்வரங்கம் ஆகியவை நடைபெறவே நடைபெறாது என்றும், அப்படியே நடைபெற்றாலும் வெளி நாட்டிலிருந்தோ, இலங்கையிலிருந்தோ, வட மாநிலங்களிலிருந்தோ இலங்கைத் தமிழர் பிரச்சினைகளில் ஆர்வமும் அக் கறையும் உடைய யாருமே வர மாட்டார் கள் என்றும், கருணாநிதி ஏமாறப் போ கிறார் என்றும் மனப்பால் குடித்தவர் களின் முகத்தில் எல்லாம் கரியை பூசுகின்ற அளவிற்கு டெசோ மாநாடு மிகவும் சிறப்பாகவும் ஈழத் தமிழர் களுக்குப் பயனுள்ள வகையிலும் நடைபெற்று முடிந்துள்ளது.
ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியது....
காலையில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற ஆய்வரங்கத்தில் இந்தியாவின் வட மாநிலங்களிலிருந்தும், அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்த், சுவீடன், மொராக்கோ, சிங்கப்பூர், மலேசியா, நைஜீரியா, மற்றும் இலங்கை நாடுகளிலிருந்தும்; வந்தால் இலங்கை கொடுங்கோல் அரசு என்ன செய்யுமோ என்ற அச்சத்தால் வராத ஒரு சிலர் தவிர்த்து; வந்திருந்த 30க்கு மேற்பட்ட தமிழார்வலர்கள், ஈழத் தமிழர் பிரச்சினைகளில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருவோர், வரைவுத் தீர்மானங் களாக தயாரிக்கப்பட்டிருந்த 11 தீர்மானங் களின் மீது விலாவாரியாக தங்கள் ஆழ்ந்த கருத்துகளையும், திருத்தங்களையும் எடுத்து வைத்து இறுதி தீர்மானங்களை வடிவமைத்து உருவாக்கியதோடு மட்டுமின்றி, புதிதாக மூன்று தீர்மானங் களையும் முன்மொழிந்து அவையும் விவாதிக்கப்பட்டு மாநாட்டிலே நிறைவேற்றப்பட வேண்டுமென்று முடி வெடுக்கப்பட்டது.
குறிப்பாக கடைசித் தீர்மானமான டெசோ மாநாட்டிற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்த தமிழக அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரி வித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென்று கூறி, அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்ததே லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அரசின் முன்னாள் அமைச்சரும், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அருமை நண்பர் ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள் தான். அந்த 14 தீர்மானங்களைப் பற்றி இன்று தமிழகத்திலே உள்ள அனைத்து நாளேடுகளும் வரவேற்று நல்ல முறையில் வெளியிட்டுள்ளன.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மட்டுமன்றி, அங்கே நிகழ்த்தப்பட்ட உரைகளையும் வெளி யிட்ட அந்த நாளேடுகளுக்கும், மாநாட்டி லே கலந்து கொண்டு சிறப்பித்த பன் னாட்டுத் தலைவர்களுக்கும், பார்வையா ளராக வந்தவர்களுக்கும் டெசோ அமைப்பின் தலைவர் என்ற முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி! நன்றி!!
மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரை களைக் கேட்பதற்காகவும், ஈழத் தமிழர் பிரச்சினையில் நாமனைவரும் ஒன்று பட்ட உணர்வோடு இருக்கிறோம் என்பதை உலகிற்கு உணர்த்துவ தற்காகவும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து கழகத்தின் தாரக மந்திரமாம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எள்ளளவும், எள் முனையளவும் சிதைந்து விடாமல் ராணுவ வீரர்களைப் போல; எந்தவிதமான அசம்பாவிதத்திற்கும் இடம் கொடுத்து விடாமல் மாநாட் டினை மாபெரும் வெற்றி மாநாடு என்ற சிறப்பினை உருவாக்கித் தந்த கழகக் கண்மணிகள், டெசோ அமைப்பில் இடம் பெற்ற மற்ற கட்சிகளின் உடன் பிறப்புக்கள் அனைவருக்கும் என் தலை தாழ்ந்த வணக்கங்களையும், இதயம் நிறைந்த நன்றியையும் குவிக்கின்றேன்.
டெசோ மாநாட்டிற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என உயர் நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் உயர் நீதி மன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் பொது நலன் கருதி, மாநாடு அமைதியான முறையில் நடக்கும் விதமாக தகுந்த நடவடிக்கையை போலீஸ் கமிஷனர் மேற்கொள்ள வேண்டும் என்று திட்ட வட்ட மாகத் தெரிவித்திருந்த போதிலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர் களும், வெளிநாடுகளைச் சேர்ந்த மிக முக்கிய பிரமுகர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் ஆயிரக்கணக் கான பார்வையாளர்களும் கலந்து கொண்ட, அந்த மாநாட்டுப் பந்தலிலோ, அல்லது வெளிப்பகுதிகளிலோ காவல் துறை எவ்விதப் பாதுகாப்புப் பணியையும் மேற்கொள்ளவில்லை. ஒரு காவலர் கூட மருந்துக்கும் நம் கண்களில் தென்பட வில்லை.
நிரந்தரமானதல்ல ஆளும் வாய்ப்பு!
ஆட்சிக் கட்சி என்பது நிரந்தரமானதல்ல; ஜனநாயக நாட்டில் கட்சிகள் ஆளுங்கட்சிகளாக வரும், மாறும். ஆனால் அதிகாரிகள் என்போர் நிர்வாகத்தில் நிரந்தரமானவர்கள். அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளை கட்சி வேறுபாடு கருதாமல் நடுநிலையோடு நிறைவேற்ற வேண்டுமே அல்லாமல், ஆட்சிக் கட்சியின் விருப்பு வெறுப்புகளை மனதிலே கொண்டு செயல்படுவது என்பது ஜனநாயக வளர்ச்சிக்கு உகந்ததல்ல. மாநாட்டில் கலந்து கொண்ட இசட் பிளஸ் பிரிவின் கீழ் வரும் தலைவர் களுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் பாதுகாப்பைத் தவிர, வேறு எந்தவிதமான மாநிலக் காவல் துறை பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்பது வருந்தத் தக்கது மட்டுமல்லாமல், கண்டிக்கத் தக்கதுமாகும்.
காவல் துறை பாதுகாப்பே இல்லாதது கண்டு மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள், குறிப்பாக வெளி நாட்டி லிருந்து வந்திருந்தவர்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் தெரிவித்தார்கள். காவல் துறையினர் வாயிலாகவே அ.தி.மு.க. பிரமுகரை விட்டு நீதி மன்றத்திலே தடை பெறுவதற்கு மூன்று முறை முயன்று மூக்கறுபட்டவர்களுக்கு காவல் துறையின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது என்பதை தமிழக மக்கள் தெளிவாகவே உணர்ந்து கொண்டார்கள்.
தடந்தோள்கள் உண்டு
தடைக்கற்கள் உண்டெனினும், தடந்தோள்கள் உண்டு என்று நான் நேற்று முன்தினம் குறிப்பிட்டபடி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எப்போதுமே விரோதப் போக்கினைக் கடைப்பிடித்து வரும் அ.தி.மு.க. வும், அ.தி.மு.க. ஆட்சி யாளர்களும் தொடர்ந்து நமக்கு ஏற்படுத்திய தடைகளையெல் லாம் கடந்து காவல் துறையின் எவ்விதப் பாதுகாப்புமின்றி டெசோ மாநாடு வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைத்த டெசோ இயக்கத்துக் கண்மணிகள் ஒவ்வொருவருக்கும், சிறப்பாகவும் குறிப்பாகவும் காலத்தே வழங்கப்பட்ட நீதியின் காவலர்களுக்கும் ஆயிரம் ஆயிரம் முறை நன்றி சொல்லி அகம் மிக மகிழ்கிறேன்.
செய்தி: டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் மீது மத்திய அரசு நட வடிக்கை எடுக்காவிட்டால் கருணாநிதி என்ன செய்யப் போகிறார்? - தோழர் தா. பாண்டியன்
சிந்தனை: பரவா யில்லை தீர்மானங்கள்மீது குறை சொல்ல முடிய வில்லை. அதுவரை மாநாட்டுக்கு வெற்றிதான்; அகில இந்தியக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும்கூட இந்திய அரசுக்கு அழுத் தம் கொடுக்க செய்ய தோழர் தா.பா. முன்வரு வாரா என்று தெரிய வில்லை.
செய்தி: இன்றைய நவீன உலகிற்கு ஏற்றாற் போல அறிவியல் தொழில் நுட்ப முறையில் வேதங்கள் பதிவு செய்யப்பட்டுப் பாது காக்கப்பட வேண்டும். - சிருங்கேரி சங்கராச்சாரியார்
சிந்தனை: மிலேச் சர்கள் கண்டுபிடித்த நவீனக் கருவிகளைக் கொண்டு வேதங்களைப் பாதுகாப்பது ஆகம விதி களுக்கு உகந்தது தானா? அப்படியே வேதங்கள் பாதுகாக்கப்படுவது எதற் காக? பிராமணன் - சூத்திரன் பேதங்கள் பாதுகாக்கப்படத்தானே!
சும்மா ஆடுமா அவா ளின் குடுமி? 14-8-2012
இந்தியா கொடுக்க வேண்டிய அழுத்தம்
டெசோ சார்பில் சென்னையில் நடத்தப்பெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பதினான்கு தீர்மானங்களும் காலத்தாற் நிறைவேற்றப்பட்டவை - முத்தாய்ப் பானவை!
ஈழத் தமிழர் வரலாற்று ஓட்டத்தில் டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் அடிக்கடி மேற்கோள் காட்டப்படத் தகுந்தவையாகும்.
முதல் இரண்டு தீர்மானங்களும், ஈழத்தில் தமிழர்கள் படுகொலை (Genocide) செய்யப் படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்ததாகும். அங்கே இனப்படுகொலை நடந்தது என்பதை அய்.நா.வால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட குழு அறிக்கை கொடுத்தாகிவிட்டது.
அதனடிப்படையில் அய்.நா.வின் மனித உரிமைக் குழுவில் பெரும்பாலான நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எதுவும் இல்லை. (ஜெனீவாவில் நடக்க இருந்த மனித உரிமைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழ் ஆர்வலர்கள் இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்த அடியாட்களால் தாக்கப்பட்டனர் என்பது எத்தகைய கேவலம்!)
இத்தகு சூழ்நிலையில்தான் டெசோ சார்பில் கூட்டப்பட்ட மாநாட்டில் ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசு நடவடிக்கைகளை உறுதியுடன் மேற்கொள்கிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு அய்.நா.வின் மனித உரிமை ஆணையம் ஒரு மேற்பார்வைக் குழுவை நியமித்திட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ள நாடுகளுக்கு அடிப்படையான கடமை உணர்ச்சி ஒன்று இருக்கிறது. அத்தீர்மானம் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக வற்றிப் போய்விடாமல், உயிர்த் துடிப்புடன் செயல்படுத்தப்படுவதற்கான முயற்சிகளை உந்துதலைக் கொடுக்க வேண்டாமா? ஜெனீவா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த இந்தியாவுக்கு இதில் கூடுதல் பொறுப்பு இருக்கவில்லையா?
இந்தியாவுக்கு இருக்கும் கடமையினை டெசோ மாநாட்டுத் தீர்மானம் நன்றாக வலியுறுத்தியுள்ளது.
இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்திய போருக்குப் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் அங்கு நடைபெற்றுள்ள மறுவாழ்வுத் திட்டங்களைப் பார்வையிட இந்தியாவின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் (பா.ஜ.க.) தலைமையில் 12 பேர் கொண்ட குழு அதிபர் ராஜபக்சே உட்பட பலரையும் சந்தித்தது.
தமிழர்களுக்கு ஓரளவுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்க வழிவகுக்கும் 13 ஆவது சாசன ஒப்பந்தம், 1987 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பற்றியெல்லாம் பேசப்பட்டதாகவும், அவற்றை நிறைவேற்ற இலங்கை அதிபர் ராஜபக்சே ஒப்புக் கொண்டதாகவும் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார். ஆனால் அவ்வாறு தாம் உறுதியளித்ததாக இந்தியக் குழுவிடம் கூறவேயில்லை என்று கூறிவிட்டாரே அந்தச் சத்தியப் புத்திரர் ராஜபக்சே!
இந்தியாவின் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் தலைமையில் அந்தக் குழு சென்றிருந் தாலும் அது இந்திய அரசாங்கத்தின் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டதுதான். அந்தக் குழுவையே அவமதிக்கும் வகையில் இப்படி அந்நாட்டு அதிபர் நடந்து கொண்டிருக்கிறாரே - இது குறித்துக் கூட இந்திய அரசு விளக்கம் கேட்டிருக்க வேண்டாமா?
சர்வதேச நாடுகளின் அழுத்தங்களைக் கூட அலட்சியப்படுத்தும் போக்கில் நடந்து கொண்டு வருகிற இலங்கை இனவாத பாசிச அரசை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து, உரிய தண்டனையை அளிக்காவிட்டால், உலகின் பல பகுதிகளிலும் பல ராஜபக்சேக்கள் தோன்றுவது தவிர்க்கப்பட முடியாததாகும்.
தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களுக்கு ஆதரவாக வெள்ளை அரசுக்குப் பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வரவேண்டும் என்று அய்.நா.வில் தீர்மானத்தை முன்மொழிந்த இந்திய அரசு, நமது தொப்புள் கொடி உறவு உள்ள ஈழத் தமிழர்கள் விடயத்தில் மட்டும் ஏன் அது போன்ற முயற்சியில் ஈடுபடக்கூடாது? டெசோ மாநாட்டில் இந்த அழுத்தம் கலந்த உணர்வு தலை தூக்கி நின்றது என்பது சுட்டிக் காட்டத் தகுந்ததாகும்.14-8-2012
டவுட் தனபாலு
லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் : இலங்கைத் தமிழர்கள் பிரச்னையை, வட மாநிலத்தவர்கள் அறிந்துகொள்ளவே இல்லை. ஈழத்தமிழர் என்றால் விடுதலைப் புலிகள்; பயங்கரவாதிகள் என்றே கருதி வருகின்றனர்.
எனவே, ஈழத் தமிழர்களின் உண்மை நிலையை விளக்க, வடமாநிலம் முழுவதும் கூட்டங்களை டெசோ அமைப்பு நடத்த வேண்டும்.
டவுன் தனபாலு: சுத்தம்...! உள்ளூர் ராயப்பேட்டையில, ஒரு மாநாட்டை நடத்தி முடிக்கிறதுக்குள்ள தி.மு.க.வினருக்கு நாக்கு தள்ளி போயிடுச்சு... இதுல, வடமாநிலங்களுக்கும் வந்து, உங்க வீரத்தைக் காட்டுங்க கைப்புள்ள...ன்னு, வெத்தலை, பாக்கு வைக்குறீங்களே...!
தினமலர்: 14.8.2012
யாருக்கு நாக்குத் தள்ளிப் போச்சு என்பது ஊருக்கும், உலகுக்கும் தெரிந்த விஷயம்! என்னென்ன ஜகதலப்பிரதாபம் எல்லாம் செய்து பார்த்தும் கடைசியில் மூக்குடைபட்டு பார்ப்பனக் கூட்டத்தின் வயிறு வெடிச்சுப் போச்சே - என்ன பதில்?
யார் இந்த சிருங்கேரி சங்கராச்சாரியார்கள்?
இந்தியாவின் தென்கோடியில் கருநாடக மாநிலத்தின் சிக்மகளூர் மாவட்டத்தில் சிருங்கேரி சங்கராச்சாரியார் மடம் ஒன்றுள்ளது. ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களுள் இதுவும் ஒன்று. (காஞ்சி மடம் இந்தப் பட்டியலில் வராது.)
இந்தச் சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியார் ஸ்ரீபாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகளாம். சென்னையில் டேரா போட்டுள்ளார். (மயிலாப்பூர் சுதர்மா இல்லத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரித்துக் கொண்டு வழக்கம் போல இருக்காளாம்.)
19.8.2012 கல்கி அட்டைப்படம் போட்டு ஆராதித்து சாங்கோபாங்கமாகப் பேட்டி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
தமது குருநாதரான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தர் பற்றி சும்மா விளாசித் தள்ளி இருக்கிறார். அந்தக்குருநாதர் எப்படிப்பவட்டவர் தெரியுமா? ‘The Hindu Ideal’ எனும் நூலை சிருங்கேரி மடம் வெளியிட்டுள்ளது. அதன் 23 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது:
‘The Panchama asked to be at a distance because of the inborn impurity of his body. Any amount of washing of the body with the best available soaps and any clothing and decoration of it in the best uptodate style cannot remove from it its inlaid flith that has originated from the deep rooted contamination of filthy inheredity. ’
என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.
உலகத்தில் உள்ள எந்த உயர்ந்த சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும், நவீன ஆடை அணிமணிகளால் அலங்கரித்தாலும் கூட பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது படிந்த அந்தத் தீட்டு - அழுக்கு பரம்பரைப் பரம்பரையாக ஆழமாக வேர் பிடித்து அவர்களின் பிறப்பிலேயே தொடர்ந்து வந்துள்ளதால் இதனை நீக்கவே முடியாது என்று சொன்னவர்தான் - இல்லை, இல்லை - திருவாய் மலர்ந்தருளியவர்தான் இவரின் குருநாதர்.
இந்த மனிதகுல விரோதிகள் இவர்கள்! சகமனிதனைப் பிறப்பின் அடிப்படையில் வெறுக்கக் கூடிய மனிதநேயமற்ற வகையில் மனித உருவில் நடமாடும் பேர்வழிகள்தான் ஆச்சாரியார்களாம் - ஜகத்குருக்களாம்- ஸ்ரீலஸ்ரீகளாம்.
நியாயமாக தீண்டாமையைப் பச்சையாகப் பேசும் இந்த வர்ணாசிரம விரியன்கள், பிணையில் வெளியில் வர முடியாத குற்றத்தின் கீழ் வெஞ்சிறையில் தள்ளப்பட வேண்டியவர்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் துணிச்சலாக அதனைச் செய்யத்தானே வேண்டும்? நம் அரசுகளுக்கு ஏது அந்த முதுகெலும்பு?
குறிப்பு: காஞ்சி சங்கர மடத்துக்கும், சிருங்கேரி சங்கர மடத்துக்கும் ஆகாது - அந்த அளவுக்கு ஜென்மப் பகை என்பது வேறு விஷயம்! 15-8-2012
Post a Comment