Search This Blog

5.8.12

விடுதலை - நமக்கு ஓர் போர்வாள்

ரஷியப் புரட்சி கண்ட மாமேதை லெனினுக்குப் போர்வாளாக இருந்தது இங்க்ரா (தீப்பொறி) நாளிதழ்.
சமுதாயப் புரட்சி கண்ட தந்தை பெரியாருக்குக் கேடயமாக இருந்தது - இன்றும் இருப்பது விடுதலை!
இங்க்ராவின் பணி முடிந்து விட்டது. ஆனால் விடுதலையின் பணி காலத்தின் தேவையாகத் தொடருகிறது - இனியும் தொடரும்!

எழுபத்தைந்து கடந்தாலும் நமது ஆசிரியர் -தமிழர் தலைவர் தளராத நடையோடு இன்னும் தாவித்தாவித்தான் வருகிறார். தனது நெஞ்சுக் கூட்டிற்குள் அவர் வளர்க்கும் விடுதலையும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்தக் காலக் கண்ணாடியும் எழுபத்து நான்கு வயது நிறைவுபெற்று எழுபத்து அய்ந்தாவது வயதில் அடியெடுத்து வைக்கிறது. இளமை மாறாத அக்கினிக் குஞ்சிற்கு இவ்வளவு வயதா? எண்ணிப் பார்க்கும்போது வியப்பாகவும் இருக்கிறது - மலைப்பாகவும் இருக்கிறது.

பழமைவாதிகளுக்குச் சவுக்கடி

விடுதலையோடு பிறந்த பல ஏடுகள் பணிமுடித்துக் கண்மூடிவிட்டன. பல ஏடுகள் பாதி வழியிலேயே பயணத்தை முடித்துக்கொண்டன. ஆனால், விடுதலை ஏடு மட்டும் இன்னும் வீறுநடை போடுகிறதே ஏன்? என்ன காரணம்? அன்றைக்கு அய்யா பெரியாருக்கு அதுவே கைத்தடி! - இன்றைக்கு முன்னோக்கிச் சுழலும் சரித்திரச் சக்கரத்தை நிறுத்தத் துடிக்கும் பழைமைவாதிகளுக்கும் வர்ணாஸ்ரமவாதிகளுக்கும் இதுவே சவுக்கடி! இப்படி விடுதலையின் பணி விரிந்துகொண்டே செல்கிறது.
யாம் எழுபத்தியேழு வயது முடித்து எழுபத்தெட்டை எட்டுகிறோம். விடுதலையின் நெடுங்கால வாசகன். அதன் தலையங்கங்கள், பெட்டிச் செய்திகளையெல்லாம் படிக்கும்போது எமக்கு இளமை திரும்பிவிடும். நரம்புகள் முறுக்கேறும். அப்போது படைக்கின்ற படைப்புகளில் என்னுடைய வார்த்தைகள் வெடித்து விழும். விடுதலைக்கு அத்தகைய அதிசய ஆற்றல் உண்டு.
ஜஸ்டிஸ் கட்சி செல்வந்தர்களின் பாசறைதான். அவர்கள் நினைத்தால் தமிழ்நாட்டையே விலைபேசமுடியும். ஆனால், அவர்களால் ஒரு ஏட்டை நடத்த முடியவில்லை.அந்த ஏடுதான் விடுதலை.

பெரியார் வாங்கினார்
வாரம் இருமுறையாக வந்த அந்த ஏட்டை சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்திற்காகப் பெரியார் வாங்கினார். 1937ஆம் ஆண்டிலிருந்து பண்டிதர் எஸ்.முத்துசாமியை ஆசிரியராகக் கொண்டு ஈரோட்டிலிருந்து நாளேடாக வெளிவந்தது. விலை காலணா. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் குறிப்பிட்டதுபோல அப்போதே விடுதலை விஷமக்காரர்களுக்கு விரியன் பாம்புக்குட்டியாகத் தெரிந்திருக்கிறது. அந்த சுயமரியாதைப் பாசறையிலிருந்து தினம்தினம் ஒரு வெடிகுண்டாய்ச் செய்திகள், கட்டுரைகள் வெளிவந்தன. வர்ணாஸ்சிரமக் கோட்டைகள் கலகலத்தன. மூடநம்பிக்கைகளின் முகாம்களான சங்கர மடங்கள், ஆலயங்கள், அக்கிரகாரங்கள் எல்லாம் கதிகலங்கிப் போயின.

இன உணர்வுள்ள மக்களின் படைக்கலன்!

சுயமரியாதை இயக்கம் தொடங்கி அய்யா பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பிய அந்தக் காலத்தை நினைவில் அசைபோட்டுப் பாருங்கள். பெரும்பாலும் அய்யாவின் கூட்டங்கள் கலவரங்களில்தான் முடியும். சனாதனிகள்கூட தீவிரவாதிகளாகப் போர்க்கோலம் பூணுவார்கள். எல்லா ஏடுகளும் ஈரோட்டுப் பாசறை நோக்கி ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தும். ஆனால் அவை அனைத்தையும் சந்தித்ததும், முறியடித்ததும் விடுதலைதான். அந்த ஏடு பத்தோடு பதினொன்று அல்ல - அஃது இன உணர்வுள்ள மக்களின் படைக்கலன்!

அண்ணாவின் சாதனைகளுக்குத் துணை நின்ற விடுதலை

1967ஆம் ஆண்டு அண்ணாவின் தலைமையில் தமிழர் அரசு அமைந்தது. அந்த அரசை அரியணைக்கு அழைத்து வந்ததே அய்யாவின் சுயமரியாதைச் சுடரொலிதான். ஆகவேதான் தமது அரசை அய்யாவிற்குக் காணிக்கையாக்குகிறேன் என்ற அண்ணா அறிவித்தார். கேட்பதற்கு எவ்வளவு பெருமையாக - மகிழ்ச்சியாக இருக்கிறது! ஆனால், அந்தச் சாதனைக்குத் துணைநின்ற விடுதலைக்குத்தான் எத்தனை எத்தனை சோதனைகள்? எத்தனை எத்தனை வழக்குகள்? எவ்வளவு தண்டனைகள்? அவசரநிலைக் காலத்தில் அதற்கு ஏற்பட்ட அவதிகள் என்ன?
வியாபார நோக்குடைய ஏடுகளென்றால் வளைந்து கொடுத்து போற்றிப் பாசுரம் பாடித் தப்பித்துக்கொள்ளும் - நட்டத்தை ஈடுகட்டிக் கொள்ளும். ஏன் கொழுத்த லாபத்திலேயே பயணம் போகும்! ஆனால், இலட்சிய முதலீட்டோடு துவக்கப்பட்ட விடுதலைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதமும் யுகப் பிரவசம்தான்.
விடுதலைக்கு அண்ணா பொறுப்பாசியராக இருந்தார். அப்பொழுதெல்லாம் அவர்தான் தலையங்கம் எழுதுவார். பெரியாரின் பாராட்டுகளைப் பெறுவார். ஆனாலும், சுயமரியாதை, பகுத்தறிவுக் கருத்துகளை எப்படி இணைப்பது என்பதனை அண்ணாவிற்குப் பெரியார் பலமுறை எடுத்துக் கூறியிருக்கிறார். அண்ணாவும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

காலத்திற்கேற்ப மாறுதல்கள்

அண்ணாவைத் தொடர்ந்து குத்தூசி குருசாமி, சாமி சிதம்பரனார் போன்ற அறிஞர் பெருமக்கள் பொறுப்பாசிரியர்களாகப் பணி செய்திருக்கின்றனர். அதன் பின்னர் தமிழர் தலைவர் வீரமணி பொறுப்பேற்றார். இன்றுவரை அவருடைய அரும்பணி தொடர்கிறது. விடுதலையும் காலத்திற்கு ஏற்ப பல மாறுதல்களை சுவீகரித்துக் கொண்டு வருகிறது.

இந்துவும் - விடுதலையும்

தந்தை பெரியார் இருந்தபோது பொறுப்பாசிரியர்கள் வேறுபணிக்குச் சென்று மீளமுடியவில்லை என்றால் யார் தலையங்கம் எழுதுவது? உதவி ஆசிரியரைப் பெரியார் அழைப்பார். இந்துப் பத்திரிகைக்காரன் என்ன எழுதியிருக்கிறான் என்று படி. அதற்கு நேர்மாறாக அவனுக்குப் பதில் எழுது. அதுதான் இன்றைய தலையங்கம் என்றும் பெரியார் கூறுவாராம். இதில் என்ன வியப்பு என்றால் இன்றைக்கும் அந்த இந்துப் பத்திரிகைக்குப் பதில் எழுதும் பணியை விடுதலை தொடர்கிறது. நீதிக்கட்சிக்குத் தேவைப்பட்ட அந்தப் போர்வாள் இன்றைய நிகழ்காலத்திற்கும் தேவைப்படுகிறது.
அண்மையில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. தி.மு.கழகம் தேறாது என்றே இந்து ஏடும் அதன் டெல்லி வம்சாவளி ஆங்கிலத் தொலைக்காட்சிகளும் அலறிக் கொண்டிருந்தன. அத்துடன் அனைவரும் தங்கள் ஆசைகளையும் அள்ளிக் கொட்டின.
முப்பது உறுப்பினர்களோடு செல்வி ஜெயலலிதா, முடிசூட டெல்லி வருகிறார் என்று அந்த ஆங்கிலத் தொலைக்காட்சிகளெல்லாம் விடியவிடிய வாய்நீளம் காட்டின.

இந்துக் கூட்டத்தின் மனப்பான்மை

வாக்குப் பதிவு முடிந்ததும், அந்தத் தொலைக்காட்சிகளுக்கு இந்து ராம் பேட்டி அளித்தார். கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் ஆறு சதவிகித அதிக வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. ஆகவே, அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றி-ஸ்வீப் என்று புல்லரித்துப்போய் பேட்டி அளித்தார்.
வாக்குச் சாவடிக்கு வந்த செல்வி ஜெயலலிதாவை வழிமறித்து 39 தொகுதிகளிலும் வெற்றி உங்களுக்கே என்றும் வாழ்த்தும் கூறினார்.
விடிந்தால் தெரியும் உண்மைக்கு எதற்காக இத்தனை ஆரூடங்கள்? ஆர்ப்பாட்டங்கள்? அவைகள் ஆரூடங்கள் அல்ல. அவைதான் அவர்கள் உள்ளத்தில் தேக்கி வைத்திருக்கும் ஆசைகள். இவர்களை அம்பலப்படுத்தும் பணியை விடுதலை செய்கிறது.

டெல்லியிலும் ஜெயலலிதாவிற்கு முடிசூட்டுவது பற்றி இந்துவும் அதன் ரத்த உறவுகளான ஆங்கிலத் தொலைக்காட்சிகளும் சிந்திக்கின்றன. ஆனால் விடுதலை தமிழினத்தின் அடுத்த தலைமுறைக்கும் அரணாக விளங்குவது எப்படி என்று சிந்திக்கிறது. இந்துக்கள் இருக்கும் வரை விடுதலையும் இருக்கும். அதற்கு அப்பாலும் மிளிரும். காரணம் மலர்கள் குழந்தைகளோடு பேசும். விடுதலை மக்களோடு பேசும்.

எத்தனைக் காலம் நட்டத்தைத் தாங்குவது? விடுதலை நாளேடாக வருவதை நிறுத்திவிட்டு வார ஏடாக வெளியிட்டால் என்ன என்று ஒரு கட்டத்தில் பெரியார் சிந்தித்தார். அதனை அன்னை மணியம்மையாரே தெரிவித்திருக்கிறார். சரியான மாலுமியை அடையாளம் காட்டினார் அய்யா
ஆனால், அய்யா அவர்கள் அச்சப்பட்ட அந்தச் சோதனைக் காலத்தையெல்லாம் விடுதலை வென்றுவிட்டது. மக்கள் கடலில் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது.

விடுதலை மட்டுமல்ல, அய்யா அன்றைக்கு வகுத்த கனவுத் திட்டங்களெல்லாம் இன்றைக்கு அறிவாலயங்களாக உயர்ந்து நிற்கின்றன. காரணம் கப்பலுக்குச் சரியான மாலுமியை அன்றைக்கே அய்யா அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறார்.
ஆசிரியர் வீரமணி ஆரம்பத்தில் அய்யாவின் மாணவர். அடுத்து அய்யாவின் படைத்தளபதி. பின்னர் அய்யாவின் நண்பர். அய்யாவின் இறுதிக் காலத்தில் அவருக்குத் தோழர். இன்றைக்கு அவரை தமிழர், தம் தலைவராகச் சமுதாயம் அங்கீகரித்திருக்கிறது. இத்தகைய சிறப்பு வேறு எவருக்குக் கிடைக்கும்?
விடுதலை என்றால் சோர்வறியாத வீரர் வீரமணி என்று அர்த்தம். வீரமணி என்றால் நடைதளராத விடுதலை என்று அர்த்தம். அவருடைய விடாமுயற்சி தந்த வெகுமதிதான் விடுதலையின் வெற்றியாகும்!

----------------------------- அண்மையில் மறைந்த சோலை விடுதலை பவளவிழா மலரில் எழுதியது.

20 comments:

தமிழ் ஓவியா said...

இணையத்தில் விடுதலையின் போராட்டம்


- தமிழ் ஓவியா மாரிமுத்து

விடுதலை இதழ் எனக்கு 1980 களின் இறுதியில் அறிமுகமாகிப் படித்து வந்தாலும்,1983 முதல் தினந்தோறும் படித்து வந்த எண்ணற்ற வாசகர்களில் நானும் ஒருவன்.நான்கு பக்கங்கள் கொண்ட விடுதலை இதழில் தொடங்கிய எனது பயணம் தற்போது இணைய இதழ் (VIDUTHALAI E-PAPER) மூலமாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. 25 ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி வரும் விடுதலை இதழை நிறுத்தி விடலாமா? என்று பெரியார் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் 1962 ஆம் ஆண்டு முதல் பொறுப்பேற்று நடத்தி,கடந்த சில ஆண்டுகளாக பல வண்ணங்களில் 8 பக்கங்களுடன் வெளிவருவது மட்டுமல்லாது. தினந்தோறும் இதழ் அச்சாகும் அதே வேளையில் இணைய இதழாகவும் (VIDUTHALAI E-PAPER) மலர்ந்து வருவதைப் பார்க்கும் போது தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யாவின் உழைப்பின் பெ(அ)ருமையை என்னவென்று சொல்வது?. 2004 ஆம் ஆண்டு முதல் எனக்கு கணினி அறிமுகமாகி டயல் அப் (VIDUTHALAI E-PAPER) என்ற முறையில் இணைய இணைப்பின் மூலம் இ-மெயில் மற்றும் ஒரு சில பணிகளைச் செய்து வந்தேன். 2007 ஆம் ஆண்டு (broad band) அகலவரிசை இணைய இணைப்புக் கிடைத்த போது நண்பர் ஒருவரின் உதவியால் தமிழ் ஓவியா (thamizhoviya.blogspot.com) வலைப்பூ தொடங்கி அதில் பெரியார் கருத்துகள் மற்றும் விடுதலை இதழில் வளிவரும் கட்டுரைகள், செய்திகளை வெளியிட்டு வந்தேன்.

எல்லா இடத்திலும் தன் ஆதிக்கக் கொடுக்கைப் பரப்பியிருந்த பார்ப்பனியம் இணையதளத்திலும் தனது விஷ(ம)க் கொடுக்கை அங்கிங்கென்னாதபடி எங்கும் பரப்பியிருந்தது.

வலைப்பூவில் பெரியாரின் கருத்துகளை பதிவிட்டபோது வந்த எதிர்ப்பு இருக்கிறதே! யப்பப்பா... சொல்லி மாளது. தந்தைபெரியாரையும், பெரியாரியலை உலகமயமாக்க ஓயாது உழைத்து வரும் தமிழர்தலைவரையும் கொச்சைப்படுத்தி வந்த பின்னூட்டங்கள் எண்ணிலடங்கா? பார்ப்பனர் களின் கொச்சையான அனைத்து விமர்சனங் களையும் நயத்தக்க நாகரிகமாக,பெரியார் தத்துவப்படியும், தமிழர்தலைவரின் கருத்துக்களின் துணையுடனும் அதை எதிர்கொண்டு விளக்கமளித்தேன்.

படிக்கும் வாசகர்களும் பார்ப்பனியத்தின் உண்மைத்தன்மையை உணர்ந்து இன்று 343 பின்பற்றுபவர்களுடன் (FOLLOWERS) மற்றும் 5,81,241 பேர் படித்துக் கொண்டிருக்கும் வலைப்பூவாக தமிழ் ஓவியா (thamizhoviya.blog spot.com) வளர்ந்து கொண்டிருக்கிறது. 22-.7.-2012 நிலவரப்படி தமிழ்மணம் திரட்டியில் 7 ஆவது இடத்தில் உள்ளது தமிழ் ஓவியா. இதற்கு முழு முதற்காரணம் விடுதலை இதழை இணையத்தில் கொண்டு வந்து பெரியாரை உலகமயமாக்கும் முயற்சியில் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களே. ”உண்மை” ஆகஸ்ட் 1-15 2012

தமிழ் ஓவியா said...

நாளேட்டின் நாயகர்


- மஞ்சை வசந்தன்

வியப்பின் மறுபெயர் வீரமணி என்று நான் ஒரு நூல் எழுதி முடிக்கவிருக்கிறேன். அவர் வாழ்வில் சாதித்தவை, நிகழ்த்தியவை, எல்லாமே வியப்பிற்குரியவையே! அவற்றுள் ஒன்றுதான் ஒரு பத்திரிகை ஆசிரியராய் தொடர்ந்து ஒரே பத்திரிகைக்கு 50 ஆண்டுகள் நிறைவு செய்வது என்பது. அதுவும் ஒரு புரட்சிப் பத்திரிகையை, வெகுஜனங்களின் நம்பிக்கைக்கு எதிரான ஆனால் உண்மையான செய்திகளை வெளியிடும் ஒரு பத்திரிகையை ஆசிரியராய் இருந்து நடத்தி சாதிப்பது என்பது வியப்பினும் வியப்பாகும். ஆம் உலகில் வேறு எவரும் இச்சாதனையை நிகழ்த்தியிருப்பார்களா? இல்லை என்றே நினைக்கிறோம். ஆம். எனில் அவருக்கு விரைவில் கின்னஸ் பதிவு கிடைக்கும்; கிடைக்க வேண்டும்; கிடைக்கச் செய்ய வேண்டும். அது தமிழர் கடமை. காரணம் உண்மையில் இது ஓர் உலக சாதனை!

காலத்தால் மட்டும் சாதனையல்ல. காலம் கடந்து கொண்டிருப்பது. 100 ஆண்டு வாழ்வதுகூட சாதனை எனப்படுகிறது. அதில் சாதனை என்பது உடலை வைத்துக் கொண்ட முயற்சிக்கு மட்டுமே. மற்றபடி அதில் சிறப்பு ஏதும் இல்லை. அதேபோல், 50 ஆண்டு ஆசிரியர் என்பது ஒரு காலக்கணக்கீட்டுச் சிறப்பு. ஆனால், அது மட்டுமே இவருடைய சிறப்பன்று. 50 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சிறப்பிற்குரியது.

30 வயதில், வாலிப துள்ளலில் வாழவேண்டிய வயதில் அவரிடம் தந்தை பெரியார் அவர்கள் சவால் நிறைந்த, சரித்திர முக்கியத்துவம் பெற்ற, சாதிக்க வேண்டிய, தமிழ் இனத்தை தலைநிமிர்த்த வேண்டிய, சூழ்ச்சியான, கூர்மையான, அதிகார பலம் வாய்ந்த எதிரியை எதிர்கொள்ள வேண்டிய ஒரு பெரும் பொறுப்பை மானமிகு கி.வீரமணி அவர்களிடம் பெரியார் கொடுத்தார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஆசிரியர் வீரமணி அவர்களைப்பற்றி வியந்து பாடிய பாடலில் இதை மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.
இளமை வளமையை விரும்பிடும் என்பர்
இளமை எளிமையை விரும்பிய புதுமையை
வீரமணியிடம் நேரில் கண்டேன்!
என்று வியந்தார்கள்.

இளமைக்கால கனவுகள் எதையும் அவர் சிந்தையுள் கொள்ளாது, இனமானக் கவலையை மட்டுமே உள்ளத்தில் ஏற்றி, ஒவ்வொருநாளும் உழைத்தார்.

விடுதலை ஆசிரியர் பொறுப்பை மிகத் தயக்கத்துடனே ஏற்றார். பெரியார் தேர்வு என்றும் பிழையானதில்லை. அவ்வாறே இதுவும். இன்றைக்குப் பத்திரிகை நடத்துவது என்பது எளிமை. அந்த அளவிற்கு அறிவியல் சாதனங்கள், தொலைத்தொடர்பு, செய்தி சேரும் விரைவு, அச்சின் மேன்மை போன்றவை வந்துவிட்டன. ஆனால் இவர் ஆசிரியராய் பொறுப்பேற்றபோது என்ன நிலை?-

சரியான அச்சு எந்திரம்கூட இல்லை. எழுத்துக்களை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கிச் சேர்த்தாக வேண்டும். அச்சுக்கோர்த்து முடிக்கவே பல மணி நேரம் ஆகும். ஆனால், இன்று என்ன வளர்ச்சி!

வர்த்தக நோக்கில் நடத்தப்படும் நாளேடுகளோடு போட்டியிடும் அளவிற்கு தரமும், அமைப்பும், அழகும் மிளிர இன்றைக்கு விடுதலையை வளர்த்து, வெளியிட்டுவருகிறார். வண்ணவண்ண எழுத்துக்கள், படங்கள், உள்ளடக்கத்தைக் காட்டும் முகப்பு; கட்டமிட்ட கருத்துக்கள், கட்டங்களிலே பலவகை! பரவசமூட்டும் பக்கங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் விடுதலையில் ஓர் அறிவிப்பையே ஆசிரியர் கொடுத்தார். விடுதலை ஏட்டில் என்னென்ன இடம்பெற வேண்டும்; என்னென்ன மாற்றம் வேண்டும் என்பன குறித்து வாசகர்கள் கருத்துத் தெரிவிக்கலாம் எனக் கேட்டிருந்தார்கள். நானும் கருத்து எழுதியிருந்தேன். கருத்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி சொல்லி கடிதமும் எழுதி, உரிய மாற்றங்கள் செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தார்கள்.

ஒரு பத்திரிகையாசிரியர் இவ்வளவு ஜனநாயக அணுகுமுறையில் கருத்துக்களைக் கேட்டு, மாற்றங்களை உருவாக்கியது என்பது எத்தகைய மாண்பு! எத்தகு உயர்வு! அவருக்கன்றி அடுத்தவர்கக்கு வருவது அரிதே!
இரத்தினச் சுருக்கமாக கொளுவைகளாகச் (கேப்சூல்) செய்திகளைக் கொடுக்கும் பாங்கு நேர்த்தியானது. விளையாட்டு, மருத்துவம், அறிவியல், இல்லம், கல்வி, பெண்ணுரிமை என்று எத்தனை துறைசார்ந்த கருத்துக்கள்! அத்தனையும் முத்துக்கள்!

ஆசிரியர் அறிக்கை: எந்த ஏட்டிற்கும் இல்லாத சிறப்பு இது. அவர் அறிக்கை ஒவ்வொன்றும் வரலாற்றுக் கருவூலம். அன்றாட நிகழ்வுகள், அரசியல், சமூக நடப்புகள் போன்றவற்றைக் கூர்ந்து கவனிக்கும் எம் போன்றோர், இப்படிச் செய்திருக்கலாமே, அப்படிச் செய்யலாமே, இன்ன தீர்வு காணலாமே, இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எண்ணுவோம் பேசுவோம். அது அடுத்த நாள் விடுதலையில் ஆசிரியர் அறிக்கையாய் வந்திருக்கும். இதைப்பலரும் கூறக் கேட்டிருக்கிறேன்.

பலதரப்பு மக்களின் உணர்வுகளை உள்வாங்கி, விழிப்புடன் ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு நிகழ்வையும் கவனித்து, காலம் தாழ்த்தாது, பட்டென்று அறிக்கையாக பத்திரிகையில் சொல்லவேண்டியதை சொல்லும் ஆற்றல், அறிவு நுட்பம், விரைவு வேறு யாருக்கு வரும்?

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் அறிக்கை தமிழக அரசியலுக்கு ஒவ்வொரு நாளும் வழிகாட்டி; ஆட்சியாளர்களுக்கும், கட்சி நடத்துவோருக்கும் திசைகாட்டி, ஒவ்வொரு குடிமகனின் உண்மை விளம்பி. ஆட்சியாளர்களின் குறைகளைச் சுட்டித்திருத்துவதும், நல்லவற்றைப் பாராட்டிப் போற்றுவதும் இதில் அடங்கும்.

கலைஞர் தமக்கு வேதம் என்பார் விடுதலையை. ஒவ்வொரு நாளும் விடுதலையைப் பார்த்தே தம்மைச் சரிசெய்து கொள்வதாக கலைஞர் ஒருமுறை வெளிப்படையாகவே அறிவித்தார்கள்.

ஆசிரியரின் அறிக்கைகள் தொகுப்பு நூல்களாக வந்துள்ளன. அவை வரலாற்றுப் பெட்டகங்கள். வாரிசுகள் அறிய ஒவ்வொரு வீட்டிலும் வேண்டும்!

ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் வாழ்வு என்பது ஒரு சராசரி வாழ்வு அல்ல. 10 வயது தொடங்கி, பக்குவப்பட்ட, பயிற்சி பெற்ற, உலகத் தலைவருடன் உடன் உறைந்த வாழ்வு.

அவர் படித்த நூல்கள் ஆயிரம் ஆயிரம். அவர் பெற்ற அனுபவங்கள் கோடானுகோடி! மருத்துவம் முதல், உடற்பயிற்சி, உணவு, சட்டம், அறிவியல் என்று அனைத்துத் துறையிலும் நுண்ணறிவு பெற்றவர். எதற்கும் ஆலோசனை கூறும் ஆற்றல் அவருக்கு உண்டு. ஒரு மருத்துவரையும் மிஞ்சும் மருத்துவ அறிவும், தெளிவும் அவருக்கு உண்டு. அவர் சட்டமும் படித்ததால் அவர் அறியாததே இல்லை எனலாம். எனவே அனைத்து அனுபவங்களின் சாறாக வாழ்வியல் சிந்தனை வருவதால், அதைப் படித்தால், அவர் கற்றவற்றை, அறிந்தவற்றை, சிந்தித்தவற்றை சுருக்கமாக, எளிமையாக சிரத்தையின்றி நாமும் பெற்றதாக அமையும். இதுவும் தொகுப்பு நூலாக வந்துள்ளது. வாங்கிப் படித்தால் தலைமுறை தலைமுறையாய் பாடம் சொல்லிக் கொண்டிருக்கும்!

தலையங்கம்: விடுதலைத் தலையங்கம் சாட்டையாகவும் வரும்; பாராட்டுச் சட்டையாகவும் வரும்!

உரியவர்கள் கூர்ந்து படித்துத் தெளிந்தால், குற்றம் தவிர்த்து, நிறைவும், பெருமையும் நிறைய பெறலாம்.

விற்பனை: விடுதலையன் விற்பனையை ஆசிரியர் தன் வாழ்வின் தவமாகவே கொண்டுசெய்து வருகிறார்.

விடுதலை விற்பனை அளவு என்பது தமிழர் வாழ்வின் வளர்ச்சியின் அளவு ஆகும். அது சென்றடைய தமிழன் வளர்வான். அதனால்தான் விடுதலையை அதிக மக்கள் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதில் அதிக கவனமும் முயற்சியும் செலுத்துகிறார். மற்றபடி அந்த ஆர்வம் வணிக நோக்கில் வந்ததல்ல. வீதிதோறும் விடுதலை என்பதை தற்போது வீடுதோறும் விடுதலை என்று ஆக்கி, சந்தா சேர்ப்பை இயக்கமாக மாற்றி சாதனை புரிந்து வருகிறார்.

பவள விழாவிலும் பாராட்டுவோம்: 50 ஆண்டு ஆசிரியர் பணியை அரும்பணியாக, தமிழர் மேம்பாட்டுப் பணியாக, பெரியாரை உலக மயமாக்கும் பணியாகச் செய்து முடித்துள்ள ஆசிரியர், நல்ல நலத்துடன் இருந்து நம்மையும், விடுதலையையும் நடத்துவார். 75ஆம் ஆண்டு பவள விழாவும் காண்பார். அப்போது விடுதலை இன்னும் மாற்றமும் ஏற்றமும் பெற்று வரும். அதைத் தமிழினமும் பெற்றிருக்கும். ஆசிரியர் எத்தனை பொறுப்புக்கள் வகித்தாலும் அவரின் நிலைத்த விளிப்பு ஆசிரியர்தானே!

இந்தப் பொன்விழாவில் நாம் ஆசிரியருக்குச் செய்யும் பாராட்டு, நன்றியெல்லாம் வீடுதோறும் விடுதலையைத் தவறாது தொடர்ந்து கொண்டு சேர்ப்பதாகும்.

தமிழ் ஓவியா said...

வரவேற்கிறேன் - தந்தை பெரியார்



என் உடல் நிலை எனக்கு திருப்தி அளிக்கத்தக்கதாய் இல்லை. இப்போது போல் சுற்றுப்பிரயாணம் செய்ய என்னால் இனி முடியாது. கழகம் நல்லபடி இயங்க வேண்டுமானால் பிரசாரமும் பத்திரிகையும் மிக்க அவசியமாகும். இந்த இரண்டு காரியத்திற்கும் தகுதியான தன்மையில் தான் நான் இருந்து வந்தேன்.

எப்படி என்றால் நான் ஒருவன்தான் இவற்றிற்கு முழு நேரத் தொண்டனாகவும் கழகத்தில் ஊதியம் எதிர்பார்த்து வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியமில்லாதவனாகவும் இருந்து வந்தேன்; வருகிறேன். இன்று கழகத்தின் மூலம் ஊதியம் எதிர்பார்த்து வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியமில்லாத தோழர்கள் கழகத்தில் ஏராளமான பேர் இருந்து நல்ல தொண்டு ஆற்றிவருகிறார்கள்.

ஆனால் கழகத் தொண்டுக்கு முழுநேரம் ஒப்படைக்கக் கூடிய தோழர்கள் இல்லை. பிரசாரத்திற்கும் அப்படிப்பட்ட தோழர் இதுவரை கிடைக்கவில்லை. பத்திரிகைக்கும் அப்படிப்பட்ட தோழர் கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் கழக விஷயமாய் நான் நீண்ட நாளாகப் பெருங்கவலைப்பட்டுக் கொண்டு இருந்தேன். இதற்கென்றே இரு தோழரை வேண்டினேன். அவர்களில் ஒருவர் தோழர் ஆனைமலை நரசிம்மன் பி.ஏ. ஆவார்கள். மற்றொருவர் தோழர் கடலூர் வீரமணி எம்.ஏ., பி.எல்., அவர்கள். இதில் தோழர் நரசிம்மன் அவர்கள். எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு தனது எஸ்ட்டேட்டை மக்களுக்கு ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, வீட்டை விட்டே வந்து விட்டார். அதனாலேயே அவரை கழக மத்திய கமிட்டிக்கு தலைவராகத் தேர்ந்து எடுக்கலாம் என்று கருதி, முதலில் கழகப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கச் செய்தேன். தோழர் வீரமணி அவர்களைக் கேட்டுக் கொண்டபோது அவர் சென்னையில் வக்கீலாக தொழில் நடத்திக் கொண்டு கழக வேலையையும், பத்திரிகை வேலையையும் கவனித்துக் கொள்வதாகச் சொன்னார். அது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. என்றாலும் அந்த அளவுக்கு ஆவது கிடைத்த அனுகூலத்தை விடக் கூடாது என்று கருதி அவரை கழக துணைப் பொதுக்காரியதரிசியாக தேர்ந்தெடுக்கச் செய்தேன்.

இந்த நிலையில் தோழர் நரசிம்மன் அவர்களுக்கு ஒரு சங்கடமாக நிலை ஏற்பட்டது. அதாவது அவர் எஸ்டேட்டை. குடும்ப நிர்வாகத்தை, கவனித்து வந்த அவரது மூத்த மகன் - வயது சுமார் 25 உள்ள சங்கருக்கு உடல் நோய்ப்பட்டதோடு அது ஒரு அளவு மூளைத்தாக்குதலுக்கு ஆளாகிவிட்டதால், குடும்ப நிர்வாகத்திற்கும் எஸ்டேட் கவனிப்புக்கும் சிறிது காலத்திற்காவது அவர் (நரசிம்மன்) ஆனைமலையில் இருந்தாகவேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. அதன் பயனாக இன்னும் சில நாளைக்கு அவரது முழு நேரத் தொண்டுக்கு இடமில்லாமல் போய் விட்டது.

தமிழ் ஓவியா said...

இந்த நிலையில் தோழர் வீரமணி அவர்கள், நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் இணங்க, கழகத்திற்கு முழு நேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து பத்திரிகைத் தொண்டையும் பிரசாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக் கொண்டு தொண்டாற்ற ஒப்புக் கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கே வந்து விட்டார்.

இது நமது கழகத்திற்கு கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி திரு. வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வீரமணி அவர்கள் வக்கீல் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாட்களுக்குள் மாதம் 1-க்கு ரூ.200. ரூ.300 என்கிற கணக்கில் வருமானமும், அதிகாரிகளின் பாராட்டுதலும் மதிப்பும் பெறத்தக்க நிலையை அடைந்துவிட்டார்.
அவரது இயக்க சம்பந்தமில்லாத நண்பர்களும், வக்கீல் தோழர்களும் அவருக்கு எவ்வளவோ ஆசை ஏற்படும்படியான எதிர்காலத்தைப்பற்றி சொல்லித் தடுத்தும், அதை ஏற்காமல் துணிந்து முழு நேரப் பொதுத் தொண்டுக்கு இசைந்து முன்வந்தது குறித்து நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன்.

மனைவி, குழந்தை குட்டி இல்லாத வாலிபப் பருவத்தில் பொதுத் தொண்டு உற்சாகம் பலருக்கு ஏற்படுவது இயற்கை. ஆனால் மனைவி, குழந்தை, குடும்பப் பொறுப்பு, நல்ல எதிர்காலம், தொழில் ஆதரவு ஆகிய இவை உள்ள நிலையிலும், நாளைக்கும் அவர் (வீரமணி) ஒப்புக் கொள்வதானால் (எம்.ஏ., பி.எல்.,) என்பதனாலும் பரீட்சையில் உயர்ந்த மார்க்கு வாங்கி இருக்கும் தகுதியாலும்) மாதம் 1-க்கு ரூ.250-க்கு குறையாத சம்பளமுள்ள அரசாங்க அல்லது ஆசிரிய பதவி அவருக்கு காத்திருந்து ஆசை காட்டிக் கொண்டிருக்கும் போதும், அவைகளைப்பற்றிய கவலையில்லாமல் முழு நேரப் பொதுத் தொண்டில் இறங்குவதென்றால் இது இயற்கையில் எப்படிப்பட்ட மனிதரிடமும் எளிதில் எதிர்பார்க்க முடியாத விஷயமாகும்.

உண்மையைச் சொல்கிறேன். தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன்.

எனக்கு திருச்சியிலும் தாங்க முடியாத பளு ஏற்பட்டு விட்டது.

ஆண்கள் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியுடன் பெண்கள் பயிற்சிப் பள்ளி; அனாதைப் பெண்கள் பள்ளி; எலிமெண்டரி பள்ளி ஆகியவை ஆஸ்ட்டல் உடனும் நடைபெற்று வருவதோடு அனாதைப் பிள்ளைகளுக்கு சாப்பாடு போட்டு, கைத்தொழில், தச்சு, தையல், அச்சு எழுத்து சேர்த்தல் (கம்போசிங்) வேலையும் ஒரு 100 பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கத் திட்டமிட்டு அதற்காக முன் ஏற்பாடு வேலையும் நடந்து வருகிறது. இந்த பெரிய பொறுப்புகளில் பெரும் அளவு திருமதி மணியம்மையார் மேற்போட்டுக் கொண்டு பார்த்துவருவதால் என்னாலும் இந்த அளவுக்கு ஆவது சமாளிக்க முடிகிறது.

கழகத் தொண்டிற்கு ஆதரவளிக்கவும் தொண்டாற்றவும் இன்று பல தோழர்கள் இருந்தாலும், முழு நேரத் தொண்டர்களாக இன்னும் சில பேர் வேண்டி இருக்கிறது. இப்போது தோழர் இமயவரம்பன் (புலவர் பரீட்சை பாஸ் செய்தவர்) மாதம் 150 ரூபாய் வரை சம்பள வருவாயை விட்டு, தனது குடும்ப பெரிய சொத்து நிர்வாகத்தையும் விட்டு, மற்றும் பல பணத்தோடு வரக்கூடிய சவுகரியத்தையும் தள்ளிவிட்டு, வீட்டிலிருந்து பணம் தருவித்து செலவு செய்து கொண்டு கழகத்துக்கு ஒரு வேலை ஆளாக 3,4 ஆண்டாக தொண்டாற்றி வருகிறார்.

இந்த நாட்டில் சொந்த சுயநலம் கருதாமலும், பொது பயனுள்ளதுமான தொண்டாற்றிவரும் கழகம் திராவிடர் கழகம் ஒன்றுதானே இருந்து வருகிறது? இக்கழகத்தில் இருப்பவர்கள்தான் சுயநலமில்லாமல் பாடுபடுகிறார்கள். மற்ற கழகங்கள், கழகத்தால் சுயநலம் பயன் அடையக் கருதி பாடுபடுபவை. அதுவும் பயனற்ற. உண்மையற்ற, காரியத்திற்கு பாடுபடும் கழகங்களாகத்தானே இருக்கின்றன? ஆகையால் மற்றும் முழு நேரத் தொண்டர்கள் கிடைத்தால் ஆவலோடு வரவேற்க காத்திருக்கின்றேன். ஆண்கள் வந்தாலும் சரி; பெண்கள் வந்தாலும் சரி; உடை, உணவு பெறலாம்.



ஈ.வெ. ராமசாமி
(விடுதலை 10.8.1962)

தமிழ் ஓவியா said...

விடுதலை "லை"



விடுதலை என்றதும் எனது பள்ளி மாணவப் பருவத்தில் நடந்த நிகழ்வு ஒன்று நிழலாடுகின்றது.

அப்பொழுது நான் அரசு உயர்நிலைப் பள்ளியில் அய்யங்கார் பாளையத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வகுப்பில் நன்றாகப் படிக்கக் கூடியவள்; ஆசிரியரால் பாராட்டப்பட்டவள். செய்தித்தாள் பற்றிய கட்டுரை ஒன்று எழுதச் சொல்லியிருந்தார் எனது தமிழ் அய்யா. நானும் கட்டுரை எழுதி இன்று நம் நாட்டில் வெளிவரும் செய்திதாள்களின் பெயர்களில் ஒன்றாக விடுதலை என்பதனைக் குறிப்பிட்டு இருந்தேன். எனது தந்தையார், குடும்பம்பற்றி நன்றாகத் தெரிந்த தமிழ் அய்யாவிற்கும், எனக்கும் எப்பொழுது பார்த்தாலும் வாக்குவாதம்தான். தமிழ்ச் செய்யுட் பகுதியில் உள்ள பொருள் குறித்து கம்பராமாயணம், அரிச்சந்திரபுராணம், பாஞ்சாலி சபதம், புரட்சிக்கவிஞர் பாடல் என ஏதாவது ஒரு பாடல் குறித்து விவாதம் செய்துகொண்டே இருப்பேன். அதனால் அவருக்கு என் மேல் சற்று வெறுப்புண்டு. எனது கட்டுரைப் பயிற்சி ஏட்டில் பிழைத் திருத்தம் பகுதியில் எப்பொழுதும் எந்தத் திருத்தமும் செய்யும்படியாக நான் எழுதியதில்லை என்பதால், விடுதலை என்ற பெயரில் லை தவறாக உள்ளது என்று கூறி திருத்தம் செய்யச் சொன்னார். நான் நாளிதழின் பெயரே அவ்வாறு இருக்கும்போது அதனை எப்படி மாற்ற முடியும் என்றும், அய்யா தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்பற்றியும் கூறி, அவரிடம் வாதாடினேன்.

ஆனால், முடிவில் மாணவியாக இருந்ததால் ஆசிரியருக்குக் கட்டுப்பட வேண்டிய நிலை உருவாயிற்று. அதனால், மிகவும் அவமானத்திற்குரியதாகவே நான் கருதினேன். ஆனால், அதே ஆண்டு இறுதியில் அன்னை மணியம்மையாரின் வேண்டுகோளுக்கிணங்க, தமிழ்நாட்டின் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களால் அய்யாவின் நூற்றாண்டு விழா சிறப்பாக எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் ஆணையை வெளியிட்ட பொழுது நான் மறுபடியும் அவரிடம் சென்று பிழை திருத்தம் செய்திருந்த அந்த விடுதலையைக் காட்டி சரியென்று கையெழுத்து வாங்கினேன். நம் மாநில முதல்வர் உன்னைக் காப்பாற்றி விட்டார் என்று கூறினார் தமிழ் அய்யா.

இன்று இல்லாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் யார் வந்தாலும் அதனைச் செய்துதான் இருப்பார்கள். அப்படி எப்பொழுது நடந்திருந்தாலும் நான் உங்களைச் சந்தித்து இதனைப்பற்றி கூறியிருப்பேன் என்று மறுமொழி பகன்று நிம்மதியடைந்தேன். அதன் பின் 10 ஆம் வகுப்பில் அதே தமிழாசிரியரின் எழுத்துச் சீர்திருத்த முறையில் பாடங்களை எழுதிக் காட்டும் பொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.
இன்று தமிழின் அடுத்த கட்ட எழுத்துச் சீர்திருத்தத்திற்கும் அடிகோலியவர் ஆசிரியர் என்பதும், அதற்கு அச்சாணி விடுதலையே என்பதும் பெருமைக்குரியதாகும்.

- இறைவி

தமிழ் ஓவியா said...

விடுதலை வளர்ச்சியில் ஆசிரியர்!


- புலவர் குறளன்பன்

எழுச்சிப் பெரியாரின் இனமானப் பணியில் முழுநேரத் தொண்டனாகத் தன்னை இணைத்துக் கொண்ட ஆசிரியர் வீரமணி எடுத்து வைத்த ஒவ்வோர் அடியும் விடுதலைக்கும் - இயக்கத்திற்கும் ஏற்றம் தந்தது.

விடுதலை _இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றதும் ஆசிரியர் வீரமணி அவர்கள் முதல்வேலையாக முகவர்களிடமிருந்து விடுதலைக்கு வந்து சேரவேண்டிய நிலுவைத் தொகைகளைக் கேட்டு வழக்கு எச்சரிக்கை அறிக்கை வழி மீள வழிவகுத்தார்.

நிருவாக ஓட்டைகளை அடைத்து சிக்கனத்தை அறிவுறுத்தி நிமிர்த்தினார்.

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா மலர்களை 1963ஆம் ஆண்டு முதல் பளபளக்கும் பலவண்ணங்களில் அச்சிட்டுப் பலரும் வரவேற்கும்படிச் செய்தார்.

விடுதலை நாள்காட்டி _ விடுதலை நாள் குறிப்புச் சுவடி போன்றவற்றை வெளியிட்டுப் ஒவ்வொரு நாளும் பெரியார் கருத்துப் பரப்பும் நாளாக வித்திட்டார்.

மறுபடி வெளிவராத தமிழர் தலைவர் (சாமி சிதம்பரனார், ஜாதியை ஒழிக்க வழி (அம்பேத்கார்), தந்தை பெரியாருக்குப் பிடித்தமான அவருடைய சித்திரபுத்திரனின் கல்வியின் ரகசியம், ஞானசூரியன் முதலிய நூல்களையும், தந்தை பெரியாரின் திருச்சி வழக்கு மன்றத் தீர்ப்பைத் தானே மொழிபெயர்த்து நீதி கெட்டது யாரால்? _ போன்ற பல நூல்களையும் புதிய கோணத்தில் பதிப்பித்து கொள்கை வளர்த்தார்.

விடுதலை _ இதழ், பெரியார் தன்மதிப்புப் பரப்புரை நிறுவன நூல்கள், திராவிடர் கழக வெளியீடுகள் தடையின்றி வெளிவர விடுதலை மறுதோன்றி (ஆப்செட்) அச்சகத்தை ஏற்படுத்தி முறுக்கேற்றினார்.

விடுதலை அலுவலகப் புதிய பணிமனைக் கட்டுமானத்தில் ஒப்பந்தக்காரர் உண்டாக்கிய சிக்கல்களை உடைத்து உடனடியாகக் கட்டி முடித்தார்.

விடுதலை இதழ் வாசகர்கள் பெருகும் வகையில் வாழ்வியல் சிந்தனைகள், செய்திச் சிதறல்கள், வரலாற்றுச் சுவடுகள், பகுத்தறிவு அரங்கம், இளைஞர் அரங்கம், மகளிர் அரங்கம், அறிவியல் அரங்கம், மருத்துவத் தகவல்கள் _ என்று அவரவர் தேவைக்கு ஏற்ப அளித்து விடுதலை நாளிதழ் வெற்றிமுகடு நோக்கி விரைந்து மேலோங்கி வளர வழிகாட்டிய மேலாண்மை மறவர் தோழர் வீரமணி என்றால் அது முற்றிலும் உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை.

ஒருவருடைய இல்லம் தமிழர் இல்லம் என்பதற்கு அடையாளம் அங்கு விடுதலை வருவதே _என்று விடுதலை இதழின் புதிய பணிமனைத் திறப்பு விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரையாற்றினார்.

குன்றக்குடியாரின் மனமொழி வெளிவருவதற்கு முன்னமே குன்றக்குடியாராகத் தமிழர் வாழும் பொருட்டுத் தந்தை பெரியார் தொடங்கிய விடுதலை இதழிற்கு ஆசிரியர் பொறுப்பேற்ற தோழர் வீரமணி விடுதலை உறுப்பினர் (1000) சேர்ப்பு இயக்கத்தைத் தஞ்சை மாவட்டத்தில் தொடங்கி முன்னோடி வழிகாட்டியாகிப் பெரியாரின் மனத்தைக் குளிர்வித்துவிட்டார்.

நான் இறந்தாலும் ஏனைய திராவிடத் தோழர்கள் ஏமாந்து விடமாட்டார்கள்.

எனது வேலையை அப்படியே விட்டுவிட மாட்டார்கள்.

தொடர்ந்து போராடி வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுவிட்டது. ]
குடிஅரசு - 05.06.1948

தந்தை பெரியார் அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப விடுதலை ஆசிரியர் வீரமணி அவர்கள் தொடர்ந்து உழைத்து வருகிறார் (அய்ம்பதாம் ஆண்டாய்) என்பதற்கு விடுதலை வளர்ச்சியே விடிவெள்ளி சான்றாகும்.

தமிழ் ஓவியா said...

சிறைக் கைதிக்கு இருக்கும் விடுதலை படிக்கும் ஆர்வம்!



பாளையங்கோட்டையில் ஆயுள் கைதியாக இருந்த தோழர் ஒருவர் அக்டோபர் 1980ல் எழுதிய ஒரு மடல்.

எனது பெருமதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு மானமிகு தம்பி அ.பக்கிமுகம்மது எழுதும் விவரம். வணக்கம். அய்யா, நான் ஆயுள் தண்டனையில் இருக்கிறேன். 12 வருஷம் ஆகிறது: அப்படி இருந்தும் பகுத்தறிவுப் பணிக்கு வேன் நிதிக்காக என்னால் முடிந்த அளவு ரூபாய் 15 அனுப்பி இருக்கிறேன். தாங்கள் பெற்றுக் கொண்டதற்கு உடன் கடிதம் எழுதுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன். விடுதலை இதழ் வந்து கொண்டு இருக்கிறது. மிகவும் நன்றி.

_ அ.பக்கிரிமுகம்மது,
சி.என்.ஓ.2640, மத்திய சிறை, பாளை


குறிப்பு: சிறையிலே உடல் இருந்தாலும் அந்த ஆயுள் கைதியின் சிந்தனை விடுதலை படிப்பதில் சிறகடித்துப் பறக்கிறது. இங்கு வெளியிலே உலவிக் கொண்டிருக்கும் மனிதர்களில் எத்தனையோ பேர் விடுதலை படிக்கும் தன்மையின்றிச் சிந்தனை முடங்கிய சிறையிலே ஆயுளைக் கடத்துகின்றனர்.

தமிழ் ஓவியா said...

கருத்தாளர்-எழுத்தாளர்-தொகுப்பாளர்



விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய பல தொகுப்புகள், கட்டுரைகள் நூல்களாக வெளிவந்து பல்லாயிரக் கணக்கில் விற்றுத்தீர்ந்துள்ளன. இன்றளவும் ஆய்வுக்காகவும், ஆதாரங்களுக்காகவும் படிக்கப்படுகின்றன. அவற்றில் சில பற்றி இக்கட்டுரையாளர் விளக்குகின்றார்.

***

சக்தி வழிபாடு என்ற நூல் மெக்காலிஸ்டர் எழுதிய ‘A Century of Excavation in Palestine’,, இல்லஸ்டிரேட்டட் வீக்லி இதழில் குஷ்வந்த சிங் எழுதிய, தாந்தீரகக் கலையும் அதன் குறிகளும் ஏ.வி.ஜெயச்சந்திரன் எழுதிய சக்தி ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு கி.வீரமணி இந்நூலினை எழுதியுள்ளார்.

தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் நூல் 1977ஆம் ஆண்டு வெளிவந்தது. தி.மு.க. ஆட்சியில் கல்வி, தொழில், விவசாயம், மின்சாரம் முதலிய துறைகள் பெற்ற வளர்ச்சியினை இந்நூலில் புள்ளி விவரத்தோடு கி.வீரமணி வெளியிட்டிருக்கின்றார். தி.மு.க. ஆட்சியில் உத்தியோக மண்டலத்தில் தமிழர்கள் பெரும் பங்கு பெற்றதையும், சமூக நீதி கிடைக்கப் பெற்றதையும் அரசு ஊழியர்கள் பலன் பெற்றதையும் இந்நூல் விளக்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

கோயில்கள் தோன்றியது ஏன்? 1972இல் வெளிவந்த இந்நூல். மனுநீதி, ஆகமங்கள் தோன்றுவதற்கு முன்பே சாணக்கியரால் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரம் கொண்டு கோயில்கள் தோன்றிய வரலாற்றை விளக்குகின்றார் கி.வீரமணி. எந்தப் புரட்டைக் செய்தாவது வருவாயைப் பெருக்க வேண்டும் என்பதே சாணக்கியர் வகுத்த அரசியலாகும். இதன் அடிப்ப்டையில் அரசனுக்கு வருவாய் வழிக்காக உருவாக்கப்பட்டதுதான் கடவுள் என்கின்றார் பிரெஞ்சு அறிஞர் ஆபே டூபே, ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் மாக்ஸ்முல்லர், வங்கதேசத்து சட்ட நிபுணர் ஜெ.சி.கோஷ், காந்தியடிகள், பி.டி.சீனிவாச அய்யங்கார் முதலியோர்களின் கருத்துக்களை இந்நூலில் தமக்கு ஆதாரமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் கி.வீரமணி.

வருவாய்க்கு ஆக கோயில்கள் கட்டப்பட்டதால் மக்களை வசீகரிக்கப் பல ஏற்பாடுகளையும் அரசன் செய்ய முனைந்தான். திரைப்படம் எடுப்பவர்கள் வசூல் கண்ணோட்டத்தில் பல மட்டரக ரசனைக் காட்சி களையும், பால் உணர்ச்சி களைத் தூண்டக்கூடிய காட்சிகளையும் எப்படி எடுத்து வசூல் சாதனையை ஏற்படுத்திக காட்டுகிறார் களோ அதுபோன்றே அந்தக் காலத்தில் பிறரை வசீகரப் படுத்த, கவர்ந்து இழுக்க நடனத்தையும், சங்கீதத்தையும் கோயிலுக்குள் நுழைந்தார்கள்! என்று கோயிலுக்குக் கூட்டம் சேர்க்க கையாண்ட வழிமுறை களையும் இந்நூலினுள் விளக்குகின்றார்.

தமிழ் ஓவியா said...

கோயிலுக்குள் பார்ப்ப னர்கள் நுழைந்த விதத்தை அக்னியை வணங்க வேண்டிய பிராமணர்கள் கோயில் களுக்குச் சென்று விக்கிரகங் களை வழிபட்ட காரணத்தால் அவர்கள் சாதப் பிரஷ்டம் செய்யப்பட்டார்கள். புறக்கணிக்கப்பட்ட பார்ப்பனர் களின் சவுகரியங்களுக்காகச் சொத்துக்களும், அடிமைப் பெண்களும், தாசிகளும், சங்கீதமும், வேலையாள்களும் மற்றும் பொருட்களும் கொடுக்க வேண்டியதாயிற்று. பிராமணன் வராத கோயி லுக்குக் கவுரமில்லை என்ற எண்ணம் பல பார்ப்பன ரல்லாதாருக்கு உண்டு. அமந்த கவுரவத்தை உண்டு பண்ணும் பொருட்டே பார்ப்பனருக்கு இவ்வளவு சவுகரியங்களையும் செய்து கோவிலுக்குள் அழைத்து வந்திருக்கக் கூடும் என்று ஜெ.சி.கோஷ் என்னும் ஆய்வாளர் கருத்தை எடுத்துரைத்து ஆதரிக்கிறார்.

மனுதர்மம் என்பது சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்திற்குப் பின் எழுதப்பட்டது என்பதும், அர்த்த சாஸ்திரத்தில் உள்ள பார்ப்பனரின் சூழ்ச்சியையும், மோசடியையும் நம் மக்கள் படித்து விளங்கிக் கொண் டால், ஆரிய சூழ்ச்சியை வெகு எளிதில் அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளுவார்கள் என்பதாலேயே மனுதர்மத்தின் நாலாவது அத்தியாகத்தின் 10ஆவது சுலோகத்தில் சூத்திரனுக்கு இம்மைக்கு உபயோகமான அர்த்த சாஸ்திரத்தைச் சொல்லி வைக்கலாகாது என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது! என்றுரைக்கும் கி.வீரமணி, பார்ப்பனர்கள் கோயிலில் நுழைந்து, அவர்களுக்குத் தேவையான சாப்பாடு உண்டு, தாசிகளைக் காமக்கிழத்திகளாக்கிக் கொண்டு வாழ்ந்த நிலை _ இவை போன்றவற்றால் கோயில்கள் மூலம் அரசனுக்கும், அவனது கஜானாவுக்கும் மட்டுமே செல்ல வேண்டிய கோயில் வருமானம் பிறகு கோயில் சொத்துக்களாக்கப்பட்டு, அதற்கென ஒரு தனி ஸ்தாபனமாக்கப்படும் நிலை ஏற்பட்டது என்று விளக்குகின்றார்.

தமிழ் ஓவியா said...

காமராஜர் ஆட்சியின் சாதனைகள் என்னும் நூல் 1961ஆம் ஆண்டு விடுதலை வெளியீடாக வெளிவந்தது. கி.வீரமணியால் எழுதப்பட்ட அந்நூல் அவர் பெயரின்றி வெளியிடப்பட்டது. அந்நூல் உருவான வரலாற்றை காமராசர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலக்கட்டம் அது. தந்தை பெரியார் அவர்கள் காமராசரைத் தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வருவார். கல்விக் கண் திறந்த காமராசர், தமிழ்நாட்டின் இரட்சகர் காமராசர், பச்சைத் தமிழர் காமராசர் என்றெல்லாம் பொதுமேடைகளில் காமராசரின் ஆட்சியை உயர்த்திப் பேசுவார் அய்யா! அவருக்கு முன்பு பேசிய நான், அதற்கேற்ற ஆதாரங்களையெல்லாம் செய்தித் தாள் நறுக்குள் எழுதிய பலவற்றைக் காட்டிப் பல புள்ளி விவரங்களுடன் பேசியதைக் கேட்ட அய்யா ஒருமுறை கவனித்து, அந்த விவரங்களைச் சிறு நூலாக்கலாம் என்றார். காமராசர் ஆட்சியின் சாதனைகள் என்று தலைப்பிட்டு ஏற்பாடு செய்தோம்.

தந்தை பெரியார் அவர்கள் தாம் பேசும் கூட்டங்களில் பேச்சைத் தொடங்கிப் பேசும்போது கூட்டத்தில் விற்கப்படும் புத்தகங்களைப் பற்றிச் சிறப்பாக அறிமுக உரை நிகழ்த்தி அதைக் கூட்டத்திலுள்ள மக்கள் வாங்கும்படி ஆவலைத் தூண்டிப் பேசுவ வழமையாகும். அப்படிச் சொல்லும்போது அய்யா அவர்கள் காமராசர் ஆட்சியின் சாதனைகள் பற்றி அறிமுகம் செய்கையில் ஒரு கூட்டத்தில் திடீரென்று அதை நண்பர் கி.வீரமணி அவர்கள் மெத்தச் சிரமப்பட்டு கடினமாக உழைத்து மிக அருமையாகத் தொகுத்தறித்துள்ளார். விலை நான்கு அணாதான். நீங்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்று கூறினார் என்று கி.வீரமணி தம் சுயசரிதையில் தெளிவுபடுத்துகிறார்.

நீதி கெட்டது யாரால்? எனும் நூல் தந்தை பெரியார் பெயரில் 1957இல் வெளியானது. உயர்ஜாதி நீதிபதிகள் தவறான ஜாதிக் கண்ணோட்டத்தோடு தந்த மூன்று தீர்ப்புகளை ஆதாரமாகக் கொண்டு நீதி கெட்டது யாரால்? என்ற தலைப்பில் கி.வீரமணி எழுதிய கட்டுரையைப் படித்த தந்தை பெரியார், இவ்வுளவு நல்ல ஆதாரங்களைக் கொண்டதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. இதனை உங்கள் பெயரில் வெளியிடுவதால் உங்கள் மீது வழக்கு சட்டப்படி ‘Contempt of court’ வர வாய்ப்பு உண்டு. ஆகவே, எனது பெயரிலேயே வெளியிடுகிறேன். உங்கள் பெயரைவிட என் பெயரில் வெளிவந்தால் அதற்கு வெயிட் அதிகம் வரும். அரசு, நீதிமன்றத்தின் அதிக கவனத்தையும் அது ஈர்க்க வாய்ப்புண்டு என்றார். வேலூர் கழகத் தோழர்கள் பெரியாரிடம், கட்டுரையைப் பிரமாதமாக எழுதியுள்ளீர்கள் என்று பாராட்டிப் புகழ்ந்தபோது, அக்கட்டுரையை எழுதியது உண்மையில் நான் அல்ல. நம்ம தோழர் வீரமணிதான் அதை எழுதினார். அவர் மீது ஏதும் நடவடிக்கை வந்துவிடக் கூடாதே என்பதற்காகத்தான் எனது பெயரில் என் கையொப்பத்துடன் நானே வெளியிடுமாறு செய்தேன் என்றார்

ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் என்னும் நூல் தந்தை பெரியார் பெயரில் 1963இல் வெளியானது. ராஜாஜி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பள்ளி மூடல்கள், குலக்கல்வித் திட்டத் திணிப்பு, இந்தி திணிப்புப் பற்றிப் பொதுக்கூட்டங்களில் பெரியார் ஆற்றிய உரையைக் கேட்ட கி.வீரமணி, ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் என்னும் தலைப்பில் நூலினைத் தயாரித்தார். குடிஅரசு, விடுதலை, லிபரேட்டர் இதழ்களின் செய்திகளை ஆதாரமாக்கி, ராஜகோபாலாச்சாரியாரின் 1938 மற்றும் 1953 ஆட்சியின்போது நிகழ்ந்த கொடுமைகளைப் பட்டியலிட்டு, சட்டமன்ற நடவடிக்கைகளையும் உள்ளடக்கி கி.வீரமணி இப்புத்தகத்தை உருவாக்கினார். நூலில் பெரியார் பெயர் இருந்தாலும் அது வீரமணி தொகுத்தது என்றே பெரியார் தயக்கமின்றிக் கூறுவார் என்று கி.வீரமணி தெரிவிக்கின்றார்.

சிறந்த பேச்சாளராகத் திகழ்கின்ற வீரமணி நல்ல எழுத்தாளராகவும் இருக்கிறார் என்பதற்கு அவரெழுதிய நூல்களே சாட்சியம் கூறுகின்றன

- கி.வீரமணி வாழ்வும் பணியும் முனைவர் பட்ட ஆய்வேட்டிலிருந்து...

தமிழ் ஓவியா said...

பெரியார் ஒப்படைத்த பெரும்பணி

- நக்கீரன் கோபால்

பெரியார் இல்லையென்றால் இந்த இனத்திற்கு விடுதலை என்பது இல்லை. அவர் நடத்திய விடுதலை, குடிஅரசு போன்ற பத்திரிகைகள் இல்லையென்றால், எங்கள் நக்கீரன் போன்ற மக்களின் குரலாய் ஒலிக்கும் பத்திரிகை உருவாகியிருக்க முடியுமா என்பது கேள்விக்குறியதே. ஆதிக்கசக்திகளை எதிர்த்து நின்று பெரியார் தன்னுடைய பத்திரிகைகளை நடத்தியதால் ஏற்பட்ட தாக்கமும் விளைவுமே இன்று எங்கள் நக்கீரன் இலட்சக்கணக்கான வாசகர்களுடன் எளிய மக்களின் குரலாய் ஒலிக்கிறது. ஆதிக்கத்தை எதிர்த்து உறுதியாக நிற்கிறது. சவால்களையும் சங்கடங்களையும் துணிவுடன் எதிர்கொள்கிறது. பெரியார் அமைத்துத் தந்தை பாதையில் பயணத்தைத் தொடர்கிறது.

அந்தப் பாதையை இன்றைய காலத்திற்கேற்ப நவீனப்படுத்தியிருப்பவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். திராவிடர் இயக்கத்தில், ஆசிரியர் என்ற சொல் அவருக்கே உரியதாய் அமைந்துவிட்டது. அதற்கு அவர் முற்றிலும் பொருத்தமானவர், அந்தப் பெயருக்கு பெருமை சேர்த்தவர் என்பதால்தான், விடுதலை நாளிதழின் ஆசிரியராக 50 ஆண்டுகள் நிறைவுசெய்து, பொன்விழா ஆசிரியராக அனைவரின் வாழ்த்துக்களையும் பெறுகிறார்.

விடுதலை நாளேட்டின் தேவை என்ன என்பது பற்றி பெரியார் அவர்கள் குறிப்பிடும்போது, ஒழுக்கக்கேடானதும் மூடநம்பிக்கைகளை வளர்க்கக்கூடியதும், தமிழ் மக்களுக்குச் சமுதாயத்திலும் _ அரசியலிலும் உத்தியோகத் துறையிலும் கேடு அளிக்கக்கூடியதுமான காரியங்களை வெளியாக்கி, அக்கேடுகளைப் போக்குவதற்காகப் பாடுபடும் பத்திரிகை விடுதலை. அது இல்லாதிருந்தால் மேற்கண்ட துறைகளில் ஏற்படும் கேடுகளை ஏன் என்று கேட்க நாதியே இல்லாமல் போயிருக்கும் என்று சொல்லியிருக்கிறார்.

எத்தகைய உயர்ந்த சமுதாய நோக்கத்துடன் இந்த நாளேட்டை பெரியார் அவர்கள் வளர்த்தாரோ, அந்த நோக்கத்தின் அடிப்படையிலான பயணத்தைப் பல நெருக்கடிகளுக்கு நடுவிலும் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பவர் ஆசிரியர் அவர்கள். ஒரு பத்திரிகையின் உரிமையாளர் என்ற முறையில் அதனை நடத்துவதில் எத்தனை இடர்பாடுகள் இருக்கும் என்பதை உணர்ந்தவன் என்ற முறையில் ஆசிரியர் அவர்களின் அரும்பணியை நினைத்துப் பார்க்கிறேன்.

தமிழ் ஓவியா said...

இது இலட்சக்கணக்கில் விற்கின்ற பத்திரிகை அல்ல. இலட்சியங்களோடு நடக்கின்ற பத்திரிகை என்று விடுதலை பற்றி ஆசிரியர் பலமுறை சொல்லியிருக்கிறார். அந்த இலட்சியத்தின் அடிப்படையில் அவருடைய ஆசிரியர் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. விடுதலை நாளேட்டில் பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கத்தில், இனி விடுதலைக்கு உண்மையான பிரசுரகர்த்தாவாகவும், ஆசிரியராகவும் வீரமணி அவர்கள்தான் இருந்து வருவார். விடுதலையின் 25வது ஆண்டு துவக்கத்தில் இலட்ச ரூபாய்களை விடுதலை நடப்புக்காகச் செலவிட்டு, நஷ்டமடைந்த நிலையில், இதனை ஏற்க முன்வந்த வீரமணி அவர்களது துணிவையும், தியாகத்தையும் சுயநலமற்ற தன்மையையும் கருதி, விடுதலை வீரமணி அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எப்படிப்பட்ட சூழலில், விடுதலையின் ஆசிரியராக வீரமணி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார் என்பதைப் பெரியாரே விளக்கிவிட்டார். மேலும் அவரே, உண்மையைச் சொல்கிறேன். தோழர் வீரமணி இந்த முழுநேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி வாரப்பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். பெரியாருக்கு அத்தகைய நெருக்கடியான நிலையை ஏற்படுத்தாமல் ஆசிரியர் அவர்கள் விடுதலை நாளேட்டை சிறப்பாக நடத்தத் தொடங்கி இன்றுவரை அதனை மிக அருமையான முறையிலே நடத்திவருவதை நாம் அனைவரும் காண்கிறோம்.

விடுதலையின் ஆசிரியராக வீரமணி அவர்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்தே அதனுடைய வடிவமைப்பு, எழுத்துவடிவம், செய்திகள் ஆகியவற்றைத் தொடர்ந்து மேம்படுத்தி வந்துள்ளார். திராவிடர் கழகத் தொண்டர்கள் பலர் தங்களுடைய வருமானத்தில் முதல் வேலையாக, விடுதலைக்கு சந்தா செலுத்தியிருக்கிறார்கள் என்பதை மூத்த பத்திரிகையாளர் அய்யா சின்னக்குத்தூசி அவர்கள் பலமுறை சொல்லியிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

அய்யா சின்னக்குத்தூசி அவர்களின் நண்பரான திருவாருர் லெனின் கோவிந்தராசன் அவர்களும் இதுபற்றி சொல்லியிருக்கிறார். திருவாரூரில் ஒரு ஜெனரல் ஸ்டோர்ஸில் வேலை பார்த்துவந்த ஹபீப் முகமது என்ற இஸ்லாமியர் தந்தை பெரியார் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட கறுப்புச் சட்டைக்காரர். திருமணமே செய்துகொள்ளாதவர். வயது முதிர்ந்த நிலையில் தனக்குக் கிடைத்த சொற்ப வருமானத்தில் ஒருவேளை உணவைத்தான் சரியாக சாப்பிடுவார். ஆனால், அந்த நிலையிலும் நாள்தோறும் காசுகொடுத்து விடுதலை பத்திரிகை வாங்கிவிடுவார். அதில் வெளியாகியிருக்கும் ஆசிரியரின் அறிக்கை, தலையங்கம், இயக்கச் செய்திகளைப் படித்துவிட்டு, அதனடிப்படையில் மற்றவர்களுடன் விவாதிப்பாராம். இன்று அவர் உயிருடன் இல்லை என்றாலும் அவரைப்போன்ற எத்தனையோ எளிய ஹபீப் முகமதுகள்தான் விடுதலையின் பெருமைமிகு வாசகர்கள்.

அவர்களுக்கு செய்திகள் சரியான முறையில் போய்ச் சேரவேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு விடுதலையை சிறப்பாக நடத்திவருகிறார் ஆசிரியர் வீரமணி அவர்கள். இந்திராகாந்தி அம்மையார் ஆட்சியில் எமர்ஜென்சி நடைமுறைக்கு வந்தபோது, கழுத்து நெறிக்கப்பட்ட பத்திரிகைகளில் விடுதலையும் முதன்மையானது. ஆசிரியர் அவர்கள் மிசா சிறைவாசியாக, சென்னை மத்திய சிறையில் நேரடித் தாக்குதலுக்குள்ளாகி பல துன்பங்களை அனுபவித்துவந்த நேரத்தில், விடுதலை நாளேடு நாள்தோறும் தணிக்கைக்குள்ளாகி பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. பெரியார் என்ற வார்த்தையைக்கூட தணிக்கை செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நேரங்களிலும் பத்திரிகையைத் தொடர்ச்சியாக வெளிவரச் செய்யும் நிலைமையை உருவாக்கியவர் ஆசிரியர் அவர்கள்.

அச்சுத் தொழிலில் காலத்திற்கேற்ற வளர்ச்சிகளையும் மாற்றங்களையும் உடனே ஏற்றுக்கொண்ட தமிழ் நாளேடு விடுதலை என்றால் அது மிகையல்ல. கணினியில் அச்சுக்கோர்க்கும் முறை வந்தபிறகுதான் லை, னை, றா போன்ற எழுத்துக்கள் பெரும்பாலான பத்திரிகைகளில் பயன்பாட்டுக்கு வந்தன. அதற்கு முன்பு ,, போன்ற எழுத்துகள்தான். ஆனால், தமிழின் சீர்திருத்த எழுத்துகளாக பெரியார் இருந்தபோதே, தற்போது பயன்படுத்தும் எழுத்துகளை பயன்படுத்திய ஏடு, விடுதலை.

ஒரு லே_அவுட் ஆர்ட்டிஸ்ட் என்ற முறையிலும் விடுதலை என்னை மிகவும் கவர்ந்த நாளேடாகும். மிக எளிமையான முறையிலும் அதே நேரத்தில் மிகச் சீரான வகையிலும் அதன் லே_அவுட் அமைந்திருக்கும். செய்திகளைப் படிப்பதில் வாசகர்களுக்கு சிக்கலோ சலிப்போ ஏற்படாத வகையில் அமைவதே நல்ல லே_அவுட் என்பார்கள். அந்த இலக்கணத்திற்கு உட்பட்டிருப்பது விடுதலையின் லே_அவுட். அச்சு இதழாக மட்டுமின்றி, இணைய இதழாகவும் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது விடுதலை.

விடுதலையின் வயது 78. அதன் ஆசிரியராக 50 ஆண்டுகாலம் பணியாற்றியிருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள். பெரியார் ஒப்படைத்த பெரும்பணியை அவர் எத்தனை சிறப்பாக செய்து வருகிறார் என்பதற்கு இது ஒரு சான்று.

தமிழினம் இன்னும் பல துறைகளில் உண்மையான விடுதலையைப் பெற வேண்டியிருக்கிறது. அந்த விடுதலைக்கான குரலாய், விடுதலை நாளேட்டின் கொள்கை முழக்கம் தொடரவேண்டும். அதன் ஆசிரியராக அய்யா வீரமணி அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் செயல்படவேண்டும் என நக்கீரன் நெஞ்சார வாழ்த்துகிறது.

தமிழ் ஓவியா said...

சமூக நீதிப் பொரில் ஆசிரியரின் 'விடுதலை"

வகுப்புரிமை பல்லாயிரம் ஆண்டு சமுதாய நோய்க்குக் கிடைத்திட்ட மூலிகை! இந்தியப் பரப்பின் எல்லாப்பகுதிகளிலும் அம்மூலிகைப் பயிர் விளைச்சலுக்கு வித்துக் கொடுத்த இயக்கம் தந்தை பெரியார் இயக்கம் என்பார் கவிஞர் கலி பூங்குன்றன்.

அந்த இயக்கத்தின் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் வாரிசாக வந்துதித்த தமிழர் தலைவர் _ விடுதலை ஆசிரியர் சமூகநீதிப்போரில் தம் பகைவாள் விடுதலையை எம்.ஜி. ஆர் அரசுக்கு எதிராக உயர்த்திப் பிடிக்க வேண்டிய வேலை 1979ல் ஏற்பட்டது. வீரத்தின் திரு உரு வீரமணி முடங்கிப் போய்விட வில்லை. முன்னணி வீரராக விடுதலையைக் கையில் பிடித்து முன்னேறினார்.
அந்த வரலாற்றுப்பக்கங்கள் நம் கண் முன்னே விரிகின்றன.

1977- ஆம் முதன் முதலாக ஆட்சியை கைப்பற்றிய அ.தி.மு.க, 1979லேயே முன்பின் யோசனை இல்லாமல் தமிழினத்தின் தலைவிதியை நிருணயிக்கக்கூடிய சமூகநீதிக் கொள்கையில் கை வைத்தது. அந்த திருத்தம் இதுதான்.

உயர் கல்விக்கூடங்களிலும் அரசாங்கப் பதவிக்கு அரசாங்கப்பதவிக்கு பிறபடுத்தப்பட்ட வகுப்பினருக்கு 31 விழுக்காடும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 விழுக்காடும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பல்லாண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த கொள்கை 1952ல் இருந்து 1954 வரையில் ஆட்சி புரிந்து வந்த பார்ப்பனர், இராஜாஜிகூட இக்கொள்கையில் கை வைத்து எந்த மாற்றமும் செய்யவில்லை.அப்படியிருக்க ஆட்சியில் ஏறியதும் எம்.ஜி.ஆர் அவசர கோலத்தை அள்ளி வீசியதுபோல இந்தக் கொள்கையில் திடுமென தடுமாற்றத்தைப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் தலையில் பேரிடியை இரக்கும் மாற்றம் தன்னைச் செய்தார்.

பிறப்பால் சமூக அடிப்படிஅயில், கல்வி அடிப்படையில், பிறப்ட்ட சமூகத்தைச் சேர்ந்த வராத இருந்தால் மட்டும் ஓத்த, ஆண்டுக்கு ரூபாய் 9000க்குக் குறைவான வருவாய் உடையவராய் இருந்தால் மட்டுமே பிற்பட்ட வகுப்புகுரிய சலுகைகளைப் பெறவியலும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற போதிலும் அவருடைய வருவாய் ரூ.9000த்தைத் தாண்டி விடுமானால் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர் களுக்கான சலுகையைப் பெற முடியாது. ஒருவர் பின்தங்கியவராக நிர்ணயிப்பதற்கு அவருடையச் சமூகக் கல்வி அடிப்படையில் மட்டுமே கவனிக்க வேண்டும் என்றும் விதி உள்ளபோது அதிமுக அரசு-எம்.ஜி.ஆர் அரசு புதிதாக பொருளாதார அளவுகோலை தன்னைச்சையாக முடிவு செய்தது.

இப்படி முடிவு செய்ததை அவாளின் பத்திரிக்கைகள் எல்லாம் ஆல வட்டம் வீதி வரவேற்றன. ஆசிரியர் வீரமணியின் விடுதலை இச்செய்தியை வெறும் செய்தியாக வெளியிடாமல் பிற்படுத்தப்பட்டோருக்கு தமிழக அரசின் துரோகம் என்று விடுதலை 4.7.79இல் வெளிச்சம் போட்டுக் கொட்டை எழுத்தில் கொந்தளித்து அறிவித்தது. செய்தியில். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு மெலும் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். என்ற கோரிக்கை எழுந்துள்ள நேரத்தில் தமிழ்நாடு அரசு, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் கழுத்தைப் பிடிக்கிறது.

ஆண்டு கொத்த வருமானம் 9 ஆயிரத்துக்குக் குறைவாக் இருப்பவர்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள சலுகைகள் பெற முடியும். தமிழ்நாடு அரசு இந்த படுபாதகமான உத்தரவை நேற்று வெளியிட்டு, நேற்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்து விட்டது. இந்திய அரசியல் சட்ட்த்தில் கல்வி, சமூக ரீதியாக என்றுதான் பிற்படுத்தப் பட்டவர்கள் வரையறுக்கப்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியாலல்ல தமிழக பிற்படுத்தப்பட்டவருக் குள்ள பொருளாதார அளவுகோலைப் புகுத்தியிருப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதம், பிற்படுத்தப்பட்ட சமுதாயத் துக்கும் துரோகமாகும் என்று செய்தி வெளியிட்டது.

எம்.ஜி.ஆர் அரசின் இந்த அறிவிப்பு ஜூலை 14,15 தேதிகளில் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக் காப்பு மாநாடு என்று அறிவித்த வேளையில் வந்த அறிவிப்பு அத்துடன் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு மற்றொரு பேரிடி என்று தலையங்கம் தீட்டியது விடுதலை.

“Socially and Educationally” சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறதே தவிர, ‘Economically’ பொருளாதார ரீதியாக என்று எங்கும் குறிப்பிடவே இல்லை என்பது கோடிட்டு காட்டப்பட வேண்டிய கட்சியாளர் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான உண்மையாகும். “Socially and Educationally Backward என்பதுதான் நிர்ணய அளவுகோலாக இருக்க வேண்டுமே தவிர பொருளாதார அடிப்படை என்பது ஒப்புக் கொள்ளப்படவே இல்லை.

தமிழ் ஓவியா said...

சூத்திரன் படிக்கக் கூடாது என்பது மனுதர்மம், பிச்சை எடுக்கும் பார்ப்பனர் கூட சமுதாயத்தில் உயர்ந்தவர், கல்வியில் எழுத்தறிவு வாசனை உடையவர் என்பதைப் புரிந்து கொண்டால் பொருளாதார அடிப்படை என்பதை ஏன் தந்தை பெரியார் அவர்கள் கடுமையாக எதிர்த்தார் என்பது யாவருக்கும் புரிந்து விடும்.

மாதம் 750 ரூபாய் வருமானம் வந்து விடுவதாலேயே பிற்படுத்தப்பட்ட குடிமகனுக்கு வந்து விடுவதாலேயே பல்லாயிரணக்கான ஆண்டுகளாய் அவன் தலைமுறை, தலைமுறையாகக் கல்வி, உத்தியோக வாய்ப்புகளில் அழுத்தி வைக்கப்பட்டு இருந்தது மாறிவிடுவா? மாறிவிட்டது என்று எதிர்ப்பார்த்தால் அது நியாயமா? என்று ஆசிரியரின் விடுதலைத் தலையங்கம் செவிட்டில் அறைந்தது போல் கேள்வி எழுப்பியது என்றால் அது பொதுச்செயலாளர், விடுதலை ஆசிரியர் வீரமணியின் கேள்வி.

ஆச்சாரியார் செய்யத் துணியாததை, அவசர காலத்தில் ஆர்.பி சுப்பிரமணிய அய்யரும், தவே அய்யரும் செய்யத் துணியாததை அண்ணா பெயரில் ஆட்சிக் கட்டில் ஏறிய எம்.ஜி.ஆர் ஏறிச்செய்த துரோகத்தை அம்பலப்படுத்தினர் சமூகநீதி போராளி கி.வீரமணி.

இப்பிரச்சினையை மறுபரிசீலனை செய்து இவ்வாணையை திரும்ப பெற வேண்டுமென்று விடுதலை வாயிலாக வேண்டுகோள் விடுத்தார்.

வெறும் அறிக்கை எனும் காகித வாளைச் சுழற்றவில்லை.

4.7.79இல் தமிழக அரசு வெளியிட்ட விபரீத உத்தரவு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு மிகப்பெரிய அநீதி என்று பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தலைவர்களைக் கூட்டிக் கூட்டறிக்கை வெளியிட்டு அநீதியை எதிர்க்கக் கட்சி வேறுபாடின்றி ஓரணியில் திரளுவோம் என தி.க., தி.மு.க., இ.காங்கிரஸ், உழைப்பாளர் முன்னேற்றக் கட்சி என்று பலரும் வடி அறிக்கை வெளியிட்டனர்.

அதேநாளில் மற்றொரு தலையங்கமும் பிறப்டுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு மற்றொரு பேரிடி என்று எழுதினார். அதில் மவுண்ட் ரோடு மகாவிஷ்னு எனப்பட்ட இந்து ஏடு முற்போக்கானது பொருள் பொதிந்ததும் என்று தலைப்பிட்டு தமிழ்நாடு அரசு ஆணையை மிகவும் பாராட்டி எழுதியிருப்பதை வெளிச்சம் போட்டக் காட்டி அக்கிரகாரம் அடையும் குதூகலத்தை வெளிப்படுத்தியது விடுதலை.

தமிழ் ஓவியா said...

5.7.79 விடுதலை கட்டம் கட்டிச் செய்தி வெளியிட்டுப் பிற்படுத்தப்பட்டோர் மூடிய வழிகளைத் திறக்கச் செய்தது. (காண்க: பெட்டிச்செய்தி)

5.7.79ல் எழுதிய தலையங்கத்தில் விடுதலை இதைவிட பிற்படுத்தப்பட்டோருக்கு இனி பேராபத்து ஒன்றும் இல்லை! இதைவிடப் பெரியார் கொள்கைக்குத் துரோகம் வேறு எதுவுமில்லை என்று முடித்ததுடன் முரசொலியில் கலைஞர் கடிதத்தை வெளியிட்டதை விடுதலை மறுபிரசுரம் செய்தது. கலைஞரின் கடிதத்தின் தலைப்பு பிற்படுத்தப்பட்டோர் தலையில் அரசு போட்ட அணுகுண்டு சேலத்தில் நேரு கலையரங்கில் முன்னாள் அமைச்சர் முத்தையா அரங்கில் 14.7.79 அன்று பிற்படுத்தப்பட்டோர் உரிமை பாதுகாப்பு மாநாட்டினைக் கூட்டி, தமிழக அரசு புதிய உத்தரவினை ரத்து செய்யாமல் நியாயப்படுத்தும் பிடிவாதப் போக்கினை மேற்கொண்டால், ஒரு போராட்டத் திட்டத்தை வகுக்க மற்றவர்களுடன் கலந்து அறிவிக்கும் பொறுப்பான ஏற்றிட வேண்டும் எனத் திராவிடர் கழகப் பொச்செயலாளர் கி.வீரமணி அவர்களை மாநாடு ஒருமனதாகக் கேட்டுக்கொண்டது.

அடுத்து 22.7.79ல் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறப்டுத்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாடு என்.எம்.மணிவர்மா தலைமையில் நடைபெற்றபோது சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, பேராசிரியர் அன்பழகன், செங்கல்வராயன் முதலானவர்களும் கலந்துகொண்டனர்.

அரசு 9000 ரூபாய் உச்ச வரம்பு ஆணையை திரும்பப் பெறவில்லையெனில் ஒரு நாளில் பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் வெறுப்பைக் காட்டும் அறிகுறியாக அரசு ஆணையின் நகலை எரித்துச் சாம்பலை முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அனுப்புவது அன்று முடிவு செய்யப்பட்டது. அத்துடன் இந்த ஆணைக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடையும் பெறப்பட்டது.

புதுக்கோட்டையில் நடைபெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் கழகப் பொதுச்செயலாளரிடம் 50 பேர் கொண்ட போராட்டப் பட்டியல், பட்டுக் கோட்டையில் 150 பேர் கொண்ட பட்டியல், குடந்தை வட்டத்தில் 100 பேர் என்று குருதிக் கையெழுத்திட்டு அனுப்பிய செய்தியை விடுதலை வெளியிட்டது.

9 ஆயிரம் ஆணை வழக்கு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்குச் சென்றது.

எம்.ஜி.ஆர். அரசு நிர்ணயித்த பொருளாதார அளவுகோலுக்கு எதிராகப் பெரியாரின் தீர்க்கமான சிந்தனைகளில் ஊறிய கூரான வாதங்களைத் திமிழர் தலைவர் எழுப்யிதை விடுதலையின் பக்கங்கள் வீறுகொண்டு பரப்பியது கண்டு அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் திணரித்தான் போனார்கள். பிற்பட்ட சமூகங்கள் எல்லாம் வீரமணி அவர்களின் தலைமையில் கூடின.

அடுத்து வந்த 1980 தேர்தலில் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தொகுதிகளில் தி.மு.க. கூட்டணியிடம் அ.தி.மு.க. படுதோல்வி கண்டு பாடம் கற்றது எனில் சமூகநீதிப் போரில் வீரமணியின் கைவாள் விடுதலையின் பங்கு முதன்மையானது.

இதை உணர்ந்த எம்.ஜி.ஆர் அரசு தேர்தல் முடிந்த உடனேயே சமூக நீதிக் கொள்கையில் செய்த அநீதியான மாற்றத்தைப் பொருளாதார அளவுகோல் என்ற நியதியைக் கைவிட்டது. பிற்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு வந்த இடங்களையும் 50 விழுக்காடாக உயர்த்தியது. விடுதலையின் வீரவரலாறு இது.

- பேராசிரியர் ந.க.மங்கள்முருகேசன்

தமிழ் ஓவியா said...

தன்னிகரற்ற பன்முக ஆற்றல்

திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் - மானமிகு கி.வீரமணி அவர்களின் ஆற்றலுக்கு பல்வகைப்பட்ட தனிச் சிறப்புகள் உண்டு.

ஒரு பத்திரிகையாளராக, தந்தை பெரியார் அவர்களின் அன்புக் கட்டளைப்படி விடுதலை நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் முதல், தனது எழுத்துக்கள் மூலம் இயக்கத்தின் லட்சியங்களை, கொள்கைகளை முன்னிறுத்தி ஏற்றம் பெறச் செய்வதுடன், இயக்க ஏடுகளான விடுதலை, உண்மை, ‘The Modern Rationalist’ ஆகியவற்றில் புதிய புதிய உத்திகளைக் கையாண்டு புதிது புதிதான பகுதிகளை உருவாக்கி அவற்றை பரிணமிக்கச் செய்வார். தான் விழித்திருக்கும் நேரத்தில் பெரும்பகுதியை படிப்பதற்கும், எழுதுவதற்கும், சிந்திப்பதற்குமே செலவிடும் பண்பாளர் இவர். எதையும் செய்யாமல் அவர் சும்மா இருப்பதையே காணமுடியாது. பயணம் செய்யும்போதும் கூட எதையாவது படித்துக் கொண்டோ, சிந்தித்துக் கொண்டோதான் இருப்பார். தனது அறிவைப் பற்றியோ ஆற்றலைப் பற்றியோ எள்முனையும் தன்முனைப்பு கொள்ளாத அவர், புதிய புதிய நூல்களைப் பயில்வதன் மூலம் மேலும் மேலும் தனது அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளும் தாகம் மிகுந்தவராகவே விளங்குகிறார். என்றாலும் பேசும் போதெல்லாம், தனக்கு பெரியார் தந்த புத்தியே போதும்; சொந்த புத்தி தேவையில்லை என்று கூறத்தவறமாட்டார்.

பத்திரிகையில் புதிய பகுதிகள்

அது மட்டுமல்ல; தான் அறிந்தவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது என்ற பத்திரிகையாளர்களுக்கே உரித்தான உயர் பண்பையும் பெற்று விளங்குபவர் அவர். அவர் விடுதலை இதழில் தொடர்ந்து எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகள் இதற்குத் தக்க எடுத்துக்காட்டாகும். அதே போன்று உங்களுக்குத் தெரியுமா? என்ற புதிய பகுதியில் The book of General Ignorance என்ற நூலில் இருந்த பல்வேறுபட்ட தகவல்களை மொழியாக்கம் செய்து விடுதலையில் தொடராக வெளியிடச் செய்தார். புதிது புதிதாக வெளிவரும் நூல்களைப் பற்றி இந்து ஆங்கில நாளிதழ் மற்றும் பிற இதழ்களிலிருந்து அறிந்து கொண்டு, அவற்றில் முக்கியமானவை எனத் தான் கருதும் நூல்கள் அனைத்தையும் வாங்கிப்படித்துவிடுவார்; அவற்றில் இருக்கும் உடன்பாடான கருத்துகளை தனது எழுத்திலும், பேச்சிலும் வெளிப்படுத்திவிடுவார். வெளிநாடுகளில் அவரை மிகவும் கவர்ந்த இடம் நூல் விற்பனை நிலையங்கள்தான்.

இயக்கத் தோழர்களின் அன்பு

தந்தை பெரியார் அவர்களைப் போலவே தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளிலும், குக்கிராமங்களிலும் இருக்கும் இயக்கத் தோழர்களைப் பற்றி நன்று அறிந்து வைத்திருக்கும் அவரது நினைவாற்றல் வியக்கத் தக்கது. தனது சொந்த பிரச்சினைகள் பற்றி ஒரு சாதாரண இயக்கத் தொண்டர் கடிதம் எழுதினாலும் அவரது பிரச்சினையைத் தீர்த்து வைக்க உதவுவார் அல்லது தக்க வழிகாட்டுவார். ஆதரவற்ற மூத்த பெரியார் தொண்டர்களுக்கு நிதி உதவி செய்து வரும் அவரது உள்ளம் வள்ளல்தன்மை கொண்டது. அவர் மீது இயக்கத் தோழர்களும், தொண்டர்களும் வைத்திருக்கும் பேரன்புக்கும், மரியாதைக்கும் அளவே இல்லை.

தமிழ், ஆங்கில நூலாசிரியராக . . .

தமிழிலும் ஆங்கிலத்திலும் எண்ணற்ற நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார் தமிழர் தலைவர். அதில் குறிப்பிடத் தக்கது கீதையின் மறுபக்கம் என்ற தமிழ் ஆங்கில மொழிகளில் வெளிவந்துள்ள ஆராய்ச்சி நூலாகும். குறைந்த விலையில் இயக்கக் கருத்துகள் கொண்ட பிரசுரங்களை வெளியிடும் தந்தை பெரியார் அவர்களின் உத்தியைப் பயன்படுத்தி 2 ரூ, 5 ரூ என்று மிகக் குறைந்த விலையில் ஏராளமான பிரசுரங்களை வெளியிடச் செய்வதன் மூலம், இயக்கக் கருத்துகள் எளிதாக மக்களிடையே பரவச் செய்கிறார். அதே போன்று தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள், கருத்துகள் உலகெங்கும் பரவும் வண்ணம் அவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடச் செய்துவருகிறார்.

பொதுக்கூட்டங்கள், மாநாடுகள்

தமிழ் ஓவியா said...

இயக்கக் கொள்கைகளைப் பரப்புரை செய்ய இதழ்கள், நூல்களைப் பயன்படுத்துவது போலவே, பொதுக் கூட்டங்களையும், மாநாடுகளையும் தமிழர் தலைவர் ஆக்க பூர்வமாகப் பயன்படுத்தி வருகிறார். நாட்டையும், மக்களையும் பாதிக்கும் எந்த ஒரு பிரச்சினை எழுந்தாலும், பொதுக் கூட்டங்களையும் மாநாடுகளையும் ஏற்பாடு செய்து நடத்தி அவற்றின் மூலம் அது பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவார். மண்டல மாநாடுகள், சிறப்பு மாநாடுகள், வட்டார மாநாடுகள் என்று மாநாடுகள் ஆண்டு முழுவதும் நடந்து கொண்டேயிருக்கும். ஒவ்வொரு மாநாட்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி தவறாமல் இருக்கும். அதே போல பெரியாரியல் பயிற்சி முகாம்கள் ஆண்டுதோறும் குற்றாலத்திலும், ஆண்டு முழுவதிலும் மற்ற வட்டாரங்களிலும் நடத்தப்பட்டு மாணவர்கள், இளைஞர்களுக்கு பெரியார் அவர்களின் கருத்துகள், கொள்கைகள் அறிமுகப்படுத்தி வைக்கப்படுகின்றன.

அதே போல பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் சிலைகள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், ஆந்திர மாநிலம் விஜயவாடா போன்ற இடங்களிலும் அமைக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்து தருவார்.

தமிழர் தலைவரின் சாதனைகள்

அவர் படைத்துள்ள சாதனைகள் ஏராளம். பத்து வயதில் மேடையேறி பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய அவர் தனது 79 வயதில் 69 வயது பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். உலகிலேயே பகுத்தறிவு நாளிதழாக வெளிவருவது நமது விடுதலை ஏடு மட்டும்தான். இந்த ஏட்டிற்கு ஆசிரியராக இருந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள தமிழர் தலைவர் அவர்கள்தான் ஒரு நாளிதழுக்கு நீண்ட காலமாக ஆசிரியராக இருந்தவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆவார்.

தமிழர் தலைவரின் பன்முகப் பொறுப்புகளும் கடமைகளும்

ஒரு அரசியல் தலைவரைவிட, ஓர் அமைச்சரை விட அதிக பொறுப்புகளை ஏற்று கடமையாற்றி வரும் தலைவர் தமிழர் தலைவர். கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் ஒரு புறம், அறக்கட்டளைகளின் நிர்வாகம் ஒருபுறம், இயக்க அமைப்பு நிர்வாகம் ஒரு புறம், நாளிதழ், பத்திரிகைகள் வெளியிடும் பணி ஒரு புறம், புதிய புதிய இயக்க நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் பணி ஒரு புறம், இயக்கக் கொள்கைகளைப் பரப்புரை செய்யும் பணி ஒரு புறம், தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை உலக மயமாக்கும் பணிகள் ஒரு புறம் என்று ஓய்வில்லாமல் உழைத்துவரும் ஒப்பற்ற தலைவர் தமிழர் தலைவர். அவர் காலத்தில் வாழ்ந்து அவருக்குக் கீழே பணியாற்றும் பேற்றினைப் பெற்றிருக்கிறோம் என்பதே நமக்குப் பெருமை அளிக்கும் செய்தியாகும்.

- த.க.பாலகிருஷ்ணன்

தமிழ் ஓவியா said...

நமது கேள்வி: சதயம், பூரட்டாதியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?

இப்படியெல்லாம் இதழ்கள் கட்டுரைகளை எழுதித் தள்ளுகின்றனவே - இந்த நட்சத்திரங்கள் எவ்வளவுக் காலமாக இருந்து வருகின்றன? இந்த நட்சத்திரங்களில் எவ்வளவு காலமாக எவ்வளவு மக்கள் பிறந்திருக்கிறார்கள்?

அப்பொழுதெல்லாம் இவர்கள் எதைப் படித்தார்கள்? இப்பொழுது மட்டுமே படிக்க முடிவதற்கு யார் கரணியம் எது காரணம் பார்ப்பனர்கள் மட்டும் படிக்கக் கூடிய ஒரே நட்சத்திரத் தில் பிறந்தார்களா?

ஒரு பெரியாரும், ஒரு காமராசரும், ஒரு திராவிடர் இயக்கமும் பாடுபட்ட பிறகுதானே நம் மக்களுக்குப் படிப்பு வந்தது? இதழ் நடத்தும் முதலாளிகளே! எம்மக்கள் உங்களுக்கு என்ன கேடு செய்தார்கள்? ஏன் அவர்களை இன்னும் வஞ்சிக்கிறீர்கள்? 6-8-2012