ஓணம் பண்டிகையாம்; இது தமிழ்நாட்டை விட கேரள மாநிலத்தில் வெகு விமர்சையாகக் கொண் டாடப்படுகிறது.
இதன் கதை என்ன?
சோழ நாட்டில் திருமரைக்காடு (வேதாரண்யம்); அங்கு ஒரு சிவன் கோயில். அங்குள்ள சிவனின் மனைவிக்குப் பெயர் ஞானம் பழுத்த நாயகி என்பதாகும்.
ஒரு நாள் தன் மனைவியோடு சிவன் புணர்ந்து கொண்டு இருந்தானாம். (இது மாதிரி சமாச்சாரம் இல்லையென்றால், இந்து மதம் என்பதற்கு அர்த்தமே கிடையாது!)
அந்த நேரத்தில் எரிந்து கொண்டிருந்த தீபம் ஒளி குன்றி எரிந்து கொண்டிருந்ததாம். அந்த சமயத்தில் அங்கு வந்த எலி விளக்கில் இருந்த நெய்யைக் குடித்துவிட்டு, எலியின் வால் திரியின் மேல் பட்டதால், தூண்டப்பட்டு ஒளி பிரகாசமாகிவிட்டதாம்.
சிவனா கொக்கா? எலியைப் பார்த்து சிவன், நீ மூவுலகையும் அரசாட்சி செய்வாய்! என்று வரம் கொடுத்தானாம்.
விளக்கைத் தூண்டவேண்டும் என்ற எண் ணத்தில்கூட எலி அந்த வேலையைச் செய்யவில்லை; எதிர்பாராவிதமாக வால் பட்ட சங்கதி! சிவன் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்தால் இப்படி ஒரு வரம் கொடுத்திருப்பான்? (ஓ, இது மாதிரி கடவுள் சமாச்சாரங்களில் எல்லாம் அறிவைச் செலுத்தக் கூடாதே - கண்மூடி தண்டனிட வேண்டுமே!)
மாவலி என்னும் பெயரோடு பிறந்த அசுர குல அரசன் மண்ணுலகம், விண்ணுலகம், பாதாள உலகம் மூன்றையும் கட்டி ஆண்டானாம்.
விண்ணுலகையும் மாவலி ஆண்டதால், இந்திர லோகத்தின் அதிபதியாகிய இந்திரன் கூட மாவ லிக்குக் கட்டுப்பட்டவனாகிவிட்டான். பொறுக்குமா அவர்களுக்கு?
அதே நேரத்தில் யாருக்கும் எந்த கேட்டையும் செய்யாமல் நல்லாட்சி புரிந்து, நல்ல பெயர் எடுத்தான் மாவலி!
அசுர குலத்தவன் நல்லாட்சி செய்வதாவது! நல்ல பெயர் எடுப்பதாவது! விட்டுவிடுவார்களா? இந்திரனின் தகப்பனாகிய காசிப முனிவன், விஷ்ணுவிடம் மனு போட்டானாம். கடும் தவமிருந்து விஷ்ணுவிடம் வரம் வேண் டினானாம். விஷ்ணு தமக்கு மகனாகப் பிறந்து மாவலியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று மன்றாடினானாம். அதன்படியே வரமும் கிடைத்தது.
(மூன்று உலகத்தையும் மாவலி கட்டி ஆள வேண் டும் என்று சிவன் கொடுத்த வரம் என்னவாயிற்று? சிவனை விட வைணவக் கடவுளுக்குச் சக்தி அதிகம் என்று காட்டுவதற்கு இதுபோன்ற கதைகள் போலும்!)
ஒருமுறை யாகம் செய்த மாவலி தான தருமங்களைச் செய்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி காசிப முனிவருக்குப் பிறந்த வாமனன் (குள்ளப் பார்ப்பான் - சூழ்ச்சி என்று வந்தால் புராணங்கள் கூட பார்ப்பானைத்தான் தேடிப் பிடிக்கின்றன.) பிச்சைக்காரனாக (யாசகம் புருஷ லட்சணம் என்பதே பார்ப்பன தருமம் ஆயிற்றே!) சென்று மூன்று அடி மண்ணைக் கேட்டானாம். கேட்பாருக்கு இல்லை என்று சொல்லிப் பழக்க மில்லாத அந்தத் தர்மப்பிரபுவாகிய மாவலி எனும் அசுர அரசன் சம்மதித்தான்.
சூழ்ச்சிக்காரக் குள்ளப் பார்ப்பனனாகிய வாமனன் பேருரு எடுத்து (விசுவரூபம்) ஓரடியை மண்ணுலகத்திலும் மற்றொரு அடியை விண்ணு லகத்திலும் வைத்து, மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்டானாம். என் தலையில் வை! என்றானாம் அந்த அப்பாவி; அவ்வளவுதான். தலையில் காலை வைத்து மிதித்து சிறையிலும் அடைத்தானாம்.
இந்த நாளில் மாவலி வீட்டுக்கு வீடு வருகிறானாம். கேரளத்தில் அப்படி ஒரு நம்பிக்கை. வீட்டு வாசலில் கோலம் போட்டு வைக்கிறார்கள்- மாவலியின் வருகைக்காக. ஓணம் பண்டிகை என்பது இதுதான்.
இந்தக் கதை மூடத்தனத்தின் மொத்தக் குத்தகை என்பது ஒருபுறம். இந்து மதத்தில் விஷ்ணு அவதாரம் எடுப்பதெல்லாம் அசுரர்களை அழிக்கத் தான் என்பதை மறந்துவிடவேண்டாம். தீபாவளிக் கதையும் இந்த ரகத்தைச் சேர்ந்ததே!
நல்லவனாக இருந்தாலும் அவன் அசுர குலத்தவன் என்றால் - சூத்திரன் என்றால் அவனை ஆளவிடாதே- அழித்துவிடு! என்கிற ஆரிய தத்துவம்தான் இந்த வாமன அவதாரக் கதை!
இங்கு மதம், கடவுள், பக்தி என்பதெல்லாம் நம்மை ஒழிப்பதற்கே! இந்தச் சூழ்ச்சி புரியாமல் கடவுள், காடாத்து என்று அலைவது பரிதாபமே!
-----------------------"விடுதலை” தலையங்கம் 29-8-2012
9 comments:
தொண்டறத்திற்கு ஏழ்மை தடையில்லை!
தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள்: ஒரு குருவி மற்றொரு குருவிக்குக் கூடு கட்டித் தராது; தனக்கு மட்டும்தான் கூடு கட்டிக் கொள்ளும். ஆனால், மனிதனோ பிறருக்கு வீடு கட்டித் தருவதை மேற்கொள்ளுகிறவன்.
மனித வாழ்வில் தொண்டறம் - பிறருக்கு இதய சுத்தியோடு உதவுவதில் எல்லை யற்ற இன்பத்தைக் காணும் சுகம் ஆகும்.
சில நண்பர்கள் - நமக்கு என்ன வசதி வாய்ப்பு (பணம் - என்ற பொருளில்) இருக்கிறது - தொண்டறத்தில் ஈடுபடு வதற்கு? நம்ம பொழப்பே பெரும்பாடாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் நாம் எப்படி மற்றவருக்கு உதவுவது? என்று வக்கணை அல்லது சாக்குப் போக்குக் கூறி தனது அப்பட்டமான சுயநல வாட்டத்தை மறைத்துக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்ட செத்தாருள் வைத்து எண்ணப்படவேண்டிய மனிதர்கள் அறிய வேண்டிய செய்தி, கற்றுக்கொள்ளவேண் டிய அரியதோர் பாடம் - இணையத் தின்மூலம் கிடைத்தது!
சீனாவில் குப்பை அள்ளிப் பிழைக்கும் ஒரு துப்புரவுப் பணி செய்யும் ஏழ்மை நிலையில் அன்றாடம் வாழும் 88 வயது நிறைந்த லூ ஜியாஓயிங் என்ற சீன மூதாட்டி, குப்பைக் கூடைகளில் கிடைக் கும் பொருள்களைக் கண்டெடுத்து மறுபயன்மூலம் அன்றாட கஷ்ட ஜீவனம் நடத்துபவர்.
நான்கு குழந்தைகளுடன் லூ ஜியாஓயிங்
ஜுனுகுவா என்ற நகரத்தின் வீதி களில் குப்பைக் கூடைகளில் ஏதாவது கிடைத்தால், அதை விற்று வாழ்க்கை நடத்திடும் அந்த அம்மையார், குப்பைக் கூடைகளில் போடப்பட்ட - கைவிடப் பட்ட பல குழந்தைகளைக் கண்டெடுத்து, அனாதைக் குழந்தைகளை (குடிரனேடபேள) எடுத்து வளர்த்து ஆளாக்கி, அவர் களுக்கு கல்வி கொடுத்து வளர்த்து வருகிறார் 88 வயதிலும்! அவரது உடல் நலிந்த நிலையிலும் தொண்டு தொட ரவே செய்தார்!
கடந்த 17 ஆண்டுகளுக்குமுன் அவரது கணவர் மறைந்துவிட்டார்; அவ ரும் இவரது தொண்டுக்கு உறுதுணை யாக இருந்தவர்.
88 வயதில் அவருக்கு இதயநோய், சிறுநீரகக் கோளாறு - இவ்வளவு இருந் தும் அவர் 30 குழந்தைகளைக் கண் டெடுத்து, அதில் நான்கு குழந்தைகளை இவ்விருவருமே வளர்த்து ஆளாக்கி யுள்ளனர்; எஞ்சிய 26 குழந்தைகளை அவர்களது உறவினர்கள், நண்பர் களிடம் ஒப்படைத்து வளர்த்து, வாழ் வளிக்கச் செய்து, அப்பணியில் முழு மன நிறைவு கொள்கிறார்!
என்னே சிறப்பான தொண்டறம்!
இந்தத் தொண்டினை - கைவிடப் பட்ட இந்தக் குழந்தைச் செல்வங்களை எடுத்து வளர்த்து ஆளாக்குவதையும், மற்ற ஏற்பாடுகளைச் செய்வதிலும் ஆக 40 ஆண்டுகளாக இவர் இப்பணியினை - விளம்பரம் ஏதுமின்றி செய்து அதில் இன்பம் காணுகிறார்!
இணையத்தில் வந்துள்ள செய்தியின் தமிழாக்கத்தினை கீழே கொடுத்தி ருக்கிறோம், படியுங்கள்!
30-க்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட குழந்தைகளைக் காப்பாற்றிய 88 வயது சீன மூதாட்டி லூ ஜியாஓயிங்
தன் வாழ்நாள் முழுவதையும் வறுமையிலேயே வாடிக் கழித்த ஒரு சீன நாட்டு மூதாட்டி, தனது வாழ்நாளில், எந்த வித சுயநல நோக்க மும் இன்றி இதுவரை 30-க்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட குழந்தை களைக் காப்பாற்றியதற்காக, இன்று நாட்டின் மிகப் பெரிய நாயகியாகப் போற்றிப் புகழப் படுகிறார். சீனநாட்டின் ஜின்ஹூவா நகரத் தெருக்களில் இருந்து, பெற்றவர்களால் கைவிடப்பட்ட 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை இவர் எடுத்துக் காப் பாற்றியுள்ளார் என்று நாளேடான யன்ஜாவோ தெரிவித்துள்ளது.
17 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன அவரது கணவருடன் சேர்ந்து இந்த அனாதைக் குழந்தைகளில் நால்வரை லூ, தானே நேரிடையாக வளர்த்து ஆளாக்கி உள்ளார். மற்ற குழந்தைகளை அவரது குடும்பத் தினரும், நண்பர்களும் எடுத்து வளர்த்து ஆளாக்கியுள்ளனர்.
தற்போது இந்த லூ அம்மையார் இதய நோயாலும், சிறுநீரக பாதிப் பாலும் துன்பப்பட்டுக் கொண்டிருக் கிறார். உயிர் வாழ்வதற்காக குப்பைத் தொட்டிகளில் கிடைப்பவற்றைத் தேடி எடுத்து வாழ்ந்து வந்த இந்த அம்மை யாரின் சேவை அவரது இறுதி நாட்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டு காலம் கஷ்டப்பட்டுக் கொண்டே அமைதியாக, ஆரவாரம் இன்றி சேவை செய்து வந்த இந்த அம்மையாருக்கு, அவரது இறுதிக் காலத்தில் உதவி செய்ய சமூகத்தின் கரங்கள் நீண்டுள்ளன.
தனது அனுபவங்களை இந்த அம்மையார் கூறுகிறார்:
1972 ஆம் ஆண்டில், நான் குப்பைத் தொட்டியைக் கிளறிக் கொண் டிருந்த போது ஒரு சிறு பெண் குழந்தை அதில் இருந்ததைக் கண்டேன். பெற்றவர்களால் கைவிடப்பட்ட அந்தக் குழந்தை தெருவில் உள்ள குப்பையில் போடப்பட்டிருந்தது. அக் குழந்தையை நான் காப்பாற்றி எடுத்து வராமல் போயிருந்தால் அது இறந்தே போயி ருக்கும்.
அந்தப் பெண் குழந்தை படிப் படியாக வளர்ந்து பலம் பெற்று வருவதைக் காண்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. குழந்தைகள் மீது அன்பு செலுத்தும் உண்மையான அக்கறை எனக்கு இருக்கிறது என்பதை அப்போதுதான் நான் உணர்ந்து கொண்டேன். குப்பை களில் இருந்து எங்களுக்குப் பயன்படக் கூடியவைகளைத் தேடிப் பொறுக்கி எடுக்க எங்களால் முடியுமானால், மதிப்புமிக்க மனித உயிர்களை எடுத்துக் காப்பாற்ற எங்களால் எவ்வாறு இயலாமல் போகும்? என்று கூறும் லூ அம்மையாருக்குப் பிறந்த சொந்த பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. அப்படியிருக்கும் நிலையில் ஒரு குப்பைத் தொட்டியில் கிடந்த ஒரு ஆண் பிள்ளையை தனது ஆறாவது குழந்தையாக இந்த 82 வயதில் ஏற்றுக் கொண்ட செயல் எவராலும் கனவிலும் எண்ணிப் பார்க்க இயலாததாகும்.
எனக்கு வயது அதிகமாக ஆகி தள்ளாத முதுமை நிலை அடைந்து விட்டேன் என்ற போதிலும், அந்தக் குழந்தையை எடுத்து வராமல் அப்படியே அது இறந்து போகட்டும் என்று குப்பைத் தொட்டியில் விட்டு விட்டு வர என்னால் முடியவில்லை. அவன் பார்ப்பதற்கு மிகவும் அழகாகத் தோன்றினான். அவனுக்கு உதவி அவசியம் தேவைப்பட்டதால் அவனை என்னுடன் வீட்டிற்கு எடுத்துச் சென் றேன் என்று தனது 7 வயது தத்து மகன் கில்லிங் பற்றி அவர் கூறுகிறார்:
எனது தாய் மிகுந்த வறுமையில் வாடிக் கொண்டிருந்த போதிலும், தான் காப்பாற்றி எடுத்து வந்த குழந்தை களுக்குத் தேவையானவற்றைத் தன்னால் எவ்வளவு சிறப்பாக அளிக்க முடியுமோ அவ்வளவு சிறப்பாக அளித்து வளர்த்தார் என்று அவரால் தத்து எடுத்து வளர்க்கப்பட்ட மகள் ஜங் ஜூஜூ கூறுகிறார். மேலும் அவர் கூறுகிறார்: முதுமை நிலையிலும் அவர் வெளியே செல்வதை எவராலும், எதனாலும் தடுத்து நிறுத்த முடிய வில்லை. தினமும் மூன்று அல்லது நான்கு முறை வெளியே சென்று, குப்பைத் தொட்டிகளில் தேடி பணத் துக்காக விற்பதற்குத் தகுதியான பொருள்களை எடுத்து வருவார். தனது உடல் நலம் சீரழிந்தபோதும் இந்த வேலையை அவர் நிறுத்தவே இல்லை.
தன்னால் நகர்ந்து செல்லவோ, பேசவோ முடியாமல் போன பிறகும் தனது அன்பிற்குரிய, தன்னால் காப் பாற்றி வளர்க்கப்பட்ட குழந்தைகளைப் பற்றியே லூ அம்மையார் நினைத்துக் கொண்டே இருக்கிறார். இன்னமும் அதிக நாட்கள், நான் உயிருடன் இருக்க மாட்டேன். ஆனால் நான் பார்க்க விரும்புவதெல்லாம் இந்த 7 வயது சிறுவன் கில்லிங் பள்ளிக்குச் செல் வதைத்தான். அந்த முறையில், நான் இறந்துபோனாலும், எனது வாழ்க்கையைப் பற்றி வருத்தப் படுவதற்கு எதுவுமே இருக்காது என்று மருத்துவமனையில் படுத்துக் கொண் டிருக்கும் அந்த அம்மையார் கூறுகிறார்.
தனது மூத்த மூன்று குழந்தை களைப் பள்ளிக்கு அனுப்ப அவரால் இயலாமல் போயிருந்தாலும், தனது மகள் ஜங்கையும், இப்போது 33 வயதாகும் மற்றொரு மகளையும் இளம் உயர்நிலைப் பள்ளிவரை படிக்க வைத்துள்ளார்.
லூ அம்மையாரின் வீரமும், துணிவும், அன்பும் செறிந்த வாழ்க் கைக் கதை இன்று சீன இதழ்களில் தலைப்புச் செய்தியாக அழகுபடுத்தி வரும் நிலையில், லூ அம்மையாரின் சமூகத்தினர் அவரது வாழ்க்கை லட்சி யத்திற்கு உதவி செய்து முன்னெடுத்துச் செல்ல முன்வந்துள்ளனர்.
இந்த அம்மையாரின் மருத்துவச் செலவுகளுக்கு உதவி செய்ய நன் கொடை இயக்கம் ஒன்று ஆன் லைனில் தொடங்கப்பட்டுள்ளது. கில்லிங் சிறுவனை குறைந்த கட் டணத்தில் பள்ளியில் சேர்த்துக் கொள்ள அந்நகர ஆரம்பப் பள்ளி முன் வந்துள்ளது.
இதுதான் அந்த அம்மையாரின் கடைசி விருப்பம். அதனை நிறை வேற்ற நாம் உதவி செய்ய வேண்டும் என்று ஜின்ஹூவா நகர ஆரம்பப் பள்ளி தலைவர் ஜாங் பாங்கிரோ கூறுகிறார்.
அறத்தால் வருவதே இன்பம் என்பது புரிகிறதல்லவா?
எனவே, தொண்டறம் புரிய, பிறருக்கு உதவிட பணம், காசு முக்கியமல்ல நண்பர்களே, மனம், உள்ளம்தான் தேவை! பாருக்குழைப்பதே யோகம் - வேறல்ல என்பது புரிவோம்!
தந்தை பெரியார், அன்னை மணி யம்மையார், புலவர் கோ. இமயவரம்பன் ஆகியோர் தம் தொண்டறத்தால் தொய்வின்றி நடைபோடும் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் பணிகூட இன்னமும் விளம்பர வெளிச் சத்திற்கு வராத - வெற்று ஆரவார மில்லாத, மனிதத்தை உணர்த்தும் பணி என்பதை, பார்க்காதவர்கள் - இனி யாவது சென்று பாருங்கள் - குறைந்த பட்சம் அதைப் பார்ப்பதையாவது தொண் டாக எண்ணி சென்று பாருங்களேன்.
மனிதர்களை எப்படி நினைத்தனர் அய்யாவும், அம்மாவும் என்பது பிறகு புரியும்! 29-8-2012
கழகத் தலைவர் மன்னையில் 27.8.2012 இல் தெரிவித்தபடி, விளம்பரப் பதாகைகள் கொள்கைப் பிரச்சார வாய்ப்பாக மட்டும் பயன்படுத்தவேண்டும்.
கடவுளை மற, மனிதனை நினை
சாதி ஒழிந்த சமுதாயமே நமது கழக லட்சியம்,
சமூகநீதிக்கு என்றும் குரல் கொடுப்போம்,
மானமும் அறிவும் மனிதர்க்கழகு - தந்தை பெரியார்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு - தந்தை பெரியார்
மதவெறி மாய்ப்போம்! மனிதநேயம் காப்போம்!
தற்குறி இனத்தை மாற்றித் தரணியெங்கும் தமிழர்களை அனுப்பியது - திராவிடமே! 29-8-2012
வேப்பிலையில் ஓடுமா பேருந்து?
மூடநம்பிக்கை என்னும் முடக்கு வாதம் ஓர் இடம் இரு இடம் என்று இல்லை; எல்லா இடங் களிலும் நீக்க மற நிறைந்து காணப்படுகிறது.
தங்கள் பகுதியில் கொலை கொள்ளையா? திருட்டு அதிகரிக்கிறதா? காவல்துறை குற்ற வாளிகளைக் கண்டுபிடிக்கும் துப்பு இல்லாமல் காவல் நிலையத்தில் கிடா வெட்டிப் பூஜை போடு கிறார்கள்.
இப்பொழுது தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகத்தில் ஒரு கோமாளிக் கூத்து - வாயால் சிரிக்க முடியாத சங்கதி.
புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி, கீரமங்கலம்; மேற்பனைக்காடு வழியாகப் பேராவூரணிக்கு ஒரு பேருந்து (த.நா.55 எண் 0367) சென்று கொண்டிருக்கிறது.
சரியான சீரமைப்பு பராமரிப்பு இல்லாததால் இந்தப் பேருந்து அடிக்கடி படுத்துக் கொள்கிறது - விபத்துக்குள்ளாகிறது. இதனைப் புரிந்து கொள்ளாமல் போக்கு வரத்துத் துறை எனும் கொலம்பசுகள் புதிய காரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதுதான் தெய்வக் குற்றமாம். இதற்கு என்ன பரிகாரமாம்? வேப்பிலையைப் பேருந்தில் சொருகி விட்டால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விடுமாம்.
அப்படி என்றால் டீசல் போட வேண்டாம். பிரேக் போட வேண்டாம்; ஏன் ஓட்டுநர் கூடத் தேவைப்படாது. வேப்பிலையைச் சொருகினால் மாரியாத்தாள் பிரச்சினையின்றிப் பேருந்தை இயக்குவாளோ! அட, வெட்கக்கேடே! தலை எப்படியோ அப்படிதானே வாலும் ஆடும்! 29-8-2012
இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி மத்திய அரசின் செயல்பாடு குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து
சென்னை, ஆக.28- இலங்கை இராணு வத்தினருக்கு இந்தியா பயிற்சி அளிப்பது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:
செய்தியாளர்: இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பதுபற்றி தமிழகத்தில் சார்பில் முறையிடும்போதெல்லாம் அந்த ராணுவ வீரர்களைத் திருப்பி அனுப்புவதும், சில நாள்களுக்குப் பிறகு மீண்டும் பயிற்சி கொடுப்பதும் தொடர் கதையாக நீடிக் கிறதே?
கலைஞர்: இந்திய மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் சம்பவத்தில் நடப்பதைப்போலத்தான் இந்தப் பிரச்சினையிலும் இந்திய அரசு நடந்துகொள்கிறது. இலங்கை இராணு வத்தினருக்கு இந்தியா பயிற்சி அளிப்பது என்பதில்; நாம் முறையிட்டால் உடனடி யாக அவர்களை வேறு மாநிலத்திற்குத் திருப்பி அனுப்புவதும், சில நாள்களுக்குப் பிறகு மீண்டும் பயிற்சி அளிப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
அதனால்தான் நடைபெற்ற டெசோ மாநாட்டிலேயே 12 ஆவது தீர்மானமாக இலங்கைத் தமிழர்களைப் பாதிக்கக் கூடிய அளவிற்கு இலங்கை இராணுவத் திற்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பயிற்சி கொடுப்பதை இந்த மாநாடு ஏற்க இயலாது என்பதோடு, இனி அப்படிப் பட்ட பயிற்சிகள் அளிப்பதை அறவே தவிர்க்கவேண்டும் என்றும் மத்திய அரசை இந்த மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று நிறை வேற்றியதோடு நின்று விடாமல், அந்தத் தீர்மானத்தின் நகல்களை கழக நாடாளு மன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந் தித்து நேரிலேயே அளித்திருக்கிறார் கள். இருந்தாலும் இந்த இராணுவப் பயிற்சி தொடர்ந்துகொண்டே இருக் கிறது.
இந்தப் போக்கினை மத்திய அரசு இனியும் நீடிக்காமல், உடனடியாக இலங்கை அரசுடன் இந்தப் பயிற்சி குறித்தும், இந்திய மீனவர்கள் தாக்கப் படுவது குறித்தும் கடுமையாகப் பேசி தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கலைஞர் கூறியுள்ளார். 28-8-2012
பாராட்டுகிறார்கள் - வாழ்த்துகிறார்கள்!
வாஷிங்டன் பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த குடும்பங்கள் அனைத்தும் விடுதலை ஆசிரியருக்கு வாழ்த்து
விடுதலை ஏட்டின் ஆசிரியராக 50 ஆண்டு கால சிறப்பான பணியை முடித்த தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு, சென்னை பெரியார் திடலில் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவினை ஒட்டி, அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் நகரில் உள்ள பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த குடும்பங்கள் அனைத்தும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:
விடுதலை ஆசிரியராக 50 ஆண்டு காலப் பணி முடித்தமைக்காக சென்னை பெரியார் திடலில் தங் களுக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதை அறிந்து பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்வது போல கருதி, தங்களுக்கு எங்களது உளம் நிறைந்த பாராட்டுகளையும், நல் வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்றைய விழா மிகச் சிறப்பாக, வெற்றிகரமாக நடந்தேற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்
அரசு செல்லையா மற்றும் வாஷிங்டன் பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சார்ந்த நண்பர்கள்.
Respected and Dear Sir,
All families involved in Periyar Inter-national Washington DC are delighted to learn that there will be a celebration at Periyar Thidal in the eve of your completion of 50 years as Editor of Viduthalai. All of us join the celebration and offer our felicitations and best wishes to you.
We wholeheartedly wish that to-days function is a grand success.
Anbudan,
Arasu Chelliah & Friends of
Periyar International Washington
கே.ஆர்.பன்னீர்செல்வம்
கடவுள் மறுப்பிற்கும், வாழ்வியல் சிந்தனைக்கும், அறிவியல் கண் ணோட்டத்தோடு நடத்தப்படக் கூடிய உலகின் ஒரே நாளிதழின் 50 ஆண்டு கால ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களுக்கு, வணக்கம்.
புரட்சிகர சிந்தனையும், சித்தாந் தமும் எந்த ஒரு தனி மனிதனுக்கும் உதித்திட வேண்டுமானால் தன் மானமும், சுயமரியாதைச் சிந்தனையும் அவனிடம் விதைக்கப்பட்டால்தான் முடியும் என்ற கோட்பாட்டுடன் தொடங்கப்பட்ட அறிவுப் பெட்டகமாம் - வெவ்வேறு பெயர் தாங்கி இன்று விடுதலையாய் நிற்கும் நாளிதழுக்கு நீங்கள்தான் ஆசிரியர் கடந்த 50 ஆண்டு காலமாய்.
எண்ணிப் பார்த்திட இயலவில்லை! முடியுமா? முடிந்ததே?
யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்; நம்மால் முடியாதது யாராலும் முடியாது
என்ற இரண்டு வரிக்கு முழுக்க முழுக்கச் சொந்தக்காரராய் நீங்கள் தான் விளங்கமுடியும்.
எத்தகைய கருத்துகள்? ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்டு உன் அறிவைப் பெருக்கிடுவாய் ஏதன்ஸ் நகரத்து இளைஞனே என்ற அறிவுச் சுடராம் சாக்ரடீஸ் கூட இயக்கம் கட்டி வழிகாட்டிடவில்லையே, அய்யா தந்தை பெரியார் அவர்களைப் போல.
எல்லோரும் வாருங்கள். இதுதான் வழி; தானாகத் திறக்காது, போராடி னால்தான் திறக்க முடியும் என்று கட்டியம் கூறி கைகாட்டி நின்றிடாமல், சாகும் வரைப் போராடிய அந்தக் கிழவனின் கைத்தடி அல்லவா நீங்கள்! அடிச்சுவடு அல்லவா நீங்கள்!
சொல்லிவிட்டேன், அவர்கள் செய்திடட்டும் என்று காத்திடாமல் நானே செய்கிறேன் பார் என்று கூறி, ஓய்வு இல்லாமல் உழைத்திடும் சமூகப் போராளியே!
பத்தாம் வயதிலிருந்தே எழுபது ஆண்டுகளறாய் உலகினைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் புரட்சியாளரே!
நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்திட வேண்டும்; அந்த ஒவ்வொரு நாளும் இவ்வுலகம் ஊக்கம் பெற்றிடும்.
வாழ்க! வாழ்க!! பல்லாண்டு
தங்களின் அறிவு அனைப்பிற்குரிய எண்ணற்றோரில் ஒருவன்,
கே.ஆர். பன்னீர்செல்வம்,
தஞ்சாவூர்
ஹாங்காங் திரு. ந.அப்துல் ரஹ்மான்
50 ஆண்டுகளாக விடுதலை ஆசிரி யராக பொறுப்பு வகிக்கும் தமிழர் தலை வருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த் தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
ந. அப்துல் ரஹ்மான்,
ஹாங்காங்
அய்ந்து முழக்கங்கள்!
வரும் 31 ஆம் தேதியன்று தமிழ்நாட்டு மாவட்டத் தலைநகரங்களில் 5 பிரச்சினைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றினை தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ளார். திருச்சிராப் பள்ளியில் நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அவர் தலைமை தாங்கவும் செய்கிறார்.
1. காவிரி நீர் உரிமை, முல்லைப் பெரியாறு நீர்த் தேக்க உரிமை
2. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்துதல்
3. தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட் டோருக்கும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு
4. தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதைத் தடுத்தல்
5. இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதைத் தடை செய்தல்
- எனும் அய்ந்து பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இந்த அய்ந்து பிரச்சினைகளும் இந்தக் கால கட்டத்தில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது சொல்லித் தெரியப்பட வேண்டியவை அல்ல.
தமிழ்நாட்டின் உயிர்நாடிப் போன்ற அடிப்படை உரிமைப் பிரச்சினைகள் இவை. சட்டத்துக்கு அப்பாற்பட்ட கோரிக்கைகளும் அல்ல நியாயத்தைத் தாண்டியவையும் அல்ல!
சட்டப்படியும், நியாயப்படியும் நமக்குக் கிடைக்கவேண்டியவை.
சட்டப்படி கிடைக்கவேண்டியவைகளுக்காகப் போராடுவது - இந்த நாட்டில் இவற்றிற்கு இடம் இல்லை என்பதற்கான அத்தாட்சியமாகும்.
இந்தியாவின் மிக அதிகாரம் படைத்த உச்சநீதிமன்ற ஆணைகூட இந்தப் பிரச்சினையில் மீறப்படுகிறது என்றால், நாட்டில் அரசமைப்புச் சட்ட ரீதியான அமைப்பு முறை இருக்கிறதா என்கிற கேள்விக்கு இடம் அளிக்கின்றது.
வங்கதேசத்திற்கும், இந்தியாவிற்கும் இடை யிலான கங்கை நதிநீர்ப் பிரச்சினையில் சில மணிநேரங்களில் சுமூகமான முடிவு எட்டப்படுகிறது. பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் இடையிலான சிந்துநதி நீர்ப் பிரச்சினையை, பிரச்சினை இல்லாமல் முடிவுக்குக் கொண்டு வர முடிகிறது.
இந்தியத் தேசியம், 22 காரட் இந்திய ஒருமைப் பாடு என்றெல்லாம் வாய்கிழிய பேசப்படும் இந்தியாவுக்குள் உள்ள மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்ப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைக்க முடியவில்லை என்றால் இதன் பொருள் என்ன? இயல்பான ஒருமைப்பாடு இருப்பதற்கான வழியில்லை என்றுதானே பொருள்?
பிரிவினை குற்றம் என்றால், பிரிவினை எண் ணத்தைத் தூண்டுவது அதைவிடக் குற்றமல்லவா!
இன்னொரு பிரச்சினை; சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றம் பற்றியது. மத்திய அமைச்சரவை முடிவு செய்து நிதியும் ஒதுக்கப்பட்டு முக்கால்வாசிப் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், இராமன் பாலம் என்ற இதிகாசக் கற்பனைப் பாத்திரத்தின் பெயரைப் பயன்படுத்தி, முட்டுக்கட்டை போட முடிகிறது - இந்தப் பாரத புண்ணிய பூமியில்.
புராண, இதிகாசக் குப்பைகளைக் கணக்கில் கொண்டால் இந்தியாவில் எந்த வளர்ச்சித் திட்டத்தையும் நிறைவேற்ற முடியுமா?
பூமி - பூமாதேவி, தண்ணீர் - கங்காதேவி, நெருப்பு - அக்னிபகவான், ஒளி - சூரிய பகவான் என்ற முட்டாள்தனமான நம்பிக்கைகளை எல்லாம் கணக்கெடுத்துக் கொண்டால், மனிதன் தரையி லேயே கால் வைக்க முடியாதே! தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடாதே!
இந்த யோக்கியதையில் குடிமக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது.
அதுபோலவே, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்று சொல்லி சொல்லி அலுத்துப் போய்விட்டது. ஈழத் தமிழர்களைக் கொல் லும் இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கக் கூடாது என்று எத்தனை முறைதான் கோரிக்கை வைப்பது?
மக்கள் மன்றத்தில் கொண்டு வந்து ஒரு முடிவை எட்டவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த ஆர்ப்பாட்டம். கழகத் தோழர்களே, வெற்றி பெறச் செய்வீர்!28-8-2012
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் இருக்கிறார்களா?
நியூயார்க்,ஆக.28-அமெரிக்காவின் நாசா விண்வெளி மய்யம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது. அங்கு மனிதர்கள் வாழமுடியுமா? என கண்டறிய கியூரியாசிட்டி என்ற ஆய்வுகூட விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு பத்திரமாக தரை இறங்கிய அந்த விண்கலம் தனது ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை படம் எடுத்து அனுப்பி வருகிறது.
சமீபத்தில் அனுப்பிய ஒரு படத்தில் அடையாளம் காண முடியாத ஒரு பொருள் பறப்பது போன்று வெளிச்சத்துடன் தெரிந்தது. எனவே அது வேற்று கிரகத்தவரின் பறக்கும் தட்டு ஆக இருக்கலாம் என கூறப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் நடத்தும் ஆய்வை அறிய வேற்றுக் கிரகவாசிகள் பறக்கும் தட்டும் மூலம் வந்து இறங்கியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது. அதை மெய்பிக்கும் வகையில் தற்போது கியூரியாசிட்டி அனுப்பிய மற்றொரு படத்தில் தடயங்கள் சிக்கியுள்ளன. அதில் மனித கைவிரல் எலும்பு ஒன்றும் கூம்பு போன்ற வடிவம் கொண்ட மற்றொரு பொருளும் உள்ளன.
மற்றொரு படத்தில் ஷூ இருப்பது போன்றும் பதிவாகி உள்ளது. எனவே அங்கு அவ்வப்போது வேற்றுக் கிரகவாசிகள் நடமாட்டம் இருக்க லாம் என விஞ்ஞானி கள் கருதுகின்றனர். இதுதவிர கியூரியா சிட்டி அங்குள்ள மலை கள், பாறை படிவங்கள் போன்றவற்றை மிகவும் தெளிவாக வண்ணப் படம் எடுத்து அனுப்பி யுள்ளது. அதே நேரத்தில் பூமியில் இருந்து பதிவு செய்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய ஆடியோ பதிவு மீண்டும் அங்கிருந்து திரும்பி வந்தது.
இதை நாசா விஞ்ஞானிகள் கியூரியாசிட்டி விண்கலத்துக்கு அனுப்பினர். அங்கிருந்து அதே குரல் மீண்டும் பூமிக்கு திரும்பி வந்து ஒலித்தது. இந்த தகவலை கலிபோர்னியா பசதெனா ஆய்வு கூடத்தின் தலைமை டொகம்யூனி கேசன் என்ஜினீயர் சாட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். சந்திரனுக்கு அப்பால் உள்ள மற்றொரு கிரகத்தில் இருந்து மனித குரல் கேட்பது இதுவே முதல் முறை என அவர் தெரிவித்தார்.
Post a Comment