Search This Blog

22.8.12

முற்போக்குச் சிந்தனைகள் வளர்ந்துள்ளதற்குக் காரணம் பெரியார்

திருச்சி தீர்மானம்: கழகப் பிரச்சாரத் திட்டம்

திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் (18.8.2012) திராவிடர் கழகப் பிரச்சாரத் திட்டம் குறித்து விரிவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விஞ்ஞானக் கருவிகளான ஏடுகளும், இதழ்களும், தொலைக்காட்சிகளும், விஞ்ஞானத்துக்கு முரண்பாடாக மூட நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இது ஒரு நாணயக்கேடான செயல் என்பதில் அய்யமில்லை. கருவாடு விற்ற காசு நாறாது; நாய் விற்ற காசு குரைக்காது என்பதைத் துல்லியமாக உணர்ந்தவர்கள் இவர்கள். மக்களை வஞ்சிக்கும் இவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.

தொலைக்காட்சிகளை எடுத்துக்கொண்டால் காலை முதலே அதன் கந்தாயங்களைத் தொடங்கி விடுகின்றன. ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் சாமியார்கள் ஆக்கிரமித்து விடுகின்றனர்.

இன்றைக்கு எந்த நிறத்தில் சட்டை போடுவது, எந்த வண்ணத்தில் மோதிரம் அணியவேண்டும் என்பதுதான் இந்தக் காட்சி ஊடகக்காரர்களின் தலையாய கவலை.

ஏடுகளை, இதழ்களை எடுத்துக்கொண்டாலும் ராசி பலன், சோதிட பலன்களை வெளியிடுவது பற்றிச் சிறிதும் வெட்கப்படுவதில்லை.

ராஜாஜி, கல்கி போன்றவர்கள் சோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும், கல்கி ஏடு ராசி பலன்களை வெளியிட்டுக் கொண்டுதானே இருக்கிறது.

கோவில் திருவிழாக்கள் என்று கூறி மக்களின் அறிவையும், உழைப்பையும் ஒரு பக்கம் சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியா வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு இந்தக் குப்பைகள்தான் அடிப்படைக் காரணம்! மழை பெய்வதற்காக அரசே யாகம் நடத்தும் கொடுமையை என்ன சொல்ல!


சுயமரியாதையும், பகுத்தறிவும் இல்லாத தனி மனிதனும், சமுதாயமும் எப்படி முன்னேற முடியும்?

ஜாதி உணர்வு, தீண்டாமை என்பவையெல்லாம் நீடிப்பதற்குக் காரணம் என்ன? மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மை வளர்க்கப்பட வேண்டாமா?

இவற்றைச் சாதிப்பதற்கு வெறும் சட்டங்கள் போதா! அடிப்படை மாற்றங்கள், சிந்தனைகள் எழவேண்டும்.

இவற்றையெல்லாம் மனதிற்கொண்டுதான் திருச்சியில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழு பல அரிய திட்டங்களை வகுத்துள்ளது.

அறிவியல் கண்காட்சி, மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி, புத்தகச் சந்தை, பிரச்சாரக் கூட்டங்கள் என்று பலப்பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்துக்கு 5 நாள்கள் ஒருங்கிணைந்த பிரச்சாரம் நடைபெறுவதற்கு முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் பெரிதும் ஒத்துழைக்க முன்வரவேண்டும்.

அலைமேல் அலையாக  குறிப்பிட்ட பகுதிகளில் பகுத்தறிவுப் பிரச்சாரம் - மூட நம்பிக்கை ஒழிப்புக்கான  செயல்முறைத் திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டால், அந்த வட்டார மக்கள் நம் பக்கம் ஈர்க்கப்படுவார்கள். குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் கண்டிப்பாக ஈர்க்கப்படுவார்கள்!

இளைஞர்களை இயக்கத்தின்பால் ஆற்றுப் படுத்தும்  பணிக்கு முன்னுரிமை என்று பொதுக் குழு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பது முக்கியமானதாகும்
.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே இப்படி மூடநம்பிக்கை ஒழிப்பை ஒரு திட்டமாகக் கொண்டு செயல்படும் ஒரே இயக்கம் திராவிடர் கழகம்தான். அதனால்தான் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் முற்போக்குச் சிந்தனைகள் வளர்ந்துள்ளதற்குக் காரணம் பெரியார் ஈ.வெ.ரா. என்று அமெரிக்கப் பேராசிரியர் ஜான்ரைலி போன்ற வர்கள் கூறியுள்ளனர்.

இது உண்மைதான் என்றாலும், ஊடகங்களின் முரட்டுத்தனமான மூட நம்பிக்கைப் பிரச்சாரத்தை முறியடிக்க சரியான திட்டங்களோடு களத்தில் இறங்குவோம்! கழகத் தோழர்களே முனைப்பாகச் செயல்பட ஆயத்தமாவீர்!



    -----------------------"விடுதலை” தலையங்கம் 22-8-2012

37 comments:

தமிழ் ஓவியா said...

தா.பா.



மகன்: டெசோ மாநாட் டின் எதிரொலிதான் இன்றைக்குக் காலை யில்கூட மீனவர்கள் தாக்கப்படுகின்றனர் என்று சி.பி.அய். செய லாளர் தோழர் தா.பாண்டியன் கூறியுள்ளாரே, அப்பா!

அப்பா: இப்படிப் பேசு பவர்கள் இருக்கும் வரை தமிழக மீனவர் கள் மட்டுமல்ல, தமி ழர்களும் தாக்கப்பட்டுக் கொண்டேதான் இருப் பார்கள், மகனே! 22-8-2012

தமிழ் ஓவியா said...

உருப்படுமா நாடு?



அரசுப் பணத்தை (ரூ.17.5 கோடி) இப்படி அறிவியலுக்கு முரணான வகையில் செலவழிக்கலாமா? சட்டப்படி இது சரியானதுதானா?

ஆடிட்டர் ஜெனரல்களின் கண்களுக்கு இவையெல்லாம் படவே படாதா? இப்படிப்பட்ட நாட்டில் முதன்மையான தேவை பகுத்தறிவு விழிப்புணர்வுதானே? தந்தை பெரியாரின் இயக்கம் இந்தக் காலகட்டத்தில் உலகுக்கே தேவை என்பது விளங்கவில்லையா?

நாற்பத்திரெண்டு வருடங்களில் இல்லாத வறட்சி, இந்த வருஷம் கருநாடக மாநிலத்துக்கு. மழையே இல்லை! அதனால் கருநாடகம், 35,000 கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்தப் போகிறது.

செலவு? 17.5 கோடி! இந்த யாகத்துக்காக பெங்களூருவுக்கு வரவழைக்கப்பட்ட இளம் புரோகிதர்கள் முன்பு தரையில் விழுந்து வணங்குபவர் வேறு யாரும் இல்லை; கருநாடக சுற்றுலா அமைச்சர் ஆனந்த் சிங்!

(26.8.2012, கல்கி)22-8-2012

தமிழ் ஓவியா said...

டெசோ அடுத்த கட்டம் - தி.மு.க. எம்.பி.,க்கள் - பிரதமர் சந்திப்பு பிரதமரிடம் தீர்மானங்கள் - கலைஞரின் விளக்கக் கடிதம் நேரில் அளிக்கப்பட்டன உரியது செய்ய பிரதமர் மன்மோகன்சிங் உறுதி



தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு தலைமையில் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து, டெசோவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், கலைஞரின் விளக்கக் கடிதத்தையும் நேரில் கொடுத்தனர் (புதுடில்லி, 21.8.2012).

புதுடில்லி, ஆக. 22- டெசோ நடத்திய ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் (12.8.2012) ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களையும், அதனையொட்டி டெசோ தலைவர் கலைஞர் எழுதிய கடிதத்தையும் தி.மு.க. நாடாளு மன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து நேரில் அளித்தனர் (21.8.2012).

இந்திய அரசு அய்.நா.வில் வலியுறுத்தவேண்டிய பிரச்சினை உள்பட டெசோ தலைவர் கலைஞரின் கடிதத்தில் இடம்பெற்றுள்ளது.

1. இலங்கை அரசு கூறுவதுபோல் மெனிக் பண்ணையில் 6000 தமி ழர்கள்தான் மீதமுள்ள னர் என்பது உண்மை தான். பெரும்பாலான தமிழ் மக்கள் எந்தவித மான அடிப்படை வசதி களும் இல்லாத அவர் களது கிராமங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். சிலர் மரங்களின் அடி யிலும் மற்றும் சிலர் உற வினர்களின் தயவிலும் வாழ்கின்றனர்.

2. முகாம்களை விட்டு வெளியேறும்போது குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவி மிகவும் கொஞ்சமானது. சில மாதங்களுக்குப் பிறகு குடும் பங்கள் அடிப்படை வசதிகளுக்கு போராடுகிறார் கள். வேலை எதுவும் கிடைக்க வழியில்லாததால் மறுகுடியமர்த்தப்பட்டு தமிழர்கள் மிக மோசமாக உள்ளனர்.

3. இராணுவம் குடிமக்கள் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வியாபித்து பொருளாதாரத்தை மேற்கொண்டுவிட்டது. முடிதிருத்தகங்கள்கூட இராணுவத்தினரால் நடத்தப்படுகின்றன. எனவே தமிழர்கள் பொருளாதார மீட்சிக்கு இடமில்லை.

4. தமிழர் பகுதிகள் சிங்களமயமாக்கல் உண்மை நிலை ஆகும். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையிலான ஏ 9 நெடுஞ்சாலையில் முன்பு பல தமிழர்களின் பெட்டிக் கடைகளும், வியாபாரி களும் இருந்தனர். தற்போது அவை அனைத்தும் சிங்கள முன்னாள் இராணுவத்தினருக்கு கொடுக்கப் பட்டுவிட்டன.

5. தமிழர் பகுதிகளில் இராணுவம் தனது செயல் பாடுகளுக்காக ஏராளமான வீடுகளை எடுத்துக் கொண்டுவிட்டது. காலியான வீடுகளை எடுத்துக் கொண்ட இராணுவம் அவற்றைக் காலி செய்ய மறுக்கிறது.

தமிழ் ஓவியா said...


6. இராணுவத்தின் அனுமதி இன்றி வடக்கு அல்லது கிழக்குப் பகுதிகளில் எந்த சமுதாய நிகழ்ச்சியும் நடத்த முடியாது.

இராணுவத்தின் அனுமதி இன்றி தமிழர்கள் தங்களது வீடுகளில் எந்த விருந்தினரையும் வைத்துக்கொள்ள முடியாது.

தங்களது சொந்தக் குடிமக்களை பாதுகாக்கும் தார்மீகப் பொறுப்பில் தவறிய ஒரு அரசால் சகலவிதமான மனிதாபிமானமற்ற, சமத்துவமற்ற முறையில் நடத்தப்பட்டுவரும் ஒரு இன ரீதியிலான, கலாச்சார, மொழி ரீதியிலான இனத்தைக் காப்பாற்ற வழிமுறைகளைக் காண்பது நாகரிக உலக சமுதாயத்தின் கடமை ஆகும்.

மேற்கூறிய பல்வேறு நிகழ்வுகளையும், சம்பவங்களையும் கருத்தில் கொண்டு, சென்னையில் 12.8.2012 அன்று ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்பு குறித்து ஒரு ஆய்வரங்கத்தையும், மாநாட்டையும் டெசோ அமைப்பு நடத்தியது.

இந்திய அரசியல் கட்சிகளின், தலைவர்களுடன், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு பிரதிநிதி உட்பட உலகெங்கும் உள்ள மனித உரிமை நடவடிக்கையாளர்கள், இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ஈழம் பகுதியில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குறுகிய கால, இடைப்பட்ட கால, நீண்ட காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, ஆய்வரங்கத்தில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு, பல தீர்மானங்கள் மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கடந்த காலத்தில் இந்திய அரசால் செய்யப்பட்ட இந்தக் குறுக்கீடுகளை நாங்கள் நினைவுபடுத்தும் போது, இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் இதர நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சினை தற்போது அய்.நா. அமைப்பின் மூலமாக சர்வதேசக் கண்ணோட்டத்துடன் தீர்க்கப்பட வேண்டிய தெற்காசியப் பிரச்சினையாக மாறி விட்டது என்று டெசோ நம்புகிறது.

எனவே, நாங்கள் இந்திய அரசிடம் கீழ்க்கண்ட வேண்டுகோள்களை வலியுறுத்துகிறோம்.

1. மாநாடு முடிவு செய்தபடி இலங்கையிலுள்ள தமிழர்கள் கோரி வரும் அரசியல் தீர்வை அவர்களே முடிவு செய்ய அவர்களுக்கு உரிமைகள் வழங்கும் தீர்மானத்தை அய்.நா. பொதுச் சபையிலும், அய்.நா. மனித உரிமைகள் கவுன்சிலிலும் கொண்டு வர வேண்டும்.

2. அதைத் தொடர்ந்து இந்திய அரசால் முன்மொழியப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக அய்.நா. அமைப்பின் இதர உறுப்பு நாடுகளைக் கொண்டுவர சாத்தியமான அனைத்து ராஜிய உக்திகளையும் எடுக்க வேண்டும்.

3. இந்தியாவில் வாழும் அனைத்து இலங்கை அகதிகளுக்கும் இந்தியக் குடியுரிமை அல்லது நிரந்தர வசிப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்.

4. தமிழர்களுக்கான மறுவாழ்வு உதவியாக இந்திய அரசு வழங்கிய ரூ.500 கோடி மற்றும் இதர பொருள் உதவிகள் இப்பணிகளுக்காக முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு குழுவை அனுப்ப வேண்டும்.

5. சிறை வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் விடுதலை. வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தாய்நாடு திரும்புதல், தமிழர் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை மீட்டல், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் அமைத்தல், மருத்துவ வசதிகள் விரிவாக்கம் மற்றும் 10 ஆவது தீர்மானத்தில் கோரியவாறு மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை உட்பட தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் அதன் முன்னணிப் பாத்திரத்தை வகித்தல்;

6. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கச்சத்தீவை மீண்டும் எடுத்தும் தனுஷ்கோடி அல்லது மண்டபத்தில் இந்திய கடற்படை தளம் அமைத்தல் (தீர்மானம் 11) ஆகியவை மூலமாக இலங்கைக் கடற்படை தாக்குதல்களிலிருந்து இந்திய மீனவர்களைக் காப்பாற்ற முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

7. இந்த மாநாடு கோரியவாறு (தீர்மானம் 12) இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிப்பதைத் தவிர்த்தல்.

- இவ்வாறு டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.
22-8-2012

தமிழ் ஓவியா said...

இராணுவத்தின் ராஜபக்சே மகனுக்கு விண்வெளிப் பயணம் ஒரு கேடா?

கொழும்பு, ஆக. 22- இனவெறி சிங்கள அதிபர் ராஜபக் சேவின் மகன் விண்வெளியில் பறக்கப் போகிறானாம் - கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சேவை விண்வெளிக்கு அனுப்புவதற்கான பயிற்சியை அளிக்க ருசியா முன்வந்துள்ளது.

இங்கிலாந்து பல்கலைக் கழகத்தில் விண்வெளி அறிவியல் துறை படிப்பில் அண்மையில் ரோஹித பட்டம் பெற்றார். இந்நிகழ்ச்சியில் ராஜபக்சேவின் மனைவி சிராந்தி மட்டும் கலந்து கொண்டிருக்கிறார்.

தற்போது தமது தந்தையிடம் விண்வெளிக்குப் போக வேண்டும் என்று ரோஹித ராஜபக்சே அடம்பிடித்திருக்கிறார். இதையடுத்து ருசிய அதிபரிடம் மகிந்தவும் பேசியிருக்கிறார். ரசிய அதிபர் புதினும் இதற்கு ஒப்புதல் தெரிவித்து ராஜபக் சேவுக்கும் அவரது மகனுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி யிருக்கிறார். இதையடுத்து ரோஹித ராஜபக்சே விரைவில் ருசியா செல்ல இருக்கிறார். இதற்காக பெருந்தொகையான பணத்தை ராஜபக்சே, ருசியாவுக்குக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை இலங்கை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து ராஜபக்சேவை விளாசத் தொடங்கியிருக்கின்றன. நாட்டின் விலைவாசி விண்ணை முட்டி நிற்கையில் ராஜபக் சேவின் மகனுக்கு விண்வெளி பயணம் ஒரு கேடா? என்றும் அந்த கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.22-8-2012

தமிழ் ஓவியா said...

சென்னை அய்.அய்.டி. பற்றி அவாள் ஏடே கூறுகிறது



சென்னை, ஆக. 22- சென்னை அய்.அய்.டி. என் பது அசல் அக்கிரகார ஆதிக்க நிறுவனமாக நடைபெற்று வருவது பற்றி விடுதலை பலமுறை எழுதி வந்திருக் கிறது. அந்த நிறுவனம் பற்றி அக் கிரகார ஏடான தினமணியே என்ன கூறுகிறது படியுங்கள் சென்னை கிண்டியில் உள்ள இந்திய தொழில்நுட் பக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.டி.) பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும் அவமதிக் கப்படுவதும் தொடர்ந்து நடைபெறுவது அந்த நிறு வனம் சட்டத்திற்கு அப்பாற் பட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) என்றதும், அது சர்வதேச தரத்தில் தலை சிறந்த கல்வி நிறுவனமாக விளங்கி வருவதோடு மட்டு மல்லாமல், அங்கிருந்து சிறந்த விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப நிபுணர்களும் உருவா கின்றனர் என்பதும்தான் அனைவரின் நினைவுக்கு வரும். ஆனால் அண்மைகால மாக அங்கு நடைபெறும் சம் பவங்கள் அந்த தோற்றத்தை வலுவிழக்கச் செய்து வரு கிறது.

மாணவர்கள் தற்கொலை:

சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 8 மாதங்களில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்கள் பல்வேறு காரணங் களுக்காக தற்கொலை செய் திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் குடும்பச் சூழ்நிலை மற்றும் தனிப்பட்ட காரணங்களால் தான் அவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என அந்த நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகின்றது.

பல்வேறு வழிகளில் பேரா சிரியர்களின் நெருக்கடி, படிப் புச் சுமை உள்ளிட்ட காரணங் களாலேயே இதுபோன்ற தற் கொலைகள் நடைபெறுகின் றன என மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கூறப் படுகின்றது.

இந்த நிலையில், நாட்டின் உயரிய கல்வி நிறுவனத்தில் இதுபோன்ற தொடர்ந்து நடைபெற்று வரும் மர்ம தற்கொலைகளுக்கான கார ணம் மற்றும் அதை தடுப்ப தற்கான நடவடிக்கைகள் குறித்து செய்தி சேகரிக்க பத் திரிகையாளர்கள் அனுமதிக் கப்படாதது, அந்த கல்வி நிறுவனம் குறித்து சமூக ஆர் வலர்களிடம் சந்தேகத்தை மேலும் வலுப்பெறச் செய்து உள்ளது.

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்:

பத்திரிகையாளர்கள் தொடர்ச்சியாக அவமதிக்கப் படுவதும், தாக்கப்படுவதும் ஐ.ஐ.டி. பற்றிய நல்லெண் ணத்தை மாற்றி வருகிறது. ஐ.ஐ.டி.யில் கடந்த 2010-ம் ஆண்டு ஒரு தனியார் தொலைக் காட்சி கேமராமேன் தாக் கப்பட்டுள்ளார்.

இதேபோல 2011-லும் தனியார் தொலைக் காட்சி கேமராமேன் தாக் கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் தகராறு செய் ததற்காக தாக்கப்படவில்லை, அவர்களது பணியைச் செய்யும் போது தாக்கப்பட்டுள்ளனர்.


தமிழ் ஓவியா said...

அதுமட்டுமல்லாமல் கடந்த ஏப்ரல் மாதம் மாண வர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர் பாக செய்தி சேகரிக்கச் சென்ற பெண் செய்தியாளர் ஒருவர், ஐ.ஐ.டி. பாதுகாவலரால் அவ மதிக்கப்பட்டார். இப்போது அதற்கும் ஒருபடி மேலே சென்று செவ்வாய்க்கிழமை அங்கு தற்கொலை செய்து கொண்ட மாணவியை புகைப்படம் எடுக்கச் சென்ற "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' புகைப்பட கலைஞர் ஆல்பின் மாத்யூவை, ஐ.ஐ.டி. பேராசிரி யர் ஒருவரே ரத்த காயம் ஏற்படும் வரை தாக்கியுள் ளார்.

பத்திரிகையாளர்கள் தாக் கப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும், ஒவ் வொரு இடத்திலும் சமூக விரோதிகளாலும், ரௌடி களாலும், அரசியல்வாதி களாலும் பத்திரிகையாளர் கள் இதுவரை தாக்கப்பட்ட னர். ஆனால் முதல்முறையாக நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக அறியப்படும் ஐ.ஐ.டி.யில் பேராசிரியரால் புகைப்படக் கலைஞர் தாக் கப்பட்டுள்ளார். அதுவும் புகைப்பட கலைஞர் தனது பணியைச் செய்யச் சென்ற போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஐ.ஐ.டி. வளாகத்தில் நடை பெறும் குற்றச் சம்பவங்களை மட்டுமன்றி, அங்கு நடை பெறும் கருத்தரங்கு உள்ளிட்ட நல்ல நிகழ்ச்சிகளுக்கு செய்தி சேகரிக்கச் செல்லும் பத் திரிகையாளர்களையும், புகைப்பட கலைஞர்களையும் பல்வேறு நெருக்கடிக்கு உட் படுத்தியும், அவமதிக்கும் வகையில் ஐ.ஐ.டி. நிர்வாகம் செயல்படுவது, அந்த நிறு வனம் தாங்கள் யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் இல்லை என்பதைப் போன்ற தோற் றத்தை ஏற்படுத்துகிறது.


தமிழ் ஓவியா said...

சட்டத்திற்கு அப்பாற் பட்டவர்களா? அதேபோல மாணவர்களுக்கு நல்ல ஒழுக் கத்தையும், அறிவையும் புகட்ட வேண்டிய ஒரு ஆசிரியர், இப்படி அநாகரீகமாகவும், ரௌடி போலவும் நடந்து கொள்வது அந்த அமைப்பின் ஒட்டுமொத்த கௌரவத்தை யும் குறைக்கிறது.

அதோடு மட்டுமின்றி இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி தொடர்ச்சியாக நடைபெற்று வந்தபோதிலும், ஐ.ஐ.டி. தன்னுடைய அணுகு முறையை சிறிதும் மாற்றிக் கொள்ளாமல் செயல்படுவது அந்த அமைப்பு சட்டத்திற்கு அப்பாற்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஒவ்வொரு முறையும் பத் திரிக்கையாளர்கள் அவமதிக் கப்பட்டு தாக்கப்படும்போது ஐ.ஐ.டி. நிர்வாகம், அந்தத் தவறை உணர்ந்து அது போன்ற தவறு அடுத்து நடை பெறாமல் இருப்பதற்குரிய நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால்தான் மீண்டும், மீண்டும் இதுபோன்ற சம்ப வங்கள் அங்கு நடைபெறு கின்றன.

புகைப்பட கலைஞர்கள் மீது தாக்குதல்
சென்னை, ஆக. 22- சென்னை ஐ.அஐ.டி.யில் பத்திரிகை புகைப்படக் கலைஞர் செவ்வாய்கிழமை கொடூரமாகத் தாக்கப்பட்டார். அங்குள்ள பேராசிரியர்களும், பாதுகாவலர்களும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கிண்டி அய்.அய்.டி/ வளாகத்தில் உள்ள சரயு மாணவியர் விடுதியில் நெருகு மானஸா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக புகைப்படம் எடுப்பதற்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்பட கலைஞர் ஆல்பின் மாத்யூ (23) அந்த விடுதிக்குச் சென்றார்.

அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த அய்.அய்.டி மெக்கானிக் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் பிரகாஷ் எம்.மய்யா மற்றும் 4 காவலர்கள், ஆல்பினிடம் அங்கு புகைப்படம் எடுக்கக் கூடாது எனவும், எடுத்த புகைப்படங்களை அழிக்குமாறு தகராறு செய்தனர். ஆல்பின் புகைப்படங்களை அழிக்க மறுப்பு;த தெரிவித்துள்ளார்.

இதனால் பேராசிரியர் பிரகாஷ் மற்றும் காவலர்கள் ஆத்திரமடைந்தனர். ஆல்பினை சூழ்ந்து நின்று ரத்தக் காயம் ஏற்படும்வரை தாக்கினர். பின்னர் அவர்கள், அவர் வைத்திருந்த கேமராவை உடைத்து நொறுக்கினர். இதுகுறித்து ஆல்பின், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

காவல்துறையினர் அங்கு செல்லும் வரை ஆல்பினை அவர்கள் அடித்து உதைத்தனர். இதுகுறித்து ஆல்பின், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார், அதன்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

நிருபர்கள் சங்கம் கண்டனம்
சென்னை, ஆக. 22- பத்திரிக்கை புகைப்பட கலைஞர் தாக்கப்பட்டதற்கு சென்னை பத்திரிக்கை நிருபர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஆர்.ரங்கராஜ் மற்றும் செயலாளர் டி.சேகர் செவ்வாய்க்கிழமை கூட்டாக வெளியிட்ட செய்தி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் புகைப்பட கலைஞர் ஆல்பின் மேத்யு, ஐ.ஐ.டி. பேராசிரியர் மற்றும் பாதுகாவலர்களால் செவ்வாய்கிழமை தாக்கப்பட்டார்.

அவரை ரத்தக் காயம் ஏற்படும் வகையில் தாக்கி, அவரது கேமராவையும் சேதப்படுத்தி ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் அநாகரிகமான முறையில் நடந்துள்ளனர். பத்திரிகையாளர் மீது அடக்குமுறையை கையாளும் ஐ.ஐ.டி. நிர்வாகத்தின் இந்த செயலை பத்திரிக்யைளர் சங்கம் கண்டிக்கிறது. ஆல்பின் மேத்யுவை தாக்கியவர்கள் மீதும் அதை மூடி மறைக்க முயல்பவர்கள் மீதும் ஐ.ஐ.டி. நிர்வாகமும் போலீஸாரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்று அதில் தெரிவித்துள்ளனர். பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம்: இதேபோல், புகைப்பட கலைஞர் ஆல்பின் மேத்யு தாக்கப்பட்ட தற்கு தமிழ்நாடு பத்திரிகைப் புகைப்பட கலைஞர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் டி.சம்பத்குமார் மற்றும் பொதுச்செயலாளர் எல்.ஆர். சங்கர் வெளியிட்டுள்ள செய்தியில், ஐ.ஐ.டி.நிறுவனம், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

(நன்றி: தினமணி, 22.8.2012)

தமிழ் ஓவியா said...

இது பழையகோட்டை! பக்தியால் பின் தங்கிய மாவட்டம்


தமிழகம் முழுவதும் பக்தர்கள் இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் இருக்கிறார்கள். ஏன் உலகமெங்கும் பக்தர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களில் சமீபத்தில் கிடைத்த புள்ளி விபரம் ஒன்றின்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதிக பக்தர்களைக் கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை என்கிறது.

ஆம். புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சபரி மலைக்குப் போகிறவர்கள் மட்டும் பேருந்து, வேன், ஜீப் என்று வாகனங்களை அமர்த்திக் கொண்டு சென்று விடுகிறார்கள். திருப்பதிக்குப் போகிறவர்களும்தான். ஆனால் பழனி, திருச்செந்தூர், வேளாங்கண்ணி, பிள்ளையார்பட்டி என்று பாதயாத்திரை சென்றவர்கள் (அ) மேற் கொண்டவர்கள், இப்போது கடந்த சில ஆண்டுகளாக சமயபுரம் மாரியம்மனைக் குறிவைத்து நடக்கத் துவங்கியிருக்கிறார்கள்.


தமிழ் ஓவியா said...

சமயபுரத்துக்குச் செல்கிறவர்கள் மஞ்சளாடை உடுத்திக் கொள்கிறார்கள். சமயபுரத்துக்குச் செல்வதற்கு முன் எத்தனை நாள் விரதமிருக்க வேண்டும் என்கிற கணக்கும் கிடையாது, ஒன்றும் கிடையாது. ஆனி மாதம் கடைசி வாரத்திலிருந்து துவங்கி விடுகிறார்கள். அவ்வாறு போகிறவர்கள் பெரும்பாலும் உழைப்பாளிகளாகத்தான் இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை. ஆடி செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை கோயிலில் இருக்கிறது மாதிரி கணக்கு வைத்துக்கொண்டு பாதயாத்திரையைத் துவங்குகிறார்கள்.

உதாரணத்துக்கு அறந்தாங்கி அல்லது அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து யாத்திரை துவங்குவது என்றால் நான்கு அல்லது அய்ந்து நாட்களுக்கு முன்னதாகக் கிளம்புகிறார்கள். ஆவுடையார்கோயில் போன்ற பகுதிகள் என்றால் இன்னும் ஒரு நாள் கூடுதலாக எடுத்துக் கொள்கிறார்கள்.

அவ்வாறு போகிறவர்களில் வயது முதிர்ந்தவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். (பழனிக்குப் போகிறவர்களைப் பார்த்தால் பெரும்பாலும் ஆண்களாகத்தான் இருப்பார்கள். அரிதிலும், அரிதாக வயது முதிர்ந்த பெண்கள் இருப்பார்கள். நடு வயது அல்லது இளம்பெண்களை பாதுகாப்பு கருதி அனுப்புவதில்லை. அதுபோல திருச்செந்தூருக்கும்.)

தமிழ் ஓவியா said...

சமயபுரத்துக்குச் செல்பவர்களில் இளம்பெண்கள் தொடங்கி நடுவயதுப் பெண்கள், குடும்பத்துப் பெண்கள் அதிகளவில் செல்கிறார்கள். அவர்களுடன் துணைக்குச் செல்பவர்களில் பலரும் அடுத்தடுத்த வீட்டுப் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். இவர்களுடன் ஆண்களும் செல்கிறார்கள். அவர்கள் செல்வதெல்லாம் பக்தியால் அல்ல என்பதை உற்று நோக்கினால் புரிய வரும். பெண்கள்தான் சமயபுரத்தை நாடிச் செல்கிறார்கள். ஆண்களுக்கு அங்கு என்ன வேலை? சமயபுரத்திற்குச் சென்று பார்த்தால் தமிழகம் முழுவதும் இருந்து வரும் பக்தர்களில் அதிக விகிதாச்சாரத்தில் கலந்து கொள்பவர்கள் புதுக்கோட்டை மாவட்ட பக்தர்களும் பக்தைகளும்தான்.

நீண்ட கால நண்பர்கள், உறவினர்கள் என யாரோடு பேசினாலும் அய்யம் கொள்ளும் ஆணாதிக்க உள்ளம் கொண்ட ஆண் பக்தர்கள் தன் உறவுப் பெண்களை சாமியார் என்றாலும் நம்பி அனுப்ப தயங்குவதில்லை; இப்படியான ஆன்மீகப் பயணமானாலும் பல ஆண்களோடு அனுப்பி வைப்பதில் சிறிதும், தயக்கம் காட்டுவதில்லை. காவி உடைகளின் வண்டவாளங்கள் தண்டவாளங்கள் ஏறிக் கொண்டிருக்க, இன்னும் காவி உடுத்துபவன் யோக்கியன் என்று நம்புவதை என்னவென்று சொல்ல?

தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்கள் குறித்து ரெப்கோ வங்கியின் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் தமிழகத்தில் வங்கிக் கணக்கு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற அக்கறை மிகவும் குறைவாக உள்ளது புதுக்கோட்டை மாவட்டம்தான் என்று தெரிய வந்திருப்பதாக சில தினங்களுக்கு முன் அந்த வங்கியின் இயக்குனர் மகாலிங்கம் கவலை தெரிவித்தார். அப்போதுதான் ஒரு உண்மை தெரிந்தது. அதாவது ஒரு கோயிலைக்கூட விடாமல் கோயில்கோயிலாகச் சுற்றி வந்து கொண்டிருந்தால் எதிர்காலச் சிந்தனையோ அறிவியல் சிந்தனையோ எப்படியிருக்கும். அறிவு மழுங்கி விடாதா? அதுதான் வங்கிச் சேவையைப் பயன்படுத்திக் கொள்வதில் புதுக்கோட்டை மிகவும் பின் தங்கியிருக்கிறது.

- ம.மு.கண்ணன். 16-31 2012

தமிழ் ஓவியா said...

அலையாத்தி மனம்

சுனாமி என்ற வார்த்தையை 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ம் நாளுக்கு முன்னர் நாம் கேள்வியே பட்டதில்லை. ஆனால் அந்த பேரழிவிற்குப் பின் மிகப் பெரிய பிரச்சினைக்கு சுனாமியை எடுத்துக்காட்டாகக் கூறுவது வழக்கமாகி விட்டது. அதன் பின்னர் இப்போது 2011 டிசம்பர் 30 ம் நாள் சுழன்றடித்து சூறையாடிய 'தானே' புயல் தன் 'சக்தி' எப்படிப்பட்டது என்பதை சொல்லிவிட்டது. ஆண்டு தோறும் பருவ மழைக் காலங்களில் தென்மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. அவ்வப்போது தமிழ்நாட்டிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதெல்லாம் வெளிநாடுகளில் நடக்கிறது, நமக்கு வராது ஏனென்றால் இது 'புண்ணிய'பூமி என்று நினைத்து சும்மா இருந்துவிட முடியாது. உலகில் எப்போதும் எங்கேயாவது ஓரிடத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கிறன்றன. நமக்கும் நடக்கிறது.



தமிழ் ஓவியா said...


தகவல் தொடர்பு தொழில் நுட்பம் வளராத காலங்களில் ஒரு நிகழ்வு நடந்த மூன்றாம் நாள்தான் நமக்கு செய்தியே தெரிய வரும். ஆனால் இப்போது மூன்று நிமிடங்கள் என்பது அதிகம். இதனால் பதற்றம் வேகமாகப் பரவுகிறது என்பது உண்மைதான். ஆனால் மீட்புப் பணிகளும் வேகமாகச் செய்ய முடிகிறது என்பதும் உண்மையே.

முன்பு சுனாமி தாக்கிய பகுதிகளில் கடலூரும் ஒன்று. இப்போது 'தானே' புயலும் தன் பங்குக்கு கடலூரை சின்னாபின்னமாக்கி விட்டது. 'தானே' தாக்கிய மூன்றாம் நாள் நான் (கட்டுரையாளர்) அங்கு இருந்தேன். அதாவது புயல் மீட்புப் பணிகளுக்காக அலுவலகப் பணி மேற்கொண்டேன். ஒரு நிமிடம் இலங்கை யுத்தக் களத்திற்கு வந்து விட்டோமோ என்று அதிர்ந்து போனேன். இயற்கை தொடுத்த போர் அது. குண்டு வீச்சு நடந்ததா என்று அய்யம் ஏற்பட்டது. அந்தக் கொடுமையைச் சொன்னால் சொல்லில் அடங்காது;எழுதினால் ஏட்டில் அடங்காது; அது இருக்கட்டும். இது போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் உயிர்ச் சேதங்கள் பொருளாதார இழப்புகள் ஆகியவை பணத்தால் மதிப்பிடப் படுகின்றன. இயற்கையின் தாக்குதலுக்குள்ளான இடத்தில் தப்பிய மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு அரசும் தொண்டு நிறுவனங்களும் கொடுக்கும் பணம் சார்ந்த இழப்பீடுகள் போதுமா? (போதுமானதா என்பது வேறு கேள்வி) சுனாமி போன்றவற்றின் தாக்குதலைக் குறைக்க அலையாத்தி(னீணீஸீரீக்ஷீஷீஸ்மீ )(அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தும்) மரங்களை வளர்க்கலாம் என்று சொல்கிறார்கள். அதற்கான செயல் வடிவம் எந்த அளவில் இருக்கின்றதென்று தெரியவில்லை. ஆனால், மனமாத்தி முறைகளைப் பற்றி தெரிந்துகொண்டால் மன அலைகளின் வேகம் குறைந்து வாழ்க்கைப் படகை செலுத்த வசதியாக இருக்கும். இயற்கை இடர்பாடுகளால் நீங்கள் உடல் ரீதியாகப் பாதிக்கப் படவில்லையென்றாலும் அது மோசமான உணர்ச்சிப் பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. மன அழுத்தம், புரியாத எண்ணங்கள், மன ஒருமுகப்படுத்த இயலாமை,முடிவெடுக்க இயலாமை,உண்ணும் உறங்கும் முறைகளில் பாதிப்பு, பாதிப்பு ஏற்பட்ட நினைவு நாட்களில் பதட்டம், அதே போன்ற நிகழ்வுகள் வேறிடங்களில் நடந்தாலும் அதிர்ச்சி, மற்றவர்களோடு பழகுவதில் சிக்கல், தலைவலி, குமட்டல், நெஞ்சுவலி போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

மனதில் உறுதி வேண்டும். எங்கேயும் எப்போதும் எதுவும் நடக்கலாம் என்பதால் அந்த எதிர்பாராததை எதிர்கொள்ள முன் தயாரிப்பு செய்துகொள்வது நல்லது. அடிக்கடி வெள்ளம் ஏற்படும் கடல் மற்றும் நதிக்கரையோர மக்கள் தங்கள் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது குறித்து எப்போதும் கவலைப் படுவது உண்டு. அவர்களின் நிலையற்ற வாழ்க்கை மிகவும் கவலைக்குரியது. வெள்ளம் வரப்போகிறது என்ற அபாய அறிவிப்பு அவர்களுக்கு மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் பயத்தையும் உண்டாக்குகிறது. பயம் பதற்றத்தைச் சமாளிக்கும் எளிய பயனுள்ள வழிகளைத் தெரிந்துகொள்வோம். இது வெள்ள நேரத்தில் மட்டுமல்லாமல் எல்லாச் சூழ்நிலைகளிலும் உங்கள் உடல், மன நலனுக்கு ஏற்றதாக இருக்கும்.

தமிழ் ஓவியா said...

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். வெள்ள அபாய நேரத்தில் நீங்களும் உங்கள் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் உங்கள் கால்நடைகள், செல்லப் பிராணிகள் ஆகியவையும் பாதுகாப்பாக இருக்க ஒரு திட்டத்தை வைத்திருப்பது அவசியமாகும். அண்மைய இயற்கைப் பேரிடர்கள் சொல்லிக் கொடுத்தப் பாடம் அதுதான். அரசோ, மற்றவர்களோ உங்கள் உதவிக்கு வருவார்கள் என்று எதிர் பார்க்காமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவு செய்யுங்கள். கிடைக்கக்கூடிய போக்குவரத்து சாதனம், உங்களுக்கு உதவக்கூடிய உறவினர், தங்குமிட விவரங்கள் வேறு தனியார், அரசு சார்ந்த உதவும் அமைப்புகளின் விவரங்களைத் தெரிந்து வைத்திருப்பது அபாய நேரத்தில் உங்கள் பதற்றத்தைக் குறைக்கும்.

உண்மைச் செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். இது போன்ற நேரங்களில் உண்மையை விட புரளி வேகமாகப் பரவுவதுண்டு. ('தானே' புயல் தாக்கிய சில நாட்களில் கடலூரில் சுனாமி புரளி பரவியதால் கடலோர மக்கள் ஒரு இரவு முழுவதும் ஒரு உயரமான பாலத்தின் மீது நின்று கொண்டிருந்தனர்.) அதனால் உண்மையான தகவல்களைச் சேகரியுங்கள். அது உங்கள் அபாய நிலையின் அளவைச் சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்கள் வீண் அலைச்சலைக் குறைக்கும். உள்ளூர் செய்தி நிறுவனங்கள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகங்கள்,மக்கள் செய்தித் தொடர்பு அலுவலகங்கள் ஆகியவற்றின் அலுவலர்கள் கூறும் செய்திகள் உண்மையாக இருக்கும். அவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது. ஒரே செய்தியை பல பேர் பல முறை கூறுவதால் அபாயத்தின் அளவு அதிகமாகத் தெரிய வாய்ப்புள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.

தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

குடும்ப உறுப்பினர்களிடமும் நண்பர்களிடமும் தொடர்பிலேயே இருங்கள்.இது உங்கள் வலிமையின் ஆதாரம். ஒருவருக்கொருவர் நெருங்கி இருப்பதும் உதவி செய்து கொள்வதும் உங்கள் மன நலனுக்கு ஏற்றது. நல்ல உடல் நலனைப் பராமரிப்பது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை - சரியான அளவு சரிவிகித உணவு, உடற்பயிற்சி, ஓய்வு ஆகியவை எந்த விதமான அச்சுறுத்தலையும் சமாளிக்கக் கூடியது. ஆரோக்கியமான உடல் எண்ணங்களில் நேர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு வெள்ளம் போன்ற அபாய நேரங்களில் நல்ல முடிவுகளை எடுக்க உதவும்.

குழந்தைகளோடு நெருக்கமாக இருங்கள்.

உங்கள் குழந்தைகள் தேவையில்லாத செய்திகளைக் கேட்பதைத் தடுங்கள். நாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்று கூறி அவர்களுக்கு ஆறுதல் சொலுங்கள். (சுனாமியின் போது கடலூரில் ஒரு தாயும் ஏழு வயது பெண் குழந்தையும் வெள்ளத்தில் தூக்கி எறியப்பட்டு மின் கம்பத்தை தாயும் மின் கம்பியை குழந்தையும் பிடித்துக்கொள்ள ,(மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது) அவர்கள் காப்பாற்றப்படும் வரை அந்தக் குழந்தைக்கு அந்தத் தாய் தைரியம் சொல்லிக் கொண்டே இருந்தாராம்.-இதை அவர்களே சொல்லக் கேட்டேன்.)

நம்பிக்கையுடன் இருங்கள்.

அரசு ஊழியர்கள், மீட்புக் குழுவினர், ராணுவம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்றவை ஏற்கனவே மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதை நினைவில் வையுங்கள். அவர்களுடைய நடவடிக்கைகள் போதிய முன்னேற்றத்தை அடைந்திருக்கும் என்பதை நம்புங்கள். நீங்கள் ஏற்கனவே இது போன்ற சூழ்நிலைகளில் இருந்து வெற்றிகரமாக மீண்டிருந்தால் அந்த அனுபவத்தை வைத்து இப்போதைய சூழ் நிலையை சமாளிக்க முயற்சி செய்யுங்கள்.

உதவியை நாடுங்கள்.

பயம் பதற்றத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது நீடித்த பின் விளைவுகளால் மற்றவர்களுடன் பழகுவதில் அல்லது வேலையில் அக்கறையின்மை போன்ற சிக்கல்கள் இருந்தால் உரிய பயிற்சி பெற்ற மன நல வல்லுனரின் உதவியை நாடுங்கள். அவர்கள் உங்களின் இயல்பான வாழ்க்கைக்கு மீள உதவுவார்கள்.

நில நடுக்கத்தால் ஏற்படும் மன நடுக்கம்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில் அவ்வப்போது லேசாக நம்மை நடுங்க வைத்துக் கொண்டிருப்பது நில நடுக்கம். 2001 ஜனவரி 26 ம் நாள் குஜராத்தில் நிகழ்ந்த பூகம்பம் மிகப்பெரும் சேதம் விளைவித்து சில கிராமங்களை முற்றிலுமாய் அழித்து விட்டதை கண்ட போது அனைவர் மனதிலும் ஓர் அச்சம் ஊடுருவ ஆரம்பித்துள்ளது. ஏனென்றால் வடக்கே ஆயிரம் கி.மீ. தாண்டி பிளந்த பூமி தெற்கே திருவையாறு வரை நிலத்தை அசைத்திருக்கிறது. அதைத் தவிர இப்பொழுது பாதுகாப்பான பகுதி என நம்பிக் கொண்டிருந்த சென்னையிலும் அவ்வப்போது ஐந்து விநாடி பூமி அசைவு. நில நடுக்கம் ஏற்பட்ட இடங்களில் நம்முடைய குடும்பத்தாரோ, உறவினரோ, நண்பர்களோ இருந்தால் அவர்களுடைய பாதுகாப்பு நிலைமைப் பற்றி அறிந்தோ கொள்ள அதைப் பற்றிய செய்தியை மிகுந்த கவலையுடன் கவனிப்பது இயற்கையே. ஆனால்...

நாம் என்ன செய்ய வேண்டும்?

செய்திகளுக்கு இடைவேளை, இடைவெளி இல்லாமல் செய்திகளைக் கேட்பது அழுத்தத்தை மிகவும் அதிகப்படுத்தும். உங்கள் அன்புக்குரியவர் நில நடுக்கம் பதிக்கப்பட்ட இடத்தில் இருந்தாலும் சற்று இடைவெளி விட்டு செய்திகளைப் பாருங்கள். அந்த இடங்களில் அவ்வளவு விரைவாக செய்தி திரட்ட முடியாது என்பதாலும் தகவல் தொடர்புக் கருவிகள் பழுதடைந்திருக்கும் என்பதாலும் உடனடி செய்தி கிடைக்க வாய்ப்பில்லை. நிதானமாக இருங்கள்.

உங்கள் அன்றாட செயல்களைத் தொடருங்கள்.

வழக்கமான வேலைகளைச் செய்வதன் மூலம் தொடர்ந்து நிலநடுக்கம் பற்றிய செய்திகள் கேட்பதையும் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதையும் தவிர்ப்பதால் பதற்றம் சற்றுக் குறையும்.

உடலை நல்ல ஆரோக்கியமுடன் வைத்துக் கொள்வதால் உணர்ச்சிகளை நல்ல நிலையில் நிர்வகிக்க முடியும்.

தமிழ் ஓவியா said...

எதையும் எதிர் பாருங்கள்.

ஒரு பூகம்பம் ஏற்படுத்தும் பயங்கரமான பேரழிவு எந்த விதமான செய்தியையும் கொண்டுவரலாம். என்றாலும் நேர்மறையான எண்ணத்துடனே இருங்கள். நம்பிக்கையுடனும் பக்குவத்துடனும் அடுத்து வரும் நாட்களை எதிர் நோக்குங்கள்.

உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.

பல்வேறு நிறுவனங்கள் பூகம்பத்தில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு பல வகைகளிலும் உதவி செய்கின்றன. அவர்களுக்கு பணமாகவோ உடல் உழைப்பின் மூலமோ உதவி செய்வதன் மூலம் நிச்சயம் நல்ல மாறுதல் (ஆறுதல்) கிடைக்கும்.

நம்பிக்கையை கை விடாதீர்கள்.

துன்பம் நிறைந்த அனுபவத்தால் மனதை பக்குவப் படுத்திக் கொண்டதன் மூலம் மரியாதைக்குரிய வளர்ச்சியை அடைய முடியும். இதன் மூலம் தன் வலிமையைத் தெரிந்துகொள்ள முடிவதுடன் வாழ்வதற்கு அர்த்தத்தை ஏற்படுத்த முடியும்.

உளவியலாளர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

சாதாரணமாக அளிக்கப்படும் அறிவுசார்ந்த, நடத்தை சார்ந்த, அறிவு-நடத்தை இணைந்த, இணைந்து பழகும் முறை, மனிதாபிமான நடத்தை, உள வலிமை படுத்தல் ஆகிய முறைகளில் ஒன்றையோ சிலவற்றை இணைத்தோ சிகிச்சை அளிப்பதன் மூலம் தனிஆளோ தம்பதியரோ குடும்பமோ பயனடையும்.ஹிப்னாடிச சிகிச்சை அளிப்பதன் மூலம் வலிகள், பதற்றம்,பிறழ் மனநிலை ஆகியவை பெரிய அளவில் குணமாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உளவியலாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் மன அழுத்தம்,உணர்ச்சிக் கொந்தளிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். அவர்கள், உயிர் பிழைத்தவர்களுக்கும் தொண்டர்களுக்கும் மீட்புக் குழுவினருக்கும் அவர் களுடைய உணர்ச்சி நிலை, கோபம், அழுத்தம், துயரம் ஆகியவற்றைப் புரிந்து நடந்து கொள்ள உதவுகிறார்கள்.

பேரிடர் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீண்டு தன்னம்பிக்கையுடன் வாழ ஊக்கப்படுத்துகிறார்கள். சிறிய ஆரம்பத்திலிருந்து படிப்படியாக நீண்ட நாள் இலக்கை அடையும் வழிமுறைகளைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

பேரிடரின் தாக்கத்திலிருந்து குழந்தைகள் மீண்டு எதிர்கால வாழ்வை அமைத்துக் கொடுப்பதைப் பற்றிய பெற்றோரின் கவலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

குடியிருப்பில் உடன் வசிப்பவர்கள், தொண்டர்கள் மற்றும் ஊழியர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டை நீக்க உதவுகிறார்கள். உயிரிழந்த குடும்பத்தினர்,உறவினர் ஆகியோரைப் பற்றிய கவலைகளை மறக்க உதவுகின்றனர். பேரிடரிலிருந்து தப்பியவர்களுக்கு பயம்,பயங்கரக் கனவுகள்,உறுத்தலான மன நிலை,குழப்பம் போன்ற விளைவுகள் ஏற்படுவது இயல்பே எனவும் தக்க சிகிச்சையின் மூலம் வழக்கமான வாழ்க்கைக்கு திரும்ப முடியும் எனவும் தெளிவுபடுத்தி அதற்கான ஆவன செய்கிறார்கள். குழந்தைகளுக்குச் சிறப்பாகப் பயிற்சி பெற்ற நிபுணர்கள் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு தக்க வழி காட்டுகிறார்கள். நீண்ட கால உதவியை எங்கே எப்படி பெறுவது என்பது போன்ற வழிகாட்டி ஆலோசனையைத் தருகிறார்கள்.

திடீரென்று ஏற்படும் இழப்புகளை "இயற்கையின் கோணல் புத்தி" என்று தந்தை பெரியார் சொல்வார். பேரிடர் நிகழ்வுகளில் ஏற்படும் துயரங்களைத் தாங்கிக் கொள்ள பகுத்தறிவைப் பயன் படுத்த வேண்டும்.ஏற்கனவே பட்டறிவு (பட்ட அறிவு) உள்ளவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இனி இப்படியொரு நிகழ்வு ஏற்படக்கூடாது என்பது விருப்பமாகும் . நிகழ்ந்தால் எப்படித் தாங்கிக் கொள்வது என்பதைத் தெரிந்து கொள்வது நம் பொறுப்புமாகும்.

- க.அருள்மொழி 16-31 2012

தமிழ் ஓவியா said...

அடிப்படையில் இங்கு பிரச்சினைக்குக் காரணம் என்னவென்றால், ஜாதிய அமைப்பு. இந்தியாவின் அடிப்படைக் கட்டுமானமே ஜாதியில் சிக்குண்டு கிடக்கிறது. அந்தச் ஜாதிதான் ஜனநாயகம், அரசியல், ஆட்சி இயந்திரம் எல்லாவற்றையும் சூழ்ந்து இருக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், ஜாதிய அமைப்பு, நிலப்பிரபுத்துவ முறையில் இருந்து கார்ப்பரேட் முறைக்கு மாறி இருக்கிறது.

இங்கு ஊழலை எல்லோரும் நோயாகத்தான் பார்க்கிறார்கள். அது ஒரு நோயின் அறிகுறிதான். உண்மையில் நோய் எது என்றால், சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வு. இந்தியாவில் இன்றைக்குப் பணமோ, அதிகாரமோ இல்லாத சாமானியன் நீதியைக் கோரி ஒரு துறையைக்கூட அணுக முடியாது. இந்த மாதிரி ஒரு கட்டமைப்பை வைத்துக்கொண்டு, எவ்வளவு சட்டங்கள், எத்தனை போலீஸாரைக் கொண்டுவந்தாலும் ஊழலை ஒழிக்கவே முடியாது. இதைப் புரிந்து கொள்ளாமல்தான் அண்ணா ஹசாரே இயக்கம் கோஷம் போடுகிறது.

- சமூக செயல்பாட்டாளர் அருந்ததிராய்

தமிழ் ஓவியா said...

மறுமணம் செய்தார் என்ற காரணத்திற்காக, விபத்தில் கணவனை இழந்த பெண்ணுக்கும், மனைவியை இழந்த கணவனுக்கும் இழப்பீடு வழங்க மறுக்கக்கூடாது. இறந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசாக, அவர்கள் தொடர்ந்து இருப்பார்கள். கணவனை இழந்த பெண், கடினமான சூழலில் வாழ வேண்டும் என சமுதாயம் எதிர்பார்க்கிறது. சமூக மாற்றம் முக்கிய மானது. அந்த மாற்றம் சட்டத்தின் மூலமாகவோ, நீதித்துறையின் தலையீடு காரணமாகவோ நடைபெறலாம். மனுதாரர் கணவர் இறக்காமல் இருந்திருந்தால் மறுமணம் செய்திருக்க மாட்டார். விதவைகள் மனரீதியாக பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். அதனை கருத்தில் கொள்ள வேண் டும். விதவைகள் மறுமணம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் விதவை என்ற அவச் சொல்லை நீக்க முடியும். பெண்களுக்கு சமூக பாதுகாப்பும் கிடைக்கும்.


- வழக்கு ஒன்றின் தீர்ப்புரையில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.விமலா

தமிழ் ஓவியா said...

எதிர்க்கதை

கோலம்

குமுதம் 11-7-2012 இதழில் வெளியான முதல் மாணவிஎன்ற பிற்போக்குச் சிந்தனைக் கதைக்கு எதிர்வினையாய் எழுந்த சிந்தனை

பள்ளி வளாகம் களைகட்டியிருந்தது. நடந்து முடிந்த +2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடத்தைப் பெற்றாள் கஸ்தூரிபாய் மேல்நிலைப் பள்ளி மாணவி அர்ச்சனா. பாராட்டு விழா! மாவட்ட கல்வி அதிகாரி மணிமேகலை காரில் வந்து இறங்கினார். மாணவ மாணவிகள் இருபுறமும் வரிசையில் நின்று கைதட்டி வரவேற்றனர். காரை விட்டு இறங்கிய மணிமேகலையை வாசலில் போடப்பட்டிருந்த கோலம் ஈர்த்தது. ஒருசில நிமிடங்கள் நின்று ரசித்தார். அருகில் நின்ற தலைமை ஆசிரியர் பெருமையுடன் அந்தக் கோலத்தை வரைந்தது இன்றைய விழா நாயகி அர்ச்சனாதான் என்றார். நிகழ்ச்சி துவங்கியது. வாழ்த்துப் பா, வரவேற்புரை என முறையாக நடந்தது. அர்ச்சனாவையும் பள்ளி ஆசிரியர்களையும் வெகுவாகப் பாராட்டிய அதிகாரி மணிமேகலை வாசலில் போடப்பட்டிருந்த கோலத்தைப் பற்றியும் குறிப்பிடத் தவறவில்லை. அர்ச்சனாவின் ஓவியத் திறமையை மிகவும் லயித்துப் பாராட்டினார்.

அடுத்து அர்ச்சனாவின் ஏற்புரை என்று அறிவித்ததும் பள்ளி மாணவர்களின் கைதட்டல் சத்தம் அடங்க வெகுநேரமாயிற்று. ஒன்றிரண்டு விசில் சத்தமும் காற்றைக் கிழித்தது. அர்ச்சனா அனைவருக்கும் வணக்கம் சொல்லி உரையைத் துவங்கினாள். நான் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றதை கல்வித்துறை அதிகாரி மிகவும் பாராட்டினார்கள். அதற்குக் காரணம் எனது பள்ளி ஆசிரியர்களும் எனது பெற்றோரும்தான் என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் வாசலில் போடப்பட்டிருந்த கோலம் நான் வரைந்ததாக நினைத்து என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். மன்னிக்க வேண்டும். அந்தக் கோலத்தை நான் போடவில்லை. நேற்று தலைமை ஆசிரியர் என்னை அழைத்து உன் வீடு அருகில்தானே இருக்கிறது நீ காலையில் வந்து கோலம் போட்டுச் சென்றுவிடு என்று சொன்னார்கள். எனக்கு கோலம் போடத் தெரியாது. அவரிடம் சொல்ல பயந்து வகுப்பாசிரியையிடம் தெரிவித்தேன்.

அவர் ஒரு பெண் கோலம் போடத் தெரியவில்லை என்று சொல்கிறாயே! வெட்கமாக இல்லை? நீயெல்லாம் ஒரு பெண்ணா? என்று கடுமையான வார்த்தைகளை வீசினார். வீட்டிற்குச் சென்ற பிறகும் வகுப்பாசிரியை நீயெல்லாம் ஒரு பெண்ணா என்று கேட்ட அந்தக் கேள்வி என் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

வேலை முடித்து வீடு திரும்பிய என் தந்தை என் முகத்தின் வாட்டம் அறிந்து காரணம் கேட்க நடந்ததைச் சொன்னேன். அட என்னம்மா நீ! இதற்குப் போய் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குற! பெண்ணாகப் பிறந்தால் கோலம் போடத் தெரியனும், சமைக்கத் தெரியனுங்கிறது என்ன எழுதப்படாத சட்டமா? எந்த வேலையா இருந்தாலும் தேவைப்பட்டா யாரும் கத்துக்கனும்! செய்யனும்! இதில் ஆண் என்ன? பெண் என்ன? உனக்கு கோலம் தானே போடனும். நானே போடுறேன் கவலையை விடு என்றார். எனது தந்தை ஒரு சிறந்த ஓவியர் அவர்தான் இன்று விடியற்காலை அந்தக் கோலத்தைப் போட்டவர். அவர் இந்த நிகழ்ச்சிக்கும் வந்திருக்கிறார். கல்வி அதிகாரியின் பாராட்டும் புகழும் என் தந்தைக்கு உரியது என்று தன் உரையை முடித்தாள்! மேடை அருகில் நின்று அர்ச்சனாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த வகுப்பாசிரியர் தேன்மொழிக்கு கன்னத்தில் அறைந்ததுபோல் இருந்தது!

- கி.தளபதிராஜ் 16-31 2012

தமிழ் ஓவியா said...

ஒரு சிந்தனை-ஒரு தகவல்


ஒரு சிந்தனை

டார்வின் தியரி மகா தப்பு!

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது டார்வின் தத்துவம். அது தவறு என்கிறேன். குரங்கு வர்க்கத்தில் பள்ளு, பறை, முதலியார், அய்யர், செட்டியார், பிள்ளை என ஜாதிப் பாகுபாடு இல்லையே!
குரங்கு ஒரே வர்க்கமாயிற்றே!

ஒரு தகவல்

கண்ணதாசன்

உங்களுக்கு தெரிய வேண்டியது புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்ற திராவிட இயக்க இலக்கிய மாத இதழ் தரமிக்கது. கல்கி, கலைமகள், ஆனந்த விகடன் போன்ற அவாள் ஏட்டிற்கு சவால் விட்ட ஏடு. ஆசிரியர்: முருகு.சுப்பிரமணியன்; நிர்வாகி: அரு.பெரியண்ணன்.

அந்த இதழ் அறிமுகம் செய்த பாரதிதாசன் பரம்பரை என்ற கவிதை நயமான தொடரில், சுரதா, முடியரசன், பொன்னிவளவன், நாக.முத்தையா, நாரா.நாச்சியப்பன், மு.அண்ணாமலை போன்ற கவிஞர்கள் அறிமுகம் ஆனார்கள். கண்ணதாசன் மட்டும் அதில் அறிமுகம் ஆகவே இல்லை! அவர் எழுதி அனுப்பிய மாடு விற்போன் திருப்பி அனுப்பப்பட்டது; பிரசுரத்திற்கு ஏற்கப்படவில்லை.

தகவல்: சந்தனத்தேவன், திண்டுக்கல்.

தமிழ் ஓவியா said...

குருமூர்த்தியின் சுதேசி வியாபாரம் - சு.அறிவுக்கரசு


பார்ப்பனர்களின் பாதுகாவலனாகப் பல ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் மூதறிஞர் சோ.ராமசாமியின் இந்த இதழில் ஒருவர் கட்டுரை எழுதியிருக்கிறார். எழுதியவர் எஸ்.குருமூர்த்தி என்பார். பிராமணதர்மம் பிறழாமல் _புரோகிதம் பார்ப்பதற்குப் பதில் பெரு முதலாளிகளின் கள்ளக்கணக்குப் பேரேடுகளைப் புரட்டிக் காசு பார்ப்பவர். ஆர்.எஸ்.எஸ்.காரர். அதன் ஆக்டோபஸ் கரங்களில் ஒன்றான சுதேசி ஜாக்ரான் மஞ்ச்சின் தலைவர். அதாவது உள்நாட்டுப் பொருள்களை மட்டுமே வாங்கவேண்டும், விதேசிப் பொருள்களை வாங்கக்கூடாது எனப் பிரசங்கம் செய்பவர். இதற்காக ஒரு முறை மதுரை மூதூருக்குப் போய்க் கல்லூரி மாணவர்களை 30_40 பேர் அடங்கிய மாபெரும் கூட்டத்தில் பிரசங்கம் செய்தார். சென்னையிலிருந்து மதுரைக்கு விதேசிக் கண்டுபிடிப்பான விமானத்தில்தான் பயணம் செய்தார். மாட்டு வண்டியில் போகவில்லை. வலது கையில் கைக்கடிகாரம் கட்டிக் கொண்டிருப்பார்.

அது சுவிஸ் அல்லது ஜப்பான் வாட்ச் ஆக இருக்கலாம். அல்லது விதேசி கண்டுபிடிப்பை பாரதத்திலேயே உற்பத்தி செய்கிறார்களே, அதுவாகக் கூட இருக்கலாம். ஆக, ஊருக்குத்தான் உபதேசம்! தனக்கல்ல என வாழ்பவர்! தலைப்பே தவறு

கட்டுரையின் தலைப்பு கடவுள் அணுவும் சிவனின் நடனமும் என்பது. அண்மையில் கண்டறியப்பட்ட ஹிக்ஸ்போசான் என்பதை அவர் கடவுள் அணு என்கிறார். சில ஏடுகள் கடவுள் துகள் என்றன. தூள் தூள் ஆன கடவுள்என்று உண்மை தலைப்பிட்டது. குருமூர்த்தி கொடுத்த தலைப்பு சரியா? ஏற்கெனவே கண்டறியப்பட்ட 12 துகள்களும் 4 விசைகளும் மட்டுமே பேரண்டத்தை உருவாக்கின எனக் கூறிட இயலவில்லை; இவற்றை இணைக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது, அதனையும் கண்டறியவேண்டும் என்கிற ஆய்வு ஆர்வத்தை 1964இல் விதைத்தவர் பீட்டர் ஹிக்ஸ் எனும் நாத்திகரான விஞ்ஞானி. அவரின் பெயராலும், இந்தத் துறையில் 1930 வாக்கில் ஆய்வு செய்த இந்திய அறிவியலாளர் சத்யேந்திரநாத் போஸ் பெயராலும் இது ஹிக்ஸ் போசான் என்று அழைக்கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

கடவுள் வந்த கதை

ஹிக்ஸ் சொல்லி 30 ஆண்டுகளுக்குப் பிறகு 1993இல் லெயான் மேக்ஸ் லெடர்மேன் எனும் விஞ்ஞானி நூல் எழுதினார். அதன் தலைப்பு காட் டாம்ன் பார்டிக்ள் என்பதுதான். இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்த வியாபாரி வணிகநோக்கில் கவர்ச்சியான தலைப்பு தருவதாகக் கருதிக் கொண்டு (GOD PARTICLE) என்று தந்துவிட்டார். அதன்படிகூட கடவுள் துகள் என்றுதான் தமிழில் குறிப்பிட வேண்டும். குரூமூர்த்தி அய்யர்வாள், அக்கிரகாரத் தன்மையோடு கடவுள் அணு என்றாக்கி விட்டார்.

செய்யலாமா? செய்து வந்தனர் பார்ப்பனர். இறந்த காலத்தில் என்ன, நிகழ்காலத்திலும் செய்கிறோம் என்று பூணூல் தட்டும் (மார்தட்டுவதும், தொடை தட்டுவதும் வீரர்கள் செய்வது என்பதால் இந்தப் புது சொல்லாடல்) செயலில் இறங்கியிருக்கிறார் கோயங்கா குடும்பக் கணக்குப்பிள்ளை.

பார்ப்பனர் ஏடெழுதும் பாழ் நிலைமை போகுமட்டும்

பைந்தமிழ்கோ சீர்ப்பெரிய நாட்டினுக்கோ சிறிதேனும்

நன்மையில்லை என எழுதினார் புரட்சிக்கவிஞர்! குருமூர்த்தி நிரூபிக்கிறார்!

கடவுள் படைக்கவில்லையே

துகளும் அணுவும் வெவ்வேறு: அணு மூன்றாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. மூன்றும் சேர்ந்து, அணுக்கள் கோடிகோடியாகச் சேர்ந்து எடை பெற்று பேரண்டத்தில் காணும் எல்லாப் பொருள்களும் உருவாகின என்பது அறிவியல். இதை ஏற்கும் குருமூர்த்தி இதையும் ஏற்பார் என எதிர்பார்க்கிறோம் _ இவர் சிலாகித்து எழுதும் நடராசன் சிலையும்கூட இந்தச் சேர்க்கையால் வந்ததுதான். ஏற்கிறாரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

இதுதான் கண்டுபிடிப்பு

இந்தச் சேர்க்கையை ஏற்படுத்தியது எது என்பதைத்தான் இப்போது கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார்கள். ஆனால் குருமூர்த்தி இந்தத் துகளை உபஅணு என்று எழுதிக் குழப்ப முயல்கிறார். அந்தக் கட்டுரையில் வந்திருக்கும் பெட்டிச் செய்தியில் குழப்பும் கைங்கர்யத்தை நன்னாச் செய்திருக்கிறார்.

ஆரியக்கூத்து எப்படியெல்லாம் ஆடியிருக்கிறது என்பதை, அத்வைதத்தைத் திணிப்பதிலிருந்தும் செத்துப்போன சாமிநாத சங்கராச்சாரி எழுதியதை எடுத்துப் போட்டிருப்பதிலிருந்தும் புரிந்துகொள்ள லாம். இந்த அபத்தப் பைத்தாரப் பிதற்றலை (பைத்தியக்கார என்பதை அவாள் அப்படித்தான் சொல்லுவா) அறிவியல் அறிஞர்கள் ஒப்புக் கொள்வார்களா? குறைந்தபட்சம் வடகலை, தென்கலை வைணவர்களோ, மாத்வர்களோ அத்வைதத்திற்கு முகாமை தருவதை ஏற்றுக்கொள் வார்களா?

நடனம் ஆடினானா?

சிவன் ஆடினான், அது பிரபஞ்ச நடனம் என்கிறாரே, குருமூர்த்தி! அறிவியல் ஆய்வுகளின் மூலம் தன் முடிவுகளை நிரூபிப்பதுபோல, நடராஜ நடனத்தை நீரூபிப்பாரா? எவராவது நிரூபித்திருக்கிறார்களா? இல்லை எனும்போது, ஏன் பொய்? பித்தலாட்டம்?

பாரத பூமி என்றே பிடிவாதமாக எழுதுகிறார். அது ஆர்.எஸ்.எஸ். பிடிவாதம். போகட்டும். அந்த ஞானபூமி இதுவரை எதில், எந்த வகையில் உலகச் சமுதாயத்திதற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன? ஒன்றும் இல்லை எனும்போது, அவர்கள் செய்ததில் இவாள் தங்கள் மூக்கைப் புகுத்துவது வெறுக்கத் தக்கதல்லவா?

பார்ப்பனர்கள் ஏடெழுதும் பாழ்நிலைமை போகுமட்டும்... நம் சமுதாயத்திற்கு விடிவில்லை; உயர்வில்லை என்பதை உணர்ந்து செயல்படுவோம்!

தமிழ் ஓவியா said...

சம உரிமையுடன் வாழ விரும்பும் ஈழத்தமிழர்கள்

பாதிக்ககப்பட்ட ஈழத் தமிழர்களை நேரில் சந்தித்த மனநல மருத்துவர் மா.திருநாவுக்கரசு


இலங்கையில் சிங்கள இனவாத அரசு நடத்திய இனப்படுகொலைக்குப் பிறகும் எஞ்சி வாழும் தமிழர்களின் வாழ்வுரிமை என்பது கேள்விக்குறி என்ற நிலையில், உலகத் தமிழர்களெல்லாம் கவலையோடு இருக்கின்ற வேளையில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் தற்போதைய மனநிலை எப்படி உள்ளது? அவர்களுக்கு தற்போதைய தேவைகள் என்ன? அவர்கள் எதை எதிர் பார்க்கிறார்கள்? என்பதை அறிய இலங்கையில் கொழும்பு, அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி, வன்னிபிரதேசம், யானையிறவு, யாழ்ப்பாணம் போன்ற தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு நேரில் சென்று வந்த உலக மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பின் தெற்காசியப் பிரிவுத் தலைவரும், சிறந்த மனநல மருத்துவ நிபுணருமான பேராசிரியர் மா.திருநாவுக்கரசு அவர்கள், தமிழர்களை சந்தித்து அவர்களுக்கு மன உறுதிக்கான ஆலோசனைகளை வழங்கியதோடு, தற்போது அங்குள்ள சூழ்நிலைகளை நம்மிடம் எடுத்துரைத்தார்.

அதன் விவரம் வருமாறு: கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி கொழும்புவில் உள்ள மனநல மருத்துவர் சிவதாஸ் எழுதிய நலமுடன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றினேன். மக்கள் ஆர்வத்துடன் இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார்கள். இந்தியாவில் இருந்து வந்திருந்து தமிழில் உரையாற்றி, கலந்துரையாடலும் செய்ததைப் பற்றி அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

அவர்களுடைய ஆர்வமும், தமிழ்ப் பற்றும் வெளிப்படையாகத் தெரிந்தது. அன்று இரவே அனுராதபுரம் வழியாகப் பயணம் செய்து வவுனியா வந்தடைந்ததோம், வவுனியா தற்போதுதான் மீண்டெழுந்து செயல்பட்டு வருகிறது. மக்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறார்கள்.

இரண்டு மணி நேரம் பயணம் செய்து கிளிநொச்சியைச் சென்றடைந்தோம். அங்கு உள்ள மத்திய பள்ளி வளாகத்தில் புத்தக வெளியீட்டு விழா. போருக்குப் பின் அப்பள்ளியில் நடக்கும் ஒரு பொது நிகழ்ச்சி என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

நிகழ்ச்சி வன்னி பிரதேச கல்வி இயக்குனர் தலைமையில் நடந்தது. போரின்போதெல்லாம் அப்பள்ளி வளாகம் சிகிச்சை அளிக்கக் கூட பயன்படுத்தப்பட்டது என்று கூறினர். அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.

சுனாமி பேரழிவின் பாதிப்புகள், போரின் அவலங்கள், அதனால் ஏற்பட்ட காயங்கள், மிச்சங்கள் மற்றும் எச்சங்கள் ஆகியவை பற்றியும் பகிர்ந்துகொண்டார்கள். வவுனியா பிரதேசத்தின் பொது மருத்துவமனையின் இயக்குனரும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் போது முள்ளி வாய்க்கால் முழுக்க அவரது நிர்வாகப் பொறுப்பில்தான் இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. அனைவருமே நம்பிக்கையூட்டும் விதமாக பேசினார்கள். பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஏதாவது ஒரு முகாமை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கெல்லாம் வந்து பேச, உரையாட, அறிவுரை வழங்க கேட்டுக் கொண்டார்கள்.

தமிழ் ஓவியா said...

கல்வி நிலைய முதல்வர்களுடனும், களப் பணியாளர்களுடனும் ஒரு மணி நேரம் கலந்துரையாடல் நடைபெற்றது. போரினால் ஏற்பட்ட இழப்புகள், தாக்கங்கள், காயங்கள் மற்றும் மன அழுத்தங்கள் தெளிவாகத் தெரிந்தன. அனைவருமே எதையாவது இழந்திருந்தார்கள். இழப்பை சந்திக்காதவர்களே இல்லை என்று கூறலாம்.

போருக்கு முன் ஏறத்தாழ நான்கு அய்ந்து ஆண்டுகளுக்கு மேல் பள்ளிகளே செயல்பட வில்லை. கிளிநொச்சி பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மின்சாரம் கிடையாது என்பதை அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது.

யானையிறவு பகுதியில் பலத்த பாதுகாப்பு சோதனை இருந்தது. யாழ்ப்பாணம் பகுதி சுறுசுறுப்பாகத்தான் இருந்து வருகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லூர் முருகன் கோயில் பகுதிக்குச் சென்ற பிறகு வெவல்வெட்டித்துறை, கணேசன்துறை, பலாலி வழியாக செல்லும்போது பிரபாகரன் வீடு அமைந்த சந்தையும் (வீதி) பார்க்க நேர்ந்தது. இராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வீட்டைப் பார்க்க அனுமதி இல்லை என்று கூறிவிட்டார்கள். அங்கிருந்து பாயின்ட் பெட்ரோ சென்று கடற்கரையைப் பார்த்தோம். வெகு நாட்களாக மீன் பிடிக்கத் தடை செய்யப்பட்டிருந்த இடம் இது.

அங்கிருந்து வேதாரண்யம் மிக அருகில் உள்ளது என்றார்கள். சமீபத்தில்தான் மீன் பிடி தொழில்தடை நீங்கி, உயிர் பெற்று சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மீண்டும் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தைப் பார்த்த பிறகு பொதுஜன நூலகத்தைப் பார்த்துவிட்டு கொழும்பு திரும்பினோம்.

2006 இல் சுனாமியின்போது மீட்புப் பணிகளுக்காக கொழும்பு சென்றிருந்தேன். அப்போது திரிகோண மலை மற்றும் மட்டக்களப்பு வரைதான் செல்ல அனுமதி கிடைத்தது. வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் செல்ல தடையிருந்ததாகக் கூறினார்கள்.

தற்போது சென்றபோது தடை இல்லை. கண்காணிப்போடு எந்த இடத்திற்கும் சென்றுவர முடிந்தது. மக்களை சந்திக்க முடிந்தது. உரையாட முடிந்தது. அதிலிருந்து நான் அறிந்து கொண்டவை இவைதான்:-


தமிழ் ஓவியா said...

போருக்குப் பின் ஏற்பட்ட அமைதி தெளிவாகப் புலப்பட்டது. மக்கள் சகஜமாக நடமாடுகிறார்கள். இயல்பாக இருக்க முயற்சிக்கிறார்கள். வழி நெடுக சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தொடர் ராணுவ மற்றும் காவலர் கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை மய்யங்கள் உள்ளன.

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய இடங்கள்தான் மிக அதிகமான பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்கள். பலர் யாழ்ப்பாணத் திலிருந்து புலம் பெயர்ந்து வேறு நாடுகளுக்குச் சென்று செட்டிலாகிவிட்டார்கள். அதே சமயம் வவுனியா பகுதியில் உள்ள மக்கள்தான் இரண்டு பக்கத்திலும் மாட்டிக்கொண்டு இன்னல்களை அனுபவித்திருக்கிறார்கள்.

தற்போது தமிழர்களிடம் இருப்பது மனிதவளம்தான். தைரியத்தோடும், தெளிவோடும் இருக்கிறார்கள்.

மேற்கொண்டு போராடுவதற்கு அவர்கள் தயாராக இல்லை என்று தெரிகிறது. அதே சமயம் நடந்தவைகளை நினைத்து அசைபோட விரும்பவில்லை. மேற்கொண்டு என்ன செய்யலாம் எவ்வாறு முன்னேறலாம் என்றுதான் முயற்சிக்கிறார்கள்.

மனித வளத்தை முதலீடு செய்து மேம்படவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தைரியம், தன்னம்பிக்கையை இழந்ததாகத் தெரியவில்லை. அதே சமயம் பாதுகாப்பின்றிதான் இருக்கிறார்கள். சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்ற நினைப்பும், சமத்துவமாக நடத்தப்படுவதில்லை என்ற ஆதங்கமும், கவலையும் அவர்களது பேச்சில் தெரிகிறது.

சுதந்திரமாக செயல்படவும், சமத்துவமாக நடத்தப்படவுமான உலக நாடுகளின் உதவி மற்றும் செயல் பாடுகளால், வற்புறுத்தலால் தங்களுக்குக் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறார்கள். எல்லோரும் தோற்றதாகத்தான் நினைக்கிறார்கள். யாரும் வெல்லவில்லை என்பதுதான் அவர்களது கருத்து.

தமிழ் மக்கள் செய்த தியாகம் மகத்தானதுதான். அம்மக்களுக்குக் கிடைக்கவேண்டிய பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் சமத்துவம் கிடைத்திட, உலக நாடுகள் முயன்றிட வேண்டும் என எண்ணுகிறேன் என்று மனநல மருத்துவ நிபுணர் பேராசிரியர் மா.திருநாவுக்கரசு அவர்கள் ஈழத் தமிழர்களை நேரில் சந்தித்த தனது அனுபவங்களை உண்மை இதழ் வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டார்.

சந்திப்பு: வே.சிறீதர்

தமிழ் ஓவியா said...

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்


நூல்: நல்லவன் வெல்வது எப்படி?

ஆசிரியர்: பவான் சவுத்ரி

வெளியீடு: Wisdom Village Publication (P) Ltd.
649,040 Udyog Vigar, Base V,
Gurgaon, Hariyana - 122 001

இணையதளம்: www.wvld.in

நூலிலிருந்து...

தீர்மானகரமாக நிரூபிக்கவோ, மறுக்கவோ இயலாத காரண, காரிய உறவுகளைப் பற்றிய யூகத்தையே மூடநம்பிக்கை என்கிறோம். பொதுவாக, மூடநம்பிக்கைகள் பயனற்றவை; எதிர்பாராத உடன் நிகழ்வுகளை காரணத்துடன் நிகழ்பவை எனத் தவறாகப் புரிந்து கொள்வதால், அவை தோன்றுகின்றன.

பி.எஃப்.ஸ்கின்னர் என்கிற நடத்தையியல் உளவியல் வல்லுநர் 1948ஆம் ஆண்டு நடத்திய வரலாற்றுப் புகழ் மிக்க ஆய்வின் மூலம் புறாக்களுக்கு மூடப்பழக்கங்கள் இருப்பதாகக் காட்டினார். பசியுடன் இருந்த எட்டுப் புறாக்களைக் கூண்டுகளில் அடைத்தார். குறிப்பிட்ட காலமுறைப்படி அவற்றிற்கு உணவுத் துணுக்குகளை வழங்கினார். அவற்றின் எவ்வித செயல்பாடுகளுக்கும் தொடர்பின்றி பதினைந்து நொடிகளுக்கு ஒருமுறை உணவு வழங்கப்பட்டது. எட்டில் ஆறு புறாக்கள் வியக்கத்தக்க செய்கைகளைச் செய்தன; அவை அனைத்தும் வெவ்வேறானவை. எடுத்துக்காட்டாக, ஒரு புறா கூண்டின் ஒரு மூலையில் தலையை முட்டிக் கொண்டது; மற்றொன்று கூண்டுக்குள் சுற்றிச் சுற்றிப் பறந்தது; வேறொன்று மேலும் கீழும் குதித்தது; இன்னுமொன்று முன்னும் பின்னும் அசைந்தாடியது. அவ்வாறு ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயலைச் செய்தன. மனநல மருத்துவர் ஸ்கின்னர், உணவை முதன்முதலாகக் கண்டவுடன் புறாக்கள் மனம்போன போக்கில் ஏதோ செயல்களை நிகழ்த்துகின்றன; மறுபடியும் உணவுத் துணுக்குகளைப் பெறுவதற்கு முன்பு, முன்னர் செய்த அதே செயல்களை நிகழ்த்துகின்றன என யூகித்தார். அவ்வாறு செய்யா விட்டாலும்கூட அவற்றிற்கு உணவு கிடைக்கத்தான் போகிறது. ஆகவே, அவை ஒருவித மூடநம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருந்தன.

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கைகள் தோன்றுகின்ற நிகழ்வு மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பொருந்தக் கூடியது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரே நிகழ்வு திரும்பத் திரும்ப நடந்தால் உண்மையாகவே தொடர்பு எதுவும் இல்லை என்றபோதிலும் அத்தகைய நிகழ்வு எதனுடனாவது தொடர்புறுத்திப் பார்க்கப்படுகிறது. ஆகவே, எதிர்பாராத உடன் நிகழ்வுகள் மூடநம்பிக்கைக்கு ஓர் ஆதாரமாகிறது.

எந்தவொரு மூடநம்பிக்கைக்கும் மற்றொரு ஆதாரம் பண்பாடு. இதற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தரலாம். நான் முதன் முறையாகப் பாரிஸுக்குச் சென்றதற்கு முன்னர் என்னுடைய பணியாளுடன் தவறாக நடந்து கொண்டேன். (அதற்காகப் பெரிதும் வருந்துவதுண்டு) பாரிஸ் சென்றடைந்த பின்னர் ஒருநாள், எனது கடவுச்சீட்டைக் காணோம். எனது பெட்டி, படுக்கைகளிலெல்லாம் தேடியும் காணாமற் போகவே, மடத்தனமாக அங்கிருந்த எனது சக பணியாளர்களிடம் தெரியப்படுத்தி விட்டேன். இடி விழுந்துவிட்டது. அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் புதிய கடவுச்சீட்டும் பிற நாடுகளுக்குச் செல்வதற்கான நுழைவு அனுமதியும் பெற்றாக வேண்டும். பெரும் பீதி பீடித்துக் கொண்டது. இறுதியில், நண்பர் ஒருவருடைய உதவியுடன், படாதபாடுபட்டு, வியர்வை சிந்தி, பலருடைய கேலி, கிண்டல்களுக்கு ஆட்பட்டு ஒருவழியாக புதிய கடவுச்சீட்டும், நான் செல்ல இருந்த நாடுகளின் நுழைவு அனுமதிகளும் பெற்றேன். சில மணி நேரத்திற்குப் பிறகு, எனது பையின் பக்கவாட்டு உறையில் காகிதம் ஒன்றை இழுத்தபோது எனது கைகளில் சிறு புத்தகம் ஒன்று தட்டுப்பட்டது.

தமிழ் ஓவியா said...

அது என்னுடைய கடவுச்சீட்டு.

நான் அதைத் தொலைக்கவில்லை. அதுவரை பைக்குள் மாட்டிக் கொண்டிருந்தது. அப்பொழுது என்ன நேர்ந்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை; தற்பொழுது புரிகிறது. என்னுடைய பணியாளுடன் தவறாக நடந்து கொண்டது எனது மூளையைக் குடைந்து கொண்டிருந்தது. வினை-_விளைவுத் தத்துவத்தில் ஆழமாக மூழ்கிப் போனதால், எனக்குத் தண்டனையை எதிர்பார்த்திருந்தேன். அது தானாக வரவில்லை; நானாகவே தண்டித்துக் கொண்டேன். இது போன்ற கணக்குகளைக் கடவுள் பராமரிப்பதில்லை; நாமாகவே ஏதேனும் ஒரு விதத்தில் விளைவித்துக் கொள்வோம் என்பது தற்பொழுது தெரிகிறது.

கட்டுப்பாடுகளுக்கு உட்படுவதிலிருந்தும், அச்சத்திலிருந்தும், ஏதேனும் ஒரு சாதகமான விளைவுடன் நம்மை நெருக்கமாகப் பிணைத்துக் கொள்வதிலிருந்தும் மூடநம்பிக்கை பிறப்பதுண்டு. இந்தித் திரைப்பட நடிகர் ஒருவர் நகரின் எப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றாலும் ஒரு குறிப்பிட்ட தடத்தின் வழியாகத்தான் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அடைவார். ஏனைய தடங்கள் நெரிசலின்றியும், சாலை நன்கு அமைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அந்தக் குறிப்பிட்ட தடத்தில் தான் செல்வார்.

அதுபோன்ற மூடநம்பிக்கைகள் பலவீனப்படுத்தி போதிய ஆற்றல் கிடைக்காமல் செய்துவிடுகிறது. தில்லியைச் சேர்ந்த மகிழ்வுந்து விற்பனையாளர் அடிக்கடி கூறுவதுண்டு. விற்பனை இலக்கினை எட்டவேண்டும் என்பதற்காகக் குறைவான விலையை மாதக் கடைசி நாளன்று அறிவிப்பனராம். அன்று சனிக்கிழமையாக அமைந்துவிட்டால் எதிர்பார்த்த விற்பனை இருக்காதாம். ஏனெனில், சனிக்கிழமை மகிழ்வுந்து போன்ற இருப்பாலான வற்றைப் புதிதாகப் பெற ஏற்ற கிழமை இல்லையாம். ஆகவே, அவர்கள் எப்பொழுது வாங்குவர்? சில நாட்கள் கழித்து, அனுமதிக்கப்பட்ட விலைக்குறைவை அனுபவிக்காமல், கூடுதல் விலை கொடுத்துப் பெறுவர்.

மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுவது எப்படி? அது எங்கிருந்து தோன்றுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அவை பெரும்பாலும் பேராசை, அச்சம் இவற்றிலிருந்து தான் தோன்றுகின்றன. தோற்றுவாயைப் புரிந்து கொண்டாலே அறியாமையை உணர்ந்து நீங்களாகவே நகைத்துக் கொள்வீர்கள். பிறகு, மூடநம்பிக்கைகள் தாமாகவே விழுந்து விடுகின்றன.

அவை அறிவுக்குப் பொருந்தாதவை என்கிற உமது விழிப்புணர்வு அவற்றை வேருடன் பிடுங்கி எறிந்து விடும்.

தமிழ் ஓவியா said...

நிகழ்ந்தவை


ஜூலை 27 அன்று இலண்டனில் 30 ஆவது ஒலிம்பியாட் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. 204 நாடுகளிலிருந்து 10,500 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஜூலை 29 அன்று கர்நாடக மாநிலம் மங்களூரில் விடுதி ஒன்றில் பிறந்தநாள் விருந்தில் பங்கேற்ற 13 மாணவிகள் மற்றும் மாணவர்கள் மீது இந்துத்துவ அமைப்பான, இந்து ஜன ஜாக்ரான் வேதிகா அமைப்பினர் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதையொட்டி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜுலை 30அன்று காலை ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பிடித்ததில் எஸ் 11 கோச்சில் வந்த 32 பேர் உயிரிழந்தனர்.

ஜூலை 31 அன்று ஆக்ராவில் உள்ள வடக்கு மின் தொகுப்பு நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு 22 மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 67 கோடி மக்கள் பாதிக்கப் பட்டனர். மின்சார ரயில்கள் இயங்கவில்லை.

ஆகஸ்ட் 1 அன்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரானதைத் தொடர்ந்து அவர் வகித்த நிதி அமைச்சர் பொறுப்பை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், உள்துறை அமைச்சர் பொறுப்பை சுஷில் குமார் ஷிண்டேவும், மின்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பை வீரப்ப மொய்லியும் ஏற்றனர்.

ஆகஸ்ட் 2 அன்று காத்மாண்டுவிலிருந்து டெல்லி வந்த நித்யானந்தாவின் சீடர் நிதின் கவுசிக் என்பவரிடமிருந்து நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா உள்பட 32 பேரின் பாஸ்போர்ட்டுகளை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஆகஸ்ட் 3 அன்று மாணவர்கள் பெயர்களில் போலிப் பட்டியல் தயாரித்து அரசு உதவித்தொகை ரூ 87 இலட்சம் மோசடி செய்த நாமக்கல் மாவட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 77 பேரை அரசுக் கல்வித்துறை நீக்கியது.

ஆகஸ்ட் 5 அன்று அமெரிக்காவின் விஸ்கான்சின் அருகே ஓக் கிரீக் நகரில் உள்ள சீக்கிய குருத்வாராவில் முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் 6 சீக்கியர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.



ஆகஸ்ட் 7 அன்று நடைபெற்ற இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி 490 வாக்குகள் பெற்று வென்றார்.இவரை எதிர்த்து நின்ற பா.ஜ.க.வின் ஜஸ்வந்த் சிங் 238 வாக்குகள் பெற்றார்.

தமிழ் ஓவியா said...

நிகழ்வுகளும் புனைவும்


12 ஆம் வகுப்பு மாணவி உடைந்த கண்ணாடித் துண்டுகளின் மீது நடக்கும் இந்தக் காட்சி கோவை தனியார் பள்ளி ஒன்றில் எடுக்கப்பட்டது. (நன்றி:தி இந்து ஏப்ரல் 6,2012) விடுமுறைக் கால வகுப்பு ஒன்றில் மாணவிகளின் அச்சத்தைப் போக்கி ஊக்கம் அளிக்க உளவியல் பயிற்சியாக இந்தப் பயிற்சியை அளித்துள்ளனர்.``முதலில் பயந்தேன், ஆனால், அப்புறம் எதிர்பார்த்த அளவுக்கு பயமில்லாமல் போய்விட்டது என்று சொல்லியிருக்கிறார் இந்த மாணவி. இது மட்டுமல்ல, தகவல் தொழில் நுட்பத் துறை நிறுவனங்களில் நெருப்பின் மீது நடக்க வைத்து மன அச்சத்தைப் போக்கும் பயிற்சிகளை உளவியல் நிபுணர்கள் அளிப்பது தற்போது வழக்கத்திற்கு வந்துவிட்டது. எதார்த்த நிலை இவ்வாறு இருக்க கடந்த 11.7.2012 குமுதம் இதழில் முதல் மாணவி என்ற ஒரு சிறுகதை இளம்பெண்களைப் பிற்போக்குக் குழிக்குள் தள்ளும் வகையில் எழுதப்பட்டிருந்தது. மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு கோலம் போடத்தெரியவில்லை; இது பெரிய குறை என்பதுதான் அந்தக் கதையின் சாரம். பொய்க்கு ஒப்பனை செய்து புனைந்த இந்தக் கதைக்கு எதிராக உண்மை எழுந்து வந்தால் எப்படி இருக்கும்?

எதிர்க்கதை கோலம்

தமிழ் ஓவியா said...

பெண்ணைத் தாயாக மதிக்கும் நாடு?


புண்ணிய பூமியாம் பாரத பூமி - பெண்களைத் தாயாக மதிக்கும் நாடு; மண், மொழி, நதி, கடவுள் என்று அனைத்தை யும் பெண் வடிவத்தில் காணும் நாடு என்றெல்லாம் பலர் வாயளப் பதைப் பார்த்திருப்போம்.

பெண்களைத் தாயாகப் பார்க்கிறோம் என்பது பெருமைப்படுத்துவதற்கு என்பதைவிட பதுக்கி வைப் பதற்கே!

தாயென்றால் கட்டுப்பெட்டியாக, தந்தைக்கு(ஆணுக்கு) அடங்கி நடக்க வேண்டும். அதிலும் முந்தைய தலைமுறைத் தாய்மார் எல்லோரையும் உதாரண மாகக் காட்டலாம். ஒன்றல்ல.. இரண்டல்ல.. பெண்களின் பதிவிரதத் தன்மைக்கும், அதற்கான பலன்களுக்கும் பக்கம் பக்கமாக இருக்கின்றன புராணங்கள், கதைகள், இத்தியாதி, இத்தியாதி!



பெண்ணென்று பிறந்தாயா? பிறந்தது முதல் தந்தை, சகோதரன், கணவன், மகன், பேரன் என்று முழுக்க ஆண்களைச் சார்ந்தே வாழப் பழகிக்கொள். ஆசை என்று உனக்கு எதுவும் இருக்கக் கூடாது. ஆசைப்படவும், ஆண்டு அனுபவிக்கவும் ஆண் மட்டுமே உரிமை படைத்தவன். அவனுக்குப் பயன்படவே உனக்குத் தகுதியும் உரிமையும் உண்டு. இதை நீ கடைசி வரைக்கும் ஃபாலோ பண்ணியின்னா.. பீச்சுக்குப் பக்கத்தில கண்ணகி சிலை இருக்கு பாத்தியா.. அங்க என் பொண்டாட்டியும் பத்தினின்னு உனக்கொரு சிலை வைப்பேன்ங்கிற வடிவேலு வசனம் மாதிரிதான் பெண்களை வைத்திருக்கிறது மனுதர்ம சமூகம். பெண்கள் புகைபிடிப்பது போலவும், கல்லூரி மாணவிகள் மது அருந்துவது போலவும் படங்களை எடுத்துப் போட்டு, அந்தக் காலத்தில் பெண்கள் வீடுகூட்டுவது போன்ற படங் களையும் போட்டு, பாருங்கள் இப்போது காலம் கெட்டுப் போச்சு என்று கூப்பாடு போடும் பதிவுகள் இணையத்தில் ஏராளமாய்க் கிடைக்கின்றன. புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் யார் செய்தாலும் அது வரவேற்கத்தக்கதல்ல என்பது ஒருபுறம் இருக்கட்டும். போதைப் பழக்கத்துக்கும், வீடு கூட்டுவதற்கும் என்ன தொடர்பு? அவர்களுடைய நோக்கம் போதைப் பழக்கம் தவறு என்பதல்ல; அப்படிக் கருதுவார் களேயாயின் ஆண்களின் போதைப் பழக்கத்தையும் அல்லவா கண்டித்திருக்க வேண்டும்? பெண்கள் என்றால் வீட்டு வேலைக்காரர்களாக இருக்க வேண்டும் என்பது தான் அவர்கள் சொல்லவருவது! நேரடியாக பெண்கள் படிக்கிறார்கள் முன்னேறுகிறார்கள் என்று போட்டு வயிற்றெரிச்சல் பட முடியாது அல்லவா? அதனால் தான் பொம்மனாட்டிங்க எல்லாம் தண்ணியடிக்கிறார்கள், தம்மடிக் கிறார்கள், கலிகாலம் என்று புலம்புவது!

தமிழ் ஓவியா said...

இப்படிப்பட்ட புலம்பல்களால் ஒன்றும் பிரச்சினையில்லை என்று சும்மாவிடமுடியாது. காரணம், இதனுடைய நீட்சி தான் கடந்த ஜூலை மாதம் 9-ஆம் நாள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்வு! தன் ஆண், பெண் நண்பர்களுடன் மது அருந்த பாருக்கு வந்தாராம் ஒரு பெண். அவர்களில் சிலர் சென்றுவிட, தனித்துவிடப்பட்ட பெண்ணைத் தொட்டு, சீண்டி, கேலிசெய்து, வன்முறையில் ஈடுபட்டு, வதை செய்து, ஊடகங்கள் படம் பிடிக்கப் பிடிக்க, எதைப் பற்றியும் கவலை யில்லாமல் ஒரு பாலியல் வன்கொடுமையே அரங்கேறியிருக்கிறது. உள்ளூர் தொலைக் காட்சிகளில் செய்தி வெளியாகி, இணையதளங் களுக்கு வந்தபிறகு சுதாரித்துக் கொண்ட வட இந்திய ஊடகங்கள் இதுகுறித்து பல்வேறு செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டன. பெண் எப்படி மது அருந்த பாருக்குப் போகலாம்? அரைகுறை ஆடை அணிந்திருந்தால் அப்படித்தான்! பெண்ணே இப்படி இருந்தால் ஆண்கள் எப்படி இருப்பார்கள்? என்ற தொனி யில் தான் முதலில் இப்பிரச்சினை அணுகப்பட் டது. பின்னர் இது குறித்த விரிவான விவாதங்கள் எழுந்தன. மகளிர் அமைப்புகள், முற்போக்கு சக்திகள், மனித உரிமை அமைப்பினர் குரல் கொடுத்ததன் விளைவாக இதன்மீது அனை வருக்கும் கவனம் திரும்பியது. வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் வீடியோ காட்சிகளின் வழியாகக் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர். அந்தப் பெண் கொடுமை செய்யப்பட்டபோது தடுக்க முயலாமல் அதைப் படமெடுத்ததோடு மட்டுமல்லாமல், ஊக்கு விக்கவும் செய்தனர் என்று ஊடகத்தினர் மேலும் புகார் எழுந்து விவாதத்திற்குள்ளானது. விவாதிக்கப்படவேண்டியதும் கூட.

இந்த வன்கொடுமைக்கு மறைமுகமாக சப்பைக் கட்டுகட்டிய தினமணி போன்ற ஏடுகள், அந்தப் பெண் ஏன் மது அருந்த வந்தாள்? என்பது பற்றி ஏன் யாரும் கேட்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறது. மது அருந்துவது என்று முடிவெடுத்த பின் ஆண் என்ன? பெண் என்ன? ஏன் பெண்ணுக்கு மட்டும் அதீத ஒழுக்கக் கட்டுப்பாடுகள் வைக்கப் பட்டுள்ளன என்று கேட்க வைத்தியநாத அய்யருக்குக் கை வரவில்லை. அப்படிக் கேட்டு விட்டால், மதுவிருந்துகளில் புகுந்து ரகளை செய்யும் இந்துத்துவக் கும்பலையும் கண்டிக்க வேண்டுமல்லவா? அது ஏன் பெண்கள் குடித் தால் மட்டும் வீடு புகுந்து அடிப்பது? என்று கேள்விகேட்க வேண்டியிருக்கும் அல்லவா?

தமிழ் ஓவியா said...

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்குதல், சட்ட ரீதியாக அணுகுதல் என்று தொடர்ந்து உதவிகள் நடந்துவருகின்றன என்பது வேறு செய்தி. இதையொட்டி எழுகிற வாதம் என்னவென் றால், ஆண்கள் வழிதவறி நடக்க பெண்களே காரணம் என்பது தான்! பெண்கள் அணியும் உடை தான் ஆண்களின் மனம் பிறழக் காரண மாக இருக்கிறது என்று பல அறிவுஜீவிகள் கருத்துகளை உதிர்த்தார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மத்தியப் பிரதேச பாரதிய ஜனதா அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா. இந்திய கலாசாரத்தின்படி பெண்கள் உடை அணிய வேண்டும். ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணியக் கூடாது. நெறிதவறிய நடத்தை, அருவருப்பான ஆடைகளை அணிந்து கொள்ளுதல், நாகரீக மற்ற வாழ்க்கை முறை, பழக்கங்கள் ஆகியன சமுதாயத்தில் குழப்பங்களை அதிகரித்து விடும் என்று திருவாய் மலர்ந்தார் இந்தக் காவித் துண்டுக்காரர்.

தமிழ் ஓவியா said...

இந்தக் கூற்றில் நியாயம் இருக்குமோ என்ற மயக்கம் பலருக்கும் இருக்கக்கூடும். ஒரு வேளை பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவதால் தான் ஆண்கள் சலனப்பட்டுவிடுகிறார்களோ என்று! ஆனால் அதற்கும் பதில் ஜூலை மாதத்தின் நடுப் பகுதியிலேயே அசாமில் இருந்தே வந்தது. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டுத்த முனைந்து உதை வாங்கிவந்தார் ஓர் இந்திய இராணுவ வீரர்(?!). உ.பி.யில் யாரோ மூவரால் கடத்தப்பட்ட பெண்ணை மீட்ட காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர், அப்பெண்ணைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அவரும், மற்றொரு தனியார் காவலாளி ஒருவருமாக சேர்ந்து தொடர் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்தப் பெண் மீட்கப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போன்ற நிகழ்வுகள் காவல்துறையால் மறைக்கப்படுவதாகக் கூறி நீதிமன்றமே வழக்கைத் தானாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் இருளர் இனப் பெண்கள் காவல்துறையினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். இங்கெல்லாம் பெண்கள் அணிந்திருந்த உடை ஆபாசமான தல்ல; அரைகுறையானதல்ல; ஆண்களுக்கு உணர்ச்சியைத் தூண்டுவதல்ல. ஆனாலும் வன்கொடுமைகள் நடந்துள்ளனவே காரணம் என்ன? இன்னும் ஆயிரமாயிரம் எடுத்துக் காட்டுகளைக் காட்டலாமே! இந்தியாவில் தான் 54 நிமிடங்களுக்கொரு பாலியல் வல்லுறவு நடக்கிறதே! 26 நிமிடங்களுக்கொரு பாலியல் வன்சீண்டல், துன்புறுத்தல் நடக்கிறது! பெண் களுக்கெதிரான குற்றம் 7 நிமிடங்களுக்கொரு முறை நடக்கிறது. இவையெல்லாம் பதிவு செய்யப்படும் குற்றங்கள் மட்டுமே என்பதுதான் கூடுதல் குறிப்பு!

ஆக, இவ்வாறான பாலியல் கொடுமைகளுக் கும், பெண்களின் உடைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நிறுவமுடிகிறதா? இது ஒரு பக்கம். எப்படி உடுத்த வேண்டும் என்று எனக்குச் சொல்லாதே; அவனை பாலியல் வன்கொடுமை செய்யாமல் இருக்கச் சொல் என்ற குரல் தானே நியாயமானது. மேற்கு வங்காளத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கோபர்டங்கா என்ற ஒரு கிராமமே தொடர் பாலியல் வன்புணர்வு களுக்கு இலக்காகி இருந்தது என்பதும், அதனை எதிர்த்து மக்களைத் திரட்டி, உணர்வூட்டி, அத்தகைய குழு பாலியல் வல்லுறவுகளைத் தடுத்த பருண் பிஸ்வாஸ் என்ற இளைஞர் அண்மையில் வன்முறையாளர்களால் சுடப் பட்டு இறந்தார் என்ற செய்தியையும் கேட்கிறபோது, இது சுதந்திர நாடா? இல்லை சுடுகாடா? என்ற கேள்வி எழுவதைத் தடுக்கமுடியவில்லையே! பாலியல் வல்லுறவுக்கு மறுத்த சோனாலி முகர்ஜி என்ற பெண் ஆசிட் ஊற்றி கொடுமைப்படுத்தப்பட்ட செய்திகள் இந்நாட்டில் தான்!

இந்தூர் நகரில் தன் மனைவியின் மறைவிடங் களைப் (உறுப்புகளை) பூட்டி, சாவியை வேலைக்குப் போகும் போது எடுத்துக் கொண்டு போன ஒரு மெக்கானிக் பற்றிய செய்தி என்ன சொல்கிறது? தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இவ்வாறு செய்து தன் மனைவி தன்னிடம் ஒழுக்கமாக(!) இருப்பதை உறுதி செய்து கொண்ட கணவனைக் குறித்துக் கேள்விப்பட் டீர்களா? கணவனின் தொடர் தொல்லையால் மனமுடைந்த அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்ற பிறகுதான் இந்த செய்தி வெளியில் வந்துள்ளது. இது இன்று நேற்றல்ல... ஒன்றிரண்டல்ல... காலம்காலமாக தொடர்ந்து நடந்துவருகிறதாம். நாம் வாழ்வது காட்டு மிராண்டிக் காலத்திலா என்ற சந்தேகம் எழுகிறதா இல்லையா?

இந்த லட்சணத்தில் தான் சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டதாகக் கொண்டாடு கிறார்கள் இந்தியத் தாய்த் திருநாட்டுமக்கள்! பெண்களைப் பதுமைகளாகவும், அடிமை களாகவும், பிள்ளைப் பெறும் இயந்திரங் களாகவும், பாலியல் பொம்மைகளாகவும் பார்க்கும் இந்த்ச் சமூகத்தில் பெரியாரின் கருத்துகளை, பெண்ணுரிமைச் சிந்தனையை இன்னும் வேகமாக எடுத்துச் செல்லவேண்டிய தன் தேவையை இந்த நிகழ்ச்சிகள் இன்னும் எடுத்துக் காட்டிக் கொண்டே இருக்கின்றன. நாம் முன்பே சொன்னதைப் போல, பெண்ணைத் தாயாக மதிக்கிறோம்... நாடாக மதிக்கிறோம் போன்ற சால்ஜாப்புகளை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு, பெண்ணைப் பெண்ணாகவும், சக மனித உயிராகவும் பார்க்கும் மனப்பான்மையை அடுத்த தலைமுறையிடம் வளர்க்காவிட்டால் 21-ஆம் நூற்றாண்டென்ன இன்னும் 20 நூற்றாண்டுகள் வந்தாலும் பாலியல் சமத்துவம் மட்டுமல்ல.. அடிப்படை மனிதநேயம் கூட மலராது!

-சமா.இளவரசன்-

தமிழ் ஓவியா said...

மருதிருவர் மண்ணிலே...


சிவகங்கை இராமச்சந்திரன் 1884இல் பிறந்து 1933இல் மறைந்த திராவிடர் இயக்க சுயமரியாதைப் பகுத்தறிவாளர். 1929இல் செங்கற்பட்டு மாநில சுயமரியாதை இயக்க மாநாட்டில் பங்கு பெற்று, பெரியார் பாதையில் தம் ஜாதி ஒட்டுவை நீக்கி, சிவகங்கை இராமச்சந்திரன் சேர்வை ஆகிய நான், இன்றுமுதல் சிவகங்கை இராமச்சந்திரன் என்றே அழைக்கப்படுவேன் என்று சூளுரைத்து ஜாதியைத் துறந்தவர்.

ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட பெருந்தகையாளர். இரவுநேரப் பள்ளிகளைத் தொடங்கி, அந்த உழைக்கும் மக்களுக்குக் கல்வியறிவு புகட்டியவர். தம் சொந்த வருவாயில் பெரும்பகுதியை இந்தப் பணிக்காகச் செலவிட்ட வள்ளல்.

சிவகங்கை மன்னரின் கொடையால் துவங்கி நடத்தப்பட்ட விடுதிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் எனப் போராடி வெற்றி கண்டவர். சத்திரம் நிதி எனும் பெயரால் உதவி செய்யப்பட்டுத் தொடங்கப்பட்ட முதல் விடுதியே சிவகங்கையில் அமைந்ததுதான்.

பார்ப்பனச் சிறுவர்களுக்கு மட்டுமே என நடத்தப்பட்ட அந்த விடுதியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சிறுவர்களும் சேர்ந்து உணவளிக்கப்பட வேண்டும் என வாதாடி வென்றவர்.

தேவகோட்டைக்குப் பக்கத்தில் இரவுசேரிநாடு பகுதியில் ஆதிக்க ஜாதி அம்பலக்காரர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கடும் மோதல் அக்காலத்தில் உருவாகிவிட்டது. ஆதிதிராவிட ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேல் ஆடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த கிளர்ச்சி மோதலாக வளர்ந்துவிட்ட நிலையில், சிவகங்ககை இராமச்சந்திரன் உயிரைத் துச்சமெனக் கருதி, கலவரப்பகுதிக்குச் சென்று இருதரப்பினரிடமும் பேசி, சுமூக நிலையை உருவாக்கினார். சட்டப் பிரிவு 144இன் கீழ் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும், எந்த மோதலும் நடக்காமல் தீர்த்து வைத்த பெருமைக்கு உரியவர்.

(திராவிடர் இயக்கத் தொடக்க நாள் தலைவர்களில் ஒருவரான சிவகங்கை இராமச்சந்திரனாரின் பெருமைபற்றிய இச்செய்தி இந்திய கெசட்டில் -தமிழ்நாடு -இராமநாதபுரம் மாவட்ட அரசிதழில் பக்கம் 810இல் பதிவாகி இருப்பதாகும்.)

வேலுநாச்சியார் வழியிலே...

காந்தியார் முதல் காங்கிரசுக்காரர்கள் யாருமே பொதுத்தொண்டில் தம் துணைவியரை ஈடுபடுத்தியது கிடையாது. மனைவி என்ற நிலையில் தமக்குத் தொண்டு செய்யவேண்டும் எனக் கருதும் ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்களாக அவர்கள் இருந்தனர்.

ஆனால், தந்தை பெரியார் அவர்களும் அவரைப் பின்பற்றிய அக்கால திராவிடர் இயக்கத் தலைவர்களும் தம் துணைவியரையும் பொதுத் தொண்டில் ஈடுபடத் தூண்டியவர்கள்; செயல்படுத்திக் காட்டியவர்கள். 1920களில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் தந்தை பெரியாரின் இணையர் நாகம்மையாரும் தங்கை கண்ணம்மாளும் கலந்து கொண்டது இந்திய வரலாற்றில் காணக்கிடைக்காத அரிய பதிவு ஆகும்.

அதனையொட்டி, பெரியாரின் தொடக்ககாலக் கூட்டு உழைப்பாளி சிவகங்கை இராமச்சந்திரனும் தம் துணைவியாரைப் பொதுவாழ்வில் ஈடுபடுத்திய சிறப்புக்குரியவர். அவரின் துணைவியார் கிருஷ்ணம்மாள் படிப்பறிவு பெற்றவர்.

இராமநாதபுரம் மாவட்டக் கழக உறுப்பினர். சிவகங்கை தாலுக்கா போர்டு உறுப்பினராகவும் 1932 முதலே பணியாற்றியவர்.அப்பகுதியில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அவரின் தலைமை உரை மிகவும் உணர்ச்சியுடன் நிகழ்த்தப்பட்ட ஒன்றாகும். ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகத் தம் துணைவர் இராமச்சந்திரனுடன் இணைந்து உழைத்த பெருமைக்குரியவர்.

சிவகங்கையில் பெண்களுக்கென தனி மருத்துவமனையையும் குழந்தைகளுக்கான மருத்துவமும் இணைந்து செயல்படும் மருத்துவமனையையும் அமைத்தது இவரது தொண்டில் சிறந்தது.

இராமநாதபுரம் மாவட்ட கல்விக் குழுவின் உறுப்பினராகவும் சிவகங்கை நகரின் மதிப்புமிகு மாஜிஸ்திரேட் ஆகவும் பணிபுரிந்தவர்.

(முந்தைய இராமநாதபுரம் மாவட்ட அரசிதழில் பக்கம் 820. இச்செய்தியை எடுத்து அனுப்பி உதவியவர் மண்டல தி.க. தலைவர் பொறியாளர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், சிவகங்கை)

- செங்கோ