Search This Blog

21.8.12

மெகந்தி, குங்குமம், திருநீறு மகாத்மியங்கள்!



பரபரப்பாக ஒரு செய்தி! சில ஏடுகளில் பக்கங்களின் தலைப்பிலும் வெளியாகியுள்ளது. இயற்கையான மருதாணிபோல் இப்போது செயற்கையான மருதாணி விற்பனைக்கு வந்துள்ளது.

எதிலும் செயற்கை மோகம்!  அழகான டப்பாக்களில் அடைத்து, பளபளப்பான வடிவமைப்புகளில் வெளிவரும் போது ஏமாந்த சோணகிரியான மக்கள் அந்த விளம்பர வலையில் விழுந்து, பணத்தைப் பறி கொடுக்கும் பரிதாப நிலை இன்று.

தொலைக்காட்சி தரும் தொல்லைகளுள், இதுவும் ஒன்று. மருதாணிக்குப் பெயர் மெகந்தியாம்! இப்படிப் புதுப்புது பெயர்களும் சூட்டப்படுகின்றன - எல்லாம் கலாச்சார ஊடுருவல்தான் மருதாணி என்றால் அதுகேவல மாகப்படுகிறது போலும்!

ரம்ஜான் பண்டிகையையொட்டி கடைகளில் விற்கும் மெகந்தியை வாங்கிக் கைகளில் விதவிதமாகப் போட்டுக் கொள்கின்றனர்.

இந்த ஆண்டு என்ன ஆயிற்றுத் தெரியுமா?

இந்த மெகந்தியை எந்தெந்த இடங்களில் எல்லாம் வரைந்து கொண்டார்களோ அந்த இடங்களில் எல்லாம் அரிப்பு அதிகமாக எடுத்து பெருந்தொல்லைக்கு ஆளாகியுள்ளனராம். அதில் விஷமும் கலந்து இருப்பதாகவும், தலை சுற்றல், வாந்தி ஏற்பட்டதாகவும் நாடெங்கும் வதந்திகள்!

அரசு மருத்துவமனைகளுக்கு அலை அலையாகப் படை எடுத்துள்ளனர். மெகந்தியை விற்பனை செய்த கடைகளும் சில இடங்களில் தாக்கப்பட்டுள்ளன.

இப்படித்தான் குங்குமம், திருநீறுகளை இந்துக்கள் நெற்றியில் பயபக்தியோடு அணிந்து கொள்வதும்!

இதுபற்றிய ஒரு தகவல் பார்ப்பன இதழான ஜூனியர்விகடனில் வெளி வந்ததுண்டு.

குங்குமம், விபூதிபற்றி

பிரபல தோல் நிபுணர் டாக்டர் தம்பையா கூறுகிறார்!

நாற்பது வருடத்துக்கு மேல் நான் ப்ராக்டீஸ் பண்றேன். பதி னைந்து வருடங்களுக்கு முன்பிருந் துதான் குங்குமம், விபூதி அலர்ஜி யாகிற பேஷண்டுகள் வர்றது அதிகரிக்க ஆரம்பிச்சது. நவீன உலகில் குங்குமத்தில் என்னென்ன கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன! அவை எப்படி எப்படித் தோலைப் பாதிக்கின்றன என்பது பற்றிப் பெரிய ஆராய்ச்சியே பண்ணி தீஸிஸ்கூட சப்மிட் செஞ்சிருக்காங்க.

கலப்பட விபூதி பத்தியும் இது மாதிரி யாராச்சும் ஸ்டடி பண்ணிக் கண்டுபிடிக்கணும். குங்குமம், விபூதி போன்றவற்றை ஒருசிலக் குடும்பங்கள் பாரம்பரிய மாகத் தயாரித்தன. அதாவது, குடிசைத் தொழில் மாதிரி... இப்ப அது மாறிப் போயிடுச்சு..

இந்த மாதிரி குங்குமம், விபூதி போன்றவற்றால் தோலில் பிரச்சினை ஏற்பட்டு என்னை அணு குபவர்களிடம், முதலில் குங்குமம், விபூதி இடுவதைத் தற்காலிகமாக நிறுத்தச் சொல்லிவிட்டு, பிறகு தான் சிகிச்சையைத் தொடங்கு கிறேன். என்றார்.


(நன்றி: ஜூனியர் விகடன் 26.10.1997).

சென்னை திருவல்லிக்கேணி கோயிலில் பிரகாரத்தில் நவீன தரைக் கற்கள் பதிக்கப்படுவது ஆகமத்துக்கு விரோதம் சம்பி ரதாயத்துக்கு விரோதம் என்று கொடி பிடிக்கும் பக்த சிரோன் மணிகள் திருநீறையும், குங்குமத் தையும் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படுகிறதா என்பது பற்றிக் கவலைப்படுவதில்லை.

குங்குமம்பற்றி புராணம் சொல்லுவதோ மகா ஆபாசம்! சிவனின் இணைப்பான கங்கையின் மாதவிடாய்தான் குங்குமமாம்! வெட்கக்கேடு!

பக்தியே ஒரு வியாபாரம்! அப்படியிருக்க அதன் கிளைக் கடைகள் சமாச்சாரமான குங்குமம், திருநீறுகளைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
                  -------------------------விடுதலை” 21-8-2012


5 comments:

தமிழ் ஓவியா said...

கூடங்குளம் மின் உற்பத்தி அனைத்தும் தமிழ்நாட்டுக்கே என்பது நியாயமானதாகும் முதல்வரும், கலைஞரும் குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழ் நாட்டுக்கே தேவை என்பது நியாயமான தாகும். முதல் அமைச்சர் இந்த வகையில் விடுத்துள்ள வேண்டுகோளும், அதனை ஏற்கும் வகையில் முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களும் ஒரே குரலில் வேண்டுகோள் விடுத்திருப்பதும் வரவேற்கத் தக்கதாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கூடங்குளம் அணுமின் உலையில் உற்பத்தியாகும் மின்சாரம் (சுமார் 1000 மெகாவாட் ஆக இருக்கலாம்) முழுவதையும் தமிழ்நாட்டின் மின்தேவைக்கே மத்திய அரசு அளிக்க முன் வரவேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோள் மிக நியாயமான ஒன்றாகும்.

இதனை பல மாதங்களுக்கு முன்பே நாம் (திராவிடர் கழகம்) வரவேற்று எழுதியிருந்தோம்.

இப்போது முதலமைச்சர் அவர்கள் நமது பிரதமருக்கு மீண்டும் நினைவூட்டி மற்றொரு கடித வேண்டுகோளும் அனுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டை மின் தட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் காப்பாற்ற, இந்த உதவியை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று, கேட்பது - உரிமையின் அடிப்படையில் மட்டுமல்ல; நியாயத்தின் அடிப்படையிலும் தேவையான ஒன்றாகும்.

தி.மு.க. தலைவர் கலைஞர் வரவேற்பு

இதனை ஆதரித்து அத்துணைப் பேரும் அரசியல் மாச்சரியங்கள், கருத்து வேறுபாடுகளையும் கடந்து, தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு - பொதுப் பிரச்சினையாக இதனை எண்ணி - ஒரே குரலாகக் கொடுக்க வேண்டும்.

தி.மு.க.வின் தலைவர் கலைஞர் அவர்கள் இதனை ஏற்றுக் குரல் கொடுத்துள்ளதும் வரவேற்கத்தக்கது.

பொதுப் பிரச்சினைகளில் ஒரே குரல்!

தமிழ்நாட்டின் நலனைப் பொறுத்த பொதுப் பிரச்சினைகள் - காவிரி நதிநீர்ப் பங்கீடு, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை போன்றவற்றில் - தமிழ்நாட்டிலுள்ள அத்துணை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஒரே அணியில் திரளத் தயங்கினாலும், ஒரே குரலை - சுருதி பேதமின்றி, உரிமை முழக்கமாக எழுப்பக் கடமைப்பட்டுள்ளார்கள்.

இத்தகைய பொது நோக்கு பெருகட்டும்! உரிமைகளை வற்புறுத்தி மக்களுக்கு, வாழ்வளித்திட அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் உறுதியேற்போமாக!

சென்னை

21.8.2012



தோழமையுடன்

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்



தமிழ் ஓவியா said...

திருச்சி தீர்மானம்:சமூகநீதி

திராவிடர் கழகப் பொதுக் குழுவாக இருந்தாலும், மாநாடாக இருந்தாலும் கட்டாயம் சமூகநீதியைக் குறித்த தீர்மானம் இடம் பெற்றிருக்கும்.

இத்தகைய தீர்மானங்கள் பிற்காலத்தில் முக்கியத்துவம் பெற்று, சட்ட வடிவமாகப் பரிணாமம் பெற்றுள்ளன என்பதை மறுக்க முடியாது.

எடுத்துக்காட்டாக 50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீடு செல்லக் கூடாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பில் கூறப்பட்டது. அதனை முறியடிக்க மாநில அரசே இந்திய அரசமைப்புச் சட்டம் 31-சி பிரிவின்கீழ் சட்டம் இயற்றி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டால் நீதிமன்றம் குறுக்கிட முடியாது என்ற கருத்துருவை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் முன் வைத்தார்.

இதுகுறித்து 1983ஆம் ஆண்டிலேயே (அக்டோபர் 9) புதுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்திலேயே இப்படி ஓர் ஏற்பாட்டை சட்ட ரீதியாகச் செய்யலாம் என்று தீர்மான வடிவில் கூறப்பட்டது. அந்த அடிப்படையில் தான் தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு சட்டரீதியாக பாதுகாக்கவும் பட்டது.

இந்தியாவிலேயே எந்த ஒரு கட்சியும் அரசுக்கே சட்ட வடிவை உருவாக்கிக் கொடுத்து நிறைவேற்றச் செய்த சாதனைக்குரியது திராவிடர் கழகம் மட்டுமே!

சமூக நீதித் திசையில் அடுத்த கட்டம் தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு என்று திராவிடர் கழகப் பொதுக்குழுவில் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்துள்ளார். இது காலத்தின் கட்டாயம் ஆகும்.

பொதுத்துறைகள் அருகி, தனியார்த்துறைகளும் பன்னாட்டு நிறுவனங்களும் படையெடுத்திருக்கும் கால கட்டத்தில், இந்தக் கோரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தனியார்த்துறை நிறுவனங்களில் தலைமைப் பீடத்தில் நிருவாகிகளாக, இயக்குநர்களாக, பொது மேலாளர்களாக இருப்பவர்கள் பார்ப்பனர்களே! அரசுத் துறைகளில் பணியாற்றிய பார்ப்பன அதி காரிகள் விருப்ப ஓய்வு பெற்று, தனியார்த்துறைகளை ஆக்ரமித்துக் கொண்டு இருக்கின்றனர். அதன் காரணமாக தனியார்த்துறைகளில் பார்ப்பனர்கள் அதிவேகமாக வேலை வாய்ப்புப் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மண்டல் குழு அறிக்கைகூட தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தினைக் கூறியுள்ளது. தனியார்த் துறை என்று வருகின்றபோது, தொழில் தொடங்க நிலம், நீர், மின்சாரம் இவையெல்லாம் அரசிடமிருந்துதானே பெற்றுக் கொள்கின்றன.

இன்னும் சொல்லப் போனால் மூலதன நிதிகூட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்துதான் கடனாகவும் பெறப்படுகிறது. அரசு உதவிகள் பரந்து இருக்கும்போது அரசின் சட்ட திட்டங்கள் மட்டும் புறக்கணிக்கப்படலாமா என்பது நியாயமான கேள்வியாகும்.

இந்தியாவில் உள்ள முதலாளிகள் இந்தியாவில் இடஒதுக்கீடு அளிக்க மறுக்கிறார்கள்; அதே நேரத்தில் அதே இந்திய முதலாளிகள் வெளி நாடுகளில் தொழில்களைத் தொடங்கும்போது அங்கெல்லாம் எப்படி நடந்து கொள்கின்றனர்?
தென்னாப்பிரிக்காவில் உள்ள தனது நிறுவனங்களில் டாட்டா குழுமம் கறுப்பர்களுக்கு பங்குகளைக் கொடுக்கிறது.

தலைமை அலுவலராக கறுப்பர்கள் நியமிக்கப் படுகின்றனர். இதுபற்றிய விவரங்களை பிசினஸ் ஸ்டாண்டர்டு ஏடு (27.5.2005) வெளியிட்டதே!

இந்திய நாட்டு முதலாளிகளின் இந்த இரட்டை வேடம் ஏன்? வெளி நாடுகளில் தொழில்களை ஆரம்பித்தால் இடஒதுக்கீடு; உள் நாட்டுக்குள் ஆரம்பித்தால் கிடையாதா? ஏன் இந்த இரட்டை வேடம்? இவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் கொண்டு வந்து வழிப்புணர்வை ஏற்படுத்துவோம்! அரசையும் வலியுறுத்தித் தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு என்பதைச் சாதித்துக் காட்டுவோம் - இது காலத்தின் கட்டாயமாகும். ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேர்வீர்!

21-8-2012

தமிழ் ஓவியா said...

திராவிடத்தால் வீழ்ந்தோமா? தாய்ப்பாலால் நலிந்தோமா? ஆவடி உண்மை வாசகர் வட்டத்தில் பேராசிரியர் மறைமலை இலக்குவனார்



ஆவடி உண்மை வாசகர் வட்டத்தில் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் சிறப்புரையாற்றினார்.

ஆவடி, ஆக.21-சென்னை ஆவடியில் இயங்கி வரும் உண்மை வாசகர் வட் டம் நடத்திய கூட்டத் தில் பேராசிரியர் மறை மலை இலக்குவனார் திராவிடத்தால் வீழ்ந் தோமா? வளர்ந்தோமா? என்னும் தலைப்பில் உணர்வுமிக்க உரை யாற்றினார்.

சி.நடேசனார் ஏற்றிய பேரொளி சர்.பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் ஆகியோரால் கட்டிக் காக்கப்பட்ட பேரியக்கம் திராவிடர் இயக்கம். இந்தியா முழு மைக்குமான பெரு நிலப்பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்ட,பிற் படுத்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட இனத்தவருக்குக் கல்வியறிவும், அரசுப் பணியில் வேலைவாய்ப் பும் பெற்றுத்தந்த பெரும் பணியைத் தந்தை பெரியார் அவர்களின் தளரா உழைப்பாலே இந்த இயக்கம் சாதித் தது.

சென்ற நூற்றாண் டுத் தமிழகத்தைப் பற் றிய புள்ளிவிவரங்களைக் கண்டாலே இந்த உண்மை புலனாகும்.

கணினியில் கைபதித் துத் தொழில்நுட்பத் தில் சாதனைகளை ஏற் படுத்தும் இன்றைய தலைமுறை, திராவிடர் இயக்கம் தோன்றியிரா விட்டால், கழனியில் கால்புதைத்துக் களை பறித்துக் கொண்டிருக் கும்.

வகுப்புவாரி உரிமை யும், கல்விகற்கும் வாய்ப் பும், அரசுப்பணிகளில் முன்னுரிமையும் நமக்கு,சூத்திரர் என இன இழிவு செய்யப் பட்ட நமக்குப் பெற்றுத் தந்து தன்மானமும், சுய மரியாதை உணர்வும் மேலோங்கச் செய்தது திராவிடர் இயக்கம் என் பதைமறந்துவிடக் கூடாது எனப் பேசிய மறைமலை இலக்கு வனார் புள்ளிவிவரங் கள் பலவற்றைச் சான்று காட்டிப் பாதாளத்தில் வீழ்ந்திருந்த தமிழி னத்தைக் குன்றில் ஏற் றிய திராவிடர் இயக்க முன்னோடிகளின் அரும்பணியைப் பாராட்டினார்.

குழந்தைப்பருவத்தில் ஆரோக்கியமான தாயின் சத்தான பாலைக் குடித்துத் திடகாத்திர மாக வளர்ந்த இளை ஞன்தாய்ப்பாலால் நலிந்தேன் எனக் கூறி னால் அது எவ்வளவு பொய்யோ அதைப் போன்றதே திராவிடர் இயக்கத்தால் வீழ்ந் தோம் எனக் கூறுவது எனப் பேசிய மறைமலை இலக்குவனார் இன்று தமிழியக்கம் என்னும் பேரில் திராவிடர் இயக் கத்தைப் பழித்துரைப் போரின் தகுதியைக் கேள்விக்குறியாக்கினார்.

தந்தை பெரியா ருக்குப் பக்கத்துணை யாக இருந்த மறைமலை அடிகளை விடவா இவர் களுக்குத் தமிழ்ப்புல மையும் தமிழுணர்வும் அதிகமாகி விட்டது? சைவச் சான்றோர் மறை மலையடிகள் பெரியா ரின் பெரும்பணியும் திராவிடர் இயக்கத்தின் உறுதுணையுமே தமிழரை உய்விக்கும் எனப் போற்றினாரே? திரு.வி.க. திராவிடர் இயக்கத்தின் வளர்ச்சி யில் பெரிதும் ஆர்வம் காட்டினாரே!

பேராசி ரியர் சி.இலக்குவனாரும், இராசமாணிக்க னாரும், பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையாரும், தேவநேயப்பாவாணரும் திராவிடர் இயக்கத் தோடு தங்களை ஒருங் கிணைத்துக் கொண்டு உழைத்தனரே! அவர் களையெல்லாம் விடவா இந்த இளைஞர் களுக் குத் தமிழில் ஆர்வமும் பற்றும் மேலோங்கி விட்டது? எனப் பேராசி ரியர் மறைமலை இலக் குவனார் திராவிட இயக் கத்தோடு ஒன்றிணைந்து உழைத்த தமிழறிஞர் களைச் சான்றுகாட்டிப் பேசினார்.

முன்னெப்போதையும் விட இப்போது திராவி டர் இன உணர்வின் தேவை மிகுதியாகி விட் டது. தமிழின் செம் மொழித் தகுதிப்பேற்றை நடுவண் அரசு அறிவித்து ஆணை பிறப்பித்த பின் னர் உலகெங்கும் வாழும் ஆரிய உணர்வாளர்கள் தமிழைப் பழித்தும் ஆரியத்தை உயர்த்தியும் பல நூல்கள் எழுதி வெளியிட்டு வருகின் றனர். செல்டன் பொல் லோக்கு, கெர்மன் டீக் கன் முதலிய வெள் ளையர்கள் எழுதிய நூல் களும், அமெரிக்கா வாழ் இராசீவ் மல்கோத்ரா வும் அண்மையில் நாக சாமியும் எழுதிய நூல் களும் ஆரியத்தைப் போற்றியும் தமிழைத் தாழ்த்தியும் அமைந் துள்ளன.

இந்தியமொழிகளில் சமற்கிருதமே செம் மொழி என்றும் அதன் துணையினாலேயே தமிழ் வளம் பெற்றது என்றும் இவர்கள் பச் சைப்பொய்யைக் கூசா மல் கூறியுள்ளனர்.

ஆரியம் அகில உலகக் கூட்டணி அமைத்துச் செயற்படும் வேளையில் திராவிடத்தைப் பழித்தல் கொலைவெறிகொண்ட பகைவனுக்குத் தாயைப் பலியாகக் கொடுத்த லுக்குச் சமம் என அவர் உணர்வு பொங்கக் கூறியது அவை யின ரின் கவனத்தை ஈர்த்தது. விடுதலைச்சிறுத் தைகள் அமைப்பைச் சார்ந்த திராவிடமணி, மறைமலை அடிகளின் பேரன் மறைதாயுமா னவர் உள்ளிட்ட பலர் திரளாகக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். உண்மை வாசகர் வட்டத்தலைவர் வெ.கார்வேந்தன் தலைமை தாங்கினார். க.பாலமுரளி வரவேற் புரைவழங்கினார். எ.கண்ணன் நன்றியுரை யாற்றினார்.

தமிழ் ஓவியா said...

தா.பா.



மகன்: டெசோ மாநாட் டின் எதிரொலிதான் இன்றைக்குக் காலை யில்கூட மீனவர்கள் தாக்கப்படுகின்றனர் என்று சி.பி.அய். செய லாளர் தோழர் தா.பாண்டியன் கூறியுள்ளாரே, அப்பா!

அப்பா: இப்படிப் பேசு பவர்கள் இருக்கும் வரை தமிழக மீனவர் கள் மட்டுமல்ல, தமி ழர்களும் தாக்கப்பட்டுக் கொண்டேதான் இருப் பார்கள், மகனே! 22-8-2012

தமிழ் ஓவியா said...

உருப்படுமா நாடு?



அரசுப் பணத்தை (ரூ.17.5 கோடி) இப்படி அறிவியலுக்கு முரணான வகையில் செலவழிக்கலாமா? சட்டப்படி இது சரியானதுதானா?

ஆடிட்டர் ஜெனரல்களின் கண்களுக்கு இவையெல்லாம் படவே படாதா? இப்படிப்பட்ட நாட்டில் முதன்மையான தேவை பகுத்தறிவு விழிப்புணர்வுதானே? தந்தை பெரியாரின் இயக்கம் இந்தக் காலகட்டத்தில் உலகுக்கே தேவை என்பது விளங்கவில்லையா?

நாற்பத்திரெண்டு வருடங்களில் இல்லாத வறட்சி, இந்த வருஷம் கருநாடக மாநிலத்துக்கு. மழையே இல்லை! அதனால் கருநாடகம், 35,000 கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்தப் போகிறது.

செலவு? 17.5 கோடி! இந்த யாகத்துக்காக பெங்களூருவுக்கு வரவழைக்கப்பட்ட இளம் புரோகிதர்கள் முன்பு தரையில் விழுந்து வணங்குபவர் வேறு யாரும் இல்லை; கருநாடக சுற்றுலா அமைச்சர் ஆனந்த் சிங்!

(26.8.2012, கல்கி)22-8-2012