Search This Blog

24.8.12

கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் - கி.வீரமணி

கச்சத்தீவைத் தூக்கிக் கொடுத்தது சட்ட விரோதமே! சென்னை சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர்


கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு அளித்த விதம் சட்டத்திற்கு விரோ தமானது. நாடாளுமன்றத்தில் ஒப்புதல் இல்லாமல் வழங்கப்பட்டது சட்டப்படி குற்றம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை - பெரியார் திடலில் 21.8.2012 அன்று அவர் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

டெசோ மாநாட்டிலே கூட ஒரு செய்தியை நாம் எடுத்துச் சொன்னோம். திடீரென்று இவங் களுக்கென்ன அக்கறை வந்துவிட்டது; திடீரென்று இவங்க கவலைப்படுகிறார்கள், அதுவும் அரசியல் ரீதியாக - இது அவரின் புனர்வாழ்வுக்காக, இவரை உயர்த்துவதற்கு என்றெல்லாம் பொறுப்பற்ற வர்களும், பார்ப்பன ஊடகங்களும் இதைப் பேசுகி றார்கள் என்று சொன்னால், அது அப்படிப்பட்ட தல்ல, இயல்பாகவே நாங்கள் அதனைப்பற்றிக் கவலைப்பட்டவர்கள் என்பதற்கு ஆதாரமாகத் தான் உங்களுக்கெல்லாம் நினைவிலே இருக்கும், இலங்கைத் தமிழர் இன்னலும், நீதிக்கட்சியும் என்று போட்டு தென்னிந்திய நலவுரிமைச் சங்கத் தின் நிருவாகக் கமிட்டிக் கூட்டம் 10.8.1939 ஆம் ஆண்டு ஈரோட்டில் பெரியார் மாளிகையில் நடை பெற்ற ஒரு நிகழ்ச்சியை, கடந்த 12.8.2012 அன்று நடைபெற்ற டெசோ மாநாட்டில் நான்  உரை யாற்றிய போது கூட சுட்டிக்காட்டினேன்.

1939ஆம் ஆண்டிலேயே...

இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத்தியதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதையும் கமிட்டி கண்டிப்பதாகவும், அதற்கு ஈ.வெ.ராமசாமி, ராவ்பகதூர் சாமியப்ப முதலியார், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், டபிள்யூ,பி.ஏ. சவுந்தர பாண்டியன் ஆகியோரை இலங்கைக்குச் சென்று, தமிழர்களின் நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிடவேண்டுமாய் கேட்டுக் கொள்வதாகவும் முதல் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

ஈரோட்டிலிருந்து விடுதலை வெளிவந்தபோது, விடுதலையின் அய்ந்தாம் பக்கத்தில் வந்த செய்தி இது என்று சுட்டிக்காட்டினேன். பல நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள், இந்த வரலாற்று உண்மை எங்களுக்குத் தெரியாது; இது அனை வரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு செய்தி என்று சொன்னார்கள்.

இப்பொழுதெல்லாம் விமர்சனம் செய்பவர்கள் யாரென்று கேட்டால், நேற்று பெய்த மழையில் இன்று மாலையிலே முளைத்த காளான்கள், அவர்களுக்கு வரலாறே தெரியாது; ஆனால், பேசுவதைப் பார்த்தால், வசனங்கள்; வசனம் பேசி பேசிய விசனத்தில் தள்ளிவிட்ட இனம் இது.

அரிய நூல் வெளிவந்துள்ளது

அற்புதமான மற்றொரு ஆதாரம் நமக்கு இப் பொழுது கிடைத்திருக்கிறது. அது என்னவென் றால், இவர் திராவிடர் இயக்கத்தைச் சார்ந்தவரல்ல; சிட்னி பல்கலைக் கழகத்திலே இருக்கக் கூடிய ஈழத் தமிழர்; ரொம்ப ஆழமாக ஆய்வு செய்து,  700 பக்கங்களுக்கு ஒரு நூலை எழுதியிருப்பவர்; இது வரை கிடைக்காத ஒரு தகவலைச் சொல்லியி ருக்கிறார்.

தொப்புள்கொடி உறவு அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று நாம் சொல்லுகிறோம்; இது ஒரு கற்பனைச் சொல் அல்ல; அலங்காரச் சொல்லும் அல்ல; முழுக்க முழுக்க இரத்த உறவுச்சொல், அதுதான் மிக முக்கியம். இன அடிப்படையிலே உருவானது என்பதற்கு ஒரு அடையாளம், ஆதாரம் என்னவென்றால், இங்கே ஒரு செய்தியைச் சொல்கிறார்:

Tamil -Ceylon State Council and Sinhalese - Ceylon State Council என்ற தலைப்பின் கீழ் வெளிவந்துள்ள ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார்.

1940இல் ஒரு மனு

அதாவது எம். கணபதிபிள்ளை என்பவர் All Ceylon Aboriginal Inhabitants’ Association Jaffna (Ceylon) என்ற அமைப்பின் செயலாளர், அவர் டில்லிக்கு வந்து  1.3.1940 இல் ஒரு மனுவை வெள்ளைக் காரர்களிடம் கொடுக்கிறார்.

அந்த மனுவில் இருக்கின்ற ஒரு பகுதியை இங்கே படிக்கின்றேன்:

Ceylon and India are one country. Ceylon forms the Southern part of India. The Tamils of Ceylon who are Dravidians and the Indian Dravidians are of one race. The Tamils are all Dravidians. The Sinhalese have therefore no right to treat the Indians as separate from the Ceylon Tamil.

The whole of Ceylon was originally a Tamill Country, The Tamils also called Dravidians were the aboriginal inhabitants of Ceylon and ruled over the whole land.

The Sinhalese came to Ceylon from Central Asia by way of Bengal. They (Sinhalese) are therefore foreigners to Ceylon. The Indian Dravidians (Tamils) belong to the same race and are entitled to the same rights as the Dravidians of Ceylon.

இங்கே வரலாற்று ஆய்வாளர்கள், பேராசிரி யர்கள் எல்லாம் இருக்கிறீர்கள். அவர்கள் இதனை எடுத்து ஆராய்ச்சி செய்யவேண்டும். இது ஓர் அற்புதமான ஓர் ஆவணம். இதுவரை கிடைக்காத ஓர் ஆவணம்.

அந்த மனுவிற்குக் கீழே ஒரு குறிப்பை பதிவு செய்திருக்கிறார்:

மேலும், நவம்பர் 1940 ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற மாநாட்டில் All Ceylon Aboriginal Inhabitants’ (Tamil) Association இலங்கை, யாழ்ப்பாணப் பிரதிநிதிகள் முன் வைத்த கோரிக்கையை மேற்படி சங்கத்தின் செயலாளர், குடியேற்ற நாடுகளின் அரசு செயலாளருக்கு அனுப்பிய ஆவணத்தையும் இங்கு இணைப்பதன் மூலம், தமிழரின் அரசியல் பிரச்சி னையைத் தெளிவாக விளக்கிக் கொள்ள முடியும்.

நீதிக்கட்சி - திராவிடர் இயக்கம் எப்பொழுது தீர்மானம் போட்டிருக்கிறது 1939 ஆம் ஆண்டு. இத்தாக்கத்தின் விளைவாகத்தான் மேற்கண்ட மனு டில்லியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை நாம் எடுத்துச் சொல்லுகிறோம். மேற்கண்ட செய்திகளைப்போல் இன்னும் நிறைய செய்திகளை ஆய்வாளர் பதிவு செய்துள்ளார்.

இன்றைய அரசியலுக்காக அல்ல!

ஆகவே, நம்முடைய தொப்புள்கொடி உறவு, நம்முடைய இன உணர்வு, நம்முடைய மனிதநேயம் என்பது காலங்காலமாக இருக்கக்கூடிய ஒன்று. இது திடீரென்று நேற்றைய அரசியலுக்காக, இன்றைய அரசியலுக்காக, நாளைய அரசியலுக்காக உருவாக்கப் பட்டது அல்ல. இதனை எல்லோரும் அருள்கூர்ந்து புரிந்துகொள்ளவேண்டும். எனவே, நாம் அதற்காக பாடுபடக்கூடிய, அந்த உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடியவர்களாக இருக்கிறோம்.

அப்படிப்பட்ட சூழ்நிலையிலே அடுத்து ஒரு கேள்வி, டெசோ மாநாட்டில் மிக முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றி, அத்தீர்மானங்கள் அனைத்தையும் பிரதமரிடம் அளிக்கவேண்டும் என்று டெசோ மாநாட்டு அமைப்பாளர்களெல் லாம் கலைஞர் தலைமையில் முடிவெடுத்தோம். அம்முடிவின்படி, இன்று (21.8.2012) காலையில் டி.ஆர். பாலு அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தி.மு.க. தலைவர் கலைஞரின் ஆணைக்கிணங்க, பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை நேரில் சந்தித்து, டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை அளித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மீனவர் பிரச்சினை

இலங்கையில் இருக்கும் ஈழத் தமிழர்களுக்குக் கொடுக்கும் இன்னல்கள்போதாதென்று, இங்குள்ள மீனவர்களின் உரிமைகளையும் சிங்களவர்கள் விட்டு வைக்கவில்லை; மீனவர்களுக்கு மீன் பிடி தொழிலைத் தவிர வேறெதுவும் தெரியாதே, வாழ்வாதாரம் அது ஒன்று மட்டும்தானே! வேறு எந்தத் தொழிலை மீனவர்கள் செய்யப் போகிறார்கள்? இன்று தொலைக்காட்சி, நாளிதழ்களைப் பார்த்தால், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைப் பிடித்தனர், வலைகளை அறுத்தனர்; மீன்களைப் பிடுங்கிக் கொண்டனர்; தாக்கினர் இப்படி நாள் தோறும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மீனவப் பிரச்சினை தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது.

இதற்கு முன் இருந்த முதல்வர் கலைஞர் அவர்கள் மீனவர் பிரச்சினை குறித்து கடிதம் எழுதிக் கொண்டே இருக்கிறார் என்று சொன்னார்கள்; இப் பொழுதுள்ள முதல்வர் மட்டும் என்ன கடிதம்தானே எழுதுகிறார்; அங்கே போய் என்ன குடியிருக்கிறாரா? நாம் சண்டை போட்டுக்கொள்ள விரும்பவில்லை; ஏதோ எழுதுகிறார், எழுதட்டும்; எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்கிறோம், அந்த அளவுக்காவது பயன் படட்டும். நமக்குள்ள அரசியல் பிரிவினைகளைக் கூட தள்ளி வைத்துவிட்டு, நாம் பொதுநோக்கோடு பார்ப்போம். இன்றைக்கு காவிரி பிரச்சினை பற்றி முதலமைச்சர் சொல்லியிருக்கிறார், அதனை நாம் வரவேற்றுள்ளோமே!

கச்சத்தீவுப் பிரச்சினை

கச்சத்தீவை யாரையும் கேட்காமல் தாரை வார்த்த நிலையில், தி.மு.க. சார்பில் கண்டனக் கூட்டம் நடத் தியது; நாங்களும் அக்கூட்டங்களில் கலந்துகொண்டு பல ஊர்களில் உரையாற்றியுள்ளோம். ஒரு நாட்டி னுடைய இடத்தை மற்றொரு நாட்டிற்குத் தர வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தின் அனுமதி பெற்று சட்டப்படித்தான் மாற்ற முடியும்; ஆனால், கச்சத்தீவை தாரை வார்த்த விஷயத்தில் சட்டப்படி, முறைப்படி வழங்கப்படவில்லை என்பது சட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய ஓட்டை.

இராமேசுவரத்தில், மீனவர்களைப் பாதுகாக்கும் மாநாட்டை திராவிடர் கழகம் நடத்தியபோது, இம்மாநாட்டில் ஜார்ஜ் பெர்னாண்டசு, சகோதரர் நெடுமாறன் போன்றவர்கள் கலந்துகொண்டார்கள். அம்மாநாட்டில் உரையாற்றும்போது, கச்சத் தீவைப் பற்றி நான் விளக்கம் சொன்னேன், அரசியல் சட்ட விதிகளை எடுத்துக்காட்டி, இந்த விதிகளுக்கு மாறாக, ஒருவருடைய சொந்தப் பொருளை எடுத்து மற்றொருவருக்குத் தருவதுபோல, அது சட்ட விரோதமாகச் செய்யப்பட்ட காரியம், சட்டப்படி செய்யப்பட்ட காரியமல்ல; ஆகவே, அது மாற்றப் படாவிட்டால், நாங்கள் நீதிமன்றத்திற்குச் சென்று அங்கே சுட்டிக்காட்டுவோம் என்று சொல்லி, திராவிடர் கழகம் உடனடியாக வழக்குப் போட்டது.
அவ்வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. உங்களுக்குத்தான் தெரியுமே, நம் நாட்டின் நீதி மன்றங்களைப் பார்த்தோமேயானால், வெள்ளி விழா, பொன்விழா, வைர விழா என்று இப்படியே சென்று கொண்டிருக்கும் வழக்குகள்.

மீனவ சமுதாயத்தை, மீனவ சகோதரர்களை நாம் காப்பாற்றவேண்டுமென்றால், மிகப்பெரிய அளவில் நாம் குரல் கொடுக்கவேண்டியது அவசியம்.

கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்

கச்சத்தீவுக்கென்று தனி வரலாறு உண்டு. கச்சத்தீவு நமக்குச் சொந்தமானது; அதையெடுத்து யாருக்கோ கொடுத்துவிடுவதா? மீண்டும் மீனவ சமுதாயத்திற்கு  நிரந்தரமான ஒரு பாதுகாப்பைப் பெற்றுத் தரவேண்டும் என்று சொன்னால், கச்சத்தீவை மீண்டும் மீட்போம் என்று சொல்லக்கூடிய நிலையை உருவாக்கவேண்டும். தீர்மானம் போட்டிருக்கின்றோமா - இல்லையா? அதற்குரிய வழி வந்திருக்கின்றதா - இல்லையா? எப்போது தீர்மானம் போட்டோம், எப்போது வழக்கு போட்டோம்? டெசோ அமைப்பைச் சேர்ந்தவர்கள்தானே வழக்கு போட்டோம், தீர்மானம் போட்டோம். தோழர் ஜார்ஜ் பெர்னாண்டசு அவர்களே ஆச்சரியப்பட்டார், இந்த மாதிரியா என்று. அவர் ஒரு நல்ல நாடாளு மன்றவாதி; அப்பேர்ப்பட்டவர் கச்சத்தீவை தாரை வார்த்ததில் சட்ட ஓட்டை இருக்கிறது என்பது நீங்கள் எடுத்துச் சொன்னபொழுதுதான் புரிகிறது என்று சொன்னார்.

இதைவிட இன்னொரு கொடுமை என்ன வென்று சொல்லவேண்டுமென்றால், இந்தியக் கடற்படையே சிங்களவர்களுக்குச் சாதகமாக நடந்துகொண்டு வருகிறது. காரணம் என்னவென் றால், இந்த உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யவேண்டும் என்பதற்கு, டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கண்டனத்தோடு நிறுத்தாமல், தீர்மானத்தை விளக்கிச் சொல்லும்பொழுது, தனுஷ்கோடி அல்லது இராமேசுவரம் பகுதியில் ஒரு கடற்படை தளத்தை உருவாக்கவேண்டும்; அதன்மூலம் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

வட நாட்டிலுள்ளவர்கள்  துப்பாக்கி வைத்துக் கொள்கிறான்; ஆர்.எஸ்.எஸ்.காரன் திரிசூலத்தைத் தூக்குகிறான், எல்லா இடத்திலும் துப்பாக்கியைத் தூக்கிக் காட்டுகிறான்.  நாட்டின் எல்லையைத் தாண்டி வந்தான், தாண்டி வந்தான் என்று சொல்வது இருக்கிறது பாருங்கள், அதைப்பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்; நிலம் என்றால், அதில் கோடு போட்டிருப்பார்கள்? அதைத் தாண்டி வந்தான் என்று சொல்லலாம்; ஆனால், கடலில் அப்படி செய்ய முடியாது;
காற்றடித்தால், டக்கென்று அங்கே போய்விடக் கூடிய சூழல் இருக்கிறதல்லவா? அங்கே என்ன கோடா போட்டிருப்பார்கள்? பூமத்திய ரேகை எங்கே இருக்கிறது என்று பார்ப்பதுபோல், அங்கே பார்க்க முடியுமா? ஆகவே, அறிவுபூர்வமான சிந்தனையோடு பார்க்கின்றபோது நீக்குப்போக்கு தான் இதில் தேவை; நல்லெண்ணம் இருக்க வேண்டும். ஆனால், அந்த நாட்டிற்குத்தான் நாம் உதவி செய்துகொண்டிருக்கிறோம். அவன் நாட்டு குடிமக்களுக்கு புத்தாக்கம் கொடுக்கவேண்டும், புது நிவாரணம் கொடுக்கவேண்டும் என்பதற்காக நாம் பணம் கொடுக்கின்றோம். எது இறையாண்மை?

ஆனால், அவர்கள் எங்களுடைய இறையாண் மைக்கு எதிராக விரோதமாகப் பேசுகிறார்கள் என்று சொல்லுகிறாயே, நம்மகிட்டே பணம் வாங்கினார் என்றாலே, அந்நாட்டின் இறை யாண்மை போயே போச்சு; அப்புறம் என்ன தனியா உங்களுக்கு இறையாண்மை உங்க நாட்டுக் குடி மக்களாய் இருக்கக் கூடிய தமிழர்களுக்கே வீடு கட்டி, அதில் சிங்களவர்களைக் குடியேற்றிக் கொண்டிருக்கிறாய் நீ - பிச்சை எடுக்கும்பொழுது, காசு வாங்கும் பொழுது உனக்கு இறையாண்மை கிடையாது - எங்கள் இனத்தவர்களை ஒழுங்காக நடத்துங்கள் என்று சொன்னால் மட்டும்  இறையாண்மை வந்துவிடுமா? இறையாண்மை இல்லை ஆண்மையே இல்லாத விஷயம் அது. நீங்கள் மிகத் தெளிவாக நினைத்துப் பார்க்க வேண்டும்.
எப்படிப்பட்ட ஒரு சிந்தனை என்பதை ஆழமாக யோசித்துப் பார்க்கவேண்டும். ஆகவே, அந்தத் தீர்மானத்திலே ஆக்க ரீதியான திட்டங் களைக் கொடுத்திருக்கிறோம். கண்டனத்தை மட் டும் சொல்லவில்லை. டெசோ தீர்மானம் இருக் கிறதே நண்பர்களே, இதனுடைய முக்கியத்துவம் காலம் தீர்ப்பளிக்கக் கூடிய அளவிற்கு, இன்றைக்கு இருக்கக் கூடியதைவிட வருங்காலத்தில் இதன் மூலம் விடிவு ஏற்படப் போகிறது என்பது திண்ணம். ஒரு பிரச்சினைக்குத் தீர்வு என்பது பல கட்டங்களாக ஏற்படக்கூடியது. உடனே எல்லாமே முடிந்துவிடும் என்பதல்ல.
இவர் நினைத்திருந்தால் அப்போதே எல்லோரையும் காப்பாற்றி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இப்போதுகூட ஒரு தொலைக் காட்சியில் கேள்வி கேட்டார்கள், அதற்கு நானும் பதில் சொன்னேன். பலர் அதைப் பார்த்திருப்பீர்கள்.  பொது எதிரி யார்? நம்ம கவலை அதுதான்? பொது எதிரி சிங்களப் பேரின வாதம் - தனி நபர்கூட அல்ல. அப்படி இருக்கும்பொழுது நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறோம். அதனாலே தேவையில்லாதவர்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நம்ம ஊரில் உள்ள ஊடகங்களுக்கு, பார்ப்பன ஊடகங்களுக்கு குறிப் பாக நம்ம இரண்டு பேரையும் முட்ட விடறதுதான் ஆசை.
இவர் அதைச் சொன்னார்; அவர் இதைச் சொன்னார் என்று சொல்லி இரண்டு பேர் சொன்னதையும் பத்திரிகையில் போட்டு, அதை நம்ம ஆட்களே வாங்க வைத்திடுவான். ஆகவே, அப்பேர்ப்பட்ட சூழ்நிலை இருப்பதை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் பதில் சொல்ல வில்லையே தவிர, கலைஞர் என்ன செய்யாமல் இருந்தார் ஆட்சியில் இருக்கும்பொழுது? ஒரு ஆட்சி, அதுவும் மாநில அரசு - அவர் என்ன பிரத மரா? கூண்டு என்ற நூல்

இங்கே இன்னொரு தகவலைச் சொல்கிறேன் கேளுங்கள், கார்டன் வைஸ் என்பவர் கூண்டு என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார். ஆங்கிலத் திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட நூல் இது. இந்த நூலைப்பற்றி சொல்கிறபோது இவர் அத்தாரிட்டி திங்ஸ் கொஞ்சம் அனுபவபூர்வமாக, பயனுள்ளதாக இந்தப் பிரச்சினையை - ஈழத் தமிழர் பிரச்சினையை அணுகி இருக்கிறார். இதில் எத்தனையோ மாறு பட்ட கருத்துகளும் இருக்கும்.

நான் அங்கே அதாவது இலங்கையிலே மூன் றாண்டுகள் வாழ்ந்தேன். மோதல் பிராந்தியங்களில் மொத்தம் 20 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். யுத்தத்தின் இறுதிக் காலங்களில் நான் அய்.நா.வின் செய்தித் தொடர்பாளராகவும், ஆலோசகராகவும் இருந்திருக்கிறேன் என்று அந்நூலின் முன்னு ரையிலே சொல்லியிருக்கிறார்.அவர் ரொம்ப ஆழ மாகச் சொன்ன ஒரு செய்தி இருக்கிறதே, அதைக் கவனமாக கேட்கவேண்டும்.

எல்லோரையும் ஏமாற்றி இருக்கிறது இலங்கை அரசு என்றுதான் சொல்லவேண்டும்; யாரை என்று சொன்னால், அய்.நா.வை ஏமாற்றி இருக்கிறது; அமெரிக்காவை ஏமாற்றி இருக்கிறது; உலக நாடுகளையும் எந்தெந்த வகையில் ஏமாற்றி இருக் கிறது என்பதை அந்நூலில் அவர் சுட்டிக் காட்டி யிருக்கிறார். அதையெல்லாம் பார்க்கும்பொழுது இங்கே நடந்த சம்பவங்கள் எவ்வளவு கெட்ட வாய்ப்பான சம்பவங்கள்;
எந்த அளவுக்கு நமக்கு வாய்ப்புகள் அமைந்தன என்பதை யோசித்துப் பார்க்கவேண்டாமா? ஏதோ எல்லாம் முடிந்து விட்டதுமாதிரி ஏன் உடனே அங்கே போய் தடுக்கவில்லை? ஏன் சும்மா இருந்தீர்கள் என்று கேட்டால் என்ன அர்த்தம்? ஒரு மாநில அரசின் முதல்வர், அவரால் என்ன செய்ய முடியும்?
மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதற்காக தானே முன்வந்து சென்னையில் முதலமைச்சர் கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார்; அங்கிருந்து போர் நிறுத்தம் வந்துவிட்டது; போர் நிறுத்தம் செய்துவிட்டோம்.  Light Machine only with the spad என்று சொல்லி, Heavy ordinal மற்ற எதையும் நாங்கள்  பயன்படுத்தமாட்டோம் என்று எங்களுக்கு உறுதியான தகவல் தளத்திலிருந்து வந்துவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சரிடமிருந்து தகவல் வந்ததும்தானே கலைஞர் அவர்கள் உண்ணா விரதத்தை நிறுத்தினார்கள். இதைத்தானே நம்ப முடியும், இல்லை இல்லை, நான் நேரே இலங் கைக்குப் போய் பார்த்தால்தான் நம்புவேன் என்று யாராவது சொல்ல முடியுமா? மத்திய உள்துறை தகவலைத்தானே நாம் நம்ப முடியும்.

புலிகளுக்கு மக்கள் மத்தியில் எப்படி செல்வாக்கு ஏற்பட்டது?

கூண்டு என்ற நூலில் அந்நூலாசிரியர் மேலும் கூறுகையில், இலங்கையைப் பொறுத்தவரை ஏதோ விடுதலைப்புலிகளினால்தான் யுத்தமே துவங்கியது என்ற ரீதியில் சிலர் தவறாக விளக்கமளிக்கின்றனர்.  வாதத்திற்காக அது சரி என்றே வைத்துக் கொள் வோம். ஆனால், புலிகளுக்கு மக்கள் மத்தியில் பரவ லான செல்வாக்கு எப்படி உருவாயிற்று என்று கேட்க வேண்டாமா?

இதுதானே மிக முக்கியம். சரியான ஒரு கேள்வியை நடுநிலையில் இருந்து ஒரு ஆஸ்தி ரேலியன் ஒரு வெளிநாட்டுக்காரர் கேட்கிறாரே, அதுமட்டுமல்ல, 1983 கலவரங்களில் சில ஆயிரம் தமிழர்கள் இறந்ததுதான் விடுதலைப்புலிகள் உருவாக வழிவகுத்தது. இப்படிச் சொல்வது, கலைஞரோ, வீரமணியோ, டெசோ அமைப்போ அல்ல; இப்படிச் சொல்வது ஆஸ்திரேலிய செய்தியாளர் கார்டன் வைஸ். இலங்கையில் இருந்து, அங்கிருந்த நிலை மையைப் பார்த்து விடுதலைப் புலிகள் செய்தது தவறு என்று சில இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளார் -  அவருடைய கண்ணோட் டத்தில்.

அண்மைய சம்பவங்கள் என்னென்ன தாக்கங் களை ஏற்படுத்தும், நினைவுகள் மரிப்பதில்லை; அது எப்பொழுதும் உயிரோடு இருக்கும். அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று வலியுறுத்தி வருபவர்தான் தயான் ஜயதிலக.  இவர் இப்படிச் சொன்னதால், இவரின் தூதுவர் பதவியும் பறிபோயிற்று. அவன் சிங்களவனாக இருந்தாலும் அவர்கள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. இந்த மாதிரி யாராவது சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களுடைய நிலை என்ன என்று சொல்லுகிறது போது, எப்படிப்பட்ட எழுச்சிகள் உருவானது? ஏன் இந்த நிலைமைகள் வந்தது? என்று சொல்லும்போது, வெறும் பயங்கர வாதம், பயங்கரவாதம் என்ற சொல்லக்கூடிய நிலையிலே, அதனுடைய அடிப்படையிலே ஒரு விஷயத்தை சொல்கிறார்:

                    -(தொடரும்)-----”விடுதலை”  24-8-2012

11 comments:

Vadivelan said...

Veeramani. is another comedian in tamil politics....

தமிழ் ஓவியா said...

தண்ணீரும் மின்சாரமும்

தமிழ்நாடு மக்களை இரு வேறு பிரச்சினைகள் வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கின்றன. ஒன்று மின்சார வெட்டு, ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டின் மின் வெட்டுப் பிரச்சினை 6 மாதங்களில் தீர்த்து வைக்கப்படும் என்று அடித்துச் சொன்னது. 15 மாதங்கள் ஓடிய பிறகும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இடையில் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது. பரவாயில்லை மின்வெட்டுத் தீர்ந்து விடும் என்று நம்பியிருந்த நிலையில் மீண்டும் கடும் பற்றாக்குறை எனும் புயல் வீசத் தொடங்கி விட்டது.

பனிரெண்டு மணி நேரம் என்கிற அளவுக்குக்கூட மின்வெட்டு என்றால், அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்று பொருள். உற்பத்திப் பாதிப்பு, வேலை வாய்ப்புப் பாதிப்பு இவற்றின் காரணமாக விலைவாசி ஏற்றம் என்று ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டு இருக்கிறது.

இந்த மின்வெட்டை நீக்க உருப்படியான முடிவுகள் ஏதாவது எட்டப்பட்டு இருப்ப தாகவும் தெரியவில்லை. மின்வெட்டினால் விவசாயம் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. ஜூன் மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், குறுவைச் சாகுபடி நாசமாகப் போய் விட்டது. சம்பா விவசாயமும் கேள்விக்குறியாகிவிட்டது.

நிலத்தடி தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தால் மின் வெட்டின் காரணமாக மோட்டாரைப் பயன் படுத்த முடியாத முட்டுக்கட்டை! உரலுக்கு ஒரு பக்கத்தில் அடி என்றால் மத்தளத்துக்கு இரு பக்கம் அடி என்று சொல்லுவார்களே - அந்த நிலைக்கு நம் நாட்டு விவசாயிகள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

காவிரி நீரை நம்பி வாழும் டெல்டா மாவட்ட மக்கள் மட்டுமல்ல - முல்லைப் பெரியாறு பிரச்சினையால் தென் மாவட்ட விவசாயிகள் கை பிசைந்து நிற்கின்றனர்.

இவற்றிற்கு எல்லாம் என்னதான் பரிகாரம்? விடிவு கிடைக்குமா? விடிவுக்கு ஏதாவது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு கின்றனவா? அரசு என்ற ஒன்று இயங்குகிறதா? அதிகாரிகள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்களா? என்ற வினா சாதாரண மக்கள் மத்தியிலேகூட செங்குத்தாக எழுந்து நிற்கிறது.

உணவு உற்பத்தி பாதிக்கப்படும் நிலையில் அடுத்து வரும் காலம் மக்களுக்குக் கடும் சோதனையாக - வேதனையாக - சவாலாக இருக்கப் போகிறது. அதன் விளைவு கடுமை யானதாக இருக்கும்.

தொலைநோக்குக் கண்ணோட்டத்தோடு பிரச்சினைகளுக்கு உருப்படியான தீர்வினைக் காண அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டாமா? யாருக்கோ வந்த விருந்து என்ற தன்மையில் ஏனோ தானோ என்று இருக்கலாமா?

எதிர்க்கட்சிகள் வாய் திறந்தால், பேனாவைத் திறந்தால் அவர்கள்மீது வழக்குப் போடுவதை விட்டுவிட்டு, எதிர்க்கட்சிகள் என்றால் குற்றம் கூறத்தான் செய்வார்கள் என்கிற ஜனநாயகப் பண்பை ஏற்றுக் கொண்டு, மக்கள் சந்திக்கும் பற்றாக் குறைகளைச் சரி செய்யும் வேலையில் அரசு கவனம் செலுத்தட்டும்! 24-8-2012

தமிழ் ஓவியா said...

பதவியைக் குறுக்கு வழியில் பிடிக்க ஆசைப்பட வேண்டாம்! திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி



தமிழ் ஓவியா said...

இந்திய நாட்டின் நாடாளுமன்றத்தினை கடந்த 3 நாள்களாக (இன்று காலை வரைகூட) நடக்க விடாமல் முடக்கும் வகையில், எதிர்க்கட்சிகள் குறிப்பாக முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும், அதன் தலைவர்களும் நடந்து வருவது, ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசுவதாகும்.

பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும்; அவர் அதனை அறிவிக்காவிட்டால் நாங்கள் நாடாளுமன்றத்தினை நடத்த அனுமதிக்கவே மாட்டோம் என்று சபையில் சண்டித்தனம் செய்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தினைக் கேலிக் கூத்தாக்குகின்றனர் எதிர்க்கட்சியினர்!

அனுமானமா? உண்மையில் இழப்பா?

முன்பு பிரதமர் மன்மோகன்சிங் பொறுப்பில் நிலக்கரி சுரங்கத்துறை இருந்தபோது, நிலக்கரிச் சுரங்க வருவாய் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சி.ஏ.ஜி. என்ற மத்திய அரசின் தணிக்கை அதிகாரியின் அறிக்கை வெளி வந்துள்ளதை வைத்தே இத்தனை அமளி, துமளி - ஆர்ப்பாட்டங்கள்!

நாம் முன் வைக்கும் சில நியாயமான கேள்விகளுக்கு அந்த எதிர்க்கட்சியினரும், அவர்களது ஒலி குழாய்களாக விளங்கும் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகத்துறையினரும் பதில் அளிக்க முன்வர வேண்டும்.

1. இந்தத் தொகை - அனுமானமா? உண்மையான இழப்பா? (It is only a presumptive loss) கற்பனை ஊகம்தானே!

கடந்த காலத்தில் அப்படிச் செய்யாமல் ஏலம் விட்டிருந்தால் இவ்வளவு தொகை கூடுதலாக அரசுக்குக் கிடைத்திருக்கக் கூடும்; இதனைக் கடைப்பிடிக்காமல் விட்டதால் இந்த (யூக) இழப்பு என்றுதான் CAG Report கூறுகிறது.

பதவிப் பசியில் பா.ஜ.க.,

இப்படி பிரதமருக்கு நெருக்கடி கொடுத்து பதவி இழந்து பசியால் வாடும் பா.ஜ.க., மேலும் 2 ஆண்டுகள் 2014 பொதுத் தேர்தல் வரை காத்திருக்காமல் குறுக்கு வழியில், நாட்டில் ஒரு அவசரத் தேர்தலை மக்கள்மீது திணித்து விட்டால், தங்களுக்கு ஒரு சான்ஸ் - குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல கிடைத்து விடாதா என்ற நப்பாசையின் காரணமாகவே இப்படிக் கூச்சல் போடுகின்றனர்!

மூலகாரணம் என்ன?

இதற்கு மூல காரணம் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலவீனமான உண்மையான கூட்டணி நெறியைக் கடைப்பிடிக்காமல், மற்ற தோழமையினரை பலிகடாக்களாக்கி, தாங்கள் தப்பித்தால் போதும், அவர்களைத் திருப்தி செய்ய, அழி வழக்குகளைப் போட்டாவது எதிர்க்கட்சியினர் வாயை மூடினால் போதும் என்று 2ஜி அலைக்கற்றை வழக்கினை இதே போன்ற ஒரு யூக நட்டத்தினை CAG அறிக்கை வைத்து, எதிர்க்கட்சியினர் வாய்க்கு அவலைத் தந்ததின் விளைவுதான் இன்று அக்கட்சி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை நோக்கி ஏவும் எதிர்க்கட்சியின் ராஜினாமா கோரிக்கை!

2ஜி அலைக்கற்றை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அது கொள்கை முடிவு (Policy Decision of the cabinet; government) என்று துவக்கத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டு, பிறகு தி.மு..க அமைச்சரையும் சம்பந்தா சம்பந்தமின்றி திருமதி கனிமொழியையும் குற்றவாளிகளாக இணைத்து சிறையில் பல மாதங்கள் வைத்தது எவ்வகையிலும் நியாயமா? இழப்பு பூஜியம்தான் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில்சிபல் போன்றவர்கள் கூறியபிறகும்கூட இது நடந்திருக்கிறது.

அதன் பார தூர விளைவுதான் - அதே அனுமான - யூக இழப்பாக அதைவிட பெரிய இழப்பை ஊதிக் காட்டி, உலகத்தார் கண்ணில் ஊடக கொயபெல்ஸ்களின் உதவி மூலம் இப்படி ஒரு திட்டமிட்டே பிரச்சாரத்தைச் செய்து, அப்பதவிக்குள்ள மரியாதையையும் காற்றில் பறக்க விடச் செய்கின்றனர்!


தமிழ் ஓவியா said...

எந்த அடிப்படையில் ராஜினாமா கோரிக்கை?

எந்த அடிப்படையில் பிரதமர் ராஜினாமா? நிலக்கரி ஊழல் (Coalgate என்ற ஊடகப் பெயர் வந்துள்ளதே) நிரூபிக்கப்பட்டுவிட்டதா? விவாதம்கூட நாடாளுமன்றத்தில் நடத்த இந்த எதிர்க்கட்சிகள் தயாராக இல்லையே! ஒரு சில கட்சிகள் இப்போதுதான் பா.ஜ.க.வின் சூழ்ச்சி வலையில் விழாமல், நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று முன்வந்து கூறுகின்றன. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி 2ஜி அலை வரிசையில் தெளிவான ஒரு நிலைப்பாட்டினை மேற்கொள்ளவில்லை; உறுதியோடு இருந்திருந்தால் இந்நிலை அதற்கு வந்திருக்காது.

கூச்சல் போட்டுக் குழப்பம் செய்வதா?

முதலில் நாடாளுமன்ற பொதுக் கணக்குக்குழு கூட்டத் தயங்கி, காலந்தாழ்த்தி, பிறகு இரண்டு குழு விசாரணையை ஏற்று, பிறகு மத்திய அமைச்சர்கள் ராஜினாமா என்று ஆக்கி, பிறகு வழக்கு சி.பி.அய். மூலம் போட்டு - இவ்வளவும் ஏற்படாத இழப்புக்காக! (ஏற்பட்ட இழப்பாக இருப்பின் ஒரே விதமான தொகை அல்லவா குற்றச்சாட்டுகளில் வந்திருக்கும். அப்படி அல்லவே! ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்தில் ஒரு மாதிரி! வழக்கு இருப்பதால் நாம் உள்ளே புக விரும்பவில்லை).

தமிழ் ஓவியா said...

இப்போது நிலக்கரி ஊழல் என்பதும் கூச்சல் மூலம் பாமர வாக்காளருக்கு இந்த உண்மை தெரியாமலேயே ஆக்கப்படக் கூடும். குற்றம் செய்திருந்தால் - அதனைச் சொல்ல வேண்டிய இடம் நாடாளுமன்றம் தானே?

திருமதி சோனியாவின் சரியான கருத்து

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் திருமதி சோனியாகாந்தி அவர்களின் சரியான ஒரு கருத்தை எடுத்து வைத்துள்ளார். காங்கிரஸ் இதுவரை தன்னைக் காப்பாற்றிடும் விளக்கமே (defensive) தந்து வந்துள்ளது; அதை சற்று மாற்றி டீககநளேஎந - எதிர்க்கட்சிகளின் முரண்பட்ட வாதங்களை, புரட்டுகளை, ஊழல்களை அவர்கள் ஆளும் மாநிலங்களும் இதற்குக் காரணமாக உள்ளன என்ற தகவல்களையெல்லாம் எடுத்துத் திருப்பி அடித்துக் கூற முன் வர வேண்டும்.

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்

அது மட்டுமா? பாபர் மசூதி இடிப்பு கிரிமினல் வழக்கில் குற்றவாளிகளாக உள்ள பா.ஜ.க. தலைவர்கள்மீதுள்ள வழக்கு ஆண்டுகள் 1992 முதல் 2012 வரை 20 ஆண்டுகளாக ஊறுகாய் ஜாடியில் ஊறிக் கிடப்பதா?

ஜஸ்டீஸ் லிபரான் கமிஷன் அறிக்கை குப்பைக் கூடையில் போடப்பட்டு எத்தனை ஆண்டுகள்?

குஜராத், கருநாடகா மதவெறி ஊழல்கள் பற்றி பேச்சு மூச்சு உண்டா?

பா.ஜ.க.வின் முகமூடிகள்!

ஊழலை ஒழிக்க பா.ஜ.க.வின் முகமூடிகள் யார் யார் எந்தெந்த சுவாமிகள் என்று சொல்ல வேண்டாமா?

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி முதலில் கூட்டணியின் கட்சிகளுக்குரிய முக்கியத்துவம் கொடுத்து, நடந்திருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை திருப்தி செய்ய எவரையும் பலி கொடுக்க முன் வந்ததின் விளைவுதான் - இப்படிப்பட்ட நிலைமைகள்.

ஓடுகிறவர்களைக் கண்டால் துரத்துகிறவர்கள் சும்மா இருப்பார்களா?

தோழமைக் கட்சிகளிடம் தோழமை வேண்டாமா?

நெருக்கடி வரும் நேரத்தில் மட்டும் தோழமையைத் தேடாமல், உறுதியுடன் இருந்து, மதச் சார்பின்மையை, ஜனநாயகத்தைக் காப்பாற்றிட துணிவுடனும், கூட்டணித் தெளிவுடனும் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசியல் சந்தர்ப்பவாதம் (Political Expediency) என்பது பலன் தராது - யாருக்குமே!

கொள்கை முடிவுகள் தொலைநோக்குடன் மேற்கொள்ளப்பட வேண்டும். நாடாளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களைப் பதிவு செய்து அதிர வைக்கட்டுமே!

வாக்கெடுப்புக்கு வழி கேட்கட்டுமே! இன்னும் 2 ஆண்டுகள் பொறுத்திருக்காமல் இப்படி ஒரு குறுக்கு சால் ஒரு போதும் பயன்தராது.

அது ஜனநாயக முறை ஆகாது. காங்கிரஸ் 2ஜியிலிருந்து மாறி, தனது அணுகுமுறையில் புதிய கோணம் புதிய பார்வையைச் செலவழித்து மக்களிடம் உண்மைகளை விளக்க முன் வர வேண்டும்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்றத்தில் சு.சாமி மனு தள்ளுபடி!

புதுடில்லி, ஆக.24: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பு பற்றி மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட உச்ச நீதிமன்றத்தில் ஜனதா கட்சி சுப்பிரமணிய சாமியும், வழக்குரை ஞர் சாந்திபூஷனும் தாக்கல் செய்த இரு மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளு படி செய்யப்பட்டன.

2008 இல் ஏ.ராஜா அமைச்சராக இருந்த போது அளிக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை உரிமங்கள் அளிக்கப் பட்டதில் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராகக் கூறப் படும் குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று மத்திய புலனாய்வுக் கழகம் தொடக்கம் முதலே கூறி வருகிறது. சிதம் பரம் மற்றும் ராஜாவும் சேர்ந்து சதி செய் தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் அளிக் கப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறி யுள்ளது.

இதற்கு முன்னதாக இத்தகைய மனு ஒன்றை சி.பி.அய். தனி நீதிமன்றத்தில் சுப்பிர மணியசாமி தாக்கல் செய்திருந்தார். நீதிபதி ஓ.பி. சைனி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து மேல் முறை யீடு செய்யப்பட்ட போதுதான் உச்சநீதி மன்ற நீதிபதிகள் சிங்வி ராதாகிருஷ்ணன் ஆகி யோர் அடங்கிய அமர்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்தக் குற்றச் சாட்டுக்காக சிதம்பரம் பதவி விலகவேண்டும் என்று கோரி வந்த பா.ஜ.கட்சிக்கு இது பெருத்த அடியாகும் என்றும், மதிப்பு மிகுந்த நீதி மன்றத்தின் நேரத்தை பா.ஜ.க. வீணாக்கிவிட்டது என் றும் மூத்த அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் பற்றி விசாரித்து வரும் நாடாளுமன்ற குழு பிரதமரையும், சிதம் பரத்தையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி பா.ஜ.க. உறுப்பினர்கள் நடப்பு வாரத்தின் தொடக்கத் தில் வெளிநடப்பு செய் தது குறிப்பிடத்தக்கது.
முகத்தில் கரிப்பூச்சு

வாய்ச்சவடால், பிளாக்மெயில், வீராதி வீரர் சுப்ரமணியசாமி பார்ப்பனருக்கு இன்றைய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு அவரது வீராப்பின் முதுகெலும்பை முறித்து முகத்தில் கரி தடவிய தீர்ப்பல்லவா?

அவரைத் தூக்கிப் பிடித்த பூணூல் ஊடகங்களே உங்கள் நிலையையும் பார்த்தீர்களா? அந்தோ பரிதாபம்!

தமிழ் ஓவியா said...

தினமலர் - ஆன்மீக மலரும்: நமது வினாக் கணையும்

குழந்தைகளுக்கு வைக்கும் திருஷ்டிப் பொட்டே அழகாக இருந்தால் திருஷ்டி எப்படி கழியும்?
அழகாக இருந்தாலும் திருஷ்டிப் பொட்டு தானே? கருமையால் பொட்டு வைத்து விட்டால் பார்ப்பவர் களுக்கு முதலில் அதுதான் கண்ணில் படும். இதனால், குழந்தைக்கு ஏற்படும் திருஷ்டி கழிந்து விடும். வேண்டுமானால் நீங்கள் திருஷ்டிப் பொட்டை அழகாக வைக்காமல், கோணலாக வையுங்கள்.

நமது கேள்வி:



இது போன்ற திடீர்ப் பொட்டை பார்ப்பன அய்.ஏ.எஸ். அதிகாரி வீட்டுப் பிள்ளையின் கன்னங்களில் வைக்காதது ஏன்? திடீர்ப் பொட்டில் கலந்திருக்கும் இராசாயனப் பொருள் தோல் வியாதியைத் தானே உண்டாக்குகிறது?


?

தமிழ் ஓவியா said...


தவறு செய்த மனிதனுக்கு அடுத்த பிறவியில் துன்பம் கொடுப்பதை விட இந்தப் பிறவியிலேயே அவனைத் திருத்தக் கூடாதா?
சென்ற பிறவியில் செய்த பாவ புண்ணிய பலனை அனுபவிப்பதற்கே இந்தப் பிறவியின் ஆயுட்காலம் போதவில்லை. புதிதாகச் சேரும் பாவங்களுக்கும் இறைவன் துன்பத்தைக் கொடுத்தால் மனிதனால் தாங்க முடியாது. இதற்காகத்தான் அவன் திருந்தும் வரை பொறுமையாகத் தண்டிக்க மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்கிறார்.
இந்த கருணையைப் புரிந்து கொண்ட வர்கள் தீயவழியில் சென்று பாவத்தைச் சேர்க்க மாட்டார்கள். புரிந்து கொள்ளாதவர்களும் தீயவழியில் சென்று பாவத்தை சேர்க்க மாட்டார்கள். புரிந்து கொள்ளாத வர்களும், புரிந்து அலட்சியப் படுத்துபவர்களும் தீயவழியில் சென்று பாவத்தை சேர்த்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் பக்குவப்படும் வரை பிறவிகளையும் அந்தந்த பிறவிகளில் இன்ப துன்ப அனுபவங்களையும் இறைவன் தந்து கொண் டேயிருப்பார்.
ஒரே பிறவியில் மனிதனைத் திருத்து வதற்கு சுவாமியின் கருணை உள்ளம் இடம் தாராது.

நமது கேள்வி:

இது உண்மையானால் கொலை குற்றப் புகழ் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் எந்தப் பட்டியலில் அடங்குவார்? புற்று நோயால் அவதிப்பட்டு மாண்ட ரமண ரிஷியின் நிலை என்ன?

ஒரு மாத காலம் படுத்த படுக்கையில் கிடந்து படாத பாடுபட்ட சாயிபாபாவும் பாவ ஆத்மாதானா?

அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, பாவம் செய்வதை மட்டும் மனிதன் மீது சுமத்து வானேன்?

தமிழ் ஓவியா said...

பாவச் செயலுக்குக் கடவுள்தானே பொறுப்பு?

பொறுப்பைத் தட்டிக் கழிப்பவன்தான் பகவானா?
ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு மகளாகிய நான் திதி கொடுக்கலாமா?
நேரடியாக கொடுக்க முடியாது. உங்கள் தந்தை அதாவது சித்தப்பா, அல்லது பெரியப்பா அல்லது அவர்களின் மகன்கள் போன்றவர்கள் மூலம் திதி கொடுக்கலாம். செலவிற்குப் பணத்தை நீங்கள் கொடுத்து விடலாம்.

நமது கேள்வி:


பெண் ஏன் திதி கொடுக்கக்கூடாது? பெண் மட்டும் ஆண்டவனின் படைப்பு இல்லையா? சிவபெருமான் தலையில் ஒரு பெண்ணையும் (கங்கையையும்) இடுப்பில் ஒரு பெண்ணையும் (பார்வதியையும்) வைத்திருக்கும் போது, சக்தி இல்லையேல் சிவன் ஏது என்று கூட சொல்லிக் கொண்டு பெண்ணை இழிவுபடுத்துவானேன்?

புத்தென்னும் நரகத்திலிருந்து தந்தை யைக் காப்பாற்றுபவன்தான் புத்திரனாம். உண்மையைச் சொல்லப்போனால் மகனை விட மகள்தானே தங்கள் பெற்றோர்களைப்; பெரும்பாலும் உபசரிப்பர். இந்த நிலையில் திதி கொடுக்கும் உரிமை மகனுக்கு மட்டும் ஏன்? ஓ, இந்து மதம் என்றால் பெண்ண டிமைத்தனம் தானே!

காசு மட்டும் பெண்கள் கொடுக்க வேண்டு மா? ஓ, நாய் விற்ற காசு குறைக்காதே!

தமிழ் ஓவியா said...

பெற்றோர் இருக்கும் போது, பிள்ளைகள் காகத்திற்குச் சாதம் வைக்கலாமா?

தினசரி சாப்பிடும் முன் காகத்திற்கு சாதம் வைப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். பித்ரு தினங்களில் பெற்றோர் இல்லாதவர்கள் மட்டுமே வைக்க வேண்டும். அமாவாசை, முன்னோர் வழிபாட்டு நாள் போன்றவை பித்ரு தினங்களாகும்.

நமது கேள்வி:


காகங்கள் என்ன பித்ருக்களின் முகவர் களா? ஏமாந்த குழந்தைகளின் கைகளி லிருந்து காகம் கொத்திச் செல்லுகிறதே. அந்தப் பொருள் கூட பித்ருக்களுக்குத்தான் போய்ச் சேருமா