Search This Blog

12.10.09

தீபாவளி தமிழ்நாட்டில் எப்பொழுது நுழைந்தது?


புரட்டாசி

தீபாவளிப் பண்டிகை புரட்டாசி மாதத்தில் வருவதால் ஆட்டிறைச்சி விற்பனை குறைவாக இருக்கும் என வியாபாரிகள் கருதுகின்றனர். இதனால் கிராம வாரச் சந்தைகளில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர் என்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

தீபாவளி என்பதே முட்டாள்தனமான பண்டிகை _ ஆரிய திராவிடப் போராட்டத்தின் ஒரு பகுதி. அதற்குள் எத்தனை எத்தனை மூடத்தனங்களைக் கொட்டி வைத்துள்ளனர்.

யாகம் என்ற பெயரால் உயிர்ப்பலி செய்து, பசு மாட்டின் எந்தெந்தப் பாகத்தை எப்படி எப்படியெல்லாம் பாகம் செய்து சாப்பிட்டுக் களியாட்டம் போடவேண்டும் என்பதற்கெல்லாம் பார்ப்பனர்களின் சாஸ்திர நூல்களில் ஏராளம் இடம் உண்டு.

சிரார்த்தத்தில் விதிக்கப்பட்ட விதிப்படி பிராமணன், மாமிசத்தை தோஷமென்று புசியாவிட்டால் அவன் 21 ஜனனமும் பசுவாகப் பிறப்பான் (மனுதர்மம், அத்தியாயம் 5, சுலோகம் 35).

இந்த யோக்கியதையில் இருக்கிறது இவர்களின் கதை. அப்படி இருக்கும்போது புரட்டாசி என்ன - சனிக்கிழமை விரதம் என்ன- புலால் உண்ணக்கூடாது என்ற கட்டுப்பாடு என்ன?

சரி, தீபாவளி தமிழ்நாட்டில் எப்பொழுது நுழைந்தது?

தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் பதினோறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவரும் பெருநாள். இது பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படவேயில்லை. சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக்காலம்வரையில் இருந்த-தில்லை. (ஆதாரம்: அ.கி. பரந்தாமனார் எழுதிய மதுரை நாயக்கர் வரலாறு, பக்கம் 433_434).

ஆக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தீபாவளி தமிழ்நாட்டில் இல்லை.

கறி தின்பது என்பது தமிழர்களுக்கும் சரி, பார்ப்பனர்களுக்கும் சரி இயல்பான ஒன்றுதான். பழக்கமான ஒன்றுதான். அப்படியிருக்கும்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புகுத்தப்பட்ட, தீபாவளிப் பண்டிகை புரட்டாசி சனிக்கிழமையில் வந்தால் மட்டும் கறி சாப்பிடக்கூடாது என்பது எந்தப் பின்னணியில், எந்தப் பொருளில்?

பார்ப்பனர்கள் சைவர்களாகிவிட்டார்கள் என்ற ஒரு நிலையில் (அதுகூட உண்மையல்ல.பெரும்பாலான அசைவக் கடைகள் பார்ப்பனர்களை நம்பித்தான் ஓடுகின்றன) அந்தப் பண்பாட்டை தமிழர்கள்மீது திணிக்கும் எத்து வேலைதானே இது?

ஒவ்வொன்றிலும் பார்ப்பனிய முத்திரை என்று கலையும் தமிழர்களின் நித்திரை?

---------------- மயிலாடன் அவர்கள் 12-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

4 comments:

சுதாகர் said...

அப்படியே, ரமலான், பக்ரீத், கிறிஸ்துமஸ், புனித வெள்ளி-யும் எப்போ, எப்படி நுழைந்ததுன்னு சொன்னா ரொம்ப நல்லாருக்கும்.

கபிலன் said...

"இது பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படவேயில்லை. "

இது பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படவேயில்லை.

பெரும்பாலான பழந்தமிழர் இயக்கத்தில் சிவனைப் பற்றியும், பெருமாளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்களே...அப்போது....சிவனும், பெருமாளும் உண்மை தான் என்று ஒப்புக் கொள்கிறீர்களா?

தமிழ் ஓவியா said...

செஞ்சிட்டா போவுது சுதாகர்.

வேதமும் விஞ்ஞானமும்,
குரானோ குரான் பொன்ற நூலில் இது குறித்து விரிவாகப் எழுதப்பட்டுள்ளது. வாங்கிப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் சுதாகர்

தமிழ் ஓவியா said...

பழந்தமிழ் இலக்கியம் வேறு பக்தி இலக்கியம் வேறு கபிலன்