Search This Blog

2.10.09

ஒரு ஜாதி இந்து இன்னொரு ஜாதியாக மாற முடியுமா?


டாக்டர் பொன்முடி

கேள்வி: இந்து மதம் பெரும்பான்மை பெற்றதல்ல; பல்வேறு ஜாதிகளால் இந்துக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளதுபற்றி....

பதில்: கிறிஸ்துவ, இஸ்லாம் மதங்களிலும்கூட உட்பிரிவுகள் உண்டு; அமைச்சர்கள் அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பதால் பயன் ஏதும் இராது.

(கல்கி, 4.10.2009, கேள்வி_பதில்,பக்கம்81)

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் மானமிகு மாண்புமிகு முனைவர் க. பொன்முடி கூறியதில் என்ன தவறு இருக்கிறது?

இந்து மதத்தில் இல்லாததை அவர் அப்படி என்னதான் கூறிவிட்டார்? ஆனால், அதற்குப் பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு, கல்கிதான் அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்திருக்கிறது.

கிறிஸ்துவ, இஸ்லாம் மதங்களில் உட்பிரிவுகள் உண்டு, உண்மைதான்; ஆனால், அவை இந்து மதத்தில் உள்ள தீண்டாமையைப் போன்றதல்ல! தொடாதே, நெருங்காதே, பார்க்காதே என்கிற பாகுபாடுகள் கிடையாது. அந்த மதத்தில் உள்ளவர்கள் அதற்குரிய மதப் பாடங்களைப் படித்துத் தேர்ந்தால் பாதிரியாராகவோ, மவுல்வியாகவோ ஆக முடியும். ஆனால், இந்து மதத்தில் அந்த நிலை உண்டா?

அதற்கான காரணத்தைத்தான் அமைச்சர் க. பொன்முடி கூறியிருக்கிறார்.

ஒரு கிறித்துவன், முஸ்லிம் ஆகலாம்; ஒரு முசுலிம் கிறித்துவன் ஆகலாம்; ஆனால், ஒரு ஜாதி இந்து இன்னொரு ஜாதியாக மாற முடியுமா? அதற்கு அர்த்தமுள்ள இந்துமதத்தில் இடம் உண்டா?

இன்னும் சொல்லப்போனால், ஒரு முசுலிமோ, கிறித்தவரோ, இந்து ஆகவேண்டுமானாலும் அதற்கும்கூட இடர்ப்பாடு உண்டு. அப்படி இந்து மதத்திற்கு வரக்கூடியவர்கள் எந்த ஜாதியின்கீழ் வைக்கப்படுவார்கள் என்பதுதான் இந்து மதத்தின் ஆணிவேரைப் பிளக்கும் ஆயிரம் டாலர் கேள்வியாகும்.

அதுவும் இந்து மதத்தில் ஜாதிப் பேதம் என்பது பிறப்பின் அடிப்படையைச் சேர்ந்தது. செத்துச் சுடுகாட்டில் எரிக்க, புதைக்கச் சென்றால்கூட அங்கும் பறையன் சுடுகாடு, பார்ப்பான் சுடுகாடு இருக்கிறதே! இந்து மதத்தில் மனிதன் சாகிறான்; ஆனால், அவனைப் பிடித்த ஜாதி மட்டும் சாவதில்லை.

ஜாதியை ஏற்காதவன் இந்துவாக இருக்க முடியாது_ இதுதான் சாஸ்திரத்தின் சட்டத்தின் நிலைப்பாடு!

இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, அமைச்சர் பொன்முடிக்குப் பதில் சொல்வதாக நினைத்-துக்கொண்டு, பெருமாள் போய் பெத்த பெருமாளான கதையாக அல்லவோ கல்கி கதைக்கிறது!

அமைச்சர் பொன்முடி ஒரு வரலாற்றுப் பேராசிரியர், வெள்ளையர் நீக்ரோ பற்றிய நிறப் பேதத்தைப்பற்றியும், இங்குள்ள ஜாதிப் பேதத்தைப்பற்றியும் ஒப்பிட்டு ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

(நூல்: The Dravidian Movement and The Black Movement)

அவர் ஒன்றும் அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கவில்லை சரியாகத்தான் சரியானவைகளை இடித்துச் சொல்லியிருக்கிறார்.

------------ மயிலாடன் அவர்கள் 2-10-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

39 comments:

Gokul said...

௧. இந்து மதத்தில் உள்ள உட்பிரிவுகளில் தீண்டாமை உள்ளதுதான் , ஆனால் தீண்டாமையால் பாதிக்கபட்டோரும் இந்து என்ற பிரிவில்தான் வருகின்றனர் (அதாவது ஒரு வகையில் சிலை வழிபாடுதான் செய்கின்றனர், விபூதி இடுகின்றனர், இந்து கோவிலுக்குள் வருகின்றனர்).

ஆக எண்ணிக்கையில் இந்தியாவில் இந்துக்கள்தான் பெரும்பான்மையினர்.
அப்படி இல்லை என்று அமைச்சர் சொன்னால்,தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கலாமே?

ஜாதி விட்டு ஜாதி மாற முடியாதது என்பது உண்மையே , ஆனால் இஸ்லாத்தில்/கிறிஸ்துவத்தில் உட்பிரிவு மாறுவது கடினமா அல்லது மிகவும் எளிதா என்று அம்மதங்களை பின்பற்றும் சான்றோர் சொன்னால் நல்லது.

கலாட்டாப்பையன் said...

அய்யா கோகுல் அவர்களே,
இஸ்லாத்தில் ஜாதி கட்டமைப்பு என்ற ஒன்று இல்லவே இல்லை திருக்குரானும் அப்படி சொல்லவில்லை உங்களால் திரு குரானில் ஒரு இடத்தில குட அதை நிருபிக்க முடியாது , காலபோக்கில் ஒரு சில மக்களின் தவறான வழி காட்டலினால் இன்று ஷியா சுன்னி என்று அரசியல் காரணங்களுக்கு பிரிந்து போய் உள்ளனர். தமிழகத்தில் அதை வேரோடும் வேராடி மண்ணோடும் அழிப்பதற்கும் நபி வழியை பின்பற்றுவதற்கும் இன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் போன்ற கட்சிகள் பாடு பட்டு வருகின்றன.

ஜாதிகள் இருக்கிறது என்று உங்கள் வாதத்திற்கு அப்படியே வைத்து கொண்டாலும் நீங்கள் இஸ்லாம் மதத்திற்கு வந்தால் நீங்கள் எதை விரும்பு கின்றேர்களோ அதில் இருந்து விட்டு போங்கள் (இது கண்டிபாக உங்கள் வாதத்திற்கு மட்டுமே ஜாதி முன் வைக்க படுகிறது )

ஒரு சிலர் இங்கே கோதுமைக்கும் ரொட்டிக்கும் கிருத்தவ மதம் மற்றும் இஸ்லாமிய மார்கதிற்கும் மாறினார்கள் என்று சொல்லி கொண்டு அலைகின்றனர், அவர்காளிடம் நான் கேட்பது என்னவென்றால் ஒரு தலித்( நீங்கள் சொல்ல்வது போல அவரும் ஒரு இந்துதான்) சாம்பார் சாப்பாட்டிற்கு ஆசை பட்டு
ஜாதி மாற தயாராக இருக்கிறார் அவரை உங்கள் பிராமின ஜாதியில் சேர்த்து கொள்ள தயாரா ?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

கோகுல்
&

கலாட்டாப்பையன்

ஆனந்தன் said...

ஒரு கிறித்துவன், முஸ்லிம் ஆகலாம்; ஒரு முசுலிம் கிறித்துவன் ஆகலாம்; ஆனால், ஒரு ஜாதி இந்து இன்னொரு ஜாதியாக மாற முடியுமா? அதற்கு அர்த்தமுள்ள இந்துமதத்தில் இடம் உண்டா?

லூஸாப்பா நீ?

அதே போல ஒரு இந்து முஸ்லிமாகலாம்,இல்லன்னா கிருஸ்துவனாகலாம்

ஒரு லெப்பை ராவுத்தனாக முடியாது,ஒரு கிருஸ்துவ நாடார்,கிருஸ்துவ முதலியார் ஆக முடியாது.

கலாட்டாப்பையன் said...
அய்யா கோகுல் அவர்களே,
இஸ்லாத்தில் ஜாதி கட்டமைப்பு என்ற ஒன்று இல்லவே இல்லை திருக்குரானும் அப்படி சொல்லவில்லை உங்களால் திரு குரானில் ஒரு இடத்தில குட அதை நிருபிக்க முடியாது , காலபோக்கில் ஒரு சில மக்களின் தவறான வழி காட்டலினால் இன்று ஷியா சுன்னி என்று அரசியல் காரணங்களுக்கு பிரிந்து போய் உள்ளனர். தமிழகத்தில் அதை வேரோடும் வேராடி மண்ணோடும் அழிப்பதற்கும் நபி வழியை பின்பற்றுவதற்கும் இன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் போன்ற கட்சிகள் பாடு பட்டு வருகின்றன.

ஒரே இறை நம்பிக்கை கொண்டவர்களே பல்வேறு கட்சிகளாய் பிரிந்து இருக்கும் போது,சைவம்,வைணவம்,சாக்தம்,என இன்னும் பல இறை நம்பிக்கைகள் கொண்டவர்கள் பிரிந்து இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?


ஜாதி விட்டு ஜாதி மாற முடியாதது என்பது உண்மையே , ஆனால் இஸ்லாத்தில்/கிறிஸ்துவத்தில் உட்பிரிவு மாறுவது கடினமா அல்லது மிகவும் எளிதா என்று அம்மதங்களை பின்பற்றும் சான்றோர் சொன்னால் நல்லது?

இந்த கேள்விக்கு பதில் சொல்வத விட்டு விட்டு,ஜாதி பற்றிய கதை எதற்க்கு?

நான் ஒரு தலித், முஸ்லீமாக தயார், எனக்கு ஒரு சவுதி அரபியை மணம் முடிக்க ஆசை, உங்கள் தவ்கித் ஜமாத் அல்லது முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஏற்ப்பாடு செய்து தருமா?

Gokul said...

அன்புள்ள கலாட்டா பையன்,

முதலில் ஒரு சிறு suggestion, பதட்டபடாதிர்கள். நீங்கள் பதட்டம் அடைந்ததால் என்ன எழுதி இருக்கறீர்கள் என்று பாருங்கள்..

அ. //இஸ்லாத்தில் ஜாதி கட்டமைப்பு என்ற ஒன்று இல்லவே இல்லை //
நான் இஸ்லாமில் ஜாதி இருக்கிறது என்று சொல்லவே இல்லையே , நான் சொன்னது என்னவென்றால் **இஸ்லாத்தில்/கிறிஸ்துவத்தில் உட்பிரிவு மாறுவது**, கவனிக்கவும் உட்பிரிவு. ஷியா மற்றும் சன்னி எல்லாம் உட்பிரிவு அல்லாமல் மற்றென்ன? நீங்களாக நான் இஸ்லாமில் ஜாதி உள்ளதாக ஏன் கற்பனை செய்து கொள்ள வேண்டும்?


ஆ.நான் இந்து மதத்தில் ஜாதி மாறுவது முடியும் என்றே கூறவில்லை, அதை ஒத்துகொள்கிறேன் //ஜாதி விட்டு ஜாதி மாற முடியாதது என்பது உண்மையே //, அதனால் உங்கள் சாம்பார் சாத விளக்கம் இங்கே தேவை இல்லாதது.

இ. நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லை , இஸ்லாமில் ஷியாவில் இருந்து சன்னிக்கு மாறுவது எளிதா இல்லையா? அதற்கு பதிலாக நீங்கள் இந்து மதத்தில் இருந்து ஒரு இஸ்லாமிற்கு மாறினால் எந்த பிரிவிற்கும் செல்லலாம் என்று பதில் சொல்கறீர்கள்.கேட்டதற்கு நேரடியான பதில் இல்லை. மேலும் இங்கே மதமாற்றம் பற்றியும் பேச்சில்லை.

ஈ. 'உங்கள் பிராமண ஜாதி' : நான் பிராமணன் இல்லை ,

எ.இந்த விவாதமே அமைச்சர் பொன்முடி சொன்ன 'இந்துக்கள் பெரும்பான்மை இல்லை' என்ற வாதத்தின் மூலம் தொடங்கியது. இதை இப்படி compare செய்யலாமா?
இராக்கில் இஸ்லாம் ஷியா சன்னி என்று பிளவு பட்டு இருக்கிறது, அதனால் இராக்கில் இஸ்லாம் பெரும்பான்மை என்று சொல்ல முடியாது' - அபத்தமாக இல்லையா?

ஏ. இன்னமும் தலித்துக்கள் தங்களது மதம் என்று இந்து மதத்தைதான் குறிப்பிடுகிறார்கள் (விண்ணப்பங்களில் மற்ற அரசு தொடர்பான கோப்புகளில்) அப்படி இருக்கும்போது - சாதி/தலித் போன்றவைகளால் அவர்களை இந்து மதத்தில் இருந்து எப்படி பிரித்து பார்க்க முடியும்.

உ. நான் கேட்ட கேள்வி இன்னமும் இருக்கிறது 'இந்துக்கள் பெரும்பான்மை இல்லை 'என்று அமைச்சர் சொன்னால் - தமிழ்நாட்டில் இந்துக்களை சிறுபான்மை என்று அறிவிக்க அது தொடர்பான சலுகைகளை அளிக்க உங்களுக்கும் / தமிழோவியாவுக்கும் / அமைச்சர் பொன்முடிக்கும் / கலைஞருக்கும் சம்மதமா?

நம்பி said...

Blogger Gokul said...

// இந்துக்கள் பெரும்பான்மை இல்லை 'என்று அமைச்சர் சொன்னால் - தமிழ்நாட்டில் இந்துக்களை சிறுபான்மை என்று அறிவிக்க அது தொடர்பான சலுகைகளை அளிக்க உங்களுக்கும் / தமிழோவியாவுக்கும் / அமைச்சர் பொன்முடிக்கும் / கலைஞருக்கும் சம்மதமா?
October 4, 2009 9:26 AM //

யார் அந்த சிறுபான்மை இந்துக்கள்?

நம்பி said...

Blogger ஆனந்தன் said...

// நான் ஒரு தலித், முஸ்லீமாக தயார், எனக்கு ஒரு சவுதி அரபியை மணம் முடிக்க ஆசை, உங்கள் தவ்கித் ஜமாத் அல்லது முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஏற்ப்பாடு செய்து தருமா?
October 4, 2009 1:02 AM //

பலே! பலே! மதங்கள் மேட்ரி மோனி வேலையையும் பண்ண ஆரம்பிச்சுடுச்சா? நல்ல விஷயம் தான்.

சவுதி அரேபிய பெண்ணை மணக்க சவுதி அரேபிய பெண்ணின் சம்மதம் வேண்டாமா? பெண்ணின் குடும்ப சம்மதம் வேண்டாமா? ஸ்டெரெயிட்டா மெரேஜ்க்குத்தான் போகணுமா? பெண்ணின் சம்மதம் இருந்தா எந்த மதம் என்ன செய்யமுடியும்? எண்ணெய் கிணறு இருப்பதாலா..?

இதுக்காகத்தான் மதம் மாறவேண்டுமா? அப்படியே மாறினாலும் ஏன்? இங்கிருக்கும் இஸ்லாமியப் பெண்கள் வேண்டாமா? அதுக்கும் பெண்ணின் விருப்பம் இருந்தால் போதுமே..?

இது ஏதோ சவுதி அரேபியாவில ஒருதலையாய் பிக்ஸ் பண்ணிவிட்டு கேக்கற மாதிரி இருக்குதே...ஏதாவது சிக்கல் வந்துவிட்டதா...?

நம்பி said...

Blogger Gokul said...
//எ.இந்த விவாதமே அமைச்சர் பொன்முடி சொன்ன 'இந்துக்கள் பெரும்பான்மை இல்லை' என்ற வாதத்தின் மூலம் தொடங்கியது. இதை இப்படி compare செய்யலாமா?//

ஏன் compare செய்யக்கூடாது? அதற்கு வைக்கும் தீர்வு என்ன? இந்து மதம் எந்த அடிப்படையில் பெரும்பானமை பெறுகிறது?

உட்பிரிவின் அடிப்படையிலா? ஜாதி அடிப்படையிலா?

இந்து மதத்தின் உட்பிரிவுகள்... எத்தனை?

இந்து மதத்தில் பிரிக்கப்பட்ட ஜாதிகள் எத்தனை...?

எது பிரித்தது...?

வர்ணாசிரமம் என்றால் என்ன?

அந்த ஜாதிக்காரன் எங்குருந்து பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது..?

அவன் எங்கிருந்து இங்கு வந்தான்...?

இந்து மதத்தை எந்த ஜாதி உருவாக்கியது...?

ஒரு ஜாதி சுயநலத்திற்காக உருவாக்கியதை எப்படி இன்னொரு பெரும்பான்மை ஜாதியினர் இழிவுடன் பின்பற்ற முடியும்....?

இந்து மதக்காவலர்களாக கருதப்படும், தன்னைத்தானே கூறிக்கொள்ளும் ஜாதிப்பிரிவினர் யார்...?

அவர்கள் தான் தன்னைத்தானே இந்து மதக்காவலர்கள் காவலர்கள் என்று கூறுக்கொள்ளும் பொழுது, இந்து மதம் எப்படி பெரும்பான்மையினரின் மதமாக மாறமுடியும்...?

ஒன்று ஜாதியில்லாமல் இருக்க வேண்டும்...?

இல்லை உட்பிரிவுகள் இல்லாமல் இருக்கவேண்டும்...?

எல்லா கருமங்களும் இருக்கும் ஒரு மதத்தை எப்படி பெரும்பான்மையோர் விருப்பப்படும் மதமாக இருக்கமுடியும்?

இப்படி இதர மதங்களில் இருக்கிறதா...? உட்பிரிவு இருக்கும்? அதனுள் மோதல்களும் இருக்கும், அவைகள் செல்வாக்கு பற்றிய மோதல்கள்..? இங்கு அப்படியா...? ஜாதிகள் பற்றிய, தொழில்கள் பற்றிய மோதல்கள்? இழிவுகள் பற்றிய மோதல்கள். மற்றவங்க கிட்ட நல்ல விஷயத்தை எல்லாம் உற்று நோக்கறீங்க...ஆனா மாறமாட்டேங்கறீங்களே!

இங்கு முழுக்க முழுக்க அனைத்துமே குறை, முழுக்க முழுக்க இழிவுகள். அங்கு குறைவான குறைகள் நிறைவுகள் அதிகம்.

சரி, இந்து மதம் பெரும்பான்மையோர் என்று தீர்மானிக்கும் ? ஜாதி எது?

Gokul said...

//யார் அந்த சிறுபான்மை இந்துக்கள்? //

இப்போது தமிழக அரசு குடுக்கும் ஜாதி சான்றிதழில் மதம் என்ற பிரிவில் இந்து என்று போடும் அனைவருக்கும்தான்.
அவர்தான் "இந்துக்கள்" பெரும்பான்மை இல்லை என்று கூறுகிறாரே? அவர் ஒரு ஜாதியையோ / பிரிவையோ கூறவில்லையே?

Gokul said...

இதுதான் நான் எழுதிய "எ" point. இதை பாதியில் வகுத்து ஏன் compare செய்ய கூடாது என்று எழுதினால் என்ன பதில் சொல்வது. நான் கேட்ட கேள்வி "இராக்கில் இஸ்லாம் ஷியா சன்னி என்று பிளவு பட்டு இருக்கிறது, அதனால் இராக்கில் இஸ்லாம் பெரும்பான்மை என்று சொல்ல முடியாது' என்று சொல்லலாமா?"

நம்பி said...

//Blogger Gokul said...

//யார் அந்த சிறுபான்மை இந்துக்கள்? //

இப்போது தமிழக அரசு குடுக்கும் ஜாதி சான்றிதழில் மதம் என்ற பிரிவில் இந்து என்று போடும் அனைவருக்கும்தான்.
அவர்தான் "இந்துக்கள்" பெரும்பான்மை இல்லை என்று கூறுகிறாரே? அவர் ஒரு ஜாதியையோ / பிரிவையோ கூறவில்லையே?

April 15, 2011 9:04 PM//

இந்து என்று போட்டாலும் இந்து மதத்தை காப்பவன் நான் தான்...என்று மார்தட்டிக்கொண்டிருக்கிறதே ஒரு பூணூல் கூட்டம் அதை காப்பதற்குத்தான் எனக்கு பூணூல் அணிவிக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறதே அந்தக் கூட்டம்....எல்லோருமே எனக்கு கீழ்தான், ஏனென்றால் நான் தான் இந்து மதக் கடவுள் என்று ஒரு ஜாதிக் கூறிக்கூண்டிருக்கிறதே!...

கடவுளும் பூணூல் போடுகிறார் நானும் பூணூல் போட்டுக்கொள்கிறேன்....

அப்போது இந்து மதம் ஜாதி அடிப்படையில் வந்து விடுகிறதே அதைத்தான் குறிப்பிடுகிறார் அமைச்சர்...


அமைச்சர் பொன்முடி கூறியவை....

இந்து மதம் பெரும்பான்மை பெற்றதல்ல; பல்வேறு ஜாதிகளால் இந்துக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளதுபற்றி.

//Blogger Gokul said...

இதுதான் நான் எழுதிய "எ" point. இதை பாதியில் வகுத்து ஏன் compare செய்ய கூடாது என்று எழுதினால் என்ன பதில் சொல்வது. நான் கேட்ட கேள்வி "இராக்கில் இஸ்லாம் ஷியா சன்னி என்று பிளவு பட்டு இருக்கிறது, அதனால் இராக்கில் இஸ்லாம் பெரும்பான்மை என்று சொல்ல முடியாது' என்று சொல்லலாமா?"

April 15, 2011 9:10 PM//

இதற்கு வைத்தது...

ஒன்று ஜாதியில்லாமல் இருக்க வேண்டும்...?

இல்லை உட்பிரிவுகள் இல்லாமல் இருக்கவேண்டும்...?

எல்லா கருமங்களும் இருக்கும் ஒரு மதத்தை எப்படி பெரும்பான்மையோர் விருப்பப்படும் மதமாக இருக்கமுடியும்?ஈராக்கில் உள்ள சன்னி, ஷியா என்பது உட்பிரிவுகள்...இங்கு (இத்துப்போன இந்து மதத்தில்) ஜாதிகள் 6000.

இங்கு (ஈராக்கில்) இரண்டே இரண்டு உட்பிரிவுகள்....

இங்கு (இந்து மதத்தில்) உட்பிரிவுகள் என்னென்ன?

சமணம், வைணவம், சைவம், பௌத்தம், ஜைனம், சீக்கியம்...பொட்டு, புடலங்கா போன்ற நிறைய உட்பிரிவுகள்...இது எல்லாம் இந்து மதமா? ஆனால் இது எல்லாமே இந்திய சட்டப்பிரிவில் உட்பிரிவுகளாக உள்ளவைகள் தான். இது மொத்தத்தையும் இந்து மதம் என்றே சொல்லப்படுகிறது. இது பெரும்பான்மையா?

ஈராக்கில் இப்படி பிரிக்கப்பட்டிருக்கிறதா...? ஜாதிகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறதா? இதுதான் கேள்வி...?

அதைத்தான் அமைச்சர் குறிப்பிடுகிறார். பதிவிலேயே எல்லா விஷயங்களும் விளக்கமாக உள்ளன.

முந்தய பின்னூட்டத்தில் அனைத்தையும் விளக்கித்தான் வைக்கப்பட்டுள்ளது. சிலவற்றை கேள்விகளாக வைக்கப்பட்டுள்ளது.

திருப்பி அதையேதான் இப்பொழுதும் வைக்கப்பட்டுள்ளது. புரியாமல் வைக்கவில்லை. ஒவ்வொன்றிற்கும் மேற்கோளிடவில்லை அவ்வளவுதான்.

Gokul said...

மன்னிக்கவும் , நான் quote செய்ய மறந்து விட்டேன்

//எ.இந்த விவாதமே அமைச்சர் பொன்முடி சொன்ன 'இந்துக்கள் பெரும்பான்மை இல்லை' என்ற வாதத்தின் மூலம் தொடங்கியது. இதை இப்படி compare செய்யலாமா? இராக்கில் இஸ்லாம் ஷியா சன்னி என்று பிளவு பட்டு இருக்கிறது, அதனால் இராக்கில் இஸ்லாம் பெரும்பான்மை என்று சொல்ல முடியாது' - அபத்தமாக இல்லையா?
//

இதுதான் நான் எழுதிய "எ" point. இதை பாதியில் வகுத்து ஏன் compare செய்ய கூடாது என்று எழுதினால் என்ன பதில் சொல்வது. நான் கேட்ட கேள்வி "இராக்கில் இஸ்லாம் ஷியா சன்னி என்று பிளவு பட்டு இருக்கிறது, அதனால் இராக்கில் இஸ்லாம் பெரும்பான்மை என்று சொல்ல முடியாது' என்று சொல்லலாமா?" இதற்கு என்ன பதில்?

Gokul said...

மேலும் இங்கே அமைச்சர் இரண்டு விஷயங்களை சொல்லி இருக்கிறார்

1.இந்து மதத்தில் ஜாதிகள் இருக்கின்றன
2.இந்துக்கள் பெரும்பான்மை கிடையாது.

இந்து மதத்தில் (அது மதமா இல்லை வேறு எதாவதா என்பது இங்கு விவாதம் இல்லை) பல ஜாதிகள் அது எப்படி வந்தது , அது நியாயமா என்பது பற்றி நான் கருத்து கூறவே இல்லை , நான் சொன்னது இப்போது அரசாங்கம் தரும் ஜாதி சான்றிதழ்கள் , இந்து சமயம் + இந்த ஜாதி என்றுதான் தருகின்றன . மதம் மாறுவதற்கான படிவத்திலும் "Hinduism" என்று குறிப்பிட்டு இருக்கிறது (http://www.tn.gov.in/appforms/Proforma-2.pdf ) அப்படி என்றால் அமைச்சர் அங்கம் வகிக்கும் அரசாங்கம் சொல்லும் இந்த இந்து என்பதற்கான விளக்கம் என்ன? தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரில் இருக்கும் இந்து யார்/என்ன? அரசாங்கம் தரும் ஜாதி சான்றிதழ் மூலமாக கணக்கெடுத்தாலும் அதில் அதிக சான்றிதழ்கள் Religion என்ற இடத்தில் இந்து என்று போடப்பட்ட சான்றிதழ்கள் தான் அதிகம் இருக்கும், இதன் மூலமாகவே இந்துக்கள் பெரும்பான்மை என்று கூறுகிறேன். இது எப்படி தவறாகும்?

எல்லாவற்றிக்கும் மேலாக தமிழ்நாடு அரசின் வலைத்தளத்திலேயே இந்துக்கள் பெரும்பான்மை என்ற விவரம் இருக்கிறது

http://www.census2001.tn.nic.in/religion.aspx

நம்பி said...

Blogger Gokul said...

//எ.இந்த விவாதமே அமைச்சர் பொன்முடி சொன்ன 'இந்துக்கள் பெரும்பான்மை இல்லை' என்ற வாதத்தின் மூலம் தொடங்கியது. இதை இப்படி compare செய்யலாமா? இராக்கில் இஸ்லாம் ஷியா சன்னி என்று பிளவு பட்டு இருக்கிறது, அதனால் இராக்கில் இஸ்லாம் பெரும்பான்மை என்று சொல்ல முடியாது' - அபத்தமாக இல்லையா?
//

ஏன் compare பண்ணக்கூடாது...ஈராக்கில் உள்ள இஸ்லாமிய சமயத்தில் இம்மாதிரி பிரிவினைகள் இல்லை...

அவர் அமைச்சராக இருந்தால் என்ன? கருத்து தெரிவிப்பதற்கு உரிமை இருக்கிறது. மக்கள் பிரதிநிதி தானே...அவரை எப்படி? இந்து மதவாதியாக நீங்களே மாற்ற முடியும்.

இந்து மதமே ஒரு சாராருடைய மதமாக மாறிவிட்டபிறகு அதை எப்படி பெரும்பான்மை மக்களின் மதமாக ஆக முடியும்?

எல்லோருடைய மதமா அது? அப்படி எந்த சமத்துவமும் அந்த மதத்தில் இல்லையே! இது மாதிரி ஜாதிப் பிரிவினைகள் இஸ்லாத்தில் இல்லை. ஏற்றத்தாழ்வுகள் இல்லை...அங்கே கருத்து தெரிவித்திருக்க மாட்டார்கள். உட்பிரிவுகள் சண்டைதான்.

இங்கு உட்பிரிவும் இருக்கிறது...ஜாதியும் இருக்கிறது...ஏற்றத்தாழ்வும் இருக்கிறது...இதை எதற்கு பொரும்பான்மையோரின் மதமாக கருத முடியும்? அது தான் கேள்வி...?

பதிவில் உள்ளது...
//ஒரு ஜாதி இந்து இன்னொரு ஜாதியாக மாற முடியுமா? அதற்கு அர்த்தமுள்ள இந்துமதத்தில் இடம் உண்டா?//

பௌத்தம் இந்துமதம் என்று பௌத்த்ர்கள் ஒத்துக்கொள்வார்களா? அப்புறம் எதற்கு அம்பேத்கார் பௌத்தத்திற்கு மாறினார்.


சீக்கியர்கள் இந்துமதமாக நினைத்திருந்தால் காலிஸ்தானம் என்று வந்திருக்காதே...!

இப்போது இந்து மதத்தை பார்த்தால் அப்த்தமாக இல்லையா? பெரும்பான்மை என்று சொன்னால் அபத்தமாக இல்லையா..? அதனால் சொல்லியிருக்கிறார் அது பெரும்பான்மையோரின் மதமல்ல.

சாதி சான்றிதழில் இந்துக்கள் என்று வந்துவிட்டாலே அவர் இந்து தான் என்றால் அவரை இந்து அறநிலையத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட கோயிலில் உள்ளே விட மறுக்கின்றனர், இது அபத்தமாக இல்லையா? இது மாதிரி இசுலாத்தில் உள்ளதா?

ஒருவர் அது மாதரி பார்க்கவில்லை என்பதற்காக...மற்றவர்கள் இந்து மதத்தை அபத்தமாக பார்ப்பதை எப்படி தடுக்கமுடியும்.?..

...எங்களுக்கே இந்த இந்து மதம் அப்த்தமாக தெரிகிறதே...அந்த கருத்தை தெரிவித்திருக்கிறார். ஏன் தெரிவிக்க கூடாது கம்பேர் பண்ணக்கூடாது?....இதற்கு தடை விதித்திருக்கிறார்களா? அது தான் கேள்வி...அவர் தெரிவித்த கருத்துக்குத்தான் பதிவு வெளியிடப்படுகிறது...அப்புறம் அதையே கிண்டினால் என்ன அர்த்தம்.


ஈராக்கில் கருத்து தெரிவிக்கவில்லை என்று எப்படி அவ்வளவு உறுதியாக கூறுகிறீர்கள்? அப்படி அவர்கள் தெரிவிக்கவில்லை என்றால் இங்கு அப்படி தெரிவிக்க கூடாது என்று நீங்கள் எப்படி கூறமுடியும்?


....எதற்கு சாதி சான்றிதழ் கொடுக்கிறீர்கள்...இது என்ன? அவரா கொடுக்கிறார். இந்திய சட்டப்படி சான்றிதழ் கொடுக்கிறார்கள். சான்றிதழ் வேண்டாம் என்பவர்களுக்கும் தான் ஜாதி சான்றிதழ் கொடுக்கிறார்கள்.

நடிகர் கமல்ஹாசன் ஜாதி, மதம் வேண்டாம், தெரிவிக்க விரும்பவில்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் ஜாதி, மதம் போட்டுத்தானே பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

இந்த கருத்துக்கு மக்கள் எதிரிப்பு தெரிவிக்கவில்லையே.

மக்களாகிய நாங்கள் ஆதரவு தருகிறோமே!.....நாங்கள் என்ன அராசங்கம் தந்த ஜாதி சான்றிதழ் வாங்காதவர்களா?

நம்பி said...

Blogger Gokul said...

//இந்து மதத்தில் (அது மதமா இல்லை வேறு எதாவதா என்பது இங்கு விவாதம் இல்லை) பல ஜாதிகள் அது எப்படி வந்தது , அது நியாயமா என்பது பற்றி நான் கருத்து கூறவே இல்லை , நான் சொன்னது இப்போது அரசாங்கம் தரும் ஜாதி சான்றிதழ்கள் , இந்து சமயம் + இந்த ஜாதி என்றுதான் தருகின்றன . மதம் மாறுவதற்கான படிவத்திலும் "Hinduism" என்று குறிப்பிட்டு இருக்கிறது (http://www.tn.gov.in/appforms/Proforma-2.pdf ) அப்படி என்றால் அமைச்சர் அங்கம் வகிக்கும் அரசாங்கம் சொல்லும் இந்த இந்து என்பதற்கான விளக்கம் என்ன? தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரில் இருக்கும் இந்து யார்/என்ன? அரசாங்கம் தரும் ஜாதி சான்றிதழ் மூலமாக கணக்கெடுத்தாலும் அதில் அதிக சான்றிதழ்கள் Religion என்ற இடத்தில் இந்து என்று போடப்பட்ட சான்றிதழ்கள் தான் அதிகம் இருக்கும், இதன் மூலமாகவே இந்துக்கள் பெரும்பான்மை என்று கூறுகிறேன். இது எப்படி தவறாகும்?//

அராசாங்கம் ஜாதி சான்றிதழ் கொடுத்தாலும்....இந்த ஜாதிக்காரர் மட்டும் தான் கோயிலில் கருவறைக்குள் நுழையலாம்...இந்த ஜாதிக்காரர் மட்டும்தான் இந்து மதத்தைக்காக்கும் உரிமை கொண்டவர் என்று கூறப்படுவது...இந்த ஜாதிக்காரர் மட்டும் தான் இந்து மத மடாலயத்தின் தலைவராக இருக்கமுடியும்...

இந்த இந்து மதத்தில் ஒரு ஜாதியில் இருந்து இன்னொரு ஜாதிக்கு மாறமுடியாது.

அப்படி மாற முடியாத இந்த இந்து மதத்தை எப்படி பெரும்பான்மையோர் மதம் என்று கூற முடியும் இது அபத்தாமாக இல்லையா? என்று கேட்கிறோம்? இது எப்படி தவறாகும்..? இது எப்படி அபத்தமாகும்.

இந்த இந்து மதத்தில் பின்பற்றுபவைகள் அனைத்தும் அபத்தமாகும் என்று கூறுகிறோம் இது எப்படி தவறாக முடியும்.

Gokul said...

முதலில் இரு விஷயங்களை தெளிவு படுத்த விரும்புகிறேன்..

முதலில்
இந்த பதிவில் அமைச்சர் பொன்முடி கூறியது ஒரு Quantity பற்றிய கணக்கு. இந்து மதத்தில் உள்ள ஏற்ற தாழ்வு பற்றி கூறியதாக இந்த பதிவில் இருக்கிறதா ?
அப்படி Quantity பற்றிய தகவல் ஒரு அமைச்சர் கூறுகிறார் என்றால் அதற்கு ஆவணம் இருக்க வேண்டும். அல்லது அதற்கு எதிராகவாது ஆவணம் இல்லாமல் இருக்க வேண்டும் .

நான் இந்த விஷயத்தில் இந்துக்கள் எப்படி பெரும்பான்மை என்று அரசாங்க ஆவணத்தோடு / சான்றுகளோடு கூறி இருக்கிறேன். நீங்கள் மறுத்தால் இந்துக்கள் ஏன் அரசாங்கம் define செய்து
இருப்பவர் சிறுபான்மை என்று அரசாங்க ஆவணத்தோடு சான்றளித்து விட்டு அதற்கு பிறகு மற்ற விஷயங்களுக்கு வாருங்கள்.

Gokul said...

இரண்டாவது நீங்கள் சொன்ன ஜாதி பிரச்சினை , மேல் ஜாதி கீழ் ஜாதி, தீண்டாமை என அனைத்தும் உங்களை விட தெளிவாக தமிழோவிய அவர்களின் வலைமனையில் ஏற்கனவே

இருக்கிறது , அதற்கு இந்த பதிவு தேவை இல்லை.
இங்கு பிரச்சினையே Quantity.

Gokul said...

இரண்டாவது நீங்கள் சொன்ன ஜாதி பிரச்சினை , மேல் ஜாதி கீழ் ஜாதி, தீண்டாமை என அனைத்தும் உங்களை விட தெளிவாக தமிழோவிய அவர்களின் வலைமனையில் ஏற்கனவே

இருக்கிறது , அதற்கு இந்த பதிவு தேவை இல்லை.
இங்கு பிரச்சினையே Quantity.

Gokul said...

மேலும் ஒரு கேள்வி,
நீங்கள் இந்து என்ற மதம் இருக்கிறது என்று நினைக்கறீர்களா?
இல்லை என்றால் , இல்லாதது என்று நீங்கள் நம்பும் விஷயம் சிறுபான்மையா அல்லது பெரும்பாண்மையா என்று கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை.

ஆம் இருக்கிறது என்றால், உங்களுடைய definition என்ன?

Gokul said...

//அவர் அமைச்சராக இருந்தால் என்ன? கருத்து தெரிவிப்பதற்கு உரிமை இருக்கிறது. மக்கள் பிரதிநிதி தானே...அவரை எப்படி? இந்து மதவாதியாக நீங்களே மாற்ற முடியும். //

அமைச்சருக்கு கருத்து தெரிவிப்பதற்கு உரிமை இல்லை என்று நான் கூறினேனா ? விஷயமே அவர் கூறியது தவறா இல்லையா என்பதுதானே! அவரது உரிமை பிரச்சினை எங்கிருந்தது வந்தது?

மேலும் ஒன்று, அவர் அமைச்சர் என்பதால்தான் பிரச்சினை, அமைச்சர் மக்களின் பிரதிநிதி என்பதால் அவர் அரசாங்கத்தின் பிரதிநிதி இல்லை என்பதல்ல அர்த்தம். நான் சொல்லும் விஷயமே அதுதான் தமிழக அரசின் வணத்தோடு முரண்பட்டு ஒரு அமைச்சர் பேசக்கூடாது என்பதுதான் , இந்த விஷயத்தை அரசாங்க பொறுப்பு இல்லாத நான் பேசலாம் ஆனால் ஒரு அமைச்சர் பேசலாமா?

இப்படி வைத்துகொள்வோம் , தமிழ்நாட்டில் மொத்தம் 30 மாவட்டங்கள்தான் இருக்கிறது என்று ஒரு அமைச்சர் பேசுகிறார் , உடனே அவரை ஆதரிப்பவர் (உங்களை போல் ஒருவர்) ஆமாம் 30 மாவட்டங்கள்தான் இருக்கிறது அரியலூர் மாவட்டமும் நாமக்கல் மாவட்டமும் மிகவும் சிறியது அதனால் 32 மாவட்டங்கள் இல்லை 30 மாவட்டங்கள்தான் இருக்கிறது என்று சொன்னால் அது சரியா? அது அரசாங்க ஆவணத்தோடு முரண்படுகிறது.

அரசாங்க ஆவணத்தோடு முரண்படுகிற எந்த விஷயத்தையும் பேசக்கூடாதா என்றால் பேசலாம் தாராளமாக பேசலாம் அதை அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர் பேசக்கூடாது.எதிர்கட்சிகள் கூறும் குற்றசாட்டை அரசாங்க புள்ளி விவரப்படி மறுப்பவர்தானே ஆளுங்கட்சி அமைச்சர், அந்த மாதிரியான புள்ளிவிவரத்தை அவரே எப்படி மறுத்து பேசுவது.அவரே அவரின் அரசாங்க கணக்கெடுப்பை நம்ப வில்லை என்றால் அவர் கூறும் மற்ற புள்ளிவிவரத்தை மற்றவர் எப்படி நம்புவர்?

Gokul said...

//எங்களுக்கே இந்த இந்து மதம் அப்த்தமாக தெரிகிறதே...அந்த கருத்தை தெரிவித்திருக்கிறார். ஏன் தெரிவிக்க கூடாது கம்பேர் பண்ணக்கூடாது?....இதற்கு தடை விதித்திருக்கிறார்களா? அது

தான் கேள்வி...அவர் தெரிவித்த கருத்துக்குத்தான் பதிவு வெளியிடப்படுகிறது...அப்புறம் அதையே கிண்டினால் என்ன அர்த்தம். //

ஏன் தெரிவிக்க கூடாது? தெரிவிக்கலாம், தெரிவித்த கருத்து தவறா சரியா என்பதுதான் பிரச்சினை. இதற்கு தடை விதிக்க வேண்டும் நான் சொன்னேனா?

Gokul said...

//எதற்கு சாதி சான்றிதழ் கொடுக்கிறீர்கள்...இது என்ன? அவரா கொடுக்கிறார். இந்திய சட்டப்படி சான்றிதழ் கொடுக்கிறார்கள். //

அப்போது அமைச்சர் பொன்முடிக்கும் , அரசாங்கத்திற்கும் சம்பந்தம் இல்லையா? அரசாங்கத்தின் கொள்கை முடிவிற்கும் அதில் அங்கம் வகிக்கிற அமைச்சருக்கும் தொடர்பு இல்லையா?

அவர் சார்ந்திருக்கும் கட்சிதான் மத்திய அமைச்சரவையிலும் இருக்கிறது. மத்திய அரசின் பதவியில் இருக்கும் இவரது கட்சியும் இவரும்தான் கொள்கை முடிவிற்கும் காரணமாக இருக்க முடியும். பதவிக்கு மட்டும்தானா.. கொள்கை முடிவிற்கு இல்லையா?

Gokul said...

//அராசாங்கம் ஜாதி சான்றிதழ் கொடுத்தாலும்....இந்த ஜாதிக்காரர் மட்டும் தான் கோயிலில் கருவறைக்குள் நுழையலாம்...இந்த ஜாதிக்காரர் மட்டும்தான் இந்து மதத்தைக்காக்கும் உரிமை கொண்டவர் என்று கூறப்படுவது...இந்த ஜாதிக்காரர் மட்டும் தான் இந்து மத மடாலயத்தின் தலைவராக இருக்கமுடியும்...இந்த இந்து மதத்தில் ஒரு ஜாதியில் இருந்து இன்னொரு ஜாதிக்கு மாறமுடியாது.

அப்படி மாற முடியாத இந்த இந்து மதத்தை எப்படி பெரும்பான்மையோர் மதம் என்று கூற முடியும் இது அபத்தாமாக இல்லையா? என்று கேட்கிறோம்? இது எப்படி தவறாகும்..? இது எப்படி அபத்தமாகும். //

இதெல்லாம் நான் மறுக்கவில்லையே , நீங்கள் கூறுவது எல்லாம் இந்து மதத்தின் குறைகள். இதன் மூலம் தொகை எப்படி கூடும் குறையும்.? மேலும் அப்படி மாற முடியாதது என்று அமைச்சர் சார்ந்து இருக்கும் அரசு நினைத்து இருந்தால் ஏன் "அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்" என்ற சட்டம் கொண்டு வர வேண்டும். அது மாற்றத்திற்கு வழிதானே?

Gokul said...

இறுதியாக இரண்டு விஷயங்களுக்கு பதில் தெரிந்தால்தான் மேற்கொண்டு போக முடியும்

இந்துக்கள் சிறுபான்மையினர் என்பதற்கு அரசாங்க ஆவணம் ஆதாரம் இருக்கிறதா?
இந்து என்பதற்கு உங்கள் definition?

நம்பி said...

Blogger Gokul said...

//அமைச்சருக்கு கருத்து தெரிவிப்பதற்கு உரிமை இல்லை என்று நான் கூறினேனா ? விஷயமே அவர் கூறியது தவறா இல்லையா என்பதுதானே! அவரது உரிமை பிரச்சினை எங்கிருந்தது வந்தது?//

நிச்சயமாக தவறே இல்லை....!

நன்றாக பதிவைப்பார்த்து விட்டு....

கேள்வி: இந்து மதம் பெரும்பான்மை பெற்றதல்ல; பல்வேறு ஜாதிகளால் இந்துக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளதுபற்றி...

இதற்கான விளக்கம் பதிவில் வைக்கப்பட்டுள்ளது.

(இது தவறு! என்றால் வழக்குப் போடு!...அப்புறம் நீதிபதி தூக்கி கடாசுவாறு கேஸ் கட்டை...தூ என்று துப்பி)

தவறா இல்லையா ? என்று கேட்டுவிட்டு "உரிமை பிரச்சினை எங்கிருந்து வந்தது?" என்று மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினால் எப்படி?

இப்படி கேட்பதே உரிமை மீறல்...

நீங்கள் யார்? அவர் உரிமையை தடுப்பதற்கு...? ஏதாவது தடை இருக்கிறதா? இந்த பக்கம் இருப்பவர்கள் அது மாதிரி சான்றிதழ் பெறாதவர்களா? இது பற்றி பல இடங்களில் கருத்து வைக்கப்பட்டிருக்கிறதே....பெரியார் இது பற்றி பல இடங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறாரே...இங்கேயே பதிவுகள் இருக்கிறதே...

சட்டமே மதவாதத்துடன்...அர்த்தமற்றதாக இருப்பதாகத் தான் குற்றசாட்டு....அப்படி கூறுவதை நீங்கள் எப்படி தடுக்க முடியும்.

பலர் இந்து மதத்தில் இருந்து கொண்டு தான் இந்து மதத்தை எதிர்க்கிறோம்....மதமே தேவையில்லை என்ற வாதத்தை வைக்கிறோம். சட்டங்கள் திருத்தப்படவேண்டியவைகள் தான். அதற்காகத்தான் இந்த விமர்சனங்கள்.

இந்தியாவில் இந்துக்கள் எனப்படுவோர் 80 சதவீதத்தினர் இருக்கிறார்கள் என்று எவருக்கும் தெரியாதா? அது அபத்தமானது என்பது எங்கள் பக்க குற்றசாட்டு.

அதைத்தான் கருத்து தெரிவித்து இருக்கிறார். உங்களுக்கு தவறு என்பது உங்கள் பார்வையாக இருக்கலாம்......நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எப்படி கட்டாயப்படுத்த முடியும்?

சட்டத்தை விமர்சிக்கலாம்...அதற்கும் மக்களுக்கு உரிமை உண்டு....ஏன் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குப் போடுங்களேன் பார்ப்போம்.

மத்தவங்களுக்கு வழக்குப் போடத் தெரியாதா? பத்திரிகை காரங்களுக்கு வழக்குப் போடத் தெரியாதா? இல்லை இந்துத்துவா அமைப்பிற்கு வழக்குப் போடத் தெரியாதா? அவங்களை விடவா?


அதற்கு முன் தீர்ப்பை எப்படி எழுத முடியும்.

நம்பி said...

Blogger Gokul said...

//நான் இந்த விஷயத்தில் இந்துக்கள் எப்படி பெரும்பான்மை என்று அரசாங்க ஆவணத்தோடு / சான்றுகளோடு கூறி இருக்கிறேன். நீங்கள் மறுத்தால் இந்துக்கள் ஏன் அரசாங்கம் define செய்து
இருப்பவர் சிறுபான்மை என்று அரசாங்க ஆவணத்தோடு சான்றளித்து விட்டு அதற்கு பிறகு மற்ற விஷயங்களுக்கு வாருங்கள்.

April 18, 2011 10:59 PM//

எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்...

இதை define பண்ணவே தேவையில்லை...எதற்காக சொல்லப்பட்டது என்பதை பதிவிலேயே Define பண்ணியாச்சு....

அடிக்கடி குவிஸ் புரோகிராம் எதாவது நடத்தப்படுகிறதா? இணையத்தில் இருக்கும் தகவலை எதுக்கு அடிக்கடி define பண்ணவேணும்.

இன்னும் என்னென்ன Define பண்ண வேண்டும் என்று கேட்கப்படுகிறது...? தெரியவில்லை...எத்தனை சதவீதம் மக்கள் கேட்கப்படுகிறதா?

அதெல்லாம் இந்திய மதங்கள் என்ற தலைப்பில் இணையத்தில் உள்ளன்....இந்திய அரசு தளத்திலேயே, இந்தியாவில் பின்பற்றப்படும் மதங்களின் சதவீதங்களாக உள்ளன். சென்று பார்த்து கொள்ளலாம். இது பெரியவிஷயமில்லை.

நாங்கள் தெரிந்து தான் கூறுகிறோம்...எதற்காக கூறுகிறோம் என்பதற்கான பதில்கள் தான் பதிவில் கூறப்பட்டவைகள். இது தவறே அல்ல. அரசின் கொள்கை முடிவாக கூட எடுத்துக்கொள்ளலாம்.

இந்தியாவின் அடிப்படை உரிமைகளில் நினைத்த மதத்தை தழுவுவதற்கும், சமயத்தை கைவிடுவதற்கும், கருத்து சுதந்திரத்திறகும் அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இந்த கருத்து. இதை தடை செய்ய யாருக்கும் உரிமை கிடையாது.

பெரும்பான்மை பெற்ற மதம் என்பதை யாரும் எடுத்துக் கொள்ளத் தயாராயில்லை, இந்த பக்கம்.


இதை Define பண்ண தேவையே இல்லை...தவறே இல்லை...!

தவறு என்றால் வழக்கு போடுங்கள் பார்க்கலாம்.

தீர்ப்பு என்ன வருகிறது என்று தெரிந்து கொள்ளலாமே...?

(காமராஜர் காலத்தில அணைகட்டினாங்க திராவிட ஆட்சி காலத்தில ஒரு அணை கூட கட்டவேயில்லை என்று ஆதாரமில்லாம தெரிவித்தது மாதிரி கிடையாது.

அபத்தமான சட்டத்தை தெரிந்தே இதை தெரிவித்து கொண்டிருக்கிறோம் இன்னும் தெரிவிப்போம். தவறில்லை.

நம் நாடே மதச்சர்பற்ற நாடு. இந்திய அரசின் முகப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்புறம் இந்த கருத்தை எப்படி தவறு என்று கூற முடியும்?

நம்பி said...

//இந்துக்கள் சிறுபான்மையினர் என்பதற்கு அரசாங்க ஆவணம் ஆதாரம் இருக்கிறதா?
இந்து என்பதற்கு உங்கள் definition?

April 18, 2011 11:05 PM//

ஆவணங்களில் குறிப்பிட்டப்பட்டுள்ளதற்காக, இந்துக்கள் சிறுபான்மையினர் என்ற கருத்தை தெரிவிக்க கூடாது என்று ஏதாவது உத்தரவுகள் இருக்கிறதா?

ஆவணங்களில் உள்ளதினால், இந்துக்கள் பெரும்பான்மையினர் இல்லை என்று கூறுவதற்கு ஏதாவது தடையுத்தரவுகள், பெற்ப்பட்டுள்ளதா? நீதமன்றங்கள் தடையுத்தரவு கொடுக்கப்பட்டுள்ளதா? அது மாதிரி ஆவணங்கள் இருந்தால் காட்டவும்.

அதை காட்டினால் தான் மேலும் இது பற்றி வளர்க்கவேமுடியும்? (ஆரம்பத்திலிருந்தே இது தேவையற்றது)...இதுவும் இறுதியாகவென்றே எடுத்து கொள்ளலாம்.

நம்பி said...

Blogger Gokul said...

//மேலும் ஒன்று, அவர் அமைச்சர் என்பதால்தான் பிரச்சினை, அமைச்சர் மக்களின் பிரதிநிதி என்பதால் அவர் அரசாங்கத்தின் பிரதிநிதி இல்லை என்பதல்ல அர்த்தம். நான் சொல்லும் விஷயமே அதுதான் தமிழக அரசின் வணத்தோடு முரண்பட்டு ஒரு அமைச்சர் பேசக்கூடாது என்பதுதான் , இந்த விஷயத்தை அரசாங்க பொறுப்பு இல்லாத நான் பேசலாம் ஆனால் ஒரு அமைச்சர் பேசலாமா?//

பேசலாம்...அவருக்கு தெரியாதது அல்ல...நமக்கே தெரியும் போது அவருக்கு தெரியாதா? அவர் என்ன படிக்காதவரா? முனைவராக இருந்தவராயிற்றே...தவிர பத்திரிகைக்குத் தான் பேட்டியளித்திருக்கிறார்.

அது சட்டத்தை மீறுவது என்று தெரிந்திருந்தால் அப்பொழுதே அவரால் தடுத்திருக்க முடியும்.

முரண்பட்ட மதத்தை பற்றி முரண்பட்ட விஷயங்கள் அந்த மதத்தில் இருப்பதை பற்றி நிச்சயமாக பேசலாம. சட்டம் அந்த உட்பிரிவையெல்லாம் மறைத்துவிட்டு பெரும்பான்மை என்று ஒரு அபத்தமான கணக்கை காட்டிக்கொண்டிருக்கிறது என்று கூட கருத்து சொல்லலாம். தவறில்லை.

நம்பி said...

Blogger Gokul said...

//இப்படி வைத்துகொள்வோம் , தமிழ்நாட்டில் மொத்தம் 30 மாவட்டங்கள்தான் இருக்கிறது என்று ஒரு அமைச்சர் பேசுகிறார் , உடனே அவரை ஆதரிப்பவர் (உங்களை போல் ஒருவர்) ஆமாம் 30 மாவட்டங்கள்தான் இருக்கிறது அரியலூர் மாவட்டமும் நாமக்கல் மாவட்டமும் மிகவும் சிறியது அதனால் 32 மாவட்டங்கள் இல்லை 30 மாவட்டங்கள்தான் இருக்கிறது என்று சொன்னால் அது சரியா? அது அரசாங்க ஆவணத்தோடு முரண்படுகிறது.//

இல்லை, இப்படியிருந்தால் தான் அதிக தவறு.... காமராஜர் மட்டும் தான் அணை கட்டினார் திராவிட ஆட்சிக் காலத்தில் அணை கட்டவேயில்லை என்று நுனிப்புல் மேய்ந்துவிட்டு தகவல் சொன்னால் தான் தவறு.


காமராஜர் காலத்தில் வெறும் 16 அணைகளை கட்டிவிட்டு திராவிட ஆட்சிக்காலத்தில் 60 க்கும் மேற்பட்ட அணைகள் கட்டியிருப்பதை பார்க்காமல், திரவிட ஆட்சிக்காலத்தில் ஒன்றுமே கட்டவேயில்லை என்று பதில் கூறியிருந்தால் தான் தவறு.

தமிழகத்தில் நாப்பது மாவட்டங்கள் இருக்கிறது....அதில் பதினைந்து ஆந்திராவுக்குச் சொந்தமானது...இருந்தாலும் அது தமிழகத்தைச் சேர்ந்ததாக மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறுவது தான் தவறு.

மேலே குறிப்பிட்டுள்ளபடி அப்படி கூற வாய்ப்பில்லை. ஏனென்றால் எல்லா மாவட்டங்களும் தமிழகத்தை சேர்ந்தவை தான்.

என்ன ஏதேதோ வைக்கப்படுகிறதே... ..கவலைப்படவேத் தேவையில்லை இது தவறே இல்லை இது மதத்தை பற்றிய விமர்சனம். தாராளமாக வைக்கலாம்.

இங்கு ஆந்திராவின் மாவட்டங்களை தனதாக்கி கொண்டு பெரும்பான்மை மாவட்டங்களை பெற்ற மாநிலம் தமிழகம் என்று கூறுவது தான் தவறு.

பொன்முடி இது மாதிரி தான் கருத்து தெரிவித்து இருக்கிறார் விமர்சித்து இருக்கிறார்.

மாவட்டங்கள் தான் என்றில்லை....சீனா, இந்தியா...எல்லைப் பிரச்சினைகளை கூட எடுத்துக்கொள்ளலாம்...அருணாச்சலப் பிரதேசம் எங்களுடையது தான் ஆகையால் அது எங்கள் நாடு தான் அங்கிருந்து வருபவர்களுக்கு விசா தேவையில்லை என்று கூறியதே!

அது மாதிரி தான் இந்து மதம் கூறிக்கொண்டிருக்கிறது...அதற்கு ஏற்படுத்தப்பட்ட இந்து மத சட்டங்களும் கூறிக்கொண்டிருக்கிறது. அது பற்றிய விமரசனம் தான். அமைச்சர் கூறியது.

உடனே இதை வைத்து யாரும் டி.என்.பி.சி எக்சாம்ல தவறாக எழுதிவிட மாட்டார்கள்...எழுதினாலும் பெயிலாயிடமாட்டார்கள். கவலையில்லாமல் இருக்கலாம்.

நம்பி said...

//Blogger Gokul said...

மேலும் ஒரு கேள்வி,
நீங்கள் இந்து என்ற மதம் இருக்கிறது என்று நினைக்கறீர்களா?
இல்லை என்றால் , இல்லாதது என்று நீங்கள் நம்பும் விஷயம் சிறுபான்மையா அல்லது பெரும்பாண்மையா என்று கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை.

ஆம் இருக்கிறது என்றால், உங்களுடைய definition என்ன?

April 18, 2011 11:00 PM//

இங்க நினைக்கிறது இருக்கட்டும் அங்க என்ன நினைக்குது அது தெரியட்டுமே அதுதானே வேணும்.

நம்பி said...

//Blogger Gokul said...

இரண்டாவது நீங்கள் சொன்ன ஜாதி பிரச்சினை , மேல் ஜாதி கீழ் ஜாதி, தீண்டாமை என அனைத்தும் உங்களை விட தெளிவாக தமிழோவிய அவர்களின் வலைமனையில் ஏற்கனவே

இருக்கிறது , அதற்கு இந்த பதிவு தேவை இல்லை.
இங்கு பிரச்சினையே Quantity.

April 18, 2011 11:00 PM//

அப்படியா! இது எப்பத்திலேயிருந்து தெரியவே தெரியாதே!...ரொம்ப சந்தோஷம்...அப்புறம் கூடவா இப்படி?

Gokul said...

//(காமராஜர் காலத்தில அணைகட்டினாங்க திராவிட ஆட்சி காலத்தில ஒரு அணை கூட கட்டவேயில்லை என்று ஆதாரமில்லாம தெரிவித்தது மாதிரி கிடையாது.
//

ரொம்ப நன்றிங்க ஆனா இது ரொம்ப சுத்தி வளைச்சு சொல்ற மாதிரி இருக்குது.. சுருக்கமா சொன்ன "தன்னிடம் அரசாங்க ஆதாரம் இருந்தால் எதிராளி நுனிப்புல் மேய்பவன் ..அவனிடம் இருந்தால் அந்த அரசாங்க ஆதாரமே கேள்வி குறி" அப்படின்னு சுருக்கமா சொல்லலாம்.

Gokul said...

//ஆவணங்களில் குறிப்பிட்டப்பட்டுள்ளதற்காக, இந்துக்கள் சிறுபான்மையினர் என்ற கருத்தை தெரிவிக்க கூடாது என்று ஏதாவது உத்தரவுகள் இருக்கிறதா?

ஆவணங்களில் உள்ளதினால், இந்துக்கள் பெரும்பான்மையினர் இல்லை என்று கூறுவதற்கு ஏதாவது தடையுத்தரவுகள், பெற்ப்பட்டுள்ளதா? நீதமன்றங்கள் தடையுத்தரவு கொடுக்கப்பட்டுள்ளதா? அது மாதிரி ஆவணங்கள் இருந்தால் காட்டவும்.//

அப்படி எல்லாம் இல்லைங்க. ஆனா காமரஜ்தாங்க அதிக அணை கட்டினார் (இப்படி சொல்வதற்கு எந்த நீதிமன்றமும் தடை உத்தரவு போடவில்லை என்று நினைக்கிறேன் :-) )

நம்பி said...

இந்திய உச்சநீதிமன்றம் 2005 ஆம் அண்டு அளித்த தீர்ப்பின் விவரம்...சுருக்கமாக வழிமாற்றின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது....(கிருத்துவ சமயத்தளம்)

தீர்ப்பை வழங்கியவர்கள் நீதியரசர்கள் ஆர்.சி லகோத்தி, தரமாதிகரி, பி.கே பாலசுப்ரமணியம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின் விவரம் இந்த வழிமாற்றில் விவரிக்கப்பட்டுள்ளது.

(மொழிபெயர்ப்பை பிறகு ஒரு சந்தரப்பத்தில் வெளியிடலாம்...)


மைனாரிட்டி மெஜாரிட்டி என்று இந்திய மதங்களில் கிடையாது

நம்பி said...

உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பின் ஒரு பகுதி......

(ஜெயின் சமூகம் தங்கள் சமூகத்தை சிறுபான்மையினராக அறிவிக்க கோரப்பட்ட வழக்கில்... இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது)

(சிறுபான்மையினர் என்று கூறி இழிவுப் படுத்தவும் கூடாது. இப்படி இழிவு படுத்துவதால் நாடு படு பலவீனமாக போய்விடும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது..)


//The Court said "in a caste-ridden Indian society, no section or distinct group of people can claim to be in majority. All are minorities amongst Hindus.//

"சாதிகள் அடிப்படையில் இருக்கும் இந்திய சமூக அமைப்பில்" எந்த ஒரு பிரிவினரோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவைச்சேர்ந்த மக்களோ, தங்களை பெரும்பான்மையினர் என்று சொல்லிக்கொள்ள மாட்டார்கள். அனைவரும் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள்.

ஹி ஹி குவிஸ் புரோகிராம் முடிஞ்சிடுச்சி....

http://www.christianaggression.org/item_display.php?type=NEWS&id=1123785359

Gokul said...

rediff என்று ஆதாரம் போட்டு நீங்க குடுத்த website ல போய்த் பார்த்த இப்படி போட்டு வெச்சு இருக்காங்க

//The Court said "in a caste-ridden Indian society, no section or distinct group of people can claim to be in majority. All are minorities amongst Hindus//
கீழே சுப்ரீம் கோர்ட் சொல்றத இப்படி போட்டுட்டு மேலே religion அப்படின்னு கோட்டை எழுத்தில தலைப்பா போட்டு இருக்காங்க ..
amongst Hindus அப்படின்னா என்ன? இந்துக்களுக்குள் அப்படின்னுதான அர்த்தம் ? இந்துக்களுக்குள் மெஜாரிட்டி மைனாரிட்டி இல்லை அப்படின்னு சொல்லி இருக்காங்க.

இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அல்லது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அப்படின்னு சொன்ன மாதிரி இந்த தகவல் சொல்லலையே (among religions/indians). amongst hindus அப்படின்னுதான் சொல்லி இருக்காங்க.

தலைப்பை தப்பா போட்டுட்டு இருக்காங்க போல..

நம்பி said...

Blogger Gokul said...

//இந்துக்களுக்குள் மெஜாரிட்டி மைனாரிட்டி இல்லை அப்படின்னு சொல்லி இருக்காங்க.//

சரி இருக்கட்டும்...! இப்ப அமைச்சர் சொன்னது தவறா? தவறில்லையா...? நீதிபதிகள் சொல்லியாச்சே...

(நிறைய இருக்கு...இந்த இடத்துக்கு இது போதும்...வேணுங்கறத போய் அந்தந்த இடத்துல தெளிவடைஞ்சுக்கலாம்)

கேள்விக்கு இடமே இல்லையே..!

அதானே குவிஸ்...Blogger Gokul said...

//amongst Hindus அப்படின்னா என்ன? இந்துக்களுக்குள் அப்படின்னுதான அர்த்தம் //

ஓ ஓ ஓ அப்படியா!

"amongst" என்றால்.."பலவற்றுள்" என்று தான் பொருள் போட்டிருக்கிறது அகராதியில்...

"short term crop raised amongst the long term crop"

"நீண்டகாலப் பயிர் வரிசைகளுக்கிடையே சாகுபடி செய்யப்படும் குறுகிய காலப் பயிர்"

"இந்துகளுக்குள்" என்றால் "in Hindus" என்று தானே வரும்.


Blogger Gokul said...

//கீழே சுப்ரீம் கோர்ட் சொல்றத இப்படி போட்டுட்டு மேலே religion அப்படின்னு கோட்டை எழுத்தில தலைப்பா போட்டு இருக்காங்க ..//


ஹி ஹி...தீர்ப்புல இப்படி போடக்கூடாது என்று கூறாததினாலே போட்டிருப்பாங்க...


"ஏன் போட்டீங்க" என்று கேள்வி கேட்பதற்கு ஆள் இருப்பது அவங்களுக்கு தெரியாது போல இருக்கு, அவங்க கிட்டேயே அதை பற்றி கேட்டு விளக்கம் பெறலாம்...தேவைப்பட்டா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தையும் பயன்படுத்தலாம்...

அப்படியே உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி நடவடிக்கை கூட எடுக்கலாம். நீதிமன்ற அவமதிப்பாக கூட வழக்கு போடலாம்...அதுக்கு முன்னாடி....??????

நம்பி said...

இன்னொரு உதாரணம்...அகராதிப்படி...

"unity amongst the members of cast"= "ஒரு சாதியினரிடையே காணப்படும் ஒற்றுமைக் கட்டுப்பாடு"

நம்பி said...


சரி அடுத்த பிட்டை பார்க்கலாம்...


இந்து மதத்தில் அதிக..... பிரிவினைகள் இருந்து வந்ததால் நம்பிக்கைகள் இருந்து வந்த்தால் இதில் இவர்தான் இந்து என்று உறுதியுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருமைப்படுத்தும் வாதத்தை முன்வைக்கமுடியாது........

இதனடிப்படையில் 1995 ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் பி.ப்பி.கஜெந்திரகட்கரால் வைக்கப்பட்ட தீர்ப்பின் விவரம்..(ஒரு பகுதி)....


When we think of the Hindu religion, unlike other religions in the world, the Hindu religion does not claim any one prophet; it does not worship any one god; it does not subscribe to any one dogma; it does not believe in any one philosophic concept; it does not follow any one set of religious rites or performances; in fact, it does not appear to satisfy the narrow traditional features of any religion or creed. It may broadly be described as a way of life and nothing more.

இந்து மதம் என்று எடுத்து கொள்கிறபொழுது, உலகில் உள்ள மற்ற மதங்களைப் போல் ஒரு போதகரின் கீழோ, அல்லது ஒரு கடவுளை வணங்குவது போன்றோ உரிமை கொண்டாடவோ, இது எந்த ஒரு தனிப்பட்ட சமயக்கோட்டபாட்டை அல்லது எந்தவொரு தனிப்பட்ட தத்துவத்தையோ, எந்தவொரு தனிப்பட்ட சமய வழிபாட்டு முறைகளையோ, இது எந்தவொரு குறுகிய பாரம்பரிய கொள்கைகளையுடைய எந்தவொரு சமயத்தையும் திருப்திபடுத்தவோ அல்லது கோட்பாட்டை கொண்டதோ அல்ல. இதை பொதுவாக குறிப்பிட வேண்டுமானால் வாழ்வியல் முறை..அதைத்தவிர வேறொன்றுமில்லை.....

அட இவரும் இப்படி சட்ட விரோதமா சொல்லியிருப்பாரோ?..இப்ப இவர் மேல ஏதாவது....போடலாமா...?ஆதாரம் ஆங்கில விக்கி களஞ்சியம்....

http://en.wikipedia.org/wiki/Hindu

http://en.wikipedia.org/wiki/Hindu