Search This Blog

20.10.09

யார் இந்தக் கந்தன்? புராணப்படி இவன் பிறப்பு என்ன? எதற்காக இந்த கந்த சஷ்டி?


கந்தர் சஷ்டியாம்!

ஏடுகளை, இதழ்களை திறந்தால் கந்தசஷ்டி, கந்த சஷ்டி என்ற கூத்துகள்தாம். தீபாவளி முடிந்தது என்றால், அடுத்து ஒரு படையெடுப்பு நடத்தப்படவேண்டாமா? வாரம், மாதம் என்று தொடர்ந்து இந்துப் பண்டிகைகளில் மூழ்கடித்து நம் மக்களை மூச்சுத்திணற வைக்காவிட்டால் அவர்கள் பிழைப்பு என்னாவது? இதற்கடுத்து கார்த்திகைத் தீபம் என்று கதைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

யார் இந்தக் கந்தன்? புராணப்படி இவன் பிறப்பு என்ன? எதற்காக இந்த கந்த சஷ்டி? யாருக்காவது தெரியுமா?

கந்தன் பிறப்பைக் கேட்டாலோ, படித்தாலோ புழுத்த நாய் குறுக்கே போகாதே!

உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாய்விட்டது; அதை எங்களால் தாங்க முடியவில்லை. ஆகவே, அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு அவர்களை அழிக்-கக்கூடிய வல்லமை பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற்றுத்தரவேண்டும் என்று வேண்டினார்கள். அதற்குச் சிவனும் இணங்கி பார்வதியைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளைபெறும் முயற்சியில் அவளோடு கலவி செய்ய இறங்கினானாம்.

தொடர்ந்து 1,000 வருடங்கள் கலவி செய்துகொண்டே சிவனும், பார்வதியும் இருந்தார்களாம். ஆனால், குழந்தை பிறக்காததைக் கண்டு தேவர்கள், இனி பிள்ளை பிறந்தால் இந்த உலகே தாங்காது; அவ்வளவு வலிமை உள்ளதாக இருக்கும். அது இந்த உலகத்தையே அழித்தாலும் அழித்துவிடும் என்று தேவர்கள் சிவனிடம் சென்று வேண்டிக் கலவி செய்வதை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.

அதற்கு சிவன், நீங்கள் சொல்லுவதுபோல் நிறுத்திக் கொள்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. நிறுத்தினால் அதிலிருந்து வரும் வீரியத்தை என் செய்வது என்றதும், உடனே தேவர்கள் தங்கள் கைகளை ஏந்தி அதில் விடும்படிக் கேட்டார்களாம். அதன்படி தேவர்கள் அனைவரின் கையிலும் வீரியத்தை விட்டு, சிவன் குடிக்கும்படி கூற, அவர்களும் குடித்தனராம். மீதி வீரியத்தை சிவன் கங்கையில் விட்டானாம்.

கங்கை அதைத் தாங்காமல் கொதிக்க ஆரம்பித்துவிட்டதாம். வீரியத்தைக் குடித்த தேவர்களுக்கு கர்ப்ப நோய் வந்துவிட்டதாம்.

அவர்கள் சிவபிரானிடம் சென்று வணங்கி, தங்கள் கர்ப்பநோய்க்கு மருந்து கேட்க, அவர் அதற்கு, காஞ்சிபுரத்திலுள்ள சுரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கினால் கர்ப்பம் கலையும் என்று கூறினாராம். அதன்படி தேவர்கள் அக்குளத்தில் மூழ்கிக் கர்ப்பத்தைக் கலைத்துக் கொண்டார்களாம்.

கங்கையில் ஓடிய சிவ வீரியமானது, ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடியதால், ஆறு குழந்தைகள் ஆயிற்றாம். அதனை ஆறு பெண்கள் எடுத்துப் பால் கொடுத்து வளர்த்தனராம். ஆறு பேர்கள் பால் கொடுப்பது என்பது சிரமமாக இருப்பதாக எண்ணி, அவர்கள் ஆறு பேரையும் ஒன்றாக அணைத்துப் பால் கொடுக்கையில், முகம் 6 ஆகவும் (தலைகள்), கைகள் 12 ஆகவும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதையாம். ஸ்கலிதத்திலிருந்து உதித்ததால், ஸ்கந்தன் என்று பெயர் உண்டாயிற்றாம்.

ஸ்கந்தம் என்றால், விந்து என்று பொருள். கந்தன் என்ற சுப்பிரமணியக் கடவுளின் பிறப்பு யோக்கியதையைக் கண்டீர்களா?

இதுதான் ஸ்கந்தனாகிய கந்தனின் பிறப்பு!

இந்த யோக்கியதை உடைய ஒரு கடவுளின் பெயரால் ஒரு வார காலம் தெருப்புழுதியாம்! கந்தன், சுப்பிரமணியன், முருகன் எல்லாம் ஒன்றுதான். சில புலவர்கள் இதில் குறுக்குச்சால் ஓட்டுவார்கள். தமிழர்களின் முருகன் வேறு, ஆரியர்களின் கந்தன் வேறு என்றெல்லாம்கூடக் கூறுவார்கள்.

அது உண்மையென்றால், முருகனுடைய அறுபடை வீடு என்று சொல்லப்படும் இடங்களில் எல்லாம் கந்த சஷ்டி என்ற பெயரால் விழாக்கள் நடத்துவது ஏன்?

ஒவ்வொரு வீட்டுக்கும் அற்புதங்களை சிலாகிப்பது ஏன்? திருப்பரங்குன்றம் என்றால் தெய்வானையின் கையை முருகன் பிடித்த இடமாம். திருச்செந்தூர் என்றால் பத்மாசுரனை சம்ஹாரம் செய்த ஸ்தலமாம். கந்தர் சஷ்டி கவசம் இக்கோயிலில்தான் இயற்றப்பட்டதாம்.

மூன்றாம் படை வீடு பழனியாம் _ ஒரு பழத்துக்காக விநாயகனும், முருகனும் சண்டை போட்ட இடமாம். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை கட்டி வைத்துள்ளனர்.

எண்கண் ஊரில் உள்ள முருகன்மீது ஒரு அற்புதத்தைத் திணித்துள்ளனர். இங்குள்ள முருகனின் சிலையை வடித்த சிற்பிக்குக் கண் பார்வை கிடையாதாம்.

பொரவச்சேரி முருகனை மனதில் வைத்து சிலையைச் செதுக்கினாராம். சிலையின் கண்களை சிற்பி திறந்தபோது கண் பார்வையற்ற அந்தச் சிற்பிக்கும் கண் பார்வை வந்ததாம். எல்லாம் விட்டாலாச்சாரியார் படக்கதைதான். இந்தச் சிற்பிக்குத் தான் கண் தெரியாதே. பொரவச்சேரி முருகன் உருவத்தை எப்படி மனதில் இறுத்தி சிலையைச் செதுக்கினாராம்?

கேள்வி கேட்டால், எந்தக் கடவுள்தான் கால் ஊன்றி நிற்க முடியும்? கதைக்குக் கால் இல்லை என்பது இதுதானோ!

அசிங்கத்துக்குப் பொட்டு வைப்பதுதான் மதத் திருநாளா?

---------------------"விடுதலை" தலையங்கம் 20-10-2009

6 comments:

நாளும் நலமே விளையட்டும் said...

என்னங்க இவ்வளவு மோசமாவா எழுதி இருக்காங்க?

இதை எப்படி பிள்ளைகளிடம் சொல்வது?

குலவுசனப்பிரியன் said...

என் தந்தையார் பல வருடங்கள் சட்டி விரதமாக ஆறு நாட்களும் சாப்பிடாமல் இருந்ததால், ஈரல் பாதிகப்பட்டு அகால மரணமடைந்தார்.

பெரியாரின் கருத்துக்கள் இன்னும் பலரைச் சென்றடைய வேண்டும். ”கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன்.”

Unknown said...

சிலை வழிபாடு கூடாது...ஆனால் பெரியார் சிலையை எல்லா இடத்திலும் திறந்து மாலை அணிவித்து வழிபட வேண்டும்

Radha said...

புராணங்களின் தத்துவங்களை படித்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். தங்கள் சுயநலத்திற்காக யாரோ கூறும் கதைகளை இப்படி அடுத்தவர்களுக்கு கூறாதீர்கள்.

//சிலை வழிபாடு கூடாது...ஆனால் பெரியார் சிலையை எல்லா இடத்திலும் திறந்து மாலை அணிவித்து வழிபட வேண்டும்// :-))

நம்பி said...

//Shanmuhapriya said...

புராணங்களின் தத்துவங்களை படித்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். தங்கள் சுயநலத்திற்காக யாரோ கூறும் கதைகளை இப்படி அடுத்தவர்களுக்கு கூறாதீர்கள்.//

முதல்ல மனிதனை புரிந்து கொள்ள முயற்சி செய்தால் போதும்..உண்மையை புரிந்து கொள்ள முயற்சி செயதால் போதும்..சிறிதளவேனும் பகுத்தறிவை பயன்படுத்தினால் போதும்.....உப்பு சப்பில்லாத இந்த ஆரிய பார்ப்பன ஊத்தை தத்துவங்களை தூக்கி குப்பையில் போட்டுடலாம்...

இதை ஆரிய பார்ப்பனன் என்கிறவன் தன் சுயநலத்திற்காக உருவாக்கியது என்பதை நன்றாக உணர்ந்து கொள்வாய்.

கடவுள் என்ற கற்பனைக்கு விளம்பரம் தேடமாட்டாய். அந்த கற்பனையை நம்பும் பக்திமான் என்று உன்னுடையை மூடநம்பிக்கையை பறை சாற்றிக்கொள்ளமாட்டாய்.

புராணப் பித்தலாட்டம்..இங்கே! பைபில், குரான்.... அங்கே!...இதுலேயே ஒற்றுமை இல்லை!...உன் கடவுளாலேயே கடல் தாண்டி போகமுடியலை!...நாடு விட்டு நாடு போக முடியல....! அனைத்து மொழிகளையும் அறிய முடியவில்லை!

ஒவ்வொரு கடவுளும் குண்டுசட்டியில குதிரை ஓட்டிகிட்டு இருந்தது. இப்ப எல்லா கடவுளோடவும் முட்டி மோதிகிட்டு நிக்குது.

கடவுளை மற! மனிதனை நினை! கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்பதை விளம்பரப்படுத்து. அதை வைத்து பித்தலாட்டம் பண்ணாதே!

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று வந்துவிட்டபிறகு கடவுள் எங்கேயிருந்து வந்தார்?

நம்பி said...

//Blogger Kamal said...

சிலை வழிபாடு கூடாது...ஆனால் பெரியார் சிலையை எல்லா இடத்திலும் திறந்து மாலை அணிவித்து வழிபட வேண்டும்

October 23, 2009 4:56 PM//

பெரியார் சிலைக்கு பாலபிஷேகம், தீபாரதனை...தயிரை தூக்கி பெரியார் சிலைக்கு குடம் குடமாக கொட்டுவதா? நடைபெறுகிறது!...


வீட்டில் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் எல்லாம் வைப்பது போல்....

எதற்காக?

வாழ்ந்த தலைவரை நினைவு கூறுவதற்காக, அவரின் சிலை வைத்து அவரது கொள்கைகள் போற்றப்படுகிறது.

பெரியார் சிலையின் கீழே கடவுளை மற! மனிதனை நினை! கடவுளை கற்பித்தவன் முட்டாள்! என்று எழுதிவைக்கப்பட்டிருக்கிறது.

அந்த சிலையை பார்த்தவுடன் கீழே இருக்கும் வாசகத்தை படிப்பாய்! என்று வைக்கப்பட்டது.

கண்ணால் கண்டவருக்கு சிலை வைக்கப்பட்டது. இந்த சிலைகள் கடவுள் எதிர்ப்பு பிரச்சாரங்களை பண்ணக்கூடியது. மக்களுக்காக நிறுவப்பட்டது.

பெரியார் சிலைகளை யார்? வேண்டுமானாலும் தொடலாம். தீண்டாமை கிடையாது. ஜாதி கிடையாது. மதம் கிடையாது.

இறந்தவருக்கு மட்டும் தான் சிலை, என்ற மூடநம்பிக்கை கிடையாது. சிலை வைத்தவுடன் இறந்துவிடுவார் என்ற மூடநம்பிக்கையும் கிடையாது.

மேலே குறிப்பிடப்பட்ட எந்த விஷயமாவது காணாத கடவுளுக்கு உண்டா.?..கடவுள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உண்டா...? அரசாங்க பதிவேடுகளில் உண்டா? வரலாற்றுப் பாடபுத்தகத்தில் உண்டா?

அந்த கற்பனை கடவுளை. ஒழிய்ட்டும் உன் மூடநம்பிக்கை என்றாலும், ஜாதி வித்தியாசமில்லாமல் தொடுவதற்கு, தொட்டு வணங்குவதற்கும் அனுமதி உண்டா?

தேவையில்லாமல் நம்பாதவர்கள் உழைத்த காசும், வரிப்பணமும், அந்த மூடநம்பிக்கைக்கு ஆதரவாக செல்லுகிறதே! மனிதனை இழிவுபடுத்துவதற்கு செல்லுகிறதே!

அதை தீண்டாமையை வலியுறுத்த மட்டும் தான் பயன்படுத்துவியா? மனிதநேயமற்ற செயலை வலியுறுத்துவதற்கு மட்டும் தான் உன் மூடநம்பிக்கையை பய்னபடுத்துவாயா?

உன்தாய் மொழியில் வாய் திறந்து, உன் மூட நம்பிக்கைகாக கற்பனை கடவுளை புகழ்பாடவாவது அனுமதி உண்டா?

சிலையை செய்தவனுக்கே சிலையை தொட அனுமதியில்லையே!" ப்பீ " "மூத்திரத்தில்" இருந்த கல்லை செதுக்கி உருவாக்கிய சிலையை, "ப்பீ " "மூத்திரம்" போன இடத்தில் கட்டிய கோயிலில், கட்டியவனே உள்ளே செல்லவே அனுமதியில்லையே! இதற்காகவாவது நீ போராடியது உண்டா?