Search This Blog

9.3.15

மணியம்மையாரை அன்னை எனப் புகழ்கிறீர்களே! இது சரியா?

  அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மார்ச் - 10
  மணியம்மையாரை அன்னை என்பது ஏன்?
  புகழக்கூடாத மணியம்மையாரை அன்னை எனப் புகழ்கிறீர்களே! இது சரியா? என்று மணச்சநல்லூரிலிருந்து ஒருவர் கேட்ட கேள்விக்கு சூடாக புரட்சிக்கவிஞர் அளித்த பதிலிருந்து சில பகுதிகள் இதோ!
  நாம் இளைமைப் போதில் முருகனைப் புகழ்ந்தோம் _ பாடினோம் _ ஆனால் நாளடைவில் முருகன் புகழத்தக்க ஒரு பொருளன்று. பாடத்தக்க ஒருபொருளன்று எனக் கண்டோம். முருகனைப் புகழ்வதை விட்டோம். முருகனைப் பாடுவதை விட்டோம்.

  பாரதி தமிழ்ப் பாட்டுக்கு ஒரு புதுநடை கண்ட புலவன். பாரதியைப் புகழ்ந்தோம் _ பாடினோம் _ இதைச் சிலர் எதிர்த்தார்கள். பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பதை எதிர்த்து வருகின்றார்கள். அவர்களின் எதிர்ப்பை நாம் பொருட்படுத்தவில்லை. ஆனால் நாம் புகழ்வதற்கும் புகழ்ந்து பாடுதற்கும் பாரதியைவிட ஒருவர் இருக்கிறாரா? அவர் யார் என்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.
  தாம் போகும் வழியை மறித்துக் கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குத்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறிவருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். தமிழ்நெறி காப்பேன் தமிழரைக் காப்பேன். ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன் என்று அறையில் அல்ல; மலைமேல் நின்று மெல்ல அல்ல தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம்.

  அது மட்டுமல்ல.
   
  குன்று உடைக்கும் தோளும் நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் கண்டோம். இந்த அணுகுண்டுப் பட்டறைதாம் பெரியார் என்பதும் கண்டோம். பெரியாரைப் புகழ்ந்து பேசினோம்; புகழ்ந்து எழுதினோம்; புகழ்ந்து பாடினோம். ஆயினும் நாம் புகழ நாம் பாட இன்னும் ஒரு மேலான ஒரு பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.
  பெரியார் செத்துக் கொண்டிருந்தார்! தமிழர் அழுது கொண்டிருந்தார்கள்.
  ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்துபோக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரை _ போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு. மக்கள் மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.

  ஆயினும் காற்றிறங்கிப் பொதிமாடுபோல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒரு பால் ஒட்டிய ஆண் குறியினின்று முன்னறிவிப்பின்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலம் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந் தொண்டால் முடியாது. அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது;  வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு
  ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை,
  அன்னை என்று புகழாமல் நாம்வேறு
  என்ன என்று புகழவல்லோம்?
  பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப் பொருளாலும் அழகுபெறக் கட்டிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.

  அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார், ஏதுங்கெட்ட வேலைக்காரி போல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.
  ஒரே ஒரு மாலையை என் துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை; எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டைக் கட்டுவதன்றி அம்மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தம் தலையில் வைத்தார் என்பதும் இல்லை.

  மணச்சநல்லூராரே,
  நான் யாரைப் புகழ வேண்டும்?
                       ------------------- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், "குயில்" 10.5.1960; 2,3

  37 comments:

  தமிழ் ஓவியா said...

  எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன்களை பிற்போக்குச் சக்திகள் அச்சுறுத்திய நிலை

  இப்பொழுது புதிய தலைமுறைப் பணியாளர்களை
  தாக்கிய இந்துத்துவ அடிப்படைவாதிகள்

  காவல்துறை துணை போகலாமா? மீண்டும் நெருக்கடி காலமா?
  முற்போக்கு சக்திகளை ஒன்று திரட்டி முறியடிப்போம்

  எழுத்தாளர்களையும், ஊடகத் துறையினரை யும் தாக்கும் அடிப்படைவாதிகளை முற்போக்கு சக்திகள் ஒன்று திரட்டி முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
  நம் நாடு ஜனநாயக நாடு என்று இந்திய அரசியல் சட்டத்தின் படி அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 மாதங்களுக்குமுன் அமைந்த பா.ஜ.க. ஆட்சி என்னும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரின் ஆட்சியின் கீழ் அத்தன்மை வேகவேகமாக மாற்றப்பட்டு நவீன ஹிட்லரிச பாசீச ஆட்சியாக அவ்வாட்சி மாறி வரு கிறதோ என்ற அய்யம், பரவலாக எங்கும் எழுந்துள்ளது!

  கருத்துரிமையைப் புறக்கணிப்பதா?

  அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, மதச் சுதந்திர உரிமை - எல்லாம் மெல்ல மெல்லக்கூட அல்ல - வெகு வேகமாக காணாமற் போகிறதோ என்ற நிலை, தீ பரவுவது போல பரவி வருகிறது!

  மோடி அரசுக்குத் தாளம் போட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு முதலியவை மத்திய அரசின் இரயில்வே, மற்றும் பொது பட்ஜெட் மூலம் பறிக்கப்பட்டாலும் வாய் மூடி மவுனியாக தமிழக அரசும், தமிழ்நாட்டின் பெரும்பான்மை எம்.பி.க்களான 37 பேர்களும் (மாநிலங்கள் அவை 10 ஆக கூடுதல் உறுப்பினர்களும்) ஆளுங் கட்சி பலத்துடன் மத்திய அரசிடமிருந்து நிதி ஆதாரம் உட்பட பலவற்றைப் பெறும் சூழ்நிலை இருந்தும், வேறு சில காரணங்கள் காரணமாக மவுனத்தையும் தலையாட்டுதலையும், நடத்திடும் போக்கு நிலவுகிறது. ஆர்.எஸ்.எஸ்.

  இந்துத்துவா ஆட்கள் எண்ணிக்கையில் வெகு குறைவாக இருந்தாலும் தமிழ்நாட்டில், கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரத்திற்கு எதிராக வன்முறைக் களத்தில் இறங்கி, எழுத்தாளர்களை மிரட் டியும், அடித்தும், உதைத்தும், ஆட்சி இயந்திரமும் அத் தகைய வன்முறையாளர்கள் பக்கம் சாயும் நிலையும்கூட இருக்கிறது என்பது வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியதாகும்!

  திருச்செங்கோடு எழுத்தாளர் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் ஆகியோர் அப்படிப்பட்ட கொடு மைக்கு ஆளாகும் நிலையிலும் ஆட்சி, காவல்துறை குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தவறி யுள்ளனர்!
  மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகளே எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டது மிகவும் வெட்கக் கேடானது.

  ஜாதி அரசியலால் லாபம் பெறலாம் என்ற அற்பத்தன ஆசையோ என்னவோ இதற்குக் காரணம் போலும்!

  புதிய தலைமுறைப் பணியாளர்கள் தாக்கப்பட்ட கொடுமை

  புதிய தலைமுறை என்ற ஒரு தனியார் தொலைக் காட்சியில் மகளிரை அழைத்து தாலிபற்றிய கருத்துக்கள் பற்றி ஒரு விவாதம் நடத்திட முனைந்தால் அவர்களை மிரட்டுவது, கேமிரா மேன்களை அடிப்பது, உடைப்பது, இதற்குக் காவல் துறை அதிகாரிகள் சிலரும் தாறுமாறாகப் பேசி - வசவுகளைப் பொழிவது எவ்வகையில் நியாய மாகும்?

  புதிய தலைமுறை என்ற ஒரு தனியார் தொலைக் காட்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று இதைஒதுக்கிவிட முடியாது.

  இந்தப் போக்கு ஜனநாயக விரோத பாசிசத்தின் பச்சையான படமெடுத்தாடும் அவலம்!
  இதனை திராவிடர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

  முன்பு தீபாவளி பற்றிய ஒரு கருத்துரைக்கும்கூட எதிர்ப்புக் குரல். நமது கூட்டங்கள் நடத்த முயன்றால், அதற்கு எதிராக ஒரு தயார் மனு வழமையாக காவல் நிலையங்களில் கொடுப்பது, அந்த அனாமதேயங்களின் மனுக்களை பெற்று ஏதோ பிரளயமே உருவாக இருப்பதைப் போல சில மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கருத்துச் சுதந்திர உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது!

  கிருஷ்ணகிரியில் காவல்துறை ஒரு பெண் அதிகாரி தொடர்ந்து திராவிடர் கழகத்திற்கு எதிராக இப்படி ஒரு தடை முயற்சிகளைச் செய்து வரும் நிலை உண்டு.
  விரைவில் நீதிமன்றத்திற்கேகூட அத்தகையவர்களை அழைக்கும் நிலையை திராவிடர் கழக சட்டத்துறை செய்யவிருக்கிறது!

  இந்தக் கருத்துச் சுதந்திர பறிப்பு பற்றி முற்போக்கு சிந்தனையாளர்கள், ஒத்த கருத்து உள்ளவர்களை ஒன்று திரட்டி பல்முனைப் போராட்டங்களை அறிவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள திராவிடர் கழகம் தயங்காது! நெருக்கடி காலம் திரும்புகிறதோ? நெருக்கடி காலத்தின் முடிவை ஆட்சியாளர்கள் மறந்து விடக் கூடாது.

  சென்னை கி.வீரமணி தலைவர் திராவிடர் கழகம்
  9.3.2015

  Read more: http://viduthalai.in/e-paper/97527.html#ixzz3TuLpOpWw

  தமிழ் ஓவியா said...

  தாலி குறித்து விவாதம் நடத்தவே கூடாதா?

  இந்து மத வெறி கும்பலுக்கு மாதர் சங்கம் கண்டனம்

  சென்னை, மார்ச் 9_ தாலி குறித்து விவாதம் நடத்தக்கூடாது என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது இந்து மதவெறிகும்பல் தாக்குதல் தொடுத்துள்ளதை அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

  இதுதொடர்பாக சங்கத்தின்மாநிலத் தலை வர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

  புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஞாயிறன்று ஒளிப்பரப் பப்பட விருந்த தாலி குறித்த விவாதநிகழ்ச்சியை ஒளிபரப்ப விடாமல் சில மதவெறி சக்திகள் தடுத்து நிறுத்தி உள்ளன. அந்த நிகழ்ச்சிஒளிபரப்பப்படாது என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் அந்த சமூக விரோதிகள் புதிய தலை முறை தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்பு கூடி அங்கிருந்த ஒளிப்பதிவா ளர் ஒருவரை தாக்கி விலை உயர்ந்த கேம ராவை உடைத்துள்ளனர். அத்துடன் பெண்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சர்வதேச மகளிர் தினத்தன்று ஒரு பெண் பத்திரிகையாள ரையும் தாக்கியுள்ளது அதிர்ச்சியை தருகின்றது.

  கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மதவெறி சக்தி களின் தாக்குதலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.தாலி என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷய மல்ல. சங்ககால இலக்கி யங்கள் முதல் இன்று வரை தாலி குறித்த பல்வேறு கருத்துக்கள் பதிவு செய் யப்பட்டுள்ளன. தமிழகத் தில் ம.பொ.சி,பெரியார் போன்ற தலைவர்கள் தாலி குறித்த பல்வேறு விவாதங்களை நடத்தி கட்டுரைகளும் வெளி யிட்டு உள்ளனர். பெரியார் பெண்ணே உன்னை அடிமைப்படுத்தும் இந்தக் கயிறை அறுத்தெறி என்று பெண்ணடிமைத் தனத்தை சாடியுள்ளார்.

  எனவே, தாலி குறித்து பேசவே கூடாது என்ற இந்த கலாச்சார காவலர் களின் கருத்து சுதந்திர பறிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
  மேலும் இந்த தாக் குதல் நடைபெறும் போது காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததும் கண்டிக்கத்தக்கது. தமிழ கத்தில் ஜாதிய ஆதிக்க செயல்களை தமிழக காவல்துறை எப்படி கை கட்டி வேடிக்கை பார்க் கின்றதோ அப்படியே மதவெறி சக்திகளின் சமூக விரோத செயல்களையும் கை கட்டி வேடிக்கை பார்த்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அந்த விவா தத்தினை ஒளிபரப்புவதற் கான ஏற்பாட்டினையும் செய்யவும் தமிழக அரசை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத் துகின்றது.

  Read more: http://viduthalai.in/e-paper/97530.html#ixzz3TuM2so9g

  தமிழ் ஓவியா said...

  இன்றைய ஆன்மிகம்?

  உயிர்கள்தானே
  சாப்பாட்டு விஷயத் தில்கூட காய்கறியில் புட லங்காய்தான் பிடிக்கும். உருளைக்கிழங்குதான் பிடிக்கும் என்று சொல் கிறோம். எல்லாம் இந்த நாக்கிலிருந்து தொண்டைக்குள் செல்லும் வரைக்கும்தான்; அப்புறம் எந்த உணவாக இருந்தா லும் குடல் அதிலுள்ள சத்தைப் பிரித்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது. சத்துக்காக சாப்பிடுவதுபோல, உயிர்கள் பிறவி எடுத் திருப்பதே கடவுளை அறிவதற்குத்தான் என்று ஓர் ஆன்மிக மலர் கதை அளக்கிறது.

  இதன்படி எந்த உயிர் கடவுளை அறிந்ததாம்? கண்டவர் விண்டிலர், விண்டலர் கண்டிலர் என்று தானே சொல்லப் பட்டுள்ளது? உயிர் என் றால் மனித உயிர் மட்டும் தானா! விலங்குகளும், பறவைகளும்கூட உயிர் தானே அவை சாப்பிடு வதும் கடவுளை அறிவ தற்காகத்தானா? காய் கறிகள்கூட சுவாசிக்கின் றனவே, அவைகளும் உயிர்கள்தானே! அப்படி என்றால் அவற்றிற்கு எரு போடுவது, தண்ணீர் ஊற்றுவது (அவையும் அவைகளுக்கு உணவு தானே) எல்லாம் கட வுளை அறிவதற்குத்தானா?

  Read more: http://viduthalai.in/e-paper/97529.html#ixzz3TuMOlE2M

  தமிழ் ஓவியா said...

  பழனி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கார் மோதி சாவு

  சத்திரப்பட்டி, மார்ச்.9 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்யா நகரை சேர்ந்தவர் வீரமணி (வயது23). அங்குள்ள காய்கறி சந்தையில் வேலை செய்து வந்தார்.

  இவரது மனைவி மலர்விழி (19). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு குழந்தை இல்லை. வீரமணி சில நாள்களுக்கு முன் புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கினார். அதில் அவர் நேற்று மனைவியுடன் பழனிக்கு சாமி கும்பிட சென்றார்.

  சாமி தரிசனம் செய்த பின்னர் இரு சக்கர வாக னத்தில் வீடு திரும்பினர். விருபாச்சி மேட்டுப்பகுதி யில் வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் இரு சக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில் வீரமணி சம்பவ இடத் திலேயே உடல்நசுங்கி பலியானார். படுகாயம டைந்த மலர்விழியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  ஆனால் வழியிலேயே அவரும் இறந்தார்.
  இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Read more: http://viduthalai.in/e-paper/97537.html#ixzz3TuMYiR7i

  தமிழ் ஓவியா said...

  மனிதன்

  பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
  (விடுதலை, 9.6.1962)

  Read more: http://viduthalai.in/page-2/97541.html#ixzz3TuMmIDwX

  தமிழ் ஓவியா said...

  சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அவசியமே!

  மகாராட்டிர மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது சிறுபான்மை மக்களான முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க சட்டம் செய்யப்பட்டது.

  இப்பொழுது அம்மாநிலத்தில் ஆளும் பொறுப்பில் இருக்கும் பி.ஜே.பி. சிவசேனைக் கூட்டாட்சி முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டைக் காலாவதி ஆகச் செய்துவிட்டது.
  சிறுபான்மை மக்கள் என்றாலே பி.ஜே.பி. சிவசேனா, சங்பரிவார்க் கும்பலுக்குக் கடுமையான வெறுப்பும், வன்மமும் தான் மேலோங்கி நிற்கின்றன.

  சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் குடியுரிமையின்றியும் வாழ முன் வர வேண்டும் என்று எழுதி வைத்தவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தங்களின் குருநாதர் என்று போற்றித் துதிக்கும் எம்.எஸ். கோல்வால்கர்.

  அப்படிப்பட்ட கொள்கையைக் கொண்டவர்கள் ஆளும் ஒரு மாநிலத்தில் இத்தகு நடவடிக்கைகள் என்பவை ஆச்சரியப்படுவதற்கில்லைதான்.

  இந்தியாவை எடுத்துக் கொண்டால்கூட மேற்கு வங்கத்தில் 10 சதவீதம், கேரளாவில் 12 சதவீதம். கருநாடகத்தில் 4 சதவீதம், தமிழ்நாட்டில் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் முஸ்லிம் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையிலும்கூட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது செல்லும் என்றே கூறப்பட்டு விட்ட நிலையில் மகாராட்டிர மாநிலத்தில் முந்தைய அரசின் முடிவை ரத்து செய்கிறது என்றால் இதன் பொருளென்ன?

  உலகில் அதிக முஸ்லிம்கள் வாழக் கூடிய நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அத்தகைய ஒரு நாட்டில் அவர்கள் இரண்டாம் தரக் குடி மக்களாக நடத்தப்படுவது சரியானதுதானா?
  நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா குழு தனது பரிந்துரை யில் கல்வி, வேலை வாய்ப்பில் முசுலிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதே!
  வேலை வாய்ப்பில் 5 சதவீதம் அளவுக்குத்தான் முசுலிம்கள் இடம் பெற்றுள்ளனர் என்று விசாரணை அறிக்கைகளே கூறுகின்றன. இந்த நிலையில் அவர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வளர்ச்சி அடைய சட்டரீதியாக இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்!

  16ஆவது மக்களவையில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில், முசுலிம்கள் வெறும் 24 பேர் மட் டுமே! இது 4.4 சதவீதமேயாகும். அவர்களின் மக்கள் தொகையோ 14 சதவீதமாற்றே.
  பிஜேபி சார்பில் ஒரே ஒரு முசுலிம் கூட வெற்றி பெற முடியவில்லையே! 9 மாநிலங்களில் பிஜேபி ஆட்சி இருக்கிறது. அவற்றில் 155 அமைச்சர்கள் இருக் கிறார்கள் என்றால் அதில் இடம் பெற்றுள்ள முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? ஒன்றே ஒன்றுதான்.
  சிறுபான்மை மக்களுக்கு இந்தியாவில் உரிய பாதுகாப்பு இல்லை; உரிய உரிமைகள் இல்லை என்பது அப்பட்டமான உண்மையாகும்.

  இது ஏதோ முஸ்லிம் மக்களைச் சார்ந்த பிரச்சினையாகக் கருதி விடக் கூடாது - முடியாது. ஒட்டு மொத்தமான சமுதாயப் பிரச்சினையாகும். நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிற சக மனிதனின் நல வாழ்வும், உரிமை வாழ்வும் கிடைக்க வழி செய்யா விட்டால் ஒரு ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா என்ற வினாவை எழுப்பாதா?

  பொதுவாகவே மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி இடஒதுக்கீட்டில் நம்பிக்கை இல்லாத ஆட்சி என்பதைவிட அது கூடவே கூடாது என்று கருதுகிற கோட்பாட்டைக் கொண்டதாகும்.

  மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை வேலை வாய்ப்பில் வழங்கினார் என்ப தற்காக சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் தானே பிஜேபியினர் என்பதை மறந்து விடக் கூடாது. இதனை எல்.கே. அத்வானி அவர்கள் தமது சுயசரிதை நூலில் தெளிவாகவே ஒப்புக் கொண்டு எழுதியுள்ளாரே.

  சிறுபான்மையினருக்கு ஏதோ ஒரு மாநிலத்தில் நடந்தது தானே என்று மற்றவர்கள் பாராமுகமாக இருக்கக் கூடாது.

  சமூக நீதியில் அக்கறை உள்ளவர் அத்தனைப் பேரும் ஒன்று சேர்ந்து அழுத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் வீதிக்கு வந்து போராட வும் தயங்கக் கூடாது. சமூக நீதி என்பது இந்திய அரச மைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட ஒன்று; யாரோ கருணையின் அடிப்படையில் கொடுக்கிற பிச்சையல்ல.

  Read more: http://viduthalai.in/page-2/97543.html#ixzz3TuMwikeY

  தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி

  ஜில்லென்ற தர்பூசணியின் சுவையில் மயங்காதவர்கள் இருக்க முடியாது. கொளுத்தும் வெயிலில் சுவைக்கும்போது, தாகம் தணியும். உடலும், உள்ளமும் குளிரும். தர்பூசணியில் ஏராளமான மருத்துவக்குணங்கள் உள்ளன என்பது பலர் அறியாத விஷயம். தர்பூசணியில் பசலைக்கீரைக்குச் சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, ஏ, பி 6, பி1 உள்ளன.

  பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன. 100 கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 கலோரி, கார்போஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது.

  தர்பூசணியை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாக சிட்ரூலின் அர்ஜினைன் என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்தையும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்கு விக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

  சிட்ரூலின் அர்ஜினைன் வேதி மாற்றம் சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். கண்களைப் பராமரிக்க வைட்டமின் ஏ, மூளை மற்றும் செல் பாதிப்பை தடுக்க வைட்டமின் சியையும் கொண்டு செயல்படுகிறது. தமனி, ரத்த ஓட்டம், இதய ஆரோக்கியத்தை காக்கும் அமினோ அமிலங்கள் போன்றவற்றை சீராக இயக்கக் கூடியது.

  உடலிற்கு தேவையான இன்சுலினையும் மேம்படுத்தும். கட்டி, ஆஸ்துமா, பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும். சதையுடன் விதையும் பலன் தரக்கூடியது. விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.

  இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லது. தர்பூசணியை சாப்பிட மட்டுமல்லாமல், தற்போது பதார்த்தங்கள் செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். தர்பூசணி தென் ஆப்ரிக்காவைத் தாயகமாகக் கொண்டது.

  முதலில் எகிப்தில் அதிகளவில் பயிரிடப்பட்டது. 7ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலும், 10ஆம் நூற்றாண்டில் சீனாவிலும் தர்பூசணி அறிமுகமாகியுள்ளது. உலகில் தர்பூசணியை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக சீனா விளங்குவது குறிப்பிடத்தக்கது. தர்பூசணியில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இந்தப் பழம் ஒரு இயற்கை வயாக்ரா என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

  தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளது. இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் சத்துகள் உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத் திருக்கின்றன.

  இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. தர்பூசணியில் உள்ள சிட்ரூலின் சத்துப்பொருள், வயாக்ராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

  Read more: http://viduthalai.in/page-5/97580.html#ixzz3TuO1biFN

  தமிழ் ஓவியா said...

  ஆரோக்கியம் காக்க...

  * தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.

  * தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.

  * தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.

  * கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.

  * தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.

  * 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.

  * 2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

  * பப்பாளி நம் வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.

  * பப்பாளி தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

  * பப்பாளி இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.

  Read more: http://viduthalai.in/page-5/97581.html#ixzz3TuO9QvRp

  தமிழ் ஓவியா said...

  கொழுப்பை கரைக்கும் உணவுகள்

  * கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும்.

  * இஞ்சி உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும். * வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம்.

  * லவங்க மசாலா பட்டை நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன் மொத்த கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

  * சிவப்பு அரிசி, கொழுப்பை குறைக்கிறது.

  * நிலக் கடலை நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. உணவில் முக்கியமாக கடலை எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.

  * கருப்பு திராட்சை, கொழுப்புச் சத்தை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

  Read more: http://viduthalai.in/page-5/97581.html#ixzz3TuOHPyWq

  தமிழ் ஓவியா said...

  தமிழர் தலைவர் உரை

  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரை வருமாறு: என்னைப் பொறுத்தவரையிலே இருபது ஆண்டுக்காலம் கழித்து, கழகப் பிரச்சாரத்துக்காக, இடையிலே பல்வேறு பிரச்சாரங்களுக்கு வந்திருந்தாலும்கூட, கழகப்பிரச்சாரம் என்ற முறையிலே கொள்கைப் பிரச்சாரத்துக்காக வந்திருக்கிற வாய்ப்பு இடைவெளியாக இருந்தாலும்கூட, அதற்கு முன்னாலே இந்த ஊர் நமக்கு புதிதல்ல.

  இங்கே பேசிய நண்பர்கள் சொன்னார்கள். என்னுடைய மாணவப் பருவம் தொட்டு , அடிக்கடி பிரச்சாரத்துக்கு வரக்கூடிய பகுதி இந்தபகுதி. அதுவும் இந்த பகுதியிலே குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், நம்முடைய இளைஞர்களுக்கே பலபேருக்குத் தெரியாது.

  முதல்முறையாக விழுப்புரம் நீதிக்கட்சினுடைய ஒரு கோட்டையாக மிகப்பெரிய அளவுக்கு பலம் பெற்றிருந்த காலத்தில், அந்தக் காலத்தில் எங்களைப் போன்றவர்களே சிறு வயதினர்களாக, இளைஞர்களாக இருந்த காலத்திலே நகரசபை தலைவராக இருந்து, அய்யா தந்தை பெரியாரை அழைத்தவர் கோவிந்தராஜிலு என்கிற பெரியவர். இந்த நகரசபைத் தலைவர்.

  இப்போது வயதானவர்கள், மூத்த குடிமக்களுக்கு மட்டும்தான் அவரது பெயரேகூடத் தெரியும். நீதிக்கட்சியினுடை ஆற்றல்வாய்ந்த நகர்மன்றத் தலைவர். அப்போதெல்லாம் நகர் மன்றம் ஒழுங்காக நடக்கும். அப்பொழுதெல்லாம் யாரும் ஒலிபெருக்கியைப் பிடுங்க மாட்டார்கள். ஒலி பெருக்கியே இல்லாத காலம். பிடுங்குவதற்கே அவசியம் வந்ததில்லை. அப்படிப்பட்ட ஒரு காலக்கட்டம்.

  அதற்குப்பிறகு அதே இடத்தில் சண் முகம் அவர்கள் தந்தை பெரியாரிடம் கடைசிவரையிலே இந்த உணர்வாளராக இருந்தார். அரசியலிலே கொஞ்சம் மாற்றம் இருந்தாலும்கூட.. சண்முக உடையார் என்றுதான் அவரை பலபேர் அழைப்பார்கள். ஏனென்றால் அந்தக் காலத்திலே ஜாதிப்பட்டத்தைச் சொல்லி அழைத்தால், அது ஒரு கவுரவம் என்று கருதப்பட்டகாலம் ஒன்று உண்டு.

  கோவிந்தராஜீலு நாயுடு. சண்முக உடையார் இப்படி பார்ப்பனர் அல்லாதவர்கள் வந்தார்கள். அதற்குப்பிறகு நாங்கள் எல்லாம் உரிமையோடு தங்குகிற ஒரு இடம் இந்த பகுதியிலே இருக்கிறது என்று சொன்னால், டாக்டர் தியாக ராஜன் அவர்களுடைய மிகப்பெரிய மருத்துவமனையாகும்.

  இத்தனைபேரையும் அழைத்துச்செல்லக்கூடிய பெரியார் பெருந்தொண்டராக, என்றென்றைக்கும் எங்கள் நினை வைவிட்டு நீங்காதவராக தந்தைபெரியார் கொள்கையில் கடைசிவரையிலே கொஞ்சம்கூட மாறுபாடு இல்லாமல், இறுதி மூச்சு அடங்கும்வரையிலே அன்னை மணியம்மை யார் தலைமை ஏற்றபோதும் சரி,

  அவர்களுக்குப்பிறகு எங் களைப்போன்ற எளியவர்கள் இந்தப் பொறுப்பேற்ற பிறகும்கூட தொடர்ந்து இருந்தவர்முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பவர் தோழர் கஜேந்திரன் அவர்கள் ஆவார்கள். அதுபோல இன்றைக்கு வருகிற பொழுது நான் அத்தனைப் பழையத் தோழர்களை யெல்லாம் இளமைக்காலத்திலே இருந்து இன்றுவரையிலே பாடுபட்டத் தோழர்களை எல்லாம் நான் எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்.

  பதவி, பெருமைக்காக வந்தவர்கள் அல்ல

  அவர்கள் பதவிக்காகவோ, பெருமைக்காகவோ இயக் கத்துக்கு வந்தவர்கள் அல்ல. இயக்கத்தைவிட்டு சென்ற வர்களும் அல்ல. அதைத்தான் இன்றைக்க பார்க்க வேண் டும். அப்படிப்பட்ட கடைசிவரையிலே சங்கடம் இல்லாமல் அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தவர்கள்.

  அதேபோல என்னை இந்த பகுதியிலே இருந்து சுற்றுவட்டாரத்திலே வெறும் சைக்கிளிலே அமரவைத்து சுற்றுவட்டார கிராமங்களிலே பிரச்சாரத்துக்கு பல இடங்களிலே அழைத்துப் போயிருக் கிறார்கள். நம்முடைய கண்டாச்சிபுரத்திலே இருந்து தோழர்கள் வந்திருக்கிறார்கள். அதுபோல எத்தனையோத் தோழர்கள் சுற்றுவட்டாரத்திலே.

  அதற்குப்பிறகு, இந்தக் காலக்கட்டத்துக்குப் பிறகு, இங்கே திராவிடர் கழகத்தை நிலைநிறுத்தி, மிகப்பெரிய அளவிலே உறுதியாக இருந்தவர் நம்முடைய ஆசிரியர் கெடார் நடராசன் அவர்கள் ஆவார்கள். நடராசன் அவர்களுடைய குடும்பம் இன்னமும் நம்முடைய கொள்கைக் குடும்பமாக நீடித்து கொண்டிருக்கிறது.

  தமிழ் ஓவியா said...

  அதிலே மாறுதல் இல்லை. அம்மா அவர்களும் கூட திருமதி சவுந்தரி நடராசன்கூட வந்திருக் கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் எல்லாம் இயக்கத் துக்கு அணிகலன்களாக, கருவிகளாக இருக்கிறார்கள். அந்தக் காலக்கட்டத்திலே எங்களைவிட்டு நகர்ந்திருந் தாலும்கூட, பெரியார் கொள்கை என்ற பெயராலே இருந்த வர்கள் இங்கே நம்முடைய நண்பர்கள் ஞானசேகரன் எல்லாம் குறிப்பிட்டார்களே,

  தோழர் இராமச்சந்திரன், சரோஜா போன்றவர்கள் அந்த நிலையிலே திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பிறகு சென்றிருந்தாலும்கூட, நடராஜன் என்ற ஒரு தோழர் என்னை சைக்கிளிலே அமரவைத்து சுற்றுவட்டார கிராமங்களில் எல்லாம் சென்று பிரச்சாரம் செய்வார்கள்.

  பக்கத்திலே இருந்த பொய்யாப் பாக்கம் இருக்கிறதே, அங்கே பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து தோழர் கண்ணபிரான் போன்றவர்கள் எத்த னையோ தோழர்கள் மிக அற்புதமாக சிறைச்சாலைக்கும் சென்று, போராட்டங்களையெல்லாம் நடத்தியவர்கள். எனவே, இந்த விழுப்புரம் ஒரு சிறப்பானதாகும்.

  பாகவி அப்துல் வகாப்

  அதுபோலவே மந்தக்கரையிலே இசுலாமிய சகோதரர் கள். அவர்கள் அடிக்கடி கூட்டத்தைப் போடுகிற நேரத் திலே, எந்தவிதமான வேறுபாடுகள் இல்லாமல் நபிநாயகம் விழாவுக்கு வந்திருக்கிறார்கள். அதுபோலவே பாகவி அப்துல் வகாப் என்று இருந்தார்கள்.

  அவர்கள் திராவிடர் கழகத்திலிருந்த பாகவி. சிறப்பான பேச்சாளர். இசுலாமிய சகோதரர்களில்கூட எத்தனைப் பேர் நினைவில் வைத் திருக்கிறார்கள் என்று தெரியாது. மந்தக்கரையிலே, நாங்க ளெல்லாம் கலந்து கொண்ட மற்ற பகுதிகளில் எல்லாம், அவரை திராவிடர் கழகப் பிரச்சாரத்துக்காக அழைத்துக் கொள்வோம்.

  ஆகவே இப்படி கருத்துவேறுபாடு இல்லாமல், ஜாதிமத பிளவுகளைப்பற்றிக் கவலைப்படாமல், இந்தச் சமுதாயத் திலே மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதற்காக அறிவாசான் தந்தைபெரியார் அவர்களுடைய அந்தப் பணிக்கு நாங்கள் எல்லோருமே சென்றிருக்கிறோம்.

  இன்னும் கேட்டால், அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற என்னுடைய வாழ்க்கைக்குறிப்பு நூலிலே நான் தெளிவாக ஒரு செய்தியைக் குறிப்பிடும்போது, விழுப்புரத்தைப்பற்றி ஒரு சம்பவத்தை அதிலே குறிப்பிட்டிருப்பேன்.

  பஞ்சு மெத்தையல்ல கழகப்பாதை

  கடலூரிலேயிருந்து அனந்தபுரத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் கழகம் இப்போது தீவிரமாக இருக்கிற பகுதி களைப்போல், அன்றைக்கு இருந்த பகுதிகளிலே அனந்த புரத்தில் தவறாமல் இயக்கத் தோழர்கள் இயக்கத்தை நடத்துவார்கள்.

  அனந்தபுரத்துக்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், எங்களைப் போன்றவர்கள் எல்லோருமே அனந்தபுரத்துக்கு ஒவ்வொரு ஆண்டும், ஒரு திருவிழா மாதிரி நடத்துவார்கள். அப்போது அனந்த புரத்துக்கு பேருந்து வசதி எல்லாம் கிடையாது. நேரிடை யாக இரவு ஒன்பதரை மணிக்கு புறப்பட்டால், மதுரை பாஸ்ட் பாசஞ்சர் என்று அதற்குப் பெயர்.

  அதிலே ஏறி, இங்கே ஒரு பத்தரை, பதினொன்னரை மணிக்கு விழுப் புரம் சந்திப்பிலே வந்திறங்கி, நடந்தே அனுமார்கோயி லுக்குப் பக்கத்திலே நிறைய கூண்டு வண்டிகள் இருக்கும். அந்த வண்டிகளிலே மூட்டைகள் ஏற்றப்பட்டிருக்கும். அந்த மூட்டையைக்கட்டி இரவில் புறப்படுவார்கள். மாடுகள் மெதுவாக நடந்து அனந்தபுரத்துக்கு பொழுது விடிய சென்று சேரும்.

  அந்த மூட்டைகளிலே நாங்கள் படுத்துக்கொள்வோம். அதுதான் எங்களுக்கு பஸ் போன்றது. ஏனென்றால், அங்கு வந்து எங்களுடைய தோழர்கள் வந்து எங்களை வரவேற்பார்கள். இரவுக் கூட்டம் பேசி முடித்து, அதேமாதிரி அங்கிருந்து புறப்படு கிற வண்டிகள் இருக்கும். அதில் படுத்துக்கொண்டிருப் போம். இங்கேவந்த இறங்கி விழுப்புரம் சந்திப்புக்கு செல்வோம்.

  எனவே, இப்படி வளர்த்த இயக்கம் இது. சாதா ரணமாக பட்டு - பஞ்சு மெத்தையிலே பளபளப்பிலே வளர்ந்த இயக்கம் அல்ல. அதைத்தான் இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது பதவிக்காக இருக்கும் இயக்கம் அல்ல.

  ஆபத்தை உணர்த்தும் எச்சரிக்கை மணி எங்கள் பணி

  நாங்கள் விழிப்புணர்வு தேவை விழிப்புணர்வு தேவை என்று சொன்னால், எங்களுடைய பணி உறங்கிக்கொண் டிருக்கிற திராவிடனைத் தட்டி எழுப்பவேண்டும்.

  ஏனென்றால், ஆபத்து நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆபத்து கதவுக்கு அருகில் மட்டும் அல்ல, கதவையும் தாண்டி உள்ளே நுழைந்துவிட்டது. எனவே, எச்சரிக்கையோடு வாழுங்கள் என்று ஒன்பது மாதங்களுக்கு முன்னாலே சொன்னோம்.

  மோடி ஆட்சியைப்பற்றி சகோதரர் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சித் தோழர் சரவணன் சொன்னார். திமுக, இந்திய யூனியன்முசுலீம் லீக் தோழர்கள் எல்லாம் இங்கே சொன்னார்கள்.

  திரும்பத்திரும்ப எச்சரிக்கை மணியை ஒலிப்பதுதான் திராவிடர்கழகத்தின் பணி. இந்த இயக்கத்தினுடைய பணி மதவெறியை மாய்ப்போம். மனித நேயத்தைக் காப்போம். ஜாதி வெறியை சாய்ப்போம். சமத்துவத்தை உருவாக்குவோம்.

  - இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையில் குறிப்பிட்டார்கள்.

  Read more: http://viduthalai.in/page-5/97587.html#ixzz3TuOsUXOT

  தமிழ் ஓவியா said...

  இலங்கைப் பிரதமருக்கு தமிழக மீனவர் அமைப்பு கண்டனம்

  ராமேசுவரம், மார்ச் 8_ இலங்கை கடல் எல் லைக்குள் அத்து மீறி நுழையும் தமிழக மீனவர் களை சுடுவதில் தவ றில்லை என்று அந்நாட் டுப் பிரதமர் ரணில் விக் ரமசிங்கே கூறியிருப்பதற்கு தமிழக மீனவர்கள் கண் டனம் தெரிவித்துள்ளனர்.

  அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன் றுக்கு ரணில் விக்ரம சிங்கே அளித்துள்ள பேட் டியில் கூறியிருப்பதாவது: இந்திய மீனவர்கள் கோரு வது போல், இலங்கையின் பாரம்பரிய மீன்பிடி பகுதி யில் மீன்பிடிக்க அனுமதி அளிக்க முடியாது.

  இந்திய மீனவர்கள் 600_-க்கும் மேற்பட் டோரை இலங்கைக் கடற் படையினர் சுட்டு வீழ்த் தியதாகக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. 2011_-க்கு முன்னர் விடுதலைப் புலி களுக்கு இந்திய மீனவர் கள் சிலர் ஆயுதங்களை வழங்கி வந்தனர். அவ் வாறு ஆயுதங்கள் வழங்க இலங்கை கடல் எல்லைக் குள் அத்துமீறும் மீனவர் களே சுடப்பட்டுள்ளனர். 2011-_க்குப் பிறகு எவ்வித துப்பாக்கிச் சூடும் நடை பெறவில்லை.

  இலங்கை கடல் எல் லைக்குள் அத்து மீறி நுழை யாமல் இருந்திருந்தால் துப்பாக்கிச் சூடு நடந் திருக்காது. இந்திய கடல் எல்லைக்குள்ளேயே அவர்கள் இருந் திருந்தால் எவ்வித துப்பாக்கிச் சூடும் நடந்திருக்காது. எங்கள் எல்லைக்குள் நடக்கும் துப்பாக்கிச் சூடு தவ றில்லை எனக் கூறியிருந் தார். அவரது கருத்து தமிழக மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

  இதுகுறித்து ராமேசு வரம் மீனவர் நேசக்கரங் கள் அமைப்பின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர் னாண்டோ கூறியதாவது:
  இலங்கை மீனவர்கள், இந்திய கடல் பகுதியில் வந்து மீன் பிடிப்பதும், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதும் பல நூற்றாண்டுகளாக நடை பெற்று வரக்கூடியது.

  குறிப்பாக இந்தியா வின் ஆழ்கடல் பகுதியான வெட்ஜ் பாங்க் பகுதியில் உலக அளவில் அதிக வருவாய் தரக்கூடிய சூரை மீன்களை சிங்கள மீன வர்கள் அள்ளிச் செல் கிறார்கள். இவ்வாறு எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கும் இலங்கை மீனவர்களுக்கு சிறுகா யத்தை கூட இந்திய கடற் படையினர் ஏற்படுத் தியதாக வரலாறு கிடை யாது.

  2011--க்கு பிறகு தமிழக மீனவர்கள் மீது எந்த துப்பாக்கிச்சூடும் நடை பெறவில்லை என ரணில் கூறியுள்ளார். ஆனால், 2.4.2011 அன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா விடம் இலங்கை தோற் றது. இதனால் ஆத்திர மடைந்த இலங்கைக் கடற்படையினர், அன் றிரவு நடுக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 4 பேரை கொன்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Read more: http://viduthalai.in/page1/97475.html#ixzz3TuXs1pyn

  தமிழ் ஓவியா said...

  செவ்வாய் கிரகத்தில் கடல் இருந்தது ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

  செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் கடல் இருந்ததற்கான அடையா ளங்கள் உள்ளன என்று புதிய ஆய்வில் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

  அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆய்வு நிறு வனமான நாசாவில், கோடார்ட் விண்வெளி உயிரியல் ஆய்வு மய் யத்தைச் சார்ந்த தலைமை விஞ்ஞானி மைக்கேல் மும்மா கடந்த ஆறு ஆண்டு களாக மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

  செவ்வாய்க் கோளில் வட துருவத்தில் லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல் இருந்தது. அது ஆர்டிக் பெருங்கட லின் அளவுக்குப் பெரிய கடலாக இருந்துள்ளது.
  பூமியில் இருப்பதைப் போலவே ஒரு வகையான நீர் செவ்வாயிலும் இருந் துள்ளது. அதாவது, இங்கு இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்ஸி ஜன் அணுவும் சேர்ந்த நீர் போலவே செவ்வாயிலும் இருந்துள்ளது.

  அதேசமயம் இன் னொரு வகையான நீரும் செவ்வாயில் இருந்திருக் கிறது. அந்த வகையான நீர், ஹைட்ரஜனின் அய்சோ டோப்பான டியூட்ரியம் என் பதைக் கொண்டிருந்தது.
  பூமியில் உள்ள நீரில் இருக்கும் டியூட்ரியத்தின் அளவைக் காட்டிலும், செவ்வாயில் எட்டு மடங்கு அதிகமாக டியூட் ரியம் இருந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, செவ்வாய்க் கோளில் 137 மீட்டர் ஆழத்தில் மூழ்கடித்து விடக் கூடிய அளவுக்கு ஒரு காலத்தில் அந்தக்கட லின் நீர் அளவு இருந் திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

  இந்தப் புதிய கண்டு பிடிப்பு செவ்வாய்க் கோளை பற்றி தங்களுக்கு மேலும் பல புரிதல்களைத் தந்திருப்பதாக விஞ்ஞானி கள் கூறுகின்றனர்.
  "இந்த அளவுக்கான நீர், பல்லாண்டு காலமாக செவ்வாயில் இருந்தது என்றால், நிச்சயமாக அங்கே உயிர்கள் தோன்றி வளர்வதற்கான வாய்ப்பு களும் இருக்கவே செய்யும்" என்று கோடார்ட் விண் வெளி ஆய்வு மய்யத்தைச் சேர்ந்த பால் மஹாஃபி தெரிவித்துள்ளார்.

  Read more: http://viduthalai.in/page1/97483.html#ixzz3TuY1is2O

  தமிழ் ஓவியா said...

  பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியின் 35 ஆம் ஆண்டு பவள விழா

  வெளிநாட்டிலுள்ள ‘Statue of Liberty’-யைப்போல உலகமே வியக்கும் வகையில் ‘Statue of Self-Respect’-அய் உருவாக்குகிறார் கி.வீரமணி

  பேராசிரியர் அனந்தராமன் அவர்கள் கல்லூரி தலைவருக்குப் பாராட்டு

  வல்லம், மார்ச் 8_ தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் 35 ஆம் ஆண்டு பவள விழா நேற்று (7.03.2015) இப் பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் தலைமையேற்று உரையாற்றிய பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள்,

  மாணவ, மாணவிகள் அனை வரும் தைரியமாகவும் எதையும் செய்து முடிக் கும் ஆற்றல் உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும் என்று கூறிய அவர், நமது நோயைப் போக்கிக் கொள்ள மருந்து சாப்பிடுவதுபோல் அறியாமையையும், மூட நம்பிக்கையையும் போக்கிக்கொள்ள நாம், அறிவைத் தரும் கல்வியைக் கற்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

  முன்னாள் மாணவ, மாணவிகள் தைரியமாகவும், தன்னம்பிக்கைமிக்கவர்களாகவும் விளங்குகிறார்கள் என்றும், இப்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர் நவீன தொழில்நுட்பத்திலும். ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குகிறார்கள் என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், ஆராய்ச்சி மனப்பான் மையையும்,

  புதுமையான எண்ணங்களையும் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். இவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய இக்கல்லூரி நிறு வனத் தலைவரின் ஆசிரியரும், சென்னை அய்.அய். டி.யின் முன்னாள் பேராசிரியரும், இவ்விழாவின் சிறப்பு விருந்தினருமாகிய டாக்டர் வி.அனந்தராமன் தமது சிறப்புரையில்,

  பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவிகளும், பயிலும் இந்நாள் மாணவிகளும் மிகவும் தைரியசாலிகளாக விளங்குகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், மகளிர் மேம்பாட்டையும், மறு மலர்ச்சியையும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி ஏற்படுத்துகிறது என்று கூறினார்.

  மாணவர்கள் அனைவரும் ஆங்கில பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறிய அவர், டிப்ளமோ பயின்ற மாணவர்கள் அனைவரும் உயர் கல்வியைப் பயின்று வாழ்க்கையில் உயரவேண்டும் என்று குறிப்பிட்டார்.

  மேலும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் களுடைய கல்விப் பணியையும், இயக்கப் பணியையும் பாராட்டியதோடு, வெளிநாட்டில் உள்ள Statue of Liberty -யை உலகமே வியந்து பாராட்டுவதைப்போல, Statue of Self-Respect என்று கூறக்கூடிய வகையில், தந்தை பெரியாருடைய பிரம்மாண்ட சிலையை அமைக்க தமிழர் தலைவர் பாடுபட்டு வருவதை வெகு வாகப் பாராட்டி வரவேற்றார்.

  பெரியார் உலகம் சிறப்பாக அமைவதற்கு தமது பாராட்டுதல்களைத் தெரிவித்தார். பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா ஆண்டறிக்கை வாசித்தளித்தார். இப்பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் தனி அலுவலர் சுலோச்சனா வேதமூர்த்தி, முன்னாள் மாணவி டி. சாந்தி,

  அமெரிக்காவில் மருத்து வராகப் பணியாற்றும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், முன்னதாக இக்கல்லூரியின் துணை முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச்சந்திரன் கலந்துகொண்டார்.

  மாணவர்களின் தொழில்நுட்பக் கண்காட்சி விருந்தினர்களின் கண்ணையும், கருத்தை யும் கவர்வதாக இருந்தது. விழாவில் 35 ஆம் ஆண்டு பவள விழா ஆண்டு மலரை சிறப்பு விருந்தினர் டாக்டர் வி. அனந்தராமன் வெளியிட கல்லூரி நிறுவனத் தலைவர் பெற்றுக் கொண்டார்.

  முன்னாள் மாணவர்களின் விவரப் புத் தகத்தை முன்னாள் தனி அலுவலர் சுலோச்சனா வேதமூர்த்தி வெளியிட, முன்னாள் மாணவி டி.சாந்தி பெற்றுக்கொண்டார், மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து உருவாக்கிய பாலிடெக்னிக் கல்லூரியின் பெயர்ப்பலகையை கல்லூரி நிறுவனத் தலைவர் திறந்து வைத்தார்.

  சமுதாயக் கல்லூரியில் முதலாண்டு படிப்பை முடித்த மாணவர்களுக்கு முதலாண்டு நிறைவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

  இருபத்து அய்ந்து ஆண்டு பணியை நிறைவு செய்த முதலா மாண்டு துறைத் தலைவர் க. சாந்தி மற்றும் நூலகர் க. சிவகாமி ஆகியோருக்கு ரூ 10,000 பணப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

  2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த முன்னாள் மாணவர் விருது கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் துறைத்தலைவராக பணியாற்றும் டி.சாந்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் இக்கல்லூரியின் முதன்மையர் டாக்டர் அ. ஹேமலதா நன்றியுரையாற்ற விழா நிறைவுற்றது.

  Read more: http://viduthalai.in/page1/97495.html#ixzz3TuYmxSAW

  அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்

  வாழ்க்கை குறிப்புகள்
  1920 மார்ச் மாதம் 10ஆம் நாள் வேலூரில் வி.எஸ்.கனகசபை - பத்மாவதி தம்பதியருக்கு மகளாய்ப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் சண்முகம், தியாகராஜன் ஆகிய இரண்டு சகோதரர்களும், கமலா என்ற ஒரு சகோதரியும் ஆவார்கள்.

  வேலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி ஆண்டு (எஸ்.எஸ்.எல்.சி.) வரை படித்தார்.
  கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் சி.டி.நாயகம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் வகுப்பு படிக்கையில் கல்வி தடைப்பட்டு விட்டது.
  1936இல் வேலூருக்கு ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பெரியாரிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அப்போது நான்காவது பாரம் படித்துக் கொண்டிருந்தபோது பெரியாரைச் சந்தித்த காரணத்திற்காக, பள்ளி நிர்வாகம் இவரை வகுப்பிலிருந்து வெளியேற்றியது.

  1943 செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் - தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளால் கவரப்பட்டு அய்யாவின் தொண்டராகப் பணியாற்ற வந்தார்.
  1944 சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கழகமாக மாறிய மாநாட்டில் (27.8.1944) காந்திமதி என்ற கே.ஏ.மணி, கே.அரசியல் மணி என்று மாற்றப்பட்டு மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு உரையாற்றினார்.

  1948 டிசம்பர் 20-ஆம் நாள் குடந்தையில் நடந்த மொழி உரிமைப் போரில் அரசு தடையை மீறியதற்காக கைது செய்யப்பட்டு, பாபநாசம் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

  விசாரணைக்குப் பின் இரண்டு மாதம் தண்டனை அளிக்கப்பட்டு வேலூர் சிறையில் காவலில் வைக்கப்பட்டார்.

  1949 பிப்ரவரி மாதம் 23ஆம் நாள் வேலூர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த மணியம்மையாரை தந்தை பெரியார் வரவேற்றார்.

  மார்ச் மாதம் 31ஆம் நாள் சென்னையில் மணியம்மையார் தலைமையில் இந்தி எதிர்ப்பு மறியல் போர் நடந்தது.

  ஜூலை மாதம் 9ஆம் நாள் பெரியார் - மணியம்மையார் பதிவுத் திருமணம், திருமண ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது.
  திருமணத்திற்குப் பிறகு கே.ஏ.மணியம்மை (கே.அரசியல் மணி) என்று இருந்து வந்த பெயரை ஈ.வெ.ரா.மணியம்மை என்று தமிழிலும், E.V.R மணியம்மை என்று ஆங்கிலத்திலும் அழைக்குமாறு தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.

  தமிழ் ஓவியா said...

  1952 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளராக தந்தை பெரியாரால் நியமிக்கப்பட்டார்.

  1958 மார்ச் மாதம் 8ஆம் நாள், ஜாதி ஒழிப்புப் போரில் ஈடுபட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட தோழர் பட்டுக்கோட்டை ராமசாமியும், 10ஆம் நாள் மணல்மேடு வெள்ளைச்சாமியும் மாண்டனர். இவர்களின் சடலத்தைத் தர சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

  அந்த நேரத்தில் மணியம்மையார் அவர்கள் முதலமைச்சர் காமராசர் அவர்களைச் சந்தித்து மறைந்த தோழர்களின் உடல்களைத் திரும்பப் பெற்றார். மணியம்மையார் தலைமையில் சவ ஊர்வலம் சிறப்பாக நடந்தது.
  19-1-1958 விடுதலையில் வெளியான இளந்தமிழா! புறப்படு போருக்கு என்ற கட்டுரை சம்பந்தமாக அதன் ஆசிரியரும், வெளியிடுபவருமான ஈ.வெ.ரா.மணியம்மையார் மீது வழக்குத் தொடரப்பட்டது.
  மணியம்மையாருக்கும், கட்டுரையை எழுதிய தோழருக்கும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

  1959 தந்தை பெரியார் அவர்களும், கழக முன்னணியினரும் சிறையில் இருந்த முக்கியக் காலகட்டத்தில் கழகம் சோர் வடையாமலும் கழகப் பணி, நிர்வாகப் பணிகளைத் திறமையாகக் கவனித்துக் கொண்டதற்காகவும், அன்னை மணியம்மையாருக்குத் திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் (19.7.1959) பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  1973 டிசம்பர் 24ஆம் நாள் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் மறைவுற்ற பின் அன்னை மணியம்மையார் அவர்கள் கழகத் தலைவர் பொறுப்பேற்றுக் கழகத்தை வழிநடத்திச் சென்றார்.

  1974 திருச்சி பெரியார் மாளிகையில் 6.1.1974-இல் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு, மணியம்மையார் அவர்களை கழகத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது.

  3.4.1974 அன்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வகை செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சென்னை தலைமை அஞ்சலகம் முன் மறியல் கிளர்ச்சி செய்தார்.

  இப்போராட்டத்தின் 2ஆம் கட்டமாக 26.5.1974 அன்று சென்னை வந்த டில்லி அமைச்சர் ஒய்.பி.சவானுக்கு கருப்புக் கொடி காட்டினார்.

  அன்னை மணியம்மையார் அவர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருதி அன்னை மணியம்மையார் அவர்களுக்கே கூடத் தெரியாத நிலையில் தந்தை பெரியார் அவர்களால் ஏற்பாடு செய்து வைத்திருந்த சொத்துகளைத் தமக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல் மக்களின் பொது நலனுக்கே அவை பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உடல் நலமின்றி, தாம் சென்னைப் பொது மருத்துவமனையில் இருந்தபோது அன்னை மணியம்மையார் அவர்கள் 23.9.1974 அன்று பெரியார் -மணியம்மை கல்வி அறக்கட்டளைக் கழகம் துவக்கப்பட ஏற்பாடு செய்தார்கள். அந்த அமைப்பு 24.9.1974 அன்று சென்னையில் பதிவு செய்யப்பட்டது. அந்த அறக் கட்டளைக்கு அன்னை மணியம்மையார் அவர்கள் தலைவராக வும், கி.வீரமணி அவர்கள் செயலாளராகவும் இருந்தார்கள்.

  டிசம்பர் 25ஆம் நாள் சென்னை - பெரியார் திடலில் நடந்த இராவண லீலா நிகழ்ச்சி சம்பந்தமாகக் கைது செய்யப் பட்டார். இது சம்பந்தமாக வழக்குத் தொடரப்பட்டது.

  பெரியார் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மய்யத்தை நிறுவினார். பெரியார்- மணியம்மை பெண்கள் உயர்நிலைப் பள்ளியை திருச்சியில் ஏற்படுத்தினார்.
  1975 ஏப்ரல் 26-இல் வைக்கக்கத்தில் நடைபெற்ற வைக்கம் பொன்விழாவில் கலந்துகொண்டு பெண்கள் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.
  சென்னை அண்ணாசாலையில் 21.9.1975 அன்று கலைஞர் சிலையை அமைத்து திறப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

  1976 செப்டம்பர் 9ஆம் நாள் இராவண லீலா வழக்கில் மணியம்மையார் மற்றும் தோழர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. வழக்கை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது.

  மிசா காலத்தில் 16.9.1976 அன்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு முதல் நாள் திடீரென்று கைது செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.

  1977 ஏப்ரல் 25ஆம் நாள் இராவண லீலா வழக்கில் மணியம்மையாரும், மற்ற தோழர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

  அக்டோபர் மாதம் 30-ஆம் நாள் தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு, தமது உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த நிலையிலும் கருப்புக் கொடி காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்.

  பெரியார் திடல் முகப்பில் பெரியார் பில்டிங்ஸ் என்ற ஒரு பெரிய கட்டடத்தை உருவாக்கினார்.

  1978 மார்ச் மாதம் 16ஆம் நாள் மாரடைப்பு நோயால் சென்னை பொதுமருத்துவமனையில் காலமானார்.

  தமிழ் ஓவியா said...

  பூஜை, ஹோமத்துடன் அரசியலா?
  முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு

  பெங்களூரு, மார்ச் 11- உச்சநீதிமன்ற உத் தரவுப்படி, பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் இருந்த ம.ஜ.த., அலுவலகம் காலி செய்யப்பட்டு, காங்கிரஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஏராளமான எலுமிச்சை பழங்களும், மந்திரிக்கப்பட்ட பொருள் களும் இருந்ததாக, காங்கிரஸ் தொண்டர்கள் கூறினர்.

  இதுகுறித்து சித்தராமையா கூறியதாவது:

  இதற்காக, காங்கிரஸ் அலுவலகத்தில் பூஜை, ஹோமம் நடத்த வேண்டும் என, மாநிலத் தலைவர் பரமேஸ்வர் உள்பட, பல மூத்த காங் கிரஸ் தலைவர்கள் ஏற்பாடு செய்திருப்பதாக அறிகிறேன். இது மக்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தலாம். பல ஆண்டுகளாக, கேரளாவில் உள்ள கோவிலுக்குச் சென்று, தேவகவுடா பூஜை செய்வது வழக்கம். அவரது மகன் ரேவண்ணா, கையில் எலுமிச்சை பழம் இல்லாமல், சட்டசபைக்குள் வரமாட்டார்.

  நான், ஜனதா தளத்தில் இருந்தபோதே, இவைகளை எதிர்த்ததுண்டு. பரமேஸ்வர் பூஜை, ஹோமம் நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும், அவரது செய்கையைத் தடுக்கமாட்டேன். புதிய அலுவலகத்தில் நடக்கும் பூஜைகளில் பங்கேற்க மாட்டேன். - இவ்வாறு அவர் கூறினார்

  Read more: http://viduthalai.in/e-paper/97675.html#ixzz3U4sL0s5e

  தமிழ் ஓவியா said...

  செய்தியும்
  சிந்தனையும்

  சாலம்மா

  செய்தி: மதுரையில் நடைபெற்ற விழா ஒன் றில் கூடுதல் ஆட்சியர் ரோகிணி ராமதாஸ் பேசியபோது, இங்கே வந்திருக்கும் ஒரு பெண் ணின் பெயர் ஆசு பர்த்தி என்பதாகும். இதன் பொருள் போதும் பொண்ணு என்பதாகும். (வரிசையாக மூன்று பெண் குழந்தை பிறந் தால் பாட்டி இப்படிப் பெயர் வைத்தாராம்).

  சிந்தனை: நிறைய குழந் தைகளைப் பெற்றுள்ள ஒருவர் தன் குழந் தைக்குப் பெயர் வைக் குமாறு தந்தை பெரி யாரிடம் கேட்டுக் கொண் டார். அந்தக் குழந் தைக்குத் தந்தை பெரியார் வைத்த பெயர் சாலம்மா (போதும் அம்மா) என்பதாகும்.

  Read more: http://viduthalai.in/e-paper/97677.html#ixzz3U4sa05fi

  தமிழ் ஓவியா said...

  உயிர் ஒன்று - உடல் மூன்று  ஆட்சி, பிரபுத்துவம், ஜாதி உயர்வு இவை மூன்றும், உயிர் ஒன்றும், உடல் மூன்றுமாயிருக்கின்றன.
  _ (குடிஅரசு, 3.11.1929)

  தமிழ் ஓவியா said...

  அய்ந்து பெண் அமைச்சர்கள் போர்க்கொடி!

  மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை எதிர்த்து மத்திய பெண் அமைச்சர்கள் அய்வர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அருண்ஜெட்லிமீது பிரதமர் நரேந்திர மோடியிடம் இதுகுறித்துப் புகாரும் கூறியுள்ளனர்.

  மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ருதிராணி இதுபற்றிக் கூறியதாவது:

  பள்ளிக் கல்விக்கு கேட்கப்பட்ட நிதியோ 12 ஆயிரத்து 896 கோடி ரூபாய்; நிதியமைச்சரோ கேட்கப்பட்ட தொகை யிலிருந்து ஓராயிரம் கோடி ரூபாயை வெட்டியுள்ளார் என்று கூறியுள்ளார்.

  மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளதாவது:

  பிரதமரின் கனவுத் திட்டமான பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டத்துக்கு வெறும் 97 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோலவே, ஒருங் கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்குக் கேட்கப்பட்டுள்ள தொகையைவிட 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில் மட்டுமே ரூபாய் 11 கோடி நிதி வெட்டப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி குமுறியுள்ளார்.

  நீர்வளத் துறையில் 9 ஆயிரத்து 64 கோடியை நிதியமைச்சர் வெட்டித் தள்ளியுள்ளார் என்று மத்திய அமைச்சர் உமாபாரதி கூறியுள்ளார்.

  சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா இந்தத் துறைக்கான தொகை நிதிநிலை அறிக்கையில் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, உணவுப் பதப்படுத்துதல் துறையிலும் நிதி வெட்டப்பட்டுள்ளதாக வேதயைத் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர்.

  இந்த அய்ந்து பெண் அமைச்சர்களும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் புகார் செய்துள்ள நிலையில், பிரதமர் தெரிவித்த கருத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.

  என்னிடம் சொல்வதைவிட, நிதியமைச்சரிடமே உங்கள் குறைபாடுகளைச் சொல்லி நிவாரணம் தேடுங்கள் என்று கூறி, தம் பொறுப்பைத் தட்டிக் கழித்து வழக்கம்போல, தமது வெளிநாட்டுப் பயணத்தில் கவனம் செலுத்தினார்.

  பரிதாபத்திற்குரிய இந்த அய்ந்து பெண் அமைச்சர் களும் உள்ளுக்குள் குமுறுவதைத் தவிர வேறு மார்க்கம் அறியாதவர்களாகத் திகைத்து நிற்கின்றனர்.

  இதில் குறிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன? பாதிப்புக்கு ஆளானவர்கள் அய்வரும் பெண்கள். பாரதீய ஜனதாவில் பெண்களுக்குரிய இடம் இதுதான்; இந்துத்துவா கொள்கைப்படி பெண்கள் உயிருள்ள ஒரு ஜீவனே கிடையாதே! எந்த வயதிலும் ஆணுக்குக் கட்டுப்பட்டு அடங்கிக் கிடக்கவேண்டியவர்கள் பெண்கள் என்பதுதானே மனுதர்மம்.

  பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று சொல்லுவது தானே பகவத் கீதை. அந்தப் பகவத் கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்கப் போகிறோம் என்று சொல்லுகிற ஆட்சிதானே மத்தியில் இருக்கிறது!

  கல்வியிலும், குழந்தைகள் நலத்துறையிலும் கைவைக் கிறார்கள் என்றால், இந்த ஆட்சியைப்பற்றி எடை போட்டுப் பார்க்கவேண்டும். அதேநேரத்தில், சமஸ்கிரு தத்தைப் பரப்புவதிலும், கங்கை நீரைச் சுத்தப்படுத்துவதிலும் காட்டும் ஆர்வத்தை, அவற்றைவிட அதிமுக்கியமான துறைகளின்மீது காட்ட மறுப்பது ஏன்? அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள இந்துத்துவா எண்ணம்தான் இப்படிச் செயல்பட வைக்கிறது.

  மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி இருக்கிறது என்றால், பல்லாயிரம் கோடி ரூபாயை அந்நியச் செலாவணியாக ஈட்டித் தருகிற மாட்டிறைச்சியை முடக்கும் வேலையில் ஈடுபடுவார்களா?

  பசு மாட்டையும், காளை மாட்டையும் உணவுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்கிற அவர்களின் இந்துத்துவா உணர்வுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களே தவிர, நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்தோ, பசுவதைத் தடை சட்டத்தால் பாதிக்கப்படுகிற மக்களைப்பற்றியோ, கோடிக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை பறி கொடுப் பவர்களைப்பற்றியோ கிஞ்சிற்றும் கவலைப்படுவதில்லை.

  இந்துத்துவாவைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கும் இந்தப் பெண் அமைச்சர்கள் இந்த சந்தர்ப்பத்திலாவது அவர்கள் தங்களைப் பிணைத்துக் கொண்டிருக்கும் கட்சியின் இந்துத்துவா கொள்கை பெண்களுக்கும், நாட்டு மக்கள் வளர்ச்சிக்கும் எந்தளவு முட்டுக்கட்டையானது என்பதை உணர முன்வர வேண்டும்; சிந்தித்தும் பார்க்கவேண்டும்.

  தங்களுக்கு என்று வந்தால்தான் தலை வலியும், வயிற்று வலியும் என்று நினைக்கலாமா? அப்படி வந்த நேரத்திலாவது உண்மை நிலையை உணர்ந்து பார்க்கவேண்டாமா?

  நிதியமைச்சரும் கைவிரித்துவிட்டார்; பிரதமரும் கைவிரித்துவிட்டார்! அடுத்து இந்த அய்ந்து பெண் அமைச்சர்களும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தைச் சந்திக்கவேண்டியதுதான் பாக்கி; அவர் எப்படிப்பட்டவர்?

  கணவனைவிட அதிகம் படித்த பெண்கள், அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் கணவன்மார்கள் சொல்லுவதற்குக் கட்டுப்படுவதில்லை. அந்த நிலையில், கணவர்கள், மனைவிகளை விவாகரத்துச் செய்யவேண்டும் என்று சொன்னாரே - அவரிடம் நியாயம் எங்கிருந்து கிடைக்கப் போகிறது?

  இந்திய நாட்டுப் பெண்களும் சிந்திக்கவேண்டிய தருணம் இது.

  Read more: http://viduthalai.in/page-2/97683.html#ixzz3U4tB1JS1

  தமிழ் ஓவியா said...

  முதுமையே போ...! போ...! முதிர்ச்சியே வா...! வா...!

  முதுமை என்பது வயதின் வளர்ச்சி என்றாலும், நமக்கு உழைக்கச் சக்தி அளிக்கும் உடல் உறுப்புகளின் தளர்ச்சி யல்லவா!

  வாழ்க்கை நீளவேண்டுமென்று விரும்புவோரும் சரி,

  வாழ்க நீங்கள் பல்லாண்டு என்று வாழ்த்துவோரும் சரி,

  ஒரு முக்கிய கருத்தை மறந்து விடக்கூடாது.

  ஆயுள் நீளுவது நல்லது; மிகப் பெரும்பாலோர் விரும்புவது, வேண்டு வது, அதற்காகவே!

  ஆனால், உடல்நலம் - உடற்கட்டு - செயல்படும் வகையில் அமைவது அதைவிட முக்கியமானது - அடிப் படையானது!

  அறிஞர் அண்ணா கூறினார்: தமிழின் முதுபெரும் வரலாறு மட்டும் பெருமைப்படத்தக்கது அல்ல; அதன் சீரிளமை மிகவும் முக்கியம். அதில் படிந்த பழைமை ஒட்டடைகளையும், பாசிக் குப்பைகளையும் நீக்கி, புதிய இளமைப் பொலிவுடன் தமிழ் என்றும் திகழவேண்டும்; பகுத்தறிவு அடிப்படை யில் பட்டதாரி இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா வில் ஆற்றிய ஆங்கிலப் பேருரையில் குறிப்பிட்டார். அதற்குப் பழைய கிரேக்கத்து மாஜி கடவுள்களின் கதை களையும் ஒப்பிட்டிருந்தார்!

  கிரேக்கக் காதல் கடவுளான பெண் கடவுள், தன் காதலனான மற்றொரு கடவுளின் வாழ்வு எப்போதும் அழி யாததாக - மறையாததான வாழ்வாக இருக்க வரம் கேட்டு வாங்கியதாம்!

  Immortality எப்போதும் இருப்பது - சாவு அண்டாத வாழ்க்கையைக் கேட்டுப் பெற்றார், மகிழ்ந்தார்.

  ஆனால், காலம் ஏற ஏற, முதுமை அவரைத் தாக்குவது தவிர்க்க முடியாததாகி விட்டது.

  இளமையைத் துறந்து, முதுமையை அடைந்து, வாழும் தொல்லை அப்போதுதான் புரிந்தது! முதுமை அண்டா இளமையை அல்லவா நாம் யாசகமாய் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும் என்று தவறுக்காக மிகவும் வருந்தினாளாம்!

  இப்படி ஒரு கதை கிரேக்கப் புராணங்களில்!

  மேலும் மேலும் ஆயுள் நீள வேண்டும் என்று விரும்பும் நாம், பலருக்குப் பயன்படும் இளமைத் துடிப் புடன் அந்த வாழ்க்கை அமைந்தால் தானே அது விரும்பத்தக்கது?

  இன்றேல் உறவுக்கும், ஊருக்கும், உலகத்திற்கும் கூடுதல் சுமைதானே!

  முதுமை ஒருபுறம் இருந்தாலும், முதிர்ச்சி - வயது, பல்வேறு கசப்பான - இனிப்பான - துவர்ப்பான - பல்சுவை அனுபவங்கள் காரணமாக கற்ற பாடங்களால் நாம் பெறுகிறோம்.

  அதனை பாடப் புத்தகமாக்கி, ஒரு நல்லாசிரியனாகி போதிக்கவேண்டும்; அதன்மூலம் கொடுத்தலின் காரண மாகப் பெறும் மகிழ்ச்சியை பெரு ஊதியமாகக் கருதிப் பெருமிதம் கொள்ளவேண்டும் என்று நினைக் கிறோம்!

  தமிழ்ப் பெரியார் திரு.வி.க. பார்வை இழந்த நிலையிலும், முதிர்ச்சி தந்த பாடங்களை டாக்டர் மு.வ. என்று அழைக்கப் பெற்ற மு.வரதராசனார் அவர்களிடம் கூறி, அவர் கேட்டு எழுதிட, இரண்டு நூல்கள் கவிதை வடிவத்தில் வந்தன.

  முதுமை உளறல்
  படுக்கைப் பிதற்றல்
  சிறந்த அறவுரைகள் அவை.

  மிகுந்த தன்னடக்கத்தினால் திரு.வி.க. அத்தகைய தலைக்கனமில் லாத் தலைப்புகளை தந்து உயர்ந்தார் - சிந்தனை வள்ளலாக!

  அவை, உளறலும் அல்ல; பிதற்றலும் அல்ல!

  தந்தை பெரியார் அவர்கள் 95 ஆண்டுவரை - கடுமையாக உழைத்தார் - பயணித்தார் - பல மணிநேரம் சிங்கமென கர்ஜித்தார்!

  சிந்தனை, உரையில், எழுத்தில் எவ்வித தடுமாற்றமும் இன்றி - மறதி நோயே தாக்காமல் - கணினிபோல் செய லாற்றி அதிசய சாதனை படைத்தார்!

  அவரது ஆரம்ப கால சிந்தனைகள் அறிவியல் சாதனைகளாகிய செய்தி களை நாங்கள் மேலைநாட்டு ஏடுகளி லிருந்து படித்துக் காட்டியபோது - 1973, டிசம்பர் 19 (இறுதிப் பேருரை ஆற்றிடப் போகுமுன்) வேனில் பயணித்த நிலை யில் என்ன சொல்லி வருந்தினார் தெரியுமா?

  நாளை எழுதுகிறேன்.

  - வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

  Read more: http://viduthalai.in/page-2/97687.html#ixzz3U4tL0HnS

  தமிழ் ஓவியா said...

  பன்றி இறைச்சியை முஸ்லிம்கள் வெறுத்தாலும்
  இஸ்லாமிய நாடுகளில் பன்றி இறைச்சிக்குத் தடையில்லை  இது இந்தியா போன்ற ஜனநாயக நாடல்ல, மன் னராட்சி நடக்கும் நாடு.

  இது இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடும் அல்ல. மதச்சார்புடைய நாடு. ஒரு இஸ்லாமிய நாடு.

  இஸ்லாமியர்கள் பன்றிக் கறியை 'ஹராம்' என சொல்லி விலக்கி விடுவார்கள். பெரும்பா லும், பன்றிக் கறியைக் கண்ணால் பார்ப்பதைக் கூட தவிர்த்துவிடுவார்கள். ஆனால், அத்தகைய கட்டுப்பாடுகள் உடைய ஒரு இஸ்லாமிய நாடான UAE ல் பெரும்பாலான 'ஹைப்பர் மார்க்கெட் டுகளில்' பன்றி இறைச்சி தாராளமாக கிடைக்கும்.'For Non Muslims' என பெரிதாக அறிவிப்பு பலகை வைத்து விடுவார்கள்.

  ஒரு மதச்சார்புள்ள நாட்டில் அவர்கள் மார்க் கத்திற்கு எதிரான ஒரு இறைச்சி விற்பனையா கிறது. பன்றி இறைச்சியை விருப்ப உணவாக சாப் பிடுபவர்களை இங்கு யாரும் தடுப்பது கிடை யாது. அடுத்தவன் தட்டில் என்ன இருக்க வேண்டும்? அவன் என்ன சாப்பிட வேண்டும்? என இங்கு யாரும் சட்டம் போட்டுத் தடுக்கவில்லை.

  ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என சொல்லிக்

  கொள்ளும் இந்தியாவில் ஒரு மாநிலத் தில் மாட்டு இறைச்சிக்கு தடை விதித்து தங்கள் மதச் சார்பின்மையை(?!) உல கிற்கு பறைசாற்றுகின்றார்கள்.

  அடுத்தவன் என்ன சாப்பிட வேண் டும் என சொல்வது அரசாங்கத்தின் வேலையா?

  ஒரு உணவுப் பொருளை மக்களின் ஆரோக்கியம் கருதி அரசாங்கம் தடை செய்தால் அது வரவேற்கத்தக்கது. மற்றக் காரணங்களுக்காக தடை செய்வதாக இருந்தால் அது தனி மனித உரிமை மீறல்.

  எனக்கு மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கம் இல்லை. அதனால் நான் நல்லவன் என்றும் மாட்டிறைச்சி சாப்பிடும் என் நண்பன் கெட்டவன் என்றும் அர்த்தம் இல்லை.

  அவன் சாப்பிடும் உணவு அவன் விருப்பம் சார்ந்த விஷயம். அதில் யார் தலையிட முடியும்?

  சாதி, மதம் இதை தூக்கி ஓரம் வைத்து விட்டு இதை படியுங்கள் புரியும். புரியாவிட்டால் மேலுள்ள படத்தை மீண்டும் ஒருமுறை பாருங்கள்!

  - நம்பிக்கை ராஜ் முகநூல் பக்கத்திலிருந்து

  தகவல்: ந.விவேகானந்தன், செஞ்சி.

  Read more: http://viduthalai.in/page1/97643.html#ixzz3U4uZbQdo

  ஆதரிப்பது...

  எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.
  (குடிஅரசு, 18.5.1930)

  தமிழ் ஓவியா said...

  தெருக்கள், பொதுஇடங்களுக்கு சூட்டப்பட்ட சாதிப் பெயர்களை நீக்கக்கோரி வழக்கு

  மதுரை, மார்ச் 10_ தமிழகத்தில் தெருக்கள், பொது இடங்களுக்கு சூட் டப்பட்ட ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரும் மனுவுக்கு தமிழக அரசு பதி லளிக்க சென்னை உயர் நீதிமன்ற மது ரைக்கிளை திங்கள்கிழமை உத்தர விட்டது.

  திருச்சியைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் பவுண்டேசன் நிர்வாகி பொன்தம்மபாலா இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். மனு விவரம் _ தமிழகத்தில் சாலைகள், தெருக்கள், பொது இடங்களுக்கு சூட்டப்பட்ட ஜாதிப் பெயர்களை நீக்குவதற்கு உரிய தீர்மானங்களை நிறைவேற்றுமாறு உள்ளாட்சி மன்றங்களுக்கு 1978இல் அரசு உத்தரவிட்டது. இதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து அறிக்கை அளிக்குமாறு அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அந்த உத்தரவை உள்ளாட்சி மன்றங்கள் நிறைவேற்றவில்லை. திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரிகளில் சாதிப்பெயர்கள் இடம் பெற்றிருந்ததை சுட்டிக்காட்டி, அவற்றை நீக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு 2014 செப்.15 இல் புகார் அனுப்பினேன். அந்தப் புகார் மனு, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட் டது. அதன்பிறகும் ஜாதிப் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தமிழகத்தில் பொது இடங் கள், தெருக்களுக்கு சூட்டப்பட்ட ஜாதிப் பெயர்களை நீக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இம்மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வா ணன், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங் கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசா ரணைக்கு வந்தது. மனுவுக்கு தலை மைச் செயலர், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச் சித் துறை செயலர்கள் பதிலளிக்க நீதி பதிகள் உத்தரவிட்டனர். விசாரணை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.

  Read more: http://viduthalai.in/page1/97635.html#ixzz3U4vHAXF8

  தமிழ் ஓவியா said...

  எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன்களை பிற்போக்குச் சக்திகள் அச்சுறுத்திய நிலை

  இப்பொழுது புதிய தலைமுறைப் பணியாளர்களை
  தாக்கிய இந்துத்துவ அடிப்படைவாதிகள்

  காவல்துறை துணை போகலாமா? மீண்டும் நெருக்கடி காலமா?
  முற்போக்கு சக்திகளை ஒன்று திரட்டி முறியடிப்போம்

  எழுத்தாளர்களையும், ஊடகத் துறையினரை யும் தாக்கும் அடிப்படைவாதிகளை முற்போக்கு சக்திகள் ஒன்று திரட்டி முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
  நம் நாடு ஜனநாயக நாடு என்று இந்திய அரசியல் சட்டத்தின் படி அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 மாதங்களுக்குமுன் அமைந்த பா.ஜ.க. ஆட்சி என்னும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரின் ஆட்சியின் கீழ் அத்தன்மை வேகவேகமாக மாற்றப்பட்டு நவீன ஹிட்லரிச பாசீச ஆட்சியாக அவ்வாட்சி மாறி வரு கிறதோ என்ற அய்யம், பரவலாக எங்கும் எழுந்துள்ளது!

  கருத்துரிமையைப் புறக்கணிப்பதா?

  அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, மதச் சுதந்திர உரிமை - எல்லாம் மெல்ல மெல்லக்கூட அல்ல - வெகு வேகமாக காணாமற் போகிறதோ என்ற நிலை, தீ பரவுவது போல பரவி வருகிறது!

  மோடி அரசுக்குத் தாளம் போட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு முதலியவை மத்திய அரசின் இரயில்வே, மற்றும் பொது பட்ஜெட் மூலம் பறிக்கப்பட்டாலும் வாய் மூடி மவுனியாக தமிழக அரசும், தமிழ்நாட்டின் பெரும்பான்மை எம்.பி.க்களான 37 பேர்களும் (மாநிலங்கள் அவை 10 ஆக கூடுதல் உறுப்பினர்களும்) ஆளுங் கட்சி பலத்துடன் மத்திய அரசிடமிருந்து நிதி ஆதாரம் உட்பட பலவற்றைப் பெறும் சூழ்நிலை இருந்தும், வேறு சில காரணங்கள் காரணமாக மவுனத்தையும் தலையாட்டுதலையும், நடத்திடும் போக்கு நிலவுகிறது. ஆர்.எஸ்.எஸ்.

  இந்துத்துவா ஆட்கள் எண்ணிக்கையில் வெகு குறைவாக இருந்தாலும் தமிழ்நாட்டில், கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரத்திற்கு எதிராக வன்முறைக் களத்தில் இறங்கி, எழுத்தாளர்களை மிரட் டியும், அடித்தும், உதைத்தும், ஆட்சி இயந்திரமும் அத் தகைய வன்முறையாளர்கள் பக்கம் சாயும் நிலையும்கூட இருக்கிறது என்பது வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியதாகும்!

  திருச்செங்கோடு எழுத்தாளர் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் ஆகியோர் அப்படிப்பட்ட கொடு மைக்கு ஆளாகும் நிலையிலும் ஆட்சி, காவல்துறை குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தவறி யுள்ளனர்!
  மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகளே எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டது மிகவும் வெட்கக் கேடானது.

  ஜாதி அரசியலால் லாபம் பெறலாம் என்ற அற்பத்தன ஆசையோ என்னவோ இதற்குக் காரணம் போலும்!

  புதிய தலைமுறைப் பணியாளர்கள் தாக்கப்பட்ட கொடுமை

  புதிய தலைமுறை என்ற ஒரு தனியார் தொலைக் காட்சியில் மகளிரை அழைத்து தாலிபற்றிய கருத்துக்கள் பற்றி ஒரு விவாதம் நடத்திட முனைந்தால் அவர்களை மிரட்டுவது, கேமிரா மேன்களை அடிப்பது, உடைப்பது, இதற்குக் காவல் துறை அதிகாரிகள் சிலரும் தாறுமாறாகப் பேசி - வசவுகளைப் பொழிவது எவ்வகையில் நியாய மாகும்?

  புதிய தலைமுறை என்ற ஒரு தனியார் தொலைக் காட்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று இதைஒதுக்கிவிட முடியாது.

  இந்தப் போக்கு ஜனநாயக விரோத பாசிசத்தின் பச்சையான படமெடுத்தாடும் அவலம்!
  இதனை திராவிடர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

  முன்பு தீபாவளி பற்றிய ஒரு கருத்துரைக்கும்கூட எதிர்ப்புக் குரல். நமது கூட்டங்கள் நடத்த முயன்றால், அதற்கு எதிராக ஒரு தயார் மனு வழமையாக காவல் நிலையங்களில் கொடுப்பது, அந்த அனாமதேயங்களின் மனுக்களை பெற்று ஏதோ பிரளயமே உருவாக இருப்பதைப் போல சில மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கருத்துச் சுதந்திர உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது!

  கிருஷ்ணகிரியில் காவல்துறை ஒரு பெண் அதிகாரி தொடர்ந்து திராவிடர் கழகத்திற்கு எதிராக இப்படி ஒரு தடை முயற்சிகளைச் செய்து வரும் நிலை உண்டு.
  விரைவில் நீதிமன்றத்திற்கேகூட அத்தகையவர்களை அழைக்கும் நிலையை திராவிடர் கழக சட்டத்துறை செய்யவிருக்கிறது!

  இந்தக் கருத்துச் சுதந்திர பறிப்பு பற்றி முற்போக்கு சிந்தனையாளர்கள், ஒத்த கருத்து உள்ளவர்களை ஒன்று திரட்டி பல்முனைப் போராட்டங்களை அறிவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள திராவிடர் கழகம் தயங்காது! நெருக்கடி காலம் திரும்புகிறதோ? நெருக்கடி காலத்தின் முடிவை ஆட்சியாளர்கள் மறந்து விடக் கூடாது.

  சென்னை கி.வீரமணி தலைவர் திராவிடர் கழகம்
  9.3.2015

  Read more: http://viduthalai.in/page1/97527.html#ixzz3U4wXVXuP

  தமிழ் ஓவியா said...

  தாலி குறித்து விவாதம் நடத்தவே கூடாதா?

  இந்து மத வெறி கும்பலுக்கு மாதர் சங்கம் கண்டனம்

  சென்னை, மார்ச் 9_ தாலி குறித்து விவாதம் நடத்தக்கூடாது என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது இந்து மதவெறிகும்பல் தாக்குதல் தொடுத்துள்ளதை அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

  இதுதொடர்பாக சங்கத்தின்மாநிலத் தலை வர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

  புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஞாயிறன்று ஒளிப்பரப் பப்பட விருந்த தாலி குறித்த விவாதநிகழ்ச்சியை ஒளிபரப்ப விடாமல் சில மதவெறி சக்திகள் தடுத்து நிறுத்தி உள்ளன. அந்த நிகழ்ச்சிஒளிபரப்பப்படாது என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் அந்த சமூக விரோதிகள் புதிய தலை முறை தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்பு கூடி அங்கிருந்த ஒளிப்பதிவா ளர் ஒருவரை தாக்கி விலை உயர்ந்த கேம ராவை உடைத்துள்ளனர். அத்துடன் பெண்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சர்வதேச மகளிர் தினத்தன்று ஒரு பெண் பத்திரிகையாள ரையும் தாக்கியுள்ளது அதிர்ச்சியை தருகின்றது.

  கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மதவெறி சக்தி களின் தாக்குதலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.தாலி என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷய மல்ல. சங்ககால இலக்கி யங்கள் முதல் இன்று வரை தாலி குறித்த பல்வேறு கருத்துக்கள் பதிவு செய் யப்பட்டுள்ளன. தமிழகத் தில் ம.பொ.சி,பெரியார் போன்ற தலைவர்கள் தாலி குறித்த பல்வேறு விவாதங்களை நடத்தி கட்டுரைகளும் வெளி யிட்டு உள்ளனர். பெரியார் பெண்ணே உன்னை அடிமைப்படுத்தும் இந்தக் கயிறை அறுத்தெறி என்று பெண்ணடிமைத் தனத்தை சாடியுள்ளார்.

  எனவே, தாலி குறித்து பேசவே கூடாது என்ற இந்த கலாச்சார காவலர் களின் கருத்து சுதந்திர பறிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
  மேலும் இந்த தாக் குதல் நடைபெறும் போது காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததும் கண்டிக்கத்தக்கது. தமிழ கத்தில் ஜாதிய ஆதிக்க செயல்களை தமிழக காவல்துறை எப்படி கை கட்டி வேடிக்கை பார்க் கின்றதோ அப்படியே மதவெறி சக்திகளின் சமூக விரோத செயல்களையும் கை கட்டி வேடிக்கை பார்த்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அந்த விவா தத்தினை ஒளிபரப்புவதற் கான ஏற்பாட்டினையும் செய்யவும் தமிழக அரசை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத் துகின்றது.

  Read more: http://viduthalai.in/page1/97530.html#ixzz3U4x2CvsK

  தமிழ் ஓவியா said...

  சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அவசியமே!

  மகாராட்டிர மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது சிறுபான்மை மக்களான முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க சட்டம் செய்யப்பட்டது.

  இப்பொழுது அம்மாநிலத்தில் ஆளும் பொறுப்பில் இருக்கும் பி.ஜே.பி. சிவசேனைக் கூட்டாட்சி முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டைக் காலாவதி ஆகச் செய்துவிட்டது.
  சிறுபான்மை மக்கள் என்றாலே பி.ஜே.பி. சிவசேனா, சங்பரிவார்க் கும்பலுக்குக் கடுமையான வெறுப்பும், வன்மமும் தான் மேலோங்கி நிற்கின்றன.

  சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் குடியுரிமையின்றியும் வாழ முன் வர வேண்டும் என்று எழுதி வைத்தவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தங்களின் குருநாதர் என்று போற்றித் துதிக்கும் எம்.எஸ். கோல்வால்கர்.

  அப்படிப்பட்ட கொள்கையைக் கொண்டவர்கள் ஆளும் ஒரு மாநிலத்தில் இத்தகு நடவடிக்கைகள் என்பவை ஆச்சரியப்படுவதற்கில்லைதான்.

  இந்தியாவை எடுத்துக் கொண்டால்கூட மேற்கு வங்கத்தில் 10 சதவீதம், கேரளாவில் 12 சதவீதம். கருநாடகத்தில் 4 சதவீதம், தமிழ்நாட்டில் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் முஸ்லிம் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையிலும்கூட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது செல்லும் என்றே கூறப்பட்டு விட்ட நிலையில் மகாராட்டிர மாநிலத்தில் முந்தைய அரசின் முடிவை ரத்து செய்கிறது என்றால் இதன் பொருளென்ன?

  உலகில் அதிக முஸ்லிம்கள் வாழக் கூடிய நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அத்தகைய ஒரு நாட்டில் அவர்கள் இரண்டாம் தரக் குடி மக்களாக நடத்தப்படுவது சரியானதுதானா?
  நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா குழு தனது பரிந்துரை யில் கல்வி, வேலை வாய்ப்பில் முசுலிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதே!
  வேலை வாய்ப்பில் 5 சதவீதம் அளவுக்குத்தான் முசுலிம்கள் இடம் பெற்றுள்ளனர் என்று விசாரணை அறிக்கைகளே கூறுகின்றன. இந்த நிலையில் அவர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வளர்ச்சி அடைய சட்டரீதியாக இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்!

  16ஆவது மக்களவையில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில், முசுலிம்கள் வெறும் 24 பேர் மட் டுமே! இது 4.4 சதவீதமேயாகும். அவர்களின் மக்கள் தொகையோ 14 சதவீதமாற்றே.
  பிஜேபி சார்பில் ஒரே ஒரு முசுலிம் கூட வெற்றி பெற முடியவில்லையே! 9 மாநிலங்களில் பிஜேபி ஆட்சி இருக்கிறது. அவற்றில் 155 அமைச்சர்கள் இருக் கிறார்கள் என்றால் அதில் இடம் பெற்றுள்ள முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? ஒன்றே ஒன்றுதான்.
  சிறுபான்மை மக்களுக்கு இந்தியாவில் உரிய பாதுகாப்பு இல்லை; உரிய உரிமைகள் இல்லை என்பது அப்பட்டமான உண்மையாகும்.

  இது ஏதோ முஸ்லிம் மக்களைச் சார்ந்த பிரச்சினையாகக் கருதி விடக் கூடாது - முடியாது. ஒட்டு மொத்தமான சமுதாயப் பிரச்சினையாகும். நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிற சக மனிதனின் நல வாழ்வும், உரிமை வாழ்வும் கிடைக்க வழி செய்யா விட்டால் ஒரு ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா என்ற வினாவை எழுப்பாதா?

  பொதுவாகவே மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி இடஒதுக்கீட்டில் நம்பிக்கை இல்லாத ஆட்சி என்பதைவிட அது கூடவே கூடாது என்று கருதுகிற கோட்பாட்டைக் கொண்டதாகும்.

  மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை வேலை வாய்ப்பில் வழங்கினார் என்ப தற்காக சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் தானே பிஜேபியினர் என்பதை மறந்து விடக் கூடாது. இதனை எல்.கே. அத்வானி அவர்கள் தமது சுயசரிதை நூலில் தெளிவாகவே ஒப்புக் கொண்டு எழுதியுள்ளாரே.

  சிறுபான்மையினருக்கு ஏதோ ஒரு மாநிலத்தில் நடந்தது தானே என்று மற்றவர்கள் பாராமுகமாக இருக்கக் கூடாது.

  சமூக நீதியில் அக்கறை உள்ளவர் அத்தனைப் பேரும் ஒன்று சேர்ந்து அழுத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் வீதிக்கு வந்து போராட வும் தயங்கக் கூடாது. சமூக நீதி என்பது இந்திய அரச மைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட ஒன்று; யாரோ கருணையின் அடிப்படையில் கொடுக்கிற பிச்சையல்ல.

  Read more: http://viduthalai.in/page1/97543.html#ixzz3U4xCuyp6

  தமிழ் ஓவியா said...

  மனிதன்

  பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
  (விடுதலை, 9.6.1962)

  Read more: http://viduthalai.in/page1/97541.html#ixzz3U4xLGvum

  தமிழ் ஓவியா said...

  தாளமுத்து

  இந்தி எதிர்ப்பு வரலாற்றில் நடராசன் - தாளமுத்து என்ற பெயர்கள் என்றென்றும் எதி ரொலிக்கும் இலட்சியப் பெயர் கள் ஆகும்.

  1938 ஜனவரி 15 இல் நட ராசன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வீரன் மரணத்தைத் தழுவினார். அது போர்க் குரலாக சென்னை சட்டசபையில் வெடித்தபோது ஆணவக்காரரான பிரதமர் ஆச்சாரியார் (ராஜாஜி) என்ன சொன்னார் தெரியுமா?

  நடராசன் என்பவர் படிப்பு வாசனை அறியாத ஒரு அரி ஜன்; தன் தாய் மொழியிலும் கூட நடராசனுக்கு எழுதத் தெரியாது என்று பதிலளித்தார்.

  படிப்பு வாசனையற்ற கார ணத்தால்தான் நடராசனுக்கு மர ணம் நேர்ந்தது என்று அமைச் சர் கருதுகிறாரா? என்று அப்துல் அமீர்கான் சுடச்சுடக் கேட்டார்.

  படிப்பில்லாததால்தான் அந்தக் கைதி மறியல் செய்ய நேர்ந்தது. சிறையில் அவர் இறந்து போனார் என்று ராஜாஜி மமதை அடங்காமல் மறுமொழி கூறினார். அதே சென்னைச் சிறைச் சாலையில் அடுத்து இரு மாதங்கள் கழித்து தாளமுத்து என்ற நாடார் சமூகத்தைச் சேர்ந்த வீரர் மரணத்தைத் தழுவினார் (12.3.1939).

  இறுதி ஊர்வலம் கண் ணீரும் கம்பலையுமாகப் புறப் பட்டது. மயானத்தில் தோழர் சி.பாசுதேவ் தலைமையில் இரங்கற்கூட்டம் நடைபெற்றது.

  இந்தி எதிர்ப்பு எட்டாவது சர்வாதிகாரி எஸ்.சம்பந்தமும், தளபதி அண்ணா அவர்களும் இரங்கல் உரை ஆற்றினார்கள்.

  அண்ணா அவர்கள் அப் போது பேசினார்: நடராசன் அடக்கமான காலத்து மீண்டும் இத்தகைய நிகழ்ச்சி தமிழ் நாட்டில் ஏற்படாதென நினைத் தேன். ஆனால், நாடார் குல திலகம் தாளமுத்து இறந்தது காண மனம் கலங்குகிறது. தோழர்கள் நடராசன் தாளமுத்து மரணத்தை என்னுடைய அண்ணன், தம்பி மரணம் என்றே கருதுகின்றேன். முன்பு நான் சாக்கோட்டை சுய மரி யாதை மாநாட்டில் பேசும் போது, நாடார் சகோதரர்களைத் தமிழர் அறப்போருக்கு வருமாறு வருந்தி அழைத்தேன். ஆனால், அவர்களைத் திருப்பிக் கொடுப் பதாக உறுதி கூற முடியாதெனத் தெரிவித்துத்தான் அழைத் தேன்.... நடராசனை - தாள முத்தை நாம் இழந்தோம். கண்ணீர் விட்டோம், கலங்கி னோம். நெஞ்சு துடித்தோம், நிலை தடுமாறினோம். ஆனால், இதே சமயத்தில் ஆச்சாரியார் மார்தட்டி, கருப்புக் கண்ணாடி யைத் துடைத்த வண்ணம் கலகலவெனப் பேசுவார். ஏன் பேசமாட்டார்? தமிழன் ஆச்சா ரியார் காலின்கீழ் இருக்கிறான்.

  இரண்டு மணிகளை இழந் தோம். தமிழர் ஆட்சி ஏற்படும் போது இவ்விரு வீரர்களின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டே அது எழுப்பப்படும். வருங்காலத்தில் விடுதலை பெற்ற தமிழகத்தில் தலைவர் பெரியாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச் சிலை எழுப்பவேண்டும். ஏன் பெரியார் சற்றுத் தளர்ச்சி அடைந்த காலத்திலெல்லாம் இந்த இரு சமூகங்கள்தான் அவருக்கு உதவி செய்து வந் திருக்கின்றன என்று அண்ணா பேசியதை தாள முத்து மறைந்த இந்த நாளில் நினைவு கூர்வோம்.

  - மயிலாடன்

  குறிப்பு: மானமிகு கலைஞர் அவர் கள் சென்னையில் பெருநகர வளர்ச்சிக் குழுமம் கட்டடத்திற்கு (எம்.எம்.டி.ஏ.) தாளமுத்து- நடராசன் பெயர் சூட்டி வரலாற்றில் பதிவு செய்துள்ளார்).

  Read more: http://viduthalai.in/e-paper/97720.html#ixzz3UCCU0n8C

  தமிழ் ஓவியா said...

  புதிய தலைமுறை அலுவலகம்முன் இன்று காலைகூட டிபன்பாக்ஸ் குண்டு வீச்சு எனும் வன்முறை!

  ஒத்த கருத்துள்ளவர்கள் ஒன்று திரண்டு முறியடிப்போம்!

  தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

  புதிய தலைமுறை அலுவலகம் முன் இந்துத்துவா அடிப்படைவாதிகள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் வன்முறையைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

  தாலிபற்றிய விவாதம் ஒன்றினை புதிய தலை முறை தொலைக்காட்சி சில நாள்களுக்குமுன் ஏற்பாடு செய்ததை, மிரட்டி நடக்கவிடாமல் செய்ய, அந்த ஊடகவியலாளர்களான கேமிராமேன் மற்றும் சில ஊழியர்களைப் பின்புறத்தில் சென்று தாக்கி வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, கருத்துச் சுதந் திரத்தை எதிர்த்து அச்சுறுத்தல்களை மேற்கொண்டுள் ளனர்; அதுவும் மோடி அரசு மத்தியில் வந்ததை யொட்டி தங்கு தடையின்றி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் மதவாத அமைப்புகள் வன்முறைகளில் தீவிரமாக இறங்கிவிட்டன. அவ்வமைப்புகளின் தலை வர்கள் வன்முறையை நியாயப்படுத்துவது போன்ற அறிக்கைகள் வாயிலாக அச்செயல்களைத் தூண்டு வதும் வெளிப்படையாகி விட்டது.

  தாலி அணிதல் மதத்தின் கலாச்சாரமா?

  தாலி அணிதல் என்பது ஒரு மதத்தின் கலாச்சாரம் என்றுகூட எவராலும் வாதிட முடியாது; காரணம், மதுரை, தேனி போன்ற சில மாவட்டங்களில் மற்றும் பல பகுதிகளில் தாலி கட்டாத வைதிக திருமணங்களே பலவும் வழமையாக (Customary Marriages) நடை பெற்று வருவது கண்கூடு.

  இதை ஒரு விவாதத்திலேயே கொண்டு வரக்கூடாது என்பதற்காக அத்தகைய தொலைக்காட்சி ஊடக ஊழி யர்களைத் தாக்குவது வன்மையான கண்டனத்திற் குரியது. இது அச்சுறுத்திப் பணிய வைக்கும் பாசிச அணுகுமுறையாகும்.

  இதுகுறித்து நாம் சில நாள்களுக்கு முன் (9.3.2015) அறிக்கையும் விடுத்தோம்.

  புதிய தலைமுறை அலுவலகம்முன் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு!

  இன்று (12.3.2015) காலை அதே அலுவலகம் (புதிய தலைமுறை) முன்பு இரண்டு டிபன்பாக்ஸ் குண்டு களை வெடிக்கச் செய்துள்ளதானது - மிகமிக வேத னைக்கும், வெட்கத்திற்கும், வன்மையான கண்டனத் திற்கும் உரிய நடத்தை கெட்ட செயல் அல்லவா?
  அந்த அலுவலகத்திற்கு முன்பே தக்க பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் கடமையல்லவா?

  மதவறியர்களைக் கைது செய்க!

  மதவெறியர்களை உடனடியாகக் கைது செய்து, கருத்துச் சுதந்திர உரிமையைக் காவல்துறையும், தமிழ்நாடு அரசும் நிலை நிறுத்த முன்வரவேண்டும்.

  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் இருக்கிறது என்று மற்றவர்கள் பேசுவார்களே என்ற கவலை கூடவா இந்த அரசுக்கு இருக்காது?

  ஒத்த கருத்துள்ளவர் ஒன்று திரண்டு எதிர்த்திடுவோம்!

  இது ஒரு தொலைக்காட்சிமீது நடத்தப்பட்ட அச் சுறுத்தல் வன்முறை என்று எடுத்துக்கொள்ள முடியாது; ஒட்டுமொத்த கருத்துச் சுதந்திரத்தின்மீது தொடுக்கப் பட்ட போர்! இதற்குத் தக்க பதிலடியை - வன்முறையால் அல்ல - ஒன்று திரண்டு ஓங்கிய குரலால், ஒத்தக் கருத்துள்ள அனைவரும் ஓரணியில் திரண்டு ஒலிக்க முன்வரவேண்டும் - முறியடிக்கவேண்டும்.

  கி.வீரமணி
  தலைவர், திராவிடர் கழகம்

  சென்னை
  12.3.2015

  Read more: http://viduthalai.in/e-paper/97725.html#ixzz3UCChV07N

  தமிழ் ஓவியா said...

  இதுதான் இந்துத்துவா ஆட்சி

  பாலியல் குற்றங்களைவிட மாட்டிறைச்சி தடைக்கு அபராதம் அதிகமாம்

  மாட்டிறைச்சி வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு அய்ந்தாண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது

  புதுடில்லி, மார்ச் 12_ ஏழைகளின் புரதச் சத்து மிக்க உணவாக திகழும் மாட்டிறைச்சிக்கு மகா ராஷ்டிரத்தில் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரி ணாமுல் எம்.பி., இந்தத் தடையை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தைவிட, பாலியல் வன் முறை வழக்குகளுக்கு விதிக்கப்படும் தொகை குறைவாக உள்ளதாக தெரிவித்தார்.

  மகாராஷ்டிர மாநி லத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  மாட்டிறைச்சி வைத்திருப் போர் அல்லது விற்பனை செய்வோருக்கு 5 ஆண்டு கள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அப ராதம் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

  மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திரிணாமுல் எம்.பி. தெரீக் ஓப்ரியன், மகா ராஷ்டிரத்தில் மாட்டி றைச்சி விற்பனைக்குத் தடை விதித்திருப்பது குறித்து பேசும்போது, மாட்டிறைச்சி விவ காரத்தை நாம் மதம் சார்ந்த கோணத்தில் பார்க்கக்கூடாது. இந்தத் தடையால் சிறுபான்மை யினர், தலித் மக்கள் என தாழ்த்தப்பட்டச் சமூகத் தைச் சார்ந்த பலர் பாதிக் கப்படுவார்கள். வடகிழக்கு மாநில மக்கள் அனை வரும் மாட்டிறைச்சியை தங்களது முக்கிய உண வாக கொண்டிருக்கின் றனர். ஏழைகளின் புரதச் சத்துமிக்க உணவாக திக ழும் மாட் டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏற்கக் கூடியதாக இல்லை.

  பாலியல் வன்முறை குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு விதிக் கப்படும் தண்டனையை விட இந்தத் தடை உத் தரவு பயங்கரமானதாக உள்ளது. அதில், வழங்கப் படும் அபராதத் தொகை யைக் காட்டிலும் மாட்டி றைச்சி தடைக்கு அபரா தம் அதிகமாக உள்ளது.

  இந்த தடையால் மற்ற இறைச்சிகளின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கோழிக்கறி, மீன் உள்ளிட்டவைகளின் விலை ஏற்கெனவே அந்த மாநிலத்தில் உயர்ந்து விட்ட நிலையில் இந்தத் தடை பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். மகாராஷ்டிராவில் ஏற் கெனவே 55 சதவீத அள வுக்கு தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தச் சட் டத்தால் வயது முதிர்ந்த மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும். விவ சாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

  துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் வேறொரு விலங்குக்கு தடை உள் ளது. ஆனால், குறிப் பிட்ட கடைகளில் விற் பனை செய்ய அவர்கள் அனுமதித்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

  ஓப்ரியன்னின் கருத் துக்கு பாஜக எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உறுப்பினர்களுக்கு எந்த விவகாரத்தையும் எழுப்பும் உரிமை உள்ளது. ஆனால் அதனை முறையாக எழுப்ப வேண்டும். இந்த விஷயத் தில் விவாதத்துக்கு அனு மதிக்கக் கூடாது என்று மாநிலங்களவை அரசி யல் விவகாரங்களுக்கான அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி தெரிவித்தார்.

  Read more: http://viduthalai.in/e-paper/97726.html#ixzz3UCCx0ZEB

  தமிழ் ஓவியா said...

  பிள்ளையால் வரும் தொல்லை

  ஒரு மனிதன் தான் பிள்ளை குட்டிகாரானாய் இருப்பதனாலேயே யோக்கியமாகவும், சுதந்திரமாகவும் நடந்துகொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாயிருக்கின்றான். அன்றியும், அவனுக்கு அனாவசியமான கவலையும், பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றன. - (குடிஅரசு, 12.8.1928)

  தமிழ் ஓவியா said...

  வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

  முதுமையே போ...! போ...! முதிர்ச்சியே வா...! வா...! (2)

  19 டிசம்பர் 1973 அன்று தியாகராயர் நகரில் தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவாற்றப் புறப்படுகிறார் தனது வேனில்!

  புலவர் கோ.இமயவரம்பனும், நானும் வேனில் உடன் செல்லுகிறோம்;

  அந்த வாரத்தில் வெளிவந்த பிரபல இங்கிலீஷ் வார ஏடான தி இல்லஸ்ட் டிரேடட் வீக்லி ஆஃப் இண்டியா (The Illustrated Weekly of India) இதழில், ஆணின் விந்து வங்கி (Semen Bank) என்ற ஒன்றை, ரத்த வங்கி போல - சேமித்து வைக்க ஆய்வாளர்கள் ஆய் வில் வெற்றி கண்டுவிட்டனர்; இதன்படி ஒரு மனிதனுக்குப் பிள்ளை பேறு, அவன் திடீர் விபத்தினாலோ அல்லது எப்படி மறைந்துபோன பின்புகூட அவ் விந்தைச் செலுத்தி, பிள்ளைப் பேறுக்கு வழிவகை செய்யலாம் (அவனது மகள் அல்லது மகன்) என்று இருந்த அறிவி யல் - மருத்துவவியல் முன்னேற்றம் வளர்ச்சிபற்றிப் படித்துக் காட்டினேன்!

  அதுபோலவே, mprint என்ற ஆங் கில மாத இதழ் ஒன்றில், வழக்கமான ஆண் - பெண் சேர்க்கையில்லாம லேயே, பரிசோதனைக் குழாய் (Test Tube Baby) குழந்தை முயற்சி வெற்றி பெற்றது என்பதையெல்லாம் அக் கட்டுரையில் (இத்தாலியில் முதல் குழந்தை பிறந்தது) குறிப்பிட்டிருந் ததைக் கேட்டு, மிகவும் பூரிப்புடன் கைதட்டி, மகிழ்ச்சி பொங்க, நம் சிந்தனைகளின் செயலாக்கத்தை நாமே பார்க்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்தோங்கி விட்டதே! இன்னமும் எங்கெங்கே, என்னவென்னமோ வெல் லாம்கூட நடக்கும்!

  இப்போது நான் யோசிக்கிறேன் - நமக்கு வயதாகிவிட்டதே - ஒரு 10, 20 ஆண்டு கம்மியாக இருந்தால், எவ் வளவு அதிகமாக இன்னமும் பிரச்சாரம் செய்து பகுத்தறிவின் வெற்றிபற்றி மக்களிடம் எடுத்துக் கூறலாமே! வீணாக இந்த முதுமை நமக்கு குறுக்கே வந்து விட்டதே என்று உளப்பூர்வமாக வருந்தினார்!

  90 வயதில் உடல்நலம் தளர்ந்து, கழிக்கும் சிறுநீரை ஒரு போத்தலில் பிடித்து, (இணைக்கப்பட்ட இரப்பர் குழாய் வழிவந்த நிலையில்) அந்த கண்ணாடி போத்தலை, ஒரு பிளாஸ்டிக் வாளியில் வைத்து, தன் கையிலே தூக்கிக்கொண்டு, இருபுறமும் இரண்டு பேர்களின் தோள்களைப் பிடித்து எழுந்து நிற்கவும் ஆன நிலையிலும்கூட பயணம் செய்து மணிக்கணக்கில் பேசி அறிவுறுத்திடவும் அய்யா தவறவில் லையே!

  முதுமை வாட்டியும், முதிர்ச்சி பீறிட்டுக் கிளம்பிய வண்ணம் இருந்தது!

  அப்படி 19.12.1973 அன்று மாலை பயணம் சென்ற வாகனத்தில் குறிப் பிட்டபோது, அய்யா தந்தை பெரியாரின் உணர்வுகள் எப்படி என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும்.

  ஆனால், இயற்கையின் கோணல் புத்தி அந்த உரைதான் அவரது இறுதிப் பேருரையாக - மரண சாசனமாக ஆகிவிட்டது!

  மேலே எழுதிய பல அறிவியல் கண்டுபிடிப்புகளைப்பற்றி சிலாகித்துப் பேசியது அவ்வுரையில் இடம்பெற்றுள் ளதை அய்யாவின் குரலிலேயே எவரும் ஒலிநாடாவில் இன்றும் கேட்கலாம்!

  வயது ஏற ஏற, முதிர்ச்சி நமக்கு ஏற்படவே செய்கிறது. இளமைத் துடிப் புடன் எவரும் எடுத்தேன் - கவிழ்த் தேன் என்று பேசுவது தவிர்க்கப்படக் கூடும்!
  முதுமை முத்திரை - தெரிந்தோ தெரியாமலோ முதிர்ச்சி முத்திரையைப் பதிப்பிக்கவே செய்கிறது.

  என்னைப் பொறுத்தவரை எனக்கு ஏற்பட்ட அனுபவம்கூட, பல்வேறு சோதனைகள் வந்தபோது முன்பு இருந்த பதற்றம் - துடிதுடிப்பு இப்போது இருப்ப தில்லையே!

  இமயமே இடிந்து நம்மீது விழுந்து விடுவதுபோல பிரச்சினைகள் வந்து விழுந்தாலும், அதை உணர்ச்சிவயப் படாமல், அறிவுப்பூர்வமாக, அணுகி சிந்திக்கவேண்டியவற்றைச் சிந்தித்தும், அறிவுரை கேட்கவேண்டியவர்களிடம் கேட்டும், எதையும் வெல்லும் பகுத் தறிவு அணுகுமுறையை முதிர்ச்சி - முதுமையின் தொடர்ச்சியாக வருகிறது என்பதை (பெரியார் தந்த புத்தி கார ணமாக) உணர்ந்து வருவதால், முதுமை கண்டு அஞ்சாதீர்! முதிர்ச்சியை வர வேற்க ஆயத்தமாயிருங்கள்!

  எனவே,

  முதுமையே போ! போ!

  முதிர்ச்சியே வா! வா! என்று கூவிக் கூத்தாடி குதுகலமாகி வாழ்க்கையை அணுகுங்கள்!

  (தொடருகிறது)

  Read more: http://viduthalai.in/page-2/97735.html#ixzz3UCDcEQPH

  தமிழ் ஓவியா said...

  கா(லி)விகளின் அட்டகாசம்!
  புதிய தலைமுறை அலுவலகம் மீது குண்டு வீச்சு

  சென்னை, மார்ச் 12_ சென்னையிலிருந்து ஒளி பரப்பாகிவரும் புதிய தலைமுறை தொலைக் காட்சி நிறுவனத்தின் தலைமையகத்தின் மீது இன்று அதிகாலையில் வெடி குண்டு வீசப்பட்டது.

  அதிகாலை மூன்று மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் டிபன் பாக்ஸ் போன்ற பாத்திரத்தில் பொருத்தப்பட்ட குண்டு களை அலுவலகத்தின் மீது வீசிவிட்டுச் சென்று உள்ளனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. பொருட்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை.

  இதையடுத்து அந்த அலுவலகத்தின் முன்பாக பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக் கப்பட்டுள்ளனர். வெடி குண்டு நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு, அந்த வெடிகுண்டின் பாகங்கள் சேகரிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை; பொருட்களும் சேதமடையவில்லை.

  சிசிடிவி கேமராக் களில் பதிவாகியிருக்கும் காட்சிகளை வைத்து, குண்டுவீசிய நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

  புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாலி தொடர்பான விவா தம் ஒன்று ஒளிபரப்பாகவி ருந்தது. இந்த விவாதத்தை ஒளிபரப்பக்கூடாது என இந்து அமைப்புகள் சில எதிர்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக் கிழமையன்று போராட்டம் நடத்தின.

  இந்தப் போராட்டத் தின்போது புதிய தலை முறை தொலைக்காட்சி யின் ஒளிப்பதிவாளர் ஒரு வர் தாக்கப்பட்டார். ஒளிப்பதிவுக் கருவி ஒன்று சேதப்படுத்தப்பட்டது.

  இந்தச் சம்பவம் தொடர் பாக 10 பேர் கைது செய் யப்பட்டனர்

  Read more: http://viduthalai.in/page-8/97767.html#ixzz3UCEWkHDl