Search This Blog

26.3.15

பலர் தாலி அணியாமலே நல்வாழ்வு வாழ்கின்றனர்! கவிஞர் அய்யா திருமணத்தில் பெரியார்

 (பெருமதிப்புக்குரிய நமது  திராவிடர்கழகத் துணைத் தலைவர் அய்யா மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் திருமணத்தில் தந்தைபெரியார் அவர்கள்  நிகழ்த்திய சொற்பொழிவை பதிவு செய்வதில்            “தமிழ் ஓவியா”  வலைப்பூ  பெருமை கொள்கிறது---நன்றி)
*********************************************

கணவன் - மனைவி முறை ஜாதி முறையைவிட கேடானதாகும்





இத்திருமணத்தில் மணமகனாக இருக்கும் கலியமூர்த்தி, சுயமரியாதை இயக்கத்திற்குச் செல்லப்பிள்ளை ஆவார். இயக்கக் காரியங்களுக்கு நாம் சொல்லாமலே நம் காரியப் பணிகளை முன்னிலையில் நின்று காரியமாற்றக் கூறியவர். மணமகளின் தந்தை இயக்கத்திற்கு மிகத் தொண்டாற்றியவர். தொண்டாற்றுபவராவார்.


மணமகன் அரசாங்கப் பணியில் உள்ளவர் இனி அதிகமாக இயக்கக் காரியங்களில் ஈடுபடாமல் ஆதரவு தருவதோடு நிறுத்திக் கொள்வது நலமென்ற கருதுகின்றேன். ஏன் இப்படிச் சொல்கிறேனென்றால், எங்காவது வேறு உத்தியோகத்தில் பார்ப்பான் இருப்பான். அவன் இவர் இயக்கக்  காரியத்தில் ஈடுபடுவது தெரிந்தால் எப்படியாவது எந்தக் குறையையாவது, குற்றத்தையாவது சொல்லி வேலையிலிருந்து நீக்க முயற்சிப்பான். அதற்கு இடமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும்.


பொதுவாக நம் நாட்டின் திருமணமென்றால் பெண்ணாயிருந்தால் வேலைக்காரி, ஆணையிருந்தால் எஜமானன். இத்தத்துவப்படிதான உலகமெங்கும் திருமணம் நடைபெறுகிறது.


சாதாரணமாக நம் நாட்டில் கல்யாணமில்லாமல் ஆண்கள் சமாளித்துக் கொள்ளலாம். பெண்களால் முடியாது. ஏன் பெண்களால் முடியாது என்றால், என்ன இவ்வளவு வயதாச்சு? இன்னும் கல்யாணம் பண்ணமாலிருக்கிறீர்கள் என்று கண்டவரெல்லாம் கேட்பார்கள். அதற்காகவாவது கல்யாணம் செய்ய வேண்டியவர்களாகிறார்கள். பெண்கள் அடிமைகளாகத் தான் இருக்க வேண்டும் என்பதுதான், நம் கடவுள் - மதம் - சாஸ்திரங்கள் எல்லாமாகும். அடுத்து மக்களைப் பல சடங்குகளைச் செய்ய செய்து அதன் மூலம் மடையர்களாக்குவது. மற்றும் ஜோசியம் - ஜாதகம் - பொருத்தம் பார்ப்பது - சாமி கேட்பது எல்லாமே மனிதனை மடையனாக்கப் பார்ப்பானால் ஏற்பாடு செய்யப்பட்டதே ஆகும். தமிழனுக்கு இந்த முறையில் எதுவுமே சம்பந்தம் கிடையாது. இதுபோன்று முறை இருந்தது என்பதற்குத் தமிழில் எந்த இலக்கியத்திலுமே சான்று இல்லை.

ஜாதி முறையை விடக் கேடு இந்தக் கணவன் மனைவி முறையாகும். 


பறையன், சக்கிலிக் கூட மேல்ஜாதிக்காரன் சொல்வதைக் கேட்காமல், "நீ போ சாமி என்னால் முடியாது" என்று சொல்லி விட்டுப் போய் விடலாம். ஆனால் ஒருத்தன் மனைவி அதுபோலச் சொல்ல முடியாது. சொன்னால் கணவன் அவளைக் கொலை கூடச் செய்வான். இதுபோல் நடக்கின்றன. தினசரி பத்திரிகையில் நாள் தவறாமல் எங்காவது ஒரு நிகழ்ச்சி பெண் - ஆனால் கொலை செய்யப்படும் செய்தி வந்த வண்ணமிருக்கிறது. இதுவரை பழைய முறையில் செய்யப்பட்டதால் என்ன பலனடைந்து விட்டார்கள். மற்ற மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதற்காக எடுத்துக்காட்டாக நடந்து கொண்டவர்கள் என்று சொல்லப்படும் சீதை, கண்ணகி, திரவுபதை இவர்கள் கதைகளைப் பார்த்தாலே தெரியுமே. பெரிய ஜோசியனை எல்லாம் வைத்து நேரம் காலம் பொருத்தம் பார்த்துச் செய்யப்பட்டது தானே இவர்கள் திருமணம். இவர்கள் என்ன சிறந்த வாழ்வு வாழ்ந்து விட்டனர். இதனை மக்கள் சிந்திக்க வேண்டும்.


மனித சமுதாய வாழ்வே முட்டாள்தனத்தை அடிப்படையாகக் கொண்டது தான். ஆடு, மாடு, நாய், மலம் இவற்றை விட இழிவானதாகக் கருதப்படுகிறது மனித சமுதாயம். நாயைத் தொடலாம் - ஆடு, மாடு, நாய், மலம் இவற்றை தொடலாம். ஆனால் ஒரு மனிதனைத் தொட்டால், அவன் கட்டியத் துணியோடு குளிக்க வேண்டுமென்பது ஜாதித் தன்மையாக இருக்கிறது. இதை விடக் கொடுமை ஒரு பெண் ஓர் ஆணைத் தொட்டால் அவளைக் கொல்ல வேண்டும் என்கிறான். கொல்கிறான். பெண்ணை அவ்வளவு இழிவாக்கி, அடிமையாக்கி ஆண் தனக்கே உரிமைப் பொருளாக்கி வைத்திருப்பதே காரணமாகும். அதன் அறிகுறி தான் இந்தத் தாலியாகும். இது பெண்ணை அடிமையாக்குவதன் சின்னமாகவும், முண்டச்சியாக்கும் சின்னமாகவும் அணியப்படுவதே யாகும். அந்தத் தன்மையை அடிப்படையாகக் கொண்ட தாலி அணிவதைத் தவிர்த்தது அறிவுடைமையாகும். இதனால் எந்தக் கேடும் ஏற்படாது. ஏற்படவுமில்லை. பலர் தாலி அணியாமலே நல்வாழ்வு வாழ்கின்றனர்.

வாழ்த்துக் கூறுவதால் எந்தப் பலனும் கிடையாது. ஒரு சந்தோஷத்தைத் தெரிவிப்பதற்கான முறையே தவிர, வேறில்லை. வெள்ளைக்காரன் நான் ஆசைப்படுகிறேன் - விரும்புகிறேன் என்று தான் சொல்வான். இந்த வாழ்த்துக் கூறுவதே பார்ப்பான் நம்மை ஏமாற்றப் பயன்படுத்தியதே தவிர, பார்ப்பானால் ஏற்பாடு செய்யப்பட்டதே தவிர மற்றப்படி அதனால் எந்தப் பயனும் இல்லை.


மணமக்கள் நண்பர்களைப் போலப் பழக வேண்டும். வரவிற்கு மேல் செலவிடக் கூடாது. பட்டினிக் கிடந்தாலும், கடன்காரனாகக் கூடாது. ஆடம்பரமாகத் தங்களைத் காட்டிக் கொள்ளாமல் எளிய வாழ்வு வாழ வேண்டும். சினிமா, கோயில் இவற்றிற்குச் செல்லக் கூடாது. நெய்வேலி - பம்பாய் போன்ற தொழில் நகரங்களுக்குச் சென்று தொழிற்சாலைகளைப் பார்க்க வேண்டும்.


பிள்ளை பெறாமலே பார்த்ததுக் கொள்ள வேண்டும். மீறினால் ஒன்று அல்லது இரண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். குறவனுக்கு எப்படித் திருடுவதில் அவமானமில்லையோ, அதுபோல பிள்ளைக் குட்டிக்காரன் இலஞ்சம் வாங்குவதிலும் - பல்லைக் காட்டிக் கெஞ்சுவதிலும் அவமானப்படுவது கிடையாது. நீ பணக்காரனாக வேண்டும் என்று சொல்வதற்குப் பதில், நீ நாசமாகப் போ என்று சொல்வதற்குப் பதில் பத்து பன்னிரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொள் என்று சொன்னாலே போதும். அப்பிள்ளைகளே அவனை நாசமாக்கி விடும்.


-------------------------- 14.07.1968 அன்று மாயவரத்தில் நடைபெற்ற கலியமூர்த்தி - வெற்றிச் செல்வி திருணத்தில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 13.08.1968

38 comments:

தமிழ் ஓவியா said...

நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து விட்டதாகக் கூறுவது ஏன்?

மத்திய அரசின் பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தபோது அதற்குப் பாராட்டுத் தெரிவித்தது அ.இ.அ.தி.மு.க.

தற்போது நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு

தமிழ்நாட்டை வஞ்சித்து விட்டதாகக் கூறுவது ஏன்?

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெரிக்க வேண்டாம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

நீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைக்காதது ஏன்?
தமிழ்நாடு அரசு நிதி நிலை அறிக்கை குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் 2015-2016ஆம் நிதி ஆண்டின் வரவு - செலவுத் திட்டத்தை தமிழக முதல் அமைச்சரும் நிதி அமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்!

இதில் துவக்கத்தில் மத்திய மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டை எப்படியெல்லாம் நிதித் துறையில் வஞ்சித்துள்ளது என்ற தகவல்களின் திரட்டாக இந்த பட்ஜெட் உரை அமைந்துள்ளது!

மத்திய அரசின் பட்ஜெட்டும் அதிமுகவின் நிலைப்பாடும்!

மத்திய அரசு பட்ஜெட்டை பலரும் கடுமையாக விமர்சித்தனர். அதன் தோழமைக் கட்சியும், ஆட்சியில் பங்கேற்ற சிவசேனா போன்றவைகளும்கூட பல்வேறு அம்சங்களைக் குறைகூறிய நிலையில், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா வரவேற்று அறிக்கை விட்டார்!

இப்போது தமிழ்நாடு அரசு முதல்வர் பட்ஜெட் மூலம் எப்படியெல்லாம் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சித் துள்ளது என்பதைக் கீழ்க் காணும் தகவல்கள் மூலம் உண்மைகளைக் கூறியுள்ளார்:

மொத்த பரப்பளவு, தனிநபர் வருமான இடைவெளி ஆகியவற்றிற்குக் கொடுக்கப்பட்ட அதிகமான முக்கியத் துவம், மொத்த பசுமைப் பரப்பின் அளவு போன்ற பொருத்தம் இல்லாத அளவுகோல்களைப் புகுத்தியது போன்ற நடவடிக்கைகள் தமிழ்நாட்டிற்கு பாதகமாக அமைந்துவிட்டன.

தமிழ் ஓவியா said...


பொருளாதார வளர்ச்சியை துரிதப் படுத்துவதற்காக, வெளிச்சந்தையில் அதிகக் கடன் திரட்டியும், வரி விதிப்பதன் மூலம் வருவாயை அதிகமாகப் பெருக்கியும் நிதி முதலீடு செய்ய முனைந்த தமிழ் நாட்டைப் போன்ற மாநிலங்களின் நலன்களைப் பாதுகாக்க நிதி ஆணையம் தவறிவிட்டது.

வரிகள் மூலம் நிதி திரட்டும் அதிகாரம் மத்திய அரசிடமே அதிகம் குவிந்துள்ள நிலையில், உயர் பொருளாதார வளர்ச்சியை எட்டும் மாநிலங்கள், தம்முடைய சொந்த வருவாயினை மட்டுமே நம்பி இயங்கிட வேண்டும் என்பது தவறான கருத்தாகும்.

மாநில அரசு எடுக்கும் முயற்சிகளின் காரணமாக ஏற்படும் உயர் பொருளாதார வளர்ச்சியின் மூலம் கிடைக்கும் அதிக வரி வருவாய், குறிப்பாக, வருமான வரி, சுங்கத்தீர்வை, மத்திய ஆயத்தீர்வை, நிறுவனங்கள் மீதான வரி மற்றும் சேவை வரிகள் ஆகியவற்றின் பயன்கள் அனைத்தும் மத்திய அரசுக்கே கிடைக்கும் நிலையில், மாநில அரசால் விற்பனை வரியின் பயனை மட்டுமே பெற இயலும். இதனால், தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்கள் பெரும் வருவாய் இழப்பை எதிர்கொள்வதுடன், தங்களின் நடைமுறை நிர்வாகத் தேவைகளுக்குக்கூட என்றென்றும் மத்திய அரசினைச் சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். மத்திய அரசு முன்வைக்கும் இத்தகைய கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவம், மாநிலங்களும், மத்திய அரசும் சமச்சீரற்ற வருவாய் ஆதாரங்களைக் கொண்டுள்ள நிலையில், அவற்றை சமமான பங்குதாரர்களாகக் கருதுவது வியப்பை அளிக்கிறது.

தமிழ் ஓவியா said...

எனவே, வருவாய்ப் பற்றாக் குறையால் அத்தகைய மாநிலங்கள் பொருளாதார வீழ்ச்சியைச் சந்திப்பதைத் தவிர்க்கவும், பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து அடையவும் மத்திய அரசு நேரடி வரி வருவாயை மட்டும் தனது அதிகார வரம்பில் வைத்துக்கொண்டு மற்ற அனைத்து மறைமுக வரி வருவாயினையும் மாநிலங்களுக்கே வழங்கிட வேண்டிய காலம் கனிந்துவிட்டது என்றே கருதுகிறேன் என்று முதல்வரும் நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் நிதி நிலை அறிக்கையில் கூறியுள்ளார்.

பொதுவாக நாட்டில்தான் வளமை குன்றி வறட்சி நிலவுவது வாடிக்கை. நமது பட்ஜெட்டோ உரிமை பறிக்கப்பட்ட, நிதி வறட்சி பட்ஜெட்டாக அல்லவா தரப்பட்டுள்ளது!

தி.மு.க. ஆட்சியோடு ஒப்பிடும்போது இவ்வாட்சியில் பெரும் சரிவு ஏற்பட்டு விட்டது. (தனியே பெட்டிச் செய்தி காண்க).

புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லையே!

கேரளா, கர்நாடகாவைப் பார்க்கக் கூடாதா?

கேரளா, கர்நாடக அரசுகளின் புதிய அணைகள் கட்டும் முயற்சிகளை முதல் அமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதாலேயே முறியடித்து விட முடியாது.

ஒட்டு மொத்த தமிழ்நாடும் இந்த அரசின் பின்னால் உள்ளது - கட்சிமாச்சாரியங்களைக் கடந்து என்று காட்டவாவது, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முன் வர வேண்டும்; இதில் அரசியல் வீம்பு கண்ணோட்டம் தேவையில்லை; கர்நாடகம், கேரளத்தைப் பார்த்துக் கூடவா நாம் பாடம் படித்துக் கொள்ளக் கூடாது?

தமிழ் ஓவியா said...

தினசரி கொலை, கொள்ளைகள்தானா?

சட்டம் ஒழுங்கு மிகவும் கேலிக்கூத்தாக உள்ளது. சில நாளேடுகளில் தினசரி பட்டியல் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு! பற்றி வெளியிடுவது தமிழக அரசுக்குப் பெருமையா?

உயர்நீதிமன்றத்தின் கண்டனங்களுக்குப் பல்வேறு உயர் அதிகாரிகள் ஆளாவதும், ஊழல், லஞ்சம் தலை விரிகோலம் என்று முன்பு இவ்வாட்சியை ஆதரித்த ஏடுகளேகூட எதிர்த்து எழுதுவதும் சுவர் எழுத்துக்களாக உள்ளனவே! மாற்றுத் திறனாளிகளிடம் கருணை இல்லாமல் நடக்கலாமா?

சட்டப்படி தவறுகளைச் சுட்டிக் காட்டினால் சட்டம் அவர்கள்மீது பாய்வதா?

சட்டப்படி தவறுகளைச் சுட்டிக் காட்டும் டிராபிக் இராமசாமி மற்றும் இராணிப்பேட்டை அருகில் நடந்த ஒரு விபத்தில் கொல்லப்பட்டவர்மீது கருணை இல்லாமல் நடந்து கொண்ட மாவட்ட ஆட்சியரிடம் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நீதி கேட்ட நண்பர் துரைமுருகன் மற்றும் தி.மு.க.வினர் 179 பேர்மீது வழக்குப் போடுவது போன்ற நடவடிக்கைகளும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்குப் போதிய வாய்ப்பளிக்காமல், ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிப்பது போன்ற தொடர் நடவடிக்கைகள், வெகு குறுகிய கால சட்டமன்ற தொடர்கள் என்பவை இவ்வாட்சிக்கு ஒருபோதும் பெருமை சேர்க்கப் போவதில்லை. இவை பொதுவாக உள்ளவர்களின் வெறுப்பைத்தான் மலைபோல் குவித்து வருகிறது!

பெரும்பான்மை இருக்கிறது என்கிற காரணத்தால்....

எனவே, இந்த வரவு -செலவு திட்டமும் அதனை ஏற்க வைக்கும் சட்டமன்றக் கூட்டமும் ஜனநாயக நாட்டின் அம்சங்கள் என்பதை மறந்து எங்கள் பெரும்பான்மையை வைத்து எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளுவோம் என்ற நிலை கூடாது!

முதல் அமைச்சர் செயல்படத் தயக்கம் காட்டுவது அக்கட்சிக்கும் தலைமைக்கும்கூட பெருமை சேர்க்காது.

----------------------

தி.மு.க. ஆட்சியோடு ஒப்பிடும் போது....

திமுக தன் ஆட்சி காலத்தில் வாங்கிய கடன் ரூ. 43,892 கோடி கடன் வாங்கிய திமுக தன் 5 ஆண்டுகால ஆட்சி காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை பெரிதாக உயர்த்தவில்லை.

பல தொலைநோக்கு மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தியது....

1. 4300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 8 மின் திட்டங்கள்

2. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

3. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்

4. இராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம்

5. அண்ணா நூற்றாண்டு நூலகம்

6. மெட்ரோ இரயில் திட்டம்

7. 7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி

8. முதல் பட்டதாரி மாணவர்களுக்கு இலவச கல்வி

9. உள்கட்டமைப்பு திட்டங்கள்

10. புதிய சட்டசபை வளாகம்......

இன்றைய அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தின் கடன் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் என்று சொல்லப்படுகிறது). மேலும் ஜெயலலிதாவின் ஆட்சியில் பால் கட்டணம் இரண்டுமுறை, மின்சாரக் கட்டணம் இரண்டுமுறை, பேருந்துக் கட்டணம் என அனைத்து கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டன. பட்ஜெட்டுக்கு முன்பாகவே புதிதாக வரிகள் விதிக்கப்பட்டன.

திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி -13.4 சதவிகிதம்...

அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி - 4.14 சதவிகிதம்

திமுக ஆட்சி காலத்தில் தொழில் வளர்ச்சி - 20.93 சதவிகிதம்

அதிமுக ஆட்சி காலத்தில் தொழில் வளர்ச்சி - 1.61 சதவிகிதம். மாநிலம்

மொத்த உள்நாட்டு உற்பத்தி

1. மகாராஷ்டிரா ரூ.190,310,000.00 கோடி

2. உத்தரப் பிரதேசம் ரூ.109,770,000.00 கோடி

3. ஆந்திர பிரதேசம் ரூ.100,350,000.00 கோடி

4. தமிழ்நாடு ரூ.97,970,000.00 கோடி

5. குஜராத் ரூ.90,650,000.00 கோடி

6. மேற்கு வங்காளம் ரூ.84,570,000.00 கோடி

7. கருநாடகம் ரூ.70,890,000.00 கோடி

8. ராஜஸ்தான் ரூ.53,930,000.00 கோடி

9. கேரளா ரூ.48,630,000.00 கோடி

10. மத்தியப் பிரதேசம் ரூ.45,810,000.00 கோடி

கடந்த 2000 முதல் 2011 வரை தொடர்ந்து இந்திய அளவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து இரண்டாமிடத் தில் இருந்து வந்த தமிழ்நாடு கடந்த 3 ஆண்டுகளில் சரிவைக்கண்டு நான்காம்மிடத்திற்கு வந்துவிட்டது



- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
26.3.2015

Read more: http://viduthalai.in/e-paper/98550.html#ixzz3VUZUNRmJ

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

குழந்தைப் பேறு

மயிலாடுதுறையையடுத்த திருவாலங்காட்டில் உள்ள கோயில் குளமான காமேஸ் வர தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைப் பேறு கிடைக் குமாம். - ஒரு நாளேட்டின் செய்தி இது. அந்தத் திருவாலங் காட்டிலேயே குழந் தைகள் இல்லாத தம்பதிகள் இருக் கிறார்களே?

Read more: http://viduthalai.in/e-paper/98552.html#ixzz3VUa7RuPX

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்தி இவ்வளவுதான்!
பழநி மலை கோயில்
ரோப் கார் அறுந்து விழுந்தது

பழநி, மார்ச் 26:பழநி மலைக்கோயிலுக்கு பஞ்சா மிர்தம் கொண்டு சென்ற மெட்டீரியல் ரோப் கார், பில்லர் சாய்ந்ததால் அறுந்து விழுந்தது.

பழநி தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயி லுக்கு செல்வதற்காக தெற்கு கிரி வீதியில் இருந்து ரோப் கார் இயக்கப்பட்டு வருகிறது.

பஞ்சாமிர்தம், அன்ன தானத்துக்கான மளிகை பொருட்கள் கொண்டு செல்வதற்கு தனியாக மெட்டீரியல் ரோப் கார் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதில் நேற்று பிற்பகல் வழக்கம் போல் பஞ்சாமிர்தம் ஏற்றி செல்லப்பட்டது. அப்போது ரோப்கார் வழித்தடத்தில் உள்ள இரும்பு பில்லர் திடீரென சரிந்து வயர்கள் அறுந்து விழுந்தன.

இதில் பஞ்சாமிர்தம் ஏற்றி சென்ற ஒரு பெட்டி சாய்ந்ததால், பஞ்சாமிர்த டப்பாக்கள் கீழே விழுந்தன. காலியாக வந்த பெட்டி அடுத்து கீழே விழுந்தது. உடன் ரோப் கார் இயக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ள தால், ஒரு வாரத்திற்கு மெட்டீரியல் ரோப் கார் இயங்காது என்று ஊழி யர்கள் தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/98551.html#ixzz3VUaJLRcn

தமிழ் ஓவியா said...

மனிதத் தன்மை


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு, அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...

மாற்றுத் திறனாளிகள் மீது
மனிதநேய அணுகுமுறை தேவை

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சென்னை விருந்தினர் மாளிகை முன்பு கடந்த 24ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொள்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகளைப் போராட வைப்பது என்பதே கருணையற்ற - மனித நேயமற்ற ஒன்று என்று எடுத்த எடுப்பிலேயே கூறிட வேண்டும். அவர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை - பார்வையற்றவர்கள் பிரச் சினையை அரசு திறந்த பார்வையுடன் பார்க்க வேண்டும்.

காது கேளாதோர் பிரச்சினையை அரசாங்கம் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்பது இயற்கையின் பாற்பட்ட மனித நியதியாகும். அவர்களின் கோரிக்கைதான் என்ன?

மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற அரசு கடைப்பிடிக்கும் சட்ட விரோத விதிகளை ரத்து செய்க!

மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமே அனைவருக்கும் உதவி தொகை வழங்கிடுக!

40 சதம் ஊனம் உள்ள அனைவருக்கும் உதவித் தொகை வழங்கிடுக!

காது கேளாதோர் உதவித் தொகை பெற 80 சதம் என்கிற பாரபட்சத்தை ரத்து செய்க!

உதவித் தொகை நிறுத்தப்பட்ட அனைவருக்கும் நிலுவை தொகையுடன் உடனே வழங்குக!

உத்தரவு பெற்று காத்திருக்கும் அனைவருக்கும் காலதாமதமின்றி உதவித் தொகை வழங்கிடுக!

2014 மார்ச் அரசாணை எண்.10-ன் படி ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத் திறனாளிக்குரிய 1107 பின்னடைவு காலிப் பணியிடங்களில், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் 900-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி ஆசிரியர்களை பணி நியமனம் செய்க!

அரசாணைப்படி ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாளச் சான்று வழங்கிடுக!

அரசு காலிப் பணியிடத்தில் 3 சதவிதத்தை மாற்றுத் திறனாளிகளை கொண்டு நிரப்பிடுக!


மேற்கண்ட ஒன்பது கோரிக்கைகளில் அடங்கி யுள்ள நியாயத்தை விளக்கிட வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு தாய்க்கு நான்கு குழந்தைகள் இருந்தால் அதில் ஒன்று பிறப்பிலேயே மாற்றுத் திறனாளியாக இருந்தால் அத்தாயின் கடமை என்பது அந்தக் குழந்தையின்மீது கூடுதல் கவனம் செலுத்துவ தாகும்.

அரசு என்பதும் அந்தத் தாயின் இடத்தி லிருந்து மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினையைப் பார்க்க வேண்டாமா? காது கேட்பதில் என்ன 80 சதவிதம்? விசித்திர மான கேலிக் கூத்து!

இவை எல்லாம் ஒரு பிரச்சினையைத் தட்டிக் கழிக்க வைக்கப்படும் நிபந்தனைகளாகவே தெரிகிறது.

இவர்கள் எல்லாம் என்ன மிட்டா மிராசு தார்களா? செல்வந்தர்களா?

அரசு கொடுக்கும் உதவித் தொகையில் வாழ வேண்டிய கட்டாயத் துக்கு ஆளாக்கப்படுபவர்களாயிற்றே! அவர்கள் விஷயத்தில் தேவையற்ற நிபந்தனைகளைத் திணிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்பதில் அய்யமில்லை.

இவர்களில் படித்தவர்களுக்கு சட்டப்படி அளிக்க வேண்டிய வேலை வாய்ப்பை அளித்திட என்ன தயக்கம்? அப்படி என்ன இவர்களுக்குப் பெரிய தொகை செலவாகப் போகிறது?

அரசு கீழே சிந்தும் பணத்துக்கு ஈடாகுமா இது? அரசு இவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற் றிட முன்வர வேண்டும்.

தந்தை பெரியார் அவர்களால் உண்டாக்கப்பட்ட திராவிடர் கழகம் மனிதாபிமான இயக்கமாகும் - மனித உரிமைகளுக்காகப் போராடும் இயக்கமும் ஆகும்.

அந்த முறையில்தான் மாற்றுத் திறனாளிகளை அவர்கள் போராடும் இடத்திற்குச் சென்று நேற்று சந்தித்தோம். அவர்கள் நியாயமான கோரிக்கை களுக்காக திராவிடர் கழகம் உரத்த முறையில் குரல் கொடுக்கத் தயாராகவே இருக்கிறது.

நீதிமன்றம் சென்றுதான் ஆக வேண்டும் என்றாலும், அந்த வகையிலும் உதவிட திராவிடர் கழகம் தயாராகவே இருக்கிறது.

அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் தமிழ்நாடு அரசு கருணையோடும், மனிதநேய உணர்வுடனும் அணுக வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்து கிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

26.3.2015

Read more: http://viduthalai.in/page-2/98557.html#ixzz3VV2Av9w5

தமிழ் ஓவியா said...

பெரியார் பாதையில் லீக்வான்யூ

சிங்கப்பூரின் சிற்பி லீயின் 'இறுதி அஞ்சலி நாளன்று அவரவர் இருக்கும் இடங்களில் , கறுப்பு உடை அணிந்து பெருமை மிகு லீ அவர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்' என்ற வேண்டுகோள், எதிர்பாராத அளவுக்கு மக்கள் மனங்களைத் தொட்டிருக்கிறது. ஆயிரமாயிரம் அன்பர்கள் அந்தச் செய்தியை பெரிய அளவில் பகிர்ந்து கொண்டு, அன்னாரின் புகழை உலகெங்கும் பரப்பியுள்ளனர்.

எதிர்பார்த்த அளவுக்குக் கருப்புடை தரித்த அனுதாபக் கூட்டம் உருவாகி வருகிறது. தந்தை பெரியாரின் கொள்கைகளை லீ அவர்கள் மறைமுகமாக ஏற்றவர். உழைத்தால் மட்டுமே உயர முடியும் என்ற பெரியாரின் அரிய கருத்தின் முழு சொந்தக்காரர் லீ.

அதே நேரத்தில் லீயின் தெய்வ நம்பிக்கை, இதுவரை யாருக்கும் வெளிப்படையாகத் தெரியாத ஒன்று. செயலாக்கமே நாட்டை முன்னுக் குக் கொண்டு வரும் எனத் திடமாக நம்பிய அவர், தெய்வம் சார்ந்த கொள்கைகளுக்கு நேரம் ஒதுக் காததையும் நம்மால் காண முடிகிறது. ஆனாலும், தன் மக்களின் தெய்வ நம்பிக் கைகளில் என்றைக்குமே அவர் குறுக்கே நின்ற தில்லை. முப்பதுக்கு மேற்பட்ட இந்து கோயில்களை கட்ட அனுமதித்தவர். தைப்பூசத் திருவிழாவுக்கு முக்கியத்துவம் தந்தவர்.

இந்து அறக் கட்டளை வாரியத்தின் வழி, கோயில்கள் ஒழுங்காக நிர்வ கிப்பதை உறுதிப் படுத்திஇருப்பவர். இன்றைய நம் கோயில்கள் பல, சமய ஆராதனைகளுடன், பாலர் பள்ளி போன்ற போதனைக் கூடங்களையும் நடத்தி வருகின்றன. லீயின் மறைவை ஒட்டி ,தந்தை பெரியாரின் கருஞ் சட்டைக் கொள்கையை மக்கள் இங்கே பின்பற்ற நினைப்பது மிகப் பொருத்தமே! நவ நாகரீக சிங்கப் பூக்கு, பெரியார் பார்வை தந்த பெருமையும் லீ அவர்களுக்கே உரியது.

- சிங்கப்பூர் ஏ.பி. இராமன் -

Read more: http://viduthalai.in/e-paper/98593.html#ixzz3VaHtEvB1

தமிழ் ஓவியா said...

அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய கோமியமா?

மத்திய அமைச்சர் கருத்துக்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு

சென்னை, மார்ச் 27_ அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய கோமியம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்திருப்பது சாத்திய மற்றது என அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும்போது, பினாயில் பயன்படுத் துவதைவிட கோமியத்தால் தயாரிக் கப்படும் திரவத்தை பயன்படுத் தினால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, மற்ற துறைகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

அமைச்சர் கூறியது நடைமுறைச் சாத்தியமில்லை என்றும், இது பாஜகவின் அரசியல் தந்திரம் என்றும் அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகி கள் கூறுகின்றனர். அவர்கள் கூறிய தாவது:

மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன பொதுச் செயலாளர் எம். துரைபாண்டியன்: இந்தக் கருத்தை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளிடம் இருந்து எதிர்பார்க்கலாம். ஆனால், மத்திய அமைச்சரே கூறுகிறார் என்றால் ஒட்டுமொத்த அமைச்சகமே ஆர். எஸ்.எஸ். கருத்தியலை அமல்படுத் ததான் முயல்கிறது என்பது தெளிவாகிறது. தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் ஜே.கணேசன்: அனைத்து அரசு அலுவலகங்களிலும் தினந்தோறும் கோமியம் பயன்படுத் துவது என்பது நடைமுறைச் சாத்திய மற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஆர். தமிழ்ச்செல்வி: தமிழகத் தில் சுமார் ஆயிரம் அரசு அலுவலக வளாகங்கள், 10 ஆயிரம் அலுவலக கட்டிடங்கள் உள்ளன. பல அலுவ லகங்கள் பராமரிப்பின்றி கிடக்கின் றன. குறைந்தபட்சம் பினாயில் பயன்படுத்திதான் சுத்தம் செய்து வருகின்றனர்.

திடீரென்று அனைத்து அலுவலகங்களிலும் கோமியம் பயன்படுத்துவது சாத்தியமில்லாதது. மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் சங்க அகில இந்திய தலைவர் கே.கணேசன்: சுற்றுச்சூழ லுக்கு நல்லது என்றால் இத்தனை ஆண்டுகள் இதுபற்றி ஏன் கூற வில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தைரியமாக இதுபோன்ற கருத்துகளை பேசி வருகின்றனர். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கும் என்று தோன்றுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Read more: http://viduthalai.in/page-2/98601.html#ixzz3VaJN9b80

தமிழ் ஓவியா said...

மதத்தினால்.....


யாருக்கு எந்த மதத்தில் பற்றிருப்பினும் அதுகுறித்து எனக்குக் கவலையில்லை. ஆனால், அந்த மதத்தினால் நாடு என்ன நன்மை பெற்றது? மனித வர்க்கத்திற்கு என்ன பலனேற்பட்டது என்னும் கேள்வி முக்கியமானதாக இருக்கவேண்டும்.
(குடிஅரசு, 15.4.1928)

Read more: http://viduthalai.in/page-2/98597.html#ixzz3VaK5J7gP

தமிழ் ஓவியா said...

சின்ன சின்ன மலர்கள்

அனைத்தையும் படைத்தவன் ஆண்டவன்தான் என்கிறான் மனிதன்! இந்த மனிதன் படைத்ததுதான் என்ன? இது தெரியாதா? மனிதனின் படைப்புத்தான் ஆண்டவன்!

********************

உலகில் ஓரிருவர் சரித்திரமாகிறார்கள். ஒருசிலர் சரித்திரத்தை உருவாக்குகிறார்கள்.... பலர் சரித்திரத்தில் இடம் பெறுகிறார்கள். மிகப்பலரோ இவை எதுவுமற்ற தரித்திரங்களாகவே மறைந்து போகிறார்கள்.

********************

வீரன், ஒருமுறைதான் சாவான்; கோழை பலமுறை சாவான் என்பார்கள் - ஒரு திருத்தம்; வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை.

- கலைஞர் (சிறையில் பூத்த சின்ன மலர்கள் என்ற நூலிலிருந்து)

Read more: http://viduthalai.in/page-4/98634.html#ixzz3VaMZy722

தமிழ் ஓவியா said...

அண்ணா கூறுகிறார்!

குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமே யன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடியாது என்று கூறுவதுண்டோ?

குழந்தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போது தான் இடதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக் கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப் பரு வத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத் துகளை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர்.

நூல்: உவமை நயம்

Read more: http://viduthalai.in/page-4/98634.html#ixzz3VaMjHDSH

தமிழ் ஓவியா said...

குன்னமிர்தல் கூறுகிறார்!

மக்களிடையே இருப்பது சமுதாய, பொருளாதாரப் பிளவுகளும், அவற்றுடன் சமுதாய நலன்கள், வேலை வருவாய் வாய்ப்புகள் இவற்றில் கொடிய சமமின்மையும் ஆகும்.

சமமற்ற ஏற்றத்தாழ்வுள்ள சமுதாய அமைப்பு இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அகற்றமுடியாத பெரும் பகையாக உள்ளது. (ஆசியன் டிராமா - பக்கம் 258)

இந்திய சமுதாய பழக்க வழக்கங்களில் சாதிப் பாகுபாடு ஊடுருவிப் பாய்ந்துள்ளது கடுமையான அறுவை சிகிச்சையாலன்றி, வேறு முறையால் அதனை வீழ்த்திட முடியாது

(பக்கம் 278 - அதே நூல்)
(குன்னமிர்தல் எழுதிய ஆசியன் டிராமா என்ற இந்நூல் நோபல் பரிசு பெற்றது)

Read more: http://viduthalai.in/page-4/98634.html#ixzz3VaNiZI3r

தமிழ் ஓவியா said...

மந்திரம் - தந்திரம் - யந்திரம்

மனிதன் ஒரு காந்தம். அவன் உடல் உறுப்புகளில் காந்த சக்தி உள்ளது என்பதைப் பகுத்தறிவாளர்கள் கூட மறுக்க முடியாது. ஏனென்றால், அது விஞ்ஞானி களால் நிரூபிக்கப் பட்ட உண்மை.

இந்த உண்மையின் அடிப் படையில் அமைந்தது தான் தாந்த்ரிக சாஸ்திரம். சரியான சாதனையாலும், பயிற்சியாலும் இந்த காந்த சக்தியை ஓர் ஆக்க சக்தியாக்கி அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டியிருக் கின்றனர். (ஞான பூமி, பிப்ரவரி 1982, பக்கம் 29)

தேஹரியில் கொஞ்சகாலம் தங்கினேன், அப்போது பண்டிதரிடம் எனக்குப் படிக்கச் சில புத்தகங்களையும் ஏடுகளையும் கேட்டேன். அவர் சில இலக்கணங்கள், இலக் கியங்கள், நிகண்டுகள், தாந்திர நூல்கள் கிடைக்குமென்றார். தாந்திர நூல்களை நான் அதுகாறும் பார்த்ததில்லை. அதைப் படிக்கக் கேட்டேன். பண்டிதர் பல தாந்திர நூல்களைத் தந்தார்.

புத்தகத்தைத் திறந்ததுமே நம்பமுடியாதபடி அவ்வளவு அசுத்த, ஆபாச, அபத்த, அசங்கியச் சரக்குகளைக் கண்டு அருவருத்தேன். தாந்திர நூல் தாய், மகள், அக்கா, தங்கை, சண்டாளி, சாமரி என்ற விவஸ்தை இல்லாமல் ஸஹகமனம் (புணர்ச்சி) செய்யத் தூண்டுகிறது.

அதில் நிர்வாண ஸ்திரீயை பூஜை செய்யச் சொல்லியிருக்கிறது. எல்லா பிராணிகளையும் கொன்று புலாலுண்ணலாம். மீனுண்ணலாம், மதுபானம் செய்யலாம்; இவையெல்லாம் பூஜா விதியாம்.

பிராமணன் முதல் சாமரன் வரையில், விவஸ்தை இல்லாமல் பஞ்ச மகாரானுஷ்டானம் செய்யச் சொல்லுகிறது. மாமிசம், மது, மத்ஸ்யம், முத்திரை, மைதுனம் ஆகியவை பஞ்சமகாரங்கள். இந்தப் பைசாச அனுஷ்டானங்கள் முக்தி தருமாம். ஆனந்த முக்திக்கு இவை வழியாம்.

இந்தத் தாந்திர நூல்களை படித்து முடித்தபோது, என் அருவருப்பிற்கும் வியப்பிற்கும் அளவில்லை. இப்படிப்பட்ட ஆபாசக் குப்பை களை எழுதி தர்ம சாஸ்திரம் என்று பிரச்சாரம் செய்யும் தூர்த்தரை வெறுத்து, அங்கிருந்து சிறீநகரம் சென்றேன்.

- (பக்கம் 24, நூல்: தயானந்த ஜோதி, ஆரிய சமாஜம், சென்னை

Read more: http://viduthalai.in/page-4/98635.html#ixzz3VaNrvBmP

தமிழ் ஓவியா said...

இந்துமதம் பற்றி தாகூர்!

டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:

இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம்.

இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியு டையவர்களாக இல்லை.

இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை.

நம் சாஸ்திரங்கள், ஜாதிப் பிரிவுகளை மீறக்கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண்டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ்திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத் தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.

- இரவீந்திரநாத் தாகூர்

Read more: http://viduthalai.in/page-4/98636.html#ixzz3VaOQ1tFa

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகம் என்று சொல்லப் படுவது இந்துக்களில் 100-க்குத் 97 பேராக இருக்கிற பார்ப்பன ரல்லாத மக்கள் அனைவருக்குமான கழக மாகும். அதன் கொள்கை திராவிட மக்களை முன்னேறச் செய்வதும் அவர்களுக்கு இருக்கிற இழிவைப் போக்கி உலக மக்களைப் போல வாழச் செய்வதுமாகும்.


Read more: http://viduthalai.in/page-4/98636.html#ixzz3VaOhFjkz

தமிழ் ஓவியா said...

நாட்டையே அழிக்கும் ஆபத்து: மிகப்பெரிய விண்கல் நாளை பூமியை கடக்கிறது

லண்டன், மார்ச் 27_ சுமார் 1000 மீட்டர் அக லம் கொண்ட மிகப்பெரிய விண்கல் ஒன்று நாளை (27 ஆம் தேதி) பூமிக்கு மிக அருகில் கடக்க உள் ளது.

அந்த விண்கல்லுக்கு 2014 ஒய்.பி.35 என்று விண்வெளி ஆய்வாளர் கள் பெயர் சூட்டியுள் ளனர். இந்தக்கல் பூமியின் 28 லட்சம் மைல்களை கடந்து பயணிக்கும்.

இந்த மிகப்பெரிய கல் முதல் முறையாக கடந்த ஆண்டு இறுதியில் கேட் டலினா ஸ்கை சர்வே மூலம் அடையாளம் காணப்பட்டது. இந்த அளவு பெரிய விண்கல் பூமியை கடப்பது 5 ஆயி ரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசய மாகும். இந்த மிகப்பெரிய விண்கல் மணிக்கு 37 ஆயிரம் கி.மீ. வேகத்தில் வருகிறது.

இந்த விண்கல் மோதினால் ஒரு பெரிய நாட்டையே அழித்து விடும். மேலும் இதனால் பருவநிலை மாற்றம், நில நடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.

1908 ஆம் ஆண்டு சைபீரியாவில் டுங்குஸ்கா பகுதியில் விழுந்த விண் கல்லால் ஏற்பட்ட பாதிப் புகளை விட இந்த புதிய விண்கல்லின் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இதுதொடர்பாக பக் கிங்காம் ஷைர் பல்கலைக் கழகத்தின் வானியல் பேராசிரியர் பில் நேப்பி யர் கூறுகையில், 2014 ஒய்.பி.35 போன்ற விண்கற்கள் உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. விண்கற்கள் பூமியில் மோதுவது அரிய நிகழ்வுதான் என்றாலும் அவை ஏற்படுத்தும் ஆபத் துகளை நாம் சாதாரண மாக எடை போட்டு விட முடியாது என்றார்.

Read more: http://viduthalai.in/page-4/98642.html#ixzz3VaPOMTIn

தமிழ் ஓவியா said...

காந்தியாரால் அல்ல - சவர்க்காரால்தான் சுதந்திரம் கிடைத்ததாம்!

வீர் சவர்க்காரின் தியாகத்தால் தான் சுதந்திரம் கிடைத்த்து காந்தி ஆங்கி லேயருக்காக இந்தியாவில் நடக்கும் சுதந்திரப்போராட்டத்தைப் பற்றிய தகவல்களை ரகசியமாகக் கூறும் உளவுப் பிரிவிற்காக பணியாற்றிவந்தார் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சாமியாரிணி பிராய்ச்சி கூறியுள்ளார்.

விஷ்வ இந்துபரிஷத் அமைப்பின் 50 ஆண்டு விழா தற்போது பல்வேறு மாநி லங்களில் கொண்டாடப்பட்டு வரு கிறது, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள் ளும் இந்துத்துவா தலைவர்களின் ஒவ்வோரு பேச்சும் சமூகத்தை பிளவு படுத்தும் வகையில் உள்ளது. உத்தரப் பிரதேசமாநிலம் பாயிரஜ் என்ற இடத் தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சாத்வி பிராச்சி கூறியதாவது:

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் என்பது இந்துக்களின் புனிதப் போராட் டமாகும், இந்த போராட்டத்தின் விளைவை ஆங்கிலேயருக்கு உளவு பார்த்து கூற இங்கே பலர் இருந்தனர். அவர்களின் சூழ்ச்சி எல்லாம் சுதந்திரப் போராட்டத்தை மழுங்கடிப்பதாகும். இராட்டை சுற்றுவதால் எங்காவது சுதந்திரம் கிடைக்குமா? இது ஒரு ஏமாற்று வேலை;

அன்றைய கால கட்டத்தில் ஆங்கிலேயர் நடத்திய ஊடகங்கள் காந்தியை ஒரு நாயகன் போல் உலகம் முழுவதும் காட்டியது. காந்தியின் ஆங்கிலேயப் பாசத்திற்கு வெள்ளைக்காரர்கள் கொடுத்த சன் மானமாகும், அவர் ஆங்கிலேயர்களின் ஏஜெண்டாக இருந்த காரணத்தால் உலகம் முழுவதும் காந்தி ஏதோ புகழ் மிக்க தலைவர்களைப் போல் பார்க்கப் படுகிறார்.

உண்மையில் அவர் புகழ் மிக்க தலைவராவதற்குத் தகுதியற்றவர். இந்து மக்களின் அடிமைத்தளை களை ஒழிக்க அரும்பாடு பட்டவர் வீர் சவர்கார் அவர்தான் இந்தியாவின் தந்தை என்று புகழப்படவேண்டும். இந்துக்கள் அவரைத்தான் தேசத்தந்தையாக பார்க்கவேண்டும் என்று கூறினார்.

அதே நேரத்தில் அதிகம் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பிறமதத்தவரின் உரிமைகளைப் பறிக்கவேண்டும், அவர்களுக்குச் சலுகைகள் மற்றும் வாக்குரிமை கொடுக்கக்கூடாது. இதை எதிர்ப்பவர்கள் துணிச்சலிருந்தால் இந்தமேடையிலேயே என்னுடன் விவாதிக்கலாம், இஸ்லாமிய நடிகர் களின் திரைப்படங்களைப் புறக்கணி யுங்கள் என்று நான் சொன்னது நன்மைக்காகத்தான்.

அவர்கள் இந்துப் பெண்களின் மனதில் நச்சைவிதைக் கின்றனர். லவ்ஜிகாத்தின் விதை இஸ்லாமிய திரைப்பட நடிகர்களிட மிருந்துதான் ஆரம்பிக்கிறது பாகிஸ் தானில் ஒரு இந்து நடிகராக முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பசுவதையைத் தடைசெய்யக்கோரி இந்திரா காந்தியைச் சந்திக்கச்சென்ற சாமியார்கள் மீது தடியடி நடத்த உத் தரவிட்டார். அதனால் அவரது மரணம் இவ்வளவு மோசமாக இருந்தது. இந்துக்களின் மீது கைவைக்கும் அனை வரது முடிவும் இப்படித்தான் இருக்கும். மசூதிகளில் எந்த ஒரு கடவுளும் இல்லை, சுவரைப் பார்த்து வணங் குவது எப்படி கடவுள் வழிபாடாகும் ஆகவே மசூதிகள் எல்லாம் வெறும் கட் டிடங்கள் மட்டுமே என்று பிராய்ச்சி கூறினார்.

தமிழ் ஓவியா said...

மாநில அரசு இணையதளத்தில் இன்றளவும் ஜெயலலிதா தான் முதல்வர்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்று எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல மக்களும் கூட புலம்பும் நிலைதான் தமிழகத்தில் உள்ளது. அதற்கேற்பத்தான் ஆட்சியும் காட்சிகளும் உள்ளன.

தமிழகத்தில் அதிமுகவினர்தான் ஜெயலலிதாவை விடாமல் மக்களின் முதல்வர் என்று கூறி வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அரசுத் துறையும் கூட அவரை இன்னும் முதல்வராகவே பார்க்கிறது, பாவிக்கிறது என்பதுதான் வேடிக்கையானது.

மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்காக பூஜைகளும் சிறப்பு யாகங்களும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அரசின் சாதனை குறித்த புகைப்படக் கண்காட்சியை நடத்தினர். அதில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் படம் மருந்துக்குக் கூட வைக்கவில்லை. மாறாக ஜெயலலிதா படம்தான் நிறைந்திருந்தது.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இன்னும் கூட அகற்றப்படவில்லை. தற்போது தமிழக அரசின் மக்கள் செய்தி மக்கள் தொடர்பு துறை இணையதளத்தில் ஜெயலலிதாவை இன்னும் முதல்வராகவே வைத்துள்ளனர். அந்தத் தளத்தை கிட்டத்தட்ட அப்படியே போட்டு விட்டு போய் விட்டது போலவே தெரிகிறது.

எந்த ஒரு மாற்றமும் இல்லை. இந்தத் தளத்தைப் பார்த்தபோது. அதில் அமைச்சரவைப் பட்டியலில் முதல்வர் ஜெ. ஜெயலலிதா என்று போட்டு வைத்துள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சராகவே நீடிக்கிறார். மேலும் அந்தத் தளம் முழுவதும் ஜெயலலிதா படம்தான்.

Read more: http://viduthalai.in/page5/98662.html#ixzz3VgDNz8Qw

தமிழ் ஓவியா said...

சோதிடப் புயல்!

Astronomy என்பது வான இயல். இது காரண காரியத்தை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞான பூர்வமானது. Astrology என்பது சோதிடம் கூறுதலாகும். இதற்கும் அறிவியலுக்கும் சிறிதும் சம்பந்தம் கிடையாது.

ஆனால் மெத்த படித்த சிலரும் இவ்விரண் டையும் ஒன்று என்று எண்ணி குழம்புகின்றனர். Astrology சோதி டம் என்பது வெறும் புரட்டே என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மெயில் நாளிதழில் (‘The mail’ Madras) 7_11_1981 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

நவம்பர் மாதம் 11ஆம் தேதியன்று பெரும் புயல் ஒன்று தமிழ்நாட்டு கடலோரத்தையும் வங்காள தேசத்தையும் கடுமையாக தாக்கு மென்றும்; அது 1977ஆம் ஆண்டு நவம்பரில் வீசிய புயலைப் போல் பயங்கரமாக இருக்கும் என்றும்;

அப்புயலின் உச்ச கட்டம் 13ஆம் தேதியாக இருக்கும் என்றும் Indian Institute of Astrology யைச் சேர்ந்த டாக்டர். ஹிராலால் பால் என்பவர் சோதிடம் கூறியிருந்ததுடன் அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.

ஆனால், அந்தோ பரிதாபம்! அவர் குறிப்பிட்ட நவம்பர் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி முடிய - அது அய்ப்பசி மாதமான போதி லும் (சென்னையில்) ஒரு துளிகூட மழை இல்லாமல் வெயில் அடித்து இரவில் பகல்போல நிலவும் காய்ந் தது.

தமிழ்நாட்டில் எங்கும் புயல் இல்லை. வங்காளதேசத்திலும் புயல் அடித்ததாகச் செய்தி இல்லை.
சோதிடம் பொய் என்பதற்கு சரியான ஆதாரமாகும் இது.

Read more: http://viduthalai.in/page6/98663.html#ixzz3VgDZmA9l

தமிழ் ஓவியா said...

சனாதன அடுக்கில் இந்துவாய் இருப்பதில்
பயனென்ன?

பரிணாம வளர்ச்சியால் பல்லுயிர் உலகம்
படைக்கப் பட்டதன்று; உருவானதே
அறிவியல் முறையில் ஆய்ந்து உலகிற்கு
நாட்டினர் அறிஞர் டார்வின்
பிறப்பொக்கு மென்றார் பெருமகன் வள்ளுவர்
உலகினில் எங்குமே நிலவாத
பிறப்பை வைத்துபேத முரைப்பது
அர்த்த முள்ளஇந்து மதமே!

தொட்டால் தோசம்நிழல் பட்டால் தீட்டு
குலக்கொடுமை கொடிகட்டிப் பறந்தது
நாட்டின் மனுதர்ம நடைமுறை ஆட்சி
அதிகாரம் பெற்றதே காரணம்
முன்பிறப்பு வினையென்று மோசடியால் கடவுள்
மதத்தைக் காட்டிய மதமெது?
தன்னலங் கரம்பிய தான்தோன்றிக் கூட்டம்
நால்வண்ணத்தில் மேல்வண்ண மென்றதே!

ஊர்ப் புறத்தே ஒதுக்கி ஒடுக்கி
தீண்ட மறுத்தது எந்த மதம்?
செருப்பு தெருவில் போடக் கூடாதென
கூனிக் குறுகவைத்தது எந்த மதம்?
தோளில் துண்டு போடக் கூடாது
அக்குளில் வைத்தது எந்தமதம்?
மேலாடை அணியக் கூடா தென்று
பெண்ணைத் தடுத்தது எந்த மதம்?

பித்தளைப் பாத்திரம் புழங்கக் கூடாது
மிதிவண்டி ஓட்டினால் தண்டனை
சூத்திர னுக்கே கல்வியில்லை பஞ்சமன்
நினைத்துப் பார்க்க முடியுமா?
ஆதியில் வராத சாதி ஆரியப்
பார்ப்பனரால் பாதியில் வந்தது
நாதியற்று நடைப் பிணமாய் நடைபாதையில் வதிந்து
நலிந்தவர் தாழ்த்தப் பட்டோரே!

இந்துவாய் என்றும் இருந்த இழிவைச்
சுமக்க வேண்டும் காவிகள்
இந்துவென்று இனிக்கப் பேசுவோர் இருபதாம்
நூற்றாண்டு தொடக்கம் வரை
தாழ்த்தப் பட்டோர் இந்துப் பகுப்பில்லை
என்பதே தமிழக வரலாறு!
ஆழ்ந்து சிந்தித்தால் ஆலகால நஞ்சாம்
ஆர்எஸ்எஸ் கரவு புரியுமே!

தாய்மதம் திரும்ப அழைக்கும் தம்பிரான்கள்
இந்துவானால் எந்தசாதி இயம்புவாயா?
அய்ரோப்பா அரபு நாடுகளில் வந்தவரா?
இந்நாட்டின் மண்ணின் மைந்தர்கள்
சமத்துவ மில்லா சனாதன அடுக்கில்
இந்துவாய் இருப்பதில் பயனென்ன?
சமத்துவ நோக்கில் சனாதனம் விலக்கி
இணைந்தார் கிருத்துவ இசுலாமிற்கே!

கவிஞர் இனியன், திருச்சி - 13

Read more: http://viduthalai.in/page7/98667.html#ixzz3VgDmoWM3

தமிழ் ஓவியா said...

திருடுவதிலும் வினோதம் - எச்சரிக்கை!

ஆக்ராவில் உள்ள அஜய் சர்மா என்ற ஆயத்த ஆடை வர்த்தகர் தன்னுடைய மோட்டர் சைக்கிளை விற்க பிரபல இணையதளத்தில் படத்துடன் பதிவு செய்திருந்தார். இந்த விளம்பரத்தைப் பார்த்து பலர் வந்தனர். 22 வயது மிக்க கல்லூரி இளைஞர் போல் தோற்றமளித்த ஒருவர் அஜய் சர்மாவிடம் தனக்கு மோட்டார் சைக்கிள் வேண்டும் என்று கூறினார்.

விலை எல்லாம் பேசி முடித்த பிறகு மோட்டர் சைக்கிளை ஓட்டிப்பார்த்துவிட்டு பணம் கொடுக்கிறேன் என்றுகூறியவுடன் நம்பிக் கையுடன் அஜய் சர்மா அவரது மோட்டர் சைக்கிளைத் தந்துள்ளார்.

இதனை அடுத்து அந்த நபர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று விட்டார், நீண்ட நேரம் வரை காத்திருந்த அஜய் சர்மா அந்த இளைஞர் மீண்டும் வராததைக் கண்டு அவரின் அலைபேசியைத் தொடர்பு கொண்ட போது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

தெரியவந்தது இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கொண்ட அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் தேடினார். ஆனால், அந்த இளைஞர் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச்சென்ற விபரம் தெரியவந்து, அவர் ஆக்ரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இணையதளத்தில் அந்த இளைஞர் போலியான முகவரி மற்றும் வேறு ஒருவரின் படத் தையும் கொடுத்து இருந்ததால் உடனடியாக அவரை அடையாளம் காண முடியவில்லை.

Read more: http://viduthalai.in/page8/98671.html#ixzz3VgF69jKz

தமிழ் ஓவியா said...

மோடி சம்பளம் வாங்காத பிசிசிஅய் விளம்பரத் தூதரா?

காலையில் வெற்றி பெற வாழ்த்து, நண்பகலில் நன்றாக பேட்டிங் செய்ய வாழ்த்து, மாலையில் தோற்றவுடன் மக்களுக்கு ஆறுதல்?! மோடி சமூக வலைதளத்தின் மூலம் இங்குள்ள கிரிக்கெட் கிளப்பிற்கு சம்பளம் வாங்காத பிராண்ட் அம் பாசிடர் போல் செயல் பட்டு வருகிறார். ஆசியப் போட்டிகளில் பதக்கம் வென்றபோதும், காமன்வெல்த் போட்டி யில் வரலாற்றில் முதல் முறையாக இந்திய விளை யாட்டு வீராங்கனைகள் பதக்கம் வென்றபோதும் இது குறித்து பேசாத மோடி. கிரிக்கெட் போட்டி கள் ஆரம்பித்ததில் இருந்தே சமூகவலைதளத் தில் பிசிசிஅய்க்கு விளம் பரம் செய்தவாறே இருந்தார். பிசிசிஅய் என்ற தனியார் நிறுவனம் தனது விளையாட்டு வியாபா ரத்தை நடத்த ஒப்பந்த அடிப்படையில் சூதுவா தில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கட்ட ளைக்கு ஏற்ப ஆடும் பொம்மைகளை களத்தில் இறக்கி விட்டு வியாபாரம் பார்க்கிறது. கிரிக்கெட் விளையாட் டுப் போட்டிகள் தனியார் நிறுவனம் நடத்தும் மேற் படி சூதாட்டம், இதை பிசிசிஅய் நீதிமன்றத்தி லேயே கூறிவிட்டது, நேற்று மாத்திரம் 67 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சூதாட்டம் நடந்த தாக இண்டெர்நேசனல் பிஸ்னஸ் டைம்ஸ் (லீஜீ://ஷ்ஷ்ஷ்.வீதீவீனீமீ.நீஷீ.வீஸீ/) என்னும் செய்தி நிறு வனம் செய்திவெளியிட் டுள்ளது. கடந்த வாரம் கூட 2007-ஆம் ஆண்டு நடந்த அய்.பி.எல் விளையாட் டில் சுமார் 500 கோடிக் கும் மேல் வரிஏய்ப்பு செய்ததாக பிசிசிஅய் மீது உச்சநீதிமன்றத்தில் வரு மானவரித்துறை மற்றும் சிபிஅய் வழக்கு பதிவு செய்துள்ளது.

இது போன்ற நாட்டிற்கு வரிஏய்ப்பு செய்துவரும் அமைப்பைச் சேர்ந்த வணிகம் தொடர்பான விளையாட்டிற்கு மோடி வலிய வந்து வக்காலத்து வாங்குகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/98715.html#ixzz3VgIrEIaz

தமிழ் ஓவியா said...

இன்று இராம நவமியாம்!

இராமன் பிறந்தானாம்! இராம ராஜ்யம் - இதுதானா?

புரிந்து கொள்வீர் இராம பக்தர்களே!

இராமாயணத்தில் இராமன் ஆட்சி - எப்படி நடந்தது? யாருக்காக நடந்தது?

வால்மீகி இராமாயணத்தின் கடைசிக் காண்டமான உத்தரகாண்டத்தில் இராமராஜ்யம் பற்றிக் கூறப் படுகிறது!

ஒரு பார்ப்பனச் சிறுவன் இறந்து போனான். அவனது சடலத்தோடு, பார்ப்பனக் கூட்டம், இராமனுடைய தர்பாருக்குள் கும்பலாக நுழைகிறது.

இராமா! உன் ஆட்சியில் அதர்மம் மேலோங்கி விட்டது; (அதாவது மனுதர்மம், குலதர்மம் உள்ளடக் கிய) வர்ணதர்மக் கட்டளைகளை யாரும் சரியாகக் கடைப்பிடித்து ஒழுகுவதில்லை.

ஞானியானாலும், மூடன் ஆனாலும், சூத்திர னுக்குப் பிராமணனே தெய்வம்; அந்த மேலான தெய்வ மாகிய பிராமணனை மட்டும்தான், அல்லது அவன் மூலமாகத்தான் தெய்வத்தைத் தொழ முடியும்; தொழ வேண்டும். இந்த இந்து மத சாஸ்திரங்களைமீறி, சம்பூகன் என்ற சூத்திரன் ஊருக்கு வெளியே காட்டில் கடவுளிடம் வரம் வாங்கிட தவம் செய்கிறான், முயலுகிறான்;

இந்த அதர்மத்தினால் எனது மகன் பாலகன் செத்து விட்டான் என்று கதறி முறையிட,
எந்த விசாரணையும் இன்றி, உடனே ராமன் புறப்பட்டுச் சென்று தவம் செய்து கொண்டிருந்த சம்பூகன் என்ற சூத்திரனை (அசுரன்) நாலாஞ் சாதிக்காரனை கண்டந்துண்டமாக வெட்டி எறிந்தான்.

செத்துப் போன பிராமணச் சிறுவன் உடனே உயிர் பெற்றெழுந்தான் என்றும் கூறப்படுகிறது!

இந்த அடிப்படையில்தான் இன்றும்கூட உச்சநீதி மன்றத்தில் நீதி (ஒரு மும்பை வழக்கில்) சூத்திரர்களுக்கு சந்நியாசம் கொள்ளவும்கூட உரிமையில்லை; காரணம் வர்ண முறைப்படி பிராமணர்களுக்கு மட்டும்தான் மடாதிபதியாக, சந்நியாசம் வாங்கிட உரிமையுண்டு என்று சில ஆண்டுகளுக்குமுன் தீர்ப்பும் வந்து இந்த குலதர்மப் பாதுகாப்பை - வர்ண தர்மப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது!

இந்த இராமனை சூத்திரர்களும் பஞ்சமர்களும் அதாவது கீழ் ஜாதியாக்கப்பட்டவர்களும் கும்பிடலாமா?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள் பக்தர்களே!

குறிப்பு: இந்த உத்திரகாண்டத்தை கம்பன் போன்ற கைக்கூலிகள் எழுதாமல் கைவிட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/98717.html#ixzz3VgJ2FfoP

தமிழ் ஓவியா said...

மதம்படுத்தும்பாட்டைப் பாரீர்!

புனித(?) நதியில் மூழ்கி 10 இந்துப் பக்தர்கள் பலி!

டாக்கா, மார்ச் 28-_ வங்காளதேசம் முஸ்லிம் நாடாக இருந்தாலும், அதன் 16 கோடி மக்களில் 10 சதவீதம் பேர் இந் துக்கள் ஆவார்கள். அங்கு தலைநகர் டாக்காவில் இருந்து 25 கி.மீ. தெற்கே பழைய பிரம்மபுத்ரா நதிக்கரையில் லங்கல்பந்த் என்ற இந்து புனித தலம் உள்ளது.

அங்கு ஆண்டு தோறும் பங்குனி அஷ்ட மியின்போது, வங்காள தேசத்தில் இருந்து மட்டு மல்லாது இந்தியா, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்தும் ஏறத்தாழ 10 லட்சம் பேர் கூடுவது வழக்கமாம். பிரம்மபுத்ரா வில் இந்த நாளில் நீராடி தெய்வ தரிசனம் செய்வது நல்லது என இந்துக்கள் கருதுகின்றனராம்.

இந்த ஆண்டும் வழக் கம் போல நேற்று அந்த நதியில் புனித நீராடுவ தற்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். அதற்காக 15 முனைகள் நீராடுவதற்கு ஏற்ற இடங் களாக அறிவிக்கப்பட் டிருந்தன. நேற்று காலை 5.45 மணிக்கு நீராடல் தொடங்கியது.

சுமார் 9 மணிக்கு புனித நீராடுவதற்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அப்போது நதியில் புனித நீராடுவ தற்கு பக்தர்கள் ஒருவருக் கொருவர் முந்திச்செல்ல முற்பட்டபோது நெரிசல் ஏற்பட்டது. பலர் கீழே விழுந்தனர். ஒருவரை ஒருவர் மிதித்து செல்லும் நிலை உருவானது.

இந்த நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரி ழந்தனர். அவர்களில் 7 பேர் பெண்கள். 30 பக்தர் கள் படுகாயம் அடைந் தனர். அவர்கள் உடனடி யாக மீட்கப்பட்டு அரு கில் உள்ள மருத்துவம னைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்த தக வல் அறிந்ததும் நாராயண் கஞ்ச் காவல்துறை கண் காணிப்பாளர் கண்டகர் மத் உதீன், டி.அய்.ஜி., முகமது சபீக், கூடுதல் டி.அய்.ஜி. பரூக் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் அலை மோதிய நிலையில், அவர் களை ஒழுங்குபடுத்தி நீராடுவதற்கு உதவும் வகையில் தேவையான எண்ணிக்கையில் காவல் துறையினரும் தன்னார்வ தொண்டர்களும் பணி அமர்த்தப்படவில்லை என பக்தர்கள் கூறினர். இதனால்தான் நெரிசல் ஏற்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

மாவட்ட நிர்வாக அதிகாரி அனிசுர் ரகுமான் கூறும்போது, இந்த ஆண்டு வங்காளதேச தேசிய தினத்தை முன் னிட்டு விடுமுறை விடப் பட்டிருந்ததால், வழக் கத்தை விட கூட்டம் அதிகமாக கூடியது. அத னால்தான் இந்த அள வுக்கு நிலைமை ஏற்பட்டு விட்டது என கூறினார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆழ்ந்த இரங் கல் தெரிவித்துள்ளார்.

மத விழாவில் மதம் பிடித்த யானையால் பாகன் பலி!

கேரள மாநிலம் திருச் சூரில் உள்ளது கையப்ப மங்களம். இங் குள்ள சலியன்கோவில் என்ற இடத்தில் சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் திரு விழா நடைபெற்று வருகிறது.

நேற்று மாலை பட்டங்கட்டிய யானைகள் ஊர்வலமாக சென்றன. இதில் 1000க்கும் மேற் பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விஜயகிருஷ் ணன் என்ற யானையும் பட்டம் கட்டி ஊர்வல மாக வந்தது. இதன் பாகனாக சிவசங்கரன் (வயது 51) இருந்தார்.

ஊர்வலம் கோவில் அருகே வந்தபோது விஜய கிருஷ்ணன் யானைக்கு மதம் பிடித்தது. பக்தர் களை யானை ஆவேசமாக தாக்க முயன்றது. பக்தர் கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பக்தர்களை காப்பாற்ற சிவசங்கரன் யானையின் அருகே சென்று அடக்க முயன்றார். ஆவேசத்தில் இருந்த யானை பாகன் சிவசங்கரனை தந்தத்தால் குத்தி எறிந்தது. இருந்தா லும் பாகன் மீண்டும் யானையை அடக்க முயன் றார். இதில் ஆத்திர மடைந்த யானை சிவசங் கரனை துதிக்கையால் பிடித்து சுழற்றி கீழே போட்டது. பின்னர் காலால் மிதித்தது. இதில் பாகன் சிவசங்கரனுக்கு நெஞ்சு பிளந்தது.

ரத்தவெள்ளத்தில் சிவசங்கரன் உயிருக்கு போராடினார். அங்கிருந்த கையப்பமங்களம் காவல் துறையினர் சிவசங்கரனை ஜீப்பில் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென் றனர். அங்கு போதிய மருத் துவ வசதி இல்லாததால் திருச்சூரில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பல னின்றி சிவசங்கரன் பரிதாபமாக இறந்தார்.

யானைக்கு மதம் பிடித்தது குறித்து திருச்சூர் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. அவர்கள் மயக்க ஊசி செலுத்தி யானை விஜயகிருஷ்ணனை சங் கிலியால் கட்டிப்போட்ட னர். இதுகுறித்து கையப் பமங்களம் காவல்துறை யில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

சேர்த்திடுக!

செய்தி: பால் விலை உயர் வால் ஏழைகள் பாதிக்கப் படவில்லை.
- முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

சிந்தனை: இரு முறை மின் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்படவில்லை; போக்குவரத்துக் கட்டண உயர்வால் பொது மக்கள் பாதிக்கப்படவில்லை என் பனவற்றையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாமே!

Read more: http://viduthalai.in/e-paper/98712.html#ixzz3VgJM1HoX

தமிழ் ஓவியா said...

மனிதத் தன்மை


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு, அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/98697.html#ixzz3VgJpWi6g

தமிழ் ஓவியா said...

ஊழியர்களை மிரட்டி இந்தித் திணிப்பா?

சென்னை, மார்ச் 28_ சென்னை சாஸ்திரி பவனில் மார்ச் 26 வியா ழனன்று நிறுவனங்கள் விவகாரத் துறைஇந்தி நாள் கொண்டாடி யிருக்கிறது. பொதுவாக செப்டம்பர் 14 அன்று தான் இந்தி நாள் கொண் டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்தத்துறை, செப்டம்பரில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சாக்கு சொல்லி இப்போது கொண் டாடியிருக்கிறது. அதில் பேசிய நிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச் சகத்தின் தென்மண்டல இயக்குநர் பி.கே.பன்சால், தமிழக ஊழியர்களை கிட்டத்தட்ட மிரட்டியிருக்கிறார்.

இந்தி தினத்தைக் கட்டாயமாக கொண்டாடவேண்டும் என்றும், இந்திதெரியாத ஊழியர்கள் இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும், இந்தியில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் ஆவணங்களில் இந்தியில்தான் குறிப்பெழுத வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.இதை தமிழ்மொழியுரிமைக் கூட்டு இயக்கம் கண்டித்துள்ளது.இத்தகைய இந்தித் திணிப்பு முயற்சியை கடுமையாக கண்டிப்பது டன், அலுவல் மொழிகள் சட்ட விதிகளின்படி தமிழகத்தின் அனைத்து மத்திய அரசு அமைப்பு களிலும் கட்டாயமாக இந்தி பயன் படுத்தப்படுவதை தடைசெய்யவேண்டும் என்று அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் ஆழி செந்தில்நாதன் கூறியுள் ளார்.

சட்டம் சொல்வது என்ன?

இந்திய அரசியல்சாசனம் இந்தி மட்டுமே இந்தியாவின் ஒரே அலுவல் மொழி என்று கூறவில்லை. மாறாக ஆங்கிலத்தையும் அது ஏற்கிறது. அது மட்டும் போதாது, அனைத்துத் தேசிய இனங்களின் மொழியையும் இந்தியா வின் ஆட்சிமொழியாக ஆக்கவேண்டும் என்று கோரிக்கை இப்போது இந்தியா முழுவதிலும் வந்துகொண்டிருக்கிறது. அதை விட முக்கியமாக, இந்தியாவின் ஆட்சி மொழிச் சட்டம்1-1963இன் கீழ் வகுக்கப்பட்ட, அலுவல் மொழிகள் விதிமுறைகள் 1976 மிகத் தெளிவாகவே இந்தி அலுவல் மொழி என்பது தமிழகத்துக்குப் பொருந்தாது என்று வரையறுத்திருக்கிறது.

அதாவது இந்தி அலுவல் மொழி யாக பயன்படும் இடங்கள் எதுவாக இருந்தாலும், தமிழ்நாட்டில் இந்தி அவ் வாறாக பயன்படுத்தப்படவேண்டிய தில்லை என்பதே அந்தச் சட்டத்தின் கருத்தாகும்.இன்னும் தெளிவாக, எந்தெந்த அமைப்புகள் தமிழ்நாட்டில் இருந்தால் அவற்றுக்குப் பொருந்தாது என்பதும் சட்ட விதிகளில் வரையறுக் கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் அமைச்சகம் அல்லது அலுவலகம், மத்திய அரசாங்கம் நியமிக்கும் ஒரு ஆணையம், குழு, தீர்ப்பாயம், மத்திய அரசாங்கத்துக்கு உடைமையான அல்லது அதன் கட்டுப்பாட்டிலிருக்கிற தொழில் நிறுவனம் ஆகிய அனைத் துக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

நன்றி: தீக்கதிர் 28.3.2015

Read more: http://viduthalai.in/page-2/98704.html#ixzz3VgJy4sib

தமிழ் ஓவியா said...

தாஜ்மகால் யாருக்குச் சொந்தம்? இந்துத்துவாவாதிகளுக்கு மூக்குடைப்பு!


லக்னோ, மார்ச் 28- உலகின் அதிசயங்களில் ஒன்றான தாஜ்ம ஹாலை முன்னாள் சிவன் கோயில் என்று உரிமை கோரிய மனுவினை ஆக்ரா நகர உரிமையியல் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.

ஆக்ரா உரிமையியல் நீதிமன்றத் தில் ஹரி ஷங்கர் ஜெயின் மற்றும் மேலும் அய்வர், நேற்று மனு ஒன் றினை தாக்கல் செய்திருந்தனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள ஆக்ரா நகரில் கம்பீரமாக வீற்றிருக்கும் தாஜ்மஹால் உருவாவதற்கு முன்ன தாக அந்த இடத்தில் அக்ரேஷ்வர் மகாதேவ் என்னும் கடவுளுக்கு அர்ப் பணிக்கப்பட்ட பழைமையான சிவன் கோயில் இருந்தது. எனவே, தற்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் முஸ்லிம்கள் வழிபாடு செய்ய தடை விதித்து, தாஜ்மஹாலை இந்துக்களி டம் ஒப்படைக்க வேண்டும். இந்த வாதத்துக்கு தேவையான வலுவான ஆதாரங்கள் உள்ளன என அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவினை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி தள்ளுபடி செய்து விட்டதாக தெரிவித்த மனுதாரரின் வழக்கறிஞர், இந்த கோரிக்கை தொடர் பாக அலகாபாத் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/98705.html#ixzz3VgKAxQfq

தமிழ் ஓவியா said...

சர்ச்சைக்குரிய 66-ஏ சட்டப்பிரிவு
முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் கருத்துக்கு ஆ.இராசா பதில்

சென்னை, மார்ச் 28_ சர்ச் சைக்குரிய 66-ஏ சட்டப் பிரிவை தொடங்கியது நானா? என முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் கருத்துக்கு ஆ.இராசா பதில் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைத் தளங் களில் கருத்து வெளியிடுகிற சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவு அமைந்தது என்று கூறி, உச்சநீதிமன்றம் அந்தச் சட்டப் பிரிவை ரத்து செய்து கடந்த 24- ஆம் தேதி தீர்ப்பு ஒன்றினை வெளியிட்டது.

அந்தத் தீர்ப்பினை அனைத்துத் தரப்பினரும் பெரிதும் வரவேற்கின்ற நேரத்தில், உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள அந்த சர்ச்சைக்குரிய சட்டப் பிரி வுக்கான கருத்தை உருவாக் கியவனே நான் தான் என் பதைப் போல, முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ் பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்திருப்பது, எனக்குப் பெரிதும் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் வருத்தத் தையும் தருகிறது.

ஒரு சட்ட முன்வரைவு ஒரு அமைச்சகத்தால் ஆய் வுக்கு பிறகு தயாரிக்கப் பட்டு, அது சட்ட அமைச் சகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும். சட்ட அமைச்சகம், அதனை விரி வாக எல்லா கோணங்களி லும் ஆய்வு செய்த பிறகே ஒப்புதல் தரும். அதற்கு பிறகு தான் அந்த சட்ட முன்வரைவு மத்திய அமைச் சரவையின் பரிசீலனைக்கு வைக்கப்படும். அமைச்ச ரவை ஒப்புதல் வழங்கிய பிறகு தான் அந்தச் சட்ட முன்வரைவு நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப் படும்.

அப்போது கூட, அந்த சட்டத்தை விவாதத்திற்கு நாடாளுமன்றம் எடுத்துக் கொள்ளலாமா? வேண் டாமா? என்பதை முடிவு செய்ய போதுமான விதி களின் பாதுகாப்பும், அவைத் தலைவரின் ஒப்புத லும் அவசியம் தேவையா கும். அந்த நிலையில் கூட, அந்த சட்ட வரைவுக்கு எதிர்ப்பு இருக்குமானால், அந்த சட்ட முன் வரைவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப வழி வகை உள்ளது.

இப்படி எல்லாம் படிப்படியாக அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் உட் படுத்தப்பட்ட பிறகு தான் இந்தச் சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறியது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவிலே கூட, இந் தச் சட்டம் தவறாக கொண்டுவரப்பட்டது என்று எந்த உள்நோக்கத் தையும் என்மீதோ, அல் லது நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் மீதோ குற் றமாக எதுவும் கூறாத போது, சட்ட அமைச்சராக இருந்த பரத்வாஜ் சட்டம் நிறைவேற ஒரு காரணமாக இருந்துவிட்டு, இப்போது எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாத நிலையில் என்மீது பழி சுமத்துவதைப் போல ஒரு கருத்தினை வெளியிட் டிருப்பது, அவர் வகித்த பதவிக்கு உகந்ததல்ல.

இதுபோன்ற சட்டங் கள் உருவாகும்போது, அது ஒட்டு மொத்த அமைச்ச ரவையின் முடிவாகத்தான் கருதப்பட வேண்டுமே தவிர, தனிப்பட்ட ஒருவன் மீது பழி சொல்வது ஜன நாயக நெறிமுறைகளுக்கு ஏற்றதல்ல.

இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-4/98684.html#ixzz3VgLRet2N

தமிழ் ஓவியா said...

வரவேற்கத்தக்க தீர்ப்பு
புகார்களைப் பதிவு செய்யாத காவல்துறையினர் மீது நடவடிக்கை: டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 28_ பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மறுக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தர விட்டது.

மதுரையைச் சேர்ந்த ஜி.திருமுருகன் உள்ளிட்ட 69 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் இவ்வாறு உத்தரவிட்டார். காவல் நிலையங்களில் தாங்கள் அளித்த புகார் கள் மீது காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தர விட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந் தனர்.

இம்மனுக்களை விசா ரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு: புகார்களில் கூறப்படும் குற்றச்சாட்டு நடவடிக்கை எடுக்கத் தகுந்ததாக இருந்தால் காவல்துறை யினர் உடனடியாக வழக் குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என பலமுறை நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

இருப்பினும் காவல்துறையினர் தங்கள் விருப்பம் போல் நடந்து கொள்வது கவலையளிக் கிறது. புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யாதது புகார்தாருக்கும் வழக்கு விசாரணையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உண்மைகளைத் திரித்து வழக்குப்பதிவு செய்வது, சாதாரண குற்றங்களை கடுமையான குற்றங்களாகவும், கடுமை யான குற்றங்களை சாதா ரண குற்றங்களாகவும் மாற்றுவது போன்ற தவ றுகளில் காவல்துறையி னர் ஈடுபடுவதாகத் தெரி கிறது. இந்திய அளவில் காவல்துறையிடம் அளிக் கப்படும் புகார்களில் பாதி யளவு பதிவு செய்யப்படு வதில்லை என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

எனவே கீழ்க்கண்ட பரிந்துரைகளை காவல் துறைக்கு அளிக்கிறோம். புகாரில் கூறப்படும் குற் றம் வெளிப்படையாகப் புலனாகும் பட்சத்தில் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு தெரியாத போது, விசாரணை நடத்தி சம்பவம் நடந்துள் ளதா எனக் கண்டறிய வேண்டும்.

முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையென் றால் வழக்கை முடிக்க வேண்டும். வழக்கு முடிக் கப்பட்டது குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் புகார்தாரரிடம் ஒரு வார காலத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

இந்த கடமையில் இருந்து தவறும் காவல் துறையினர் மீது நட வடிக்கை எடுக்க வேண் டும் என உத்தரவில் குறிப் பிடப்பட்டுள்ளது. மேலும் மனுக்கள் மீதான விசா ரணை முடித்து வைக்கப் பட்டது.

நீதிபதி தனது உத் தரவில், குடும்பத்தகராறு, வணிக ரீதியான குற்றங் கள், மருத்துவ சிகிச்சை யில் கவனக்குறைவு, ஊழல், காலதாமதமாக அளிக் கப்படும் புகார் ஆகியவற் றில் முதற்கட்ட விசா ரணை நடத்தப்பட வேண் டும். விசாரணையை 7 நாள்களில் முடிக்க வேண் டும். விசாரணையில் கால தாமதம் ஏற்பட்டால் அதுகுறித்து டைரியில் பதிவு செய்ய வேண்டும். புகார்கள் அனைத்தையும் பொது டைரி, நிலைய டைரி, தினசரி டைரி ஆகியவற்றில் எழுத வேண்டும்.

இதுகுறித்து காவல் துறையினருக்கு விழிப் புணர்வு பயிற்சி அளிக்க வேண்டும். புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்வதில் தவறிழைக்கும் காவல் துறையினரைக் கண் காணிக்க குழு அமைக்க வேண்டும்.

தவறு கண்டுபிடிக்கப் பட்டால் அவர்கள் மீது நிர்வாக ரீதியாக நட வடிக்கை எடுக்க வேண் டும் என உத்தரவில் குறிப் பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-4/98690.html#ixzz3VgLpQB8n

தமிழ் ஓவியா said...

கேள்வியும் பதிலும்

- சித்திரபுத்திரன் -

கேள்வி:- பெண்களுக்குப் புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்.

பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும், விபசார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படு கின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்டதாலேயே சட்டப்படி முழுவிடுதலையும் பெற்று இருக்கிறார்கள்.

ஆதலால் பெண்கள் விடுதலை பெற வேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்க வேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன் என்றோ, ஆண்கள் தங்கப் பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூட வேண்டியதில்லை. துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண்பாத்திரம் வேறுயாராவது தொட்டால் கழுவினால்கூட தீட்டுப் போகாது.

அதை உடைத்து குப்பைத்தொட்டியில் எறிந்தாகவேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-4/98716.html#ixzz3VgLzS3qe

தமிழ் ஓவியா said...

குடிஅரசுக்குப் பாணம்

குடிஅரசு பத்திரிகைக்கு இந்திய அரசாங்க அவசர சட்டப்படி பாணம் போட்டாய் விட்டது. அதாவது நவம்பர் மாதம் 20ஆம் தேதிக்குள் தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் உண்மை விளக்கம் அச்சுக்கூட சொந்தக்காரர் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும், குடி அரசு பத்திரிகையின் பிரசுரகர்த்தாவாகவும், வெளியிடுவோராகவும்,

இருக் கின்றார் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும் ஆக 2000 ரூபாய் கோயமுத்தூர் ஜில்லா மேஜிஸ்டிரேட்டிடம் ஜாமீன் கட்டவேண்டுமென்று நோட்டீஸ் சார்வு செய்யப் பட்டாய்விட்டது. இதைப்பற்றி நாம் வருத்தமடையவில்லை. கவர்ன்மெண்டார் மீதும் நிஷ்டூரப்படவுமில்லை. இதுவரையில் இப்படிச் செய்யாமல் விட்டு வைத் திருந்ததற்கு நன்றி செலுத்தவும், மகிழ்ச்சியடையவுமே கட்டுப்பட்டிருக்கிறோம்.

முதலாளிவர்க்க ஆட்சியாகிய இன்றைய அரசாங் கத்தின் சட்டப்படி குடிஅரசு ஆரம்பித்தகாலம் முதல் இந்த நிமிஷம்வரை குடிஅரசின் ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொருவாக்கியத்திலும் கண்டவிஷயங்கள் குடிஅரசைக் கொல்லத்தக்க பாணம்விடக்கூடத் தகுதியுடையவைகளே என்பதில் நமக்குச் சிறிதும் அய்யமில்லை. ஆதலால் இந்த அரசாங்கம் இதுவரை விட்டு வைத்தது அதிசய மேயாகும்.

குடிஅரசு தோன்றி இந்த 8 1/2 வருஷகாலமாக நாளுக்கு நாள் முற்போக்கடைந்து பணக்கார ஆதிக்க ஆட்சியை ஒழித்து சரீரத்தால் கஷ்டப்படும் ஏழை மக்கள் ஆட்சியை உண்டாக்கவேண்டும் என்கின்ற கவலைகொண்டிருக்கிறது என்பதிலும் இக்காரியம் கைகூடுவதற்கு பார்ப்பனியம், புரோகிதம், பாதிரித்தன்மை முதலியவைகளோடு இவற்றிற்கு ஆதிக்கம் கொடுத்துவரும் எல்லா மதங்களும் ஒழிய வேண்டும் என்பதிலும் கவலையுடன் உழைத்துவந்துள்ளது என்பதில் சிறிதும் ஆட்சேபணையில்லை.

இதற்காக இக்கூட்டங்களின் யோக்கியதைகளைக் கண்ணாடி போல் வெளிப் படுத்தும் தொண்டை பிரதான மாய்க் கருதி அதைச் செய்து வந்திருக்கிறது என்பதையும் நாம் மறைக்கவில்லை. இனியும் அதைத்தான் முதலில் செய்யக்காத்திருக்கிறோம் என்பதையும், தைரியமாய் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தொண்டுகள் செய்ய இடமில்லையானால் குடிஅரசு பத்திரிகை இருக்க வேண்டிய அவசியமுமில்லை.

சிறிதுகாலத்துக்கு முன் நாம் தெரிவித்துக் கொண்டபடி, இனி நம்மால் நமது கடமையைச் செய்ய முடியாதென்று தெரிந்தால் நாம் இருப்பதைவிட இறப்பதுமேல் என்பது போல் குடிஅரசு தன் கடமையை ஆற்ற முடிய வில்லை யானால் அது எதற்காக இருக்க வேண்டும்? ஆதலால் அது மறைந்துபோக நேரிட்டாலும் ஆசிரி யன் என்கின்ற முறையில் நமக்கு கவலையில்லை.

ஆனால் பதிப்பாளர் என்கின்ற முறையிலும், பிரசுர கர்த்தா என்கின்ற முறையிலும் அதன் அத்தியந்த நண்பர்கள் என்கின்ற முறையிலும் சிலருக்குக் குடிஅரசு மறைவதில் அதிகக் கவலையி ருந்து வருகின்றதாக அறிகிறோம். ஜாமீன் தொகை கட்டவும் முயற்சிக்கிறார்கள். விஷயம் எப்படி முடியும் என்று முடிவுகட்ட முடியவில்லை. நமது உடல் நிலை இந்த 5, 6 மாதமாய் அதிகமாய் சீர்கெட்டு விட்டது.

மயக்கமும், மார்வலியும் அதிகம். கால்களில் நீர்ஏறி வீக்கம் கண்டிருக்கிறது. காதுகளும் சரியாய்க் கேட்பதில்லை. ஆதலால் எப்படி ஓய்வெடுப்பது என்று எண்ணியதுடன் இனி உயிர் வாழ்வதும் உலகுக்கு பாரம் என்றே எண்ணி னோம். இந்த நிலையில் குடிஅரசு நின்றுபோக ஏற்பட்டால் தோழர் நாகம்மாள் மறைவு ஏற்பட்டது போலவே மற்றொரு விதத்தில் நமக்கு நன்மை என்றே கொள்ளவேண்டியதாகும். ஆனால் என்ன நடக்கின் றனவோ பார்ப்போம்.

நிற்க இதன் பயனாய் குடி அரசின் கொள்கைகள் மறைந்து விடுமோ என்றாவது, அது இவ்வளவு நாள் செய்துவந்த வேலைகள் கெட்டுப்போகுமோ என்றாவதுயாரும் பயப்பட வேண்டியதில்லை. நமது கொள்கைகள் எங்கும் வேரூன்றி விட்டன. பிரச்சாரம் என்கின்ற கொடி எங்கும் பரவிவிட்டது.

குடி அரசோ சுயமரியாதைக்காரரோதான் கொள்கைகளைப் பரப்ப இருக்கிறார்கள் என்பதாக இனி கருதவேண்டியதில்லை. குடிஅரசும் சு.ம.காரரும் சொன்னதையே நாமும் திருப்பிச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டதே; என்று வெட்கப்பட்டுக்கொண்டு வேறு போர்வைக்குள் இருந்து வேறு பாஷையில் குடி அரசுக்கொள்கையைச் சொல்லவும், பிரச்சாரம் செய்யவும், வெகு தொண்டர்களும் தலைவர்களும் இந்தியாவெங்கும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதலால் அவர்களுக்கும் இதுசமயம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தது போலவும் ஆகும். மற்ற விவரங்கள் பல தோழர்களைக் கலந்தபிறகு வெளியாக்கப்படும். ஆதலால் கோவை ஜில்லா சுயமரியாதை (ஈரோடு) மகாநாட்டிற்கு குடிஅரசு அபிமானத் தோழர்கள் எல்லோரும் அவசியம் விஜயஞ் செய்து இது விஷயமாய் ஒரு முடிவு கட்டும் விஷயத்தில் கலந்து கொள்ள வேண்டுமாக பிரத்தியேகமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.

குடிஅரசு - தலையங்கம் - 12.11.1933

Read more: http://viduthalai.in/page-4/98720.html#ixzz3VgMATHjv

தமிழ் ஓவியா said...

சுயமரியாதைச் சுடரொளி
சுயமரியாதை இயக்க திராவிடர் கழக தளபதியான
அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின்
நினைவு நாள் இன்று (1949)

இளைஞர்களே, அழகிரி பேசுகிறார் கேளுங்கள்

பெரியார் அவர்களை நான் ஏறக்குறைய 30 வருடங்களாக அறிந்திருக்கிறேன். நெருங்கிப் பழகி இருக்கிறேன். என்றாலும், அவரது நம்பிக்கைக்கு இன்றுவரை நான் பாத்திரம் ஆனேனில்லை. கொள்கையைப் பொறுத்தா? இல்லை. இயக்கத்தைப் பொறுத்தா? இல்லை. பின் எதைப் பொறுத்து என்னிடம் அவருக்கு நம்பிக்கை பிறக்கவில்லை? என்னுடைய சொந்த நிலையைப் பொறுத்துத்தான்.

அவர் போடும் காகிதத்துக்குக்கூடச் சரியாகப் பதில் அனுப்பியிருக்கமாட்டேன். அப்படியிருந்தும் அவர் என்னை வெறுத்துவிட்டாரா? இல்லை. அதுதான் அவரிடமுள்ள சிறப்பான பண்பு. தனிமையில் எதையும் பொறுத்துக் கொள்வார்.

பெரியாருக்குத் தனிப்பட்ட முறையில் யார் என்ன தீங்கு செய்தாலும், செய்திருந்தாலும் அதை, மனித சுபாவமே அப்படித்தான் என்று கூறிப் பொறுத்துக் கொண்டுவிடுவார். ஆனால், இயக்கத்தைப் பொறுத்தமட்டில் சிறிது தவறு செய்துவிட்டாலும், உளம் பொறார். சுலபத்தில் ஆத்திரம் கொள்வார்.

தயைதாட்சண்யமின்றிச் சற்றும் பொறுப்பில்லாதவன், முட்டாள், போக்கிரி, சோம்பேறிப் பயல் என்றெல்லாம்கூட சமய சந்தர்ப்பம் பாராமல் ஏசிவிடுவார். இயக்கத்தின்மீது அவ்வளவு பற்றுதல் உள்ளவர். அவரது தன்னலமற்ற இந்த இயக்கப் பற்றுதல் தான் இந்த ஏசல் மொழிகளைக் கேட்டுக் கொண்டு நமது இளைஞர்களை பெரியார் வாழ்க வாழ்க என வாழ்த்தொலி கூறிப் பின்பற்றிச் செல்லும்படி தூண்டுகிறது.

குறிப்பு: இன்றைக்கு 68 ஆண்டுகளுக்குமுன் திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், அஞ்சாநெஞ்சன் தளபதி கே.வி.அழகிரிசாமி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து. (இதோ பெரியாரில் பெரியார் என்ற இயக்க வெளியீட்டை வாங்கிப் படியுங்கள்!).

Read more: http://viduthalai.in/page-4/98728.html#ixzz3VgMmYaLd

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

ஜாதி என்பது வடமொழி. இதற்கு ஏற்ற சொல் தமிழில் இல்லை. எனவே, ஜாதி என்பது தமிழரிடை முன்பு இருந்த தில்லை. தமிழர்களுக்குள் ஜாதி என்பது இருந்து இருக்கு மானால் அதற்குத் தமிழில் ஒரு சொல் இருந்து இருக்க வேண் டுமே? இல்லையே! எப்படி காபி என்பது அன்னிய நாட்டுப் பொருளானதால் அதற்குத் தமிழில் சொல் இல்லையோ அதுபோல் ஜாதி என்பதற்கும் சொல் இல்லை.

ஆரிய எதிர்ப்புணர்ச்சியும் அவர்கள் கலாச்சாரப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உணர்வும் இந்தியாவிலேயே தமிழன் என்கிறவனுக்குத் தான். தமிழ்நாட்டில்தான் இருந்திருக்கிறது... நம்முடைய கலை, சிற்பம் என்பது நாம் எவ்வளவு நாகரிகம், பண்பாடு ஆகியவைகளைப் பெற்று அந்தக் காலத்திலேயே நாம் எப்படி உயர்ந்திருக்கிறோம் என்பதைக் காட்டும். இந்தியாவின் மற்றெந்தப் பகுதியிலும் இப்படிப்பட்ட உயர்ந்த அறிவும் சக்தியும் அந்தக் காலத்தில் இருந்ததாகவே தெரியவில்லை.


Read more: http://viduthalai.in/page-4/98720.html#ixzz3VgNEsEt1

தமிழ் ஓவியா said...

தமிழர் சமுதாயம் 100-க்கு 100 மக்கள் படித்தவர்களாக வேண்டும்; ஆக்கப்பட வேண்டும். பத்தாண்டு களிலாவது தமிழன் சமுதாயம் ஆணும் பெண்ணும் தன் ஜனத் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப அரசியல், தொழிலியல் முதலிய சகல துறைகளிலும் விகிதாச்சாரம் பதவி - இடம்பெற வேண்டும். தமிழனைப் பற்றிய வேறு எந்தக் காரியத்தைப் பற்றியும் சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகம் பார்த்துக் கொள்ளும்.

Read more: http://viduthalai.in/page-4/98716.html#ixzz3VgNmsOHI

தமிழ் ஓவியா said...

ரவி சாஸ்திரி


ரவி சாஸ்திரி என் பவர் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் விளையாட்டுக்காரர். இப்பொழுது கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலை வராகவும் இருக்கிறார்.

அந்த ரவிசாஸ்திரிமீது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தூர் பஜ் ரங்தள் செயலாளர் மனோஜ்பஸ்பானி இந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

எதற்காக அந்த வழக்கு? தென்னாப்பிரிக் காவில் ஜோகன்ஸ்பர்க் நகரில் இந்தியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் விளையாட் டின்போது ரவிசாஸ்திரி வருணனையாளராகச் செயல்பட்டார். அப்பொ ழுது நான் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்றாலும் என்னால் மாட்டு இறைச்சி சாப்பிடா மல் இருக்க முடியாது என்று கூறிவிட்டாராம். அதனால்தான் அவர்மீது இந்த வழக்காம்.

வழக்கைத் தொடுத்த பஜ்ரங்தள் பேர்வழி என்ன கூறினார்? ரவி சாஸ்திரி மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக தெரிவித் துள்ளது - இந்துக்கள் மனதைப் புண்படுத்துவ தாக உள்ளது. அவர் சுய முழு நினைவோடு கூறி இருக்கிறார். இந்தியத் தண்டனைச் சட்டம் 295ஏ பிரிவின்கீழ் ரவிசாஸ்திரி யின் கருத்து மதத்தையும், மதம் சார்பான நம்பிக் கையையும் புண்படுத்து கிறது. எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யுள்ளார். இதன் அடிப் படையில் வழக்கு ஒன் றையும் தொடுத்தார் (மாலை மலர் 24.12.2006).

சங்பரிவார்க் கூட்டம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்; பார்ப்பனர்களாலேகூட மாட்டுக்கறி சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. விளையாட்டு வீரர்களுக் குத் தேவையான சத்து மாட்டுக்கறியில் மிகவும் அதிகமாகவே இருக் கிறது.

பிரபல சர்.சி.வி. ராம சாமி அய்யருக்கு மாட் டின் நாக்குதான் அதிகம் பிடிக்கும் என்பதை இந் தக் கூட்டம் அறியுமா?

பிஜேபி ஆளும் கோவா மாநிலத்தையே அவர்களால் கட்டுப் படுத்த முடியவில்லை; நாங்கள் மாட்டிறைச் சியைத் தடை செய்ய மாட்டோம் என்று கோவா முதல்வர் லட்சுமி காந்த் பர்சேகர் பளார் என்று கன்னத்தில் அறைந்ததுபோல் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தப் பிரச்சினை யில் பிஜேபியும் அதன் சங்பரிவார்களும் அவமா னப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/98750.html#ixzz3Vly6YxpU