பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்றார் பெரியார் (நூல்:-இந்துத்துவாவின் படையெடுப்பு) என்று பாண்டே தந்தி தொலைக்காட்சியில் பதிவு செய்துள்ளாரே இதில் ஏதாவது உண்மையா?
இது குறித்து அந்த விவாதத்திலேயே ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தெளிவாகவே விளக்கம் அளித்து விட்டார். மேலும் அறிந்து கொள்ள வேண்டுமானால் 6-12-1992 லேயே “விடுதலை” ஞாயிறுமலர் கேள்வி-பதில் பகுதியில் விளக்கமளித்து விட்டார் ஆசிரியர் கி.வீரமணி.அதையெல்லாம் படிக்காமல் ஏனோ தானோ என்று தத்துப்பித்து என்று கேள்வி கேட்டு மூக்கு உடைபட்டு போனார் பாண்டே.
அதே போல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு திராவிடர்கழகம் ,என்ன செய்தது என்ற முட்டாள்தனமான கேள்வி வேறு? இதோ அந்தக் கேள்விக்கான ஆதாரங்கள்.
--------- நூல்:- அறிந்து கொள்வீர்!புரிந்துகொள்வீர்!(தமிழர் தலைவர் மானமிகு கிவீரமணி எம்.ஏ.பி.எல். அவர்களின் பதில்கள், பக்கம் 3,4
23 comments:
உலகிலேயே பிஜேபிதான் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியாம்
மோசடி முகத்திரையைக் கிழிக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா
ராஞ்சி மார்ச் 31 மோகன் ஜா என்ற விளையாட்டுப்பிரிவு செய்திப்பத்திரிகையாளர் உலகக் கோப்பை விளையாட்டிற்காக செய்தி சேகரித்துக் கொண்டு இருந்தார், அப்போது அவருக்கு இரண்டு முறை ஒரு எண்ணில் இருந்து (தவறிய) அழைப்பு வந்தது, பத்திரிகையாளர்கள் என்றாலே அவர்களுக்கு வரும் அழைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதால் அவர் தனது அறையைவிட்டு வெளியே வந்து மீண்டும் அழைப்பு வந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தார்.
எதிர்புறம் யாரும் எடுக்கவில்லை, மீண்டும் ஒருமுறை போன் செய்துவிட்டு தனது அறைக்கு திரும்பியவரின் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்தது, அதில் இவ்வாறு எழுதியிருந்தது. வாழ்த்துக்கள் நீங்கள் பாஜகவின் உறுப்பினராகிவிட்டீர்கள். உங்களது உறுப்பினர் எண் 1087369859.
உங்களது முகவரி வோட்டர் அய்டி எண், மின்னஞ்சல் முகவரி அனைத்தையும் 09242492424 என்ற எண்ணிற்கு அனுப்பி உங்கள் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அந்த குறுஞ்செய்தியில் எழுதியிருந்தது.
அவர் மீண்டும் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேச முற்பட்டப்போது எதிர்தரப்பில் யாரும் பேசவில்லை. இவரும் பதில் குறுஞ்செய்தி, எனக்கு தேவையில்லை, என்னை வலுக்கட்டாயமாக பாஜக உறுப்பினராக மாற்ற வேண்டாம் என்று அனுப்பினார்.
ஆனால், மீண்டும் அவருக்கு வாழ்த்துக்கள் நீங்கள் பாஜக உறுப்பினராகிவிட்டீர்கள் என்று மீண்டும் ஒரு புதிய உறுப்பினர் எண் குறுஞ்செய்தி வந்துசேர்ந்தது. அதாவது சில நிமிடங்களில் ஒரு நபருக்கு இரண்டு உறுப்பினர் எண்களை வழங்கியிருக்கிறார்கள். இறுதியில் மோடியுடன் இணைந்து பாஜகவை வழிநடத்துவோம் வாருங்கள் என்று மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
பட்னாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு வந்த குறுஞ்செய்தியோ பாஜகவின் செயலை சந்தி சிரிக்கவைத்துள்ளது. அவருக்கு மொத்தம் 3 மொபைல் போன்கள் மூன்று போன்களில் 13க்கு மேற்பட்ட பாஜக உறுப்பினர் எண்கள் வந்துவிட்டன. பாஜக ஆளும் கோவா மாநிலத்தில் ஜனவரியில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் பாஜகவிற்கு கிடைத்த மொத்த ஓட்டுக்கள் 1,50,674 மாத்திரமே ஆனால் கடந்த டிசம்பர் மாதம் கோவா பாஜக பத்திரிகையாளர்களை அழைத்து எங்கள் கட்சியில் கோவாவில் மத்திரம் 13 லட்சம் பேர் உறுப்பினராகி விட்டனர், என்று கூறியிருந்தனர்.
இதே நிலைதான் சிறீரங்கத்திலும் அங்கு நடந்த இடைத் தேர்ந்தலுக்கு முன்பு சிறீரங்கத்தில் மாத்திரம் 22 ஆயிரம் பேர் உறுப்பினராகிவிட்டனர். என்று அந்தக்கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவித்திருந்தார்.
ஆனால் அங்கு பாஜகவிற்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையோ வெறும் அய்ந்தாயிரம் தான். டில்லியின் நிலையும் இப்படித்தான் டில்லி தேர்தலுக்கு முன்பு டில்லி மக்கள்தொகையில் 90 விழுக்காடு எங்கள் உறுப்பினராகி விட்டனர்.என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித்ஷா தெரிவித்திருந்தார்.
ஆனால் 3 மூன்று பேர் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிலும் ஒருவர் அகாலிதள் கட்சியைச் சார்ந்தவர், மற்ற இருவரும் தனிப்பட்ட முறையில் மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள். ஜார்கண்ட் உள்ளாட்சிதேர்தலில் அத்தனை மாநகராட்சி களையும் பாஜக காங்கிரசிடம் இழந்து மூன்றா மிடம் வந்தது.
அங்கேயும் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று உறுப்பினர் அட்டையைக் காண்பிக்கிறார்கள். சமீபத்தில் டில்லியில் ராயன் என்று பள்ளியில் 3-வதுபடிக்கும் குழந்தைகளின் கையில் உறுப்பினர் படிவத்தைக் கொடுத்து வீட்டிற்கு சென்று நிரப்பிக்கொண்டு வரவேண்டும் என்று வற்புறுத்திய சம்பவங்கள் எல்லாம் பத்திரிகையில் வந்து பாஜகவின் மட்டமான உறுப்பினர் சேகரிப்பு கூத்தை அம்பலப்படுத்தியது.
(டைம்ஸ் ஆஃப் இந்தியா, மகாராட்டிரா டைம்ஸ், தைனிக் பாஸ்கர் ஏடுகள் வெளியிட்ட தகவல்களிலிருந்து 31.3.2015)
Read more: http://viduthalai.in/page1/98858.html#ixzz3W3alrCDy
கலாச்சாரப்படி..
. பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)
Read more: http://viduthalai.in/page1/98859.html#ixzz3W3dGyykw
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13_ஆவது மாநில மாநாடு கடந்த 19 ஆம் தேதி திருப்பூர் வாலி பாளையம், ஹார்வி குமா ரசாமி கல்யாண மண்ட பத்தில் சிறப்போடு அமைக் கப்பட்டிருந்த எழுத்தா ளர் ராஜம் கிருஷ்ணன் வளாகம், தி.க.சி. அரங்கில் எழுச்சியோடு துவங்கியது. அதன் ஒரு பகுதியாக 21.3.2014 அன்று இரவு 7 மணியளவில் திருப்பூர் டவுன்ஹால் வளாகத்தில் முற்போக்குத் தமிழ் மரபை முன்னெடுப்போம் என்ற கருத்துரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் சமூகப் பொறுப்புணர்ச்சி யோடு சிறப்பாக துவங்கி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பேராசி ரியர் அருணன் அவர்கள் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு தொகுதி சிபிஅய்எம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேலு வரவேற் புரையாற்றினார். தமுஎகச பொறுப்பாளர்கள் மற் றும் படைப்பாளிகள் பல ரும் முன்னிலை வகித்தனர்.
சமுதாயத்தை மேம் படுத்தும் முற்போக்குக் கருத்துக்களைத் தாங்கிய இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகப் பங் கேற்ற திராவிடர் கழகத் தின் பிரச்சாரச் செயலா ளரும், சீரிய வழக்குரைஞ ருமான அ.அருள்மொழி அவர்கள் உரைவீச்சு நிகழ்த்தியதாவது; முற் போக்குத் தமிழ்மரபை முன்னெடுப்போம்! என்ற முழக்கத்தோடு நடை பெறுகிற இன்றைய சிறப்பு நிகழ்வில் உங்களை சந் தித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்ப் பளித்த தமுஎகசவிற்கு நன்றி!
பெண்களுக்கு உரிமை யிருக்கிறதா? என்ற மர பைத்தேடிப் பார்க்கிறேன். நம்முடைய அப்பத்தா, அம்மாயி காலங்களில் பெண்கள் தங்கள் மனக் குமுறலை எடுத்துச் சொல்ல வெளிப்பாடாக இருந்த தாலாட்டையும், ஒப்பாரியையும் தான் நம் முன்னோர்களின் மரபாக பார்க்க முடியும்.
வரலாறுகள் எழுதப் படாத காலத்தில் மக்க ளின் பசிப்பிணி போக்க அட்சயப்பாத்திரம் தாங் கிய மணிமேகலையை நினைவு படுத்தியது 3_ஆம் தமிழ் மரபு. இந்த மரபை மாற்றி பெண்களுக்கு எவ் வித உரிமையும் கொடுக் கக்கூடாது என்ற தடையை மனுதர்மவாதிகள் ஏற் படுத்தியிருந்தார்கள். இந் தத் தடைகளை எல்லாம் தகர்த்து, அவர்களின் மற்ற சீர்கேடுகளை ஒழித்து பெண்ணுரிமை மரபையும், கல்வியையும் மீட்டுக் கொடுத்தது. தமிழ்நாட் டில் தந்தை பெரியார் தொடங்கிய பண்பாட்டுப் புரட்சிஇயக்கம். முற் போக்கு மரபை மீட்டெ டுத்த தந்தை பெரியார் வழியில் இருந்து நான் மரபை தொடங்குகிறேன்.
நம் முன்னே இருப்பது இரு மரபு:
1) பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப் பொவ்வா செய்தொழில் வேற்றுமை தான்.
2) சதுர் வர்ணம் மாயா சிருஷ்டம்
பாவேந்தர் பாரதி தாசன் கூறுவதுபோல் பிறர் நூல் கொள்கை எது? தமிழ்நூல் கொள்கை எது? என்பதை அறிய சங்கத்தமிழ் நூலைப் படி, காலையில் படி, மாலை யில் படி, கடும் பகல் படி என்று நம் மரபு எது என் பதை படித்து உணர வேண்டும்.
கல்வி என்பதற்கு அளவு கோல் இடஒதுக்கீடு அதை தகுதிக்கு எதிரானது என்று மனுதர்மவாதிகள் பிரச்சாரம் செய்தார்கள். அதை முறியடித்து இட ஒதுக்கீட்டை பிடித்தோம். நாம் அனைவரும் கல்வி கற்றோம். நம்முடைய விழிப்புணர்வை பார்த்து இன எதிரிகள் அஞ்சுகி றார்கள்.
யாதும் ஊரே! யாவ ரும் கேளிர்! என்ற தமிழ்க் கோட்பாடு ஒரு புறமும், ஜாதி தர்மம் என்ற மனு நீதிக்கோட்பாடு மறுபுற மும் நம் முன்னே நிறுத் தப்பட்டுள்ளது. நம் மரபு முற்போக்குத் தமிழ் மரபு. பல வித மாறுபட்ட சூழ் நிலைகள் இருப்பினும், முற்போக்குத் தமிழ்மரபு. பலவித மாறுபட்ட சூழ் நிலைகள் இருப்பினும், முற்போக்குத் தமிழ்மரபை முன்னெடுத்து வெற்றி பெற உழைப்போம் என உரையாற்றினார்.
Read more: http://viduthalai.in/page1/98893.html#ixzz3W3eIPHhY
முக்கிய அறிவிப்பு
தாலி அகற்றும் விழா மற்றும் மாட்டிறைச்சி விருந்துக்கு ஆதரவு குவிகின்றது
தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டு, திராவிடர் மகளிர் பாசறையால் நடத்தப்படும் தாலி அகற்றும் விழா மற்றும் மாட்டிறைச்சி விருந்துக்கு கழகத் தோழர்களிடமிருந்தும், மக்களிடம் இருந்தும் ஆதரவு குவிகின்றது.
ஏராளமான தோழர்கள் முன் பதிவு செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் இதுவே தவிர்க்க முடியாத விவாதப் பொருளாக மாறிவிட்டது.
இந்த விழாவைப்பற்றி மக்களிடம் கொண்டு செல்லாமல் இருட்டடிப்பு செய்த ஊடகங்கள்கூட தற்போது அதுகுறித்து விவாதிக்கத் தொடங்கியுள்ளன.
எனவே, இரு நிகழ்வுகளுக்கும் முன்பதிவு அவசியம்.
தொடர்பு கொள்ள:
திராவிடர் மகளிர் பாசறை,
9940348533 - 9841263955 - 9524097177
Read more: http://viduthalai.in/e-paper/98905.html#ixzz3W3er7tM8
மாட்டுக்கறியை சாப்பிடக்கூடாதா?
மனிதன் புல், பூண்டைத்தான் சாப்பிட வேண்டுமா?
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் பதிலடி!
சென்னை, ஏப்.1- மாட்டுக் கறி உணவு என்பது ஏழைகளின் உணவாகும்; அதனை சாப்பிடக்கூடாது என்று சொன்னால், தடை செய்தால் மனிதன் புல், பூண்டைத்தான் சாப்பிட வேண்டுமா? என்று தமிழகக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவருடைய பேட்டி வருமாறு:
மாட்டுக்கறி என்பது ஏழைகளின் உணவு. அதைச் சாப் பிடக் கூடாது; அதை விற்கக்கூடாது என்று தடை செய்வது, ஏழைகளினுடைய வயிற்றில் அடிப்பது போன்றது. ஏனென் றால், இன்றைக்கு ஆட்டுக்கறி ஒரு கிலோ 500 ரூபாய்க்கும்; கோழிக்கறி ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்கிறது. ஏழை, எளியோர்களின் சத்தான உணவு மாட்டுக்கறி யாகும். மிகவும் விலை குறைவாகவும் கிடைக்கிறது. அது மட்டுமல்ல, மாட்டுக் கறி சுவையை விரும்பி பலர் சாப்பிடு கிறார்கள். நானும் மாட்டுக்கறியை விரும்பிச் சாப்பிடுவேன்.
திடீரென்று நீங்கள் எல்லாம் அரிசி உணவை சாப்பிடக்கூடாது என்றால் எவ்வளவு மோசமோ, கோதுமை உணவை சாப்பிடக்கூடாது என்றால் எவ்வளவு மோசமோ அதுபோன்றதுதான் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்பது.
மக்கள் என்ன ஆடு, மாடுகள் சாப்பிடுகின்ற புல், பூண்டுகளையா சாப்பிட முடியும்?
உங்களுக்கு சைவ உணவு பிடிக்கும் என்றால், சைவ உணவை சாப்பிட்டுக் கொள்ளுங்கள்; அசைவ உணவு பிடிக்கும் என்றால் அசைவ உணவை சாப்பிட்டுக் கொள் ளுங்கள்; அதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு. அதனைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. பாம்பைச் சாப்பிடவேண்டும் என்று ஆசைப்பட்டாலும், சாப்பிடலாம்; சீனாவில் பாம்புக் கறி உணவை சாப்பிடு கிறார்கள். ஆகவே, மாட்டுக்கறியை நாங்கள் தடை செய்கிறோம் என்று சொல்வது என்பது முழுக்க முழுக்க ஒரு மோசமான செயலாகும்.
தாலி கட்டும் பழக்கம்
இன்னொன்று தாலி கட்டும் பழக்கம் என்பது, உலகத்தில் இந்தியாவில்கூட தமிழ்நாட்டில் நம்முடைய பெண்கள் சிலரிடம்தான் உள்ளது. ஆகவே, தாலி கட்டுவது அவசி யமா? இல்லையா?
என்று விவாதம் நடப்பதில் தவறேதும் கிடையாது. உலகத்தில் இருக்கின்ற பெரும்பான்மையான பெண்கள் தாலி கட்டிக்கொள்வது கிடையாது. சில பெண்கள் மோதிரம் அணிந்து கொள்கிறார்கள்; சில பேர் தங்கச் சங்கிலியைப் போட்டுக் கொள்கிறார்கள்.
ஆகவே, தாலி அணியவேண்டும் என்று கட்டாயப்படுத் துவது மிகவும் தவறு; அதேநேரத்தில், தாலி கட்டக்கூடாது என்று சொல்வதும் தவறு என்று நினைக்கின்றேன்.
தாலி கட்டுவதும், தாலி கட்டாததும் ஒவ்வொரு வருடைய விருப்பத்தைப் பொறுத்தது. ஆகவே, தாலி வேண்டாம் என்று சொல்வது தவறு என்றெல்லாம் சொல்ல முடியாது. சுயமரியாதைத் திருமணங்களில் தாலி கிடை யாது.
ஆகவே, அதற்காக ஊடகங்களை உடைப்போம்; தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்குவோம்; குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், ஒரு தொலைக் காட்சியில், தாலி வேண்டுமா? வேண்டாமா? என்ற நிகழ்ச்சி ஒளிபரப்புகிறோம் என்றவுடன், நாங்கள் அந்தத் தொலைக்காட்சியை உடைப்போம் என்று சொல்வதை, சுதந்திர நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாதது!
எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு!
- இவ்வாறு தமிழகக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
Read more: http://viduthalai.in/e-paper/98906.html#ixzz3W3ezPykm
இன்றைய ஆன்மிகம்?
இந்து மதத்தின் லட்சணம் பாரீர்!
தாரகாட்சன், வித்யுன் மாலி, கமலாட்சன் ஆகிய அசுரர்கள் மூவரும் பிரம்மாவை நோக்கித் தவமிருந்து தங்கம், வெள்ளி, இரும்பு எனும் மூன்று பறக்கும் கோட்டைகள் பெற்று, தேவர்கள், முனிவர்கள், மக்களுக்குத் துன்பம் இழைத்தனராம். தேவர்கள் சிவபிரானிடம் முறையிட, சிவன் அசுரர்களை அழித்தானாம்.
இந்து மதத்தில் ஒரு கடவுள் அருள் கொடுக்கிறது; இன்னொரு கடவுள் அதனை அழிக்கிறது - இதுதான் இந்து மதம் கூறும் ஆன்மிகத்தின் லட்சணமா?
Read more: http://viduthalai.in/e-paper/98907.html#ixzz3W3f6pKhs
பெண் ஒரு சொத்தா?
பெண்களுக்குத்தான் கற்பு; ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால், பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவளின் நிலைமை
_ (குடிஅரசு, 1.3.1936)
Read more: http://viduthalai.in/page-2/98908.html#ixzz3W3fKnljy
யார் இந்தப் பாண்டே - அவர் பின்னணியில் உள்ளவர்கள் யார்?
பேரா. அ.மார்க்ஸ் தோலுரிக்கிறார்
தமிழர்களின் பெருமை யாக இன்று தமிழ்த் தேசி யர்களால் தெண்டனிட்டுக் கொண்டாடப்படும் ராஜராஜ சோழன், அவன் மகன் ராஜேந்திர சோழன்... இவன்கள் எல்லோரது காலத்திலும் பீஹாரிலிருந்து பார்ப்பனர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.
கோவில் அர்ச்சகர் களாக மட்டுமல்ல, அரச குருக்களாகவும், கோட் டைக் காவலர்களாகவும் (துர்க்கா தண்டநாயகர்கள்) அவர்கள் பெரும் செல்வாக்குடன் வாழ்ந்து அதிகாரம் செலுத்தியுள்ளனர்.
பீஹாரில் எந்த ஊரிலிருந்து கொண்டுவரப்பட்ட வர்கள் என்கிற விவரங்கள் எல்லாம் சாசனங்களில் உள்ளன. நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவப் பண்டாரத்தார் எல்லோரும் இதைத் தம் சோழர் வரலாற்றில் குறிப்பிடுகின்றனர். நண்பரும் வாழும் தமிழறிஞருமான பொ.வேல்சாமியும் தனது 'கோவில் நிலம் சாதி' நூலில் இதைக் குறிப்பிடுவார்.
எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம். இந்த தந்தி டி.வி ரங்கராஜ் பாண்டே குறித்து. அது என்ன பாண்டே, தமிழ்ப் பெயராகத் தெரியவில்லையே என. சற்று முன் விசாரித்த போதுதான் இந்த நபரின் பூர்வீகம் தெரிந்தது. பீஹார் பார்ப்பனர்தானாம். இவரது தந்தை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்திற்கு அர்ச்சகராக வந்தவராம். இவர் இங்கு பிறந்து வளர்ந்தவராம்.
இன்னும் கூடவா அர்ச்சகர்கள் பீஹாரிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும்? என்ன பின்னணி எனத் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
ஆசிரியர் வீரமணியிடம் பாண்டே அடி வாங்கியது குறித்து முகநூல் அல்லோகலப் படுகிறது. மகிழ்ச்சி. எனக்குப் பார்க்க இயலவில்லை.
எல்லோரும் ஆசிரியரைப் பாராட்டுகின்றனர். எனக்கு வியப்பில்லை. இது போன்ற கேள்வி களுக்குப் பதில் அளிப்பதையே ஒரு வாழ்வாகக் கொண்டவர்கள் அல்லவா பெரியாரியர்கள்... எத்தனை கேள்விகள்... எத்தனை அவதூறுகள்... எத்தனை கல்லடிகள். தந்தை பெரியார் மீதே செருப்பை வீசவில்லையா இழி பிறவிகள். அவர் எதிர் கொள்ளாத கேள்விகளா?
ஒரு பதிலை நான் மிகவும் ரசித்தேன்.நண்பர் பிரபா அழகரின் பக்கத்திலிருந்தது அது.
"நீங்கள் ஏன் எப்போதும் இந்து மதத்தையே விமர்சிக்கிறீர்கள்? கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களை விமர்சிப்பதில்லையே..."
இந்தக் கேள்விகள் வழக்கமாகப் பெரியாரியர்கள் எதிர் கொள்வதுதான். என்னிடமும் பல முறை இது கேட்கப்பட்டதுண்டு. இல்லை, அப்படியெல்லாம் இல்லை. நாங்கள் இந்த மதங்களையும் கூட விமர்சிக்கத் தேவை வரும்போது தவறுவதில்லை.
இவை இன்று இங்கு சிறுபான்மை மதங்களாகவும், பெரும்பான்மை வன்முறைக்கு ஆளாகக் கூடியதாகவும் இருப்பதால் எங்கள் முன்னுரிமை அதற்கு இருப்பதில்லை என்கிற ரீதியில் என் பதில் இருக்கும். பல நேரங்களில் அது எடுபடுவதில்லை.
ஆசிரியர் அட்டகாசமாக இதற்குப் பதில் சொல்லியுள்ளார். யார் எங்களை சூத்திரர் என்றும், வேசி மக்கள் என்றும் தீண்டத் தகாதவர் என்றும் இழிவு செய்கிறார்களோ அவர்களை விமர்சிப்பது தான் என் முன்னுரிமை. கிறிஸ்தவமோ. இஸ்லாமோ எங்களை இப்படி இழிவு செய்வதில்லை.
87 சதம் மக்கள் தொகை உள்ள ஒரு மதத்தின் பிரதிநிதியாக நிறுத்திக் கொண்டு அவர்கள் இதை எல்லாம் செய்கிறார்கள். ஆனால் இதர மதத்தினர் இப்படி யெல்லாம் எங்களை இழிவு செய்வதில்லை என்பதோடு சிறுபான்மையினரும் கூட என்கிற ரீதியில் ஆசிரியரின் பதில் நச்.. நச்......
நண்பர்களே. பாண்டே முகம் வெளிறி இருக் கலாம். ஆசிரியர் அந்த நபரின் மூக்கை உடைத் திருக்கலாம். நாமும் பெருமிதம் கொள்ளலாம். ஆனால் ஒன்றை மறந்து விடாதீர்கள். தமிழகத்தில், அதுவும் "நாம் தமிழர்"
ஆதித்தனாரின் ஊடகம் ஒன்றில் ஒரு பீஹார்ப் பார்ப்பனன் ஆசிரியரிடம் திராவிடர் இயக்கம் குறித்தும், அதன் கொள்கைகள் குறித்தும் எடுத்தெறிந்து பேசவும், இத்தகைய அபத்தக் கேள்விகளை நேர்காணல் என்கிற பெயரில் ஆசிரியரை நோக்கிக் கேட்கவும் நேர்கிற ஒரு நிலை இன்று ஏற்பட்டுள்ளது என்பது தான் அது.
இன்றும் இந்த நிகழ்விலும், ஆசிரியர் அறிவித் துள்ள தாலி அகற்றும் போராட்டம் குறித்தும் யாரெல்லாம் அதை அவதூறு செய்கிறார்கள், யாரெல்லாம் அதை எதிர்க்கின்றனர் என்பதை ஒரு கணம் கவனிக்கத் தவறாதீர்கள்.
பெரியார் குறித்த அவதூறுகளைக் கடந்த 35 ஆண்டுகளாக மேலெடுத்த சகல தரப்பினருக்கும் பார்ப்பனீயத்திற்கும் உள்ள மிக நெருக்கமான உறவையும் மறந்துவிடாதீர்கள்.
Read more: http://viduthalai.in/e-paper/98939.html#ixzz3W46XcTtL
அக்கிரகாரச் செருக்கை அய்யாவின் அறிவாயுதத்தால் முறியடிப்போம்
தமிழ் கூறும் நல்லுலகில் மனு தர்ம அடிப் படையில் பெண்களை அடிமைகளாக, பேரிளம் பெண்களை போகப் பொருளாக மொத்தத்தில் பிள்ளை பெறும் இயந்திரமாக ஆக்கி அடிமைப் படுத்திய காலத்தில் மனித உணர்வுகளின் மாட்சிமை தாங்கிய குறளாக அன்று தந்தை பெரியார், பெண் ஏன் அடிமையானாள்? என்ற கேள்வியை எழுப் பினார். அக்ரகாரத்துப் பெண்களுக்கும் அய்யாவின் கேள்வி சரியாகப் பட்டது.
பொட்டு வைத்து, பூ வைத்து பொட்டுக் கட்டிய தேவதாசி முறையினை ஆவேசமாக எதிர்த்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் ஆவேசக் குரலின் உள்ளே கூட அய்யாவின் கொள்கை ஒலித்தது. அய்யா என்ற அந்த உயிர் எழுத்து, ஆண்களிடம் இருந்து பெண்களைப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், ஆண்டவனிடத்திலிருந்தும், அக்ரகாரத்திலிருந்தும் பெண்களின் உரிமையைப் பாதுகாத்தது.
தாலி என்பது பெண்களுக்கு எந்த வகையில் வேலியாக உள்ளது? எங்களைக் காப்பதில் தாலி வேலியாக உள்ளதா? பாலியல் வன்முறை செய்யும் போது பெண்களின் கற்புக்கு தாலி வேலியாக இருந்து இருக்கிறதா? கணவனே மனைவியைக் கொலை செய்யும் போது தாலி பாதுகாத்திருக்கிறதா? அரசு அலுவலகத்திலே, காவல் நிலையத்திலே, அங்காடிகளிலே, சிற்றின்ப சீறல்கள் எழுந்த போது தாலி வேலியாக இருந்திருக்கின்றதா?
ஒரு காலத்தில் பெண்கள் கல்வி அறிவு இல்லாத, பகுத்தறிவு சிந்தனை இல்லாத போது, பெண் திருமணம் ஆனாள் என்ற அடையாளமாக தாலி இருந்தது (அடிமையாக்க).
இன்றோ, ஆகாய விமானத்தில் இருந்து அறிவுசார் தொழில்நுட்பம் வரையிலும் பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள். கல்வி, வேலை வாய்ப்புகளில், ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் அளப்பரிய சாதனைகளைச் செய்து வருகிறார்கள்.
தாலியை விரும்பினால் போட்டுக் கொள். விரும்பாவிட்டால் அகற்றி விடு. அறிவாய்ந்து வாழ்வது, அடிமையாக வாழ்வதும் அவரவர் விருப்பம்.
தாலி அகற்றும் நிகழ்ச்சி என்பது அறிவாய்ந்த பெண்களின் விருப்பத்தின்பாற்பட்டது. இதுவே அய்யா வீரமணி அவர்களின் அறைகூவல்.
இதையறியா மழைக்காலத்து மண்டூகங்களாய் தமிழ் நாட்டு அரசியலில் பால பாடம் படிக்கும் பக்குவமற்ற சிலர் (சரத்குமார்) சந்து முனையில் சிந்து பாடுகிறார்கள். அவரவர் வாழ்க்கையை அவர்களே திரும்பிப் பார்க்கட்டும்.
தாலிக்கு அவர்கள் கொடுத்த மரியாதை அவர்களுக்கே தெரியாதே? அய்யாவின் கொள்கைக்கு தமிழ்நாட்டின் பெண்கள் துணையாக நிற்போம்!
அய்யாவைக் கண்டிக்கும் அக்ரகாரச் செருக்கை அய்யா பெரியாரின் அறிவாயுதம் கொண்டு முறியடிப்போம்!
- கலைமகள் இளையபாரதி
பாப்பாநாடு (உரத்தநாடு)
மாவட்ட மகளிரணி அமைப்பாளர் (திமுக)
Read more: http://viduthalai.in/e-paper/98939.html#ixzz3W46i1YIe
இனி பெண்கள் ஆம்ஆத்மி சின்னத்தை கையில் எடுக்க வேண்டியது தானா?
- ஊசிமிளகாய்
அரசியல் தலைவர்களும் சரி, சில சமூக அமைப்பின் தலைவர்களும் சரி, மகளிரைக் கொச்சைப்படுத்திப் பேசுவதில், ஒரு வகை இன்பம் காணும் போக்கு அண்மையில் மிகவும் மலிந்து வருவது வேதனையானதும், வெட்கக்கேடானதும் ஆகும்.
இதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். மகளிர்கள் எக்கட்சியினர் - கட்சியேயல்லாத வர்களானாலும் கண்டித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணி நடத்தப்படல் வேண்டும். நடத்துகிறார்கள்.
பாலின வன்புணர்ச்சியைவிட மனோதத் துவப் போர் போல இது கிளம்பியுள்ளது.
பா.ஜ.க. ஆட்சி மத்தியில் ஏற்பட்ட பிறகு தான் இப்போக்கு மிக அதிகமாக தலை தூக்கி நிற்கிறது. ஒரு மத்திய (பா.ஜ.க.) இணையமைச்சர் பீகார் கிரிராஜ் சிங் என்பவர் மிகவும் வாய்க் கொழுப்புடன் சோனியா காந்தி நிறம் கருப்பாக இருந்தால் அவர் காங்கிரசுத் தலைமைக்கு வந்திருப்பாரா? என்று பேசியுள்ளார்!
ஒரு அரசியல் தலைவரைப்பற்றி இப்படி பேசுவதா?
அய்க்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத்யாதவ் மாநிலங்களவையில் இதேபோல் தென்னாட்டு மகளிர் நிறம் அழகு பற்றியெல் லாம் பேசி, அதற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வருத்தம் தெரிவித்தார்.
அதுபோலவே கோவாவின் முதல் அமைச்சர் (பா.ஜ.க.) பெண்கள் வெயிலில் நின்று போராடினால் அவர்கள் நிறம் கறுத்து விடும்; பிறகு அழகு போய் விடும் என்று கூறி அவர்களது போராட்டத்தைக் கிண்டலும் கேலியும் செய்துள்ளார்!
இப்படிப்பட்ட நவீன மனுதர்ம, கிருஷ்ணா வதாரங்களை பா.ஜ.க. பெற்றுள்ளது என்பது மிகப் பெரிய தேசிய அவமானம் அல்லவா?
இவர்களது வக்கிர புத்தியும், கீழ்த்தர ரசனையும் இப்படியா நாளும் பெருகுவது?
கிருஷ்ணன் பெண்களையும், சூத்திரர் களையும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று கூறிய பாணியை இவர்கள் வேறு வகையில் கூறுகின்றனரோ? இவர்களது, கிருஷ்ண கடவுளே கறுப்புதானே!
பத்து பிள்ளைகள் பெற சங்கராச்சாரிகள் அருளுபதேசம் செய்வது,
ஒரு பெண் அமைச்சர் தேர்தல் பிரச்சாரத் தில் நீங்கள் (டில்லி வாக்காளர்கள்) பா.ஜ.க. வுக்கு வாக்களித்தால் இராமனுக்குப் பிறந்த வர்கள்; மாறி வாக்களித்தால் கண்டவர்களுக் குப் பிறந்தவர்கள் என்று தேர்தல் மேடையில் பேசி, இன்னமும் அந்த ஆர்.எஸ்.எஸ். அம் மணி பதவியில் தொடருகிறாரே, இதைவிட அரசியல் அநாகரிகம் வேறு உண்டா?
இப்படியே இவர்களைப் பேச விடாமல் தடுக்க ஆம் ஆத்மி தேர்தல் சின்னத்தை கையில் எடுத்துக் கூட போராடும் நிலை பெண்களுக்கு ஏற்பட்டு விடுமே!
அந்த அளவுக்கு நாடு போகுமுன் மோடிகளும், அவர்களை ஆட்டி வைக்கும் அரசியல் பொம்மலாட்டக்காரர்களும் சிந்திக்கட்டும்.
மாற்றம் வரும்! மாற்றம் வரும் என்றனரே, வந்த மாற்றம் இதுதானா?
அவமானம்! அவமானம்!!
Read more: http://viduthalai.in/e-paper/98963.html#ixzz3W9xlqxTh
செய்தியும் சிந்தனையும்
கடைக்கோடி
செய்தி: சிங்கப்பூர் முன் னாள் பிரதமர் லீகுவான்யூ ஒரு சகாப்தம்! - பிரதமர் நரேந்திரமோடி
சிந்தனை: பல இனங்கள், பல மதங்கள், பல கலாச் சாரங்கள் உள்ள மக்களை ஒரு சார்பின்றி அனைவ ரையும் சகோதரத்துவத் துடன் வாழ வைத்தவர் ஒரு சகாப்தம்தான்; அதே கண் ணோட்டத்தில் பார்த்தால் மோடி - கடைக் கோடிதான்.
8,000
ஆண்டுதோறும் இந்தி யாவில் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழக் கும் பெண்களின் எண் ணிக்கை 8,000.
Read more: http://viduthalai.in/e-paper/98962.html#ixzz3W9y2IHGj
குன்னூர் காவல்துறையின் ஆர்.எஸ்.எஸ். போக்கு
வன்முறையில் ஈடுபட்ட காலிகளை விட்டு விட்டு கழகத் தோழர்களை கைது செய்வதா?
நீலமலை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 31.3.2015 செவ்வாய் மாலை 6 மணியளவில் குன்னூர் - சேலாஸ் பகுதியில் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு மாவட்ட கழக அமைப்பாளர் இரா. ரவி தலைமையில் நடை பெற்றது. மாவட்ட ப.க. தலைவர் இரா. புகழேந்தி, செயலாளர் மு. வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், ம.தி.மு.க. நகர செயலாளர் கிங்ஸ்ராசன், த.மு.எ.க. சங்க மாவட்ட செயலாளர் மணிவசந்தம், மாவட்ட செயலாளர் மு. நாகேந்திரன், மாவட்ட கழக தலைவர் ஆ. கருணாகரன் ஆகியோர் பேசியபின், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி தொடக்க உரையாற்றினார். இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். திராவிடர் கழகம் மக்களுக்கு ஆற்றிய தொண்டு தந்தை பெரியாரின் அளப்பரிய பணிகள், சூத்திர - பஞ்சமர் இழிவைப் போக்க கழகம் நடத்தி வரும் அரும்செயல்பாடுகள் பற்றி விளக்கி தமது பேச்சில் குறிப்பிட்டார்.
கூட்டம் முடியும் தறுவாயில் ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி காலிகள் கூட்டமாக வந்து ஜெய்காளி, ஓம்காளி என்று முழக்கமிட்ட வண்ணம் மேடையை நோக்கி வந்தனர். தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் பேசிய நிலையில் காலிகள் கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். கழக மாவட்ட செயலாளர் மு. நாகேந்திரன் தலையில் கல் வீச்சால் காயம் ஏற்பட்டது. தோழர்கள் தந்தை பெரியார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க, மதவெறி ஒழிக, மதவெறி மாய்ப்போம், மனிதநேயம் காப்போம் என வீர முழக்கமிட்டு மாநாட்டை நிறைவு செய்தனர்.
தொடக்கம் முதலே சேலாஸ் பகுதியில் கழக மாநாடு நடைபெறக் கூடாது என காவல்துறையிடம் எதிர்ப்பு தெரிவித்து வந்த மதவெறியர்களின் முயற்சியை முறிய டித்து மக்கள் ஆதரவுடன் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துகிறோம் என்ற எரிச்சலில், காவல்துறையினர் கண்டும் காணாமல் இருந்த போக்கின் காரணமாக அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்து முன்னணி அமைப்பாளர் கார்த்திக், ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்த கிஷோர் மற்றும் 30 பேர் கொண்ட கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. எதிர்ப்பை முறியடித்து கழகத்தின் மாநாடு வெற்றிகரமாக நடந்தது. முடிவில் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் சத்தியநாதன் நன்றி கூறினார். தலையில் காயம்பட்ட நிலையில் மாவட்ட செயலாளர் மு. நாகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நான்கு தையல்கள் போடப்பட்ட இந்நிலையில், குன்னூர் காவல்துறை கலவரத்தில் ஈடுபட்ட இந்துத்துவவாதிகளை கைது செய்யாமல், படுகாயம் அடைந்த மாவட்டச் செயலாளர் மு. நாகேந்திரன் மீதும், மாவட்டத் தலைவர் ஆ. கருணாகரன் மீதும் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத் துள்ளனர்.
குன்னூர் பகுதியில் இந்துத்துவாவாதிகளுடன் காவல்துறை கைகோர்த்து நிற்பதாக பொது மக்கள் மத்தியில் அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது.
மாநில காவல்துறை அதிகாரிகள் இதில் போதிய கவனம் செலுத்தி மேல் நடவடிக்கைகளை, எடுப்பார்கள் என்று நம்புகிறோம். இன்றேல் நீதிமன்றப் பரிகாரத்தினை தேட கழகம் தயங்காது.
Read more: http://viduthalai.in/e-paper/98955.html#ixzz3W9yGpPNB
இன்றைய ஆன்மிகம்?
தனிக்கோயில்
மார்க்கண்டேயனுக்காக திருக்கடையூரையடுத்த மணல் மேட்டில் தனிக் கோயில் இருக்கிறதாம்.
அவன்தான் சிவனிடம் என்றும் பதினாறு என்று வரம் பெற்று விட் டானே அவன் அந்தப் பக்கத்தில்தானே பதினாறு வயதுள்ளவனாக நட மாடிக்கொண்டு இருக்க வேண்டும்; பக்தர்கள் கண்டுபிடித்துக் கொண்டு வருவார்களா?
Read more: http://viduthalai.in/e-paper/98954.html#ixzz3W9yZEWIf
மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க முடியாதாம்
மத்தியப்பிரதேச முதல்வர் சவ்கான்
போபால், ஏப்.2 மத்தியப்பிரதேச மாநி லத்தில் மாட்டிறைச்சிக்கு கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவ்கான் எந்த விலை கொடுத்தேனும் மாட்டி றைச்சி ஏற்றுமதிக்கு அனு மதி அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
சுவேதாம்பரர்கள் மத்தியில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவ்கான் கூறும்போது, எங்கள் அரசு பால் உற்பத்தி, காய்கறி, பழங்கள், தானியங்கள் உற்பத்தியை அதிகரிப் பதன்மூலம் காய்கறி உணவுமுறையை முன்னெ டுக்கிறோம். எந்த விலை கொடுத்தேனும் மாட்டி றைச்சி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்றார்.
மத்தியப்பிரதேசத்தில் மக்கள் நவீன இறைச்சிக் கூடங்களை அமைத்துத் தருமாறு அரசிடம் கோரி வருகின்றனர். ஆனால், அது நடைபெறாது. எங் கள் அரசு இருக்கும்வரை நவீன இறைச்சிக்கூடங் களுக்கு அனுமதி அளிக் கப்பட மாட்டாது.
மத்தியப்பிரதேசத்தில் 1992ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான சுந்தர்லால் பட்வா அரசு பசுவைக் கொல்லத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. நீண்ட காலத்துக் குப் பிறகு அந்தச் சட் டத்தில் கூடுதலாக அதி காரங்கள் அளிக்கப்பட்டு கடுமையாக்கப்பட்டது.
பசுக்கொலைத் தடுப் புச்சட்டத்தை கடுமை யாக்கினோம். பசுவைக் கொல்வது மனிதனைக் கொல்வதற்கு ஒப்பாக தண்டனைகள் கொண்டு வரப்பட்டது என்றார்.
மாட்டிறைச்சி வணிகம், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்லுதல் மற்றும் மாட் டிறைச்சி எடுத்துக்கொள் வது உள்ளிட்ட அனைத் தும் மத்தியப்பிரதேசத்தில் கடுமையான தண் டனைக்கு உள்ளதாகும்.
Read more: http://viduthalai.in/e-paper/98953.html#ixzz3W9ynVIfx
கருப்பு நிற பெண்கள் குறித்து பிஜேபி கோவா முதல்வரின் மட்டரகக் கருத்து
பானாஜி (கோவா) ஏப். 2_ கோவா மாநில முதல்வர் தங்கள் உரிமைகளுக்காக போராடிவரும் செவிலி யர்களைப் பார்த்து நீங்கள் போராடினால் உங்கள் நிறம் மங்கி கருத்து விடுவீர்கள், கருப்பு நிறப்பெண்களை பிறர் தவறாகப் பார்ப் பார்கள், உங்களை யாரும் திருமணம் செய்யமுன் வரமாட்டார்கள் என்று கூறினார். கோவா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவம னைகளில் செவிலியர் மற்றும் துணை மருத் துவப் பணியாளர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்துவருகின்றனர். இவர்களை ஒப்பந்தத்தில் பணியமர்த்திய தனியார் நிறுவனம் அவசர ஊர்திசேவையையும் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது.
இந்நிலையில் தனியார் நிறுவனம் நீண்ட நாட் களாக சரிவர ஊதியம் தராமல் அலைக்கழித்து வருகிறது, புதிதாக துவங் கப்பட்ட அவசர ஊர் திக்கு நியமிக்கப்பட்ட ஓட் டுநர்களுக்கு ஊதியமும் ஊக்கத்தொகையும் இது வரை தரவில்லை. இதனை அடுத்து ஓட்டுநர்களும் போராட்டத்தில் இறங்கி னார்.
நீண்ட நாட்களாக நடக்கும் இந்த போராட் டத்திற்கு அரசும் தனியார் நிறுவனமும் செவிசாய்க்க வில்லை. இந்த நிலையில் கோவாவில் உள்ள அனைத்து மருத்துவமனை செவிலியர்கள் அனை வரும் திங்கள் முதல் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பேச்சு நடத்த கோவா முதல்வர் செவிலி யர்களின் பிரதிநிதிகளை அழைத்தார். அப்போது செவிலியர் களிடம் பேசிய லட்சுமி காந்த பாரேஷ்கர் கூறிய தாவது: நீங்கள் எல்லாம் தன்னலமற்ற சேவை செய்யபவர்கள், சிறு சிறு பிரச்சினைக்காக போராடு வது நியாயமல்ல.
நீங்கள் போராடினால் உண்ணா விரதமிருந்தால் உங்கள் உடல் இளைத்துவிடும் தோல் கருத்துவிடும், தோல்கருத்த பெண்களை தவறாகப் பார்ப்பார்கள், அவர்களை திருமணம் செய்ய எந்த ஆணும் முன்வரமாட்டான் உங் களது நிலை இப்படி ஆகி விடக்கூடாது, ஆகவே நீங்கள் உடனடியாக பணிக்குத்திரும்புங்கள் என்று கூறினார். இந்த மட்டமான பேச்சு ஊடகங்களில் வெளியான உடன் முதல்வர் அப்படி கூறவே இல்லை, அவரது பேச்சை திரித்து ஊடகங்கள் வெளியிடுகின்ற்ன என்று முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந் தது. ஆனால் இதுவரை முதல்வர் தன்னுடைய பேச்சுகுறித்து மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
Read more: http://viduthalai.in/e-paper/98965.html#ixzz3W9yxD68P
பெருமை
மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.
(விடுதலை, 10.10.1973)
Read more: http://viduthalai.in/page-2/98948.html#ixzz3W9zbvS5e
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
அடடே, உலகிலேயே மிகப் பெரிய கட்சி பிஜேபியாமே!
8.8 கோடி உறுப்பினர்கள் உள்ள கட்சி உலகிலேயே பிஜேபி என்று பிஜேபி அறிவித்துள்ளதாக ஒரு செய்தி ஏடுகளில் வெளி வந்துள்ளது.
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொதுக் கூட்டங்களில் ஒரு கருத்தைத் தவறாமல் சொல்லி வருகிறார்.
மிஸ்டு கால் மூலம் பிஜேபியினர் உறுப்பினர்களை சேர்க்கிறார்களாம். சொந்தக் காலில் நிற்க முடியாதவர்கள் மிஸ்டு காலில் நிற்கப் பார்க்கிறார்கள் என்று ஆசிரியர் குறிப்பிடும் பொழுதெல்லாம் மக்கள் மத்தியில் பலத்த கரவொலி வெடிக்கிறது.
பிஜேபியின் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை எந்த யோக்கியதையில் இருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டுப் போதுமே
தமிழ் மாநில இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் செயலாளர் தோழர் முத்தரசன் அவர்களுக்கே ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.
நீங்கள் பிஜேபியின் ஆரம்ப உறுப்பினராகி (Primary Membership) உள்ளீர்கள், உங்களடைய மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி வையுங்கள் என்று நாடறிந்த கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளருக்கே இப்படி வந்துள்ளது என்றால், பிஜேபி உறுப்பினர் சேர்க்கும் பித்தலாட்டம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம் - வெட்கக்கேடு!
Read more: http://viduthalai.in/page-5/98969.html#ixzz3WA1omQrm
பாண்டேஜ் பாண்டே ........ இறுதியில் வெல்வது பெரியார்தான்!
பார்ப்பானுக்கு புத்தி கிடையாது என்பது மீண்டும் நிரூபணம் ஆகிவிட்டது. தனது ஆர்எஸ்எஸ் எஜமானர்களை திருப்தி செய்யவேண்டும், தமிழர் தலைவர் மற்றும் திராவிடர் கழகத்தினை கொச்சைப்படுத்தவேண்டும் என்கிற நப்பாசையில் நிகழ்ச்சி நடத்தப் போய் ஆப்படித்துக் கொண்ட குரங்காய் தந்தி தொலைக்காட்சி பாண்டே மாட்டிக் கொண்டது நல்ல வேடிக்கை.
இருந்தாலும் ஒரு வகையில் நாம் அவருக்கு நன்றி சொல்லவேண்டும். தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பியதை பார்த்தவர்களை விட இணையதளம்மூலம் பார்த்தவர்கள் மிக அதிகம். குறைந்தது நான்கு முதல் அய்ந்து இலட்சம் பேர் இணையத்தின்மூலம் பார்த்திருப்பார்கள் என ஊடகத் துறை நண்பர் ஒருவர் கூறினார்.
கழகத்தைச் சாராத நடுநிலையாளர்கள் மற்றும் நம்மீது பெரிய அபிப்பிராயம் இல்லாதவர்கள்கூட இந்தப் பேட்டியை பார்த்தவுடன் தமிழர் தலைவர்மீதும். நமது கழகத்தின் செயல்பாடுகள்மீதும் பெரும் மதிப்பை ஏற்படுத்திக் கொண்டனர் என்பது நிதர்சனமான உண்மை.
தங்களை எப்பொழுதும் மெத்தப் படித்தவர்கள், அறிவு ஜீவிகள் என எண்ணிக்கொள்ளும் மற்றும் அங்ஙனம் செயல்படும் பார்ப்பனர்களுக்கு பாண்டேயின் முட்டாள்தனமான கேள்விகள், ஆசிரியரின் பளீர் பளீர் பதில்கள் பெரும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியதுதான் உண்மை.
தந்தி தொலைக்காட்சி பார்ப்பன மயமாகும் இச்சூழலில், இத்தகைய நிகழ்வு அதன் முதலாளிகளுக்கு கண் திறந்திருக்கும் என நம்புகிறோம்.
அதன் வெளிப்பாடே அவர்கள் திரும்பத் திரும்ப நமது மறுப்பினை ஒளிப்பரப்பியது. ஆனால், இன்னொரு தொலைக்காட்சியில் பெரும் பொறுப்பில் உள்ள நண்பர் ஒருவர் கூறிய வேறொரு காரணம்கூட உண்மையாக இருக்கலாம்.
பாண்டேவின் தில்லுமுல்லு இந்திய ஊடக வரலாற்றில் முதன்முறையாக காணப்பட்ட ஒன்று, நிச்சயம் பாண்டேவின் இந்த செயல் கிரிமினல் வழக்காகப் பதிவுச் செய்ய முடியம். அந்த அச்சத்தின் காரணமாகவே இந்த மறுப்பு ஒளிப்பரப்பு நடவடிக்கை என்றார். எதுவோ, ஏப்ரல் 1, முட்டாள்கள் தினத்திற்கு பாண்டேவுக்கும் அவர் சார்ந்த காவிக் கூட்டத்திற்கும் கிடைத்த பரிசு.
- வெளிச்சம்
Read more: http://viduthalai.in/page-8/98993.html#ixzz3WA2La7I8
சிகரெட் மற்றும் புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதில்லை நாடாளுமன்ற நிலைக்குழுத்தலைவரின் பேச்சிற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு
மும்பை, ஏப்.2_ பாஜக எம்பியும் நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவரு மான டி.கே.காந்தி புகை யிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந் தார். அதில் புகைபிடிப்ப தாலோ அல்லது வேறு ஏதாவது வகையில் புகை யிலையை உட்கொள்வ தாலோ புற்றுநோய் ஏற் படாது. அப்படி புற்று நோய் ஏற்படும் என்று இதுவரை எந்த ஒரு உறு தியான ஆய்வு முடிவும் கிடைக்கவில்லை என்று கூறினார்.
மேலும் இதுவரை நாடு முழுவதும் புற்று நோய் ஏற்படக்காரணம் புகையிலைதானா என்று கருத்துக்கணிப்புகள் எடுக் கப்படவில்லை. இதன் மூலம் புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் புகை யிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப் பில்லை என்றே தெரிகி றது எனவும் தனது அறிக் கையில் கூறியிருந்தார்.
இதனை அடுத்து சிகி ரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளின்மீது அச்சிடப்படும் எச்சரிக்கை வாசகமும், படமும் விலக் கப்படும் என்பது உறுதியா னது. இந்நிலையில் மத்திய சுற்றுப்புற பாதுகாப்பு அமைச்சகம் நிலைக்குழுத் தலைவரின் இந்த அறி விப்பு அவரது சொந்தக் கருத்து என்று கூறியுள் ளது.
கடந்த வாரம் புகை யிலை உற்பத்தியாளர்கள் வர்த்தக அமைப்பு மத்திய அரசுக்கு சில நிபந்தனை களை விதித்திருந்தது. அதில் கூறப்பட்டுள்ளதா வது: தற்போது புகையிலைப் பொருள்களின்மீது அச் சிடப்பட்டுவரும் படங் கள் மிகவும் விகாரமாக உள்ளன. இதனால், குழந் தைகள் மனநிலையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். அதேவேளை யில், மக்களிடையே ஒரு அச்ச உணர்வும் ஏற்படும்.
இதனால் புகையிலை தொடர்பான வர்த்தகத் தில் சரிவு ஏற்பட வாய்ப் புள்ளது. அப்படி சரிவு நேர்ந்தால் புகையிலை தொடர்பான வணிகத்தில் இருக்கும் தொழிற்சாலை கள் கடுமையான பொரு ளாதார இழப்பைச் சந் திக்க நேரிடும். இதனால், இதை நம்பி வாழும் லட் சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும்.
ஆகவே, புதிய நிதியாண்டு முதல் (2015_2016) ஏப்ரல் ஒன் றிலிருந்து எச்சரிக்கைப் படங்கள் மற்றும் வாச கங்களை அகற்றவேண் டும் என்று கேட்டிருந்தது. இதனை அடுத்து நாடா ளுமன்ற நிலைக்குழுத் தலைவரின் பேட்டி
Read more: http://viduthalai.in/page-8/98992.html#ixzz3WA2gAIyf
உங்களுக்குத் தெரியுமா?
தேசியக் கொடியில் காந்தியார் ராட்டை சின்னம்தான் இடம்பெற வேண்டும் என்று போராடிய நேரத்தில், அசோகச் சக்கரம் இடம்பெறச் செய்த பெருமைக்குரியவர் அம்பேத்கர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
இணையதளங்களில் கருத்துரிமையைத் தடுக்கும் சட்டப் பிரிவு ரத்து உச்ச நீதிமன்றத்தின் பாராட்டத்தக்க தீர்ப்பு
தகவல் புரட்சி யுகம் என்று அழைக்கப்படும் புதுமையான மின்னணுப் புரட்சியால், உலகத்தின் ஒரு கோடி அல்லது மூலையில் உள்ள செய்தி, அடுத்த சில நொடிகளில் மற்றொரு கோடிக்கோ, மூலைக்கோ பரவும் வண்ணம் வேகமான மின்னஞ்சல் வசதி -_ அதையொட்டிய முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் எத்தனை எத்தனையோ!
அவற்றின்மூலம் ஏராளமான கருத்துப் பரிமாற்றங்கள் சுதந்திரமாக நடைபெற்று வருகின்றன உலகெங்கும்!
ஆனால், ஆட்சியாளர்கள் - இந்தக் கருத்துரிமை வெளிப்பாட்டின் கழுத்தை நெரிக்கவே புதிய சட்டங்களையும், திருத்தங்களையும், தங்களுக்குள்ள ஆட்சி, அதிகார பலத்தின் காரணமாக மக்கள்மீது திணிக்கச் செய்கின்றனர்.
அப்படி வந்த ஒரு திருத்தச் சட்டம்தான் 66ஏ (தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டத்தின் பிரிவு) என்ற செக்ஷன்.
ஆட்சியாளர்கள் இதில் கூறப்படும் கருத்துக்காக எவரையும் கைது செய்யலாம், தண்டிக்கலாம்.
இதைக் காட்டி முன்பு மும்பையிலும், மேற்கு வங்கத்திலும் இன்னும் பல ஊர்களிலும் கூறப்பட்ட கருத்துக்காக இரவோடு இரவாக கைது; சிறையில் அடைப்பு என்ற பாசிசப் போக்குகள் மலிந்துவரும் வேளையில், இப்படி ஒரு 66ஏ பிரிவு செல்லாது; இது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படையான கருத்துச் சுதந்திர உரிமைக்கு எதிரான சட்டம் என்று திட்டவட்டமாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மார்ச் 24 அன்று அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்!
இந்தச் சட்டத்தின் பிரிவை நாங்கள் ஆழ்ந்து ஆராய்ந்து தேவையான அளவுக்கே பயன்படுத்துவோம் - தவறாகப் பயன்படுத்தமாட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட கருத்தினை ஏற்கவில்லை உச்ச நீதிமன்றம்.
இந்த அம்சத்தை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்; காரணம், இதற்கு முன்பு ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அத்துணை கறுப்புச் சட்டங்கள் - கடுமைச் சட்டங்கள் (Draconian Laws ) அனைத்தையும் நுழைக்கும்போது, இப்படிப்பட்ட வாக்குறுதிகளை நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் ஆளுவோர் கூறுவதும், பிறகு நடைமுறையில் அவற்றைக் காற்றில் பறக்க விடுவதும் சர்வ சாதாரணமான நிகழ்வுகள் ஆகும்.
தவறாக எழுதப்படும் அவதூறு பரப்பும் செய்தி, கட்டுரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிவில், கிரிமினல் தேசப் பாதுகாப்பு முதலிய சட்டங்கள் ஏராளம் சட்டப் புத்தகங்களில் உள்ளபோது, இம்மாதிரி புதிய உற்பத்திகள் பாசிசத்தின் வெளிப்பாடுகளேயாகும்.
எனவே, இத்தீர்ப்பின்மூலம், ஜனநாயகத்தின் அடிக்கட்டுமானம் குலைக்கப்படாமல் _- கருத்துச் சுதந்திரமே அது -_ காப்பாற்றப்பட்டுள்ளது!
எனவே, இத்தீர்ப்பினை வரவேற்கிறோம்.
- கி.வீரமணி,
ஆசிரியர்
புரட்சியாளர் பிறந்த நாளில் புரட்சிகர நிகழ்வுகள்
தாலி அகற்றும் விழா - மாட்டுக்கறி விருந்து
இந்த சென்னையிலே - ஒரு தொலைக் காட்சியிலே தாலிபற்றிய ஒளிபரப்பைக் காட்டக்கூடாது என்று சொல்கிறான்? மீறினால் டிபன்பாக்ஸ் குண்டு, வெடிகுண்டு என்கிறான்.
ஏப்ரல்-14 அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள். அந்த நாளில் சென்னையில் பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை எங்களுடைய பெண்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள்.
ஒத்த கருத்து உள்ளவர்கள் வரலாம்.
அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய உடன், மாட்டுக்கறி விருந்து நடைபெறும். மாட்டுக்கறி விருந்துக்கு யார்யார் வருகிறீர்களோ இப்போதே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் உண்டு.
ஏனென்றால், நான் என்ன சாப்பிடுவது என்பதை இராமகோபாலய்யர் முடிவு பண்ணுவதா?
எங்கள் வீட்டில் என்ன செய்வது, அல்லது இராமகிருஷ்ணன் வீட்டிலே, முத்தரசன் வீட்டிலே, பீட்டர் அல்போன்ஸ் வீட்டிலே என்ன சமைப்பது என்று இவர்கள் முடிவு செய்வார்களா?
எனக்கு டயாபடிசுங்க, தித்திப்பு வேண்டாம் என்றால், அது நியாயம்.
அதுமாதிரி சொல்லுங்கள்.
பசுவை மட்டும் பாதுகாப்பார்களாம். ஏன் எருமை மாடு என்னய்யா பாவம் பண்ணியது?
ஒரே விஷயம் கருப்புத் தோல் என்பதாலா? சிந்திக்க வேண்டாமா? என்று அறிவிப்பு தந்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
களம் சூடுபிடித்திருக்கிறது.
சுவைக்க வாருங்கள் ஏப்ரல் 14இல்!
லீக்வான்யூ மறைவு, உலகிற்கே பேரிழப்பு!
உலகின் தலைசிறந்த நிர்வாக மேதையும், சிறந்த அரசியல் ஞானியும், நவீன சிங்கப்பூரின் ஆற்றல் மிகு தந்தையுமான பேரறிஞர் லீக்வான்யூ அவர்கள் தனது 91ஆவது வயதில் (23.3.2015) அன்று காலை காலமானார் என்ற செய்தி சிங்கப்பூர் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; உலகின் அறிவு சார் மனித குலத்திற்கே ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
பெரும்பான்மையினர் சீனர்கள்தான் என்றா லும், தமிழர் திராவிடர் அடங்கிய இந்தியர், மலாய்காரர்கள், யூரேசியர்கள் வெகு குறைவான எண்ணிக்கையினர்தான் என்றாலும், பெரும் பான்மை சிறுபான்மை என்ற பிளவுபடுத்திப் பார்க்க முடியாத வண்ணம், இந்த முப்பெரும் இனத்தவர்களும் கைகோர்த்து, சமூக நல்லிணக் கத்தோடு வாழ, அவரவர்தம் மொழி, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு இவைகளை மதித்ததோடு, தமது அரசில் சமவாய்ப்பினையும் கொடுத்த்தவர்.
ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் கூட, தன் மனதில் பட்ட கருத்தை எடுத்துச் சொல்லி, இலங்கையில் தமிழர் இன அழிப்பு (Genocide) என்பதை தயங்காமல் கண்டித்தவர் அவர்.
அவர் என்றும் வாழுவார். சிங்கப்பூரின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவர் வாழுகிறார்; அவர் தொடர்ந்து வாழ்வார். அவருக்கு நமது வீர வணக்கம்!
- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்த இரங்கல் அறிக்கையிலிருந்து..
Post a Comment