எடுத்துக்காட்டாக பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு வீட்டில் பிள்ளையாரை வணங்கினார், வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தார்,பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபடவில்லை,அவர்களை இழிவாகப் பேசினார் என்பது போன்ற பல அவதூறுகளை அள்ளிவீசி வருகின்றார்கள். இந்த அவதூறுகள் பெரியார் உயிரோடு இருந்த போதிலிருந்தே சொல்லப்பட்டு வருகிறது. இந்த அவதூறுகளுக்கெல்லாம் பெரியாராலும், பெரியார் தொண்டர்களாலும் மற்றும் நேர்மையான வரலாற்று ஆய்வாளர்களாலும் தகுந்த ஆதாரங்களுடன் பதில் அளிக்கப்பட்டே வந்துள்ளது.
இருந்தாலும் திரும்பத் திரும்ப அதே அவதூறுகளை இப்போதும் சொல்லிவருகிறார்கள். அந்த வகையில் http://www.tamilhindu.com தளத்தில் பெரியாரின் மறுபக்கம் என்ற பெயரில் ஏற்கனவே புத்தகமாக வந்ததை பதிவு செய்து வருகின்றனர். அந்த தளத்தில் வரும் செய்திகளையொட்டி நாம் மறுமொழி அளித்தால் பதிவு செய்யப்படுவதில்லை. அதோடு நாம் பதில் அளிக்கவில்லை. நழுவி விடுகிறோம் என்ற மாய்மாலப் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விடுகின்றனர். இவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கெல்லாம் நாம் ஏற்கனவே நாம் http://thamizhoviya.blogspot.com “தமிழ் ஓவியா” வலைப்பூவில் பதில் அளித்துள்ளோம். குறிப்பாக பெரியார், பெரியார்-தலித், அய்யத்தெளிவு என்ற சுட்டியை சுட்டிப் படித்தால் உண்மையை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
பணிப்பளு மற்றும் குடும்பச் சுமை காரணமாக இந்தப் பார்ப்பனக்கும்பலுக்கு உடனுக்குடன் பதில் அளிக்க கால தாமதமாகிறது. அதோடு ஏற்கனவே இது குறித்து பதில் அளித்து விரிவான நூல்கள் வந்து விட்ட நிலையில் திரும்பத் திரும்ப எழுத வேண்டுமா? என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
அந்த வகையில் 2004 அம் ஆண்டு “உலகத் தமிழர் சக்தி” ஜூன் 2004 இதழில் “தலித் தலைமை –பெரியாரின் நிலை என்னவாக இருந்தது?” என்ற தலைப்பில் டாக்டர் வேலு அண்ணாமலை அவர்கள்,எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக நான் எழுதிய கட்டுரையை இங்கு தொடர்ச்சியாகப் பதிவு செய்கிறேன்.
சமூகப் பொறுப்பில் என்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று கூறியதோடு இந்த கட்டுரையை தட்டச்சு செய்து கொடுத்த எனது இனிய தோழர் “ஆதிஆனந்த்அப்பா” அவர்களின் உதவிக்கு மிக்க நன்றி
****************************************************************************
தலித் விடுதலை முன்னோடி – பெரியார் என்ற தலைப்பில் 9 பகுதிகளாக 2009 ஆம் ஆண்டே தற்போது தந்திதொலைக்காட்சியில் பாண்டே எழுப்பிய அத்துணை கேள்விகளுக்கும் பதில் நம்மாலும் மற்ற அறிஞர்களாலும் அதற்கு மேலாக பெரியாராலும் பதில் அளிக்கப்பட்டுளதை பதிவு செய்துள்ளோம். இதையெல்லாம் எதையும் பொருட்படுத்தாமல் திட்டமிட்டே மீண்டும் மீண்டும் பாண்டே போன்ற பார்ப்பன சக்திகளால் புதிய குற்றச்சாட்டுக்கள் போல் சுமத்தி வருகின்றனர். இதையெல்லாம் தோலுரித்துக் காட்டவே 2009 ஆம் ஆண்டு பதிவு செய்த கட்டுரைகளை தொகுத்து தந்துள்ளோம். இன்றைய சூழலில் மீண்டும் ஒரு முறை படியுங்கள்!சிந்தியுங்கள்!!
அதற்கான சுட்டி இதோ:-
http://thamizhoviya.blogspot.in/2009/09/blog-post_19.html
http://thamizhoviya.blogspot.in/2009/10/3.html
http://thamizhoviya.blogspot.in/2010/01/7_18.html
http://thamizhoviya.blogspot.in/2010/01/8_20.html
http://thamizhoviya.blogspot.in/2010/01/9_21.html
---------------------------------------------------------------------------------------------
இது போல் இன்னும் ஏராளமான செய்திகள்,தொடர்கட்டுரைகள் தமிழ் ஓவியா வலைப்பூவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. படியுங்கள்!!
22 comments:
Unga blog ellm yar padikara? Neengale ezhudhi neengale padichukonga. Paandevin anal parkkum kelvogalai edhorgolla thraani illmal thindadiyadhai dhan naangal paarthome. Avar ketkum kelvigalukku badhil sollaamal veru edhavadhu pesi veeramani neratthai kadatthi vidalam enru enni pesikonde irundhar. Dhairiyam irundhal Muslim Christian madha nambikkaiyai patri pesungal parpom. Edharlume neradiyaaga badhil sollaamal katthi pesuvadhanaal neengal neengal kelvi ketpavargalai adakki vida mudiyadhu. Neengal ellam epper pattavargal enru makkalukke theriyum. Ungalai ellam makkal oru porutagave ninaipadhillai. Nan yen ingu badhil koorinen enral neengal pande vidam pesa mudiyamal thinari vittu pande virku badhiladi kuduthar enru pacchi poiyai alli vidugireergale. Andha comedy kaaga dhan nanum ungal blog il comment podugiren. Aanmeegam kadavul bakthi ingu adhigamagi konde pogiradhu. Ungalal adhai thadukka mudiyadhu. Ungalidam hindu brahmin dhvesathai thavira veru edhuvum illaai. Pagutthu arivu enbadhellm summa makkalai emaatra solginra pecchu.
இவர்கள் திருந்தப் போவதில்லை
நாடு முழுவதும் பசுவதை தடைச் சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்குமாம்
ராஜ்நாத் சிங் தகவல் புதுடில்லி, மார்ச்.30- நாடு முழுவதும் பசுக் களை கொல்வதை தடை செய்து, சட்டம் கொண்டு வர மத்திய அரசு முயற் சிக்கும் என மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சமண மதத்தின் சுவதம்பர் பிரிவு தலைவர்கள் நேற்று சந் தித்து பேசினர். அப்போது அவர்கள் பசுக்களை கொல்ல தடை விதித்து சட்டம் கொண்டுவருவது டன், எருமைகள் வதை தடை சட்டத்தையும் நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொட ரில் நிறைவேற்ற வேண் டும் என்று வலியுறுத் தினர்.
அவர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசுகையில் கூறியதாவது:-
இந்த நாட்டில் பசு வதையை ஏற்றுக்கொள்ள முடியாது. பசுவதையை தடுப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளை யும் எடுப்போம். பசுக் களை கொல்வதற்கு தடை விதித்து சட்டம் கொண்டு வர கருத்தொற்றுமை ஏற்படுத்த கடுமையாக முயற்சி செய்வோம்.
பசுக்களை கொல்வதை தடை செய்ய நாங்கள் உறுதி கொண்டிருப்பதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அந்த வகையில் ஏற்கெனவே மத்திய பிரதேச மாநில அரசு கடுமையான சட்டம் கொண்டு வந்துள்ளது. மராட்டிய அரசும் சட்டம் கொண்டு வந்திருக்கிறது. மராட்டிய அரசு பசுவதை தடை சட்டம் இயற்றி அனுப்பி வைத்தபோது, அதை குடியரசு தலை வரின் ஒப்புதலுக்கு நாங்கள் அனுப்பி வைக்க நேரம் எடுக்கவில்லை.
பசுவதை தடை சட் டத்தை நிறைவேற்றுவ தற்கு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் அரசுக்கு மெஜாரிட்டி இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு அரசு எப்படியெல்லாம் போரா டுகிறது என்பதை ஊட கங்கள் வாயிலாக நீங்கள் அறியலாம். 2003-ஆம் ஆண்டு நான் விவசாய துறை அமைச்சராக இருந்த போது, பசுவதைக்கு எதி ராக நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்தேன். அந்த மசோ தாவை நான் அறிமுகம் செய்தபோதே சபையில் அமளி ஏற்பட்டது. அதன் காரணமாக அப்போது அந்த மசோதாவை நிறை வேற்ற முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Read more: http://viduthalai.in/e-paper/98792.html#ixzz3Vsdgpbu6
நாத்திகன்
நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)
Read more: http://viduthalai.in/page-2/98796.html#ixzz3Vse6PT00
அமெரிக்காவில் சிறுபான்மையினர்
இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று குடியுரிமை பெற்று வாழும் இந்துக்கள், சீக்கியர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல் மற்றும் அவர்களுக்கு எதிராக விரோதப் பேச்சுக்கள்மீது அமெரிக்காவின் முக்கிய புலனாய்வுக் குழுவான எஃப்.பி.அய் (திஙிமி) கண்காணிக்கத் துவங்கியுள்ளது. 2014 முதல் 2015 வரை தொடர்ந்து அமெரிக்காவில் வாழும் சீக்கியர்களும், இந்துக்களும் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
வழிபாட்டுத்தலங்களின் மீதும் தாக்குதல் அவ்வப்போது நடந்துவருகிறது. கடந்த மாதம் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள இந்துக் கோயில்மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குறிப்பாக இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து பராக் ஒபாமா தலைமையிலான அரசு அமெரிக்காவின் புகழ்வாய்ந்த எஃப்.பி.அய் (திஙிமி) புலனாய்வுக் குழுவிடம் இந்த விசாரணையை ஒப்படைத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க சட்டத்துறை நிபுணர்கள் கூறும்போது, அமெரிக்காவின் குடியுரிமை பெற்று இங்கு வசிக்கும் அனைவரும் இந்த நாட்டின் அரசியல் சட்டவிதிகளுக்குட்பட்டு பாதுகாப்பிற்கும், சுதந்திரமாக வாழ்வதற்கும் உரிமை பெற்றவர்கள். சமீபகாலமாக சில மதத்தவர்களின் மீது நடக்கும் தாக்குதல்கள் அரசியலமைப்புச் சட்டவிதிகளை மதிக்காதவர்கள் செய்யும் செயலாகும், இந்த செயலால் சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்கவாழ் சீக்கிய அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கூறும்போது அரசின் இந்த முடிவு எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சில மாதங்களாகவே எங்களுக்குப் பாதுகாப்பின்மை போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது உண்மைதான் என்று கூறினார்.
விசாரணையைக் கையிலெடுத்த எஃப்.பி.அய் தரப்பில் கூறப்படுவதாவது, இந்துக்கள் மற்றும் சீக்கியர் களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு என்ன காரணம் என்று முதலில் கண்டறியவேண்டும், இதன் மூலமே தாக் குதல்களை நிறுத்தமுடியும். தாக்குதல்களை நடத்துப வர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். வெளிநாட்டில் சிறுபான்மையராக இருக்கக் கூடியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் உள்ள இந்துத்துவவாதிகள் இந்தப் பிரச்சினை மூலம் ஒன்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இந்துக்களைத் தவிர மற்றவர்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள்.
இந்தியாவில் இந்துக்களைத் தவிர்த்த மற்ற சிறுபான் மையினரைத் தாக்க ஆரம்பித்தால், அதன் எதிரொலி வேறு நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு இடையூறும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அமெரிக்க அரசு சிறுபான்மையினரை அங்கீகரிக்கிறது; அவர்கள்மீது வன்முறையை ஏவினால் அவர்களைப் பாதுகாக்க முனைகிறது.
இந்தியாவின் நிலை என்ன? இந்தியாவில் சிறுபான்மையினர் என்பதே கிடையாது - இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களே என்று பி.ஜே.பி.யில் உள்ள முன்னணியினரிலிருந்து சங்பரிவாரங்கள் வரை அரட்டை அடிக்கின்றனர்.
அப்படி சொல்லிக் கொண்டே, ஆளும் பிஜேபி வட்டாரத்தினர் சிறுபான்மை மக்கள்மீது அவதூறு கக்கும் நெருப்புக் கணைகளை வீசுகின்றனர். அடிதடி, கொலை வரை அது நீண்டு கொண்டே போகிறது. சிறுபான்மையினர்தம் வழிபாட்டுத் தலங்களை அடித்து நொறுக்குகின்றனர். வணிக நிறுவனங்களைத் தீக்கிரையாக்கி வருகின்றனர்.
அமெரிக்க அரசின் அணுகுமுறையையும், இந்திய அரசின் அணுகுமுறையையும் ஒப்பிட்டால் இந்தியா வின் அவலம் எத்தகையது என்பது எளிதில் விளங்கி விடும். குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்த போது அரசப் பயங்கரவாதத்தைக் கொம்பு சீவி சிறு பான்மை யினர்மீது ஏவிவிட்டு ஆயிரக்கணக்கானோர் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டனர்; அந்த முதல் அமைச்சர்தான் இப்பொழுது இந்தியாவின் பிரதமராகி இருக்கிறார்.
காரில் பயணம் செய்யும்போது நாய்க்குட்டி அடி படுவதையும் சிறுபான்மையினர் தாக்கப்படுவதையும் ஒப்பிட்டு பேசியவர் தான் இன்று இந்தியா வின் பிரதமர்; வெளிநாடுகளைப் பார்த்தாவது இந்துத் துவாவாதிகள், ஆட்சியாளர்கள் திருந்துவார்களா?
இந்தியாவில் இருப்பதைவிட வெளிநாடுகளில் சுற்றுவதையே வாடிக்கையாகக் கொண்டு விட்ட பிரதமர் நரேந்திரமோடி சில பாடங்களைக் கற்றுக் கொண்டு திரும்புவது நல்லது!
Read more: http://viduthalai.in/page-2/98797.html#ixzz3VseL4Ehn
பாண்டேயின் கேள்வியும், ஆசிரியரின் அதிரடியும்
- குடந்தை கருணா
தந்தி தொலைக்காட்சியில் கேள்விக்கென்ன பதில் நிகழ்வில், நெறியாளர் ரங்கராஜ் பாண்டே, ஆசிரியரிடம் கேள்வி கேட்ட விதம் பலவித விமர்சனங்களுக்கும், கண் டனங்களுக்கும் ஆளாகியுள்ளது.
ஆனால், ரங்கராஜ் பாண்டே கேள்விகள் ஒன்றும் புதிதல்ல.
தொடர்ந்து சோ முதல் நாம் அன்றாடம் பேருந்துகளிலும், ரயில் பயணத்திலும் பார்ப்பனர்கள் நம்மிடம் கேட்கும் அதே கேள்விகள் தான்.
இந்த கேள்விகளுக்கெல்லாம் பெரியார் காலத்திலிருந்து பதில் சொல்லி, பதில் சொல்லி அலுத்து விட்டது. இருந்தாலும் அதே கேள்வியை இன்றையவரை பாண்டேயை விட்டு கேட்கிறார்கள் என்றால், காரணம் இருக்கிறது தோழர்களே.
பெரியார் எனும் அந்த மானுடத் தத்துவம், அவர்களை இன்றுவரை தூங்கவிடாமல் செய்கிறது தங்களின் ஆளுமையை தகர்த்த, தொடர்ந்து தகர்க்கும் ஒரே ஆயுதமாக, பெரியாரின் தத்துவம் விளங்குகிறதே என்ற ஆத்திரம். அவர்களின் கண்களை உண்மை நிலையிலிருந்து மறைக்கிறது.
அதனால்தான், தாலி அகற்றும் கேள்விக்கு பதில் பெறுவதற்கு முன்பாகவே, சடாரென, பர்தா, இஸ்லாமியர், கிறித்துவர் பக்கம் கேள்வி சாய்கிறது.
திராவிடர் கழகத்தின்பால், சிறுபான்மை மக்கள் கொண்டுள்ள இன உணர்வுரீதியான பிணைப்பை அறுக்க முடியுமா என்ற நப்பாசை;
பெரியாரும், இயக்கமும், எப்போதும் மிகவும் ஒடுக்கப்பட்ட, அழுத்தப்பட்ட மக்களின் பக்கம்தான் என அனைவருக்கும் தெரியும் என்றாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன செய்தது? என்று தொடர்ந்து சொன்னால், அதன் மூலம் அந்த மக்களுக்கு எதிராக திருப்பிவிட முடியுமா என்கிற அந்த விஷ எண்ணம்;
இந்த வகையில்தான், பார்ப்பனர் களின் கேள்வி எப்போதும் இருக்கும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாமல், இங்கே தமிழ் நாட்டில் தான், இயக்க ரீதியாக, பார்ப் பனர்களின் ஆதிக்கமும் அவர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக விளங்கும் பார்ப்பன சனாதன ஹிந்து மதமும் கிழித்தெறியப்படுகிறது.
அந்த சிறப்பான பணி, பெரியாரின் இயக்கத் தால் நடைபெறுகிறது என்பதை பார்ப்பன பரிவாரங்களால் சீரணிக்க முடியவில்லை.
அதன் விளைவுதான், சோ முதல், அத்தனை சவுண்டிகளும் ஒரே கோரஸாக, ஒரே மாதிரியான கேள்விகளை தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆசிரியர் தக்க பதிலடி தந்தாலும், தொடர்ந்து இந்த கேள்விகள் தொடரும்.
ரங்கராஜ் பாண்டேவை தொடர்ந்து இன்னும் சில நாட்களில் அல்லது மாதத்தில் வேறு ஒரு பாண்டேவோ அல்லது பத்ரியோ, சேஷாத்திரியோ இதே கேள்வியைக் கேட்பார்கள்.
அவர்களுக்கு துணை போவதற்கு நம்மூர் தந்தி டிவி போல பல டிவிக்கள் ஆவலுடன் இருக்கின்றன.
ஆனால், அவர்கள் எந்த முறையில் வந்தாலும், எந்தக் காலத்திலும் பெரியாரின் தத்துவத்தை அசைக்கக் கூட முடியாது என்பது அவர்களுக்கு தெளிவாக தெரிகிறது.
நம்ம மக்களுக்கு புரிந்தால் சரி.
Read more: http://viduthalai.in/page-2/98804.html#ixzz3VseiVVFo
மருத்துவப் பயன் அதிகம் உள்ள கோவைக்காய்
கோவைக்காயில் உடல் சூட்டைத் தணிக்கும் தன்மை உள்ளது. அத்துடன் இது உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கும் குணம் கொண்டது. அதற்கேற்ற பாக்டீரியா எதிர்ப்பு சக்தி இதில் உள்ளது. கோவைக்காய் உடலில் உள்ள அதிகபட்ச சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது. தேவையற்ற உணவுப் பழக்கங்களால் வயிற்றில் ஏற்படும் சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும்!
பழைமையான ஆயுர்வேத மருத்துவ நூல்களில் கோவைக்காயில் உள்ள சிறப்பு அம்சங்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவைக்காயில் உள்ள மெட்டபாலிக் தன்மைகள் நமது இதயத்துக்கு மிகவும் நல்லது. இது கல்லீரலுக்கும் நன்மை பயக்கக் கூடியது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற காய் இதுவாகும். மஞ்சள் காமாலை, ஆஸ்துமா நோயாளிகள் இதை சாப்பிட்டால் விரைவில் குணம் ஏற்படும்.
கோவைக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை காரணமாக கோவைக்காய் மற்றும் செடியிலிருந்து ஆயுர்வேத மருந்துப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் பெண்களுக்கு ஏற்படும் அதிகபட்ச வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தவும், சிறுநீர் சார்ந்த நோய்களைக் குணப்படுத்தவும், வயிறு சார்ந்த செரிமான பிரச்சினை களைத் தீர்க்கும் மருந்துகளுக்கும் கோவைக்காய் பயன்படுத்தப்படுகிறது.
விடாரியாடி கஷாயம் எனப்படும் ஆயுர்வேத மருந்து கோவைக்காய் செடியிலிருந்து பெறப்படும் சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தக் கஷாயம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் சோர்வுத் தன்மையை நீக்க அளிக்கப்படுகிறது. பெண் களுக்கு ஏற்படும் பொதுவான சோர்வை போக்கவும் தரப்படுகிறது.
எடையிழப்பு போன்ற ஊட்டச்சத்து குறை பாட்டால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் அளிக்கப்படுகிறது. இது எக்ஸிமா எனப்படும் சருமப் பிரச்சினையைக் குணப்படுத்த மருந்தாக அளிக்கப்படுகிறது. வாய்ப்புண்ணை - குறிப்பாக நாக்கில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த இது உதவுகிறது, எடை குறைக்க விரும்புவோருக்கு உணவுடன் சாப்பிட ஏற்ற மிகச் சிறந்த காய் இதுவே.
Read more: http://viduthalai.in/page-2/98837.html#ixzz3VsgjqywX
மிளகின் மருத்துவ குணங்கள்
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம் என்பது பழமொழி. அப்படியா மிளகில் அவ்வளவு விஷயம் இருக்கா என ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த மருந்து பொருளாக மிளகு விளங்குகிறது.
இவை இந்தியாவில் அதிகளவு பயிரிடப்படுகிறது. மிளகில் உள்ள வேதிப் பொருள்கள் அனைத்தும் நம்மை நோயில் இருந்து காக்கும் வேலைகளை செய்கிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கத்தை குறைக்கும் வாதத்தை அடக்கும். பசியை அதிகரிக்கும்.
நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு மிளகு சிறந்த நல்ல மருந்தாகும். வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு. நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோயும் நெருங்கியதில்லை. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.
மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக் குளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினை களை சரி செய்கிறது.
அதாவது சரியான செரிமானம் வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.
தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன்மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சினை எட்டிப் பார்க்காது. மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே, மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன்மூலம் எடையை குறைக்கலாம். மிளகு தோல் நோயை குணப் படுத்துவதற்கும் பயன்படுகிறது.
இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். லண்டன் ஆராய்ச்சி ஒன்றின்படி மிளகு வெண் புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.
ஆக்சிஜனேற்றியாக செயல்படும் மிளகு புற்றுநோய் இதயநோய், கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சினையை எதிர்த்து செயல்படும். மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது.
காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சினைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், வலி நிவாரணம் கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாச பிரச்சினைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து. மேலும் பல் வலி, பல் சிதைவு போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் மிளகு மருத்துவத்தைத் தான் பயன்படுத்தி வந்தனர்.
உடல் வெப்பத்தை குறைக்கும். இப்படி பல பண்புகளை கொண்டது மிளகு. நரம்புத்தளர்ச்சி, கைகால் நடுக்கம், உதறல், ஞாபகமறதி, முதுமையில் ஏற்படும் தலை சுற்றல் ஆகிய வற்றிற்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. வயிற்றுபகுதியில் என்சைம்களை தூண்டி அதிகம் சுரக்கச் செய்கிறது.
செரிமானத் தன்மையையும் அதிகரிக்க செய்கிறது. நச்சுக் கழிவுகளை உடலில் தங்க விடாமல் செய்வதால்தான் நம் முன்னோர்கள் பத்து மிளகு இருந்தால் என்ற பழமொழியை பயன்படுத்தியிருக்கிறார்கள். என்ன மிளகு வாங்கக் கிளம் பிட்டீங்களா.
Read more: http://viduthalai.in/page-2/98838.html#ixzz3VsgtCgve
உற்சாகமாக இருக்க
குளிர்ந்த நீரில் குளிக்கலாம்
மனித உடலுக்குத் தண்ணீர் வைத்தியம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் உற்சாகமளிக்கக் கூடியதாகும். உங்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் சக்தி தேவை என்று நீங்கள் எண்ணினால், உற்சாகமின்மையால் அவதிப்படுவதாக நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு தேவையானது குளிர்ந்த நீர் வைத்தியம்தான்.
தண்ணீரில் வைத்தியம் என்றால் குளிக்கும் தொட்டியில் குளிர்ந்த நீரை நிரப்பிக் கொள்ளுங்கள். அதற்குள் இறங்கி படுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நிமிடம் தண்ணீருக்குள் உங்கள் உடல் முழுவதும் இருக்கும் விதத்தில் வைத்துக் கொண்டு உடலை ஆங்காங்கே உங்கள் கைகளால் தேய்த்து விடுங்கள். ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை இப்படி குளிர்ந்த தண்ணீரில் சோப் இன்றித் தேய்த்துக் குளிக்கும்போது நிணநீர் மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கி உள்ளே உள்ள உறுப்புகளை சுத்தம் செய்துவிடுகிறது. இதனால் இதயமும் சுறுசுறுப்படைகிறது.
குளித்ததும் உடலை நன்கு துடைத்துவிடுங்கள். இதனால் அடுத்த பல மணி நேரம் சுறுசுறுப்பாகப் பணிபுரியலாம்.
Read more: http://viduthalai.in/page-2/98838.html#ixzz3VshGYrL2
கொழுப்பை கரைக்கும் கத்தரிக்காய்
கத்திரிக்காய் உடல் வலியைப் போக்கும் தன்மை யுடையது. காய்ச்சலைப் போக்கக் கூடியது. சோர்வைப் போக்கக் கூடியது. வீக்கத்தைத் தணிக்கக் கூடியது. கொழுப்பைக் குறைக்கக் கூடியது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. ரத்த அணுக்கள் சேர்க்கையைத் தடுக்கக் கூடியது. கண்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது.
மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த வல்லது, ஒவ்வாமையால் ஏற்படும் மயக்க நிலையைத் தடுக்க வல்லது, உறுப்புகளைத் தூண்டவல்லது. 100 கிராம் கத்தரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச் சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உதவுவதோடு ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்க வும் இது மிகவும் உதவியாக உள்ளது.
புத்துணர்வைத் தரும்
கத்தரிக்காயின் தோலில் உள்ள ஆன்த்தோ சயனின் என்னும் வேதிப்பொருள் உடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக் கூடியது, அது மட்டுமின்றி ஆன்தோ சையனின் புற்றுநோய் எனப்படும் கேன்சர் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு தடுக்க வல்லது.
கத்தரி இலைகள் ஆஸ்துமா எனப்படும் இறைப்பு நோய், மூச்சுக் குழல் நோய்கள், சுவாச அறைக்கோளாறுகள், வலியுடன் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவற்றுக்கும் மருந்தாகிப் பயன் தருகின்றது. வாயில் எச்சில் சுரக்கவும் இது பயன்படுகிறது. கத்தரிச் செடியின் வேர் மூச்சிரைப்பு மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது.
கொழுப்புச் சத்தைக் குறைக்கும்
வேரின் சாறு காது வலியைப் போக்கப் பயன்படுகிறது. நோய் வாய்ப்பட்டிருக்கும்போது பத்திய உணவில் கத்தரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. கத்தரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவும் ஓர் உன்ன தமான மருந்தாகும்.
கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து பசியை அடக்கி வைப்பதால் உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. மேலும் இதயத்துக்கு பலத்தைத் தருவதாக அமைகிறது. கத்தரிக்காயை எண்ணெயிலிட்டுக் காய்ச்சி மேல் பூச்சாகப் பூசுவதால் ரத்தக் கசிவு குணமாகும்.
நார்ச்சத்து
கத்தரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந் திருப்பதால் உடலுக்கு மென்மையும், பலமும் தரவல்லது. கத்தரிக்காய் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கவல்லது மட்டுமின்றி சர்க்கரை நோயையும் தடுக்க வல்லது. கத்தரிக்காயை அரைத்து தீநீராக்கி வீக்கமுற்ற கால்களின் மீது தேய்த்துவர நாளடைவில் வீக்கம் குறைந்து விடும்.
கத்தரிக்காயைச் சாறு பிழிந்து உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தேய்த்துவிட கால்களில் வியர்த்து இடையூறு உண்டாவது தடுக்கப்படும். பழத்தை வேக வைத்து உள்ளுக்குக் கொடுப்பதால் காளான் சாப்பிட்டு ஏற்பட்ட நச்சு முறிந்து விடும். கத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய பெருங்காயம், பூண்டு, உப்பு, சேர்த்து சூப் செய்து சாப்பிட வயிற்றில் சேர்ந்து துன்பம் தரும் வாயு கலையும்.
கத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய தேன் சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிட நல்ல தூக்கத்தை உண்டாக்கும் இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை அகலும்.
Read more: http://viduthalai.in/page-2/98839.html#ixzz3VshRf7lS
இந்தியாவில் 10 இல் ஒருவருக்கு
மன அழுத்தம் உள்ளது: ஆய்வில் தகவல்
மும்பை, மார்ச் 30- இந்தியாவில் 10- இல் ஒருவர் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக அளவில் மன அழுத்தம் நோய் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. உலகில் உள்ள 5 பெண்களில் ஒருவரும், 10 ஆண்களில் ஒருவரும் வாழ்வில் ஒரு முறையாவது தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரையில் 10 இ-ல் ஒருவருக்கு மன அழுத்தம் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயின் அறிகுறிகளாக, செய்யும் வேலை களில் கவனம் செலுத்த முடியாமை, வெறுமையாக உணர்வது, தன்னம்பிக்கை இழப்பது, குற்ற உணர்வு, முடிவுகள் எடுப்பதற்கு சிரமப்படுவது, ஞாபக மறதி, அதிதூக்கம் அல்லது தூக்கம் இன்மை, தற்கொலை எண்ணம் போன்றவை முக்கிய அறிகுறிகளாக கூறப்படுகிறது.
இது தவிர குடிப்பழக்கம், அதிகமாக புகைப்பது கூட மன அழுத்ததின் வெளிப்பாடாக இருக்கலாம். இந்தி யாவில் மன அழுத்தம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. சரியான சிகிச்சை எடுத்துகொள்வதன் இந்த நோயை தீர்க்க முடியும்.
சமீபத்தில் விபத்துக்கு உள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் துணை விமானி லுபிட்ஸ் கடும் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக விசாரணை யில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதான் இந்து மதம்:
செத்த பின்னும் ஜாதி
பெங்களூரு, மார்ச் 30_ புற்றுநோய் பாதிப்பால் 11 வயது ஸ்வேதா உயிரிழந்தார். ஜாதிவெறி பாதிப்பு உயிரோடு இருக்கும்போது இருப்பது மட்டுமன்றி உயி ரிழந்த பின்னரும் ஜாதிக்கொடுமை தொடர்ந்துள்ளது.
ஹென்னூர் பகுதியில் சிறுமியின் உடலை அடக்கம் செய்வதற்கு அவருடைய ஜாதியைக் காரண மாகக் கூறி இரண்டு நாள்களாக காவல்துறையினர் தலையிட்டும் அனுமதி மறுத்துவிட்டனர்.
வேறு வழியின்றி கருநாடக மாநிலத்திலிருந்து சொந்த ஊரான தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரிக்கு சிறுமி ஸ்வேதாவின் உடலைக் கொண்டு வரவேண் டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர்.
கருநாடக மாநிலத்தில் ஹென்னூர் அருகே உள்ள பாபுசபால்யா பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். ஸ்வேதாவின் உறவினரான தேவி சிக்கம்மா கூறும்போது, இதற்கு முன்னர் பல முறை எங்கள் குடும்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு இறுதி மரியாதையை இங்கேயே செய்துள்ளோம். ஆனால், இந்த முறை உள்ளூர் ஜாதிக்காரர்களால் நாங்கள் வேறு ஜாதிக்காரர்கள் என்று காரணம் கூறி அடக்கம் செய்வதற்கு எங்களை விடவில்லை என்று கூறினார்.
உள்ளூர்வாசிகளிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தும் முடியாமல் போனதால், காவல்துறை யினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினரும் சமாதானம் செய்ய முயற்சித்தும், பிடி வாதமாக அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க மறுத்து விட்டனர்.
Read more: http://viduthalai.in/page-2/98845.html#ixzz3Vshsc4n9
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - திராவிடர் கழகம்
இடையிலான உறவை எவராலும் சிதைக்க முடியாது!
தொல்.திருமாவளவன் அறிக்கை
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நேர்காணல் மார்ச் 28 அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. அவரை நேர்காணல் செய்த அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் திராவிடர் கழகத்துக்கும் இடையிலான நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு ஓரிரு கேள்விகளை எழுப்பியதைக் காண முடிந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் அவர்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர் என்னும் கருத்தைப் பரப்புவதாக அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
விடுதலைச் சிறுத்தைகளும் திராவிடர் கழகமும் கொள்கைப் புரிதலோடு ஒருங்கிணைந்து தொடர்ந்து செயல்பட்டுவருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத காழ்ப்புணர்வின் அடிப்படையிலேயே இக்கேள்வி எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
தந்தை பெரியாரும் புரட்சியாளர் அம்பேத்கரும் எத்தகைய புரிதலோடும் நட்புறவோடும் இணைந்து பணியாற்றினார்களோ அதே வகையில், அவ்விரு தலைவர்களின் வழியில் இன்றும் இவ்விரு இயக்கங்களும் தோழமை உணர்வோடு இணைந்து பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, சாதி-மதவெறி சக்திகளை எதிர்ப்பதில் பெரியாரிய சக்திகளோடு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து களமாடி வருகிறது.
திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழாய் துப்பாக்கி என அழைக்கப்படுவதுண்டு. தற்போது விடுதலைச் சிறுத்தைகளையும் சேர்ந்து மூன்று குழல் துப்பாக்கியானோம் என ஆசிரியர் வீரமணி அவர்கள் மிகுந்த பூரிப்போடு அறிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு விடுதலைச் சிறுத்தைகளுக்கும் திராவிடர் கழகத்துக்கும் இடையிலான நட்புறவு வலுப்பெற்றிருக்கிறது.
அவ்வுறவில் சிறு கீறலையாவது ஏற்படுத்த வேண்டுமென்னும் தீய உள்நோக்கத்தோடு அத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் குதர்க்கமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அக்கேள்விக்குப் பதிலளித்த ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பியவரின் திசை திருப்பும் முயற்சியை மிகச் சரியாக அம்பலப்படுத்தினார்.
விடுதலைச் சிறுத்தைகள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையும் தந்தை பெரியார் அவர்களையும் தமது கொள்கை ஆசான்களாக ஏற்றுக்கொண்டு கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. சாதிமதவெறி சக்திகளுக்கு எதிராகப் போராடிவரும் சான்றோர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக தந்தை பெரியாரின் பெயரில் விருது மற்றும் பொற்கிழி வழங்கி வருகிறது.
விடுதலைச் சிறுத்தைகளின் துண்டறிக்கைகள், சுவரொட்டிகள் உள்ளிட்ட அனைத்து வெளியீடுகளும் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகிய இரு பெரும் தலைவர்களின் திருவுருவப் படங்களோடுதான் வெளியிடப்பட்டு வருகின்றன. விடுதலைச் சிறுத்தைகளின் திருமண நிகழ்ச்சிகளில் மணமக்கள் இருவரும் 'புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் வழியில் சமூகப் பணி ஆற்றுவோம்!' என உறுதியேற்று வருகின்றனர்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைகளை நிறுவும் இடங்களிலெல்லாம் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைகளையும் நிறுவ வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளுக்கு கட்சியின் தலைமையிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எனது அரசியல் உந்துசக்திகளாக விளங்கும் மூவரில் ஒருவர் தந்தை பெரியார் என்பதை மிகுந்த பூரிப்போடு அறிவிப்புச் செய்திருக்கிறேன். அதாவது, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மேதகு பிரபாகரன் ஆகிய மூவரும்தான் எனது பொதுவாழ்க்கைக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளித்துவரும் தலைவர்கள் என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறேன். பெரியார் திடலிலிருந்துதான் என் அரசியல் பயணம் தொடங்கியது என்பதைப் பல முறை பதிவுசெய்திருக்கிறேன்.
இவ்வாறு பெரியாரின் கொள்கைகளோடும் பெரியாரின் இயக்கங்களோடும் இரண்டறக் கலந்து ஒடுக்கப்பட்டோர் சிறுபான்மையினர் மற்றும் பிற விளம்புநிலை மக்கள் யாவரையும் அமைப்பாக்குவதிலும் அரசியல்படுத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டுவரும் விடுதலைச் சிறுத்தைகளின் மீதான நன்மதிப்பையும் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில், அந்த நேர்காணல் நிகழ்ச்சியில் கேள்விகள் எழுப்பியதை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகளுக்கும் திராவிடர் கழகத்திற்கும் மற்றும் பிற பெரியார் இயக்கங்களுக்கும் இடையிலான நட்புறவை எவராலும் எக்காலத்திலும் சிதைக்க முடியாது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் மிகவும் அழுத்தமாகத் தெளிவுபடுத்த விரும்புகிறது. மேலும், சாதி-மதவெறி சக்திகளுக்கெதிராக பெரியாரிய, மார்க்சிய இயக்கங்களோடு என்றென்றைக்கும் விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து போராடும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறது.
இவண்
தொல்.திருமாவளவன்
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
உலகிலேயே பிஜேபிதான் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியாம்
மோசடி முகத்திரையைக் கிழிக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா
ராஞ்சி மார்ச் 31 மோகன் ஜா என்ற விளையாட்டுப்பிரிவு செய்திப்பத்திரிகையாளர் உலகக் கோப்பை விளையாட்டிற்காக செய்தி சேகரித்துக் கொண்டு இருந்தார், அப்போது அவருக்கு இரண்டு முறை ஒரு எண்ணில் இருந்து (தவறிய) அழைப்பு வந்தது, பத்திரிகையாளர்கள் என்றாலே அவர்களுக்கு வரும் அழைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதால் அவர் தனது அறையைவிட்டு வெளியே வந்து மீண்டும் அழைப்பு வந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தார்.
எதிர்புறம் யாரும் எடுக்கவில்லை, மீண்டும் ஒருமுறை போன் செய்துவிட்டு தனது அறைக்கு திரும்பியவரின் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்தது, அதில் இவ்வாறு எழுதியிருந்தது. வாழ்த்துக்கள் நீங்கள் பாஜகவின் உறுப்பினராகிவிட்டீர்கள். உங்களது உறுப்பினர் எண் 1087369859.
உங்களது முகவரி வோட்டர் அய்டி எண், மின்னஞ்சல் முகவரி அனைத்தையும் 09242492424 என்ற எண்ணிற்கு அனுப்பி உங்கள் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அந்த குறுஞ்செய்தியில் எழுதியிருந்தது.
அவர் மீண்டும் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேச முற்பட்டப்போது எதிர்தரப்பில் யாரும் பேசவில்லை. இவரும் பதில் குறுஞ்செய்தி, எனக்கு தேவையில்லை, என்னை வலுக்கட்டாயமாக பாஜக உறுப்பினராக மாற்ற வேண்டாம் என்று அனுப்பினார்.
ஆனால், மீண்டும் அவருக்கு வாழ்த்துக்கள் நீங்கள் பாஜக உறுப்பினராகிவிட்டீர்கள் என்று மீண்டும் ஒரு புதிய உறுப்பினர் எண் குறுஞ்செய்தி வந்துசேர்ந்தது. அதாவது சில நிமிடங்களில் ஒரு நபருக்கு இரண்டு உறுப்பினர் எண்களை வழங்கியிருக்கிறார்கள். இறுதியில் மோடியுடன் இணைந்து பாஜகவை வழிநடத்துவோம் வாருங்கள் என்று மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
பட்னாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு வந்த குறுஞ்செய்தியோ பாஜகவின் செயலை சந்தி சிரிக்கவைத்துள்ளது. அவருக்கு மொத்தம் 3 மொபைல் போன்கள் மூன்று போன்களில் 13க்கு மேற்பட்ட பாஜக உறுப்பினர் எண்கள் வந்துவிட்டன. பாஜக ஆளும் கோவா மாநிலத்தில் ஜனவரியில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் பாஜகவிற்கு கிடைத்த மொத்த ஓட்டுக்கள் 1,50,674 மாத்திரமே ஆனால் கடந்த டிசம்பர் மாதம் கோவா பாஜக பத்திரிகையாளர்களை அழைத்து எங்கள் கட்சியில் கோவாவில் மத்திரம் 13 லட்சம் பேர் உறுப்பினராகி விட்டனர், என்று கூறியிருந்தனர்.
இதே நிலைதான் சிறீரங்கத்திலும் அங்கு நடந்த இடைத் தேர்ந்தலுக்கு முன்பு சிறீரங்கத்தில் மாத்திரம் 22 ஆயிரம் பேர் உறுப்பினராகிவிட்டனர். என்று அந்தக்கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவித்திருந்தார்.
ஆனால் அங்கு பாஜகவிற்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையோ வெறும் அய்ந்தாயிரம் தான். டில்லியின் நிலையும் இப்படித்தான் டில்லி தேர்தலுக்கு முன்பு டில்லி மக்கள்தொகையில் 90 விழுக்காடு எங்கள் உறுப்பினராகி விட்டனர்.என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித்ஷா தெரிவித்திருந்தார்.
ஆனால் 3 மூன்று பேர் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிலும் ஒருவர் அகாலிதள் கட்சியைச் சார்ந்தவர், மற்ற இருவரும் தனிப்பட்ட முறையில் மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள். ஜார்கண்ட் உள்ளாட்சிதேர்தலில் அத்தனை மாநகராட்சி களையும் பாஜக காங்கிரசிடம் இழந்து மூன்றா மிடம் வந்தது.
அங்கேயும் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று உறுப்பினர் அட்டையைக் காண்பிக்கிறார்கள். சமீபத்தில் டில்லியில் ராயன் என்று பள்ளியில் 3-வதுபடிக்கும் குழந்தைகளின் கையில் உறுப்பினர் படிவத்தைக் கொடுத்து வீட்டிற்கு சென்று நிரப்பிக்கொண்டு வரவேண்டும் என்று வற்புறுத்திய சம்பவங்கள் எல்லாம் பத்திரிகையில் வந்து பாஜகவின் மட்டமான உறுப்பினர் சேகரிப்பு கூத்தை அம்பலப்படுத்தியது.
(டைம்ஸ் ஆஃப் இந்தியா, மகாராட்டிரா டைம்ஸ், தைனிக் பாஸ்கர் ஏடுகள் வெளியிட்ட தகவல்களிலிருந்து 31.3.2015)
Read more: http://viduthalai.in/page1/98858.html#ixzz3W3alrCDy
கலாச்சாரப்படி..
. பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)
Read more: http://viduthalai.in/page1/98859.html#ixzz3W3dGyykw
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13_ஆவது மாநில மாநாடு கடந்த 19 ஆம் தேதி திருப்பூர் வாலி பாளையம், ஹார்வி குமா ரசாமி கல்யாண மண்ட பத்தில் சிறப்போடு அமைக் கப்பட்டிருந்த எழுத்தா ளர் ராஜம் கிருஷ்ணன் வளாகம், தி.க.சி. அரங்கில் எழுச்சியோடு துவங்கியது. அதன் ஒரு பகுதியாக 21.3.2014 அன்று இரவு 7 மணியளவில் திருப்பூர் டவுன்ஹால் வளாகத்தில் முற்போக்குத் தமிழ் மரபை முன்னெடுப்போம் என்ற கருத்துரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் சமூகப் பொறுப்புணர்ச்சி யோடு சிறப்பாக துவங்கி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பேராசி ரியர் அருணன் அவர்கள் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு தொகுதி சிபிஅய்எம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேலு வரவேற் புரையாற்றினார். தமுஎகச பொறுப்பாளர்கள் மற் றும் படைப்பாளிகள் பல ரும் முன்னிலை வகித்தனர்.
சமுதாயத்தை மேம் படுத்தும் முற்போக்குக் கருத்துக்களைத் தாங்கிய இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகப் பங் கேற்ற திராவிடர் கழகத் தின் பிரச்சாரச் செயலா ளரும், சீரிய வழக்குரைஞ ருமான அ.அருள்மொழி அவர்கள் உரைவீச்சு நிகழ்த்தியதாவது; முற் போக்குத் தமிழ்மரபை முன்னெடுப்போம்! என்ற முழக்கத்தோடு நடை பெறுகிற இன்றைய சிறப்பு நிகழ்வில் உங்களை சந் தித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்ப் பளித்த தமுஎகசவிற்கு நன்றி!
பெண்களுக்கு உரிமை யிருக்கிறதா? என்ற மர பைத்தேடிப் பார்க்கிறேன். நம்முடைய அப்பத்தா, அம்மாயி காலங்களில் பெண்கள் தங்கள் மனக் குமுறலை எடுத்துச் சொல்ல வெளிப்பாடாக இருந்த தாலாட்டையும், ஒப்பாரியையும் தான் நம் முன்னோர்களின் மரபாக பார்க்க முடியும்.
வரலாறுகள் எழுதப் படாத காலத்தில் மக்க ளின் பசிப்பிணி போக்க அட்சயப்பாத்திரம் தாங் கிய மணிமேகலையை நினைவு படுத்தியது 3_ஆம் தமிழ் மரபு. இந்த மரபை மாற்றி பெண்களுக்கு எவ் வித உரிமையும் கொடுக் கக்கூடாது என்ற தடையை மனுதர்மவாதிகள் ஏற் படுத்தியிருந்தார்கள். இந் தத் தடைகளை எல்லாம் தகர்த்து, அவர்களின் மற்ற சீர்கேடுகளை ஒழித்து பெண்ணுரிமை மரபையும், கல்வியையும் மீட்டுக் கொடுத்தது. தமிழ்நாட் டில் தந்தை பெரியார் தொடங்கிய பண்பாட்டுப் புரட்சிஇயக்கம். முற் போக்கு மரபை மீட்டெ டுத்த தந்தை பெரியார் வழியில் இருந்து நான் மரபை தொடங்குகிறேன்.
நம் முன்னே இருப்பது இரு மரபு:
1) பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப் பொவ்வா செய்தொழில் வேற்றுமை தான்.
2) சதுர் வர்ணம் மாயா சிருஷ்டம்
பாவேந்தர் பாரதி தாசன் கூறுவதுபோல் பிறர் நூல் கொள்கை எது? தமிழ்நூல் கொள்கை எது? என்பதை அறிய சங்கத்தமிழ் நூலைப் படி, காலையில் படி, மாலை யில் படி, கடும் பகல் படி என்று நம் மரபு எது என் பதை படித்து உணர வேண்டும்.
கல்வி என்பதற்கு அளவு கோல் இடஒதுக்கீடு அதை தகுதிக்கு எதிரானது என்று மனுதர்மவாதிகள் பிரச்சாரம் செய்தார்கள். அதை முறியடித்து இட ஒதுக்கீட்டை பிடித்தோம். நாம் அனைவரும் கல்வி கற்றோம். நம்முடைய விழிப்புணர்வை பார்த்து இன எதிரிகள் அஞ்சுகி றார்கள்.
யாதும் ஊரே! யாவ ரும் கேளிர்! என்ற தமிழ்க் கோட்பாடு ஒரு புறமும், ஜாதி தர்மம் என்ற மனு நீதிக்கோட்பாடு மறுபுற மும் நம் முன்னே நிறுத் தப்பட்டுள்ளது. நம் மரபு முற்போக்குத் தமிழ் மரபு. பல வித மாறுபட்ட சூழ் நிலைகள் இருப்பினும், முற்போக்குத் தமிழ்மரபு. பலவித மாறுபட்ட சூழ் நிலைகள் இருப்பினும், முற்போக்குத் தமிழ்மரபை முன்னெடுத்து வெற்றி பெற உழைப்போம் என உரையாற்றினார்.
Read more: http://viduthalai.in/page1/98893.html#ixzz3W3eIPHhY
முக்கிய அறிவிப்பு
தாலி அகற்றும் விழா மற்றும் மாட்டிறைச்சி விருந்துக்கு ஆதரவு குவிகின்றது
தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டு, திராவிடர் மகளிர் பாசறையால் நடத்தப்படும் தாலி அகற்றும் விழா மற்றும் மாட்டிறைச்சி விருந்துக்கு கழகத் தோழர்களிடமிருந்தும், மக்களிடம் இருந்தும் ஆதரவு குவிகின்றது.
ஏராளமான தோழர்கள் முன் பதிவு செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் இதுவே தவிர்க்க முடியாத விவாதப் பொருளாக மாறிவிட்டது.
இந்த விழாவைப்பற்றி மக்களிடம் கொண்டு செல்லாமல் இருட்டடிப்பு செய்த ஊடகங்கள்கூட தற்போது அதுகுறித்து விவாதிக்கத் தொடங்கியுள்ளன.
எனவே, இரு நிகழ்வுகளுக்கும் முன்பதிவு அவசியம்.
தொடர்பு கொள்ள:
திராவிடர் மகளிர் பாசறை,
9940348533 - 9841263955 - 9524097177
Read more: http://viduthalai.in/e-paper/98905.html#ixzz3W3er7tM8
மாட்டுக்கறியை சாப்பிடக்கூடாதா?
மனிதன் புல், பூண்டைத்தான் சாப்பிட வேண்டுமா?
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் பதிலடி!
சென்னை, ஏப்.1- மாட்டுக் கறி உணவு என்பது ஏழைகளின் உணவாகும்; அதனை சாப்பிடக்கூடாது என்று சொன்னால், தடை செய்தால் மனிதன் புல், பூண்டைத்தான் சாப்பிட வேண்டுமா? என்று தமிழகக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவருடைய பேட்டி வருமாறு:
மாட்டுக்கறி என்பது ஏழைகளின் உணவு. அதைச் சாப் பிடக் கூடாது; அதை விற்கக்கூடாது என்று தடை செய்வது, ஏழைகளினுடைய வயிற்றில் அடிப்பது போன்றது. ஏனென் றால், இன்றைக்கு ஆட்டுக்கறி ஒரு கிலோ 500 ரூபாய்க்கும்; கோழிக்கறி ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்கிறது. ஏழை, எளியோர்களின் சத்தான உணவு மாட்டுக்கறி யாகும். மிகவும் விலை குறைவாகவும் கிடைக்கிறது. அது மட்டுமல்ல, மாட்டுக் கறி சுவையை விரும்பி பலர் சாப்பிடு கிறார்கள். நானும் மாட்டுக்கறியை விரும்பிச் சாப்பிடுவேன்.
திடீரென்று நீங்கள் எல்லாம் அரிசி உணவை சாப்பிடக்கூடாது என்றால் எவ்வளவு மோசமோ, கோதுமை உணவை சாப்பிடக்கூடாது என்றால் எவ்வளவு மோசமோ அதுபோன்றதுதான் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்பது.
மக்கள் என்ன ஆடு, மாடுகள் சாப்பிடுகின்ற புல், பூண்டுகளையா சாப்பிட முடியும்?
உங்களுக்கு சைவ உணவு பிடிக்கும் என்றால், சைவ உணவை சாப்பிட்டுக் கொள்ளுங்கள்; அசைவ உணவு பிடிக்கும் என்றால் அசைவ உணவை சாப்பிட்டுக் கொள் ளுங்கள்; அதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு. அதனைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. பாம்பைச் சாப்பிடவேண்டும் என்று ஆசைப்பட்டாலும், சாப்பிடலாம்; சீனாவில் பாம்புக் கறி உணவை சாப்பிடு கிறார்கள். ஆகவே, மாட்டுக்கறியை நாங்கள் தடை செய்கிறோம் என்று சொல்வது என்பது முழுக்க முழுக்க ஒரு மோசமான செயலாகும்.
தாலி கட்டும் பழக்கம்
இன்னொன்று தாலி கட்டும் பழக்கம் என்பது, உலகத்தில் இந்தியாவில்கூட தமிழ்நாட்டில் நம்முடைய பெண்கள் சிலரிடம்தான் உள்ளது. ஆகவே, தாலி கட்டுவது அவசி யமா? இல்லையா?
என்று விவாதம் நடப்பதில் தவறேதும் கிடையாது. உலகத்தில் இருக்கின்ற பெரும்பான்மையான பெண்கள் தாலி கட்டிக்கொள்வது கிடையாது. சில பெண்கள் மோதிரம் அணிந்து கொள்கிறார்கள்; சில பேர் தங்கச் சங்கிலியைப் போட்டுக் கொள்கிறார்கள்.
ஆகவே, தாலி அணியவேண்டும் என்று கட்டாயப்படுத் துவது மிகவும் தவறு; அதேநேரத்தில், தாலி கட்டக்கூடாது என்று சொல்வதும் தவறு என்று நினைக்கின்றேன்.
தாலி கட்டுவதும், தாலி கட்டாததும் ஒவ்வொரு வருடைய விருப்பத்தைப் பொறுத்தது. ஆகவே, தாலி வேண்டாம் என்று சொல்வது தவறு என்றெல்லாம் சொல்ல முடியாது. சுயமரியாதைத் திருமணங்களில் தாலி கிடை யாது.
ஆகவே, அதற்காக ஊடகங்களை உடைப்போம்; தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்குவோம்; குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், ஒரு தொலைக் காட்சியில், தாலி வேண்டுமா? வேண்டாமா? என்ற நிகழ்ச்சி ஒளிபரப்புகிறோம் என்றவுடன், நாங்கள் அந்தத் தொலைக்காட்சியை உடைப்போம் என்று சொல்வதை, சுதந்திர நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாதது!
எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு!
- இவ்வாறு தமிழகக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
Read more: http://viduthalai.in/e-paper/98906.html#ixzz3W3ezPykm
இன்றைய ஆன்மிகம்?
இந்து மதத்தின் லட்சணம் பாரீர்!
தாரகாட்சன், வித்யுன் மாலி, கமலாட்சன் ஆகிய அசுரர்கள் மூவரும் பிரம்மாவை நோக்கித் தவமிருந்து தங்கம், வெள்ளி, இரும்பு எனும் மூன்று பறக்கும் கோட்டைகள் பெற்று, தேவர்கள், முனிவர்கள், மக்களுக்குத் துன்பம் இழைத்தனராம். தேவர்கள் சிவபிரானிடம் முறையிட, சிவன் அசுரர்களை அழித்தானாம்.
இந்து மதத்தில் ஒரு கடவுள் அருள் கொடுக்கிறது; இன்னொரு கடவுள் அதனை அழிக்கிறது - இதுதான் இந்து மதம் கூறும் ஆன்மிகத்தின் லட்சணமா?
Read more: http://viduthalai.in/e-paper/98907.html#ixzz3W3f6pKhs
பெண் ஒரு சொத்தா?
பெண்களுக்குத்தான் கற்பு; ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால், பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவளின் நிலைமை
_ (குடிஅரசு, 1.3.1936)
Read more: http://viduthalai.in/page-2/98908.html#ixzz3W3fKnljy
யார் இந்தப் பாண்டே - அவர் பின்னணியில் உள்ளவர்கள் யார்?
பேரா. அ.மார்க்ஸ் தோலுரிக்கிறார்
தமிழர்களின் பெருமை யாக இன்று தமிழ்த் தேசி யர்களால் தெண்டனிட்டுக் கொண்டாடப்படும் ராஜராஜ சோழன், அவன் மகன் ராஜேந்திர சோழன்... இவன்கள் எல்லோரது காலத்திலும் பீஹாரிலிருந்து பார்ப்பனர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.
கோவில் அர்ச்சகர் களாக மட்டுமல்ல, அரச குருக்களாகவும், கோட் டைக் காவலர்களாகவும் (துர்க்கா தண்டநாயகர்கள்) அவர்கள் பெரும் செல்வாக்குடன் வாழ்ந்து அதிகாரம் செலுத்தியுள்ளனர்.
பீஹாரில் எந்த ஊரிலிருந்து கொண்டுவரப்பட்ட வர்கள் என்கிற விவரங்கள் எல்லாம் சாசனங்களில் உள்ளன. நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவப் பண்டாரத்தார் எல்லோரும் இதைத் தம் சோழர் வரலாற்றில் குறிப்பிடுகின்றனர். நண்பரும் வாழும் தமிழறிஞருமான பொ.வேல்சாமியும் தனது 'கோவில் நிலம் சாதி' நூலில் இதைக் குறிப்பிடுவார்.
எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம். இந்த தந்தி டி.வி ரங்கராஜ் பாண்டே குறித்து. அது என்ன பாண்டே, தமிழ்ப் பெயராகத் தெரியவில்லையே என. சற்று முன் விசாரித்த போதுதான் இந்த நபரின் பூர்வீகம் தெரிந்தது. பீஹார் பார்ப்பனர்தானாம். இவரது தந்தை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்திற்கு அர்ச்சகராக வந்தவராம். இவர் இங்கு பிறந்து வளர்ந்தவராம்.
இன்னும் கூடவா அர்ச்சகர்கள் பீஹாரிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும்? என்ன பின்னணி எனத் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
ஆசிரியர் வீரமணியிடம் பாண்டே அடி வாங்கியது குறித்து முகநூல் அல்லோகலப் படுகிறது. மகிழ்ச்சி. எனக்குப் பார்க்க இயலவில்லை.
எல்லோரும் ஆசிரியரைப் பாராட்டுகின்றனர். எனக்கு வியப்பில்லை. இது போன்ற கேள்வி களுக்குப் பதில் அளிப்பதையே ஒரு வாழ்வாகக் கொண்டவர்கள் அல்லவா பெரியாரியர்கள்... எத்தனை கேள்விகள்... எத்தனை அவதூறுகள்... எத்தனை கல்லடிகள். தந்தை பெரியார் மீதே செருப்பை வீசவில்லையா இழி பிறவிகள். அவர் எதிர் கொள்ளாத கேள்விகளா?
ஒரு பதிலை நான் மிகவும் ரசித்தேன்.நண்பர் பிரபா அழகரின் பக்கத்திலிருந்தது அது.
"நீங்கள் ஏன் எப்போதும் இந்து மதத்தையே விமர்சிக்கிறீர்கள்? கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களை விமர்சிப்பதில்லையே..."
இந்தக் கேள்விகள் வழக்கமாகப் பெரியாரியர்கள் எதிர் கொள்வதுதான். என்னிடமும் பல முறை இது கேட்கப்பட்டதுண்டு. இல்லை, அப்படியெல்லாம் இல்லை. நாங்கள் இந்த மதங்களையும் கூட விமர்சிக்கத் தேவை வரும்போது தவறுவதில்லை.
இவை இன்று இங்கு சிறுபான்மை மதங்களாகவும், பெரும்பான்மை வன்முறைக்கு ஆளாகக் கூடியதாகவும் இருப்பதால் எங்கள் முன்னுரிமை அதற்கு இருப்பதில்லை என்கிற ரீதியில் என் பதில் இருக்கும். பல நேரங்களில் அது எடுபடுவதில்லை.
ஆசிரியர் அட்டகாசமாக இதற்குப் பதில் சொல்லியுள்ளார். யார் எங்களை சூத்திரர் என்றும், வேசி மக்கள் என்றும் தீண்டத் தகாதவர் என்றும் இழிவு செய்கிறார்களோ அவர்களை விமர்சிப்பது தான் என் முன்னுரிமை. கிறிஸ்தவமோ. இஸ்லாமோ எங்களை இப்படி இழிவு செய்வதில்லை.
87 சதம் மக்கள் தொகை உள்ள ஒரு மதத்தின் பிரதிநிதியாக நிறுத்திக் கொண்டு அவர்கள் இதை எல்லாம் செய்கிறார்கள். ஆனால் இதர மதத்தினர் இப்படி யெல்லாம் எங்களை இழிவு செய்வதில்லை என்பதோடு சிறுபான்மையினரும் கூட என்கிற ரீதியில் ஆசிரியரின் பதில் நச்.. நச்......
நண்பர்களே. பாண்டே முகம் வெளிறி இருக் கலாம். ஆசிரியர் அந்த நபரின் மூக்கை உடைத் திருக்கலாம். நாமும் பெருமிதம் கொள்ளலாம். ஆனால் ஒன்றை மறந்து விடாதீர்கள். தமிழகத்தில், அதுவும் "நாம் தமிழர்"
ஆதித்தனாரின் ஊடகம் ஒன்றில் ஒரு பீஹார்ப் பார்ப்பனன் ஆசிரியரிடம் திராவிடர் இயக்கம் குறித்தும், அதன் கொள்கைகள் குறித்தும் எடுத்தெறிந்து பேசவும், இத்தகைய அபத்தக் கேள்விகளை நேர்காணல் என்கிற பெயரில் ஆசிரியரை நோக்கிக் கேட்கவும் நேர்கிற ஒரு நிலை இன்று ஏற்பட்டுள்ளது என்பது தான் அது.
இன்றும் இந்த நிகழ்விலும், ஆசிரியர் அறிவித் துள்ள தாலி அகற்றும் போராட்டம் குறித்தும் யாரெல்லாம் அதை அவதூறு செய்கிறார்கள், யாரெல்லாம் அதை எதிர்க்கின்றனர் என்பதை ஒரு கணம் கவனிக்கத் தவறாதீர்கள்.
பெரியார் குறித்த அவதூறுகளைக் கடந்த 35 ஆண்டுகளாக மேலெடுத்த சகல தரப்பினருக்கும் பார்ப்பனீயத்திற்கும் உள்ள மிக நெருக்கமான உறவையும் மறந்துவிடாதீர்கள்.
Read more: http://viduthalai.in/e-paper/98939.html#ixzz3W46XcTtL
அக்கிரகாரச் செருக்கை அய்யாவின் அறிவாயுதத்தால் முறியடிப்போம்
தமிழ் கூறும் நல்லுலகில் மனு தர்ம அடிப் படையில் பெண்களை அடிமைகளாக, பேரிளம் பெண்களை போகப் பொருளாக மொத்தத்தில் பிள்ளை பெறும் இயந்திரமாக ஆக்கி அடிமைப் படுத்திய காலத்தில் மனித உணர்வுகளின் மாட்சிமை தாங்கிய குறளாக அன்று தந்தை பெரியார், பெண் ஏன் அடிமையானாள்? என்ற கேள்வியை எழுப் பினார். அக்ரகாரத்துப் பெண்களுக்கும் அய்யாவின் கேள்வி சரியாகப் பட்டது.
பொட்டு வைத்து, பூ வைத்து பொட்டுக் கட்டிய தேவதாசி முறையினை ஆவேசமாக எதிர்த்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் ஆவேசக் குரலின் உள்ளே கூட அய்யாவின் கொள்கை ஒலித்தது. அய்யா என்ற அந்த உயிர் எழுத்து, ஆண்களிடம் இருந்து பெண்களைப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், ஆண்டவனிடத்திலிருந்தும், அக்ரகாரத்திலிருந்தும் பெண்களின் உரிமையைப் பாதுகாத்தது.
தாலி என்பது பெண்களுக்கு எந்த வகையில் வேலியாக உள்ளது? எங்களைக் காப்பதில் தாலி வேலியாக உள்ளதா? பாலியல் வன்முறை செய்யும் போது பெண்களின் கற்புக்கு தாலி வேலியாக இருந்து இருக்கிறதா? கணவனே மனைவியைக் கொலை செய்யும் போது தாலி பாதுகாத்திருக்கிறதா? அரசு அலுவலகத்திலே, காவல் நிலையத்திலே, அங்காடிகளிலே, சிற்றின்ப சீறல்கள் எழுந்த போது தாலி வேலியாக இருந்திருக்கின்றதா?
ஒரு காலத்தில் பெண்கள் கல்வி அறிவு இல்லாத, பகுத்தறிவு சிந்தனை இல்லாத போது, பெண் திருமணம் ஆனாள் என்ற அடையாளமாக தாலி இருந்தது (அடிமையாக்க).
இன்றோ, ஆகாய விமானத்தில் இருந்து அறிவுசார் தொழில்நுட்பம் வரையிலும் பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள். கல்வி, வேலை வாய்ப்புகளில், ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் அளப்பரிய சாதனைகளைச் செய்து வருகிறார்கள்.
தாலியை விரும்பினால் போட்டுக் கொள். விரும்பாவிட்டால் அகற்றி விடு. அறிவாய்ந்து வாழ்வது, அடிமையாக வாழ்வதும் அவரவர் விருப்பம்.
தாலி அகற்றும் நிகழ்ச்சி என்பது அறிவாய்ந்த பெண்களின் விருப்பத்தின்பாற்பட்டது. இதுவே அய்யா வீரமணி அவர்களின் அறைகூவல்.
இதையறியா மழைக்காலத்து மண்டூகங்களாய் தமிழ் நாட்டு அரசியலில் பால பாடம் படிக்கும் பக்குவமற்ற சிலர் (சரத்குமார்) சந்து முனையில் சிந்து பாடுகிறார்கள். அவரவர் வாழ்க்கையை அவர்களே திரும்பிப் பார்க்கட்டும்.
தாலிக்கு அவர்கள் கொடுத்த மரியாதை அவர்களுக்கே தெரியாதே? அய்யாவின் கொள்கைக்கு தமிழ்நாட்டின் பெண்கள் துணையாக நிற்போம்!
அய்யாவைக் கண்டிக்கும் அக்ரகாரச் செருக்கை அய்யா பெரியாரின் அறிவாயுதம் கொண்டு முறியடிப்போம்!
- கலைமகள் இளையபாரதி
பாப்பாநாடு (உரத்தநாடு)
மாவட்ட மகளிரணி அமைப்பாளர் (திமுக)
Read more: http://viduthalai.in/e-paper/98939.html#ixzz3W46i1YIe
நேர்மைக் குறைவல்ல - அயோக்கியத்தனம்
பெரியார் வினாக்களுக்கோ, விமரிசனத்திற்கோ அப்பாற்பட்டவர் அல்லர். பெரியார் கொள்கைகள் குறித்த தொலைக்காட்சி விவாதத்தில் பெரியாரின் கருத்து குறித்த கேள்விகளைக் கேட்பதோ, அதற்கான ஆதாரங்களை அளிப்பதோ இயல்பானதே!
ஆனால் பேட்டி காணப்படுபவரிடம் அவர் கூறும் கருத்துகளுக்கு எதிரான ஆதாரங்களை கொடுத்து விளக்கம் கேட்பதுதான் ஏற்கத்தகுந்த நேர்மையான ஊடக அறமாக இருக்கும். அதற்கு பதிலாக கருத்துரைப்பவர் இல்லாத நிலையில் அரைகுறை ஆவணங்களை ஆதாரம் என்ற பெயரில் திணிப்பது ஊடக அறமல்ல. அதன் பெயர் நேர்மைக்குறைவுமல்ல. அயோக்கியத்தனம்..!
பத்திரிகை சுதந்திர ஆதரவாளர்கள், கருத்துரி மைக் காவலர்கள் உட்பட எந்த தரப்பினரும் இந்த நேர்மையற்ற செயல் குறித்து சாதிக்கும் மவுனத்தை நான் "கள்ள மவுனம்" என்று சொல்லலாமா?
ஊடக நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கை களுக்கு பொங்கி எழுந்து கண்டனம் தெரிவிக்கும் பத்திரிகையாளர் அமைப்புகள் இந்த கருத்துத் திணிப்பு குறித்தும் எதிர்வினை ஆற்றுவார்கள் என்று நம்புகிறேன்...!
- சுந்தரராசன், வழக்குரைஞர்
Read more: http://viduthalai.in/e-paper/98939.html#ixzz3W46tJaRS
Post a Comment