Search This Blog

21.2.15

பார்ப்பனர் அல்லாதாரும், பெண்களும் சிந்திப்பார்களாக!

ஆத்திரப்பட வேண்டியவர்கள் யார்?


 
தொலைக்காட்சிகளில் விவாதங்கள் என்பது முக்கிய இடம் பெறுகின்றன. அன்றாட செய்திகள் அலசப்படு கின்றன. கருத்தோடு கருத்து மோதல் என்பது வரவேற்கத்தக்க அறிவார்ந்த அம்சமே!

பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்களும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் குழுவைச் சேர்ந்தவர்களும் நடந்து கொள்ளும் முறை அநாகரிகமாகவும்,  அறிவுக் குறைவாகவும் இருப்பது வெளிப்படை.


எதிர்த் தரப்பினரைப் பேச விடாமல் செய்வது, உரக்கக் கத்துவது என்கிற யுக்திகளை மேற்கொள் கின்றனர். இதனை திராவிடர் கழகப் பிரச்சார செய லாளர் வழக்குரைஞர் அருள்மொழி தொலைக்காட்சி ஒன்றில் நேருக்கு நேர் முகத்துக்கு முகமே சுட்டிக் காட்டி எச்சரித்தார். ஆனாலும் அவர்கள் திருந்துவ தாகத் தெரியவில்லை. திட்டமிட்டே அவர்களுக்கு அப்படியொரு பயிற்சி அளிக்கப்படுவதாகவே தெரிகிறது.


இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. கால்பந்தாட் டத்தில் ஒன்றைச் சொல்லுவார்கள்; பந்தை அடிக்க முடியவில்லை என்று சொன்னால் எதிரியின் காலை அடி என்ற தவறான  (Foul Game)
கோழைத்தனமான அணுகுமுறை இது. மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களின் ஆணவமும், அடாவடித்தனமும் ஓங்கி நிற்பதாகத் தெரிகிறது.


தனியார்த் தொலைக்காட்சி ஒன்றில் ஒருங்கிணைப் பாளராக இருந்து சிறப்பாக தன் பணியைச் செய்த ஒருவர் - தங்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டு கிறார் என்ற காரணத்துக்காக அந்தத் தொலைக்காட்சி முதலாளிகளுக்கு அழுத்தம் கொடுத்து அவரை அந்தப் பணியிலிருந்து நீக்கம் செய்த அவலமும் நடந்ததுண்டு.


நேற்று முதல் நாள் ஒரு தொலைக்காட்சியில் விவாதம் ஒன்று அரங்கேறியது. அதில் பங்கு கொண்ட பிஜேபி பிரச்சாரகர், கீதை ஒரு புனித நூல் என்று சாதிக்க முனைந்தார். எதிர்த் தரப்பில் பேசிய வரலாற்றுப் பேராசிரியர் அதனை மறுத்ததோடு - கீதையில் உண்மையிலே என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டினார்.


வருணத்தை நானே உண்டாக்கினேன் என்று கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார் என்பதோடு மட்டுமல்ல;

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கீதை கூறுகிறதே. இது எப்படிப் புனித நூலாகும் என்ற அறிவார்ந்த வினாவைத் தொடுத்தார் பேராசிரியர்.


அவ்வளவுதான் பிஜேபிகாரர் போட்ட சத்தம் இருக்கிறதே - அநாகரிகமானது; உண்மையைச் சொன் னால் உடல் எரிச்சல் என்பார்களே - அதனைத்தான் அது வெளிப்படுத்தியது.


பேராசிரியர் சொன்னது தவறு என்று சொல்லட்டுமே பார்க்கலாம். கீதையின் மறுபக்கம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூல், இதுவரை இலட்சக்கணக் கில் மக்கள் மத்தியில் பரவியிருக்கிறது. 1998இல் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது. 2015இல்  22ஆம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இது பதிப்பகத் துறையில் புதிய சாதனையாகும்.


தமிழில் வெளிவந்த இந்த நூல் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.(Bhagavath Gita Myth or Mirage)  இந்த நூலில் கூறப்பட்டுள்ள ஒரே ஒரு வரியைக்கூட மறுக்க முடியாதவர்கள், இப்படித் தாண்டி  குதிக்கிறார்கள் என்றால், அது அவர்களுடைய பலகீனத்தின் வெளிப்பாடே!


இப்பொழுது கூடக் கேட்கிறோம். தொலைக்காட்சி யில் பேராசிரியர் சொன்ன குற்றச்சாற்றுக்கு ஆதாரம் இதோ:


மாம் ஹரி பார்த்த வ்யபாச்ரித்ய
ஷிபி ஸ்யு: பாப - யோயை
ஸ்திரியோ வைச்யாஸ் - ததா சூத்ராஸ் - தேஷி
பி யாந்தி பராங்கிதப்
(கீதை அத்தியாயம் 18 - சுலோகம் - 44)


பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் (Born out of the womb of sin)  என்று இருக்கிறதே - இதனை மறுக்க முடியுமா? என்று சவால் விட்டே கேட்கிறோம்.


நியாயமாக கீதையின் இந்த சுலோகத்தால் பாதிக்கப்படுகிற - இழிவுபடுத்தப்படுகிற பார்ப்பனர் அல்லாத மக்களும், பெண்களும்தான் கோபப்பட வேண்டும் - பொங்கி எழ வேண்டும்; அதற்கு மாறாக கேவலப்படுத்துபவர்களின் குரல் உயருகிறது என்றால் இதன் பொருள் என்ன? 

நாங்கள் அப்படித்தான் எழுதுவோம் - பேசுவோம் - நீங்கள் யார் அதனைப் பற்றிப் பேசுவதற்கு? உங்களுக்கு எப்படி சுயமரியாதை உணர்வு வெடித்துக் கிளம்பலாம்? என்று கேள்வி கேட்பதாகத்தானே இதன் பொருளாகும்.


கீதை ஒரு முட்டாளின் உளறல் என்று அண்ணல் அம்பேத்கர் சொல்லவில்லையா? கீதையை படிப் பதைவிட கால் பந்து விளையாடக் கற்றுக் கொள் ளுங்கள் என்று சொன்னவர், இது யார்? இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பிரச்சாரம் செய்தவர் என்று பெருமையாக பிஜேபி வகையறாக்களால் பேசப்படும் விவேகானந்தர் தானே?


இந்து மதத்தில் முக்கிய ஸ்மிருதியான மனுதர்மத் தில் (அத்தியாயம் - சுலோகம் 415) பார்ப்பனர் அல்லாத மக்களான சூத்திரர்களை விபச்சாரி மகன் என்று கூறப்படவில்லையா?


படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், பொய், துரோக சிந்தை இவற்றினைப் பெண்கள் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (மனுதர்மம் அத்தியாயம் - 9 சுலோகம் 17).


இவற்றை மறுக்க முடியுமா? இந்த மனுதர்ம நூலை அலங்கரித்து  ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் எடுத்துச் சென்றார்களா இல்லையா? இந்திய அரசமைப்புச் சட்டமாக மனுதர்மம் ஆக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் போடப்படவில்லையா?


இந்த நிலையில் பாதிக்கப்படுபவர்கள் ஆவேசப் படுவதுதான் நியாயம். ஆனால், அந்தப் பாதிப்புக்குக் காரணமானவர்கள் ஆவேசப்படுகிறார்கள். ஆத்திரப் படுகிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன? நாம் இன்னும் கோழையாக இருக்கிறோம் என்றுதானே பொருள்? பார்ப்பனர் அல்லாதாரும், பெண்களும் சிந்திப்பார்களாக!

                ---------------------------”விடுதலை” தலையங்கம்  21-02-2015
Read more: http://viduthalai.in/page-2/96609.html#ixzz3SNttQnBC

37 comments:

தமிழ் ஓவியா said...

ஆதாயக் கொலைகள் அதிகரிப்பு பட்டியலில் சென்னை முதலிடம்

சென்னை, பிப்.21_ தமிழகத்தில், ஆண்டு தோறும் அதிகரித்து வரும் ஆதாயக் கொலை பட்டி யலில், கடந்த ஆண்டு, 20 ஆதாயக் கொலைகளுடன், சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது. குற்ற சம்பவங்களை பொறுத்த மட்டில், சொத்து தொடர் பான குற்றங்களாக, ஆதாயக் கொலைகள், வழிப்பறி, கொள்ளை, கூட்டுக் கொள்ளை, பெரிய, சிறிய திருட்டு என, வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

அதுபோல், கொடூர குற்றங்களாக, கொலை, கொலை முயற்சி, திட்ட மிடாத கொலை, உயிர் சேதமின்றி வெட்டுதல், உயிர் பயத்தை உண்டாக்க காயம் ஏற்படுத்துதல் போன்ற குற்றங்கள் கூறப்படுகின்றன. மேலும், பெண்களுக்கு எதிராக, கடத்தல், பாலியல் வன்முறை, பாலி யல் ரீதியான தொல்லை, வரதட்சணை மரணம், கணவனால் சித்ரவதை, பிற குற்றங்கள் என பிரித்து, மாநில குற்ற ஆவண காப்பகம் மூலம், குற்றத் தகவல்கள் சேகரிக் கப்படுகின்றன.

அந்த வகையில், கடந்த ஆண்டு, சென்னையில் அதிகபட்சமாக, 20 ஆதா யக் கொலைகள் நடந் துள்ளன. பெரும்பாலும், தனியாக வசித்து வரும் மூதாட்டிகள், கணவரை பிரிந்து வாழும் பெண்கள், கணவரை வெளிநாடு களுக்கு அனுப்பி விட்டு, தனிமையில் வசிக்கும் பெண்கள், நகை, பணத் திற்காக, குறி வைத்து கொல்லப்பட்டு உள்ள னர். சில கொலைகள், தகாத உறவு காரணமாக வும் நிகழ்ந்துள்ளன. சென்னையை பொறுத்த மட்டில், தினசரி ஒரு கொலை, அய்ந்துக்கும் மேற்பட்ட செயின் பறிப்பு, திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

Read more: http://viduthalai.in/e-paper/96615.html#ixzz3SOxJVeoF

தமிழ் ஓவியா said...

வன்முறைக்கும், பயங்கரவாதத்திற்கும் காரணம்
மத அடையாளங்களைச் சுமப்பவர்களே!

அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து

நியூயார்க் பிப் 21_ மத அடையாளத்தைச் சுமக்கும் சிலரே வன் முறைக்கும், பயங்கரவாதத் துக்கும் காரணமானவர் களாவர் மதத்தின் பெயரைக் கூறிக்கொண்டு மனித நேயமற்ற செயல் களைப் புரிபவர்கள் மீதான நடவடிக்கை எடுக் கும் கட்டாயத்தில் உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்று பராக் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெ ரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரேசில், ருஷ்யா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 63 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மூன்று நாட்கள் நடக் கும் இந்த மாநாட்டில் அதிபர் பராக் ஒபாமா பேசியதாவது: உலகில் அதிகரித்து வரும் தீவிர வாதத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்க நாம் இங்கு கூடியுள்ளோம். ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு (இஸ்லாம்) எதிராக நட வடிக்கை அல்ல, இதை பல முறை தெளிவுபடுத்தி யுள்ளோம். எந்த ஒரு மதமும் மனிதர்களைக் கொல்வதை வலியுறுத்த வில்லை, மனித நேயத் தைத்தான் வலியுறுத்து கிறது. ஆனால் சிலர் மதத்தின் பெயரால் மக் களை துன்புறுத்துகின்ற னர். கொலை செய்கின்ற னர்.

அடிமைகளாக வாழ்நாள் முழுவதும் வைத்திருக்கின்றனர். ஆகையால் நமது நட வடிக்கை மதத்தின் மரபு களைத் திரித்து மனித நேயத்திற்கு எதிரான நட வடிக்கையில் இறங்குபவர் களை ஒடுக்குவதாக இருக்கும். சில தீவிரவாத இயக் கங்கள் மதரீதியில் ஆன சமூகத்தை உருவாக்கு கிறோம் என்று கூறிக் கொண்டு அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் மதங்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கு கின்றன என பிரச்சாரம் செய்கிறார்கள். இளைஞர் களை இவர்கள் மூளைச் சலவை செய்கிறார்கள். இவர்களின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். மதம் சார்ந்த பெரியவர்கள் இளைஞர் களை நல்வழியில் திருப்ப வேண்டும். காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் மனித நாகரிகம் வளர்ச்சி என்பது நீண்ட கால வரலாற்றை உடை யது, ஒவ்வொரு கால கட்டதிலும் புதிய பரிணா மத்தை உள்ளடக்கியது. ஆனால் மதங்கள் இந்த நவீன நாகரிக வளர்ச் சியை ஏற்றுக்கொள்வ தில்லை. அவர்கள் அனை வரும் நவீன வளர்ச்சிகள் எல்லாம் மதக் கோட் பாடுகளுக்கு எதிரானவை என்று கூறிக்கொண்டு வருகின்றனர். அறிவியல் வளர்ச்சியின் மூலம் கண்டுபிடித்த சாதனங்கள் மூலமாக அவர்கள் அறி வியல் வளர்ச்சி முட்டாள் தனமானது என்று பேசி வருகின்றனர். அவர்கள் முன் வைக்கும் எந்த ஒரு வாதத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஏனெ னில் அவர்கள் சொல்வது பொய். அவர்கள் எதிர் பார்க்கும் அங்கீகாரத்தை ஒருபோதும் நாம் அளித்துவிடக் கூடாது. அவர்கள் மதங்களைச் சார்ந்தவர்கள் அல்லர் அவர்கள் முழுக்க முழுக்க மனித சமூகத்திற்கு எதிரான செயல் களைச் செய்பவர்கள் தீவிரவாதச் செயல்களைச் செய்ப வர்கள் ஒரு மதத்தின் பின் னால் ஒளிந்து கொள் கின்றனர். தீவிரவாதிகளின் சித்தாந்தத்தை உலகம் முழுதும் உள்ள மக்கள் நிராகரித்துள்ளனர். இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று சில தீவிரவாதக் குழுக்கள் கூறுவதை ஏற்றுகொள்வது தவறான பார்வையாகும். அவர்கள் இஸ்லாத்தை எந்த வகை யிலும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.

அவர்கள் கடவுளின் பெயரால் அப்பாவிகளைக் கொலை செய்யும் பைத் தியக்காரர்களே. கடவு ளின் பெயரால் அப்பாவி களைக் கொல்பவர்கள் இந்துக்களானாலும் சரி, கிறிஸ்தவர்கள் ஆனாலும் சரி, யூதர்கள், புத்தமதத் தவர்கள் என எந்த மதத் தைச் சேர்ந்தவராகவும் இருக்க முடியாது. பயங்கர வாதத்துக்கு எந்த ஒரு மதமும் பொறுப்பல்ல. ஆனால், மத அடையா ளத்தைச் சுமக்கும் சிலரே வன்முறைக்கும், பயங்கர வாதத்துக்கும் காரண மானவர்களாவர்.

தீவிரவாதத்தால் சிரியா, ஈராக்கை அய். எஸ்.அய்.எஸ். சீர் குலைத்து வருகிறது. அப்பாவி மக்கள் தலை துண்டிக்கப்பட்டு, உயிரு டன் எரித்துக் கொல்லப் படுகின்றனர். இது மன் னிக்க முடியாத கொடூரம். அதே நேரத்தில் மதத்தின் பெயரால் ஒரு சாராரை அடிமைப்படுத்தும் செயலும் நீண்ட காலமாக நடந்து வருகிறது. மதத்தின் பெயரால் மனித நேயத்திற்கு எதி ரான போக்கை மதத்தின் பெயரைக்கொண்டு செய்பவர்களை மன்னிக்க முடியாது. இவர்களின் தீவிரவாதச் செயல்களுக் குக் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படுகிறது. ஆனால், பயங்கரவாதத் துக்கு எதிரான இந்தப் போரில் வெற்றி பெறு வோம் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உலக நாடுகளின் ஒத் துழைப்பு இந்த நம்பிக் கையை மேலும் பலப் படுத்தியுள்ளது என்றார் அவர்.

Read more: http://viduthalai.in/e-paper/96617.html#ixzz3SOxNNe4t

தமிழ் ஓவியா said...

இதுதான் மகா சிவராத்திரி நிர்வாண சாமியார்களின் ஆபாசம்!


ஜூனாகாத், பிப்.21_ குஜராத்தின் ஜூனாகத் பாவ்நாத் கோவிலில் ஆயிரக்கணக்கான நிர்வாண சாமியார்களின் அமர்க்களமான ஆட்டம் பாட்டம் ஊர்வலத்துடன் மகாசிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. குஜராத் மாநிலம் ஜூனாகாத்தின் கிர்னார் மலைப் பகுதியை சிவனின் முகமாக கருதி இந்துக்கள் வழிபாடு நடத்துகின்றனர். 10 ஆயிரம் படிக்கட்டுகளைக் கடந்து வழிபாடு நடத்து வது இங்கு வழக்கம். இம்மலை அடிவாரத் தில் இந்து மதத்தின் 'தற்கொலைப்படை'யாக செயல்பட்டு வரும் அகோ ரிகள் எனப்படும் நிர் வாண சாதுக்களின் கிளை மடங்கள் ஏராளமாக உள்ளன. பொதுவாக கும்பமேளா காலங்களில் தான் பல்லாயிரக்கணக் கில் நிர்வாண சாதுக்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தி ஹரித்துவார், அலகாபாத் உள்ளிட்ட இடங்களில் நீராடி வழி பாடு நடத்துவர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி நாளில் கிர்னார் மலை அடி வாரத்தில் உள்ள பாவ் நாத் கோயிலில் இந்த நிர்வாண சாதுக்கள் ஒன்று கூடி நீராடி வழி பாடு நடத்துவது வழக்கம். இவர்கள் நீராடுவது மிகச் சிறிய அளவிலான கிணறு போன்ற இடத்தில்தான்.. இந்த கிணற்றில் நிர் வாண சாதுக்களின் எந்தப் பிரிவு முதலில் குளிக் கிறதோ அவர்களுக்கு சிவபெருமானின் அருள் நேரடியாக கிடைத்து விடும் என்பது நம்பிக்கை யாம். இதற்காக நிர்வாண சாதுக்களிடையே பெரும் போட்டி அடிதடியும் நடைபெறும்.

இந்த ஆண்டும் பாவ்நாத் சிவ ராத்திரி திருவிழா கடந்த 15-ஆம் தேதி தொடங் கியது. இதையொட்டி நாடு முழுவதும் இருந்து சாம்பல் பூசிய உடம்புடன் நிர்வாண சாமியார்கள் ஆயிரக்கணக்கில் ஜூனா காத் கிர்னார் மலை அடி வாரத்தில் முகாமிட்டிருந் தனர். மலைஅடிவாரத் தில் கொட்டும் பனியிலும் இவர்கள் அனைவரும் நிர்வாணமாகவே விடிய விடிய வலம் வந்து கொண்டிருந்தனர். மகாசிவராத்திரியின் கடைசி நாளில் அதி காலையில் சிறப்பு வழி பாடு நடத்தப்பட்டன. முன்னதாக நிர்வாண சாமியார்களின் பிரம் மாண்ட ஊர்வலம் நடத் தப்பட்டது. நிர்வாண மாகவே ஆடிப் பாடி பலவகை சாகசங்களை நிகழ்த்தியபடி இவர்கள் ஊர்வலமாக வந்தனர். மிரள வைக்கும் சிலம் பாட்டம், கத்திச் சண்டை உள்ளிட்ட இந்த நிர் வாண சாகச நிகழ்ச்சிகள் பல மணிநேரம் நடை பெற்றது. உள்நாடு மற்றும் வெளிநாட்டினர் பல்லாயிரக்கணக்கில் திரண்டு இந்த 'நிர்வாண' சாதுக்களின் சாகசங்களை பார்வையிட்டனர். பின் னர் பாவ்நாத் கோயிலின் புனித கிணற்றில் போட்டி போட்டுக் கொண்டு நிர் வாண சாதுக்கள் புனித நீராடி வழிபாடு நடத்தின ராம். இந்தத் திருவிழா வையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Read more: http://viduthalai.in/e-paper/96621.html#ixzz3SOxUzuV6

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சமஸ்கிருதம்

கடவுள் சபலங்களுக் கும், சடங்குகளுக்கும் அப்பாற்பட்டவர் என் றால் கோயிலில் சமஸ் கிருதத்தில்தான் அர்ச் சனை செய்யப்பட வேண்டும். குட முழுக்கு சமஸ்கிருதத்தில்தான் நடைபெற வேண்டும் என்பது கடவுளைக் கேலி செய்வது ஆகாதா? ஆகமம் என்றாலும் அவாளுக்குத்தான் சாதகமா?

Read more: http://viduthalai.in/e-paper/96619.html#ixzz3SOxcOCal

தமிழ் ஓவியா said...

மனித சமுதாயத்தில்...


நாம் உண்மையான பகுத்தறிவுவாதிகளாக ஆகிவிடுவோமேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும். (விடுதலை, 16.11.1971)

Read more: http://viduthalai.in/e-paper/96607.html#ixzz3SOxr26SJ

தமிழ் ஓவியா said...

புதுக்கோட்டையின் எல்லையில் கருவேப்பிலான் கேட் அருகில் இருந்து தமிழர் தலைவர் அவர்களுக்கு தோழர்களால் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அங்கிருந்து அசோக்நகர் கே.எல்.கே.எஸ். நகரில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் மாவட் டத் திராவிடர் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படிப்பகத்தை தமிழர் தலைவர் அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து திலகர் திடலில் நடந்த வட்டார மாநாட்டில் கலந்துகொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றியபோது, தந்தை பெரியார் அவர்களின் வழியில் கொள்கை களை சிறு சிறு புத்தகங்களாக அச்சிட்டு வழங்கி வருகிறோம்.

அய்யா அவர்கள் காட்டிய சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறோம். இப்போது மதவெறியும் ஜாதிவெறியும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக் கிறது. அதனை அணைக்கவேண்டும். அதற்காக யார் யார் கையில் மணல் இருக்கிறதோ, தண்ணீர் இருக் கிறதோ அவர்களை ஒன்றிணைத்து அணைக்கவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். திமுகவும், தி.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்றார்கள்.

அதேபோல், இன்னொரு குழலாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இருக்கிறது. அதே நிலையில்தான் பொதுவுடைமை இயக் கங்களும் இருக்கின்றன. அதனால் ஒன்றிணைந்து மத வெறியை மாய்க்கவேண்டும். அதற்காகத்தான் இந்த மாநாடு.

பல மதங்கள் இருக்கும் இந்தியாவில், எம் மதம் மட்டும்தான் உயர்வானது, அது மட்டும்தான் இருக்க வேண்டும்; இஸ்லாமியர்களாக இருந்தாலும், கிறிஸ்த வர்களாக இருந்தாலும், பொதுவுடைமைக் கொள்கை யாளர்களாக இருந்தாலும், கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட பகுத்தறிவுவாதிகளாக இருந்தாலும் அனை வரும் எங்களது மதத்தையும்,

இந்துத்துவா கொள்கை களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மோடி அரசு என்று சொல்லக் கூடிய ஆர்எஸ்எஸ் அமைப்புகள் வலியுறுத்துவது அடுத்த தலைமுறைக்குச் செய்யும் கொடு மையாகும். அதனைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும். மதவெறி பிடித்த கட்சி என்றும், மோடி மதவெறியர் என்றும் சொன்னபோது, ஊடகங்கள்தான் தூக்கிப் பிடித்தன.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், வேறொன்றும் செய்ய வேண்டிய தில்லை. இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம். இந்தத் தடை என்பது பொதுவுடைமை இயக் கங்களுக்கே வந்ததில்லை. ஆனால், ஆர்எஸ்எஸ் இயக் கத்திற்கு தடை போடப்பட்டது.

தமிழ் ஓவியா said...


அப்போதெல்லாம் வேறு வேறு பெயர்களில் இயக்கத்தை வைத்துக்கொண்டு இப்போது அவர்களின் உண்மை முகத்தைக் காட்டி விட் டார்கள். அமைதிப் பூங்காவாக இருந்த நாட்டை அம ளிக்காடாக்கி வருகிறார்கள். இப்படித்தான் செய்வார் கள் என்று ஒன்பது மாதங்களுக்கு முன்னரே எச்சரித் தோம். ஆனால், அதை மக்கள் கண்டு கொள்ளவில்லை.

தூக்கத்திலிருந்து விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காகத்தான் அலாரம் வைத்து விட்டுத் தூங்கு கிறோம். அது பலவகையிலும் எழுப்பிக் கொண்டே யிருக்கிறது. தூக்கத்திலிருந்து விடுபட முடியாதவர்கள் அலட்சியம் செய்து விட்டுத் தூங்குகிறார்கள். அலாரம் ஓய்ந்துபோய் விடுகிறது.

அதுபோலத்தான் நாங்கள் ஒன்பது மாதங்களுக்கு முன்னரே அலாரம் அடித்தோம் கேட்கவில்லை. இப்போதுதான் மக்களுக்கு தாங்கள் மோடியில் அலையில் ஏமாந்து போனது தெரிய வந்தி ருக்கிறது. அறிவியல் வளர்ந்த நாடுகளில் எல்லாம் சென்று பகவத் கீதையைப் பரப்பும் வேலையில் மோடி யும், சுஷ்மா சுவராஜ் போன்றவர்களும் செய்து வரு கிறார்கள்.

வெளிநாட்டு அதிபர்களிடமும் கொடுத்து வரு கிறார்கள். அறிவியல் மாநாடுகளில் சென்று கீதையைக் கொடுத்து வருகிறார்கள். அலாரம் வைத்தது அப்போது போல் அல்ல. இப்போது வைத்திருக்கும் அலாரம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும். அதற் காகத்தான் தமிழகம் முழுவதும் 2000- மாநாடுகளும், பொதுக்கூட்டங்களும் நடத்தத் திட்டமிட்டு செயல் பட்டு வருகிறோம்.

இப்படித்தான் ராமகோபாலன் அவர்கள் திமுக தலைவர் கலைஞர் அவரகளுக்கு கீதையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். பதிலுக்குக் கலைஞர் அவர்கள் இதோ கீதையின் மறுபக்கத்தைப் படித்து விட்டு மறுப்பு எழுதுங்கள் என்று சொல்லி புத்தகத்தைக் கொடுத்தார். அது நடந்து 11- ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒரு வரிக்குக்கூட மறுப்பு வரவில்லை.

அதனால் இப்போது வரை 23 பதிப்புகளைச் செய்து வெளியிட வேண்டியி ருக்கிறது. இப்போது மோடிகளுக்காக மேலும் பல பதிப்புகளைக் கொண்டு வர வேண்டியிருக்கிறது.

மூத்தோர் சொல்லும், முதுநெல்லிக்கனியும் முதலில் கசக்கும்; பின் இனிக்கும் என்று சொல்வார்கள். நாங்கள் முதியவர்கள் என்று சொல்வதைவிட எங்களது கருத்து கள் முதிர்ச்சியானவை என்பதை அனைவரும் உணர்ந் திருக்கிறார்கள். தமிழகத்தில் எந்தப் பக்கம் திரும்பினா லும் பெரிய கட்டடங்கள் இருக்கிறதே என்று பார்த் தால் அவை பொறியியல் கல்லூரிகளாகவும், பல்கலைக் கழ கங்களாகவும் அறிவியல் கல்லூரிகளாகவும் இருக்கின்றன.

மனுதர்மம் என்று சொல்லிக் கொண்டு அதை இப்போது மதவெறியர்கள் தூக்கிக்கொண்டு அறிவுக்கும் சிந்தனைக்கும் தடைபோடுகிறார்கள் என்றால் நாம் அனுமதிக்கக் கூடாது. மனுதர்மம் என்ன போதிக்கிறது. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்கிறது. நாமெல்லாம் கல்வி கற்கக் கூடாது என்று சொல்பவர்களை எப்படி நாம் அனு மதிப்பது?

வேர்களுக்கு (பெரியார் பெருந்தொண்டர்களுக்கு) விழுதுகள் பாராட்டு
1. புதுக்கோட்டை மண்டல திக தலைவர் பெ.இராவணன் 2. பொதுக்குழு உறுப்பினர் இர.புட்ப நாதன் 3. பெரியார் பெருந்தொண்டர் இராமதி.இராசன் 4. பெரியார் பெருந்தொண்டர் கு.ப.சுயமதி தங்கையா 5. பெரியார் பெருந்தொண்டர் இராசமாணிக்கம் 6. மாவட்ட திக துணைத் தலைவர் செ.இராசேந்திரன் 7. திருமயம் ஒன்றிய திக தலைவர் ஆ.ஜேக்கப் ஆகி யோருக்கு திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் காரைக்குடி சாமி.திராவிடமணி பயனாடை அணிவித்தார். தமிழர் தலைவர் அவர்கள் நினைவு பரிசு வழங்கினார். உடன் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ணன் அரசு.

ஓதலும், ஓதுவிப்பதும் அவாளுக்குச் சொந்தம் என்றால், நாம் கற்ற கல்வியும் நாம் ஆசிரியர் வேலை செய்வதும் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. அவர்கள் மனுதர்மத்தைக் கையில் எடுத் திருப்பது நம் அடுத்த தலைமுறைக்கு ஆபத்து வந்தி ருக்கிறது என்பதை அனைவரும் உணரவேண்டும்.

மதம் பிடிப்பதும் மதத்தை நாம் பிடிப்பதும் என்றைக்கும் ஆகாது. நாங்கள் அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படவில்லை. அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலைப்படுகிறோம். அதனால், மதவெறியை மாய்த்து மனித நேயம் காக்க ஒன்று சேருங்கள் என்றார். மேலும் பல கருத்துகளை எடுத்துக்கூறி உரையாற்றினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/96626.html#ixzz3SOySy8cT

தமிழ் ஓவியா said...

ஆதி திராவிட அபிவிருத்தி சங்கத்தார் வரவேற்பு

அன்பார்ந்த சகோதரர்களே! சகோதரிகளே!!

அக்கிராசனரவர்கள் எம்மைப்பற்றி அதிக புகழ்ச்சியாகக் கூறிவிட்டார்கள். நான் அவைகளுக்கு அருகதையுடைய வனல்ல என்றாலும், நமது மக்கள் தங்களது பகுத்தறிவைக் கொண்டு நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை ஒப்புக் கொள்கிறது. ஒன்றே எமக்குத் திருப்திகரமாக விருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஈடேறும் வழி என்பதாக என்னை பேசும்படி கேட்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி வியாக்கியானம் அதிகம் செய்ய வேண்டியதில்லை என்றே கருதுகிறேன் ஏனெனில் பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபி மானம் என்பவைகளின் உட் கருத்தை ஊன்றிக் கவனித் தால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஈடேறும் வழிதானாகவே தோன்றும். எப்படி எனில் குறிப்பிட்ட எந்த விதமான அபிமானத்தை எடுத்துக் கொண்ட போதிலும், அநேகமாக அந்த அபிமானத்தின் பேரால் ஏமாற்றுகளே நடைபெறு கின்றன. தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக வுள்ள வர்கள். இவைகளை ஊன்றிக் கவனித்து - அலசிப்பார்த்து - உரைகல்லில் வைத்து உரசிப்பார்க்க வேண்டும். அவ்வாறு அவர்கள் பார்ப்பார்களேயானால் வாஸ்தவதத்திலே தாழ்த்தப் பட்டவர்கள் ஈடேறும் வழியை எளிதில் கண்டு கொள்வதற்கு ஏதுகரமாக விருக்கும் மக்களது முன் னேற்றத்திற்குத் தடைகல்லாக விருக்கும் காரியங்கள் எதுவுண்டோ அவைகளைத் தகர்த்தெரிய வேண்டும். வீணாக ஆடம்பரமாக நாங்களும் தலைவர்கள் தான் என்று வீரம் பேசிக் கொள்வதில் பயனில்லை. நமக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அப்பகுத்தறிவின் பயனால் இடையூறாக இருக்கும் காரியங்களை மனோதிடத்துடன் தகர்த்தெறிய முன்வர வேண்டும். அன்றே முன்னேற ஈடேற வழி ஏற்படுமென்பதில் சிறிதும் அய்யமில்லை என்று குறிப்பிட்டார்.

(ஆதிதிராவிட அபிவிருத்தி சங்கத் தலைவர் கொழும்பு கும்பனித்தெரு, சி. எம். எ. பாட சாலையில் திரு. எ. ஆர். முத்தையர் தலைமையில் 22.10.1932-இல் நடைபெற்ற வரவேற்பு கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு.)

குடிஅரசு - சொற்பொழிவு - 06.11.1932Read more: http://viduthalai.in/e-paper/96642.html#ixzz3SOyeKYTH

தமிழ் ஓவியா said...

வரவேற்கிறோம்

சுமார் 10 மாதங்களாக, மேல்நாடுகளில் சுற்றுப் பிரயாணஞ் செய்த நமது இயக்கத் தோழர்களான ஈ. வெ. ராமசாமி அவர்களும், எஸ். ராமநாதன் அவர்களும், எப்பொழுது வருவார்கள், வருவார்கள் என்று நமது இயக்கத்தோழர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். நமது தோழர்களாகிய ஈ. வெ. ராமசாமி அவர்களும், எஸ். ராமநாதன் அவர்களும், ஏனைய சில இயக்கத் தலைவர் களைப்போல சுயநலமே பெரிதெனக் கருதுபவர்களல்லர். உண்மையிலேயே, நமது நாட்டின் ஏழை மக்களுக்கு, அரசியலிலும், சமூகத்திலும், மதத்திலும் உள்ள கட்டுப்பாடு களும் தடைகளும் ஒழிந்து மக்களனைவரும் சமவுரிமை பெற்று இன்புறவேண்டுமென்னும் நோக்கத் துடனேயே நமது சுயமரியாதை இயக்கத்தைக்கண்டு அதற்காக உழைத்து வருகின்றனர். இவர்கள் மேல்நாட்டுச் சுற்றுப்பிரயாணம் செய்யப்போனதும், தங்கள் சுயநலத்தைக் கருதியோ, பெருமை புகழ்கள் சம்பாதிப்பதைக் கருதியோ, மற்றும் சிலரைப்போல் அரசாங்கத்தாரின் பிரதிநிதிகள் என்ற முறையில் அரசாங்கத் தாரின் பணச்செலவிலோ, அல்லது பொதுஜனப் பிரதிநிதிகள் என்ற முறையில் பொது ஜனங்களின் பணச்செலவிலோ சென்றவர்களுமல்லர். ஆனால், சுயமரியாதை இயக்கத்தை இன்னும் எவ்வாறான சிறந்த முறையில் நடத்திச் சென்றால், அவ்வியக்கம் நமது நாட்டு ஏழை மக்களுக்குப் பூரணமான சமத்துவத்தை யளிக்கும் என்பதை நிர்ணயிக்கும் பொருட்டு, மேனாட்டில் உள்ள பற்பல தேசங்களிலும் சமுதாய முன்னேற்ற நிலைமைகளையும், அவர்கள் சமுதாயத்துறையில் சிறந்து விளங்குவதற்கு எந்தெந்த வழிகளை அனுசரித் தார்கள், அனுசரிக்கிறார்கள் என்பதையும் நேரே கண்டறிந்து வரும் பொருட்டே சென்றார்கள். ஆகையினால்தான் அவர்கள், மேனாட்டிற்குப் புறப்படும் காலத் திலும், எவ்வித ஆடம்பரங் களும் செய்து கொள்ளாமல் சந்நியாசிகளின் பயணத்தைப் போல் புறப்பட்டார்கள். அங்குச் சுற்றுப் பிரயாணம் பண்ணிக்கொண்டிருந்த காலங்களில், ஒவ்வொரு தேசங்களில் நடந்த விஷயங்களையும் கண்ட காட்சி களையும் அவர்கள் தெரிவித்துக் கொள்ளவில்லை.

ஆகையால் இங்குள்ள நமது இயக்கத்தோழர்கள் பலரும், அவர்கள் இருவரின் சுற்றுப்பிரயாணத்தைப் பற்றிய விவரங்கள் ஒன்றையும் அறியாமலும், அவர்கள் எங்கெங்கே சென்றார்கள்; என்னென்ன செய்தார்கள், எப்பொழுது திரும்புவார்கள் என்ற செய்திகளைப் பற்றி ஒன்றும் தெரியாமலும் மிகவும் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள். அன்றியும், தோழர் ஈ. வெ. ராமசாமி அவர்கள் இந்தியாவில் இருந்து புறப்படும் போது உடல்நிலை சரியாயில்லாத காரணத்தால், சுற்றுப்பிரயாண காலத்தில் அவர் சரீர நிலைமை எவ்வாறு இருக்கிறதோ என்று கவலைப்பட்டவர்களும் மிகப்பலர்.

தமிழ் ஓவியா said...


இதற்கிடையில், வெளிநாடு சென்றிருந்த நமது தோழர்கள் பால் இயக்கத்தின்பால், பொறாமை கொண்டவர்களும், வெறுப்புக் கொண்டவர்களும், நமது இயக்கத்தை ஒத்துக் கொள்ளாதவர்களும், நமது இயக்கத்தினால் தமது சுயநலம் பாதிக்கப்படும் என்று கருதியவர்களான புராண மரியாதைக் காரர்களும் சோம்பேறிகளாய் இருந்து வாழ நினைத்த வர்களும் தேசியப் பிழைப்புக்காரர் முதலியவர்களும் பலவகையான விஷமப்பிரசாரம் செய்து கொண்டிருந்தனர்.

அரசாங்கத்தார், நமது தோழர்கள், இருவரையும் இனி இந்நாட்டிற்கு வர அனுமதிக்க மாட்டார்களென்றும், ஆகையால் போனவர்கள் இனி திரும்பப் போவதில்லையென்றும், ஆகவே, சுயமரியாதை இயக்கம் அடியோடு ஒழிந்து போய்விடும் என்றும் பரிகசிக்கத்தக்க முறையில் தப்புப் பிரசாரம் பண்ணிக்கொண்டு வந்தனர்.

ஆனால், இவ்வளவு பேர்களும், திடுக்கிடும்படி நமது தோழர் ஈ. வெ. ராமசாமி அவர்கள் 17-10-1932 திங்கட்கிழமை யன்று சிலோன்வந்து சேர்ந்து அங்கு 3 வாரம் சுற்றுப் பிரயாணம் செய்துவிட்டு தூத்துக்குடி, மதுரை, திருச்சி, ஆகிய ஊர்களில் இறங்கிவிட்டு 11-11-1932 தேதி ஈரோடு வந்து சேர்ந்தார்.
நமது தோழர் மேல்நாட்டிற்குச் செல்லும்போது எந்நிலையில் சுயமரியாதை இயக்கத்தை நம் தோழர்களிடம் விட்டுச் சென்றார்களோ, அந்நிலைக்கு சிறிதும் குறைவு வராத மாதிரியில் எவ்வளவோ எதிர்ப்புகளுக்கிடையில் நிலைநிறுத்தி வைத்திருக் கிறதைக் கண்டு களிப்பார் என்றே கருதுகின்றோம். ஆகவே அவர்கள் இந்நிலையில் இருந்து இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி இன்னும் மும்முரமாக தமிழ்நாடு மாத்திர மல்லாமல், இயக்கக் கொள்கைகள் நாடு முழுமையும் பரவவும், கொள்கைகள் செயல்முறைகளில் நடத்தப்படுவதற்கான காரியங்கள் செய்யவும் தக்க ஏற்பாடுகள் செய்வார்களென்றே கருதுகின்றோம்.

மேலும் இயக்கத்தில் தொடக்க முதல் உழைத்து வந்த உண்மைத் தோழர்கள் சிலர் சிறு காரணங்களால் அபிப்பிராய பேதமேற்பட்டு பிரிந்து நின்று தொண்டாற்றி வந்ததையும் இனி மாற்றி யாவரும் ஒன்றுபட்டு ஒருமனப்பட்டு தொண்டாற்று வதற்கான காரியங்களையும் செய்வார் என்றே நம்புகின்றோம்.

நிற்க, இனி கூடிய சீக்கிரம் குடிஅரசின் ஆசிரியப் பொறுப்பையும் ஏற்று வாசகர் களுக்கு நல்விருந்தளித்து ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஊட்டிச் சமதர்மப் புரட்சியை அதிவிரைவில் நடத்த வேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளு கிறோம். குடிஅரசு - தலையங்கம் - 13-11-1932

Read more: http://viduthalai.in/e-paper/96641.html#ixzz3SOym34nl

தமிழ் ஓவியா said...

கொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவுஇந்த சினிமா காட்சி பார்ப்பதற்கு மிக அதிசயமாயும் ரம்மியமாயும் காணப் பட்டாலும், இதைப் பார்ப்பதனால் ஏற்படும் பயன் மூடநம்பிக்கையும் அடிமைத் தனமும் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், இந்த மூடநம்பிக்கையும் அடிமைத் தன்மையையும் சோம்பேறிகள் பயன்படுத்திக் கொண்டு ஏழைகளை வருத்தி செல்வம் பெருகிக்கொள்ள பயன்படுகின்ற தென்றும், இனி இப்படிப்பட்ட காட்சிகள் தடுக்கப்பட வேண்டுமென்றும், பகுத்தறிவும், சுதந்தரமும் ஏற்படக் கூடிய விஷயங்களையே நாடகமாகவோ படக்காட்சியாகவோ காட்ட இந்த தியேட்டர் சொந்தக்காரர் முயற்சிக்க வேண்டுமென்றும், உண்மையான சுதந்திர, சமத்துவத் தேசங்களில் உள்ள காட்சிகள் அப்படித்தான் இருக்கின்றதென்றும் சொன்னார்.

ஆதி திராவிடர் சங்க வரவேற்பில் சொற்பொழிவு

தாழ்த்தப்பட்டவர்கள் ஈடேற ஒரே ஒரு வழிதான் உண்டென்றும், அது உலகில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டிய முயற்சி எடுக்க வேண்டுமென்றும், அம்முயற்சிக்கு எதிரியாய் இருக்கும் சாதனங்களான தேசாபிமானம், மதாபிமானம் என்பவை களை அடியோடு அழித்து உலக ஏழைகள் அபிமானம் உலக தாழ்த்தப் பட்டவர்கள் அபிமானம் என்பதன் உணர்ச்சியுடன் வேலை செய்யத் துணிய வேண்டும் என்றும், உலக மனித சமூகத்தை 2 -வகுப்பாகத்தான் பிரிக்க வேண்டு மென்றும், அது ஒன்று, தொழில் செய்து கஷ்டப்பட்டு வாழும் ஏழை, மற்றொன்று தொழில் செய்யாமல் மற்றவர்கள் தொழிலின் பயனை அனுபவிக்கும் சோம்பேறி செல்வவான்கள் என்றும் இரண்டே பிரிவாகப் பிரிந்து போராடி விடுதலை அடைய தயாராயிருக்க வேண்டு மென்றும் பேசினார். (கடைசியாக, ஒரு உபதேசியார் எழுந்து ராமசாமியின் உழைப்பையும் உபதேசத்தையும் தான் பல வருஷங் களாகப் பார்த்து வருவதாகவும், அவர் மூலம் தான் மக்கள் கஷ்டம் ஒழியக் கூடுமென்றும், ஆனால் அவர் கடவுளை நம்பவில்லையென்று சொல்லுவது தனக்கு வருத்தத்தைக் கொடுக்கிற தென்றும் சொன்னார்.)

அதற்கு ராமசாமி பதிலளிக்கையில் கடவுளை நம்ப வேண்டும் என்பது ஒரு அடக்குமுறை என்றும், அது அவனவன் சொந்த விஷய மாகப் பாவிக்க வேண்டுமென்றும் கடவுள் மீது சிறிதாவது நம்பிக்கை இருப்ப வர்கள் ராமசாமியால் கடவுள் இல்லாமல் போய் விடுமோ என்று பயப்பட வேண்டியதில்லை என்றும், உலகில் நடக்கும் அக்கிரமங்களுக்கும், ஏழைகளை வஞ்சித்து கொடுமைபடுத்தி வேலை வாங்கி சோம் பேறியாய் வாழும் அயோக்கிய தனத்திற்கும் பெரிதும் கடவுள் நம்பிக்கைக் காரர்கள் தான் காரணஸ்தர்களாகவும் பொறுப்பாளிகளாகவும் இருக்கின்றார்களே ஒழிய வேறில்லை என்றும் ஆதலால் கடவுள் நம்பிக்கை போய் விட்டால் உலகம் என்ன கதியாகும் என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னார்.

குடிஅரசு - சொற்பொழிவு - 13.11.1932

Read more: http://viduthalai.in/e-paper/96643.html#ixzz3SOyz9FAq

தமிழ் ஓவியா said...

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்

வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சாணை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல், நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.

நமது இலட்சியம் அரசியல் வேட்டையல்ல, மந்திரி நாற்காலியல்ல. நாலாறு பெறுவதல்ல. நமது மூதாதையர் ஆண்ட நாட்டை மீண்டும் பெறுவது - புதிய அரசை அமைப்பது, அதுதான் நம்முடைய நோக்கம்.

Read more: http://viduthalai.in/page2/96579.html#ixzz3SP08tthy

தமிழ் ஓவியா said...

இந்திரலோகத்தில்அழகப்பன்கள்!

சாலைகள் நெடுகிலும் குண்டு குழிகள் சுளுக்கெடுத்து
சிமெண்டுச் சாலைகளாயின

தெருவோர சாக்கடைகள் மூடிமறைத்து நாற்றம் நீக்கப்பட்டன

சந்திக்குச் சந்தியிருந்த கூடாரக் கோவில்கள் அகற்றப்பட்டன

வழிநெடுகிலும் பூச்செடிகளும் கொடிகளும் பசுமைக் காட்சியாகப் பார்வைக்குத் தெரிந்தன

இயற்கை மரங்களில் செயற்கைப் பூக்கள்
இதழ்விரித்து மணம்பரப்பி வரவேற்றன

ஏழைச் சிறுவர்களுக்கு எண்ணெய் கொடுத்து
வாரிச் சீவிய செம்பட்டைத் தலைகள் சூரிய ஒளியில் சுடர்விட்டுக் கண்களைப் பறித்தன

தீபாவளிக்கும் பெருநாளுக்கும் மட்டுமே புத்தாடை வாங்கிய பொதுமக்களுக்கின்று இலவசமாய்
வீட்டுக்குவீடு உடைகள் விநியோகம் செய்யப்பட்டன

குளங்களும் கண்மாய்களும் தூர்வாரப்பட்டன
உடைந்துபோன அதன் படிக்கட்டுகள் சீர்செய்யப்பட்டன

பஞ்சாயத்துகளின் வானொலியில் ஒலிபரப்பப்பட்டன
பார்க்குகளில் பச்சைத் தரைகளாய் பார்வைக்குத் தெரிந்தன

குடும்ப ரேசன்கார்டுக்குத் தாராளமாய்
கோதுமை அசி மண்ணெண்ணெயுடன்
சீனியும் கொடுத்து பிரஜைகள் இனிப்பூட்டப்பட்டனர்

கோவில்களையும் மசூதிகளையும் சுற்றி
கிருமிநாசினிகளைத் தெளித்து நாட்டில் நோய்பரவாமல் தடுத்தனர்

தேவையில்லாத பேனர்களும்
போஸ்டர்களும் நீக்கப்பட்டன

தமிழ் ஓவியா said...

ஆண்டுகள் பலவாகியும் எரியாத விளக்குகள் ஒளியூட்டப்பட்டன

நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள
தனியார் வீட்டுச் சுவர்களுக்கு
அரசு செலவில் வண்ணம் பூசப்பட்டன

போக்குவரத்துக்கு இடைஞ்சலாயிருந்த பிறந்தநாள் வளைவுகள் பெயர்க்கப்பட்டன

காற்று வந்துகொண்டிருந்த கார்பரேஷன் குழாய்களில்
குடிதண்ணீர் கொட்டத் தொடங்கிவிட்டது

அறுபதுபேரை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோ
ஆறு பேருடன் போகும் அரிய காட்சிகள் படமெடுக்கப்பட்டன

அண்டை காவல் நிலையத்தில் விடுமுறை எடுக்காத காவலர்கள் வீடுபோல் நாட்டைக் காக்கத் தலைப்பட்டனர்

தேர்தலுக்குத் தேர்தல் பார்க்கும் எம்மெல்யே எம்பிக்கள் ஆங்காங்கே பல்தெரிய பார்வைக்கு நிறுத்தப்பட்டனர்

தமிழ் ஓவியா said...

காக்கைக் குருவிகளின் கழிப்பிடமான காலத்தை வென்ற தலைவர்களின் சிலைகள் பளிச்சிட்டன

பெயர்களோ தொண்டர்களோ இல்லாத அரசியல் கொடிக்கம்பங்கள் இரவோடு இரவாக காணாமற்போயின

யமுனா நதியின் நடுவில்நின்று தடைபோட்ட மேடுகளும் செடிகளும் காணாமற்போய்
ஆற்றில் சரளமாக நீரோடி, படகோடின

காதலின் சின்னமான உலக அதிசயம்
இந்த நூற்றாண்டில் கழுவப்பட்டது
உயிர்பெற்றது; உயர்வு பெற்றது

நாள்தோறும் வரும் லட்சக்கணக்கான
யாத்ரீகர்களின் நலனும் வசதியும் இன்றே பெருக்கப்பட்டன

இதைவிட என்ன வேண்டும் இந்தியாவுக்கு?
உலக அரங்கில் இந்தியா உயர்ந்து நிற்கிறது
ஆக்ரா வந்து செல்லும் வழியெலாம் பார்த்துவிட்டு
அய்நா சபையில் அளந்துவிடப் போகிறாரென்று
முச்சூடும் கனவுகண்ட மோடி அவர்களுக்கு
வேட்டு வைத்துவிட்டுக் கிளம்பிவிட்டார் சவுதிக்கு.

ஒபாமா வராவிட்டால் என்ன
உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாவது
உருப்படியாகி உயர்வுபெற்றதே!

உலகத்தின் சட்டாம்பிள்ளையே!
ஆண்டுக்கு அறுபது முறை இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும்
சுற்றி வருவதாக ஒரு சுற்றறிக்கை விடுங்களேன்

ஆமாம்சாமி போடும் அரசர் யாராவது அப்போது மண்டையைப் போடமாட்டார்களா?
உயர்ந்த மனிதரே! நீங்கள் வராவிட்டாலும்
ஊருக்கு நல்லது நல்லதாய் வருமே!

அப்புறம் என்ன? பாரதம் இந்திரலோகமாகி
மாதம் மும்மாரி பொழிந்து
தேனும் பாலும் தெருவெல்லாம் வழிந்தோடப் போவதால்
அழகப்பன்கள் (மக்கள்) ஆடிப்பாடி மகிழ்வர்

சிங்கப்பூர் புதுமைத்தேனீ

மா. அன்பழகன்

Read more: http://viduthalai.in/page3/96581.html#ixzz3SP0IIUzi

தமிழ் ஓவியா said...

வோல்ட் (மின்சாரம்) பெயர் எப்படி வந்தது?

மின்சாரத்தின் பயன்பாட்டில் குறியீடாக உள்ள வோல்ட் என்ற பதம் அலெசான்ரா வோல்ட்டா என்ப வரின் நினைவாக வைக்கப்பட்டது. இத்தாலி நாட்டில் 1745-ஆம் ஆண்டு இதே நாளில் படகோட்டியின் மகனாகப் பிறந்தார். நகரத்தின் வெளியே இருந்ததால், அடிக்கடி மின்னும் மின்னல் இவரை மிகவும் ஈர்த்தது. சிறுவயதில் இருந்தே மின்னல் மின்சாரம் குறித்து ஆராய்வதில் பேரார்வம் கொண்டிருந்தார்.

இதன் விளைவாக மின்சாரம் என்ற ஒன்று உருவாவதற்கு முன்னோடியாக இருந்த அறிவியல் அறிஞர்களுள் இவர் முதன்மையானவர். இவருடைய காலகட்டத்தில் அய்ரோப் பாவில் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும், அது பொழுதுபோக் கிற்காகவும், தனிப்பட்ட மனிதர்களின் பயன்பாட்டிற்கு மாத்திரமே இருந்தது.

மின்சாரத்தை பயன்படுத்தும் முறையில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அலக்சாண்ட்ரா அனைவரும் இதை பயன்படுத்தவேண்டும் என்ற பேரவா இவருக்கு இருந்தது. இந்த ஆவல் இவரை மின்கலன்(பேட்டரி) கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்தது. மின்கலன் கண்டறியும் போது மின்கலனை அளவிடும் வோல்டா மீட்டரையும் கண்டுபிடித்தார்.

மின்சாரம் பற்றிய ஆய்வுத்தூண்டல் காரணமாக பல்வேறு தனிமங்களில் இருந்துமின்சாரம் எடுக்கும் முறையைக் உலகுக்கு எடுத்துக்காட்டினார். தனிமங்களை ஆய்வு செய்யும் போது தான் இவர் மீத்தேன் என்னும் வாயுவையும் கண்டுபிடித்தார். இவரது குடும்பம் முழுவதுமே பழமைவாத கிறிஸ்தவ மதப்பிரிவைச்சேர்ந்தவர்கள்.

சூரியன் மறைந்த பிறகு சமைப்பதோ, விளக்கு பற்றவைப்பதோ, கூடிப்பேசுவதோ பழமைவாத கிறிஸ்தவ முறையில் கடுமையான குற்றமாகக் கருதப்பட்டது. அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த இவர் இரவைப் பகலாக்கும் மின்சாரத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் மின்கலம்(பேட்டரி) கண்டறிந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய 82-ஆவது வயதில் மே மாதம் 5 ஆம் தேதி மரணமடைந்தார்.

Read more: http://viduthalai.in/page3/96582.html#ixzz3SP0aSKrz

தமிழ் ஓவியா said...

வாத்தியாரே தீர்ப்பை மாற்று!

மனைவியின் விருப்பமின்றி கணவன் வற்புறுத்தி உறவுகொள்வது பாலியல் வன்முறைக் குற்றமாக்கப்பட வேண்டும் என்று கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் தனிப்பட்ட பிரச்சி னையை பொதுப்பிரச்சினையாகக் கருத முடியாது என்று நிராகரித்துவிட்டது.

டில்லியில் அலுவலராகப் பணி புரியும் ஒரு பெண் தன்னுடைய கணவ னால் தொடர்ச்சியாக பாலியல் வன் முறைக்கு ஆளாகி உள்ளார். அப்படி தன்னுடைய விருப்பத்துக்குமாறாக இருந்துள்ள கணவனின் செயலை குற்ற மாக்கிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

அப்பெண்ணின் வழக்கில் சட்டத்தின் பார்வையில் கணவன் மனைவியிடம் நடந்துகொள்ளும் பாலியல் உறவு என்பதை குற்றமாகக் கருத இடம் இல்லை என்றும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 375இன்படி, மணமான இணையருக்குள் பாலியல் உறவு என்பதில் அவர்களுக்குள் ஒப்புத லின்றியே இருந்தாலும், மனைவியின் வயது 15வயதுக்குள் இல்லாமல், மனைவியின் ஒப்புதலின்றி அவள் கணவன் உறவு கொண்டால் அது பாலியல் வன்முறை ஆகாது என்று கூறப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு டில்லியில் பாலியல் வன்முறை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப் பட்ட நீதிபதி வர்மா தலைமையிலான குழு அறிக்கையில், மணமான பின்னர் விருப்பமின்றி உறவு கொள்வதைக் குற்றமாகக் கருதவேண்டுமா?

என்ப தைக் கவனத்தில் கொள்ளும்போது, விருப்பமின்றி கணவன் மனைவி யிடையே ஏற்படக்கூடிய உறவைக் குற்றமாகக் கருதினால், அது திருமணம் என்பதற்கான முறையையே அழித்து விடும் ஆற்றல் உள்ளதாக ஆகிவிடும் என்று இந்திய அரசு கருதுகிறது. குடும்ப முறையே முழுமையாக பெரிய அழுத் தத்துக்கு உள்ளாகிவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்ப முறையை சீர்குலைத்துவிடும் என்பதால் திருமணத்துக்குப்பின்னர் கணவன் மனைவியிடையே விருப்ப மின்றி உறவு கொள்வதைக் குற்றமாகக் கருத முடியாது என்று இப்பிரச் சினைகுறித்து விவாதிக்க அமைக்கப் பட்ட நாடாளுமன்ற குழு கூறிவிட்டது.

அதேநேரத்தில், சட்டப்படி பிரிந்து இருக்கும்போது கணவன் மனைவியி டையே பாலியல் தொல்லைகள் நிகழும்போது, அதைக் கடுமையானக் குற்றமாகக் கருதவேண்டும். என்றும் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை கூறியிருந்தது.

வழக்கு தொடுத்த பெண்ணின் வழக்குரைஞர் கோலின் கோன்சால்வ்ஸ் கூறுகையில், இப்போதைக்கு வழக்குக் கான மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். ஆனாலும், பெண் களுக்கான அமைப்புவாயிலாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

Read more: http://viduthalai.in/page3/96588.html#ixzz3SP15gTcq

தமிழ் ஓவியா said...

புத்தர்தம் பகுத்தறிவு ஒளி!

’இவ்வுலகில் புலன் இன்பங்களில் கட்டுப்பாடு அற்றவர்களாய், இனிய பொருட்களில் பேரவா கொண்டவர் களாய், குற்றச் செயல்களோடு தொடர்பு உடையவர்களாய், அழிவு நிலைப் பார்வை உடையவர்களாய், குறுகிய மதியினராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச்சியை உண்பவர்களன்று’

’இவ்வுலகில் கடுமையானவராய் நம்பிக்கைத் துரோகம் செய்பவராய், கருணை அற்றவராய், அதிக சுயநலம் கொண்டவராய், கருமியாய், எவருக்கும் ஏதும் அளிக்காதவராய், புறங்கூறுபவ ராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச் சியை உண்பவர்கள் அன்று’

இவ்வுலகில் தீயொழுக்கம் உடை யவராய், தம் தொழிலில் ஏமாற்றுக் காரராய், கடனைத் திருப்பித்தர மறுப்பவராய், பாசாங்குக்காரராய், பிறரை இகழ்ச்சியாய் நினைப்பவராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச் சியை உண்பவர்கள் அன்று.

இவ்வுலகில் பிறருக்குத் துன்பம் இழைப்பவராய், பிறர் பொருள் கவர்பவராய், தீயொழுக்கம் உள்ளவராய் மரியாதை அற்றவராய், கொடுஞ் செயல்களில் கட்டுப்பாடு அற்றவராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச் சியை உண்பவர்கள் அன்று.

இவ்வுலகில் கொலை செய்வோராய், கொலை செய்யத் தூண்டுதலாய் இருப்போராய், திருடராய், பொய்யராய், வஞ்சிப்பவராய், ஏமாற்றுக்காரராய் தவறான காமச் செயல்களில் ஈடுபடு வோராய் இருப்பவர்களே தீயர்கள்! இறைச்சியை உண்பவர்கள் அன்று.

இவ்வுலகில் சினம் மிகுந்தோராய், தற்பெருமை, தற்புகழ்ச்சி, பொறாமை, தீய நெறிகளில் நிலைப்போராய் இருப்பவர்களே தீயர்கள். இறைச்சியை உண்பவர்கள் அன்று.

எவரொருவர் மீனையும், இறைச் சியையும் உண்பவராய் இருந்தும், நல் லோராய், பற்றுக்களைக் கடந்தோராய், நேரிய வழியில் மகிழ்வோராய், வெல்லப்பட்ட புலன்களை உடைய வராய், பேராசை, வஞ்சகம், தற்புகழ்ச்சி அற்றோராய், கருணை உள்ளவராய், இறப்பிற்குப் பின்னும் நற்பெயர் பெறு வோராய், நன்னெறியில் நிலைப் போராய் இருப்பவர்கள் தீயோராக கருதப்படுவதில்லை.

எவரொருவர் பற்றுகள் நிறைந் தவராய், பேராசை பிடித்தவராய், ஏமாற் றுக்காரராய், வஞ்சகம் செய்வோராய், குற்றச் செயல்களில் தொடர்புடை யோராய், புலன்களை வெல்ல முடி யாதவராய், தீய ஒழுக்கமுடையோராய், நம்பிக்கைத் துரோகம் புரிபவராய், கருணை அற்றவராய், இறப்பிற்குப் பின்னும் தீய பெயர் பெறுவோராய்,

தீய நெறியில் நிலைப் போராய் இருந்து, சாம்பல் பூசியவராய், சடைமுடி வளர்ப் பவராய், பருவத்திற்கேற்ப பூஜைகள், யாகங்கள் செய்வோராய், எல்லாவித சடங்குகளையும் செய்பவராய் இருப் பவர், மீனையும் இறைச்சியையும் தவிர்ப்பவராய் இருப்பதினால் நல் லோராக கருதப்படுவது இல்லை.

மீனையும், இறைச்சியையும் உண் ணாது தவிர்த்தலும், நிர்வாணமாய் இருத்தலும், குடுமி வைத்தலும், மழித் தலும், உரோம உடை உடுத்தலும், யாகத் தீ வளர்த்தலும் போன்ற இவை யெல்லாம் பேரின்ப ஞானம் பெற போதிய வழிமுறைகள் அன்று. தன்னை வருத்தலும், யாகத்தீயில் தானப் பொருள்களை இழத்தலும், சடங்குகளும், குற்றம் உடைய மனிதனைத் தூய்மைப் படுத்தி விடாது.

’தீமைகளை உருவாக்குவது தீயசெயல் களே அன்றி மீனையோ இறைச் சியையோ உண்பதனால் அன்று’

உங்கள் புலன்களை அடக்குங்கள்! உண்மையைக் கடைப்பிடியுங்கள்! உங்கள் சக்திகளை நீங்களே ஆளும் திறன் பெறுங்கள்! இரக்கத்தோடு இருங்கள்! அனைத்துக் கட்டுக்களையும் விட்டொழித்து தீமைகளை வென்ற துறவிதான் கண்டவற்றாலும் கேட்ட வற்றாலும் களங்கப்படுவது இல்லை.

புனிதர் புத்தரின் போதனைகளி லிருந்த சத்தியத்தை உணர்ந்த துறவி ஆமகந்தர், அங்கேயே அப்போதே தன்னையும் தன் சீடர்களையும் நன் னெறியாம் தம்மநெறிக்கு ஒப்புக் கொடுக்க புனிதர் புத்தரைப் பின்பற்றுவோர் களாகத் தம்மை ஏற்கும்படி வேண்டிப் பணிந்தார்.
இவ்வாறு புத்தர் கூறினார்.

(அண்ணல் அம்பேத்கர் எழுதிய நூலின் மொழி பெயர்ப்பு)

மொழியாக்கம்: திருமகள்

Read more: http://viduthalai.in/page3/96587.html#ixzz3SP1Cvdv4

தமிழ் ஓவியா said...

கீதை பற்றி விவேகானந்தர்

கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கீதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேதவியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப் பட்டதா?
இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா? மூன்றாவதாக கீதை யில் கூறப்படுவதுபோல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?

நான்கா வதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள் தானா? என்பன கீதையைச் சங்கராச் சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத் தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி - குரு சேத்திர யுத்தம் நடைபெற்றது என்ப தற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத் தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே உரை யாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண் டாரா என்ற பிரச்சினை எழுகிறது.

அர்ஜூனன் ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத் திரயுத்தம் செய்தனர் என்பதோ கூறுவ தற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. -விவேகானந்தர்,

கீதையைப்பற்றி கருத்துகள் என்ற நூலில் ஆதாரம்: ஏ.எஸ்.கே.அய்யங்கார் எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூலில் - பக்கம் 11,.117)

Read more: http://viduthalai.in/page3/96586.html#ixzz3SP1RGbF6

தமிழ் ஓவியா said...

அய்வருக்கும்....

பாஞ்சாலி
யார்? -
வாக்காளர்
பட்டியல்
தயாரிப்பவர்
கேட்டாராம்....
நவ.5
என பதில்வர
திகைத்துப் போய்
எடுத்தார்
ஓட்டம்?

யார் கண்டுபிடிப்பு!?

நாங்கள்
எதையும் கண்டுபிடிக்கவில்லையா?
மதம், சாதி, கடவுள்...
எங்களைத் தவிர - வேறு
யாரால் கண்டுபிடிக்க முடியும்?
சவால்! சவால்!

- மா. அழகிரிதாசன்

Read more: http://viduthalai.in/page3/96589.html#ixzz3SP1YH6Hu

தமிழ் ஓவியா said...

மோடியின் 10 லட்ச ரூபாய் சட்டை ஏலம்
பாவத்தைப் போக்க கங்கையில் கரைக்கிறார்களோ!

குடியரசு தினத்தன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் இருந்த போது மோடி அணிந்த ஆடை உலக அளவில் மிகவும் கடுமையான விமர் சனத்திற்கு ஆளானது.

இங்கிலாந்து நிறுவனம் ஒன்றினால் தனிப்பட்ட முறையில் தங்க இழையால் நரேந்திர தாமோதர் மோடி என பெயர் பொறிக் கப்பட்டு நெய்து ஆஸ்திரியா நாட்டு ஆடை வடிவமைப்பாளர்களின் கைவண்ணத்தில் ஆடையாக நரேந்திர மோடி அணிந்தார். இந்த ஆடை நெய்வ தற்கு, ஆடை வடிவமைக்க தைத்து கொடுக்க என்று ரூ 10 லட்சம் வரை செலவானது.

இது குறித்து இன்றுவரை மோடி எதுவும் கூறவில்லை. ஆனால் இந்த ஆடை விவகாரம் பெரிய அளவில் மோடிக்கு அவப் பெயரை வாங்கிக்கொடுத்ததுமல்லாமல் டில்லி தேர்தலின் தோல்விக்கு ஒரு காரணமாகவும் அமைந்துவிட்டது.

இந்த ஆடை அணிந்த நாளில் இருந்து தொடர்ந்து மோடிக்குக் கெட்ட சகுனமாகவே இருந்து வந்ததாம், காஷ்மீர் விவகாரத்தில் ஆட்சியமைப் பதில் இருந்து பின்னடைவு, டில்லி தேர்தல் தோல்வி, பீகார் மாநில அரசி யலில் தலையிட்டதன் மூலம் கூட்டணி கட்சிகளிடம் பிணக்கம் என தொடர்ந்து அரசியல் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கு முக்கிய காரணம் இந்த ஆடையின் மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டுவிட்டது என்று கூறி ஆடையை ஏலம் விட முடிவு செய்தார்களாம். வெறும் ஆடையை மட்டும் ஏலம் விட்டால் ஊடகங்கள் பிரச்சினையை எழுப்பும் என்று கூறி மோடி குஜராத் முதல்வராக இருந்த போதுஅவருக்கு பரிசாக அளித்த 400-க்கும் மேற்பட்ட பொருட்களையும் ஏலம் விடப் போகி றார்களாம்.

இதில் வரும் தொகை கங்கை சுத்திகரிப்பு இயக்கத்திற்கு கொடுக்கப் படும் என்று மோடியின் தரப்பில் கூறப்படுகிறது. (இதிலும் இந்துத்துவா தானா?)

கடந்த வெள்ளியன்று மோடியின் ஆடையை ஏலம் விட்டு அதில் வரும் பணத்தை தூய்மை இந்தியா இயக்கத் திற்கு வழங்கப்படும் என்று கூறிவந்த நிலையில் திடீரென கங்கை சுத்திகரிப்பு இயக்கத்திற்கு வழங்கப்படும் என்று அறிவித்ததன் பின்புலம் இப்படியும் இருக் கலாம்; அவர்கள் நடவடிக்கைப்படி அவர் செய்த பாவம் எல்லாம் கங்கையில் கரைக்கும் ஏற்பாடாக இருக்குமோ!

Read more: http://viduthalai.in/page3/96590.html#ixzz3SP1hrKjo

தமிழ் ஓவியா said...

பிற இதழிலிருந்து....
தொழில் முனைவோர் நம்பக் கூடாது, ஜோசியத்தை!

யார் யாரைப் பார்க்க வேண் டுமோ, அவர்களை எல்லாம் பார்த் தாகி விட்டது. என்னென்ன செய்திகள் தேவையோ, அவற்றை எல்லாம் சேகரித் தாகி விட்டது. முழுமையாக இல்லா விட்டாலும் -_ இயலா விட்டாலும் _ நினைத்ததில் மனநிறைவு தருகின்ற அளவிற்குத் தகவல்களைத் திரட்டி விட்டோம் என்றால், அவற்றைப் பகுத்தும் தொகுத்தும் பார்த்து, சாதக பாதகங்களை எல்லாம் சரியான கோணங்களில் அலசி ஆராய வேண் டும். இறுதியாக ஓர் உறுதியான முடிவை மேற்கொள்ள வேண்டும்.

நாம் தொழிலில் இறங்கப் போகி றோம் என்றால் நாம்தான் உறுதியாக இருக்க வேண்டும்; உறுதியுடன் இறங்க வேண்டும். அதை விடுத்து நான் இந்தத் தொழில் செய்ய வேண்டும் என்று என் தகப்பனார் உறுதியாக இருக்கிறார் என்றோ, என் மாமா பிடிவாதமாக இருக்கிறார் என்றோ ஓர் இளைஞர் சொல்லுவார் என்றால், அவரது மனதில் பலவீனத்தின் நிழல் விழுந்து விட்டது என்றுதான் பொருள். அவ ருக்கு முழுமையாக ஈடுபாடு இல்லை என்றுதான் பொருள்.

தமிழ் ஓவியா said...


நம் கச்சேரியில் தகப்பனார், மாமனார், நண்பர்கள், சகோதரர்கள்.. இவர்கள் எல்லாம் பக்க வாத்தியக் காரர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். நாம்தான் முழுக்க கதாநாயகர்கள் என்பதைத் தொழில் முனைப்பாளர்கள் உணர வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வரு கிறது. பொறியியல் துறையில் பட்டம் பெற்ற ஒரு இளைஞர் தொழில் செய்வது தொடர்பாக பலரையும் பல நாட்கள் அணுகித் தேவையான செய்தி களை எல்லாம் திரட்டி வைத்திருந்தார்.

வாங்கப் போகின்ற பொருள்களைப் பற்றியும், தயாரிக்கப் போகின்ற பொருள்களைப் பற்றியும், ஆட்கள் நிர்வாகம் பற்றியும், விற்பனைப் பிரிவு, வங்கிகளில் கடன் பெறுதல் போன்ற எல்லா விவரங்களையும் சேகரித்து நன்றாக ஆராய்ந்து தொழில் தொடங்குவதற்குத் தயாராக இருந்தார்.

இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு அவரைச் சந்தித்தபோது, ஆவ லுடன் கேட்டேன். தொழில் தொடங்கி விட்டீர்களா? என்று அவருடைய பதில் என்னைத் திகைக்க வைத்தது. என்னுடைய சித்தப்பா ஜாதகம் பார்த்துவிட்டு, நான் இன்னும் மூன்று ஆண்டு கழித்துத்தான் தொழில் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார். அதனால், ஏதாவது ஒரு வேலையில் சேரப் போகிறேன் என்றார்.

நாள் பார்த்து நேரம் பார்த்துத் திருமண ஏற்பாடுகளை எல்லாம் செய்து விட்டு, மணவறைக்கு வந்து சகல வாத்தியமும் ஒலிக்கப் போகும் சமயத்தில் மாப்பிள்ளை, நான் மூன்று ஆண்டு கழித்துத் திருமணம் செய்து கொள்கிறேன். இதே பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறேன். இப் போது வேண்டாம் என்று பின் வாங் கியது மாதிரி இருந்தது அவருடைய பதில்.

திருமணம் என்றதும், இன்னொரு நிகழ்ச்சிகூட நினைவுக்கு வருகிறது. ஒரு பட்டதாரி இளைஞர், பத்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தில் இருந்தவர், தன்னை விட வசதி மிக்க பெரிய இடத்துப் பெண்ணைக் காதலித்துக் கொண்டிருந் தார். முதலில் இந்தத் தாழ்வைப் போக் கினால்தான் தன் லட்சியத்தை விரை வில் அடையச் சிறந்தவழி ஏதாவது தொழில் துவங்கு வதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்து தீவிரமாக அலைந்து கொண்டு இருந் தார்.எப்போது பார்த்தாலும் ஃபைலும், கையுமாகக் காட்சியளித்துக் கொண் டிருந்தார்.

சில மாதங்கள் சென்ற பின் தற் செயலாக அவரை ரயில் நிலையத்தில் சந்தித்தேன். மிகவும் உற்சாகமாகக் காணப் பட்ட அவர் கூறினார். தொழில் துவங் கறது எல்லாம் நமக்குச் சரிபட்டு வராதுங்க... அருமையான வேலை கிடைச்சிருக்குது. பதினைந்து ஆயிரம் ரூபாய் சம்பளம். நாளைக்கு டூட்டி ஜாயின் பண்ணப் போறேன் என்றார்.

தொழில் துவங்கி, நாயாக அலைந்து, பிறகு மனிதனாக மாறுவதற்கு மூன்று, நான்கு ஆண்டுகள் ஆகலாம். (அதற்கு உத்திரவாதம் இல்லை) அதுவரை தன் காதல் நீடிக்குமா என்று அவர் சந்தேகப்பட்டிருக்கலாம். இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், இரயில் நகர ஆரம்பித்தது. அந்த இளைஞர் ஓடிப் போய் ஏறிக் கொண்டார்.

தொழில் தொடங்கப் போகிற நேரத்தில், இப்படிக் கடைசி நிமிடத்தில் முடிவை மாற்றிக் கொண்ட எத் தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள்; பாதி வழியில் முடிவை மாற்றத் துடிக்கின்ற சிலரையும் காணலாம்.

தொழில் தொடங்கவும் தொடர்ந்து நடத்தவும், பொறுமை, மன உறுதி, கடின உழைப்பு, சமயோசிதம் இவை தேவைப்படுகின்றன. இவற்றில் தலையாயது மன உறுதி.

ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களுள் தொழில்முனைப்பாளர் தம் மேஜைமீது எழுதி வைத்திருக்க வேண்டிய குறள் இதோ:
வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற - (குறள் 661)
--_ கே ஜெகதீசன்
நன்றி: வளர்தொழில் பிப்ரவரி 2015

Read more: http://viduthalai.in/page-1/96596.html#ixzz3SP1zHci1

தமிழ் ஓவியா said...

நீதிமன்றத்தை எதிர்த்து கழகம் நடத்திய போராட்டங்கள்

26.8.1985: உயர்நீதிமன்றம் முன்பாக ஆர்பாட்டம்

சென்னை - உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 7 நீதிபதிகள் பதவிக்கும் பார்ப்பனர்களையே நியமிக்கும் வண்ணம் டில்லிக்குப் பரிந்துரைகள் சென்றுள்ளன. 98 விழுக்காடு உள்ள மக்களைப் புறக்கணித்து விட்டு, 100-க்கு இரண்டே விழுக்காடு உள்ள பார்ப்பனர்களுக்கே அய்க்கோர்ட்டை தாரைவார்த்துக் கொடுத்து அதன் மூலம் இதனை மற்றொரு அக்ரகாரமாக்கிடும் அபாயப்போக்கை எதிர்த்து,

26.8.1985 அன்று காலை சென்னை - பெரியார் திடலிலிருந்து துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு வாயில்களிலும் இரு அணிகளாகப் பிரிந்து தோழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உயர்நீதிமன்றமா? பார்ப்பன சாதி மன்றமா?

நீதிபதி பதவிக்கு - தாழ்த்தப்பட்டோரை நியமனம் செய்!
பெண்களை நீதிபதிகளாக்கு!
உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்டோரை நீதிபதியாக்கு!
என்பன போன்ற முழக்கங்கள் ஒலிக்கப்பட்டன.

20.11..1986 : சென்னை - உயர்நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் 6 நீதிபதிகள் பதவிகளுக்கும் பார்ப்பனர் களையே நியமிப்பதற்குப் பரிந்துரை செய்துள்ள சென்னை - உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்துர் கரைக் கண்டித்தும், சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு தாழ்த்தப்பட்ட,

பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்த வர்களை, காலியாக உள்ள இடங்களுக்கு நிரப்ப வேண்டும் என்று கோரியும் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை - பெரியார் திடலிலிருந்து காலை 9 மணியளவில் ஊர்வலம் புறப்பட்டுச் சென்று 10 மணியளவில் உயர்நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கழகப்பொருளாளர் கா.மா.குப்புசாமி, கழகத்துணைப் பொதுச்செயலாளர் கோ.சாமிதுரை, தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன், க.பார்வதி, அ.அருள்மொழி, வீரசேகரன் மற்றம் ஏராளமான கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.

2.11.1987 : சென்னை - உயர்நீதிமன்றத்தில் உள்ள 20 நீதிபதிகளில் தலைமை நீதிபதி உள்பட 3 பேர்கள் பார்ப்பனர். மேலும் காலியாக உள்ள 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் பொறுப்புக்கு பார்ப்பனர்களைத் தலைமை நீதிபதி சந்துர்கர் சிபாரிசு செய்துள்ளதைக் கண்டித்து, சென்னை - பெரியார் திடலிலிருந்து கழகத் தோழர்கள் - தோழியர்கள் கொட்டும் மழையிலும் பேரணியாகச் சென்று சென்னை -உயர்நீதிமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ் ஓவியா said...

கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி அவர்கள் சென்னை தொலைக்காட்சி நிலையம் முன் ஈழம் பற்றிய பொய்ப்பிரச்சாரத்தை எதிர்த்து மறியலில் ஈடுபட்டு சென்னை - மத்தியச் சிறையில் இருந்த காலகட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.

2.6.1990: சென்னை - உயர்நீதிமன்றத்திற்கு வெளிமாநிலத்திலிருந்து நீதிபதி மிஸ்ரா அவர்களை நியமனம் செய்வதைக் கண்டித்தும், தேசிய முன்னணி அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை - பெரியார் திடலிலிருந்து மாபெரும் ஊர்வலம் புறப்பட்டு உயர்நீதிமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வழக்கறிஞர் கோ.சாமிதுரை, கழகத்தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் மற்றும் மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள். இளைஞரணித் தோழர்கள் மகளிரணியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

26.4.1994 : தமிழ் தெரியாத நீதிபதி தமிழ்நாட்டுக்கு வேண்டாம் என்றும் ஏற்கெனவே நீதிபதியாக இருக்கும் கே.எஸ்.பக்தவச்சலத்தை மாற்றக்கூடாது என்றும் வலியுறுத்தி சென்னை - பூக்கடை காவல் நிலையத் திலிருந்து பேரணி புறப்பட்டு சென்னை - உயர்நீதிமன்றம் முன்பாக திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் ஓவியா said...

கழகத் தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்டத்திற்கான நோக்கத்தை விளக்கி உரையாற்றினார். கழகப் பிரச்சாரச் செயலாளர் துரை.சக்ரவர்த்தி, மாநில இளைஞரணிச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பேராசிரியர் ந.இராமநாதன் ஆகியோரும், வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், விழுப்புரம், தஞ்சை மாவட்டத் தோழர்களும் ஏராளமாகக் கலந்து கொண்டனர்.

18.10.1994 : 27 நீதிபதிகளில் 10 பேர் பார்ப்பனர்களாக உள்ள சென்னை - உயர்நீதிமன்றத்தில் பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்தும், தமிழர் நீதிபதிகளை வெளி மாநிலங்களுக்கு மாற்றுவதை எதிர்த்தும், தாழ்த்தப்பட்ட நீதிபதிகளை அதிகரிக்கக் கோரியும் காலை 10 மணியளவில் கழகத்துணைப் பொதுச்செயலாளர் கோ.சாமிதுரை அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் மாபெரும் ஊர்வலமாக சென்னை - பூக்கடை அருகிலிருந்து புறப்பட்டு உயர்நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன், எம்.கே.டி.சுப்ரமணியன், க.பார்வதி, உரத்தநாடு இரா.குணசேகரன் மற்றும் மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள், இளைஞரணி தோழர்கள், மகளிரணியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

10.1.1996 : உயர்நீதிமன்றத்தில் பெண்களுக்கு உரிய பங்கு கொடுக்கப்படாததைக் கண்டித்தும், பிள்ளையார் பால் குடித்ததாகக் கூறப்பட்ட மூடநம்பிக்கைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததை எதிர்த்தும், இந்துத்துவா பற்றி உச்சநீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்தும், 3 சதவீதம் உள்ள பார்ப்பனர் 30 சதவீதம் நீதிபதிகளாக அனுபவிப்பதைக் கண்டித்தும் காலை 10 மணியளவில் தோழியர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் தலைமையில் சென்னை - பெரியார் திடலிலிருந்து கழகத் தோழர்கள் ஒலி முழக்கமிட்டு, ஊர்வலமாகச் சென்று உயர்நீதிமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் கோ.சாமிதுரை, வழக்குரைஞர் அருள்மொழி, கழகத் தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உயர்நீதிமன்றப் பதிவாளர் இராமமூர்த்தி அவர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

26.3.1997 : சென்னை - உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்படாத 13 இடங்களுக்கு பெண்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர் களையும் நியமிக்கக்கோரி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சென்னை - பெரியார் திடலில் காலை 9 மணியளவில் தொடங்கி வைத்தார்.

வழக்கறிஞர்கள் த.வீரசேகரன், அ.அருள்மொழி, பா.குப்பன், இரத்தினகுமார், இராகுலப்புத்தன் (கணேசன்) ஆகியோர் ஊர்வலத்திற்கு தலைமை வகித்தனர். பெரியார் திடலிலிருந்து புறப்பட்ட தோழர்கள் ஒலி முழக்கங்கள் கொடுத்துக்கொண்டே சென்று சென்னை - உயர்நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைமைக்கழகச் செயலாளர் கலி.பூங்குன்றன், விசுவநாதன்கக்கன், த.வீரசேகரன், அ.அருள்மொழி, பா.குப்பன், கணேசன், க.பார்வதி ஆகியோர் உரையாற்றினர்.

22.1.2004 : சென்னை - உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பார்ப்பனரல்லாத பெண்களுக்குப் பிரதிநிதித் துவத்தை வலியுறுத்தியும் 22.1.2004 அன்று காலை 10 மணியளவில் சென்னை ஒயிட் மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்து நீதித்துறை யிலும் சமூகநீதி - இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், எங்கும் உள்ள பார்ப்பன ஆதிக்கத்தைக் கண்டித்தும் உரையாற்றினார்.

கழகப்பொருளாளர் கோ.சாமிதுரை ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றினார். கழகத் துணைப் பொதுச் செயலாளர்கள் கலி.பூங்குன்றன், சு.அறிவுக்கரசு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினர். கோட்டப் பிரச்சாரக்குழுத் தலைவர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் நன்றி கூறினார்.

வடசென்னை தென்சென்னை, தாம்பரம் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களை நீதிபதிகளாக நியமிக்கக்கோரி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சென்னை - நினைவு அரங்கம் (மெமோரியல் ஹால்) முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

22.8.2005: சுயநிதிக் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் முன் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

28.12.2005: சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கத்தைக் கண்டித்தும், சமூகநீதி கோரியும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

27.7.2006: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

1.11.2006 : நீதிபதி முகோபாத்தியாவை மாற்றுக மறியல், தடையை மீறி ஆர்ப்பாட்டம்

27.11.2007 : நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரி ஆர்ப்பாட்டம்

8.3.2008 : நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரியும், சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து சமய அறநிலைய துறையின் கீழ் கொண்டு வர வலியுறுத்தியும் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

30.6.2008 : சங்கராச்சாரியார் மீதான கொலை வழக்கினை விரைவுப்படுத்திட ஆர்ப்பாட்டம்

19.2.2015 : சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்கள் முன் ஆர்ப்பாட்டம்

Read more: http://viduthalai.in/page-1/96594.html#ixzz3SP2MXP4I

தமிழ் ஓவியா said...

10.1.1996 : உயர்நீதிமன்றத்தில் பெண்களுக்கு உரிய பங்கு கொடுக்கப்படாததைக் கண்டித்தும், பிள்ளையார் பால் குடித்ததாகக் கூறப்பட்ட மூடநம்பிக்கைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததை எதிர்த்தும், இந்துத்துவா பற்றி உச்சநீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்தும், 3 சதவீதம் உள்ள பார்ப்பனர் 30 சதவீதம் நீதிபதிகளாக அனுபவிப்பதைக் கண்டித்தும் காலை 10 மணியளவில் தோழியர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் தலைமையில் சென்னை - பெரியார் திடலிலிருந்து கழகத் தோழர்கள் ஒலி முழக்கமிட்டு, ஊர்வலமாகச் சென்று உயர்நீதிமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் கோ.சாமிதுரை, வழக்குரைஞர் அருள்மொழி, கழகத் தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உயர்நீதிமன்றப் பதிவாளர் இராமமூர்த்தி அவர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

26.3.1997 : சென்னை - உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்படாத 13 இடங்களுக்கு பெண்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர் களையும் நியமிக்கக்கோரி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சென்னை - பெரியார் திடலில் காலை 9 மணியளவில் தொடங்கி வைத்தார்.

வழக்கறிஞர்கள் த.வீரசேகரன், அ.அருள்மொழி, பா.குப்பன், இரத்தினகுமார், இராகுலப்புத்தன் (கணேசன்) ஆகியோர் ஊர்வலத்திற்கு தலைமை வகித்தனர். பெரியார் திடலிலிருந்து புறப்பட்ட தோழர்கள் ஒலி முழக்கங்கள் கொடுத்துக்கொண்டே சென்று சென்னை - உயர்நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைமைக்கழகச் செயலாளர் கலி.பூங்குன்றன், விசுவநாதன்கக்கன், த.வீரசேகரன், அ.அருள்மொழி, பா.குப்பன், கணேசன், க.பார்வதி ஆகியோர் உரையாற்றினர்.

22.1.2004 : சென்னை - உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பார்ப்பனரல்லாத பெண்களுக்குப் பிரதிநிதித் துவத்தை வலியுறுத்தியும் 22.1.2004 அன்று காலை 10 மணியளவில் சென்னை ஒயிட் மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்து நீதித்துறை யிலும் சமூகநீதி - இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், எங்கும் உள்ள பார்ப்பன ஆதிக்கத்தைக் கண்டித்தும் உரையாற்றினார்.

கழகப்பொருளாளர் கோ.சாமிதுரை ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றினார். கழகத் துணைப் பொதுச் செயலாளர்கள் கலி.பூங்குன்றன், சு.அறிவுக்கரசு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினர். கோட்டப் பிரச்சாரக்குழுத் தலைவர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் நன்றி கூறினார்.

வடசென்னை தென்சென்னை, தாம்பரம் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களை நீதிபதிகளாக நியமிக்கக்கோரி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சென்னை - நினைவு அரங்கம் (மெமோரியல் ஹால்) முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

22.8.2005: சுயநிதிக் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் முன் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

28.12.2005: சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கத்தைக் கண்டித்தும், சமூகநீதி கோரியும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

27.7.2006: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

1.11.2006 : நீதிபதி முகோபாத்தியாவை மாற்றுக மறியல், தடையை மீறி ஆர்ப்பாட்டம்

27.11.2007 : நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரி ஆர்ப்பாட்டம்

8.3.2008 : நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரியும், சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து சமய அறநிலைய துறையின் கீழ் கொண்டு வர வலியுறுத்தியும் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

30.6.2008 : சங்கராச்சாரியார் மீதான கொலை வழக்கினை விரைவுப்படுத்திட ஆர்ப்பாட்டம்

19.2.2015 : சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்கள் முன் ஆர்ப்பாட்டம்

Read more: http://viduthalai.in/page-1/96594.html#ixzz3SP2MXP4I

தமிழ் ஓவியா said...

கோல்வால்கரும் - மோகன்பகவத்தும்

நீண்ட காலமாக மறைக் கப்பட்ட ஒரு நூல் ஆர்.எஸ். எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கரால் எழுதப்பட்ட We or our nationhood defined என்பதாகும். திராவிடர் கழகத் தலைவர் அவர்களுடைய உரையில் அண்மைக் காலமாக தோண்டி எடுக்கப்பட்டு வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அவர்களின் குருநாதரால் எழுதப்பட்ட இந்நூலை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வெட்கப்படுகிறார்கள் என்பதைவிட அந்நூலில் இடம் பெற்றிருப்பவை வெளி யில் வந்தால் தங்களுக்குப் பெரும் இடர்ப்பாட்டை ஏற்படுத்தும் - வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாகும் என்ற அச்சம் அவர்களைப் பிடுங்கித் தின்பதே இதற்கு விழுமிய காரணமாகும்.

இந்த நூலை வெளிப் படுத்தத் தயங்கினாலும், அந்த நூலின் சாரத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் உட்பட ஆங்காங்கே தூவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆட்சி அதிகாரம் அவர்கள் கைகளில் இருக் கும் இந்தத் தருணத்தில் அதனைச் சொல்லாமலும் இருக்க முடியவில்லை; சொன் னாலும் எதிர் விளைவை ஏற்படுத்தி விடுமே என்ற அச்சமும் அவர்களைக் குடைந்தெடுக்கிறது.

அந்த நூலில் கோல் வால்கர் என்ன எழுதுகிறார்?

சிறுபான்மையினர் இந்த தேசத்தில் வாழ்வது ஆபத் தானது அது தேசப் பாது காப்பிற்கும் தேச நலன் களுக்கும் உகந்தது அல்ல. எனவே, தேசிய இனத்தைச் சாராதவர்கள் தேசிய இனத்தின் மொழியையும், மதத்தையும், கலாச்சாரத் தையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் தங் களுடைய அனைத்து விட யங்களையும் தேசிய இனத் தின் அடிப்படையிலேயே மாற்றிக் கொள்ள வேண்டும். சிறுபான்மையினருக்கு இரண்டே வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று அவர்கள் தங்களை முழுவதுமாக பெரும்பான்மை தேசிய இனத்தின் அடிப்படையில் வாழ்க்கை நெறிகளை மாற்றம் செய்ய வேண்டும். இல்லை யென்றால் எந்த உரிமையும் இல்லாமல் பெரும்பான்மை மக்கள் கருணை கொண்டு அவர்கள் அனுமதிக்கும் காலம் வரை வாழலாம். (“We or our nationhood defined’’ பக்கம் - 47)

ஆர்.எஸ்.எஸ்.இன் மிக முக்கியமான சிந்தனைவாதி யாகவும், குருவாகவும் கருதப் படும் குருஜி கோல்வால்கர் இந்துத்துவத்தை அடிப் படையாக கொண்ட இந்து ராஷ்ட்ரியத்தின் சிறுபான்மை யினர் குறித்தான பிரச்சினை களுக்கு ஹிட்லர், முசோலினி யின் தீர்வையே முன்மொழி கின்றார்.

சிறுபான்மையினர் இங்கே வாழ வேண்டுமாயின் அவர்கள் தேசிய இனமான இந்துக்களின் மதம், மொழி மற்றும் கலாச்சாரங்களை பின் பற்ற வேண்டும். இல்லை யென்றால் அவர்களுக்கு இந்த தேசத்தில் எந்த உரி மையும் இல்லை. ஏன் அவர் கள் இந்துஸ்தானின் குடி மக்களாக கூட கருதப்பட மாட்டார்கள்.’(“We or our nation hood defined’’பக்கம் - 47)

இந்துஸ்தானில் வாழும் இந்துக்களே தேசியவாதிகள், அவர்களே தேசபக்தர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த தேசத்தின் எதிரிகள் மற்றும் துரோகிகள் இந்துக் கள் அல்லாதவர்களால் இந் துஸ்தானின் தேச நலனிற்கு பேராபத்து உள்ளது (மேற்கண்ட நூல் பக்கம் - 44)

இப்பொழுது ஆர்எஸ். எஸ். தலைவர் மோகன் பகவத் கூற்றைக் கொஞ்சம் கவனிப்போம்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் அனைவரும் இந்துக்களே! அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்துக் கொள் கைகளை ஏற்க வேண்டியவர்களே என்று அரசின் வானொ லியைப் பயன்படுத்திப் பேசி யதை நினைவில் கொள்வீர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/96775.html#ixzz3SfDWmfrg

தமிழ் ஓவியா said...

காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்தான்
மதம் மாற்றம் செய்ய வந்தாராம் மதர் தெரசா - மோகன்பகவத் கூறுகிறார்


பரத்பூர் (ராஜஸ்தான்) பிப் 24 சமூகசேவை என்ற பெயரில் மத வியாபாரம் செய்தார் மதர் தெரசா, உண்மையில் அவருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மன நிலை இருந்தால் இந்தியாவிற்கு ஏன் வர வேண்டும்? மக்களை சேவை என்ற பெயரில் ஏமாற்றி மதமாற்றம் செய்வதற்காகத்தான் இங்குவந்தார் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் தன் னுடைய சொந்த ஊரான பரத்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது மதர்தெரசா பற்றி அவர் கூறியதாவது, நமது நாடு ஆங்கிலேயர்கள் வருகையின் முன்பு செல் வச்செழிப்பும் அமைதியும் அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நியதியின் படி கட்டுப்பாட்டோடு வேலைகளைச் செய்து வந்தனர். முகமதியர்கள் வந்த பிறகு செல்வச் செழிப்பை சுரண்டினர். இதன் காரணமாக வறுமை தொடங்கியது. ஆங்கிலேயர்கள் வந்த பிறகு மக்களிடம் வறுமை கோரதாண்டவமாடியது. இதைச் சாதகமாகப் பயன் படுத்தி மதமாற்றத்தை ஆங்கிலேயர்கள் செய்ய ஆரம்பித்தனர். அவர் களின் மதமாற்றத்திற்கு உதவ பல வெளிநாட்டி னர் இங்குவந்தனர். அவர்கள் கல்வி என்ற பெயரில் மதமாற்றத்தை செயல்படுத்தினர்.

இந்த வரிசையில் மதர் தெரசா மிகவும் புத்தி சாலித்தனமாக சேவை என்ற போர்வையை போர்த்திக்கொண்டு மத மாற்றத்தில் இறங்கினார். எங்களைப் போன்றவர் களுக்கு மாத்திரம் தான் மதர்தெரசாவின் உண்மை யான நடவடிக்கை என்ன வென்று தெரியும். மக்கள் மதர்தெரசாவின் உண்மை யான மதமாற்றச் செயலை கவனிக்காமல் விட்டு விட் டார்கள். அவர் செய்த மதமாற்றச் செயல்பாடு கள் வெளியில்வராமல் இருக்க ஆங்கிலேயர்கள் அவருக்கு நோபல் பரிசு கொடுத்தனர். அவர் உண்மையி லேயே சேவை செய்ய வேண்டுமென்றால் உலகில் வேறு நாடுகளே இல்லையா, இந்தியா மாத்திரம் ஏன் அவர் களின் கண்களுக்குப் பட்டது. அவர்களின் நோக்கமே இந்துமதத்தின் மாண்புகளை சிதைக்க வேண்டும் மக்களை மதம் மாற்றி இந்துமதத்தை அழிக்கவேண்டும் என்பது தான் என்று தன்னுடைய உரையில் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/96782.html#ixzz3SfDgl1en

தமிழ் ஓவியா said...

குருட்டு நம்பிக்கை...


உலகில் உள்ள மதங்கள் எல்லாம் குருட்டு நம்பிக்கை என்கின்ற பூமியின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன.
(குடிஅரசு, 3.11.1929)

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்தியின் கையாலாகாத்தனம் சனீஸ்வரன் காப்பாற்றவில்லையே!

கோவை, பிப்.23_ கோவை பீளமேடு அவினாசி ரோட்டை சேர்ந் தவர் கேசவ மூர்த்தி (வயது 44). பீள மேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

நேற்று இரவு வீடு திரும்பிய கேசவ மூர்த்தி வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக் கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடிச் சென்றி ருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து பீளமேடு காவல்துறையி னருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத் தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

5 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

ஜோலார்பேட்டை, பிப்.23 ஜோ லார்பேட்டை அடுத்த மேட்டுசக்கர குப்பம் என்ற இடத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு யாரோ சிலர் இந்த கோவிலின் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்து அம்மன் கழுத்தில் இருந்த பவுன் தாலியை திருடிச்சென்று விட் டனர். அதேபோல் பக்கத்து பகுதியான போயர்வட்டம் என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் கோவிலிலும் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த பவுன் தங்க தாலியை திருடிச்சென்றனர்.

மேலும் அதே பகுதியில் உள்ள பெருமாள், ஆஞ்சநேயர், காமாட்சியம் மன் கோவில்களிலும் உண்டியலை உடைத்து, உண்டியல் பணம், வெள்ளி நகைகளை யாரோ சிலர் திருடி சென்றனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் குடமுழுக்கில் தாலி சங்கிலி பறிப்பு

திருவான்மியூர், பிப். 23 சோழிங்க நல்லூரை அடுத்த காரப்பாக்கம் கங்கையம்மன் கோவில் குட முழுக்கு நேற்று நடந்தது. அதில் ஏராள மானோர் கலந்து கொண்டனர். அந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சோழிங் கநல்லூர் காந்தி நகரை சேர்ந்த பார்வதி (55) என்ற பெண்ணின் 5 பவுன் தாலி சங்கிலியை அடையாளம் தெரியாத நபர் பறித்து சென்றான்.

அதே போன்று சோழிங்கநல்லூர் பள்ளிக்கூட சாலை தெருவை சேர்ந்த கஸ்தூரி (60) என்பவரிடம் 4 பவுன் தாலி சங்கிலி பறிக்கப்பட்டது. இது குறித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. எனவே அங்கு சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து காவல் துறை யினர் விசாரித்து வருகின்றனர்.

கோவில் குளத்தில் மூழ்கி 8ஆம் வகுப்பு மாணவி சாவு

மாமல்லபுரம், பிப். 23-_ மாமல்ல புரம் அண்ணல் காந்தி தெரு வில் வசிக்கும் விநாயகமூர்த்தி என்ப வரின் மகள் அருந்ததி (வயது 13). இவர் மாமல்லபுரம் அரசு மேல்நிலை பள்ளி யில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று அரை நாள் பள்ளிக்கு சென்றுவிட்டு மதியம் 1 மணியளவில் வீடு திரும்பும் போது உடன் வந்த 4 தோழிகளுடன் கருக்காத்தம்மன் தெப்ப குளத்தின் படித்துறையில் நின்று மீன் பிடித்து விளையாடியுள்ளனர். அப் போது அருந்ததி பாசி படிந்த படிக்கல் வழுக்கி குளத்தின் நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற முற் பட்ட 4 தோழி களும் நீரில் மூழ்கினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் 5 பேரையும் மீட்டனர். இதில் அருந்ததி மட்டும் மூச்சு திணறி உயிரி ழந்தார். கோவில் குளத்தில் தடுப்பு வேலியும் அவசர படிக்கல்லும் இல் லாததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று கோரி கூறி பொதுமக்கள் மாண வியின் உடலை பிரேத பரிசோதனை நடத்த விடாமல் முற்றுகையிட்டனர். பின்னர் மாமல்லபுரம் காவல்துறை யினர் உடலை செங்கல்பட்டு அரசு மருத் துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

Read more: http://viduthalai.in/page1/96711.html#ixzz3SfGZ1w2G

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வியாபார வசீகரமா?

செவ்வாய், வெள்ளி களில்தான் கோயில் களுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பது வியா பார வசீகரமா? அல்லது கடவுளுக்கு மற்ற கிழமை கள் எல்லாம் பிடிக்கா தவை என்ற அர்த்தமா?

Read more: http://viduthalai.in/page1/96710.html#ixzz3SfGh7g6s

தமிழ் ஓவியா said...

காரணம்


வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...

பல நோய்களை தீர்க்க உதவும் அதிமதுரம்

அதிமதுரம் கொடி வகையை சேர்ந்தது. காடுகளில் புதர் செடியாக வளரும் கூட்டிலைகளை கொண்டது. கணுக்களில் சிறிய மஞ்சள் கலந்த ஊதா நிறபூக்கள் நிரம்பியதாக இருக்கும். இதன் வேர்கள், இலைகள் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. வேர் கடை சரக்காக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். மலச்சிக்கலை போக்கும் உணவு மண்டலத்தை சீராக இயங்கவைக்கும்.

ஊட்டசத்து நிரம்பியது. சிறுநீர் புண்களை ஆற்றும், கல்லடைப்பை நீக்க பயன்படும். அதிங்கம், அஷ்டி, மதூகம், மதூரம் என பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் அதிமதுரம் உலகத்தின் அனைத்து மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதை எளிய முறையில் பயன் படுத்தி பல்வேறு நோய்களையும் தீர்க்கமுடியும்.

பித்தம், வாதம். ரத்ததோசம், வீக்கம், வாந்தி, நாவறட்சியை போக்கும். தாகம், அசதி, கண்நோய்கள், விக்கல், எலும்பு நோய்கள், மஞ்சள்காமாலை, இருமல், தலை நோய்கள் ஆகியவற்றை குணமாக்கும். வேர்கள் இனிப்புச்சுவையும் குளிர்ச்சித்தன்மையும் கொண்ட வையாக இருக்கும்.

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளம்வறுப்பாய் வறுத்து சூரணம் செய்து வைத்து கொண்டு சூட்டினால் ஏற்படும் இருமலுக்கு 5 கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட தீரும்.

சிலர் உடல் உறுப்புகளில் புண் ஏற்பட்டு ரத்தவாந்தி எடுப்பார்கள். இவர்கள் அதிமதுரப்பொடி, சந்தனத்தூள் சமஅளவாக கலந்து அதில் 1 கிராம் அளவில் அளவில் பாலில் கலந்து குடிக்க ரத்தவாந்தி நிற்கும். புண்கள் ஆறும்.

போதுமான அளவில் தாய்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அளவில் அதிமதுர சூரணத்தைப்பாலில் கலந்து அதனுடன் இனிப்பு சிறிது சேர்த்து சாப்பிட்டால் தாய்பால் நன்கு சுரக்கும். அதிமதுரத்தை நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் இளநரை ஏற்படாது. முடி உதிர்தலும் நிற்கும். அதிமதுரத்தை சூரணமாக்கி காற்றுபுகாத பாட்டிலில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தொண்டைக்கட்டு, இருமல், சளி உள்ளவர்கள் 1 முதல் 2 கிராம்வரை எடுத்து தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட தீரும். 1முதல் 2 கிராம் அளவில் அதிமதுரப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வர மார்பு, ஈரல், இரைப்பை, தொண்டை ஆகியவற்றில் உள்ள வறட்சி நீங்கி நலம் உண்டாகும். இருமல், மூலம், தொண்டைகரகரப்பு, நரம்புதளர்ச்சி தீரும்.

Read more: http://viduthalai.in/page1/96734.html#ixzz3SfHbdKIm

தமிழ் ஓவியா said...

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ஆப்பிள்

ஆப்பிள் பழங்காலத்தில் இருந்தே அறியப்பட்ட ஒரு அற்புதமான பழமாகும். ஆப்பிள், குமளி பழம், ஆப்பழம், சீமை இலந்தைபழம், அரத்திபழம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் குளிர் பிரதேசங்களில் வளரக்கூடியது. தற்போது இந்தியா, சீனா, அர்ஜென்டினா மற்றும் மத்திய ஆசியாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

நம்நாட்டில் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் உள்ளன. எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கும் ஆப்பிள், அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி சாப்பிடக்கூடியது. விலை சற்று அதிகம் என்றாலும் மருத்துவத்தில் இதன் பயன் அதிகரித்துள்ளது.

சத்துக்கள்: ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலிய சத்துகள் அதிக அளவில் அடங்கியுள்ளன.

பயன்கள்: ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயன கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாக செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்பு சத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் ரத்தசோகை விரைவில் நிவர்த்தியாகிறது. ரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.

* தேவையற்ற கொழுப்பு சத்தை குறைக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு ரத்த அழுத்தம் குறைய உதவுகிறது. அதிக ரத்த போக்கை தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது.

செரிமாண மண்டலம் சீராக இயங்க செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்க செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்த சர்க்கரை குறைய உதவுகிறது. சோடியம் உடம்புக்கு பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.

* மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.

* குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஆப்பிள் பழத்தை வேகவைத்து பிசைந்து கொடுத்தால் குணமாகும்.

* வலிப்பு உள்ளவர்கள் ஆப்பிள் பழச்சாறு 60 மி.லி, அத்திப்பழச்சாறு 60 மி.லி கலந்து தினசரி இரண்டு வேளை கொடுத்து வந்தால் மூன்று தினங்களில் வலிப்பின் தீவிரம் குறைந்துவிடும்.

* இதய நோயாளிகளுக்கு சிறந்த உணவாகிறது. நரம்பு தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் பழம் மட்டும் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.

* தூக்கத்தில் எழுந்து நடக்கும் இயல்பு டையவர்கள் குணமடைய, இரவில் இரண்டு ஆப்பிள் பழங்களை தண்ணீரில் போட்டு வைத்திருந்து அதி காலையில் இதன் சாற்றை பிழிந்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

* வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும்.

* சரியான உடல் வளர்ச்சியும், சதைப்பிடிப்பும் இல்லா தவர்களும் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஒல்லியான உடல் சீராகப் பருமன் அடையும்.

Read more: http://viduthalai.in/page1/96736.html#ixzz3SfHl41FW

தமிழ் ஓவியா said...

திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாட் டில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சியுரை யாற்றுகையில்:

_ சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சென்னிமலைக்கு வந்து நான் உரையாற்றி யுள்ளேன். அப்பொழுது ஒரு சாமியார் வண்டி மாட்டை மலையில் ஏற்றி மக்களை ஏமாற்றி மூட நம்பிக்கையில் மூழ்க வைத் திருந்தார். விரதம் இருந் தால் தான் மேலே ஏற முடியும் என்று சொல்லி வைத்திருந்தார்.

அதெல் லாம் மூடநம்பிக்கை என்று எங்களது தோழர் பழையகோட்டை இளைய தளபதி கழகத்தின் முதல் பொருளாளர் அர்ச்சுனன் அவர்களின் மகன் சிவக் குமார் மன்றாடியார் அவ ரது மாட்டு வண்டியெல் லாம் கொடுத்து அந்த வண்டியை பழக்கப்படுத்தி நாங்கள் மூடநம்பிக் கையை முறியடித்தோம். இந்த ஊருக்கு எம்.பி. நாச்சிமுத்து என்பவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர்.

முதன் முதலாக வழக்கறிஞர் படிப்பை படித்து வழக்கறிஞராக ஆனார். அப்பொழுது தந்தை பெரியார் அவர் கள் நம்ம இனத்தைச் சேர்ந்த ஒருவர் வழக் கறிஞராக வந்துவிட்டார் என்று மகிழ்ச்சி பொங்க அந்த வழக்கறிஞரை சாரட் வண்டியில் ஏற்றி மிகப் பெரிய ஊர்வலமாக அவரை அழைத்துச் சென்று நிதிமன்ற வாயில் வரை அவருக்கு மரியாதை செய்து இறக்கி விட்டு வந்தார்.

அப்போதெல் லாம் பார்ப்பனர்களே நீதி பதியாகவும், வாக்குரைஞ ராகவும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நம்முடைய இனத்திலி ருந்து வந்த முதல் வழக் கறிஞர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன் பாலச்சந்திரன் அவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார். இன்று காலை தான் அவர் என்னை நேரில் சந்தித்தார்.

அவ ருக்கே இந்த விஷயம் தெரி யாது. நான் அவரிடம் கூறியபோது மிகவும் ஆச் சரியப்பட்டார். பி.ஜே.பி. அரசினுடைய முன்னேற் றம் முன்னேற்றம் என்று சொல்லிக்கொண்டு அய்.டி. ஊழியர்கள் மற்றும் பல்வேறு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு துணைபோவதையும்,

பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்கவில்லை என்று காரணம் கூறி மூட நினைப்பதும் மக்களுக்கு அடிப்படை தேவையான இ.எஸ்.அய். மருத்துவ மனைகளை மூட நினைப் பதையும் போன்ற மோடி அரசின் பிற்போக்கு தனத்தைச் சுட்டிக் காட்டி எழுச்சியுரையாற்றினார்.

அசல் மனுதர்மத்திலுள்ள பல்வேறு கருத்துகளை விளக்கமாக எடுத்துக்கூறி அது நம்மை எப்படி அடிமைப்படுத்துகிறது என்பதைச் சுட்டிக் காட்டினார். மேலும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். (முழு உரை பின்னர் வெளிவரும்)

Read more: http://viduthalai.in/page1/96731.html#ixzz3SfILLHy5