Search This Blog

14.2.15

மோடிக் கப்பல் கவிழ்ந்தது!

மோடிக் கப்பல் கவிழ்ந்தது!அடேயப்பா! எவ்வளவுப் பெரிய ஆர்ப்பாட்டம்! மோடி என்ற புதிய அவதார புருஷனைப் பாரீர்! எத்தகைய அசகாய சூரர் இவர்.

நூற்றாண்டைக் கண்ட காங்கிரசை  நூல் நூலாகப் பிரித்து எடுத்து விட்ட ஜாம்பவான் இவர்!


குஜராத்தை எப்படி எல்லாம் தூக்கி உட்கார வைத்தார். இந்தியாவையும் இமய மலை எவரஸ்டுக்கு மேலும் பறக்க விடுவார் என்று கார்ப்பரேட்டுகளின் கைகளில் உள்ள ஊடகங்களும் ,பார்ப்பனமயமான பத்திரிகைகளும் பராக்குப் பாடினரே!

அந்தப் பட்டம் ஒரு எட்டு மாதத்தில் கிழிந்து தொங்கும் என்று யார்தான் எதிர்ப்பார்த்திருக்க முடியும்?


இந்தியாவின் தலைநகரமான டில்லிக்கு உட்பட்ட ஏழு மக்களவைத் தொகுதி களையும் வென்று வாய்க்குள் போட்ட பா.ஜ.க. - எட்டு மாதத்திற்குள் மூன்றே மூன்று சட்டப் பேரவை இடங்களைக் கைப்பற்றி 67 தொகுதிகளில் மண்ணைக் கவ்வியது என்றால் எளிதில் நம்ப முடியாதுதான். ஆனாலும் என்ன செய்ய! அதுதான் நடந்தது - நடந்தே விட்டது.


இவ்வளவுக்கும் பிரதமர் மோடி அய்ந்து இடங்களில் அடேயப்பா கோடையிடியாக அல்லவா முழங்கினார் அந்தப் பேச்சில் தான் எத்தனை எத்தனை மின்னல் வெட்டுகள்! அக்னிப் புயல்களின் ஆவேச ஆட்டம்!
ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி அலசினாரா? வாக்குறுதிகளை நிறைவேற்றிய பட்டியல் பட்டத்தைப் பறக்க விட்டாரா?அதுதான் இல்லை  வைத்துக் கொண்டா  வஞ்சனை செய்தார் - சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?


அதற்குப் பதிலாக ஆம் ஆத்மி கட்சி யின் தலைவரும் டில்லி முதல் அமைச்சருக் கான வேட்பாளருமான கேஜ்ரிவாலை சும்மா புரட்டிப் புரட்டியடித்தார்!


தனிப்பட்ட முறையில் தாக்குத் தாக்கு என்று தாக்கித் தள்ளினார்.
பந்தை அடிக்க முடியவில்லை என்றால் காலைத் தானே அடிப்பார்கள்? அந்தத் தப்பாட்டத்தைத்தான் பிரதமர் மோடி அழகாகவே ஆடிக்காட்டினார்.
யார் இந்த கெஜ்ரிவால்? அராஜகவாதி, வெற்று ஆர்ப்பாட்டக்காரர், கடைந்தெடுத்த பொய்யர், தீவிரவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் நக்சலைட்டுகளிடம் தஞ்சமாக வேண்டியவர்கள்  - அராஜகம் டில்லிக்கு உரியதல்ல - நாட்டின் தலைநகரம் - மய்யப் பகுதி என்று அடேயப்பா அவர் பேச்சு முழுவதும் அரட்டைக் கச்சேரி யாகவே இருந்தது.
49 நாட்களில் ஆட்சியை விட்டே ஓடியவர்களை வாக்காளர்களே நீங்கள் தண்டிக்க வேண்டும் என்று போர்ப் பாட்டும் பாடினார்.


கெஜ்ரிவாலின் குடும்பத்தைப் பற்றியும் குழந்தைகளையும் கூட விட்டு வைக்க வில்லை; ஏன் அவர் சார்ந்த ஒட்டு மொத்த சமுதாயத்தையும் சாடு சாடு என்று சாடி னார்கள் (வாழ்க அவர்களின் வழியும் தார்மீகப் பண்பாடும்!)
அவர் மட்டுமல்ல; கட்சியின் தலைவர் அசாத்திய சாணக்கியர் என்று அண்டம் குலுங்கப் பிரச்சாரம் செய்யப்படும் அமித்ஷா செய்யாத தந்திரங்களா? சூழ்ச்சிகளா?


மோடியும், அமித்ஷா மட்டுமா? 20 மத்திய அமைச்சர்களும் 120 நாடாளுமன்ற உறுப்பினர்களும் களம் இறக்கப்பட்டனர் - விட்டேனா பார்! நானா நீயா? என்று சவால் விட்டனர்.


இதில் என்ன வேடிக்கை தெரியுமா? டில்லி தேர்தலில் இந்தியாவையே ஆளும் பிஜேபி கட்சி ஒரு தேர்தல் அறிக்கையைக் கூட முன்வைக்கவில்லை! (வாய் நீளத்தைப் பாரு!)


ஆனால், ஆகாயத்திலிருந்து, அதிசய தேவதையாக பாராசூட்டில் குதிக்கச் செய் யப்பட்ட அய்.பி.எஸ் அதிகாரி கிரண்பேடி 35 கேள்விகளை கெஜ்ரிவால் முன் வைத்தார்.  சவாலைச் சந்திக்கத் தயார் என்று வரிந்து கட்டி கெஜ்ரிவால் நின்றதுதான் தாமதம் - பதுங்கி விட்டார் அய்.பி.எஸ். அதிகாரி! - அதையெல்லாம் சட்டசபையில் பேசிக் கொள்வோம் என்று சறுக்கினார். முதல் கோணல்! அந்தோ பரிதாபம், சட்டசபைக்கே அவர் போக முடியவில்லை!.


ஆம் ஆத்மியோ முறையாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. மோடி பாணியில் முண்டா தட்டாமல் மக்கள் பிரச்சினையை  மட்டும் மய்யப்படுத்தி பிரச்சாரப் பெருமழையைப் பெய்தது.


டில்லி தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் அதே கால கட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். சங்பரி வார்கள் தங்களுக்கே உரித்தான ஆபாச - அநாகரிகப் பேச்சுகளை அள்ளிக் கொட் டினர்.


கலை நிகழ்ச்சி நடத்தி வந்த ஒரு பெண்மணி - மத்திய அமைச்சராகவும் ஆக்கப்பட்ட நிலையில், தேர்தல் பிரச்சாரத் தில் பிச்சி உதறினார் பாருங்கள்.


இந்தியாவில் ராமனை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரும் ராமனின் பிள்ளைகள், (ராம் ஜாதி) ராமனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அனைவரும் முறைதவறிப் பிறந்தவர்கள் (ஹராம் ஜாதி) என்ற பொறுக்கி எடுத்த முத்து களை உதிர்த்தார்  மத்திய அமைச்சரான பெண்மணி - சாத்வி நிரஞ்சன் ஜோதி.
விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பி.ஜே.பி.யைச் சேர்ந்த பிராச்சி சாமியாரிணி என்ன பேசினார் தெரியுமா?


இந்துக்கள் நான்கு குழந்தை களைப் பெற வேண்டும் என்று நாட்டு நலனில் அக்கறை கொண்டு பேசிய நமது மூத்த சாதுக்கள் மற்றும் இந்து நலனுக்கு என்றென்றும் பாடுபடும் நமது அரசியல் தலை வர்கள் கூறினால், தேச நலனுக்கு எதிரான சிலர் இந்தக் கூற்றைத் தவறாகச் சித்தரித்து மக்களிடையே பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். இவர்கள் இந்து நலனுக்கு எதிரானவர்கள், இந்து ராஷ்டிரம் அமைவதற்கு முட்டுக்கட்டை போடுப வர்கள் இவர்களால் நமக்கு என்றும் தொல்லைதான்.


ஆனால், லவ்ஜிகாத் (முஸ்லீம்கள்) செய்பவர்கள் 40 குழந்தைகளை நாய் களைப் போல பெற்றுத் தள்ளுகின்றனர் (மிஙிழி லிமிக்ஷிணி 2.2.2015) என்று தேர்தல் நேரத்திலேயே இப்படி திருவாய் மொழிந்த தீரர்கள் இவர்கள்.
பிரதமர் மோடியே தனிப்பட்ட முறையில் முதல்வருக்கான எதிர்க்கட்சி வேட்பாளரை வேண்டும் அளவுக்குத் திட்டித் தீர்த்தார் என்றால் மற்ற அரை வேக்காடுகளைக் குறை கூறி என்னபயன்?


இது ஒரு பக்கம் என்றால்... இன்னொரு பக்கம் கிறித்தவர்களின் தேவாலயங்களை இடிக்கும், எரிக்கும் வேலையும் ஒகோ என்று டில்லியில் நடைபெற ஆரம்பித்தன.


நவம்பர் 22 முதல் டிசம்பர் 3 வரை  டில்லி கிழக்கு தில்சாத் கார்டன்,தாகிர் பூர், கிழக்கு டில்லி தேவாலயம் மற்றும் செயின்ட் செபாஸ்டியன் தேவாலயங்கள் சமூக விரோதிகளால் தீக்கிரையாக்கப்பட்டன.  மாலைஆராதனை நடந்து கொண்டி ருந்த பாத்திமா ஃபொரேன் தேவாலயத்தின் சாளரங்கள் கடந்த டிசம்பர் மாதம் தொடர்ந்து 5 முறை கல்வீசி கண்ணாடி மற்றும் ஜன்னல்கள் நொறுக்கப்பட்டன. இந்தத் தேவாலயம் தெற்கு டில்லியின் பாதுகாப்பு நிறைந்த ஜசோலா பகுதியில் அமைந்திருக்கிறது


மேற்கு டில்லியின் விகாஸ் புரியில் ஒரு தேவாலயம் ஜனவரி 15-ஆம் தேதி தாக்கப் பட்டது. இதற்கும் சற்று முன்பாக ஒரு தேவாலயத்திற்கு வைக்கப்பட்ட தீயில் குழந்தை ஏசுவின் தொட்டில் கருகியது. மேற்கு டில்லியின் ரோகினி என்னு மிடத்தில் இந்தத் தேவாலயம் அமைந் திருக்கிறது. பிப்ரவரி ஒன்றாம்தேதி அதிகாலையில் புனித அல்போன்ஸா தேவாலயத்துக்குள் நுழைந்து கூடாரத்தை உடைத்து இருக் கிறார்கள். பின்னர் பாதிரியாரின் அங்கி மற்றும் திருவிருந்து பாத்திரங்கள் வைக்கப் பட்டிருக்கும் அறைக்குள் பிரவேசித்து அவற்றை சேதப்படுத்தி இருக்கிறார்கள். இந்த சம்பவத்துக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக காட்டிக் கொள்ள, கொள்ளை முயற்சி வழக்கை போலீஸ் போட்டிருக் கிறது. ஆனால், தேவாலயத்தில் இருந்த விலை உயர்ந்த பொருட்களும், காணிக்கை பணமும் கொள்ளை அடிக்கப்படவில்லை. கிறித்தவர்கள் புனிதமாக கருதும் குறி யீடுகள் மட்டுமே கவனமாக சேதப்படுத்தப் பட்டுள்ளன.


ஒரு தேர்தல் நேரத்தில் இப்படி வன்முறை வெறியாட்டம் போடுகிறோமே என்பதைப் பற்றியெல்லாம் அந்தக் கூட்டம் கவலைப்படவில்லை; கிறித்தவர், முசுலிம் களுக்கு எதிராக வன்முறையை ஏவிப் பிரச்சினையை ஏற்படுத்தி - இந்து வாக்கு வங்கி - சிறுபான்மையினர் வாக்கு வங்கி என்று உத்திப் பிரித்து வாக்குகளை வாரிக் கொட்டிக் கொள்ளலாம் எனும் குரூரப் புத்திதான் இது.

 

ஏடுகளின் பித்தலாட்டம்!

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பத்திரி கையாளர்கள், ஊடகங்கள் தெரிவிக்கும் தகவல்கள் எந்த அளவுக்கு நம்பிக்கைத் தன்மை வாய்ந்தவை என்பதற்கு நடந்து முடிந்த டில்லி சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் ஒன்று போதும்; அவை விருப்பு - வெறுப்பு அடிப்படையில் திரிக்கப்படுபவை என்பதை இப்பொழுதாவது பொது மக்கள், வாக்காளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.


5.2.2015 வெளிவந்த ஏடுகளில் வெளி வந்த கருத்துக் கணிப்பு என்ன?


இந்தியா டுடே மற்றும் சிரோ அமைப் புகள் இணைந்து வெளியிட்ட கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மிக்கு 38 முதல் 46 இடங்களிலும், பிஜேபிக்கு 19 முதல் 25 இடங்களிலும் காங்கிரசுக்கு 3 முதல் 7 இடங்களிலும் வெற்றி  வாய்ப்புக் கிட்டும் என்று கூறப்பட்டு இருந்தது; இது ஏடுகளில் வெளி வந்த நாள்: 5.2.2015
மறுநாள் (6.2.2015) வெளிவந்த கருத்துக் கணிப்புகள் தலைகீழாக மாறின.
ஆர்.டி.அய். நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பிஜேபிக்கு வெற்றி வாய்ப்பு என்று வெளியிடப் பட்டது. பிஜேபிக்கு 41 முதல் 45 இடங்களிலும், ஆம் ஆத்மிக்கு 21 முதல் 25 இடங்களிலும், காங்கி ரசுக்கு 4 இடங்களிலும் வெற்றி வாய்ப்பு என்று தெரிவித்தன. முதல் நாள் ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு என்றவுடன் பிஜேபி அதிகார வர்க்கம் தலையிட்டு, இல்லை இல்லை  பிஜேபிக் குத் தான் ஆட்சி அமைக்க வாய்ப்பு என்று கருத்துக் கணிப்பை வெளி யிடச் செய்தது தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.


எல்லாக் கருத்துக் கணிப்பு களையும் குப்புறத்தள்ளி, ஆம் ஆத்மி இதுவரை காணாத வெற் றியை ஈட்டியுள்ளது. கருத்துக் கணிப்பல்ல. கருத்துத் திணிப்பு தான் என்ற நமது கருத்து உறுதியாகி விட்டது. ஆலை முதலாளிகள் கையிலும் (Corporates) உயர்ஜாதி பார்ப்பனர்கள் கையிலும்தான் ஊடகங்கள் முடங்கிக் கிடப்பதால் அவர் களின் ஆசைக்கு ஏற்ப இந்தக் கருத்துத் திணிப்புகள் நடந்து வருகின்றன என்பது தான் உண்மை. என்ன பித்தலாட்டம் செய் தும் பிள்ளை பிழைக்கவில்லை - விளக் கெண்ணெய்க்குக் கேடாகத்தான் முடிந்தது.


மக்களவையில் போதிய எண்ணிக் கையில் காங்கிரஸ் இல்லை என்பதால் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடையாது என்று அரட்டை அடித்த பிஜேபியின் நிலை - டில்லி சட்டமன்றத்தில் என்ன?


பரிதாப கரமான மூன்று சீட்டு முகவரியாக அல்லவா அருகி விட்டது. ஆனாலும் கெஜ்ரிவாலோ மிகுந்த பெருந்தன்மையோடு மூன்று சீட்டு என்றாலும் எதிர்க்கட்சி அந்தஸ்தைத் தரத் தயார் என்று கூறி, பிஜேபியின் முகத் தில் மொத்தமாகக் கரியைப் பூசி விட்டார்.


தேர்தலுக்கு முன்னதாக மோடி அரசின் சாதனைக்கு டில்லி மக்கள் வாக்களிப் பார்கள் என்று வக்கணைப் பேசியவர்கள் படுதோல்வியைச் சந்தித்த நிலையில் டில்லி தேர்தல் முடிவுக்கும் மோடி ஆட்சிக்கும் தொடர்பில்லை; அதுவேறு இது வேறு என்று சினிமா நகைச்சுவை வசனம் போல பிதற்ற ஆரம்பித்து விட்டனர்.


நோயை எந்த அளவுக்கு மறைக் கிறார்களோ, அந்த அளவுக்கு மரணப் படுக்கை அருகில் வருகிறது என்றுதானே பொருள். டில்லி தேர்தல் மட்டுமல்ல; மத்தியில் பிஜேபி அரசு அமைந்த பிறகு தோல்வி முகம் அவர்களை  துரத்திக் கொண்டுதான் இருக்கிறது (பெட்டி செய்தி தனியே காண்க) பத்து ஆண்டு தொடர்ந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்ததால் எதிர் வாக்கு களால் (Anti Incumbency) வெற்றியைப் பறித்தவர்களின் ஆட்டம் எட்டு மாதத்துக் குள்ளேயே அடங்கி விட்ட பரிதாபத்தை என் சொல்ல!


ஆக மோடிக் கப்பல் கவிழ ஆரம்பித்து விட்டது; காப்பாற்ற நினைக்கிறவர்களையும் சேர்த்து அது கடலுக்குள் இழுத்து விடும் - எச்சரிக்கை!


------------------------

பாரப்பா பழனியப்பா - தோல்வி முகத்தை! 


பத்து மாநிலங்களில் 3 மக்களவை, 33 சட்டப்பேரவை  தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.


இதன் முடிவு பாஜகவுக்கு  கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., ராஜஸ்தான், குஜராத்  மாநிலங்களில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில்,  மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த சமாஜ்வாடி, காங் கிரஸ்  கட்சிகள் இடைத்தேர்தலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளன.  மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய  பாஜக,  உத்தரகாண்ட், பீகார்,  மத்தியப் பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா சட்டப்பேரவை  இடைத்தேர்தல்களில் பின்னடைவை சந்தித்தது. உத்தரகாண்டில் 3  தொகுதியிலும் தோற்றது. பீகார், ம.பி., பஞ்சாப், கர்நாடகாவில் 18ல் 8  தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. இந்நிலையில், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 10  மாநிலங்களில் காலியாக உள்ள 3 மக்களவை, 33 சட்டப்பேரவை  தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 13ஆம் தேதி நடந்தது.  உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி  தலைவர் முலாயம் சிங் யாதவ் ராஜினாமா செய்த மெயின்புரி  தொகுதியில் அவரது பேரன் தேஜ் பிரதாப் சிங் யாதவ் 3.21 லட்சம்  வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தெலங்கானாவில் டிஆர்எஸ்  கட்சி தலைவரும் முதல்வருமான சந்திர சேகர ராவ் ராஜினாமா செய்த  மேடக் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட பிரபாகர் ரெட்டி  5,71,800 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். சட்டப்பேரவை  முடிவுகள்: சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும்  பின்னடைவை தந்துள்ளன. 23 தொகுதியில் போட்டியிட்ட பாஜக 13ல்  தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக பொதுத் தேர்தலில், 80 தொகுதிகளில் பெரும்பாலானவற்றை  கைப்பற்றி சாதனை படைத்த உ.பி.யில் படுதோல்வியை சந்தித்துள்ளது.


இங்கு 11 தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் 8 தொகுதிகளை  சமாஜ்வாடி கைப்பற்றி உள்ளது. இதே போல, ராஜஸ்தானில் ஆளும்  பாஜக வசம் இருந்த 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் 3  தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. தெற்கு கோட்டா  தொகுதியை மட்டுமே பாஜக தக்க வைத்துக் கொண்டுள்ளது. மோடியின்  குஜராத் மாநிலத்திலும் காங்கிரஸ் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.  இங்கு இடைத்தேர்தல் நடந்த 9 தொகுதியில் 3ல் காங்கிரஸ் வெற்றி  பெற்றுள்ளது. 6 தொகுதிகளை பாஜக கைப்பற்றி உள்ளது. அசாமில் 3 தொகுதிகளில் ஏஅய்யுடிஎப், பாஜக, காங்கிரஸ் தலா 1  தொகுதிகளை கைப்பற்றி உள்ளன.
இதுதவிர, ஆந்திராவின் நந்திகாமா  தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் சவுமியாவும், திரிபுராவின்  மானு தொகுதியில் மார்க்சிஸ்ட்டின் பிரபாத் சவுத்ரியும் வெற்றி  பெற்றனர்.


ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் 25 தொகுதிகளை கைப்பற்றி 2வது இடத்திற்கு வந்தது. நாடாளுமன்றத்தேர்தல் வாக்குகளை கணக்கில் கொண்டால் இது பாஜகவிற்கு சரிவைக் கொடுத்த தேர்தலாகும். முக்கியமாக நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளில் பாதியைக்கூட காஷ்மீர் பகுதியில் பிடிக்கமுடியவில்லை. இதனைத் தொடர்ந்து 2015 பாரதீய ஜனதாவிற்கு பெரும் சரிவாக பலத்த அடியாக டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இது பிரதமர் ஆன பின்னர் மோடி முதல் முறையாக சந்திக்கும்  படுதோல்வி என்று கருதப்பட்டாலும், காஷ்மீர் மற்றும் ஜார்கண்டில் வாக்குகள் சரிவே தோல்விக்கு அச்சாரமிட்டுவிட்டது  என்று கருதப்படுகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் டில்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா 32 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க முடியவில்லை. தற்போதைய தேர்தலிலோ 3 இடங்களைக் கைப்பற்றுவதற்கே பெரும்பாடாகி விட்டது.


                     ------------------------ மின்சாரம் அவர்கள் 14-02-2015 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

30 comments:

தமிழ் ஓவியா said...

செய்தியும்
சிந்தனையும்

கேவலம்

செய்தி: கோவில் திருட் டைத் தடுக்கக் கோவில் களில் எச்சரிக்கை மணி பொருத்தவேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள் ளதே!

சிந்தனை: கடவுள் சக் தியை இதைவிட வேறு எப்படிக் கேவலப்படுத்த முடியுமாம்?

Read more: http://viduthalai.in/e-paper/96369.html#ixzz3S0kVZ1ch

தமிழ் ஓவியா said...

அடையாளம்

மகன்: காதலர் தினம் என்பதற்கு எதிராக சில இந்து முன்னணி, சிவ சேனா அறிஞர் பெரு மக்கள்? மிக ஆர்வத் துடன் நாய்க்கும், குரங் குக்கும் இப்படி மிருக ஜீவன்களுக்குத் திரு மணம் தடபுடலாக நடத்தி, பத்திரிகையில் விளம்பரம் பெறுகிறார் களே, ஏன் அப்பா? காதலர்களை கேலி செய்யவா இம்முறை?

அப்பா: மகனே, உனக் குத் தெரியாதா? யார் யாரின் நெருங்கிய சொந்தங்களோ, அவர் கள்தான் இம்மாதிரி ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களை செல வழித்து நடத்தி மகிழ்ந் திடுவார்கள்.

அதைத்தான் இந்த சொந்தங்களின் சொந் தங்கள் செய்து தங் களை உலகத்திற்கு அடை யாளம் காட்டிக் கொள் ளுகிறார்கள் மகனே! புரிந்ததா?

Read more: http://viduthalai.in/e-paper/96375.html#ixzz3S0kmN07G

தமிழ் ஓவியா said...

கர்மாவை நம்பினவன் கடைத்தேற மாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான்.
_ (குடிஅரசு, 12.4.1931)

தமிழ் ஓவியா said...

மகிழ்ச்சிபற்றி ஒரு புதுக்கண்ணோட்டம்

அண்மையில் சிங்கப்பூருக்குச் சென்ற குறுகிய கால நான்கு நாள் பயணத்தில், வழக்கமாகச் சென்று புத்தங்களைப் பார்க்கும் கினோ குனியா (kinokuniya) புத்தகக் கடைக்குச் சென்று சில புத்த கங்களை வாங்கிப் படித்தேன்; மகிழ்ந் தேன்.

அதில் ஒரு புத்தகம் மகிழ்ச்சி (Happiness) என்பதாகும்.

நம்மைப் பொறுத்தவரையில் புதிய புத்தகங்களை வாங்குவதும், படிப்பதும், படித்ததை மற்ற நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதுமே மகிழ்ச்சிதான்.

அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை

என்ற புரட்சிக்கவிஞரின் அறிவுரைக் கேற்ப இந்த நூல்கள் நமது மனச் சுமையைக் குறைத்து அல்லது அகற்றி ஒரு புத்துணர்ச்சியை, புத்தாக்கத்தைத் தருவதாக அமைந்துள்ளது என்பது உண்மை.

பயணச் சுமையைக் குறைத்து, துணைவனாக இருப்பது - தனிமையில் பயணிக்கும்போது - இத்தகைய புத்தகங்களே!

ஆஸ்திரேலியாவிலும், அமெரிக் காவிலும், இங்கிலாந்திலும் வெளியிடப் பட்டு, மகிழ்ச்சிபற்றி பல்வேறு தத்துவ அறிஞர்கள் வெளியிட்ட பலதரப்பட்ட கருத்துக்களையும் ஒரு புதிய கோணத் தில் தொகுத்தளித்து ஆய்வு செய்துள்ள இந்நூல், ஒரு நல்ல தொகுப்புக் களஞ்சியம் - சிறு கைப் புத்தகம் ஆகும்.

வில் பக்கிங்காம் என்ற தத்துவ கர்த்தாவும், புதின எழுத்தாளருமான இவர் இந்த அருமையான நூலை எழுதியுள்ளார்.

உலகின் ஆதிகால கிரேக்கத் தத்துவ மேதைகள் தொடங்கி, இந்தியாவின் புத்தர், சீனத்துக் கன்ஃபூஷியஸ், ஸுவாங் சீன, மெனிக்யூயஸ் போன்ற அறிஞர் கள் கருத்தையெல்லாம் வாழ்க்கையில் பரிசோதனைக்குட்படுத்தி, வாழ்வில் மகிழ்ச்சியை வெறும் தத்துவமாகப் பார்க்காமல், படிக்காமல், நடைமுறைக்கு உகந்ததாக்குவதுதான் முக்கியம் என் பதை நன்கு விளக்கியுள்ளார் - இந் நூலாசிரியர் வில் பக்கிங்காம் என்ற தத்துவ சிந்தனையாளர்.

இரு வேறு அணுகுமுறைகள்பற்றிய சிறந்த ஆய்வும் சிந்தனைக்கு விருந் தாக அமைந்துள்ளன.

1. வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தான் பொது விதி. துன்பம் என்பது இடையில் ஏற்படுவது, அதை ஏற்கும் பக்குவம் இன்றியமையாதது - அது விதிவிலக்கு.

மற்றொன்று 2. துன்பம்தான் நம் வாழ்க்கையில் பொது விதி. எப்போதாவது ஏற்படு வதால், மகிழ்ச்சி என்பதுதான் விதிவிலக்கு.

இப்படி இரு மாறுபட்ட அணுகு முறைகளும் அலசி, வாதப் பிரதிவாதங் களோடு ஜெர்மானியத் தத்துவ அறிஞர் களின் கருத்துகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தக்க தரவு களாக மேற்கோள்கள் காட்டப்பட்டுள் ளன.

இன்பம் விழைதல், உயிர்களின் பொது வியற்கை; மனித குலத்தின் ஆறாவது அறிவு அவ்வின்பத்திற்கு அவ்வப்போது புதுப்புது பொருள் கண்டு, கொண்டு, சமூகத்திற்கு வழங்குவதற்குத் தயங்குவதில்லை.

உடல் இன்பத்தால் விளையும் மகிழ்ச்சியை உருவாக்கும் காரண மானதை காமம் என்று வர்ணிக் கின்றனர். சொல்லாடலில் பயன்படுத்து கின்றனர்.

வள்ளுவரின் காமத்துப் பால் என்று முப்பாலில் ஒரு முக்கிய பகுதி அது பற்றித்தானே என்று வாதாடுகின்றனர்.

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதில் உள்ள காமுறுவர் எதைக் குறிக்கிறது?

குறுகிய பொருள் அல்ல காமத்திற்கு.

கைவிடப்படாத, விட முடியாத, நினைத்து நினைத்து மகிழ்ச்சியைப் பெருக்கத்தான் காமுறுதல் என்பதற்கு முழுப் பொருள் என்று கொள்ளலாமே!

உடலுக்கும், உள்ளத்திற்கும் இரண்டுக்கும் மகிழ்ச்சி - உள்ளத்தில் ஊறிய உணர்ச்சிக்கு உடலின் வடிவம் ஏற்படுவதுதானே காமம்?

இப்படி மகிழ்ச்சியை 2500 ஆண்டு களுக்குமுன்பே தோன்றிய தத்துவ ஞானிகளின் பட்டியலில் திரு வள்ளுவரையும் இணைக்கவேண்டும்.

மேலைநாட்டுத் தத்துவ அறிஞர் களில் ஆல்பர்ட் ஷைவட்சர்தான் இதில் பெரும் சாதனை செய்தவர். ஜி.யூ.போப் அவர்களுக்குப் பிறகு.

நம்மில் பலரும் வாய் வீச்சு, எழுத்து வியாபாரத்துடன் நிறுத்திக் கொண் டோம்.

உலக மயமாக்கியிருந்தால் வள்ளு வரும் அந்நூலில் இடம்பெற்றிருப்பாரே என்ற கவலை என்னைத் தாக்கியது!

மற்றவை நாளை!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/e-paper/96380.html#ixzz3S0lUqlXL

தமிழ் ஓவியா said...

மனிதக் கொடுமை


தன் இனத்தையே அடிமைப்படுத்தி அதைக் கொடுமைப்படுத்தி வாழும் கெட்ட குணம் மனித ஜீவனிடத்திலேயே அதிகமாய் இருந்து வருகின்றது.
- (உண்மை, 15.5.1977)

Read more: http://viduthalai.in/page1/96314.html#ixzz3S0oedC7h

தமிழ் ஓவியா said...

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி

வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்தப் பிரச்சினைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் நீங்கும்.

நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் சி யும் இக்கீரையில் உள்ளன. மூலநோய்க்கும் குடல் பிரச்சினைக்கும் இந்தக் கீரை நல்ல மருந்தாகும். மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும்.

சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும்.

நீர்க்கோவை நோய் மிகச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. இக்கீரையைக் கஷாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம்.

கீரையையும், இளந்தண்டு களையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும்.

கீரையைப் போலவே இதன் பழமும் சக்தி வாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங் களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம்.

உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம். நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும்.

மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கின்றன.

Read more: http://viduthalai.in/page1/96342.html#ixzz3S0q1Ph74

தமிழ் ஓவியா said...

மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூ

மருத்துவக் குணமும் மகத்தான நலமும் கொண்டது வாழைப்பூ. ஆனாலும், அது சமையலில் அரிதாகவே இடம்பெறுகிற ஒன்றாக இருக்கிறது. வாழைப்பூவை சமைக்கத் தெரியா தவர்கள் ஒரு பக்கம் என்றால், வாழைப்பூவை ஆய்ந்து, சுத்தப்படுத்தி சமைப்பதற்கு அலுத்துக் கொண்டு அதைத் தவிர்ப்பவர்கள் இன்னொரு பக்கம்.

அறியாமையையும், அலுப்பையும் தவிர்த்து வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களின் வீடுகளில் ஆரோக்கியம் தாண்டவமாடும் என்பதில் சந்தேகமில்லை. வாழைப்பூவின் குணநலன்களை விளக்குவதோடு, அதை வைத்து சூப்பர் உணவுகளையும் செய்து காட்டுகிறார் சஞ்சீவனம் ஆயுர்வேத தெரபி மய்யத்தின் மருத்துவ அதிகாரி விஜயகுமார்.

நமது உணவில் காய்கறிகள் முக்கிய அங்கம் வகிக் கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திய உணவு வகைகளில் எப்போதுமே காய்கறிகள் ஒரு பகுதி யாவது இடம்பெறுகின்றன. பெரும்பாலும் நமது உணவில் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கள் இடம்பெறுகின்றன. காய்கள் சேர்ந்த உணவுக் கலவை அல்லது தொட்டுக்கொள்ளும் ஒரு உணவாக காய்கறி இடம்பெறுகிறது.

சில காய்கறிகள் பொதுவாக நமது உணவில் வழக்கமாக தினசரி இடம் பெறுகின்றன. சில காய்கறிகள் பொதுவாக சமைக்கப் படுவதே கிடையாது. வாழைப்பூ, பெரும்பாலான வீடுகளில் விரும்பப்படும் உணவாகும்.

இருப்பினும் மற்ற காய்கறி களான கேரட், முட்டை கோஸ், பீட்ரூட், பாகற்காய் உள்ளிட்ட காய்களைப் போல இது பயன்படுத்தப் படுவதில்லை. வாழைப்பூவில் என்ன சமைப்பது என்று பலருக்குத் தெரியாததுதான் காரணமாகும். சமையல் பயன் பாட்டுக்கு அப்பால், உணவு வகைகள் சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டதாகவும் திகழ்கின்றன.

வாழைப் பூவில் சில உணவு வகைகள் தயாரிக்கத் தெரிந்து கொள் வதற்கு முன்பாக வாழைப்பூவில் உள்ள உடலுக்கு நன்மை தரும் விஷயங்களை தெரிந்து கொள்வோம்.ஆயுர்வேத மருத்துவத்தில் பல காய்கறிகள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும், அவற்றில் முதன்மையானதாக கதலி எனப்படும் வாழைப்பூ முக்கிய இடம் பிடித்துள்ளது.

இதில் உள்ள நன்மை தரும் விஷயங்களால் இதை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வாழைப்பூவில் அதிக காரம் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் பயனளிக்கக் கூடியது.

வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். ஆயுர்வேதத்தில் இது பித்த சம்ஹா (உடலில் பித்தத்தைத் தணிக்கும் குணம் கொண்டது) எனப்படுகிறது.

இதை உரிய வகையில் சமைத்து சாப்பிடும்போது வெப்பத்தால் ஏற்படும் பலவித நோய்களை - அதாவது, சிறுநீரகம் சார்ந்த நோய்கள், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உள்ளிட்ட வற்றைக் குணப்படுத்த உதவுகிறது.

Read more: http://viduthalai.in/page1/96340.html#ixzz3S0qDtxzz

தமிழ் ஓவியா said...

மே நரேந்திர மோடி போல்த்தா ஹூம்

எரிவாயு உருளை விசயத்தில் ஏற்கெனவே ஏகப்பட்ட தேவையற்ற அலைச்சல் உள்ள இந்த காலகட்டத்தில் எரிவாயு உருளை தேவைக்காக பதிவு செய்ய எங்கள் மடிப் பாக்கம் பகுதிக்கு தானி யங்கி சேவைக்காக இயங் குகின்ற கைப்பேசி எண் ணுக்கு தொடர்பு கொண்ட போது முன் எப்போதும் என்னுடன் தொடர்பில் இல்லாத ஒரு குரலைக் கேட்டேன். படபடப்பாக தவறுதலாக வேறு எண் ணுக்குப் போட்டு விட் டோமோ என்று மீண்டும் தானியங்கிச் சேவை எண்ணைச் சரிபார்த்தேன்.

சரியாகத் தானிருந்தது. மீண்டும் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டேன். திரும்பவும் அதே குரல். இப்போது தெளிவாகக் கேட்டேன். மே நரேந்திர மோடி போல்த்தா ஹீம் என்று தொடங்கி 30 வினாடிகளுக்கும் மேலாக என்னிடம் பிரதமர் ஹிந்தி யில் பேசினார். நான் புரி யாமல் கேட்டுக் கொண்டி ருந்தேன். அதன் பிறகு 24 மணி நேர தானியங்கிச் சேவை என்னை தமிழில் வரவேற்றது. அப்பாடா என்று நிம்மதியாக பெரு மூச்சு விட்டுக்கொண்டே என்னுடைய எரிவாயு உரு ளைக்கான எண்ணைப் பதிவு செய்தேன்.

- இசையின்பன், சென்னை-91

மேற்கண்ட தகவல் களை தோழர் ஒருவர் தெரிவித்துள்ளார். எரிவாயு உருளை தேவைக்காகப் பதிவு செய்யும் அலுவலகத் தில் நரேந்திர மோடி எங்கு வந்தார்? அவர்தான் இந்த நிறுவனத்தின் முதலாளியா? அப்படியென்றால் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசி யமாகிறது. இந்தி பேசாத ஒரு மாநிலத்தில் இந்தியா வின் பிரதமர் ஒருவர் வாடிக்கையாளரகளுடன் வாடிக்கையாளர் செலவில் 30 வினாடிகள் பேசுகிறாராம்.

மத்தியில் உள்ள ஓர் ஆட்சி அதிகாரத்தை அலங்கோலப்படுத்தி வரு கிறது என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?

இன்னொரு வகையில் பார்த்தால் இந்தித் திணிப் பின் இன்னொரு வடிவம் தானே இது? இப்படியெல் லாம் இந்தியைத் திணித்து விட முடியுமா? இது எதிர் விளைவைத் தான் ஏற் படுத்தும் என்கிற அடிப் படை அறிவுகூடவில்லையே! பிஜேபி தலைமையில் உள்ள மத்திய அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டதாகவே தெரிகிறது.

வேறு எந்த மாநிலத்தில் தன் விளையாட்டைப் போட்டுக் காட்டுவதற்கும், தமிழ்நாட்டில் மொழி அகங்காரத்தின் வாலை நுழைப்பதற்கும் அடிப் படையில் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.

சிங்கத்தின் வாலை மிதித்துப் பார்ப்பதோ, எரிமலையின் மேல் பட்டு விரித்துப் படுப்பதோ ஆபத்தை ஆசையோடு அரவணைப்பதற்கு ஒப் பாகும். 30 வினாடி பேசினா லும் சரி 30 மணி நேரம் பேசினாலும் சரி அது யாருக்குப் புரியப் போகிறது என்கிற அடிப்படை அறிவு வேண்டாமா?

இனிய செந்தமிழ் மொழி வீழ்தல் - ஹிந்தி
எனுமொரு வடமொழி எதிர்ப்பின்றி வாழ்தல்
அநியாய மிவை யன்றோ? தமிழா! உன்
ஆண்மையும் ரோஷ மும் அழிந்ததோ தமிழா!

இது 1938ஆம் ஆண் டிலேயே தமிழ் மண்ணில் எழுந்த போர்ப் பாட்டு (பாடல் ஆசிரியர்: சித்த மல்லி அ. சிதம்பரநாத பாவலர்) மீண்டும் கிளரும் போர் -எச்சரிக்கை!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/96192.html#ixzz3S0spojcN

தமிழ் ஓவியா said...

கவுரவம்

அண்ணன் இராவ ணனை காட்டிக் கொடுத்த தற்காக அவன் தம்பி விபீ டணனை ஆழ்வார் என்று பட்டம் கொடுப்பதன் மூலம் இந்து இதிகாசமான இராமாயணம் காட்டிக் கொடுப்பதைக் கவுரவப்ப டுத்துகிறது என்று தானே கருத வேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/96201.html#ixzz3S0t0VzhE

தமிழ் ஓவியா said...

பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது. - (விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...

சமதர்மம் என்றால் சாதாரணமாகப் பாரபட்சமற்ற நீதி, சமத்துவம், பேதமற்ற அதாவது உயர்வு தாழ்வு இல்லாத நிலை என்பதாகும். ஆனால், இன்றைய வாழ்க்கை யில் ஒவ்வொரு அம்சத்திலும் அதாவது ஜாதியில், கல்வியில், செல்வத்தில், வாழ்க்கை அந்தஸ்து நிலையில் மேல் கீழ் நிலை இருந்து வருகிறது. இவற்றை ஒழித்து யாவற்றிலும் சமத்துவத்தை நிறுவுவதற்குச் சமதர்மக் கொள்கை ஆட்சி அவசியம்.-

தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page1/96216.html#ixzz3S0uCpqxi

தமிழ் ஓவியா said...

சௌந்திரபாண்டியன் வெற்றி

சமீபத்தில் நடைபெற்ற மதுரை ஜில்லா போர்டு தேர்தலில் நமதியக்கத்தோழர் சௌந்திர பாண்டியன் அவர்கள் பெரு வாரியான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதறிய அளவிலா மகிழ்ச்சியடைகிறோம்.

பொது ஜன சேவையில் ஆர்வமும், ஊக்கமும், செல்வாக்குமுள்ளவர் பலர் வெளியே தங்கி விடுவதும், தன்னலமும், வைதிகப்பித்தும் கொண்ட சிலர் அங்கம் பெற்று பொதுநலத்தொண்டை அறவே மறந்து சுயநலமே கருத்திருத்தி பணியாற்றுவதும் இப்போதைய ஸ்தலஸ்தாபனங்களின் இயற்கையாய் போய் விட்டது.

நமது தோழர் சௌந்திரபாண்டியன் அவர்கள் முன்னர் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராய் இருந்து ஆற்றி வந்த பொது நல சேவையையும், தாழ்த்தப்பட்டார் விஷயத்தில் காட்டி வந்த அனுதாபமும், வெறும் ஏட்டுச் சுரைக்காயாய் போய் விடாமல் அவைகளைச் சட்ட மூலமாய் அமலுக்குக் கொண்டுவருவான்வேண்டி எடுத்துக் கொண்ட பெரு முயற்சிகளும், தமிழ் நாட்டார் இதற்குள்ளாக மறந்திருக்க மாட்டார் களென்றே நம்புகிறோம்.

பொதுவாக மதுரை ஜில்லா வாசிகளும், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரும் தங்கள் தங்கள் நன்மைக்காக கடைசி வரை வாதாட ஒரு உண்மையும், ஊக்கமும், உறுதியும் கொண்ட இத்தகைய ஒரு அக்கத்தினரை பெற்ற பெருமைக்கு உரித்தவர்களென்றே எண்ணுகிறோம். வெற்றி பெற்ற நமதியக்கத் தோழர் சௌந்திரபாண்டியன் அவர்களுக்கு நமது மகிழ்ச்சியுரியதாகுக.

குடிஅரசு - துணைத்தலையங்கம் 07.08.1932

Read more: http://viduthalai.in/page1/96218.html#ixzz3S0uQQU3h

தமிழ் ஓவியா said...

மீண்டும் கார்ப்பொரேஷனில் இந்து மதம்

சென்ற 19.10.32 சென்னைக் கார்ப்பொரேஷனில் நடந்த கூட்டத்தில், ஜார்ஜ் டவுன் சொர்ணவிநாயகர் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள 537 சதுர அடி நிலத்தை அக்கோயிலுக்கு விட்டுவிடுமாறு ஒரு அவசரத்தீர்மானம் பிரரேபிக்கப்பட்டு ஆமோதிக்கப்பட்டது. ஒரு கனவான் இது அவசரமான விஷயமல்லவென்றும், ஆகையால் இவ்விஷயத்தை தீர்க்க ஒரு கமிட்டி நியமிக்க வேண்டுமென்றும் கூறினார்.

மற்றொரு கனவான், அந்தக் கோயிலிலும், அதற்கு விடும் நிலத்திலும் தீண்டாதார்க்கு உரிமையுண்டா என்று கேட்டார். இவைகளுக்குச் சரியான சமாதானம் கூறப்படாமல், முதலில் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகரசபைக்குச் சொந்தமான சொத்துக்கள் நகர மக்களுக்கும் பொதுவான சொத்துக்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே நகரசபைச் சொத்துக்களைச் செலவு செய்யும்போது, அவை நகர மக்கள் அனைவருக்கும் உபயோகப்படக்கூடிய முறையிலேயே செலவு செய்யப் படவேண்டும் என்பதை எவரும் ஒப்புக்கொள்ளுவார்கள்.

ஆகவே, நகரசபைக்குச் சொந்தமான ஒரு பொது நிலத்தை, ஒரு மதத்தார்க்கே, அதிலும் சில ஜாதியார்க்கே உபயோகமாக இருக்கும் ஒரு கோயிலுக்கு விட்டதனால் நகர மக்களுக்கு என்ன பிரயோஜனமென்று கேட்கின் றோம்.

முன்பு நகரசபை சங்கராச்சாரியாருக்கு வரவேற்பு அளிக்கத் தீர்மானித்ததையும், இப்பொழுது பொதுஜன உபயோகத்திற்குப் பயன்படுத்த வசதியுள்ள 537 சதுர அடியுள்ள நிலத்தை ஒரு பிள்ளையார் கோவிலுக்குச் சொந்தமாக்கிய தீர்மானத்தையும் பார்க்கும்போது, நகரசபை, பொதுஜன நன்மைக்காக ஏற்பட்டதா? அல்லது இந்துமதப் பாதுகாப்புக்காக ஏற்பட்டதா? என்ற சந்தேகம், அந்நிய மதக்காரர்களுக்கு உண்டாகாமற் போகாது.

இம்மாதிரியே நகர சபை இந்து மதத்திற்குப் பாதுகாப்பும் அளித்துக்கொண்டே போவதைப் பொது ஜனங்கள் கண்டிக்க முற்படுவது எவ்வகையிலும் குற்றமாகாதென்றே கருதுகின்றோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 23.10.1932

Read more: http://viduthalai.in/page1/96221.html#ixzz3S0uXJzxl

தமிழ் ஓவியா said...

ஒருவன் பூணூல் போட்டுக்கொண்டு, நெற்றிக் குறி இட்டுக் கொண்டு, அவன் தாயார் மொட்டை அடித்து முக்காடு போட்டுக் கொண்டு, அவன் மனைவி கோவணம் போட்டு சேலை கட்டிக் கொண்டு இருக்க உங்களிடம் வந்து நான் பொதுஉடைமைவாதி, அதுவும் இடதுசாரிக் கம்யூனிஸ்ட் என்று சொன்னால்,

அதை நீங்கள் நம்பினால் நீங்கள் எவ்வளவு தூரம் முட்டாள்கள் ஆவீர்களோ அதேபோல்தான் நெற்றிக் குறியுடன் இராமாயணம், பாரதம், தேவாரம், பிரபந்தங்களைப் படித்துக்கொண்டு பாராயணம் செய்துகொண்டு பூசை புனஸ்காரங்களுடன் திரிகின்றவனைச் சமதர்மவாதி என்று நம்புவதாலும் ஆவீர்கள்.

- தந்தை பெரியார் பொன்மொழிகள்

Read more: http://viduthalai.in/page1/96221.html#ixzz3S0udr5YH

தமிழ் ஓவியா said...

பிற்படுத்தப்பட்டோரின் கவனத்துக்கு...

யுஜிசி என அழைக்கப்படும் பல்க லைக்கழக மானியக் குழுவானது ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள் ளிட்ட சிறுபான்மையினர், பெண்கள் உள் ளிட்டோருக்குப் பல்வேறு விதமான கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. தற்போது, முதல்முறையாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ -மாணவிகளுக்குப் புதிய கல்வி உதவித் தொகை திட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

எம்.ஃபில். பிஎச்.டி. (முனைவர் பட்டம்) படிப்பதற்கு இந்த உதவித் தொகை கிடைக்கும். கலை, சமூக அறிவியல், அறிவியல், பொறியியல், தொழில் நுட்பம் ஆகிய படிப்புகளுக்கு உதவித் தொகை பெறலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

(விண்ணப்பதாரர்கள் யுஜிசி அல்லது அறிவியல் மற்றும் தெழில்நுட்ப அமைச் சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அறிவி யல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி (சிஎஸ்அய்ஆர்) நிறுவனத்தின் ஜெஆர் எஃப் உதவித்தொகை பெறக்கூடாது என்பது ஒரு நிபந்தனை). ஆண்டு தோறும் 300 ஓபிசி மாணவர்களுக்கு உதவித் தொகை களை வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது. இதில் 3 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப் பட்டிருக்கிறது.

தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம் கிடைக்கும். அத்துடன் எதிர்பாராத செல வுக்காக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரமும் (கலை படிப்புகள்), ரூ.12 ஆயிரமும் (அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம்) வழங்கப்படும்.

இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்பு கல்வி செயல்பாடுகள் திருப்தியாக இருக் கும் பட்சத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.28 ஆயிரம் கிடைக்கும். அதோடு எதிர்பாராத செலவினங்களுக் காகக் கலைப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,500-ம், அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

இந்த உதவித்தொகை விண்ணப்ப தாரரின் வங்கிக்கணக்குக்கு ஆன்லைனில் நேரடியாக (E- payment) வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வி ஆண்டின் உதவித்தொகையைப் பெறுவ தற்கு வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதிக் குள் ஆன்லைனில் (www.ugc.ac.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

ஓ.பி.சி. வகுப்பினர் யார்?

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர் களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் இருக்கும் நபர்கள் ஓ.பி.சி பிரிவின் கீழ் வருவார்கள். பி.சி, எம்.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்தைத் தாண்டிவிட்டால் அவர்கள் ஓ.பி.சி. வகுப் பினராகக் கருதப்பட மாட்டார்கள். ஓபிசி வகுப்பினருக்கான சான்றிதழைத் தாசில்தார் வழங்குவார். இதற்கு உரிய படிவத்தில், தேவையான ஆவணங் களுடன் கிராம நிர்வாக அதிகாரி, வரு வாய் ஆய்வாளர் மூலமாக விண்ணப் பிக்க வேண்டும்.

(தி இந்து 3.2.2015 இணைப்பு பக்கம் 1)

Read more: http://viduthalai.in/page-1/96222.html#ixzz3S0xHmjRx

தமிழ் ஓவியா said...

சென்னைத் தலைமைச் செயற்குழுவில்
கழகத் தலைவர் தெரிவித்த கருத்துகள் (சென்னை 12.2.2015)

1) கழகத் தலைவர் கலந்து கொள்ளும் ஊர்களில் கட்டாயம் மண்டலம் / மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்.

2) ஒப்படைக்கப்பட்ட நன்கொடைப் புத்தகங்களை கணக்குகளுடன் ஒப்படைக்க வேண்டும் என்று விடுதலையில் அறிவிப்பு வருவது உகந்ததல்ல - அந்த அளவிற்கு பொறுப்பாளர்கள் நடந்து காட்டவேண்டும்.

3) 2015 ஏப்ரல் 28, 29 நாட்களில் (மாலை 5 மணிக்கு) சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு மாநாடு பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து மீட்டுருவாக்கம் - கருத் தரங்கம்; மொழிப்போர் வீரர்களுக்கும் படத் திறப்புகள்; நுழைவுக்கட்டணமும் உண்டு. இனி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நன்கொடையாக இருந்தாலும் பெரியார் உலகத்திற்கே!

4) பெரியார் உலகம் தொடர்பான பணிகளும், கழகத் பிரச்சாரத் தொடர்பான பணிகளும் தங்குத் தடை யின்றி இணைந்தே நடைபெறவேண்டும்.

5) இளைஞரணி - மாணவரணி மகளிர் அணிகள் விரிவாக்கம். மகளிர் அணி - 30 வயதுக்கு மேல்; மகளிர் பாசறை - 30 வயதுக்குள்
(மாணவரணி, இளைஞரணிக்கும் இது பொருந்தும்)

6) இளைஞரணி - மாணவரணி மாநாடு - ஆகஸ்டில் (பெரியார் சமூகக்காப்பு அணியும் இணைந்தது) நடைபெறும்.

இளைஞரணி - மாணவரணி அமைப்புக்குழு பொதுச்செயலாளர்கள்:

1) வீ.அன்புராஜ், 2) டாக்டர் துரை. சந்திரசேகரன், 3) தஞ்சை இரா.ஜெயக்குமார், 4) உரத்தநாடு இரா.குணசேகரன், 5) மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், 6) இளை ஞரணிச் செயலாளர் இல.திருப்பதி, 7) இளந்திரையன், 8) ஒருங்கிணைப்பாளர் முனைவர் செயக்குமார் - கடலூர்.

7) மகளிர்அணி ஒருங்கிணைப்பு: 1) கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, 2) பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, 3) மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணியம்மை 4) உமா செல்வராசு

8) தலைமைக் கழகத்தினர் சம்பந்தப்பட்ட மாவட்டங் களில் இயக்கப்பணிகளுக்கும், செயல்பாட்டுக்கும் பொறுப்பாளர்கள் ஆவர். மாவட்டப் பொறுப்பாளர்களோடு தொடர்பிலேயே இருக்க வேண்டும். தலைமைச்செயற்குழுவுக்கு வரும்போது திட்டங் களோடும், கருத்துக்களுடனும் வருதல் வேண்டும். அவற்றை முறைப்படுத்தி செயல்படுத்தவும் வேண்டும்.

9) மாவட்டத்திற்கு இரு இளைஞர்கள் / மாணவர்களை தேர்வு செய்து சிறப்பான பயிற்சி (INTENSIVE TRAINING) களப்பணி - மாணவர்கள், இளைஞர்கள் சேர்க்கை, ஊடக விவாதங்களில் பங்கேற்பு உள்ளிட்ட துல்லியமான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கருத்துருகளை கழகத் தலைவர் கழகத் தலைமைச் செயற் குழுவில் அறிவித்தார்.

Read more: http://viduthalai.in/page1/96136.html#ixzz3S0y93I52

தமிழ் ஓவியா said...

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்து அய்.நா. விசாரணை நடத்த வேண்டும் என்ற இலங்கை வடகிழக்கு மாகாண அரசின் தீர்மானம் வரவேற்கத்தக்கதே!

இந்திய நாடாளுமன்றத்திலும் இத்தகைய தீர்மானம் கொண்டு வரப்பட
தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

டில்லி தேர்தல் முடிவுகள்

ஈழத்தில் வடகிழக்கு மாகாண அரசு ஒரு முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றியுள் ளது. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து அய்.நா. விசாரணை நடத்திட வேண்டும் என்று நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்கத் தக்கது என்றும். இதனை வலியுறுத்தும் வகை யிலும், அழுத்தம் கொடுக்கும் தன்மையிலும் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட, தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் இராஜபக்சே தலைமை ஆட்சி ஒழிந்த நிலையில், பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற மைத்திரி பாலசிறீசேனாவின், தலைமையில் அமைந்துள்ள புதிய ஆட்சி, (இதுவும் சிங்களப் பெரும்பான் மையை வைத்துள்ள ஒரு ஆட்சி என்ற போதிலும்) இராஜபக்சே அணுகுமுறைக்கு விடை கொடுத்தால் ஒழிய, உலகத்தார் கண்முன் சீரிய ஆட்சியாகத் திகழ வாய்ப்பில்லை என்பதாலும், பொது மரியாதை கிடைக்காது என்ற தன்மையாலும், தமிழர்களின் வாக்குகளைப் பெற்றே ஆட்சிக்கு வந்துள்ளோம் - அவர்களின் ஒத்துழைப்பும், நல் லெண்ணமும் ஆட்சிக்குத் தேவை என்பதாலும், தமிழ் நாட்டு மக்களின் உணர்வை ஓரளவு புரிந்து கொண்ட தாலும், இவற்றைப் புரிந்து கொண்டு ஆட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இதுவரை எதிர்பார்த்ததற்கு சற்று மேலாக, பழைய கள் புது மொந்தை என்பது போல் அல்லாது, பல்வேறு வரவேற்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தமிழ் ஓவியா said...

புதிய அரசின் செயல்பாடுகள்

1. வடகிழக்கு மாகாண ஆளுநரை மாற்றியது.

2. அங்கே உள்ள இராணுவத்தைத் திரும்ப அழைத்திடும் பல்வேறு நடவடிக்கைகள்.

3. சிங்களர், குடியேற்றப் பகுதிகளை மீண்டும் தமிழர் பகுதியாக்கிட, மீள் குடியேற்ற நடைமுறைத் திட்டங் களை வகுத்து, தமிழர்களுக்குரிய உரிமைகளை மீட்டுத் தரும் நடவடிக்கை.

4. முந்தைய ஒப்பந்தத்தில் உள்ள 13ஆவது பகுதி (அதனால் பெரும் அளவுக்கு லாபமில்லை என்றாலும்) கொஞ்சம் பரவாயில்லை என்ற வகையில் அரசியல் தீர்வுக்கு வழி வகை செய்தல்.

5. இராஜபக்சேவின் ஜால்ரா தலைமை நீதிபதியை மாற்றி அதற்குப் பதில் திறமை மிக்க ஒருவரை அமர்த்தி யுள்ளமை.

இவை எல்லாம் மிகப் பெரும் காயம்பட்ட நிலையில் முதலுதவிபோல, முன் சிகிச்சை போன்ற ஓரளவு திருப்தி தரும் புதிய அரசின் நடவடிக்கைகளாகும்.

தமிழக மீனவர்களின் படகுகள் மீட்பு

இவை அல்லாமல் -

1. தமிழக மீனவர்களிடமிருந்து அடாவடித்தனமாக இராஜபக்சே ஆட்சியினால் பறிக்கப்பட்ட 87 படகுகளை - சுப்ரமணியசாமி போன்ற அரசியல் தரகர்களின் விஷம ஆலோசனைகளை ஏற்று, இலங்கை மண்ணில் முடக்கி வைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்ததை மாற்றி, அவர்களுக்குத் திருப்பி தரும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதானது - நல்லெண்ண நடவடிக்கைகளாகும்.

வடகிழக்கு மாகாண முதல் அமைச்சர் திரு. விக்னேசுவரன் தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம் முக்கியமானது; இலங்கையில் நடைபெற்றது - அப்பட்டமான இன அழிப்புப் படுகொலையே! (Genocide) அய்.நா. வெளியிலிருந்து சுதந்தரமானவர்களை வைத்து அதை விசாரணை செய்து, குற்றவாளி இராஜபக்சேயையும் அவரது கூட்டத்தினையும் தண்டிக்க வேண்டும் என்ற கருத் தமைந்த வடகிழக்கு மாகாண அரசின் தீர்மானம் - அனைத்து மக்களாலும் வரவேற்றுப் பாராட்டக் கூடியது ஆகும்!

மனித உரிமைப் பறிப்பு - அய்.நா. சாசனத்திற்கு முரணானது.

இதை திராவிடர் கழகமும், டெசோ அமைப்பும், பற்பல ஆண்டுகளாக வற்புறுத்தி வருகின்றன.

உலக நாடுகளின் ஆதரவைப் பெறும் தீர்மானம்

அ.ய்.நா. அமைத்த போர்க் குற்ற விசாரணை அறிக்கை யில் கூறப்பட்ட கருத்துக்களை நடுநிலையோடு ஆராய்ந் தால், நிமீஸீஷீநீவீபீமீ என்ற இன அழிவுப் படுகொலைக்கான அத்தனை சம்பவங்களும் நடந்தன என்பது எளிதாக விளங்குமே!

திரு விக்னேசுவரன் அரசின் தீர்மானம் உலக நாடு களின் ஆதரவை - நியாய உணர்வு - மனித உரிமை அடிப்படையில் பெற்றே தீரும் என்பது உறுதி.

இவையெல்லாவற்றினும் மேலாக இந்திய அரசு - பிரதமர் மோடி தலைமையில் உள்ள அரசு, இலங்கையில் நடைபெற்றது அப்பட்டமான இன அழிப்புப் படுகொலை என்பதை வலியுறுத்தி, இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு தனித் தீர்மானமே கொண்டு வர முன்வர வேண்டும்.

இனப்படுகொலை குறித்து அய்.நா.வின் சுதந்திரமான விசாரணை தேவை!

வருகிற தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் இப்படி ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவும், விக்னேசுவரன் அரசின் தீர்மானத்தின் கருத்தை ஆதாரமாக்கி, தமிழர் இனப்படுகொலைபற்றி அய்.நா.வின் சுதந்திரமான ஒரு விசாரணைக் குழு நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

அத்துணைக் கட்சிகளும், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி, ஒரு மனதாக ஒருமித்த குரலில் ஆதரவு கொடுத்து வரலாற்றில் இனி எங்கும் இப்படிப்பட்ட மனித இனப்படுகொலை தலை தூக்கக் கூடாது என்று நிலையை உருவாக்கிட அது பெரிதும் உதவும் என்பது உறுதி.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
13-2-2015

Read more: http://viduthalai.in/page1/96130.html#ixzz3S0yGyZew

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

தோஷம் விலக

ராகு கேதுகள் தோஷம் விலக திருநாகேஸ்வரம் கீழப் பெரும் பள்ளம், காளகஸ்தி போன்ற ஆலயங்களுக்குச் சென்று பூஜை செய்து விரதம் இருப்பது நன்மை தருமாம்.
ராகு,கேதுகள் என்று கிரகங்களே கிடையாது என்று வானியல் விஞ்ஞா னம் கூறுகிறதே - இதி லிருந்து இவை எல்லாம் வெறும் கற்பனைகள், அசல் மூடநம்பிக்கைகள் என்று தெரியவில்லையா?

Read more: http://viduthalai.in/page1/96133.html#ixzz3S0yPdJvL

தமிழ் ஓவியா said...

உங்களுக்கு தெரியுமா?

-தந்தை பெரியார்

சூத்திரன் பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு தவம் செய்யாமல் கடவுளை நினைத்துத் தவம் செய்வதற்காக, ராமன் சம்புகன் என்ற சூத்திரனைச் சித்திரவதை செய்து கொன்றான். அதாவது சூத்திரனுக்கு (திராவிடனுக்கு) கடவுள் பார்ப்பான்தான். பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு வணங்காதவனைப் பார்ப்பான் அரசன் கொல்ல வேண்டும். இது இராமாயண தர்மம் மாத்திரமல்லாமல் மனுதர்மமுமாகும். எனவே இராமாயணம் இருக்க வேண்டுமா?

**************
பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய நான்கு ஜாதிகளை நான் படைத்தேன் என்றும், பிராமணனுக்குச் சூத்திரன் அடிமைப்பணி செய்ய வேண்டும்; செய்யாவிட்டால் நரகத்தில் புக வேண்டும் என்பதாகவும் பாரதத்தில் (கீதையில்) கிருஷ்ணன் சொல்லி இருக்கிறான். எனவே பாரதம் இருக்க வேண்டுமா?

**************

சூத்திரன் என்பவன் தாசி புத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன். இதுதான் மனுதர்மம்; மனுதர்ம மாத்திரமல்ல, இந்து லாவும் இப்படித்தான் சொல்லுகிறது.

Read more: http://viduthalai.in/page1/96149.html#ixzz3S10MOE7L

தமிழ் ஓவியா said...

அறிவியல்

23.1.1938 அன்று ஆயக்கவுண்டன் பாளையத்தில் கூடிய மாநாட்டில் தந்தை பெரியார் குறிப்பிட்டதாவது:-

மக்கள் பிறப்பது கூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனி குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டுகள் வாழ முடியும். யாரும் சராசரி ஒன்று, இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள். ஆண் - பெண் புணர்ச்சிக்கும், பிள்ளை பேறுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.

வேலை செய்கிற குதிரைகள் வேறு. குட்டி போடுகிற, போடச் செய்கிற குதிரை வேறு என்கிற மாதிரி மனித சமூகத்தில் இருக்கும். பிள்ளைப் பெறும் தொல்லை, வளர்க்கும் தொல்லை, அதற்குச் சொத்து சுகம் தேடும் தொல்லை ஒழிந்து போகும் என்கிற நம்பிக்கை உண்டு.

- குடிஅரசு, 30.1.1938

Read more: http://viduthalai.in/page1/96150.html#ixzz3S10hClsX

தமிழ் ஓவியா said...

வேடிக்கை வாதம் போலி சயின்ஸ்

சுயமரியாதைக்காரர்.: மாட்டுச் சாணியை உருட்டி கொளுக்கட்டை போல் ஆக்கி சாமியாக வைத்துக் கும்பிடுகிறார்களே இதன் காரணம் என்ன? அந்தச் சாணி நாற்றமடிப்பதில்லை என்கின்ற காரணம் தானே?

பார்ப்பான்: ஓய் உமக்கென்னங்காணும் தெரியும்? பசுஞ்சாணியில் ஜர்ம்ஸ் (பூச்சி)களைக் கொல்லும் சக்தி இருக்கிறது ஓய்.

சு.ம.: இது எந்த டாக்டர் சொன்னார் உமக்கு? அல்லது இது எதிலிருக்கிறது?

பார்ப்பான்: ஓய், ஓய், இந்தக் காலத்து டாக்டர்களை யெல்லாம் விட, இந்தக் காலத்து சைன்ஸ் புத்தகங்களை யெல்லாம் விட, அந்தக்காலத்துப் பெரியவாளும், சாஸ்திரங்களும் எவ்வளவோ மேலானது. தெரியுமா? இதற்கெல்லாம் ஆதாரம் கேட்காதேயும், இப்படிக் கேட்டவர் வெகு பேருக்கு வாய் புளுத்துப் போய்விட்டது.

சு.ம.: ஓ! ஓ! அப்படியா? பகுத்தறிவில்லாத மாட்டுச் சாணிக்கே ஜர்ம்சைக் கொல்லுகிற சக்தி இருந்தால் அதை விட உயர்ந்த பிறவியான பகுத்தறிவுள்ள மனுஷன் சாணிக்கு இன்னமும் என்ன என்னமோ சக்தி இருக்கலாமே: பின்னை அதை...

பார்ப்பான்: சீச்சீ, நீர் என்ன? சுயமரியாதைக் காரராக்கும். உம்மிடம் யார் பேசுவார்?
(குடிஅரசு 20.11.1943)

Read more: http://viduthalai.in/page1/96151.html#ixzz3S10oAeZb

தமிழ் ஓவியா said...

கே.எம்.பணிக்கர் கூற்று!

ஜாதி உணர்ச்சி பற்றி குற்றம் சாட்டும் பெரும்பாலோர் ஜாதிகளின் பிரதிநிதிகளாகவே இருந்தவர்கள்!

ஒரு காலத்தில் அவர்கள் தங்கள் பகுதிகளில் அரசியல் ஆதிக்கத்தை ஏக போகமாக அனுபவித்து வந்தவர்கள். இன்று வயது வந்தோர்க்கு வாக்குரிமை என்பதன் அடிப்படையில் உள்ள மக்கள் ஆட்சியில் இதுவரை சமுதாயத்தில் செல்வாக்கும் அரசியல் ஆதிக்கமும் இழந்திருந்த மக்கள் தங்களுக்குச் சவால் விடும் அளவுக்கு உயர்ந்து விட்டனரே என்பதால்தான் ஜாதி உணர்ச்சி ஓங்கி விட்டது என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஜனநாயக வழிமுறைகளினால் கீழ் ஜாதிக்காரர்கள் அரசியல் ஆதிக்கம் வகிக்கும் அளவுக்கு முன்னேறி வருவது இந்திய ஜனநாயகத்தில் மிகவும் வரவேற்கத்தக்கதொரு அம்சமாகும்.

- ஜம்மு - காஷ்மீர் பல்கலைக்கழக துணை வேந்தர் கே.எம்.பணிக்கர், கருநாடகப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் 1962ஆம் ஆண்டு உரையாற்றியது.

Read more: http://viduthalai.in/page1/96151.html#ixzz3S10vh9DC

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை

சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தால் உடனே வெளியேற் றிட வேண்டும்; அடக்கக் கூடாது, தள்ளிப் போட்டால் அங்கேதான் ஆரம்பமாகிறது சிறுநீரக பாதிப்புப் பிரச் சினை! சுகாதாரமான கழிவறை யும் மிகவும் முக்கியம்.

Read more: http://viduthalai.in/page1/96087.html#ixzz3S120ww7r

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வேண்டுதல்

கடவுள் எல்லாம் அறிந் தவன் தெரிந்தவன் என் றால், பக்தர்கள் எல்லாம் ஏன் அவனிடம் வேண்டு தலை செய்கிறார்கள் - நேர்த் திக் கடன் கழிக்கிறார்கள்?

Read more: http://viduthalai.in/page1/96087.html#ixzz3S127IZTd

தமிழ் ஓவியா said...

உயிர் நாடி...

மதங்களுக்கு உயிர் நாடியாயிருப்பது பிரச்சாரமும், பணமுமேயல்லாமல், அவற்றின் கடவுள் தன்மையோ, உயர்ந்த குணங்களோ அல்லவே அல்ல.

- (விடுதலை, 1.4.1950)

Read more: http://viduthalai.in/page1/96089.html#ixzz3S12Dp6st

தமிழ் ஓவியா said...

இது உண்மையா? இது உண்மையா? இது உண்மையா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 18 நீதிபதி பணியிடங்களை நிரப்பிடும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, தற்போதுள்ள தலைமை நீதிபதி பார்ப்பனர் (வடக்கே இருந்து வந்தவர்) தற்போதுள்ள பார்ப்பன நீதிபதிகளின் எண்ணிக்கை 6 (2 அல்லது 3 சதவிகிதம் உள்ள வகுப்பினர்) மேலும் அதே அளவுக்கு நியமனம் செய்யப்பட- பார்ப்பனப் பண்ணையமாக மாற்றிட - தீவிர முயற்சிகளைச் செய்து, பகீரதப் பிரயத்தனம் செய்யும் நிலையில், இதை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் புரிந்துகொண்டு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது.

இரண்டு மூன்று பட்டியலின் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?

ஒரே பட்டியலாகப் புதிய நீதிபதிகளுக்கான நியமனப்பட்டியலுக்குப் பதிலாக - இரண்டு அல்லது மூன்றாகப் பிரித்து, தனித்தனியே ஒவ்வொரு பட்டியலிலும் ஒன்று அல்லது இரண்டு பார்ப்பனர்கள் பெயரை அவ்வப்போது சேர்ப்பது என்ற தந்திர வித்தை கையாளப்படுவதால் இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது உண்மையா?

தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாய் வருவதற்கு, மிகவும் பார்ப்பன வெறிபிடித்த ஒரு மாவட்ட நீதிபதி, (டில்லியில் தனக்குள்ள செல்வாக்கால்,) கலைஞர் ஆட்சிக்காலத்தில் இங்குள்ள ஆட்சியின் எதிர்ப்பினால், வடக்கே (பஞ்சாபி) மாநிலத்தில் நியமிக்கப்பட்டவர், தற்போது வாரம் இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மந்திராலோசனையின் முக்கிய நபராக உள்ளார் என்பதும், இதில் மற்றொரு ஆலோசகராக சென்னை நீதிமன்ற மூத்த பார்ப்பன நீதிபதி ஒருவரும் முக்கியப் பங்கு வகித்து ஒரு கூட்டுத் திட்டமே உருவாகி அதிகமான பார்ப்பனரை உள்ளே கொண்டு வருவதும், பார்ப்பனரல்லாத மாவட்ட நீதிபதிகளை வீட்டுக்கு அனுப்பிட, ஏதாவது அற்பக் காரணங்களைத் தேடுவதும், தலைக்குக் கத்தி வைக்கும் மனு நீதி ராஜ்யத்தை நடத்திவரும் கொடுமை தொடர்கிறது என்று உயர்நீதிமன்ற நீதித்துறை வட்டாரங்களிலேயே கூட குமுறலும், கொந்தளிப்பும் பெருகியுள்ளன என்பது உண்மையா?

எந்தவித ஊழல், லஞ்சக் குற்றச்சாட்டு ஏதும் இல்லாத - கூறவும் முடியாத நிலையில் ஒரு மாவட்ட நீதிபதியை இதற்கு மேலே பதவி உயர்வு (உயர்நீதிமன்ற நீதிபதிக்குத் தகுதி) அவர் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக இம்மாதம் 28 ஆம் தேதி அவரது பதவிக் காலம் (மாவட்ட நீதிபதிக்கானது) முடிவுறும் நிலையில், அவரைப் பரிந்துரை செய்வதைத் தவிர்க்கவே,
அவர் அரசியல் செல்வாக்குள்ள தம் ஜாதிக்காரர் ஒருவரை ஒரு குறிப்பிட்டவரைச் சந்திக்கின்றார் என்றெல்லாம் உயர்நீதிமன்ற மேலிடம் ஏனோதானோ என்று குற்றம் சுமத்தி, செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதுபோல நடந்துகொள்வது உண்மையா?

மாவட்ட நீதிபதி பதவிகள் நியமனத்திலும் பார்ப்பன சூழ்ச்சி

மாவட்ட நீதிமன்ற சார்பு (Subordinate Judiciary) தேர்வுக்கான, தேர்வுத் தாளைத் திருத்துதல், மாவட்ட நீதிபதி முதல் மற்ற நீதித் துறையில் பார்ப்பனர் ஏக போகம் தொடரும் வண்ணம், பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு மதிப்பெண் போடுவதில், பாரபட்சம் காட்டி, பார்ப்பனரல்லாதவர்களைத் தடுக்கும் முயற்சியை திருப்பணியாகவே ஒரு பார்ப்பன உயர்நீதிமன்ற நீதிபதி, மேலிடத்தின் ஆதரவோடு நடத்தி, பார்ப்பனரல்லாதவர்களை ஒழித்துக்கட்டும், பரசுராம அவதாரம் எடுத்து வருவது உண்மையா?

இதுபற்றி உடனடியான மாற்றம் தேவை; பார்ப்பனரல்லாத மூத்த நீதிபதிகள் பலர் இருந்தும், இந்தப் பொறுப்பு முழுவதும் ஏன் ஒரு பார்ப்பனரிடமே விடப்பட்டுள்ளது? இந்த நிலையால், மேலும் குமுறல் அதிகமாகி, நீதித்துறை கொதி நிலையில் உள்ளது என்பதும் உண்மையா?

குறிப்பு: இதற்கான சமூகநீதிப் போராட் டத்தில் பெருமளவு வழக்குரைஞர்கள் கலந்துகொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம் -

திராவிடர் கழகம்)

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் 2000-த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் படுகொலைக்குக் காரணமாக இருந்த ஆட்சியின் சொந்தக்காரர் மோடி கூறுகிறார்

உலக அளவில் நடக்கும் மத ரீதியான மோதல்கள் கவலையளிக்கிறதாம்!

புதுடில்லி, பிப்.18_ டில்லி விக்யான் பவனில் நடந்த கிறிஸ்துவ மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி உலக அளவில் நடக்கும் மதரீதியான மோதல்கள் கவலையளிப்பதாக உள் ளது என்று தெரிவித்துள் ளார். கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் மற்றும் கன்னிகாஸ்திரி யூப்ரேசியா ஆகியோருக்கு அண்மையில் வாடிகன் நகரில் நடந்த விழாவில் புனிதர் பட்டம் அளிக்கப் பட்டது. புனிதர் பட்டம் அளிக்கப்பட்டதை நினை வுகூரும் வகையில் டில் லியில் உள்ள விக்யான் பவனில் நடந்த விழாவில் கொண்டாடப்பட்டது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உலகில் தங்களுக்கு விருப்பமான மத நம்பிக் கையை பின்பற்ற ஒவ் வொருவருக்கும் பூரண உரிமை உள்ளது இந்தி யாவிலும் அந்த நிலை உள்ளது என்று கூறிய மோடி இதற்கான சுதந் திரத்தை அரசு உறுதி செய்யும் என்றார். அனைத்து மதத்தின ரையும் மதித்து நடக்கும் பண்பாடு ஒவ்வொரு இந்தியனின் உணர்வி லும் கலந்தது என குறிப் பிட்ட மோடி, மத சகிப்புத் தன்மையுடனும், பரஸ்பர மரியாதையுட னும் பிற மதத்தினரை மதிக்கவேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத ரீதியிலான மோதல்களை உருவாக்கு பவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை என்றார்.

இந்தியா வந்த அமெ ரிக்க அதிபர் ஒபாமாமுதல் அமெரிக்க பத்திரிகையின் தலையங்கம்வரை இந்தி யாவில் மத நல்லிணக்கம் குறைந்து வருவதாக பேசப்பட்டது. பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் மவுனம் கலைத்துப் பேச வேண்டும் எனவும் பல் வேறு தரப்புகளில் இருந்து தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வந்தது.

மோடியை அழைக்க எதிர்ப்பு!

பிரதமர் மோடியை இந்நிகழ்ச்சிக்கு அழைத் ததில் கிறிஸ்தவ சபை களுக்கு இடையே இரு வேறு கருத்து நிலவுவ தாகவும் தெரிகிறது. ஒரு தரப்பினர், டில்லி யில் தேவாலயங்கள்மீதான தாக்குதலுக்குப் பின்னர் எந்தக் கருத்தும் தெரிவிக் காதவரை ஏன் அழைக்க வேண்டும் என வாதிட்ட தாகவும், மற்றொரு தரப் பினர் இந்த அழைப்பின் மூலம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்பாக பிரதமர் மவு னம் கலைக்க வழிவகை ஏற்படும் என தெரிவித் ததாகவும் கூறப்படுகிறது.

தலைநகர் டில்லியில் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கு தலுக்கு ஆளாகிவருகின் றன. கடந்த வாரம் கிறிஸ் தவ கல்வி நிறுவனம் ஒன்று தாக்கப்பட்டது. இருப்பினும் மோடி மத மோதல்கள் தொடர்பாக தொடர்ந்து மவுனத்தை கடைப்பிடித்து வந்தார். டில்லி தேர்தல் தோல்வி, அதைத் தொடர்ந்து காஷ்மீரில் ஆட்சி அமைப் பதில் மீண்டும் தோல்விய டையும் நிலை, உலக நாடுகளின் அழுத்தம் போன்றவைகளால் இறுதி யில் மோடி தனது நிலைப் பாட்டைக் கூறியுள்ளார். அதே நேரத்தில் நேரடி யாக இந்துத்துவா சக்தி களைக் குறிப்பிடாமல், சர்வதேச மத ரீதியான மோதல்கள் என்று குறிப் பிட்டதன்மூலம் சங் பரி வாரத்தின் தலைவர்களை சமாதானப்படுத்துவதுபோல் உள்ளதாகத் தெரிகிறது.

மோகன் பகவத், அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா போன்றோர் இந்து ராஷ்டிரம், அகண்ட பாரதம், இந்தியாவில் பிறந்த அனைவரும் இந் துக்களே என்றும், விரை வில் 5 கோடி பேரை இந்துமதத்திற்கு மாற் றுவோம் என்று கூறி வரும் நிலையில், மோடி யின் இந்த திடீர்ப் பேச்சு சங் பரிவார் கூட்டங்களி டையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதான் மோடியின் மதச்சார்பின்மை!

இந்துக் கலாச்சாரம், இந்து நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் அரசு மத்தியில் அமைந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடிக்குச் சற்று அவகாசம் கொடுங்கள். நமது பாரதத் தன்மை குறித்த கனவு களை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார்.

மேற்கண்டவாறு ராகவ் ரெட்டி, வி.எச்.பி. அமைப்பின் சர்வதேசத் தலைவர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/96418.html#ixzz3S69iOwIi

தமிழ் ஓவியா said...

பரிகார முயற்சி

எங்கு அளவுக்கு மீறிய, தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ, அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டெழவும், சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும். - (குடிஅரசு, 4.10.1931)

Read more: http://viduthalai.in/page-2/96422.html#ixzz3S6AGE9f6

தமிழ் ஓவியா said...

இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி நடக்கிறதா? ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு முஸ்லிம் மத குருக்களின் 6 கேள்விகள்

கான்பூர், பிப். 18_ இந் தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி நடக்கிறதா என்பது தொடர்பாக முஸ்லிம் மத குருக்களின் குழு கேட்ட 6 கேள்வி கள், ஆர்.எஸ்.எஸ். நிர்வா கியை எரிச்சலூட்டியுள்ளது.

அனைத்திந்திய மஜ் லிசே இத்தேயாதுல் முஸ் லிமின் (ஏ.அய்.எம்.அய். எம்.) தலைவர் அசாதுதீன் உவைசி சமீபத்தில் பேசிய பேச்சுக்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப் புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. உவைசியின் கருத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் மவுனமாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதைத் தொடர்ந்து சன்னி உலமாக்கள் கவுன் சில் பொதுச் செயலர் ஹாஜி மொகம்மது சலீஸ் தலைமையிலான முஸ்லிம் மத குருக்கள், ஆர்.எஸ். எஸ். மூத்த நிர்வாகி இந்தரேசை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பு குறித்து ஹாஜி மொகம்மது சலீஸ் கூறியதாவது:

உவைசியின் கருத்தை முஸ்லிம் மக்கள் ஏற்க வில்லை. அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். பாஜக எம்.பி.க்கள் சாக்ஷி மகராஜ், சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் பேசி யதுபோல், நாடாளுமன்ற உறுப்பினரான உவைசியும் தேவையில்லாத கருத்தை பேசியுள்ளார். அதை முழுமையாக எதிர்க் கிறோம்.

இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றனவா என்பது தொடர்பாக 6 கேள்வி களை கேட்டோம். ஆனால் அது இந்தரேசை எரிச் சலூட்டியுள்ளது என் பதை உணர்கிறோம். அவர் அந்த 6 கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.

மாறாக முஸ்லிம்கள் மாநாட்டை நடத்தும்படியும், அதில் தனது பதிலை தெரிவிப்ப தாகவும் கூறினார். ஒரு அறைக்குள் நடந்த கூட் டத்திலேயே இந்த கேள்வி களுக்கு பதிலளிக்க முடிய வில்லை. மாநாட்டில் எப் படி பதிலளிக்க முடியும்.

நமது அரசமைப்பு சட்டமானது அனைவருக் கும் மத சுதந்திரத்தை கொடுத்துள்ளது. மதமாற் றம் குறித்த வரைவு சட் டத்தைக் கொண்டுவர ஏன் தயங்குகிறார்கள்.

முஸ்லிம் மதத்தை பிடிக்கவில்லை என்றால் அதிலிருந்து விலகி செல்ல எநதத் தடையும் இல்லை. யாரையும் கட்டாயப் படுத்தி முஸ்லிமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. நாங்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். நாட்டின் நலனுக்காகவே உள் ளோம். அதனால்தான் பிரிவினையின்போது ஜின் னாவையும், பாகிஸ்தா னையும் துறந்தோம். காந் தியாரை தலைவராகவும், இந்தியாவை தாய்நாடா கவும் ஏற்றுக் கொண்டோம்.

மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் யார் பேசினாலும் அதை எதிர்ப் போம். உவைசியின் கருத் தையும் எதிர்க்கிறோம். காந்தியாரின் வழியில் ஒன் றுபட்டு நாட்டு நலனை யோசிப்போம்.

இவ்வாறு ஹாஜி மொகம் மது சலீஸ் தெரிவித்தார்.

இதனிடையில் முஸ் லிம் மத குருக்கள் குழு வில் இடம்பெறுவதற்கு மறுத்த கான்பூர் நகர முஸ்லிம் மத குருவான ஆலம் ராஜா நூரி, ஆர்.எஸ். எஸ். நிர்வாகியிடம் இது குறித்து பேச வேண்டிய தில்லை. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக வத்தை சந்தித்துக் கேட்க வேண்டும் என்றார்.

இந்த சந்திப்பால் எந்தப் பலனும் கிடைக்கப் போவ தில்லை. நான் ஊரில் இல்லை. இருந்திருந்தா லும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க மாட்டேன் என்றார் நூரி.

ஆர்.எஸ்.எஸ். நிர்வா கியை சந்திக்கும் தங்களு டைய குழுவில், நூரியின் பெயர் இடம்பெறவில்லை. கடைசியில்தான் அவரு டைய பெயர் சேர்க்கப்பட் டது என்று சலீஸ் தெரி வித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/96466.html#ixzz3S6BiHa7s