Search This Blog

4.2.15

அண்ணாவின் துணிச்சலான ஆட்சி

அண்ணாவின் துணிச்சலான ஆட்சிபேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! வேறு எவரையும்விட அண்ணா அவர்களுக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடுவதில், அவரைப் பாராட்டுவதில் மிகுந்த பொருள் உண்டு.


இந்தியாவிலேயே வேறு யாராலும் சாதிக்க முடியாத காரியத்தை அண்ணா அவர்கள் சாதித்துக் காட்டினார். நமக்குத் தெரிந்த வரையில் வேறு யாரும் அந்த அளவுக்கு சாதிக்கவே இல்லை. என்னைப் பொருத்தவரை நான் காரியம் அதிகம் சாதித்திருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். அதன் பலன் அந்த அளவுக்கு ஏற்படவில்லையே, இனிமேல் தான் ஏற்படவேண்டும் _ ஏற்படும் என்று ஆசைப்படுகிறேன். என் முயற்சி எதுவும் வீண் போகவில்லை.
தரவேண்டிய அளவுக்கு பலன் தரவில்லையே தவிர வேறு ஒன்றுமில்லை.
எனது அருமைத் தோழர்கள் என்னைப் பின்பற்றி முயற்சிக்கிறார்கள். அவர்கள் அதில் வெற்றியும் அடையக்கூடும் என்று நாம் நம்புகிறோம்.


அண்ணா அவர்கள் செயற்கரிய காரியம் செய்தவராவார். இந்நாட்டில் நமக்கு சரித்திரம் தெரிய எவன் எவனோ ஆண்டிருக்கிறான். சேர, சோழ, பாண்டியன், நாயக்கர், துலுக்கன், வெள்ளைக்காரன், காங்கிரஸ்காரன் வேறு எவன் எவனோ ஆண்டிருக்கிறான் என்றாலும் அண்ணா அவர்கள் சாதித்த காரியம்போல வேறு எவருமே சாதித்ததில்லை, இந்தியாவை ஆண்ட எவரும் இதுமாதிரி செய்ததில்லை.


ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை கடவுள் வேண்டாம், மதம் வேண்டாம், ஜாதி வேண்டாம், சாஸ்திரம் வேண்டாம் என்ற ஒரு கொள்கையுடைய ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை அண்ணா அவர்கள் தோற்றுவித்தார் என்றால் அது சாமானிய காரியமல்ல பிரம்மாண்டமான சாதனையாகும்.
நம் மக்களுக்கு இது சரியாகப் புரிகிறதோ இல்லையோ, எதிரிகளுக்கு இது தெளிவாகப் புரியும்.


அண்ணா செய்த காரியம் இதற்கு முன்னால் ஆண்டவர்கள் பலரும் செய்ததற்கு மாறான காரியத்தை அல்லவா அண்ணா செய்தார்கள்!
சேர, சோழன், பாண்டியன் வெங்காயம் எல்லாம் என்ன செய்தார்கள் . அதற்குப் பிறகு வெள்ளைக்-காரர்கள்தான் ஆண்டார்களே அவர்களால் பெரும் மாற்றத்தைச் செய்ய முடிந்ததா என்றால் இல்லையே!


அண்ணா நேற்று செய்ததற்கு மாறாகத்தானே அவர்கள் செய்தார்கள்!
மக்களிடையே மூடநம்பிக்கைகளைப் புகுத்தி அந்தக் காரியங்களைப் பாதுகாப்பதுதான் அரசியல் ஆட்சியின் லட்சியம் என்று அல்லவா அவர்கள் காலத்தில் கருதப்பட்டது!


மூவேந்தர்கள் செய்தது என்ன? கோவில்களைக் கட்டினார்கள். கடவுள்களை உற்பத்தி செய்தார்கள் பார்ப்பானுக்கு அரசர்கள் தன் மனைவிகளை விட்டுக் கொடுத்தாகிலும் புண்ணியம் சம்பாதிக்க வேண்டும் என்று நடந்து கொண்டார்கள். பார்ப்பன நலத்தைத்தான் கொள்கையாக கொண்டு இருந்தனர்.


பறையன் பறையனாகவும், சக்கிலி சக்கிலியாகவும், சூத்திரன் சூத்திரனாகவும் இருக்கத்தான் ஆட்சி பயன்பட்டது. தவிர மனுஷன் மனுஷனாக வாழ்கிறான் என்று பார்க்கப் பயன்படவே இல்லையே! முடியவில்லையே! தப்பித் தவறி ஒரு ஆட்சி அப்படித் திரும்ப முயற்சித்தாலும் ஒழித்திருப்பார்களே!


முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் ஆண்டார்கள் என்றாலும், அவர்களும், பழைய இராஜாக்கள் காலத்து ஆட்சியைப் போல் கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம், சம்பிரதாயம் _- இவற்றில் கை வைக்காமல் ஆட்சி புரியும்படி பார்ப்பான் ஆக்கி வைத்துக் கொண்டானே! வெள்ளைக்காரன் சில மாற்றங்களைச் செய்ய ஆரம்பத்தில் முன்வந்தான் என்றாலும் மாற்றவிடாமல் மிரட்டிச் சரிப்படுத்திக் கொண்டார்கள். அவனும் நமக்கெதற்கு வம்பு, நமக்குச் சிக்கியது வரை சரிதான் என்றல்லவா ஆண்டான்? அண்ணா அவர்கள் அமைத்த அரசாங்கம் தானே இவற்றில் துணிந்து கைவைக்கக்கூடிய அளவுக்கு பகுத்தறிவாளர் ஆட்சியாக உள்ளது.


அண்ணா ஆட்சி வருகிற வரைக்கும் முன்புள்ள ஆட்சிகள் மதத்தை சாஸ்திரத்தைப் பாதுகாக்கவும் மக்களது மூடநம்பிக்கைகளைப் பத்திரமாகப் பாதுகாப்பதையும்தான் தமது தொழிலாகக் கொண்டிருந்தன. மனித சமூகத்தைச் சின்னாபின்னப்படுத்தி வந்த ஜாதி, மூடநம்பிக்கை இவற்றை, அழிக்கவோ, போக்கவோ அவைகள் முன்வரவில்லையே!
இந்த நிலையில் இருந்த ஆட்சியைத் திருப்பி துணிந்து பகுத்தறிவுக் கொள்கையைப் புகுத்திய ஆட்சியை அண்ணா அவர்கள் உண்டாக்கி னார். என்னைப் போன்றவர்கள் கூட வாயினால்தான் பேச முடிந்தது. புத்தரின் காலத்தில்கூட இப்படி ஒரு ஆட்சியை அவரால் உண்டாக்க முடியவில்லையே.

அண்ணா ஒருவர்தான் இதைச் சாதித்தார். கடவுள், மதம், ஜாதி, இவைகளை ஒழித்து அந்தக் கொள்கையின் பேரால் ஒரு ஆட்சியை -_ பகுத்தறிவாளர் ஆட்சியை உண்டாக்கினார்.


தி.மு.க. என்றால் என்ன? திராவிடர் கழகத்துக் கொள்கைகளை உடைய கட்சி; ஆனால் அதைவிட சற்று வேகமாக தீவிரமாகச் செல்லும் கட்சி என்பதுதானே பொருள்?


தி.க. என்றால் சுயமரியாதை இயக்கம், சுயமரியாதை இயக்கத்தினை நாங்கள் தோற்றுவித்துப் பிரச்சாரங்களும் செய்தோம். கடவுள் ஒழிய வேண்டும்; மதம் ஒழியவேண்டும்; காங்கிரஸ் ஒழியவேண்டும்; பார்ப்பான் ஒழியவேண்டும், காந்தி ஒழியவேண்டும் என்பதுதானே அதன் கொள்கைகள். அதே கொள்கை அடிப்படையில் காங்கிரசை ஒழித்து, கடவுள் இல்லாமல் மதம் இல்லாமல், பார்ப்பான் இல்லாமல், ஒரு ஆட்சியை அண்ணா உண்டாக்கி காட்டிவிட்டாரே!


அண்ணா அவர்கள் மத்தியில் காலமானார் என்றாலும் இன்னமும் அந்தக் கொள்கையைக் கொண்ட ஆட்சிதானே நிலையாக இருந்து அதற்கான காரியத்தைச் செய்கிறது? பச்சையாகவே அண்ணா சொன்னாரே, எனக்கு இந்த அமைச்சரவையையே காணிக்கை ஆக்குகிறேன் என்று, அதற்குப் பொருள் என்ன?

கடவுள் பெயரால் பிரமாணம் எடுக்கவில்லை _- அதற்கு கடவுள் நம்பிக்கை அற்ற ஆட்சி என்பது தானே! ஆட்சியில் கடவுள் மதத்திற்கு வேலையில்லை என்பதைத் தானே அது காட்டுகிறது. சுயமரியாதைத் திருமணங்களைச் செல்லும்படியாக்கும் சட்டம் கொண்டு வந்தார்.


இது எதைக்காட்டுகிறது? கடவுளுக்கோ, மதத்துக்கோ, மதத்தினர் சம்பிரதாயத்துக்கோ சாஸ்திரங்களுக்கோ வேலையில்லை, ஒரு ஆணும் பெண்ணும் பார்த்து நாங்கள் இருவரும் சிநேகிதர்கள் என்றால் தீர்ந்தது. அவ்வளவுதானே இதன் தத்துவம் என்ன? கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம், பார்ப்பான் எதுவும் வேண்டாம் என்று ஆக்கப்பட்டு விட்டது என்பதுதானே!
கல்கத்தாவைச் சார்ந்த ஒரு வங்காளக் கம்யூனிஸ்டு எம்.பி. கேட்கிறார், எங்களால் முடியவில்லை. இவ்வளவு புரட்சி பேசும் என் வீட்டில் அதைச் செய்ய முடியவில்லை. உங்களால் இவ்வளவு சல்லீசாக எப்படிச் செய்ய முடிகிறது என்று?


இம்மாதிரி இந்தியாவில் உள்ள பலரும் ஆச்சரியப்படும்படி அல்லவா அண்ணா அவர்கள் காரியங்களைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்! அண்ணா ஜெயித்தவுடன் நான் இது பார்ப்பான் ஆட்சியாகத்தான் இருக்கும் முன்னேற்றக் கழக ஆட்சியாக இருக்காது. பார்ப்பான் காலடியில் உள்ள ஆட்சியாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன், எழுதினேன்.
இவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக பார்ப்பனரும் வெகு பாடுபட்டார்கள். பார்ப்பனத் தலைவர் ராஜாஜி அவர்களும் அதற்கு ரொம்ப பாடுபட்டார். தி.மு.க. ராமசாமியிடம் இருந்த கட்சி என்றாலும், பெருங்காயம் இருந்த டப்பா, ஆனால் இப்போது காலி டப்பா, நான் வழித்து எறிந்து விட்டேன் என்று கூறினார். அண்ணா இவற்றை ஏதும் மறுக்கவே இல்லை.


இந்த இரண்டையும் பார்த்த நான் இதற்காகவே எதிர்த்தேன். அண்ணா வெற்றி பெற்றவுடன் என்னை வந்து பார்த்தார். எனக்கு யோசனை சொல்ல வேண்டும் என்றார். நானும் ஆகட்டும் என்றேன். பார்ப்பனரும் ராஜாஜியும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை சபாநாயகர் தேர்தல் முதற்கொண்டே காட்ட ஆரம்பித்தனர்.

ஆனாலும் அண்ணா அவர்கள் அவரது கொள்கைகளை அமல்படுத்தும் ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சியை நடத்த ஆரம்பித்தார். அதன் காரணமாக மக்கள் ஆதரவும் அதற்குப் பெருக ஆரம்பித்ததுடன், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சிறப்பான ஆட்சி என்று பலரும் அதிசயப்பட்டு பாராட்டத்தக்க ஆட்சியாக அது இன்று வளர்ந்திருக்கிறது.


மற்ற ஆட்சிகளைப் பார்க்கிறோமே மரியாதை கெட்டு, மானம் கெட்டு, ஒருவரை ஒருவர் செருப்பால் அடித்துக் கொள்வது கட்சிவிட்டு கட்சிமாறுவது, கொலை, கொள்ளை சர்வசாதாரணம் என்றும் தானே ஆட்சிகள் எல்லாம் நடைபெறுகிறது?


மற்ற ஆட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் தி.மு.க. ஆட்சி எவ்வளவு சிறப்பானது என்பது எவருக்கும் சுலபமாக விளங்கும்.


மற்றபடி என்னை நீண்ட நாள் வாழவேண்டும் என்று பலர் கூறினீர்கள். சொல்லுகிறபடி நடக்கும் சக்தி அதற்கு இருக்குமானால் இன்னும் அதிக நாள் சொல்லலாமே! வாழும் எனக்குத்தானே அதிலுள்ள கஷ்டம் என்னவென்று தெரியும். நான் படுகிறபாடு எனக்குத்தானே தெரியும்?


என்னுடைய கடமை தொண்டு கொள்கைகளை இறுதிவரை பரப்பி மக்களுக்குப் பயன்படும் வகையில் பாடுபடவேண்டும் என்பதுதான் எனது ஆசையாகும்.


மற்றவனெல்லாம் சொல்ல பயப்படுகிறானே என்பதுதான் எனது கவலை.
நாம் சொல்லும் அருமையான கருத்துகளைக் கேட்டு ஜீரணிக்கும் அளவுக்காவது மக்கள் பக்குவப் பட்டிருக்கிறார்கள் என்பதுதான் எனக்குள்ள திருப்தி.


அதற்குமுன் எவ்வளவு கடுமையான எதிர்ப்பு நண்பர் வீரமணி அவர்களது ஊரான கடலூரில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் என்மீது செருப்பை வீசினார்கள். ஏன் ஒரு செருப்பை மட்டும் வீசுகிறாய் மற்றொன்றும் எங்கே? என்றவுடன் அதையும் வீசினார். எடுத்து என் பெட்டிக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டேன்.


பல ஊர்களில் அழுகிய முட்டை, முட்டை கூட்டுக்குள் மலத்தை நிரப்பி வீசியிருக்கிறார்கள். இப்படி பல மாதிரி எதிர்ப்பு, சங்கடங்கள். இவைகளையெல்லாம் தாண்டித்தானே இந்த அளவுக்கு எங்கள் நாடு பக்குவப்பட்டிருக்கிறது.


கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளை உண்டாக்கியவன் முட்டாள், கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று இப்போது இம்மாதிரி அட்டைகளை அச்சிட்டு சிலைகள் அடியில் வைப்பதும் கல்வெட்டுகளைப் பதிப்பிப்பதுமான அளவுக்கு மக்கள் அங்கு தெளிவுபெற்று சிந்திக்கும் பக்குவத்தைப் பெற்றுள்ளார்கள்.


மக்கள் இந்த அளவுக்குப் பக்குவம் பெற்றிருக்கிறார்களே என்ற திருப்திதான் எனக்கு.


இப்படி நாங்கள் பிரச்சாரம் செய்திரா விட்டால் - தி.மு.க. ஆட்சி வந்திருக்காவிட்டால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குட்டிச் சுவரையும் ரிப்பேர் செய்து கோவில் ஆக்கியிருப்பார்கள். வயதானவர்கள் கிழடுகள் எப்படியோ தொலையட்டும் இளைஞர்கள் இது குறித்து துணிச்சலாகச் சிந்தித்து மாறவேண்டும். இன்று இளைஞர்கள் நன்றாக இக்கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் நிலையைப் பார்க்கிறோமே!


------------------------1.11.1970 முதல் 5.11.1970 வரை மும்பையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாக்களில் தந்தை பெரியார் ஆற்றிய உரை -"விடுதலை" (12.11.1970, 13.11.1970)

21 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வெங்காய ஜாதகம்?

கேள்வி: ஒருவர் மறை விற்குப் பின் என்ன நிலை யில் உள்ளார் என்பதை ஜாதகத்தில் தெரிந்து கொள்ள முடியுமா?

பதில்: அப்படி எது வும் ஜாதகத்தில் இல்லை.
- கல்கி, 8.2.2015

அப்புறம் என்ன வெங் காய ஜாதகம்?

Read more: http://viduthalai.in/e-paper/95503.html#ixzz3Qmpq6shz

தமிழ் ஓவியா said...

வாய்க் கொழுப்பு நீள்கிறது

முஸ்லீம்கள் நாய்போல் பிள்ளைகளை பெற்றுத் தள்ளுகிறார்களாம் பி.ஜே.பி.யைச் சேர்ந்த பிராச்சி சாமியாரிணி பேச்சு

புதுடில்லி, பிப்.4_ விசுவ இந்து பரிசத் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய பிஜேபி தலைவர் களில் ஒருவரான பிராச்சி சாமியாரிணி லவ் ஜிகாத் செய்பவர்கள் நாய்களைப் போல் 40_50 பிள்ளைக ளைப் பெற்றுத்தள்ளுகி றார்கள். இந்துக்கள் 4 குழந் தைகளைப் பெறக் கூறி னால் சிலருக்கு கோபம் வரு கிறது என்று பேசினார். ஞாயிறன்று இரவு புதுடில்லியில் விசுவ இந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத் தில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் களுள் ஒருவரான சாமியா ரிணி பிராய்ச்சி என்பவர் பேசும்போது, இந்துக்கள் 4 குழந்தைகளைப் பெற வேண்டும் என்று நாட்டு நலனில் அக்கறை கொண்டு பேசிய நமது மூத்த சாதுக்கள் மற்றும் இந்து நலனுக்கு என்றென்றும் பாடுபடும் அரசியல் தலை வர்கள் கூறினால், தேச நலனுக்கு எதிரான சிலர் இந்தக் கூற்றைத் தவறாக சித்தரித்து மக்களிடையே பொய் பிரச்சாரம் செய் கின்றனர்.

இவர்கள் இந்து நலனுக்கு எதிரானவர்கள், இந்து ராஷ்டிரம் அமை வதற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள். இவர்க ளால் நமக்கு என்றென் றும் தொல்லைதான்.

ஆனால் லவ்ஜிகாத் (முஸ்லீம்கள்) செய்பவர் கள் 40 குழந்தைகளை நாய்களைப்போல் பெற்றுத் தள்ளுகின்றனர். இப்படி நாய்களைப் போல் குழந்தைப் பெறு வதை யாரும் கண்டு கொள்ளவில்லை; ஆனால், இந்து ராஷ்டிரத்தின் ஒற்றுமைக்கு 4 குழந்தை களைப் பெறக் கூறினால் அதை எதிர்க்கின்றனர். இனிவரும் காலங்களில் எந்த வித பொய்ப்பிரச் சாரங்களையும் இந்துமக் கள் கவனத்தில் கொள் ளக்கூடாது அவர்களது கடமை 4 நான்கு குழந் தைகளைப் பெறுவது மட் டுமே, இதை தொடர்ந்து செய்துவந்தால் விரைவில் நமது நாடு இந்து நாடாக மாறிவிடும், மேலும் 4 குழந்தைகளுக்குமேல் உள்ள இந்து குடும்பங் களுக்கு பாராட்டும், பணமும் வழங்கப்படும்.

இதன்மூலம் அனைத்து இந்துக்களும் 4 குழந்தை களுக்குமேல் பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற கடமையுணர்ச்சி வரும், இந்தியாவில் உள்ள முக் கிய முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் தங்கள் தாய் மதமான இந்து மதத் திற்குத் திரும்பவேண்டும் என்று பிராச்சி சாமியா ரிணி தமதுரையில் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/95505.html#ixzz3QmqCso9c

தமிழ் ஓவியா said...

நீதி போதனை வகுப்பா?

உச்சநீதிமன்றத்தில் டில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

சமூகத்தில் அறநெறிகள் குறைந்து வருகின்றன. பணம் சம்பாதிப்பது மட்டுமே சமூகத்தின் குறிக்கோளாக மாறி வருகிறது. இதுபோன்ற சமூகச் சீரழிவை மாற்றி அமைக்க வேண்டும். எனவே, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை நீதி போதனை வகுப்பைக் கட்டாய மாக்கி, மாணவர்களுக்கு அறநெறிகளைப் போதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த வழக்குரைஞர் கள், தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி சிக்ரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசும், மத்திய அரசின் கல்வி வாரியமும் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்பேகூட இந்தக் கருத்து உலா வந்து கொண்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது இது நல்லதுதானே - நல்லொழுக்கத்தை மாணவர்களாக இருக்கும் பருவத்திலிருந்தே பயிர் செய்தால்தானே அவர்களின் எதிர்காலம் ஒழுக்கம் உள்ளதாக, கட்டுப்பாடு உள்ளதாக இருக்கும் என்று சொல்லக்கூடும்.

நடைமுறையில் பார்க்கும்பொழுது - அதுவும் பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் - சங் பரிவார்க் கூட்டத்தின் அழுத்தத்தில் ஆட்சி நடை போடும் ஒரு சமயத்தில் நீதி போதனை என்பது இந்து மதப் பிரச்சாரப் புயலாகத்தான் வீசும்.

ஏற்கெனவே அரியானாவில் கீதை கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டு விட்டது; கல்வித் திட்டத்தையே இந்து மயமாக ஆக்க இருப்பதாகவும் அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நீதி போதனை என்றாலே இதிகாசக் கதைகள், புராணக் கதைகளைத்தான் மாணவர்களுக்குப் போதிப்பார்கள்; பல ஆண்டுகளுக்குமுன் உயர்நிலைப் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு (Moral Instruction) நடைபெற்றுக் கொண்டு தானிருந்தது. அப்பொழுதும் புராண அளப்புகள்தான்; இராமன் கதை, அரிச்சந்திரன் கதை, குரு பக்திக்கு எடுத்துக்காட்டு கட்டை விரலைக் காணிக்கையாக துரோணாச்சாரிக்குக் கொடுத்த ஏகவலைவன் கதை களைத்தான் கதைத்துக் கொண்டிருந்தனர்.

குசேலனுக்கு 27 குழந்தைகள் - அவன் கிருஷ்ணன்மீது கொண்ட ஆழமான பக்தியின் காரணமாக கிருஷ்ண பகவான் தங்கத்தையும், பொருளையும் வாரி வழங்கி செல்வந்தனாக ஆக்கினார். ஆகவே, மாணவர்களே, பகவான்மீது பக்தி செலுத்துங்கள் என்று சொல்லுவதனால் மாணவர்கள் சோம்பேறிகளாக ஆவதைத் தவிர வேறு வழியே இல்லை!

தந்தை பெரியார்தான் அறிவார்ந்த வினாவை எழுப்பினார்.

ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்தால், அவன் வருஷத்துக்கு ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால், இருபது வயதிலும், அதற்கு மேற்பட்ட வயதும் நிறைந்த குழந்தை கள் எட்டாவது இருக்கும்.

இந்தக் குழந்தைகளும் சோம் பேறித் தடியன்போல், ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாத மாமிசப் பிண்டங்களாக அல்லவா இருந்திருக்கக் கூடும்! இப்படி இருபது வயதுக்கு மேற்பட்டவர்களை வீட்டிலே வைத்துக்கொண்டு ஒருவன் பிச்சைக்குப் போயிருந்தால், அந்த நாட்டில் மற்றவர்களும் இதுபோல் இருந்திருக்க வேண்டாமா? அப்படி இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படி ஆகியிருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியர்களுக்குக் கடவுள் செல்வம் கொடுக்கலாமா? (பொன்னி பொங்கல் மலர், 1948)

என்று தந்தை பெரியார் எழுதியுள்ளாரே! இதில் ஒரு வரியை மறுக்க முடியுமா? மதம் காட்டும் மார்க்கம், புராணம் காட்டும் புத்தியுரை இதுதானா?

இவற்றையெல்லாம்தானே நீதி போதனை வகுப்பில் சொல்லிக் கொடுத்தார்கள்? இனிமேலும் சொல்லியும் கொடுப்பார்கள்.

கொள்கைக்காக நஞ்சுண்டு மறைந்த சாக்ரட்டீசை பற்றியா சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?

பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து என்று கூறிய தந்தை பெரியார் அவர்களின் கொள்கையைப் பற்றியா எடுத்துக் கூறுவார்கள்?

இப்பொழுதே ஆசிரியர் தினம் என்பதை குரு உத்சவ் என்று சொல்லி வியாசரின் பிறந்த நாளைத்தான் இன்றைய தினம் மத்தியில் ஆட்சியிலிருக்கும் வகையறாக்கள் கொண்டாடுகிறார்கள்.

நேருவின் பிறந்த நாளைக் குழந்தைகள் நாளாக ஏற்காமல், சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி, வாலிப வயதில் பெண்ணைத் திருடிய கிருஷ்ணன் பிறந்த நாளை(?) கொண்டாடக் கூடியவர்கள்.

இத்தகைய ஓர் ஆட்சியில் நீதி போதனை என்ற வகுப்பு எந்தக் கேவலத்திற்கு - பிற்போக்குத் தனத்திற்கு, மூட நம் பிக்கைக்கு இழுத்துப் போகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

நீதி போதனை வகுப்பில் மதச்சார்பின்மை என்னும் தத்துவத்தின் சீலத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

ராமராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் - இந்து ராஜ்ஜி யத்தைப் படைப்போம் என்று காட்டுக் கூச்சல் போடுவோர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய இந்தக் காலகட்டத் தில் நீதி போதனை வகுப்பு என்பது மாணவர்கள் மத்தியிலேயே மதவாதத்தைத் திணிக்கும் பேராபத்தில் கொண்டு போய் விடும் - எச்சரிக்கை!

எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/95509.html#ixzz3QmqsR4HW

தமிழ் ஓவியா said...

உரிமையைப் பெறும் வழி


நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின் மீதுதான் நாம் நம் உரிமைகளைப் பெற முடியும். - (விடுதலை, 30.5.1951)

Read more: http://viduthalai.in/page-2/95508.html#ixzz3Qmr1GkpT

தமிழ் ஓவியா said...

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மில்லியன் டாலர் குட்டு!

ஜனவரி 26 - குடியரசு நாளைக் கொண்டாடும் சாக்கில் பிரதமர் மோடி அவர்கள் தன்னை உலகத் தலைவர்களில் ஒருவராகக் காட்டிக் கொள்ளும் வகையில் ஈடுபட்டுள்ள பல்வேறு திட்டமிட்ட செயல்களில் ஒன்றாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களையே இவ்வாண்டு முக்கிய விருந்தினராக அழைத்துள்ளார்!

இதனால் ஏற்படும் பலன்களும் விளைவுகளும் பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியவையாகும்.ஏற்கெனவே திரு. மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது போட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில், ஒப்புக் கொள்ளப்பட்டாமல் இழுபறியாக இருந்த சில பிரிவுகளும் நம் மக்களுக்குக் கேடு_பாதகம் விளைவிக்கக்கூடிய பிரிவுகளும் சேர்த்து இப்போது பிரதமர் மோடி அரசால் கையொப்பமிடப்பட்டு, முழுக்க அமெரிக்காவின் பக்கமே சாய்ந்துவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

அணு உலையினால் ஏற்படும் ஆபத்துகளுக்கு அமெரிக்கா (வெளிநாடு) எவ்விதத்திலும் பொறுப்பேற்காது; நஷ்டஈடு தராது. மாறாக, அணு உலையை ஏற்படுத்தும் நாடே அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்ற பிரிவை ஒப்புக் கொண்டிருப்பது, நமது முழு சரணாகதியைத்தான் காட்டும். பொதுவாக இதுமாதிரி ஒப்பந்தங்கள் இரு சாராருக்கும் வெற்றி, யாருக்கும் தோல்வி இல்லை என்ற (Win Win Situation) அடிப்படையில் அமைவதே விரும்பத்தக்கது!

அமெரிக்க முதலீடு என்பதால் அதிக லாபம் யாருக்கு? உள்நாட்டுத் தொழில்நுட்ப அறிவு (Technical Know) எந்த அளவு வளரும்; பொறுத்திருந்து பார்த்தால் புரியும்.

பொதுவாக இவ்வாட்சி ஒரு பக்கம் மதவாதம்; மற்றொரு பக்கம் கார்ப்பரேட் முதலாளிகளின் ஏகபோகப் பண்ணையம் இவற்றின் நிலைக்களனாக உள்ளது என்பன மறுக்க முடியாதவை.

அதானிகள், அம்பானிகள், டாட்டா, பிர்லாக்கள் போன்ற கொள்ளை லாபக் குபேரர்கள் கொழுக்கவும், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம், நிலங்களைக்கூட அடிமாட்டு விலைக்கு விற்று வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொள்ளும் நிலைதான்; உர மானியம் ரத்து, உணவுக்கான சலுகைகள் ரத்து போன்றவை இதன் உண்மை நிறத்தைக் காட்டும்!

நமது விருந்தினராக வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா பேசுகையில், இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். மதவெறியைப் பளிச்சென்று சுட்டிக்காட்டிய-தோடு, சரியான எச்சரிக்கையையும் தந்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சி எப்போது வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்றால், அது மதவாதத்தை விட்டுவிட்டு மதத்தின் பெயரால் பிரிவினைவாதச் செயல்களை நடத்தாமல் இருக்கும்பொழுதுதான் இந்த நாட்டின் வளர்ச்சி சிறப்பாக அமையும். அதுவரை நாட்டின் வளர்ச்சி என்பது கேள்விக்-குறியாகத்தான் இருக்கும்.

இந்திய அரசியல் சட்டத்தின் (அடிப்படை உரிமை) 25ஆவது பிரிவு அனைத்து மக்களும் சமம் என்று குறிப்பிடுகிறது. அனைவருக்கும் _ தேர்வு செய்வதிலிருந்து, சுதந்திரமாய் பேசுவதற்கும், பின்பற்றுவதற்கும், பரப்புவதற்கும் உரிமை உள்ளது. நமது இரண்டு நாடுகளிலும், அனைத்து நாடுகளிலும் மதச் சுதந்திரத்தைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் உள்ளது.

இப்படி பிரதமர் மோடிக்கும், ஆட்சியிலிருக்கும் அவரது கட்சியினருக்கும் பராக் ஒபாமா இந்திய அரசியல் சட்டப் பிரிவு பற்றி பாடம் எடுத்துள்ளார்!

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்கள் முதல் மற்ற மதவாத அடிப்படையாளர்களும் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். இது டாலர் தேசத்திலிருந்து வந்த மில்லியன் டாலர் குட்டு!

மோதிரக் கையால் குட்டுப்படுவதைவிட டாலர் கையால் குட்டுப்படுவதைப் பெருமையாகக் கருதுவார்களோ? இதைத்தானே நாம் அன்றும் இன்றும் கூறி வருகிறோம்.

- கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

இரோம் சர்மிளா : விடுதலையும் தொடரும் கைதுகளும்


இராணுவச் சட்டங்கள்

இரோம் சர்மிளா :

விடுதலையும் தொடரும் கைதுகளும்


'சர்மிளா தற்கொலைக்கு முயலும் குற்றவாளி', அவரைக் காண இம்பால் நீதிமன்றத்தை அணுகியபோது நீதிபதி அனுமதி மறுத்துக் கூறியவை இவை. ஆனால் அதே நீதிமன்றம் 'சர்மிளா குற்றமற்றவர், அவரது போராட்டம் சட்டப்பூர்வமானது என தீர்ப்பளித்து. ஜனவரி 22ஆம் தேதி விடுதலை செய்தது.

ஆனால் அடுத்த நாள் இரவே மருத்துவ உதவி தரப்படுகிறது என மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த விடுதலையும் தொடரும் கைதுகளும் சர்மிளாவின்மேல் நிகழ்த்தப்படுவதல்ல, அவர் வைக்கும் கோரிக்கையின்மேல் நிகழ்த்தப்படுபவை.

மணிப்பூரில் நடைமுறையில் உள்ள ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதுவே அந்தக் கோரிக்கை. அதற்காகவே கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார்.

இந்தச் சட்டத்தை இங்கிலாந்து காலனிய காலத்தில் எதிர்த்த அதே காங்கிரஸ்தான், இந்திய விடுதலைக்குப் பிறகு இங்கு நடைமுறைப்படுத்தியது.

இந்திய விடுதலைக்குப் பிறகான அரை நூற்றாண்டு காலம் கடந்தும் நடைமுறையில் உள்ள ராணுவ சிறப்பதிகாரச் சட்டம், மத்தியில் எந்த அரசாங்கம் மாறினாலும் மாறாத ஒன்று. அந்தச் சட்டம் ஏற்படுத்திய வன்முறையே எனது உண்ணாவிரதத்துக்குக் காரணம் என்கிறார் சர்மிளா.

அப்படி என்ன வன்முறை? நவம்பர் 2, 2002, மாலோம் என்ற பகுதியில் காலைப் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த 10 பேர் எவ்வித எச்சரிக்கையுமின்றி அசாம் ரைபில்ஸ் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதில் ஓர் இளைஞர் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் வீரதீர விருது பெற்றவர். இந்தச் சட்டத்துக்குக் கொடுக்கப்படும் கேள்விகள் கேட்கமுடியாத உட்சபட்ச அதிகாரத்தை எதிர்த்து அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை சர்மிளா தொடர்கிறார்.

ஏன் இந்தச் சட்டம்? 1948இல் இந்தியாவால் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்ட மணிப்பூரிலும் இன்னும் பிற வடகிழக்குப் பகுதிகளிலும் இந்திய _- காலனித்துவ ஆட்சி (Indian Colonial Rule) என்று நிலவும் அரசியல் சூழலை இன்றளவும் இந்திய அரசு ஏற்கத் தயாராக இல்லை என்பதால் இங்கு ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை வைத்திருக்க வேண்டிய நிலை இந்திய அரசுக்கு உள்ளது. ஆனால் இந்திய அரசு, ஆயுத இயக்கங்கள் ஊடுருவலைத் தடுக்கவே இச்சட்டம் என்கிறது.

தற்கொலை குற்றமல்ல

அண்மையில் உச்ச நீதிமன்றம் அய். பி. சி. 309, அதாவது தற்கொலைக்கு முயல்வது குற்றமாகாது என்றது. இப்போது சர்மிளாவுக்குக் கொடுக்கப்பட்ட விடுதலை, அய். பி. சி. 309 விலக்கப்பட்ட அடிப்படையில்தான் என எண்ணப்பட்டது.

தற்கொலைக்கு முயலும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சட்ட ஆணையகம், தற்கொலைக்கு முயல்வோரைத் தண்டிப்பது சரியாகாது. அவர்களுக்கு அதிலிருந்து மீண்டும் உளவியல் சார்ந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றது.

சட்ட ஆணையகம் கருத்தின் அடிப்படையில், இங்கு சிகிச்சையானது ராணுவ சிறப்பதிகாரச் சட்டக் கொள்கை மீதே தேவையாக உள்ளது.

- மகா.தமிழ்ப் பிரபாகரன்

(கட்டுரையாளர் நியூஸ்7 தொலைக்காட்சியில் தமிழ் செய்தியாளராகப் பணியாற்றுபவர். இரோம் ஷர்மிளா குறித்து அத்தொலைக்காட்சியில் சிறப்புப் பதிவினைச் செய்தவர்.)

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வழக்குகளை விசாரிக்கும் ஆங்கிலேய நீதிபதிகளுக்கு உதவியாக சாஸ்திரங்களை எடுத்துச் சொல்லும் பொறுப்பில் பார்ப்பனர்களே இருந்தார்கள் என்பதும், அந்தப் பார்ப்பனர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப கருத்துகளைக் கூறி வந்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

எதுக்காவது போராடுவோம்?"

போனவாரம் மாதொருபாகன் மனதைப் புண்படுத்துகிறது என்று போராடியவர்கள், இப்போது நயன்தாரா பீர் வாங்குவது போல் நடிக்கக்கூடாது என்று போராட்ட அறிவிப்பு விடுத்திருக்கிறார்கள். எப்படியாவது செய்திகளில் இடம்பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் எதற்குப் போராட்டம் நடத்துவது என்று தெரியாமல் எல்லாவற்றுக்கும் போராட்ட அறிவிப்பு விடுக்கிறார்கள் இந்துத்துவ காமெடியினர். ஏதோ நம்மால ஆன உதவியையும் செய்யலாமே! எதற்கெல்லாம் போராட்டம், எப்படியெல்லாம் நடத்தலாம் என்பதை நம் உண்மை வாசகர்கள் எழுதி அனுப்பலாம். சிறந்த போராட்டத்திற்குப் பரிசு உண்டு. வரும் பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் உங்கள் ஆலோசனைகளை அனுப்பிவையுங்கள்.

எதுக்காவது போராடுவோம்?

உண்மை

பெரியார் திடல், 84/1, (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7

unmaionline@gmail.com

தமிழ் ஓவியா said...

கருத்து


மார்க்சிஸ்ட் தலைவர்கள் பலர் தற்போது சிந்தனை ரீதியாக முதலாளித்துவ ஆதரவாளர்களாகி-விட்டனர். சமூக, பொருளாதாரக் கொள்கையின்படி நான் இன்னும் ஒரு மார்க்சிஸ்ட்தான். முதலாளித்துவ நாடுகளில் ஏழை, பணக்காரர்கள் இடையேயான வித்தியாசம் அதிகரித்துள்ளது. சரிசமமான பகிர்வுக்குத்தான் மார்க்சிசத்தில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

- தலாய் லாமா, புத்த மதத் தலைவர், திபெத்.

இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு எட்டு விபத்துகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் நடைபெறும் விபத்துகளில் 15 விழுக்காடு தமிழகத்தில் நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் இரண்டு பேர் செஞ்சிலுவைச் சங்கம் அல்லது அவசர ஊர்தி சேவை போன்ற முதலுதவிச் சங்கங்களில் தொண்டாற்ற வேண்டும்.

- கே.ரோசய்யா, தமிழக ஆளுநர்


மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் மட்டுமே உள்ளனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நாடு முழுவதும் பெண் சிசுக் கொலை அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

- மேனகா காந்தி, மத்திய அமைச்சர்சொல்றாங்க...பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடக்கம்தான். பாரதப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் கற்பிக்கும் வகையில் விரைவில் கல்வி முழுமையாகக் காவி மயமாக்கப்படும்.

- ராம் பிலாஸ் சர்மா, கல்வி அமைச்சர், ஹரியானா

சொல்றேங்க...

நல்லா கற்பிங்க அமைச்சர் சார்!

ஆனா... நண்பன் படத்து டயலாக் மாதிரி கற்பிங்கிறது கற்பழின்னு ஆகாமப் பாத்துக்குங்க! ஏன்னா... நீங்க சொல்ற பாரதப் பண்பாட்டின் மகாபாரதத்தையும், பாகவதத்தையும், இதர புராணங்களையும் மாதிரி கற்பழிப்பு சீன் உள்ள கதைகள் உலகத்திலேயே கிடையாது!

சொல்றாங்க...

பகவத் கீதையை முன்னிறுத்தி அரசியல் நடைபெறுவதை ஏற்க முடியாது. உலகில் உள்ள அனைவருக்கும் கீதை பொதுவானது. அது பா.ஜ.க.விற்கு மட்டும் சொந்தமல்ல.

- பூபிந்தர் சிங் ஹுடா, மேனாள் முதல்வர், ஹரியானா

சொல்றேங்க...

இதுதானா சார் உங்க டக்கு! பா.ஜ.க. மட்டும் இதை வச்சு அரசியல் பண்ணக்கூடாது... நாங்களும் பண்ணு-வோம்ங்கிறீங்களா... விஷம் யார் கையில இருந்தாலும் விஷம்தான் சார்.

சொல்றாங்க...

டில்லியில் ராமபக்தர்களின் அரசாங்கம் அமைந்துள்ளது. ஜெய்ஸ்ரீராம் என்ற மக்களின் பிரார்த்தனையால்தான் ராம பக்தர்களால் டில்லியில் ஆட்சி அமைக்க முடிந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசு அயோத்தியை மேம்படுத்தவில்லை. அயோத்தியைப்பற்றி தற்போதைய சமாஜ்வாடி மற்றும் முந்தைய பகுஜன் சமாஜ் அரசுகளுக்கும் அக்கறை இல்லை. இதற்குக் காரணமே இந்தக் கட்சிகளின் ஜாதிய அரசியல்தான். - நிதின் கட்காரி, மத்திய அமைச்சர்

சொல்றேங்க...

ஆமாங்க... அவங்களோடது பிற்படுத்தப்-பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல். உங்களோடது பார்ப்பன உயர்ஜாதி அரசியல்!

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர் நாடாக பாலஸ்தீனம் ஜனவரி 6 அன்று இணைந்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மின்னணு முறையில் ஓட்டளிக்கத் தேவையான ஏற்பாடுகளை எட்டு வாரங்களுக்குள் செய்துதர மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஜனவரி 12 அன்று ஆணையிட்டது.

அய்ரோப்பிய நாடான குரோஷியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கொலிந்தா கிரயா கிதாரொவிச் வெற்றிபெற்று அந்நாட்டின் அதிபர் பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சுரங்க முறைகேடு வழக்கில் கைதாகி சிறையிலிருந்த கருநாடக மேனாள் அமைச்சர் ஜனார்த்த ரெட்டிக்கு 40 மாதங்களுக்குப் பின்னர் ஜனவரி 20 அன்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

பயங்கரவாதிகள் மீதான வழக்கை விரைந்து விசாரிப்பதற்காக சிறப்பு ராணுவ நீதிமன்றங்கள் ஏற்படுத்த வகை செய்யும் அரசியல் சாசனத் திருத்த மசோதாக்கள் இரண்டினை பாகிஸ்தான் அரசு ஜனவரி 3 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அவை ஜனவரி 6 அன்று நிறைவேற்றப்பட்டன.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவிக்குப் போட்டியிட்ட திருநங்கை மதுகின்னார் வெற்றி பெற்றுள்ளார்.

சவுதி அரேபியா நாட்டில் மன்னர் அப்துல்லா ஜனவரி 23 அன்று மரணம் அடைந்ததை அடுத்து புதிய மன்னராக சல்மான் அறிவிக்கப்-பட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

தேநீர் இரட்டைக் குவளை

மலைஜாதிப் பெண்
கிள்ளிப் பறித்தாள்
தேயிலையை அங்கே!
கறவைப் பசுவை
பாடிக் கறந்தாள்
பால் வந்ததிங்கே!
கரும்பாலை அலுப்பில்
தினம் அவன் உழைத்தே
சக்கரை சேர்ந்ததிங்கே!
தண்ணீர் கலந்தவன்
என்ன ஜாதியோ?
என்ன எழவோ?
-என யாரும் கேட்டறியேன்.
பாத்திரம் தேய்த்தவன்,
அடுப்பைச் செய்தவன்,
எரிக்கிற எண்ணெய்,
கழுவுகிற சோப்புக் கட்டி,
எதற்கும் ஆதிமூலம் கேட்டறியேன்.
ஜாதி பேசும்
சுத்தபத்தம் எல்லாம்
தேநீர்க் கடை
இரட்டைக் குவளையில்தான்.
இப்பெல்லாம் எங்க சார்
இரட்டை டம்ளர். எல்லாமே பிளாஸ்டிக் டம்ளர்தானே' என்பவன்
வலிந்து சொல்வான்
இப்பெல்லாம் யாரு சார்?
ஜாதி பாக்குறா! என்று.

- தம்பி. அழ. பிரபு, மதுரை

தமிழ் ஓவியா said...

டில்லி தேர்தல் பிஜேபிக்குக் கிலி

டில்லியில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபி தோற்கப் போகிறது என்கிற கிலி, பிஜேபி தலைவர்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டு இருக்கிறது என்பதற்கு இதோ இரு எடுத்துக்காட்டுகள்.

டில்லி தேர்தல் வெற்றி, மோடி அரசின் செயல்பாட்டை அங்கீகரிக்கும் தேர்தல் இல்லை

- மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு

நடைபெறும் டில்லி சட்டப் பேரவைத் தேர்தல் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அல்ல; எனவே, டில்லி தேர்தல் முடிவு எந்த விதத்திலும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசைக் கட்டுப்படுத்தாது

- பிஜேபி தலைவர் அமித்ஷா

இப்பொழுதே புரிகிறது தோல்வி ஜூரம் பிஜேபிக்கு வந்து விட்டது.

பிரகாஷ்காரத் கருத்து

மோடி அரசும், ஆர்.எஸ்.எசும் பின்னிப் பிணைந்து செயல்பட்டு வருகின்றன. இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்து பா.ஜ.க. மற்றும் மோடி அரசுக்கு எதிராகப் போராடுவதை முக்கிய பணியாக எங்கள் கட்சி கையில் எடுத்துள்ளது

- பிரகாஷ்காரத் சி.பி.எம். பொதுச் செயலாளர்

கடும் கோபமாம்!

பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா மீது பிஜேபி இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு கடும் கோபமாம். டில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தத் தலைவர்கள் கொடுத்த வேட்பாளர் பட்டியலை, குப்பைக் கூடையில் அமித்ஷா தூக்கிப் போட்டு விட்டாராம். எந்த நேரத்திலும் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், யஷ்வந்த் சின்கா போன்றவர்கள் வெடித்துக் கிளம்புவார்களாம் - இப்படி சொல்லுவது, பிஜேபிக்கு மிகவும் நெருங்கிய ஏடான தினமலர் தான் கூறுகிறது.

கருப்புப் பணம் தொடர்பாக மோடி கூறியவை தேர்தல் தந்திரமாம்!

தமிழ் ஓவியா said...

இது என்ன கூத்து?

மத சுதந்திரம் தொடர்பான ஒபாமாவின் கூற்று துரதிருஷ்டமானது.
- உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

ஒபாமா சொன்ன கருத்து பொதுவாகச் சொல் லப்பட்டதுதானே தவிர, நம்மைப் பற்றியல்ல!
- பி.ஜே.பி. தலைவர் அமித்ஷா

Read more: http://viduthalai.in/e-paper/95648.html#ixzz3QyNvrepD

தமிழ் ஓவியா said...

வாராக்கடன்

முடிந்த டிசம்பர் காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ஏற் பட்ட நட்டம் 6516 கோடி யாம்.

வாராக் கடன் 8.12 சதவீதம் அதிகரித்ததே இதற்குக் காரணமாம். (ரூ.14,500 கோடி வாராக் கடன்).

அம்மா பசி!

அம்மா பசி என்று அழும் குழந்தைகள் உலகில் 56.8 கோடி

Read more: http://viduthalai.in/e-paper/95644.html#ixzz3QyO7QOlG

தமிழ் ஓவியா said...

இராமயண காலம் - பொய்

இராமாயணம் நடந்த காலம் திரேதாயுகம். திரேதா யுகம், துவாபர யுகம் இரண்டிற்கும், முறையே 12,96,000; 8,64,000 ஆண்டுகள். மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம்.

புத்தர் பிறந்து இன்றைக்கு 2500 ஆண்டுகள்தான் ஆகின்றன. இவ்விதம் 2500 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப் பற்றி திரேதா யுகத்தில் (21,00,000 ஆண்டு களுக்கு முன்) நடந்த இராமாயணத்தில் காணப்படுவன ஆதாரங் களுடன் கீழே தரப்படுகின்றன:- (சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு)

1. ராமனைப் பார்க்கவந்த பரதனிடம் ராமன் கேட்கும்போது பவுத்தன், சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங்களையும் தர்ம சாஸ்திரங் களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல், கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும் பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்ப வர்கள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
(அயோத்தி காண்டம் 100ஆம் சர்க்கம், 374ஆம் பக்கம்)

2. ராமன், ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்போது திருடனும், பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும் நாஸ்திகனுக்கும் பேதமில்லை என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(மேற்படி காண்டம் 109ஆம் சர்க்கம், 412ஆம் பக்கம்)

3. சீதையைத் தேடிச் சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்கு சற்று தூரத்திற்கப்பால் புத்தரின் ஆலயம் போல் கட்டப்பட்ட ஓர் உப்பரிகையைக் கண்டார்.
(சுந்தர காண்டம் 15ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)

4. வாலியிடம் ராமன் கூறும்போது, பூர்வத்தில் ஒரு பவுத்த சன்யாசி உன்னைப் போல் கொடிய பாபத்தைச் செய்து அதற்காக மாந்தாதா சக்ரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான் என்று சொன்னதாகக் குறிக்கப்பட்டுள்ளது.
(கிஷ்கிந்தா காண்டம் 18ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)

5. இராமனுக்கு தசரதன் பட்டாபிஷேகம் செய்ய நகரை அலங்கரிக்கும்பொழுது வெளுத்த மேகம் போன்ற தேவாலயங்கள், நாற்சந்தி மண்டபங்கள், வீதிகள் புத் தரின் ஆலயங்கள், மதிற்சுவரின் மேல் கட்டப்பட்டிருக்கும் நாற்கால் மண்டபங்கள்..... முதலிய இடங்களில் கொடித் துணியுள்ள துவஜங்களும், கொடித் துணியில்லாத துவஜங்களும் எடுத்துக் கட்டப்பட்டன எனக் குறிக்கப்பட்டுள்ளது.
(அயோத்தி காண்டம் 6ஆம் சர்க்கம், 23, 24ஆம் பக்கங்கள்)

21 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் இராமாயணக் கதையில் 2500 ஆண்டுக்குள் இருந்து வந்த புத்தரைப்பற்றிக் கூறுகிற சேதியைக் கொண்டு ஆராய்ந்தால் இராமாயணக் கதை 2500 ஆண்டுகளுக்குள்ளாகவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆதலால் இராமாயண காலம் என்பது பொய்யேயாகும்.

Read more: http://viduthalai.in/page-7/95690.html#ixzz3QyPY9shU

தமிழ் ஓவியா said...

சாக்ரட்டீஸின் பொன்மொழிகள்

தங்கத்தைக் கண்டுபிடிக்கச் சுரங்கத்திற்குள் நுழைகிறவன் மரியாதையை பார்த்தால் முடியுமா? தங்கத்தை விட மேலான பொருளை அதாவது நீதியைத் தேடி கண்டுபிடிக்க நாங்கள் புறப்பட்டிருக்கிறோம். இதில் மரியாதையை பார்த்துக் கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடு வோமா?
***************
நீதிக்கு நான் மிக உயர்ந்த ஸ்தானம் கொடுக்கிறேன். அதாவது எந்த விஷ யத்தை அந்த விஷயத்திற்காகவும் அதன் விளைவு களுக்காகவும் நேசிக்கிறோமோ அந்த மாதிரியான விஷயங்களில் ஒன்றாக நீதியை நான் கருதுகிறேன்.
***************
ஒரு மனிதனுக்கு எந்தத் தொழிலைச் செய்ய இயலுகையிலேயே ஒரு திறமை இருக்கிறதோ அந்தத் தொழிலை மட்டும் அவன் செய்து கொண்டு போனால் நல்லது.
***************
விபரீதமான குற்றங்களைச் செய்கிற கடவுளர்களை சிருஷ்டித்து அந்தக் கடவுள்களின் கதைகளைச் சிறுவர் களுக்கு சொல்லிக் கொடுப்போமானால் அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு விடுகிறார்கள் தெரியுமா? கடவுளர்களே பல குற்றங்களை செய்திருக்கிறபோது நாமும்தாம் செய்தாலென்ன! என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.

இந்த மாதிரியான கதைகளை நாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது. தவிர, ஒரு தெய்வத்திற்கு விரோதமான மற்றொரு தெய்வம் சதி செய்வதாகவோ, யுத்தம் செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லலாகாது. ராட்சதர்களோ அல்லது தேவர்களோ ஒருவருக் கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது.

மனிதர்கள் ஒருவரை யொரு வர் நேசிக்க வேண்டுமென்றும், ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், இதை போன்ற நீதிகளைப் புகட்டுகிற கதைகளையே சொல்ல வேண்டும்.
***************
அதிகமான செல்வமோ அதிகமான வறுமையோ தங்கள் ராஜ்யத்திற்குள் வரவொட்டாதபடி அரசர்கள் பாதுகாக்க வேண்டும். அதிக செல்வத்தினால் ஆடம்பரத் தன்மையில் சோம்பேறித்தனமும் உண்டாகும். அதிக வறுமையினால் புரட்சியும், இழிதகைமையும், துரோகமும் ஏற்படும்.

Read more: http://viduthalai.in/page-7/95691.html#ixzz3QyPt7u3O

தமிழ் ஓவியா said...

மதச்சார்பின்மை என்றால் அரசுக்கு மதம் கிடையாது என்பதே பொருள்

குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் சரியான கருத்து

மும்பை, பிப்.5- குடியரசு நாள் விழாவையொட்டி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அரசமைப்பு சட்ட முகப்புரை விளம்பரத்தில் மதச்சார்பின்மை, சோசலிஸ்ட் ஆகிய இரண்டு வார்த்தைகளும் இடம் பெற வில்லை. 42ஆவது திருத்தம் செய்வதற்கு முன் இருந்த முகப்புரையை வெளியிட்டதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் தெற்கு மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில், மாணவர்களிடம் கலந்துரையாடிய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறியதாவது:_-

மதச்சார்பின்மை என்றால், நமக்கு என்ன புரிகிறது? நமது சமூகத்தில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கிறோம். அதனால்தான் நமது நாட்டை மதச்சார்பற்ற நாடு என்கிறோம். மதச்சார்பின்மை என்பது ஒரு நாட்டுக்கு சொந்தமாக மதம் இல்லை என்பதை உணர்த்துகிறது. மத அடிப்படையில் ஒரு நாடு மக்களை பிரிக்கக் கூடாது. வளர்ச்சித் திட்டம், கல்வி உதவித் தொகை ஆகியவற்றை மத அடிப்படையிலோ அல்லது பாலின அடிப்படையிலோ வழங்காமல் பொதுவாக வழங்க வேண்டும். பாலின பாகுபாடு என்ற நோயால் நமது சமூகம் பல இன்னல்களை அனுபவித்துள்ளது. பாலின பாகுபாடு சட்டத் தால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இது சரியான பலனை அளிக்கவில்லை. எனவே இந்த சவாலை சமூகரீதியாக சந்திக்க வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை பின்பற் றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதற்கு நாம் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். சரியா, தவறா என்பதைப் பற்றிக் கவலைப்படால் நாட்டின் குடிமக்கள் பொது வாழ்வில் பங்கு கொள்ள வேண்டும். மாணவர்களும் குடிமக்கள்கள் தான். அதனால் பொது வாழ்வில் பங்கேற்பது உங்களின் கடமை. குடிமக்களாகிய நீங்கள் உங்கள் கடமையைச் செய்ய வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/page1/95621.html#ixzz3QyQKhKFV

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கிரகங்கள்

நமது உடலை சரியான முறையில் இயற்கை யாகவே பராமரித்து வரும் எச்சில், கல்லீரல், இரைப்பை நீர், குடல் நீர், கண் நீர் சுரப்பி, வியர்வைச் சுரப்பி போன்ற நாள முள்ள சுரப்பி நீர் களை ராகு - கேதுவை தவிர ஏனைய ஏழு கிரகங் களும் கட்டுப்படுத்துகின் றன என்று மருத்துவ ஜோதிடர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித் துள்ளனர்.

- தினகரன் ஜோதிட மலர் 4.2.2015

ராகு, கேது என்ற கிரகங்கள் இல்லை என் பது வானியல் அறிவியல் சொல்லும் ஆணித்தர மான கருத்து.

மருத்துவ ஜோதிடர்களாமே - அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? மருத்துவமும் ஜோதிட மும் எதிர்முனைகள் அல்லவா!

Read more: http://viduthalai.in/page1/95626.html#ixzz3QyQU3NYU

தமிழ் ஓவியா said...

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் பாரதிதாசன் பாடல்களை நீக்குவதா?


காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் தொலைதூர கல்வி பாடத்திட்டத்தில் முதுகலை தமிழ் முதலாமாண்டு பாடத்தில் இக்காலஇலக்கியம் எனும் பகுதியில் இடம் பெற்றுள்ள பாரதிதாசன் பாடல் வரிகளான தமிழியக்கம் கவிதை தொகுப்பு கடந்த 2004ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

பத்து ஆண்டு களுக்கு பிறகு இப்போது சென்னை ஆழ்வார்ப் பேட்டை, சர்.சி.பி ராமசாமி (அய்யர்) சாலையை சேர்ந்த பார்ப்பனர் ஒருவர் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்குழு தலைவர் திரு சோம. கலியமூர்த்தி அவர்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மேற்கண்ட புரட்சிக் கவிஞரின் தமிழியக்கம் பாடல்களை நீக்க வேண்டும், இல்லை யென்றால் தங்கள் மீதும், நிர்வாகத்தின் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.அதற்கு பதிலளித்த துணைவேந்தர் (பொறுப்பு) முறைப்படி கடிதம் அனுப்பாமல், சொல்வதை மட்டுமே வைத்து நீக்க முடியாது, எனவே, தங்களின் சார்பில் வேண்டுகோள் கடிதம் அனுப்பினால் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்க, அந்தப் பார்ப்பனரும் உடனடியாக தனது வேண்டு கோளை இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார்.

உடன் அதற்கான நடவடிக்கை நடக்க உள்ளது என்ற தகவலறிந்த திராவிடர் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், பாரதிதாசன் தமிழ் பேரவை, பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி, பகுத்தறிவாளர் கழகம் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பாரதிதாசன் பாடல்களை நீக்கக் கூடாது என்று அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் பொறுப்புக்குழு தலைவர் திரு சோம. கலியமூர்த்தி அவர்களிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இதனிடையே கடந்த 02.02.2015 அன்று காரைக்குடி வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் மூலம் இத்தகவல் அறிந்து அன்று மாலை காரைக்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் இது குறித்து பேசும் போது புரட்சிக்கவிஞர் பாடல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டவை; அதை நீக்கிட துணைவேந்தருக்கும் அதிகாரமில்லை, அரசுக்கும் அதிகாரமில்லை.

எனவே, திராவிடர் கழகம் இது தொடர்பாக நடத்தும் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு அளிக்கும், போராடும் என்று பேசினார். இதனிடையே வரும் 12.02.2015 அன்று நடக்கவுள்ள அழகப்பா பல்கலைகழக ஆட்சிமன்றக் குழு கூட்டத் தில் இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்து நீக்கும் முயற்சி எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இதை தடுத்து நிறுத்த காரைக்குடியில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

மத்தியில் பாரதீய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி அமைந்து விட்டது என்றவுடன் இந்தப் பார்ப்பனர்களின் தலைகளில் அதிகாரத் திமிர் என்னும் கொம்பு முளைத்து விட்டதாகவே திமிருகிறார்கள் - முட்டித் தள்ளக் குதியாட்டம் போடுகிறார்கள்.

பல்கலைக் கழகத்தில் எந்தப் பாடத்தை வைப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை இந்தப் பார்ப்பனர்களுக்கு யார் கொடுத்தார்கள்?

அறிவியலுக்கு முரணாக பித்தாபிறை சூடி பெருமானே! (தலையில் சந்திரனை சூடியிருக்கும் சிவபெருமானே!) என்ற பாடல்களை எல்லாம் பாடத் திட்டத்தில் சொல்லிக் கொடுக்கும் பொழுது பகுத் தறிவுச் சிந்தனை வளம் கொழிக்கும் புரட்சிக் கவிஞர் பாடல்கள் பல்கலைக் கழகத்தில் இடம் பெறக் கூடாதா?

குற்றலாக் குறவஞ்சியில் ஒரு பாடல்:
காதலஞ் செழுத்தார் போதநீ றணியார்
கைந்நரம் பெடுத்துக் கின்னரம் தொடுத்தப்
பாதகர் தோலால் பலதவி லடித்துப்
பறவைகள் படுக்கும் குறவனும் நானே
என்று குற்றாலக் குறவஞ்சியில் திரி கூட ராசப்பக் கவிராயர் பாடியுள்ளார்.

அடியார்கள் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி வழுத்தும் சிவபெருமான் திருநீற்றை அணியாதவர் களின் கைந் நரம்பினை எடுத்துக் கின்னரம் என்ற யாழில் தொடுத்து, நீறில்லா நெற்றியினுடைய தீவினை யாளர்களுடைய (பாவிகளுடைய) தோலினால் செய்யப்பட்ட தவிலினை அடித்துப் பறவைகளைப் பிடிக்கின்ற குறவனும் நானே! என்பது இப்பாடலின் பொருள். மேல்நிலைப் பள்ளிகளில் இப்பாடல் வைக்கப் பட்டதுண்டு அதைப்பற்றியெல்லாம் இந்த அறிவுக் கொழுக்கட்டைக் கண்டு கொள்ளாதது ஏன்?

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம், தமிழர் ஒருவரின் நன்கொடையால் உருவானது. அத்தகு பல்கலைக் கழகத்தில் ஒரு தமிழ்க் கவிஞரின் பாடல் களை நீக்க முயலுவது கண்டிக்கத்தக்கது. மீறினால் கடும் போராட்டம் வெடிக்கும் எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page1/95597.html#ixzz3QyQhGnU3

தமிழ் ஓவியா said...

ஆயுதம்!


கொஞ்சத் தண்டனையானாலும், அதிகத் தண்டனையானாலும் அது எதற்காக ஏற்பட்டது என்றால், ஒரு குற்றத்தைச் செய்தவன் மேலும் (மறுமுறை) அக்குற்றத்தைச் செய்யாமல் இருப்பதற்குப் பயன்படும் ஆயுதம்தான் அது.
(விடுதலை, 13.01.1965)

Read more: http://viduthalai.in/page1/95596.html#ixzz3QyQsEvKM

தமிழ் ஓவியா said...

விடுதலையின் சிறப்பு

எனக்கு வயது 55 ஆகிறது. மாணவப் பருவம் தொட்டு, விடாமல் விடுதலை படித்து வருகின்றேன். ஒருவர் நல்ல மனோதிடமும், பொது அறிவும், அரசியல் தெளிவும் பெற விடுதலையை மட்டும் படித்து வந்தாலே போதும் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.

ஈமோ என்ற ஓவியத் தொடர் ஆரம்பத்தில் சிறுவர்களுக்கான பகுதி என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். அதில் பெரியவர்களுக்கான செய்திகளும் உள்ளன என்பதை விடாமல் படித்து வரும்போது தெரிந்துகொண்டேன்.

விடுதலை வாசகர் ஒவ்வொரு வரும், தான் படித்த விடுதலை நாளிதழை, விடுதலை நாளிதழ் வாங்காத ஒருவரிடம் கொடுத்து படித்துப் பாருங்கள் என்று சொல்ல வேண்டும். ஏனைய நாளிதழ் களோடு ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்ல வேண்டும் என வேண்டிக் கொள்கின் றேன்.

- பெரி. காளியப்பன், மதுரை

Read more: http://viduthalai.in/page1/95610.html#ixzz3QyR2rJfI