Search This Blog

18.2.15

கடவுளின் மரணம்

(ம.சிங்காரவேலர்  அவர்களின் பிறந்தநாள்   நினைவாக இக்கட்டுரை பதிவு செய்யப்படுகிறது- படியுங்கள்!சிந்தியுங்கள்!! --------------தமிழ் ஓவியா)


ம.சிங்காரவேலர்


தோழர்களே! இன்று நாம் நடத் தும் நாத்திகர் மாநாடு நமது நாட்டில் நடக்கின்ற முதல் மாநாடாகும். இந்த மாநாட்டினால் நம் நாட்டிற்கு நன்மையே உண்டாகும். அறியாதவர்கள் இம்மாநாட்டை கேலி செய்வார்கள், ஆத்திகர்கள் இதனை இகழ்வார்கள், அதிகாரிகள் அடக்குமுறையைக் கையாளுவார்கள், இவை புதிதாக நடக்கும் நிகழ்வல்ல, கடந்த கால வரலாற்றில் முற்போக்கு இயக்கங்கள் தண்டிக்கப்பட்டும் இகழப்பட்டும்தான் வந்துள்ளன.
மூட உலகம் நன்மையளிக்கும் இயக்கங்களை தொடக்கத்திலிருந்தே பழித்தே வந்திருக்கிறது. பழிப்பதோடு மட்டுமின்றி கொடுமைப்படுத்தியும் வந்திருக்கிறது. அறிவியல் அறிவு பரவுவதைத் தடுத்து வந்திருக்கிறது. நாத்திகரான இங்கர்சாலை ஒரு காலத்தில் அமெரிக்கா நாடு பழித்தது. இப்போது அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

பிரித் தானிய நாட்டின் நாத்திகரான பிராட் லாவை அந்நாடு ஒரு காலத்தில் குற்ற வாளிக் கூண்டில் நிறுத்தியது. இப் போது அந்நாட்டில் என்ன நடக்கிறது? இப்போது அந்நாடு அவரது நினைவு நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறது. இந்நிலையில் வருங்காலத்தில் மிக பெரும் நாத்திக மாநாடு நம் நாட்டில் நடைபெறும் என்பதை ந்ன் உறுதியாக நம்புகிறேன்.
நாத்திகர்களின் பெயர் களை நம் மக்கள் மறக்கலாம். ஆனால் அவர்களின் சிந்தனைகள் எப்போதும் மக்கள் நெஞ்சங்களை சிந்திக்க வைத்துக் கொண்டே இருக்கும்.

நாத்திகம் ஒரு பழைமையான கோட்பாடு, அதனை உருவாக்கியதும் மேம்பட வைத்ததும் ஆத்திகமேயாகும், கடவுள் எனுங் கொள்கை உருவாக்கிய தும், அதற்கு எதிராக கடவுள் இல்லை யென்ற கோட்பாடும் தோன்றிவிட்டது.
மனிதன் தாம்பேசும் காலத்திற்கு முன்பு (பேசத் தெரியாத காலத்தில்) அவனிடத் தில் கடவுள் எனும் எண்ணமே இல்லை. பண்டைக் காலத்திலிருந்த மனிதன் கடவுளை நினையாதவனாகவே இருந்தான் அவன் தான் வரலாற்றில் ஆதி நாத்திகனாவான்.

மத வரலாற்றில் உற்சாகம் அளிக்கும் ஒரு செய்தி உண்டு. ஒவ்வொரு மதமும், தமக்கு எதிரான மதத்தினரை நாத்திகராகவே கருதுகின்றன. இந்துவாக இல்லாதவனை ஓர் இந்து அவனை நாத்திகனாகக் கருதுகிறான். ஒரு முக மதியன் முகமதியனாக அல்லாதவனை நாத்திகனாகவே கருதுகிறான்.

இவ் வாறே பெரும்பான்மையினர் கருது கிறார்கள். ஒருவன் நாத்திகனாக இருப்பதில் பெருமை அடைகிறான் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும் புகிறேன், அவன் மதத்தைச் சேராத வனாக இருப்பதுடன் மட்டுமின்றிக் கடவுள் இருப்பதில் நம்பிக்கையற்ற வனாகவும் உள்ளான்.
 
கடவுள் எனும் வார்த்தை மனிதன் உண்டாக்கிய சொல்லாக இருப்பதால், அவன் கடவுளுக்காகக் கோயில்களையும் கட்டத் தொடங்கினான். அவன், மூத் தவர்க்கும், அதிகாரம் உள்ளவர்க்கும் மரியாதையளிப்பது போன்று கட வுளுக்கும் மரியாதை அளிக்கலானான். அவன் தனக்காக எப்படி இசை, நடனம், சடங்கு, விருந்து ஆகியவற்றைப் படைத் தானோ அவ்வாறே தாம் வணங்கும் கடவுளுக்கும் படைத்தான். இவ்வாறே மனிதனைப் போல் கடவுளும் ஆனார்.

முற்காலத்திலிருந்த தந்திரமான மனிதர்கள் வாழ்வதற்கு எளிதான வழியைக் கண்டுபிடித்து, கடவுள் என்ற பதத்தையும் அதற்கான வழிபாட்டை யும் புகுத்தி விட்டனர். கடவுள் எனும் அச்சத்தோடு உறுதியுடன் மனிதன் வாழவும், அனைத்தும் அவற்றால் சாத்தியம் என்பதை அவர்கள் உருவாக்கியதால் புரோகிதர் செல்வாக்குப் பெறும் நிலை ஏற்பட்டு விட்டது.

மனிதனின் கடவுள் பயத்தையும் அச்சத்தையும் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் நன்கு வாழ்ந்தும் களித்தும் இருந்தார்கள். கடவுள் எனும் ஒரு வார்த்தையைப் படைத்து, வழி பாட்டையும், மந்திரச் சடங்குகளையும் ஆத்திக மாளிகையையும் கட்டி அமைத்து விட்டனர்.

மத வரலாற்றில் பல நம்பிக்கைகள் பயனற்றுப் போயின. இந்த நம்பிக்கைகள் தான் ஆத்திக மாகும். இவை வருங்காலத்தில் பயனற் றுப் போகும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆத்திகத்தின் முதன்மையான ஆபத்தான செயற்பாடு என்னவென் றால், அது மனிதனின் துணிவையே நாசமாக்கி விடும். அறியாமை, அவன் சிந்தனையில் ஊறிவிடும். அறிவியல் எண்ணங்களால்தான் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள். ஆத்திகம் மனிதனுக்கு எதிரான தீங்குமட்டுமன்று, அது கொடூரமானது.
கடவுளின் எதிர்காலம் இனி எப்படியோ? ஆனால் அதன்பேரில் கடந்த காலத்தில் நடந்தவற்றை நம்மால் மறக்கவோ பொறுக்கவோ முடியாது. 

நாத்திகம்தான் மனிதன் எண்ணத்தில் உறுதியை உண்டாக்குகிறது. அது ஒன்றுதான் மக்களிடத்திலிருக்கும் சமூக பொரு ளாதார ஏற்றத்தாழ்வை ஒழிக்க உரத்துப்பேசுகிறது. அதுதான் முன் னேற்றப் பாதையிலிருக்கும் தடைகளை அகற்ற உதவுகிறது. மனிதன் மனிதனாக இருக்கவும், இந்தப் பூமியைச் சொர்க் கமாக மாற்றவும் நாத்திகம் தான் அவனுக்குக் கற்பிக்கிறது.
தோழர்களே, நம்முன் முக்கியமான போராட்டம் உள்ளது. நம் வெற்றியில் நாம் பின்தங்கக்கூடாது. நாம் பாது காப்பைத் தேட வேண்டியுள்ளது. ஆத்திகத்தை முழுமையாக நாம் ஒழித்துவிட வில்லை. அதிகாரம், பணம், பிரச்சாரம் ஆத்திகத்திற்கு உதவியாக உள்ளன. பெரும்பான்மையான மக்கள் அறியாமையில் இருந்து கொண்டு ஆத் திகத்தைப் பின்பற்றுகிறார்கள்.

அவர் களை நாம் மீட்க வேண்டியுள்ளது, ஆத்திகம் அதிகாரத்தையும், பணத் தையும் பெற்றிருப்பதால், அது மானு டத்தின் உற்சாகத்தையும், மேம் பாட்டையும் தடுக்கும் தடையாக உள்ளது.

ஹிட்லரிசமும், பாசிசமும் இதற்கு மிக உறுதியான சான்றாகும். மத நம்பிக்கைகளும், காலங்கடந்த புரியாத கருத்துகளும் மனித குரல் வளையைக் கவ்விப் பிடிக்கின்றன. இது ஒரு ஆபத்தான முறையாகும்.
காந்தியடிகள் கூறியவற்றை நாம் நோக்க வேண்டும். அவர் வெளிப் படையாக ஆத்திகத்திற்கு வக்காலத்து வாங்குகிறார். அவர் சாதி அமைப்பில் சீர்திருத்தம் செய்வதற்கு மறுகட்ட மைப்புச் செய்ய ஏங்குகிறார். இவை யெல்லாம் நமது பார்வையில் நாத்திக அடிப்படைக் கொள்கைக்கு முரணான தாகும். அவரால் கூறப்படும் தீண் டாமை, ஆத்திகத்தை வலுப்படுத்தும் திட்டமேயாகும்.
ஆறுகோடி எண்ணிக்கையுள்ள தீண்டத்தகாதோர் பொருளாதாரத்திலும், சமூக வாழ்க்கையிலும் மிகப்பின்தங்கியவராக உள்ளனர். அவர்களுக்கு தேவை கட வுளும் மதமுமா? இல்லை. இவர்களுக்குத் தேவை, நாளும் உண்ண உணவும், வாழ்வதற்குத் தேவையான வேலை வாய்ப்பும் தான்.

நம்முன் மற்றொரு ஆபத்தும் உள்ளது, இந்து மகா சபையினர், சனா தனவாதிகள், முகமதிய வகுப்புவாதத் தினர் சட்ட சபைகளைக் கைப்பற்றப் போராடுகிறார்கள். இதனால், அவர்கள் ஆத்திகத்தை ஒரு வேளை அரங் கேற்றலாம். ஆத்திகத்திற்கு முடி சூட்ட சட்டசபைகளைக் கைப்பற்ற போராடு கிறார்கள். வேண்டாத வாய்ப்புள்ள நம் நாட்டில், இவர்களே நமக்கு மோசமான எதிர்வினையினர் ஆவர்.

தோழர்களே எச்சரிக்கையாக இருங்கள், ஒவ்வொரு கிராமத்திலும், பஞ்சாயத்திலும் ஒவ்வொரு தாலுக்கா விலும் ஊராட்சியிலும் போட்டியிடு வதைத் தவிர்க்க வேண்டாம். சாதிகளின் வஞ்சத்தையும் அதன் கொடுமையையும் வெளிப்படுத்துங்கள், ஆத்திக மூடத் தனத்தை ஒழித்துக் கட்டுங்கள், அன்பு கூர்ந்து நாத்திகத்தையும் பொதுவுடை மையையும் அவ்விடத்தில் அரியணை ஏற்றுங்கள்.

குறிப்பு: மதமூடத்தனம் குறித்தும், இந்துத்துவத்தின் ஆபத்துக்குறித்தும் அந்நாளிலேயே சிங்காரவேலர் துல்லியப் பார்வையில் தொலைநோக் கோடு எச்சரித்துள்ளார். இந்துத்துவா, நம் காலத்தில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி நர்த்தனம் ஆடுகிறது. இப்பேச்சில் சிங்காரவேலர் இறுதியில் கூறியதை, நாம் நிறைவேற்றுவதில் தான் நம் நாட்டின் எதிர்காலம் உள்ளது.
 ------------------------------------- தகவலும் தமிழாக்கமும்: - பா.வீரமணி--
நன்றி: புதிய உலகு டிசம்பர் 2014

38 comments:

தமிழ் ஓவியா said...

இது உண்மையா? இது உண்மையா? இது உண்மையா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 18 நீதிபதி பணியிடங்களை நிரப்பிடும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, தற்போதுள்ள தலைமை நீதிபதி பார்ப்பனர் (வடக்கே இருந்து வந்தவர்) தற்போதுள்ள பார்ப்பன நீதிபதிகளின் எண்ணிக்கை 6 (2 அல்லது 3 சதவிகிதம் உள்ள வகுப்பினர்) மேலும் அதே அளவுக்கு நியமனம் செய்யப்பட- பார்ப்பனப் பண்ணையமாக மாற்றிட - தீவிர முயற்சிகளைச் செய்து, பகீரதப் பிரயத்தனம் செய்யும் நிலையில், இதை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் புரிந்துகொண்டு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது.

இரண்டு மூன்று பட்டியலின் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?

ஒரே பட்டியலாகப் புதிய நீதிபதிகளுக்கான நியமனப்பட்டியலுக்குப் பதிலாக - இரண்டு அல்லது மூன்றாகப் பிரித்து, தனித்தனியே ஒவ்வொரு பட்டியலிலும் ஒன்று அல்லது இரண்டு பார்ப்பனர்கள் பெயரை அவ்வப்போது சேர்ப்பது என்ற தந்திர வித்தை கையாளப்படுவதால் இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது உண்மையா?

தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாய் வருவதற்கு, மிகவும் பார்ப்பன வெறிபிடித்த ஒரு மாவட்ட நீதிபதி, (டில்லியில் தனக்குள்ள செல்வாக்கால்,) கலைஞர் ஆட்சிக்காலத்தில் இங்குள்ள ஆட்சியின் எதிர்ப்பினால், வடக்கே (பஞ்சாபி) மாநிலத்தில் நியமிக்கப்பட்டவர், தற்போது வாரம் இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மந்திராலோசனையின் முக்கிய நபராக உள்ளார் என்பதும், இதில் மற்றொரு ஆலோசகராக சென்னை நீதிமன்ற மூத்த பார்ப்பன நீதிபதி ஒருவரும் முக்கியப் பங்கு வகித்து ஒரு கூட்டுத் திட்டமே உருவாகி அதிகமான பார்ப்பனரை உள்ளே கொண்டு வருவதும், பார்ப்பனரல்லாத மாவட்ட நீதிபதிகளை வீட்டுக்கு அனுப்பிட, ஏதாவது அற்பக் காரணங்களைத் தேடுவதும், தலைக்குக் கத்தி வைக்கும் மனு நீதி ராஜ்யத்தை நடத்திவரும் கொடுமை தொடர்கிறது என்று உயர்நீதிமன்ற நீதித்துறை வட்டாரங்களிலேயே கூட குமுறலும், கொந்தளிப்பும் பெருகியுள்ளன என்பது உண்மையா?

எந்தவித ஊழல், லஞ்சக் குற்றச்சாட்டு ஏதும் இல்லாத - கூறவும் முடியாத நிலையில் ஒரு மாவட்ட நீதிபதியை இதற்கு மேலே பதவி உயர்வு (உயர்நீதிமன்ற நீதிபதிக்குத் தகுதி) அவர் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக இம்மாதம் 28 ஆம் தேதி அவரது பதவிக் காலம் (மாவட்ட நீதிபதிக்கானது) முடிவுறும் நிலையில், அவரைப் பரிந்துரை செய்வதைத் தவிர்க்கவே,
அவர் அரசியல் செல்வாக்குள்ள தம் ஜாதிக்காரர் ஒருவரை ஒரு குறிப்பிட்டவரைச் சந்திக்கின்றார் என்றெல்லாம் உயர்நீதிமன்ற மேலிடம் ஏனோதானோ என்று குற்றம் சுமத்தி, செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதுபோல நடந்துகொள்வது உண்மையா?

மாவட்ட நீதிபதி பதவிகள் நியமனத்திலும் பார்ப்பன சூழ்ச்சி

மாவட்ட நீதிமன்ற சார்பு (Subordinate Judiciary) தேர்வுக்கான, தேர்வுத் தாளைத் திருத்துதல், மாவட்ட நீதிபதி முதல் மற்ற நீதித் துறையில் பார்ப்பனர் ஏக போகம் தொடரும் வண்ணம், பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு மதிப்பெண் போடுவதில், பாரபட்சம் காட்டி, பார்ப்பனரல்லாதவர்களைத் தடுக்கும் முயற்சியை திருப்பணியாகவே ஒரு பார்ப்பன உயர்நீதிமன்ற நீதிபதி, மேலிடத்தின் ஆதரவோடு நடத்தி, பார்ப்பனரல்லாதவர்களை ஒழித்துக்கட்டும், பரசுராம அவதாரம் எடுத்து வருவது உண்மையா?

இதுபற்றி உடனடியான மாற்றம் தேவை; பார்ப்பனரல்லாத மூத்த நீதிபதிகள் பலர் இருந்தும், இந்தப் பொறுப்பு முழுவதும் ஏன் ஒரு பார்ப்பனரிடமே விடப்பட்டுள்ளது? இந்த நிலையால், மேலும் குமுறல் அதிகமாகி, நீதித்துறை கொதி நிலையில் உள்ளது என்பதும் உண்மையா?

குறிப்பு: இதற்கான சமூகநீதிப் போராட் டத்தில் பெருமளவு வழக்குரைஞர்கள் கலந்துகொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம் -

திராவிடர் கழகம்)

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் 2000-த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் படுகொலைக்குக் காரணமாக இருந்த ஆட்சியின் சொந்தக்காரர் மோடி கூறுகிறார்

உலக அளவில் நடக்கும் மத ரீதியான மோதல்கள் கவலையளிக்கிறதாம்!

புதுடில்லி, பிப்.18_ டில்லி விக்யான் பவனில் நடந்த கிறிஸ்துவ மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி உலக அளவில் நடக்கும் மதரீதியான மோதல்கள் கவலையளிப்பதாக உள் ளது என்று தெரிவித்துள் ளார். கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் மற்றும் கன்னிகாஸ்திரி யூப்ரேசியா ஆகியோருக்கு அண்மையில் வாடிகன் நகரில் நடந்த விழாவில் புனிதர் பட்டம் அளிக்கப் பட்டது. புனிதர் பட்டம் அளிக்கப்பட்டதை நினை வுகூரும் வகையில் டில் லியில் உள்ள விக்யான் பவனில் நடந்த விழாவில் கொண்டாடப்பட்டது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உலகில் தங்களுக்கு விருப்பமான மத நம்பிக் கையை பின்பற்ற ஒவ் வொருவருக்கும் பூரண உரிமை உள்ளது இந்தி யாவிலும் அந்த நிலை உள்ளது என்று கூறிய மோடி இதற்கான சுதந் திரத்தை அரசு உறுதி செய்யும் என்றார். அனைத்து மதத்தின ரையும் மதித்து நடக்கும் பண்பாடு ஒவ்வொரு இந்தியனின் உணர்வி லும் கலந்தது என குறிப் பிட்ட மோடி, மத சகிப்புத் தன்மையுடனும், பரஸ்பர மரியாதையுட னும் பிற மதத்தினரை மதிக்கவேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத ரீதியிலான மோதல்களை உருவாக்கு பவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை என்றார்.

இந்தியா வந்த அமெ ரிக்க அதிபர் ஒபாமாமுதல் அமெரிக்க பத்திரிகையின் தலையங்கம்வரை இந்தி யாவில் மத நல்லிணக்கம் குறைந்து வருவதாக பேசப்பட்டது. பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் மவுனம் கலைத்துப் பேச வேண்டும் எனவும் பல் வேறு தரப்புகளில் இருந்து தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வந்தது.

மோடியை அழைக்க எதிர்ப்பு!

பிரதமர் மோடியை இந்நிகழ்ச்சிக்கு அழைத் ததில் கிறிஸ்தவ சபை களுக்கு இடையே இரு வேறு கருத்து நிலவுவ தாகவும் தெரிகிறது. ஒரு தரப்பினர், டில்லி யில் தேவாலயங்கள்மீதான தாக்குதலுக்குப் பின்னர் எந்தக் கருத்தும் தெரிவிக் காதவரை ஏன் அழைக்க வேண்டும் என வாதிட்ட தாகவும், மற்றொரு தரப் பினர் இந்த அழைப்பின் மூலம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்பாக பிரதமர் மவு னம் கலைக்க வழிவகை ஏற்படும் என தெரிவித் ததாகவும் கூறப்படுகிறது.

தலைநகர் டில்லியில் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கு தலுக்கு ஆளாகிவருகின் றன. கடந்த வாரம் கிறிஸ் தவ கல்வி நிறுவனம் ஒன்று தாக்கப்பட்டது. இருப்பினும் மோடி மத மோதல்கள் தொடர்பாக தொடர்ந்து மவுனத்தை கடைப்பிடித்து வந்தார். டில்லி தேர்தல் தோல்வி, அதைத் தொடர்ந்து காஷ்மீரில் ஆட்சி அமைப் பதில் மீண்டும் தோல்விய டையும் நிலை, உலக நாடுகளின் அழுத்தம் போன்றவைகளால் இறுதி யில் மோடி தனது நிலைப் பாட்டைக் கூறியுள்ளார். அதே நேரத்தில் நேரடி யாக இந்துத்துவா சக்தி களைக் குறிப்பிடாமல், சர்வதேச மத ரீதியான மோதல்கள் என்று குறிப் பிட்டதன்மூலம் சங் பரி வாரத்தின் தலைவர்களை சமாதானப்படுத்துவதுபோல் உள்ளதாகத் தெரிகிறது.

மோகன் பகவத், அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா போன்றோர் இந்து ராஷ்டிரம், அகண்ட பாரதம், இந்தியாவில் பிறந்த அனைவரும் இந் துக்களே என்றும், விரை வில் 5 கோடி பேரை இந்துமதத்திற்கு மாற் றுவோம் என்று கூறி வரும் நிலையில், மோடி யின் இந்த திடீர்ப் பேச்சு சங் பரிவார் கூட்டங்களி டையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதான் மோடியின் மதச்சார்பின்மை!

இந்துக் கலாச்சாரம், இந்து நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் அரசு மத்தியில் அமைந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடிக்குச் சற்று அவகாசம் கொடுங்கள். நமது பாரதத் தன்மை குறித்த கனவு களை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார்.

மேற்கண்டவாறு ராகவ் ரெட்டி, வி.எச்.பி. அமைப்பின் சர்வதேசத் தலைவர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/96418.html#ixzz3S69iOwIi

தமிழ் ஓவியா said...

சிவராத்திரி உபயம்: 2000 பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதி

உஜ்ஜைன், பிப். 18_ மத்தியப் பிரதேசம் உஜ் ஜைனியில் உள்ள மகா பைரவர் கோவிலில் சிவராத்திரி அன்று இரவு பிரசாதம் சாப்பிட்ட 2000 சிவ பக்தர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனை யில். சேர்க்கப்பட்டுள் ளனர்.

அதில் 200_க்கும் மேற்பட்டவர்களின் நிலைமை மோசமாக உள்ளதாம். மிகவும் சக்திவாய்ந்த தெய்வம் என்றும், உலகம் அழியும்போதுகூட அழி யாத கோவில் என்றும் கதைகட்டி விடப்பட்ட உஜ்ஜைனி மகாபைரவர் கோவிலில் சிவராத்திரி விழாவன்று ஆயிரக்கணக் கானோர் கூடுவார்கள். இந்த ஆண்டும் உஜ்ஜைனி மகாபைரவர் சிவராத்திரி கோவில் விழா கடந்த ஞாயிறு அன்று துவங்கி யது. மத்தியபிரதேச மாநிலம் மட்டுமின்றி ராஜஸ்தான் போன்ற மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். நேற்று மாலைமுதல் சிவராத்திரி விழா தொடங்கி நடந்து வந்ததாம்.

நள்ளிரவு விழாவில் கலந்துகொண்ட அனை வருக்கும் பிரசாதம் வழங் கப்பட்டதாம். அத்துடன் விழா நிறைவடைந்தது. பிரசாதம் உண்ட சில மணிநேரத்தில் முதலில் குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் மற்றும் கடுமை யான வயிற்றுவலி ஏற் பட்டது. இதனை அடுத்து பெண்கள் மற்றும் ஆண் களுக்கும் வயிற்றுவலி, மயக்கம் ஏற்பட்டது. முதலில் சில நூறு பேருக்கு மட்டும் இருந்த வயிற்றுவலி இன்று காலையில் ஆயிரக்கணக் கானோர் வயிற்றுவலி மற்றும் வாந்தியால் அவ திப்பட ஆரம்பித்துவிட் டனர்.

இதனால் கோவில் வளாகம் முழுவதுமே அழுகுரல் கேட்கத் தொடங்கியது. நிலைமை மோச மானதைத் தொடர்ந்து அனைவரும் அருகில் உள்ள பல்வேறு மருத் துவமனைகளில் சேர்க்கப் பட்டனர். இச்சம்பவம் குறித்து மத்தியப்பிரதேச தலைமை மருத்துவ அதி காரி என்.கே.திரிவேதி கூறியதாவது. காலைமுதல் 2000_க் கும் மேற்பட்டோர் தொடர்ந்து அரசு மருத் துவமனை மற்றும் தனி யார் மருத்துவமனைகளில் குவிந்தவண்ணம் உள்ள னர்.

சுமார் 500 பேர் களுக்கு முதலுதவி கொடுத்து வீட்டிற்கு அனுப்பி விட்டோம். இதில் 1500_க்கும் மேற் பட்டோர் உள்நோயா ளிகளாக சேர்க்கப்பட் டுள்ளனர். குழந்தைகள் மற்றும் பெண்களில் 200_க்கும் மேற்பட்டோர் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதில் 40 பேரை போபா லில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள் ளோம்.

மாவட்ட காவல்துறை இணை ஆணையர் ஆர்.பி. கோலட் கூறும்போது, பிரசாதம் தயாரித்து வழங்கும் உரிமையைப் பெற்றுள்ள தனியார் நிறு வனம் ஒன்று வெளியில் இருந்து உணவு தயாரித் துக் கொண்டுவந்துள்ளது. உணவில் நச்சு கலந் துள்ளதா என கண்டறிய உணவு மாதிரிகள் ஆய் வகத்திற்கு அனுப்பட் டுள்ளது, இவ்விவகாரம் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடந்துவரு கிறது என்று கூறினார். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/96419.html#ixzz3S69qyljo

தமிழ் ஓவியா said...

போர்க்குற்ற விசாரணையும் - இந்திய அரசும்!

இலங்கையில் புதிய அரசு ஏற்பட்டதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் வரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்பைப் போன்றே பல்வேறு இனிப்பான அறிவிப்புகளும் தொடக்கத்தில் சில ஆதரவு நடவடிக்கைகளும் நடந்தேறின. அதேவேளையில் போர்க் குற்றவிசாரணையைத் தள்ளிவைக்கும் வேலை களும் தொடர்ந்து நடந்து வந்துகொண்டு இருக்கின்றன.

இலங்கை வெளிவிவகாரத் துறை அமைச்சர் மங்கள் சமரவிர அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் போர்க்குற்றவிசாரணையில் அக்கறை காட்டவேண்டாம் என்றுவலியுறுத்தி வருகிறார். அய்.நா. சபைத் தலைவர் பான் கீ மூனிடமும் இதே கோரிக்கையை வைத்தார்.

அவர் அதனை ஏற்கவில்லை. ஆனால், பன்னாட்டு அறிக்கையை ஆறு மாதம் கழித்துத் தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் அனுமதித்து இருப்பது சரியல்ல! மேற்குலக நாடுகளின் முடிவு இந்தியாவின் முடிவை ஒட்டியே இருக்கும் என்ற காரணத்தால் இந்தியா வந்த இலங்கை அதிபர் இந்தியா போர்க்குற்ற விசாரணையை வெளியிடச் செய்யாமல் இருக்க சர்வதேச நாடுகளுக்கு முக்கியமாக அமெரிக்காவை வலியுறுத்தவேண்டும் என்ற கோரிக்கை யையும் மோடியிடம் வைத்துள்ளதாகத் தெரிகிறது.

போர்க்குற்ற விசாரணைத் தள்ளிவைப்பு திடீரென வெளிவந்துள்ள நிலையில், இந்தியா வந்துள்ள இலங்கை குழுவினரின் அறிவிப்பு இந்தியா போர்க்குற்ற விசாரணையை ஆறப்போடுவதில் முக்கியபங்காற்றி உள்ளது என்று தெரிகிறது. இந்தியா வந்துள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழுவில் உறுப்பினர்களான இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவிர மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் சம்பிக்க ரணவாக்க கூட்டாக தலைநகர் டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

சர்வதேச விசாரணை இனப் பிரச்சினைக்கு தீர்வாகாது, நல்லிணக்கத்தினை ஏற்படுத்த நல்லதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் சர்வதேச விசாரணை இலங்கையின் வளர்ச்சியைப் பாதிக்கும். புதிய அரசாங்கம் மலர்ந்த பிறகும் இலங்கையை சர்வதேச அழுத்தங்கள் சூழ்ந்து வருகின்றன எனத் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...

மேலும் அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

போர் முடிவடைந்தும் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு எட்டுவதற்கு வாய்ப்புக்கள் அமையாததற்கு இலங்கை தமிழ்ச் சமூகத்தின் பிடிவாதப் போக்கும், சிங்களப் பகுதியில் உள்ள சில அரசியல்வாதிகளின் அக்கறையின்மையும் காரணமாகும் என்று அறிக்கை கூறுகிறது.

போர்க்குற்ற விசாரணையின்மூலம் தீர்வைப் பெற்றுக் கொள்வதைவிட நாட்டைக் காப்பாற்றி ஒட்டுமொத்தமாக தீர்வொன்றுக்குச் செல்லவேண்டும். இவ்வாறானதொரு நிலையில், சர்வதேசத்தின் தலையீட்டின் மூலம் மீண்டும் இலங்கைக்குள் குழப்பங்கள் தொடருமே தவிர, சர்வதேச தலையீட்டினால் இனப் பிரச்சினைக்கான தீர்வோ அல்லது இலங்கைக்குச் சாதகமான விசாரணைகளோ நடைபெறப் போவதில்லை.

அதேபோல் வடமாகாணத் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளின் நடவடிக்கைகள் நாட்டை மேம்படுத்தும் வகையில் அமையப் போவதில்லை. சமீபத்தில் இனப்படுகொலையை வலியுறுத்தி தீர்மானம் ஒன்று கொண்டுவருவது மீண்டும் தமிழர் பிரச்சினையில் சிக்கலை ஏற்படுத்தும். இவ்வாறானதொரு நிலையில் மீண்டும் பிரிவினைகளைத் தூண்டும் வகையில் சர்வதேச தலையீடுகளை எவரும் தூண்டுவது மோசமானதொரு செயற்பாடாகும்.

இலங்கை விவகாரத்தில் சர்வதேசங்கள் தலையிடுவ தால் நாட்டில் எந்த ஒரு வளர்ச்சியும் ஏற்படப்போவ தில்லை. அதே நேரத்தில் இந்தியா நமக்கு அருகில் உள்ள நாடு இலங்கையின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட நாடு. இலங்கை போன்ற நட்பு நாட்டின்மீது மேற்குலக நாடுகளின் அழுத்தத்தை இந்தியா அனுமதிக்காது, சர்வதேச விசார ணையால் எந்தப் பலனும் இல்லை என்பது இந்தியாவிற்கு தெரியும், என்று தங்களது கூட்டறிக்கையில் கூறியுள்ளனர்.

இலங்கையிலும் பன்னாட்டளவிலும், இந்தியாவிலும் உள்ள தமிழர்களின் கோரிக்கை என்பது இனப் படுகொலை யாளர்களை அடையாளம் கண்டு தண்டனைக்குட்படுத்த வேண்டும், இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழவேண்டும் என்பது மட்டுமே. ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசும், தற்போதைய மோடி தலைமையில் ஆன பாஜக அரசும் இலங்கையில் இனப்படுகொலை விசாரணைப்பற்றி பேசும்போதெல்லாம் இலங்கையின் வளர்ச்சி என்ற சப்பைக்காரணம் காட்டி இனப்படுகொலைகளுக்கு வக்காலத்து வாங்கி நிற்கின்றன.

ராஜபக்சே தோல்விக்குக் காரணம் - அவர் செய்த இனப்படுகொலைகள் தானே! குற்றம் இழைத்தவர்கள் உரிய தண்டனையை பெறுவதையும், ஈழத் தமிழர்களுக்கான மீள் உருவாக்கத்தையும் ஒன்றோடு ஒன்று போட்டுக் குழப்புவானேன்?

இனப்படுகொலை நேரத்தில் ராஜபக்சே அமைச்சரவையில் தாமும் ஒரு அமைச்சராக இருந்த காரணத்தால், ஒரு வகையில் தாமும் பொறுப்பு என்ற உளவியல் காரணமாக இருக்கலாம் என்ற எண்ணம் இருக்கக்கூடும். அவற்றையும் தாண்டி, உலகளாவிய அளவில் ஒரு முக்கியப் பிரச்சினை இருக்கிறது.

ராஜபக்சே போன்ற இனப்படுகொலையாளர்கள் தண்டிக்கப்படவில்லையானால், உலகில் பல பகுதிகளிலும் இத்தகைய ராஜபக்சேக்கள் அவ்வப்போது தைரியமாகத் தோன்றிக்கொண்டேதான் இருப்பார்கள் என்பதை மறக்கவேண்டாம்.

இன்றைய மத்திய அரசு பழைய அரசின் பாணியில் இப்பிரச்சினையில் நடந்துகொள்ளுமேயானால், அது தமிழ்நாட்டு மக்களின் கடும் வெறுப்பையும், எதிர்ப்பையும் சந்திக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கின்றோம்.

Read more: http://viduthalai.in/page-2/96423.html#ixzz3S6A6GTkC

தமிழ் ஓவியா said...

மகிழ்ச்சிபற்றி ஒரு புதுக்கண்ணோட்டம் (2)

மகிழ்ச்சி என்பது இன்ப உணர்வின் வெளிப்பாடு;

துயரம், துக்கம் என்பது துன்பத்தின், துயரத்தின் வெளிப்பாடு.

வாழ்க்கையில் வெறும் இன்பமோ, வெறும் துன்பமோ எப்போதும் இருந்த தில்லை - எவர்க்கும்.

மாறி மாறி மகிழ்ச்சியும், துயரமும் வெளிப்படும் நிகழ்வுகளும், நிலை களும் சகஜம்.

உலக வரலாற்றில் எப்போதும் எல்லா பக்கங்களும் தொடர் துன்பத் தாலோ அல்லது அறுபடாத தொடர் இன்பத்தாலோ நிரப்பப்பட்டதல்ல; சில பக்கங்கள் இரண்டுமில்லாத காலி பக்கங்களாகவே இருக்கின்றன என்றார் ஜெர்மன் தத்துவ அறிஞர் ஜார்ஜ் வில் லியம் பிரஃடெரிக் ஹெகல் (1770-1831).

(இவர் வரலாற்றுக்கும், தத்துவத் திற்கும் உள்ள இணைப்பைப்பற்றி நன்கு அறிந்து ஆராய்ந்த மேதையாவார். காரல் மார்க்ஸ்க்கு இவரது தத்துவம், தர்க்க முறையின் தாக்கம் அதிகம் உண்டு).

தத்துவ அறிஞர்களில்கூட நம்பிக் கைக் குறைந்த சலிப்பும், விரக்தியும் மேலோங்கும் அணி (Pessimistic Philosophers); மற்றொரு வகை எப்போதும் நம்பிக்கை தளராத விரிந்த மனப்போக்கு உடைய தத்துவ ஞானிகள் (Optimistic Philosophers).

முன்னவர்களை Weeping philosophers - எப்போதும் அழுது புலம்பும் அழுகுணிச் சித்தர்கள் என்றும், பின்ன வர்களை எப்போதும் சிரித்து மகிழும் சிரிப்புத் தத்துவ அறிஞர்கள் Laughing Philosophers என்றும் கூறி மகிழ்வது.

சிற்சில நேரங்கள் ஒருவர் மகிழ்ச்சி மற்றவருக்குத் துன்பம் என்ற நிலையே உலகின் நடைமுறையாக உள்ளது! எல்லோருக்கும் எல்லா நிலைகளிலும் மகிழ்ச்சியும், துயரமும் - இன்பமும், துன்பமும் - எல்லா நேரங்களிலும் ஏற்பட்டுவிடுமா?

இயலுமா? என்றால், பதில் இல்லை. கடினம்; எளிதில் இவை இணையாது என்பதே யதார்த்தம் - நடைமுறை.

பசியால் மானை வேட்டையாடி சிங்கம் தன் பசியைத் தீர்த்து மகிழ்கிறது.

மான், சிங்கத்திடமிருந்து தப்பியோட முயன்று அதில் தோல்வி அடைந்து, சிக்கிக் கொள்கிறது. இரையாகி அது சிங்கத்திற்கு தன்னை இழந்து சிங்கம் மகிழ்ச்சி அடைகிறது.

அதுபோலத்தான் ஏழைகளும், பாட்டாளிகளும் தங்கள் இரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி உழைத்து, தனக்குரிய பலன் கிட்டாவிட்டாலும், பணக்காரர்களின் குதிர் நிரம்பி வழிய உதவுகின்றனர்!

ஏழை பாட்டாளிகளின் கண்ணீர், செந்நீர், ஏகபோக முதலாளிகள் - பணக்காரர்களின் பன்னீராக மாற்றப் படுகிறது!

ஒரு பக்கம் வலி மிகுந்த துன்பம்; மறுபுறம், குதூகலம், கொள்ளை லாபத் தினை குன்றெனக் குவித்து மகிழும் குவலயச் சுரண்டல்காரர்களின் மகிழ்ச்சி - என்று நியாயமான துன்பம், நியாயம், நீதியற்ற இன்பம் - இவைதான் இன் றைய உலகின் சமூக அமைப்பாகி உள்ளது!

பொத்தல் இலைக் கலமானார் ஏழை மக்கள்
புனல் நிறைந்த தொட்டியானார் செல்வர்

என்றார் புரட்சிக்கவிஞர்.

மகிழ்ச்சியை இன்பத்தால் மட்டுமே அனுபவிப்பதைவிட, துன்பம் துவட்டி எடுக்கும்போதும் அனுபவிக்கப் பழகு வது மிகவும் இன்றியமையாத தேவை யாகும் தொண்டறத்தில்.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை (குறள் 669)

இதில் துன்பத்தை ஏற்று துக்கம் வராமல் (கொண்ட லட்சியத்திற்கான விலை என்கிறபோது, மகிழ்ச்சியோடு அதை ஏற்கும் வைர நெஞ்சங்களுக்கு, வையகத்தில் பஞ்சமா? வரலாற்றில் கொஞ்சமா?

நச்சுக்கோப்பையை ஏற்று குடித்து மகிழ்வுடன் தனது வாழ்வை முடித்து, வரலாறாக வாழுகிறார் சாக்ரட்டீஸ்!

தூக்குமேடையை முத்தமிட்ட கொள்கை நாத்திக நன்னெறியார் தீரன் பகத்சிங்,

வசதி, வழக்குரைஞர் செல்வ வாழ்வு துறந்து, சிறையில் செக்கிழுத்து, அறி வையும், மானத்தையும் தவிர, மற்ற எல்லாவற்றையும் துறந்த ஒப்பற்ற தியாக மாணிக்கம் - வைர நெஞ்சம் படைத்த வ.உ.சிதம்பரனார், எதிர் நீச்சல், இழிவுகளைச் சுமந்தும் தன் இலட்சியப் பயணத்தை, ஒரு கையில் மூத்திரச் சட்டி, மறுகையில் அணையாத அறிவுச்சுடர் தாங்கி 95 வயது வரை பட்டிதொட்டியெங்கும் பரப்புரை செய்து வாழ்வதில் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்ட ஈரோட்டு ஏந்தல் தந்தை பெரியார் - இப்படி எத்தனை எத்தனையோ பேர் துன்பத்தால் துவளாது, இன்பத்தை நெருப்பிலும் கண்டு தூய்மையாலே தொண்டறச் செம்மல்கள் ஏராளம் உண்டே!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/96424.html#ixzz3S6AP6J52

தமிழ் ஓவியா said...

பாவாணர் - ஜீவா விழா மாட்சி

- நம்.சீனிவாசன்

திராவிடர் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இராஜபாளையம் வருகை புரிந்தார். மேற்கு தொடர்ச்சி மலை தாலாட்டும் தொட்டில் இராஜ பாளையம் வளமான மண்...! பண்பட்ட மக்கள்...! தமிழர் தலைவரை உற்சாகமாய் வரவேற்று மகிழ்ந்தனர்.

இராஜபாளையத்திற்கு அருகில் அமைந்துள்ள சிற்றூர்தான் முரம்பு. வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். தமிழே உலக முதன்மொழி என முழங்கிய திரா விட மொழி ஞாயிறு தேவநேயப் பாவா ணர் பயின்ற ஆசிரியராக பணியாற்றிய பெருமைக்குரிய ஊர்.

தமிழ் உணர்வாளர்கள், தமிழ் இன உணர்வாளர்கள் ஒன்று கூடி முரம்பு எனும் சிற்றூரில் பாவாணர் கோட்டத்தை எழிலுற எழுப்பியிருக்கின்றனர். பாவாணர் கோட் டத்தின் திறப்பு விழா 2003-ஆம் ஆண்டு சிறப்புற நடைபெற்றது. அய்ந்து துணை வேந்தர்கள், எழுபத்தி மூன்று தமிழறி ஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் விழா அது. பாவாணர் கோட்டமும், நூலகமும் இணைந்து அறிவுச்சுடராய் ஒளி வீசுகிறது. முகப்பில் தேவநேயப் பாவாணரின் முரட்டு உருவம் கம்பீரமாய்க் காட்சி யளிக்கின்றது. நான்கு லட்சம் ரூபாய் செலவில் எழுப்பியிருக்கின்ற அந்த அறிவாலயத்தில் பாவாணரின் நூல்கள் பளிச்சிடுகின்றன. தமிழன் எப்படிக் கெட்டான்? தமிழர் சரித்திர சுருக்கம், திராவிட தாய், சொல்லாராய்ச்சிக் கட்டுரை கள், பழந்தமிழ் ஆட்சி, முதல் தாய் மொழி, தமிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் திருமணம், சென்னை பல்கலைக்கழக அகராதியின் சீர்கேடு, பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும், தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு, இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? தமிழர் மதம், திருக் குறள் தமிழ் மரபுரை முதலிய அறிவுக் களஞ்சியங்கள் நூலகத்தை அலங்கரிக் கின்றன. நாட்டம் மிக்க முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மொய்க்கும் சோலை தான் பாவாணர் கோட்டம்.

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாண ருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடியது திராவிடர் கழகம். கொண்டாடியவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள். பாவாணருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மக்களின் விருப்பத்தை நிறைவேற்றியவர் வேந்தர் வீரமணி. அப்பேர்ப்பட்ட வீரமணிக்கு வரவேற்பு கொடுப்பதும், பாராட்டு மழை பொழிவதும் எங்கள் கடமை என்று பாவாணரின் கொள்கை களை நெஞ்சில் சுமந்த தமிழ் உள்ளங்கள் விழைந்தன. இராஜபாளையத்திற்கு வருகை புரிந்த விடுதலை ஆசிரியரை அன்போடு அழைத்தனர். மகிழ்ச்சியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தமிழர் தலைவர். கூடியிருந்த தமிழ் அன்பர் களின் உற்சாகத்திற்கு அளவில்லை.

சீரிய பகுத்தறிவாளர் நெடுஞ்சேரலாதன் பம்பரமாய்ச் சுழன்றார். இளங்கண்ணன், வெற்றிக்குமரன், உலகநாயகன், நில வழகன், அரச குரு முதலிய தமிழ் அன் பர்கள் விழாவில் நெகிழ்ச்சியாய் வலம் வந்தார்கள். தமிழர் தலைவரின் வருகை அவர்களுக்கு அளவில்லாத ஆனந் தத்தை நல்கியது. வரவேற்புரை, ஆண் டறிக்கை, வேண்டுகோள் முதலிய பல் வேறு நிகழ்வுகளை நேரத்தின் நெருக்கடி கருதி மின்னலைப்போல விரைவாய், சுருக்கமாய் மேடையில் நிகழ்த்தினார்கள். தாய்ப்பாலில் தூசு இல்லை என்பதுபோல அன்பர்களின் உரையில் பிறமொழிக் கலப்பில்லை.

தமிழ் ஓவியா said...

அய்யா வீரமணியை உரை நிகழ்த்த அழைத்தார்கள். கூடியிருந்த தமிழ் தொண்டர்களின் உணர்ச்சியை தம் உரையில் தமிழர் தலைவர் வெகுவாய் புகழ்ந்தார். தேவநேய பாவாணரின் ஆராய்ச்சி திறத்தை அழகுற படம் பிடித்துக்காட்டினார். தென்னூல்களான தொன்னூல்களெல்லாம் வடமொழியில் பெயர்க்கப்பட்ட பின் அழிந்தும் அழிக்கப் பட்டும் போயின என்று தமிழர் வரலாறு என்ற தம் நூலில் ஞா.தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டிருப்பதை மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் எடுத்துக்காட்டி விளக்கியதை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நினைவு கூர்ந்தார். தமிழன் என்றால் தமிழ்பற்று மட்டும்தான் இருக்கும். திராவிடன் என்று சொன்னால் அதில் தமிழ்ப்பற்றோடு இனப்பற்றும் இருக்கும் என்றார். அய்யா பெரியாரின் கொள்கையையும் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் கொள் கையையும் சரியாக உணர்ந்து கொண்ட வர்கள் இங்கே குழுமியிருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது என்றார்.

பாவாணர் பாசறைக் கட்டுவதற்காக சீயோன் மலையில் பத்து லட்சம் ரூபாய்க்கு தமிழன்பர்கள் இடம் வாங்கி யிருக்கிறார்கள். பாவாணர் பாசறையில் தமிழியல் பயிற்சிப் பயிற்றகம் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. அம் முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ரூபாய் பத்தாயிரம் வழங்குவதாக் தமிழர் தலைவர் அறிவிக்க உற்சாகமாய் கரவொலி எழுப்பி மகிழ்ந்தார்கள்.

விழாவில் கலந்து கொண்ட தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு ஆட்சி பொறுப்பாளர் ஆ.நெடுஞ்சேரலாதன் பயனாடை அணிவித்தார். விழாவில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சந் தனமாலை அணிவிக்கப்பட்டது. சீயோன் மலை, முரம்பு, மில்கேட், சோழபுரம் வடக்கு. தேசிகாபுரம், ஆசிலாபுரம் திமுக கிளைசெயலாளர்கள் பொன்னாடை அணிவித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் சொ.ஞானராஜ், உறுப்பினர் பசுபதி பாசம் பொங்க பயனாடை அணிவித்தார்கள்.

பாவாணர் உரை அடங்கிய குறுந்தகடு, தமிழ்எண் பொறிக்கப்பெற்ற மணிப் பொறி, பாவாணர் விருது கேடயம், பாவாணரியல் ஆண்டுமலர், பாவாணர் கோட்டம் வெளியிட்ட அய்ந்து நூல்கள் முதலியவற்றை விழாக்குழுவினர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கி மகிழ்ந் தனர். விழா நிறைவுற்றப்பின் தமிழர் தலை வரை வாகனம் வரை வந்து பாசமுடன் வழியனுப்பி வைத்ததோடு அன்று இரவு சேத்தூரில் நடைபெற்ற திராவிடர் விழிப் புணர்வுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு தமிழர் தலைவரின் உரைகேட்டு மகிழ்ந் தனர்.

ஜீவா படிப்பகத்தின் நிறுவனர் தோழர் இரா.சண்முகவேல் ஆவார். புத்தகத் தாத்தா என்று சொன்னால் அனைவருக் கும் புரியும், சிவப்புச் சட்டைத் தாத்தா என்று சொன்னால் சின்னக் குழந்தை களுக்கும் தெரியும். சங்கரன் கோயிலுக்கு அருகில் கீழக்கலங்கல் சிற்றூரில் ஜீவா படிப்பகத்தின் இருபத்து ஏழாம் ஆண்டு விழா. தமிழர் தலைவர் வரவேண்டும் என்பது புத்தகத் தாத்தாவின் பெரு விருப்பம். ஊர்ஊராய் சைக்கிளில் சென்று தோளில் சுமந்த புதத்கங்களை மாணவர் களுக்கு வழங்குவதைத் தூய தொண்டாய் முதிர்ந்த 74 வயதிலும் ஆர்வம் பொங்க உழைக்கும் சேவைச் செம்மலை பாராட்டு வது நம் கடமை என்று கருதிய தலைவர் கி.வீரமணி அவர்கள் உற்சாகமாய் புறப் பட்டார்.

பரபரப்பான காலைப்பொழுதில் சங்கரன் கோவில் கடைவீதியில் திமுக தோழர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி பொங்க வரவேற்பு நல்கினர். காவல்துறை யினர் மிகுந்த அக்கறையுடன் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தினர்

Read more: http://viduthalai.in/page-2/96425.html#ixzz3S6AjvJAH

தமிழ் ஓவியா said...

இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி நடக்கிறதா? ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு முஸ்லிம் மத குருக்களின் 6 கேள்விகள்

கான்பூர், பிப். 18_ இந் தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி நடக்கிறதா என்பது தொடர்பாக முஸ்லிம் மத குருக்களின் குழு கேட்ட 6 கேள்வி கள், ஆர்.எஸ்.எஸ். நிர்வா கியை எரிச்சலூட்டியுள்ளது.

அனைத்திந்திய மஜ் லிசே இத்தேயாதுல் முஸ் லிமின் (ஏ.அய்.எம்.அய். எம்.) தலைவர் அசாதுதீன் உவைசி சமீபத்தில் பேசிய பேச்சுக்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப் புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. உவைசியின் கருத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் மவுனமாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதைத் தொடர்ந்து சன்னி உலமாக்கள் கவுன் சில் பொதுச் செயலர் ஹாஜி மொகம்மது சலீஸ் தலைமையிலான முஸ்லிம் மத குருக்கள், ஆர்.எஸ். எஸ். மூத்த நிர்வாகி இந்தரேசை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பு குறித்து ஹாஜி மொகம்மது சலீஸ் கூறியதாவது:

உவைசியின் கருத்தை முஸ்லிம் மக்கள் ஏற்க வில்லை. அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். பாஜக எம்.பி.க்கள் சாக்ஷி மகராஜ், சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் பேசி யதுபோல், நாடாளுமன்ற உறுப்பினரான உவைசியும் தேவையில்லாத கருத்தை பேசியுள்ளார். அதை முழுமையாக எதிர்க் கிறோம்.

இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றனவா என்பது தொடர்பாக 6 கேள்வி களை கேட்டோம். ஆனால் அது இந்தரேசை எரிச் சலூட்டியுள்ளது என் பதை உணர்கிறோம். அவர் அந்த 6 கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.

மாறாக முஸ்லிம்கள் மாநாட்டை நடத்தும்படியும், அதில் தனது பதிலை தெரிவிப்ப தாகவும் கூறினார். ஒரு அறைக்குள் நடந்த கூட் டத்திலேயே இந்த கேள்வி களுக்கு பதிலளிக்க முடிய வில்லை. மாநாட்டில் எப் படி பதிலளிக்க முடியும்.

நமது அரசமைப்பு சட்டமானது அனைவருக் கும் மத சுதந்திரத்தை கொடுத்துள்ளது. மதமாற் றம் குறித்த வரைவு சட் டத்தைக் கொண்டுவர ஏன் தயங்குகிறார்கள்.

முஸ்லிம் மதத்தை பிடிக்கவில்லை என்றால் அதிலிருந்து விலகி செல்ல எநதத் தடையும் இல்லை. யாரையும் கட்டாயப் படுத்தி முஸ்லிமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. நாங்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். நாட்டின் நலனுக்காகவே உள் ளோம். அதனால்தான் பிரிவினையின்போது ஜின் னாவையும், பாகிஸ்தா னையும் துறந்தோம். காந் தியாரை தலைவராகவும், இந்தியாவை தாய்நாடா கவும் ஏற்றுக் கொண்டோம்.

மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் யார் பேசினாலும் அதை எதிர்ப் போம். உவைசியின் கருத் தையும் எதிர்க்கிறோம். காந்தியாரின் வழியில் ஒன் றுபட்டு நாட்டு நலனை யோசிப்போம்.

இவ்வாறு ஹாஜி மொகம் மது சலீஸ் தெரிவித்தார்.

இதனிடையில் முஸ் லிம் மத குருக்கள் குழு வில் இடம்பெறுவதற்கு மறுத்த கான்பூர் நகர முஸ்லிம் மத குருவான ஆலம் ராஜா நூரி, ஆர்.எஸ். எஸ். நிர்வாகியிடம் இது குறித்து பேச வேண்டிய தில்லை. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக வத்தை சந்தித்துக் கேட்க வேண்டும் என்றார்.

இந்த சந்திப்பால் எந்தப் பலனும் கிடைக்கப் போவ தில்லை. நான் ஊரில் இல்லை. இருந்திருந்தா லும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க மாட்டேன் என்றார் நூரி.

ஆர்.எஸ்.எஸ். நிர்வா கியை சந்திக்கும் தங்களு டைய குழுவில், நூரியின் பெயர் இடம்பெறவில்லை. கடைசியில்தான் அவரு டைய பெயர் சேர்க்கப்பட் டது என்று சலீஸ் தெரி வித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/96466.html#ixzz3S6BiHa7s

தமிழ் ஓவியா said...


ஏனிந்த ஆர்ப்பாட்டம்?
கழகத் தலைவர் பேட்டி


சென்னை, பிப்.19- உயர்நீதிமன் றத்தில் நீதிபதி பதவிகள் நியமனம் தொடர்பான இந்த ஆர்ப்பாட்டம் ஏன்? என்பதற்கான காரணத்தை செய்தியாளர்கள் மத்தியில் திராவி டர் கழகத் தலைவர் விளக்கினார். அதன் விவரம் வருமாறு:

சென்னை உயர்நீதிமன்றத் தினுடைய மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 60இல் ஒருவர் காஷ்மீருக்கு தலைமை நீதிபதியாக சென்ற நிலையில் 18 இடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இடங்களை நிரப்புவதில் சமூகநீதிக் கொள்கை கடைப்பிடிக்க வேண் டும். அது சலுகையோ, பிச்சையோ அல்ல. இந்திய அரசியல் சட்டம் வகுத்திருக்கிற போதிய பிரதிநிதித் துவம் (அடிக்குவேட்ரெபிரசன் டேசன்) என்ற பிரிவின்கீழும், சமுகநீதியை நிலைநாட்டவேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

ஜனநாயக நாட்டில் யாரும் கருத்துகளைச் சொல்ல லாம். பட்டியலை அனுப்பும்போது, ஒரே பட்டியலை அனுப்பவேண்டும் என்று சொல்லுகிறார்கள். காரணம் என்னவென்றால், திறமை உள்ளவர்களுக்கு என்று ஒரு பட்டியலாம், பிறகு இன்னொரு பட்டியலாம். மற்றவர்கள் எல்லாம் திறமை இல்லாத வர்களைப்போல அவர்கள் சொல்லுவது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

ஆறு பார்ப்பனர்களை ஒரேயடியாக அனுப்புவ தற்குப்பதிலாக, இரண்டு மூன்றாக பிரித்து அனுப்பி னாலும் மொத்த எண்ணிக்கை அதுதான். இதுவரை உயர்நீதிமன்றத்தையே எட்டிப்பார்க்காத சமூகங்கள், ஜாதிகள் இருக்கின்றன. அவைகளுக்குப் போதிய பிரதிநிதித் துவம் கொடுக்க வேண்டும். அது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தித் தான் இந்தப் போராட்டம்.

வழக்குரைஞர்கள் போராட்டமாக மட்டுமல்ல, மக்கள் போராட்டமாக அது வெடித்திருக்கிறது. மதுரையிலும் இந்தக் கிளர்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. அனைத்து இயக்கங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இப்போது நீதிமன்றப் போராட்டம் வீதிமன்றப் போராட்டமாக மாறி இருக் கிறது. இது முதல் கட்டம். மேலும் தொட ரும். நீதி கிடைக்கும்வரை போராடுவோம்.

செய்தியாளர் கேள்வி: புதிய நீதிபதிகள்...?

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பதில்: 6 பேர். ஆறு பேரும் பார்ப்பனர்கள். ஒரே ஜாதிக்காரர்கள். இதுவரை பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் நீதிபதியாக, தகுதி உள்ள வழக் குரைஞர்களாக இருந்தும் கூட, அவர்களுடைய பெயர் பரிந்துரைக்கப்பட வில்லை. அதுதான் இப்போது வழக்குரைஞர்களுடைய மிகப்பெரிய குறைபாடு; நியாயமான குறைபாடு.

Read more: http://viduthalai.in/e-paper/96498.html#ixzz3SBvGoy1u

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஒழுக்கப் போதனையா?

பிர்மாவுக்கும், விஷ் ணுவுக்கும் இடையே யார் பெரியவன் என்று சண்டை வந்தது என்று புராணம் எழுதி வைக்கப்பட்டுள் ளதே - இப்படி அதிகாரம், ஆணவம் கொண்டவர்கள் தான் படைத்தல், கடவுள், காத்தல் கடவுளா? இது தான் ஆன்மீகம் கற்றுத் தரும் ஒழுக்கப் போதனையா?

Read more: http://viduthalai.in/e-paper/96502.html#ixzz3SBvpbIOk

தமிழ் ஓவியா said...

நரேந்திர மோடியின் ஆட்சியில் தொழிலதிபர்களுக்குத் தான் நல்ல காலம் பிறந்துள்ளது அன்னா ஹசாரே


மும்பை, பிப்.19- பா.ஜ.க.வுக்கு ஓட்டு போட்டால் நல்ல காலம் பிறக்கும் என தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்துள்ள நரேந்திர மோடியின் தலைமையிலான அரசில் தொழிலதிபர்களுக்குத் தான் நல்ல காலம் பிறந் துள்ளது என ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார்.

மராட்டிய மாநிலத் தில் உள்ள தனது சொந்த ஊரான ரலேகான் சித்தி யில் பிரபல தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டி யளித்த அன்னா ஹசாரே, ஏழைகள் மற்றும் விவ சாயிகளின் நலனைப் பற்றி மோடி நினைப்ப தில்லை. மாறாக, தொழி லதிபர்களின் நலனைப் பற்றியே அவர் நினைத்து வருகிறார்.

அவரது தலைமையி லான ஆட்சி அமைந்தவு டன் நல்ல காலம் பிறக் கும் என்று தோன்றியது. ஆனால், அந்த நல்ல காலம் தொழிலதிபர்களுக் குத் தான் வந்துள்ளது. இதனால், அவரது செல் வாக்கு சரிந்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/96500.html#ixzz3SBvxmwAj

தமிழ் ஓவியா said...

நீங்குமா? நீங்காதா?


மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும், அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா? நீங்காதா? என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.
(விடுதலை, 3.12.1962)

Read more: http://viduthalai.in/page-2/96503.html#ixzz3SBwBKa96

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள்
இந்தியாவில் மனித உரிமை மீறல்கள்

Print
Email


இந்தியாவில் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்பு ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு உத்தரபிரதேசம், முசாபர் நகரில் ஏற்பட்ட கலவரம் முதல் அண்மையில் பிகார் மாநிலத்தில் நடந்த கலவரம் வரை குறிப்பிட்ட மதத்தின்மீது கடுமையான தாக்குதல்கள் நடை-பெற்றுள்ளன. இந்தத் தொடர் தாக்குதலின்-மூலம் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்-துள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைச் சுதந்திர-மாகச் செயல்பட அனுமதித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

ஆந்திரா, ராஜஸ்தான், ஜார்கண்ட் போன்ற நகரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முக்கியமாக மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ள இந்த மாநிலங்களில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் மிரட்டி வற்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். மத்திய அரசு இந்த அவலத்தை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது.

அண்மையில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில் எந்தவிதப் பாதுகாப்பும் அளிக்க அரசு முன்வராததால் குற்றவாளிகளுக்குத் துணிச்சல் ஏற்பட்டுவிடுகிறது.

இந்தியாவில் 13 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்கள் ஆரம்பக் கல்வியைக்கூட முடிக்காத நிலையில் இருப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. சில குழந்தைத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்படுகின்றனர்.

தடுக்க வேண்டிய அரசுகளோ கண்ணை மூடிக்கொண்டு இருக்கின்றன என பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்-பட்டுள்ளது

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனியாக உணவு பரிமாறி வ.வே.சு. அய்யர் ஜாதிவெறியோடு நடத்திய சேரன்மாதேவி குருகுலம் மலேயா நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் தந்த ரூ 20,000 நன்கொடையால் நடத்தப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...கருத்து

’மேக் இன் இந்தியா’ மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுகிறார் பிரதமர் மோடி. ஆனால், வெளிநாட்டுத் தயாரிப்புகளை இந்தியாவில் விற்க சங்பரிவாரின் பொருளாதாரப் பிரிவான ஸ்வதேசி ஜாக்ரண் மஞ்ச் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. என்ன முரண் இது?

- திக்விஜய் சிங்

காங்கிரஸ் பொதுச்செயலாளர்

மதச்சார்பின்மை மற்றும் சோஷலிசம் என்ற வார்த்தைகளை அரசியல் சட்டத்தின் முகவுரையிலிருந்து நீக்க வேண்டும் என சிவசேனா தெரிவித்துள்ளது அழிவை ஏற்படுத்தக்கூடியது; கண்டிக்கத்தக்கது மற்றும் வெறுக்கத்தக்க அறிக்கையாகும். அறியாமையின் வெளிப்பாடே அந்த அறிக்கை மதச்சார்பின்மை அவசியம் இல்லை என சொல்வது கவலை தருவதாக உள்ளது.

- ஜிதன்ராம் மாஞ்சி

பிகார் முதல்வர்

மத சுதந்திரம் மற்றும் பன்மைத்துவம் மிகுந்த இந்தியா, தற்போது வெறுப்பு, பெரும் பான்மைத்துவம் மற்றும் சகிப்புத் தன்மை இல்லாத நாடாக மாறியிருக்கிறது. புதிய அரசு பதவியேற்ற முதல் 100 நாட்களில், சிறுபான்மை கிறித்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களை இந்து தேசியவாதிகள் அதிகரித்து இருப்பதாக என்.ஜி.ஓ.க்களின் ஆவணங்-களின் தகவல்கள் கூறுகின்றன.

- ஜோ பிட்ஸ்,

அமெரிக்காவின் குடியரசு

கட்சியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர்.தேர்தல் சட்டத் திருத்தம் வருகின்ற நேரத்தில் இந்தியாவில் பல்லாண்டு-களாகப் பலராலும் சொல்லப்-பட்டு வருகின்ற விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பற்றியும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

- கலைஞர், தி.மு.க. தலைவர்

மனிதனின் வாழ்க்கை உயர்வடைய புத்தகங்கள் மிகவும் முக்கிய-மானவை. ஒருவன் தலைகுனிந்து-படிப்பது-தலைநிமிர்ந்து வாழ்வதற்கே. உலக அளவில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியவை புத்தகங்களே. புத்தகம் என்பது ஒவ்வொரு முறை திறக்கும்-போதும் வெடிக்கக்கூடிய சக்தி படைத்தது. சாதாரண மனிதனைக்கூட சாதனை மனிதனாக்க புத்தகங்களால் முடியும்.

- இரா.தாண்டவன்,

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்.


சொல்றாங்க...

அய்க்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு கொடுக்கும்.

- ஒபாமா, அமெரிக்க அதிபர்

சொல்றேங்க...

அமெரிக்காவா? நம்ப வைத்துக் கழுத்த அறுக்காம இருந்தா சரி!

இந்தியா_பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு அய்.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு அளிக்கக் கூடாது.

- சர்தாஜ் அஜிஸ்,

தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாகிஸ்தான்.

ஏன் சீனாதான் நெருக்கமா இருக்கே, அங்க விண்ணப்பித்தாப் போச்சு!

தமிழ் ஓவியா said...

கர்மவீரன் கோட்சேயாம்!
பாராளுமன்றத்தின் முன் சிலைகளாம்!சந்திரபிரகாஷ் கவுசிக்

காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் சிலை வைக்க மத்திய அரசை நாடியுள்ளதாக கூறியுள்ளது. நாடு முழுவதும் கோட்சேவிற்கு சிலைகள் அமைக்க வேண்டும் என்று இந்து மகாசபை கூறியிருந்தது.

இந்த நிலையில் முதலில் நாடாளுமன்றத்தில் சிலை அமைத்துவிட்டு பிறகு மற்ற இடங்களில் அமைக்க வேண்டும் என்று தற்போது மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.

இதுகுறித்து டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சந்திரபிரகாஷ் கவுசிக் கூறியதாவது: இதுவரை நமது நாட்டை ஆண்ட அரசுகள் நாதுராம் கோட்சே போன்ற கர்மவீரரை தேசத்தின் எதிரியாகவும் கொலைகாரனாகவும் சித்தரித்து வந்தது. ஆனால் கோட்சே அப்படியாப்பட்டவர் அல்ல, அவர் ஒரு உண்மையான தேசபக்தர்.

அவரை நாம் கொலைகாரராகப் பார்க்கக்கூடாது. ஆனால், நமது தேசத்தை ஆண்ட தேசவிரோத சக்திகள் நம்மை அப்படிப் பார்க்க வைத்துவிட்டனர். தற்போது தேசநலனில் அக்கறை கொண்ட அரசு மலர்ந்திருக்கிறது. இது ஒரு இந்து ராஷ்டிரம். இதை மத்திய அரசே ஒப்புக்கொண்டு விட்டது.

பிரதமர் மோடிகூட பல மேடைகளில் இதைக் கூறியுள்ளார். இந்த நாட்டில் உள்ள ஒருவர் இந்து நாடு என்று கூறுவதில் தவறு என்ன என்று புரியவில்லை. மோடி ஒன்றும் பாகிஸ்தானிலோ, அல்லது இஸ்ரேலிலோ சென்று இந்து நாடு பற்றிப் பேசவில்லை. இந்து நாட்டில் இருந்து இந்து நாட்டைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

சாக்சி

கோட்சேவிற்கு சிலை வைக்கும் முடிவு நடாளுமன்றத்தில் இருந்தே தொடங்க வேண்டும். தெருவிற்குத் தெரு சிலைவைக்கும் முன்பு நாடாளுமன்றத்தில் சிலை வைத்தால் அதற்குத் தகுந்த மரியாதை கிடைக்கும்.

இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே எங்களின் பிரதிநிதிகள் மத்திய அரசை அணுகியுள்ளனர். முதலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிலை வைத்த பிறகுதான் மற்ற இடங்களிலும் வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். இதற்கு மத்திய அரசும் அனுமதியளிக்கும் என்று உறுதிபடக் கூறுகிறோம்.

சாக்சி, கோட்சேவைப் பற்றிக் கூறியது, பிறகு பின்வாங்கியது பற்றிக் கேட்டபோது, நமது நாட்டின் மீது பற்றுக்கொண்ட தேசபக்தர்கள் அனைவரும் கோட்சேவை ஒரு கர்மவீரன் போன்றுதான் பார்க்கிறார்கள். இந்துக்களின் பாதுகாவலனாகிய கோட்சேவை திறந்த மனதுடன் இதுவரை ஆதரிக்க யாருக்கும் துணிச்சல் இல்லை, காரணம் சில தேசவிரோத சக்திகளின் பிடியில் நமது நாடு சிக்கி இருந்தது. இப்போது நாம் பயப்படத் தேவையில்லை.

இன்று கோட்சே போன்று வீரம், விவேகம் கொண்ட இளைஞர்கள் பெருகியுள்ளனர். இவர்களுக்கு எல்லாம் இனி சுதந்திரம்தான். இவர்கள் நினைத்தால் இந்து தேசத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டு செல்ல முடியும். அரசியல்வாதிகளுக்கு அரசியல் லாபம்தான் முக்கியம்.

அதனால்தான் ஆளும் பா.ஜ.க. அரசு கோட்சே பற்றி திறந்த மனதுடன் முடிவெடுக்க இயலவில்லை. ஆனால் தற்போது நடப்பது இந்து அரசு. ஆகையால் எந்த முடிவிற்கும் தயக்கம் கொள்ளத் தேவையில்லை. கோடான கோடி இந்துக்களின் ஆதரவு என்றும் பா.ஜ.க. அரசிற்கு உள்ளது என்று கூறினார்.

ஆதாரம்: http://www.liveaaryaavart.com/2014/12/demand-for-putting-Godsey-idol-in-parliament.html

கோட்சே போன்ற மகா புருஷர்களுக்கு இந்தியாவில் சிலை வைக்காமல் பாகிஸ்தானிலா வைக்க முடியும்?

- இந்து மகாசபைத் தலைவர் சந்திரபிரகாஷ் கவுசிக், (எக்னாமிக் டைம்ஸ் 17.12.2014)

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு வளர சிறந்த வழி


எங்கள் வழிகாட்டி மாம்பலம் ஆ.சந்திரசேகர் அழைப்பு சோதிடம் மறுப்பு...

கூடுதல்....மாதம், நாள் மறுப்பு......செய்தால்...!

என் திருமண மண்டபத்தில்....

ஆடி , மார்கழி, புரட்டாசி.. மாதங்களில் திருமணம் செய்தால் கட்டணத்தில் 75% தள்ளுபடி செய்கிறேன்!

அஷ்டமி... நவமி... அமாவாசையில் எந்த மாதம் மணம் செய்தாலும் 75% தள்ளுபடி நிச்சயம்!

நான் தயார்..

நீங்கள் தயாரா?...

- முகநூலிலிருந்து

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவே இளைஞர்களை ஆளவேண்டும்

-அறிஞர் அண்ணா

பட்டதாரிகளே! உங்கள் குடும்பங்களுடைய நன்னிலைக்குப் பாடுபடுவதோடு, சமூகத்திற்-காகப் பணிகளையும் செய்ய வேண்டியதுடன், பகுத்தறிவுவாதத்தின் ஒளியை எங்கும் வீசச் செய்பவர்களாக நீங்கள் திகழ வேண்டும்.

பகுத்தறிவுவாதம் என்பது அடிப்படை உண்மைகளை, நெறிகளை மறுப்பதாகாது; எதையும் காரணங் கண்டு ஆராய்ந்து உண்மை காண்பதாகும். போலித்தனமான எண்ணங்-களை, செயல்களை அழித்தொழிப்பதுதான் பகுத்தறிவு ஆகும்.

அறிவின் எந்த ஒரு துறையாயினும் அதில் நமக்கென்று ஒருமுறை இல்லாமலில்லை. நம்முடைய வாழ்க்கை முறைகள் அழியாதவை என்று நாம் கொண்டாடலாம். ஆயினும், அந்த முறைகளை இளமை குன்றாத தீவிரத் தன்மையோடு கூடியதாக வைத்திருக்க வேண்டுமானால், மாறுதலை ஏற்றுக் கொள்ளத்தக்க, புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய இளம் இதயத்தைப்போல் நமது இதயம் பசுமையானதாக விளங்க வேண்டும்.

பெரியாரைப் பின்பற்றுவோம்

நெடுங்காலமாகப் பழைய முறைகளிலேயே ஊறி, அவற்றைத் தாங்கி, அவற்றுக்கெதிரான வாதங்களுக்கு எதிர்ப்புக்கூறி, காலத்தைக் கழித்திருக்கிறோம்.

இதே காலத்தில் உலகத்தின் ஏனைய நாட்டவர்கள் எல்லாம் உண்மையை நாடி, பொறுமையோடு தங்களது இடைவிடா ஆராய்ச்சி சோதனை மூலம் பல புதிய முடிவுகளை எய்தியதுடன், உயர்வு பெற்றுள்ளனர். நாம் பண்டைய பழம்பெருமையில் அமர்ந்திருப்பதில் திருப்தி கொள்கிறோம்.

நன்மையறியாமல் இவற்றைப் பாதுகாக்கக் கூடியவர்களாக இருந்து வந்துள்ளோம். இந்த வகையில், புரையோடிய சமூகக் கருத்துகளைச் சாகடிக்கும் வீரர் பெரியாரைக் குறைகூறத் துணிவதில் சிறிதுகூட அறிவுத் தெளிவு இல்லை.

பழம் பெருமை பேசிக்கொண்டு, மூடப் பழக்கங்களில் ஆழ்ந்து அடிமைப்பட்டிருக்கும் சமுதாயத்தைச் சீர்திருத்தி, புரையோடிய சமுதாயக் கருத்துகளை ஒழித்துப் போராடும் வீரரான பெரியாரைக் குறைகூறிப் பயன் என்ன? பகுத்தறிவே எல்லோருடைய உள்ளங்களையும் தங்குதடை-யின்றி ஆளவேண்டும்.

ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் அமைக்கும் போர் வீரர்களாக எல்லோரும் முன்வர வேண்டும். நாட்டில் புத்துயிர் ஊட்டிப் பகுத்தறிவாளர்களைப் பெருக்க வேண்டும்.

ஜாதி முறையை எதிர்த்துப் போர் தொடுங்கள்

பகுத்தறிவு மூலம் சமுதாயத்தினைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும். பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்று வெளியேறுவோர் இப்பணிக்குத் தூதுவர்களாக விளங்க வேண்டும். ஜாதி முறையை எதிர்த்துப் போர் தொடுத்திடுங்கள் என நான் உங்களை அழைக்கிறேன்.

விஞ்ஞானத்தோடு ஒட்டி வாழ முடியாத மூடப் பழக்கங்களுக்கு எதிராகப் போர் தொடுக்கும்படியும் உங்களை வேண்டுகிறேன்.

(அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் 18.11.1967 அன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி.)

தமிழ் ஓவியா said...

பழைமையான சூரியக் குடும்பம்


பூமியைப் போன்ற அளவுள்ள அய்ந்து கிரகங்கள் சுற்றி வரும் ஒரு நட்சத்திரம் நாசாவின் கெப்ளர் செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதுவரை கண்டறியப் பட்ட நட்சத்திரங்களிலேயே மிகப் பழைமையான நட்சத்திரமாகக் கருதப்படும் இதற்கு கெப்ளர் 444 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கெப்ளர் 444அய் பூமியை விடச் சிறியதான புதன் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு இடைப்பட்ட அளவில் உள்ள அயந்து கிரகங்கள் சுற்றி வருகின்றன. கெப்ளர் 444 குடும்பத்திலுள்ள கிரகங்கள் தங்களது சூரியனை 10 நாள்களுக்கும் குறைவான நேரத்தில் சுற்றி வந்துவிடுகின்றன. அதேபோல பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தில் பத்தில் ஒரு பங்கு தூரத்திற்குள் வட்டப் பாதையில் சுற்றி வந்துவிடுகினறன என வானியலாளர்கள் கூறியுள்ளனர். இதுபோன்ற பழைமையான நட்சத்திரத்தைச் சுற்றி ஏராளமான சிறிய கோள்கள் சுற்றி வருவதைப் பார்த்ததில்லை. இது மிகவும் சிறப்பானது. கெப்ளர் 444 சூரியக் குடும்பமானது நமது சூரியக் குடும்பத்தைவிட இரண்டரை மடங்கு பழைமையானது. நமது சூரியக் குடும்பம் 450 கோடி ஆண்டுகள்தான் பழைமையானது என சிட்னி பல்கலைக்கழக இயற்பியல் கல்லூரிப் பேராசிரியர் டேனியர் ஹுபர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

புதுப்பா

முகங்கள்
அண்ணனுக்கு ஆனைமுகம்
தம்பிக்கு ஆறுமுகம்
தந்தைக்கும் தாய்க்கும்
பாதிப் பாதி முகம்
பக்தனே நீ எந்த முகத்தோடு
கோவிலுக்குப் போகிறாய்?

- வீ.உதயக்குமாரன், வீரன்வயல்.

புதுப்பா

பாதையை மாற்று!
விரும்பியதை விரும்பு - உன்னை
விரும்பியதை விரும்பு!
எறும்புக்குத் தெரியாதா
கரும்பின் சுவை!
கண்ணின் பார்வை
காணும் தூரம் மட்டும்!
அறிவின் பார்வையோ
ஆகாயத்தை எட்டும்!
கீதையைப் போற்றாதே!
பாதையை மாற்று! - பெரியார்
பாதைக்கு மாற்றேது!

- சீர்காழி கு.நா.இராமண்ணா

தமிழ் ஓவியா said...

மோடி ஏன் மறுக்கவில்லை?

இந்தியாவில் மதச் சிறுபான்மையர் மீதான வன்முறைத் தாக்குதல்கள் குறித்துக் குறிப்பிடும் போது, மோடியின் மவுனம் ஆபத்தானது என்று அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் இதழின் தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.

கிறித்தவர்களின் வழிபாட்டிடங்கள்மீதான தாக்குதல்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியாவில் அனைத்துக் குடிமக்களையும் காப்பாற்ற வேண்டியராக உள்ள பிரதமர் மோடி, எவ்விதக் கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார்.

அதேபோல், கிறித்தவர்கள் மற்றும் இசுலாமியர்கள் அதிக அளவில் கட்டாயப்-படுத்தி அல்லது பணம் கொடுப்பதாக உறுதியளித்து இந்து மதத்துக்கு மாற்றம் செய்யப்படுவது குறித்தும் எந்தக் கருத்தும் வெளியிடாமல் உள்ளார்.

மத சகிப்புத்தன்மை இல்லாத நிலை அதிகரித்து இதுபோன்ற தொல்லைகள் இருந்தபோதிலும், மோடி தொடர்ச்சியாக அமைதியாக இருப்பதன் மூலம், இந்து தேசியவாதிகளின் உரிமைகளைக் குறித்த எல்லைகளுக்குள் கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது கட்டுப்படுத்த விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது.

அண்மையில் இந்தியாவில் உள்ள ஏராளமான கிறித்தவ வழிபாட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டு சூறையாடப்பட்டன. கடந்த டிசம்பரில் கிழக்கு டில்லியில் செயின்ட் செபாஸ்டியன் சர்ச் முழுவதுமாக தீக்கிரை-யாக்கப்-பட்டது.

கிறித்தவ மதபோதகர் கூறும்போது, புகைமண்டலமாக இருந்தபோது மண்ணெண்ணெய் மணம் வெளிவந்ததாகக் கூறியுள்ளார். டில்லியில் அண்மையில் தீய நபர்களால் செயின்ட் அல்போன்சா சர்ச் தீவைத்து எரிக்கப்பட்டது. சடங்குகளுக்குப் பயன்படுத்தும் பொருள்களை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், பணம் நிறைந்திருந்த உண்டியல் பெட்டியை அவர்கள் தொடவில்லை.

கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டில் இந்தியாவுக்கே உரிய மதச் சார்பின்மையை நிலைநிறுத்த அரசுக்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறித்தவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள், சொந்த நாட்டில் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாபெரும் அளவிலான மதமாற்றங்கள் குறித்தும் கவலைகளைத் தெரிவித்துள்ளனர். ஆக்ராவில் கடந்த டிசம்பரில் 200 முசுலீம்கள் இந்து மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜனவரியில் மேற்கு வங்கத்தில் நூறு கிறித்தவர்கள்வரை மறு மதமாற்றம் என்கிற பெயரில், இந்துமதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்து தேசியவாதக் குழுக்களாக உள்ள விஸ்வ இந்து பரிஷத், ராஷ்டிரிய சுயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) ஒளிவுமறைவின்றி தாய்மதம் திரும்புதல் என்கிற பெயரில் பிரச்சாரத்தைச் செய்து இந்துக்கள் அல்லாதவர்களை மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பச் செய்வதாகக் கூறுகிறார்கள்.

இந்தியாவில் 80 விழுக்காட்டினருக்கும் மேலாக இந்துக்கள் உள்ளனர். ஆனால், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சார்ந்த பிரவீன் தொகாடியா கூறும்போது, அவருடைய அமைப்பான வி.எச்.பி., நாட்டில், நூறு விழுக்காட்டளவில் இந்துக்களாக ஆக்குவது-தான் இலக்கு என்று கூறியுள்ளார். அதற்கு ஒரே வழி மதச்சிறுபான்மையரின் மத நம்பிக்கைகளை மறுப்பதுதான்.

அயோத்தியில் 3,000 முசுலீம்களை ஒரே நேரத்தில் மதமாற்றம் செய்ய உள்ளதாக வி.எச்.பி. கூறுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகளால் 1992ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, நாடுமுழுவதும் ஏற்பட்ட வன்முறைக் கலவரங்களில் 2000பேர் உயிரிழந்தனர்.

நெருப்போடு விளையாடுவதை வி.எச்.பி. தெரிந்தே செய்கிறது. மோடியின் விருப்பமான திட்டமாக இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதி அளித்திருந்தார். ஆனால், புதுடில்லியில் கடந்த மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மதவாதங்களால் பிரித்துக் கொண்டிருக்கும் வரை, இந்தியா வெற்றி பெறவே முடியாது என்று கூறியுள்ளார். மத சகிப்புத் தன்மையற்ற தன்மையில் கேளாக்காதாக உள்ள மோடியின் அமைதியை உடைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

தமிழ் அழிப்பாரின் எண்ணத்துக்கு வலிமை சேர்த்துவிடக் கூடும் என்று கருதினார் புரட்சிக்கவிஞர். தம் கருத்தை வலியுறுத்தி ஆராய்ச்சித் தொடர் ஒன்றினை எழுதினார்; வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? எனும் கட்டுரைத் தொடர், தமிழ்ப் பகைவர்களுக்குச் சாட்டையடி கொடுத்தது: தமிழ் ஆர்வலர்களுக்கெல்லாம் புது வழி காட்டியது; தெளிவூட்டியது.

- சு.மன்னர்மன்னன்

காட்சி

தமிழ்ச் சொற்களையெல்லாம் வடசொற்கள் என்று ஆக்குவதில் பார்ப்பனர்க்குத் தனி ஆசை. அவ்வாறு செய்வதால் இந்நாட்டுக்கும் அவர்கட்கும் இல்லாத தொடர்பை உண்டு-பண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் இந்தத் தீய முயற்சியை அறிவுடைய தமிழர்களும், நடுநிலை-யுடைய உலகமும் அறிந்து நகையாடக்கூடுமே யென்பதை அவர்கள் கருதுவதேயில்லை.

தூங்கிக் கொண்டிருந்தார்கள் தமிழர்கள். அது அந்த நாள். பார்ப்பனர் அல்லல் புரிந்தார்கள் அளவில்லாமல்.

விழித்துக் கொண்டார்கள் தமிழர்கள். இது இந்த நாள். அல்லல் புரியாது அடங்கினார்களா எனில் இல்லை.

காட்சி _- தொழிற்பெயர். அதில் காண், முதனிலை, சி_-தொழிற்பெயர், இறுதிநிலை. காண் என்பதின் இறுதியில் உள்ள _ -ண், என்ற மெய்யானது _- சி, என்ற வல்லினம் வந்தால் _- ட் -_ ஆகும் என்பது சட்டம். அதனால்தான் காட்சி என்றாயிற்று. காணல், காண்டல், காட்சி அனைத்தும் ஒரே பொருள் உடையவை. எனவே காட்சி தூய தமிழ்ச் சொல். இதைப் பார்ப்பனர் தம் ஏடுகளில் காக்ஷி என்று போடுவார்கள்.

காட்சியைக் காக்ஷி ஆக்குவதில், தமிழ்ச்-சொல்லை வடசொல் ஆக்குவதில் அவர்-கட்குள்ள ஆசை புரிகிறது அல்லவா? இவ்வாறு காக்ஷி என்று பார்ப்பனர்கள் தம் ஏடுகளில் கொட்டை எழுத்துகளில் வெளியிடுவதால் நம்மவர்களும் அதையே பின்பற்றத் தொடங்கி விடுகிறார்கள்.

பார்ப்பான் சொன்னது பரமசிவன் சொன்னதல்லவா? அதனால்தான் நாம் பொதுவாக நம்மவர்கட்குச் சொல்லுகிறோம்.

தமிழ் தமிழர்க்குத் தாய்! தமிழிற் பிழை செய்வது தாயைக் குறைவுபடுத்துவதாகும். படக் காட்சிக்குரிய அறிவிப்போ, திருமண அழைப்பிதழோ, வாணிக அறிவிப்புப் பலகையோ எழுதும் போது தமிழறிஞர்களைக் கலந்து எழுதுங்கள் என்கிறோம்.

இனி இவ்வாறு தமிழ்ச் சொற்களையெல்லாம் பார்ப்பனர் வடசொற்கள் என்று சொல்லிக்-கொண்டு போகட்டுமே, அதனால் தீமை என்று தமிழரிற் சிலர் எண்ணலாம்.

அவ்வாறு அவர்கள் இந்நாள் வரைக்கும் விட்டு வைத்ததால் என்ன ஆயிற்று தெரியுமா? வடமொழியினின்றுதான் தமிழ் வந்தது, வடவர் நாகரிகத்திலிருந்துதான் தமிழர் நாகரிகம் தோன்றியது என்றெல்லாம் அவர்கள் சொல்வ-தோடு அல்லாமல், உலகையும் அவ்வாறு நம்பவைக்கவும் முயல்கிறார்கள்.

அது மட்டுமா? மேற்சொன்ன காரணங்-களைக் காட்டி, அவர்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர்கள் என்னும் முடிச்சுமாறித்-தனத்தையும் மெய் என்று நிலைநாட்டி வருகிறார்கள்.

இது வட சொல்லன்று; இன்ன காரணத்தால் இது தமிழ்ச் சொல் என்று விளக்கிவர முடிவு செய்துள்ளோம். தமிழர்கள் ஊன்றிப்படிக்க.

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

அடிமாடு

செய்தி: தொழில் துறை எவ்வளவு வளர்ச்சி அடைந் தாலும் போதாது; விவசாயம் தான் வளர்ச்சி அடைய வேண்டும். - பிரதமர் மோடி

சிந்தனை: ஆமாம்; அதற்காகத் தான் விவசாய நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக அடி மாட்டு விலைக்கு வாங்கப் படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/96569.html#ixzz3SIRKFtrY

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சாதனையா?

பகவான்தான் தலை எழுத்தை எழுதுகிறான் என்றால் மக்களின் சராசரி வயது முன்பை விட இப்பொழுது உயர்ந் துள்ளதே - இது கடவுள் சக்தியா? அறிவியல் மருத்துவத்தின் சாதனையா?Read more: http://viduthalai.in/e-paper/96572.html#ixzz3SIRTif7W

தமிழ் ஓவியா said...

கற்றுக் கொள்ள வேண்டியது


இதுவரை எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனரல்லாத கட்சிக்கு அனுகூலமாய்ப் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறாரா? என்றால் ஒருவர்கூட இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனருக்கு வேறு எவ்வளவு கெட்ட குணம் இருந்தாலும், தங்கள் வகுப்பு விசயத்தில் எல்லாரும் ஒன்று சேருவது அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம்.
(குடிஅரசு, 7.11.1926)

Read more: http://viduthalai.in/e-paper/96550.html#ixzz3SISLaB4F

தமிழ் ஓவியா said...

ரஷ்யாவில் விஷ்ணுவின் மகன் விநாயகன்

ரஷ்யாவில் உள்ள லெனின் கிராட் நகரில் உள்ள வினோதங்களில் ஒன்று அங்கு அமைந்திருக்கும் நாத்திகர்கள் காட்சி சாலை. உலகத்தில் உள்ள அனைத்து மதங்கள், கடவுள்கள் பற்றிய விளக்கக் குறிப்புகளும், கடவுள் உருவச் சின்னங்களும் அங்கு வைக் கப்பட்டுள்ளன.

மதங்களாலும், கடவுள்களாலும் அல்லது இவை பற்றிய நம்பிக்கையால் மக்களுக்கு ஒருவித பயனும் இல்லை என்பதை விளக்குவதே அந்த கண்காட்சியின் நோக்கம்.

அங்கு ஓரிடத்தில் விநாயகர் சிலைக்குக் கீழே விநாயகர் விஷ்ணுவின் மகன் என்ற குறிப்பு இருக்கிறது.

அந்தக் கண்காட்சியில் கடவுள், மதம் காரணமாக மனித குலத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், அநீதிகள் பற்றிய விளக்கங்கள் காணப்படுகின்றன.

Read more: http://viduthalai.in/e-paper/96555.html#ixzz3SITO14B2

தமிழ் ஓவியா said...

ஜாதி கணக்கெடுப்பில் உள்நோக்கமில்லை
முதல்வர் சித்தராமையா

பெங்களூரு, பிப்.21 ''பொது நியாயப்படி, அனைவருக்கும் கிடைக்க வேண்டிய சலுகைகள், கிடைக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில், ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்படு கிறது. இதில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை, என்று, முதல்வர் சித்தராமையா கூறினார்.

மைசூரு மண்ட ஹள்ளி விமான நிலையத் தில், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொது நியாயப்படி, அனைவருக்கும் கிடைக்க வேண்டிய சலுகைகள், கிடைக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில், ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்படு கிறது. இதில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. அனைவருக்கும் சமமான சலுகையை வழங்கு வதன் மூலம், சமூக அபிவிருத்தியை, முன்னோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது. ஆனால், இதை பற்றி சிலர், தேவையின்றி குற்றம் சாட்டி வருகின் றனர்; இதற்கு, அரசு பணி யாது. சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு, கூடுதல் முக்கியத்துவம் தரப்படும். மத்திய அரசு, இது போன்ற திட்டங்களை குறைத்து கொள்வது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/96615.html#ixzz3SOxChszH

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சமஸ்கிருதம்

கடவுள் சபலங்களுக் கும், சடங்குகளுக்கும் அப்பாற்பட்டவர் என் றால் கோயிலில் சமஸ் கிருதத்தில்தான் அர்ச் சனை செய்யப்பட வேண்டும். குட முழுக்கு சமஸ்கிருதத்தில்தான் நடைபெற வேண்டும் என்பது கடவுளைக் கேலி செய்வது ஆகாதா? ஆகமம் என்றாலும் அவாளுக்குத்தான் சாதகமா?

Read more: http://viduthalai.in/e-paper/96619.html#ixzz3SOxcOCal

தமிழ் ஓவியா said...

மனித சமுதாயத்தில்...


நாம் உண்மையான பகுத்தறிவுவாதிகளாக ஆகிவிடுவோமேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும். (விடுதலை, 16.11.1971)

Read more: http://viduthalai.in/e-paper/96607.html#ixzz3SOxr26SJ

தமிழ் ஓவியா said...

ஆதி திராவிட அபிவிருத்தி சங்கத்தார் வரவேற்பு

அன்பார்ந்த சகோதரர்களே! சகோதரிகளே!!

அக்கிராசனரவர்கள் எம்மைப்பற்றி அதிக புகழ்ச்சியாகக் கூறிவிட்டார்கள். நான் அவைகளுக்கு அருகதையுடைய வனல்ல என்றாலும், நமது மக்கள் தங்களது பகுத்தறிவைக் கொண்டு நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை ஒப்புக் கொள்கிறது. ஒன்றே எமக்குத் திருப்திகரமாக விருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஈடேறும் வழி என்பதாக என்னை பேசும்படி கேட்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி வியாக்கியானம் அதிகம் செய்ய வேண்டியதில்லை என்றே கருதுகிறேன் ஏனெனில் பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபி மானம் என்பவைகளின் உட் கருத்தை ஊன்றிக் கவனித் தால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஈடேறும் வழிதானாகவே தோன்றும். எப்படி எனில் குறிப்பிட்ட எந்த விதமான அபிமானத்தை எடுத்துக் கொண்ட போதிலும், அநேகமாக அந்த அபிமானத்தின் பேரால் ஏமாற்றுகளே நடைபெறு கின்றன. தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக வுள்ள வர்கள். இவைகளை ஊன்றிக் கவனித்து - அலசிப்பார்த்து - உரைகல்லில் வைத்து உரசிப்பார்க்க வேண்டும். அவ்வாறு அவர்கள் பார்ப்பார்களேயானால் வாஸ்தவதத்திலே தாழ்த்தப் பட்டவர்கள் ஈடேறும் வழியை எளிதில் கண்டு கொள்வதற்கு ஏதுகரமாக விருக்கும் மக்களது முன் னேற்றத்திற்குத் தடைகல்லாக விருக்கும் காரியங்கள் எதுவுண்டோ அவைகளைத் தகர்த்தெரிய வேண்டும். வீணாக ஆடம்பரமாக நாங்களும் தலைவர்கள் தான் என்று வீரம் பேசிக் கொள்வதில் பயனில்லை. நமக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அப்பகுத்தறிவின் பயனால் இடையூறாக இருக்கும் காரியங்களை மனோதிடத்துடன் தகர்த்தெறிய முன்வர வேண்டும். அன்றே முன்னேற ஈடேற வழி ஏற்படுமென்பதில் சிறிதும் அய்யமில்லை என்று குறிப்பிட்டார்.

(ஆதிதிராவிட அபிவிருத்தி சங்கத் தலைவர் கொழும்பு கும்பனித்தெரு, சி. எம். எ. பாட சாலையில் திரு. எ. ஆர். முத்தையர் தலைமையில் 22.10.1932-இல் நடைபெற்ற வரவேற்பு கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு.)

குடிஅரசு - சொற்பொழிவு - 06.11.1932Read more: http://viduthalai.in/e-paper/96642.html#ixzz3SOyeKYTH

தமிழ் ஓவியா said...

கொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவுஇந்த சினிமா காட்சி பார்ப்பதற்கு மிக அதிசயமாயும் ரம்மியமாயும் காணப் பட்டாலும், இதைப் பார்ப்பதனால் ஏற்படும் பயன் மூடநம்பிக்கையும் அடிமைத் தனமும் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், இந்த மூடநம்பிக்கையும் அடிமைத் தன்மையையும் சோம்பேறிகள் பயன்படுத்திக் கொண்டு ஏழைகளை வருத்தி செல்வம் பெருகிக்கொள்ள பயன்படுகின்ற தென்றும், இனி இப்படிப்பட்ட காட்சிகள் தடுக்கப்பட வேண்டுமென்றும், பகுத்தறிவும், சுதந்தரமும் ஏற்படக் கூடிய விஷயங்களையே நாடகமாகவோ படக்காட்சியாகவோ காட்ட இந்த தியேட்டர் சொந்தக்காரர் முயற்சிக்க வேண்டுமென்றும், உண்மையான சுதந்திர, சமத்துவத் தேசங்களில் உள்ள காட்சிகள் அப்படித்தான் இருக்கின்றதென்றும் சொன்னார்.

ஆதி திராவிடர் சங்க வரவேற்பில் சொற்பொழிவு

தாழ்த்தப்பட்டவர்கள் ஈடேற ஒரே ஒரு வழிதான் உண்டென்றும், அது உலகில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டிய முயற்சி எடுக்க வேண்டுமென்றும், அம்முயற்சிக்கு எதிரியாய் இருக்கும் சாதனங்களான தேசாபிமானம், மதாபிமானம் என்பவை களை அடியோடு அழித்து உலக ஏழைகள் அபிமானம் உலக தாழ்த்தப் பட்டவர்கள் அபிமானம் என்பதன் உணர்ச்சியுடன் வேலை செய்யத் துணிய வேண்டும் என்றும், உலக மனித சமூகத்தை 2 -வகுப்பாகத்தான் பிரிக்க வேண்டு மென்றும், அது ஒன்று, தொழில் செய்து கஷ்டப்பட்டு வாழும் ஏழை, மற்றொன்று தொழில் செய்யாமல் மற்றவர்கள் தொழிலின் பயனை அனுபவிக்கும் சோம்பேறி செல்வவான்கள் என்றும் இரண்டே பிரிவாகப் பிரிந்து போராடி விடுதலை அடைய தயாராயிருக்க வேண்டு மென்றும் பேசினார். (கடைசியாக, ஒரு உபதேசியார் எழுந்து ராமசாமியின் உழைப்பையும் உபதேசத்தையும் தான் பல வருஷங் களாகப் பார்த்து வருவதாகவும், அவர் மூலம் தான் மக்கள் கஷ்டம் ஒழியக் கூடுமென்றும், ஆனால் அவர் கடவுளை நம்பவில்லையென்று சொல்லுவது தனக்கு வருத்தத்தைக் கொடுக்கிற தென்றும் சொன்னார்.)

அதற்கு ராமசாமி பதிலளிக்கையில் கடவுளை நம்ப வேண்டும் என்பது ஒரு அடக்குமுறை என்றும், அது அவனவன் சொந்த விஷய மாகப் பாவிக்க வேண்டுமென்றும் கடவுள் மீது சிறிதாவது நம்பிக்கை இருப்ப வர்கள் ராமசாமியால் கடவுள் இல்லாமல் போய் விடுமோ என்று பயப்பட வேண்டியதில்லை என்றும், உலகில் நடக்கும் அக்கிரமங்களுக்கும், ஏழைகளை வஞ்சித்து கொடுமைபடுத்தி வேலை வாங்கி சோம் பேறியாய் வாழும் அயோக்கிய தனத்திற்கும் பெரிதும் கடவுள் நம்பிக்கைக் காரர்கள் தான் காரணஸ்தர்களாகவும் பொறுப்பாளிகளாகவும் இருக்கின்றார்களே ஒழிய வேறில்லை என்றும் ஆதலால் கடவுள் நம்பிக்கை போய் விட்டால் உலகம் என்ன கதியாகும் என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னார்.

குடிஅரசு - சொற்பொழிவு - 13.11.1932

Read more: http://viduthalai.in/e-paper/96643.html#ixzz3SOyz9FAq

தமிழ் ஓவியா said...

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்

வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சாணை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல், நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.

நமது இலட்சியம் அரசியல் வேட்டையல்ல, மந்திரி நாற்காலியல்ல. நாலாறு பெறுவதல்ல. நமது மூதாதையர் ஆண்ட நாட்டை மீண்டும் பெறுவது - புதிய அரசை அமைப்பது, அதுதான் நம்முடைய நோக்கம்.

Read more: http://viduthalai.in/page2/96579.html#ixzz3SP08tthy

தமிழ் ஓவியா said...

வோல்ட் (மின்சாரம்) பெயர் எப்படி வந்தது?

மின்சாரத்தின் பயன்பாட்டில் குறியீடாக உள்ள வோல்ட் என்ற பதம் அலெசான்ரா வோல்ட்டா என்ப வரின் நினைவாக வைக்கப்பட்டது. இத்தாலி நாட்டில் 1745-ஆம் ஆண்டு இதே நாளில் படகோட்டியின் மகனாகப் பிறந்தார். நகரத்தின் வெளியே இருந்ததால், அடிக்கடி மின்னும் மின்னல் இவரை மிகவும் ஈர்த்தது. சிறுவயதில் இருந்தே மின்னல் மின்சாரம் குறித்து ஆராய்வதில் பேரார்வம் கொண்டிருந்தார்.

இதன் விளைவாக மின்சாரம் என்ற ஒன்று உருவாவதற்கு முன்னோடியாக இருந்த அறிவியல் அறிஞர்களுள் இவர் முதன்மையானவர். இவருடைய காலகட்டத்தில் அய்ரோப் பாவில் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும், அது பொழுதுபோக் கிற்காகவும், தனிப்பட்ட மனிதர்களின் பயன்பாட்டிற்கு மாத்திரமே இருந்தது.

மின்சாரத்தை பயன்படுத்தும் முறையில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அலக்சாண்ட்ரா அனைவரும் இதை பயன்படுத்தவேண்டும் என்ற பேரவா இவருக்கு இருந்தது. இந்த ஆவல் இவரை மின்கலன்(பேட்டரி) கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்தது. மின்கலன் கண்டறியும் போது மின்கலனை அளவிடும் வோல்டா மீட்டரையும் கண்டுபிடித்தார்.

மின்சாரம் பற்றிய ஆய்வுத்தூண்டல் காரணமாக பல்வேறு தனிமங்களில் இருந்துமின்சாரம் எடுக்கும் முறையைக் உலகுக்கு எடுத்துக்காட்டினார். தனிமங்களை ஆய்வு செய்யும் போது தான் இவர் மீத்தேன் என்னும் வாயுவையும் கண்டுபிடித்தார். இவரது குடும்பம் முழுவதுமே பழமைவாத கிறிஸ்தவ மதப்பிரிவைச்சேர்ந்தவர்கள்.

சூரியன் மறைந்த பிறகு சமைப்பதோ, விளக்கு பற்றவைப்பதோ, கூடிப்பேசுவதோ பழமைவாத கிறிஸ்தவ முறையில் கடுமையான குற்றமாகக் கருதப்பட்டது. அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த இவர் இரவைப் பகலாக்கும் மின்சாரத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் மின்கலம்(பேட்டரி) கண்டறிந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய 82-ஆவது வயதில் மே மாதம் 5 ஆம் தேதி மரணமடைந்தார்.

Read more: http://viduthalai.in/page3/96582.html#ixzz3SP0aSKrz

தமிழ் ஓவியா said...

வாத்தியாரே தீர்ப்பை மாற்று!

மனைவியின் விருப்பமின்றி கணவன் வற்புறுத்தி உறவுகொள்வது பாலியல் வன்முறைக் குற்றமாக்கப்பட வேண்டும் என்று கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் தனிப்பட்ட பிரச்சி னையை பொதுப்பிரச்சினையாகக் கருத முடியாது என்று நிராகரித்துவிட்டது.

டில்லியில் அலுவலராகப் பணி புரியும் ஒரு பெண் தன்னுடைய கணவ னால் தொடர்ச்சியாக பாலியல் வன் முறைக்கு ஆளாகி உள்ளார். அப்படி தன்னுடைய விருப்பத்துக்குமாறாக இருந்துள்ள கணவனின் செயலை குற்ற மாக்கிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

அப்பெண்ணின் வழக்கில் சட்டத்தின் பார்வையில் கணவன் மனைவியிடம் நடந்துகொள்ளும் பாலியல் உறவு என்பதை குற்றமாகக் கருத இடம் இல்லை என்றும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 375இன்படி, மணமான இணையருக்குள் பாலியல் உறவு என்பதில் அவர்களுக்குள் ஒப்புத லின்றியே இருந்தாலும், மனைவியின் வயது 15வயதுக்குள் இல்லாமல், மனைவியின் ஒப்புதலின்றி அவள் கணவன் உறவு கொண்டால் அது பாலியல் வன்முறை ஆகாது என்று கூறப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு டில்லியில் பாலியல் வன்முறை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப் பட்ட நீதிபதி வர்மா தலைமையிலான குழு அறிக்கையில், மணமான பின்னர் விருப்பமின்றி உறவு கொள்வதைக் குற்றமாகக் கருதவேண்டுமா?

என்ப தைக் கவனத்தில் கொள்ளும்போது, விருப்பமின்றி கணவன் மனைவி யிடையே ஏற்படக்கூடிய உறவைக் குற்றமாகக் கருதினால், அது திருமணம் என்பதற்கான முறையையே அழித்து விடும் ஆற்றல் உள்ளதாக ஆகிவிடும் என்று இந்திய அரசு கருதுகிறது. குடும்ப முறையே முழுமையாக பெரிய அழுத் தத்துக்கு உள்ளாகிவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்ப முறையை சீர்குலைத்துவிடும் என்பதால் திருமணத்துக்குப்பின்னர் கணவன் மனைவியிடையே விருப்ப மின்றி உறவு கொள்வதைக் குற்றமாகக் கருத முடியாது என்று இப்பிரச் சினைகுறித்து விவாதிக்க அமைக்கப் பட்ட நாடாளுமன்ற குழு கூறிவிட்டது.

அதேநேரத்தில், சட்டப்படி பிரிந்து இருக்கும்போது கணவன் மனைவியி டையே பாலியல் தொல்லைகள் நிகழும்போது, அதைக் கடுமையானக் குற்றமாகக் கருதவேண்டும். என்றும் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை கூறியிருந்தது.

வழக்கு தொடுத்த பெண்ணின் வழக்குரைஞர் கோலின் கோன்சால்வ்ஸ் கூறுகையில், இப்போதைக்கு வழக்குக் கான மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். ஆனாலும், பெண் களுக்கான அமைப்புவாயிலாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

Read more: http://viduthalai.in/page3/96588.html#ixzz3SP15gTcq

தமிழ் ஓவியா said...

புத்தர்தம் பகுத்தறிவு ஒளி!

’இவ்வுலகில் புலன் இன்பங்களில் கட்டுப்பாடு அற்றவர்களாய், இனிய பொருட்களில் பேரவா கொண்டவர் களாய், குற்றச் செயல்களோடு தொடர்பு உடையவர்களாய், அழிவு நிலைப் பார்வை உடையவர்களாய், குறுகிய மதியினராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச்சியை உண்பவர்களன்று’

’இவ்வுலகில் கடுமையானவராய் நம்பிக்கைத் துரோகம் செய்பவராய், கருணை அற்றவராய், அதிக சுயநலம் கொண்டவராய், கருமியாய், எவருக்கும் ஏதும் அளிக்காதவராய், புறங்கூறுபவ ராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச் சியை உண்பவர்கள் அன்று’

இவ்வுலகில் தீயொழுக்கம் உடை யவராய், தம் தொழிலில் ஏமாற்றுக் காரராய், கடனைத் திருப்பித்தர மறுப்பவராய், பாசாங்குக்காரராய், பிறரை இகழ்ச்சியாய் நினைப்பவராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச் சியை உண்பவர்கள் அன்று.

இவ்வுலகில் பிறருக்குத் துன்பம் இழைப்பவராய், பிறர் பொருள் கவர்பவராய், தீயொழுக்கம் உள்ளவராய் மரியாதை அற்றவராய், கொடுஞ் செயல்களில் கட்டுப்பாடு அற்றவராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச் சியை உண்பவர்கள் அன்று.

இவ்வுலகில் கொலை செய்வோராய், கொலை செய்யத் தூண்டுதலாய் இருப்போராய், திருடராய், பொய்யராய், வஞ்சிப்பவராய், ஏமாற்றுக்காரராய் தவறான காமச் செயல்களில் ஈடுபடு வோராய் இருப்பவர்களே தீயர்கள்! இறைச்சியை உண்பவர்கள் அன்று.

இவ்வுலகில் சினம் மிகுந்தோராய், தற்பெருமை, தற்புகழ்ச்சி, பொறாமை, தீய நெறிகளில் நிலைப்போராய் இருப்பவர்களே தீயர்கள். இறைச்சியை உண்பவர்கள் அன்று.

எவரொருவர் மீனையும், இறைச் சியையும் உண்பவராய் இருந்தும், நல் லோராய், பற்றுக்களைக் கடந்தோராய், நேரிய வழியில் மகிழ்வோராய், வெல்லப்பட்ட புலன்களை உடைய வராய், பேராசை, வஞ்சகம், தற்புகழ்ச்சி அற்றோராய், கருணை உள்ளவராய், இறப்பிற்குப் பின்னும் நற்பெயர் பெறு வோராய், நன்னெறியில் நிலைப் போராய் இருப்பவர்கள் தீயோராக கருதப்படுவதில்லை.

எவரொருவர் பற்றுகள் நிறைந் தவராய், பேராசை பிடித்தவராய், ஏமாற் றுக்காரராய், வஞ்சகம் செய்வோராய், குற்றச் செயல்களில் தொடர்புடை யோராய், புலன்களை வெல்ல முடி யாதவராய், தீய ஒழுக்கமுடையோராய், நம்பிக்கைத் துரோகம் புரிபவராய், கருணை அற்றவராய், இறப்பிற்குப் பின்னும் தீய பெயர் பெறுவோராய்,

தீய நெறியில் நிலைப் போராய் இருந்து, சாம்பல் பூசியவராய், சடைமுடி வளர்ப் பவராய், பருவத்திற்கேற்ப பூஜைகள், யாகங்கள் செய்வோராய், எல்லாவித சடங்குகளையும் செய்பவராய் இருப் பவர், மீனையும் இறைச்சியையும் தவிர்ப்பவராய் இருப்பதினால் நல் லோராக கருதப்படுவது இல்லை.

மீனையும், இறைச்சியையும் உண் ணாது தவிர்த்தலும், நிர்வாணமாய் இருத்தலும், குடுமி வைத்தலும், மழித் தலும், உரோம உடை உடுத்தலும், யாகத் தீ வளர்த்தலும் போன்ற இவை யெல்லாம் பேரின்ப ஞானம் பெற போதிய வழிமுறைகள் அன்று. தன்னை வருத்தலும், யாகத்தீயில் தானப் பொருள்களை இழத்தலும், சடங்குகளும், குற்றம் உடைய மனிதனைத் தூய்மைப் படுத்தி விடாது.

’தீமைகளை உருவாக்குவது தீயசெயல் களே அன்றி மீனையோ இறைச் சியையோ உண்பதனால் அன்று’

உங்கள் புலன்களை அடக்குங்கள்! உண்மையைக் கடைப்பிடியுங்கள்! உங்கள் சக்திகளை நீங்களே ஆளும் திறன் பெறுங்கள்! இரக்கத்தோடு இருங்கள்! அனைத்துக் கட்டுக்களையும் விட்டொழித்து தீமைகளை வென்ற துறவிதான் கண்டவற்றாலும் கேட்ட வற்றாலும் களங்கப்படுவது இல்லை.

புனிதர் புத்தரின் போதனைகளி லிருந்த சத்தியத்தை உணர்ந்த துறவி ஆமகந்தர், அங்கேயே அப்போதே தன்னையும் தன் சீடர்களையும் நன் னெறியாம் தம்மநெறிக்கு ஒப்புக் கொடுக்க புனிதர் புத்தரைப் பின்பற்றுவோர் களாகத் தம்மை ஏற்கும்படி வேண்டிப் பணிந்தார்.
இவ்வாறு புத்தர் கூறினார்.

(அண்ணல் அம்பேத்கர் எழுதிய நூலின் மொழி பெயர்ப்பு)

மொழியாக்கம்: திருமகள்

Read more: http://viduthalai.in/page3/96587.html#ixzz3SP1Cvdv4

தமிழ் ஓவியா said...

கீதை பற்றி விவேகானந்தர்

கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கீதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேதவியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப் பட்டதா?
இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா? மூன்றாவதாக கீதை யில் கூறப்படுவதுபோல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?

நான்கா வதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள் தானா? என்பன கீதையைச் சங்கராச் சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத் தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி - குரு சேத்திர யுத்தம் நடைபெற்றது என்ப தற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத் தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே உரை யாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண் டாரா என்ற பிரச்சினை எழுகிறது.

அர்ஜூனன் ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத் திரயுத்தம் செய்தனர் என்பதோ கூறுவ தற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. -விவேகானந்தர்,

கீதையைப்பற்றி கருத்துகள் என்ற நூலில் ஆதாரம்: ஏ.எஸ்.கே.அய்யங்கார் எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூலில் - பக்கம் 11,.117)

Read more: http://viduthalai.in/page3/96586.html#ixzz3SP1RGbF6

தமிழ் ஓவியா said...

மோடியின் 10 லட்ச ரூபாய் சட்டை ஏலம்
பாவத்தைப் போக்க கங்கையில் கரைக்கிறார்களோ!

குடியரசு தினத்தன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் இருந்த போது மோடி அணிந்த ஆடை உலக அளவில் மிகவும் கடுமையான விமர் சனத்திற்கு ஆளானது.

இங்கிலாந்து நிறுவனம் ஒன்றினால் தனிப்பட்ட முறையில் தங்க இழையால் நரேந்திர தாமோதர் மோடி என பெயர் பொறிக் கப்பட்டு நெய்து ஆஸ்திரியா நாட்டு ஆடை வடிவமைப்பாளர்களின் கைவண்ணத்தில் ஆடையாக நரேந்திர மோடி அணிந்தார். இந்த ஆடை நெய்வ தற்கு, ஆடை வடிவமைக்க தைத்து கொடுக்க என்று ரூ 10 லட்சம் வரை செலவானது.

இது குறித்து இன்றுவரை மோடி எதுவும் கூறவில்லை. ஆனால் இந்த ஆடை விவகாரம் பெரிய அளவில் மோடிக்கு அவப் பெயரை வாங்கிக்கொடுத்ததுமல்லாமல் டில்லி தேர்தலின் தோல்விக்கு ஒரு காரணமாகவும் அமைந்துவிட்டது.

இந்த ஆடை அணிந்த நாளில் இருந்து தொடர்ந்து மோடிக்குக் கெட்ட சகுனமாகவே இருந்து வந்ததாம், காஷ்மீர் விவகாரத்தில் ஆட்சியமைப் பதில் இருந்து பின்னடைவு, டில்லி தேர்தல் தோல்வி, பீகார் மாநில அரசி யலில் தலையிட்டதன் மூலம் கூட்டணி கட்சிகளிடம் பிணக்கம் என தொடர்ந்து அரசியல் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கு முக்கிய காரணம் இந்த ஆடையின் மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டுவிட்டது என்று கூறி ஆடையை ஏலம் விட முடிவு செய்தார்களாம். வெறும் ஆடையை மட்டும் ஏலம் விட்டால் ஊடகங்கள் பிரச்சினையை எழுப்பும் என்று கூறி மோடி குஜராத் முதல்வராக இருந்த போதுஅவருக்கு பரிசாக அளித்த 400-க்கும் மேற்பட்ட பொருட்களையும் ஏலம் விடப் போகி றார்களாம்.

இதில் வரும் தொகை கங்கை சுத்திகரிப்பு இயக்கத்திற்கு கொடுக்கப் படும் என்று மோடியின் தரப்பில் கூறப்படுகிறது. (இதிலும் இந்துத்துவா தானா?)

கடந்த வெள்ளியன்று மோடியின் ஆடையை ஏலம் விட்டு அதில் வரும் பணத்தை தூய்மை இந்தியா இயக்கத் திற்கு வழங்கப்படும் என்று கூறிவந்த நிலையில் திடீரென கங்கை சுத்திகரிப்பு இயக்கத்திற்கு வழங்கப்படும் என்று அறிவித்ததன் பின்புலம் இப்படியும் இருக் கலாம்; அவர்கள் நடவடிக்கைப்படி அவர் செய்த பாவம் எல்லாம் கங்கையில் கரைக்கும் ஏற்பாடாக இருக்குமோ!

Read more: http://viduthalai.in/page3/96590.html#ixzz3SP1hrKjo