Search This Blog

25.2.15

இந்து வெறியர்களின் ஆட்சியில் இந்தியா இன்னும் என்னென்ன விலையைக் கொடுக்க வேண்டியிருக்குமோ!

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் அநாகரிகப் பேச்சு! 


ஆர்.எஸ்.எசுக்கும், எங்களுக்கும் எந்தவித ஒட்டும் உறவும் இல்லை; அது வேறு; நாங்கள் வேறு என்று ஒரு காலகட்டத்தில் பி.ஜே.பி. பிரமுகர்கள் சொல்லிக்கொண்டு இருந்தனர். இப்பொழுதெல்லாம் அவர்கள் அவ்வாறு சொல்லுவதில்லை. தொலைக்காட்சி விவாதங்களில்கூட ஆர்.எஸ்.எசுக்குப் பச்சையாக வக்காலத்து வாங்கிப் பேசி வருகின்றனர். இன்னும் சொல்லப் போனால் நாங்கள் ஆர்.எஸ்.எஸில் இருந்தோம் என்று சொல்லுவதில் பெருமைப்படுகிறோம் என்று சொல்லவும் செய்கின்றனர்.


அதேநேரத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் முதல் தலைவர்கள் வரை பேசி வருகின்றவை பி.ஜே.பி.க்காரர் களைத் திக்கு முக்காடச் செய்து வருகிறது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தமது சொந்த ஊரான பரத்பூரில் (ராஜஸ்தான்) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தங்களுக்கே உரித்தான இந்துத்துவா வெறியோடு நஞ்சைக் கக்கியுள்ளார்.

நமதுநாடு ஆங்கிலேயர்கள் வருகையின் முன்பு செல்வச் செழிப்பும், அமைதியும் அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நியதியின்படி கட்டுப்பாட்டோடு வேலை களைச் செய்து வந்தனர். முகமதியர்கள் வந்த பிறகு செல்வச் செழிப்பைச் சுரண்டினர். இதன் காரணமாக வறுமை தொடங்கியது.


ஆங்கிலேயர்கள் வந்த பிறகு மக்களிடம் வறுமை கோரதாண்டவமாடியது. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி மத மாற்றத்தை ஆங்கிலே யர்கள் செய்ய ஆரம்பித்தனர். அவர்களின் மத மாற்றத் திற்கு உதவிட வெளிநாட்டினர் இங்கு வந்தனர். அவர்கள் கல்வி என்ற பெயரில் மத மாற்றத்தைச் செயல்படுத்தினர்.


இந்த வரிசையில் மதர் செரசா மிகவும் புத்திசாலித் தனமாக சேவை என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு மத மாற்றத்தில் இறங்கினார்.  எங்களைப் போன்றவர் களுக்குத்தான் மதர் தெரசாவின் உண்மையான நட வடிக்கை என்னவென்று தெரியும். மக்கள் மதர் தெரசா வின் உண்மையான மத மாற்ற செயலைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். அவர் செய்த மத மாற்றச் செயல் பாடுகள் வெளிவராமல் இருக்க ஆங்கிலேயர்கள் அவருக்கு நோபல் பரிசு கொடுத்தனர்.


அவர் உண்மையிலேயே சேவை செய்யவேண்டுமென் றால், உலகில் வேறு நாடுகளே இல்லையா? இந்தியா மாத்திரம் ஏன் அவர்களின் கண்களுக்குப்பட்டது? அவர் களின் நோக்கமே இந்து மதத்தின் மாண்புகளைச் சிதைக்கவேண்டும். மக்களை மதம் மாற்றி இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்பதுதான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பொரிந்து தள்ளியுள்ளார்.


இதற்கு பி.ஜே.பி. தலைவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? 

(தமிழ்நாட்டுக்கு பி.ஜே.பி.யின் பொறுப்பாள ராக இருக்கக்கூடிய முரளிதரராவ் மீண்டும் பழைய குரலில் பேச ஆரம்பித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு பி.ஜே.பி.யைக் கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளார். அடடே, இவர்களின் இரட்டை வேடத்துக்கும், இரட்டை நாக்குக்கும் எல்லையே இல்லையா?)


ஏதோ இப்பொழுதுதான் இவர்கள் இப்படி சொல்லுகிறார்கள் என்று நினைக்கவேண்டாம்; இவர்களின் புத்தியே மத நஞ்சில் ஊறித் திளைத்த ஒன்றாயிற்றே!


அமர்த்தியாசென், மதர் தெரசா ஆகியோருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது - கிறிஸ்துவ சதி என்று சொன்னவர் யார் தெரியுமா? விசுவ இந்துபரிசத்தின் தலைவர் அசோக்சிங்கால்தான் அப்படிக் கூறினார்.

அதோடு விட்டுவிட்டார்களா? இந்தியா கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று அமர்த்தியா சென் கூறுவது - கிறிஸ்தவர்களின் கல்விப் பணியை நாட்டில் விரிவுபடுத்தும் நோக்கத்துடன்தான் என்று ஆர்.எஸ்.எஸின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசர் எழுதியது.


உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், கல்வி யைக் கொடுக்காதே என்று சொன்னது இந்து மதம்; கல்வியைக் கொடு என்று சொன்னது கிறித்தவம். ஆங் கிலேயர்கள் இந்தியா வரவில்லை என்றால், கல்வியும், மருத்துவமும் இங்கு வேர் விட்டு இருக்குமா? என்பது அறிவார்ந்ததும், யதார்த்தமானதுமான கேள்வியாகும்.


1999 ஜனவரி 22 இல் ஒரிசா மாநிலம் மனோகர்பூர் கிராமத்தில் என்ன நடந்தது? தொழுநோயாளிகளுக்காகக் குடும்பத்தோடு தொண்டூழியம் செய்துகொண்டிருந்த கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் அவர்களையும், அவர் களின் அருமைச் செல்வங்கள் பிலிப்ஸ், திமோத்தி ஆகியோரை ஒரு நள்ளிரவில் கொளுத்திக் கொன்ற கூட்டம் எது? சங் பரிவாரைச் சேர்ந்த பஜ்ரங் தள் அமைப் பைச் சேர்ந்த தாராசிங் தலைமையிலான கும்பல்தானே!


தொழுநோய் என்றால் கர்மப் பலன் என்று கதை கட்டிய இந்துத்துவக் கும்பல், தொழுநோயாளிகள் மத்தியில் தொண்டு செய்து வந்த ஸ்டெயின் பாதிரியாரையும், அவரின் இரண்டு மகன்களையும் படுகொலை செய்தது என்றால், மதர் தெரசாவை அவர் மரணத்திற்குப் பிறகும் இப்பொழுது கொச்சைப்படுத்துகிறது!


கிறித்தவர்கள் விழாவில் கலந்துகொண்டு அனைத்து மதத்திற்கும் இந்தியாவில் சம உரிமை உண்டு என்று கொட்டி முழங்கிய பிரதமர் நரேந்திரமோடி ஆர்.எஸ்.எஸ். தலைவரின் மதர் தெரசா குறித்த கொச்சைத்தனமான விமர்சனத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? அவர் வாயிலிருந்து வரும் சமாதானம் என்ன?


இந்த இந்து வெறியர்களின் ஆட்சியில் இந்தியா இன்னும் என்னென்ன விலையைக் கொடுக்கவேண்டி யிருக்குமோ!

                                ------------------------”விடுதலை” தலையங்கம் 25-02-2015

47 comments:

தமிழ் ஓவியா said...

இணைய தமிழில் புதிய மாற்றம் பெரியார் அறிமுகப்படுத்திய எழுத்துச் சீர்திருத்தம்

இந்த மாற்றத்திற்குப் பேருதவி புரிந்துள்ளது!

இந்து ஆங்கில ஏட்டில் சிறப்புக் கட்டுரை

சென்னை, பிப்.25_ இணைய தளத்தில் தமிழ் இன்று ஆதிக்கம் செலுத்து வதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார் அறிமுகப் படுத்திய தமிழ் எழுத்துச் சீர்திருத்தமே என்று இந்து ஏட்டில் இன்று (25.2.2015) வெளிவந்துள்ள சிறப்புக் கட்டுரை கூறுகிறது.

இணையதமிழ் (i தமிழ்) என்ற தமிழ் எழுத்துருவின் நவீன வடிவத் திட்டத்தை கார்கி ஆராய்ச்சி மய்யம் செயல் படுத்த முனைந்துள்ளது. தமிழ் பல நூற்றாண்டு களாக பல்வேறு மாற்றங் களை சந்தித்து வந்தது. எழுத்துருவில் மாற்றங் களைச் சந்தித்தாலும் அதன் தொன்மை மாறா மல், வளமை குன்றாமல் இன்றளவும் இளமையாக, மேலும் புதுமையாக திகழ் வதே இதன் தனித்துவ மாகும். இதனடிப்படையில் கணினி எழுத்திற்கேற்ப எளிமையான முறையில் தமிழ் எழுத்துக்களில் மாற் றங்களைக் கொண்டுவர கவியரசர் வைரமுத்துவின் மகன் கார்க்கி தன்னுடைய ஆய்வு மய்யத்தின்மூலம் புதிய எழுத்துருக்களை வர விருக்கும் தமிழ் இணைய வழி மாநாட்டில் ஆய்வா ளர்கள் முன்பு வைக்க உள்ளார்.

மதன்கார்க்கி அவரது குழுவினரான சுதர்சனம் நேசமணி மற்றும் தமிழ்ச் செல்வி ஆகியோர் ஒன்றி ணைத்து 216 உயிர்மெய் எழுத்திற்கும் புதிய வரிவடி வத்தை உருவாக்கியுள்ளனர். முக்கியமாக ஒருங்குறி யில் (யுனிக்கோட்) முறை யில் இன்றளவும் சில குறை பாடுகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. முக் கியமாக தற்போது மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஆண்டிராய்டு மற்றும் அய்போன் போன்ற தளங் களில் யுனிக்கோட் எழுத் துருக்கள் சரிவர தெரிவ தில்லை.

இதனடிப்படை யில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கார்கி ஆய்வு மய்யம் வேகமாக வளர்ந்துவரும் இணைய தமிழ் உலகில் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும், அதேநேரத்தில் இனிவரும் காலத்திலும் இணைய வழித் தமிழ் மிகவும் எளிய முறையில் வரும் தலை முறைக்கும் பயனளிக்கும் விதத்தில் பல்வேறு மாற் றங்களைக் கொண்டுவந் துள்ளனர்.

i தமிழ் எழுத்துருக்கள் நவீன ஸ்மார்ட் போன் களின் எழுது பலைகை களில் (keyboard) எவ்வித சிறப்புக் குறியீடுகள் இல் லாமல் சாதாரண எழுது பலகை போன்றே அவற்றை நாம் பயன்படுத்தமுடியும். தமிழ் எழுத்துருக்களில் மாற்றம் நூற்றாண்டுக ளாகத் தொடர்ந்து மாறிக் கொண்டு வந்தாலும் வீர மாமுனிவர் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் எளிமையாக் கும் முயற்சி துவங்கியது.

தந்தை பெரியார் தொலைநோக்கிற்கு மிகப் பெரும் உதாரணங்களுள் ஒன்றாக தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கூறலாம். அவரது காலத்தில் தமிழ் அச்சுக்கள் தோன்ற ஆரம் பித்துவிட்டன. தமிழ் அச் சுக்கோர்வைக்கு அப்போதி ருந்த வடமொழிக் கலப்புத் தமிழ் ஏற்றதாக இருக்காது என்ற தொலைநோக்குப் பார் வையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். பெரியாரின் இந்த எழுத்துச் சீர்திருத்தம் என்பது இன்று இணையம் வரை வந்து விட்டது. இந்திய மொழிகளில் இணையத்தில் தமிழின் ஆதிக்கம் இன்று முதலிடத் தில் இருப்பதற்கு முக்கிய காரணம் பெரியார் கொண்டு வந்த தமிழ் சீர்திருத்தம் தான். பெரியாரின் எழுத் துச் சீர்திருத்திற்கு முன்பாக இருந்த தமிழையொட் டியே மலையாளம், தெலுங்கு கன்னடம் போன் றவை இருந்தன. ஆனால், அம்மொழிகளால் எழுத் துச் சீர்திருத்தம் பெற இய லாமல் இன்றளவும் இணைய உலகில் பின்தங் கியே உள்ளது. சீன மொழி இன்றள வில் உலகம் முழுவது அதி கமாக பேசும் மொழிகளில் முதன்மையானதாக உள் ளது. நவீன சீனாவைப் படைத்த சான் யாட் சென் சீனமொழியை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யவேண்டும். நவீன வளர்ச்சிக்கு ஏற்ப மொழி யில் மாற்றம் செய்யவேண் டும் என்று கூறினார். அவரது ஆலோசனையின் படி சீன மொழியில் ஏற் பட்ட எழுத்துரு மாற்றம் இன்று உலகின் பொருளா தார வல்லரசாக மாற்றி யுள்ளது.

கார்கி ஆய்வு மய்யம் கொண்டுவந்துள்ள நவீன தமிழ் எழுத்துருக்கள்மூலம் பதிப்பிற்குச் செல்லும் போது அதிக இடங்கள் சேமிக்கப்படும் இதன் மூலம் காகித சேமிப்பு மாத் திரமல்லாமல் காகிதத்திற் காக வெட்டப்படும் மரங்கள் சேமிக்கப்படும்.

(இன்றைய ஆங்கில இந்து ஏட்டில் கார்த்திக் சுப்பிரமணியம் எழுதிய ‘‘A Proposal to simplify the Tamil Script’’ கட்டுரையின் தமிழாக்கம் இது).

Read more: http://viduthalai.in/e-paper/96807.html#ixzz3Sl5yEyt0

தமிழ் ஓவியா said...

டி.என்.ஏ.வை சோதனை செய்தால்
அதில் இந்து டி.என்.ஏ.தான் இருக்குமாம்
பி.ஜே.பி. எம்.பி.,யின் உளறல்!


ரோஹதக் (அரியானா), பிப்.25_ மதமாற்றம் தொடர்பான எந்த மாற் றுக் கருத்துக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். மதம் மாறிய இந்துக்களை மீண் டும் தாய் மதம் திரும்பும் புனிதப்பணியை தொடர்ந்து செய்வோம் என்று பாஜக எம்பியும், சாமியாருமான ஆதியனாத் தெரிவித்தார். அரியானா மாநிலம் ரோஹதக் நகரில் விசுவ இந்துபரிஷத் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆதித்ய நாத் பேசியதாவது: இந்த நாட்டின் முக்கிய பிரச்சினை ஏழ்மை அல்ல, ஜிகாதிகளின் பிரச்சி னையே இந்த நாட்டின் தலையாய பிரச்சினையா கும். ஜிகாதிகளின் சிந்த னைக்கு சில கட்சிகள் அடிபணிந்து அவர்களுக்கு அடங்கிப்போகின்றன. வேற்று நாட்டுக்காரர் களின் மதம் இந்த நாட் டின் கலாச்சாரத்திற்கு உகந் தது அல்ல; ஆகையால் தான் அந்நியர்கள் நுழைந்த நாள் முதலே இந்த நாடு ஏழ்மையில் ஆழ்ந்துவிட் டது. அந்நிய மதத்தவர்கள் முற்றிலும் இந்து மதத்திற் கும் மாறும்வரை இந்து மதத்திற்கு அழைக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடை பெறும். முதலில் மற்ற மதத்துக்காரர்களை இந்த நாட்டில் இருந்து கொண்டு இந்துக்களை மதம் மாற்று வதைத் தடுக்கவேண்டும்.

முஸ்லிம் உடலில் தேச விரோத ரத்தம் ஓடுகிறதாம்!

இஸ்லாமிய இளைஞர் களிடம் தேச விரோத செயல் என்பது அவர் களது உடம்பில் ஓடும் ரத் ததில் கலந்துள்ளது. தேச விரோத நடவடிக்கைக்கு என்ற தனி இனம்தான் முஸ்லிம்கள் (கிஸீவீ-ழிணீவீஷீஸீணீறீ கிநீவீஸ்வீவீமீ ஙிக்ஷீமீமீபீ) இந்துக் களின் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியை தடுக்கிறவர் கள். தேசத் துரோக மதங் களின் நடவடிக்கையை தடுக்க ஏன் தயங்குகிறார் கள்? தற்போது இந்து மக்கள் அனைவரும் பாது காப்பாக இருக்கின்றனர். ஒரு இந்து தாய், இந்து சகோதரி, இந்து அமைப்பு களின் தொடர் நடவடிக் கையால் மிகவும் பாதுகாப் பாக இருக்கின்றனர். இந்து அமைப்புகள் இந்துவாக மாறுபவர்களின் பாதுகாப் பிற்கு உத்திரவாதம் கொடுக்கிறது. ஆனால், இஸ்லாமியர் வாழும் பகுதியில் எப் போதும் கலவரமும், கொலைகளும், கொள்ளை களும் நடந்து கொண்டே இருக்கின்றன. காரணம் அது தேசத்துரோகிகளின் கூடாரமாகும். இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா வெற்றிபெற்றால் இந்துக் கள் கொண்டாடுகிறார்கள்.

முஸ்லிம்கள் வயிற்றெரிச் சல் படுகிறார்கள். காரணம் அவர்களின் உடலில் தேசத் துரோக சிந்தனையே நிரம்பி இருக்கிறது. இந்த நாட்டின் ஒவ் வொரு குடிமகனின் டி.என்.ஏ.வை சோதனை செய்தால் அதில் இந்து டி.என்.ஏ.தான் இருக்கும். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை இந்து டி.என்.ஏ. தான் கிடைக்கும்; முஸ்லிம் டி.என்.ஏ. கிறிஸ்து டி.என்.ஏ. கிடைக்காது அயோத்தியாவில் ராமர் பிறந்த இடம்தான் பாபர் மசூதி. அங்கு ராமர் கோவில் கட்டவேண்டும். பாதி மசூதி; பாதி இந்து கோவில் என்ற பேச்சிற்கே இடமில்லை. அதுமட்டு மல்ல, இந்துக்களின் புனித நகரங்களில் பிற மத வழி பாட்டுத்தலங்கள் இருக்கக் கூடாது, வாரணாசியில் விசுவநாதர் கோவில்தான் உள்ளது அதைத்தான் அனைவரும் வழிபட வரு வார்கள். ஆனால், அங்கு மசூதி இருக்கிறது, ஏன்? ஆக்ராவில் இந்துக் கோவிலை இடித்துவிட்டு உலகை ஏமாற்றும் வேலை களை செய்துள்ளனர். அதுபோல் மதுராவில் கிருஷ்ணர் பிறந்தார், அங் கும் மசூதிகள் உள்ளன. இவையெல்லாம் இந்து மதத்தின் தூய்மையைக் குலைக்கின்றன. இனி மேலும் இந்துக்களின் புனித தலத்திற்கு ஏற்படும் இந்த இழிவை கண்டு நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். புனித தலங்களில் பிற மத வழி பாட்டுத்தலங்கள் இருக்கும் வரை இந்துக்களின் சுதந் திரம் என்பது முழுமையா னது அல்ல.

அரியானா மாநிலத்தில் ஒரே ஒரு ஊரில் மாத்திரம் முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களால் இந்துக்களின் விழாக்களை அங்கு கொண் டாடமுடியவில்லை. அவர் கள் இந்து விரோதசக்திகள், அரியானாவில் நடக்கும் பல்வேறு சட்டவிரோத செயல்கள் அங்குள்ள முஸ் லிம்களால்தான் நடை பெறுகின்றன.

ராமர் கோவில் இயக்கத்திற்கு (பாபர் மசூதி இடிப்பு) பிறகு முஸ்லிம்கள் அடங்கி விட்டனர் பயந்துவிட்ட னர். அந்தப் பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க தேச விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். விரைவில் அவர்களை அடக்கிவிட் டால் இந்த நாடு அமைதி யாகிவிடும் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/96809.html#ixzz3Sl68lpts

தமிழ் ஓவியா said...

செவ்வாய்த் தோஷ நம்பிக்கையாளர்களுக்குக் காணிக்கை!
செவ்வாய்க்கோளில் பிறக்கும் முதல் குழந்தை?

மார்ஸ் ஒன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம். உள்படம்: செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப் பயணம் மேற்கொண்டு, பிள்ளை பெற விரும்பும் பிரிட்டானிய பெண் மேகி லியூ

செவ்வாய்க் கோளில் பெண்மணி ஒருவர் முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த மார்ஸ் ஒன் (Mars One) என்ற தனியார் நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம் (A One-Way Trip) என்ற பிரமாண்டமான திட்டத்தை அறிவித்தது. இதற்காக, செவ்வாய்க்கு செல்லும் பயணிகள் மீண்டும் பூமிக்குத் திரும்ப இயலாது; அதற் கான எந்த ஏற்பாட்டையும் நிறுவனம் செய்ய வில்லை என்ற நிபந்தனையுடன் விண்ணப் பங்களை வழங்கியது.

2024 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளை நோக்கி செல்லும் இந்த பயணக்குழுவினர், அங்கேயே நிரந்தரமாக தங்க வைக்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த சாகசப் பயணத்தில் பங்கு பெற உலகம் முழுவதிலும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 586பேர், தங்களின் பெயர்களை முன்பதிவு செய்தனர். இத்திட்டத்திற்கு, சுமார் 100பேர் தெரிவு செய்யப்பட்டனர். இதில், அமெரிக்காவி லிருந்து 39, அய்ரோப்பாவிலிருந்து 31, ஆசியா விலிருந்து 16, ஆப்ரிக்காவிலிருந்து 7, ஓசியானி யாவிலிருந்து 7 பேரும் தேர்வாகியுள்ளனர். செவ்வாய்க்கோள் பயணத்தில் பயணம் செய்யும் குழுவினரில் இந்தியர்களான கேர ளாவைச் சேர்ந்த சாரதா பிரசாத் (19), துபாயில் வசிக்கும் ரிதிகா சிங் (29) ஆகிய 2 பெண்களும், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கணினி அறிவியலில் டாக்டரேட் பயின்று வரும் தரண்ஜீத் சிங் (29) உட்பட 3 பேர் தேர்வானவர்களின் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

இந்நிலையில், இந்தப் பயணத்திற்குப் பிரிட்டனைச் சேர்ந்த 24 வயதான மேகி லியூ (Maggie Lieu)
என்ற பெண் தெரிவாகி யுள்ளார். மேலும் இவர், செவ்வாய்க்கோளில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடிவெடுத் துள்ளதாகவும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, செவ்வாய்க்கோளில் குழந்தையை பெற்றெடுப்பதற்கு அங்குள்ள புவி ஈர்ப்பு விசை சாதகமாக இருக்காது என்று இதுவரை ஆராய்ச்சியில் வெளியாகவில்லை என்றும் அதனால், அங்கு தான் நிச்சயம் குழந்தை பெற்றெடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த பயணத்திற்கு தெரிவான 100 பேரில் அனைவரும் 19 வயதிலிருந்து 60 வயதுடையவர்கள் என்பதால் அவர்களில் ஒருவரை எனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டு குழந்தையை பெற்றெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

சுமார் 6 பில்லியன் டாலர் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயணத்தில் பங்கு பெறுபவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கணக்கில் பல பயிற்சிகள் அளிக்கப் பட்டு வருகின்றன. இது தவிர, இந்த பெரிய பயணத்தை உருவாக்கியவரும், இத்திட்டத்தின் தலைமை நிர்வாகியுமான பாஸ் லான்ஸ் டோர்ப் கூறுகையில், உலகமே வியக்குமளவிற்கு இருக்கப் போகும் இந்தப் பயணத்தை நேரடியாக செவ்வாய்க்கோளிலிருந்து ஒளிப்பரப்ப போகி றோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தொலைக்காட்சி மற்றும் இணைய தள வசதிகள் உள்ள ஒவ்வொருவரும் இந்தப் பயணத்தைக் கண்டுகளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள தாகவும் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/96811.html#ixzz3Sl6GETOL

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

விருப்பு - வெறுப்பு!

ஆன்மிகம் பொதுவானது என்றால், வடகலைக் காரன் ஏன் தென்கலைக்காரனை வெறுக்கிறான்? திருநீறு பூசுபவன் ஏன் இவர்கள் இருவரையும் வெறுக் கிறான்? ஆக, ஆன்மிகத்திலும் விருப்பு - வெறுப்பு இருக்கிறது என்பது உண்மையானால், அது என்ன வெங்காய ஆன்மிகம்?

Read more: http://viduthalai.in/e-paper/96808.html#ixzz3Sl6NwyQP

தமிழ் ஓவியா said...

பள்ளி மாணவர்கள் மத்தியிலே நேருவைக் கொச்சைப்படுத்திய பி.ஜே.பி. கல்வி அமைச்சர்


ரோஹதக், பிப்.25_ பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அரி யானா கல்வியமைச்சர் ராம்விலாஸ் சர்மா பள்ளி மாணவர்கள் முன்பு முன் னாள் பிரதமர் நேருவை அசிங்கமான வார்த்தை களைப் பயன்படுத்தி திட் டினார். அரியானா மாநிலம் ரோஹதக்கில் அம்

மாநிலத்தைச் சேர்ந்த பிரபல கவிஞர் லக்மிசந் தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது, இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக அரியானா மாநிலத்தின் கல்வி அமைச்சர் ராம்விலாஸ் சர்மா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அனைவரிடத்திலும் சங்கடத்தை ஏற்படுத்தியது

நமது கவி லக்மிசந் திற்கு நிகரானவர் யாரு மில்லை. அவருக்குள்ள புகழ் என்றும் மறையாது. அவரை எந்த ஒரு தலை வருடனும் ஒப்பிட முடி யாது. ஒருமுறை டில்லிக் குப் பயணம் செய்த சிலர் பேசிக்கொண்டனர். அதில் ஒருவர், இன்று நேரு இறந்துவிட்டார் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த நமது அரியா னாவைச் சேர்ந்தவர் கூறும்போது, பெருமை மிக்க லக்மிசந்த் எங்கே என்று கூறி (சில தவறான வார்த்தைகளை உபயோ கித்து) அந்த நேரு எங்கே? என்று கூறினாராம். இதை அப்படியே ஒலி பெருக்கியில் கூறினார். அவருக்கு முன்பாக நூற் றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் அமர்ந்திருக்க, மேடை யில் ஆசி ரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் அமர்ந் திருக்கும்போது, மாநில கல்வி அமைச்சர் ஒருவரே ஜவர்கர்லால் நேருவை அசிங்கமான வார்த்தை யால் திட்டித் தீர்த்துள் ளது அனைவரிடத்திலும் சங்கடத்தை ஏற்படுத் தியது. நிகழ்ச்சி முடிந்த பிறகு இதுகுறித்து ஊடகவிய லாளர்கள் அமைச்சரிடம் கேட்ட போது,

நான் வேண்டு மென்றே இந்த வார்த்தையைக் கூற வில்லை. கவிஞர் லக்மி சந்த்பற்றி மக்கள் கூறு வதைத்தான் நான் கூறி னேன். மேலும், சில வார்த் தைகளை எந்த அளவு கோல் வைத்து மட்ட மான வார்த்தை நல்ல வார்த்தை என்று கூறு கிறீர்கள் என்று ஊடக வியலாளர்களிடம் பதில் கேள்விவைத்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆசிரியர்கள் கூறியதாவது: அவை நிறைந்த பள்ளி மாணவ, மாணவிகள் முன்பாக இதுபோன்ற வார்த்தையை பயன் படுத்தக் கூடாது

. மேலும் பள்ளியில் நேரு குறித்து மாணவர்களுக்கு நாங்கள் பாடம் சொல்லித்தருகி றோம். அப்படி இருக்க எங்களின் முன்பே புகழ் பெற்ற ஒரு தலைவரை கொச்சையான வார்த்தை களைப் பயன்படுத்தி பேசியிருப்பது தவறான முன்னுதாரணமாகும் என்று கூறினார்கள். ஆர்.எஸ்.எஸ் உறுப் பினரான ராம்விலாஸ் சர்மா முன்னாள் பாஜக மாநிலத் தலைவராக நீண்ட ஆண்டுகாலம் பதவி வகித்தார். அரியா னாவில் உள்ள பாஜக அரசில் கல்வி அமைச்ச ராக உள்ளார்.

தமிழ் ஓவியா said...

மூடன்


கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக்கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழிபோட்டுக்கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன். - (குடிஅரசு, 18.5.1930)

Read more: http://viduthalai.in/page-2/96798.html#ixzz3Sl6po8mX

தமிழ் ஓவியா said...

திருச்சி - கொடைவள்ளல் வீகேஎன் வாழ்விணையர் திருமதி கண்ணாத்தாள் மறைவு நமது ஆழ்ந்த இரங்கல்!

நமது பெரியார் மணியம்மை பல் கலைக்கழக இணை வேந்தரும், பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் தாளா ளரும் திருச்சியில் பிர பல தொழில் அதிப ரும் கொடைவள்ளலு மான திரு.VKN கண் ணப்பன் அவர்களது வாழ்விணையர் திருமதி கண்ணாத்தாள் ஆச்சி (வயது 64) அவர்கள் இன்று (25.2.2015) திருச்சி மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி நமக்கு மிகவும் ஆறாத் துன்பத்தையும், அதிர்ச்சியையும், துக்கத்தையும் தருகிறது.

கல்வி வள்ளல் வீகேஎன் அவர்களது வாழ்க்கையில் மிகப் பெருந்துணையாக நின்ற அவர், அன்பும், பண்பும், எவரிடத்திலும் மரியாதை கலந்த பாங்குடனும் பழகும் நற்றன்மை மிக்கவர்! திருச்சி மாளிகைக்கு வரும்போதெல்லாம், மிகவும் வாஞ்சையுடன் பேசுபவர்.

அவரது பிரிவு அக்குடும்பத்தின் உறுப்பினர் போன்றுள்ள நமக்கு ஆறாத் துயரத்தினை அளிக்கிறது!

இந்த இழப்பிலிருந்து நேரடித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள அன்புச் சகோதரர் வீகேஎன் அவர்களுக்கும், அவரது அன்புச் செல்வர்கள், ராஜா, கல்யாணம், நாராயணன் மற்றும் குடும்பத்தாருக்கும் நமது இயக்கம், கல்வி நிறுவனங்கள் அனைத்து சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை - கி.வீரமணி

25.2.2015 தலைவர், திராவிடர் கழகம்

குறிப்பு: இறுதி நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு திருச்சியில் நடைபெறுகிறது. இறுதி நிகழ்ச்சி யில் கலந்துகொள்ள திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திருச்சிக்கு விரைந்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்தம் வாழ்விணையர் வீ.மோகனா ஆகியோர் தொலைப்பேசி மூலம் வீகேஎன் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

Read more: http://viduthalai.in/page-8/96858.html#ixzz3Sl7ZtOE3

தமிழ் ஓவியா said...

செவ்வாய்த் தோஷ நம்பிக்கையாளர்களுக்குக் காணிக்கை!
செவ்வாய்க்கோளில் பிறக்கும் முதல் குழந்தை?

மார்ஸ் ஒன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம். உள்படம்: செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப் பயணம் மேற்கொண்டு, பிள்ளை பெற விரும்பும் பிரிட்டானிய பெண் மேகி லியூ

செவ்வாய்க் கோளில் பெண்மணி ஒருவர் முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த மார்ஸ் ஒன் (Mars One) என்ற தனியார் நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம் (A One-Way Trip) என்ற பிரமாண்டமான திட்டத்தை அறிவித்தது. இதற்காக, செவ்வாய்க்கு செல்லும் பயணிகள் மீண்டும் பூமிக்குத் திரும்ப இயலாது; அதற் கான எந்த ஏற்பாட்டையும் நிறுவனம் செய்ய வில்லை என்ற நிபந்தனையுடன் விண்ணப் பங்களை வழங்கியது.

2024 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளை நோக்கி செல்லும் இந்த பயணக்குழுவினர், அங்கேயே நிரந்தரமாக தங்க வைக்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த சாகசப் பயணத்தில் பங்கு பெற உலகம் முழுவதிலும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 586பேர், தங்களின் பெயர்களை முன்பதிவு செய்தனர். இத்திட்டத்திற்கு, சுமார் 100பேர் தெரிவு செய்யப்பட்டனர். இதில், அமெரிக்காவி லிருந்து 39, அய்ரோப்பாவிலிருந்து 31, ஆசியா விலிருந்து 16, ஆப்ரிக்காவிலிருந்து 7, ஓசியானி யாவிலிருந்து 7 பேரும் தேர்வாகியுள்ளனர். செவ்வாய்க்கோள் பயணத்தில் பயணம் செய்யும் குழுவினரில் இந்தியர்களான கேர ளாவைச் சேர்ந்த சாரதா பிரசாத் (19), துபாயில் வசிக்கும் ரிதிகா சிங் (29) ஆகிய 2 பெண்களும், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கணினி அறிவியலில் டாக்டரேட் பயின்று வரும் தரண்ஜீத் சிங் (29) உட்பட 3 பேர் தேர்வானவர்களின் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

இந்நிலையில், இந்தப் பயணத்திற்குப் பிரிட்டனைச் சேர்ந்த 24 வயதான மேகி லியூ (Maggie Lieu)
என்ற பெண் தெரிவாகி யுள்ளார். மேலும் இவர், செவ்வாய்க்கோளில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடிவெடுத் துள்ளதாகவும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, செவ்வாய்க்கோளில் குழந்தையை பெற்றெடுப்பதற்கு அங்குள்ள புவி ஈர்ப்பு விசை சாதகமாக இருக்காது என்று இதுவரை ஆராய்ச்சியில் வெளியாகவில்லை என்றும் அதனால், அங்கு தான் நிச்சயம் குழந்தை பெற்றெடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த பயணத்திற்கு தெரிவான 100 பேரில் அனைவரும் 19 வயதிலிருந்து 60 வயதுடையவர்கள் என்பதால் அவர்களில் ஒருவரை எனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டு குழந்தையை பெற்றெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

சுமார் 6 பில்லியன் டாலர் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயணத்தில் பங்கு பெறுபவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கணக்கில் பல பயிற்சிகள் அளிக்கப் பட்டு வருகின்றன. இது தவிர, இந்த பெரிய பயணத்தை உருவாக்கியவரும், இத்திட்டத்தின் தலைமை நிர்வாகியுமான பாஸ் லான்ஸ் டோர்ப் கூறுகையில், உலகமே வியக்குமளவிற்கு இருக்கப் போகும் இந்தப் பயணத்தை நேரடியாக செவ்வாய்க்கோளிலிருந்து ஒளிப்பரப்ப போகி றோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தொலைக்காட்சி மற்றும் இணைய தள வசதிகள் உள்ள ஒவ்வொருவரும் இந்தப் பயணத்தைக் கண்டுகளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள தாகவும் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/96811.html#ixzz3Sl81XgPw

தமிழ் ஓவியா said...

இங்கிலாந்திலிருந்து வெளிவரும் இதழில்

இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ஸ்வின்டன் அட்வர்ட்டைசர் (swindonadvertiser.co.uk) எனும் ஆங்கில இதழில் கடவுள் இல்லை என்று தலைப்பிட்டு வெளியாகி உள்ள வாசகர் கடிதத்தில் உள்ள தகவல் வருமாறு:

கடவுள் இல்லை

மூன்று முசுலீம்கள் அமெரிக்காவில் கொல்லப் பட்டனர். கடவுளை நம்புபவர்களிடையே காட்டு மிராண்டித்தனங்கள் ஏற்படக்கூடாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாக உள்ளது.

அண்மைக்காலத்தில் எத்தனை முசுலீம்கள் கொல்லப்பட்டுள்ளனர்? வானத்திலிருந்து கற் பனையாக எவனோ குதிப்பான் என்கிற நம்பிக்கை யால், மக்களைக் கடத்துவது மற்றும் உயிரோடு எரிப்பது என நடைபெறுகின்றன.

ஏசுவாக இருந்தாலும், அல்லாவாக இருந்தாலும், இன்னும் மொகம்மத் அல்லது கடவுள் அல்லது புத்தர் என்று எவரும் இருப்பதாகக் கூறினால், நாம் வாதிடுவதற்கு காரணமாவது இருக்கும்.

எங்குமே கடவுள் இல்லை, மற்றபடி இல்லாத இந்தக் குப்பைகளின் பெயரால் அந்த நம்பிக்கையில் பின்பற்றுபவர்களால் பொறுப்பற்றமுறையில் பலவும் நடத்தப்படுகின்றன.

அப்படி ஒருவன் இல்லாதநிலையில் அவனால் என்ன செய்துவிட முடியும்?

- ரோஜெர் லேக் வடக்கு ஸ்வின்டன்

Read more: http://viduthalai.in/e-paper/96890.html#ixzz3SqlW7xUI

தமிழ் ஓவியா said...

மோடி குட்டு உடைந்தது!
சொந்த தொகுதிக்குக்கூட ஒரு பைசா செலவழிக்கவில்லை

மோடியின் தத்து கிராமத்திலும் வெத்து விளம்பரம் தான்! புதுடில்லி பிப் 26_ புதிய ஆட்சி அமைந்து ஓர் ஆண்டு நெருங்கிக் கொண்டு இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களின் தொகுதிக்காக இதுவரை என்ன செய்தார்கள் என்று டில்லியைச் சேர்ந்த சமூக சேவகர் தகவல் அறியும் உரிமைச்சட்டத் தின் கீழ் கேள்வி கேட் டுள்ளார்.

இதில் வாரணாசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மோடி இதுவரை அந்த தொகுதிக் காக ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என் பது தெரியவந்தது. நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அவர்களின் தொகுதி வளர்ச்சிக்காக ரூ200 கோடி ஒதுக்கப்படு கிறது. இந்த நிதியில் அவர்களின் தொகுதி மேம்பாட்டிற்கென புதிய திட்டங்களை வகுத்து அதை நடைமுறைப்படுத்த லாம், மத்திய மாநில அரசுகளின் அனுமதி மற்றும் வேறு எந்த ஒரு தடையும் இல்லாத நிலையில் திட்டங்களை தொகுதி மக்களிடம் இருந்து பெறலாம். வாரணாசி தொகுதி மக்கள் இதுவரை பொது சமுதாயக் கூடம், பள்ளி களில் கணினி, குடிநீர் சுத்திகரிப்பு கருவி, மற்றும் சிறுதொழில் முனைவோ ருக்கான பொதுச்சந்தை போன்ற பல்வேறு திட் டங்களை மோடி வார ணாசிக்கு வரும் போதெல்லாம் அவரிடம் கோரிக்கை மனுவாக கொடுத்திருந்தனர். ஆனால் இந்த மனுக்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும் மக்கள் கொடுத்த கோரிக் கைகள் குறித்து ஆலோ சனைகள் கூட நடைபெற வில்லை என்று தெரிகிறது,.

இது குறித்து வார ணாசி மக்கள் கூறும் போது மோடி வாரணா சிக்கு வரும்போது நாங்கள் கொடுக்கும்; மனுக்கள் குறித்து என்ன நடவ டிக்கை எடுத்தார் என்று கேட்டதற்கு இதில் பெரும்பாலானவை மாநில அரசு செய்து கொடுக்கும் இதற்கான நிதி மாநில அரசின் வளர்ச்சித் திட்டத்தில் ஒதுக்கியுள்ளோம் என்று பதில் கிடைத்தது. மோடி வாரணாசி வரும்போ தெல்லாம் வாரணாசியை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று பாஜக காரர்கள் கூறுகிறார்கள்.

வாரணா சிக்கு உலக தலைவர்களை எல்லாம் அழைத்து வரு வோம் என்கிறார்கள். ஆனால் அந்தத் தலை வர்கள் வருகை தருவதற்கு தரமான சாலைகள் எதுவும் இல்லை, இதற்குக் காரணம் கேட்டால் சாலைகளை நிர்வகிப்பது மாநில அரசு என்று பதில் வருகிறது. மோடியின் தத்து கிராமம்தான் என்ன வாழ்கிறது? மோடி தத்து எடுத்த முஸ்லீம்களே வசிக்காத கிராமமான ஜெயபூரிலும் இதே நிலைதான், மோடி செயல்படுத்தப்போகும் திட்டங்களின் பட்டியல் அடங்கிய பெரிய பதா கைகள் கிராமத்தின் நுழைவாயிலில் அலங்கரிக் கின்றன.

மோடி முதல் முறையாக வருகைதந்த போது வைத்த இந்தப் பதாகைகள் இன்று பழையதாகிப் போய் விட்டன. பல எழுத்துகள் அழிந்துவிட்டன; ஆனால் இதுவரை எந்த ஒரு திட்டமும் செயல் படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம் கேட்ட போது கிராமங்களில் முக்கிய உறுப்பினர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று அங்கெல்லாம் நடந்து வரும் வளர்ச்சிப் பணியை கண்காணித்து வருகின்றனர். கிராமத்தில் நாங்கள் கேட்ட சாதாரண திட் டங்களுக்குகூட இப்படி எதிர்மாறான பதில்களே வருகின்றன. ஆக்கப் பூர்வமான எந்த திட்டமும் இன்றுவரை நடைபெறவில்லை என்று கூறுகின்றனர்.

கோடைப் பிரதேசமான வாரணாசி யில் ஆப்பிள் மரம் நடு வதற்கு வற்புறுத்துகின்ற னர். ஆப்பிள் மரங்கள் பனிபொழியும் பிரதேசங் களில் தான் செழுமையாக வளரும் ஆண்டிற்கு 3 மாதம் மட்டுமே குளிர் காலமாக இருக்கும் வாரணாசியில் ஆப்பிள் விவசாயம் என்பது இய லாத காரியம்; ஆனால், ஜெயபூர் கிராம பஞ் சாயத்துத் தலைவரான துர்காவதி தேவியின் மைத்துனர் கிராமத்தில் ஆப்பிள் விவசாயம் செய்ய அனைவரையும் வற்புறுத் துகிறார் இதற்காக லட்சக் கணக்கில் பணம் செல வழிக்கின்றனர். தேவை யற்ற இந்த காரியத்தின் மூலம் வாரணாசியில் மோடிக்கு அவப்பெயரே ஏற்படப்போகிறது என்று வாரணாசி மக்கள் கூறுகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/96885.html#ixzz3SqliRMqH

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பட்டர்

ஜாதியைப் பொறுத்து யாரும் உயர்வு, தாழ்வு பாராட்டக் கூடாது; கடவுள் பக்தி கொண்டவன், பக்தியற்றவன், தாழ்ந்த வன் என்பது தான் வைணவத்தின் அடிப்படை. மகாபாரதத்தில் வரும் விதுரர் தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் அவரை வியாசர் போற்றி வணங் குகிறார் என்று எழுது கிறது ஓர் ஆன்மிக இதழ்.

ஏன் அதனோடு நிறுத்திக் கொண்டனர்? அந்தப் பக்தியுள்ள விதுரர் குலத்தவர்கள் அந்த வைணவக் கோயி லில் பட்டராக முடி யாதது ஏன் என்பதுதான் இன்றையக் கேள்வி?

Read more: http://viduthalai.in/e-paper/96887.html#ixzz3Sqlr2YPG

தமிழ் ஓவியா said...

வேலிக்கு ஓணான்

மதர் தெரசா சேவையை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்தார் அல்லவா? சேவை என்ற பெயரால் கிறித்துவ மத மாற்றம் செய்தவர் என்று சொன்னார் அல்லவா! அதனை சிவ சேனாவும் வரவேற்றுள்ளது. வேலிக்கு ஓணான் சாட்சி என்பார்களே அது இது தானோ!

ஆவியுடன் பேச்சாம்!

மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்துவந்த மும்பை நரேந்திர தபோல்கர் மதவெறியர்களால் கொல் லப்பட்டார் அல்லவா? குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காவல்துறை தபோல்கரின் ஆவியுடன் பேசும் முயற்சிகள் மேற்கொண்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் குற்றஞ்சாட்டியுள்ளார். பகுத்தறிவாளரைக் கொலை செய்தவரைக் கண்டுபிடிக்க பகுத்தறிவுக்கு எதிரான அணுகுமுறையாம் - வெட்கக் கேடு!

Read more: http://viduthalai.in/e-paper/96889.html#ixzz3Sqlyrb2a

தமிழ் ஓவியா said...

அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ்.இல் இணையலாமாம்

ராய்பூர், பிப்.26_ அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸில் இணையவும், அரசியல் பணிகளில் ஈடுபடவும் சத்தீஸ்கர் அரசு அனுமதி அளித் துள்ளது. சத்தீஸ்கர் அரசின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சத் தீஸ்கர் அரசின் இந்த உத்தரவு ஜனநாயகத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புனித நகரமாம் திருப்பதி
மது விற்பனையில் முதலிடம்

திருமலை, பிப். 26_ புனித நகரமாக கருதப்படும் திருப்பதி, சித்தூர் மாவட்டத்தில் மது விற்பனையில் முதலிடமாக உள்ளது என கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 415 மதுக்கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வரு கிறது. கடந்த ஆண்டு சித்தூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து 188 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் சித்தூர் மாவட்டத்தில் முதலிடம் வகிப்பது புனித நகரமான திருப்பதி.அங்கு கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.192 கோடிக்கு விற்பனையானது.

சிறீகாளஹஸ்தியில் 2013ஆம் ஆண்டு ரூ.104 கோடிக்கு விற்பனையானது. 2014ஆம் ஆண்டு ரூ.103 கோடிக்கு விற்பனையானது.

Read more: http://viduthalai.in/e-paper/96891.html#ixzz3SqmBScUF

தமிழ் ஓவியா said...

அஸ்திவாரம் கிடையாது!


பார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரமே கிடையாது. - (விடுதலை, 11.7.1954)

தமிழ் ஓவியா said...

கர்மப்பலன்

செய்தி: மதர்தெரசா மருத் துவத் தொண்டு என்ற பெயரில் மத மாற்றத்தில் ஈடுபட்டார். - மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ். தலைவர்

சிந்தனை: குஷ்ட நோய் என்றால் அது கர்மபலன் என்று சொல்லும் இந்துத் துவவாதிகள் அந்த நோய் தீர்க்கும் பணியில் ஈடுபட்ட வர்களை ஏற்றுக் கொள் வார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/96900.html#ixzz3SqnolyCZ

தமிழ் ஓவியா said...

பிற மதத்தில் இருந்து இந்து மதம் மாறியவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி பிப் 27 பிற மதங்களிலிருந்து இந்து மதத்தை ஏற்றுக்கொள்ப வர்களை தாழ்த்தப்பட்ட வர்கள் பட்டியலில் தான் சேர்க்கவேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப் பான தீர்ப்பை வெளியிட் டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த கெபி மனு என்ப வரின் பாட்டனார் கிறிஸ் தவராக மதம் மாறினார். அதன் பிறகு அவர்கள் மூன்று தலைமுறைகளாக கிறிஸ்தவர்களாக இருந் தனர்.

இந்த நிலையில் மனு இந்துமதத்திற்கு மாறி தனது ஜாதிச்சான்றிதழில் தாழ்த்தப்பட்ட இந்து என்று சேர்ந்து அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்று இருந்தார். இதை கேரள நீதி மன்றம் ஏற்க மறுத்து வேற்று மதத்தில் இருந்து இந்துமதத்திற்கு வருப வர்கள் எப்படி தாழ்த்தப் பட்டவராக சேர்க்க முடியும் என்று கூறி அவரது பணி நியமனத்தை சட்டவிரோதம் என்று கூறி அவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாயை வசூல் செய்யவும் அவரை உடன டியாக பணி நீக்கம் செய் யவும் உத்தரவிட்டிருந்தது.

கேரள உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கெபி மனு உச்சநீதி மன்றத்திற்கு சென்றார். இவரது மனு நீதிபதி தீபக் மிஷ்ரா மற்றும் கோபால் கோடா அடங்கிய அமர் வின் முன்பு விசார ணைக்கு வந்தது. இது குறித்து நீதிபதிகள் கூறியதாவது: பிற மதங் களில் இருந்து இந்து மதத்திற்கு வருபவர்கள் அவர்களின் மூதாதை யர்கள் எந்த ஜாதியில் இருந்தார்கள் என்பதை சாட்சிபூர்வமாக உறுதிப் படுத்தவேண்டும். மேலும் அவர்கள் வேறு ஜாதி களை ஏற்றுக்கொள்பவ ராக இருந்தால் அந்த ஜாதி இந்துக்கள் அவர் களை தங்கள் ஜாதிக் காரர்களாக மனப்பூர்வ மாக ஏற்றுக் கொள்ள வேண்டும், ஒருவர் கிருத் தவ மதத்தில் இருந்தோ அல்லது இஸ்லாம் மதத் தில் இருந்தோ இந்து மதத்திற்கு மாறுவதனால் இந்து சமூகம் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண் டும். அப்படி ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அவர்கள் தாழ்த்தப்பட்ட வர்களாகக் கருதப்படு வார்கள்.

இன்று இஸ்லாம் மற்றும் கிருத்தவ மதத்தைச் சார்ந்தவர்களின் முன் னோர்கள் பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முன் னோர்கள் தான் வேற்று மதத்திற்கு சென்றார்கள் எனவே அவர்கள் இந்து மதத்திற்குத் திரும்பும் பொழுது அவர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் இந்து மதம் திரும்பு பவர்கள் தங்களது ஜாதி நிருபிக்கப்படாத நிலையில், அவர்கள் தாழ்த்தப்பட்ட வர்கள் என்றும், தாழ்த்தப்பட்டவர் களுக்குரிய அனைத்து இடஒதுக்கீடு சலுகைகளும் அவர்களுக்கு உண்டு என்று தீர்ப்பு கூறினார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/96966.html#ixzz3SxD381uY

தமிழ் ஓவியா said...

பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் தொடரும் மதவெறிப் பேச்சு!
மெக்காவில் ராமர்கோவிலை கட்டி விட்டு அயோத்தியாவில் மசூதி கட்டட்டும்!


சாஜஹான்பூர்(உபி) பிப் 27_ மெக்காவில் கோவில் கட்ட விடுவார்களா? மதீ னாவில் கோவில் கட்ட முடியுமா வாடிகன் சர்ச் சின் பாதிபகுதியில் கோவில் கட்ட விட்டால் அங்கு எல்லாம் கோவிலைக் கட்டிவிட்டு பிறகு ராமர் கோவில் பகுதியில் மசூதி கட்டுவது பற்றி கூறினால் நாங்கள் அதை விவாதத் திற்கு எடுத்துக்கொள் வோம் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாமியார் ஆதித்யனாத் யோகி மீண்டும் மதவெறிப் பேச்சை வெளிப்படுத்தியுள் ளார்.

இந்து நாட்டில் வேறு கோவில்களா?

விவாதத்திற்குரிய பாபர் மசூதி பிரச்சி னைக்கு தீர்வு காண பாபர் மசூதி மற்றும் ராம்மந்திர் கட்டலாம் என்ற தீர்மா னத்தை குறிப்பிட்டு பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாமியார் ஆதித்யனாத் கூறியதாவது; இது இந்து நாடு இந்து நாட்டில் வேறு மதக் கோவில்கள் ஏன் இருக்க வேண்டும். நாம் அடிமை யாக இருக்கும் போது அந்த அடிமைத்தனத்தைப் பயன்படுத்தி மசூதி, தேவாலயங்கள் கட்டப் பட்டுவிட்டன. இன்று இருக்கும் மசூதிகள் எல் லாம் ஒரு காலத்தில் இந்துக்கோவிலாக இருந்த வைகள். ராமர் கோவில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டியுள்ளார்கள். இடிந்து போன பழமை யான ஒரு கட்டடத்தை ராமர் கோவில் கட்டுவ தற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு தொழுகை நடத்தி அதை மசூதியாக மாற்ற முயற்சித்தார்கள். ஆனால் அதற்கான எதிர்நடவடிக் கையில் கரசேவகர்கள் வெற்றிகண்டனர்.

அயோத்தியில் ராமர் கோவில் விவகாரத்தில் தீர்வாக மீண்டும் அங்கு மசூதியும் கோவிலும் கட்ட வேண்டும் என்று கூறுகி றார்கள். இது மடத்தன மான விவகாரம்; அங்கு இஸ்லாமியர்களுக்கான உரிமை ராமர் கோவில் கட்டுமிடத்தில் எங்கிருந்து வந்தது?

அயோத்தி சனாதன தர்ம பூமி, இது புனித பூமி ராமர் பிறந்த பூமி, இங்கு மசூதி இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே பாபர் மசூதி இடிக்கப்பட் டது. தற்போது மீண்டும் அங்கு மசூதி கட்டுங்கள் என்று கூறுகிறார்கள். நான் கூறுகிறேன் முதலில் மக்காவில் கோவில் கட்ட இடம் தாருங்கள், மதீனா வில் கோவில் கட்டுங்கள், வாடிகன் சர்ச்சில் பாதி இடத்தில் கோவில் கட்ட அனுமதி தாருங்கள் அதன் பிறகு ராமர் கோவில் பகுதியில் மசூதி கட்டுவது பற்றி நாங்கள் முடிவு செய்கிறோம் என்று பேசினார்.

அயோத்தி விவகாரத் திற்குத் தீர்வு காண்பதற்கு அகாடா பரிசத் மற்றும் மசூதி வழக்கு தொடுத்த ஹுசைன் அன்சாரி ஒருவ ரும் இணைந்து ராமர் மந்திர் மற்றும் மசூதி கட்ட நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தனர். இதற்கு விஷ்வ இந்து பரிசத் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் விவாதத்திற்குரிய பேச்சைப் பேசியிருக்கிறார். மோடிக்குப் பதிலடியா?

கடந்த 17-ஆம் தேதி டில்லியில் கிறிஸ்தவ விழா ஒன்றில் பேசிய மோடி கூறியபோது அனைத்து மத உணர்வுகளையும் மதித்து நடக்க வேண்டும், மத நல்லிணக்கம் இந்தி யர்களில் டி.என்.ஏவில் உள்ளது என்று கூறியிருந் தார். அதற்கு எதிர்க் குர லாகத் தான் பிஜேபி மக் களவை உறுப்பினர் (ஆதித்யனாத்) இப்படிப் பேசி இருக்கிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/96963.html#ixzz3SxDMWSyz

தமிழ் ஓவியா said...

அன்னைதெரசாமீது அவதூறு : கலைஞர் கருத்து


கேள்வி:- அன்னை தெரசா வின் சேவையைக் கொச்சைப் படுத்தும் வகையில் ஆர். எஸ்.எஸ். தலைவர் கருத்து தெரிவித்தது பற்றி?

கலைஞர் :- தேவையில் லாத கருத்து அது. பேசக் கூடாத கருத்து அது. ராஜஸ் தான் மாநிலத்தில் ஒரு கூட் டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு. மோகன் பகவத், அன்னை தெரசா ஆற்றிய சேவைகள் சிறந்தவையாக இருக்கலாம்; ஆனால், அந்தச் சேவையாருக்கு வழங்கப்படுகிறதோ, அந்த நபரை கிறித்தவ மதத்திற்கு மாற்றுவதுதான் அதன் ஒரே நோக்கமாக இருந்தது என்று குறிப் பிட்டிருக்கிறார். அன்னைதெரசா, கொல்கத்தா நகரில் ஏழையெளியவர்களுக்காக அய்ம்பதாண்டு களுக்கும் மேலாக பணியாற்றியவர். 1979ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசே வழங்கப்பட்டது. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. அதிலும் மறைந்து விட்ட ஒரு மாபெரும் மாதரசியைப்பற்றி இப்படிப் பட்ட அநாகரிகமான வார்த்தைகளை ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறி, வீண் பிரச்சினை ஒன்றைப் பா.ஜ.க. அரசுக்கு ஏற்படுத்தி விட்டார் என்றுதான் கூற வேண்டும். யாகாவாராயினும் நாகாக்க என்பதை இவர்கள் உணராமல் இருக் கிறார்களே என்பதுதான் வேதனை!

Read more: http://viduthalai.in/e-paper/96961.html#ixzz3SxDVIRK7

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

இயற்கை சீற்றங்கள்

கேள்வி: திடீரென்று ஏற்படும் நில நடுக்கம் பெரு வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஜோதிட சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டவையா? அல்லது அப்பாற்பட்டவையா?

பதில்: இது பிரசத் ஜாதக முறைப்படி சொல்லப்படும். இதற்கு இயற்கை உற்பவங்கள் என்று பெயர் (கல்கி 15.2.2015 பக்கம்.15) ஏதாவது புரிகிறதா? இந்த வழுக்கலுக்குப் பெயர்தான் ஆன்மிகம்!

Read more: http://viduthalai.in/e-paper/96962.html#ixzz3SxDhum3W

தமிழ் ஓவியா said...

பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் தினமலர் ஆசிரியர் புகழாரம்

அந்தக் காலத்தில் உள்ள எழுத்துக்கள் ஈய எழுத்துக்கள், அந்த ஈய எழுத்துகளுக்குப் பதிலாக பெரியார் நூற்றாண்டு விழாவில்தான் பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்களை அறிவித்தனர். அந்த சீர்திருத்த எழுத்துக்கள் வராவிட்டால், இந்த மாதிரி 1,200 பக் கங்களை கம்போஸ் செய்வது கடினமாக இருக்கும்.

- தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி
சென்னை நூல் வெளியீட்டு விழாவில் (தினமலர் 27.2.2015)

Read more: http://viduthalai.in/e-paper/96962.html#ixzz3SxDnvGpT

தமிழ் ஓவியா said...

இன்றைய நம் கேள்வி???

மத்திய ரயில்வே நிதி நிலை அறிக்கைபற்றி செய்தி வெளியிடும் ஏடுகள் கட்டண உயர்வு இல்லை என்பதையே பெரிதாக செய்திகளை வெளியிடு கின்றனவே - பெட்ரோல், டீசல் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில் கட்டணங்கள் ஏன் குறைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பாதது ஏன்?

Read more: http://viduthalai.in/e-paper/96962.html#ixzz3SxDuzyRg

தமிழ் ஓவியா said...

பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் தொடரும் மதவெறிப் பேச்சு!
மெக்காவில் ராமர்கோவிலை கட்டி விட்டு அயோத்தியாவில் மசூதி கட்டட்டும்!


சாஜஹான்பூர்(உபி) பிப் 27_ மெக்காவில் கோவில் கட்ட விடுவார்களா? மதீ னாவில் கோவில் கட்ட முடியுமா வாடிகன் சர்ச் சின் பாதிபகுதியில் கோவில் கட்ட விட்டால் அங்கு எல்லாம் கோவிலைக் கட்டிவிட்டு பிறகு ராமர் கோவில் பகுதியில் மசூதி கட்டுவது பற்றி கூறினால் நாங்கள் அதை விவாதத் திற்கு எடுத்துக்கொள் வோம் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாமியார் ஆதித்யனாத் யோகி மீண்டும் மதவெறிப் பேச்சை வெளிப்படுத்தியுள் ளார்.

இந்து நாட்டில் வேறு கோவில்களா?

விவாதத்திற்குரிய பாபர் மசூதி பிரச்சி னைக்கு தீர்வு காண பாபர் மசூதி மற்றும் ராம்மந்திர் கட்டலாம் என்ற தீர்மா னத்தை குறிப்பிட்டு பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாமியார் ஆதித்யனாத் கூறியதாவது; இது இந்து நாடு இந்து நாட்டில் வேறு மதக் கோவில்கள் ஏன் இருக்க வேண்டும். நாம் அடிமை யாக இருக்கும் போது அந்த அடிமைத்தனத்தைப் பயன்படுத்தி மசூதி, தேவாலயங்கள் கட்டப் பட்டுவிட்டன. இன்று இருக்கும் மசூதிகள் எல் லாம் ஒரு காலத்தில் இந்துக்கோவிலாக இருந்த வைகள். ராமர் கோவில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டியுள்ளார்கள். இடிந்து போன பழமை யான ஒரு கட்டடத்தை ராமர் கோவில் கட்டுவ தற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு தொழுகை நடத்தி அதை மசூதியாக மாற்ற முயற்சித்தார்கள். ஆனால் அதற்கான எதிர்நடவடிக் கையில் கரசேவகர்கள் வெற்றிகண்டனர்.

அயோத்தியில் ராமர் கோவில் விவகாரத்தில் தீர்வாக மீண்டும் அங்கு மசூதியும் கோவிலும் கட்ட வேண்டும் என்று கூறுகி றார்கள். இது மடத்தன மான விவகாரம்; அங்கு இஸ்லாமியர்களுக்கான உரிமை ராமர் கோவில் கட்டுமிடத்தில் எங்கிருந்து வந்தது?

அயோத்தி சனாதன தர்ம பூமி, இது புனித பூமி ராமர் பிறந்த பூமி, இங்கு மசூதி இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே பாபர் மசூதி இடிக்கப்பட் டது. தற்போது மீண்டும் அங்கு மசூதி கட்டுங்கள் என்று கூறுகிறார்கள். நான் கூறுகிறேன் முதலில் மக்காவில் கோவில் கட்ட இடம் தாருங்கள், மதீனா வில் கோவில் கட்டுங்கள், வாடிகன் சர்ச்சில் பாதி இடத்தில் கோவில் கட்ட அனுமதி தாருங்கள் அதன் பிறகு ராமர் கோவில் பகுதியில் மசூதி கட்டுவது பற்றி நாங்கள் முடிவு செய்கிறோம் என்று பேசினார்.

அயோத்தி விவகாரத் திற்குத் தீர்வு காண்பதற்கு அகாடா பரிசத் மற்றும் மசூதி வழக்கு தொடுத்த ஹுசைன் அன்சாரி ஒருவ ரும் இணைந்து ராமர் மந்திர் மற்றும் மசூதி கட்ட நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தனர். இதற்கு விஷ்வ இந்து பரிசத் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் விவாதத்திற்குரிய பேச்சைப் பேசியிருக்கிறார். மோடிக்குப் பதிலடியா?

கடந்த 17-ஆம் தேதி டில்லியில் கிறிஸ்தவ விழா ஒன்றில் பேசிய மோடி கூறியபோது அனைத்து மத உணர்வுகளையும் மதித்து நடக்க வேண்டும், மத நல்லிணக்கம் இந்தி யர்களில் டி.என்.ஏவில் உள்ளது என்று கூறியிருந் தார். அதற்கு எதிர்க் குர லாகத் தான் பிஜேபி மக் களவை உறுப்பினர் (ஆதித்யனாத்) இப்படிப் பேசி இருக்கிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/96963.html#ixzz3SxE3SLIt

தமிழ் ஓவியா said...

பக்குவப்படுத்த வேண்டும்

மக்கள் இயற்கையிலேயே மூட நம்பிக்கை, காட்டுமிராண்டித்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஓரளவுக்காவது மாற்றிப் பகுத்தறிவு, சமதர்மம் இவைகளுக்குப் பக்குவப்படுத்தவேண்டும்.
(விடுதலை, 16.1.1973)

Read more: http://viduthalai.in/e-paper/96967.html#ixzz3SxEJRmf7

தமிழ் ஓவியா said...

எந்த வகையிலும் வரவேற்க முடியாத ரயில்வே பட்ஜெட் தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து

சென்னை, பிப்.27_ எந்த வகையிலும் வரவேற்க முடியாததாக ரயில்வே பட்ஜெட் உள்ளது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே பட் ஜெட் குறித்து, தி.மு.க. தலைவர் கலைஞர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா முழுவதிலும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட பயணிகள் கட்டண குறைப்பு இல்லை என்று தெரிந்து விட் டது. கடந்தாண்டு பா.ஜ.க. அரசின் ரயில்வே பட் ஜெட் நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவால் தாக்கல் செய்யப் படுவதற்கு சில நாள்களுக்கு முன்பாகவே 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கட்டண உயர்வினை; கடந்த கால அரசின் முடிவு அது என்று கூறி அறிவித் தார்கள். அதற்குப் பிறகு டீசல் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில், பயணிகள் கட்டணமும், சரக்கு கட்டணமும் இந்த ஆண்டு மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவால் குறைத்து அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்பட்டும் குறைக்கப்பட வில்லை.

கடந்த 8.2.2015 அன்று நான் வெளியிட்ட அறிக்கையிலேகூட, தமிழகத்திற்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 24 ரயில்வே திட்டங்களும் நிறைவேற போதுமான நிதியினை வருகின்ற ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால் இந்தப் பட் ஜெட்டிலும் தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்திய ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே இந்த முறை தான் முதல் தடவையாக புதிய ரயில் களோ, கூடுதல் ரயில்களோ அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட ஈரோடு_பழனி ரயில் திட்டம் போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கி, இந்த ஆண்டு நிறைவேற்ற வேண்டும் என்றும் நான் விடுத்த அறிக்கையிலே கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், மத்திய ரயில்வே அமைச்சர் மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற் பட்டிருப்பதால் புதிய ரயில்களை அறிவிக்க முடியாத சூழ்நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்று அறிவித்திருப்பதால், பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைவார்கள். புதிய திட்டங்களை அறி விக்காததோடு பல திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளன. எனவே, எந்த வகையிலும் வரவேற்க முடியாத பட்ஜெட்டாகவே மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/96927.html#ixzz3SxGEgVdB

தமிழ் ஓவியா said...

யம திசை!

தென்திசையை யம (எமன்) திசை என்றும், வடதிசையை குபேர திசை என்றும் கூறுவது உண்டு. இது ஆரியர் வழக்கு. அவர்கள் வடக்கே வாழ்ந்தார்கள். ஆகவே, அதைக் குபேர திசை என்றார்கள். அவர்களை எதிர்த்த தமிழர் தெற்கே இருந்தார்கள். எனவே, தென் திசையை யம திசை என்றார்கள்! தென்திசையை அவாக் என்று ஆரியர் கூறினார்கள். வாக்கு என்றால் மொழி. அவாக் என்றால் மொழி அல்லாதது. அதாவது, அவர்களின் மொழி வழக்கில் இல்லாத திசை என்று பொருள். ஆனால், தமிழரோ தென் திசையைப் போற்றினார்கள் தென் என்றால், இனிமை என்று பொருள் கொண்டார்கள். தெற்கில் இருந்து வீசும் காற்றை தென்றல் என்கிறார்கள். தங்கள் மொழியை தென்மொழி என்றார்கள். தங்கள் மன்னனை தென்னவன் என்று கூறி மகிழ்ந்தார்கள். அதே நேரம் வடதிசையைப் பழிக்கவில்லை! நன்றி: ராணி, 7.3.1982

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxGt4wEm

தமிழ் ஓவியா said...

கீதை பற்றி விவேகானந்தர்கீதை என்ற நூல் மகாபார தத்தின் ஒரு பகுதியாகும். கீதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபார தத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேதவியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?

இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா? மூன்றாவதாக கீதையில் கூறப்படுவதுபோல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா? நான்காவதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா? என்பன கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளி யிட்டிருந்தாலும் சரி - குருசேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண் டாரா என்ற பிரச்சினை எழுகிறது.

அர்ஜூனன் ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளனவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத்திரயுத்தம் செய்தனர் என்பதோ. கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. - விவேகானந்தர், கீதையைப்பற்றி கருத்துகள் என்ற நூலில்

ஆதாரம்: ஏ.எஸ்.கே.அய்யங்கார் எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூலில் - பக்கம் 11,.117)

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxGzeQRD

தமிழ் ஓவியா said...

மக்கள் ஒருமைப்பாடு பேசுவோரே! கடவுள் ஒருமைப்பாடு எங்கே!

அரியும் சிவனும் ஒண்ணு: இதை அறியாதவர் வாயில் மண்ணு! நெடுங்காலமாய் நம் நாட்டில் வழங்கி

வரும் பழமொழியிது. சிவனுக்கும் திருமாலுக் கும் உயர்வு - தாழ்வு-வேறுபாடு-முரண்பாடு கிடையவே கிடையா தென்று, மதக்குழப்பங்களுக்குள்ளான மக்கட்கு அறிவு கொளுத்தும் மொழியாக இப்படிச் செப்பினர் சூழ்ச்சி மதியினர் சிலர்.

ஆதிசங்கரர் மேற்கொண்ட சமய நடவடிக்கையான உண்மை இணைப்பில் சைவத்தையும், வைணவத்தையும் உள்ளடக்கவே செய்தார்.

அதன்பின் பல நூறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அறிவாசான் அய்யா அவர்கள் தெளிவாகக் கேட்டு வந்தார் மதத் தலைவர்கள் தங்கள் கடவுளர்களைப் பற்றி ஒருமைப்பாடான முடிவுக்கு முதலில் வரமுடியுமா? என்று,

அய்யா சொல் என்றைக்கும் பொய்யாதென்பதற்கு இதோ சான்று:

மொட்டைக் கோபுரம் என்று அழைக்கப்பட்டு வந்த சிறீரங்க பெருமாள் கோவிலின் தென்திசைக் கோபுரத்தை வளரச் செய்வதில் வெற்றி கண்ட அகோபில மடத்தின் 44ஆம் ஜீயர் சிறீ அழகிய சிங்கரிடம் கல்கி இதழ் சார்பில் கேட்கப்பட்ட 87ஆண்டு அகவையாகி விட்ட ஒளிவு மறைவில்லா கேள்வியொன்றுக்குச் சிங்கர் அளித்த விடை சமய மக்களுக்குச் சரியான அறைகூவல்!
கேள்வி: சிறீ சங்கராச்சார்யாள் இந்த கோபுரத்தில் மூன்றாம் கட்டத்துக்குப் பண உதவி செய்திருக்கிறார். பல சைவர்களும் பெருமாள் திருப்பணிகளுக்கு உதவுகிறார்கள். இதுமாதிரி வைஷ்ணவப் பெரியார்கள் சைவ தலப் பணி களுக்கு ஏன் உதவுக்கூடாது?

விடை: நான் சிவன் கோவில்களுக்குச் செய்ய மாட்டேன்... ஏன் என்று கேட்டா.... சிறீமத் நாராயணன் தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம்... பிரம்மாவை நாராயணன் தன் நாபியிலிருந்து படைத்தான். அந்த பிரும்மா சங்கரனைப் படைத்தான் என்று கதையிருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு நாராயணன் பாட்டன் ஆகிறார். தபஸ் பண்ணி பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தார்னும், அதே போல சிவன் எத்தனையோ யாகம் பண்ணி கடைசியிலே தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றார்னு சாஸ்திரம் இருக்கு, சிவங்கள்ளாம் புண்ணியம் பண்ணி, தபஸ் பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்தவர்கள். நாராயணன் எப்போதும் உள்ளவர். அவரை வழிபடற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். நாங்கள்ளாம் மோட்சத்துக்குப் போக டிக்கெட் வாங்கிண்டாச்சு. அதனாலே சிவன் கோவில் திருப்பணிக்குப் பணம் இருந்தாலும் தரமாட்டேன் (கல்கி 11-4-82) மேற்கண்ட விடை நமக்கு விளக்குவதென்ன?

1. சங்கரனுக்கு நாராயணன் பாட்டன். 2. சிவன் தவம் புரிந்து தெய்வம் ஆனவன். 3 வைணவன் சிவன் கோவிலுக்குச் சென்றால் புத்தி கெட்டுவிடும். 4 வைண வனிடம் பணம் இருந்தால் கூட, சிவன் கோவிலுக்குத் தரக்கூடாது!

ஆக, இன்றைக்கும் கூட அரியும் சிவனும் ஒன்றாகி விட்டார்களா?

குழப்பம் குறையவில்லை; நீடிக்கிறது. மக்கள் ஒருமைப்பாடு பேசவந்து விட்ட மதக்காவற் காரர்கள் முதலில் கடவுள் ஒருமைப்பாடு காணட்டும்.
- பகுத்தறிவு

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxH6qrLx

தமிழ் ஓவியா said...

அண்ணா அறைகிறார்!

குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடியாது என்று கூறுவதுண்டோ? குழந்தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போது தான் இடதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக்கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப் பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத்துகளை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர். நூல்: உவமை நயம்

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxHDNFOg

தமிழ் ஓவியா said...

கலைவாணர் போட்ட மந்திரம்

எங்கள் வீட்டில் வயதான பாட்டி இருந்தார்கள். அவர் காலில் ஒரு நாள் தேள் கொட்டி விட்டது. வீட்டில் தம் நண்பர் களுடன் பேசிக் கொண்டிருந்த போது அப்பாவிடம் இதைச் சொன்னோம்.

அவர் உடனே, இவ்வளவு தானே நானே குணப்படுத்தி விடுகிறேன். செம்பு நிறைய நீரும் ஒரு கொத்து வேப்பி லையும் கொண்டு வாருங்கள் என்றார்.

அவை கொண்டு வரப்பட்டன. வேப்பிலையை நீரில் தொட்டு கொட்டிய இடத்தில் பாட்டிக்கு வீச ஆரம்பித்தார். வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அப்பாவின் நண்பர்கள் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது வலி இறங்கி இருக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்று பாட்டியிடம் கேட்டார். பாட்டி, சற்றுத் தேவலை இன்னும் மேலிடத்தில்தான் வலிக்கிறது என்றார்.

உடனே மறுபடியும் ஒரு தடவை மந்திரம் முணு முணுத்து வேப்பிலை நீர் அடித்தார். பின்பு, இப்போது எப்படி இருக்கிறது. மேலிடத்திலும் வலி குறைந்து இருக்க வேண்டுமே என்று கேட்டார். பாட்டியார், அந்த இடத்திலும் வலி குறைந்து விட்டது என்றார்.

அப்படியானால் வலிசுத்தமாக இறங்கி விட்டது என்று அர்த்தம். இனி வலியே இருக்காது. எங்கே காலை மடக்கு பார்க்கலாம். பாட்டி காலை மடக்கினார். எழுந்து நில் பார்க்கலாம் பாட்டி எழுந்து நின்றார். நட பார்க்கலாம் பாட்டி நடந்து காட்டினார். இனி உன்னால் ஓடவும் கூட முடியும் அவ்வளவுதான் என்றார் அப்பா.

அப்பாவின் நண்பர்கள், வியப்பினால், தேள் கொட்டினால் விஷத்தை இறக்க மருந்து வைத்துக் கட்டாமல் இப்படி மந்திரம் போடுகின்றாயே. மந்திரத்தில் ஏதும் பயனில்லை என்று பிரச்சாரம் செய்கிறாய். இந்த மந்திரத்தை யாரிடம் கற்றாய்? இத்தனை நாள் எங்களுக்கு தெரியாமல் மறைத்து விட்டாயே. அது என்ன என்று எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டனர். அது ஒன்றும் இல்லை. அது பரம ரகசியம். இன்னொரு நாளைக்கு இன்னொரு இடத்தில் சொல்லுகிறேன். இப்போது இங்கு வேண்டாம்

நண்பர்கள் விடாப்பிடியாக, இல்லை இப்போதே எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க, அப்பா சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு, பாட்டியார் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அது ஒன்றும் கஷ்டமான மந்திரம் இல்லை. உன்னை கடிச்சா எனக்கென்ன, உன்னை கடிச்சா எனக்கென்ன என்று அவசரமாகச் சொன்னேன். இவ்வளவுதான். மனோதத்துவ வைத்தியம் இது - அவ்வளவுதான். நீங்களும் கூட இதைச் செய்யலாம் என்றாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டு நண்பர்கள் அப்படியா சங்கதி என்று கூறிக் கொண்டு அப்பாவின் கருத்தியல்புகளை மேலும் ஒரு படி புரிந்து கொண்டார்கள்.

கேட்டவர்: உடுமலை நடராசன்

கூறியவர்: மறைந்த நகைச்சுவை நடிகர் கலை வாணர் அவர்களின் புதல்வர் திரு.நல்லதம்பி
இடம்: பயணிகள் விடுதி, அமராவதிநகர், உடு மலை வட்டம். நாள்: 11.4.1981

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxHNJEEu

தமிழ் ஓவியா said...

74 ஆண்டுகளுக்குமுன் அண்ணா தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட மூதாட்டியின் மலரும் நினைவுகள்

திருச்சி அருகில் திருவானைக் கோவில் பகுதியில் ஓட்டுவீட்டில் வசிப்பவர் சம்பூரணம் 92 வயதுள்ள மூதாட்டி இவர்.
அண்மைக்காலத்தில் முக்கியப்பிர முகர்களின் கவனத்துக்குள்ளானார். முதுமைக்காலத்தில் தற்போது அதிகஅளவில் மகிழ்வடைந்துள்ளார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அம்மூதாட்டியைச் சந்தித்து அவர் அந்தக் காலத்தில் செய்துகொண்ட சுயமரியாதைத் திருமணம் குறித்து பேசி உள்ளார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக அப்படி ஒரு சீர்திருத்த திருமணம் செய்துகொள்வது என்பது மிகப்பெரிய புரட்சியானதாகும்.

1941ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திமுக நிறுவனர் அறிஞர் அண்ணா அவர்கள் முதல்முறையாக நடத்திவைத்த சுயமரியாதைத் திருமணமாக சம்பூரணம்- _ -இராம. சின்னய்யா ஆகியோரின் திருமணம் அமைந்திருந்தது. புரட்டாசி மாதத்தில் 50 பேர் கலந்துகொண்ட மணவிழாவாக நடைபெற்றது.

இதுகுறித்து சம்பூரணம் கூறுகையில், அப்போது எனக்கு 19 வயது. என் கணவருக்கு 34 வயது என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

எப்போதும் மறக்க முடியாத விழா அது. தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதன், வழக்குரைஞர் டி.பி.வேதாசலம் ஆகி யோரும் பங்கேற்றனர் என்று பசுமை யான நினைவுகளை எடுத்துக்கூறினார்.

அறிஞர் அண்ணாவுக்கு முக்கிய மான நிகழ்வாக அமைந்நதது. அதுதான் அவர் நடத்திவைத்த முதல் சுயமரி யாதைத் திருமணமாகும். இரண்டு ரோஜா மாலைகள் மற்றும் 50 ரோஜா மலர்கள் விழாவில் இடம் பெற்றன.

அய்ந்துபேருடன் பிறந்தவர் சம்பூர ணம். சம்பூரணத்தின் தமக்கையார் அய்ந்து படி அரிசி போட்டு திருமண விருந்து படைத்தார். அவர் சகோதரர் சைமன் இராமசாமி கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலும், திமுக பொதுக்கூட்டங்களி லும் பாடியவராவார். அவர்தான் சம் பூரணம் திருமணம் சுயமரியாதைத் திரு மணமாக நடைபெற்றதற்குப் பெரிதும் காரணமானவராக இருந்துள்ளார்.

திருச்சியில் பல ஆண்டுகளாக ஆசிரியையாகப் பணியாற்றியவர் சம்பூர்ணம். அவருடைய சகோதரி பொற்செல்வி இளமுருகு கலைஞர் மற்றும் அவர் குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.

ஆனாலும், சம்பூரணம் கலைஞரை பொதுக்கூட்டங்களில் மட்டுமே பார்த்து, அவர் பேச்சு, உச்சரிப்புகளால் பெரிதும் கவரப்பட்டவர். சம்பூரணத் தின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன் பாக சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். அவர் மகன்கள் திருச்சி மற்றும் மதுரையில் உள்ளனர். அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்கின்றனர்.

அண்மையில் சிறீரங்கம் இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருகைதந்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சம்பூரணம் அம்மையாரை நேரில் சந்தித்து பயனாடை அணிவித்து, நலம் விசாரித்துள்ளார்.

அவரிடமும் கலைஞர் மற்றும் தயாளு அம்மாள் குறித்தும் சம்பூரணம் நலன் விசாரித்ததுடன், கலைஞர் நீண்ட காலத்துக்கு நல்ல உடல் நலனுடன் வாழ வேண்டும் என்கிற விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page8/96997.html#ixzz3T2NippVB

தமிழ் ஓவியா said...

தெரியுமா?

சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத்தான் எழுப்பும்.

ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.

ஒட்டகப் பறவை என்று நெருப்புக் கோழி அழைக்கப்படுகிறது. இது ஒட்டகத்தைப் போல பல நாள்கள் தண்ணீர் குடிக்காமலேயே வாழக் கூடியது என்பதால் அதற்கு இந்தப் பெயர்.

மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தித் தள்ள முடியும்.

காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும்.

ஒரு சாதாரண பசு அதன் வாழ்நாளில் 2 லட்சம் குவளை பால் கொடுக்கும்.


Read more: http://viduthalai.in/page8/96998.html#ixzz3T2NypqGR

தமிழ் ஓவியா said...

மதம் படுத்தும் பாடு

அமெரிக்க நாத்திக எழுத்தாளர் பங்களாதேஷில் கொல்லப்பட்ட கொடுமை!

பங்களாதேஷைச் சேர்ந்தவரும் அமெரிக்காவில் வசித்துவருபவருமான அவிஜித் ராய் என்பவர் நாத்திக, மதசார்பற்ற கருத்துகளை தம்முடைய இணையப் பக்கங்களில் (Blogger) பதிவிட்டு வந்துள்ளார்.

இசுலாமிய அடிப்படை மத வாதிகளின் தொடர்ச்சியான அச்சுறுத் தல்கள் இருந்தபோதிலும், அஞ்சா நெஞ்சினராக மதசார்பற்ற நிலையில் தம்முடைய கருத்தைப் பதிவு செய்து வந்துள்ளார்.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றுவந்த புத்தகக் கண்காட்சிக்கு தம் மனைவி ரபீதா அகமத் போன்னாவுடன் சென்று வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, (26.2.2015) அடையாளம் தெரியாத இரண்டு காலிகளால் அவிஜித் ராய் மற்றும அவர் மனைவி ரபீதா ஆகிய இருவரும் பெரிய கத்திகளால் சரமாரியாகத் தாக்கப்பட்டனர்.

இச்சம்பவம்குறித்து உள்ளூர் காவல் துறைத் தலைமைப் பொறுப்பில் உள்ள சிராஜூல் இஸ்லாம் கூறும்போது, அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே உயிரிழந்துவிட்டார். இத்தாக்குதலில் அவர் மனைவியின் விரல் துண்டிக்கப்பட்டு, மிகவும் மோச மாக காயமடைந்துள்ளார் என்றார்.

ராய் பங்களாதேசத்தில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் ஆவார். அவர் மதசார்பற்ற கருத்து களைப் பதிவு செய்யும் வகையில் முக்தோ-_மோனா என்கிற பிளாக் பக்கத்தை உருவாக்கி தொடர்ச்சியாக மதசார்பற்ற கருத்துகளை எழுதி வந் துள்ளார். அவர் எழுதியுள்ள புகழ் பெற்ற நூல் பிஸ்வாசெர் வைரஸ் (நம் பிக்கை எனும் வைரஸ் கிருமி) உள் ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

தெற்காசிய நாடுகளில் மதசார்பற்ற எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர் கள்மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்தவண்ணம் உள்ளன.
இதேபோன்று 2013 ஆம் ஆண்டில் பங்களாதேசத்தில் நாத்திக கருத்தை எழுதிவந்த இணையப் பக்க எழுத் தாளர் அகமத் ரஜீப் ஹைடர் என்பவர் மோசமாகத் தாக்கப்பட்டு கொல்லப் பட்டார்.

அப்போது, மத அடிப்படை வாதிகளைக் கண்டித்து நாடுமுழுவதும் பெரும் போராட்டமாக வெடித்தது.

பங்களாதேசத்தில் இசுலாமிய அடிப்படைவாதிகளால், இசுலாம் மதத்தின்மீது விமர்சனத்தை முன் வைக்கும் எழுத்தாளர்களை வதம் செய்வது என்கிற பெயரால் கொன்று வருகிறார்கள்.

ராய் மற்றும் அவர் மனைவிமீது தாக்குதல் நடத்தியவர்களை இன்னமும் பங்களாதேசக் காவல்துறையினர் கைது செய்யவில்லை. தாக்குதலுக்குப் பயன் படுத்திய பெரிய கத்தியைமட்டும் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு சிந்தனை


புல், பூண்டு - ஓரறிவு; நத்தை, சங்கு - ஈரறிவு; எறும்பு, கரையான் - மூவறிவு; ஈ, வண்டு - நான்கறிவு; விலங்குகள், பறவைகள் - அய்ந்தறிவு; மனிதன் மட்டுமே! - ஆறறிவு.

ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? எப்பொழுது? யாரால்? - இந்த ஆறு வினாக்களும் ஆறறிவு படைத்த மனிதனின் அடையாளச் சின்னங்களாகும்.

அறிதல், உணர்தல், விரும்பிச் செய்தல் ஆகிய மூன்றும் அறிவின் கூறுபாடுகள். அறிவார்ந்த சிந்தனை, அறிவார்ந்த சொல்; அறிவார்ந்த செயல் மூன்றையும் உள்ளடக்கியவனே மனிதன். எனவே தான் மனிதன் ஓர் அறிவு ஜீவி என்றார் கிரேக்க நாட்டுப் பேரறிஞர் அரிஸ்டாட்டில் சிந்தனையின் கூர்மையே பகுத்தறிவு பகுத்தறிவு சிந்தனை வீரத்தின் சிறப்பு அம்சமாகும்.

தகவல்: வை. மாறன், நன்னிலம்

Read more: http://viduthalai.in/page5/96990.html#ixzz3T2OwNWW9

தமிழ் ஓவியா said...

அண்ணா அறைகிறார்!

குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமே யன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடி யாது என்று கூறுவதுண்டோ?

குழந் தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போது தான் இடதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக் கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப் பரு வத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத் துகளை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண் டுள்ளனர். நூல்: உவமை நயம்

Read more: http://viduthalai.in/page3/96987.html#ixzz3T2PpGlQk

தமிழ் ஓவியா said...

கண்டுபிடிப்பு

நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார். கோபர்நிகஸ் கோள்களின் இயக்கத்தைக் கண்டுபிடித்தார். டார்வின் பரிணாம வளர்ச்சியைக் கண்டு பிடித்தார். ஆல்வா எடிசன் மின் விளக்கைக் கண்டுபிடித்தார். இவற்றால் மனித குலம் வளர்ச்சி பெற்றது.

மனிதன் கடவுளைக் கண்டு பிடித்தானே - அதனால் என்ன பலன் ஏற்பட்டது? மடையனா வதற்கும், சோம்பேறியாவதற்கும் ஏற்பட்டதல் லாமல் வேறு என்னவாம்?

துத்தநாகம்

நாக்குக்கு ருசி தெரிய வில்லை என்பார்கள். என்ன காரணம் தெரியுமா? உடலில் துத்தநாகம் என்ற உப்புச் சத்துக் குறைவதால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. காய்ச்சலின் போது இந்தச் சத்து இழக்கப்படுவதால் வாய் கசப்பாக இருப்பதையும் உணர்கிறோம்.

Read more: http://viduthalai.in/page2/96984.html#ixzz3T2QQ7400

தமிழ் ஓவியா said...

போகாத ஊருக்கு வழிகாட்டலா?
இல்லாத சரஸ்வதி நதிக்கு பிஜேபி அரசின் பணம் விரயம்

சண்டிகர், பிப்.28_ சரஸ்வதி ஆறு இருப்ப தாகக் கற்பனையில் கூறப் பட்டு வரும் நிலையில், அந்த கற்பனையான சரசுவதி நதியை பூமிக்கு வெளியே கொண்டு வருவ தற்கான முயற்சியில் மீண்டும் இரட்டிப்பான முயற்சியில் அரியானா மாநிலத்தின் வனத்துறை இறங்கி உள்ளதாம்.

யமுனா நகர் மாவட் டத்தில் சரஸ்வதி நதி உருவான இடம் எனக் கூறப்படும் இடமாகிய அதி பத்ரி பகுதியில் சரசுவதி உத்கம் ஸ்தல் எனும் பகுதியில் பூமிக்கு வெளியே சரசுவதி நதியை கொண்டு வரப் போகிறார்களாம்.
வனத்துறை அலுவலர் களைக் கொண்ட குழுவி னர் அதற்கான பணிகளை மேற்கொள்ள சரசுவதி உத்கம் ஸ்தல் பகுதிக்குப் பயணமாகி உள்ளனராம்.

அப்பகுதியில் தண்ணீர் போக்குவரத்துள்ள கால்வாய்ப்பகுதிகளைத் தேடிக் கண்டுபிடித்து அல்லது உருவாக்கு வதன்மூலம் கற்பனையில் மட்டுமே கூறப்பட்டுவரும் சரசுவதி நதியின் தடத்தைக் கண்டறிந்து வெளியே கொண்டுவரப்பட உள்ள தாம். இந்துமதப் புராணங் களில் குறிப்பிடக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து, அதன்மூலமாக சரசுவதி யின் பாதையை அறிய முடியுமா? என்றும் ஆய்வு மேற்கொள்வார்களாம். இந்துப் புராணங்களில் சரசுவதி நதி அலகாபாத் வரை பாய்ந்துசென்று அதன் பின்னர், கங்கை மற்றும் யமுனை நதிகளு டன் திரிவேணி எனும் பகுதியில் இணைகிறதாம்.

சரஸ்வதி உத்கம் ஸ்தல் என்பது ஷிவாலிக் மலை யடிவாரத்தில் அதி பத்ரி பகுதியில் உருவாவதாக நம்பப்படுகிறதாம். இது தான் சரஸ்வதி நதியின் மூலமாம். இந்தத் தகவ லின்படி, அந்தப் பகுதி களில் அரியானா சுற்று லாத்துறையும் ஷிவாலிக் நதியின் பாதையை அறிய முற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

அரியானா மாநில வனத்துறை அலுவலகத் தின் சார்பில் ரந்தீர் குமார் என்பவர் கூறும்போது, இந்தப் பகுதியில் உள்ள நீரோட்டத்தைக் கொண்டு தண்ணீரை எடுத்து வாய்க் கால் அமைத்து, மேலும் இரண்டு, மூன்று குழாய்க் கிணறுகள் அமைத்தும் அதன்மூலம் பெறப்படும் தண்ணீரை அருகில் உள்ள பழமையான ஆற்றில் கலந்து விடப் போகி றோம் என்று கூறினார்.

இந்து மதக் கற்பனை யில் உள்ளபடி, சரஸ்வதி ஆறு என்பது பூமிக்கடி யில் இன்னமும் உள்ள நீரோட்டமாம். பூமிக்கடி யில் உள்ள நீரோட்டம் இருப்பதுகுறித்து செயற் கைக்கோள் படங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள் ளது என்றும். சரஸ்வதியின் ஆற்றோட்டப் பாதை யாகக் கருதப்படும் பகுதி யில் நீரோட்டம் உள்ள தாகக் கூறப்படுகிறது.

பூமிக்கடியில் உள்ள சரசுவதி ஆற்றை பூமிக்கு வெளியே கொண்டு வருவ தற்கு பாஜக ஆளும் அரியானா அரசு டேராடூ னில் உள்ள ஆய்வகத்தின் உதவியை நாடி உள்ளது. புதிதாக தண்ணீர் கால் வாயை உருவாக்குவதன் மூலம், அந்தப் பகுதியில் மத ரீதியிலான சுற்று லாவை அதிகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது என்று வனத்துறை யின் சார்பில் கூறப்பட் டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/97010.html#ixzz3T2R1t8fe

தமிழ் ஓவியா said...

முட்ட விடும் வேலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை நசுக்க பழங்குடியினர் ஆதரவைத் திரட்டப் போகிறார்களாம். வேறு ஒன்றுமில்லை; நக்சலைட்டுகளையும், மலைவாழ் மக்களையும் மோதவிடும் நரித் தந்திரம் இது. குஜராத் கலவரத்தில் முதல் அமைச்சர் மோடி இந்த வேலையைத்தானே செய்தார்.

தினமணியின் பத்திரிகா தர்மம்!

பன்றிக் காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கைகள்: திமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு என்று தினமணி வைத்திய நாதய்யர் தலைப்புப் போடுகிறார். சென்னை மாநகராட்சி மன்றத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை எடுத்ததற்காக தி.மு.க. உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்று மக்களை நம்பச் செய்யும் தகிடு தத்தம் இது. திமுக உறுப்பினர் வெளிநடப்புச் செய்தது வேறு காரணத்திற்காக என்பதுதான் உண்மை. திமுக என்றால் வைத்திகளுக்கு அப்படி ஒரு வெறுப்போ!

திடீர் சவார்க்கர் சிலை அகற்றம்

குமரி மாவட்டம் ஈத்தா மொழியில் நேற்று இந்து மகா சபை சார்பில் இந்து மகாசபை தலைவர் தா. பால சுப்பிரமணியம் தனது வீட்டில் சவார்க்கர் சிலை வைத்து கட்சி நிருவாகிகளுடன் மாலை அணிவித்துள்ளார்.

இதற்கு அரசு அனுமதிக்கவில்லை. வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று அந்த சிலையை அகற்றினர். மேலும், இந்து மகா சபை நிர்வாகி தா. பாலசுப்பிரமணியம்மீது பல பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நல்ல சேதி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனத்துக்கான 300 ரூபாய் முன் பதிவு டிக்கெட் விற்பனையில் பெரும் பின்னடைவு!

Read more: http://viduthalai.in/e-paper/97013.html#ixzz3T2RAgvO5

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பாராட்டு

செய்தி: பயங்கரவாதச் செயல்களில் படித்தவர் கள் ஈடுபடுவதற்கு அற நெறி இல்லாததே காரணம்.
- ராஜ்நாத்சிங்

மத்திய உள்துறை அமைச்சர் சிந்தனை: 1992இல் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கியவர்கள் (அத் வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உட் பட) படித்திருந்தும் அறநெறி இல்லாதவர்கள் என்பதை ஒப்புக் கொண் டதற்குப் பாராட்டு!

மருந்து

பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக அர்சீனியம் ஆல்பம் என்னும் ஹோமியோபதி மருந் தைப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/97015.html#ixzz3T2RJx732

தமிழ் ஓவியா said...

ஒழுக்க நெறி!

பள்ளிக்கூட அறைகளில் கேமரா, ரயில் பெட்டிகளில் கேமரா, கோயில் உண்டியல் பணத்தை எண்ணும் இடத்தில் கேமரா - இது தான் இந்த நாட்டில் ஆன்மிகம் வளர்த்த ஒழுக்க நெறி!

Read more: http://viduthalai.in/e-paper/97016.html#ixzz3T2RRCCKX

தமிழ் ஓவியா said...

முயற்சிக்க வேண்டும்


தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையா வண்ணம் நடந்துகொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/97005.html#ixzz3T2RbBn4z

தமிழ் ஓவியா said...

கொழும்பு பர்ஷியன் ஹோட்டல் விருந்தில் சொற்பொழிவு

இன்று உலகில் பெரும் பாகத்தில் நடக்கும் தேச பக்திக் கிளர்ச்சிக்கும், ஜாதியக் கிளர்ச்சிக்கும், அரசியல் கிளர்ச்சிக்கும் தனது அபிப்பிராயம் மாறுபட்டிருப்பதாகவும் இவ்விதக் கிளர்ச்சிகள் கஷ்டப்படும் மக்களுக்கு எவ்வித மாறுதலையோ பயனையோ கொடுக்காதென்றும் ஏழை மக்களின் கஷ்டங்களைச் சொல்லிக் கொண்டு அதன் பேரால் சோம்பேறி வாழ்க்கைப் பிரியர்களாலும்,

பேராசைக் காரர்களாலும் நடத்தப்படும் போட்டி வியாபாரங்களே இன்று தேசியமாயும், ஜாதியுமாயும் மதாபிமானமாயும் இருக்கின்றதே தவிர, அவற்றுள் நாணயமோ, உண்மையோ சிறிதும் தன்னால் காணக்கூடவில்லை யென்றும், உலகில்,

ஒரு பெரிய மாறுதல், அதாவது வெடி மருந்து சாலையில் தீப் பிடித்து வெடித்துக் கிளம்புவது போல் சமீபத்தில் ஏற்படப் போகிறதென்றும் வாழ இஷ்டமிருக்கின்றவர்கள் அதற்கு தகுந்த படி தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும்,

இப்போதைய பெரும்பாக கிளர்ச்சிகள் உலக உண்மைக் கஷ்டத்தைக் கஷ்டப்படும் மக்கள் அறிய முடியாமல் இருப்பதற்குச் செய்யும் தந்திரமென்றும் பேசினார். குடிஅரசு - சொற்பொழிவு - 13.11.1932

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3T2SIyuFu

தமிழ் ஓவியா said...

பெரியார் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் சென்று மீண்டபின் அளித்த முக்கிய அறிக்கை

தோழர்களே, எனது மேல் நாட்டு சுற்றுப் பிரயாணம் ஒருவாறு வெற்றியுடன் முடிந்து 11. 11. 32 தேதி காலை ஈரோடு வந்து சேர்ந்திருக்கிறேன். நீண்ட பிரயாணத்தினால் நான் சிறிது களைப்புற்றிருந்தாலும் சமீபத்தில் களைப்பு நீங்கி இயக்க வேலையை மும்முரமாய் தொடங்க உறுதி கொண் டிருக்கிறேன்.

என்னுடன் கூட வந்த தோழர் ராமநாதன் அவர்கள் என்னை மார்செயில்ஸில் இந்தியாவுக்குக் கப்பலேற்றி விட்டு ஜினிவாவுக்குச் சென்று இருக்கிறார். அங்கு சில விஷயம் அறிந்து 2 - அல்லது 3 - மாதத்தில் இந்தியா திரும்புவதாக சொல்லிப் போயிருக்கிறார்.

அதற்குள் கூடிய சீக்கிரம் நமது இயக்கத் தோழர்கள் பலரைக் கூட்டி கலந்து பேசி ஒரு வேலை திட்டத்துடன் தீவிர பிரசாரம் நடத்த உத்தேசித்திருக்கிறேன்.

சீக்கிரத்தில் எனது சுற்றுப் பிரயாணத்தின் விருத்தாந்தங் களையும், காட்சிகளையும், அதனால் தான் கொண்ட கருத்துக் களையும் அதை எந்த அளவுக்கு நாம் பின்பற்ற வேண்டும் என்பதையும் விளக்கி சீக்கிரம் பத்திரிகையில் வெளியிடவும் உத்தேசித்து இருக்கிறேன்.

நான் இங்கு இல்லாத போது இயக்கத்தைத் தொடர்ந்து முன்னிலும் பல மடங்கு அதிகமாக எழுத்தாலும் உபன்யாசங்களாலும் மகாநாடுகள் கூட்டியும் மக்களுக்கு உண்மை உணர்ச்சிக்களை ஊட்டி தீவிரமாய் வேலை செய்து வந்த தோழர்கள் யாவருக்கும் நான் என் மனப் பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

குடிஅரசு - குறிப்பு - 13.11.1932

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3T2SQb1dK

தமிழ் ஓவியா said...

தேசியத்தின் விளைவு

1914ஆம் வருஷம் முதல் 1918 வருஷம் வரை நடந்த உலக மகாயுத்தமானது அதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தேச மக்களையும் தேசியம், தேசாபிமானம் என்பவற்றின் பேரால் செய்யப்பட்ட பிரசாரத்தின் பயனாகவே அந்த யுத்தத்தின் சம்பந்தப்படும் படி செய்தது.

இந்த உலக மகாயுத் தத்தின் பயனாய் கொல்லப்பட்டவர்கள் 97,43,914 கிட்டத் தட்ட ஒரு கோடி பேர் காயம் பட்டவர்கள் 20,92,7,459 இரண்டு கோடிப் பெயர்களுக்கு மேலானவர்கள் காணாமல் போன வர்கள் 30,00,000. இந்த மகாயுத்தத்திற்கு செலவான தொகை 70,00,00,00,000 பவுன் (ஏழு ஆயிரம் கோடி பவுன்) அதாவது 10,00,00,00,00,000 ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும்.

இது நிற்க, இன்றைய தினம் உலக யுத்தத்தை எதிர்பார்த்து தேசாபிமானத்தின் காரணமாக என்று தேசத்தைக் காப்பாற்றுவதற்காக உலக அரசாங்கங்கள் மொத்தமும் செலவு செய்யும் தொகை சென்ற 1931ஆம் வருஷத்திற்கு மாத்திரம் 80,00,00,000 எண்பது கோடி பவுன் அதாவது 1080,00,00,000 ஆயிரத்து எண்பது கோடி ரூபாய் ஆகும்.

இதை தினக் கணக்காய் பிரித்தால் தினம் 1க்கு 20,00,000 பவுன் (இருபது லட்சம் பவுன்) அதாவது நாள் 1க்கு 270,00,000 இரண்டே முக்கால் கோடி ரூபாய் செலவு செய்யப் படுகின்றது.

பிரிட்டிஷ் அரசாங்கமானது தனது அரசாட்சி வரும் படியில் உள்ள ஒவ்வொரு பவுன் வரும் படியிலும் 13 ஷில்லிங் யுத்த தேசாமானத்திற்காக. தேசத்தைக் காப்பாற்ற தேசிய கடனுக்கும் சேனை தளவாடங்களுக்காக அதாவது,

யுத்த கடனுக்கு வட்டி 0 - 9 - 0 யுத்த வீரருக்கு பென்ஷன் தற்காலம் ராணுவத்திற்கும் 0 - 1 - 3
தரைகப்பல் தளவாடத்திற்கும் 0 - 2 - 9 ஆக : 0 - 13 - 0

மேற்படி பதின்மூன்று ஷில்லிங்போக பாக்கி இருக்கும்

ஷில்லிங்கில் கல்விக்கு 0 - 1 - 5
உத்தியோக பென்ஷன் 0 - 1 - 3
தல ஸ்தாபன உதவி 0 - 1 - 2
வேலை இல்லதவர்களுக்கு பிச்சை 0 - 1 - 2

வீட்டு வசதி கோர்ட்டு வசதிவகையறாவுக்கு 0 - 0 - 8
போலீஸ் 0 - 0 - 6
விவசாயம் சுகாதாரம் 0 - 0 - 2
சில்லறை ஆக 0 - 0 - 3 ஆக : 0 - 7 - 0

ஆக பிரஜைகளின் நன்மைக்கு என்று ஏழு ஷில்லிங்கும் செலவு செய்யப்படுகிறது.

அதாவது மேற்கண்ட யுத்த கடன் வட்டிக்காக என்று செலவு செய்யப்படும் 9 ஷில்லிங்கும் முதலாளிமார்களுக்கே போய்ச்சேரும் தேசாபிமானத்திற்காக ஏற்பட்ட காரியத்தின் பயனாய் இன்று முதலாளிமார்கள் தேச அரசிரை வரும் படியில் கிட்டத் தட்ட சரிபகுதியை உலக முள்ளளவும் அனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

எனவே, பல கோடிக்கணக்கான மக்களை பலி கொடுத்து காயப்படுத்தி காணாமல் போகச் செய்ததும் அல்லாமல், மக்களிடத்தில் வாட்டிப் பிழிந்து வசூல் செய்யும் வரியிலும் நூற்றுக்கு 65 பாகத்தை தேசத்தைக் காப்பாற்ற என்னும் பேரால் இராணுவத்திற்கும், தள வாடங்களுக்கும் செலவு செய்தும்,

இந்த தேசத்தில் இன்று பத்து லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமலும், ஜீவனத்துக்கு தங்களுக்கும் தங்கள் பெண்டு பிள்ளைகளுக்கும் அரைவயிற்றுக்கு போதுமான கஞ்சிக்கூட மார்க்கமில்லாமலும் தவித்து வருகிறார்கள்.

இது பாமர ஜனங்களுடைய - ஏழை ஜனங்களுடைய தேசாபிமான முட்டாள் தனமா? அல்லது பணக்காரனுடைய படித்த கூட்டத்தாருடைய தேசாபிமான பித்தலாட்டமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அடுத்த வாரம் தேசியக் கடன் என்பது என்ன? என்பதைப் பற்றி எழுதுகிறேன்.

குடிஅரசு - கட்டுரை - 11.12.1932

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3T2SYjvzi

தமிழ் ஓவியா said...

மத்திய அரசின் பொது பட்ஜெட்:

எதிர்பார்த்தவை தராமல் ஏழை, எளிய - நடுத்தர
மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது வேதனைக்குரியது

தமிழர் தலைவர் முக்கிய அறிக்கை
இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!
மத்திய அரசின் இந்த பொது நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) எதிர்பார்த்தவற்றைத் தராமல், ஏழை, எளிய - நடுத்தர வர்க்க மக் களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது வேதனைக்குரியதாகும் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி அவர்களது தலைமையில் பொறுப் பேற்று 9 மாதங்களான நிலையில், அவரது நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் மக்களவையில் இரண்டாம் முறை பட்ஜெட் நேற்று (28.2.2015) அறிவித்துள்ளார்.

முதல் முறை அறிவித்தது முழுமையான ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் அல்ல; இதுதான் முழு நிதி ஆண்டிற்கான பட்ஜெட் ஆகும்.

ரயில்வே துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன்பு அளித்த பட்ஜெட்டும் ஏழை, எளிய, மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாகவே இருந்தது.

ஆனால், சில ஜிகினா வேலைகள் - அறிவிப்புகள் மூலம் - ஒப்பனை அதிகமாக செய்யப்பட்டதாக இருந்து இரயில்வே அமைச்சரால், தமிழ் நாட்டிற்குப் பட்டை நாமம் சாத்தும் வகையில் ஏற்கெனவே நடத்தப்பட்ட புதிய ரயில்வே திட்டங்கள் - பாதிக் கிணறு தாண்டியதைப் போல பாதியிலேயே கைவிடப்பட்ட திட்டங்களாகின! முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எடுக்காமலேயே கைவிடப் பட்டன!

ஏமாற்றப்பட்ட பட்ஜெட்

இந்த பொது பட்ஜெட்டிலும் எதிர்பார்த்தவை தராமல் ஏமாற்றப்பட்ட பட்ஜெட்டாகவே ஏழை, எளிய நடுத்தர வர்க்க மக்களுக்கு அமைந்துள்ளது வேதனைக்குரிய தாகும். டீசல், பெட்ரோல் விலை - உலகச் சந்தையில் 145 டாலர் விலை 45 டாலராக குறைந்துள்ள நிலையில் இங்கு (ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக 3 ரூபாய்க்கு மேல்) ஏற்றப்பட்டுள்ளது!

விலைவாசிகள் மேலும் ஏறும் அபாயம்

மற்ற விலைவாசிகள் இதன் மூலம் மேலும் ஏறும் அபாயமும், டீசல் பம்ப் செட் மோட்டார் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் போன்ற வர்களையும் வேறு பல தரப்பட்ட நடுத்தர மக்களையும் இது வெகுவாகப் பாதிக்கும் என்பது உறுதி.
சேவை வரிகளை மேலும் பல துறைகளுக்கு விரிவாக் கியதோடு, 2 விழுக்காடு கூடுதலாக தூக்கி உயர்த்தி யுள்ளதும் மேலே சொன்ன பல தரப்பினரையும் பாதிப்பது உறுதி.
வருமான வரி வரம்பு ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாயிலிருந்து மேலும் உயர்த்தி அறிவிப்புகள் வரலாம் என்ற மக்களின் எதிர்பார்ப்பு - ஏமாற்றத்தையே தந்துள்ளது.
அதில் மாறுதல் - கூடுதல் ஏதும் அறிவிக்கப்படவில்லை. முதுகுடி மக்களுக்கு அளித்துள்ள சலுகை ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியதாகும்.

பெரு முதலாளிகளுக்கான கார்ப்பரேட் ஆட்சி

அதே நேரத்தில் பெரு முதலாளிகளுக்கான கார்ப்பரேட் ஆட்சிதான் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி என் பதை இந்த பட்ஜெட் உலகுக்கே பிரகடனப்படுத்தியுள்ளது!

பெரும் கம்பெனிகள் செலுத்தும் வரி 30 சதவிகிதத்தி லிருந்து 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு அவர்களது மகிழ்ச்சியையும், பாராட்டையும் பெற்றுள்ள பட்ஜெட்டாக உள்ளது என்பதை எவரே மறுக்க முடியும்?

கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகை அது சமுதாய முதலீடு என்ற தத்துவத்திற்கு ஆதாரமாகும். ஆனால், அது பெரும் அளவில் ஒதுக்கப்படவில்லை. 68,000 கோடி என்பதுதான் கல்வி வளர்ச்சி என்ற யானைப் பசிக்கு இது வெறும் சோளப் பொறிதான்!

பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்றும் தனியார் துறையில் அரசு போட்டிருந்த பங்குகளையும் விற்றும், பற்றாக்குறைகளை ஈடு கட்ட முயன்றுள்ளார்கள்! பொன் முட்டையிடும் வாத்து கதை தான் இது!

கருப்புப் பணம் பற்றி கடும் விதிகள் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், செயல்பாட்டைப் பொறுத்துதான் அதன் வெற்றி - தோல்வி அமையக் கூடும்.

விரிவான விளக்கம் பிறகு.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

1.3.2015

Read more: http://viduthalai.in/e-paper/97091.html#ixzz3T8I1Kr42

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சிவன்

மார்க்கண்டேயனை - அவன் ஆயுள் முடிந்த நிலையில் எமன் பாசவலையை வீசினான். அந்த நேரத்தில் சிவனை மார்க்கண்டேயன் கட்டி அணைத்ததால் எமனைக் காலால் உதைத்து விரட்டி னான் சிவன் என்றால் இதில் எமன் செய்தது தவறா? (அவன் கட மையைத்தானே செய் தான்?) சிவன் செய்தது சரியா?

Read more: http://viduthalai.in/e-paper/97093.html#ixzz3T8IQQ5To

தமிழ் ஓவியா said...

ஜாதி மறுப்புத் திருமணம்: உதவிக்கரம் நீட்டிய நீதிமன்றம்

கொச்சி, மார்ச் 1_ வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த காதலர்கள் திருமணம் செய்து கொள்ள கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

கேரள மாநிலம், காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கே.எம்.சசீந்திரன். இந்து மதத்தைச் சேர்ந்த இவரின் மகளும், அதே பகுதியில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதற்கு இருதரப்பில் இருந்தும் அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. இதனால் அவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதையடுத்து தனது மகளை காணவில்லை என்று கூறி, கேரள உயர் நீதிமன்றத்தில் சுசீந்திரன் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் வி.கே.மோகனன், பி.டி.ராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காதலர்கள் ஆஜராகி தாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தெரிவித்தனர். அதையடுத்து, இருவரின் திருமணத்தையும் பதிவு செய்ய அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இருவருக்கும் பாது காப்பு அளிக்கவும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். இதையடுத்து கடந்த 25ஆம் தேதி அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது.

Read more: http://viduthalai.in/page-3/97083.html#ixzz3T8Ii6RSp

தமிழ் ஓவியா said...

திராவிடர் இயக்கத்தால் பலன் பெறாத குடும்பம் உண்டா?

பெண்ணாடம் வட்டார மாநாட்டில் கழக துணைத் தலைவர் வினா விருத்தாசலம், மார்ச் 1_- திராவிடர் இயக்கத்தால் பலன் பெறாத குடும்பங்கள் தமிழ்நாட்டில் உண்டா? என பெண்ணாடத்தில் நடந்த திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாட்டில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வினா எழுப்பி, சிறப்புரையாற்றினார். பெண்ணாடம் வானொலித் திடல் அண்ணா அரங்கத்தில் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு (22.2.2015) எழுச்சியுடன் நடைபெற்றது. இதில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார். அப்போது, நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு கிடைத்ததற்கு திராவிட இயக்கமே காரணம் என்றும், நீதிமன்றத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர்கூட நீதிபதியாக இல்லாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜஸ்டீஸ் வரதராஜன் என்கிற ஆதிதிராவிடர் நீதிபதியாக நியமிக்கப்பட்டது யாரால்? பின்னர் அவர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்றால் யாருடைய உழைப்பு? இந்த வரலாறு தமிழ்த் தேசியங்களுக்குத் தெரியாது.

இன்றும்கூட, நீதி மன்றத்தில் இடஒதுக்கீடு கேட்டு அனைத்துத் தரப்பினரையும் அழைத்து கூட்டங்கள் நடத்துவதும், போராட்டம் நடத்துவதும் திராவிடர் இயக்கமல்லவா! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அல்லவா! எனவே, தமிழகத்தில் திராவிடர் இயக்கத் தால் பலன் பெறாத குடும்ப உண்டா எனக் கேள்வி எழுப்பினார்.

Read more: http://viduthalai.in/page-8/97056.html#ixzz3T8Jxb9tF