Search This Blog

2.2.15

பெரியாரின் பார்ப்பனஎதிர்ப்பு மதஎதிர்ப்புப் பிரச்சாரம்தான் முக்கிய காரணம்?எதற்கு?ஏன்?

காலூன்றப் பார்க்கிறார்கள் - எச்சரிக்கை!

ஆர்.எஸ்.எஸின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசரின் முன்னாள் ஆசிரியர் சேஷாத்திரி சாரி என்பவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.


நாடு முழுவதும் 50 ஆயிரம் ஷாகா பயிற்சிகளை நடத்தி வருகிறோம். இதனை இருமடங்காக - அதாவது ஒரு லட்சம் எண்ணிக்கையில் அதிகரிக்கத் திட்டமிட் டுள்ளோம். குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இதனை அதிகரிக்க உள்ளோம் என்று கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் உள்ள பொதுநல விரும்பிகளும், மதச் சார்பற்ற சக்திகளும் இதனைக் கூர்மையாகக் கவனித்து, சவாலாக ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


ஷாகா என்றால் வேறு ஒன்றும் அல்ல - வன்முறையைத் தூண்டுவதற்கும், கலவரத்திற்குமான பயிற்சியே தவிர, வேறு ஒன்றும் இல்லை. வெளியில் சொல்லுவார்கள் -  ஒழுக்கத்தைப் போதிக்கிறோம், கட்டுப்பாட்டைக் கற்றுக் கொடுக்கிறோம். உடற் பயிற்சியைச் சொல்லித் தருகிறோம் என்றெல்லாம் வித்தாரமாக வியாக்கியானம் செய்வார்கள்.


நாட்டில் சிறுபான்மை  மக்களுக்கெதிராகக் கலவரங்களைத் தூண்டி விடுவது இவர்கள்தான். அதற்கான ஒரு சூழ்நிலையை உண்டாக்குவார்கள்.


சதுமுகை எனும் ஊரில் பிள்ளையாருக்குச் செருப்பு மாலை அணிவித்து, அதனைச் செய்தது கருப்புச் சட்டைக்காரர்கள்தான் என்று காவல்துறைக்குப் புகார் செய்தார்கள். உண்மை என்னவென்றால் அதனைச் செய்ததே அந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்ற குட்டு உடைந்தது.


காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொள்ளவில்லையா? சுன்னத் செய்து கொள்ள வில்லையா?


பழி ஓரிடம் பாவம் வேறொரு இடம் என்பார்களே, அதற்குச் சரியான எடுத்துக்காட்டு இதுதான். தென் காசியில் இந்து முன்னணிக்காரர்களின் அலுவலகத்தில் குண்டு வெடிக்கச் செய்து - அதனைச் சிறுபான்மை மக்கள் மத்தியில் பழி சுமத்தியவர்கள் அவர்கள்தான் என்பதைக் காவல்துறை கண்டுபிடித்ததுண்டு.


இதுபோன்ற சூழ்ச்சிகளை, நயவஞ்சக காரியங்களை எப்படி சன்னமாக தந்திரமாகச் செய்வது என்பதை யெல்லாம்  இந்த ஷாகாக்களில் சொல்லிக் கொடுப் பார்கள்.

தமிழ்நாட்டை ஏன் அவர்கள் குறி வைக்கிறார்கள் என்பது எளிதில் தெரிந்ததே! தந்தை பெரியார் பிறந்த திராவிட இன எழுச்சி ஊட்டப்பட்ட இந்தப் பகுத்தறிவுப் பூங்காவில் சங் பரிவார்க் கும்பலால் வேர்ப்பிடிக்க முடியவில்லை.


பிஜேபியின் தமிழகப் பிரமுகர் திருவாளர் இல.கணேசன் அவர்களே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு, மத எதிர்ப்புப் பிரச்சாரம்தான் முக்கிய காரணம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

திராவிட அரசியல் கட்சிகளின் தோள் மீது நின்று இவர்கள் செப்படி வித்தை காட்டியதுண்டு; இப்பொழுது அந்த அரசியல் கட்சிகள் பிஜேபி அதன் ஆணி வேரான ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்களின் விஷமங்களை அனுபவத்தில் உணர்ந்துள்ளனர்.


இந்த நிலையில் மறந்தும் பிஜேபியோடு கூட்டணிக் கரம் நீட்டாது என்று நம்புவோமாக! சொந்தக்காலில் நிற்க ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நெருக் கடியில் இருக்கிறது பி.ஜே.பி. அதற்கு முதற்கட்டம் ஆர்.எஸ்.எஸை வலுப்படுத்துவதே என்ற நிலை யில்தான் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களின் எண்ணிக் கையை அதிகப்படுத்திடத் திட்டமிட்டுள்ளார்கள்.


பொது இடங்களிலோ கல்வி நிறுவனங்களிலோ ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களுக்கு சட்டப்படி இடம் கிடையாது. முன்பு அது மாதிரி ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் திராவிடர் கழகம் நேருக்கு நேர் நின்று முறியடித்ததுண்டு.


அப்படி மீண்டும் பொது இடங்களிலே அரசுக்குச் சொந்தமான இடங்களிலே ஷாகா பயிற்சி நடை பெற்றால் உடனே தலைமைக் கழகத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஊருக்கு ஊர் செல்வது, உறுப்பினர்களைச் சேர்த்திடப் பணம் கொடுப்பது, வேறு சில தேவைக ளைப் பூர்த்தி செய்வது என்கிற யுக்திகளில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள், அதற்கான தகவல்களும் நமக்குக் கிடைத்து வருகின்றன.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கட்சிப் பாகுபாடு பார்க்காமல், நமது பொது எதிரியான பார்ப் பனியத் தத்துவத்தின் முகவர்களான ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்கள் இவற்றின் அரசியல் வடிவான பி.ஜே.பி.யை முறியடிப்பதில் முன்னணியில் நிற்போம்!


திராவிட இயக்கங்களும், இடதுசாரிகளும், ஒடுக்கப்பட்ட சமூக அமைப்புகளும், நமக்கு பொது எதிரான தத்துவத்தைக் கொண்ட இந்தியாவைக் காவிமயமாக்கத் துடித்துக் கொண்டு இருக்கும் கூட்டத்திற்கு இங்கு இடம் இல்லை என்பதைக் காட்டுவோம்!


அதிகாரம் இருக்கிறது, பணம் கிடைக்கிறது, உயர் ஜாதி ஊடகங்கள் இருக்கின்றன என்ற துணிவில் எகிறிப் பார்க்கிறார்கள் - நமது ஒட்டுமொத்த உணர் வுக்கு முன் அவை எல்லாம் தூள் தூளாக்குவோம் வாரீர்!

                              -------------------------”விடுதலை” தலையங்கம் 2-22015

55 comments:

தமிழ் ஓவியா said...

கோலாலம்பூரில் 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

உலகளாவிய அளவில் தமிழும் - தமிழரும் எனும் தலைப்பில்

தமிழர் தலைவர் ஆசிரியர் நிகழ்த்திய ஆய்வுரை

வடமொழியால் விளைந்த பண்பாட்டுப் படையெடுப்புக் குறித்தும் இடித்துரை


கோலாலம்பூர், பிப்.2_ கோலாலம்பூரில் நடைபெற்ற 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வட மொழி யால் தமிழுக்கு நேர்ந்த கேடுகளை ஆதாரத் துடன் எடுத்துக்காட்டி ஆய்வுரை வழங்கினார்.

9 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசி யாவின் தலைநகர் கோலாலம்பூரில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.

தமிழ்மொழியை தமிழர்க்கு அறிமுகம் செய்தவர் அறிஞர் கால்டுவெல் ஆவார். தமிழை உலகுக்கு அறிமுகப் படுத்தியதில் பெரும்பங்கு வகித்தவர் தனி நாயக அடிகளார் ஆவார். அவருடைய பெரு முயற்சியால் முதல் உலகத்தமிழ் மாநாடு மிகவும் சிறப்பாக 1965இல் கோலாலம்பூரில் நடந்தது. இரண் டாவது மாநாடு சென்னையிலே மிகவும் கோலாகல மாக அறிஞர் அண்ணா அவர்களால் உலகச் சிறப் புடன் நடந்தது.

இப்போது 9ஆவது மாநாடு மீண்டும் கோலாலம்பூ ரில் சனவரி 30, 31 பிப்ரவரி 1ஆம் நாள்களில் நடை பெற்றது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் பெருமைமிகு பேராசிரியர் டத்தோ மாரிமுத்து அவர்களின் பெருமுயற்சியாலும், பெருமைமிகு டத்தோ சாமிவேலு அவர்களது ஒத்துழைப்புடனும், மலேசிய அரசின் ஒரு மில்லியன் டாலர் உதவியுடனும் நடைபெற்றது.

முதல் நாள் தொடக்க விழாவில் பேசிய மலேசியப் பிரதமர் மாண்புமிகு நஜீப் ரசாக் அவர்கள் திருக் குறளின் பெருமையைப் பேசி தமிழின் பெருமை, தமிழர்களின் முன்னேற்றம், குறித்தும் கருத்துரை வழங் கினார். மலேசியாவில் 542 அரசு தமிழ்ப் பள்ளிகள் இயங்குவது பற்றியும் பேசினார்.

பல்வேறு அமர்வுகளில் 120 ஆராய்ச்சிக் கட்டு ரைகள் வாசிக்கப்பட்டன.

இரண்டாம் நாள் சிறப்புப் பேச்சாளராக மானமிகு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். கோவையில் சிறப்புக்கூட்டத்தை முடித்துக் கொண்டு நேரே சென்னை வந்து உள்நாட்டு விமான நிலையத்தி லிருந்து பன்னாட்டு விமானத்தில் ஏறி மலேசியா வந்தடைந்தார்.
டத்தோ சாமிவேலு அவர்கள் அறிமுகப்படுத்திய போது மிகவும் பெருமையுடன் தானே திராவிடர் கழகத்தாலும், அய்யா சாரங்கபாணி அவர்களாலும் உருவாக்கப்பட்டதைச் சொல்லி ஆழமான உரை யாற்றினார். ஆசிரியர் அவர்களின் உழைப்பைப் பாராட்டி, அவரது வருகையால் நாங்கள் மிகவும் பெருமைப்படுகின்றோம் என்று வரவேற்றார்.

ஆசிரியர் அவர்கள் ஒரு மணி நேரம் உலகளாவிய நிலையில் தமிழும் தமிழரும் எனற தலைப்பில் தமிழும், தமிழரும் எப்படிப் பண்பாட்டுப் படை யெடுப்பை முறியடிக்க வேண்டியிருக்கின்றது என்பதை ஆதாரபூர்வ நூல்களை எடுத்துக்காட்டி விளக்கினார். தமிழனுக்குத் தனது மொழியே வட மொழியிலிருந்து கடன் பட்டது என்ற கதையை இல்லை,இல்லை, வடமொழிதான் தமிழுக்குக் கடன் பட்டுள்ளது, அதைத் திருடி தனது சொத்தாக சமஸ்கிருதம் என்ற மொழி உருவான கதையைச் சொன்னார். பண்பாட்டுப் படையெடுப்பு, மொழியில் மட்டுமன்றி, கலை, பண்பாடு, மொழியை அழிக்கச் செய்த சூழ்ச் சிகள், ஆக்கிக் கொண்டதையும், அதை நம்மையே நம்ப வைத்துவிட்ட சூழ்ச்சியையும் சொன்னார்.

செம்மொழிக்கு இருக்க வேண்டிய 11 தகுதிகளும் தமிழுக்கு மட்டுமே உள்ளதையும், சமஸ்கிருதத்திற்கு 7 தகுதிகள் மட்டுமே உள்ளதையும் விளக்கமாகச் சொன்னார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குயில் இதழ்களில் எழுதிய வந்தவர் மொழியா செந் தமிழ்ச்செல்வமா, என்றார். பல சொற்கள் வடமொழி போல் தோன்ற வைத்ததையும் அவை தூய தமிழ்ச்சொற்களேயாம் என்பதையும் நூலாக வெளியிட்டுள்ளதைக் காண்பித்தார். தமிழ் இசை கர்நாடக சங்கீதமாகவும், திருக்குறளிலேயே உள்ள "கூத்தாட்டும் அவை" பரத நாட்டியமாகவும் பண்பாட்டுப் படையெடுப்பு, மொழியை மட்டுமன்றி உள்ளதைத் தமிழறிஞர்கள் ஆக்கபூர்வமாக எடுத்துச் சொல்வதுதான் உண்மையான தமிழ்ப்பணி, அதை நாம் அனைவரும் நமது பிளவுகளை ஓரங்கட்டி, இணைப்புப் பாலங்களை இறுகச் செய்ய வேண்டும் என்று முழங்கினார். பேச்சு, புத்தகமாக அனைவர்க்கும் தரப்பட்டது.

கடைசி நாள் மலேசியாவின் கல்வி அமைச்சர் முடிவு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தார். பல்கலைக் கழக் துணைவேந்தர்களும், பல தமிழறிஞர்களும், 20 நாடுகளில் இருந்து வந்து பங்கேற்றனர். முன்னாள் கல்வி அமைச்சர் ஆறுமுக பரமசிவம் உணர்ச்சியுடன் தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிப் பேசியும் மழலைத் தமிழ் பேசியும் அனைவரையும் மயக்கினார்.

2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மலேசியப் பல்கலைக் கழகத்தில், அவர்களது ஆதர வுடன் நடைபெற்ற வெற்றித் திருவிழாவாக நடை பெற்றது.

Read more: http://viduthalai.in/e-paper/95391.html#ixzz3Qb8cu36q

தமிழ் ஓவியா said...

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்

நம் முன்னோர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற ரீதியில் தங்கள் உணவு பழக்கத்தை வைத்திருந்தனர். அதனால்தான் அவர்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். இன்றைய நவீனஉலகமும், இயந்திரத்தனமான வாழ்க்கையும் அத்தகைய உணவு பழக்கத்தை நம்மை விட்டு தள்ளி விட்டுள்ளது.

அதனால்தான், வாழ்க்கையின் குறிப்பிட்ட நாட்களை மருத்துவ சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டிய சூழ்நிலையில் தவித்து வருகிறோம். அந்த வகையில் நமது முன்னோர்களின் உணவில் முக்கிய பங்கு வகித்த வெந்தயத்தின் மகிமை அலாதியானது.

வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக் கின்றன. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள்.

தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டாது.

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது. நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமி லங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன.

வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைவதோடு சீக்கிரம் ஆறும் தன்மைக் கொண்டது. வயிற்றுப்போக்கை குணமடைய செய்வதோடு, தாய்ப்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. வெந்தய கீரையை பகலில் சமைத்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்பசம் இருந்தாலும் குறையும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சுண்டக்காய்ச்சி, இருவேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாக குணமாகும்.

பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சினையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்தால், முடி உதிர்வது குறைவதுடன், அடர்த்தியாக முடி வளரவும் செய்கிறது.

பொடுகு பிரச்சினை, அரிப்பு குறைவதோடு முடியை பளபளப்பாகவும் வைக்கிறது. வெந்தய விழுதை பருக்கள் மீது தடவ பருக்கள் மறையும். ஆகவே, வெந்தயத்தை பயன்படுத்தி தான் பாருங்களேன் அதன் பயன்களும், மருத்துவ குணங்களும் என்னவென்று உங்களுக்கே தெரியும்.

Read more: http://viduthalai.in/page-7/95419.html#ixzz3Qb9Pq67R

தமிழ் ஓவியா said...

மருத்துவ குணங்கள் நிறைந்த பரங்கிக்காய்

மலையாளிகள் சமூகத்தில் மஞ்சள் பூசணிக்காய் எரிசேரி என்பது மிகவும் பிரபலமான ஓர் உணவு. வெளிர் ஆரஞ்சு நிறமுள்ள இந்த பதார்த்தம் பண்டிகை நாட்களின் ஸ்பெஷல் தயாரிப்பு. இது மிகவும் சுவையாக இருக்கும். இந்த காயின் வெளிர் ஆரஞ்சு நிறம் பீட்டா கரோட்டீன் கொண்டது.

இது நம் உடலுக்குத் தேவைப்படும் போது கல்லீரலுக்கு வைட்ட மின் ஏ-வாக மாற்றிக் கொடுக்கும். தோற்றம் பரங்கிக்காயின் பூர்வீகம் வட அமெரிக்கா. பரங்கி என்பது ஒரு தாவரத்தின் பெயர்.

சமையலுக்கு மட்டுமல்ல... விதையாகவும் எண்ணெயாகவும் கூட இது பயன்படுகிறது. குணங்கள் பரங்கி பரவலாக விளையக்கூடிய ஒரு காய். இது அளவிலும் நிறத்திலும் வடிவத்திலும் வேறுபட்டது. மெகா சைஸ் பரங்கிக்காய் 4-6 கிலோ எடை கூட இருக்கும். இது பொதுவாக ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கு இப்படியொரு நிறத்தைக் கொடுப்பது, அதன் தோல் மற்றும் உள்ளே உள்ள சதைப் பகுதி. இதன் தோல் பகுதி அழுத்தமாகவும் எடையற்ற தாகவும் இருக்கும்.

ஆழமான இதன் உள் பகுதியில், சின்ன சின்ன வெள்ளை நிறமுடைய விதைகள் ஒன்றோடு ஒன்று வலைபோலப் பின்னிப் பிணைந்திருக்கும். பயன்கள் மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும், கொலஸ்ட்ராலும் இல்லை.

இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகிய வற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம். வைட்டமின் ஏவை அபரி மிதமாகக் கொண்ட இது, உடலுக்குத் தேவையான இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயல் படுகிறது. சரும ஆரோக்கியத்தையும் சளி சவ்வுப் பகுதி களையும் பாதுகாக்கிறது. பார்வைத்திறன் மேம்படவும் உதவுகிறது.

இது ஆல்ஃபா, பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் ஆகியவற்றைக் கொண்டது. என்பது இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட். இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் தசை நோய்களைத் தடுக்கிறது. பரங்கியில் கெராட்டினாயிட்ஸ் அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.

ஃபோலேட், நியாசின், வைட்டமின் பி6, தையாமின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் போன்ற பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிகம். தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை சிறந்த அளவில் உள்ளடக்கிய காய். பரங்கி விதைகளில் நார்ச்சத்தும், ஒற்றை - நிரம்பாத கொழுப்பு அமிலமும் உள்ளன.

இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் ட்ரிப்டோஃபன் எனப்படுகிற அமினோ அமிலம் உள்ளது. 1 டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை விரட்டுகிறது. பரங்கியில் நமது சருமத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலமும் உள்ளது. சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசி யமும் உள்ளது.

பரங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதுடன் மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராடவும் செய்கிறது. பரங்கியில் உள்ள வைட்டமின் ஈ, சருமக் குறைபாடுகளை சரி செய்கிறது. பரங்கியில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் ஆகியவையும் சரி செய்யப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page-7/95417.html#ixzz3Qb9gOqLF

தமிழ் ஓவியா said...

குடும்பக் கட்டுப்பாடு மாத்திரையை உருவாக்கிய விஞ்ஞானி மறைவு

சான்பிரான்சிஸ்கோ, பிப்.2_ குடும்பக் கட் டுப்பாட்டுக்கு உதவும் மாத்திரையை உரு வாக்கிய விஞ்ஞானியான கார்ல் ஜெராஸி (91) காலமானார்.

ஆஸ்திரியாவில் பிறந்த இவர், அமெரிக் காவில் உயர் கல்வி பயின்றார். 1951 -இல் இவரது தலைமையிலான ஆய்வுக்குழு நாரத் ரின்ட்ரோன் எனும் மூலக்கூறைக் கண்டு பிடித்தது. அவருக்கு அப்போது 28 வயது. அந்த மூலக்கூறு அடிப்படையிலேயே குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உதவும் மாத்தி ரைகள் உருவாக்கப்பட்டன.

இதையடுத்து, குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரையின் தந்தை என கார்ல் ஜெராஸி அறியப்பட்டார்.
குடும்பக் கட்டுபாடு மாத்திரை ஒரு நாட் டின் பொருளாதாரத் திட்டங்களை வகுக்க உதவியது மட்டுமல்லாமல், பாலியல் உறவு களிலும், பெண்களின் வாழ்விலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. உலகெங்கும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில், அறி வியலைவிட, அரசியல் முக்கியப் பங்கு வகிக் கும் என்று அவர் ஒருமுறை குறிப்பிட்டார்.

வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர், பல்வேறு தனியார் வேதி யியல் மற்றும் மருந்து தயாரிப்பு நிறு வனங்களில் பணியாற்றியுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் வேதியியல் துறையின் கவுரவப் பேராசிரியராக இருந்தார். கரிம வேதியியல் துறைக்குப் பெரும் பங்களிப்பு செய்துள்ள அவர், சுமார் 1,200 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இரு கவிதைத் தொகுப்புகள், விஞ்ஞான நாவல்கள், நாடகங்களும் எழுதி யுள்ளார். இவரது சுயசரிதை 4 தொகுதி களாக வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக் கிழமை (ஜன.30) அவர் இறந்ததாக ஸ்டான் ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-7/95438.html#ixzz3Qb9t49SJ

தமிழ் ஓவியா said...

புதிய ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதங்களில் எந்த மாற்றங்களும் நடக்கவில்லை: அசோசேம் கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடில்லி, பிப்.2- புதிய அரசு பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களில் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் நடக்கவில்லை என்று அசோசேம் கருத்து கணிப்பில் கலந்துகொண்ட பெரும்பான்மையான தொழி லதிபர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

தவிர நடப்பு நிதி ஆண்டில் எந்த முதலீட்டுத் திட்டங்கள் வரும் என்பதையும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் தொழில் துறை அமைப்பான அசோசேம் பிஸினஸ் நம்பிக்கை குறியீடு என்ற பெயரில் நடத்திய சர்வேயில் இவை தெரிய வந்திருக்கின்றன.

அதேசமயம் நடப்பாண்டின் முதல் அரையாண்டுக்குள் சூழ் நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.
சர்வேயில் கலந்துகொண்ட 54.2 சதவீத தொழிலதிபர்கள் கடந்த ஆறு மாத காலத்தில் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்கள்.

மேலும் 45.8 சதவீத தொழிலதிபர்கள் நடப்பு நிதி ஆண்டுக்குள் முதலீட்டு சூழ்நிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் தெரிவித்தார்கள்.
மேலும் ஏற்றுமதி சந்தையும் மந்தமாகவே இருக்கும் என்று தெரிவித்தார்கள். ஆனால் 41.7 சதவீத தொழிலதிபர்கள் நடப்பு காலாண்டில் நிலைமை மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/95442.html#ixzz3QbA0kql6

தமிழ் ஓவியா said...

திமுக உறவு நட்பு ரீதியானது தொல்.திருமாவளவன்

சென்னை, பிப்.2_ திமுக வுடனான உறவு குறித்து விளக்கம் அளிக்க வேண் டியதில்லை என்று தொல். திருமாவளவன் கூறினார்.
இது தொடர்பாக சென்னையில் ஞாயிற்றுக் கிழமை திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பொன்.ராதாகிருஷ்ணன் என் நட்புக்குரியவர். நல்ல வர். ஆனால், தற்போது அவரை ஆக்கிரமித் துள்ள அதிகாரத்தின் மூலம் பேசுகிறார்.
பெரியார், நாராயண குரு போன்றோரின் கோட்பாடுகளை நான் உள்வாங்கி இருப்பதால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை எதிர்க்கிறேன். தனிப் பட்ட முறையில் அமித் ஷாவோ, பொன்.ராதா கிருஷ்ணனோ எனக்குப் பகைவர்கள் இல்லை.

திமுக_ விடுதலைச் சிறுத் தைகள் இடையிலான பிரச்சினை நட்பின் அடிப் படையிலானது. இதற்கு விளக்கம் அளிக்க வேண் டிய தேவையில்லை. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் செல்வாக்குடன் திகழ்ந்த காமராஜரின் புதுதில்லி இல்லத்தை யார் கொளுத் தினர் என்பது அவருக்கே தெரியும். காந்தியைச் சுட்ட கோட்சேவை தேச பக்தன் என்று சொல்வது நியாயமா?

இதனைப் பொன். ராதாகிருஷ்ணன் கண்டிக் காதது ஏன் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். அண் மையில், நடைபெற்ற தமாகாவின் கருத்தரங்கில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை யும், பாஜக தேசியத் தலை வர் அமித்ஷாவையும் தொல்.திருமாவளவன் விமர்சித்து இருந்தார்.

அதற்கு பதில் அளித் திருந்த பொன்.ராதா கிருஷ்ணன், சிறீரங்கம் இடைத்தேர்தலில் திமுகவை, விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிக்கா தது ஏன் என்பதற்கு அவர்கள் (விடுதலைச் சிறுத்தைகள்) விளக்கம் அளிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு, தற்போது திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-7/95441.html#ixzz3QbA8j1Hs

தமிழ் ஓவியா said...

பிற இதழிலிருந்து....

அமித்ஷா எனும் அலாவுதீன் பூதம்

2014-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராளி களைத் தூண்டும் விதத்தில் பேசி னார்கள். இந்துப் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து கொண்டு, அவர்களை முஸ்லிம்களாக மதம் மாற்றும் காதல் ஜிகாத்தில் முஸ்லிம் இளைஞர்கள் இறங்கியுள் ளார்கள் என்றார் கோரக்பூரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி ஆதித்யநாத்.

காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே உண்மை யான தேச பக்தர் என்றார் உன்னாவ் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சாக்ஷி மகராஜ். ராமரை வணங் காத வர்களும் பாஜகவுக்கு வாக்களிக்காதவர் களும் விஷமக்காரர்கள் என்றார் ஃபதேபூரிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட சாத்வி ஜோதி நிரஞ்சனா.


தமிழ் ஓவியா said...

இவர் மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றுள் ளார். முஸ்லிம்களையும் கிறிஸ்தவர் களையும் இந்து மதத்துக்கு மாற்றும் நட வடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள் ளார் அலிகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சதீஷ் கவுதம்.

இந்த 4 பேரும் மத்திய அரசில் ஆட் சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட் சியைச் சேர்ந்தவர்கள். இந்த நால்வரின் பேச்சுகள்குறித்து உங்களுடைய கருத்து என்ன என்று விளக்க வேண்டும் என்று ஆட்சியின் தலைவரான பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க் கட்சித் தலைவர்கள் கேட்டனர். இதனால், மாநிலங்களவையில் எந்தவித அலு வலும் மேற்கொள்ளப்பட முடியாமல் 4 நாட்களுக்கு அவை முடக்கப்பட்டது. எதிர்க் கட்சிகள் கோரியபடி அவைக்கு வர மறுத்த பிரதமர், பின்னர் அந்த நால்வரின் பேச்சுகளைக் கண்டிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டார். ஆனால், அது சம்பந்தப்பட்டவர்களைப் போதுமான அளவு கண்டிக்க வில்லை என்று நினைத்ததால், எதிர்க் கட்சிகள் திருப்தி அடையவில்லை.

அமித்ஷாவின் தொடர்பு

இந்த சர்ச்சைகளையெல்லாம் விரிவான செய்தியாக வெளியிட்ட பத் திரிகைகள் ஒரு முக்கியமான அம் சத்தைக் கவனிக்கத் தவறிவிட்டன. இந்த 4 உறுப்பினர்களும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மக்கள வைத் தேர்தலில் போட்டியிட கட்சியின் பொதுச் செயலாளராக அப்போது பதவி வகித்த அமித் ஷாவால் தேர்ந்தெடுக் கப்பட்டவர்கள். உத்தரப் பிரதேச மாநி லத்தில் கட்சியின் தேர்தல் பிரசாரப் பொறுப்பு அமித் ஷாவிடமே தரப் பட்டது. செய்தி ஊடகங்களும் எதிர்க் கட்சிகளும் இந்தத் தொடர்பைக் கவனிக்கத் தவறிவிட்டன. நாடாளுமன் றத்தின் உள்ளேயும் வெளியேயும் இந்த 4 உறுப்பினர்களின் பேச்சுகளுக்காகப் பிரதமரைத்தான் குறிவைத்துத் தாக்கி னார்களே தவிர, கட்சியின் தலைவராக வும் பின்னர் பொறுப்பேற்றுக்கொண்ட அமித் ஷா விளக்கம் தர வேண்டும் என்று கேட்கவேயில்லை.

அமித்ஷாவை நாட்டின் பிற அரசி யல் தலைவர்களைப் போலவே ஆபத் தில்லாதவர் என்று கருதுவதும் நடத்து வதும் கவலையை அளிக்கிறது. மாநில உள்துறை அமைச்சராகப் பதவி வகித்து கைதான முதல் அரசியல்வாதி அமித் ஷாதான். முக்கிய குற்ற வழக்குகளில் சாட்சிகளைக் குலைத்துவிடுவார்,

தமிழ் ஓவியா said...


ஆவணங்களைத் திருத்திவிடுவார் என்று உச்ச நீதிமன்றத்தாலேயே சொந்த மாநிலத்தை விட்டு வெளியேற்றப்பட்ட முதல் அரசியல் தலைவரும் அவர்தான். தன்னுடைய மாநிலக் காவல் துறையைத் தனது அரசியல் சிந்தனையைப் பின் பற்றி நடக்குமாறு மாற்றியவர் என்றும் தன்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதவர்களைத் தண்டித்தவர் என்றும் கூறப்பட்டவரும் அவர்தான்.

பாரதிய ஜனதாவுக்கு மக்களவைப் பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும் பான்மை கிடைத்தவுடன் அமித்ஷாவின் அரசியல் பின்னணி பெரும்பாலானவர் களால் மறக்கப் பட்டுவிட்டது.

உத்தரப் பிரதேசத்தின் மொத்த முள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதி களில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெறக் காரணமாக இருந்தார் என்ப தற்காகக் கட்சியின் தேசியத் தலைவ ராகவே பதவி உயர்வு பெற்றார் அமித் ஷா. பாரதிய ஜனதாவுக்கு உத்தரப் பிரதேசத்தில் பெரும் வெற்றி கிடைத் ததற்கு அமித் ஷா மேற்கொண்ட பிரச்சார உத்தி, ஒருங்கிணைப்பு ஆகி யவையே காரணம் என்று பத்திரிகை களால் புகழப்பட்டது. அவருடைய கடந்த கால அரசியல் சந்தேகத்துக்கு அப்பாற் பட்டதல்ல என்றாலும், மிகப் பெரிய அரசியல் மேதை என்றும் சிறந்த சாணக்கியர் என்றும் பத்திரிகைகள் பாராட்டித் தள்ளின.

பத்திரிகைகளில் அரசியல் கட்டு ரைகள் எழுதும் பண்டிதர்கள், அமித் ஷா மேற்கொண்ட வேட்பாளர் தேர் வைப் புகழ்ந்து மகிழ்ந்தார்கள். அவரால் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் யோகி ஆதித்யநாத், சாக்ஷி மகராஜ், சாத்வி ஜோதி நிரஞ்சனா, சதீஷ் கவுதம். இருப்பினும், இந்த 4 பேரின் பேச்சுக்கு விளக்கம் தர வேண்டும் என்று கட்சித் தலைவர் அமித் ஷாவை யாருமே கேட் கவில்லை (சாக்ஷி மகராஜிடம் மட்டும் கட்சித் தலைமை விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியது). சங்கப் பரிவாரத்தின் இதர உறுப்பினர்களும் தங்களுடைய நோக்கம் என்ன என்பதை ஒளிக்காமல், மறைக்காமல் வெளியிட் டனர். இந்தியாவே இந்து ராஷ்டிரம் தான், தங்களுடைய பூர்வீகம் இந்து மதம்தான் என்று இந்நாட்டில் பிறந்த அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைமை திட்டவட்டமாக அறிவித்தது. இந்த லட்சியத்தை ஒட்டியே விஸ்வ இந்து பரிஷத், பிற மதத்தவர்களைத் தாய் மதத்தில் கொண்டுவந்து சேர்க்கும் மதமாற்ற நிகழ்ச்சியை உடனடியாக மேற்கொண்டது. தங்களுடைய இறுதி லட்சியம், இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரையும் இந்துவாக்குவது தான் என்று அதன் தலைவர் பிரவீண் தொகாடியா அறிவித்தார்.

நரேந்திர மோடியே இந்து ராஷ்டிரம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர்தான். முதலமைச்சராகப் பதவியேற்ற தொடக்க காலத்தில், கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் விமர்சித்துப் பேசியவர்தான் நரேந்திர மோடி. 2008-ஆம் ஆண்டு தொடக்கத்தி லிருந்துதான் மிதவாதத் தலைவராகக் கருதப்படும் வகையில் பேச்சை மாற்றிக் கொண்டார். உடனே, அவர் வளர்ச்சிக் கான தலைவராகக் கருதப்பட்டார். அவருடைய சொல், சிந்தனை, செயலால் குஜராத் மாநிலமே வளர்ச்சி கண்ட தாகப் பேசப்பட்டது. பிரதமர் பதவிக் கான வேட்பாளராகத் தன்னை முன் னிறுத்திக்கொண்ட பிறகு, கடந்த காலத்துக்கான தலைவராக அல்லாமல், எதிர் காலத்துக்கான தலைவராகத் தன்னை மாற்றிக்கொண்டார். அரசியல் பொடிவைத்துப் பேசுவதில் அவருக்கு ஆர்வம் அதிகம் என்றாலும் சமூகங் களை விடுத்து, தனக்கு எதிரான அர சியல் தலைவர்களைக் குறிவைத்துப் பேசத் தொடங்கினார்.

தமிழ் ஓவியா said...

வெற்றிக்குக் காரணம்

பாரதிய ஜனதாவைப் பெருவாரி யான மக்கள் ஏற்கும் விதத்தில் ஒப்பனை செய்ததுடன் தனது பேச்சுத் திறமை மூலம் ஒரே கோணத்தில் சிந்திக்க வைத்து மக்களவைப் பொதுத் தேர் தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றார் மோடி. மோடிக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை இந்து ராஷ்டிரமாகக் கருதுகிறவர்கள் இல்லை என்று துணிந்து கூறலாம். காங்கிரஸ் கட்சியின் ஊழல், வாரிசு அரசியல் ஆகியவற்றை வெறுத்த மக்கள், நரேந்திர மோடியைத் துடிப்புள்ள, கவர்ச்சி மிக்க, சுயமாக முன்னுக்கு வந்த நல்ல தலைவராகப் பார்த்தார்கள். அவர் வந்தால் ஊழல் குறையும், நாடு வளம் பெறும், நாட்டின் பாதுகாப்பு வலுப்படும் என்று நம்பினார்கள். நவீன காலத்துக்கு ஏற்ற அரசியல் தலைவர் மோடி. அவ ரால் சாதிக்க முடியாதது ஏதும் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கும் நல்ல நிர்வாகத் துக்கும் அவர் உத்தரவாதம் என்ற எண்ணங்கள் ஏற்படுத்தப்பட்டதால் மக்கள் அவரை நம்பி வாக்களித்தார்கள்.

அவரைப் பற்றிய இந்தக் கண் ணோட்டமெல்லாம் அவருக்கு அடுத்த தலைமுறைத் தலைவர்களுக்கும் பொருந்துமா?

இங்குதான் சந்தேகம் ஆழமாகிறது. வாக்குச் சீட்டு மூலம் இந்துக்கள் பழிவாங்க வேண்டும் என்று அமித் ஷா பேசியதைத் தேர்தல் ஆணை யம் கண்டித்ததை நினைவுகூர வேண்டும். அரசின் வளர்ச்சித் திட்டங்களில் தங்களுக்கு ஆர்வம் இல்லை. மோடியால் ஒரு காலத்தில் பேசப்பட்டு, இப்போது அவரால் பேசப்படாமல் இருக்கும் இந்து ராஷ்டிரத்தை அமைப்பதுதான் தங்க ளுடைய லட்சியம் என்பதை 4 மக்க ளவை உறுப்பினர்களும் உறுதிப்படுத் தியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...


யோகி ஆதித்யநாத், ஜோதி நிரஞ்சனா ஆகியோரின் பேச்சை கட்சித் தலைவர் அமித்ஷா பகிரங்கமாகக் கண்டிக்காமல் இருப்பதிலிருந்தே இந்தப் பேச்சு அவருக்கு உடன்பாடுதான் என்பதை உணர்ந்துகொள்ளலாம். இதைச் சுட்டிக்காட்டி நிருபர்கள் கேட்டபோது, சமூக ஒற்றுமைதான் எங்களுடைய லட்சியம் என்று சுற்றி வளைத்துத்தான் பதில் அளித்திருக் கிறார் அமித் ஷா.

ஆபத்தான அறிகுறிகள்

அறிகுறிகள் ஆபத்தாக இருக்கின்றன. காரணம், உத்தரப் பிரதேசத்தை மதரீதியாகப் பிளவுபடுத்துவதில் அமித் ஷாவுக்கும் அவருடைய கட்சிக்கும் உகந்தாற்போலவே முலாயம் சிங் செயல்பாடும் அவருடைய கட்சியும் இருக்கிறது. இரு தரப்புக்குமே மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்துவதில் அரசியல் ஆதாயம் இருக்கிறது. உத்தரப் பிரதேச சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. முலாயமும் ஆசம் கானும் முஸ்லிம் களிடையே அச்ச உணர்வைக் கிளறு வார்கள். யோகி ஆதித்யநாத், சாத்வி ஜோதி நிரஞ்சனா போன்றவர்கள் இந்துக்களிடையே பீதியை ஏற்படுத் துவார்கள்.

தமிழ் ஓவியா said...


அசாதுதீன் ஒவாய்சியும் மஜ்லிஸ்-இ-இத்தேஹதுல் முஸ்லிமினும் சூழலை மேலும் மோசமாக்குவார்கள். அமித் ஷா தலைமையில் பாரதிய ஜனதா இரட்டை வேடம் போடும். எல்லா இளைஞர்களுக்கும் வேலை, கிராமங்களில் 24 மணி நேரமும் மின் சப்ளை என்று பிரதமர் நரேந்திர மோடி பேசுவார். களத்திலோ கட்சித் தொண் டர்கள் இந்துக்களின் பெருமையை நிலைநாட்டப் பாடுபடுவார்கள்.

போலி என்கவுன்டர் சம்பவத்தில் அமித் ஷாவுக்கு நேரடிப் பங்கு இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) சமீபத்தில் அளித்த நற் சான்றிதழை ஷாவின் ஆதரவாளர்கள் ஏற்கெனவே பேசிவிட்டனர். ஆனால், நம்முடைய அரசியல் சட்டம் வலியுறுத் தும் சட்டபூர்வ கடமைகளுக்கும் நிலைக்கும் முற்றிலும் மாறுபட்ட வகையில் - நாடாளுமன்ற உறுப்பினர் கள் பகிரங்கமாகப் பேசுவதையும் ஆதரிப் பதையும் கண்டிக்காமல், மறைமுகமாக அங்கீகரிப்பவர் நாட்டின் முக்கியமான அரசியல் கட்சியின் தலைவராக இருப் பது சரியா என்ற கேள்வி எழுகிறது.

அமித்ஷா குஜராத்தில் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தது, உத்தரப் பிரதேசத்தில் மக்களவைப் பொதுத் தேர்தலின்போது பிரச்சாரத்துக்குத் தலைமை ஏற்று நடத்தியது, கட்சிக்குத் தேசியத் தலைவராக இப்போது நடந்துகொள்வது என்று 3 வெவ்வேறு வகையிலான நடவடிக்கைகளையும் ஆராயும்போது, தனக்கிட்ட பணியின் முடிவு எப்படி என்பதில்தான் அவருக்கு அக்கறை இருக்கிறதே தவிர, அதை நிறைவேற்ற எந்த வழிமுறையைக் கையாள்வது என்பதில் கவலையே இல்லை என்று தெரிகிறது. எனவேதான் செய்தி ஊடகங்கள் அவருக்குத் தரும் மரியாதையும் பாராட்டும் நமக்குக் கவலையைத் தருகின்றன.

- ராமச்சந்திர குஹா, இந்தியா ஆஃப்டர் காந்தி உள்ளிட்ட வரலாற்று நூல்களின்ஆசிரியர்;

தமிழில்: சாரி

நன்றி: தி இந்து (தமிழ்) 28.1.2015)

Read more: http://viduthalai.in/page2/95262.html#ixzz3QbAj5KDG

தமிழ் ஓவியா said...

இங்கிலாந்தில் போர்க் கொடி!


மனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேச விசாரணையை புறக்கணித்த இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து எம்.பி.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அந்த நாட்டுக்கு அய்ரோப்பிய யூனியன் வர்த்தக சலுகை வழங்கக் கூடாது என அவர்கள் கூறி உள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டம் அடைந்தபோது லட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். உலகில் வேறெங்கும் நடந்திராத அளவில், மனித உரிமைகள் மீறப்பட்டன. இது தொடர்பாக அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த விசாரணையை இலங்கை அதிபர் இராஜபக்சே நிராகரித்து விட்டார். எந்த ஒத்துழைப்பும் வழங்க முடியாது என அவர் திட்டவட்டமாக கூறி விட்டார். இதன் காரணமாக இலங்கைக்கு வர்த்தக ரீதியில் எந்த சலுகையும் வழங்கக் கூடாது என அய்ரோப்பிய யூனியனிடம் இங்கிலாந்து போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற வெளியுறவு கமிட்டியின் தலைவரும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.யுமான ரிச்சர்ட் ஒட்டவே மற்றும் எம்.பி.க்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துகிற சர்வதேச விசாரணை குழுவுக்கு அனுமதி அளிக்க முடியாது என்று அந்த நாடு மறுத்து வருகிறது. இது தொடர்ந்தால் அந்த நாட்டுக்கு வழங்கி வருகிற வர்த்தக சலுகைகளை நீக்குவது குறித்து அய்ரோப்பிய யூனியனிடன் நமது அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் பொருளாதார தடை விதிப்பது, சர்வதேச விசாரணை குழுவை இலங்கையில் அனுமதிக்கச் செய்வது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளையும் பரிசீலிக்க நமது அரசு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page2/95263.html#ixzz3QbB3pxkp

தமிழ் ஓவியா said...

கணவனே கண் “கொன்ற’’ தெய்வம்!

இந்திய திருநாட்டில் ஒவ்வொரு அய்ந்து மணித்துளி களிலும் ஒரு திருமதி தன் கணவனாலோ அல்லது கணவரின் உறவுகளினாலோ வன்கொடுமைக்கு ஆளாக்கப் படுகிறார்.அந்தத் திருமதியோ புகலிடம் இன்றி எல்லாக் கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு கணவன் வீட்டிலேயே வாழும் நிலை.

2013 ஆம் ஆண்டு பி. பி. சி. மேற்கொண்ட களஆய்வுப் பணியின் முடிவுகள் மிகவும் துயரம் தருவன. எடுத்துக்காட் டாக இரண்டு திருமதிகளின் உண்மை நிகழ்வுகளை கேளுங்கள். என் பெயர் அதிதி.(பெயர் மாற்றப்பட்டுள்ளது)

என்னுடைய தோழி என்னுடைய வருங்காலக் கணவரை அறிமுகம் செய்து வைத்தார். தேர்வு செய்தவரும் அவரே. அவர் நல்ல அழகு.. பழகும் பண்பு மெச்சத்தக்கது. வியந்தேன், மகிழ்ந்தேன். திருமணம் கோலாகலமாக நடந்தது. உலகின் பல பகுதி களிலிருந்து உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். சில வாரங்கள் ஓடின! அதோ என் கணவர் வருகிறார். அறைக்கதவு மூடப்பட்டது.

தமிழ் ஓவியா said...

இசைப் பெட்டியின் ஒலி கூட்டப் படுகிறது. இரைச்சல் அறை முழுவதும் .அவர் இடுப்பிலிருந்த பெல்ட் அவர் கையில். விதி முறைகள் என்னிடம் சொல்லப்படுகின்றன. கத்தாதே, இந்த அறையை விட்டு எந்த சத்தமும் வெளியே போகக் கூடாது. மீறினால் இந்த பெல்ட்டுக்கு அதிக வேலை" அடுத்த அரை மணிநேரம் அந்த பெல்ட்டுக்கு நல்ல வேலை. என் உடலை பதம் பார்த்தது. போதாது என்று அவருடைய கையும் முட்டியும் என்னைத் தாக்கியது.. காது கூசும் அளவுக்கு தகாத வார்த்தைகளால் அர்ச்சனை. அவருடைய கொடுஞ்சினம், அப்பப்பா!

கணவருக்கு எல்லாப் பணிவிடைகளையும் மிகக் கவன மாக செய்தேன்.அவருடைய குறிக்கோளோ குறைகளைக் காண்பதிலேயே. வன்கொடுமை வளர்ந்ததே அன்றி எள்ளள வும் குறையவில்லை. அவர் வீட்டிற்குள் நுழையும்போதே 'திக் திக் 'திக் இதயம் பட படக்கும் இன்று என்ன ஆகுமோ என்ற அச்சம்.

என்னுடைய 19ஆம் வயதிலிருந்தே இந்த சவுக்கு அர்ச்சனை அரங்கேறுகிறது. ஆறு வருடங்களாக தொடர் கிறது. நரகத்திற்கு போனால் எனக்கு அது சொர்க்கமாக இருக்கும்.

நாடினேன் என் பெற்றோர்களுடைய உதவியை .உடற் காயத்தைக் காண்பித்தேன்.. ஒரு மகள் தன் தாயிடம் சொல்ல முடியாததைக் கூட விளம்பினேன். தாய் இரக்கப் பட்டாள்., ஊக்கமளிக்கவில்லை.. அந்தத் தாயோ இதெல்லாம் எப்படியம்மா உன்னால் என்னிடம் சொல்ல முடிகிறது ? கணவனிடமே செல், .உன் மணவாழ்வை நீ தான் சரி செய்ய வேண்டும்., சகித்துக் கொள், பொறுத்துக் கொள் , தாங்கிக் கொள் " தந்தையோ குடிகாரர், .தாயைக் கொடுமைப்படுத் துவார் இதுதான் இந்திய திருமதிகளின் வாழ்க்கை முறையோ என்றெண்ணினேன். நாளாவட்டத்தில் என் வாழ்க்கை சீர்மை அடையும் என்றெண்ணினேன். கானல் நீர்தான். கண்ணிலும் நீரில்லை. ஆண்டு 2012, ஏப்ரல் மாதம், நண்பர்கள் உதவியோடு தப்பினேன். புகலிடம் ஒரு அரசு சாரா அமைப்பில் - பணி புரிகிறேன். என் கடந்த கால கொடூர வாழ்க்கையைப் புறந்தள்ளிவிட்டேன்.

இதோ திருமதி சுனிதா (பெயர் மாற்றப் பட்டுள்ளது) அவர் சொல்கிறார். நான் வேலை பார்க்கிறேன், என் சொந்தக் காலில் நிற்கிறேன் திருமணமான மூன்றாவது நாளே என் கணவரின் முழங்கை என்னை பதம் பார்த்தது. அடியின் வேகத்தில் படுக்கையில் விழுந்தேன். குலுங்கிக் குலுங்கி இரவு முழுவதும் அழுதேன். ஆனால், ஒரு வார்த்தை "வருந் துகிறேன்" என்று, அவர் வாயிலிருந்து உதிரவில்லை.. என்னே ஒரு கொடூர நெஞ்சம்!

நான் வேலை பார்க்கிறேன்.,மணவிலக்கு பெறலாமா, மறுமணம் செய்து கொள்ளலாமா என்றெண்ணினேன். மண விலக்கு பெற்றவரை மறுமணம் செய்தவரை சமூகம் என்ன சொல்லுமோ, பரிகசிக்குமோ என்ற அச்சம்.

தமிழ் ஓவியா said...

கணவரை அறிமுகம் செய்த தோழியிடம் சென்றேன். கையை விரித்தாள், அறிவுரை அள்ளி வீசினாள்." மணமாகி விட்டாலே நீ கணவனிடம் தஞ்சமாகி விடவேண்டும்." நான் கேட்டேன் "அவர் என்னைக் கொன்றுவிட்டால்"

அவள் "அவரை கொலை யாளியாக்கிவிடு, மணவிலக்கை விட மரணமே மேல், நான் உன் னுடைய இடத்திலிருந்தால் மரணத்தை வரவேற்பேன்" என் றாள். எதற்கும் எல்லையுண் டல்லவா, நான்கே மாதத்தில் நான் என் பெற்றோரிடம் சரணடைந்தேன்.

அதிதி, சுனிதா போன்ற திருமதிகளுக்கு இந்திய நாட்டில் பஞ்சமா, என்ன?

பாலியல் வன்கொடுமைகளை விட திருமதிகளுக்கு இழைக் கப்படும் வன்முறைகள் மிக அதிகம். இந்திய திருநாட்டில் களஆய்வு புள்ளிவிவரங்களை சிறிதே பார்ப்போம்.

2013 ஆம் ஆண்டில் இந்தியப் பெண்களுக்கெதிரான வன் கொடுமைகள்- பதிவு செய்யப்பட்டவை.


பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் அதிகரித்தே வருகின்றன இந்திய அரசு 2005 ஆம் ஆண்டில் இயற்றிய சட்டத்தின் காரணமாகவே வன்கொடுமை நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.

பெண்கல்வி, வேலைவாய்ப்பு, விழிப்புணர்வு, மனவலிமை போன்றவைகளே குற்றங்களை வெளிக் கொணர்கின்றன, பதிவு செய்யப்படுகின்றன.பெரும் எண்ணிக்கை மறைந்தே கிடக்கின்றன" என்கிறார் வழக்கறிஞர் மோனிகா ஜோஷி...

இந்திய அரசு இயற்றிய 2005ஆம் ஆண்டு சட்டம் உரிமை யியல் சட்டமே தவிர, குற்றவியல் வழக்கின் கீழே வரா. உயிரற்ற சட்டமாக உள்ளது என்ற கருத்து நிலவுகிறது.

குடும்ப வன்முறை நிகழ்வுகள் இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமா? உலகெங்கும் நடைபெறுகின்றன, ஆனால் இந்தக் குற்றங்களுக்கெதிரான மயான அமைதி இந்தியாவின் கலாச் சாரத் தனிப்பண்பு. பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறை ஆணாதிக்க சமூகத்தில் ஊறிப் போன ஒன்று. ஆணுக்குப் பெண் அடிமை .பெண்ணுக்கெதிரான கொடுமை வழமை யானது .பெண்களை உதாசீனம் செய்., பெண்களை அடிப்பதில் தவறில்லை.

மேற்குறிப்பிட்ட கலாச்சார சீர்கேடு இந்திய மக்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. இதனைச் சீர் செய்ய பெண் கல்வி, மனவலிமை மற்றும் அரசு இயற்றிய சட்டங்களை நேர்மையாக செயல்படுத்துதல் வழியாகவே இயலும். (பி.பி.சி.யின் ஆய்வுக் கட்டுரையின் தழுவல்)
சி.நடராசன்

Read more: http://viduthalai.in/page3/95264.html#ixzz3QbBNXRyc

தமிழ் ஓவியா said...

எனை ஆட்கொண்ட அறிவு ஆசான்!


- மு.வி.சோமசுந்தரம்

எனை ஆட்கொண்ட அறிவு ஆசான்!


தந்தை பெரியார் அவர்கள் நிகழ்த்திய உரையை ஒலி நாடாவில் பதிவு செய்து, அந்த உரையை முழுமையாகத் தொடர்ந்து கேட்க 2 ஆண்டுகள், 5 மாதங்கள் 11 நாள்கள் தேவைப்படும் என்ற நல்ல கணக் கீட்டை பெரியார் திடல் வழங்கியுள்ளது. அவரின் உரை பகுத்தறிவுப் பயிர் தழைக்க ஏற்ற நிலமாக தமிழகத்தைப் பக்குவப் படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. மேலும், மனிதருக்கு மானமும், அறிவும் இன்றியமையாதவை என்று எண்ணிப் பார்க்கும் சூழ்நிலையையும் அவர் உரை ஏற்படுத்தியுள்ளது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியே.

பெரியாரின் பண்பு நலன்கள்

அவரின் உரையை விஞ்சும் வகையில் அவருடைய மனிதப் பண்புகள் - வாய்மை, துணிவு, ஒப்புரவறிதல், சிக்கனம், செயல் திறம், ஈகை போன்ற நற்பண்புகள் பலரை, அவரை முன் மாதிரியாக வைத்து வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ள துணை செய்துள்ளதைக் காண முடிகிறது.

27.10.2014 விடுதலை இதழில் பக்கம் 4இல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் உரையில் கண்ட செய்தியே இந்த கட்டுரையை எழுதத் தூண்டியது.

அய்யா ஆசிரியர் கூறுகிறார்: அய்யா அவர்கள் மிகவும் அடக்கமானவர் என்பது உங்களுக்குத் தெரியும் - ஆனால் மிகவும் சென்சிட்டிவ்வாக இருப்பார் என்று கூறி விட்டு அதனை மேலும் விளக்கும் வகையில் கூறுகிறார்: பெரியார் அவர்களின் உயர் பண்பு நலன் பளிச் சிடுவதைக் காண முடிகிறது.

சாதாரணமாக யாராவது பழம் வாங்கிக் கொடுத்தால் அய்யா வாங்கிக் கொள்வார். ஆனால் பரிந்துரை என்று வரும்பொழுது, ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றை வாங்கிக் கொண்டு வந்தார்கள் என்றால் அதனை அய்யா அவர்கள் வாங்கிக் கொள்ள மாட் டார்கள் மறுத்து விடுவார். தலைவன் எவ்வழியோ, தொண்டன் அவ்வழியே!

தமிழ் ஓவியா said...

வேலைக்கு விண்ணப்பம்

வள்ளுவர் கூறும் பயன் தூக்காராகப் பரிந்துரை செய்யும் தந்தை பெரியாரின் மாண்பினை நான் கண்டு நடுங்கியதையும் நெகிழ்ந்து போன அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் அமராவதி நகர் சைனிக் பள்ளியில் பணியில் சேர்ந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையில், ஈரோட்டில் உள்ள சிக்கைய நாயக்கர் கல்லூரியில் வரலாற் றுத் துறையில் பணியிடத்திற்கு விண்ணப் பம் வரவேற்கும் விளம்பரத்தைக் கண்டேன். ஈரோட்டின் மண் மணத்தை நுகர வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. பணிக்கான விண்ணப்பத்தைத் தயார் செய்து எடுத்துக் கொண்டு 7.6.1972 காலை 6.50க்கு ஈரோட்டுக்கு புறப்பட்டேன். ஈரோட்டில் பெரியார் வழியில் பெரியார் தொண்டராக வாழ்ந்து வருபவர் மானமிகு ஆ. குப்புசாமி அவர்கள் முனை வர் காளிமுத்து அவர்கள் முன்னிலையில், ஆ. அறிவுக்கன்பன் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டவர். கடந்த அய்ந் தாண்டுகளில் ஆலயம் அழிவது சாலவும் நன்று ஈரோட்டு பேரறிவாளர் பெரியார் என்ற புத்தகங்களை எழுதி வெளியிட் டார். எங்கள் குடும்ப நண்பர். அவருக்கு நான் அவர் வீட்டிற்கு வருவதாகத் தெரி வித்து விட்டேன். அவரின் யோசனையை கேட்க வருவதாகவும் கூறியிருந்தேன்.

ஈரோட்டில் நண்பரின் யோசனை

அவரும், என் முயற்சியை வரவேற்றார் சில யோசனைகளையும் கூறினார். அதில் முதன்மையானது, கல்லூரியில் பணியில் சேர்வதை உறுதிப்படுத்திக் கொள்ள தந்தை பெரியாரின் பரிந்துரைக் கடிதம் துணை செய்யும் என்ற கருத்தைக் கூறி னார். பெரியார் கொள்கைப் பற்றாளனாக இருந்தாலும் பெரியாரை அணுகிக் கேட்க முடியுமா, எப்படிச் செயல்படுவது என்று தெரியாமல் தயங்கினேன்.

பரிந்துரைக் கடிதம் கொடுக்கும் படி கேட்பது முறையாகுமா? என்று குழம்பிக் கொண்டிருந்தேன். நண்பர், ஒரு புத்தகம் காண்பித்து, 6.8.1928 இல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்கள், தன் மகனுக்கு பரிந்துரை கேட்டு கடிதம் எழுதியதைக் காட்டி முயற்சிக்கும்படி கூறினார். தயக்கத்தைவிட பயமே மேலிட்டது. பெரியார் எங்கு உள்ளார் என்று தெரிய வேண்டும். பெரியார் மன்னார்குடியில் இருப்பதாக நண்பர் செய்தி அறிந்து சொன்னார் புறப்படுங்கள் என்று நண்பர் முடுக்கி விட்டார். மன்னார்குடிக்கு நான் முன்னதாக சென்றில்லாத இடம் எனினும் அன்றைய மன நிலையில் புறப்பட்டேன் பேருந்து மூலமாக

காலை 11 மணிக்கு - _ கரூர்
மாலை 2_-45 - _ திருச்சி
மாலை 5_40 _ தஞ்சாவூர்
இரவு 7-_30 -_ ஒரத்தநாடு
இரவு 8.40 - _ மன்னார்குடி

பெரியார் எங்கு தங்கி இருக்கிறார் என்று விசாரித்தல் அரசு விருந்தினர் விடுதியில் தங்கியிருந்ததை அறிந்து அங்கு சென்றேன். இரவு 10.30 மணி அங்கு புலவர் இமயவரம்பன் அய்யா இருந்தார்கள் வந்த நோக்கத்தைக் கூறினேன். இரவு 11 மணிக்குப் பெரி யாரைப் பார்த்தேன். புலவர் அய்யா அறி முகப்படுத்தினார்கள். காலை சந்திக்கலாம் என்றார் புலவர். இரவு அங்கேயே தங்கி விட்டு, 6 மணிக்கு எழுந்து காத்தி ருந்தேன். தந்தை பெரியார் அவர்கள் 6.30க்கு எழுந்து விட்டார்கள். காலை 7.30க்கு அய்யாவை சந்தித்தோம். மகிழ்ச்சியுடன் பரிந்துரைக் கடிதம் கொடுத்தார். வாயடைத்து நின்றேன். நன்றி அய்யா, நன்றி அய்யா என்று கூறி நின்றேன் புலவர் அய்யா, அழைக்க வெளியில் வந்தோம்.

தமிழ் ஓவியா said...

வியப்பு, மகிழ்ச்சி, எதிர்பார்த்திராத உணர்ச்சி அய்யா அவர்கள் எழுதிக் கொண்டிருந்தபோது என் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்று தற்போது நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

பெரியாரின் பரிந்துரையும் புலவரின் கோபமும்

பரிந்துரைக் கடிதத்தைப் படித்த போது வறண்ட நிலத்துக்கு வானிருந்து அமிழ்தம் மொழிந்தது போல் உள்ளம் நன்றி பெருக்கில் மகிழ்ச்சி அடைந்தது. புலவர் அய்யாவிடம் கூறி விட்டு புறம்படும் முன் தயங்கி, தயங்கி அய்யா, கழகத்துக்கு நன்கொடையாக ரூ.50 அய் பெரியார் அய்யாவிடம் அளிக்க விரும் புகிறேன் என்று நான் கூறியதும் புலவர் முகம் கடுகடுத்து, வெறுப்பு தோன்ற அதெல்லாம் விரும்ப மாட்டார்கள். நீங்கள் பத்திரமாகச் சென்று அடுத்து செய்ய வேண்டியதைக் கவனியுங்கள் என்று கூற, நன்றி கூறி விடை பெற்றேன்.

பொன் விலங்கு

அய்யா பெரியார் அவர்கள் வழங்கிய பரிந்துரைக் கடிதம் என்னைப் பிணைத்த அன்புப் பொன் விலங்கு, கருணை முத்திரை பதித்த பட்டயம் என்று கருது கிறேன். அந்த பரிந்துரைக் கடிதமாவது: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார ஸ்தாபனம் (பதிவு செய்யப்பட்டது)

ஈ.வெ. ராமசாமி பெரியார் மாளிகை
திருச்சிராப்பள்ளி -_17
தேதி: 18.6.1972

அன்புள்ள அய்யா உயர்திருவாளர் சிக்கையா அவர்களுக்கு ஈ.வெ.ரா. வணக்கம்.
அய்யா நமது கல்லூரியில் லக்சரர் (சரித்திரம்) இடம் காலி என்று தெரி கிறது.

அப்படி இருக்குமானால் அவ் வேலையை அருள் கூர்ந்து, இத்துடன் வரும், நமக்கு மிகவும் வேண்டியவரான திரு எம்.வி. சோமசுந்தரம், எம்.ஏ. பி.எட். அவர்களுக்குத் தந்து உதவ வேண்டு கிறேன். மன்னிக்கவும்.
_- ராமசாமி

(குறிப்பு: மன்னார்குடி பயண நேரம் பரிந்துரைக் கடிதம் பற்றிய குறிப்புகள், என் 1972 ஆண்டு நாள் குறிப்பேட்டில் குறித்து வைத்ததிலிருந்து தரப்பட் டுள்ளது)

நன்றி மறவேல்

26.8.2014 விடுதலை இதழில் ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையில் ஒவ்வொரு நாளும் அமர்ந்து நீங்கள் யாருக்கெல்லாம் நன்றிக் கடன்பட்டுள்ளீரோ யார் யாரிடம் எவ்வகை உதவிகளைப் பெற்றுள்ளீர்களோ அந்தப் பட்டி யலைக் கைப்பட எழுதிடுங்கள் என்று அறிவிப்பாகக் கூறிய வகையில் தந்தை பெரியாருக்கு என் நன்றிக் கடனைக் கூறி என்றும் நினைவில் நிறுத்துவேன்

பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது (குறள் 103)

Read more: http://viduthalai.in/page4/95266.html#ixzz3QbBefd5o

தமிழ் ஓவியா said...

மதவெறி ஆட்சியை வேருடன் சாய்க்க வாரீர்!

பேராய மென்பது பார்ப்பன பனியாவைப்
பாதுகாக்கும் பிற்போக்குக் கட்சி
பார்ப்பன சனதாவோ ஆர்.எஸ்.எஸ். கோட்பாட்டை
அட்டியின்றிச் செயல்படுத்தும் நஞ்சு
இருபெரும் கட்சியின் ஆட்சியால் இல்லாமை
ஏழ்மை நிலவிடும் அவலம்
பெரும்முத லாளிய பன்னாட்டுப் பகாசுர
நிறுவனத்தை வளர்க்கும் கட்சிகளே!

பேராயம் மதச்சார்பின்மை பேசிடினும்
மதவெறியைக் கட்டுப் படுத்தவில்லை
அரசு சார்ந்து ஆர்.எஸ்.எஸ். ஊடுருவ
வாளா விருந்ததே காரணம்
நேரு காலத்திலே நேர்ந்த அவலத்தால்
பாபர் மசூதியை இடித்தனர்
பெரும்பான்மை மக்களைப் பின்னுக்குத் தள்ளி
சிறுபான்மைப் பார்ப்பனர் ஆட்சியே!

பார்ப்பன சனதாவின் கூட்டணி ஆட்சியில்
நிறைவேறா மறைமுகத் திட்டங்கள்
ஆர்.எஸ்.எஸ். வழிகாட்ட அறுதிப் பெரும்பான்மை
பெற்றுவிட்ட மோடியின் அரசு
வெளிப்படையாகவே செயல் படுத்த
ஆளுக்கொரு விதமாய்க் கூச்சலிட
நாளுக்கோர் அறிவிப்பை கூச்சநாச்ச மின்றி
மதவெறியால் கொக்கரிக் கின்றார்

இந்தித் திணிப்பு சமஸ்கிருத மாக்கல்
கல்வியில் காவிச் சாயமேற்ற
இந்நாட்டின் வரலாற்றைத் திரிக்க கொலைநூல்
கீதையை தேசிய நூலாக்க
இந்துவெறி தலைக்கேற இந்தியா இந்து
நாடாம் ஒரே பண்பாடாம்
மந்தை யாடுகள் மக்களென எண்ணி
மதவெறியால் மனப்பால் குடிக்கின்றார்!

காந்தியும் பட்டேலும் கூர்ச்சரத்தில் பிறந்தவர்
பட்டேலைத் தூக்கும் கமுக்கம்
காந்தியைத் தாழ்த்தி கோட்சேவை தேசப்
பக்தரென சரடுவிடு கின்றார்
தாயைக் கொன்றவனுக்கு ஊரிலே பாதியாம்
அதுபோல் கொடுவெறி யனுக்கு
வாய்த்து விட்ட ஆட்சியால் நாடொறும்
சிலைகோ யில் கட்டத் துடிக்கின்றார்!

மதவெறி பிடித்தால் மானுடம் கேடுறும்
மண்ணில் நிலவும் அவலம்
மதவெறியை மாய்த்தால் மானுடம் தழைக்கும்
மதவெறியை விலக்குவீர் நாட்டோரே
அய்யா பெரியார் அண்ணல் அம்பேத்கர்
கொள்கைக் கோட்பாட்டை ஏற்று
மய்யத்தை யாளும் மதவெறி ஆட்சியை
வேருடன் சாய்க்க வாரீரே!

- கவிஞர் இனியன், திருச்சி

Read more: http://viduthalai.in/page4/95265.html#ixzz3QbBoP6D3

தமிழ் ஓவியா said...

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் (1948 டிசம்பர் 10)

- இர.செங்கல்வராயன்

இரண்டாம் உலகப் போர் 1939 முதல் 1945 வரை 6 ஆண்டுகள் நடை பெற்றன. இந்தப்போர் ஜெர்மனியின் இட்லராலும், இத்தாலியின் முசோலினி யாலும் தொடங்கப்பட்டது. இவ்விரு கொடுங்கோலர்களும் நேச நாடுகளான அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டு நடவடிக்கையால் தோற்கடிக்கப்பட்டு 1945 ஜூலையில் போர் முடிந்து அனுமதி திரும்பியது. இந்தப்போரில் உலகம் முழு வதும் பல்வேறு நாடுகளில், பல்வேறு போர்க் களங்களில் 5 கோடி மக்கள் மாண்டனர்!

போரில் வெற்றி பெற்ற அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நேச நாடுகள் ஒன்றுகூடி எதிர்காலத்தில் இதைப்போன்ற போர் நிகழாமல் தடுக்க அய்க்கிய நாடுகள் சபையை நிறுவின. உலக நாடுகளிடையே ஒற்றுமையையும், நட் பையும் வளர்ப்பதும், மனித உரிமை களைப் பாதுகாத்தல் ஆகியவற்றைத் தனது முக்கிய இலட்சியமாகக் கொண்டு அய்.நா.சபை. செயல்பட்டு வருகின்றது.

1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் அய்.நா.வின் பொதுச்சபை அனைத் துலக மனித உரிமைகள் பற்றிய விதிகளை வெளியிட்டது. இப்பிரகடனம் மனித குலத்தின் வாழ்வியல், அரசியல், பொரு ளாதார உரிமைகளைத் தன்னுள் கொண்டு விளங்குகிறது. இப்பிரகடனம் அய்க்கிய நாடுகளின் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டு அனைத்து நாடுகளா லும் எவ்வகைக் கருத்து வேறுபாடுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்பிரகடனம் 30 விதிகளைக் கொண்டது. முதல் 21 விதிகள் வாழ்வியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பற்றியும், 6 விதிகள் பொரு ளாதார மற்றும் சமூக உரிமைகளையும் 3 விதிகள் பொதுவான கருத்துக்களைப் பற்றியும் கூறுகின்றன. இப்பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டில் 58 நாடுகள் இவ்வமைப்பில் அடங்கி இருந்தன.

1968 இல் அய்.நா.வின் பொதுச் செய லாளர் யு.தாண்ட், 43 நாடுகளின் அரசி யல் சட்ட அமைப்புகள் பிரகடனத்தின் முக்கிய இலட்சியங்களை உள்ளடக்கி உள்ளன என்ற கருத்தை வெளியிட்டார். இந்திய அரசியல் சட்டம் தனது குடி மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கி உள்ளது.

பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள 1) வாழ்வியல் உரிமைகள் 2) அரசியல் உரிமைகள் 3) பொருளாதார உரிமைகள் ஆகிய மூன்று தலைப்புகளில் வரும் உரிமைகளைப்பற்றி மட்டும் சுருக்கமாக விளக்கி இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.

வாழ்வியல் உரிமைகள்

1) வாழும் உரிமை: மனிதன் உயிர் வாழும் உரிமை என்பது மகத்தானது. வாழும் உரிமை என்பது மற்ற உரிமை களுக்கெல்லாம் அடிப்படையானதாகும். மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்ற நெறிமுறைகளின் படி வாழ்தலே வாழும் உரிமை ஆகும்.

2) வேலை செய்யும் உரிமை: ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் திறமைக்கேற்ப வேலையைத் தேடிக்கொள்ளும் உரிமை உண்டு.

3) சொத்துரிமை: சொத்துரிமை மற்றைய உரிமைகளுக்கெல்லாம் ஊற் றாகும்; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு என்பது வள்ளுவரின் பொய்யாமொழி.

4) கல்வி கற்கும் உரிமை, மனிதன் தன் உரிமைகளை அனுபவிக்க கல்வி அடிப்படை.த் தேவையாகிறது. எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும் கண் என்ப வாழும் உயிர்க்கு என்பது வள்ளுவரின் பொன்மொழி.

5) பேச்சுரிமை: மனிதன் உயிர்வாழ காற்று எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே மக்களாட்சி வலிவுடன் செயல் பட பேச்சுரிமை இன்றியமையாததாகும்.

6) பத்திரிக்கைச் சுதந்திரம்: பத்திரி கைகள் மக்களாட்சியின் நான்காவது தூண் என்று போற்றப்படுகிறது. குடி மக்களின் கருத்தை உருவாக்குவதற்கும், அரசின் குறைபாடுகளை எடுத்துக்கூறி அவற்றைக் களைவதற்கும் பத்திரிகைகள் சிறந்த தொண்டு புரிகின்றன.

7) சமய (மத) உரிமை: ஒவ்வொரு மனிதனுக்கும் தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றவும், ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாறிக்கொள்ளவும் உரிமை உண்டு. அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்திலுள்ள சாதிக்கொடுமைகள், தீண்டாமை, மூடநம்பிக்கைகள் இவற்றை வெறுத்து 14.10.1956 இல் நாகபுரியில் 4 இலட்சம் தொண்டர்களுடன் புத்த நெறியில் இணைந்தார். எம்மதத்திலும் சேராமல் ஒரு மனிதன் பகுத்தறிவு வாதியாக செயல்படவும் உரிமை உண்டு.

8) சங்கங்கள் அமைக்க உரிமை: கருத்துரிமை பெற்ற மனிதன் அதைச் செயல்படுத்த ஒத்த கருத்துடைய பலருடன் கூடி அளவளாவும் முறை தோன்றியது. தொழிலாளர் நலச்சங்கம், மனித உரிமைகள் மன்றம், ரோட்டரி சங்கம், தமிழ் வளர்ச்சி மன்றம் ஆகியவை இவ்வுரிமையில் அடங்கும்.

தமிழ் ஓவியா said...


9) கூட்டம் கூடும் உரிமை: மக்களாட் சியில் அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற அவ்வப்போது பொதுக் கூட்டங்கள் நடத்தித் தங்கள் கொள் கைகளை பொதுமக்களின் முன்னால் எடுத்து வைக்கும் உரிமை உண்டு. இதைப் போலவே தொழிலாளர் சங்கங்கள், சமூகத்தொண்டு மன்றங்கள் போன்றவை கூட்டங்கள் நடத்த உரிமை பெற் றுள்ளன.

10) இல்லற வாழ்வில் ஈடுபடும் உரிமை: ஒவ்வொரு மனிதனும் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் ஈடுபடு வதற்கும், குழந்தைச் செல்வங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் குடும்பத்தை பரா மரிப்பதற்கும் உரிமை பெற்றவனாவான்.

அரசியல் உரிமைகள்:

மக்களாட்சியில் அரசியல் உரிமைகள் என்பவை குடிமக்களுக்கு மிகவும் இன்றியமையாதவை. இந்திய அரசியல் சட்டத்தில் சில அரசியல் உரிமைகளை அதன் குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. அரசியல் உரிமைகள் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன.

1) தேர்தலில் வாக்களிக்கும் உரிமை: மக்களாட்சி என்பது மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் நடைபெறும் ஆட்சியாகும். ஆண், பெண் இரு பாலரும் 18 வயது அடைந்திருப்பின் அவர்கள் வாக்குரிமை பெற்றவராவர். இந்திய அரசு தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல்களை சுதந்திரமாக நடத்தி வருகிறது

2) தேர்தலில் போட்டியிடும் உரிமை: இந்தியாவில் 25 வயதுக்கு மேற்பட்டவர் களே தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றவர்கள், அரசு ஊதியம் பெறு பவர்கள், குற்றவாளிகள் என்று நீதிமன்றத் தால் தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் தேர் தலில் போட்டியிடத் தகுதி அற்றவர்கள்.

3) அரசு அலுவலகங்களில் பணி செய்யும் உரிமை: தகுதி உள்ள ஒவ்வொரு குடிமகனும் அரசு அலுவலகத்தில் பணி புரியும் உரிமை பெற்றவன் ஆகிறான்.

4) அரசை விமர்சிக்கும் உரிமை: அரசு தன் வாக்குறுதிகளை நிறைவேற்றாத போதும், மக்கள் நலனைப் புறக்கணிக்கும் போதும், லஞ்ச ஊழலில் ஈடுபடும் போதும் அரசைக் கண்டனம் செய்ய ஒவ் வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.

5) புகார் மனு தாக்கல் செய்யும் உரிமை: குடிமகனுடைய உரிமைகள் பறிக்கப்படும் போது அவன் நீதி மன்றத்தை அணுகித் தன் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளலாம்.

பொருளாதார உரிமைகள்:

இன்றைய மக்களாட்சிகள் அனைத் தும் குடிமக்களின் பொருளாதார உரிமைகளும், வாழ்வியல் உரிமைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. பொருளாதார உரிமைகள் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன.

1) வேலை செய்யும் உரிமை: இவ்வுரிமை அனைத்துப் பொருளாதார உரிமைகளுக்கும் அடிப்படை ஆகும். இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 41 வேலை செய்யும் உரிமையை வலியுறுத் துகிறது.

2) தகுந்த ஊதியம் பெறும் உரிமை: ஒவ்வொரு மனிதனும் வேலைக்கேற்ற ஊதியம் பெறும் உரிமை பெற்றுள்ளான். அனைவருக்கும் சமவேலை, சம ஊதியம் என்பது பொது நியதியாக அமைய வேண் டும்.

3) குறிப்பிட்ட நேரம் வேலை செய்யும் உரிமை: ஒவ்வொரு மனிதனும் குறிப் பிட்ட கால அளவே வேலை செய்ய முடியும். மனிதன் வேலை செய்யும் இடங்களில் அவன் வேலை செய்ய வேண்டிய நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

4) தொழிற் சாலைகளில் தன்னாட்சி செய்யும் உரிமை: உலகில் தொழிற் புரட்சிக்குப்பின் இவ்வுரிமை செயல்படத் தொடங்கியுள்ளது. தொழிற்சாலை நிருவாகத்தில் பங்கு பெறும் உரிமையும், லாபத்தில் பங்குபெறும் உரிமையும் ஒவ்வொருவரும் பெற்றுள்ளார்கள்.

5) பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள்: 1948 ஆம் ஆண்டு அனைத்துலக ஒப்பந்தம் பெண்கள் அதிக நேரம் இரவில் வேலை செய்வதைத் தடை செய்துள்ளது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

குழந்தைகளை கட்டாய வேலைக்கு உட்படுத்தக்கூடாது. அய்.நா.சபை வலியுறுத்தியுள்ள குழந்தைகளின் உரிமைகளை இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அமெரிக்க நாட்டின் மறைவு எய்திய குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட்டின் துணைவியார் ரூஸ்வெல்ட் இப்பிர கடனம் மனித இனத்தின் மகா சாசனம் என்றும் முதன் முதலாக அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பொதுவான விதிகள் அடங்கிய பிரகட னம் இதுவே என்றும் புகழ்ந்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page5/95267.html#ixzz3QbC4NHQp

தமிழ் ஓவியா said...

தெரிந்து கொள்ள வேண்டியவை

நீரை அதிக அளவு தேக்கி வைப்பதில் இந்தியாவிலேயே மிகப் பெரியது பரம்பிக்குளம் ஆழியாறு நீர்த் தேக்கமாகும். உலகிலுள்ள முதல் பத்து மிகப் பெரிய நீர்த் தேக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

தேன்கூட்டில் சேகரித்து வைக்கப்படும் தண்ணீர் அற்ற தேன், ஆயிரம் ஆண்டுகளானாலும் கெடாது.

ஒரு மனிதன் தூங்கும்போது 14 முறை புரண்டு படுக்கிறான்.

வாழ்நாள் முழுவதும் நாம் சாப்பிடும் சாப்பாட்டின் எடை நூறு யானைகளின் எடைக்குச் சமம்.

தீயில் எரிந்து போன எழுத்துக்களை அறிய அகச் சிவப்பு கதிர்களை பயன்படுத்துகின்றனர்.

எதிர்காலத்தில் மின்சாரம் வழங்கப் போவது நிலக்கரியோ அல்லது சுற்றுச்சூழலைப் பாதிக்கக் கூடிய பிற உலைகளோ இல்லை.

சூரிய ஒளிமூலம் எல்லா இடங்களிலும் பரவலாக மின்சாரம் எடுக்கப்படும்.

ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு அலுவலகமும் தங்களுக்குத் தேவையான சூரியஒளி மின்சாரத்தை தாங்களே தயாரித்துக் கொள்ளும் நிலை இருக்கும்.

இதனால் மின்தடை என்பது இருக்காது.

டயரை கண்டுபிடித்தவர் டன்லப் - 1833ஆம் ஆண்டு.

நீர்ச்சத்து நிறைந்தது தர்ப்பூசணிப் பழங்கள், கோடை காலத்துக்கு ஏற்றவை.

நாம் தர்ப்பூசணியின் சதைப் பற்றான பகுதியை மட்டும் சாப்பிட்டு விட்டு வெள்ளை நிறப் பகுதியை வீசி எறிந்து விடுகிறோம். இப்படி தூக்கி ஏறியப்படும் பகுதியில் இருந்துதான் சர்க்கரையும், எத்தனாலும் தயாரிக்கப்படுகிறது.

மரங்களுக்கு மனிதர்களைப் போல் வாழ்நாள் இவ்வளவு என்று கணக்கு கிடையாது.

கலிபோர்னியாவில் சில மரங்களுக்கு வயது 4 ஆயிரம் ஆண்டுகளாகும்.

(நூல் அறிவியல் செய்திகள் களஞ்சியம்)

தகவல்: க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page5/95268.html#ixzz3QbCCv1hG

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பண்படுத்திய இந்த பூமியில் இந்து அமைப்புகளின் எதிர்மறைக் கருத்துகளை பிரதமர் மறுக்காதது ஏன்?

கலைஞர்
கண்டனம்


சென்னை, பிப்.1_ தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் பண் படுத்தி வளர்த்து பாதுகாத்து வரும் இந்த பூமியில், இந்து அமைப்புகளின் எதிர் மறை கருத்துகளைப் பிரதமர் அவ்வப் போது மறுத்து, தெளிவுபடுத்தாதது ஏன்? எனவும், இவை ஆச்சரியத்தையும், அதிர்ச் சியையும் அளிப்பதாகவும் தி.மு.க. தலை வர் கலைஞர் கண்டனம் தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து கலைஞர் அவர்கள் வெளி யிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேள்வி:- இலங்கையில் தமிழர் ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறாரே?

கலைஞர்:- இலங்கையில் பொறுப் பேற்றிருக்கும் சிறீசேனாவின் புதிய அரசு, சிறுபான்மைத் தமிழினத்தைச் சேர்ந்த 62 வயதான திரு.கே.சிறீபவன் என்பவரை நாட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்திருப்பது வரவேற்றுப் பாராட் டப்பட வேண்டிய நடவடிக்கையாகும். 1991 ஆம் ஆண்டில் இலங்கையின் தலைமை நீதிபதியாக திரு. தம்பையா என்னும் தமிழர் இருந்திருக்கிறார். தற் போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண் டும் ஒரு தமிழர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது, தமிழினத்திற்கு இதுவரை இழைக்கப்பட்டிருக்கும் ஏராள மான அநீதிகளை ஒவ்வொன்றாகத் துடைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் ஒன்றாகவே உலகத் தமிழினத்தால் கருதப்படும். எனினும், இலங் கையில் புதிய அரசின் பல அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவதில் ஏற்படும் தாம தம் தவிர்க்கப்படவேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது.

கேள்வி:- இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும். சட் டப்படி இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்கவேண்டும் என்ற குரல் மீண்டும் கேட்கத் தொடங்கிவிட்டதே?

தமிழ் ஓவியா said...

மதவாதத்தை எதிர்த்திட திராவிடர் கழகத்தின்
முயற்சியை வரவேற்கிறோம்

தலைவர்கள்முழக்கம்

காந்தியார் நினைவு நாள் பொதுக் கூட்டத்தில்

திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற காந்தியார் நினைவு நாள் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையாற்றுகிறார்

திராவிடர் கழகத்தின் சார்பில் கோயம் புத்தூர் சிவானந்தா காலனியில் நேற்று (30.1.2015) மாலை ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த காந்தியார் நினைவு நாள் பொதுக் கூட்டம் கோவை வரலாற்றில் மட்டுமல்ல; தமிழ் நாட்டின் வரலாற்றில் என்றைக்கும் பேசப்படக் கூடிய வரலாற்றுக் கல்வெட்டாக ஒளிரப் போகிறது என்பது மட்டும் உண்மை நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

இந்தக் கூட்ட ஏற்பாட்டை பார்த்தவர்கள், கேட்டவர்கள் எல்லாம் உச்சி மோந்து பாராட்டும் அளவுக்கு விரிவான ஏற்பாடு களை நேர்த்தியாகச் செய்திருந்த கோவை மாவட்ட, மாநகர திராவிடர் கழகத் தோழர் களை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.

நகரின் எப்பக்கம் நோக்கினும் ஏதோ ஒரு வகையில் இந்த நிகழ்வுக்கான விளம் பரங்கள் சுண்டி இழுத்தன! பதாகைகள் பளிச்சிட்டன! திராவிடர் கழகக் கொடிகள் காற்றில் பறந்தாடி கருத்துக் கேட்க வாரீர் என்ற அழைப்பைக் கொடுத்துக் கொண் டிருந்தன. 30க்கு 30 அடி என்ற வகையில் பிரம் மாண்டமான மேடை - கண்ணுக்கு எட்டிய வரை மின் விளக்குகள் - ஆயிரக்கணக்கான நாற்காலி வசதிகள் என்றாலும் அவற்றையும் கடந்து கடல் போல் எம் தமிழர் ஆர்ப் பரித்துக் கூடிய அந்தக் கண் கொள்ளாக் காட்சி அது!

இது பெரியார் பூமி! காவிக் கூட்டமே, உமக்கு இங்கு என்ன வேலை? என்ற எச்சரிக்கை வினா விளக்கைத் தூக்கிப் பிடித்தது அந்த மக்கள் திரள்!

காந்தியார் நினைவு நாளை ஒரு பெரும் நிகழ்வாக நடத்துவதற்கு - திராவிடர் கழகத் திற்கு அப்படி என்ன அவசியம் என்ற வினா கூட சில இடங்களில் எழுப்பப்பட்டதாம்.

காரணம் இல்லாமலா கருஞ்சட்டைச் சேனை ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்ளும்?

காந்தியார் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கையின் சாரம் என்ன? பார்ப்பான் ஒருவன் சுட்டான் என்ற காரணத்திற்காக அந்த பார்ப்பனரைத் திட்டி விடுவதாலோ, அல்லது அந்தப் பார்ப்பன சமூகத்தையே அழித்துவிடுவதாலோ, எத் தகைய உருப்படியான பலனும் ஏற்பட்டு விடாது. நான் கூறுகிறேன் சுட்டது பார்ப் பான் அல்ல சுட்டது கைத்துப்பாக்கி அதற் காக பார்ப்பான் மீது கோபித்துக் கொள்வதா யிருந்தால் அந்த அளவுக்கேனும் அந்தப் பார்ப்பானின் கைக்கருவியாக இருந்த அந்தத் துப்பாக்கியின் மீது நாம் கோபித்துக் கொண்டாக வேண்டும். அதை முதலில் துண்டு துண்டாய் உடைத்து தூள் தூளாக ஆக்க வேண்டும். காந்தியாரைச் சுட்டுக் கொல்ல உதவி யாயிருந்த துப்பாக்கியின் மீது நாம் எவ் வளவு கோபப்படலாமோ, எவ்வளவு பழிக்கலாமோ, அந்த அளவுக்குத்தான் அதை உபயோகப்படுத்திய பார்ப்பான் மீதும் நாம் கோபித்துக் கொள்ள முடியும். பழிக்க முடியும். அவனைப் பழிப்பதாயிருந் தால் அதே அளவுக்கேனும் அவன் பின் னாடி இருந்துகொண்டு அவனுக்கு ஆதரவா யிருந்த மற்றவர்களையும் பழிக்க நாம் சித்தமாயிருக்கவேண்டும். அவனும் அந்த துப்பாக்கி போல் அவர்களுக்கு ஒரு கருவி யாகத்தான் அமைந்து விட்டான். மதத்தின் பேரால் உள்ள மூட நம்பிக் கைக் கருத்துகளும் ஜாதியின் பேரால் உள்ள ஆசார அநுஷ்டானங்களும் மற்றும் கடவுள், சாஸ்திரம் இவைகளின் பேரால் உள்ள அறியாமையும்தான் இம்மாதிரி காரியத்தைச் செய்யும்படி அவர்களைச் செய்துவிட்டது. இனியேனும் இப்படிப்பட்ட காரியம் நடவாமல் இருக்கவேண்டும். அவனைத் தூக்கில் போட்டு விடுவதாலோ, அல்லது அவன் சேர்ந்திருந்த ஸ்தாபனத் தைக் கலைத்துவிடுவதாலோ அல்லது அவனுக்கு ஆதரவாயிருந்த அத்தனை பேரையும் அழித்துவிடுவதாலோ இப்படிப் பட்ட காரியம் நின்று விடாது. இவை வெறும் தற்கால சாந்தியாகத்தான் இருக்க முடியும். இது ஒருபோதும் நிரந்தரமான சாந்தியாகி விடாது. இப்படிப்பட்ட கொலைகாரர்கள் தோன்ற எது ஆதாரமாயிருந்ததோ அதை அழித்து ஒழிக்க வேண்டும்.

ஒரு தனி மனிதன்மீதோ, அந்த மனிதன் சார்ந்திருக்கும் ஜாதியின் மீதோ, இனத்தின் மீதோ தந்தை பெரியாருக்குக் கோபமில்லை.

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள் மீது பெரியாருக்குத் துவேஷம் என்று நஞ்சு கக்கும் ஆசாமி கள் இந்த இடத்தில் தந்தை பெரியார் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்தகைய மனநோயாளியாக தந்தை பெரியார் இருந்திருப்பாரேயானால் காந்தி யார் படுகொலை செய்யப்பட்டபோது அந்தக் கொலையைச் செய்தவன் சார்ந்த இனத்தின்மீது வன்முறையை ஏவிவிட சரியான சந்தர்ப்பம் இது என்று தந்தை பெரியார் கருதியிருப்பாரே! அந்த வகையில் தந்தை பெரியார் கொஞ்சம் கண் அசைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

அதே நேரத்தில் மும்பையில் என்ன நடந்தது? அக்கிரகாரங்களுக்கு தீ வைக்கப் படவில்லையா? பார்ப்பனர்கள் தாக்கப்பட வில்லையா? அவ்வாறு தமிழ்நாட்டில் நடைபெறாமல் இருந்ததற்காக பார்ப்பனர்கள் காலா காலத்திற்கும் தந்தை பெரியார் அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளனர்.

தந்தை பெரியார் அன்று சொன்ன கருத்தினை மக்கள் முழுமையாக ஏற்று இருந்தால் இன்றைக்கு இந்து ராஜ்ஜியத்தை அமைப்போம் என்று சொல்லும் அளவுக்கு நாட்டில் தைரியம் ஏற்பட்டு இருக்குமா?
காந்தியாரைப் படுகொலை செய்த அந்தக் காவிப் பரம்பரையின் ஆட்சி இன் றைக்கு இந்தியாவில்தான் ஏற்பட்டு இருக் குமா?

தமிழ் ஓவியா said...

எந்த இந்து வெறி உலகம் போற்றும் உத்தமர் ஒருவரின் உயிரைக் குடித்ததோ, அந்த இந்துவின் பெயரால் ஓர் இராஜ் ஜியத்தை அமைப்போம் என்று கூறும் நிலை இன்று ஏற்பட்டுள்ளதே.


இன்னும் ஒருபடி மேலே சென்று, காந்தியாரை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு நாடு எங்கும் சிலை நிறுவப் போகிறோம் என்று தலை கொழுத்து வீதிக்கு வந்து விட்டனரே!

இந்தியா முழுமையும் வாழ்பவர்கள் யாராக இருந்தாலும் கிறித்தவர்கள், முசுலிம் களாக இருந்தாலும் அவர்களும் இந்துக்களே என்று மத்திய அரசுக்குச் சொந்தமான அகில இந்திய வானொலியில் அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர், மோகன்பகவத் அதிகாரப் பூர்வமாக அனல் பறக்கப் பேச முடிகிறது என்றால் நாடு எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாமே!

1948இல் தந்தை பெரியார் எச்சரித்தது - இன்று நடக்கிறதா இல்லையா!

அன்று தந்தை பெரியார் கொடுத்த அதே எச்சரிக்கையை அவரால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகம் - அதன் தன்னிகரற்ற தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மீண்டும் புதுப்பிப்பதற்கான - காலம் கருதிய ஏற்பாடு தான் கோவை - காந்தியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்.

நாட்டைக் கலவரப்படுத்தும் - சிறு பான்மை மக்களை அரச பயங்கரவாதமாக வேட்டையாடிக் கொன்று குவிக்கும் போக் கைத் தடுத்து நிறுத்த, இந்துத்துவாவாதிகள் விரிக்கும் வலையில் வீழாமல் நம் மக்களைத் தடுத்து நிறுத்திட, கருத்து ரீதியாக ஒன்று திரட்டும் ஒப்பற்ற ஏற்பாடே கோவை நிகழ்ச்சி.

ஒரு கால கட்டத்தில் சமூக நீதி அணி - அதற்கு எதிரான ஓர் அணி என்பதை இந்தி யத் துணைக் கண்டத்திற்கே இனம் கண்டு, அடையாளப்படுத்தி, அந்த அடிப்படையில் இந்தியத் துணைக் கண்டத்திற்கே கூட வழிகாட்டியாக இருந்தவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

அந்த அடிப்படையில் அரசியல் அணிகளும் உத்தி பிரிந்து இந்திய அரசின் அதிகாரப் பீடத்தில் சமூக நீதி அணி அமருவதற்கு அஸ்திவாரம் போட்டுக் கொடுத்தவர் தான் இந்தத் தலைவர்.

சமூக நீதிக் காவலராக விளங்கிய மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் பிரதமராக ஒளி விட்டு, மண்டல் குழுப் பரிந்துரைகளின் ஒன்றான வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வாழும் கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களுக் குக் கிடைக்கும் படியான ஏற்பாட்டை வரலாறு என்றென்றைக்கும் ஆனந்தமாகப் பாடிக் கொண்டு இருக்குமே!

தமிழ் ஓவியா said...

அதுவரை வி.பி.சிங் தலைமையிலான அரசை வெளியில் இருந்து கொண்டு ஆதரவுக் கரம் நீட்டிய பாரதிய ஜனதா கட்சி சமூக நீதித் திசையில் தன் பொற் பாதத்தை வி.பி. சிங் பதித்தார் என்றவுடன் ஆட்சியைக் கவிழ்த்த பிஜேபிதான் இன்றைக்கு மத்திய ஆட்சிக் கட்டிலில்

ஒரு பக்கம் சமூக நீதிக்கு எதிரான மனப் போக்கு - இன்னொரு பக்கத்தில் மதச் சார் பின்மையை மரணக் குழியில் தள்ளி, இந்து ராஜ்ஜியத்தை ஏற்படுத்தத் துடிக்கும் மதவெறிப் போக்கு!

இவற்றை எல்லாம் அடையாளம் காட்டுவதுதான் கோவை நிகழ்ச்சி! அன்றைக்கு சமூகநீதி அணி சமூகநீதிக்கு எதிரான அணி என்று அடையாளம் காட்டிய அதே தலைவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்தான். மதவாத அணி - மதவாத எதிர்ப்பு அணி (மதச் சார்பின்மை அணி!) என்பதைத் தமிழ்நாட் டுக்கு மட்டுமல்ல. இந்தியத் துணைக் கண்டத்திற்கே அடையாளம் காட்டியுள்ளார் - அதற்கு அடி எடுத்துக் கொடுக்கும் அருமையான கண் கொள்ளாக் காட்சியை நேற்று கோவை மாநகரில் காண முடிந்தது.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்தியத் தேசிய காங்கிரஸ் தலைவர் (தமிழ்நாடு) மானமிகு ஈ.வெ.கி.ச. இளங்கோவன், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் மானமிகு தோழர் தா. பாண்டியன், விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமா வளவன், தி.மு.க. கலை இலக்கிய பகுத் தறிவுப் பேரவையின் செயலாளர் மானமிகு பொள்ளாச்சி மா. உமாபதி ஆகியோர் பங்கேற்று, ஒளிவு மறைவின்றி மதவாத சக்திகளின் முதுகெலும்பை முறிக்கும் முழக்கத்தை மக்கள் முன் வைத்தனர்.

அந்த மேடையில் காட்சி அளித்த தலை வர்கள் - அவர்களைச் சார்ந்த அமைப்புகள் அம்மேடையில் கொடுத்த செய்தி

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல- இந்தியத் துணைக் கண்டத்திற்கே தேவையான மதவாத முறிப்பு மூலிகையே!

பொள்ளாச்சி மா. உமாபதி

தி.மு.க. - கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் செயலாளர் பொள்ளாச்சி மா. உமாபதி அவர்கள் தன் உரையில் பதித்த முத்திரை அடிகள்.

காந்தியார் ரகுபதி ராகவ ராஜாராம் என்று சொன்னது வரை பொறுத்துக் கொண்ட பார்ப்பன இந்துத்துவா சக்திகள்.

தமிழ் ஓவியா said...

ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று சொன்னவற்றை ஏற்க மறுத்து விட்டனர். தெய்வாதீனம் ஜகத் சர்வம் மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிராமணா தீனம்
பிராமணா மமதேவதா
என்பதுதான் அவர்களின் வேதம்.

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட் டது, கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட் டவர், மந்திரங்கள் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டவை. எனவே பிராமணர்களே நமது கடவுள் இப்படி சொல்லுகிற இந்துத் துவாவைத் தான் கொண்டு வர ஆசைப் படுகிறார்கள்.

உத்தமர் காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேக்குச் சிலை எழுப்பப் போகிறார்களாம். வைக்கட்டும்! மக்கள் காரித் துப்புவதற்கு ஒரு சிலை வேண்டாமா? என்று நறுக்கென்ற முத்தாய்ப்புடன் தன் உரையை முடித்தார்.

ஈ.வெ.கி.ச. இளங்கோவன்

இந்திய தேசிய காங்கிரஸ் (தமிழ்நாடு) தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர் களின் உரையில் சில முத்துக்கள்

அரசியல் பதவிகளில் சிக்காமல் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கும் சமூகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் திராவிடர் கழகம் - எனது பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொருத்தமான நேரத்தில் இப்படியொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்காக எனது நன்றி யையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்ற பீடிகையோடு தனது உரையைத் தொடங்கினார்.

அரசியல் ரீதியாக எங்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மக்களைப் பிளவுபடுத்தும் மத வாத சக்தியை எதிர்க்கும் போரில் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். இந்த மேடைக்கு வர வேண்டியவர்கள் இன்னும் இருக் கிறார்கள், அவர்களும் வர வேண்டும் என்ற அழைப்பையும் கொடுத்தார் காங்கிரஸ் தலைவர். காந்தியாரைக் கொன்ற காமராசரைக் கொலை செய்ய முயற்சித்த கூட்டம்தான் இன்றைக்கு அதிகார பீடத்தில் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது என்றும் எச்சரித்தார்.

இந்தி - சமஸ்கிருதத் திணிப்பை என் றைக்குமே ஏற்றுக் கொள்ளாத நாடு தமிழ் நாடு என்று சுட்டிக்காட்டிய அவர் - அரசாங் கத்தின் மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் கொள்கைக்கு எதிராக - அதிக குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுங்கள் என்று ஆட்சிக்கு அருகில் இருப்பவர்களே கூறுவது சரிதானா?

தமிழ்நாட்டு முதல் அமைச்சர் பதவி யிலிருந்து விலகி, காமராசர் அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக போனபோது, அவ்வாறு செய்வது தமிழ்நாட்டுக்கும், தங்களுக்கும் தற்கொலைக்கு ஒப்பாகும் என்று தந்தை பெரியார் காமராசர்

அவர்களுக்குத் தந்தி கொடுத்தார் - அது அப்படியே நடந்தும் விட்டது என்றும் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் உரைத்தார்.

தொல். திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமா வளவன் அவர்கள் தமது உரையில் பொறித் தவை சில:

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாருக்கும் காந்தியடிகளுக் கும், அண்ணல் அம்பேத்கருக்கும் காந்தி அடிகளுக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. அதே நேரத்தில் காந்திஅடிகளின் தூய்மையில் மதிப்பும் மரியாதையும் உண்டு.

தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் எதையும் காலத்தாற் செய்யக் கூடியவர் இப்பொழுதும் அதனைச் செய் துள்ளார்.
அரசமைப்புச் சடடத்தில் பீடிகையில் சொல்லப்பட்டுள்ள மதச் சார்பின்மை என்பதற்கு உண்மையான பொருள் என்ன? மதச் சார்பின்மை என்றால் அரசுக்கும், மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதாகும்.

ஆனால், மத்தியில் உள்ள மதவாத பிஜேபி அரசு மோடி அரசு - குடியரசு தின அரசு விளம்பரத்தில் மதச் சார்பின்மை என்ற சொல்லையும், சோசலிஸ்ட் என்ற சொல்லையும் நீக்கி விட்டு விளம்பரம் செய்துள்ளனர் என்றால் இதன் பொருள் என்ன?

மதச் சார்பின்மையைத் தூக்கி எறிந்து விட்டு, இந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போகிறோம் என்ற அறிவிப்புதானே இதன் பொருள்? என்ற அர்த்தமிக்க வினாவை எழுப்பினார் எழுச்சித் தமிழர்.

2023இல் இந்தியாவில் முசுலிம்களும், கிறித்தவர்களும் இருக்க முடியாது - கூடாது என்று சொல்கிறார்கள் என்றால் இவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய நாட்டில் பவுத்த விகாரங்களை யெல்லாம் இடித்து விட்டு, அவற்றை சைவ, வைணவக் கோயில்களாக மாற்றியவர்கள் இந்த ஆரியப் பார்ப்பனர்கள் என்னும் வரலாற்று உண்மையை பதிவு செய்தார்.

தமிழ் ஓவியா said...


எளிமை எளிமை என்று பேசி வருப வர்கள் யார்? அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்து கொண்ட குடியரசு நாள் விழாவில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர்

நரேந்திர மோடி அணிந்திருந்த சட்டையின் மதிப்பு பத்து லட்சம் ரூபாயாம்! இவர்தான் ஏழை இந்தியாவின் பிரதிநிதியா?
தனது பெயரை அந்த உடையில் பதித் துள்ளார். மன நோயாளிகள்தான் இவ்வாறு நடந்து கொள்ளவார்கள் என்று கூறினார் திருமா.

தோழர் தா. பாண்டியன்

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் அவர் கள் உரையில் அனல் பறந்தது. அந்த அனல் வீச்சில் ஒரு சில.

60 ஆண்டுகளுக்குமுன் உச்சநீதிமன் றத்தால் கொலைகாரன் என்று குற்றஞ் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட இந்து மதவெறியன் நாதுராம் கோட்சேக்கு இப்பொழுது சிலை வைக்கப் போகிறார்களாம். இந்தத் தைரியம் வந்தது எப்படி? நம்மை எல்லாம் என்னவாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்?

காசியில் மதன்மோகன் மாளவியா இந்துப் பல்கலைக் கழகத்தைத் திறந்தார். இந்து மன்னர்கள் எல்லாம் பணம் கொடுத் தார்கள். அவ்விழாவில் பார்வையாளராக இருந்த காந்தியார் அய்ந்து நிமிடம் பேசுவ தற்கு அனுமதிக்கப்பட்டார். அப்படிப் பேசும் போது நறுக்கென்று ஒன்றைக் குறிப்பிட்டார்.

இந்த மேடையில் வீற்றிருக்கும் மன்னர்களின் மகுடங்களில் ஜொலிக்கும் நகைகளை உருக்கி, அதைக் கொண்டு ஏழை எளிய மக்களுக்குப் பாட சாலை களைத் திறந்தால் என்ன என்று கேட்டார் காந்தியார். ஏழெட்டுப் பேர்கள் மேடையில் ஏறிக் காந்தியாரைத் தூக்கிச் சென்று விட்டனர்.

முதல் நாள் வரை கடவுள் இருக்கிறார் என்று சொன்ன காந்தியார், இந்த நிகழ்ச் சிக்குப் பின் உண்மைதான் - சத்தியம்தான் கடவுள் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார் என்ற வரலாற்றுத் தகவலைப் பதிவு செய்தார் தோழர் தா.பா.

இன்னும் என்ன நடக்கிறது. கோயிலைக் கட்டியவன் தமிழன் - எல்லாம் கட்டி முடிக்கப்பட்ட பின் நீ வெளியே போ - உள்ளே வராதே என்று சொல்லி விட்டானே பார்ப்பான் நூற்றுக்கு மூன்று பேர் உள்ளே - 97 பேர் வெளியே வா? என்ன நியாயம் இது.

இந்த 60 ஆண்டில் இடஒதுக்கீட்டின் காரணமாக எங்கள் மக்கள் படித்தார்கள். சந்திராயன் வரை எங்கள் தமிழர்கள் கண்டு பிடிக்கவில்லையா? எந்தப் பார்ப்பான் கண்டுபிடித்தான்? சொல்லுங்கள் பார்க்கலாம் என்று பளிச் பளிச் சென்று வாள் வீச்சாக அமைந்திருந்தது தோழர் தா.பா.வின் உரை.

திராவிடர் கழகம் இதுபோன்ற நிகழ்வு களைச் செய்வது புதிதல்ல; தொடர்ந்து இந்தப் பணியைச் செய்து கொண்டு தானிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page1/95303.html#ixzz3QbEbdaVk

தமிழ் ஓவியா said...

மக்கள் தொகைப் பெருக்கம் ஓர் எச்சரிக்கை!


இந்துத்துவா வாதிகள் இப்பொழுது புதிய முழக்கம் ஒன்றைக் கொடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்துக்களே! நமது மக்கள் தொகை குறைய ஆரம்பித்து விட்டது. முசுலிம் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஆபத்து! ஆபத்து!! இந்த நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைகளைச் சரமாரியாகப் பெற்றுத் தள்ளுங்கள்! என்பது தான் இவர்கள் முழக்கம். எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை கூடினால் என்ன, குறைந்தால் என்ன? இது ஒரு பிரச்சினையா?

மதம் வளர்ந்தால் மத வெறியும் சேர்ந்தே வளரப் போகிறது; அதன் விளைவு மோதல்கள் - உயிர்ப் பலிகள் - இவற்றின் காரணமாக சமுதாயத்தில் எல்லா வகையான நல்ல வளர்ச்சிகளும் கெட்டுக் குட்டிச்சுவராகி போகும். அவ் வளவு தானே!

அத்தகைய மதத்தின் வளர்ச்சியால் என்ன பயன்?

இன்னொரு வகையில் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டாமா? ஏற்கெனவே 120 கோடி மக்கள் தொகையால் மூச்சுத் திணறி கொண்டு இருக்கிறது இந்திய துணைக் கண்டம். இன்னும் பத்து ஆண்டுகளில் சீனாவையும் புறந்தள்ளி உலகின் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடாக இந்தியத் துணைக்கண்டம் இருக்கப் போகிறதாம்!

உலகநாடுகளின் வளர்ச்சி விகிதத்தில் இந்தியா 72ஆவது இடத்தில் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு ரூ.20 வருமானம் உள்ளவர்கள் இந்தியாவில் 77 சதம் இருக்கிறார்கள் என்கிறது அரசின் புள்ளி விவரம். மக்களின் அடிப்படைத் தேவைகள், இன்னும் பூர்த்தியாக வில்லை; பள்ளிகளில் கழிவறை வசதிகள் செய்வதில் கூட தன்னிறைவு இல்லை. மனிதன் மலத்தை இன்னொரு மனிதன் சுமக்கும் கேவலம் மற்றோர் புறத்தில்.

வேலையில்லாத் திண்டாட்டம் விலா எலும்பை முறிக்கிறது. உணவு உற்பத்தியிலும் பிரச்சினை, விவசாயி கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலநிலை!

இந்தநிலையில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது அரசின் கொள்கையும், திட்டமாகவும் இருந்து வருகிறது. ஆனால் ஆட்சியில் இருக்கும் கட்சிக்காரர்களே- அந்த கட்சியின் துணை அமைப்புகளே - ஆட்சியின் கொள்கைக்கு விரோதமாக இந்துக்களே! குழந்தைகளை பெற்றுத்தள்ளுங்கள் என்று கூசாமல் குரல் கொடுப்பது வெட்கக்கேடு அல்லவா. பொறுப்பற்ற தன்மை அல்லவா! திருவாரூரில் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இதனை சுட்டிக் காட்டி கண்டிக்கவும் செய்தாரே!

இந்தக் கண்ணோட்டத்தில் மற்ற மற்ற அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டிக்க வேண்டியது அவர் களின் பொறுப்பான கடமையாகும்.

இதில் என்ன கொடுமை என்றால் ஆளும் பிரதமரோ, கேபினட் அமைச்சர்களோ யாரும் இதனைக் கண்டு கொள்வதில்லை. காரணம் அவர்களும் இந்துத்துவாவாதி களாகவும், இந்து மக்களின் எண்ணிக்கை உயர வேண்டும் எனும் எண்ணம் உடையவர்களாகவும் இருப்பதுதான்.

ஓசூரில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற விசுவ இந்து பரிஷத் மாநாட்டில் கூட மகாபாரதத்தில் பாண்டவர்கள் போல அய்ந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றி உள்ளனரே!

ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை இருப்பதால் இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் இந்துமக்கள் சிறுபான்மையின மக்களாக மாறும் அவல நிலை ஏற்படும். எனவே, ஒரு குடும்பத்திற்கு பஞ்ச பாண்டவர்கள் போல அய்ந்து குழந்தைகளை இந்துக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதனால் முதியோர் இல்லங்கள் குறையும் என்பதுதான் அந்தத் தீர்மானம்.

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், காவியாளர்களும் இதனை வலியுறுத்தியே வருகிறார்கள்.

1. இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து மைனாரிட்டி ஆகி விடுவார்கள். அதை தடுக்க இந்துத் தம்பதிகள் கட்டாயம் 5 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அசோக் சிங்கால் (23.2.2014 - போபால்)

2. இந்துக்கள் 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இந்து நாடு உருவா க்க இது முக்கிய கடமையாகும் என்றார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் (10.10.2014, கொல்கத்தா)

3. இந்துக்களின் பலம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. ஆகவே இந்துக்கள் குறைந்தது அய்ந்து குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார் பிரவீன் தொகாடியா (10.11..2014 - உத்ரகாண்ட்)

4. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் லோக்சபா தொகுதி பா.ஜ., எம்.பி., சாக்ஷி சாமியார் மீரட்டில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசும் போது இந்துப் பெண்கள் அனை வரும் 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் (13.1.2015). 5. இந்து பெண்கள் அனைவரும் தலா 10 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தர்காண்ட் சங்கராச்சாரியார் வாசுதேவனாந்த் சரஸ்வதி ஆலோசனை தெரிவித்துள்ளார் (19.1.2015 - அலகாபாத்)

நாடு எங்கே செல்கிறது என்பதை பொறுப்பு வாய்ந்த குடிமக்களும் வாக்காளர்களும் எண்ணிப்பார்க்க வேண் டாமா? இதில் இன்னொரு பிரச்சினையும் முக்கியமானது. குழந் தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள், பெற்றுக் கொள் ளுங்கள் என்று கூச்சல் போடுகிறார்களே - அவர்களை நோக்கி மிக முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது.

குழந்தைகளைப் பெறுவது பெண்கள்தானே! குழந்தை களைப் பெற்றுக் கொண்டே இருப்பதுதான் அவர்கள் வேலையா? அவர்களின் நிலையை எண்ணிப் பார்த் திருந்தால் இப்படி சொல்வார்களா?

இந்துத்துவா வாதிகளுக்கும் பெண்ணுரிமைக்கும் என்ன உறவு? பெண்களை அடிமைப் பொருளாக கருது வதுதானே இந்து மதம் - அந்த கண்ணோட்டத்தில் இப்படி யெல்லாம் பேசித் திரிகிறார்கள் என்னும் போது இந்த இந்து மதம்தான் எவ்வளவு மோசமானது என்பதைப் பெண்கள் எண்ண வேண்டும். இந்த வகையில் பார்த்தால் கூட பெண்ணுரிமைக்கு எதிராக இந்த இந்துமதம் ஏன் வளர வேண்டும் என்றுதான் பெண்கள் நினைப்பார்கள் - நினைக்க வேண்டும்.

இதில் என்ன வேடிக்கை என்றால் குழந்தைப் பிறப்பு பற்றி சாமியார்கள் பேசுவதுதான். என்ன செய்வது. இந்து மத சாமியார்கள் ஆசிரமத்தை சோதனை செய்தால் அங்கே கர்ப்பத்தடைக் கருவிகள் தான் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன.

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று துல்லிய மாக கண்டுபிடிக்கக்கூடிய எந்திரங்களும் இருக்கின்றன.

அர்த்தமுள்ள இந்துமதத்தை நினைத்தால் குடலே புரட்டிக் கொண்டே வருகிறது - மகா வெட்கக்கேடு! வெட்கக்கேடு!!

வளர்க பகுத்தறிவு!!

Read more: http://viduthalai.in/page1/95296.html#ixzz3QbFGTnWL

தமிழ் ஓவியா said...

பகிஷ்கார யோசனை

காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தற்போது செய்தி ருக்கும் பகிஷ்கார யோசனை மிகவும் புத்திசாலித்தன முள்ளதாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கிறது. ரயில் போஸ்டாபீஸ், தந்தி முதலியவைகளையும் பகிஷ்காரம் செய்ய வேண்டுமாம். ஆனால் எந்த காங்கிரஸ்காரராவது இவைகளை நடைமுறையில் செய்து காட்ட முடியுமா? என்று கேட்கிறோம்.

இந்த பகிஷ்கார வியாக்கியானம் வெகு வேடிக்கையானது! ரயிலைப் பகிஷ்காரஞ் செய்வதென்றால் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வண்டிகளில் ஏறாமல் மூன்றாவது வகுப்பில்தான் ஏறவேண்டுமாம்! தபால் பகிஷ்காரம் என்றால் கவர் எழுதாமல் கார்டுகளிலேயே எழுத வேண்டுமாம்.

தந்தியைப் பகிஷ்கரிப்பது என்றால் கூடுமானவரையில் வார்த்தைகளைச் சுருக்கித் தந்தி கொடுக்க வேண்டுமாம்! இதுதான் இந்த பகிஷ்காரங் களுக்குக் காங்கிரஸ்காரர்கள் செய்யும் அருமையான அர்த்த புஷ்டியுள்ள விருத்தியுரை.

இந்த வியாக்கியானம் கூறவும், இந்தப் பகிஷ்காரப் பிரசாரஞ் செய்யவும் வேண்டிய அவசியமே இல்லை. பொருளாதார நெருக்கடியுள்ள தற்காலத்தில் இப்படித்தான் நடந்து தீருகின்றது. ஏழை மக்கள் ரயிலில் முதலாவது, இரண்டாவது வண்டிகளை எப்பொழுதும் திரும்பிப் பார்த்தே இருக்க மாட்டார்கள்.

அவர்கள் எழுதும் கடிதங் களும் குறைவு. அதுவும் கார்டு 9 பைசாவும், கவர் 1 அணா 3 பைசாவும் ஆனவுடன் நிச்சயமாகக் கார்டில்தான் எழுது வார்கள். தந்திக்கும் அவர்களுக்கும் வெகுதூரம் ஆகையால் இந்தப் பகிஷ்காரத்தைப் பற்றிப் பிரயோசன மில்லை.

உண்மையிலேயே பகிஷ்காரம் பண்ண வேண்டுமானால், வெள்ளைக்கார அரசாங்கத்திற்குச் சொந்த மானதையெல்லாம் நாம் உபயோகிக்கக் கூடாது என்று இருக்க வேண்டுமேயானால், முதலில் நாம் இந்த நாட்டி லேயே இருக்கக் கூடாது. ஏன்? இந்த நாட்டை இப்பொழுது வெள்ளைக்கார அரசாங்கந்தானே ஆண்டு கொண்டிருக்கின்றது? ஆகவே அவர் களுடைய ஆட்சிக்குள் அடங்கிய நாட்டில் இருப்பது பாவம் அல்லவா? ஆகையால் எல்லோரும் சமுத்திரத்தில் குடியேற வேண்டும்;

வெள்ளைக் காரர் ஆளும் பூமியைப் பகிஷ்காரம் பண்ண வேண்டும் என்று தீர்மானஞ் செய்வார்களானால் இன்னும் மெச்சத்தக்கதாக இருக்கும் என்று யோசனை கூறுகிறோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 10.01.1932

Read more: http://viduthalai.in/page1/95301.html#ixzz3QbFhSS37

தமிழ் ஓவியா said...

பொன்னம்பலனார் சுலோச்சனா


நமது இயக்கத்தின் உண்மை ஊழியர்களில் ஒருவராகிய தோழர் பொன்னம்பலனார் அவர்களைப் பற்றி நாம் அறிமுகம் பண்ணி வைக்க வேண்டியது அவசியமற்றதாகும். அவர் தமது வாழ்க்கையை நமது இயக்கத்திற்கே தத்தஞ் செய்தவர் என்பதையும்,

நமது இயக்கத்திற்குப் பணி செய்ய முற்பட்டது முதல் அவர் அடைந்த துன்பங்களும், நஷ்டங்களும், ஏமாற்றங் களும் பல என்பதையும் அனேகமாக நமது இயக்க அன்பர்கள் எல்லோரும் அறிவார்கள். என்றாலும் அவருடன் நெருங்கிப் பழகிய தோழர்கள் நன்றாய் அறிவார்கள் என்று கூறுதல் மிகையான கூற்றேயாகும்.

இவர் சென்ற சில தினங்களுக்குமுன், அதாவது 08-04-1932 முதல், தமது மனைவியார் திருமதி சுலோச்சனா அவர்களுக்கும் தமக்குமிருந்த மண ஒப்பந்தத்தை நீக்கிக் கொண்டார் என்று கேள்வி யுற்றவுடன் சிறிது சஞ்சலமடைந்தோம்.

திருமதி. சுலோச்சனா, தோழர் பொன்னம்பலனார் திருமணம் நிறைவேறி சரியாக இன்னும் ஓராண்டே முடியவில்லை. இதற்குள் மண ஒப்பந்தத்தை நீக்கிக்கொண்டு இருவரும் பிரிந்து விடுவதென்றால், அது கேட்போர்க்கு அதிலும், மண ஒப்பந்தத்தை நீக்கிக் கொண்டதன் உண்மையான காரணத்தை அறியாதவர் களுக்குக் கொஞ்சம் திடுக்கிடக் கூடிய செய்தியாகவே காணப்படும்.

நமது இயக்கத்தின் பகுத்தறிவுக்கிசைந்த கொள்கைகளில் கணவன் மனைவி களுக்குள் ஒற்றுமையோடு இருந்து வாழ்வதற்கு முடியாத மனப்பிணக்கு ஏற்பட்டு, அப்பிணக்கு நீங்குவதற்கு வழியில்லாமலிருந்தால் அப்பொழுது கணவனோ அல்லது மனைவியோ யார் விரும்பினாலும் தங்கள் மண ஒப்பந்தத்தை நீக்கிக் கொள்ளலாம் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கையாகும். ஆகையால் நமது தோழர் செய்தக் காரியம் எந்த வகையிலும் தவறான காரிய மல்ல என்பதே நமது அபிப்பிராயமாகும்.

தனது வாழ்க்கை முறைக்குத் திருமதி. சுலோச்சனா அவர்கள் ஒத்துவர முயலாததோடு, குணம், செயல் களில் வேறுபட்ட காரணத்தால் இருவர் மனராசியிலும் (இருவருடைய சம்மதத்தின் பேரிலும்) பல தோழர்கள் முன்பாகவும் தமது மண ஒப்பந்தத்தை நீக்கிக் கொண்டதாகத் தமது புதுவை முரசு பத்திரிகையில் தோழர் பொன்னம்பலனார் வெளியிட்டிருக்கிறார்.

தோழர் தமது மணத்தை நீக்கிக் கொண்டதற்குக் காட்டியுள்ள நீதியான காரணத்தின் உண்மை அறிகின்றவர்கள் எவரும் அவர் செய்கையைப் பற்றி ஒன்றும் குறை கூறமுடியாது என்பது திண்ணம். ஆனால் இவ்விஷயத்தை நமது எதிரிகள் ஒரு காரணமாக வைத்துக் கொண்டு நமது இயக்கத்தைப் பற்றியும் சுயமரியாதைக் கலப்பு மணங்களைப் பற்றியும் குறை கூறுவார் களென்பதில் அய்யமில்லை.

ஆனால் எதிரிகள் கூறும் குறை களைக் கண்டு இயக்க அபிமானிகள் யாரும் அஞ்சவேண்டிய அவசியமோ, கவலைப்படவேண்டிய அவசியமோ இல்லையென்று தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

சுயமரியாதை மணமோ, சுயமரியாதைக் கலப்பு மணமோ நடைபெறுவதற்கு முன் மணமகன், மணமகள் இருவரும் ஒவ்வொருவரிடமுள்ள மனப்போக்கை யும், குணங்களையும், பழக்க வழக்கங்களையும் நன்றாக ஆராய்ந்து தங் களுக்குள் ஒற்றுமையும் ஒருவரோடு ஒருவர் மனப்பிணக்கின்றி எப்பொழுதும் சேர்ந்து வாழ முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்ட பின்னர் மணம் புரிந்து கொள்ளுவதால் எக்காலத்திலும் மண விடுதலை செய்து கொள்ளுவதற்கு இடமிருக்காதென்பதில் அய்யமில்லை.

தோழர்கள் பொன்னம்பலனார், சுலோச்சனா மண ஒப்பந்தமும் இவ்வாறு ஆரம்பத்திலேயே கொஞ்சம் நன்றாய் ஆலோசனை செய்தபிறகு நடைபெற்றிருக்குமாயின் இப்பொழுது மண ஒப்பந்தத்தை நீக்கிக் கொள்ளும்படியான நிலைமை ஏற்பட்டிருக்க முடியாது என்பதே நமது உறுதியான எண்ணமாகும்.

தமிழ் ஓவியா said...

ஆகையால் நமது இயக்க அன்பர்களும், வாலிபர்களும், பெண்களும் இம்மண விடுதலையைக் கண்டு சுயமரியாதை மணம், கலப்பு மணம், விதவை மணம், விவாக விடுதலை செய்து கொண்டே பெண்ணையோ, ஆணையோ, மணஞ் செய்து கொள்ளுதல் ஆகிய காரியங்களில் ஊக்கம் குன்றாமலிருக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்.

இறுதியாகத் தோழர் பொன்னம்பலனார் அவர்கள் தமக்கும் திருமதி சுலோச்சனா அவர்களுக்குமுள்ள மண ஒப்பந்தத்தை நீக்கிக் கொண்ட செய்தி அவருடைய தோழர்கள் பலருக்கும் சிறிது மனத்துயரை உண்டாக்கக் கூடியதானாலும், அவருடைய உண்மையான வீரத்தன்மையைப் பாராட்டுமாறு செய்யாமலிருக்க முடியாது.

மணமக்கள் இருவருள் எப்பொழுது ஒருவர் வாழ்க்கைமுறைக்கு மற்றொருவர் ஒத்து நடக்கவில்லையோ, ஒருவர் குணத்தோடு மற்றொருவர் குணம் வேறு பட்டதாக ஆகிவிடுகின்றதோ, ஒருவர் செய்கையோடு மற்றொருவர் செய்கை முரண்பட்டு விடுகின்றதோ அப்பொழுது அவர்கள் பேருக்காக மட்டும் கணவன் மனனவிகளாக இருந்து வாழ்க்கை நடத்துவதில் என்ன பயனிருக்கிறது? அத்தகைய வாழ்க்கையைக் காட்டிலும் எவர் விரும்பினாலும் அவர் தமது மண ஒப்பந்தத்தை நீக்கிக் கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்த முற்படுவதில் சிறிதும் தவறோ, நீதியற்ற தன்மையோ இருப்பதாகப் பகுத்தறிவுடைய எவரும் கூறமாட்டார்கள்.

ஒரு சமயம் அவ்வையார் என்னும் தமிழ்ப் பெரும்புலவராகிய பெண்மணியார் தனது மனைவியின் குணம் பிடிக்காமல் இல்லற வாழ்க்கையில் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒருவனை நோக்கி பார்த்தாவுக்கேற்ற பதிவிரதையுண்டானால், எத்தாலும் கூடி இருக்கலாம் - சற்றேனும், ஏறு மாறாக இருப்பாளேயாமாயின் கூறாமல் சன்யாசங்கொள் என்று புத்தி கூறியதாக ஒரு பாடலும் வழங்குகின்றது.

இப்பாடலை உண்மையாக நம்புகின்ற வைதிகர்களும், பண்டிதர்களும்கூட இந்த மண ஒப்பந்த நீக்கத்தை ஒப்புக் கொள்ளுவார்கள் என்பதில் அய்யமில்லை. அவ்வையார் ஆண்களுக்கு மாத்திரம் இப்பாடலைக் கூறினார்; ஆனால் நமது இயக்கம் பெண்களுக்கும் இத்தகைய உரிமையைத் தாராளமாக வழங்குகின்றது என்ற செய்தியையும் இவ்வமயத்தில் நினைப்பூட்ட விரும்புகின்றோம்.

ஆகையால், தோழர் பொன்னம்பலனார் அவர்கள், தைரியமாகத்தனது மனச்சான்று விரும்பியபடி, உலகினர் அறியும் படி தமது மண ஒப்பந்தத்தை நீக்கிக் கொண்ட செயலை மீண்டும் நீதியான செயலென்றே, சந்தேகப்படுகின்றவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றோம் இது பற்றி நமது எதிரிகள் அவதூறு விளம்பரம் புரிவார்களானால், அதைக்கேட்டு ஏமாறாமலிருக்கு மாறும் எச்சரிக்கை செய்கின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 24.04.1932

Read more: http://viduthalai.in/page1/95302..html#ixzz3QbFukAd8

தமிழ் ஓவியா said...

தற்கொலை தெய்வீகமா? (தேசியத்துரோகி)


மசூலிப்பட்டிணத்தில், ஒரு போலீஸ் சேவகரின் மகளுக்குக் கல்யாணம் நடத்துவதாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததாம். கல்யாணத்திற்கு முதல் நாள் அந்த மணப்பெண், கல்யாண உடைகளை அணிந்து கொண்டு வீட்டின் கொல்லைப் புறத்தில் அடுக்கியிருந்த விறகில் ஏறித் தானே நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து விட்டாளாம்.

தமிழ் ஓவியா said...


இவ்வாறு இறந்ததற்குக் காரணம் அப்பெண், தன்னை தெய்வத் தன்மை உள்ளவள் என்றும், தான் மனிதனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள யோக்கியதை இல்லை என்றும் கூறியதாகவும் கடிதம் எழுதி வைத்திருந்த தாகவும் சொல்லப்படுகிறது.

அப்பெண் இறந்ததற்குத் தெய்வத் தன்மை கற்பிக்கப்பட்டவுடன், ஏராளமான ஜனங்கள் கூடி, முனிசிபல் அதிகாரிகளின் உத்தரவுப் பெற்று அப்பிணத்தை ஊர்வல மாகத் தூக்கிச் சென்று அடக்கஞ் செய்தார்களாம். இதன்பின் அப்பிணத்தைப் புதைத்த இடத்தில் கோயில் கட்டுவ தற்காக ஜில்லா முழுதும் பணம் வசூல் பண்ணுகிறார்களாம்.

நமது நாட்டு மக்களின் பயித்தியக்காரத்தனத்தைக் காட்டு வதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

வாங்கினகடனை திருப்பிக் கொடுக்க முடியாத காரணத் தால் மானமுள்ளவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிர் துறந்திருக்கிறார்கள். கௌரவமாக ஜீவனம் பண்ணிய வர்கள், கஷ்டப்பட வேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்த போது கஷ்டம் பொறுக்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்டி ருக்கிறார்கள் குடும்பச் சச்சரவு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டு மடிந்து போனவர்களில் ஆண் களும் உண்டு, பெண்களும் உண்டு.

மணமகன் பிடிக்காத காரணத்தால், மணமகள் தற்கொலை செய்து கொண்டு இறப்பதும், மணமகள் பிடிக்காத காரணத்தால் மணமகன் தற் கொலை செய்து கொண்டு சாவதும் உண்டு. இம்மாதிரி இதற்கு முன் நடை பெற்றும் இருக்கின்றது ஆகையால் தற்கொலை செய்து கொண்டு இறப்பதில் தெய்வத்தன்மை கற்பிப்பதும், அதை மக்கள் நம்பி ஏமாறுவதும் மூடத்தனமேயாகும்.

மசூலிப்பட்டணத்தில் இறந்து போன மணப்பெண் விஷய மும் வெறும் தற்கொலையே தவிர வேறு ஒன்றும் ஆச்சரிய முள்ளதல்ல வென்றே நாம் சொல்லுவோம். அந்தப் பெண், தனக்குக் குறிப்பிட்டிருந்த மாப்பிள்ளை பிடிக்காத காரணத்தால் இறந்திருக்க வேண்டும்; அல்லது புத்தி தடுமாற்றத்தால் இறந்திருக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த காரணமும் கூற முடியாது.

இவ்வாறு உண்மையைச் சிந்தித்து பார்க்கும் அறிவில்லாமல் தெய்வீகத் தன்மையை நம்பி ஒருவர் சென்ற வழியே மற்றவர்களும் ஆட்டு மந்தைப் போலச் செல்வதனால் உண்டாகும் பைத்திய காரத்தனத்தையும், பொருள் நஷ்டத்தையும் யாராவது கவனிக்கின்றார்களா? இந்தமாதிரியே செத்துப் போனவர்கள் சம்பந்தமாக உண்டான மூடநம்பிக் கைகள் காரணமாகத் தான் இன்று நமது நாட்டில் எண்ணற்ற கோயில்கள் பெருகியிருக்கின்றன.

கிராமங்களில் உள்ள பல வகைப்பட்ட கோயில்களெல்லாம் செத்துப் போனமனிதர்கள் பேரால் ஏற்பட்டவை என்பதை இன்றும் கிராமங்களில் உள்ள வர்கள் அந்தக் கோயில் சாமி களைப் பற்றிச் சொல்லும் கதை களால் அறியலாம். இப்பொழுது மசூலிப் பட்டினத்தில் நடந்த சம்பவமும் இதற்குத் தகுந்த உதாரணமாகும்.

பொது ஜனங் களிடம், இந்த மாதிரியான இயற்கை நிகழ்ச்சிகளை எல்லாம் தெய்வத்தன்மை என்று நம்புகின்ற குணம் இருக்கின்ற வரை யிலுமவர்கள் முன்னேற்ற மடையப் போவதில்லை. ஆகையால் பகுத்தறிவுடைய தோழர்கள் இது போன்ற விஷயங்கள் நேரும் போதெல்லாம் பொது ஜனங்களை எச்சரித்து ஏமாறாமலிருக்கும் படி செய்ய முன் வருமாறு வேண்டுகிறோம்.

குடிஅரசு - கட்டுரை - 05.06.1932

Read more: http://viduthalai.in/page1/95304.html#ixzz3QbG8gGP7

தமிழ் ஓவியா said...

அண்ணா


நூல் விமர்சனம் என்ற பகுதியில் இவ்வார கல்கி இதழில் (8.2.2015 பக்கம் 48) கருத்து ஒன்று கூறப்பட் டுள்ளது.

நா. முத்துநிலவன் கட் டுரை ஒன்றில்:

கம்பனைப் பற்றிய கட்டுரை ஒன்றில் வடமொழி பக்தி நூல்களை விடவும் தமிழ்நாட்டுப் பக்தி இயக்கங் களும், இலக்கியங்களும் ஜாதி உடைப்புக்கு ஆற்றிய பங்கை ஆய்வு செய்வது அவசியம்... என்று கூறுவதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். தீ பரவட்டும் என்று நெருப்பு வைத்து விட்டால் மட்டுமே அழிந்து நீறாகி விடக் கூடியவன் அல்லன் கம்பன் என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய செய்தி என்று புத்திசாலித் தனமாக ஏதோ சொல்லி விட்டதாக கல்கியில் குறிப் பிடப்பட்டுள்ளது.
சொல்லின் செல்வர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும், பசுமலை நாவலர் சோமசுந்தர பாரதி

யாருடனும், முறையே சென் னையிலும், சேலத்திலும் அண்ணா அவர்கள் கம்ப இராமாயணம், பெரிய புரா ணத்தை எதிர்த்து நடத்திய அந்த விவாதப் போரில் கம்ப இராமாயணமும், பெரிய புராணமும் கொளுத்தப்பட வேண்டியவையே என்று அண்ணா அவர்கள் ஆற்றிய உரை தீ பரவட்டும் என்ற நூலாக வெளி வந்துள்ளது. அதைத்தான் முத்துநிலவன் மறைமுகமாக அறிஞர் அண் ணாவைச் சாடியிருக்கிறார். வரலாறு தெரியாதவர்கள் என்றும் ஜாடை பேசுகிறார். கல்கிக்கு இது ஒரு மகிழ்ச்சி யான அம்சம்தானே!

அண்ணா அவர்களிடம் விவாதம் நடத்தியவர்களே தங்கள் தோல்வியை ஒரு வகையில் ஒப்புக் கொண்ட நிலையில், காலங் கடந்து கல்கியோ அவர் எடுத்துக் காட்டும் நூலாசிரியரோ கதறிப் பயனில்லை.

அண்ணாவுக்கு வரலாறு தெரியுமா தெரியாதா என் பதை அவரின் ஆரிய மாயை நூலைப் படித்து விட்டுப் பேச வேண்டும்.

இராமாயணம் என்பது ஆரியர் திராவிடர் போராட் டம் என்று வரலாற்று அறிஞர்கள் கூறியதுதான்! பி.டி. சீனிவாசய்யங்காரோ, விவேகானந்தரோ, திரா விடர் இயக்கத்தைச் சேர்ந் தவர்கள் அல்லர் - வரலாறு தெரியாதவர்களும் அல்லர். இவர்களே ஆரியர் - திரா விடர் போராட்டம் என்று தான் சொல்லுகிறார்கள்.

கம்பனாகிய திராவிடன் - தமிழன், நமது இனத்தை இழிவுபடுத்தும் ஒரு நூலைத் தமிழில் எழுதினானே என்ற சினம், சுயமரியாதை உள்ள வர்களுக்கு ஏற்படத்தான் செய்யும்; சுயமரியாதை உணர்வே தேவையில்லை என்று நினைத்தால் அவர் களிடம் விவாதம் செய்வதில் அர்த்தம் இல்லை.

வையகம் என்னை இகழுமோ, மாசு வந்து எய்துமோ? என்று கம்பன் தொடக்கத்திலேயே ஏன் எழுதினான்? அதில் ஒரு குற்ற உணர்வு மேலோங்கி நிற்பதற்குக் காரணம் என்ன? இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் வரலாறு தெரி யாதவர்கள் என்று பொத்தாம் பொதுவில் எழுதுவது எந்த வகையில் புத்திசாலித்தனம்?

ஒன்றை எதிர்ப்பதற்குக் காட்டக் கூடிய அடையா ளம்தான் தீ மூட்டுவதாகும்.

அந்நிய துணிகள் பகிஷ் காரம் என்று அந்தத் துணி களை எரிக்கவில்லையா? இராமாயணத்தை தந்தை பெரியார் எரித்தது - எரிக்கச் சொன்னது - அதன்மீது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற கோட்பாட் டின் அடிப்படையில்தானே!

ஆரிய - திராவிடப் போராட்டத்தில் கல்கி எந்தப் பக்கம் நின்று பேசும் என்று யாருக்குத்தான் தெரியாது!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/95464.html#ixzz3QgxBOuLJ

தமிழ் ஓவியா said...

காந்தியின் கொள்ளுப் பேரன் எச்சரிக்கை


இந்தூர், பிப்.3-_ மகாத் மாவை சுட்டுக்கொன்ற கோட்சே பெயரை தங்கள் இயக்க வளர்ச்சிக்காக சிலர் பயன்படுத்துவது வேதனைக் குரிய விஷயம் என்று காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி தெரி வித்துள்ளார். காந்தியைச் சுட்டுக்கொன்ற, நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்றும், அவருக்குக் கோவில் கட்டப்படும் என்றும் சில தலைவர்கள் கூறி வருகின்றனர். இது காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்திக்கு (வயது 55) மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது: காந்தியார் அவர் களைச் சுட்டுக் கொன்றவர் கோட்சே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது பெயரை தங்கள் இயக்க வளர்ச்சிக்காக சிலர் பயன் படுத்துவது வேதனைக்குரிய விஷயம். மகாத்மா அகிம்சை கருத்துகளை கொண்டிருந்தார். ஆனால் மற்றவர்கள் வெறுப்பு மற்றும் பகைமை எண்ணங் களை வளர்த்தனர். கோட்சேயை போற்றுவது, நாட்டின் வன்முறைக்கு வித்திடும் செயலாகும். இவ் வாறு துஷார் காந்தி கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/95470.html#ixzz3QgxKXDTu

தமிழ் ஓவியா said...

மாநில மொழிகளைக் காக்க ஒற்றுமையுடன் போராட வேண்டும் கர்நாடக முதல்வர் சித்தராமையா


மாநில மொழிகளைக் காக்க அனைவரும் ஒற்று மையாகப் போராட வேண்டும் என்று, கர் நாடக முதல்வர் சித்தர மையா கேட்டுக் கொண் டார்.

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், ஷாரவணபெலகோலாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய 81-ஆவது கன்னட சாகித்ய மாநாட் டைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

மத்திய அரசின் மொழிக் கொள்கையால், மாநில மொழிகளைக் காக்க வேண்டிய அவசி யம் ஏற்பட்டுள்ளது. தமது மாநில மொழிகளைக் காக்க பக்கத்து மாநிலங் களைச் சேர்ந்த அனை வரும் ஒற்றுமையாகப் போராட வேண்டும்.

கர்நாடகத்தில் கன்னட மொழிக்கு ஆபத்து ஏற்படும்போது அனைவரும் ஒன்றி ணைந்து போராடி வரு கிறோம். கன்னட மொழி யைக் காக்க, வரும் காலங் களிலும் இது தொடர வேண்டும்.

ஆங்கில மொழி மோகத் தால் தனியார் பள்ளிகள் கன்னட மொழியைப் புறக்கணித்து வருகின்றன. இதனால், நமது மண் ணிலேயே நமது தாய் மொழி அழியும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, நமது மொழியைக் காக்க வேண் டியது நமது அனைவரின் கடமை. இதுகுறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களை ஒன்றி ணைத்து பிரதமரைச் சந்திக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதுதொடர் பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத முடிவு செய்துள் ளேன்.

கன்னட மொழியைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை கட்டாயம் கன்னடம் கற்பிக்க வேண் டும் என சட்டத்திருத்தம் செய்யப்பட உள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் தாய்மொழியைக் கற்பிக்க தமிழகத்தின் மாதிரியில் சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுச் செயல் பட்டு வருகிறோம். கர் நாடகத்தில் அனைத்து மொழிகளைச் சேர்ந்த வர்களும் வாழ்ந்து வரு கின்றனர்.

ஆனால், ஆங்கில மொழி வேறு நாட்டிலி ருந்து இங்குவந்து குடி யேறி உள்ளது. அதனை தாய்மொழியாகக் கொண் டவர்கள் 0.5 சதம்கூட இருக்க மாட்டார்கள். என்றாலும், அனைவரும் ஆங்கில மோகம் கொண் டுள்ளது வேதனை அளிக் கிறது.

அனைத்து மாநிலங் களிலும் தங்கள் தாய் மொழியைக் கட்டாய மாக்க வேண்டும் என காங்கிரஸ் அரசு உறுதி யாக உள்ளது. கன்னட சாகித்ய மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மா னங்களைச் செயல்படுத்த அரசு உதவியாக இருக்கும் என்றார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கன் னட சாகித்ய மாநாட்டின் தலைவர் சித்தலிங்கையா உள்ளிட்டோர் உடனிருந் தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/95473.html#ixzz3QgxWnT6Q

தமிழ் ஓவியா said...

மனிதன்


மனிதன் ஒருபோதும் தனித்து வாழக்கூடியவன் அல்ல; அப்படி வாழவும் அவனால் முடியாது; அதனால்தான் கூட்டமாகக் கூடி வாழ்கிறான். சமுதாயத் திற்குத் தேவையான ஒவ்வொரு காரியத் தையும் ஒவ்வொருவன் செய்கிறான்.
(விடுதலை, 10.02.1960)

தமிழ் ஓவியா said...

அரபு மொழியில் திருக்குறள்

ராமநாதபுரம், பிப். 3_ திருக் குறளை அரபு மொழியில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் எம். முத்துவேல் தெரிவித்தார். ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி தமிழ் உயராய்வு மய்யமும், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்தும் செவ்விலக்கியக் கலைவடிவங்களும், மாற்றுக் கலை வடிவங்களும் என்பது குறித்த 10 நாள் பயிலரங்கம் கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் அ.ஜோசப்துரை தலைமை வகித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலையின் பதிவாளர் வெ. மாணிக்கவாசகம் பயிலரங்கை தொடக்கி வைத்தார். விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் எம். முத்துவேல் பேசியதாவது: 21-ஆம் நூற்றாண்டில் மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குகூட விடை தரக்கூடிய வகையில் திருக்குறள் அமைந்துள்ளது. திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் தனித்தனி ராகத்தில் இணையத்தில் பாடலாகக் கேட்கலாம். 1812இல் திருக்குறள் அச்சேறுவதற்கு முன்பாகவே 1730இல் குறள் அய்ரோப்பிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஓலைச்சுவடியிலிருக்கும்போதே வேறு மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டது திருக்குறள் ஒன்றாகத்தான் இருக்கும். தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. விரைவில் அரபு மொழியில் திருக்குறளை வெளியிட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதுவரை 80க்கும் மேற்பட்டோர் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழி பெயர்த்திருக்கின்றனர்.

இவற்றில் சிறந்த 18 மொழி பெயர்ப்புகளை தேர்வு செய்து தொகுத்து அதை நூலாக்கியிருக் கிறோம். கல்லூரிகளில் செம் மொழித் தமிழில் முதுகலை படிப்பு தொடங்கினால் ஒரு மாணவருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்குகிறோம். புத்தகங்கள் வாங்க ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி செய்கிறோம். முனைவர் பட்டம் பெற ஒரு மாணவருக்கு மாதம் ரூ.12 ஆயிரமும், முனைவர் பட்ட மேலாய்வுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.18 ஆயிரம் வீதம் 5 பேருக்கு நிதியுதவி செய்யப்படுகிறது என்றார் முத்துவேல்.

Read more: http://viduthalai.in/page-2/95482.html#ixzz3QgyB2Mqe

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை: அய்பாட், ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் குழந்தைகளின் மூளைத்திறன் வெகுவாக பாதிக்குமாம்

நியூயார்க், பிப். 3- அமெரிக்காவில் அய்பாட், ஆண்ட்ராய்ட் போன், டேப்லெட் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்களை உபயோகிக்கும் குழந்தைகளை வைத்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

பாஸ்டன் பல்கலைக்கழக குழந்தைகள் நல மருத்துவர் குழு நடத்திய இந்த ஆய்வில், குழந்தைப் பருவத்தின் ஆரம்ப கட்டங்களில், வழக்கமான நட்புணர்வு மற்றும் எதேச்சையான விளையாட்டுகளை தவிர்த்து இதுபோன்ற சாதனங்களின் அதீத பயன்பாடானது, பரிதாப உணர்ச்சி, சமூக சிந்தனை மற்றும் சிக்கலை தீர்க்கும் மூளையின் திறன் ஆகியவற்றில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.

மேலும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் குழந்தைகளின் மொழி மற்றும் சமூகத்திறன்கள் பாதிக்கப்படும் என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/95497.html#ixzz3Qh0nNgOI

தமிழ் ஓவியா said...

விடுதலை வாசகர்களுக்கு ஓர் இனிய அறிவிப்பு

நாட்டின் முக்கிய பிரச்சினைகளை விவாதிக்கும் வகையில், உரத்த சிந்தனையாக ஓர் புதிய பகுதி "கருத்துக்களம்" என்ற பொதுத் தலைப்பில் முக்கிய தலைப்புகளை அறிவிப்போம்.

100 - 150 சொற்களுக்கு மிகாமல் சுருங்க எழுதி விளங்க வைக்கும் வகையில், மின் அஞ்சல் மூலம் விடுதலை ஆசிரியருக்கு அனுப்பலாம்.

வெளிவரும் சிறப்பான கருத்துகளுக்கு தக்க பரிசுகள்- புத்தகங்களாக அளிக்கப்படும்.

திராவிடர் இயக்கத்தால் தமிழும், தமிழரும் வளர்ந்தன ரா? இல்லையா?

முதல் களம்

இரு கருத்துகளும் வரலாம். (Point - Counter Point வாதம் - எதிர்வாதம்போல் அமையும்)

அனுப்பப்படும் கருத்துகள் அத்தனையும் இடம்பெறும் என்று உறுதி அளிக்க இயலாது.

ஆனால், மாறுபட்ட கருத்துகளுக்கு இடம் நிச்சயம் உண்டு.

- ஆசிரியர், விடுதலைmail id : viduthalaimalar@gmail.com

Read more: http://viduthalai.in/e-paper/95501.html#ixzz3Qmq4hUPn

தமிழ் ஓவியா said...

வாய்க் கொழுப்பு நீள்கிறது

முஸ்லீம்கள் நாய்போல் பிள்ளைகளை பெற்றுத் தள்ளுகிறார்களாம் பி.ஜே.பி.யைச் சேர்ந்த பிராச்சி சாமியாரிணி பேச்சு

புதுடில்லி, பிப்.4_ விசுவ இந்து பரிசத் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய பிஜேபி தலைவர் களில் ஒருவரான பிராச்சி சாமியாரிணி லவ் ஜிகாத் செய்பவர்கள் நாய்களைப் போல் 40_50 பிள்ளைக ளைப் பெற்றுத்தள்ளுகி றார்கள். இந்துக்கள் 4 குழந் தைகளைப் பெறக் கூறி னால் சிலருக்கு கோபம் வரு கிறது என்று பேசினார். ஞாயிறன்று இரவு புதுடில்லியில் விசுவ இந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத் தில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் களுள் ஒருவரான சாமியா ரிணி பிராய்ச்சி என்பவர் பேசும்போது, இந்துக்கள் 4 குழந்தைகளைப் பெற வேண்டும் என்று நாட்டு நலனில் அக்கறை கொண்டு பேசிய நமது மூத்த சாதுக்கள் மற்றும் இந்து நலனுக்கு என்றென்றும் பாடுபடும் அரசியல் தலை வர்கள் கூறினால், தேச நலனுக்கு எதிரான சிலர் இந்தக் கூற்றைத் தவறாக சித்தரித்து மக்களிடையே பொய் பிரச்சாரம் செய் கின்றனர்.

இவர்கள் இந்து நலனுக்கு எதிரானவர்கள், இந்து ராஷ்டிரம் அமை வதற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள். இவர்க ளால் நமக்கு என்றென் றும் தொல்லைதான்.

ஆனால் லவ்ஜிகாத் (முஸ்லீம்கள்) செய்பவர் கள் 40 குழந்தைகளை நாய்களைப்போல் பெற்றுத் தள்ளுகின்றனர். இப்படி நாய்களைப் போல் குழந்தைப் பெறு வதை யாரும் கண்டு கொள்ளவில்லை; ஆனால், இந்து ராஷ்டிரத்தின் ஒற்றுமைக்கு 4 குழந்தை களைப் பெறக் கூறினால் அதை எதிர்க்கின்றனர். இனிவரும் காலங்களில் எந்த வித பொய்ப்பிரச் சாரங்களையும் இந்துமக் கள் கவனத்தில் கொள் ளக்கூடாது அவர்களது கடமை 4 நான்கு குழந் தைகளைப் பெறுவது மட் டுமே, இதை தொடர்ந்து செய்துவந்தால் விரைவில் நமது நாடு இந்து நாடாக மாறிவிடும், மேலும் 4 குழந்தைகளுக்குமேல் உள்ள இந்து குடும்பங் களுக்கு பாராட்டும், பணமும் வழங்கப்படும்.

இதன்மூலம் அனைத்து இந்துக்களும் 4 குழந்தை களுக்குமேல் பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற கடமையுணர்ச்சி வரும், இந்தியாவில் உள்ள முக் கிய முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் தங்கள் தாய் மதமான இந்து மதத் திற்குத் திரும்பவேண்டும் என்று பிராச்சி சாமியா ரிணி தமதுரையில் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/95505.html#ixzz3QmqCso9c

தமிழ் ஓவியா said...

நீதி போதனை வகுப்பா?

உச்சநீதிமன்றத்தில் டில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

சமூகத்தில் அறநெறிகள் குறைந்து வருகின்றன. பணம் சம்பாதிப்பது மட்டுமே சமூகத்தின் குறிக்கோளாக மாறி வருகிறது. இதுபோன்ற சமூகச் சீரழிவை மாற்றி அமைக்க வேண்டும். எனவே, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை நீதி போதனை வகுப்பைக் கட்டாய மாக்கி, மாணவர்களுக்கு அறநெறிகளைப் போதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த வழக்குரைஞர் கள், தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி சிக்ரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசும், மத்திய அரசின் கல்வி வாரியமும் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்பேகூட இந்தக் கருத்து உலா வந்து கொண்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது இது நல்லதுதானே - நல்லொழுக்கத்தை மாணவர்களாக இருக்கும் பருவத்திலிருந்தே பயிர் செய்தால்தானே அவர்களின் எதிர்காலம் ஒழுக்கம் உள்ளதாக, கட்டுப்பாடு உள்ளதாக இருக்கும் என்று சொல்லக்கூடும்.

நடைமுறையில் பார்க்கும்பொழுது - அதுவும் பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் - சங் பரிவார்க் கூட்டத்தின் அழுத்தத்தில் ஆட்சி நடை போடும் ஒரு சமயத்தில் நீதி போதனை என்பது இந்து மதப் பிரச்சாரப் புயலாகத்தான் வீசும்.

ஏற்கெனவே அரியானாவில் கீதை கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டு விட்டது; கல்வித் திட்டத்தையே இந்து மயமாக ஆக்க இருப்பதாகவும் அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நீதி போதனை என்றாலே இதிகாசக் கதைகள், புராணக் கதைகளைத்தான் மாணவர்களுக்குப் போதிப்பார்கள்; பல ஆண்டுகளுக்குமுன் உயர்நிலைப் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு (Moral Instruction) நடைபெற்றுக் கொண்டு தானிருந்தது. அப்பொழுதும் புராண அளப்புகள்தான்; இராமன் கதை, அரிச்சந்திரன் கதை, குரு பக்திக்கு எடுத்துக்காட்டு கட்டை விரலைக் காணிக்கையாக துரோணாச்சாரிக்குக் கொடுத்த ஏகவலைவன் கதை களைத்தான் கதைத்துக் கொண்டிருந்தனர்.

குசேலனுக்கு 27 குழந்தைகள் - அவன் கிருஷ்ணன்மீது கொண்ட ஆழமான பக்தியின் காரணமாக கிருஷ்ண பகவான் தங்கத்தையும், பொருளையும் வாரி வழங்கி செல்வந்தனாக ஆக்கினார். ஆகவே, மாணவர்களே, பகவான்மீது பக்தி செலுத்துங்கள் என்று சொல்லுவதனால் மாணவர்கள் சோம்பேறிகளாக ஆவதைத் தவிர வேறு வழியே இல்லை!

தந்தை பெரியார்தான் அறிவார்ந்த வினாவை எழுப்பினார்.

ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்தால், அவன் வருஷத்துக்கு ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால், இருபது வயதிலும், அதற்கு மேற்பட்ட வயதும் நிறைந்த குழந்தை கள் எட்டாவது இருக்கும்.

இந்தக் குழந்தைகளும் சோம் பேறித் தடியன்போல், ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாத மாமிசப் பிண்டங்களாக அல்லவா இருந்திருக்கக் கூடும்! இப்படி இருபது வயதுக்கு மேற்பட்டவர்களை வீட்டிலே வைத்துக்கொண்டு ஒருவன் பிச்சைக்குப் போயிருந்தால், அந்த நாட்டில் மற்றவர்களும் இதுபோல் இருந்திருக்க வேண்டாமா? அப்படி இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படி ஆகியிருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியர்களுக்குக் கடவுள் செல்வம் கொடுக்கலாமா? (பொன்னி பொங்கல் மலர், 1948)

என்று தந்தை பெரியார் எழுதியுள்ளாரே! இதில் ஒரு வரியை மறுக்க முடியுமா? மதம் காட்டும் மார்க்கம், புராணம் காட்டும் புத்தியுரை இதுதானா?

இவற்றையெல்லாம்தானே நீதி போதனை வகுப்பில் சொல்லிக் கொடுத்தார்கள்? இனிமேலும் சொல்லியும் கொடுப்பார்கள்.

கொள்கைக்காக நஞ்சுண்டு மறைந்த சாக்ரட்டீசை பற்றியா சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?

பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து என்று கூறிய தந்தை பெரியார் அவர்களின் கொள்கையைப் பற்றியா எடுத்துக் கூறுவார்கள்?

இப்பொழுதே ஆசிரியர் தினம் என்பதை குரு உத்சவ் என்று சொல்லி வியாசரின் பிறந்த நாளைத்தான் இன்றைய தினம் மத்தியில் ஆட்சியிலிருக்கும் வகையறாக்கள் கொண்டாடுகிறார்கள்.

நேருவின் பிறந்த நாளைக் குழந்தைகள் நாளாக ஏற்காமல், சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி, வாலிப வயதில் பெண்ணைத் திருடிய கிருஷ்ணன் பிறந்த நாளை(?) கொண்டாடக் கூடியவர்கள்.

இத்தகைய ஓர் ஆட்சியில் நீதி போதனை என்ற வகுப்பு எந்தக் கேவலத்திற்கு - பிற்போக்குத் தனத்திற்கு, மூட நம் பிக்கைக்கு இழுத்துப் போகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

நீதி போதனை வகுப்பில் மதச்சார்பின்மை என்னும் தத்துவத்தின் சீலத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

ராமராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் - இந்து ராஜ்ஜி யத்தைப் படைப்போம் என்று காட்டுக் கூச்சல் போடுவோர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய இந்தக் காலகட்டத் தில் நீதி போதனை வகுப்பு என்பது மாணவர்கள் மத்தியிலேயே மதவாதத்தைத் திணிக்கும் பேராபத்தில் கொண்டு போய் விடும் - எச்சரிக்கை!

எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/95509.html#ixzz3QmqsR4HW

தமிழ் ஓவியா said...

உரிமையைப் பெறும் வழி


நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின் மீதுதான் நாம் நம் உரிமைகளைப் பெற முடியும். - (விடுதலை, 30.5.1951)

Read more: http://viduthalai.in/page-2/95508.html#ixzz3Qmr1GkpT

தமிழ் ஓவியா said...

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மில்லியன் டாலர் குட்டு!

ஜனவரி 26 - குடியரசு நாளைக் கொண்டாடும் சாக்கில் பிரதமர் மோடி அவர்கள் தன்னை உலகத் தலைவர்களில் ஒருவராகக் காட்டிக் கொள்ளும் வகையில் ஈடுபட்டுள்ள பல்வேறு திட்டமிட்ட செயல்களில் ஒன்றாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களையே இவ்வாண்டு முக்கிய விருந்தினராக அழைத்துள்ளார்!

இதனால் ஏற்படும் பலன்களும் விளைவுகளும் பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியவையாகும்.ஏற்கெனவே திரு. மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது போட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில், ஒப்புக் கொள்ளப்பட்டாமல் இழுபறியாக இருந்த சில பிரிவுகளும் நம் மக்களுக்குக் கேடு_பாதகம் விளைவிக்கக்கூடிய பிரிவுகளும் சேர்த்து இப்போது பிரதமர் மோடி அரசால் கையொப்பமிடப்பட்டு, முழுக்க அமெரிக்காவின் பக்கமே சாய்ந்துவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

அணு உலையினால் ஏற்படும் ஆபத்துகளுக்கு அமெரிக்கா (வெளிநாடு) எவ்விதத்திலும் பொறுப்பேற்காது; நஷ்டஈடு தராது. மாறாக, அணு உலையை ஏற்படுத்தும் நாடே அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்ற பிரிவை ஒப்புக் கொண்டிருப்பது, நமது முழு சரணாகதியைத்தான் காட்டும். பொதுவாக இதுமாதிரி ஒப்பந்தங்கள் இரு சாராருக்கும் வெற்றி, யாருக்கும் தோல்வி இல்லை என்ற (Win Win Situation) அடிப்படையில் அமைவதே விரும்பத்தக்கது!

அமெரிக்க முதலீடு என்பதால் அதிக லாபம் யாருக்கு? உள்நாட்டுத் தொழில்நுட்ப அறிவு (Technical Know) எந்த அளவு வளரும்; பொறுத்திருந்து பார்த்தால் புரியும்.

பொதுவாக இவ்வாட்சி ஒரு பக்கம் மதவாதம்; மற்றொரு பக்கம் கார்ப்பரேட் முதலாளிகளின் ஏகபோகப் பண்ணையம் இவற்றின் நிலைக்களனாக உள்ளது என்பன மறுக்க முடியாதவை.

அதானிகள், அம்பானிகள், டாட்டா, பிர்லாக்கள் போன்ற கொள்ளை லாபக் குபேரர்கள் கொழுக்கவும், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம், நிலங்களைக்கூட அடிமாட்டு விலைக்கு விற்று வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொள்ளும் நிலைதான்; உர மானியம் ரத்து, உணவுக்கான சலுகைகள் ரத்து போன்றவை இதன் உண்மை நிறத்தைக் காட்டும்!

நமது விருந்தினராக வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா பேசுகையில், இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். மதவெறியைப் பளிச்சென்று சுட்டிக்காட்டிய-தோடு, சரியான எச்சரிக்கையையும் தந்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சி எப்போது வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்றால், அது மதவாதத்தை விட்டுவிட்டு மதத்தின் பெயரால் பிரிவினைவாதச் செயல்களை நடத்தாமல் இருக்கும்பொழுதுதான் இந்த நாட்டின் வளர்ச்சி சிறப்பாக அமையும். அதுவரை நாட்டின் வளர்ச்சி என்பது கேள்விக்-குறியாகத்தான் இருக்கும்.

இந்திய அரசியல் சட்டத்தின் (அடிப்படை உரிமை) 25ஆவது பிரிவு அனைத்து மக்களும் சமம் என்று குறிப்பிடுகிறது. அனைவருக்கும் _ தேர்வு செய்வதிலிருந்து, சுதந்திரமாய் பேசுவதற்கும், பின்பற்றுவதற்கும், பரப்புவதற்கும் உரிமை உள்ளது. நமது இரண்டு நாடுகளிலும், அனைத்து நாடுகளிலும் மதச் சுதந்திரத்தைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் உள்ளது.

இப்படி பிரதமர் மோடிக்கும், ஆட்சியிலிருக்கும் அவரது கட்சியினருக்கும் பராக் ஒபாமா இந்திய அரசியல் சட்டப் பிரிவு பற்றி பாடம் எடுத்துள்ளார்!

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்கள் முதல் மற்ற மதவாத அடிப்படையாளர்களும் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். இது டாலர் தேசத்திலிருந்து வந்த மில்லியன் டாலர் குட்டு!

மோதிரக் கையால் குட்டுப்படுவதைவிட டாலர் கையால் குட்டுப்படுவதைப் பெருமையாகக் கருதுவார்களோ? இதைத்தானே நாம் அன்றும் இன்றும் கூறி வருகிறோம்.

- கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

இரோம் சர்மிளா : விடுதலையும் தொடரும் கைதுகளும்


இராணுவச் சட்டங்கள்

இரோம் சர்மிளா :

விடுதலையும் தொடரும் கைதுகளும்


'சர்மிளா தற்கொலைக்கு முயலும் குற்றவாளி', அவரைக் காண இம்பால் நீதிமன்றத்தை அணுகியபோது நீதிபதி அனுமதி மறுத்துக் கூறியவை இவை. ஆனால் அதே நீதிமன்றம் 'சர்மிளா குற்றமற்றவர், அவரது போராட்டம் சட்டப்பூர்வமானது என தீர்ப்பளித்து. ஜனவரி 22ஆம் தேதி விடுதலை செய்தது.

ஆனால் அடுத்த நாள் இரவே மருத்துவ உதவி தரப்படுகிறது என மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த விடுதலையும் தொடரும் கைதுகளும் சர்மிளாவின்மேல் நிகழ்த்தப்படுவதல்ல, அவர் வைக்கும் கோரிக்கையின்மேல் நிகழ்த்தப்படுபவை.

மணிப்பூரில் நடைமுறையில் உள்ள ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதுவே அந்தக் கோரிக்கை. அதற்காகவே கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார்.

இந்தச் சட்டத்தை இங்கிலாந்து காலனிய காலத்தில் எதிர்த்த அதே காங்கிரஸ்தான், இந்திய விடுதலைக்குப் பிறகு இங்கு நடைமுறைப்படுத்தியது.

இந்திய விடுதலைக்குப் பிறகான அரை நூற்றாண்டு காலம் கடந்தும் நடைமுறையில் உள்ள ராணுவ சிறப்பதிகாரச் சட்டம், மத்தியில் எந்த அரசாங்கம் மாறினாலும் மாறாத ஒன்று. அந்தச் சட்டம் ஏற்படுத்திய வன்முறையே எனது உண்ணாவிரதத்துக்குக் காரணம் என்கிறார் சர்மிளா.

அப்படி என்ன வன்முறை? நவம்பர் 2, 2002, மாலோம் என்ற பகுதியில் காலைப் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த 10 பேர் எவ்வித எச்சரிக்கையுமின்றி அசாம் ரைபில்ஸ் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதில் ஓர் இளைஞர் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் வீரதீர விருது பெற்றவர். இந்தச் சட்டத்துக்குக் கொடுக்கப்படும் கேள்விகள் கேட்கமுடியாத உட்சபட்ச அதிகாரத்தை எதிர்த்து அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை சர்மிளா தொடர்கிறார்.

ஏன் இந்தச் சட்டம்? 1948இல் இந்தியாவால் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்ட மணிப்பூரிலும் இன்னும் பிற வடகிழக்குப் பகுதிகளிலும் இந்திய _- காலனித்துவ ஆட்சி (Indian Colonial Rule) என்று நிலவும் அரசியல் சூழலை இன்றளவும் இந்திய அரசு ஏற்கத் தயாராக இல்லை என்பதால் இங்கு ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை வைத்திருக்க வேண்டிய நிலை இந்திய அரசுக்கு உள்ளது. ஆனால் இந்திய அரசு, ஆயுத இயக்கங்கள் ஊடுருவலைத் தடுக்கவே இச்சட்டம் என்கிறது.

தற்கொலை குற்றமல்ல

அண்மையில் உச்ச நீதிமன்றம் அய். பி. சி. 309, அதாவது தற்கொலைக்கு முயல்வது குற்றமாகாது என்றது. இப்போது சர்மிளாவுக்குக் கொடுக்கப்பட்ட விடுதலை, அய். பி. சி. 309 விலக்கப்பட்ட அடிப்படையில்தான் என எண்ணப்பட்டது.

தற்கொலைக்கு முயலும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சட்ட ஆணையகம், தற்கொலைக்கு முயல்வோரைத் தண்டிப்பது சரியாகாது. அவர்களுக்கு அதிலிருந்து மீண்டும் உளவியல் சார்ந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றது.

சட்ட ஆணையகம் கருத்தின் அடிப்படையில், இங்கு சிகிச்சையானது ராணுவ சிறப்பதிகாரச் சட்டக் கொள்கை மீதே தேவையாக உள்ளது.

- மகா.தமிழ்ப் பிரபாகரன்

(கட்டுரையாளர் நியூஸ்7 தொலைக்காட்சியில் தமிழ் செய்தியாளராகப் பணியாற்றுபவர். இரோம் ஷர்மிளா குறித்து அத்தொலைக்காட்சியில் சிறப்புப் பதிவினைச் செய்தவர்.)

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வழக்குகளை விசாரிக்கும் ஆங்கிலேய நீதிபதிகளுக்கு உதவியாக சாஸ்திரங்களை எடுத்துச் சொல்லும் பொறுப்பில் பார்ப்பனர்களே இருந்தார்கள் என்பதும், அந்தப் பார்ப்பனர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப கருத்துகளைக் கூறி வந்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

எதுக்காவது போராடுவோம்?"

போனவாரம் மாதொருபாகன் மனதைப் புண்படுத்துகிறது என்று போராடியவர்கள், இப்போது நயன்தாரா பீர் வாங்குவது போல் நடிக்கக்கூடாது என்று போராட்ட அறிவிப்பு விடுத்திருக்கிறார்கள். எப்படியாவது செய்திகளில் இடம்பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் எதற்குப் போராட்டம் நடத்துவது என்று தெரியாமல் எல்லாவற்றுக்கும் போராட்ட அறிவிப்பு விடுக்கிறார்கள் இந்துத்துவ காமெடியினர். ஏதோ நம்மால ஆன உதவியையும் செய்யலாமே! எதற்கெல்லாம் போராட்டம், எப்படியெல்லாம் நடத்தலாம் என்பதை நம் உண்மை வாசகர்கள் எழுதி அனுப்பலாம். சிறந்த போராட்டத்திற்குப் பரிசு உண்டு. வரும் பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் உங்கள் ஆலோசனைகளை அனுப்பிவையுங்கள்.

எதுக்காவது போராடுவோம்?

உண்மை

பெரியார் திடல், 84/1, (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7

unmaionline@gmail.com

தமிழ் ஓவியா said...

கருத்து


மார்க்சிஸ்ட் தலைவர்கள் பலர் தற்போது சிந்தனை ரீதியாக முதலாளித்துவ ஆதரவாளர்களாகி-விட்டனர். சமூக, பொருளாதாரக் கொள்கையின்படி நான் இன்னும் ஒரு மார்க்சிஸ்ட்தான். முதலாளித்துவ நாடுகளில் ஏழை, பணக்காரர்கள் இடையேயான வித்தியாசம் அதிகரித்துள்ளது. சரிசமமான பகிர்வுக்குத்தான் மார்க்சிசத்தில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

- தலாய் லாமா, புத்த மதத் தலைவர், திபெத்.

இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு எட்டு விபத்துகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் நடைபெறும் விபத்துகளில் 15 விழுக்காடு தமிழகத்தில் நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் இரண்டு பேர் செஞ்சிலுவைச் சங்கம் அல்லது அவசர ஊர்தி சேவை போன்ற முதலுதவிச் சங்கங்களில் தொண்டாற்ற வேண்டும்.

- கே.ரோசய்யா, தமிழக ஆளுநர்


மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் மட்டுமே உள்ளனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நாடு முழுவதும் பெண் சிசுக் கொலை அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

- மேனகா காந்தி, மத்திய அமைச்சர்சொல்றாங்க...பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடக்கம்தான். பாரதப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் கற்பிக்கும் வகையில் விரைவில் கல்வி முழுமையாகக் காவி மயமாக்கப்படும்.

- ராம் பிலாஸ் சர்மா, கல்வி அமைச்சர், ஹரியானா

சொல்றேங்க...

நல்லா கற்பிங்க அமைச்சர் சார்!

ஆனா... நண்பன் படத்து டயலாக் மாதிரி கற்பிங்கிறது கற்பழின்னு ஆகாமப் பாத்துக்குங்க! ஏன்னா... நீங்க சொல்ற பாரதப் பண்பாட்டின் மகாபாரதத்தையும், பாகவதத்தையும், இதர புராணங்களையும் மாதிரி கற்பழிப்பு சீன் உள்ள கதைகள் உலகத்திலேயே கிடையாது!

சொல்றாங்க...

பகவத் கீதையை முன்னிறுத்தி அரசியல் நடைபெறுவதை ஏற்க முடியாது. உலகில் உள்ள அனைவருக்கும் கீதை பொதுவானது. அது பா.ஜ.க.விற்கு மட்டும் சொந்தமல்ல.

- பூபிந்தர் சிங் ஹுடா, மேனாள் முதல்வர், ஹரியானா

சொல்றேங்க...

இதுதானா சார் உங்க டக்கு! பா.ஜ.க. மட்டும் இதை வச்சு அரசியல் பண்ணக்கூடாது... நாங்களும் பண்ணு-வோம்ங்கிறீங்களா... விஷம் யார் கையில இருந்தாலும் விஷம்தான் சார்.

சொல்றாங்க...

டில்லியில் ராமபக்தர்களின் அரசாங்கம் அமைந்துள்ளது. ஜெய்ஸ்ரீராம் என்ற மக்களின் பிரார்த்தனையால்தான் ராம பக்தர்களால் டில்லியில் ஆட்சி அமைக்க முடிந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசு அயோத்தியை மேம்படுத்தவில்லை. அயோத்தியைப்பற்றி தற்போதைய சமாஜ்வாடி மற்றும் முந்தைய பகுஜன் சமாஜ் அரசுகளுக்கும் அக்கறை இல்லை. இதற்குக் காரணமே இந்தக் கட்சிகளின் ஜாதிய அரசியல்தான். - நிதின் கட்காரி, மத்திய அமைச்சர்

சொல்றேங்க...

ஆமாங்க... அவங்களோடது பிற்படுத்தப்-பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல். உங்களோடது பார்ப்பன உயர்ஜாதி அரசியல்!

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர் நாடாக பாலஸ்தீனம் ஜனவரி 6 அன்று இணைந்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மின்னணு முறையில் ஓட்டளிக்கத் தேவையான ஏற்பாடுகளை எட்டு வாரங்களுக்குள் செய்துதர மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஜனவரி 12 அன்று ஆணையிட்டது.

அய்ரோப்பிய நாடான குரோஷியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கொலிந்தா கிரயா கிதாரொவிச் வெற்றிபெற்று அந்நாட்டின் அதிபர் பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சுரங்க முறைகேடு வழக்கில் கைதாகி சிறையிலிருந்த கருநாடக மேனாள் அமைச்சர் ஜனார்த்த ரெட்டிக்கு 40 மாதங்களுக்குப் பின்னர் ஜனவரி 20 அன்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

பயங்கரவாதிகள் மீதான வழக்கை விரைந்து விசாரிப்பதற்காக சிறப்பு ராணுவ நீதிமன்றங்கள் ஏற்படுத்த வகை செய்யும் அரசியல் சாசனத் திருத்த மசோதாக்கள் இரண்டினை பாகிஸ்தான் அரசு ஜனவரி 3 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அவை ஜனவரி 6 அன்று நிறைவேற்றப்பட்டன.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவிக்குப் போட்டியிட்ட திருநங்கை மதுகின்னார் வெற்றி பெற்றுள்ளார்.

சவுதி அரேபியா நாட்டில் மன்னர் அப்துல்லா ஜனவரி 23 அன்று மரணம் அடைந்ததை அடுத்து புதிய மன்னராக சல்மான் அறிவிக்கப்-பட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

தேநீர் இரட்டைக் குவளை

மலைஜாதிப் பெண்
கிள்ளிப் பறித்தாள்
தேயிலையை அங்கே!
கறவைப் பசுவை
பாடிக் கறந்தாள்
பால் வந்ததிங்கே!
கரும்பாலை அலுப்பில்
தினம் அவன் உழைத்தே
சக்கரை சேர்ந்ததிங்கே!
தண்ணீர் கலந்தவன்
என்ன ஜாதியோ?
என்ன எழவோ?
-என யாரும் கேட்டறியேன்.
பாத்திரம் தேய்த்தவன்,
அடுப்பைச் செய்தவன்,
எரிக்கிற எண்ணெய்,
கழுவுகிற சோப்புக் கட்டி,
எதற்கும் ஆதிமூலம் கேட்டறியேன்.
ஜாதி பேசும்
சுத்தபத்தம் எல்லாம்
தேநீர்க் கடை
இரட்டைக் குவளையில்தான்.
இப்பெல்லாம் எங்க சார்
இரட்டை டம்ளர். எல்லாமே பிளாஸ்டிக் டம்ளர்தானே' என்பவன்
வலிந்து சொல்வான்
இப்பெல்லாம் யாரு சார்?
ஜாதி பாக்குறா! என்று.

- தம்பி. அழ. பிரபு, மதுரை