Search This Blog

3.2.15

காந்தியாரின் படுகொலைக்குப் பின்னால் இருந்தது இந்துத்துவா என்னும் நஞ்சு!

கோவை கொடுத்த குரல்!


காந்தியார் படுகொலை செய்யப்பட்ட நாள் ஜனவரி 30 (1948) உலகை உலுக்கிய நாள். நாங்கள் இருந்தவரை காந்தியாரைக் காப்பாற்றினோம். நாங்கள் வெளியேறிய 5 மாதத்திற்குள் காந்தியாரைக் காப்பாற்றத் தவறி விட்டீர்களே என்று இந்தியர்களைப் பார்த்து வின்சன்ட் சர்ச்சில் சொன்னது ஏளனமா? கண்டனமா? என்பதை நுணுகிப் பார்ப்பவர்களுக்கு நன்றாகவே விளங்கும்.

காந்தியாரைக் கொன்றது நாதுராம் கோட்சே  என்ற தனி மனிதன் அல்ல; இந்து வெறிதான் அவரைத் தீர்த்துக் கட்டியது. இதனைத்தான் காந்தியார் படுகொலை செய்யப்பட்டபோது தந்தை பெரியார் அழுத்தமாகச் சுட்டிக் காட்டினார். 


இதையேதான் பிரதமராகவிருந்த ஜவகர்லால் நேரு கூடக் கூறினார்.
காந்தியாரைக் கொலை செய்த அந்த மனிதனையோ அவனது செய்கைகளையோ தனிப்பட்ட விஷயமாகக் கருத முடியாது. கடந்த சில மாதங்களாக தலை விரித்தாடிய பலவித தீய சக்திகளின் விளைவே அது  என்று மிகச் சரியாகவே நேரு கணித்துக் கூறினார்.

மவுலானா அபுல்கலாம் ஆசாத்தும் இதே கருத்தையே வேறு சொற்களில் எடுத்துக் கூறினார்.

காந்தியாரின் படுகொலைக்குப் பின்னால் இருந்தது இந்துத்துவா என்னும் நஞ்சுதான்; கோட்சே ஆர்.எஸ்.எஸ். காரனா, இந்து மகாசபைக்காரனா என்ற ஆராய்ச்சிக் கூடத் தேவையில்லை; இவை இரண்டுமே இந்து வெறி என்னும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.


சங்பரிவார்கள் பேசி வரும் பேச்சுக்களைக் கவனிப்பவர் களுக்கு இந்த உண்மை மிக எளிதாகவே விளங்கும்.


அன்றைக்கு நீதிமன்றத்திலே நிற்க வைக்கப்பட்ட நாதுராம் கோட்சே கீதையிலிருந்து சுலோகங்களை எடுத்துக் கூறித்தான் காந்தியாரைப் படுகொலை செய்த தற்கு நியாயம் கற்பித்தான். இதன் பிழிவு என்னவென்றால் காந்தியார் என்ற உலகம் போற்றும் தலைவரைப் படு கொலை செய்வதற்கு இந்து மதத்தின் புனித நூல் என்று கூறப்படும் கீதையும், அதனைச் சொன்னதாகக் கூறப்படும் கடவுள் கிருஷ்ணனும் உந்து சக்தியாக இருந்திருக்கின்றன.


இந்த நூலைத்தான் இந்தியாவின் தேசியப் புனித நூலாக அறிவிக்கப் போகிறோம் என்று இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஒரு பெண் மணி - சுஷ்மா சுவராஜ் என்பவரே அறிவித்தாரே - இவர் பிஜேபியைச் சேர்ந்தவர்தானே!


காந்தியாரைக் கொன்றதற்குப் பதிலாக நேருவைக் கொன்று இருக்க வேண்டும் நாதுராம் கோட்சே என்று ஆர்.எஸ்.எஸ். ஏடான கேசரி (மலையாளம்) எழுதிட வில்லையா?


இந்து மகாசபைக்காரன் நாதுராம் கோட்சே என்ப வர்கள் - அவன் கூறும் அதே கருத்தைத்தானே அதே தொனியில் பிஜேபிகாரரும், ஆர்.எஸ்.எஸ்.காரரும் கூறுகிறார்கள்.


இந்த நிலையில் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரரல்ல என்று இவர்கள் கூறுவதில் கொஞ்சம்கூடப் பொருள் இல்லையே! என் செய்வது? அப்படிச் சொல்லித் தீர வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அப்படிப் பார்க்கும் பொழுது இந்த ஆர்.எஸ்.எஸ். பிஜேபிகாரர்களைவிட நாதுராம் கோட்சே கொஞ்சம் - அறிவு நாணயக்காரனாகவே தோன்றுகிறான்.


தன்னை ஆர்.எஸ்.எஸ்.காரன் என்று கோட்சே சொல்லுவதைத் தவிர்ப்பதற்குக் காரணம் அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கொடுத்த நிர்பந்தம்தான்; இதனை நாதுராம் கோட்சேவின் உடன் பிறப்பும், காந்தி யார் படுகொலையில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலை ஆனவருமான கோபால் கோட்சேயே கூறி விட்டாரே!


இப்பொழுதுள்ள நிலை என்ன? அன்றைக்குத் தொலை நோக்காக தந்தை பெரியார் எச்சரித்தது தானே இன்று நடந்து கொண்டுள்ளது.


காந்தியாரைக் கொன்றவன் ஒரு துப்பாக்கி; துப்பாக்கி மீது கோபப்பட்டு பயனில்லை; அந்தத் துப்பாக்கியைப் பின்புலத்திலிருந்து இயக்கியுள்ளது - இந்து மதம் தானே! அதனை ஒழிக்க அல்லவா நாம் முயற்சிக்க வேண்டும் என்று கருத்துக் கூறினார் தந்தை பெரியார்.


வரலாற்றில் ஒரு நிகழ்வை இதற்கு எடுத்துக்காட்டவும் செய்தார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.


மதுரை மாநகரில் 8000 சமணர்கள் சைவத்தை எதிர்த்ததற்காக கழுவேற்றப்பட்டார்கள் - காரணம் பார்ப்பான் அல்ல, முஸ்லிமும் அல்ல. பின் யார்? அன்றைய மதக் கருத்துப்படி அரசன் அவர்களைக் கழுவேற்ற ஆணையிட்டான்; ஆகவே அவனல்ல கழுவேற்றியது. அவன் தழுவி இருந்த மதம்தான் அவர்களைக் கழுவேற் றும்படி அவனைத் தூண்டியது (விடுதலை 22.2.1948).


இன்றைக்கு ஒன்பது மாநிலங்களில் ஆட்சி அதிகாரத் தையும், மத்தியில் ஆட்சி அதிகாரத்தையும் பிடித்திருக்கும் பிஜேபி அரசு கோட்சேயிசத்தை முன்னெடுத்துக் கொண்டு கிளம்பி இருக்கும் சூழ்நிலையில், பிஜேபியின் சங்பரிவார்க் கூட்டம் இந்து வெறி நஞ்சைக் கக்கும் வேலையில் மும் முரமாக ஈடுபட்டு இருக்கும் இந்தக் கால கட்டத்தில், அரச மைப்புச் சட்டத்தின் பீடிகையிலே அறுதியிட்டுக் கூறப் பட்டுள்ள மதச் சார்பின்மை, சோசலிசம் என்பனவற்றை நீக்கும் அளவுக்கான போக்கு மதம் பிடித்த யானையைப் போல திமிரிக் கொண்டு எழுந்துள்ள தன்மையில்தான் திராவிடர் கழகம் அதன் ஒப்பற்ற தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் காந்தியார் நினைவுநாள் நிகழ்ச்சியை கோவையில் ஒழுங்குப்படுத்தினார் (30.1.2015).


கட்சி வண்ணங்களை மனதிற்கொள்ளாமல், மதவாத தீய சக்திகளை எதிர்கொள்ளும் வண்ணம் இந்திய அரச மைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட மதச் சார்பின் மையைக் (Secularism) காப்பாற்றும் உயரிய நோக்கத் தோடு, திமுக, காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணித் தலைவர் களை அழைத்து, நாட்டைச் சூழ்ந்து தின்னும்இந்துத்துவா அபாயத்தை அறிவிக்கச் செய்தார். இலட்சோப லட்சம் மக்கள் கூடியிருந்த அந்தச் சிறப்புக் கூட்டம் வெளிப் படுத்திய உணர்வு - மிகவும் நம்பிக்கை தருவதாக அமைந் திருந்தது. திராவிடர் கழகம் இந்தக் கால கட்டத்தில் ஒரு மகத்தான கடமையை ஆற்றியிருக்கிறது என்பதில் திராவிடர் கழகம் மன நிறைவு கொள்கிறது.


நம் பயணம் இத்திசையில் மேலும் தெளிவாக, திட்டவட்டமாக கூர்மை யாகவே இருக்கும்.


வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

                        -----------------------------”விடுதலை” தலையங்கம் 3-2-2015

42 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வழிபாடு

தமிழ் மொழியினால் சிவனருள் பெற்ற மாணிக் கவாசகருக்கு, தமிழ் மொழியிலேயே தினமும் வழிபாடு செய்யப் பெறு கின்றது. தமிழ் மாதத்தில் வரும் மகம் நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடு கள் நடத்தப்படுகின்றன. மாணிக்கவாசகர் இறை வனுடன் கலந்ததாகக் கருதப்படும் ஆனி மாதம் மகம் நட்சத்திர நாள் அவரது குரு பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியின்போது மாணிக்கவாசகர் நகர் வலம் செல்கிறார். ஆனி மற்றும் மார்கழி மாதங் களில் உத்திரம் நட்சத்திர நாளில் மாணிக்கவாசகர், நடராசர் என இரு உற்ச வர்களும் ஒரே தேரில் நகர்வலம் செல்வது கண் கொள்ளாக் காட்சியாகும். மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா தரிசன நாளில் மூலவரான மாணிக்க வாசகர் விரித்த சடை யுடன் நடனக் காட்சியில் நடராசராக அலங்கரிக் கப்பட்டு வழிபாடு நடை பெறுகிறது என்று எழுது கிறார்கள்.

மாணிக்கவாசகர் கடவுள் ஸ்தானத்தில் வைக்கப்படுவதாக சொல்லுகிறார்கள். அப்படியானால் இந்த சிவன், விஷ்ணு, பிர்மா போன்றவர்கள் எல்லாம் மனிதர்களாக இருந்து கடவுளாக ஆக்கப்பட்ட வர்கள் தானா?

Read more: http://viduthalai.in/e-paper/95469.html#ixzz3Qgwmd5Yf

தமிழ் ஓவியா said...

அண்ணா


நூல் விமர்சனம் என்ற பகுதியில் இவ்வார கல்கி இதழில் (8.2.2015 பக்கம் 48) கருத்து ஒன்று கூறப்பட் டுள்ளது.

நா. முத்துநிலவன் கட் டுரை ஒன்றில்:

கம்பனைப் பற்றிய கட்டுரை ஒன்றில் வடமொழி பக்தி நூல்களை விடவும் தமிழ்நாட்டுப் பக்தி இயக்கங் களும், இலக்கியங்களும் ஜாதி உடைப்புக்கு ஆற்றிய பங்கை ஆய்வு செய்வது அவசியம்... என்று கூறுவதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். தீ பரவட்டும் என்று நெருப்பு வைத்து விட்டால் மட்டுமே அழிந்து நீறாகி விடக் கூடியவன் அல்லன் கம்பன் என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய செய்தி என்று புத்திசாலித் தனமாக ஏதோ சொல்லி விட்டதாக கல்கியில் குறிப் பிடப்பட்டுள்ளது.
சொல்லின் செல்வர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும், பசுமலை நாவலர் சோமசுந்தர பாரதி

யாருடனும், முறையே சென் னையிலும், சேலத்திலும் அண்ணா அவர்கள் கம்ப இராமாயணம், பெரிய புரா ணத்தை எதிர்த்து நடத்திய அந்த விவாதப் போரில் கம்ப இராமாயணமும், பெரிய புராணமும் கொளுத்தப்பட வேண்டியவையே என்று அண்ணா அவர்கள் ஆற்றிய உரை தீ பரவட்டும் என்ற நூலாக வெளி வந்துள்ளது. அதைத்தான் முத்துநிலவன் மறைமுகமாக அறிஞர் அண் ணாவைச் சாடியிருக்கிறார். வரலாறு தெரியாதவர்கள் என்றும் ஜாடை பேசுகிறார். கல்கிக்கு இது ஒரு மகிழ்ச்சி யான அம்சம்தானே!

அண்ணா அவர்களிடம் விவாதம் நடத்தியவர்களே தங்கள் தோல்வியை ஒரு வகையில் ஒப்புக் கொண்ட நிலையில், காலங் கடந்து கல்கியோ அவர் எடுத்துக் காட்டும் நூலாசிரியரோ கதறிப் பயனில்லை.

அண்ணாவுக்கு வரலாறு தெரியுமா தெரியாதா என் பதை அவரின் ஆரிய மாயை நூலைப் படித்து விட்டுப் பேச வேண்டும்.

இராமாயணம் என்பது ஆரியர் திராவிடர் போராட் டம் என்று வரலாற்று அறிஞர்கள் கூறியதுதான்! பி.டி. சீனிவாசய்யங்காரோ, விவேகானந்தரோ, திரா விடர் இயக்கத்தைச் சேர்ந் தவர்கள் அல்லர் - வரலாறு தெரியாதவர்களும் அல்லர். இவர்களே ஆரியர் - திரா விடர் போராட்டம் என்று தான் சொல்லுகிறார்கள்.

கம்பனாகிய திராவிடன் - தமிழன், நமது இனத்தை இழிவுபடுத்தும் ஒரு நூலைத் தமிழில் எழுதினானே என்ற சினம், சுயமரியாதை உள்ள வர்களுக்கு ஏற்படத்தான் செய்யும்; சுயமரியாதை உணர்வே தேவையில்லை என்று நினைத்தால் அவர் களிடம் விவாதம் செய்வதில் அர்த்தம் இல்லை.

வையகம் என்னை இகழுமோ, மாசு வந்து எய்துமோ? என்று கம்பன் தொடக்கத்திலேயே ஏன் எழுதினான்? அதில் ஒரு குற்ற உணர்வு மேலோங்கி நிற்பதற்குக் காரணம் என்ன? இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் வரலாறு தெரி யாதவர்கள் என்று பொத்தாம் பொதுவில் எழுதுவது எந்த வகையில் புத்திசாலித்தனம்?

ஒன்றை எதிர்ப்பதற்குக் காட்டக் கூடிய அடையா ளம்தான் தீ மூட்டுவதாகும்.

அந்நிய துணிகள் பகிஷ் காரம் என்று அந்தத் துணி களை எரிக்கவில்லையா? இராமாயணத்தை தந்தை பெரியார் எரித்தது - எரிக்கச் சொன்னது - அதன்மீது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற கோட்பாட் டின் அடிப்படையில்தானே!

ஆரிய - திராவிடப் போராட்டத்தில் கல்கி எந்தப் பக்கம் நின்று பேசும் என்று யாருக்குத்தான் தெரியாது!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/95464.html#ixzz3QgxBOuLJ

தமிழ் ஓவியா said...

காந்தியின் கொள்ளுப் பேரன் எச்சரிக்கை


இந்தூர், பிப்.3-_ மகாத் மாவை சுட்டுக்கொன்ற கோட்சே பெயரை தங்கள் இயக்க வளர்ச்சிக்காக சிலர் பயன்படுத்துவது வேதனைக் குரிய விஷயம் என்று காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி தெரி வித்துள்ளார். காந்தியைச் சுட்டுக்கொன்ற, நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்றும், அவருக்குக் கோவில் கட்டப்படும் என்றும் சில தலைவர்கள் கூறி வருகின்றனர். இது காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்திக்கு (வயது 55) மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது: காந்தியார் அவர் களைச் சுட்டுக் கொன்றவர் கோட்சே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது பெயரை தங்கள் இயக்க வளர்ச்சிக்காக சிலர் பயன் படுத்துவது வேதனைக்குரிய விஷயம். மகாத்மா அகிம்சை கருத்துகளை கொண்டிருந்தார். ஆனால் மற்றவர்கள் வெறுப்பு மற்றும் பகைமை எண்ணங் களை வளர்த்தனர். கோட்சேயை போற்றுவது, நாட்டின் வன்முறைக்கு வித்திடும் செயலாகும். இவ் வாறு துஷார் காந்தி கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/95470.html#ixzz3QgxKXDTu

தமிழ் ஓவியா said...

மாநில மொழிகளைக் காக்க ஒற்றுமையுடன் போராட வேண்டும் கர்நாடக முதல்வர் சித்தராமையா


மாநில மொழிகளைக் காக்க அனைவரும் ஒற்று மையாகப் போராட வேண்டும் என்று, கர் நாடக முதல்வர் சித்தர மையா கேட்டுக் கொண் டார்.

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், ஷாரவணபெலகோலாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய 81-ஆவது கன்னட சாகித்ய மாநாட் டைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

மத்திய அரசின் மொழிக் கொள்கையால், மாநில மொழிகளைக் காக்க வேண்டிய அவசி யம் ஏற்பட்டுள்ளது. தமது மாநில மொழிகளைக் காக்க பக்கத்து மாநிலங் களைச் சேர்ந்த அனை வரும் ஒற்றுமையாகப் போராட வேண்டும்.

கர்நாடகத்தில் கன்னட மொழிக்கு ஆபத்து ஏற்படும்போது அனைவரும் ஒன்றி ணைந்து போராடி வரு கிறோம். கன்னட மொழி யைக் காக்க, வரும் காலங் களிலும் இது தொடர வேண்டும்.

ஆங்கில மொழி மோகத் தால் தனியார் பள்ளிகள் கன்னட மொழியைப் புறக்கணித்து வருகின்றன. இதனால், நமது மண் ணிலேயே நமது தாய் மொழி அழியும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, நமது மொழியைக் காக்க வேண் டியது நமது அனைவரின் கடமை. இதுகுறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களை ஒன்றி ணைத்து பிரதமரைச் சந்திக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதுதொடர் பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத முடிவு செய்துள் ளேன்.

கன்னட மொழியைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை கட்டாயம் கன்னடம் கற்பிக்க வேண் டும் என சட்டத்திருத்தம் செய்யப்பட உள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் தாய்மொழியைக் கற்பிக்க தமிழகத்தின் மாதிரியில் சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுச் செயல் பட்டு வருகிறோம். கர் நாடகத்தில் அனைத்து மொழிகளைச் சேர்ந்த வர்களும் வாழ்ந்து வரு கின்றனர்.

ஆனால், ஆங்கில மொழி வேறு நாட்டிலி ருந்து இங்குவந்து குடி யேறி உள்ளது. அதனை தாய்மொழியாகக் கொண் டவர்கள் 0.5 சதம்கூட இருக்க மாட்டார்கள். என்றாலும், அனைவரும் ஆங்கில மோகம் கொண் டுள்ளது வேதனை அளிக் கிறது.

அனைத்து மாநிலங் களிலும் தங்கள் தாய் மொழியைக் கட்டாய மாக்க வேண்டும் என காங்கிரஸ் அரசு உறுதி யாக உள்ளது. கன்னட சாகித்ய மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மா னங்களைச் செயல்படுத்த அரசு உதவியாக இருக்கும் என்றார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கன் னட சாகித்ய மாநாட்டின் தலைவர் சித்தலிங்கையா உள்ளிட்டோர் உடனிருந் தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/95473.html#ixzz3QgxWnT6Q

தமிழ் ஓவியா said...

மதசார்பின்மை, சோசலிசம் குறித்த விவாதம் வேண்டும் என்று எப்போதுமே அழைக்கவில்லையாம்!

பல்டி அடிக்கும் சட்ட அமைச்சர்

டில்லி, பிப்3- அமைச் சர் ரவிசங்கர் பிரசாத் மதசார்பின்மை, சோசலி சம் குறித்த விவாதம் வேண்டும் என்று ஏற்கெ னவே கூறியதை மாற்றி தற்போது மதசார்பின்மை, சோசலிசம் குறித்த விவா தத்துக்கு எப்போதுமே தாம் அழைப்பு விடுக்க வில்லை என்று கூறி யுள்ளார்.

மத்திய தகவல் ஒலி பரப்புத்துறை அமைச்சர் ஆங்கில நாளிதழுக்கு எழுதியுள்ள கடிதம் வாயி லாக அவர் குறிப்பிட் டுள்ளதாவது:

தி இந்து ஆங்கில நாளிதழின் 2.2.2015 தேதி யில் தலையங்கத்தில் (“A needless controversy”) தேவையற்ற முரண்பாடு என்கிற தலைப்பில் அர சமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சோசலிஸ்ட் மற்றும் செக்குலர் ஆகிய சொற்களை தொடர்வ தற்கு தேசிய அளவிலான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நான் அழைப்பு விடுத்ததாக என்னை விமரிசனம் செய் துள்ளது.

அதுபோன்ற கோரிக் கையை நான் எப்போ துமே எழுப்பவில்லை என்பதை நான் இக்க டிதத்தின் வாயிலாக நேரடியாகவே பதிவு செய் கிறேன். உண்மையில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின்னர் ஊடகங்களிடம் அமைச் சரவை முடிவுகுறித்து கூறியபோது, தகவல் தொடர்புத்துறையின் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் அரச மைப்புச் சட்டத்தின் திருத்தப்படாத முகவு ரையை வெளியிட்டது தொடர்பாக செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு நான் பதில் அளிக்கும்போது, ஜவ கர்லால் நேரு மதசார் பற்றவரா இல்லையா என்பதுகுறித்து காங்கிரசு கட்சி விவாதம் செய்ய வேண்டும் என்றுதான் கூறினேன். ஏனென்றால், ஜவகர்லால் நேருவுடன் இருந்த மற்ற தலைவர் களான மவுலானா ஆசாத், சர்தார் படேல், பீமாராவ் அம்பேத்கர் மற்றும் டாக்டர் ராஜேந் திர பிரசாத் ஆகியோர் சிறந்த தலைவர்களாகவும், சுதந்திரப் போராட்டத் தில் ஈடுபட்டவர்களாக வும் இருந்தபோதிலும், இந்த இரு சொற்களையும் இணைப்பதற்கு எப்போ துமே தேர்ந்தெடுக்கவில்லை.

மற்ற செய்தித்தாள்கள் நான் கூறியதை அப்ப டியே வெளியிட்ட போதி லும், அந்த இரண்டு சொற்கள்குறித்து நான் விவாதத்துக்கு அழைத் துள்ளதாக ஓர் ஆங்கில இதழ் (தி இந்து) மட்டும் வெளியிட்டுள்ளது.

அடுத்த நாளே டில் லியில் உள்ள ஆங்கில நாளிதழ் அலுவலகத்துக்கு என்னுடைய விளக்கத்தை அளித்துவிட்டேன். அதுவும் வெளியிடப்பட் டது. இணையத்திலும் வெளியானது.

இது இப்படிஇருக்க செய்தித்தாளின் முக்கியத் தலையங்கத்திலேயே நான் பேசாததை குறிப்பிட்டுள் ளதால் நான் சிறிய அள வில் பாதிப்புக்கு ஆளா னேன். அரசோ, நானோ செக்குலர் மற்றும் சோசலிஸ்ட் சொற்களை அரசமைப்பிச்சட்டத்தின் முகவுரையிலிருந்து அகற் றப்பட வேண்டும் என்றோ, அதுகுறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றோ கூறவே இல்லை.

மதசார்பின்மை மற்றும் சோசலிச சமூக சமத்துவம் முற்றும் முழு வதுமாக இருக்கவேண்டும் என்பதற்காக எங்களை நாங்கள் அர்ப்பணித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு வருடைய நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் நாகரிகம், பாரம்பர்யம் மற்றும் பண்பாடும் ஆகும் என்னும் அரசமைப்பின் அடிக்கட்டுமானத்தின்படியே உச்சநீதிமன்றம் வழி நடத்தி வருகிறது.

(குறிப்பு: சட்ட அமைச் சர் தெரிவித்த கருத்து தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பப்பட்ட நிலை யில் இப்பொழுது பிரச் சினை வெடித்துப் பெரி தான நிலையில் அந்தர் பல்டி, ஆகாயப் பல்டி அடிக் கிறார் - இதுதான் பிஜேபி யின் அறிவு நாணயம்!)

Read more: http://viduthalai.in/e-paper/95472.html#ixzz3QgxfuK4Z

தமிழ் ஓவியா said...

மனிதன்


மனிதன் ஒருபோதும் தனித்து வாழக்கூடியவன் அல்ல; அப்படி வாழவும் அவனால் முடியாது; அதனால்தான் கூட்டமாகக் கூடி வாழ்கிறான். சமுதாயத் திற்குத் தேவையான ஒவ்வொரு காரியத் தையும் ஒவ்வொருவன் செய்கிறான்.
(விடுதலை, 10.02.1960)

தமிழ் ஓவியா said...

அரபு மொழியில் திருக்குறள்

ராமநாதபுரம், பிப். 3_ திருக் குறளை அரபு மொழியில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் எம். முத்துவேல் தெரிவித்தார். ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி தமிழ் உயராய்வு மய்யமும், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்தும் செவ்விலக்கியக் கலைவடிவங்களும், மாற்றுக் கலை வடிவங்களும் என்பது குறித்த 10 நாள் பயிலரங்கம் கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் அ.ஜோசப்துரை தலைமை வகித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலையின் பதிவாளர் வெ. மாணிக்கவாசகம் பயிலரங்கை தொடக்கி வைத்தார். விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் எம். முத்துவேல் பேசியதாவது: 21-ஆம் நூற்றாண்டில் மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குகூட விடை தரக்கூடிய வகையில் திருக்குறள் அமைந்துள்ளது. திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் தனித்தனி ராகத்தில் இணையத்தில் பாடலாகக் கேட்கலாம். 1812இல் திருக்குறள் அச்சேறுவதற்கு முன்பாகவே 1730இல் குறள் அய்ரோப்பிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஓலைச்சுவடியிலிருக்கும்போதே வேறு மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டது திருக்குறள் ஒன்றாகத்தான் இருக்கும். தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. விரைவில் அரபு மொழியில் திருக்குறளை வெளியிட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதுவரை 80க்கும் மேற்பட்டோர் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழி பெயர்த்திருக்கின்றனர்.

இவற்றில் சிறந்த 18 மொழி பெயர்ப்புகளை தேர்வு செய்து தொகுத்து அதை நூலாக்கியிருக் கிறோம். கல்லூரிகளில் செம் மொழித் தமிழில் முதுகலை படிப்பு தொடங்கினால் ஒரு மாணவருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்குகிறோம். புத்தகங்கள் வாங்க ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி செய்கிறோம். முனைவர் பட்டம் பெற ஒரு மாணவருக்கு மாதம் ரூ.12 ஆயிரமும், முனைவர் பட்ட மேலாய்வுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.18 ஆயிரம் வீதம் 5 பேருக்கு நிதியுதவி செய்யப்படுகிறது என்றார் முத்துவேல்.

Read more: http://viduthalai.in/page-2/95482.html#ixzz3QgyB2Mqe

தமிழ் ஓவியா said...

சென்னை பெரியார் திடல் பணியாளர்களின் சந்திப்பும்- நெஞ்சம் நிறைந்த பாராட்டும்!

அய்யா, வணக்கம்!

2.2.2015 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பணி யாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் அன்புராஜ் அவர்களால், தமிழர் தலைவர் அனுமதி யுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி நெஞ்சுருக வைக்கும் நிகழ்ச்சியாக அமைந்தது.

பொதுவாகவே ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கூட்டம் என்றால், அந்தக் கூட்டத்தில் அலுவலகம் சம்பந்தப் பட்ட நிறை குறை, வளர்ச்சி சம்பந்தமான பிரச்சினைகளைப்பற்றித்தான் பேசு வார்கள். ஆனால், நேற்று நடைபெற்ற பெரியார் திடல் பணியாளர்கள் சந்திப்பு என்பது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியாக அமைந்தது.

பிறந்த நாள் என்பது அவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் உள்ளவர் களுக்குக்கூட தெரியாது. ஏன், அவர்களது வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுக்கேகூட தெரியாது. அப்படியிருக்கையில், கடந்த மாதத்தில் பிறந்தவர்கள் யார்? யார்? என்று தெரிந்து, அவர்களை அழைத்து கேக் வெட்டச் செய்து பாராட்டி பரிசு வழங்கியது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

பொதுவாகவே, குழந்தைகளின் முதலாமாண்டு பிறந்தநாளைக்குத்தான் அனைவரையும் அழைத்து கேக் வெட்டி கொண்டாடுவார்கள். ஆனால், பிறகு வயது ஏற, ஏற பல பேர் தங்களுடைய பிறந்த நாளை வெளிப்படையாக சொல்லவும் மாட்டார்கள். இப்படியிருக்கையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி முதலாமாண்டு பிறந்த நாள் கொண்டாடும் குழந்தைகள் எப்படி மகிழ்ச்சியுறுவார்களோ, அப்படித்தான் ஒவ்வொருவரும் கேக் வெட்டி மகிழ்ந் தார்கள்.

அதிலும், 73 வயதான பிழை பொறுத்தான் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி யுடனும், நெகிழ்ச்சியுடனும், நான் இது வரையில் பிறந்த நாளே கொண்டாடிய தில்லை. இன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நாளில் நான் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன், இது வரையில் என்னுடைய சம்பளத்திலிருந்து ரூ.500 அய் பெரியார் உலகத்திற்கு நன் கொடையாகக் கொடுத்து வந்தேன்.

இந்த மாதம் முதல் ரூ.1000-த்தை பெரியார் உலகத் திற்காக என்னுடைய சம்பளத்திலிருந்து கொடுக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்புரையாற்றிய கழகப் பொதுச்செயலாளரும், எல்லோ ராலும் அண்ணன் என்று அழைக்கப்படுப வருமான அண்ணன் அன்பு ராஜ் அவர்கள் இந்தக் கூட்டம் எதற்காகக் கூட்டப்பட்டிருக் கிறது என்று விளக்கிச் சொன்னவுடன், அனைவரது முகத்திலும் ஒரு மகிழ்ச்சிக் களை தெரிந்தது. (ஏனென்றால், அலுவலகக் கூட்டம் என்றால், ஏதோ சில நடவடிக் கைகள் இருக்கும் என்று நினைத்து வந்த வர்கள் பலர். அப்படி ஏதும் இல்லை ஒவ் வொருவரைப்பற்றியும் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டம் என்றார் அண்ணன் அவர்கள். இதுபோன்ற நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் நடத்தவேண்டும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கண்டிப்பாக சொல்லியிருக்கிறார் என் பதையும் பலத்த கரவொலிக்கிடையே அறி வித்தார்.

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி உரையாற்றிய திராவிடர் கழக துணைத் தலைவரும், விடுதலை நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், உங்களைக் கருப்புச் சட்டை அணியுங்கள், திராவிடர் கழகத்தில் சேருங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. குறைந்த பட்சம் பகுத்தறிவோடு வாழுங்கள் என்றுதான் சொல்கிறோம். பகுத்தறிவு வாழ்க்கை வாழ்ந்தால், என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை எடுத்துச் சொல்லி, அனைவரையும் சிந்திக்க வைத்தார்.

க்ஹ்க்ஃப்ல்;ஹ்க்ஃப்அடுத்ததாக, திராவிடர் கழகத் தலை மைக் கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் அவர்களின் வாழ்வியல் உரை, சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. பக்தியால் மனிதனின் மூளைக்கு விலங்கிட்டு இருப்பதை ஒவ்வொரு நிகழ்ச்சியாக விளக்கிக் கூறிய பாங்கு அருமை. குடமுழுக்கில் நடைபெறும் அக்கிரமங்கள் என்ன? திதி கொடுக்கும் பொழுது வடமொழியில் அய்யர் சொல்லும் மந்திரத்தின் விளக்கம் என்ன? என்பதை அக்குவேறு ஆணிவேறாக பிய்த்து எறிந்தார். இன்னும் இவர் பேச மாட்டாரா? என்று பலரும் வியக்கும் வண்ணம் அமைந்தது. ஆனால், நேரமின்மையின் காரணமாக அவர் தன்னுடைய உரையை சுருக்கமாக முடித்தார்.

கடந்த மாதம் பிறந்தவர்கள் ஒவ்வொரு வரையும் அழைத்து, கேக் வெட்டி, அவர்களுக்கு இனிப்புகளையும், பரிசு களையும் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் களும், பொதுச்செயலாளர் அண்ணன் அன்புராஜ் அவர்களும் வழங்கினர். இந்த நிகழ்வு என்பது நெஞ்சுருக வைத்த நிகழ்வாக அமைந்தது.

பெரியார் திடல் பணியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகளையும் அமைதியோடும், அன்போடும் பணியாளர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள அனைத்துப் பணியாளர்களின் உற்ற வழிகாட்டியாகவும் விளங்கும் பெரியார் திடல் மேலாளர் ப. சீதாராமன் அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

இந்த நிகழ்வு பெரியார் திடல் பணி யாளர்களின் நெஞ்சை விட்டு அகலாத நிகழ்வாக அமைந்தது என்பது குறிப் பிடத்தக்கது. நன்றி!

- ச. பாஸ்கர்,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018

குறிப்பு: இது ஒவ்வொரு மாதமும் நிகழும்.

Read more: http://viduthalai.in/page-2/95489.html#ixzz3QgysCSPW

தமிழ் ஓவியா said...

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் ஆர்.எஸ்.எஸ். பங்கு குறித்து மவுனம் ஏன்? திக் விஜய்சிங் வினா


கடந்த 1984-ஆம் ஆண்டு நடந்த சீக்கியர் களுக்கு எதிரான கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப் பினருக்கு உள்ள தொடர்பு குறித்து ஊடகங்கள் உள்பட யாரும் பேசாதது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தி யாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறிய தாவது: கடந்த 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச் சம்ப வங்கள் வருத்தத்துக்கும் கண்டனத் துக்கும் உரியவை.

இதுதொடர்பாக பல்வேறு விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனால், இந்தக் கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப் பினருக்கு உள்ள பங்கு என்ன என்பது குறித்து ஊடகங்கள் உள்பட யாரும் பேசவில்லை. இந்த விஷயத்தில் அனை வரும் மவுனம் சாதிப்பது ஏன்? என்று திக் விஜய் சிங் கேள்வி எழுப்பினார்.

Read more: http://viduthalai.in/page-2/95480.html#ixzz3Qgz2docf

தமிழ் ஓவியா said...

கபிஸ்தலங்கள் தொடரட்டும்! தஞ்சைத் தரணியில் தமிழ்மக்கள் கலைவிழா

தைப்பிறந்தால் வழி பிறக்கிறதோ இல்லையோ தஞ்சைப் பகுதி மக்கள் ஆவலோடு இரண்டு விஷயங்களுக்காகக் காத் திருப்பார்கள் என்று நம்பலாம். ஒன்று தை மாதப்பொங்கல் திருநாள் முன்னம் அறுவடை. மற்றொன்று கபிஸ்தலம் பகுதி யில் மாலை முதல் அதிகாலை வரை நடைபெறும் கலை விழா. அதுமட்டுமல்ல கண்களுக்கும், காதுகளுக்கும் மட்டும் விருந்து என்றில்லை. வயிற்றுக்கும் சுவையான விருந்து, பால் என்று பதினைந்தாயிரம் பேர் அளவிற்கு கூடும் மக்கள் சுவைத்து மகிழும் ஏற்பாடும் உண்டு.

பதினோராம் ஆண்டு தமிழ்மக்கள் கலைவிழா, அறிவிய லின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்ட புதுமையும் இந்த ஆண்டு நிகழச்செய்யும் வகையில் டிஜிட்டல் மயமாகி விட்டது.

கலை, கலைக்காக என்றும் தத்துவத்திலிருந்து கலை மனி தனுக்காக என்னும் தத்துவத்தை மனிதநேயத்தை வலியுறுத் திய மாண்புறு தலைவர் தந்தை பெரியார், அவர் மதித்துப்போற் றிய உழைக்கும் வேளாண் திருக்கூட்டம் வயலில் இறங்கி நடும் தோற்றத்துடன் அழைப்பிதழிலேயே புதுமை சேர்த்துவிட்ட தந்தை பெரியார் அறிவியல் கலை, பண்பாடு, விளையாட்டு மன்றம் நடத்தும் தமிழ் மக்கள் கலை விழா இது என்பதே பெருமை மிகு நிகழ்வு.

இந்த மன்றத்தின் அடிப்படை நோக்கமே உலகம் ஒன்றாதல் வேண்டும் என்பதாகும். தமிழர் தலைவர் ஆசிரியர் பெரியாரை உலகமயமாக்கி வரும். பெரியார் உலகமயமாகும் கோட்பாட்டி னையும் முன்னெடுத்துச்செல்வது அடிப்படை நோக்கத்தையும் தாங்கி நிற்கும் தமிழர் பண்பாட்டு கலை விழா.

தஞ்சை மண்ணே கலை சிறந்த மண். அங்கே தமிழர் கலை விழா என்பது மண்ணின் மைந்தர் உணர்ந்து நன்றி கலந்து கொண்டாடும் கலை விழா இங்கே தான் காண முடிந்தது. ஏனெனில் இங்கே ஒரு கூட்டம் ஆண்டுதோறும் கூவி, பஞ்சரத்தின கீர்த்தனை என்னும் பெயரில் புரியாத மொழியில் தொடையைத் தட்டி பாடி உலவுவதைப் போன்றதன்று இந்த கலை விழா. இது திராவிடப் பெருங்குடி மக்கள் கொண்டாடி மகிழும், விருந்துண்டு மகிழும், விருது வழங்கி மகிழும், உடற்கொடை வழங்கிடும், உயர்ந்தோரைப் போற்றி மகிழும் விழா என்பதால் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஆண்டுக்கு ஆண்டு விழாக்காணக் கூடும் கூட்டம் பெருகிவருகிறது. வரும் அத்தனைப் பேரையும் அமர வைத்துக்கொண்டும் பனியிலும் குதூகலித்து மகிழச்செய்யும் கலை விழா இது. இது தமிழ்மக்கள் கலை விழா என்பது பெயரில் மட்டுமல்லாது, உண்மையாகவே கூடும் தமிழ்மக்களைப் பார்த்தே புரிந்து கொள்ளக்கூடிய திராவிடர் கலை விழா.

தமிழ் ஓவியா said...


அந்தி முதல் விடியும் வரை வந்து கூடி கலை நிகழ்ச்சி களைக் கண்டு மகிழும் கூட்டம் நம் திராவிடர் கூட்டம். இங்கு நடக்கும் கலைவிழா திராவிடர் திருநாளாம் திராவிடப் புத்தாண்டு, பொங்கல் திருநாள் கொண்டாடி மகிழும் விழா. கட்சி வேறுபாடின்றி ஆண்டு தோறும் இந்தக் கலை விழாவில் திராவிடர்கள் கூடுகின்றனர். நம் பண்பாட்டுச் சிறப்புமிக்க கலைகளை நம்மவர் போற்றி மகிழும் கலைகளை இங்கே அரங்கேற்றி ஆரவாரத்துடன் ரசிக்கச் செய்கின்றனர். அதுவும் கூட்டு முயற்சியாக இதனைக் கூடிநின்று செய்கின்ற பாங்கைப் பாராட்ட வேண்டும். இளைஞர், பெண்டிர், முதியோர் என்று அனைத்துப் பிரிவினரும் ஓடியாடி வேலை செய்கின்ற பாங்கு பாராட்டத்தக்க பாங்காக விளங்குகின்றது.. கலை விழா என்று வெறும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று ஆடிப் பாடிக் கூடிக்கலையாமல் புத்தகத்திருவிழா, பாராட்டு அரங்கம் என்றும் கலையோடு களைகட்டி நிற்கிற காட்சி காண்கிறோம் அத்தோடு கருத்துப் பரப்புதலையும் செய்கின்றனர். எப்படி? தமிழ்மக்களே தங்கள் குழந்தைச் செல்வங்களுக்குத் தமிழில் பெயர் சூட்டுங்கள். தங்கள் நிறுவனங்களுக்குத் தமிழில் பெயரி டுங்கள் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

தமிழ் ஓவியா said...


அந்தி வேளையில் விழாக்காண வந்த திராவிட மக்கள் திரும்பிச் செல்லும் அதிகாலைப்போதில் பேருந்து வசதியில்லா மல் தவிக்கக்கூடாது என்பதற்காக விழா முடிந்தவுடன் அனைத்து வழித்தடங்களிலும் திரும்பிச்செல்ல மினிப் பேருந்து வசதியும் செய்திருப்பதையும் பாராட்ட வேண்டும்.
தந்தை பெரியார் அறிவியல் கலை பண்பாடு விளையாட்டு மன்றம் கபிஸ்தலம் உறுப்பினர்கள் ஆண்டுதோறும் நடத்தும் இந்தத் தமிழ் மக்கள் கலைவிழா ஒரு நாள் அந்தி முதல் விடியல் வரை தான் நடைபெற்றாலும் ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டுப் பணிகளைத் தொடங்கினார்கள்.

வரவேற்பு இசையாக நாதசுரம் முழங்கும் நிகழ்ச்சிகளைக் கண்ணுற்ற நமக்குப் புதுமையாக கொம்பு, தாரை, எக்காளம், நுமரி, திருச்சனம் முழங்கியது. பெரியார் பெருந்தொண்டர் வை.விசுவநாதன் இதற்கு நன்றிக்குரியவராக விளங்கினார். இதனையடுத்து பெரியார் விருது பெற்ற இசைஞாயிறு கே.பி.எஸ் முத்துகுழுவினர் வழங்கிய இன்னிசை இதற்கு நன்றிக்குரியவர் வெ.ப.புவியாற்றல் கபிஸ்தலம் பெரியார் செல்வன். நம் இல்லங்களில் திருமணம் முதலிய நிகழ்ச்சிகளில் பெண்டிர் வாசலில் நின்று சந்தனம், மலர் வழங்குவது போல் வந்தவர்களை வாழ்த்தி வரவேற்றனர். பாலன் குழுவினர் வழங் கிய பெண்கள் செண்டை மேளம் செண்டை மேளம் எனில் ஆண்கள் வாசிக்கக்கண்டு வந்த நமக்குப் பெண்டிர் செண்டை ஒலி எழுப்பியது புதுமையாக இருந்தது என்பதை விட இனிமையாக இருந்தது என்று குறிப்பிடல் வேண்டும். இதை ஏற்பாடு செய்த நன்றிக்குரியவர் பாபநாசம் பெனிபிட் பண்டின் செயல் அலுவலர் லயன் த.ஆறுமுகம் ஆவார். அதன்பின் கலைமாமணி விநாயகம் குழுவினரின் காவடியாட்டம். அதுவும் அரைமணி நேரம் தான். இதை ஏற்பாடு செய்தவர் மலேசியா எழுத்தாளர் செல்வி கே.எஸ்.செண்பகவல்லி அதைத் தொடர்ந்து புதுவைப் பேராசிரியர் வேலு சரவணன் குழுவினர் வழங்கிய வேலு மாமா குழந்தைகள் நாடகம் அரை மணி நேரம். இதை ஏற்பாடு செய்த நன்றிக்குரியவர்கள் ரோட்டரி யன்கள் இரா.பத்மநாபன், கோ.சத்தியமூர்த்தி, மோஅறிவொளி ஆகியோர் அடுத்த அரை மணிநேரம் தஞ்சை பானுமதி ராஜரத்தினம் குழுவினர் வழங்கிய பொய்க்கால் குதிரைநடனம். இந்த நிகழ்ச்சியும் கூட அரைமணிநேரம்தான். இதை ஏற்பாடு செய்த நன்றிக்குரியவர்கள் கபிஸ்தலம் ந.சுந்தரமூர்த்தி, சீ.நீலக்கண்ணன், மு.ராஜா ஆகியோர் ஆவர்.

தமிழ் ஓவியா said...

இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியும் அரைமணி நேரம் மட்டுமே என்று திட்டமிட்டு அமைத்தது பார்வையாளர்களை இன்னும் கொஞ்சநேரம் இந்நிகழ்ச்சி நடைபெறாதா என்று ஏங்க வைத்தது என்பதோடு எந்த நிகழ்ச்சியும் பார்ப்பவர்கள் கவனத்தை வேறு எந்தப்பக்கமும் அப்படி இப்படி அசையாமல் கட்டிப்போட்டது.

இந்தக் கலை நிகழ்ச்சிகள் தொடங்கும் முன் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் இரா.துரைக்கண்ணு மாலை 5 மணிக்கு புத்தகத்திருவிழாவை அறிமுகம் செய்து அறிவுக்கு விருந்து உண்டு என்று காட்டினார்.


இதை அடுத்துத் தஞ்சை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் உணவுத்திருவிழாவை அறிமுகம் செய்தார். ஒரு பக்கம் கலை நிகழ்ச்சிகள் மறுபக்கம் புத்தகத்திருவிழா, உணவுத்திருவிழா என்று கலகலப்பாக நிகழ்ச்சிகள் களை கட்டின. இந்த உணவு விருந்தினை பண்டார வாடை ஏ.ஹபீப் குடும்பத்தினர் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வழங்கி வருகின்றனர் என அறிகிறோம்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடலில் பால், தமிழ்ப்பால் என்று பாடக்கேட்டிருக்கிறோம். அந்தத்தமிழ் பாலை சுமார் 15,000க்கும் மேற்பட்டவர்கள் சுவைத்துப்பருக குறிச்சி தமிழ்ப்பால் நிறுவனத்தார் வழங்கினர்.

இந்தத் தமிழர் திருவிழா என்பது தமிழ்ப் பெருமக்கள் பலரின் கூட்டு முயற்சி எனக்குறிப்பிட்டது உண்மைதான். வலங்கைமான் ரோட்டரி சங்கம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கியது எனில் தணிக்கையாளர் சு.சண்முகம், சிறீநிதி அரிசி ஆலை பாண்டிச்சேரி, குமரன் பை தயாரிப்பாளர், ஆத்தூரார் பிரியாணி, வசந்தம் மளிகை, ஆர்.ஆர்.ஆர்.டிரேடர்ஸ் அரிசி மண்டி கும்பகோணம், ஏ.அப்துல் முத்தலீப் பண்டாரவாடை, அன்பு பேக்கரி பாபநாசம், டாக்டர் தி.பாவேந்தன் ஆகியோர் உணவுப் பொருட்களும், நார்த்தங்குடி நா.உ.கல்யாணசுந்தரம், அணியமங்கலம் இராசேந்திரன் குடும்பத்தார் உணவுத்தட்டும் வழங்கியுள்ளனர். ஒலி, ஒளி அமைப்பை கும்பகோணம் இராஜம் ரேடியோஸ், கும்பகோணம் மருத்துவர் பி.எஸ்.சித்தார்த் தனும் செய்துள்ளனர். மக்கள் இருக்கைகள் வழங்குதலை பெரியார் கல்வி சமூகப்பணி அறக்கட்டளை கபிஸ்தலம், திரா விடர் சமுதாய நல கல்வி அறக்கட்டளை, (பாபநாசம்) மேற்கொண்டு உள்ளனர். துண்டறிக்கைகள், அடையாள அட்டையைக் கும்பகோணம் பி.இராதாகிருஷ்ணன் வழங்கியுள்ளார்.

நன்றிக்குரியோர் பட்டியல் நிறைவு பெற்றுவிடவில்லை. கும்பகோணம் ஃபர்ன்மார்ட் மகாதேவன் போட்டோஸ், தமிழரசி திருமண மண்டபம், கும்பகோணம் சீமாட்டி துணியகம், ரெடிமேட்ஸ், சிவ.இ.சரவணன், மணிமேகலை சேது ராமன், ப.சத்தியமூர்த்தி, அ.முருகன், உணவுத் தயாரிப்பு செய்த கபிஸ்தலம் குரு குழுவினர், பந்தல் அமைத்த கோ.பாண்டித் துரை, எஸ்.பாலாஜி, எஸ்.சவுமியநாராயணன் என்று பங்குபெற்ற பலர் பெயரும் நன்றிக்குரியோர் பெயரும் தொடர்கிறது.

இதை இங்கே சுட்டிக்காட்டுவது, இதுபோல் தமிழர் திருவிழாச் சிறப்பைச் செய்து பெயர் பெறுவது தஞ்சை மண் என்றில்லாமல் பிற பகுதியைச் சேர்ந்தவர்களும் இது போல் தமிழர் கலைவிழா நிகழ்த்த வேண்டும். தமிழகம் முழுவதும் தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் திருநாள் விழா சிறக்க வேண்டும் என்றும் நம் பேரவாவின் விழைவு தான்.

கலை நிகழ்ச்சிகளை அரைமணி நேரம் வழங்கி மக்களை ஈர்த்ததுடன் நின்று விடாமல் பாராட்டு அரங்கம் ஒன்றினை இரவு 8.45 மணி முதல் 10 மணி வரை கச்சிதமாக நடத்தினர்.

தமிழ் ஓவியா said...

பாராட்டு அரங்கத்திற்குத் தலைமையேற்றவர். திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர், உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பெண்கள் விடுதலைப் போராளி அ.அருள்மொழி அவர்கள், பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம் என்ற வழியில் பெண்ணுரிமைப் போராளி தந்தை பெரியார் வழி வந்த வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைமையேற்கப் பாராட்டுரை வழங்கியவர் மண்ணின் மைந்தர் மத்திய கப்பல்துறை மேனாள் அமைச்சர் மேன்மைமிகு ஜி.கே.வாசன் தலைவர், தமிழ்மாநில காங்கிரஸ் பாராட்டுரை ஜி.கே.வாசன் என்பதால் இந்த ஆண்டு நடைபெற்ற தமிழர் விழாவில் தேசிய இயக்கத்தவர், திராவிட இயக்கத்தவர் நடத்திய தமிழர் விழாவில் அய்ந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் கூடினர். அமைப்பாளர்களும் அவர்களுக்குத் தனியே இடம் ஏற்பாடு செய்து, தமிழர் விழாவைக் காணவந்த பொதுமக்களுக்கும் தனி ஏற்பாடு செய்தது பாராட்டும்படியாக இருந்தது. மதிப்பிற்குரிய ஜி.ஆர்.மூப்பனார், ஜி.சந்திரசேகர மூப்பனார், எஸ்.சுரேஷ்மூப்பனார். பாபநாசம் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் எம்.ராம்குமார் ஆகியோர் பாராட்டுக்குரியவர் களை வாழ்த்தியவர்கள் ஆவர்.

தமிழ் ஓவியா said...

ஆண்டுதோறும் ஆற்றலாளர்களைத் தேடிக்கண்டறிந்து, நம்மவர்களில் இதோ ஆற்றலாளர்கள் பலர் இருக்கிறார்கள் என்று வரவழைத்துப் பாராட்டி, சிறப்பித்து, நினைவுப்பரிசினை யும் வழங்கும் பெருமைமிகு நிகழ்ச்சியை இந்த விழாவில் செய்து, கூடியுள்ள பல்லாயிரக்கணக்கானவர் வாழ்த்தைப் பெறச் செய்யும் அற்புதமான பணியினை தமிழ்மக்கள் கலை விழாக்குழுவினர் ஆண்டுதோறும் செய்து வருகிறார்கள். இவ்வாறு அளிக்கும் பாராட்டு மக்கள் அளிக்கும் பாராட்டு.

இந்த ஆண்டு மங்கள்யான் முனைவர் மயில்சாமி அண்ணா துரை, உலகிலேயே அதிக நுண்ணறிவு பெற்றவர். பில்கேட்சை யும் நுண்ணறிவில் முந்திய தமிழ்ப்பெண் செல்வி க.விஷாலின், லோட்டஸ் டி.வி. செய்தி வாசிப்பாளர். திருநங்கை பத்மினி பிரகாஷ், எழுத்தாளர் திரைப்பட நடிகர், இயக்குநர் அஜயன் பாலா, புதுவை நாடகத்துறை பேராசிரியர் வேலுசரவணன், ஊடகவியலார் கோவி.லெனின், இலண்டன் தமிழோசை மேனாள் தலைவர் ஏ.ஜெ.ஷாஜஹான், ரோட்டரி மேனாள் ஆளுநர் ஆர்.விஸ்வேஷ்வரன் ஆகியோர் பாராட்டப் பெற்றனர்.

பாராட்டு அரங்கம் முடிந்ததும் விருந்தினர்களுக்குச் சிறப்பான விருந்தினைத் தம் இல்லத்தில் ஆடிட்டர் சண்முகம் குடும்பத்தினர், அவருடைய வாழ்விணையர் அவருடைய உடன்பிறப்புக்கள் ஆகியோர் வழங்குவது வழக்கம் அதனைத் தொடர்ந்து மேற்கொண்டனர். பாராட்டால் அத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்று விடுவதில்லை.

அதன்பிறகு மாற்றுத்திறனாளி செல்வன் டான்சர் தமிழின் வியப்பூட்டும் நடனம் கணேஷ் மெட்டல்ஸ், பர்னிச்சர், அவர்தம் பாத்திரம் பர்னிச்சர் மாளிகை கபிஸ்தலம் நன்றிக் குரியராய் விளங்க நடைபெற்ற நடன நிகழ்ச்சி மெய்சிலிர்க்கச் செய்தது. காதில் இனிக்கும் தப்பாட்டத்தைக் கண்ணுக்கு விருந்தாகவும், காலுக்குத் தாளம் போடவும் செய்து விட்டனர். திருச்சி கருப்பையா, க.ஆனந்தநாயகி, கரு.மலர்ச்செல்வன், ம.ரம்யா, சுந்தர பெருமாள் கோவில் சி.தங்கமணி, த.சாந்தி இதற்கு நன்றிக்குரியவர்கள். அருணா பிரைட் பார்ட்ஸ் பி.ராமச்சந்திரன் நன்றிக்குரி யோராய் விளங்கிய தொலைக்காட்சி புகழ், அசத்தல் மன்னன் மதுரை மருது எனும் மதுரை வீரன் குழுவினர் வழங்கிய அசத்தல் நிகழ்ச்சி அசத்திய நிகழ்ச்சியாகவே விளங்கியது.

தமிழர் திருவிழாவில் முத்தாய்ப்பு நிகழ்ச்சி என்பதை விடத் தூக்கத்தில் இருக்கும் தமிழர்களை எழுப்பும் நிகழ்ச் சியாகக் குறிப்பிடத்தகு நிகழ்ச்சியாக விளங்கியது எனில் அதில் குறிப்பிடத்தக்கது கலைமாமணி சங்கீதசேது தஞ்சை மண்ணின் மைந்தன் முனைவர் புஷ்வவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி குழுவினர் வழங்கிய தமிழ்மண் இசை.

தமிழ் மண் இசையை மட்டும் பாடிச் சென்றிருந்தால் இவ்வளவு பீடிகை போட்டிருக்க மாட்டோம். ஒவ்வொரு பாடல் பாடும் போதும் சுயமரியாதை இயக்கக் கருத்துக்களை, தந்தை பெரியார் விதைத்த பகுத்தறிவு நெல்மணியை விதைத்து அதைத் தொட்டுக்காட்டிப் பாடிய அற்புதத்தைச் செய்தார். 97 விழுக்காடு உள்ள நீங்கள் மூன்று விழுக்காடேயுள்ள வைதீகக் கும்பலின் வாலாட்டுதலுக்குப் பணியலாமா, குனிந்து விழுந்து கிடக்கலாமா என்று பாடல் ஊடே விதைத்த எழுச்சியுரை, தமிழ் மக்கள் கலை விழாவின் முக்கியத்துவத்தைத் தொட்டுச் சிறக்க வைத்தது. இதற்கு நன்றிக்குரியோராய் விளங்கியவர்கள் அரசு ஜூவலர்ஸ், அரசு பஜாஜ், அரசு பொறியியல் கல்லூரி கும்பகோனம் ஆவர்.

தமிழ் மக்கள் கலை விழா இரவு தொடங்கி விடியல் வரை தமிழ் மக்கள் வாழ்வில் விடியல் எந்த அளவிற்கு வந்துள்ளது, எந்த அளவிற்கு இன்னும் வரவேண்டும் என்று காட்டுவதாக அமைந்து தஞ்சை மண்ணில் புதுமை நிகழ்த்தியது. அது மட்டுமல்லாது உடற்கொடையாளர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.

உணவு விருந்தும் சரி, கலை விருந்தும் சரி, பாராட்டுக் குரல்களும் சரி, பத்தோடு பதினொன்று என்று இல்லாமல், பதினொன்று பதினொன்று தான். தனித்தது, இனித்தது, என்றும் வந்திருந்தவர்கள் மனதில் நிறைந்தது என்றே கூற வேண்டும்.

சென்னையில் திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் வழிகாட்டலில் மூன்று நாட்கள் திராவிடர் திருநாளைத் திராவிடர் கழகப் பொதுச்செயலர் இளவல் வீ.அன்புராஜ் மாபெரும் வெற்றித் திருவிழாவாக நடத்திக்காட்டினார்.

அடுத்த வாரத்தில் - தஞ்சை மண்ணில் கபிஸ்தலத்தில் ஒரே நாளில் தந்தை பெரியார் அறிவியல் கலை பண்பாட்டு மன்றம் அருமையாக நடத்தியிருக்கிறது. தமிழர் தலைவர் குறிப்பிட்டது போல் ஆரியரின் பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான ஆக்கபூர்வமான முயற்சிகள் இவை.

இம்முயற்சிகள் அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் பல பகுதிகளிலும் தொடரட்டும். கபிஸ்தலங்கள் பல தென்னகத்தில் மதுரை, நெல்லை, குமரிச்சீமைகளில் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்து எழுச்சியை உருவாக்கட்டும்!

தமிழ் ஓவியா said...

திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி

கிட்டத்தட்ட 85 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் எழுத வருவதே அரிதாக இருந்தது. ஆனால் மருங்காபுரி ஜமீன் தாரிணியான கி.சு.வி.லட்சுமி அம்மணி, 1929ஆம் ஆண்டு திருக்குறள் தீபாலங்காரம் என்னும் பெயரில் ஒரு அற்புதமான உரை நூலை எழுதித் தமிழுக்கு அளப்பரிய சேவை செய்துள்ளார்.

அதுவரை திருக்குறளுக்கு உரை எழுதிய தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர் அல்லது நத்தர், பரிமேலழகர், பருதி, திருவனையர் அல்லது திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் இவர்களது வரிசையில், 85 ஆண்டுகளுக்கு முன்பு, எளிய வசன நடையில் அதன் உட்பொருள் மாறாமல் உரை எழுதிய முதல் பெண்மணி என்னும் மதிப்பையும் இவர் பெற்றுள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ளது மருங்காபுரி. இது முன்னொரு காலத்தில் மருங்கிநாடு என்றும் அழைக்கப்பட்டது. இத்தகைய மருங்காபுரி ஜமீனாக இருந்தவர் கிருஷ்ணவிஜய பூச்சய நாயக்கர். இவர் ஒருமுறை புலியோடு சண்டை செய்து, அந்தப் புலியைக் குத்திக் கொன் றதால், புலிக்குத்து நாயக்கர் பரம்பரை என்றும் பெருமை யோடு அழைத்துவருகின்றனர்.

மக்கள் நலன், குளம் வெட்டுதல் உள்ளிட்ட பொதுப்பணிகளை நீதி வழுவாத நிர்வாகத் திறமையுடன் நிர்வகித்து வந்ததால் இன்றளவும் மருங்காபுரி ஜமீன் மீது மணப்பாறை சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. இந்தப் பெருமை களுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல ஜமீன்தார் கிருஷ்ணவிஜய பூச்சய நாயக்கரின் மனைவியரில் ஒருவரும் ஜமீன்தாரிணியுமான கி.சு.வி.லட்சுமி அம்மணியின் தமிழ்த் தொண்டு காலம் கடந்தும் போற்றப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


தமிழ்த்தொண்டு

இவர் 1894இல் பிறந்து 1971 வரை வாழ்ந்துள்ளார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். அனைவருக்கும் எளிதாகப் புரியும் அளவுக்குக் கருத்தை விரித்து, குறிப்புகளை அவ்வப்போது துண்டுச் சீட்டில் எழுதி வைத்ததாகவும், அதையே பலரின் விருப்பம் காரணமாகத் திருக்குறள் தீபாலங்காரம் என்னும் நூலாக வெளி யிட்டுள்ளதாகவும் லட்சுமி அம்மணி முகப்புரையில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்நூலை இதனினும் மிகத் தெளிவாகவும், விரிவாகவும் எழுதலாமென்று கல்வி மான்கள் கருதலாம். ஆயினும் அதிக நூல் பயிற்சியும், கேள்விகளும் இல்லாத அடியேன், இந்நூலை எழுதியுள்ள தாக அடக்கத்தோடு கூறியுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள நூலில் அணிந்துரை வழங்கியவர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, இவர் எந்த அளவுக்கு அறிவுக் கூர்மை உள்ளவர் என்பதும், தமிழ் இலக்கண இலக்கியங்களில் அவருக்கிருந்த விரிந்த பார்வையும் புலப்படுகின்றன.

திருக்குறள் உரை நூலில் அறத்துப்பால், பொருட்பால் என இரு பால்களுக்கும் முழு உரை விளக்கம் தந்துள்ளார். காமத்துப் பாலில் உள்ள குறள்களுக்கு மட்டும் சுருக்கமாக உரை எழுதியுள்ளார். இவர் காலத்தில் தமிழுடன் வடமொழி இரண்டறக் கலந்திருந்ததால் உரை நூல் முழுதும் சமஸ்கிருதத்தின் தாக்கம் நிரம்பியுள்ளது.

அணிந் துரைக்காகப் பலருக்கும் புத்தகம் அனுப்பி, அறிஞர்கள் எழுதித் தந்ததற்குப் பிறகே இந்த உரைநூல் வெளியிடப் பட்டுள்ளது. சுமார் 4, 5 மாதங்கள் லட்சுமி அம்மணி இப்பணியில் ஈடுபட்டிருந்தார் என்பதை இதன் மூலம் அறியலாம்.

அறிவார்ந்த நட்பு

செப்டம்பர் 1928இல் தொடங்கி 1929இல் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் அப்போது வாழ்ந்த உ.வே.சா. நா.மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தை உமா மகேசுவரனார், திரு.வி.க. உள்ளிட்டவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை அளித்திருப்பதன் மூலம் அவர்களுடனான நட்பும் தொடர்பும் பலமாகவே நூலாசிரியருக்கு இருந்துள்ளது தெரிகிறது.

நூல் தரமான தாளில் நேர்த்தியாக சென்னை - ராயப்பேட்டை சாது அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டுள்ளது. உறுதியான கட்டமைப்புடன் (பைண்டிங்) 500 பக்கங் களைக்கொண்ட நூலின் விலை மூன்று ரூபாய். முறையான நூல் காப்பு உரிமமும் இந்நூலுக்குப் பெறப்பட்டுள்ளது. உரை விளக்கம் முழுவதிலும் சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டி ருந்தாலும், பக்க எண்கள் அனைத்தும் தமிழ் எண்களாலேயே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மொழிப் புலமையில் கொண்டிருந்த ஈடுபாடு அளவுக்கு நூலாசிரியர், பொதுப் பணிகளிலும் அக்கறை செலுத்தியுள்ளார். அப்போதே திருச்சி ஜில்லா போர்டுக்கு நியமன உறுப்பினராக இவர் தேர்வு செய்யப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றி உள்ளார். இதுதவிர, மாவட்ட பாரதி சகோதர சங்கத்தின் தலைவராகவும் இருந்து இலக்கியப்பணி செய்துள்ளார்.

2004ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி ரிஷிகேஷ் (இமயமலை) தமிழ்ச் சுரங்கம், டில்லித் தமிழ்ச் சங்கம், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகள் நடத்திய மொழி மாநாட்டில் நூலாசிரியர் லட்சுமி அம்மணியின் படத்தை வெள்ளையாம்பட்டு சுந்தரம் திறந்து வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.

உ.வே.சாமிநாத அய்யர் நூலகத்தில் இருந்த, இந்த நூல் மற்றும் நூலாசிரியர் தொடர்பான செய்தியறிந்து இந்நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பழம் பெருமை வாய்ந்த திருக்குறள் தீபாலங்காரம் நூலைப் பற்றியும், நூலாசிரியரின் வள்ளுவர் நெறி குறித்தும் வெளி உலகத்திற்குப் போதிய அளவில் தெரியாமல் இருப்பது பெரும் குறைதான்.

தமிழக அரசு இந்த நூலை நாட்டுடைமையாக்கி எல்லாத் திசை களுக்கும் லட்சுமி அம்மணியின் புகழைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே தமது ஆசை என அவரது வளர்ப்பு மகன் சிவசண்முக பூச்சய நாயக்கர் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/95490.html#ixzz3Qh0JSAXi

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை: அய்பாட், ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் குழந்தைகளின் மூளைத்திறன் வெகுவாக பாதிக்குமாம்

நியூயார்க், பிப். 3- அமெரிக்காவில் அய்பாட், ஆண்ட்ராய்ட் போன், டேப்லெட் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்களை உபயோகிக்கும் குழந்தைகளை வைத்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

பாஸ்டன் பல்கலைக்கழக குழந்தைகள் நல மருத்துவர் குழு நடத்திய இந்த ஆய்வில், குழந்தைப் பருவத்தின் ஆரம்ப கட்டங்களில், வழக்கமான நட்புணர்வு மற்றும் எதேச்சையான விளையாட்டுகளை தவிர்த்து இதுபோன்ற சாதனங்களின் அதீத பயன்பாடானது, பரிதாப உணர்ச்சி, சமூக சிந்தனை மற்றும் சிக்கலை தீர்க்கும் மூளையின் திறன் ஆகியவற்றில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.

மேலும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் குழந்தைகளின் மொழி மற்றும் சமூகத்திறன்கள் பாதிக்கப்படும் என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/95497.html#ixzz3Qh0nNgOI

தமிழ் ஓவியா said...

விடுதலை வாசகர்களுக்கு ஓர் இனிய அறிவிப்பு

நாட்டின் முக்கிய பிரச்சினைகளை விவாதிக்கும் வகையில், உரத்த சிந்தனையாக ஓர் புதிய பகுதி "கருத்துக்களம்" என்ற பொதுத் தலைப்பில் முக்கிய தலைப்புகளை அறிவிப்போம்.

100 - 150 சொற்களுக்கு மிகாமல் சுருங்க எழுதி விளங்க வைக்கும் வகையில், மின் அஞ்சல் மூலம் விடுதலை ஆசிரியருக்கு அனுப்பலாம்.

வெளிவரும் சிறப்பான கருத்துகளுக்கு தக்க பரிசுகள்- புத்தகங்களாக அளிக்கப்படும்.

திராவிடர் இயக்கத்தால் தமிழும், தமிழரும் வளர்ந்தன ரா? இல்லையா?

முதல் களம்

இரு கருத்துகளும் வரலாம். (Point - Counter Point வாதம் - எதிர்வாதம்போல் அமையும்)

அனுப்பப்படும் கருத்துகள் அத்தனையும் இடம்பெறும் என்று உறுதி அளிக்க இயலாது.

ஆனால், மாறுபட்ட கருத்துகளுக்கு இடம் நிச்சயம் உண்டு.

- ஆசிரியர், விடுதலைmail id : viduthalaimalar@gmail.com

Read more: http://viduthalai.in/e-paper/95501.html#ixzz3Qmq4hUPn

தமிழ் ஓவியா said...

வாய்க் கொழுப்பு நீள்கிறது

முஸ்லீம்கள் நாய்போல் பிள்ளைகளை பெற்றுத் தள்ளுகிறார்களாம் பி.ஜே.பி.யைச் சேர்ந்த பிராச்சி சாமியாரிணி பேச்சு

புதுடில்லி, பிப்.4_ விசுவ இந்து பரிசத் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய பிஜேபி தலைவர் களில் ஒருவரான பிராச்சி சாமியாரிணி லவ் ஜிகாத் செய்பவர்கள் நாய்களைப் போல் 40_50 பிள்ளைக ளைப் பெற்றுத்தள்ளுகி றார்கள். இந்துக்கள் 4 குழந் தைகளைப் பெறக் கூறி னால் சிலருக்கு கோபம் வரு கிறது என்று பேசினார். ஞாயிறன்று இரவு புதுடில்லியில் விசுவ இந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத் தில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் களுள் ஒருவரான சாமியா ரிணி பிராய்ச்சி என்பவர் பேசும்போது, இந்துக்கள் 4 குழந்தைகளைப் பெற வேண்டும் என்று நாட்டு நலனில் அக்கறை கொண்டு பேசிய நமது மூத்த சாதுக்கள் மற்றும் இந்து நலனுக்கு என்றென்றும் பாடுபடும் அரசியல் தலை வர்கள் கூறினால், தேச நலனுக்கு எதிரான சிலர் இந்தக் கூற்றைத் தவறாக சித்தரித்து மக்களிடையே பொய் பிரச்சாரம் செய் கின்றனர்.

இவர்கள் இந்து நலனுக்கு எதிரானவர்கள், இந்து ராஷ்டிரம் அமை வதற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள். இவர்க ளால் நமக்கு என்றென் றும் தொல்லைதான்.

ஆனால் லவ்ஜிகாத் (முஸ்லீம்கள்) செய்பவர் கள் 40 குழந்தைகளை நாய்களைப்போல் பெற்றுத் தள்ளுகின்றனர். இப்படி நாய்களைப் போல் குழந்தைப் பெறு வதை யாரும் கண்டு கொள்ளவில்லை; ஆனால், இந்து ராஷ்டிரத்தின் ஒற்றுமைக்கு 4 குழந்தை களைப் பெறக் கூறினால் அதை எதிர்க்கின்றனர். இனிவரும் காலங்களில் எந்த வித பொய்ப்பிரச் சாரங்களையும் இந்துமக் கள் கவனத்தில் கொள் ளக்கூடாது அவர்களது கடமை 4 நான்கு குழந் தைகளைப் பெறுவது மட் டுமே, இதை தொடர்ந்து செய்துவந்தால் விரைவில் நமது நாடு இந்து நாடாக மாறிவிடும், மேலும் 4 குழந்தைகளுக்குமேல் உள்ள இந்து குடும்பங் களுக்கு பாராட்டும், பணமும் வழங்கப்படும்.

இதன்மூலம் அனைத்து இந்துக்களும் 4 குழந்தை களுக்குமேல் பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற கடமையுணர்ச்சி வரும், இந்தியாவில் உள்ள முக் கிய முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் தங்கள் தாய் மதமான இந்து மதத் திற்குத் திரும்பவேண்டும் என்று பிராச்சி சாமியா ரிணி தமதுரையில் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/95505.html#ixzz3QmqCso9c

தமிழ் ஓவியா said...

நீதி போதனை வகுப்பா?

உச்சநீதிமன்றத்தில் டில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

சமூகத்தில் அறநெறிகள் குறைந்து வருகின்றன. பணம் சம்பாதிப்பது மட்டுமே சமூகத்தின் குறிக்கோளாக மாறி வருகிறது. இதுபோன்ற சமூகச் சீரழிவை மாற்றி அமைக்க வேண்டும். எனவே, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை நீதி போதனை வகுப்பைக் கட்டாய மாக்கி, மாணவர்களுக்கு அறநெறிகளைப் போதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த வழக்குரைஞர் கள், தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி சிக்ரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசும், மத்திய அரசின் கல்வி வாரியமும் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்பேகூட இந்தக் கருத்து உலா வந்து கொண்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது இது நல்லதுதானே - நல்லொழுக்கத்தை மாணவர்களாக இருக்கும் பருவத்திலிருந்தே பயிர் செய்தால்தானே அவர்களின் எதிர்காலம் ஒழுக்கம் உள்ளதாக, கட்டுப்பாடு உள்ளதாக இருக்கும் என்று சொல்லக்கூடும்.

நடைமுறையில் பார்க்கும்பொழுது - அதுவும் பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் - சங் பரிவார்க் கூட்டத்தின் அழுத்தத்தில் ஆட்சி நடை போடும் ஒரு சமயத்தில் நீதி போதனை என்பது இந்து மதப் பிரச்சாரப் புயலாகத்தான் வீசும்.

ஏற்கெனவே அரியானாவில் கீதை கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டு விட்டது; கல்வித் திட்டத்தையே இந்து மயமாக ஆக்க இருப்பதாகவும் அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நீதி போதனை என்றாலே இதிகாசக் கதைகள், புராணக் கதைகளைத்தான் மாணவர்களுக்குப் போதிப்பார்கள்; பல ஆண்டுகளுக்குமுன் உயர்நிலைப் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு (Moral Instruction) நடைபெற்றுக் கொண்டு தானிருந்தது. அப்பொழுதும் புராண அளப்புகள்தான்; இராமன் கதை, அரிச்சந்திரன் கதை, குரு பக்திக்கு எடுத்துக்காட்டு கட்டை விரலைக் காணிக்கையாக துரோணாச்சாரிக்குக் கொடுத்த ஏகவலைவன் கதை களைத்தான் கதைத்துக் கொண்டிருந்தனர்.

குசேலனுக்கு 27 குழந்தைகள் - அவன் கிருஷ்ணன்மீது கொண்ட ஆழமான பக்தியின் காரணமாக கிருஷ்ண பகவான் தங்கத்தையும், பொருளையும் வாரி வழங்கி செல்வந்தனாக ஆக்கினார். ஆகவே, மாணவர்களே, பகவான்மீது பக்தி செலுத்துங்கள் என்று சொல்லுவதனால் மாணவர்கள் சோம்பேறிகளாக ஆவதைத் தவிர வேறு வழியே இல்லை!

தந்தை பெரியார்தான் அறிவார்ந்த வினாவை எழுப்பினார்.

ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்தால், அவன் வருஷத்துக்கு ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால், இருபது வயதிலும், அதற்கு மேற்பட்ட வயதும் நிறைந்த குழந்தை கள் எட்டாவது இருக்கும்.

இந்தக் குழந்தைகளும் சோம் பேறித் தடியன்போல், ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாத மாமிசப் பிண்டங்களாக அல்லவா இருந்திருக்கக் கூடும்! இப்படி இருபது வயதுக்கு மேற்பட்டவர்களை வீட்டிலே வைத்துக்கொண்டு ஒருவன் பிச்சைக்குப் போயிருந்தால், அந்த நாட்டில் மற்றவர்களும் இதுபோல் இருந்திருக்க வேண்டாமா? அப்படி இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படி ஆகியிருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியர்களுக்குக் கடவுள் செல்வம் கொடுக்கலாமா? (பொன்னி பொங்கல் மலர், 1948)

என்று தந்தை பெரியார் எழுதியுள்ளாரே! இதில் ஒரு வரியை மறுக்க முடியுமா? மதம் காட்டும் மார்க்கம், புராணம் காட்டும் புத்தியுரை இதுதானா?

இவற்றையெல்லாம்தானே நீதி போதனை வகுப்பில் சொல்லிக் கொடுத்தார்கள்? இனிமேலும் சொல்லியும் கொடுப்பார்கள்.

கொள்கைக்காக நஞ்சுண்டு மறைந்த சாக்ரட்டீசை பற்றியா சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?

பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து என்று கூறிய தந்தை பெரியார் அவர்களின் கொள்கையைப் பற்றியா எடுத்துக் கூறுவார்கள்?

இப்பொழுதே ஆசிரியர் தினம் என்பதை குரு உத்சவ் என்று சொல்லி வியாசரின் பிறந்த நாளைத்தான் இன்றைய தினம் மத்தியில் ஆட்சியிலிருக்கும் வகையறாக்கள் கொண்டாடுகிறார்கள்.

நேருவின் பிறந்த நாளைக் குழந்தைகள் நாளாக ஏற்காமல், சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி, வாலிப வயதில் பெண்ணைத் திருடிய கிருஷ்ணன் பிறந்த நாளை(?) கொண்டாடக் கூடியவர்கள்.

இத்தகைய ஓர் ஆட்சியில் நீதி போதனை என்ற வகுப்பு எந்தக் கேவலத்திற்கு - பிற்போக்குத் தனத்திற்கு, மூட நம் பிக்கைக்கு இழுத்துப் போகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

நீதி போதனை வகுப்பில் மதச்சார்பின்மை என்னும் தத்துவத்தின் சீலத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

ராமராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் - இந்து ராஜ்ஜி யத்தைப் படைப்போம் என்று காட்டுக் கூச்சல் போடுவோர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய இந்தக் காலகட்டத் தில் நீதி போதனை வகுப்பு என்பது மாணவர்கள் மத்தியிலேயே மதவாதத்தைத் திணிக்கும் பேராபத்தில் கொண்டு போய் விடும் - எச்சரிக்கை!

எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/95509.html#ixzz3QmqsR4HW

தமிழ் ஓவியா said...

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மில்லியன் டாலர் குட்டு!

ஜனவரி 26 - குடியரசு நாளைக் கொண்டாடும் சாக்கில் பிரதமர் மோடி அவர்கள் தன்னை உலகத் தலைவர்களில் ஒருவராகக் காட்டிக் கொள்ளும் வகையில் ஈடுபட்டுள்ள பல்வேறு திட்டமிட்ட செயல்களில் ஒன்றாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களையே இவ்வாண்டு முக்கிய விருந்தினராக அழைத்துள்ளார்!

இதனால் ஏற்படும் பலன்களும் விளைவுகளும் பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியவையாகும்.ஏற்கெனவே திரு. மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது போட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில், ஒப்புக் கொள்ளப்பட்டாமல் இழுபறியாக இருந்த சில பிரிவுகளும் நம் மக்களுக்குக் கேடு_பாதகம் விளைவிக்கக்கூடிய பிரிவுகளும் சேர்த்து இப்போது பிரதமர் மோடி அரசால் கையொப்பமிடப்பட்டு, முழுக்க அமெரிக்காவின் பக்கமே சாய்ந்துவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

அணு உலையினால் ஏற்படும் ஆபத்துகளுக்கு அமெரிக்கா (வெளிநாடு) எவ்விதத்திலும் பொறுப்பேற்காது; நஷ்டஈடு தராது. மாறாக, அணு உலையை ஏற்படுத்தும் நாடே அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்ற பிரிவை ஒப்புக் கொண்டிருப்பது, நமது முழு சரணாகதியைத்தான் காட்டும். பொதுவாக இதுமாதிரி ஒப்பந்தங்கள் இரு சாராருக்கும் வெற்றி, யாருக்கும் தோல்வி இல்லை என்ற (Win Win Situation) அடிப்படையில் அமைவதே விரும்பத்தக்கது!

அமெரிக்க முதலீடு என்பதால் அதிக லாபம் யாருக்கு? உள்நாட்டுத் தொழில்நுட்ப அறிவு (Technical Know) எந்த அளவு வளரும்; பொறுத்திருந்து பார்த்தால் புரியும்.

பொதுவாக இவ்வாட்சி ஒரு பக்கம் மதவாதம்; மற்றொரு பக்கம் கார்ப்பரேட் முதலாளிகளின் ஏகபோகப் பண்ணையம் இவற்றின் நிலைக்களனாக உள்ளது என்பன மறுக்க முடியாதவை.

அதானிகள், அம்பானிகள், டாட்டா, பிர்லாக்கள் போன்ற கொள்ளை லாபக் குபேரர்கள் கொழுக்கவும், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம், நிலங்களைக்கூட அடிமாட்டு விலைக்கு விற்று வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொள்ளும் நிலைதான்; உர மானியம் ரத்து, உணவுக்கான சலுகைகள் ரத்து போன்றவை இதன் உண்மை நிறத்தைக் காட்டும்!

நமது விருந்தினராக வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா பேசுகையில், இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். மதவெறியைப் பளிச்சென்று சுட்டிக்காட்டிய-தோடு, சரியான எச்சரிக்கையையும் தந்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சி எப்போது வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்றால், அது மதவாதத்தை விட்டுவிட்டு மதத்தின் பெயரால் பிரிவினைவாதச் செயல்களை நடத்தாமல் இருக்கும்பொழுதுதான் இந்த நாட்டின் வளர்ச்சி சிறப்பாக அமையும். அதுவரை நாட்டின் வளர்ச்சி என்பது கேள்விக்-குறியாகத்தான் இருக்கும்.

இந்திய அரசியல் சட்டத்தின் (அடிப்படை உரிமை) 25ஆவது பிரிவு அனைத்து மக்களும் சமம் என்று குறிப்பிடுகிறது. அனைவருக்கும் _ தேர்வு செய்வதிலிருந்து, சுதந்திரமாய் பேசுவதற்கும், பின்பற்றுவதற்கும், பரப்புவதற்கும் உரிமை உள்ளது. நமது இரண்டு நாடுகளிலும், அனைத்து நாடுகளிலும் மதச் சுதந்திரத்தைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் உள்ளது.

இப்படி பிரதமர் மோடிக்கும், ஆட்சியிலிருக்கும் அவரது கட்சியினருக்கும் பராக் ஒபாமா இந்திய அரசியல் சட்டப் பிரிவு பற்றி பாடம் எடுத்துள்ளார்!

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்கள் முதல் மற்ற மதவாத அடிப்படையாளர்களும் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். இது டாலர் தேசத்திலிருந்து வந்த மில்லியன் டாலர் குட்டு!

மோதிரக் கையால் குட்டுப்படுவதைவிட டாலர் கையால் குட்டுப்படுவதைப் பெருமையாகக் கருதுவார்களோ? இதைத்தானே நாம் அன்றும் இன்றும் கூறி வருகிறோம்.

- கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

இரோம் சர்மிளா : விடுதலையும் தொடரும் கைதுகளும்


இராணுவச் சட்டங்கள்

இரோம் சர்மிளா :

விடுதலையும் தொடரும் கைதுகளும்


'சர்மிளா தற்கொலைக்கு முயலும் குற்றவாளி', அவரைக் காண இம்பால் நீதிமன்றத்தை அணுகியபோது நீதிபதி அனுமதி மறுத்துக் கூறியவை இவை. ஆனால் அதே நீதிமன்றம் 'சர்மிளா குற்றமற்றவர், அவரது போராட்டம் சட்டப்பூர்வமானது என தீர்ப்பளித்து. ஜனவரி 22ஆம் தேதி விடுதலை செய்தது.

ஆனால் அடுத்த நாள் இரவே மருத்துவ உதவி தரப்படுகிறது என மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த விடுதலையும் தொடரும் கைதுகளும் சர்மிளாவின்மேல் நிகழ்த்தப்படுவதல்ல, அவர் வைக்கும் கோரிக்கையின்மேல் நிகழ்த்தப்படுபவை.

மணிப்பூரில் நடைமுறையில் உள்ள ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதுவே அந்தக் கோரிக்கை. அதற்காகவே கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார்.

இந்தச் சட்டத்தை இங்கிலாந்து காலனிய காலத்தில் எதிர்த்த அதே காங்கிரஸ்தான், இந்திய விடுதலைக்குப் பிறகு இங்கு நடைமுறைப்படுத்தியது.

இந்திய விடுதலைக்குப் பிறகான அரை நூற்றாண்டு காலம் கடந்தும் நடைமுறையில் உள்ள ராணுவ சிறப்பதிகாரச் சட்டம், மத்தியில் எந்த அரசாங்கம் மாறினாலும் மாறாத ஒன்று. அந்தச் சட்டம் ஏற்படுத்திய வன்முறையே எனது உண்ணாவிரதத்துக்குக் காரணம் என்கிறார் சர்மிளா.

அப்படி என்ன வன்முறை? நவம்பர் 2, 2002, மாலோம் என்ற பகுதியில் காலைப் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த 10 பேர் எவ்வித எச்சரிக்கையுமின்றி அசாம் ரைபில்ஸ் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதில் ஓர் இளைஞர் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் வீரதீர விருது பெற்றவர். இந்தச் சட்டத்துக்குக் கொடுக்கப்படும் கேள்விகள் கேட்கமுடியாத உட்சபட்ச அதிகாரத்தை எதிர்த்து அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை சர்மிளா தொடர்கிறார்.

ஏன் இந்தச் சட்டம்? 1948இல் இந்தியாவால் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்ட மணிப்பூரிலும் இன்னும் பிற வடகிழக்குப் பகுதிகளிலும் இந்திய _- காலனித்துவ ஆட்சி (Indian Colonial Rule) என்று நிலவும் அரசியல் சூழலை இன்றளவும் இந்திய அரசு ஏற்கத் தயாராக இல்லை என்பதால் இங்கு ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை வைத்திருக்க வேண்டிய நிலை இந்திய அரசுக்கு உள்ளது. ஆனால் இந்திய அரசு, ஆயுத இயக்கங்கள் ஊடுருவலைத் தடுக்கவே இச்சட்டம் என்கிறது.

தற்கொலை குற்றமல்ல

அண்மையில் உச்ச நீதிமன்றம் அய். பி. சி. 309, அதாவது தற்கொலைக்கு முயல்வது குற்றமாகாது என்றது. இப்போது சர்மிளாவுக்குக் கொடுக்கப்பட்ட விடுதலை, அய். பி. சி. 309 விலக்கப்பட்ட அடிப்படையில்தான் என எண்ணப்பட்டது.

தற்கொலைக்கு முயலும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சட்ட ஆணையகம், தற்கொலைக்கு முயல்வோரைத் தண்டிப்பது சரியாகாது. அவர்களுக்கு அதிலிருந்து மீண்டும் உளவியல் சார்ந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றது.

சட்ட ஆணையகம் கருத்தின் அடிப்படையில், இங்கு சிகிச்சையானது ராணுவ சிறப்பதிகாரச் சட்டக் கொள்கை மீதே தேவையாக உள்ளது.

- மகா.தமிழ்ப் பிரபாகரன்

(கட்டுரையாளர் நியூஸ்7 தொலைக்காட்சியில் தமிழ் செய்தியாளராகப் பணியாற்றுபவர். இரோம் ஷர்மிளா குறித்து அத்தொலைக்காட்சியில் சிறப்புப் பதிவினைச் செய்தவர்.)

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வழக்குகளை விசாரிக்கும் ஆங்கிலேய நீதிபதிகளுக்கு உதவியாக சாஸ்திரங்களை எடுத்துச் சொல்லும் பொறுப்பில் பார்ப்பனர்களே இருந்தார்கள் என்பதும், அந்தப் பார்ப்பனர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப கருத்துகளைக் கூறி வந்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

எதுக்காவது போராடுவோம்?"

போனவாரம் மாதொருபாகன் மனதைப் புண்படுத்துகிறது என்று போராடியவர்கள், இப்போது நயன்தாரா பீர் வாங்குவது போல் நடிக்கக்கூடாது என்று போராட்ட அறிவிப்பு விடுத்திருக்கிறார்கள். எப்படியாவது செய்திகளில் இடம்பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் எதற்குப் போராட்டம் நடத்துவது என்று தெரியாமல் எல்லாவற்றுக்கும் போராட்ட அறிவிப்பு விடுக்கிறார்கள் இந்துத்துவ காமெடியினர். ஏதோ நம்மால ஆன உதவியையும் செய்யலாமே! எதற்கெல்லாம் போராட்டம், எப்படியெல்லாம் நடத்தலாம் என்பதை நம் உண்மை வாசகர்கள் எழுதி அனுப்பலாம். சிறந்த போராட்டத்திற்குப் பரிசு உண்டு. வரும் பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் உங்கள் ஆலோசனைகளை அனுப்பிவையுங்கள்.

எதுக்காவது போராடுவோம்?

உண்மை

பெரியார் திடல், 84/1, (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7

unmaionline@gmail.com

தமிழ் ஓவியா said...

கருத்து


மார்க்சிஸ்ட் தலைவர்கள் பலர் தற்போது சிந்தனை ரீதியாக முதலாளித்துவ ஆதரவாளர்களாகி-விட்டனர். சமூக, பொருளாதாரக் கொள்கையின்படி நான் இன்னும் ஒரு மார்க்சிஸ்ட்தான். முதலாளித்துவ நாடுகளில் ஏழை, பணக்காரர்கள் இடையேயான வித்தியாசம் அதிகரித்துள்ளது. சரிசமமான பகிர்வுக்குத்தான் மார்க்சிசத்தில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

- தலாய் லாமா, புத்த மதத் தலைவர், திபெத்.

இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு எட்டு விபத்துகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் நடைபெறும் விபத்துகளில் 15 விழுக்காடு தமிழகத்தில் நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் இரண்டு பேர் செஞ்சிலுவைச் சங்கம் அல்லது அவசர ஊர்தி சேவை போன்ற முதலுதவிச் சங்கங்களில் தொண்டாற்ற வேண்டும்.

- கே.ரோசய்யா, தமிழக ஆளுநர்


மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் மட்டுமே உள்ளனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நாடு முழுவதும் பெண் சிசுக் கொலை அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

- மேனகா காந்தி, மத்திய அமைச்சர்சொல்றாங்க...பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடக்கம்தான். பாரதப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் கற்பிக்கும் வகையில் விரைவில் கல்வி முழுமையாகக் காவி மயமாக்கப்படும்.

- ராம் பிலாஸ் சர்மா, கல்வி அமைச்சர், ஹரியானா

சொல்றேங்க...

நல்லா கற்பிங்க அமைச்சர் சார்!

ஆனா... நண்பன் படத்து டயலாக் மாதிரி கற்பிங்கிறது கற்பழின்னு ஆகாமப் பாத்துக்குங்க! ஏன்னா... நீங்க சொல்ற பாரதப் பண்பாட்டின் மகாபாரதத்தையும், பாகவதத்தையும், இதர புராணங்களையும் மாதிரி கற்பழிப்பு சீன் உள்ள கதைகள் உலகத்திலேயே கிடையாது!

சொல்றாங்க...

பகவத் கீதையை முன்னிறுத்தி அரசியல் நடைபெறுவதை ஏற்க முடியாது. உலகில் உள்ள அனைவருக்கும் கீதை பொதுவானது. அது பா.ஜ.க.விற்கு மட்டும் சொந்தமல்ல.

- பூபிந்தர் சிங் ஹுடா, மேனாள் முதல்வர், ஹரியானா

சொல்றேங்க...

இதுதானா சார் உங்க டக்கு! பா.ஜ.க. மட்டும் இதை வச்சு அரசியல் பண்ணக்கூடாது... நாங்களும் பண்ணு-வோம்ங்கிறீங்களா... விஷம் யார் கையில இருந்தாலும் விஷம்தான் சார்.

சொல்றாங்க...

டில்லியில் ராமபக்தர்களின் அரசாங்கம் அமைந்துள்ளது. ஜெய்ஸ்ரீராம் என்ற மக்களின் பிரார்த்தனையால்தான் ராம பக்தர்களால் டில்லியில் ஆட்சி அமைக்க முடிந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசு அயோத்தியை மேம்படுத்தவில்லை. அயோத்தியைப்பற்றி தற்போதைய சமாஜ்வாடி மற்றும் முந்தைய பகுஜன் சமாஜ் அரசுகளுக்கும் அக்கறை இல்லை. இதற்குக் காரணமே இந்தக் கட்சிகளின் ஜாதிய அரசியல்தான். - நிதின் கட்காரி, மத்திய அமைச்சர்

சொல்றேங்க...

ஆமாங்க... அவங்களோடது பிற்படுத்தப்-பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல். உங்களோடது பார்ப்பன உயர்ஜாதி அரசியல்!

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர் நாடாக பாலஸ்தீனம் ஜனவரி 6 அன்று இணைந்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மின்னணு முறையில் ஓட்டளிக்கத் தேவையான ஏற்பாடுகளை எட்டு வாரங்களுக்குள் செய்துதர மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஜனவரி 12 அன்று ஆணையிட்டது.

அய்ரோப்பிய நாடான குரோஷியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கொலிந்தா கிரயா கிதாரொவிச் வெற்றிபெற்று அந்நாட்டின் அதிபர் பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சுரங்க முறைகேடு வழக்கில் கைதாகி சிறையிலிருந்த கருநாடக மேனாள் அமைச்சர் ஜனார்த்த ரெட்டிக்கு 40 மாதங்களுக்குப் பின்னர் ஜனவரி 20 அன்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

பயங்கரவாதிகள் மீதான வழக்கை விரைந்து விசாரிப்பதற்காக சிறப்பு ராணுவ நீதிமன்றங்கள் ஏற்படுத்த வகை செய்யும் அரசியல் சாசனத் திருத்த மசோதாக்கள் இரண்டினை பாகிஸ்தான் அரசு ஜனவரி 3 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அவை ஜனவரி 6 அன்று நிறைவேற்றப்பட்டன.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவிக்குப் போட்டியிட்ட திருநங்கை மதுகின்னார் வெற்றி பெற்றுள்ளார்.

சவுதி அரேபியா நாட்டில் மன்னர் அப்துல்லா ஜனவரி 23 அன்று மரணம் அடைந்ததை அடுத்து புதிய மன்னராக சல்மான் அறிவிக்கப்-பட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

தேநீர் இரட்டைக் குவளை

மலைஜாதிப் பெண்
கிள்ளிப் பறித்தாள்
தேயிலையை அங்கே!
கறவைப் பசுவை
பாடிக் கறந்தாள்
பால் வந்ததிங்கே!
கரும்பாலை அலுப்பில்
தினம் அவன் உழைத்தே
சக்கரை சேர்ந்ததிங்கே!
தண்ணீர் கலந்தவன்
என்ன ஜாதியோ?
என்ன எழவோ?
-என யாரும் கேட்டறியேன்.
பாத்திரம் தேய்த்தவன்,
அடுப்பைச் செய்தவன்,
எரிக்கிற எண்ணெய்,
கழுவுகிற சோப்புக் கட்டி,
எதற்கும் ஆதிமூலம் கேட்டறியேன்.
ஜாதி பேசும்
சுத்தபத்தம் எல்லாம்
தேநீர்க் கடை
இரட்டைக் குவளையில்தான்.
இப்பெல்லாம் எங்க சார்
இரட்டை டம்ளர். எல்லாமே பிளாஸ்டிக் டம்ளர்தானே' என்பவன்
வலிந்து சொல்வான்
இப்பெல்லாம் யாரு சார்?
ஜாதி பாக்குறா! என்று.

- தம்பி. அழ. பிரபு, மதுரை

தமிழ் ஓவியா said...

டில்லி தேர்தல் பிஜேபிக்குக் கிலி

டில்லியில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபி தோற்கப் போகிறது என்கிற கிலி, பிஜேபி தலைவர்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டு இருக்கிறது என்பதற்கு இதோ இரு எடுத்துக்காட்டுகள்.

டில்லி தேர்தல் வெற்றி, மோடி அரசின் செயல்பாட்டை அங்கீகரிக்கும் தேர்தல் இல்லை

- மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு

நடைபெறும் டில்லி சட்டப் பேரவைத் தேர்தல் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அல்ல; எனவே, டில்லி தேர்தல் முடிவு எந்த விதத்திலும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசைக் கட்டுப்படுத்தாது

- பிஜேபி தலைவர் அமித்ஷா

இப்பொழுதே புரிகிறது தோல்வி ஜூரம் பிஜேபிக்கு வந்து விட்டது.

பிரகாஷ்காரத் கருத்து

மோடி அரசும், ஆர்.எஸ்.எசும் பின்னிப் பிணைந்து செயல்பட்டு வருகின்றன. இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்து பா.ஜ.க. மற்றும் மோடி அரசுக்கு எதிராகப் போராடுவதை முக்கிய பணியாக எங்கள் கட்சி கையில் எடுத்துள்ளது

- பிரகாஷ்காரத் சி.பி.எம். பொதுச் செயலாளர்

கடும் கோபமாம்!

பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா மீது பிஜேபி இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு கடும் கோபமாம். டில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தத் தலைவர்கள் கொடுத்த வேட்பாளர் பட்டியலை, குப்பைக் கூடையில் அமித்ஷா தூக்கிப் போட்டு விட்டாராம். எந்த நேரத்திலும் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், யஷ்வந்த் சின்கா போன்றவர்கள் வெடித்துக் கிளம்புவார்களாம் - இப்படி சொல்லுவது, பிஜேபிக்கு மிகவும் நெருங்கிய ஏடான தினமலர் தான் கூறுகிறது.

கருப்புப் பணம் தொடர்பாக மோடி கூறியவை தேர்தல் தந்திரமாம்!

தமிழ் ஓவியா said...

அமித்ஷா ஒப்புதல் வாக்குமூலம் கருப்புப் பணம் தொடர்பாக மோடி கூறியவை அனைத்தும் தேர்தல் தந்திரம் மட்டுமே என பாஜக தலைவர் அமித் ஷா கூறியிருப்பது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவரிடம் கருப்பு பணத்தை மீட்டு அனைவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக மோடி கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அமித் ஷா மோடி பிரச்சாரத்தின் போது கூறியது தேர்தல் தந்திரம் மட்டுமே என்றும், கருப்பு பணத்தை மீட்டு வருவோம் என்பதை அவருக்கு உரிய பாணியில் மோடி குறிப்பிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

கருப்புப் பணத்தை மீட்டு திட்டங்களில் முதலீடு செய்து ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மோடி திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். அதே நேரம் தங்கள் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்பதை மக்களே நம்பியிருக்க மாட்டார்கள் என்றும் அமித்ஷா தெரிவித்தார். தேர்தல் தந்திரத்திற்கும், வாக்குறுதிக்கும் வித்தியாசம் உள்ளது என்றார் அவர். பணம் கிடைக்காது என்று மக்களுக்கே தெரிந்திருக்கும் போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இது புரியவில்லை என்றால் அவர் மீது பரிதாப படதான் முடியும் என்றும் அமித் ஷா கூறினார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கருப்புப் பண விவகாரத்தில் பொய்யான வாக்குறுதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கைத் துரோகம் செய்ததற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாஜக-வின் அரசியல் சந்தர்ப்பவாதத்தால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.

டில்லி தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம், மது, பிரியாணி விருந்து

பா.ஜனதாமீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு டில்லி சட்டமன்ற தேர்தல் பிரசாரம் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பா.ஜனதா, ஆம்ஆத்மி கட்சி களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சியினரும் ஒருவரையொருவர் மாறி மாறி புகார் கூறுகிறார்கள். இந்த நிலையில் பாரதீய ஜனதா வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவதாக ஆம்ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான அசுதோஸ் கூறியதாவது:

பாரதீய ஜனதா கட்சி வாக்காளர்களுக்கு பணம், மது, பிரியாணி போன்றவைகளை கொடுப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஏழை வாக்காளர்களின் அடை யாள அட்டையும் கைப்பற்றி வைத்து இருக்கிறார்கள்.

ஆம்ஆத்மிக்கு வாக்களிக்க கூடாது என்று வாக்காளர்களை மிரட்டி அச்சுறுத்துவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதற்கான விளைவுகளை அவர்கள் பின்னர் தாங்கி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆம்ஆத்மியின் இந்த புகாருக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.

அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் நரசிம்மா இதுபற்றி கூறியதாவது: பணத்தை வாங்கிக் கொண்டுதான் ஆம்ஆத்மி தேர்தல் போட்டியிடுவதற்கு வாய்ப்பை கொடுத்தது. ஆம்ஆத்மியின் புகாருக்கு நாங்கள் பதில் சொல்லத் தேவையில்லை. ஹவாலா பணம் மோசடி செய்து கட்சியை நடத்துபவர்களுக்கு எங்களை பற்றி சொல்ல எந்த தகுதியும் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/95646.html#ixzz3QyNLOUOP

தமிழ் ஓவியா said...

இது என்ன கூத்து?

மத சுதந்திரம் தொடர்பான ஒபாமாவின் கூற்று துரதிருஷ்டமானது.
- உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

ஒபாமா சொன்ன கருத்து பொதுவாகச் சொல் லப்பட்டதுதானே தவிர, நம்மைப் பற்றியல்ல!
- பி.ஜே.பி. தலைவர் அமித்ஷா

Read more: http://viduthalai.in/e-paper/95648.html#ixzz3QyNvrepD

தமிழ் ஓவியா said...

வாராக்கடன்

முடிந்த டிசம்பர் காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ஏற் பட்ட நட்டம் 6516 கோடி யாம்.

வாராக் கடன் 8.12 சதவீதம் அதிகரித்ததே இதற்குக் காரணமாம். (ரூ.14,500 கோடி வாராக் கடன்).

அம்மா பசி!

அம்மா பசி என்று அழும் குழந்தைகள் உலகில் 56.8 கோடி

Read more: http://viduthalai.in/e-paper/95644.html#ixzz3QyO7QOlG

தமிழ் ஓவியா said...

சட்டம் போட்டால் போதுமா?

வாக்காளர்களுக்குப் பணமோ, பரிசுப் பொருளோ கொடுத்தால் இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ஏற்கெனவே நடைமுறையில் இருந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஓராண்டு என்றுதான் இருந்தது - இப்பொ ழுது ஈராண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இது வரவேற் கத்தக்கதுதான் என்றாலும் இதனால் மட்டும் எதிர் பார்க்கும் பலன் கிடைத்து விடுமா என்பது சந்தேகமே!

இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் பணம் பட்டுவாடா நடைபெற்றதே.

அதற்காக நடைமுறையில் இருந்து வந்த சட்டத்தின்படி ஓராண்டு தண்டிக்கப்பட்ட வர்கள் யார்? அப்படி ஒரு பட்டியல் இருக்கிறதா?

சில நேரங்களில் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தி கூட வெளிவந்ததுண்டு.

கைது என்ற செய்தி வெளிவந்ததே தவிர, நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, தீர்ப்பின் அடிப்படையில் யாராவது தண்டிக்கப்பட் டார்களா? இல்லை என்கிற போது இந்தச் சட்டத்தின் மூலம் மட்டும் கையூட்டுக் கொடுப்பது தடுக்கப்பட்டு விடும் என்று எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?

(பணத்தை நேரடியாகப் பட்டுவாடா செய்வதற்குப் பதில் டோக்கன் கொடுக்கிறார்களாம் - சட்டத்தை உடைக்க வழியா தெரியாது?).

பெரும்பாலும் ஆளும் கட்சியினர் தான் வாக் காளர்களுக்குப் பணம் கொடுப்பதில் முன்னணி வரிசையில் அணிவகுத்து நிற்கின்றனர். அப்படி இருக்கும் பொழுது காவல்துறை அவர்களைக் கைது செய்யும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? கச்சித மாகப் பணம் பட்டு வாடா செய்ய காவல்துறை பாது காப்பாக இல்லாமல் இருந்தாலே பெரிய காரியம்தான்.

நடந்து முடிந்த 16ஆவது மக்களவைத் தேர்தலில், தமிழ் நாட்டில் தேர்தல் ஆணையமே 144 தடை உத்தரவு பிறப்பிக்கச் செய்து, ஆளும் கட்சி, வாக்காளர் களுக்குப் பணம் பட்டுவாடா செய்ய நடை பாதை திறந்துவிட வில்லையா?

தேர்தல் முடிந்தவுடன் தமிழகத் தேர்தல் ஆணையர் என்ன சொன்னார்? வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது உண்மை. அதனைத் தடுக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையரே வெளிப் படையாக ஒப்புக் கொண்டாரே. அவர்மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ன?

இந்த அதிகார வர்க்கத்தை வைத்துக் கொண்டு எந்த சட்டம் போட்டாலும் வாக்காளர்களுக்கும் பணம் கொடுப்பதை எப்படித் தடுக்கமுடியும்?

நாட்டில் தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம் எந்தத் தரத்தில் இருக்கின்றன? என்பது கவனத்தில் கொள்ளப் பட வேண்டியதுதான்.

வாக்காளர்களே, வாக்களிக்க பணத்தை எதிர்பார்க் கும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளதா இல்லையா? பணம் கொடுப்பவர்கள் தான் இதற்குக் காரணமா? வாங்குப வர்கள் தான் காரணமா? என்பது பட்டிமன்றத்திற்குப் பொருத்தமான தலைப்பாக இருக்கக் கூடும்.

முறையான ஒரு சான்றிதழைப் பெறுவதாக இருந் தாலும் அடிமட்டத்திலிருந்து இலஞ்சம் தேவைப்படு கிறது ; இப்படி சம்பந்தப்

பட்ட அலுவலகங் களில் அறை போட்டு சதா அந்த வேலையில் ஈடுபடும் நிலை இருக்கின்றதே!

கடவுளுக்குக் கூட லஞ்சம் (நேர்த்திக்கடன்) கொடுத்தால் தான் வரம் கிடைக்கும் என்ற கேவலமான மனப்பான்மை தாண்டவமாடும் நாடு இது என்பதை மறந்து விட வேண்டாம்!

குடும்பக் கட்டுப்பாட்டுக்கு விளம்பரம் செய்தது போல எங்கு நோக்கினும் பிரச்சார ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டாமா? தொலைக் காட்சிகளில் அதற்கென நேரத்தை ஒதுக்கித் தலைவர் களையும், அறிஞர்களையும், சமூகப் பொறுப்பு வாய்ந்த சான்றோர்களையும் அழைத்துப் பேச வைத்தால் என்ன? அது ஓரளவுக்கு தாக்கத்தை உண்டாக்கத்தான் செய்யும். தந்தை பெரியார் பொதுக் கூட்டங்களில் மக்களைப் பார்த்து ஒரு கேள்வியை நாக்கைப் பிடுங்குமாறு கேட்பார்.

நீ பணம் வாங்கிக் கொண்டு தானே ஓட்டுப் போட்டாய்? உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் இலஞ்சம் வாங்கினான் என்று சொல்லுவதற்கு உனக்கு யோக்கிதை ஏது? உரிமை ஏது? முதல் போட்டவன் சம்பாதிக்க மாட்டானா? என்ற அடிப்படைக் கேள் வியை பொதுமக்களைப் பார்த்துக் கேட்பார் - அதற்கும் கை தட்டல் கிடைக்கும்.

தந்தை பெரியாரின் மற்றொரு கேள்வி மிகவும் முக்கியமானது. தேர்தலில் போட்டியிடும் வேட்பா ளர்கள் இவ்வளவுப் பணம்தான் செலவு செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது; தேர்தலில் போட்டி யிடுபவர்கள், அவர்கள் வெற்றி பெற்றவர்களாக இருந்தாலும், தோல்வியுற்றவர்களாக இருந்தாலும் சரி, தேர்தலில் செலவழித்த உண்மையான கணக்கைத்தான் காட்டுகிறார்களா? என்ற கேள்விக்குப் பிரதமராக இருந்தாலும், நாணயமாகப் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.

பணம் பெற்றுக் கொண்டுதான் செய்தி வெளியிட முடியும் என்கிற ஒழுக்கக்கேடு நிர்வாணமாக கூத்தாடும் ஒரு நாட்டில் வெறும் சட்டங்கள் ஏட்டுச் சுரைக் காயாகத்தான் இருக்க முடியும்.

பக்திப் பிரச்சாரத்துக்காக ஒதுக்கப்படும் காலத் தையும் கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கி வைத்து பொது ஒழுக்கத்தைப் பரப்புவதற்காக செயல்படட்டும்.

கண்டிப்பாக நல்லதோர் தாக்கம் ஏற்படத்தான் செய்யும்.

Read more: http://viduthalai.in/page-2/95650.html#ixzz3QyORrJxD

தமிழ் ஓவியா said...

கடவுள்பற்றி துணுக்குத் துக்கடா! சித்திரபுத்திரன்

சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி, எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்க மாட்டேன் என்கிறானே.

ராமன்: அதுமாத்திரம் அதிசயமில்லப்பா, பசியா வரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக் கிடக்கிறார். ஒருவன் கூட ஒருகை கூழ் ஊத்த மாட்டேங்கிறானே.

சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?

ராமன்: இதுதான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?

ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்ய முடியவில்லை என்றால் இது முட்டாள்தனமான சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?

அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட்டம் இருக்கிறதோ அதேபோல் சர்வ சக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனை நம்பச் செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.

- விடுதலை (22.2.1972)

Read more: http://viduthalai.in/page-7/95689.html#ixzz3QyPHt7iO

தமிழ் ஓவியா said...

இராமயண காலம் - பொய்

இராமாயணம் நடந்த காலம் திரேதாயுகம். திரேதா யுகம், துவாபர யுகம் இரண்டிற்கும், முறையே 12,96,000; 8,64,000 ஆண்டுகள். மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம்.

புத்தர் பிறந்து இன்றைக்கு 2500 ஆண்டுகள்தான் ஆகின்றன. இவ்விதம் 2500 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப் பற்றி திரேதா யுகத்தில் (21,00,000 ஆண்டு களுக்கு முன்) நடந்த இராமாயணத்தில் காணப்படுவன ஆதாரங் களுடன் கீழே தரப்படுகின்றன:- (சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு)

1. ராமனைப் பார்க்கவந்த பரதனிடம் ராமன் கேட்கும்போது பவுத்தன், சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங்களையும் தர்ம சாஸ்திரங் களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல், கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும் பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்ப வர்கள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
(அயோத்தி காண்டம் 100ஆம் சர்க்கம், 374ஆம் பக்கம்)

2. ராமன், ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்போது திருடனும், பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும் நாஸ்திகனுக்கும் பேதமில்லை என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(மேற்படி காண்டம் 109ஆம் சர்க்கம், 412ஆம் பக்கம்)

3. சீதையைத் தேடிச் சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்கு சற்று தூரத்திற்கப்பால் புத்தரின் ஆலயம் போல் கட்டப்பட்ட ஓர் உப்பரிகையைக் கண்டார்.
(சுந்தர காண்டம் 15ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)

4. வாலியிடம் ராமன் கூறும்போது, பூர்வத்தில் ஒரு பவுத்த சன்யாசி உன்னைப் போல் கொடிய பாபத்தைச் செய்து அதற்காக மாந்தாதா சக்ரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான் என்று சொன்னதாகக் குறிக்கப்பட்டுள்ளது.
(கிஷ்கிந்தா காண்டம் 18ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)

5. இராமனுக்கு தசரதன் பட்டாபிஷேகம் செய்ய நகரை அலங்கரிக்கும்பொழுது வெளுத்த மேகம் போன்ற தேவாலயங்கள், நாற்சந்தி மண்டபங்கள், வீதிகள் புத் தரின் ஆலயங்கள், மதிற்சுவரின் மேல் கட்டப்பட்டிருக்கும் நாற்கால் மண்டபங்கள்..... முதலிய இடங்களில் கொடித் துணியுள்ள துவஜங்களும், கொடித் துணியில்லாத துவஜங்களும் எடுத்துக் கட்டப்பட்டன எனக் குறிக்கப்பட்டுள்ளது.
(அயோத்தி காண்டம் 6ஆம் சர்க்கம், 23, 24ஆம் பக்கங்கள்)

21 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் இராமாயணக் கதையில் 2500 ஆண்டுக்குள் இருந்து வந்த புத்தரைப்பற்றிக் கூறுகிற சேதியைக் கொண்டு ஆராய்ந்தால் இராமாயணக் கதை 2500 ஆண்டுகளுக்குள்ளாகவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆதலால் இராமாயண காலம் என்பது பொய்யேயாகும்.

Read more: http://viduthalai.in/page-7/95690.html#ixzz3QyPY9shU

தமிழ் ஓவியா said...

ஆன்மா அடங்காத ஒன்றா?

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரி யங்களும் (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரயங்களும் (தொழிற்கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தாமாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?

ஆன்மா ரூபமுடையது என் பீரேல், சரீரப் பிரமாணத்ததா, அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!

ரூபம் அற்றது என்றாலோ ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ, இரு வகைத்தும், குற்றமே என்றறிக.

- (நீலகேசி, மொக்கலவாதச் சருக்கம், பக்கம் 3)

Read more: http://viduthalai.in/page-7/95692.html#ixzz3QyPiyWS3

தமிழ் ஓவியா said...

சாக்ரட்டீஸின் பொன்மொழிகள்

தங்கத்தைக் கண்டுபிடிக்கச் சுரங்கத்திற்குள் நுழைகிறவன் மரியாதையை பார்த்தால் முடியுமா? தங்கத்தை விட மேலான பொருளை அதாவது நீதியைத் தேடி கண்டுபிடிக்க நாங்கள் புறப்பட்டிருக்கிறோம். இதில் மரியாதையை பார்த்துக் கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடு வோமா?
***************
நீதிக்கு நான் மிக உயர்ந்த ஸ்தானம் கொடுக்கிறேன். அதாவது எந்த விஷ யத்தை அந்த விஷயத்திற்காகவும் அதன் விளைவு களுக்காகவும் நேசிக்கிறோமோ அந்த மாதிரியான விஷயங்களில் ஒன்றாக நீதியை நான் கருதுகிறேன்.
***************
ஒரு மனிதனுக்கு எந்தத் தொழிலைச் செய்ய இயலுகையிலேயே ஒரு திறமை இருக்கிறதோ அந்தத் தொழிலை மட்டும் அவன் செய்து கொண்டு போனால் நல்லது.
***************
விபரீதமான குற்றங்களைச் செய்கிற கடவுளர்களை சிருஷ்டித்து அந்தக் கடவுள்களின் கதைகளைச் சிறுவர் களுக்கு சொல்லிக் கொடுப்போமானால் அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு விடுகிறார்கள் தெரியுமா? கடவுளர்களே பல குற்றங்களை செய்திருக்கிறபோது நாமும்தாம் செய்தாலென்ன! என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.

இந்த மாதிரியான கதைகளை நாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது. தவிர, ஒரு தெய்வத்திற்கு விரோதமான மற்றொரு தெய்வம் சதி செய்வதாகவோ, யுத்தம் செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லலாகாது. ராட்சதர்களோ அல்லது தேவர்களோ ஒருவருக் கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது.

மனிதர்கள் ஒருவரை யொரு வர் நேசிக்க வேண்டுமென்றும், ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், இதை போன்ற நீதிகளைப் புகட்டுகிற கதைகளையே சொல்ல வேண்டும்.
***************
அதிகமான செல்வமோ அதிகமான வறுமையோ தங்கள் ராஜ்யத்திற்குள் வரவொட்டாதபடி அரசர்கள் பாதுகாக்க வேண்டும். அதிக செல்வத்தினால் ஆடம்பரத் தன்மையில் சோம்பேறித்தனமும் உண்டாகும். அதிக வறுமையினால் புரட்சியும், இழிதகைமையும், துரோகமும் ஏற்படும்.

Read more: http://viduthalai.in/page-7/95691.html#ixzz3QyPt7u3O

தமிழ் ஓவியா said...

மதச்சார்பின்மை என்றால் அரசுக்கு மதம் கிடையாது என்பதே பொருள்

குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் சரியான கருத்து

மும்பை, பிப்.5- குடியரசு நாள் விழாவையொட்டி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அரசமைப்பு சட்ட முகப்புரை விளம்பரத்தில் மதச்சார்பின்மை, சோசலிஸ்ட் ஆகிய இரண்டு வார்த்தைகளும் இடம் பெற வில்லை. 42ஆவது திருத்தம் செய்வதற்கு முன் இருந்த முகப்புரையை வெளியிட்டதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் தெற்கு மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில், மாணவர்களிடம் கலந்துரையாடிய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறியதாவது:_-

மதச்சார்பின்மை என்றால், நமக்கு என்ன புரிகிறது? நமது சமூகத்தில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கிறோம். அதனால்தான் நமது நாட்டை மதச்சார்பற்ற நாடு என்கிறோம். மதச்சார்பின்மை என்பது ஒரு நாட்டுக்கு சொந்தமாக மதம் இல்லை என்பதை உணர்த்துகிறது. மத அடிப்படையில் ஒரு நாடு மக்களை பிரிக்கக் கூடாது. வளர்ச்சித் திட்டம், கல்வி உதவித் தொகை ஆகியவற்றை மத அடிப்படையிலோ அல்லது பாலின அடிப்படையிலோ வழங்காமல் பொதுவாக வழங்க வேண்டும். பாலின பாகுபாடு என்ற நோயால் நமது சமூகம் பல இன்னல்களை அனுபவித்துள்ளது. பாலின பாகுபாடு சட்டத் தால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இது சரியான பலனை அளிக்கவில்லை. எனவே இந்த சவாலை சமூகரீதியாக சந்திக்க வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை பின்பற் றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதற்கு நாம் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். சரியா, தவறா என்பதைப் பற்றிக் கவலைப்படால் நாட்டின் குடிமக்கள் பொது வாழ்வில் பங்கு கொள்ள வேண்டும். மாணவர்களும் குடிமக்கள்கள் தான். அதனால் பொது வாழ்வில் பங்கேற்பது உங்களின் கடமை. குடிமக்களாகிய நீங்கள் உங்கள் கடமையைச் செய்ய வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/page1/95621.html#ixzz3QyQKhKFV

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கிரகங்கள்

நமது உடலை சரியான முறையில் இயற்கை யாகவே பராமரித்து வரும் எச்சில், கல்லீரல், இரைப்பை நீர், குடல் நீர், கண் நீர் சுரப்பி, வியர்வைச் சுரப்பி போன்ற நாள முள்ள சுரப்பி நீர் களை ராகு - கேதுவை தவிர ஏனைய ஏழு கிரகங் களும் கட்டுப்படுத்துகின் றன என்று மருத்துவ ஜோதிடர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித் துள்ளனர்.

- தினகரன் ஜோதிட மலர் 4.2.2015

ராகு, கேது என்ற கிரகங்கள் இல்லை என் பது வானியல் அறிவியல் சொல்லும் ஆணித்தர மான கருத்து.

மருத்துவ ஜோதிடர்களாமே - அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? மருத்துவமும் ஜோதிட மும் எதிர்முனைகள் அல்லவா!

Read more: http://viduthalai.in/page1/95626.html#ixzz3QyQU3NYU

தமிழ் ஓவியா said...

ஆயுதம்!


கொஞ்சத் தண்டனையானாலும், அதிகத் தண்டனையானாலும் அது எதற்காக ஏற்பட்டது என்றால், ஒரு குற்றத்தைச் செய்தவன் மேலும் (மறுமுறை) அக்குற்றத்தைச் செய்யாமல் இருப்பதற்குப் பயன்படும் ஆயுதம்தான் அது.
(விடுதலை, 13.01.1965)

Read more: http://viduthalai.in/page1/95596.html#ixzz3QyQsEvKM

தமிழ் ஓவியா said...

விடுதலையின் சிறப்பு

எனக்கு வயது 55 ஆகிறது. மாணவப் பருவம் தொட்டு, விடாமல் விடுதலை படித்து வருகின்றேன். ஒருவர் நல்ல மனோதிடமும், பொது அறிவும், அரசியல் தெளிவும் பெற விடுதலையை மட்டும் படித்து வந்தாலே போதும் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.

ஈமோ என்ற ஓவியத் தொடர் ஆரம்பத்தில் சிறுவர்களுக்கான பகுதி என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். அதில் பெரியவர்களுக்கான செய்திகளும் உள்ளன என்பதை விடாமல் படித்து வரும்போது தெரிந்துகொண்டேன்.

விடுதலை வாசகர் ஒவ்வொரு வரும், தான் படித்த விடுதலை நாளிதழை, விடுதலை நாளிதழ் வாங்காத ஒருவரிடம் கொடுத்து படித்துப் பாருங்கள் என்று சொல்ல வேண்டும். ஏனைய நாளிதழ் களோடு ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்ல வேண்டும் என வேண்டிக் கொள்கின் றேன்.

- பெரி. காளியப்பன், மதுரை

Read more: http://viduthalai.in/page1/95610.html#ixzz3QyR2rJfI