Search This Blog

23.2.15

ஆரியத்திற்கு நேர் எதிர் தத்துவம் திராவிடம்

திராவிடர் என்ற உணர்வு வந்திராவிட்டால் ஆரியம் ஆட்சி புரியாதா?
கிருட்டினகிரி வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் கேள்வி

சென்னை, பிப். 20- திராவிடர் என்ற உணர்வு வந்திரா விட்டால் ஆரியம் ஆட்சி புரியாதா? என்று கேள்வி எழுப் பினார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 28.12.2014 அன்று கிருட்டிணகிரியில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

இரண்டாவது வாய்ப்பு இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு....

மிகக் குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டாலும்கூட, மிக எழிலோடும், எழுச்சியோடும், சிறப்போடும், ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்பு, இந்த கிருஷ்ணகிரி மாநகரில், பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கி, நடைபெறக்கூடிய இந்த அற்புதமான திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு 2000 மாநாடுகளை தமிழ்நாடு முழுக்க வருகின்ற ஓராண்டுக்குள் முடிக்கவேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் முடிவெடுத் தோம். அந்த அடிப்படையில், நேற்று முன்னாள் சென்னை யில் முதலாவது மாநாடு; இன்றைக்கு இரண்டாவது வாய்ப்பு இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குக் கிடைத்தது பெரு மையாகும். நாளைக்கு மூன்றாவது மாநாடு தருமபுரி மாவட்டம் பென்னாகரத்திற்கு அந்த வாய்ப்பு இருக்கிறது.

அப்படிப்பட்ட  எழுச்சி மிகுந்த இந்த மாநாட்டினுடைய தலைவர் மானமிகு தலைமைச் செயற்குழு உறுப்பினர், பெருமதிப்பிற்குரிய முதுபெரும் பெரியார் பெருந்தொண் டர் அய்யா திருப்பதி அவர்களே, வரவேற்புரையாற்றி யுள்ள மானமிகு மாவட்டத் தலைவர் தியாகராஜன் அவர்களே, இந்த மாநாட்டைத் திறந்து வைத்து சிறப்பான சொற்பொழிவை ஆற்றி அமர்ந்துள்ள கழகச் செயலவைத் தலைவர் மானமிகு அறிவுக்கரசு அவர்களே, கழகக் கொடியை ஏற்றி வைத்து அடுத்து விரைவில் இந்த கிருஷ்ணகிரி மாநகரில், ஏற்கெனவே கார்னேஷன் திடலுக்குப் பக்கத்தில் அவர்கள் அளித்த அந்த இடத்தில், கழகத்தின் சார்பாக, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக, நூலகம், படிப்பகக் கட்டடம் விரைவில் இன்னும் சில மாதங்களில், வருகின்ற 2015 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கின்ற வகையில், அதற்காக இன்றைக்கு ஒரு லட்சம் ரூபாயை அளித்துள்ள அருமைத் தோழியர் பிரபா வதி அவர்களே, அதேபோன்று, நம்முடைய அய்யா மருத் துவர் அவர்களும், 50 ஆயிரம் ரூபாயை அறிவித்து, முதல் தவணையாக 5 ஆயிரம் ரூபாயை அளித்துள்ளார்கள்.

2003-க்குப் பிறகு 2014 இல்!
ஆக, அப்படிப்பட்ட ஒரு நல்ல பணியைத் தொடங்கக் கூடிய இந்தக் காலகட்டத்தில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி; ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்பு, 2003 என்று நினைவுபடுத்தினார்கள்; அதற்குப் பிறகு 2014 இல் தான் வட்டார மாநாடு மறுபடியும் இங்கே நடைபெறுகிறது என்று சொன்னாலும், எழுச்சியோடு நடைபெறக்கூடிய இந்த மாநாட்டில், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், அறிஞர் அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டிய தைப்போல, இரட்டைக் குழல் துப்பாக்கிகள்தான் என்று சொல்லக்கூடிய அளவில், புதிதாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, இந்த மாவட்டத்தினுடைய, மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய அருமைத் தோழர் மானமிகு இ.ஜி.சுகவனம் அவர்கள், பொறுப்பேற்றதும் முதலாவதாக பங்கேற்கக்கூடிய மேடையாக, இந்த மாநாட்டு மேடை அமைந்தது மிகவும் சிறப்பானது. அவருடைய பணியின் தொடக்கம், அந்தப் பொறுப்பின் முதல் பணி என்னவென்றால், திராவிடர் களுக்கு விழிப்பை ஏற்படுத்துவதுதான் என்பதை அறிவிக் கின்ற பணியாகவே அது தொடங்கியிருக்கிறது. ஏனென்றால், இந்த மாநாடு திராவிடர் விழிப்புணர்வு மாநாடாகும். திராவிடன் தூங்கியதினால்தான், இன்றைக்குப் பல அவதிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். ஆகவே, தூங்கிக் கொண்டிருக்கின்ற திராவிடர்களை, தமிழர்களைத் தட்டியெழுப்பவேண்டும் என்ற பணியை நாங்கள் செய்கின்றோம் என்று சொன்னால், அந்தப் பணியில், முதன் பணியாக, முதல் பங்காக என்னுடையதும் இருக்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஆற்றல்மிகு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாவட்டச் செயலாளர் அருமைச் சகோதரர் இ.ஜி.சுகவனம் அவர் களே.

உங்களுக்குப் பனி; எங்களுக்குப் பணி!
மாவட்டச் செயலாளர் இங்கே சுட்டிக்காட்டியதைப் போல, பனி பொழிந்து கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பனி; எங்களுக்குப் பணி. இந்தப் பணியை நாங்கள் செய்வதற்கு, பனியாக இருந்தாலும், மழையாக இருந்தாலும், கொட்டும் மழையாக இருந்தாலும், கொளுத்தும் வெயிலாக இருந்தாலும், இடைவிடாது பொழிகின்ற பனியாக இருந் தாலும், எங்களுடைய பணி நிற்கக்கூடாது என்பதுதான், இந்த இனத்தினுடைய மிக முக்கியமாகும்.
எப்படி உடலில் இருதயத்தின் இயக்கம் நிற்கக்கூடாதே, அதுபோலத்தான், பெரியார் இயக்கத்தினுடைய செயல்பாடு என்பது தங்கு தடையில்லாமல் இயங்கிக் கொண்டே இருக்கும். இயங்கிக் கொண்டே இருப்பதினால்தான், இது இயக்கமாக இருக்கிறது. இதைப் புரியாமல், இங்கே இருக்கின்ற சில காவல்துறை அதிகாரிகள் அடிக்கடி தொல்லை கொடுக்கிறார்கள் என்பதை, துணைத் தலைவர் அவர்கள் மிகுந்த வேதனையோடு, அதே நேரத்தில் நியாயமான கோபத்தோடு இங்கே தெரியப்படுத்தினார்கள்.
கருத்து மாறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும்கூட...

இதனைக் கேட்கும்பொழுது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. எங்களுடைய பணி என்பது, காவல்துறையின ருக்குப் பிரச்சினையில்லாமல், மக்கள் அமைதியாக இருக்கவேண்டும்; மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும்; ஜாதிக் கலவரம், மதக் கலவரம் இவைகளில் ஈடுபடக் கூடாது. அனைத்து மக்களும் கைகோர்த்துக் கொண்டிருக்க வேண்டும். எல்லா மக்களும், அன்பு சகோதரர்கள் என்கிற உணர்வு படைத்தவர்களாக இருக்கவேண்டும். நாம் ஜாதி யால் பிரிந்திருக்கக்கூடாது; மதத்தால் பிளவுபட்டிருக்கக் கூடாது. கட்சிகளால் வேறுபட்டு இருக்கக்கூடாது. கருத்து மாறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும்கூட, சட்ட ரீதியாக ஜனநாயக முறையில் அவைகளை வெளிப் படுத்தவேண்டுமே தவிர, எவரும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சொன்ன அறிவாசான் தலைவர் தந்தை பெரியாருடைய இயக்கம் இந்த இயக்கம்.

காக்கிகள் இருக்கின்ற இடத்தில், காவிகள் வந்து அமரக்கூடிய சூழல் ஏற்பட்டுவிடும்

தயவு செய்து காவல்துறை அதிகாரிகளே, அதுவும் பார்ப்பனரல்லாத அதிகாரிகளே, நீங்கள் போட்டிருக்கின்ற காக்கிச் சட்டை, பெரியார் அணிந்த கறுப்புச் சட்டையினு டைய உழைப்பினால், உங்களுக்கு ஏற்பட்டது. அதை மறந்துவிடாதீர்கள். திராவிடர் கழகம் பலமாக இருந்தால் தான், காக்கிகள் இருக்க முடியும்; இல்லையானால், காக்கிகள் இருக்கின்ற இடத்தில், காவிகள் வந்து அமரக்கூடிய சூழல் ஏற்பட்டுவிடும். அதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

எனவே, எங்களுடைய துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் சொன்னார்கள் அல்லவா, தெளி வான ஒரு நல்ல அறிவுரை; எச்சரிக்கை என்றுகூட நாங்கள் சொல்லமாட்டோம்; அதுபோன்ற சொற்களைக்கூட நாங்கள் பயன்படுத்த மாட்டோம். நல்ல அறிவுரை, தோழமையுள்ள ஒரு அறிவுரை, பொறுப்பான ஒரு சிறப்புரை, அவர்கள் சொன்னார்களே, அதனை நான் கழகத்தினுடைய தலைவன் என்கிற முறையில் மட்டுமல்ல, மக்களில் ஒருவனாக இருந்து, ஜனநாயக உரிமையினுடைய காவல் அரணாக இருக்கக்கூடிய இயக்கம், இந்த இயக்கம் என்கிற காரணத்தினாலே, நான் வழிமொழிகிறேன் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

தயவு செய்து நீங்கள், இந்தச் சில்லறைப் பணிகளில், விஷமங்களில் ஈடுபடுவீர்களேயானால், அடுத்து நீங்கள் எங்களை நீதிமன்றத்தில் சந்திக்கக்கூடிய அவசியம் ஏற்படும்; எங்களால் வீதிமன்றத்திற்கும் வர முடியும்; நீதிமன்றத்திற்கும் போக முடியும். இப்பொழுதெல்லாம் நீதிமன்றங்களில், அதிகாரிகளுக்கு அபராதம் போடுகின்ற பழக்கம் அதிகமாக வருகின்றதென்பதையும் நினைவூட்ட வேண்டிய அவசியம் இல்லை உங்களுக்கு. எனவேதான், தெளிவாகச் சொல்கிறோம், எங்கள் தோழர்களை ஏதோ ஓரிருவர் என்று நினைக்காதீர்கள். எண்ணிக்கை முக்கிய மல்ல. இந்த நாட்டில் எந்த அரசு அமைவது; அமைந்த அரசுகள் நீடிப்பதா? நிலைப்பதா? இவைகளையெல்லாம் நிர்ணயம் செய்யக்கூடிய இடத்தில் இருக்கக்கூடிய ஒரு அமைப்பிற்குப் பெயர்தான் திராவிடர் கழகம்.

திராவிடர் கழகத்தை  ஏதோ சாதாரணமாக நீங்கள் எண்ணிவிடாதீர்கள். அதுதான் மிக முக்கியம். அந்த அடிப்படையில், இதனை நாங்கள் மிகத் தெளிவாக உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். ஆகவே, இனிமேல் இப்படிப்பட்ட ஒரு நிலை இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இதுவரை திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களில், பொதுச்சொத்துக்கு நாசமுண்டா? பொது அமைதிக்குப் பங்கமுண்டா? அனுமதியில்லாமல், நாங்கள் திடீரென்று சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்ட வரலாறு உண்டா? கிடையவே கிடையாது.

ஆகவேதான், திராவிடர் கழகத்தை நீங்கள் சாதாரண மாக எண்ணிவிடாதீர்கள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பது மாறி மாறி வரும். ஒரு கட்சியே ஆளுங்கட்சியாக இருக்கமாட்டார்கள்; ஒரு கட்சியே எதிர்க்கட்சி என்பது யாருக்கும் நிரந்தரமல்ல. ஆனால், எங்களைப் பொறுத்த வரையில், எங்களுக்கு யார் ஆளுகிறார்கள்; யார் எதிர்க் கட்சியாக இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. இந்த மக்கள் கட்டுப்பாடோடு, ஒழுங்கோடு, உண்மையாக, நேர் மையாக, பாதுகாக்கப்பட்ட உரிமை உள்ள மக்களாக திரா விடர் சமுதாய மக்கள் இருக்கவேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள்.

காரணம், இது பெரியார் இயக்கம். பெரியாருடைய இயக்கத்தில், தெளிவாக அய்யா சொன்ன அறிவுரை என்ன? ஏறத்தாழ நூறாண்டு காலம் வாழ்ந்த ஒரு தலைவர்; அதில் முக்கால் நூற்றாண்டு பொதுத் தொண்டுக்காகவே செலவழித்த ஒரு தலைவர். அப்படிப்பட்ட அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய பணி என்ன? என்று சொல்கின்ற நேரத்தில், திராவிடர் சமுதாயத் தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள மக்களாக இந்த மக்களை ஆக்கவேண்டும் என்று, 95 வயதில், தனக்கு இயல்பாக சிறுநீர் பிரியவில்லை என்று சொன்ன நேரத்தில், அந்த சிறுநீர் பிரிவதற்காக, குழாயை அமைத்து, ஒரு பையை வைத்து - அதனைத் தூக்கிக்கொண்டு, இந்த மக்களுக்காக உழைத்தாரே, அவருடைய இயக்கம் இந்த இயக்கம். அந்தப் பணியினுடைய தொடர்ச்சிதான் திராவிடர் கழகம். எனவே, திராவிடர் கழகத்தை நீங்கள் துச்சமாகக் கருதலாம் என்று தப்புக் கணக்குப் போடாதீர்கள். அதனை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இன்றைக்கும் இந்த இயக்கம் இல்லாவிட்டால், நாட்டில் உண்மைகளைச் சொல்லக்கூடியவர்கள் உண்டா? ஆறு மாதங்களுக்கு முன்பு, திராவிடர்களுக்கு விழிப்புணர்வுத் தேவை என்று, தேர்தல் நேரத்தில், தேர்தலை நாங்கள் வெறும் அரசியலாகப் பார்க்காமல், வெறும் வாக்குச் சேகரிக் கின்ற வாய்ப்பு, சிலர் வெற்றி பெறுவார்கள்; சிலர் தோல்வி யுறுவார்கள் என்று பார்க்காமல், நீங்கள் இதில் அலட்சிய மாக இருந்தால் என்னாகும்? உங்களுக்கு மயக்க பிஸ் கெட்டுகளைக் கொடுக்கிறார்கள். மயக்க மருந்தைகூட அல்ல; இனிப்பைத் தடவிக் கொடுப்பதைப்போல, வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் என்று சொல்கிறார்கள். ஏற்கெனவே இருந்த அரசுகள் செய்யத் தவறிய பல பிரச்சினைகளை யெல்லாம், அதிருப்தி அடைந்திருந்த மக்கள் மத்தியில், இப்படி ஒரு ஈர்ப்பைக் காட்டியவுடன், அதில் இளைஞர்கள் உள்பட பலர் ஏமாந்துவிடக்கூடாது; உள்ளே இருப்பது விஷம்; வெளியே தெரிவது இனிப்பு. ஆகவே, நீங்கள் ஏமாந்து விடாதீர்கள் என்று தெளிவாகச் எடுத்துச் சொன்னோம்.
எங்களுடைய பார்வை அரசியல் பார்வை அல்ல!
ஆனால், இன்றைக்கு என்ன நிலைமை நண்பர்களே, மோடி வந்தால், ஏதோ பெரிய இந்த நாட்டில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று பலர் நினைத்தார்கள். உங்களிடத்தில் சொன்னார்கள்; ஆறு மாதத்திற்கு முன்பாக, தமிழ்நாட்டில் மோடி ஓடி, ஓடி பலரைப் பார்த்தார்; சினிமாத் துறைகளில் உள்ளவர்களையெல்லாம் பார்த்தார்; சினிமா நடிகர், நடிகைகளையெல்லாம் போய்ப் பார்த்தார்; வலிய, வலிய அவரே சென்று பார்த்தார். இன்னுங்கேட்டால், அவர்களுக்குப் பிறந்த நாள் விழாக்களுக்கே வாழ்த்துச் சொல்வதற்காக, பிரதம வேட்பாளராக இருக்கக்கூடிய ஒருவர் அங்கே சென்று பார்த்தார். காரணம் என்ன? தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத ஒரு காவிக் கட்சி; ஒரு ஆர்.எஸ்.எஸ். அதன் அரசியல் வடிவமான பி.ஜே.பி. சிலர் கேட்கலாம், என்னய்யா, நீங்கள்தான் அரசியலுக்குப் போகாதவர்களாயிற்றே! உங்களுக்கென்ன அதைப்பற்றி கவலை என்று கேட்லாம். எங்களுடைய பார்வை அரசியல் பார்வை அல்ல. மீண்டும் உறுதிப்படுத்திச் சொல்கிறோம். எங்களுடைய பார்வை, பொதுநலப் பார்வை; பொது அமைதிப் பார்வை. இந்த நாட்டில், ஜாதிக்கலவரமோ, மதக் கலவரமோ வேறு எந்தவிதமான கலவரமோ நடக்கக் கூடாது. மக்கள் எல்லோரும் கைகோர்த்துக் கொண்டு இருக்க வேண்டும். அன்பால், பண்பால் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லுகின்ற இயக்கம் இந்த இயக்கம். அந்த அடிப்படையில், நீங்கள் நினைத்துப் பாருங்கள்,

திராவிடர்களுக்கு விழிப்புணர்வு ஏன் தேவை?
இவர்கள் வந்து இங்கே சொன்னவுடன், அரசியல் லாபத்திற்காக சிலரைத் தேடித் தேடி  அலைந்தார்கள். சில நண்பர்கள், பாவம் அவர்களுடைய கூட்டணிக்குப் போய்ச் சேர்ந்தார்கள். இப்பொழுது நீங்கள் நினைத்துப் பாருங்கள், திராவிடர்களுக்கு விழிப்புணர்வு ஏன் தேவை? திராவிடர் விழிப்புணர்வு மாநாடு இந்த மாநாடு இந்த மாநாட்டிற்கு ஏன் அந்தத் தலைப்பு இருக்கிறது? எனவே, தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏன் தேவை? ஆறு மாதத்திற்குமுன்பு தூங்கியவர்கள், இப்பொழுது விழித்துக் கொண்டிருக்கிறார்கள்; இப்பொழுதுதான் விழித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களிடம் போய் சேர்ந்தவர்கள், இன்றைக்கு அவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். சகோதரர் வைகோ, எங்களிட மிருந்து வேறுபட்டாலும், எங்களை விமர்சித்திருந்தாலும், நாங்கள் அவரை விமர்சித்திருந்தாலும், சகோதரர் என் றைக்கும் சகோதரர்தான். அதில் எந்தவிதமான மாறுபாடும் இருக்க முடியாது. சண்டை போடும் சகோதரர்களாகவும் இருப்பார்கள்; சமரசம் காணும் சகோதரர்களாகவும் இருப்பார்கள். எதைப் பொறுத்ததும் சகோதரத்தன்மை அல்ல; நீதிமன்றத்திற்குச் சென்று நாங்கள் சகோதரர் அல்ல என்றால் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். மனைவி இல்லை என்று சொன்னால்கூட, விடுதலை கொடுப்பார்கள்; ஆனால், சகோதரர் இல்லை என்று யாரும் வழக்குப் போட முடியாது. இது ஒரு சாதாரண செய்தியாகும்.
அவர்களைப் பார்த்து, மற்றவர்கள் ஏமாறாதீர்கள் என்று சொல்கிறோம்
அதுபோலத்தான், இன்றைக்கு ஆறு மாதத்திற்குள் தெளிவு ஏற்பட்டு, மோடி அரசு மாதிரி, ஒரு மோசடி அரசு வேறு கிடையாது என்று அவர்தான் இப்பொழுது வேக மாகப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார் என்று சொன்னால், அவர் விழித்துக் கொண்டார்; அவரைப் பின்பற்றி பல பேர் சென்றார்களே, அவர்கள் விழித்துக் கொண்டார்கள். நாங்கள் விழிக்க வைக்கப் பட்ட பாட்டை விட, மோடியும், காவியும், பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் செய்கின்ற பணி இருக்கின்றதே, அவர்களே, இவர்களைத் தட்டி எழுப்பி விட்டார்கள். எனவே, நீங்கள் அதில் தெளிவாக இருங்கள்; அவர்களைப் பார்த்து, மற்றவர்கள் ஏமாறாதீர்கள் என்று சொல்கிறோம்.

நம்முடைய டாக்டர் அய்யா மருத்துவர் ராமதாஸ் அவர்கள்; எங்களுடைய அன்பிற்குரியவர். அப்படிப்பட் டவர், நேற்று அற்புதமான, ஒரு மகத்தான உண்மையை வெளியிட்டிருக்கிறார். இதுவரையில், அவர் வெளியிடாத ஒரு உண்மையை வெளியிட்டு, நான்கூட அதனை தொலைக்காட்சியில்தான் பார்த்தேன். செய்தியாளர்களி டமும் அதைப்பற்றி நான் காலையில் பேசினேன்.

பா.ஜ.க. என்ற ஒன்று இல்லை; இது டாக்டர் ராமதாஸ் வாக்குமூலம்!

தமிழ்நாட்டில் பா.ஜ.க. என்ற ஒன்று இல்லை. இது டாக்டர் ராமதாஸ் அவர்களுடைய வாக்குமூலம் நேற்று. என்ன அற்புதமான கண்டுபிடிப்பு இது. இல்லாத ஒன்றுடனா, இவ்வளவு நாள் கூட்டுச் சேர்ந்துகொண்டிருந்தோம் என்று இப்பொழுதுதான் உணருகிறார்கள், மகிழ்ச்சியே! நான் குற்றம் சொல்லமாட்டேன். நீங்கள் விழித்திருக்கிறீர்கள். மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை உண்டாக்கவேண்டி யது எங்களுடைய வேலை. எங்களுடைய வேலை நாளுக்கு நாள் எளிதாகக் கொண்டிருக்கிறதே தவிர, சிக்கலாகிக் கொண்டுவரவில்லை.

எனவேதான், இந்த இரண்டு பேரும் வெளியேறி விட்டார்கள்  என்றால், அடுத்தது யார் உங்களோடு இருப் பார்கள். தமிழ்நாட்டில் ஏதோ ஒரு புதுக்கணக்கு வருவது போலவும், திராவிடக் கட்சிகளை வீழ்த்தி விடுவோம் என்றெல்லாம் தோள் தட்டி, தொடை தட்டி, மார்தட்டி யெல்லாம் சொன்னார்கள். மிஸ்டு கால் கொடுங்கள் என்று சொல்கிறார்கள். மிஸ்டு காலில் ஒரு இயக்கத்திற்கு ஆள் சேர்த்தால், அந்த இயக்கத்திற்குப் பெயர் என்ன?

மிஸ்டு கால் கொடுத்து ஆள் சேர்க்கிறார்களாம்!
மிஸ்டு கால் கொடுத்து, இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதை இதுவரையில் நீங்கள் யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர் களா? திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உறுப்பினர்கள் சேர்க்கிறார்கள்; ஏன், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உறுப்பினர்களைச் சேர்க்கிறார்கள்; எங் களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும், அது வேறு சங்கதி.  ம.தி.மு.க.,விற்கும் உறுப்பினர்களைச் சேர்க்கிறார் கள். காங்கிரசிற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் தீவிரமாக, மும்முரமாக இருக்கிறார்கள். காங்கிரசை விட்டு வெளியேறிய ஜி.கே. வாசன் அவர்கள் அவருடைய கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கிறார். எல்லோரும் போய், ஆளைப் பார்த்து, கொள்கையைச் சொல்லி, அந்தக் கொள்கைக்கு அவர் உடன்பாடா என்று பார்த்துதான் ஒரு இயக்கத்தில் சேர்க்கக்கூடிய வழக்கமே தவிர, மிஸ்டு கால் கொடுங்கள், நாங்கள் ஓடிவருகிறோம் என்று சொல்கிற அளவிற்கு இருந்தால், இது என்ன பீட்சா விற்கின்ற வியாபாரமா?  வியாபாரத்திற்குத்தான் விளம்பரத்தில் போடுவார்கள், மிஸ்டு கால் கொடுங்கள் என்று.

ஆகவே, இவர்கள் வியாபாரம் செய்கிறார்களா, அர சியல் வியாபாரம் செய்கிறார்களா? அல்லது கொள்கை யைப் பரப்புகிறார்களா? என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.


122 அல்ல; தமிழ்நாட்டில் ஒரு 5 இடமாவது கிடைக்குமா?

இந்த லட்சணத்தில், தமிழ்நாட்டையே நாங்கள் பிடித்துவிடுவோம்; 122 எங்களுடைய இலக்கு என்றெல்லாம் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்களே, நான் மிகவும் அன்போடு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், இந்த 122 இல், 1, 2, 2, இந்த மூன்றையும் கூட்டினால், 5 இந்த 5 ஆவது உங்களுக்குக் கிடைக்குமா? என்று நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா என்று மக்கள் கேட்கிறார்கள். நான் கேட்கவில்லை. யார் கேட்கிறார்கள்? உங்களோடு நேற்றுவரையில் இருந்து, இன்றைக்கு இருக்கிறார் என்று, இன்னமும் நீங்கள் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்ற, டாக்டர் ராமதாஸ் கேட்கிறார்; என்னவென்று, பா.ஜ.க. என்ற ஒரு கட்சியே தமிழ்நாட்டில் இல்லையே என்கிறார்.  பா.ஜ.க.வே இல்லாதபோது, ஒரு 5 இடமாவது கிடைக்குமா?

அதுதான் எங்களுடைய வாதம்.  உங்களுடைய சரக்கு என்ன வென்பது, இன்றைக்கு நாடாளுமன்றத்தில் தெரிந்துவிட்டது.

இதுவரையில், வேகமாக மோடி வித்தைகள் காட்டினார்; இங்கேகூட மந்திரமா? தந்திரமா? என்ற நிகழ்வில், வித்தைகளைக் காட்டினார்கள். இந்த வித்தைகள் எவ்வளவு நேரத்திற்கு சுவையாக இருக்கும்; கொஞ்ச நேரத்திற்கு சுவையாக இருக்கும். அது நீண்ட நேரத்திற்கு இருக்காது. அதுபோன்று, உங்களோடு யார் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் சொல்லலாம்.
தேமுதிக இன்னமும் எங்களோடு இருக்கிறதே என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், அவரே சொல்லிவிட்டார், என்னுடைய தலைமையை ஏற்றுக்கொண்டால்தான், கூட்டணி என்று. அவரைப் பொறுத்தவரையில், அவர் எப்பொழுது, என்ன முடிவெடுப்பார் என்பது அவருக்கே தெரியாது. அவருக்கே தெரியாதபோது, மற்றவர்களுக்கு எப்படி தெரியும்? நமக்கு எப்படி தெரியும்?  ஏனென்றால், திடீரென்று என்னுடைய கூட்டணி தெய்வத்தோடு என்று சொல்வார். தெய்வத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதிலேயே எல்லோருக்கும் சிக்கல் உள்ளது.

ஆகவே, அந்த நிலையில், உங்களோடு இருந்த ஆறு மாதத்திற்கு முன்பாக ஏமாந்தவர்களே, இப்பொழுது ஏமாறத் தயாராக இல்லை என்று அறிவித்து, நாங்கள் விழித்துக் கொண்டோம், விழித்துக்கொண்டோம் என்று சொல்லக் கூடிய கட்டத்திற்கு வந்துவிட்டார்கள் என்றால், இனிமேல் புதிதாக நாங்கள் ஏமாற்ற, மிஸ்டு கால் கொடுங்கள் என்று சொன்னால், எந்த அளவிற்கு வருவார்கள். ஏதோ சிலர் லாபம் கருதி வரக்கூடும். ஆனால், அடிப்படை அதுவல்ல நண்பர்களே, பத்தோடு பதினொன்று அல்ல, அந்த அரசியல் கட்சி. சில பேர் நம்முடைய நாட்டில்கூட, ஏதோ இவ்வளவு நாள்கள் இவர்கள் ஆட்சியில் இருந்தார்கள்; இப்பொழுது புதிதாக அவர்களுக்குத்தான் ஓட்டளித்துப் பார்ப்போமே என்று அவர்கள் நினைத்தார்கள் என்று சொன்னால், அதைவிட பொறுப்பற்றப் போக்கு, நாட்டைப்பற்றிய அலட்சிய மனப்பான்மை வேறு இருக்க முடியாது.

இன்றைக்கு நாமெல்லாம் முழங்காலுக்குக் கீழே வேட்டிக் கட்டிக்கொள்கிறோமே, தோளில் துண்டு போடு கிறோமே, வெள்ளையாக, டிப்டாப்பாக உடையணிகி றோமே, கோவணத்தைக்கூட தேடிக் கண்டுபிடிக்கவேண் டிய ஒரு சமுதாயமாக இருந்த, உழைப்பாளி சமுதாயமாக இருந்த நம்முடைய சமுதாயம், சேற்றில் கால் வைத்து அழுந்தி இருக்கக்கூடிய நம்முடைய சமுதாயம், பள்ளப் பயல், பறைப்பயல், சக்கிலி என்று கேவலப்படுத்தி, நம்முடைய சகோதரன், நம்முடைய உழைப்பாளியைப் பார்த்து கொச்சைப்படுத்திய ஒரு சமுதாயத்தை மாற்றி, நீங்களெல்லாம் மனிதர்கள், நமக்கென்று ஒரு வரலாறு உண்டு; அதுதான் திராவிட இனத்தினுடைய வரலாறு; அவர்கள்தான் திராவிடர்கள் என்று நம்மைத் தட்டியெழுப்பி, நம்முடைய தோளில் தொங்கச் செய்தாரே, அவர் தந்தை பெரியார் அல்லவா! அந்த இயக்கத்தின் பெயர் திராவிடர் கழகம் அல்லவா! இந்த நாட்டில் திராவிடர் என்கிற உணர்வு வந்திருக்காவிட்டால், ஆரியம் ஆட்சி புரிந்திருக்காதா? ஆரியம் இருந்த காலத்தில் வந்தது என்ன? அதுதானே மனுதர்மம்.

நாங்கள் சொல்கின்ற ஒவ்வொன்றும் ஆதாரப்பூர்வமானது
இன்றைக்கும் சில பேர் சொல்கிறார்கள், ஆரியர் - திராவிடர் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.


பெரியாரும், அண்ணாவும் மிக அழகாகச் சொன்னார்கள். ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால், நீண்ட நாள் களுக்கு முன்பாகவே, ஆரியரும், திராவிடரும் கலந்து விட்டார்கள்.

அவர்கள் கலந்துவிட்டார்கள் என்று நீ சொல்லித் தெரியவேண்டியதில்லையே! எல்லா திராவிடர்களுக்கும் தெரியும். இரண்டு பேரும் கலந்துவிட்டார்கள் என்பது.

எப்பொழுது கலந்தார்கள்; எங்கே கலந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை. மனுதர்மத்திலேயே கலந்துவிட்டார்கள் என்று நீயே எழுதி வைத்திருக்கிறாய். சங்கர ஜாதி என்ற வார்த்தையை மனுதர்மத்தில் பயன்படுத்தியிருக்கிறாயே!
நாங்கள் சொல்கின்ற ஒவ்வொன்றும் ஆதாரப்பூர்வ மானது. இங்கே நாங்கள் புத்தகங்களைக் கொண்டு வந்திருக் கிறோம் என்று சொன்னால், அது வியாபாரத்திற்காக அல்ல!

இந்த இயக்கம், இந்த இயக்கத்தினுடைய சொற்பொழி வாளர்கள் பேசுகின்ற எந்தக் கொள்கையாக இருந்தாலும், அந்தக் கொள்கை என்பது முழுக்க முழுக்க ஆதாரப்பூர்வ மானது; சான்றுகளைக் கொண்ட உண்மைகள். உண்மை களைத் தவிர வேறு கிடையாது.
                                                   ----------------------------(தொடரும்) 20-02-2015
*************************************************************************************

மூன்று பேர் நூலை கழற்றுவது சுலபமா? 97 பேர் நூலை வாங்கிப் போடுவது சுலபமா?
கிருட்டினகிரி திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் உரை

சென்னை, பிப். 21- மூன்று பேர் நூலை கழற்றுவது சுலபமா? 97 பேர் நூலை வாங்கிப் போடுவது சுலபமா? என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார் 28.12.2014 அன்று கிருட்டிணகிரியில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் தொடர்ச்சி வருமாறு:

சாகும் தறுவாயில் யாரும் பொய் சொல்லமாட்டார்கள்
அய்யா ஒருமுறை சொன்னார், என்னைப் பார்த்து உண்மை இல்லாத விஷயத்தைச் சொல்கிறேன் என்று யாரும் சொல்ல முடியாது. காரணம், நான் பொய் சொல்கிறேன் என்று யாரும் சொல்ல முடியாது.


மரண வாக்குமூலம் கொடுக்கின்றவர்கள் யாரும் பொய் சொன்னதாக வரலாறு கிடையாது. மரண வாக்குமூலம் என்று சொன்னால், அதற்கு சட்ட ரீதியான வலிமை உண்டு.  ஏனென்றால், சாகும்பொழுது யாரும் பொய் சொல்ல மாட்டார்கள். அவர்கள் உண்மையைத்தான் சொல்வார்கள், கடைசி கட்டத்தில் என்பதுதான் உண்மை. அதற்கு சட்டத்தில் இருக்கின்ற தனித்தன்மையான வலிமையாகும்.

அதைத்தான் அய்யா அவர்கள் சொன்னார், மரண வாக்குமூலம் மாதிரி நான் சொல்கிறேன். நாங்கள் ஏன் பொய் சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, அய்யா ஒன்றை சொன்னார்.

உண்மையைச் சொல்வதற்கே எனக்கு நேரம் இல்லை. நான் ஏன் பொய் சொல்லப் போகிறேன் என்று சொன்னார்.

ஆகவே, நினைத்துப் பாருங்கள், ஆரியர் - திராவிடர் ஆராய்ச்சியில் சில பேர் ஈடுபடுவது. இன்னும் சில பேருக்குப் பதவி ஆசையை உண்டாக்கி, நாக்கில் தேனைத் தடவி, அவரவர்கள் தனித்தனி அமைப்பை உண்டாக்கிக் கொள்வோம் என்று சொல்லக்கூடிய நிலையை உருவாக்குவது. இப்படிப்பட்டவர்களுக்காக நான் சொல்கிறேன், திராவிடர் விழிப்புணர்வு மாநாடு என்ற தலைப்பில் இந்த மாநாட்டைப் போட்டிருக்கிறோம். திராவிடம் என்று சொன்னால், அதையெல்லாம் நாங்கள் வீழ்த்தி விடுவோம், திராவிடர் இயக்கம் எல்லாம் கீழே விழுந்து போய்விட்டது. திராவிடர் இயக்கம் இனிமேல் எழுந்து நிற்க முடியாது என்று சொல்கிறார்கள். சோர்ந்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

சோர்ந்துவிட்டதற்கு அடையாளமா, முன்பு 30 மாவட்டங்களாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம்; இன்றைக்கு 65 மாவட்டங்களாக வந்திருக்கிறது என்று சொன்னால், வளர்ச்சியா? தளர்ச்சியா? அய்யய்யோ, அது இல்லை என்று சொன்னால், இவ்வளவு போட்டிகள் இல்லாமல் இருக்குமா? நல்ல வாய்ப்பாக, இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில், மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக் கப்பட்டு எந்தவித சிக்கலும் இல்லாமல் வந்திருக்கிறார். அப்படி இருந்தால்கூட என்ன? எந்த அரசியல் கட்சியில் இல்லாமல் இருக்கு.

அத்வானி என்ன முழுக்க முழுக்க மோடியை ஆதரிக் கிறாரா? முரளிமனோகர் ஜோஷி என்று ஒருத்தர் இருந்தாரே, அவர் என்ன முழுக்க முழுக்க மோடியை ஆதரிக்கிறாரா? தேசிய அளவிலேயே அப்படி இருக்கிறது.

இங்கே மாநிலத்தில் ஏதாவது ஒன்று நடந்தால், அதைப் பெரிதுபடுத்துகிறார்கள். ஏனென்றால், பார்ப்பன ஆதிக்கக் கருவிகளாக ஊடகங்கள் இன்றைக்கு இருக்கின்றன. இன்றைக்கு இவ்வளவு பெரிய மாநாடு நடக்கிறது. அதிகமான அளவிற்கு, மாநாடுகளையும், கூட்டங்களையும் நடத்துவது திராவிடர் கழகம். ஆனால், அதிகமான அளவிற்குப் பத்திரிகையில் இடம்பெறாத ஒரு இயக்கம் இருக்கிறது என்றால், அது திராவிடர் கழகம்தான்.
ஏனென்றால், நாங்கள் பரபரப்பை ஊட்டுவதில்லை; நாங்கள் அங்க மச்ச அடையாளங்களைப்பற்றி விமர்சனம் செய் கிறவர்கள் அல்ல. நாங்கள் கருத்துகளைப் பேசக்கூடியவர்கள். எனவே, கருத்துகளைப் பேசினால், அது செய்தியாகாது இவர்களுக்கு.

அவர் இவரைத் தாக்கினார்; இவர் அவரைத் தாக்கினார் என்று சொன்னால்தான், சில பேருக்கு செய்தி.

பெரியாரைப் பார்க்காதவர்கள் இங்கே இருக்கிறீர்கள்; பெரியாரின் பேச்சைக் கேட்காதவர்கள் இங்கே இளைஞர்கள் இருக்கிறீர்கள். பெரியாரைத் தெரிந்துகொள்ளாதவர்கள் பலர் இங்கே இருக்கிறீர்கள். பெரியாரைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். பெரியார் பாடுபட்டது அவருக்காகவா? நாங்கள் என்ன பதவிக்குப் போகக்கூடியவர்களா? எப்பொழுது எங்களுக்குப் பாரத ரத்னா பட்டம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கக்கூடியவர்களா? அல்ல! தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். எப்பொழுது நம்முடைய சூத்திரப் பட்டம், இழிவுப்பட்டம் நீங்கும் என்ற எதிர்பார்ப் பிற்காக, தங்களையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற ஒரு தற்கொலைப் பட்டாளம் இருக்கிறது என்றால், அதுதான் கருஞ்சட்டைப் பட்டாளம் என்கிற உணர்வோடு இருக்கக் கூடியவர்கள். எனவே, இதனை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

தந்தை பெரியார் சொல்கிறார்
தந்தை பெரியார் அவர்கள் சொல்கிறார்: நான், நம்மை திராவிடர் என்பதும், பின் சரித்திரக் காலத் தன்மை என்பதும் உங்களை நான் அந்தக் காலத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கருதாதீர்கள்.  திராவிடர் - ஆரியர் என்று உடற்கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து, பிரித்துப் பேசுவதாகக் கருதா தீர்கள். ஆரியன் திராவிடன் என்பது கலந்து போய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்துவிட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலியர்கள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்துவிட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தா லென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?

கறுப்புச் சட்டைக்காரர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபணை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கறுப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா? என்று பாருங்கள்.

ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட் சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக் கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும். நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது.

ஆரியம் - திராவிடம் தெரிந்துகொள்ளுங்கள்!
ஆரியம் என்றால் என்ன?

பூணூல் போடவேண்டும்; ஆரியம் என்றால் என்ன? பிறக்கும்பொழுதே ஒருவன் மேல்ஜாதி; பிறக்கும்பொழுதே இன்னொருவன் கீழ்ஜாதி; அவனுக்குக் கீழே தொடக்கூடாத ஜாதி; பார்க்கக்கூடாத ஜாதி; புழங்கக்கூடாத ஜாதி. இது ஆரியம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; எல்லாம் ஒன்றே; மனித குலம் ஒன்றே என்று சொல்வது திராவிடம்.


உங்களுக்கு விளங்குவதற்காக சொல்கிறேன்.

ஒருமுறை துக்ளக் ஏட்டிற்காக, நண்பர் சோ.ராமசாமி, பெரியார் திடலுக்கு வந்து என்னை பேட்டி கண்டார். அந்தப் பேட்டியை ஆறு வாரத்திற்கு வெளியிட்டார்கள்.

அந்தப் பேட்டிக்காக என்னிடம் கேள்விகளைக் கேட்டார். அவர் பேசும்பொழுதே குயுக்தியாக பேசுவார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்; எழுதும்போதும் அப்படித்தான் எழுதுவார்.

அவர் என்னிடம் கேட்டார், ஏன் சார், நீங்கள் எதற்கு இன்னும் ஆரியம் - திராவிடம்; பார்ப்பனர் - பார்ப்பனரல்லா தார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, இப்பொழுது எல்லோரும்தான் மாறிவிட்டார்களே என்று கேட்டார்.

நான் உடனே, அப்படிங்களா, நாம் இரண்டு பேரும் சட்டையைக் கழற்றுவோம் என்றேன்.

என்ன சார் நீங்க, வம்புக்கு வருகிறீர்களே! என்று கேட்டார்.

அடிப்பதற்காகவோ, சண்டை போடுவதற்காக சட்டையைக் கழற்றச் சொல்லவில்லை. நாம் இரண்டு பேரும் சட்டையைக் கழற்றுவோம். அவர்கள் மாறிவிட்டார்கள் என்று சொன்னால், உங்கள் முதுகில் ஏன் பூணூல் தொங்குகிறது? என்னுடைய முதுகு ஏன் வெறும் முதுகாக இருக்கிறது என்றேன்.

சார், எங்க அப்பா, அம்மா சொன்னார்கள் என்பதற்காகப் போட்டுக் கொண்டேன் என்று சொன்னார்.

சரி, உங்க அப்பா, அம்மா சொன்னார்கள்; என்னுடைய அப்பா, அம்மா சொன்னார்கள் என்பதற்காகவே நான் போடாமல் இருக்கிறேன்.
ஜாதித் தத்துவத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள்? அசல் மனுதர்ம சாஸ்திரம் இங்கே விற்கப்படுகிறது. அதில், பூணூல் போடுவதைக்கூட எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் தெரியுமா? நம்மாள் சில பேர் புரியாமல் கேட்கிறார்கள், ஏங்க, நம்ம செட்டியார் போட்டிருக்கிறாரே, ரெட்டியார் போட்டிருக் கிறாரே, வன்னியர் போட்டிருக்கிறாரே என்று கேட்கிறார்கள். இவையெல்லாம்  சட்டபூர்வமாகவும் சரி, சாஸ்திரபூர்வமாகவும் அங்கீகரிக்கப்பட்டதல்ல. இது கள்ள 100 ரூபாய் நோட்டு போல. கள்ள நோட்டுகளை எங்கேயாவது ஏற்றுக்கொள்வார்களா?

உங்கள் சங்கராச்சாரியாரை பூணூல் எடுத்துக்கொடுக்கச் சொல்லுங்கள்!
சோ முதுகில் போட்ட பூணூல் இருக்கிறது பாருங்கள், அதுதான் உயர்ஜாதி பூணூல்.

சோ, உடனே சொன்னார், சார் நீங்களும் போட்டுக் கொள்ளலாமே என்றார்.
உடனே நான், சோ அவர்களே, நான் போட்டால், அந்தப் பூணூலுக்கு மரியாதை கிடையாது என்பது தெரியும். உங்கள் சங்கராச்சாரியாரை பூணூல் எடுத்துக்கொடுக்கச் சொல்லுங்கள், எல்லோரும் போட்டுக் கொள்வதற்கு என்றேன். ஏற்கெனவே, ராமானுசர் எல்லோருக்கும் பூணூல் போட்டாரே, தாழ்த்தப் பட்டவர்களுக்கெல்லாம் ராமானுசர் பூணூல் போட்டு விட்டாரே, அவர்கள் எல்லாம் கறுப்பு அய்யர்களாக மாறி விட்டார்களா? இல்லையே! நூலுக்குப் பிடித்த கேடே தவிர, நூல் விலை உயர்ந்ததே தவிர, வேறொன்றும் இல்லை. நூல்தானே வீணாகப் போயிற்று. கொஞ்சம் பலமான நூலாக இருந்தாலும் கூட,  வேகமாக இழுத்தால், முதுகு அரிக்கும்பொழுது அவன் சொரிந்துகொள்ள முடியும்; இந்த நூலை இழுத்தாலே அறுந்து போய்விடுமே! அதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா? இந்த நூல் படுத்துகிற பாட்டைப் பாருங்கள் என்றேன்.

அய்யய்யோ, இதற்குமேல் வேண்டாம் என்று சொன்னார்.

மூன்று பேர் நூலை கழற்றுவது சுலபமா? 97 பேர் நூலை வாங்கிப் போடுவது சுலபமா?

நான் சொன்னேன், இதோ பாருங்கள், எல்லோரையும் பூணூல் போட்டுக்கொள்ளுங்கள் என்று நீங்கள் சொல்வதை விட, நீங்கள் மூன்று பேர்; நாங்கள் 97 பேர். 97 பேர் நூலை வாங்கிப் போட்டால், நூல் விலை ஏறும். மூன்று பேர் நூலை கழற்றுவது சுலபமா? 97 பேர் நூலை வாங்கிப் போடுவது சுலபமா? சொல்லுங்க  என்று கேட்டேன்.

வேண்டாங்க, சார், அடுத்த கேள்விக்குப் போகலாம் என்றார்.

எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால், ஆரியம் - திராவிடம் இன்னும் இருக்கிறதா, இல்லையா என்று கேட்டால், இருக்கிறதா? இல்லையா? ராமகோபாலனும் இந்து முன்னணிதான்; அதிலொன்றும் சந்தேகமில்லை. இன்னொரு வர் பிரிந்து போனவர் அர்ஜுன் சம்பத் என்பவர். இரண்டு பேரையும் ஒரே மாதிரி பார்க்கிறார்களா? பா.ஜ.க. இயக்கத்திற்கு காரைக்குடியிலிருந்து ஒரு அய்யர், ராஜா அய்யர் என்பவர், தமிழகத்திற்கு பா.ஜ.க. தலைவராக வரவேண்டும் என்று நினைக்கிறார். தமிழிசை சவுந்திரராஜன் என்று நம் குடும்பத்துப் பெண்; நம் குடும்பம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், என்னைப் பார்த்தால், சிற்றப்பா, பெரியப்பா என்றுதான் கூப்பிடுவார், எங்கேயாவது சந்தித்தால். காரணம் என்னவென்றால், நம்முடைய குமரிஅனந்தன் அவர்களுடைய மகள் அவர். குமரிஅனந்தனும், நானும்  பல்கலைக் கழகத் தோழர்கள், பல ஆண்டுகாலமாக. அந்த தமிழிசை சவுந்திர பாண்டியன் அவர்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அந்த அம்மையாரை தலைவராகப் போட்டிருக் கிறார்கள் என்றால், எதற்காக? மோடியைக் காட்டி பிற்படுத்தப்பட்டவர் என்று ஒரு காலகட்டத்தில் தேர்தல் நேரத்தில் மோடி வித்தை காட்டினார்கள் பாருங்கள், பிற்படுத்தப்பட்டவர் என்கிற முத்திரையை காட்டவேண்டும் என்பதற்காகத்தான்.

ஏன் ராஜா அய்யரை தலைவராகப் போடவேண்டும் என்று மேலே முடிவு செய்தார்கள். ஆனால், ஏன் இந்த அம்மை யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். அங்கே நடந்த ஆரிய - திராவிட போராட்டத்தினால்தான். இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா? இதை வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். இது பெரியார் கண்ணாடிக்கு மட்டுமே தெரிகின்ற விஷயம். இதைப் புரிந்துகொள்ளவேண்டு மென்றால், பெரியார் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால் தான் தெரியும். பெரியார் கண்ணாடி மட்டுமல்ல, அது நுண்ணாடி.


அண்ணாவின் கருத்து

ஆரியம் - திராவிடம்பற்றி அண்ணா அவர்களும் மிக அழகாக சொன்னார்; பெரியார் கருத்து என்னவோ, அதுதான் அண்ணாவின் கருத்தாகும்.
ஒரு இனம் தங்களை உயர்ந்தவர்கள் என்றும், தங்கள் நாகரிகமே சிறந்தது என்றும், தங்கள் மொழியே சிறப்புடையது என்றும் கூறிக்கொண்டு, மற்ற மக்களையும், அவர் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை இழிவாகப் பேசும் போக்கையும் நாம் கண்டிக்கிறோம், வெறுக்கிறோம். ஆரியராவது, திராவிடராவது ஒன்றுமில்லை. எல்லோரும் ஒன்றாகக் கலந்துவிட்டனர் என்று யார் யார் வாய் வேதாந்தம் பேசுகிறார்களோ, அவர்களே இன்றைக்குத் தங்களை ஆரியர்கள் என்றும், தங்கள் மொழியான சமஸ்கிருதம் கோவில்களிலும், பிற இடங்களிலும் முதலிடம் பெறவேண்டும் என்றும் கூறி வருவதோடு, திராவிடர்களையும், திராவிட மொழிகளையும் இழிவாகப் பேசி வருகின்றனர். ஆரியர்களில், படித்தவர், படிக்காதவர் யாராக இருந்தாலும், தங்களுடைய வேதம் நான்கென்றும், அது ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்றும் கூறுகின்றனரே அன்றி, திருக்குறளையோ, சிலப்பதிகாரத்தையோ, ஏனைய தமிழ் இலக்கியங்களையோ, தங்களுடைய நூல்களாக ஒப்புக்கொள்ளுவதே கிடையாது என்று திராவிட நாட்டில் எழுதியிருக்கிறார். அண்ணா அவர்கள் பல ஆண்டுகாலம் எழுதினார் பெரியார் கருத்தை.
இன்றைக்கு என்ன சூழ்நிலை? இன்றைக்குப் பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்கவேண்டும் என்று, அந்த ஆரிய இனத்தைச் சேர்ந்த அம்மையாராக இருக்கக் கூடிய திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்கள் பேசுகிறார் என்றால், என்ன அர்த்தம்?

இன்னுங்கூட ஒருவரை விட்டு சொன்னார்கள்; பகவத் கீதையை தேசிய புனித நூல் என்று அறிவிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். இங்கே உரையாற்றிய எங்களுடைய செயலவைத் தலைவர் அறிவுக்கரசு அவர்கள் ஒரு கேள்வி கேட்டாரே, இந்து மதத்திலேயே எல்லோரும் ஒப்புக்கொள் கின்ற நூலா பகவத் கீதை? முதலில் இந்து மதத்தில் உள்ள எல்லா பிரிவினரும் பகவத் கீதையை ஏற்றுக்கொள்கிறார்களா? சைவர்கள் இந்நூலை ஏற்றுக்கொள்கிறார்களா? மறைமலை யடிகள் இதனை ஏற்றுக்கொண்டிருக்கிறாரா? கா.சு.பிள்ளை அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறாரா? என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஆகவே, கீதையின் மறுபக்கம் என்கிற நூலைப் படித்துப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். ஏன் பகவத் கீதையை வலியுறுத்துகிறான் என்றால், மறுபடியும் ஜாதியைக் கொண்டுவந்து நிலை நாட்டவேண்டும் என்று நினைக்கிறான். ஆரியத்தினுடைய உயிர்நிலை எங்கே இருக்கிறது என்றால், வருணாசிரம தருமத்தில் இருக்கிறது. அந்த வருணாசிரம தருமத்தைச் சொல்வதுதான், ஒரு பக்கத்தில் மனுதர்மம்; இன்னொரு பக்கத்தில் பகவத் கீதை.


மதுரையில் மாநாடு போட்டு தீர்மானம் நிறைவேற் றினார்கள்!

விசுவ இந்து  பரிசத் எல்லோரையும் மத மாற்றம் செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள் பாருங்கள், அவர்கள் மதுரையில் மாநாடு போட்டு, நிறைவேற்றிய தீர்மானம் என்ன  தெரியுமா?

இந்திய அரசியல் சட்டத்தை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் நாட்டின் அரசியல் சட்டமாக எதை வைக்கவேண்டும் என்றால், மனுதர்மத்தைத்தான் வைக்கவேண்டும் என்று மதுரையில் தீர்மானம் நிறைவேற்றினார்களே!
ஆர்.எஸ்.எஸ்.சிற்கு யார் இதனை சொல்லிக் கொடுத்தது; இந்து மகாசபைத் தலைவர்களில் முதன்மையாக இருந்து, பெரிய தேசபக்தர் என்று வேஷம் போட்டு, மக்களிடம்  விளம்பரப்படுத்தப்பட்டிருக்கும் பாலகங்காதர திலகர்.
நியாயமாக சுதந்திர இந்தியா வந்தால், மனுதர்மம்தான் அரசியல் சட்டமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.

அந்த மனுதர்மத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? அந்த பிரம்மா ஆனவர், இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக, தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளின்றும் உண்டான, பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித்தனியே பகுத்தார் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அம்பேத்கர் விட்ட பணி இன்றைக்கு தொடர்கிறது...

அம்பேத்கர் இதனை மறுத்தார்; அப்படி மறுத்தால் உங்களுக்கு இடமில்லை என்று சொன்னார்கள். அப்படி யானால், எனக்கு மந்திரி பதவி தேவையில்லை. எனக்கு மந்திரி பதவி முக்கியமல்ல; கொள்கைதான் முக்கியம் என்று வெளியேறியவர் பாபாசாகேப்  அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவர் விட்ட பணி இன்றைக்கு நடந்துகொண்டிருக் கிறது மிகத் தெளிவாக.
பெண்களுக்குச் சொத்துரிமையா? இந்து மதத்தில் கிடையாது, கொடுக்கக்கூடாது என்று சொன்னார்கள். இதனை யார் சொன்னது தெரியுமா? சாதாரண குப்பனோ, சுப்பனோ அல்ல. ஜனாதிபதி பதவியில் உட்கார்ந்திருந்த சனாதிவதி பாபு ராஜேந்திர பிரசாத் சொன்னார்.

-------------------------------------- தொடரும்21-02-2015
Read more: http://viduthalai.in/page-3/96634.html#ixzz3SNwR9DPB
 *******************************************************************************
கடவுள் இல்லை என்கிற எங்களால்
கோயிலுக்கோ, மனிதர்களுக்கோ ஆபத்து வந்ததுண்டா?

கிருட்டினகிரி திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில்
தமிழர் தலைவர் எழுப்பிய அறிவார்ந்த வினா
சென்னை, பிப். 22- கடவுள் இல்லை என்கிற எங்களால் கோயிலுக்கோ, மனிதர்களுக்கோ ஆபத்து வந்ததுண்டா? என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பினார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 28.12.2014 அன்று கிருட்டிணகிரியில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் தொடர்ச்சி வருமாறு


காரணம் என்ன? மனுதர்ம சிந்தனை; ஆரியம், அந்த ஆரியம் எங்கெங்கே சென்றாலும், அவர்களுடைய காரியம் என்னவென்றால், தங்களுடைய தத்துவத்தை சொல்வதுதான் அவர்களுடைய அடிப்படையாகும். ஆகவே, அந்த அடிப் படையினுடைய அடிப்படையில் இவர்கள் சொல்கிறார்கள்.
அந்த பிரம்மா ஆனவர், இந்த உலகத்தைக் காப்பாற்று வதற்காக, தன் முகம், தோள், தொடை, பாதம் இவை களின்றும் உண்டான, பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரர் என்று.


அடுக்கு ஜாதி முறை என்று அதைத்தான் சொன்னார் கள். Graded inequality  மற்ற இடங்களில் நடந்த அநியாயத்தைவிட, இந்து மத வருணாசிரம தருமத்தில், ஏணிப் படிக்கட்டு மாதிரி.


நான்காவது ஜாதிக்குக் கீழே ஜாதிக்கு அப்பாற்பட்ட வர்கள், ஜாதி அற்றவர்கள் இதில் யார் வருகிறார்கள் என்றால், பஞ்சமர்கள்; அய்ந்தாவது ஜாதி. ஆறாவது ஜாதி என்று ஒன்று இருக்கிறது. பல பேருக்குத் தெரியாத ஒன்று, அது அத்தனை ஜாதியிலும் இருக்கின்ற பெண்கள். உயர்ஜாதிப் பெண்களாக இருந்தாலும், அவர்கள் ஆறாவது ஜாதியாக, கீழ்ஜாதியாகக் கொண்டு வந்தார்கள். எனவே தான், சூத்திரர்களுக்கு என்னென்ன அடிமையாக இருக் கின்ற வேலையோ, அவை அத்தனையையும் சேர்த்து செய்யவேண்டிய வேலை பெண்களுக்கு உண்டு.


மனுதர்மம் 415 ஆவது சுலோகம் என்ன சொல்கிறது.


சூத்திரன் என்றால் என்ன பொருள்?


சூத்திரன் ஏழு வகைப்படுவர்; 1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன் 2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன். 3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன். 4) விபசாரி மகன். 5) விலைக்கு வாங்கப்பட்டவன், 6) ஒரு வனால் கொடுக்கப்பட்டவன்  7) தலைமுறை, தலைமுறை யாக ஊழியம் செய்கிறவன்.
இதை பாராட்டவேண்டிய அளவிற்கு, நம்முடைய மாவட்ட திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள் துண்டறிக்கையாக அச்சடித்து அனைவருக்கும் வழங்கியுள்ளனர்.


ஆரியத்திற்கு நேர் எதிர் தத்துவம் திராவிடம்


மேற்கண்ட நிலை மீண்டும் வரவேண்டும் என்பதற் காகத் தான் ஆர்.எஸ்.எஸ். அதை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வினுடைய இன்னொரு திட்டம். கொஞ்சம் ஏமாந்திருக்கிறார்களா, இல்லையா என்று விட்டு விட்டுப் பார்க்கிறார்கள். தூங்கியவன் தொடை யில் கயிறு திரித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். திராவிடர் இயக்கத்தின்மேல் ஏன் கோபம் என்றால், இவர்களைத் தத்துவ ரீதியாக எதிர்க்கின்ற இயக்கம், இந்தியாவிலே இயக்கம் இருக்கிறது என்றால், அரசியல் ரீதியாகவும் சரி, சமூக ரீதியாகவும் சரி, திராவிடர் இயக்கம்தான்.


இதற்கு நேர் எதிரானது; கருப்புக்கு நேர் எதிரானது வெள்ளை என்பதுபோல, இருட்டுக்கு நேர் எதிரானது வெளிச்சம் என்பதுபோல, ஆரியத்திற்கு நேர் எதிர் தத்துவம் திராவிடம்.


வள்ளுவர் எழுதியிருக்கிறாரே,


உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.


நம்மாள் சேற்றில் கால் வைக்காவிட்டால், இவன் சோற்றில் கை வைக்க முடியுமா?


ஆனால், பாருங்கள், மனுதர்மத்தில் எழுதுகிறான்:


பாவகரமான தொழில் உண்டு என்று சொன்னால், அது விவசாயம்; அதை செய்யவே கூடாது. அதிலும் பிராமணர் கள் ஏர் பிடிக்கவே கூடாது என்று. இன்றுவரையிலும் அதைக் கடைபிடிக்கிறார்கள். நம்மாள்களில் எத்தனையோ பேர் ஏர் பிடிக்கிறார்கள். அதில் ஒன்றும் தடையில்லை. எது ஆரியம்? எது திராவிடம்? இந்த ஆராய்ச்சியைப் பார்க்காதீர்கள். இதுதான் ஆரியம்; இதுதான் திராவிடம். அன்றைய நிலையைக் காப்பாற்றவேண்டும் என்று நினைக் கின்றான். இன்றைக்கும், டிராக்டர் வந்த காலத்தில்கூட, எங்கேயாவது அவன் டிராக்டர் கம்பெனியில் மேனேஜராக இருந்திருப்பானே தவிர, உழுவதற்கு வயலில் இறங்கி இருக்கிறானா என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஆகவே, இந்த சமுதாயத்தில் இது மீண்டும் தலைகீழாக உண்டாக்கவேண்டும் என்ற அடிப்படையில், அதனை செய்வதற்காகத்தான் அந்தப் பணிகளைச் செய்கிறார்கள். இதைத்தான் கீதையும் சொல்கிறது.


மகாபாரதம் எழுதியபோது கீதை கிடையாது


அந்த பிரம்மா உண்டாக்கினார் என்றான். மும்மூர்த்தி கடவுள்களில். இதில், கிருஷ்ண அவதாரக் கடவுள். இதை யெல்லாம் ஆர்.எஸ்.எஸ். நம்பச் சொல்கிறார்கள்.


மகாபாரதம் எழுதியபோது கீதை கிடையாது. ரொம்ப வருஷத்திற்குப் பிறகுதான், கீதை என்ற ஒன்றை உண் டாக்கி, அதைக் கொண்டு போய் நடுவில் சொருகினார்கள். பகுத்தறிவோடு யோசனை செய்தால், பகுத்தறிவோடு யாரும் சிந்தித்துப் பார்த்தால், அது நிற்காது.


காரணம் என்னவென்றால், ஒரு சிறிய விஷயத்தை உங்களுக்குச் சொல்கிறேன். பகவான் கிருஷ்ணன், சாரதியாக வந்து ரதம் ஓட்டுகிறார். எதிரே கவுரவர்களின் படை நிற்கிறது. பாண்டவர்களுக்குத் தேரோட்டியாக வருகிறார் கிருஷ்ணன் என்றுதான் கதை எழுதி வைத்திருக்கிறார்கள்.


எதிரே நிற்பவர்கள் எல்லோரும் சொந்தக்காரர்கள். அவர் களை எதிர்த்து சண்டை போடு என்று கிருஷ்ணன் சொல் கிறான். அர்ஜூனனுக்கு நியாயமான ஒரு சந்தேகம் இருக்கிறது. நம் சொந்தக்காரர்களை சாகடித்துவிட்டு நாம் என்ன செய்யப் போகிறோம் என்று நினைத்து, ஆகவே, அதற்கு நான் தயாராக இல்லை என்கிறான்.


உடனே கிருஷ்ண பரமாத்மா என்ன செய்திருக்க வேண் டும்? இங்கே கலவரம் நடைபெறுகிறது என்றால், காவல்துறை என்ன செய்யவேண்டும்?

காவல்துறை கலவரத்தைத் தடுக்கவேண்டும். அதற்குப் பெயர்தான் காவல்துறை. இல்லை, இல்லை நீங்கள் நன்றாகக் கலவரம் செய்யுங்கள்; நாங்களும் உங்களுக்கு வசதி செய்து தருகிறோம். நீங்கள் ஏன் சோர்ந்து போய் இருக்கிறீர்கள், இதோ இருக்கிறது பெட்ரோல் பாம் என்று சொன்னால், அது காவல்துறையாக இருக்க முடியுமா?


சண்டைக்குப் போ, போ என்று சொல்வதற்கு ஒரு கடவுள் தேவையா?
அதுபோல, அர்ஜூனன் போர் செய்ய மாட்டேன் என் கிறான், ஆனால், சண்டைக்குப் போ, போ என்று சொல்வ தற்கு ஒரு கடவுள் தேவையா? உலகத்திலேயே நம் கட வுளைத் தவிர, இந்துக் கடவுளைத் தவிர சண்டைக்குப் போகச் சொன்ன கடவுள் வேறு எங்காவது இருக்கிறானா? இதைவிட, அராஜகம், இதைவிட பயங்கரவாதம் வேறு ஏதாவது உண்டா? போர் செய், எதிரே இருப்பவர்களை சாகடி என்று சொல்கிறார். அப்போது உபதேசம் சொல் கிறார்.


700 சுலோகம் சொன்னார் என்று கதை எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால், 745 சுலோகம் இருக்கிறது என்றும், எத்தனையோ கீதைகள் இருக்கிறது என்றும் திலகரே எழுதி வைத்திருக்கிறார்.


சரி, 700 சுலோகங்களை சமஸ்கிருத்தில் சொல்கிறார். எதிரே, எதிரிப் படைகள் நின்று கொண்டிருக்கின்றன. அது நட்புக் களம் அல்ல; போர்க்களம்; அந்தப் போர்க்களத்தில் படைகள் நின்று கொண்டிருக்கின்றன. அவர்கள் எல்லாம் அமைதியாக நிற்கிறார்களாம்; இன்னும் 700 சுலோகம் முடியவில்லை; 645 சுலோகம்தான் முடிந்திருக்கிறது என்று அமைதியாக நிற்பார்களா?  இது அறிவுக்கு ஏதாவது சம்பந்தம் உள்ள விஷயமா?  நன்றாக நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


அப்பொழுது என்ன டேப்ரிக்கார்டில் பதிவு செய்தார் களா? யாராவது ஷார்ட்டெண்டில் எழுதினார்களா, கிருஷ்ணன் சொல்லச் சொல்ல, பிறகு பின்னாளில் எப்படி புத்தகம் வந்தது? நம்பு என்று சொல்கிறார்கள்; வெள்ளைக் காரன் சொன்னான், புராணங்கள் எல்லாம் கற்பனை என்று.
அவதாரம் எடுத்தான் என்று சொல்கிறார்களே, கிருஷ்ணன் பத்து அவதாரம் எடுத்தான் என்று.


தேவர்கள் எல்லாம் சென்று, தேவர்கள் என்றால், ஆரியர்களுக்குச் சமம். அசுரர்கள் என்றால், திராவிடர்கள் என்கிற கற்பனை.


அசுரர்கள் எல்லாம் அக்கிரமம் செய்கிறார்கள். அவர்களை அடக்க முடியவில்லை. அவர்களை ஏதாவது செய் என்று சொன்னவுடன்,
கிருஷ்ணன் உடனே, நான் அவதாரம் எடுத்து வருகிறேன் என்று சொல்லி, பத்து அவதாரம் எடுத்தான். அய்ந்து அவதாரத்தை மிருகமாக எடுத்தான். மீதி அய்ந்து அவதாரம் மனித உருவமாக.


அசுரர்களை அழிக்கவேண்டும்; அதில் சத்திரியர்களே மிகத் திமிராக இருக்கிறார்கள். அவர்களையும் அடக்க வேண்டும் என்று சொல்லி, இரண்டு அவதாரத்தை எடுக்கிறார். இவையெல்லாம் மகாபாரதத்தில் எழுதியிருக் கிறது. அதைத்தான் நான் சொல்கிறேன்.


யாருக்காவது சந்தேகம் இருந்தால், காவல் துறையாக இருந்தாலும் சரி, யாராவது ஆதரவாக இருக்கிறார்கள் என்று சொன்னாலும், தயவு செய்து, இந்தப் பேச்சுக்காக என்மீது வழக்குப் போடுங்கள்; என் பேச்சை பதிவு செய்துகொண்டு வழக்குப் போடுங்கள். நீதிமன்றத்தில் அதனை சந்திப்பதற்கு நமக்கு நல்ல வாய்ப்பு ஏற்படும் என்பதற்காக நான் சொல் கிறேன்.
நீங்கள் கேட்பது, பாரதக் கதையில் இருக்கும் மிகப் புண்ணியமான ஒரு இடத்தை நான் சொல்லப் போகிறேன். சொல்கிற எனக்கும் புண்ணியம்; கேட்கின்ற உங்களுக்கும் புண்ணியமாகும். பாதியில் நிறுத்தினால், இரண்டு பேரும் நரகத்திற்குப் போய்விடுவோம்.  அவன் கதை சொல்லி வைத்திருக்கிறான். அதனாலே பாதியிலே நிறுத்த நான் தயாராக இல்லை. முழுவதும் சொல்லியாகவேண்டும்.


மகாவிஷ்ணு தடவிப் பார்க்கிறார், மார்பில் இருக்கின்ற இரண்டு மயிரைப் பிடுங்கி எறிகிறார். ஒன்று கறுப்பு மயிர்; இன்னொரு வெள்ளை மயிர். கறுப்பாக இருந்த மயிர் கிருஷ்ண அவதாரம்; வெள்ளை மயிர் பலராமன் அவ தாரம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். யாருக்காவது சந்தேகம் இருந்தால், பாரதத்தைப் பாருங்கள்;


இதை அப்படியே மறைமலையடிகள் தன்னுடைய புத்தகத்திலேயே மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார். மாணிக்கவாசகர் காலமும், வரலாறும் என்பதிலேயும் எடுத்து எழுதியிருக்கிறார்.


புராணங்கள் எல்லாம் நடந்தவையாம்!


ஆகவே, இப்பொழுது என்ன சொல்கிறார்கள், ஆர்.எஸ். எஸ்.காரரை சரித்திர ஆராய்ச்சி தலைவராகப் போட்டவுடன், அவர் சொல்கிறார்,
புராணத்தையெல்லாம் கற்பனை என்று நினைக் காதீர்கள்; அவையெல்லாம் நடந்தது என்று சொல்கிறார்.


சரி, இப்பொழுது இந்த விஷயம் நடந்தது என்று ஒப்புக்கொண்டால், கடவுளை எவ்வளவு டேமேஜ் செய்கிற விஷயம் இது.


ஏண்டா, கற்பனை என்று நாங்கள் சொன்னதை நீங்கள் நம்பினால், உன் கடவுளாவது காப்பாற்றப்படுகிறார்; இல்லை, நடந்தது என்று ஒப்புக்கொள் என்று நீ சொன்னால், இதைவிட கடவுளைக் கேவலப்படுத்துவது, கொச்சைப் படுத்துவது வேறு உண்டா?


அந்தக் கிருஷ்ணன் சொல்கிறார்,


சதுர்வர்ணம், மயாசிருஷ்டம்


நான்கு ஜாதிகளையும் நானே உண்டாக்கினேன். நானே நினைத்தாலும்கூட அதனை மாற்ற முடியாது.


ஏன் ஜாதி நம் நாட்டில் நிலைத்து இருக்கிறது. ஜாதி இருந்தால், ஜாதி சண்டை வரும்; மதம் இருப்பதினால், மதச் சண்டை ஏற்படுகிறது.


அந்த மதவெறி, இந்த மதவெறி என்று உண்டா? அண்மையில் பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் பெஷாவரில் உள்ள பள்ளிக்கூடத்திலிருந்த குழந்தை களைக் கொன்றிருக்கிறார்களே! மனிதனுக்கு மதம் பிடிக்கக்கூடாது; யானைக்கு மதம் பிடித்தாலே ஆபத்து என்றால், மனிதனுக்கு மதம் பிடித்தால் எவ்வளவு ஆபத்து என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
பன் மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள் இருக்கின்ற நாட்டில், என் மதம் மட்டுமே ஆளவேண்டும் என்று சொல்வதுதான் இந்துத்துவா!
என் மதம் இந்து மதம்; அதுவும் பெரும்பான்மை நாங்கள், அதனால், இந்துக்கள் நாங்கள்.


மோகன்பகவத் என்கிற ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்கிறார், இந்தியாவில் உள்ள எல்லோரும் இந்துக்கள். ஆகவே, நாங்கள் இதனை செய்வோம் என்று.
இந்தியாவில் இருக்கின்ற எல்லோரும்தான் இந்துக் களாயிற்றே! பிறகு ஏன், இந்துராஜ்ஜியம் என்ற ஒன்றை உருவாக்கவேண்டும். இந்தியாவே இந்துராஜ்ஜியம் என்று சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே! ஏன், இந்தியாவை மாற்றவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.


இதோ என் கையில் இருப்பதைப் பாருங்கள்:


எவ்வளவு பெரிய ஆபத்து வர இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமானால், நண்பர்களே, புரிந்துகொள்ளுங்கள், இது ஆர்.எஸ்.எஸ். தலைவர் எழுதிய, ஞானகங்கை புத்தகமாகும். இது 1939 இல் கோல்வால்கர் எழுதியதாக சொல்லப்படுகின்ற புத்தகம்.


அந்தக் கோல்வால்கர் என்ன சொன்னார் என்றால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று சொல்கிறார்.


அதனால்தான் இப்பொழுது கட்டாய மத மாற்றம்.  மத மாற்றம் நாங்கள் செய்வோம். எல்லோரையும் பிடிப்போம்; 2 லட்சம் ரூபாய் கொடுத்து, 5 லட்சம் ரூபாய் கொடுத்து மத மாற்றம் செய்கிறார்கள்.


மீனாட்சிபுரத்தில் மத மாற்றம் வந்தபொழுது கண்டித்த வர்கள், இன்றைக்கு மீண்டும் தாய் மதம் என்று சொல்கிறார்கள்; எங்களைப் பொறுத்தவரையில் எந்த மதத்தையும் ஏற்பவர்கள் அல்ல திராவிடர் கழகத்துக் காரர்கள். ஆனால், மனிதநேய நேய அடிப்படையில், நல்லெண்ணம் இருக்கவேண்டும்.


நாத்திகர்களால் யாருக்காவது தொந்தரவு ஏற்பட்டுள்ளதா?


கடவுள் இல்லை என்கிற எங்களால் யாருக்காவது, எந்தக் கோவிலுக்காவது ஆபத்து உண்டா? யாராவது வழிபடுகின்ற இடத்திற்கு ஆபத்து உண்டா? ராமர் இங்கே பிறந்தார் என்று இவன்தான் கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு போகிறான்; இன்னொருத்தன், இல்லை, இல்லை இங்கேதான் பாபர் மசூதி கட்டினார் என்று அவர் போகிறார், தடுக்கிறார். ரத்த ஆறு ஓடுகிறது.
நாங்கள்தான் சொல்கிறோம், ஏம்பா, யார் இடமாக இருந்தாலும் அமைதியாக இருங்கள் என்று சொல்வதற்கு எங்களைத் தவிர நாட்டில் நாதி உண்டா? நாத்திகர்களால் யாருக்காவது தொந்தரவு ஏற்பட்டு இருக்கிறதா? கடவுள் சண்டை உண்டா? மதச் சண்டை உண்டா?


பள்ளிக்கூடம் கட்டு, எல்லோரும் வருவார்கள் என்று சொல்கிறோம்; ஒரு கோவில் கட்டினால், அந்த மதத்துக் காரர் மட்டும்தான் வருவார்; மசூதி கட்டினால், அந்த மதத்துக்காரர் மட்டும்தான் வருவார்; சர்ச் கட்டினால், அந்த மதத்துக்காரர் மட்டும்தான் வருவார். ஆனால், மருத்துவ மனை கட்டுங்கள், அதற்கு எல்லா மதத்துக்காரர்களும் வருவார்களே, அதில் யாரும் வித்தியாசம் பார்க்க மாட்டார்கள்.


ஆனால், பல்கலைக் கழகத்தில்கூட, இந்துப் பல்கலைக் கழகம் என்று ஆரம்பித்தவர்தான், அண்மையில் இது வரையில் நீங்கள் கேள்விப்படாத ஒரு பெயரை இரண்டு நாள்களுக்கு முன்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட பண்டிட் மதன்மோகன் மாளவியா என்று.
மாளவியா என்றால், பல பேருக்குத் தெரியாது. தெரிய வேண்டிய பல பேரையே தெரியாது நமக்கு. மோடியே ஆறு மாதத்திற்கு முன்பு பல பேருக்குத் தெரியாதே! இப்பொழுதுதானே மோடியே தெரிய ஆரம்பித்திருக்கிறது.
அந்த மதன்மோகன் மாளவியா என்ன செய்தார் தெரியுமா? இந்துப் பல்கலைக் கழகத்தை, இந்து மகாசபையை உருவாக்கினார். அதனுடைய விளைவு என்ன? ஆறு மாதத்திற்கு முன்பு நீங்கள் ஏமாந்ததின் விளைவு, என்ன அக்கிரமம் நடந்திருக்கிறது என்றால், காந்தி தேசப் பிதா, அண்ணல் காந்தியடிகள், அவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்தான்; ராம் ராம் என்று சொன்னவர்தான்.


ரகுபதி ராகவ ராஜாராம்!
பதீத பாவன சீதாராம்!
சீதாராம் ஜெய சீதாராம்!
பஜ து ப்யாரே சீதாராம்!
ஈஸ்வர அல்லா தேரே நாம்!
சப்கோ சன்மதி தே பகவான்!
ரகுபதி ராகவ ராஜா ராம்!
பதீத பாவன சீதாராம்!


காந்தியார்மீது அவர்களுக்கு ஏன் கோபம் வந்தது?


இவ்வளவையும் பாடியவர்தான் காந்தியார்; அவர் ஒன்றும் நாத்திகர் அல்ல. அப்பேர்ப்பட்ட காந்திக்கு, கடைசியில், இந்த ஆரியத்தின் சூழ்ச்சி புரிந்தது; வகுப்புவாரி உரிமைபற்றி பேசியதும்; திராவிடர்களுடைய கோரிக்கை நியாயம் என்று சொல்லிவிட்டார் என்றவுடன், அவர் களுக்கு காந்தியார்மீது கோபம் வந்தது.


காந்தியார் கேட்டார், வேதம் ஓதுவதுதானே வேதியர்க்கு அழகு; நீங்கள் ஏன் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்; நீங்கள் ஏன் பிணத்தை அறுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் ஏன் டி-ஸ்கொயர் எடுத்துக்கொண்டு பொறியியல் கல்லூரிக்குச் செல்லவேண்டும் என்று கேட்ட ஒரு மாதத்தில் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.  நாதுராம் விநாயக கோட்சே என்ற மராத்திய பார்ப்பான்.


எவ்வளவு தைரியம் இருந்தால், இவ்வளவு நாள் வரையில் அந்த கோட்சேயைப்பற்றி பேசாதவர்கள், இப்பொழுது கோட்சேவுக்குச் சிலை வைக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். அதுவும், தமிழ்நாட்டில் போஸ்டர் அடித்து ஓட்டுகின்ற அளவிற்கு, இந்த ஆட்சிகளும், காவல் துறையும் எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை. தயவு செய்து இதனை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். காந்தியாருடைய நினைவு நாளான ஜனவரி 30; மதவெறி ஒழிப்பு நாள்! அதனால்தான் நாங்கள் இன்றைக்கு மிகத் தெளிவாக அறிவித்தோம். வருகின்ற ஜனவரி 30 ஆம் தேதி மதவெறி ஒழிப்பு நாள் என்று காந்தியாருடைய நினைவு நாளை நாங்கள் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும், ஒத்த கருத்துள்ள அத்துணைக் கட்சித் தலைவர்களையும், பேச்சாளர்களையும் அழைத்து, மாவட்டத் தலைநகரங் களில் நடத்தி, மக்கள் நல்லிணக்கத்தாடு இருக்கவேண்டும், ஒற்றுமையோடு இருக்கவேண்டும்; மதவெறிக்கு ஆளாகக் கூடாது; இந்த நாடு காப்பாற்றப்படவேண்டும்.


இது பெரியார் பூமி; திராவிட பூமி!


பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், இந்தியா முழுவதும் ரத்த ஆறு ஓடியது. ஆனால், ஒரு சம்பவம்கூட, ஒரு அசம்பாவிதம்கூட, ஒரு சிறு பிரச்சினைகூட இல்லாத ஒரு மாநிலம், இந்தியாவில் தமிழ்நாடுதான். காரணம், இது பெரியார் பூமி; திராவிட பூமி.


இதையேதான் பத்திரிகைகளும் அன்றைக்கு எழுதின. அதைக் குலைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடுகள் மடமடவென்று வேகமாக நடக்கின்றன. ஒரு பக்கம் மதமாற்றம்; இன்னொரு பக்கம், பச்சையாக கோட்சேவுக்கு நாங்கள் சிலை வைப்போம்; கோட்சே பிறந்த நாளை கொண்டாடுவோம் என்று சொல்கிறார்கள்.


காந்தியார் அப்படி என்ன செய்தார்? வகுப்புரிமையை ஆதரித்தார், அவ்வளவுதானே! அப்பேர்ப்பட்ட காந் தியாரை சுட்டுக் கொன்றனர். எல்லாருக்கும் சம வாய்ப்புக் கொடுப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று சொல்கின்ற ஒரு ஆட்சி வந்து, நீங்கள் மீண்டும் மீண்டும் ஏமாந்தால், அதனுடைய விளைவு என்ன?


ஆரியம் - பாசிசம்; திராவிடம் - ஜனநாயகம்


ஜனநாயகம் என்றால் என்ன அர்த்தம்? பெரும்பான்மை மக்கள் ஆளவேண்டும்; அவர்களுடைய பிரதிநிதிகள் ஆளவேண்டும். சிறுபான்மைச் சமுதாய மக்கள் மாள வேண்டும் என்பதா? சிறுபான்மை சமுதாய மக்களும் வாழவேண்டும், அதுதான் மிக முக்கியம். பெரும்பான்மை ஆளட்டும்; சிறுபான்மைச் சமுதாயமும், மற்றவர்க ளைப்போல உரிமைப் பெற்று வாழவேண்டும்; அதுதான் ஜனநாயகத்தினுடைய தத்துவமாகும்.


நான் பெரும்பான்மை, நான் வைத்ததுத்தான் சட்டம் என்று சொன்னால், அதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல; அது பாசிசம், பச்சைப் பாசிசம். ஆரியம் என்பது பாசிசம்; திராவிடம் என்பது ஜனநாயகம்.


எப்படி திருக்குறள் என்பது திராவிடம்; மனுதர்மம் என்பது ஆரியமோ அதுபோலத்தான், அதே தத்துவங்கள் தான்.


இந்த கோல்வால்கர் என்பவர் தெளிவாக அவருடைய நூலில் சொல்லியுள்ளார்.

*************************************************************************


ராஜபக்சே வெற்றிபெற வேண்டும் என்று உதவி புரிந்தவர் நரேந்திர மோடி தானே!
கிருட்டினகிரி மாநாட்டில் கழகத் தலைவர் உரை
சென்னை, பிப். 22- ராஜபக்சே வெற்றபெற வேண்டும் என்று உதவி புரிந்தவர் நரேந்திர மோடி தானே! என்றார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 28.12.2014 அன்று கிருட்டிணகிரியில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் தொடர்ச்சி வருமாறு:


உயிர், கொள்கைக்காகப் போனால், அதைவிட மிகப்பெரிய வாய்ப்பு வேறு கிடையாது


நாங்கள் ஏன் திராவிடர் விழிப்புணர்வு மாநாடு போட்டு இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம்? எங்களுக்கு அதனால் என்ன லாபம்? எங்களுடைய உயிரையும் பணயம் வைத்துப் பேசுகிறோம்; எங்களைப் பார்த்து கேட்கிறார்கள், நீ வந்தால், இன்றைக்குத் திரும்பிப் போகமாட்டாய் என்று சொல்கிறார்கள்.


இன்றைக்கு தைரியமாக அடையாளம் தெரியாத ஆள்களெல்லாம் பேசுகிறார்கள். நாங்கள் திரும்பிப் போவது முக்கியமல்ல; நீ திருந்தி வருவதுதான் எங்களுக்கு முக்கியமே தவிர, நாங்கள் என்ன உலகம் உள்ளவரை வாழப் போகிறோமா? உயிர், நோயால் போகக்கூடாது; உயிர், விபத்தினாலே போகக்கூடாது. உயிர், கொள்கைக் காகப் போனால், அதைவிட மிகப்பெரிய வாய்ப்பு வேறு கிடையாது. அப்படி எண்ணக்கூடியவர்கள்தான் பெரியார் தொண்டர்கள்.


எனவே, இந்த சமுதாயத்திற்கு எச்சரிக்கை மணி அடிப்பதற்கு எங்களைவிடத் தகுதியானவர்கள் வேறு யாரும் கிடையாது. எங்களுக்கு அரசியல் ஆசாபாசங்கள் கிடையாது. எங்களுக்கு லட்சியப் பார்வை மட்டுமே உண்டு. ஆகவே அந்த அடிப்படையில்தான் இதைச் சொல்கிறோம்.


கோல்வால்கரின் ஞானகங்கை என்ன சொல்கிறது?


அந்த கோல்வால்கர் நூலில் சொல்லியிருக்கிறார் பாருங்கள், அதை அப்படியே படிக்கிறேன் கேளுங்கள்:


இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சமுதாயத்தில், மிக முக்கியமாக இருக்கக்கூடிய உங்களுக்கு நாங்கள் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம். நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமுதாய மக்கள் நீங்கள் எல்லோரும் அந்நிய மக்கள். நாட்டில் வாழும் அன்னிய மக்களுக்கு, இரண்டே வழிகள்தான் உள்ளன.


ஒன்று, அவர்கள் சமுதாய இனத்தில் ஒன்றென கலந்து, அவர்கள் பண்பாட்டை தழுவுதல் வேண்டும். அல்லது சமுதாய இனத்தின் தயவு தாட்சண்யத்தில் வாழுபவராக இருக்கவேண்டும். அதுதான் தர்க்கரீதியாக உட்பட்ட சரியான முறையாகும்.


ஒன்றுதான் மிக முக்கியம்,

இந்துஸ்தானத்தில் வாழும் இந்துக்கள் அல்லாதார், இந்து பண்பாடு, மொழி ஆகியவற்றை மேற்கொண்டு, இந்து சமயத்தை உயர்ந்த மதிப்பில் வைத்துப் போற்றி, இந்து இனம், அதனுடைய பண்பாடு ஆகிய இரண்டின் புகழைத் தவிர வேறு எதையும் அவர்கள் வரவேற்கக் கூடாது. அதா வது, அவர்கள் இந்த நாடு, அதனுடைய பழைமையான பாரம்பரியம் ஆகியவற்றைக் காண சகியாத தன்மைகளை யும், நன்றிகெட்ட தன்மையையும் முற்றிலும் நீக்கிவிட்டு, உறுதியான எண்ணத்துடன், அன்பையும், பக்தியையும் அவைகளுக்குப் பதிலாகக் கொள்ளவேண்டும். ஒரே வார்த்தையில் கூறவேண்டுமானால், அவர்கள் அன்னிய ராக இருப்பதை விட்டொழித்துவிடவேண்டும். அவ்வாறு அவர்கள் இருக்க அவர்கள் விரும்பவில்லை என்றால், அவர்கள் இந்து சமுதாயத்திற்கு முற்றிலும் கீழ்ப்பட்ட மக்களாக சலுகைகள் எதுவும் பெறத் தகுதியற்றவர்களாக, கண்ணியமாக நடத்தப்படுவதிலேயோ அல்லது பிரஜா உரிமையோ கூட அவர் அடைய அருகதையற்றவர்களாக, சுருங்கக் கூறுமிடத்து, எதனையும் கோர முடியாத மக்களாக வாழுதல் வேண்டும்.
ராமனைக் கும்பிட்டால்தான், இஸ்லாமியர்களாகிய நீங்கள் இந்த நாட்டில் இருக்க முடியும். கிருஷ்ணனை நீங்கள் வணங்கினால்தான், கிறிஸ்தவர்கள் இந்த நாட்டில் இருக்க முடியும் என்று அந்த நூலில் எழுதியிருக்கிறார். ஆதாரம் இருக்கிறதே!


இதை எவ்வளவு விரைவாக நம்முடைய ஆட்சியில் செய்ய முடியுமோ, அவ்வளவு விரைவில் செய்யவேண்டும் என்பதுதான் இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். அதனுடைய அரசியல் வடிவம்தான் பா.ஜ.க.
இதைச் சொல்லாமல், மக்களை ஏமாற்றுவதற்காக என்ன சொன்னார்கள், வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்று சொன்னார்கள். நாங்கள் வந்தால் மாறுதல் செய்வோம் என்று சொன்னார்கள்.


சகோதரர் வைகோ அவர்களுக்கு அன்றைக்கே புரிந்தது!


இவர்கள் வந்தால், நம்முடைய ஈழத் தமிழர்களுக்கு விடியல் கிடைத்துவிடும். நம்முடைய மீனவப் பிரச்சினை கள் தீர்ந்துவிடும். மோடி கையில் மந்திரக் கோல் வைத் திருக்கிறார், அதனை நீட்டியவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.


என்ன நடந்தது? இவர் பதவியேற்ற நாளிலேயே அது அப்பட்டமாக எல்லோருக்கும் தெரிந்தது. சகோதரர் வைகோ அவர்களுக்கு அன்றைக்கே புரிந்தது. ஆனால், வெட்கம் தடுத்தது; உடனே சொல்வதற்கு. அதனால், எதிர்ப்பைக் காட்டினார்.


மோடி பதவியேற்பு விழாவிற்கு, கொடுங்கோலன் ராஜபக்சவை அழைத்தார்கள். அவரை மட்டுமல்ல, எல் லோரையும் அழைத்தார்கள். சார்க் மாநாட்டுத் தலைவர்கள் என்று அதற்கு வியாக்கியானம் சொன்னார்கள்.
சர்வதேச அரசியலுக்கு மாறாக, இலங்கையில் தமிழினம் புண்பட்டுக் கிடக்கிறது. அதிபராக இருக்கின்ற ராஜபக்சே, அய்க்கிய நாடுகளின் சபையின் சார்பாக போடப்பட்ட மனித உரிமையின் ஆணையத்தின் சார்பில், போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள போர்க் குற்றவாளி, சர்வதேச ரீதியாக.


கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

அதற்காக அய்.நா. தன்னுடைய குழுவை அனுப்புகிறது. நான் அவர்களை அனுமதிக்கமாட்டேன் என்று நேற்று வரை சொல்லிக் கொண்டிருந்தவர், அந்த சர்வாதிகாரி, சிங்கள வெறியன், இலங்கை அதிபர் ராஜபக்சே.  அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு; எங்கே, டில்லியில். இதைவிட ஈழத் தமிழர்கள் நெஞ்சில் புண்ணை உருவாக் கக்கூடியது; வெந்த புண்ணில் வேலை குத்துவது வேறு ஏதாவது உண்டா? அதனை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.


உருட்டைக்கு நீளம்; புளிப்புக்கு அதற்கு அப்பன்

இலங்கையில் நடைபெறுகின்ற அதிபர் தேர்லில், நீங்கள் வெற்றி பெறவேண்டும் என்று மோடி வாழ்த்துச் சொல்கிறார். அதைச் சொல்லலாமா? தமிழர்களுடைய உணர்வுகளை அவர் புரிந்துகொண்டாரா? காங்கிரஸ்காரர் மேல் இருந்த கோபம், தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு; உருட்டைக்கு நீளம்; புளிப்புக்கு அதற்கு அப்பன் என்று சொல்வார்கள்.


உருட்டை என்றால் எலுமிச்சம்பழம்; புளியம்பழம் அதிகம் புளிப்பா? எலுமிச்சம் பழம் அதிகம் புளிப்பா? என்ற சந் தேகம் வந்தது.


சப்பிப் பார்த்தவுடன், இவன் வாயில் போட்டு ருசித்துப் பார்த்தான்; உருட்டைக்கு நீளம்; புளிப்புக்கு அதற்கு அப்பன் என்று சொன்னான். அதுபோல, காங்கிரசுக்கு அப்பன், எதில், அவர்கள் நடந்துகொண்டது மோசம் என்று இவர்களை வைத்தால், இவர் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போட்ட மாதிரி, அவருக்கு அடிக்கடி வரவேற்பு கொடுத்தார்கள். காங்கிரஸ் ஆட்சியில் வராத துணிச்சல், அப்பொழுது ஏற்படாத அக்கிரமம் இப்பொழுது வந்துவிட்டது. இதனைப் புரிந்துகொண்டோமே, இவ்வளவு சீக்கிரத்தில்.

உண்மை உருவத்தைக் காட்டக்கூடாது; அதற்குப் பதில் ஒப்பனைதான் இருக்கவேண்டும்!

ராஜபக்சே வெற்றி பெறவேண்டும் என்று மோடி சொன்னார்; அத்தோடு மட்டுமல்ல நண்பர்களே, அவருடைய வெற்றிக்கு உதவுகிறாராம். என்ன செய்கிறார் தெரியுமா? நேற்று முன்நாள்தான் ஒரு செய்தி வெளிவந்தது. இந்தியாவில், இணையத்தில் இளைஞர்களை ஏமாற்றினார் பாருங்கள், அதற்கு அரவிந்த் குப்தா என்பவர், அவர் அமெரிக்காவிலிருந்து வந்து இணைய தளத்தையெல்லாம் சரிபடுத்திக் கொடுத்தவர். அந்த இணைய தளத்தின் உதவியுடன் மோடியின் வெற்றிக்காக இளைஞர்களை ஏமாற்றுவது எப்படி? தேர்தல் பிரச்சாரம் செய்வது எப்படி? வளர்ச்சி! வளர்ச்சி! வளர்ச்சி!! என்று சொல்லி வித்தியாசம் காட்டவேண்டும்; உண்மை உருவத் தைக் காட்டக்கூடாது; அதற்குப் பதில் ஒப்பனைதான் இருக்கவேண்டும்.
ஒப்பனையை நம்பினால் என்னாகும்? அந்தக் காலத்தில் சொல்வார்கள், கிராமத்திலிருந்து ஒருவன் நாடகம் பார்க்கச் சென்றான். ஸ்திரீபாட் போட்ட ஒரு வனைப் பார்த்து, அவன் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறான். அந்தக் காலத்தில், ஆண்கள்தான் ஸ்திரீபாட் போடுவது வழக்கம். பெண்கள் நடிப்பதில்லை. இவன் ஒற்றைக்காலில் நின்றான், அவ ளைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று. அவன் அரிதாரத்தைக் கலைத்து, நான் ஆண் என்றான்.


அதுபோன்று,  இவர்கள் ஏமாற்றக்கூடிய அளவிற்கு அப் படியே உருவத்தை மாற்றுகிறார்கள்.


தமிழினம் பூண்டோடு அற்றுப் போவதற்கு உதவினால், இதைவிட மோடியினுடைய துரோகம் வேறு இருக்கமுடியுமா?


நீங்கள் எப்படி இந்தியாவில் வெற்றி பெற்றீர்களோ,  அதற்காக இணையத்தில் பணி செய்தாரே, அவரை இலங்கைக்கு அனுப்புங்கள் என்று சொல்கிறார்.
அரவிந்த் குப்தா என்பவர், அதற்காக இலங்கைக்குச் சென்றிருக்கிறார். அவர்தான் ராஜபக்சே அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மேற்பார்வையாளராக இருக்கிறார்.


ஆனால், இலங்கையில் என் தமிழனை அழிக்கின்ற ஒருவன் மீண்டும் அவன் பதவிக்கு வரவேண்டுமென்று உத வினால், தமிழினம் பூண்டோடு அற்றுப் போவதற்கு உத வினால், இதைவிட மோடியினுடைய துரோகம் வேறு இருக்கமுடியுமா?


இவர்கள் ஆட்சிக்கு வந்ததும், இங்குள்ள மீனவர் பிரச்சினை தீர்ந்ததா? இன்றைக்குக்கூட கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை அடித்து, இலங்கைக் கடற்பனையினர் பிடித்துக் கொண்டு போயிருக்கிறார்கள்; இது அண்மைச் செய்தி. இல்லை யென்று மறுக்கமுடியுமா?


ஆக, அந்த மீனவர்கள் அப்பாவிகளாக இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட படகுகள் திருப்பிக் கொடுக்கப்பட்டனவா? சுப்பிரமணியசாமி என்ன அதிபரா? அவனைவிட ஒரு அரசியல் புரோக்கர் வேறு யாருமே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு ஆளை வைத்துக் கொண் டிருக்கிறார்கள்; அவர் தமிழ்நாட்டில் எதையும் பேசினால், இவர்கள் எல்லாம் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். சமய சந்தர்ப்பம் வரும்பொழுது, கோட்சேவுக்கு சிலையா? அதற்கும், பி.ஜே.பி.,க்கும் சம்பந்தம் இல்லை என்று சொல் கிறார்கள். கோட்சே ஆர்.எஸ்.எஸ். என்று சொன்னவுடன்,


ஆதாரம் வேண்டுமானால், விடுதலையில் இருக்கிறது!


கலைஞர் அவர்கள் சட்டசபையில் இருந்தபொழுது பிரச்சினை எழுந்தது ஒரு நாள். உடனே கலைஞர் சொன்னார், ஆதாரம் வேண்டுமானால், விடுதலையில் இருக்கிறது; ஆதாரம் வேண்டுமானால், பெரியார் திட லுக்குச் செல்லுங்கள் என்றார்.


இல்லீங்க, அவர் ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து விலகி விட்டார். கோட்சே, ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினரா? என்று கேட்டார்கள்; மிகவும் சாமர்த்தியமாக. அப்பொழுது ஆர்.எஸ்.எஸில் உறுப்பினர் சேர்க்கின்ற பழக்கமே கிடையாது. அப்பொழுது அதில் உறுப்பினர் என்றால், எவ்வளவு சாமர்த்தியமான வாதம் பாருங்கள்; உறுப்பினராக யாருமே சேர்க்க முடியாது என்று சொன்னால், பிறகு அவர் எப்படி உறுப்பினராக இருந்திருப்பார். இந்து மகாசபையில் பயிற்சி எடுத்தவர் என்று சொன்னார்கள்.


காந்தியாரைக் கொன்றவன் பயிற்சி எடுத்த ஒரு அமைப்பை உருவாக்கியவருக்கு, பாரத ரத்னா விருது


சரி, இந்து மகாசபையில் பயிற்சி எடுத்தவர் என்று சொன்னீர்கள் அல்லவா, நாங்கள் ஒரு கேள்வி கேட் கிறோம், அதற்குப் பதில் சொல்லுங்கள். இந்து மகாசபையை உண்டாக்கியவர் பண்டிட் மதன்மோகன் மாளவியா. இந்து மகாசபையில் பயிற்சி எடுத்தவன்தான் கோட்சே, காந்தியாரைக் கொன்றவன் என்றால், இப்பொழுது அவர்கள் மிகத் தெளிவாக பாரத ரத்னா விருதை யாருக்குக் கொடுக்கிறார்கள் என்றால், காந்தியாரைக் கொன்றவன் பயிற்சி எடுத்த ஒரு அமைப்பை உருவாக்கியவருக்கு, பாரத ரத்னா விருது கொடுக்கிறார்கள் என்றால், கோட்சவுக்கு சிலை வைக்கின்றவர்களுக்கும், மறைமுகமாக பாரத ரத்னா விருது கொடுக்கின்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது தத்துவத்தில்? இதைப் புரிந்துகொள்ள வேண்டாமா? இதையெல்லாம் பெரியார் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்க்கவேண்டும். அதற்காகத்தான் திராவிடர் விழிப்புணர்வு மாநாடு.
நாங்கள் எச்சரிக்கிறோம்! எச்சரிக்கை மணி அடிக் கின்றோம்; கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்துகொள்ளாதீர்கள். ஏற்கெனவே உங்கள் தலை புண்ணாக இருக்கிறது என்று சொல்கிறோம். இதைச் சொல்வதுதான் எங்களுடைய வேலை. ஆகவே, நண்பர் களே, உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நீங்கள் விழிப்புணர்வு அடையவேண்டும் என்பதுதான்.

இந்தக் கூட்டத்தில் ஆதாரப்பூர்வமாக அதனைச் சொல் கிறோம். நமக்கு ஆபத்து வருகிறது; திராவிடர் இயக்கம் என்று சொல்லாதீர்கள்; திராவிடர் இயக்கத்தை கீழே தள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள். உடனே, பூஜ்ஜியம், பூஜ்ஜியம், பூஜ்ஜியம், பூஜ்ஜியம், போட்டு விட்டார்கள். 2ஜி ஊழல். வழக்கு நடைபெற்றுக் கொண் டிருக்கிறது, இன்னும் தண்டிக்கப்படவேயில்லை. இவர்கள் தண்டிக்கப்படாதவர்கள்; உச்சநீதிமன்றத்திற்குப் போயிருக் கிறார்கள். புதிதாக சரக்கு ஒன்றும் இல்லை என்றவுடன்,  இன்னொரு வழக்கை புதிதாகப் போடுகிறான். சரி, அதனை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள், நாங்கள் ஒன்றும் அதற்காக வக்காலத்து வாங்கவேண்டிய வேலையில்லை.


இந்தியா டுடே


ஆனால், நண்பர்களே,  இப்பொழுது என்ன எழுது கிறார்கள் தெரியுமா? எந்தப் பத்திரிகைக்காரன் எழு தினானோ, அதே பத்திரிகைக்காரன், இந்த 2ஜி எல்லாம் மிகவும் மிகைப்படுத்தி பூஜ்ஜியம், பூஜ்ஜியமாகச் சேர்த்து விட்டோம். அது தவறாக நடந்துபோய்விட்டது. அப் பொழுது ஊழல் என்று பெரிது படுத்திவிட்டோம் என்று சொல்கிறார்கள் இப்பொழுது யார்? இந்தியா டுடே. அவர்கள் நினைத்தால், எதை வேண்டுமானாலும் மாற்றுவார்கள்.
ஆகவே, நீங்கள் எந்த வகையிலும் சாதாரணமாக நாங்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று சொல் கிறார்கள். வடக்கேயிருந்து இங்கே வந்து ஒருவர் பேசு கிறார், திராவிட இயக்கமெல்லாம் சோர்ந்து போய்விட்டது; திராவிட இயக்கத்தினுடைய கதையெல்லாம் முடிந்து போய்விட்டது. நாங்கள் வந்துதான் இங்கே உட்கார போகிறோம் என்கிறார்.


உங்களுக்கு வாய்ப்பு ஏதாவது வந்தது என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சைதானே!


உன்னை அடையாளமே தெரியாதே, இன்றைக்குக் கொஞ்ச நஞ்சம் உங்களுக்கு வாய்ப்பு ஏதாவது வந்தது என்றால், திராவிட இயக்கம் போட்ட பிச்சைதானே! எங் களுடைய ஆள்களின் தோள்மீது மாறி மாறி ஏறி உட்கார்ந்தீர்கள்; உங்கள் தோள்மீது எங்கள் ஆள்கள் ஏறினார்களோ இல்லையோ, அவர்களுடைய தோள்மீது நீங்கள் ஏறி உட்கார்ந்தீர்கள்.  அதனாலே கொஞ்சம் கணக்கைத் தொடங்கினீர்கள். அவ்வளவுதானே தவிர, அதற்கு முன் வாஜ்பேயி தனியே வந்தாரே! 13 நாள்கள் ஆட்சியில் உட்கார்ந்தாரே, அதற்குப் பிறகு என்னாயிற்று? வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று வந்தவுடன், வாஜ்பேயினுடைய கெட்டிக்காரத்தனம் என்ன தெரியுமா? நான் ராஜினாமா செய்துவிட்டேன் என்றார். ஏனென்றால், அவருக்குத் தெரியும் ஓட்டெடுப்பில் தோற்றுப் போய் விடுவோம் என்பது. இவையெல்லாம் பழைய கதையாகும்.


சத்தியமூர்த்தி பார்ப்பனர் என்ன சொன்னார்? ஆகவே, உங்களுக்குச் சொல்கிறோம், திராவிடர் இயக்கம் என்று சொன்னால், நீங்கள் அதனை அலட்சியமாக நினைக்காதீர்கள். இன்னும் பல பேர் புரியாமல் சொல் கிறார்கள், திராவிட இயக்கங்களுடைய சகாப்தம் முடிந்து விட்டது என்று. இப்படித்தான் நீண்ட நாள்களுக்கு முன்பு சொன்னார், சத்தியமூர்த்தி என்ற ஒரு பார்ப்பனர், காங்கிரஸ்காரர். ஜஸ்டீஸ் கட்சியை குழிதோண்டி புதைத்துவிட்டோம் என்றார்.


நீதிக்கட்சியின் தொடர்ச்சியே திமுகவின் ஆட்சி

அண்ணா அவர்கள் 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் செய்தியாளர்கள் அவர்களிடம் கேட்டார்கள்,


10 வருஷத்தில் ஆட்சியைப் பிடித்த ஒரே கட்சி, உலகத்தில் நீங்களேதான்; அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள் நீங்கள் என்றனர் செய்தியாளர்கள்.
வேறு ஒருத்தராக இருந்தால், ஆமாம், ஆமாம் என்று மார் தட்டி இருப்பார். ஆனால், அண்ணாவினுடைய அறிவும், அடக்கமும் ஒப்பற்றவை. அண்ணா அதற்கு என்ன பதில் சொன்னார் தெரியுமா? 10 வருஷத்தில் ஆட்சியைப் பிடிக்கவில்லை; 50 வருஷத்திற்கு முன்பு எனக்குப் பாட்டன் யார் தெரியுமா? அதுதான் நீதிக்கட்சி; அதனுடைய தொடர்ச்சிதான் இப்பொழுது. நீதிக்கட்சியை குழிதோண்டி புதைத்துவிட்டோம் என்று சொன்னார்களே, நீ புதைக்கவில்லை, நாங்கள் மறுபடியும் உயிரோடு வந்திருக்கின்றோம் என்று காட்டுவதுதான் திராவிடர் இயக்கம் என்று சொன்னார்.


எப்போதும் ஏமாறுவதுதான் தமிழனுடைய வழக்கம்

எனவே, எந்தக் கொம்பனாலும் திராவிடர் இயக்கத்தை அசைத்துவிட முடியாது. அதுவும் இன்றைக்கு சாதாரணமான இயக்கம் அல்ல இது. இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இயங்குவோம்; எங்களுடைய வேலை இருக்கிறது பாருங்கள், நாங்கள் கோட்டைக்கு உள்ளே போகிறவர்கள் அல்ல; கோட்டைக்கு வெளியில்தான் எங்கள் பணி. கோட் டையில் யாரும் ஓட்டை போட்டுவிடக்கூடாது என்பதற்காக! நம்மாள் எப்பொழுதும் ஏமாந்துகொண்டே இருக்கிறான். ஏமாறுவதுதான் எப்பொழுதும் தமிழனுக்கு வழக்கம்.
கதை எழுதி வைத்திருக்கிறார்கள் பாருங்கள், வாசுகி என்கிற பாம்பை, மத்தாக்கி பாற்கடலை கடைந்தார்களாம்; அப்படிக் கடைந்தவுடன், அமுதம் வந்ததாம்; தலைப்பக்கம் யார் நின்றது என்றால், அசுரர்கள்; வால் பக்கம் யார் நின்றது என்றால், தேவர்கள்.


வெற்றிபெற்ற பின்பு ஏமாற்றுவதுதான் ஆரியத்தின் பண்பாடு

அமுதம் கிடைத்ததும் என்ன செய்திருக்கவேண்டும்; ஒரு கூட்டம் தலைப்பக்கம் நின்றார்கள். இன்னொரு கூட்டம் வால் பக்கம் நின்றார்கள். பங்கு போடவேண்டும் என்று வந்தவுடன், எனக்கு 50 சதவிகிதம் கொடு என்று கேட்டார்கள்; அய்ம்பது சதவிகித பிரச்சினை அப்பொழுதே ஆரம்பித்துவிட்ட பிரச்சினையாகும். இது இப்பொழுது ஆரம்பித்தது அல்ல. 50 சதவிகிதம் கொடு என்றார்கள் அசுரர்கள். நியாயமாக 100 சதவிகிதம் கொடு என்று கேட்கவேண்டும். ஏனென்றால், இவர்கள் தலைப்பக்கம் நின்று போராடியவர்கள். ஆனால், தேவர்கள் வால்பக்கம் நின்றவர்கள். ஆனால், அசுரர்களுக்கு 50 சதவிகிதம் கொடுப்பதற்குக்கூட அவர்கள் தயாராக இல்லை. முழுக்க முழுக்க இவர்களே அனுபவிக்கவேண்டும் என்று நினைத்தார்கள். ஏனென்றால், வெற்றிபெற்ற பின்பு ஏமாற்றுவதுதான் ஆரியத்தின் பண்பாடு. அதற்கு அந்தக் காலத்துப் புராணத்திலிருந்து உதாரணம் சொல்லலாம். வரலாற்றிலிருந்துகூட அல்ல.


100 சதவிகிதமும் தங்களிடம் வரவேண்டும் என்று நினைத்தார்கள். போரிட்டு அசுரர்களை வெல்ல முடியாது. அதற்காக என்ன செய்தார்கள் என்றால், மோகினி அவதாரத்தை விட்டார்கள். நம்மாள்கள் எல்லாவற்றிலும் சரியாக இருப்பார்கள், ஆனால், இந்த மோகினி அவதாரம் என்றாலே, அதுதான்  வீக்பாயிண்ட் அவனுக்கு; அந்த இடத்தில் நம்மாள் கீழே விழுந்தான். ஒவ்வொரு அவதாரங் களையும் எப்படி கண்டுபிடித்திருக்கிறார்கள் பாருங்கள்.

எச்சரிக்கை செய்வதற்குத்தான் திராவிடர் கழகம்

இப்பொழுதும் பல மோகினி அவதாரங்கள் வரப் பார்க்கின்றன. அதை எச்சரிக்கை செய்வதற்குத்தான் இந்த இயக்கம் இருக்கிறது.
எனவே, ஏமாறாதீர்கள் தமிழர்களே! நாம் திராவிடர்கள். நம்முடைய உரிமைகள் திராவிடர்களுடைய உரிமைகள். சமத்துவம், ஜாதியற்ற சமுதாயம், எல்லோருக்கும் உரிமையுள்ள சமுதாயம் இவைகள் மலரவேண்டுமானால், விழிப்போடு இருங்கள், விழிப்புற்று எழுங்கள் என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, அனைவருக்கும் நன்றி! வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
                     --------------------------"விடுதலை” 23-02-2015

30 comments:

தமிழ் ஓவியா said...

இந்தி - சமஸ்கிருதம்: அவசரம் காட்டும் அதிகாரிகள் கலைஞர் கருத்து


சென்னை, பிப்.24_ இந்தி, சமஸ்கிருதம் திணிப்பில் அரசைவிட அரசு அதிகாரிகள் அவச ரம் காட்டுகிறார்கள் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் எழுதியுள்ளார்.

கேள்வி :- இந்தி, சமஸ் கிருதம் போன்ற மொழி களைத் திணிக்க மத்திய ஆட்சிப் பொறுப்பிலே இருப்போர் அவசரம் காட்டாத நிலையிலும், அதிகாரிகள் மட்டத்திலே இருப்பவர்கள் இந்தியைத் திணிக்க அவசரம் காட்டு கிறார்களே?

கலைஞர்:- உண்மை யானதும், அதிர்ச்சி தரத் தக்கதுமான செய்திதான் இது. தினமணி நாளிதழில் வெளி வந்துள்ள செய்தி யில், சி.பி.அய். (மத்திய புல னாய்வுத் துறை) அனைத்து அலுவலகங்களிலும் நிர்வாகத் தேவைகளுக் கான பணிகளை இந்தி மொழியில் மேற்கொள்ள வும், அந்த மொழியை அலுவலர்கள் அறிந்து கொள்ளும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்தவும் அதன் தலைமையகம் கண்டிப்புடன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சி.பி.அய். தலைமையக நிர்வாகப் பிரிவு துணை இயக்குநர் மணிஷ் கே. ஷா அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக் கையில், சி.பி.அய் அலுவல கக் கூட்ட நிகழ்வுகள், தீர் மானங்கள், அரசாணை கள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கைகள், அலுவலக ஒப்பந்தங்கள், உரிமங்கள், ஏல ஒப்பந்தப் புள்ளி கோரல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இந்தி உள்ளிட்ட இரு மொழிகளில் வெளியிடு வதை மண்டலத் தலைமை அதிகாரிகள் உறுதிப் படுத்த வேண்டும். இந்தி மொழியில் சி.பி.அய். அலுவ லகத்துக்கு வரும் கடிதங் களுக்கு கட்டாயம் இந்தி மொழியில்தான் பதில் அனுப்ப வேண்டும். அதி காரிகளின் பணிக்கால ஆவணங்கள் அனைத்தும் இந்தி மொழியிலேயே இருக்க வேண்டும். அலு வல் கோப்புகளில் அதிகா ரிகள் குறியிடும் விவரங் கள் இந்தி மொழியில் தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் குறிப்பிடப் பட்டுள்ளது என்று செய்தி வந்திருப்பது அதிர்ச் சியாக உள்ளது. இந்தச் செய்தி உண்மையாக இருக்குமேயானால், மத் திய அரசும், முக்கியமாக பிரதமர் அவர்களும் இதனைப் பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றப் புலனாய் வில் முக்கியப் பங்கு வகிக் கும் சி.பி.அய். இப்படி அலு வலக நடைமுறைகளில் இந்திக்கு முதலிடம் அளிக்குமானால், மத்திய அரசின் மற்ற துறைகளும் ஒவ்வொன்றாக இந்த முன் மாதிரியைப் பின்பற்றும் நிலை ஏற்பட்டு, அனைத் தும் இந்தி மயம் என்ற ஆபத்து தோன்றிவிடும்! கிரானைட் முறைகேடுகள் குறித்து சகாயம் அய்.ஏ. எஸ். அவர்களுக்குத் தகவல் தந்தவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் சகாயம் அவர் களுக்கு அதிக பாதுகாப்பு செய்து தரப்பட வேண் டும் என்றும் கலைஞர் எழுதியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/96788.html#ixzz3SfDGtbLo

தமிழ் ஓவியா said...

கோல்வால்கரும் - மோகன்பகவத்தும்

நீண்ட காலமாக மறைக் கப்பட்ட ஒரு நூல் ஆர்.எஸ். எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கரால் எழுதப்பட்ட We or our nationhood defined என்பதாகும். திராவிடர் கழகத் தலைவர் அவர்களுடைய உரையில் அண்மைக் காலமாக தோண்டி எடுக்கப்பட்டு வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அவர்களின் குருநாதரால் எழுதப்பட்ட இந்நூலை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வெட்கப்படுகிறார்கள் என்பதைவிட அந்நூலில் இடம் பெற்றிருப்பவை வெளி யில் வந்தால் தங்களுக்குப் பெரும் இடர்ப்பாட்டை ஏற்படுத்தும் - வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாகும் என்ற அச்சம் அவர்களைப் பிடுங்கித் தின்பதே இதற்கு விழுமிய காரணமாகும்.

இந்த நூலை வெளிப் படுத்தத் தயங்கினாலும், அந்த நூலின் சாரத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் உட்பட ஆங்காங்கே தூவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆட்சி அதிகாரம் அவர்கள் கைகளில் இருக் கும் இந்தத் தருணத்தில் அதனைச் சொல்லாமலும் இருக்க முடியவில்லை; சொன் னாலும் எதிர் விளைவை ஏற்படுத்தி விடுமே என்ற அச்சமும் அவர்களைக் குடைந்தெடுக்கிறது.

அந்த நூலில் கோல் வால்கர் என்ன எழுதுகிறார்?

சிறுபான்மையினர் இந்த தேசத்தில் வாழ்வது ஆபத் தானது அது தேசப் பாது காப்பிற்கும் தேச நலன் களுக்கும் உகந்தது அல்ல. எனவே, தேசிய இனத்தைச் சாராதவர்கள் தேசிய இனத்தின் மொழியையும், மதத்தையும், கலாச்சாரத் தையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் தங் களுடைய அனைத்து விட யங்களையும் தேசிய இனத் தின் அடிப்படையிலேயே மாற்றிக் கொள்ள வேண்டும். சிறுபான்மையினருக்கு இரண்டே வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று அவர்கள் தங்களை முழுவதுமாக பெரும்பான்மை தேசிய இனத்தின் அடிப்படையில் வாழ்க்கை நெறிகளை மாற்றம் செய்ய வேண்டும். இல்லை யென்றால் எந்த உரிமையும் இல்லாமல் பெரும்பான்மை மக்கள் கருணை கொண்டு அவர்கள் அனுமதிக்கும் காலம் வரை வாழலாம். (“We or our nationhood defined’’ பக்கம் - 47)

ஆர்.எஸ்.எஸ்.இன் மிக முக்கியமான சிந்தனைவாதி யாகவும், குருவாகவும் கருதப் படும் குருஜி கோல்வால்கர் இந்துத்துவத்தை அடிப் படையாக கொண்ட இந்து ராஷ்ட்ரியத்தின் சிறுபான்மை யினர் குறித்தான பிரச்சினை களுக்கு ஹிட்லர், முசோலினி யின் தீர்வையே முன்மொழி கின்றார்.

சிறுபான்மையினர் இங்கே வாழ வேண்டுமாயின் அவர்கள் தேசிய இனமான இந்துக்களின் மதம், மொழி மற்றும் கலாச்சாரங்களை பின் பற்ற வேண்டும். இல்லை யென்றால் அவர்களுக்கு இந்த தேசத்தில் எந்த உரி மையும் இல்லை. ஏன் அவர் கள் இந்துஸ்தானின் குடி மக்களாக கூட கருதப்பட மாட்டார்கள்.’(“We or our nation hood defined’’பக்கம் - 47)

இந்துஸ்தானில் வாழும் இந்துக்களே தேசியவாதிகள், அவர்களே தேசபக்தர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த தேசத்தின் எதிரிகள் மற்றும் துரோகிகள் இந்துக் கள் அல்லாதவர்களால் இந் துஸ்தானின் தேச நலனிற்கு பேராபத்து உள்ளது (மேற்கண்ட நூல் பக்கம் - 44)

இப்பொழுது ஆர்எஸ். எஸ். தலைவர் மோகன் பகவத் கூற்றைக் கொஞ்சம் கவனிப்போம்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் அனைவரும் இந்துக்களே! அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்துக் கொள் கைகளை ஏற்க வேண்டியவர்களே என்று அரசின் வானொ லியைப் பயன்படுத்திப் பேசி யதை நினைவில் கொள்வீர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/96775.html#ixzz3SfDWmfrg

தமிழ் ஓவியா said...

காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்தான்
மதம் மாற்றம் செய்ய வந்தாராம் மதர் தெரசா - மோகன்பகவத் கூறுகிறார்


பரத்பூர் (ராஜஸ்தான்) பிப் 24 சமூகசேவை என்ற பெயரில் மத வியாபாரம் செய்தார் மதர் தெரசா, உண்மையில் அவருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மன நிலை இருந்தால் இந்தியாவிற்கு ஏன் வர வேண்டும்? மக்களை சேவை என்ற பெயரில் ஏமாற்றி மதமாற்றம் செய்வதற்காகத்தான் இங்குவந்தார் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் தன் னுடைய சொந்த ஊரான பரத்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது மதர்தெரசா பற்றி அவர் கூறியதாவது, நமது நாடு ஆங்கிலேயர்கள் வருகையின் முன்பு செல் வச்செழிப்பும் அமைதியும் அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நியதியின் படி கட்டுப்பாட்டோடு வேலைகளைச் செய்து வந்தனர். முகமதியர்கள் வந்த பிறகு செல்வச் செழிப்பை சுரண்டினர். இதன் காரணமாக வறுமை தொடங்கியது. ஆங்கிலேயர்கள் வந்த பிறகு மக்களிடம் வறுமை கோரதாண்டவமாடியது. இதைச் சாதகமாகப் பயன் படுத்தி மதமாற்றத்தை ஆங்கிலேயர்கள் செய்ய ஆரம்பித்தனர். அவர் களின் மதமாற்றத்திற்கு உதவ பல வெளிநாட்டி னர் இங்குவந்தனர். அவர்கள் கல்வி என்ற பெயரில் மதமாற்றத்தை செயல்படுத்தினர்.

இந்த வரிசையில் மதர் தெரசா மிகவும் புத்தி சாலித்தனமாக சேவை என்ற போர்வையை போர்த்திக்கொண்டு மத மாற்றத்தில் இறங்கினார். எங்களைப் போன்றவர் களுக்கு மாத்திரம் தான் மதர்தெரசாவின் உண்மை யான நடவடிக்கை என்ன வென்று தெரியும். மக்கள் மதர்தெரசாவின் உண்மை யான மதமாற்றச் செயலை கவனிக்காமல் விட்டு விட் டார்கள். அவர் செய்த மதமாற்றச் செயல்பாடு கள் வெளியில்வராமல் இருக்க ஆங்கிலேயர்கள் அவருக்கு நோபல் பரிசு கொடுத்தனர். அவர் உண்மையி லேயே சேவை செய்ய வேண்டுமென்றால் உலகில் வேறு நாடுகளே இல்லையா, இந்தியா மாத்திரம் ஏன் அவர் களின் கண்களுக்குப் பட்டது. அவர்களின் நோக்கமே இந்துமதத்தின் மாண்புகளை சிதைக்க வேண்டும் மக்களை மதம் மாற்றி இந்துமதத்தை அழிக்கவேண்டும் என்பது தான் என்று தன்னுடைய உரையில் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/96782.html#ixzz3SfDgl1en

தமிழ் ஓவியா said...

குருட்டு நம்பிக்கை...


உலகில் உள்ள மதங்கள் எல்லாம் குருட்டு நம்பிக்கை என்கின்ற பூமியின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன.
(குடிஅரசு, 3.11.1929)

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்தியின் கையாலாகாத்தனம் சனீஸ்வரன் காப்பாற்றவில்லையே!

கோவை, பிப்.23_ கோவை பீளமேடு அவினாசி ரோட்டை சேர்ந் தவர் கேசவ மூர்த்தி (வயது 44). பீள மேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

நேற்று இரவு வீடு திரும்பிய கேசவ மூர்த்தி வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக் கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடிச் சென்றி ருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து பீளமேடு காவல்துறையி னருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத் தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

5 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

ஜோலார்பேட்டை, பிப்.23 ஜோ லார்பேட்டை அடுத்த மேட்டுசக்கர குப்பம் என்ற இடத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு யாரோ சிலர் இந்த கோவிலின் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்து அம்மன் கழுத்தில் இருந்த பவுன் தாலியை திருடிச்சென்று விட் டனர். அதேபோல் பக்கத்து பகுதியான போயர்வட்டம் என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் கோவிலிலும் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த பவுன் தங்க தாலியை திருடிச்சென்றனர்.

மேலும் அதே பகுதியில் உள்ள பெருமாள், ஆஞ்சநேயர், காமாட்சியம் மன் கோவில்களிலும் உண்டியலை உடைத்து, உண்டியல் பணம், வெள்ளி நகைகளை யாரோ சிலர் திருடி சென்றனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் குடமுழுக்கில் தாலி சங்கிலி பறிப்பு

திருவான்மியூர், பிப். 23 சோழிங்க நல்லூரை அடுத்த காரப்பாக்கம் கங்கையம்மன் கோவில் குட முழுக்கு நேற்று நடந்தது. அதில் ஏராள மானோர் கலந்து கொண்டனர். அந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சோழிங் கநல்லூர் காந்தி நகரை சேர்ந்த பார்வதி (55) என்ற பெண்ணின் 5 பவுன் தாலி சங்கிலியை அடையாளம் தெரியாத நபர் பறித்து சென்றான்.

அதே போன்று சோழிங்கநல்லூர் பள்ளிக்கூட சாலை தெருவை சேர்ந்த கஸ்தூரி (60) என்பவரிடம் 4 பவுன் தாலி சங்கிலி பறிக்கப்பட்டது. இது குறித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. எனவே அங்கு சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து காவல் துறை யினர் விசாரித்து வருகின்றனர்.

கோவில் குளத்தில் மூழ்கி 8ஆம் வகுப்பு மாணவி சாவு

மாமல்லபுரம், பிப். 23-_ மாமல்ல புரம் அண்ணல் காந்தி தெரு வில் வசிக்கும் விநாயகமூர்த்தி என்ப வரின் மகள் அருந்ததி (வயது 13). இவர் மாமல்லபுரம் அரசு மேல்நிலை பள்ளி யில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று அரை நாள் பள்ளிக்கு சென்றுவிட்டு மதியம் 1 மணியளவில் வீடு திரும்பும் போது உடன் வந்த 4 தோழிகளுடன் கருக்காத்தம்மன் தெப்ப குளத்தின் படித்துறையில் நின்று மீன் பிடித்து விளையாடியுள்ளனர். அப் போது அருந்ததி பாசி படிந்த படிக்கல் வழுக்கி குளத்தின் நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற முற் பட்ட 4 தோழி களும் நீரில் மூழ்கினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் 5 பேரையும் மீட்டனர். இதில் அருந்ததி மட்டும் மூச்சு திணறி உயிரி ழந்தார். கோவில் குளத்தில் தடுப்பு வேலியும் அவசர படிக்கல்லும் இல் லாததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று கோரி கூறி பொதுமக்கள் மாண வியின் உடலை பிரேத பரிசோதனை நடத்த விடாமல் முற்றுகையிட்டனர். பின்னர் மாமல்லபுரம் காவல்துறை யினர் உடலை செங்கல்பட்டு அரசு மருத் துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

Read more: http://viduthalai.in/page1/96711.html#ixzz3SfGZ1w2G

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வியாபார வசீகரமா?

செவ்வாய், வெள்ளி களில்தான் கோயில் களுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பது வியா பார வசீகரமா? அல்லது கடவுளுக்கு மற்ற கிழமை கள் எல்லாம் பிடிக்கா தவை என்ற அர்த்தமா?

Read more: http://viduthalai.in/page1/96710.html#ixzz3SfGh7g6s

தமிழ் ஓவியா said...

காரணம்


வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...

பல நோய்களை தீர்க்க உதவும் அதிமதுரம்

அதிமதுரம் கொடி வகையை சேர்ந்தது. காடுகளில் புதர் செடியாக வளரும் கூட்டிலைகளை கொண்டது. கணுக்களில் சிறிய மஞ்சள் கலந்த ஊதா நிறபூக்கள் நிரம்பியதாக இருக்கும். இதன் வேர்கள், இலைகள் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. வேர் கடை சரக்காக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். மலச்சிக்கலை போக்கும் உணவு மண்டலத்தை சீராக இயங்கவைக்கும்.

ஊட்டசத்து நிரம்பியது. சிறுநீர் புண்களை ஆற்றும், கல்லடைப்பை நீக்க பயன்படும். அதிங்கம், அஷ்டி, மதூகம், மதூரம் என பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் அதிமதுரம் உலகத்தின் அனைத்து மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதை எளிய முறையில் பயன் படுத்தி பல்வேறு நோய்களையும் தீர்க்கமுடியும்.

பித்தம், வாதம். ரத்ததோசம், வீக்கம், வாந்தி, நாவறட்சியை போக்கும். தாகம், அசதி, கண்நோய்கள், விக்கல், எலும்பு நோய்கள், மஞ்சள்காமாலை, இருமல், தலை நோய்கள் ஆகியவற்றை குணமாக்கும். வேர்கள் இனிப்புச்சுவையும் குளிர்ச்சித்தன்மையும் கொண்ட வையாக இருக்கும்.

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளம்வறுப்பாய் வறுத்து சூரணம் செய்து வைத்து கொண்டு சூட்டினால் ஏற்படும் இருமலுக்கு 5 கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட தீரும்.

சிலர் உடல் உறுப்புகளில் புண் ஏற்பட்டு ரத்தவாந்தி எடுப்பார்கள். இவர்கள் அதிமதுரப்பொடி, சந்தனத்தூள் சமஅளவாக கலந்து அதில் 1 கிராம் அளவில் அளவில் பாலில் கலந்து குடிக்க ரத்தவாந்தி நிற்கும். புண்கள் ஆறும்.

போதுமான அளவில் தாய்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அளவில் அதிமதுர சூரணத்தைப்பாலில் கலந்து அதனுடன் இனிப்பு சிறிது சேர்த்து சாப்பிட்டால் தாய்பால் நன்கு சுரக்கும். அதிமதுரத்தை நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் இளநரை ஏற்படாது. முடி உதிர்தலும் நிற்கும். அதிமதுரத்தை சூரணமாக்கி காற்றுபுகாத பாட்டிலில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தொண்டைக்கட்டு, இருமல், சளி உள்ளவர்கள் 1 முதல் 2 கிராம்வரை எடுத்து தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட தீரும். 1முதல் 2 கிராம் அளவில் அதிமதுரப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வர மார்பு, ஈரல், இரைப்பை, தொண்டை ஆகியவற்றில் உள்ள வறட்சி நீங்கி நலம் உண்டாகும். இருமல், மூலம், தொண்டைகரகரப்பு, நரம்புதளர்ச்சி தீரும்.

Read more: http://viduthalai.in/page1/96734.html#ixzz3SfHbdKIm

தமிழ் ஓவியா said...

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ஆப்பிள்

ஆப்பிள் பழங்காலத்தில் இருந்தே அறியப்பட்ட ஒரு அற்புதமான பழமாகும். ஆப்பிள், குமளி பழம், ஆப்பழம், சீமை இலந்தைபழம், அரத்திபழம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் குளிர் பிரதேசங்களில் வளரக்கூடியது. தற்போது இந்தியா, சீனா, அர்ஜென்டினா மற்றும் மத்திய ஆசியாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

நம்நாட்டில் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் உள்ளன. எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கும் ஆப்பிள், அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி சாப்பிடக்கூடியது. விலை சற்று அதிகம் என்றாலும் மருத்துவத்தில் இதன் பயன் அதிகரித்துள்ளது.

சத்துக்கள்: ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலிய சத்துகள் அதிக அளவில் அடங்கியுள்ளன.

பயன்கள்: ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயன கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாக செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்பு சத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் ரத்தசோகை விரைவில் நிவர்த்தியாகிறது. ரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.

* தேவையற்ற கொழுப்பு சத்தை குறைக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு ரத்த அழுத்தம் குறைய உதவுகிறது. அதிக ரத்த போக்கை தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது.

செரிமாண மண்டலம் சீராக இயங்க செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்க செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்த சர்க்கரை குறைய உதவுகிறது. சோடியம் உடம்புக்கு பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.

* மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.

* குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஆப்பிள் பழத்தை வேகவைத்து பிசைந்து கொடுத்தால் குணமாகும்.

* வலிப்பு உள்ளவர்கள் ஆப்பிள் பழச்சாறு 60 மி.லி, அத்திப்பழச்சாறு 60 மி.லி கலந்து தினசரி இரண்டு வேளை கொடுத்து வந்தால் மூன்று தினங்களில் வலிப்பின் தீவிரம் குறைந்துவிடும்.

* இதய நோயாளிகளுக்கு சிறந்த உணவாகிறது. நரம்பு தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் பழம் மட்டும் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.

* தூக்கத்தில் எழுந்து நடக்கும் இயல்பு டையவர்கள் குணமடைய, இரவில் இரண்டு ஆப்பிள் பழங்களை தண்ணீரில் போட்டு வைத்திருந்து அதி காலையில் இதன் சாற்றை பிழிந்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

* வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும்.

* சரியான உடல் வளர்ச்சியும், சதைப்பிடிப்பும் இல்லா தவர்களும் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஒல்லியான உடல் சீராகப் பருமன் அடையும்.

Read more: http://viduthalai.in/page1/96736.html#ixzz3SfHl41FW

தமிழ் ஓவியா said...

திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாட் டில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சியுரை யாற்றுகையில்:

_ சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சென்னிமலைக்கு வந்து நான் உரையாற்றி யுள்ளேன். அப்பொழுது ஒரு சாமியார் வண்டி மாட்டை மலையில் ஏற்றி மக்களை ஏமாற்றி மூட நம்பிக்கையில் மூழ்க வைத் திருந்தார். விரதம் இருந் தால் தான் மேலே ஏற முடியும் என்று சொல்லி வைத்திருந்தார்.

அதெல் லாம் மூடநம்பிக்கை என்று எங்களது தோழர் பழையகோட்டை இளைய தளபதி கழகத்தின் முதல் பொருளாளர் அர்ச்சுனன் அவர்களின் மகன் சிவக் குமார் மன்றாடியார் அவ ரது மாட்டு வண்டியெல் லாம் கொடுத்து அந்த வண்டியை பழக்கப்படுத்தி நாங்கள் மூடநம்பிக் கையை முறியடித்தோம். இந்த ஊருக்கு எம்.பி. நாச்சிமுத்து என்பவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர்.

முதன் முதலாக வழக்கறிஞர் படிப்பை படித்து வழக்கறிஞராக ஆனார். அப்பொழுது தந்தை பெரியார் அவர் கள் நம்ம இனத்தைச் சேர்ந்த ஒருவர் வழக் கறிஞராக வந்துவிட்டார் என்று மகிழ்ச்சி பொங்க அந்த வழக்கறிஞரை சாரட் வண்டியில் ஏற்றி மிகப் பெரிய ஊர்வலமாக அவரை அழைத்துச் சென்று நிதிமன்ற வாயில் வரை அவருக்கு மரியாதை செய்து இறக்கி விட்டு வந்தார்.

அப்போதெல் லாம் பார்ப்பனர்களே நீதி பதியாகவும், வாக்குரைஞ ராகவும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நம்முடைய இனத்திலி ருந்து வந்த முதல் வழக் கறிஞர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன் பாலச்சந்திரன் அவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார். இன்று காலை தான் அவர் என்னை நேரில் சந்தித்தார்.

அவ ருக்கே இந்த விஷயம் தெரி யாது. நான் அவரிடம் கூறியபோது மிகவும் ஆச் சரியப்பட்டார். பி.ஜே.பி. அரசினுடைய முன்னேற் றம் முன்னேற்றம் என்று சொல்லிக்கொண்டு அய்.டி. ஊழியர்கள் மற்றும் பல்வேறு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு துணைபோவதையும்,

பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்கவில்லை என்று காரணம் கூறி மூட நினைப்பதும் மக்களுக்கு அடிப்படை தேவையான இ.எஸ்.அய். மருத்துவ மனைகளை மூட நினைப் பதையும் போன்ற மோடி அரசின் பிற்போக்கு தனத்தைச் சுட்டிக் காட்டி எழுச்சியுரையாற்றினார்.

அசல் மனுதர்மத்திலுள்ள பல்வேறு கருத்துகளை விளக்கமாக எடுத்துக்கூறி அது நம்மை எப்படி அடிமைப்படுத்துகிறது என்பதைச் சுட்டிக் காட்டினார். மேலும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். (முழு உரை பின்னர் வெளிவரும்)

Read more: http://viduthalai.in/page1/96731.html#ixzz3SfILLHy5

தமிழ் ஓவியா said...

இணைய தமிழில் புதிய மாற்றம் பெரியார் அறிமுகப்படுத்திய எழுத்துச் சீர்திருத்தம்

இந்த மாற்றத்திற்குப் பேருதவி புரிந்துள்ளது!

இந்து ஆங்கில ஏட்டில் சிறப்புக் கட்டுரை

சென்னை, பிப்.25_ இணைய தளத்தில் தமிழ் இன்று ஆதிக்கம் செலுத்து வதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார் அறிமுகப் படுத்திய தமிழ் எழுத்துச் சீர்திருத்தமே என்று இந்து ஏட்டில் இன்று (25.2.2015) வெளிவந்துள்ள சிறப்புக் கட்டுரை கூறுகிறது.

இணையதமிழ் (i தமிழ்) என்ற தமிழ் எழுத்துருவின் நவீன வடிவத் திட்டத்தை கார்கி ஆராய்ச்சி மய்யம் செயல் படுத்த முனைந்துள்ளது. தமிழ் பல நூற்றாண்டு களாக பல்வேறு மாற்றங் களை சந்தித்து வந்தது. எழுத்துருவில் மாற்றங் களைச் சந்தித்தாலும் அதன் தொன்மை மாறா மல், வளமை குன்றாமல் இன்றளவும் இளமையாக, மேலும் புதுமையாக திகழ் வதே இதன் தனித்துவ மாகும். இதனடிப்படையில் கணினி எழுத்திற்கேற்ப எளிமையான முறையில் தமிழ் எழுத்துக்களில் மாற் றங்களைக் கொண்டுவர கவியரசர் வைரமுத்துவின் மகன் கார்க்கி தன்னுடைய ஆய்வு மய்யத்தின்மூலம் புதிய எழுத்துருக்களை வர விருக்கும் தமிழ் இணைய வழி மாநாட்டில் ஆய்வா ளர்கள் முன்பு வைக்க உள்ளார்.

மதன்கார்க்கி அவரது குழுவினரான சுதர்சனம் நேசமணி மற்றும் தமிழ்ச் செல்வி ஆகியோர் ஒன்றி ணைத்து 216 உயிர்மெய் எழுத்திற்கும் புதிய வரிவடி வத்தை உருவாக்கியுள்ளனர். முக்கியமாக ஒருங்குறி யில் (யுனிக்கோட்) முறை யில் இன்றளவும் சில குறை பாடுகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. முக் கியமாக தற்போது மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஆண்டிராய்டு மற்றும் அய்போன் போன்ற தளங் களில் யுனிக்கோட் எழுத் துருக்கள் சரிவர தெரிவ தில்லை.

இதனடிப்படை யில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கார்கி ஆய்வு மய்யம் வேகமாக வளர்ந்துவரும் இணைய தமிழ் உலகில் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும், அதேநேரத்தில் இனிவரும் காலத்திலும் இணைய வழித் தமிழ் மிகவும் எளிய முறையில் வரும் தலை முறைக்கும் பயனளிக்கும் விதத்தில் பல்வேறு மாற் றங்களைக் கொண்டுவந் துள்ளனர்.

i தமிழ் எழுத்துருக்கள் நவீன ஸ்மார்ட் போன் களின் எழுது பலைகை களில் (keyboard) எவ்வித சிறப்புக் குறியீடுகள் இல் லாமல் சாதாரண எழுது பலகை போன்றே அவற்றை நாம் பயன்படுத்தமுடியும். தமிழ் எழுத்துருக்களில் மாற்றம் நூற்றாண்டுக ளாகத் தொடர்ந்து மாறிக் கொண்டு வந்தாலும் வீர மாமுனிவர் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் எளிமையாக் கும் முயற்சி துவங்கியது.

தந்தை பெரியார் தொலைநோக்கிற்கு மிகப் பெரும் உதாரணங்களுள் ஒன்றாக தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கூறலாம். அவரது காலத்தில் தமிழ் அச்சுக்கள் தோன்ற ஆரம் பித்துவிட்டன. தமிழ் அச் சுக்கோர்வைக்கு அப்போதி ருந்த வடமொழிக் கலப்புத் தமிழ் ஏற்றதாக இருக்காது என்ற தொலைநோக்குப் பார் வையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். பெரியாரின் இந்த எழுத்துச் சீர்திருத்தம் என்பது இன்று இணையம் வரை வந்து விட்டது. இந்திய மொழிகளில் இணையத்தில் தமிழின் ஆதிக்கம் இன்று முதலிடத் தில் இருப்பதற்கு முக்கிய காரணம் பெரியார் கொண்டு வந்த தமிழ் சீர்திருத்தம் தான். பெரியாரின் எழுத் துச் சீர்திருத்திற்கு முன்பாக இருந்த தமிழையொட் டியே மலையாளம், தெலுங்கு கன்னடம் போன் றவை இருந்தன. ஆனால், அம்மொழிகளால் எழுத் துச் சீர்திருத்தம் பெற இய லாமல் இன்றளவும் இணைய உலகில் பின்தங் கியே உள்ளது. சீன மொழி இன்றள வில் உலகம் முழுவது அதி கமாக பேசும் மொழிகளில் முதன்மையானதாக உள் ளது. நவீன சீனாவைப் படைத்த சான் யாட் சென் சீனமொழியை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யவேண்டும். நவீன வளர்ச்சிக்கு ஏற்ப மொழி யில் மாற்றம் செய்யவேண் டும் என்று கூறினார். அவரது ஆலோசனையின் படி சீன மொழியில் ஏற் பட்ட எழுத்துரு மாற்றம் இன்று உலகின் பொருளா தார வல்லரசாக மாற்றி யுள்ளது.

கார்கி ஆய்வு மய்யம் கொண்டுவந்துள்ள நவீன தமிழ் எழுத்துருக்கள்மூலம் பதிப்பிற்குச் செல்லும் போது அதிக இடங்கள் சேமிக்கப்படும் இதன் மூலம் காகித சேமிப்பு மாத் திரமல்லாமல் காகிதத்திற் காக வெட்டப்படும் மரங்கள் சேமிக்கப்படும்.

(இன்றைய ஆங்கில இந்து ஏட்டில் கார்த்திக் சுப்பிரமணியம் எழுதிய ‘‘A Proposal to simplify the Tamil Script’’ கட்டுரையின் தமிழாக்கம் இது).

Read more: http://viduthalai.in/e-paper/96807.html#ixzz3Sl5yEyt0

தமிழ் ஓவியா said...

செவ்வாய்த் தோஷ நம்பிக்கையாளர்களுக்குக் காணிக்கை!
செவ்வாய்க்கோளில் பிறக்கும் முதல் குழந்தை?

மார்ஸ் ஒன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம். உள்படம்: செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப் பயணம் மேற்கொண்டு, பிள்ளை பெற விரும்பும் பிரிட்டானிய பெண் மேகி லியூ

செவ்வாய்க் கோளில் பெண்மணி ஒருவர் முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த மார்ஸ் ஒன் (Mars One) என்ற தனியார் நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம் (A One-Way Trip) என்ற பிரமாண்டமான திட்டத்தை அறிவித்தது. இதற்காக, செவ்வாய்க்கு செல்லும் பயணிகள் மீண்டும் பூமிக்குத் திரும்ப இயலாது; அதற் கான எந்த ஏற்பாட்டையும் நிறுவனம் செய்ய வில்லை என்ற நிபந்தனையுடன் விண்ணப் பங்களை வழங்கியது.

2024 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளை நோக்கி செல்லும் இந்த பயணக்குழுவினர், அங்கேயே நிரந்தரமாக தங்க வைக்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த சாகசப் பயணத்தில் பங்கு பெற உலகம் முழுவதிலும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 586பேர், தங்களின் பெயர்களை முன்பதிவு செய்தனர். இத்திட்டத்திற்கு, சுமார் 100பேர் தெரிவு செய்யப்பட்டனர். இதில், அமெரிக்காவி லிருந்து 39, அய்ரோப்பாவிலிருந்து 31, ஆசியா விலிருந்து 16, ஆப்ரிக்காவிலிருந்து 7, ஓசியானி யாவிலிருந்து 7 பேரும் தேர்வாகியுள்ளனர். செவ்வாய்க்கோள் பயணத்தில் பயணம் செய்யும் குழுவினரில் இந்தியர்களான கேர ளாவைச் சேர்ந்த சாரதா பிரசாத் (19), துபாயில் வசிக்கும் ரிதிகா சிங் (29) ஆகிய 2 பெண்களும், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கணினி அறிவியலில் டாக்டரேட் பயின்று வரும் தரண்ஜீத் சிங் (29) உட்பட 3 பேர் தேர்வானவர்களின் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

இந்நிலையில், இந்தப் பயணத்திற்குப் பிரிட்டனைச் சேர்ந்த 24 வயதான மேகி லியூ (Maggie Lieu)
என்ற பெண் தெரிவாகி யுள்ளார். மேலும் இவர், செவ்வாய்க்கோளில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடிவெடுத் துள்ளதாகவும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, செவ்வாய்க்கோளில் குழந்தையை பெற்றெடுப்பதற்கு அங்குள்ள புவி ஈர்ப்பு விசை சாதகமாக இருக்காது என்று இதுவரை ஆராய்ச்சியில் வெளியாகவில்லை என்றும் அதனால், அங்கு தான் நிச்சயம் குழந்தை பெற்றெடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த பயணத்திற்கு தெரிவான 100 பேரில் அனைவரும் 19 வயதிலிருந்து 60 வயதுடையவர்கள் என்பதால் அவர்களில் ஒருவரை எனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டு குழந்தையை பெற்றெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

சுமார் 6 பில்லியன் டாலர் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயணத்தில் பங்கு பெறுபவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கணக்கில் பல பயிற்சிகள் அளிக்கப் பட்டு வருகின்றன. இது தவிர, இந்த பெரிய பயணத்தை உருவாக்கியவரும், இத்திட்டத்தின் தலைமை நிர்வாகியுமான பாஸ் லான்ஸ் டோர்ப் கூறுகையில், உலகமே வியக்குமளவிற்கு இருக்கப் போகும் இந்தப் பயணத்தை நேரடியாக செவ்வாய்க்கோளிலிருந்து ஒளிப்பரப்ப போகி றோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தொலைக்காட்சி மற்றும் இணைய தள வசதிகள் உள்ள ஒவ்வொருவரும் இந்தப் பயணத்தைக் கண்டுகளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள தாகவும் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/96811.html#ixzz3Sl6GETOL

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

விருப்பு - வெறுப்பு!

ஆன்மிகம் பொதுவானது என்றால், வடகலைக் காரன் ஏன் தென்கலைக்காரனை வெறுக்கிறான்? திருநீறு பூசுபவன் ஏன் இவர்கள் இருவரையும் வெறுக் கிறான்? ஆக, ஆன்மிகத்திலும் விருப்பு - வெறுப்பு இருக்கிறது என்பது உண்மையானால், அது என்ன வெங்காய ஆன்மிகம்?

Read more: http://viduthalai.in/e-paper/96808.html#ixzz3Sl6NwyQP

தமிழ் ஓவியா said...

பள்ளி மாணவர்கள் மத்தியிலே நேருவைக் கொச்சைப்படுத்திய பி.ஜே.பி. கல்வி அமைச்சர்


ரோஹதக், பிப்.25_ பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அரி யானா கல்வியமைச்சர் ராம்விலாஸ் சர்மா பள்ளி மாணவர்கள் முன்பு முன் னாள் பிரதமர் நேருவை அசிங்கமான வார்த்தை களைப் பயன்படுத்தி திட் டினார். அரியானா மாநிலம் ரோஹதக்கில் அம்

மாநிலத்தைச் சேர்ந்த பிரபல கவிஞர் லக்மிசந் தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது, இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக அரியானா மாநிலத்தின் கல்வி அமைச்சர் ராம்விலாஸ் சர்மா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அனைவரிடத்திலும் சங்கடத்தை ஏற்படுத்தியது

நமது கவி லக்மிசந் திற்கு நிகரானவர் யாரு மில்லை. அவருக்குள்ள புகழ் என்றும் மறையாது. அவரை எந்த ஒரு தலை வருடனும் ஒப்பிட முடி யாது. ஒருமுறை டில்லிக் குப் பயணம் செய்த சிலர் பேசிக்கொண்டனர். அதில் ஒருவர், இன்று நேரு இறந்துவிட்டார் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த நமது அரியா னாவைச் சேர்ந்தவர் கூறும்போது, பெருமை மிக்க லக்மிசந்த் எங்கே என்று கூறி (சில தவறான வார்த்தைகளை உபயோ கித்து) அந்த நேரு எங்கே? என்று கூறினாராம். இதை அப்படியே ஒலி பெருக்கியில் கூறினார். அவருக்கு முன்பாக நூற் றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் அமர்ந்திருக்க, மேடை யில் ஆசி ரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் அமர்ந் திருக்கும்போது, மாநில கல்வி அமைச்சர் ஒருவரே ஜவர்கர்லால் நேருவை அசிங்கமான வார்த்தை யால் திட்டித் தீர்த்துள் ளது அனைவரிடத்திலும் சங்கடத்தை ஏற்படுத் தியது. நிகழ்ச்சி முடிந்த பிறகு இதுகுறித்து ஊடகவிய லாளர்கள் அமைச்சரிடம் கேட்ட போது,

நான் வேண்டு மென்றே இந்த வார்த்தையைக் கூற வில்லை. கவிஞர் லக்மி சந்த்பற்றி மக்கள் கூறு வதைத்தான் நான் கூறி னேன். மேலும், சில வார்த் தைகளை எந்த அளவு கோல் வைத்து மட்ட மான வார்த்தை நல்ல வார்த்தை என்று கூறு கிறீர்கள் என்று ஊடக வியலாளர்களிடம் பதில் கேள்விவைத்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆசிரியர்கள் கூறியதாவது: அவை நிறைந்த பள்ளி மாணவ, மாணவிகள் முன்பாக இதுபோன்ற வார்த்தையை பயன் படுத்தக் கூடாது

. மேலும் பள்ளியில் நேரு குறித்து மாணவர்களுக்கு நாங்கள் பாடம் சொல்லித்தருகி றோம். அப்படி இருக்க எங்களின் முன்பே புகழ் பெற்ற ஒரு தலைவரை கொச்சையான வார்த்தை களைப் பயன்படுத்தி பேசியிருப்பது தவறான முன்னுதாரணமாகும் என்று கூறினார்கள். ஆர்.எஸ்.எஸ் உறுப் பினரான ராம்விலாஸ் சர்மா முன்னாள் பாஜக மாநிலத் தலைவராக நீண்ட ஆண்டுகாலம் பதவி வகித்தார். அரியா னாவில் உள்ள பாஜக அரசில் கல்வி அமைச்ச ராக உள்ளார்.

தமிழ் ஓவியா said...

மூடன்


கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக்கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழிபோட்டுக்கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன். - (குடிஅரசு, 18.5.1930)

Read more: http://viduthalai.in/page-2/96798.html#ixzz3Sl6po8mX

தமிழ் ஓவியா said...

செவ்வாய்த் தோஷ நம்பிக்கையாளர்களுக்குக் காணிக்கை!
செவ்வாய்க்கோளில் பிறக்கும் முதல் குழந்தை?

மார்ஸ் ஒன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம். உள்படம்: செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப் பயணம் மேற்கொண்டு, பிள்ளை பெற விரும்பும் பிரிட்டானிய பெண் மேகி லியூ

செவ்வாய்க் கோளில் பெண்மணி ஒருவர் முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த மார்ஸ் ஒன் (Mars One) என்ற தனியார் நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம் (A One-Way Trip) என்ற பிரமாண்டமான திட்டத்தை அறிவித்தது. இதற்காக, செவ்வாய்க்கு செல்லும் பயணிகள் மீண்டும் பூமிக்குத் திரும்ப இயலாது; அதற் கான எந்த ஏற்பாட்டையும் நிறுவனம் செய்ய வில்லை என்ற நிபந்தனையுடன் விண்ணப் பங்களை வழங்கியது.

2024 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளை நோக்கி செல்லும் இந்த பயணக்குழுவினர், அங்கேயே நிரந்தரமாக தங்க வைக்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த சாகசப் பயணத்தில் பங்கு பெற உலகம் முழுவதிலும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 586பேர், தங்களின் பெயர்களை முன்பதிவு செய்தனர். இத்திட்டத்திற்கு, சுமார் 100பேர் தெரிவு செய்யப்பட்டனர். இதில், அமெரிக்காவி லிருந்து 39, அய்ரோப்பாவிலிருந்து 31, ஆசியா விலிருந்து 16, ஆப்ரிக்காவிலிருந்து 7, ஓசியானி யாவிலிருந்து 7 பேரும் தேர்வாகியுள்ளனர். செவ்வாய்க்கோள் பயணத்தில் பயணம் செய்யும் குழுவினரில் இந்தியர்களான கேர ளாவைச் சேர்ந்த சாரதா பிரசாத் (19), துபாயில் வசிக்கும் ரிதிகா சிங் (29) ஆகிய 2 பெண்களும், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கணினி அறிவியலில் டாக்டரேட் பயின்று வரும் தரண்ஜீத் சிங் (29) உட்பட 3 பேர் தேர்வானவர்களின் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

இந்நிலையில், இந்தப் பயணத்திற்குப் பிரிட்டனைச் சேர்ந்த 24 வயதான மேகி லியூ (Maggie Lieu)
என்ற பெண் தெரிவாகி யுள்ளார். மேலும் இவர், செவ்வாய்க்கோளில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடிவெடுத் துள்ளதாகவும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, செவ்வாய்க்கோளில் குழந்தையை பெற்றெடுப்பதற்கு அங்குள்ள புவி ஈர்ப்பு விசை சாதகமாக இருக்காது என்று இதுவரை ஆராய்ச்சியில் வெளியாகவில்லை என்றும் அதனால், அங்கு தான் நிச்சயம் குழந்தை பெற்றெடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த பயணத்திற்கு தெரிவான 100 பேரில் அனைவரும் 19 வயதிலிருந்து 60 வயதுடையவர்கள் என்பதால் அவர்களில் ஒருவரை எனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டு குழந்தையை பெற்றெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

சுமார் 6 பில்லியன் டாலர் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயணத்தில் பங்கு பெறுபவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கணக்கில் பல பயிற்சிகள் அளிக்கப் பட்டு வருகின்றன. இது தவிர, இந்த பெரிய பயணத்தை உருவாக்கியவரும், இத்திட்டத்தின் தலைமை நிர்வாகியுமான பாஸ் லான்ஸ் டோர்ப் கூறுகையில், உலகமே வியக்குமளவிற்கு இருக்கப் போகும் இந்தப் பயணத்தை நேரடியாக செவ்வாய்க்கோளிலிருந்து ஒளிப்பரப்ப போகி றோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தொலைக்காட்சி மற்றும் இணைய தள வசதிகள் உள்ள ஒவ்வொருவரும் இந்தப் பயணத்தைக் கண்டுகளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள தாகவும் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/96811.html#ixzz3Sl81XgPw

தமிழ் ஓவியா said...

இங்கிலாந்திலிருந்து வெளிவரும் இதழில்

இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ஸ்வின்டன் அட்வர்ட்டைசர் (swindonadvertiser.co.uk) எனும் ஆங்கில இதழில் கடவுள் இல்லை என்று தலைப்பிட்டு வெளியாகி உள்ள வாசகர் கடிதத்தில் உள்ள தகவல் வருமாறு:

கடவுள் இல்லை

மூன்று முசுலீம்கள் அமெரிக்காவில் கொல்லப் பட்டனர். கடவுளை நம்புபவர்களிடையே காட்டு மிராண்டித்தனங்கள் ஏற்படக்கூடாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாக உள்ளது.

அண்மைக்காலத்தில் எத்தனை முசுலீம்கள் கொல்லப்பட்டுள்ளனர்? வானத்திலிருந்து கற் பனையாக எவனோ குதிப்பான் என்கிற நம்பிக்கை யால், மக்களைக் கடத்துவது மற்றும் உயிரோடு எரிப்பது என நடைபெறுகின்றன.

ஏசுவாக இருந்தாலும், அல்லாவாக இருந்தாலும், இன்னும் மொகம்மத் அல்லது கடவுள் அல்லது புத்தர் என்று எவரும் இருப்பதாகக் கூறினால், நாம் வாதிடுவதற்கு காரணமாவது இருக்கும்.

எங்குமே கடவுள் இல்லை, மற்றபடி இல்லாத இந்தக் குப்பைகளின் பெயரால் அந்த நம்பிக்கையில் பின்பற்றுபவர்களால் பொறுப்பற்றமுறையில் பலவும் நடத்தப்படுகின்றன.

அப்படி ஒருவன் இல்லாதநிலையில் அவனால் என்ன செய்துவிட முடியும்?

- ரோஜெர் லேக் வடக்கு ஸ்வின்டன்

Read more: http://viduthalai.in/e-paper/96890.html#ixzz3SqlW7xUI

தமிழ் ஓவியா said...

மோடி குட்டு உடைந்தது!
சொந்த தொகுதிக்குக்கூட ஒரு பைசா செலவழிக்கவில்லை

மோடியின் தத்து கிராமத்திலும் வெத்து விளம்பரம் தான்! புதுடில்லி பிப் 26_ புதிய ஆட்சி அமைந்து ஓர் ஆண்டு நெருங்கிக் கொண்டு இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களின் தொகுதிக்காக இதுவரை என்ன செய்தார்கள் என்று டில்லியைச் சேர்ந்த சமூக சேவகர் தகவல் அறியும் உரிமைச்சட்டத் தின் கீழ் கேள்வி கேட் டுள்ளார்.

இதில் வாரணாசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மோடி இதுவரை அந்த தொகுதிக் காக ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என் பது தெரியவந்தது. நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அவர்களின் தொகுதி வளர்ச்சிக்காக ரூ200 கோடி ஒதுக்கப்படு கிறது. இந்த நிதியில் அவர்களின் தொகுதி மேம்பாட்டிற்கென புதிய திட்டங்களை வகுத்து அதை நடைமுறைப்படுத்த லாம், மத்திய மாநில அரசுகளின் அனுமதி மற்றும் வேறு எந்த ஒரு தடையும் இல்லாத நிலையில் திட்டங்களை தொகுதி மக்களிடம் இருந்து பெறலாம். வாரணாசி தொகுதி மக்கள் இதுவரை பொது சமுதாயக் கூடம், பள்ளி களில் கணினி, குடிநீர் சுத்திகரிப்பு கருவி, மற்றும் சிறுதொழில் முனைவோ ருக்கான பொதுச்சந்தை போன்ற பல்வேறு திட் டங்களை மோடி வார ணாசிக்கு வரும் போதெல்லாம் அவரிடம் கோரிக்கை மனுவாக கொடுத்திருந்தனர். ஆனால் இந்த மனுக்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும் மக்கள் கொடுத்த கோரிக் கைகள் குறித்து ஆலோ சனைகள் கூட நடைபெற வில்லை என்று தெரிகிறது,.

இது குறித்து வார ணாசி மக்கள் கூறும் போது மோடி வாரணா சிக்கு வரும்போது நாங்கள் கொடுக்கும்; மனுக்கள் குறித்து என்ன நடவ டிக்கை எடுத்தார் என்று கேட்டதற்கு இதில் பெரும்பாலானவை மாநில அரசு செய்து கொடுக்கும் இதற்கான நிதி மாநில அரசின் வளர்ச்சித் திட்டத்தில் ஒதுக்கியுள்ளோம் என்று பதில் கிடைத்தது. மோடி வாரணாசி வரும்போ தெல்லாம் வாரணாசியை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று பாஜக காரர்கள் கூறுகிறார்கள்.

வாரணா சிக்கு உலக தலைவர்களை எல்லாம் அழைத்து வரு வோம் என்கிறார்கள். ஆனால் அந்தத் தலை வர்கள் வருகை தருவதற்கு தரமான சாலைகள் எதுவும் இல்லை, இதற்குக் காரணம் கேட்டால் சாலைகளை நிர்வகிப்பது மாநில அரசு என்று பதில் வருகிறது. மோடியின் தத்து கிராமம்தான் என்ன வாழ்கிறது? மோடி தத்து எடுத்த முஸ்லீம்களே வசிக்காத கிராமமான ஜெயபூரிலும் இதே நிலைதான், மோடி செயல்படுத்தப்போகும் திட்டங்களின் பட்டியல் அடங்கிய பெரிய பதா கைகள் கிராமத்தின் நுழைவாயிலில் அலங்கரிக் கின்றன.

மோடி முதல் முறையாக வருகைதந்த போது வைத்த இந்தப் பதாகைகள் இன்று பழையதாகிப் போய் விட்டன. பல எழுத்துகள் அழிந்துவிட்டன; ஆனால் இதுவரை எந்த ஒரு திட்டமும் செயல் படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம் கேட்ட போது கிராமங்களில் முக்கிய உறுப்பினர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று அங்கெல்லாம் நடந்து வரும் வளர்ச்சிப் பணியை கண்காணித்து வருகின்றனர். கிராமத்தில் நாங்கள் கேட்ட சாதாரண திட் டங்களுக்குகூட இப்படி எதிர்மாறான பதில்களே வருகின்றன. ஆக்கப் பூர்வமான எந்த திட்டமும் இன்றுவரை நடைபெறவில்லை என்று கூறுகின்றனர்.

கோடைப் பிரதேசமான வாரணாசி யில் ஆப்பிள் மரம் நடு வதற்கு வற்புறுத்துகின்ற னர். ஆப்பிள் மரங்கள் பனிபொழியும் பிரதேசங் களில் தான் செழுமையாக வளரும் ஆண்டிற்கு 3 மாதம் மட்டுமே குளிர் காலமாக இருக்கும் வாரணாசியில் ஆப்பிள் விவசாயம் என்பது இய லாத காரியம்; ஆனால், ஜெயபூர் கிராம பஞ் சாயத்துத் தலைவரான துர்காவதி தேவியின் மைத்துனர் கிராமத்தில் ஆப்பிள் விவசாயம் செய்ய அனைவரையும் வற்புறுத் துகிறார் இதற்காக லட்சக் கணக்கில் பணம் செல வழிக்கின்றனர். தேவை யற்ற இந்த காரியத்தின் மூலம் வாரணாசியில் மோடிக்கு அவப்பெயரே ஏற்படப்போகிறது என்று வாரணாசி மக்கள் கூறுகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/96885.html#ixzz3SqliRMqH

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பட்டர்

ஜாதியைப் பொறுத்து யாரும் உயர்வு, தாழ்வு பாராட்டக் கூடாது; கடவுள் பக்தி கொண்டவன், பக்தியற்றவன், தாழ்ந்த வன் என்பது தான் வைணவத்தின் அடிப்படை. மகாபாரதத்தில் வரும் விதுரர் தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் அவரை வியாசர் போற்றி வணங் குகிறார் என்று எழுது கிறது ஓர் ஆன்மிக இதழ்.

ஏன் அதனோடு நிறுத்திக் கொண்டனர்? அந்தப் பக்தியுள்ள விதுரர் குலத்தவர்கள் அந்த வைணவக் கோயி லில் பட்டராக முடி யாதது ஏன் என்பதுதான் இன்றையக் கேள்வி?

Read more: http://viduthalai.in/e-paper/96887.html#ixzz3Sqlr2YPG

தமிழ் ஓவியா said...

வேலிக்கு ஓணான்

மதர் தெரசா சேவையை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்தார் அல்லவா? சேவை என்ற பெயரால் கிறித்துவ மத மாற்றம் செய்தவர் என்று சொன்னார் அல்லவா! அதனை சிவ சேனாவும் வரவேற்றுள்ளது. வேலிக்கு ஓணான் சாட்சி என்பார்களே அது இது தானோ!

ஆவியுடன் பேச்சாம்!

மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்துவந்த மும்பை நரேந்திர தபோல்கர் மதவெறியர்களால் கொல் லப்பட்டார் அல்லவா? குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காவல்துறை தபோல்கரின் ஆவியுடன் பேசும் முயற்சிகள் மேற்கொண்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் குற்றஞ்சாட்டியுள்ளார். பகுத்தறிவாளரைக் கொலை செய்தவரைக் கண்டுபிடிக்க பகுத்தறிவுக்கு எதிரான அணுகுமுறையாம் - வெட்கக் கேடு!

Read more: http://viduthalai.in/e-paper/96889.html#ixzz3Sqlyrb2a

தமிழ் ஓவியா said...

அஸ்திவாரம் கிடையாது!


பார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரமே கிடையாது. - (விடுதலை, 11.7.1954)

தமிழ் ஓவியா said...

பிற மதத்தில் இருந்து இந்து மதம் மாறியவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி பிப் 27 பிற மதங்களிலிருந்து இந்து மதத்தை ஏற்றுக்கொள்ப வர்களை தாழ்த்தப்பட்ட வர்கள் பட்டியலில் தான் சேர்க்கவேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப் பான தீர்ப்பை வெளியிட் டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த கெபி மனு என்ப வரின் பாட்டனார் கிறிஸ் தவராக மதம் மாறினார். அதன் பிறகு அவர்கள் மூன்று தலைமுறைகளாக கிறிஸ்தவர்களாக இருந் தனர்.

இந்த நிலையில் மனு இந்துமதத்திற்கு மாறி தனது ஜாதிச்சான்றிதழில் தாழ்த்தப்பட்ட இந்து என்று சேர்ந்து அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்று இருந்தார். இதை கேரள நீதி மன்றம் ஏற்க மறுத்து வேற்று மதத்தில் இருந்து இந்துமதத்திற்கு வருப வர்கள் எப்படி தாழ்த்தப் பட்டவராக சேர்க்க முடியும் என்று கூறி அவரது பணி நியமனத்தை சட்டவிரோதம் என்று கூறி அவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாயை வசூல் செய்யவும் அவரை உடன டியாக பணி நீக்கம் செய் யவும் உத்தரவிட்டிருந்தது.

கேரள உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கெபி மனு உச்சநீதி மன்றத்திற்கு சென்றார். இவரது மனு நீதிபதி தீபக் மிஷ்ரா மற்றும் கோபால் கோடா அடங்கிய அமர் வின் முன்பு விசார ணைக்கு வந்தது. இது குறித்து நீதிபதிகள் கூறியதாவது: பிற மதங் களில் இருந்து இந்து மதத்திற்கு வருபவர்கள் அவர்களின் மூதாதை யர்கள் எந்த ஜாதியில் இருந்தார்கள் என்பதை சாட்சிபூர்வமாக உறுதிப் படுத்தவேண்டும். மேலும் அவர்கள் வேறு ஜாதி களை ஏற்றுக்கொள்பவ ராக இருந்தால் அந்த ஜாதி இந்துக்கள் அவர் களை தங்கள் ஜாதிக் காரர்களாக மனப்பூர்வ மாக ஏற்றுக் கொள்ள வேண்டும், ஒருவர் கிருத் தவ மதத்தில் இருந்தோ அல்லது இஸ்லாம் மதத் தில் இருந்தோ இந்து மதத்திற்கு மாறுவதனால் இந்து சமூகம் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண் டும். அப்படி ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அவர்கள் தாழ்த்தப்பட்ட வர்களாகக் கருதப்படு வார்கள்.

இன்று இஸ்லாம் மற்றும் கிருத்தவ மதத்தைச் சார்ந்தவர்களின் முன் னோர்கள் பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முன் னோர்கள் தான் வேற்று மதத்திற்கு சென்றார்கள் எனவே அவர்கள் இந்து மதத்திற்குத் திரும்பும் பொழுது அவர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் இந்து மதம் திரும்பு பவர்கள் தங்களது ஜாதி நிருபிக்கப்படாத நிலையில், அவர்கள் தாழ்த்தப்பட்ட வர்கள் என்றும், தாழ்த்தப்பட்டவர் களுக்குரிய அனைத்து இடஒதுக்கீடு சலுகைகளும் அவர்களுக்கு உண்டு என்று தீர்ப்பு கூறினார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/96966.html#ixzz3SxD381uY

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

இயற்கை சீற்றங்கள்

கேள்வி: திடீரென்று ஏற்படும் நில நடுக்கம் பெரு வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஜோதிட சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டவையா? அல்லது அப்பாற்பட்டவையா?

பதில்: இது பிரசத் ஜாதக முறைப்படி சொல்லப்படும். இதற்கு இயற்கை உற்பவங்கள் என்று பெயர் (கல்கி 15.2.2015 பக்கம்.15) ஏதாவது புரிகிறதா? இந்த வழுக்கலுக்குப் பெயர்தான் ஆன்மிகம்!

Read more: http://viduthalai.in/e-paper/96962.html#ixzz3SxDhum3W

தமிழ் ஓவியா said...

இன்றைய நம் கேள்வி???

மத்திய ரயில்வே நிதி நிலை அறிக்கைபற்றி செய்தி வெளியிடும் ஏடுகள் கட்டண உயர்வு இல்லை என்பதையே பெரிதாக செய்திகளை வெளியிடு கின்றனவே - பெட்ரோல், டீசல் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில் கட்டணங்கள் ஏன் குறைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பாதது ஏன்?

Read more: http://viduthalai.in/e-paper/96962.html#ixzz3SxDuzyRg

தமிழ் ஓவியா said...

பக்குவப்படுத்த வேண்டும்

மக்கள் இயற்கையிலேயே மூட நம்பிக்கை, காட்டுமிராண்டித்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஓரளவுக்காவது மாற்றிப் பகுத்தறிவு, சமதர்மம் இவைகளுக்குப் பக்குவப்படுத்தவேண்டும்.
(விடுதலை, 16.1.1973)

Read more: http://viduthalai.in/e-paper/96967.html#ixzz3SxEJRmf7

தமிழ் ஓவியா said...

எந்த வகையிலும் வரவேற்க முடியாத ரயில்வே பட்ஜெட் தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து

சென்னை, பிப்.27_ எந்த வகையிலும் வரவேற்க முடியாததாக ரயில்வே பட்ஜெட் உள்ளது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே பட் ஜெட் குறித்து, தி.மு.க. தலைவர் கலைஞர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா முழுவதிலும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட பயணிகள் கட்டண குறைப்பு இல்லை என்று தெரிந்து விட் டது. கடந்தாண்டு பா.ஜ.க. அரசின் ரயில்வே பட் ஜெட் நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவால் தாக்கல் செய்யப் படுவதற்கு சில நாள்களுக்கு முன்பாகவே 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கட்டண உயர்வினை; கடந்த கால அரசின் முடிவு அது என்று கூறி அறிவித் தார்கள். அதற்குப் பிறகு டீசல் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில், பயணிகள் கட்டணமும், சரக்கு கட்டணமும் இந்த ஆண்டு மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவால் குறைத்து அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்பட்டும் குறைக்கப்பட வில்லை.

கடந்த 8.2.2015 அன்று நான் வெளியிட்ட அறிக்கையிலேகூட, தமிழகத்திற்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 24 ரயில்வே திட்டங்களும் நிறைவேற போதுமான நிதியினை வருகின்ற ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால் இந்தப் பட் ஜெட்டிலும் தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்திய ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே இந்த முறை தான் முதல் தடவையாக புதிய ரயில் களோ, கூடுதல் ரயில்களோ அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட ஈரோடு_பழனி ரயில் திட்டம் போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கி, இந்த ஆண்டு நிறைவேற்ற வேண்டும் என்றும் நான் விடுத்த அறிக்கையிலே கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், மத்திய ரயில்வே அமைச்சர் மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற் பட்டிருப்பதால் புதிய ரயில்களை அறிவிக்க முடியாத சூழ்நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்று அறிவித்திருப்பதால், பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைவார்கள். புதிய திட்டங்களை அறி விக்காததோடு பல திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளன. எனவே, எந்த வகையிலும் வரவேற்க முடியாத பட்ஜெட்டாகவே மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/96927.html#ixzz3SxGEgVdB

தமிழ் ஓவியா said...

கீதை பற்றி விவேகானந்தர்கீதை என்ற நூல் மகாபார தத்தின் ஒரு பகுதியாகும். கீதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபார தத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேதவியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?

இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா? மூன்றாவதாக கீதையில் கூறப்படுவதுபோல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா? நான்காவதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா? என்பன கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளி யிட்டிருந்தாலும் சரி - குருசேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண் டாரா என்ற பிரச்சினை எழுகிறது.

அர்ஜூனன் ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளனவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத்திரயுத்தம் செய்தனர் என்பதோ. கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. - விவேகானந்தர், கீதையைப்பற்றி கருத்துகள் என்ற நூலில்

ஆதாரம்: ஏ.எஸ்.கே.அய்யங்கார் எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூலில் - பக்கம் 11,.117)

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxGzeQRD

தமிழ் ஓவியா said...

மக்கள் ஒருமைப்பாடு பேசுவோரே! கடவுள் ஒருமைப்பாடு எங்கே!

அரியும் சிவனும் ஒண்ணு: இதை அறியாதவர் வாயில் மண்ணு! நெடுங்காலமாய் நம் நாட்டில் வழங்கி

வரும் பழமொழியிது. சிவனுக்கும் திருமாலுக் கும் உயர்வு - தாழ்வு-வேறுபாடு-முரண்பாடு கிடையவே கிடையா தென்று, மதக்குழப்பங்களுக்குள்ளான மக்கட்கு அறிவு கொளுத்தும் மொழியாக இப்படிச் செப்பினர் சூழ்ச்சி மதியினர் சிலர்.

ஆதிசங்கரர் மேற்கொண்ட சமய நடவடிக்கையான உண்மை இணைப்பில் சைவத்தையும், வைணவத்தையும் உள்ளடக்கவே செய்தார்.

அதன்பின் பல நூறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அறிவாசான் அய்யா அவர்கள் தெளிவாகக் கேட்டு வந்தார் மதத் தலைவர்கள் தங்கள் கடவுளர்களைப் பற்றி ஒருமைப்பாடான முடிவுக்கு முதலில் வரமுடியுமா? என்று,

அய்யா சொல் என்றைக்கும் பொய்யாதென்பதற்கு இதோ சான்று:

மொட்டைக் கோபுரம் என்று அழைக்கப்பட்டு வந்த சிறீரங்க பெருமாள் கோவிலின் தென்திசைக் கோபுரத்தை வளரச் செய்வதில் வெற்றி கண்ட அகோபில மடத்தின் 44ஆம் ஜீயர் சிறீ அழகிய சிங்கரிடம் கல்கி இதழ் சார்பில் கேட்கப்பட்ட 87ஆண்டு அகவையாகி விட்ட ஒளிவு மறைவில்லா கேள்வியொன்றுக்குச் சிங்கர் அளித்த விடை சமய மக்களுக்குச் சரியான அறைகூவல்!
கேள்வி: சிறீ சங்கராச்சார்யாள் இந்த கோபுரத்தில் மூன்றாம் கட்டத்துக்குப் பண உதவி செய்திருக்கிறார். பல சைவர்களும் பெருமாள் திருப்பணிகளுக்கு உதவுகிறார்கள். இதுமாதிரி வைஷ்ணவப் பெரியார்கள் சைவ தலப் பணி களுக்கு ஏன் உதவுக்கூடாது?

விடை: நான் சிவன் கோவில்களுக்குச் செய்ய மாட்டேன்... ஏன் என்று கேட்டா.... சிறீமத் நாராயணன் தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம்... பிரம்மாவை நாராயணன் தன் நாபியிலிருந்து படைத்தான். அந்த பிரும்மா சங்கரனைப் படைத்தான் என்று கதையிருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு நாராயணன் பாட்டன் ஆகிறார். தபஸ் பண்ணி பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தார்னும், அதே போல சிவன் எத்தனையோ யாகம் பண்ணி கடைசியிலே தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றார்னு சாஸ்திரம் இருக்கு, சிவங்கள்ளாம் புண்ணியம் பண்ணி, தபஸ் பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்தவர்கள். நாராயணன் எப்போதும் உள்ளவர். அவரை வழிபடற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். நாங்கள்ளாம் மோட்சத்துக்குப் போக டிக்கெட் வாங்கிண்டாச்சு. அதனாலே சிவன் கோவில் திருப்பணிக்குப் பணம் இருந்தாலும் தரமாட்டேன் (கல்கி 11-4-82) மேற்கண்ட விடை நமக்கு விளக்குவதென்ன?

1. சங்கரனுக்கு நாராயணன் பாட்டன். 2. சிவன் தவம் புரிந்து தெய்வம் ஆனவன். 3 வைணவன் சிவன் கோவிலுக்குச் சென்றால் புத்தி கெட்டுவிடும். 4 வைண வனிடம் பணம் இருந்தால் கூட, சிவன் கோவிலுக்குத் தரக்கூடாது!

ஆக, இன்றைக்கும் கூட அரியும் சிவனும் ஒன்றாகி விட்டார்களா?

குழப்பம் குறையவில்லை; நீடிக்கிறது. மக்கள் ஒருமைப்பாடு பேசவந்து விட்ட மதக்காவற் காரர்கள் முதலில் கடவுள் ஒருமைப்பாடு காணட்டும்.
- பகுத்தறிவு

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxH6qrLx

தமிழ் ஓவியா said...

அண்ணா அறைகிறார்!

குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடியாது என்று கூறுவதுண்டோ? குழந்தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போது தான் இடதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக்கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப் பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத்துகளை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர். நூல்: உவமை நயம்

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxHDNFOg

தமிழ் ஓவியா said...

கலைவாணர் போட்ட மந்திரம்

எங்கள் வீட்டில் வயதான பாட்டி இருந்தார்கள். அவர் காலில் ஒரு நாள் தேள் கொட்டி விட்டது. வீட்டில் தம் நண்பர் களுடன் பேசிக் கொண்டிருந்த போது அப்பாவிடம் இதைச் சொன்னோம்.

அவர் உடனே, இவ்வளவு தானே நானே குணப்படுத்தி விடுகிறேன். செம்பு நிறைய நீரும் ஒரு கொத்து வேப்பி லையும் கொண்டு வாருங்கள் என்றார்.

அவை கொண்டு வரப்பட்டன. வேப்பிலையை நீரில் தொட்டு கொட்டிய இடத்தில் பாட்டிக்கு வீச ஆரம்பித்தார். வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அப்பாவின் நண்பர்கள் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது வலி இறங்கி இருக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்று பாட்டியிடம் கேட்டார். பாட்டி, சற்றுத் தேவலை இன்னும் மேலிடத்தில்தான் வலிக்கிறது என்றார்.

உடனே மறுபடியும் ஒரு தடவை மந்திரம் முணு முணுத்து வேப்பிலை நீர் அடித்தார். பின்பு, இப்போது எப்படி இருக்கிறது. மேலிடத்திலும் வலி குறைந்து இருக்க வேண்டுமே என்று கேட்டார். பாட்டியார், அந்த இடத்திலும் வலி குறைந்து விட்டது என்றார்.

அப்படியானால் வலிசுத்தமாக இறங்கி விட்டது என்று அர்த்தம். இனி வலியே இருக்காது. எங்கே காலை மடக்கு பார்க்கலாம். பாட்டி காலை மடக்கினார். எழுந்து நில் பார்க்கலாம் பாட்டி எழுந்து நின்றார். நட பார்க்கலாம் பாட்டி நடந்து காட்டினார். இனி உன்னால் ஓடவும் கூட முடியும் அவ்வளவுதான் என்றார் அப்பா.

அப்பாவின் நண்பர்கள், வியப்பினால், தேள் கொட்டினால் விஷத்தை இறக்க மருந்து வைத்துக் கட்டாமல் இப்படி மந்திரம் போடுகின்றாயே. மந்திரத்தில் ஏதும் பயனில்லை என்று பிரச்சாரம் செய்கிறாய். இந்த மந்திரத்தை யாரிடம் கற்றாய்? இத்தனை நாள் எங்களுக்கு தெரியாமல் மறைத்து விட்டாயே. அது என்ன என்று எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டனர். அது ஒன்றும் இல்லை. அது பரம ரகசியம். இன்னொரு நாளைக்கு இன்னொரு இடத்தில் சொல்லுகிறேன். இப்போது இங்கு வேண்டாம்

நண்பர்கள் விடாப்பிடியாக, இல்லை இப்போதே எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க, அப்பா சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு, பாட்டியார் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அது ஒன்றும் கஷ்டமான மந்திரம் இல்லை. உன்னை கடிச்சா எனக்கென்ன, உன்னை கடிச்சா எனக்கென்ன என்று அவசரமாகச் சொன்னேன். இவ்வளவுதான். மனோதத்துவ வைத்தியம் இது - அவ்வளவுதான். நீங்களும் கூட இதைச் செய்யலாம் என்றாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டு நண்பர்கள் அப்படியா சங்கதி என்று கூறிக் கொண்டு அப்பாவின் கருத்தியல்புகளை மேலும் ஒரு படி புரிந்து கொண்டார்கள்.

கேட்டவர்: உடுமலை நடராசன்

கூறியவர்: மறைந்த நகைச்சுவை நடிகர் கலை வாணர் அவர்களின் புதல்வர் திரு.நல்லதம்பி
இடம்: பயணிகள் விடுதி, அமராவதிநகர், உடு மலை வட்டம். நாள்: 11.4.1981

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxHNJEEu