Search This Blog

8.2.15

ஆதிதிராவிட வாலிபர்கள் கொடுத்த வரவேற்பில் பெரியார்


தோழர்களே! நீங்கள் இங்கு எனக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்கப் பட்டதைப் பற்றியும், தலைவர் புகழ்ந்து பேசியதைப் பற்றியும், நான் சிறிதும் பெருமையாகக் கொள்ளவில்லை. ஏனெனில் நான் பிறந்து வளர்ந்ததும் இந்த ஊர். நீங்கள் பிறந்து வளர்ந்ததும் இந்த ஊர். அன்றியும் சுமார் 10 வருஷத் திற்கு முந்தியவரையில் உங்களுக்கும் எனக்கும் வெகு நெருங்கிய சம்பந்தம் இருந்து வந்திருக்கிறது. ஆதலால் உள்ளூர்க்காரர்கள் நெருங்கிய சம்பந்தம் இருந்து வந்தவர்கள் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொள்வது என்பது பரிசிக்கத் தக்கது என்றே கருதுகிறேன்.


உங்கள் பத்திரத்தில் உள்ளூரிலிருக்கிற உங்களை நான் முன்போல் கவனிக்கவில்லை என்று கண்டு இருக்கிறீர்கள். முன்போல் உங்களுக்குப் பலவித நன்மைகள் செய்யவில்லை என்று சொல்லுகிறீர்கள் இவைகள் வாதவமாயிருக்கலாம். ஏனெ னில் நான் இந்த ஊர் முனிசிபல் சேர் மனாய் இருந்த காலத்தில் உங்கள் தெரு விற்கு என்ற அதிக சலுகை காட்டினது போல் இப்போது நான் ஈடுபட்டிருக்கும் காரியத்தில் தனி சலுகை என்றும், பொருள் சம்மந்தமாயும் நான் எதைச் செய்யமுடியும்? என் சொந்தத்திலும் எனக்கு முன்பு இருந்த மாதிரியான பொருள் வருவாய் கிடையாது. பொதுக் காரியங்களின் உண்மையாய் உழைப்ப வர்களுக்கு வரும்படி இல்லாமல் போவதோடு கைபொருளும் சிதைந்து போய் விடும். ஆதலால் பொருள் மூலமாய் செய்யும் நன்மைகள் செய்வது கஷ்டமான காரியம்.


மற்றபடி நீங்கள் குறிப்பிட்டப்படியே உங்கள் சமூக விஷயத்தில் பொதுவாக ஒரு புரட்சிப் போன்ற காரியத்தை சுயமரியாதை இயக்கம் செய்திருக்கிறது என்று சொல்லவதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் காங்கிரசில்  இருக்கும் போதும் தீண் டாதார் விஷயத்தைப் பற்றியே. அதிகம் உழைத்திருக்கிறேன். வைக்கம் சத்தி யாகிரகம் என்பதும் தீண்டாமை விலக் குக்காகத் தான் ஏற்பட்டதே தவிர வேறில்லை. 3 வருடத்திற்கு முன் நடந்த ஈரோடு கோயில் பிரவேசம் என்பதும் அது சம்பந்தமான வழக்கும் தீண்டாமை விலக்கு சம்பந்தமாக ஏற்பட்டதே தவிர வேறில்லை.


இன்னும் சுயமரியாதை இயக்கத் திலும் தீண்டாமை விலக்குத் தத்துவம் தான் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. அது விஷயமாய் சமபந்தி போஜனம், கலப்பு மணம் முதலியவைகள் கூட ஜாதி வித்தி யாசம் என்பது சிறிதும் பாராமல் அநேக காரியங்கள் நடைபெற்று வருவதை நீங்கள் உணர்ந்தே இருக்கிறீர்கள். இங்கு சற்று முன் பேசிய தோழர் அன்ன பூரணியம்மாள் ஒரு பறப்பெண் அவரை மணம் செய்து கொண்ட இங்கிருக்கும் தோழர் ரத்தின சபாபதி ஒரு திருநெல் வேலி சைவர் ஒன்றுக்கொன்று எவ்வளவு வித்தியாச பாவிக்கப் படுவது மாறி இன்று சதிபதிகளாய் உங்கள் முன் விளங்கு வதைப் பாருங்கள். உங்கள் சமுகத்துக்கு சகலதுறைகளிலும் சர்க்கார் உத்தி யோகத்திலும் தனி பிரதிநிதித்துவம் எப்படி வந்தது? ஓர் காலத்தில் சுய மரியாதை இயக்க மந்திரிகளாய் இருந்த டாக்டர் சுப்பராயன், தோழர் முத்தையா முதலியார் ஆகியவர்கள் காலத்தில் தான் இது ஏற்பட்டது. அது போலவே சட்டசபை முதலிய தாபனங்களிலும்கூட உங்களுக்குத் தனி பிரதிநிதித்துவம் எப்படிக் கிடைத்தது. உலகமே வெறுத்து தள்ளிய சைமன் கமிஷனை சுயமரியாதை இயக்கம் தான் உங்கள் நன்மைக்காக வரவேற்று, உங்கள் குறைபாடுகளைச் சொல்லி கொள்ளும்படி வேண்டிக் கொண்டதுடன் உங்கள் குறைபாடுகளையும் அது அறியும்படி செய்தது. அதன் பயன் தான்  இப்போது எத்தனையோ பேர் தடுத்தும் சூழ்ச்சி செய்தும் ஒரு அளவாவது நீங்கள் அவைகளிலும் தானம் பெற முடிந்தது. உங்களுக்குத் தனி கிணறும், தனிக் கோயிலும் கட்ட வேண்டு என்று சொன்ன தேசியங்களும், மாளவியாக்களும் உங்களுக்கு பொது கிணற்றில் உரிமையும், பொதுக் கோயில்களில் அனுமதியும் கொடுக்கிறோம் என்று வாயளவிலாவது சொல்லக் கூடிய நிலைமை எப்படி ஏற்பட்டது? சுய மரியாதை இயக்கம் உங்கள் நிலைமையை உத்தேசித்தும், தேசியத்தின் வண்டவாளத்தை வெளிப்படுத்தியும் தீண்டாமை விலக்கின் சூழ்ச்சியை வெளியாக்கியும் செய்த பிரசாரமல்லவா என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள் இந்த காரியங்களுக்காக சுயமரியாதை இயக்கமும், தோழர்களும் பொது சனங் களிடத்தில் எவ்வளவு கெட்டப் பெயர் வாங்கினார்கள், எவ்வளவு பழிப்புக் கும் தூஷணைக்கும் ஆளானார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா?


இவற்றை யெல்லாம் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டதா? இல்லையா என்பது நன்றாய் விளங்கும். இனிமேல் நீங்கள் ஒன்றுக்கும் கவலைப் பட வேண்டியதில்லை. இனியும் 10 வருஷக்காலத்திற்குள்  தீண்டாமை இந்திய நாட்டை விட்டு பறந்தே ஓடிவிடும். தேசிய சூழ்ச்சி குறுக்கிடாமலிருந்தால் இன்னும் உங்களுக்கு எவ்வளவோ நன்மை ஏற்பட மார்க்கமுண்டு. எப்படியெனில் உலகம் ஒரு  பெரும் புரட்சிக்கு தயாராகிக் கொண்டு வருகிறன்றது. அப்புரட்சி வெற்றி பெற்றாலும், தோல்வி, அடைந்தாலும் தீண்டாமையும், தாழ்த்தப்பட்ட தன்மையும் சமீபத்தில் அழிந்துதான் தீரும். இந்த நாட்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டு 160 வருஷ காலமாகியும் தீண்டாமை ஒழிக்கப் படாமல் இருப்பது பிரிட்டீசாருக்குப் பெருத்த அவமானகரமான காரியமாகும். அவர்கள் இனி ஆட்சி செய்ய தகுதி யுடையவர்கள் அல்ல என்பதற்கு இந்த ஒரு காரணமே போதும். பிரிட்டிஷார் இந்திய பொது ஜனங்கள் மீது, பார்ப்பனர் மீது, இந்து மதத்தின் மீது பழி போடலாமானாலும், இவர்களுக்கு அறிவும் யோக்கிய பொறுப் பும் எங்கு போயிற்று? என்ற கேள்விக்கு இவர்கள் என்ன பதில் சொல்லு வார்கள்.


ஆகவே இனி யாருடைய தயவும் தேவை யில்லாமலேயே காரியங்கள் நடந்து விடும். உலகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுயமரியாதை உதயம் ஆகி விட்டது. அதன் முன் எந்த மதமும், எந்தக் கடவுளும், எந்த மகாத்மாக்களும், எந்த தேசிய மும், எந்த அரசாங்கமும் இனி தடையாய் நிற்க முடியாது. இவைகள் இத்தனையும் அதன் வேகத்தில் கலந்து கொண்டு உங்களுக்கு நாங்கள் தான் நன்மை செய்தோம் என்று சொல்லி போலி உரிமை கொண்டாடி மக்களை ஏய்க்கவே அவைகள் இப்போது பாடுபடுகின்றன. இந்த ஏய்ப்பில் நீங்கள் சிக்கி விடாதீர்கள். உங்களுக்கு விடுதலை வேண்டுமானால், சமத்துவம் வேண்டுமா னால் எந்த மதத்தையும், எந்த கடவுளையும், எந்த தேசியத்தையும், எந்த மகாத்மாவையும் எந்த அரசாங்கத்தையும் எதிர்பாராதீர்கள். இவைகள் ஒன்றினாலும் உங்களுடைய தீண்டாமையை  ஒழித்து சமதர்மம் கொடுக்க முடியாது. உங்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டும். அவ்வுணர்ச்சி உண்மையாக உங்களுக்கு ஏற்பட்டால் உங்களை அறியாமலே பெரியதொரு புரட்சி ஏற்பட்டு விடும். அதில் நீங்கள் மாத் திரம் சமத்துவமைடந்து உலக சுகபோகங் களில் சம சுதந்திரம் பெறுவதோடு நில் லாமல் உலகிற்கே சமதர்மம் வழங்கக் கூடியவர்களாகி விடுவீர்கள். ஆனால் நீங்கள் உண்மை சுயமரியாதை வீரர்களாக வேண்டும் மதத்திற்கு ஆளாவதோ, கடவு ளுக்கு அடிமையாவதோ, தேசியத்திற்கும், அரசாங்கத்திற் கும் அடிமையாவதோ ஆன காரியங்களில் எதில் கட்டுப்பட்டு விட்டாலும் உங்கள் புரட்சி அடங்கிவிடும், வலுவற்றதாகி விடும். பிறகு பழைய கருப்பன்தான் ஆய்விடுவீர்கள்.


நான் ஏன் இப்படி சொல்லுகிறேன்? எனக்கு மதமும் கடவுளும் இருந்திருக்க வில்லையா? இந்த ஊர் கோவில்களைப் போய் பாருங்கள் எங்கள் குடும்பப் பெயர் அங்கெல்லாம் இருக்கின்றதா இல்லையா? நாமம் பூசிக் கொண்டோ சாம்பல் அடித்துக் கொண்டோ இந்த ஊருக்கு வந்த பாகவதர் அடியார் என்பவர்களான சோம்பேறி களுக்கெல்லாம் சத்திரம் போல் சாப்பாடு போட்டு வந்ததை நீங்கள் அறிவீர்களா? சர்க்காரோடு தோளோடு தோள் போட்டு அதிகாரிகளுடன் உரைத்தது நீங்கள் அறிவீர்களா? தேசியத்தில் முன்னனியில் நின்று குடும்பத்துடன் அலைந்ததும் பல தடவை சிறை சென்றதும், நீங்கள் அறி வீர்களா? நீங்கள் உள்ளூர்க்காரர்கள். ஆனால் சகலமும் நேரில் பார்த்தவர்களான தால் இதை உங்களிடம் சொல்லுகிறேன். அயலூர்க்காரர்களுக்கு வேண்டுமானால் இது மயக்கத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கலாம். அப்படி இருக்க இப்போது ஏன் இவைகள் அவ்வளவும் புரட்டு என்றும் உங்களுக்கு பயன்படாதது என்றும், பணக்காரர்களுடையவும் சோம்பேறி வயிற்றுப் பிழைப்புக் காரர்களுடையவும் நன்மைக்கு ஏற்ற ஆயுதங்கள் என்றும் ஏன் சொல்லுகிறேன். எல்லாவற்றையும் நான் அனுபவித்து பார்த்து விட்டேன். என்னு டைய 40, 50 வருஷ உலக அனுபவமும் இவைகளை சந்தேகமற விளக்கி விட்டது. ஆகவே, நீங்கள் துணிவு கொண்ட புரட்சிக் குத் தயாராகுங்கள். நீங்கள் ஏன் கீழ் ஜாதி என்று உங்களையே கேள்வி கேளுங்கள். கடவுள் காரணம் என்று தோன்றினால் உடனே அந்த கடவுளைத் தூள்தூளாக்கி உடைத்தெரியுங்கள். மதக் கட்டளை என்று தோன்றினால். அம்மதத்தைச் சின்னாபின்ன மாக்குங்கள் அல்லது அரசாட்சி முறை என்று கண்டால் அதை அழித்திடுங்கள் அல்லது மனிதர்களு டைய சூழ்ச்சி  சுயநலப் பித்து என்று தோன்றினால் தைரியமாய் அவர்களிடம் இனிமேல் இந்தப் புரட்டு நடக்காது என்று சொல்லுங்கள் உங்கள் புரட்டு களை உணர்ந்து விட்டோம் நல்ல தனத்தில் யோக்கியமாய் நடக்கிறீர்களா? அல்லது இதற்காக எங்கள் உயிரை இழக்க வேண்டியதுதானா? என்று கேளுங்கள்.


இதில் ஒன்றும் தப்பிதமில்லை. ஏனெ னில் பாடுபட்ட நீங்கள் பட்டினி கிடக் கவும், கீழ் ஜாதியாய் இருக்கவும், சோம் பேறியாய் இருந்தவர் செல்வனாய் இருக்கவும், மேல் ஜாதியாய் இருக்கவும் ஏற்பட்ட முறைகள் எதுவானாலும் அதை ஒழிப்பது எவ்விதத்திலும் குற்ற மாகாது அவை புரட்டின் பேரிலும் சூழ்ச்சியின் பேரிலும் சுயநலத்தின் பேரிலுமே கட்டப்பட்ட கட்டடமாகும். உங்களுக்கு உண்மையான சுயமரி யாதை உணர்ச்சி வந்து விட்டால் அது மணலால் கட்டிய வீடு சரிந்து விழுவது போல் அதுதானே சரிந்து விழுந்து விடும். ஆதலால் நீங்கள் உங்கள் பங்கை அடைய எதன் பேராலும் பின் வாங்கா தீர்கள். உங்களுக்கு எந்த கோவிலுக்குள் போய் எந்த கடவுளை வணங்க அனுமதி கிடைத்துவிட்டாலும் இதனால் எல்லாம் இன்று நீங்கள் படும் அரை பட்டினி அவதையையும், அரை நிர்வாண அவ தையையும், கல்வி இல்லாமல் தற்குறி களாய் மடையர்களாய் ஆக்கி வைத் திருக்கும் பகுத்தறிவற்ற அவதையும் ஒரு காலமும் நீங்கிவிடப் போவதில்லை. அதற்கு ஏற்ற முயற்சிகளே செய்ய வேண்டும் அதிலே வெற்றிபெற வேண் டும் அதற்காத்தான் சுயமரியாதை உணர்ச்சி வேண்டுமென்கிறோம் என்பது வாகப் பேசி முடித்தார்.


--------------------------------------------------வெளிநாடு சென்று திரும்பியபின் ஈரோட்டில் 27.11.1932ந் தேதி ஆதிதிராவிட வாலிபர்கள் கொடுத்த வரவேற்பில்  தந்தை பெரியார்ஆற்றிய சொற்பொழிவு.
"குடிஅரசு" - சொற்பொழிவு - 04.12.1932

52 comments:

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் மதச்சார்பின்மை படும்பாடு-சர்வதேச அமைப்புகள் கண்டனம்

ஒபாமாவின் செயலுக்கு பாராட்டும் - மோடிக்கு எதிராக கண்டனத் தீர்மானங்களும்


ஒபாமா இந்தியாவின் வளர்ச் சிக்கு அந்த நாட்டிற்கு உதவ முன் வந்த அதே நேரத்தில் அந்த நாட் டில் நடக்கும் மதவெறித்தாக் குதலுக்கு தன்னுடைய கண்ட னத்தை தெரிவித்த விதம் பாராட் டிற்குரியது என பன்னாட்டு மதச்சுதந்திரப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங் டனில் அனைத்து மத்த்தின் முக்கிய தலைவர்கள் மத்தியில் பேசிய பராக் ஒபாமா இந்தியாவில் நடக்கும் மதவெறித்தாக்குதல் குறித்து தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

பராக் ஒபாமாவின் இந்த பேச்சின் எதிரொலியாக அமெரிக்காவின் முன்னணி நாளிதழ் மதவெறித் தாக்குதல் தொடர்பான செயல் களின் பின்புறம் அரசை வழி நடத்துவதாக கூறப்படும் மத அமைப்புகள் இருந்த போதிலும் மோடி இது குறித்து வாயைத் திறக்காமல் இருப்பது குறித்து தலையங்கம் எழுதி இருந்தது.

மதச்சுதந்திரக் கண்காணிப்பு காங்கிரஸ்

இந்த நிலையில் மதச்சுதந்திரக் கண்காணிப்பு காங்கிரஸ் இந்தியா வில் தொடர்ந்து நடந்துவரும் மத வெறித்தாக்குதல் தொடர்பில் அமெ ரிக்க அதிபர் பராக் ஒபா மாவின் கண்டிப்பு பாராட்டத்தக்கது என்று கூறி தீர்மானம் இயற்றியுள்ளது. இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட் டுள்ளதாவது:

உலகம் முழுவதும் மதவெறித் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் சிறுபான் மையினர் மீதான தாக்குதல்கள் குறித்தும் மனிதநேயமுள்ளவர்கள் கவலைப்பட வேண்டியுள்ளது. நீண்டகாலமாக இந்தியா மதச் சார்பின்மைக்கு சாட்சியாக இருந்து வந்துள்ளது. உலக முழுவதிலு முள்ள இந்தியர்களிடையே பிற மதத்தவர்களிடம் நல்லிணக்கம் காணப்பட்டு வருகிறது.

ஆனால், கடந்த சில ஆண்டு களாக இந்தியாவில் மதச்சார் பின்மை தன்மை சிதைந்துவருவது கண்கூடாக தெரிகிறது. அங்கு சிறுபான்மையினர் மீதான தாக் குதல்கள் அதிகரித்து வருவது ஒரு மிகுந்த கவலையளிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. எல்லையால் நாடுகள் பிரிக்கப்பட்டு இருந்தாலும் மனித நேயம் என்பது அனைவருக் கும் பொதுவானது. மனிதநேயம் சிதையும் பட்சத்தில் உள்நாட்டில் அமைதி குலையும் போது உலக நாடுகள் அதை உள்நாட்டு விவ காரம் என்று பார்த்துக்கொண்டு இருக்கலாகாது. குறைந்த பட்சம் தன்னுடைய கண்டனத்தையாவது தெரிவிக்கவேண்டும். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் இந்தியா சென்று வந்தார். டில்லியில் இறுதி நாள் அன்று பேசிய அவர் அங்கு மதச்சார் பின்மை சீர்குலைந்து வருவது குறித்து பேசினார். மதச்சார் பின்மை சீர் குலைந்து வருவதும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக அமையும் என்ற அறி வுரை கூறினார். இருப்பினும் அங்கு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறையவில்லை. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் இந் தியாவை கண்டித்திருப்பது பாராட் டிற்குரியது என பன்னாட்டு மதச் சுதந்திரக் கண்காணிப்பு காங்கிரஸ் பாராட்டு தெரிவித்துள்ளது அதே வேளையில் இந்தியா விரைவில் மதச்சுதந்திரம் பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தனது தீர்மானத்தில்

தமிழ் ஓவியா said...

குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் பன்னாட்டு மதநல்லிணக்கக் குழு (USICRF)

அமெரிக்க மற்றும் பன்னாட்டு மத நல்லிணக்க குழு அமெரிக்க அதிபரின் கருத்துக்கு தனது நிலையை கூறியுள்ளது. இந்த அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந் தியத் தலைவர் கட்ரினா லெந்தன் ஸ்வாட் கூறியுள்ளதாவது: அமெ ரிக்க அதிபர் பராக் ஒபாமா சரியான நேரத்தில் இந்தியாவில் நடக்கும் மதவெறித் தாக்குதல்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவருக்கு எங்களது பாராட்டுக்கள், இந்தியாவின் மதச்சுதந்திர அதி காரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அங்கு பல்வேறு பட்ட மதத்தவர்கள், பல்வேறு பட்ட இனம், மொழி மக்கள் வாழும் நாடு ஆகும். ஆனால் சமீப காலமாக அங்கு நடக்கும் செயல் களால் உலக நாடுகள் பெரிதும் கவலையடைந்துள்ளன. புதிய அரசு அங்கு நடக்கும் மதச்சுதந்திரப் பாதிப்பு பற்றிய கருத் துக்களை அறிய எங்கள் அமைப்பு இந்தியா செல்ல நினைத்தபோது உள்துறை அமைச்சகம் விசா மறுத்து விட்டதும் அல்லாமல் இந் தியாவில் உள்ள எங்கள் அமைப் பிற்கு பல்வேறு தடைகளை விதித் துள்ளது. நாங்கள் ஒடிசாவில் மதத் தலைவர் ஒருவர் குடும்பத்துடன் எரித்துக் கொல்லப்பட்ட போதும், குஜராத்தில் இஸ்லாமியர்கள் மீதான வன்முறையின் போதும் சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்தோம். ஆனால், குஜராத் அரசு எங்களை அந்த மாநிலத்திற்குள் அனுமதிக்கவில்லை. அதே நேரத் தில் எங்களது முக்கிய பிரமுகர்களை வெளியேறக் கூறி விட்டது என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

அவர் இந்தியாவில் மதச் சார்பின்மை குறித்த ஆய்வறிக்கை 2 2 (Tayar II)
என்ற ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில் கூறியிருப்பதாவது:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலம் இடிக்கப்பட்டத்தில் இருந்தே இந்தியாவில் மதச்சார்பின்மை சிறிது சிறிதாக சிதைக்கப்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக குஜராத் கலவரம், கன்னியாஸ்திரிகள் மீதான் பாலியல் வன்முறை, சிறுபான்மை வழிபாட்டுத்தலங்கள் மீதான தொடர் தாக்குதல் இவை அனைத்தும் நீண்டகால பழமைப் பாண்பாடு கொண்ட ஒரு நாட்டின் மற்றும் உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக தன்னைப் பறைச்சாற்றிக்கொள்ளும் ஒரு நாட்டிற்கு ஒரு சிறுபான்மையினர் மீதான இந்த தாக்குதல்கள் அந்த நாட்டின் வளர்ச்சிக்கான சமிக்ஞையை காட்டவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 6- மதச்சுதந்திரம் மற்றும் மதப்பிரச்சாரம் குறித்து எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் வரலாற்றில் வேற்று மதத்தவர்கள் நீண்டகாலம் ஆண்ட போதிலும் அந்த நாட்டின் மதம் தொடர்பான மக்கள் சுதந்திரங்களில் தலையிடவில்லை. ஆனால், சமீபகாலமாக மதவெறி யாட்டங்கள் தலை விரித்தாடத் துவங்கியுள்ளன. இதில் சிறுபான்மையினரை தொந்தரவு செய்வது, மிரட்டுவது, கொலைசெய்வது, வன்முறையில் இறங்குவது, சிறுபான்மையினப்பெண்களை பாலியல்வன்முறைக்கு ஆளாக்குவது இது போன்ற செயல்கள் அங்கு மதச் சுதந்திரத்தை பாதிக்கும் காரணிகளாக மாறிவிட்டன. இத்தனை ஆண்டுகாலம் இருந்த ஒரு சுமூகமான சூழலை கெடுத்துவிட்டதாக கருதுகிறோம். அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு இரண்டு முறை வந்துள்ளார். அவர் தன்னுடைய கருத்தில் தன்னுடைய முதல் இந்தியப் பயணம் மற்றும் இரண்டாம் இந்தியப்பணத்தில் உள்ள வேறு பாடுகள் குறித்து தெளிவாக தெரிவித்துள்ளார். இரண்டாவது பயணத்தின் போது இறுதி நாளன்று இந்தியத் தலை நகர் டில்லியில் அங்கு நிலவும் மதச்சார்பின்மை சீர் குலைவு பற்றி மிகவும் தெளிவாக இந்திய அரசிய லமைப்புச்சட்ட 25-இல் குறிப்பிட்டுக் கூறியிருந்தார். ஆனால், அவரது கருத்து அம்மக்களிடையே முழுமையாக கொண்டுசேரவில்லை. அங்குள்ள தலை வர்களால் அதன் சாரத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள இயலவில்லை என்றே தெரிகிறது. ஆகையால் 5 பிப்ரவரி அன்று வெள்ளைமாளிகையில் நடந்த மத நல்லிணக்கக் கூட்டத்தில் இதை தெளிவாக கூறவேண் டிய கட்டாயத்திற்கு ஆட்படுத்தப்பட்டார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மேடம் ஸ்வாட் மேலும் தனது கருத்தை தெரிவித் தாவது:

ஒபாமா எந்த காலகட்டத்தில் இந்தக் கருத்தை கூறியிருக்கிறார் என்று முக்கியமாக கவனிக்கவேண்டும். இந்தியாவில் சில மத அமைப்புகள் சிறுபான்மை யினரின் வாழ்வாதாரத்தை முடக்கும் அளவிற்கு சென்றுவிட்டன. இந்தியா-அமெரிக்கா இரண்டும் மிகவும் முக்கிய நட்பு நாடுகளாகும். இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 122 கோடியை தொட்டுள்ளது. அது அழகான அனைத்து மத மக்களும் வாழும் ஒரு நாடு. மிக அதிக அளவில் இந்துக்கள், அதனை அடுத்து இஸ்லாமியர்கள், பிறகு கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், யூதர்கள் மதங்களை சார்ந்து நிற்காத நாத்திகர்கள் என பல்வேறு பட்ட முகங்களைக்கொண்ட நாடுஅது. இந்த அனைத்து மக்களையும் இணைக்கும் ஒற்றுமைச் சங்கிலிதான் மதச்சார்பின்மை ஆனால், தற்போது அந்த சங்கிலியை உடைக்கும் பணியில் சில அமைப்புகள் இறங்கியுள்ளன.

இந்தியா பற்றிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாவின் கவலை நியாமானதே எனக் கூறினார். 1973-ஆம் ஆண்டு உலக மதங்களால் பாதிக்கப்படும் நபர்களுக்கான அமெரிக்க மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளால் ஆரம்பிக்கப்பட்டது. எந்த மதம் சார்ந்து இல்லாமல் இந்த அமைப்பு ஒரு கண்காணிப்பு குழுபோன்றே செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பாகிஸ்தானில் இந்துக்கள் பாதிக்கப் பட்ட போதும் தனது கண்டனத்தை தெரிவித்து, மேலும் பர்மாவில் முஸ்லீம்கள் தாக்குதலுக்கு ஆளான போதும், இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலின் போதும் கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.

இந்தியாவில் ஒரிசா பாதிரியார் எரித்து கொல்லப்பட்ட விவகாரம், பாபரி மஸ்ஜீத் இடிக்கப்பட்ட விவகாரம் அதைத் தொடர்ந்து எழுந்த வன்முறை, குஜராத் கல வரம் குறித்தும் விரிவான அறிக்கைகளை நேரடியாக கள ஆய்வு செய்து வெளியிட்டது இந்த அமைப்பின் முக்கிய பிரமுகர்களுக்கு குஜராத் மாநில அரசு தங்களது மாநிலத்தில் நுழைய தடைவிதித்தது குறிப்பிடத் தக்கதாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/95836.html#ixzz3R9bga8PI

தமிழ் ஓவியா said...

முதலில் மனைவியுடன் சேர்ந்து வாழுங்கள்!

பிறகு ஊருக்கு உபதேசம் செய்யலாம் மோடிக்கு அரியானா பெண்கள் அறிவுறுத்தல்

ஜின்த், பிப்.8-_ அரி யானா மாநிலம், ஜின்த் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு ஒன்று முதலில் மோடி தனது மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து காட்டிய பிறகு ஊருக்கு உபதேசம் செய்யட்டும் என்று கூறியுள்ளது. அரியானா மாநிலத் தில் சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை யைக் காப்பாற்றுங்கள், பெண் குழந்தையை படிக்க வையுங்கள் என்ற முழக்கத்துடன் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தி சில திட்டங்களை அறி வித்தார். அங்கு பேசும் போது அரியானாவில் தான் பெண்கள் நிலை மிகவும் மோசமாக உள் ளது. இங்கு தான் பெண் களை கணவன்கள் சரி யாக நடத்த மறுக்கி றார்கள்; பெண்கள் சமூக அக்கறையின்றி வாழ் கிறார்கள் என்று பேசி னார். மாதம்தோறும் 10,000 கடிதங்கள் மோடிக்கு!

இதற்கு அரியா னாவைச் சேர்ந்த பல் வேறு அமைப்புகள் கண் டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் அரி யானா ஜின்த் மாவட்டத் தில் உள்ள பெண்கள் அமைப்பு முதலில் மோடி தனது மனைவியுடன் வாழ்ந்து காட்டட்டும் என்று கூறியிருந்தனர். மேலும் அவர்கள் வாரம் ஒரு முறை மோடிக்கு மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டி 10000 கடிதங்கள் எழுதுவோம். அவர் தனது மனைவி யுடன் சேர்ந்து வாழும் வரை நாங்கள் தொடர்ந்து விடாமல் கடிதம் எழுது வோம் என்று கூறியிருந் தனர். மேலும் அவர்கள் கூறியதாவது: உலகப் புகழ் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா, விளை யாட்டு வீராங்கனை சானியா நெய்வால், ஹாக்கி வீராங்கனை சுமன் பால், மல்யுத்த வீராங்கனை சுமன் கத்து போன்றோர் அரியானா பெண்கள்தான், உங்களது அமைச்சரவையில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்களும் அரியானாவைச் சேர்ந்த வர்கள் தான். மேலும் இந்தியாவிலேயே அதிக அளவில் அயல்நாடு சென்று பெரிய பதவியில் இருக்கும் பெண்களில் அரியானாவைச் சேர்ந் தவர் தான் அதிகம். பெண்களுக்கு எதிரான நிலை அரியானாவில் மாத்திரம் இல்லை, இந்தியா முழுவதும் இந்த நிலை உள்ளது. ஆனால் எங்கள் மாநிலத்தை மாத் திரம் சுட்டிக்காட்டியுள் ளார். ஒபாமாவைப் பார்த்தாவது திருந்த வேண்டாமா?

சமீபத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு வந்திருந் தார். அவர் இரண்டு முறையும் தனது மனைவி யுடன் வருகை தந்தார். இது அவர் இந்த உலக மக்களுக்கு கூறும் சிறந்த எடுத்துக்காட்டாக கருது கிறேன் என்று அவரே கூறுகிறார். எந்த ஒரு அயல்நாட்டுச் சுற்றுப் பயணத்திற்குச் சென் றாலும் தனது மனை வியை அழைத்துச் செல் லாமலிருப்பதில்லை. அவரை தனது நண்பர் என்று பெருமையுடன் கூறிக்கொண்டு இருக்கும் மோடி அவரிடம் இருந்து குடும்பவாழ்க்கையில் மனைவியின் முதன்மைத் துவம் பற்றி தெரிந்திருக்க வேண்டாமா? முதலில் திருமணம் பிறகு சில ஆண்டு மண வாழ்க்கை அதன் பிறகு அந்தப் பெண்ணை தனி மையில் விட்டுவிட்டு வெளியேறியவர் அந்த பெண்ணின் நிலையைப் பற்றி சிறிதாவது சிந்தித் துப் பார்த்தாரா? பெண்களின் நிலை பற்றிப் பேசும் முன் தான் அதற்கு எடுத்துக்காட் டாக இருக்கவேண்டும். முதலில் தனது மனை வியை அழைத்து வந்து குடும்பம் நடத்திவிட்டு, ஊருக்கு உபதேசம் செய் யட்டும்! அவர் தனது மனைவியை அழைத்து வந்து குடும்பம் நடத்தும் வரை வாரத்திற்கு 10,000 கடிதங்கள் தொடர்ந்து எழுதுவோம் என்று கூறி னார்கள் மேலும் ஜின்த் மாவட்டத்தில் உள்ள பல்வா என்ற சிற்றூரைச் சேர்ந்த ஜில்லா பரிஷத் தலைவி சுரீந்தர் தேவி கூறும்போது விரைவில் நாங்கள் எங்கள் ஜில்லா பரிஷத்தின் மூலம் மோடி தன் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று தீர்மானம் இயற்ற வற் புறுத்துவோம் எனக் கூறினார்கள்.

இந்தப் பெண்களின் கோரிக்கை குறித்து அரி யானா பாஜக எந்த கருத் தும் கூற மறுத்துவிட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/95831.html#ixzz3R9bvfYfo

தமிழ் ஓவியா said...

கணவனின் வருவாயை அறிய தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்படி மனைவிக்கு உரிமை உண்டு
மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

புதுடில்லி, பிப். 8_ கணவனின் சொத்து விவ ரங்கள், முதலீடுகள் மற் றும் பிற சொத்துகள் உள் ளிட்ட பல்வேறு வருவாய் குறித்த தகவல்களை அறிய தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி மனை விக்கு உரிமை உள்ளது என்று மத்திய தகவல் ஆணையம் அளித்தத் தீர்ப்பில் கூறி உள்ளது.

குடும்ப வன்முறை பாதிப் புக்கு ஆளாகிய மனைவி யின் மனுவின்மீதான வழக் கில் மத்திய தகவல் ஆணை யம் அளித்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அந்த வழக்கில் தனி நபர் வரு வாய் என்பது தனிப்பட்ட தகவல் என்று வாதிடப் பட்டது. அப்பெண்ணின் கணவன் பணிபுரியும் டில்லி டிரான்ஸ்கோ நிறு வனத்துக்கு கணவன் வருவாய் குறித்து, அவர் மனைவியின் வாழ்வாதார உரிமைக்குத் தேவையான தகவலை அளிக்க ஆணை யம் உத்தரவு பிறப்பித்துள் ளது. தகவல் பெறும் உரி மைச்சட்டத்தின்கீழ் தனிப் பட்டவர்களின் தகவலை அளிக்கக்கூடாது என்பதி லிருந்து விதிவிலக்காக மனைவிக்கு கணவனின் வருவாய்குறித்த தகவல் அளிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் வரதட் சணையாக அளிக்கப்பட் டது உள்பட கணவனின் சொத்து விவரங்கள், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முயன் றது, மனைவியை பொரு ளாதார ஆதரவின்றி கைவிட்டது உள்ளிட்ட வைகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்து தகவல்களை மனைவி கேட்டுள்ளார்.

தீர்ப்பில் கூறும்போது, தனிப்பட்ட பிரச்சினை என்று பார்க்காமல் பொதுப் பிரச்சினையாகவே இதைப்பார்க்க வேண்டும் என்று தகவல் ஆணையர் எம்.சிறீதர் ஆச்சார்யலு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும் போது, டில்லி டிரான்ஸ்கோ நிறுவனத்திடம் ஒரு பெண் கேட்டுள்ள தகவல் களை அளிக்காமல் தள்ளி விட முடியாது.

தனிநபர்குறித்த தகவல் பாதுகாப்பு என்பதைத் தாண்டி, ஒரு அரசு அலு வலரின் பொதுவான கடமை என்பதில் குடும்ப வன்முறை என்றில்லாமல் மனைவி மற்றும் குழந் தைகளை பராமரிக்கும் பொறுப்பு உள்ளது. கண வனின் வருவாய் குறித்த தகவலை மனைவிக்கு 48 மணி நேரத்துக்குள் டிரான்ஸ்கோ நிறுவனம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் டில்லி உயர்நீதிமன்ற உத்தரவில் கசம் சர்மா எதிர் மகிந்தர் குமார சர்மா வழக்கில் மத்திய தகவல் ஆணை யம் எடுத்துக்காட்டி உள் ளது. டில்லி உயர்நீதிமன்றம் கணவன் மற்றும் மனை வியின் வருவாய், சொத்து மற்றும் முதலீடுகள் குறித்த உறுதிமொழி ஆவணங் களை அளிக்க உத்தர விட் டது. அதற்கு முன்னதாக தனிப்பட்டவர்களின் தகவல் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

பொருளாதாரத்தில் சார்பு நிலைகுறித்தும், பெற்றோர்கள் ஆதரவின் றியும், கணவனின் பரா மரிப்பு இன்றியும் உள்ள மனைவி, தன்னுடைய வாழ்வாதார உரிமையை சவாலாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே இத்தகவல்கள் மனைவி யின் வாழ்வாதார உரிமை யைப் பொருத்துள்ள தாகும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/95854.html#ixzz3R9coyNWh

தமிழ் ஓவியா said...

ஆந்திராவில் பெரியார், பகத்சிங் படங்களுடன் பகுத்தறிவு வினாக்களுக்கு விடை அளித்தால் ரூ.10 லட்சம் பரிசு

கடவுளை மற! மனிதனை நினை!! (தேவுன்னி தொலகிஞ்சு, மானவத்வான்னி ரக்ஷிஞ்சு) வாசகங் களுடன் உள்ள நெகிழி (பிளக்ஸ் பேனர்) ஆந்திர மாநிலம் கடப மாவட்டம், "ப்ரொத்தட்டூரு" எனும் ஊரில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அதில் (பேனரில்) இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு: இவை மூட நம்பிக்கைகள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

* பேய்கள், பூதங்கள், ஆத்மா, மறுபிறப்பு, சொர்க்கம்-நரகம், - ஆகியவை முழுக்க முழுக்க கற்பனைகளே!

* மந்திரங்கள், மகிமைகள், செய்வினை, பாணாமதி போன்ற அனைத்தும் உண்மையே அல்ல!

* வாஸ்து, சோதிடம், எண் கணித சாத்திரம், அதிருஷ்ட மோதிரங்கள், திவ்விய வைரங்கள், இராசி பலன்கள்! * தன லட்சுமி, குபேர மந்திரங்கள், வீட்டு தோஷங்கள், யக்ஞ-யாகங்கள் - அனைத்தும் அய்-டெக் மோசடிகள் * பர லோகம், சுவிசேஷ பிரார்த்தனைகளின் ஊடாக நோய்களைத் தீர்த்தல்...

* சாமியாடுதல் கடவுள் அருளால் நிகழ்வதல்ல - ஹிஸ்டீரியா எனப்படும் மன-உள நோய் (பிரமை)

* பாபாக்கள், சுவாமிஜிக்கள் ஆகியோர் மகிமைகளின் பெயரால் செய்யும் தந்திரங்களே! (மந்திரமல்ல-தந்திரமே)

* மதக் கிரந்தங்கள் அனைத்தும் மனித இன கற்பனைகளே;

* கடவுளர் உறையும் கோயில்கள், மனிதனின் நிர்மாணங்களே, கட்டுமானங்களே!
மேலே சொல்லப்பட்டுள்ளவை அனைத்தும் அறிவியல் அடிப்படையானவை என நிரூபித்தால், உறுதி/அறுதிப்படுத்தினால் - ரூ. பத்து இலட்சம் பரிசு!

*பிரஜா மக்கள் நாத்திக அமைப்பு, ஆந்திரப் பிரதேச கிளை, கடப மாவட்டம், ப்ரோத்தட்டூரூ கிளை மாநிலப் பேரவையின் ஒத்துழைப்புடன் ... மக்கள் புரட்சி மேடை.

- தகவல்: கோரா.

Read more: http://viduthalai.in/page-8/95853.html#ixzz3R9cwgeKE

தமிழ் ஓவியா said...

இடஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்தவர்களால் நிறுவனங்கள் அபார வளர்ச்சியைத் தொட்டுள்ளன

அமெரிக்க -இந்திய பொருளாதார நிபுணர்களின் ஆய்வின் முடிவு வெளிக்கொணர்ந்த உண்மை

புதுடில்லி, பிப்.7_ இடஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்தவர் களால் நிறுவனத் தின் உற்பத்தித்திறன் அதிகரித்தது மட்டுமல் லாமல் சத்தமின்றி பல சாதனை உயரங்களைத் தொட்டுள்ளது என சமீபத்தில் வெளிவந்த ஆய்வுகளின் முடிவு வெளிக்கொணர்ந்துள்ளது. இட ஒதுக்கீட்டால் பணியிடங்களில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படு கிறது, இட ஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்த வர்களால் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் பாதிக் கப்படும். அதன் வளர்ச்சி விகிதம் குறையும் என்று நீண்டகாலமாக இடஒதுக் கீட்டிற்கு எதிரானோர் கூறிவந்தனர்.

இந்தக் கூற்று எந்த அளவிற்கு உண்மை என்பதைக் கண் டறிய அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் டில்லி பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கள் இணைந்து இந்தியா வின் பொதுத்துறை நிறுவனமான ரயில்வேத் துறையில் ஆய்வை மேற் கொண்டனர்.

1980ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரையிலான முதல் நிலை மற்றும் இரண் டாம் நிலை அதிகாரிகள் நிலையில் நேரடியாக நடந்த ஆய்வின் முடிவை கடந்த வியாழன் அன்று வெளியிட்டனர். இந்த ஆய்வின் முடிவில் பல் வேறு வியக்கத்தகு உண் மைகள் வெளிவந்துள்ளன. இந்த ஆய்வு முடிவின் படி

முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்பதவிகளில் இட ஒதுக்கீட்டின் மூலம் நியமிக்கப்பட்ட அதி காரிகள் மற்றவர்களை விட தங்களின் திறமையை மிகச்சிறப்பான முறையில் வெளியிடுகின்றனர்.

இட ஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந் தோர் அதிகமாகப் பணியா ற்றிய துறையில் பொதுப் பிரிவினரை விட உற் சாகமாகப் பணியாற்றி பல்வேறு துணிச்சலான முடிவுகளை எடுத்து அவற்றை செயலாற்றிய காரணத்தால் ரயில்வே துறை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

இடஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேரும் அதிகாரிகளில் பெரும் பான்மையோர் முதல் தலைமுறைக் கல்வியா ளர்கள் இவர்கள் தங் களின் திறமையை வெளிக் கொண்டுவர பதவியை பெரிய தூண்டுகோலாக எடுத்துக்கொள்கின்றனர். இவர்களிடம் அதிகாரம் சேரும் போது இட ஒதுக் கீட்டின் மூலம் பணியில் சேர்ந்த, அவருக்கு கீழ் பணிபுரியும் அனைவருக் கும் புதிய உத்வேகத்தை கொடுக்கிறது, இதனால் சுதந்திரமாகப் பணியற்ற நல்ல வாய்ப்பு கிடைக் கிறது.

தமிழ் ஓவியா said...


முக்கியமாக ரயில் வேதுறை என்பது இந்தி யாவின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவன மாகும். உலகின் முன்னணி பொது நிறுவனங்களின் வரிசையில் முதலாவதாக இருக்கும் ரயில்வே நிறுவ னம் இட ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு சமூக மக்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளித்துள்ளது.

இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைத்த இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு நேர்மையுடனும், துணிச்சலுடனும் பணி யாற்றும் சூழ்நிலையை அவர்களாகவே உருவாக் கிக் கொள்கின்றனர்.

இட ஒதுக்கீட்டின் மூலமாக பணியாற்றியவர் களால் பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்ட காரணத்தால் ரயில்வேதுறை பல்வேறு முன்னேற்றங்களை கண் டுள்ளது. நடுத்தரவர்க்க மக்களால் அதிகம் பயன் பாட்டில் உள்ள ரயில்வே துறையை அந்த மக் களுக்கு ஏற்றவாறு பல் வேறு வசதிகளை உரு வாக்கித்தர முடிந்தது என்றால் அதற்கு இட ஒதுக்கீட்டின் மூலம் பணி யில் சேர்ந்தவர்களால் தான் இது சாத்தியமானது.

ரயில்வேதுறை மாத்திரமல்ல வேறு சில பொதுத்துறை நிறுவனங் களிலும் இடஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்த அதிகாரிகளால் அந்த நிறுவனம், சில தனியார் நிறுவனங்களை விட முன்னணியில் திகழ்கிறது. இது குறித்த ஆதார பூர்வமான தகவல்களும் இந்த ஆய்வுக்குழுவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதி, திறமை எங் களின் தனிச்சொத்து என்ற பார்ப்பனர்களின் வாதம், இந்த ஆய்வின் மூலம் உடைத்தெறியப் பட்டுள்ளது.

இது நாள் வரை இட ஒதுக்கீடு என்பது திறமை யில்லாதவர்களுக்கும், தகுதியற்றவர்களுக்கும் அரசியல் லாபம் காண் பதற்கான அள்ளித்தரும் செயல் எனவும் இட ஒதுக்கீட்டின் மூலமாக பணியில் சேரும் நபர் களால் நாட்டுக்கு தீமை யும் இவர்களின் மூலமாக நிர்வாகச் சீர்கேடும் பணி யிடங்களில் கடுமையான பேதங்களும் நிலவுகிறது என்று தொடக்கம் முதலே போலியான பிரச்சாரங் கள் மேற்கொள்ளப்பட் டன. இந்தப் பிரச்சாரத் திற்கு ஆதரவாக இட ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்து லாபமடைந்தவர் களின் வாரிசுகளே பின் பாட்டு பாடி வருகின் றனர். இந்த ஆய்வு பொய் யர்களின் முகத்திரையை கிழித்தது மட்டுமல்லாமல் இட ஒதுக்கீட்டை சரிவரப் புரிந்து கொள்ளாத மக் களுக்கு ஒரு தெளிவையும் ஏற்படுத்தி விட்டது. சமூக நீதிக்களத்தில் திராவிடர் இயக்கம் 1920_-களில் இருந்தே கடுமை யாகப் போராடி வருகிறது. தொடக்க முதலே இட ஒதுக்கீட்டின் நன்மை என்பது நாட்டின் வளர்ச் சிக்கு மிகவும் தேவையான ஒன்று எனக்கூறி வந்தது.

ஆனால், பார்ப்பன ஊட கங்களும், இட ஒதுக்கீட் டிற்கு எதிரான சக்திகளும் தொடர்ந்து பொய்யான பிரச்சாரங்களைச் செய்து வந்தனர். இதன் காரண மாக இன்றளவும் சமூ கத்தில் சமநிலை ஏற்படா மல் இருந்து வருகிறது இதை நாம் கண்கூடாக காண்கிறோம். இட ஒதுக்கீடு இருக் கும் இடத்தில் ஜாதிய பேதங்களும், மோதல் போக்கும் இருக்கும் என்று கூறி முட்டுக்கட்டை போடுபவர்களுக்கு சரி யான சவுக்கடியை இந்த ஆய்வு கொடுத்திருக்கிறது.

இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி சமூகத்தில் இன்றளவும் வாய்ப்புக் களைப் பெற இயலாத நிலையில் உள்ள மக்க ளுக்கு சமூக நீதி வழங்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும். அரசுத் துறை மாத்திரமல்லாமல் தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை வழங்க முன்வரவேண்டும். அதற் கான சட்டங்களை உட னடியாக இயற்றும் சூழல் இந்த ஆய்வு முடிவின் மூலம் உருவாகியுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அந்த மக்கள் அர்ப்பணிப்பு உணர் வுடன் பணியாற்றுவார்கள்

Read more: http://viduthalai.in/page1/95749.html#ixzz3R9dZ9hTk

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சாபம்

தினமும் கொஞ்சம் நாழிகை ஸ்வாமியைப் பார்வதி - பரமசிவனா கவோ, மகாலஷ்மி மகா விஷ்ணுவாகவோ நினைத்துக் கொண்டு விட்டீர்களானால் மனம் நல்லதாக ஆகும்; புத்தி யும் தெளிவாக ஆகும். அதனால் படிப்பும் நன் றாக வளரும் நன்றாகப் பாஸ் பண்ணி விடலாம்.
- காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகேந்திர சரஸ்வதி (கல்கி 8.2.2015)

உதாரணமே சரியில் லையே! இந்த சிவன் தாருகாவனத்து ரிஷி பத்தினிகளின் கற்பைச் சூறையாடி ரிஷிகளின் சாபத்திற்கு ஆளானவன் ஆயிற்றே!

Read more: http://viduthalai.in/page1/95750.html#ixzz3R9dkbfdA

தமிழ் ஓவியா said...

தகாத வார்த்தைகளில் 19 நிமிடம் திட்டிய ராஜபக்சே! அந்தரங்கத்தை அம்பலப்படுத்தும் சந்திரிகா!!

கொழும்பு, பிப்.7 இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே முதல் முறையாக பொறுப்பேற்ற போது அவருக்கு வாழ்த்து சொன்னதற்காக, தம்மை தகாத வார்த்தைகளால் 19 நிமிடம் திட்டினார் என்று அந்நாட்டின் முன் னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க குற்றம்சாட்டி யுள்ளார். மேலும் ராஜ பக்சேவின் அந்தரங்க வாழ்க்கை பற்றி, நான் விவரித்த போது தொலை பேசி இணைப்பை அவர் துண்டித்து விட்டார் என்றும் சந்திரிகா கூறியுள் ளார். இலங்கை அதிபர் தேர்தலை முன்வைத்து மீண்டும் அரசியல் களத் தில் பரபரப்பானவர் முன் னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க. அவர் அண் மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி யில் கூறியுள்ளதாவது:

நான் அதிபர் பதவியி லிருந்து ஓய்வு பெறும் நேரத்தில் அடுத்த அதிபர் வேட்பாளராக ராஜபக் சேவை நிறுத்தினேன். அப்போது இருந்த ஆளும் கட்சி உறுப்பினர்களில் 61 பேரில் 56 பேர் ராஜபக் சேவை அதிபர் வேட்பாள ராக நிறுத்த வேண்டாம். அவர் கட்சித் தலைமைக்கு பொருத்தமற்றவர் எனவும் தெரிவித்தனர். ஆனால் அவர் தனது தவறுகளை உணர்ந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்குவார் எனும் நம்பிக்கையில் நானும், இன்னும் மூவரும் அவரை அதிபர் வேட் பாளராக நியமித்தோம். அவரோ, ரணில் விக்ரம சிங்கவுடன் இணைந்து கொண்டு, எனக்கு எதிராக பேசுவது உள்ளிட்ட பல் வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ராஜபக்சே முதல் முறையாக அதிப ராகப் பொறுப்பேற்ற பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தொலைபேசியில் பேசி னேன். அப்போது, அவர் என்னை 19 நிமிடங்கள் தொடர்ச்சியாக தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார். நான் அமைதி யாக அவர் கூறியவற்றை யெல்லாம் கேட்டு விட்டு, குறிப்பிட்ட சிலர் மட்டுமே அறிந்த அவரின் வாழ்க்கை ரகசியத்தை கூறினேன். உடனே அவர் தொலை பேசி அழைப்பை துண் டித்து விட்டார். பின்னர் மகிந்த ராஜபக்சே என்னை சிறிது சிறிதாக பழிவாங்கினார். என்னை, அரசின் இல்லத்திலிருந்து வெளியேற்றுவதற்காக எனக்கு எதிராக வழக்கும் தொடர்ந்து, என்னை மிகவும் கேவலப்படுத்தி னார்.

எனினும் அவரால் அந்த வீட்டை பறிக்க முடியாது போய்விட்டது. இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகாலமாக அவர் நடத்திய அரசியல் சீரழிவு களை பொருட்படுத்த முடியாமல் பல்வேறு தரப் பினர் என்னை மீண்டும் அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தினர். ஆனால் மீண்டும் ஒருமுறை, நான் அரசியலுக்கு வர விரும் பாததினால் இந்நாட்டை கட்டியெழுப்ப சிறந்த தலைமைத்துவம் ஒன்று வேண்டும் என தீர்மா னித்து அதற்கு ஏற்றாற் போல் தற்போதைய அதி பர் மைத்திரிபால சிறீ சேனவை நியமித்தேன். இவ்வாறு சந்திரிகா குமார துங்க கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/95758.html#ixzz3R9dsiOt4

தமிழ் ஓவியா said...

கோட்சே விவகாரம்பற்றி ஏன் வாயைத் திறக்கவில்லை?

மகாராட்டிர காங்கிரசு எம்.பி., மோடிக்குக் கடிதம்

மும்பை, பிப்.9 இந் துத்துவா அமைப்புகள் நாடு முழுவதும் நாதுராம் கோட்சேவை வீர நாய கனைப்போல் தற்போது சித்தரித்துக்கொண்டு இருக்கின்றனர், அகிம்சை யின் அடையாளமான காந்தியாரை கொலை செய்தவனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறித்து மோடி என்ன சொல்லப் போகிறார் என்று மகாராஷ்டிராவை சேர்ந்த மாநிலங்களவை உறுப் பினர் ஹுசைன் தால்வி கடிதம் ஒன்றை எழுதி யுள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சிபீடத்தில் அமர்ந்த தில் இருந்து இந்துத்துவா அமைப்புகள் நாட்டின் அமைதிக்கு பங்கம் விளை விக்கும் வகையில் பொது இடங்களில் பேசி வரு கிறது; இது குறித்து உலக நாடுகளும் தற்போது கண்டனம் கூறத் தொடங்கி விட்டன.

இந்த நிலையில் மகாராஷ்டி ராவைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் ஹுசைன் தால்வி இவ் விவகாரம் குறித்து மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பாஜக கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சி பீடத்தில் அமர்ந் தது, அது ஆட்சி பீடத் தில் அமர்ந்தது முதலே இந்துத்துவ அமைப்புகள் சிறுபான்மையினருக்கு எதிராக பேசிவருகின் றனர்.

பாலத்திற்கு கோட்சேயின் பெயரா?

இந்துத்துவ அமைப்பு களின் தாய் அமைப்பான இந்து மகாசபா மிகவும் பாதகமான ஒரு செயலை கையிலெடுத்து அது குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு கோட்சே வின் பிறந்த நாளை மிக வும் சிறப்பாக கொண் டாட அனைவரையும் பொது இடத்திற்கு அழைக்கிறது, சிலைகள் அமைக்க முடிவு செய் கிறது. சமீபத்தில் ராஜஸ் தான் மாநிலத்தில் புதி தாக கட்டப்பட்டுக் கொண்டு இருக்கும் ஒரு பாலத்திற்கு நாதுராம் கோட்சே பெயர் வைக்கப் பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலக நாடுகளால் அகிம்சையின் அடையாள மாக பார்க்கப்படும் காந் தியாரைக் கொன்ற ஒருவனுக்கு இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இன்று ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது? அதுவும் மத் தியில் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் பாஜகவிற்கு நட்புறவாக உள்ள ஒரு அமைப்பு திடீரென கோட்சேவை புனிதமாக்க முயற்சி செய்வது ஏன்? மகாராஷ்டிரா வில் கோட்சே திரைப்படம், புத்தகம், கோட்சே நாட கம் என பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. காந்தியிரைக் கொன்ற கொலைகார னுக்கு ஏன் திடீரென இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் இந்தியாவின் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் மோடி(நீங்கள்) இந்துத்துவா அமைப்பு களின் செயலுக்கு எந்த ஒரு பதிலும் கூறாமல் அமைதிகாத்து வருகிறீர் கள்? இதன் தொடர்ச்சி யாக கோட்சேவிவகாரம் வந்துள்ளது. ஆகையால் இந்தச் செயலுக்குத் தங் களின் நிலை என்ன என் பதை உடனடியாக மக் களிடையே தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட் டுக் கொள்கிறேன் என தனது கடிதத்தில் குறிப் பிட்டிருந்தார்.

Read more: http://viduthalai.in/page1/95757.html#ixzz3R9e2NBpI

தமிழ் ஓவியா said...

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில்
பாரதிதாசன் பாடல்களை நீக்குவதா?: கலைஞர் கண்டனம்


சென்னை, பிப்.7_ காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இக்கால இலக்கியம் என்ற தலைப்பில் இடம் பெற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைத் தொகுப்புக்கு வாய்ப்பு இல்லை என்பதை திராவிட முன்னேற்றக் கழகமும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது என தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட கேள்வி _ பதில் வடிவிலான அறிக்கை:
கேள்வி :- காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் பாரதிதாசன் பாடல்களை நீக்குவதா என்ற தலைப்பில் 5.-2-.2015 அன்று விடுதலை தலையங்கம் ஒன்று தீட்டியிருக்கிறதே? கலைஞர் :- நானும் அதைப் படித்தேன்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் தொலை தூரக் கல்விப் பாடத் திட்டத்தில் முதுகலைத் தமிழ் முதலாமாண்டு பாடத்தில் இக்கால இலக்கியம் எனும் பகுதியில் இடம் பெற்றுள்ள பாரதிதாசன் பாடல் வரிகளான தமிழியக்கம் கவிதைத் தொகுப்பு பத்தாண்டுகளுக்கு மேலாக இடம் பெற்றிருந்ததை நீக்க வேண்டுமென்று வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பதை அறிந்த திராவிடர் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், பாரதிதாசன் தமிழ்ப் பேரவை, பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி, பகுத்தறிவாளர் கழகம் போன்ற அமைப்புகளின் சார்பில் அந்தப் பல்கலைக் கழகத் துணை வேந்தரிடம் அதற்கு எதிராக மனு அளித்திருப்பதாகவும், காரைக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத்தின் போராட்டத் திற்கு தங்களின் ஆதரவு உண்டு என்று தெரிவித் திருப்பதாகவும், பல்கலைக் கழகம் பாரதிதாசனின் பாடல்களை நீக்க நடவடிக்கை எடுத்தால் போராட்டம் நடைபெறு மென்றும் அந்தத் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. இக்கால இலக்கியம் என்ற தலைப்பில் இடம்பெற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைத் தொகுப்புக்கு வாய்ப்பு இல்லை என்பதை திராவிட முன்னேற்றக் கழகமும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது என்பதுதான் நமது முடிவு. பேருந்துக் கட்டணத்தை குறைக்க வேண்டும்

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியபோது, அதைக் காரணம் காட்டி பேருந்துக் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு படிப்படியாகக் குறைத்து வருகிறது. ஆனால், அதிமுக அரசு பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க முன் வரவில்லை. டீசல் விலை குறைவு காரணமாக ஒடிசா மாநில அரசு பேருந்துக் கட்டணத்தைக் குறைத்து அறிவித்துள்ளது. லாரிகளின் வாடகைக் கட்டணத்தை, லாரி உரிமையாளர்கள் ஒரு டன்னுக்கு ரூ.300 வரை குறைத்துள்ளனர்.

எனவே, தமிழக அரசும் பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். அம்பேத்கர் சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்று வலியுறுத்தி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

அடிப்படை வசதிகள் கோரி உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய, ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கதாகும் என்று கலைஞர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/95773.html#ixzz3R9eXBwBh

தமிழ் ஓவியா said...

வெற்றிக்குறி

திருச்சியில் உயர் திருவாளர் எம்.டி. சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சீர்திருத்த திருமண நிகழ்ச்சியைப் பற்றிய செய்தி பிறிதோரிடம் பிரசுரிக்கப்பட்டு உள்ளது. நமதன்பர் சோமசுந்தரம் அவர்கள் சென்னை அரசாங்க அமைச்சர் கனம் பி. டி. ராஜன் அவர்களது சிறிய தந்தை யென்பதும், தொண்டை மண்டல முதலியார் என்று சொல்லப்படும் வகுப்பைச் சேர்ந்தவரென்பதும் நேயர்கள் அறிந்ததே.

அன்னார் தலைமையில் புரோகிதம் ஒழிந்து சீர்திருத்தத் திருமணம் நடந்ததானது மேற்படி சமூகத்தில் ஒரு பெரும் புரட்சியையுண்டாக்கி விட்ட தென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இந்தச் சமூகத்தார் தாங்கள் ஜாதியில் உயர்ந்தவர்கள் என்ற இறுமாப்புக் கொண்டிருப்பதோடு புரோகிதத்தையோ, வைதிக மதாச்சார சடங்குகளையோ எக்காரணங் கொண்டும் கைவிட ஒறுப்படாதவர்கள்.

அத்தகைய ஒரு பெரிய வகுப்பில் புரோகிதம் ஒழிந்த சீர்திருத்தத் திருமணம் நடந்ததென்றால், அது நமதியக்கத் திற்கு மகத்தான வெற்றி என்றே கூற வேண்டும். நமதியக்கக் கொள்கைகள் நாட்டில் எவ்வளவு மலிந்து வருகின்ற தென்பதோடு நமது கொள்கைகள் திட்டங்கள் யாவும் மக்களுக்குத் தங்கள் தினசரி வாழ்க்கைக்குப் பயன்படத்தக்க இன்றியமையா தனவாய் இருக்கின்றன வென்பது நன்கு புலனாகும்.

நமது கொள்கைகள் நாடெங்கும் பரவி சர்வ வியாபகமாக வேண்டுவதற்குப் பார்ப்பனியக் கோட்டை களும், சைவக் கோட்டைகளும் தகர்த்தெறியப்பபட வேண்டுமென நாம் பன்முறையும் இடித்திடித்துக் கூறிவந்திருக்கிறோம்.

தலைவரவர்கள் தனது முன்னு ரையில் சுயமரியாதை உலகெலாம் பரவவேண்டுமென அவாவுவதையும், இத்தகைய மணங்கள் நாட்டிற்கு எவ்வகையிலும் புதிதன்று எனவும், இது பழங்கால முறையே என்றும் குறித்திருப்பதைப் பாராட்டுவதோடு இத்தகையத் திருமணங்கள் ஏராளமாக நடைபெற வேண்டுமென்றும் விரும்புகிறோம்.
குடிஅரசு - துணைத் தலையங்கம் - 03.07.1932

Read more: http://viduthalai.in/page1/95751.html#ixzz3R9eri9hI

தமிழ் ஓவியா said...

ஏழைகள் கண்ணீர்

தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி பரிதவிக்கும் மக்கள் ஏழை மக்களே யாவார்கள். அதிலும் தொழிலாளர்கள் படும் துயரத்தைச் சொல்லத் தரமன்று. ஒவ்வொரு யந்திரசாலை களிலும், தொழிற்சாலைகளிலும் வேலையாட்களைக் குறைத்துக் கொண்டே வருவதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலையற்றவர்களாக வெளி யேறுகின்றனர்.

நமது நாட்டுத் தொழிலாளர்கள் பெரும்பாலும், அநேகமாக, எல்லோருமே தினச் சம்பளம் பெறுகின்றவர் களாயிருந்தாலும், வாரச்சம்பளம் பெறுகின்றவர்களாயிருந் தாலும், மாதச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், அவர்கள் அந்தக் கூலியைக் கொண்டு ஜீவனஞ் செய்கின்ற வர்கள் தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.

இதைத் தவிர அவர்களுக்கு வேறு பூதிதியோ, ரொக்கப் பணமோ இல்லை. அநேகர் குடியிருக்கவும் சொந்த குடிசை இல்லாமல், குடிக்கூலிக்கு வாழ்ந்து வருபவர்கள், இத்தகைய நிலையில் உள்ளவர்களைத் திடீரென்று வேலையும் இல்லையென்று வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டால், அவர்களின் கதி என்னாவது என்று கேட்கின்றோம். எங்கும் பணப் பஞ்சம் மக்களை வாட்டுகிற காலத்தில் அவர்கள் தங்கள் பெண்டுபிள்ளைகளைக் காப்பாற்றுவது எப்படி?

இன்று பணக்காரர்களோ நிலச்சுவான்தார்களோ, முதலாளிகளோ மற்றும் யாராயிருந்தாலும் அனைவரும் சவுக்கியம் அனுபவிப்பதற்குக் காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் நாட்டில் தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கும், வியாபாரம் வளர்வதற்கும், காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் இருந்தும் அவர்கள் நிலை என்ன?

இருக்க இடமில்லாமலும் உடுக்க உடை யில்லாமலும், உண்ண உணவில்லாமலும், பெண்டு பிள்ளை களுடன் பட்டினிக் கிடந்து நோயால் வருந்தி பரிதவிப் பதுதான் அவர்கள் கண்ட பலன்.

இன்று ஒவ்வொரு ரயில்வே கம்பெனிகளிலும் ஆட்களைக் குறைத்து வருவதுடன் இன்னும் குறைப் பதற்கும் திட்டம் போட்டு வருகிறார்கள். இது போலவே அரசாங்கத்தின் அதிகாரத்திலுள்ள தொழிற்சாலை களிலும் தனிப்பட்ட முதலாளிகளின் ஆதிக்கத்திலுள்ள தொழிற் சாலைகளிலும் ஆட்களை குறைத்து வருகிறார்கள்.

ஆனால் இக் கம்பெனிகளிலும் தொழிற்சாலைகளிலும் உள்ள ஆயிரம், இரண்டாயிரம் என்று சம்பளம் பெறும் உத்தி யோகஸ்த்தர்களைக் குறைக்கக் காணோம். ஏழைத் தொழி லாளர்களின் வயிற்றில் மண்போட்டு பெரிய உத்தியோகஸ் தர்களின் பணப் பெட்டிகள் நிரப்பப்படுகின்றன.

தொழிலாளிகளைக் குறைப்பதைக் காட்டிலும், தொழில் நேரத்தைக் குறைத்து, விடுமுறை நாளை அதிகப்படுத்தி சம்பளத்தைக் குறைத்துக் கொடுப்பதன் மூலம் தொழிலாளர் களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுவதைத் தற்கால சாந்தியாக நிவர்த்திக்கலாமென்று தொழிலாளர்களின் தலைவர்கள் சிலர் கூறும் யோசனை சிறந்த யோசனையே யாகும்.

இந்த யோசனைக்கு ஏனைய தொழிலாளர்களும் சம்மதிப்பதாகவும் அறிகின்றோம். இவ்வாறு செய்வதனால் தொழிலாளர்கள் அரை வயிற்றுக் கஞ்சியாவது குடித்துக் கொண்டிருக்க முடியும். இந்த முறையையாவது, தொழிலாளர் களைக் குறைத்துதான் ஆக வேண்டுமென்ற நிர்பந்தத்திற்கு உள்ளாகும் கம்பெனிகளும் அரசாங்கமும், முதலாளிகளும் கைப்பற்றுவார்களானால் ஒருவாறு தற்சமயம் அவர்கள் துயரம் நீங்கும் என்றே கூறலாம். ஆனால் இது நிறை வேறுமா என்றுதான் கேட்கிறோம்.

சுயராஜ்யத்திற்கு என்றும் சுதேசிக்கு என்றும் பொது பாஷைக்கு (இந்தி) என்றும் கூச்சல் போட்டு தேசாபிமானி களாக விளங்குகின்றவர்கள் யாரும் ஏழைத் தொழிலாளர்கள் விஷயத்தில் ஒன்றும் கவலை எடுத்துக் கொள்ள காணோம். அரசாங்கமும் அவர்கள் துயரை நீக்க முன்வரக் காணோம்.

இந்த நிலையிலேயே தொழிலாளர் துயரமும் வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டே போகுமானால் கடைசியில் பெரும் ஆபத்தாக முடியுமென்று எச்சரிக்கை செய்கின்றோம். ஆகையால் இப்பொழுதே முதலாளிகளும், மாகாண அரசாங்கங்களும், இந்திய அரசாங்கமும், தொழிலாளர்களின் துன்பத்தை நீக்கத் தாமதமின்றி முயற்சி எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

-குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.08.1932

Read more: http://viduthalai.in/page1/95752.html#ixzz3R9f0ujOy

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

மனிதன் பகுத்தறிவுவாதி; வளர்ச்சிக்கு உரியவன். அவன், வாழ்க்கையைச் சுமையாக, அமைத்துக் கொள்ளக் கூடாது. மனிதச் சுதந்திரத்திற்கும் கவலையற்று வாழ்வதற்கும் ஏற்ற முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும்... எனவே, மனித வாழ்வு பெண்டாட்டி கட்டிக் கொண்டு குட்டி போட்டுக் கொண்டு,

காப்பாற்ற மட்டும் என்று எண்ணாமல், மனிதச் சமுதாய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாடுபடுவதுதான் என்பதை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும்.

நம்மைப் பற்றி நாமேதான் கவலை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். நம் கையூன்றி நாமேதான் கரணம் போடவேண்டும். நமக்காக வாதாடுகிறவர்களோ நமக்கு உதவி செய்கிறவர்களோ யாரும் இல்லை.

நம்முடைய வேலை மிகக் கடினமானது. அதற்கு யாருடைய உதவியும் ஆதரவும் நமக்குக் கிடையாது. ஆனால் நாம் கடைசிவரை போராடித்தான் தீர வேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/95756.html#ixzz3R9fGtUHm

தமிழ் ஓவியா said...

காதல் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதத்தை கட்டாயமாக்க முடியாது
மதுரை உயர்நீதிமன்றம் கருத்து

மதுரை, பிப். 7_ காதல் திருமணத்தின்போது பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், வாழ்க்கை துணையை தேடிக் கொள்ள உரிமை உண்டு என கூறி யுள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர்நீதி மன்றம் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கவுரவ கொலைகள், காத லால் தற்கொலை, கடத் தல் போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவற்றை தடுக்க அரசு தவறிவிட் டது. காதல் என்ற பெய ரில் சிலர் வீட்டை விட்டு வெளியேறி, பிற ஜாதி யினரை திருமணம் செய்கின் றனர்.

திருமணம் முடிந்த சில மாதங்களில் வரதட் சணை கேட்டு கொடு மைப்படுத்தும் நிலையும் உள்ளது. இதனால் பெண் கள் பெருமளவு பாதிக்கப் படுகின்றனர். வன்முறை கூட ஏற்படுகிறது. காதல் திருமணம் செய்வோருக்கு பெற்றோரின் ஆதரவு கிடைப்பதில்லை.

தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட கவுரவ கொலை கள் நடந்துள்ள நிலையில், அதை தடுக்க அரசு உறு தியான நடவடிக்கை எடுக்க வில்லை. இவற்றை தடுக் கும் விதமாக ஒவ்வொரு கலப்பு திருமணத்தையும் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் பதிவு செய்யக் கூடாது எனவும், பெற்றோர் உடன் வருவதை கட்டா யப்படுத்த வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசா ரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், எஸ்.தமிழ் வாணன் ஆகியோர், அர சியலமைப்பு சட்டப்படி ஒருவருக்கு, அவரது வாழ்க் கைத் துணையை தேடிக் கொள்ள உரிமை உண்டு. இதில் நீதிமன்றம் தலை யிட முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என உத்தரவிட்டனர்.

Read more: http://viduthalai.in/page1/95793.html#ixzz3R9fcWiwq

தமிழ் ஓவியா said...

ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப் படுகின்றதோ அவைகளையெல்லாம் மாற்றுவதுதான் உண்மையான சுயமரி யாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர, அரசனுக்குப் பதிலாகப் பார்ப்பானை ஏற்றி வைப்பதும், பார்ப்பானுக்குப் பதிலாகப் பணக்காரனைப் பட்டத்தில் வைப்பதும் ஒரு நாளும் சுயமரியாதையாகாது; இவையெல் லாம் சுயநல மரியாதையேயாகும்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page1/95752.html#ixzz3R9fyqc2G

தமிழ் ஓவியா said...

டில்லி தேர்தல் பிஜேபிக்குக் கிலி

டில்லியில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபி தோற்கப் போகிறது என்கிற கிலி, பிஜேபி தலைவர்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டு இருக்கிறது என்பதற்கு இதோ இரு எடுத்துக்காட்டுகள்.

டில்லி தேர்தல் வெற்றி, மோடி அரசின் செயல்பாட்டை அங்கீகரிக்கும் தேர்தல் இல்லை

- மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு

நடைபெறும் டில்லி சட்டப் பேரவைத் தேர்தல் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அல்ல; எனவே, டில்லி தேர்தல் முடிவு எந்த விதத்திலும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசைக் கட்டுப்படுத்தாது

- பிஜேபி தலைவர் அமித்ஷா

இப்பொழுதே புரிகிறது தோல்வி ஜூரம் பிஜேபிக்கு வந்து விட்டது.

பிரகாஷ்காரத் கருத்து

மோடி அரசும், ஆர்.எஸ்.எசும் பின்னிப் பிணைந்து செயல்பட்டு வருகின்றன. இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்து பா.ஜ.க. மற்றும் மோடி அரசுக்கு எதிராகப் போராடுவதை முக்கிய பணியாக எங்கள் கட்சி கையில் எடுத்துள்ளது

- பிரகாஷ்காரத் சி.பி.எம். பொதுச் செயலாளர்

கடும் கோபமாம்!

பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா மீது பிஜேபி இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு கடும் கோபமாம். டில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தத் தலைவர்கள் கொடுத்த வேட்பாளர் பட்டியலை, குப்பைக் கூடையில் அமித்ஷா தூக்கிப் போட்டு விட்டாராம். எந்த நேரத்திலும் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், யஷ்வந்த் சின்கா போன்றவர்கள் வெடித்துக் கிளம்புவார்களாம் - இப்படி சொல்லுவது, பிஜேபிக்கு மிகவும் நெருங்கிய ஏடான தினமலர் தான் கூறுகிறது.

கருப்புப் பணம் தொடர்பாக மோடி கூறியவை தேர்தல் தந்திரமாம்!

அமித்ஷா ஒப்புதல் வாக்குமூலம் கருப்புப் பணம் தொடர்பாக மோடி கூறியவை அனைத்தும் தேர்தல் தந்திரம் மட்டுமே என பாஜக தலைவர் அமித் ஷா கூறியிருப்பது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவரிடம் கருப்பு பணத்தை மீட்டு அனைவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக மோடி கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அமித் ஷா மோடி பிரச்சாரத்தின் போது கூறியது தேர்தல் தந்திரம் மட்டுமே என்றும், கருப்பு பணத்தை மீட்டு வருவோம் என்பதை அவருக்கு உரிய பாணியில் மோடி குறிப்பிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

தமிழ் ஓவியா said...

கருப்புப் பணத்தை மீட்டு திட்டங்களில் முதலீடு செய்து ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மோடி திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். அதே நேரம் தங்கள் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்பதை மக்களே நம்பியிருக்க மாட்டார்கள் என்றும் அமித்ஷா தெரிவித்தார். தேர்தல் தந்திரத்திற்கும், வாக்குறுதிக்கும் வித்தியாசம் உள்ளது என்றார் அவர். பணம் கிடைக்காது என்று மக்களுக்கே தெரிந்திருக்கும் போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இது புரியவில்லை என்றால் அவர் மீது பரிதாப படதான் முடியும் என்றும் அமித் ஷா கூறினார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கருப்புப் பண விவகாரத்தில் பொய்யான வாக்குறுதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கைத் துரோகம் செய்ததற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாஜக-வின் அரசியல் சந்தர்ப்பவாதத்தால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.

டில்லி தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம், மது, பிரியாணி விருந்து

பா.ஜனதாமீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு டில்லி சட்டமன்ற தேர்தல் பிரசாரம் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பா.ஜனதா, ஆம்ஆத்மி கட்சி களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சியினரும் ஒருவரையொருவர் மாறி மாறி புகார் கூறுகிறார்கள். இந்த நிலையில் பாரதீய ஜனதா வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவதாக ஆம்ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான அசுதோஸ் கூறியதாவது:

பாரதீய ஜனதா கட்சி வாக்காளர்களுக்கு பணம், மது, பிரியாணி போன்றவைகளை கொடுப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஏழை வாக்காளர்களின் அடை யாள அட்டையும் கைப்பற்றி வைத்து இருக்கிறார்கள்.

ஆம்ஆத்மிக்கு வாக்களிக்க கூடாது என்று வாக்காளர்களை மிரட்டி அச்சுறுத்துவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதற்கான விளைவுகளை அவர்கள் பின்னர் தாங்கி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆம்ஆத்மியின் இந்த புகாருக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.

அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் நரசிம்மா இதுபற்றி கூறியதாவது: பணத்தை வாங்கிக் கொண்டுதான் ஆம்ஆத்மி தேர்தல் போட்டியிடுவதற்கு வாய்ப்பை கொடுத்தது. ஆம்ஆத்மியின் புகாருக்கு நாங்கள் பதில் சொல்லத் தேவையில்லை. ஹவாலா பணம் மோசடி செய்து கட்சியை நடத்துபவர்களுக்கு எங்களை பற்றி சொல்ல எந்த தகுதியும் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/95646.html#ixzz3R9gLW5FD

தமிழ் ஓவியா said...

மதவெறித் தாக்குதல்களைப் பார்த்திருந்தால் காந்தியார் அதிர்ச்சி அடைந்திருப்பார்

உண்மைகளை மறைத்து வரலாற்றைத் திரிக்கும் வேலைகளைச் செய்வதா?

மத்திய பிஜேபி ஆட்சிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மீண்டும் ஓங்கிக் குட்டு!

வாசிங்டன், பிப்.6- இந்தியாவில் சிறுபான்மை யினர் மீதான தொடர் தாக்குதல்கள் அதிகரித் துள்ள நிலையில் வியா ழனன்று அமெரிக்க அதி பர் பராக் ஒபாமா சமீப காலமாக இந்தியாவில் நடந்து வரும் சிறுபான் மையினர் மீதான தாக்கு தல்களை காந்தியார் இன்று இருந்து பார்த்திருந்தால் அவர் மிக கடுமையாக அதிர்ச்சி அடைந்திருப் பார் என்று கூறினார். அமெரிக்க அதிபரின் வெள்ளைமாளிகையில் அனைத்து மத நல்லிணக்க சிறப்புக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த கூட் டத்திற்கு தலைமையேற்று பேசிய பராக் ஒபாமா கூறியதாவது: இங்கு உலகின் முக்கிய மதபிரமுகர்கள் கலந்து கொண்டு மத நல்லிணக் கத்தை பேணமுன் வந்திருக்கிறீர்கள். இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமானதாகும், தற்போது உலகத்தின் பல்வேறு இடங்களில் மத மோதல்களும் மதங்களின் பெயரால் கொலைகளும் நடந்து கொண்டு வருகின் றன. மத போதனைகள் பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்த மட்டுமா போதித்திருக்கின்றன?

இந்தியாவின் இன்றைய நிலை உள்ள!

நானும் எனது மனைவி மிச்சேலும் கடந்த முறை இந்தியா சென்றிருந்தோம். மிகவும் அழகான நாடாக காட்சியளித்தது, அனைத்து மதத்து மக்களிடையே மத நல்லிணக்கம், சகோதரத் துவம்,சமூக அமைதி மற்றும் மதசகிப்புத்தன்மை நிலவியது, அது ஒரு அழ கான நாடாக இருந்தது என்பதை உள்ளார்ந்து ஒப்புக் கொள்கிறேன். ஆனால், இன்றைய நிலை என்ன?

சமீபகாலமாக இந்தியா வில் மத நல்லிணக்கம் என்பது மிகவும் மோச மான ஒரு செயலாக பார்க்கப்படுகிறது. அங்கு பொது இடங்களில் வழங்கப்படும் பேச்சுக்கள் அனைத்தும் மதச் சார் பின்மைக்கு சவால்விடும் பேச்சாக அமைந்துவிட் டன. இது இந்திய மக்களுக்கு மோசமான ஒரு சூழ்நிலையை உருவாக்கும் படி அமைந்துவிட்டது. அங்கு மதங்களிடையே பேதங்கள் எழத் துவங்கி விட்டன இதை உறுதி செய்யுமளவிற்கு பல்வேறு சம்பவங்கள் சமீபகாலமாக நடந்தேறி விட்டன.

பல் வேறு மதங்கள், கலாச் சாரங்கள், மொழிகள், இனங்கள் கொண்ட மக்கள் வாழும் ஒரு நாட்டில் மதச்சார்பின்மை சீர்கேடு என்பது மிகவும் தலைகுனியவைக்கும் ஒரு செயலாகும், உலகிற்கு எடுத்துக்காட்டாக இருந்த ஒரு நாடு இன்று மதச் சகிப்புத் தன்மையற்று உள்ளது. சமீப காலமாக இந்தியாவில் சிறுபான்மை யினர் மீதான தாக்குதல்கள் நடந்தேறுகின்றன. இது தொடர்ந்து நடப்பதுதான் தான் வேதனைக்குரியதாக ஒற்றுமையை வேண்டு பவர்கள் கருதுகிறார்கள். காந்தியார் இந்த காலங் களில் இந்தியாவில் இருந் திருந்தால் மனம் வேத னைப்படும் அளவிற்கு அதிர்ச்சியடைந்திருப்பார்!

.மனித நேயம் கெடும் போதெல்லாம் உலகம் பல்வேறு வேதனையான நிகழ்வுகளைச் சந்தித்துள் ளது. இதை நாம் வரலாற் றின் மூலம் படித்திருக் கிறோம், தற்போது கண் கூடாக பார்க்கும் சூழலும் உள்ளது. நாம் மக்களி டையே ஒற்றுமையை நிலைநிறுத்த காலம் கரு தாமல் பணியாற்ற வேண் டும். இது நமது கடமையும் கூட, நாம் ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது மக்களை என்ணி பணியாற்றக் கூடாது, இந்த உலகில் வாழும் அனைத்து மக் களின் நலனுக்கான மனித நேயத்துடன் பாடுபட வேண்டும். மக்கள் நலனுக் காக பாடுபட்டு உயிர் துறந்தவர்களின் எண்ணங் களும் இதுவாகத்தான் இருந்தது. இயேசு சிலு வையில் அறையப்பட்டார் என்றால் அவர் உயிர் துறக்கும் வரை மனித நேயத்திற்காக பாடுபட் டார் என்பதை இங்கே நினைவு கூர விரும்பு கிறேன். விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி மூடநம்பிக்கைகள்
ஆனால், இன்று நடப் பது என்ன? அறிவியல் சாதனங்களைப் பயன் படுத்தி மக்களை முட்டா ளாக்கும் செயல்கள் அதி கரித்துள்ளன. முட்டாள் தனமான பதிவுகளைப் பதிப்பதன் மூலம் உண்மை களை மறைத்து வரலாற் றைத் திரிக்கும் வேலை களை இணையதளங்கள் மூலம் செய்து கொண்டு இருக்கின்றனர். சமூக வலைதளங்களில் ஒரு பதிவேற்றுவதன் மூலம் மக்களை தங்களால் வசீகரித்துவிடமுடியும் என்று எண்ணுகின்றனர். ஆனால், இது போன்ற செயல்களால் மதச் சகிப்புத் தன்மை குறைந்து அமைதி கெட்டுவிடும் என்பதை அவர்கள் மறந்து விட்டனர்.

தமிழ் ஓவியா said...


மனிதநேயத்திற்காக பணியாற்ற வேண்டும்

இவையனைத்தையும் நாம் மனதில் கொண்டு மனிதநேயத்திற்காக பணி யாற்றவேண்டிய கட்டா யத்தில் உள்ளோம். நமது இந்த நோக்கம் மிகவும் விரைவாக நடந்தேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நான் நம்பிக் கையுடன் இருக்கிறேன், மனித நேயத்திற்காக நாம் செய்யப்போகும் காரியங் களின் உடனடியாக சில கொள்கைகளை வகுக்க வேண்டியுள்ளது. நமது நல்லெண்ண செயல்பாடு கள் உடனடியாக இல்லா விட்டாலும் கட்டாயம் உலகத்தில் அமைதியை உருவாக்க வழிவகுக்கும் என்று முழு நம்பிக்கையு டன் கூறுகிறேன் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது உரையில் கூறினார்.

தற்போது மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். ஒருபகுதியில் உணவிற்கு வழியில்லாமல் மரணிக்கும் நிலை நிலவுகிறது, நாம் அவர்களுக்கு உதவவேண் டும். நம்பிக்கை தான் நம்மை உயிர்வாழ வைக் கின்றது, ஆனால் இந்த நம்பிக்கையை வைத்து அதை திரித்து மக்களை குழப்புபவர்களால் மக்கள் மிகவும் மோசமாக பாதிக் கப்பட்டுள்ளனர், அவர் களுக்கு இந்த திரிபுவாதம் ஒரு ஆயுதமாக படுகிறது. அதை அவர்கள் தந்திர மாக பயன்படுத்துகின் றனர். அதற்கு மக்களும் பலியாகின்றனர். மதத் தின் பெயரால் உலகம் முழுவதும் நடக்கும் தாக் குதல்களைப் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது கடவுள் பெயரை மனித நேயத்தை சிதைக் கும் செயலுக்காக பயன் படுத்த வேண்டாம் என்று கூறினார். பராக் ஒபாமாவின் இந்த உரையின் போது உலகின் அனைத்து மதங்களைச்சேர்ந்த சுமார் 3000 முக்கிய தலைவர்கள் குழுமி இருந்தனர்.

மேலும், ஒபாமா இந்தியாவைப் பற்றிக்கூறும் போது கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என குறிப்பிட்டுக்கூறாமல் அனைத்து சிறுபான்மை யினருமே பாதிக்கபட்டுள் ளனர் என்று குறிப்பிட் டது இங்கு கவனிக்கத்தக்க தாகும். (ஆதாரம்: பிபிசி) சமீபத்தில் இந்தியா வந்த பராக் ஒபாமா சிரி கோட்டையில் பேசிய பேச்சு மோடி அரசை பற்றியது அல்ல என நேற்று பாஜக அரசு பத்திரிகையில் செய்தியை வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தி வெள்ளை மாளி கையை மேற்கோள் காட்டி கூறியதாக செய்திக்குறிப் பில் கூறப்பட்டிருந்தது. அந்தச்செய்தியின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ள நிலையில் ஒபாமா நேரடி யாக இந்தியாவில் மதச் சார்பின்மை சீர்கெட்டு விட்டது என்று கூறியி ருப்பதன் மூலம் பாஜக அரசு பொய்யான செய் திகளை அவர்களது அமெரிக்க கையாட்கள் மூலம் பரப்பிவருகிறது என்பது உண்மையாகி விட்டது.

Read more: http://viduthalai.in/page1/95645.html#ixzz3R9gb4C1a

தமிழ் ஓவியா said...

சட்டம் போட்டால் போதுமா?

வாக்காளர்களுக்குப் பணமோ, பரிசுப் பொருளோ கொடுத்தால் இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ஏற்கெனவே நடைமுறையில் இருந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஓராண்டு என்றுதான் இருந்தது - இப்பொ ழுது ஈராண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இது வரவேற் கத்தக்கதுதான் என்றாலும் இதனால் மட்டும் எதிர் பார்க்கும் பலன் கிடைத்து விடுமா என்பது சந்தேகமே!

இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் பணம் பட்டுவாடா நடைபெற்றதே.

அதற்காக நடைமுறையில் இருந்து வந்த சட்டத்தின்படி ஓராண்டு தண்டிக்கப்பட்ட வர்கள் யார்? அப்படி ஒரு பட்டியல் இருக்கிறதா?

சில நேரங்களில் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தி கூட வெளிவந்ததுண்டு.

கைது என்ற செய்தி வெளிவந்ததே தவிர, நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, தீர்ப்பின் அடிப்படையில் யாராவது தண்டிக்கப்பட் டார்களா? இல்லை என்கிற போது இந்தச் சட்டத்தின் மூலம் மட்டும் கையூட்டுக் கொடுப்பது தடுக்கப்பட்டு விடும் என்று எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?

(பணத்தை நேரடியாகப் பட்டுவாடா செய்வதற்குப் பதில் டோக்கன் கொடுக்கிறார்களாம் - சட்டத்தை உடைக்க வழியா தெரியாது?).

பெரும்பாலும் ஆளும் கட்சியினர் தான் வாக் காளர்களுக்குப் பணம் கொடுப்பதில் முன்னணி வரிசையில் அணிவகுத்து நிற்கின்றனர். அப்படி இருக்கும் பொழுது காவல்துறை அவர்களைக் கைது செய்யும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? கச்சித மாகப் பணம் பட்டு வாடா செய்ய காவல்துறை பாது காப்பாக இல்லாமல் இருந்தாலே பெரிய காரியம்தான்.

நடந்து முடிந்த 16ஆவது மக்களவைத் தேர்தலில், தமிழ் நாட்டில் தேர்தல் ஆணையமே 144 தடை உத்தரவு பிறப்பிக்கச் செய்து, ஆளும் கட்சி, வாக்காளர் களுக்குப் பணம் பட்டுவாடா செய்ய நடை பாதை திறந்துவிட வில்லையா?

தேர்தல் முடிந்தவுடன் தமிழகத் தேர்தல் ஆணையர் என்ன சொன்னார்? வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது உண்மை. அதனைத் தடுக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையரே வெளிப் படையாக ஒப்புக் கொண்டாரே. அவர்மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ன?

இந்த அதிகார வர்க்கத்தை வைத்துக் கொண்டு எந்த சட்டம் போட்டாலும் வாக்காளர்களுக்கும் பணம் கொடுப்பதை எப்படித் தடுக்கமுடியும்?

நாட்டில் தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம் எந்தத் தரத்தில் இருக்கின்றன? என்பது கவனத்தில் கொள்ளப் பட வேண்டியதுதான்.

வாக்காளர்களே, வாக்களிக்க பணத்தை எதிர்பார்க் கும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளதா இல்லையா? பணம் கொடுப்பவர்கள் தான் இதற்குக் காரணமா? வாங்குப வர்கள் தான் காரணமா? என்பது பட்டிமன்றத்திற்குப் பொருத்தமான தலைப்பாக இருக்கக் கூடும்.

முறையான ஒரு சான்றிதழைப் பெறுவதாக இருந் தாலும் அடிமட்டத்திலிருந்து இலஞ்சம் தேவைப்படு கிறது ; இப்படி சம்பந்தப்

பட்ட அலுவலகங் களில் அறை போட்டு சதா அந்த வேலையில் ஈடுபடும் நிலை இருக்கின்றதே!

கடவுளுக்குக் கூட லஞ்சம் (நேர்த்திக்கடன்) கொடுத்தால் தான் வரம் கிடைக்கும் என்ற கேவலமான மனப்பான்மை தாண்டவமாடும் நாடு இது என்பதை மறந்து விட வேண்டாம்!

குடும்பக் கட்டுப்பாட்டுக்கு விளம்பரம் செய்தது போல எங்கு நோக்கினும் பிரச்சார ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டாமா? தொலைக் காட்சிகளில் அதற்கென நேரத்தை ஒதுக்கித் தலைவர் களையும், அறிஞர்களையும், சமூகப் பொறுப்பு வாய்ந்த சான்றோர்களையும் அழைத்துப் பேச வைத்தால் என்ன? அது ஓரளவுக்கு தாக்கத்தை உண்டாக்கத்தான் செய்யும். தந்தை பெரியார் பொதுக் கூட்டங்களில் மக்களைப் பார்த்து ஒரு கேள்வியை நாக்கைப் பிடுங்குமாறு கேட்பார்.

நீ பணம் வாங்கிக் கொண்டு தானே ஓட்டுப் போட்டாய்? உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் இலஞ்சம் வாங்கினான் என்று சொல்லுவதற்கு உனக்கு யோக்கிதை ஏது? உரிமை ஏது? முதல் போட்டவன் சம்பாதிக்க மாட்டானா? என்ற அடிப்படைக் கேள் வியை பொதுமக்களைப் பார்த்துக் கேட்பார் - அதற்கும் கை தட்டல் கிடைக்கும்.

தந்தை பெரியாரின் மற்றொரு கேள்வி மிகவும் முக்கியமானது. தேர்தலில் போட்டியிடும் வேட்பா ளர்கள் இவ்வளவுப் பணம்தான் செலவு செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது; தேர்தலில் போட்டி யிடுபவர்கள், அவர்கள் வெற்றி பெற்றவர்களாக இருந்தாலும், தோல்வியுற்றவர்களாக இருந்தாலும் சரி, தேர்தலில் செலவழித்த உண்மையான கணக்கைத்தான் காட்டுகிறார்களா? என்ற கேள்விக்குப் பிரதமராக இருந்தாலும், நாணயமாகப் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.

பணம் பெற்றுக் கொண்டுதான் செய்தி வெளியிட முடியும் என்கிற ஒழுக்கக்கேடு நிர்வாணமாக கூத்தாடும் ஒரு நாட்டில் வெறும் சட்டங்கள் ஏட்டுச் சுரைக் காயாகத்தான் இருக்க முடியும்.

பக்திப் பிரச்சாரத்துக்காக ஒதுக்கப்படும் காலத் தையும் கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கி வைத்து பொது ஒழுக்கத்தைப் பரப்புவதற்காக செயல்படட்டும்.

கண்டிப்பாக நல்லதோர் தாக்கம் ஏற்படத்தான் செய்யும்.

Read more: http://viduthalai.in/page1/95650.html#ixzz3R9guC1tj

தமிழ் ஓவியா said...

கடவுள்பற்றி துணுக்குத் துக்கடா! சித்திரபுத்திரன்

சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி, எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்க மாட்டேன் என்கிறானே.

ராமன்: அதுமாத்திரம் அதிசயமில்லப்பா, பசியா வரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக் கிடக்கிறார். ஒருவன் கூட ஒருகை கூழ் ஊத்த மாட்டேங்கிறானே.

சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?

ராமன்: இதுதான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?

ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்ய முடியவில்லை என்றால் இது முட்டாள்தனமான சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?

அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட்டம் இருக்கிறதோ அதேபோல் சர்வ சக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனை நம்பச் செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.

- விடுதலை (22.2.1972)

தமிழ் ஓவியா said...

சாக்ரட்டீஸின் பொன்மொழிகள்

தங்கத்தைக் கண்டுபிடிக்கச் சுரங்கத்திற்குள் நுழைகிறவன் மரியாதையை பார்த்தால் முடியுமா? தங்கத்தை விட மேலான பொருளை அதாவது நீதியைத் தேடி கண்டுபிடிக்க நாங்கள் புறப்பட்டிருக்கிறோம். இதில் மரியாதையை பார்த்துக் கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடு வோமா?
***************
நீதிக்கு நான் மிக உயர்ந்த ஸ்தானம் கொடுக்கிறேன். அதாவது எந்த விஷ யத்தை அந்த விஷயத்திற்காகவும் அதன் விளைவு களுக்காகவும் நேசிக்கிறோமோ அந்த மாதிரியான விஷயங்களில் ஒன்றாக நீதியை நான் கருதுகிறேன்.
***************
ஒரு மனிதனுக்கு எந்தத் தொழிலைச் செய்ய இயலுகையிலேயே ஒரு திறமை இருக்கிறதோ அந்தத் தொழிலை மட்டும் அவன் செய்து கொண்டு போனால் நல்லது.
***************
விபரீதமான குற்றங்களைச் செய்கிற கடவுளர்களை சிருஷ்டித்து அந்தக் கடவுள்களின் கதைகளைச் சிறுவர் களுக்கு சொல்லிக் கொடுப்போமானால் அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு விடுகிறார்கள் தெரியுமா? கடவுளர்களே பல குற்றங்களை செய்திருக்கிறபோது நாமும்தாம் செய்தாலென்ன! என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.

இந்த மாதிரியான கதைகளை நாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது. தவிர, ஒரு தெய்வத்திற்கு விரோதமான மற்றொரு தெய்வம் சதி செய்வதாகவோ, யுத்தம் செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லலாகாது. ராட்சதர்களோ அல்லது தேவர்களோ ஒருவருக் கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது.

மனிதர்கள் ஒருவரை யொரு வர் நேசிக்க வேண்டுமென்றும், ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், இதை போன்ற நீதிகளைப் புகட்டுகிற கதைகளையே சொல்ல வேண்டும்.
***************
அதிகமான செல்வமோ அதிகமான வறுமையோ தங்கள் ராஜ்யத்திற்குள் வரவொட்டாதபடி அரசர்கள் பாதுகாக்க வேண்டும். அதிக செல்வத்தினால் ஆடம்பரத் தன்மையில் சோம்பேறித்தனமும் உண்டாகும். அதிக வறுமையினால் புரட்சியும், இழிதகைமையும், துரோகமும் ஏற்படும்.

Read more: http://viduthalai.in/page1/95691.html#ixzz3R9hd1o7p

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கிரகங்கள்

நமது உடலை சரியான முறையில் இயற்கை யாகவே பராமரித்து வரும் எச்சில், கல்லீரல், இரைப்பை நீர், குடல் நீர், கண் நீர் சுரப்பி, வியர்வைச் சுரப்பி போன்ற நாள முள்ள சுரப்பி நீர் களை ராகு - கேதுவை தவிர ஏனைய ஏழு கிரகங் களும் கட்டுப்படுத்துகின் றன என்று மருத்துவ ஜோதிடர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித் துள்ளனர்.

- தினகரன் ஜோதிட மலர் 4.2.2015

ராகு, கேது என்ற கிரகங்கள் இல்லை என் பது வானியல் அறிவியல் சொல்லும் ஆணித்தர மான கருத்து.

மருத்துவ ஜோதிடர்களாமே - அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? மருத்துவமும் ஜோதிட மும் எதிர்முனைகள் அல்லவா!

Read more: http://viduthalai.in/page1/95626.html#ixzz3R9iCVrGz

தமிழ் ஓவியா said...

அதிர்ஷ்டத்தை நம்பும் மோடி
நாட்டிற்கே பெரும் அவலம்

நிதிஷ்குமார் சாட்டை

பாட்னா, பிப்.5_ டில்லி தேர்தல் கூட்டத் தில் பேசிய மோடி, நான் அதிர்ஷ்டக்காரன், நான் எந்த நாட்டிற்கு சென்றா லும் அந்த நாட்டு அதி பர்கள் என்னுடன் பேசு வதை பெருமையாக நினைக்கிறார்கள் என்று கூறினார். இது குறித்து பேசிய நிதீஷ்குமார் அதிர்ஷ் டத்தை நம்பி ஆட்சி நடத்தும் ஒரு நபரை நாம் தேர்ந்தெடுத்திருக்கி றோம். இது நாட்டிற்கே அவலம் என்று கூறினார். பிகார் மாநில முன் னாள் முதல்வர் நிதீஷ் குமார் பட்னாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது:

மத்தியில் பாஜக ஆட் சிக்கு வந்தது முதல், மத வாதம் தலைதூக்கிவிட் டது. மதவாதப் பேச்சுக் கள் ஆளும் கட்சி தலை வர்களும் சரி அவர்களை வழிநடத்தும் இந்து அமைப்புகளின் தலைவர் களும் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகின்றனர். மேடை முழுக்க வளர்ச்சி வளர்ச்சி என்று பேசிய மோடி இந்த மதவாத பேச்சுக்களுக்கு மறுப்பெ துவும் கூறாமல் அமைதி காத்து வருகிறார். மத வாதம் ஒருபுறம் பெருகிக் கொண்டு இருக்கும்போது நாட்டின் வளர்ச்சி என் பது எந்த வகையில் சாத்தியமாகும்? இந்த சாதாரண சிந்தனை கூட இவர்களிடம் இல்லை. அதே வேளையில் நாடு முழுவதும் உள்ள சிறு பான்மையினரை அச் சுறுத்தும் வகையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களின் பேச்சுக்கள் அமைந்துள்ளன. இளைஞர்களை எங்கே இழுக்கிறார்கள்?

ஒருபுறம் இந்த அரசு இளைஞர்களை மதவாதப் பாதையில் திருப்பிவிடப் பார்க்கிறது, மறுபுறம் சமூகத்தில் சிறுபான்மை யினருக்கு எதிரான பேச் சுக்கள் தீவிரமாகி வரு கின்றன.

மோடி பல்வேறு சர்ச்சைக்குரிய பேச்சுக் களைப் பேசி வருகிறார். அவர் ஒரு பெரிய ஜன நாயக நாட்டின் பிரத மரைப் போன்று பேச வில்லை. ஏதோ மேடைக்கு மேடை மக்களைக் கவர்ந்து பேசும் ஒரு பேச் சாளரைப் போல் பேசி வருகிறார். சமீபத்தில் அவர் நான் அதிர்ஷ்டக் காரன் என்னை மிகப் பெரிய வெற்றி வாய்ப்புத் தேடி வருகிறது என்கிறார். நான் செல்லும் நாட் டின் பெரிய தலைவர்கள் எல்லாம் என்னை புகழ் கிறார்கள் என்று தனது முதுகிலேயே தட்டிக் கொள்கிறார். இப்படி அதிர்ஷ்டத்தின் பேரில் நாட்டை வழி நடத்தும் ஒருவர் பிரதமராக இருப் பது நாட்டிற்கே அவல மாகும்.

சமீப காலமாக தொடர்ந்து இந்துக்கள் 10 குழந்தை பெற்றுக் கொள் ளுங்கள், 5 குழந்தை பெற் றுக் கொள்ளுங்கள், 4 குழந்தை பெற்றுக்கொள் ளுங்கள் என்று தொடர்ந்து பாஜகவினர் பேசிவருகி றார்கள். தற்போதைய சூழலில் ஒரு குழந்தை யைப் பெற்று வளர்த்து அவர்களை ஆளாக்குவ தற்கே பெரும் சிரமம் ஏற் படுகிறது, இந்த நிலையில் சிறிதும் சிந்திக்காமல் 10 குழந்தைகளை பெறச் சொல்கிறார்கள். இப்படி மக்கள் மீது அக்கறையில் லாமல் மதரீதியாக பேசும் இவர்கள் முதலில் 10 குழந்தைகளை பெற்று எடுத்துக்காட்டாக இருந்து பிறகு மக்களிடம் தங்களின் 10 குழந்தை களோடு சென்று பிரச் சாரம் செய்யட்டும் என்று தனது உரையில் கூறினார். குறிப்பு: திருஷ்டம் என்றால் பார்வை; அதிருஷ் டம் என்றால் குருட்டுத் தனம் பார்வையின்மை என்று பொருளாகும்.

மோடியின் நாசிசம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா டில்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த ஆண்டு மே 16ஆம் தேதிக்கு முன்பு வரை, உலகளவில் இந் தியா அங்கீகரிக்கப்பட வில்லை. தான் பிரதமர் ஆன பின்புதான் இந்தியா வுக்கு உலக அளவிலான அங்கீகாரம் கிடைத்துள் ளதாக பிரதமர் மோடி பேசுகிறார். இது அவரு டைய மோசமான மன நிலையின் அறிகுறி. இப்படி கூறுவதன் மூலம் இவர், முன்னாள் பிரத மர்கள் நேரு, வாஜ்பாய் போன்றோரை அவமதிக் கிறார்.

உலகத் தலைவர்களு டன் பேசும்போது நேரு, இந்திரா காந்தி போன் றோர் கவுரவமாகவும், பண்புடனும் நடந்து கொண்டனர். ஆனால், வானொலி நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபரின் முதல் பெயரான பராக் என்ற வார்த்தையை 23 முறை கூறினார் மோடி. பிரதமர் பதவிக்கு மோடி பெருமை சேர்க்கவில்லை. என்னைப் பொருத்தவரை அவரது ஸ்டைல் தேசிய அளவில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் அணிந்த கோட் உலகம் முழுவதும் விமர்சிக்கப் பட்டது.

நான், தனது என்ற தற்பெருமை மோடியிடம் அதிகம். நாட்டில் மீதம் உள்ள 125 கோடி பேரும் வாய்ப்பு அற்றவர்கள் என மோடி நினைக்கிறார். இதுதான் நாசிசம். மோடி யின் இந்த மோசமான மனநிலை கவலை அளிக் கிறது. தன்னிடம்தான் எல்லா அதிகாரமும் உள்ளது, நாட்டின் மூத்த விஞ்ஞானிகள், உயர் அதிகாரிகளை அவமதிக்க தனக்கு உரிமை உள்ளது என மோடி நினைக்கிறார். அதனால்தான் அக்னி ஏவுகணை உருவாக்கிய ராணுவ ஆராய்ச்சி மேம் பாட்டு மய்ய இயக்குநர் அவினாஷ் சந்தர், வெளி யுறவுத்துறை செயலர் சுஜாதா சிங் ஆகியோரை பதவிக் காலம் முடியும் முன்பே நீக்கியுள்ளார்.

ஏவுகணை விஞ்ஞானி அப்துல் கலாமுக்கு பாரத ரத்னா வழங்கி, அவரை குடியரசு தலைவர் ஆக்கி நாம் கவுரவித்தோம். தற் போது அதற்கு முரண் பாடாக நடந்து வருகிறது. இவ்வாறு ஆனந்த் சர்மா கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/95613.html#ixzz3R9iRtpsP

தமிழ் ஓவியா said...

விடுதலையின் சிறப்பு

எனக்கு வயது 55 ஆகிறது. மாணவப் பருவம் தொட்டு, விடாமல் விடுதலை படித்து வருகின்றேன். ஒருவர் நல்ல மனோதிடமும், பொது அறிவும், அரசியல் தெளிவும் பெற விடுதலையை மட்டும் படித்து வந்தாலே போதும் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.

ஈமோ என்ற ஓவியத் தொடர் ஆரம்பத்தில் சிறுவர்களுக்கான பகுதி என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். அதில் பெரியவர்களுக்கான செய்திகளும் உள்ளன என்பதை விடாமல் படித்து வரும்போது தெரிந்துகொண்டேன்.

விடுதலை வாசகர் ஒவ்வொரு வரும், தான் படித்த விடுதலை நாளிதழை, விடுதலை நாளிதழ் வாங்காத ஒருவரிடம் கொடுத்து படித்துப் பாருங்கள் என்று சொல்ல வேண்டும். ஏனைய நாளிதழ் களோடு ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்ல வேண்டும் என வேண்டிக் கொள்கின் றேன்.

- பெரி. காளியப்பன், மதுரை

Read more: http://viduthalai.in/page1/95610.html#ixzz3R9j2v6Ez

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கெட்ட நாள்

கோகுலாஷ்டமி கிருஷ்ணன் பிறந்த நாளாம். ராமநவமி ராமன் பிறந்த நாளாம். அப்படி இருக்கும்போது அஷ்டமி, நவமி கெட்ட நாள் என்று பக்தர்கள் பதறுவது ஏன்? கடவுள்கள் பிறந்தது கெட்ட நாளா?

Read more: http://viduthalai.in/e-paper/96004.html#ixzz3RRgOwKQj

தமிழ் ஓவியா said...

தக்கதோர் அறிவுரை

வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியால் நீங்கள் ஆணவம் கொள்ளக் கூடாது. பிஜேபியும் காங்கிரசும் தோல்வி அடைந்த தற்கு அதுவே காரணம். மக்கள் நம்முடன் இருப்ப தைத் தேர்தல் முடிவு உணர்த் துகிறது. மக்கள் நலனில் மட்டுமே கவனம் செலுத்தி, இனி உழைக்க வேண்டும். நமது முதல் நோக்கமே ஊழலை ஒழிப்பதுதான்!

- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கெஜ்ரிவால் அறிவுரை

Read more: http://viduthalai.in/e-paper/96004.html#ixzz3RRgWVge0

தமிழ் ஓவியா said...

தேர்தல் தோல்வி மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு கிடைத்த பரிசு அன்னா ஹசாரேவின் ஞானோதயம்


புதுடில்லி, பிப்.11_ டில்லி தேர்தலில் பாஜக விற்குக் கிடைத்த பலத்த தோல்வியை அடுத்து தனது கருத்தை அன்னா ஹசாரே தெரிவித்தார். மத்திய அரசால் குறுக்கு வழியில் இயற்றப்பட்ட நில உரிமைச் சட்டம் மற்றும் கருப்பு பணம் கொண்டு வருவோம் என்று கூறி அதனை செய்யத் தவறியது தான் தோன்றித்தனமாக முடிவு களை எடுத்தது போன்ற சர்வாதிகாரத்தனத்திற்கு கிடைத்த முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்த லுக்கு முன்பு கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்போம் என்று கிளம் பிய இரண்டு பேர்களில் ராம்தேவ் பாபா மற்றும் அன்னா ஹசாரே முக்கிய மானவர்கள். தேர்தல் காலத்தில் மோடியை மிகவும் புகழ்ந்த அன்னா ஹசாரேவிற்கு டில்லி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மோடி சர்வாதிகாரி யாகத் தெரிகிறார். மோடி கடந்த நாடா ளுமன்ற குளிர்காலக் கூட் டத் தொடரின் போது நாடாளுமன்றத்தில் விவாதத்தின் மூலம் சட்டத்தை நிறைவேற்றட துணிச்சலில்லாமல் அவசர சட்டமாக பல சட்டங்களைக் கொண்டு வந்தார்.

இதில் முக்கிய மானது நில அபகரிப்புச் சட்டம். இந்தச் சட்டத் தின் மூலம் விவசாயி களின் நிலத்தை அவர் களது அனுமதியின்றி எடுத்துக்கொள்ள முடியும் அதே நேரத்தில் விவசாய நிலங்களுக்கான இழப் பீட்டையும் அந்த நிறு வனங்கள் தர தேவை யில்லை என்ற பல்வேறு விசித்திரமான சட்டவிதி களுடன் நிலஅபகரிப்புச் சட்டம் அவசர அவசர மாக நிறைவேற்றப்பட்டது.

இந்தச்சட்டம் குறித்து அன்னா ஹசாரே கூறி யுள்ளதாவது: நமது நாடு சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் ஆகிவிட்ட்து. ஆனால் இன்றுவரை விவ சாயிகளின் தற்கொலை தொடர்கிறது. மோடி தலைமையில் புதிய ஆட்சி ஏற்பட்ட பிறகு விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்துள் ளது மிகவும் வேதனை தரக்கூடிய செய்தியாகும். புதிய நில உச்சவரம்பு சட்டம் விவசாயிகளின் தற்கொலையை மேலும் ஊக்கப்படுத்தும் தீமை யான சட்டமாக இருக்கும். மக்களின் நலனில் அக்கறை வைத்துள்ளவர் போல் தேர்தல் காலங் களில் நாடுமுழுவதும் சொல்லிகொண்டு திரிந் தார். ஆனால் அவரது நடவடிக்கைகள் விவசாயி களுக்குக் கடுமையான ஏமாற்றத்தைத் தந்து விட்டது. மோடி விவசாயி களை ஏமாற்றி விட்டார். நில அபகரிப்புச் சட்டத் தின் மூலம் விவசாயி களுக்கு தங்களின் நிலத் தின் மீதிருந்த உரிமை முற்றிலும் இல்லாமல் போனது. இது குடிமக் களுக்கு எதிரான சட்ட மாகும். சர்வாதிகார நாட் டில் தான் இதுபோன்று மனம்போன போக்கில் சட்டமியற்றப்படும். கடந்த காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சட் டமே மேல், அந்த சட்டத் தில் விவசாயியிடம் வாங்கிய நிலத்தில் அய்ந்து ஆண்டிற்குள் எந்த ஒரு தொழிற்சாலையும் தொடங்காவிட்டால் திரும்ப விவசாயியிடமே கொடுத்துவிடவேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த அரசு அதை நீக்கி முதலாளி களை முழுமையாக நில உடமையாளராக ஆக்கி விட்டது. ஆங்கிலேயர் களின் காலத்தில் கூட இப்படிப்பட்ட ஒரு கொடூர சட்டம் இல்லை. மோடி முதலாளிகளின் கைப்பாவையாகிவிட்டார். இது போன்ற விவசாயி களுக்கு விரோதமான சட்ட்த்தைக் கொண்டு வந்ததன் மூலம் மோடி மக்களாட்சியில்லாமல் சர்வாதிகார ஆட்சியை நடத்த தொடங்கி விட் டார் இதன் காரணமாக டில்லி மக்கள் மோடியை தூக்கி எறிந்துவிட்டார்கள் என கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/96000.html#ixzz3RRgdzCNU

தமிழ் ஓவியா said...

டில்லி யூனியன் பிரதேசத்தில்
இராமனுக்குப் பிறக்காதவர்கள் இவ்வளவு அதிகமா?

- ஊசி மிளகாய்

டில்லி சட்டமன்றத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் அமைப்புகளுக்கும், பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசுக்கும், அக்கட்சிக்கும் படுதோல்வியைப் பரிசாக, டில்லி வாக்காளர்ப் பெரு மக்கள் வழங்கி, விட்டனர். மதவெறி அரசியலும், அதிகாரப் போதை, ஆணவ உளறலும், இனிமேல் செல்லாது என்று உணர்த்தி உள்ளனர்.

அமித்ஷா - மோடி கூட்டு ஏதோ பெரிய அற்புத அதிசயங்களை யெல்லாம் தரக்கூடிய அலாவுதீனின் அற்புத விளக்கு என்பதைப் போன்ற (மாய்மாலப் பிரச்சாரப் புரட்டு என்ற) பெரிய பலூனை - கெஜ்ரிவால் என்ற சின்ன குண்டூசியைக் கொண்டு குத்தி ஒன்று மில்லாமல், பரிதாபத்திற்குரிய நிலையில் எதிர்க்கட்சித் தகுதியைக்கூடப் பெறாது வீழ்த்திப் பாடம் புகட்டி யுள்ளனர்!

நாடாளுமன்றத் தேர்தலில் மோடியால் இளைஞர் களுக்கும், ஏனையோருக்கும் தரப்பட்ட குளோரோபாம் - மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவில்லை; மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவும் கூடாது; அது மரணத்தில்தான் போய் முடியும்!

ஆகவே நாடு அழிவை நோக்கி - மதவெறி பழைய வர்ண தர்ம வெறி, சிறுபான்மையினரை மிக மோசமாக சித்தரித்து நடத்திய வன்கொடுமைக்கு வாக்கு பெட்டி வழியே இப்படி ஒரு மவுனப் புரட்சியை டெல்லி வாக்காளர்கள் நடத்திப் பாடம் போதித்துள்ளனர்.

5 முறை தேர்தல் பிரச்சாரத்தினை மும்முரமாக நடத்திய மோடி பிரச்சாரம் பரிதாபத்திற்குரிய நிலையில் 5 இடங் களைக்கூட பெற முடியாமல், வெறும் 3 இடங்களையே பெற்றுள்ளது!

கிரண்பேடி என்ற ஒரு பச்சோந்தி பதவி ஆசைப் பெண்ணை -விளம்பர வியாதியால் வீணே அலைந்த ஒரு பெண்ணை - ஒரே நாளில் கட்சித் தாவ வைத்து, எடுத்த எடுப்பிலேயே முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்து பெண்கள் வாக்குளைப் பெற இந்த மாயமான் காட்சியை நடத்தியும்கூட கை கொடுக்கவில்லை.

அவரே தோற்றுப் போனார்!

கூடு விட்டுக் கூடு பாயும் குணவதிக்கு வாக்குகளால் பாடம் கற்பித்துள்ளனர்!

அவருக்குத் திடீர் பிரோமோஷன் கொடுத்த ஷாவின் வித்தைகளின் விலா எலும்பு முறிக்கப்பட்டுள்ளது!

அதைவிட டில்லி வாக்காளர்கள் இந்தப் பெருத்த தோல்வியை பா.ஜ.க. அணிக்குத் தந்து, நன்றாகக் கரி பூசி விட்டனர்.

எவ்வளவு கேவலமான பேச்சு! - தேர்தல் பிரச்சாரத்தில்? ஒரு ஆர்.எஸ்.எஸ். கதாகாலட்சேப பெண்ணைக் கொண்டு வந்து மத்திய இணை அமைச்சராக்கியதோடு, அவரை டில்லி தேர்தல் பிரச்சாரத்திலும் களம் இறக்கினர் - பிரதமர்.

அந்தப் பெண் அமைச்சர் உதிர்த்த நாகரிகமான கருத்து - தேர்தல் பிரச்சார வரலாற்றில் எங்கே தேடினாலும் கிடைக்காது.

அருவருக்கத்தக்க ஆணவப் பேச்சு! பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லாம் இராமனின் பிள்ளைகள். மற்றவர்களுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லோரும் முறை தவறிப் பிறந்தவர்கள்

- எத்தகைய கேவலமான இழி நிலைப் பேச்சு! இப்படிப்பட்டவர் மோடி அரசில் இன்னமும் மந்திரியாக தொடருவதும், பிரதமர் மவுனமாக இருப்பதும் சரிதானா?

67 இடங்களைப் பெற்று வியக்கத்தக்க வெற்றி பா.ஜ.க.வுக்கு எதிராகக் கிடைத்துள்ளது. பா.ஜ.க. வெறும் மூன்றே இடங்களைத்தான் பெற்றுள்ளது! அப்படியானால்

ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பிரச்சாரகரான அந்தஅமைச்சர் அம்மாவின் கணக்குப்படி டில்லி யூனியன் பிரதேசத்தில் இராமனுக்குப் பிறந்தவர்கள் வெறும் மூன்று தொகுதிகளில்தான் உள்ளனர்.

மற்றவர்கள் எல்லாம்....? நமக்கே எழுதிடக் கை கூசுகிறது!

இப்படிப்பட்ட கழிசடைகளையெல்லாம் துடைப்பத் தால் கூட்டி வாரிக் குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டார்கள்!

வார்த்தைகளால் பதில் கூறாமல் வாக்குகளால் செயலில் காட்டி, மூக்கறுத்துள்ளனர்.

கெட்டிக்காரன் புளுகுக்கேகூட உச்ச வரம்பு எட்டு நாள்கள்!

ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங் புளுகுக்கு எட்டு மாதங்கள் போலும்!

இனியாவது ஆர்.எஸ்.எஸ். பல குரல் மன்னர்களின் ஆணவம் குறையுமா?

எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/e-paper/96005.html#ixzz3RRglr128

தமிழ் ஓவியா said...

மனித சமுதாயத்தில்...
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாம் உண்மையான பகுத்தறிவுவாதிகளாக ஆகிவிடுவோமேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும்.
(விடுதலை, 16.11.1971)

Read more: http://viduthalai.in/page-2/95991.html#ixzz3RRh0Ly44

தமிழ் ஓவியா said...

மதவாத பிஜேபிக்கு மரண அடி!


டில்லி தேர்தல் முடிவுகள் :

வெற்றி பெற்ற ஆம் ஆத்மிக்கு வாழ்த்துகள்

மதவாத பிஜேபிக்கு மரண அடி!

திராவிடர் கழகத் தலைவர் கருத்து

டில்லி தேர்தல் முடிவுகள்

டில்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் கருத்து வருமாறு:

மத்தியில் அமைந்த பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி நடக்கும் பா.ஜ.க. ஆட்சி கடந்த எட்டு மாதங்களுக்குமுன் வளர்ச்சி என்ற மயக்கப் பேச்சினாலும், காங்கிரஸ் ஆட்சியின்மீது ஏற்பட்ட கோபத்தாலும், பா.ஜ.க. மோடிக்குக் கிடைத்த வெற்றி என்பது நிலையானதா? அல்லது தற்காலிக வித்தைகளின் விளைவா?

என்பதுபற்றி ஆராய்ந்து எடை போட்டுச் சொல்லும் மக்கள் - வாக்காளர்கள் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் சரியான தீர்ப்பு வழங்கி விட்டனர். உலகமே தலைநகர் டில்லி சட்டமன்றத் தேர்தலின் முடிவை எதிர்பார்த்திருந்த வேளையில், அதுவும் மோடி அய்ந்து முறை தேர்தல் பிரச்சாரத்தை செய்து பார்த்தும், அவரது நண்பர் அமித்ஷா வித்தைகளைக் காட்டியும் விடியற்காலை மூன்று மணி வரை விழித்து வேலை செய்தும், கிரண்பேடி என்ற மாற்றுக் கட்சி முன்னாள் அய்.பி.எஸ். பெண் அதிகாரிக்கு பா.ஜ.க.வில் ஞானஸ்நானம் கொடுத்து, உடனேயே முதல்வர் வேட்பாளராக அறிவிப்பு செய்த நிலையிலும், எதுவும் டில்லியில் எடுபடவில்லை.

ஒற்றை இலக்கத்தில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்துவிட்டது ; மக்களை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மதவெறிக் கும்பலின் மாய்மால - வளர்ச்சி என்ற பிரச்சாரத்தினால் - மயக்கப் பிஸ்கட் கொடுத்து - ஏமாற்றியதற்கான விலை தான் இது என்பதை சுவரெழுத்துப் போல் தெளிவாகப் பிரகடனப்படுத்துகிறது.

இந்துத்துவா மதவெறிக்குக் கிடைத்த மரண அடியாகவே இந்தப் பா.ஜ.க. தோல்வி படலம். இது முடிவல்ல, ஒரு நல்ல தொடக்கமாகும்.கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சிதம்பரம்
10-2-2015

Read more: http://viduthalai.in/page1/95960.html#ixzz3RRiu0hGg

தமிழ் ஓவியா said...

உடன் பிறப்பு பெருங்கவிக்கோ நீடுவாழ்ந்து தமிழ்த் தொண்டு புரிக!

தமிழ் மொழி, இன உணர் வின் நடமாடும் உருவம் ஒருவர் உண்டு என்றால், அவர் நமது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும், பாசத்திற் கும் உரிய அருமைச் சகோதரர் மானமிகு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் ஆவார்கள்.

உலகம் முழுவதும் சுற்றிச் சுற்றி தமிழ் அமைப்புகள் நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம், கவியரங்கம், மாநாடுகளில் சீரிளமைத் திறத்தோடு சிறப்பாகக் கலந்துகொண்டு, தமிழர் திராவிடர் தம் பெருமையைப் பரப்பிடும் தொண்டறச் செம்மல் அவர்.

அவர் தமிழர் தம் உரிமைக்காக திராவிடர் இன உணர்வுக்காக பல்வேறு போராட்டங்களிலும், நடை பயணங்களிலும் தவறாது கலந்துகொண்ட வீர வரலாற்றுக்குரியவர்! எவரிடத்திலும் இருகரம் கூப்பி, அன்பு ஒழுக, பண்பு மிளிர உரையாடும் அருமை (சகோதரர்) உடன்பிறப்பு அவர்!

அவருக்கு அகவை 80 முத்து விழா என்பது மிகவும் பெருமைப்படும் நிகழ்வு ஆகும்.

அவர் மட்டுமல்ல, அவரது குடும்பமே திராவிடர் இயக்கக் கொள்கை உணர்வாளர்களின் சங்கமம் ஆகும்.

அவர் நலத்துடன் மேலும் பல்லாண்டு வாழ்ந்து தமிழ்கூறும் நல்லுலகத் தொண்டைத் தொடர வாழ்த்துகிறோம் - நெஞ்சார!

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/95972.html#ixzz3RRj4A4k4

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மனக் குழப்பம்

கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலை வில் உள்ள ஊர் திரு விடை மருதூர் இங்குள்ள மகாலிங்க சுவாமி கோவில் 20 ஏக்கர் பரப் பளவில் 4 கோபுரங் களைக் கொண்டது. இங்குள்ள நந்தி, தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியை விடப் பெரியது. இங்குள்ள மூகாம்பாள் சன்னதி வடநாட்டுப் பாணியில் இருப்பது தனிச் சிறப்பு.

இங்கு பட்டினத்தார் நீண்ட நாட்கள் தங்கி சிவனை வழிபட்டதால் அவருடைய சிலை இக்கோவிலில் உள்ளது. மனக் குழப்பம், மனநிலை பாதிப்பு உள்ளவர்கள் அசுவமேத பிரகாரத்தில் தங்கி நிவர்த்தி பெறலாமாம்.

இப்படி ஒவ்வொரு கோயிலுக்கும் மகிமை எழுதி வைத்தவர்கள் யார்? தங்கள் கோயி லுக்கு இப்படி ஓர் அற்புத சக்தியிருக்கிறது என்று பிரச்சாரம் செய்தால்தான் கோயில் வியாபாரம் ஜோராக நடக்கும்.

ஒரு கேள்வி: மகா லிங்க சுவாமி இருக்கும் அந்தத் திருவிடை மரு தூரில் மன நோயாளிகள், மனநலம் பாதிக்கப்பட்ட வர்கள் யாரும் இல்லையா? அல்லது மனநல மருத்துவர்கள்தான் இல் லையா?

Read more: http://viduthalai.in/page1/95964.html#ixzz3RRjCn7am

தமிழ் ஓவியா said...

எத்தனை முதல்வர்களோ!


என்னை முதல்வராக்கிப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை என் கட்சித் தொண்டர்களுக்கு இருக்கிறது! என்று சிறீரங்கம் இடைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு இன்னும் எத்தனை முதல்வர்களோ!

Read more: http://viduthalai.in/page1/95977.html#ixzz3RRjLBb3l

தமிழ் ஓவியா said...

மசூதி மற்றும் தேவாலயங்களில் இந்து சாமி சிலைகள் வைக்க வேண்டுமாம்

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஆதித்யநாத் யோகி ஆவேசக் கூச்சல்!

வாரணாசி பிப் 10 இந்த நாடு இந்து நாடு, இங்கு உள்ளவர்கள் இந் துக்கள் இங்கு இந்து கோவில்கள் மட்டுமே இருக்கவேண்டும், ஆகை யால் மசூதி, தேவாலயம் போன்ற வழிபாட்டுத் தலங்களில் இந்து தேவ தைகளின் சிலைகளை இந்து அமைப்புகள் வைக்கவேண்டும் அதை இந்துக்கள் வணங்க முன் வரவேண்டும் என்று ஆதித்திய யோகி கூறினார்.

மத்தியில் பாஜக ஆட்சிப்பீடத்தில் அமர்ந் ததில் இருந்து தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக பேசிவருகின் றனர். இந்து நாடு இந்து மக்கள், அகண்ட இந்து ராஜ்யம் என்ற பேச்சு ஒரு புறம் தொடர்கிறது, மறு புறம் மதமாற்றம் சிறு பான்மையினர் மீதான தாக்குதல்களும் தொடர் கிறது, இவை அனைத்தும் ஆட்சியில் இருக்கும் பாஜக எம்பிக்கள் கூறி வருகின்றனர். இதனிடையே வாணா சியில் விஷ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஆத்தியநாத் ஜோகி பேசிய போது கூறியதாவது: இது இந்து நாடு இங்கு இந்துக்கள் மட்டுமே இருக்கவேண் டும், மக்காவில் யாராது வேற்று மதத்தவர் செல்ல முடியுமா?

வாடிகனில் வேறு மதத்தவர் செல்ல முடியுமா? ஆனால், இந்தி யாவில் யாரும் வருகி றார்கள், இதைக் கேட்க இதுவரை இருந்து வந்த அரசுகளுக்குத் துணி வில்லை. தற்போது இந்துக்களுக்கான அரசு அமைந்துள்ளது. இதை மிகவும் மகிழ்ச்சியுடன் இந்திய சாமியார்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். நான் வாரணாசி விஷ்வநாதர் கோவிலுக்கு வரும் போதெல்லாம் வரும் வழியில் உள்ள மசூதி என்னை பார்த்து நகைக்கிறது, நான் அவ மானத்தால் தலைகுனிந்து போகிறோன், இந்துக் களின் புனித நகரத்தில் மசூதியா? என்ற கேள்வி என்னை அரித்துக் கொண்டே இருக்கிறது. மதர்தெரசா போன் றவர்களை இங்குள்ளவர் கள் புனிதர்களாக பார்க் கின்றனர். அவர் புனித மானவரா? யாருக்குத் தெரியும்? ஆனால், இந்து சாமியார்களை உலகில் உள்ள நாட்டு மக்கள் எல் லாம் மிகவும் புனிதமான வர்களாகப் பார்க்கின்ற னர். அவர்களுக்கு என்று மிக நீண்ட பாரம்பரியம் உண்டு. பாகிஸ்தான் இஸ்லாமியர்களை உலக நாடுகள் விரட்டுகின்றனர். ஆனால், நாம் இங்கே இஸ்லாமியர்களுக்கு வச திகள் செய்து கொடுத்து வருகிறோம். ஆனால் அந்த காலம் முடிந்து விட் டது. இந்துநாடு என்பதற் கான சங்கொலிகள் ஒலித்து விட்டன. இனி நாம் செய்யவேண்டியது இதுதான்; ஒவ்வொரு மசூதி தேவாலயங்களை இந்துக் கோவிலாக மாற்றவேண்டும் அங்கு இந்து சாமிசிலைகளை வைக்கவேண்டும் அனைத்து இந்துக்களும் உள்ளே சென்று வழிபட வேண்டும்.

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பிள்ளையார் மற்றும் ராமர் சிலைகளை ஒவ் வொரு மசூதி மற்றும் தேவாலயங்களில் வைப்பேன். யாருக்கு துணி விருக்கிறது என்னை தடுக்க என்று அப்போது நான் பார்க்கிறேன் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/95969.html#ixzz3RRjbOkkY

தமிழ் ஓவியா said...

தானே வீழ்ந்துவிடும்!


பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமும் ஆகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.
(விடுதலை, 20.11.1964)

Read more: http://viduthalai.in/page1/95945.html#ixzz3RRjzfWwY

தமிழ் ஓவியா said...

தமிழருக்குக் கேடு


இந்நாட்டில் அரசியல் கிளர்ச்சி என்னும் பேரால் நூறு ஆண்டுகளாக நடந்து வந் திருப்பதன் உள் தத்துவமே பார்ப்பனனின் உத்தியோகம், பதவி, ஆதிக்கம் இவற்றுக் காகவே தவிர, அரசியல் நீதியையோ, மனிதத் தர்மத்தையோ அடிப்படையாகக் கொண்டவை அல்ல. பார்ப்பனர் ஆதிக்கம் கிடைத்த போதெல்லாம் தமிழர்க்குக் கேடாகவே நடந்துள்ளனர். - (விடுதலை, 5.4.1965)

Read more: http://viduthalai.in/page1/95902.html#ixzz3RRlWbu3X

தமிழ் ஓவியா said...

வயிற்றுக் கொழுப்பை குறைக்கலாம்!

இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை பெரும் பாலோர் வயிற்றுக் கொழுப்பால் அவதிப்படு கின்றனர். வயிற்றுக் கொழுப்பை குறைக்க எளிய வழிகள் உள்ளது. அதை கடைப்பிடித்தால் பெருத்த வயிறு, தட்டையான வயிறாக மாறும். வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் வழிமுறைகள் வருமாறு:

துரித உணவுகளை தவிர்த்தல்

சரியான முறையில் சாப்பிட்டால் 80 சதவீத கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்க்கவேண்டும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை உண்ணலாம்.

தண்ணீர்

தாகம், அயர்ச்சி ஏற்படும் நேரங்களில் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக பலர் உணவு உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தேவையற்ற கொழுப்பு படியும். எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ளவேண்டும். குறைந்தது 6 முதல் 8 குவளை தண்ணீராவது குடிக்கவேண்டும்.

உடற்பயிற்சி

பல மணிநேர உழைப்பு மற்றும் வெகு தூர ஒட்டப்பயிற்சி ஆகிய இரண்டும், தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும்போது கொழுப்பு அதிகமாக குறையும்.

சர்க்கரை வேண்டாம்: நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில் சர்க்கரையை குறைப்பது நல்லது. இதற்குப் பதிலாக தேன், பனங்கற்கண்டு பயன்படுத்தலாம்.

சோடியம் கலந்த உப்பு தவிர்த்தல்: சோடியம் கலந்த உப்பை தவிர, பொட்டாசியம் கலந்த உப்பு, எலுமிச்சை உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன, இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

வைட்டமின் சி உணவுகள்: வயிற்றுக் கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாக கார்டிசால் உள்ளது. மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலை வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது.

உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கானிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. வைட்டமின் சி உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்.

தூக்கம்: போதுமான அளவு உறங்காமல் இருப்பது உடல் எடையை அதிகரிக்கும். உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியம். 6 முதல் 8 மணி நேரம்வரை உறக்கம் மேற்கொள்ளவேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/95914.html#ixzz3RRlza7LJ

தமிழ் ஓவியா said...

அங்கும் இங்கும்

அங்கு: அலாஸ்காவில் மெண்டென் ஹால் பனிப் பாறை மிகவும் புகழ் பெற்றது. இந்தப் பாறைப் பிளவுக்குள் 50 அடி ஆழம் கயிறு மூலம் சென்று இறங்கி விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்தார் மியரிக் சில இடங்களில் தண்ணீர் மேலே வந்து கொண்டிருந்தது.

இங்கு: 2 கிலோ தங்கக் கம்பியை எல்இடி பல்புகளில் மறைத்து (ஒவ் வொரு பல்புக்குள்ளும் மெல்லிய தங்கக் கம்பிகள் இருந்தன) அபிதாபியில் இருந்து சென்னைக்கு கடத்திய கேரள இளைஞர் கைது.

- எஸ். நல்லபெருமாள், வடசேரி

தமிழ் ஓவியா said...

இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். மேதாவிகளின் கவனத்திற்கு...

நீங்கள் மின்சாரத்தை பயன்படுத்தா தீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் பென்ஜமின் பிராங்கலின் என்னும் கிறித்தவர். நீங்கள் இரயில்வண்டியில் பயணம் செய்யாதீர்கள் ஏனெனில் இதை கண்டு பிடித்தவர் .ஹென்றி போர்டு என்ற கிறித்தவர்.

நீங்கள்கேமிராவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக்கண்டுபிடித்தவர் தாமஸ்பெல்ஸ் உட் என்றகிறித்தவர்.
நீங்கள்திரைப்படங்களை பார்க்காதீர்கள். ஏன் பார்க்கக் கூடாது என்றசந்தேகம் தோன் றினால் இதை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர்.

அதனால் திரைப்படம் பார்க்காதீர்கள். நீங்கள் கிராமபோனை பயன்படுத்தா தீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ்ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர்.

நீங்கள் வானொலியை கேட்காதீர்கள். ஏனெனில் இதைக்கண்டுபிடித்தவர் மார் கோனி என்ற கிறித்தவர்.
நீங்கள்கடிகாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இந்தக் கடிகாரத்தைக்கணடு பிடித்தவர் பீட்டர்ஹல் என்ற கிறித்தவர்.
நீங்கள் அச்சுப் பொறியை பயன்படுத் தாதீர்கள். ஏனெனில் அதைக் கண்டுபிடித்தவர் ஹீடன்பார்க்கேக் ஸடன் என்ற கிறித்தவர்.

பவுண்டன்பேனாவை பயன்படுத்தா தீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வாட்டர்மேன் என்னும்கிறித்தவர். நீங்கள் டயரை பயன்படுத்தா தீர்கள்.ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் டன்லப் என்ற கிறித்தவர்.

நீங்கள் டெலிபோனை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக்கண்டுபிடித்தவர் அலெக் சாண்டர் கிரஹாம்பெல் என்ற கிறித்தவர்.
நீங்கள் தையல் மிஷின் என்ற கருவியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் கோபாஸ் என்ற கிறித்தவர்.
இந்துக்களே!

உங்கள் கால், கை, உடைந்தால் நீங்கள் எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெ னில் இதைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ரோன்டஜன் என்ற கிறித்தவர்.

நீங்கள் மிக முக்கியமாக டீசல் பெட்ரோல் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், அது இஸ்லாமிய நாடுகளிலிருந்து கிடைக்கிறது. அரபு நாடுகளுக்கு பிழைக்கப்போன இந்துக் களை திரும்பி வரும்படி செய்யுங்கள் ஏனெனில் அது முஸ்லிம் நாடு.

குறிப்பு: நம்நாட்டிலுள்ள நம் இனத்தை சேர்ந்தவர்கள் (இந்துக்கள்), கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என இந்துக்களுக்கு அறிவுறுத்தி மதகலவரத்தை தூண்டிவிடும் விதத்தில் இந்து முன்னணியின ரால் போடப்பட்ட தீர்மானத்திற்குப்பதிலாக இது அமையும்.

உலகத்திலே தீண்டாமையை கண்டுபிடித் ததும் கடைபிடிப்பதும் இந்து மதம்தான்.
(இவை உதகையில் நடந்த இந்து முன் னணி மாநாட்டின் போது உதகை திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டது).

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRo7277O

தமிழ் ஓவியா said...

அப்பளம், பார்ப்பனர்களால் தயாரித்தது?

அப்பளம்கூட பார்ப்பனர்களால் (Prepared by Brahmins) தயாரிக்கப் பட்டது என்று விளம்பரம் செய்யும் போக்கிரித்தனம் - ஜாதி ஆணவம்!

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRoHHFl2

தமிழ் ஓவியா said...

அலர்ட்டா இருங்க அம்புட்டுதான் சொல்ல முடியும்

தலையில் மயிர் முளைக்க ஒரு கம்பெனி விளம்பரம் தர்றான். அது அமேசான் காட்டில் இருந்து யாருக்கும் கிடைக்காத மூலிகையை வச்சு தயாரிச் சுதுன்னு சொல்றான். எங்கேடா கிடைக் கும்னா, எனக்கு மிஸ்டு கால் கொடு, உடனே அனுப்புறேங்கறான்.
இங்கே இன்னொரு கம்பெனி விளம்பரம் குடுக்குது.

தெருவுக்கு தெரு தட்டி வச்சு விளம்பரம் தருது என்னடான்னு பார்த்தா, இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடு, உடனே எங்க கட்சிலே சேர்த்துக்கு வோம்ங்கிறான்.

முதல்ல சொல்ற கம்பெனிக்கு மிஸ்டு கால் கொடுத்தா, மயிர் முளைக்குதோ, இன்னும் கொட்டுதோ தெரியாது. கொடுத்த காசோடு போயிடும்.

ஆனா, இந்த இரண்டாவது சொன்ன கம்பெனிக்கு மிஸ்டு கால் கொடுத்தீங்க. நீங்க மட்டும் மிஸ் ஆக மாட்டீங்க. உங்க வம்சமே ஒன்னும் இல்லாம போயிடும். மானம் மரியாதை எல்லாம் போயி, ஒரு நூறு வருஷத்துக்கு முன்னாடி கொண்டு போய் நிறுத்திடும் இந்த கூட்டம்.
அலர்ட்டா இருங்க. அம்புட்டுதான் சொல்ல முடியும்.

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRoPZJgv

தமிழ் ஓவியா said...

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!

விவேகானந்தர் சிகாகோ செல்வ தற்கு பொருள் உதவி செய்தவரும் ,சிகாகோ மாநாடு முடித்து திரும்பிய விவேகானந்தருக்கு வரவேற்பு அளித்த வருமான ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி தான் 1897 மே 14 கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாடார்கள் நுழைந்து வழிபாடு செய்ததை கண்டித்து,

நாடார்கள் பிறப்பால் தாழ்ந்த சாதிகாரர்கள் ,அவர்களுக்கு கோவில் நுழைவு மறுக்கப்பட்டது , மீறி நுழைந்ததால் கோவில் தீட்டாகிவிட்டது எனவும், கோவிலை மத சடங்குகள் மூலம் தூய்மைபடுத்த நாடார்கள் ரூ.2500/ தர வேண்டும் என ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மதுரை சிவில் நீதிமன்றதில் வழக்கு தொடுத்தார் என்ற விவரம் தெரியுமா? உங்களுக்கு

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRodFFpZ

தமிழ் ஓவியா said...

என்ன நான் சொல்றது.. சரிதானே

பாஜகவின் அடியாள் சங்கங்களான வி.ஹெச்.பி. போன்ற கோஷ்டிகள், மதமாற்றத்தை செய்வதற்கு ஒரு பெயர் வைத்துள்ளார்கள். அதற்கு பெயர் கர் வாபஸ். அதாவது வீட்டுக்கு திரும்ப வேண்டும்.

மோடி தேர்தல் நேரத்தில் என்ன சொன்னார்? நம் நாட்டை ஏமாற்றி வெளி நாட்டில் பதுக்கி வைத்த பணத்தை மீட்டு வாபஸ் செய்து நம்ம கணக்கில் வைப்பேன் என சொன்னாரே, அதை முதல்ல செய்கய்யா.

எங்களுக்கு வேண்டாம் GHAR VAPASI கர் வாபஸ்
எங்களுக்கு வேண்டியது PAISA VAPASI பைசா வாபஸ்.
என்ன நான் சொல்றது.. சரிதானே.

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRojHYVD

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் நான்கில் ஒருவர் தீண்டாமையை கடைப்பிடிக்கிறார்கள்

இந்தியாவிலிருந்து தீண்டாமை முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாக ஒரு பக்கம் கூறினாலும், மறுபக்கம் இன்னமும் நான்கில் ஒருவர் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

தலைநகர் டில்லியில் இயங்கிவரும் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் கழகம் ( National Council of Applied Economic Research - NCAER ) என்னும் தன்னார்வ அமைப்பு சார்பில், தீண்டாமை குறித்து நாடு தழுவிய அளவில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

விழிப்புணர்வு, சட்டம், கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தீண்டாமை களையெடுக்கப் பட்டு விட்டதாக கூறப்பட்டு வருவதை இல்லை என்கிறது இந்த ஆய்வு. கடந்த 2011-_12 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், பொதுமக்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டது.

அதாவது, 1. உங்களது வீடுகளில் தீண்டாமை நடைமுறையில் உள்ளதா? 2. உங்கள் வீட்டு சமையல் அறைக்குள் பட்டியல் இனத்தவர் நுழை யவும், பாத்திரங்களைப் பயன்படுத்தவும் அனுமதிப்பீர்களா? என ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் கேட்கப்பட்டது. இதற்கு ஆய்வில் பங்கெடுத்த நான்கில் ஒருவர், தீண் டாமையைக் கடைபிடிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முழு விவரமும் தொகுப்பாக அடுத்தாண்டு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. தற்போதைக்கு ஆய்வுத் தகவல்கள் புள்ளி விவரங்களாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜாதி அடிப்படையில் 27 சதவீதத்தினர் தீண்டாமை இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

மாநிலவாரியாகப் பார்த்தால் வடமாநிலங்களில், மத்தியப் பிரதேசம் 53 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 43 சதவீதமும்,இமாச்சலில் 50 சதவீதமும், சத்தீஸ்கரில் 48 சதவீதமும்,ராஜஸ்தான் மற்றும் பீகாரில் 47 சதவீதமும், உத்தரகாண்டில் 40 சதவீதமும் `தீண்டாமை `இருந்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இதேபோல், தென் மாநிலங்களில் ஆந்திரப்பிரதேசத்தில் 10 சதவீதம் மட்டுமே தீண்டாமை உள்ளதாக கூறும் இந்த ஆய்வு, மேற்கு வங்காளத்தில் ஒரு சதவீதமும்,கேரளாவில் 2 சதவீதமும் தீண்டாமை இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வு தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள தலைமை ஆராய்ச் சியாளர் டாக்டர் அமித் தோரட், இந்த ஆய்வின் மூலம் கல்வி பெற்ற மக்களிடையே ஜாதியின் தாக்கம் குறைந்துள் ளதையும், பணம் படைத்தவர்களிடமே தீண்டாமையை செயல்படுத்தும் எண்ணம் மேலோங்கி இருப்பதையும் அமித் சுட்டுக் காட்டியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-1/95711.html#ixzz3RRoyPHiq

தமிழ் ஓவியா said...

வாஸ்துவுக்குப் பின்புறத்தில் ஜாதி இருக்கிறது!

அறிவியல் முன்னேற்றத் தினால், பல தொழில்கள் வளர்ச்சி யடைந்துள்ளன. அவற்றில் ஒன்று, கட்டட கட்டுமானப்பணி, பல கட்டுமானப் பொருட்கள், தொழில் நுட்பங்கள், புதிய சாதனங்கள் ஆகியவை தோன்றி சாதனைகள் பல, ஒன்றை ஒன்று மிஞ்சி நிகழ்த்தப்பட்டுள்ளன. இருப்பினும் வாஸ்து முறைப்படி வீடு கட்டுதல் என்ற வழக்கமும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இது கல்வி அறிவு இல்லாத பாமர மக்களிடையே மட்டுமின்றி படித் தவர்களிடையேயும் கூட பரவி யுள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம், மூட நம்பிக்கையும், பயமும், பேராசையும் ஆகும். எந்த அறிவுப் பூர்வ ஆதாரமும் இல்லாத, பகுத்தறிவுக்குப் பொருந்தாத பல கோட்பாடுகள் இங்கு நிலவு கின்றன.

எடுத்துக்காட்டாக, மனை அளவு 8அடி இருந்தால் அரசு பரிபாலனம் என்றும் 9அடி இருந்தால் செல்வம் குறையும் என்றும் சொல்லப்படுகிறது. இதே போன்று 11அடி இருந்தால், புத்திரப்பேறு அதிகம் என்றும் 12 அடி இருந்தால் மலடாவர் என்று பயமுறுத்துகிறது. 15அடி இருந் தால் தரித்திரம், தாழ்ச்சி என்றும் 16அடி இருந்தால் செல்வம் கொழிக்கும் என்றும் கூறுகிறது.

இந்த ஒரு அடி வேறுபாடு ஏன், எப்படி இந்த நன்மை, தீமை களுக்குக் காரணமாக அமைய முடியும் என்று பகுத்தறிவோடு சிந்தித்தால்தான் இவை மக்களை பயமுறுத்துவதற்காகக் கூறப்பட் டவை என்று தெளிவாகும்.

அறையின் நீளத்திற்கும் தரித் திரத்திற்கும் என்ன சம்பந்தம்?

இதேபோல் அறையின் நீளமும், அகலமும் பல நன்மை தீமைகளுக் குக் காரணமாக விளங்கும் என்றும் கூறுகிறது. அறையின் நீளம், அகலம், 19அடி இருந்தால் தரித்திரம், புத்திரபீடை என்றும், 20அடி இருந்தால் இன்பமயம் என்றும் கூறுகிறது. இது 25அடி இருந்தால் மனைவியின் மரணம் என்றும், 26அடி இருந்தால் செல்வம் பெருகும் எனவும் சொல் லப்படுகிறது.

இங்கும் இந்த ஒரு அடி வேறுபாடு இந்த மாற்றங் களை ஏற்படுத்தும் என்பது பகுத் தறிவுக்குப் புறம்பான ஒன்றாகும். இதே போன்று ஒரு வீட்டை வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கா விட்டால், இந்த எஜமானன், எஞ்சினீயர், காண்ட்ராக்டர், கொத்து மேஸ்திரி, தச்சு மேஸ்திரி ஆகிய அய்வரின் வாழ்விலும் பாதிப்பு ஏற்படும் எனவும் அச்சுறுத்துகிறது.

இந்த சாத்திரம், அடுத்து ஏற்படும் அய்யப்பாடு, ஏன் இந்த அச்சுறுத்தும் கோட் பாடுகள் கூறப்படுகின்றன என்ப தாகும். இதை சற்று சிந்தித்தால் எப்படி சாதகம், சோசியம் போன் றவை பேராசை, பயம், மூடநம் பிக்கை ஆகியவற்றைக் கொண்ட மக்களை ஏமாற்றி பிழைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றதோ, அதேபோல், வாஸ்துவும் அதில் கூறப்படும் அச்சுறுத்தும் கோட் பாடுகளும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதற்குப் பயன்படுத்தப்படு கின்றது என்பது தெளிவாகும்.

ஜாதி இதன் பின்னணி! மற்ற தொழில் நுட்பத் துறை களுக்குக் கொடுக்கப்படாத சாஸ்திர அந்தஸ்து ஏன் இந்த வாஸ்துவுக்கு மட்டும் கொடுக்கப் பட்டது என்று ஆராய்வோம். ஜாதி முறையை நிலைநாட்டவும் ஜாதியின் அடிப்படையில் சூழ்ச்சி யாக சில நியதிகள் செயல்படுத் தப்படவும் இந்த வாஸ்து வழி செய்தது.

அ) பொன்னிறமான மண்ணில் -_ இனிப்பு ருசியும், தாமரை மலரின் வாடையும் இருந்தால், அந்தணர் கள் இதில் வீடு கட்டலாம்.

ஆ) சிவந்த நிறமும், கார்ப்பு ருசியும், குதினாயின் வாடையுள்ள மனையில் சத்திரியர்களும்,

இ) பச்சை நிறமும், புளிப்பு ருசியும் வாடையுமுள்ள மனையில் வைசியர்களும்

ஈ) கருப்பு நிறமும், கசப்பு ருசியும், தானிய வாடையுமுள்ள மனையில் மற்ற இனத்தவர்களும் (சூத்திரர்) வீடு கட்ட வேண்டும்.

இதேபோல், அந்தணர் தென்திசை ஆயர்மேற்றிசை
வந்திடு வணிகர்நல்வடக்கு வான்திசை
தொந்தமில் சூத்திரர் தோன்றுங்கீழ்திசை
பிந்திய நடுவது பிரமன்தானமே
என்று ஜாதியின் அடிப்படை யில் வீடுகட்டும் இடத்தை நிர்ண யம் செய்தது, வாஸ்து.

இவ்வாறு ஜாதி முறையை நிலைநாட்டவும், அதன் மூலம் பல வசதிகளை பெறவும், வழி செய்ததால், இக் கலை சாஸ்திர அந்தஸ்தை பெற் றது என்று ஊகிக்கலாம்.

இந்த வாஸ்து முறையைப் பின்பற்றாமல் கட்டப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்பதும், இம்முறையைப் பின் பற்றி கட்டப்பட்ட கட்டடங் களின் உரிமையாளர்கள் பலர் பல இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதும், இம்முறையைப் பின் பற்றி கட்டப்பட்ட கட்டடங் களின் உரிமையாளர்கள் பலர் பல இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந் ததே.

ஆனால், இந்த வாஸ்து முறையைச் சொல்லி, மற்றவர்களை ஏமாற்றி வாழ்பவர்கள், கட்டடக் கலைகூறும் சில நல்ல கருத் துக்களையும் சேர்த்துக் கூறுவது, நச்சுப் பொருளை, இனிப்பு மேலு றையுடன் கொடுப்பதற்கு இணை யாகும் அல்லவா?

முனைவர் நல். இராமச்சந்திரன், பேரா. எல்.ஜே. சுப்ரமணியம்

Read more: http://viduthalai.in/page-1/95716.html#ixzz3RRqdcwjk

தமிழ் ஓவியா said...

சாமிக்கு சாராய அபிஷேகம்!

மத்தியப்பிரதேசத்தில் காலபைரவர் சிலைக்கு சாராயம் அபிஷேகம் செய்ய அரசு சார்பில் கடை அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்கிறார்கள். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெயினி அருகே காலபைரவர் கோவில் உள்ளது. இங்கு காலபைரவரின் மிகப்பெரிய சிலை உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமிக்கு சாராயத்தால் அபிஷேகம் செய்கிறார்கள்.

சாமியின் கண் வழியே சாராயத்தை ஊற்றுகிறார்கள். இதனால், பக்தர்கள், வியாபாரிகளிடம் அதிக விலை கொடுத்து சாராயம் மற்றும் வெளிநாட்டு மது வாங்குகிறார்கள். அரசு சார்பில் கடை திறப்புபக்தர்களிடம் வியாபாரிகள் அதிக விலைக்கு சாராயம் விற்பதை தடுக்க தற்போது மத்தியப்பிரதேச அரசே கோவில் அருகே கடை திறந்துள்ளது.

இங்கு 2 கவுண்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.ஒன்றில் அரசு சாராயமும், மற்றொன்றில் வெளிநாட்டு மதுவும் விற்கப்படுகிறது. 180 மி.லிட்டர் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.இந்த கோவிலில் பக்தர்களுக்கு சாராயம்தான் பிரசாதமாகவும் கொடுக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page-1/95717.html#ixzz3RRqxIEb6

தமிழ் ஓவியா said...

வாஜ்பேய யாகம்

வாஜ்பேய யாகம் - பார்ப்பனர், புரோகிதராக அல்லது தலைமைக் குருவாக உயர் பதவி பெறும் பொழுது செய்யப்படும் யாகமாகும். அரசனும் இராசசூய யாகம் செய்த பின்னர் பேரரசாக மாறிய பொழுது வாஜ்பேயி யாகத்தைச் செய்யலாம் இவ்வேள்வி செய்யும்போது கலைமானின் தோலினைப் போர்த்திக் கொண்டு செய்தல் மரபாகும்.

வேள்வியின்போது பணிவிடை செய்வதற்குப் பத்தினிகள் மூவர்க்கும் குறையாமல் இருத்தல் வேண்டும். இவ்வகையான சடங்குகள் வடநாட்டிலிருந்து பின்னர் தமிழகம் வந்ததாம்.

யாகங்கள் 21-ஆம் சோம யாகங்கள் ஏழு, ஹவியர் யாகங்கள் ஏழு, பாக யாகங்கள் ஏழு இவற்றில் சோம யாகங்கள் ஏழில் ஒன்றாக வாஜ்பேயி யாகம் உள்ளது. அந்த யாகத்தின் இறுதியில் உணவும், பானமும் கூட்டாக அருந்தப் பெறுமாம்.

- எஸ். நல்ல பெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page-1/95722.html#ixzz3RRrdTEl9

தமிழ் ஓவியா said...

கம்யூனிஸ்டுகளின் கடவுள் கொள்கை

கம்யூனிஸ்டு ஒழுக்கமுறை என்று ஒன்று இருக்கிறதா? ஆம் நிச்சயமாக இருக்கிறது. நமக்கென்று தனி நெறிமுறையில்லை என்று அடிக்கடி கருத்துக் கூறப்படுகிறது. பூர்ஷ்வாக்கள் நம்மைக் கம்யூனிஸ்டுகள் எல்லாவித ஒழுக்க முறைகளையும் நிராகரிக்கிறார்கள் என்று அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள். இது பிரச்சினையைக் குழப்பும் முறையாகும்.

தொழிலாளர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதாகும். எந்த அர்த்தத்தில் நெறிமுறைகளை நிராகரிக்கின்றோம். பூர்ஷ்வா வர்க்கத்தால் கொடுக்கப்படும் அர்த்தத்தில் கடவுளின் கட்டளைகள் என்னும் அடிப்படையில் கூறப்படும் நெறிமுறை என்னும் அர்த்தத்தில் கூறப்படும் அவைகளை நிராகரிக்கின்றோம்.

இந்த விஷயத்தில் நாம் நிச்சயமாக ஒன்று கூறுகிறோம். தமக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. மதக் குருக்களும், நிலப்பிரபுக்களும், பூர்ஷ்வாக்களும் கடவுளின் பெயரைக் கிளப்பி விட்டு - அவர்கள் சுரண்டல்காரர்கள் என்னும் முறையில் அவர்களுடைய நல உரிமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதை நாம் நன்கு தெளிவாக அறிவோம்.

- வி.இ. லெனின்
(மதத்தைதப்பற்றி எனும் நூல் பக்.103)

Read more: http://viduthalai.in/page-1/95720.html#ixzz3RRs5IJ4n

தமிழ் ஓவியா said...

இந்திய அறிவியல் கழகம்

இந்திய அறிவியல் கழகத்தின் 102 ஆவது கூட்டம் 5, ஜனவரி, 2015 அன்று மும்பையில் நடைபெற்றது. அதில் வேத அறிவியல் என்று சில மூட அறிவியல்களை பரப்பியதுமட்டுமன்றி உலக அறிவியல்களின் மூதாதையர்கள் இந்தியர்கள் என்றும், இவர்களின் கண்டுபிடிப்புகளை மேல்நாட்டார் கவர்ந்து சென்றது போன்றும் கருத் துக்களை பரப்பினர்.

இதனைச் சார்ந்து 06.01.2015 அன்றைய ஆங்கில இந்து நாளேட்டில் டி.கீதா அவர்கள் 'ஆசிரியருக்கு கடிதம்' பகுதியில் ஒரு அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்திருக்கிறார். அவர் குறிப்பிட் டவை: வேத கால அறிவியல் அறிக் கையில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு தொல்துறை நிபுணர்கள், வெட் டெழுத்து நிபுணர்கள் மற்றும் வர லாற்று வல்லுனர்கள் தகுந்த ஆதா ரத்தை வழங்குமாறு உரிமையுடன் கேட்க வேண்டும்.

கடந்த ஆண்டு புதுச்சேரி பல் கலையின் பேராசிரியர் ராஜன் அவர்கள் பொருந்தல் கிராமத்தில் கிடைக்கப் பெற்ற பழங்கால தாழிகளில் கண்ட 'தமிழி' எழுத்து வடிவினை ஆராய்ந்த தில் இந்திய மொழிகளின் வரிவடிவின் அடித்தளமே இந்த தமிழி எழுத்து வரிவடிவங்கள் தான்' என்று ஆணித் தரமாக நிரூபித்தார்.

இதனை சென் னையில் இயங்கும் தொல்லியல் துறை ஆதிச்சநல்லூரில் கிடைக்கப் பெற்ற முதுமக்கள் தாழியில் இருந்த வரிவடிவங்கள் வழியாக மேலும் உறுதி செய்தனர். வெப்பமிளிர்வு சோதனைக்கு உட்படுத்தியதில் பொருந்தல் கிராமத் தில் கிடைக்கப் பெற்ற பானை ஓடுகள் கி. மு 1000 ஆண்டுகளை சார்ந்ததாக்கும் என்று உறுதிப்படுத்தினார்.

இதனை மேலும் உறுதிசெய்ய இந்தத் தாழியை மைசூர் கிளை தொல்லியல் துறை, வெட்டெழுத்து வல்லுனர்களுக்கு அனுப்பப்பட்டது. அவர்களை உறுதி செய்யுமாறு மீண்டும் நினைவுபடுத் தினர். வந்த பதில் "அந்தத் தாழியைக் காணோம் தேடியும் கிடைக்கவில்லை" இது வேண்டுமென்றே செய்யப் பட்ட தகாத செயல் என்ற முடிவுக்குத் தான் வர முடிகிறது.

டி.கீதா, அய்தராபாத்.
நாம் அறிவது - தமிழின் தொன்மை யையும் அதன் சிறப்பையும் கண்டு பொறுக்காத இனங்கள் இன்னமும் உள்ளன.
தகவல்: சி.நடராசன்

Read more: http://viduthalai.in/page-1/95724.html#ixzz3RRskwq5T