Search This Blog

20.2.15

இதுதான் வால்மீகி இராமாயணம்-56

  இதுதான் வால்மீகி இராமாயணம்


அயோத்தியா காண்டம்

பதின்மூன்றாம் அத்தியாயம் தொடர்ச்சி


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேல்சென் றிடித்தற் பொருட்டுஅழிவின் அவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு


என நம் தெய்வத் தமிழ்பெரும் புலவர் திருவள்ளுவர் திருவாய் மலர்ந்து கட்டளையிட்டருளியிருக் கின்றனரன் றோ? ஆதலின் நம்முடைய கடமையை உணர்ந்து நாமும் கம்பரைப்போலக் கோடரிக் காம்பாகாமல் உண்மைத் தமிழ் மக்களெனப் பெயரெடுக்க முன் வருவோமாக! இத்தகைய இழிசெயல்களையெல்லாம் மறைத்து இழிதகையர் - கம்பர் இராமாயணம் பாடியமையன்றோ, தமிழ்ப்பெருமக்கள் உண்மையுணராது தம் மூதாதையரை அநியாயமாகக் கொன்று இழிபுபடுத்திய கதையைப் பாராட்டிப் படிப்பதோடு நில்லாமல், தம் முன்னோரை வஞ்சித்துக்கொன்ற பாதக னாகிய இராமனையும் தெய்வம்போல் வழிபடுகின்றனர்? இவ்வுண்மைகளை உணரும் நண்பர்கள் இனியேனும் அறியா நண்பர்கட்கு இவற்றை எடுத்துக்காட்டி நல்வழிப் படுத்த முன்வர அவர்களை அன்புடன் வேண்டுகிறோம். இத்தகைய கொடிய தீமைகளைத் தமிழுலகத்துக்கு விளைத்த இனத்துரோகியாகிய கம்பரை நினைக்குந் தோறும் நினைக்குந்தோறும் நம் உள்ளத்தே ஊற்றெடுக்குந் துயரத்துக்கோர் அளவு முண்டோ? அவர் விதைத்த தீமைப் பயிரைக் கருவறுக்க வேண்டியதே ஒவ்வொரு தமிழ் மகனுடைய இன்றியமையாத முதற் கடமையாகும். எம் உடன் பிறப்பாளரே! இக்கடனுணர்ந்து மெய்த்தொண்டாற்றி நலம்புரிய முன்வாருங்கள்! முன்வாருங்கள்!

இராமன் சீதையை நோக்கி, பெண்ணே! அதோ சக்கரவாகப் பறவைகள் சம்போகத்திற்காக ஒன்றுக்கொன்று இனிய குரலுடன் அழைத்துச் சம்போக காலத்தில் உண்டாகும் அழகிய ஒலிகளை ஒலித்துக் கொண்டு சேர்க்கையின் பொருட்டு அந்தப் பூக்களின்மேல் ஏறுகின்றன. இந்தச் சித்திரக்கூடம் மிகவும் ஏகாந்தமான போகங்களை அனுபவிக்கும் இடமாக இருத்தலால் இது அயோத்தியினும் இன்பந்தருகிறது. இந்நதி மிகவும் காமத்தை உண்டாக்குகிறது என்று கூறி அவளுடன் நீர் விளையாட்டு ஆடுகிறான். இதனால் இராமனுடைய மனநிலை எப்படிப்பட்டது என்பது தெரிகிறது. அப்போது இலக்குவனும் அருகிலிருக்கிறான். இதனால் அவர் களுடைய ஒழுக்க நிலை மிகவும் இழிந்தது என்பது விளங்குகிறது. இராமனும் சீதையும் படுத்திருக்கும்போது, அவர்களுடைய கால்களை சிருங்கபேரபுரத்தில் கழுவினவன்தானே இவ்விலக்குவன்.

இவர்கள் வெட்கமானத்தை உதிர்த்தவர்கள் போலும்! இராமனும் சீதையும் காமப்பித்தேறி மிருகங்களைப் போலப் பகலென்றும் பாராமல் இரவென்றும் பாராமல் காம இன்பம் நுகர்ந்து திரிந்தனரென்பது தெரிய வருகிறது. இதுபற்றியே சீதை இராமனைப் பிரியாமல் காடு வந்தாள் என நாம் முன் குறித்தது இதனால் நிலைபெறுகிறது.

இலக்குவன் எப்படியாவது பரதனைக் கொன்றுவிடு வதாகக் கூறுகிறான். இதனால் இவன் பரதனைக் கொன்று விட்டால் எப்படியாவது தான் பட்டத்துக்கு வந்துவிடலாம் என எண்ணுகிறான். இராமன் மகாசூதனென்பதும், அவன் எவ்வாறாவது பரதனை ஏமாற்றி அரசைக் கைக்கொள் வதற்கு வழி, காட்டுக்குப் போவதே எனத்துணிந்து காடு போந்தனனென்றும் முன் கூறினோம். அவன் இலக்கு வனுடைய தந்திரத்தை உடனே அறிந்து, முன் தந்தையைக் கொல்வேனென்றாய், இப்போது அண்ணனைக் கொல்வே னென்கிறாய். உனக்கு அரசாட்சி வேண்டுமென்று விரும்பு கின்றாய் போலும்! என்று மிகவும் உண்மையாக வினாவு கிறான். தீயவனாகிய இலக்குவன் தனது சூதை இராமன் உணர்ந்து கொண்டது பற்றி வெட்கி, உடனே பேச்சை மாற்றி, நமது தந்தை வந்தாலும் வரலாம் என்கிறான். இத்தீய மதியனை என் செய்வது? இராமனுக்கு இலக்கு வனுடைய தீயசிந்தை நன்றாகத் தெரியும்.
அதனாலலேயே முன்னால் தந்தையைக் கொன்று அரசிப் பெறலா மென்றாய் என்கிறான். இதனால் இலக்குவன் முன்னர்க் கோசலை முன்னிலையில், அண்ணா! நீ அரசைக் கைப்பற்று. உனக்குப் பிரியமில்லையானால், நான் அரசாட்சியைப் பெறுகிறேன் என்று சொல்லிய பேச்சை இராமன் மறவாமல் நினைத்திருந்தது விளங்குகிறது. அயோத்தியா காண்டம் சருக்கம் இருபத்தி மூன்றில் இராமனை நோக்கி இலக்குவன், இராஜ்யம் அடிக்கடி மாறுமென்று தங்களுக்குச் சந்தேக முண்டாகி அதனால் தங்களுக்கு இராஜ்யம் வேண்டாமென்றால், சமுத்திரத்தை அதன் கரை காப்பதுபோல நான் இந்த இராஜ்யத்தைக் காப்பாற்றுவேன். இப்படியே சபதம் செய்கிறேன் என்று கூறிய செய்தி காணப்படுகிறது. இவ்விடத்து நாம் முன் 23.12.2028 இல் வெளிவந்த எட்டாம் கட்டுரையிலுள்ள பின்வரும் குறிப்பை அறிஞர் சிந்தித்து உண்மையுணருமாறு மறுபடியும் கீழே குறிக்கின்றோம். அது வருமாறு:-
தந்தையைக் கொன்றேனும் அரசைக் கைப்பற்ற வேண்டுமென்பதே அவனுடைய கேவலமான எண்ணமாக இருக்கிறது. இவனைப்போலும் பிள்ளைகள் வேண்டுவது அவசியமே. இராமனுங்கூட அவனை நோக்கி, நம் தகப்ப னாராயிருந்தாலும் அவரைக் கொன்று நாடாளு வோமென்ற கேவல புத்தியை விட்டுவிடு என்று கூறுகிறான். இலக் குவன் இவ்வளவோடு நின்றதாகத் தெரியவில்லை.
                             ----------------------------------- தொடரும் 13-02-2015

 ************************************


இதுதான் வால்மீகி இராமாயணம்
இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.

அயோத்தியா காண்டம்

பதின்மூன்றாம் அத்தியாயம் தொடர்ச்சி


இலக்குவனுடைய பேராசை அதன் மேலும் அளவு கடந்து செல்லுகிறது. அவன், அண்ணா! தசரதனையும் கைகேயியையும் காட்டுக்கனுப்பி உமக்கு அரசைத் தருகிறேன். அரசாட்சி அடிக்கடி மாறுமென்று தங்களுக்குச் சந்தேக முண்டாகித் தங்களுக்கு அரசாட்சி  வேண்டா மென்றால், நானே அரசாட்சியை ஏற்றுக்கொண்டு நாட்டைக் காப்பாற்றுவேன் என்று கூறுகிறான். இதனால் அவன் உள்ளக்கிடை இதுவென விளங்குகிறது. இராமன் தனக்கு அரசாட்சி கிடைக்கவில்லையென்ற கவலை யாலோ, அல்லது உள்ளபடி உலகத்திலுள்ள வெறுப்பாலோ அரசாட்சி வேண்டாமென்றால் தானாவது அதைக் கைப்பற்றிக் கொள்ளலாமென்ற கெட்ட எண்ணம் இலக்குவனிடமிருந்ததாகத் தெரிகிறது. இதனால் அவன் தான் இராமனை அணுகியிருந்து எப்படியாவது ஒரு காலத்தில் தானே அரசனாக வரலாம் என்ற பேராசை யுடையவனாக இருந்தானென்பது புலனாகிறது

இவன் இராமனைக் காட்டில் கொன்று அரசு பெறவும் எண்ணமுடையவனாயிருந்திருக்கும் அவ்வளவு கெட்ட வன் என்பது குகன் இலக்குவனைச் சந்தேகித் திலிருந்து தெளிவாகிறது. இலக்குவனைப் போலும் கொடிய பாதகரு முளரோ? இனிக் கம்பர் புரளியைக் காண்போம்.
வால்மீகி, பரதன் வந்ததையறிந்த குகன் தன் சேனையை எச்சரித்துக் காணிக்கையோடும் அவனைக் காணவந்ததாகவும், சுமந்திரன் அவனை இராமனுடைய உயிர்த்தோழனெனவும், இராமனிருக்குமிடமறிந்தவ னெனவும், பரதனிடம் கூறியதாகவும், குகன் வந்து பணிந்து பரதனை எதிர் கொண்டழையாமைக்கு மன்னிக்கவேண்டி அன்றிரவை விருந்துண்டு கழிக்கக் கேட்டுக்கொண்டதாகவும் கூறுகிறார். கம்பர் இதற்கு மாறாக நாடகம் போலக் கதைதையே மாற்றுகிறார். அவர் குகன் தென்கரையில் நின்று பரதன் வருவதைக் கண்டு மிகச்சினங்கொண்டு தன் வீரரோடும் வீரம் பேசிநின்ற தாகவும், அவன் நிற்பதுகண்ட சுமந்திரன் இராமனுடை உயிர்த்தோழன் அவன் எனக்கூறியதாகவும், உடனே பரதன் அவனைத்தானே வலியச்சென்று காணவேண்டு மென்று தம்பியோடும் கங்கைக்கரையில் சென்று நின்றதாகவும், குகன் அவனைப் பார்த்து இராமனைப் போல மரவுரியுடுத் திருந்ததோடு, துக்கமுகத்துடனிருந்த தையறிந்து துணுக்குற்று வில்லையெறிந்து தனியே ஒரு தோணி யேறிவந்து பரதனைப் பணிந்ததாகவும், பரதனும் எதிர் பணிந்ததாகவும் கூறுகிறார். கம்பர் குகனைத் தென்கரையில் நிறுத்தி வட கரைக்குக் கொண்டு வந்ததை நோக்க, அவனூர் தென்கரையிலேயே இருந்ததாக மயங்குமாறுள்ளது. அவனுடைய ஊர் உண்மையில் வடகரையிலேயே இருந்தது. குகன் இலக்குவனைச் சந்தேகித்த செய்தியைக் கம்பர் முற்றிலும் மறைத்தார்.

                                                                           - தொடரும்  17-02-2015
Read more: http://viduthalai.in/e-paper/96361.html#ixzz3S0lqFoqN
 **********************************************************************************
இதுதான் வால்மீகி இராமாயணம்

இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.

அயோத்தியா காண்டம்

பதின்மூன்றாம் அத்தியாயம் தொடர்ச்சி

இவ்விடத்திலே கம்பர் மிகவும் பிழைபட்டார். என்னை? சுமந்திரன் பரதனிடம் குகன் இராமனுக்கு உயிர்த்தோழனெனக் கூறினானெனக்கூறுகிறார். இராமன் குகனோடு அப்போதுதான் பழகுகிறானென்னபது போலக் கதையைக் கூறிவரும் கம்பர். இராமனுக்கும் குகனுக்கும் நேர்ந்த நட்பைச் சுமந்திரன் அறிந்தவாறு கூறாமல் அவனை அயோத்திக்கு அருகிலிருக்கும் சோலையி லிருந்தே பிரித்து விட்டு இவ்வாறு கூறுவரேல், அது இவருடைய மறதியையே காட்டும். மிகவும் ஞாபக வல்லமையுடையவராகச் சொல்லப்படும் கம்பர் இவ் விடத்துத் தாம் முன் கூறியதை முற்றிலும் மறந்துவிட்டு, வால்மீகி கூறிய கதையை, அதாவது கங்கைக்கரைவரை பின்னரும் சிலநாளிலிருந்து மீண்ட கதையைத் தாம் மாற்றி விட்டதை உணராமல் இங்கே திடீரெனத் தம்மையும் மறந்து இராமனுக்கும் குகனுக்கும் உள்ள நட்பைச் சுமந்திரன் கூறியதாகக் கூறுகிறார். இப்பிழைக்கு யாதொரு சமாதானமும் கூறவே முடியாது. அறிஞர் இதனைச் சிந்தித்துக் கம்பர் பிழையைத் தெளிவார்களாக!


கங்கையைத் தாண்டும்போதுதான முதன்முதலாகக் குகன் தசரதனுடைய தேவியரைக் கண்டதாகவும், குகன் அவர்களை வினாவப் பரதன் அவர்களை ஒவ்வொரு வராகச் சுட்டிக் காட்டியதாகவும் கூறுகிறார் கம்பர், வால்மீகியோ, பரதனும் குகனும் சந்தித்த அன்றே அவர் அவர்களிடை இராமனுடைய வரலாறு கூறியதாக விளம்புகிறார். மேலும் குகன் அவர்களை யாரென வினவியதாகவாவது பரதன் அவர்களை இன்னாரெனக் குறித்துக் கூறியதாகவாவது வால்மீகி கூறவேயில்லை. அவர்களை இன்னாரென அறிய வினாவியவன் பரத்து வாச முனிவனெனவும், அவனிடமே பரதன் அவர்களை இன்னாரெனக் கூறியதாகவும் அவர் கூறுவர். அவ் வரலாற்றை வேறுபடுத்தினார் கம்பர்.


கோசலையை இன்னாளெனப் பரதன் கூறியபோது குகன் அவளடி வீழ்ந்ததாகவும், அவள் இவன் யாரென வினவியதாகவும், அவன் இராமனுக்கு இளையவன் எனக்கும் தம்பியர்க்கும் மூத்தவன் என்று விடைபகர உடனே கோசலை, இராமன் காடேகியதும் நலமேயா யிற்று, எனக்கு முன் மைந்தர் நால்வரோடும் இம் மைந்தனையும் பெற்றேன். அய்வீரும் ஒருவீராய் அகலிடத்தைக் காத்தீர் என மகிழ்ந்து கூறியதாகவும் கம்பர் புதுக்கதை கட்டுகிறார். இவ்வாறு கோசலை வாயில் இச்சொற்களையேற்றித் தீயவளாகிய அவளை உலகினர் மிக நல்லவளென நினைக்குமாறு செய்யவே இவர் இவ்வாறு கதையை மாற்றிப்புதுக்கதை புனைகிறா ரென்பது வெள்ளிடை மலைபோல விளங்குகின்றது. தீயவளாகிய கோசலையை இவ்வாறு உயர்த்திக் கூறிய கம்பர் அடுத்த கவியில் கைகேயியை மிக இழிகுணத் தவளாகக் காட்டி மகிழ்கிறார். இவர்தம் தீய மகிழ்ச்சி மிக அழகியதே. இத்தீயவர் கவியையும் அறிஞர் சிலர் உண்மையுணராது பாராட்டிப் படிக்கின்றனர்.


                            -------------------- தொடரும் -- “விடுதலை” 20-022015

32 comments:

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

அடிமாடு

செய்தி: தொழில் துறை எவ்வளவு வளர்ச்சி அடைந் தாலும் போதாது; விவசாயம் தான் வளர்ச்சி அடைய வேண்டும். - பிரதமர் மோடி

சிந்தனை: ஆமாம்; அதற்காகத் தான் விவசாய நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக அடி மாட்டு விலைக்கு வாங்கப் படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/96569.html#ixzz3SIRKFtrY

தமிழ் ஓவியா said...

மத்திய அரசே, ஈஎஸ்அய் மருத்துவக் கல்லூரிகளை மூடாதே!

தமிழக அரசே, வனத்துறை கல்லூரி மாணவர்கள்
பிரச்சினையில் தலையிடுக!

சத்துணவுக் கூடங்களை மூடாதே!

மத்திய - மாநில அரசுகளுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்

மத்திய அரசே, ஈஎஸ்அய் மருத்துவக் கல்லூரிகளை மூடாதே! தமிழக அரசே, வனத்துறை கல்லூரி மாணவர்கள் பிரச்சினையில் தலையிடுக! சத்துணவுக் கூடங்களை மூடாதே!

ஏராளமான எண்ணிக்கையில் மருத்துவர்கள் தேவைப்படும் இந்தியாவில் நிதிப் பற்றாக் குறையைக் காரணம் காட்டி, 11 தொழிலாளர் நலத்துறை (ஈ.எஸ்.அய்.) மருத்துவக் கல்லூரி களை மத்திய அரசு மூடுவதைக் கண்டித்தும், அதுபோலவே வனத்துறைக் கல்லூரி மாண வர்கள் பிரச்சினையில் தமிழக அரசு தலை யிட்டுத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத் தியும், சத்துணவுக் கூடங்களை எக்காரணம் கொண்டும் மூடக் கூடாது என்று கூறியும் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கல்வி அறிவு நம் நாட்டில் பரவி, கல்லாமையை, இல்லாமையாக்கிட மத்திய, மாநில அரசுகள் தங்களது வரவு - செலவுத் திட்டத்தில் ஆண்டின் மொத்த வருவாயில் 6 விழுக்காடு கல்விக்கென ஒதுக்கிட வேண்டும் என்று கோத்தாரி கமிஷன் பரிந்துரைத்து, சுமார் 40 ஆண்டுகள் ஆகிய நிலையில், இன்னமும் தொடர்ந்து வந்த அரசுகள், பாதுகாப்புக்கான செலவினத்தைப் பெருக்கியும், இன்னும் பல வாக்கு வங்கிக் கண்ணோட்ட இலவசம் போன்றவைகளை கட்சி ஏலம் போட்டும், மக்களின் அறிவுத்தரம் உயர போதிய கவனமும் அக்கறையும் செலுத்தவில்லை.

மருத்துவக் கல்லூரிகளை மூடுவதா?

இதன் விளைவு கல்வித் துறையில் மூடு விழாக்களை வெட்கமின்றி, மக்கள் அரசுகள் செய்து வருவது கண்டனத்திற் குரியதாகும்.

எடுத்துக்காட்டாக, பொதுத் தேர்தலில் 9 மாதங்களுக்கு முன்பு வாய் கிழிய வாக்குறுதிகளை வளர்ச்சி, வளர்ச்சி என்று பேசியவர்கள், பெரிய பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்து, தனித்தே ஆளும் அளவுக்கு மிருகபலம் பெற்றுள்ள (மாநிலங்கள் அவை ஒரு தடுப்பணையாக எதேச்சையாக அமைந்தது, ஒரு ஜனநாயக சேப்டிவால்வு Safety Valve ஆகும்) நிலையில், மத்திய தொழிலாளர் துறையின்கீழ் பல்வேறு மாநிலங்களில் இயங்கும் 11 மருத்துவக் கல்லூரிகளை - நிதிப் பற்றாக் குறை காரணமாக மூடுவது என்பது கல்விக் கண்ணைக் குத்தும் கண்டனத்திற்குரிய அவலம் ஆகும்!

நாட்டின் மருத்துவர்கள் தேவை தன்னிறைவை அடைந்து விட்டனவா? இல்லையே! இன்னும் ஏராளம் மருத்துவக் கல்லூரிகள் அரசுத் தரப்பில் திறக்கப்பட்டாக வேண்டும். (தனியார் மருத்துவக் கல்லூரியில் நன்கொடை வழங்கி - அதிக சம்பளம் கட்டி, ஏழை, எளிய, நடுத்தர மக்களால் மருத்துவப் படிப்புப் படிப்பது எளிதல்ல என்ற யதார்த்த நிலையில்)

இந்நிலையில் மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை ஈ.எஸ்.அய். ESI மருத்துவமனைகளை மூடுவது என்ற முடிவு ஆபத்தான முடிவாகும்.

தமிழ் ஓவியா said...

இத்துறை அமைச்சரான திரு. பண்டாருதாத்ரேயா பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த, சமூகநீதியில் நம்பிக்கை உள்ள ஒருவர். அவருடைய துறையில் இப்படிப்பட்ட முடிவு வருவது - நம் கையைக் கொண்டே நம் கண்ணைக் குத்துவது என்ற கொடும் தந்திரம் - சூழ்ச்சி அல்லவா?

ஏற்கெனவே சேர்ந்து படித்து வரும் மருத்துவ மாணவர்கள் கதி என்ன என்று கலங்குகின்றனர் -அதுவும் தேர்வுக்கு ஆயத்தமாகும் பருவத்தில் இப்படி ஒரு பேரிடி போன்ற செய்தியா?

மாணவர்களும், பெற்றோர்களும் எவ்வளவு துன்புறு வார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

தமிழ்நாட்டிலும் ஒரு மருத்துவக் கல்லூரி E.S.I. இ.எஸ்.அய். துறையின்மூலம் இயங்கிவருகின்றது.

எனவே, தமிழ்நாடு அரசுக்கும் இதில் கவலையும் அக் கறையும் பொறுப்பும் உண்டு - மூடாமல் தொடர வைக்கும் கடமை உண்டு.

மாநில அரசுகள் வசம் நிதி தந்து மத்திய அரசு உதவலாம். அல்லது ஜிப்மெர் போன்ற தானே இயங்கும் அமைப்பைத் தொடரச் செய்யலாம்.

எக்காரணம் கொண்டும் மூடு விழா கூடாது. அனைத் துக் கட்சிகளும், கல்வியாளர்களும், சமூகநீதிக்கான அமைப்புகளும் இதில் ஒத்த குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

வனத்துறைக் கல்லூரி மாணவர்கள் பிரச்சினை

இரண்டாவது மேட்டுப்பாளையத்தில் இயங்கும் தமிழக அரசின் வனத்துறை கல்லூரி மாணவ - மாணவியர்களின் அறப்போராட்டம் குறித்து தமிழக அரசு கேளாக் காதுடன், மெத்தனத்துடன் இருப்பது விரும்பத்தக்கதல்ல; வன்மை யான கண்டனத்திற்குரியது; பல வழிப் போராட்டங்களைத் தாண்டி சாகும் வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி யுள்ள இளந்தளிர்களை அழைத்துப் பேசி, பிரச்சினைக்கு முடிவு -தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டியது அவசர அவசியமாகும்!

அவர்கள் எந்த அரசியல் கட்சிகாரர்களாலும் தூண்டி விடப்பட்டு இப்படி நடக்கவில்லை; தங்களது குறைகளை நியாயமாக அறவழியில் தெரிவிக்கிறார்கள்.

இதை அலட்சியப்படுத்தக் கூடாது - சம்பந்தப்பட்ட அமைச்சர் துறையினர், காவல் நுண்ணறிவு துறை - இணைந்து தீர்வு காண வேண்டும்.

தங்களின் எதிர்காலம் - வாழ்வு பற்றிய கவலை, படிக்கும் மாணவ - மாணவியர்களுக்கு வருவதும், அதற்காக அவர்கள் நியாயமாக அறவழியில் போராடு வதும் எவ்வகையில் தவறு ஆகும்?

திராவிடர் கழகத்தின் ஆதரவு உண்டு

எந்தப் பிரச்சினையையும் வளரவிட்டு பிறகு அடக்குமுறை- அதிகாரம் மூலம் முடித்துவிடலாம் என்று எண்ணுவது ஜனநாயக அரசுக்கு உகந்ததாகாது.

திராவிடர் கழகம் அவர்களது அறப்போருக்கு ஆதரவு தருகிறது. மாணவர்கள் உயிருடன் விளையாடாமல் வேறு முறைகளை - அறவழியில் - தேர்வு செய்ய வேண்டும். சாகும் வரை போராட்டம் என்ற முறையைக் கைவிட வேண்டும்.

சத்துணவுக் கூடங்களை மூடுவதா?

அதுபோலவே, சத்துணவுக் கூடங்கள் தமிழக அரசால் மூடப்படுகின்றன என்ற செய்தி அதிர்ச்சியூட்டத் தக்கதாக வெளிவருவது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியது.

சர். பிட்டி தியாகராயர் காலத்தில் மாநகராட்சியில் (திராவிடர் இயக்க ஆட்சியில்) தொடங்கி, பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசர் காலத்தில் பகல் உணவுத் திட்டமாக மலர்ந்து - அண்ணா, கலைஞர் ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து,

எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவு என்று பெயர் பெற்று வளர்ந்து, திராவிடர் இயக்க ஆட்சியில் மேலும் மேலும் முட்டை, வாழைப்பழம் முதலிய சத்துணவுகள் வழங்கப்பட்டு, வளர்ந்து வந்துள்ளது.

இன்றைய ஆட்சி நிதிப் பற்றாக்குறையையோ, வேறு காரணம் காட்டியோ மூடு விழா செய்வது மிகவும் கண்டனத்திற்குரியது!

இது உண்மையாக இருந்தால் உடன் பள்ளிக் கல்வி அமைச்சகம் தலையிட்டு தடுத்து நிறுத்த முன் வர வேண்டும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


திருச்சி
20-2-2015

Read more: http://viduthalai.in/e-paper/96562.html#ixzz3SIRfNSjE

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவுத் திரைப்படத்தை முடக்குவதா?


பிரபுவிண்டே மக்கள் எனும் மலையாளப்படத்தில் பகுத்தறிவுக் கருத்துகள் உள்ளன.

மதங்களுக்கு எதிரான கருத்துகளை உள்ளடக்கி உள்ளதால் இணையத்தில் அந்த படம் தடை செய்யப்பட்டுள்ளது.

படத்தின் இயக்குநர் சஞ்ஜீவன் அந்திகாட் கூறும்போது, இந்தப்படத்தை 1.25 இலட்சம் பேர் பார்த்துள்ளனர். பகுத்தறிவு மற்றும் மதசார்பற்ற குழுவினராகிய கேரளா சுதந்திர சிந்தனையாளர்களின் அமைப்பால் கடந்த ஜனவரி 8ஆம் நாளன்று யூ டியூப்பில் இந்தப் படம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்த அமைப்பின்மூலம் ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த பிற வீடியோப் பதிவுகள் மதவெறி மற்றும் மூடநம்பிக்கைள், பகுத்தறிவு வாதங்கள் ஆகி யவைகளைக் கொண்டுள்ள வீடியோப் பதிவுகளும் தடை செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். யூ டியூப்பிலிருந்து கேரளா சுதந்திர சிந்தனை யாளர்கள் அமைப்புக்கு உள்ள கணக்கு முடக்கப் பட்டதாக தகவல் வந்துள்ளது.

உரிய முறையில் பொருத்தம் இல்லாமல் பதிவுகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து யூ டியூப் நிர்வாகம் அவைகளை தடை செய்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பதிவையும் எவரேனும் நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுவிட்டால், யூ டியூப் நிர்வாகத்தின் சார்பில் உள்ள குழுவினர் அதை ஆய்வு செய்வார்கள். அதன்படி, யூ டியூப் அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய வகையில் அப்பதிவுகள் இருந்துள்ளன. ஆகவே, அவை நீக்கப்பட்டன. பிரபுவிண்டே மக்கள் (மலை யாளம்) முழு படமும் அதன்படியே நீக்கப்பட்டுள்ளது என்று யூ டியூப் அளித்துள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

படத்தின் இயக்குநர் இணையத்தில் வெளியிட்ட மூன்று வாரங்களுக்குள் அப்படம் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. வகுப்புவாத சக்திகள் அப்படத்தை நீக்குவதற்காகப் பணிபுரிந்துள்ளனர்.

இயக்குநர் சஞ்ஜீவன் அந்திகாட் மேலும் கூறும் போது, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின்மூலம் தணிக்கை சான்று அளிக்கப்பட்ட படமாகும். அப்படி இருக்கும்போது, பொருத்தமில்லாதவை எப்படி அதில் இடம் பெற முடியும்? மதங்களால் ஏற்படும் தீமைகளை அந்தப்படம் வெளிப்படுத்தி உள்ளது. ஆகவே, மதவாத சக்திகளாக இணையத்தில் மறைந்துள்ளவர்களால் அதன் சிறகுகள் வெட்டப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்களில் கேரளா சுதந்திர சிந்தனையாளர்களுக்கான அமைப்பு பதிவேற்றிய பக்கங்கள் இதுவரையிலும் ஆறு முறை இதுபோன்று தடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

பி.கே. என்ற இந்தி படம் வட மாநிலங்களில் சங்பரிவார்க் கும்பலால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. பல திரையரங்குகள் தாக்கப்பட்டன. அதன் விளைவு பொது மக்கள் மத்தியிலே பெரும் ஆதரவைப் பெற்றது. 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. இந்தக் கால கட்டத்தில் பிரபு விண்டே மக்கள் எனும் மலையாளப் படத்தினை இணையத்தில் முடக்கு வதேன்? அதுவும் தணிக்கைத் துறையால் அனுமதிக்கப் பட்ட ஒரு திரைப்படத்தை முடக்குவது எந்த வகையில் சரியானதாக இருக்க முடியும்?

மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையையும் சீர்திருத்த உணர்வையும் வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் நிலையில் இது போன்ற திரைப்படங்களை முடக்குவது கண்டிக்கத் தக்கது - சட்ட விரோதமானதும்கூட மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு செல்லுவது கேரள சமூக சீர்திருத்தவாதிகளின் முக்கிய கடமையாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/96552.html#ixzz3SIRvUEZ7

தமிழ் ஓவியா said...

ரஷ்யாவில் விஷ்ணுவின் மகன் விநாயகன்

ரஷ்யாவில் உள்ள லெனின் கிராட் நகரில் உள்ள வினோதங்களில் ஒன்று அங்கு அமைந்திருக்கும் நாத்திகர்கள் காட்சி சாலை. உலகத்தில் உள்ள அனைத்து மதங்கள், கடவுள்கள் பற்றிய விளக்கக் குறிப்புகளும், கடவுள் உருவச் சின்னங்களும் அங்கு வைக் கப்பட்டுள்ளன.

மதங்களாலும், கடவுள்களாலும் அல்லது இவை பற்றிய நம்பிக்கையால் மக்களுக்கு ஒருவித பயனும் இல்லை என்பதை விளக்குவதே அந்த கண்காட்சியின் நோக்கம்.

அங்கு ஓரிடத்தில் விநாயகர் சிலைக்குக் கீழே விநாயகர் விஷ்ணுவின் மகன் என்ற குறிப்பு இருக்கிறது.

அந்தக் கண்காட்சியில் கடவுள், மதம் காரணமாக மனித குலத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், அநீதிகள் பற்றிய விளக்கங்கள் காணப்படுகின்றன.

Read more: http://viduthalai.in/e-paper/96555.html#ixzz3SITO14B2

தமிழ் ஓவியா said...

அர்ச்சகர் - ஜோசியர் சம்பாஷணை

அர்ச்சகர்: என்ன ஜோசியரே, கோயிலுக்கு முன்போல் ஆட்கள் வருவதே இல்லையே! குடும்ப நிர்வாகம் கஷ்டமாகவல்லவா இருக்கிறது.

ஜோசியர்: என்ன காரணம்?

அர்: இந்த எழவு எடுத்த சுயமரியாதைதான்.

ஜோ: சுயமரியாதை காரணம் என்றால், சுயமரியா தைக்காரர்கள் சாமி இல்லை பூதம் இல்லை என்று சொல்லி மக்களைக் கோயிலுக்குள் போகக் கூடாது என்று பிரச்சாரம் செய்கின்றார்களே, அதனாலா?

அர்: இல்லை இல்லை. அதற்கெல்லாம் நமக்கு பயமில்லை. இன்னமும் ஆயிரந்-தடவை வேண்டுமானாலும் சாமியில்லை; பூதமில்லை என்று சொல்லட்டும்; கோயிலை வேண்டுமானாலும் இடிக்க வேண்டுமென்று சொல்லட்டும். அதனால் நமக்கு ஒன்றும் கெட்டுப் போகாது.

ஜோ: மற்றென்ன காரணம் என்ன சொல்லுகிறீர்கள்?

அர்: கோவில்களுக்கு தேவதாசிகள் வருகின்றதான முக்கிய கைங்கரியத்தைப் பற்றி கண்டபடி பேசி அதை நிறுத்தி விட்டார்-களல்லவா, அதனால்தான்.

ஜோ: இதற்கும் பக்திக்கும் சம்பந்தமென்ன? இதனால் எல்லாம் மக்களுக்குக் கடவுள் பக்தி குறைந்து விடுமா?

அர்: கடவுள் பக்தி என்றால் என்ன என்கிறீர்! கடவுள் தான் எங்கும் நிறைந்தவராயிற்றே; இதற்காக ஒரு மனிதன் கோவிலுக்கு வர வேண்டுமா?

ஜோ: மற்றெதற்காக வருகிறார்கள்?
இரண்டு காரியத்திற்காக...

அர்: இரண்டு காரியத்திற்காகத்தானே கோவிலுக்கு வருகின்றார்கள்:
1) தன்னை பக்திமான் என்று பிறர் மதிக்க வேண்டும்.
2) அங்கு வரும் நல்ல பெண்களை ஆண்கள் பார்க்கவும், ஆண்களைப் பெண்கள் பார்க்கவுமான காரியங்களுக்கு என்றாலும், இரண்டாவது விஷயத்திற்குத்தான் அதிகம் பேர் வாலிபர்கள் சற்று ஷோக் பேர் வழிகள் சிறிது வயதானவர் களாயிருந்தாலும் சபலமுடையவர்கள் ஆகியவர்கள் வருவது.

இப்படிப்பட்ட ஆண்கள் தாராளமாய் வராவிட்டால் குடும்பப் பெண்களும் வருவதில்லை. ஆக, இப்படிப்பட்ட இரண்டு கூட்டம் வந்தால்தானே காணிக்கை, கட்டளை, இணைப்புத் தரகு ஆகியவை கிடைக்கும். ஆகவே, நமக்குக் கோயிலில் மணியடிப்பதில் என்ன பிரயோசனம்? கோயில் சம்பளமாகிய மாதம் 1-12-0 ரூபாய் சம்பளமா நமக்குக்கட்டும்?

ஜோ: அப்படியா சங்கதி, அவர்கள் இப்படிச் செய்தால் நமக்கு வேறு கிடைக்காதோ?

தமிழ் ஓவியா said...


அர்: என்ன வழி?

ஜோ: நம்ம ஆளுகளே ஒன்று சேர்ந்து நாம் ஆளுக்கு இரண்டு மூன்று வீதம் பெண்டாட்டிகள் கட்டி, நன்றாய் அலங்கரித்து தினம் காலை, மாலையில் கோயிலுக்கு வரும்படி செய்தால் என்ன?

அர்: அப்படிச் செய்வது சாத்தியமாகுமா? அவர்களுக்கு நகை, புடைவை, மினுக்கு கண்ட கண்ட இடங்களுக்கு எல்லாம் சென்று அறிமுகம் செய்து கொள்ளுவது முதலாகிய இதெல்லாம் செய்ய வேண்டாமா? பிறகு நமது வீடுகளிலும் போதிய சவுகரியம் - வீடு, வாசல், கட்டில், படுக்கை முதலிய சவுகரியம் ஆகியவை வேண்டாமா? இவற்றிற்கெல்லாம் பணத்திற்கு எங்கே போவது?

நாம் ஏதோ தாசிகள் செல்வாக்கினால் கோவிலுக்கு வருகின்றவர்களில் ஒன்று இரண்டு ஆள்களைப் பிடித்து சரி பண்ணி, அதுவும் இரகசியம் என்றும் அவசரமென்றும் பயப்படுத்தி 10, 5 பெற்றுக் கொண்டு கஷ்டமில்லாமல் நஷ்டமில்லாமல் சம்பாதிப்பது நலமா? அப்படிக்கின்றி, நம்ம பெண்களையே தாசிபோல் நடக்க ஏற்பாடு செய்து கொள்ள முடியுமா?

ஜோ: என்னமோ கஷ்டகாலம் உங்களுக்கு மாத்திரமல்ல; நமக்கும்கூடத்தான் வந்துவிட்டது.

அர்: உங்களுக்கு என்ன வந்தது?

ஜோ: இப்போது எந்தத் தேவடியா மகன் நம்மிடம் ஜோசியம் பார்க்க வருகிறான்? பிள்ளைக்கும், பெண்ணுக்கும் பொருத்தம் பார்க்கின்ற வேலையே மிகவும் குறைந்து போய் விட்டது.

அர்: ஏன்?

ஜோ: ஏன் என்றால்! அததுகளே - பெண்ணும் மாப்பிள் ளையுமே பொருத்தம் பார்த்துக் கொள்ளுகின்றன.

அர்: இருந்தாலும் கிரகதோஷம் பார்க்கவாவது வருவார்களே?
சுயமரியாதை

ஜோ: அதாவது வந்தாலும் பரவாயில்லை. அதற்குத்தான் எங்கு வருகின்றார்கள்! திருட்டுத் தேவடியா பிள்ளைகள் காய்ச்சல் வந்தால் - தலைவலி வந்தால் உடனே டாக்டர்கள் இடம் போய் விடுகின்றார்கள். நம்மிடம் வருவதே இல்லை. நம்மைக் கண்டால் சிரிக்கின்றார்கள்; என்னடா என்று கேட்டால், சுயமரியாதையடா என்கின்றார்கள்.

அர்: சரி, இவ்வளவு ஆனதற்கப்புறம் எனக்கு ஒன்று தோன்றுகிறது.

ஜோ: என்ன?

அர்: நாமும் சுயமரியாதைப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றி மெள்ள மெள்ள உள்ளே இருந்தே அதை ஒழித்து விடுவது! எப்படி என்றால், இப்பொழுது எத்தனையோ தமிழ்ப் பண்டிதர்கள் அப்படித்தான்; அதாவது, நானும் சுயமரியாதைக் காரன் என்று சொல்லிக் கொண்டு அதற்குள் பிரவேசித்து அதை ஒழிக்கப் பார்க்கின்றார்களே அதுபோல்.

ஜோ: அது நல்லவழிதான். நம்முடைய பெரியவாள் பவுத்தர்கள் காலத்திலும் இப்படித்தான் செய்தார்கள். ஆனால், இந்த சு.ம. பயல்கள் (சுயமரியாதைக்காரர்கள்) இது தெரிந்து தான் பு.ம. பயல்களை (புராண மரியாதைக்காரர்களை) அதாவது, பிராமணர்-களைச் சேர்ப்பதில்லை என்று தீர்மானித்து விட்டார்களே!

அர்: அதுவும் அப்படியா! அப்படியானால் இந்தப்படி ஏழைகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் இந்த சு.ம.காரன்கள் நாசமாய் நிர்மூலமாய்ப் போகட்டும். நாம் போய் இனி காங்கிரசில் சேர்ந்து கொள்ளுவோம்.
- சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது, (குடிஅரசு 10.5.1931).

Read more: http://viduthalai.in/e-paper/96559.html#ixzz3SITetfuC

தமிழ் ஓவியா said...

அண்ணா சொன்ன கடவுளர் கதைகள்

ஆண்டவன் ரகசியம்

ஆதி காலத்தில் மனிதன் ஓயாத அலைகளைப் பார்த்தான். அதன் சீற்றத்தால் நாடு அழிவதைக் கண்டான்; கடும்புயல் வீசி பெருமரங்கள் சாய்வதைக் கண்டான்; இடி இடித்து அதன் ஓசையால் புற்றுக்குள் இருக்கும் நாகமும், புதரில் மறைந்து இருக்கும் புலியும் நடுநடுங்கி ஓடுவதை அவன் பார்த்தான்.

ஏன் இவை ஏற்படுகின்றன என்று அவனுக்குப் புரியவில்லை. இது விளங்காத காரணத்தால் அவனுக்கு அச்சம் ஏற்பட்டது. ஏன் என்று புரியாது அச்சத்துடன் நின்ற அந்த மனிதனின் முன்னே ஒரு எத்தன் நின்றான். அவை என்ன தெரியுமா? அதுதான் ஆண்டவன் செயல் என்று அந்த எத்தன் கூறினான்.

அந்த ஆதி மனிதன் முன்னே நின்ற எத்தன்தான் உலகிலேயே முதலில் தோன்றிய பார்ப்பனன் அல்லது புரோகிதன். அச்சத்திலே ஏற்பட்டதுதான் ஆண்டவன் தத்துவம்.

முக்தி பெற்ற பார்ப்பான்!

மதுரை சோமநாதப் பெருமானின் ஒரு பார்ப்பன பக்தன் காமுகப்பட்டு, கருத்திழந்து தொட்டிலிலே வளர்த்தவளை கட்டிலுக்கிழுத்தான்- பெண்டாடினான். நடக்க கூடாத செயல்! ஆனால் நடந்திருக்கிறது.

தாய் அவனைப் பார்த்து பாவி அன்னையையா இந்த அக்கிரமம் செய்தாய் என்று கேட்க அவன் அப்பன் ஒருவன் இருப்பதால் அல்லவோ நீ எனக்கு அன்னையானாய் அவன் இல்லாவிட்டால்...! ஒரு பெண்தானே, என எண்ணி அவனை வெட்டி வீழ்த்தினான்.

இரு பாதகம் செய்த அவன் மருட்சி கொண்டு மதுரைக்கு வந்து ஆலவாய் அப்பனிடம் அடைக்கலம் புகுந்தான் அலறினான். அப்போது சோம பெருமானும் மீனாட்சி அம்மையும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருக்க, அவன் குரல் கேட்ட பெருமான் ஆட்டத்தை நிறுத்த, உடனே அம்மை பார்த்து ஏன் ஆடவில்லை என்று கேட்க அய்யன்,

அன்னையை பெண்டாடிய அடியாரின் கருத்தை விளக்க, அந்த மாபாவிக்கா அருள்புரிவது என்று மீனாட்சி சிணுங்க உமையவளே, உற்றுக் கேள் எத்தகைய மகா பாதகம் என்றாலும் பிராமணன் என்றால் அருள்புரியத் தான் வேண்டும் என்று கூறினாராம். பிறகு அவன் முக்தி (மோட்சம்) பெற்றானாம்.

அக்கினியின் ஆசை!

ஒரு காலத்தில் சப்தரிஷிகள் யாகம் செய்தனராம். அந்த யாகத்திற்கு அவிர்ப்பாகம் வாங்கச் சென்ற அக்கினி பகவான் அந்த ஏழு ரிஷி பத்தினிகள் மீதும் காமமுற்றா னாம். இதனை வெட்கத்தை விட்டு தன் மனைவியிடம் சொன்னானாம்.

ஆண்டவனான அக்கினி பகவான் தன் மனைவியிடம் அதற்கு ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னானாம். அவன் மனைவியும் சப்தரிஷிகளில் ஆறு பேர்களின் மனைவியைப் போல உருவெடுத்து தன் கணவனின் காமத்தைத் தணித்தாளாம்.

ஆனால் ஏழாவது முனிவரின் மனைவியான அருந்ததியைப் போல மட்டும் உருவெடுக்க முடியவில்லையாம் அதற்குக் காரணம் அருந்ததி ஒரு ஆதி திராவிடப் பெண்ணாம்.
ஆதாரம்: பேரறிஞர் அண்ணா சொன்ன குட்டிக் கதைகள் 100 என்ற நூல்

Read more: http://viduthalai.in/e-paper/96560.html#ixzz3SITopAdp

தமிழ் ஓவியா said...

ஜாதி கணக்கெடுப்பில் உள்நோக்கமில்லை
முதல்வர் சித்தராமையா

பெங்களூரு, பிப்.21 ''பொது நியாயப்படி, அனைவருக்கும் கிடைக்க வேண்டிய சலுகைகள், கிடைக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில், ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்படு கிறது. இதில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை, என்று, முதல்வர் சித்தராமையா கூறினார்.

மைசூரு மண்ட ஹள்ளி விமான நிலையத் தில், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொது நியாயப்படி, அனைவருக்கும் கிடைக்க வேண்டிய சலுகைகள், கிடைக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில், ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்படு கிறது. இதில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. அனைவருக்கும் சமமான சலுகையை வழங்கு வதன் மூலம், சமூக அபிவிருத்தியை, முன்னோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது. ஆனால், இதை பற்றி சிலர், தேவையின்றி குற்றம் சாட்டி வருகின் றனர்; இதற்கு, அரசு பணி யாது. சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு, கூடுதல் முக்கியத்துவம் தரப்படும். மத்திய அரசு, இது போன்ற திட்டங்களை குறைத்து கொள்வது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/96615.html#ixzz3SOxChszH

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சமஸ்கிருதம்

கடவுள் சபலங்களுக் கும், சடங்குகளுக்கும் அப்பாற்பட்டவர் என் றால் கோயிலில் சமஸ் கிருதத்தில்தான் அர்ச் சனை செய்யப்பட வேண்டும். குட முழுக்கு சமஸ்கிருதத்தில்தான் நடைபெற வேண்டும் என்பது கடவுளைக் கேலி செய்வது ஆகாதா? ஆகமம் என்றாலும் அவாளுக்குத்தான் சாதகமா?

Read more: http://viduthalai.in/e-paper/96619.html#ixzz3SOxcOCal

தமிழ் ஓவியா said...

மனித சமுதாயத்தில்...


நாம் உண்மையான பகுத்தறிவுவாதிகளாக ஆகிவிடுவோமேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும். (விடுதலை, 16.11.1971)

Read more: http://viduthalai.in/e-paper/96607.html#ixzz3SOxr26SJ

தமிழ் ஓவியா said...

கொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவுஇந்த சினிமா காட்சி பார்ப்பதற்கு மிக அதிசயமாயும் ரம்மியமாயும் காணப் பட்டாலும், இதைப் பார்ப்பதனால் ஏற்படும் பயன் மூடநம்பிக்கையும் அடிமைத் தனமும் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், இந்த மூடநம்பிக்கையும் அடிமைத் தன்மையையும் சோம்பேறிகள் பயன்படுத்திக் கொண்டு ஏழைகளை வருத்தி செல்வம் பெருகிக்கொள்ள பயன்படுகின்ற தென்றும், இனி இப்படிப்பட்ட காட்சிகள் தடுக்கப்பட வேண்டுமென்றும், பகுத்தறிவும், சுதந்தரமும் ஏற்படக் கூடிய விஷயங்களையே நாடகமாகவோ படக்காட்சியாகவோ காட்ட இந்த தியேட்டர் சொந்தக்காரர் முயற்சிக்க வேண்டுமென்றும், உண்மையான சுதந்திர, சமத்துவத் தேசங்களில் உள்ள காட்சிகள் அப்படித்தான் இருக்கின்றதென்றும் சொன்னார்.

ஆதி திராவிடர் சங்க வரவேற்பில் சொற்பொழிவு

தாழ்த்தப்பட்டவர்கள் ஈடேற ஒரே ஒரு வழிதான் உண்டென்றும், அது உலகில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டிய முயற்சி எடுக்க வேண்டுமென்றும், அம்முயற்சிக்கு எதிரியாய் இருக்கும் சாதனங்களான தேசாபிமானம், மதாபிமானம் என்பவை களை அடியோடு அழித்து உலக ஏழைகள் அபிமானம் உலக தாழ்த்தப் பட்டவர்கள் அபிமானம் என்பதன் உணர்ச்சியுடன் வேலை செய்யத் துணிய வேண்டும் என்றும், உலக மனித சமூகத்தை 2 -வகுப்பாகத்தான் பிரிக்க வேண்டு மென்றும், அது ஒன்று, தொழில் செய்து கஷ்டப்பட்டு வாழும் ஏழை, மற்றொன்று தொழில் செய்யாமல் மற்றவர்கள் தொழிலின் பயனை அனுபவிக்கும் சோம்பேறி செல்வவான்கள் என்றும் இரண்டே பிரிவாகப் பிரிந்து போராடி விடுதலை அடைய தயாராயிருக்க வேண்டு மென்றும் பேசினார். (கடைசியாக, ஒரு உபதேசியார் எழுந்து ராமசாமியின் உழைப்பையும் உபதேசத்தையும் தான் பல வருஷங் களாகப் பார்த்து வருவதாகவும், அவர் மூலம் தான் மக்கள் கஷ்டம் ஒழியக் கூடுமென்றும், ஆனால் அவர் கடவுளை நம்பவில்லையென்று சொல்லுவது தனக்கு வருத்தத்தைக் கொடுக்கிற தென்றும் சொன்னார்.)

அதற்கு ராமசாமி பதிலளிக்கையில் கடவுளை நம்ப வேண்டும் என்பது ஒரு அடக்குமுறை என்றும், அது அவனவன் சொந்த விஷய மாகப் பாவிக்க வேண்டுமென்றும் கடவுள் மீது சிறிதாவது நம்பிக்கை இருப்ப வர்கள் ராமசாமியால் கடவுள் இல்லாமல் போய் விடுமோ என்று பயப்பட வேண்டியதில்லை என்றும், உலகில் நடக்கும் அக்கிரமங்களுக்கும், ஏழைகளை வஞ்சித்து கொடுமைபடுத்தி வேலை வாங்கி சோம் பேறியாய் வாழும் அயோக்கிய தனத்திற்கும் பெரிதும் கடவுள் நம்பிக்கைக் காரர்கள் தான் காரணஸ்தர்களாகவும் பொறுப்பாளிகளாகவும் இருக்கின்றார்களே ஒழிய வேறில்லை என்றும் ஆதலால் கடவுள் நம்பிக்கை போய் விட்டால் உலகம் என்ன கதியாகும் என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னார்.

குடிஅரசு - சொற்பொழிவு - 13.11.1932

Read more: http://viduthalai.in/e-paper/96643.html#ixzz3SOyz9FAq

தமிழ் ஓவியா said...

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்

வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சாணை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல், நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.

நமது இலட்சியம் அரசியல் வேட்டையல்ல, மந்திரி நாற்காலியல்ல. நாலாறு பெறுவதல்ல. நமது மூதாதையர் ஆண்ட நாட்டை மீண்டும் பெறுவது - புதிய அரசை அமைப்பது, அதுதான் நம்முடைய நோக்கம்.

Read more: http://viduthalai.in/page2/96579.html#ixzz3SP08tthy

தமிழ் ஓவியா said...

ஜா(பா)தகம்

வீரன்வயல் வீ. உதயக்குமரன்

உங்க பொண்ணு எங்களுக்கு பிடிச்சி போச்சி.. உங்க எல்லோருக்கும் என் பையனையும் பிடிச்சி போச்சி.. ஆனா ரெண்டு பேரோட சாதகமும் பொருந்த லேன்னு சொல்றது சரியா படலே சம்மந்தி உடைந்த குரலில் சொன்னார் சிவ சங்கரன்.

கள்ளிமேட்டு சோசியன் கணிப்பு தப்பாது. கல்யாணம் நடந்தா ஆறே மாசத்துல என் பொண்ணு முண்டச்சி ஆயிடுவா
அழுத்தமாய் வாதித்தார் பெண்ணின் தந்தை நாச்சிமுத்து.

”சரி வேற சோசியரை பார்ப்போம். அவனும் இதையே சொன்னா... இந்த கல்யாணம் வேண்டாம்”

”சம்மந்தியும் விடறதா இல்ல. சரி உங்க திருப்திக்காக வேற ஜோசியனையும் பாக்கலாமே நான் சோதிடம், ஆன்மீகம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவன் இதெல்லாம் சுத்த பேத்தல்னு நிரூபிக்கதான் நான் வேற சோசியனை பாக்கலாம்னு சொல்றேன்”

சம்மந்திகள் இருவரும் கொத்தமங்கலம் கோபாலிடம் சாதகங்களை நீட்டி னார்கள். கோபால் தனது காவி பற்கள் வெளியே தெரிய சிரித்தார்.

”இந்த கல்யாணம் நடக்கும்.. ஆனா உடனே நடக்காது.. ஆறு வருஷம் பொறுத்திருக்கணும்”

”என்ன சோசியரே.. உங்க கிட்ட கல்யாணத்துக்கு பொருத்தம் பாக்க சொன்னா அறுபதாம் கல்யாணத்துக்கு காத்திருக்க சொல்றீங்க”

சிவசங்கரன் தனது எரிச்சலை கொட்டித் தீர்த்தார். மேலும் நான்கு சோதிடர்களை பார்த்த பிறகு சிவசங்கரன் ஒரு முடிவுக்கு வந்தார்.

”சம்மந்தி எவனாவது ஒரே மாதிரி சொன்னானா.. நாலு பேரும் நாலு விதமா சொல்றான். இப்ப வாங்க.. நாம முதல்ல பாத்த கள்ளி மேட்டு சோசியன் கிட்ட போகலாம் ம் அவர்தான் கரெக்டான ஆள்”

ம்.. இந்த சாதகத்துக்கு ரெண்டு பேர்க்கும் போன வருஷமே கல்யாணம் நடந்திருக்கணுமே கள்ளி மேட்டு சோதிடர் தனது கணிப்பை சொன்னதும் பொங்கி எழுந்தார் நாச்சிமுத்து.

”படவா ராஸ்கல் உன் பேச்சை கேட்டு ஒருவருஷம் வீணாப் போச்சிடா.. போன வருஷம் ஒரு பேச்சு இந்த வருஷம் ஒரு பேச்சு இதான் சாதகமா.. வாங்க சம்மந்தி நாமளே நாள் குறிக்கலாம்”

Read more: http://viduthalai.in/page3/96584.html#ixzz3SP0hKKoH

தமிழ் ஓவியா said...

வாத்தியாரே தீர்ப்பை மாற்று!

மனைவியின் விருப்பமின்றி கணவன் வற்புறுத்தி உறவுகொள்வது பாலியல் வன்முறைக் குற்றமாக்கப்பட வேண்டும் என்று கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் தனிப்பட்ட பிரச்சி னையை பொதுப்பிரச்சினையாகக் கருத முடியாது என்று நிராகரித்துவிட்டது.

டில்லியில் அலுவலராகப் பணி புரியும் ஒரு பெண் தன்னுடைய கணவ னால் தொடர்ச்சியாக பாலியல் வன் முறைக்கு ஆளாகி உள்ளார். அப்படி தன்னுடைய விருப்பத்துக்குமாறாக இருந்துள்ள கணவனின் செயலை குற்ற மாக்கிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

அப்பெண்ணின் வழக்கில் சட்டத்தின் பார்வையில் கணவன் மனைவியிடம் நடந்துகொள்ளும் பாலியல் உறவு என்பதை குற்றமாகக் கருத இடம் இல்லை என்றும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 375இன்படி, மணமான இணையருக்குள் பாலியல் உறவு என்பதில் அவர்களுக்குள் ஒப்புத லின்றியே இருந்தாலும், மனைவியின் வயது 15வயதுக்குள் இல்லாமல், மனைவியின் ஒப்புதலின்றி அவள் கணவன் உறவு கொண்டால் அது பாலியல் வன்முறை ஆகாது என்று கூறப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு டில்லியில் பாலியல் வன்முறை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப் பட்ட நீதிபதி வர்மா தலைமையிலான குழு அறிக்கையில், மணமான பின்னர் விருப்பமின்றி உறவு கொள்வதைக் குற்றமாகக் கருதவேண்டுமா?

என்ப தைக் கவனத்தில் கொள்ளும்போது, விருப்பமின்றி கணவன் மனைவி யிடையே ஏற்படக்கூடிய உறவைக் குற்றமாகக் கருதினால், அது திருமணம் என்பதற்கான முறையையே அழித்து விடும் ஆற்றல் உள்ளதாக ஆகிவிடும் என்று இந்திய அரசு கருதுகிறது. குடும்ப முறையே முழுமையாக பெரிய அழுத் தத்துக்கு உள்ளாகிவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்ப முறையை சீர்குலைத்துவிடும் என்பதால் திருமணத்துக்குப்பின்னர் கணவன் மனைவியிடையே விருப்ப மின்றி உறவு கொள்வதைக் குற்றமாகக் கருத முடியாது என்று இப்பிரச் சினைகுறித்து விவாதிக்க அமைக்கப் பட்ட நாடாளுமன்ற குழு கூறிவிட்டது.

அதேநேரத்தில், சட்டப்படி பிரிந்து இருக்கும்போது கணவன் மனைவியி டையே பாலியல் தொல்லைகள் நிகழும்போது, அதைக் கடுமையானக் குற்றமாகக் கருதவேண்டும். என்றும் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை கூறியிருந்தது.

வழக்கு தொடுத்த பெண்ணின் வழக்குரைஞர் கோலின் கோன்சால்வ்ஸ் கூறுகையில், இப்போதைக்கு வழக்குக் கான மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். ஆனாலும், பெண் களுக்கான அமைப்புவாயிலாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

Read more: http://viduthalai.in/page3/96588.html#ixzz3SP15gTcq

தமிழ் ஓவியா said...

புத்தர்தம் பகுத்தறிவு ஒளி!

’இவ்வுலகில் புலன் இன்பங்களில் கட்டுப்பாடு அற்றவர்களாய், இனிய பொருட்களில் பேரவா கொண்டவர் களாய், குற்றச் செயல்களோடு தொடர்பு உடையவர்களாய், அழிவு நிலைப் பார்வை உடையவர்களாய், குறுகிய மதியினராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச்சியை உண்பவர்களன்று’

’இவ்வுலகில் கடுமையானவராய் நம்பிக்கைத் துரோகம் செய்பவராய், கருணை அற்றவராய், அதிக சுயநலம் கொண்டவராய், கருமியாய், எவருக்கும் ஏதும் அளிக்காதவராய், புறங்கூறுபவ ராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச் சியை உண்பவர்கள் அன்று’

இவ்வுலகில் தீயொழுக்கம் உடை யவராய், தம் தொழிலில் ஏமாற்றுக் காரராய், கடனைத் திருப்பித்தர மறுப்பவராய், பாசாங்குக்காரராய், பிறரை இகழ்ச்சியாய் நினைப்பவராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச் சியை உண்பவர்கள் அன்று.

இவ்வுலகில் பிறருக்குத் துன்பம் இழைப்பவராய், பிறர் பொருள் கவர்பவராய், தீயொழுக்கம் உள்ளவராய் மரியாதை அற்றவராய், கொடுஞ் செயல்களில் கட்டுப்பாடு அற்றவராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச் சியை உண்பவர்கள் அன்று.

இவ்வுலகில் கொலை செய்வோராய், கொலை செய்யத் தூண்டுதலாய் இருப்போராய், திருடராய், பொய்யராய், வஞ்சிப்பவராய், ஏமாற்றுக்காரராய் தவறான காமச் செயல்களில் ஈடுபடு வோராய் இருப்பவர்களே தீயர்கள்! இறைச்சியை உண்பவர்கள் அன்று.

இவ்வுலகில் சினம் மிகுந்தோராய், தற்பெருமை, தற்புகழ்ச்சி, பொறாமை, தீய நெறிகளில் நிலைப்போராய் இருப்பவர்களே தீயர்கள். இறைச்சியை உண்பவர்கள் அன்று.

எவரொருவர் மீனையும், இறைச் சியையும் உண்பவராய் இருந்தும், நல் லோராய், பற்றுக்களைக் கடந்தோராய், நேரிய வழியில் மகிழ்வோராய், வெல்லப்பட்ட புலன்களை உடைய வராய், பேராசை, வஞ்சகம், தற்புகழ்ச்சி அற்றோராய், கருணை உள்ளவராய், இறப்பிற்குப் பின்னும் நற்பெயர் பெறு வோராய், நன்னெறியில் நிலைப் போராய் இருப்பவர்கள் தீயோராக கருதப்படுவதில்லை.

எவரொருவர் பற்றுகள் நிறைந் தவராய், பேராசை பிடித்தவராய், ஏமாற் றுக்காரராய், வஞ்சகம் செய்வோராய், குற்றச் செயல்களில் தொடர்புடை யோராய், புலன்களை வெல்ல முடி யாதவராய், தீய ஒழுக்கமுடையோராய், நம்பிக்கைத் துரோகம் புரிபவராய், கருணை அற்றவராய், இறப்பிற்குப் பின்னும் தீய பெயர் பெறுவோராய்,

தீய நெறியில் நிலைப் போராய் இருந்து, சாம்பல் பூசியவராய், சடைமுடி வளர்ப் பவராய், பருவத்திற்கேற்ப பூஜைகள், யாகங்கள் செய்வோராய், எல்லாவித சடங்குகளையும் செய்பவராய் இருப் பவர், மீனையும் இறைச்சியையும் தவிர்ப்பவராய் இருப்பதினால் நல் லோராக கருதப்படுவது இல்லை.

மீனையும், இறைச்சியையும் உண் ணாது தவிர்த்தலும், நிர்வாணமாய் இருத்தலும், குடுமி வைத்தலும், மழித் தலும், உரோம உடை உடுத்தலும், யாகத் தீ வளர்த்தலும் போன்ற இவை யெல்லாம் பேரின்ப ஞானம் பெற போதிய வழிமுறைகள் அன்று. தன்னை வருத்தலும், யாகத்தீயில் தானப் பொருள்களை இழத்தலும், சடங்குகளும், குற்றம் உடைய மனிதனைத் தூய்மைப் படுத்தி விடாது.

’தீமைகளை உருவாக்குவது தீயசெயல் களே அன்றி மீனையோ இறைச் சியையோ உண்பதனால் அன்று’

உங்கள் புலன்களை அடக்குங்கள்! உண்மையைக் கடைப்பிடியுங்கள்! உங்கள் சக்திகளை நீங்களே ஆளும் திறன் பெறுங்கள்! இரக்கத்தோடு இருங்கள்! அனைத்துக் கட்டுக்களையும் விட்டொழித்து தீமைகளை வென்ற துறவிதான் கண்டவற்றாலும் கேட்ட வற்றாலும் களங்கப்படுவது இல்லை.

புனிதர் புத்தரின் போதனைகளி லிருந்த சத்தியத்தை உணர்ந்த துறவி ஆமகந்தர், அங்கேயே அப்போதே தன்னையும் தன் சீடர்களையும் நன் னெறியாம் தம்மநெறிக்கு ஒப்புக் கொடுக்க புனிதர் புத்தரைப் பின்பற்றுவோர் களாகத் தம்மை ஏற்கும்படி வேண்டிப் பணிந்தார்.
இவ்வாறு புத்தர் கூறினார்.

(அண்ணல் அம்பேத்கர் எழுதிய நூலின் மொழி பெயர்ப்பு)

மொழியாக்கம்: திருமகள்

Read more: http://viduthalai.in/page3/96587.html#ixzz3SP1Cvdv4

தமிழ் ஓவியா said...

கீதை பற்றி விவேகானந்தர்

கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கீதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேதவியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப் பட்டதா?
இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா? மூன்றாவதாக கீதை யில் கூறப்படுவதுபோல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?

நான்கா வதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள் தானா? என்பன கீதையைச் சங்கராச் சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத் தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி - குரு சேத்திர யுத்தம் நடைபெற்றது என்ப தற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத் தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே உரை யாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண் டாரா என்ற பிரச்சினை எழுகிறது.

அர்ஜூனன் ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத் திரயுத்தம் செய்தனர் என்பதோ கூறுவ தற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. -விவேகானந்தர்,

கீதையைப்பற்றி கருத்துகள் என்ற நூலில் ஆதாரம்: ஏ.எஸ்.கே.அய்யங்கார் எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூலில் - பக்கம் 11,.117)

Read more: http://viduthalai.in/page3/96586.html#ixzz3SP1RGbF6

தமிழ் ஓவியா said...

தமிழகத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகள்

நோக்கியா

கடந்த ஆகஸ்டிலிருந்து தமிழகத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகளினால் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000 தொட்டுள்ளது. இதில் நோக் கியா மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மாத்திரம் நேரடியாக மற்றும் அதனைச் சார்ந்த தொழில் செய்து வந்த 25,000 பேர் நிரந்தரமாக வேலையிழந்துள்ளனர்.

நோக்கியா தொழிற்சாலை வரி ஏய்ப்பிற்காக மூடப்பட்டதா?

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நோக்கியா தனது தொழிற்சாலையை சென்னையில் திறந்தது. மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய பகுதிகளில் இருந்த சந்தைகளுக்கு இங்கிருந்து மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஒப்பந்தத்தின் படி ஏற்றுமதிக்கான தயாரிப்புகள் மாத்திரமே இங்கு தயாரிக் கப்பட்டு வந்தது. ஆனால் ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக, உள்ளூர் சந்தையில் பெரும் வரவேற்பு இருப்பதை அறிந்து கொண்டு விதிமுறைகளை மீறி மொபைல் போன்களை உள்நாட்டுச் சந்தையிலும் விற்றது.

நோக்கியாவின் இந்த விதி முறை மீறிய செயல்பாட்டின் காரண மாக தமிழ்நாட்டிற்கு சுமார் 3000 கோடி வரி இழப்பு ஏற்பட்டது. கலைஞர் தலைமை யினால் ஆன அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் விதிமுறை மீறிய நோக்கியா நிறுவனம் தமிழக அரசுக்கு 2,400 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டும் என அறிவிக்கை அனுப்பியது.

மற்றோரு வழக்கில் நோக்கியா மைக்ரோசாஃப்டிற்கு மாற்றுவதற்கு முன்பாக 3500 கோடி ரூபாய்க்கு உத்தரவாதமளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், நோக்கியா நிறுவனம் சிறீப்பெரும்புதூர் தொழிற்சாலை கைமாறவில்லை, அதற்கு மாறாக மொபைல் போன்களை உற்பத்தி செய்து தருவதாக மட்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம் என்று நீதிமன்றத்தில் கூறியது. இதன் மூலம் சிறீப்பெரும்புதூர் நோக்கியா ஆலை தொடர்ந்து இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென மைக்ரோசாப்ட் நிறுவனம் மொபைல்போன் வாங்குவதை நிறுத்தி விட்டது. ஆகவே தொழிற்சாலையை மூடப் போகிறோம் என்று அறிவித்து கடந்த நவம்பர் முதல் இந்நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. நோக்கியா நிறுவனம் இயங்கிக்கொண்டு இருந்த போது சுமார் 8000 தொழிலாளர்கள் நேரடியாக பணிசெய்து கொண்டு இருந்தனர்.

இவர்களை அழைத்துச்செல்ல 27 ஒப்பந்தப் பேருந்துகள் இயங்கிக் கொண்டு இருந்தன. மேலும் நோக்கியா நிறுவனத்தில் பராமரிப்பு பணிக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் என 25,000 பேரின் வாழ்வாதாரம் நோக்கியா நிறுவனத்தை நம்பி இருந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நோக்கியா தன்னுடைய பணியாளர்களை வெளி யில் அனுப்ப ஆரம்பித்து விட்டது.

எதிர்காலத்தில் நோக்கியா நிறுவனம் மூடப்படும் என்பதால் வேறு வழியின்றி சுமார் அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட் டோர், தானாகவே பணியிலிருந்து விலகிவிட்டனர். ஒப்பந்தத்தை மீறி உள்ளூர் சந்தையில் விற்பனையில் ஈடுபட்ட நிறுவனம் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றம் மூலம் வரியை திருப்பித்தரக்கோரினால் ஆலையை மூடிவிட்டு ஓடிவிட்டது. நவம்பர் மாதம் முற்றிலுமாக அனை வரும் வெளியேற்றப்பட்டனர்.

ஃபாக்ஸ்கான்

சிறீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் தொழிற்சாலை வளாகத் தில் செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஃபாக்ஸ்கான் தொழிற் சாலை இயங்கி வந்தது. இத்தொழிற் சாலையில் நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் பயிற்சி தொழிலாளர்கள் என மொத்தம் சுமார் 8000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் நோக்கியா தொழிற் சாலை மூடப்பட்டதை தொடர்ந்து பாக்ஸ்கான் நிறுவனம் தனது உற்பத் தியை குறைத்துக்கொண்டது. இதனால் இத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்கள், பயிற்சி தொழிலாளர்கள் சுமார் 6400 பேர் ஏற்கனவே வேலை இழந்துள்ளனர். இந்த நிலையில் 2014-ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி ஆலையை முழு மையாக மூடிவிட்டது. இதன் மூலம் 8000 பேர் வேலை இழந்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page3/96591.html#ixzz3SP1oxxwn

தமிழ் ஓவியா said...

இந்தி - சமஸ்கிருதம்: அவசரம் காட்டும் அதிகாரிகள் கலைஞர் கருத்து


சென்னை, பிப்.24_ இந்தி, சமஸ்கிருதம் திணிப்பில் அரசைவிட அரசு அதிகாரிகள் அவச ரம் காட்டுகிறார்கள் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் எழுதியுள்ளார்.

கேள்வி :- இந்தி, சமஸ் கிருதம் போன்ற மொழி களைத் திணிக்க மத்திய ஆட்சிப் பொறுப்பிலே இருப்போர் அவசரம் காட்டாத நிலையிலும், அதிகாரிகள் மட்டத்திலே இருப்பவர்கள் இந்தியைத் திணிக்க அவசரம் காட்டு கிறார்களே?

கலைஞர்:- உண்மை யானதும், அதிர்ச்சி தரத் தக்கதுமான செய்திதான் இது. தினமணி நாளிதழில் வெளி வந்துள்ள செய்தி யில், சி.பி.அய். (மத்திய புல னாய்வுத் துறை) அனைத்து அலுவலகங்களிலும் நிர்வாகத் தேவைகளுக் கான பணிகளை இந்தி மொழியில் மேற்கொள்ள வும், அந்த மொழியை அலுவலர்கள் அறிந்து கொள்ளும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்தவும் அதன் தலைமையகம் கண்டிப்புடன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சி.பி.அய். தலைமையக நிர்வாகப் பிரிவு துணை இயக்குநர் மணிஷ் கே. ஷா அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக் கையில், சி.பி.அய் அலுவல கக் கூட்ட நிகழ்வுகள், தீர் மானங்கள், அரசாணை கள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கைகள், அலுவலக ஒப்பந்தங்கள், உரிமங்கள், ஏல ஒப்பந்தப் புள்ளி கோரல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இந்தி உள்ளிட்ட இரு மொழிகளில் வெளியிடு வதை மண்டலத் தலைமை அதிகாரிகள் உறுதிப் படுத்த வேண்டும். இந்தி மொழியில் சி.பி.அய். அலுவ லகத்துக்கு வரும் கடிதங் களுக்கு கட்டாயம் இந்தி மொழியில்தான் பதில் அனுப்ப வேண்டும். அதி காரிகளின் பணிக்கால ஆவணங்கள் அனைத்தும் இந்தி மொழியிலேயே இருக்க வேண்டும். அலு வல் கோப்புகளில் அதிகா ரிகள் குறியிடும் விவரங் கள் இந்தி மொழியில் தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் குறிப்பிடப் பட்டுள்ளது என்று செய்தி வந்திருப்பது அதிர்ச் சியாக உள்ளது. இந்தச் செய்தி உண்மையாக இருக்குமேயானால், மத் திய அரசும், முக்கியமாக பிரதமர் அவர்களும் இதனைப் பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றப் புலனாய் வில் முக்கியப் பங்கு வகிக் கும் சி.பி.அய். இப்படி அலு வலக நடைமுறைகளில் இந்திக்கு முதலிடம் அளிக்குமானால், மத்திய அரசின் மற்ற துறைகளும் ஒவ்வொன்றாக இந்த முன் மாதிரியைப் பின்பற்றும் நிலை ஏற்பட்டு, அனைத் தும் இந்தி மயம் என்ற ஆபத்து தோன்றிவிடும்! கிரானைட் முறைகேடுகள் குறித்து சகாயம் அய்.ஏ. எஸ். அவர்களுக்குத் தகவல் தந்தவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் சகாயம் அவர் களுக்கு அதிக பாதுகாப்பு செய்து தரப்பட வேண் டும் என்றும் கலைஞர் எழுதியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/96788.html#ixzz3SfDGtbLo

தமிழ் ஓவியா said...

கோல்வால்கரும் - மோகன்பகவத்தும்

நீண்ட காலமாக மறைக் கப்பட்ட ஒரு நூல் ஆர்.எஸ். எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கரால் எழுதப்பட்ட We or our nationhood defined என்பதாகும். திராவிடர் கழகத் தலைவர் அவர்களுடைய உரையில் அண்மைக் காலமாக தோண்டி எடுக்கப்பட்டு வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அவர்களின் குருநாதரால் எழுதப்பட்ட இந்நூலை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வெட்கப்படுகிறார்கள் என்பதைவிட அந்நூலில் இடம் பெற்றிருப்பவை வெளி யில் வந்தால் தங்களுக்குப் பெரும் இடர்ப்பாட்டை ஏற்படுத்தும் - வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாகும் என்ற அச்சம் அவர்களைப் பிடுங்கித் தின்பதே இதற்கு விழுமிய காரணமாகும்.

இந்த நூலை வெளிப் படுத்தத் தயங்கினாலும், அந்த நூலின் சாரத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் உட்பட ஆங்காங்கே தூவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆட்சி அதிகாரம் அவர்கள் கைகளில் இருக் கும் இந்தத் தருணத்தில் அதனைச் சொல்லாமலும் இருக்க முடியவில்லை; சொன் னாலும் எதிர் விளைவை ஏற்படுத்தி விடுமே என்ற அச்சமும் அவர்களைக் குடைந்தெடுக்கிறது.

அந்த நூலில் கோல் வால்கர் என்ன எழுதுகிறார்?

சிறுபான்மையினர் இந்த தேசத்தில் வாழ்வது ஆபத் தானது அது தேசப் பாது காப்பிற்கும் தேச நலன் களுக்கும் உகந்தது அல்ல. எனவே, தேசிய இனத்தைச் சாராதவர்கள் தேசிய இனத்தின் மொழியையும், மதத்தையும், கலாச்சாரத் தையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் தங் களுடைய அனைத்து விட யங்களையும் தேசிய இனத் தின் அடிப்படையிலேயே மாற்றிக் கொள்ள வேண்டும். சிறுபான்மையினருக்கு இரண்டே வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று அவர்கள் தங்களை முழுவதுமாக பெரும்பான்மை தேசிய இனத்தின் அடிப்படையில் வாழ்க்கை நெறிகளை மாற்றம் செய்ய வேண்டும். இல்லை யென்றால் எந்த உரிமையும் இல்லாமல் பெரும்பான்மை மக்கள் கருணை கொண்டு அவர்கள் அனுமதிக்கும் காலம் வரை வாழலாம். (“We or our nationhood defined’’ பக்கம் - 47)

ஆர்.எஸ்.எஸ்.இன் மிக முக்கியமான சிந்தனைவாதி யாகவும், குருவாகவும் கருதப் படும் குருஜி கோல்வால்கர் இந்துத்துவத்தை அடிப் படையாக கொண்ட இந்து ராஷ்ட்ரியத்தின் சிறுபான்மை யினர் குறித்தான பிரச்சினை களுக்கு ஹிட்லர், முசோலினி யின் தீர்வையே முன்மொழி கின்றார்.

சிறுபான்மையினர் இங்கே வாழ வேண்டுமாயின் அவர்கள் தேசிய இனமான இந்துக்களின் மதம், மொழி மற்றும் கலாச்சாரங்களை பின் பற்ற வேண்டும். இல்லை யென்றால் அவர்களுக்கு இந்த தேசத்தில் எந்த உரி மையும் இல்லை. ஏன் அவர் கள் இந்துஸ்தானின் குடி மக்களாக கூட கருதப்பட மாட்டார்கள்.’(“We or our nation hood defined’’பக்கம் - 47)

இந்துஸ்தானில் வாழும் இந்துக்களே தேசியவாதிகள், அவர்களே தேசபக்தர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த தேசத்தின் எதிரிகள் மற்றும் துரோகிகள் இந்துக் கள் அல்லாதவர்களால் இந் துஸ்தானின் தேச நலனிற்கு பேராபத்து உள்ளது (மேற்கண்ட நூல் பக்கம் - 44)

இப்பொழுது ஆர்எஸ். எஸ். தலைவர் மோகன் பகவத் கூற்றைக் கொஞ்சம் கவனிப்போம்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் அனைவரும் இந்துக்களே! அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்துக் கொள் கைகளை ஏற்க வேண்டியவர்களே என்று அரசின் வானொ லியைப் பயன்படுத்திப் பேசி யதை நினைவில் கொள்வீர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/96775.html#ixzz3SfDWmfrg

தமிழ் ஓவியா said...

காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்தான்
மதம் மாற்றம் செய்ய வந்தாராம் மதர் தெரசா - மோகன்பகவத் கூறுகிறார்


பரத்பூர் (ராஜஸ்தான்) பிப் 24 சமூகசேவை என்ற பெயரில் மத வியாபாரம் செய்தார் மதர் தெரசா, உண்மையில் அவருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மன நிலை இருந்தால் இந்தியாவிற்கு ஏன் வர வேண்டும்? மக்களை சேவை என்ற பெயரில் ஏமாற்றி மதமாற்றம் செய்வதற்காகத்தான் இங்குவந்தார் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் தன் னுடைய சொந்த ஊரான பரத்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது மதர்தெரசா பற்றி அவர் கூறியதாவது, நமது நாடு ஆங்கிலேயர்கள் வருகையின் முன்பு செல் வச்செழிப்பும் அமைதியும் அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நியதியின் படி கட்டுப்பாட்டோடு வேலைகளைச் செய்து வந்தனர். முகமதியர்கள் வந்த பிறகு செல்வச் செழிப்பை சுரண்டினர். இதன் காரணமாக வறுமை தொடங்கியது. ஆங்கிலேயர்கள் வந்த பிறகு மக்களிடம் வறுமை கோரதாண்டவமாடியது. இதைச் சாதகமாகப் பயன் படுத்தி மதமாற்றத்தை ஆங்கிலேயர்கள் செய்ய ஆரம்பித்தனர். அவர் களின் மதமாற்றத்திற்கு உதவ பல வெளிநாட்டி னர் இங்குவந்தனர். அவர்கள் கல்வி என்ற பெயரில் மதமாற்றத்தை செயல்படுத்தினர்.

இந்த வரிசையில் மதர் தெரசா மிகவும் புத்தி சாலித்தனமாக சேவை என்ற போர்வையை போர்த்திக்கொண்டு மத மாற்றத்தில் இறங்கினார். எங்களைப் போன்றவர் களுக்கு மாத்திரம் தான் மதர்தெரசாவின் உண்மை யான நடவடிக்கை என்ன வென்று தெரியும். மக்கள் மதர்தெரசாவின் உண்மை யான மதமாற்றச் செயலை கவனிக்காமல் விட்டு விட் டார்கள். அவர் செய்த மதமாற்றச் செயல்பாடு கள் வெளியில்வராமல் இருக்க ஆங்கிலேயர்கள் அவருக்கு நோபல் பரிசு கொடுத்தனர். அவர் உண்மையி லேயே சேவை செய்ய வேண்டுமென்றால் உலகில் வேறு நாடுகளே இல்லையா, இந்தியா மாத்திரம் ஏன் அவர் களின் கண்களுக்குப் பட்டது. அவர்களின் நோக்கமே இந்துமதத்தின் மாண்புகளை சிதைக்க வேண்டும் மக்களை மதம் மாற்றி இந்துமதத்தை அழிக்கவேண்டும் என்பது தான் என்று தன்னுடைய உரையில் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/96782.html#ixzz3SfDgl1en

தமிழ் ஓவியா said...

குருட்டு நம்பிக்கை...


உலகில் உள்ள மதங்கள் எல்லாம் குருட்டு நம்பிக்கை என்கின்ற பூமியின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன.
(குடிஅரசு, 3.11.1929)

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வியாபார வசீகரமா?

செவ்வாய், வெள்ளி களில்தான் கோயில் களுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பது வியா பார வசீகரமா? அல்லது கடவுளுக்கு மற்ற கிழமை கள் எல்லாம் பிடிக்கா தவை என்ற அர்த்தமா?

Read more: http://viduthalai.in/page1/96710.html#ixzz3SfGh7g6s

தமிழ் ஓவியா said...

காரணம்


வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...

பல நோய்களை தீர்க்க உதவும் அதிமதுரம்

அதிமதுரம் கொடி வகையை சேர்ந்தது. காடுகளில் புதர் செடியாக வளரும் கூட்டிலைகளை கொண்டது. கணுக்களில் சிறிய மஞ்சள் கலந்த ஊதா நிறபூக்கள் நிரம்பியதாக இருக்கும். இதன் வேர்கள், இலைகள் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. வேர் கடை சரக்காக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். மலச்சிக்கலை போக்கும் உணவு மண்டலத்தை சீராக இயங்கவைக்கும்.

ஊட்டசத்து நிரம்பியது. சிறுநீர் புண்களை ஆற்றும், கல்லடைப்பை நீக்க பயன்படும். அதிங்கம், அஷ்டி, மதூகம், மதூரம் என பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் அதிமதுரம் உலகத்தின் அனைத்து மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதை எளிய முறையில் பயன் படுத்தி பல்வேறு நோய்களையும் தீர்க்கமுடியும்.

பித்தம், வாதம். ரத்ததோசம், வீக்கம், வாந்தி, நாவறட்சியை போக்கும். தாகம், அசதி, கண்நோய்கள், விக்கல், எலும்பு நோய்கள், மஞ்சள்காமாலை, இருமல், தலை நோய்கள் ஆகியவற்றை குணமாக்கும். வேர்கள் இனிப்புச்சுவையும் குளிர்ச்சித்தன்மையும் கொண்ட வையாக இருக்கும்.

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளம்வறுப்பாய் வறுத்து சூரணம் செய்து வைத்து கொண்டு சூட்டினால் ஏற்படும் இருமலுக்கு 5 கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட தீரும்.

சிலர் உடல் உறுப்புகளில் புண் ஏற்பட்டு ரத்தவாந்தி எடுப்பார்கள். இவர்கள் அதிமதுரப்பொடி, சந்தனத்தூள் சமஅளவாக கலந்து அதில் 1 கிராம் அளவில் அளவில் பாலில் கலந்து குடிக்க ரத்தவாந்தி நிற்கும். புண்கள் ஆறும்.

போதுமான அளவில் தாய்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அளவில் அதிமதுர சூரணத்தைப்பாலில் கலந்து அதனுடன் இனிப்பு சிறிது சேர்த்து சாப்பிட்டால் தாய்பால் நன்கு சுரக்கும். அதிமதுரத்தை நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் இளநரை ஏற்படாது. முடி உதிர்தலும் நிற்கும். அதிமதுரத்தை சூரணமாக்கி காற்றுபுகாத பாட்டிலில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தொண்டைக்கட்டு, இருமல், சளி உள்ளவர்கள் 1 முதல் 2 கிராம்வரை எடுத்து தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட தீரும். 1முதல் 2 கிராம் அளவில் அதிமதுரப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வர மார்பு, ஈரல், இரைப்பை, தொண்டை ஆகியவற்றில் உள்ள வறட்சி நீங்கி நலம் உண்டாகும். இருமல், மூலம், தொண்டைகரகரப்பு, நரம்புதளர்ச்சி தீரும்.

Read more: http://viduthalai.in/page1/96734.html#ixzz3SfHbdKIm

தமிழ் ஓவியா said...

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ஆப்பிள்

ஆப்பிள் பழங்காலத்தில் இருந்தே அறியப்பட்ட ஒரு அற்புதமான பழமாகும். ஆப்பிள், குமளி பழம், ஆப்பழம், சீமை இலந்தைபழம், அரத்திபழம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் குளிர் பிரதேசங்களில் வளரக்கூடியது. தற்போது இந்தியா, சீனா, அர்ஜென்டினா மற்றும் மத்திய ஆசியாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

நம்நாட்டில் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் உள்ளன. எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கும் ஆப்பிள், அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி சாப்பிடக்கூடியது. விலை சற்று அதிகம் என்றாலும் மருத்துவத்தில் இதன் பயன் அதிகரித்துள்ளது.

சத்துக்கள்: ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலிய சத்துகள் அதிக அளவில் அடங்கியுள்ளன.

பயன்கள்: ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயன கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாக செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்பு சத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் ரத்தசோகை விரைவில் நிவர்த்தியாகிறது. ரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.

* தேவையற்ற கொழுப்பு சத்தை குறைக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு ரத்த அழுத்தம் குறைய உதவுகிறது. அதிக ரத்த போக்கை தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது.

செரிமாண மண்டலம் சீராக இயங்க செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்க செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்த சர்க்கரை குறைய உதவுகிறது. சோடியம் உடம்புக்கு பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.

* மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.

* குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஆப்பிள் பழத்தை வேகவைத்து பிசைந்து கொடுத்தால் குணமாகும்.

* வலிப்பு உள்ளவர்கள் ஆப்பிள் பழச்சாறு 60 மி.லி, அத்திப்பழச்சாறு 60 மி.லி கலந்து தினசரி இரண்டு வேளை கொடுத்து வந்தால் மூன்று தினங்களில் வலிப்பின் தீவிரம் குறைந்துவிடும்.

* இதய நோயாளிகளுக்கு சிறந்த உணவாகிறது. நரம்பு தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் பழம் மட்டும் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.

* தூக்கத்தில் எழுந்து நடக்கும் இயல்பு டையவர்கள் குணமடைய, இரவில் இரண்டு ஆப்பிள் பழங்களை தண்ணீரில் போட்டு வைத்திருந்து அதி காலையில் இதன் சாற்றை பிழிந்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

* வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும்.

* சரியான உடல் வளர்ச்சியும், சதைப்பிடிப்பும் இல்லா தவர்களும் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஒல்லியான உடல் சீராகப் பருமன் அடையும்.

Read more: http://viduthalai.in/page1/96736.html#ixzz3SfHl41FW

தமிழ் ஓவியா said...

திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாட் டில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சியுரை யாற்றுகையில்:

_ சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சென்னிமலைக்கு வந்து நான் உரையாற்றி யுள்ளேன். அப்பொழுது ஒரு சாமியார் வண்டி மாட்டை மலையில் ஏற்றி மக்களை ஏமாற்றி மூட நம்பிக்கையில் மூழ்க வைத் திருந்தார். விரதம் இருந் தால் தான் மேலே ஏற முடியும் என்று சொல்லி வைத்திருந்தார்.

அதெல் லாம் மூடநம்பிக்கை என்று எங்களது தோழர் பழையகோட்டை இளைய தளபதி கழகத்தின் முதல் பொருளாளர் அர்ச்சுனன் அவர்களின் மகன் சிவக் குமார் மன்றாடியார் அவ ரது மாட்டு வண்டியெல் லாம் கொடுத்து அந்த வண்டியை பழக்கப்படுத்தி நாங்கள் மூடநம்பிக் கையை முறியடித்தோம். இந்த ஊருக்கு எம்.பி. நாச்சிமுத்து என்பவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர்.

முதன் முதலாக வழக்கறிஞர் படிப்பை படித்து வழக்கறிஞராக ஆனார். அப்பொழுது தந்தை பெரியார் அவர் கள் நம்ம இனத்தைச் சேர்ந்த ஒருவர் வழக் கறிஞராக வந்துவிட்டார் என்று மகிழ்ச்சி பொங்க அந்த வழக்கறிஞரை சாரட் வண்டியில் ஏற்றி மிகப் பெரிய ஊர்வலமாக அவரை அழைத்துச் சென்று நிதிமன்ற வாயில் வரை அவருக்கு மரியாதை செய்து இறக்கி விட்டு வந்தார்.

அப்போதெல் லாம் பார்ப்பனர்களே நீதி பதியாகவும், வாக்குரைஞ ராகவும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நம்முடைய இனத்திலி ருந்து வந்த முதல் வழக் கறிஞர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன் பாலச்சந்திரன் அவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார். இன்று காலை தான் அவர் என்னை நேரில் சந்தித்தார்.

அவ ருக்கே இந்த விஷயம் தெரி யாது. நான் அவரிடம் கூறியபோது மிகவும் ஆச் சரியப்பட்டார். பி.ஜே.பி. அரசினுடைய முன்னேற் றம் முன்னேற்றம் என்று சொல்லிக்கொண்டு அய்.டி. ஊழியர்கள் மற்றும் பல்வேறு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு துணைபோவதையும்,

பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்கவில்லை என்று காரணம் கூறி மூட நினைப்பதும் மக்களுக்கு அடிப்படை தேவையான இ.எஸ்.அய். மருத்துவ மனைகளை மூட நினைப் பதையும் போன்ற மோடி அரசின் பிற்போக்கு தனத்தைச் சுட்டிக் காட்டி எழுச்சியுரையாற்றினார்.

அசல் மனுதர்மத்திலுள்ள பல்வேறு கருத்துகளை விளக்கமாக எடுத்துக்கூறி அது நம்மை எப்படி அடிமைப்படுத்துகிறது என்பதைச் சுட்டிக் காட்டினார். மேலும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். (முழு உரை பின்னர் வெளிவரும்)

Read more: http://viduthalai.in/page1/96731.html#ixzz3SfILLHy5

தமிழ் ஓவியா said...

இணைய தமிழில் புதிய மாற்றம் பெரியார் அறிமுகப்படுத்திய எழுத்துச் சீர்திருத்தம்

இந்த மாற்றத்திற்குப் பேருதவி புரிந்துள்ளது!

இந்து ஆங்கில ஏட்டில் சிறப்புக் கட்டுரை

சென்னை, பிப்.25_ இணைய தளத்தில் தமிழ் இன்று ஆதிக்கம் செலுத்து வதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார் அறிமுகப் படுத்திய தமிழ் எழுத்துச் சீர்திருத்தமே என்று இந்து ஏட்டில் இன்று (25.2.2015) வெளிவந்துள்ள சிறப்புக் கட்டுரை கூறுகிறது.

இணையதமிழ் (i தமிழ்) என்ற தமிழ் எழுத்துருவின் நவீன வடிவத் திட்டத்தை கார்கி ஆராய்ச்சி மய்யம் செயல் படுத்த முனைந்துள்ளது. தமிழ் பல நூற்றாண்டு களாக பல்வேறு மாற்றங் களை சந்தித்து வந்தது. எழுத்துருவில் மாற்றங் களைச் சந்தித்தாலும் அதன் தொன்மை மாறா மல், வளமை குன்றாமல் இன்றளவும் இளமையாக, மேலும் புதுமையாக திகழ் வதே இதன் தனித்துவ மாகும். இதனடிப்படையில் கணினி எழுத்திற்கேற்ப எளிமையான முறையில் தமிழ் எழுத்துக்களில் மாற் றங்களைக் கொண்டுவர கவியரசர் வைரமுத்துவின் மகன் கார்க்கி தன்னுடைய ஆய்வு மய்யத்தின்மூலம் புதிய எழுத்துருக்களை வர விருக்கும் தமிழ் இணைய வழி மாநாட்டில் ஆய்வா ளர்கள் முன்பு வைக்க உள்ளார்.

மதன்கார்க்கி அவரது குழுவினரான சுதர்சனம் நேசமணி மற்றும் தமிழ்ச் செல்வி ஆகியோர் ஒன்றி ணைத்து 216 உயிர்மெய் எழுத்திற்கும் புதிய வரிவடி வத்தை உருவாக்கியுள்ளனர். முக்கியமாக ஒருங்குறி யில் (யுனிக்கோட்) முறை யில் இன்றளவும் சில குறை பாடுகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. முக் கியமாக தற்போது மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஆண்டிராய்டு மற்றும் அய்போன் போன்ற தளங் களில் யுனிக்கோட் எழுத் துருக்கள் சரிவர தெரிவ தில்லை.

இதனடிப்படை யில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கார்கி ஆய்வு மய்யம் வேகமாக வளர்ந்துவரும் இணைய தமிழ் உலகில் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும், அதேநேரத்தில் இனிவரும் காலத்திலும் இணைய வழித் தமிழ் மிகவும் எளிய முறையில் வரும் தலை முறைக்கும் பயனளிக்கும் விதத்தில் பல்வேறு மாற் றங்களைக் கொண்டுவந் துள்ளனர்.

i தமிழ் எழுத்துருக்கள் நவீன ஸ்மார்ட் போன் களின் எழுது பலைகை களில் (keyboard) எவ்வித சிறப்புக் குறியீடுகள் இல் லாமல் சாதாரண எழுது பலகை போன்றே அவற்றை நாம் பயன்படுத்தமுடியும். தமிழ் எழுத்துருக்களில் மாற்றம் நூற்றாண்டுக ளாகத் தொடர்ந்து மாறிக் கொண்டு வந்தாலும் வீர மாமுனிவர் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் எளிமையாக் கும் முயற்சி துவங்கியது.

தந்தை பெரியார் தொலைநோக்கிற்கு மிகப் பெரும் உதாரணங்களுள் ஒன்றாக தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கூறலாம். அவரது காலத்தில் தமிழ் அச்சுக்கள் தோன்ற ஆரம் பித்துவிட்டன. தமிழ் அச் சுக்கோர்வைக்கு அப்போதி ருந்த வடமொழிக் கலப்புத் தமிழ் ஏற்றதாக இருக்காது என்ற தொலைநோக்குப் பார் வையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். பெரியாரின் இந்த எழுத்துச் சீர்திருத்தம் என்பது இன்று இணையம் வரை வந்து விட்டது. இந்திய மொழிகளில் இணையத்தில் தமிழின் ஆதிக்கம் இன்று முதலிடத் தில் இருப்பதற்கு முக்கிய காரணம் பெரியார் கொண்டு வந்த தமிழ் சீர்திருத்தம் தான். பெரியாரின் எழுத் துச் சீர்திருத்திற்கு முன்பாக இருந்த தமிழையொட் டியே மலையாளம், தெலுங்கு கன்னடம் போன் றவை இருந்தன. ஆனால், அம்மொழிகளால் எழுத் துச் சீர்திருத்தம் பெற இய லாமல் இன்றளவும் இணைய உலகில் பின்தங் கியே உள்ளது. சீன மொழி இன்றள வில் உலகம் முழுவது அதி கமாக பேசும் மொழிகளில் முதன்மையானதாக உள் ளது. நவீன சீனாவைப் படைத்த சான் யாட் சென் சீனமொழியை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யவேண்டும். நவீன வளர்ச்சிக்கு ஏற்ப மொழி யில் மாற்றம் செய்யவேண் டும் என்று கூறினார். அவரது ஆலோசனையின் படி சீன மொழியில் ஏற் பட்ட எழுத்துரு மாற்றம் இன்று உலகின் பொருளா தார வல்லரசாக மாற்றி யுள்ளது.

கார்கி ஆய்வு மய்யம் கொண்டுவந்துள்ள நவீன தமிழ் எழுத்துருக்கள்மூலம் பதிப்பிற்குச் செல்லும் போது அதிக இடங்கள் சேமிக்கப்படும் இதன் மூலம் காகித சேமிப்பு மாத் திரமல்லாமல் காகிதத்திற் காக வெட்டப்படும் மரங்கள் சேமிக்கப்படும்.

(இன்றைய ஆங்கில இந்து ஏட்டில் கார்த்திக் சுப்பிரமணியம் எழுதிய ‘‘A Proposal to simplify the Tamil Script’’ கட்டுரையின் தமிழாக்கம் இது).

Read more: http://viduthalai.in/e-paper/96807.html#ixzz3Sl5yEyt0

தமிழ் ஓவியா said...

செவ்வாய்த் தோஷ நம்பிக்கையாளர்களுக்குக் காணிக்கை!
செவ்வாய்க்கோளில் பிறக்கும் முதல் குழந்தை?

மார்ஸ் ஒன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம். உள்படம்: செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப் பயணம் மேற்கொண்டு, பிள்ளை பெற விரும்பும் பிரிட்டானிய பெண் மேகி லியூ

செவ்வாய்க் கோளில் பெண்மணி ஒருவர் முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த மார்ஸ் ஒன் (Mars One) என்ற தனியார் நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம் (A One-Way Trip) என்ற பிரமாண்டமான திட்டத்தை அறிவித்தது. இதற்காக, செவ்வாய்க்கு செல்லும் பயணிகள் மீண்டும் பூமிக்குத் திரும்ப இயலாது; அதற் கான எந்த ஏற்பாட்டையும் நிறுவனம் செய்ய வில்லை என்ற நிபந்தனையுடன் விண்ணப் பங்களை வழங்கியது.

2024 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளை நோக்கி செல்லும் இந்த பயணக்குழுவினர், அங்கேயே நிரந்தரமாக தங்க வைக்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த சாகசப் பயணத்தில் பங்கு பெற உலகம் முழுவதிலும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 586பேர், தங்களின் பெயர்களை முன்பதிவு செய்தனர். இத்திட்டத்திற்கு, சுமார் 100பேர் தெரிவு செய்யப்பட்டனர். இதில், அமெரிக்காவி லிருந்து 39, அய்ரோப்பாவிலிருந்து 31, ஆசியா விலிருந்து 16, ஆப்ரிக்காவிலிருந்து 7, ஓசியானி யாவிலிருந்து 7 பேரும் தேர்வாகியுள்ளனர். செவ்வாய்க்கோள் பயணத்தில் பயணம் செய்யும் குழுவினரில் இந்தியர்களான கேர ளாவைச் சேர்ந்த சாரதா பிரசாத் (19), துபாயில் வசிக்கும் ரிதிகா சிங் (29) ஆகிய 2 பெண்களும், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கணினி அறிவியலில் டாக்டரேட் பயின்று வரும் தரண்ஜீத் சிங் (29) உட்பட 3 பேர் தேர்வானவர்களின் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

இந்நிலையில், இந்தப் பயணத்திற்குப் பிரிட்டனைச் சேர்ந்த 24 வயதான மேகி லியூ (Maggie Lieu)
என்ற பெண் தெரிவாகி யுள்ளார். மேலும் இவர், செவ்வாய்க்கோளில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடிவெடுத் துள்ளதாகவும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, செவ்வாய்க்கோளில் குழந்தையை பெற்றெடுப்பதற்கு அங்குள்ள புவி ஈர்ப்பு விசை சாதகமாக இருக்காது என்று இதுவரை ஆராய்ச்சியில் வெளியாகவில்லை என்றும் அதனால், அங்கு தான் நிச்சயம் குழந்தை பெற்றெடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த பயணத்திற்கு தெரிவான 100 பேரில் அனைவரும் 19 வயதிலிருந்து 60 வயதுடையவர்கள் என்பதால் அவர்களில் ஒருவரை எனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டு குழந்தையை பெற்றெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

சுமார் 6 பில்லியன் டாலர் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயணத்தில் பங்கு பெறுபவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கணக்கில் பல பயிற்சிகள் அளிக்கப் பட்டு வருகின்றன. இது தவிர, இந்த பெரிய பயணத்தை உருவாக்கியவரும், இத்திட்டத்தின் தலைமை நிர்வாகியுமான பாஸ் லான்ஸ் டோர்ப் கூறுகையில், உலகமே வியக்குமளவிற்கு இருக்கப் போகும் இந்தப் பயணத்தை நேரடியாக செவ்வாய்க்கோளிலிருந்து ஒளிப்பரப்ப போகி றோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தொலைக்காட்சி மற்றும் இணைய தள வசதிகள் உள்ள ஒவ்வொருவரும் இந்தப் பயணத்தைக் கண்டுகளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள தாகவும் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/96811.html#ixzz3Sl6GETOL

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

விருப்பு - வெறுப்பு!

ஆன்மிகம் பொதுவானது என்றால், வடகலைக் காரன் ஏன் தென்கலைக்காரனை வெறுக்கிறான்? திருநீறு பூசுபவன் ஏன் இவர்கள் இருவரையும் வெறுக் கிறான்? ஆக, ஆன்மிகத்திலும் விருப்பு - வெறுப்பு இருக்கிறது என்பது உண்மையானால், அது என்ன வெங்காய ஆன்மிகம்?

Read more: http://viduthalai.in/e-paper/96808.html#ixzz3Sl6NwyQP

தமிழ் ஓவியா said...

பள்ளி மாணவர்கள் மத்தியிலே நேருவைக் கொச்சைப்படுத்திய பி.ஜே.பி. கல்வி அமைச்சர்


ரோஹதக், பிப்.25_ பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அரி யானா கல்வியமைச்சர் ராம்விலாஸ் சர்மா பள்ளி மாணவர்கள் முன்பு முன் னாள் பிரதமர் நேருவை அசிங்கமான வார்த்தை களைப் பயன்படுத்தி திட் டினார். அரியானா மாநிலம் ரோஹதக்கில் அம்

மாநிலத்தைச் சேர்ந்த பிரபல கவிஞர் லக்மிசந் தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது, இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக அரியானா மாநிலத்தின் கல்வி அமைச்சர் ராம்விலாஸ் சர்மா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அனைவரிடத்திலும் சங்கடத்தை ஏற்படுத்தியது

நமது கவி லக்மிசந் திற்கு நிகரானவர் யாரு மில்லை. அவருக்குள்ள புகழ் என்றும் மறையாது. அவரை எந்த ஒரு தலை வருடனும் ஒப்பிட முடி யாது. ஒருமுறை டில்லிக் குப் பயணம் செய்த சிலர் பேசிக்கொண்டனர். அதில் ஒருவர், இன்று நேரு இறந்துவிட்டார் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த நமது அரியா னாவைச் சேர்ந்தவர் கூறும்போது, பெருமை மிக்க லக்மிசந்த் எங்கே என்று கூறி (சில தவறான வார்த்தைகளை உபயோ கித்து) அந்த நேரு எங்கே? என்று கூறினாராம். இதை அப்படியே ஒலி பெருக்கியில் கூறினார். அவருக்கு முன்பாக நூற் றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் அமர்ந்திருக்க, மேடை யில் ஆசி ரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் அமர்ந் திருக்கும்போது, மாநில கல்வி அமைச்சர் ஒருவரே ஜவர்கர்லால் நேருவை அசிங்கமான வார்த்தை யால் திட்டித் தீர்த்துள் ளது அனைவரிடத்திலும் சங்கடத்தை ஏற்படுத் தியது. நிகழ்ச்சி முடிந்த பிறகு இதுகுறித்து ஊடகவிய லாளர்கள் அமைச்சரிடம் கேட்ட போது,

நான் வேண்டு மென்றே இந்த வார்த்தையைக் கூற வில்லை. கவிஞர் லக்மி சந்த்பற்றி மக்கள் கூறு வதைத்தான் நான் கூறி னேன். மேலும், சில வார்த் தைகளை எந்த அளவு கோல் வைத்து மட்ட மான வார்த்தை நல்ல வார்த்தை என்று கூறு கிறீர்கள் என்று ஊடக வியலாளர்களிடம் பதில் கேள்விவைத்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆசிரியர்கள் கூறியதாவது: அவை நிறைந்த பள்ளி மாணவ, மாணவிகள் முன்பாக இதுபோன்ற வார்த்தையை பயன் படுத்தக் கூடாது

. மேலும் பள்ளியில் நேரு குறித்து மாணவர்களுக்கு நாங்கள் பாடம் சொல்லித்தருகி றோம். அப்படி இருக்க எங்களின் முன்பே புகழ் பெற்ற ஒரு தலைவரை கொச்சையான வார்த்தை களைப் பயன்படுத்தி பேசியிருப்பது தவறான முன்னுதாரணமாகும் என்று கூறினார்கள். ஆர்.எஸ்.எஸ் உறுப் பினரான ராம்விலாஸ் சர்மா முன்னாள் பாஜக மாநிலத் தலைவராக நீண்ட ஆண்டுகாலம் பதவி வகித்தார். அரியா னாவில் உள்ள பாஜக அரசில் கல்வி அமைச்ச ராக உள்ளார்.

தமிழ் ஓவியா said...

செவ்வாய்த் தோஷ நம்பிக்கையாளர்களுக்குக் காணிக்கை!
செவ்வாய்க்கோளில் பிறக்கும் முதல் குழந்தை?

மார்ஸ் ஒன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம். உள்படம்: செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப் பயணம் மேற்கொண்டு, பிள்ளை பெற விரும்பும் பிரிட்டானிய பெண் மேகி லியூ

செவ்வாய்க் கோளில் பெண்மணி ஒருவர் முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த மார்ஸ் ஒன் (Mars One) என்ற தனியார் நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம் (A One-Way Trip) என்ற பிரமாண்டமான திட்டத்தை அறிவித்தது. இதற்காக, செவ்வாய்க்கு செல்லும் பயணிகள் மீண்டும் பூமிக்குத் திரும்ப இயலாது; அதற் கான எந்த ஏற்பாட்டையும் நிறுவனம் செய்ய வில்லை என்ற நிபந்தனையுடன் விண்ணப் பங்களை வழங்கியது.

2024 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளை நோக்கி செல்லும் இந்த பயணக்குழுவினர், அங்கேயே நிரந்தரமாக தங்க வைக்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த சாகசப் பயணத்தில் பங்கு பெற உலகம் முழுவதிலும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 586பேர், தங்களின் பெயர்களை முன்பதிவு செய்தனர். இத்திட்டத்திற்கு, சுமார் 100பேர் தெரிவு செய்யப்பட்டனர். இதில், அமெரிக்காவி லிருந்து 39, அய்ரோப்பாவிலிருந்து 31, ஆசியா விலிருந்து 16, ஆப்ரிக்காவிலிருந்து 7, ஓசியானி யாவிலிருந்து 7 பேரும் தேர்வாகியுள்ளனர். செவ்வாய்க்கோள் பயணத்தில் பயணம் செய்யும் குழுவினரில் இந்தியர்களான கேர ளாவைச் சேர்ந்த சாரதா பிரசாத் (19), துபாயில் வசிக்கும் ரிதிகா சிங் (29) ஆகிய 2 பெண்களும், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கணினி அறிவியலில் டாக்டரேட் பயின்று வரும் தரண்ஜீத் சிங் (29) உட்பட 3 பேர் தேர்வானவர்களின் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

இந்நிலையில், இந்தப் பயணத்திற்குப் பிரிட்டனைச் சேர்ந்த 24 வயதான மேகி லியூ (Maggie Lieu)
என்ற பெண் தெரிவாகி யுள்ளார். மேலும் இவர், செவ்வாய்க்கோளில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடிவெடுத் துள்ளதாகவும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, செவ்வாய்க்கோளில் குழந்தையை பெற்றெடுப்பதற்கு அங்குள்ள புவி ஈர்ப்பு விசை சாதகமாக இருக்காது என்று இதுவரை ஆராய்ச்சியில் வெளியாகவில்லை என்றும் அதனால், அங்கு தான் நிச்சயம் குழந்தை பெற்றெடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த பயணத்திற்கு தெரிவான 100 பேரில் அனைவரும் 19 வயதிலிருந்து 60 வயதுடையவர்கள் என்பதால் அவர்களில் ஒருவரை எனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டு குழந்தையை பெற்றெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

சுமார் 6 பில்லியன் டாலர் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயணத்தில் பங்கு பெறுபவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கணக்கில் பல பயிற்சிகள் அளிக்கப் பட்டு வருகின்றன. இது தவிர, இந்த பெரிய பயணத்தை உருவாக்கியவரும், இத்திட்டத்தின் தலைமை நிர்வாகியுமான பாஸ் லான்ஸ் டோர்ப் கூறுகையில், உலகமே வியக்குமளவிற்கு இருக்கப் போகும் இந்தப் பயணத்தை நேரடியாக செவ்வாய்க்கோளிலிருந்து ஒளிப்பரப்ப போகி றோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தொலைக்காட்சி மற்றும் இணைய தள வசதிகள் உள்ள ஒவ்வொருவரும் இந்தப் பயணத்தைக் கண்டுகளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள தாகவும் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/96811.html#ixzz3Sl81XgPw