Search This Blog

11.2.15

வைக்கம் போராட்டத்தை காந்தியார் விரும்பவில்லை-ஏன்?

நாயும் பூனையும் நடக்கலாம் - தாழ்த்தப்பட்டவர் நடக்கக்கூடாதா?
வைக்கத்தில் தந்தை பெரியார் எழுப்பிய வினா
தமிழர் தலைவர் ஆற்றிய அறக்கட்டளைச் சொற்பொழிவு

சென்னை, பிப். 10- நாயும் பூனையும் நடக்கலாம் - தாழ்த் தப்பட்டவன் நடக்கக்கூடாதா? என்ற வினாவை எழுப் பினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


5.12.2014 அன்று சென்னை பல்கலைக் கழகத்தில் நாராயண குரு அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் வரலாற்று பரிமாணங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரை யாற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
  
Baba Saheb Dr.Ambedkar Life and Mission

அண்ணல் அம்பேத்கர் அவர்களைப்பற்றி, Baba Saheb Dr.Ambedkar Life and Mission என்று தனஞ்செய்கீர் எழுதிய புத்தகம். அதனைப் பலர் படித்திருப்பீர்கள். உங்களுக்கு அறிமுகமான புத்தகம்தான். ஏனென்றால், இந்நூல்தான், அம்பேத்கர் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை முழுமையாகக் கொண்டு வந்த, அதிகாரப்பூர்வமான பயாகிராபி என்று சொல்லக்கூடிய ஒரு வாழ்க்கை வரலாறு, அந்தக் காலகட்டத்தில்.

நான் சொல்லப்போகின்ற பல்வேறு கருத்துகளை, நேரத்தின் நெருக்கடி காரணமாக, தொட்டுத் தொட்டுக் காட்டிவிட்டு செல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.


அந்த வகையிலே, நண்பர்களே, இங்கேசுட்டிக்காட்ட வேண்டிய செய்தி என்னவென்று சொன்னால்,

டி.கே.மாதவன் அவர்கள், தந்தை பெரியார் அவர் களிடத்தில் மிகவும் பற்றுள்ளவர். அவர்தான் வைக்கம் சத்தியாகிரகம் தொடங்குவதற்கு, தூண்டுகோலாக இருந்த அற்புதமான ஒரு இளைஞர். அவர்கள் ஜாதி ஒழிப்பு உணர்வுகள் வளர்ந்துகொண்டிருக்கின்ற ஒரு காலகட் டத்தில், ஈழவ சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தங்களுடைய உரிமைகளை உணரவேண்டும்; அவர்கள் கேவலமாக எப்படி நடத்தப்படுகிறார்கள்; தெருக்களில் அவர்கள் நடக் கக்கூட உரிமையில்லையே என்றெல்லாம் வந்த நேரத்தில் தான்,  அதிலே சிலர் மேல்ஜாதிக்காரர்களாக இருந்தாலும், மனிதநேய உணர்வு படைத்தவர்கள் என்கிற முறையில், நீலகண்ட நம்பூதிரிபாட்அவர்களெல்லாம் அதில் கலந்து கொள்ளக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.
கே.டி.கேசவமேனன் அவர்களும், ஜார்ஜ் ஜோசப் அவர்களும் மற்றவர்களும் இணைந்துதான், ஒரு கமிட்டி யைப் போட்டு, அந்தப் போராட்டத்தினை தொடங்கு கிறார்கள். அப்படி தொடங்குவதற்கு முன்பாக, காந்தியார், அதிகாரப்பூர்வமான தலைவராக இல்லாவிட்டாலும், தேசத்தலைவர் அவர், காங்கிரசினுடைய தலைவர் அவர் தான். காங்கிரசினுடைய எந்தத் திட்டங்களாக இருந்தாலும், அவரிடம் அனுமதி கோரி விட்டுத்தான் நடத்தவேண்டும். அதற்காக அவருடைய அனுமதியைப் பெறுவதற்காக, அவர்கள் பட்டபாடு இருக்கிறதே, அது சாதாரணமானதல்ல.


யங் இண்டியாவில் வெளிவந்திருக்கிறது!


எந்த அளவிற்கு இதை அவர்கள் ஊக்கப்படுத்தாமல் இருக்க முடியுமோ, அதைப்பற்றி அவர்கள் சொல்லியிருக் கிறார்கள். அந்தப் போராட்டம் வெற்றியடைகின்ற வரை யில், அதற்கு முன்பாக, எப்படிப்பட்ட கட்டம் வந்தது என் பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமானால், கொஞ்சம் ஆழமான, ஆராய்ச்சி உணர்வோடு நீங்கள் படிக்கவேண்டு மானால், வைக்கம் சத்தியாக்கிரகம் என்கிற தலைப்பில், மகாத்மா காந்தி தொகுப்பு நூல்கள் வந்திருக்கிறதல்லவா, அந்தத் தொகுப்பில், ஏழாவது தொகுதி; பக்கம் 234, 272 அதில், தனித்தனி கட்டுரைகளாக, யங் இண்டியாவில் வெளிவந்திருக்கிறது. அந்த யங் இண்டியா பத்திரிகைக்கு காந்தியார் அவர்கள் கைது செய்யப்பட்டநேரத்தில், ஆசிரியராக இருந்த பெருமை ஜார்ஜ் ஜோசப் அவர் களுக்கு உண்டு. அவ்வளவு ஆற்றல் அவருக்கு உண்டு. அப்படிப்பட்ட ஜார்ஜ் ஜோசப் அவர்கள் கேட்டும்கூட, காந்தியார் அவர்களுக்கு இருந்த அந்தத் தீண்டாமை அணுகுமுறையேகூட, அவர்களுக்கும், அண்ணல் அம் பேத்கர் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் தீண்டாமை ஒழிப்பு அணுகுமுறைக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு.


இந்து மதத்தை அழித்தாலொழிய தீண்டாமையை ஒழிக்கமுடியாது!


இந்து மதத்தைக் காப்பாற்ற தீண்டாமை ஒழியவேண்டும் - இது காந்தியாருடைய சிந்தனை.


தந்தை பெரியார், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் ஆகியோருடைய சிந்தனை என்னவென்றால், தீண்டாமை ஒழியவேண்டுமானால், இந்து மதத்தை அழித்தாலொழிய தீண்டாமையை ஒழிக்கமுடியாது. தீண்டாமையும், இந்து மதமும் அதனுடைய இருதயம் போன்றது.


ஜாதியை விலக்கிவிட்டு, ஜாதியைக் கழித்துவிட்டு மிஞ்சுவது இந்து மதத்தில் என்ன இருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். அதனுடைய நூல்கள், அதனுடைய கடவுள்கள், அதனுடைய புராணங்கள், அதனுடைய மிச்ச எச்சங்கள் இவை அத்தனையையும் எடுத்துக்கொண்டாலே, ஜாதியைக் காப்பாற்றுவது; ஆகவே தான், தீண்டாமை ஒழியவேண்டும் என்று சொன்னால், அதனுடைய வேரை வெட்டவேண்டும் என்று சொன்ன நேரத்தில்,
இதை வைத்துக்கொண்டு எப்படி நாம் தீண்டாமையை ஒழிக்க முடியும். தீண்டாமை என்பதிருக்கிறதே, அது பிற வியினாலே, வருணதருமத்தின் ஒரு பகுதி. அதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டது கர்மா; அதற்காகவே சொல்லப் பட்டது தர்மா. எனவேதான், வருணாசிரம தருமம் - அது ஏற்பட்டது எப்படியென்றால், ஏற்கெனவே ஏற்பட்ட கர்ம வினைப்பயன். அதுதான் மிக முக்கியம்.


ஏன் ஜாதியை ஒழிக்கமுடியவில்லை?


அந்தக் கருமத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் சதுர் வருணம் மயாசிருஷ்டம் ஆகும்.


ஏன் ஜாதியை ஒழிக்கமுடியவில்லை? மற்றவைகளை யெல்லாம் சுலபமாக ஒழிக்க முடிகிறது நம் நாட்டில். ஏன் ஜாதியை, புத்தர் காலத்தில் இருந்து, நாராயண குரு காலத்தில் இருந்து, பெரியார் காலத்தில் இருந்து, இன்னமும் ஜாதியை ஒழித்துவிட்டீர்களா? என்று நம்மிடம் சவால் விட்டுக் கேட்கக்கூடிய அளவிற்கு இன்றைக்கு இருக்கிறது என்று சொன்னால் நண்பர்களே, அதற்கு என்ன அடிப் படை என்றால், ஜாதியை மனிதன் உண்டாக்கினான் என்று சொன்னால், அதனை சுலபத்தில் ஒழித்திருப்பார்கள். கடவுள் உண்டாக்கினான் என்று சொன்னதினால்தான், அதனை நெருங்குவதற்கே பயப்படுகிறார்கள்.
வேறு எந்த நாட்டிலா வது இந்த அநீதிகளை கடவுள்கள் உண்டாக்கியிருக் கிறார்களா? நீங்கள் நினைத்துப் பாருங்கள், மற்றவர் களுக்கும் கடவுள்கள் இருக்கிறார்கள்; அதற்குப் பாதுகாப்பு அரண் கடவுள்களால் வைக்கப்பட்டிருக்கிறதா?


மனுதர்மத்தை ஆரம்பிக்கும்பொழுதே ஜாதியைப்பற்றி சொல்லும்பொழுதே எப்படி ஆரம்பிக்கிறான்.


அந்த பிரம்மா ஆனவர், இந்த உலகத்தை காப்பற்றுவதற் காக முகம், தோள், தொடை, பாதம் இவைகளின்றும் முறையே உண்டான, பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று நான்கு ஜாதிகளை உருவாக்கினார்.
பகவத் கீதையில் கண்ணன் சொல்கிறானாம்;


சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்


நான்கு வகை ஜாதிகளை நானே உண்டாக்கினேன். அந்த வருண தருமத்தை நானே விரும்பினாலும்கூட மாற்ற முடியாது என்று சொல்கிறானாம்.
எனவே, அந்தப் பார்வை இருக்கிறதே, அதில் வருகிற பொழுது, யங் இண்டியா பத்திரிகையில் 1, 2, என்று சொல்லி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தலைப்பில் வெளி வந்திருக்கிறது.


மகாத்மா காந்தி தொகுப்பு நூல்


கடைசியில் வைக்கம் போராட்டம் வெற்றி பெற்ற பிறகு, எழுதியிருக்கிறார்களே தவிர, அதற்கு முன்பு, வைக்கம் சத்தியாகிரகம் நியாயமானதா? வைக்கம் சத்தியாக்கிரகத்தில் நடந்தது என்ன? வைக்கம் சத்தியாக்கிரகத்தில் அவருடைய கருத்து என்ன? என்றெல்லாம் இதில் தெளிவாக சொல்லப் பட்டிருக்கின்ற நேரத்தில், இவை அத்தனையும் அந்த மகாத்கா காந்தி தொகுப்பு நூலில், பக்கம் 234-லிருந்து 272 ஆம் பக்கம் வரை இருக்கிறது.


இதனுடைய சாரத்தை மட்டும் நான் சொல்கிறேன். அது என்னவென்று சொன்னால், வைக்கம் சத்தியாகிரகத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று காந்தியாரிடம் கேட்கிறார்கள்.


உடனே காந்தியார் அவர்கள், இதை அங்கே இருக் கின்றவர்களே செய்யவேண்டுமே தவிர, வெளியாட்கள் யாரும் அதனை செய்யக்கூடாது என்று சொல்கிறார்.


அந்தப் போராட்டம் எதற்காக வந்தது?


நீதிமன்றம், நான்கு வீதிகளில் ஒன்றில் இருக்கிறது. அந்த நீதிமன்றத்திற்கு வழக்குரைஞராக ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த மாதவன் என்பவர் வாதாடுவதற்காகச் செல்கிறார்.


நீ சட்டம் படித்துவிட்டால், உன்னுடைய ஜாதி போய்விடுமா?


அவரை உயர்ஜாதிக்காரர்கள் தடுக்கிறார்கள். நீ ஈழவ ஜாதிக்காரன்; கீழ்ஜாதிக்காரன். நீ எப்படி இந்தத் தெருவில் வரலாம்; எண்ட மகாதேவர் கோவில் இருக்கிறது, சாமி தீட்டாகிவிடுமே; திருவிழா நடக்கப்போகிறதே, கொடி யேற்றி இருக்கிறார்களே என்று சொன்னவுடன்,


உடனே அந்த வழக்குரைஞர், அய்யா, நான் வழக் குரைஞர் என்று சொல்கிறார்.
நீ யாராக இருந்தால் எங்களுக்கு என்ன? நீ சட்டம் படித்துவிட்டால், உன்னுடைய ஜாதி போய்விடுமா? நீ போகக்கூடாது, திரும்பிப் போ என்று சொல்கிறார்கள். தகராறு ஏற்படுகிறது; உடனே அவரை அடிக்கிறார்கள். அதுதான் ஆரம்பம். அதிலிருந்துதான் சத்தியாகிரகத்தினு டைய உணர்வுகளே வருகின்றன.


சத்தியாகிரகத்தினுடைய உணர்வுகள் தளர்ந்துவிடவேண்டும் என்பதற்காக காந்தி யார் அவ்வாறு சொல்கிறார்.


உயர்ஜாதிக்காரர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்கிறார் காந்தியார்
உயர்ஜாதிக்காரர்கள் காந்தியாருக்கு கடிதம் எழுது கிறார்கள். அது தவறு என்று சொல்லி, அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டிய தலைவர் என்ன சொல்கிறார் என்றால்,


ஆமாம், அவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறதே; திருவிதாங்கூர் முழுவதும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. ஆனால், அங்கேயெல்லாம் நடத்தாமல், ஏன் வைக்கத்தில் நடத்தவேண்டும் என்று கேட்கிறார். உயர்ஜாதிக்காரர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்கிறார்.
எந்த இடத்தில் பாதிப்பு இருக்கிறதோ, அங்கேதானே போராட்டத்தைத் தொடங்குவார்கள். அதன்மூலமாக அந்தப் பிரச்சினை எல்லா இடங்களிலும் இருக்கக்கூடாது என்பதுதான் போராட்டத்தினுடைய நோக்கமாகும்.


வைக்கம் போராட்டத்தை காந்தியார் விரும்பவில்லை

எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல முடியாது; அப்படி சொன்னால், பல செய்திகளை என்னால் சொல்ல முடியாது. இந்த விவரங்கள் எல்லாம் அந்த புத்தகத்தில் இருக்கின்றன; யாருக்காவது எங்களுடைய கருத்து தவறு என்றால், எழுதுங்கள், பேசுங்கள் மறுபடியும் நாங்கள் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம். பல் வாய்ப்புகள் இருக்கிறது; இந்த அரங்கம் மட்டுமல்ல, பல அரங்கங்கள் இருக்கிறது. இது அறிவார்ந்த சபை. an Intellectual audience; Intellectual audience ஆக இருப்பது மட்டுமல்ல, Intellectual Honesty  இருக்கவேண்டும், அதுதான் மிக முக்கியம்.


நம்முடைய அறிவார்ந்த மக்கள், அறிவு நாணயத்தோடு இந்தப் பிரச்சினையைப் பார்க்கவேண்டும். நமக்கு விருப்பு, வெறுப்பு இருக்கக்கூடாது. ஒரு அறிவு, ஆய்வரங்கம் இது. அந்த ஆய்வரங்கத்தில், காந்தியார் அந்த காலகட்டத்தில், வருணாசிரமத்தைத் தூக்கிப் பிடித்ததினால், அவர் வைக்கம் போராட்டத்தையே விரும்பவில்லை. பிறகு அந்தப் போராட்டம் தவிர்க்க முடியாமல், தொடங்கி விடுகிறது.


வைக்கம் போராட்டம், கோவில் நுழைவுப் போராட்டம் அல்ல;
ஜார்ஜ் ஜோசப்பிற்கு எழுதிய கடிதத்தில் காந்தியார் சொல்கிறார், நீங்கள் கிறிஸ்தவர். அது இந்துப் பிரச்சினை என்று சொல்கிறார்.


நீங்கள் தயவு செய்து நினைத்துப் பார்க்கவேண்டும். அது இந்துப் பிரச்சினையா? கோவிலுக்குள் நுழைவது என்றால், இந்துப் பிரச்சினை என்று சொல்லலாம். அது கோவில் நுழைவுப் போராட்டம் அல்ல; இன்றைக்குக்கூட படித்த வர்கள் மத்தியிலேயே ஒரு பெரிய குழப்பம் இருக்கிற பிரச்சினை எதுவென்றால், வைக்கம் போராட்டம் என்றால், கோவிலுக்குள் நுழைகின்ற தீண்டாமை ஒழிப்புப் போராட் டம் அல்ல; தெருக்களில் நடக்கக்கூடாது என்று சொன்ன நேரத்தில்தான், அந்தப் போராட்டம் நடைபெற்றது.


கை வீக்கம் குறைகின்றவரையில் நீங்கள் நூல் நூற்கவேண்டாம்!


தந்தை பெரியார் அவர்கள் காந்தியாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திலுள்ள வரிகள் வரலாற்றில் வைர வரிகள் என்று சொல்லவேண்டும். ஏனென்றால், காந்தியாருடைய  அத்யந்த சீடர் பெரியார். காந்தியாரி டத்தில், மகாத்மா, மகாத்மா என்று அவர் கை வீங்கக்கூடிய அளவிற்கு, நூல் நூற்று,  அவர், உனக்கு கொஞ்ச நாள் களுக்கு விதிவிலக்கு; கை வீக்கம் குறைகின்றவரையில் நீங்கள் நூல் நூற்கவேண்டாம் என்று சொன்னார்.
எல்லாம் காந்தியாரிடம்தான்; காந்தி சொன்னார் என்ப தற்காக, இந்தி பிரச்சாரத்தையே வகுப்பு ஆரம்பித்தவர் 1926 ஆம் ஆண்டிலேயே பெரியார் அவர்கள்தான்.


பெரியாருடைய வாழ்க்கையைப் பார்த்தீர்களேயானால், வேடிக்கையாக இருக்கும். மகாத்மா, எல்லாமே மகாத்மா; வெற்றி பெற்ற நேரத்தில்கூட, மகாத்மா காந்திக்குத்தான் அந்தப் பெருமை என்றுதான் தன்னுடைய தலைவருக்கு அந்தப் பெருமை வரவேண்டும் என்று சொல்லித்தான் அதனை முடித்திருக்கிறார்.


நாய், பன்றி, கழுதை எப்பொழுது சத்தியாகிரகம் செய்து வெற்றி பெற்றன!
அப்படிப்பட்டவர் காந்தியாருக்கு ஒரு கடிதம் எழுதினார்:


மகாத்மா அவர்களே, நீங்கள் சொல்கிறீர்கள்; நான் இங்கே வந்து பார்க்கிறேன், அந்தத் தெருக்களில் நாயும், பன்றியும், கழுதையும் தாராளமாகப் போகிறது. ஆனால், மனிதன் வரக்கூடாது என்கிறானே? இந்த நாய், பன்றி, கழுதை எப்பொழுது சத்தியாகிரகம் செய்து வெற்றி பெற்றன என்று எனக்கு சந்தேகம் என்று கேள்வி கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.


பெரியார் அவர்களுடைய சிந்தனை, பளிச்சென்று தெரிகிற மாதிரி ஒரு கேள்வி கேட்டார்.


காந்தியாருக்கு அப்பொழுதுதான் பொறி தட்டியது; அதிலொன்றும் சந்தேகமேயில்லை.


நாய் போகுது, பன்றி போகுது, கழுதை போகுது மிக தாராளமாகப் போகிறது; ஆனால், மனிதன் போகக்கூடாது என்கிறானே! ஈழவ ஜாதி, தீண்டாத ஜாதி, ஒடுக்கப்பட்ட ஜாதி என்று. ஆறறிவு படைத்த மனிதன் போகக்கூடாது என்கிறானே! ஜாதியினுடைய கொடுமையை பாருங்கள், நாயைக் கொஞ்சுகிறான்; நம் சகோதரனைத் தொட்டால், உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை குளிக்கவேண்டும் என்று இன்னமும் சொல்கிறானே! மாசு என்பது என்ன? கரியமில வாயுவிலிருந்துதானே மாசு ஏற்படுகிறது. அதில்லாமல், தொட்டால் தீட்டு என்கிறான்; பார்த்தால் தீட்டு என்கிறான்; நெருங்கினால் தீட்டு என்கிறானே! இதை வைத்துத்தான் பெரியார் அவர்கள் கோபப்பட்டார்.


ஓநாயை எந்தக் காலத்தில் சைவமாக்க முடியும்?

காந்தியாருடைய அணுகுமுறைமீது சொல்கிறேன், இது ஒரு தவறான சிந்தனை அல்லவா!


கேசவமேனன் கருத்தை காந்தியார் ஏற்கவில்லை. நீங்களாக இப்பொழுது ஆரம்பிக்காதீர்கள். அவர்களோடு சேர்ந்து எல்லோருடைய ஆதரவுகளையும் பெற்றுவிட்டு ஆரம்பியுங்கள் என்றார்.


ஓநாயை சைவமாக்கிவிட்டு, அதற்குப் பிறகு, எல்லோ ரும் சைவப் பிரச்சாரம் செய்யுங்கள் என்று சொல்வதுபோல - ஓநாயை எந்தக் காலத்தில் சைவமாக்க முடியும்?


கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் போராட் டத்தை ஆரம்பித்து, இரண்டு பேரும் தண்டனை பெற்ற னர். அதன் பிறகு அந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத நேரத்தில், தந்தை பெரியாருக்கு இரண்டு பேரும் சேர்ந்து கடிதம் எழுதுகின்றனர்.


குளித்தலை மாநாட்டில், பண்ணைபுரத்தில் இருக்கிறார் தந்தை பெரியார்; அந்தக் கடிதம் தந்தை பெரியாருக்குக் கிடைக்கின்றது. அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு, தன்னுடைய உடல்நலக் குறைவினைக்கூட பொருட் படுத்தாமல், அங்கே சென்று தன்னுடைய போராட்டத்தை நடத்துகிறார்.
அதுமட்டுமல்ல, இந்தியாவில் முதன்முதலாக நடை பெற்ற ஒரு மனித உரிமைப் போராட்டம் என்ற பெரு மையோ அதுபோலவே, தலைவர் வீட்டுப் பெண்கள் அதிலே கலந்துகொண்டார்கள் என்ற பெருமையும், பெண்கள் கலந்துகொண்டார்கள் என்ற பெருமையும் வைக்கம் போராட்டத்திற்கு உண்டு. அன்னை நாகம்மையார், தந்தை பெரியார் அவர்களுடைய தங்கை கண்ணம்மையார் ஆகியோர் 1924 ஆம் ஆண்டுகளில் பெண்களே வெளி யில் வரக்கூடாது என்றிருந்த காலகட்டத்தில், பெரியாருக் குப் பிறகு அந்தப் போராட்டம் தொடரவேண்டும் என்கிற அளவில், அவரை கைது செய்து சிறையில் வைத்த காலத்தில், நாகம்மையார், கண்ணம்மையார் ஆகியோர் அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.


கடுங்காவல் தண்டனை பெற்ற தந்தை பெரியார்

போராட்டத்திற்காக தந்தை பெரியார் அவர்கள் திருவிதாங்கூர் செல்கிறார். கைது செய்யவேண்டிய அர சாங்கத்தினர் அவருக்கு அரசு மரியாதையை கொடுக் கின்றனர். காரணம் என்னவென்றால், திருவிதாங்கூர் ராஜா அவர்கள், பெரியார் வீட்டில் தங்கியவர்.


உடனே பெரியார் அவர்கள், நான் போராடுவதற்காக வந்திருக்கிறேன்; அதனால், நீங்கள் செல்லுங்கள் என்று திருப்பி அனுப்பி விடுகிறார்.
அதனால்தான், முதல் தடவை அவருக்கு இரண்டு வாரம் தண்டனை கொடுக்கிறார்கள். மீண்டும் வெளியே வந்து போராட்டத்தைத் தொடர்ந்ததால், ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை கொடுக்கிறார்கள்.


வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகுகிறது. அய்யாமுத்து போன்றவர்கள், இராமநாதன் போன்றவர்கள், பெரியாருடைய ஆட்கள் எல்லாம் இருக்கிறார்கள். பாரதியார் பாட்டை பாடுகிறார்கள்.

இங்கு தீயர் புலயர்களுக்கும் விடுதலை


பறையர் இங்கு தீயர் புலயர்களுக்கும் விடுதலை


என்றெல்லாம் பாட்டுப் பாடி எல்லா இடங்களுக்கும் இந்தப் போராட்ட விளைவுகளை எடுத்துச் சென்றுகொண் டிருக்கின்ற காலகட்டத்தில்,
அப்பொழுது ஜார்ஜ் ஜோசப், கேசவமேனன் ஆகியோர் சிறைச்சாலைக்குப் போய்விட்டனர். பெரியாரும் இரண்டா வது முறையாக சிறைச்சாலைக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனை பெற்று உள்ளே சென்றுவிட்டார்.


சத்ரு சங்கார யாகத்தின் விளைவு!


இந்த காலகட்டத்தில் அரசாங்கத்தின் சார்பில் சத்ரு சங்கார யாகம் நடத்தினார்கள். சத்ரு என்றால் விரோதி; சங்காரம் என்றால் அழிப்பது; யாகம் என்றால், அதில் பூதம் வருமாம். யார் விரோதியோ அவர்களை அழிப்பதற்காக சத்ரு சங்கார யாகம் நடத்தினார்கள். பெரியாரை அழிப் பதற்காக அந்த யாகம் நடத்தப்பட்டது.


பெரியார் சிறைச்சாலையில் இருக்கும்பொழுது நடு இரவில் சங்கு ஊதம் சத்தம் கேட்டது; அங்கிருந்த காவ லரை அழைத்து, என்னப்பா சங்கு ஊதுகிறார்களே? என்றார்.


உடனே அந்தக் காவலர், ராஜா பின்நாடு இறந்து போய்ச்சு என்றான்.
ராஜா செத்துப் போய்விட்டார் என்பதை மலையாள மொழியில் சொல்லியுள்ளார்.

மூட நம்பிக்கை எப்படி திரும்பியது என்றால், பூதம் வந்து ராஜாவை அழித்துவிட்டது. ஆகையால், அவர்களை யெல்லாம் விடுதலை செய்துவிடுங்கள் என்று சொன்னார் கள். ராஜா இறந்து போனதும், ராணி பட்டத்திற்கு வந்தார்கள். பெரியார் விடுதலை செய்யப்பட்டார்.
ஜார்ஜ் ஜோசப் என்ன சொல்கிறார், நான் இதைப் பார்த்தவிதம், இது மனித உரிமைப் போர். இதில் மதத்திற்கு இடமில்லை. மதப் பிரச்சினையல்ல என்றார்.


இப்பொழுது தெருவில் நடப்பதற்கு அனுமதித்தால், கோவிலின் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்று கேட்பார்கள்.


பெரியாரைக் கேட்டார்கள், அய்யாவும், காந்தியாருக்கே அந்தப் பெருமை வரட்டும். கடைசியாக பேசும்பொழுது அவரே போகட்டும் என்றார்.
காந்தியார் கேட்டார், தெருவில் நடப்பதற்கு அனு மதித்தால் கோவிலின் உள்ளே செல்வதற்குக் கேட்பீர்களே, அதற்காக அவர்கள் உத்தரவாதம் கேட்கிறார்கள். கோவி லுக்குள் செல்வதற்காக கிளர்ச்சியை ஆரம்பிக்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தைக் கேட்கிறார்கள் என்றார்.


நிரந்தரமான ஒரு அடிமைச் சாசனத்தை எழுதித் தரமாட்டோம்!


அது எப்படி உத்தரவாதம் கொடுக்க முடியும். தீண்டாமை ஒழியவேண்டும் என்று நாம் சொல்கிறோம். கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று அவர்கள் சொன்னால், அதற்கு எப்படி உத்தரவாதம் கொடுக்க முடியும்? அடுத்ததடவை அந்தக் கட்டம் வரும்பொழுது, கிளர்ச்சி வராது என்று எப்படி உத்தரவாதம் கொடுக்க முடியும்? இப்பொழுது திறந்து விடுங்கள், இந்தப் போராட்டம் முடிவுறும். அதற்கு மேலே அடுத்தபடியான கட்டம், இனிமேல் நாங்கள் கோவிலுக்குள் போகமாட்டோம் என்று நிரந்தரமான ஒரு அடிமைச் சாசனத்தை எழுதித் தரமாட்டோம் என்றார்கள்.


இது ஆரம்பித்ததினுடைய தாக்கம் நண்பர்களே, இந்தியா முழுவதும் இந்தத் தாக்கம் ஏற்பட்டது. எனவே, இதனை ஒரு மதப் பிரச்சினையாகப் பார்த்தார்கள்; உள்ளூர்க்காரர்கள் மட்டும் அந்தப் பிரச்சினையை பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னார்கள். பெரியாரையே அழைத்து, திரும்பிப் போங்கள் என்று சொன்னார்கள்; நேரிடையாக காந்தியார் சொல்லவில்லை. ராஜகோபாலாச் சாரியாரைத்தான் முதலில் கேட்டார்கள், நீங்கள் அந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கவேண்டும் என்று ஜார்ஜ் ஜோசப் கேட்கிறார்.


போராட்டத்திற்கு தலைமை தாங்க மறுத்த ராஜகோபாலாச்சாரியார் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள், என்னுடைய உடல்நிலை சரியில்லை. நான் தலைமை தாங்கமாட்டேன் என்று மறுத்தார். அதற்குப் பிறகுதான் பெரியார் வருகிறார். சீனிவாச அய்யங்கார் அட்வகேட் ஜெனரலாக பின்னாளில் வந்து, நீதிபதியானவர். காங்கிரஸ்காரர்; மயிலாப்பூர்காரர். காந்தியாருக்கு மிக முக்கியமானவர். ஆவடி மாநாடு நடத்திய அம்புஜம் அம்மாளின் தந்தையார் அவர்.

கேரளாவிற்குச் சென்று நீங்கள் ஏன் போராட்டம் நடத்த வேண்டும்?
அப்படிப்பட்ட சீனிவாச அய்யங்காரை விட்டு, பெரியாரிடம் சொல்லச் சொல்கிறார் காந்தியார். நீங்கள் திரும்பி வாருங்கள்; நீங்கள் அங்கே சென்று ரகளை செய்யாதீர்கள். 15 நாள்களாக அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிறீர்கள். அந்தப் போராட்டத்தை அவர் கள்தான் நடத்தவேண்டும். கேரளாவில் நடைபெறுகின்ற பிரச்சினைக்கு கேரளக்காரர்கள்தான் போராட்டம் நடத்தவேண்டுமே தவிர, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கின்ற நீங்கள் ஏன் நடத்தவேண்டும்? அதைத் தவறாக நினைக்கிறார்கள் என்றார்.


இதற்கு என்ன எல்லைக் கோடு! மனித உரிமைகளுக்கு என்ன எல்லைக் கோடு. அவர்கள் போராட்டம் நடத்தி, எல்லோரும் சிறைச்சாலைக்குப் போய்விட்டார்கள். எனக் குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். நான் இந்த அக்கிர மத்தை சகித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் வந்திருக்கிறேன். தீண்டாமை ஒழிக்கவேண்டும் என்று நாம் சொல்கிறோமே என்றார். இதிலிருந்துதான் காந்தியாருக் கும், பெரியாருக்கும் கூட கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பிரச்சினையில் கருத்து மாறுபாடு ஏற்பட்டது.


                  --------------------------தொடரும்---"விடுதலை” 11-02-2015

47 comments:

தமிழ் ஓவியா said...

எட்டு மாதத்தில் பிஜேபியின் மதவாத ஆட்சி மக்களை வெறுக்கச் செய்துவிட்டது!


டில்லி முடிவு பி.ஜே.பி.க்குச் சரியான பாடம்

எட்டு மாதத்தில் பிஜேபியின் மதவாத ஆட்சி

மக்களை வெறுக்கச் செய்துவிட்டது!

அன்றே சொன்னது கழகம் - இன்று அதே நடக்கிறது


சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்


சிதம்பரம், பிப்.11- நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மதவாதம் தலை தூக்கும் ஆபத்து ஏற்படும் என்று திராவிடர் கழகம் எச்சரித்தது. கடந்த 8 மாத பிஜேபிஆட்சியில் அதுதான் நடக்கிறது; இதற்கு டில்லி வாழ் பொது மக்கள் நல்ல பாடம் கற்பித்து விட்டனர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் சிதம்பரத்தில் செய்தி யாளர்களிடம் கூறினார். அதன் விவரம் வருமாறு:

கடந்த 25 ஆண்டுகளாக சிதம்பரத்தில் கட்சி வேறு பாடுகளைப்பற்றி கவலைப்படாமல், ஒரு பொதுப் படிப்பகம் - நூலகம் இவ்வளவு சிறப்பாக நடைபெறுவது என்பதற்கு எடுத்துக்காட்டாக, அனைத்து மக்களுடைய ஒத்துழைப் போடு நடைபெற்று வரக்கூடிய பெரியார் படிப்பகத் தினுடைய வெள்ளி விழா - 25 ஆம் ஆண்டு விழாவிற்கு அழைப்பு கொடுத்திருக்கிறோம். இன்று (10.2.2015) மாலை ஆண்டு விழா நடைபெறவிருக்கிறது.

அவ்விழாவில் கலந்துகொள்வதற்காக வந்திருக்கின்ற நேரத்தில், உங்களை யெல்லாம் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டு, அரசியல் கட்சியாக இல்லாத நாங்கள், நாடாளு மன்றத் தேர்தலில் மிகுந்த அக்கறை காட்டியதற்குக் காரணம், மோடி வெற்றி பெற்றால் மத்தியில் ஆட்சி அமைத்தால், அதன் மூலமாக, மதச்சார்பற்ற தன்மை என்று அரசியல் சட்டத்தினுடைய அடிப்படைத் தன்மைகளுக்கு வெடி வைத்துவிடுவார்கள்.

பன் மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள் இருக்கின்ற நாட்டில், என் மதம் பெரும்பான்மை மதம், ஆகவே அதுதான் மற்றவர்களுக்கு உத்தரவு போட வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு இந்துராஷ்டிரம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கொள் கையை அமைப்பார்கள். சமஸ்கிருதத்தை பொது மொழி ஆக்கவேண்டும் என்ற அதனுடைய கொள்கையை விரைவுபடுத்துவார்கள்.
ஏற்கெனவே வாஜ்பேயி காலத்தில், வரலாற்றை எப்படி அவர்கள் காவி மயப்படுத்தினார்களோ, பாடத் திட்டங் களை மாற்றினார்களோ அதுபோல செய்வார்கள். ஒரு அமைதிப் பூங்காவாக இருக்கின்ற நாடு, மதக் கலவரங் களுக்கு வித்திட்டு, ஒரு அமளிக்காடாக ஆக்கக்கூடிய நிலை ஏற்படும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நேரு காலத்திலிருந்து நடைபெற்ற ஒரு நிலை. நாட்டினுடைய மதச் சார்பின்மை ஒற்றுமை என்பது முழுக்க முழுக்கப் பாதுகாக்கப்படக்கூடிய ஒரு சூழல், அதனாலே பாதிக்கப் படும் என்ற நிலையை மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னோம், எச்சரிக்கை செய்தோம்!

எங்களுக்கு அடுத்த தேர்தல் என்பதைவிட, தலை முறை என்பது முக்கியம் என்றும் திராவிடர் கழகத்துக் காரர்கள் சொன்னோம்.

இளைஞர்கள் ஏமாந்தனர்

ஆனால், பொதுவாக காங்கிரஸ் கட்சியின்மீது இருந்த கோபம், 18 வயது பெற்ற புதிதாக வாக்களிக்கும் வாய்ப்பைப் வாதாடவில்லை. தீர்ப்பும் விரோதமாக வந்தது. எனவேதான், விளைவுகள், இவை எதிர்பார்த்த ஒன்று. எங்களைப் பொறுத்தவரையில், இதுபோன்ற விளைவுகள், மீண்டும் தீட்சதர்கள் ராஜ்ஜியம் நடைபெறும். மீண்டும் 10 மணிக்குமேல் ஆகமம் இடம்தராது என்று சொன்னால், எலக்ட்ரிக் விளக்கு போடுவதற்கு ஆகமம் இடம் தருகிறதா? வெவ்வேறு முறையில் சிலர் நடந்துகொண்டிருக்கிறார்களே, அதற்கு ஆகமம் இடம் தருகிறதா? கோவிலைத் தவிர மற்ற இடங்களில் ஆடலாம், பாடலாம், அதிலும் இரண்டு நாட்டியாஞ்சலி நடத்துவதற்கு ஆகமம் இடம் தருகிறதா? இவையெல்லாம் தேவையா?

இதைப்பற்றியெல்லாம் மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கவேண்டும். அது ஊடகங்களாகிய உங்களுடைய பொறுப்புகள். இந்த நாட்டில் பக்தி என்கிற வியாபாரம் மிகவும் செழிப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே உண்டியலில் எவ்வளவு வசூல் ஆனதோ, அவர்களின் காலத்திலே, இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை எடுத்த பிறகு, உண்டியலில் எவ்வளவு வசூல் ஆனது என்ற ஒன்றே போதும், ஏற்கெனவே நடந்த ஊழல்கள் ஒன்று, இரண்டு அல்ல, மலைபோல.

இவையெல்லாம் தாண்டி, உச்சநீதிமன்றத்திற்கு சில பேர் சென்றார்கள் என்பதை வைத்துக்கொண்டு, மற்றவர்களுக்கு வாய்ப்பே கொடுக்காத அளவிற்கு, எந்தத் தீர்ப்பாவது, ஒரு வாரம், பத்து நாள்களுக்குள் வந்த தீர்ப்பு இதுவரையில் உச்சநீதிமன்றத்தில் உண்டா? இதுதான் தனித்தன்மையானது. அதிலிருந்தே அந்தத் தீர்ப்பைப்பற்றி நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

எனவே, அதனுடைய தவிர்க்க முடியாத விளைவுகள் இப்படித்தான் இருக்கும். மீண்டும் ஒரு துணிச்சலான மக்கள் கிளர்ச்சி, ஆட்சி இங்கு வந்து, மறுபடியும் பழைய நிலையை உருவாக்கவேண்டும். அதற்காக திராவிடர் கழகம் இந்தக் கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செலுத்த எப்பொழுதும் தயாராக இருக்கும்.


தமிழ் ஓவியா said...

சிதம்பரம் கோயிலில் குழந்தைத் திருமணங்கள்

செய்தியாளர்: சிதம்பரம் கோவிலில் குழந்தைத் திருமணம் நடைபெறுவதுபற்றி?
தமிழர் தலைவர்: அதாவது, நீங்கள் சொல்வது புதிதான செய்தியல்ல. பால்ய திருமணங்களை நடத்துவதற்கு சிதம்பரம் கோவில் தீட்சதர்களுக்கு மட்டும் விதிவிலக்கு என்று சட்டத்தில் இருக்கிறதா? சட்டம் ஏன் ஊமையாகிறது? அரசாங்கம் ஏன் காட்சிப் பொருளாக இருக்கிறது என்பதுதான் கேள்வி. உங்களுடைய கேள்வியை, தமிழக அரசுக்கு, மத்திய அரசுக்கு அப்படியே சமர்ப்பிக்கின்றேன். நடவடிக்கை தேவை. மக்களைப் பொறுத்தவரையில், வெளியில் எங்காவது குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது என்ற தகவல் வந்தால், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் சென்று தடுத்து நிறுத்துகின்றனர். இங்கே நடைபெற்றாலும் அதை நிலைதானே. சட்டம் ஒன்றும் தனியாகக் கிடையாதே! தீட்சதர்களுக்கென்று ஒரு தனி சட்டம் போட்டு நடத்தினால், பரவாயில்லை. அப்படி கிடையாதே!

ஆகவே, இது மனிதநேயத்திற்கும், மனிதாபிமானத்திற்கும், பெண்ணுரிமைக்கும், இந்திய அரசியல் சட்டத்திற்கும் விரோதமான செயலாகும்.

மோடி பதவி விலக வேண்டுமா!

செய்தியாளர்: டில்லி தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலகவேண்டும் என்று சொல்கிறார்களே, அதுபற்றி?

தமிழர் தலைவர்: நல்ல ஜனநாயக முறை என்றால், அய்ந்து முறை தேர்தல் பிரச்சாரம் செய்தார் மோடி. அவரது கட்சித் தலைவர் விடியற்காலை 3 மணிவரை விழித்துக்கொண்டு என்னென்ன திட்டம் போடுவது என்று விளக்கிக் கொண்டிருந்தார். மோடி - ஷா கூட்டணி இருக்கிறதே, அதுதான், கட்சியைக்கூட அய்ஜாக் செய்து வைத்திருக்கின்ற ஒரு சூழ்நிலை; அவர்களுடைய கட்சியைப்பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால், அந்தக் கட்சி மிகப் பலமாக வளருகின்ற கட்சி; மிஸ்டு காலிலேயே வளருகின்ற கட்சி. மிஸ்டு கால் கொடுத்து, உறுப்பினரை சேர்க்கின்ற கட்சி.

மோடியைப் பொறுத்தவரையில், டில்லி சட்டமன்றத் தேர்தலுக்காக அய்ந்து முறை பிரச்சாரம் செய்து, நீங்களே கேள்வி கேட்டதுபோல, எதிர்க்கட்சியாகக்கூட இல்லாமல், ஒற்றை இலக்கில் வந்திருக்கிறார்கள் என்றால், அதிலும் நாட்டினுடைய தலைநகரத்தில், ஒபாமாவிற்கு ஆடம்பரமாக வரவேற்பு, தலைவர்கள் வரவேற்பு, ஆடம்பரமான உடை இவற்றுக்கெல்லாம் பிறகு வந்திருக்கிறது என்று சொன்னால், நல்ல ஜனநாயகம் உணர்வு உள்ளவராக பிரதமர் இருந்தால், பிரதமர் பதவி விலகவேண்டும் என்றுதான் எல்லோரும் கேட்பார்கள்.

இதற்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால், ஒன்று, எதிர்க்கட்சியாகக்கூட இவர்களை மக்கள் அனுமதிக்கவில்லை என்பது எதைக் காட்டுகிறது என்பதுதான் முக்கியம்.

தமிழ் ஓவியா said...

ஒரு இடம், இரண்டு இடம் நாடாளுமன்றத்தில் காங்கிரசுக்குக் குறைந்தது என்று சொன்னவுடன், நாங்கள் காங்கிரசுக்கு எதிர்க்கட்சித் தகுதியைக்கூட கொடுக்கமாட்டோம் என்று இவர்கள் சொன்னார்கள். எதிர்க்கட்சித் தலைவர் பதவியே கிடையாது என்று சொன்னார்கள். முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்; எதை விதைத்தார்களோ, அதை டில்லியிலேயே அறுவடை செய்துகொண்டிருக்கிறார்கள்.
சிறீரங்கம் இடைத் தேர்தல்

செய்தியாளர்: திருச்சி சிறீரங்கம் இடைத்தேர்தல்பற்றி...?

தமிழர் தலைவர்: சிறீரங்கம் இடைத்தேர்தல்பற்றிதான் நாடு முழுவதும் தெரியுமே! அங்கே எல்லா வீடுகளிலும் காந்தி குடியிருக்கிறார். நிறைய காந்தி இருக்கிறார், ஒரு காந்தியல்ல, நிறைய காந்தி இருக்கிறார். ஆகவே, காந்தியினுடைய பளபளப்பு இருக்கிறது பாருங்கள், அது சிறீரங்கம் இடைத்தேர்தல் முடிவை காட்டும். காந்திக்கு மற்ற இடங்களில் மரியாதை இருக்கிறதோ, ஞாபகம் இருக்கிறதோ, சிறீரங்கத்தில்தான் காந்தி வீட்டிற்கு வீடு குடியிருக்கிறார்.
செய்தியாளர்: முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் அவர்கள், நாட்டியாஞ்சலிக்கு கோவில் கமிட்டி அமைக்கவில்லை என்றால், ஒரு போராட்டத்தை நடத்துவோம் என்று சொல்லியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: தாராளமாக. அதற்கு திராவிடர் கழகத்திற்கு ஆதரவு உண்டு.

இதை நாங்கள் தொடக்கத்திலிருந்தே, ஒத்த கருத்துள்ளவர்கள் செய்கிறோம். பக்தி, பக்தி இல்லாத பிரச்சினை அல்ல. இது மனித உரிமைப் பிரச்சினை. எல்லா மக்களும் ஒன்றுபட்டு வரவேண்டும். அந்தக் கோரிக்கைகள் மிகத் தேவையான ஒன்று. வி.வி.எஸ். அவர்களின் முயற்சி வெற்றி பெறவேண்டும். நாங்கள் அதற்கு நிச்சயமாக ஆதரவு தருவோம்.

செய்தியாளர்: சிதம்பரம் கோவிலில் பணம் வசூல் செய்கிறார்கள், அதற்கு ரசீது தரமாட்டேன் என்கிறார்கள்?

தமிழர் தலைவர்: அதாவது, மனுதர்மத்தில் ஒரு சுலோகம் இருக்கிறது. அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். பிராமணர்கள் தானம் வாங்கினாலும், அது பிறர் பொருளை அவர்கள் வாங்கவில்லை. இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே சொந்தமானதால், அவர்கள் பொருளை, இன்னொருவர் மூலம் அவர்களே பெற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் மனுதர்மம். ஆகவே, அந்த மனுதர்மத்தை வேறு யார் கடைபிடிக்கிறார்களோ இல்லையோ, நம்முடைய சிதம்பரம் தீட்சதர்கள் சரியாகக் கடைபிடிக்கிறார்கள்.

செய்தியாளர்: நடராஜர் உங்களுக்குக் கூலி கொடுப்பார் என்று எங்களை மிரட்டினார்கள். கமிட்டி அமைக்கவேண்டும் என்று ஒரு தீட்சதர் உதவி ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார். இதுபற்றி உங்கள் கருத்து?

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர்: என்னென்ன தீய விளைவுகள் ஏற்கெனவே நடந்ததோ, அவை தவிர்க்கப்படவேண்டும். நம்முடைய சோழ மன்னர்கள் கட்டிய கோவில், இது ஒரு பொதுக் கோவில் என்பதற்கு ஆதாரம் உண்டு என்று உச்சநீதிமன்றத்தில், உயர்நீதிமன்றத்தில் எல்லாம் உறுதி செய்த பிறகுகூட, உச்சநீதிமன்றத்தினுடைய தவறான தீர்ப்பால், எப்படியோ அவர்கள் மீண்டும் அந்த சொத்தை அவர்கள் முழுமையாக இன்றைக்கு அனுபவிக்க வாய்ப்பையும், வசதியும் ஏற்படுத்தின. அதனுடைய தீய விளைவுகள், வாங்கிய பணத்திற்கெல்லாம் ரசீது கொடுக்கவில்லை என்று சொன்னீர்கள், நடராஜர் கோவிலே எங்களுக்குச் சொந்தம் என்று சொல்லிய பிறகு, அதில் வருகின்ற வசூல் எங்களுக்குத்தான் சொந்தம் என்று சொல்வதில் ஒன்றும் அதிசயம் இல்லை. ஆகவே, தனித்தனியான பிரச்சினைகளுக்காக இதை செய்வதைவிட, மீண்டும் அரசுடைமையாக, இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கே மீண்டும் அந்தக் கோவில் திரும்பவேண்டும். அப்பொழுதுதான், ஒழுங்கான தணிக்கை முறைகள், பொதுமக்களுடைய கோவிலாக இருக்கும். தனியார் சொத்தாக இதனை ஆக்கக்கூடாது என்ற நிலை உருவாகும்.

அதற்கு வேண்டிய அடிப்படை கருத்தை, ஒட்டுமொத்தமான ஒரு இயக்கமாக தொடர்ந்து நடத்தவேண்டும். அதுதான் இதற்கு நிரந்தரமான விடையாகும். மற்றவையெல்லாம் தனித்தனி அதிகாரங்களாக ஆகும். அதுவரையில், இதுபோன்ற தவறுகளும், இதுபோன்ற ஒழுக்கக்கேடுகளும் நிச்சயமாக தொடரவே செய்யும்.

செய்தியாளர்: சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் நாட்டியமாடும் ஒவ்வொருவரிடமும் பணம் வாங்கிக் கொண்டுதான் நடத்துகிறார்கள்; 33 ஆண்டுகளாக இதனை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள் என்று நாங்கள் கேட்டபொழுது, வெறும் விபூதி மட்டும்தான் கொடுப்போம் என்று சொல்கிறார்கள்? நாட்டியாஞ்சலியை நாங்கள் வீடியோ எடுக்கவேண்டும் என்று சொன்னபொழுது, எங்களிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டனர்.

கோயில் தோன்றியது ஏன்?

தமிழர் தலைவர்: தொடர்ந்து, கோவில் என்பதே சாணக்கியர் காலத்தில் அர்த்தசாஸ்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. வருமானத்திற்காகத்தான் கோவில்கள் என்று சொன்னார். எனவே, தீட்சதர்களின் வருமானத்திற்காகத்தான் இந்தக் கோவிலும், அது நாட்டியாஞ்சலி ஆனாலும் சரி, அல்லது வசூல் ஆனாலும் சரி அது எங்களுக்கே சொந்தம் என்ற முறையைத்தான் அவர்கள் கையாளுகிறார்கள் என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

இது தனியார் மயமாக இருந்தால், இப்படிப்பட்ட பகற்கொள்ளைகள் நடக்கும் என்ற காரணத்தினால்தான், இது மீண்டும் மக்கள் சொத்தாக ஆகவேண்டும் என்பதற்கான பலமான ஒரு இயக்கத்தினுடைய அவசியத்தை இந்த நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன. - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/95997.html#ixzz3RRfZTKqy

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கெட்ட நாள்

கோகுலாஷ்டமி கிருஷ்ணன் பிறந்த நாளாம். ராமநவமி ராமன் பிறந்த நாளாம். அப்படி இருக்கும்போது அஷ்டமி, நவமி கெட்ட நாள் என்று பக்தர்கள் பதறுவது ஏன்? கடவுள்கள் பிறந்தது கெட்ட நாளா?

Read more: http://viduthalai.in/e-paper/96004.html#ixzz3RRgOwKQj

தமிழ் ஓவியா said...

தக்கதோர் அறிவுரை

வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியால் நீங்கள் ஆணவம் கொள்ளக் கூடாது. பிஜேபியும் காங்கிரசும் தோல்வி அடைந்த தற்கு அதுவே காரணம். மக்கள் நம்முடன் இருப்ப தைத் தேர்தல் முடிவு உணர்த் துகிறது. மக்கள் நலனில் மட்டுமே கவனம் செலுத்தி, இனி உழைக்க வேண்டும். நமது முதல் நோக்கமே ஊழலை ஒழிப்பதுதான்!

- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கெஜ்ரிவால் அறிவுரை

Read more: http://viduthalai.in/e-paper/96004.html#ixzz3RRgWVge0

தமிழ் ஓவியா said...

டில்லி யூனியன் பிரதேசத்தில்
இராமனுக்குப் பிறக்காதவர்கள் இவ்வளவு அதிகமா?

- ஊசி மிளகாய்

டில்லி சட்டமன்றத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் அமைப்புகளுக்கும், பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசுக்கும், அக்கட்சிக்கும் படுதோல்வியைப் பரிசாக, டில்லி வாக்காளர்ப் பெரு மக்கள் வழங்கி, விட்டனர். மதவெறி அரசியலும், அதிகாரப் போதை, ஆணவ உளறலும், இனிமேல் செல்லாது என்று உணர்த்தி உள்ளனர்.

அமித்ஷா - மோடி கூட்டு ஏதோ பெரிய அற்புத அதிசயங்களை யெல்லாம் தரக்கூடிய அலாவுதீனின் அற்புத விளக்கு என்பதைப் போன்ற (மாய்மாலப் பிரச்சாரப் புரட்டு என்ற) பெரிய பலூனை - கெஜ்ரிவால் என்ற சின்ன குண்டூசியைக் கொண்டு குத்தி ஒன்று மில்லாமல், பரிதாபத்திற்குரிய நிலையில் எதிர்க்கட்சித் தகுதியைக்கூடப் பெறாது வீழ்த்திப் பாடம் புகட்டி யுள்ளனர்!

நாடாளுமன்றத் தேர்தலில் மோடியால் இளைஞர் களுக்கும், ஏனையோருக்கும் தரப்பட்ட குளோரோபாம் - மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவில்லை; மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவும் கூடாது; அது மரணத்தில்தான் போய் முடியும்!

ஆகவே நாடு அழிவை நோக்கி - மதவெறி பழைய வர்ண தர்ம வெறி, சிறுபான்மையினரை மிக மோசமாக சித்தரித்து நடத்திய வன்கொடுமைக்கு வாக்கு பெட்டி வழியே இப்படி ஒரு மவுனப் புரட்சியை டெல்லி வாக்காளர்கள் நடத்திப் பாடம் போதித்துள்ளனர்.

5 முறை தேர்தல் பிரச்சாரத்தினை மும்முரமாக நடத்திய மோடி பிரச்சாரம் பரிதாபத்திற்குரிய நிலையில் 5 இடங் களைக்கூட பெற முடியாமல், வெறும் 3 இடங்களையே பெற்றுள்ளது!

கிரண்பேடி என்ற ஒரு பச்சோந்தி பதவி ஆசைப் பெண்ணை -விளம்பர வியாதியால் வீணே அலைந்த ஒரு பெண்ணை - ஒரே நாளில் கட்சித் தாவ வைத்து, எடுத்த எடுப்பிலேயே முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்து பெண்கள் வாக்குளைப் பெற இந்த மாயமான் காட்சியை நடத்தியும்கூட கை கொடுக்கவில்லை.

அவரே தோற்றுப் போனார்!

கூடு விட்டுக் கூடு பாயும் குணவதிக்கு வாக்குகளால் பாடம் கற்பித்துள்ளனர்!

அவருக்குத் திடீர் பிரோமோஷன் கொடுத்த ஷாவின் வித்தைகளின் விலா எலும்பு முறிக்கப்பட்டுள்ளது!

அதைவிட டில்லி வாக்காளர்கள் இந்தப் பெருத்த தோல்வியை பா.ஜ.க. அணிக்குத் தந்து, நன்றாகக் கரி பூசி விட்டனர்.

எவ்வளவு கேவலமான பேச்சு! - தேர்தல் பிரச்சாரத்தில்? ஒரு ஆர்.எஸ்.எஸ். கதாகாலட்சேப பெண்ணைக் கொண்டு வந்து மத்திய இணை அமைச்சராக்கியதோடு, அவரை டில்லி தேர்தல் பிரச்சாரத்திலும் களம் இறக்கினர் - பிரதமர்.

அந்தப் பெண் அமைச்சர் உதிர்த்த நாகரிகமான கருத்து - தேர்தல் பிரச்சார வரலாற்றில் எங்கே தேடினாலும் கிடைக்காது.

அருவருக்கத்தக்க ஆணவப் பேச்சு! பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லாம் இராமனின் பிள்ளைகள். மற்றவர்களுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லோரும் முறை தவறிப் பிறந்தவர்கள்

- எத்தகைய கேவலமான இழி நிலைப் பேச்சு! இப்படிப்பட்டவர் மோடி அரசில் இன்னமும் மந்திரியாக தொடருவதும், பிரதமர் மவுனமாக இருப்பதும் சரிதானா?

67 இடங்களைப் பெற்று வியக்கத்தக்க வெற்றி பா.ஜ.க.வுக்கு எதிராகக் கிடைத்துள்ளது. பா.ஜ.க. வெறும் மூன்றே இடங்களைத்தான் பெற்றுள்ளது! அப்படியானால்

ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பிரச்சாரகரான அந்தஅமைச்சர் அம்மாவின் கணக்குப்படி டில்லி யூனியன் பிரதேசத்தில் இராமனுக்குப் பிறந்தவர்கள் வெறும் மூன்று தொகுதிகளில்தான் உள்ளனர்.

மற்றவர்கள் எல்லாம்....? நமக்கே எழுதிடக் கை கூசுகிறது!

இப்படிப்பட்ட கழிசடைகளையெல்லாம் துடைப்பத் தால் கூட்டி வாரிக் குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டார்கள்!

வார்த்தைகளால் பதில் கூறாமல் வாக்குகளால் செயலில் காட்டி, மூக்கறுத்துள்ளனர்.

கெட்டிக்காரன் புளுகுக்கேகூட உச்ச வரம்பு எட்டு நாள்கள்!

ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங் புளுகுக்கு எட்டு மாதங்கள் போலும்!

இனியாவது ஆர்.எஸ்.எஸ். பல குரல் மன்னர்களின் ஆணவம் குறையுமா?

எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/e-paper/96005.html#ixzz3RRglr128

தமிழ் ஓவியா said...

மனித சமுதாயத்தில்...


நாம் உண்மையான பகுத்தறிவுவாதிகளாக ஆகிவிடுவோமேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும்.
(விடுதலை, 16.11.1971)

Read more: http://viduthalai.in/page-2/95991.html#ixzz3RRh0Ly44

தமிழ் ஓவியா said...

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சியாம்

சென்னையில் சில ஆண்டுகளாக ஆன்மீகக் கண் காட்சியை நடத்திக் கொண்டுள்ளனர். இதனை முன்னின்று நடத்துபவர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பனர்களே!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் என்ற பதவியில் இருந்து கொண்டே நடராஜ் அய்.பி.எஸ். இந்த இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சிக் குழுவின் தலைவராக இருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளலாமே.

கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளை என்று பெயர் பெற்ற ஆடிட்டர் குருமூர்த்தி இதில் மிகப் பெரிய அங்கம் வகிக்கிறார் என்றால் இதன் பின்னணியைத் தெரிந்து கொள்ளலாமே!

இளைஞர்களுக்கு இந்துத்துவா வெறியை ஊட்டுவது தான் இதன் முக்கிய நோக்கம்; உள்ளே நுழைந்தால் ஓர் அக்ரகாரத்தில் நுழைந்த அனுபவம் தான் கிடைக்கும்.

இந்துக்களே ஒன்று சேருங்கள் என் சொன்னாலும் ஒவ்வொரு ஜாதியாகத் தேடிப் போய்க் கண்டுபிடித்து ஜாதிக்கொரு அரங்கம் (ஸ்டால்) ஏற்பாடு செய்துள்ளனர்.

ஜாதி அமைப்பைக் காப்பாற்றுவது அவர்களின் முக்கிய நோக்கம் அதற்குத்தான் இத்தகைய ஏற்பாடு.

இதில் சேவை என்ற ஒரு வார்த்தை வேறு? அவர்கள் செய்யும் சேவை என்ன?

கிறித்தவர்களாவது இந்த நாட்டில் கல்வி நிறுவனங் களை ஆயிரக்கணக்கில் திறந்து, கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த மக்களுக்குக் கல்விக் கண்ணொளியைத் தந்தனர். மருத்துவமனைகளைத் திறந்து நோய்த் தீர்க்கும் பணியினை மேற்கொண்டனர்.

இந்து மதம் அப்படியா? சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்ன மதத்துக்குப் பெயர் தானே இந்துமதம்.

இரண்டு முறை சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் தமிழ் நாட்டுக்கு முதல் அமைச்சராக வந்த நிலையில் சூத்திரர்களுக்குக் கல்வி கொடுக்கக் கூடாது என்ற மனு தர்மத்தின் அடிப்படையில் புதிதாகப் பள்ளிகளைத் திறக்கா விட்டாலும், ஏற்கெனவே நடந்து வந்த பள்ளிகளை இழுத்து மூடினாரா இல்லையா? இந்த இலட்சணத்தில் சேவை என்ன வாழுகிறதாம்!

பூணூல்களை மாட்டிக் கொண்டு ஆங்காங்கே உட்கார்ந்து கொண்டு சமஸ்கிருத மந்திர உளறல்கள்தானே அந்தக் கண்காட்சியில்! கீதை உபதேசம் என்றால் அதன் பொருள் என்ன?

பிறவியின் அடிப்படையிலான வருணபேதத்தைக் கட்டிக் காப்பதுதானே அதன் நோக்கம்!

சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கூறும் கீதையைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு கண்காட்சியில் வெகு மக்களுக்கான பயன் என்ன இருக்க முடியும்?

சீனிவாசக் கல்யாண உற்சவம் நடத்துகிறார்களாம். கண்காட்சியில்; பார்ப்பனர்கள்தான் எவ்வளவுக் கெட்டிக் காரர்கள்! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடத்த வேண்டிய ஒன்றை ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடத்து கிறார்களே - இதெல்லாம் ஆகம முறைப்படி சரியானது தானா? இதைப்பற்றி எந்த ஆன்மீகக் கொழுந்துகள் கேள்வி எழுப்புகின்றன?

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காக, சட்டம் இயற்றி, இந்து மதத்தில் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் அர்ச்சகர்களுக்கான பயிற்சிகளை முறைப்படி அளித்து, தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களை இந்துக் கோயில்களில் அர்ச்சகராவதற்கு ஏற்பாடு செய்தால் அய்யய்யோ ஆன்மிகம் கெட்டுப் போச்சு - நாத்திகர்கள் ஆன்மீகத்தில் தலையிடுகிறார்கள் - அபச்சாரம், அபச்சாரம் என்ற அண்டமே பிளக்குமாறு கூச்சலும் கூப்பாடும் போட்டு, நேரடியாக உச்சநீதிமன்றத் திற்கே படை எடுத்து, அதனைத் தடை செய்து வருப வர்கள்தான் - இப்படி இன்னொரு மதம் சார்ந்த கல்வி நிறுவன வளாக மைதானத்தில் திருப்பதி சீனிவாசத் திருக்கல்யாணம் நடத்துகிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அவாளுக்கென்றால் ஆகமங்கள் வளைந்துகொடுக்குமோ!

ஒவ்வொரு நாளும் பேச்சுக் கச்சேரிகள் நடத்து கிறார்கள். ஜாதி ஒழிய வேண்டும் - மனித சமத்துவத்துக்கு ஜாதி எதிரானது - என்று கருத்தரங்கில் பேசுவார்களா?

மனித சமத்துவத்தைப் போதிக்காத - சகோதரத்துவ உணர்வை ஊட்டாத - பெண்களை சக மனிதராகப் பாவிக்காத எதுவாக இருந்தாலும் வளைந்த, முனை மழுங்கிய குண்டூசி அளவுக்குக்கூட பயனற்றதுதான்.

கேட்டால் சாமர்த்தியமாகச் சொல்லுவார்கள், வருணா சிரமம் வேறு, ஜாதி வேறு என்று கதைப்பார்கள்? அப் படியா? அப்படியானால் ஜாதிக்கு மூலம் எது என்ற கேள்வி எழாதா?

இன்னொன்றையும் சாமர்த்தியம் என்று எண்ணி எடுத்துரைப்பார்கள்; வருணாசிரமம் என்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல - குணத்தின் அடிப்படையிலானது என்று திசை திருப்புவார்கள்.

பிராமணர்களை பிர்மாவின் முகத்தில் இருந்தும், சத்திரியர்களை பிர்மாவின் தோள்களிலிருந்தும், வைசியர் களை பிர்மாவின் தொடைகளிலிருந்தும், சூத்திரர்களைப் பிரம்மாவின் பாதங்களிலிருந்தும் படைத்தேன் என்று சொன்ன பிறகு, குணத்தின் அடிப்படையில் இவர்கள் பிரிக்கப்படுகிறார்கள் என்பது எங்கே இருக்கிறது?

படைக்கும் போதே பிர்மா தன் உடலின் பல உறுப்புகளிலிருந்து படைத்தார் என்று ஆகி விட்ட பிறகு இவர்கள் சாமர்த்தியமாகப் புளுகும் குணம் எங்கிருந்து குதித்தது?
இன்னொரு கேள்வியுண்டு. இன்றைக்குப் பிராமணர்கள் என்று பூணூல் அணிந்து திரிகிறார்களே இவர்கள் எல்லாம் குணத்தின் அடிப்படையில்தான் தேர்வு செய்து அறிவிக் கப்பட்டவர்களா? அப்படி தேர்வு செய்பவர்கள் யார்?

பார்ப்பன வீட்டில் பிறந்த ஒரே தகுதியில்தானே இன்றைக்கும் அவர்கள் பிராமணர்கள்?

குணத்தின் அடிப்படையில்தான் வருணம் பிரிக்கப் படுகிறது என்பதை மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியே மறுத்து விட்டாரே!

இந்து ஆன்மீக சேவைக் கணகாட்சி என்பது அசல் பார்ப்பனீய வளர்ப்பே! அதனைத் தூக்கி நிறுத்துவதே என்பதை அப்பாவிப் பார்ப்பன அல்லாதார் புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

பக்தி பெருக்கெடுத்து ஓடி ஆன்மிக வலையில் சிக்கும் பார்ப்பனர் அல்லாதார் ஒவ்வொரு வரும் அந்தக் கண்காட்சிப் பொறுப்பாளர்களிடம் கேட்க வேண்டிய ஒரே ஒரு கேள்வி - இதுதான் - இந்துக் கோயிலில் தாழ்த்தப்பட் டவர் உட்பட -அர்ச்சகராக உரிமை உண்டா என்ற கேள் வியைக் கேட்டுப் பாருங்கள் - உண்மை அப்பொழுது தெரிந்து விடுமே!

Read more: http://viduthalai.in/page-2/95992.html#ixzz3RRhBEgbF

தமிழ் ஓவியா said...

உடன் பிறப்பு பெருங்கவிக்கோ நீடுவாழ்ந்து தமிழ்த் தொண்டு புரிக!

தமிழ் மொழி, இன உணர் வின் நடமாடும் உருவம் ஒருவர் உண்டு என்றால், அவர் நமது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும், பாசத்திற் கும் உரிய அருமைச் சகோதரர் மானமிகு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் ஆவார்கள்.

உலகம் முழுவதும் சுற்றிச் சுற்றி தமிழ் அமைப்புகள் நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம், கவியரங்கம், மாநாடுகளில் சீரிளமைத் திறத்தோடு சிறப்பாகக் கலந்துகொண்டு, தமிழர் திராவிடர் தம் பெருமையைப் பரப்பிடும் தொண்டறச் செம்மல் அவர்.

அவர் தமிழர் தம் உரிமைக்காக திராவிடர் இன உணர்வுக்காக பல்வேறு போராட்டங்களிலும், நடை பயணங்களிலும் தவறாது கலந்துகொண்ட வீர வரலாற்றுக்குரியவர்! எவரிடத்திலும் இருகரம் கூப்பி, அன்பு ஒழுக, பண்பு மிளிர உரையாடும் அருமை (சகோதரர்) உடன்பிறப்பு அவர்!

அவருக்கு அகவை 80 முத்து விழா என்பது மிகவும் பெருமைப்படும் நிகழ்வு ஆகும்.

அவர் மட்டுமல்ல, அவரது குடும்பமே திராவிடர் இயக்கக் கொள்கை உணர்வாளர்களின் சங்கமம் ஆகும்.

அவர் நலத்துடன் மேலும் பல்லாண்டு வாழ்ந்து தமிழ்கூறும் நல்லுலகத் தொண்டைத் தொடர வாழ்த்துகிறோம் - நெஞ்சார!

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/95972.html#ixzz3RRj4A4k4

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மனக் குழப்பம்

கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலை வில் உள்ள ஊர் திரு விடை மருதூர் இங்குள்ள மகாலிங்க சுவாமி கோவில் 20 ஏக்கர் பரப் பளவில் 4 கோபுரங் களைக் கொண்டது. இங்குள்ள நந்தி, தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியை விடப் பெரியது. இங்குள்ள மூகாம்பாள் சன்னதி வடநாட்டுப் பாணியில் இருப்பது தனிச் சிறப்பு.

இங்கு பட்டினத்தார் நீண்ட நாட்கள் தங்கி சிவனை வழிபட்டதால் அவருடைய சிலை இக்கோவிலில் உள்ளது. மனக் குழப்பம், மனநிலை பாதிப்பு உள்ளவர்கள் அசுவமேத பிரகாரத்தில் தங்கி நிவர்த்தி பெறலாமாம்.

இப்படி ஒவ்வொரு கோயிலுக்கும் மகிமை எழுதி வைத்தவர்கள் யார்? தங்கள் கோயி லுக்கு இப்படி ஓர் அற்புத சக்தியிருக்கிறது என்று பிரச்சாரம் செய்தால்தான் கோயில் வியாபாரம் ஜோராக நடக்கும்.

ஒரு கேள்வி: மகா லிங்க சுவாமி இருக்கும் அந்தத் திருவிடை மரு தூரில் மன நோயாளிகள், மனநலம் பாதிக்கப்பட்ட வர்கள் யாரும் இல்லையா? அல்லது மனநல மருத்துவர்கள்தான் இல் லையா?

Read more: http://viduthalai.in/page1/95964.html#ixzz3RRjCn7am

தமிழ் ஓவியா said...

வேலை வாய்ப்பு அலுவலகம் தேவையில்லையா?


வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.விமல்ராஜ், ஜி.ஜோசப் தாமஸ் ரிச்சர்டு, வி.முருகையா உள்பட அய்ந்து பேர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நாங்கள் 2006-2008-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தோம்.

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் வேலை வாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகிறது. இதற்கு, அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) வழிவகை செய் கிறது. இந்த விதியால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.

இந்த விதி அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இந்த விதியை ரத்து செய்ய வேண்டும், செல்லாதது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரினர்.
இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் அய்ந்து பேரும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்த குமார், பி.ஆர்.சிவகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உயர்நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு வழக்கில், வேலை வாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பதிவு மூப்புப் பட்டியல் பெறுவது மட்டுமில்லாமல், இரண்டு பத்திரிகைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும். அதில், ஒன்று, அதிகம் படிக்கக் கூடிய வட்டார மொழி பத்திரிகையாக இருக்க வேண்டும்.

அவ்வாறு விளம்பரம் செய்து, அதன் மூலம் வரும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்தும் பணி நியமனம் செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு உத்தர விட்டது.

எனவே, இந்த விதியை செல்லாது என அறிவிக் கிறோம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். இது ஒரு நியாயமானதாகக் கருதப்பட முடியாது.

இந்தத் தீர்ப்பின் படி பார்த்தால் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கே வேலையில்லை என்றாகி விடுகிறதா இல்லையா?

மாநில அரசுப் பணியாளர்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படாத பணிகள் இந்த வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமே மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு வந்தது.

ஆசிரியர்களுக்கான பணி நியமனமும் அவ்வாறே நீண்ட காலமாக நடந்து வந்தது கல்வி மாநிலப் பட்டியலி லிருந்து பொதுப் பட்டியலுக்கு நெருக்கடிக்காலம் என்ற காரிருள் காலத்தில் களவாடிச் சென்றதிலிருந்து மாநில அரசுகளின் உரிமை ஒவ்வொன்றாகப் பறி போக ஆரம்பித்தன.

மத்திய அரசின் தலையீட்டால் (NCTE) தொடக்கப் பள்ளிக்கான ஆசிரியர்களின் தேர்வுக்கூட நுழைவுத் தேர்வின் மூலம் நடைபெறத் தொடங்கி விட்டது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பத்தாண்டு, பதினைந்து ஆண்டு காலம் காத்திருக்கும் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் எல்லாம் கை பிசைந்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டு விட்டது.

கல்வி, வேலை வாய்ப்புகளில் எந்தக் குளறுபடி களையாவது செய்து, இப்பொழுது இருந்துவரும் சமூக நீதியின் கழுத்தை நெரிப்பதில்தான் கவனமாகவும், குறியாகவும் இருக்கின்றன - ஆதிக்க சக்திகள்.

உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு செய்யும் முறையை நிலை நிறுத்துமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page1/95948.html#ixzz3RRjogZ9O

தமிழ் ஓவியா said...

தானே வீழ்ந்துவிடும்!


பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமும் ஆகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.
(விடுதலை, 20.11.1964)

Read more: http://viduthalai.in/page1/95945.html#ixzz3RRjzfWwY

தமிழ் ஓவியா said...

சட்டக் கல்லூரி மாணவர்கள் பிரச்சினை:
அரசு மறுபரிசீலனை செய்க!

தமிழர் தலைவர் அறிக்கை

இப்பொழுது அம்பேத்கர் பெயரில் உள்ள சென்னை சட்டக் கல்லூரி கட்டடம் - ஒரு நூற்றாண்டுக்கு மேற் பட்ட பழைமையான வரலாற்றுப் பெருமைமிகுந்த ஒன்றாகும்.

தேவையின்றி அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதை, மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பது நியாயமானதேயாகும்.

உயர்நீதிமன்றம் அருகில் இருப்பதே உகந்தது

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மிக அருகிலேயே அத்தகைய அம்பேத்கர் பெயரில் உள்ள சட்டக் கல்லூரி அமைக்கப்பட்டதின் நோக்கமே (பிரிட்டிஷ் அரசு காலத்தில்) சட்டம் படிக்கும் மாணவர்கள், சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளையும் பார்த்து, கேட்டு அனுபவம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்த அது உதவ வேண்டும் என்பதாகும்.

இதனைப்பற்றி சிறிதும் கவலைப்படாது, தீர்க்க வேண்டிய மக்கள் நலப் பிரச்சினைகள் ஏராளம் இருக்கும் நிலையில், தேவையின்றி, இந்த மாற்றம் தேவைதானா?

பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டாமா?

அதுவும் மாணவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இதனைச் செயல்படுத்த தமிழக அரசு ஏன் தேவையற்ற பிடிவாதம் காட்டவேண்டும்?

சட்டக் கல்லூரி மாணவர்கள் இதை எதிர்க்கிறார்கள்; மாற்றம் கூடாது என்று அறவழியில் அறப்போர் நடத்துகிறார்கள் என்றால், உடனடியாக சட்ட அமைச்சர் பொறுப்பில் உள்ளவரோ, தலைமைச் செயலாளரோ அல்லது சட்டத் துறை செயலாளரோ, முதலமைச்சரோ அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான குறைகளைக் கேட்டு, இடம் மாற்றத்திற்கான காரணம், அவசியம் என்னென்னவென்று விளக்கிடுவதுதானே ஜனநாயக முறை - குடியாட்சி முறை!
அதை விடுத்து, மாணவர்கள்மீது காவல்துறை தடியடி நடத்திடுவது, இரத்தம் சிந்த வைப்பது எவ்வகையிலும் நியாயமும் அல்ல; மனிதாபிமானமும் அல்ல!

இது பெரும் மாணவர் கிளர்ச்சியாக நாடு தழுவிய அளவில் மாறிவிடும்; விரும்பத்தகாத நிலையை தமிழக அரசே, தேடிக்கொள்வது எவ்வகையிலும் புத்திசாலித் தனமல்ல!

மறுபரிசீலனை செய்க!

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது பழமொழி; இப்பொழுது ஆண்டிக்குப் பதிலாக அரசே ஊதிக் கெடுக்கலாமா?

உடனடியாக மாணவப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி முடிவு செய்க. மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்து கைவிடுக!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

9.2.2015

Read more: http://viduthalai.in/page1/95901.html#ixzz3RRklzbuR

தமிழ் ஓவியா said...

மலேசிய - கோலாலம்பூரில் 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

வற்றாத ஆராய்ச்சி நீர் ஊற்றாக ஓடிக் கொண்டிருந்தது!

கணினித் தமிழுக்குத் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் உதவியது!

கால மாற்றத்திற்கேற்ப புதிய யுக்திகள் - தொழில் நுட்பங்கள் தமிழுக்குத் தேவை

தமிழர் தலைவர் படப்பிடிப்பு

மலேசிய - கோலாலம்பூரில் 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகோலாலம்பூர் பிப்.9- கோலாலம்பூரில் நடை பெற்ற 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்டு ஆய்வுரை வழங்கினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். அது குறித்து அவர் விளக்கியுள்ளதைக் கீழே காண்க.

கடந்த (2015) ஜனவரி 29,30,31 பிப்ரவரி 1ஆம் நாள் ஆகிய நாட்களில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (9th International Conference - Seminar on Tamil Studies) பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி அமைப்பான (International Association for Tamil Research (IATR) சார்பில், மிகச் சிறப்பாக சுமார் இரண்டாயிரம் பேராளர்களுக்கு மேல், உலகின் 20 நாடுகளிலிருந்தும் வந்து கலந்து கொண்டது குறிப்பிடத் தகுந்தது.

1995க்குப் பிறகு...

எட்டாவது மாநாடு தமிழ்நாட்டில் 1995ல் நடந்த பிறகு மாபெரும் இடைவெளி ஏற்பட்டது.

(தி.மு.க.ஆட்சிக் காலத்தில் மாண்பமை முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடத்த அக்குழுவினர் என்ன காரணத்தாலோ, அனுமதிக்காததின் விளைவாக, கோவையில் பெருஞ் சிறப்புடன் தமிழக அரசால் கலைஞர் பொறுப்பேற்று நடந்த அம்மாநாடு செம்மொழி தமிழ் மாநாடாகவே நடைபெற்றது).
20 ஆண்டு இடைவெளிக்குப் பின் முற்றிலும் மாறிய உலகச் சூழலில், இந்த 9ஆவது மாநாடு கோலாலம்பூரில், மலேசிய அரசின் ஆதரவோடு; மலேசியப் பல்கலைக் கழகமும் இந்த அமைப்புடன் இணைந்து நடத்தப்படுவதற்கு மலேசிய அமைச்சர் தகுதியில் உள்ள இந்தியா மற்றும் தெற்கு ஆசியா கூட்டமைப்புத் துறை ஏற்பாட்டு ஆற்றலாளர் மாண்பமை டத்தோசிறீ, உத்தாமா சா. சாமிவேலு அவர்களது வற்றாத ஆர்வமும், வழிநடத்தும் திறமையுமே காரணமாகும். மலேசிய தலைமை அமைச்சர், மாண்புக்குரிய டத்தோ சிறீ மகம்மது நஜீப் பின்துன் இராசக் அவர்கள் இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உலக மாநாட்டைத் துவக்கி வைக்க இசைவு தந்ததோடு, வருகை புரிந்து, மிக அருமையாக உரையையும் நிகழ்த்தினார்.

உலகப் பொது நூல் திருக்குறள்

திருக்குறள் ஒரு உலகப் பொது நூல் என்று பறைசாற்றியதோடு, தமிழின் தொன்மை, வளம் பற்றிக் கூறியதோடு, மலேசிய அரசாங்கம் நாடெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ்ப் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க வேண்டுமென்பதற்காகவே 540க்கு மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளை மலேசிய அரசே நடத்தி வருகிறது. தமிழ் மொழிப் பாதுகாப்பிலும், தமிழர்களின் நலத்திலும் அக்கறை செலுத்தும் அரசாக மலேசிய அரசு இருக்கும் என்றும், டத்தோ சிறீ மாநாட்டுத் தலைவர் சாமிவேலு அவர்களின் ஆற்றல், தொண்டு பற்றியும், தமிழர்கள் ஒற்றுமையின் அவசியத்தைக் குறித்தும் மிகவும் நகைச்சுவை கலந்த ஒரு சிறப்புரையாற்றி, ஒரு மில்லியன் மலேசிய வெள்ளிகளை (10 லட்சம்) அரசின் சார்பாக மாநாட்டிற்கு நன்கொடை அறிவித்து, பலத்த கைத்தட்டலைப் பெற்றார்.

மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய டத்தோ சிறீ சாமிவேலு அவர்கள், பிரதமருக்கும், வந்துள்ள தமிழ் அறியா மற்ற இனத்துப் பெரு மக்களுக்கும் புரியும் வண்ணம் பேசினார். தமிழின் சிறப்பு, இத்தகைய மாநாட்டை மலேசிய அரசின் உதவியுடன் நடத்துவது இது மூன்றாவது முறை என்பது பெருமைக்குரியது என்றார்.

டான்மிறி பேராசிரியர் டாக்டர் மாரிமுத்து வரவேற்புரை ஆற்றினார்.

(முதல் மாநாடு, ஆறாவது மாநாடு இந்த ஒன்பதாவது மாநாடு - மலேசியத் தலைநகரில் மூன்றாவது தடவையாக இப்பொழுது நடத்தப்படுகிறது) தமிழ்நாட்டில் மூன்று முறை (1968, 1981, 1995) நடத்தப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில்

இருபது ஆண்டு இடைவெளி இந்த மாநாட்டின் மூலம் மூடி நிரப்பப்பட்டு, தமிழ் கூறும் நல்லுலகம் ஒன்றுபட்ட கருத்துப் பரிமாற்றத்தை உலக வளர்ச்சிக்கேற்ற, தமிழ்மொழி நவீனத்துவம் அடைவதில் அக்கறை செலுத்த வேண்டுமென்று விரும்பி - தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிடையே கலந்து கலந்து பேசி, மகிழ்வித்தார்.

தனித்தனி அமர்வுகள், ஆய்வரங்கங்கள் ஆங்காங்கே மூன்று நான்கு நாள்களும் நடைபெற்றன.

இந்த நான்கு நாள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட என்னால், ஜனவரி 30, 31, பிப்.1 ஆகிய நாள்களில் மட்டுமே கலந்து கொள்ளும் வாய்ப்பு - எனது சுற்றுப் பயணத் திட்டம் காரணமாகக் கிட்டிற்று.

தமிழ் ஓவியா said...

உலகளாவிய அளவில் தமிழும் தமிழரும்

சில அமர்வுகளுக்குச் சென்று கலந்து கொண்ட பிறகு 31ஆம் தேதி மாலை 6 மணிக்கு பொது அரங்கத்தில் டத்தோ சிறீ சாமிவேலு அவர்கள் தலைமையேற்க, பேராசிரியர் முனைவர் குமரன் வரவேற்க, மோகன்தாஸ் இராமசாமி அவர்கள் நன்றி கூறிட, நான் மாநாட்டின் வரவேற்பு குழுவினர் தந்த தலைப்பாகிய உலகளாவிய நிலையில் தமிழும் தமிழரும் என்ற தலைப்பில் சுமார் 60 மணித் துளிகள் (1 மணி நேரம்) உரையாற்றினேன்.

தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தமும் - கணினித் தமிழும் அறிவார்ந்த அந்த அரங்கத்தில் பெரியார் வாழ் நாள் மாணவனாகிய நான் அவரது கருத்துக்களைத்தான் எடுத்துரைக்க, ஒரு சமுதாயத் தொண்டனாக நான் வந்து உரையாற்றுகிறேன் என்று தொடக்கத்துடன், கூறி பல்வேறு கருத்துக்களை தமிழின் பழம் பெருமை என்பது முக்கியமில்லை; கால மாற்றத்துக்கு ஏற்ப கருத்து மாற்றமும் - அதற்கு வழி காண மொழி என்ற கருவியின் புதுமை நோக்கும், புதிய உத்திகளும் தேவை; தமிழ் மொழி இணையத்தில் கன்னித்தமிழ் இன்று கணனித் தமிழாக வளரும் நிலைக்கு தந்தை பெரியாரின் எழுத்துச் சிக்கனம் கை கொடுத்து உதவியது பற்றிக் கூறி, தமிழ் வழி - புத்தாண்டு பொங்கலை ஒட்டியது என்று மலேசியாவில் நடைபெற்ற மாநாட்டில் ஏற்கப்பட்டது - முதன் முதலில்! அதற்காகப் பாராட்டிப் பெருமையுடன் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

வேதங்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவையல்ல!

வேதங்களே வடமொழியான சமஸ்கிருதத்தில் முதலில் எழுதப்பட்டவை அல்ல; வேதத்தில் (ருக் வேதத்தில்) உள்ள பல சொற்கள் தமிழ்ச் சொற்கள் என்பதை தமிழ் ஆராய்ச்சி அறிஞர்கள் மட்டுமல்ல; இலங்கையின் ஈழத்துப் பெருமகனார் நவாலியூர் நடராசன் எழுதிய வடமொழி வரலாறு நூல் உட்படக் கூறுகிறது என்பதைக் கூறி தமிழை பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியது மிகவும் இன்றியமையாதது என்பது பற்றி விளக்கினேன்.

இந்தக் கருத்துக்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது -குறிப்பிடத்தக்கது!

தலைமை தாங்கிய டத்தோ சிறீ சாமிவேலு அவர்கள் தமது பொது வாழ்க்கையின் துவக்கம் திராவிடர் கழகத்திலிருந்து தான் என்றும், அவ்வியக்கம் ஒரு அருமையான எடுத்துக்காட்டான இயக்கமாகும்; இன்று தமிழ்நாட்டில் தனித்தன்மையோடு இயங்கி மக்களுக்குத் தொண்டறம் புரிந்து வருகிறது என்றும் எடுத்துக் கூறி, அருமையான உரையாற்றி முடிவுரை நிகழ்த்தினார் எனதுரை பார்வையாளர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றது; நேரிலும் பாராட்டினர், முகநூலிலும் பாராட்டுகளை அறிய முடிந்தது.

பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் ஆண் ஆதிக்கம்

31ஆம் தேதி பிற்பகல் 5 மணியளவில் மன்னை அம்பிகாபதி அவர்கள் தலைமை தாங்கிய ஒரு அமர்வு; பாரதியார் பற்றிய கருத்தரங்க அமர்வில் பார்வையாளராக டத்தோ சிறி, நாமும் கலந்துகொண்டு அமர்ந்து கேட்டோம். தமிழ் மாணவி மலேசியாவைச் சார்ந்த சுங்கைப் பட்டாணியைச் சேர்ந்தவர்) புதுமைக் கோணத்தில் ஆண் ஆதிக்கம் பாஞ்சாலி சபதப் பாடலில் இருந்ததுபற்றி கட்டுரை வாசித்தார்; இது ஒரு புதுமை நோக்கு.

மறுநாள் காலை 11 மணி அளவில் சிங்கப்பூர் பேராளர்கள், டாக்டர் சுப. திண்ணப்பன் தலைமையில் ஒரு ஆய்வரங்கத்தில் பார்வையாளராக இருந்து கேட்டேன்.

புதுவையில் 1846இல் எளிய நடைக் கவிதை மூலம் அறநூல் அறிவுரைக் கவிதை வழங்கிய சிங்கப்பூர் இலக்கிய முன்னோடி நாராயண நாயகர்பற்றிய ஆய்வுக் கட்டுரை, சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக் கழக (ஷிமிவி) வரலாற்றுப் பேராசிரியர் சண்முகம் சிங்கப்பூர் நாட்டின் பூர்வ கட்டுமானம், இந்தியாவின் கைதிகள் அரசியல் கைதிகளைக் கொணர்ந்து கட்டப்பட்ட வரலாற்றையும் பற்றி மற்றொரு ஆய்வு சிறப்பாக தரப்பட்டது. பின் என்னைப் பரிசளிக்க அழைத்தனர் - சிறு பாராட்டுரையுடன் பரிசுகளை வழங்கினேன்.

பல்வேறு நாடுகளிலும் பகுதிகளிலிருந்து வந்திருந்தவர் களின் ஒருங்கிணைந்த சந்திப்பு - கலந்து உறவாடலுக்கு அதிக வாய்ப்பில்லாதது ஒரு வருத்தமே!

தமிழ் ஓவியா said...

பல நாடுகளிலிருந்தும் பேராளர்கள்

என்றாலும் ஓரளவு இயன்றது; தமிழ்நாட்டிலிருந்து சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் தாண்டன், பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் வி.எம். முத்துக்குமார், தமிழ்த் துறை செயலாளர் டாக்டர் இராஜராமன் அய்.ஏ.எஸ்., சட்டமன்ற உறுப்பினர் வைகைச் செல்வன், கோவை கவிதாசன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக பதிவாளர் பேராசிரியர் கணேஷ்ராம் தலைமைப் பேராசிரியர்கள், டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை அறிவியல் மகளிர் கல்லூரி (சென்னை அடையாறு) தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியை அபிதா சபாபதி, சட்டக் கதிர் ஆசிரியர் சம்பத், டாக்டர் விஜி. சந்தோஷம் போன்ற பலரும் கலந்து கொண்டனர். என்னுடன் பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள் வந்திருந்தார்.

இறுதிநாளில் நிறைவு நிகழ்ச்சிகள் மொரிஷியஸ் ஆறுமுகம் பரசுராமன் போன்றவர்கள் பேசினர். சென்னை பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் குறும் உரைகளை நிகழ்த்தினர்.

பேராசிரியர் டான்சிறீ மாரிமுத்து, முனைவர் கந்தசாமி, முனைவர் இராமசாமி ஆகியோர் உரையாற்றினர்.

தமிழ் வளர்ச்சிக்கு மலேசிய அரசின் உதவிகள்

டத்தோ சிறீ சாமிவேலு அவர்கள் மலேசிய துணைப் பிரதமர் சார்பில் இரண்டாம் கல்வி அமைச்சர் திரு. யூசுப் அவர்களும், கமலநாதன் அவர்களும் கலந்து கொண்டனர். மாநாட்டில் உலக தமிழர்களின் பங்கேற்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் மலேசிய அரசு பாதுகாப்பாக இருந்து வளர்ச்சி அடையச் செய்வது உறுதி என்றும் கூறி தமிழ் வளர்ச்சிக்கு மலேசிய அரசு செய்தவற்றை பட்டியலிட்டார்.

மலேசியப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் மலாய்கார அம்மையார் ஒருவரும் பங்கேற்றார்.

தேநீர் விருந்து

அதன்பின் முக்கிய விருந்தினர் களுக்கு தேனீர் விருந்து அளிக்கப்பட்டது. அங்கே முக்கிய மேசையில் தேநீர் அருந்த என்னையும் அமைச்சர் திரு பரசுராமன் அருகே அமர வைத்து சிறிது நேரம் உரையாடியபின் விடை பெற்றனர். மாநாடு வரலாறு படைத்தது என்றாலும் இவ்வளவு பெரிய மாநாட்டில் சிற்சில குறைகள் இருந்தன என்பது பொருட் படுத்தக் கூடாதவை.

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை நினைவூட்டிக் கொண்டு, அடுத்த மாநாடு 2017இல் சிகாகோவில் நடத்த அவர்கள் விடுத்த வேண்டு கோளை - அழைப்பை டாக்டர் மாரிமுத்து அறிவித்தது மகிழ்ச்சிக்குரியதாகும்.

தமிழ் மாநாட்டு ஆய்வுகள் ஒரு வற்றாத (ஜீவ) நதியாக ஓடிக் கொண் டிருந்தன.

நமது பாராட்டு

இதனை சிறப்பாக நடத்திட உழைத்த ஆசிரியர்கள் - தோழர்கள், தமிழன்பர்கள் தொண்டறம் மிகவும் நன்றியோடு பாராட்டத் தகுந்தது!

முழுக் குவளை நீர் இல்லையே என்று வருந்துவதைவிட, தாகத்தால் தவித்தவர் களுக்கு அந்நேரத்தில் முக்கால் குவளை நீர் கிடைத்தது - மகிழ்ச்சிக்குரியதே!
கால் குவளை குறையை எண்ணி வருந்தி, நம் மகிழ்ச்சியைத் தொலைப்பது கூடாது!

உதவிய மலேசிய அரசு, மலேயா பல்கலைக் கழகம், தமிழ் அமைப்பினர் குறிப்பாக டத்தோ சிறீ சாமிவேலு, டான்சிறீ மாரிமுத்து, பதிவாளர் புண்ணிய மூர்த்தி, பேராசிரியர்கள் கந்தசாமி, குமரன், மோகன்தாஸ் இராமசாமி போன்ற அனைவருக்கும் நமது பாராட்டுகள்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/95899.html#ixzz3RRl0SPXm

தமிழ் ஓவியா said...

ஓசூர் வி.எச்.பி. மாநாடு


விசுவ இந்து பரிஷத்தின் 50ஆம் ஆண்டு விழா என்று கூறி இந்தியா முழுமையும் கொண்டாடி வருகிறார்கள். கருநாடக மாநிலத்தில் அவ்வமைப்பின் அகில உலக செயல் தலைவர் பிரவீன் தொகாடியா கருநாடக மாநிலத்தில் நுழையக் கூடாது என்று அம் மாநில அரசு தடை செய்து விட்டது. (ஆனாலும் சட்டத்தை மீறித் திருட்டுத்தனமாக தொகாடியாவின் பேச்சை ஒளிபரப்பியுள்ளார்கள் இதுதான் அவர்களின் ஒழுக்கம்!)

ஆனால், தமிழ்நாட்டில் விசுவ இந்து பரிஷத்தின் நடவடிக்கைகளுக்குத் தங்கு தடையில்லை; தமிழ்நாடு அரசு அவர்களுக்குப் பச்சைக் கொடி காட்டி வருகிறது.

இது ஒன்றும் புதிதல்ல; அப்பொழுது அம்மையார் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி நடைபெற்றபோதும் திருச்சிராப்பள்ளியில் இவர்களின் மாநாடு நடைபெற்ற துண்டு (8,9.2.2003) அந்த மாநாட்டின் யோக்கியதை என்ன என்பதை நாம் கூறுவதைவிட அவாள் ஏடான கல்கியே எழுதியிருந்தது.

மாநாட்டு மேடையில் வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் மற்றும் அதன் செயலாளர் பிரவீன் தொகாடியா ஆகியோருக்குத் தங்கத் திரிசூலங்கள் பரிசளிக்கப்பட்டன.

அந்தத் திரிசூலங்களின் மும்முனைகளும் முறையே மதம் மாற்றும் கிறிஸ்தவர்களையும், பயங்கரவாத முஸ்லீம்களையும் மதச் சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளையும் அழிப்பதற்காக ஏற்பட்டுள்ளன என அந்த மேடையிலேயே அளிக்கப்பட்ட விளக்கம்தான் தொண்டு என்ப தற்கு இவர்கள் காட்டும் இலக்கணமா?

பிப்ரவரி 22ஆம் தேதிக்குள் ராமஜென்ம பூமியை வி.எச்.பி. வசம் தரா விட்டால் இந்தி யாவில் அத்தனை மசூதிகளும் குறி வைத்துத் தகர்க்கப்படும் என தொகாடியா பேசியதுதான் தற்காப்புக்கு வழிகாட்டலா?

மதச் சார்பின்மை பேசுகிற ஹிந்துக்களும், ஹிந்து தலைவர்களும் சுயமரியாதையற்றவர்கள் என்று அசோக் சிங்கால் முழங்கியதுதான் பண்பாடா?
இந்தியப் பண்பாட்டின் மிக முக்கிய அம்ச மான சகோதரத்துவத்தை குழி தோண்டிப் புதைப் பதுடன், ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் தவறான வழி முறை சார்ந்த பாதைக்குத் தூண்டி யிருக்கிறது இம்மாநாடு. ஹிந்து பயங்கரவாதம் என்ற புதிய பிசாசைக் கட்டவிழ்த்து விட்டு தேசிய ஒருமைப்பாட்டை அச்சுறுத்துகிறது. நமது அரசியல் சாசனம் உறுதி செய்கிற மதச் சார்பின்மையை நிராகரிப்பதன் மூலம் தேசத் துரோகமே இழைத்திருக்கிறது இம்மாநாடு.

மக்கள் மனங்களில் பிரிவினையும், குரோதமும் விதைக்கிற சிந்தனைகள் வெளிப்படுகிற மேடை களை மடாதிபதிகளும், பீடாதிபதிகளும் பகிர்ந்து கொண்டு தங்கள் பீடங்களின் உயர்வுக்கு இழுக்குச் செய்திருக்கிறார்கள் (கல்கி 23.2.2003)

மாநாட்டில் பீடாதிபதிகளும் கலந்து கொண்டனர் என்று குறை கூறி இருக்கிறதே கல்கி - அந்த மடாதி பதிகள் வேறு யார்? காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந் திர சரசுவதியும், விஜேயேந்திர சரஸ்வதியும்தான்.

கல்கி இதழே விஎச்பியையும், அதன் நடவடிக் கைகளையும் இப்படி விமர்சித்ததற்குப் பிறகு வேறு யார்தான் சீர்பிரித்து வாய்ப்பாடு கூற முடியும்?

இதில் மிகப் பெரிய கொடுமை என்ன தெரியுமா? அதனையும் அதே கல்கி இதழில் குறிப்பிடப்பட் டுள்ளது.

தமிழ் ஓவியா said...

இதனை பயங்கர பேச்சும், வன்முறையைத் தூண் டும் வாசகங்களும் பேசப்படுவதை எந்த ஒரு அரசியல் தலைவரும் கண்டிக்க முன் வரவில்லை; அரசோ, காவல்துறையோ இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கல்கி எழுதியதே.

(திராவிடர் மாணவர் கழக மாநில மாநாட்டை அதற்குப் பதிலாகப் பேரணியுடன் நடத்திக் காட்டியது திராவிடர் கழகம் (2.3.2003).

அன்றைக்கு அதிமுக ஆட்சியில்தான் அவர்கள் மாநாடு நடத்தினார்கள். இப்பொழுதும் அதிமுக ஆட்சியில்தான் ஒசூரில் மாநாட்டை நடத்தியுள்ளனர் (7.2.2015).

திருச்சியில் அன்று என்ன பேசினார்களோ, அதே பாணியில்தான் ஒசூரிலும் அனல் கக்கியுள்ளனர்.

அன்று காஞ்சி சங்கராச்சாரியார்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர் என்றால் இப்பொழுது ஒசூர் மாநாட்டில் கருநாடக மாநிலம் ராஜாபுரா மடாதிபதி ராஜேஸ்வர சிவாச்சாரிய சுவாமிகள், ஒசூர் தாத்தையா ஆசிரம வெங்கடேஸ்வர சுவாமிகள், உஜ்ஜயினி மடாதிபதி சித்தலிங்க சிவாச்சாரியார் ஆகியோர் பங்கு கொண்டுள்ளனர்.

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் ஓசூர் மாநாட்டின் முக்கிய குறிக்கோளாக அமைந்திருந்தது. அன்றும் சரி; இன்றும் சரி; வன்முறை வெறியைத் தூண்டும் வகையில் விசுவ ஹிந்து பரிசத் மாநாட்டில் பேசப்பட்ட பேச்சின்மீது எந்தவித நடவடிக் கையை யும் அ.இ.அ.தி.மு.க. அரசு மேற்கொள்ள வில்லை.

இவ்வளவுக்கும் ஒசூர் மாநாட்டில் அதிமுகவைப் பற்றி குறைகூறிதான் வி.எச்.பி.யின் தலைவர் தொகாடியா பேசியுள்ளார்.

அ.தி.மு.க., தி.மு.க. காங்கிரஸ் போன்ற கட்சிகள் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவ தில்லை என்று பேசியுள்ளாரே!

ஆனாலும், அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. காரணம் இந்த ஆட்சியே கிட்டத்தட்ட ஆன்மிகத் தன்மை கொண்டதுதானே! இந்த நிலையில் வேறு எம்மாதிரி நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?

ஆனாலும், ஒட்டு மொத்தமாக அவற்றையும் மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் பணியை வேகமாகத் தான் திராவிடர் கழகம் - மேற் கொண்டு வருகிறது என்பது தமிழ் நாட்டுக்கு மிகப் பெரிய நிம்மதியே!

Read more: http://viduthalai.in/page1/95904.html#ixzz3RRlMJFXs

தமிழ் ஓவியா said...

தமிழருக்குக் கேடு


இந்நாட்டில் அரசியல் கிளர்ச்சி என்னும் பேரால் நூறு ஆண்டுகளாக நடந்து வந் திருப்பதன் உள் தத்துவமே பார்ப்பனனின் உத்தியோகம், பதவி, ஆதிக்கம் இவற்றுக் காகவே தவிர, அரசியல் நீதியையோ, மனிதத் தர்மத்தையோ அடிப்படையாகக் கொண்டவை அல்ல. பார்ப்பனர் ஆதிக்கம் கிடைத்த போதெல்லாம் தமிழர்க்குக் கேடாகவே நடந்துள்ளனர். - (விடுதலை, 5.4.1965)

Read more: http://viduthalai.in/page1/95902.html#ixzz3RRlWbu3X

தமிழ் ஓவியா said...

வயிற்றுக் கொழுப்பை குறைக்கலாம்!

இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை பெரும் பாலோர் வயிற்றுக் கொழுப்பால் அவதிப்படு கின்றனர். வயிற்றுக் கொழுப்பை குறைக்க எளிய வழிகள் உள்ளது. அதை கடைப்பிடித்தால் பெருத்த வயிறு, தட்டையான வயிறாக மாறும். வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் வழிமுறைகள் வருமாறு:

துரித உணவுகளை தவிர்த்தல்

சரியான முறையில் சாப்பிட்டால் 80 சதவீத கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்க்கவேண்டும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை உண்ணலாம்.

தண்ணீர்

தாகம், அயர்ச்சி ஏற்படும் நேரங்களில் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக பலர் உணவு உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தேவையற்ற கொழுப்பு படியும். எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ளவேண்டும். குறைந்தது 6 முதல் 8 குவளை தண்ணீராவது குடிக்கவேண்டும்.

உடற்பயிற்சி

பல மணிநேர உழைப்பு மற்றும் வெகு தூர ஒட்டப்பயிற்சி ஆகிய இரண்டும், தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும்போது கொழுப்பு அதிகமாக குறையும்.

சர்க்கரை வேண்டாம்: நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில் சர்க்கரையை குறைப்பது நல்லது. இதற்குப் பதிலாக தேன், பனங்கற்கண்டு பயன்படுத்தலாம்.

சோடியம் கலந்த உப்பு தவிர்த்தல்: சோடியம் கலந்த உப்பை தவிர, பொட்டாசியம் கலந்த உப்பு, எலுமிச்சை உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன, இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

வைட்டமின் சி உணவுகள்: வயிற்றுக் கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாக கார்டிசால் உள்ளது. மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலை வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது.

உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கானிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. வைட்டமின் சி உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்.

தூக்கம்: போதுமான அளவு உறங்காமல் இருப்பது உடல் எடையை அதிகரிக்கும். உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியம். 6 முதல் 8 மணி நேரம்வரை உறக்கம் மேற்கொள்ளவேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/95914.html#ixzz3RRlza7LJ

தமிழ் ஓவியா said...

நோய் எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது?

எல்லையிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் ராணு வத்தினரைப்போல், ஒவ்வொருவரின் உடலுக் குள்ளும் ஒரு எதிர்ப்புச் சக்தி செயல்பட்டு நம் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இந்த நோய் எதிர்ப்புச் சக்தி பற்றி தொற்றுநோய் சிறப்பு மருத்துவரான ராமசுப்பிரமணியன் விளக்குகிறார்.

வெள்ளை அணுக்கள் எனும் போர் வீரர்கள்

நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத்தட்டுகள் ஆகியவை இருக்கின்றன. இதில் வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருபவை. அதனால், வெள்ளை அணுக்களுக்குப் போர் வீரர்கள் என்று இன்னொரு பெயரும் உண்டு.

இன்று சுற்றுப்புறச் சூழல் மாசடைந்து இருக்கும் நிலையில் தண்ணீர், காற்று, உணவு, சக மனிதர்களுடன் பழகுவது என்று எந்த வடிவிலும் நோயை உண்டாக்கும் கிருமிகள் நம் உடலுக்குள் ஊடுருவலாம். அந்தக் கிருமிகளை எதிர்த்துப் போராடி நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேலையை வெள்ளை அணுக்கள் செய்கின்றன.

இரண்டு வகை சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகையில் நமக்குக் கிடைக்கிறது. ஒன்று பிறவியிலேயே அமையும் சக்தி. மாசடைந்த காற்றைச் சுவாசிக்கும்போது, இயல்பாகவே உடல் அதை ஏற்றுக் கொள்ளாமல் நமக்கு மூச்சுத் திணறுகிறது. அந்த இடத்தைவிட்டு வெளியேறவேண்டும் என்று உடல் நம்மை நிர்ப்பந்திக்கிறது.

இதுபோல், தோல் பகுதி, வயிற்றுக்குள் இருக்கும் அமிலம் என இயற்கையான எதிர்ப்பு சக்திகள் பல இருக்கின்றன. இன்னொன்று அனுபவத்தின் அடிப்படையில் உடல் உருவாக்கிக் கொள்ளும் எதிர்ப்பு சக்தி. அதாவது, புதிதாக ஒரு நோய் ஏற்படும்போது அந்த நோயை எதிர்க்கும் சக்தி உடலுக்கு இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், பாதிக்கப்பட்ட பிறகு, அந்த நோய் பற்றி உடலில் இருக்கும் செல்கள் தெரிந்துகொள்ளும். இந்தக் காரணங்களால் நோய் ஏற்படுகிறது என்பதை நினைவு வைத்துக் கொண்டு அதற்குத் தகுந்தாற்போல், உடல் எச்சரிக்கையாகிவிடும்.

இதற்கு நினைவு செல்கள் என்று பெயர். இதனால்தான், ஒருவருக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டால் அதன்பிறகு அவரது வாழ்நாளில் சின்னம்மை நோய் மீண்டும் வருவதில்லை.

எதிர்ப்பு சக்தி குறையக் காரணம் என்ன..?

ஒரு சில பிறவிக் குறைபாடுகள் தவிர்த்து, பிறக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி எல்லோருக்கும் ஒரே அளவில்தான் இருக்கும். ஆனால், இந்தச் சக்தி நாளடைவில் பல காரணங்களால் குறையும். சரிவிகித உணவு சாப்பிடாததால் ஏற்படும் சத்துக்குறைபாடு, பரம்பரைக் குறைபாடுகளால் ஏற்படும் நோய், உடல்நலக் குறைவின் காரணமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றால் குறையும்.

தமிழ் ஓவியா said...


உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போதும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறையும். என்னதான் உடலின் ரத்த வகையை எல்லாம் பார்த்து உறுப்புகளை மாற்றினாலும், இது என்னுடைய சிறுநீரகம் இல்லை, இது என்னுடைய இதயம் இல்லை என்பது அந்த உடலுக்குத் தெரிந்துவிடும். அதன்பிறகு, அந்த உறுப்பு மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் சண்டையிட ஆரம்பிக்கும்.

இதற்காக சில மருந்துகளைக் கொடுப்பார்கள். இந்தக் காரணங்களாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எச்.அய்.வி. போன்ற பாலியல் நோய்களாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நம் அன்றாட வாழ்க்கை முறையை ஒழுங்குக்குள் கொண்டு வந்தாலே போதும். பெரிதாக ஒன்றும் தேவையில்லை.

சைவமா, அசைவமா என்பதெல்லாம் பிரச்சினையில்லை. என்ன உணவு சாப்பிட்டாலும் உடலுக்குத் தேவையான வைட்டமின், புரதம், கார்போஹைட்ரேட், தாதுக்கள் ஆகிய சத்துகள் சரிவிகிதத்தில் கிடைக்குமாறு உணவுமுறையைப் பின்பற்றினாலே போதும். இன்று உடல் உழைப்பு குறைந்த வேலைகளையே பலரும் விரும்புகிறோம்.

அதனால் எளிமையான உடற்பயிற்சி, அரைமணி நேரம் நடைப்பயிற்சி, விளையாட்டுகள் என்று ஏதாவது உடல் செயல்பாடுகள் அவசியம். 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் முக்கியம். இதனுடன் புகை, மது போன்ற தீய பழக்கங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிவேகத்தில் குறைப்பவை என்பதை சொல்லத் தேவையில்லை.

நோய் எதிர்ப்பு சக்திவேண்டும் என்பதற்காக வைட்டமின் மாத்திரைகளை சிலர் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இது எல்லோருக்கும் கை கொடுக்காது. சில உணவுகள் சாப்பிட முடியாத நிலையில் வேண்டுமானால் வைட்டமின் மாத்திரை களை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல், நமது ஊரில் பழங்கள் சாப்பிட்டாலே போதும் என்றும் நினைப்பார்கள். சரி விகித உணவு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

தடுப்பூசி நல்லது

தடுப்பூசி என்பதே குழந்தைகளுக்குத்தான் என்று பலரும் நினைக்கவேண்டாம். ஆனால், தடுப்பூசி என்பது எல்லா தரப்பினருக்கும் தேவை. உதாரணத்துக்கு, குழந்தையாக இருக்கும்போது 5 டெட்டன்னஸ் ஊசி போட்டிருப்பார்கள்.

ஆனால், டெட்டன்னஸ் தடுப்பூசி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டுக் கொள்ளவேண்டும். இந்த ஊசி போட் டிருந்தால், இடையில் விபத்தில் அடிபட்டால்கூட தடுப்பூசி தேவையில்லாமலே நம்மைக் காப்பாற்றிவிடும்.

கக்குவான், மஞ்சள்காமாலை என்று பல தடுப்பூசிகள் இருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்!

Read more: http://viduthalai.in/page1/95915.html#ixzz3RRmAQdIo

தமிழ் ஓவியா said...

குளிர்ச்சி தரும் கற்றாழை

கற்றாழை என்பது ஒரு சிறு கள்ளி வகையைச் சார்ந்தது கற்றாழை கொத்தாக வளரும் அடிப்பாகம் நாற்சதுரமாகவும் வளர, வளர நுனி சிறுத்தும் மூங்கில் போத்துப் போல வளரும், சாம்பல், சிவப்பு நிறம் கலந்து, பசுமையாக வளர்ந்திருக்கும். சுமார் இரண்டடி உயரம் வரை வளரும். வறட்சியைத் தாங்கும்.

நுனியிலும் பக்கங்களிலும் சிறிய பூக்கள் பூக்கும். இயற்கையான சிறு குன்றுகளில் ஒட்டுப் பாறைகளின் ஓரங்களில் அதிகம் காணப்படும். ஆதி வாசிகள் மலையில் நடக்கும்போது தண்ணீர் தாகம் ஏற்பட்டால் இதன் தண்டைச் சாப்பிடுவார்கள். இது கைப்பு, கார்ப்பு, புளிப்பு கலந்த ஒரு சுவை இருக்கும். இதன் இனப் பெருக்கம் வேர், பக்கக்கன்றுகள் அல்லது தண்டுகள் மூலம் நடைபெறும்.

கற்றாழை உமிழ் நீரைப் பெருக்கும், பசியைத் தூண்டும், குளிர்ச்சியை உண்டாக்கும். செரிமானத்தை விரைவு படுத்தும், உடலை உரம் பெற வைக்கும். குமட்டல் வாந்தியை நிறுத்தும், நாவின் சுவையுணர்வை ஒழுங்குப் படுத்தும், நீர் வேட்கையை அடக்கும்.

துவையல்: இதை சிறு துண்டுகளாக நறுக்கி நெய் விட்டு வதக்கி, உளுந்து, இஞ்சி, கொத்துமல்லி, மிளகு, சீரகம், புளி, வைத்துத் துவையலாக அரைத்து வாரம் ஒருமுறை உணவில் உட்கொள்ள மேற்கண்ட பயனைப் பெறலாம். வாந்தி, நீர் ஊறல் நிற்கும், உடல் வெப்பம் குறையும், உடல் நலம் பெறும்.

பித்த குன்மம், குடல் வாய்வுக்கு மருந்து செய்வோர் இதனைச் சேர்த்துச் செய்வார்கள். மேலை நாடுகளில் கற்றாழையின் தன்மையை ஆராய்ச்சி செய்து அது உடல் பருமனை குறைக்கும் மற்றும் சர்க்கரை நோயைக் குணமாக்கும் என்று கண்டுபிடித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். இது தற்போது தமிழ்நாட்டில் வியாபாரப் பயிராகச் செய்கிறார்கள்.

கற்றாழையின் மெல்லிய தண்டை நீரில் சுத்தம் செய்து மூன்று அங்குலத் தண்டுகள் இரண்டு நாள்கள் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதிகள் குணமாகும் என்பதை தற்போது அறிந்துள்ளார்கள்.

Read more: http://viduthalai.in/page1/95916.html#ixzz3RRmLdhdM

தமிழ் ஓவியா said...

ஆதி சங்கராச்சாரி அவதார ரகசியம்

ஆதி சங்கராச்சாரி ஏன் இவ்வுலகில் அவதரித்தார்! அவர் அவதாரித்தன் உள் ளோக்கம் என்ன? அந்த ரகசியத்தை, பரம சிவனே காதோடு காதாக தனது ஓய்ப் (மனைவி) பார்வதிதேவியிடம் கீழ்க்கண்ட வாறு கிசுகிசுக்கின்றார்! நாமும் ஒட்டுக் கேட்போம்.

கலியுகத்திலுண்டாகும் பக்தர்களுடைய சரித்திரத்தைச் சுருக்கமாகச் சொல்லுகின் றேன். பார்வதியே! கேட்பாயாக! முயற்சியுடன் மறைத்து வைத்துக் கொள்ளத்தக்கது; ஒருவர்க்குஞ் சொல்லத் தக்கது அன்று அம் பிகையே!

பாவ கர்மத்தில் இரமிப்பவர்களும், கருமங்கள் அனைத்திலும் பிரியமற்றவர்களும், வருணாசிரமக் கருமங்களில் பிறழ்ந்தவர்களும், தருமத்தில் மாறி ஒழுகுபவர்களுமான கலியில் மூழ்கிய அந்த சனங்களைப் பார்த்து ஆக்குரோசத்தினாற் கலியுகத்தில், எனது அம்சத்தாலுண்டாகுபவரும் தபோதனருமாகிய விப்பிரரை (பார்ப்பனரை)க் கேரள தேசத்தில் உண்டாக்கவேன். மகேசுவரியே! அவருடைய சரிதத்தையே சொல்வேன், கேட்பாயாக!

இக்கலியுகத்தில் இரண்டாயிரம் வருஷங்களுக்குப் பின்... சப்தார்த்த ஞான நிபுணர்கள், தர்க்கத்தில் கூரிய புத்தியுடைய சைனர்கள், அறிவுடைய புத்தர்கள் மீமாம்சையில் இரமிப்பவர்கள்; வேதபோதக வாக்கியங்களுக்குமாறு பாடாகப் பிரீதி உண்டாக்குபவர்கள்; பிரத்தியட்ச விவாதத்தில் குசலர்கள், மிசிரர்கள்;

பெரிய சாத்திரங்களால் அத்வைதத்தைக் கெடுப்பவர்கள்; கருமமே மேலானது, பலதாயகன் சிவன் அல்லன் என்னும் யுக்தி கருதிய வாக்கியங்கொண்டு போதிப்பவர்களாகிய இவர்களால், குரு ஆசாரங்கள் கெடுக்கப்பட்டு, அவ்வாறே ஜனங்களுக்கும் கர்மமும் பாரமாகி விடும்.

அப்போது அவர்களைக் கரையேற்றுதற் பொருட்டு ஈஸ்வர அம்சத்தை உண்டாக்குவேன். மகாதேவியே! கேரள தேசத்தில் சசலம் என்னும் கிராமத்தில் எனது அம்சமாகிய அந்தணமாதின் வயிற்றில் சங்கரர் என்னும் திருநாமமுடைய அந்தண சிரேஷ்டர் பிறப்பார்
(சங்கரதிக்கு விஜயகாவிய வசனம் நூல் பக்.2)
எப்படியிருக்குக் கதை?

Read more: http://viduthalai.in/page-1/95709.html#ixzz3RRneIIbj

தமிழ் ஓவியா said...

அங்கும் இங்கும்

அங்கு: அலாஸ்காவில் மெண்டென் ஹால் பனிப் பாறை மிகவும் புகழ் பெற்றது. இந்தப் பாறைப் பிளவுக்குள் 50 அடி ஆழம் கயிறு மூலம் சென்று இறங்கி விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்தார் மியரிக் சில இடங்களில் தண்ணீர் மேலே வந்து கொண்டிருந்தது.

இங்கு: 2 கிலோ தங்கக் கம்பியை எல்இடி பல்புகளில் மறைத்து (ஒவ் வொரு பல்புக்குள்ளும் மெல்லிய தங்கக் கம்பிகள் இருந்தன) அபிதாபியில் இருந்து சென்னைக்கு கடத்திய கேரள இளைஞர் கைது.

- எஸ். நல்லபெருமாள், வடசேரி

தமிழ் ஓவியா said...

அலர்ட்டா இருங்க அம்புட்டுதான் சொல்ல முடியும்

தலையில் மயிர் முளைக்க ஒரு கம்பெனி விளம்பரம் தர்றான். அது அமேசான் காட்டில் இருந்து யாருக்கும் கிடைக்காத மூலிகையை வச்சு தயாரிச் சுதுன்னு சொல்றான். எங்கேடா கிடைக் கும்னா, எனக்கு மிஸ்டு கால் கொடு, உடனே அனுப்புறேங்கறான்.
இங்கே இன்னொரு கம்பெனி விளம்பரம் குடுக்குது.

தெருவுக்கு தெரு தட்டி வச்சு விளம்பரம் தருது என்னடான்னு பார்த்தா, இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடு, உடனே எங்க கட்சிலே சேர்த்துக்கு வோம்ங்கிறான்.

முதல்ல சொல்ற கம்பெனிக்கு மிஸ்டு கால் கொடுத்தா, மயிர் முளைக்குதோ, இன்னும் கொட்டுதோ தெரியாது. கொடுத்த காசோடு போயிடும்.

ஆனா, இந்த இரண்டாவது சொன்ன கம்பெனிக்கு மிஸ்டு கால் கொடுத்தீங்க. நீங்க மட்டும் மிஸ் ஆக மாட்டீங்க. உங்க வம்சமே ஒன்னும் இல்லாம போயிடும். மானம் மரியாதை எல்லாம் போயி, ஒரு நூறு வருஷத்துக்கு முன்னாடி கொண்டு போய் நிறுத்திடும் இந்த கூட்டம்.
அலர்ட்டா இருங்க. அம்புட்டுதான் சொல்ல முடியும்.

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRoPZJgv

தமிழ் ஓவியா said...

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!

விவேகானந்தர் சிகாகோ செல்வ தற்கு பொருள் உதவி செய்தவரும் ,சிகாகோ மாநாடு முடித்து திரும்பிய விவேகானந்தருக்கு வரவேற்பு அளித்த வருமான ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி தான் 1897 மே 14 கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாடார்கள் நுழைந்து வழிபாடு செய்ததை கண்டித்து,

நாடார்கள் பிறப்பால் தாழ்ந்த சாதிகாரர்கள் ,அவர்களுக்கு கோவில் நுழைவு மறுக்கப்பட்டது , மீறி நுழைந்ததால் கோவில் தீட்டாகிவிட்டது எனவும், கோவிலை மத சடங்குகள் மூலம் தூய்மைபடுத்த நாடார்கள் ரூ.2500/ தர வேண்டும் என ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மதுரை சிவில் நீதிமன்றதில் வழக்கு தொடுத்தார் என்ற விவரம் தெரியுமா? உங்களுக்கு

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRodFFpZ

தமிழ் ஓவியா said...

என்ன நான் சொல்றது.. சரிதானே

பாஜகவின் அடியாள் சங்கங்களான வி.ஹெச்.பி. போன்ற கோஷ்டிகள், மதமாற்றத்தை செய்வதற்கு ஒரு பெயர் வைத்துள்ளார்கள். அதற்கு பெயர் கர் வாபஸ். அதாவது வீட்டுக்கு திரும்ப வேண்டும்.

மோடி தேர்தல் நேரத்தில் என்ன சொன்னார்? நம் நாட்டை ஏமாற்றி வெளி நாட்டில் பதுக்கி வைத்த பணத்தை மீட்டு வாபஸ் செய்து நம்ம கணக்கில் வைப்பேன் என சொன்னாரே, அதை முதல்ல செய்கய்யா.

எங்களுக்கு வேண்டாம் GHAR VAPASI கர் வாபஸ்
எங்களுக்கு வேண்டியது PAISA VAPASI பைசா வாபஸ்.
என்ன நான் சொல்றது.. சரிதானே.

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRojHYVD

தமிழ் ஓவியா said...

பிரார்த்தனை செய்து நோயைக் குணப்படுத்திக் கொள்ளட்டுமே?
செம பஞ்ச்:

கேள்வி: நாத்திகர்களுக்கு ஏன் மத பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்? கடவுள்கள் பற்றிய கருத்தில் நாத்திகர்களுக்கு அசவுகரியம் இருக்கும் நிலையில், கடவுள் பெயரால் உள்ள பண்டிகைகளை மட்டும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வது ஏன்?

பதில்: விஞ்ஞான முறையில் உரு வான மருத்துவ வசதிகளை ஆத்திகர்கள் பயன்படுத்த ஏன் அனுமதிக்க வேண் டும்? அவர்கள் பிரார்த்தனை செய்து நோயைக் குணப்படுத்திக் கொள் ளட்டுமே?

Read more: http://viduthalai.in/page-1/95710.html#ixzz3RRopUR1W

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் நான்கில் ஒருவர் தீண்டாமையை கடைப்பிடிக்கிறார்கள்

இந்தியாவிலிருந்து தீண்டாமை முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாக ஒரு பக்கம் கூறினாலும், மறுபக்கம் இன்னமும் நான்கில் ஒருவர் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

தலைநகர் டில்லியில் இயங்கிவரும் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் கழகம் ( National Council of Applied Economic Research - NCAER ) என்னும் தன்னார்வ அமைப்பு சார்பில், தீண்டாமை குறித்து நாடு தழுவிய அளவில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

விழிப்புணர்வு, சட்டம், கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தீண்டாமை களையெடுக்கப் பட்டு விட்டதாக கூறப்பட்டு வருவதை இல்லை என்கிறது இந்த ஆய்வு. கடந்த 2011-_12 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், பொதுமக்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டது.

அதாவது, 1. உங்களது வீடுகளில் தீண்டாமை நடைமுறையில் உள்ளதா? 2. உங்கள் வீட்டு சமையல் அறைக்குள் பட்டியல் இனத்தவர் நுழை யவும், பாத்திரங்களைப் பயன்படுத்தவும் அனுமதிப்பீர்களா? என ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் கேட்கப்பட்டது. இதற்கு ஆய்வில் பங்கெடுத்த நான்கில் ஒருவர், தீண் டாமையைக் கடைபிடிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முழு விவரமும் தொகுப்பாக அடுத்தாண்டு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. தற்போதைக்கு ஆய்வுத் தகவல்கள் புள்ளி விவரங்களாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜாதி அடிப்படையில் 27 சதவீதத்தினர் தீண்டாமை இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

மாநிலவாரியாகப் பார்த்தால் வடமாநிலங்களில், மத்தியப் பிரதேசம் 53 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 43 சதவீதமும்,இமாச்சலில் 50 சதவீதமும், சத்தீஸ்கரில் 48 சதவீதமும்,ராஜஸ்தான் மற்றும் பீகாரில் 47 சதவீதமும், உத்தரகாண்டில் 40 சதவீதமும் `தீண்டாமை `இருந்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இதேபோல், தென் மாநிலங்களில் ஆந்திரப்பிரதேசத்தில் 10 சதவீதம் மட்டுமே தீண்டாமை உள்ளதாக கூறும் இந்த ஆய்வு, மேற்கு வங்காளத்தில் ஒரு சதவீதமும்,கேரளாவில் 2 சதவீதமும் தீண்டாமை இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வு தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள தலைமை ஆராய்ச் சியாளர் டாக்டர் அமித் தோரட், இந்த ஆய்வின் மூலம் கல்வி பெற்ற மக்களிடையே ஜாதியின் தாக்கம் குறைந்துள் ளதையும், பணம் படைத்தவர்களிடமே தீண்டாமையை செயல்படுத்தும் எண்ணம் மேலோங்கி இருப்பதையும் அமித் சுட்டுக் காட்டியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-1/95711.html#ixzz3RRoyPHiq

தமிழ் ஓவியா said...

தன்னம்பிக்கையை ஏற்படுத்திய திறமைக்கான முகாம்

நாட்டில் வேலையில்லா திண் டாட்டம் நாளுக்கு நாள் பெருகி வருகின்ற சூழ்நிலையில் அதனை எதிர்கொண்டு வாழவேண்டிய கட் டாயத்தில் இன்றைய இளைஞர்கள், பெண்கள் இருக்கிறார்கள்! பொதுவாக தொழில் முனை வோர்கள் தன்னம்பிக்கை உள்ளவர் களாகவும், தொழில் சார்ந்த சவால் களையும், நிதிச் சுமைகளையும் எதிர் கொண்டு வாய்ப்புகளை பெறுவதில் ஆர்வமுடன் இருக்க வேண்டுமென்பது முக்கியம்.

பெண்களுக்கு இந்த முக் கியத்துவத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தி சமூகத்தில் சம நிலை உடையவராகவும் ஆண்களைப் போல் பெண்களும், வருமானம் ஈட்டக் கூடியவராகவும். இந்த சமூகத்தில் வாழ முடியும் என்ற தூண்டுதலையும், ஊக்கத்தையும் கொடுத்து வருவது (பவர் அமைப்பு).

பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகமும் (பவர்) மற்றும் மகளிர் மேம்பாட்டிற்கான பெரியார் அமைப்பும் (ஜிஙிமி) இவ்விரு அமைப்பு களும் அடித்தட்டு மக்களின் மேம் பாட்டிற்காகவும் பெண்களின் வாழ்க்கை தரம் மேம்பட உருவாக்கப்பட்டு, தொடர்ந்து செயலாற்றி வருகிறது.

தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் இந்த அமைப்புகளை அறியாதவர்கள் இருக்க முடியாது. இந்திய அரசின் குறு சிறு, மற்றும் நடுத்தர அமைச்சகத்தின் தேசிய நிருவாகத்தையும், இணைத்து தஞ்சை கவிதா மன்றத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை ஜன.31 ஆம் தேதி நடத்தியது.

இம்முகாமில் தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களி லிருந்தும் படித்த இளைஞர்கள், மாணவிகள் ஏராளமானோர் பங்கேற் றனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் தஞ்சை, திருச்சி, கரூர், கோவை உள் ளிட்ட மாவட்டங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து கொண்டனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில் 1200க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்தார்கள். இம்முகாமில் பின்னலாடை, ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், சி.என்.சி வெல்டிங், டி.டி.பி ஆப்ரேட்டர், வெல்டிங், அழகு நிலையங்கள், ஆட்டோ மெஷின் நிறுவனங்களும் மேலும் கேபிள் தயாரிப்பு பணிக்கு 500க்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாகவும் இம்முகாமில் அறிவித்தது ஏற்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சி தந்ததை காணமுடிந்தது.

தமிழ் ஓவியா said...

இவ்விழா தொடக்கத்தில் தஞ்சை மாவட்ட தொழில் மய்ய பொது மேலாளர் ராம லிங்கம், மத்திய அரசு பயிற்சி நிறுவன இயக்குநர் பேரா. உதயசங்கர், பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக இணை துணைவேந்தர் டாக்டர் தவமணி ஆகியோர் கலந்து கொண்டு, இம் முகாமின் முக்கியத்துவத் தையும், சிறப்பினையும் எடுத்துக் கூறி உரையாற்றியது வருகை தந்த இளைஞர்களுக்கு ஊக்கமளித்தது.

27 நபர்களுக்கு சுயவேலை வாய்ப்பிற்கான கடனுதவி ஆவணங்கள் இந்திய ஓவர்சீஸ் வங்கி மற்றும் பஞ்சாப் நேசனல் வங்கி மூலம் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. பெரியார் தொழில் நுட்ப வணிகக் காப்பகத்தின் (பவர்) மூலம் பயிற்சி பெற்று தொழில் தொடங்கியுள்ள பிரபாகரன் என்பவர் நான்கு பேர்களுக்கு வேலைக்கான ஆணையை வழங்கினார்.

லட்சுமி விலாஸ் வங்கி அழகு நிலையம் நடத் துவதற்கு 3 பெண்களுக்கு கடனுதவி வழங்கியது. தொடர்ந்து இம்முகாமில் இடம் பெற்ற அனைத்து நிறுவனங் களும் தங்களது பெயர்ப் பலகையை வைத்து தங்களுக்கான பணியாளர்களை தேர்வு செய்தார்கள். பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே அதிக ளவில் வருகை தந்து பயன்பெற்றார்கள்.

சமூகத்தில் பெண்கள் சாதிக்க முடியும்

- பூங்கொடி

இந்த முகாமில் பவர் அமைப்பு மூலம் தொழிற்பயிற்சி பெற்று மாதம் ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வருமானத்தை ஈட்டக் கூடிய அளவிற்கு உயர்ந்து மேலும் பல புதிய தொழிற் பயிற்சி களையும் மேற்கொண்டு வரும் தஞ்சையை சேர்ந்த பூங்கொடி பவர் அமைப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு பயிற்சி பெற்றுள் ளார். அதன்பின்னர் பயிற்றுநராகவும் இருந்து வருகிறார்.

அவரை இம்முகா மில் சந்தித்தோம். அவர் நம்மிடம் கூறு கையில்: பவர் அமைப்பு கொடுத்த ஊக்கம்தான் என்னை இந்த அளவிற்கு வாழ்க்கையில் உயர்த்தியுள்ளது. பெண்களுக்கு பல்வேறு திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது.

அந்த வாய்ப்புகள் இல்லாமல் சமூகத்தில் புறந்தள்ளி வருகின்றனர். அவர்களை கண்டறிந்து சமூகத்தில் சமவாய்ப்பளித்து அவர்களுடைய திறமையை வெளிக் கொண்டு வந்தால் அவர்கள் நல்ல நிலைக்கு உயர்வார்கள் என்பதில் அய்யமில்லை. அப்படியொரு உயர்வை எட்டிப்பிடிக்க காரணமாக அமைந்தது பவர் அமைப்பு.

எனது திறமையை கண் டறிந்தது பவர் அமைப்பு தான். நான் ஒரு தொழில் முனைவோ ராக இன்றைக்கு உயர்ந் திருக்கிறேன். வாழ்க்கைத் தரத்திலும் நல்ல நிலைக்கு உயர்ந் திருக்கிறேன். தற்போது முகிலன் அலங்கார அங் காடியை சொந்தமாகவும் நடத்தி வருகிறேன். அதில் நாங்கள் தயாரிக்கும் பொருள்களை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம். இதில் எங்களுக்கு மிகவும் மனநிறைவு கிடைக்கிறது.

சிறிய அளவில் தொடங்கிய எனது வியாபாரத்தை, பெரிய அளவில் உருவாக்கி இருக்கிறேன். பலருக்கும் வேலை வாய்ப்பினை கொடுத்து வருகிறேன். தொடக்கத்தில் வங்கி மூலம் ரூ.1 இலட்சம் கடன் பெற்றேன். மேலும் பவர் அமைப்பு மூலம் கொடுத்த பயிற்சியினை நன்கு பயன் படுத்திக் கொண்டேன். எனது நிறு வனத்தை சிறப்பாக நடத்தி வருகிறேன்.

நான் இதுவரைக்கும் 750 பேர்களுக்கு மேல் பயிற்சி கொடுத்துள்ளேன். இப்பயிற்சியில் சின்னஞ் சிறிய ஆபர ணங்கள், முத்துமாலை, பாசி மாலை, தோடு, காகிதப் பூ, மற்றும் சேலையை அழகுப்படுத்துதல், காகி தத்தில் வண்ண வண்ண அலங்காரப் பொருள் களும் தயாரித்து வருகிறோம். தங்க ஆபரணங்களுக்கு மாற்றாக அழகு பொருளாக தயாரித்து ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் விற்பனை செய்து வருகிறோம்.

இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நிறையே பேர் வாங்கு கிறார்கள். பொதுவாகவே பெண்களுக்கு எதையும் அழகுப் படுத்தி செய்வது விரும்புவார்கள்.. அந்த வகையில் அழகு சாதனங்களைத்தான் எங்கள் திறமைக்கு ஏற்றவாறு நாங்கள் செய்து வருகி றோம். இந்த தொழிலில் கணவனை இழந்தவர்கள், உடல் ஊனமுற்றோர், ஆதரவற்ற பெண்கள் ஆகியோர் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூகத்தில் பெண்கள் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்த பவர் அமைப்பிற்கு இந்நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நான் சாதித்ததை போல் பலரும் சாதிக்க வேண்டும். அந்த சாதனைக்கு உந்து கோலாக பவர் அமைப்பு எங்களுக்கு கைகொடுத்துள்ளது.

நான் வேறு ஒரு பயிற்சி நிறுவ னத்தில் இதை கற்றுக் கொண்டால் பயிற்சி கட்டணம் செலுத்த வேண்டி யிருக்கும். ஆனால் பவர் அமைப்பு எனக்கு இலவசமாக சொல்லிக் கொடுத்தது. இந்த தொழில் எனக்கு மனநிறைவையும், பண நிறைவும் கொடுத்து வருகிறது என்றார்.


தமிழ் ஓவியா said...

பட்டம் வழங்கினால் போதாது!

- ராஜமகேஸ்வரி

அடுத்து ஜெயம் இண் டஸ்ட்ரீஸ் நிருவாகத்தை நடத்தி வரும் ராஜ மகேஸ்வரியை சந்தித் தோம். இவர் பெரியார் பாலிடெக்னிக் முன்னாள் மாணவி. பெரியார் கல்வி நிறுவனங்களில் படித்த வர்கள் சாதனையாளர் களாகத்தான் இருக்க முடியும் என்பதற்கு இவரும் உதாரணம். கடல் கடந்தும் பணியாற்றி வரு கின்றனர்.

இவர் தஞ்சை அருகேயுள்ள புதுக் குடியில் ஜெயம் இண்டஸ்ட்ரீஸ் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் நேரிடை யாகவும், மறைமுகமாக 5-0க்கும் மேற் பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர் நம்மிடம் மனம் திறந்து பேசினார், இதுபோன்ற முகாம்களில் படித்த இளைஞர்கள் முதலில் தகவல் திரட்டும் பணியில் ஈடுபட வேண்டும்.

அதனால் பல நிறுவனங்களின் தொடர்பு, அதன் மூலம் வேலை வாய்பையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். தொழில் முனைவோர்களும், வேலை வாய்ப்பினைப் பெறுபவர்களும், தன்னம்பிக்கையோடும் தொடர் முயற்சியில் ஈடுபட்டால் நிச்சயம் நல்ல தொழில் முனைவோராகவோ, அல்லது ஒரு நிறுவனத்தில் வேலை வாய்ப் பினையோ பெற முடியும்.

தமிழ் ஓவியா said...

சரியான தரு ணத்தில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. வரவேற்க வேண்டியது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதை முக்கிய குறிக்கோளாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்பது எனது விருப்பம். வெறும் பட்டம் மட்டும் கொடுத்து அனுப்பிவிடக் கூடாது. அவர்களுக்கு ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும்.

அதற்கான ஒரு மய்யத்தை அந்தந்த கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும். இது படித்துவிட்டு செல்லும் மாணவர்களுக்கு நல்ல வகையில் பயன்படக் கூடியதாக இருக்கும் என்று தமது கருத்தைப் பதிவு செய்தார்.

இம்முகாமில் வேலை வாய்ப்பு பெற்ற தஞ்சை வெட்டிக்காட்டை சேர்ந்த திவ்யா கூறும்போது, நான் எதிர்ப்பார்க்கவே இல்லை இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமென்று! முகாமிற்கு வந்ததை வெற்றிப் படிக்கட்டாக நினைக்கிறேன் என்றார். இதுபோன்ற பல தொழில் முனைவோர் தங்கள் கருத்துகளை இம்முகாம் மூலம் பகிர்ந்து கொண்டனர்.

படித்தவர்கள், படிக்காத வர்கள் என்று பலரும் கலந்து கொண்டு தனக்கென ஒரு வேலை வாய்ப்பினையும், ஆலோசனையையும், தொழில் முனை வோருக்கான வாய்ப்பினையும் பெற்றுச் சென்றனர்.

அவர்கள் செல்லும் போது, பவர் அமைப்பின் மூலம் பயிற்சி பெற்று அவர்களே தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து, தனித் தன்மை யோடு, தொழில்முனைவோராகவும், வேலை வாய்ப்பினை தரக்கூடியவராக வும் ஆகும் போது, பவர் அமைப்பின் உழைப்பிற்கான பலனை கண்முன் பார்க்கும் போது, ஏற்படுகிற மகிழ்ச் சியும், பெருமையும், இந்த முகாமினை ஏற்படுத்திய ஏற்பாட்டளர்கள் அனை வரின் கண்முன் காண முடிந்தது.

அவர்கள் கொடுத்த பயனுள்ள பாதை யில், ஊக்கமும், உற்சாகமும் குறையாமல் வாழ்வில் முன்னேற தொழில் முனை வோர்கள் பயணித்தால் வெற்றி நிச்சயம். திறமைக்கான முகாமினை பவர் அமைப்பின் செயலர் பர்வீன், பெரியார் தொழில் வணிக காப்பக செயல் அலுவலர் அருணாவும் இணைந்து வெற்றிகரமாக நடத்தினார்கள்.

மேலும் இதுபோன்ற முகாம்கள் வரும் மாதங்களிலும் தொடர்ந்து நடைபெறும் எனக் கூறியது இளைஞர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் மேலும் ஊக்கத்தை தந்தது. - மா.செந்தமிழினியன்

Read more: http://viduthalai.in/page-1/95713.html#ixzz3RRpM2gXn

தமிழ் ஓவியா said...

90 வயது சட்ட எரிப்புப் போராட்ட வீரர் மன்னை கோபால்

மன்னார்குடி சட்ட எரிப்பு வீரர் (6 மாதம் சிறை திருச்சியில்) மானமிகு கு. கோபால் அவர்கள் 90 வயது காணும் இளைஞர்.
தன்னுடைய மகன் கவுதமன் வீட்டில் மன்னார்குடியில் புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் இப்பொழுது வசித்து வருகிறார்.
இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

அவரை விடுதலை சார்பில் பேட்டி காணச் சென்றபோது அவர் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
என்னுடைய 12ஆம் வயதில் தஞ்சாவூர் திலகர் திடலில் தந்தை பெரி யாரைப் பார்த்தேன் - அவர் பேச்சையும் கேட்டேன் _ பசு மரத்தாணிபோல் அவர் பேச்சு என்னெஞ்சில் தைத்து விட்டது.

நான்காம் வகுப்புவரை மட்டுமே படிக்கக் கூடிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. ஆனாலும், பெரியாரின் கொள்கைக் கல்வி என் நெஞ்சைத் தொட்டு விட்டது - இவர்தான் நம் தலைவர் இவர் கொள்கைதான் நம் வாழ்க்கைப் பாதை என்று உறுதி கொண்டேன்.

இன்று வரை அய்யாவின் கொள் கைகள் ஊக்கமுடன் என்னை வாழ வைத்துக் கொண்டுள்ளன. பெரியாரைப் போல ஒரு தலைவரை காண முடியாது - புத்தருக்குப் பின் தோன்றிய மிகப் பெரிய உண்மையான புரட்சித் தலைவர் தந்தை பெரியார்.

மன்னார்குடியில் ஆறுமுக ஹேர்டிர சிங் சலூன் ஒன்றை நடத்தி வந்தேன். என்னிடம் வரும் வாடிக்கையாளர் களிடம் பெரியார் கொள்கைகளையும், இயக்கச் செயல்பாடுகளையும் எடுத்துக் கூறிக் கொண்டே இருப்பேன் யார் _ மனமும் கோணாதபடி பக்குவமாகச் சொல்லுவேன்.

பார்ப்பனர்களும் என் வாடிக்கை யாளர்கள்தான்; அவர்களிடமும் பெரியார் கொள்கையை எடுத்துச் சொல்லுவேன். அவர்களும் ஆச்சரியப் படுவார்கள். பெரியார் இப்படி எல்லாம் சொல்லியிருக்கிறாரா? எங்களிடம் வேறு மாதிரியாக அல்லவா பெரி யாரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள் என்பார்கள். அதெல்லாம் தப்புப் பிரச் சாரம் என்று பார்ப்பன வாடிக்கையா ளர்களிடமும் தெளிவுப்படுத்துவேன்.
முடி திருத்தகத்தில் விடுதலை உட்பட இயக்க ஏடுகளை போடுவேன். யாராவது படித்துக் கொண்டே இருப்பார்கள்.

மன்னார்குடியில் பெரியார் படிப் பகத்தை என் சொந்த செலவில் ஏற்படுத்தினேன். தந்தை பெரியார் அவர்களை அழைத்து நடத்தினேன். ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் வந்திருந்தார். அந்தப் படிப்பகத்திற்கு நன்கொடையாகப் புத்தகங்களை வசூல் செய்தேன் - பணம் வசூல் செய்யவில்லை.

முடி திருத்தகப் பணியோடு வைத்தியம் பார்க்க என்னிடம் வருவார் கள். அப்பொழுதும் - கொள்கைப் பிரச் சாரம்தான். அந்த வைத்தியம் என்பது எங்களுக்குப் பாரம்பரியமாக வந்தது.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் அறிவித்த ஜாதி ஒழிப்புப் போராட்டமான சட்ட எரிப் புப் போராட்டத்தில் பங்கு ஏற்றேன். 6 மாத கடுங்காவல் தண்டனை - திருச்சி மத்திய சிறையில் இருந்தேன்.

சட்டத்தை எரிப்பதற்கு முன் என்னை முன்கூட்டியே கைது செய்ய போலீஸ்காரர்கள் கடைக்கு வெளியிலே காத்துக் கொண்டு இருந்தார்கள்.

நான் என்ன செய்தேன் தெரியுமா?

சட்ட நகலை எரித்துக் கொண்டே வெளியில் வந்தேன். அவர்கள் ஏமாந் தார்கள்; முன்கூட்டியே என்னைக் கைது செய்திருந்தால் எனக்குத் தண்டனை கிடைத்திருக்காது; நான் அவ்வாறு தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. தந்தை பெரியாரின் தொண்டர்கள் கட மையைச் செய்பவர்கள் தண்டனைக்கு அஞ்சாதவர்கள் அல்லவா!

நான் சிறையிலிருந்து விடுதலை ஆவதற்கு முதல் நாள் 35 ஆண்டுகளாக திருச்சி சிறையில் பணியாற்றிய வார்டன் ஜெயிலரிடம் என்னை பற்றிச் சொன் னார் _ எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

இந்த 35 வருட சிறைப் பணியில் திராவிடர் கழகத் தோழர்கள் போல யாரையும் நான் பார்த்ததில்லை; அதிலும் குறிப்பாக இந்தத் தோழர் கோபால் மிகவும் சிறந்த கண்ணியமான மனிதர் என்று சொன்னார்.

எனது திருமணம் சுயமரியாதை முறையில்தான் நடந்தது. அய்ந்து மக்கள் எனக்கு; மூவர் பெண்கள் இருவர் ஆண்கள் -நல்ல முறையில் வசதி குறை வின்றி சிறப்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

மன்னார்குடியில் கே.ஆர்.ஜி.பால், கீழப்பாலம் ஆர்.ஆர்.எஸ். இராமச் சந்திரன், தஸ்தகீர் போனற இயக்க வீரர்களிடம் எனக்குப் பழக்கம் அதிகம். எடகீழையூர் க. நல்லதம்பி என்னை மத்திய கமிட்டி உறுப்பினராக ஆக்கு வதாகச் சொன்னார். நான் வேண்டாம்; சாதாரண - உண்மையான தொண் டனாக இருக்கவே விருப்பம் என்று சொன்னேன்.

என்னுடைய பேரன் வல்லம் பெரி யார் பாலிடெக்னிக்கில் மெக்கானிக் பிரிவில் படித்து இப்பொழுது சிங்கப் பூரில் பணியாற்றுகிறான்.

நான் என் வீட்டில் உள்ளவர் களிடம் சொல்லி வைத்திருக்கிறேன். நான் மரணம் அடைந்தவுடன், என் உடலக்குக் கருப்புச் சட்டை அணிவித்து, தீயிட்டுக் கொளுத்தி அந்த சாம்பலை வயல்களில் தெளிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். இதுதான் எனக்குக் காட்டும் முக்கிய மான மரியாதை என்று சொல்லி வைத்துள்ளேன் என்று உற்சாகம் பொங்கக் கூறினார்.

தந்தை பெரியார் எத்தகைய தொண் டர்களை உருவாக்கி இருக்கிறார்கள் பார்த்தீர்களா?
இந்த இயக்கத்துக்கும் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு இந்த உலகத்தில் ஏது?

(சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் தொடக்கத்தில் முடி திருத்தகங் கள் தான் நமது கழகத்திற்குப் பாசறையாக இருந்தன என்று கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறியது தான் நினைவிற்கு வருகிறது)

(பேட்டி கண்டவர்: கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் - இடம் மன்னார்குடி புதிய வீட்டு வசதிக் குடியிருப்பு, உடனிருந்தோர் பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் மன்னார்குடி நகர திராவிடர் கழகத் தலைவர் ஆர்.எஸ். அன்பழகன்).

Read more: http://viduthalai.in/page-1/95714.html#ixzz3RRpv4Wwz

தமிழ் ஓவியா said...

வாஸ்துவுக்குப் பின்புறத்தில் ஜாதி இருக்கிறது!

அறிவியல் முன்னேற்றத் தினால், பல தொழில்கள் வளர்ச்சி யடைந்துள்ளன. அவற்றில் ஒன்று, கட்டட கட்டுமானப்பணி, பல கட்டுமானப் பொருட்கள், தொழில் நுட்பங்கள், புதிய சாதனங்கள் ஆகியவை தோன்றி சாதனைகள் பல, ஒன்றை ஒன்று மிஞ்சி நிகழ்த்தப்பட்டுள்ளன. இருப்பினும் வாஸ்து முறைப்படி வீடு கட்டுதல் என்ற வழக்கமும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இது கல்வி அறிவு இல்லாத பாமர மக்களிடையே மட்டுமின்றி படித் தவர்களிடையேயும் கூட பரவி யுள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம், மூட நம்பிக்கையும், பயமும், பேராசையும் ஆகும். எந்த அறிவுப் பூர்வ ஆதாரமும் இல்லாத, பகுத்தறிவுக்குப் பொருந்தாத பல கோட்பாடுகள் இங்கு நிலவு கின்றன.

எடுத்துக்காட்டாக, மனை அளவு 8அடி இருந்தால் அரசு பரிபாலனம் என்றும் 9அடி இருந்தால் செல்வம் குறையும் என்றும் சொல்லப்படுகிறது. இதே போன்று 11அடி இருந்தால், புத்திரப்பேறு அதிகம் என்றும் 12 அடி இருந்தால் மலடாவர் என்று பயமுறுத்துகிறது. 15அடி இருந் தால் தரித்திரம், தாழ்ச்சி என்றும் 16அடி இருந்தால் செல்வம் கொழிக்கும் என்றும் கூறுகிறது.

இந்த ஒரு அடி வேறுபாடு ஏன், எப்படி இந்த நன்மை, தீமை களுக்குக் காரணமாக அமைய முடியும் என்று பகுத்தறிவோடு சிந்தித்தால்தான் இவை மக்களை பயமுறுத்துவதற்காகக் கூறப்பட் டவை என்று தெளிவாகும்.

அறையின் நீளத்திற்கும் தரித் திரத்திற்கும் என்ன சம்பந்தம்?

இதேபோல் அறையின் நீளமும், அகலமும் பல நன்மை தீமைகளுக் குக் காரணமாக விளங்கும் என்றும் கூறுகிறது. அறையின் நீளம், அகலம், 19அடி இருந்தால் தரித்திரம், புத்திரபீடை என்றும், 20அடி இருந்தால் இன்பமயம் என்றும் கூறுகிறது. இது 25அடி இருந்தால் மனைவியின் மரணம் என்றும், 26அடி இருந்தால் செல்வம் பெருகும் எனவும் சொல் லப்படுகிறது.

இங்கும் இந்த ஒரு அடி வேறுபாடு இந்த மாற்றங் களை ஏற்படுத்தும் என்பது பகுத் தறிவுக்குப் புறம்பான ஒன்றாகும். இதே போன்று ஒரு வீட்டை வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கா விட்டால், இந்த எஜமானன், எஞ்சினீயர், காண்ட்ராக்டர், கொத்து மேஸ்திரி, தச்சு மேஸ்திரி ஆகிய அய்வரின் வாழ்விலும் பாதிப்பு ஏற்படும் எனவும் அச்சுறுத்துகிறது.

இந்த சாத்திரம், அடுத்து ஏற்படும் அய்யப்பாடு, ஏன் இந்த அச்சுறுத்தும் கோட் பாடுகள் கூறப்படுகின்றன என்ப தாகும். இதை சற்று சிந்தித்தால் எப்படி சாதகம், சோசியம் போன் றவை பேராசை, பயம், மூடநம் பிக்கை ஆகியவற்றைக் கொண்ட மக்களை ஏமாற்றி பிழைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றதோ, அதேபோல், வாஸ்துவும் அதில் கூறப்படும் அச்சுறுத்தும் கோட் பாடுகளும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதற்குப் பயன்படுத்தப்படு கின்றது என்பது தெளிவாகும்.

ஜாதி இதன் பின்னணி! மற்ற தொழில் நுட்பத் துறை களுக்குக் கொடுக்கப்படாத சாஸ்திர அந்தஸ்து ஏன் இந்த வாஸ்துவுக்கு மட்டும் கொடுக்கப் பட்டது என்று ஆராய்வோம். ஜாதி முறையை நிலைநாட்டவும் ஜாதியின் அடிப்படையில் சூழ்ச்சி யாக சில நியதிகள் செயல்படுத் தப்படவும் இந்த வாஸ்து வழி செய்தது.

அ) பொன்னிறமான மண்ணில் -_ இனிப்பு ருசியும், தாமரை மலரின் வாடையும் இருந்தால், அந்தணர் கள் இதில் வீடு கட்டலாம்.

ஆ) சிவந்த நிறமும், கார்ப்பு ருசியும், குதினாயின் வாடையுள்ள மனையில் சத்திரியர்களும்,

இ) பச்சை நிறமும், புளிப்பு ருசியும் வாடையுமுள்ள மனையில் வைசியர்களும்

ஈ) கருப்பு நிறமும், கசப்பு ருசியும், தானிய வாடையுமுள்ள மனையில் மற்ற இனத்தவர்களும் (சூத்திரர்) வீடு கட்ட வேண்டும்.

இதேபோல், அந்தணர் தென்திசை ஆயர்மேற்றிசை
வந்திடு வணிகர்நல்வடக்கு வான்திசை
தொந்தமில் சூத்திரர் தோன்றுங்கீழ்திசை
பிந்திய நடுவது பிரமன்தானமே
என்று ஜாதியின் அடிப்படை யில் வீடுகட்டும் இடத்தை நிர்ண யம் செய்தது, வாஸ்து.

இவ்வாறு ஜாதி முறையை நிலைநாட்டவும், அதன் மூலம் பல வசதிகளை பெறவும், வழி செய்ததால், இக் கலை சாஸ்திர அந்தஸ்தை பெற் றது என்று ஊகிக்கலாம்.

இந்த வாஸ்து முறையைப் பின்பற்றாமல் கட்டப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்பதும், இம்முறையைப் பின் பற்றி கட்டப்பட்ட கட்டடங் களின் உரிமையாளர்கள் பலர் பல இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதும், இம்முறையைப் பின் பற்றி கட்டப்பட்ட கட்டடங் களின் உரிமையாளர்கள் பலர் பல இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந் ததே.

ஆனால், இந்த வாஸ்து முறையைச் சொல்லி, மற்றவர்களை ஏமாற்றி வாழ்பவர்கள், கட்டடக் கலைகூறும் சில நல்ல கருத் துக்களையும் சேர்த்துக் கூறுவது, நச்சுப் பொருளை, இனிப்பு மேலு றையுடன் கொடுப்பதற்கு இணை யாகும் அல்லவா?

முனைவர் நல். இராமச்சந்திரன், பேரா. எல்.ஜே. சுப்ரமணியம்

Read more: http://viduthalai.in/page-1/95716.html#ixzz3RRqdcwjk

தமிழ் ஓவியா said...

சாமிக்கு சாராய அபிஷேகம்!

மத்தியப்பிரதேசத்தில் காலபைரவர் சிலைக்கு சாராயம் அபிஷேகம் செய்ய அரசு சார்பில் கடை அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்கிறார்கள். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெயினி அருகே காலபைரவர் கோவில் உள்ளது. இங்கு காலபைரவரின் மிகப்பெரிய சிலை உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமிக்கு சாராயத்தால் அபிஷேகம் செய்கிறார்கள்.

சாமியின் கண் வழியே சாராயத்தை ஊற்றுகிறார்கள். இதனால், பக்தர்கள், வியாபாரிகளிடம் அதிக விலை கொடுத்து சாராயம் மற்றும் வெளிநாட்டு மது வாங்குகிறார்கள். அரசு சார்பில் கடை திறப்புபக்தர்களிடம் வியாபாரிகள் அதிக விலைக்கு சாராயம் விற்பதை தடுக்க தற்போது மத்தியப்பிரதேச அரசே கோவில் அருகே கடை திறந்துள்ளது.

இங்கு 2 கவுண்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.ஒன்றில் அரசு சாராயமும், மற்றொன்றில் வெளிநாட்டு மதுவும் விற்கப்படுகிறது. 180 மி.லிட்டர் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.இந்த கோவிலில் பக்தர்களுக்கு சாராயம்தான் பிரசாதமாகவும் கொடுக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page-1/95717.html#ixzz3RRqxIEb6

தமிழ் ஓவியா said...

தமிழரை ஏய்க்கும் தருக்கர் கூட்டத்தை முறியடிப்பீர்!

உலகில் தோன்றிய முதல்மொழி தமிழே
தனித்தியங்க வல்ல மொழிதமிழ்
உலகில் வாழும் மொழிகளுள் இன்றும்
உயிர்ப்புடன் வாழ்வது தமிழே!

இறவா இலக்கிய இலக்கணம் படைத்த
எழுத்துப் பேச்சு மொழிதமிழ்
ஆரிய ஆங்கிலத் திணிப்பை மீறி
அழியா மொழி நம் தமிழே!

கிறித்துவச் சமயம் பரப்பவந்த அய்ரோப்பா
பாதிரிகள் தமிழைக் கற்றனர்
அரும்பெரும் தமிழின் ஆற்றலை அதன்
கட்டமைப்பைக் கண்டு வியந்தனர்
தேர்ந்த காவியம் படைத்தார் திராவிட
மொழிகளின் ஒப்பிலக்கணம் வரைந்தார்
திருக்குறள் சங்க இலக்கியத்தை மொழி
பெயர்த்து உலகிற்கு உணர்த்தினர்!

ஆரியம் தமிழில் கலந்ததால் தெலுங்கு
கன்னடம், மலையாளம் தோன்றின
புராண இதிகாச புனைவுகள் புளுகுகள்
பொய்யும் புரட்டும் எழுந்தன
இயற்கை வழிபாடு இல்லாத கற்பனை
கடவுள் உருவ வழிபாடாக
ஆயக்கலையெல்லாம் ஆரிய மாக்கி
பண்பாட்டுப் படையெடுப்பை நடத்தினர்!

பொறியியல் மருத்துவம் வானியல் இசை
சிற்பம் கட்டடக் கலைபோன்று
அறிவுத் திறமுடை நூல்களை ஆரியத்தில்
பெயர்த்து நீர்நெருப்பில் அழித்தனர்
பெருவுடையார் பிரகதீஸ்வரர் சிற்றம்பலம் சிதம்பரம்
திருவரங்கம் சிறீரங்க மாக்கினர்
திருவுடை தமிழக ஊரை யெல்லாம்
வடமொழியால் ஆக்கியவர் பார்ப்பனர்!

திருவள்ளுவர் நாளைக் கொண்டாட திருகு
தாளங்கள் பாரதியைத் திணிக்கின்றார்
திருக்குறளைத் தேசிய நூலாக்க மறுக்கின்றார்
இங்கே ஒளிந்திருக்கும் ஆர்எஸ்எஸ்
குரங்குதன் குட்டியை விட்டாழம் பார்க்க
தருண்விஜய் பாராட்டு!

காவிகள்
பாராட்டில் கிரங்காதீர் கீதையைத் தேசிய
நூலாக்க ஆடிய நாடகமே!

இந்தி எதிர்ப்பில் இன்றுவரை தமிழகம்
விழிப்புடன் இருப்பதைக் கண்டு
இந்துவியக் கும்பல இப்போது தங்கள்
அணுகு முறையை மாற்றிக் கொண்டு
தமிழைப் போற்றியும் திருக்குறளை ஏற்றியும்
புதிய வடிவமெடுக் கின்றார்
தமிழரை ஏய்க்கும் தருக்கர் கூட்டத்தின்
தந்திரத்தை முறியடிப் பீரே!
கவிஞர் இனியன், திருச்சி

Read more: http://viduthalai.in/page-1/95715.html#ixzz3RRr7RCHX

தமிழ் ஓவியா said...

வாஜ்பேய யாகம்

வாஜ்பேய யாகம் - பார்ப்பனர், புரோகிதராக அல்லது தலைமைக் குருவாக உயர் பதவி பெறும் பொழுது செய்யப்படும் யாகமாகும். அரசனும் இராசசூய யாகம் செய்த பின்னர் பேரரசாக மாறிய பொழுது வாஜ்பேயி யாகத்தைச் செய்யலாம் இவ்வேள்வி செய்யும்போது கலைமானின் தோலினைப் போர்த்திக் கொண்டு செய்தல் மரபாகும்.

வேள்வியின்போது பணிவிடை செய்வதற்குப் பத்தினிகள் மூவர்க்கும் குறையாமல் இருத்தல் வேண்டும். இவ்வகையான சடங்குகள் வடநாட்டிலிருந்து பின்னர் தமிழகம் வந்ததாம்.

யாகங்கள் 21-ஆம் சோம யாகங்கள் ஏழு, ஹவியர் யாகங்கள் ஏழு, பாக யாகங்கள் ஏழு இவற்றில் சோம யாகங்கள் ஏழில் ஒன்றாக வாஜ்பேயி யாகம் உள்ளது. அந்த யாகத்தின் இறுதியில் உணவும், பானமும் கூட்டாக அருந்தப் பெறுமாம்.

- எஸ். நல்ல பெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page-1/95722.html#ixzz3RRrdTEl9

தமிழ் ஓவியா said...

வாஜ்பேய யாகம்

வாஜ்பேய யாகம் - பார்ப்பனர், புரோகிதராக அல்லது தலைமைக் குருவாக உயர் பதவி பெறும் பொழுது செய்யப்படும் யாகமாகும். அரசனும் இராசசூய யாகம் செய்த பின்னர் பேரரசாக மாறிய பொழுது வாஜ்பேயி யாகத்தைச் செய்யலாம் இவ்வேள்வி செய்யும்போது கலைமானின் தோலினைப் போர்த்திக் கொண்டு செய்தல் மரபாகும்.

வேள்வியின்போது பணிவிடை செய்வதற்குப் பத்தினிகள் மூவர்க்கும் குறையாமல் இருத்தல் வேண்டும். இவ்வகையான சடங்குகள் வடநாட்டிலிருந்து பின்னர் தமிழகம் வந்ததாம்.

யாகங்கள் 21-ஆம் சோம யாகங்கள் ஏழு, ஹவியர் யாகங்கள் ஏழு, பாக யாகங்கள் ஏழு இவற்றில் சோம யாகங்கள் ஏழில் ஒன்றாக வாஜ்பேயி யாகம் உள்ளது. அந்த யாகத்தின் இறுதியில் உணவும், பானமும் கூட்டாக அருந்தப் பெறுமாம்.

- எஸ். நல்ல பெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page-1/95722.html#ixzz3RRrdTEl9

தமிழ் ஓவியா said...

கம்யூனிஸ்டுகளின் கடவுள் கொள்கை

கம்யூனிஸ்டு ஒழுக்கமுறை என்று ஒன்று இருக்கிறதா? ஆம் நிச்சயமாக இருக்கிறது. நமக்கென்று தனி நெறிமுறையில்லை என்று அடிக்கடி கருத்துக் கூறப்படுகிறது. பூர்ஷ்வாக்கள் நம்மைக் கம்யூனிஸ்டுகள் எல்லாவித ஒழுக்க முறைகளையும் நிராகரிக்கிறார்கள் என்று அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள். இது பிரச்சினையைக் குழப்பும் முறையாகும்.

தொழிலாளர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதாகும். எந்த அர்த்தத்தில் நெறிமுறைகளை நிராகரிக்கின்றோம். பூர்ஷ்வா வர்க்கத்தால் கொடுக்கப்படும் அர்த்தத்தில் கடவுளின் கட்டளைகள் என்னும் அடிப்படையில் கூறப்படும் நெறிமுறை என்னும் அர்த்தத்தில் கூறப்படும் அவைகளை நிராகரிக்கின்றோம்.

இந்த விஷயத்தில் நாம் நிச்சயமாக ஒன்று கூறுகிறோம். தமக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. மதக் குருக்களும், நிலப்பிரபுக்களும், பூர்ஷ்வாக்களும் கடவுளின் பெயரைக் கிளப்பி விட்டு - அவர்கள் சுரண்டல்காரர்கள் என்னும் முறையில் அவர்களுடைய நல உரிமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதை நாம் நன்கு தெளிவாக அறிவோம்.

- வி.இ. லெனின்
(மதத்தைதப்பற்றி எனும் நூல் பக்.103)

Read more: http://viduthalai.in/page-1/95720.html#ixzz3RRs5IJ4n

தமிழ் ஓவியா said...

இதோ ஒரு முதல் அய்.எஃப்.எஸ். பெண்மணி

இந்தியாவில் பெண்களின் நிலை குறித்து சுதந்திரத்திற்கு முன்பு பின்பு என இரண்டு வகைகளாக பிரிக்கலாம். பெண்ணுரிமைப் போராளிகள் எனப் படுபவர்கள் எல்லாம் மத ரீதியாக பெண்ணடிமைக்கு நியாயம் கற்பித்தனர்.

ஆனால் அக்கால கட்டத்தில் தந்தைபெரியார் ஒருவரே பெண்களை அடிமையாக்குவதில் முதலிடம் மதம் தான் என்று உறுதியாக கூறியது மட்டுமல்லாமல் தானே முன்னின்று பெண்ணுரிமைக்கான சமூகப்போரை வழி நடத்திச்சென்றார். அதன் பயனைத்தான் இன்று இந்தியாவில் உள்ள பெண்கள் அனுபவிக்கின்றனர்.

ஆனால் இதன் ஆரம்பகட்டம் மிகவும் கடுமையானதாக இருந்தது, அந்த ஆரம்ப கட்டபோராட்டத்தில் வெற்றிபெற்றவர்களும் அன்னை ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, போன்றோரை அனைவருக்கும் தெரிந்திருக்கும், அவர்களின் வரிசையில் முத்தம்மாவை பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்போதைய மதராஸ் மாகாணத்தில் பிறந்து சென்னை கிருஸ்தவ கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரியில் பயின்ற முத்தம்மா அவர்கள் அய்.எஃப்.எஸ் படிப்பைத் தொடர விரும்பினார். ஆனால் அன்றைய காலகட்டத்தில் பெண்கள் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் மற்றும் அய்.எஃப்.எஸ் ஆவது குதிரைக் கொம்பாகும்; அதை முறியடித்து இந்தி யாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி ஆனார் சி.பி. முத்தம்மா (1924_2009).

1949-ஆம் ஆண்டு இந்திய வெளி யுறவுதுறை அதிகாரியாக இருந்த முத் தம்மாவிற்கு அவரது பொது வாழ்க் கையில் பல்வேறு தடைகள் முக்கியமாக திருமணம் செய்யவேண்டும் என்றால் பதவியில் இருக்ககூடாது என்ற ஒரு விதி இருந்தது, இது மட்டுமல்ல பல்வேறு விதிகள் முக்கியமாக பெண் களுக்கு எதிரான விதிகள் இருந்தன.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் முத்தம்மா, மறைந்த கிருஷ் ணய்யர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது வெளியுறவுத் துறையில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை 8(2) பட்டவர்த்தனமாக காட்டுகிறது என்று கூறி
ஒரு பெண் திருமணத்துக்கு முன்னர் அரசின் அனுமதியைப் பெற வேண்டு மென்றால் ஒரு ஆண் அதிகாரியும் அத் தகைய அனுமதியைப் பெற வேண்டும் என்பது அவசியம்.

தமது குடும்பப் பொறுப்புகள் காரணமாக ஒரு பெண் தனது பணியைச் சரிவரச் செய்ய முடியாவிட்டால் அவரது பணி பறி போகும் என்றால் அந்த விதி, மணமான ஆணுக்குமல்லவா பொருந்தும்?

விதி 18 அரசியல் சாசனத்தின் 16-ஆம் பிரிவுக்கு முரண்பட்டதாகும். திருமண மான ஆண் வெளியுறவுத் துறையில் பணியிலமர்த்தப்படுவதை உரிமையாகக் கோரமுடியும் என்றால் திருமணமான ஆணுக்கும் அல்லவா அது பொருந்தும்? பெண்கள் பலவீனமானவர்கள் என்ற மனநிலை கொண்ட ஆணாதிக்கக் கலாச்சாரத்தின் தொடர்ச்சிதான் இந்த பாகுபாடு? சுதந்திரமும் நீதியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது வானது.

அரசியல் சாசனம் சொல்லுகிற சமநீதித்தத்துவம் நடைமுறையில் செயல் படுத்தப்படுவதில்லை என்பதை இந்த விதி கட்டுகிறது,என்றார். கிருஷ்ணய் யரின் இந்தத் தீர்ப்பை அடுத்து அந்த பிரிவு நீக்கப்பட்டது.

கோடானு கோடிப் பெண்களில் ஒரு முத்தம்மா எடுத்த துணிச்சலான நட வடிக்கை அரசுத்துறைகளின் சுதந்திரத் திற்கு பின்பும் இருந்த ஆணாதிக்க திமிர் ஒழிக்கப்பட்டது. அதன் பிறகு முத்தம்மா பல்வேறு உயர்பதவிகளைப் பெற்றார். 35 ஆண்டுகள் பணிக் காலத்தில் அரசு உயர் பதவிகளில் பெண்களுக்கான தடைகளை தேடிக் கண்டுபிடித்து அவற்றை நீக்க போராடினார்.

தனது பணி ஓய்விற்கு பிறகு அவர் செய்த காரியம் இந்தியாவின் பெரும் பணக்காரர்களை வியந்து பார்க்கவைத்தது. டில்லியில் முக்கிய இடத்தில் இருந்த தனது 15 ஏக்கர் நிலத்தை அன்னை தெரசாவின் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடை யாக வழங்கினார். அப்போதே அந்த இடம் பல கோடிகள் மதிப்பு கொண்ட தாகும். அரசுத் துறைகளின் பெண்களுக்கு எதிரான விதிகளை நீக்க அவர் எடுத்துக் கொண்ட போராட்டத்திற்கு உரமாக திகழ்ந்தது பெரியாரின் பெண்ணடிமை ஒழிப்பு போராட்டம் கொடுத்த ஊக்கமாகும்.

கருநாடகத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி கொடவா என்ற பிற்படுத் தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(அவரின் பிறந்த நாள் 24.1.1924)

Read more: http://viduthalai.in/page-1/95718.html#ixzz3RRsKokch

தமிழ் ஓவியா said...

இந்திய அறிவியல் கழகம்

இந்திய அறிவியல் கழகத்தின் 102 ஆவது கூட்டம் 5, ஜனவரி, 2015 அன்று மும்பையில் நடைபெற்றது. அதில் வேத அறிவியல் என்று சில மூட அறிவியல்களை பரப்பியதுமட்டுமன்றி உலக அறிவியல்களின் மூதாதையர்கள் இந்தியர்கள் என்றும், இவர்களின் கண்டுபிடிப்புகளை மேல்நாட்டார் கவர்ந்து சென்றது போன்றும் கருத் துக்களை பரப்பினர்.

இதனைச் சார்ந்து 06.01.2015 அன்றைய ஆங்கில இந்து நாளேட்டில் டி.கீதா அவர்கள் 'ஆசிரியருக்கு கடிதம்' பகுதியில் ஒரு அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்திருக்கிறார். அவர் குறிப்பிட் டவை: வேத கால அறிவியல் அறிக் கையில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு தொல்துறை நிபுணர்கள், வெட் டெழுத்து நிபுணர்கள் மற்றும் வர லாற்று வல்லுனர்கள் தகுந்த ஆதா ரத்தை வழங்குமாறு உரிமையுடன் கேட்க வேண்டும்.

கடந்த ஆண்டு புதுச்சேரி பல் கலையின் பேராசிரியர் ராஜன் அவர்கள் பொருந்தல் கிராமத்தில் கிடைக்கப் பெற்ற பழங்கால தாழிகளில் கண்ட 'தமிழி' எழுத்து வடிவினை ஆராய்ந்த தில் இந்திய மொழிகளின் வரிவடிவின் அடித்தளமே இந்த தமிழி எழுத்து வரிவடிவங்கள் தான்' என்று ஆணித் தரமாக நிரூபித்தார்.

இதனை சென் னையில் இயங்கும் தொல்லியல் துறை ஆதிச்சநல்லூரில் கிடைக்கப் பெற்ற முதுமக்கள் தாழியில் இருந்த வரிவடிவங்கள் வழியாக மேலும் உறுதி செய்தனர். வெப்பமிளிர்வு சோதனைக்கு உட்படுத்தியதில் பொருந்தல் கிராமத் தில் கிடைக்கப் பெற்ற பானை ஓடுகள் கி. மு 1000 ஆண்டுகளை சார்ந்ததாக்கும் என்று உறுதிப்படுத்தினார்.

இதனை மேலும் உறுதிசெய்ய இந்தத் தாழியை மைசூர் கிளை தொல்லியல் துறை, வெட்டெழுத்து வல்லுனர்களுக்கு அனுப்பப்பட்டது. அவர்களை உறுதி செய்யுமாறு மீண்டும் நினைவுபடுத் தினர். வந்த பதில் "அந்தத் தாழியைக் காணோம் தேடியும் கிடைக்கவில்லை" இது வேண்டுமென்றே செய்யப் பட்ட தகாத செயல் என்ற முடிவுக்குத் தான் வர முடிகிறது.

டி.கீதா, அய்தராபாத்.
நாம் அறிவது - தமிழின் தொன்மை யையும் அதன் சிறப்பையும் கண்டு பொறுக்காத இனங்கள் இன்னமும் உள்ளன.
தகவல்: சி.நடராசன்

Read more: http://viduthalai.in/page-1/95724.html#ixzz3RRskwq5T

தமிழ் ஓவியா said...

மதுவால் மதி மயக்கம்

கரூர் பேருந்து நிலையம் அருகே நல்ல குடிபோதையில் வந்த பள்ளிக் கூட மாணவர் ஒருவர், போதையின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தது பொதுமக்கள் அனைவரையும் அதிர வைத்தது. கருரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த ஒரு ஆட்டோ டிரைவரின் மகன் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது - வயது 17).

கரூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் +2 பயின்று வருகிறார். இதே பள்ளியில் +1 பயிலும் இவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதையின் உச்சத்திற்கு வந்த மாணவர்கள் சாலையை கடந்து பேருந்து நிலையத்திற்க்கு செல்ல முயன்றுள்ளனர்.

நண்பர்கள் இருவரும் கடந்து சென்ற நிலையில் போதையின் உச்சத்தில் இருந்த ராஜேஷ் திடீரென மயங்கி பேருந்து நிலைய நுழைவாயில் அருகே விழுந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி சீருடை யிலேயே பட்டப்பகலில் மது அருந்தி பாதை தவறிச் செல்லும் மாணவனை கண்ட பொதுமக்க்ள் மயங்கிக் கிடந்த மாணவனை எழுப்ப முயன்றனர்.

இதனிடையே அவனது நண்பர்கள் பெற்றோருக்குத் தகவல் அளித்ததன் பேரில் அவரது பெற்றோர் மாணவனை அழைத்துச் சென்றனர். வீதிக்கு வீதி மதுக் கடைகளைத் திறந்து வைத்தவர்கள் இந்தப் புகைப்படத்தைத் தவறாமல் பார்க்க வேண்டும்! பள்ளிச் சீருடையில் பட்டப்பகலில் மது போதையில் மயங்கி விழுந்த விவகாரம் கரூரில் பெற்றோர்களை கதிகலங்க செய்துள்ளது.

Read more: http://viduthalai.in/page-1/95725.html#ixzz3RRsrP7Xg