Search This Blog

5.2.15

இதுதான் வால்மீகி இராமாயணம் - 54

இதுதான் வால்மீகி இராமாயணம்
இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை.
வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.

அயோத்தியா காண்டம்

பதின்மூன்றாம் அத்தியாயம் தொடர்ச்சி

குகன் பரதனைப் புகழ்ந்தான். பரதன் இராமனை நினைத்து வருந்திக் குகனிருக்குமிடம் போனான். குகன் அவனுக்கு இராமன் படுத்திருந்ததும், இலக்குவன் புலம்பியதும் இராமன் தூங்கும்போது இலக்குவன் என்ன செய்துவிடுவானோ என்று சந்தேகித்துத்தான் வில்லேந்தி அவன் சென்ற இடங்களெல்லாம் அடிதோறும் பின் தொடர்ந்து சென்று இராமனைக் காத்திருந்ததும், (சருக்கம் 87) அவர்கள் சடைபூண்டு ஓடமேறியதும், தன் வேலைக் காரன் அவர்களை அக்கரை சேர்த்ததுமாகிய வரலாற்றை விவரித்துச் சொன்னான்.

அது கேட்ட பரதன் மூச்சற்று வீழ்ந்தான். கோசலை ஓடிவந்து, அய்யோ! இலக்குவனுக் காவது  இராமனுக்காவது ஏதாவது துன்பம் நேர்ந்ததா என்றழுதாள். பரதன் தெளிந்து அவளைத் தேற்றி, இராமன் படுத்த இடம் முதலியவற்றைக் கேட்டறிந்து புலம்பினான். அவன் அன்றுமுதல் மரவுரியுடுத்துச் சடைபூணத் துணிகிறான். மறுநாள் பரதன் கங்கையையடைந்து சேனையை நிறுத்திப் பரத்துவாசனைக் காணச் சென்றான்.

பரதன் ஆயுதங்களையும், நகைகளையும், சட்டை யையும், தலைப்பாகையையும் கழற்றிவைத்துவிட்டு வெண்பட்டணிந்து வசிட்டனை முன்னிட்டுச் சென்று பரத்துவாசனைக் கண்டான். அம்முனிவன் பரதனை இராமனைக் கொல்லவந்தாயோ? என வினவினன். பரதன் வருந்தினன். முனிவன் அவனைச் சோதிக்கவே கூறியதாகச் சொல்லி, அவனை அவனுடைய சேனையோடு தங்கி விருந்துண்ண வேண்டினன்.
பரத்துவாசன் யோக மகிமையால் விசுவகர்மன் மயன் முதலிய தச்சர்களையும், அரம்பை, மேனகை முதலிய தேவ தாசிகளையும், அப்சரசுகளாகிய பெண்களையும் அழைத் தான். மைரேயம், சுரா என்கின்ற சாராயங்களையும் வர வழைத்தான். நல்ல சோற்றுடன் மாமிசங்களையும் வரவழைத் தான். அதன் பயனாகத் தேவதைகள் எங்கும் நிறைந்துவந்து பரதனுக்கும் அவன் சேனைக்கும் வேண்டுவன உதவி னார்கள். பெண்கள் சிலர் பாடினார்கள், சிலர் ஆடினார்கள்.

பரதன் தன் மந்திரி பிரதானிகளுடன் வரிசையாக உட் கார்ந்தான். பிரமன் இருபதினாயிரம் தாசிப்பெண்களையும் குபேரன் இருபதினாயிரம் தாசிப்பெண்களையும், அனுப் பினார்கள். அவர்களில் மிக அழகானவர்கள் பரதன்முன் ஆடினார்கள். சில செடிகள் பெண்களின் உருவெடுத்துக் கொண்டு, உங்கள் விருப்பப்படி எங்களை அனுபவியுங்கள். கட்குடியில் விருப்பமுள்ளவர்களே! இந்த இனிமையான சாராயங்களைக் குடியுங்கள். இந்தச் சுத்தமான மாமிசங்களை உண்ணுங்கள் என்றன.
ஒவ்வொரு ஆண்மகனையும் ஏழெட்டுப் பெண்கள் கைப்பற்றிக் கொண்டு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிக் கால்பிடித்து, அலங்கரித்து, அந்தரங்கமாகச் சுரா முதலிய பானங்களைக் குடிக்கச் செய்தார்கள். பரதனுடன் வந்த யானைக்காரர்களும், குதிரைக்காரர்களும், மற்றவர்களும் அளவுக்குமிஞ்சிக் குடித்துப் புத்தி மயங்கித் தங்கள் வாகனங்கள் போனவிடந் தெரியாமல் மயங்கினார்கள். ஆட்டு மாமிசங் களும் பன்றி மாமிசங்களும் நிரம்பியி ருந்தன.

விசித்திர மாகப் பக்குவஞ் செய்யப்பட்ட மான், மயில், கோழி முதலிய பிராணிகளின் மாமிசங்கள் சூடான பானைகளில் குன்று களைப்போல் வைக்கப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் அவர்கள் உண்டுகளித்து அன்றிரவைக் கழித்தார்கள். விடிந்தவுடன் முனிவன் இராமனிருக்குமிடத்தைப் பரதனுக்குக் கூறினான்.

பரத்துவாசன் வினாவ, பரதன் கோசலையையும் சுமித்திரையையும் சுட்டிக்காட்டியும் தன் தாயாகிய கைகேயியைச் சுட்டும்போது அவளை இழித்தும் கூறுகிறான். பின் பரதன் விடைபெற்று ஒரு பல்லக்கிலேறிச் சேனைசூழச் சென்றான். சித்திரகூடமடைந்து ஓரிடத்தில் புகை கிளப்புவது கண்டு பரதன் தன் சேனையை நிறுத்தி அவ்விடத்தை நோக்கி இராமனைக் காணச் சென்றான். அச்சேனையால் துன்புறுத்தப்பட்ட மிருகங்கள் அக்காட்டைவிட்டு ஓடிப்போயின.

                           ---------------------"விடுதலை” 30-01-2015

Read more: http://viduthalai.in/e-paper/95219.html#ixzz3QJcKI5nj

**************************************************************************************
துதான் வால்மீகி இராமாயணம்

அயோத்தியா காண்டம்

பன்னிரெண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி

விடிந்தவுடன் முனிவன் இராமனிருக்குமிடத்தைப் பரதனுக்குக் கூறினான். பரத்துவாசன் வினாவ, பரதன் கோசலையையும் சுமித்திரையையும் சுட்டிக்காட்டித் தன் தாயாகிய கைகேயியைச் சுட்டும்போது அவளை இழித் துக் கூறுகிறான். பின் பரதன் விடைபெற்று ஒரு பல்லக்கி லேறிச் சேனைசூழச் சென்றான். சித்திரகூடமடைந்து ஓரிடத்தில் புகை கிளப்புவது கண்டு பரதன் தன் சேனையை நிறுத்தி அவ்விடத்தை நோக்கி இராமனைக் காணச் சென்றான். அச்சேனையால் துன்புறுத்தப்பட்ட மிருகங்கள் அக்காட்டைவிட்டு ஓடிப்போயின.

இராமன் சீதைக்கு வனத்தின் அழகைக் காண்பித்து மந்தாரின் நதியையும் காட்டி, பெண்ணே! அதோ சக்கர வாகப் பறவைகள் சம்போகத்திற்காக ஒன்றுக்கொன்று இனிய குரலுடன் அழைத்துச் சம்போக காலத்தில் உண்டாகும் அழகிய ஒலிகளை ஒலித்துக்கொண்டு ரதியின் பொருட்டு அந்தப்பூக்களின் மேல் ஏறுகின்றன. இந்தச் சித்திரக்கூடம் மிகவும் ஏகாந்தமான போகங்களை அனுபவிக்கும் இடமாக இருத்தலால், இது அயோத்தி யினும் இன்பந்தருகிறது. இந்நதி மிகவும் காமத்தை உண்டாக்குகிறது. நாமிருவரும் இதில் நீராடுவோம் என்று பலவாறு கூறி அவர்களுடன் திரிந்தான். இராமன் அங்கே ஓரிடத்தில் உட்கார்ந்து, சீதை! இதோ சுத்தமான மாமிசம் இருக்கிறது பார். இது சுவையுள்ளது, நன்றாக வெந்தது என்று தான் முதலில் சுவைபார்த்து அவற்றைச் சீதைக்குக் கொடுத்து மகிழ்வித்தான். அப்போது பல மிருகங்கள் சேனையைக் கண்டு அஞ்சி ஓடிவந்தன. அதன் காரணமறிய இராமன் தம்பியை ஏவினான். இலக்குவன் ஒரு மரத்திலேறிச் சேனையைக் கண்டு நெருப்பை அணை சீதை குகைக்குள் போகட்டும். போருக்குத் தயார் செய் என்று கூற, இராமன் அது யாருடைய தென்று வினாவப் பரதனுடைய தென்ற றறிந்து கூறி அவனை இகழ்ந்து, நாம் மலமேலேறியோ இங்கு நின்றோ சண்டை செய்வோம். இன்று நான் பரதனைக் கொல்லாமல் விடுவதில்லை என்றான். இராமன், பரதன் மிகவும் நல்லவன், அவன் அயோத்தி வந்ததும் என் துன்பம் அறிந்து கைகேயியை இகழ்ந்து ரைத்துத் தந்தையையும் இசைவித்து என்னை அழைத் துப்போக வருகிறான். மூத்த மகனுக்கே அரசுரிமை உண்டு என்பதை அவன் நன்றாக அறிவான். பரதன்  நம்மைப் பார்க்க விரும்புவது இந்தச் சயமத்திற்குத் தகுந்ததே. இதுவரை அவன் உனக்கு ஏதாவது கெடுதி செய்தது உண்டா? முன் தந்தையைக் கொல்வே னென்றாய், இப்போது அண்ணனைக் கொல்வேனென் கிறாய், உனக்கு அரசாட்சி வேண்டுமென்று விரும்பு கின்றாய் போலும்.

பரதனை நோக்கி, அரசை எனக்குக் கொடு என்றால் உடனேயே கொடுத்துவிடுவான் என்று கூறினான். இலக்குவன் உடனே வெட்கமடைந்தான். அவன், நமது தந்தை தான் அழைத்துப்போக வந்தாலும் வரலாம் என்று பேச்சை மாற்றப்பார்த்தான். இராமன் இருக்கலாம் ஆனால் நம் தந்தையின் வெண்குடையைக் காணேன். கீழே இறங்கு. பரதனிடம் நான் கூறுமாறு நடந்துகொள் என்று எச்சரித்தான். இலக்குவன் கீழிறங்கி வணக்கத்தோடும் நின்றான்.

பரதன் தனது சேனைகளை நிறுத்திவிட்டுக் கால் நடையாக இராமனைத் தேடிவந்தான். புகை வருமி டத்தை நோக்கிச் சத்துருக்கன் முதலியோரோடும் புலம்பிச் சென்று இராமனைக் கண்டான். இவ்வரலாற்றை ஆராய்வோம்.
பரதன் செயல்களினால் அவன் இராமனிடம் உண மையான அன்பு கொண்டிருந்ததாகக் தெரியவருகிறது. கங்கைக்கரையில் இராமன் ஒரு மரத்தடியில் படுத் திருந்ததைக்கேட்டுப் பரதன் மூச்சற்று வீழ்கிறான். இதைக் கண்ட கோசலை இராமனுக்காவது இலக்குவனுக் காவது ஏதோகேடு வந்ததுகேட்டே பரதன் துன்புறு கிறான் என எண்ணி அழுகிறாள். இது இயல்பேயா யினும், மூச்சற்றுக் கீழே வீழ்ந்த பரதனுக்கு மனத்துன்பம் போக்குமாறு தேடாமல் தன் மகனையே நினைப்பது அவளது சுயநலத்தையும் உண்மையின்மையையும் காட்டும்.

பரத்துவாச முனிவன் பரதனைக் கண்டதும், இராமனைக் கொல்லவா வந்தாய் என அவன் மனம் வருந்துமாறு கேட்டுவிட்டு, அவன் வருந்தித் துடிப்பதைக் கண்டு பேச்சை மாற்றி, யான் உன் உண்மையையறி வேனாயினும், உன்னைச் சோதிக்கவே வினாவினேன் என்று கூறுகிறான். இது அவனுடைய இழிமதியையே உணர்த்துகிறது. என்னை? முக்காலமும் உணர்பவனாகத் தன்னை கூறிக்கொள்ளும் முனிவன், பரதனுடைய உண்மையறிந்தும் அவன் மனம் வருந்துமாறு வினாவுவா னேன்? இது அவனது அறியாமையை உணர்த்து மன்றோ? இதனால் அம்முனிவனும் அவனையொத்த ஆரிய முனிவர்களும் முக்காலமும் அறிவார்கள் என்று புராண இதிகாசங்களில் ஆரியர் கூறுவது முழுப்பொய் என்பதும், ஆரியர்கள் தங்களுக்கு வலிமைத்துணையாம் தங்கள் முனைவர்களை நம்பி உலகினர் மயங்கி ஈடுபடுமாறு கட்டிவிடும் கதைகளே இவை என்பதும் தெளிவாக விளங்குகின்றனவல்லவா?

பரதன் கங்கைக்கரை வந்த அன்றே மரவுரியுடுத்தத் துணிகிறான் என்று குறித்த வால்மீகர், அதற்கு மாறாகப் பரத்துவாசனைக் காணச் சென்றபோது நகைகளையும், சட்டையையும், தலைப்பாகையையும் கழற்றி வைத்து விட்டு, வெண்பட்டணிந்து சென்றான் என்று கூறுவதால், அவன் தான் கூறியபடி செய்யாமல் இருக்கிறான் என்பதும், பரத்துவாசனை அடைந்தபோது கூட மரவுரியுடுத்தவில்லை என்பதும் புலனாகின்றன.

பரத்துவாசன் பரதனுக்கும் அவனுடைய சேனைக்கும் விருந்து செய்கிறான். அதில் பிரமன், குபேரன், இந்திரன், தாசிப்பெண்கள் வந்தததாகவும், அப்பெண்கள் சேனாவீரர் ஒவ்வொருவருக்கும் ஏழெட்டு பேராகக் கூடிக்கொண்டு முழுக்காட்டி, அந்தரங்கமாகக் கூடிச் சுரா முதலிய சாராயங்களை ஊட்டினார்களென்றும் தெரிய வருகிறது. பல செடிகள் பெண்ணுருவடைந்து அவர்க ளோடு கூடினவாம். ஆரியர் விருந்து மிக அழகிதே. உணரும், சாராயமும், கட்குடிகளம், பெண்கள சேர்க்கை யும் தான் அவர்கள் நடத்தும் விருந்தின் பெருமை போலும். அதிலும் அரசர்கள் நடத்தும் விருந்தில் வேண் டுமானால் தாசிப்பெண்கள் நடனமும் சேர்க்கையும் குடியும் இருந்தாலும், முனிவன் நடத்தும் விருந்திலுமா இந்தத்தப்பான இழிசெயல்கள் வேண்டும்? பரத்துவாசன் தனது தகவலிமையை நல்ல வழியிலேயே பயன்படுத்து கிறான்! ஒரு முனிவன் நடத்தும் விருந்திலேயே இவ்வளவு ஆபாச அட்டூழியங்களும் நடைபெற்றன வென்றால், அரசர்கள் நடத்தும் விருந்துகளும் ஆரியப் பொதுமக்கள் நடத்தும் விருந்துகளும் எவ்வளவு கேவலமாக இருந் திருக்க வேண்டும். பரதனுடைய சேனா வீரர்கள் குடித்து மயங்கிப் பெண்களோடு ஆடிக்கீழ் வீழ்ந்து தம் ஊர்திகள் போன இடம் கூடத்தெரியாமல் கிடந்தார்களாம். பரத்து வாசன் இத்தகைய இழிவான, அறிஞர் வெறுக்கத்தக்க, விருந்தை நடத்தி மகிழ்ந்து பெருமை பாராட்டினனாம். பரதன் முதலியோரும் அதைப் புகழ்ந்தனராம்.

ஆரியர் தம் விருந்து முறை மிக அழகியதே! நாம் முன் கட்டுரையில் எடுத்துக்காட்டிய மனு நூலால் கண்ட விருந்து முறைக்கு, இம்முனிவன் விருந்து ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டாகும் பரத்துவாசன் நடத்திய விருந்தில் ஆட்டு மாமிசங்களும், பன்றி மாமிசங்களும் நிரம்பியிருந்தனவாம். விசித்திரமாகப் பக்குவம் செய்யப்பட்ட மான், மயில், கோழி முதலிய பிராணிகளின் மாமிசங்கள் சூடாகப் பானைகளில் மலைகலைப்போல வைக்கப்பட்டிருந்தனவாம்.
                    ---------------- தொடரும்-------"விடுதலை” 3-2-2015

32 comments:

தமிழ் ஓவியா said...

இது என்ன கூத்து?

மத சுதந்திரம் தொடர்பான ஒபாமாவின் கூற்று துரதிருஷ்டமானது.
- உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

ஒபாமா சொன்ன கருத்து பொதுவாகச் சொல் லப்பட்டதுதானே தவிர, நம்மைப் பற்றியல்ல!
- பி.ஜே.பி. தலைவர் அமித்ஷா

Read more: http://viduthalai.in/e-paper/95648.html#ixzz3QyNvrepD

தமிழ் ஓவியா said...

சட்டம் போட்டால் போதுமா?

வாக்காளர்களுக்குப் பணமோ, பரிசுப் பொருளோ கொடுத்தால் இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ஏற்கெனவே நடைமுறையில் இருந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஓராண்டு என்றுதான் இருந்தது - இப்பொ ழுது ஈராண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இது வரவேற் கத்தக்கதுதான் என்றாலும் இதனால் மட்டும் எதிர் பார்க்கும் பலன் கிடைத்து விடுமா என்பது சந்தேகமே!

இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் பணம் பட்டுவாடா நடைபெற்றதே.

அதற்காக நடைமுறையில் இருந்து வந்த சட்டத்தின்படி ஓராண்டு தண்டிக்கப்பட்ட வர்கள் யார்? அப்படி ஒரு பட்டியல் இருக்கிறதா?

சில நேரங்களில் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தி கூட வெளிவந்ததுண்டு.

கைது என்ற செய்தி வெளிவந்ததே தவிர, நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, தீர்ப்பின் அடிப்படையில் யாராவது தண்டிக்கப்பட் டார்களா? இல்லை என்கிற போது இந்தச் சட்டத்தின் மூலம் மட்டும் கையூட்டுக் கொடுப்பது தடுக்கப்பட்டு விடும் என்று எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?

(பணத்தை நேரடியாகப் பட்டுவாடா செய்வதற்குப் பதில் டோக்கன் கொடுக்கிறார்களாம் - சட்டத்தை உடைக்க வழியா தெரியாது?).

பெரும்பாலும் ஆளும் கட்சியினர் தான் வாக் காளர்களுக்குப் பணம் கொடுப்பதில் முன்னணி வரிசையில் அணிவகுத்து நிற்கின்றனர். அப்படி இருக்கும் பொழுது காவல்துறை அவர்களைக் கைது செய்யும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? கச்சித மாகப் பணம் பட்டு வாடா செய்ய காவல்துறை பாது காப்பாக இல்லாமல் இருந்தாலே பெரிய காரியம்தான்.

நடந்து முடிந்த 16ஆவது மக்களவைத் தேர்தலில், தமிழ் நாட்டில் தேர்தல் ஆணையமே 144 தடை உத்தரவு பிறப்பிக்கச் செய்து, ஆளும் கட்சி, வாக்காளர் களுக்குப் பணம் பட்டுவாடா செய்ய நடை பாதை திறந்துவிட வில்லையா?

தேர்தல் முடிந்தவுடன் தமிழகத் தேர்தல் ஆணையர் என்ன சொன்னார்? வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது உண்மை. அதனைத் தடுக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையரே வெளிப் படையாக ஒப்புக் கொண்டாரே. அவர்மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ன?

இந்த அதிகார வர்க்கத்தை வைத்துக் கொண்டு எந்த சட்டம் போட்டாலும் வாக்காளர்களுக்கும் பணம் கொடுப்பதை எப்படித் தடுக்கமுடியும்?

நாட்டில் தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம் எந்தத் தரத்தில் இருக்கின்றன? என்பது கவனத்தில் கொள்ளப் பட வேண்டியதுதான்.

வாக்காளர்களே, வாக்களிக்க பணத்தை எதிர்பார்க் கும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளதா இல்லையா? பணம் கொடுப்பவர்கள் தான் இதற்குக் காரணமா? வாங்குப வர்கள் தான் காரணமா? என்பது பட்டிமன்றத்திற்குப் பொருத்தமான தலைப்பாக இருக்கக் கூடும்.

முறையான ஒரு சான்றிதழைப் பெறுவதாக இருந் தாலும் அடிமட்டத்திலிருந்து இலஞ்சம் தேவைப்படு கிறது ; இப்படி சம்பந்தப்

பட்ட அலுவலகங் களில் அறை போட்டு சதா அந்த வேலையில் ஈடுபடும் நிலை இருக்கின்றதே!

கடவுளுக்குக் கூட லஞ்சம் (நேர்த்திக்கடன்) கொடுத்தால் தான் வரம் கிடைக்கும் என்ற கேவலமான மனப்பான்மை தாண்டவமாடும் நாடு இது என்பதை மறந்து விட வேண்டாம்!

குடும்பக் கட்டுப்பாட்டுக்கு விளம்பரம் செய்தது போல எங்கு நோக்கினும் பிரச்சார ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டாமா? தொலைக் காட்சிகளில் அதற்கென நேரத்தை ஒதுக்கித் தலைவர் களையும், அறிஞர்களையும், சமூகப் பொறுப்பு வாய்ந்த சான்றோர்களையும் அழைத்துப் பேச வைத்தால் என்ன? அது ஓரளவுக்கு தாக்கத்தை உண்டாக்கத்தான் செய்யும். தந்தை பெரியார் பொதுக் கூட்டங்களில் மக்களைப் பார்த்து ஒரு கேள்வியை நாக்கைப் பிடுங்குமாறு கேட்பார்.

நீ பணம் வாங்கிக் கொண்டு தானே ஓட்டுப் போட்டாய்? உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் இலஞ்சம் வாங்கினான் என்று சொல்லுவதற்கு உனக்கு யோக்கிதை ஏது? உரிமை ஏது? முதல் போட்டவன் சம்பாதிக்க மாட்டானா? என்ற அடிப்படைக் கேள் வியை பொதுமக்களைப் பார்த்துக் கேட்பார் - அதற்கும் கை தட்டல் கிடைக்கும்.

தந்தை பெரியாரின் மற்றொரு கேள்வி மிகவும் முக்கியமானது. தேர்தலில் போட்டியிடும் வேட்பா ளர்கள் இவ்வளவுப் பணம்தான் செலவு செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது; தேர்தலில் போட்டி யிடுபவர்கள், அவர்கள் வெற்றி பெற்றவர்களாக இருந்தாலும், தோல்வியுற்றவர்களாக இருந்தாலும் சரி, தேர்தலில் செலவழித்த உண்மையான கணக்கைத்தான் காட்டுகிறார்களா? என்ற கேள்விக்குப் பிரதமராக இருந்தாலும், நாணயமாகப் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.

பணம் பெற்றுக் கொண்டுதான் செய்தி வெளியிட முடியும் என்கிற ஒழுக்கக்கேடு நிர்வாணமாக கூத்தாடும் ஒரு நாட்டில் வெறும் சட்டங்கள் ஏட்டுச் சுரைக் காயாகத்தான் இருக்க முடியும்.

பக்திப் பிரச்சாரத்துக்காக ஒதுக்கப்படும் காலத் தையும் கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கி வைத்து பொது ஒழுக்கத்தைப் பரப்புவதற்காக செயல்படட்டும்.

கண்டிப்பாக நல்லதோர் தாக்கம் ஏற்படத்தான் செய்யும்.

Read more: http://viduthalai.in/page-2/95650.html#ixzz3QyORrJxD

தமிழ் ஓவியா said...

பொருளல்ல...

மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும்.
(விடுதலை, 10.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/95649.html#ixzz3QyOadr8C

தமிழ் ஓவியா said...

கடவுள்பற்றி துணுக்குத் துக்கடா! சித்திரபுத்திரன்

சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி, எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்க மாட்டேன் என்கிறானே.

ராமன்: அதுமாத்திரம் அதிசயமில்லப்பா, பசியா வரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக் கிடக்கிறார். ஒருவன் கூட ஒருகை கூழ் ஊத்த மாட்டேங்கிறானே.

சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?

ராமன்: இதுதான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?

ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்ய முடியவில்லை என்றால் இது முட்டாள்தனமான சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?

அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட்டம் இருக்கிறதோ அதேபோல் சர்வ சக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனை நம்பச் செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.

- விடுதலை (22.2.1972)

Read more: http://viduthalai.in/page-7/95689.html#ixzz3QyPHt7iO

தமிழ் ஓவியா said...

இராமயண காலம் - பொய்

இராமாயணம் நடந்த காலம் திரேதாயுகம். திரேதா யுகம், துவாபர யுகம் இரண்டிற்கும், முறையே 12,96,000; 8,64,000 ஆண்டுகள். மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம்.

புத்தர் பிறந்து இன்றைக்கு 2500 ஆண்டுகள்தான் ஆகின்றன. இவ்விதம் 2500 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப் பற்றி திரேதா யுகத்தில் (21,00,000 ஆண்டு களுக்கு முன்) நடந்த இராமாயணத்தில் காணப்படுவன ஆதாரங் களுடன் கீழே தரப்படுகின்றன:- (சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு)

1. ராமனைப் பார்க்கவந்த பரதனிடம் ராமன் கேட்கும்போது பவுத்தன், சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங்களையும் தர்ம சாஸ்திரங் களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல், கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும் பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்ப வர்கள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
(அயோத்தி காண்டம் 100ஆம் சர்க்கம், 374ஆம் பக்கம்)

2. ராமன், ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்போது திருடனும், பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும் நாஸ்திகனுக்கும் பேதமில்லை என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(மேற்படி காண்டம் 109ஆம் சர்க்கம், 412ஆம் பக்கம்)

3. சீதையைத் தேடிச் சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்கு சற்று தூரத்திற்கப்பால் புத்தரின் ஆலயம் போல் கட்டப்பட்ட ஓர் உப்பரிகையைக் கண்டார்.
(சுந்தர காண்டம் 15ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)

4. வாலியிடம் ராமன் கூறும்போது, பூர்வத்தில் ஒரு பவுத்த சன்யாசி உன்னைப் போல் கொடிய பாபத்தைச் செய்து அதற்காக மாந்தாதா சக்ரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான் என்று சொன்னதாகக் குறிக்கப்பட்டுள்ளது.
(கிஷ்கிந்தா காண்டம் 18ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)

5. இராமனுக்கு தசரதன் பட்டாபிஷேகம் செய்ய நகரை அலங்கரிக்கும்பொழுது வெளுத்த மேகம் போன்ற தேவாலயங்கள், நாற்சந்தி மண்டபங்கள், வீதிகள் புத் தரின் ஆலயங்கள், மதிற்சுவரின் மேல் கட்டப்பட்டிருக்கும் நாற்கால் மண்டபங்கள்..... முதலிய இடங்களில் கொடித் துணியுள்ள துவஜங்களும், கொடித் துணியில்லாத துவஜங்களும் எடுத்துக் கட்டப்பட்டன எனக் குறிக்கப்பட்டுள்ளது.
(அயோத்தி காண்டம் 6ஆம் சர்க்கம், 23, 24ஆம் பக்கங்கள்)

21 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் இராமாயணக் கதையில் 2500 ஆண்டுக்குள் இருந்து வந்த புத்தரைப்பற்றிக் கூறுகிற சேதியைக் கொண்டு ஆராய்ந்தால் இராமாயணக் கதை 2500 ஆண்டுகளுக்குள்ளாகவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆதலால் இராமாயண காலம் என்பது பொய்யேயாகும்.

Read more: http://viduthalai.in/page-7/95690.html#ixzz3QyPY9shU

தமிழ் ஓவியா said...

ஆன்மா அடங்காத ஒன்றா?

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரி யங்களும் (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரயங்களும் (தொழிற்கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தாமாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?

ஆன்மா ரூபமுடையது என் பீரேல், சரீரப் பிரமாணத்ததா, அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!

ரூபம் அற்றது என்றாலோ ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ, இரு வகைத்தும், குற்றமே என்றறிக.

- (நீலகேசி, மொக்கலவாதச் சருக்கம், பக்கம் 3)

Read more: http://viduthalai.in/page-7/95692.html#ixzz3QyPiyWS3

தமிழ் ஓவியா said...

சாக்ரட்டீஸின் பொன்மொழிகள்

தங்கத்தைக் கண்டுபிடிக்கச் சுரங்கத்திற்குள் நுழைகிறவன் மரியாதையை பார்த்தால் முடியுமா? தங்கத்தை விட மேலான பொருளை அதாவது நீதியைத் தேடி கண்டுபிடிக்க நாங்கள் புறப்பட்டிருக்கிறோம். இதில் மரியாதையை பார்த்துக் கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடு வோமா?
***************
நீதிக்கு நான் மிக உயர்ந்த ஸ்தானம் கொடுக்கிறேன். அதாவது எந்த விஷ யத்தை அந்த விஷயத்திற்காகவும் அதன் விளைவு களுக்காகவும் நேசிக்கிறோமோ அந்த மாதிரியான விஷயங்களில் ஒன்றாக நீதியை நான் கருதுகிறேன்.
***************
ஒரு மனிதனுக்கு எந்தத் தொழிலைச் செய்ய இயலுகையிலேயே ஒரு திறமை இருக்கிறதோ அந்தத் தொழிலை மட்டும் அவன் செய்து கொண்டு போனால் நல்லது.
***************
விபரீதமான குற்றங்களைச் செய்கிற கடவுளர்களை சிருஷ்டித்து அந்தக் கடவுள்களின் கதைகளைச் சிறுவர் களுக்கு சொல்லிக் கொடுப்போமானால் அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு விடுகிறார்கள் தெரியுமா? கடவுளர்களே பல குற்றங்களை செய்திருக்கிறபோது நாமும்தாம் செய்தாலென்ன! என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.

இந்த மாதிரியான கதைகளை நாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது. தவிர, ஒரு தெய்வத்திற்கு விரோதமான மற்றொரு தெய்வம் சதி செய்வதாகவோ, யுத்தம் செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லலாகாது. ராட்சதர்களோ அல்லது தேவர்களோ ஒருவருக் கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது.

மனிதர்கள் ஒருவரை யொரு வர் நேசிக்க வேண்டுமென்றும், ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், இதை போன்ற நீதிகளைப் புகட்டுகிற கதைகளையே சொல்ல வேண்டும்.
***************
அதிகமான செல்வமோ அதிகமான வறுமையோ தங்கள் ராஜ்யத்திற்குள் வரவொட்டாதபடி அரசர்கள் பாதுகாக்க வேண்டும். அதிக செல்வத்தினால் ஆடம்பரத் தன்மையில் சோம்பேறித்தனமும் உண்டாகும். அதிக வறுமையினால் புரட்சியும், இழிதகைமையும், துரோகமும் ஏற்படும்.

Read more: http://viduthalai.in/page-7/95691.html#ixzz3QyPt7u3O

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கிரகங்கள்

நமது உடலை சரியான முறையில் இயற்கை யாகவே பராமரித்து வரும் எச்சில், கல்லீரல், இரைப்பை நீர், குடல் நீர், கண் நீர் சுரப்பி, வியர்வைச் சுரப்பி போன்ற நாள முள்ள சுரப்பி நீர் களை ராகு - கேதுவை தவிர ஏனைய ஏழு கிரகங் களும் கட்டுப்படுத்துகின் றன என்று மருத்துவ ஜோதிடர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித் துள்ளனர்.

- தினகரன் ஜோதிட மலர் 4.2.2015

ராகு, கேது என்ற கிரகங்கள் இல்லை என் பது வானியல் அறிவியல் சொல்லும் ஆணித்தர மான கருத்து.

மருத்துவ ஜோதிடர்களாமே - அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? மருத்துவமும் ஜோதிட மும் எதிர்முனைகள் அல்லவா!

Read more: http://viduthalai.in/page1/95626.html#ixzz3QyQU3NYU

தமிழ் ஓவியா said...

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் பாரதிதாசன் பாடல்களை நீக்குவதா?

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் தொலைதூர கல்வி பாடத்திட்டத்தில் முதுகலை தமிழ் முதலாமாண்டு பாடத்தில் இக்காலஇலக்கியம் எனும் பகுதியில் இடம் பெற்றுள்ள பாரதிதாசன் பாடல் வரிகளான தமிழியக்கம் கவிதை தொகுப்பு கடந்த 2004ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

பத்து ஆண்டு களுக்கு பிறகு இப்போது சென்னை ஆழ்வார்ப் பேட்டை, சர்.சி.பி ராமசாமி (அய்யர்) சாலையை சேர்ந்த பார்ப்பனர் ஒருவர் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்குழு தலைவர் திரு சோம. கலியமூர்த்தி அவர்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மேற்கண்ட புரட்சிக் கவிஞரின் தமிழியக்கம் பாடல்களை நீக்க வேண்டும், இல்லை யென்றால் தங்கள் மீதும், நிர்வாகத்தின் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.அதற்கு பதிலளித்த துணைவேந்தர் (பொறுப்பு) முறைப்படி கடிதம் அனுப்பாமல், சொல்வதை மட்டுமே வைத்து நீக்க முடியாது, எனவே, தங்களின் சார்பில் வேண்டுகோள் கடிதம் அனுப்பினால் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்க, அந்தப் பார்ப்பனரும் உடனடியாக தனது வேண்டு கோளை இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார்.

உடன் அதற்கான நடவடிக்கை நடக்க உள்ளது என்ற தகவலறிந்த திராவிடர் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், பாரதிதாசன் தமிழ் பேரவை, பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி, பகுத்தறிவாளர் கழகம் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பாரதிதாசன் பாடல்களை நீக்கக் கூடாது என்று அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் பொறுப்புக்குழு தலைவர் திரு சோம. கலியமூர்த்தி அவர்களிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இதனிடையே கடந்த 02.02.2015 அன்று காரைக்குடி வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் மூலம் இத்தகவல் அறிந்து அன்று மாலை காரைக்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் இது குறித்து பேசும் போது புரட்சிக்கவிஞர் பாடல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டவை; அதை நீக்கிட துணைவேந்தருக்கும் அதிகாரமில்லை, அரசுக்கும் அதிகாரமில்லை.

எனவே, திராவிடர் கழகம் இது தொடர்பாக நடத்தும் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு அளிக்கும், போராடும் என்று பேசினார். இதனிடையே வரும் 12.02.2015 அன்று நடக்கவுள்ள அழகப்பா பல்கலைகழக ஆட்சிமன்றக் குழு கூட்டத் தில் இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்து நீக்கும் முயற்சி எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இதை தடுத்து நிறுத்த காரைக்குடியில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

மத்தியில் பாரதீய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி அமைந்து விட்டது என்றவுடன் இந்தப் பார்ப்பனர்களின் தலைகளில் அதிகாரத் திமிர் என்னும் கொம்பு முளைத்து விட்டதாகவே திமிருகிறார்கள் - முட்டித் தள்ளக் குதியாட்டம் போடுகிறார்கள்.

பல்கலைக் கழகத்தில் எந்தப் பாடத்தை வைப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை இந்தப் பார்ப்பனர்களுக்கு யார் கொடுத்தார்கள்?

அறிவியலுக்கு முரணாக பித்தாபிறை சூடி பெருமானே! (தலையில் சந்திரனை சூடியிருக்கும் சிவபெருமானே!) என்ற பாடல்களை எல்லாம் பாடத் திட்டத்தில் சொல்லிக் கொடுக்கும் பொழுது பகுத் தறிவுச் சிந்தனை வளம் கொழிக்கும் புரட்சிக் கவிஞர் பாடல்கள் பல்கலைக் கழகத்தில் இடம் பெறக் கூடாதா?

குற்றலாக் குறவஞ்சியில் ஒரு பாடல்:
காதலஞ் செழுத்தார் போதநீ றணியார்
கைந்நரம் பெடுத்துக் கின்னரம் தொடுத்தப்
பாதகர் தோலால் பலதவி லடித்துப்
பறவைகள் படுக்கும் குறவனும் நானே
என்று குற்றாலக் குறவஞ்சியில் திரி கூட ராசப்பக் கவிராயர் பாடியுள்ளார்.

அடியார்கள் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி வழுத்தும் சிவபெருமான் திருநீற்றை அணியாதவர் களின் கைந் நரம்பினை எடுத்துக் கின்னரம் என்ற யாழில் தொடுத்து, நீறில்லா நெற்றியினுடைய தீவினை யாளர்களுடைய (பாவிகளுடைய) தோலினால் செய்யப்பட்ட தவிலினை அடித்துப் பறவைகளைப் பிடிக்கின்ற குறவனும் நானே! என்பது இப்பாடலின் பொருள். மேல்நிலைப் பள்ளிகளில் இப்பாடல் வைக்கப் பட்டதுண்டு அதைப்பற்றியெல்லாம் இந்த அறிவுக் கொழுக்கட்டைக் கண்டு கொள்ளாதது ஏன்?

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம், தமிழர் ஒருவரின் நன்கொடையால் உருவானது. அத்தகு பல்கலைக் கழகத்தில் ஒரு தமிழ்க் கவிஞரின் பாடல் களை நீக்க முயலுவது கண்டிக்கத்தக்கது. மீறினால் கடும் போராட்டம் வெடிக்கும் எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page1/95597.html#ixzz3QyQhGnU3

தமிழ் ஓவியா said...

ஆயுதம்!

கொஞ்சத் தண்டனையானாலும், அதிகத் தண்டனையானாலும் அது எதற்காக ஏற்பட்டது என்றால், ஒரு குற்றத்தைச் செய்தவன் மேலும் (மறுமுறை) அக்குற்றத்தைச் செய்யாமல் இருப்பதற்குப் பயன்படும் ஆயுதம்தான் அது.
(விடுதலை, 13.01.1965)

Read more: http://viduthalai.in/page1/95596.html#ixzz3QyQsEvKM

தமிழ் ஓவியா said...

முதலில் மனைவியுடன் சேர்ந்து வாழுங்கள்!

பிறகு ஊருக்கு உபதேசம் செய்யலாம் மோடிக்கு அரியானா பெண்கள் அறிவுறுத்தல்

ஜின்த், பிப்.8-_ அரி யானா மாநிலம், ஜின்த் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு ஒன்று முதலில் மோடி தனது மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து காட்டிய பிறகு ஊருக்கு உபதேசம் செய்யட்டும் என்று கூறியுள்ளது. அரியானா மாநிலத் தில் சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை யைக் காப்பாற்றுங்கள், பெண் குழந்தையை படிக்க வையுங்கள் என்ற முழக்கத்துடன் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தி சில திட்டங்களை அறி வித்தார். அங்கு பேசும் போது அரியானாவில் தான் பெண்கள் நிலை மிகவும் மோசமாக உள் ளது. இங்கு தான் பெண் களை கணவன்கள் சரி யாக நடத்த மறுக்கி றார்கள்; பெண்கள் சமூக அக்கறையின்றி வாழ் கிறார்கள் என்று பேசி னார். மாதம்தோறும் 10,000 கடிதங்கள் மோடிக்கு!

இதற்கு அரியா னாவைச் சேர்ந்த பல் வேறு அமைப்புகள் கண் டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் அரி யானா ஜின்த் மாவட்டத் தில் உள்ள பெண்கள் அமைப்பு முதலில் மோடி தனது மனைவியுடன் வாழ்ந்து காட்டட்டும் என்று கூறியிருந்தனர். மேலும் அவர்கள் வாரம் ஒரு முறை மோடிக்கு மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டி 10000 கடிதங்கள் எழுதுவோம். அவர் தனது மனைவி யுடன் சேர்ந்து வாழும் வரை நாங்கள் தொடர்ந்து விடாமல் கடிதம் எழுது வோம் என்று கூறியிருந் தனர். மேலும் அவர்கள் கூறியதாவது: உலகப் புகழ் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா, விளை யாட்டு வீராங்கனை சானியா நெய்வால், ஹாக்கி வீராங்கனை சுமன் பால், மல்யுத்த வீராங்கனை சுமன் கத்து போன்றோர் அரியானா பெண்கள்தான், உங்களது அமைச்சரவையில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்களும் அரியானாவைச் சேர்ந்த வர்கள் தான். மேலும் இந்தியாவிலேயே அதிக அளவில் அயல்நாடு சென்று பெரிய பதவியில் இருக்கும் பெண்களில் அரியானாவைச் சேர்ந் தவர் தான் அதிகம். பெண்களுக்கு எதிரான நிலை அரியானாவில் மாத்திரம் இல்லை, இந்தியா முழுவதும் இந்த நிலை உள்ளது. ஆனால் எங்கள் மாநிலத்தை மாத் திரம் சுட்டிக்காட்டியுள் ளார். ஒபாமாவைப் பார்த்தாவது திருந்த வேண்டாமா?

சமீபத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு வந்திருந் தார். அவர் இரண்டு முறையும் தனது மனைவி யுடன் வருகை தந்தார். இது அவர் இந்த உலக மக்களுக்கு கூறும் சிறந்த எடுத்துக்காட்டாக கருது கிறேன் என்று அவரே கூறுகிறார். எந்த ஒரு அயல்நாட்டுச் சுற்றுப் பயணத்திற்குச் சென் றாலும் தனது மனை வியை அழைத்துச் செல் லாமலிருப்பதில்லை. அவரை தனது நண்பர் என்று பெருமையுடன் கூறிக்கொண்டு இருக்கும் மோடி அவரிடம் இருந்து குடும்பவாழ்க்கையில் மனைவியின் முதன்மைத் துவம் பற்றி தெரிந்திருக்க வேண்டாமா? முதலில் திருமணம் பிறகு சில ஆண்டு மண வாழ்க்கை அதன் பிறகு அந்தப் பெண்ணை தனி மையில் விட்டுவிட்டு வெளியேறியவர் அந்த பெண்ணின் நிலையைப் பற்றி சிறிதாவது சிந்தித் துப் பார்த்தாரா? பெண்களின் நிலை பற்றிப் பேசும் முன் தான் அதற்கு எடுத்துக்காட் டாக இருக்கவேண்டும். முதலில் தனது மனை வியை அழைத்து வந்து குடும்பம் நடத்திவிட்டு, ஊருக்கு உபதேசம் செய் யட்டும்! அவர் தனது மனைவியை அழைத்து வந்து குடும்பம் நடத்தும் வரை வாரத்திற்கு 10,000 கடிதங்கள் தொடர்ந்து எழுதுவோம் என்று கூறி னார்கள் மேலும் ஜின்த் மாவட்டத்தில் உள்ள பல்வா என்ற சிற்றூரைச் சேர்ந்த ஜில்லா பரிஷத் தலைவி சுரீந்தர் தேவி கூறும்போது விரைவில் நாங்கள் எங்கள் ஜில்லா பரிஷத்தின் மூலம் மோடி தன் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று தீர்மானம் இயற்ற வற் புறுத்துவோம் எனக் கூறினார்கள்.

இந்தப் பெண்களின் கோரிக்கை குறித்து அரி யானா பாஜக எந்த கருத் தும் கூற மறுத்துவிட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/95831.html#ixzz3R9bvfYfo

தமிழ் ஓவியா said...

கணவனின் வருவாயை அறிய தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்படி மனைவிக்கு உரிமை உண்டு
மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

புதுடில்லி, பிப். 8_ கணவனின் சொத்து விவ ரங்கள், முதலீடுகள் மற் றும் பிற சொத்துகள் உள் ளிட்ட பல்வேறு வருவாய் குறித்த தகவல்களை அறிய தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி மனை விக்கு உரிமை உள்ளது என்று மத்திய தகவல் ஆணையம் அளித்தத் தீர்ப்பில் கூறி உள்ளது.

குடும்ப வன்முறை பாதிப் புக்கு ஆளாகிய மனைவி யின் மனுவின்மீதான வழக் கில் மத்திய தகவல் ஆணை யம் அளித்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அந்த வழக்கில் தனி நபர் வரு வாய் என்பது தனிப்பட்ட தகவல் என்று வாதிடப் பட்டது. அப்பெண்ணின் கணவன் பணிபுரியும் டில்லி டிரான்ஸ்கோ நிறு வனத்துக்கு கணவன் வருவாய் குறித்து, அவர் மனைவியின் வாழ்வாதார உரிமைக்குத் தேவையான தகவலை அளிக்க ஆணை யம் உத்தரவு பிறப்பித்துள் ளது. தகவல் பெறும் உரி மைச்சட்டத்தின்கீழ் தனிப் பட்டவர்களின் தகவலை அளிக்கக்கூடாது என்பதி லிருந்து விதிவிலக்காக மனைவிக்கு கணவனின் வருவாய்குறித்த தகவல் அளிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் வரதட் சணையாக அளிக்கப்பட் டது உள்பட கணவனின் சொத்து விவரங்கள், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முயன் றது, மனைவியை பொரு ளாதார ஆதரவின்றி கைவிட்டது உள்ளிட்ட வைகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்து தகவல்களை மனைவி கேட்டுள்ளார்.

தீர்ப்பில் கூறும்போது, தனிப்பட்ட பிரச்சினை என்று பார்க்காமல் பொதுப் பிரச்சினையாகவே இதைப்பார்க்க வேண்டும் என்று தகவல் ஆணையர் எம்.சிறீதர் ஆச்சார்யலு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும் போது, டில்லி டிரான்ஸ்கோ நிறுவனத்திடம் ஒரு பெண் கேட்டுள்ள தகவல் களை அளிக்காமல் தள்ளி விட முடியாது.

தனிநபர்குறித்த தகவல் பாதுகாப்பு என்பதைத் தாண்டி, ஒரு அரசு அலு வலரின் பொதுவான கடமை என்பதில் குடும்ப வன்முறை என்றில்லாமல் மனைவி மற்றும் குழந் தைகளை பராமரிக்கும் பொறுப்பு உள்ளது. கண வனின் வருவாய் குறித்த தகவலை மனைவிக்கு 48 மணி நேரத்துக்குள் டிரான்ஸ்கோ நிறுவனம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் டில்லி உயர்நீதிமன்ற உத்தரவில் கசம் சர்மா எதிர் மகிந்தர் குமார சர்மா வழக்கில் மத்திய தகவல் ஆணை யம் எடுத்துக்காட்டி உள் ளது. டில்லி உயர்நீதிமன்றம் கணவன் மற்றும் மனை வியின் வருவாய், சொத்து மற்றும் முதலீடுகள் குறித்த உறுதிமொழி ஆவணங் களை அளிக்க உத்தர விட் டது. அதற்கு முன்னதாக தனிப்பட்டவர்களின் தகவல் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

பொருளாதாரத்தில் சார்பு நிலைகுறித்தும், பெற்றோர்கள் ஆதரவின் றியும், கணவனின் பரா மரிப்பு இன்றியும் உள்ள மனைவி, தன்னுடைய வாழ்வாதார உரிமையை சவாலாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே இத்தகவல்கள் மனைவி யின் வாழ்வாதார உரிமை யைப் பொருத்துள்ள தாகும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/95854.html#ixzz3R9coyNWh

தமிழ் ஓவியா said...

ஆந்திராவில் பெரியார், பகத்சிங் படங்களுடன் பகுத்தறிவு வினாக்களுக்கு விடை அளித்தால் ரூ.10 லட்சம் பரிசு

கடவுளை மற! மனிதனை நினை!! (தேவுன்னி தொலகிஞ்சு, மானவத்வான்னி ரக்ஷிஞ்சு) வாசகங் களுடன் உள்ள நெகிழி (பிளக்ஸ் பேனர்) ஆந்திர மாநிலம் கடப மாவட்டம், "ப்ரொத்தட்டூரு" எனும் ஊரில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அதில் (பேனரில்) இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு: இவை மூட நம்பிக்கைகள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

* பேய்கள், பூதங்கள், ஆத்மா, மறுபிறப்பு, சொர்க்கம்-நரகம், - ஆகியவை முழுக்க முழுக்க கற்பனைகளே!

* மந்திரங்கள், மகிமைகள், செய்வினை, பாணாமதி போன்ற அனைத்தும் உண்மையே அல்ல!

* வாஸ்து, சோதிடம், எண் கணித சாத்திரம், அதிருஷ்ட மோதிரங்கள், திவ்விய வைரங்கள், இராசி பலன்கள்! * தன லட்சுமி, குபேர மந்திரங்கள், வீட்டு தோஷங்கள், யக்ஞ-யாகங்கள் - அனைத்தும் அய்-டெக் மோசடிகள் * பர லோகம், சுவிசேஷ பிரார்த்தனைகளின் ஊடாக நோய்களைத் தீர்த்தல்...

* சாமியாடுதல் கடவுள் அருளால் நிகழ்வதல்ல - ஹிஸ்டீரியா எனப்படும் மன-உள நோய் (பிரமை)

* பாபாக்கள், சுவாமிஜிக்கள் ஆகியோர் மகிமைகளின் பெயரால் செய்யும் தந்திரங்களே! (மந்திரமல்ல-தந்திரமே)

* மதக் கிரந்தங்கள் அனைத்தும் மனித இன கற்பனைகளே;

* கடவுளர் உறையும் கோயில்கள், மனிதனின் நிர்மாணங்களே, கட்டுமானங்களே!
மேலே சொல்லப்பட்டுள்ளவை அனைத்தும் அறிவியல் அடிப்படையானவை என நிரூபித்தால், உறுதி/அறுதிப்படுத்தினால் - ரூ. பத்து இலட்சம் பரிசு!

*பிரஜா மக்கள் நாத்திக அமைப்பு, ஆந்திரப் பிரதேச கிளை, கடப மாவட்டம், ப்ரோத்தட்டூரூ கிளை மாநிலப் பேரவையின் ஒத்துழைப்புடன் ... மக்கள் புரட்சி மேடை.

- தகவல்: கோரா.

Read more: http://viduthalai.in/page-8/95853.html#ixzz3R9cwgeKE

தமிழ் ஓவியா said...

தகாத வார்த்தைகளில் 19 நிமிடம் திட்டிய ராஜபக்சே! அந்தரங்கத்தை அம்பலப்படுத்தும் சந்திரிகா!!

கொழும்பு, பிப்.7 இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே முதல் முறையாக பொறுப்பேற்ற போது அவருக்கு வாழ்த்து சொன்னதற்காக, தம்மை தகாத வார்த்தைகளால் 19 நிமிடம் திட்டினார் என்று அந்நாட்டின் முன் னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க குற்றம்சாட்டி யுள்ளார். மேலும் ராஜ பக்சேவின் அந்தரங்க வாழ்க்கை பற்றி, நான் விவரித்த போது தொலை பேசி இணைப்பை அவர் துண்டித்து விட்டார் என்றும் சந்திரிகா கூறியுள் ளார். இலங்கை அதிபர் தேர்தலை முன்வைத்து மீண்டும் அரசியல் களத் தில் பரபரப்பானவர் முன் னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க. அவர் அண் மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி யில் கூறியுள்ளதாவது:

நான் அதிபர் பதவியி லிருந்து ஓய்வு பெறும் நேரத்தில் அடுத்த அதிபர் வேட்பாளராக ராஜபக் சேவை நிறுத்தினேன். அப்போது இருந்த ஆளும் கட்சி உறுப்பினர்களில் 61 பேரில் 56 பேர் ராஜபக் சேவை அதிபர் வேட்பாள ராக நிறுத்த வேண்டாம். அவர் கட்சித் தலைமைக்கு பொருத்தமற்றவர் எனவும் தெரிவித்தனர். ஆனால் அவர் தனது தவறுகளை உணர்ந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்குவார் எனும் நம்பிக்கையில் நானும், இன்னும் மூவரும் அவரை அதிபர் வேட் பாளராக நியமித்தோம். அவரோ, ரணில் விக்ரம சிங்கவுடன் இணைந்து கொண்டு, எனக்கு எதிராக பேசுவது உள்ளிட்ட பல் வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ராஜபக்சே முதல் முறையாக அதிப ராகப் பொறுப்பேற்ற பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தொலைபேசியில் பேசி னேன். அப்போது, அவர் என்னை 19 நிமிடங்கள் தொடர்ச்சியாக தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார். நான் அமைதி யாக அவர் கூறியவற்றை யெல்லாம் கேட்டு விட்டு, குறிப்பிட்ட சிலர் மட்டுமே அறிந்த அவரின் வாழ்க்கை ரகசியத்தை கூறினேன். உடனே அவர் தொலை பேசி அழைப்பை துண் டித்து விட்டார். பின்னர் மகிந்த ராஜபக்சே என்னை சிறிது சிறிதாக பழிவாங்கினார். என்னை, அரசின் இல்லத்திலிருந்து வெளியேற்றுவதற்காக எனக்கு எதிராக வழக்கும் தொடர்ந்து, என்னை மிகவும் கேவலப்படுத்தி னார்.

எனினும் அவரால் அந்த வீட்டை பறிக்க முடியாது போய்விட்டது. இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகாலமாக அவர் நடத்திய அரசியல் சீரழிவு களை பொருட்படுத்த முடியாமல் பல்வேறு தரப் பினர் என்னை மீண்டும் அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தினர். ஆனால் மீண்டும் ஒருமுறை, நான் அரசியலுக்கு வர விரும் பாததினால் இந்நாட்டை கட்டியெழுப்ப சிறந்த தலைமைத்துவம் ஒன்று வேண்டும் என தீர்மா னித்து அதற்கு ஏற்றாற் போல் தற்போதைய அதி பர் மைத்திரிபால சிறீ சேனவை நியமித்தேன். இவ்வாறு சந்திரிகா குமார துங்க கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/95758.html#ixzz3R9dsiOt4

தமிழ் ஓவியா said...

கோட்சே விவகாரம்பற்றி ஏன் வாயைத் திறக்கவில்லை?

மகாராட்டிர காங்கிரசு எம்.பி., மோடிக்குக் கடிதம்

மும்பை, பிப்.9 இந் துத்துவா அமைப்புகள் நாடு முழுவதும் நாதுராம் கோட்சேவை வீர நாய கனைப்போல் தற்போது சித்தரித்துக்கொண்டு இருக்கின்றனர், அகிம்சை யின் அடையாளமான காந்தியாரை கொலை செய்தவனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறித்து மோடி என்ன சொல்லப் போகிறார் என்று மகாராஷ்டிராவை சேர்ந்த மாநிலங்களவை உறுப் பினர் ஹுசைன் தால்வி கடிதம் ஒன்றை எழுதி யுள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சிபீடத்தில் அமர்ந்த தில் இருந்து இந்துத்துவா அமைப்புகள் நாட்டின் அமைதிக்கு பங்கம் விளை விக்கும் வகையில் பொது இடங்களில் பேசி வரு கிறது; இது குறித்து உலக நாடுகளும் தற்போது கண்டனம் கூறத் தொடங்கி விட்டன.

இந்த நிலையில் மகாராஷ்டி ராவைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் ஹுசைன் தால்வி இவ் விவகாரம் குறித்து மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பாஜக கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சி பீடத்தில் அமர்ந் தது, அது ஆட்சி பீடத் தில் அமர்ந்தது முதலே இந்துத்துவ அமைப்புகள் சிறுபான்மையினருக்கு எதிராக பேசிவருகின் றனர்.

பாலத்திற்கு கோட்சேயின் பெயரா?

இந்துத்துவ அமைப்பு களின் தாய் அமைப்பான இந்து மகாசபா மிகவும் பாதகமான ஒரு செயலை கையிலெடுத்து அது குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு கோட்சே வின் பிறந்த நாளை மிக வும் சிறப்பாக கொண் டாட அனைவரையும் பொது இடத்திற்கு அழைக்கிறது, சிலைகள் அமைக்க முடிவு செய் கிறது. சமீபத்தில் ராஜஸ் தான் மாநிலத்தில் புதி தாக கட்டப்பட்டுக் கொண்டு இருக்கும் ஒரு பாலத்திற்கு நாதுராம் கோட்சே பெயர் வைக்கப் பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலக நாடுகளால் அகிம்சையின் அடையாள மாக பார்க்கப்படும் காந் தியாரைக் கொன்ற ஒருவனுக்கு இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இன்று ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது? அதுவும் மத் தியில் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் பாஜகவிற்கு நட்புறவாக உள்ள ஒரு அமைப்பு திடீரென கோட்சேவை புனிதமாக்க முயற்சி செய்வது ஏன்? மகாராஷ்டிரா வில் கோட்சே திரைப்படம், புத்தகம், கோட்சே நாட கம் என பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. காந்தியிரைக் கொன்ற கொலைகார னுக்கு ஏன் திடீரென இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் இந்தியாவின் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் மோடி(நீங்கள்) இந்துத்துவா அமைப்பு களின் செயலுக்கு எந்த ஒரு பதிலும் கூறாமல் அமைதிகாத்து வருகிறீர் கள்? இதன் தொடர்ச்சி யாக கோட்சேவிவகாரம் வந்துள்ளது. ஆகையால் இந்தச் செயலுக்குத் தங் களின் நிலை என்ன என் பதை உடனடியாக மக் களிடையே தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட் டுக் கொள்கிறேன் என தனது கடிதத்தில் குறிப் பிட்டிருந்தார்.

Read more: http://viduthalai.in/page1/95757.html#ixzz3R9e2NBpI

தமிழ் ஓவியா said...

அறிவோடு சிந்திக்க...

புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் என்று ஒன்று இல்லை; அது இருக்கவேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.
(விடுதலை, 23.1.1968)

Read more: http://viduthalai.in/page1/95740.html#ixzz3R9eHmKwc

தமிழ் ஓவியா said...

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில்
பாரதிதாசன் பாடல்களை நீக்குவதா?: கலைஞர் கண்டனம்

சென்னை, பிப்.7_ காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இக்கால இலக்கியம் என்ற தலைப்பில் இடம் பெற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைத் தொகுப்புக்கு வாய்ப்பு இல்லை என்பதை திராவிட முன்னேற்றக் கழகமும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது என தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட கேள்வி _ பதில் வடிவிலான அறிக்கை:
கேள்வி :- காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் பாரதிதாசன் பாடல்களை நீக்குவதா என்ற தலைப்பில் 5.-2-.2015 அன்று விடுதலை தலையங்கம் ஒன்று தீட்டியிருக்கிறதே? கலைஞர் :- நானும் அதைப் படித்தேன்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் தொலை தூரக் கல்விப் பாடத் திட்டத்தில் முதுகலைத் தமிழ் முதலாமாண்டு பாடத்தில் இக்கால இலக்கியம் எனும் பகுதியில் இடம் பெற்றுள்ள பாரதிதாசன் பாடல் வரிகளான தமிழியக்கம் கவிதைத் தொகுப்பு பத்தாண்டுகளுக்கு மேலாக இடம் பெற்றிருந்ததை நீக்க வேண்டுமென்று வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பதை அறிந்த திராவிடர் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், பாரதிதாசன் தமிழ்ப் பேரவை, பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி, பகுத்தறிவாளர் கழகம் போன்ற அமைப்புகளின் சார்பில் அந்தப் பல்கலைக் கழகத் துணை வேந்தரிடம் அதற்கு எதிராக மனு அளித்திருப்பதாகவும், காரைக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத்தின் போராட்டத் திற்கு தங்களின் ஆதரவு உண்டு என்று தெரிவித் திருப்பதாகவும், பல்கலைக் கழகம் பாரதிதாசனின் பாடல்களை நீக்க நடவடிக்கை எடுத்தால் போராட்டம் நடைபெறு மென்றும் அந்தத் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. இக்கால இலக்கியம் என்ற தலைப்பில் இடம்பெற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைத் தொகுப்புக்கு வாய்ப்பு இல்லை என்பதை திராவிட முன்னேற்றக் கழகமும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது என்பதுதான் நமது முடிவு. பேருந்துக் கட்டணத்தை குறைக்க வேண்டும்

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியபோது, அதைக் காரணம் காட்டி பேருந்துக் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு படிப்படியாகக் குறைத்து வருகிறது. ஆனால், அதிமுக அரசு பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க முன் வரவில்லை. டீசல் விலை குறைவு காரணமாக ஒடிசா மாநில அரசு பேருந்துக் கட்டணத்தைக் குறைத்து அறிவித்துள்ளது. லாரிகளின் வாடகைக் கட்டணத்தை, லாரி உரிமையாளர்கள் ஒரு டன்னுக்கு ரூ.300 வரை குறைத்துள்ளனர்.

எனவே, தமிழக அரசும் பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். அம்பேத்கர் சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்று வலியுறுத்தி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

அடிப்படை வசதிகள் கோரி உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய, ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கதாகும் என்று கலைஞர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/95773.html#ixzz3R9eXBwBh

தமிழ் ஓவியா said...

வெற்றிக்குறி

திருச்சியில் உயர் திருவாளர் எம்.டி. சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சீர்திருத்த திருமண நிகழ்ச்சியைப் பற்றிய செய்தி பிறிதோரிடம் பிரசுரிக்கப்பட்டு உள்ளது. நமதன்பர் சோமசுந்தரம் அவர்கள் சென்னை அரசாங்க அமைச்சர் கனம் பி. டி. ராஜன் அவர்களது சிறிய தந்தை யென்பதும், தொண்டை மண்டல முதலியார் என்று சொல்லப்படும் வகுப்பைச் சேர்ந்தவரென்பதும் நேயர்கள் அறிந்ததே.

அன்னார் தலைமையில் புரோகிதம் ஒழிந்து சீர்திருத்தத் திருமணம் நடந்ததானது மேற்படி சமூகத்தில் ஒரு பெரும் புரட்சியையுண்டாக்கி விட்ட தென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இந்தச் சமூகத்தார் தாங்கள் ஜாதியில் உயர்ந்தவர்கள் என்ற இறுமாப்புக் கொண்டிருப்பதோடு புரோகிதத்தையோ, வைதிக மதாச்சார சடங்குகளையோ எக்காரணங் கொண்டும் கைவிட ஒறுப்படாதவர்கள்.

அத்தகைய ஒரு பெரிய வகுப்பில் புரோகிதம் ஒழிந்த சீர்திருத்தத் திருமணம் நடந்ததென்றால், அது நமதியக்கத் திற்கு மகத்தான வெற்றி என்றே கூற வேண்டும். நமதியக்கக் கொள்கைகள் நாட்டில் எவ்வளவு மலிந்து வருகின்ற தென்பதோடு நமது கொள்கைகள் திட்டங்கள் யாவும் மக்களுக்குத் தங்கள் தினசரி வாழ்க்கைக்குப் பயன்படத்தக்க இன்றியமையா தனவாய் இருக்கின்றன வென்பது நன்கு புலனாகும்.

நமது கொள்கைகள் நாடெங்கும் பரவி சர்வ வியாபகமாக வேண்டுவதற்குப் பார்ப்பனியக் கோட்டை களும், சைவக் கோட்டைகளும் தகர்த்தெறியப்பபட வேண்டுமென நாம் பன்முறையும் இடித்திடித்துக் கூறிவந்திருக்கிறோம்.

தலைவரவர்கள் தனது முன்னு ரையில் சுயமரியாதை உலகெலாம் பரவவேண்டுமென அவாவுவதையும், இத்தகைய மணங்கள் நாட்டிற்கு எவ்வகையிலும் புதிதன்று எனவும், இது பழங்கால முறையே என்றும் குறித்திருப்பதைப் பாராட்டுவதோடு இத்தகையத் திருமணங்கள் ஏராளமாக நடைபெற வேண்டுமென்றும் விரும்புகிறோம்.
குடிஅரசு - துணைத் தலையங்கம் - 03.07.1932

Read more: http://viduthalai.in/page1/95751.html#ixzz3R9eri9hI

தமிழ் ஓவியா said...

ஏழைகள் கண்ணீர்

தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி பரிதவிக்கும் மக்கள் ஏழை மக்களே யாவார்கள். அதிலும் தொழிலாளர்கள் படும் துயரத்தைச் சொல்லத் தரமன்று. ஒவ்வொரு யந்திரசாலை களிலும், தொழிற்சாலைகளிலும் வேலையாட்களைக் குறைத்துக் கொண்டே வருவதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலையற்றவர்களாக வெளி யேறுகின்றனர்.

நமது நாட்டுத் தொழிலாளர்கள் பெரும்பாலும், அநேகமாக, எல்லோருமே தினச் சம்பளம் பெறுகின்றவர் களாயிருந்தாலும், வாரச்சம்பளம் பெறுகின்றவர்களாயிருந் தாலும், மாதச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், அவர்கள் அந்தக் கூலியைக் கொண்டு ஜீவனஞ் செய்கின்ற வர்கள் தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.

இதைத் தவிர அவர்களுக்கு வேறு பூதிதியோ, ரொக்கப் பணமோ இல்லை. அநேகர் குடியிருக்கவும் சொந்த குடிசை இல்லாமல், குடிக்கூலிக்கு வாழ்ந்து வருபவர்கள், இத்தகைய நிலையில் உள்ளவர்களைத் திடீரென்று வேலையும் இல்லையென்று வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டால், அவர்களின் கதி என்னாவது என்று கேட்கின்றோம். எங்கும் பணப் பஞ்சம் மக்களை வாட்டுகிற காலத்தில் அவர்கள் தங்கள் பெண்டுபிள்ளைகளைக் காப்பாற்றுவது எப்படி?

இன்று பணக்காரர்களோ நிலச்சுவான்தார்களோ, முதலாளிகளோ மற்றும் யாராயிருந்தாலும் அனைவரும் சவுக்கியம் அனுபவிப்பதற்குக் காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் நாட்டில் தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கும், வியாபாரம் வளர்வதற்கும், காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் இருந்தும் அவர்கள் நிலை என்ன?

இருக்க இடமில்லாமலும் உடுக்க உடை யில்லாமலும், உண்ண உணவில்லாமலும், பெண்டு பிள்ளை களுடன் பட்டினிக் கிடந்து நோயால் வருந்தி பரிதவிப் பதுதான் அவர்கள் கண்ட பலன்.

இன்று ஒவ்வொரு ரயில்வே கம்பெனிகளிலும் ஆட்களைக் குறைத்து வருவதுடன் இன்னும் குறைப் பதற்கும் திட்டம் போட்டு வருகிறார்கள். இது போலவே அரசாங்கத்தின் அதிகாரத்திலுள்ள தொழிற்சாலை களிலும் தனிப்பட்ட முதலாளிகளின் ஆதிக்கத்திலுள்ள தொழிற் சாலைகளிலும் ஆட்களை குறைத்து வருகிறார்கள்.

ஆனால் இக் கம்பெனிகளிலும் தொழிற்சாலைகளிலும் உள்ள ஆயிரம், இரண்டாயிரம் என்று சம்பளம் பெறும் உத்தி யோகஸ்த்தர்களைக் குறைக்கக் காணோம். ஏழைத் தொழி லாளர்களின் வயிற்றில் மண்போட்டு பெரிய உத்தியோகஸ் தர்களின் பணப் பெட்டிகள் நிரப்பப்படுகின்றன.

தொழிலாளிகளைக் குறைப்பதைக் காட்டிலும், தொழில் நேரத்தைக் குறைத்து, விடுமுறை நாளை அதிகப்படுத்தி சம்பளத்தைக் குறைத்துக் கொடுப்பதன் மூலம் தொழிலாளர் களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுவதைத் தற்கால சாந்தியாக நிவர்த்திக்கலாமென்று தொழிலாளர்களின் தலைவர்கள் சிலர் கூறும் யோசனை சிறந்த யோசனையே யாகும்.

இந்த யோசனைக்கு ஏனைய தொழிலாளர்களும் சம்மதிப்பதாகவும் அறிகின்றோம். இவ்வாறு செய்வதனால் தொழிலாளர்கள் அரை வயிற்றுக் கஞ்சியாவது குடித்துக் கொண்டிருக்க முடியும். இந்த முறையையாவது, தொழிலாளர் களைக் குறைத்துதான் ஆக வேண்டுமென்ற நிர்பந்தத்திற்கு உள்ளாகும் கம்பெனிகளும் அரசாங்கமும், முதலாளிகளும் கைப்பற்றுவார்களானால் ஒருவாறு தற்சமயம் அவர்கள் துயரம் நீங்கும் என்றே கூறலாம். ஆனால் இது நிறை வேறுமா என்றுதான் கேட்கிறோம்.

சுயராஜ்யத்திற்கு என்றும் சுதேசிக்கு என்றும் பொது பாஷைக்கு (இந்தி) என்றும் கூச்சல் போட்டு தேசாபிமானி களாக விளங்குகின்றவர்கள் யாரும் ஏழைத் தொழிலாளர்கள் விஷயத்தில் ஒன்றும் கவலை எடுத்துக் கொள்ள காணோம். அரசாங்கமும் அவர்கள் துயரை நீக்க முன்வரக் காணோம்.

இந்த நிலையிலேயே தொழிலாளர் துயரமும் வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டே போகுமானால் கடைசியில் பெரும் ஆபத்தாக முடியுமென்று எச்சரிக்கை செய்கின்றோம். ஆகையால் இப்பொழுதே முதலாளிகளும், மாகாண அரசாங்கங்களும், இந்திய அரசாங்கமும், தொழிலாளர்களின் துன்பத்தை நீக்கத் தாமதமின்றி முயற்சி எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

-குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.08.1932

Read more: http://viduthalai.in/page1/95752.html#ixzz3R9f0ujOy

தமிழ் ஓவியா said...

நம்பிக்கையில்லாத் தீர்மானம்

செல்வாக்கோ, வன்மையோ பெற்ற எந்தக் கட்சியே யாயினும் எந்த இயக்கமே யாயினும் அதிலுள்ள அங்கத் தினருள் அபிப்பிராய பேதங்கள் எழுவதும், இருப்பதும் சர்வ சாதாரணம். உண்மையுணர்ந்து அத்தகைய அபிப்பிராய பேதங்கள் பரிகரிக்கப்பட்டால் பின்னர் ஆக்க வேலைகள் தீவிரமாய் நடைபெறுவதும், சரித்திர சம்பந்தமான, யாரும் மறுக்க முடியாத உண்மைகளாகும்.

உலகெங்கும் இத்தகைய சம்பவங்கள் நடப்பதைக் கேட்டும் கண்டும் வருகிறோம். இத்தகைய சம்பவங்கள் கட்சியின் முன்னேற்றத்தையும் பலத்தையும் குறிக்கிற தேயன்றி வேறில்லை. பார்ப்பனரல்லாதார் கட்சி ஆதிக்கத்திலிருப்பதும் பார்ப்பனரல்லாத மந்திரிசபை அதிகாரத்திலிருப்பதம் இக்கட்சியை ஒழிக்க அதிகாரத்தைக் குலைக்க எதிரிகள் செய்யும் சூழ்ச்சிகளும் விஷமங்களும் எண்ணிறந்தன.

இதன் உண்மையறியாது நம் மக்கள் இன்னும் ஏமாந்தே வருகின்றனர். சில தினங்களுக்குமன் சென்னை அரசாங்க மந்திரி கனம் முனுசாமி நாயுடு அவர்கள் மீது நம்பிக்கை இல்லைத் தீர்மானம் கொண்டு வருவதாக இருந்த விஷயமே தக்க சான்றாகும். அதற்காகக் கூடிய தென்னிந்திய நலவுரிமைச்சங்க நிர்வாகக் கமிட்டியின் கூட்ட நடவடிக்கைகளைப் பிறிதோரிடம் பிரசுரித்துள்ளோம்.

யாராயிருந்தபோதிலும் தங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லவும், குறையைத் தெரிவித்துக் கொள்ளவும் உரிமை உண்டு என்பதை நாம் ஒப்புக் கொண்டபோதிலும், இந்தியாவுக்கு வழங்கப்போகும் சீர்திருத்தங்கள் பிரதாபத் தில் இருக்கின்றன. கட்சி பலத்தை உத்தேசித்து ஏகோபித்த ஆக்க வேலையில் ஈடுபட வேண்டிய பொழுது இத்தகை யதோர் சம்பவம் நடந்ததையறிய உண்மையில் வருந்துகிறோம்.

அஃதெவ்வாராயினும் இத்தகையதோர்த் தீர்மானம் கொணர்ந்த அங்கத்தினரே முன்யோசனையுடனும், பகுத்தறிவுடனும் நடந்து மேற்படி தீர்மானத்தை வாபஸ் வாங்கிக் கொண்டதறிய சந்தோஷிக்கிறோம். பார்ப்பனரல்லாதார் கட்சி கட்டுக் குலைந்து போகப் போகிறது என்று அகந்தையும், வீராப்பும் கொண்டிருந்த எதிரிகள் சூடுண்ட பூனை போலடங்கினறென்றே சொல்லு வோம்.

பார்ப்பனரல்லாத மக்கள் ஒருமைப்பட்டு ஆக்க வேலையில் முழு மனதுடன் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறோம்.
குடிஅரசு - துணைத்தலையங்கம் - 21.08.1932

Read more: http://viduthalai.in/page1/95753.html#ixzz3R9fA6Tsc

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

மனிதன் பகுத்தறிவுவாதி; வளர்ச்சிக்கு உரியவன். அவன், வாழ்க்கையைச் சுமையாக, அமைத்துக் கொள்ளக் கூடாது. மனிதச் சுதந்திரத்திற்கும் கவலையற்று வாழ்வதற்கும் ஏற்ற முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும்... எனவே, மனித வாழ்வு பெண்டாட்டி கட்டிக் கொண்டு குட்டி போட்டுக் கொண்டு,

காப்பாற்ற மட்டும் என்று எண்ணாமல், மனிதச் சமுதாய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாடுபடுவதுதான் என்பதை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும்.

நம்மைப் பற்றி நாமேதான் கவலை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். நம் கையூன்றி நாமேதான் கரணம் போடவேண்டும். நமக்காக வாதாடுகிறவர்களோ நமக்கு உதவி செய்கிறவர்களோ யாரும் இல்லை.

நம்முடைய வேலை மிகக் கடினமானது. அதற்கு யாருடைய உதவியும் ஆதரவும் நமக்குக் கிடையாது. ஆனால் நாம் கடைசிவரை போராடித்தான் தீர வேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/95756.html#ixzz3R9fGtUHm

தமிழ் ஓவியா said...

காதல் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதத்தை கட்டாயமாக்க முடியாது
மதுரை உயர்நீதிமன்றம் கருத்து

மதுரை, பிப். 7_ காதல் திருமணத்தின்போது பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், வாழ்க்கை துணையை தேடிக் கொள்ள உரிமை உண்டு என கூறி யுள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர்நீதி மன்றம் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கவுரவ கொலைகள், காத லால் தற்கொலை, கடத் தல் போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவற்றை தடுக்க அரசு தவறிவிட் டது. காதல் என்ற பெய ரில் சிலர் வீட்டை விட்டு வெளியேறி, பிற ஜாதி யினரை திருமணம் செய்கின் றனர்.

திருமணம் முடிந்த சில மாதங்களில் வரதட் சணை கேட்டு கொடு மைப்படுத்தும் நிலையும் உள்ளது. இதனால் பெண் கள் பெருமளவு பாதிக்கப் படுகின்றனர். வன்முறை கூட ஏற்படுகிறது. காதல் திருமணம் செய்வோருக்கு பெற்றோரின் ஆதரவு கிடைப்பதில்லை.

தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட கவுரவ கொலை கள் நடந்துள்ள நிலையில், அதை தடுக்க அரசு உறு தியான நடவடிக்கை எடுக்க வில்லை. இவற்றை தடுக் கும் விதமாக ஒவ்வொரு கலப்பு திருமணத்தையும் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் பதிவு செய்யக் கூடாது எனவும், பெற்றோர் உடன் வருவதை கட்டா யப்படுத்த வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசா ரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், எஸ்.தமிழ் வாணன் ஆகியோர், அர சியலமைப்பு சட்டப்படி ஒருவருக்கு, அவரது வாழ்க் கைத் துணையை தேடிக் கொள்ள உரிமை உண்டு. இதில் நீதிமன்றம் தலை யிட முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என உத்தரவிட்டனர்.

Read more: http://viduthalai.in/page1/95793.html#ixzz3R9fcWiwq

தமிழ் ஓவியா said...

யார் அந்த விஷமிகள்?

தேர்தல் நேரமாக இருந்தாலும், தலைவர்களின் சிலைகளை மூடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் சிறீரங்கத்தில் தந்தை பெரியார் சிலையை மட்டும் மூடிய அதிகாரிகள் யார்?

திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.சேகர் உயர்நீதிமன்ற ஆணையைக் காட்டி எடுத்துச் சொன்னபின், தந்தை பெரியார் சிலை மீது மூடியிருந்த துணி அகற்றப்பட்டது.

உயர்நீதிமன்ற ஆணைக்கு விரோதமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?

Read more: http://viduthalai.in/page1/95795.html#ixzz3R9foKQqW

தமிழ் ஓவியா said...

ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப் படுகின்றதோ அவைகளையெல்லாம் மாற்றுவதுதான் உண்மையான சுயமரி யாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர, அரசனுக்குப் பதிலாகப் பார்ப்பானை ஏற்றி வைப்பதும், பார்ப்பானுக்குப் பதிலாகப் பணக்காரனைப் பட்டத்தில் வைப்பதும் ஒரு நாளும் சுயமரியாதையாகாது; இவையெல் லாம் சுயநல மரியாதையேயாகும்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page1/95752.html#ixzz3R9fyqc2G

தமிழ் ஓவியா said...

சட்டம் போட்டால் போதுமா?

வாக்காளர்களுக்குப் பணமோ, பரிசுப் பொருளோ கொடுத்தால் இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ஏற்கெனவே நடைமுறையில் இருந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஓராண்டு என்றுதான் இருந்தது - இப்பொ ழுது ஈராண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இது வரவேற் கத்தக்கதுதான் என்றாலும் இதனால் மட்டும் எதிர் பார்க்கும் பலன் கிடைத்து விடுமா என்பது சந்தேகமே!

இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் பணம் பட்டுவாடா நடைபெற்றதே.

அதற்காக நடைமுறையில் இருந்து வந்த சட்டத்தின்படி ஓராண்டு தண்டிக்கப்பட்ட வர்கள் யார்? அப்படி ஒரு பட்டியல் இருக்கிறதா?

சில நேரங்களில் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தி கூட வெளிவந்ததுண்டு.

கைது என்ற செய்தி வெளிவந்ததே தவிர, நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, தீர்ப்பின் அடிப்படையில் யாராவது தண்டிக்கப்பட் டார்களா? இல்லை என்கிற போது இந்தச் சட்டத்தின் மூலம் மட்டும் கையூட்டுக் கொடுப்பது தடுக்கப்பட்டு விடும் என்று எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?

(பணத்தை நேரடியாகப் பட்டுவாடா செய்வதற்குப் பதில் டோக்கன் கொடுக்கிறார்களாம் - சட்டத்தை உடைக்க வழியா தெரியாது?).

பெரும்பாலும் ஆளும் கட்சியினர் தான் வாக் காளர்களுக்குப் பணம் கொடுப்பதில் முன்னணி வரிசையில் அணிவகுத்து நிற்கின்றனர். அப்படி இருக்கும் பொழுது காவல்துறை அவர்களைக் கைது செய்யும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? கச்சித மாகப் பணம் பட்டு வாடா செய்ய காவல்துறை பாது காப்பாக இல்லாமல் இருந்தாலே பெரிய காரியம்தான்.

நடந்து முடிந்த 16ஆவது மக்களவைத் தேர்தலில், தமிழ் நாட்டில் தேர்தல் ஆணையமே 144 தடை உத்தரவு பிறப்பிக்கச் செய்து, ஆளும் கட்சி, வாக்காளர் களுக்குப் பணம் பட்டுவாடா செய்ய நடை பாதை திறந்துவிட வில்லையா?

தேர்தல் முடிந்தவுடன் தமிழகத் தேர்தல் ஆணையர் என்ன சொன்னார்? வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது உண்மை. அதனைத் தடுக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையரே வெளிப் படையாக ஒப்புக் கொண்டாரே. அவர்மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ன?

இந்த அதிகார வர்க்கத்தை வைத்துக் கொண்டு எந்த சட்டம் போட்டாலும் வாக்காளர்களுக்கும் பணம் கொடுப்பதை எப்படித் தடுக்கமுடியும்?

நாட்டில் தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம் எந்தத் தரத்தில் இருக்கின்றன? என்பது கவனத்தில் கொள்ளப் பட வேண்டியதுதான்.

வாக்காளர்களே, வாக்களிக்க பணத்தை எதிர்பார்க் கும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளதா இல்லையா? பணம் கொடுப்பவர்கள் தான் இதற்குக் காரணமா? வாங்குப வர்கள் தான் காரணமா? என்பது பட்டிமன்றத்திற்குப் பொருத்தமான தலைப்பாக இருக்கக் கூடும்.

முறையான ஒரு சான்றிதழைப் பெறுவதாக இருந் தாலும் அடிமட்டத்திலிருந்து இலஞ்சம் தேவைப்படு கிறது ; இப்படி சம்பந்தப்

பட்ட அலுவலகங் களில் அறை போட்டு சதா அந்த வேலையில் ஈடுபடும் நிலை இருக்கின்றதே!

கடவுளுக்குக் கூட லஞ்சம் (நேர்த்திக்கடன்) கொடுத்தால் தான் வரம் கிடைக்கும் என்ற கேவலமான மனப்பான்மை தாண்டவமாடும் நாடு இது என்பதை மறந்து விட வேண்டாம்!

குடும்பக் கட்டுப்பாட்டுக்கு விளம்பரம் செய்தது போல எங்கு நோக்கினும் பிரச்சார ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டாமா? தொலைக் காட்சிகளில் அதற்கென நேரத்தை ஒதுக்கித் தலைவர் களையும், அறிஞர்களையும், சமூகப் பொறுப்பு வாய்ந்த சான்றோர்களையும் அழைத்துப் பேச வைத்தால் என்ன? அது ஓரளவுக்கு தாக்கத்தை உண்டாக்கத்தான் செய்யும். தந்தை பெரியார் பொதுக் கூட்டங்களில் மக்களைப் பார்த்து ஒரு கேள்வியை நாக்கைப் பிடுங்குமாறு கேட்பார்.

நீ பணம் வாங்கிக் கொண்டு தானே ஓட்டுப் போட்டாய்? உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் இலஞ்சம் வாங்கினான் என்று சொல்லுவதற்கு உனக்கு யோக்கிதை ஏது? உரிமை ஏது? முதல் போட்டவன் சம்பாதிக்க மாட்டானா? என்ற அடிப்படைக் கேள் வியை பொதுமக்களைப் பார்த்துக் கேட்பார் - அதற்கும் கை தட்டல் கிடைக்கும்.

தந்தை பெரியாரின் மற்றொரு கேள்வி மிகவும் முக்கியமானது. தேர்தலில் போட்டியிடும் வேட்பா ளர்கள் இவ்வளவுப் பணம்தான் செலவு செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது; தேர்தலில் போட்டி யிடுபவர்கள், அவர்கள் வெற்றி பெற்றவர்களாக இருந்தாலும், தோல்வியுற்றவர்களாக இருந்தாலும் சரி, தேர்தலில் செலவழித்த உண்மையான கணக்கைத்தான் காட்டுகிறார்களா? என்ற கேள்விக்குப் பிரதமராக இருந்தாலும், நாணயமாகப் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.

பணம் பெற்றுக் கொண்டுதான் செய்தி வெளியிட முடியும் என்கிற ஒழுக்கக்கேடு நிர்வாணமாக கூத்தாடும் ஒரு நாட்டில் வெறும் சட்டங்கள் ஏட்டுச் சுரைக் காயாகத்தான் இருக்க முடியும்.

பக்திப் பிரச்சாரத்துக்காக ஒதுக்கப்படும் காலத் தையும் கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கி வைத்து பொது ஒழுக்கத்தைப் பரப்புவதற்காக செயல்படட்டும்.

கண்டிப்பாக நல்லதோர் தாக்கம் ஏற்படத்தான் செய்யும்.

Read more: http://viduthalai.in/page1/95650.html#ixzz3R9guC1tj

தமிழ் ஓவியா said...

கடவுள்பற்றி துணுக்குத் துக்கடா! சித்திரபுத்திரன்

சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி, எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்க மாட்டேன் என்கிறானே.

ராமன்: அதுமாத்திரம் அதிசயமில்லப்பா, பசியா வரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக் கிடக்கிறார். ஒருவன் கூட ஒருகை கூழ் ஊத்த மாட்டேங்கிறானே.

சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?

ராமன்: இதுதான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?

ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்ய முடியவில்லை என்றால் இது முட்டாள்தனமான சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?

அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட்டம் இருக்கிறதோ அதேபோல் சர்வ சக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனை நம்பச் செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.

- விடுதலை (22.2.1972)

தமிழ் ஓவியா said...

சாக்ரட்டீஸின் பொன்மொழிகள்

தங்கத்தைக் கண்டுபிடிக்கச் சுரங்கத்திற்குள் நுழைகிறவன் மரியாதையை பார்த்தால் முடியுமா? தங்கத்தை விட மேலான பொருளை அதாவது நீதியைத் தேடி கண்டுபிடிக்க நாங்கள் புறப்பட்டிருக்கிறோம். இதில் மரியாதையை பார்த்துக் கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடு வோமா?
***************
நீதிக்கு நான் மிக உயர்ந்த ஸ்தானம் கொடுக்கிறேன். அதாவது எந்த விஷ யத்தை அந்த விஷயத்திற்காகவும் அதன் விளைவு களுக்காகவும் நேசிக்கிறோமோ அந்த மாதிரியான விஷயங்களில் ஒன்றாக நீதியை நான் கருதுகிறேன்.
***************
ஒரு மனிதனுக்கு எந்தத் தொழிலைச் செய்ய இயலுகையிலேயே ஒரு திறமை இருக்கிறதோ அந்தத் தொழிலை மட்டும் அவன் செய்து கொண்டு போனால் நல்லது.
***************
விபரீதமான குற்றங்களைச் செய்கிற கடவுளர்களை சிருஷ்டித்து அந்தக் கடவுள்களின் கதைகளைச் சிறுவர் களுக்கு சொல்லிக் கொடுப்போமானால் அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு விடுகிறார்கள் தெரியுமா? கடவுளர்களே பல குற்றங்களை செய்திருக்கிறபோது நாமும்தாம் செய்தாலென்ன! என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.

இந்த மாதிரியான கதைகளை நாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது. தவிர, ஒரு தெய்வத்திற்கு விரோதமான மற்றொரு தெய்வம் சதி செய்வதாகவோ, யுத்தம் செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லலாகாது. ராட்சதர்களோ அல்லது தேவர்களோ ஒருவருக் கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது.

மனிதர்கள் ஒருவரை யொரு வர் நேசிக்க வேண்டுமென்றும், ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், இதை போன்ற நீதிகளைப் புகட்டுகிற கதைகளையே சொல்ல வேண்டும்.
***************
அதிகமான செல்வமோ அதிகமான வறுமையோ தங்கள் ராஜ்யத்திற்குள் வரவொட்டாதபடி அரசர்கள் பாதுகாக்க வேண்டும். அதிக செல்வத்தினால் ஆடம்பரத் தன்மையில் சோம்பேறித்தனமும் உண்டாகும். அதிக வறுமையினால் புரட்சியும், இழிதகைமையும், துரோகமும் ஏற்படும்.

Read more: http://viduthalai.in/page1/95691.html#ixzz3R9hd1o7p

தமிழ் ஓவியா said...

ஆன்மா அடங்காத ஒன்றா?

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரி யங்களும் (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரயங்களும் (தொழிற்கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தாமாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?

ஆன்மா ரூபமுடையது என் பீரேல், சரீரப் பிரமாணத்ததா, அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!

ரூபம் அற்றது என்றாலோ ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ, இரு வகைத்தும், குற்றமே என்றறிக.

- (நீலகேசி, மொக்கலவாதச் சருக்கம், பக்கம் 3)

Read more: http://viduthalai.in/page1/95692.html#ixzz3R9hjOkSA

தமிழ் ஓவியா said...

மதச்சார்பின்மை என்றால் அரசுக்கு மதம் கிடையாது என்பதே பொருள்

குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் சரியான கருத்து

மும்பை, பிப்.5- குடியரசு நாள் விழாவையொட்டி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அரசமைப்பு சட்ட முகப்புரை விளம்பரத்தில் மதச்சார்பின்மை, சோசலிஸ்ட் ஆகிய இரண்டு வார்த்தைகளும் இடம் பெற வில்லை. 42ஆவது திருத்தம் செய்வதற்கு முன் இருந்த முகப்புரையை வெளியிட்டதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் தெற்கு மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில், மாணவர்களிடம் கலந்துரையாடிய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறியதாவது:_-

மதச்சார்பின்மை என்றால், நமக்கு என்ன புரிகிறது? நமது சமூகத்தில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கிறோம். அதனால்தான் நமது நாட்டை மதச்சார்பற்ற நாடு என்கிறோம். மதச்சார்பின்மை என்பது ஒரு நாட்டுக்கு சொந்தமாக மதம் இல்லை என்பதை உணர்த்துகிறது. மத அடிப்படையில் ஒரு நாடு மக்களை பிரிக்கக் கூடாது. வளர்ச்சித் திட்டம், கல்வி உதவித் தொகை ஆகியவற்றை மத அடிப்படையிலோ அல்லது பாலின அடிப்படையிலோ வழங்காமல் பொதுவாக வழங்க வேண்டும். பாலின பாகுபாடு என்ற நோயால் நமது சமூகம் பல இன்னல்களை அனுபவித்துள்ளது. பாலின பாகுபாடு சட்டத் தால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இது சரியான பலனை அளிக்கவில்லை. எனவே இந்த சவாலை சமூகரீதியாக சந்திக்க வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை பின்பற் றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதற்கு நாம் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். சரியா, தவறா என்பதைப் பற்றிக் கவலைப்படால் நாட்டின் குடிமக்கள் பொது வாழ்வில் பங்கு கொள்ள வேண்டும். மாணவர்களும் குடிமக்கள்கள் தான். அதனால் பொது வாழ்வில் பங்கேற்பது உங்களின் கடமை. குடிமக்களாகிய நீங்கள் உங்கள் கடமையைச் செய்ய வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/page1/95621.html#ixzz3R9iK32Pw

தமிழ் ஓவியா said...

ஆயுதம்!

கொஞ்சத் தண்டனையானாலும், அதிகத் தண்டனையானாலும் அது எதற்காக ஏற்பட்டது என்றால், ஒரு குற்றத்தைச் செய்தவன் மேலும் (மறுமுறை) அக்குற்றத்தைச் செய்யாமல் இருப்பதற்குப் பயன்படும் ஆயுதம்தான் அது.
(விடுதலை, 13.01.1965)

Read more: http://viduthalai.in/page1/95596.html#ixzz3R9ih077w

தமிழ் ஓவியா said...

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் பாரதிதாசன் பாடல்களை நீக்குவதா?

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் தொலைதூர கல்வி பாடத்திட்டத்தில் முதுகலை தமிழ் முதலாமாண்டு பாடத்தில் இக்காலஇலக்கியம் எனும் பகுதியில் இடம் பெற்றுள்ள பாரதிதாசன் பாடல் வரிகளான தமிழியக்கம் கவிதை தொகுப்பு கடந்த 2004ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

பத்து ஆண்டு களுக்கு பிறகு இப்போது சென்னை ஆழ்வார்ப் பேட்டை, சர்.சி.பி ராமசாமி (அய்யர்) சாலையை சேர்ந்த பார்ப்பனர் ஒருவர் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்குழு தலைவர் திரு சோம. கலியமூர்த்தி அவர்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மேற்கண்ட புரட்சிக் கவிஞரின் தமிழியக்கம் பாடல்களை நீக்க வேண்டும், இல்லை யென்றால் தங்கள் மீதும், நிர்வாகத்தின் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.அதற்கு பதிலளித்த துணைவேந்தர் (பொறுப்பு) முறைப்படி கடிதம் அனுப்பாமல், சொல்வதை மட்டுமே வைத்து நீக்க முடியாது, எனவே, தங்களின் சார்பில் வேண்டுகோள் கடிதம் அனுப்பினால் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்க, அந்தப் பார்ப்பனரும் உடனடியாக தனது வேண்டு கோளை இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார்.

உடன் அதற்கான நடவடிக்கை நடக்க உள்ளது என்ற தகவலறிந்த திராவிடர் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், பாரதிதாசன் தமிழ் பேரவை, பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி, பகுத்தறிவாளர் கழகம் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பாரதிதாசன் பாடல்களை நீக்கக் கூடாது என்று அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் பொறுப்புக்குழு தலைவர் திரு சோம. கலியமூர்த்தி அவர்களிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இதனிடையே கடந்த 02.02.2015 அன்று காரைக்குடி வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் மூலம் இத்தகவல் அறிந்து அன்று மாலை காரைக்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் இது குறித்து பேசும் போது புரட்சிக்கவிஞர் பாடல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டவை; அதை நீக்கிட துணைவேந்தருக்கும் அதிகாரமில்லை, அரசுக்கும் அதிகாரமில்லை.

எனவே, திராவிடர் கழகம் இது தொடர்பாக நடத்தும் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு அளிக்கும், போராடும் என்று பேசினார். இதனிடையே வரும் 12.02.2015 அன்று நடக்கவுள்ள அழகப்பா பல்கலைகழக ஆட்சிமன்றக் குழு கூட்டத் தில் இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்து நீக்கும் முயற்சி எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இதை தடுத்து நிறுத்த காரைக்குடியில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

மத்தியில் பாரதீய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி அமைந்து விட்டது என்றவுடன் இந்தப் பார்ப்பனர்களின் தலைகளில் அதிகாரத் திமிர் என்னும் கொம்பு முளைத்து விட்டதாகவே திமிருகிறார்கள் - முட்டித் தள்ளக் குதியாட்டம் போடுகிறார்கள்.

பல்கலைக் கழகத்தில் எந்தப் பாடத்தை வைப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை இந்தப் பார்ப்பனர்களுக்கு யார் கொடுத்தார்கள்?

அறிவியலுக்கு முரணாக பித்தாபிறை சூடி பெருமானே! (தலையில் சந்திரனை சூடியிருக்கும் சிவபெருமானே!) என்ற பாடல்களை எல்லாம் பாடத் திட்டத்தில் சொல்லிக் கொடுக்கும் பொழுது பகுத் தறிவுச் சிந்தனை வளம் கொழிக்கும் புரட்சிக் கவிஞர் பாடல்கள் பல்கலைக் கழகத்தில் இடம் பெறக் கூடாதா?

குற்றலாக் குறவஞ்சியில் ஒரு பாடல்:
காதலஞ் செழுத்தார் போதநீ றணியார்
கைந்நரம் பெடுத்துக் கின்னரம் தொடுத்தப்
பாதகர் தோலால் பலதவி லடித்துப்
பறவைகள் படுக்கும் குறவனும் நானே
என்று குற்றாலக் குறவஞ்சியில் திரி கூட ராசப்பக் கவிராயர் பாடியுள்ளார்.

அடியார்கள் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி வழுத்தும் சிவபெருமான் திருநீற்றை அணியாதவர் களின் கைந் நரம்பினை எடுத்துக் கின்னரம் என்ற யாழில் தொடுத்து, நீறில்லா நெற்றியினுடைய தீவினை யாளர்களுடைய (பாவிகளுடைய) தோலினால் செய்யப்பட்ட தவிலினை அடித்துப் பறவைகளைப் பிடிக்கின்ற குறவனும் நானே! என்பது இப்பாடலின் பொருள். மேல்நிலைப் பள்ளிகளில் இப்பாடல் வைக்கப் பட்டதுண்டு அதைப்பற்றியெல்லாம் இந்த அறிவுக் கொழுக்கட்டைக் கண்டு கொள்ளாதது ஏன்?

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம், தமிழர் ஒருவரின் நன்கொடையால் உருவானது. அத்தகு பல்கலைக் கழகத்தில் ஒரு தமிழ்க் கவிஞரின் பாடல் களை நீக்க முயலுவது கண்டிக்கத்தக்கது. மீறினால் கடும் போராட்டம் வெடிக்கும் எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page1/95597.html#ixzz3R9iqjajn

தமிழ் ஓவியா said...

விடுதலையின் சிறப்பு

எனக்கு வயது 55 ஆகிறது. மாணவப் பருவம் தொட்டு, விடாமல் விடுதலை படித்து வருகின்றேன். ஒருவர் நல்ல மனோதிடமும், பொது அறிவும், அரசியல் தெளிவும் பெற விடுதலையை மட்டும் படித்து வந்தாலே போதும் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.

ஈமோ என்ற ஓவியத் தொடர் ஆரம்பத்தில் சிறுவர்களுக்கான பகுதி என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். அதில் பெரியவர்களுக்கான செய்திகளும் உள்ளன என்பதை விடாமல் படித்து வரும்போது தெரிந்துகொண்டேன்.

விடுதலை வாசகர் ஒவ்வொரு வரும், தான் படித்த விடுதலை நாளிதழை, விடுதலை நாளிதழ் வாங்காத ஒருவரிடம் கொடுத்து படித்துப் பாருங்கள் என்று சொல்ல வேண்டும். ஏனைய நாளிதழ் களோடு ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்ல வேண்டும் என வேண்டிக் கொள்கின் றேன்.

- பெரி. காளியப்பன், மதுரை

Read more: http://viduthalai.in/page1/95610.html#ixzz3R9j2v6Ez