Search This Blog

19.2.15

ஜாதியை ஒழிக்க முன் வருவாரா ஆர்.எஸ்.எஸ். தலைவர்?

ஜாதியை ஒழிக்க முன் வருவாரா ஆர்.எஸ்.எஸ். தலைவர்? 


15.2.2015 அன்று கான்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் குறிப்பிட்டதாவது:


ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இப்போதைய தருணத்தில் சமூகத்தின் அனைத்துத் தரப்பின ராலும் விளம்பரப்படும் அளவுக்கு வளர்ந்திருக் கிறது. அதனிடம் மக்கள் அதிகம் எதிர்பார்க் கிறார்கள். இதனை சாதிக்க இந்த அமைப்பை விரிவுபடுத்துவது அவசியமாகிறது.


எதற்கும் அஞ்சாத தற்சார்புடைய தன்னல மற்றதாக இந்து சமூகத்தை மாற்றுவதும், அதை ஒற்றுமைபடுத் துவதும், நாட்டுக்காக வாழவும், சாகவும் தயாராக அதை உருவாக்குவதும் நமது பணி. நமது நாட்டில் மொழி, ஜாதி, பிராந்தியத்தால் வேறு பட்டு நின்றாலும், பாரதத்தைத் தாயாக வணங் குகிறோம் என்று பேசி இருக்கிறார்.


இதில் ஓர் உண்மையைக் கவனிக்க வேண்டும். நாம் எவை எவைகளால் வேறுபட்டு நிற்கிறோம் என்று சொல்லும் பட்டியலில் ஜாதியையும் குறிப்பிட்டுள்ளார்.


இந்து சமூகத்தை ஒற்றமைப்படுத்த வேண்டும் என்று சொல்கிறவர் என்ன செய்ய வேண்டும்? ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு எத்தகைய ஆணையைப் பிறப்பிக்க வேண்டும்?


இந்துக்களின் ஒற்றுமைக்குத் தடையாக இருக்கக் கூடிய அந்த ஜாதியை ஒழித்துக் கட்டுவோம் வாரீர் என்றல்லவா அழைப்புக் கொடுக்க வேண்டும்? அப்படிக் கொடுக்கத் தயாரா என்று சவால் விட்டே கேட்கிறோம்.


அவர்களால் ஜாதியை ஒழிப்போம் என்று சொல்ல முடியாது. காரணம், அப்படி அவர்கள் சொல்ல முன் வந்தால் ஜாதியைக் காப்பாற்றும் மனுஸ்மிருதிகளை, இந்து மத சாஸ்திரங்களை ஒழிப்போம் என்று கூற வேண்டும். ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வாக் கரால் எழுதப்பட்ட ஞான கங்கை (Bunch of Thoughts) என்ற நூல் ஜாதியைப்பற்றி என்ன சொல்லுகிறது என்பதுதான் முக்கியமானதாகும்.


சிலர் நீண்ட காலமாக ஜாதி அமைப்பு முறையை எதிர்த்துக் கொண்டு வருகிறார்கள். பழங்கால தொட்டு இந்த ஜாதி அமைப்பு முறை இருந்து வருகிறது. நாம் அதன் உச்சியிலே இருந்தோம். அந்த ஜாதி அமைப்பு முறை நம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தது என்று சொல்லுவதற்கு எந்தவித  ஆதாரமும் கிடையாது. உண்மையில் ஜாதி அமைப்பு முறை ஒற்றுமையைக் காப்பதற்கே உதவி செய்துள்ளது என்று கூறுகிறார்.


ஆனால், இன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தோ ஜாதியால் நாம் வேறுபட்டு கிடக்கிறோம் என்று சொல்லுகிறார். அன்றைய ஆர்.எஸ்.எஸ். குருநாதரும் இன்றைய ஆர்.எஸ்.எஸ். குருநாதரும் மாறுபட்டு நிற்கிறார்கள் என்று கூறலாமா? இதனை அந்தப் பரிவாரங்கள் தான் விளக்க வேண்டும்.


கோல் வாக்கரிலிருந்து மோகன்பகவத் புத்தி தெளிந்து மாறுபட்டு இருப்பதாக வைத்துக் கொண்டால் அவர் என்ன செய்ய முன்வர வேண்டும்?


இந்து மதத்தின் தீண்டாமைக்கும் இடம் இல்லை; அதன் மூல வேரான ஜாதிக்கும் இடம் இல்லை. எந்த வகையில் ஜாதி காப்பாற்றப்பட்டாலும் அதனை எதிர்க் கிறோம். ஜாதிக்கு ஆதாரமாக இருக்கும் சுருதிகளை ஸ்மிருதிகளை எதிர்க்கிறோம் - எரிக்கிறோம்.


இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப் படுகிறது என்று மாற்றிட பிரதமர் நரேந்திர மோடிக்குச் சிபாரிசு செய்கிறேன்.


இந்து மதத்தின் தலைவர்களாக சங்கராச்சாரியார்கள் பார்ப்பனர்களாகவே இருந்து வரும் நிலையினை மாற்றி இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும் சங்க ராச்சாரியாராக வரலாம் என்று ஒப்புக் கொள்கிறோம்.


அதே போல கோயில் கருவறைக்குள் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக ஆகலாம் என்பதற்கு முடிவு கட்டுவோம்; பெரியார் அறிவித்த அதற்கான போராட் டத்தை வரவேற்கிறோம்.


தி.மு.க. ஆட்சியில் கலைஞர் அவர்களால் நிறைவேற்றப்பட்ட அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற சட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.


அந்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் பார்ப்பனர்களால் தொடுக்கப்பட்டுள்ள வழக்கினை வாபஸ் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய் கிறேன்.


ஆண்டுதோறும் இரு பிறப்பாளர்கள் (தூவி ஜாதி) என்று சொல்லிக் கொண்டு பூணூலைப் புதுப்பிக்கும் ஆவணி அவிட்டம் போன்ற நிகழ்ச்சிகள்கூடாது என்று கோபுரத்தில் ஏறி நின்று கூறுகிறோம்.


ஒரே ஜாதிக்குள் திருமணம் என்ற ஏற்பாட்டை எதிர்க்கிறோம்.


எந்த வகையில் ஜாதி தென்பட்டாலும் அதனை எதிர்க்கிறோம் - இந்த ஜாதி ஒழிப்பு மூலமாகத்தான் இந்துக்களின் ஒற்றுமையை உருவாக்க முடியும் என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளோம் என்று அதிகாரப் பூர்வமாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் அறிவிக்காமல் ஏதோ ஒரு மாநாட்டில் வெற்று வார்த்தைகளைக் கொட்டுவதால் என்ன பயன்?
ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி என்று பாரதியார் பாடியதுபற்றி தந்தை பெரியார் சொன்னதுண்டு; ஆயிரம் ஜாதி இருந்தால் அந்நியர் புகாமல் என்ன செய்வான் என்பதுதான் அந்த அறிவார்ந்த கேள்வி.


நான் பயணம் செய்யும் கப்பல் ஓட்டையாக இருக்கும்; ஆனால், தண்ணீர் வந்து புகக் கூடாது என்று சொல்வது போல் இல்லையா என்ற வினாவைத் தொடுத்தார் பெரியார்.


கான்பூர் மாநாட்டு உரை காற்றோட போகப் போகிறதா? அசலாக வரப் போகிறதா?


-------------------------------”விடுதலை” தலையங்கம் 19-02-2015
Read more: http://viduthalai.in/page-2/96505.html#ixzz3SBtkRfn4

63 comments:

தமிழ் ஓவியா said...

நீதிமன்றத்திலே சமூகநீதிகோரி வீதி மன்றத்திலே போராடுகிறோம்

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை

சென்னை, பிப்.19- உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கடைபிடிக்க வேண்டும் பார்ப்பன ஆதிக்கபுரியாக மாறுவதைத் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் நடத்தும் இந்தப் போராட்டமும், தொடக்கமே தவிர முடிவல்ல; வெற்றிகிட்டும் வரை போராடுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (19.2.2015) காலை நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்குத் தலைமை வகித்து உரை யாற்றுகையில் அவர் கூறியதாவது:

உயர்நீதிமன்றத்தினுடைய மொத்த இடங்கள், நீதிபதிகளுடைய மொத்த எண்ணிக்கை 60 இடங்களாகும். இதில் 19 நீதிபதிகளுடைய இடங்கள் காலியாக ஆகி ஒருவர் காஷ்மீரத்தினுடைய தலைமை நீதிபதியாக சென்றுள்ள நிலையில் 18 நீதிபதிகளை நிரப்ப வேண்டும். தேக்கமடைந்து பைசல் ஆகாத வழக்குகள் உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டு வழக்காடிகளுடைய நலனை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு மிகப்பெரிய அளவிலே, இங்கே இருக்கக்கூடிய நீதித்துறையிலே நீதிபதிகளுடைய எண்ணிக்கை உடனடியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் இதில் சமூகநீதி கடைபிடிக்க வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு - நியாயமான கோரிக்கை.

தமிழ் ஓவியா said...

இங்கே வடக்கே இருந்து வந்திருக்கக்கூடிய தலைமை நீதிபதியாக இருக்கிற ஒரு பார்ப்பன நீதிபதி மிகத் தந்திரங்களைக் கையாளுகிறாரே என்பதைக் கண்டித்து நியாயங்கள் வழங்க வேண்டும், சமூக நீதி நிலைநாட்ட வேண்டும். இந்த மண் பெரியார் மண். இந்த மண் சமூக நீதி மண். அந்த வகையிலே முழுக்கமுழுக்க நடைபெற வேண்டும் என்று சொல்லி திராவிடர் கழகத்தின் சார்பிலே மத்திய மாநில அரசுகளுக்கும், நீதித்துறைக்கும் சேர்ந்து அவர்கள் கண் விழிக்க வேண்டும். இது மக்களுடைய போராட்டம். நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மட்டும் நடத்தும் போராட்டம் அல்ல என்பதை யெல்லாம் எடுத்துக் காட்டுவதற்காக எல்லோரும் இணைந்து, திராவிடர் கழகம் இதனை முன்னெடுத்தாலும் கூட, அனைத்து இயக்கங் களும் சேர்த்து நடத்துவகிறோம். சமூகநீதியிலே நம்பிக்கை உள்ள அனைத்து இயக்கங்கள் திராவிடர்கழகம், தி.மு.க., அதேபோல பாட்டாளி மக்கள் கட்சி, அதேபோல மற்ற அமைப்புகள், சமூக நீதி அமைப்புகள், வழக்குரைஞர்கள் சங்கங்கள், அமைப்புகள் இப்படிப் பல அமைப்புகளும் இதிலே இருக்கின்றன.

சிலபேர் இங்கு நேரிடையாக கலந்துகொள்ளும் வாய்ப்பு இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால், எல்லோருமே இந்தக் கொள்கைக்கு உடன்பாடாக இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு வருகைதந்து, மிகச் சிறப்பான வகையிலே இதிலே கலந்துகொண்டுள்ளனர்.

இந்த போராட்டம் என்பது தானே உருவானது அல்ல. இது ஒரு திணிக்கப்பட்ட போராட்டம். தேவையான அளவுக்கு முறைப்படி தலைமை நீதிபதி பரிந்துரை செய்திருந்தால், இதுபற்றி வழக்குரைஞர்கள் நீதிமன்றத் தைப் புறக்கணிக்கவோ, எதிர்த்துக் குரல் கொடுக்கவோ, இப்படி தெருக்களிலே நின்று நீதிப்போராட்டம் வீதிப் போராட்டமாக மாற வேண்டிய அளவுக்கு வரவேண்டிய அவசியமோ ஏற்பட்டிருக்காது.

அணுகுமுறையிலே தவறானது. நம்முடைய நாடு ஜனநாயக நாடு. இந்த நாட்டிலே வழக்குரைஞர்கள் என்பவர்கள் நீதிமன்றத்துக்கு முன்னாலே சென்று வாதாடவேண்டியவர்கள் தங்களுடைய உரிமைகளை, அரசியல் சட்டம் வழங்கி உள்ள உரிமைகளை அவர்கள் பாதுகாக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையிலே விகிதாச்சரத்துக்கும் மேலாக பார்ப்பனர்களை அவர்கள் திணித்துக்கொண்டிருக்கிறார்கள். பல்வேறு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர், இதுவரையிலே நீதிமன்றத்தை எட்டிப் பார்க்காதவர்கள் உண்டு. ஒரு காலத்திலே எங்களுடைய வழக்குரைஞர்கள் தகுதி உள்ளவர்கள் இல்லை என்று சொன்னார்கள், திறமை உள்ளவர்கள் இல்லை என்று சொன்னார்கள். இப்போது எண்ணற்றவர்கள் இருக் கிறார்கள். அனுபவம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு பார் கவுன்சில் ஆனாலும், வழக்குரைஞர்கள் சங்கம், அட்வகேட் அசோசியேசன் ஆனாலும் அதிலே பொறுப்பு வகிப்பவர்கள் எல்லாம் பார்த்தீர்களேயானால் அத்துணை பேரும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த, நிறைய வருமானமுள்ள, ஏராளமான வழக்குகளை வாதாடுவதற்கு உள்ள, அத்தனைத் திறமை உள்ள வழக்குரைஞர்கள் இருக் கிறார்கள்.

நீதித்துறை மனு நீதித்துறையாக மாறலாமா?

பழைய காலத்தைப் போல வெறும் பார்ப் பனர்கள் உயர் ஜாதிக் காரர்கள்தான் என்றிருப் பார்கள் என்ற நிலை இல்லை. இங்கே தலைமை நீதிபதியாக வந்திருக்கிறவர் வடக்கே இருந்து வந்திருக் கிறவர். அவர் இந்த மண் ணுடைய மனோபாவத்தை தெரிந்துகொள்ள வேண்டும். இதேபோலத்தான் வடக்கே இருந்து, பம்பாயில் இருந்து வந்த ஒரு பார்ப்பன நீதிபதி அவர் பார்ப்பனர்கள் 6 பேரை எம்ஜிஆர் இருந்த காலத்திலே அவர் பரிந்துரை செய்திருந்தார். உடனடியாக இதேபோல திராவிடர் கழகம் உயர்நீதிமன்றத்துக்கு முன்னாலேயே சென்று நாங்கள் மிகப்பெரிய கிளர்ச்சியை செய்ததுமட்டுமல்ல. மனுவையே கொடுத்தோம். மிகப் பெரிய கிளர்ச்சியாக வெடிக்கும் என்று அரசாங்கத்துக்கு செய்தி சென்றது. அரசாங்கத்திலே ஒரு சொற்றொடரை சட்டத் துறையிலே பயன்படுத்தி பரிந்துரை செய்தார்கள் மத்திய உள்துறைக்கு. என்ன அந்த சொற்றொடர் என்று சொன்னால் சாய்ல் சைக்காலஜி ஆப் தமிழ்நாடு என்ற சொற்றொடரை அவர்கள் பயன்படுத்தினார்கள்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டினுடைய மண்ணின் மனோபாவம் என்னவென்றால் சமூக நீதி. இந்த சமூக நீதியை மாற்றிவிட முடியாது. எனவே, இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி, அந்த 6 பார்ப்பனர்களை தலைமை நீதிபதிபரிந்துரைத்ததைத் திருப்பியனுப்பி, பிறகு மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தார்கள். ஒரேயொரு பார்ப்பனர்தான் அதிலே வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

இன்றைக்கு மீண்டும் இதே சூழ்நிலை. அதுமட்டும் அல்ல. இன்னொரு வித்தை என்ன என்று சொன்னால், ஏற்கெனவே 6 பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். அதைத்தான் இங்கே சொன்னார்கள். வெறும் 2 சதவிகிதம் இருக்கிறவர்களுக்கு பல மடங்கு இடம். அதுமட்டுமல்ல, கேந்திரமாக இருக்கின்ற இடம். பரிந்துரை செய்ய வேண்டிய இடத்திலே இருக்கிறார்கள். சார்பு நீதிமன்றத்திலே; தேர்வு செய்யும் இடத்திலும் அவர்கள்தான் இருக்கிறார்கள்; என்று தேர்வுத் தாளை திருத்துவதிலேயிருந்து, அடுத்து வருவதிலிருந்து, வீட்டுக்கு அனுப்புவதிலிருந்து எல்லாவற்றையும் சாமர்த்தியமாக தந்திரமாக செய்துகொண்டிருக்கிறார்கள்.

எனவே, இதைக் கண்டித்தாக வேண்டும் என்ற நிலையை அவர்கள்தான் உருவாக்கி இருக்கிறார்கள். சமூக நீதி என்பது அரசியல் சட்டம் வழங்கி இருக்கிற அடிப்படை உரிமை.
வழக்குரைஞர்களோ, நாங்களோ, இங்கு வந்திருப் பவர்களோ ஏதோ தயவைக் கேட்கவில்லை. நாங்கள் யாரிடமும் பிச்சைக் கேட்கவில்லை. நாங்கள் யாரிடமும் சலுகை கேட்கவில்லை. அரசியல் சட்டத்திலே நீங்கள் பிரமாணம் செய்திருக்கிறீர்கள். அந்த அரசியல் சட்டத்தைக் காட்டித்தான் பதவியில் இருக்கிறீர்கள். அந்த அரசியல் சட் டத்தைச் செயல் படுத்துங்கள். இதைத்தான் சொல்லு கிறோம்.

இதுமாதிரி விசித்திரம் உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இருக்காது. அரசியல் சட்டத்தின் பிரிவுகளை செயல் படுத்துங்கள் என்று இங்கே இருக்கின்ற வழக்குரைஞர்கள் கேட்கிறோம். அதுமட்டுமல்ல. நிர்வாகம் என்பதே கூட இப்போது ரைட் ஆப் இன்பர்மேசன் ஆக்ட் என்று கொண்டுவந்ததன் நோக்கம் என்ன? டிரான்ஸ்பரன்சி என்று சொல்லக்கூடிய வெளிப்படை நம்பகத்தன்மை, வெளிப்படையான தன்மை இருக்க வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தினுடைய அடித்தூண்.

அந்த ஜனநாயகத்தின் தூண்களில் முக்கியமான மூன்று தூண்களில் ஒன்று நீதித்துறை. எனவே, இந்த நீதித்துறை மனுநீதித் துறையாக மாற்றப்படக்கூடாது. இது மனுநீதிக் காலம் அல்ல. இது ஜனநாயகக் காலம். இது பெரியார் மண், அண்ணா, காமராஜர், கலைஞர், எம்ஜிஆர் ஆண்ட மண். இன்னும் எந்தக்கட்சிவேண்டுமானாலும் ஆளலாம். ஆனால், சமூக நீதியில் கைவைக்கும் துணிவு எந்தக் கட்சிக்காரனுக்கும் கிடையாது. இதுதான் தமிழ்மண்ணின் அடிப்படைத் தத்துவம்.

இதை வடக்கே இருந்து வந்திருக்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு மந்திராலோசனை செய்யக்கூடிய இந்த நாட்டு பார்ப்பனர்களுடைய யோசனைகளை அவர்கள் கேட்டால், அவர்கள் நிலை வெறுக்கத் தகுந்ததாகிவிடும்.

எனவேதான் இன்றைக்கு வந்திருக்கிற அறிஞர் பெருமக்கள், வழக்குரைஞர்களை திராவிடர் கழகத்தின் சார்பில் நாங்கள் பாராட்டுகிறோம். இவர்களுடைய

வெளிப்படையான போராட்ட உணர்வை நாங்கள் வெகுவாக பாராட்டி, இந்த உணர்வை எடுத்துச்செல்லுங்கள். இந்தச்சுடரை தாங்கிய கரங்கள் ஒருபோதும் தாழக்கூடாது. நாம் வெற்றிபெறுகின்ற வரையிலே நாம் போராடியாக வேண்டும்.

தமிழ் ஓவியா said...


உங்கள் எல்லோருக்கும் வரவேற்பு சொல்லுவதற்காகத்தான் இங்கே வந்திருக் கிறேன். நாம் இதுவரையில் எடுத்து வைத்துள்ள பிரச்சினைகளில் தோற்றதே கிடையாது. அதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வெற்றி வேண்டுமானால் கொஞ்சம் காலம் தாழ்ந்து இருக்கலாம். ஆனால், தோல் வியே கிடையாது. அதைப்புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வெறும் உயர்நீதிமன்றத்தினுடைய நீதிபதிகளை நிரப்புவதுமட்டும் இந்த நோக்கமல்ல. விடுதலையில் சில செய்தி களை இது உண்மையா? என்று எழுதி இருக்கிறோம். அதைப்பார்க்க வேண்டும். அதாவது மாவட்ட நீதிபதிகள், சார்புத் துறையிலே இருக்கக்கூடியவர்களுக்கான தேர்வுகள் என்று வருகிறபோது , அதிலே ஒரு குறிப்பிட்ட பார்ப்பன நீதிபதிதான் எல்லாம் செய்வார் என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது என்று வழக்குரை ஞர்கள் மத்தியிலே மிகப்பெரிய அளவில் பேச்சு அடிபடுகிறது. அதுமட்டுமல்ல.

கலைஞர் ஆட்சிக்காலத்திலே இங்கு வர முடியாத ஒரு ஜாதி வெறிப்பார்ப்பனருக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. அவர் பஞ்சாப் புக்குப் போனார். பஞ்சாபிலே நீதிபதியாக இருக்கிறவர் இங்கே வாரந்தவறாமல் வந்து, அவர்தான் இங்கே தமிழ்நாட்டிலே இவரை அனுப்புங்கள், அவரை அனுப் புங்கள், இந்த பார்ப்பனரைத் தேர்ந் தெடுங்கள், இவரை அனுப்பாதீர்கள் என்று சொல்லக்கூடிய அளவில் இருக் கிறார் என்று பரவலாகப் பேச்சு அடி படுகிறது. அது உண்மையாக இருக்கக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். அப்படி இருந்தால், அதைவிடக் கண் டனத்துக்கு உரியது வேறு கிடையாது.

ஏற்கெனவே 3 மாவட்ட நீதிபதிகளை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். ஒரு மாவட்ட நீதிபதியை பின்சி கிரவுண்ட் என்று சொல்லக்கூடிய அளவிலே அவர் அரசியல் செல்வாக்குள்ள ஒருவரை சந் தித்தார் என்று ஏதோ ஒரு போலிக் காரணத்தைச் சொல்லி, ஒரு பிற்படுத் தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவரை வெளியே அனுப்பி இருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

உருவத்தால் பலர் உள்ளத்தால் ஒருவரே!

இதைப்பற்றியெல்லாம் தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக் கூட்டங் களை நடத்திட உள்ளோம். திராவிடர் கழகம் ஒத்த கருத்துள்ளவர்களை, கட்சி, ஜாதி வேறுபாடுகள் இல்லாமல் எல் லோரையும் அழைத்து மிகப்பெரிய மக்கள் கிளர்ச்சியாக வெடிக்கக்கூடிய அளவிற்கு செய்ய இருக்கிறோம் என்பதை எடுத்துச் சொல்லி இங்கு வந்திருக்கிற எல்லோ ருக்கும் எங்கள் அன்பான வரவேற்பை திராவிடர்கழகத்தின் சார்பில் சொல்லி, அத்துணை வழக்குரைஞர்கள், நமக் குள்ளே அரசியல் ரீதியாக அணுகு முறைரீதியாக பல்வேறு வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால், சமூகநீதியைப் பொறுத்தவரையிலே நாங்கள் உருவத் தால் மாறுபட்டாலும், உள்ளத்தால் ஒரு வரே என்பதைத்தான் வலியுறுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்தக்குரல் இங்கே தொடங்கி இருக்கிறது. இது முடிவல்ல. தொடக்கம். அதைத்தான் மேலே இருக்கிறவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

தமிழ் ஓவியா said...


ஏனிந்த ஆர்ப்பாட்டம்?
கழகத் தலைவர் பேட்டி


சென்னை, பிப்.19- உயர்நீதிமன் றத்தில் நீதிபதி பதவிகள் நியமனம் தொடர்பான இந்த ஆர்ப்பாட்டம் ஏன்? என்பதற்கான காரணத்தை செய்தியாளர்கள் மத்தியில் திராவி டர் கழகத் தலைவர் விளக்கினார். அதன் விவரம் வருமாறு:

சென்னை உயர்நீதிமன்றத் தினுடைய மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 60இல் ஒருவர் காஷ்மீருக்கு தலைமை நீதிபதியாக சென்ற நிலையில் 18 இடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இடங்களை நிரப்புவதில் சமூகநீதிக் கொள்கை கடைப்பிடிக்க வேண் டும். அது சலுகையோ, பிச்சையோ அல்ல. இந்திய அரசியல் சட்டம் வகுத்திருக்கிற போதிய பிரதிநிதித் துவம் (அடிக்குவேட்ரெபிரசன் டேசன்) என்ற பிரிவின்கீழும், சமுகநீதியை நிலைநாட்டவேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

ஜனநாயக நாட்டில் யாரும் கருத்துகளைச் சொல்ல லாம். பட்டியலை அனுப்பும்போது, ஒரே பட்டியலை அனுப்பவேண்டும் என்று சொல்லுகிறார்கள். காரணம் என்னவென்றால், திறமை உள்ளவர்களுக்கு என்று ஒரு பட்டியலாம், பிறகு இன்னொரு பட்டியலாம். மற்றவர்கள் எல்லாம் திறமை இல்லாத வர்களைப்போல அவர்கள் சொல்லுவது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

ஆறு பார்ப்பனர்களை ஒரேயடியாக அனுப்புவ தற்குப்பதிலாக, இரண்டு மூன்றாக பிரித்து அனுப்பி னாலும் மொத்த எண்ணிக்கை அதுதான். இதுவரை உயர்நீதிமன்றத்தையே எட்டிப்பார்க்காத சமூகங்கள், ஜாதிகள் இருக்கின்றன. அவைகளுக்குப் போதிய பிரதிநிதித் துவம் கொடுக்க வேண்டும். அது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தித் தான் இந்தப் போராட்டம்.

வழக்குரைஞர்கள் போராட்டமாக மட்டுமல்ல, மக்கள் போராட்டமாக அது வெடித்திருக்கிறது. மதுரையிலும் இந்தக் கிளர்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. அனைத்து இயக்கங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இப்போது நீதிமன்றப் போராட்டம் வீதிமன்றப் போராட்டமாக மாறி இருக் கிறது. இது முதல் கட்டம். மேலும் தொட ரும். நீதி கிடைக்கும்வரை போராடுவோம்.

செய்தியாளர் கேள்வி: புதிய நீதிபதிகள்...?

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பதில்: 6 பேர். ஆறு பேரும் பார்ப்பனர்கள். ஒரே ஜாதிக்காரர்கள். இதுவரை பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் நீதிபதியாக, தகுதி உள்ள வழக் குரைஞர்களாக இருந்தும் கூட, அவர்களுடைய பெயர் பரிந்துரைக்கப்பட வில்லை. அதுதான் இப்போது வழக்குரைஞர்களுடைய மிகப்பெரிய குறைபாடு; நியாயமான குறைபாடு.

Read more: http://viduthalai.in/e-paper/96498.html#ixzz3SBvGoy1u

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஒழுக்கப் போதனையா?

பிர்மாவுக்கும், விஷ் ணுவுக்கும் இடையே யார் பெரியவன் என்று சண்டை வந்தது என்று புராணம் எழுதி வைக்கப்பட்டுள் ளதே - இப்படி அதிகாரம், ஆணவம் கொண்டவர்கள் தான் படைத்தல், கடவுள், காத்தல் கடவுளா? இது தான் ஆன்மீகம் கற்றுத் தரும் ஒழுக்கப் போதனையா?

Read more: http://viduthalai.in/e-paper/96502.html#ixzz3SBvpbIOk

தமிழ் ஓவியா said...

நரேந்திர மோடியின் ஆட்சியில் தொழிலதிபர்களுக்குத் தான் நல்ல காலம் பிறந்துள்ளது அன்னா ஹசாரே


மும்பை, பிப்.19- பா.ஜ.க.வுக்கு ஓட்டு போட்டால் நல்ல காலம் பிறக்கும் என தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்துள்ள நரேந்திர மோடியின் தலைமையிலான அரசில் தொழிலதிபர்களுக்குத் தான் நல்ல காலம் பிறந் துள்ளது என ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார்.

மராட்டிய மாநிலத் தில் உள்ள தனது சொந்த ஊரான ரலேகான் சித்தி யில் பிரபல தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டி யளித்த அன்னா ஹசாரே, ஏழைகள் மற்றும் விவ சாயிகளின் நலனைப் பற்றி மோடி நினைப்ப தில்லை. மாறாக, தொழி லதிபர்களின் நலனைப் பற்றியே அவர் நினைத்து வருகிறார்.

அவரது தலைமையி லான ஆட்சி அமைந்தவு டன் நல்ல காலம் பிறக் கும் என்று தோன்றியது. ஆனால், அந்த நல்ல காலம் தொழிலதிபர்களுக் குத் தான் வந்துள்ளது. இதனால், அவரது செல் வாக்கு சரிந்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/96500.html#ixzz3SBvxmwAj

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள்
இந்தியாவில் மனித உரிமை மீறல்கள்

இந்தியாவில் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்பு ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு உத்தரபிரதேசம், முசாபர் நகரில் ஏற்பட்ட கலவரம் முதல் அண்மையில் பிகார் மாநிலத்தில் நடந்த கலவரம் வரை குறிப்பிட்ட மதத்தின்மீது கடுமையான தாக்குதல்கள் நடை-பெற்றுள்ளன. இந்தத் தொடர் தாக்குதலின்-மூலம் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்-துள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைச் சுதந்திர-மாகச் செயல்பட அனுமதித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

ஆந்திரா, ராஜஸ்தான், ஜார்கண்ட் போன்ற நகரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முக்கியமாக மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ள இந்த மாநிலங்களில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் மிரட்டி வற்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். மத்திய அரசு இந்த அவலத்தை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது.

அண்மையில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில் எந்தவிதப் பாதுகாப்பும் அளிக்க அரசு முன்வராததால் குற்றவாளிகளுக்குத் துணிச்சல் ஏற்பட்டுவிடுகிறது.

இந்தியாவில் 13 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்கள் ஆரம்பக் கல்வியைக்கூட முடிக்காத நிலையில் இருப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. சில குழந்தைத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்படுகின்றனர்.

தடுக்க வேண்டிய அரசுகளோ கண்ணை மூடிக்கொண்டு இருக்கின்றன என பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்-பட்டுள்ளது

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனியாக உணவு பரிமாறி வ.வே.சு. அய்யர் ஜாதிவெறியோடு நடத்திய சேரன்மாதேவி குருகுலம் மலேயா நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் தந்த ரூ 20,000 நன்கொடையால் நடத்தப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

உற்சாக சுற்றுலாத் தொடர் - 3

ஈஸ்டர் தீவு

-மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன்

கடந்த அக்டோபர் 10ஆம் தேதி தென்அமெரிக்காவின் குச்கோ நகரிலிருந்து லீமா பெரு நகருக்கு விமானப் பயணம் செய்து வந்தடைந்தோம். அங்கிருந்து தொடர்ச்சியாக 7 மணி நேரம் விமானப் பயணம் செய்து அக்டோபர் 11ஆம் தேதி ஈஸ்டர் தீவை அடைந்தோம்.

எங்கே போகிறோம் என்ற எங்களிடம், ஓர் அற்புதமான இடம், மக்கள் என்று கூறிப் படங்களுடன் பேராசிரியர்கள் பாடம் எடுத்தனர்.இத்தீவு உலகிலேயே மிகத் தனிமையான தீவாகும். தென் அமெரிக்காவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் பசிபிக் பெருங்கடலில் உள்ளது. 1000 மைல்களுக்கு அருகே நிலமே கிடையாது. நிலப்பரப்பு 63 சதுர மைல் கொண்டது.

1987இல் அமெரிக்காவுக்கு விண்வெளிப் பயண விண்கலம் இறக்க இடம் தேவை என்ற காரணத்திற்காக பெரிய விமானத் தளம் அமைக்கப்பட்டது உல்லாசப் பயணிகள் வர நல்லதாகிவிட்டது. இத்தீவு எரிமலைகளால் உண்டாக்கப்பட்டது. எரிமலைகள் அமைதி ஆகி 15,000 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது அறிவியலாளர்கள் கணிப்பு ஆகும்.

ராப்ப நூயி என்பது அந்த மக்கள் அழைக்கும் பெயர். 1722இல் டச்சுக்காரர் ஜேகப் ரோகவீன் ஈஸ்டர் ஞாயிறன்று முதன்முதலில் வந்திறங்கியதால் ஈஸ்டர் தீவு என்றழைக்கப்பட்டு வருகின்றது. ராப்ப நூயி எழுத்துகளைக் கல்வெட்டுகளில் பார்த்தோம். பட வடிவ எழுத்துகளாக உள்ளன.

இத்தீவில் வசிக்கும் மனிதர்கள் ஃகவாய் தீவில் உள்ள பாலிநேசியன் மக்கள் போல் முகச்சாடையும் உடல் அமைப்பும் கொண்டவர்களாக உள்ளனர். இவர்களுடைய பழக்க வழக்கங்கள் மிகவும் பழைமையானது. ஒரு காலத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் நிறைந்திருந்தனவாம். மக்கள் அழித்ததாலும், எலிகள் வேர்களைத் தின்றதாலும் அவை பெரும்பாலும் அழிந்துவிட்டன.

இயற்கையை வழிபட்ட இம்மனிதர்கள் எரிமலைப் பாறைகளில் மிகப்பெரிய சிற்பங்களைச் செதுக்கி அவற்றை நெடுந்தூரத்தில் உள்ள அனகீனா கடற்கரையில் நிறுத்தி உள்ளனர். இச்சிலைகள் 6அடியிலிருந்து 30அடி உயரமானவை. இச்சிலைகளை மோய் என்று அழைக்கிறார்கள். இவை பல டன்கள் எடை உள்ளவை.

தமிழ் ஓவியா said...


பெரிய சிலை 82 டன். இவற்றைச் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு கடினமான கற்களை உளியாகப் பயன்படுத்திச் செதுக்கியிருப்பார்கள் என்று தொல்பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இக்கனமான சிலைகளை வெறும் மரங்களையும் கயிற்றையும் வைத்தே எப்படி பல கிலோமீட்டர்கள் நகர்த்தி கடற்கரைக்குக் கொண்டு வந்திருப்பார்கள் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது.

இச்சிலைகளை அத்தீவின் மக்கள் முன்னோர்-களாகவும், அவர்களை ஆபத்துகளிலிருந்து காப்பவர்களாகவும் கருதுகிறார்கள். இந்த மாதிரி நூற்றுக்கும் மேலான சிலைகள் தீவின் மலைச்சரிவுகளில் அரைகுறையாகச் செதுக்கிய நிலையில் கிடக்கின்றன.

1960இல் பெரிய சுனாமி வந்து சிலைகள் அடித்து சிதைக்கப்பட்டுவிட்டன. அவற்றை ஜப்பானியரின் எந்திரங்கள் மற்றும் அமெரிக்க, ஜப்பான் பொருளுதவியுடன் பொருத்திய பேராசிரியர்கள் வில்லியம் மலாய், அங்கு எங்களுடன் வந்து விளக்கிச் சொன்ன பேராசிரியை பெட்றீசியா வர்காஸ் காசனோவா, அவரது இணையர் பேராசிரியர் கிளாடியோ கிறிஸ்டினோ பல ஆண்டுகளாக அங்கே பணி செய்து வருகின்றனர்.

அவர்கள் காட்டிய அந்தத் திரைப்படம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. முதலில் இருந்த அந்த அழகிய அனகீனா கடற்கரையிலேயே அழகாக வைத்துள்ளனர்.

ஒரு காலகட்டத்தில் 1959இல் இத்தீவின் மக்கள்தொகை 159 பேர் தான். பிறகு தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான 'சிலே' இத்தீவை தன் ஆட்சிக்கு உட்படுத்திய பிறகு இத்தீவின் மக்களுக்கு பல வகை உதவிகள் கிடைத்தன. உணவு இறக்குமதி, உல்லாசப் பயணிகள் வரவு, உலக அரங்கில் ஓர் அறிமுகம், அய்க்கிய நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கவன ஈர்ப்பு ஆகியன கிடைக்க ஆரம்பித்தன.

மக்களின் வாழ்க்கைத்தரம் உயர ஆரம்பித்தது. பழங்காலத்தில் இவர்களுக்குப் பணப்புழக்கம் தேவைப்படாததாக இருந்தது. இப்பொழுது பயன்படுகின்றது. இந்தத் தனித்த தீவில் மக்களுக்குக் கடல் தரும் உணவுதான் முக்கிய உணவு. மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழை, கரும்பு போன்றவற்றைத் தென்-அமெரிக்காவிலிருந்து வந்து பயிர் செய்திருக்க வேண்டும்.

இம்மக்கள் இத்தீவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் தோணிகளில் வந்திருக்கக்கூடும் என்பது ஒரு கருத்து.

இம்மக்களின் தலைவர்கள் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாக இருந்தாலும் வடக்கு தெற்கு என்று இரு குழுவாக வாழ்ந்து வந்துள்ளனர். இத்தீவின் ஓராண்டிற்கான தலைவராக, மலை உச்சியிலிருந்து இறங்கி ஒரு கிலோ மீட்டர் கடலில் நீந்தி, அங்குள்ள பெரிய மலைப் பாறையில் வந்து முட்டையிடும் சூட்டி டெர்ன் பறவையின் முட்டையை உடைக்காமல் கொண்டு வருபவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதைப் பறவை மனிதன் என்று சொல்லி 1760 முதல் 1864 வரை தொடர்ந்திருக்கின்றார்கள். "ராபாநூயி என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் "இந்தக் கதை காட்டப்பட்டுள்ளது. அந்தச் செங்குத்தான பாறையை நேரில் பார்த்த போது யாரால் முடியும் என்று மலைக்க வைத்தது.

நாங்கள் தங்கிய விடுதியில் கூரையின் மேல் புல் வளர்த்திருந்தார்கள். இதனால் என்ன நன்மை என்று தெரியவில்லை. கோடை வெயிலுக்காகவோ? தினமும் காலை உணவு மூக்குமுட்ட விதவிதமாகச் சாப்பிட வேண்டியது, பிறகு கால் கடுக்க நடந்து அல்லது பல நூறு படிகள் ஏறி ஊர்சுற்றிப் பார்க்க வேண்டியது.

உடல் சோர்ந்தது, உள்ளமோ துள்ளியது! இரண்டாம் நாள். பசிபிக் தீவுக்குரிய கலை நிகழ்ச்சிக்குப் பிறகு இரவு 9 மணியளவில் கடற்கரையிலிருந்து விண்மீன் கூட்டங்களைக் காணச் சென்றோம்.

அங்கே கற்கள் நிறைந்-திருக்கும், நாங்கள் உங்களுக்கு அனுப்பிய சிறிய கைமின் விளக்கை எடுத்து வாருங்கள் என்று சொன்னதையும் கேட்காமல் சென்ற இளங்கோவன் எப்போதும் போல என் (கைவிளக்கின்) உதவியால் தப்பித்தார்! எங்கள் குழுவுடன் வந்த புகைப்பட நிபுணர் க்ரிசு விண்மீன்களைப்பற்றி நிறைய விளக்கம் சொன்னார்.

இரவில் எப்படிப் படமெடுப்பது என்பதை ஒவ்வொருவருக்கும் அவரவர் காமிராவில் காண்பித்தார். அந்த இரவில் உலகின் மாசில்லாத தூய்மையான வானம் வந்து நம்மைத் தொடுவது போலவும், விண்மீன்களைக் கையால் பிடித்துவிட முடியும் போலவும் இருந்தது. எ

ங்கோ உள்ள தீவிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றார்களே, அங்கே என்ன இருக்கப் போகின்றது என்று எண்ணிய எங்களைப் பார்த்து விண்மீன்கள் சிரித்தன!

கனவு இன்று, நனவு அடுத்த இதழில்!

தமிழ் ஓவியா said...

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆசிரியர்-வடமொழி நடத்திய பண்பாட்டுப் படையெடுப்பு

ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் பேராசிரியர் டத்தோ மாரிமுத்து அவர்களின் பெருமுயற்சியாலும் டத்தோ சாமிவேலு அவர்களின் ஒத்துழைப்புடனும் மலேசிய அரசின் ஒரு மில்லியன் டாலர் உதவியுடனும் நடைபெற்ற மாநாட்டில் உலகளாவிய நிலையில் தமிழும் தமிழரும் என்ற தலைப்பில் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும்விதத்தில் அமைந்த ஆசிரியர் அவர்களின் உரையிலிருந்து சில துளிகள்:

உலகளாவிய அளவில் தமிழ்மொழி செழிக்க வேண்டுமானால், தொழில்நுட்பம் புகவேண்டும். சுமார் 60 நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் இணையத் தமிழ் பிறந்தது. உலகம் முழுவதும் தமிழ் பரப்பும் சமுதாயத் தொடர்புச் சாதனமாக இணையம் பயன்படுகின்றது.

தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், சுவடிகள் போன்றவற்றைப் பாதுகாத்துப் பேணுதல், புதிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு மொழியை வளப்படுத்துதல் போன்ற நோக்கங்களோடு எண்ணற்ற தமிழ்த்தளங்கள் வந்தவாறு உள்ளன. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாக தமிழ் இணையதளங்கள் விளங்குகின்றன.

இந்த அறிவியல் முறைகளைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால் மட்டுமே உலகளாவிய நிலையில் தமிழ் பேசப்படும். தமிழர்கள் மதிக்கப்படுவார்கள் என்று தமிழ் பேசும் மக்கள் மதிப்புப் பெறுவதற்கான வழிவகைகளைச் சுட்டிக் காட்டினார்.

தமிழ் மொழியின் பெருமை, பரமசிவனுடைய டமாரத்தில் இருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ சொல்லி விடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததாலும், முதலை உண்ட பாலனை அழைத்ததாலும், எலும்பைப் பெண்ணாக்கின-தாலும், மறைக்கதவைத் திறந்ததாலும் தமிழ் மேன்மையுற்றதாகி விடாதுஎன்று கூறும் தந்தை பெரியார், ஒரு மொழியின் தேவை முக்கியத்துவமெல்லாம் அது பயன்படுகின்ற தன்மையைப் பொறுத்ததேயாகும் எனக் குறிப்பிடுகிறார்.

மேலும், மக்களது அன்றாட வாழ்க்கையில் அவர்களது அறிவை வளப்படுத்தும் தன்மையில் எந்த வகையில் உபயோகப்படும்படி இருக்கிறது என்பதையே அளவுகோலாகக் கொண்டு அளக்க வேண்டும் என்கிறார் என தந்தை பெரியாரின் கருத்தினை எடுத்துரைத்தார்.

தகவல் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தகவல் யுகத்தில் கணிப்பொறிதான் கருவி, தகவலுக்கு மொழிதான் கருவி. எனவே மக்கள் பேசும் மொழி கணிப்பொறிக்குத் தேவை. உலக மொழிகளைக் கணிப்பொறியில் கையாள புத்தம் புதிய வசதிகளும் தொழில்நுட்பங்களும் வளர்ந்த வண்ணம் உள்ளன.

தமிழ் விசைப்பலகையின் வடிவமைப்பைத் தரம்படுத்தியது போல மொழி ஆய்வுக் கருவிகளை மின்_அகராதி (e-dictionary) சொற்களஞ்சியம் (thesaurus)) பெருந்தரவு (corpus) போன்றவற்றில் உருவாக்க வேண்டும். அப்போதுதான் உலகளாவிய நிலையில் தமிழ்மொழி வளரும் என தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு வழி கூறினார்.

எழுத்துக்கலையின் தொன்மையினை, திராவிடர்கள் மீதான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு என்ற ஆதாரக் களஞ்சியத்தி-லிருந்து எடுத்துக் காட்டினார். தமிழ் இலக்கியங்களில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு இருந்த விதத்தினை, அறிஞர் அண்ணா எழுதிய ஆரிய மாயை என்னும் நூலிலிருந்து எடுத்து விளக்கினார்.

கணினித் தமிழ் எழுத்துரு பயன்பாட்டில் நிகழவிருந்த பண்பாட்டுப் படையெடுப்பு முறியடிப்பினை, விடுதலை (28.10.2010) நாளிதழில் வெளிவந்த அறிக்கை மற்றும் செய்திகளின் அடிப்படையில் விளக்கம் கொடுத்தார்.

தமிழ்ச் சொற்களையெல்லாம் வடசொற்கள் என்று ஆக்குவதில் ஆதிக்கப் பழைமைவாதி-களுக்குத் தனி ஆசை. அவ்வாறு செய்வதால் இந்நாட்டுக்கும் அவர்கட்கும் இல்லாத தொடர்பை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். ஆனால், இந்தத் தீய முயற்சியை அறிவுடைய தமிழர்களும், நடுநிலையுடைய உலகமும் அறிந்து நகையாடக்கூடுமே என்பதை அவர்கள் கருதுவதேயில்லை.

தமிழ் ஓவியா said...


இதோ, வடமொழி எனக் கருப்படும் தமிழ்மொழி வேர் அடையாளத்துடன் சில சொற்களைப் பற்றிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் அறிவார்ந்த விளக்கம்! என்று கூறிய ஆசிரியர், புரட்சிக்கவிஞரின் வந்தவர் மொழியா செந்தமிழ்ச் செல்வமா எனும் நூலிலிருந்து மீன், நேயம், பூசை, தெய்வம் போன்ற சில சொற்களை எடுத்துக்கூறி விளக்கம் தந்தார்.

தமிழ் எழுத்துக் குடித்தனத்தைச் சிக்கனப்படுத்தும் வழிமுறைகளாக, தொடக்க நிலையில், தற்சமய நடைமுறையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், மேலும் சீர்திருத்த நடைமுறை ஆக்கத்திற்கு, தமிழ் வளர்ச்சிக்கான கணினி ஆக்கப் பணிகள், தமிழ் வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகள் ஆகியன குறித்துப் பேசிய ஆலோசனைகள் பாராட்டி வரவேற்கத்தக்கன.

ஆசிரியரின் சிறப்புரை புத்தகமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-------------

உலகத் தமிழ் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி

தமிழர் வாழ்ந்த விதம், வளர்ந்த விதம், இன்று வாழ்கின்ற முறை அனைத்தையும் உலகத் தமிழ்ப் பேராளர்களுக்கு சுவையோடு விவரிக்கும் அரிய வாய்ப்பை அண்மையில் பெற்றார், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. இடம்: கோலாலம்பூர் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு. முன்னிலை: மலேசியத் தமிழ்த் தலைவர் டத்தோ சாமிவேலு மற்றும் 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஈராயிரம் தமிழ்ப் பேராளர்கள். ...

"உலகளாவிய நிலையில் தமிழும், தமிழரும் என்ற தலைப்பில் மாநாட்டில் சிறப்புரையாற்றிய கி.வீரமணி அவர்கள், தமிழுக்கும்-தமிழருக்கும் கிடைத்த அரும்பொருளில் திருக்குறளுக்கு ஈடு இணை எதுவும் இல்லை' என்றார்.

தமிழ்த் தலைவர் வீரமணி எங்கள் வழிகாட்டி' என்று, சிறப்புரைக்கு முன் அறிமுகம் செய்த டத்தோ சாமிவேலு, மலேசியத் திராவிடர் கழகம் எங்களுக்கு உணர்வூட்டும் அமைப்பு என்றும் கூறினார்.

இறுதி நாள் கூட்டத்தில், மலேசிய இரண்டாம் கல்வி அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்விலும் அவரை முன்னிலைப்படுத்திய டத்தோவும், அவரின் ஏற்பாட்டுக் குழுவினரும் பெயர் குறிப்பிட்டு அவருக்கு நன்றி நவில மறக்கவில்லை.. 57 நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது-கோடிக் கணக்கானோர் தமிழைப் பேசுகின்றனர்.

தமிழ் மொழி வாடாமல் வதங்காமல் மேலும் வளர வேண்டும் என்பதில் தமிழினத்திற்கு அக்கறையும், பொறுப்பும் அதிகரித்து வருகின்றன என்று கூறிய திரு. கி.வீரமணி, சிங்கப்பூரில் தமிழ் அதிகாரத்துவ மொழியாக விளங்குவதையும், மலாய் மொழியை தேசிய மொழியாகக் கொண்ட மலேசியாவில், தமிழ்ப் பள்ளிகளுக்கும், தமிழ்க் கற்பித்தலுக்கும் நிறைய நிதி ஒதுக்கப்பட்டு வருவதையும் பாராட்டினார்.

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்களை அங்கீகரித்ததில் தமிழகம் அல்லாத முதல் நாடு சிங்கப்பூர் எனப் பலத்த கையொலிகளுக்கிடையே குறிப்பிட்ட அவர், பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகள் இன்றைய நவீன முன்னேற்றங்களுக்கு வழி திறந்தவை என்றார்.

வேதங்கள் சம்ஸ்கிருத மொழியில் அமைந்தவை என்பது சரியல்ல - அவை தமிழில்தான் இருந்தன என்பதை அண்மைய நூல் ஒன்றின் (நாவாலியூர் நடராஜன் எழுதிய வட மொழி இலக்கிய வரலாறு') மேற்கோளுடன் குறிப்பிட்ட திரு.வீரமணி, தமிழுக்கும் செம்மொழி அங்கீகாரம் பல ஆண்டுப் போராட்டத்திற்குப் பின் தான், 2004இல் 11 தகுதிகளின் அடிப்படையில் கிடைத்தது என்றார்.

மண்ணுக்கு உரம் தேவை - அதன் பயனாகப் பயிர்களை கூடுதலாக உண்டாக்கலாம். ஆனால் உரத்தையே உணவாகக் கொள்ளலாமா? என்ற கேள்வியுடன், சிறப்புரைக்குச் சிறப்புச் சேர்த்தார் இணை வேந்தர் கி.வீரமணி.

- சிங்கப்பூர் முதுபெரும் எழுத்தாளர் ஏ.பி.இராமன் முகநூலில் எழுதியுள்ளது

தமிழ் ஓவியா said...கருத்து

’மேக் இன் இந்தியா’ மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுகிறார் பிரதமர் மோடி. ஆனால், வெளிநாட்டுத் தயாரிப்புகளை இந்தியாவில் விற்க சங்பரிவாரின் பொருளாதாரப் பிரிவான ஸ்வதேசி ஜாக்ரண் மஞ்ச் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. என்ன முரண் இது?

- திக்விஜய் சிங்

காங்கிரஸ் பொதுச்செயலாளர்

மதச்சார்பின்மை மற்றும் சோஷலிசம் என்ற வார்த்தைகளை அரசியல் சட்டத்தின் முகவுரையிலிருந்து நீக்க வேண்டும் என சிவசேனா தெரிவித்துள்ளது அழிவை ஏற்படுத்தக்கூடியது; கண்டிக்கத்தக்கது மற்றும் வெறுக்கத்தக்க அறிக்கையாகும். அறியாமையின் வெளிப்பாடே அந்த அறிக்கை மதச்சார்பின்மை அவசியம் இல்லை என சொல்வது கவலை தருவதாக உள்ளது.

- ஜிதன்ராம் மாஞ்சி

பிகார் முதல்வர்

மத சுதந்திரம் மற்றும் பன்மைத்துவம் மிகுந்த இந்தியா, தற்போது வெறுப்பு, பெரும் பான்மைத்துவம் மற்றும் சகிப்புத் தன்மை இல்லாத நாடாக மாறியிருக்கிறது. புதிய அரசு பதவியேற்ற முதல் 100 நாட்களில், சிறுபான்மை கிறித்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களை இந்து தேசியவாதிகள் அதிகரித்து இருப்பதாக என்.ஜி.ஓ.க்களின் ஆவணங்-களின் தகவல்கள் கூறுகின்றன.

- ஜோ பிட்ஸ்,

அமெரிக்காவின் குடியரசு

கட்சியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர்.தேர்தல் சட்டத் திருத்தம் வருகின்ற நேரத்தில் இந்தியாவில் பல்லாண்டு-களாகப் பலராலும் சொல்லப்-பட்டு வருகின்ற விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பற்றியும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

- கலைஞர், தி.மு.க. தலைவர்

மனிதனின் வாழ்க்கை உயர்வடைய புத்தகங்கள் மிகவும் முக்கிய-மானவை. ஒருவன் தலைகுனிந்து-படிப்பது-தலைநிமிர்ந்து வாழ்வதற்கே. உலக அளவில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியவை புத்தகங்களே. புத்தகம் என்பது ஒவ்வொரு முறை திறக்கும்-போதும் வெடிக்கக்கூடிய சக்தி படைத்தது. சாதாரண மனிதனைக்கூட சாதனை மனிதனாக்க புத்தகங்களால் முடியும்.

- இரா.தாண்டவன்,

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்.


சொல்றாங்க...

அய்க்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு கொடுக்கும்.

- ஒபாமா, அமெரிக்க அதிபர்

சொல்றேங்க...

அமெரிக்காவா? நம்ப வைத்துக் கழுத்த அறுக்காம இருந்தா சரி!

இந்தியா_பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு அய்.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு அளிக்கக் கூடாது.

- சர்தாஜ் அஜிஸ்,

தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாகிஸ்தான்.

ஏன் சீனாதான் நெருக்கமா இருக்கே, அங்க விண்ணப்பித்தாப் போச்சு!

தமிழ் ஓவியா said...

கர்மவீரன் கோட்சேயாம்!
பாராளுமன்றத்தின் முன் சிலைகளாம்!சந்திரபிரகாஷ் கவுசிக்

காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் சிலை வைக்க மத்திய அரசை நாடியுள்ளதாக கூறியுள்ளது. நாடு முழுவதும் கோட்சேவிற்கு சிலைகள் அமைக்க வேண்டும் என்று இந்து மகாசபை கூறியிருந்தது.

இந்த நிலையில் முதலில் நாடாளுமன்றத்தில் சிலை அமைத்துவிட்டு பிறகு மற்ற இடங்களில் அமைக்க வேண்டும் என்று தற்போது மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.

இதுகுறித்து டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சந்திரபிரகாஷ் கவுசிக் கூறியதாவது: இதுவரை நமது நாட்டை ஆண்ட அரசுகள் நாதுராம் கோட்சே போன்ற கர்மவீரரை தேசத்தின் எதிரியாகவும் கொலைகாரனாகவும் சித்தரித்து வந்தது. ஆனால் கோட்சே அப்படியாப்பட்டவர் அல்ல, அவர் ஒரு உண்மையான தேசபக்தர்.

அவரை நாம் கொலைகாரராகப் பார்க்கக்கூடாது. ஆனால், நமது தேசத்தை ஆண்ட தேசவிரோத சக்திகள் நம்மை அப்படிப் பார்க்க வைத்துவிட்டனர். தற்போது தேசநலனில் அக்கறை கொண்ட அரசு மலர்ந்திருக்கிறது. இது ஒரு இந்து ராஷ்டிரம். இதை மத்திய அரசே ஒப்புக்கொண்டு விட்டது.

பிரதமர் மோடிகூட பல மேடைகளில் இதைக் கூறியுள்ளார். இந்த நாட்டில் உள்ள ஒருவர் இந்து நாடு என்று கூறுவதில் தவறு என்ன என்று புரியவில்லை. மோடி ஒன்றும் பாகிஸ்தானிலோ, அல்லது இஸ்ரேலிலோ சென்று இந்து நாடு பற்றிப் பேசவில்லை. இந்து நாட்டில் இருந்து இந்து நாட்டைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

சாக்சி

கோட்சேவிற்கு சிலை வைக்கும் முடிவு நடாளுமன்றத்தில் இருந்தே தொடங்க வேண்டும். தெருவிற்குத் தெரு சிலைவைக்கும் முன்பு நாடாளுமன்றத்தில் சிலை வைத்தால் அதற்குத் தகுந்த மரியாதை கிடைக்கும்.

இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே எங்களின் பிரதிநிதிகள் மத்திய அரசை அணுகியுள்ளனர். முதலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிலை வைத்த பிறகுதான் மற்ற இடங்களிலும் வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். இதற்கு மத்திய அரசும் அனுமதியளிக்கும் என்று உறுதிபடக் கூறுகிறோம்.

சாக்சி, கோட்சேவைப் பற்றிக் கூறியது, பிறகு பின்வாங்கியது பற்றிக் கேட்டபோது, நமது நாட்டின் மீது பற்றுக்கொண்ட தேசபக்தர்கள் அனைவரும் கோட்சேவை ஒரு கர்மவீரன் போன்றுதான் பார்க்கிறார்கள். இந்துக்களின் பாதுகாவலனாகிய கோட்சேவை திறந்த மனதுடன் இதுவரை ஆதரிக்க யாருக்கும் துணிச்சல் இல்லை, காரணம் சில தேசவிரோத சக்திகளின் பிடியில் நமது நாடு சிக்கி இருந்தது. இப்போது நாம் பயப்படத் தேவையில்லை.

இன்று கோட்சே போன்று வீரம், விவேகம் கொண்ட இளைஞர்கள் பெருகியுள்ளனர். இவர்களுக்கு எல்லாம் இனி சுதந்திரம்தான். இவர்கள் நினைத்தால் இந்து தேசத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டு செல்ல முடியும். அரசியல்வாதிகளுக்கு அரசியல் லாபம்தான் முக்கியம்.

அதனால்தான் ஆளும் பா.ஜ.க. அரசு கோட்சே பற்றி திறந்த மனதுடன் முடிவெடுக்க இயலவில்லை. ஆனால் தற்போது நடப்பது இந்து அரசு. ஆகையால் எந்த முடிவிற்கும் தயக்கம் கொள்ளத் தேவையில்லை. கோடான கோடி இந்துக்களின் ஆதரவு என்றும் பா.ஜ.க. அரசிற்கு உள்ளது என்று கூறினார்.

ஆதாரம்: http://www.liveaaryaavart.com/2014/12/demand-for-putting-Godsey-idol-in-parliament.html

கோட்சே போன்ற மகா புருஷர்களுக்கு இந்தியாவில் சிலை வைக்காமல் பாகிஸ்தானிலா வைக்க முடியும்?

- இந்து மகாசபைத் தலைவர் சந்திரபிரகாஷ் கவுசிக், (எக்னாமிக் டைம்ஸ் 17.12.2014)

தமிழ் ஓவியா said...

கால மாற்றத்திற்கேற்ப புதிய யுத்திகள்- தொழில்நுட்பங்கள் தமிழுக்குத் தேவை

கடந்த (2015) ஜனவரி 29,30,31 பிப்ரவரி 1ஆம் நாள் ஆகிய நாட்களில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (9th International Conference - Seminar on Tamil Studies) பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி அமைப்பான (International Association for Tamil Research (IATR) சார்பில், மிகச் சிறப்பாக சுமார் இரண்டாயிரம் பேராளர்களுக்கு மேல், உலகின் 20 நாடுகளிலிருந்தும் வந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தகுந்தது.

எட்டாவது மாநாடு தமிழ்நாட்டில் 1995இல் நடந்த பிறகு மாபெரும் இடைவெளி ஏற்பட்டது.

(தி.மு.க.ஆட்சிக் காலத்தில் மாண்பமை முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடத்த அக்குழுவினர் என்ன காரணத்தாலோ, அனுமதிக்காததன் விளைவாக, கோவையில் பெருஞ் சிறப்புடன் தமிழக அரசால் கலைஞர் பொறுப்பேற்று நடந்த அம்மாநாடு செம்மொழித் தமிழ் மாநாடாகவே நடைபெற்றது).

20 ஆண்டு இடைவெளிக்குப் பின் முற்றிலும் மாறிய உலகச் சூழலில், இந்த 9ஆவது மாநாடு கோலாலம்பூரில், மலேசிய அரசின் ஆதரவோடு; மலேசியப் பல்கலைக்கழகமும் இந்த அமைப்புடன் இணைந்து நடத்தப்படுவதற்கு மலேசிய அமைச்சர் தகுதியில் உள்ள இந்தியா மற்றும் தெற்கு ஆசியா கூட்டமைப்புத் துறை ஏற்பாட்டு ஆற்றலாளர் மாண்பமை டத்தோசிறீ, உத்தாமா சா. சாமிவேலு அவர்களது வற்றாத ஆர்வமும், வழிநடத்தும் திறமையுமே காரணமாகும்.

மலேசிய தலைமை அமைச்சர், மாண்புக்குரிய டத்தோ சிறீ மகம்மது நஜீப் பின்துன் இராசக் அவர்கள் இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உலக மாநாட்டைத் துவக்கி வைக்க இசைவு தந்ததோடு, வருகை புரிந்து, மிக அருமையாக உரையையும் நிகழ்த்தினார்.

திருக்குறள் ஒரு உலகப் பொது நூல் என்று பறைசாற்றியதோடு, தமிழின் தொன்மை, வளம் பற்றிக் கூறியதோடு, மலேசிய அரசாங்கம் நாடெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ்ப் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க வேண்டுமென்பதற்காகவே 540க்கு மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளை மலேசிய அரசே நடத்தி வருகிறது.

தமிழ் ஓவியா said...

தமிழ் மொழிப் பாதுகாப்பிலும், தமிழர்களின் நலத்திலும் அக்கறை செலுத்தும் அரசாக மலேசிய அரசு இருக்கும் என்றும், டத்தோ சிறீ மாநாட்டுத் தலைவர் சாமிவேலு அவர்களின் ஆற்றல், தொண்டு பற்றியும், தமிழர்கள் ஒற்றுமையின் அவசியத்தைக் குறித்தும் மிகவும் நகைச்சுவை கலந்த ஒரு சிறப்புரையாற்றி, ஒரு மில்லியன் மலேசிய வெள்ளிகளை (10 லட்சம்) அரசின் சார்பாக மாநாட்டிற்கு நன்கொடை அறிவித்து, பலத்த கைத்தட்டலைப் பெற்றார்.

மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய டத்தோ சிறீ சாமிவேலு அவர்கள், பிரதமருக்கும், வந்துள்ள தமிழ் அறியா மற்ற இனத்துப் பெரு மக்களுக்கும் புரியும் வண்ணம் பேசினார். தமிழின் சிறப்பு, இத்தகைய மாநாட்டை மலேசிய அரசின் உதவியுடன் நடத்துவது இது மூன்றாவது முறை என்பது பெருமைக்குரியது என்றார்.

டான்சிறீ பேராசிரியர் டாக்டர் மாரிமுத்து வரவேற்புரை ஆற்றினார்.

(முதல் மாநாடு, ஆறாவது மாநாடு இந்த ஒன்பதாவது மாநாடு - மலேசியத் தலைநகரில் மூன்றாவது தடவையாக இப்பொழுது நடத்தப்படுகிறது) தமிழ்நாட்டில் மூன்று முறை (1968, 1981, 1995) நடத்தப்பட்டுள்ளது.

இருபது ஆண்டு இடைவெளி இந்த மாநாட்டின் மூலம் மூடி நிரப்பப்பட்டு, தமிழ் கூறும் நல்லுலகம் ஒன்றுபட்ட கருத்துப் பரிமாற்றத்தை உலக வளர்ச்சிக்கேற்ற, தமிழ்மொழி நவீனத்துவம் அடைவதில் அக்கறை செலுத்த வேண்டுமென்று விரும்பி - தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிடையே கலந்து கலந்து பேசி, மகிழ்வித்தார்.

தனித்தனி அமர்வுகள், ஆய்வரங்கங்கள் ஆங்காங்கே மூன்று நான்கு நாள்களும் நடைபெற்றன.

இந்த நான்கு நாள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட என்னால், ஜனவரி 30, 31, பிப்.1 ஆகிய நாள்களில் மட்டுமே கலந்து கொள்ளும் வாய்ப்பு - எனது சுற்றுப் பயணத் திட்டம் காரணமாகக் கிட்டிற்று.

தமிழ் ஓவியா said...


சில அமர்வுகளுக்குச் சென்று கலந்து கொண்ட பிறகு 31ஆம் தேதி மாலை 6 மணிக்கு பொது அரங்கத்தில் டத்தோ சிறீ சாமிவேலு அவர்கள் தலைமையேற்க, பேராசிரியர் முனைவர் குமரன் வரவேற்க, மோகன்தாஸ் இராமசாமி அவர்கள் நன்றி கூறிட, நான் மாநாட்டின் வரவேற்பு குழுவினர் தந்த தலைப்பாகிய உலகளாவிய நிலையில் தமிழும் தமிழரும் என்ற தலைப்பில் சுமார் 60 மணித் துளிகள் (1 மணி நேரம்) உரையாற்றினேன்.

அறிவார்ந்த அந்த அரங்கத்தில் பெரியார் வாழ்நாள் மாணவனாகிய நான் அவரது கருத்துகளைத்தான் எடுத்துரைக்க, ஒரு சமுதாயத் தொண்டனாக நான் வந்து உரையாற்றுகிறேன் என்ற தொடக்கத்துடன் கூறி பல்வேறு கருத்துகளை தமிழின் பழம் பெருமை என்பது முக்கியமில்லை; கால மாற்றத்துக்கு ஏற்ப கருத்து மாற்றமும் - அதற்கு வழி காண மொழி என்ற கருவியின் புதுமை நோக்கும், புதிய உத்திகளும் தேவை;

தமிழ் மொழி இணையத்தில் கன்னித்தமிழ் இன்று கணினித் தமிழாக வளரும் நிலைக்கு தந்தை பெரியாரின் எழுத்துச் சிக்கனம் கை கொடுத்து உதவியது பற்றிக் கூறி, தமிழ் வழி - புத்தாண்டு பொங்கலை ஒட்டியது என்று மலேசியாவில் நடைபெற்ற மாநாட்டில் ஏற்கப்பட்டது - முதன்முதலில்! அதற்காகப் பாராட்டிப் பெருமையுடன் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.


வேதங்களே வடமொழியான சமஸ்கிருதத்தில் முதலில் எழுதப்பட்டவை அல்ல; வேதத்தில் (ருக் வேதத்தில்) உள்ள பல சொற்கள் தமிழ்ச் சொற்கள் என்பதை தமிழ் ஆராய்ச்சி அறிஞர்கள் மட்டுமல்ல; இலங்கையின் ஈழத்துப் பெருமகனார் நவாலியூர் நடராசன் எழுதிய வடமொழி வரலாறு நூல் உட்படக் கூறுகிறது என்பதைக் கூறி தமிழைப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியது மிகவும் இன்றியமையாதது என்பது பற்றி விளக்கினேன்.

இந்தக் கருத்துகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது!

தமிழ் ஓவியா said...


தலைமை தாங்கிய டத்தோ சிறீ சாமிவேலு அவர்கள் தமது பொது வாழ்க்கையின் துவக்கம் திராவிடர் கழகத்திலிருந்து தான் என்றும், அவ்வியக்கம் ஒரு அருமையான எடுத்துக்காட்டான இயக்கமாகும்;

இன்று தமிழ்நாட்டில் தனித்தன்மையோடு இயங்கி மக்களுக்குத் தொண்டறம் புரிந்து வருகிறது என்றும் எடுத்துக் கூறி, அருமையான உரையாற்றி முடிவுரை நிகழ்த்தினார் எனதுரை பார்வையாளர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றது; நேரிலும் பாராட்டினர், முகநூலிலும் பாராட்டுகளை அறிய முடிந்தது.

31ஆம் தேதி பிற்பகல் 5 மணியளவில் மன்னை அம்பிகாபதி அவர்கள் தலைமை தாங்கிய ஒரு அமர்வு; பாரதியார் பற்றிய கருத்தரங்க அமர்வில் பார்வையாளராக டத்தோ சிறீ, நாமும் கலந்துகொண்டு அமர்ந்து கேட்டோம். தமிழ் மாணவி (மலேசியாவைச் சார்ந்த சுங்கைப் பட்டாணியைச் சேர்ந்தவர்) புதுமைக் கோணத்தில் ஆண் ஆதிக்கம் பாஞ்சாலி சபதப் பாடலில் இருந்ததுபற்றி கட்டுரை வாசித்தார்; இது ஒரு புதுமை நோக்கு.

மறுநாள் காலை 11 மணி அளவில் சிங்கப்பூர் பேராளர்கள், டாக்டர் சுப. திண்ணப்பன் தலைமையில் ஒரு ஆய்வரங்கத்தில் பார்வையாளராக இருந்து கேட்டேன்.

புதுவையில் 1846இல் எளிய நடைக் கவிதை மூலம் அறநூல் அறிவுரைக் கவிதை வழங்கிய சிங்கப்பூர் இலக்கிய முன்னோடி நாராயண நாயகர்பற்றிய ஆய்வுக் கட்டுரை, சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழக (ஷிமிவி) வரலாற்றுப் பேராசிரியர் சண்முகம் சிங்கப்பூர் நாட்டின் பூர்வ கட்டுமானம், இந்தியாவின் கைதிகள் அரசியல் கைதிகளைக் கொணர்ந்து கட்டப்பட்ட வரலாற்றையும் பற்றி மற்றொரு ஆய்வு சிறப்பாகப் தரப்பட்டது.

பின் என்னைப் பரிசளிக்க அழைத்தனர் - சிறு பாராட்டுரையுடன் பரிசுகளை வழங்கினேன்.

பல்வேறு நாடுகளிலும் பகுதிகளிலிருந்தும் வந்திருந்தவர்களின் ஒருங்கிணைந்த சந்திப்பு - கலந்து உறவாடலுக்கு அதிக வாய்ப்பில்லாதது ஒரு வருத்தமே!

தமிழ் ஓவியா said...

என்றாலும் ஓரளவு இயன்றது; தமிழ்-நாட்டிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் தாண்டவன், பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.எம். முத்துக்குமார், தமிழ்த் துறைச் செயலாளர் டாக்டர் இராஜாராமன் அய்.ஏ.எஸ்., சட்டமன்ற உறுப்பினர் வைகைச் செல்வன், கோவை கவிதாசன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் கணேஷ்ராம் தலைமைப் பேராசிரியர்கள், டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை அறிவியல் மகளிர் கல்லூரி (சென்னை அடையாறு) தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியை அபிதா சபாபதி, சட்டக் கதிர் ஆசிரியர் சம்பத், டாக்டர் விஜி.சந்தோஷம் போன்ற பலரும் கலந்து கொண்டனர்.

என்னுடன் பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள் வந்திருந்தார்.

இறுதிநாளின் நிறைவு நிகழ்ச்சியில் மொரிஷியஸ் ஆறுமுகம் பரசுராமன் போன்றோர் பேசினர். சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் குறும் உரைகளை நிகழ்த்தினர்.

பேராசிரியர் டான்சிறீ மாரிமுத்து, முனைவர் கந்தசாமி, முனைவர் இராமசாமி ஆகியோர் உரையாற்றினர்.

டத்தோ சிறீ சாமிவேலு அவர்கள் மலேசிய துணைப் பிரதமர் சார்பில் இரண்டாம் கல்வி அமைச்சர் திரு. யூசுப் அவர்களும், கமலநாதன் அவர்களும் கலந்து கொண்டனர். மாநாட்டில் உலகத் தமிழர்களின் பங்கேற்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் மலேசிய அரசு பாதுகாப்பாக இருந்து வளர்ச்சி அடையச் செய்வது உறுதி என்றும் கூறி தமிழ் வளர்ச்சிக்கு மலேசிய அரசு செய்தவற்றைப் பட்டியலிட்டார்.

மலேசியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மலாய்கார அம்மையார் ஒருவரும் பங்கேற்றார்.

அதன்பின் முக்கிய விருந்தினர்களுக்குத் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. அங்கே முக்கிய மேசையில் தேநீர் அருந்த என்னையும் அமைச்சர் திரு பரசுராமன் அருகே அமர வைத்து சிறிது நேரம் உரையாடியபின் விடை பெற்றனர். மாநாடு வரலாறு படைத்தது என்றாலும் இவ்வளவு பெரிய மாநாட்டில் சிற்சில குறைகள் இருந்தன என்பது பொருட்படுத்தக் கூடாதவை.

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை நினைவூட்டிக் கொண்டு, அடுத்த மாநாடு 2017இல் சிகாகோவில் நடத்த அவர்கள் விடுத்த வேண்டுகோளை - அழைப்பை டாக்டர் மாரிமுத்து அறிவித்தது மகிழ்ச்சிக்குரியதாகும்.

தமிழ் மாநாட்டு ஆய்வுகள் ஒரு வற்றாத (ஜீவ) நதியாக ஓடிக் கொண்டிருந்தன.
இதனைச் சிறப்பாக நடத்திட உழைத்த ஆசிரியர்கள் - தோழர்கள், தமிழன்பர்கள் தொண்டறம் மிகவும் நன்றியோடு பாராட்டத் தகுந்தது!

முழுக் குவளை நீர் இல்லையே என்று வருந்துவதைவிட, தாகத்தால் தவித்தவர்களுக்கு அந்நேரத்தில் முக்கால் குவளை நீர் கிடைத்தது - மகிழ்ச்சிக்குரியதே!

கால் குவளை குறையை எண்ணி வருந்தி, நம் மகிழ்ச்சியைத் தொலைப்பது கூடாது!
உதவிய மலேசிய அரசு, மலேயா பல்கலைக்கழகம், தமிழ் அமைப்பினர் குறிப்பாக டத்தோ சிறீ சாமிவேலு, டான்சிறீ மாரிமுத்து, பதிவாளர் புண்ணிய மூர்த்தி, பேராசிரியர்கள் கந்தசாமி, குமரன், மோகன்தாஸ் இராமசாமி போன்ற அனைவருக்கும் நமது பாராட்டுகள்!

-கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கோவில் நிதி மக்களுக்காக்வே!

”நிதி நெருக்கடியில் திண்டாடும் மத்திய அரசு கோவில் நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே” என்ற தலைப்பில் 21.01.2015 அன்று விடுதலையில் ஆசிரியர் அறிக்கை வெளிவந்தது. ஆசிரியரின் அறிக்கை தொடர்பான கருத்து குறித்த பல்துறை அறிஞர்களின் எண்ணப் பதிவுகள் இங்கே...

ச.இராசரத்தினம், வரியியல் வல்லுநர், பல்துறை எழுத்தாளர்

கோவில் சொத்துகளில் ஒரு பகுதியைக் கடன் பத்திரங்களாக வசூலிக்கலாமே என்ற ஆசிரியரின் அறிக்கை வரவேற்கத்தக்கதே. அதனை மேலும் விரிவாக்க சில யோசனைகள்.

பெரியார் குறிப்பிட்ட முதலாளிகளின் பெட்டகங்களில் முடங்கிக் கிடக்கக்கூடிய தங்க ஆபரணங்களும் கருப்புப் பணமும் எவருக்கும் பயன்படுவதில்லை. இறக்குமதிகளாலும் கடத்தல் மூலமும் வரும் தங்கம் நமது பொருளாதாரத்தைச் சீர்குலைக்கிறது.

அதைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை. வரிக்குட்பட்ட ஒரு பொது மன்னிப்புத் (Amnesty) திட்டத்தின் கீழ் அரசிடம் வங்கிகளின் மூலம் வைப்பாக (Deposit) அதன் மதிப்புக்கேற்ப பத்திரங்கள் (Gold Bonds) வழங்கலாம்.

அவற்றின் மூலாதாரத்தைப் பற்றிய தகவல் தேவையிருக்காது. அவை திரும்பப் பெறும்போது மூலாதாரம் இல்லாத பகுதிக்கு 30 விழுக்காடு வரி வதிப்பு உண்டு.

அதேசமயம் ஒரு உச்ச வரம்புக்கு மேல் எந்த நபரோ நிறுவனமோ தங்கம் வைத்திருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என்ற சட்டமும் இயற்றி அமலுக்கு வர ஏற்பாடு செய்வதும் திட்டத்தின் ஒரு பகுதி.

இதுபோன்ற சட்டங்கள் சில நாடுகளில் உண்டு. அது மாதிரியே ரொக்கப் பணத்திற்கும் உச்ச வரம்பு வைத்து அதிகப்படியான பணத்தைப் பறிமுதல் செய்யலாம் என்ற சட்டத்துடன் கூடிய அடித்தளத்தேவைப் பத்திரங்களுக்காக (Infrastructure Bond) ஒரு பொது மன்னிப்புத் திட்டம் கொண்டு வந்தால், கருப்புப் பணத்தையும் ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

தமிழ் ஓவியா said...


அமுதன், ஆவணப்பட இயக்குநர்

நல்ல யோசனைதான். மக்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும், நாடு வளர்ச்சியடையும் என்றுதான் வாக்களித்தோம். கல்வி, மருத்துவம் போன்ற பல அத்தியாவசிய செலவுகளுக்குப் பணம் இல்லை என்கிறது மத்திய அரசு.

இப்படியொரு சூழ்நிலையில் கோவில்களில் முடங்கிக் கிடக்கும் பணத்தினை எடுத்துப் பயன்படுத்துவதில் தவறில்லை. இந்துமதம் அனைவரையும் காப்பாற்றக்கூடியது, அனைவரையும் நல்வழிப்படுத்துகிறோம், திரும்ப வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றனர்.

திருப்பதி கோவிலின் டெபாசிட்டுக்கு ஆண்டு வட்டி மட்டும் 655 கோடி ரூபாய், தலைமுடி காணிக்கை 190 கோடி ரூபாய் என்ற கணக்கு... சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று.

கோவில் நிர்வாகம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இந்தியா முழுவதும் உள்ள கோவில்கள் அறநிலையத்துறையின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

மக்கள் பணம் கண்டிப்பாக மக்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். ஆசிரியரின் கருத்து வரவேற்கத்தக்கது.

முனைவர் அ.இராமசாமி, வரலாற்றுப் பேராசிரியர், மேனாள் துணைவேந்தர்

மக்கள் நலம் விரும்புவோர் வரவேற்பர். ஜனநாயகத்தில் அரசு என்பது மக்கள் நலம் பேணும் அரசாக (Welfare State) இருக்க வேண்டும்.

மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற எல்லா வகையிலும் நிதி ஆதாரங்களைத் தேட-வேண்டியது அவசியமாகிறது. இன்றைய இந்திய மத்திய அரசு எங்கெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் வரி போட்டு முடித்தாகிவிட்டது.

மேலும் நிதியைத் திரட்ட எங்கே போவது?

கோவில்களில் குவிந்துள்ள செல்வங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆசிரியர் கூறுவது சரியான நேரத்தில் கூறப்பட்ட சரியான அறிவுரையாகும். கோவில்களில் உள்ள செல்வங்களை யார் கொடுத்தது? கடவுள் கொடுத்ததா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் பார்ப்பனர்கள் கொடுத்ததா? உண்மையில் மன்னர்கள்தான் கொடுத்தார்கள்.

மக்களிடம் இருந்து திரட்டிய செல்வத்தைத்தான் மன்னர்கள் கோவில்களுக்குக் கொடுத்தார்கள். எனவே, திரும்ப மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதில் தவறு ஏதும் இல்லை.

அதிலும் _ கோவில் நிதியைக் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம் என்றுதான் ஆசிரியர் கூறியிருக்கிறார். எனவே, இது ஒரு நல்ல திட்டம். மக்கள் நலம் பேணும், மக்கள் நலனை விரும்புகின்ற எவரும் இந்தத் திட்டத்தை வரவேற்பார்கள் என்பது உறுதி.

ஆளூர் ஷாநவாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

கோவில், தேவாலயம், பள்ளிவாசல் சொத்துகள் இவற்றை நிர்வகிக்கின்ற நிர்வாகிகளுக்கோ, வழிநடத்துகின்ற மத குருக்களுக்கோ உரியவை அல்ல. மக்களுடைய பயன்பாட்டுக்காக மக்களால் கொடுக்கப்பட்ட அந்தச் சொத்துகள் மக்களுக்குத்தான் பயன்பட வேண்டும்.

நிர்வகிக்கிறவர்களும், வழிநடத்துபவர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் முதலாளித்துவ சக்திகளுமே சொத்துகளை அனுபவிக்கின்றனரே தவிர, மக்கள் அதற்கு வெளியேதான் இருக்கின்றனர். குறிப்பாக, முஸ்லிம் செல்வந்தர்களால் முற்காலத்தில் வழங்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

ரூ.4 லட்சம் கோடியைத் தாண்டும் அளவுக்கு மதிப்புடைய சொத்துகளுக்கு உரிய சமூகமாக இந்திய முஸ்லிம் சமூகம் இருக்கின்றபோதும், வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் இடஒதுக்கீடு கேட்டு மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வாய்ப்புக்காக ஏங்கி நிற்கின்ற சமூகமாக உள்ளது.

வக்பு வாரியத்தின் சொத்துகள் அனைத்தையும் முறையாக அரசு அம்மக்களுக்குப் பயன்படும் வகையில் கொடுத்திருந்-தால் இந்த நிலை வந்திருக்காது.

குமாரதேவன், வழக்குரைஞர்

ஆக்கப்பூர்வமான கருத்து. இதனால் எங்கள் மனம் புண்படுகிறது, கோவிலுக்கு எந்த நோக்கத்திற்காகக் கொடுத்தோமோ, அந்த நோக்கம் அழிந்து போகிறது என்கின்றனர். இது முற்றிலும் தவறான பார்வையுடையது.

எல்லா வளங்களையும் பெற்று நலமாக வாழ வேண்டும் என்பதற்குத்தானே பக்தர்கள் கடவுளுக்குக் காணிக்கை செலுத்துகின்றனர். அந்த அடிப்படையில் நிதிப் பற்றாக்குறையால் இன்று நாடு தவிக்கும் சூழலில் மக்கள் கொடுத்த அதே நோக்கத்திற்காகவே அது செலவிடப்படுவதில் தவறில்லையே.

கோவில்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் செல்வங்களை -_ சொத்துகளைப் பயன்படுத்த அரசு ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும். கோவில் பணத்தை மீட்டு மக்களுக்கு உதவிடச் செய்வது அரசின் கடமை. இதன்மூலம் நாம் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். நம் நாட்டின் வெளிநாட்டுக் கடன் கணிசமாகக் குறையும்.

பத்துத் தலைமுறைக்குப் பற்றாக்குறையே வராது.

தமிழ் ஓவியா said...

சர்க்கரை நோய்க்கு மருந்து தேவை இல்லை


மரபு வழி - மரண வழியா?

சர்க்கரை நோய்க்கு மருந்து தேவை இல்லை

- ஜானகிராமன்

மூடநம்பிக்கைக் கருத்து 3

அண்மையில் ஒரு நாள் அய்.சி.யூ_வில் பணியில் இருந்த போது 53 வயதுப் பெண் நோயாளி ஒருவரைத் தூக்கி வந்தனர்.

அவர் முழுமையாக நினைவு இழந்த நிலையில் இருந்தார் (unconscious).

அந்த நோயாளி ஏற்கெனவே எனக்குத் தெரிந்தவர்தான்.

சில ஆண்டுகளாக சர்க்கரை நோய்க்கு மருந்து உட்கொண்டு வந்தார். மற்றபடி அவருக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்பதை நான் அறிவேன்.

ஆனால் இவ்வாறு திடீரென சுயநினைவு இல்லாமல் அவரை அழைத்து வந்திருந்தது எனக்குக் குழப்பத்தைக் கொடுத்தது.

அவரின் ரத்த சர்க்கரை அளவைப் பரிசோதித்துப் பார்த்தபோது அது 500க்கு மேல் என்று காட்டியது. இரத்தத்தில் கீட்டோன் அளவும் அதிகரித்து இருந்தது.

பரிந்துரைக்கப்பட்ட அளவில் சர்க்கரை அளவினை வைத்திருந்தால் இந்நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை. உடலில் சர்க்கரை அளவு அதிகமானதால் DKA எனப்படும் உயிருக்கு ஆபத்தான பாதிப்பு அவருக்கு ஏற்பட்டிருந்தது.

எனவே நோயாளி மாத்திரைகள் ஒழுங்காகச் சாப்பிட்டு வருகின்றாரா என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தேன். அவரின் கணவர், ஆம் ஒழுங்காகத்தான் மருந்து சாப்பிட்டு வருவதாக சொல்லிக் கொண்டு இருந்தார்.

இரண்டு நாள்களில் நோயாளி ஆபத்தான கட்டத்தைத் தாண்டி இருந்தார். மூன்றாம் நாள் அவரது கணவர் 'டாக்டர் உங்களிடம் நான் ஒன்றை மறைத்துவிட்டேன்! என்று கூறினார்.
மேற்கொண்டு வினவிய போது, அவரின் சோகக் கதையை என்னிடம் சொல்லத் தொடங்கினார்.

அதாவது, அவரது நன்பர் ஒருவர் அவரிடம் சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஒரு இடத்தை நான் அறிவேன் என்று கூறி இருக்கின்றார்.

அந்த இடம் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள துர்க் (durg) என்ற இடத்தில் உள்ள ஓர் இடமாகும். அங்கே மூன்று நாள்கள் மருந்து வாங்கி அருந்தினால் சர்க்கரை நோய் முற்றிலும் தீர்ந்துவிடும் என்று கூறி இருக்கின்றார். மேலும், பல மாநிலங்களிலிருந்து பெரும் கூட்டம் அங்கே வருவதாகவும் சொல்லி இருக்கின்றார்.

இதனை உண்மை என நம்பி அந்தத் தம்பதியினர் சத்தீசுகர் மாநிலத்திற்குச் சென்று உள்ளனர். மூன்று நாள்கள் அங்கே தங்கி அந்த மருந்தை உட்கொண்டிருக்கின்றனர். அந்த போலி மருத்துவர்களின் அறிவுரைகளின்படி அலோபதி மருந்துகளை நிறுத்தியும் விட்டனர். மொத்த செலவு ரூ.20,000க்கு மேல் ஆகி இருக்கின்றது.

அதனைத் தொடர்ந்து சர்க்கரைக்கான மருந்துகள் உட்கொள்ளாததினால் இந்நிலைக்கு ஆளாகி இப்போது முழுமையாக மயக்கம் அடைந்து இங்கு அழைத்து வரப்பட்டிருக்-கின்றார். மேற்கண்ட ஆதாரமற்ற ஏமாற்று முறை போலவே நூற்றுக்கணக்கான மாற்று வழி சர்க்கரை நோய் சிகிச்சைகள் இந்தியாவில் உள்ளன.

தொலைக்காட்சி, அச்சு ஊடகம், சமூக ஊடகங்களில் பல்வேறு நோய்களை நிரந்தரமாக தங்களால் தீர்க்க முடியும் என்பது போன்ற பல்வேறு விளம்பரங்களை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள். பொதுவாகவே விஞ்ஞானத்தைவிட மெய்ஞானத்தின் மீது அதிக நம்பிக்கை வைக்கும் இந்திய மனப்பான்மைதான் இதற்கு அடிப்படையாக விளங்குகின்றது.

மேலும் மருத்துவ மூடநம்பிக்கையில் ஏமாந்தவர்கள் அதனை வெளியில் சொல்ல மாட்டார்கள். இது இந்த ஏமாற்றுக் கும்பலுக்கு மேலும் கூடுதல் பலம் சேர்க்கின்றது. வரலாற்றில் உலகம் முழுவதும் சர்க்கரை நோய் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ் ஓவியா said...

பண்டைய கால மருத்துவர்கள் சிறுநீரின் வழியே அதிகப்படியான சர்க்கரை வெளியேறுவதை நோயாளிகளின் சிறுநீர்ப் பாதை அருகே அடிக்கடி 'எறும்புகள்' வருவதன் மூலமும் அவை கடிப்பதால் ஏற்படும் தடிப்புகள் மூலமும் அறிந்து வைத்து இருந்தனர். மேலும் அதிக அளவு சிறுநீர் வெளியேறுவதால் இந்நோய் நீரிழிவு நோய் என்று பெயர் பெற்றது.

அக்கு மருத்துவர்களின் பொய்ப் பிரச்சாரம் போல் இது உருவாக்கப்பட்ட புதிய நோய் அல்ல.

சிகிச்சைகளே இல்லாத நிலை மாறி நவீன விஞ்ஞான மருத்துவம் தொடர்ந்து ஆய்வு செய்து தற்போது வெற்றிகரமாக இந்நோயைக் கட்டுபடுத்துமளவு முன்னேறி உள்ளது. இந்நோயில் பல்வேறு வகைகள் உள்ளன.

அந்த பல்வேறு வகைகளில் நோய் ஏற்பட காரணங்களும் வேறு வேறு.

Type 1. சர்க்கரை நோய் குழந்தைகளைத் தாக்குவது, இன்சுலினைச் சுரக்கும் கணைய செல்கள் செயல்படாததால் வருவது, இது மரபணுக் கோளாறாகும்.

Type 2. என்பது பொதுவாக வயதானவர்களுக்கு வருவது, இது 'இன்சுலின்' செல்கள் செயல்பட இயலாததால் (insulin resistance) ஏற்படுகின்றது.

மேலும் கர்ப்ப காலங்களில் தற்காலிகமாக வரும் சக்கரை நோய் (gestational diabetes) போன்று MODY, LADA என்று இன்னும் சில வகைகளும் உள்ளன.

மேலே சொன்னவாறு இந்த வேறு வேறு வகைகளில், நோய்க்கான காரணம் வேறு வேறாக இருப்பினும் எல்லாவற்றிலும் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகின்றது என்ற அடிப்படையில் இவை ஒன்றுபடுகின்றன. ஆகவே எந்த வகை சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்துள்ளது என்று கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை அளிப்பது அவசியமாகும்.

'சரியான ரத்த சர்க்கரை அளவு' எதை வைத்து முடிவு செய்யப்படுகின்றது என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகின்றது.

இது சர்க்கரை மனித உடலில் எந்த அளவு வரை (range) இருக்கும்போது உடல் பாதிப்பில்லாமல், இயங்குகின்றது என்ற அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது. எடுத்துக்-காட்டாக, ரத்த சர்க்கரை அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவான 90 முதல் 140 வரையில் இருக்கும்போது அவரின் சிறுநீரகம் சர்க்கரையை வெளியேற்றாது. ஒரு வேளை 200க்கும் அதிகமாக சர்க்கரை மிகுமானால் சிறுநீரகம் சர்க்கரையை வெளியேற்றத் தொடங்கும்.

மேலும் அதிக அளவு சர்க்கரை பல்வேறு செல்களில் படிந்து மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கும்.

ஆகவே எந்த அளவு வரை சர்க்கரை இருக்கும்போது உடல் செயலியலில் (physiological) பாதிப்பு ஏதும் இருக்காதோ அதுவே 'நார்மல்' அளவு என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாதிப்புடன் உள்ள நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவினைத் தொடர்ந்து பரிசோதித்ததின் மூலமும் பிணகூராய்வு சோதனைகள் மூலமும் இது முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சை அளிக்கப்படாத சர்க்கரை நோய் அல்லது தொடர்ந்து ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது சிறுநீரகம், இதயம், ரத்த நாளங்கள், கண்கள், நரம்பு மண்டலம் முதலியவற்றைப் பாதிக்கக்கூடியது. மிக அதிகமான அளவு ரத்த சர்க்கரை உயிருக்கு ஆபத்தை உடனடியாக ஏற்படுத்தக்கூடியது.

தமிழ் ஓவியா said...

30% சிறுநீரக செயலிழப்புக்கான காரணம் சர்க்கரை நோயாகும். சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளை http://en.wikipedia.org/wiki/Complications_of_diabetes_mellitus என்ற இணைப்பில் சுருக்கமாகக் காணலாம்.

ஆகவே நிலை இப்படி இருக்கும்போது, இதைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் மரபு மருத்துவர்கள் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர். சர்க்கரை நோய் ஒரு நோயே இல்லை என்று ஒரு நாள் சொல்கின்றனர் மறுநாள் மரபு மருத்துவத்தில் மட்டுமே இதனை முழுமையாகத் தீர்க்க முடியும் என்கின்றனர்.

இது நோயே இல்லை என்று முதலில் கூறிவிட்டு, பின்பு அதனைத் தங்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்று இவர்கள் கூறுவது வேடிக்கையானது மட்டுமல்லாமல் மக்களின் உயிருக்கு நேரடியாக உலை வைக்கக்கூடியது.

மேலும் மனித குலத்தையே சூறையாடி வந்த கொள்ளை நோய்களான 'பெரியம்மை, காலரா, கக்குவான், மலேரியா, தொழுநோய்' போன்ற பல நோய்களை வரலாற்றில் தீர்க்க முடியாத மரபு மருத்துவர்கள், தற்போது விஞ்ஞானம் அவற்றுக்குத் தீர்வு கண்ட பிறகு திடீரென 'அலோபதியை விரட்டுவோம்' என்று கிளம்பி இருப்பது கண்டிக்கத்தக்கது.

மேலும் இந்திய மருந்துச் சட்டம் 1945 குறித்தும் இவர்கள் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.

இந்திய மருந்துச் சட்டம் 1945இன் j பிரிவு அலோபதியில் இன்னும் 'மருந்துகள் மூலம் தீர்வு எட்டப்படாத' 54 வகை நோய்களை எங்களால் தீர்க்க முடியும் என்று 'மரபு மருத்துவர்கள்' மக்களை ஏமாற்றக் கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 1955இல் இந்தச் சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

அது சர்க்கரை வியாதி உள்ளிட்ட அறிவியல் மருத்துவத்தில் நிரந்தரத் தீர்வு காணமுடியாத 54 வகை வியாதிகளை சித்து வேலைகள் (magical remedy ) மூலம் அல்லது மாற்று மருத்துவம் மூலம் எங்களால் முழுமையாகத் தீர்க்க முடியும் என்று விளம்பரம் செய்வதைத் தடை செய்கின்றது.

அதற்குரிய தண்டனைகளையும் வரையறுக்-கின்றது.

எடுத்துக்காட்டாக, அந்த லிஸ்டில் உள்ள கேட்ராக்ட் எனப்படும் கண்புரை நோயை எடுத்துக் கொள்வோம்.

கேட்ராக்ட் என்னும் பார்வையை மறைக்கும் நோய்க்கு மருந்துகள் ஏதும் இல்லை.
ஆனால் அறுவை சிகிச்சை முறையில் அதற்கு 100% தீர்வு உள்ளது.

பழுதான லென்சை அகற்றி செயற்கை லென்சு பொருத்தினால் பார்வை மீண்டும் துல்லியமாகக் கிட்டும்.

(இந்த அறுவை சிகிச்சைகள் ஓர் ஆண்டில் லட்சக்கணக்காக நடக்கிறது)

இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் முழுமையாகத் தீர்க்க முடிந்த ஒரு நோய் ஏன் j பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதுதான்.

அது ஏனெனில், மருந்துகளால் குணப்படுத்த முடியாத cataractஅய்மக்களுக்கு அறுவை சிகிச்சையின் மேல் உள்ள பயத்தைப் பயன்படுத்தி மாற்று மருத்துவர்கள் தங்கள் மருந்துகள் மூலம் குணப்படுத்துகிறேன் என்று ஏமாற்றக் கூடாது என்பதற்காகத்தான் அது j பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதே போலவே சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றை முழுமையாக நீக்குகிறோம் என்று யாரும் மக்களை ஏமாற்றக் கூடாது என்றே அவை j பிரிவில் உள்ளன. ஆனால் இங்கு மருத்துவ விஞ்ஞானம் சர்க்கரை, பிரஷர் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் கொடுப்பதை அந்தச் சட்டம் தடை செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

எனவே நோயாளிகள் இந்த வெவ்வேறு வடிவில் வரும் மூடநம்பிக்கை முறைகளையோ, ஏமாற்று முறைகளையோ நம்பி தங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம். ஒரு மணி நேரத்திற்குக் குறைவான மணித்துளிகள் காத்திருப்பில் எந்த அரசு மருத்துவமனையிலும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளை இலவசமாக வாங்கிவிட முடியும்.

பெரும்பாலான சர்க்கரை நோய் மருந்துகள் அரசின் விலை கட்டுப்பாட்டுச் சட்டத்தில் உள்ளன. மேலும் அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளையும் 'மருத்துவ முறைகளையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

தனியார் மருத்துவக் கொள்ளைக்கு மாற்றாக மூடநம்பிக்கை மருத்துவ முறைகளை வைக்க முடியாது. மாறாக, அரசை மக்களுக்கு முழுமையான இலவச தரமான மருத்துவ சேவை வழங்கக் கோர வேண்டும். மக்கள் விரோத பா.ஜ.க. அரசு சுகாதாரத்திற்கான அரசின் நிதியைக் குறைத்துவிட்ட சூழலில் இந்தக் கோரிக்கையை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.

தமிழ் ஓவியா said...


சோதிடந்தனையிகழ்!

-சு.அறிவுக்கரசு

’விதியே வாழி! விநாயகா வாழி! பதியே வாழி! பக்தி வாழி! என்றெல்லாம் பாடிய பாரதியார், ஆத்திச்சூடியில் சோதிடந்தனை இகழ் எனக் கூறினார். இராசகோபாலாச்-சாரியாரும்கூட சோதிடம் ஒரு மூடநம்பிக்கையே என்றார். நம் வீட்டு எருமை, கன்று ஈந்த நேரத்தைக் குறித்துக் கொடுத்தால்கூட, ஜோதிடன் ஜாதகம் கணித்துக் கொடுப்பானே தவிர, இது எருமை சோதிடம் என்று கூறமாட்டான் என்றார் தந்தை பெரியார்.

அண்ணனின் ஜாதகத்தையும் தங்கையின் ஜாதகத்தையும் தந்து, பொருத்தம் பாருங்கள் என்று கூறினால், பத்துக்கு எட்டரைப் பொருத்தம் இருக்கிறது என்றுதான் சோதிடன் கூறுவானே தவிர, உடன் பிறந்தவர்களின் ஜாதகம் இவை என எந்த ஜோசியனும் கூறுவது இல்லை. ஆகவேதான் அதனை இகழ வேண்டும் என்றனர்.

மாறாக, அதனைப் பாடமாக்கி, கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் கற்பிக்கின்றனர் என்றால்... இந்தக் கொடுமை அரங்கேற்றப்பட்டது, பி.ஜே.பி. ஆட்சி ஆறாண்டுக் காலம் நடந்தபோது!

ஆர்.எஸ்.எஸ்.காரரான முரளி மனோகர் ஜோஷி கல்வித்துறையைக் கவனித்த அமைச்சராக இருந்தபோது மேடையை அமைத்தார். இந்த அறிவியல் படித்தால் பி.எஸ்.சி. பட்டம் வழங்கப்படும் என ஆணை பிறப்பித்தார். எல்லாரும் எதிர்த்தனர். இது எப்படி அறிவியலாகும் எனக் கேட்டனர்.

பதில் கூற முடியாத முரளி மனோகர் ஜோஷி பணிந்து பேசினார். பி.ஏ. பட்டம் தரப்படும் அதுவும் ஒரு கலை என்ற காரணத்தினால் என்றார். மேல்நாட்டார் ஒருவர் கொலைகூட ஒரு கலைதான் எனக் கூறினார் அல்லவா? கொலை ஒரு கலை அப்பா! என்று மந்திரிகுமாரி திரைப்படத்தில் எஸ்.ஏ.நடராஜன் என்ற நடிகர் கூறும் வசனத்தை கலைஞர் மு.க. எழுதியதைப் படம் பார்த்தவர்கள் நினைவில் வைத்திருப்பர்.

அதுபோல சோதிடத்தைப் புளுகுக்கலை எனக் கூறினாரோ? இந்தக் கலையைக் கற்றுத் தந்தால் பல்கலைக்கழக மான்யக் குழு (U.G.C.) நிதி கூடுதலாக வழங்கும் என்று தேன் தடவினார். பல்கலைக் கழகங்கள் சில ஈக்களாகச் சிக்கின. அதில் ஒன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்!

நாள், நட்சத்திரம் பார்த்து பிரும்மரிஷி வசிட்டன் ஜோதிடம் கூறியவாறு, ராமன் பட்டாபிஷேகம் நடைபெறவில்லை; காட்டுக்கு அனுப்பப்பட்டான். அக்மார்க் முத்திரை குத்தும் அருகதை பெற்றவன் வசிஷ்டன். அவன் கணித்ததே கவிழ்ந்து போனது கைகேயியால்!

முறைப்படியும் வழக்கப்படியும் ஜாதகப்படியும் அண்ணன் நாடாள முடியாது, தம்பிதான் நாடாள்வான் என்றான் ஜோதிடன். தம்பி துறவு மேற்கொண்டான். அண்ணன் ஆட்சியில் அமர்ந்தான். நிமித்தகன் சொன்னதை மாற்றிக் காட்டினான் சிலப்பதிகாரத்தில்! செங்குட்டுவன் சேரனானதை இளங்கோ அடிகள் அப்படித்தான் பாடினார்! சோதிடத்தைப் பொய் எனக் காட்டி இகழ்ந்த செய்திகளை ஏராளம் சுட்டிக்காட்டலாம்!

கேரளப் பகுத்தறிவாளர் ஏ.டி.கோவூர் 1969இல் விடுத்த அறைகூவலை ஏற்று, சோதிடம் அறிவியல் என்பதை எண்பித்துக்-காட்ட எவரும் முன்வரவில்லையே! பெங்களூர் நகரில் எட்டுக் கூட்டங்களில் பேசி இந்த அறைகூவலை 1978இல் புதுப்பித்தார் கோவூர். இங்கிலீஷில் ஜோசியம் கூறி, ஏடு நடத்திவந்த உலகப் புகழ்(!) பி.வி.ராமன் என்பவர்கூட பெங்களூர்க்காரர்தான். அறைகூவலை ஏற்கவில்லையே!

வைத்தீசுவரன் கோவில் என்ற ஊரில் நாடி ஜோதிடம் கூறிவந்த பூசமுத்து என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்து கணக்கில் காட்டப்படாத பல இலட்ச ரூபாய்த் தொகையை அள்ளிப் போனார்கள்.

பசிக்காமலிருக்க வரம் தருவேன், எனக்குப் பழைய சோறு பிச்சை போடுங்கள் என்று ஒருவன் சொன்னதைப் போல என்பார் தந்தை பெரியார். அதைப் போல ஊருக்கு ஜோசியம் சொன்ன ஆள், தனக்கு வருவதை உணரவில்லையே!

காந்தியாரும் இந்திரா காந்தியும் சுடப்பட்டுச் சாவார்கள் என்று எந்த ஜோதிடனும் கூறவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆபிரகாம் லிங்கனும், கென்னடியும் கொலை செய்யப்படுவார்கள் என்று அமெரிக்க நாட்டு ஜோதிடனும்கூடக் கூறவில்லையே! அங்கேயும்-கூட ஜோசியர்களும் சோதிடமும் இருக்கின்றன. முட்டாள்தனம் உலகுக்கே சொந்தம் என்றார் தந்தை பெரியார்.

வானவியல் (Astronomy) என்பது வேறு. சோதிடம் (Astrology) என்பது வேறு. முன்னது அறிவியல். பின்னது பொய்யியல். நோபல் பரிசு பெற்ற பல அறிவியலாளர் வெளிப்படையாக அறிவித்த பிறகும் அங்கேயே பலருக்கு அறிவு வரவில்லை எனும்போது, இந்தியாவில் எப்படி....?

தமிழ் ஓவியா said...

வானவெளியில் ஒன்பது கிரகங்கள் மட்டுமே உள்ளனவா? ஹம்ஃப்ரி என்று பெயர் வைக்கப்பட்ட பத்தாம் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியனைச் சுற்றிவர 204 நாள்கள் ஆகிறது என்பது உட்படப் பலவற்றையும் கண்டறிந்து உள்ளனர்! இது ஜாதகத்தில் இடம் பெறவில்லை! ராகு, கேது, என்பவை ஆங்கில ஜோசியத்தில் இடம்பெறவில்லையே!

சூரியனைக் கிரகம் என்கிறது சோதிடம். அது நட்சத்திரம் என்பது அறிவியல்! சூரியன் ஏழிலிருந்து ஒன்பதாம் வீட்டுக்குப் போகிறார், ஆறிலிருந்து நாலுக்கு நடக்கிறார் என்கிறது சோதிடம். சூரியன் நகர்வதோ, சுற்றுவதோ இல்லை. நிலையாக நின்று எரிகிறது என்கிறது அறிவியல். பின் எப்படி சோதிடம் அறிவியல்?

சந்திரன் கோள் அன்று! துணைக் கோள்தான். ஆனால், அதனைக் கோள் என்றே கணக்குப் போடுகிறது சோதிடம்! பூமிக்கு ஒரு சந்திரன், செவ்வாய்க்கோளுக்கு இரண்டு சந்திரன், வியாழனுக்கு 16, சனிக்கு 22, யுரேனசுக்கு 15, நெப்டியூன் கோளுக்கு 3 என நூற்றுக்கும் மேற்பட்ட சந்திரன்கள் வானவெளியில் உண்டு. எந்தச் சந்திரன் சோதிடத்தில் சேர்த்தி? நாம் கண்ணால் காணும் சந்திரனை மட்டும் சேர்த்தால் போதுமா?

தமிழ் ஓவியா said...

பூமி ஒரு கோள் (கிரகம்)! பூமியை சோதிடத்தில் கிரகமாகக் கணக்கில் சேர்க்கவில்லையே!

கோள்களின் பார்வை படுகிறது என்கிறது சோதிடம்! எட்டாம் வீட்டில் இருந்துகொண்டு சூரியன் பார்க்கிறான் என்கிறார்கள். அனுகூலப் பார்வை, வக்கிரப் பார்வை என்று பார்வையோ பலவிதம் என்கிறார்கள். பூமியிலிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் சூரியன்! 195 நாடுகளுக்கும் ஒரே சாயையும் ஒரே கிரணங்களையும் பதிவு செய்கிறது. நாடே இல்லாத, ஆளே இல்லாத துருவப் பகுதிகளிலும் சூரியக் காற்று சுமூகமாகவே வீசுகிறது. இந்த நிலையில் சூரியப் பார்வையில் வேறுபாடாம்! எப்படி அறிவியலாகும்?

உலகில் அரசியல் நிலையை சுக்கிரன் முடிவு செய்கிறதாம். போர்களைச் செவ்வாய் உண்டாக்குகிறதாம்! தர்மச் செயல்களுக்கு குருவாம்! அதர்மச் செயல்களுக்கு சுக்கிரன், செவ்வாய், ராகு கிரகங்களாம்!

நாடு பிடிக்கும் வெறியும், பேராசைகளும் உலகில் இதுவரை ஏற்பட்ட போர்களுக்குக் காரணிகள். அலெக்சான்டர், செங்கிஸ்கான், தொடங்கி பிஸ்மார்க், முசோலினி, டோஜோ, இட்லர் ஈறாகப் பல சர்வாதிகாரிகளின் மன வக்கிரங்கள், நாடு பிடிக்கும் பேராசைகள் போன்றவையே அரசியலையும் போர்களையும் ஆட்டிப் படைத்தன என்பதே உண்மை! நபர்களின் வக்கரிப்புகளுக்கு நாடு எப்படிப் பொறுப்பு? நாட்டின் ஜாதகம் எப்படிப் பொறுப்பு ஆக முடியும்?

மனிதர்களின் பிறந்த நேரம், கிரக நிலை இதனை வைத்து ஜாதகம் என்று கூறுகிறார்கள்! நாடுகளுக்கு எது பிறந்த நேரம்? இந்தியா எப்போது ஜனித்தது? 1947 ஆகஸ்ட் 15ஆம் நாளிலா? நள்ளிரவு 12-_01க்கு அல்லவா? இவர்களது பஞ்சாங்கம் 30 நாழிகைக்கு மட்டும்தானே கணித்து வைத்திருக்கிறார்கள்!

சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உள்ள 12 மணிநேர, 30 நாழிகைக்கு மட்டும்தானே! உதயமோ, அஸ்தமனமோ சூரியனுக்குக் கிடையாது. அது, தோற்றப் பிழை! ஆனால், அதனடிப்படையில் எதையோ பிதற்றுவது அறிவியலா?

எவ்வளவோ வாதங்கள் உள. என்றாலும் ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக சோதிடப் பித்தலாட்டம் உலகில் இருக்கிறது. தமிழர் பிரித்த நானிலங்களில் மருத நிலத்துக்கு உரித்தான பரத்தமை உலகின் இரண்டாம் மூத்த தொழில் என்கிறார்கள். அப்படியானால் உலகின் மூத்த முதல் தொழில்? சோதிடம்!

சோதிடர்களை நற்செய்தி கூறுவோர் (Soothe Sayers) என்கின்றனர் ஆங்கிலேயர்கள்! இங்கோ, இந்தியாவிலோ, சோதிடர்கள்தாம் எல்லாமுமே! அத்தகைய மடமை ஒழிய வேண்டும். ஒழிக்கப்பட வேண்டும். கல்விச் சாலைகள் அறிவை வளர்க்க வேண்டும்.

பகுத்தறிவைப் பயன்படுத்திட படிப்போரை ஊக்குவிக்க வேண்டும். சிலகோடி நிதிக்காகப் பகுத்தறிவைப் பாழ்படுத்தும் பாடத் திட்டங்களை ஏற்கக் கூடாது, மறுதலித்திட வேண்டும்! அந்த நாளும் வந்திடாதோ?

தமிழ் ஓவியா said...

சிறப்புச் சிறுகதை

தலைமுறை

-சிங்கப்பூர் கு.சீ.மலையரசி

சென்ற இதழின் தொடர்ச்சி...

நினைவிருக்கிறதா? ஒரு நாள் காலை சென்ற ஊட்ரம் சாலையில் பேருந்து ஏறினார் உங்கள் கணவர் நல்லதம்பி. அன்று பெய்த அடைமழையால் சிலிகி சாலை முழுவதும் வெள்ளம். பேருந்து அதைக் கடக்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.

அப்பொழுது பையிலிருந்த தமிழ்முரசுதான் படிப்பதற்குத் துணையாக இருந்தது என்றும், அந்தப் பேருந்தில் இருந்தவர்களில் சிலர் நண்பர்-களாகவும் மாறினார்கள் என்றும் கூறினார். அதில் சுல்தான் பள்ளிவாசலுக்கு நேரத்துடன் தொழுகைக்குச் செல்ல முடியாததை வேதனையுடன் கூறிய காதர் உசேனும் ஆவார்.

சிங்கப்பூரின் பழைமை வாய்ந்த சிறப்புக்குரிய சுல்தான் பள்ளிவாசல் 1924ஆம் ஆண்டு மறுசீரமைப்புடன் பெரிதாகக் கட்டப்-பட்டுள்ளது. அரேபியர்கள், மலாய், இந்திய இஸ்லாமியர்களுடன் மற்ற இனத்து இஸ்லாமியர்களும் தொழும் புனித இடமாக விளங்குகிறது.

சுல்தான் பள்ளிவாசலின் மதிப்புமிக்க 12 அறங்காவலர்களில் ஒருவராக ஆரம்ப காலத்தில் தாத்தாவும், பிற்காலத்தில் தந்தையும் முக்கியப் பங்கு வகித்துள்ளனர் என்று பேச ஆரம்பித்தவரின் நட்பு, இன்று வரை அவர் குடும்பத்துடன் தொடர்ந்து இருக்கிறது.

இன்று நம் நாடு நல்ல வளர்ச்சியடைந்து பல மாற்றங்களைக் கண்டுள்ளது. ஆனால் சிலிகி சாலையைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் இந்தச் செய்தியை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்கள்.

உங்களுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி, தியாகராஜபாகவதர் பாடிய பாடல்கள் என்றால் மிகவும் விருப்பம் என்பதால் பெரிய கிராமபோனை வாங்கி வந்து வீட்டின் நடுவில் வைத்து வெளியே தெருவரை கேட்கும்படி பாடல்களை ஒலிக்க வைத்து விடுவார். அதை அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் மகிழ்ச்சி-யோடு சேர்ந்து கேட்டுக் கொள்வார்கள்.

அப்பொழுதெல்லாம் அதுவே அவர்களுக்கும் பிரமாதமான பொழுதுபோக்கு என்றும் பிறகு அதே பழக்கத்தால் உங்கள் கணவர் (என் அப்பா) உயிருடன் இருக்கும்வரை மாதா மாதம் இந்தியன் மூவி நியூஸ் வாங்கிக் கொடுக்கத் தவறியதில்லை.

பராசக்தியில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப் போல இன்னொரு நடிகன் பிறக்கப் போவதில்லை என்று அடிக்கொரு தரம் சொல்லுவார் அப்பா.

சிவாஜிகணேசன் பேசிய பக்கம்பக்கமான வசனங்களை மனப்பாடம் செய்து அப்பாவோடு நாங்களும் பேசி சிரித்து மகிழ்வோமே மறந்து விட்டீர்களா அம்மா! என்று விசும்பலோடு தாமரை பேசினாள். சற்று நேரம் எதுவும் பேசமுடியாமல் நெஞ்சை அடைப்பதைப் போல இருந்ததால், மூச்சை நன்கு இழுத்து விட்டுக்கொண்டார்.

அம்மா! உங்கள் கணவர் (என் அப்பா) இறந்த பிறகு எங்களை வளர்த்து விடவும், படிக்க வைக்கவும் நீங்கள் படித்த தமிழ் மொழிதான் துணையாக இருந்தது என்று எங்களுக்குத் தமிழ்மொழியைப் பிழையின்றிப் பேசவும், படிக்கவும் கற்றுக் கொடுத்தீர்கள். இன்று நானும் ஒரு தமிழாசிரியையாக இருக்கின்றேன் என்றால் அது உங்களால்தான், அம்மா மீண்டும் உடல்நலம் தேறி வர வேண்டும்.

தமிழ் ஓவியா said...


உங்களின் 90ஆவது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும்! என்று குலுங்கி அழும் தன் அம்மாவின் தோள்பட்டையில் பாசத்துடன் கைகளை வைத்துப் பரிவுடன் சமாதானப்-படுத்தினாள் கீர்த்தனா. அவர் அழுவதை நிறுத்தியதும் தான் கணினியில் தேடிக் கொண்டு வந்திருந்த, தன் பாட்டிக்குப் பிரியமான பாடல்களை மெல்ல ஒலிக்க வைத்தாள்.

காற்றினிலே.. என்று தொடர்ந்து இரண்டு பாடல்கள் ஒலித்ததும் கீர்த்தனா! வேண்டாம் பரவாயில்லை நிறுத்திவிடு! பாட்டியிடம் ரொம்பவும் முக்கியமான செய்தியைச் சொல்லப் போகிறேன் என்று பீடிகை போட்டவரை, என்னவாக இருக்கும்? என்கிற கேள்வியோடு பார்த்தவள் கணினியை மூடிவைத்தாள்.

அம்மா, நீங்கள் தொடர்ந்து பேசும்முன், இந்தாருங்கள் தேநீர் வாங்கி வந்தேன். இதைக் குடித்துவிட்டுப் பிறகு பேசுங்கள் என்று அன்போடு மகள் கொடுத்ததை அருந்தியதும் அவளுக்குப் பார்வையால் நன்றியைக் கூறியவர் தன் தாயின் தலையை வருடியபடி கைகளை மெல்லப் பிடித்துக் கொண்டார் தாமரை!

அம்மா! நாம சிலை வடிக்கும் சிற்பிகளின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள், அதிலும் இராசராசசோழன் கட்டிய பெரிய கோவிலின் சிற்பக் கலையைப் புகழாதவர்கள் யாரும் இல்லை என்றுதான் கூறவேண்டும். அதில் முக்கியமானவர் கங்கைகொண்ட சோழபுரம் இராசேந்திரசோழன். நம் முன்னோர்களைக் கவுரவப்படுத்தும்படி அவர்களில் ஒருவருக்குப் பெரிய சிவலிங்கம் சன்னதியின் முன்கோபுர மாதிரியை சன்மானம் வழங்கியுள்ளார். கோபுர மாடத்தின் மீது கலசம் உள்ளது.

கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் நேர்த்தியாக இருப்பதுடன் கைதேர்ந்த வேலைப்பாடுகளைக் கொண்டும் இருந்தது என்று தலைமுறை தலைமுறையாக வாய்மொழி வழியாகச் சொல்லப்பட்டு வந்துள்ளதாக, உங்க தாத்தா பலரிடமும் பெருமையுடன் மகிழ்ச்சியோடு கூறுவதைக் கேட்டு இருப்பதாகச் சொல்லி மெய்சிலிர்த்துப் போவீர்கள்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி நம் முன்னோர்களின் வரலாறும், வளமான மரபும், கலாச்சாரமும் மிகவும் தொன்மை வாய்ந்தவை, அவற்றுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து நாம் தமிழர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லி வளர்த்தீர்கள்.

அதேபோல நம் முன்னோடிகளின் உழைப்பையும், செய்த தியாகங்களையும் நன்றி-யோடு நினைத்துப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பீர்களே! என்று தன் அம்மா வடிவம்மாள் கூறிய சிலவற்றை நினைவுப்படுத்திக் கூறி முடித்ததும். அம்மா! என்று அதிர்ச்சியுடன் அழைக்கும் கீர்த்தனாவைப் பார்த்தார்.

அம்மா! நீங்க ஒருமுறைகூட இதையெல்லாம் கூறியதே இல்லையே! எதை எதையோ படிக்கச் சொன்னீங்க. கணினியில் பல தகவல்களைத் தேடித்தேடிப் பார்க்கச் சொன்னீங்க, ஏம்மா? உங்க அம்மா உங்களுக்குச் சொன்ன நம்ம தாத்தா, பாட்டி கதைகளையெல்லாம் எங்களுக்குச் சொல்லவில்லை?

இப்பவும் இவற்றைக் கடந்து வந்துவிட்ட பாட்டியிடம்-தானே சொல்லிக் கொண்டு இருந்தீர்கள், நல்ல வேளையம்மா! உங்களுக்கும் தெரியாமல் இந்த அய்.போனை மேசையின் மேல் வைத்திருந்தேன் என்று அதை எடுத்துக் காட்டினாள். நீங்கள் பேசுவதெல்லாம் பிற்காலத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கலாம் என்று பதிவு செய்தேன். ஆனால், இப்பொழுது எனக்குத் தானம்மா இந்த அரிய தகவல் தொகுப்புத் தேவை!

கீர்த்தனா! என்றார் தழுதழுத்த குரலில் தாமரை.

ஆமாம் அம்மா! எங்களுக்கு நீங்கள் சொல்லவில்லையென்றால், வேறு யாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும்? சொல்லுங்கள் தலையைக் குனிந்து கொள்ளும் அம்மாவைப் பார்த்து நாங்கள் அடுத்த தலைமுறை! விழி இருந்தும் குருடர்கள்! மொழி இருந்தும் ஊமைகள்! என்றாள் உணர்ச்சி பொங்க பல்கலைக்கழக மாணவி கீர்த்தனா.

இதில் யார் மீது தவறு? என்கிற மனப் போராட்டச் சூழல் அமைதியில் நிலவியது!
ஓர் ஆங்கிலப் பாடகர் மறைந்ததும், அவரின் கடந்தகால சாதனைகளை இணையத்தில் தேடிப் பார்க்க நேரத்தை ஒதுக்கியவள்.

இதில் தான் ஆர்வம் காட்டவில்லை என்பதை உணர்ந்தாள். அம்மா, ஏதாவது கோபமாகப் பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள்! அங்கே பாருங்கள். பாட்டியின் இதயத்துடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது.

நான் போய் டாக்டரை வரச் சொல்கிறேன் என்று ஆறுதலாக அணைத்துப் பேசியவள், அப்புறம் இந்தத் தகவலையெல்லாம் கணினியில் பதிவேற்றம் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து-கொள்ளப் போகிறேன்! என்று தன் மடிக்கணினியை எடுத்துக்கொண்டே கூறிய கீர்த்தனா அறையை விட்டு வெளியேறினாள்.

தாமரையின் மனதிலும் ஒரு தெளிவு பிறந்தது! தனக்கு இருக்கும் மிகப் பெரிய பொறுப்பை உணர்ந்து கொண்டார்.

(சிங்கப்பூரில் இது சிறப்பான சிறுகதை என்று தேர்வு செய்யப்பட்டது. - ஆசிரியர்)

தமிழ் ஓவியா said...

இவ்விடம் அரசியல் பேசலாம்

தாய்மதம் திரும்புதல் எனும் கூத்து

-கல்வெட்டான்

மத்தியானம் சாப்பிட்டு முடித்துவிட்டு, வாடிக்கையாளர்கள் யாருமில்லாததால் சாவகாசமாக பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தார் சந்தானம். அந்த நேரத்தில் நுழைந்தார் தோழர் மகேந்திரன்.

"வாங்க தோழர்! சவுக்கியமா? சாப்பிட்டீங்களா?"

"சாப்பிட்டாச்சு தோழர்... எங்க நம்ம புது ஆளு முத்துவைக் காணும்?"

"முத்து ஒரு முக்கியமான வேலையா வெளில போயிருக்கார் தோழர்"

"என்னது, நான் வர்றப்பல்லாம் அவரைப் பார்க்க முடியலையே, டைமிங் மிஸ் பண்றேனோ?! அதுசரி, அப்படியென்ன முக்கியமான வேலை? என்னிடம் சொல்லலாமில்ல?"

"அது ஒரு பெரிய காமெடி தோழர்! உங்களிடம் சொல்லியே ஆகணும்!"

"அப்போ சொல்லுங்க, நாம சேர்ந்தே சிரிக்கலாம்!"

"அரசியல் கூட்டங்களுக்கு ஆள் சேர்க்கறதுக்காக பணமும் பிரியாணியும் கொடுத்துக் கூட்டிட்டுப் போறதைக் கேள்விப்பட்டிருப்போம்ல, இப்போ கொஞ்ச நாளா தாய் மதம் திரும்புதல்னு சொல்லி, மதமாற்றம் பண்றதுக்காகவும் ஆள் புடிக்கிறாங்களாம்!"

"இதென்ன புதுக்கதை? தாய் மதம் திரும்புறவங்க தாங்களே மனமுவந்து பண்றதால்ல பேப்பர்ல போடுறாங்க?"

"அதெல்லாம் டுபாக்கூர் செய்திங்க தோழர்! உண்மையில் வருமானத்துக்கு கஷ்டப்படுற ஏழை ஜனங்களை ஒரே ஒருநாள் மட்டும் வந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொல்லிக் கூட்டிட்டுப் போறாங்களாம்!

இதுல நிறையப் பேரு அதே இந்து மதத்தைச் சேர்ந்தவங்கதானாம்! ஆனால் பப்ளிசிட்டி ஸ்டண்டுக்காக வேற மதத்திலிருந்து திரும்பி வர்றதாக்காட்டி, அதுக்காக தடபுடலா யாகம்லாம் நடத்தி சீன் போடுறாங்க தோழர்!"

"இவங்க யாகம் நடத்துறதுலதான் எக்ஸ்பர்ட் ஆச்சே! காலைல கக்கூஸ்ல முக்கு முக்குன்னு முக்கிட்டு எதுவும் வரலைன்னாக்கூட அதுக்கும் ஒரு பரிகாரம், யாகம்லாம் வச்சு காசைப் புடிங்கிடுவாங்களே!"

"ஆமாம் தோழர்! பெரியார் வழியில சீர்திருத்தக் கல்யாணத்தை காமராஜர் ஆதரிச்சாரு. யாகம், ஓமகுண்டம், அய்யர்னு எந்தச் சடங்கும் இல்லாமல் ஊர்ப்பெரியவங்க முன்னிலையில் கல்யாணத்தை நடத்தி, இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் அனைத்திற்கும் முன்மாதிரியா இந்த தமிழ்நாடு இருந்துச்சு.

இப்பவும்கூட நிறைய இடங்களில் சீர்திருத்தக் கல்யாணம் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. ஆனாலும் அங்க விட்ட வருமானத்தைப் பிடிக்கிற மாதிரி, புதுவீடு கட்டினால் கணபதி ஹோமம் நடத்தியே ஆகணும்னு ஒரு பழக்கத்தைப் பரவலா நம்ம மக்கள் மத்தியில திணிச்சுட்டாங்க பார்த்திங்களா?"

"நானும் இதைப் பற்றி யோசிச்சிருக்கேன் தோழர். முன்னல்லாம் பால் காய்ச்சறதுன்னா புதுவீட்டில் பாலைக் காய்ச்சி எல்லாருக்கும் குடுத்துட்டு, சாமியக் கும்பிட்டு, சாப்பாடு போட்டு முடிச்சுக்குவாங்க.

இப்போ கணபதி ஹோமம்னு கொண்டாந்து விடிய விடியப் புகை போட்டு, ஏற்கெனவே வீட்டுக்கடன்ல இருக்குறவன்கிட்ட, மிச்ச மீதி வளையல், கம்மலையும் வித்து யாகம் நடத்த வைக்கிறாங்க. சீர்திருத்தக் கல்யாணம் மாதிரி, சீர்திருத்தப் புதுமனை புகுவிழாவையும் அறிமுகப்படுத்தணும் போல!"

"சரியாச் சொன்னீங்க தோழர்!"

"அதுசரி, முத்துவைப் பற்றிச் சொல்லவே இல்லையே! அவரு என்ன பண்ணிட்டு இருக்கார்?"

தமிழ் ஓவியா said...


"இந்த தாய்மதம் திரும்புதல் கூத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கறதுக்காகத்தான், முத்து இந்து மதத்துக்கு மாறப்போறதா தகவல் சொல்லி, அந்த விழாவுக்கு அனுப்பி வச்சிருக்கேன்! அதுமட்டுமில்ல, இப்போ முத்துவை தமிழ்நாட்டிலுள்ள வெவ்வேறு மாவட்ட இந்து அமைப்புகளும் அவங்களோட மதமாற்ற நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டிருக்காங்களாம்!

அதுக்கு வெயிட்டா பணம் தர்றதா சொன்னாங்களாம் தோழர்!"

"ஆக மொத்தம், ஏசுவும் இல்லை, ராமனும் இல்லைன்னு எல்லாருக்கும் ஈஸியாப் புரியும்! புரிஞ்சாலும் புரியாதமாதிரியே நடிக்கிறதுக்கும் பழகிட்டாங்க நம்ம மக்கள்! இந்த மாதிரி காமெடி விழாவில் செமயா மூக்குடைபடும் நாளைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன்!"

"அதுக்குச் சாட்சியாத்தான் நம்ம முத்துவைத் தயார்ப் பண்ணிக்கிட்டிருக்கேன் தோழர்!"

"நல்ல காரியம் தோழர்! இவங்களுக்கு இதை விட்டால், அடுத்து நடிகைகளைத்தான் சீண்டிப் பார்ப்பாங்க! அண்மையில்கூட நயந்தாரா நடிச்ச வீடியோ கிளிப் ஒன்னை வச்சுக்கிட்டுப் பிரச்சினையக் கிளப்பிப் பார்த்தாங்க, படிச்சிங்களா?"

"ஆமா தோழர், எதோ ஒயின்ஷாப்புல நயந்தாரா பீர் வாங்கற மாதிரி ஒரு படத்துக்கு எடுத்த சீன் லீக் ஆகி, அதை வைத்துக் கலாச்சாரம் பாதிக்கப்படும்னு போராட்டத்துக்குத் தயார் ஆகிட்டாங்களே!"

"இவங்களோட போராட்ட அறிவிப்பெல்லாம் வெத்து சீன்தான்! தில்லுதுரை மாதிரிதான் பேட்டி கொடுப்பாங்க, ஆனால் உண்மையில் சரியான பயந்தாங்கொள்ளி லெட்டர்பேடுகள்!"

"எதை வச்சுச் சொல்றிங்க தோழர்?"

"உண்மையில் இன்டக் பீரெல்லாம் வியாபாரம் பண்றது யாரு?"

"தமிழ்நாடு கவர்மெண்ட்"

"அப்போ இவங்க போராட்டத்தை தமிழ்நாடு கவர்மெண்டுக்கு எதிராதான நடத்தணும்? இன்னொரு பெண்மணிக்கு எதிராத்தான உண்மையில் இவங்க போராடணும்? ஆனால் அவங்களுக்கு எதிரா போராடினால், போலீஸ் புடிச்சுட்டுப் போயி முட்டிக்கு முட்டி பேத்துடுவாங்கன்னு பயம் இருக்குல்ல!"

"அதுவும் சரிதான்! இவங்களுக்குத் தேவை விளம்பரம்தான்! நம்ம பிரதமரும் இவங்க ஆளுதான!"

"ஆமா ஆமா! கொஞ்ச நாளா கோட்ஷேவ பெருமையா சொல்லிக்கிட்டும், விளம்பரம் பண்ணிக்கிட்டும் இருந்தாங்க! இப்போ கோட்டை பெருமையா சொல்லிக்கிட்டுத் திரியறாங்க!"

"எந்தக் கோட்டை சொல்றிங்க? அவரு பெயரு போட்ட கோட்டா?"

"அதேதான்! நாங்க எங்க வீட்டில் கோழி வளர்க்கும்போது, கோழி றெக்கையில கலரு சாயம் அடிப்போம். நாங்க பச்சை கலர் சாயம் போட்டால், பக்கத்து வீட்டுக்காரங்க அவங்க வளர்க்கற கோழிகளுக்கு சிவப்புக் கலர் சாயம் அடிப்பாங்க! அப்போதான் கோழி மாறிடாது! அதுதான் இப்போ என் நினைவுக்கு வருது தோழர்!"

"ஆமா, ஆமா, இவரு வெளிநாட்டுச் சுற்றுப்பயணம்னு அடிக்கடி ஏகப்பட்ட நாடுகளுக்கு டூர் அடிக்கிறாரு! அங்க தொலைஞ்சு போகாம இருக்கணும்னா இப்படிப்பட்ட கோட்டு அவசியம்தான்!"

"நாட்டுக்கு நல்லது செஞ்சு பேர் எடுக்கறாரோ இல்லையோ, இப்படி கோட்டு மாட்டியாவது பேர் எடுத்துடுவார்ல!"

"ம்ம்ம்... தேர்தலுக்கு முன்ன வரைக்கும் மோடி இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றி எழுதப்போறதா ஒரு மாயையை உண்டுபண்ணி பி.ஜே.பி.யை ஆட்சிக்குக் கொண்டு வந்தாங்க! அதுக்காக விளம்பரம் பண்றதுக்காக ஏகப்பட்ட தொகையைச் செலவு பண்ணினாங்க. இப்போ நிலைமை தலைகீழா மாறிடுச்சு. மோடியோட ஒவ்வொரு காமெடியையும் மக்கள் கண்டுபிடிச்சுடுறாங்க!"

"ஆமா தோழர், இந்தக் கோட்டு விஷயத்தைக்கூட வாட்ஸ் அப், பேஸ்புக்னு எல்லாத்திலும் ஷேர் பண்ணி, அக்குவேறு ஆணிவேறா பிரிச்சு எறிஞ்சுட்டாங்க!"

"வாட்ஸ் அப்ல இப்போ என்ன தோழர் லேட்டஸ்ட் மேட்டர்?"

"எல்லாம் தமிழ்நாடு பி.ஜே.பி.யோட மிஸ்டுகால் மேட்டர்தான்! உறுப்பினரா சேர்றதுக்கு ஒரு மிஸ்டு கால் போதும்னு இவங்க விளம்பரம் பண்றதும் அமேசான் காட்டு மூலிகை வியாபாரிகள் விளம்பரம் பண்றதும் ஒன்னுபோல இருக்குதுன்னு ஒப்புமைப்படுத்தி நக்கலடிச்சுக்கிட்டிருக்காங்க தோழர்!"

"உண்மைதான், ரெண்டுமே வளர்றதா சொல்றது மாயைதான்! இப்பல்லாம் எங்க கட்சிக்கு லட்சம் உறுப்பினர் இருக்காங்க, கோடி உறுப்பினர் இருக்காங்கன்னு குட்டியூண்டு கட்சியும் கூட அறிக்கை விடுறப்ப, தமிழ்நாட்டிலிருக்கும் பி.ஜே.பி.யும் அறிக்கை விடுறதுல சளைச்சவங்களா என்ன?!"

"அப்போ அடுத்த ஆபரேசன்ல நம்ம முத்துவை மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லிட வேண்டியதுதான!"

"ஹஹஹஹ! பண்ணிட்டாப் போச்சு!", என சிரித்தபடியே தோழர் மகேந்திரன் அங்கிருந்து விடைபெற்றார்!

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு வளர சிறந்த வழி


எங்கள் வழிகாட்டி மாம்பலம் ஆ.சந்திரசேகர் அழைப்பு சோதிடம் மறுப்பு...

கூடுதல்....மாதம், நாள் மறுப்பு......செய்தால்...!

என் திருமண மண்டபத்தில்....

ஆடி , மார்கழி, புரட்டாசி.. மாதங்களில் திருமணம் செய்தால் கட்டணத்தில் 75% தள்ளுபடி செய்கிறேன்!

அஷ்டமி... நவமி... அமாவாசையில் எந்த மாதம் மணம் செய்தாலும் 75% தள்ளுபடி நிச்சயம்!

நான் தயார்..

நீங்கள் தயாரா?...

- முகநூலிலிருந்து

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு வளர சிறந்த வழி


எங்கள் வழிகாட்டி மாம்பலம் ஆ.சந்திரசேகர் அழைப்பு சோதிடம் மறுப்பு...

கூடுதல்....மாதம், நாள் மறுப்பு......செய்தால்...!

என் திருமண மண்டபத்தில்....

ஆடி , மார்கழி, புரட்டாசி.. மாதங்களில் திருமணம் செய்தால் கட்டணத்தில் 75% தள்ளுபடி செய்கிறேன்!

அஷ்டமி... நவமி... அமாவாசையில் எந்த மாதம் மணம் செய்தாலும் 75% தள்ளுபடி நிச்சயம்!

நான் தயார்..

நீங்கள் தயாரா?...

- முகநூலிலிருந்து

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவே இளைஞர்களை ஆளவேண்டும்

-அறிஞர் அண்ணா

பட்டதாரிகளே! உங்கள் குடும்பங்களுடைய நன்னிலைக்குப் பாடுபடுவதோடு, சமூகத்திற்-காகப் பணிகளையும் செய்ய வேண்டியதுடன், பகுத்தறிவுவாதத்தின் ஒளியை எங்கும் வீசச் செய்பவர்களாக நீங்கள் திகழ வேண்டும்.

பகுத்தறிவுவாதம் என்பது அடிப்படை உண்மைகளை, நெறிகளை மறுப்பதாகாது; எதையும் காரணங் கண்டு ஆராய்ந்து உண்மை காண்பதாகும். போலித்தனமான எண்ணங்-களை, செயல்களை அழித்தொழிப்பதுதான் பகுத்தறிவு ஆகும்.

அறிவின் எந்த ஒரு துறையாயினும் அதில் நமக்கென்று ஒருமுறை இல்லாமலில்லை. நம்முடைய வாழ்க்கை முறைகள் அழியாதவை என்று நாம் கொண்டாடலாம். ஆயினும், அந்த முறைகளை இளமை குன்றாத தீவிரத் தன்மையோடு கூடியதாக வைத்திருக்க வேண்டுமானால், மாறுதலை ஏற்றுக் கொள்ளத்தக்க, புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய இளம் இதயத்தைப்போல் நமது இதயம் பசுமையானதாக விளங்க வேண்டும்.

பெரியாரைப் பின்பற்றுவோம்

நெடுங்காலமாகப் பழைய முறைகளிலேயே ஊறி, அவற்றைத் தாங்கி, அவற்றுக்கெதிரான வாதங்களுக்கு எதிர்ப்புக்கூறி, காலத்தைக் கழித்திருக்கிறோம்.

இதே காலத்தில் உலகத்தின் ஏனைய நாட்டவர்கள் எல்லாம் உண்மையை நாடி, பொறுமையோடு தங்களது இடைவிடா ஆராய்ச்சி சோதனை மூலம் பல புதிய முடிவுகளை எய்தியதுடன், உயர்வு பெற்றுள்ளனர். நாம் பண்டைய பழம்பெருமையில் அமர்ந்திருப்பதில் திருப்தி கொள்கிறோம்.

நன்மையறியாமல் இவற்றைப் பாதுகாக்கக் கூடியவர்களாக இருந்து வந்துள்ளோம். இந்த வகையில், புரையோடிய சமூகக் கருத்துகளைச் சாகடிக்கும் வீரர் பெரியாரைக் குறைகூறத் துணிவதில் சிறிதுகூட அறிவுத் தெளிவு இல்லை.

பழம் பெருமை பேசிக்கொண்டு, மூடப் பழக்கங்களில் ஆழ்ந்து அடிமைப்பட்டிருக்கும் சமுதாயத்தைச் சீர்திருத்தி, புரையோடிய சமுதாயக் கருத்துகளை ஒழித்துப் போராடும் வீரரான பெரியாரைக் குறைகூறிப் பயன் என்ன? பகுத்தறிவே எல்லோருடைய உள்ளங்களையும் தங்குதடை-யின்றி ஆளவேண்டும்.

ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் அமைக்கும் போர் வீரர்களாக எல்லோரும் முன்வர வேண்டும். நாட்டில் புத்துயிர் ஊட்டிப் பகுத்தறிவாளர்களைப் பெருக்க வேண்டும்.

ஜாதி முறையை எதிர்த்துப் போர் தொடுங்கள்

பகுத்தறிவு மூலம் சமுதாயத்தினைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும். பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்று வெளியேறுவோர் இப்பணிக்குத் தூதுவர்களாக விளங்க வேண்டும். ஜாதி முறையை எதிர்த்துப் போர் தொடுத்திடுங்கள் என நான் உங்களை அழைக்கிறேன்.

விஞ்ஞானத்தோடு ஒட்டி வாழ முடியாத மூடப் பழக்கங்களுக்கு எதிராகப் போர் தொடுக்கும்படியும் உங்களை வேண்டுகிறேன்.

(அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் 18.11.1967 அன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி.)

தமிழ் ஓவியா said...

பழைமையான சூரியக் குடும்பம்


பூமியைப் போன்ற அளவுள்ள அய்ந்து கிரகங்கள் சுற்றி வரும் ஒரு நட்சத்திரம் நாசாவின் கெப்ளர் செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதுவரை கண்டறியப் பட்ட நட்சத்திரங்களிலேயே மிகப் பழைமையான நட்சத்திரமாகக் கருதப்படும் இதற்கு கெப்ளர் 444 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கெப்ளர் 444அய் பூமியை விடச் சிறியதான புதன் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு இடைப்பட்ட அளவில் உள்ள அயந்து கிரகங்கள் சுற்றி வருகின்றன. கெப்ளர் 444 குடும்பத்திலுள்ள கிரகங்கள் தங்களது சூரியனை 10 நாள்களுக்கும் குறைவான நேரத்தில் சுற்றி வந்துவிடுகின்றன. அதேபோல பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தில் பத்தில் ஒரு பங்கு தூரத்திற்குள் வட்டப் பாதையில் சுற்றி வந்துவிடுகினறன என வானியலாளர்கள் கூறியுள்ளனர். இதுபோன்ற பழைமையான நட்சத்திரத்தைச் சுற்றி ஏராளமான சிறிய கோள்கள் சுற்றி வருவதைப் பார்த்ததில்லை. இது மிகவும் சிறப்பானது. கெப்ளர் 444 சூரியக் குடும்பமானது நமது சூரியக் குடும்பத்தைவிட இரண்டரை மடங்கு பழைமையானது. நமது சூரியக் குடும்பம் 450 கோடி ஆண்டுகள்தான் பழைமையானது என சிட்னி பல்கலைக்கழக இயற்பியல் கல்லூரிப் பேராசிரியர் டேனியர் ஹுபர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

புதுப்பா

முகங்கள்
அண்ணனுக்கு ஆனைமுகம்
தம்பிக்கு ஆறுமுகம்
தந்தைக்கும் தாய்க்கும்
பாதிப் பாதி முகம்
பக்தனே நீ எந்த முகத்தோடு
கோவிலுக்குப் போகிறாய்?

- வீ.உதயக்குமாரன், வீரன்வயல்.

புதுப்பா

பாதையை மாற்று!
விரும்பியதை விரும்பு - உன்னை
விரும்பியதை விரும்பு!
எறும்புக்குத் தெரியாதா
கரும்பின் சுவை!
கண்ணின் பார்வை
காணும் தூரம் மட்டும்!
அறிவின் பார்வையோ
ஆகாயத்தை எட்டும்!
கீதையைப் போற்றாதே!
பாதையை மாற்று! - பெரியார்
பாதைக்கு மாற்றேது!

- சீர்காழி கு.நா.இராமண்ணா

தமிழ் ஓவியா said...

மோடி ஏன் மறுக்கவில்லை?

இந்தியாவில் மதச் சிறுபான்மையர் மீதான வன்முறைத் தாக்குதல்கள் குறித்துக் குறிப்பிடும் போது, மோடியின் மவுனம் ஆபத்தானது என்று அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் இதழின் தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.

கிறித்தவர்களின் வழிபாட்டிடங்கள்மீதான தாக்குதல்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியாவில் அனைத்துக் குடிமக்களையும் காப்பாற்ற வேண்டியராக உள்ள பிரதமர் மோடி, எவ்விதக் கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார்.

அதேபோல், கிறித்தவர்கள் மற்றும் இசுலாமியர்கள் அதிக அளவில் கட்டாயப்-படுத்தி அல்லது பணம் கொடுப்பதாக உறுதியளித்து இந்து மதத்துக்கு மாற்றம் செய்யப்படுவது குறித்தும் எந்தக் கருத்தும் வெளியிடாமல் உள்ளார்.

மத சகிப்புத்தன்மை இல்லாத நிலை அதிகரித்து இதுபோன்ற தொல்லைகள் இருந்தபோதிலும், மோடி தொடர்ச்சியாக அமைதியாக இருப்பதன் மூலம், இந்து தேசியவாதிகளின் உரிமைகளைக் குறித்த எல்லைகளுக்குள் கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது கட்டுப்படுத்த விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது.

அண்மையில் இந்தியாவில் உள்ள ஏராளமான கிறித்தவ வழிபாட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டு சூறையாடப்பட்டன. கடந்த டிசம்பரில் கிழக்கு டில்லியில் செயின்ட் செபாஸ்டியன் சர்ச் முழுவதுமாக தீக்கிரை-யாக்கப்-பட்டது.

கிறித்தவ மதபோதகர் கூறும்போது, புகைமண்டலமாக இருந்தபோது மண்ணெண்ணெய் மணம் வெளிவந்ததாகக் கூறியுள்ளார். டில்லியில் அண்மையில் தீய நபர்களால் செயின்ட் அல்போன்சா சர்ச் தீவைத்து எரிக்கப்பட்டது. சடங்குகளுக்குப் பயன்படுத்தும் பொருள்களை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், பணம் நிறைந்திருந்த உண்டியல் பெட்டியை அவர்கள் தொடவில்லை.

கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டில் இந்தியாவுக்கே உரிய மதச் சார்பின்மையை நிலைநிறுத்த அரசுக்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறித்தவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள், சொந்த நாட்டில் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாபெரும் அளவிலான மதமாற்றங்கள் குறித்தும் கவலைகளைத் தெரிவித்துள்ளனர். ஆக்ராவில் கடந்த டிசம்பரில் 200 முசுலீம்கள் இந்து மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜனவரியில் மேற்கு வங்கத்தில் நூறு கிறித்தவர்கள்வரை மறு மதமாற்றம் என்கிற பெயரில், இந்துமதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்து தேசியவாதக் குழுக்களாக உள்ள விஸ்வ இந்து பரிஷத், ராஷ்டிரிய சுயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) ஒளிவுமறைவின்றி தாய்மதம் திரும்புதல் என்கிற பெயரில் பிரச்சாரத்தைச் செய்து இந்துக்கள் அல்லாதவர்களை மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பச் செய்வதாகக் கூறுகிறார்கள்.

இந்தியாவில் 80 விழுக்காட்டினருக்கும் மேலாக இந்துக்கள் உள்ளனர். ஆனால், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சார்ந்த பிரவீன் தொகாடியா கூறும்போது, அவருடைய அமைப்பான வி.எச்.பி., நாட்டில், நூறு விழுக்காட்டளவில் இந்துக்களாக ஆக்குவது-தான் இலக்கு என்று கூறியுள்ளார். அதற்கு ஒரே வழி மதச்சிறுபான்மையரின் மத நம்பிக்கைகளை மறுப்பதுதான்.

அயோத்தியில் 3,000 முசுலீம்களை ஒரே நேரத்தில் மதமாற்றம் செய்ய உள்ளதாக வி.எச்.பி. கூறுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகளால் 1992ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, நாடுமுழுவதும் ஏற்பட்ட வன்முறைக் கலவரங்களில் 2000பேர் உயிரிழந்தனர்.

நெருப்போடு விளையாடுவதை வி.எச்.பி. தெரிந்தே செய்கிறது. மோடியின் விருப்பமான திட்டமாக இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதி அளித்திருந்தார். ஆனால், புதுடில்லியில் கடந்த மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மதவாதங்களால் பிரித்துக் கொண்டிருக்கும் வரை, இந்தியா வெற்றி பெறவே முடியாது என்று கூறியுள்ளார். மத சகிப்புத் தன்மையற்ற தன்மையில் கேளாக்காதாக உள்ள மோடியின் அமைதியை உடைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

தமிழ் அழிப்பாரின் எண்ணத்துக்கு வலிமை சேர்த்துவிடக் கூடும் என்று கருதினார் புரட்சிக்கவிஞர். தம் கருத்தை வலியுறுத்தி ஆராய்ச்சித் தொடர் ஒன்றினை எழுதினார்; வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? எனும் கட்டுரைத் தொடர், தமிழ்ப் பகைவர்களுக்குச் சாட்டையடி கொடுத்தது: தமிழ் ஆர்வலர்களுக்கெல்லாம் புது வழி காட்டியது; தெளிவூட்டியது.

- சு.மன்னர்மன்னன்

காட்சி

தமிழ்ச் சொற்களையெல்லாம் வடசொற்கள் என்று ஆக்குவதில் பார்ப்பனர்க்குத் தனி ஆசை. அவ்வாறு செய்வதால் இந்நாட்டுக்கும் அவர்கட்கும் இல்லாத தொடர்பை உண்டு-பண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் இந்தத் தீய முயற்சியை அறிவுடைய தமிழர்களும், நடுநிலை-யுடைய உலகமும் அறிந்து நகையாடக்கூடுமே யென்பதை அவர்கள் கருதுவதேயில்லை.

தூங்கிக் கொண்டிருந்தார்கள் தமிழர்கள். அது அந்த நாள். பார்ப்பனர் அல்லல் புரிந்தார்கள் அளவில்லாமல்.

விழித்துக் கொண்டார்கள் தமிழர்கள். இது இந்த நாள். அல்லல் புரியாது அடங்கினார்களா எனில் இல்லை.

காட்சி _- தொழிற்பெயர். அதில் காண், முதனிலை, சி_-தொழிற்பெயர், இறுதிநிலை. காண் என்பதின் இறுதியில் உள்ள _ -ண், என்ற மெய்யானது _- சி, என்ற வல்லினம் வந்தால் _- ட் -_ ஆகும் என்பது சட்டம். அதனால்தான் காட்சி என்றாயிற்று. காணல், காண்டல், காட்சி அனைத்தும் ஒரே பொருள் உடையவை. எனவே காட்சி தூய தமிழ்ச் சொல். இதைப் பார்ப்பனர் தம் ஏடுகளில் காக்ஷி என்று போடுவார்கள்.

காட்சியைக் காக்ஷி ஆக்குவதில், தமிழ்ச்-சொல்லை வடசொல் ஆக்குவதில் அவர்-கட்குள்ள ஆசை புரிகிறது அல்லவா? இவ்வாறு காக்ஷி என்று பார்ப்பனர்கள் தம் ஏடுகளில் கொட்டை எழுத்துகளில் வெளியிடுவதால் நம்மவர்களும் அதையே பின்பற்றத் தொடங்கி விடுகிறார்கள்.

பார்ப்பான் சொன்னது பரமசிவன் சொன்னதல்லவா? அதனால்தான் நாம் பொதுவாக நம்மவர்கட்குச் சொல்லுகிறோம்.

தமிழ் தமிழர்க்குத் தாய்! தமிழிற் பிழை செய்வது தாயைக் குறைவுபடுத்துவதாகும். படக் காட்சிக்குரிய அறிவிப்போ, திருமண அழைப்பிதழோ, வாணிக அறிவிப்புப் பலகையோ எழுதும் போது தமிழறிஞர்களைக் கலந்து எழுதுங்கள் என்கிறோம்.

இனி இவ்வாறு தமிழ்ச் சொற்களையெல்லாம் பார்ப்பனர் வடசொற்கள் என்று சொல்லிக்-கொண்டு போகட்டுமே, அதனால் தீமை என்று தமிழரிற் சிலர் எண்ணலாம்.

அவ்வாறு அவர்கள் இந்நாள் வரைக்கும் விட்டு வைத்ததால் என்ன ஆயிற்று தெரியுமா? வடமொழியினின்றுதான் தமிழ் வந்தது, வடவர் நாகரிகத்திலிருந்துதான் தமிழர் நாகரிகம் தோன்றியது என்றெல்லாம் அவர்கள் சொல்வ-தோடு அல்லாமல், உலகையும் அவ்வாறு நம்பவைக்கவும் முயல்கிறார்கள்.

அது மட்டுமா? மேற்சொன்ன காரணங்-களைக் காட்டி, அவர்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர்கள் என்னும் முடிச்சுமாறித்-தனத்தையும் மெய் என்று நிலைநாட்டி வருகிறார்கள்.

இது வட சொல்லன்று; இன்ன காரணத்தால் இது தமிழ்ச் சொல் என்று விளக்கிவர முடிவு செய்துள்ளோம். தமிழர்கள் ஊன்றிப்படிக்க.

தமிழ் ஓவியா said...

ஹரப்பா நாகரிகம்-லோதல்: சிந்து சமவெளியின் சான்று - 2


லோதல்: சிந்து சமவெளியின் சான்று - 2

ஹரப்பா நாகரிகம்

-எஸ்.தீபிகா தொல்லியல்துறை ஆய்வு மாணவர்

முதிர்வடைந்த _ ஹரப்பா நாகரிகப் பண்புகளின் (பண்பாட்டின்) சில சிறப்பு அம்சங்கள்:-_

1. முதிர்வடைந்த ஹரப்பன் நாகரிக நகரங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை, பெருநகரம் அல்லது நகரம், துறைமுக நகரம், சிறுநகரம் ஆகும்.

2. பெரும்பாலான நகரங்கள் இரண்டு பகுதிகளாக அமையப் பெற்றுள்ளன. அதில் ஒன்று கோட்டைப் பகுதி, மற்றொன்று மக்கள் வாழும் உள்நகரமாகும்.3. நகரத்தில் அமைந்துள்ள கோட்டைப் பகுதி பெரும்பாலும் உள்நகரத்தின் உள்ளேயோ அல்லது உள்நகரத்தை விட்டு சிறிது வெளி தூரத்திலோ அமையப் பெற்றிருக்கும். அந்தக் கோட்டைப் பகுதியானது எப்போதும் நகரத்தின் மேற்குப் பகுதியிலேயே காணப்படும்.


தமிழ் ஓவியா said...

4. உள்நகரமானது மிகச் சிறந்த முறையான மனையமைப்பைக் கொண்டது. அதன் தெருக்கள் ஓர் ஒழுங்குமுறையில் அமையப் பெற்றவை. ஹரப்பன் நாகரிகத் தெருக்கள் எப்போதும் வடக்கு _ தெற்காகவும், கிழக்கு _ மேற்காகவும் 1:2:3:4 என்ற அளவில் அமைந்திருக்கும். இவ்வாறு மொத்த உள்நகரமும் சமமான கட்டிடத் தொகுதிகளாக வகைப்படுத்தி இருப்பதைக் காணலாம்.

5. ஒவ்வொரு தொகுதியிலும் அமைந்துள்ள வீடுகளின் வாசல்கள் அனைத்தும் ஒரு தெருவை நோக்கும் வண்ணம் அமையப் பெற்றுள்ளன. வீடுகளில் ஒரு முற்றமும், அதனைச் சுற்றி அறைகளும் காணப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஓர் அறையில் தீ மேடை /தீ பீடம் அமையப் பெற்றுள்ளது. பெரும்-பாலான அறைகளின் தரைகள் களிமண் பூசப்பட்டதாகவோ அல்லது மண் செங்கற்களால் அமையப் பெற்றதாகவோ இருக்கின்றன.

6. மூடப்பெற்ற சுகாதார வடிகால்கள் முதிர்வடைந்த ஹரப்பன் நகரங்களில் காணப்படுகின்றன. அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் கழிவு நீர் ஊறுதொட்டி அமையப்பெற்றுள்ளதை அகழ்வாராய்ச்சியில் காணமுடிகிறது.

7. அகழாய்வின்போது ஹரப்பா நாகரிக நகரங்களில் ஒரே வகையாகக் காணப்படும் கலைப் பொருள்களில் மிகவும் முக்கியமானது ஹரப்பன் முத்திரைகளாகும். இந்த ஹரப்பன் முத்திரைகள் பெரும்பாலும் மாவுக்களால் (Steatile) ஆனவை. சதுர வடிவில் 2 முதல் 3 செ.மீ. பக்கங்களை உடையன.

முத்திரையின் முன்பகுதியில் எப்போதும் ஒரு விலங்கு அல்லது மனித உருவத்துடன் சில ஹரப்பன் நாகரிகத்தின் எழுத்துகள் பொறிக்கப்-பட்டிருக்கும். சில முத்திரைகள் எழுத்துகள் இல்லாமலும் கிடைத்துள்ளன. சதுரம் மட்டும் அல்லாமல் செவ்வகம் அல்லது வட்ட வடிவம் கொண்ட முத்திரைகளும் கண்டறியப்-பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...

8. ஹரப்பா நாகரிக எழுத்துகள் முத்திரைகளில் மட்டும் இல்லாமல் மற்ற கலைப் பொருள்களிலும் காணப்படுகின்றன.

9. முதிர்வடைந்த ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் ஒரே முறையான எடை மற்றும் அளவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரும்-பாலான எடைகள் கன சதுர வடிவை உடையன. செர்ட் (Chert), சால்சிடோனி (Chalcedony), சுண்ணாம்புக்கல் (limestone) போன்றவற்றால் செய்யப்பட்டவை ஆகும். எடை போடும் தராசுகள் மொகஞ்சதாரோ, லோதல், கலிபாங்கன் போன்ற இடங்களில் கண்டறியப்-பட்ட போதும் அவை அனைத்தும் முழுமையாக அமையப்பெறவில்லை.

10. ஹரப்பன் நாகரிகத்தின் நகரங்கள் மிகச் சிறந்த வணிக நகரங்களாக விளங்கின. அகழாய்வு செய்யப்பெற்ற எண்ணற்ற இடங்கள் இதனைச் சான்றளிக்கின்றன. மெசபடோமி-யாவுடன் கடல் வழியாகவும், மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுடன் தரை வழியாகவும் வணிகம் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இதற்கு சான்றாக ஹரப்பன் நாகரிகத்தின் பானை ஓடுகள் மற்றும் கலைப் பொருள்கள் அயல்நாடுகளின் அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

11. ஹரப்பன் நாகரிகத்தின் பல இடங்களில் கண்டறியப்பட்ட தானியக் கிடங்குகள், விவசாயப் பொருள்கள் உற்பத்தி அதிக அளவில் இருந்திருப்பதை மெய்ப்பிக்கின்றன. இந்தத் தானியக் கிடங்குகள் பொதுவாக நகரத்தின் கோட்டைப் பகுதியிலேயே காணப்படுகின்றன. கோதுமை, பார்லி, பயிறு வகைகள் விளைவிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் அகழாய்வில் உறுதிப்படுத்தப்-பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...

12. ஹரப்பா நாகரிகத்தின் அகழாய்வில் முதல் இடுகாடு / கல்லறை (R-37) ஹரப்பன் நகரத்தில் கோட்டைப் பகுதியில் S-W திசையில் கண்டறியப்பட்டது. அகழாய்வில் காணப்பெற்ற உடல்கள் அனைத்தும் நீண்ட சதுரக் குழியில், தலைப்பகுதி வடக்குத் திசையை நோக்கி புதைக்கப் பெற்றுள்ளன.

உடல்களுடன் ஈமச்சடங்குப் பொருள்களும் குழிகளில் காணப்படுகின்றன. இறப்புக்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றி அவர்கள் அறிந்திருந்தனர் என்பதை இது மெய்ப்பிக்கிறது. சில ஹரப்பன் புதைத்தலில் இறந்தவர்களின் உடல் எரிக்கப்பட்டற்கான சான்றும், பகுதி பகுதியாகப் புதைக்கப்பட்டதற்கான சான்றும் காணப்-படுகின்றன.

பிற்கால ஹரப்பா நாகரிகம் (2050-1700 B.C.) - வீழ்ச்சி:-

ஹரப்பா நாகரிகம் திடீரென வீழ்ச்சி அடைந்ததற்கான சான்றுகள் இல்லை. பல்வேறு கருத்துகளை அகழாய்வில் இருந்து கண்டறியப்பெற்ற சான்றுகளின் மூலம் ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சியை ஆராய்ச்சியாளர்கள் தொகுத்துள்ளனர்.

1. வெள்ளம், வறட்சி, மழையின்மை, ஆறுகளின் வழி மாற்றம், நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஹரப்பன் நாகரிகம் வீழ்ச்சி அடைந்திருக்கக் கூடும் என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

2. அயல்நாட்டவரின் படையெடுப்பால் ஹரப்பன் நாகரிகம் வீழ்ச்சி அடைந்திருக்கலாம் என்று பல அறிஞர்கள் கருதுகின்றனர். மொகஞ்சதாரோ தெருக்களில் கண்டறியப்பெற்ற எலும்புக் கூடுகளும், பலுசிஸ்தானில் (Balochistan) உள்ள பல இடங்களில் பிற்கால ஹரப்பா காலத்தில் எரிக்கப் பெற்றிருப்பதை அகழாய்வில் காண முடிகிறது.

3. கொள்ளை நோய் தீவிரமாகப் பரவிய காரணமும், ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சிக்குச் சான்றாக அமையலாம் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பிற்கால ஹரப்பா நாகரிகத்தின் கடைசிக் காலங்களில் பல நகரங்கள் முழுமையாக கைவிடப்பட்டு மக்கள் வெளியேறினர். மெதுவாக ஹரப்பன் நாகரிகம் வீழ்ச்சியடைந்து, அழியப்பெற்று, மறைந்துபோனது.

சுமேரியன், எகிப்திய நாகரிகம் போல தொடர்ச்சியான வரலாற்றுச் சான்றுகள் ஹரப்பன் நாகரிகத்திற்குக் கிடைக்கவில்லை. முழுமையாக அழிந்தும், மறைந்தும் போன ஹரப்பன் நாகரிகம் தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் போதே மீண்டும் கண்டறியப்பட்டது.

(தொடரும்)

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

அடிமாடு

செய்தி: தொழில் துறை எவ்வளவு வளர்ச்சி அடைந் தாலும் போதாது; விவசாயம் தான் வளர்ச்சி அடைய வேண்டும். - பிரதமர் மோடி

சிந்தனை: ஆமாம்; அதற்காகத் தான் விவசாய நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக அடி மாட்டு விலைக்கு வாங்கப் படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/96569.html#ixzz3SIRKFtrY

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சாதனையா?

பகவான்தான் தலை எழுத்தை எழுதுகிறான் என்றால் மக்களின் சராசரி வயது முன்பை விட இப்பொழுது உயர்ந் துள்ளதே - இது கடவுள் சக்தியா? அறிவியல் மருத்துவத்தின் சாதனையா?Read more: http://viduthalai.in/e-paper/96572.html#ixzz3SIRTif7W

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவுத் திரைப்படத்தை முடக்குவதா?


பிரபுவிண்டே மக்கள் எனும் மலையாளப்படத்தில் பகுத்தறிவுக் கருத்துகள் உள்ளன.

மதங்களுக்கு எதிரான கருத்துகளை உள்ளடக்கி உள்ளதால் இணையத்தில் அந்த படம் தடை செய்யப்பட்டுள்ளது.

படத்தின் இயக்குநர் சஞ்ஜீவன் அந்திகாட் கூறும்போது, இந்தப்படத்தை 1.25 இலட்சம் பேர் பார்த்துள்ளனர். பகுத்தறிவு மற்றும் மதசார்பற்ற குழுவினராகிய கேரளா சுதந்திர சிந்தனையாளர்களின் அமைப்பால் கடந்த ஜனவரி 8ஆம் நாளன்று யூ டியூப்பில் இந்தப் படம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்த அமைப்பின்மூலம் ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த பிற வீடியோப் பதிவுகள் மதவெறி மற்றும் மூடநம்பிக்கைள், பகுத்தறிவு வாதங்கள் ஆகி யவைகளைக் கொண்டுள்ள வீடியோப் பதிவுகளும் தடை செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். யூ டியூப்பிலிருந்து கேரளா சுதந்திர சிந்தனை யாளர்கள் அமைப்புக்கு உள்ள கணக்கு முடக்கப் பட்டதாக தகவல் வந்துள்ளது.

உரிய முறையில் பொருத்தம் இல்லாமல் பதிவுகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து யூ டியூப் நிர்வாகம் அவைகளை தடை செய்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பதிவையும் எவரேனும் நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுவிட்டால், யூ டியூப் நிர்வாகத்தின் சார்பில் உள்ள குழுவினர் அதை ஆய்வு செய்வார்கள். அதன்படி, யூ டியூப் அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய வகையில் அப்பதிவுகள் இருந்துள்ளன. ஆகவே, அவை நீக்கப்பட்டன. பிரபுவிண்டே மக்கள் (மலை யாளம்) முழு படமும் அதன்படியே நீக்கப்பட்டுள்ளது என்று யூ டியூப் அளித்துள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

படத்தின் இயக்குநர் இணையத்தில் வெளியிட்ட மூன்று வாரங்களுக்குள் அப்படம் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. வகுப்புவாத சக்திகள் அப்படத்தை நீக்குவதற்காகப் பணிபுரிந்துள்ளனர்.

இயக்குநர் சஞ்ஜீவன் அந்திகாட் மேலும் கூறும் போது, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின்மூலம் தணிக்கை சான்று அளிக்கப்பட்ட படமாகும். அப்படி இருக்கும்போது, பொருத்தமில்லாதவை எப்படி அதில் இடம் பெற முடியும்? மதங்களால் ஏற்படும் தீமைகளை அந்தப்படம் வெளிப்படுத்தி உள்ளது. ஆகவே, மதவாத சக்திகளாக இணையத்தில் மறைந்துள்ளவர்களால் அதன் சிறகுகள் வெட்டப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்களில் கேரளா சுதந்திர சிந்தனையாளர்களுக்கான அமைப்பு பதிவேற்றிய பக்கங்கள் இதுவரையிலும் ஆறு முறை இதுபோன்று தடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

பி.கே. என்ற இந்தி படம் வட மாநிலங்களில் சங்பரிவார்க் கும்பலால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. பல திரையரங்குகள் தாக்கப்பட்டன. அதன் விளைவு பொது மக்கள் மத்தியிலே பெரும் ஆதரவைப் பெற்றது. 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. இந்தக் கால கட்டத்தில் பிரபு விண்டே மக்கள் எனும் மலையாளப் படத்தினை இணையத்தில் முடக்கு வதேன்? அதுவும் தணிக்கைத் துறையால் அனுமதிக்கப் பட்ட ஒரு திரைப்படத்தை முடக்குவது எந்த வகையில் சரியானதாக இருக்க முடியும்?

மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையையும் சீர்திருத்த உணர்வையும் வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் நிலையில் இது போன்ற திரைப்படங்களை முடக்குவது கண்டிக்கத் தக்கது - சட்ட விரோதமானதும்கூட மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு செல்லுவது கேரள சமூக சீர்திருத்தவாதிகளின் முக்கிய கடமையாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/96552.html#ixzz3SIRvUEZ7

தமிழ் ஓவியா said...

கற்றுக் கொள்ள வேண்டியது


இதுவரை எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனரல்லாத கட்சிக்கு அனுகூலமாய்ப் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறாரா? என்றால் ஒருவர்கூட இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனருக்கு வேறு எவ்வளவு கெட்ட குணம் இருந்தாலும், தங்கள் வகுப்பு விசயத்தில் எல்லாரும் ஒன்று சேருவது அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம்.
(குடிஅரசு, 7.11.1926)

Read more: http://viduthalai.in/e-paper/96550.html#ixzz3SISLaB4F

தமிழ் ஓவியா said...

கோபுரத்தை தாங்கும் காக்கைகள்!

இங்கு மட்டும்தான் மூட நம்பிக்கைகள் இருக்கின்றன என்று யாரும் நினைக்கவேண்டாம். ஆனால் நம் நாட்டில் மூடநம்பிக்கைகள் கொஞ்சம் அதிகம்.

லண்டனின் லண்டன் டவர் என்ற பிரசித்திபெற்ற கோட்டைக் கோபுரங்களில் பல காக்கைகள் வாழுகின்றன. அந்த காக்கைகளையும் அரண்மனை பணியாளர்கள் கணக்கில் சேர்த்து, அரசாங்க செலவில் அவற்றை பராமரிக்கிறார்கள்.

இதற்கு காரணம் என்? அந்தக் காக்கைகள் அகன்று விட்டால் லண்டன் டவர் கட்டடம் இடிந்து விழுந்து விடும் என்று நினைக்கிறார்கள். என்னே மூட நம்பிக்கை!

தகவல்: நாங்கூர் எஸ்.பாஸ்கரன் எம்.ஏ.,

Read more: http://viduthalai.in/e-paper/96555.html#ixzz3SITVzY67

தமிழ் ஓவியா said...

அண்ணா சொன்ன கடவுளர் கதைகள்

ஆண்டவன் ரகசியம்

ஆதி காலத்தில் மனிதன் ஓயாத அலைகளைப் பார்த்தான். அதன் சீற்றத்தால் நாடு அழிவதைக் கண்டான்; கடும்புயல் வீசி பெருமரங்கள் சாய்வதைக் கண்டான்; இடி இடித்து அதன் ஓசையால் புற்றுக்குள் இருக்கும் நாகமும், புதரில் மறைந்து இருக்கும் புலியும் நடுநடுங்கி ஓடுவதை அவன் பார்த்தான்.

ஏன் இவை ஏற்படுகின்றன என்று அவனுக்குப் புரியவில்லை. இது விளங்காத காரணத்தால் அவனுக்கு அச்சம் ஏற்பட்டது. ஏன் என்று புரியாது அச்சத்துடன் நின்ற அந்த மனிதனின் முன்னே ஒரு எத்தன் நின்றான். அவை என்ன தெரியுமா? அதுதான் ஆண்டவன் செயல் என்று அந்த எத்தன் கூறினான்.

அந்த ஆதி மனிதன் முன்னே நின்ற எத்தன்தான் உலகிலேயே முதலில் தோன்றிய பார்ப்பனன் அல்லது புரோகிதன். அச்சத்திலே ஏற்பட்டதுதான் ஆண்டவன் தத்துவம்.

முக்தி பெற்ற பார்ப்பான்!

மதுரை சோமநாதப் பெருமானின் ஒரு பார்ப்பன பக்தன் காமுகப்பட்டு, கருத்திழந்து தொட்டிலிலே வளர்த்தவளை கட்டிலுக்கிழுத்தான்- பெண்டாடினான். நடக்க கூடாத செயல்! ஆனால் நடந்திருக்கிறது.

தாய் அவனைப் பார்த்து பாவி அன்னையையா இந்த அக்கிரமம் செய்தாய் என்று கேட்க அவன் அப்பன் ஒருவன் இருப்பதால் அல்லவோ நீ எனக்கு அன்னையானாய் அவன் இல்லாவிட்டால்...! ஒரு பெண்தானே, என எண்ணி அவனை வெட்டி வீழ்த்தினான்.

இரு பாதகம் செய்த அவன் மருட்சி கொண்டு மதுரைக்கு வந்து ஆலவாய் அப்பனிடம் அடைக்கலம் புகுந்தான் அலறினான். அப்போது சோம பெருமானும் மீனாட்சி அம்மையும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருக்க, அவன் குரல் கேட்ட பெருமான் ஆட்டத்தை நிறுத்த, உடனே அம்மை பார்த்து ஏன் ஆடவில்லை என்று கேட்க அய்யன்,

அன்னையை பெண்டாடிய அடியாரின் கருத்தை விளக்க, அந்த மாபாவிக்கா அருள்புரிவது என்று மீனாட்சி சிணுங்க உமையவளே, உற்றுக் கேள் எத்தகைய மகா பாதகம் என்றாலும் பிராமணன் என்றால் அருள்புரியத் தான் வேண்டும் என்று கூறினாராம். பிறகு அவன் முக்தி (மோட்சம்) பெற்றானாம்.

அக்கினியின் ஆசை!

ஒரு காலத்தில் சப்தரிஷிகள் யாகம் செய்தனராம். அந்த யாகத்திற்கு அவிர்ப்பாகம் வாங்கச் சென்ற அக்கினி பகவான் அந்த ஏழு ரிஷி பத்தினிகள் மீதும் காமமுற்றா னாம். இதனை வெட்கத்தை விட்டு தன் மனைவியிடம் சொன்னானாம்.

ஆண்டவனான அக்கினி பகவான் தன் மனைவியிடம் அதற்கு ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னானாம். அவன் மனைவியும் சப்தரிஷிகளில் ஆறு பேர்களின் மனைவியைப் போல உருவெடுத்து தன் கணவனின் காமத்தைத் தணித்தாளாம்.

ஆனால் ஏழாவது முனிவரின் மனைவியான அருந்ததியைப் போல மட்டும் உருவெடுக்க முடியவில்லையாம் அதற்குக் காரணம் அருந்ததி ஒரு ஆதி திராவிடப் பெண்ணாம்.
ஆதாரம்: பேரறிஞர் அண்ணா சொன்ன குட்டிக் கதைகள் 100 என்ற நூல்

Read more: http://viduthalai.in/e-paper/96560.html#ixzz3SITopAdp

தமிழ் ஓவியா said...

ஜாதி கணக்கெடுப்பில் உள்நோக்கமில்லை
முதல்வர் சித்தராமையா

பெங்களூரு, பிப்.21 ''பொது நியாயப்படி, அனைவருக்கும் கிடைக்க வேண்டிய சலுகைகள், கிடைக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில், ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்படு கிறது. இதில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை, என்று, முதல்வர் சித்தராமையா கூறினார்.

மைசூரு மண்ட ஹள்ளி விமான நிலையத் தில், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொது நியாயப்படி, அனைவருக்கும் கிடைக்க வேண்டிய சலுகைகள், கிடைக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில், ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்படு கிறது. இதில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. அனைவருக்கும் சமமான சலுகையை வழங்கு வதன் மூலம், சமூக அபிவிருத்தியை, முன்னோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது. ஆனால், இதை பற்றி சிலர், தேவையின்றி குற்றம் சாட்டி வருகின் றனர்; இதற்கு, அரசு பணி யாது. சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு, கூடுதல் முக்கியத்துவம் தரப்படும். மத்திய அரசு, இது போன்ற திட்டங்களை குறைத்து கொள்வது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/96615.html#ixzz3SOxChszH

தமிழ் ஓவியா said...

வன்முறைக்கும், பயங்கரவாதத்திற்கும் காரணம்
மத அடையாளங்களைச் சுமப்பவர்களே!

அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து

நியூயார்க் பிப் 21_ மத அடையாளத்தைச் சுமக்கும் சிலரே வன் முறைக்கும், பயங்கரவாதத் துக்கும் காரணமானவர் களாவர் மதத்தின் பெயரைக் கூறிக்கொண்டு மனித நேயமற்ற செயல் களைப் புரிபவர்கள் மீதான நடவடிக்கை எடுக் கும் கட்டாயத்தில் உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்று பராக் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெ ரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரேசில், ருஷ்யா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 63 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மூன்று நாட்கள் நடக் கும் இந்த மாநாட்டில் அதிபர் பராக் ஒபாமா பேசியதாவது: உலகில் அதிகரித்து வரும் தீவிர வாதத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்க நாம் இங்கு கூடியுள்ளோம். ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு (இஸ்லாம்) எதிராக நட வடிக்கை அல்ல, இதை பல முறை தெளிவுபடுத்தி யுள்ளோம். எந்த ஒரு மதமும் மனிதர்களைக் கொல்வதை வலியுறுத்த வில்லை, மனித நேயத் தைத்தான் வலியுறுத்து கிறது. ஆனால் சிலர் மதத்தின் பெயரால் மக் களை துன்புறுத்துகின்ற னர். கொலை செய்கின்ற னர்.

அடிமைகளாக வாழ்நாள் முழுவதும் வைத்திருக்கின்றனர். ஆகையால் நமது நட வடிக்கை மதத்தின் மரபு களைத் திரித்து மனித நேயத்திற்கு எதிரான நட வடிக்கையில் இறங்குபவர் களை ஒடுக்குவதாக இருக்கும். சில தீவிரவாத இயக் கங்கள் மதரீதியில் ஆன சமூகத்தை உருவாக்கு கிறோம் என்று கூறிக் கொண்டு அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் மதங்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கு கின்றன என பிரச்சாரம் செய்கிறார்கள். இளைஞர் களை இவர்கள் மூளைச் சலவை செய்கிறார்கள். இவர்களின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். மதம் சார்ந்த பெரியவர்கள் இளைஞர் களை நல்வழியில் திருப்ப வேண்டும். காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் மனித நாகரிகம் வளர்ச்சி என்பது நீண்ட கால வரலாற்றை உடை யது, ஒவ்வொரு கால கட்டதிலும் புதிய பரிணா மத்தை உள்ளடக்கியது. ஆனால் மதங்கள் இந்த நவீன நாகரிக வளர்ச் சியை ஏற்றுக்கொள்வ தில்லை. அவர்கள் அனை வரும் நவீன வளர்ச்சிகள் எல்லாம் மதக் கோட் பாடுகளுக்கு எதிரானவை என்று கூறிக்கொண்டு வருகின்றனர். அறிவியல் வளர்ச்சியின் மூலம் கண்டுபிடித்த சாதனங்கள் மூலமாக அவர்கள் அறி வியல் வளர்ச்சி முட்டாள் தனமானது என்று பேசி வருகின்றனர். அவர்கள் முன் வைக்கும் எந்த ஒரு வாதத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஏனெ னில் அவர்கள் சொல்வது பொய். அவர்கள் எதிர் பார்க்கும் அங்கீகாரத்தை ஒருபோதும் நாம் அளித்துவிடக் கூடாது. அவர்கள் மதங்களைச் சார்ந்தவர்கள் அல்லர் அவர்கள் முழுக்க முழுக்க மனித சமூகத்திற்கு எதிரான செயல் களைச் செய்பவர்கள் தீவிரவாதச் செயல்களைச் செய்ப வர்கள் ஒரு மதத்தின் பின் னால் ஒளிந்து கொள் கின்றனர். தீவிரவாதிகளின் சித்தாந்தத்தை உலகம் முழுதும் உள்ள மக்கள் நிராகரித்துள்ளனர். இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று சில தீவிரவாதக் குழுக்கள் கூறுவதை ஏற்றுகொள்வது தவறான பார்வையாகும். அவர்கள் இஸ்லாத்தை எந்த வகை யிலும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.

அவர்கள் கடவுளின் பெயரால் அப்பாவிகளைக் கொலை செய்யும் பைத் தியக்காரர்களே. கடவு ளின் பெயரால் அப்பாவி களைக் கொல்பவர்கள் இந்துக்களானாலும் சரி, கிறிஸ்தவர்கள் ஆனாலும் சரி, யூதர்கள், புத்தமதத் தவர்கள் என எந்த மதத் தைச் சேர்ந்தவராகவும் இருக்க முடியாது. பயங்கர வாதத்துக்கு எந்த ஒரு மதமும் பொறுப்பல்ல. ஆனால், மத அடையா ளத்தைச் சுமக்கும் சிலரே வன்முறைக்கும், பயங்கர வாதத்துக்கும் காரண மானவர்களாவர்.

தீவிரவாதத்தால் சிரியா, ஈராக்கை அய். எஸ்.அய்.எஸ். சீர் குலைத்து வருகிறது. அப்பாவி மக்கள் தலை துண்டிக்கப்பட்டு, உயிரு டன் எரித்துக் கொல்லப் படுகின்றனர். இது மன் னிக்க முடியாத கொடூரம். அதே நேரத்தில் மதத்தின் பெயரால் ஒரு சாராரை அடிமைப்படுத்தும் செயலும் நீண்ட காலமாக நடந்து வருகிறது. மதத்தின் பெயரால் மனித நேயத்திற்கு எதி ரான போக்கை மதத்தின் பெயரைக்கொண்டு செய்பவர்களை மன்னிக்க முடியாது. இவர்களின் தீவிரவாதச் செயல்களுக் குக் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படுகிறது. ஆனால், பயங்கரவாதத் துக்கு எதிரான இந்தப் போரில் வெற்றி பெறு வோம் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உலக நாடுகளின் ஒத் துழைப்பு இந்த நம்பிக் கையை மேலும் பலப் படுத்தியுள்ளது என்றார் அவர்.

Read more: http://viduthalai.in/e-paper/96617.html#ixzz3SOxNNe4t

தமிழ் ஓவியா said...

இதுதான் மகா சிவராத்திரி நிர்வாண சாமியார்களின் ஆபாசம்!


ஜூனாகாத், பிப்.21_ குஜராத்தின் ஜூனாகத் பாவ்நாத் கோவிலில் ஆயிரக்கணக்கான நிர்வாண சாமியார்களின் அமர்க்களமான ஆட்டம் பாட்டம் ஊர்வலத்துடன் மகாசிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. குஜராத் மாநிலம் ஜூனாகாத்தின் கிர்னார் மலைப் பகுதியை சிவனின் முகமாக கருதி இந்துக்கள் வழிபாடு நடத்துகின்றனர். 10 ஆயிரம் படிக்கட்டுகளைக் கடந்து வழிபாடு நடத்து வது இங்கு வழக்கம். இம்மலை அடிவாரத் தில் இந்து மதத்தின் 'தற்கொலைப்படை'யாக செயல்பட்டு வரும் அகோ ரிகள் எனப்படும் நிர் வாண சாதுக்களின் கிளை மடங்கள் ஏராளமாக உள்ளன. பொதுவாக கும்பமேளா காலங்களில் தான் பல்லாயிரக்கணக் கில் நிர்வாண சாதுக்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தி ஹரித்துவார், அலகாபாத் உள்ளிட்ட இடங்களில் நீராடி வழி பாடு நடத்துவர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி நாளில் கிர்னார் மலை அடி வாரத்தில் உள்ள பாவ் நாத் கோயிலில் இந்த நிர்வாண சாதுக்கள் ஒன்று கூடி நீராடி வழி பாடு நடத்துவது வழக்கம். இவர்கள் நீராடுவது மிகச் சிறிய அளவிலான கிணறு போன்ற இடத்தில்தான்.. இந்த கிணற்றில் நிர் வாண சாதுக்களின் எந்தப் பிரிவு முதலில் குளிக் கிறதோ அவர்களுக்கு சிவபெருமானின் அருள் நேரடியாக கிடைத்து விடும் என்பது நம்பிக்கை யாம். இதற்காக நிர்வாண சாதுக்களிடையே பெரும் போட்டி அடிதடியும் நடைபெறும்.

இந்த ஆண்டும் பாவ்நாத் சிவ ராத்திரி திருவிழா கடந்த 15-ஆம் தேதி தொடங் கியது. இதையொட்டி நாடு முழுவதும் இருந்து சாம்பல் பூசிய உடம்புடன் நிர்வாண சாமியார்கள் ஆயிரக்கணக்கில் ஜூனா காத் கிர்னார் மலை அடி வாரத்தில் முகாமிட்டிருந் தனர். மலைஅடிவாரத் தில் கொட்டும் பனியிலும் இவர்கள் அனைவரும் நிர்வாணமாகவே விடிய விடிய வலம் வந்து கொண்டிருந்தனர். மகாசிவராத்திரியின் கடைசி நாளில் அதி காலையில் சிறப்பு வழி பாடு நடத்தப்பட்டன. முன்னதாக நிர்வாண சாமியார்களின் பிரம் மாண்ட ஊர்வலம் நடத் தப்பட்டது. நிர்வாண மாகவே ஆடிப் பாடி பலவகை சாகசங்களை நிகழ்த்தியபடி இவர்கள் ஊர்வலமாக வந்தனர். மிரள வைக்கும் சிலம் பாட்டம், கத்திச் சண்டை உள்ளிட்ட இந்த நிர் வாண சாகச நிகழ்ச்சிகள் பல மணிநேரம் நடை பெற்றது. உள்நாடு மற்றும் வெளிநாட்டினர் பல்லாயிரக்கணக்கில் திரண்டு இந்த 'நிர்வாண' சாதுக்களின் சாகசங்களை பார்வையிட்டனர். பின் னர் பாவ்நாத் கோயிலின் புனித கிணற்றில் போட்டி போட்டுக் கொண்டு நிர் வாண சாதுக்கள் புனித நீராடி வழிபாடு நடத்தின ராம். இந்தத் திருவிழா வையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Read more: http://viduthalai.in/e-paper/96621.html#ixzz3SOxUzuV6

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சமஸ்கிருதம்

கடவுள் சபலங்களுக் கும், சடங்குகளுக்கும் அப்பாற்பட்டவர் என் றால் கோயிலில் சமஸ் கிருதத்தில்தான் அர்ச் சனை செய்யப்பட வேண்டும். குட முழுக்கு சமஸ்கிருதத்தில்தான் நடைபெற வேண்டும் என்பது கடவுளைக் கேலி செய்வது ஆகாதா? ஆகமம் என்றாலும் அவாளுக்குத்தான் சாதகமா?

Read more: http://viduthalai.in/e-paper/96619.html#ixzz3SOxcOCal

தமிழ் ஓவியா said...

ஆதி திராவிட அபிவிருத்தி சங்கத்தார் வரவேற்பு

அன்பார்ந்த சகோதரர்களே! சகோதரிகளே!!

அக்கிராசனரவர்கள் எம்மைப்பற்றி அதிக புகழ்ச்சியாகக் கூறிவிட்டார்கள். நான் அவைகளுக்கு அருகதையுடைய வனல்ல என்றாலும், நமது மக்கள் தங்களது பகுத்தறிவைக் கொண்டு நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை ஒப்புக் கொள்கிறது. ஒன்றே எமக்குத் திருப்திகரமாக விருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஈடேறும் வழி என்பதாக என்னை பேசும்படி கேட்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி வியாக்கியானம் அதிகம் செய்ய வேண்டியதில்லை என்றே கருதுகிறேன் ஏனெனில் பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபி மானம் என்பவைகளின் உட் கருத்தை ஊன்றிக் கவனித் தால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஈடேறும் வழிதானாகவே தோன்றும். எப்படி எனில் குறிப்பிட்ட எந்த விதமான அபிமானத்தை எடுத்துக் கொண்ட போதிலும், அநேகமாக அந்த அபிமானத்தின் பேரால் ஏமாற்றுகளே நடைபெறு கின்றன. தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக வுள்ள வர்கள். இவைகளை ஊன்றிக் கவனித்து - அலசிப்பார்த்து - உரைகல்லில் வைத்து உரசிப்பார்க்க வேண்டும். அவ்வாறு அவர்கள் பார்ப்பார்களேயானால் வாஸ்தவதத்திலே தாழ்த்தப் பட்டவர்கள் ஈடேறும் வழியை எளிதில் கண்டு கொள்வதற்கு ஏதுகரமாக விருக்கும் மக்களது முன் னேற்றத்திற்குத் தடைகல்லாக விருக்கும் காரியங்கள் எதுவுண்டோ அவைகளைத் தகர்த்தெரிய வேண்டும். வீணாக ஆடம்பரமாக நாங்களும் தலைவர்கள் தான் என்று வீரம் பேசிக் கொள்வதில் பயனில்லை. நமக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அப்பகுத்தறிவின் பயனால் இடையூறாக இருக்கும் காரியங்களை மனோதிடத்துடன் தகர்த்தெறிய முன்வர வேண்டும். அன்றே முன்னேற ஈடேற வழி ஏற்படுமென்பதில் சிறிதும் அய்யமில்லை என்று குறிப்பிட்டார்.

(ஆதிதிராவிட அபிவிருத்தி சங்கத் தலைவர் கொழும்பு கும்பனித்தெரு, சி. எம். எ. பாட சாலையில் திரு. எ. ஆர். முத்தையர் தலைமையில் 22.10.1932-இல் நடைபெற்ற வரவேற்பு கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு.)

குடிஅரசு - சொற்பொழிவு - 06.11.1932Read more: http://viduthalai.in/e-paper/96642.html#ixzz3SOyeKYTH

தமிழ் ஓவியா said...

கொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவுஇந்த சினிமா காட்சி பார்ப்பதற்கு மிக அதிசயமாயும் ரம்மியமாயும் காணப் பட்டாலும், இதைப் பார்ப்பதனால் ஏற்படும் பயன் மூடநம்பிக்கையும் அடிமைத் தனமும் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், இந்த மூடநம்பிக்கையும் அடிமைத் தன்மையையும் சோம்பேறிகள் பயன்படுத்திக் கொண்டு ஏழைகளை வருத்தி செல்வம் பெருகிக்கொள்ள பயன்படுகின்ற தென்றும், இனி இப்படிப்பட்ட காட்சிகள் தடுக்கப்பட வேண்டுமென்றும், பகுத்தறிவும், சுதந்தரமும் ஏற்படக் கூடிய விஷயங்களையே நாடகமாகவோ படக்காட்சியாகவோ காட்ட இந்த தியேட்டர் சொந்தக்காரர் முயற்சிக்க வேண்டுமென்றும், உண்மையான சுதந்திர, சமத்துவத் தேசங்களில் உள்ள காட்சிகள் அப்படித்தான் இருக்கின்றதென்றும் சொன்னார்.

ஆதி திராவிடர் சங்க வரவேற்பில் சொற்பொழிவு

தாழ்த்தப்பட்டவர்கள் ஈடேற ஒரே ஒரு வழிதான் உண்டென்றும், அது உலகில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டிய முயற்சி எடுக்க வேண்டுமென்றும், அம்முயற்சிக்கு எதிரியாய் இருக்கும் சாதனங்களான தேசாபிமானம், மதாபிமானம் என்பவை களை அடியோடு அழித்து உலக ஏழைகள் அபிமானம் உலக தாழ்த்தப் பட்டவர்கள் அபிமானம் என்பதன் உணர்ச்சியுடன் வேலை செய்யத் துணிய வேண்டும் என்றும், உலக மனித சமூகத்தை 2 -வகுப்பாகத்தான் பிரிக்க வேண்டு மென்றும், அது ஒன்று, தொழில் செய்து கஷ்டப்பட்டு வாழும் ஏழை, மற்றொன்று தொழில் செய்யாமல் மற்றவர்கள் தொழிலின் பயனை அனுபவிக்கும் சோம்பேறி செல்வவான்கள் என்றும் இரண்டே பிரிவாகப் பிரிந்து போராடி விடுதலை அடைய தயாராயிருக்க வேண்டு மென்றும் பேசினார். (கடைசியாக, ஒரு உபதேசியார் எழுந்து ராமசாமியின் உழைப்பையும் உபதேசத்தையும் தான் பல வருஷங் களாகப் பார்த்து வருவதாகவும், அவர் மூலம் தான் மக்கள் கஷ்டம் ஒழியக் கூடுமென்றும், ஆனால் அவர் கடவுளை நம்பவில்லையென்று சொல்லுவது தனக்கு வருத்தத்தைக் கொடுக்கிற தென்றும் சொன்னார்.)

அதற்கு ராமசாமி பதிலளிக்கையில் கடவுளை நம்ப வேண்டும் என்பது ஒரு அடக்குமுறை என்றும், அது அவனவன் சொந்த விஷய மாகப் பாவிக்க வேண்டுமென்றும் கடவுள் மீது சிறிதாவது நம்பிக்கை இருப்ப வர்கள் ராமசாமியால் கடவுள் இல்லாமல் போய் விடுமோ என்று பயப்பட வேண்டியதில்லை என்றும், உலகில் நடக்கும் அக்கிரமங்களுக்கும், ஏழைகளை வஞ்சித்து கொடுமைபடுத்தி வேலை வாங்கி சோம் பேறியாய் வாழும் அயோக்கிய தனத்திற்கும் பெரிதும் கடவுள் நம்பிக்கைக் காரர்கள் தான் காரணஸ்தர்களாகவும் பொறுப்பாளிகளாகவும் இருக்கின்றார்களே ஒழிய வேறில்லை என்றும் ஆதலால் கடவுள் நம்பிக்கை போய் விட்டால் உலகம் என்ன கதியாகும் என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னார்.

குடிஅரசு - சொற்பொழிவு - 13.11.1932

Read more: http://viduthalai.in/e-paper/96643.html#ixzz3SOyz9FAq

தமிழ் ஓவியா said...

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்

வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சாணை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல், நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.

நமது இலட்சியம் அரசியல் வேட்டையல்ல, மந்திரி நாற்காலியல்ல. நாலாறு பெறுவதல்ல. நமது மூதாதையர் ஆண்ட நாட்டை மீண்டும் பெறுவது - புதிய அரசை அமைப்பது, அதுதான் நம்முடைய நோக்கம்.

Read more: http://viduthalai.in/page2/96579.html#ixzz3SP08tthy

தமிழ் ஓவியா said...

ஜா(பா)தகம்

வீரன்வயல் வீ. உதயக்குமரன்

உங்க பொண்ணு எங்களுக்கு பிடிச்சி போச்சி.. உங்க எல்லோருக்கும் என் பையனையும் பிடிச்சி போச்சி.. ஆனா ரெண்டு பேரோட சாதகமும் பொருந்த லேன்னு சொல்றது சரியா படலே சம்மந்தி உடைந்த குரலில் சொன்னார் சிவ சங்கரன்.

கள்ளிமேட்டு சோசியன் கணிப்பு தப்பாது. கல்யாணம் நடந்தா ஆறே மாசத்துல என் பொண்ணு முண்டச்சி ஆயிடுவா
அழுத்தமாய் வாதித்தார் பெண்ணின் தந்தை நாச்சிமுத்து.

”சரி வேற சோசியரை பார்ப்போம். அவனும் இதையே சொன்னா... இந்த கல்யாணம் வேண்டாம்”

”சம்மந்தியும் விடறதா இல்ல. சரி உங்க திருப்திக்காக வேற ஜோசியனையும் பாக்கலாமே நான் சோதிடம், ஆன்மீகம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவன் இதெல்லாம் சுத்த பேத்தல்னு நிரூபிக்கதான் நான் வேற சோசியனை பாக்கலாம்னு சொல்றேன்”

சம்மந்திகள் இருவரும் கொத்தமங்கலம் கோபாலிடம் சாதகங்களை நீட்டி னார்கள். கோபால் தனது காவி பற்கள் வெளியே தெரிய சிரித்தார்.

”இந்த கல்யாணம் நடக்கும்.. ஆனா உடனே நடக்காது.. ஆறு வருஷம் பொறுத்திருக்கணும்”

”என்ன சோசியரே.. உங்க கிட்ட கல்யாணத்துக்கு பொருத்தம் பாக்க சொன்னா அறுபதாம் கல்யாணத்துக்கு காத்திருக்க சொல்றீங்க”

சிவசங்கரன் தனது எரிச்சலை கொட்டித் தீர்த்தார். மேலும் நான்கு சோதிடர்களை பார்த்த பிறகு சிவசங்கரன் ஒரு முடிவுக்கு வந்தார்.

”சம்மந்தி எவனாவது ஒரே மாதிரி சொன்னானா.. நாலு பேரும் நாலு விதமா சொல்றான். இப்ப வாங்க.. நாம முதல்ல பாத்த கள்ளி மேட்டு சோசியன் கிட்ட போகலாம் ம் அவர்தான் கரெக்டான ஆள்”

ம்.. இந்த சாதகத்துக்கு ரெண்டு பேர்க்கும் போன வருஷமே கல்யாணம் நடந்திருக்கணுமே கள்ளி மேட்டு சோதிடர் தனது கணிப்பை சொன்னதும் பொங்கி எழுந்தார் நாச்சிமுத்து.

”படவா ராஸ்கல் உன் பேச்சை கேட்டு ஒருவருஷம் வீணாப் போச்சிடா.. போன வருஷம் ஒரு பேச்சு இந்த வருஷம் ஒரு பேச்சு இதான் சாதகமா.. வாங்க சம்மந்தி நாமளே நாள் குறிக்கலாம்”

Read more: http://viduthalai.in/page3/96584.html#ixzz3SP0hKKoH

தமிழ் ஓவியா said...

வாத்தியாரே தீர்ப்பை மாற்று!

மனைவியின் விருப்பமின்றி கணவன் வற்புறுத்தி உறவுகொள்வது பாலியல் வன்முறைக் குற்றமாக்கப்பட வேண்டும் என்று கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் தனிப்பட்ட பிரச்சி னையை பொதுப்பிரச்சினையாகக் கருத முடியாது என்று நிராகரித்துவிட்டது.

டில்லியில் அலுவலராகப் பணி புரியும் ஒரு பெண் தன்னுடைய கணவ னால் தொடர்ச்சியாக பாலியல் வன் முறைக்கு ஆளாகி உள்ளார். அப்படி தன்னுடைய விருப்பத்துக்குமாறாக இருந்துள்ள கணவனின் செயலை குற்ற மாக்கிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

அப்பெண்ணின் வழக்கில் சட்டத்தின் பார்வையில் கணவன் மனைவியிடம் நடந்துகொள்ளும் பாலியல் உறவு என்பதை குற்றமாகக் கருத இடம் இல்லை என்றும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 375இன்படி, மணமான இணையருக்குள் பாலியல் உறவு என்பதில் அவர்களுக்குள் ஒப்புத லின்றியே இருந்தாலும், மனைவியின் வயது 15வயதுக்குள் இல்லாமல், மனைவியின் ஒப்புதலின்றி அவள் கணவன் உறவு கொண்டால் அது பாலியல் வன்முறை ஆகாது என்று கூறப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு டில்லியில் பாலியல் வன்முறை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப் பட்ட நீதிபதி வர்மா தலைமையிலான குழு அறிக்கையில், மணமான பின்னர் விருப்பமின்றி உறவு கொள்வதைக் குற்றமாகக் கருதவேண்டுமா?

என்ப தைக் கவனத்தில் கொள்ளும்போது, விருப்பமின்றி கணவன் மனைவி யிடையே ஏற்படக்கூடிய உறவைக் குற்றமாகக் கருதினால், அது திருமணம் என்பதற்கான முறையையே அழித்து விடும் ஆற்றல் உள்ளதாக ஆகிவிடும் என்று இந்திய அரசு கருதுகிறது. குடும்ப முறையே முழுமையாக பெரிய அழுத் தத்துக்கு உள்ளாகிவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்ப முறையை சீர்குலைத்துவிடும் என்பதால் திருமணத்துக்குப்பின்னர் கணவன் மனைவியிடையே விருப்ப மின்றி உறவு கொள்வதைக் குற்றமாகக் கருத முடியாது என்று இப்பிரச் சினைகுறித்து விவாதிக்க அமைக்கப் பட்ட நாடாளுமன்ற குழு கூறிவிட்டது.

அதேநேரத்தில், சட்டப்படி பிரிந்து இருக்கும்போது கணவன் மனைவியி டையே பாலியல் தொல்லைகள் நிகழும்போது, அதைக் கடுமையானக் குற்றமாகக் கருதவேண்டும். என்றும் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை கூறியிருந்தது.

வழக்கு தொடுத்த பெண்ணின் வழக்குரைஞர் கோலின் கோன்சால்வ்ஸ் கூறுகையில், இப்போதைக்கு வழக்குக் கான மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். ஆனாலும், பெண் களுக்கான அமைப்புவாயிலாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

Read more: http://viduthalai.in/page3/96588.html#ixzz3SP15gTcq

தமிழ் ஓவியா said...

புத்தர்தம் பகுத்தறிவு ஒளி!

’இவ்வுலகில் புலன் இன்பங்களில் கட்டுப்பாடு அற்றவர்களாய், இனிய பொருட்களில் பேரவா கொண்டவர் களாய், குற்றச் செயல்களோடு தொடர்பு உடையவர்களாய், அழிவு நிலைப் பார்வை உடையவர்களாய், குறுகிய மதியினராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச்சியை உண்பவர்களன்று’

’இவ்வுலகில் கடுமையானவராய் நம்பிக்கைத் துரோகம் செய்பவராய், கருணை அற்றவராய், அதிக சுயநலம் கொண்டவராய், கருமியாய், எவருக்கும் ஏதும் அளிக்காதவராய், புறங்கூறுபவ ராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச் சியை உண்பவர்கள் அன்று’

இவ்வுலகில் தீயொழுக்கம் உடை யவராய், தம் தொழிலில் ஏமாற்றுக் காரராய், கடனைத் திருப்பித்தர மறுப்பவராய், பாசாங்குக்காரராய், பிறரை இகழ்ச்சியாய் நினைப்பவராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச் சியை உண்பவர்கள் அன்று.

இவ்வுலகில் பிறருக்குத் துன்பம் இழைப்பவராய், பிறர் பொருள் கவர்பவராய், தீயொழுக்கம் உள்ளவராய் மரியாதை அற்றவராய், கொடுஞ் செயல்களில் கட்டுப்பாடு அற்றவராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச் சியை உண்பவர்கள் அன்று.

இவ்வுலகில் கொலை செய்வோராய், கொலை செய்யத் தூண்டுதலாய் இருப்போராய், திருடராய், பொய்யராய், வஞ்சிப்பவராய், ஏமாற்றுக்காரராய் தவறான காமச் செயல்களில் ஈடுபடு வோராய் இருப்பவர்களே தீயர்கள்! இறைச்சியை உண்பவர்கள் அன்று.

இவ்வுலகில் சினம் மிகுந்தோராய், தற்பெருமை, தற்புகழ்ச்சி, பொறாமை, தீய நெறிகளில் நிலைப்போராய் இருப்பவர்களே தீயர்கள். இறைச்சியை உண்பவர்கள் அன்று.

எவரொருவர் மீனையும், இறைச் சியையும் உண்பவராய் இருந்தும், நல் லோராய், பற்றுக்களைக் கடந்தோராய், நேரிய வழியில் மகிழ்வோராய், வெல்லப்பட்ட புலன்களை உடைய வராய், பேராசை, வஞ்சகம், தற்புகழ்ச்சி அற்றோராய், கருணை உள்ளவராய், இறப்பிற்குப் பின்னும் நற்பெயர் பெறு வோராய், நன்னெறியில் நிலைப் போராய் இருப்பவர்கள் தீயோராக கருதப்படுவதில்லை.

எவரொருவர் பற்றுகள் நிறைந் தவராய், பேராசை பிடித்தவராய், ஏமாற் றுக்காரராய், வஞ்சகம் செய்வோராய், குற்றச் செயல்களில் தொடர்புடை யோராய், புலன்களை வெல்ல முடி யாதவராய், தீய ஒழுக்கமுடையோராய், நம்பிக்கைத் துரோகம் புரிபவராய், கருணை அற்றவராய், இறப்பிற்குப் பின்னும் தீய பெயர் பெறுவோராய்,

தீய நெறியில் நிலைப் போராய் இருந்து, சாம்பல் பூசியவராய், சடைமுடி வளர்ப் பவராய், பருவத்திற்கேற்ப பூஜைகள், யாகங்கள் செய்வோராய், எல்லாவித சடங்குகளையும் செய்பவராய் இருப் பவர், மீனையும் இறைச்சியையும் தவிர்ப்பவராய் இருப்பதினால் நல் லோராக கருதப்படுவது இல்லை.

மீனையும், இறைச்சியையும் உண் ணாது தவிர்த்தலும், நிர்வாணமாய் இருத்தலும், குடுமி வைத்தலும், மழித் தலும், உரோம உடை உடுத்தலும், யாகத் தீ வளர்த்தலும் போன்ற இவை யெல்லாம் பேரின்ப ஞானம் பெற போதிய வழிமுறைகள் அன்று. தன்னை வருத்தலும், யாகத்தீயில் தானப் பொருள்களை இழத்தலும், சடங்குகளும், குற்றம் உடைய மனிதனைத் தூய்மைப் படுத்தி விடாது.

’தீமைகளை உருவாக்குவது தீயசெயல் களே அன்றி மீனையோ இறைச் சியையோ உண்பதனால் அன்று’

உங்கள் புலன்களை அடக்குங்கள்! உண்மையைக் கடைப்பிடியுங்கள்! உங்கள் சக்திகளை நீங்களே ஆளும் திறன் பெறுங்கள்! இரக்கத்தோடு இருங்கள்! அனைத்துக் கட்டுக்களையும் விட்டொழித்து தீமைகளை வென்ற துறவிதான் கண்டவற்றாலும் கேட்ட வற்றாலும் களங்கப்படுவது இல்லை.

புனிதர் புத்தரின் போதனைகளி லிருந்த சத்தியத்தை உணர்ந்த துறவி ஆமகந்தர், அங்கேயே அப்போதே தன்னையும் தன் சீடர்களையும் நன் னெறியாம் தம்மநெறிக்கு ஒப்புக் கொடுக்க புனிதர் புத்தரைப் பின்பற்றுவோர் களாகத் தம்மை ஏற்கும்படி வேண்டிப் பணிந்தார்.
இவ்வாறு புத்தர் கூறினார்.

(அண்ணல் அம்பேத்கர் எழுதிய நூலின் மொழி பெயர்ப்பு)

மொழியாக்கம்: திருமகள்

Read more: http://viduthalai.in/page3/96587.html#ixzz3SP1Cvdv4

தமிழ் ஓவியா said...

கீதை பற்றி விவேகானந்தர்

கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கீதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேதவியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப் பட்டதா?
இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா? மூன்றாவதாக கீதை யில் கூறப்படுவதுபோல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?

நான்கா வதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள் தானா? என்பன கீதையைச் சங்கராச் சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத் தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி - குரு சேத்திர யுத்தம் நடைபெற்றது என்ப தற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத் தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே உரை யாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண் டாரா என்ற பிரச்சினை எழுகிறது.

அர்ஜூனன் ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத் திரயுத்தம் செய்தனர் என்பதோ கூறுவ தற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. -விவேகானந்தர்,

கீதையைப்பற்றி கருத்துகள் என்ற நூலில் ஆதாரம்: ஏ.எஸ்.கே.அய்யங்கார் எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூலில் - பக்கம் 11,.117)

Read more: http://viduthalai.in/page3/96586.html#ixzz3SP1RGbF6

தமிழ் ஓவியா said...

அய்வருக்கும்....

பாஞ்சாலி
யார்? -
வாக்காளர்
பட்டியல்
தயாரிப்பவர்
கேட்டாராம்....
நவ.5
என பதில்வர
திகைத்துப் போய்
எடுத்தார்
ஓட்டம்?

யார் கண்டுபிடிப்பு!?

நாங்கள்
எதையும் கண்டுபிடிக்கவில்லையா?
மதம், சாதி, கடவுள்...
எங்களைத் தவிர - வேறு
யாரால் கண்டுபிடிக்க முடியும்?
சவால்! சவால்!

- மா. அழகிரிதாசன்

Read more: http://viduthalai.in/page3/96589.html#ixzz3SP1YH6Hu

தமிழ் ஓவியா said...

தமிழகத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகள்

நோக்கியா

கடந்த ஆகஸ்டிலிருந்து தமிழகத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகளினால் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000 தொட்டுள்ளது. இதில் நோக் கியா மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மாத்திரம் நேரடியாக மற்றும் அதனைச் சார்ந்த தொழில் செய்து வந்த 25,000 பேர் நிரந்தரமாக வேலையிழந்துள்ளனர்.

நோக்கியா தொழிற்சாலை வரி ஏய்ப்பிற்காக மூடப்பட்டதா?

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நோக்கியா தனது தொழிற்சாலையை சென்னையில் திறந்தது. மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய பகுதிகளில் இருந்த சந்தைகளுக்கு இங்கிருந்து மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஒப்பந்தத்தின் படி ஏற்றுமதிக்கான தயாரிப்புகள் மாத்திரமே இங்கு தயாரிக் கப்பட்டு வந்தது. ஆனால் ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக, உள்ளூர் சந்தையில் பெரும் வரவேற்பு இருப்பதை அறிந்து கொண்டு விதிமுறைகளை மீறி மொபைல் போன்களை உள்நாட்டுச் சந்தையிலும் விற்றது.

நோக்கியாவின் இந்த விதி முறை மீறிய செயல்பாட்டின் காரண மாக தமிழ்நாட்டிற்கு சுமார் 3000 கோடி வரி இழப்பு ஏற்பட்டது. கலைஞர் தலைமை யினால் ஆன அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் விதிமுறை மீறிய நோக்கியா நிறுவனம் தமிழக அரசுக்கு 2,400 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டும் என அறிவிக்கை அனுப்பியது.

மற்றோரு வழக்கில் நோக்கியா மைக்ரோசாஃப்டிற்கு மாற்றுவதற்கு முன்பாக 3500 கோடி ரூபாய்க்கு உத்தரவாதமளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், நோக்கியா நிறுவனம் சிறீப்பெரும்புதூர் தொழிற்சாலை கைமாறவில்லை, அதற்கு மாறாக மொபைல் போன்களை உற்பத்தி செய்து தருவதாக மட்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம் என்று நீதிமன்றத்தில் கூறியது. இதன் மூலம் சிறீப்பெரும்புதூர் நோக்கியா ஆலை தொடர்ந்து இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென மைக்ரோசாப்ட் நிறுவனம் மொபைல்போன் வாங்குவதை நிறுத்தி விட்டது. ஆகவே தொழிற்சாலையை மூடப் போகிறோம் என்று அறிவித்து கடந்த நவம்பர் முதல் இந்நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. நோக்கியா நிறுவனம் இயங்கிக்கொண்டு இருந்த போது சுமார் 8000 தொழிலாளர்கள் நேரடியாக பணிசெய்து கொண்டு இருந்தனர்.

இவர்களை அழைத்துச்செல்ல 27 ஒப்பந்தப் பேருந்துகள் இயங்கிக் கொண்டு இருந்தன. மேலும் நோக்கியா நிறுவனத்தில் பராமரிப்பு பணிக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் என 25,000 பேரின் வாழ்வாதாரம் நோக்கியா நிறுவனத்தை நம்பி இருந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நோக்கியா தன்னுடைய பணியாளர்களை வெளி யில் அனுப்ப ஆரம்பித்து விட்டது.

எதிர்காலத்தில் நோக்கியா நிறுவனம் மூடப்படும் என்பதால் வேறு வழியின்றி சுமார் அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட் டோர், தானாகவே பணியிலிருந்து விலகிவிட்டனர். ஒப்பந்தத்தை மீறி உள்ளூர் சந்தையில் விற்பனையில் ஈடுபட்ட நிறுவனம் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றம் மூலம் வரியை திருப்பித்தரக்கோரினால் ஆலையை மூடிவிட்டு ஓடிவிட்டது. நவம்பர் மாதம் முற்றிலுமாக அனை வரும் வெளியேற்றப்பட்டனர்.

ஃபாக்ஸ்கான்

சிறீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் தொழிற்சாலை வளாகத் தில் செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஃபாக்ஸ்கான் தொழிற் சாலை இயங்கி வந்தது. இத்தொழிற் சாலையில் நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் பயிற்சி தொழிலாளர்கள் என மொத்தம் சுமார் 8000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் நோக்கியா தொழிற் சாலை மூடப்பட்டதை தொடர்ந்து பாக்ஸ்கான் நிறுவனம் தனது உற்பத் தியை குறைத்துக்கொண்டது. இதனால் இத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்கள், பயிற்சி தொழிலாளர்கள் சுமார் 6400 பேர் ஏற்கனவே வேலை இழந்துள்ளனர். இந்த நிலையில் 2014-ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி ஆலையை முழு மையாக மூடிவிட்டது. இதன் மூலம் 8000 பேர் வேலை இழந்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page3/96591.html#ixzz3SP1oxxwn