Search This Blog

15.7.13

அர்ச்சகர்களின் யோக்கியதை இதுதான்!


இந்து மத அறக்கட்டளைகள் பற்றி விசாரிக்க மத்திய அரசு 1960ஆம் வருடம் நியமித்த சி.பி.இராமசாமி அய்யர் கமிட்டி தனது அறிக்கையை 1962ஆம் வருடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கை யில் காணப்படும் பூசாரிகள் பற்றிய விவரங்கள் (அத்தியாயம் 5) இங்கே திரட்டித் தரப்படுகின்றன.                                                                          - (ஆ-ர்)

நாங்கள் தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்த போது ஏராளமான கோயில்களுக்கு நேரடியாக நாங்களே போய்ப் பார்க்க எங்களுக்கு நிரம்ப வாய்ப்புக் கிடைத் தது.

அர்ச்சகர்களும், பூசாரிகளும் ஒன்று கல்வி அறிவற்ற தற்குறிகளாக இருக்கின்றனர் அல்லது அரை குறையாகப் படித்தவர்களாக இருக்கின் றனர்; இவர்கள் வழக்கமாகவே பணம் பறிப்பவர்களாகவும் இருக்கின்றனர். இதில் ஏதோ சிற்சில சிறப்பான விதி விலக்குகள் உள்ளன. இந்த விதி விலக்குகள் வடக்கைவிட தெற்கே தான் அதிகம் - இவ்வாறுதான் தோன் றுகிறது.
பொருளறியாத புலம்பலே மந்திரம்!

அவர்கள் ஓதும் மந்திரங்களில் அவர்களின் உச்சரிப்பும் உச்சாடனமும் பதியத்தக்கதாக இல்லை; தப்புந் தவறுமாக இருக்கின்றன. தாங்கள் முழங்கும் இந்த மந்திரங்களின் சிறப் பையோ அல்லது பொருளையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை என் பது வருந்துதற்குரியது.

தெய்வத்தின் கருணையைப் பெறுவதற்காக கோயில்களுக்கு வரும் பக்தர்களிடத்திலும், வழிபடுவோரிடத் திலும் பக்தியும், மரியாதையும் அடங்கிய ஒரு உணர்ச்சியை ஊட்டக்கூடிய நிலையில் அர்ச்சகர்கள் இருப்பதில்லை என்பது வெளிப்படை.

சின்னஞ்சிறு பயலுக்கு என்ன தெரியும்?

ஆந்திரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் இருக்கிறது; இந்தக் கோயில்களில் நடத்தப்பட்டு வரும் வழிபாடு கொஞ்சம்கூட போதாது என்று கூறப்படுகிறது. தாங்கள் பணிபுரியும் கோயிலில் எந்த ஆகமம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது கூட பூசாரிகளில் பலருக்கு தெரிந் திருக்கவில்லை என்றுதான் தோன்று கிறது.  தெய்வத்துக்கு எந்த நேரத்தில் அபிசேகம் செய்யப்பட வேண்டும் என் றும் எந்த மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை.

மகாநந்தி என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு தாம் போயிருந்தபோது அங்கே 15 வயதாகிய ஒரு சிறுவன் பூசாரியாக இருந்ததை கண்டதாக திரு. ரமேசன் என்பவர் சாட்சியம் கூறியுள்ளார். தெய்வங்கள் பெயர்கள் கூட அந்த சிறுவனுக்குத் தெரிய வில்லை எந்த வகையான வழிபாடு நடத்தப்பட வேண்டும் - என்னென்ன மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்ப தும் அச்சிறுவனுக்குத் தெரியவில்லை.

தீக்குச்சியைக் கிழிக்க மட்டுமே தெரிகிறது!

நான்கு அடிகள் கொண்ட சமஸ் கிருதப் பாடல் ஒன்றை அச்சிறுவன் மனப்பாடம் செய்து வைத்திருக்கின் றான்; இந்தக் கருவியுடன் ஒரு தீப்பெட்டியையும் வைத்திருக்கின்றான்; ஏதாவது ஒரு பக்தர் கோயிலுக்கு வந்தால் உடனே தீக்குச்சியை கிழித்து கற்பூரத்தை கொளுத்திக் கொள்கின் றான் அவனது பிரதான கவலை களெல்லாம் கோவிலுக்குள் பக்தர் வரும் முன்னர் டிக்கட் ஒன்றை வாங்கிக் கொண்டிருக்கிறாரா என்பதை சோதித் துப் பார்த்துக் கொள்வதுதான்.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அர்ச்சகர்கள் சிலர் கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை தங்கள் உடைமையாக வைத்தனுபவிப்பதாக திரு.கே. ரங்கநாதராவ் சாட்சியம் அளித்திருக்கிறார். கோவில் சொத் துக்கள் பரிபூரணமாகத் தங்களையே சேர்ந்தவை என்பதுபோல அச்சொத் துக்களை தங்களுக்கிடையே பங்கிட் டுக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கும் ஒரு முதலாளித்துவ சுரண்டல்!

இதேபோல தங்கள் பணியின் காலத்தையும், தங்களுக்கிடையே உள்ள பல்வேறு  கிளைகளின்படி பங்கிட்டுக் கொள்கிறார்கள் இவ்வாறு செய்து கொள்ள அவர்கள் (அரசு) இலாகா விடமோ அல்லது தர்மகர்த்தாக் களிடமோ ஆலோசனை கேட்பதில்லை. பல அர்ச்சகர்கள் தங்கள் பணியைச் செய்ய பதில் ஆள் போட்டுக் கொள் கிறார்கள். உண்மையிலேயே பூஜைப் பணியை செய்பவருக்கு பெயரளவில் ஒரு சிறு தொகை மட்டுமே தரப்படு கிறது. பல அர்ச்சக குடும்பங்கள் வேறு பல தொழில்களிலும் ஈடுபட்டிருக் கிறார்கள். இதன் விளைவாக இவர் களின் பணி மிகவும் அதிருப்தி தருவ தாக உள்ளது.
குடகுப் பகுதி கோவில்கள் பற்றி மங்களூரில் உள்ள இந்து மதம் மற்றும் அறக்கட்டளை உதவி ஆணையர் கொடுத்துள்ள குறிப்பில், பூசாரிகள் தாங்கள் வகிக்கும் பதவிகளுக்கோ அல்லது தொழிலுக்கோ எந்த விதமான பயிற்சியும் பெற்றிருக்கவில்லை என் கிறார்.கோவில் நிதிக் குழுவின் உறுப் பினர்கள் ஒருமித்த குரலில் கூறியுள்ள கருத்துப்படி அர்ச்சகர்களுக்கு இந்து மதத்தின் கொள்கைகள், ஆகமங்கள், சாஸ்திரங்கள், வேதங்கள் முதலியவை களின் அடிப்படைத் தத்துவங்கள்கூட தெரியவில்லை. கோயிலின் உள்ளே தாங்கள் ஓதும் ஒரு சில மந்திரங்களின் பொருள்கூட தெரியவில்லை.

-----------------(சர். சி.பி. இராமசாமி அய்யர் குழு அளித்த அறிக்கையிலிருந்து)


(கோயில்களில் உள்ள அர்ச்சகப் பார்ப்பனர்களின் யோக்கியதை எவ்வளவுக் கேவலமாக இருக்கின்றன - ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை.அவர்கள் பார்ப்பனர்களாக இருந்தால் எப்படியும் நடந்து கொள்ளலாம்; ஆனால் அதே நேரத்தில் முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்றுள்ளவர்கள் - ஒழுக்கமானவர்களாக இருந்தாலும் அவர்கள் பார்ப்பனராக இல்லா விட்டால் அர்ச்சகர் ஆகக் கூடாதாம்! இந்த அநீதியை ஒழிப்பதுதான் திராவிடர் கழகம் நடத்தும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டம்.)
                   -------------------------”விடுதலை” 14-7-2013

29 comments:

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகம் போராட்டத்தில் தி.மு.க.வினரும் பங்கேற்பார்கள்


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக குரல் கொடுப்போம்!

திராவிடர் கழகம் போராட்டத்தில் தி.மு.க.வினரும் பங்கேற்பார்கள்

கலைஞர் அறிக்கை



சென்னை, ஜூலை 14- ஆகஸ்டு முதல் தேதி திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போரான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தில் தி.மு.க.வினரும் பங்கேற்பார்கள் என தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று (13.7.2013) வெளியிட்டுள்ள கடித அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உடன்பிறப்பே,

1970ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் தந்தை பெரியார் அவர்கள் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார்கள். ஆலயங்களில் கர்ப்பக்கிரகம் வரையில் சாதிப் பாகுபாடின்றி அனைவரும் சென்று ஆண்ட வனைத் தொழுதிட வேண்டுமென்றும், அனைவருக்கும் சமமாக சாதி உயர்வு தாழ்வு இன்றி அர்ச்சகராகும் உரிமை வேண்டுமென்றும் வலியுறுத்துகிற அடிப்படையில் அந்தக் கிளர்ச்சி அமையுமென்று பெரியார் போர் முரசு கொட்டினார்.

அப்படியொரு கிளர்ச்சி நடத்தாமலே அவரது எண்ணத்தை நடைமுறைக்குக் கொண்டு வரச் சட்டம் இயற்றப்படும் என உறுதி யளித்து, நான் தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் அறிக்கை கொடுத்தேன். அந்த வேண்டுகோளில், குறிப்பிட்ட வகுப்பினர்தான் அர்ச்சகராக இருக்க வேண்டுமென்று யாரும் இந்த நூற்றாண்டில் வாதாடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. காலம் வேகமாகச் சுழன்று மனிதனுக்கு மனிதன் பிறப்பால் உயர்வு தாழ்வு கிடையாது என்ற கொள்கை வலுப்பெற்று வரும் இந்நாளில் அப் படிப்பட்ட ஒரு பிற்போக்கு எண்ணத்தை யாரும் முரட்டுப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். வள்ளுவர், புத்தர், காந்தியடிகள் போன்றோரைப் போற்றுகிறவர்கள், ஆண்டவனுக்கு அர்ச்சகராகக் குறிப்பிட்ட சாதியினர்தான் இருந் திடல் வேண்டுமெனல் அநியாயமாகும். அர்ச்சகர்களுக்கென சில தகுதிகள் இருக்க வேண்டும் என்பதிலோ, போற்றக்கூடிய புனிதத் தன்மைகளை அவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும் என்பதிலோ, அதற்குரிய பயிற்சிகளை அவர்கள் பெற்றாக வேண்டும் என்பதிலோ, எனக்குக் கருத்து வேறுபாடில்லை. அப்படிப் பயிற்சி பெறுகிற வர்கள், எந்த வகுப்பினராயிருந்தாலும் அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகராக ஆகலாம். அதற்கு விதிமுறைகள் வகுக்க அரசு யோசித்துக் கொண்டி ருக்கிறது.

அதேசமயம் பரம்பரை அர்ச்சகர் வீட்டுப் பிள்ளைகள் அர்ச்சகராக விரும்பினால் அவர் களுக்கு முதல் சலுகை அளிப்பது பற்றியும் அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதன்படி அர்ச்சகர் பதவி களைப் பிறப்பினால் கணக்கிடாமல் தகுதி யொன்றினால் மட்டுமே கணக்கிடப்படக் கூடிய நாள் வந்து விடுமேயானால் ஆண்டவனைத் தொழுதிட ஆலயம் செல்வோர் சாதி வேறுபாடின்றி கர்ப்பக்கிரகம் வரையில் செல்வதற்கும் தடை யில்லை என்பதும் கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும். கர்ப்பக்கிரகத்தில் இருக்கின்ற பொருள்களின் பாதுகாப்புக்காக மட்டுமே அந்த இடம், ஒருவர் பொறுப்பில் விடப்பட வேண்டுமே தவிர, அதற்கு சாதி வர்ணம் பூசப்படக் கூடாது என்பதை இந்த அரசு மட்டுமல்ல; ஆண்டவன் எதிரே அனைவரும் சமம் என்ற கருத்தினை ஒப்புக் கொள்கிற எல்லோரும் ஏற்றுக் கொண்டே தீர்வர்.

தமிழ் ஓவியா said...

ஆகவே, இந்த நல்ல நிலை ஏற்பட ஆலயங்களில் ஆண்டவன் முன்னே சாதியின் பெயரால் மற்றவர் களுக்கு இழைக்கப்படும் இழிவான அநீதி அகன்றிட, விதிமுறைகள் செய்திட அரசு முன்வருகிறது என்ற உறுதிமொழியினை ஏற்று பெரியார் அவர்கள், தான் திட்டமிட்டிருக்கிற கிளர்ச்சியினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தந்தை பெரியார் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். இந்த எனது அறிக்கைக்கும் வேண்டுகோளுக்கு மிணங்கப் பெரியார் அவர்கள், தான் நடத்த இருந்த போராட்டத்தைத் தள்ளி வைக்கச் சம்மதித்தார். தந்தை பெரியார் அவர்களுக்கு நான் அளித்த அந்த உறுதிமொழிக்கேற்ப 2.12.70ல் சட்டப் பேரவையில் அர்ச்சகர் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேறியது. அர்ச்சகர் சட்டம் கண்டு, சமத்துவம் விரும்பாத சனாதனிகள் வெகுண்டார்கள். பல்லாண்டு காலமாக அனுபவித்து வருகிற ஆதிக்கத்தை அவ்வளவு எளிதில் இழந்திடச் சம்மதிப்பார்களா? அதனால் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். 12 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசியல் சட்டத்தில் மத சம்பந்த மாக அளிக்கப்பட்டுள்ள உறுதிப்படி அர்ச்சகர்கள் தங்கள் தொழிலை நடத்தும் உரிமையை அந்தச் சட்டத் திருத்தம் தடுக்கிறது எனக்கூறி அந்த அடிப்படையில் ரிட் மனுக்கள் அளித்திருந்தனர்.

அந்த வழக்கில் 1972ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் நாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு. மனுதாரர் களால் தவறு என்று கூறப்படும் இந்தச் சட்டம் மத சம்பந்தமான நடவடிக்கைகளிலோ விவகாரங்களிலோ தலையிட வில்லை. எனவே தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தம் செல்லுபடி யானதே என்று தீர்ப்பிலே கூறப்பட்டிருந்த போதிலும், நடைமுறையில் இனிமேல் செய்யக்கூடிய காரியம் என்ற வகையில் அந்தச் சட்டத்தின்படி காரியங்கள் நடைமுறைக்கு வராத அளவுக்கு முடக்கப்பட்டது. அது நடைமுறைக்கு வரவேண்டுமென்றால் அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். எத்தனையோ முறை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறியும் மத்திய அமைச்சர்களிடத்தில் விவாதித்தும் கூட அந்த அரசியல் சட்டத்திருத்தப் பணி நடை பெறவே இல்லை.

தமிழ் ஓவியா said...

இது கண்டு கொதிப்படைந்த பெரியார் அவர்கள் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 8, 9 ஆகிய நாட்களில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் நாடு தழுவிய ஒரு போராட்டத்தை நடத்துவதற்குத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால், அந்தப் போராட் டத்தை நடத்தாமலேயே 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் பெரியார் அவர்கள் மறைந்து விட்டார்கள். சென்னை அண்ணா மேம்பாலத்திற்கருகே 1977ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி பெரியார் அவர்களின் சிலை திறப்பு விழா அ.தி.மு.க. சார்பாக நடைபெற்றபோது திராவிடர் கழகத்தின் சார்பில் அந்த விழாவில் கலந்துகொண்ட அன்னை மணியம்மையார் அவர்கள் அந்நாளைய முதல மைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னிலையில் பேசும்போது, அர்ச்சகர் சட்டம் முடமாக்கப் பட்டிருப் பதைச் சுட்டிக்காட்டி, அதற்கென அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்கிற ஆவலை உள்ளத்தில் தேக்கி வைத்துக் கொண்டு, அதற்காக ஒரு போராட் டத்தையே நடத்த பெரியார் திட்டமிட்டிருந்தார். அதற்குள் மறைந்து விட்டார். கலைஞர் கருணாநிதி அவர்கள் பெரியார் மறைந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டார். பெரியாருடைய ஆசைகளை எல்லாம் எவ்வளவோ நிறைவேற்றினோம். ஆனால் இந்த அர்ச்சகர் சட்டத்தை எழுந்து நடமாடவைக்க முடியவில்லை. ஆகவே அவருடைய நெஞ்சில் ஒரு முள்ளோடுதான் புதைத்திருக்கிறோம் என்று சொன் னார்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களே அரசியல் சட்டத்தைத் திருத்தி, அர்ச்சகர் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வழிவகை செய்யுங்கள் என்று உருக்கத்துடன் கேட்டுக் கொண்டார். 1978ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் சென்னை கடற்கரையில் நான் பேசும்போது, மத்திய பாதுகாப் புத்துறை அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் அவர்களையும் அந்த மேடையில் வைத்துக் கொண்டு மத்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோள்களில், பெரியாருக்கு எத்தனையோ விருப்பங்கள் உண்டு. சாதிபேதமற்ற சமுதாயம், மூட நம்பிக்கை ஒழிந்த சமுதாயம் இதையெல்லாம் காணவேண்டு மென்று பெரியார் ஆசைப்பட்டார். என்றாலும், அந்த ஆசைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டன எனினும், இந்த ஆசை ஒன்றை நிறைவேற்ற முடியாமல் பெரியார் மறைந்து விட்டார். ஆகவே மத்திய அரசுக்கு இந்த நூற்றாண்டு விழாவில் நான் இந்தப் பொதுக்கூட்டத்தின் மூலமாக இங்கே வெள்ளமெனத் திரண்டிருக்கின்ற உங்கள் சார்பாக விடுக்கின்ற வேண்டுகோள், அர்ச்சகர் சட்டம் நடைமுறைக்கு வர அரசியல் சட்டத்தைத் திருத்திக் கொடுங்கள் என்கிற வேண்டுகோள் என்பதாகும். ஆனால் இந்த வேண்டுகோள் நிறைவேற்றப்பட வில்லை.

தமிழ் ஓவியா said...

எனவே தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் இருந்த முள்ளை அகற்றிடும் வகையில் தி.மு. கழகம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே 23-5-2006 அன்று அரசாணை ஒன்று பிறப்பிக்கப் பட்டது. அதன்படி தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி திருக் கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது. அப்போது வேத விற்பன்னரும், தமிழ் அர்ச்சனைக்காக பல்லாண்டு காலம் போராடி யவருமான அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச் சாரியர், இப்போது தேர்ந்தெடுத்திருக்கிற கருணாநிதி மந்திரிசபை எல்லா சாதிக்காரர்களும் அர்ச்சகர் ஆகலாம் என முடிவெடுத்து அறிவித் திருப்பது வேத வாக்கு. ஆகமத்தைச் சொல்லி மற்ற சாதிக்காரர்களை பிராமணர்கள் கோவிலுக்குள் விடாமல் இருந்தார்கள். ஆனால், உண்மை என்ன வென்றால் பிராம ணனுக்கும், ஆகமத்துக்குமே முரண்பாடுதான். பிரா மணன் தனக்கு எதிரான ஆகமத்தின் பெயரைச் சொல்லியே மற்ற சாதிக்காரர்களை உள்ளே விட மறுத்து வந்தான். ஆனால் உண்மையில் பாஞ்சராத்ர ஆகமப்படி சாதி தத்துவமே இல்லை. ஆகமப்படியே பார்த்தாலும் யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம். பிராமணர் இதையே, தன் தொழிலாக்கிக் கொண்டதால், மற்ற யாரையும் உள்ளே விடவில்லை. ராமசாமி நாயக்கர் அந்தக் காலத்தில் என்னிடம் தாத்தாச்சாரியாரே எங்க கையால ஒரு பூவை எடுத்து உங்க சாமிக்குப் போடக்கூடாதாய்யா? என்று கேட் டார். அந்தப் பூவை இப்போது கருணாநிதி எடுத்துப் போட வைத்திருக்கிறார்.

இது வரவேற்க வேண்டிய ஒரு சீர்திருத்த விஷயம். இதை யாராவது ஆட்சே பித்தால் அவர்கள் மக்கள் முன்னேற்றத்தைத் தடுக்கி றார்கள்னு அர்த்தம். அவர்களுக்கு நாம் தான் நல்ல புத்தி சொல்லித் திருத்த வேண்டும் என்று பதிலளித்தார். தி.மு.கழக ஆட்சியின் அரசாணையினை அடுத்து பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங் களும்; சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர். பயிற்சி முடித்த நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்ச கராகும் பிரச்சினை உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டது.

தமிழ் ஓவியா said...

அதன் காரணமாக அவர்களுக்கு உடனடியாக திருக்கோவில்களில் வேலைவாய்ப்பு உருவாக்கிட இயலாமல் போயிற்று. அதற்குப் பின்னர் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றது. உச்ச நீதிமன் றத்தில் தமிழக அரசு அர்ச்சகர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர ஆறு மாத கால அவகா சத்தைக் கேட்டுப் பெற்றது. ஆறு மாத காலம் முடிந்த பிறகும், இந்தப் பிரச்சினையில் எவ்விதமான நடவடிக் கைகளையும் அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தோர், உச்ச நீதிமன்றம் ஆறு மாத கால அவகாசம் வழங்கியும்கூட மாநில அரசு இதுவரை எவ்வித கலந்தாலோசனையையும் நடத்த வில்லை. எனவே மாநில அரசின் நோக்கத்தை நாங்கள் சந்தேகிக்கிறோம். 2006ஆம் ஆண்டு வெளியிடப் பட்ட அரசாணையை தற்போதுள்ள தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எனினும் எங்களுடைய சட்ட ரீதியான போராட் டத்தை நிறுத்திக் கொள்ளப் போவதில்லை என்று சொல்லியிருக் கிறார்கள்.

மேலும் அரசியல் சட்ட ரீதியாக பயிற்சி பெற்ற அனைத்துச் சாதி அர்ச்சகர் களுக்கும் திருக் கோவில்களில் வேலை பெறுவதற்கான உரிமை உள்ளது என்று வழக்கறிஞர்களும் கருத்து அறிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் நமது தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத் தில், தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்களின் முனைப்போடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு இதனைச் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று வற்புறுத்தும் வகையிலும் ஆகஸ்ட் முதல் தேதி யன்று அனைத்துக் கழக மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம்; இதில் ஒத்த கருத்துள்ளவர்களை அழைத்து மாநாடு ஒன்றி னை நடத்துவது; மாவட்டத் தலைநகரங்களில் கருத்தரங்குகள் நடத்துவது; மூன் றாவது கட்டமாக மறியல் போராட்டத்தை நடத்துவது என்றெல்லாம் முடிவெடுத்து அறிவித்திருக்கிறார்கள்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற முடிவுக்கு தொடக்கம் முதல் ஆதரவாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் நிறைவேற்றி யிருக்கும் இந்தத் தீர்மானத்திற்கும் ஆதரவாக இருக்கும் என்பதைத் தெரிவிப்பதற்காகத் தான் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன். திராவிடர் கழகத் தீர்மானத்தின்படி, இதற்காக நடத்தும் போராட்டங்களில் கழக உறுப்பி னர்கள் பங்கேற்று அந்தப் போராட் டத்திற்கு எழுச்சி யூட்டும் வகையில் தேவையான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

அன்புள்ள,
மு.க.

தமிழ் ஓவியா said...

ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட்டத்தில்
தி.மு.க. பங்கேற்கும் என்று அறிவித்த
மானமிகு கலைஞர் அவர்களுக்குக்
கழகத் தலைவர் நன்றி தெரிவித்தார்

ஆகஸ்டு முதல் தேதி திராவிடர் கழகம் நடத்த விருக்கும் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப் போரான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட் டத்தை ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டு மென்று அறிவித்துள்ள மானமிகு கலைஞர் அவர்கள் அறிவித்த செய்தியை 13.7.2013 அன்று அறிந்தவுடன், சேலத்தில் இருந்த தமிழர் தலைவர், மானமிகு கலைஞர் அவர்களுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ் ஓவியா said...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு - பங்கேற்பு

ஆகஸ்டு முதல் தேதி திராவிடர் கழகம் நடத்த உள்ள அறப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆர்வமுடன் பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் - எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்கள், தமிழர் தலைவரிடம் தெரிவித்துள்ளார் என்பதையும் மகிழ்ச்சியுடன், நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...


ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள் திருச்சி பெல் நிறுவனத்துக்காக போராடியவர் காமராஜர்

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மின்உற்பத்தி, தொழில், போக்குவரத்து மறுசுழற்சி ஆற்றல், இயற்கை எரிவாயு போன்ற துறைகளில் தீவிர கவனம் செலுத்தப்பட்டது. இதற்காக பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு அந்த குழுக்கள் ஒவ்வொரு மாநிலமாகச் சென்று ஆய்வு செய்தன.

அந்த வகையில் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான பாய் லர்கள், ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்யும் பெல் நிறுவனத்தை (பாரதமிகு மின் நிறுவனம்) செக் குடியரசு நாட்டு உதவியுடன் இந்தியாவில் எங்கெங்கு தொடங்கலாம் என்பது பற்றி ஆய்வு செய்ய ஒரு குழு உருவாக்கப்பட்டது. அந்தக்குழுவினர் வட மாநிலங்களில் சுற்றிக் கொண்டிருந்தனர். இதை அறிந்த பெருந்தலைவர் காமராஜர் அந்தக்குழுவை தமிழ்நாட்டுக்கு வந்து பார்க்கும்படி கூறினார். அந்தக் குழுவும் வந்தது தமிழ்நாடு முழுக்க சுற்றி பார்த்தது. கடைசியில் காமராஜரை சந்தித்தது. பெல் நிறுவனம் கட்ட தமிழ்நாட்டில் ஏற்ற இடம் எங்கும் இல்லை என்று கூறியது. உடனே அந்தக்குழு உறுப்பினர்களிடம் காமராஜர், நீங்கள் தமிழ்நாட்டில் எந்தெந்த ஊருக்கு போனீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் சென்ற ஊர்களை எல்லாம் கூறினார்கள்.

திருச்சி திருவெறும்பூருக்கு போனீர்களா? என்றார் டெல்லி குழு வினர் இல்லை என்றனர்.

உடனே காமராஜர், நீங்கள் எல்லோரும் அங்கு போய் பாருங்கள் நீங்கள் விரும்பும் அளவுக்கு இட வசதி உள்ளது. தண்ணீர் அருகில் உள்ள காவிரி நதியிலிருந்து எவ்வளவு வேண் டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்றார். மறுநாள் திருச்சிக்கு சென்ற அந்தக்குழு திருவெறும்பூர் பகுதியைப் பார்த்துவிட்டு, பெல் தொழிற்சாலை அமைக்க இந்தியாவில் இதைவிட வேறு சிறந்த இடம் இல்லை என்று சான்றிதழ் கொடுத்தது. இதன் விளைவாக அங்கு உடனே பெல் நிறுவனம் நிறுவப்பட்டது.

மத்திய அரசுக்கு மிகுந்த லாபத்தை தரும் நவரத்னா நிறுவனங்களில் திருச்சி பெல் நிறுவனம் குறிப்பிடத்தக்க இடத் தில் உள்ளது. இங்கு மின் உற்பத்தி செய்வதற்கான பாய்லர்கள், டர்பைன் எனப்படும் சுழலிகள், டர்போ ஜெனரேட் டர்கள், தூசு வடிகட்டிகள் மற்றும் எண் ணெய், சிமெண்ட் நிறுவனங்களுக்குத் தேவையான துணைக்கருவிகள் தயாரிக் கப்படுகின்றன.

கடந்த 2010-ஆம் ஆண்டு கணக் குப்படி பெல் நிறுவனத்தின் வருமானம் ரூ. 43.451 கோடி. பல லட்சம் கோடிக்கு இந்த நிறுவனத்துக்கு என சொத்துக்கள் உள்ளன. இந்த நிறுவனத்தில் தற்போது சுமார் 15 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள்.

திருச்சி பெல் நிறுவனம் புதுக் கோட்டை மாவட்டம் திருமயத்தில் பாய் லர்களுக்கான குழாய்கள் தயாரிக்கும் பிரிவை தொடங்கியுள்ளது. இங்கும் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத் துள்ளது.

இந்த நிறுவனம் தமிழ்நாட்டுக்கு கிடைத்ததால் ஏராளமான பேர் வேலை பெற்றனர். பல சிறு தொழில்கள் பெல் நிறு வனத்தை நம்பி தொடங்கப்பட்டுள்ளன. காமராஜர் அன்று சமயோசிதமாக எடுத்த முடிவால்தான் இவ்வளவு பெரிய நிறுவனம் நமக்கு கிடைத்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

1954-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14-ஆம் நாள் தமிழ் புத்தாண்டு தினத்தன்று தமிழக முதல்வர் பதவி ஏற்றார். அப்பொழுது அவர் தமிழக சட்டமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தால் குடியாத்தம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டார். அப்பொழுது தி.மு.க. தாமாக முன் வந்து அவரை ஆதரித்தது. தந்தை பெரியாரும் காமராஜரை பச்சைத் தமிழன் எனக்கூறி ஆதரித்தார். இந்தியாவிலேயே ஒரு தலைவரை எதிர்க்கட்சியைச் சேர்ந்த வர்கள் தாமாகவே முன் வந்து ஆதரித்து வாக்களித்து வெற்றி பெறச் செய்தது அதுவே முதலும் கடைசியுமாகும். நாம் உயிருள்ளவரை பெருந்தலைவர் காம ராஜரின் நினைவோடு நிலைத்து வாழவேண்டும் அவரை போல இனிமேல் எந்த அரசியல்வாதியும் இல்லை என்ற கேள்விகுறி? முதன் முதலில் நேரு அமைச்சரவையில் டாக்டர் அம்பேத்கர் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பின்னால் காமராஜர் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இவருக்குப் பின்னால் வருங்கால பிரத மர், மாண்புமிகு ராம்விலாஸ் பாஸ் வான்ஜி மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மக்களுக்கு இந்தியாவின் வழிகாட்டி ராம்விலாஸ் பாஸ்வான்ஜி அவர்கள், கென்னடி மறைந்தபோது இரங்கல் செய்தியில் காமராஜர் சொன்னார். சாதாரண மனிதர்கள் சாகிறார்கள். ஆனால் தன்னலம் துறந்த தியாகிகள் மக்களின் மனங்களில் நிரந்தரமாக வாழ்கிறார்கள் ஆம் உண்மைதான் அவர் வாய் மலர்ந்த வாசகம் அவருக்கே அழகாகப் பொருந்துகிறது.

நன்றி: நீதிக்கான விடியல் நவம்பர் 2012, பக்கம்: 22-23

தமிழ் ஓவியா said...


விடுதலை வாசகரின் மனந்திறந்த பாராட்டு


மானமிகு அய்யா,

வணக்கம் என் சொந்த ஊர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். தற்போது என் மகனுடன் பெங்களூருவில் வசித்து வருகிறேன்.

நான் சிறுவயதில் தந்தை பெரியார் அவர்களின் உரையைக் கேட்டு பார்ப்பன எதிர்ப்பும் கடவுள் இன்மை கொள்கையும் என் உள்ளத்தில் பதிந்து விட்ட காரணத்தால் என் திருமணம் 14.7.1968-இல் பார்ப்பான் இல்லாமல் சுயமரியாதைத் திருமணமாக நடந்தது.

நான்கு குழந்தைகள் பிறந்த போதும் பார்ப்பானை அழைத்து புண்ணியதானம் செய்யவில்லை. என் தந்தை, தாய் இறந்ததற்காக பார்ப்பானை அழைத்து கருமகாரியம் செய்யவில்லை. அவர்களின் (என் தந்தை, தாய்) படத்திறப்பு நிகழ்ச்சி மட்டும் தான்.

என் பிள்ளைகளுக்கும் பார்ப்பான் இல்லாமல் சுயமரியாதைத் திருமணம் தான்.

என் மருமகளின் பெரியம்மாவின் கணவர் ஜானகி ராமன் அவர்கள், திராவிடர் கழக பெங்களரூ மாநிலத் தலைவர் ஆவார். அவர்களின் வற்புறுத்தலின் பேரில் தான், சென்ற ஆண்டு விடுதலை சந்தாதாரர் ஆனேன். கடந்த ஓராண்டாக படித்து வந்ததில், பல உண்மைச் செய்திகளையும், அரிய தகவல்களையும் தெரிந்து கொண்டேன்.

உதாரணமாக:

1) பார்ப்பனர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக செய்து வரும் சதி வேலைகள், 2) கோட்சே என்பவன் இஸ்மாயில் என பெயரை மாற்றிக் கொண்டு காந்தியாரை சுட்டுக் கொன்ற உண்மைச் செய்தி 3) வாஞ்சிநாதன் ஆஷ் துரையை ஏன் கொன்றான் என்ற உண்மை, 4) ஒற்றைப்பத்தி, 5) ஊசி மிளகாய், 6) இளைஞர் அரங்கம், 7) மகளிர் அரங்கம், 8) பகுத்தறிவுக் களஞ்சியம், 9) வரலாற்றுச் சுவடுகள், 10) நீதிக்கட்சியின் வரலாறு ஆட்சியில் இருந்த போது செய்த நன்மைகள், 11) தமிழர் தலைவரின் சொற்பொழிவுகள், அறிக்கைகள், வாழ்வியல் சிந்தனைகள்.
இத்தனை செய்திகளையும் படித்தறிந்த பிறகு தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் விடுதலை இதழ் படிக்காமல் இருந்து விட்டோமே என்ற குற்ற உணர்வு என் மனதை வாட்டியது மட்டுமல்லாமல் இனிவரும் ஆண்டுகளில் சந்தா முடிவதற்கு முன்பே சந்தா தொகை அனுப்பி சந்தாதாரராக வேண்டும் என்ற உறுதி எடுத்துக் கொண்டுவிட்டேன்.

தமிழர் தலைவர் அய்யா அவர்களை, 4.11.1985-இல் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் நானும் என்போன்ற ஆசிரிய கைதிகளும் (தமிழக அரசு ஆணையின் நகலை எரித்ததற்காகக் கைதானோம்) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நாளை இன்று வரை மறக்க முடியவில்லை.

ஜாதி, சமயம் ஒழியவும், சமஉரிமை பெறவும் ஆரியத்தை - பார்ப்பனீயத்தை எதிர்த்து இன்னும் பல நூறு ஆண்டுகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந் தால் தான் தமிழினம் வாழும் வளரும்.
அதனைச் செய்து கொண்டிருக்கிறது திராவிடர் கழகம்,. விடுதலை நாளிதழ். இதழ் வளர்ச்சிக்கு என் சிறிய பங்களிப்பாகவும், எங்கள் 46-ஆவது மணநாள் (14.7.2013) மகிழ்வாகவும் ரூ. 500/- அனுப்பியுள்ளேன் என்னையும், என் வாழ்விணையரையும் வாழ்த்த வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் தங்கள் கொள்கை நிழலில் - இரா.இராசாராம் - இரா.சாவித்திரி வாழ்விணையர்.

தமிழ் ஓவியா said...

சேலம், ஜூலை 14- ஜாதி-தீண்டாமை ஒழிப்பு, அனைத்து ஜாதியினரும் அர்ச் சகராகும் சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 13-07-2013 அன்று சேலம் கோட்டை மைதானத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் போராட்ட விளக்கக் கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை ஆற்றினார். அவரது உரையில் "பிறவி இழிவான ஜாதி தீண்டாமை 21ஆம் நூற்றாண்டில் இன்னும் இருக்கிறதே!

இங்குமட்டும் மனிதன் - பிறவியில் பார்ப்பானாக பிறக்கிறான், பறைய னாக பிறக்கிறான், இன்னும் மனிதன் மட்டும் பிறக்கவில்லையே? ஏன்? என்ற அறிவுப் பூர்வமான வினாவைத் தொடுத்து, அடுக்கடுக்கான ஆதாரங்க ளுடன் "ஆதிதிராவிடன் அய்.ஏ.எஸ் ஆகலாம், ஆதி திராவிடன் அய்.பி.எஸ் ஆகலாம், ஏன் அய்க்கோர்ட் நீதிபதி யாகலாம், உச்ச நீதிமன்ற நீதிபதியாக கூட ஆகலாம்.

ஆனால் அர்ச்சகர் ஆகமுடியாத நிலை இன்னும் இருக் கிறது, உச்ச நீதிமன்ற பதவியைவிட அர்ச்சகர் பதவி உயர்ந்ததா. காதல் திருமணம் செய்துகொண்ட தருமபுரி இளைஞன் ஜாதி-தீண்டாமை கொடு மைக்குப் பலியானானே? இளவரசன்-திவ்யா இவர்களுக்கு ஏற்பட்ட நிலை இனி தொடரக்கூடாது. எனவே ஜாதி-தீண்டாமை எந்த வடிவிலும் வந் தாலும் அதை ஒழிக்கவேண்டும், அதற் காகத்தான் வரும் ஆகஸ்ட் 1ஆம் நாள் முதல் கட்டமாக ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது, அனைவரும் ஜாதி, அரசி யலைக் கடந்து போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டுகிறேன்" என்றார்.

தமிழ் ஓவியா said...


இதோ ஒரு இந்துத் தேசியவாதி!


இந்துத் தேசியவாதி ஒருவர் இந்தியாவின் பிரதமராக வரத் துடிதுடித்துக் கொண்டு இருக்கிறார். குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி வாய் சும்மா இருக்காது. தனது இந்துத்துவா வெறியை எந்த வகையிலும் மறைக்க முடியாத அளவுக்கு அதி வெறி பிடித்தவர்.

கடந்த 12ஆம் தேதி அவர் அளித்துள்ள பேட்டி ஊடகங்களில் முதன்மையான இடத்தைப் பிடித் துள்ளது.

நான் தேசியவாதி; நான் ஒரு தேசப் பக்தர். இதில் ஒன்றும் தவறு இல்லை. நான் இந்துவாகப் பிறந்தவன் எனவே இந்துத் தேசியவாதி என்று நீங்கள் கூறிக் கொள்ளலாம் என்று இவ்வளவுப் பச்சையாகவே கூறியுள்ளார்.

இந்தியாவில் எத்தனைத் தேசியங்கள் இருக் கின்றன என்ற கேள்வி எழுகிறது!

ஒரே ... இந்தியத் தேசியம் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. இன்னும் சொல்லப் போனால் காங்கிரசைவிட பிஜேபியினர் தங்களை 22 காரட் தேசியவாதிகள் என்று மார்தட்டக் கூடியவர்கள்தான். அவர்கள் அப்படி சொல்லுவது, இந்துத் தேசியம் என்ற அடிப்படையில்தான் என்பது, இதன் மூலம் அம்பலமாகி விட்டதே!

இந்தியாவில் இந்து மதம் என்ற ஒரு மதம் மட்டுமல்ல; பல மதங்கள் உள்ளன. மத நம்பிக் கையற்ற மக்களும் வாழுகின்றனர்.

இந்த நிலையில் தான் இந்தியா மதச் சார்பற்ற நாடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதி படுத்துகிறது. ஆனால் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியோ தன்னை இந்துத் தேசியவாதி என்று பிரகடனப்படுத்தியுள்ளார்.
அவர் அப்படிப்பட்டவர்தான் என்பதைத் தன் நடவடிக்கைகள் மூலம் அவ்வப்போது காட்டிக் கொண்டும் வருகிறார்.

இந்தியாவில் உள்ள இந்துக்கள் அல்லாத மற்ற மதக்காரர்கள் தங்கள் மதங்களையும், கடவுள் களையும் இந்துத்துவமயமாக்கிக் கொள்ள வேண்டும்; கிறிஸ்துவர்கள் கிருஷ்ணனை வணங்க வேண்டும். ராமனை வணங்க வேண்டும் என்று சொல்பவர்கள் என்பதை நினைவு கூர்ந்தால் மோடி கூறியதன் சூட்சுமம் விளங்கும்.

அதன் அடிப்படையில் தான் மோடி கோத்ரா கலவரத்தின் போது செயல்பட்டும் இருக்கிறார்; பொடா சட்டத்தின் கீழ் 287 பேர் அம்மாநிலத்தில் சிறைபடுத்தப்பட்டனர். அதில் 286 பேர் முசுலிம்கள் ஒருவர் சீக்கியர்.

பாதிப்புக்குக் காரணமான இந்துக்கள் சிறைப்படுத்தப்படவில்லை. மாறாகப் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் தான் கைது செய்யப்பட் டுள்ளனர் என்பதிலிருந்தே மோடி நடைமுறையில், யதார்த்தத்தில் இந்துத் தேசியவாதியாக - முதல்வராகச் செயல்பட்டு இருக்கிறார் என்பது விளங்கவில்லையா?

மோடியின் பேட்டியில் கண்டுள்ள இன்னொரு கருத்தும் கவனிக்கத்தக்கது.

எனது பார்வையில் மதச்சார்பின்மை என்பது அனைவருக்கும் நீதி, யாரையும் தாஜா செய்வதாக இருக்கக் கூடாது என்று சொல்லுவதில் உள்ள விஷமத்தைக் கணிக்க வேண்டும்.

சிறுபான்மை மக்களின் உரிமைகள், நலன்கள் பற்றி ஓர் அரசு அக்கறை கொண்டால் அது அம் மக்களைத் தாஜா செய்வது என்று கூறகிறார் மோடி.

இந்தியப் பிரதமரின் அமைச்சகத்தில் சிறுபான் மையினரின் நலனுக்காகவே ஒரு பிரிவு உண்டு. சிறுபான்மை மக்களுக்காக இந்தப் பிரிவு ரூபாய் பத்துக் கோடியை ஒதுக்கியது. ஆனால் மோடி என்ன செய்தார் தெரியுமா?

அந்தத் தொகையை சிறு பான்மை மக்களுக்காகப் பயன்படுத்தாமல், நிதியை அப்படியே திருப்பி அனுப்பி விட்டார். இது பாகுபாடு காட்டுகிறது - இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அடித்துக் கூறிவிட்டார்.

இதுபோல சிறுபான்மையினரின் கல்வியில் கை வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வரு கிறார். குஜராத்தைப் பொறுத்தவரை மெட்ரிக்குலேசன் வரை படிக்கக் கூடிய முஸ்லிம்கள் வெறும் 26 சதவீதம்தான்; முசுலிம் அல்லாதவர்களோ இது 41 சதவீதமாகும்.

மோடி தன்னை இந்துத் தேசியவாதி என்று அறிமுகப்படுத்தியதன் பொருள் இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே!

மதச் சார்பற்ற அரசமைப்புச் சட்டம் நிலவும் இந்தியாவுக்குப் பிரதமராக ஒரு இந்துத் தேசியவாதி வர முடியுமா? வரலாமா? அது சட்ட விரோதம் அல்லவா? நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்!

தமிழ் ஓவியா said...


அறிவு பெற முடியாமல்....


தெரியாததை, இல்லாததை நம்பவேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடு கிறான்.
(விடுதலை, 2.6.1970)

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினரும், அர்ச்சகராக நியமிக்கப்படவேண்டும்!


திராவிடர் கழகம் நடத்தும் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்!

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, ஜூலை 16- அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமை கோரும் திராவிடர் கழ கம் நடத்தும் ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட் டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை விடுத்துள் ளார். அறிக்கை வருமாறு:

தீண்டாமை என்பது சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்டு விட் டாலும் ஆலயங்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதி யினர் மட்டுமே அர்ச்ச கராக இருக்க முடியும் எனச் சொல்லி தொடர்ந்து தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு கடைபிடிக்கப்பட்டுவரும் தீண்டாமையை ஒழித்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு வழி செய்து கடந்த தி.மு.க ஆட்சியின் போது சட் டம் இயற்றப்பட்டது. அனைத்துச் ஜாதிகளைச் சேர்ந்த இளைஞர் களுக்கு அர்ச்சகருக் கான பயிற்சியும் அர சாங்கத்தால் வழங்கப் பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் சென்று சிலர் தடை ஆணை பெற்ற தால், முறையான அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 பேர் இப்போது வேலையின்றித் தவிக் கின்றனர். தமிழக அர சின் சட்டத்தின் மீதான தடை ஆணையை ரத்து செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அவர் களுக்காக பிரபல வழக்கறிஞர்கள் அந்தி அர்ஜுனாவும், காலின் கான்ஸலஸும் வாதாடி வருகின்றனர். ஆனால் தேதி குறிப்பிடப்படா மல் ஒத்திவைக்கப்பட்ட அந்த வழக்கு கடந்த அய்ந்து ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட் டுள்ளது. இதை அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக உச்சநீதிமன் றம் கருதாதது வேதனை அளிக்கிறது. அந்த வழக்கை விரைந்து முடித்து சமூக நீதியை நிலைநாட்டிட தமிழக அரசும் முனைப்புக் காட்டவில்லை. முன் னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு அவர்கள் பெண்களும் அர்ச்சகராக இருக்கலா மென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக் கிறார். அந்தத் தீர்ப்பு இப் போதும் நடை முறையில்தான் இருக் கிறது. எனவே, அனைத் துச் ஜாதியினர் மட்டு மின்றி பெண்களும் அர்ச்சக ராகலாம் என்ற கோரிக்கையையும் விடு தலைச் சிறுத்தைகள் கட்சி சேர்த்து முன் மொழிகிறது.

திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போர்

அரசியல் கட்சிகள் ஜாதியின் பெயரால் பேரணி நடத்தக்கூடாது என முற்போக்காக தீர்ப்பு வழங்கும் உச்சநீதி மன்றம் இன்னும் ஆல யங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படு வதை எவ்வாறு அனு மதிக்கிறது என்பது புரியவில்லை. இது வேலை வாய்ப்பு தொடர் பான பிரச்சினை அல்ல. சமத்துவம், சமூக நீதி குறித்த பிரச்சினையா கும். இதற்காக திராவி டர் கழகம் அறிவித் துள்ள போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. தமிழக மெங்கும் ஆகஸ்டு மாதம் 1 ஆம் தேதி நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் விடு தலைச் சிறுத்தைகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு போராட் டத்தை வெற்றிபெறச் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார் தொல். திருமாவளவன்

தமிழ் ஓவியா said...


தொண்டு



சுக போகத்தினால் இன்பம் காணுவதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காணுவதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்காகவும், தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்கவேண்டும் என்று கருதவேண்டும்.
(விடுதலை, 2.7.1962)

தமிழ் ஓவியா said...


திருத்தப்படவே முடியாத மதவெறியர் மோடி!

நீ இந்து என்றால் எனக்கு வாக்களிக்கவும் என்பதுதான் நரேந்திரமோடியின் பிரச்சாரமாக இருந்தது. இந்துத்துவாவை குஜராத்தின் பெருமை என்று குஜராத்திகளிடம் மோடி விற்பனை செய்தார். குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதிதான் இந்தியா என்று குஜராத்திகளை மோடி நம்ப வைத்து விட்டார். குஜராத்துதான் இந்தியா என்ற கோஷத்தை நானும் எனது செவிகளால் கேட்டேன்.

- பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார்

குலதீப் நய்யார் போன்றவர்களுக்கு அரசியல் முத்திரையை யாரும் குத்தி விட முடியாது. மோடியின் முகத்தை மிகச் சரியான வகையில் தானாகவே சாட்சியாகவே இருந்து, படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

இப்படி எதற்கெடுத்தாலும் இந்து என்று கூறி, ஒரு வெறியைக் கிளப்பி அரசியல் நடத்தக் கூடியவர் இந்தியாவின் பிரதமருக்கான வேட்பாளர் என்று முன்னிறுத்தப்படும் அறிமுக நிலையிலேயே அது தள்ளுபடி செய்யப்பட வேண்டாமா?

நாம் ஒரு காரை ஓட்டிச் சென்றால் அல்லது வேறு ஒருவர் ஓட்ட நாம் பின்னால் அமர்ந்து செல்லும்போது எதிர்பாரா விதமாக காரின் சக்கரத்தில் ஒரு நாய்க்குட்டி (Puppy) சிக்கிக் கொண்டால்கூட மனதுக்கு கஷ்டமாக இருக்குமா? இருக்காதா? நிச்சயம் அது வேதனை அளிப்பதாகத் தானிருக்கும். நான் முதல் அமைச்சராக இருக்கிறேனோ இல்லையோ, நான் ஒரு மனிதன். எங்கு எந்த கெட்ட விஷயம் நடந்தாலும் மனதுக்கு வேதனை யாகத் தானிருக்கும் என்றும் தன் பேட்டியிலே குறிப்பிட்டுள்ள நரேந்திரமோடி.

குஜராத்தில் முசுலிம்கள் கொல்லப்பட்டது - விபத்தில் நாய்க் குட்டி சிக்கியதற்குச் சமமாக மோடி விளக்கம் அளித்தது மூலம் அவர் எவ்வளவுப் பெரிய மனநோயாளி என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

இதுபற்றிக் கடுமையான வகையில் எதிர்ப்புப் புயல் வெடித்து எழுந்த நிலையில், அதற்குச் சமாதானம் கூறுவதாக நினைத்துக் கொண்டு வெளியிட்ட வார்த்தைகள் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போலிருக்கிறது.

நமது கலாச்சாரத்தில் அனைத்துவிதமான உயிர்களும் மதிக்கப்படுகின்றன என்று குறிப்பிட் டுள்ளார்.

அதாவது நாய் என்றால் அற்பமாக நினைத்து விடாதீர்கள்! நாயும் ஓர் உயிர்தானே என்று முஸ்லிம்களின் உயிரோடு நாயின் உயிரை ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் குஜராத்தில் ஒரே ஒரு முசுலிமுக்குக்கூட பிஜேபி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லையே! மோடி மனப் பான்மைக்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

இந்த மனிதனை எதைக் கொண்டும் திருத்த முடியாது - திருத்தவே முடியாது என்பது மிக மிக வெளிப்படை! இந்துக்கள் அல்லாத பிற மதத்தவர் மதம் அற்றவர்கள் மோடியை நிராகரிக்க வேண்டும் என்பதை விட உண்மையிலேயே இந்துக்கள் என்பவர்கள்தான் மோடியை ஒதுக்க வேண்டும்.

அவர் கூறும் இந்துத்துவாவாதத்தில் மக்களிடையே கடும் பிளவுகளை ஏற்படுத்திப் பெரும் மோதலை ஏற்படுத்தக் கூடிய அபாயம் இருக்கிறது; அமைதியான இந்தியா வேண்டுமா? அமளியான இந்தியா வேண்டுமா என்ற முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு இந்திய மக்களுக்கு இருக்கிறது.

இந்தியா - குஜராத்தாக மாற வேண்டும் என்று கூறுவது எந்தப் பொருளில் என்பது புரியாத புதிராக இருக்கிறது; கோத்ராவைத் தொடர்ந்து அரச பயங்கரவாதமாக சிறுபான்மை மக்கள் நர வேட்டை ஆடப் பட்டார்களே - அந்த குஜராத்தாக இந்தியா மாற வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லுகிறார்களா என்று தெரியவில்லை.

ஒருக்கால் குஜராத் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முண்டியடித்துக் கொண்டு முதல் வரிசையில் தலையைத் தூக்கி நிற்கிறது என்று ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே அந்த எண்ணத்தில் சொல்கிறார்களா?

அதுவும்கூட அவர்களுக்கே உரித்தான கோய பெல்சுப் பிரச்சாரம்தான்! இந்தியாவின் சோமாலியா குஜராத் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அந்த அளவுக்கு ஊட்டச் சத்துக் குறைவால் குழந்தைகள் 44.6 சதவீதத்தினர் குஜராத் மாநிலத்தில் அவதிப்படு கின்றனர்.

பிஜேபிக்குப் பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திர மோடிதான் கிடைத்திருக்கிறார் என்பது அக்கட்சியின் பரிதாப நிலையையும், பலகீனத்தையும் தான் வெளிப்படுத்தும்.

பிரதமருக்கான வேட்பாளர் என்று விளம்பரப் படுத்தப்பட்டுள்ள இந்தக் கால கட்டத்தில், மோடியின் பேச்சு எப்படி இருக்கிறது தெரியுமா? எனக்குப் பைத்தியம் தெளிந்து விட்டது. உலக்கையைக் கொண்டு வா! கோவணம் கட்டிக் கொள்கிறேன்! என்ற ரீதியில் தான் இருக்கிறது. மோடி அப்படித்தான் - அவர் திருந்தப் போவதில்லை. பொது மக்கள்தான் தங்கள் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்ளாமல் விழிப்பாக இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


இஸ்லாமியர்களை நாய்கள் என இழிவுபடுத்திய நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்!


தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 16- இஸ்லாமியர்களை நாய்க்கு ஒப் பிட்டுக் கூறிய நரேந்திரமோடி மன்னிப்புக் கோர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தை கட்சி யின் தலைவர் தொல்.திருமா வளவன் அறிக்கை விடுத் துள்ளார். அறிக்கை வருமாறு:

சிலநாட்களுக்கு முன் ராய்ட் டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த நரேந்திர மோடி இஸ்லா மியர்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். 2002ஆம் ஆண்டு மோடி முதல் வராக இருந்தபோது குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரம் குறித்து பேட்டியில் கேள்வி எழுப்பியுள் ளனர். அந்தக் கலவரத்துக்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? என அந்த நிருபர் கேட்டபோது யா ராவது காரை ஓட்டிக்கொண்டு போகிறார்கள். நாம் பின் இருக் கையில் அமர்ந்திருக்கிறோம். அப் போதுகூட கார் சக்கரத்தின் கீழே நாய்க்குட்டி ஒன்று ஓடிவந்து அடிபட்டு செத்துப் போனால் அது வருத்தம் அளிக்குமா இல் லையா? வருத்தம் தரும். என்று அவர் பதில் அளித்திருக்கிறார். குஜ ராத்தில் நடத்தப்பட்டது இஸ் லாமியர்களுக்கு எதிரான திட்ட மிட்ட இனப்படுகொலை என்ப தைப் பல் வேறு மனித உரிமை அமைப்புகளும் தெளிவுபடுத்தி யுள்ளன. அதற்குக் காரணமான வர் அன்றைக்கு அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிதான் என்பதை உலகம் அறியும். அங்கு நடத்தப்பட்ட போலி என்கவுண்ட் டரில் இஷ்ரத் ஜஹான் என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இப் போது தான் சி.பி.அய் குற்றப்பத் திரிகை தாக்கல் செய்திருக்கிறது. அந்த வழக்கில் மோடியும் குற்றவாளியாக சேர்க்கப் படலாம் என சொல்லப் படுகிறது. அவரது கரத்தில் ரத்தக் கறை படிந்திருப் பதால்தான் அமெரிக்கா அவரைத் தனது நாட்டுக்குள் அனு மதிக்க வில்லை. தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் தலையீட்டால் பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாள ராக மோடி முன் நிறுத்தப் படுகிறார். வளர்ச்சி, முன்னேற்றம் என மாய்மாலம் பேசி வந்த மோடி இப்போது வெளிப் படையாகத் தனது இந்துத்துவா முகத்தைக் காட்ட ஆரம்பித் திருக்கிறார். அதன் ஒரு அங்கம் தான் இஸ்லா மியர்களை இழிவு படுத்தும் இந்த நேர்காணல். இத்தகையவர் பிரதமராக வந்தால் இந்த நாட்டில் மதக் கலவரங் கள்தான் நடக்கும். குஜராத் மாடலை இந்தியா முழு மைக்கும் பரிசோதித்துப் பார்க்க சங்கப் பரிவாரங்கள் தயாராகி விட்டன என்பதைத்தான் மோடியின் நேர் காணல் காட்டுகிறது. இதை ஜனநாயக சக்திகள் அனுமதிக்கக் கூடாது. இஸ்லாமியர்களை இனப் படுகொலை செய்ததோடல்லா மல் அவர்களை நாயுடன் ஒப் பிட்டுப் பேசி இழிவுபடுத்தியிருக் கும் நரேந்திர மோடி தனது பேச்சுக்குப் பகிரங்கமாக மன் னிப்புக் கோரவேண்டும். அல்லது அவர் மீது மத்திய அரசு சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண் டும் என விடுதலைச் சிறுத்தை கள் கட்சி சார்பில் வலியுறுத்து கிறேன் என்று குறிப்பிட்ட எழுச்சித் தமிழர் திருமாவளவன் அறிக் கையில் கூறினார்.

தமிழ் ஓவியா said...


தி.மு.க. தலைமைக் கழக அறிவிப்பு


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி
திராவிடர் கழகம், மாவட்டத் தலைநகரங்களில் நடத்தும் போராட்டத்தில்
தி.மு. கழகத்தினர் திரளாகப் பங்கேற்க வேண்டுகோள்!



அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு இதனைச் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று வற்புறுத்தும் வகையிலும் ஆகஸ்ட் முதல் தேதியன்று திராவிடர் கழகம் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம்; இதில் ஒத்த கருத்துள்ளவர்களை அழைத்து மாநாடு ஒன்றினை நடத்துவது; மாவட்டத் தலைநகரங்களில் கருத்தரங்குகள் நடத்துவது; மூன்றாவது கட்டமாக மறியல் போராட்டத்தை நடத்துவது என்றெல்லாம் முடிவெடுத்து அறிவித்திருக்கிறார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற முடிவுக்கு தொடக்கம்முதல் ஆதரவாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் நிறைவேற்றியிருக்கும் இந்தத் தீர்மானத்திற்கும் ஆதரவாக இருக்கும் என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் 13.7.2013 அன்று உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். திராவிடர் கழகத் தீர்மானத்தின்படி, கழக மாவட்டச் செயலாளர்கள், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு அந்தப் போராட்டத்திற்கு எழுச்சியூட்டும் வகையில் தேவையான நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டுமென்று தலைமைக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

அண்ணா அறிவாலயம் தலைமைக் கழகம்,

சென்னை-18 நாள்: 16.7.2013 திராவிட முன்னேற்றக் கழகம்

குறிப்பு: திராவிடர் கழக மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டு ஆகஸ்ட் முதல் தேதி நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


பனி லிங்கம் போயே போச்சே!


காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் பனிலிங்கம் இருக்கிறது என்று பிரச்சாரம் செய்து மக்கள் கூட்டத்தை வரவழைத்துப் பக்தி வியாபாரம் நடக்கும்.

பனிக் காலத்தில் குகை ஒன்றில் இடுக்கு வழியாக சொட்டுகின்ற தண்ணீர்த் துளிகள் கடுங்குளிரால் பனிக்கட்டியாகிறது - அந்த உருவத்தைத்தான் பனி லிங்கம் என்று விளம்பரம் செய்து மக்களை நம்ப வைத்துள்ளார்கள்.
பனிக்காலத்தில்தானே இது நடக்கிறது? கோடையில் ஏன் நிகழவில்லை என்பதற்குப் பதில் இல்லை. ஆகஸ்ட் மாதம் வரை இந்த உருவம் தெரியும்.

இந்தாண்டு இப்பொழுதே பனி லிங்கத்தைக் காணவில்லை - உருகி ஓடிவிட்டது - சீதோஷ்ண நிலை காரணமாக! பக்தர்கள் காஸ் அடுப்பைப் பயன்படுத்தியதும் காரணமாம்!

கடவுள் உருவம் என்றால், நிலைத்து இருக்க வேண்டாமா? பக்தியால், புத்தியைப் பறிகொடுத்த மக்கள், சிவலிங்கம் உருகி ஓடிவிட்ட நிலையிலும்கூட பய ணத்தைத் தொடர்கிறார்களாம்! குடி போதையைவிட மோசமானது பக்தி போதை ஆயிற்றே!

தமிழ் ஓவியா said...


காவிரி மேலாண்மை வாரியம்-காவிரி ஒழுங்குமுறை ஆணையங்களை உடனடியாக ஏற்படுத்துக!


மத்திய அரசுக்குத் தமிழர் தலைவர் வற்புறுத்தல்

காவிரி நடுவர் மன்றம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே ஆணையிட்டும், தாமதமாக கெசட்டில் தீர்ப்பை வெளியிட்ட மத்திய அரசு - அதன் தொடர்ச்சியாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை ஆணையங்களை ஏற்படுத்தாமல் காலங்கடத்திவருவதை மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டி மேலும் காலதாமதமின்றி அவற்றை ஏற்படுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்து பல ஆண்டுகளுக்குப் பின்பே, அதன் சட்டப் படிக்கான தொடர் நடவடிக்கையான நிரந்தரமான சுதந்தரமான நிபுணர் களைக் கொண்ட காவிரி ஆணையம் உருவாக்கப்பட வில்லை; காவிரி நீர் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய அதிகாரம் பெற்ற அந்த ஆணையத்தை அமைக்காமல் இன்னமும் மத்திய அரசு காலந்தாழ்த்தி வருவது மிகவும் கண்டனத்திற்குரிய ஒன்றாகும்.

மத்திய கெசட்டில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை வெளியிடுவதற்கே, பல ஆண்டு கால தாமதம் ஆனது; தமிழ்நாட்டுத் தலைவர்கள், விவசாயிகளின் தொடர் குரல்கள்; தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு; இவற்றைத் தொடர்ந்து மத்திய அரசினை உச்சநீதிமன்றம் தனதுதீர்ப்பு ஆணை மூலம் வற்புறுத்திய பின்னர் - இந்த சாதாரண சட்ட நடவடிக்கையெடுத்தது மத்திய அரசு.

கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் அரசு பதவிக்கு வருவதற்கே இந்த மெத்தனம்; பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதுபோல கெசட் செய்யா மலேயே, சட்டபூர்வ உரிமையான தமிழ்நாடு காவிரி நீர்ப் பங்கீடு பெறுவதை - தவிர்த்து தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்தது மத்திய அரசு! பிறகு எப்படியோ கெசட்டில் வெளியிடப்பட்டு விட்டது.

2007 பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டது.

காலதாமதம்!

காலதாமதமாகித்தான் - மத்திய அரசு கெசட்டில் வெளியிட்டது - அதுவும் உச்சநீதிமன்றம் சுரீரென்று தட்டிக் கேட்ட பிறகே - தமிழக முதல்வர் போட்ட வழக்கில்.

ஆனால் இன்னமும் காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நிர்வாக ஒழுங்குமுறை ஆணையமும் மத்திய அரசால் நியமிக்கப்படவே இல்லை!

இதனால் ஒரு தற்காலிக ஏற்பாடாக இடைக் காலத்தில் - காவிரி மேற்பார்வைக் குழு என்ற ஒன்று உரு வாக்கப்பட்டு, அதில் அந்த மாநில தலைமைச் செய லாளர்கள், மத்திய அரசின் நீர்வளத் துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது!

தேவை நிரந்தர ஆணையம்

நிரந்தர ஆணையம் உடனடியாக அமைக்க தமிழ்நாட்டில் உள்ள ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் கெஞ்சுதல், கொஞ்சுதல் எல்லாம் இல்லாமல், நாம் நமது காவிரி நீர் உரிமையை நிலை நாட்டிட முடியும். அது அவசரம் அவசியம்!

ஏற்கெனவே காவிரி டெல்டா விவசாயிகள் சம்பா பயிர் சாகுபடியைச் சரிவரச் செய்யாமல் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்!

அடுத்த குறுவை சாகுபடி என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்ட கொடுமைகள் தொடர்ந்தன!

நிலத்தடி நீர் வறண்டுவிட்டது; பம்புசெட் விவசாயத் திற்கோ வாய்ப்பே குறைவு; காரணம் தொடர் மின்வெட்டு, டீசல் விலை ஏற்றம் - இப்படி அடுக்கடுக்காக விவசாயிகள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டி விட்டார்கள்.
கர்நாடக நீர்பிடிப்புப் பகுதியில் நல்ல மழை பெய்தும், ஏதோ பிச்சை போடுவது போல கர்நாடக அரசு கூறுவது வேதனைக்குரியது!

குறுவை சாகுபடிக்கு வழி செய்க!

தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்ட நமது உரிமைப்படி நமக்குச் சேர வேண்டிய 50 டி.எம்.சி. தண்ணீரை ஏற்கெனவே பாக்கி வைத்த 100 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டியது கர்நாடகத்தின் பொறுப்பு.

தற்போதைய குழுவினர் நேற்று நடைபெற்ற (டில்லி) கூட்டத்தில்கூட, தமிழகத்திற்கு ஏராளம் தந்துவிட்டோம்; மேலும் இப்போது தர இயலாது என்று அதிகப் பிரசிங்கித்தனமாகக் கூறியுள்ளதாவது நமது வாதத்திற்கு வலிமை சேர்க்கிறது.

ஆனால் கர்நாடக செயலாளர் ஏற்கெனவே வழங்க வேண்டிய 34 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்கிவிட்டது;

இன்னும் 10 டி.எம்.சி., இம்மாத இறுதிக்குள் திறந்து விடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு நிரந்தர விடியல் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்கு முறை ஆணையங்களை (நிபுணர்கள், நிதித்துறை வல்லுநர்களைக் கொண்டவை) மத்திய அரசு மேலும் கால தாமதமின்றி நியமித்து, நீதி வழங்கி, காவிரி டெல்டா குறுவை சாகுபடியாவது சரியாக நடந்திட உதவிட வேண்டுகிறோம்.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
17.7.2013

தமிழ் ஓவியா said...



இருந்து வரும்


பார்ப்பனச் சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும் வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்து வரும்.
(விடுதலை, 29.5.1973)

தமிழ் ஓவியா said...


டெசோவின் தீர்மானங்கள் (1)



நேற்று (16.7.2013) சென்னை அண்ணா அறிவால யத்தில் டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர் களின் தலைமையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் நான்கு நறுக்கான தீர்மானங்களும் அவற்றை நிறை வேற்றிட மத்திய அரசை வலியுறுத்தும் வண்ணம் அய்ந்தாவதாக போராட்ட வடிவ தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.

2012 ஏப்ரல் 30 ஆம் தேதி இரண்டாவது முறையாக டெசோ புது வடிவம் பெற்று செயல்பட்ட இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமானது.

போருக்கு முன் டெசோவின் பணி என்பது ஒரு வகையானது; போருக்குப் பின் டெசோவின் பணி இன்னொரு வகையானது. போரினால் பெரும் பாதிப்புக்கு ஆளான ஈழத் தமிழர்களின் - சுயமரியாதை வாழ்வு மீள்குடியேற்றம் - வாழ்வுரிமை, அரசியல் தீர்வுகளை உள்ளடக்கமாகக் கொண்டதாகும்.

இந்திய அளவிலும் சரி உலகளவிலும் சரி டெசோ வின் எழுச்சிக்குப் பிறகு தேக்க நிலைகள் உடைக்கப்பட்டன.

இலங்கை அரசைப் பொறுத்தவரை ஏதோ பெரும் போரில் வெற்றி பெற்றுவிட்டது போன்ற மனப்பான்மை யுடன் வெறிபிடித்துத் திரிகிறது - எந்த வகையிலும் ஈழத் தமிழர்கள் மீண்டும் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் திடமாக உள்ளது.

இந்திய அரசின் உறுதியற்ற தன்மை அதற்கு இலகுவாகப் போய்விட்டது. சீனா, ருசியா, கியூபா போன்ற இடதுசாரி நாடுகளும், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் தன்பக்கம் இருக்கும் இறுமாப்பில் இந்தியாவின் வார்த்தைகளுக்கு உரிய மதிப்பும் கொடுப்பதில்லை.

ஈழப் பிரச்சினைக்காக இருமுறை ஆட்சியை இழந்த தி.மு.க. அதே பிரச்சினைக்காகவே இப்பொழுது காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்து விலகிக் கொண்டு விட்டது.

கொஞ்ச நஞ்சம் இருந்த தர்மசங்கடமும் பறந்து ஓடிவிட்டது. இந்திய அரசு எதைச் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதில், போராடுவதில் டெசோதான் முன்னணி அமைப்பாக இருந்து வருகிறது.

நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் செறிவானவை. ஈழத் தமிழர்ப் பிரச்சினையாகவிருந் தாலும், தமிழக மீனவர் பிரச்சினையாகவிருந்தாலும் சரி இந்தத் தீர்மானங்களின் உள்ளடக்கத்தைத் தவிர, விடுபட்டது ஒன்றும் இருக்க முடியாது, என்கிற அளவுக்குத் தெளிவானவையும், திட்டவட்டமானவையு மாகும்.
குறிப்பாக, முதல் தீர்மானம் அரசியல் தீர்வு என்று பேசப்படும் 13 ஆவது சட்டத் திருத்தம்பற்றியதாகும்.

1987 இல் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையிலான சட்டத் திருத்தம் அது. இலங்கை என்றால் ஒரே அரசு (ருவையசல ளுவயவந) என்ற நிலைக்குப் பதிலாக மாநிலங்களுக்கும் சற்றுப் பரவலான அதிகாரங்களை அளிக்கும் சட்டத் திருத்தம் அது.

26 ஆண்டுகள் ஓடிய நிலையிலும், அதனைச் செயல்படுத்தவேண்டும் என்று இலங்கை அரசை வற்புறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால், இலங்கை அரசின் நேர்மையற்ற போக்கை எளிதில் தெரிந்துகொள் ளலாமே!

அந்தப் பிரிவில் அடங்கியுள்ள மாநிலங்களுக்கான உரிமைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சி யில் இப்பொழுது இலங்கை அரசு இறங்கியுள்ளது.

இரண்டு நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக மாற்றிக் கொள்ளக்கூடிய அதிகாரம் இலங்கைக்கு உண்டா என்பது முக்கியமான கேள்வி யாகும்.

வடக்கு - கிழக்கு மாநிலங்கள் இணைப்பு என்பது அந்த ஒப்பந்தத்தில் காணப்படும் முக்கிய அம்சமாகும். இலங்கை ஆளும் கட்சியின் கூட்டணியான ஜெவிபி (கம்யூனிஸ்டு என்னும் போர்வை வேறு!) மூலம் இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, சாதகமான தீர்வினையும் பெற்றுக்கொண்ட வஞ்சகத்தை என்னென்று சொல்லுவது!

இலங்கை அரசு பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டிக்கொள்ளும் விலாங்குத் தன்மையில் நடந்துகொண்டு வருகிறது.

நியாயமாக இந்தப் பிரச்சினையில் இந்திய அரசுக்குக் கூடுதலான பொறுப்புண்டு. இந்திய அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அவமதிக்கிறது, தூக்கி எறிகிறது இலங்கை அரசு என்றால் - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேற்றைய தொலைக்காட்சிப் பேட்டியில் குறிப்பிட்டதுபோல, இந்தியாவின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் அல்லவா இது!

அந்த வகையில் டெசோவின் தீர்மானம் ஈழத் தமிழர் களின் வாழ்வுரிமைக்கு மட்டுமல்ல; இந்திய அரசின் சுயமரியாதைக்குக்கூட தேவையானதாகும்.

இன்னும் சொல்லப்போனால், அய்.நா. மற்றும் உலக நாடுகளின் மரியாதையும், மனித உரிமையின் அடையாள மும்கூட டெசோவின் தீர்மானங்களில் உள்ளடக்கமாக இடம்பெற்றுள்ளன.

எனவே, இந்தத் தீர்மானங்களைக் கட்சிக் கண்ணோட்டத்துடன் பார்க்கத் தேவையில்லை.

இந்திய அரசு இதுவரை எப்படி நடந்துகொண்டு இருந்தாலும், இனியாவது விழித்துக்கொண்டு, மூடுமந்திரமில்லாமல் செயல்படட்டும்!

தமிழ் ஓவியா said...


வாய்க்கொழுப்பு மோடி வம்பில் சிக்கினார்!

மோடி: நாய்க்குட்டி கருத்து எதிரொலி: டில்லி பா.ஜ.க. துணைத் தலைவர் அமீர் ரசா ஹுசைன் பதவி விலகல்!

புதுடில்லி, ஜூலை 17- குஜராத் மாநில முதல் அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் பிரச்சாக்குழு தலை வருமான நரேந்திர மோடி, 2002 ஆம் ஆண்டு கலவரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அப்போது நாய்க் குட்டி காரில் அடிபடுவதை கலவரத் தில் இறந்தவர்களுடன் ஒப்பிட்டுக் கூறியதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் டில்லி பிரிவின் துணைத் தலைவரான அமீர் ரசா ஹுசைன் தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது மோடியின் இந்த கருத்து இழிவானது, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தக் கூடியது. இதுபோல் பேசினால் இஸ்லாமியர் களின் ஆதரவை அவர் எப்போதும் பெற முடியாது. மோடி பாரதீய ஜனதா கட்சியின் தலைவர். என்னு டைய தலைவர் இல்லை என்று கூறி யிருந்தார். இது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுத்துப்பூர்வ புகார்களும் எழுந்தன. இந்நிலையில் ஹுசைன் நேற்று தனது பதவி விலகல் கடி தத்தை கட்சி மேலிடத்திடம் வழங் கினார். அதை டில்லி பா.ஜ.க. தலைவர் ஏற்றுக்கொண்டார்.

பதவி விலகல் குறித்து அவர் கூறியதாவது:-

என்னைப்போல் பல சிறுபான் மையினர் காங்கிரஸ் அல்லாத மாற்று கட்சிகளை எதிர்பார்க்கிறோம். அதை வாஜ்பாய் அல்லது அத்வானி யால் வழங்க முடிந் தது. மோடியை முன்னிலைப்படுத் துவதன் மூலம் எங் களுக்கிருந்த மாற்று வழியை பா.ஜ.க. தடை செய்து விட்டது. எல்.கே. அத்வா னியோ அல்லது சுஷ்மா சுவராஜோ பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றே இஸ்லாமியர்கள் விரும்பு கின்றனர். மோடி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். எனவே கட்சியில் இருந்து விலக எனக்கு முழு உரிமை உள்ளது. - இவ்வாறு அவர் கூறினார்.

வளர்ப்பு நாய் குறித்த கருத்து: மோடி மீது வழக்கு பதிவு

பாட்னா, ஜூலை 17- குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, ஒரு பேட்டியில் கோத்ரா கலவர சம்பவம் குறித்து வருத்தம் உண்டா? என்ற கேள்விக்கு வளர்ப்பு நாயை ஒப்பிட் டுப் பதில் அளித்தார். இதனை சுட்டிக்காட்டி நரேந்திரமோடி மீது பாட்னா பல்கலைக்கழக புள்ளியியல் துறை ஆசிரியர் பினெய் குமார்சிங் என்பவர் பாட்னா தலைமை ஜுடீசி யல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அவதூறு மற்றும் தேச துரோக வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். முதல் வகுப்பு ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத் திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கை வருகிற 31 ஆம் தேதி அன்று நீதிபதி குமரோ கியாதிசிங் விசாரிக்கிறார்.

தமிழ் ஓவியா said...


மண்டலங்கள் தோறும் மன்றல் விழா


சென்னை, திருச்சி, மதுரை, கோவை மண்டலங்களில் மிகச் சிறப் பாக மன்றல் விழாக்கள் நடந்து முடிந்தன.

மன்றல் விழாக்களில் கலந்து கொள்ளும் நபர்கள், நம் இயக்கத் தவர்கள் அல்லர். முற்றிலும் மாறுபட்ட மக்களே! விழாக்களில் கலந்து கொள்ளும் நபர்கள் ஆயிரத்திற்கும் குறையாமல் வருகிறார்கள். வந்த வர்கள் சிறிது நேரம் அமர்ந்து பின் எழுந்து போகிறவர்களாகவும் இல்லை. அப்படியே அமர்ந்து ஆவலுடன் நிகழ்வினை பார்க்கிறார்கள். அடுத்த மன்றல் எங்கே? எப்பொழுது என்ற வினாக்கள் வந்த வண்ணமாகவே இருக் கின்றன.

என் பிள்ளைகளுக்கு இணை தேடு வது பெரும் தலைவலியாக இருந்தது. இன்று ஏதோ ஒரு காரணத்திற்காக ஜாதி மறுப்புத் திருமணம், திருமணமே செய்யாமல் இன்றைக்கு வரை வாழ்ந்து விட்டோம் அதனால் எங்களிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ள சங்கடப்படுகிறார்கள். எங்களைப் போன்றோர்க்கு இந்த மன்றல் விழா மாமருந்தாக அமையப் பெற்றதாகக் கருதுகிறோம்.

திராவிடர் கழகத்தார் இப்படிச் செய்வதைப் பார்த்தால் ஆச்சரியமாகவும், வியப்பாகவும் இருக்கின்றது. மனதார, மனம் திறந்து பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று புகழாரம் சூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

மேலும் சிலர் அய்யா போட்டுத் தந்த பாதையில் இன்று வரை அடி பிறழாமல் நடந்து, அய்யா சொன்ன சொற்களையும், அவரின் உள்ளத்தில் என்னென்ன செயல் பாடுகள் இருந்தனவோ அத்தனையையும் இன்று செய்து வரும் தமிழர் தலைவரை வாழ்த்தாமல், பாராட்டாமல் இருக்க முடியாது என்று கூறும் பலர் உள்ளனர் என்பதையும் அறிவித்துக் கொள்கிறோம்.

இச்செயல்களை செய்யும் உங்களோடு, நாங்களும் செயல்பட வருவோம். எங்களின் ஆதரவு உதவிகள் கட்டாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் பணியினைத் தொடருங்கள் என்று கூறும் ஒரு சிலரையும் சொல் லாமல் இருக்க முடியவில்லை.

வரும் ஜூலை இருபத்தெட்டாம் நாள் நெல்லையில் இணை தேடும் பெரும் விழாவை நடத்த ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் கூறி விடை பெறுகிறேன். நன்றி! வணக்கம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- திருமகள்

தமிழ் ஓவியா said...


சக்தி வாய்ந்த (?) கடவுள் எங்கே போனான்?


கோவிலில் ரூ.1 கோடி அய்ம்பொன் சிலைகள் கொள்ளை!

அய்ம்பொன் சிலைகள் திருடப்பட்ட கோவிலை படத்தில் காணலாம்.

திருப்போரூர், ஜூலை 17- திருப்போரூர் அருகே கோவிலில் ரூ.1 கோடி அய்ம்பொன் சிலைகள் கொள் ளையடிக்கப்பட்டது.

திருப்போரூரை அடுத்துள்ளது சிறுதாவூர் கிராமம். இங்கு சுமார் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூதகிரீஸ் வரர் சிவன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் அய்ம்பொன் னால் ஆன பூதகிரீஸ்வரர் சிலை, அம்மன் சிலை, ஆரவல்லி சிலை மற்றும் அப்பர் சிலை ஆகிய சிலைகள் உள்ளன. பூதகிரீஸ்வரர் கோவிலை சீரமைக்க சிறுதாவூர் கிராம மக்கள் முடிவு செய்தனர். எனவே கோவிலில் இருந்த மூலவர் உள்ளிட்ட 4 சிலைகளும் பழமை வாய்ந்த மதிப்புமிக்க அய்ம்பொன் சிலைகள் என்பதால் பாதுகாப்பு கருதி அருகில் உள்ள பஜனைக்கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.

நேற்று காலை அர்ச்சகர் பஜனை கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலின் பூட்டு திறக்கப்பட்டு கதவு திறந்தே இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் கோவில் திறந்து கிடப்பது குறித்து பொதுமக் களிடம் கூறினார். ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கோவில் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலின் உள்ளே பாதுகாக்கப்பட்டு வைத் திருந்த பூதகிரீஸ்வரர் உள்ளிட்ட 4 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டி ருந்தன.

இது குறித்து தகவல் அறிந்த சம் பவ இடத்திற்கு சென்று தீவிர விசா ரணை நடத்தினர்.

விசாரணையில் கோவிலின் பூட்டை கள்ளச்சாவி கொண்டு திறந்து சிலை களை சில ஆசாமிகள் கொள்ளை யடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட 4 சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந் தவை. இந்த 4 சிலைகளும் 150 கிலோ எடை கொண்டதாகவும், இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்போரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

கோவில் பெட்டக அறை பூட்டை உடைத்து வெள்ளி நகைகள் கொள்ளை!



அம்பத்தூர், ஜூலை 17- சென்னை முகப்பேரில் கோவில் பெட்டக அறை பூட்டை உடைத்து, ரூ.15 லட்சம் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப் பட்டன.

சென்னை முகப்பேர் கிழக்கு, 5-வது பிளாக், மறைமலை அடிகளார் சாலையில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருமாரியம்ம னுக்கும் தனியாக சன்னதி உள்ளது. இந்த சன்னதிக்கு எதிரில் அமைந் துள்ள மண்டபத்தில் 2 பெட்டக அறைகள் உள்ளன. ஒரு அறையில் அய்ம்பொன்னால் ஆன 5 உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.

மற்றொரு அறையில் 3 பீரோக்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த பீரோக்களில், பண்டிகை நாட்களில் 2 அம்மனுக்கும் அணிவிக்கப்படும் அலங்கார கிரீடம், மார்பு கவசம், அங்கவஸ்திரம் மற்றும் பூஜை சாமான் கள் உள்ளன. மற்றும் விலை உயர்ந்த பட்டுசேலைகளும் வைக்கப்பட்டு இருந்தன.

பூட்டை உடைத்து நேற்று முன்தினம் மாலை அர்ச்சகர் சுப்பிரமணி, கணக்காளர் கோபால் ஆகியோர், சாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளை முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு அனைத்து சன்னதி மற்றும் அறைகளை பூட்டி விட்டு, கோவிலின் வெளிப்பக்கமும் பூட்டி விட்டு, சென்று விட்டனர். நேற்று அதிகாலையில் வழக்கம் போல அர்ச்சகர் சுப்பிரமணி கோவி லுக்கு சென்றார். கோவிலுக்குள், ராஜராஜேஸ்வரி அம்மன், கருமாரியம் மன் சன்னதி, 2 பெட்டக அறைகளின் பூட்டும் உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அம்மன் சன்னதியில் இருந்தவை எல்லாம் அப்படியே இருந்தன. உண்டியலும் உடைக்கப்படவில்லை. ஆனால், 2 அறைகளில் இருந்த 3 பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தன. உடனே அவர், கோவில் நிர்வாகி களுக்கு தகவல் தெரிவித்தார். அவர் கள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 22 கிலோ வெள்ளி நகைகள், பட்டுசேலைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் சென்று திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை தேடி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


அருகதையற்றவர்கள்



பேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும், ஸ்தாப னங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு கொள்ள வேண்டும். இந்தத் துணிவு கொள் ளாத எவரும் சமதர்ம முயற்சிக்கு அருகதை அற்றவர்களே ஆவார்கள்.
(விடுதலை, 7.7.1965)

தமிழ் ஓவியா said...


சென்னையில் (18.7.2013) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்


ஆசிரியர் தகுதித் தேர்வு பணி: நியமனத்தில் சமூகநீதிகோரி சென்னையில் (18.7.2013) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்

(1) வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(2) வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!

(3) காப்போம், காப்போம்!
சமூக நீதியை
சமூக நீதியை
காப்போம் - காப்போம்!

(4) தமிழ்நாடு அரசே
தமிழ்நாடு அரசே
ஆசிரியர் தகுதித் தேர்வில்
ஆசிரியர் தகுதித் தேர்வில்
சமூக நீதி சமூக நீதி
தேவை, தேவை!
கட்டாயம் தேவை -
கட்டாயம் தேவை!

(5) உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்
ஒரே அளவுகோலா?
ஒரே அளவுகோலா?
மதிப்பெண்ணில் மதிப்பெண்ணில்
ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா?

(6) உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
மாற்றுத் திறனாளிக்கும்
மாற்றுத் திறனாளிக்கும்
ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா?
மதிப்பெண்ணில் மதிப்பெண்ணில்
ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா?

(7) உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும்
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும்
ஒரே அளவு கோலா?
ஒரே அளவுகோலா?
மதிப்பெண்ணில் மதிப்பெண்ணில்
ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா?

(8) பீகாரிலும் ஆந்திராவிலும்
பீகாரிலும் ஆந்திராவிலும்
சமூக நீதிக் கொடி
சமூக நீதிக் கொடி
பறக்குது! பறக்குது!!
பெரியார் பிறந்த மண்ணிலே
பெரியார் பிறந்த மண்ணிலே
சமூக நீதிக்கு சமூக நீதிக்கு
சவக்குழியா? சவக்குழியா?

(9) அனுமதியோம் - அனுமதியோம்!
சமூக அநீதியை சமூக அநீதியை
அனுமதியோம் - அனுமதியோம்!

(10) போராடுவோம் - போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம் - போராடுவோம்!

(11) தந்தை பெரியார் தந்தை பெரியார்
பெரும்படையும் பெரும்படையும்
அண்ணல் அம்பேத்கர் அண்ணல் அம்பேத்கர்
பெரும்படையும் பெரும்படையும்
புறப்பட்டோம் - புறப்பட்டோம்!

(12) தமிழக அரசே தமிழக அரசே
அமல்படுத்து அமல்படுத்து!
சமூக நீதியை சமூக நீதியை
அமல்படுத்து அமல்படுத்து!

(13) பணி முடிப்போம் - பணி முடிப்போம!
தமிழர் தலைவர் தலைமையிலே
தமிழர் தலைவர் தலைமையிலே
பணி முடிப்போம்! பணி முடிப்போம்!
தந்தை பெரியார் தந்தை பெரியார்
பணி முடிப்போம்! பணி முடிப்போம்!

தமிழ் ஓவியா said...


உச்சநீதிமன்றத்தின் அரிய தீர்ப்பு!


மருத்துவக் கல்லூரி சேர்க்கை: நீண்ட நாள் கழகக் கோரிக்கைக்கு வெற்றி!

அகில இந்திய நுழைவுத் தேர்வு தேவையில்லை

உச்சநீதிமன்றத்தின் அரிய தீர்ப்பு!

புதுடில்லி, ஜூலை 18- அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க் கைக்கு (எம்.பி.பி.எஸ்.,) ஒரே நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்துக்கு உச்சநீதி மன்றம் மறுப்புத் தெரிவித்து ஆணை பிறப்பித்து விட்டது. அகில இந்திய மருத் துவக் கவுன்சிலின் முடிவை, தொடர்ந்து எதிர்த்து வருவது திராவிடர் கழகமே என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு கொண்டு வரும் மருத் துவ கவுன்சிலின் முடிவுக்கு உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் அந்தந்த மாநிலங்களே மருத்துவ படிப்புக் கான நுழைவுத் தேர்வை முடிவு செய்து கொள்ள லாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ மாண வர்கள் தேசிய அளவிலான மருத்துவ தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( என்.இ. இ.டி) மருத்துவ கவுன்சில் கொண்டு வர வேண்டும் என விரும்பியது. மேலும் தகுதி இல்லாத நபர்கள் பணம் பெற்று சேர்க்கப்படுவதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு பல்வேறு மாநிலங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவானது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தேர்வு முறையே பின்பற்ற லாம் என இடைக்கால தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப் பட்டது. அல்டாமஸ் கபீர் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. இதன்படி நாட்டில் ஒரே மாதிரியான தகுதி நுழைவுத்தேர்வு தேவையில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர், அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். இதில் 2 நீதிபதிகள் மருத்துவ கவுன்சிலின் முடிவை எதிர்த்தனர்.ஒரு நீதிபதி மட்டும் ஆதரித்தார். கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் மத்தியில் பாதிப்பு, வேறுபாடுகளை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவை பல்வேறு அரசுகள் மற்றும் தனியார் கல்லூரிகள் வரவேற்றுள்ளன.

தமிழ் ஓவியா said...


சேலம் இரயில்வே கோட்டத்தை மங்களூருவுடன் இணைப்பதா? தடுத்து நிறுத்துக!



தென்னகத்தில் ரயில்வேக்கள் விரிவாக்கம் - அகல இரயில் பாதை போன்ற முயற்சிகள் தி.மு.க. தலைவர் கலைஞர், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, உறுப்பினர்கள், முந்தைய மத்திய அமைச்சர் பெருமக்கள் மற்றும் சேலம் வீரபாண்டிய ஆறுமுகம் ஆகியோர்களின் சீரிய முயற்சிகள் காரணமாக, சில டிவிஷன் களைத் தனியே உருவாக்கியதன் மூலம் வளர்ச்சிக்கும், புதிய வேலை வாய்ப்புக்கும் பெரிதும் வழி வகுத்தன.

மங்களூருவோடு இணைக்க திட்டமா?

எடுத்துக்காட்டாக கேரள மாநிலம், பாலக் காட்டோடு இணைக்கப்பட்ட டிவிஷன்களி லிருந்து ஒரு பெரும் பகுதியைப் பிரித்து சேலம் தனி ரயில்வே கோட்டம் - ரயில்வே டிவிஷன் அமைக்க அரும்பாடுபட்ட பிறகே, லாலு பிரசாத் அவர்கள் ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தில், சேலம் டிவிஷன் என்று தனியே சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புது டிவிஷன் உருவாக்கப்பட்டது. அப்படி உருவான பிறகும்கூட அதை முழு அளவில் வளர்ச்சியடைய வைக்க மனமின்றி. கேரளத்துச் செல்வாக்கு, மத்தியில் அதிகமாக இருப்பதன் காரணமாக, பெயரளவில் தனி அலுவலகம் போல சில ஆண்டுகள் இயங்க விட்டு, ஓரளவு வளர்ந்து வரும் நிலையில் திடீரென்று இப்போது இந்த சேலம் டிவிஷனை மங்களூருவுடன் (கர்நாடகத் துடன்) இணைக்க ரகசியமாகப் பல முயற்சிகள் நடைபெற்று வருவது குறித்து சேலத்துப் பெரு மக்களும், ரயில்வே தொழிலாளர் தோழர்களும் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

அவர்களது நியாயமான இந்த அச்சத்தைப் போக்கி, வெகுவாகப் பாடுபட்டு, வராது வந்த சேலம் ரயில்வே கோட்டம் மீண்டும் காணாமற் போகும் அவலநிலை ஏற்பட்டு விடக் கூடாது! கூடவே கூடாது!!

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு..

இதுபற்றி ரயில்வே நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் திரு. டி.ஆர். பாலு அவர்களும், நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பெரு மக்களும், காங்கிரஸ் மத்திய அமைச்சர்களும் இதில் தனி அக்கறை செலுத்தி, சேலம் டிவிஷன் வழமைபோல் தனித்தியங்குவதோடு அதை மேலும் பலப்படுத்தவும் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இன்றேல் மக்கள் கிளர்ச்சி வெடிப்பது உறுதி! உறுதி!!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
18.7.2013