Search This Blog

27.7.13

சங்கராச்சாரியாரா அரசியல்வாதியா? ஜெயேந்திரர் ஆர்.எஸ்.எஸ். ஆசாமி!
கொலைக் குற்ற வழக்கில் சிக்கிப் பிணையில் நடமாடிக் கொண்டிருக்கும் திருவாளர் ஜெயேந்திர சரசுவதி - ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று எத்தனையோ முறை ஆதாரங்களுடன் விடுதலை எடுத்துக்காட்டிய துண்டு; திராவிடர் கழகம் அடையாளம் காட்டியதுண்டு. அவற்றை நம்பாதவர்கள் எவரேனும் இருந்தால் நேற்று ஏடுகளில் அவர் வெளியிட்ட கருத்துகளைப் படித்த வர்களுக்குச் சந்தேகம் தீர்ந்திருக்கும்

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்காக பாரதீய ஜனதா முன் நிறுத்தினால் அது வர வேற்கத்தக்கது. நரேந்திரமோடி தகுதியான வேட்பாளர். நிர்வாகத் திறமை மிக்கவர். அவருக்கு கடவுள் அருளாசி உண்டு. எனது வாழ்த்துக்கள்!
ஆனால் சோனியாகாந்தி வெளிநாட்டுக்காரர் என்பதால் அவரது மகன் ராகுல் காந்திக்கு இந்தியா வுக்குத் தலைமை தாங்கும் தகுதி கிடையாது என்றே கருத வேண்டியுள்ளது.

நரேந்திரமோடி -  ராகுல்காந்தி இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நரேந்திர மோடிக்குத்தான் முதலிடம் கிடைக்கும். நிர்வாகத் திறமை ஆற்றல் படைத்த மனிதர். மிகப்பெரிய சாதனையாளர். குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவர். மதச்சார்பற்ற ஆட்சியை அவர் தருவது நிச்சயம். - இவ்வாறு காஞ்சி சங்கராச்சரியார்(?) ஜெயேந்திரர்  கூறியுள்ளார்.
மேற்கண்டதைப் படிப்போர் தெளிவாகவே ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம். மோடியை பி.ஜே.பி. சார்பில் பிரதமராக நிறுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸே முக்கிய காரணமாகும்.

மோடி, தன்னை ஒரு இந்துத் தேசியவாதி என்று சில நாள்களுக்கு முன்புதான் வெளிப்படையாகப் பேட்டி ஒன்றில் கூறினார்.

நரேந்திர மோடி மதச் சார்பற்ற கொள்கைக்கு எதிரானவர் என்று பி.ஜே.பி.யைத் தவிர அனேகமாக எல்லாத் தரப்பினரும் எடுத்துக் கூறிவிட்டனர். மதச் சார்பற்ற தன்மைக்கு தம் வசதிக்கு விளக்கம் கூறித் தப்பிக்கப் பார்க்கிறார்.
குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை இன் றளவும் நியாயப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அடித்துக் கூறுகிறார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதுகூட இதே மோடி என்ன சொன்னார்? 

இந்துக்கள் ஆண் மக்கள், பேடிகள் அல்லர் என்பதை நிரூபித்துவிட்டனர்! என்று கருத்துக் கூறிய பேர்வழிதான் இந்த மோடி.

அத்தகைய ஒருவர்தான் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்று ஒருவர் சொல்லுகிறார் என்றால், அவர் இன்னொரு மோடியாகத்தானிருக்க முடியும்.
மோடியை ஆதரிப்பதோடு அவர் நிற்கவில்லை. மிகவும் பச்சையாக காங்கிரஸ் சார்பில் பிரதமருக்கு முன்னிறுத்தப்படுபவரைப்பற்றியும் விமர்சனம் செய்கிறார் என்பதையும் கவனிக்கவேண்டும்.

பி.ஜே.பி.யின் தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்; மோடி பிரதமராக வரவேண்டும் என்பதற்குத் தனிப் பிரிவை ஏற்படுத்தி அதற்கு இந்த ஜெயேந்திரரை பிரச் சாரக் குழுத் தலைவராக அறிவிப்பதுபற்றி பி.ஜே.பி.யோ, சங் பரிவாரமோ ஆழமாகவே யோசிக்கலாம்.
நெருக்கடிநிலை காலத்தில் தலைமறைவான ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு இவர் உதவி புரிந்ததை நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம் எனும் நூலில் இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் திருவாளர் இராம.கோபாலன் 222 ஆவது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருநாடகத்தில் ஸ்ரீபேஜாவார் சுவாமிகள், நெருக்கடி வந்த முதல் வாரத்திலேயே ரூ.1001 கொடுத்ததுடன், செல்லும் இடமெல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸுக்காகப் பிரச்சாரம் செய்து வந்தார்; காஞ்சி காமகோடிப் பீடம் ஸ்ரீஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் தலைமறைவு இயக்கத்திற்குப் பல விதங்களில் உதவியுள்ளார். தலைமறைவு இயக்கத்தவர்கள் அவரை அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர் என்று திருவாளர் இராம. கோபாலன் குறிப்பிட்டுள்ளார் என்றால், ஜெயேந்திரர் காவி உடையில் திரியும் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பது விளங்கவில்லையா?

அயோத்தியில் கட்டடத்தை இடித்தது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை (தினமணி, 27.11.2000) என்று சொன்னவரும்  இந்த சாட்சாத் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்தான்.
ஒரு வகையில் ஜெயேந்திர சரசுவதி, நரேந்திர மோடியை வெளிப்படையாக ஆதரித்ததும் நல்லதாகவே போய்விட்டது.

கொஞ்ச நஞ்சம் அரசல்புரசலாக இருப்பவர்கள்கூட, நாட்டை மதத்தின் பெயரால் அமளிக்காடாக மாற்றத் துடிக்கும் ஒரு கூட்டம் கிளம்பிவிட்டது என்பதை வெகுமக்கள் தெரிந்துகொள்ள, புரிந்துகொண்டு செயல்படப் பெரும் உதவியாகவே போய்விட்டது - அந்த வகையில் வரவேற்கவும் செய்யலாம்.

                       -----------------------------"விடுதலை” தலையங்கம் 25-7-2013

சங்கராச்சாரியாரா அரசியல்வாதியா? 
 
அயோத்திப் பிரச்சினையில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது என்று சொன்ன காஞ்சி சங்கராச்சாரியார் அரசியலில் ஈடுபடத் தகுதி உடையவர்தானா?

பி.ஜே.பி.க்குச் சார்பாக அவர் கருத்துத் தெரிவிக்கிறார் என்றால் இவர் பிஜேபியில் இருக்கும் இந்துக்களுக்கு மட்டும்தான் தலைவரா?
காங்கிரசில் உள்ள இந்துக்களுக்கு இவர் தலைவர் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறார் என்று கருதலாமா?

2004இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், சென்னை தியாகராயர் நகரில், பிஜேபி தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தவர்தான் இந்த ஜெயேந்திரர். அதுபற்றி பிரச்சினை எழுந்தபோது, அதில் என்ன தப்பு? என்று எதிர் கேள்வி கேட்டவரும் அவரே!

ரஜினியுடன் சேர்ந்து விஜயகாந்து ஓர் அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம் என்று சொன்னவரும் இவரே! (குமுதம் 18.1.2001).

தன்னை நாடி வரும் பக்தர்களுக்குச் சாமியார்கள் ஆசி வழங்குவது வழமைதான். ஆனால் இந்த ஜெயேந்திரரோ வித்தியாசமான மனிதர்; தம்மை நாடிவந்த நடிகரைப் பார்த்து அரசியல் கட்சியை ஆரம்பிக்கச் சொல்லுகிறார் என்றால் இதன் பொருள் என்ன? சாமியார் வேடத்தில் ஓர் அரசியல்வாதி பதுங்கி இருக்கிறார் என்றுதானே பொருள்?

திருவானைக்காவல் கோயில் திருப்பணிகளைத் துவக்கி வைத்த இவர் செய்தியாளர்களையும் சந்தித்தார். (இவருக்கு ஏன் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் வேலை?).

அந்தப் பேட்டியில் என்ன சொன்னார்? பிஜேபி என்றால் வெறுக்காமல் ஸ்திரமான அரசு ஒன்று அமைக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் (தினமலர் 19.3.1998) என்று சொன்னவர் தானே!

மண்டைக் காட்டிலே இந்து முன்னணிக்காரர் களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் மதக்கலவரத்தைத் தூண்டி படுகொலைகளைச் செய்து கொண்டிருந்த கால கட்டத்தில், இந்த ஜெயேந்திரர் என்ன செய்தார் தெரியுமா?

ராஜபாளையத்தில் தொழிலதிபர்கள் அடங்கிய கூட்டத்தில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி பேசி யதைக் கேளுங்கள்.

தொழிலதிபர்களே! கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் ஆர்.எஸ்.எஸை ஆதரியுங்கள். நீங்கள் இப்பொழுது ஆர்.எஸ்.எஸை ஆதரிக்காமல், பின் எப்பொழுது ஆதரிக்கப் போகிறீர்கள்? மற்ற மதக் காரர்களும், நாத்திகர்களும் உங்களை ஆதிக்கம் செய்த பிறகுதான் ஆர்.எஸ்.எஸை ஆதரிக்க போகிறீர்களா? என்று பேசியதை ஆர்.எஸ்.எஸின் அதிகாரப்பூர்வமான ஆர்கனைசர் (28.3.1982) வெளியிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இவ்வளவுக்கும் ஆர்.எஸ்.எஸ். ஒரு முறை அல்ல; இரு முறையல்ல; மூன்று முறை தடை செய்யப்பட்ட கட்சி.

1987 அக்டோபரில் அவாள் நம்பும் விஜயதசமி நாளில் ஜெயேந்திர சரஸ்வதி ஜன கல்யாண் - ஜன ஜாக்ரண் (மக்கள் நலன் - மக்கள் விழிப்புணர்வு) என்ற ஓர் அமைப்பை மடத்தைவிட்டு ஓடிய பிறகு தொடங்கினார்.

அந்த அமைப்பினுடைய கொள்கைகள் என்ன? விடுதலை சொல்லுவதைவிட தினமணி (தலை யங்கம் 5.10.1987) சொல்லுவதுதானே பொருத்த மானது.
ஹிந்து சமுதாயத்தினரிடையே இன உணர் வையும், ஒற்றுமையையும் மேலும் வளர்க்க இத்திட்டம் உதவும் என்றாலும், இதிலுள்ள சில அம்சங்கள் சர்ச்சைகளுக்குரியனவாகவும்  அரசியல் நோக்கம் கொண்டனவாகவும் அமைந்து மக்களிடையே ஓரளவு வியப்பையும், திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளன என்று தினமணி எழுதியதே!

சங்கரமடம் என்பதும் சங்கராச்சாரியார் என்பதும் ஜெயேந்திரரை பொறுத்தவரை ஒரு வேடம்; மக்களை ஏமாற்றிட வசதியான இடம்; மற்றபடி ஒரு கடைந் தெடுத்த அரசியல்வாதி - காந்தியாரைக் கொன்ற ஆர்.எஸ்.எஸின் கூரிய வாள் முனைதான் ஜெயேந்திரர்

வன்முறையில் நாட்டம் கொண்டவர் - அதனால் தான் வழக்குகளில் சிக்குண்டு மூச்சுத் திணறிக் கொண்டுள்ளார்.

இவ்வளவுக்குப் பிறகும் பார்ப்பனர்கள் இவரை ஜெகத்குரு என்று உச்சி மோந்து பாராட்டுகின்றனர் என்றால், இதற்குப் பெயர்தான் பார்ப்பனர்களின் இனப்பற்று என்பது! நம் மக்களுக்குச் சுட்டுப் போட்டாலும் வருமா? 

                            -----------------------------"விடுதலை” தலையங்கம் 26-7-2013

45 comments:

தமிழ் ஓவியா said...


அன்பு வளர முடியும்நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், சாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.
(விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


அண்ணா பெயரில் சமூக அநீதியா?


ஆசிரியருக்குக் கடிதம்

அண்ணா பெயரில் சமூக அநீதியா?

நாகை மாவட்டம் தெற்கு மருதூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கே.குமாரவேலு என்பவர் (ஆசிரியர் தகுதித்தேர்வில் 83 மதிப்பெண் பெற்றவர்) தன்னை பணியில் அமர்த்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், டி.இ.டி. தேர்வில் மதிப்பெண் தகுதியில் யாரும் சலுகை கோர முடியாது.

தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உட்பட எந்த பிரிவினராயினும் டி.இ.டி. தேர்வில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என வாதிட்டார். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுகொண்ட நீதிபதி மாற்றுத் திற னாளியின் மனுவை தள்ளுபடி செய்தார். "அண்மை யில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை.

3 சதவீத இட ஒதுக் கீட்டுப்படி மாற்றுத் திறனாளிகளுக்கு 360 இடங்கள் ஒதுக்கப்படவேண்டும். மாற்றுத் திறனாளி ஒருவர் கூட பணியில் அமர்த்தப்படவில்லை. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் பிரிவுக்கு மனு கொடுத்தேன். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரையும் சந்தித்து மனு கொடுத்தேன். ஆனால் 90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பணிநியமனம் குறித்து பரிசீலிப்பதாக அவர் கூறினார்.

மாற்றுத் திறனாளி களுக்கு முன்னுரிமை கொடுத்து, இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் மற்றும் அரசாணை குறித்து நான் கேட்ட விளக்கங்களை அதிகாரிகள் அளிக்கவில்லை. இவை பின்பற்றப்படாமல் காற்றில் பறக்க விடப் பட்டுள்ளன.

இதனால் சமவாய்ப்பு அளிக்கும் அரசியல் சாசனம் மீறப்படுகிறது." என்று வழக்கு தொடுத்தவர் நீதி மன்றத்தில் கூறியுள்ளார். அதற்கு அரசு தரப்பின் பதில் என்ன? அந்தப் பணியிடங்கள் காலியாக வைக்கப் பட்டுள்ளனவா? அந்த இடத்தில் மாற்றுத் திறனாளி அல்லாத ஒருவரை பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றமல்லவா? இதே நிலைதான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்கள் விஷயத்திலும் பின்பற்றப் பட்டிருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகிறதே!

- கி.தளபதிராஜ், மயிலாடுதுறை

தமிழ் ஓவியா said...


மொட்டைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!


-ஊசி மிளகாய்

நம்மூரில் - திருப்பதி - பழனி - என்று வேண்டுதலை என்ற பெயரில் - பக்தி மூடநம்பிக்கை காரணமாக திருப்பதி, வெங்கடாஜலபதிக்கும், பழனி முருகனுக்கும் இன்னும் சில கடவுளர். கடவுளச்சிகளுக்கும் மயிர்க் காணிக்கை என்பது பய பக்தியுடன் தரப்படுவதாகும்.

எந்தப் பார்ப்பனரும் திருப்பதியிலோ, பழனியிலோ அல்லது வேறு எந்த கோயிலிலேயோ மயிர்க் காணிக்கைக்காகத் தலையை மொட்டை அடித்துக் கொள்ளுவது கிடையாது!

முன்பெல்லாம் அக்கிரகாரத்து விதவை மாமிகள் - மொட்டை அடித்துக் கொண்டு வெள்ளை சேலை உடுத்திக் கொண்டு, ரவிக்கை மொட்டைப் பாப்பாத்திகள் என்ற நாமகாரணத்துடன் உலா வருவார்கள்!

இப்போது எங்கும் அப்படி ஒரு காட்சியை அக்ரஹாரங்களில் பார்க்கவே முடியாது; காரணம் அவர்கள் மாறி விட்டார்கள். ஆனால் நம் சூத்திர ஜாதிகளில் இன்னமும் வெள்ளைச் சேலை ரவிக்கை தியாகத்துடன் உள்ள பெண்களைக் காண முடிகிறதே!

குன்றக்குடி அடிகளார் சொல்வார்: பேயைவிடக் கொடுமையாக ஆடுவர் பேய் பிடித்தவர் என்று நகைச்சுவையாக; அதை நிரூபிப்பதாக இருக்கும் நம் பெண்களின் இத்தகைய வேடம்!

இதோ இந்தப் படத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் (பெரிய) சீனியர் புஷ் அவர்களும் ஒரு சிறுவனும் உள்ளனர்!

இந்தப் பையனின் உணர்வுகளுக்கு உரமூட்ட, பெரிய புஷ் அவர்கள்தானே முன் வந்து தலையை மொட்டை அடித்துக் கொண்டாராம்!

சீனியர் புஷ் அவர்களின் பாதுகாப்புக் குழுவில் உள்ள(Security - Men) ஒருவரின் மகன் (அப்பையனுக்கு 2 வயதுதான்) ரத்தப் புற்றுநோய் வந்து(Leukaemia) அந்த சிறுபிள்ளைக்குச் சிகிச்சை தருவதால் தலை மயிர் உதிர்ந்து விட்டது. (கீமோதெரப்பி தருவதன் விளைவால் மயிர் உதிர்ந்து விடும்) அதனால் மொட்டை அடித்து விட்டனர்.

தனக்கு இப்படி மொட்டை அடித்து விட்டார்களே என்று அப்பிள்ளை மனதுக் குள் வருந்தினான். அவனது நோய் குணமாவதற்கு அது ஒரு தடையாக அமைந்துவிடும்; எனவே அவனது மன நிலையை நல்ல வண்ணம் பக்குவப்படுத்த வேண்டும் என்பதற்காக பெரியவர் புஷ் அவர்கள் தன் தலையை மொட்டையடித்துக் கொண்டு அவனிடம் விளையாடி அந்தச் சிறுவனுக்கு மகிழ்ச்சியை ஊட்டிக் கொண்டுள்ளார்!
எப்படிப்பட்ட மனிதநேயம் பார்த்தீர்களா?

அவரது சக்கர நாற்காலியில் (அதுதான் பெரிய புஷ் அவர்களின் தற்போதைய புழக்கத்திற்குரியது) அந்தப் பையனைப் போலவே நீலக்கலர் சட்டை அணிந்து கொண்டு அந்தப் பையனையும் தூக்கி தன் மடியில் (சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே) வைத்துக் கொண்டு அவனுக்குத் தெம்பூட் டும் காட்சி - எவ்வளவு அருமையான காட்சி என்பதைப் பார்த்தீர்களா!

மூடநம்பிக்கையினால் மொட்டை போடு வது சுயநலத்தின் - வெளிப்பாடு! பண்ட மாற்றின் ஒரு பரிமாணம்! ஆனால் பெரிய புஷ்ஷின் மொட்டை - ஒரு புதிய பரிமாணம்; மனிதநேயம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அருமையான எடுத்துக்காட்டு அல்லவா!

‘Empathy’ என்ற சொல்லுக்கு இதைவிட நல்லதோர் விளக்கம் வேறு இருக்கவே முடியாது!

பிறரைப் பார்த்து அவர் நிலைக்காக பரிதாபப்படுவது - Sympathy - வெறும் இரக்கம்!

பிறரின் துன்ப நிலையில்தன்னை வைத்து அவரது மன உணர்வினையே பெறுவது Empathy -- இரக்கத்தைவிட மேலானது; ஒத்தது அறிதல்!

தமிழ் ஓவியா said...

சென்னை அய்.அய்.டி.யின் சமூகஅநீதிக்கு எதிராக - நீதிபதி நாகமுத்து அவர்கள் வழங்கிய சிறப்பான தீர்ப்பு!


சென்னை அய்.அய்.டி.யின் சமூகஅநீதிக்கு எதிராக - நீதிபதி நாகமுத்து அவர்கள் வழங்கிய சிறப்பான தீர்ப்பு!

சி.பி.அய். விசாரணை என்பது மிகவும் வரவேற்கத்தக்கதே!

அய்.அய்.டி.யில் நடைபெற்றுள்ள அத்தனை குறைபாடுகளையும் சி.பி.அய். வெளியில் கொண்டு வர வேண்டும்!

தொடர் வெற்றிகளுக்காகவும் போராடுவோம்!

தமிழர் தலைவரின் முக்கிய சமூகநீதி அறிக்கை

சென்னை அய்.அய்.டி.யில் சமூக நீதிக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் அட்டூழியங்களைக் கண்டுபிடிக்க, சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப் பினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை அய்.அய்.டி. என்பது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை (H.R.D.) என்ற கல்வித் துறையின்கீழ் இயங்கும் ஒரு மத்திய கல்வி நிறுவனம்; இதற்கென ஆளு மைக்குழுவும், ஆளுநரும் உண்டு என்றாலும், இதன் இயக்குநர்களாக தொடர்ந்து உயர் ஜாதி (பார்ப்பனரே) வந்ததோடு அல்லாமல், இந்திய அரசியல் சட்டத்தின் 16ஆவது விதியின்படி பின்பற்றப்பட வேண்டிய இடஒதுக்கீட்டை அறவே புறக்கணித்து, I.I.T. என்றால், “Iyer Iyyangar Tennancy” என்று பார்ப்பவர் எவருக்கும் எளிதில் தெரியும் வண்ணமே அது நடந்து கொண்டு வந்துள்ளது! வருகிறது!!

தமிழ் ஓவியா said...

தகுதி - திறமையுள்ள ஒடுக்கப்பட்டோருக்கு முட்டுக்கட்டைகள் - தொல்லைகள்!

தகுதி திறமை என்ற அளவுகோல்படிப் பார்த்தாலும் முன்னேறிய ஜாதியினருக்குச் சளைக்காத ஆற்றல் உள்ள பார்ப்பனரல்லாத வர்கள், S.C., S.T., OBC., MBC போன்ற வகுப் பினர் எவர் உள்ளே நுழைந்தாலும்கூட, அவர்களை ஆதிக்க அதிகார வர்க்கம் தடுத்து, அடக்கி, அல்லது சதா குற்றம் கண்டு, நிம்மதி யற்ற நிலைக்கே தள்ளி, அவர்களாகவே பணியை விட்டு விட்டு ஓடும்படியாகச் செய்வது - தலைமையை அபகரித்துள்ள பார்ப்பன எஜமானர்களின் புனிதக் கடமையாகவே - தர்மமாகவே - இருந்து வந்துள்ளது!

இதை எதிர்த்து நாமும் ஒத்த கருத்துள்ள பல்வேறு அமைப்புகளும் அறப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். பல அறிக்கைகளையும் வெளியிட்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளோம்.

ஏனோ மத்திய அரசின் காதுகளில் இவை இன்னும் விழுந்ததாகவே தெரியவில்லை; அதன் பார்வை இந்தக் கொடுமைகள் - அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளையே - பின்பற்றாத - இந்தக் கொடுமைகள் பக்கம் திரும்புவதே யில்லை!
எத்தனையோ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட பேராசிரியர்கள் புழுக்களைப் போல ஆதிக்கக் கொடுங் கரங்களால் அழுத்தி மிதிக்கப்பட்டே வைக்கப்பட்ட வரலாறு பழைய வரலாறே ஆகும்! இது கொடுமையிலும் கொடுமை.

நீதியரசர் நாகமுத்து அவர்களின் சிறப்பான தீர்ப்பு!

இதனால் வெகு காலமாக பாதிக்கப்பட்ட - வர்ணிக்க முடியாத அளவுக்கு மன உளைச் சலுக்கு ஆளாகிய பேராசிரியை டாக்டர் வசந்தா அவர்கள் கணித மேதை - அவரது பாட நூல்கள் பலவும் அவரது ஆற்றலைப் பறைசாற்றுபவை - சென்னை உயர்நீதிமன்றத் தில் ஒரு ரிட் மனு போட்டு நியாயம் கேட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்பமை ஜஸ்டீஸ் திரு எஸ். நாகமுத்து அவர்கள், ஒரு நல்ல தீர்ப்பை வழங்கி யுள்ளார்கள்!

1995 முதல் 26.9.2000 வரை சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற பணி நியமனங்கள் தொடர்பான உண்மைகளை அறிய சி.பி.அய். புலன் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தர விட்டுள்ளார்கள்.

மேலும் மனுதாரர் டாக்டர் வசந்தா கடந்த 27.7.1995 முதல் இணைப் பேராசிரியராக 18.12.1996 முதல் பேராசிரியராகவும், அய்.அய்.டி.யில் பணியாற்றி வருவதாகக் கருதப்பட வேண்டும்.

அந்த அடிப்படையில் எதிர் காலத்துக்கான அவரது ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி அவர்கள் தமது தீர்ப்பில் கூறியுள்ளார்கள்!

சமூகநீதிக்குக் கிடைத்த வெற்றி!

இது சமூக நீதிக்குக் கிடைத்த நியாயமான வெற்றி! இதுகூட தாமதத்துடன் கிடைத்தது என்றாலும் - மறுக்கப்படாமல் கிடைத்ததே என்ற மகிழ்ச்சி! இந்த மனிதவளத்துறை கல்வியகங்களில் நசுக்கப்பட்டு வந்த பல ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்டோர் சற்று நிம்மதிப் பெரு மூச்சு விடுவர்!

சி.பி.அய். செய்ய வேண்டியது என்ன?

நீதியரசர் வழங்கிய நியாயத்திற்கான தீர்ப்பினைப் பாராட்டுகிறோம். அய்.அய்.டி.யில் - அரசியல் சட்டம் விதித்துள்ள உரிமைகள் அனைத்தும் (அவை சலுகைகளோ, பிச்சை களோ அல்ல) ஒடுக்கப்பட்டோருக்குக் கிட்டும் வண்ணம் சி.பி.அய்.யின் விசாரணை அறிக்கை அமைவது அவசியம்! அய்.அய்.டி. தொடர்பான பல்வேறு குறைகள் கண்டு அறியப்பட்டு களையப்படல் வேண்டும்; அதனைக் கண் காணிக்க வேண்டிய பொறுப்பு சென்னை உயர்நீதிமன்றத்திற்குரிய கடமையாகும்.

இதற்கு முன்பு பொறுப்பிலிருந்த பலரும் தப்பிவிடக் கூடாது! கூடவே கூடாது!

இது ஒரு கட்டம்தான். மேலும் சமூகநீதி பெறுவதற்கு பல கட்டங்கள் அங்கே தேவைப் படும்.

தொடர் வெற்றிக்காகப் போராடுவோம்!

இந்த வழக்கில் சொல்லப்பட்ட தகவல்கள், ஒரு பனிப்பாறையின் முனைதான் (Tip of the iceberg) k£Lnk! மட்டுமே!

எனவே சமூகநீதிப் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வெற்றியின் வெள்ளி முளைத் துள்ளது இப்போது!

தொடர்ந்து நாமும் விழிப்போடு இருப்போம் -விழிப்புணர்வை உருவாக்கி அறவழியில் போராடுவோம்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
26.7.2013

தமிழ் ஓவியா said...


ஆன்மா பற்றி மொக்கலவாதக் கருத்து


கடவுளை உண்டு பண் ணினவனை விட ஆன் மாவை உண்டு பண்ணினவனே அயோக்கியன் என தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். இதே கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பவுத்தத்தைச் சார்ந்த மொக் கல வாதக் கருத்தும் (நை ராத்ம வாதம் அல்லது ஆன்மா இல்லை என்கின்ற வாதம்) அமைந்திருப்பதை நீலகேசி என்னும் நூலில் மொக்கல வாதசருக்கத்தில் காணலாம்.

ஆன்மா அடங்காத ஒன்றா?

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங் களும், (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரியங்களும் (தொழிற்கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தானாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?

ஆன்மா ரூபமுடையது என்பீரேல்; சரீர பிரமாணத் ததா? அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!

ரூபம் அற்றது என்றாலோ? ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.

ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ இரு வகைத்தும் குற்றமே என்றறிக! (நீலகேசி மொக்கலவாதச்சருக்கம், பக்கம்-3)

இதிலிருந்து ஆன்மா என்பதே ஒரு பொய்க் கற்பனை என்பதும், உடலுக்குள் புகுவதும், பிறகு உடல் செயலற்றுப் பிணம் என்றாகி விட்டால் அந்த உடலை விட்டு வெளியேறிவிடுகிறதென்பதும், மீண்டும் வேறு உடலை ஏற்றுக் கொள்கிறதென்பதும் சுத்தப் புரட்டு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சேலம் ர.ஒந்தாட்சி

தமிழ் ஓவியா said...

அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்ட விரோதம்!

அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்டவிரோதம் என்று ஜப்பான் நாட்டில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. ஜப்பான் மதச்சார்பு இல்லாத நாடுஎன்று அதன் அரசியல் சட்டம் கூறுகிறது. அதன்படி, அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்ட விரோதம் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருக்கிறது. இந்தத் தீர்ப்புப்படி ஜப்பான் மன்னரும் கோவிலுக்குப் போக முடியாது. இந்த சட்டம் இந்தியாவிற்கு?

(ராணி, 3.1.1991)

தமிழ் ஓவியா said...

மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...

பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன்வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும்.

இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரிகளுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன? ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயிருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடைய வனாயிருக்கிறான்.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...


அம்பேத்கர் கூற்று!


இந்த நாடு வெளிநாட்டுக்காரர்களின் ஆளு கையால்தான் காலங்காலமாய் இருந்திருக்கிறது. அடிமைத் தனத்திலேயே சுகங்கண்டவர்கள் இந்தியர்கள். இதற்கெல்லாம் காரணம் சாதி தவிர, வேறு ஏதாவது காரணம் கூற முடியுமா? காந்தி இதைக் கொஞ்சமாவது உணர்ந்திருக்கிறாரா? சித்த சுவாதீனம் இல்லாதவனைப் போலவும், தற்கால மனிதனைப் போலவுமே இருக்கிறது அவரது பேச்சும் நடவடிக்கையும்.

- டாக்டர் அம்பேத்கார்

தமிழ் ஓவியா said...

காற்பலம் குறைவு

ஒரு சைவன் சுயமரியாதைகாரனானான். பின்னர் அவனை நிறுத்துப் பார்த்ததில் - எடையில் காற்பலம் குறைவு ஏற்பட்டது; விபூதியிடுவது நீங்கியதால்!

****************************
கண்ணு: உழைப்பை நிறுத்தி விட்டால் உடம்பு பெருக்கிறதா என்று பார்க்க போகிறேன்.

வேணு: ஏன் பார்ப்பனர்களில் சதை இல்லாத ஆசாமி இல்லையா?

- புரட்சிக்கவிஞர்

தமிழ் ஓவியா said...

ஈரேழு லோகமாம்!

கண்ணன் வாயைக் காட்ட அவன் வாயில் ஈரேழு பதி னான்கு உலகமும் இருப் பதை நேரில் அவன் தாய் கண்டாள் என்று சொற்பொழி வாளர் கூறியதும் கூட்டத்திலிருந்து கேள்வி கேட்கிறார்:

ஒரு கேள்வி:- ஏனையா, வாய்க்குள் ஈரேழு லோகங் களும் புகைபோல் தெரிந் தனவா? திருத்தமாகவா?

உபந்யாசகர்:- முட்டாளே! அசல் உலகங்கள்! உலகத்தில் உள்ள ஒன்று விடாமல் தெரிந்தன என்று தாய் ஆச்சரியப்பட்டாள்.

மற்றொரு வேண்டுகோள்:- அய்யா! உபந்நியா சகரே! இந்தக் கடிதத்தை அந்த அம்மாவிடம் கொடுத்து, தயவு செய்து (வாய்க்குள் தெரிவதால்) சுலபமாய்ச் சென்னை - பாரிஸ் வெங்கடாசல அய்யர் வீதி நெ.17 வீட்டின் குறட்டில் போட்டு விடச் சொன்னால் போதும் அவசரமான லெட்டர். ஸ்டாம்பு வாங்கக் காசில்லை.

-புரட்சிக் கவிஞர், (பாரதிதாசன் கதை: 100

தமிழ் ஓவியா said...


அப்பா, ஒரு சந்தேகம்!


மகன்: ராஜகோபுரத்தின் முன்னே தீ அணைப்பு மோட்டார் நிறுத்தி வைத்திருக்கிறார்களே எதற்கு?

தகப்பனார்: தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பதற்கு.

மகன்: சாமி நெருப்பு பிடிக் காமல் பார்த்துக் கொள்ளாதா?

தகப்பனார்: (மகனை முறைத்து பார்க்கிறார்.)

மகன்: (பயந்து கொண்டு) அப்பா.

தகப்பனார்: என்னடா?

மகன்: என் மேலே கோவிக்காமல் சொல்லுப்பா.

தகப்பனார்: சரி என்னத்தை கேக்கப்போற?

மகன்: சாமி தூக்கி வரும்போது பக்கத்திலேயே ஏராளமான போலீஸ்காரர்கள் சூழ்ந்து கொண்டு வருகிறார்களே எதுக்கப்பா?

தகப்பனார்: அட, இது தெரியலியே உனக்கு! சாமிக்கு போட்டு வைத்திருக்கிற தங்கம், வைரம், இவைகளைக் கொண்டு செய்த விலை மதிப்பு போட முடியாத நகைகளை திருடர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு போகாமல் பாதுகாத்துக் கொள்ள வரு கிறார்கள்.

மகன்: சாமியே பார்த்துக் கொள்ளாதா அப்பா?

தகப்பனார்: சரி, சரி நீ வீட்டுக்கு வாடா உன் தோலை உரித்துவிட்டு மறு வேலை பார்க்கிறேன்.

- வி.வாசுதேவன், திருவொற்றியூர், சென்னை.

தமிழ் ஓவியா said...


குறும்பா


தேள் கொட்டினால்
விஷம் தீண்டினால்..
கோயிலுக்கா போகிறார்கள்?
கடவுளையா வேண்டுகிறார்கள்?
ஆஸ்பத்திரிக்குப் போகிறார்கள்
டாக்டரை அணுகுகிறார்கள்!
இதைத்தான் சொன்னார்
பெரியார்!
கடவுளை மற
மனிதனை நினை என்று!!

- கோ.கலியபெருமாள்,
மன்னார்குடி

தமிழ் ஓவியா said...


சொல்லும் அதில் புதைந்துள்ள கதையும்-மு.வி.சோமசுந்தரம்

கோர்டியன் முடுச்சி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடக்கூடிய சொல்லின் தோற்றக் கதையும் விளக்கத்தையும் காணுவோம்.

கிரேக்க பழமை இலக்கியத்துடன் தொடர்பு கொண்டது. இந்த சொல், கோர்டியஸ் ஒரு குடியானவர். அவன் பிறகு பிரிகியா என்ற நாட்டின் அரசனாவதற்கு முன்னதாக, தன்னுடைய வண்டி யில் நுகத்தடியில் காளை மாட்டை சிக்கலான முடிச்சை பயன்படுத்தி பூட்டினான். அவன் அந்த வண்டியை குறி சொல்லும் கிரேக்கக் கடவுள் சீயஸ் 99 தலத்தில் காணிக்கையாக செலுத்தினான். சீயஸ். யார் இந்த நுகத்தடி முடிச்சை அவிழ்க்கிறார்களோ அவர் ஆசியாவின் அரசனாவார். என்று குறி சொல்லியது. பலர் முயற்சித்தனர். தோல்வியே கண்டனர். அலெக்ஸாண்டர் கோர்டியான் பகுதிக்கு வந்தபோது, சீயஸின் விசித்திரமான குறியைப் பற்றி கேள்வி பட்டு, சீயஸ் கோயில் தலத்துக்குச் சென் றான். சிக்கல் முடிச்சை அவிழ்ப்பதற்குப் பதிலாக, தன்னுடைய வாளை எடுத்து அந்த முடிச்சை வெட்டினான். தொடர்ந்த படையெடுப்பின் மூலம் ஆசியாவின் பேரரசனானான்.

இந்த சொல்லானது, சிக்கலான ஒரு பிரச்சினைக்கு, சாதுரியமான தீர்வை கையாளுவதைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. அதாவது விரைவாகவும் துணிச் சலுடனும் செயல்படுவதைக் குறிக்கும்.

எடுத்துக்காட்டாக நிர்வாகத்தில் சிக்கலும் சச்சரவையும் ஏற்படுத்தும் ஊழி யர்களை நிர்வாகத் தலைவர் அவர்கள் அனை வரையும் வேலையைவிட்டு நீக்கினார்.

(நன்றி: தி இந்து, Know Your English)

தமிழ் ஓவியா said...

தனிக்கட்டையின் தவிப்பு

- வச்சலா சோமசுந்தரம்

கேரி வாக்கியருக்கு மன உளைச் சல் பணி மனையிலும் சங்கடமான சூழ்நிலை நாள் முழுவதும் அலு வலகத்தில் தனி ஆணாக 120 பெண் களுடன் இயங்கும் அலுவலகத்தில் செயல்பட வேண்டிய கட்டாய நிலையில் கேரி வாக்கியர் இருந்தார்.

கேரி வாக்கியர் ஆறடி உயரத் தினராக எழிலான தோற்றத்துடன், தலைமை அஞ்சலகத்தில் கணக்கு பிரிவில் பணியாற்றும் பிரம்மச்சாரி வயது 18 தான், பணி செய்யும் பெண்கள் அவரைத் தொல்லையின் எல்லைக்கே தள்ளிவிட்டனர். அலுவலகத் தொழிற்சங்கத்தில், தன்னை வேறு அறைக்கு மாற்றம் செய்யும்படி வேண்டுகிறார் பணித் தொல்லை என்பதைக் காரணமாக மனுவில் குறிப்பிட்டார்.

என்னைத் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். நான் பெண்களைப் போற்றுகிறேன், என்று சமாதானம் வேறு கூறினார். 120-க்கிடையில் ஒன்று இருப்பது அச்சப்பட வேண்டிய ஒன்று தானே நாள் முழுவதும் அலுவலகத்தில் உப்பு சப்பற்ற பேச்சு, சிரிப்பு சத்தம் எங்கும் நறுமணம் கவ்வியிருக்கும். சங்கடமும், சித்தரவதையும் தாங்க முடியவில்லை. ஆனாலும் கேரி சகித்துக்கொண்டுதான் இருக்க வேண்டும். ஏன்? மாற்றம் கேட்டு விண்ணப்பித்த கேரியின் மனு ஏற்கப்படவில்லை.

(நன்றி: தி இந்து 3.4.2013 - 50 ஆண்டுகளுக்கு முன் பகுதி செய்தி)

தமிழ் ஓவியா said...


காய்கறியில் என்ன இருக்கு?

வாழைத் தண்டு: கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்கள், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளன. இது சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருந்தால் கரைக்க உதவும்.

வாழைப்பூ: கால்சியம், பாஸ்பரஸ், புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி உள்ளன. மலச்சிக்கலை போக்க உதவும்.
வாழைக்காய்: இரும்புச் சத்து, போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. கருவுற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகையைத் தடுக்க உதவும்.

பீட்ரூட்: இதில் துத்தநாகம், கால்சியம், சோடியம், பொட்டாசியம் ஆகியவை உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும். உடல் வளர்ச்சிக்கு ஏற்றது.
உருளைக்கிழங்கு: இதில் மாவுச் சத்து அதிகமாக உள்ளது. வைட்டமின் ஏ, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.
பாகற்காய்: இந்த காயில் வைட்ட மின் சி, ஏ, பி, பாஸ்பரஸ், கால்சியம் உள்ளன. இந்த காயை சாப்பிடுவதன் மூலம் பசி அதிகரிக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.

கேரட்: இதில் வைட்டமின் ஏ அதிக மாக உள்ளது. குழந்தைகளின் உணவில் அதிகமாக சேர்த்தால், பிற்காலத்தில் பார்வை கோளாறு எதுவும் வராது. மாலைக்கண் நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.

கத்தரிக்காய்: பாஸ்பரஸ், போலிக் ஆசிட், வைட்டமின் பி, சி உள்ளன. ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வெண்டைக்காய்: போலிக் ஆசிட், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளது. மூளை வளர்ச்சிக்கு உதவும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும். தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கில் புலி ஆகலாம்.

பீன்ஸ்: புரதச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

புடலங்காய்: வைட்டமின் ஏ, பி, இரும்புச் சத்து, தாமிரம், கால்சியம் உள்ளன. எலும்பு உறுதிக்கு இதை சாப்பிடலாம்.

அவரைக்காய்: புரதச்சத்து, நார்ச் சத்து உள்ளன, உடல் வளர்ச்சி பெறும், மலச்சிக்கலை போக்கும்.

முருங்கைக்காய்: வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளன. ஆண்களுக்கு விந்து அதிகரிக்க உதவும், பெண்களுக்கு உதிரப் போக்கை கட்டுப்படுத்தும்.

வெங்காயம்: இரும்புச்சத்து, கால் சியம் உள்ளன. தினமும் சாப்பாட்டில் வெங்காயம் சேர்த்தால், உடல் கொழுப்பை கரைக்க உதவும்.

சுண்டைக்காய்: புரதச்சத்து, இரும் புச்சத்து, வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன. எலும்புகளுக்கு வலு சேர்க் கவும், ரத்தசோகை வராமல் தடுக்கவும் உதவும்.

கருணைக் கிழங்கு: கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி ஆகியவை உள்ளன. இதை சாப்பிட்டால், உடல் வளர்ச்சிக்கு நல்லது. மூல நோய் வரா மல் தடுக்கவும், மூலத்தை கட்டுப் படுத்தவும் உதவும்.

தக்காளி: வைட்டமின், ஏ, பி, சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. உடல் உறுதிக்கும், ரத்தவிருத்திக்கும் உதவும்.

தமிழ் ஓவியா said...


பிராமணன் என்றால்...


பிராமணன் என்றால் ஆங்கில அகராதியில் இந்துக்களில் உயர்ந்த ஜாதியான் என்று போட்டிருக்கிறது.

தமிழ் அகராதிகளில் பிராமணன் என்றால் பார்ப்பான் என்றும்,
புரோகிதன் என்றும்,
முதல் ஜாதியான் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

இந்து மத ஆதாரங்களில் சிரேஷ்டமானவர்கள் என்றும்,

கடவுள் முகத்தில் தோன்றியவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, அவர்களுக்குப் பல உயர்வும், மற்றவர்களுக்கு இல்லாத தனி உரிமையும் அளிக்கப்பட்டிருக்கின்றன.

உழைப்பாளிகளையும், சேமிப்பு ஆட்களையும் ஏய்த்துச் சுருண்டுவதுதான் இவர்களது வாழ்க்கைத் தருமம்.

(குடிஅரசு தொகுதி 35 பக்கம் 88).

தமிழ் ஓவியா said...


அவனும் நீயும் (தமிழ் அடிமை)


பார்ப்பானைப் பார்த்து, நீ ஏன் பொறாமைப் படுகிறாய்.

அவன் கட்டுப்பாடான சமூகத்தைச் சேர்ந்தவன். நீ கட்டுப்பாட்டை வெறுக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவன். அவன் கட்டுப்பாட்டுக்கு உழைப்பவன்.
நீ கட்டுப்பாட்டை உடைப்பதற்குக் கூலி வாங்குபவன். அவன் இன நலத்தைப் பார்ப்பவன் நீ சுயநலத்தைப் பார்ப்பவன். அவன் மதத்தில் அவன் ஜாதி உயர்வு. உன் மதத்தில் உன் ஜாதி தாழ்வு.

- க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


நாவலர் பாரதியார்


..என்னுடைய 14 வயதிலே எனக்கு கல் யாணம் நடந்தபோது நேரிட் டதைச் சொல்கிறேன். எட்டையபுர சமஸ்தானத் தில் ஓர் கிராமத்திலே, நாகரிக உணர்ச்சி பரவ முடியாத ஊரிலே எனக்குக் கல்யாணம். நான் வைதீக உணர்ச்சி உள்ளவன். நல்ல சைவன். இப்போது இருக் கும்சைவம் போன்றதல்ல. என்னுடைய சிவ நெறி வேறு. இன்று சைவப் பண் டிதர்கள் கூறும் சைவம் நான் கொள்வதல்ல. உண் மையே எனக்குச் சிவம். எனக்குக் கல்யாணம் பார்ப்பனரை வைத்துச் செய்வதாக கூறினார்கள். அப்படிப்பட்ட கலியாணம் எனக்கு வேண்டாம் என் றேன். சைவ ஆகமங்களின் படி பார்ப்பனர்களைச் சண்டாளர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. கோயில்களிலே அவர்கள் துவஜஸ்தம்பத்துக்கு அப்புறம் நுழையக்கூடாது. வந்தால் தீட்டாகி விடும் என்று ஆகமம் கூறுவதால், அப்படிப்பட்ட சண்டாளர் களைக் கொண்டு நான் கலியாணம் செய்து கொள்ள மாட்டேன் என்றேன். என் குடும்பத்தார் திருநெல் வேலிக்கும், மதுரைக்கும் போய் பண்டிதர்களைக் கேட்டார்கள். திருநெல் வேலி பண்டிதர்கள்கூட சரியாகச் சொல்லவில்லை. மதுரையிலிருந்த பண்டிதர் கள் பையன் சொல்லுவது உண்மைதான். ஆகமம் அப்படித்தான் கூறுகிறது என்று சொன்னார்கள்.

- நாவலர் சோமசுந்தர பாரதியார்

(நாவலர் பாரதியார் - அறிஞர் அண்ணா இராமா யணச் சொற்போர் 14.3.1948 - சேலம். நூல்: தீ பரவட்டும் - பக்கம் 52).

நாவலர் பாரதியாரின் இந்தக் கருத்தை இன்று நினைவூட்டுவதற்குக் காரணம் - அவரின் பிறந்த நாள் (1876) இந்நாள்!

பார்ப்பனர்கள் தான் சகலமும் கற்றவர்கள்; அவர்கள்தான் கோயில் கருவறைகளுக்குள் செல்லும் தகுதி பிறப்பின் அடிப்படையில் பெற்ற வர்கள் என்று அரட்டை அடிக்கிறார்கள் அல்லவா!

அது எத்தகைய பொய் மூட்டை என்பதை அவிழ்த் துக் கொட்டுவதற்குத்தான் நாவலர் அவர்களை இங்கு அழைத்துள்ளோம்.

கோயில்களில் பார்ப் பனர்கள் துவஜஸ்தம்பத் துக்கு அப்புறம் நுழையக் கூடாது என்று சொல்லு பவர் சாதாரணமான வரல்லர்; மெத்த படித்தவர் - பன்மொழி அறிந்தவர் -சைவ மெய்யன்பர் என் பதை நினைவூட்டுகிறோம்.

1938இல் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங் கியபோது தோன்றாத் துணையாக நின்ற அந்தப் பெரு மகனாரை இந்நாளில் நன்றி உணர்வுடன் நினைவு கூர்வோம்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆர்ப்பாட்டம்!


அனைத்துத் தரப்புகளிலிருந்தும், பேராதரவு குவிகிறது
இடையில் நான்கே நாட்கள் விரைந்து செயல்படுவீர்!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

தமிழர் தலைவரின் எழுச்சிமிகு அறிக்கைஆகஸ்டு முதல் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட் டமான, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆர்ப்பாட் டத்திற்கு இடையில், இன்னும் நான்கு நாட்களே உள்ளன; அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் ஆர்ப்பாட் டம் வெற்றிகரமாக நடைபெற கழகத் தோழர்கள் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினர்களே!

அனைவருக்கும் அன்பு வணக்கம். ஆகஸ்ட் 1 ஆம் தேதி நெருங்கி விட்டது!

இன்னும் நான்கே நாள்கள்தான்!

நாடெங்கும் அடைமழைப் பிரச்சாரங்கள்!

இந்த இடைவெளி நாள்களில்தான் கழகப் பொறுப்பாளர்கள் ஜாதி தீண்டாமை, ஒழிப்புக்கான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் - சட்டத்தை சரியான முறை யில் செயல்படுத்த, நமது கழகம் அறிவித்த முதல் கட்டப் போராட்டமான அறப் போராட்டத்தைச் சிறப்பாக நடத்திட நாடெங்கும் அடைமழைப் பிரச்சாரங்கள் மிகச் சிறப்பாக - தெரு முனைப் பிரச்சாரம் தொடங்கி, பொதுக் கூட்டங்கள், கருத் தரங்குகள், வட்டார மாநாடுகள் என்று பல முனைகளிலும் மிக எழுச்சியோடு நடைபெற்று வருகின்றன!
இந்தப் போராட்டத்தை விளக்கி, நமது இயக்கம் வெளியிட்டுள்ள அறப்போர் விளக்க ஆவணம் போன்ற கையேடு - நூல் - இதுவரை லட்சம் படிகளுக்கு மேல் பரப்பப்பட்டுள்ளது!

துண்டறிக்கைகள் விநியோகமோ, பல லட்சக் கணக்கில்!!

ஜாதி மோதல்கள் - தீண்டாமையை இன்னமும் ஆழ் மனதில் வைத்துக் கொண்டு ஒப்புக்கு சப்பாணி! யாக இருக்கும் பலருக்கும் நமது அறப்போர் நல்லதோர் விளக்கத்தை அளித்துள்ளது!

எந்த விலையும் கொடுப்போம்!

கடந்த 43 ஆண்டுகளுக்குமேல் இந்தப் பிரச்சினையில் நமது இயக்கம் - ஜாதி - தீண்டாமை ஒழிப்பு என்பது நமது உயிர் மூச்சுக் கொள்கை; ஆனபடியால் உறுதியாக நின்று வென்றே தீருவது என்ற திடசித்தத்துடன், எந்த விலையையும் கொடுக்கத் தயார் என்று நாளும் பாடுபட்டு களங்காண, களைப்பின்றிக் கடமையாற்றி வருகிறோம்!

தீர்ப்புகளும், நீதிபதிகளின் பரிந்துரைகளும்

(அ) இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புக் கள் ஆதி திராவிடர் உட்பட அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனம் சட்டப்படி சரி என்றுதான் கூறி, இதன் நியாயத் தையும், தேவையையும் ஏற்றிருக்கின்றன.

(ஆ) இரண்டு முறை இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் இந்து அறநிலையத்துறை அறிஞர்களைக் கொண்டு குழுக்கள் - முறையே எம்.ஜி.ஆர். கலைஞர் ஆகியவர்களின் தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க., தி.மு.க. அரசுகளால் நியமிக்கப்பட்டு (ஜஸ்டீஸ் மகாராசன் குழு) அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்து ஜாதி அர்ச்சகர்கள், ஆகமப் பயிற்சியை தக்க முறையில் பெற்று - தயார் நிலையில் இப்போது உள்ளனர்!

ஜஸ்டீஸ் திரு. ஏ.கே. ராஜன் அவர் களின் தலைமையிலும், தி.மு.க. ஆட்சி காலத்தில் குழு அமைக்கப்பட்டு உரிய பரிந்துரைகள் பெறப்பட்டன.
மூன்று முதல் அமைச்சர்களின் ஆதரவு!

(இ) மூன்று முதல் அமைச்சர்கள்,
மாண்புமிகு கலைஞர்,
மாண்புமிகு எம்.ஜி.ஆர்.,
மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா,
ஆகியோர்தம் ஆட்சியில் தமிழக சட்டமன்றத்திலேயே உறுதி அளிக்கப்பட்டு சட்டங்கள் வந்தன!

தமிழ் ஓவியா said...

இன்றைய உச்சநீதிமன்ற குறுக்கீடுகள் தற்காலிகத் தடைதான்.

பயிற்சி பெற்றவர்கள் தயார்!

தமிழக அரசு, அது ஏற்கெனவே தந்த உறுதிப்படி, 69 சதவிகித அடிப்படையில் தேர்வு செய்து, ஆகமங்களில் உரிய பயிற்சியைப் பெற்று விட்டு, வைணவ, சிவன் கோயில்களில் தற்போதுள்ள ஆகமம் அறியாத அர்ச்சகர்கள் போல் இன்றி, அப்பாடத் திட்டத்தை முறையாக கற்று, வெற்றி பெற்று பட்டயச் சான்றையும் பெற்றவர்களை நியமிப்பதற்கு எந்த மறுப்பும் சட்டப்படியும், நியாயப்படியும் இருக்கவே முடியாது!

இப்போதைய பார்ப்பனீயத்தின் கடைசி முயற்சி, அது ஒருக்காலும் வெற்றி பெற முடியாது. தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் பேராதரவு!

இச்சட்டத்தை தந்தை பெரியார் தம் பெரு விருப்பப்படி இயற்றி, ஒருமுறை அல்ல, இரண்டு முறை ஆட்சியில் இருந்தபோது செயல்படுத்த அத்துணை சட்டத் தேவைகளையும் நிறைவேற்றிய நமது தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், அண்ணா சொன்ன இரட்டைக் குழலாக இரு கழகங் களும் (தி.க.; தி.மு.க.) இயங்குகின்றன என்பதை நாட்டிற்கு அறிவிக்கும் வண்ணம், இந்த அறப் போராட்டத்தில் தி.மு.க. கலந்து கொள்ளும் என்று அறி வித்துள்ளார்கள்; அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அருமையான ஒத் துழைப்பை நல்கி, ஒருங்கிணைப்புப் பணிக்கு உறுதுணையாகி களங்காண ஆயத்தமாகியுள்ளனர் இது நமக்குப் பெருமித உணர்வை உண்டாக்கியுள்ளது.

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் ஆதரவு

அதுபோலவே எப்போதும் நம்முடன் ஒன்றியுள்ள பிரிக்க இயலாத சகோதர பாச உணர்வு பொங்கும் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்களும், அந்த இயக்கமும் முதல் தேதி அறப்போரில் பங்கேற்கும் என்று அறி வித்து, அவர்தம் தோழர்களை ஆயத்தப் படுத்தி வருகிறார்கள்.

பக்தர்கள் ஆதரவு

இதில் ஒரு தனிச்சிறப்பு - பக்தர்கள் பலரும் நமது போராட்டத்திற்குப் பரவ சத்துடன் ஆதரவு தந்து கைகோக்க முனைந்துள்ளார்கள்!
எங்கெங்கும் உற்சாகப் பெரு, வாழ்வு! உணர்ச்சிக் கொப்பளிப்பு!!

ஆயத்தமாவீர் ஆயத்தமாவீர்!!

அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!!

இப்படை தோற்கின்

எப்படை வெல்லும்?

எவர் ஒத்த கருத்துடன் நம்மோடு கைகோக்க முனைந்தாலும் இருகரம் நீட்டி வரவேற்போம்.
காரணம், இது ஒரு கட்சிப் போராட்டம் அல்ல!

இது ஒரு இன இழிவு ஒழிப்புப் போராட்டம்!

மாபெரும் மனித உரிமைக்காகப் போராடும் மனிதநேயப் போராட்டம்!
எனவே அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
27.7.2013

தமிழ் ஓவியா said...


ஆன்மீகவாதிகளிடமிருந்தும் ஆதரவு!


அன்புள்ள அய்யா கி. வீரமணி அவர் களுக்கு,

தாங்கள், அடுத்த மாதத் தொடக் கத்தில் (ஆகஸ்டு ஒன்றில்); எல்லாச் ஜாதியினரும், அர்ச்சகர் ஆகலாம் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக போராட்டம் நிகழ்த்த இருப்பதாகப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன். நல்லதொரு கொள்கைப் போராட் டம்; நிகழ்த்த வேண்டியதே; வெற்றி பெற என் நல் வாழ்த்துக்கள்.

அக்கொள்கைப் போராட்டத்தில், கலந்து கொள்ளவும் - கருத்துக் கூற வும்; எல்லாத் தகுதியும் உடையவன் - நான்!

தாங்கள் விரும் பினால் - நேரில் சந்திக்கவும் - கலந்து கொள்ளவும் - தயாராய் உள் ளேன். பிற - பின்பு - பதில் பார்த்து!.

எல்லாம் வல்ல சொக்க நாயகி உடனுறை சொக்க நாதப் பெருமான்; தங்களுக்கு எல்லா நலமும் அருள்வானாகுக!!

தங்கள்,

அலங்கை வே. அன்பரசவேள் பி.ஏ.,

(ஆன்மீகச் சொற்பொழிவாளர் அலங்காநல்லூர் , மதுரை)

தமிழ் ஓவியா said...


பீடை!மகன்: ஆடி மாதம் தெய்வீக மாதம் என் றும் 12 மாதங்களில் அதுதான் சிறந்தது என்றும் தினமணி கூறுகிறதே அப்பா!

அப்பா: அப்படியா! ஆடி மாதம் பீடை மாதம் என்றும் அம்மாதங்களில் கல்யாணங்கள் செய் யக் கூடாது என்று சொல்லுவதும் இவர் களின் மதம் தானே மகனே!

தமிழ் ஓவியா said...


இடையில் நான்கே நாட்களே!

எந்த மதத்திலும் இல்லாத பெருங்கொடுமை இந்து மதத்தில்தான் இருக்கிறது. ஒரே மதத்தைச் சேர்ந்திருந்தாலும் தங்களைத் தவிர வேறு யாரும் அர்ச்சகர் ஆக முடியாது என்று அடம் பிடிக்கின்றனர் பார்ப்பனர்கள்.

அரசு சட்டம் போட்டாலும், பார்ப்பனர்களுக் குள்ள வசதிகள் வாய்ப்புகள் காரணமாக உச்சநீதிமன்றம் வரை சென்று காரியங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள்.

கோயிலுக்குள் அர்ச்சகராக அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காக திராவிடர் கழகம் கொடி பிடிப்பது - ஏதோ மிகப் பெரிய உத்தியோகம் என்ற எண்ணத்தால் அல்ல.

பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகர் ஆகக் கூடாது என்பதற்குச் சொல்லப்படும் காரணம் தான்; இவர்கள் சூத்திரர்கள் - இவர்கள் கருவறைக்குள் நுழைந்தால் சாமி தீட்டுப்பட்டு விடும் - தோஷம் ஏற்பட்டு விடும்; அதனைத் தொடர்ந்து பிராயச் சித்தங்கள் செய்யப்பட வேண்டும் - தீட்டுக் கழிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்களே. இந்த இழிவைத் துடைப்பது தான் இந்தப் போராட்டத்தின் நோக்கம். இது ஒரு மனித உரிமைப் போராட்டம்!

எனவே தோழர்களே! எழுமின்! எழுமின்!! ஆகஸ்டு முதல் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் 60 முக்கிய இடங்களில் அறவழி ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம். இழிவைத் துடைத்தெறியும் இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து இடங்களிலும் வெகு மக்கள் இயக்கமாக நடைபெற வேண்டும்; பொது மக்களுக்கு விளக்கித் துண்டு அறிக்கைகள், சுவர் எழுத்துகள், பதாகைகள், தெருமுனைக் கூட்டங்கள் மூலம் பிரச்சாரம்! பிரச்சாரம்!! நடக்கட்டும்! நடக்கட்டும்!!

பக்தி நம்பிக்கையுள்ள நம் தமிழர்கள்கூட இன்னும் புரியாத நிலையில் இருக்கக்கூடும். அவர்கள் புரிந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க ஆர்வமுடன் முனைந்து வரும் அளவுக்கு நமது பிரச்சாரம் கடைகோடிக்குப் போய்ச் சேர்ந்திட வேண்டும்.

தி.மு.க. தோழர்களும், விடுதலைச் சிறுத்தைக் கட்சித் தோழர்களும் எல்லா மய்யங்களிலும் பங்கேற்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள். முறைப்படி நீங்களும் தொடர்பு கொள்ளுங்கள்.

இடையில் இன்னும் நான்கு நாட்களே உள்ளன. சுறுசுறுப்பாக விறுவிறுப்பாகப் பணியாற்றுங்கள். பொது மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும் அளவுக்குத் தகவல்கள் போய்ச் சேர வேண்டும்.

சந்திக்கும் தோழர்களிடத்தில் எல்லாம் வாய்ப்புக் கேற்ற வகையில் நாம் நடத்தவுள்ள போராட்டத்தின் நோக்கத்தை எடுத்துச் சொல் லுங்கள். இரயிலில், பேருந்தில், ஆட்டோக்களில் பயணம் செய்யும் பொழுதுகூட, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் சென்ற இடத்தில் கூட இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று பக்குவமாகப் போராட்டத்தின் நோக்கத்தை எடுத்துக் கூறுங்கள்.

உங்கள் பகுதியில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர் இருந்தால் அவர்களுடனும் தொடர்பு கொண்டு, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புக் கொடுங்கள். ஒட்டு மொத்தமான தமிழர்களின் இழிவு ஒழிக்கும் போராட்டம் இது.

உங்களைச் சூத்திரர்களாக விட்டு விட்டுப் போகிறேனே என்று தந்தை பெரியார் தெரிவித் ததை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். மின்சாரம் உடலில் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்படும்; ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட்டம் தொடக்கம்தான். அடுத்தடுத்து பல கட்டங் களில் பல வடிவங்களில் போராட இருக்கிறோம். இந்தப் பிரச்சினையில் முடிவு எட்டப்படும் வரை நாம் ஓயப் போவதில்லை.

கழகத் தோழர்களின் வீட்டில் உள்ள அனைத்து மக்களும் (பெரியார் பிஞ்சுகள் உட்பட) ஆர்ப்பாட்டக் களத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
என்ன சரிதானே?

பணி முடிப்போம் - பெரியார் பணி முடிப்போம்!

பணி முடிப்போம்!!

தமிழ் ஓவியா said...


தொடர்பு


மதம் மதத்தைச் சேர்ந்த வர்களிடம்தான் தொடர்பு கொண் டிருக்கிறது. பகுத்தறிவு மனிதச் சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொள்கிறது. (விடுதலை, 14.10.1971)

தமிழ் ஓவியா said...

நெல்லையில் தமிழகத்தின் மாபெரும் ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா - மன்றல் 2013


என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை ஏந்தவேண் டும் வெளிநாட்டில் என்ற இந்த தத்துவ பாடல் வரிகளுக்கு முற்றி லும் பொருத்தமான நாடு நம் தமிழ் நாடு. இதே நேரத்தில் தமிழ்நாட்டில் மாவட்டவாரியாக பார்க்கும் போது அனைத்து வளங்களும் ஒருங்கே காணப்படுவது திருநெல்வேலி மாவட்டமாகும், இன்றும் தமிழ கத்தில் ஒரு வழக்கு மொழி உண்டு மூவகைத்தொழில் முனை வோர்(மீன்பிடி, உழவு, வேடர்) திரு நெல்வேலிக்கு சென்றால் சிறப்பாக வாழ்வார்கள் என்பதுதான்

இந்த வழக்குமொழிக்கேற்ப திரு நெல்வேலியின் கிழக்கே கடற்கரை, மத்தியில் செழிப்பான தாமிரபரணி பாயும் வண்டல் வளம் மிகுந்த மண், மேற்கே உலகின் மிகவும் அபூர்வ வகை மூலிகை மரங்கள், குரங்கி னங்கள் மற்றும் தென்னிந்தியாவின் புலிகள் சரணாலயம் கொண்ட மேற்குத்தொடர்ச்சி மலை, என செழிப்புடன் இருப்பதால் தான் ஒருகாலத்தில் திருநல்வாழி என அழைப்பட்ட ஊர் மருவி திருநெல் வேலியாக மாறியிருக்க கூடுமோ என்ற அய்யம் இன்றும் தமிழார் வலர்களுக்கு உள்ளது. திருநெல் வேலியைப் பொருத்தவரை பெரும் பாலும் அனைத்துத் தரப்பு மக்களும் கடின உழைப்பாளிகள் மேலும் இம்மாவட்டத்தைச்சேர்ந்த பெண்கள் குடும்ப நிர்வாகத்திலும் நிதிதிட்டமிடுதலிலும் சிறந்து விளங்குகின்றனர் என்பது பொது வான கருத்து. பொதுவாக இந்தியா முழுவதும் நடுத்தர வர்க்கப்பெண் கள் தங்களின் குடும்ப வருமானத்தை திட்டமிட்டு செலவு செய்வதில் வல்லமைபெற்றவர்கள் தான். ஆனால் திருநெல்வேலி மாவட்ட பெண்களைப்பொறுத்தவரை இந்த மாவட்டத்தில் தொடர்ந்து திடீர் ஏற்ற இறக்கங்களை காணும் பொருளாதாரச்சூழலில் குடும்பத் தை தகுந்தவாறு நிர்வாகிக்க திட்ட மிடுதல் என்பதை வாழ்க்கையின் முக்கிய அங்கமாக ஆக்கிக்கொண் டார்கள். இந்த மாவட்டத்தின் பொருளாதார சங்கிலிப்பிணைப்பு அனைத்து கிராமம் மற்றும் நகரங் களை இணைக்கிறது.

தமிழ் ஓவியா said...

ஆனால் இந்த பொருளாதார சூழல் தொடர் நிகழ்வல்ல சில மாதங்கள் வணிகம் தொய்வடைந்து இருக்கும் போது சேமிப்பை வைத்து வாழ்க்கையை கழிக்கவேண்டிய சூழலில் நீண்ட காலம் வாழ்ந்து விட்டமையால் நிதி மேலாண்மை யும் திருநெல்வேலிமாவட்ட பெண் களுக்கு கைவந்த கலையாயிற்று. 1400-களின் இறுதியில் கேரளத்தின் கரையில் இறங்கிய போர்ச்சுகீசி யர்கள் கோவாவை நோக்கி ஆதிக் கத்தின் கவனம் செலுத்தினாலும் அவர்களுடன் வந்த ரோமன் கத் தோலிக்க பாதிரியார்கள் கல்வி தொடர்பான சேவைகளை தென் தமிழகத்தில் துவங்கினார்கள், இந்தியாவிலேயே பெண்கள் மட்டுமே படிக்கும் கல்விச் சாலை 1887ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாசரேத்தில் துவங்கப் பட்டது, அதே போல் பெண்கள் தங்கி படிக்க விடுதியுடன் கூடிய பள்ளிக்கூடமும் 1897ஆம் ஆண்டு நாரைக்கிணறு என்னும் ஊரில் துவங்கப்பட்டது.(தற்போது இரண்டு ஊர்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது) சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கான கல்விச்சாலைகள் அதிகம் உள்ள மாவட்டமும் திருநெல்வேலிதான் என்பது வரலாற்றுச்சிறப்பு.
சமயவிதிகளை புறந்தள்ளிய பெண்கள் 10ஆம் நூற்றாண்டிற்கு பிறகு இந்தியா முழுவதுமே சமயவிதி களின் தாக்கம் காரணமாக பெண் கள் பணிக்கு செல்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டு ஒரு சாரர் வருமானத்தை மாத்திரமே சார்ந்து இருக்கவேண்டிய சூழல். மேல் மட்ட மக்களின் வாழ்க்கையில் பொருளாதார சிக்கல் சமாளிக்கத் தகுந்த நிலையில் இருந்தது ஆனால் நடுத்தரமக்களின் வாழ்க்கை சமய விதிகளின் காரணமாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்ததுவங்கியது, பெண்கள் வீட்டில் முடங்கியதால் ஒரு சார்பு வருமானம் அதைக் கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழல், ஆனால் திருநெல் வேலி மக்களை சமயவிதிகள் அவ்வளவாக கட்டுப்படுத்தவில்லை என்றே கூற முடியும், முக்கியமாக பெண்கள் சுதந்திரத்தை எதிர்பார்த் தனர். சமய அழுத்தங்கள் 10ஆம் நூற்றாண்டில் முழுமையடைய துவங்கினாலும் அவை மெல்ல மெல்ல அடித்தள மக்கள் வரை சென்றடைய 300 நூற்றாண்டுகள் வரை ஆனது, இந்த காலகட்டத்தில் இஸ்லாம் மற்றும் கிருஸ்தவம் மெல்ல மெல்ல பரவிக்கொண்டு இருந்த காலம் இதனால் அடித்தள மக்கள் விரைவாக கிருஸ்தவத்தை ஏற்றுக்கொண்டனர், முக்கியமாக மீனவர் இந்தியாவின் கடற்கரைப் பகுதியில் வாழும் மீனவர்களின் பெரும்பாலானோர் கிருஸ்தமத் தைத் தழுவியவர்கள் காரணம் இந்து மதத்தில் கடல்சார்ந்த தொழில் செய்ய அனுமதி இல்லை, இதன் காரணமாக கடல்சார்ந்த தொழில் செய்த அனைவரும் மிகவும் விரை வாக கிருஸ்தவத்தை ஏற்றுக்கொண் டனர். இதன் துவக்கம் தென் இந்தியாவின் திருநெல்வேலியில் இருந்துதான் துவங்கியது. முத்தெடுக்கும் தொழில் சிறந்து விளங்கிய 18-ஆம் நூற்றாண்டுகள் வரை பெண்களும் முத்துகுளிக்க ஆழ்கடலிலிறங்கியதற்கான ஆதா ரங்கள் உள்ளன. மீனவப் பெண் களின் உழைப்பின் தாக்கம் சமவெளிப்பகுதிபெண்களிடமும் தொற்றிக்கொள்ள அவர்களும் தங்களுக்கு ஏற்ற பணிகளை செய்ய முன்வந்தனர், கணவரின் தொழிலில் தானும் இணைந்து பங்கேற்பது (பனைத்தொழில், விவசாயம், நெசவு) போன்றவை இம்மாவட்ட பெண் களிடம் இருந்து மெல்ல மெல்ல தமிழகம் முழுவதும் பரவியிருக் கலாம், இன்று பொருளாதார மேலாண்மை பட்டப்படிப்பில் பயிற்றுவிக்கப்படும் நிதிதிட்ட மிடல் அடித்தட்டு மக்களின் வாழ்க் கையில் இருந்து தான் பெற்றது, இதற்கு பெண்கள் தலையாய காரணமாக இருந்தனர். முக்கியமாக சமய இறுக்கங்கள் காரணமாக ஜாதிய முறைகள் எல்லா பகுதிகளிலும் பரவினாலும் இங்கு தொழிம் மற்றும் பொருளா தார போட்டிகாரணமாக திருநெல் வேலிமாவட்டம் சாதியத்தில் மிகவும் இறுக்கமான மாவட்டமாக மிகவும் விரைவாக மாறத் துவங் கியது, இதன் பாதிப்பு பெண் களிடம் காணப்பட்டது, திறமை கள் இருப்பினும் அதை சுதந்திரமாக பயன்படுத்த இயலாத நிலை திறமைகள் இருந்தும் அதை வெளி யே காட்டாத ஒரு சிறைவாழ்க்கை வாழும் சூழலில் கடந்த 300 ஆண்டுகள் கழிக்கவேண்டியதா யிருக்கு, இருப்பினும் தங்களின் உரிமைகளுக்காக நீண்டதொரு தொடர்போராட்டங்களை திருநெல்வேலிமாவட்டப்பெண்கள் கண்டுள்ளனர். முக்கியமாக சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாவட்ட மாநாடு 28.11.1927-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் தான் துவங்கியது. என்பது வரலாறு

தமிழ் ஓவியா said...

இந்த மாவட்டத் தின் மற்றொரு பெருமை இத்தகைய பெருமைகளை ஒருங்கே கொண்ட திருநெல்வேலியில் தந்தை பெரி யாரின் நீண்ட நாள் கனவான சுய மரியாதைத்திருமணம் என்ற அமைப்பின் மூலம் மக்கள் எல்லோ ரையும் சுயமாக சிந்திக்கவும் செயல் படவும் பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டி தன் வாழ்நாள் முழுவதும் உலகத்தில் எங்குமே கிடைக்கப்பெறாத சுயமரியாதை என்ற அனைத்து தரப்பு மக்களும் பெறவேண்டும் என்ற தாகத்தால் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். தனித்து இயங்குவதாலும் தகுந்த தளமின்றி இயங்குவதாலும் எந்த ஒரு போராட்டமும் வெற்றி பெறாது, இதை கருத்தில் கொண்டு தான் அறிவாசான் தந்தை பெரியார் திராவிட இனத்தை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கி தனது வாழ் நாளிலேயே அதில் வெற்றியும் கண்டார். மக்களை ஜாதிமதவேறுபாடு களுடன் இணைக்கும் போராட் டத்தை பெண்களிடம் இருந்து துவங்கவேண்டும் என்பது அவரது கருத்து, இதன் காரணமாகத்தான் அவர் ஆரம்பம் முதலே பெண் ணடிமையை உடைத்தெரியும் பணி யை தனது தலையாய கடமையாக கொண்டு பயணித்தார், அதில் சுயமரியாதைத்திருமணமும் ஒன்றாகும் தகுதியான சட்டவிதி களின் படி வயதுக்குவந்த ஆணும் பெண்ணும் தங்கள் எதிகாலத்தை நிர்ணயிக்க உரிமையுண்டு இதில் சமய சாம்பிராணிகள் ஜாதி சாக் கடைகளுக்கும் இடம் தரக்கூடாது, பெரியாரின் இந்த கருத்தை நினைவில் கொண்டு மன்றல் நிகழ்வு தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை என வெற்றிகரமாக நடந்த மன்றல் நிகழ்வு தற்போது நெல்லையிலும் வெற்றிகரமாக நடந்தேற உள்ளது. வளமான திரா விட சமுதாயம் காண முனைப் போடு களமிறங்கிய மன்றலின் பணியினை அனைத்து மக்களி டமும் கொண்டு சேர்க்கும் கடமை நம்முடையதே வாழ்க பெரியார்! வளர்க அவரது தொண்டு!

சரவணா இராசேந்திரன்

தமிழ் ஓவியா said...


கோயமுத்தூர் ஜில்லா தேர்தல்


கோயமுத்தூர் ஜில்லாவின் சார்பாக சென்னை சட்டசபைக்குப் பார்ப்பனரல்லாத அபேட்சகர்கள் மூன்று பேரும் பார்ப்பன அபேட்சகர் ஒருவரும் ஆக நான்கு அபேட் சகர்கள் நிற்கிறார்கள். இந்நான்கு கன வான்களும் பெயருக்கு மாத்திரம் தனித் தனிக் கட்சியைச் சேர்ந்ததாகச் சொல்லிக் கொண்டாலும் தத்துவத்தில் பார்ப்பனரல் லாத கட்சிக்கு மூன்று பேரும், பார்ப்பனக் கட்சிக்கு ஒருவருமாய் இருக் கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக, ஸ்ரீமான் அய்யங்கார் தேவதான மசோதா வையும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தையும் எதிர்ப்பதினாலும், ஸ்ரீமான் செட்டி யார் முதலானவர்கள் இவ்விரண்டையும் மனப்பூர்வமாய் ஆதரிப்பதினாலும் தெரிந் துக் கொள்ளலாம். நாம் இதற்கு முன் பல தடவைகளில் எழுதி வந்தது போலவே சட்டசபைகள் மூலம் குடிமக்களுக்கு எவ்வித அரசியல் நன்மையும் செய்ய முடியவே முடியாது என்பதை இப்பொழுதும் சொல்லுகிறோம். ஆனால் வேளாள குடி மக்கள் இந்நாட்டில் உள்ள மற்ற எல்லா மக்களைவிட உயர்ந்த தன்மை உடையவர் களாயிருந்தாலும் பார்ப்பன ஆதிக்கத்தில் சிக்கி விவகாரம் முதலியவைகளால் குடி கெடுவதையும் வைதீகச் சடங்குகளால் தாழ்த்தப்பட்டு அடிமைகளாவதிலிருந்தும் தப்புவிக்க உபயோகப்படுத்திக் கொள்ள லாம் என்று சொல்லுவோம்.

ஆனால் பல காரியங்கள் செய்திருப்ப தாய் ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்கார் போன்ற பல பார்ப்பனர்கள் பத்திரிகைகள் மூலமும் விளம்பரங்கள் மூலமும் பறையடிப்ப தெல்லாம் குடியான மக்களை ஏமாற்றச் செய்யும் வெறும் மோசடியே தவிர வே றில்லை. அதுபோலவே அதைப் பார்த்து பார்ப்பனரல்லாத அபேட்சகர்களும் குடி யானவர்களை ஏமாற்ற பார்ப்பனர்களைப் பின்பற்றி பொய் விளம்பரம் செய்ய வேண்டி ஏற்படுகிறது. உண்மையில் ஸ்ரீமான் வெங் கிட்டர மணய்யங்கார் போன்றவர்கள் வெளிப் படுத்தி இருக்கும் வேலைகளின் இரகசியங் களை அறிந்தால் அது ஸ்ரீமான் அய்யங் காரால் நடந்ததா? அல்லது ஸ்ரீமான்கள் டி.எ. இராமலிங்கம் செட்டியார், சி.எ. இரத்தினசபாபதி முதலியார் போன்ற வர்களின் பிரயத்தனத்தால் நடந்ததா என்பது நன்றாய் விளங்கும். ஸ்ரீமான் அய் யங்கார் விளம்பரம் செய்து கொள்வதில் அதிக ஆசை உள்ளவராகவும் அதைப்பற்றி பிறத்தியார் தன்னை எவ்வளவு கேவல மாகப் பேசினாலும் அதைக் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் எப்படியாவது சட்ட சபைக்குப் போனால் போதும் என்கிற கவலை உள்ளவருமானதால் எவ்வளவு தூரம் குடியானவர்களை ஏய்க்கலாமோ அவ்வளவு தூரம் விளம்பரப்படுத்திக் கொள்ளுகிறார்.

ஸ்ரீமான்கள் செட்டியாரும், முதலியாரும் தங்களைப் புத்திசாலிகள் கேவலமாய் நினைப்பார்களே என்று பயப்படுவதாலும் தற்புகழ்ச்சி செய்து கொள்ள வெட்கப் படுவதாலும் அவர்களின் உண்மையான பெருமைகளும் செய்த வேலைகளும் கூட வெளியாருக்குத் தெரிவதற்கிட மில்லாமல் இருக்கிறது. ஸ்ரீமான் வேணுவுடையாக் கவுண்டர் அவர்களுக்கு இதில் அனுபோகமில்லாத தாலும் அவரும் விளம்பரம் செய்து கொள்ள வெட்கப்படுவதாலும் அவரது நிலைமையும் சரிவர ஓட்டர்கள் உணர்வதற் கில்லாமல் இருக்கிறது. ஆதலால் பார்ப்பனரல்லாத ஓட்டர்கள் வெறும் விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல் பார்ப்பனரல்லாத அபேட்சகர்களையே ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். குறிப் பாய் இந்த ஜில்லா வேளாளக் கவுண்டர் கனவான்கள் எவ்வளவுக் கெவ்வளவு தங்களுடைய ஓட்டுகளைப் பார்ப்பன அபேட்சகருக்குக் கொடுக் கிறார்களோ அவ்வளவுக் கவ்வளவு தங்கள் வகுப்புத் தலைவராகிய ஸ்ரீமான் பட்டக்காரர் வேணு வுடையாக் கவுண்டர் அவர்கள் சட்ட சபைக்குத் தெரிந்தெடுக்கப்படுவதைக் கண்டிப்பாய் தடைபடுத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 17.10.1926

தமிழ் ஓவியா said...


ஸ்ரீமான் சீனிவாச சாதிரியார் கொல்லத் தெருவில் ஊசி விற்பனை


ஸ்ரீமான் சீனிவாச சாதிரியார் கொல்லத் தெருவில் ஊசி விற்பனை

மகா மகாகனம் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் வரப்போகும் தேர்தலில் பார்ப்பனர்களுக்கு வெற்றி கிடைப்பதற்காக ஊர் ஊராய் பிரசங்கம் செய்து வருகிறார். இந்த முறையில் கோய முத்தூருக்கும் வந்து மாணவர் சங்கத்திலும் வகுப்பு வாதத்தால் ஏற்படும் தீங்கு என்பதைப் பற்றி பேசியிருக்கிறார். வகுப்பு வாதத்திற்கு ஏற்பட்ட கட்சி தன்னை ஜனநாயக் கட்சியென் றும், தேசியக் கட்சி என்றும் சொல்லிக் கொள்வது தகாது என்றும், இதைப்போல் இந்திய ராஜீயத் துறையில் அதிகமாக கேட்டை விளைவிப்பது வேறெதுவுமில்லை என்றும் கூறுகிறார்.

இதில் எவ்வளவு புரட்டுகள் இருக்கின்றன என்பதை யோசியுங்கள். முதலாவது, ஸ்ரீமான் சாஸ்திரி இந்திய மக்களின் சார்பாக பேசுவதற்கே யோக் கியதை அற்றவர் என்பதே நமதபிப்பிராயம். அவர் நமது சர்க்காருக்கு உள் உளவாயிருந்து தனக்குப் பெரிய அந்தஸ்தும் பட்டமும் பதவியும் பெற்றுக் கொண்டு தன்னுடைய பிள்ளை குட்டிகளுக்கும் பெரிய பெரிய உத்தியோகத்தை வாங்கிக் கொண்டவர். அல்லாமலும், தேசத்திற்காகவும் ஜனநாயக தத்துவத்திற்காகவும் பாடுபட வந்த அவதார மூர்த்தி யாகிய மகாத்மா காந்தியை `அராஜகர் என்றும் அவரை சும்மா வைத்துக் கொண்டிருந் தால் ராஜ்யமே கெட்டுப் போய்விடும் என்றும், சர்க்காருக்கு உபதேசித்து அவரை ஜெயிலில் வைக்கச் சர்க்காருக்கு உதவியாயிருப்பதற்காக பதவி பெற்றவர். ஜனநாயக தத்துவ முறையை அடைவதற்காக பாரதமாதா முடிவு செய்து கொண்டு அதன் மக்கள் பதினாயிரக்கணக் கான பேரை ஜெயிலுக்குள் தள்ளிக் கொண் டிருக்கும் பொழுது வெள்ளைக்காரருக்கு அனுகூலமாய்ப் பேசிக் கொண்டும் மகாத்மாவை அடக்கினால் தான் இவ்வியக்கம் அடங்கு மென்றும் சொல்லிக்கொண்டு, தான் மேல்நாடு களில் உல்லாசப் பிரயாணம் செய்து வெள்ளைக் காரருடன் விருந்துண்டு கொண்டு கேளிக்கை யாயிருந்தவர், ஜனநாயக தத்துவத்திற்காக நாளிதுவரை ஸ்ரீமான். ஸ்ரீநிவாச சாஸ்திரி யாரால் ஒரு காதொடிந்த ஊசிக்குச் சமானமான உதவியாவது உண்டா? வகுப்புவாதம் கூடாது என்று சொல்ல பிராமணருக்கு யோக்கியதை ஏது? பிராமணன் வகுப்பு வாதத்தையே அடிப் படையாகக் கொண்டவன்; எப்பொழுது ஒரு மனிதன் தான் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளுகிறானோ அப் பொழுதே அவனிடத்தில் அவனுடைய வகுப்பு உயர்ந்த வகுப்பு மற்றவர்கள் தன்னிலும் தாழ்ந்த வகுப்பு என்கிற வகுப்புவாதம் இருக்கிறதா இல்லையா? முதலில், தான் அதை விட்டு விட்டுப் பார்ப்பனர்களையும் இதை விடச் செய்த பிறகு வகுப்பு வாதம் கூடாது என்று உபதேசிக்க வந்தால் அப்போது ஸ்ரீமான் சாஸ்திரியாருக்குப் பேச உரிமை உண்டு.

தங்கள் வகுப்பு உயர்ந்த வகுப்பு என்பதைப் பற்றி யாரும் ஆட்சேபிக்கக்கூடாது; அது அப்படியே இருக்க வேண்டும். அதற்கு வேண்டிய பிரயத்தனமும் செய்யவேண்டும். மற்றவர்கள் மாத்திரம் வகுப்பைப் பற்றிப் பேசக்கூடாது. தாழ்ந்த வகுப்பாராகவே இருக்க வேண்டும் என்று சாஸ்திரியார் கனவு கண்டால் அதற்கு மற்றவர்கள் இடம் கொடுப்பார்கள் என்று சாஸ்திரியார் நினைக்கிறார் போல இருக்கிறது. அல்லாமலும் பிராமணனால்தான் வகுப்புவாதம் ஏற்பட்டது. ஆதலால் அவனிடத்தில் இருப்பதை ஒழித்தால் தான் வகுப்புப் பிசாசு நம் நாட்டை விட்டுத் தொலையும் என்று நாம் சொல்லும் போது பிராமணன் வந்து இதில் நியாயாதிபதியா யிருக்க இடமேது. திருடனையே தன் திருட்டுக்கு நியாயதி பதியாய் வைத்தால் அவன் தன்னை தண்டித்துக் கொள்வானா? அதுபோல் பார்ப்பனன் குற்றவாளி என்றால் பார்ப்பனனே வந்து நான் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு சொல்லிக் கொள்ள பாத்தியமேது? சாஸ்திரியார் பார்ப்பனன் என்கிற முறையில் வேண்டுமானால் தன்னிடம் குற்றமில்லை என்று வாதாடிக் கொள்ளலாமேயொழிய, தான் நடுநிலை மைக்காரர் போல் வேஷம் போட்டுக் கொண்டு மாணவர்களுக்கு உபதேசம் பண்ண யோக்கி யதை ஏது? என்றுதான் நாம் கேட்கி றோம். ஆனால் இதிலும் அதிகமான பார்ப்பன சூழ்ச்சிகளைக் கண்டு தேறியிருக்கும் கோவை பார்ப்பனரல்லாத மாணாக்கர் முன்னிலையில் பார்ப்பன சாஸ்திரியரின் உபதேசம் `கொல்லத் தெருவில் ஊசி விற்கப் போனதற்குச் சமானமே யொழிய வேறில்லை என்பதே நமதபிப்பிராயம்.

- குடிஅரசு - கட்டுரை - 17.10.1926

தமிழ் ஓவியா said...

தமிழ்ப் பொழில் அன்பர்கட்கு வேண்டுகோள்

தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச்சங்கத்தினின்றும் தமிழ்ப் பொழில் என்னும் பெயரிய ஒரு திங்கள் வெளியீடு தமிழறிஞர் திருவாளர் ஆர். வேங்கடாசலம் பிள்ளையவர்களை ஆசிரியராகக் கொண்டு ஓராண்டு வெளிப் போந்து நற்பயன் அளித்தமை நேயர்களுணர்ந்திருக்கலாம். என்றும் இடையறாது உரிய காலங்களில் வெளிவரற்குறிய சில முன் ஏற்பாடுகள் செய்தற் பொருட்டுப் `பொழில் சிறிது காலந்தாழ்ந்து வெளிவரும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்க்குள்ள அலுவல் மிகுதியால் சிறிய கால அளவு கொஞ்சம் பெரிதாக நீண்டது. முன் ஏற்பாடுகள் முன்னரே செய்யப்பட்டிருக்கின்றன. நிற்க, `தமிழ்ப் பொழிலின் முன்னேற்றங் கருதி உழைக்க ஆங்கிலமும் தமிழும் கற்றுவல்ல அறிஞராகிய திருவாளர்கள் நீ. கந்தசாமிப் பிள்ளையவர்கள், எம்.ஆர்.ஏ.எ., அரசர்மடம் பள்ளிக்கூட தமிழாசிரியர் சாமி சிதம்பர உடையாரவர்கள் ஆகிய இருவரும் முன் வந்துள்ளார்கள். இவருள் முன்னவர் உதவி ஆசிரியர், பின்னவர் உடனின்று துணை செய்தலேயன்றி வெளியிடங்கட்குச் சென்று பொழிற்கு அன்பர்களைத் திரட்டும் உதவியாளர் ஆவார். திருவாளர் உடையாரவர்கள் தாம் எய்தி வந்த ஊதியத்தினையும் விட்டு விட்டுத் (தமது சுருங்கிய செலவுகளை மட்டும் பெற்றுக் கொண்டு) தொண்டு செய்ய முன்வந்திருப்பது மிகப் பாராட்டற்பாலது. செந்தமிழ்ச் செல்வர்கள், ஊதியம் கருதாது தமிழ்த் தொண்டொன்றே கருதித் தனித் தீந்தமிழில் வெளிவரும் பொழிலைப் புரந்து தமிழ்த்தாயைப் போற்றி வருமாறு வேண்டுகிறோம்

- குடிஅரசு - வேண்டுகோள் - 24.10.1926

தமிழ் ஓவியா said...


ஒரே நிமிடம்!நம் மக்களை இந்தப் பாழாய்ப் போன பக்தி என்ன பாடுபடுத்து கிறது! எவ்வளவு பட் டாலும் புத்தி வரவில் லையே என்று எண்ணும் போது குருதி கொதிக் கிறது; இன்னொரு பக்கத்தில் வேதனை விலா எலும்புகளை முறிக்கிறது.

அமர்நாத்தில் பனி லிங்கமாம்! லிங்கத் தில்தான் எத்தனை வகை! தயிர்வடை, மசால் வடை, மெது வடை என்பது மாதிரி - எத்தனை எத்தனை வகை; பிடித்து வைத் தால் போண்டா - தட்டி வைத்தால் வடை என் பது மாதிரி.

குளிர் காலத்தில் பனி நீர் கசிவதால் இறுகி செங்குத்தாக ஒன்று நிற்கிறது - அது தான் பனி லிங்கமாம் - அருகில் ஸ்டவ் பற்ற வைத்தால் பனி உருகி ஓடி விடுகிறது.

எல்லாம் தெரிந்தும் பனி லிங்கத்தைத் தரி சிக்கச் செல்லுகிறார் களாம்; ஜூன் 28 தொடங்கியது இந்தக் கூத்து, இந்நாள் வரை இவ்வாண்டில் மூன் றரை லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்குப் போனார்களாம்.

போனவர்களுக்குப் பாவம் நீங்கிப் புண் ணியம் கிடைப்பது ஒரு புறம் இருக்கட்டும். இந்த ஆண்டில் மட்டும் 10 யாத்திரிகர்கள், ஓர் உதவியாளர் உட்பட 11 பேர் மரணம் அடைந் துள்ளனர். கடந்த ஆண்டில் 6 லட்சத்து 21,145 பேர் போனார் களாம். அவர்களில் 93 பேர் உடல் நலக் குறைவு காரணமாகவும், 42 பேர் விபத்துக்கள் காரண மாகவும் பலியானார் களாம்.

2011ஆம் ஆண்டில் 2 லட்சத்து 35611 பேர் சாமி கும்பிட அங்குச் சென்றார்களாம். அவர் களில் 106 பேர் மாண் டார்களாம்.

தம்மை நாடி வந்த வர்களைக் காக்க முடியாத கடவுள் என்ன கடவுள் - மண்ணாங் கட்டிக் கடவுள் - என்ற சிந்தனைப் பொறி வெடித்துக் கிளம்ப வேண்டாமா?

மடிந்தவர்கள் பக்தர்கள் என்பதால் நாம் மகிழவில்லை. விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் இப்படி மலிவாக, நாசமாகப் போகிறதே என்ற மன சங்கடத்தால்தான் எழுதுகிறோம்.
ஒரு கணம் ஒழுங்காகப் புத்தியைப் பயன்படுத்தினால் போதும் - இந்த நம் பிக்கை எனும் பனி உருகி ஓடிவிடுமே! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் அர்ச்சகர் பார்ப்பனர்களின் யோக்கியதை என்ன? - 9

ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற வர்கள், அவற்றை நன்கு அறிந்தவர்கள் தான் பூசை செய்யலாம் என்பது ஆகம விதி. ஆனால், தற்போது கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களில் பெரும்பாலா னோர் அதற்கான பயிற்சி பெற்றவர்கள் அல்லர். பெரும்பாலான பூசாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோர் சாதாரணமாக பக்தர்கள் வேண்டுகோள்களுக்கேற்ப செய்யப்படும் அர்ச்சனை செய்யத் தேவையான 108 நாமாவளிகள் மட்டுமே தெரிந்தவர்களாக உள்ளனர். மிகப் பெரிய கோயில்களில்கூட, ஒருசில அர்ச்சகர்கள் மட்டுமே ஆகமப் பயிற்சி பெற்றவர்கள் அல்லது ஆகமம் பற்றிய முழுமையான அறிவு பெற்றுள்ளனர்.

சென்னை கபாலீஸ்வரர் கோயில், வடபழநி முருகன் கோயில், திருவண்ணா மலை அருணாசலேசுவரர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில் போன்ற பெரிய கோயில் களில்கூட, பணிபுரியும் அர்ச்சகர்களில் மிகச் சிலரே அனைத்துப் பூசை முறை களையும் கற்றுத் தேர்ந்தவர்கள். கபாலீசு வரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் 4 அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆகம விதி கள் தெரிந்துள்ளன. மற்றவர்களுக்கு அஷ்டோத்திரம், குறிப்பான சில மந்திரங் கள், நாமாவளிகள், மட்டுமே தெரியும்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 116 அர்ச்சகர்களுள் ஆகமம் பயின்றவர்கள் 28 நபர்கள் மட்டுமே. 15 நாள் புத்தொளிப் பயிற்சி பெற்றவர்கள் 22 நபர்கள் மட்டுமே. இதர 66 அர்ச்சகர்கள் தங்களது தந்தை வழியாக ஆகமங்களைப் பயின்றவர்கள். அவர்களுடைய தந்தையார் செய்யும் பூசை முறைகளைப் பார்த்துப் பெற்ற அனு பவத்தை மட்டுமே பெற்றவர்கள். அவர்கள் முறையாக ஆகம அனுஷ்டானம் அறிந்த வர்கள் என்று சொல்ல இயலாது.

பெரும்பாலான மற்றக் கோயில்களிலும் இதே நிலைதான். கோயில்களில் பூசாரியாகப் பணிபுரியும் ஒவ்வொருவரும் தங்களது பிள்ளைகளுக்கு வழி வழியாக நடைமுறைகளைத்தான் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார்கள். சுமார் 30,40 ஆண்டுகளுக்கு முன்புவரை ஆகமங் களை பயிற்றுவிப்பதற்கான முறையான பயிற்சி நிலையங்கள் எதுவும் இல்லை.

வடபழநி முருகன் கோயிலில் குமார தந்திரமும், காமிக ஆகமமும் பின்பற்றப் படுகின்றன. முறைப்படி நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர்களுக்கு உதவியாக உள்ளவர்கள் அவர் களின் உறவினர்கள் என்பதால், அவர்களுடன் பணியாற்றுவதால், உடனிருப்பதிலிருந்து அறிந்து கொண்ட அஷ்டோத்திரம் மட்டுமே தெரிந்தவர்கள். இருப்பினும், அவர்கள் அனைவரும் பூசை செய்கின்றனர். அத்துடன் பக்தர்கள் அதிகம் வருகின்ற காரணத்தால், அர்ச்சகர்களின் தேவை அதிகமாக உள்ளதால், அர்ச்சகர்களாக நிய மிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களுடைய உறவினர் பலரை அழைத்து வந்து அர்ச்சகராகப் பணியாற்ற வைத்துள் ளனர். நாள் ஒன்றுக்கு ரூ.2/- கோயிலுக்குச் செலுத்திவிட்டு கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்து வருகிறார்கள். இவ்வாறு ரூ.2/- கட்டணம் செலுத்திவிட்டு கோயிலுக்குள் சென்று அர்ச்சனை செய்பவர்கள் அஷ்டோத்திரம் மட்டும் செய்பவர்கள். அவர்கள் தீட்சை பெற்றுள்ளார்களா என்பதே ஐயத் திற்குட்பட்டதாக உள்ளது. அவர்கள் ஆகம விதிகள் தெரிந்தவர்கள் அல்ல. அவ்வாறானவர்களே அக்கோயிலில் பூசை செய்து வருகிறார்கள். அதா வது பணி நியமனம் செய்யப்பட்ட ஒருவரின் உறவினர் என்ற ஒரே தகுதியில், ஆகமம் தெரியும் என்று அவர்களே கொடுத்த வாக்குமூலத் தின் அடிப்படையில், பணிபுரி கிறார்கள். இத்தகைய தற்காலிக அர்ச்சகர்கள்கூட கோயிலுக்கு உள்ளே சென்று பூசை செய்கிறார் கள். பல வைணவக் கோயில்களிலும் அர்ச்சகர்கள் இதே நிலையில்தான் உள்ளார்கள். ஆகமம் கற்றறியாத வர்கள், செய்முறை மற்றும் நாமா வளிகள் மட்டுமே தெரிந்தவர்கள் தான் பூசை செய்கிறார்கள்.
தற்போது தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் நடைபெறும் பூசைகள் அனைத்தும் ஆகம முறைப்படியான பூசைகள் அல்ல. தேவை மற்றும் சூழ்நிலைக்கேற்ப பூசை முறைகள் மாற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான அர்ச்சகர்கள் ஆகமக் கல்விப் பயிற்சி பெற்றவர்கள் அல்லர். சில பெரிய கோயில்களைத் தவிர மற்ற கோயில்களில், திருவிழாக் காலங்கள் போன்ற சமயங்களில் மட்டுமே ஆகமங்கள் பின்பற்றப்படு கின்றன. பெரும்பாலான கோயில் களில் அவ்வாறுகூட நடைபெறுவது இல்லை. சில நடுத்தரக் கோயில் களில் திருவிழாக் காலங்களில் மட்டுமே ஓரளவுக்கு ஆகமப் பூசைகள் நடைபெற்று வருகின்றன.

-நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன்
(நூல்: கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்)

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பங்கேற்கும் சுப. வீரபாண்டியன் அறிவிப்புசென்னை, ஜூலை 28- அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராகும் உரி மையைக் கோரி வரும் ஆகஸ்ட் முதல் நாள் (01.08.2013) திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் இன்று (28.07.2013) விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:

ஏற்றத் தாழ்வுகள் அற்ற, சமத்துவச் சமுதாயம் நோக்கிய பயணத்திற்கு இவ்வறப் போராட்டம் மிகப் பெரும் தேவை யாக உள்ளது. எனவே இந்த ஆர்ப்பாட்டத் தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் பகுதியில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்.

தமிழ் ஓவியா said...


முடியாது


உண்மையாக ஜாதிப் பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணா சிரமத் தர்மத்தையும், சூத்திரத் தன்மையையும் ஒழிக்கவேண்டுமானால், எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
(குடிஅரசு, 19.1.1936)

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யின் வியூகம்!


இந்துத்துவா வெறி அமைப்பான பிஜேபி நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வியூகங்களில் வேகமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த இரு முறை தொடர்ந்து காங்கிரஸ் தலைமையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி தொடர்ந்து இருந்து வந்திருப்பதாலும் எதிர்ப்புணர்ச்சி (Anti Incumbency) தங்களுக்கு சாதகமாக அமையும்; விலைவாசி உயர்வு போன்ற வையும் கை கொடுக்கும் என்ற எண்ணத்தில் கோயபல்ஸ் பாணியில் பொய் மூட்டைகளை அவிழ்த்து கொட்டுவார்கள் - கொட்டவும் ஆரம்பித்து விட்டனர்.

நரேந்திர மோடி முதல் அமைச்சராகவிருக்கும் குஜராத் மாநிலம்தான் இந்தியாவிலேயே வளம் கொழிக்கும் மாநிலம், பாலாறும், தேனாறும் பெருகி ஓடுகிறது என்று பிரச்சாரம் செய்யப்படவில்லையா?

பொருளாதார மேதை அமர்த்தியாசென் போன்றவர்கள் அதன் பொய்த் திரையைக் கிழித்துக் காட்டி விட்டார்களே! கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலம்தான் குஜராத் என்பதைப் புள்ளி விவரங் களே போதுமான அளவிற்குத் தெரிவிக்கின்றனவே.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்குக் குழந்தைகள் நலன் என்பது முக்கிய அளவீடாகக் கருதப்படும். இதில் இந்தியாவின் சோமாலியா குஜராத் என்று சொல்லப்படுகிறது. இதனை எல்லாம் மறைத்துவிட்டு குஜராத்துதான் இந்தியாவின் முன் மாதிரியான மாநிலம் என்று பலூனுக்குக் காற்றடித்து ஆகாயத் தில் பறக்க விடுவது போல பம்மாத்து வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மதவாத சக்தி ஆட்சிக்கு வரக் கூடாது என்பதிலே அக்கறை உள்ளவர்கள், ஆர்வம் உள்ளவர்கள் இவற் றையெல்லாம் அம்பலப்படுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

இன்னொரு அதி முக்கிய கடமை இந்தியா முழுமையும் உள்ள வாக்காளர்களுக்கு இருக்கிறது. அதுதான் இந்திய அரசமைப்புச் சட்டப் பீடிகை உத்தரவாதப்படுத்தியுள்ள மதச் சார்பின்மை என்பதாகும்.

இந்த மதச் சார்பின்மையை முற்றிலும் அழித்து, அதன்மீது இந்துத்துவா என்னும் மதவெறி நாடாக மாற்றி, மனுதர்மக் கொடியைப் பறக்கவிடத் துடித்துக் கொண்டிருக்கும் பிஜேபியை - நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் மண்ணும் மண்ணடி வேருமின்றித் தூக்கி எறிய வேண்டாமா?
அறிவியல் நுணுக்களைப் பயன்படுத்தி, இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பல யுக்திகளைக் கையாள இருக்கிறார்கள். அதற்காகப் பெருந் தொகை செலவு செய்து பிரச்சார வெள்ளத்தைப் பெருக்கெடுக்கச் செய்து, மக்களை மயக்கி விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டுள்ளனர் - பிஜேபி.யினர்.

உலகம் பிரச்சாரத்திற்கு அடிமை என்று சொல்லுவார்கள். அதில் அதிக நம்பிக்கை கொண்ட பிற்போக்குச் சக்திகளைத் தூக்கி வீசிட ஒவ்வொரு வாக்காளரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் (25.7.2013) திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெளிவாக எடுத்து விளக்கியுள்ளார்.

பிஜேபி - அதன் ஆணி வேர், சல்லி வேர் - பக்க வேர்களான சங்பரிவார்கள் இந்தியாவில் இதுவரை நடத்தி வந்திருக்கும் மதக் கலவரங்கள், வன் முறைகள் அமைதிச் சீர்குலைவுகளைப் பட்டியல் போட்டு, வீதி வீதியாக தெருமுனைக் கூட்டங்கள் போட்டு அம்பலப்படுத்தியாக வேண்டும். இது ஒரு கட்சிப் பிரச்சினையல்ல.

மதச் சார்பற்ற தன்மையில் அனைத்து மத நம்பிக்கையாளர்களும், மத நம்பிக்கையற்றவர்களும் அவரவர்களுக்குள்ள உரிமைகளோடும், வாழ்க்கை உத்தரவாதத்தோடும் அமைதித் தென்றல் வீசும் நாடாக அமைய அனுமதிக்கப் போகிறோமா அல்லது இந்தியாவை குஜராத்போல மதவாதப் பூமியாக்கி அன்றாடம் மனித ரத்தத்தை ஓட விடப் போகிறோமா என்பதுதான் இன்று இந்திய மக்கள் ஒவ்வொரு வரின் முன்பும் எழுந்து நிற்கும் மிக முக்கியமான வினாவாகும்.

மக்களை ஏமாற்ற ஏராளமான திட்டங்களைக் கையில் வைத்துள்ள ஒரு சக்தியை முறியடிக்க தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள் ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மதச் சார்பின்மைச் சக்திகள் பிளவுபட்டு, வேண்டாத சக்திக்குச் சிவப்புக் கம்பளத்தை விரித்து விடக் கூடாது.

தமிழ் ஓவியா said...


ஓதியும் ஓதார் - இருந்தும் வறியார் - புரிந்து கொள்வோம்


பகுத்தறிவுப் புலவர் டாக்டர் மா. நன்னன் அவர்களது நன்னன்குடி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும், மறைந்த அவர்தம் மகன் ந.அண்ணல் நினைவையொட்டி ஜூலை 30-இல் நடைபெறும் நிகழ்வில் நன்னன் அவர்கள் எழுதிய புதிய நூல்கள் வெளியீடும், சொற்பொழிவு களும், நல்ல இலக்கியப் படைப்பாளி களுக்குப் பரிசுகளும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்தோரைப் பாராட்டி ஊக்கப்படுத்துவதும் போன்ற ஆக்கச் செயல்கள் பலவும் நடத்தப் பெறு கின்றன.

இவ்வாண்டு (நாளை) நடைபெற விருக்கும் புதிய (அவரது) நூல் வெளியீடுகளில் ஒன்றான நாலடியார் மூலமும், பொழிப்பு விளக்க உரை களும் என்ற நூல் நேற்றுப் படித்தேன்; சுவைத்தேன். தெவிட்டவில்லை.

திருக்குறளுக்கு அடுத்தபடி, நல்ல அறநூல் நாலடியார் ஆகும்.

சமணப் புலவர்கள் பலரது பாடல்கள் - ஒழுக்க நெறிகளை மிகவும் ஆழமாகச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்கள்போல உள்ளன. நாலும் தெரிந்தவர் என்ற சொல்லுக்கு என்ன சரியான பொருளோ நாம் அறியோம்; ஆனால் நாலடியார் செய்யுள்களை அறிந்தால் பொது அறிவும், வாழ்வி யலில் அறிந்து கொள்ள வேண்டி யவைகளை அறிந்தும், புரிந்து கொள்ள வேண்டியவைகளையும் புரிந்தும் வாழ் வில் வெற்றி பெறலாம். அறிவின்மை என்ற ஒரு தலைப்பில் உள்ள பாடல்களில் ஒன்று இதோ: ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல!

ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார் - தூயதாக
நல்கூர்ந்துச் செல்வர் இரவாதார் செல்வரும் நல்கூர்ந்தர் ஈயா ரெனின்.

இதன் பொருள்: அறிவிலிகள் கற்றி ருந்தாலும் கல்லாரே; அறிஞர்களோ கற்காதவராயினும் கற்றாரேயாவர். முழுமையாக வறுமையுறினும் இரந்து கைநீட்டாதார் செல்வர்களே; செல்வர் களும் தக்கார்க்கொன்று ஈயாராயினும் வறியோரே.

வாழ்க்கையில் பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அடிப்படைப் பாடம் இது.

ஏராளமாக (மெத்தப்) படித்தவர் இவர் என்று ஒருவரை அறிமுகப்படுத்தினால் உடனே அவர் மரியாதைக்குரியவ ராகிவிட மாட்டார்; காரணம் படிப்பு வேறு; அறிவு வேறு; படித்து முடித்த காரணத் தாலேயே அவர்கள் அறிவாளிகள் ஆகிவிட மாட்டார்கள். அனுபவம், பொது அறிவு, பண்பாடு, பிறரைப் புரிந்து கொள் ளுதலில் தடுமாற்றம், தம்மைவிட குறைந்தவராயின் எதில் இருந்தாலும் - அதற்காக அவர் களை அலட்சியப் பார்வையுடன் பார்ப்பது என்பதன் மூலம், இவரின் அறிவுதான் கேள்விக்குறியாகி விடுகிறது!

தந்தை பெரியார் படித்த பாமரர்கள் அல்லது படித்த தற்குறிகள் என்ற மிகப் பொருத்தமான சொற்றொடர்களைக் கையாளுவார்; இத்தகைய கற்றறி மூடர்களைக் கண்டு; நுண்ணறிவு வேறு; நூலறிவு வேறு; வேண்டுமானால் நுண் ணறிவினை மேலும் கூர்மையாக்கிக் கொள்ள நூலறிவு பற்பல நேரங்களில் பயன்படுமே தவிர, எல்லா நிலை களுக்கும் பொருந்திவராது!

ஓதியும் ஓதார்! என்னே அருமை யான சொற்றொடர்!

இருந்தும் இல்லாதவர் இரண்டு வகையினரும் மிகவும் முக்கியம்.

செல்வத்தின் சிறப்பே பயன் பாட்டைப் பொறுத்ததுதான். புதைந்து கிடக்கும் புதையலால் யாருக்கும் பயன் எப்படி கிடைக்காதோ அதுபோல செல்வம், தேவைப்படுவோருக்கு பயன் படாது இருப்பின் அதைவிட அதைக் கொடுத்து மிகுந்த மனநிறைவை மகிழ்ச்சியைப் பெறாமல் கேடு கெட்ட மானிடராக, வறியார்க்கொன்று ஈயாத வராக வாழ்ந்தவரால் அவருக்கும் பயன் இல்லை; பிறருக்கும் பயன் இல்லை.

அதை எவ்வளவு அழகாக உண்மையாக எவர் வறுமையாளர் என்பதை நாலடியார் விளக்குகிறது?

எவருக்கும் ஈயாது; ஈய்ந்து மகிழ்ச் சியைப் பெற்று உற்சாகமாக வாழத் தெரியாதவர்களுக்கு, எத்தனை கோடிகள் இருந்தும் என்ன பயன்?
அவரை யார் அறிவர்? யார் மதிப்பர்?

தமது செல்வம் முழுவதையும், மக் களுக்கே சேரும்படிச் செய்த தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியாருக்குள்ள பெருமை - அவர்தம் சுயநலம் இல்லாப் பொது நலத்தோடு எல்லாவற்றையும் பொது மக்களுக்குத் தந்துள்ளார்.

தொண்டறத்தால் சிறந்தோங்கி நிற்கும் கல்வி வள்ளல் காமராசரை, பகுத்தறிவுப் பகலவன் பெரியாரை படிக்காதவர்கள் என்றார்களே,

அவ்விருத் தலைவர்களின் அறிவும், மதி நுட்பமும் எளிதானதல்லவே!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


ஆகமங்கள் மாற்றமடைந்தது கிடையாதா?


பூஜை முறையை பரம்பரை பரம் பரையாக எங்கள் முன்னோர்களிட மிருந்து கற்று வருகிறோம். ஆகம முறைப்படி கோயில் பூஜையை செய்வதற்கு எங்கள் ஜாதிக்கு மட்டுமே உரிமையுண்டு - என்று சொல்ல எந்த சிவாச்சாரியருக்கும் அருகதை இல்லை, என்றே சொல்ல லாம். தில்லை நடராஜரையும் ஸ்ரீரங்க நாதரையும் பூஜை செய்வதற்கு எங்களுக்கும், எங்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே உரிமை யுண்டு என்று சொல்ல எவருக்குமே அருகதை இல்லை.

காரணம், பூஜை என்பது ஒரு புனிதமான தொழில் என்று காலம் காலமாக ஏமாற்றி வந்த காலம் என்றோ மலையேறி விட்டது. இப் பொழுது இது ஒரு பக்கா பிசினஸ் என்று எல்லோருக்குமே தெரிய ஆரம்பித்து விட்டது.

ஆம்.

இன்று நம் கண் முன்னே ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் முதல், ஒழுக்கம் கெட்டவர்கள் வரை கடவுளாகி விட்டார்கள். உனக்கு மார்க்கெட் செய்யத் தெரியுமா? நீ யாரை வேண்டுமானாலும் கடவு ளாக்கி, உன் செலவில் கோவில் கட்டு. நான் குண்டத்துல உக்காந்து நெய்ய ஊத்தி கும்பாபிஷேகம் செய்யறேன் என்ற தவறான முன் னுதாரண நிலைக்கு வந்துவிட்டார் கள் சிவாச்சாரியர்கள். மேலும் நீ எங்க வேண்டுமானாலும் கோயில் கட்டு - எனக்கு தேவை துட்டு என்ற வியாபார நிலைக்கும் வந்து விட்டார்கள் சிவாச்சாரியர்கள்.

இல்லையென்றால் - ஆகமத் திற்கு புறம்பாக அதிக அளவில் அதாவது 77,450 கோயில்களை பொது மக்களுக்கு இடையூறாக, பொது இடங்கள் மற்றும் நடை பாதையில் கோயில் கட்டுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் மாநிலம் என்று சாதனை படைக்குமா?

இதற்கு மூலகாரணம் யார்? சிவாச்சாரியார்கள்தானே!

அது மட்டுமா?

ஒரு சில திரைப்படங்களுக்கு ஞயசவ - ஐஐ வெளிவருவது போல - புராணங்களை தூசித்தட்டி, அதில் ஒரு கடவுளை தேர்வு செய்து, சிறந்த முறையில் திரைக்கதை வசனம் எழுதி ஞயசவ - ஐஐ உருவாக்கினாலும் - அதற்கும் - நாங்கள் ஆகமமுறைப் படி பூஜை செய்கிறோம் என்று நீங்கள் மணிகண்டனுக்கு கொடுத்த ஆதர வால் நாடு அடைந்த பலன் என்ன?

ஏறத்தாழ 70 ஆண்டுகளில் ஐயா யிரத்திற்கும் அதிகமான வீடுகளில் இழவு விழுந்ததுதான் மிச்சம்.

அது மட்டுமா?

இந்த ஐயப்பன் கோயில்களில் சிவாச்சாரியர்கள் பூஜை செய்கின்ற அழகைப் பார்க்க வேண்டுமே! அட.. அட... அட.. காண கண் கோடி வேண்டுமே!

அடி மடியில் கை வைத்தால் ஆகமம்.. ஆகமம் என்று அலறிக் கொண்டே உச்சநீதிமன்றம் வரை ஓடி ஐயா நீதியரசரே... இந்த பூஜை முறையை எங்கள் முன்னோர்களிட மிருந்து வழி வழியாக கற்று வருகிறோம் என்று கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் கூப்பாடு போடு கின்றீர்களே...! இந்த ஐயப்பனை பூஜை செய்வதற்கு எந்த முன்னோர் களிடமிருந்து கற்றுக் கொண் டீர்கள்? சொல்ல முடியுமா?

அதிகபட்சமாக தாத்தாவிட மிருந்து கற்றுக் கொண்டிருப்பீர்கள் அவ்வளவுதானே! இப்பொழுது சொல்லுங்கள். பூஜை தொழில் புனிதமானதா!

பக்கா பிசினஸ்தானே! எப்பொ ழுது ஒரு தொழில் வியாபாரம் என்ற நிலைக்கு வந்துவிட்டதோ - அப்பொழுதே அந்தத் தொழில் அனைவருக்கும் சொந்தமானது தான். எனவே அனைத்து சாதி யினரும் அர்ச்சகராவதில் தவறே இல்லை. எனவே அரசாங்கம் அனைத்து சாதியினருக்கும் அர்ச் சகர் தொழிலில் பயிற்சி அளித்து, பின் பரீட்சை செய்து, வெற்றி பெற்ற எவரையும் அர்ச்சகராக்குவதில் தவறே இல்லை, என்ற உயர்ந்த நோக்கத்தோடு உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

- குமார் ராமசாமி
நூல்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாமா?

தமிழ் ஓவியா said...

ஓம் சக்தி கட்டளைப்படி
கணவனைக் கொன்ற மனைவி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே லாலா பேட்டைப் பேர்வழி பரதன் (வயது 44) மனைவி உஷாராணி (வயது 38).

கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வருமாம். ஆத்திரம் அடைந்த மனைவி தூங்கிக் கொண்டிருந்த கணவன் தலையில், அம்மிக்கல்லை போட்டுக் கொலை செய்ய முயன்றார். கணவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென் றனர். பிழைக்கவில்லை; ஆசாமி மண்டையைப் போட்டு விட்டார். காவல்துறையினர் மனைவியைக் கைது செய்து விசாரித்தனர். அப்பொழுது அந்தப் பெண் சொன்னார். கொலை நடந்த அன்று என் கணவன் என்னைத் தாக்கினார். பின்னர் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டார். நான் அழுது கொண்டிருந்தேன். அப்பொ ழுது என் கனவில் ஒம் சக்தித் தாய் தோன்றினாள். உன் கணவனை அடித்துக் கொன்று விடு என்று சொன்னதால் குழவிக் கல்லை எடுத்து என் கணவன் தலையில் போட்டேன் என்றார் உஷாராணி.

சபாஷ்! ஓம் சக்தி எதற்கெல்லாம் பயன்படுகிறது பார்த்தீர்களா?

யாரும் யாரையும் கொலை செய்துவிட்டு கடவுள் மீது பாரத்தைப் போட்டு விடலாம். கடவுள் கூப்பிட்டால் சாட்சிக் கூண்டுக்கு வரவா போகிறார்?

தமிழ் ஓவியா said...

சபாஷ்! கடவுளைக் கண்டுபிடித்து விட்டார்கள்?

உத்தரகாண்டில் கொத்துக் கொத்தாக மக்களை வெள்ளம் அடித்துச் சென்றது. தப்பியவர்கள் ஆயிரக்கணக்கில் மலை முகடுகளில் தொற்றிக் கொண்டு தொங்கியபடி மீட்புக்காகக் காத்துக் கிடந்தார்கள். இரு கரைகளுக்கும் கம்பிகளை கட்டி இராணுவ வீரர்கள் வரிசையாக அதில் குறுக்கே படுத்துக் கொண்டார்கள். தங்கள் முதுகின்மீது வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்களை நடக்கச் செய்து கரை சேர்த்தார்கள். இதில் இந்திய இராணுவ வீரர்களின் சேவையின் மூலம் பேரிடர் பூமியில் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளை நேரில் உணர்ந்தார்கள். இப்படி ஒரு விளம்பரம் தனியார் நிறுவனத்தின் சார்பில் நாளேட்டில் வெளி வந்துள்ளது.

உத்தரகாண்டில் கடவுளைத் தேடிச் சென்றவர்கள் பெரு வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்கள் எந்தக் கடவுளும் ஓடி வந்து காப்பாற்றவில்லை.

இராணுவத்தினர் தான் காப்பாற்றினார்கள் அவர் களுக்குத்தானே நன்றி சொல்ல வேண்டும். ஆனால் காக்கத் தவறிய கடவுளை இந்த இராணுவத்தினர் உருவில் கண்டார்களாம். எப்படி இருக்கிறது. எப்படியோ மனிதனைக் கடவுள் காப்பாற்றா விட்டாலும் மனிதன் கடவுளைக் காப்பாற்ற வேண்டியவனாகி விட்டான் - பாவம் கடவுள்!

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவு தான்!


கோயில் சிலைகளை பாதுகாக்க கேமராவாம் : அறநிலையத்துறை நடவடிக்கை

நெல்லை: தமிழகத்தில் விலை உயர்ந்த அய்ம்பொன் சிலைகள் உள்ள அனைத்து கோயில்களிலும் அலாரம் மற்றும் சுழலும் கேமரா அமைக்க அற நிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் அற நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 36 ஆயிரத்து 425 கோயில்கள் மற்றும் 56 மடங்கள் உள்ளன. இந்த கோயில்களில் விலை மதிப்பு மிக்க அய்ம்பொன் னால் ஆன கடவுள் சிலைகள் மற்றும் நகைகள் உள்ளன. சில கோயில்களில் சிலைகள் கொள்ளை போகும் சம்பவம் நடை பெற்றதை அடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நெல்லை யப்பர் கோயில், திருவாரூர் கோயில் உள்ளிட்ட பெரிய கோயில்களில் சிலை பாதுகாப்பு மய்யங்கள் அமைக்கப்பட்டன. கேமரா, அலாரம் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மய்யங்களின் அருகே உள்ள பல கோயில்களின் திருவிழாக்காலங் களில் மட்டும் பயன்படுத்தப்படும் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து திருவிழா நேரங்களில் இவை எடுத்துச் செல்லப்பட்டு திருவிழா முடிந்த பின்னர் மீண்டும் பாதுகாப்பாக வைக்கப்படுவது வழக்கம். இந்த சிலை பாதுகாப்பு மய்யங்களில் கேமரா, அலாரம் மற்றும் அதிநவீன பூட்டு, காவலர்கள் போன்ற வசதி செய்யப்பட்டுள்ளன.

ஆயினும் உற்சவர் உள்ளிட்ட முக்கிய அய்ம்பொன் சிலைகளும் குறைந்த அளவிலான நகைகளும் கோயில்களிலேயே நிரந்தரமாக வைக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சிலைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்கிறது. குறைந்த அள விலான சிலை இருந்தாலும் அனைத்து கோயில்களிலும் வங்கி களில் இருப்பது போன்ற அலாரம் மற்றும் சுழலும் வீடியோ கண் காணிப்பு கேமரா அமைக்க அற நிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தேவையான இடங்களில் இரவுக் காவலர்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேமரா, அலாரம் போன்ற வசதிகள் அமைக்க நிதி வசதி இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து மேல் நடவடிக்கை எடுத்து உடனடியாக பாதுகாப்பை பலப்படுத்த அறிவு றுத்தப்பட்டுள்ளனர்.

காவடி சுமந்து பாத யாத்திரை சென்ற பக்தர்கள் நான்கு பேர் ரயில் மோதி பலி

ராணிப்பேட்டை: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து பாத யாத்திரை செல்கின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள மேல்பட்டி லட்சுமி அம்மாள் புரத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது45) தேநீர்க் கடை வைத் திருந்தார். மேல்கார்கூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ்(18) பாலிடெக்னிக் மாணவர், தர்மபுரி மாவட்டம் இருமத்தூர் கொண்டா ரம்பட்டியை சேர்ந்த சிங்கார வேல் (20) கல்லூரி மாணவர் இவர்கள் உள்பட பக்தர்கள் திருத்தணிக்கு காவடி சுமந்து கொண்டு பாத யாத்திரை புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு வேலூர் அருகே உள்ள பொய்கையில் தங்கினர். அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு வாலாஜா ரோடு ரயில் நிலையத்தை அடைந் தனர்.

அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத் தனர். அப்போது ஆனந்தன், ஜெக தீஷ், சிங்காரவேல் மற்றும் ஆம்பூரை சேர்ந்த நவீன் (18) ஆகியோர் காலைக் கடன் கழிக்க தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப் போது காலை 5.30 மணிக்கு சென்னை நோக்கி வந்த ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்தன், ஜெகதீஷ், சிங்காரவேல் 3 பேரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர். நவீன் படுகாயம் அடைந்தார். நவீனை மீட்டு வேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்தவர்கள் உடல் பிரேத பரிசோ தனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட் டது. காட்பாடி ரயில்வே காவல் துறை யினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


வரவேற்கிறோம்.... ஆனால்...


மருத்துவக் கல்விக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக மத்திய நல் வாழ்வுத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, திராவிடர் கழகம் தொடக்கத் திலேயே கருத்துத் தெரிவித்துள்ளது. இந்தியா வின் வேறு பகுதிகளில்கூட, எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைவர் கலைஞர் அவர்கள் இந்த வகையிலே ஏற்கெனவே கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களும் இப்போது இதனை ஒட்டியே கருத்துத் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நுழைவுத் தேர்வு சட்டப்படியாக, திமுக ஆட்சியில் ஒழிக்கப் பட்டு விட்டது.

கல்வியைப் பொதுப் பட்டியலில் நெருக்கடி காலத்தில் கொண்டு சென்ற மத்திய அரசு, தேவையில்லாமல் மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிட்டு வருகிறது.

மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு பிரச்சினையை முன் வைத்தாவது கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுவது நல்லது; மத்திய அரசும் இணங்கி வரவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

தமிழ்நாடு முதல் அமைச்சர் மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு தேவையில்லை; மேல் முறையீடும் செய்யக் கூடாது என்று வற்புறுத்தும் அதே வேளையில், ஆசிரியர் தகுதித் தேர்விலும், பணி நியமனத்திலும், சமூகநீதிக்கு விரோதமாகச் செயல்பட்டு வருவது பற்றியும், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே, நமது முக்கியமான வேண்டுகோளாகும்.

இந்தப் பிரச்சினையில் இந்தியாவுக்கே வழி காட்டக் கடமைப்பட்டுள்ள தமிழ்நாடு முதல் அமைச்சர், ஆந்திர மாநிலம், பீகார், அஸ்ஸாம், கேரள மாநிலங்கள் பின்பற்றும் சமூக நீதியைக்கூடக் கடைபிடிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இந்தப் பிரச்சினையில் திராவிடர் கழகம் முன்னின்று போராடி வருகிறது; முக்கிய எதிர்க் கட்சியான கலைஞர் அவர்களும் வலுவான கருத்தினை வெளியிட்டுள்ளார்.

பல்வேறு அமைப்புகளும், தத்தம் வழியில் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றன. இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக் கப்பட்டு வருகின்றன.

இவ்வளவுக்குப் பிறகும் - தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு என்று தவறான முடிவின்மீது கருத்துத் தெரிவித்து விட்டது.

சமூகநீதியில் இவ்வரசுக்கு இருக்கும் அந் தரங்கச் சுத்தியையே சந்தேகத்துக்கு உள்ளாக்கி விட்டதே!

30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்று பல்வேறு கல்வி நிபுணர்களின் குழுக்கள் ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளன. அதன்படி ஆசிரியர்களை நியமனம் செய்தால் இப்பொழுது ஆசிரியர் பயிற்சி பெற்று அரசுப் பணிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அத்தனை பேர்களுக் கும் பணி வாய்ப்புப் பெற விசாலமான வாய்ப்பு உண்டு. அந்த நிலையில் தகுதித் தேர்வு பிரச்சினைக்கும் இடம் இல்லாமலேயே போகும். அதுபற்றியும்கூட இ.அ.அ.தி.மு.க. அரசு சிந்திப் பது நல்லது; உடனடியாக அதனைச் செயல்படுத்த முடியாத பட்சத்தில், தகுதித் தேர்வில் செய்துள்ள குளறுபடிகளைச் சரி செய்ய முன்வரவேண்டும்.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முன் னேறிய ஜாதியினருக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரி சேர்க்கைகளில்கூட வெவ்வேறு சத வீதத்தில் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும் பொழுது, ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் அந்த முறை கடைபிடிக்கப்படாதது ஏன் என்ற கேள்விக்கு அரசு தரப்பிலிருந்து இதுவரை நியாயமான பதில் இல்லாத திலிருந்தே அரசு தரப்பில் தவறு நடந்திருக்கிறது என்பது வெளிப் படையாகவில்லையா? வீண் பிடிவாதம் எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்று எச்சரிக் கின்றோம்.

தமிழ் ஓவியா said...


நாடுநாடு என்று எதைச் சொல்ல வேண்டும் என்றால், அது பொரு ளாதாரச் சுதந்திரமுடைய நாடாக இருத்தல் வேண்டும்; அது இல்லாத நாடு அடிமை நாடு என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, சுதந்திர நாடு என்று சொல்ல முடியாது.
(விடுதலை, 2.12.1958)

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம்! (ஜாதி - தீண்டாமை ஒழிப்பு) 1.8.2013 - முழக்கங்கள் (1)


வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(2) பணி முடிப்போம் பணி முடிப்போம்!
மரண சாசனமாக மரண சாசனமாக
பெரியார் அறிவித்த பெரியார் அறிவித்த
அனைத்து ஜாதியினருக்கும்
அனைத்து ஜாதியினருக்கும்
அர்ச்சகர் உரிமை அர்ச்சகர் உரிமை
பணி முடிப்போம் - பணி முடிப்போம்

(3) ஒழிக ஒழிக ஒழிகவே!
வருணா சிரமம் வருணா சிரமம்
ஒழிக ஒழிக ஒழிகவே!

(4) ஒழிக ஒழிக ஒழிகவே
ஜாதியும் - தீண்டாமையும்
ஜாதியும் தீண்டாமையும்
ஒழிக ஒழிக ஒழிகவே!

(5) கோயில் கருவறையில் கோயில் கருவறையில்
தீண்டாமை தீண்டாமை ஒழிக ஒழிக ஒழிகவே!

(6) அர்ச்சகராக்கு அர்ச்சகராக்கு!
அனைத்து ஜாதியினரையும்
அனைத்து ஜாதியினரையும்
அர்ச்சகர் ஆக்கு அர்ச்சகர் ஆக்கு!

(7) பேதம் வேண்டாம் பேதம் வேண்டாம்
பக்தியின் பெயரால் பக்தியின் பெயரால்
மதத்தின் பெயரால் மதத்தின் பெயரால்
பேதம் வேண்டாம் பேதம் வேண்டாம்!

(8) பார்ப்பான் மட்டும் பார்ப்பான் மட்டும்
அர்ச்சகனா? அர்ச்சகனா?
தமிழன் மட்டும் தமிழன் மட்டும்
சூத்திரனா? சூத்திரனா?

(9) கோயில் கட்டும் கோயில் கட்டும்
தமிழன் எல்லாம் தமிழன் எல்லாம்
வீதியிலா? வீதியிலா?
குருக்கள் மட்டும் குருக்கள் மட்டும்
கருவறையிலா கருவறையிலா?

(10) தாழ்த்தப்பட்டோரும்
பிற்படுத்தப்பட்டோரும்
தாழ்த்தப்பட்டோரும்
பிற்படுத்தப்பட்டோரும்
அய்.ஏ.எஸ். ஆகலாம்
அய்.ஏ.எஸ். ஆகலாம்
நீதிபதியாகலாம் நீதிபதியாகலாம்
அர்ச்சகர் ஆக அர்ச்சகர் ஆக
கூடாதா? கூடாதா?
முடியாதா? முடியாதா?

(11) ஆண்டவன் அனைவருக்கும்
ஆண்டவன் அனைவருக்கும்
பொது என்றால் பொது என்றால்
பிராமணன் என்றும் சூத்திரன் என்றும்
பிராமணன் என்றும் சூத்திரன் என்றும்
பேதங்கள் ஏன்? பேதங்கள் ஏன்?

(12) பெரியார் நெஞ்சில் பெரியார் நெஞ்சில்
தைத்த முள்ளை தைத்த முள்ளை
மானமிகு கலைஞர் மானமிகு கலைஞர்
சட்டம் இயற்றி சட்டம் இயற்றி
நீக்கினார் நீக்கினார்
உச்சநீதிமன்றமே உச்சநீதிமன்றமே
தடையை நீக்கு - தடையை நீக்கு!

(13) கட்சியில்லை கட்சியில்லை
ஜாதியில்லை ஜாதியில்லை
உரிமைப் போர் உரிமைப் போர்
மனித உரிமைப் போர் மனித உரிமைப் போர்!

(14) தமிழா தமிழா ஒன்றுபடு-
தமிழா தமிழா ஒன்றுபடு!
தமிழன் பகையை
தமிழன் பகையை
வென்று விடு - வென்று விடு!

(15) வெல்லட்டும் வெல்லட்டும்!
மனித உரிமை மனித உரிமை
வெல்லட்டும் - வெல்லட்டும்!

(15) போராடுவோம் - போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம் - போராடுவோம்!
வெற்றி பெறுவோம்
வெற்றி பெறுவோம்!

(17) வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(18) வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!

(19) வாழ்க வாழ்க வாழ்கவே
அறிஞர் அண்ணா வாழ்கவே!

(20) வெல்க வெல்க வெல்கவே
தமிழர் உரிமை வெல்கவே!
- தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம்! (ஜாதி - தீண்டாமை ஒழிப்பு) 1.8.2013 - முழக்கங்கள் (1)


வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(2) பணி முடிப்போம் பணி முடிப்போம்!
மரண சாசனமாக மரண சாசனமாக
பெரியார் அறிவித்த பெரியார் அறிவித்த
அனைத்து ஜாதியினருக்கும்
அனைத்து ஜாதியினருக்கும்
அர்ச்சகர் உரிமை அர்ச்சகர் உரிமை
பணி முடிப்போம் - பணி முடிப்போம்

(3) ஒழிக ஒழிக ஒழிகவே!
வருணா சிரமம் வருணா சிரமம்
ஒழிக ஒழிக ஒழிகவே!

(4) ஒழிக ஒழிக ஒழிகவே
ஜாதியும் - தீண்டாமையும்
ஜாதியும் தீண்டாமையும்
ஒழிக ஒழிக ஒழிகவே!

(5) கோயில் கருவறையில் கோயில் கருவறையில்
தீண்டாமை தீண்டாமை ஒழிக ஒழிக ஒழிகவே!

(6) அர்ச்சகராக்கு அர்ச்சகராக்கு!
அனைத்து ஜாதியினரையும்
அனைத்து ஜாதியினரையும்
அர்ச்சகர் ஆக்கு அர்ச்சகர் ஆக்கு!

(7) பேதம் வேண்டாம் பேதம் வேண்டாம்
பக்தியின் பெயரால் பக்தியின் பெயரால்
மதத்தின் பெயரால் மதத்தின் பெயரால்
பேதம் வேண்டாம் பேதம் வேண்டாம்!

(8) பார்ப்பான் மட்டும் பார்ப்பான் மட்டும்
அர்ச்சகனா? அர்ச்சகனா?
தமிழன் மட்டும் தமிழன் மட்டும்
சூத்திரனா? சூத்திரனா?

(9) கோயில் கட்டும் கோயில் கட்டும்
தமிழன் எல்லாம் தமிழன் எல்லாம்
வீதியிலா? வீதியிலா?
குருக்கள் மட்டும் குருக்கள் மட்டும்
கருவறையிலா கருவறையிலா?

(10) தாழ்த்தப்பட்டோரும்
பிற்படுத்தப்பட்டோரும்
தாழ்த்தப்பட்டோரும்
பிற்படுத்தப்பட்டோரும்
அய்.ஏ.எஸ். ஆகலாம்
அய்.ஏ.எஸ். ஆகலாம்
நீதிபதியாகலாம் நீதிபதியாகலாம்
அர்ச்சகர் ஆக அர்ச்சகர் ஆக
கூடாதா? கூடாதா?
முடியாதா? முடியாதா?

(11) ஆண்டவன் அனைவருக்கும்
ஆண்டவன் அனைவருக்கும்
பொது என்றால் பொது என்றால்
பிராமணன் என்றும் சூத்திரன் என்றும்
பிராமணன் என்றும் சூத்திரன் என்றும்
பேதங்கள் ஏன்? பேதங்கள் ஏன்?

(12) பெரியார் நெஞ்சில் பெரியார் நெஞ்சில்
தைத்த முள்ளை தைத்த முள்ளை
மானமிகு கலைஞர் மானமிகு கலைஞர்
சட்டம் இயற்றி சட்டம் இயற்றி
நீக்கினார் நீக்கினார்
உச்சநீதிமன்றமே உச்சநீதிமன்றமே
தடையை நீக்கு - தடையை நீக்கு!

(13) கட்சியில்லை கட்சியில்லை
ஜாதியில்லை ஜாதியில்லை
உரிமைப் போர் உரிமைப் போர்
மனித உரிமைப் போர் மனித உரிமைப் போர்!

(14) தமிழா தமிழா ஒன்றுபடு-
தமிழா தமிழா ஒன்றுபடு!
தமிழன் பகையை
தமிழன் பகையை
வென்று விடு - வென்று விடு!

(15) வெல்லட்டும் வெல்லட்டும்!
மனித உரிமை மனித உரிமை
வெல்லட்டும் - வெல்லட்டும்!

(15) போராடுவோம் - போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம் - போராடுவோம்!
வெற்றி பெறுவோம்
வெற்றி பெறுவோம்!

(17) வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(18) வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!

(19) வாழ்க வாழ்க வாழ்கவே
அறிஞர் அண்ணா வாழ்கவே!

(20) வெல்க வெல்க வெல்கவே
தமிழர் உரிமை வெல்கவே!
- தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்