Search This Blog

23.7.13

நமது கடவுளும் மதமும் -- பெரியார்

நமது கடவுளும் மதமும்

பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! பெரியோர் களே! இந்த சீரங்க மாநகரில் எனது 87- ஆம் ஆண்டுபிறந்த நாள் விழாவை ஒருவார காலமாக சிறப் பாகக் கொண்டாடி வருகின்றீர்கள்.
இன்றைக்குக் கடைசி நாளில் என்னையும் வரவழைத்துப் பொன்னாடை போர்த்தியும், கை நிறைய அன்பளிப்பும், மனம் குளிர வாழ்த் துரைகளும் வழங்கியமைக்கு எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கின்றேன்.
சீரங்கம் என்பது மூடநம்பிக்கைக்கு சிகரம் வைத்தது போன்று காட்டுமிராண்டி ஊர் ஆகும். அப்படிப்பட்ட நகரில் சிந்தனை விழா என்ற தலைப்பில் ஒரு வார காலமாக விழாக்கொண்டாடி, சிந்தனையைக் கிளறும் கருத்துகளை, பல அறிஞர்களைக் கொண்டு வழங்கச் செய்தது ஆச்சரியமாகும்.
எனது பிறந்த நாள் விழாவை, நமது கொள்கையினைப் பிரச்சாரம் செய்ய ஒரு சாதனமாகவே கருதி, நானும் அனுமதித்து கலந்து கொள்ளுகின்றேன்.
தோழர்களே! பத்து ஆண்டு களுக்கு முன்பு கூட, நமது நாட்டு மக்களின் சராசரி வயது 32 தான். காமராசர் ஆட்சி காரணமாக இன்று 50 ஆண்டு சராசரி வயது என்று நமது நாட்டு சுகாதார நிலை அபிவிருத்தி அடைந்து உள்ளது: அந்த வளர்ச்சியின் பயனாகத்தான் என்போன்றவர்கள் 87 வயது வாழமுடிகின்றது.
இனி நமது மக்கள் 87 என்ன,  90-வயது, 100 வயது கூட வாழ் வார்கள்; எளிதில் சாகமாட்டார்கள்.
முன்பு தாய்மார்கள் கர்ப்பவதி யானால் 100-க்கு 25 பெண்கள் பிரசவத்தில் இறந்து விடுவார்கள். 100-க்கு 25 பிள்ளைகள் பிறக்கும்போதே செத்துப் போகும். பிறந்த 10 நாள், ஒருமாதத்தில், 25 போய் விடும். இன்று 100-க்கு நூறும் பிழைத்துக் கொள்கிறது. தலையில் கல்லைப் போட்டால் கூட சாகிறது இல்லை; இதற்காக நாம் காமராசருக்குத் தான் பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
நல்ல சுகாதாரம், வைத்திய வசதி காரணமாக மக்கள் எண் ணிக்கை பெருக்கெடுத்து விட்ட தனால், அரசாங்கமும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை மேற் கொண்டு உள்ளது.
இந்த விழாவிற்குச் சிந்தனை விழா என்று பெயர் வைத்து, பேச் சுக்கும் சிந்தனை என்று தலைப்புக் கொடுத்தது கண்டு நான் பெரிதும் மகிழ்கின்றேன்.
இந்தியாவிலேயே சிந்தனை யைப் பற்றிப்பேச வேண்டும் என் றால், பிரச்சாரம் செய்யவேண்டும் என்றால், நாங்கள்தான், எங்கள் கழகம் தான்.
சிந்தனை என்றால் பகுத்தறிவு என்பதுதான் பொருள். பகுத்தறிவு கொண்டு சிந்திப்பதை இந்த நாட் டில் நாத்திகம் என்று ஆக்கி விட்டார்கள். 

புராணங்களை, கடவுள் கதை களை, முன்னோர் கூற்றுகளை - சிந்திக்காமல் அப்படியே ஒத்துக் கொள்வது ஆத்திகம் என்று கூறுவார்கள்.
அறிவு கொண்டு அலசிப் பார்த்து, அறிவுக்குச்சரி என்று பட்டதை ஏற்றுக் கொண்டு, மற் றதைத் தள்ளி விடுபவர்கள் நாத்திகர்கள் என்று கூறி, வெறுப்பு உணர்ச்சியினை வளர்த்து விட்டு உள்ளார்கள்.
சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது ஜைன மதமும், புத்த மதமும் ஆகும். அவர்கள் முடிவு சரியோ, தப்பாகவோ இருந்தாலும், அவர்களுடைய மார்க்கத்தின் முடிவுக்கு அவர்கள் பயன்படுத்திக் கொண்டது பகுத்தறிவு ஆகும்.
சமண மதத்துக்கு பெயர் அருக மதம்; அருகமதம் அறிவை ஆதார மாகக் கொண்டு வகுக்கப்பட்டது. புத்த மதமும் புத்தியை ஆதாரமாகக் கொண்டு கொள்கை வகுக்கப் பட்டது ஆகும்.
ஜைன, பவுத்தர்களை சிந்தனை யாளர்கள் என்று கூறப்படக் கார ணம் என்னவென்றால், இவர்கள் பகுத்தறிவினை ஆதாரமாகக் கொண்டவர்களானதனால்தான்.
இதன் காரணமாக வைதிக மதக்காரர்கள் இந்த ஜைன, பவுத்தமதத்தினரை `நிரீசுவர வாதிகள்'' என்றே கூறி உள் ளார்கள்.
தேவாரத்தை எடுத்துக் கொண் டால் பல இடங்களில் ஜைன. பவுத்தர்களைக் கண்டித்துப் பாடியுள்ளார்கள்.
சம்பந்தன் 10 பாட்டுக்கு, ஒரு பாட்டாவது கண்டித்தே இருப் பதைக் காணலாம். ஜைன பவுத்த மதக்காரர்களின் மனைவிமார்களைக் கற்பழிக்க தனக்கு அரு ளும்படி கடவுளை நோக்கிப்பாடியும் இருக்கின்றார்கள்.
சமண, பவுத்த மதக்காரர்களை - சைவ, வைணவ மதக்காரர்கள் கழுவேற்றியுள்ளார்கள். சொத்துக் களைச் சூறையாடி, கொலையும் செய்து இருக்கின்றார்கள்.
இந்த ஜைன பவுத்தர்கள் செய்த அக்கிரமம்தான் என்ன? பகுத் தறிவு கொண்டு எதனையும் பார்க்க வேண்டும் என்று கூறியதுதான் ஆகும்.
கடவுள் கண்ணுக்கும் எட்டாத வன், அறிவுக்கும் எட்டாதவன், மனதுக்கும் எட்டாதவன் என்று ஆத்திகன் கூறுகின்றான். இந்த மூன்றுக்கும் எட்டாதவன், பிறகு எதற்குத் தான் எட்டுவான்? இது பற்றி ஆராயக் கூடாது; அப்படியே நம்பவேண்டும்; அதற்குப் பெயர் தான் ஆத்திகம். இப்படி எட்டாதது எப்படிக் கடவுளாகும்? என்று கேட்டால் - நாத்திகமா?
ஜீவராசிகளில் மனிதனைத் தனியாகப் பிரித்து உயர் திணை யாக ஆக்கி, மற்ற ஜீவராசிகளை அஃறிணையாக்கிப் பிரித்து வைக்கக் காரணம் என்ன? மனிதனுக்கு மற்ற ஜீவராசிகளிடம் காணப்படாத பிரத்தியேகமான அறிவு - பகுத்தறிவு இருப்பதனால் தான்! மற்ற ஜீவராசிகளுக்கு இந்தப் பகுத்தறியும் சக்தி கிடையாது.
கழுதைக்கும், எருமைக்கும் 1000  வருஷங்களுக்கு முன்பு என்ன புத்தி இருந்ததோ, அதே புத்திதான் இன்றும் உள்ளது.
ஆனால், ஓட்டுகின்றவன் மாற்றி ஓட்டுவதுமூலம் ஏதோ சில மாறுதல் இருக்குமே ஒழிய வேறு விதத்தில் மாற்றமே கிடையாது.
மனிதனோ பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்தனை மூலம் வளர வேண்டியவன். அப்படி வளர்ச்சி அடையாமல் மிருகங்களைப்போல பகுத்தறிவு அற்றவனாக இருக்கக் காரணம் என்ன? அவனுக்கு அறிவு வளர்ச்சியினைத் தடைப் படுத்த கடவுளையும், மதத்தையும், சாஸ்திரங்களையும் முன்னோர்கள் நடப்பையும் கொண்டுவந்து புகுத்தி விட்டார்கள்.
அறிவுக்குச் சுதந்திரமில்லாமல், பெரியோர்கள் -   சாஸ்திரங்கள் - மதம் சொன்னபடி நடக்கணும் என்று தடைவிதித்ததன் காரண மாக வளர்ச்சி அடையவில்லை.
மற்ற நாட்டு மக்கள் கடவுள் உண்டு என்று நம்பினாலும், காலத் துக்கு ஏற்ப அறிவுக்கு ஏற்ப, ``கடவுள் ஒன்று உண்டு என்று நம்பு'' என்று அந்த அளவுக்கே சொல்ல வேண்டிய வர்களாக ஆகிவிட்டார்கள்!
ஆராய்ந்த மூட நம்பிக்கைகளை எல்லாம் ஒழித்து, எல்லா அமைப் புக்கும் காரணம் இயற்கை யான மாற்றம்தான் என்று சொல்ல வெட்கப் பட்டுக் கொண்டு - ஒரு கடவுள்தான் என்று கூறினார்கள்.
ஆனால் ஒரு கூட்டத்தார், இன்று உலக அமைப்புக்குக் கடவுள் தேவை இல்லை என்று பச்சை யாகக் கூறிக் கொண்டு வாழ்கின் றார்கள். அவர்கள்தான் இரஷ்யாக் காரர்கள். அவர்கள் சுமார் 30 கோடியாவர். அங்கு ஏழையும் இல்லை, பணக் காரனும் இல்லை; வாழ்க்கைத் தரத்திலும்பேதம் இல்லை.
காரணம், அவர்கள் அறிவை முன்வைத்து, சிந்தனையை முன் வைத்து, பார்த்துச் செய்கின்றார் கள். ``ஏன் வாழ்வில் பேதம்?'' என கேட்டு ஒழிக்கின்றார்கள் பிரத்யட் சத்துக்கு, அனுபவத்துக்கு ஒத்து வருகின்றதா? என்று பார்த்து காரியம் ஆற்றுகின்றார்கள்.
இவர்கள் மட்டும் அல்ல - சீனர் கள், ஜப்பானியர்கள், பர்மியர்கள், இலங்கைக்காரர்கள், சயாம்காரர் கள் இப்படியாக புத்தமதக்காரர் கள் இருக்கின்றார்கள். இவர் களுக்குக் கடவுளும் இல்லை, ஆத்மாவும் இல்லை, முன்ஜென்மும் இல்லை, பின்ஜென்மும் இல்லை.
இவர்களை எல்லாம் தள்ளி விட்டுப் பார்த்தால், கடவுள் நம்பிக்கைக்காரர்கள் சுமார் 150 கோடி மக்கள்தான் உலகில் வாழ் கின்றார்கள். முஸ்லிம்கள் சுமார் 70, 80 கோடிமக்கள் இருக்கலாம். கிறிஸ்தவர்கள் 100, 120 கோடி இருக்கலாம். இந்த இரு மதங் களையும் முகமதுநபியும், கிறிஸ்து வும் தோன்றி, ஒரே கடவுள்; அதற்கு உருவம் இல்லை; அதற்கு ஒன்றும் தேவை இல்லை என்று கூறி ஜாக் கிரதையாக அமைத்து விட் டார்கள்.
நமது இந்தியாவில்தான் 25 கோடி மக்களாகிய இந்து என்று கூறப்படுகின்ற நமக்குத்தான் கடவுளைப் பற்றிய தெளிவான கொள்கையே இல்லை. ஆயிரக் கணக்கான கடவுள்கள் அதுகளுக் குப் பல உருவங்கள்! மனைவி மக்கள். சோறு, சாறு என்று ஆக்கிவைத்து உள்ளார்கள்.
நமது கடவுள்கள் காட்டு மிராண்டிக் காலத்தில் ஏற்பட்டவை தான் இன்றும் உள்ளன.
முஸ்லிமும், கிறிஸ்தவனும் திருத்தப் பாடு செய்து கொண்டது போல இவனும் செய்துகொள்ள வில்லை. அதன் காரணமாகத் தானே நாம் இன்றும் காட்டு மிராண்டியாக உள்ளோம்?
கிறிஸ்தவனும், முஸ்லிமும் கடவுள் ஒருவர்தான்; உருவம் இல்லை. ஒழுக்க மானவர், கருணையானவர், பெண்டுபிள்ளை சோறு, சாறு வேண்டாதவர் என் கின்றான்!
நமது மதக்காரன் அப்படி யாரடா சொன்னது? எங்களுடைய கடவுளுக்குப் பல உருவம், பெண்டு பிள்ளை, வைப்பாட்டி, சோறு, சேலை, நகை எல்லாம் வேண்டும் என்று கூறுவதுபோல கடவுளை அமைத்து உள்ளாள்.
இந்த ஊர் ரெங்கநாதன், சீரங் கத்திலே இருந்து உறையூருக்கு வைப்பாட்டி வீட்டுக்குத் தூக்கிப் போகும் விழாவானது 1965-லும் நடக்கின்றதே, சிந்திக்க வேண் டாமா? மக்கள் அய்ஸ்கட்டியைத் தொட்டால் ஜில் என்கின்றது. நெருப்பைத் தொட்டால் சுடுகின் றது. இதைப் பிரத்தியட் சத்தில் நாம் உணர்ந்து கொள்ளுகின்றோம். கடவுளைப்பற்றிய உணர்வு எதன் மூலமாவது நாம் காண முடி கின்றதா? இல்லையே!
கடவுளை உண்டு பண்ணி யவன், மனிதனைப் போலவே அதற்கு உருவம், ஆசாபாசங்கள் நடப்புகள் எல்லாம் கற்பித்து உள்ளான். நாம் நல்லது பண்ணி னால், கடவுள் நமக்கு நல்லது பண்ணுவார்; தீமை பண்ணினால், நமக்குத் தீமை பண்ணுவார் என்று கூறப்படுகின்றது.
நல்லது  பண்ணவும்,  தீமை பண்ணவும்  நமக்கு அதிகாரம் உள் ளது. நமக்கு நன்மையும், தீமையும் அளிக்கக்கூடிய அதிகாரம் கடவு ளுக்கு மட்டும் ஏன் இருக்க வேண்டும்?
கடவுள்தானே நம்மை நல்லதும், தீமையும் பண்ணச் செய்தவன்; அவன் அன்றி ஒன்றும் அசையாது என்கிறாயே, அப்படி இருக்க - அவன் ஏன் நன்மையும், தீமையும் நம் காரியங்களுக்காக செய்ய வேண் டும்? மக்கள் சிந்திக்க வேண்டும்.
இன்றைக்கு அறிவு வளர்ச்சி யின் காரணமாக மற்ற நாட்டுக் காரன்கள் சிந்தனை செய்து, எவ்வளவு விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டு முன்னேறுகின்றான்? நமக்கு மட்டும் ஏன் இல்லை? நமக்குச் சிந்தனைச் சக்தி உரிமை இல்லை.
சிந்திப்பது பாவம் என்று, மதத்தின் பேரால், முன்னோர்கள் நடப்பின் பேரால்தடை விதிக்கப்பப் பட்டு உள்ளது.
இதன் காரணமாகத்தான் ஒரு நெருப்புக் குச்சியைக் கூட நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. மற்ற நாட்டுக்காரர்களிடையே தோன் றுவதுபோல, நம்நாட்டில் அதிசய அற்புதங்களைக்கண்டு பிடித்தவர் களையே காணமுடிய வில்லையே.
காரணம் என்ன? நாம் சிந்த னையின் சக்தியை உணர வில்லை; மற்ற நாட்டுக்காரர்கள் உணர்ந்து பயன்படுத்து கின்றார்கள்.
நமக்கு அரசாங்கமும் 10,000-கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றது. இதனுடைய வேலை மனிதனை மடையனாக வைத்து இருக்கவேண்டியது என்று தான் நடந்து வந்து இருக்கின்றது.
மதத்தினுடைய வேலையும் மனிதனை மடையனாக வைத்து இருக்கச் செய்வதுதான் ஆகும்.
நமது சாஸ்திரங்களும் இப்படியே யாகும்.
நமது நாட்டை விட்டு வெளியே போனால், நம்மைப்பற்றி மற்ற நாட்டுக்காரர்கள் என்ன கருத்துக் கொண்டு உள்ளார்கள் தெரியுமா இந்தியா ஒரு மூடநம்பிக்கை நிறைந்த நாடு; முட்டாள்கள் நிறைந்த நாடு என்பதுதானே?
தோழர்களே! எதற்காக நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வது? எதற்காக விபூதி பூசிக் கொள்வது? முட்டாள் என்று காட்டிக் கொள் வதைத் தவிர, வேறு என்ன? எதையும் சிந்தித்துப் பார்ப்பதே, நடப்பதே மனிதன் முன்னேற வழி என்று விரித்துரைத்தார்கள்.
மேலும் பேசுகையில், இன் றைக்கு ஏற்பட்டு உள்ள பாகிஸ் தான், சீனா ஆக்கிரமிப்பு பற்றியும், போர் நிறுத்தம் ஏற்பட்டு உள்ள போதிலும் அபாயமும், நெருக்கடியும் நீங்கி விட்டதாகக் கூறமுடியாது. பொது மக்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பும் உதவியும் செய்ய வேண்டியதோடு ஒற்றுமையாகவும் இருக்கவேண்டும்.
துரோகச்  செயல்கள் நடை பெற்றால், அரசாங்கத்துக்குத் தெரி வித்து அம்பலப்படுத்த வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்கள்.

------------------------------------சீரங்கத்தில் 17.9.1965 இல் தந்தை பெரியார்  ஆற்றிய உரை "விடுதலை", 26.9.1965

54 comments:

தமிழ் ஓவியா said...


இதோ, பாரம்பரிய அர்ச்சகரின் வன்முறை பக்திப் பரவசம்!


- ஊசி மிளகாய்

தகுதி, திறமை பேசும் பார்ப்பனர்களுக்கு, ஏனோ அர்ச்சகரைத் தகுதி, திறமைக்கு உரியவர்களாக்கி, முறைப்படி, ஆகமங்கள் அதுவும்கூட சிவன் கோயிலுக்கு சிவாகமம், வைஷ்ணவ கோயிலுக்கு வைகனாச ஆகமங்கள் மற்றும் பஞ்சாராத்திரம் போன்றவைகளையும், (சம்பிரதாய நடைமுறை களையும்) அர்ச்சனை பற்றிய முழுக் கல்வியைக் கற்றுத் தேர்வு செய்தவர்களையும் ஏன் இன்னும் கோயில் கருவறைக்குள் விடு வதைத் தடுக்க வேண்டும்?

பார்ப்பன அர்ச்சகர்களின் பரம்பரைக் கொள்ளை, சுவாகா சுய தொழில் தடையின்றி நடைபெற வேண்டும் என்ற பேராசைதானே ஒரே காரணம்?

உச்சநீதிமன்றத்தின் இரண்டு முக்கிய தீர்ப்புகள் (பல நீதிபதிகள் அமர்வுகள் அதில் உண்டு) - அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவது அரசியல் சட்ட விரோதமல்ல; மத விஷயங்களில் குறுக்கீடு ஆகாது; அரசியல் சட்ட விதிகள் 25, 26ஆவது பிரிவுக்குட்பட்ட சட்ட பூர்வ நடவடிக்கைகளே என்று தெளிவான தீர்ப்புகள் 1971-லும் 2002லும் வந்து விட்டன! இரண்டு ஆட்சிகளில் (எம்.ஜி.ஆர். கலைஞர் ஆட்சிகளில் - அதிமுக, திமுக ஆட்சிகளில்) இரண்டு உயர்நீதிமன்ற நீதியரசர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அவர்கள் பரிந்துரையும் இதை ஏற்றுக் கொண்டு விட்டது!

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் முறையான பாட திட்டத்தின்கீழ், 69 சதவிகித தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு சட்டப் படியே பயிற்சி பெற்று 206 பேர்கள் உள்ளனரே!

பிறகு ஏன் இன்னமும் இந்த முட்டுக்கட்டை முயற்சிகள்?

பாரம்பரிய அர்ச்சகர், பார்ப்பனர்களின் ஒழுக்கம் என்பது எப்படிப்பட்டது?

ஆச்சாரம் போச்சு, அனுஷ்டானம் போச்சு என்று ஒப்பாரி வைக்கும் துக்ளக் துருவாச முனிவர்களின் துருப்பிடித்த சாபம் எல்லாம் பொருள் உள்ளதா?

இந்த அர்ச்சகர்கள் எப்படிப்பட்டவர்கள்? இந்திய அரசு டாக்டர் சர். சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் அமைத்த இந்து அறநிலைய ஆய்வுக் கமிட்டி அறிக்கை முதல் துவங்கி,
ஜஸ்டிஸ் மகராஜன் தலைமையில் (எம்.ஜி.ஆர். அரசு) போட்ட கமிஷன் அறிக்கையும் சரி,

நடைமுறையில் காஞ்சிபுரம் கோயில் கருவறையை விபச்சார கேந்திரமாகப் பயன்படுத்தி, பல குடும்பப் பெண்களை எல்லாம் செல்போன் அருளால் படம் எடுத்து பயமுறுத்தி தொடர் கற்பழிப்புத் திருப்பணி செய்த அர்ச்சகர் தேவநாதன் வரை ஏராளம் சொல்ல முடியும் சம்பவங்கள் வரை எத்தனைத் திருப்பணிகள்!

சி.பி. ராமசாமி அய்யர் கமிஷன் அறிக்கைகள் அரைபாட்டில் சாராயத்திற்கு சாமி சிலையை விற்ற அர்ச்சகர்கள் கதையெல்லாம் கூறப்பட்டுள்ளதே!

நேற்று சுடச்சுட - ஒரு சம்பவம் பூரி ஜெகன்நாதர் தேரோட்டம் நடை பெறுகிறது ஒடிசாவில்.

அங்கு சென்ற இத்தாலிய நாட்டு நாட்டிய மாதுவின் தோளை தொட்டுப் பார்த்துள்ளனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு விரிவான செய்தியாக இன்று முதல் பக்கத்தில் வெளியிட் டுள்ளது!

அந்த அம்மையாரிடம் 1000 ரூபாய் தட்சணை கேட்டுள்ளார் அந்த அர்ச்சகர்; இவர் மிக அதிகம் என்று கூறி மறுத்துள்ளார்!

அதற்காக அவரை ஓங்கிக் கன்னத்தில் அறைந் துள்ளார் அந்தப் பார்ப்பன அர்ச்சகர்!

அந்த அம்மையாரின் கையைப் பிடித்து முறுக்கி, தோள் பட்டையை அழுத்தி ஆபாச வார்த்தைகளில் அந்த அம்மையாரை அர்ச்சனை செய்துள்ளார் அந்தப் பார்ப்பனர்.

ஆத்திரம் பொங்க, காவல்துறை அதிகாரி களிடம் ஆங்கிலத்தில் புகார் கொடுத்துள்ள அந்த அம்மையார் இத்தாலிய நாட்டுக்காரர்; பெரிய பிரபல நாட்டியப் பயிற்சியாளரும்கூட!
எப்படிப் போகிறது பார்த்தீர்களா? அர்ச்சகர் பக்தி, ஒழுக்கம் எல்லாம்!

பக்திப் பரசவம் இதுதானோ?

பேராசைக் காரனடா பார்ப்பான் - நம்மைப் பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்
என்ற (பார்ப்பன) பாரதியின் கவிதைக்கு ஒடிசாவும் எடுத்துக்காட்டு போலும்!

தமிழ் ஓவியா said...


சமூகநீதியாளர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய காலம் இது! தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய சமூக நீதிக்கான அறிக்கை


அகில இந்திய நுழைவுத் தேர்வு மாநில உரிமை, சமூக நீதி இவற்றைத் தகர்க்கக் கூடியதாகும்

மருத்துவ நுழைவுத் தேர்வில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்!

சமூகநீதியாளர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய காலம் இது!
தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய சமூக நீதிக்கான அறிக்கை

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க் கைக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு (NEET) தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பினை எதிர்த்து மறு ஆய்வு மனு செய்வதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை (Neet - National Eligibility - Cum Entrance Test) அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்தது. அதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு- நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கி யுள்ளது (மூன்று நீதிபதிகளில் பெரும்பான்மைத் தீர்ப்பு)

தமிழ் ஓவியா said...


மேல் முறையீடாம்!

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்ய விருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து இதற்கு முன்பாகவே கடந்த ஆண்டு (27.9.2012) அறிக்கை ஒன்றை விரிவாக வெளியிட் டுள்ளோம்.

இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வு தேவையில்லை; தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நுழைவுத் தேர்வு சட்டப்படியே ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் அகில இந்தியப் போர்வையில் மாநில அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக ஒன்றைத் திணிப்பது மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாகும்.

பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதால் - ஏற்பட்ட ஆபத்து!

கல்வியை மாநில பட்டியலிலிருந்து நெருக்கடி காலத்தில் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்ற அத்துமீறலால், இதுபோன்ற மாநில அரசின் கொள்கை முடிவுகளில் பெரியண்ணனாக மத்திய அரசு மூக்கை நுழைக்கிறது.

ஏற்கெனவே மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலி ருந்தும் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு 15 சதவீத இடங் களை எடுத்துச் சென்று விட்டது. மருத்துவ முதுநிலைப் படிப்புக்கு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 50 சதவீத இடங்களைக் கொண்டு சென்றுள்ளது.

இதில் என்ன கொடுமை என்றால், இப்படி மத்திய தொகுப்புக்குக் கொண்டு செல்லப்படும் இடங்களில் பிற் படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேயில்லை.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பு!

மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட் டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்கிற சட்டப் படியான நிலைமையில் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை!

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாளா?

இந்த நிலையில் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் எனும் தன்மையில் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் என்ன செய்தது தெரியுமா?

மாநிலங்களிலிருந்து 15 சதவீத இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு எடுத்துச் சென்றதை மாற்றி, நூறு சதவீத இடங்களையும் அகில இந்தியத் தொகுப்புக்கு எடுத்துச் சென்று, புதிதாக அகில இந்திய நுழைவுத் தேர்வை நடத்தித் (Neet) தேர்வு செய்கிறதாம்.
இதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் முடிவுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒரே நுழைவுத் தேர்வு என்பது உண்மைதானா?

அகில இந்திய நுழைவுத் தேர்வை நடத்துவதால் மாணவர்கள் பல நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய சுமை இருக்காது என்று நாக்கில் தேன் தடவுவது போல காரணம் சொல்லுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

அதாவது உண்மையா? இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்குமான நுழைவுத் தேர்வு அன்று இது.

டில்லியில் உள்ள எய்ம்ஸ், சண்டிகரில் உள்ள பி.ஜி.அய். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர், இராணுவ மருத் துவக் கல்லூரிகளுக்கு இந்த நுழைவுத் தேர்வு செல்லு படியாகாது என்பதைக் கவனிக்க வேண்டும்.

இந்த மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமென் றால் தனித்தனியாகத்தான் நுழைவுத் தேர்வை எழுதிட வேண்டும்.

கடந்த தி.மு.க. ஆட்சியிலும் சரி, இன்றைய ஆட்சி யிலும் சரி நுழைவுத் தேர்வை ஏற்றுக் கொள்ளவில்லை.

மற்ற பல மாநிலங்களும் இதை எதிர்த்து, தங்கள் உரிமையும் பறி போகின்றன என்று வாதாடினர்.

தமிழ்நாடு அரசு எதிர் மனு தாக்கல் செய்யலாம்

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு, மத்திய அரசு இப்பொழுது மேற்கொள்ளவிருக்கும் மேல் முறையீட்டை எதிர்த்து தன்னையும் ஒருவாதியாக இணைத்துக் கொண்டு,(Implead) தமிழ்நாட்டில் ஆண்டாண்டு காலமாக அரும்பாடுபட்டு நிலை நிறுத்திய சமூக நீதியைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஆந்திரா மற்றும் காஷ்மீர் மாநிலங்களைப் பாருங்கள்!

ஆந்திர மாநில அரசும் , காஷ்மீர் மாநில அரசும் - அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கும் இடங்கள் எங்களுக்குத் தேவையில்லை; - எங்கள் மாநிலத்தி லிருந்து இடங்களையும் மத்திய அரசுக்கு அளிக்கத் தயா ராக இல்லை என்று கறாராக முடிவு செய்து அறிவித்தனர். இம்முறையைப் பின்பற்றி நம் மாநிலத்திற்கு ஏற்பட்டு இருக்கும் இழப்பிலிருந்தும் தப்புவதற்கும் வழி இருக்கிறது.

தனியார்த்துறைகளிலும் இடஒதுக்கீடு வழி செய்யலாமே!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் இடஒதுக்கீட்டினை முறையாகப் பின்பற்றாமல் இடங்களை விலை பேசி விடுகிறார்கள் - இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வு (Neet)
அதனைத் தடுத்து விடுகிறது என்று கூடுதலாக தங்கள் முடிவுக்கு நியாயம் கற்பிக்க முயலுகிறார்கள்.

தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று சட்ட ரீதியாக அழுத்தம் கொடுத்து, தவறு செய்வதற்கு இடம் கொடுக்காத ஒரு வழி முறையை (Fool Proof) உண்டாக்கினால் அந்தத் தவறினைத் தவிர்க்கச் செய்ய முடியுமே!

நீட் நுழைவுத் தேர்வு என்பது சி.பி.எஸ்.இ. பாடத் திட்ட முறையில் அமைந்துள்ளதாகும். வேறு கல்வி முறையில் தான் பெரும்பாலான மாணவர்கள் படிக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்களைப் பாதிக்கச் செய்யும் ஒரு தேர்வு முறை, சரியானது தானா? பல்வேறு கல்வி முறைகள் உள்ள ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட கல்வி முறையில் பயின்றவர்களுக்குப் பயன்படும் வகையில் தேர்வு முறையைப் புகுத்தலாமா?

இன்னொன்று, அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த இருபால் மாணவர்களும் அந்தந்த மாநிலத்தில் படிக்கவே விரும்புவார்கள். அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் புதிய தேர்வு முறையால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். பெண்கள் வெளி மாநிலத்தில் சென்று படிப்பது இன்றைய சூழலில் கடினமே! அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பால குருசாமி போன்றவர்கள்கூட அகில இந்திய நுழைவுத் தேர்வை எதிர்த்துள்ளனரே!

ஒட்டகம் நுழைய இடம் கொடுத்தால்...

மருத்துவக் கல்வியில் நுழைய மத்திய அரசு என்னும் ஒட்டகத்தை அனுமதித்தால் எல்லாத் துறைகளிலும் புகுந்து மாநில அரசே என்ற ஒன்று இல்லாமல் எலும்புக் கூடாக ஆக்கக் கூடிய அபாயம் ஏற்படும், எச்சரிக்கை! எச்சரிக்கை!!
தமிழ்நாடு முதல் அமைச்சர் இதில் முக்கிய கவனம் செலுத்தி ஏற்படக் கூடிய ஆபத்தினைத் தடுத்து நிறுத்து மாறு வலியுறுத்துகிறோம்.

ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்!

சமூகநீதியில் அக்கறை உள்ள அனைத்துக் கட்சிகளும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, மத்திய அரசின் முடிவைக் கைவிடச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள் கிறோம். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியர் பணி நியமனத்தில் (FACULTY) இடஒதுக்கீடு தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. சமூக நீதியில் அடுத்தடுத்துப் பல இடர்ப்பாடுகள் திணிக்கப் பட்டு வருகின்றன. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
22.7.2013

தமிழ் ஓவியா said...


கவனிக்கவேண்டும்


மதத்தைக் காப்பாற்றவே கோயில் களும், சொத்துகளும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.
_ (விடுதலை,3.12.1962)

தமிழ் ஓவியா said...


கவனிக்கவேண்டும்


மதத்தைக் காப்பாற்றவே கோயில் களும், சொத்துகளும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.
_ (விடுதலை,3.12.1962)

தமிழ் ஓவியா said...


சிங்களமயமாக்கல்!


ஜூலை 16ஆம் தேதி டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 4ஆவது தீர்மானம் தமிழர் பகுதிகளில் சிங்களவர் களுக்கு உருவாக்கப்பட்டுள்ள புது மாவட்டம் பற்றியதாகும்.

வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டத்திற்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த இணைப்பைத் துண்டிக்கும் வகையிலும், சிங்களப் பகுதியான அனுராதபுரம் மாவட்டத்தோடு இணைந் திருக்கும் வகையிலும் வெளி ஓயா என்ற சிங்களப் பெயரிலேயே ஒரு புதிய மாவட்டத்தை சிங்கள அரசு உருவாக்கி, அங்கே சிங்கள வர்களை மட்டுமே குடியேற்றி வருகின்ற நிகழ்வுகளும் தற்போது நடைபெற்று வருவதை டெசோ இயக்கம் சுட்டிக்காட்டி அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானத்தின்படி பொதுத் தேர் தல்கள் நடைபெறும் காலத்தில் இது போன்ற மாவட்டங்களை உருவாக்குவதோ, எல்லை களை மாற்றுவதோ, புதிய குடியேற்றத்தை ஊக்குவிப்பதோ கூடாது என்று திட்டவட்டமாக கூறப்பட்ட போதிலும்; அதை மீறுகின்ற வகையில் சிங்கள அரசு ஈடுபடுவதையும் இந்திய அரசு கவனத்தில் கொண்டு, இதனை உலக நாடுகள் மற்றும் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றின் கவனத் திற்கு எடுத்துச் சென்று, உடனடியாகத் தடுத்து நிறுத்திட ஆவன செய்ய வேண்டுமென்று இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது என்ற டெசோவின் 4ஆம் தீர்மானம், இலங்கையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தமிழினத்தின் அடையாளத்தையே முற்றிலுமாக அழிக்கும் பேராபத்தைச் சுட்டிக் காட்டியுள்ளது.

தொடர்ந்து 1948ஆம் ஆண்டு முதலே கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய அளவில் தமிழ் ஈழத்தில் 9 ஆயிரம் சதுர மைல்களில் 2000 சதுர மைல்களை ஆக்கிரமித்துள்ளது.

தமிழர்கள் வீடுகளிலேயேகூட சிங்கள வர்கள் குடியேறிய கொடுமையை இலங்கையில் அப்பொழுது இருந்த இந்திய அமைதிப் படை (ஐ.ஞ.மு.கு.) நிருவாகிகளிடம் புகார் செய்யப்பட்டது. ஆனாலும் எந்தப் பரிகாரமும் கிட்டவில்லை. இப்பொழுது 89 தமிழ் ஊர்களின் பெயர்கள் சிங்கள மயமாக்கப்பட்டுள்ளன. (தமிழ்நாட்டில் தமிழ் ஊர்கள் சமஸ்கிருத மயம் ஆக்கப் பட்டதையும் நினைவில் கொண்டால் சிங்கள வர்கள் ஆரியர்களே என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அவர்களின் அணுகுமுறைகள் ஒன்றாகவே இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்)

இலங்கையில் தமிழர் பகுதிகள் ஆக்கிர மிக்கப்படுவதை எதிர்த்தும், சர்வதேச அளவில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சேர்க்கவும் தமிழக மக்கள் பேரவைத் தலைவர் திருச்சேத்தி தலைமையில் பிரான்சு நாட்டு தமிழீழ மக்கள் பேரவை சார்பில் பாரீசில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டதும் உண்டு (ஜூன் - 2012) வாரா வாரம் பல வாரங்கள் அப்படி நடத்தினர்.

நியாயமான இந்த அறவழிப் போராட்டங் களையெல்லாம் இலங்கைப் பாசிச அரசு கிஞ்சிற்றும் பொருட்படுத்தவில்லை. தான் நினைத்த - விரும்பிய தமிழீழ அழிப்பை மூர்க்கத் தனமாகவே செய்து கொண்டு இருக்கிறது. அதனைத் தடுத்து நிறுத்தும் கடமை இந்திய அரசுக்கு இல்லையா? அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இப்படிப் பச்சையாக இலங்கை அரசு நடந்து கொண்டுள்ளதே - இதன்மீது நடவடிக்கை என்ன?

டெசோ இதனைத்தான் சுட்டிக் காட்டு கிறது; உலக நாடுகள் மத்தியில் இவற்றைக் கொண்டு செல்ல வரும் ஆகஸ்டு 8ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் டெசோ நடத்த இருக்கும் அறவழி ஆர்ப்பாட்டம் நல்ல அளவுக் குத் திருப்பத்தைத் தரும் என்று எதிர் பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...


முன்னாள் அமைச்சர் வி.வி. சாமிநாதன் எழுதுகிறார்


தந்தை பெரியாரின் பிரதிநிதி தி.க. தலைவர் கி.வீரமணி ஆகஸ்ட் முதல் நாள் அனைத்து சாதியினரும் அர்ச்சக ராகலாம் என்று தமிழ்நாட்டில் அரசு அமல்படுத்த அறிவித்த போராட்டம் ஆகஸ்ட் சுதந்திர போராட்டத்திற்கு ஒப்பானது.

உண்மையில் சாதி பேதம் உயர்வு தாழ்வு கூடாது என்பதை உளமார நம்பினால் தி.மு.க. ஆதரவு தந்தது போல் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க., இடதுசாரி கம்யூனிஸ்ட்டுகளும் திரு. கி.வீரமணி அவர்களின் ஆகஸ்ட் போராட்டத்தை ஆதரிக்க முன் வர வேண்டும். மாநில மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு தமிழ் எழுத்தாளர் முற்போக்கு சங்கம் போன்ற அமைப் புகளும், திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரிஅனந்தன், சேகர் முதலியவர்கள் கை கோக்க வேண்டும். மண் விடுதலையடைந்தால் போதாது. மூடப் பழக்க வழக்கங்களிலிருந்து மனம் விடுதலையடைய வேண்டும். வைக்கம் போராட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தந்தை பெரியார் போராட் டத்தை தொடர்ந்து தீண்டாமை ஒழிய சிறை சென்று வெற்றி பெற்று வைக்கம் வீரர் என்ற பட்டத்துடன் தமிழகம் திரும்பினார். ஆனால், அதே மலை யாள நாட்டில் எர்ணாகுளம் மாவட்டம் ஆரங்காடு என்ற கிராமத்தில் 1993இல் ஒரு சிவன் கோயில் கருவறைக்குள் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் நடத்தும் பயிற்சிப் பள்ளியில் மந்திரம் கற்றுத் தேர்ந்த திறமையான ஆனால் பார்ப்பனரல்லாத ஈழ வகுப்பு அர்ச் சகரை கருவறைக்குள் நுழைய நம் பூதிரி பார்ப்பனர்கள் மறுத்து விட்டனர். கேரள நாட்டு அரசும், அறநிலையத் துறையும், பொது மக்களும், தாழ்ந்த குலமானாலும் தகுதியுடைய அர்ச்சகர் ஆதித்தியன் நியமனத்தை ஆதரித் தன. இருந்தாலும் வேந்தனும், வேதி யர்களுக்கு துரும்பு என்று உயர்சாதி வெறி பிடித்த நம்பூதிரி பிராமணர்கள் கேரள உயர்நீதிமன்ற புல்பெஞ்ச் சட்டப்படி செல்லும் என்று சொல்லியும் அரசை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு போன வழக்கு வரலாற்று சிறப்பு மிக்க வழக்கு; ஆதித்தியன் கே. திருவிதாங்கூர் சமஸ்தானம் என்ற வழக்கில் 3.10.2002இல் இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அது சட்டப்படி செல்லும் நியாயமானதே என தீர்ப்பளித்தது. தமிழர்களுக்கு முன்பே அதிகம் படித்த அய்யர், அய்யங்கார், அர்ச்சகர்களுக்கு இது தெரியாது என்று சொல்ல முடியாது. தந்தை பெரியார் உயிருடன் இருக்கும் போதே கோயில் நுழைவுப் போராட்டம் அரசியல் சாசன சட்டம் போன்றவை களால் அரசு கோயில்களில் உள்ள கருவறைகளுக்குள் ஒளிந்து கொண்டு இருக்கும் தீண்டாமையை ஒழிக்க ஆன்மீகவாதிகளோ ஆ.ஞ., ஆ.டு.ஹ., ஆக போட்டியிடும் அரசியல் கட்சிகளோ வாய் திறக்கவே இல்லை. எனவே பெரியார் 26.1.1970 ராஜமன்னார்குடி ராஜகோபால சாமி பெருமாள் கோயில் கர்ப்பக்கிரக நுழைவு போராட்டத்தை துவக்கப் போவ தாக அறிவித்து விட்டார்கள். அன்று தி.மு.க.வின் முதல் முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா இறந்து கலைஞர் முதலமைச்சராக இருந்த காலம் அண்ணாவால் நியமிக்கப்பட்ட அற நிலையத்துறை அமைச்சர் கே.வி. சுப்பைய்யா மூலம் அனைத்து சாதி யினரும் அர்ச்சகராகலாம் என சட்ட சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றியதால் பெரியார் 26.1.1970இல் அறப் போராட்டத்தை ஓத்தி வைத்தார்கள். ஆனால் அரசியலில் ஏற்பட்ட சுனாமி யால் சட்டம் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்ததால் 5ஆவது தடவை முதலமைச் சரானவுடன் கலைஞர் 2006இல் பெரியாரின் கொள்கையை அமல்படுத்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக லாம் என சட்டத்தை மீண்டும் நிறைவேற்றினார்.

தமிழ் ஓவியா said...

கேரள நாட்டில் 2002இல் நம் பூதிரி பிராமணர்கள் கொட்டம் அடங்கியும் 2006இல் கூட தமிழ்நாட்டில் உள்ள ஸ்மார்த்த பிராமண அய்யர் மற்றும் அய்யங்கார் அர்ச்சகர்கள் உயர் ஜாதி வெறி தலைதூக்கி ஆடியது. மரபு, பழைய பழக்க வழக்கங்கள் என கூறி 2006இல் நேரிடையாகவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சமூக நீதி சட்டம் அமல் செய்ய முடியாமல் இடைக்கால தடை வாங்கி இன்று வரை ஏழு ஆண்டு களாக பார்ப்பனரல்லாத எல்லா தகுதி களும் உடைய வகுப்பினர்கள் தமிழ் நாட்டில் அரசு ஆலயங்களில் கருவறை கதவுகளைத் தட்டினாலும் திறக்காமல் பார்ப்பன அர்ச்சகர்கள் தடுத்துக் கொண்டு வருகிறார்கள். தமிழ் மடாதி பதிகளுக்கு வெட்கமில்லை தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடு வதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இருக்கிறார்கள்.

தமிழ் பல்கலைக் கழகங்கள் தோன்றி அதை அலங்கரிக்கும் முன்னாள் இந்நாள் துணைவேந்தர்கள் கவலையில்லாமல் இருக்கிறார்கள். ஆன்மீகத்திற்கு அவ மானம் மனித உரிமைகள் மதிக்கப்பட வில்லை. இந்திய அரசியல் சாசன அடிப் படை உரிமை ஷரத்துக்கள் 13,14,15,16 மற்றும் 17 மீறப்படுகின்றன. தீண்டாமைத் தடுப்பு தண்டனை தரும் சட்டம் செத்த பாம்பாகி விட்டது. விவேகானந்தர் தினம் கொண்டாடும்போது கோயிலில் கருவ றைக்குள் கடைப்பிடிக்கும் தீண் டாமையை ஏன் பேச விவேகிகள் மறுக்கிறார்கள்?

ஆலயங்களில் இலவச அன்னதான திட்டம் கோயில்களுக்கு கொடிக் கம்பங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி கோயிலுக்குள் கடவுள்கள் வாழும் கருவறைக்குள் பொது புனித மண் வழிபாட்டு இடத்தில் சாதி வேற்றுமை தாண்டவமாடுவதை மறைக்கப் பார்ப்பது மன்னிக்க முடியாத குற்றம் மக்களை ஏமாற்ற முடியாது யாரும்.

மாது தீட்டானால் கங்கையில் குளிக் கலாம் கங்கைக்கே தீட்டாகியிருக்கிறதே 3.10.2002-ஆம் தேதியன்று உச்சநீதி மன்றம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கடைப்பிடிக்கப்படும் பழக்க வழக்கமா னாலும், மரபு ஆனாலும், அரசு உத்தரவே ஆனாலும் அது கோயிலானாலும் சரி அவை மக்கள் சமத்துவம் சகோதரத் துவம், நாகரிகம், முன்னேற்றம் முதலிய கொள்கைகளுக்கு முரணாக இருந்தால் அவை சட்டப்படி செல்லாது என உச்சநீதிமன்றமே 3.10.2002ஆம் தேதி கொடுத்த தீர்ப்பை அவமதிப்பது போல் இருக்கும்போது 2006இல் இடைக்காலத் தடை பார்ப்பன அர்ச்சகர்களுக்கு கொடுத்தது அதிசயம்! அதைவிட அதி சயம் 7 ஆண்டுகள் ஆகியும் தடையை நீக்கி இறுதித் தீர்ப்பு வழங்காமல் இருப் பதுதான். நீதி வழங்க தாமதமானால் நீதி வழங்க மறுப்பதற்கு சமமென்ற பழமொழி தெரியாதா?

எனவே 1.8.2013ஆம் தேதியன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராக லாம் என்ற பெரியார் கொள்கையை தமிழ்நாடு அரசு பெரியார் பிறந்த தினத்திற்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி தி.க. தலைவர் கி.வீரமணி நடத்தும் போராட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும். பெரியார், தீண்டாமையை பூரணமாக ஒழிக்க ஏற்றிய தீபத்தை அணையாமல் ஏந்தும் கி.வீரமணி வாழ்க!

தமிழ் ஓவியா said...


தகுதியானதா தகுதித் தேர்வு?


ஆசிரியர் பணிக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தகுதித் தேர்வு குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டும் கல்வித் துறை அசைந்து கொடுப்பதாக இல்லை. எனினும் மீண்டும் ஒரு முறை பரிசீலித்தால் நல்லது.

ஆசிரியர் பணிக்கு வருகிறவர் பாட அறிவைவிட கற்பித்தலில் சிறந்து விளங்க வேண்டும். அதாவது தனது பாட அறிவை, சரியான முறையில் கற்பித்தால்தான் மாணவர்களின் புரிந்து கொள்ளும் ஆற்றலை வளர்க்க முடியும்.

மாணவர்களுக்குப் பாடங்களைச் சரியாகப் புரிய வைப்பதில்தான் ஆசிரியரின் வெற்றியே இருக்கிறது. அவ்வாறெனில் தகுதித் தேர்வு, போதனை முறைக் குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும். அதைவிடுத்து மீண்டும் மீண்டும் பாட அறிவையே சோதிப்பதால் எப்படி தகுதியான ஆசிரியர் கிடைத்துவிடுவார்?

உதாரணமாக ஆங்கில மொழிப் பாடத்தில் மொத்த முள்ள 30 வினாக்களில் 29 வினாக்கள் இலக்கண அறிவைச் சோதிப்பதாகவே உள்ளன. கற்பித்தல் முறையைச் சோதிக்கும் கேள்வி ஒன்றே ஒன்று தான்.

கற்பித்தல் முறைகளான புரிந்துகொள்ளும் திறன், எழுத்தாற்றல், வாக்கியங்களை அமைக்கும் திறன், பேச்சுத் திறன், பல்வேறு கற்பித்தல் முறைகளில் திறன், உச்சரிக்கும் திறன் ஆகியவற்றைச் சோதிக்கும் கேள்வி கள் அந்தத் தாள்களில் இல்லையே? ஆசிரியர்களின் கற்பித்தல் ஆற்றலையும், மாணவர்களின் கற்கும் ஆற்றலையும் எவ்வாறு கணக்கிடுவது?

இடைநிலை ஆசிரியர்களுக்கு முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையுள்ள பாடத் திட்டத்திலி ருந்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலுள்ள பாடத்திட்டத்திலிருந்தும்தானே கேள்விகள் இடம் பெற வேண்டும்? இதைக் கவனத்தில் கொள்ளாமல் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி களைக் கேட்டால் என்னாவது?
இப்படிக் கேட்பது ஆசிரியர்களின் தரத்தைச் சோதிப்பதைவிட வேலைவாய்ப்பில் வடிகட்ட மட்டுமே உதவும்.

சிறந்த முறையில் ஆசிரியப் பயிற்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தகுதித் தேர்வு தேவையில்லை. வேலை வாய்ப்பை மனதில் கொண்டு தேர்வு வைப்பதானால் சிறந்த கற்பித்தல் திறன்பெற்ற ஆசிரிய வல்லுநர்களைக் கொண்டு வினாத்தாள் தயாரிக்கட்டும். அதுவும் அந்தந்த நிலை பாடத்திட்டத்திலிருந்து கற்பித்தல் முறை குறித்து அதிக வினாக்கள் இருக்க வேண்டும். இத்தகைய தேர்வு முறையே ஆசிரியர் தகுதித் தேர்வின் தீர்வாக இருக்க முடியும்

- கலைப்பித்தன், கடலூர்
நன்றி: தினமணி, 22.7.2013

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு புறக்கணிப்பதா? கலைஞர் கண்டனம்


சென்னை, ஜூலை 22- ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு புறக் கணிக்கப்படக் கூடாது என்று கூறி யுள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று முரசொலியில் எழுதி இருப்ப தாவது:- கேள்வி :- ஆசிரியர் தகுதித் தேர் வில் இட ஒதுக்கீடு முறை வேண்டு மென்று நீங்கள் எழுதி யிருந்தீர்கள். ஆசிரியர்களும் மிகுந்த எதிர்பார்ப் போடு இருக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க. அரசு அதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரிய வில்லையே?
கலைஞர் :- இதைப்பற்றி நான் எழுதியதன் தொடர்ச்சியாக, தமிழ் நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் விரிவாக அறிக்கை விடுத்துள்ளார். விடுதலை நாளிதழி லும் இந்தப் பிரச்சினை பற்றித் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மாநிலங்களவை உறுப் பினர் கனிமொழியும் இதைப்பற்றி கட்டுரை எழுதியிருந்தார். 7-6-2013 அன்று நானும் கேள்வி-பதில் பகுதியில் தெளி வாக எழுதியிருக்கிறேன்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் அனை வருமே 60 சதவிகித மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி பெற்றவர்களா கக் கருதப்படுவார்கள் என்று அ.தி. மு.க. அரசு அறிவித்துள்ளது. இது இடஒதுக்கீட்டுக் கொள் கைக்கு எதிரான அறிவிப்பாகும். தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுக் கொள்கை யைப் பின்பற்றி, ஆந்திராவில் உயர் சாதியினருக்கு 60 சதவிகிதம், பிற்படுத் தப்பட்டோருக்கு 50 சத விகிதம், தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவிகிதம் மதிப்பெண்கள் வாங்கினாலே தேர்ச்சி பெற முடியும். அஸ்ஸாமில் உயர் சாதி யினருக்கு 60 சதவிகிதம், மற்றவர் களுக்கு 55 சதவிகிதம் மதிப்பெண் பெற்றால் போதும். ஒரிசாவில் உயர் சாதியினருக்கு 60 சதவிகிதம், மற்றவர் களுக்கு 50 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி நிர்ணயிக்கப்பட் டுள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்துப் பிரி வினருக்கும் ஒரே மாதிரியாக 60 மதிப்பெண் என்று நிர்ணயம் செய்யப் பட்டிருப்பது இட ஒதுக்கீட்டுக் கொள்கையையே அடியோடு குழியில் புதைக்கின்ற காரியமாகும்.

தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை தமிழகத்தில் பின்பற்றாத காரணத்தால், பாதிக்கப்பட்ட நாகையைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவரும், கூலி வேலை செய்யும் ஒருவரின் மகனும், மாற்றுத் திறனாளியுமான கே. குமரவேலு என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, நீதியரசர் திரு. அரி பரந்தாமன் அவர்கள், வழக்கில் உள்ள நியாயத்தை மறுக்கவில்லை; ஆனால் இதற்கு முன்பு நீதியரசர் திரு. சந்துரு அவர்கள் அளித்த தீர்ப்பில் இட ஒதுக்கீட்டை ஏற்க முடியாது என்று கூறியுள்ளதால், இந்த மனுவினைத் தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பளித்திருக்கிறார்.
ஆனால் எத்தனையோ வழக்கு களில் ஒரு நீதிபதி அளித்த தீர்ப்புக்கு மாறாக மற்றொரு நீதிபதி தீர்ப் பளித்திருப்பதைக் கண்டிருக்கிறோம். எனவே இந்தப் பிரச்சினையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பற்றிய முக் கியத்துவம் கருதி, டிவிஷன் அமர்வில் மேல்முறையீடு செய்யப் போவதாகச் செய்தி வந்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும். கேள்வி :- சான்று சரிபார்ப்பு ஏற்கனவே முடித்தவர்கள் டி.இ.டி. தேர்வு (தகுதித் தேர்வு) எழுதத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்யப் போவதாகச் செய்தி வந்திருக்கிறதே?

தமிழ் ஓவியா said...


கலைஞர் :- அப்படியொரு முடி வினை அ.தி.மு.க. அரசு எடுத்தால், அது மிகத் தவறான முடிவாகும். இதைப் பற்றி நான் ஏற்கனவே விரிவாக எழுதியிருந்தேன். இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம் 2010 ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின்படி, இடை நிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் களை, ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தான் நியமிக்க வேண்டும். தமிழக அ.தி.மு.க. அரசும் இதற் கான உத்தரவை 2011ஆம் ஆண்டு நவம்பரில் பிறப்பித்தது. இந்த நிலை யில் தான் தமிழகத்தில், பட்டதாரி ஆசிரியர் தேர்விற் கான நட வடிக்கை ஆரம்பித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள்தான், பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப் படுவார்கள் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி உத்தரவிடப் பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்த பலர், சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்தனர். அதில், உச்சநீதி மன் றம் 2008 ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறப்பித்த உத்தர வில், பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி வேலை வாய்ப்பு அலு வலகம் மூலம் இடஒதுக்கீட்டு முறை யைப் பின்பற்றி உதவி பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப் பட்டு வந்தன. மேலும், தங்களுக்கு 2010ஆம் ஆண்டு மே மாதத்திலேயே சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்து விட்டது என்றும், வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் படி, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டதால், ஆசிரியர் தகுதித் தேர்வு இல்லாமல், பணிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்கள். சென்னை உயர் நீதிமன்றம் அந்த வழக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தள்ளுபடி செய்து விட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுவும், கடந்த ஆண்டு ஜூலை 13ஆம் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, உயர் நீதி மன்றத்தில் 70 பேர் மனு தாக்கல் செய்தார்கள். மனுக்களை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், வேணு கோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்கள் பி.எட்., பட்டம் பெற்றுள் ளனர். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அவர்களுக் குத் தகுதி உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்காக சீனியாரிட்டி மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், மனுதாரர்களின் பெயர்களை வேலை வாய்ப்பு அலு வலகம் அனுப்பியுள்ளது. மனுதாரர் கள் மற்றும் 32 ஆயிரம் பேர், சான்றி தழ் சரிபார்ப்புக்காக அழைக்கப் பட்டு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாமல், பட்டதாரி ஆசிரியர் களாக நியமிக்கப்பட இவர் களுக்குத் தகுதியுள்ளது. இவர்களையும் தகுதித் தேர்வு எழுத வேண்டுமென்று அரசு உத்தரவிட முடியாது. எதிர்காலத்தில் காலியா கும் இடங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டுமென்று இவர் களை வற்புறுத்தாமல், பணியில் நிய மிக்க வேண்டும் என்று ஆணை பிறப் பித்துள்ளார்கள்.

ஆசிரியர்கள் எல்லாம் மிக முக்கியமான பிரச்சினையில் நிறைவு தரும் முடிவு ஏற்பட்ட தென்று இந்தத் தீர்ப்பினைப் பெரிதும் வரவேற்று மகிழ்ச்சியோடு இருக்கின்ற நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்திருப்பதாக வந்துள்ள செய்தி உண்மையாக இருக் குமேயானால் அது ஆசிரியர்களுக்கு எதிராக இந்த அரசு எடுக்கின்ற முடிவாகவே இருக்கும்.

தமிழ் ஓவியா said...


நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்


பொதுவாக நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் காணப்படும் சர்க் கரையின் அளவைப் பராமரிக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையின் அளவைக் கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்ள உணவு கட்டுபாடு மிகவும் அவசி யமாக உள்ளது. ஆகவே உணவுக்கட்டு பாட்டில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நீரிழிவு நோயாளிகள் எந்த வகையான உணவுகளை சேர்க்கலாம் தவிர்க்கலாம் என முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நீரிழிவுக்காரர்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் ஊட்டச் சத்துகள், கொழுப்பு சத்துகள், அதிக கலோரிகள் இல்லாத உணவு வகைகளை தேர்வு செய்து உட்கொள்லாம்.

செறிவூட்டப்பட்ட கொழுப்புக்கள் கொண்ட உணவுகள்

செறிவூட்டப்பட்ட கொழுப்புக்களை கொண்ட உணவுகளான இறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, சமைத்த பன்றி இறைச்சி, தீயில்வாட்டிய இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றில் கொழுப்பு அதிகம் உள்ளது. ஆதலால் செறிவூட்டப் பட்ட உணவை தவிர்க்கவும். குறிப்பாக பதப்படுத்தபட்ட உணவுகளில் வெண் ணெய் உணவுகளை சேர்க்ககூடாது..

அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகள்

கொழுப்பு நிறைந்த உணவுகள் இதயத்தின் முதல் எதிரி. நீரிழிவு நோ யாளிகள் கொழுப்பு உணவு வகை களை சாப்பிட்டால் இதயம் பாதிக்கப்படும். ஆதலால் கண்டிப்பாக கொழுப்பு கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். கொழுப்பு உணவுகளான முட்டையின் மஞ்சள் கரு, கோழியின் தோல் போன்ற வற்றில் கொழுப்பு சத்து இருப்பதால் இந்த வகை உணவுகளைத் தவிர்க்கலாம்.

ஃபைபர் நிறைந்த உணவுகள்

நார்சத்து அதிகமுள்ள உணவுகள் செரிமானத்திற்கு நல்லது. இவை ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை கட்டுபடுத்தும். நீரிழிவு நோயாளி களுக்கு ஃபைபர் நிறைந்த உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. நார்சத்துகளை கொண்ட ராஸ்பெர்ரி, வாழைப்பழம், ஆரஞ்சு, உலர்ந்த திராட்சைகள், பார்லி, தவிடு, பாப்கார்ன், பழுப்பு அரிசி, பயறு வகைகள், ஆர்டிசோக், மற்றும் பட்டாணி போன்ற உணவுகளில் நார்சத்து அதிகம் கொண்டுள்ளதால் இவை நீரிழிவுக்கு சிறந்தது.

நல்ல கார்போஹைட்ரேட்

சிறந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதால் ரத்தஅளவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும். சிறந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம். கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளான முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், தவிடு, மற்றும் பருப்பு வகைகள் உள்ளன.

நல்ல கொழுப்புகள் கொண்ட உணவுகள்

நல்ல கொழுப்புகளை கொண்ட உணவு களான பாதாம், ஆலிவ், வெண்ணெய், மற்றும் அக்ரூட் பருப்புகள் சிறந்தவை. சால்மன் மீன், போத்தா மீன், கானாங் கெளுத்தி போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

தமிழ் ஓவியா said...

வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் முளைக்கீரை

கீரையைத் தினமும் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். முளைக்கீரை அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்த கீரை. இக்கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் சி, போலேட் மற்றும் ரிபோப்லாவின் ஆகியவற்றை கொண் டுள்ளது. நீர்சத்து அதிகமுள்ள முளைக்கீரை வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

உடலுக்கு பலம் கூட்டும் சக்தியை கொண்டது. சிறுவர்களுக்கு இந்தக்கீரையை தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி அடைவார்கள். முளைக்கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், மங்கனீசு போன்ற கணிமங்களைக் கொண்டுள்ளது முளைக்கீரை. கோதுமை, அரிசி, ஓட்ஸ், ஆகியவற்றில் கொண்டுள்ள புரதத்தை விட 30 அதிகபுரதத்தை கொண்டுள்ளது. இதயநோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்களுக்கு முளைக்கீரை உதவுகிறது.

தமிழ் ஓவியா said...

தண்ணீர் அதிகம் குடித்தால் சிறுநீரகக் கல்லை தவிர்க்கலாம்!

சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சினையில் முக்கியமானது, சிறுநீரக கல் உருவாகுதல். சிறுநீரில் உள்ள உப்புகள் ஒன்று திரண்டு, கற்களாக உருவெடுக்கின்றன. கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால், இவை உண்டாகின்றன.

இது, மிகச் சிறு துகள் அளவில் துவங்கி, பிறந்த குழந்தையின் தலை அளவிற்குக் கூட வளரக்கூடும். எனவே நாள்தோறும் தண்ணீர் அதிகம் குடிப்பதனால் இப்பிரச்சினையைத் தவிர்க்கலாம்.

தமிழ் ஓவியா said...


சுத்தம் வேண்டும் நித்தம்!


குளிக்கும் பழக்கம்: நாமும் தினமும் குளித்து குளிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும். என்னதான் அவசரமாக இருந்தாலும், முகம்-கை-கால் மட்டுமே கழுவிக்கொண்டு செல்லக்கூடாது. காது மடல்கள், மூக்கு மற்றும் உடல் முழுவதும் சோப் மற்றும் பிரத்தியேகக் குளியல் நாரினால் தேய்த்து நிறையத் தண்ணீர் விட்டுக் குளிக்கக் கற்றுக்கொடுங்கள். தினமும் இரண்டு வேளை குளித்தால் மிகவும் நல்லது. ஈரத் துணியில் பாக்டீரியா வேகமாக வளரும். குளித்ததும் ஈரம் போகத் துடைத்து, துவைத்த உள்ளாடைகளை அணிவியுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு போட்டுக் குளிக்கவைக்கவும்.

கை சுத்தம்: சாப்பிடும்போதும், உணவுப் பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்று விட்டு வந்ததும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகும், கைகளைச் சுத்தமாக கழுவ வேண்டும். கைகளில் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி ஜெல் போட்டு குறைந்தது 20 விநாடிகள் கழித்து கையைக் கழுவக் கற்றுக்கொடுங்கள். மூக்கில் சளித் தொந்தரவு இருந்தால் மூக்கைத் தொட்டதும், மருந்துகளைத் தொடுவதற்கு முன்பும் பின்பும், கைகளை நிச்சயம் கழுவ வேண்டும் என்று வலியுறுத்துங்கள். நக இடுக்குகள் தான் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற இடம். ஆதலால் நகங்களை எப்போதும் வெட்டி, தூய்மையாக வைத்திருக்கக் கற்றுக்கொடுங்கள்.

பல் சுத்தம்: சொத்தைப் பல் பிரச்சினை குழந் தைகள் மத்தியில் மிகவும் அதிகரித்திருக்கிறது. தினமும் இரண்டு முறை பல் துலக்கக் கற்றுக் கொடுக்காததே இதற்குக் காரணம். தூங்கப் போகும் முன்பு கட்டாயமாக பல்லை சுத்தம் செய்ய கற்றுகொடுங்கள். குழந்தைகளை பல் துலக்கச் செய்வதே பெற்றோர்களுக்கு மிகப் பெரிய சவால்தான்.

பள்ளிக்குப் புறப்படும் கடைசி நேரத்தில் அரக்கப்பரக்க குழந்தைகளை எழுப்பி, பரபரவென, பற்களைத் துலக்கி அனுப்பிவிடுகின்றனர். குழந்தைகளை சீக்கிரத்திலேயே எழுந்திருக்க வைத்து, நிதானமாகப் பல் துலக்கவையுங்கள். பல்லின் முன், பின், மேல், கீழ் என எல்லாப் பக்கங் களிலும் துலக்கச் செய்வதால் பெப்பர்மின்ட் வாசம் தூக்கும். பளிச் எனப் பற்களும் பிரகாசிக்கும்.

காயங்களை மூட வேண்டும்: காய்ந்துவரும் புண்ணை பிய்க்கும் பழக்கமும் குழந்தைகளுக்கு இருக்கும். காயங்கள் மூலம் கிருமிகள் உடலுக்குள் மிக எளிதில் புகுந்துவிடும். இதைத் தவிர்க்க, காயம்பட்டவுடன் முதலில் ஆன்டிசெப்ட்டிக் திரவத் தால் காயத்தை சுத்தம்செய்து, காயங்களை பேன் டேஜ் போட்டு மூட வேண்டும். காயங்கள் மீது கைகள் படக் கூடாது என்று அறிவுறுத்துங்கள். பள்ளிக்கூடம், வெளி இடங்களில் குழந்தைக்கு எந்த சிறிய காயம் பட்டாலும், உடனடியாகத் தெரிவிக் கும்படி குழந்தைக்கு சொல்லி கொடுங்கள்

தும்மல் வந்தால் மூடிக்கொள்ளுங்கள்: தும்மல், இருமல் வந்தால், நன்கு உலர்ந்த துணி, அல்லது டிஷ்யூவால் மூக்கு, வாயை மூடிக் கொள்ளும் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். ஒரு வேளை தும்மல் ஏற்படும்போது கையில் துணி ஏதும் இல்லை என்றால், முழங்கையின் முன்புறத்தால் மூடிக்கொள்ளச் சொல்லலாம். ஏனெனில், கையில் தும்மல் பட்டால், அதில் கிருமிகள் பரவி, மற்ற குழந்தைகளைத் தொடுவதன் மூலம் இந்த கிருமி மற்றவர்களுக்கும் பரவும்.

ஆனால், முழங்கையால் மூடித் தும்மும்போது கிருமியானது குறிப்பிட்ட சிறிய பகுதியில் மட்டுமே இருக்கும். வீட்டுக்குச் சென்றதும் குளித்தால் அந்தக் கிருமிகளும் இல்லாமல் போய்விடும். குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதற்கு முன்னர், கைக்குட்டை ஒன்றை அவர்களது உடையின் மேல் 'பின் செய்து அனுப்புவது நல்லது.

தமிழ் ஓவியா said...கடவுளின் சக்தி அவ்வளவுதான்! கோவில் பூட்டை உடைத்து திருட்டு


செஞ்சி, ஜூலை 22- செஞ்சி அருகே கோவில் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ளது. செஞ்சி அருகே உள்ள வளைய செட்டிக்குளம் கிராமத்தில் வேணு கோபால சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் நேற்று காலை வழக்கம் போல் பொதுமக்கள் சாமி கும்பிட சென்றனர். அப்போது கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கோவில் பூசாரி மற்றும் பொதுமக்கள் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் பூஜைக்காக வைத்திருந்த 2 குத்துவிளக்கு கள், செப்பு தவளை, வெள்ளி பூணூல் ஆகியவை திருட்டுப் போயிருந்தது தெரியவந் தது.மேலும் கருவறையில் உள்ள கதவின் பூட்டை உடைக்க கொள்ளையர்கள் முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் முடியாததால் கையில் கிடைத்த பொருட்களை மட்டும் எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

எழுதுகோல் மறுக்கப்பட்டு ஏர் பிடிக்க மட்டுமே பழக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து இப்பொழுதுதான் நாட்டின் தலைமை நீதிபதியாக வர முடிகிறது!

66 ஆண்டுகால அரசியல் விடுதலையின் அவலநிலை!
ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி நினைவு நிகழ்ச்சியில் தமிழர் தலைவரின் சமூகநீதி முழக்கம்!

சமூகநீதிப் போராளி நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி நினைவு அறக்கட்டளை சார்பாக நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி விருது உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி நீதியரசர் கே.ராமசுவாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர் சார்பாக, அவரது மகள் டாக்டர் ஜோதி அவர்கள் அவ்விருதினை தமிழர் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டார் (அய்தராபாத், 21.7.2013).

தமிழ் ஓவியா said...

அய்தராபாத், ஜூலை 22- சமூகநீதிப் போராளி நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி நினைவு அறக்கட்டளை சார்பாக அவரது 5 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு ஆந்திர மாநிலம் அய்தராபாத் நகரில் நடைபெற்றது.

நிகழ்வில் நீதியரசரின் பெயரால் ஏற்படுத்தப் பட்ட சமூகநீதிக்கான நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி விருது, உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி நீதியரசர் டாக்டர் கே.ராமசுவாமி அவர்களுக்கு வழங்கப் பட்டது.

நீதியரசர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூகநீதி ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்ட விழாவில், தமிழர் தலைவர் கி.வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சமூகநீதி விருதினை வழங்கி சிறப்புப் பேருரை ஆற்றினார்.

அய்தராபாத் நகரின் மய்யப் பகுதியான பாக்லிங்கம் பள்ளியில் அமைந்துள்ள ஆந்திர மாநில போக்குவரத்துக் கழக கலை மன்ற கட்ட டத்தில் ஜூலை 21 ஆம் நாள் நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் கே.சந்திரபானு தலைமை வகித்தார்.

உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி நீதியரசர் டாக்டர் கே.ராமசாமி உடல்நலக் குறைவால் நேரில் வர இயலாத காரணத்தால், அவரது மகள் டாக்டர் ஜோதி, தன் தந்தையாரின் சார்பாக சமூகநீதிக்கான ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி விருதினைப் பெற்றுக்கொண்டார்.

சமூகநீதி விருதினை வழங்கி சமூகநீதிப் பயணத் தில் இதுவரை கடந்து வந்த பாதை, சாதனைகள், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.

நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி அவர்கள் உடலால் மறைந்தாலும், சமூகநீதிக் கொள்கை உணர்வில் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். ஆந்திர மாநிலத்தில் மட்டுமின்றி, தமிழகத்திலும், குறிப்பாக சமூகநீதித் தளத்தில் ஆழமான கொள்கை உறவுகளைக் கொண்டிருந்தார்.

சமூகநீதித் தளத்தில் அந்நாளில் சமூகநீதிப் போராளி கவுத லட்சண்ணா காலம்முதல் நம்முடன் கொள்கை உறவு கொண்ட வர் நீதியரசர் சுவாமி ஆவார். தந்தை பெரியாரின் லட்சியங்களை நடைமுறைப்படுத்தும் கடும் பய ணத்தில் எம்முடன் சமூகநீதித் தளத்தில் களப்பணி ஆற்றினார்.

திராவிடர் கழகத்தின் சார்பாக ‘Tribute to Justice B.S.A. Swamy’ (நீதியரசர் ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ.சுவாமிக்குப் புகழாரம்) எனும் ஆங்கில நூலினை, தமிழர் தலைவர் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.விவேகானந்த் வெளியிட்டார். நூலினை நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதியரசர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் அறிஞர் பெருமக்கள் பலர் பெற்றுக்கொண்டனர்.

நிறைவு நாள் நிகழ்வு என்பது சடங்குக் காக நடத்தப்படுவது அல்ல. சமூகநீதிப் பயணத்தில் நீதியரசர் சுவாமி முன்னெடுத்த பல்வேறு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு நியாயமான சமத்துவ வாய்ப்புகள் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவி னருக்கும் கிடைக்கின்ற வகையில் பாடுபடுவதுதான் நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை ஆகும்.

அத்தகைய கொள்கை சார்ந்த நினைவு நாள் நிகழ்ச்சியினை நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி நினைவு அறக்கட்டளை சார்பாக அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களது ஏற்பாட்டிற்கு பெரியார் இயக்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை யும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...

இந்திய அரசமைப்புச் சட்ட 60 ஆண்டு காலப் பயணம்!

இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு, 60 ஆண்டுகளுக்கும்மேல் ஆகிவிட் டது. அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே சமூக, பொருளாதார, அரசியல் நீதிபற்றிய அவசியம் மற்றும் அவைகளை நாட்டு மக்களுக்கு வழங்கப் படவேண்டுமென்று அழுத்தமாக குறிப்பிடப்பட் டுள்ளது. இருப்பினும் சமூகநீதிக்கான சமத்துவ வாய்ப்புகள் அரசமைப்புச் சட்டக் குறிப்புகள் இன்னும் நடைமுறை ஆக்கம் பெறவில்லை.

இது வரை நடைமுறைக்கு வந்த விதிகளும் நீரோட்டத் தினை எதிர்த்து நீச்சல் அடிப்பதைப் போன்று போராடித்தான் பெற முடிந்தது. அந்த சமூகநீதிப் போராட்டம், அரசமைப்புச் சட்ட விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கி றோம். சமூகநீதி உரிமைகள் பிச்சைப் பொருளல்ல; போராடிப் பெறவேண்டியவை அந்த உரிமைகள்.

ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ.சுவாமி அவர்கள் மறைந்தாலும், அவர் பெயரில் நடைபெற்றுவரும் அறக்கட்டளைப் பணிகளை சிறப்பாக செய்துவரும் ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களின் துணைவியார் திருமதி ஜெயலட்சுமி மற்றும் அவரது மகள் சவீதா குமாரி, மருமகன் சுதாகர் ஆகியோருக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து பாராட்டினை தெரிவித்தார் (அய்தராபாத், 21.7.2013).

1977-1978 ஆம் ஆண்டில் மண்டல் குழுவின் பரிந்துரை நடைமுறைக்கான போராட்டக் களத்தில் நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி அவர்கள் வழக்கறிஞராக அவர் பணி செய்தபொழுதுதான் சந்திக்க நேர்ந்தது. அந் நாள் தொடங்கி, நீதித் துறையில் பல்வேறு பொறுப்புகள், பதவி களை அவர் ஏற்றுக் கொண்ட பொழுதும் அவரது சமூகநீதிக்கான குரல் ஒலித்துக் கொண் டிருந்தது. பொதுவாக நீதிபதி பொறுப்பில் உள்ளோர், தங்களது பொறுப்பு காரணமாக, சில கருத்துகளை வெளிப் படையாகத் தெரிவிக் கத் தயங்குவர்.

ஆனால், நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி, தான் பொறுப்பு வகித்த காலத்தில் வெளிப்படையாக சமூக நீதிக் கருத்துகளுக்கு குரல் எழுப்பினார்; வெற்றிக்கு வலு சேர்த் தார். அவரது பணி நிறைவிற்குப் பின் சமூகநீதிக் குரலின் வலு இன்னும் அழுத்தம் பெற்றது. நாடு தழுவிய சமூகநீதிக்கான வழக்கறி ஞர் மன்றம் (Lawyers’ Forum for Social Justice) அமைக்கப்படுவதற்கு அவர் அளப்பரிய பங்காற்றினார். பின்புலத்தில் இருந்து கொண்டு சமூகநீதிப் பணிகளுக்கு ஆக்கம் காட்டுவதில் வித்தகராகவே விளங்கினார் நீதியரசர்.
சமூகநீதிப் பற்றுள்ள சக வழக்கறிஞர்களுக்கு, நீதிபதிகளுக்கு சமூகநீதிக்கான நடைமுறைகளை மேற்கொள்ள ஓர் எடுத்துக்காட்டாக, கலங்கரை விளக்காக விளங்கினார் நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி. தியாகங்கள், இழப்புகளில்தான் சமூகநீதிக் கட்ட டம் எழுப்பப்படவேண்டும் என்பதை கடந்தகால நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. மண்டல் குழு பரிந்துரை நடைமுறை கண்டது; பிரதமர் பதவி யினை பலிகொடுக்க வேண்டியிருந்தது என்பதை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் கூறியது கருத்தில் கொள்ளப்படவேண்டியுள்ளது.

உயர்நீதித் துறையில் இட ஒதுக்கீடு என்பது இன்னும் கனவாகவே உள்ளது. மக்களாட்சி அமைப்பின் பல்வேறு அங்கங்களில் ஒன்றாக நீதித்துறை இருந்தாலும், நீதித்துறையின் தாக்கம் சமூகத்தில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தவல்லது. அந்தத் துறையில் உயர்நீதிமன்றத்தில், உச்சநீதிமன் றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

அரசியல் விடுதலை பெற்று 66 ஆண்டுகாலம் கடந்துவிட்ட நிலையில், உயர்நீதித் துறையில் சமூகநீதிக் கதவுகள் திறக்கப்படவில்லை. 66 ஆண்டுகள் கழித்து இப் பொழுதுதான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். விவசாயக் குடும்பத்திலிருந்து பிரதிநிதித்துவம் பெற்றுள்ளார். எழுதுகோல் பிடிக்க மறுக்கப்பட்டு, ஏர் பிடிக்க மட்டுமே பழக்கப்பட்ட குடும்பத்திலிருந்து நாட்டின் தலைமை நீதிபதி பதவிக்கு உயர்ந்துள்ளார். தந்தை பெரியாரின் கனவு நனவாகியுள்ளது.
முதன்முறையாக பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் நாட்டின் முதன்மை நீதிபதியாக இப்பொழுதுதான் வந்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இப்பொழுதுள்ள நீதி பதிகளில் தாழ்த்தப்பட்ட சமுதாயத் தவர் ஒருவர்கூட இல்லை. இதுதான் உயர்நீதித் துறையில் சமூகநீதியின் இன்றைய நிலை.

இப்பொழுது பதவியேற்றுள்ள நாட்டின் தலைமை நீதிபதி, உயர்நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு நடை முறைப்படுத்தப்படவேண்டும் என்று கூறியிருப்பது பாராட்டுக்குரியது. பெண்களுக்கும், சிறுபான்மையினருக் கும் இட ஒதுக்கீடு அவசியம் என வலியுறுத்தியுள்ளார். பதவியில் உள்ள நிலையில் சமூகநீதி குறித்து வெளிப் படையாகக் கருத்துக் கூற பெரும் பாலோர் தவிர்க்கும் நிலையில், தலைமை நீதிபதியாக, தான் பதவி யேற்பதற்கு முன்பே சமூகநீதிக்கு வலு சேர்த்துள்ளார். சமூகநீதிக் கருத்து களுக்கு நீதியரசர்கள் தங்களது பதவிக் காலத்திலேயே வலு சேர்த்திட முன்வர வேண்டும். அத்தகைய நீதியரசராக ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி வாழ்ந்தார்; இன்றும் சமூகநீதிக் கொள்கை வழி வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...


மண்டல் குழு பரிந்துரை தொடர் பான இந்திரா சகானி வழக்கு விவாதத் தின்போது இட ஒதுக்கீட்டுக்கு எதி ராக வழக்காடிய பிரபல வழக்கறிஞர் நானா பல்கி வாலா, தனது விவாதத் தின்பொழுது, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் முட்டாள்கள் (Backward Class People are Idiots) எனக் குறிப்பிட்டார். தன் கூற்றை திரும்பப் பெறவேண்டும் என கருத்துத் தாக்குதலுக்கு ஆளானார்; இன்று அந்த பிற்படுத்தப்பட்ட சமு தாயத்தைச் சார்ந்தவர் நாட்டின் தலைமை நீதிபதி நிலைக்கு உயர்ந்து உள்ளார்.

இன்று சமூகநீதி விருது வழங்கப் பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் டாக்டர் கே.இராமசாமி, தகுதி திறமை என்பது எனது கால் தூசிக்குச் சமம் எனக் கூறியுள்ளது, சமூகநீதித் தத்துவத்தில் அவருக்குள்ள ஆழ்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

புத்தக அறிவுள்ள பலர் பணியில் திறமை காட்டுவதில்லை. சாதனை புரிய முடிவதில்லை. இட ஒதுக் கீட்டுக்கு எதிராக உள்ளோரின் தகுதி, திறமை நிலை இதுதான்.

சமூகநீதித் தளத்தில் கடந்து வந்த வெற்றிப் பாதை சிறு அளவுதான். செல்லவேண்டிய தூரம் வெகு தொலைவு. சமூகநீதி ஆர்வலர்கள், ஈடுபாடு கொண்டவர்கள், தாங்கள் ஏற்றுக்கொண்ட பணியில், எவ்வளவு தூரம் சமூகநீதிக்கு ஆக்கம் கூட்டிட இயலுமோ அத்தகைய செயல்களில் ஈடுபட முன்வரவேண்டும்.

தமிழ் ஓவியா said...

இதுவே ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ.சுவாமி அவர் களுக்கு நாம் செலுத்தும் மரியாதை. நீதியரசர் சுவாமி விட்டுச் சென்ற பணிகள் தொடர்ந்திட, அவரது தோழர்கள் பாடுபடவேண்டும். அவர் கண்ட சமூகநீதி சாதனைக் கனவுகள் நனவாக்கப்படவேண்டும். வாழ்க ஜஸ்டிஸ் சுவாமியின் புகழ்! ஓங்குக சமூகநீதித் தத்துவம்!

- இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

சமூகநீதிக்கான ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி விருது

நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி நினைவு அறக்கட்டளை சார்பாக உச்சநீதி மன்ற மேனாள் நீதிபதி டாக்டர் கே.இராமசாமிக்கு சமூகநீதிக்கான ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ.சுவாமி விருதினை தமிழர் தலைவர் கி.வீரமணி வழங் கினார். நீதியரசர் உடல்நலக் குறை வால் வர இயலாத நிலையில், அவரது சார்பாக அவரது மகள். டாக்டர் ஜோதி விருதினை பெற்றுக்கொண் டார். டாக்டர் ஜோதி அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பாகவும், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தார். நிகழ்விற்கு வருகை தந்திருந்த நீதியரசர்கள், வழக்குரைஞர் கள், சமூகநீதி ஆர்வலர்கள் பலரும் விருது பெற்றமைக்கு தங்களது பாராட் டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி புகழாரம்

நீதியரசர் நினைவு நாள் நிகழ்ச்சி யில் ‘Tribute to Justice B.S.A. Swamy’ (நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி புகழாரம்) எனும் புத்தகத் தொகுப்பு திராவிடர் கழகத்தின் சார்பாக வெளியிடப்பட் டது. தொகுப்பு நூலை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் விவேகானந்த் வெளியிட, மேடையில் வீற்றிருந்த நீதியரசர்கள் மற்றும் விருந்தினர் அனைவரும் பெற்றுக்கொண்டனர். ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமிபற்றிய நினைவுகளைப் போற்றும் விதமாக நீதியரசர் பற்றிய குறிப்பு, சமூகநீதித் தளத்தில் அவர் ஆற்றிய அரும்பணி, அவரது அறக்கட்டளை தொடர்பான கல்விப் பணிகள் பற்றிய செய்திகள் தொகுக்கப்பட்டு புத்தகம் வெளியிடப் பட்டது. சமூகநீதிக்கான விருதினை பெற்ற நீதியரசர் டாக்டர் கே.இராம சுவாமி பற்றிய குறிப்புகள், செய்தி களும், புத்தகத்தின் உள்ளடக்கமாக இருந்தன.

நினைவு நாள் நிகழ்ச்சியில் நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி பற்றி, தற்போதைய நீதியரசர் டாக்டர் யத்திராஜுலு, சமூகநீதி விருது வழங்கப்பட்ட நீதி யரசர் டாக்டர் கே.இராமசாமிபற்றி மேனாள் நீதியரசர் பவானி பிரசாத் அவர்களும் உரையாற்றினர். மேலும், மாண்பமை நீதியரசர்கள் சந்திரய்யா, ஏ.வி.ஷேசாய், ஆந்திர மாநில மேனாள் அமைச்சர் ஜி.இராஜேசம் கவுட், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.விவே காந்த், சட்டமன்ற உறுப்பினர் கே.இ.கிருஷ்ணமூர்த்தி, பணிவு நிறைவு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரி டி.டி. நாயக் மற்றும் பலர் உரையாற்றினர்.

அய்தராபாத்தில் நடைபெற்ற ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ.சுவாமியின் நினைவு நிகழ்ச்சிக்கு தமிழர் தலைவருடன் பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் மற்றும் ஒளிப்படக் கலைஞர் தோழர் பா.சிவக் குமார் ஆகியோர் சென்றிருந்தனர்.

ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி குடும்பத்தாருக்கு திராவிடர் கழகம் பாராட்டு நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி அவர் கள் தொடங்கிய சமூகநீதி மற்றும் கல்வி மற்றும் இதர சமூகசேவைப் பணிகளைப் அவர் அமைத்த அறக் கட்டளைமூலம் தொடர்ந்து நடத்தி வரும் நீதியரசரின் துணைவியார் பி.ஜெயலட்சுமி, மகள் சவிதாகுமாரி, மருமகன் சுதாகர் ஆகியோரைத் தமிழர் தலைவர் பாராட்டி, திராவிடர் கழகத்தின் சார்பாக சால்வை அணி வித்து பாராட்டினார்.

ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ.சுவாமியின் நினைவு நாள் நிகழ்ச்சியும், சமூகநீதிக் கான விருது வழங்கு விழாவும் ஆந்திர மாநிலம் சமூகநீதி ஆர்வலர்களி டையே ஒரு புத்தாக்கத்தை ஏற்படுத் தியது. கலந்துகொண்ட உயர்நீதிமன்ற இந்நாள், மேனாள் நீதிபதிகள், வழக் குரைஞர்கள் தமிழர் தலைவரிடம் கூட்ட முடிவில் உரையாடிய விதம், அவர்களிடம் ஏற்படுத்திய விளைவு களை வெளிப்படுத்துவதாக அமைந்தன.

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டு சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது!


கூலிப்படைகள் அட்டகாசம் தாங்க முடியவில்லை! அவற்றின் பின்னணிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்!

முதல் அமைச்சர் அவசர அவசியமாகத் தலையிட்டு நடவடிக்கை தேவை!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழங்கு சீர் கெட்டுப் போய் விட்டது; கூலிப்படைகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. தமிழ்நாடு முதல் அமைச்சர் அவசர அவசியமாகத் தலையிட்டுச் சீர் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் எல்லாம் விலையேற்றத்தோடு நாளும் இருக்கையில், மிகவும் மலிவாகக் கிடைப்பது கூலிப்படைகள்தான்! கொலை செய்வதற்காக ஆங்காங்கே - (கார்ப்பரேட் கம்பெனிகள்போல்) இயங்கி வருவதாகவும், அவர்களை அழைத்துப் பேசி இப்படிப்பட்ட கொடுமைக்கள் அரங்கேற்ற திட்டமிடப்படு கின்றன என்றும் சாதாரணமான மக்களி டையேகூட பேச்சுக்கள் அடிபடுகின்றன!

தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு?

கொலைகளும், கொள்ளைச் சம்பவங்களும் அன்றாட அவலங்களாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு சீர்கேடாக உள்ளது.

இதை மறைப்பதோ, பூசிமெழுகுவதோ கூடாது; சில குற்றங்களைப் பதிவு செய்வதுகூட தவிர்க்கப்படுவதனால், குற்ற எண்ணிக் கையைப் புள்ளி விவர ரீதியாக குறைத்துக்கூட தமிழக அரசு கூறலாம்; ஆனால் பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் அறிய மாட்டார்களா?

ஏடுகளை எடுத்தால், தொலைக்காட்சி களைத் திறந்தால்., அன்றாடம் கொலை, கொள்ளைகள், திருட்டுகள் இவற்றைத் தாண்டி சாலை விபத்துக்கள் இவைதான் செய்தி களாகப் படமெடுத்தாடுகின்றன!

சேலம் - பிஜேபி பிரமுகர் படுகொலை கண்டிக்கத்தக்கது!

சேலத்தில் ஆடிட்டர் இரமேஷ் என்ற பா.ஜ.க.வின் தமிழகப் பொதுச் செயலாளர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும்.

இதற்கு மூல காரணம் யார் எது என்று கண்டறியப்படுவது, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதைவிட முக்கியமாகும்.

இதற்கு சில வாரங்கள் முன் வேலூரில் இதே கட்சியின் ஒருவரும் வெட்டிக் கொல்லப் பட்டார் என்ற வேதனைக்குரிய செய்தியும் வெளிவந்தது!

நம்மைப் பொறுத்தவரை, பொது வாழ்வில் உள்ள எவராயினும் கருத்துப் போர் நிகழ்த்தலாமே தவிர, வன்முறை வெறியாட்டங்களிலோ கொலை வெறித் தாக்குதலிலோ ஈடுபடுவது கூடாது! நியாயப்படுத்தவே முடியாது!

காந்தியாரைச் சுட்டுக் கொன்றபோதே தந்தை பெரியார் என்ன சொன்னார்?

அண்ணல் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே நிகழ்வுபற்றிக்கூட, தந்தை பெரியார் அவர்கள் தனி நபர் செயல் அல்ல அது என்று கூறி, அதன் பின்னே இருக்கிற வெறிக்குரிய காரணம் கண்டறிந்து அதனைப் போக்க, அல்லது தடுக்க வேண்டும் என்று தனது முதிர்ந்த அனுபவத்தால் அறிவுரை வழங் கினார்கள்.

பெரியார் தந்த புத்தியின் அடிப்படையோடு நாமும் கூறுகிறோம்; கூலிப்படைகளால் கொலைகள் நடைபெறுகின்றன என்னும்போது அவற்றிற்கு மூலவர்கள் யார் என்பது அல்லவா முக்கியம்?

கூலிப்படைகள்! கூலிப்படைகள்!!

தமிழ்நாட்டில் பல கொலைகளுக்கு ரியல் எஸ்டேட்டு தகராறுகள், தொழில் போட்டி பொறாமை, தவறான உறவுகள் தங்களைக் காக்க கூலிப்படைகளை ஏவுகணைகளாக்கிக் கொள்ளும் நிலை மலிந்து காணப்படுகிறது!

எல்லாம் ஒரே வகையில் (அதாவது வெட்டிச் சாய்ப்பதுதான் பெரும்பான்மையாக உள்ளது) என்கிறபோது, வெறும் அரிவாள்கள் உற்பத் திக்குத் தடை விதித்தால் மட்டும் போதுமா?

கூலிப்படைகளை அடையாளம் காணுவ தோடு களையெடுத்து, தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்றவும் முயற்சிக்க வேண்டாமா தமிழக அரசு?

காவல்துறை பொறுப்பேற்க வேண்டும்

அரசியல் தலைவர்களுக்குப் போதிய பாது காப்பு வழங்குவது முக்கியம்தான் என்றாலும், அதைவிட முக்கியம் கூலிப்படைகளையும், அதற் காக முக்கிய தலைமைகள் பற்றிய தகவல் களைத் திரட்டி, கூர்மையான நடவடிக்கை களும் உடனே செய்ய தமிழக அரசின் உள்துறை, குறிப்பாக காவல்துறை முன்வர வேண்டும்.

குற்றங்கள் நிகழ்வுக்குக் காவல்துறை அதிகாரிகள் போதிய பொறுப்பேற்குமாறு ஆணைகளை அரசு வழங்க வேண்டும். எந்த கொலைக் குற்றங்களும் குறிப்பிட்ட கால வரைக்குள் துப்பு துலக்கப்பட்டாக வேண்டும் என்பதை அரசு வற்புறுத்திட வேண்டும்.

தொடர்ந்து பல்வேறு பொறுப்பாளர்களை இழந்து வரும் பா.ஜ.க. கட்சியினருக்கு (நாம் கொள்கை லட்சியங்களில் வேறுபட்டவர்கள் என்பதை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு) மனிதநேயத்தோடு, ஆழ்ந்த இரங்கலைத் தெரி விப்பதோடு, மறைந்தவரின் குடும்பத்தின ருக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

முதல் அமைச்சரின் கடமை

பதற்றங்களைத் தணிக்க மூல காரணங்கள் கண்டறியும் வண்ணமும், மேலும் இனிமேல் இச்சம்பவங்கள் நிகழாவண்ணமும் எக்கட்சித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் உட்பட அனைத்து மக்களது பாதுகாப்பும் உறுதி செய்யப்படல் வேண்டும்!

தமிழக முதல் அமைச்சர் உடனே அவசர அவசியமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அமைதியை ஏற்படுத்தஆவன செய்ய முன் வர வேண்டும்.கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
23.7.2013

தமிழ் ஓவியா said...


பதினாறு குண்டு வெடிப்புகளுக்கு நாங்கள் தான் காரணம் - காவி பயங்கரவாதி பரபரப்பு வாக்குமூலம்!


***பீகார் புத்தர் கோயில் குண்டு வெடிப்பும் இதுவரை நடந்த மற்ற குண்டு வெடிப்புகளும்***

பதினாறு குண்டு வெடிப்புகளுக்கு நாங்கள் தான் காரணம் -காவி பயங்கரவாதி பரபரப்பு வாக்குமூலம்.....

இந்தியாவில் இது வரை நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 16 குண்டுவெடிப்புகளை காவி பயங்கரவாத இந் துத்துவ தீவிரவாதிகள் நிகழ்த்தியதாக வாக்கு மூலங்கள் வெளிவந்துள் ளன, இதன் மூலம் இந்தி யாவில் நிகழ்ந்த பல் வேறு குண்டுவெடிப்பு களில் இந்துத்துவ தீவிர வாதிகளுக்கு பங்கிருப் பது தெரியவந்துள்ளது,

மலேகான், சம் ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, 2-ஆவது மலே கான் உள்ளிட்ட குண்டு வெடிப்புகளில் தொடர்புடையதாக, அண்மையில் தேசிய பாதுகாப்புப் படை யினரால் கைது செய் யப்பட்ட இந்துத்துவா தீவிரவாதி ஒருவன் இதனை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்,

2007 ஆம் ஆண்டு சம்ஜோதாஎக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் குண்டுவைத்த ராஜேந்தர் சவுத்ரி அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் இருந்து கைது செய்யப்பட்டார், இதையடுத்தே இந்த உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன,

இந்துத்துவா தீவிர வாத குழுக்கள் குண்டு வெடிப்புகளை நடத்தி விட்டு, முஸ்லிம்கள் மீது பழியை சுமத்திவிட்ட உண்மை இந்த வாக்கு மூலங்களின் வழியாக வெளிவந்து கொண்டி ருக்கிறது,

2004 ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள பீர் மித்தா அஹ்லே ஹதீஸ் மசூதியில் வெள்ளிக் கிழமை தொழுகைக்குத் திரண்டவர்கள் மீது வெளியே இருந்து க்ரே னேடை வீசியவர்கள் தங்களின் குழுவைச் சார்ந்தவர்கள் தாம் என்பதை இந்துத்துவ தீவிரவாதிகள் தற் போதைய வாக்குமூலத் தில் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் க்ரேனைடு வெடித்து 2 பேர் பலியானார்கள்
ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.

எனினும் இச்சம்பவம் காஷ்மீர் தீவிரவாதிகளின் சதிவேலையாகவே அப்போது பார்க்கப்பட்டது, தெஹ்ரீக்குல் முஜாஹிதீன் என்ற அமைப்பு இச்சம்பவத்திற்கு காரணம் என்று அன்று காவல்துறை கூறி யிருந்தது.

மேற்கண்ட சம்பவம் வழக்கு தொடர்பான விசாரணை அறிக் கையை காஷ்மீர் காவல்துறையினரி டம் தேசிய பாதுகாப்புப் படை கேட்டுள்ளது. விசாரணை அறிக் கையில் இந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து ஏதேனும் விவரங்கள் கூறப்பட்டுள்ளனவா? என்பதை ஆராயவே இந்த அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது,

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர் புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் சுனில் ஜோஷி கொலை, பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் ஜிலானியை கொல்ல முயன்றது உள்ளிட்ட வழக்குகளில் இந்துத்துவத்திற்கு தொடர்பிருப் பதையும் ராஜேந்தர் சௌத்ரியின் வாக்குமூலம் தெரிவித்துள்ளது.

நன்றி செய்தி : இந்நேரம்.காம்

தமிழ் ஓவியா said...

அறிவியல்

ஆள் நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிந்தன்ஷாவடி உருவாக்கியுள்ளார்.

மனிதர்கள் நடமாடும் போது மட்டுமல்ல; வாகனங்கள் சென்றாலும் அந்த நேரத்தில் திடீர் என்று வெளிச்சம் கிடைக்கும் வகையில் இதனை உருவாக்கியுள்ளார்.

இதனால் மின்சாரமும் மிச்சமா கிறது. இருட்டில் பேய், பிசாசு என்று அவிழ்த்து விடும் பொய் மூட்டை களும் அவிழ்ந்து கொட்டி விடும் அல்லவா!

தமிழ் ஓவியா said...

கோயில் என்றால்

ஆந்திர மாவட்டம் காளஹஸ்தி கோயிலின் கோபுரம் 28.5.2010 அன்று இடிந்து விழுந்தது. (இதற்குப் பெயர்தான் கடவுள் சக்தி! - நம்பித் தொலையுங்கள்!) புதிய ராஜகோபுரம் கட்டுவதாகக் கூறி அக்கம் பக்கத்தில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப் பட்டன. அதற்குப் பதிலாக பரத்வாஜ தீர்த்தம் பகுதியில் நிலங்கள் அளிக் கப்படும் என்று உறுதி அளிக்கப் பட்டது. ஆனால் இதுவரை கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படாத காரணத்தால் சுங்கி ரெட்டி என்பவர் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி, நிலங்கள் வழங் கப்படும் வரை ராஜ கோபுரக் கட்டு மான பணியினை நிறுத்திட நீதி மன்றம் ஆணை பிறப்பித்து விட்டது.

கோயில் சம்பந்தப்பட்டது என்ப தால் அதன் தர்ம கர்த்தர்கள் நாணய மாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான்; தெய்வ காரியம்தானே எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நம்பினால் படுமோசம்தான்.
கோயில் தர்மகர்த்தாக்களின் அறிவு நாணயம் எப்படிப்பட்டது என்பதற்கு இது ஒரு சின்ன எடுத் துக்காட்டு, அவ்வளவுதான்.

சுங்கி ரெட்டி உஷார் பேர் வழி - பாராட்டுகள்!

தமிழ் ஓவியா said...

விசா வேண்டுமாம்!

குஜராத்தில் 2002இல் நடந்த கல வரத்தைத் தொடர்ந்து மோடிக்கு விசா அளிக்க அமெ ரிக்கா மறுத்து வந்தது. இந்தத் தடையை விலக்கிக் கொள்ளும்படி அமெரிக்க அதிகாரிகளிடம் வற்புறுத் துவேன் என்று பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

வற்புறுத்துவது ஒரு புறம் இருக் கட்டும்; அமெரிக்கா விசா மறுத் ததற்கான காரணங்களிலிருந்து மோடி விடுபட்டு விட்டாரா? இன்று வரை குஜராத் கலவரத்தை நியாயப் படுத்திக் கொண்டு தானே இருக் கிறார்.

குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் வாஜ்பேயி எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளி நாடுகளுக்குச் செல் லுவேன்? என்று புலம்ப வில்லையா? இந்தியாவுக்குள்ளேயே கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியுள் ளதே! கூட் டணிக் கட் சிக்குள்ளேயே விரிசல் ஏற்பட்டு விட்டதே!

இந்தியாவுக்குள்கூட டில்லி பல்கலைக்கழக மாணவர்கள் மோடியை அனுமதிக்கவில்லையே!

இந்த நிலையில் அமெரிக்க அதிகாரிகளிடம் மோடிக்கு விசா வழங்க வற்புறுத்தப் போவதாக பிஜேபியின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறுவது ஓர் அர்த்தமற்ற பேச்சு தானே?

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியாரின் தமிழ் நேசம்!

சென்னை சேத்துப்பட்டு காஞ்சி காமகோடி பீடம் சங்கராலயத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தமிழ் வழி பாடசாலை தொடங் கப்பட்டுள்ளது. விழா வைத் தொடங்கி வைத்து உரையாற்றிய ஜூனியர் சங்கராச்சாரி யார் விஜயேந்திர சரஸ்வதி! தமிழை ஆன்மீக உணர்வுடன், தூய்மை மற்றும் புனிதத் தன்மை யோடு கற்றுக் கொள்ள வேண்டும்; இறைவன் பெருமையை அதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

என்னே தமிழ்நேசம் - பாசம்! ஆன்மீக உணர்வோடு தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டுமாம். மெத்த சரி, அந்தத் தெய்வத் தமிழைக் கோயிலில் அர்ச்சனை மொழியாக அனுமதிக்க முடியாது என்று அடம் பிடிக்கிறீர்களே அது ஏன் என்று ஒரு கேள்வியை முன் வைத்தால், சங்க ராச்சாரியாரின் போலித் தமிழ்ப் பற்றின் முகமூடி கிழிந்து தொங்கி விடுமே!

இன்றுவரை சங்கராச் சாரியின் சீடர் திருவாளர் சோ ராமசாமி தமிழில் அர்ச்சனை செய்தால் பொருள் இருக்கும்; அதே நேரத்தில் அருள் இருக் காது என்று எழுது கிறாரே - அவருக்குப் புத்தி மதியை காஞ்சி மடத்தார் சொல்லக் கூடாதா?

பூஜை வேளைகளில் சங்கராச்சாரி யார் நீஷ பாஷையை (தமிழை) பேச மாட்டார் என்ற நிலையிலிருந்து சங்கராச்சாரியார்கள் மாறி விட் டார்களா?

தமிழ் ஓவியா said...


நிரந்தர விரோதி


நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கிறது.
_ (குடிஅரசு, 13.4.1930)

தமிழ் ஓவியா said...


மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ? - காற்றுதான் சிலரை நீக்கி வீசுமோ?


தந்தை பெரியார் அவர்களைத் தரணிக்கு தந்த ஈரோடு பெரு நகரத்தில், இரண்டு அற்புத இன்றைய இருபால் இணையர்களை மருத்துவமனைக்கு சென்று கண்டு, மகிழ்ந்தேன் - சில ஆண்டுகளுக்கு முன் - அவரது பெரியார் பற்று - அதைவிட ஆழமான அவரது நன்றிப் பெருக்கு, நானிலமே போற்றிப் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று அல்லவா!

அதற்குரிய சான்றுதான் இந்தக் கடிதம்!
ஈரோடு - 18.07.2013 வியாழன் அன்று பிரபல எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் பி.டி.சக்திவேல்-மகப்பேறு மருத்துவர் சவுந்திரம் சக்திவேல் இணையரின் மகன் பிரதீப்குமார் அவர்களுக்கு இந்த ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.

சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றி ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புக் கதவை நீதிக்கட்சி ஆட்சி மருத்துவப் படிப்பிற்குத் திறந்தது. அதற்கும் தந்தை பெரியார்தான் காரணம், அதனைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டிற்காக போராடி, இட ஒதுக்கீடு பெற்றுத்தந்ததும் தந்தை பெரியார்தான்; இன்றுவரை தந்தைபெரியாரின் இயக்கமான திராவிடர் கழகம் சமூக நீதிக்காக பல்வேறு களங்களைக்கண்டு மாபெரும் வெற்றிகளைத் தமிழ்ச் சமுதாய ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்களின் பணி அளப்பரியது.தந்தை பெரியார், விடுதலை, ஆசிரியர் கி.வீரமணி இவர்களது உழைப்பால் இடஒதுக்கீடு (கல்வி,வேலை வாய்ப்பு) தமிழ் நாட்டிலும்,மண்டல்கமிசன் மூலம் இந்தியா வெங்கும் சிறப்பான முறையில் நடைமுறைக்கு வந்துள்ளது.

இட ஒதுக்கீட்டு முறையில்தான் நானும், எனது இணையர் சவுந்திரம் அவர்களும் மருத்துவர்களாக படித்து பயன்பெற்றோம்,அதனால் நாங்களும் இச்சமூகத்திற்குப் பயன்படுகிறோம். அந்த வகையில் எங்களது மகன் பிரதீப் குமாருக்குக் கோவை அரசு மருத்துவக்கல்லூரி யில் 2013-இந்த ஆண்டு இடஒதுக்கீடு அடிப் படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத் துள்ளது. எனவே வாழையடி வாழையாக தமிழ்ச் சமூகம் உயர்வதற்கு உழைத்துவரும் விடுதலை" வளர்ச்சிக்கு நன்றியுடன் ரூபாய் 10000/- (பத்தாயிரம்) வங்கிவரைவோலையாக வழங்கி மகிழ்கிறோம். நன்றி.

நன்றியுடன் மருத்துவர் பி.டி.சக்திவேல் எம்.பி.பி.எஸ். எம்.எஸ்.ஆர்த்தோ, ஈரோடு.

அறிவு ஆசான் கல்வி வள்ளலாக இருந்து பரிந் துரைக் கடிதங்களை நூற்றுக்கணக்கில் ஆயிரக் கணக்கில் கடந்த பல ஆண்டுகளாகத் தந்து - அவர்கள் வாழ்ந்த காலத்தில் கல்வியாண்டு துவக்கப் பருவத்தில் எழுதி, எழுதிக் கொடுப்பார்கள் - எங்களைப் போன்ற உதவியாளர்களுக்கு, அத்தகவலை உரியவர்களை நேரில் பார்த்து அய்யாவின் விருப்பத்தை அப்படியே எடுத்துக்கூறி, அதன் காரணமாக மருத்துவத்தில், பொறியியலில், கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் இடம் பெற்று, பட்டதாரிகள் ஆனவர்கள் பல்லாயிரவர் இருந் திருப்பார்கள்; இருக்கிறார்கள் இன்றும்கூட!

பயன் பெற்றோர் பலரும் தவறாது தமிழன் என்றொரு இனமுண்டு.

தனியே அவர்க்கொரு குணமுண்டு என்ற நாமக்கல் கவிஞரின் கருத்துக்கு ஏற்ப, நன்றி கூற மறந்தவர்களும், தவறியவர்களுமே அநேகர்!

அது தமிழனின் தனிக்குணம் போலும்!

நன்றி விசுவாசம் காட்டுவதும் நயவஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு என்பது தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு.

இதில்அத்தி பூத்ததுபோல், தவறாது நன்றி சொன்னவர்கள், செய்பவர்களும் இல்லாமல் இல்லை! நன்றி மறந்த இந்தப் பரந்த பாலைவனத்தில், அத்தகையவர்கள் ஒயாசிஸ் - சோலைகள் போன்றவர்கள் ஆவார்கள்!

அதற்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டுதான் மேலே காட்டிய டாக்டர் இணையர்களின் எடுத்துக் காட்டான கடிதமும், நன்கொடையும்!

தந்தை பெரியார் தந்த பரிந்துரைகளால் பயன் பெற்ற - இடம் கிடைக்கப் பெற்ற தோழர், தோழி யர்கள் விடுதலை நாளேட்டிற்கு ஒரு சந்தா கட்டி னால் இன்று பல லட்சம் பிரதிகள் சர்க்குலேஷன் ஆகிக் கொண்டிருக்குமே!

என்ன செய்வது! நம் இனத்தின் கூறுபாடு இது! அதற்காக நாம் நமது தொண்டறத்தை, மனிதநேய அடிப்படையிலான கல்விக்கண் பெற வைத்தல், உத்தி யோக மண்டலக் கதவுத் திறக்க உழைத்தல் போன்ற பணிகளை நிறுத்திவிட முடியுமா?

மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?

காற்றுதான் சிலரை நீக்கி வீசுமோ?

நம் பணி என்றும் தொண்டறம் தானே!

நன்றி என்பது பயனடைந்தவர் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்க வேண்டிய ஒன்றல்ல; அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமே

- 1931இல் தந்தை பெரியார் அன்று குடிஅரசு ஏட்டில் எழுதிய வரிகள் இவை.

எனவேதான் இந்த நன்றி பாராத (Thankless Jobs) என்ற பயனுறு பணி செய்யும் பாதையான ஈரோட்டுப் பாதையில் என்றும் எப்போதும், எந் நிலையிலும் பயணிக்கிறோம்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


பூனைக்குட்டி வெளியில் வந்தது!


நரேந்திர மோடிக்குத்தான் பிரதமர் ஆகும் தகுதி உள்ளதாம்
சொல்கிறார் காஞ்சி ஜெயேந்திரர்

சென்னை, ஜூலை 24-நரேந்திர மோடிதான் பிரதமராக வரவேண்டுமாம் - சொல்லி இருப்பவர் காஞ்சி சங்கராச்சாரியார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்காக பாரதீய ஜனதா முன் நிறுத்தினால் அது வரவேற்கத்தக்கது. நரேந்திரமோடி தகுதியான வேட்பாளர். நிர்வாக திறமை மிக்கவர். அவருக்கு கடவுள் அருளாசி உண்டு. எனது வாழ்த்துக்கள்!

ஆனால் சோனியாகாந்தி வெளிநாட்டுக்காரர் என்பதால் அவரது மகன் ராகுல் காந்திக்கு இந்தியாவுக்குத் தலைமை தாங்கும் தகுதி கிடையாது என்றே கருத வேண்டியுள்ளது.

நரேந்திரமோடி - ராகுல்காந்தி இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நரேந்திர மோடிக்குத்தான் முதலிடம் கிடைக்கும். நிர்வாகத் திறமை ஆற்றல் படைத்த மனிதர். மிகப்பெரிய சாதனையாளர். குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவர். மதச்சார்பற்ற ஆட்சியை அவர் தருவது நிச்சயம். - இவ்வாறு காஞ்சி சங்கராச்சரியார்(?) ஜெயேந்திரர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


விளம்பரம்


ஊடகங்களில் இடம் பெறும் விளம்பரங்கள் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின் றன என்பது மாநில, மத்திய அரசுகளுக்குத் தெரியாதா?

தெரிந்திருந்தால், ஊட கங்களில் குறிப்பாக தொலைக்காட்சிகளில் இடம்பெறும் விளம்பரங்கள் குறித்துக் கவனம் செலுத்தி இருக்கவேண்டுமே!

ஒரு தனியார் தொலைக் காட்சியில் ஒரு விளம்பரம் (நாய் விற்ற காசு குரைக் கவா போகிறது?)

தனலட்சுமி என்ற எந்திரம்; அதை வாங்கி வீட்டில் வைத்துக்கொண் டால் அந்த வீட்டில் செல் வம் அப்படியே பொங்கி வழியுமாம்.

வியாபாரி ஒருவர் தன லட்சுமி எந்திரத்தை வாங்கிக் கடையில் வைத் ததால், நட்டத்தில் மூழ்கிப் போய்க் கொண்டிருந்த வியாபாரம் ஓகோவென்று லாபம் கொழிக்க ஆரம் பித்துவிட்டதாம்.

மக்களைச் சோம்பேறி யாக்கும், அவர்களின் பணத்தை மோசடி செய்யும் - வழிப்பறி போன்ற குற்ற மல்லவா இது! இவற்றை அனுமதிக்கலாமா?

இதே நேரத்தில் இலண் டனிலிருந்து ஒரு தகவல்:

கோகோகோலா விளம் பரத்தைத் தடை செய்த செய்தி அது-

கோகோகோலா குடிப்ப தால் உடம்பில் உள்ள அதிகப்படியான கலோரி கள் எரிக்கப்படுவதாகக் கூறும் விளம்பரம் அது. அதனை எதிர்த்துப் புகார் கிளம்பியதுதான் தாமதம்; அந்த விளம்பரத்தை உட னடியாகத் தடை செய்தது இங்கிலாந்து அரசு.

அதல்லவா மக்கள் நல அரசு! அதேபோல, பிரிட் டனில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியான எம்.ஏ.டி.வி. கணேஷ் ருத் திராட்சப் பதக்கம் குறித்து விளம்பரம் ஒன்றை ஒளி பரப்பியது. இதனை அணிந்துகொண்டால் கெட்ட ஆவிகள் அண்டாது என்று இரு பெண்கள் பேசுவதுபோல் அந்தக் காட்சி!

இதனை நிரூபிக்க ஆதாரம் உண்டா என்ற வினாக் கணைகள் வெடித் துக் கிளம்பின. விளைவு அந்த மூட நம்பிக்கை விளம் பரம் தடை செய்யப்பட்டது.
(ஆதாரம்: தினமலர், 23.2.2008)

அது அல்லவோ நாடு- அது அல்லவோ மக்கள் நல அரசு! இந்தியாவிலும் அத்தகு நடைமுறைகள் தேவை.

விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்கவேண்டும் என்று (51-ஏ(எச்)) வெறும் ஏட்டில் எழுதி வைத்தால் போதுமா? - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


அமர்த்தியா சென்னின் கருத்து பேரலையாய் வீசும்!


பிரபல பொருளாதார அறிஞரும், அத்துறையில் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் - பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திர மோடி குறித்துத் தெரிவித்துள்ள கருத்து - இந்திய அளவில் பெரிய இமாலய அலையாய் வீசப் போகிறது என்பதில் அய்யமில்லை.

அவர் ஒன்றும் அரசியல்வாதியல்ல; எந்த அரசியல் கட்சியோடும் தொடர்புடையவரும் அல்லர்.

பிரதமருக்கான வேட்பாளர் மதச் சார்பற்றவராக இருக்கவேண்டும்; மோடியைப் பொறுத்தவரை சிறுபான்மை மக்களின் நலனையும், பாதுகாப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாதவர் என்று மய்யப் படுத்தித்தான் அவரின் குற்றச்சாற்று அமைந் துள்ளது.

இதே குற்றச்சாற்றைத்தான் பிரபல சிந்தனை யாளர் இராமச்சந்திர குகா, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ போன்ற வர்கள் வைத்திருக்கின்றனர். ஏன், அன்னா ஹசாரே கூட இந்த வகையில் வாய்த் திறந்துவிட்டாரே!

இதே குற்றச்சாற்றைத்தான் - பி.ஜே.பி.யின் கூட்டணியில் அங்கம் வகித்த அய்க்கிய ஜனதா தளத்தின் - குறிப்பாக அக்கட்சியின் சார்பாக பிகாரில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிதிஷ் குமாரும் முன்வைத்துள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மிக முக்கியமான கொள்கைகளில் முற்றிலும் மாறுபட்ட வர் எப்படிப் பிரதமராக வர முடியும் என்ற கேள்வி மோடியின் கழுத்தை மிகவும் நெருக்கிப் பிடித்து அழுத்திக் கொண்டிருக்கிறது.

இதே காரணத்திற்காகத்தான் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் செல்ல விசா மறுக்கப்பட்டது.

இதே காரணத்தைச் சொல்லிதான் அன்றைய பிரதமரும் - சொந்தக் கட்சியைச் சேர்ந்தவருமான அடல்பிகாரி வாஜ்பேயியும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாட்டுக்குச் செல்வேன்? என்று புலம்பினார்.

இவ்வளவுக்குப் பிறகும், அரசியல் நாகரிகத் துக்காகக்கூட தன்னைச் சரிப்படுத்திக் கொள்ள மோடி தயாராகவில்லை.

சிறுபான்மை மக்களை - குறிப்பாக முஸ்லிம் களைக் குறிப்பிடும்பொழுதெல்லாம் தம் வன்ம உணர்வை வெளிப்படுத்திடத் தவறுவதில்லை. அம்மக்கள் சார்ந்த இடத்தில், பரிவர்த்தனைக்காகக் குல்லாயைக் கொடுத்தபோதுகூட ஒரு நாகரிகத் துக்காகக்கூட சற்று நேரம்கூட அதனை அணிந்து கொள்ளத் தயாராக இல்லையே!

முஸ்லிம்கள்பற்றிக் குறிப்பிடும்பொழுது அவருக் குக் கிடைத்த உதாரணம் நாய்க்குட்டிதான்; ஏன் நாயைக் குறிப்பிடுகிறார் தெரியுமா? முசுலிம்கள் பொதுவாக நாய்களை வளர்க்கமாட்டார்கள் - எனவே, அதைச் சொல்லி வம்பு வளர்க்கும் அற்பப் புத்தி.

காங்கிரசைக் குறிப்பிடும்பொழுது மதச்சார் பின்மை என்னும் பர்தாவுக்குள் தன்னை மறைப்பதாக, அந்தப் பர்தா என்னும் முசுலிம் பெண்கள் அணியும் உடையைப் பயன்படுத்துகிறார்.

மதச்சார்பின்மை என்னும் போர்வை அல்லது முகமூடி என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம்; அப்படிச் சொன்னால், மோடியின் இந்துத்துவா வெறி ஆசுவாசம் கொள்ளாதே!

அவர் முதலமைச்சராக இருக்கும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் ஒரே ஒரு முசுலிம்கூட வேட்பாளராக நிறுத்தப்படாததிலிருந்தே அந்த மனிதனின் கோர ரூபத்தை அடையாளம் காணலாமே!

சும்மாவா சொன்னார் - உச்சநீதிமன்ற நீதிபதி நீரோ மன்னன் என்று மோடியை?

120 கோடி மக்களைக் கொண்ட இந்தியா என்னும் துணைக் கண்டத்திற்குப் பிரதமராக வரக்கூடியவர் மதச் சார்பற்றவராக இருக்கவேண்டும் என்று இந் தியாவுக்குள் உள்ள மக்கள் மட்டுமல்லர்; இந்தியா வைத் தாண்டியுள்ள மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் கூடப் பெறத் தகுதியில்லாதவர் நரேந்திர மோடி என்பதால், தொடக்கத்தின் தேர்விலேயே இந்தியத் துணைக் கண்ட மக்களால் தள்ளுபடி செய்யப்படக் கூடிய வராகவே ஆகிவிட்டார்.

அதுவும், அமர்த்தியாசென் போன்றவர்கள் கூறிய பிறகு இந்தக் கருத்துப் பேருரு பெற்று - புதிய திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக்கொண்டு விடலாம்.

தமிழ் ஓவியா said...


அவசியம்கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும், அவசியமுமாகும்.
(விடுதலை, 17.6.1970)

தமிழ் ஓவியா said...


நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்க முடியாது!


நோபல் அறிஞர் அமர்த்தியா சென் திட்டவட்டமான கருத்து

புதுடில்லி, ஜூலை 24- குஜராத் முதல்வர் நரேந் திர மோடி பிரதமராக வருவதை ஏற்கமுடியாது என நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அறிவித்துள்ளார்.

நரேந்திர மோடிதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்பதை யும் கிட்டத்தட்ட அறி வித்துவிட்டது பாஜக. மோடியை முன் நிறுத் துவதை பாஜவுக்குள் ளேயே ஒரு பிரிவினர் எதிர்த்து வரும் நிலை யில், நாட்டின் சமூக ஆர்வலர்கள், மத நல்லி ணக்கவாதிகள், பொரு ளாதார அறிஞர்கள் என பல மட்டங்களி லும் மோடிக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வரு கிறது.

நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென் கடுமையாக எதிர்த் துள்ளார் மோடியை. அவர் அளித்த பேட்டியில்,

மதநல்லிணக்கத்துக்கு எதிரான ஒரு மனிதரை எப்படி நாட்டின் பிரத மராக ஏற்க முடியும்? ஒரு இந்தியக் குடிமகன் என்ற முறையில் அவர் பிரதமராவதை நான் கடு மையாக எதிர்க்கிறேன். சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்பு டன் இருக்கிறோம் என உணரும் வகையில் அவர் எதையுமே சொல்ல வில்லை. சிறுபான்மை யினருக்கு மட்டும் என் றல்ல... நான் சிறுபான் மையில் ஒருவன் இல்லை... பெரும் பான்மை மக்களுக்கும் கூட அவர் என்ன செய்துவிட்டார்? வன்முறைக்குச்சட்ட அங்கீகாரமா?

2002 இல் அவர் செய் தது திட்டமிட்ட வன் முறை. மோடியை அங் கீகரிப்பதன் மூலம் அந்த வன்முறைக்கு சட்ட அங்கீகாரம் தரப்போகி றார்கள் என்றுதான் அர்த்தம்.

இந்திய பிரதமராக விரும்பும் எந்த இந்திய குடிமகனுக்கும் இல்லாத பயங்கரமான வன்முறை பின்னணி மோடிக்கு உள்ளது. அவரை ஏற்கக் கூடாது.குஜராத்தில் சில உள்கட்டமைப்புகள் நன்றாக இருக்கலாம். ஆனால் கல்வி மற்றும் சுகாதாரத்தில் அந்த மாநி லம் கடந்து வர வேண்டிய தூரம் நிறைய உள்ளது.

சகிப்புத் தன்மையில் நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்தியாவில், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான நிலை உள்ளது என பெரும் பான்மை மக்கள் எண் ணுமளவுக்கு மோடி நடந்து கொள்ளவில்லை என்றார்.

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்

திருநெல்வேலியில் திருப்பம்

தமிழர் தலைவர் அவர்களுக்கு, வணக்கம். அய்யா வருகின்ற சூலை மாதம் 28 ஆம் தேதி திருநெல்வேலியில் மன்றல் (ஜாதி மறுப்பு இணை தேடல்) நடை பெறுவது சம்பந்தமாக நானும், மாவட்டத் தலைவர் இரா.காசி அய்யாவும், துண்டறிக்கையை கொடுத்து நிதி உதவி கோரி பல நண்பர்களை சந்தித்தபோது ஏற் பட்ட அனுபவங்களை தங்களிடம் தெரிவிக்க விரும்பி இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

நாங்கள் இருவரும் அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை யின் இயக்குநர் பொறியாளர் ஆர். ஆதிலிங்கம் அய்யா அவர்களை சந்தித்து துண்டறிக்கையை கொடுத்தபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அவர் கூறிய வார்த் தைகள் பெரியார் இல்லை என் றால் இங்கு ஒன்றுமே இல்லை அதேபோல் காந்திமதி மருத்துவ மனையின் நிறுவனர் டாக்டர் தங்கராஜ் அய்யா அவர்களை சந்தித்தோம். எங்களால் முடியாத காரியத்தை தங்களுடைய இயக்கம் தான் செய்ய முடிகின்றது என பாராட்டி, ஜாதி மறுப்பு திருமணம் செய்கின்றவர்களுக்கு பொருளா தார நெருக்கடி ஏற்பட்டால் முழு மையாக நான் உதவி செய்கின்றேன் என எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.

பின்பு விடிவெள்ளி மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் சந்திரசேகர் அவர்களைச் சந்தித் தோம். அவர் இப்படிப்பட்ட புரட் சிகரமான திட்டங்களை தங்களால் எப்படி செய்ய முடிகின்றது? எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்களுடைய உழைப்பையும், நேரத் தையும் செலவழிக்கின்றீர்கள் என வியந்து பாராட்டினார். அவரே துண்டறிக்கை, சுவரொட்டி முத லியவற்றை எனக்கு அனுப் புங்கள், நான் பிரச்சாரம் செய்கிறேன் எனக் கூறி அதன்படியும் செய்தார். மண்டலச் செயலாளர் மா.பால் இராசேந்திரம் எங்களை வழி நடத்தினார்.

இந்நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற வேண்டும்; என முடிவு செய்து 74 வயது இளைஞர் இரா.காசி எனது டிவிஎஸ்-50-இல் உட்கார்ந்து கொண்டு காலையில் இருந்து மாலை வரை, என்னுடன் தொண்டு செய்வது எனக்கே ஆச்சரியம்.

அதேபோல் தென்காசி மாவட் டத் தலைவர் டேவிட் செல்லத் துரை அவர்கள், நேரிடையாக நெல்லைக்கே வந்து செய்ய வேண் டிய, செய்த பணிகளை திட்டமிட்டு ஒழுங்குபடுத்திவிட்டு சென்றது, நெல்லை மாநகரத் தலைவர் பி.இரத்தினசாமி, தன் முதுமையை பொருட்படுத்தாது நாங்கள் அழைத்தபோது வந்து பங்கேற்றது, குறிப்பாக கீழப்பாவூர் தோழர் அருண் தன் தொழில் சம்பந்தமாக தொடர்புடைய நண்பர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு எங்களுக்கு பொருளாதார வசதி செய்தது, தூத்துக்குடி மாவட்ட தலைவர் கனகராஜ் செல்போனில் தொடர்பு கொண்டு, நாங்கள் தோழர்களுடன் நெல்லைக்கு வரு கின்றோம், துண்டறிக்கையை கொடுத்து மக்களிடத்தில் பிரச் சாரம் செய்வோம் என எனக்கு உற் சாகப்படுத்தியது எல்லாம், அவர் கள் பெரியாருக்கு செய்த நன்றி.

நன்றி என்பது பலன் அடைந்த வர்கள் காட்டவேண்டிய கடமையே தவிர, உதவி செய்தவர்கள் எதிர் பார்ப்பது சிறுமைக் குணமே என்ற தந்தை பெரியாரின் பொன்மொழி என் நினைவுக்கு வருகின்றது.

தங்களின் விசுவாசமுள்ள ஊழியன்

- ச.இராசேந்திரன்
திருநெல்வேலி

தமிழ் ஓவியா said...


பசித்திரு - அறியத் துடித்திடு!


ஆப்பிள் கம்ப்யூட்டர் குழுமத்தை ஆலமரமாக வளர்த்தெடுத்த அதன் நிறுவனத் தலைவரான ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) அவர்கள் குறுகிய காலத்தில் புகழ் செல்வத்தையும், தொழிற் செல்வத்தையும் அடைந்து மறைந்தும், மறையாமல் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும் அவரது படைப்புகள், படையெடுப்புகளாக வெற்றி கரமாக சாம்ராஜ்யத்தை அமைத்துவிடும் அளவுக்கு உயர்ந்தார்!

அவர் அமெரிக்காவில் உள்ள பிரபல ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகப் (Stanford University) பட்டமளிப்பு விழாவில் குறிப்பிட்ட பட்டதாரிகளுக்கு வழங்கிய அறிவுரை - இரண்டு வாக்கியங்கள் - உலகம் முழுவதும் பிரபலமாகிப் பயன்படுத்தப்படும் வாசகங்களாக, பொன்மொழி களாக ஆகிவிட்டன!

‘‘Stay Hungry
Stay Foolish’’

‘‘என்றும் அறிவுப் பசியோடு இருங்கள்;

‘‘என்றும் அறியாமையைப் புரிந்து அறிந்து
(கற்று) கொள்ளும் நிலையிலேயே இருங்கள்!’’

இவ்விரண்டு வாக்கியங்களுக்குள், திருவள்ளு வரின் திருக்குறள்போல, ஆழமான முத்தான கருத்துக்கள் புதைந்துள்ளன - அல்லவா?

என்றும் பசியோடு இருப்பவன்தான் எப்போதும் உழைத்திட வேண்டும் என்ற உறுதியோடு அன்றாடம் தன் கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பான்.

பசியோடு இருப்பவன் என்றால் நலம் குன்றாத மனிதன் என்கிற பொருளிலும்கூட இதைப் புரிந்து கூறிய ஸ்டீவ் ஜாப்ஸ் எவ்வளவு பாராட்டுக்குரியவர்!

அவர் பசி என்பது உடல் உணவுக்காக அல்ல; உள்ளத்துப் பசி - அறிவுத்தாகம் கொண்டு அலை வது ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதைச் சுட்டிக் காட்டவே ஆகும்!

அறிவுக்கு எல்லை ஏது? மேலும் மேலும் பல்வேறு செய்திகளை நாம் அறிந்துகொண்டே ஆர்வம் குன்றாத ஆர்வமாக அமைதல்தான் நம்மை பல்முனைகளிலும் உயர்த்திட உதவும்.

இன்றைய புதுமை - வியப்பு!

நாளை அதுவே பழைமை - சாதாரணமாகி விடுகிறது!

வள்ளலார் அவர்கள் பசித்திரு என்று ஒரு சொல்லில் கூறியதை அவரது பக்தர்கள் பலரும் வெறும் அன்னதானத்திற்கு மட்டுமே உரியது என்று ஒரு குறுகிய சிமிழுக்குள் அடைத்துவிட்டனர்!

பசித்திருத்தல் - எல்லாத் துறைகளிலும் தேவை!

எல்லா வயதினருக்கும் தேவை!

எல்லாக் காலங்களிலும் தேவை!!

அடுத்து, நம் அறியாமையை நாம் அறிந்தும் அறிந்துகொண்டும் வளரவேண்டும் என்று அவா வுறுதலும், ஆர்வங்கொண்டு அலைவதும் அவசியம்; மனிதகுல முன்னேற்றத்திற்குரிய முக்கியத் தேவைகள் ஆகும்!

எனக்குத் தெரிந்ததெல்லாம் என் அறியாமை ஒன்றுதான் என்று மிகுந்த தன்னடக்கத்தின் உச்சியில் நின்று, தணியாத அறிவு வேட்கையைப் புலப்படுத்தினார்-

மனித குல மாணிக்கம் உண்மைத் தியாகி

கிரேக்கத்துச் சாக்ரட்டீஸ் அவர்கள்!

நமக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவமும்!

நான் என்ற அகம்பாவமும், நமது, நாங்கள் என்பதைக் கைவிட்டு - நான், எனது என்ற அகங்கார உச்சரிப்பும் வளர்ச்சியைத் தடுக்கும் உச்சகட்ட முட்டுக்கட்டை.

இதைத்தான் அறிவை விரிவு செய் - அகண்ட மாக்கு என்றார் புரட்சிக்கவிஞர்.

அறிதோறும் அறியாமை என்று வள்ளுவர் சொன்னார்.

புதிய பருவங்களில் புதிய சொற்றொடர்கள் புதையல்களாகக் கிடைக்கின்றன நமக்கு!

போற்றுவது முக்கியமல்ல!

பின்பற்றுவதே - அதிமுக்கியமானது - தேவையானது! -----கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


சங்கராச்சாரி பட்டத்தைப் பறிப்பார்களா?


இந்துத்துவா வெறியரான நரேந்திர மோடி பிரதமராகக் கூடாது என்று நோபல் அறிஞர் அமர்த்தியா சென் கூறியதற்காக அவருக்கு அளிக் கப்பட்ட பாரத ரத்னா விருதைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றால், மதவாதியாக இருந்துகொண்டு அரசியலில் மூக்கை நுழைக்கிறாரே - மோடி பிரதமராக வரவேண்டும்; ராகுல் பிரதமராக ஆகக்கூடாது என்று அரசியல் பேசும் ஜெயேந்திரரிடமிருந்து சங்கராச்சாரி பட்டத்தைப் பறிக்கலாமா?

சங்கராச்சாரியார் அரசியல் பேசலாமா?

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி. ஆளும் மாநிலத்திலேயே மோடி புறக்கணிக்கப்படுகிறார்


போபால், ஜூலை 25- மத்தியபிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா பிரச்சார சுவரொட்டிகளில் நரேந்திரமோடி படம் புறக்கணிக்கப்பட்டது.

குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடியை பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக அவர் கட்சியின் பிரச்சார குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரை பல்வேறு மாநிலங்களிலும் பாரதீய ஜனதா கட்சியினர் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா பிரச்சார சுவரொட்டிகளில் நரேந்திரமோடி படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. சிவராஜ்சிங் சவுகான் முதல் அமைச்சராக இருந்து வருகிறார். அவர் தனது அரசின் சாதனைகளை விளக்கி கட்சி சார்பில் 60 நாட்கள் ரதயாத்திரை பிரச்சாரத்தை நேற்றுமுன்தினம் தொடங்கி வைத்தார். இதற்காக பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து இருந்தார். அதில் வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, அனந்தகுமார் ஆகியோரது படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் நரேந்திரமோடி படம் இடம்பெறவில்லை. அனந்தகுமார், அருண் ஜெட்லி போன்றவர்களது படங்கள் இடம்பெற்ற நிலையில் நரேந்திரமோடி படம் இடம்பெறாதது தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நரேந்திரமோடி பாரதீய ஜனதா பிரச்சார குழு தலைவராக நியமிக்கப்பட்டதற்கு அத்வானி எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்தார். பின்னர் சமரசம் ஆனார். முன்னதாக அத்வானி மத்திய பிரதேசம் சென்ற போது சிவராஜ்சிங் சவுகானை பாராட்டி சிறப்பாக ஆட்சி செய்வதாகவும், மத்திய பிரதேச மாநிலம் வேகமாக முன்னேறி வருவதாகவும் புகழ்ந்து பேசினார்.

நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் அளிப்பதை வைத்தே அவர் இவ்வாறு சவுகானை உயர்த்தி பேசினார். இது கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு உத்தரகாண்ட் மாநிலம் சென்ற நரேந்திர மோடி அங்கு தவித்த தனது மாநில பக்தர்களை மட்டும் மீட்டு அழைத்து வந்தார். மத்திய பிரதேச மாநில பக்தர்களை அவர் கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக நரேந்திரமோடி மீது மத்திய பிரதேச மாநிலத்தில் அதிருப்தி நிலவியது.
இதன் வெளிப்பாடுதான் நரேந்திரமோடி படம் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தமிழ் ஓவியா said...


இரண்டு வாங்கினால் ஒன்று இனாம்!


கடைகளில் விலை போகாமல் சரக்குகள் தேங்கிவிட்டால், என்ன செய்வார்கள்? இரண்டு வாங்கினால் ஒன்று இனாம் என்பார்களே - அதுபோல, கட்சிக்கு ஆயிரம் பேர்களைத் திரட்டிக் கொடுத்தால், மோடியைச் சந்தித்துப் பேசலாமாம்!

கட்சிக்கு ஆள் சேர்ப்பது கொள்கை அடிப்படையில் கிடையாதோ! கடைகளில் வாங்கும் கத்திரிக் காய்களோ!

நல்ல கட்சியப்பா, பி.ஜே.பி.!

தமிழ் ஓவியா said...


ஜெயேந்திரர் ஆர்.எஸ்.எஸ். ஆசாமி - சந்தேகம் வேண்டாம்!


கொலைக் குற்ற வழக்கில் சிக்கிப் பிணையில் நடமாடிக் கொண்டிருக்கும் திருவாளர் ஜெயேந்திர சரசுவதி - ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று எத்தனையோ முறை ஆதாரங்களுடன் விடுதலை எடுத்துக்காட்டிய துண்டு; திராவிடர் கழகம் அடையாளம் காட்டியதுண்டு. அவற்றை நம்பாதவர்கள் எவரேனும் இருந்தால் நேற்று ஏடுகளில் அவர் வெளியிட்ட கருத்துகளைப் படித்த வர்களுக்குச் சந்தேகம் தீர்ந்திருக்கும்

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்காக பாரதீய ஜனதா முன் நிறுத்தினால் அது வர வேற்கத்தக்கது. நரேந்திரமோடி தகுதியான வேட்பாளர். நிர்வாகத் திறமை மிக்கவர். அவருக்கு கடவுள் அருளாசி உண்டு. எனது வாழ்த்துக்கள்!

ஆனால் சோனியாகாந்தி வெளிநாட்டுக்காரர் என்பதால் அவரது மகன் ராகுல் காந்திக்கு இந்தியா வுக்குத் தலைமை தாங்கும் தகுதி கிடையாது என்றே கருத வேண்டியுள்ளது.

நரேந்திரமோடி - ராகுல்காந்தி இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நரேந்திர மோடிக்குத்தான் முதலிடம் கிடைக்கும். நிர்வாகத் திறமை ஆற்றல் படைத்த மனிதர். மிகப்பெரிய சாதனையாளர். குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவர். மதச்சார்பற்ற ஆட்சியை அவர் தருவது நிச்சயம். - இவ்வாறு காஞ்சி சங்கராச்சரியார்(?) ஜெயேந்திரர் கூறியுள்ளார்.

மேற்கண்டதைப் படிப்போர் தெளிவாகவே ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம். மோடியை பி.ஜே.பி. சார்பில் பிரதமராக நிறுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸே முக்கிய காரணமாகும்.

மோடி, தன்னை ஒரு இந்துத் தேசியவாதி என்று சில நாள்களுக்கு முன்புதான் வெளிப்படையாகப் பேட்டி ஒன்றில் கூறினார்.

நரேந்திர மோடி மதச் சார்பற்ற கொள்கைக்கு எதிரானவர் என்று பி.ஜே.பி.யைத் தவிர அனேகமாக எல்லாத் தரப்பினரும் எடுத்துக் கூறிவிட்டனர். மதச் சார்பற்ற தன்மைக்கு தம் வசதிக்கு விளக்கம் கூறித் தப்பிக்கப் பார்க்கிறார்.

குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை இன் றளவும் நியாயப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அடித்துக் கூறுகிறார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதுகூட இதே மோடி என்ன சொன்னார்? இந்துக்கள் ஆண் மக்கள், பேடிகள் அல்லர் என்பதை நிரூபித்துவிட்டனர்! என்று கருத்துக் கூறிய பேர்வழிதான் இந்த மோடி.

அத்தகைய ஒருவர்தான் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்று ஒருவர் சொல்லுகிறார் என்றால், அவர் இன்னொரு மோடியாகத்தானிருக்க முடியும்.

மோடியை ஆதரிப்பதோடு அவர் நிற்கவில்லை. மிகவும் பச்சையாக காங்கிரஸ் சார்பில் பிரதமருக்கு முன்னிறுத்தப்படுபவரைப்பற்றியும் விமர்சனம் செய்கிறார் என்பதையும் கவனிக்கவேண்டும்.

பி.ஜே.பி.யின் தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்; மோடி பிரதமராக வரவேண்டும் என்பதற்குத் தனிப் பிரிவை ஏற்படுத்தி அதற்கு இந்த ஜெயேந்திரரை பிரச் சாரக் குழுத் தலைவராக அறிவிப்பதுபற்றி பி.ஜே.பி.யோ, சங் பரிவாரமோ ஆழமாகவே யோசிக்கலாம்.

நெருக்கடிநிலை காலத்தில் தலைமறைவான ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு இவர் உதவி புரிந்ததை நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம் எனும் நூலில் இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் திருவாளர் இராம.கோபாலன் 222 ஆவது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருநாடகத்தில் ஸ்ரீபேஜாவார் சுவாமிகள், நெருக்கடி வந்த முதல் வாரத்திலேயே ரூ.1001 கொடுத்ததுடன், செல்லும் இடமெல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸுக்காகப் பிரச்சாரம் செய்து வந்தார்; காஞ்சி காமகோடிப் பீடம் ஸ்ரீஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் தலைமறைவு இயக்கத்திற்குப் பல விதங்களில் உதவியுள்ளார். தலைமறைவு இயக்கத்தவர்கள் அவரை அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர் என்று திருவாளர் இராம. கோபாலன் குறிப்பிட்டுள்ளார் என்றால், ஜெயேந்திரர் காவி உடையில் திரியும் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பது விளங்கவில்லையா?

அயோத்தியில் கட்டடத்தை இடித்தது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை (தினமணி, 27.11.2000) என்று சொன்னவரும் இந்த சாட்சாத் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்தான்.

ஒரு வகையில் ஜெயேந்திர சரசுவதி, நரேந்திர மோடியை வெளிப்படையாக ஆதரித்ததும் நல்லதாகவே போய்விட்டது.

கொஞ்ச நஞ்சம் அரசல்புரசலாக இருப்பவர்கள்கூட, நாட்டை மதத்தின் பெயரால் அமளிக்காடாக மாற்றத் துடிக்கும் ஒரு கூட்டம் கிளம்பிவிட்டது என்பதை வெகுமக்கள் தெரிந்துகொள்ள, புரிந்துகொண்டு செயல்படப் பெரும் உதவியாகவே போய்விட்டது - அந்த வகையில் வரவேற்கவும் செய்யலாம்.

தமிழ் ஓவியா said...


தொல்லைவரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

தமிழ் ஓவியா said...


ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட்டம் தோழர்களே, கவனம்! கவனம்!!தமிழர்களைச் சூத்திரர்கள் என்று சொல்லும் - இன்றைய கோயில் அர்ச்சகர் முறையை எதிர்த்தும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தியும் ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட்டம் அனைத்துக் கழக மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெறுவதற்கான தகவல்கள் குவிந்து கொண்டுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவுக் கரம் நீட்டும் அமைப்புகளையும் (தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஏற்கெனவே ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்). அரவணைத்து எழுச்சியுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்துவீர்! அரசுகளின் காதுகளுக்கும், நீதிமன்றத்தின் காதுகளுக்கும் எட்டட்டும்! எட்டட்டும்!! மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் தத்தம் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் தோழர்களின் பட்டியலையும் சேர்த்து, சிந்தாமல், சிதறாமல் ஆர்ப்பாட்டத்தை நடத்துவீர்! நடத்துவீர்!! காவல்துறைக்கு அனுமதி கேட்டுக் கடிதம் கொடுத்துவிட்டீர்களா?

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


அன்பு வளர முடியும்நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், சாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.
(விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


அண்ணா பெயரில் சமூக அநீதியா?


ஆசிரியருக்குக் கடிதம்

அண்ணா பெயரில் சமூக அநீதியா?

நாகை மாவட்டம் தெற்கு மருதூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கே.குமாரவேலு என்பவர் (ஆசிரியர் தகுதித்தேர்வில் 83 மதிப்பெண் பெற்றவர்) தன்னை பணியில் அமர்த்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், டி.இ.டி. தேர்வில் மதிப்பெண் தகுதியில் யாரும் சலுகை கோர முடியாது.

தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உட்பட எந்த பிரிவினராயினும் டி.இ.டி. தேர்வில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என வாதிட்டார். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுகொண்ட நீதிபதி மாற்றுத் திற னாளியின் மனுவை தள்ளுபடி செய்தார். "அண்மை யில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை.

3 சதவீத இட ஒதுக் கீட்டுப்படி மாற்றுத் திறனாளிகளுக்கு 360 இடங்கள் ஒதுக்கப்படவேண்டும். மாற்றுத் திறனாளி ஒருவர் கூட பணியில் அமர்த்தப்படவில்லை. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் பிரிவுக்கு மனு கொடுத்தேன். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரையும் சந்தித்து மனு கொடுத்தேன். ஆனால் 90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பணிநியமனம் குறித்து பரிசீலிப்பதாக அவர் கூறினார்.

மாற்றுத் திறனாளி களுக்கு முன்னுரிமை கொடுத்து, இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் மற்றும் அரசாணை குறித்து நான் கேட்ட விளக்கங்களை அதிகாரிகள் அளிக்கவில்லை. இவை பின்பற்றப்படாமல் காற்றில் பறக்க விடப் பட்டுள்ளன.

இதனால் சமவாய்ப்பு அளிக்கும் அரசியல் சாசனம் மீறப்படுகிறது." என்று வழக்கு தொடுத்தவர் நீதி மன்றத்தில் கூறியுள்ளார். அதற்கு அரசு தரப்பின் பதில் என்ன? அந்தப் பணியிடங்கள் காலியாக வைக்கப் பட்டுள்ளனவா? அந்த இடத்தில் மாற்றுத் திறனாளி அல்லாத ஒருவரை பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றமல்லவா? இதே நிலைதான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்கள் விஷயத்திலும் பின்பற்றப் பட்டிருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகிறதே!

- கி.தளபதிராஜ், மயிலாடுதுறை

தமிழ் ஓவியா said...


மொட்டைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!


-ஊசி மிளகாய்

நம்மூரில் - திருப்பதி - பழனி - என்று வேண்டுதலை என்ற பெயரில் - பக்தி மூடநம்பிக்கை காரணமாக திருப்பதி, வெங்கடாஜலபதிக்கும், பழனி முருகனுக்கும் இன்னும் சில கடவுளர். கடவுளச்சிகளுக்கும் மயிர்க் காணிக்கை என்பது பய பக்தியுடன் தரப்படுவதாகும்.

எந்தப் பார்ப்பனரும் திருப்பதியிலோ, பழனியிலோ அல்லது வேறு எந்த கோயிலிலேயோ மயிர்க் காணிக்கைக்காகத் தலையை மொட்டை அடித்துக் கொள்ளுவது கிடையாது!

முன்பெல்லாம் அக்கிரகாரத்து விதவை மாமிகள் - மொட்டை அடித்துக் கொண்டு வெள்ளை சேலை உடுத்திக் கொண்டு, ரவிக்கை மொட்டைப் பாப்பாத்திகள் என்ற நாமகாரணத்துடன் உலா வருவார்கள்!

இப்போது எங்கும் அப்படி ஒரு காட்சியை அக்ரஹாரங்களில் பார்க்கவே முடியாது; காரணம் அவர்கள் மாறி விட்டார்கள். ஆனால் நம் சூத்திர ஜாதிகளில் இன்னமும் வெள்ளைச் சேலை ரவிக்கை தியாகத்துடன் உள்ள பெண்களைக் காண முடிகிறதே!

குன்றக்குடி அடிகளார் சொல்வார்: பேயைவிடக் கொடுமையாக ஆடுவர் பேய் பிடித்தவர் என்று நகைச்சுவையாக; அதை நிரூபிப்பதாக இருக்கும் நம் பெண்களின் இத்தகைய வேடம்!

இதோ இந்தப் படத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் (பெரிய) சீனியர் புஷ் அவர்களும் ஒரு சிறுவனும் உள்ளனர்!

இந்தப் பையனின் உணர்வுகளுக்கு உரமூட்ட, பெரிய புஷ் அவர்கள்தானே முன் வந்து தலையை மொட்டை அடித்துக் கொண்டாராம்!

சீனியர் புஷ் அவர்களின் பாதுகாப்புக் குழுவில் உள்ள(Security - Men) ஒருவரின் மகன் (அப்பையனுக்கு 2 வயதுதான்) ரத்தப் புற்றுநோய் வந்து(Leukaemia) அந்த சிறுபிள்ளைக்குச் சிகிச்சை தருவதால் தலை மயிர் உதிர்ந்து விட்டது. (கீமோதெரப்பி தருவதன் விளைவால் மயிர் உதிர்ந்து விடும்) அதனால் மொட்டை அடித்து விட்டனர்.

தனக்கு இப்படி மொட்டை அடித்து விட்டார்களே என்று அப்பிள்ளை மனதுக் குள் வருந்தினான். அவனது நோய் குணமாவதற்கு அது ஒரு தடையாக அமைந்துவிடும்; எனவே அவனது மன நிலையை நல்ல வண்ணம் பக்குவப்படுத்த வேண்டும் என்பதற்காக பெரியவர் புஷ் அவர்கள் தன் தலையை மொட்டையடித்துக் கொண்டு அவனிடம் விளையாடி அந்தச் சிறுவனுக்கு மகிழ்ச்சியை ஊட்டிக் கொண்டுள்ளார்!
எப்படிப்பட்ட மனிதநேயம் பார்த்தீர்களா?

அவரது சக்கர நாற்காலியில் (அதுதான் பெரிய புஷ் அவர்களின் தற்போதைய புழக்கத்திற்குரியது) அந்தப் பையனைப் போலவே நீலக்கலர் சட்டை அணிந்து கொண்டு அந்தப் பையனையும் தூக்கி தன் மடியில் (சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே) வைத்துக் கொண்டு அவனுக்குத் தெம்பூட் டும் காட்சி - எவ்வளவு அருமையான காட்சி என்பதைப் பார்த்தீர்களா!

மூடநம்பிக்கையினால் மொட்டை போடு வது சுயநலத்தின் - வெளிப்பாடு! பண்ட மாற்றின் ஒரு பரிமாணம்! ஆனால் பெரிய புஷ்ஷின் மொட்டை - ஒரு புதிய பரிமாணம்; மனிதநேயம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அருமையான எடுத்துக்காட்டு அல்லவா!

‘Empathy’ என்ற சொல்லுக்கு இதைவிட நல்லதோர் விளக்கம் வேறு இருக்கவே முடியாது!

பிறரைப் பார்த்து அவர் நிலைக்காக பரிதாபப்படுவது - Sympathy - வெறும் இரக்கம்!

பிறரின் துன்ப நிலையில்தன்னை வைத்து அவரது மன உணர்வினையே பெறுவது Empathy -- இரக்கத்தைவிட மேலானது; ஒத்தது அறிதல்!

தமிழ் ஓவியா said...


இதை எதிர்த்து நாமும் ஒத்த கருத்துள்ள பல்வேறு அமைப்புகளும் அறப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். பல அறிக்கைகளையும் வெளியிட்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளோம்.

ஏனோ மத்திய அரசின் காதுகளில் இவை இன்னும் விழுந்ததாகவே தெரியவில்லை; அதன் பார்வை இந்தக் கொடுமைகள் - அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளையே - பின்பற்றாத - இந்தக் கொடுமைகள் பக்கம் திரும்புவதே யில்லை!
எத்தனையோ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட பேராசிரியர்கள் புழுக்களைப் போல ஆதிக்கக் கொடுங் கரங்களால் அழுத்தி மிதிக்கப்பட்டே வைக்கப்பட்ட வரலாறு பழைய வரலாறே ஆகும்! இது கொடுமையிலும் கொடுமை.

நீதியரசர் நாகமுத்து அவர்களின் சிறப்பான தீர்ப்பு!

இதனால் வெகு காலமாக பாதிக்கப்பட்ட - வர்ணிக்க முடியாத அளவுக்கு மன உளைச் சலுக்கு ஆளாகிய பேராசிரியை டாக்டர் வசந்தா அவர்கள் கணித மேதை - அவரது பாட நூல்கள் பலவும் அவரது ஆற்றலைப் பறைசாற்றுபவை - சென்னை உயர்நீதிமன்றத் தில் ஒரு ரிட் மனு போட்டு நியாயம் கேட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்பமை ஜஸ்டீஸ் திரு எஸ். நாகமுத்து அவர்கள், ஒரு நல்ல தீர்ப்பை வழங்கி யுள்ளார்கள்!

1995 முதல் 26.9.2000 வரை சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற பணி நியமனங்கள் தொடர்பான உண்மைகளை அறிய சி.பி.அய். புலன் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தர விட்டுள்ளார்கள்.

மேலும் மனுதாரர் டாக்டர் வசந்தா கடந்த 27.7.1995 முதல் இணைப் பேராசிரியராக 18.12.1996 முதல் பேராசிரியராகவும், அய்.அய்.டி.யில் பணியாற்றி வருவதாகக் கருதப்பட வேண்டும்.

அந்த அடிப்படையில் எதிர் காலத்துக்கான அவரது ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி அவர்கள் தமது தீர்ப்பில் கூறியுள்ளார்கள்!

சமூகநீதிக்குக் கிடைத்த வெற்றி!

இது சமூக நீதிக்குக் கிடைத்த நியாயமான வெற்றி! இதுகூட தாமதத்துடன் கிடைத்தது என்றாலும் - மறுக்கப்படாமல் கிடைத்ததே என்ற மகிழ்ச்சி! இந்த மனிதவளத்துறை கல்வியகங்களில் நசுக்கப்பட்டு வந்த பல ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்டோர் சற்று நிம்மதிப் பெரு மூச்சு விடுவர்!

சி.பி.அய். செய்ய வேண்டியது என்ன?

நீதியரசர் வழங்கிய நியாயத்திற்கான தீர்ப்பினைப் பாராட்டுகிறோம். அய்.அய்.டி.யில் - அரசியல் சட்டம் விதித்துள்ள உரிமைகள் அனைத்தும் (அவை சலுகைகளோ, பிச்சை களோ அல்ல) ஒடுக்கப்பட்டோருக்குக் கிட்டும் வண்ணம் சி.பி.அய்.யின் விசாரணை அறிக்கை அமைவது அவசியம்! அய்.அய்.டி. தொடர்பான பல்வேறு குறைகள் கண்டு அறியப்பட்டு களையப்படல் வேண்டும்; அதனைக் கண் காணிக்க வேண்டிய பொறுப்பு சென்னை உயர்நீதிமன்றத்திற்குரிய கடமையாகும்.

இதற்கு முன்பு பொறுப்பிலிருந்த பலரும் தப்பிவிடக் கூடாது! கூடவே கூடாது!

இது ஒரு கட்டம்தான். மேலும் சமூகநீதி பெறுவதற்கு பல கட்டங்கள் அங்கே தேவைப் படும்.

தொடர் வெற்றிக்காகப் போராடுவோம்!

இந்த வழக்கில் சொல்லப்பட்ட தகவல்கள், ஒரு பனிப்பாறையின் முனைதான் (Tip of the iceberg) k£Lnk! மட்டுமே!

எனவே சமூகநீதிப் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வெற்றியின் வெள்ளி முளைத் துள்ளது இப்போது!

தொடர்ந்து நாமும் விழிப்போடு இருப்போம் -விழிப்புணர்வை உருவாக்கி அறவழியில் போராடுவோம்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
26.7.2013

தமிழ் ஓவியா said...


ஆன்மா பற்றி மொக்கலவாதக் கருத்து


கடவுளை உண்டு பண் ணினவனை விட ஆன் மாவை உண்டு பண்ணினவனே அயோக்கியன் என தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். இதே கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பவுத்தத்தைச் சார்ந்த மொக் கல வாதக் கருத்தும் (நை ராத்ம வாதம் அல்லது ஆன்மா இல்லை என்கின்ற வாதம்) அமைந்திருப்பதை நீலகேசி என்னும் நூலில் மொக்கல வாதசருக்கத்தில் காணலாம்.

ஆன்மா அடங்காத ஒன்றா?

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங் களும், (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரியங்களும் (தொழிற்கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தானாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?

ஆன்மா ரூபமுடையது என்பீரேல்; சரீர பிரமாணத் ததா? அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!

ரூபம் அற்றது என்றாலோ? ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.

ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ இரு வகைத்தும் குற்றமே என்றறிக! (நீலகேசி மொக்கலவாதச்சருக்கம், பக்கம்-3)

இதிலிருந்து ஆன்மா என்பதே ஒரு பொய்க் கற்பனை என்பதும், உடலுக்குள் புகுவதும், பிறகு உடல் செயலற்றுப் பிணம் என்றாகி விட்டால் அந்த உடலை விட்டு வெளியேறிவிடுகிறதென்பதும், மீண்டும் வேறு உடலை ஏற்றுக் கொள்கிறதென்பதும் சுத்தப் புரட்டு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சேலம் ர.ஒந்தாட்சி

தமிழ் ஓவியா said...

அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்ட விரோதம்!

அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்டவிரோதம் என்று ஜப்பான் நாட்டில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. ஜப்பான் மதச்சார்பு இல்லாத நாடுஎன்று அதன் அரசியல் சட்டம் கூறுகிறது. அதன்படி, அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்ட விரோதம் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருக்கிறது. இந்தத் தீர்ப்புப்படி ஜப்பான் மன்னரும் கோவிலுக்குப் போக முடியாது. இந்த சட்டம் இந்தியாவிற்கு?

(ராணி, 3.1.1991)

தமிழ் ஓவியா said...

மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...

பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன்வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும்.

இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரிகளுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன? ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயிருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடைய வனாயிருக்கிறான்.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...


அம்பேத்கர் கூற்று!


இந்த நாடு வெளிநாட்டுக்காரர்களின் ஆளு கையால்தான் காலங்காலமாய் இருந்திருக்கிறது. அடிமைத் தனத்திலேயே சுகங்கண்டவர்கள் இந்தியர்கள். இதற்கெல்லாம் காரணம் சாதி தவிர, வேறு ஏதாவது காரணம் கூற முடியுமா? காந்தி இதைக் கொஞ்சமாவது உணர்ந்திருக்கிறாரா? சித்த சுவாதீனம் இல்லாதவனைப் போலவும், தற்கால மனிதனைப் போலவுமே இருக்கிறது அவரது பேச்சும் நடவடிக்கையும்.

- டாக்டர் அம்பேத்கார்

தமிழ் ஓவியா said...

காற்பலம் குறைவு

ஒரு சைவன் சுயமரியாதைகாரனானான். பின்னர் அவனை நிறுத்துப் பார்த்ததில் - எடையில் காற்பலம் குறைவு ஏற்பட்டது; விபூதியிடுவது நீங்கியதால்!

****************************
கண்ணு: உழைப்பை நிறுத்தி விட்டால் உடம்பு பெருக்கிறதா என்று பார்க்க போகிறேன்.

வேணு: ஏன் பார்ப்பனர்களில் சதை இல்லாத ஆசாமி இல்லையா?

- புரட்சிக்கவிஞர்

தமிழ் ஓவியா said...

ஈரேழு லோகமாம்!

கண்ணன் வாயைக் காட்ட அவன் வாயில் ஈரேழு பதி னான்கு உலகமும் இருப் பதை நேரில் அவன் தாய் கண்டாள் என்று சொற்பொழி வாளர் கூறியதும் கூட்டத்திலிருந்து கேள்வி கேட்கிறார்:

ஒரு கேள்வி:- ஏனையா, வாய்க்குள் ஈரேழு லோகங் களும் புகைபோல் தெரிந் தனவா? திருத்தமாகவா?

உபந்யாசகர்:- முட்டாளே! அசல் உலகங்கள்! உலகத்தில் உள்ள ஒன்று விடாமல் தெரிந்தன என்று தாய் ஆச்சரியப்பட்டாள்.

மற்றொரு வேண்டுகோள்:- அய்யா! உபந்நியா சகரே! இந்தக் கடிதத்தை அந்த அம்மாவிடம் கொடுத்து, தயவு செய்து (வாய்க்குள் தெரிவதால்) சுலபமாய்ச் சென்னை - பாரிஸ் வெங்கடாசல அய்யர் வீதி நெ.17 வீட்டின் குறட்டில் போட்டு விடச் சொன்னால் போதும் அவசரமான லெட்டர். ஸ்டாம்பு வாங்கக் காசில்லை.

-புரட்சிக் கவிஞர், (பாரதிதாசன் கதை: 100

தமிழ் ஓவியா said...


அப்பா, ஒரு சந்தேகம்!


மகன்: ராஜகோபுரத்தின் முன்னே தீ அணைப்பு மோட்டார் நிறுத்தி வைத்திருக்கிறார்களே எதற்கு?

தகப்பனார்: தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பதற்கு.

மகன்: சாமி நெருப்பு பிடிக் காமல் பார்த்துக் கொள்ளாதா?

தகப்பனார்: (மகனை முறைத்து பார்க்கிறார்.)

மகன்: (பயந்து கொண்டு) அப்பா.

தகப்பனார்: என்னடா?

மகன்: என் மேலே கோவிக்காமல் சொல்லுப்பா.

தகப்பனார்: சரி என்னத்தை கேக்கப்போற?

மகன்: சாமி தூக்கி வரும்போது பக்கத்திலேயே ஏராளமான போலீஸ்காரர்கள் சூழ்ந்து கொண்டு வருகிறார்களே எதுக்கப்பா?

தகப்பனார்: அட, இது தெரியலியே உனக்கு! சாமிக்கு போட்டு வைத்திருக்கிற தங்கம், வைரம், இவைகளைக் கொண்டு செய்த விலை மதிப்பு போட முடியாத நகைகளை திருடர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு போகாமல் பாதுகாத்துக் கொள்ள வரு கிறார்கள்.

மகன்: சாமியே பார்த்துக் கொள்ளாதா அப்பா?

தகப்பனார்: சரி, சரி நீ வீட்டுக்கு வாடா உன் தோலை உரித்துவிட்டு மறு வேலை பார்க்கிறேன்.

- வி.வாசுதேவன், திருவொற்றியூர், சென்னை.