Search This Blog

4.7.13

பார்ப்பனர்கள் பற்றி பார்ப்பனர்

பல பகுதிகளின் தலைவர்கள், அரச வம்சத்தைச் சேர்ந்த பெரிய சேனாதிபதிகள், இவர்களையெல்லாம் விட பெரிய சுரண்டும் கூட்டம் புரோகிதக் கூட்டம் (பக்கம் 160).

பார்ப்பனர்கள் பவுத்தர்களைத் தங்களது பலமான எதிரிகள் என்று கருதுகிறார்கள்; எல்லா நாட்டிலும் உள்ள பவுத் தர்களும் பசு மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்ற காரணத்திற்காகவே பசு மாமிசம் தடை செய்யப் பட்டதென்றும் பசுவையும் பார்ப்பனர்களையும் காப் பாற்றுவது தர்மம் என்றும் பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள் (பக்கம் 312).

அறிவைவிட ஏட்டுச் சுவடிகளுக்கு முக்கியத் துவம் கொடுப்பது, உலகத்தைத் தோற்றுவித்தவர் கடவுள் என்று ஒப்புக் கொள்வது, தீர்த்த மாடுவதை மதச் சடங்காக ஆக்குவது, பிறப்பிலே சாதி வேற் றுமை காண்பது, பாவத்தை போக்குவதற் காக உடம்பை வாட்டுவது இவை அய்ந்தும் மனிதர்கள் அறிவற்ற திடப் பொருளாகி விட்டார்கள் என்பதற்கு அறிகுறிகள்

வேதப்ராமண்யம் கஸ்மசித் காத்தருவாதஹ
ஸ்நானே தர்மேச்சா ஜாதி வாதாவலேபஹ
சந்தா பாரம்பஹ பார்ஹநாயசேதி
த்வஸ்த பரகஞான மாம் பஞ்சலிங்
காணி ஜாடயே
திராவிடத் தர்க்கப் பேரறிஞர் கீர்த்தி (பக்கம் 3-7)

------------------- வால்காவிலிருந்து கங்கை வரை நூலிலி ருந்து (ராகுல் சாங் கிருத்தியாயன்).

மேலே எடுத்துக் காட்டப்பட்டவை ஈரோட்டுச் சரக்கல்ல; திராவிடர் கழகத் தலைவரின் கற் பனையுமல்ல; அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை நூலில் இருந்து எடுத்துக்காட்டப்பட்டதும் அல்ல!

உலகப் புகழ் பெற்ற ஆய்வறிஞர் ராகுல் சாங் கிருத்தியாயன் (அவரும் பார்ப்பனர்தான்) தான் இப்படி குறிப்பிடுகிறார். புகழ் பெற்ற வால்கா முதல் கங்கை வரை என்ற தகவல் களஞ்சிய மான கருவூல நூலில்!

பார்ப்பனர்கள் தமிழர்கள்தான், பார்ப்பனன் என்றால் சிந்தனையாளன் என்றும், அறிஞன் என்றும் பதம் பிரித்துப் பொழிப்புரை கூறப் புறப்பட்டு இருக்கும் தமிழ்த் தேசியம் என்பதையே கொச்சைப்படுத்தக் கிளம்பி இருக்கும் பேர் வழிகள் சிந்திப்பார்களாக!

பிஜேபி ஆளும் குஜராத் போன்ற மாநிலத்தில் பசுவதைத் தடைச் சட்டம் எந்த அடிப்படையில் என்பதையும் புரிந்து கொண்டால் பாரதீய ஜனதாவின் உள் முகமும் பளிச் சென்று புலப்பட்டு விடுமே!

-------------------------- மயிலாடன் அவர்கள் 4-7-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை35 comments:

தமிழ் ஓவியா said...


சேலம் சுயமரியாதைச் சங்கம் சட்டப்படி மீட்கப்பட்டது


செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

சேலம், ஜூலை 4- 1927இல் தொடங்கப்பட்ட சேலம் சுயமரியாதைச் சங்கம் சட்டப்படி மீட்கப்பட்டது என்றார் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள். செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

சேலம் தாய் வீடு என்று சொல்லுவார்கள்; 1927இல் சேலம் சுயமரியாதைச் சங்கம் தொடங்கப்பட்டது. அதற்கான சொந்த இடம் வாங்கி 1931 ஜூன் 29ஆம் தேதி திறப்பு விழா நடைபெற்றது. இதில் அப்போதைய அமைச்சர் திவான் பகதூர் பி.டி. ராஜன் கலந்து கொண்டார். 1957இல் இருந்து பழைமை வாய்ந்த சுயமரியாதை சங்க கட்டடத்தில் படிப்பகம் நூலகங்கள் இயங்க ஆரம்பித்தன. இந்த சுயமரியாதை சங்கத்தில் பொறுப்பாளர்களாக இருந்த சிலர் 1998இல் மனுகுல தேவாங்கர் சங்கத்தோடு இணைந்தார்கள். இந்த சுயமரியாதை சங்கமானது, பகுத்தறிவைப் பரப்புவதற்கும் ஜாதி பேதங்களை ஒழிப்பதற்கும், பெண்ணடிமை ஒழிப்பிற்காகவும், இயங்கி வந்தது. ஆனால் இந்த சங்கத்தை மனுகுல தேவாங்க சங்கம் என்ற ஜாதிச் சங்கத்தோடு இணைத்தது தவறு என்றும் வழக்கு நடத்தப்பட்டது.

இந்த சங்கத்தின் உறுப்பினராக இருந்த நடேசன் என்பவர் வழக்கு நடத்தி வந்தார். அவர் நோயுற்ற காலத்தில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் பிரச்சார செயலாளர் கி.வீரமணி அவர்களே இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என் கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கின் இறுதியில் 19.6.2013-இல் பத்திரபதிவுத் துறையின் அய்.ஜி (இன்ஸ்பெக்டர் ஜெனரல்) ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில் ஜாதி சங்கத்தோடு, சேலம் சுயமரியாதை சங்கத்தை இணைத்தது தவறு என்றும், சேலம் சுயமரியாதை சங்கம் தனித்து இயங்கலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில் சேலம் சுயமரியாதை சங்கத்தின் அலுவலகம் இந்த கட்டடத்தில் இன்று முதல் இயங்குகிறது. தமிழகத்தில் முதன்முதலாக தொடங்கப்பட்ட (1927) சேலம் சுயமரியாதை சங்கம் சட்டப்படி மீட்கப்பட்டது என செய்தியாளர் சந்திப்பில் கூறினார் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள்.

மேலும் வேலூர் பி.ஜே.பி. முன்னணி தலைவர் கொலை செய்யப்பட்டதுபற்றி செய்தியாளர் கேள்விக்கு தமிழர் தலைவர் கூறியது:- கொள்கையளவில் வேறுபாடு இருந்தாலும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டுமே தவிர வன்முறையில் யார் ஈடுபட்டாலும் அது தவறு தான். தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் மிகவும் மலிவாகிவிட்டது. தமிழக அரசு நோய் நாடி, நோய் முதல் நாடி என்பது போல அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து களைய வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...

கடவுளுக்கே வறட்சியோ!

பழநி, ஜூலை 4- பழநி இடும்பன் மலைக்கோவிலில், தண்ணீர் இல்லாத தால், பூஜை நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வசதியின்றி, பக்தர்கள் அவதிப்படுகின்றனராம்.

பழநிக்கு, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள், முதலில், இடும்பன் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு, மலைக்கோவில் செல்வர். இடும்பன் மலை கோவில் பூஜைக்கு, கிணற்று தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். வறட்சியால் கிணறு வற்றிவிட்டது.

இதனால், மலைக்கு தண்ணீர் கொண்டு செல்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. அபிஷேகத்திற்கு தண் ணீர் கிடைக்காததால், பூஜை முழுமை யாக நடப்பதில்லை. அர்ச்சகர்கள் குடங்களில், அவ்வப்போது கொண்டு செல்லும் தண்ணீரில், பூஜை செய்யப் படுகிறதாம். கோவில் செயற்பொறியாளர் குமரேசன் கூறுகையில்,"இடும்பன் மலை அடிவாரத்தில், புதிய தண்ணீர் தொட்டி கள் கட்டும்பணி நடக்கிறது. லாரி மூலம், இத்தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படும். இங்கிருந்து இடும்பன் மலை கோவிலுக்கு, தண்ணீர் விநியோகம் செய்யப்படும். இப் பணி, ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும்,'' என்றார்.

தமிழ் ஓவியா said...

பழநி முருகன் தீர்த்து வைக்க மாட்டானா?

பழனி, ஜுலை.4- பழனி கோவில் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடி சேமநல பிடித்தத்தில் முறைகேடு ஆகிய வற்றை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள அறு படை வீடுகளுக்கும் ஆஸ்பிடாலிட்டி பெசிலிட்டி அன்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற தனியார் ஒப்பந்தக்காரர் மூலம் துப்புரவு பணியாளர்கள் நியமிக் கப்பட்டனர். பழனி மலைக்கோவில், கிரிவலவீதி, படிப்பாதை, தங்கும் விடுதிகள் ஆகியவற்றிற்கென துப்புரவு பணியாளர் கள் 325 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 125 பேர் ஆண்கள், 200 பேர் பெண்கள். இவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.3,300 வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு மாதம் கூட குறிப்பிட்ட தேதியான 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கியது கிடையாது. சேமநல நிதியாக ஒவ்வொரு வருக்கும் ஊதியத்தில் இருந்து ரூ.400 பிடித்தம் செய்து அதனுடன் ஒப்பந்தகாரர் சார்பில் ரூ.400 சேர்த்து ரூ.800 வரவு வைக்கப்பட வேண்டும். ஆனால் துப்புரவு பணியாளர்கள் ஒருவருக்குகூட சேமநல நிதி வரவு வைக்கப்படவில்லை. இது குறித்து நிர்வாகத்திடம் பல முறை கேட் டும் எந்த வித பதிலும் தரவில்லை. இத னால் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் இன்று துப்புரவு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேமநல நிதி பிடித்தம் செய்யப்படு கிறதே தவிர அது வரவுவைக்கப்பட வில்லை. கடந்த 5 ஆண்டில் 5-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இறந்தும் அவர்கள் குடும்பத்துக்கு உதவித் தொகை வழங்கவில்லை. யாராவது அவர்களை எதிர்த்து கேட்டால் வேலையில் இருந்து நிறுத்தி விடுகிறார்கள். எனவே எங்களை திருக்கோவில் நிர்வாகத்தினரே தினக்கூலி அடிப்படையில் வேலையில் அமர்த்தி னால்கூட நிம்மதியாக பணியாற்றுவோம் என்று தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...

மதம் பிடித்த 20 கோயில் யானைகளுக்கு மருத்துவம்!

பாலக்காடு, ஜூலை 4- கேரளாவில் உள்ள குருவாயூர் கோயில் தேவஸ்தானத் திற்கு சொந்தமாக 62 யானைகள் உள்ளன. இவை, கோயில் அருகேயுள்ள புனத்தூர் கோட்டை யானைதாவளத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுக்கு ஆண்டுதோறும் ஆனி, ஆடி மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுவது வழக்கம். ரூ.8 லட்சம் செலவில் இந்தாண்டுக்கான முகாம் நேற்றுமுன்தினம் துவங்கியது. முதற்கட்ட மாக 42 யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. யானைகளுக்கு அரிசி, பாசிபயறு, கொள்ளு மற்றும் அட்டசூர ணம் போன்ற ஆயுர்வேத மூலிகை கலந்த உணவு வகைகள் வழங்கப்படுகிறதாம்.

முகாமை, திருச்சூர் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதி ஜோந்திர தாஸ் துவக்கி வைத்தார். மீதமுள்ள 20 யானைகளுக்கு தற்போது மதம்பிடித் துள்ளதால், அவற்றுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இம் முகாம் ஜூலை 31ஆம் தேதி வரை நடக்கிறது.

தமிழ் ஓவியா said...


தவறான தீர்ப்பாம்!


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் அவர்கள் வழங்கிய தீர்ப்பு பார்ப்பனர்களின் - பிற்போக்குவாதிகளின் அஸ்திவாரத்தைக் கலகலக்க வைத்து விட்டது.

கல்கி துக்ளக் போன்ற பார்ப்பன இதழ்கள் பகிங்கரமாக எதிர்ப்புக் கணைகளை வீசு கின்றனர்.

இன்று வெளி வந்துள்ள துக்ளக் (10.7.2013) இதழில் ஒரு கேள்வி பதில்.

கேள்வி: திருமணமாகாத ஆண் - பெண்ணின் பாலியல் உறவை திருமணமாகவும், அவர்களைத் தம்பதிகளாகவும் கருதலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியா?

பதில்: இது தவறான தீர்ப்பு என்பது என் கருத்து. அப்பீல் செய்யப்பட்டால் இந்தத் தீர்ப்பு மாற்றப்படும் என்பது என் எதிர்பார்ப்பு என்று எழுதுகிறது துக்ளக்.

கல்கி (7.7.2013) இதழில் வெளிவந்த கேள்வி பதில் வருமாறு: கேள்வி: ஆண் - பெண் இடையே நடக்கும் பாலியல் உறவே சட்டப்பூர்வமான திருமணம். மற்றவை அல்ல, என்று சென்னை ஹைகோர்ட்டு சொல்வதுபற்றி?

பதில்: மீடியாவும் சமூக வலைத்தளங்களும் பரபரப்படைந்து, நீதிபதி கர்ணனின் தீர்ப்பை விமர்சித்தன. இவ்வாறு விமர்சிப்பதை ஆட்சேபித்துள்ளார் நீதிபதி. தீர்ப்புகளை விமர்சிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்று சட்ட வல்லுநர்களே எடுத்துரைக்கின்றனர். அது ஒருபுறமிருக்க, நீதிபதி குறிப்பிட்ட ஒரு வழக்கில் நியாயத் தீர்ப்பை அளித்து ஓர் அநீதிக்குப் பரிகாரம் காண்பதுடன் நின்றிருந்தால் பிரச்சினை தோன்றி இராது. நமது சமூகம் எளிதில் ஏற்க முடியாத பொதுப்படையான சில கருத்துகளைக் கூறப் போகத்தான் எதிர்ப்புக் குரல் ஏராளமாக எழக் காரணமாயிற்று. நீதிபதியின் விளக்கம் மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது என்கிறது கல்கி

சென்னை நீதிபதியோடு இந்தக் கருத்து நிற்கவில்லை; உச்சநீதிமன்றத்திலும் நீதியர சர்கள் பி. சதாசிவம், ஜெகதீஸ் சிங் கேஹர் ஆகியோர் அடங்கிய அமர்வும் இதே வகையில் தான் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவின்மீது உச்சநீதிமன்ற அமர்வு - சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் அவர்களின் தீர்ப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தீர்ப்பினை வழங்கி விட்டதே!

திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து பெண்ணின் சம்மதத் துடன் உடலுறவு கொண்டவரை நிரபாரதி என்று கூற முடியாது என்கிறது உச்சநீதிமன்றம்.

ஆண்கள்தன் ஆதிக்கத் தன்மையுடன் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டு விட்டு தப்பித்துக் கொள்வதை துக்ளக் கல்கி வகையறாக்கள் ஏற்றுக் கொள்கின்றனவா?

திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆண் கூறியது உண்மைதானே; அதைக் கூறி பாலியல் உறவு கொண்ட நிலையில் அதனைத் திருமணம் என்று ஏன் கருதக் கூடாதாம்?

நீதியரசர் கர்ணன் தன் தீர்ப்பில் இன்னொன்றையும் சுட்டிக் காட்டியுள்ளார். சடங்கு ஆச்சாரங்களுடன் திருமணம் செய்து கொண்டு அதே நேரத்தில் பாலியல் உறவு கொள்ளவில்லையென்றால் அந்தத் திருமண மும் சட்டப்படி செல்லாது என்றும் கூறியுள் ளாரே! இதன் மூலம் கணவன் - மனைவி என்பதற்கு முக்கியமான அடையாளம் பாலியல் உறவு என்பது வெளிப்படவில்லையா?

பார்ப்பன வட்டாரங்கள் பதறுவதற்கு முக்கிய காரணமே - சடங்குகள் முக்கியமல்ல என்று கூறப்பட்டு இருப்பதுதான்; சடங்குகள் என்று சொல்லும்போது திருமணத்தில் முழுக்க முழுக்க பார்ப்பனக் கலாச்சாரம் சம்பந்தப்பட்டதுதான்.

ஓமக் குண்டம் சப்தபதி என்பதற்கும் பார்ப் பனர் அல்லாத மக்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஆணும் ஆணும் சேர்ந்து பெற்ற பிள்ளை தான் அய்யப்பன் என்பதை ஒப்புக் கொள்ளும் பார்ப்பனர்கள், வயது அடைந்த ஓர் ஆணும் பெண்ணும் பாலியல் உறவு கொள்வதை முக்கிய சாட்சியமாக ஏற்றுக் கொள்ளாதது - ஏன்?

பார்ப்பனர் அல்லாத மக்கள் சிந்திக்கட்டும்!

தமிழ் ஓவியா said...


வளர்ச்சியற்றவர்கள்


பெண்களுக்கும், ஆண்களுக்கும் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவதால், சிறு வயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்துவிடுகிற காரணத் தினால், சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவைகளுக்கு ஆளாகிப் போதிய வளர்ச்சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

(விடுதலை, 13.9.1972)

தமிழ் ஓவியா said...

தமிழ்ச்செல்வன் - வினோதினி வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவில் தமிழர் தலைவர் எடுத்துக்காட்டான உரை

* 1953இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு - திருமணம் என்றால் சடங்கு தேவை என்பது

* 2013இல் அதே உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு - சடங்கு மட்டும் திருமணம் அல்ல என்பது
பெரியார் வென்றார் என்பதற்கு இது ஒன்று போதும்!
*சென்னை,ஜூன்4- 1953இல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பையும், 2013இல் அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப் பையும் ஒப்பிட்டு, பெரியார் கொள்கை வென்று வருகிறது என்று எடுத்துக்காட்டினார் தமிழர் தலைவர்.

சென்னை கோ. கருணாநிதி (மேலாளர் - பணி நிறைவு, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா) சுகுணா ஆகியோரின் செல்வன் க. தமிழ்ச் செல்வன் B.E., M.S., (USA) (Knoinc, Cali Fornia, USA) சோளிங்கர் இராஜேஸ்வரி கந்தராஜ் ஆகியோரின் செல்வி சு. வினோதினி B.E. (CTS Glendale, Cali Fornia, USA) ஆகியோருக்கு வாழ்க்கை இணை நல ஒப்பந்தத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் 30.6.2013 அன்று காலை 11 மணி அளவில் சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடத்தி வைத்து, ஆற்றிய உரை வருமாறு;

இந்தக் குடும்பம் எங்கள் குடும்பம், எங்கள் கழகக் குடும்பம். மணமகனின் தந்தையார் கருணாநிதி அவர்கள் இந்தியா முழுமைக்கும் சமூக நீதிக்கான கொடியை ஏந்திச் செல்லக் கூடியவர். தன்னுடன் தந்தை பெரியார் கொள்கைகளை கொண்டுச் செல்லக் கூடியவர்.

இத்தகையவரின் குடும்பத்தில் நடைபெறும் இந்த திருமணம் புரட்சிகரமானதாக நடை பெறுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டி யவர்கள் மணமகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கொள்கைத் திருமணத்துக்கு மனதார ஏற்றுக் கொண்டு, ஒத்துக் கொண்டுள்ளதற்காக அவர்களை மிகவும் பாராட்டுகிறேன்.

வீட்டைக் கட்டிப் பார் - கல்யாணத்தை செய்து பார் என்பார்கள் நம் நாட்டில். கருணாநிதி அவர்களால் கும்பகோணத்தில் கட்டப்பட்ட வீட்டினையும் நான் தான் திறந்து வைத்தேன் (27.9.1987). இன்று அவர்கள் வீட்டு திருமணத்தையும் நான் நடத்தி வைக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரும் சமூக நீதிக்காகப் பாடுபடக் கூடியவருமான அனுமந்தராவ் எம்.பி. அவர்கள் பங்கு கொண்டு வாழ்த்தியது மகிழ்ச்சிக்குரியது. தந்தை பெரியார் ஏற்படுத்தியுள்ள புரட்சியை அவர் கண்டு வியந்து பாராட்டினார். சுயமரியாதை திருமணம் என்றால் இவ்வளவு ஆடம்பரமாகச் செலவு செய்து நடக்கும் என்று நினைக்க வேண்டாம். சிக்கனமாக திருமணம் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை. அதே நேரத்தில் சுயமரியாதைக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் ஒன்றும் தாழ்ந்து போய் விடவில்லை. நாங்கள் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தவும், இந்தக் கருத்துகளை பிரச்சாரம் செய்யவும் கிடைத்த வாய்ப்பு என்கின்ற வகையில் தான் இவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

ஒரு காலத்தில் இத்திருமணங்கள் செல்லாது என்று நீதிமன்றம் கூறியது. அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் மக்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்து அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக வந்த நிலையில், சுயமரியாதை திருமணத் திற்கு சட்ட வடிவம் கொண்டு வந்து பெரியார் அவர்களுக்கு நன்றி காணிக்கையாக்கி னார்.

எங்கள் மாமனார் - மாமியார் திருமணம், தந்தை பெரியார் தலைமையில் 1934இல் நடைபெற்றது.

எனது மாமனாரின் முதல் மனைவி மறைந்து விட்டார். அதே போல மாமியார் அவர்களும் இளம் வயதிலேயே கணவரை இழந்தவர். இருவருக்கும் திருச்சியில் தந்தை பெரியார் சுயமரியாதை திருமணத்தை நடத்தினார்.

அவர்களின் முதல் மனைவியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சொத்து தொடர்பாக தொடர்ந்த வழக்கில் சுயமரியாதை திருமணம் சட்டப்படி செல்லாது, அந்த முறையில் திருமணம் செய்து கொண்டவர்களின் பிள்ளைகளுக்கு சொத்துரிமை கிடையாது என்கிற முறையில் வழக்கு தொடுக்கப் பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜகோபாலன் அய்.சி.எஸ்., சத்தியநாராயணராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்றும், அக்னியைச் சுற்றி சப்தபதி ஏழு அடிகளை எடுத்து வைத்தால்தான் செல்லும் என்றும் சடங்குகள் இல்லாத திருமணத்தை சட்டம் ஏற்காது என்றும் தீர்ப்புக் கூறியது. அதே நேரத்தில் சூத்திரர் களுக்கு வைப்பாட்டி வைத்துக் கொள்ள உரிமை யுண்டு, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் சொத்தில் உரிமை உண்டு என்றும் தீர்ப்புக் கூறினர்.

தமிழ் ஓவியா said...

அதே சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் சில நாட்களுக்கு முன் நீதியரசர் கர்ணன் தீர்ப்பு ஒன்றைக் கூறியுள்ளார். வெறும் சடங்குகள் மட்டும் திருமண மாகாது சட்டப்படி திருமண வயதை அடைந்த ஆண்/பெண் இருவருக்குமிடையே பாலியல் உறவு இருந் தாலே அது திருமணமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.

1953இல் தீர்ப்பு வழங்கிய இரு பார்ப்பன நீதிபதிகளும் திருமணம் என்றால் சடங்குகள் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்கள். 2013இல் அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் சடங்குகள் மட்டும் திருமணம் அல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் வென்றார் உலகமயமாகிறார் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா? (பலத்த கரஒலி!) என்று குறிப்பிட்டார். கலி. பூங்குன்றன்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினர். அவர்தம் வரவேற்புரையில், தோழர் கருணாநிதி அவர்கள் நமது இயக்கத்தின் பிரதிநிதிபோல இருந்து தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை - குறிப்பாக சமூக நீதிக் கருத்துக்களை இந்தியா முழுமையும் கொண்டு சென்றுள்ளார். அவரின் சமூக நீதிப் பணியைப் பாராட்டித்தான் சிகாகோவை தலைமை யிடமாகக் கொண்ட பெரியார் பன்னாட்டு மய்யம், சமூக நீதிக் கான வீரமணி விருதினை அவருக்கு அளித்து மகிழ்ந்தது என்று குறிப் பிட்டார். மணமகன் தமிழ்ச்செல்வன் தஞ்சை இல்லத்திலேயே நாங் கள் நடத்திய குழந்தை கள் முகாமிலே 20 ஆண்டுகளுக்கு முன் பயிற்சி பெற்றதையும் நினைவூட்டினார்.

டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி.

தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங் கோவன் எம்.பி. அவர்கள் தமதுரையில் குறிப்பிட்ட தாவது: சுயமரியாதைத் திருமணத்தைப் பொறுத்த வரையில் மற்றவர் களைவிட மணமகள் வீட்டார் தான் வர வேற்க வேண்டும்.

பெண்களைத் திரு மணம் என்ற பெயரில் கன்னி காதானம்தானே செய்து கொடுத்தார்கள். பெண் என்றால் ஏதோ ஒரு பொருள் என்கிற வகையில்தானே அவமதிக்கப்பட்டது. அது ஏற்கப்படவில்லை இந்தத் திருமணத்தில். தாலி என்பது அடிமைச் சின்னம். இந்தத் திருமணத்தில் அது இடம் பெறவில்லை என்கிறபோது பெண்கள்தானே வரவேற்க வேண்டும் என்று சிறப்பாகக் குறிப்பிட்டார்.

மணமகனின் தந்தை கோ. கருணாநிதி அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, நாங்கள் எல்லாம் பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைக்காக சமூகநீதிக் காகப் குரல் கொடுக்கின்றோம் - நாடாளுமன்றத்திலே பேசுகிறோம் என்றால் எங்களைப் போன்றவர்களைப் பின்னாலிருந்து இயக்கும் சக்தி கருணாநிதி அவர்கள் தான் தேவையான தகவல்களையும் புள்ளி விவரங் களையும் டில்லியிலேயே தங்கித் தந்து உதவும் சகோதரர் ஆவார் என்று குறிப்பிட்டார்.

அனுமந்தராவ் எம்.பி.,

கருணாநிதி அவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக் காக முழு நேரமும் உழைக்கக் கூடியவர். பெரியாரின் சீடர். நான் எத்தனையோ திருமணங்களில் கலந்து கொண்டுள்ளேன். இது எனக்கொரு வித்தியாச மாகவே தெரிகிறது. சமூகச் சிந்தனையோடு தேவையான மாறுதல் களோடு நடக்கிறது. வரவேற்கத்தக்கது.

என்னுடன் பல ஆண்டு காலமாக இணைந்து சமூக நீதிக்காகப் பாடுபட்டு வரும் கருணாநிதி அவர்களின் மகன் திருமணத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மணமக்களுக்கு என் அன்பு கனிந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டார்.

சென்னை மாவட்ட யூனியன் வங்கியின் பொது மேலாளர் அசோக் குப்தா வாழ்த்துக்களைத் தெரி வித்துப் பேசினார். மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடக்கத்தில் மணமகனின் தந்தையாரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலா ளருமான கோ. கருணாநிதி அறிமுகவுரையாற்றினார்.

நன்றி உரையை மணமகள் வினோதினி மிகச் சிறப்பாக ஆற்றி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.

வெளி மாநிலங்களில் இருந்தெல்லாம் பிற்படுத்தப் பட்டோர் நலச் சங்கங்களின் பொறுப்பாளர்களும், வங்கி அதிகாரிகளும், கழகத் தோழர்களும் பெரு மளவில் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


பேய், ஆவி புரளி!

மக்களின் அச்சத்தைப் போக்கி கருஞ்சட்டைப் படையினருடன் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பிரச்சாரம்

கடலூர், ஜூலை 4- கிராம மக்களிடையே பேய், ஆவி புரளி பரவியதையடுத்து, திராவிடர் கழகத்தினர் அவர் களின் அச்சத்தை போக்கும் வகையில் பிரச்சாரம் செய்தனர்.

கடலூரை அடுத்த புதுச்சத்திரத்தில் உள்ள வில்லியநல்லூர் என்ற கிராமத்தில் கடந்த மாதத்தில் கதிர்வேலு (வயது 80), சர்க்கரை (வயது 60), கணேசன் (வயது 40), திரிபுரசுந்தரி (வயது 30), தையல் நாயகி (வயது 40) ஆகிய அய்வர் அடுத்தடுத்து இறந்தனர். இதனைப் பயன்படுத்தி விஷமிகள் சிலர் குறி சொல்கிறேன் என்ற பெயரால் இத்தகையை புரளியை அவிழ்த்து விட்டுள்ளனர்.

அடிப்படை வசதிகள் ஏதுமற்ற கிராமம்

வில்லியநல்லூர் கிராமத்தில், சுமார் ஆயிரம் மக்களுக்கு மேல் குடியிருக்கின்றனர். இது தாழ்த்தப் பட்ட என்று சொல்லப்படுகின்றவர்கள் வாழும் பகுதி. இங்கு பெரும்பாலும் மக்கள் கல்வியறிவு அற்றவர் களாகவே இருக்கின்றனர். அடிப்படை வசதிகளும் ஏதுமில்லை. ஏற்கெனவே மாரியம்மன் கோயில் (குடிசை) ஒன்று இருந்தாலும், ஊர் மக்களிடம் வசூல் செய்து அய்யப்பன் கோயில் ஒன்றை பாதிவரை கட்டியிருக்கிறார்கள் அதற்கு மேல முடியவில்லை.

இந்த சூழலில் கதிர்வேலு - 80, சர்க்கரை - 60 ஆகிய இருவரும் வயதின் காரணமாக இறந்துவிடுகின்றனர். கணேசன் - 40 நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்திருக்கிறார். இவரைத்தான் பேய் அறைந்ததாக புரளி அங்கே பரவியிருக்கிறது. திரிபுரசுந்திரி - 30, தையல் நாயகி - 40 ஆகிய இருவரும் காய்ச்சலால், அதாவது முறையான மருத்துவம் செய்து கொள்ளாமல் இறந்துள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த ஊரில் இருக் கும் சாமியாரினி தவமணி (குறி சொல்பவர்) கோயிலை பாதியில் நிறுத்திவிட்டதால், கடவுள் பேய், ஆவி இவைகளின் மூலம் ஊரிலிருப்பவர்களை பலி வாங்கு கிறது என்று சொல்லியிருக்கிறார். அவரிடம் பேச முயன்ற போது அவரின் மாமனார் சதாசிவம் என்பவர் நம்மை கடுமையாக பேசி விரட்டினார்.

களத்தில் குதித்த கருஞ்சட்டைப் படையினர்

இப்படிப்பட்ட நிலையில்தான் கருஞ்சட்டைப் படையினர் கடந்த 1.7.2013 அன்று மாலை 5 மணியளவில் வில்லியநல்லூரில் முகாமிட்டனர்.

நம்பிக்கையளிக்கும் மக்கள் கருத்து

சுடுகாட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் ரவி, செல்வராணி இணையர்கள் ஆமாங்க இதுவரைக்கும் இந்த மாதிரி நடந்ததில்லை ஆனா அதைப்பற்றியெல்லாம் நாங்க கவலைப்படவில்லை. நாங்க எப்போதும் போல வாழ்ந்துக்கிட்டு தான் இருக்கோம். இதைவிட்டா வேறு எங்க போறது நீங்களே சொல்லுங்க. எங்களுக்கு இதி லெல்லாம் நம்பிக்கை இல்லீங்க என்று பளிச்சென்று சொன்னார்கள்.

ஊருக்குள் வசிக்கும் வேல்விழி - 28, எங்க சித்திக்கு வயிற்றில் கேன்சர் இருந்திருச்சுங்க அது என்னன்னு தெரியாமலேயே இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் தான் தெரிய வந்துச்சு என்று கூறி காய்ச்சலால் இறந்தவர் களை பேய் அடித்திருக்கும் என்ற புரளியை கேள்விக் குறியாக்கினர்.

தமிழ் ஓவியா said...


களைகட்டிய மாலை நேரப் பிரச்சாரம்

சிதம்பரம் கழக மாவட்ட அமைப்பாளர் கு.தென்ன வன் தலைமையேற்க, மாவட்டத் தலைவர் ஜே.கே. அருள்ராஜ் மாவட்ட செயலாளர் க.கண்ணன், கடலூர் மாவட்டத் தலைவர் கொ.தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகிக்க பிரச்சாரம் தொடங்கியது.

நம்பிக்கையூட்டிய யாழ்திலீபன்

படித்தவர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதி காரிகள் ஆகியோரை பேய் அடித்ததாக கேள்விப்பட்டி ருக்கிறீர்களா என்று கேள்வியுடன் தொடங்கினார். மருத்துவமனையில் நோய்களால் மக்கள் இறக்கிறார் கள். அதே படுக்கையில் அடுத்த நோயாளிகள் படுக்கிறார்கள் இறந்தவர்களின் பேய் அல்லது ஆவி வந்து அடித்துக் கொண்டா இருக்கிறது? என்ற எளிய கேள்விகள் மூலம் மக்களுக்கு தன்னம்பிக்கையூட் டினார்.

சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பொதுச் செயலாளர்

யாழ்திலீபனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பேசினார். அவர் எடுத்த எடுப்பிலேயே பிரச்சினையின் மய்யத்தை தொட்டார். இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. சுகாதாரம் சுத்தமாக இல்லை என்பதைக் கூறிவிட்டு இதை கடந்தவாரம்தான் இங்கு வந்து நேரில் கண்டு சென்றதாகவும், அதனடிப்படையில் இன்று காலையில் இந்த மாவட்ட ஆட்சித்தலைவரைச் சந்தித்து, இந்த கிராமத்திற்கு அடிப்படை சுகாதார வசதிகளை செய்து தர வேண்டுமென்று விண்ணப்பம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம் என்று கூறி வெறுமனே பிரச்சாரம் செய்ய வரவில்லை. உங்கள் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் நாங்கள் என்பதை உணர்த்தினார்.

அறிவு அற்றம் காக்கும் கருவி

தொடர்ந்து சுகாதாரத்தை வலியுறுத்தி சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தனர். இதனால் பெண்கள் படும் சங்கடத்தை தொட்டுக் காட்டினார், தந்தை பெரியாரும் அவர் வழியில் தமிழர் தலைவர் வீரமணியும் மக்களுக்கு ஆற்றிய, ஆற்றி வருகிற தொடணடைக் குறிப்பிட்டு, பரவலாக மக்கள் இன்று மருத்துவர்களாக, வழக்குரை ஞர்களாக, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., ஆக, பொறியாளர் களாக வந்திருக்கும்போது, இந்த கிராமத்தில் அப்படி யாருமே வரவில்லையே ஏன்? என்று கேள்வியை எழுப்பி, கல்வியின் அவசியத்தை விவரித்தார். அதற்கு முதல் படியாக மூடநம்பிக்கை களை விட்டொழி யுங்கள், அறியாமையை விரட்டி அடியுங்கள். நீங்களும் முன்னேறலாம் அறிவு அற்றம் காக்கும் கருவி என்று கூறி முடித்துக் கொண்டார்.

மந்திரமா? தந்திரமா?

அதைத்தொடர்ந்து பேராசிரியர் கலைவாணன் சாமியார்கள், குறி சொல்பவர்கள் ஆகியவர்களின் மோசடிகளை மந்திரமா? தந்திரமா? நிகழ்வின் மூலம் செய்து காட்டி மக்களுக்கு புரிய வைத்தார். தொடக்கத்தில் இந்த பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்த மக்கள் பின்னர் படிப்படியாக ஈர்க்கப்பட்டு குடும்பம் குடும்பமாக கூடி முடியும் வரை இருந்து கண்டு களித்து பயன் பெற்றனர்.

நிகழ்வில் விஜயகுமார், சிவக்குமார், புலவர் இராவணன், நா.தாமோதரன், கோவி.குணசேகரன், பொய்யாமொழி, சிற்பி சிலம்பரசன், ச.செங்குட்டுவன், புவனகிரி ஆசிர்வாதம் மற்றும் கழக தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஓயாத பிரச்சாரம்

வில்லியநல்லூர் பிரச்சாரம் முடிந்ததும், புதுச்சத்திரத்திலும் இந்தப்பிரச்சாரம் தொடர்ந்தது. புதுச்சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், பேராசிரியர் ராஜன், கழக சொற்பொழிவாளர் யாழ்திலீபன் ஆகியோர் இதே பிரச்சினையை மய்யப்படுத்தி சிறப்புரையாற்றினர். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்து கண்டு, கேட்டு விழிப்புணர்வு பெற்றனர்.

தமிழ் ஓவியா said...

கிராமங்களில் வாழும் ஏழை மக்கள் 17 ரூபாயிலும், நகரங்களில் 23 ரூபாயிலும் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருவதாக 2011 ஜூலை முதல் 2012 ஜூன் வரை நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ள 5 சதவிகித ஏழைகளின் சராசரி மாதாந்திர செலவு கிராமங்களில் ஆள் ஒன்றுக்கு 521.44 ரூபாயாகவும் நகரங்களில் 700.50 ரூபாயாகவும் உள்ளது.

மேல்தட்டில் உள்ள முதல் 5 சதவிகிதத்தினரின் சராசரி மாதச் செலவு ஆள் ஒன்றுக்கு கிராமங்களில் 4,481 ரூபாயாகவும் நகரங்களில் 10,282 ரூபாயாகவும் உள்ளதாம்.

அகில இந்திய அளவில் கிராமங்களில் ஒருவரின் மாதச் செலவு 1,430 ரூபாயாகவும் நகரங்களில் 2,630 ரூபாயாகவும் இருக்கிறது. இதிலிருந்து, நகரங்களில் வாழும் மக்களின் சராசரி மாதச் செலவு கிராம மக்களின் மாதச் செலவைவிட 84 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் வாழும் ஏழை மக்கள் 17 ரூபாயிலும், நகரங்களில் 23 ரூபாயிலும் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருவதாக 2011 ஜூலை முதல் 2012 ஜூன் வரை நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ள 5 சதவிகித ஏழைகளின் சராசரி மாதாந்திர செலவு கிராமங்களில் ஆள் ஒன்றுக்கு 521.44 ரூபாயாகவும் நகரங்களில் 700.50 ரூபாயாகவும் உள்ளது.

மேல்தட்டில் உள்ள முதல் 5 சதவிகிதத்தினரின் சராசரி மாதச் செலவு ஆள் ஒன்றுக்கு கிராமங்களில் 4,481 ரூபாயாகவும் நகரங்களில் 10,282 ரூபாயாகவும் உள்ளதாம்.

அகில இந்திய அளவில் கிராமங்களில் ஒருவரின் மாதச் செலவு 1,430 ரூபாயாகவும் நகரங்களில் 2,630 ரூபாயாகவும் இருக்கிறது. இதிலிருந்து, நகரங்களில் வாழும் மக்களின் சராசரி மாதச் செலவு கிராம மக்களின் மாதச் செலவைவிட 84 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


காலம் காலமாக தமிழர்கள் மட்டுமே அர்ச்சகர்களாகப் பணியாற்றி வந்த பழனி முருகன் கோயிலில் -_ பார்ப்பனர்கள் நுழைந்து தமிழர்களே அர்ச்சகராக முடியாத நிலையை உருவாக்கிவிட்டனர் என்ற வரலா-று உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கடவுள் வழிபாடு மற்றும் பக்திப் பிரமிடு


- சரவணா.இரா

இன்றைய காலகட்டத்திலும் ஆலயங்களில் கூட்டம் கூடுகிறது என்றால் அந்தக் கூட்டத்தை நான்கு அடுக்குப் பிரமிடாகப் பிரிக்கலாம்.

முதல் அடுக்கு: தான் சார்ந்த மதம் என்ற சுயநலத்தில் கோயிலுக்குச் செல்பவர். இவர்களுக்கு 1%கூட கடவுள் பக்தியோ அல்லது பயமோ கிடையாது. இவர்களுடைய நோக்கம் வருமானம் மட்டுமே, இதில் பார்ப்பனப் பூசாரிகள் இதர ஜோதிடர்கள் மற்றும் கோயில்களில் கடை வைத்திருப்பவர்கள் காரணம். வருகிறவர்கள் எல்லாம் கன்னத்தில் தாளமிட்டு தன்னைத்தானே தலையில் குட்டிக்கொண்டு சென்றுவிட்டால் மேலே கூறியவர்களின் பிழைப்பிற்கு என்ன வழி?

இரண்டாம் அடுக்கு: கடவுளின் மீது நம்பிக்கை வைப்பது போல் நடிப்பவர்கள். இவர்கள் செல்வந்தர்கள், வியாபாரிகள், அதிகாரம் மிக்கவர்கள். இவர்களின் நோக்கமே ஆதாயம் _ உழைப்பின்றி ஆதாயம் பெறுவது. இவர்களுக்கும் கடவுள்பக்தி, பயம் என எதுவும் இம்மியளவும் கிடையாது. இவர்களுக்கு முதல் அடுக்குக்காரர்கள் பெரிதும் துணை செல்வார்கள். இலாபத்தொகையில் கணிசமான பங்கு முதல் அடுக்கு ஆட்களுக்கு உண்டு.

மூன்றாம் அடுக்கு: இவர்களுக்குப் பக்தி இருக்கும், ஆனால் கடவுள் நம்பிக்கை இருக்காது. எதற்குக் கோயிலுக்குப் போகிறோம் என்று தெரியாமல் செல்பவர்கள். இவர்களால்தான் பக்தி வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

நான்காம் அடுக்கு: இருப்பதைக் கொடுத்துவிட்டு பகவான் செயல் என்று செல்லும் சாமானியர்கள். பிள்ளைக்குத் திருமணம் ஆகவேண்டுமா? மகளுக்கேற்ற மருமகனைத் தேடுவதைவிட்டு கோயில் கோயிலாகச் செல்வார்கள்!.

திருமணம் முடிந்து பிள்ளை பிறக்க வில்லையா? மீண்டும் கோயில்! மகள் குழந்தை யின்மைப் பிரச்சினையால் விரட்டப்பட் டாளா? மீண்டும் கோயில்! இவர்களின் பக்தி குறை யாமல் பார்த்துக் கொள்வதில் முதல்படி ஆசாமிகளின் பங்கு 100% உண்டு.

மேலும் இவர்கள் எண்ணிக்கையில் அதிகம். இவர்களிடம் இருந்து கிட்டத்தட்ட முழு உழைப்பும் பிடுங்கப்படுகிறது. இதில் என்ன வருத்தமான செய்தி என்றால், தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்தும் திருந்த மறுக்கிறார்கள். இவர்கள்தான் பக்தி வியாபாரத்திற்குத் தங்க முட்டையிடும் வாத்து. இந்த இறுதிநிலை மக்கள் திருந்தினால் ஒரே மாதத்தில் திருப்பதி ரெயில் நிலையம் இழுத்து மூடப்படும்.

தமிழ் ஓவியா said...

பொன்மொழி

தகுதிக்கு அதிகமாகச் செலவு செய்பவர்கள் தங்கள் கழுத்துக்குத் தாங்களே சுருக்கிட்டுக் கொள்கிறார்கள்.
-_செர்பியா

தமிழ் ஓவியா said...

வெளிவந்துவிட்டது தோழர்களே, விரைந்து கடமையாற்றுவீர்!


திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்த அந்தச் சிறு வெளியீடு வெளி வந்துவிட்டது.

தந்தை பெரியார் 1970 இல் தீவிரமாகத் தொடங்கிய ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தில் வெற்றி இன்னும் நம் கைக்கு வந்து சேரவில்லை!

கடந்த 43 ஆண்டுகளில் அடுக்கடுக்கான போராட்டங்கள் - அலை அலையான செயற்பாடுகள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருமுறை சட்டங்கள் நிறைவேற்றம். இவ்வளவு இருந்தும் பார்ப்பனர்களின் பாதுகாப்புச் சரணாலயமாக இருக்கக்கூடிய உச்சநீதிமன்றம் குறுக்குச்சால் ஓட்டி காலத்தைக் கரியாக்கிக் கொண்டிருக்கிறது.

இனியும் பொறுத்திருக்க நியாயம் இல்லை. அறப்போராட்டத் துக்குத் தேதி கொடுத்துவிட்டார் தமிழர் தலைவர்.

ஆகஸ்டு முதல் தேதி போர்! போர்!! போர்!!!

பல கட்டப் போராட்டங்களுக்குக் கறுஞ்சட்டைச் சிறுத்தைகளே தயாராவீர்! தயாராவீர்!! என்று சங்கநாதம் செய்துவிட்டார்.

இப்பொழுதே பட்டியல்கள் குவிய ஆரம்பித்துவிட்டன; இளைஞர்கள் இரத்தக் கையொப்பமிட்டுக் கொடுத்துள்ளனர் (பகுத்தறிவுச் சிங்கங்களே, இந்த முறை தேவையில்லை என்று ராஜபாளையம் மாநாட்டில் நமது தலைவர் ஓங்கி அடித்துக் கூறிவிட்டார்).

மதுரையை நோக்கி தென்மாவட்டங்களிலிருந்து இரு பிரச்சாரப் படைகள் ஜூலை முதல் வாரத்தில் புறப்பட உள்ளன. நிறைவு விழாவில் (ஜூலை 8) தமிழர் தலைவர் மதுரை மாநகரில் பங்கேற்க இருக்கிறார்.

அதற்கு முன்னதாக இன இழிவு ஒழிப்புப் போராட்டம் எதற்காக நடத்தப்படுகிறது? அதன் நோக்கம் என்ன?

தமிழன் கட்டிய கோவில்களில் தமிழுக்கு ஏன் இடமில்லை? தமிழர்கள் ஏன் அர்ச்சகராக முடியவில்லை?

தந்தை பெரியார் இந்தக் குரலை எப்பொழுது முதல் கொடுத்து வருகிறார்? அதன் வரலாறு என்ன?

இந்த இலட்சியத்தை ஈடேற்ற நாம் கடந்து வந்த பாதைகள் யாவை?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டங்கள் இயற்றப்பட்டது - உச்சநீதிமன்றத்திற்குப் பார்ப்பனர்கள் படையெடுப்பு - உச்சீநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைகள் - இன்னோரன்ன அடுக்கடுக்கான ஆதாரபூர்வமான தகவல்கள் அடங்கிய கையடக்க ஆவணமாக சிறு கையேடு தயாரிக்கப்பட்டு வெளிவந்துவிட்டது.

32 பக்கங்களைக் கொண்ட இந்தக் கையேட்டின் நன்கொடை ரூபாய் அய்ந்தே, அய்ந்துதான்.

ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இந்த நூல் இருக்கவேண்டும் - அதற்கான முயற்சிகளில் கழகத் தோழர்களே, இளைஞரணி, மாணவரணித் தோழர்களே, தொழிலாளரணி, மகளிரணி செல்வங்களே, பகுத்தறிவாளர் கழக அன்பர்களே, வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை இந்த வெளியீட்டைக் கொண்டு சேர்ப்பீர்! சேர்ப்பீர்!!

காரணாக் காரியங்களை எடுத்துக் கூறி களத்தில் இறங்கும் பண்பாட்டைக் கொண்டது கறுஞ்சட்டைப் பாசறை.

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போரில் இந்த வெளியீடு முதற்கட்டப் பாய்ச்சல்.

ஒவ்வொரு கழகத் தோழரின் கைப்பையிலும் குறைந்தபட்சம் 25 நூல்களாவது தயாராக இருக்கவேண்டும். யார் யாரை எல்லாம் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் உங்கள் கை இந்த வெளியீட்டைத் தாங்கி நீளவேண்டும்.

இந்த முதற்கட்டப் பணியை முடித்தால்தான் வெற்றிச் சங்கை ஊதும் வாய்ப்பு விரைவில் கிட்டும்!

புறப்படுக! புறப்படுக!! புறப்படுக!!! பூம் பூம் பூம்...!

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...

பார்ப்பனார் பற்றி
காந்தியார்

பிராமணர்கள் தங்களை உயர் வாகக் கருதும் தற்பெருமை காரணமாக, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே அவர்கள் கற்பிக்கும் வேற்றுமை கொடூரமானது
- காந்தியார் (ஆதாரம்: இந்து ஏடு, 23.8.1920)

தமிழ் ஓவியா said...

மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...

பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன் வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும். இந்தியாவிலே கோடீசு வரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரிகளுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன?

ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயி ருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்தி ரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடையவனாயிருக்கிறான்.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

இங்கர்சால் கூற்று

மதாசாரியார்கள், குருக்கள் இறைவன் புதல்வர்கள் என்று கூறிக் கொள்பவர்கள், முனிவர்கள் இவர்கள் எல்லாம் உலகத்திற்கு ஒரு சிறிதும் பயன்படாதவர்கள் அவர்களில் பலர் தொழில்செய்வதில்லை; கைத் தொழில் செய்ய வில்லை. பிறருடைய உழைப்பால் அவர்கள் வயிறு வளர்த்து வந்தார்கள். பிறர் அவர்களுக்காகப் பாடுபட்டால், அவர்கள் பிறரைக் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டுவார்கள் மக்களுக்கு இதோபதேசம் செய்யவே கடவுள் தங்களைப் படைத்ததாக அவர்கள் சொல்லிக் கொள்வார்கள் இவர்களே இழிவானவர்கள், துன்பத்தை உண்டாக்கக் கூடியவர்கள், அயோக்கியர்கள்.

- ராபர்ட் இங்கர்சால்

தமிழ் ஓவியா said...

இங்கர்சால் கூற்று

மதாசாரியார்கள், குருக்கள் இறைவன் புதல்வர்கள் என்று கூறிக் கொள்பவர்கள், முனிவர்கள் இவர்கள் எல்லாம் உலகத்திற்கு ஒரு சிறிதும் பயன்படாதவர்கள் அவர்களில் பலர் தொழில்செய்வதில்லை; கைத் தொழில் செய்ய வில்லை. பிறருடைய உழைப்பால் அவர்கள் வயிறு வளர்த்து வந்தார்கள். பிறர் அவர்களுக்காகப் பாடுபட்டால், அவர்கள் பிறரைக் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டுவார்கள் மக்களுக்கு இதோபதேசம் செய்யவே கடவுள் தங்களைப் படைத்ததாக அவர்கள் சொல்லிக் கொள்வார்கள் இவர்களே இழிவானவர்கள், துன்பத்தை உண்டாக்கக் கூடியவர்கள், அயோக்கியர்கள்.

- ராபர்ட் இங்கர்சால்

தமிழ் ஓவியா said...

மனித குலத்துக்கு அடிமைக் கயிறு!

கடவுள் கருத்து எப்பொழுதும் சமுதாய உணர்வுகளை உறங்க வைத்திருக்கிறது; மழுங்கடித்திருக்கிறது. உயிருள்ளவற்றிற்குப் பதிலாக அந்த இடத்தில் இறந்ததை வைக்கின்றது அது எப்பொழுதும் அடிமைத் தனத்தின் கருத்தாகவே - மிகவும் படுமோசமான அடிமைத் தனத்தின் கருத்தாகவே இருந்திருக்கின்றது. கடவுள் கருத்து எந்தக் காலத்திலும் தனி நபரைச் சமுதாயத்துடன் இணைத்ததில்லை; அது எப்பொழுதும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைத்தான் ஒடுக்கு பவர்களின் தெய்வத் தன்மைக் கற்பனையில் - கடவுள் நம்பிக்கை என்னும் கயிற்றால் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டி ருக்கின்றது. மதம் என்னும் நுகத்தடி மனித குலத்தை அழுத்திக் கொண்டிருப்பது; சமுதாயத்துக்குள்ளேயே உள்ள பொருளாதார நுகத்தடியின் பிரதிபலிப்பு - அதன் விளைவுதான் என்பதை மறப்பது குறுகிய பூர்ஷவா புத்தியாகும்.

- லெனின்

தமிழ் ஓவியா said...
கிறிஸ்து மதமும் பணச் செலவும்

அமெரிக்க சர்வ கலா சாலையொன்றில் பேராசிரியராக திகழும் இந்திய தோழர் டாக்டர் சுதந்திர போஸ் பிரபுத்த பாரத என்ற பத்திரிகையில், கீழ்நாட்டில் கிறிஸ்துவ பாதிரிகள் செய்யும் வேலையைப் பற்றி எழுதியுள்ள குறிப்பின் சாராம்சம் வருமாறு:-

அமெரிக்க யுனைடெட் ஸ்டேட்ஸ் பிராட் டஸ்டான்ட் சர்ச்சானது வெளிநாடுகளில் தன் மதத்தை பரப்புவதற்காக மதப் பாதிரிகளை அனுப்பி வைக்கின்ற செலவு 4 கோடி டாலர்கள் ஆகின்றது. அதாவது ரூ.12 கோடி ரூபாய் களாகும்.

ரிபப்ளிக் நாடான சைனாவில் புராடஸ் டான்ட் மதத்தைச் சார்ந்தவர்களில் 120 பிரிவுகளுக்கு மேல் இருக்கின்றார்கள். இதுவரையில் அந்த நாட்டில் மாத்திரம் அரை லட்சம் கோடி டாலர்கள் செலவு செய்திருக் கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் சைனா நாட்டில் உள்ள 700 நகரங்களில் 8000 பிராட்டஸ் டான்ட் மிஷினரிகள் இருந்து வந்தார்கள். ஆனால் இன்றைய தினமோ 5000 மெஷினரிகள் தான் 400 நகரங்களில் மாத்திரம் வசித்து வருகிறார்கள். கத்தோலிக் கிறிஸ்துவ பாதிரி மிஷினிகளோ, சில ஆண்டுகளுக்கு முன்பு 4000 பேர்கள் இருந்தவர்கள், இன்றைய தினம் 200, 300 மிஷினரிகளுக்கும் குறை வாகவே இருந்து வருகிறார்கள்.

அய்க்கிய அமெரிக்க நாட்டின் லுதர்ன் சர்ச் பொருளாளரான டாக்டர் கிளாரன்ஸ் இ.மில்லர் சமீபத்தில் தெரிவிக்கிறதாவது:- ஒரு சைனாக்காரரை கிறிஸ்துவர் என்ற மதமாற்றத்திற்கு கொண்டு வருவதற்கு ரூ.1300 வீதம் செலவாகி வருகிறது. இந்த கணக்குப்படி இயேசுநாதரின் பெயரை சைனா நாட்டில் நிலை நிறுத்த வேண்டுமானால் 175 லட்சம் கோடி டாலர்கள் ரிசர்வ் ஆக்க வேண்டும்.

இதிலிருந்து கோடிக்கணக்கான டாலர்களை மதத்தின் பேரால் செலவு செய்யும் கிறிஸ்து மதமாகட்டும், அன்றி வேறு எந்த மதமாகட்டும் முன்னேறுவதற்கு வழியின்றி சிதைந்து வருவது ஏன் என்று மக்கள் ஆலோசித்து பார்ப்பார்களாக.

- 30.7.1933, குடிஅரசு

தமிழ் ஓவியா said...


முடிந்த பாடில்லை...


மேனாட்டார் புதிது புதிதான விஞ்ஞான ரகசியங்களையும், இயந்தி ரங்களையும் கண்டுபிடிப்பதில் ஊக்கங் காட்டி வருகின்றனர். நம் நாட்டிலே புல்லிலும், பூண்டிலும் கடவுளைத் தேடி அவற்றின்பால் பக்தி செலுத்தும் வேலையும் மோட்ச வழி ஆராய்வதும் இன்னும் முடிந்தபாடில்லை.
(விடுதலை, 7.8.1950)

தமிழ் ஓவியா said...


வாழ்வின் இரு முக்கிய கண்காணிப்பாளர்கள்!


வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்வாக அமைய வேண்டும் என் றால் அதற்கு உணவும், தூக்கமும் மிகப் பெரிய தேவைகள் அல்லவா?

இந்த இரண்டும் நம் உடல் நலத்தின் மிகப் பெரிய கண்காணிப்புகள் ஆகும்.

உடம்பார் அழியின்

உயிரார் அழியும் நிலை ஏற்படும்.

சரியான உணவோ, போதுமான தூக்கமோ இன்றி நம் வாழ்க்கை அமைந்தால் அதைவிட கொடுந் தண்டனை நமக்கு வேறு இருக்கவே முடியாது.

உணவுகூட, நல்ல நலவாழ்வுக்கு உகந்த, உதவிடும் உணவாக அமை வதும், அல்லது நாம் அமைத்துக் கொள்வதும் மிக கவனம் செலுத்தப் பட வேண்டிய அன்றாடக் கடமை களில் ஒன்று. ஏன் முக்கியமானதும் கூட!

இன்றைய இருபால் இளைஞர்கள் உணவை, வெறும் நாக்கு சுவைக் காகவே பல நூறு ரூபாய்கள் செலவழித்து, வேக உணவுகள் (Fast Foods) என்ற பல அமெரிக்க, மற்றும் வெளிநாட்டு உணவுகளில், இத்தாலியிலிருந்து உலக நாடு களுக்கு அனுப்பப்பட்ட பீட்சா, போன்றவைகளில் மோகம் கொண்டு, பர்கர் (Burger) களை வாங்கி தின்று கொழுப்பை உடலில் ஏற்றிக் கொண்டு, காற்றடைத்த பலூன்களைப் போல ஆகி விடுகிறார்கள். இப்போது அது இன்ப மாகக் கூடத் தோன்றலாம்! ஆனால் போகப் போக அது உடல் நலத்திற்கு எவ்வளவு கேடு செய்யக் கூடிய ஆபத்து என்பது புரியும்.

இதற்குமேல் (Coke) கோக், பெப்சி, செவன் அப் போன்ற இனிப்பு சுவைநீர் பானங்களை - தூய நீர் அருந்தாமல் குடித்து, பணத்தையும், உடல் நலத்தையும் இழக்க வேண்டியவர்களாகிறார்கள்!

முன்பெல்லாம் 50 வயதுக்குமேல் தான் சர்க்கரை நோய் - டயாபெட்டிஸ் (Diabetes)! இப்போதோ 30 வயதுள்ள வாலிபர்களுக்கே சோதனை தேவைப்படும் அளவு நாட்டில் இளைஞர் கூட்டம், நல்ல உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிட மறுக்கின்றனர்.

பல வீடுகளில் - பணக்காரர்கள்கூட அல்லர்; நடுத்தர வர்க்கத்தினர்தான் - அங்கே மாணவர்கள் - அடம் பிடித்து பெற்றோர்களிடம் காசை வாங்கிக் கொண்டு இப்படி வேக உணவு என்ற முறையில் விலை இல்லாக் கொழுப்பை, உடலில் சேர்க்கின்றனர்!

50 வயதுக்குமேல் உள்ள எவரும் நாக்குக்கு அடிமையாகாமல், நலக்கண்ணோட்டத்திற்கு உணவுகளையே மருத் துவ ஆலோசனைப்படி கைக்கொள்ள திடசித்தம் உடையவர்களாக வேண்டும்.

வயிறு 50 வயதுக்குமுன் நாம் என்ன சொன்னாலும், எதைத் தின்றாலும் செரிமானம் செய்து, சொன்னதைக் கேட்கும்.

ஆனால் 50-க்குப் பின், வயிறு என்ன சொல்கிறதோ, அதைக் கட்டளையாகக் கொண்டு நாம் வாழ்ந்தால்தான் நமக்கும் தொல்லை இருக்காது. மருத்துவச் செலவும் குறையும், நம்முடன் இருக்கும் குடும்பத்தவர்களுக்கும் நம்மால் தொல் லையோ தொந்தரவோ இருக்காது!

நாம் பிறருக்குச் சுகமாக இருக்க வேண்டுமே தவிர, சுமையாக இருக்கக் கூடாது!

தூக்கமும்கூட இதுபோல முக்கிய மாக 8 மணி நேரத் தூக்கம் என்று கூறுகிறார்கள்.

பலருக்கு - அது வாய்ப்பாக அமையா விட்டாலும்கூட குறைந்தது 7 மணி நேரம் இருந்தால் நிம்மதி; நல வாழ்வுக்குக் குந்தகம் ஏற்படாது என்பது பிரபல தூக்கவியல் ஆய்வாளர்களின் கருத் தாகும்!

மித மிஞ்சிய உணவு எப்படி அஜீர ணத்தில் கொண்டு போய் நம்மைத் தள்ளுகிறதோ அது போலவே, அதிக தூக்கம் - அளவு மீறிய தூங்கு மூஞ்சித் தனம் நம் நல வாழ்வுக்குக் கேடாய் முடிந்து நம் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக அமைந்துவிடும்!

மனம் அமைதியாக, மகிழ்ச்சியாக இருந்தால்தான், இந்த இரண்டு உடற்காவலர்களும் (உணவும் தூக்கமும்) நமக்கு நல்ல வண்ணம் ஒத்துழைப்பார்கள்.

அமைதியற்ற நிலையிலோ, ஆத்திரத்தின் இடையிலோ உணவை உண்டால் அது செரிமானமாகாது;

வயிற்றுப் பொருமல், முதல் பல் வகை அஜீரணக் கோளாறுகளில் கொண்டு போய் நிறுத்தவே செய்யும்!

இந்த இரண்டுக்கும் உள்ள புரிந்துணர்வு (Under Standing) மிகவும் வியக்கத்தக்கதாக இல்லையா?

இரவு உணவு மிகக் குறைத்தலும் கூட, தூக்கம் பாதியிலேயே பாதிப் பதை நானே பல முறை அனுபவித் துள்ளேன்.

எதையும் அளவுக்குள் வைத்து, குறையாமலும் கூடாமலும், பார்த்து வாழ்ந்தால் அதைவிட கொள்ளை இன்ப வாழ்வுதான் வேறு ஏது?

இளமையிற் கல்லாக இருக்கும் உடல் வேகமாக முதுமையில் நொறுங்கி மண்ணாகாமல் தடுக்க கட்டுப்பாடு இவை இரண்டிலும் தேவை! தேவை!!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


தாயின் குரலைக் கேட்கும் சிசு


தாயின் கருப்பைக்குள் இருக்கும் சிசு தாயின் குரலைக் கேட்கும் என்றால் யாரும் நம்ப மாட்டார் கள். ஆனாலும் இது குறித்த ஆய்வில் சிசு தாயின் குரலைக் கேட்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஜான் ஹாப்பின்ஸ் என்ற பல்கலைக் கழகம் உள்ளது. அந்தப் பல்கலைக் கழகம்தான் இந்த ஆய்வை மேற்கொண்டது. 36 வார கால கர்ப்பிணிப் பெண்கள் வரவழைக்கப்பட்டு புத்தகம் ஒன்றைக் கொடுத்து 2 நிமிட நேரம் படிக்க வைக்கப்பட்டனர். அவர்கள் படித்தபோது சிசு தன் அசைவை நிறுத்திக் கொண்டு இதயத் துடிப்பையும் குறைத்துக் கொண்டு தாயின் குரலைக் கேட்பதைக் கண்டறிந்தனர். எப்படி? நம் நாட்டிலும் தான் ஆராய்ச்சி செய்கிறார்கள். மகரஜோதி தோன்றுகிறது வானத்தில் என்று கூறி, சூடத்தைக் கொளுத்தி பானையில் காட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...


இரண்டு மருத்துவர்கள்; இரண்டு குறிக்கோள்கள்!ஜூலை ஒன்று இந்தியாவில் மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வேறுபட்ட இருதுறைகளில் சிறந்த சேவை செய்த இரு மருத்துவர்களைப் பற்றி இங்கே...

டாக்டர் க்ரா ஃபர்டு எம்லாங் 1815இல் அமெரிக்காவில் பிறந்தார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவப்பட்டம் பெற்றார். அறுவை சிசிக்சை மருத்துவராகப்பணி புரிந்து வந்தார். அறுவை சிகிச்சையின் போது நோயாளிகள் வலியினால் துடிப்பதைக் கண்டு ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணினார். வலியில்லாத அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று நினைத்தார்.

பல ஆண்டுகளாகப் பழக்கத்தில் இருந்த எத்தனாலும், சல்ஃயூரிக் அமிலமும் இணைந்த கலவை, கோழிக்குஞ்சுகளுக்கு தூக்கம் வருவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு விட்ராயில் இனிப்பு எண்ணை (Sweet oil vitroie) என்று பெயர். ஆனால் அதை மருத்துவத்திற்கு பயன்படுத்துவது பற்றி யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

அந்த எண்ணெயை மருத்துவர் லாங் டெய்தில் எய்தர் (Diethil either) ஆக மாற்றி, 1842-ஆம் ஆண்டு மார்ச் 30-இல் ஒரு நோயாளிக்குச் செலுத்தி கழுத்திலிருந்து ஒரு கட்டியை நீக்கினார். அது தான் முதல் வலியில்லாத அறுவைச் சிகிச்சை அப்போது அவருக்கு வயது 27 தான். அந்த சிகிச்சை மூலம், அவர் நோயாளியின் வலியையும் மருத்துவரின் கவலையையும், ஒரு மந்திரம் போல போக்கினார். ஆனால் அவர் பாராட்டுக்களுக்காக காத்திருக்கவில்லை.

நான்காண்டுகளுக்குப் பிறகு டி.ஜி.மார்ட்டன் (T.G.Morton) என்ற மருத்துவர் எத்தர் வலி நீக்கியின் பலனை பொதுமக்களுக்கு செய்து காட்டினார். அவருக்கு ஏகப்பட்ட பாராட்டுக்களும் நவீனயுகத்தின வலி நீக்கியை பரவச்செய்தவர் என்றும் பெயர் பெற்றார். டாக்டர்களால், ஒரு பிரசவ சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போதே 1878-இல் மரணமடைந்தார்.

1991-இல், 122 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ஜார்ஜ் புஷ்சும், அமெரிக்க செனட் சபையும் கூடி, டாக்டர்லாங்கின் சேவைகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றினர். அமெரிக்காவில் மார்ச் 30-ஆம் தேதி மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுவதற்கும் திறமையான மருத்துவரை நினைவு கூரவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நமது நாட்டில் பி.சி.ராய் பாட்னா பங்கிப்பூரில் ஜூலை ஒன்றாம் தேதி பிறந்தார். 14 வயதில் தாயை இழந்தார். அய்ந்து குழந்தைகளின் இளையவரான அவர் மருத்துவராக விரும்பினார். கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் படித்தார். எம்.பி.பி.எஸ் படிப்பிற்குப் பிறகு இங்கிலாந்தில் தொடர்ந்து படிக்க விரும்பினார். 30-ஆவது முயற்சிக்கு பிறகே வெற்றி பெற்றார். அவர் வெற்றிகரமாக MRCP, FRCS பட்டங்களையும் இரண்டாண்டுகளுக்குள் பெற்று, கல்வி பற்றிய பேராசிரியர்களின் அய்யங்கள் தவறு என நிரூபித்தார். பொது மருத்துவத்திலும், அறுவைத்துறையிலும் சிறந்து நின்றார்.

தொடர்ந்து வியாதிகளுக்கு அவரது எளிய மருந்துகளும், வியாதிகளைப் பற்றிய அவரது சரியான ஆற்றல் விரைவில் கண்டு பிடிக்கக் கூடிய திறனும் அவருக்குப் பெரும் புகழைக் கொண்டு வந்தன. ஆனால் அவர் சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். ஒரு தனி மனிதனை நலம் பெறச் செய்வதைக் காட்டிலும் பரந்த தேசத்தை நலம் பெறச் செய்தல் நன்று என்று அவர் எண்ணினார். அரசியலில் சேரும்படி அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். காங்கிரஸ் இயக்கத்தில் பல பதவிகளை வகித்தார். 1948-இல் மேற்கு வங்காளத்தின் முதல் மந்திரியாகவும் வாய்ப்புப் பெற்றார். நல்ல நிருவாகியாக, தனது பதவிக் குரிய கடமைகளைச் செய்து சிறந்து விளங்கினார்.

அவர் பிறந்த நாளிலேயே இறந்தது ஒரு விந்தை. இந்தியாவில் அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு ஜூலை ஒன்றாம் தேதி மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. டாக்டர் லாங் மனிதன் வலியிலிருந்து விடுதலை பெற மரத்துப் போகச் செய்தார். டாக்டர் பி.சிராயோ, மரத்துப் போய் உறங்கிக் கொண்டிருந்தவர்களை விழிப்புறச் செய்தார்!

தமிழ் ஓவியா said...


சோதிடத்தின் அய்ந்துமுகப் பார்வை


- பேரா.ஏ.எஸ்.நடராஜ்

தனக்கு நேரக்கூடிய துன்பங்கள் அனைத்திற்கும் பிறர் காரணம் என்று மனிதன் கருதுகிறான். கடவுளே காரணம் என்று பல நேரங்களில் கதறுகிறான், பதற்றமடைகிறான்.

இப்படிப்பட்டவர்களுக்கு அறிவு, ஆறுதல் அளிப்பதில்லை. குறுக்கு வழியில் இன்பத்தைத் தேடும் முயற்சியும், பிறரை வஞ்சித்து வாழ்ந்திடவும் கண்டுபிடிக்கப் பெற்ற கருவிதான் சோதிடம்.

வாதி புளுகன், மாந்திரீகன் வீண் புளுகன், சோதிடன் என்பவனோ சுத்தப்புளுகன் என்பது நம் சான்றோர் வாக்கு.

சோதிடம் சொல்பவனுக்கும், கேட்பவனுக்கும் இடையே சொல்லொணாத் துன்பம் வருவதில்லையா? சோதிடத்தை சிலர் பிழைப்புக்கும் பெருமைக்கும் சொல்லிக் கொள்கிறார்கள்.

கடவுள் நம்பிக்கை என்னும் ஆணிவேரின் ஒரு கிளையாகவே மனித மனத்தில் இது பதிந்துள்ளது.

சோதிடம் சுத்தப்பொய்; அது உண்மையென மெய்ப்பிப்பார்க்கு ரூபாய் ஒரு கோடி பரிசு என்று அறைகூவல் விட்டுக் கொண்டிருக்கும் சிந்தனையாளர் பேராசியர் ஏ.எஸ்.நடராஜ் என்பவரால் கன்னடமொழியில் (சோதஷத பஞ்சமுக தர்ஷன்) எழுதப் பெற்றதை, தமிழாக்கம் செய்துள்ளார். பகுத்தறிவுப் பாவலர் வீ.இரத்தினம்.

இது ஓர் அறக்கட்டளை சார்பான வெளியீடு என்பதால் பலரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்கிற நோக்கில் பொதுநலம் கருதி, 107 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை உருபா பத்து (ரூ. 10) மட்டுமே!

நூல் கிடைக்குமிடம்:

V. Rathinam 1157, 11th Main Road, Hampi Nagar,
Bangalore-560014. Cell: 9449880117

தமிழ் ஓவியா said...


புதிய ஆகஸ்ட் புரட்சி அறிவித்து விட்டார் நம் தமிழர் தலைவர்!


ஆகஸ்ட் ஒன்றில் புது புரட்சி!
சாதி ஒழிப்பின் அடித்தளமாய்,
தீண்டாமை ஒழிப்பின் அடிப்படையாய்,
அறிவிக்கப்பட்ட அரும் புரட்சி!
ஆகமம் பயின்ற அனைத்துச் சாதியினரும்,
அர்ச்சகராக போராடும் புரட்சி!

மனித வாழ்வின் முதல் துவக்கம்,
தன்னலமற்ற தாயின் கருவறை!
மனித வாழ்வின் மாபெரும் இழிவு!
இன ஒதுக்கல் பேணும் இந்துக் கருவறை!

வெந்து நொந்து வியர்வை சிந்தி - கோயில் கட்டிடம் கட்டிய சூத்திரத்தொழிலாளியா?
எட்டி நில்! கருவறை வெளியே! உளிப்பிடித்த கைத்திறத்தாலும்
உள்ளத்தில் ஊறிடும் கலைதிறத்தாலும் -
கடவுள் உருவம் வடித்த சூத்திர சிற்பியே !

ஒதுங்கி நில் ! கருவறை வெளியே!
ஆயிரம் லட்சமென நன்கொடை நல்கிய உபய சூத்திரர்களே ! கருவறை
உள்ளே நுழைய அனுமதி பெற்றவை, உங்கள் கரன்சிகள் மட்டுமே! என மனுவின் குரலாய் ஒலித்திடும்

கருவறை சட்டங்கள்! வெளியே நிற்பது விபச்சாரி மக்கள்!
வெளியே நிற்பது விபச்சாரி மக்கள்!
என்றே ஒலித்திடும் இழிவோசை-பார்ப்பன
அர்ச்சகன் அடித்திடும் மணிஓசை!

தேவன் கோவில் மணியோசையில் கேட்டிடாத பேத ஒலி!
புத்தம்! சரணம்! கச்சாமியில் இல்லையே இந்த வர்ண மொழி!
அல்லாஹு அக்பர் வாசலிலே அனைவரும் நுழைய தடையில்லை!
இந்துக்கோயில் கருவறையில் மட்டும்
சூத்திரனை பழிக்கும் மூத்திரச்சட்டம்!

வெள்ளையனே! வெளியேறு! என்றது பழைய ஆகஸ்ட் புரட்சி!
சூத்திரனை உள்ளே விடு என முழங்கிடும்
புதிய ஆகஸ்ட் புரட்சி!

ஆத்திகனானாலும் நாத்திகனானாலும்
தன்மானம் என்பது பொது உணர்வென
தரணிக்கு காட்டிட தமிழர் தலைவர் அறிவித்து விட்டார் அரும் புரட்சி!
ஆகஸ்ட் புதிய பெரும் புரட்சி!

பொங்கும் புனலென, பூக்கும் அனலென
திரண்டிட வேண்டும் திராவிடரே !
தமிழர் தலைவர் தடம் பதித்தே!

- தகடூர் தமிழ்ச்செல்வி -

தமிழ் ஓவியா said...


சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்


சமூக நீதிக்கு எதிரான அரசாணை எண் 181அய் திருத்துக!

அரசாணை எண் 252அய் ரத்து செய்க!

சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பணி நியமனம் குறித்த சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டு கருத்தரங்கத்தில் பங்கேற்று உரையாற்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் முனைவர் பாவலர் க. மீனாட்சிசுந்தரம், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, பேராசிரியர் தேவா, தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவர் மனநல மருத்துவர் டி.எம்.என். தீபக் ஆகியோருக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாராட்டி பெரியார் நூல்களை வழங்கினர். (சென்னை பெரியார் திடல் - 5.7.2013)

சென்னை, ஜூலை 6- தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு பணி நியமனத்தில் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி திராவிடர் கழக மாணவரணி சார்பில் சென்னை பெரியார் திடலில் நேற்று (5.7.2013) நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை முன்மொழிந்தவர்: பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார், மாநில செயலாளர், திராவிடர் கழக மாணவரணி.

தீர்மானம் வருமாறு:

தீர்மானம்: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 181 ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ்நாடு அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களை இடைநிலை (SGT)
மற்றும் பட்டதாரி (BT Asst.) ஆசிரியர் பணிகளில் பணி நியமனம் செய்ய வழி செய்துள்ளது. அது மட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் இனி வருங்காலங்களில் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்திற்கான பணி நியமனத்திற்குத் தேவைப்படும் ஒரு தகுதித் தேர்வில் சமூகநீதி பின்பற்றப்படாமல் அனைத்துப் பிரிவு மக்களும் 60 சதவீதம் பெற்றால்தான் தேர்ச்சி என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமையை மறுப்பதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைக்கான பணியை மறுக்கும் செயலாகும்.

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) வகுத்துள்ள விதிமுறைகளின் படியே இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தனித்தனியே தகுதி மதிப்பெண்கள் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவீதம் என்பதை கட்டாயமாக்கியது மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு விரோதமானதும், சமூகநீதிக்கு எதிரானதும் ஆகும்.

அரசாணை எண் 181 திருத்தப்பட்டு, வெவ்வேறு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் வெவ்வேறு தகுதி மதிப்பெண்கள் வழங்கி இடஒதுக்கீட்டை ஆசிரியத் தேர்வு வாரியம் பின்பற்ற வழி செய்ய வேண்டும் என இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

அரசாணை எண் 252 தகுதித் தேர்வின் அடிப்படையிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனத்திற்கான வழியைக் கூறாமல் வெயிட்டேஜ் முறையை அறிமுகம் செய்துள்ளது. பட்டாயம், பட்டம் பெற்றவரின் மேல்நிலைப்பள்ளி (+2) கல்வியில் பெற்ற மதிப்பெண் அடிப்படை வெயிட்டேஜ் வழங்கி உள்ளது மிகப் பெரும் சமூக அநீதி. ஆசிரியர் தகுதித் தேர்வே தேவையில்லை என்பது நமது நிலைப்பாடு எனினும், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது என்ற அரசின் முடிவிலும் சமூகநீதிக்கு எதிராக உள்ள வெயிட்டேஜ் முறையைக் கைவிட்டு, அரசாணை எண் 252 திரும்பப் பெற்று, பதிவு மூப்பையும் கருத்தில் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு அடிப்படையிலான பணி நியமனங்கள் /மாற்றுத் திறனாளி/பெண்கள் /திருநங்கை என அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் சமூகநீதி அடிப்படை யிலான வெவ்வேறு கட்-ஆஃப் நிர்ணயித்து இடஒதுக் கீட்டு முறையைக் கடைப்பிடிக்க இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

(பலத்த கரவொலிக்கிடையே தீர்மானம் நிறைவேற்றப் பட்டது).

தமிழ் ஓவியா said...


புலி வேட்டை


பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடாகும். ஆதலால், நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்தால், ஒருவர் இருவர் கடிபட வேண்டியது தான்.
(விடுதலை, 20.10.1960)

தமிழ் ஓவியா said...

ராயப்பேட்டைத் தேர்தல் பார்ப்பனர்களின் சட்ட ஞானம்

ஸ்ரீமான் பி.எ. குருசாமி நாயுடு அவர்களும் ஸ்ரீமான் ஒ.எ.ஒ.கே. லட்சுமணன் செட்டியார் அவர்களும் ராயப்பேட்டை டிவிசன் நகர சபைத் தேர்தலுக்கு அபேட்சகர்கள். இதில் ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் நியமனத் தேதியில் கௌரவ மேஜிஸ்திரேட்டாக இருந்த தால் சட்டப்படி அபேட்சகராயிருக்க அருக ரல்லவென்று கமிஷனர் அவரை நீக்கித் தேர் தல் நடத்த உத்திரவிட்டார். இதன்மேல் அத்தேர்தலை நிறுத்த நமது பார்ப்பனர்கள் சென்னை மால் கே கோர்ட்டில் (ளுஅயடட உயரளந உடிரசவ) ஒரு பார்ப்பன நீதிபதியிடம் தடை உத்திரவு வாங்கினார்கள். அது அவரிட மே நிவர்த்தி செய்யப்பட்டும், மறுபடியும் இதன் பேரில் நமது பார்ப்பனர் ஹைக்கோர்ட்டில் பார்ப்பனரல்லாத மூன்று ஜட்ஜிகளிடம் ஒரு தடை உத்திரவு வாங்கினார்கள். இதையும் அவர்களிடமே நிவர்த்தி செய்து 30-ந் தேதிக் குள் தேர்தல் நடத்த உத்திரவிடப்பட்டது. இம்மூன்று ஜட்ஜிகள் உத்திரவிற்கு விரோத மாய் மறுபடியும் ஒரு பார்ப்பன ஹைகோர்ட் ஜட்ஜிடம் நமது பார்ப்பனர் அத் தேர்தலையும் நடைபெறாதபடி ஒரு தடை உத்திரவு வாங்கி விட்டார்கள். இந்த நிலையில் சென்னை பிரதம நீதிபதி அவர்கள் இந்த நடவடிக்கையில் சந்தேகப் பட்டு மூன்று ஜட்ஜிகள் கூடி பைசல் செய்த ஒரு விஷயத்தை மறுபடியும் ஒரு ஜட்ஜிடம் போய் எப்படி மாற்றிக் கொள்ளலாம் என்று கூட கோர்ட்டில் பார்ப்பன வக்கீல் களைக் கேட்டிருப்பதாகவும் அதற்கு அவர்கள் சட்ட சம்பந்தமான ஆதாரமிருப் பதாகவும் ஒரிஜினல் என்ற காரணத்தை உத்தேசித்து அங்கு போனதாகவும் சொல்லி திருப்தி செய்திருக்கிறார்கள். அப்படியானால் அதையும் என்னிடமே ஏன் கொண்டு வந்திருக்கக் கூடாது என்றும் பிரதம நீதிபதி அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்குச் சட்ட சம்பந்தமான சமாதானமாக அந்தக் காரணம் இந்தக் கோர்ட்டுக்கு வரக் கூடியதல்ல என்று சொன்னதாக தெரிய வருகிறது. இதைப் பார்த்தால் சட்டமியற்றுவது பார்ப்பனர்; அதை விவாதிப்பது பார்ப்பனர்; அதற்குத் தீர்ப்புச் சொல்லுவதும் பெரும்பாலும் பார்ப்பனர் என்று ஏற்படுகிறது. இந்நிலையில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கிற வகுப்பு உணர்ச்சி உள்ள விவகாரங்களில் பார்ப்பனரல்லாதாருக்கு நியாயம் கிடைக்கு மென்று உறுதியாய் நம்ப இடமிருக்கிறதா? என்பதை முடிவு செய்யும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டு விடு கிறோம்.

- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926

தமிழ் ஓவியா said...

கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல்

நமது ஜில்லா சட்டசபைத் தேர்தல் விஷயமாகச் சென்ற இதழில் ஒரு வியாசம் எழுதப்பட்டிருந்ததை நேயர்கள் வாசித் திருக்கக் கூடும். அவ்வியாசத்தின் வேண்டுகோள்படியே குடியான வகுப்பைச் சேர்ந்த அபேட்சகர்களான இரண்டு கவுண்டர் கனவான்களில் ஒரு கனவா னான ஸ்ரீமான் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் பின்வாங்கிக் கொண்டதாக கேள்விப்படுகிறோம். தங்கள் சமூக நன்மை யை உத்தேசித்து தங்கள் சமூகத்தாரில் யாராவது ஒரு கனவான் சட்டசபைக்கு வரவேண்டும் என்கிற ஒரே எண் ணத்தின் பேரில் மற்றொரு கவுண்டர் கனவானுக் காக விட்டுக் கொடுத்த ஸ்ரீமான் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களின் பெருந்தன்மையையும் குலாபிமானத் தையும் நாம் மனமாரப் போற்றுகிறோம். நாம் முந்திய வார இதழில் எழுதியது போலவே ஒருவர் பின்வாங்கிக் கொண்ட தினாலேயே மற்ற கனவானுக்கு யாதொரு பிரயத்தனமுமில்லாமல் சட்டசபை தானம் கிடைத்துவிடும் என்று நம்பி அஸ்

வாரஸ்யமாய் இருந்து விடக் கூடாது என்றும் தக்க முயற்சி எடுத்துக்கொண்டு கிராமம் கிராமமாய் வேளாள சமூக பிரசாரகர்களைக் கொண்டு பிரச்சாரம் செய்து கிராமத்துக் குடியான மக்களுடைய மனதைத் திருப்ப முயற்சி செய்ய வேண்டும் என்றும் அப்படிக்கில்லாமல், அஸ்வா ரஸ்யமாயிருந்தால் கண்டிப்பாய் ஏமாற்ற மடைய நேரிடும் என்றும் தெரிவித்துக் கொள்வதோடு ஸ்ரீமான் சங்கரண்டாம் பாளையப்பட்டக்காரக் கவுண்டர் அவர் களுக்கு வெற்றி கிடைக்க வேண்டியது அவசியமென்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926


தமிழ் ஓவியா said...

இந்தியாவின் `ஏக தலைவரான ஸ்ரீமான் எ.சீனிவாசய்யங்காரின் முடிவான லட்சியம்

எல்லா இந்திய காங்கிர தலைவரும், எல்லா இந்திய சுயராஜ்யக் கட்சித் தலைவரும், தமிழ்நாடு காங்கிர கமிட்டித் தலைவரும், தென்னாட்டுப் பார்ப்பனத் தலைவரும், மாஜி அட்வொகேட் ஜெனரலும் ஆகிய ஏக தலைவரான ஸ்ரீமான் எ. சீனிவாசய்யங்காருக்கு இன்னும் மூன்று லட்சியம்தான் இருக்கிறதாம்.
அதாவது :- 1. ஸ்ரீமான்கள் ஏ. ராமசாமி முதலியாரவர்களையும் பனகால் ராஜாவையும் சென்னை சட்டசபையில் தானம் பெறாதபடி செய்துவிட வேண்டும்.

2. தான் இந்தியா சட்டசபைக்குத் தெரிந்தெடுக் கப்பட வேண்டும்.

3. ஸ்ரீமான்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் ஆரியாவையும் ஜெயிலுக்கு அனுப்பிவிட வேண்டும்.

ஆகிய இம்மூன்று லட்சியங்களும் நிறைவேறி விட்டால் பிறகுதான் ராஜிய வாழ்விலிருந்தே விலகி விடுவாராம். ஏனெனில் ஒரு மனிதனுக்குச் செல்வம், பெண், கீர்த்தி ஆகிய மூன்று சாதனங்கள்தான் லட்சியமானதாகுமாம். அவற்றில் முதல் இரண்டைப் பற்றி தான் திருப்தியடைந்தாய் விட்டதாம். மூன்றா வதான கீர்த்திக்கு முட்டுக்கட்டையாக மேற்சொன்ன படி சென்னை சட்டசபையில் ஸ்ரீமான்கள் ஏ. ராமசாமி முதலியார், பனகால் அரசர் ஆகியவர் களும் இந்தியா சட்டசபைக்குப் போகாமல் இருக்கும்படி தடை செய்துவரும் ஸ்ரீமான்கள் நாயக்கர், ஆரியா ஆகியவர்கள் தன்னைத் தூற்றுவதும் ஆகிய காரியங்கள்தான் தடங்கலாயிருக்கிறதாம். அய்யோ பாவம்! இம்மூன்று காரியங்களும் அய்யங்கார் இஷ்டம்போல் நிறைவேறினாலாவது அய்யங்காரின் கடைசி லட்சியம் நிறைவேறுமா என்பது நமக்குச் சந்தேகமாகவே இருக்கிறது.
- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926

தமிழ் ஓவியா said...

தீண்டாமை விலக்குச் சட்டம்

பொதுத் தெருக்களில் எவரையேனும் நடக்கக் கூடாது என்று தடுப்பவருக்கு 100 ரூபாய் வரையில் அபராதம் போடலாம் என்கிறதாக ஒரு பிரிவை சென்னை ஜில்லா லோக்கல் போர்டு சட்டங்களில் ஒரு பிரிவாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீமான் வீரய்யன் அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேறிவிட்டதாகவும், முனிசிபாலிட்டி சட்டத்திலும் இவ்வித திருத்தம் செய்ய வேண்டுமென்று கொண்டு வரப்பட்ட திருத்தம்தான் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக வும் ஸ்ரீமான் வீரய்யன் அவர்களால் தெரி விக்கப்படுகின்றன.

குறிப்பு : இவ்வித சட்டம் செய்யப்பட்டது பற்றி நாம் மிகுதியும் களிப்பெய்துகிறோ மானாலும் பார்ப்பன வக்கீல்களும் பார்ப்பன நீதிபதிகளும் இச்சட்டம் செய்தவர் கருத் துப்படி பலனளிக்கச் சம்மதிப்பார்களா? அவர்களது சட்ட ஞானமும் பாஷ்ய ஞான மும் இச்சட்டத்தை உயிருடன் வைத்தி ருக்கச் சம்மதிக்குமா என்று கேட்கிறோம்?
- குடிஅரசு - செய்திவிளக்கம், 03.10.1926

தமிழ் ஓவியா said...

இளவரசன் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டுள்ளான்!

தருமபுரியில், எதிர்பாராமல் இளவரசனுடைய மரணம் என்பது தற்கொலையா? அல்லது அவர்கள் சொல்கிறபடி படுகொலையா? என்ற உண்மை விரைவில் வெளிவரும்.

ஆனால், ஒன்று நிச்சயம், அது என்னவென்று சொன்னால், முழுக்க முழுக்க அது ஜாதி வெறியினரால் ஏற்பட்ட பலி - அதைத்தான் நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். ஜாதி வெறி என்பது இருக்கிறதே, ஜாதியையும், தீண்டாமையையும் ஒழிப்பதைத்தான் வீர சபதமாக, சூளுரையாக நாம் எடுத்துக்கொள்வதுதான், அந்த வீரனுக்கு நாம் செலுத்துகின்ற மிகப்பெரிய வீரவணக்கமாக இருக்க முடியும்.

நாளைக்கோ, மறுநாளோ, சில நாள்களுக்குப் பிறகோ அவன் புதைக்கப்படலாம்; ஆனால், அவன் புதைக்கப்படமாட்டான்; விதைக்கப்படுவான் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும். நாம் தோற்றுக்கொண்டே இருக்கிறோம் என்பதைப்போல, அன்புச்சகோதரர் எழுச்சித் தமிழர் நினைக்கவேண்டாம்; இறுதியில் சிரிப்பவர் யார் என்பது தெரியும். உண்மையான வீரன் அவன்தான். அந்த உணர்வு நமக்கு நிச்சயமாக வரும். அந்த வகையிலே, உங்களுடைய நிதானம் பாராட்டப்படவேண்டியதாகும்.

காலையில்கூட அவர் மிகுந்த ஆவேசத்தோடு, உணர்ச்சிவயப்பட்டு என்னிடம் பேசியபொழுது, நான் சில கருத்துகளைச் சொல்லியதாகச் சொன்னார். ஆம், நம்முடைய மவுனம் இந்த நேரத்திலேயே பல பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இந்த மவுனத்திற்கு அர்த்தம் நாம் தோற்றுவிட்டோம் என்பதல்ல; நாம் தான் இறுதியாக வெற்றி பெறப் போகிறோம். அது நிரந்தர வெற்றியாக அமையவேண்டும்; அது தற்காலிக வெற்றியாக அமையக்கூடாது என்பதற்கு அடிப்படையாகத்தான் ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. மறைந்த இளவரசன் அவர்களுக்கு வீர வணக்கத்தைச் செலுத்தி, அவரது குடும்பத்திற்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஜாதி வெறிக்குப் பலியான ஒரு மாவீரன், காதல் உணர்வு என்பதற்காக பலியான ஒரு மாவீரனுக்காக அருள்கூர்ந்து அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுனம் காத்து வீர வணக்கத்தைச் செலுத்துவோம். (அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்தனர்).

- சென்னை பெரியார் திடலில் நேற்று (5.7.2013) நடைபெற்ற மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர்