Search This Blog

8.7.13

கீதையையும், கிருஷ்ணனையும் செருப்பால் அடிக்காவிட்டால் நாம் சூத்திரர்தானே!


 1926 முதல் கடவுள்களையெல்லாம் இழிவு படுத்தி வருகின்றேன். கடவுள் உருவங்ளை உடைத்திருக் கின்றேன். படங்களைக் கொளுத்தி இருக்கின்றேன். அப்படிச் செய்த நான் இன்னும் 93 வயதாகியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றேனே! அட முட்டாள்களா! இதைப் பார்த்தாவது கடவுள் இல்லை என்பதை உணர வேண்டாமா?

மனிதனை மடையனாக்கும் சாதனங்கள்தான் இந்தக் கோயில்கள், கடவுள்கள், உற்சவங்கள் யாவும், மனிதனை அறிவாளிகளாக்க இவைகளையெல்லாம் ஒழிக்க வேண்டுமென்கின்றோம்.

இது மதப்பிரச்சாரமல்ல; கடவுள் பிரச்சார மல்ல. கதாகாலட்சேபமல்ல; இவைகளுக்கு மாறான பிரச்சாரமாகும். இது உங்களுக்கு வெறுப்பாக இருக் கும். இதற்காக நீங்கள் எங்களை அடிக்கக்கூடத் தோன்றும். காரணம், வெகுகாலமாக அறிவற்று, மானமற்று இழிவினை ஏற்றுக் கொண்டிருக்கிற மக்களிடையே அவர்களின் மானமற்ற தன்மையையும், இழிவையும் எடுத்துச் சொல்லி அவர்களை அறிவு பெறும்படியாகச் செய்யும் மனித சமுதாயத் தொண்டினைச் செய்து வருகின்றோம்.

நாங்கள் கடவுள் அவதாரம், கடவுள் புத்திரர், கடவுளின் தூதர்; நாங்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை. நாங்கள் சொல்கிறோம்; உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்து ஏற்கக் கூடியதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

கடவுளையும், மதத்தையும் குறை சொன்னால் மனம் புண்படுகிறது என்கின்றான். இந்தக் கடவுளும், மதமும்தானே எங்களைச் சூத்திரர்களாக, பார்ப் பானுக்கு வைப்பாட்டி மக்களாக ஆக்கி வைத்திருக் கிறது. இது எங்கள் மனத்தைப் புண்படுத்துமா? இல்லையா? இந்த இழிவை நீக்கிக் கொள்ள முயற்சிப்பது எப்படிக் குற்றமாகும்? நாம் கடவுளைக் குறை சொன்னால் பார்ப்பான் மட்டுமல்ல, அவனுடைய வைப்பாட்டி மகன் என்று நினைத்துக் கொண்டு நெற்றியிலே சாம்பலையும், மண்ணையும் பூசிக் கொண்டி ருக்கின்றானே, அவன்தான் நம்முடன் சண்டைக்கு வருகின்றான்!

நான் ஒரு இந்து என்பதை ஒப்புக் கொண்டால் சூத்திரன் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். கடவுளை ஒப்புக் கொண்டால் (கிருஷ்ணன் கீதையில் நான்தான் 4 ஜாதியாக பிரித்தேன்) சூத்திரன் 4-ஆவது ஜாதி என்பதை நான் ஒப்புக் கொண்டுதானே ஆகவேண்டும்? இந்தக் கீதையையும், கிருஷ்ணனையும் செருப்பாலடிக்காவிட்டால் நான் சூத்திரன் தானே? இந்தக் கடவுளையும், மதத்தையும் நம் இழிவிற்கு ஆதாரமான மற்றவைகளையும் ஒழிக்காத வரை சூத்திரன்தானே!

இந்துவும், முஸ்லிமும், கிறிஸ்தவர் களும் தங்கள் மதத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பலாத்காரத்தில்தான் ஈடுபட்டார்கள். அறிவுப் பிரச்சாரம் செய்த புத்தர் களையும் சமணர்களையும் கொலை செய்தார்கள், கழுவேற்றி னார்கள் வீடுகளுக்குத் தீயிட்டார்கள். இன்னும் எத் தனையோ கொடுமைகளைச் செய்து அவர்களை யெல்லாம் அழித்தார்கள். இப்போது மக்களிடம் கொஞ்சம் அறிவு வளர்ந்திருக்கிறது. ஆதலால் நாம் மிஞ்சி இருக்கிறோம். இல்லாவிட்டால் நம்மையும் ஒழித்திருப்பார்கள்.

பொய் இல்லாமல் மனிதத் தன்மைக்கு மேம்பட்ட சக்தியில்லாத மதம் எதுவுமே கிடையாது. மதம் என்றால் அதற்கொரு கடவுள் இருந்தாக வேண்டும். மனிதத் தன்மைக்கு மேம்பட்ட சக்தியுடையவன் இருந்தாக வேண்டும்.

இதுவரை இந்த அரசாங்கங்கள் யாவும் பார்ப்பான் சார்புடைய அரசாங்கமாக கடவுள், மத, சாஸ்திரங் களைக் காப்பாற்றக் கூடிய அரசாங்கமாக இருந்த தால் நமது கருத்துகள் பரவ முடியாமல் போய்விட்டது. இன்றைய ஆட்சி பகுத்தறிவுக் கொள்கை கொண்ட வர்களாட்சி யானதால் நமது கருத்துகள் தீவிரமாகப் பரவுகின்றன. தற்போது உலகம் வேகமாக மாறிக் கொண்டு போகிறது. எங்குப் போகுமென்று சொல்ல முடியாது. அதற்கேற்ப மனிதன் மாறியாக வேண்டும்.

கடவுள் வந்த பின்தான் மனிதன் மடையனானான். கடவுள் கதைகளைப் படித்ததினால், நம்பியதினால் முட்டாள் ஆனான், சூத்திரன் ஆனான், 4-ஆம் சாதி 5-ஆம் சாதி ஆனான். ஆனதனால் மனிதனை மனித னாக்க வேண்டுமானால், அவனை எந்தச் சாதனம் இழிவுபடுத்திற்றோ, அதனை ஒழிக்கணும். மனித னுக்கு அறிவிருக்கிறது. என்றாலும் அவன் மனதில் கடவுள் எண்ணத்தைப் புகுத்தி விட்டதால் மடைய னாகி விட்டான். மதம் மனிதனை அறிவைக் கொண்டு சிந்திக்க விடாமல் தடுத்து விட்டது. நம் சூத்திரத் தன்மைக்கு, இழிவிற்குக் காரணம் என்ன வென்றால், கடவுள், மதம், சாஸ்திரம் என்கின்றான். இவைகளை ஒழிக்காமல் நம் இழிவை ஒழிக்க முடியாது என்பதால் தான் இவற்றை ஒழிக்கப் பாடு படுகின்றோமே தவிர வேறு எதனாலும் அல்ல என எடுத்துரைத்தார்.

-----------------------------------------19, 20, 22, 24 25.6.1971 ஆகிய நாள்களில் எஸ்.ஆடுதுறை, விருத்தாசலம், மேட்டுப்பாளையம், அவினாசி, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய ஊர்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை (விடுதலை, 3.7.1971).

26 comments:

தமிழ் ஓவியா said...

கும்மிடிப்பூண்டி மாநாட்டின் தீர்மானங்கள்


தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் உறுதி செய்யப்படுதல் அவசியம்!

இளவரசன் மரணத்திற்கு பதிலடி; ஜாதியை முற்றாக ஒழித்துக் கட்டுவதே!

கும்மிடிப்பூண்டி மாநாட்டின் தீர்மானங்கள்

கும்மிடிப்பூண்டி, ஜூலை 7- இளவரசன் மரணத் திற்குப் பதிலடி ஜாதியை முற்றாக ஒழிப்பதே என்கிற சூளுரைத் தீர்மானம் உட்பட 5 தீர்மானங்கள் கும்மிடிப் பூண்டியில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் (6.7.2013) நிறைவேற்றப்பட்டன.

கழகப் பொதுக்குழு உறுப்பினர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். பலத்த கரவொலி கிடையே 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மா னங்கள் வருமாறு:-

தீர்மானம் 1:

தோழர் இளவரசன் மறைவிற்கு இரங்கல்

1. ஜாதி மறுப்பு - காதல் திருமணம் செய்துகொண்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நத்தம் தோழர் இளவரசன் அவர்களின் அதிர்ச்சியூட்டக்கூடிய மறை விற்கு இம்மாநாடு தனது ஆழ்ந்த இரங்கலையும், சொல் லொணாத் துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

இளவரசனின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற அய்யப்பாடு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிப்பதில், தமிழ்நாடு அரசு சற்றும் தயக்கம் காட்டக்கூடாது என்று தமிழ்நாடு அரசை குறிப்பாக முதலமைச்சர் அவர்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மறைவிற்குக் காரணமாக இருக்கக்கூடிய ஜாதிய சிந்தனையையும், வெறியையும், கட்டமைப்பையும் எதிர்த்துப் போராடுவதே - ஒழிப்பதே இதற்குக் கொடுக்கும் பொருத்தமான பதிலடி என்பதால், திராவிடர் கழகம் மேலும் தீவிரத் தன்மையுடனும், ஒத்தக் கருத்துள்ளவர்களை இணைத்தும் ஜாதி ஒழிப்பை முதன்மைப்படுத்திக் கடுமையாகப் பாடுபடுவது - போராடுவது என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் 2:

ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் (அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டம்)

ஜாதி - தீண்டாமை ஒழிப்பின் முக்கிய அம்சமான கோவில் கருவறைகளில் அதிகாரப்பூர்வமாக ஆணவத் துடன் குடிகொண்டிருக்கும் - பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகர் என்கிற நிலையை மாற்றி, அனைத்து ஜாதியினருக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்களால் இறுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் பணியான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெறவிருக்கும் போராட்டத்தில் பெருந்திரளாக ஈடுபடுவது என்றும், திராவிடர் கழகம் மேற்கொள்ளவிருக்கும் இந்த இன இழிவு ஒழிப்புப் போராட்டத்துக்குத் தமிழினப் பெருமக்கள் அனைவரும் பெரும் ஒத்துழைப்புக் கொடுத்து வெற்றி பெறச் செய்யவேண்டுமெனவும் இம்மாநாடு தமிழ்ப் பெருமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இது தொடர்பான வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி, வெற்றி பெறுவதற்குத் தேவையான அனைத்து முயற்சி களையும் மேற்கொள்ளவேண்டுமென தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 3 (அ):

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழர் பதவி ஏற்புக்குப் பாராட்டும் - வேண்டுகோளும்!

ஒரு தமிழர் முதன்முதலாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்பதற்கு இம்மாநாடு தனது பாராட்டுதலையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் மகிழ்ச்சியை ஊட்டும் வகையில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களால் நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவேண்டும் என்று புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்கும் தமிழரான திரு.பி.சதாசிவம் அவர்கள் கூறியிருப்பதற்கு இம்மாநாடு மகிழ்ச்சியையும், நல் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்வதுடன், மிகப்பெரிய பொறுப்பில் - அதிகாரத்தில் இருக்கும் நீதிபதியவர்கள் நீதித்துறையில் இட ஒதுக்கீட்டை நிலை நிறுத்திட ஆவன செய்து, வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் இந்தச் சாதனையைச் செய்து முடிக்க வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 3 (ஆ):

நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்துக!

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 65-லிருந்து 68 ஆகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு

வயதை 62-லிருந்து 65 ஆகவும் உயர்த்தி மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 4:

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் உறுதி செய்யப்படுதல் அவசியம்

தமிழ்நாட்டிற்குரிய சட்டப்படியான காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் தமிழ்நாடு பாதிப்புக்கும், இழப்புக்கும் ஆளாக்கப்பட்டுள் ளதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட இத்தகு பொதுப் பிரச்சினைகளில் சுருதி பேதம் இல்லாமல், அனைத்துத் தரப்பினரும் உரிமைக்குரல் கொடுக்கவேண்டுமாய் ஒட்டுமொத்த தமிழர்களையும், தலைவர்களையும், அமைப்புகளையும் இம்மாநாடு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் இத்தகு பொதுப் பிரச்சினைகளில் ஒட்டுமொத்த தமிழர்களின் ஒன்றுபட்ட கருத்தைத் திரட்டும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்யுமாறு இம்மாநாடு முதலமைச்சர் அவர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மத்திய அரசும் இப்பிரச்சினையில் நியாயமாகவும், சட்டப்படியாகவும், அரசியல் கண்ணோட்டமில்லாமல் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 5:

சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துக!

தமிழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் வழி செய்யவேண்டிய தமிழ்நாடு அரசு, அந்தத் திட்டமே கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பது - தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டுவதுடன், அத்தகு பழிக்கு ஆளாகாமல், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், வழக்கை விலக்கிக் கொண்டு, திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முனைப்பு காட்டவேண்டுமாய் இம்மாநாடு தமிழ்நாடு அரசை குறிப்பாக முதலமைச்சர் அவர்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இது தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் திராவிடர் இயக்கத்தவர்கள் விரும்பிய திட்டம் மட்டுமல்ல, அ.இ.அ.தி.மு.க.வின் இரண்டு தேர்தல் அறிக்கைகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதையும் இம்மாநாடு நினைவூட்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணியில் அரசியல் கண்ணோட்டம் தேவையில்லை என்பதையும், அது அரசுக்குக் கடும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்ற கசப்பான உண்மையையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

கும்மிடிப்பூண்டியைக் குலுக்கிய பேரணி! கொள்கை முழக்கமோடு வந்த குன்றாப் பேரணி!!

சென்னை மண்டல திரா விடர் கழக மாநாடு கும்மிடிப் பூண்டியில் 6.7.2013 சனிக் கிழமை காலை முதல் இரவு 10 மணி வரை நேர்த்தி நதியாகப் பிரவாகித்தது. அழகியலும், கருத்தியலும் ஒன்றை ஒன்று பிணைந்து புன்னகைத்தன.

மாலை 5.30 மணிக்கு கும் மிடிப்பூண்டி நெடுஞ்சாலை மேம்பாலம் அருகிலிருந்து கும்மிடிப்பூண்டி கழக மாவட்ட இளைஞரணி தலை வர் இர.இரமேஷ் தலைமையில் அணி வகுத்து நின்றது. சென்னை மண்டல திரா விடர் கழக செயலாளர் வெ. ஞானசேகரன் பேரணியைத் தொடங்கி வைத்து உரையாற் றினார். திராவிடர் கழக இளை ஞரணி செயலாளர் வ.இரவி, மாவட்ட மாணவரணி தலை வர் ச.மலர்மன்னன், மாவட்ட மாணவரணி செயலாளர் சி.ராஜ்குமார், திராவிடர் கழக மகளிர் அணி தோழியர்கள் வேணி, ராணி, தொழிலாளரணி தோழர் மு.இரவி ஆகியோர் பேரணிக்கு முன்னிலை வகித் தனர்.

தமிழ் ஓவியா said...


அனைவருக்கும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் சால்வை அணிவித்தார். தெலுங் கானாவைச் சேர்ந்த பிரஜா நாத்திக சமாஜத்தை சேர்ந்த டிரம் செட் முழக்கம் முன் வரிசையில் இடம் பெற்றது.

அடுத்து மகளிர் அணியை சேர்ந்த தோழர்கள் தீச்சட்டி இங்கே - மாரியாத்தா எங்கே? என்று தீச்சட்டி ஏந்தி தீரமான குரல் கொடுத்து வந்த காட்சி கும்மிடிப்பூண்டி வாழ் மக்களைத் திகைக்கச் செய்தது என்றால் அதற்கு முதல் நாள் தான் அந்த ஊரில் மஞ்சள் புடவை கட்டிய பெண்கள் கோயில் தீமிதியைப் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீ மிதிப்பதற்கும் கடவுள் சக்திக்கும், பக்திக்கும் சம்பந்தா சம்பந்தமில்லை என்பதை ஒரு நாள் இடைவெளியில் அப் பகுதி மக்களுக்கு மிகப் பொருத் தமாக நிரூபித்துக் காட்டப் பட்டது.

பளப்பளக்கும் அரிவாள் மீது நின்று பகுத்தறிவு முழக்கம்

பளப்பளக்கும் அரிவாள் மீது அனாயாசமாக ஏறி நின்று கடவுள் இல்லை இல்லவே இல்லை என முழக்கமிட்ட காட்சியை காளையர்கள் கண்டு கை தட்டி வரவேற்றனர்.

கோயிலில். முதுகில் அலகு குத்தி சிறு தேர் இழுப்பதுண்டு. இங்கோ அம்பாசிடர் காரை அதுபோல இழுத்து வந்ததோடு மட்டுமல்லாமல் கடவுள் இல்லை என்று சொல்லி கார் இழுக்கும் எங்களைப் பாரீர்! பாரீர்!! என்று குரல் கொடுத்து வந்தனர். கடவுள் மறுப்பு வாசகங்களையும் கணீர் கணீர் என்று முழங்கி சென்றனர்.

அலகுக் காவடி எடுத்து வந்த தோழர்களும் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்ற சொல்லி அசத்தினர்.

கொள்கை விளக்க பிரச்சார நாடகம்

மாநாட்டை விளக்கி கிராமப்பிரச்சாரம் செய்தோர்:

மாங்காடு மணியரசன் (கழகப் பேச்சாளர்), தமிழ் சாக்ரடீஸ் (மாநில இளைஞரணி து.செ)

பத்து நாட்களாக மாநாட்டிற்கு உழைத்தோர்:

இர.தர்மசீலன் (உரத்தநாடு), இர.ராஜ்கிரண் (உரத்தநாடு), மாதவன் (உரத்தநாடு), லெனின் (உரத்தநாடு), நா.அழகிரி (உரத்தநாடு), மணிகண்டன் (உரத்தநாடு), குமரேசன் (உரத்தநாடு), பொன்முடி (நாகை), சி.பாண்டிதுரை (பேராவூரணி) மேற்கண்ட தோழர்களை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.

கோயில்களில் என்னனென் னவற்றை எல்லாம் செய்து காட்டி கடவுள் சக்தி என்று கூறுவார்களோ, அவை அத் தனையையும் கருஞ்சட்டைத் தோழர்கள் செய்து காட்டி கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று முழங்கிச் சென்றது உண்மையிலே அந்த பகுதியில் புதுமையானதுதான். வைத்த கண் சிதறாமல் அந்த காட்சிகளைக் கண்டு வியந்து போய் நின்றனர். இளைஞர் களோ அக்காட்சிகளைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.

நெடுஞ்சாலையில் இத் தகைய மூட நம்பிக்கை ஒழிப் புக் காட்சிகள் அடங்கிய பேரணி சென்றதாலும் பெண் கள் ஏராளமானேர் அணி வகுத்து வந்ததாலும், வழக்க மாக பொதுமக்களும், வணிகப் பெருமக்களும் நிரம்பி வழிந்த அந்தப் பகுதி இதுவரை காணப் படாத ஒன்றாகும்.
பார்த்தவர்கள் ஒவ்வொரு வரையும் சிந்திக்கும் தன்மையில் ஆழ்த்தின.

முழக்கங்கள்

வெறும் கடவுள் மறுப்பு முழக்கங்கள் மட்டுமல்ல - சமூக நீதிச் சிந்தனைகள் - ஜாதி ஒழிப் புக் கருத்துக்கள், பெண்ணுரி மைச் சிந்தனைகள் அய்ந்து முழக்கங்கள் (அச்சிட்டுக் கொடுக்கப்பட்டிருந்தன) விண்ணை பிளந்தன.

வேண்டாம் வேண்டாம் ஜாதி அரசியல் வேண்டாம்.

திருத்தணி பன்னீர்செல்வன் இசை நிகழ்ச்சி

மோத வேண்டாம் மோத வேண்டாம் வலது கையும் இடது கையும் மோத வேண்டாம்.

மாய்ப்போம் மாய்ப்போம் மதவெறி மாய்ப்போம்
காப்போம் காப்போம் மனித நேயம் காப்போம்
மலரட்டும் மலரட்டும் மனித நேயம் மலரட்டும் மலரட்டும்

அர்ச்சகராக்கு அர்ச்சகராக்கு அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கு - அர்ச்சகராக்கு வஞ்சிக்காதே வஞ்சிக்காதே ஈழத்தமிழர்களை வஞ்சிக்காதே
வெல்க வெல்க டெசோ முயற்சி வெல்க, வெல்கவேபணி முடிப்போம் பணி முடிப்போம் தமிழர் தலைவர் தலைமையில் பணி முடிப்போம் பணி முடிப்போம்.

தந்தை பெரியார் பணி முடிப்போம் என்பன போன்ற மனித உரிமை மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் முழக்கங்களாக அவை அமைந்திருந்தன. மூடநம்பிக்கை ஒழிப்புகளை செய்து காட்டிய தோழர்கள் யார்? யார்?

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம்

அரிவாள் மீது ஏறியவர்கள்: கறம்பக்குடி முத்து, அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட தி.க. செயலாளர்)
தீச்சட்டி ஏந்திவந்த தோழியர்கள்: திண்டிவனத்தை சேர்ந்த இ.வள்ளி, த.விஜயலட்சுமி, சாந்தியம்மாள், தனலெட்சுமி, சரோஜா, விஜயலெட்சுமி, லெட்சுமி
செடல் காவடி: ஜெயங்கொண்டம் கலியமூர்த்தி, காப்பலூர் ராமச்சந்திரன்

கார் இழுத்தவர்கள்: பொழிசை கண்ணன் (தி.க.தாம்பரம் மாவட்டம்), நாகை பொன்முடி (நாகை மாவட்ட மாணவரணி செயலாளர்), ஆ.இரவி (பகுத்தறிவாளர் கழகம் கும்மிடிப்பூண்டி)

வீரவிளையாட்டு: கறம்பக்குடி சண்முகசுந்தரம், கறம்பக்குடி முத்து

இசை கலைஞர்கள்: ஆந்திரபிரதேச மாநில தெலங்கானா பகுதியைச் சோந்த ஜி .டி. சாரய்யா குழுவினர் வெங்கடேஷ். சியாம், செந்து, ரவிவர்மா இவர்களுடன் மேல்மருவத்தூர் செல்வம் (மொழி பெயர்பாளர்கள்)

மாநாட்டில் நடைபெற்ற மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி

அய்ந்து முழக்கங்கள் (அச்சிட்டுக் கொடுக்கப் பட்டிருந்தன) விண்ணை பிளந்தன.

வேண்டாம் வேண்டாம் ஜாதி அரசியல் வேண்டாம்.

மோத வேண்டாம் மோத வேண்டாம் வலது கையும் இடது கையும் மோத வேண்டாம்.

மாய்ப்போம் மாய்ப்போம் மதவெறி மாய்ப்போம்

காப்போம் காப்போம் மனித நேயம் காப்போம்

மலரட்டும் மலரட்டும் மனித நேயம் மலரட்டும் மலரட்டும்

அர்ச்சகராக்கு அர்ச்சகராக்கு அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கு - அர்ச்சகராக்கு வஞ்சிக்காதே

வஞ்சிக்காதே ஈழத்தமிழர்களை வஞ்சிக்காதே

வெல்க வெல்க டெசோ முயற்சி வெல்க, வெல்கவே

பணி முடிப்போம் பணி முடிப்போம் தமிழர் தலைவர் தலைமையில் பணி முடிப்போம் பணி முடிப்போம்.

தந்தை பெரியார் பணி முடிப்போம் என்பன போன்ற மனித உரிமை மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் முழக்கங்களாக அவை அமைந்திருந்தன. மூடநம்பிக்கை ஒழிப்புகளை செய்து காட்டிய தோழர்கள் யார்? யார்?

தமிழ் ஓவியா said...


சுதந்திர நாட்டில் பார்ப்பான் - பறையன் பள்ளன் என்ற பேதம் இருக்கலாமா?


கும்மிடிப்பூண்டி மாநாடு - ஓர் உரைச் சித்திரம்!

நமது சிறப்புச் செய்தியாளர்

சென்னை மண்டல திராவிடர் கழக மாநாடு - கும்மிடிப்பூண்டியில் 6.7.2013 அன்று திறந்த வெளி மாநாடாக பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்ட எழிலார்ந்த மேடையில் இரவு 7 மணிக்குத் தொடங்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டியில் இயக்கப் பணியை எழுச்சியுடன் ஆற்றி மறைந்த தேவதாசு அவர்களின் பெயர் மாநாட்டு மேடைக்குப் பொருத்தமாக சூட்டப்பட்டு இருந்தது.

கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் உதயகுமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். இந்த மாநாடு நடத்தியது எங்களுக்குக் கிடைத்த பெரும் பேறு என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மாநாட்டுக்கு சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.ரா. இரத்தினசாமி தலைமை வகித்தார். தொடக்கத்தில் கழகக் கொடியை வாழ்த்து முழக்கங்களு டன் திராவிடர் கழக மாணவரணியைச் சேர்ந்த வி. கனிமொழி ஏற்றி வைத்தார்.

கீழ்க்கண்ட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

தி.வெ.சு. திருவள்ளுவர் (தலைவர், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்), வெ.மு. மோகன் (செயலாளர், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்), இரா. வில்வ நாதன் (தலைவர், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம்), செ.ரெ. பார்த்தசாரதி (செயலாளர், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம்), ப. முத்தையன் (தலைவர், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்), அனகை கு. ஆறுமுகம் (செயலாளர், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்), ம.ஆ. கந்தசாமி (தலைவர், ஆவடி மாவட்ட திரா விடர் கழகம்), பா. தென்னரசு (செயலாளர், ஆவடி மாவட்ட திராவிடர் கழகம்), பொன்னேரி ஆசிரியர் சந்திரராசு.

தி.ரா. இரத்தினசாமி

மாநாட்டுத் தலைவர் தி.ரா. இரத்தினசாமி அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டதாவது:

நித்திரையில் இருக்கும் தமிழா?

சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு

தரணி ஆண்ட தமிழர்க்குத்

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

என்றார் புரட்சிக் கவிஞர்.

புரட்சிக் கவிஞனின் கனவை கலைஞர் நிறை வேற்றினார். அதனை மறு படியும் சித்திரைக்கு மாற்றி விட்டது இந்த ஆட்சி மீண்டும் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக்கும் சக்தி நம் தலைவருக்குத் தான் உண்டு என்று குறிப் பிட்டார்.

வழக்குரைஞர் அருள்மொழி

மாநாட்டினைத் திறந்து வைத்து திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அருள்மொழி உரை யாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

நமது தமிழினத்துக்கு என்று சிறப்பான வரலாறு உண்டு. உலகிற்கு விவசாயத்தைக் கற்றுக் கொடுத்த இனம் இது. கட்டடக் கலையில் கை தேர்ந்தவன் தமிழன். அத்தகைய இனத்தின் சுயமரியாதைக்காக போராட வேண்டிய நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

கீதையைத் தூக்கிக் கிணற்றில் போடு - திருக் குறளைப் படி என்று கூறியவர் - அதற்காக மாநாடு நடத்தி காட்டியவரும் தந்தை பெரியாரே!

திருக்குறளில் காணப்படும் நல்ல சொற்களைத் தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்குப் பெயர் சூட்டவும் செய்தார்.

நாட்டில் புத்த நெறிக்குப் புது திருப்பத்தைக் கொடுத்தவரும் அவரே. கவுதமன் என்றும், சித்தார்த்தன் என்றும் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டியவரும் அய்யாவே!

மேல் ஜாதி பெண்கள்தான் மேலாடை அணிய முடியும் என்றிருந்த நிலை இன்று இல்லை. இந்த நாட்டில் தலை கீழ் மாற்றம் தந்தை பெரியாரால், இந்த இயக்கத்தால் நிகழ்ந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இது அன்றோ நம் பண்பு!

கழகப் பிரச்சார செயலாளர் பேசிக் கொண்டி ருந்தபோது முசுலிம்கள் வாங்கு ஓதினார்கள். அந்த நேரத்தில் கழகத் தலைவர் குறுக்கிட்டு, அருள் மொழியின் உரையைச் சிறிது நேரம் நிறுத்தச் சொன்னார்கள். அவ்வாறே நிறுத்தி விட்டு அந்த வாங்கு ஓதுவது நின்றவுடன் உரையைத் தொடங்கிய பிரச்சார செயலாளர் கூறினார்.

மேடை நாகரிகம் என்ன என்பதை நமது தலைவர் ஆசிரியர் அவர்கள் நமக்கு உணர்த்தி வழிகாட்டி இருக்கிறார்.

இதுதான் நம் கழகத்தின் பண்பாடு. இந்து மத சாமி ஊர்வலம் வந்தால்கூட இப்படித்தான் நாம் நடந்து கொள்வோம்.

பிள்ளையார் ஊர்வலம் என்று சொல்லி மசூதி வழியாகத்தான் செல்வோம் என்று அடம் பிடிக்க கூடியவர்கள் யார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று வழக்குரைஞர் அருள்மொழி சொன்னபோது பலத்த கரஒலி!

கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களுக்கு எப்பொழுதுமே முன் புத்தி கிடையாது. காங்கிரசில் இருக்கும்போது தந்தை பெரியார் நூற்றுக்கு 50 சதவிகித இடங்களைப் பார்ப்பனர்களுக்குக் கொடுக்க முன் வந்தார். அதனை மரியாதையாகப் பெற்றுக் கொண்டிருக்கலாம் அல்லவா? அப்பொழுது அதனை ஏற்றுக் கொள்ளாத பார்ப்பனர்கள் நமது ஆசிரியரிடம் நேரில் வந்து எங்களுக்கு 20 சதவிகித இடம் வேண்டும் என்று கேட்கிறார்களே - என்று அழகாகக் குறிப்பிட்டார் கழகப் பொருளாளர்.

துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்

20 ஆண்டுகளுக்குமுன் இதே கும்மிடிப்பூண்டியில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்துடன் கூடிய பொதுக் கூட்டத்தை நடத்தி இருக்கிறோம். நமது கழகத் தலைவர் உரையாற்றினர்.

இந்தப் பகுதியில் நமது இயக்கம் நல்ல அளவு வேரூன்றி வருகிறது. ஏராளமான எண்ணிக்கையில் இளைஞர்கள் இயக்கத்திற்கு இந்தப் பகுதியில் கிடைத்துள்ளனர். தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு இயக்கம் பலகீனப்பட்டுப் போய் விடவில்லை. மாறாக பலம் பெற்றுள்ளது வளர்ந்துள்ளது என்பதற்கு இன்று, நாள் முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சிகளும், அதில் மாலையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும், மக்கள் காட்டிய உணர்ச்சியும் கட்டியம் கூறுகின்றன.

திராவிடர் கழகத்திற்கு இளைஞர்கள் வர வேண்டும். காரணம் இது ஒன்றுதான் புரட்சிகரமான முற்போக்கு இயக்கம் - சமூக நீதிக்காகப் போராடும் இயக்கம் பகுத்தறிவு ஒழுக்கத்தை வலியுறுத்தும் இயக்கம் என்றும் குறிப்பிட்டார்.

படம் 1): கும்மிடிப்பூண்டி மாநாட்டில் பெரியார் களஞ்சியம் தொகுதி 33, பகுத்தறிவு - பாகம் 1, வாழ்வியல் சிந்தனைகள் - பாகம்-9 (கி.வீரமணி) ஆகிய நூல்களை தமிழர் தலைவர் வெளியிட கி.மு.திராவிடமணி (விடுதலை சிறுத்தைகள் கலை பண்பாட்டு மாநிலச் செயலாளர்) வளர்தொழில் ஆசிரியர் செயகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். படம் 2): மாநாட்டு ஊர்வலத்தில் கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என கழகத் தோழர்கள் அலகு குத்தி கார் இழுத்து வந்த காட்சி. (6.7.2013)

தமிழர் தலைவர் கி.வீரமணி

காலையில் நடைபெற்ற பட்டிமன்றத்தின் மேடைக்கு மறைந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு வடகரை முனுசாமி அவர்களின் பெயரும், இந்தத் திறந்த வெளி மாநாட்டுக்குச் செயல் வீரர் தேவதாசு பெயரும் சூட்டப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது.

இவர்கள் எல்லாம் நம்மைப் பொறுத்தவரை மறைந்த வர்கள் அல்லர் - நம் நெஞ்சங்களில் நிறைந்தவர்கள் என்று எடுத்த எடுப்பிலேயே குறிப்பிட்ட கழகத் தலைவர் கும்மிடிப்பூண்டிப் பகுதியைக் கொள்கை நாற்றங்கால் என்று படம் பிடித்துச் சொன்னார். கூட்டு முயற்சியால் இந்த மாநாடு வெற்றி பெற்றுள்ளது என்று கணித்துச் சொன்னதன் மூலம், எந்த ஒரு நிகழ்ச்சியையும் கூட்டு முயற்சியுடன் செய்யுங்கள் என்று கழகத் தோழர்களுக்கு வழிகாட்டும் ஓர் அறிவுரையைத் தந்தவர்.

தமிழ் ஓவியா said...

நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியை வெகுவாகப் பாராட்டினார். மக்களின் மூடநம்பிக்கையை ஒழிக்க எங்கள் தோழர்கள் தங்கள் உடலை வருத்திக் கொண்டு முதுகில் அலகு குத்தி கார் இழுத்து வந்ததைத் தமிழர் தலைவர் குறிப்பிட்டுச் சொன்னார்.

அலகுக் காவடி எடுத்து வந்த தோழர்கள் கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று சொல்லி அசத்தினர்.

கடவுள் சக்தி வெறும் புரட்டு என்பதை நிரூபிக்க சில நாட்களுக்குமுன் உத்தரகாண்ட் மாநிலத்தில் புண்ணிய யாத்திரைக்குச் சென்ற பக்தர்கள் பல்லாயிரக் கணக்கில் பலியானதை எடுத்துச் சொன்ன தலைவர் அவர்கள் செத்தவர்கள் பக்திமான்கள் என்பதற்காக மகிழக் கூடியவர்கள் அல்லர் நாங்கள். மனித உயிர்கள் பக்தியின் பெயரால் இப்படி மலிவாகப் பறி போகிறதே என்ற வருத்தத்தால்தான் இதனைச் சுட்டிக் காட்டுவதாகவும் குறிப் பிட்டார்.

உயிர் தப்பித்தவர்கள் தெய்வாதீனமாகத் தப்பித்தோம் என்று சொல்லுவது குறித்து மிக அழகாக எதிர் கேள்வியை வைத்தார்.

பிழைத்தவர்களுக்குக் காரணம் தெய்வா தீனம் என்றால் இறந்தவர்களுக்கு எந்த ஆதீனம் காரணம் என்ற கேள்வியைக் கேட்டபோது, கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் அதனை வெகுவாக ரசித்தனர்.

பக்தர்கள் தப்பி வந்ததுகூட இந்திய ராணுவ உதவியினாலேயேயொழிய கடவுள்களால் அல்ல என்றார் - உண்மைதானே!கழகத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

காலை நிகழ்ச்சிக்கு வருகை தந்த கழகத் தலைவருக்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும் - திமுக முன்னணி வீரருமான கும்மிடிப்பூண்டி வேணு அவர்கள் கழகத் தலைவருக்குச் சால்வை அணிவித்து வரவேற்றார். விடுதலைச் சிறுத்தைகளின் பொறுப்பாளர்களும் மேடையில் தமிழர் தலைவருக்குச் சால்வை போர்த்தினர். கும்மிடிப்பூண்டி ஒன்றிய முன்னாள் தலைவர் புனிதவள்ளி அம்மையார் கழகத் தலைவருக்குச் சால்வை அணிவித்து மாநாட்டில் கடைசி வரை இருந்து உரைகளைச் செவி மடுத்தார்.

#####


கும்மிடிப்பூண்டியில் பயணியர் மாளிகை அருகே கழகக் கொடியினை தமிழர் தலைவர் ஏற்றி வைத்தார்.

கடவுள் பக்தி என்பது ஒரு வகையான போதை அவ்வளவுதான் - அதற்குமேல் ஒன்றும் இல்லை என்றார் (சிகரேட் குடிப்பது தவறு என்று தெரிந்திருந்தும் ஒரு வகையான போதைக்கு அடிமையானதால் அதனை விட முடியாமல் தவிப்பது இல்லையா!)

தமிழ் ஓவியா said...

தமதுரையில் ஆகஸ்டு முதல் தேதி நடக்க இருக்கும் போராட்டம் குறித்து முக்கியமாகக் குறிப்பிட்டார்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் என்பது ஜாதி - தீண் டாமை ஒழிப்புப் போராட்டம் என்றும் விளக்கினார்.

இந்து மதத்தில் பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் அர்ச்சகர்கள் ஆக கூடாது என்பது, சூத்திரர்கள் இழிவானவர்கள் என்ற அடிப் படையில் தானே -இதனைப் பக்தியில் நம் பிக்கை உள்ள தமிழர்கள் சிந்திக்க வேண்டாமா என்ற வினாவை எழுப்பினார் தமிழர் தலைவர்.

கோடிக் கோடியாகக் கொட்டிக் கொடுத் தாலும் நாங்கள் திராவிடர் கழகத்து தொண் டர்கள் யாரும் அர்ச்சகராகப் போவதில்லை (பலத்த கரஒலி!)

கடவுள் இல்லை என்பது எங்கள் கொள்கை, அர்ச்சகராக வேண்டும் என்று வலியுறுத்துவது மனித உரிமை என்று தந்தை பெரியார் புரியும் படிக் கூறினார்.

முதற்கட்டமாக ஆகஸ்டு முதல் தேதி போராட்டம் நடத்திட உள்ளோம். நாங்கள் சூத்திரர்கள் அல்ல - இழி ஜாதியினர் அல்ல என்று கருதும் உணர்ச்சியினை, மான உணர் வுள்ள ஒவ்வொருவரும் கழகம் நடத்தவிருக்கும் அறப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

பல கட்டங்களில் போராட்டம் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. வெற்றி காணும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை என்று தமிழர் தலைவர் சொன்னபோது பலத்த கரஒலி காதுகளைப் பிளந்தது.

கடைசியாக ஒரு வினாவை எழுப்பினார்.

சுதந்திர நாட்டில் பார்ப்பான் இருக்கலாமா; பறையன் இருக்கலாமா; பள்ளன் இருக்கலாமா இவை இருந்தால் நாம் சுதந்திர நாட்டில் இருக்கிறோம் என்று அர்த்தமா?

உண்மை சுதந்திரம் என்பது ஜாதி ஒழிப்பில் தான் இருக்கிறது என்று ஆழமாகக் குறிப் பிட்டார் தமிழர் தலைவர் (முழு உரை பின்னர்).

சிறப்பாக ஒத்துழைத்த காவல்துறையிருக்கு நன்றி கூறிய கழகத் தலைவர் மாநாடு வெற்றி பெற சிறப்பாக கூட்டுப் பணியாளர்களாகப் பணியாற்றிய கழகத் தோழர்களை மறுபடியும் ஒரு முறை பாராட்டினர்.

அண்மைக் காலமாக அலை அலையாக கழக மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. ஒரு மாநாடு இன்னொரு மாநாட்டை விட சிறப்பானது என்று கணிக்கும் அளவுக்கு மிகவும் நேர்த்தியாக, எழுச்சியாக நடை பெறுவது சிறப்பானதாகும்.

புழல் ஆனந்தன்

கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் புழல் ஆனந்தன் நன்றி கூறிட இரவு 9.55 மணிக்கு மாநாடு நிறைவுற்றது.

எள் போட இடம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆயிரக்கணக்கில் அடர்த்தியாக பொது மக்கள் கூடி நின்று உரைகளைக் கேட்டது - மாநாட்டின் வெற்றிக்கான அடை யாளமாகும்.

மாநாட்டுத் துளிகள்...

கும்மிடிப்பூண்டி மாவட்ட கழகத்தின் சார்பில் 50 விடுதலை சந்தாவுக்கான தொகையை விஜயகுமாரும், முப்பது பெரியார் பிஞ்சுக்கான சந்தாவுக்கான தொகையை உதயகுமாரும் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

###

விடுதலை சந்தாவுக்கான முதல் தவணையாக ரூ.10 ஆயிரத்தை கழகத் தலைவரிடம் புழல் கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினர்.

####

ஆந்திர தோழர்களின் கலை நிகழ்ச்சி

ஆந்திர மாநிலம் தெலங்கானாவில் இயங்கி வரும் பிரஜாநாத்திக சமாஜத்தின் தலைவர் ஜி.டி. சாரய்யாவும் அவர்களின் தோழர்களும் அவரைச் சார்ந்த தோழர்களும் கடந்த ஒரு வாரமாக கும்முடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதி கிராமங்களில் தெலுங்குப் பாடல்கள் மூலம் மாநாட்டுப் பிரச்சாரத்தைச் சிறப்பாக செய்ததோடு, மாநாட்டு மேடையிலும் பகுத்தறிவுப் பாடல்களையும், தந்தை பெரியார் அவர்களின் சாதனைகளையும் விளக்கும் பாடல்களை அழுத்தமாகப் பாடி மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றனர். கழகத் தலைவர் அவர்களுக்கெல்லாம் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.

###

மயிர்க் கூச்செறியும் வீர விளையாட்டு

பொன்னேரி சுப்ரமணியம் ஆசான் அவர்களின் வீர விளையாட்டுப் பாசறையில் தயாரிக்கப்பட்ட குழந்தைகள் சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள் செய்து காட்டிய வீர சாகச விளையாட்டு நிகழ்ச்சிகள் மாநாட்டின் சிறப்பு அம்சமாக இருந்தது என்றே கூற வேண்டும்.

குறிப்பாக தீப்பந்தங்களை அவர்கள் கையாண்ட முறை மயிர்க்கூச்செறியச் செய்து பலத்த கரஒலியைப் பொது மக்களிடமிருந்தும் பெற்றது.

ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல - பெண்கள் என்பதைச் சாதித்துக் காட்டினார்கள். அக்குழுவினரைப் பாராட்டி நிர்வாகிகளுக்கு பயனாடை அணிவித்துப் பாராட்டினார் கழகத் தலைவர்.

தமிழ் ஓவியா said...


காரணம்எதற்கும் பகுத்தறிவை உப யோகிக்க விடாமலும், ஆராய்ச்சி செய்யவோ, ஆலோசனை செய்து பார்க்கவோ இடம் கொடுக்கா மலும் அடக்கி வைத்த பலனே நமது நாட்டின் இன்றைய இழிந்த நிலைக்கும், குழப் பத்திற்கும் காரணமாய் இருக்கிறது.

- (குடிஅரசு, 4.5.1930)

தமிழ் ஓவியா said...


நிதி வழங்க விரும்புகிறேன்


நிதி வழங்க விரும்புகிறேன்

தமிழர் தலைவர் அவர்களுக்கு என்றும் உங்கள் கொள்கைத் தொண்டன் இன்று திருவாரூர் மாவட்ட கழகக் குடும்பங்களின் கலந்துரையாடலில் குடும்பத்துடன் கலந்து கொண்டு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோராது செயலாற்றி வரும் தங்களின் தொண்டறம் தொடர பெரிதும் விழைகின்றேன்.

மூடநம்பிக்கையிலிருந்து இன்னும் விடுபடாத மக்கள், அரசியலிலும் தெளிவற்ற நிலை, இன உணர்வற்ற தமிழர்கள், இவற்றுக்கிடையே இனமான பகுத்தறிவுப் பேரொளியாக அய்யாவின் வழியில் தங்கள் எழுத்தும், பேச்சும், செயல்பாடுகளும் என்றும் தொடர என்றும் எங்கள் துணை உங்களுக்கு இருக்கும்.

தங்களை 2013-ஆம் ஆண்டு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெரிதும் மகிழ்ந்து தங்கள் உடல்நல மருத்துவ பாதுகாப்பு நிதியாக ரூ.2013/- (இரண்டா யிரத்து பதின்மூன்று ரூபாய் மட்டும்) வழங்கி மகிழ்கிறேன். வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் நிதி வழங்கிட விரும்புகிறேன்.

- மணியம் கிருஷ்ணமூர்த்தி, புலிவலம்.

தமிழ் ஓவியா said...


தலைவர்கள் சிந்திக்கட்டும்!


கும்மிடிப்பூண்டி மாநாடு பல வகைகளிலும் சிறப்பானது. கழகத்தின் புதிய மாவட்டமாக உதயமான இம்மாவட்டத்தில் இப்படி ஓர் எழுச்சி மாநாடு நடைபெற்றது என்பது சாதாரணமானதல்ல.

மூடநம்பிக்கையை முன்னிறுத்திப் பேசப்படும் கருத்துகளுக்கு பெரும் வரவேற்பு இருப்பதை அறிய முடிகிறது. மாநாட்டின் நிறைவுரையில் தமிழர் தலைவர் ஆற்றிய அந்த வகையான பேச்சுக்குப் பெரும் வரவேற்பைக் காண முடிந்தது. அரசியல் தொடர்பான தலைப்புக்குச் செல்லாமல் மக்களின் அறியாமை குறித்துச் சுட்டிக் காட்டி அவர் பேசிய பேச்சுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது.

குறிப்பாக கோயில் கருவறைக்குள் பார்ப்பனர்கள் தவிர்த்து பார்ப்பனர் அல்லாதார் செல்லக் கூடாது; அர்ச்சனை செய்யக் கூடாது - அப்படி சென்றால் சாமி தீட்டுப்பட்டு விடும் என்ற ஏற்பாட்டின் முதுகெலும்பை முறிக்கும் வகையில் கருத்துக்களை எடுத்து வைத்தார்.

கடவுள் தீட்டுப்பட்டு விடும்; தோஷம் பட்டு விடும் என்று கூறுவதே அவர்கள் கூறும் கடவுள் தன்மைக்கு முரண்பாடு இல்லையா? என்ற கேள்வி எல்லோரையும் கவர்ந்தது.

கடவுள் மறுப்பு இயக்கமான திராவிடர் கழகம் கோயில் அர்ச்சகர் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்வது ஏன் என்ற கேள்விக்கு நியாய மான அறிவு நாணயமான பதிலை வழங்கினார்.

கடவுள் இல்லை என்பது எங்கள் கொள்கை; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது மனித உரிமைப் பிரச்சினை என்று அழகான முறையில் பதில் அளித்தார்.

கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் திராவிடர் கழகத்தினர் எவரும் அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பிக்க மாட்டார்கள் என்பதையும் தெளிவுபடுத்தினர்.

இந்தப் பிரச்சினையில், ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைபற்றி, நீதியரசர் மகராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்குவது ஆகமங்களுக்கு விரோதமானதல்ல என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளதே!

அந்தக் குழுவில் திருமுருக கிருபானந்தவாரியார், காஞ்சி சங்கராச்சாரியார் போன்றவர்களும் அங்கம் வகித்தனரே!

நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும், பயிற்சிப் பள்ளி அமைத்துப் பாடங்கள் சொல்லிக் கொடுப்பதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளதே!

இதற்குமேல் என்ன ஆதாரங்கள், நியாயங்கள் தேவை? உச்சநீதிமன்றம் தேவையில்லாமல் எதற்கு முட்டுக்கட்டை போடுகிறது?

தற்போதைய அ.இ.அ.தி.மு.க. அரசு, அதன் முதலமைச்சர் (1999-2004) ஆட்சிக் கால கட்டத்தில், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பச்சைக் கொடி காட்டியதே! இப்பொழுது ஏன் இந்தப் பிரச்சினையில் அழுத்தமான அமைதியை மேற்கொள்கிறது?

இந்தப் பிரச்சினை குறித்து திராவிடர் கழகம் தவிர, மற்ற கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் ஏன் போதுமான அக்கறை இல்லை? இது என்ன ஓர் இயக்கப் பிரச்சினை மட்டும் தானா?

தந்தை பெரியார் அவர்களை ஏற்றுக் கொள்ளாத, மதிக்காத கட்சியோ, தலைவரோ தமிழ் நாட்டில் இருக்கிறார்களா? அப்படி இருக்கும்போது தந்தை பெரியார் தன் இறுதிப் போராட்டம் என்று அறிவித்த - இந்த ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஏன் அக்கறை காட்டுவதில்லை?

அதே நேரத்தில் தன் ஜாதி ஆதிக்கத்தைச் சற்றும் விட்டுக் கொடுக்க விரும்பாத நிலையில் பார்ப்பனர்கள் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திற்குச் செல்லுவதை அறிந்திருந்தும் பார்ப்பனர்பற்றிய புரிதல் நம் பார்ப்பனர் அல்லாத தலைவர்களுக்கும் அமைப்புகளுக்கும் புரியவில்லையா? தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கிடைக்கப் பெற்றால், அது இந்தியா விலேயே புரட்சிகரமான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துமே.

ஜாதி வெறியைக் கையில் எடுத்துக் கொண்டு அரசியல் நடத்தப்படுவதற்கும் முடிவு கட்டப்பட்டு விடுமே!

நிதானமாகச் சிந்திக்கட்டும்; இது மிக மிக முக்கியமான மனித உரிமைப் பிரச்சினை - அலட்சியம் காட்டுவது பொறுப்பற்ற தன்மையாகும்.

வேறு தடங்களில் எதைச் சாதித்து இருந்தாலும், இந்தப் பிரச்சினையில் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதன் மூலமே தலைவர்களும் அமைப்புகளும் எதிர்காலத்தில் மதிக்கப்பட முடியும்.

சிந்திப் பார்களாக!

தமிழ் ஓவியா said...


இறந்த பின்...


ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

தமிழ் ஓவியா said...

மதுரை, ஜூலை 9- நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண் டும் என மதுரையில் நேற்று (8.7.2013) நடை பெற்ற பொதுக் கூட்டத் தில் தமிழர் தலைவர் வலியுறுத்தினார்.

அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை, சேது சமுத்திரத் (தமிழன் கால்வாய்) திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி நாகர் கோவில் முதல் மதுரை வரை -ஒரு குழுவும் தென்காசி முதல் மதுரை வரை மற்றொரு குழுவும் தொடர் பிரச்சாரம் நடத்தி வந்தன. இந்த பிரச்சார நிறைவு விழா மதுரை டி.எம். கோர்ட் அருகே 8.7.2013 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

தமிழர் தலைவர் உரிமை மீட்பு எழுச்சி உரை

இக்கூட்டத்தில் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது: "இரண்டு பிரச்சினை களை முன்னிறுத்தி இங்கே இந்தக் கூட்டம் நடைபெறுகின்றது. ஒன்று அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பது, இன்னொன்று சேது சமுத்திரத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என்பது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பது 43 ஆண்டு களாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கை. தந்தை பெரியார் தொடங்கி, அன்னை மணியம்மை யார் தலைமையில், அதற்கு பின் என்னைப் போன்றோர் தலைமை யில் தொடர்ந்து எழுப் பப்பட்டு வரும் கோரிக்கை. கட்சிக ளுக்கு அப்பாற்பட்டு, நாத்திகமா, ஆத்திகமா என்பதற்கு அப்பாற் பட்டு, மனித நேயத்தின் அடிப்படையில் எழுப் பப்படும் கோரிக்கை. இன்னும் சூத்திரன், பஞ்சமன் என்றில்லாமல் மனிதராக இருக்க வேண்டும் என்பதற்காக எழுப்பப்படும் பிரச் சினை. இதை அலட்சி யப்படுத்தினால் ஆட்சிய திகாரமே ஆட்டம் காணக் கூடும் என்பதனை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்லர். மற்ற நாடுகளில் மனிதன் மனிதனாகப் பிறக்கிறான். ஆனால் இந்த நாட்டில் தான் மனிதன் பிறக்கும் போதே, சூத்திரானாக, பஞ்சமனாகப் பிறக்கின் றான். சாகும்போதும் சூத்திரனாக, பஞ்சம னாகத்தான் சாகின்றான். இன்னும் தீண்டாமை இருக்கிறது,ஜாதி வேற்றுமை இருக்கிறது. இன்றைக்கும் ஜாதி வேற்றுமையால்தான் திவ்யாக்களும், இளவர சன்களும் நிம்மதியாக வாழ முடியவில்லை.

தீண்டாமை, இன்னும் அரசியல் சட்டத்தில் இருக்கிறது. அரசியல் சட்டத்தில் 17ஆவது பிரிவில் தீண்டாமை நீக்கப்பட்டது (ருவேடிரஉடைவைல ஹடிடளைநன) என்று தான் இருக்கிறது: இன்னும் ஜாதி ஒழிக்கப் பட்டது என்று அரசியல் சட்டத்தில் இல்லை. அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகப் பயிற்சி பெற்றவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி சிறீ ரங்கம் கோயில், காஞ்சி காமாட்சி கோயில் போன்ற இடங்களில் அர்ச்சகர்களாக நியமிக் கப்பட வேண்டும். ஜாதி இழிவு நீங்கும் வரை விட மாட்டோம். சட்டப்படி யாக போராடுவோம்! அறப் போராட்டமாக போராடுவோம். ஒரே நாளில் முடியும் போராட்டமாக அல்ல பல கட்டங்களாக போராடுவோம் உறுதி யாக வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்தார். சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் ஆனதாக சொல்லப்பட்டும்கூட இப்பொழுதுதான் ஒரு பிற்படுத்தப்பட்டவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (சதாசிவம்) ஆகியிருக் கிறார். அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வேண்டும் என்று நீதியரசர் பி. சதா சிவம் அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார் கள். அதை நாங்கள் வரவேற்கிறோம் என்று தமிழர் தலைவர் பேசி னார். மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறினார்.

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத்தின் அடுத்த கட்ட கிளர்ச்சி

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு

திராவிடர் கழகத்தின் அடுத்த கட்ட கிளர்ச்சி

இந்த நாட்டினுடைய 65 ஆண்டுகால வரலாற்றில், முதன்முறையாக தமிழ்நாட்டைச் சார்ந்த, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதியரசர் சதாசிவம் அவர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வருகின்ற 19 ஆம் தேதி பதவியேற்க விருக்கிறார். ஆனால், ஒரு கொடுமை என்னவென்றால், அவர் அந்தப் பதவியில் 9 மாதங்கள்தான் இருப்பார்.

இந்த 9 மாதத்திலும் அய்ந்து மாதங்கள் வரவேற்பு; மீதி நான்கு மாதத்தில் பிரிவு உபசார விழா; இதிலேயே பதவிக்காலம் முடிந்துவிடுமே! ஆனால், அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்; ஏர் பிடித்த உழவர் அவர்; ஈரோட்டு மண்ணிலே பிறந்த ஒருவர், முதன்முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வருவதற்கு முன்னாலேயே, நீதிபதிகள் நியமனங்களில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு தேவை என்று கூறியுள்ளார். இதுவரை மாவட்ட நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகள் நியமனங்களில் மட்டும்தான் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. முதல் முறையாக பெரியார் பிறந்த மண்ணிலே இருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வந்திருக்கிறார்.

அவர் பதவி ஏற்பதற்கு முன்பு உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்திலும் இடஒதுக்கீடு அமலாக வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தார். இதற்காகத்தான் திராவிடர் கழகத்தினுடைய அடுத்த கிளர்ச்சி! அதில் ஒன்றும் சந்தேகமில்லை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்தார்.

(8.7.2013 அன்று மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையிலிருந்து...)

தமிழ் ஓவியா said...


தலைமைச் செயற்குழுவில் கழகத் தலைவரின் பன்மணித் திரள்கள்!

புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

1. தென்மாவட்டங்களில் ஜாதி தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் (அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை) மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது. அவற்றில் கலந்துகொண்டு உரையாற்றிய தோழர்களுக்கும், மந்திரமா? தந்திரமா? கலைஞர்களுக்கும், ஒருங்கிணைத்த வர்களுக்கும், கூட்டங்களைச் சிறப்பாக ஏற்பாடு செய்த கழகப் பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும் பாராட்டுகள் - நிறைவு விழா மதுரைப் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பான ஏற்பாடுகள் - பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர், மகிழ்ச்சி!

2. கும்மிடிப்பூண்டி மாநில மாநாடு திட்டமிட்ட முறையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுக்கும், ஒருங்கிணைத்தவர்களுக்கும் சிறப்பான பாராட்டுகள் - எனக்குப் பெரும் அளவில் மனநிறைவை அளித்த மாநாடு இது!

3. மாணவரணி, இளைஞரணி, மகளிரணி, தொழிலா ளரணி இவற்றின் செயல்பாடுகள் தனித்தனியாக நடை பெற்று, மேற்கொள்ளப்பட்ட பணிகள் தலைமைக்குத் தெரிவிக்கப்படவேண்டும். நகராட்சி, மாநகராட்சிகளில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் இயக்கம் வலிமை பெற அவ்விரு அணிகளும் செயல் திட்டத்தோடு சிறப்பாகப் பணியாற்றிட வேண்டும்.

4. தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி மாண வரணி, இளைஞரணி, மகளிரணி சார்பில் தனித்தனியே நாடு தழுவிய அளவில் கருத்தரங்கம் நடைபெறவேண்டும். அவற்றின் முக்கிய பொருள்: ஜாதி ஒழிப்பு, மகளிர் உரிமை, சமூகநீதி.

5. மன்றல் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளன. இயக்கத்தின் நடவடிக்கைகளைப் பல தரப்பினரும் பாராட்டுகின்றனர். சென்னை, திருச்சி, மதுரை, கோவையில் நடைபெற்றுள்ளதைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் நெல்லையில் நடைபெறவுள்ளது. ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் ஒரு பக்கம், அதற்கான ஆக்க ரீதியான செயல்பாடுகள் இன்னொருபுறம் - அதுதான் நாம் நடத்தும் மன்றல் நிகழ்ச்சி.

6. மண்டலத் தலைவர்கள், செயலாளர்களுக்கென தனியே ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டு, அவர் களின் பணிகள் வரையறுக்கப்படவேண்டும் (இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும்).

7. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் பல கட்டங்களில் நடைபெறும். ஒவ்வொரு ஊரிலும் இந்தப் போராட்டம்பற்றி பொதுமக்களுக்குத் தெரியும் வண்ணம் - அவர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் சுவர் எழுத்துகள், துண்டறிக்கைகள், கழகம் வெளியிட்ட கையடக்க ஆவண நூல் பரப்புதல் (நன்கொடை ரூ.5 மட்டும்தான்) என்று புது உத்வேகத்தோடு பணிகள் நடைபெற்றாகவேண்டும்.

8. இந்தப் போராட்டத்திற்கு எந்தப் பக்கத்திலிருந்தும் எதிர்ப்புக் கிடையாது. ஆளும் கட்சி - எதிர்க்கட்சி, ஆத்தி கம் - நாத்திகம் என்பது போன்ற எந்தப் பிரச்சினையும் இந் தப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் கிடையவே கிடை யாது. ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து நடத்தலாம்.

9. பணி செய்பவர்களுக்கு இயக்கத்தில் உரிய இடம் அளிக்கப்பட்டுப் பயன்படுத்திக் கொள்ளப்படும். பணிதான் அளவுகோலே தவிர மற்றவையல்ல.

10. இயக்கத்தைப் பனைமரத்துக்கு ஒப்பிட்டுக் கூறுவார் தந்தை பெரியார். தண்ணீர் ஊற்றாமலேயே வளரக்கூடியது! காரணம், நம் மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பணிகளை சுயநலமின்றி, எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி, அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செய்யக்கூடிய இயக்கம் திராவிடர் கழகம் - தொண்டர்கள் திராவிடர் கழகத்தினர்.

11. என்னைப் பொறுத்தவரை உடல் உபாதைகள் பல இருப்பினும், கழகத்தின் செயல்பாடுகள் எனக்கு உற்சாகம் என்கிற டானிக்கை அளிக்கின்றன! ஓய்வு குறைகிறது - நல்ல ரத்த ஓட்டம் ஏற்படுகிறது - எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும்தான்!

- பன்மணித் திரளாக மேற்கண்ட கருத்துகளை சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எடுத்துக் கூறினார் (9.7.2013).

தமிழ் ஓவியா said...


இலங்கையில் 13-ஏ சட்டம் தப்புமா?


கொழும்பு, ஜூலை 10- இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவசங்கரமேனன் தலைமையில் இலங்கை சென்ற குழு இலங்கை அதிபர் ராஜபக் சேவைச் சந்தித்து 13-ஏ திருத்தச் சட்டம் செயல் படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடத்தப் பட்ட போர் முடிவுக்கு வந்த பின்பு, முகாம்களில் தங்க வைக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வு பணிகள் துவங்கின. மறுவாழ்வு திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி செய்து வருகிறது.

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு விரைவில் தேர்தல் நடத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தியா இலங்கையின் 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி, தமிழர்கள் வசிக்கும் மாகாண கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அந்தத் திருத்தத்தை மறு ஆய்வு செய்து அதிகாரங்களை குறைக்க இலங்கை அரசு முயற் சித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் தலை மையில் 6 பேர் குழு கொழும்பு வந்துள்ளது. கொழும் பில் அதிபர் ராஜபக்சேவை மேனன் சந்தித்து பேசி னார். அப்போது, இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் மறுசீரமைப்பு திட்டப்பணிகள் குறித்து விவாதித்தனர். இதன்பின்னர், இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் தமிழர்கள் உள்பட அனைத்து மக்களும் சமமாகவும், கண்ணியமாகவும் நடத்தப் பட வேண்டுமென இந்தியா விரும்புகிறது. இந்த அடிப்படையில், உலக நாடுகளுக்கு இலங்கை அளித்த உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும். 13 ஆவது திருத்தத்தையும் கடந்து சிறப்பான அரசியல் தீர்வை விரைவில் காண வேண்டுமென மேனன் இலங்கை அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு கூட்டாக செயல்படுவது என முடிவு செய்து, இதற்காக முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சிவசங்கர் மேனன், இலங்கை ராணுவ அமைச்சர் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவு ராணுவ அமைச்சர் முகமத் நசீம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு: கழக முயற்சிக்கு முதல்கட்ட வெற்றி!

94 பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாகப் பணி நியமனம் செய்க!

சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

சென்னை, ஜூலை 10- ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிக்கை வெளியாகும் முன்பே பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரி பார்ப்பு முடிந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவை யில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பின் மூலம் வழக்குத் தொடர்ந்த 94 பட்டதாரிகள் பலன் பெறுவர்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலி யாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2010 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின்படி 32 ஆயிரம் பட்டதாரிகள் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்காக அழைக்கப்பட்டனர்.

அனைத்து மாவட்டங்களிலும் 12.5.2010 முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்றன. பணி நியமன ஆணைக்காகக் காத்திருந்த அவர்கள் யாருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட வில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே இனி ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று அரசு கூறிவிட்டது.

இதனை எதிர்த்து டி.எஸ். அன்பரசு உள்ளிட்ட 70 பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அவர்களின் மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். அதனை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உயர்நீதி மன்றத்தின் முதன்மை அமர்வு தள்ளுபடி செய்து விட்டது.

இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி அவர்கள் 70 பேரும் உயர்நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்தனர்.

அதேபோல் என்.பரந்தாமன் உள்ளிட்ட வேறு 24 பேர் தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். இதனை எதிர்த்து அவர்கள் அனைவரும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

ஆக 70 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவும், பின்னர் 24 பேர் தனியாக தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் நீதிபதிகள் எலிபி தர்மராவ், எம்.வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு தாரர்கள் 94 பேரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று செவ்வாய்க்கிழமை தீர்ப் பளித்தனர்.
தீர்ப்பு விவரம் வருமாறு:

2010-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரி பார்ப்புப் பணிக்கு மனுதாரர்களின் பெயர்களை வேலைவாய்ப்புத் துறை ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி அவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டுள்ளனர். அன்றைய நிலவரப்படி ஆசிரியர் தகுதித் தேர்வு எதுவும் எழுதாமலேயே அவர்கள் ஆசிரியர் பணி நியமனத்துக்கான முழுத் தகுதியையும் பெற்றி ருந்தனர்.

இந்நிலையில் ஆசிரியர் பணி நியமனத்துக்கு இனி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என்ற அறிவிக்கையை 23.8.2010 அன்று ஆசிரியர் கல்விக் கான தேசிய கவுன்சில் வெளியிட்டது. எனினும் அதில் ஒரு விதிவிலக்கும் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிக்கை வெளியாகும் முன்னரே ஆசிரியர் பணி நியமனத்துக்கான அறிவிப்புகள் ஏதேனும் வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற் றிருந்தால், அந்த பணி நியமனங்களை 2001 ஆம் ஆண்டின் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் விதிமுறைகளின்படி மேற்கொள்ளலாம் என்ற அந்த விதிவிலக்கில் கூறப்பட்டிருந்தது.

ஆகவே, இந்த வழக்கில் தொடர்புடைய 94 பேரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவை யில்லை. எனினும் தற்போது அவர்களுக்கு பணி நியமனம் வழங்கிட காலியிடங்கள் இல்லை என்று அரசு தலைமை வழக்குரைஞர் கூறியுள்ளார்.

ஆகவே, எதிர்காலத்தில் காலியிடங்கள் உருவாகும் போது இவர்கள் அனைவரையும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என கட்டாயப்படுத்தாமல் ஆசிரியர் பணியில் நியமித்திட வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

கடந்த 5.7.2013 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக மாணவரணி நடத்திய சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...


பயத்தால்...


அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததைப் பயத்தால் நம்பு கிறவன் பக்குவமடைந்த மனிதனா கான்.
(விடுதலை, 20.3.1956)

தமிழ் ஓவியா said...போர்ச் சங்கு!


திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் நேற்று கூடி போர்ச் சங்கு ஊதிவிட்டது.

தமிழ்நாட்டில் தமிழன் கட்டிய கோவில்களில் தமிழன் அர்ச்சகனாக முடியாதாம் - கூடாதாம் - கருவறைக்குள் நுழைந்து தமிழர்கள் அர்ச்சனை செய்தால் கடவுள் சக்தி வெளியே தலைதெறிக்க ஓடிவிடுமாம். எஞ்சி இருப்பது கல்லோ, செம்போ அவ்வளவுதானாம்.

இவ்வளவுக்கும் அந்தக் கோவிலைக் கட்டியதில் பார்ப்பனர்களுக்கு எந்தவிதப் பாத்தியதையும் இல்லை. ஒரு செங்கல்லைத் தூக்கிக் கொடுத்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் கோவிலுக்குள் இருக்கும் அந்தக் கடவுள் சிலையைச் செய்தவன்கூட சிற்பியாகிய தமிழன்தான்.

கோவிலைக் கட்டி கோவிலில் கருவறையையும் உருவாக்கி, அதற்குள் வைக்கவேண்டிய சாமி சிலை யையும் வடித்து, கோவிலுக்கு குடமுழுக்கு என்று அதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்து முடித்த நிலையில், கும்பத்தில் ஏறுவதற்குச் சாரம் அமைத்துக் கொடுத்து, கும்பத்தில் ஊற்றவேண்டிய பால் உள்பட அனைத்துப் பொருள்களையும் கொண்டுவந்து கொடுப்பவன் எல்லாம் தமிழன்! தமிழன்!! தமிழன்தான்!!!

அதுவரை எள் மூக்கு முனை அளவுகூட எந்தவித உதவியும் செய்யாத பார்ப்பனர் கும்பத்திற்கு அபிஷேகம் செய்து, தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் - சம்பந்தமே இல்லாத புரியாத சமஸ்கிருத மந்திரங்களை ஓதிய அக்கணமே கோவிலுக்கும், தமிழனுக்கும் எந்தவிதமான ஒட்டுறவும், சம்பந்தமும் இல்லாமல் போகிறது.

இதைவிட கொடுமையான சூழ்ச்சி உண்டா? மண்ணின் மைந்தர்களுக்கு இதைவிட அவமானம் உண்டா?
எந்த அளவுக்குக் கொடுமை என்றால், அந்தக் கடவுள் சிலைக்குக்கூட பூணூல் மாட்டி வைப்பதுதான் - காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஏழுமலையானுக்கு மூன்றரை கிலோ தங்கத்தினால் ஆன பூணூலை மாட்டியது மறக்கப்படக் கூடியதுதானா?

கோவில் என்பது பார்ப்பன உயர்ஜாதி ஆணவத்தை, வருணாசிரமத்தை பாதுகாக்கும் ஏற்பாடு அல்லாமல் வேறு என்னவாம்!

உலகத்தில் வேறு எங்கேயாவது - சொந்த நாட்டுக் காரன் இவ்வளவுக் கேவலமாக அவமதிக்கப்படு வதுண்டா? அப்படி அவமதித்தால் மயிலே மயிலே இறகு போடு! என்று யாசகம் கேட்டுக்கொண்டுதான் இருப் பானா? மனு போட்டுக் கொண்டுதான் இருப்பானா?

மனிதனுக்கு முதலாவது உணர்வு என்பது சுய மரியாதைதானே. அதற்கே சவால் என்றால், அதனைக் கண்டு கொண்டு கைகளைக் கட்டிக்கொண்டு நிற்க முடியுமா?

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று திருக்குறளைவிட சுருக்கமாக மனிதனைப் படம் பிடித்துக் காட்டிவிட்டாரே தந்தை பெரியார்.

ஏதோ ஆகமமாம், அதில் சொல்லப்பட்டுள்ளதாம் - பார்ப்பனர் அல்லாதவன் கருவறைக்குள் சென்றால் கடவுள் தீட்டுப் பட்டுப் போய்விடுவாராம். யாரால் எழுதப்பட்டது அந்த ஆகமங்கள்? அவர்களாகவே எந்தக் காலத்திலோ சூழ்ச்சியாக எழுதி வைத்துக்கொண்டு அதனைப் பூச்சாண்டியாகக் காட்டி நம்மை மிரட்டு கிறார்கள் என்றால், அவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள தமிழர்கள் எல்லாம் சோற்றால் அடித்த பிண்டங்களா?

தன்மான உணர்வினை தமிழர்களுக்கு ஊட்டிய தந்தை பெரியார் அவர்களால், தம் வாழ்நாளில் இறுதியாக அறிவிக்கப்பட்ட போராட்டம் இது.

இன்றைக்கு 43 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக் கப்படுபவர்கள் சட்டம் கொண்டுவந்தாலும், அதனை மலம் துடைக்கும் காகிதமாகப் பார்ப்பனர்களும், நீதிமன்றங்களும் நினைப்பது என்றால், இதனை எப்படி அனுமதிக்க முடியும்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி. ஆத்திகம் - நாத்திகம் என்கிற பிரச் சினைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பொதுப் பிரச்சினை இது.

எதிர்க்கக் கூடியவர்கள் பார்ப்பனர்களும், அவர் களின் ஆதிக்கத்தில் இருக்கக் கூடிய நீதிமன்றமும்தான்.
திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட மூன்று கட்டப் போராட்டங்களுக்கும் அனைத்துத் தமிழர்களும் ஓரணியில் போரணியாக நின்று போர்ச் சங்கு ஊதிப் புறப்படுவோம் - வாரீர்!

தமிழர்களின் பழம்பெருமை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்; இப்பொழுது கோவில்களில் நாம் மீட்கும் இனவுரிமையில்தான், இழிவை ஒழிக்கும் உரிமையில் தான் தமிழர்களின் உண்மையான வீரதீரமும், தன்மான மும் உண்மையில் இருக்கிறது!

மறவாதீர்! மறவாதீர்!! முதல் கட்டப் போராட்டம் ஆகஸ்ட் முதல் தேதியில் - கழக மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!! ஆர்ப்பரித்துக் கிளம்புக அரிமா சேனையே!

தமிழ் ஓவியா said...


ஆகமங்களில் இடைச் செருகல் - 2


எதற்கு எடுத்தாலும் ஆகமங்கள் ஆகமங்கள் என்று கூறி கோயில்களைத் தங்கள் கைக்குள் அடக்கி வைத்துள்ளனரே பார்ப்பனர்கள்; அந்த ஆகமங்களில் இடைச் செருகல் எப்படி எல்லாம் நடந்துள்ளன என்று நீதிபதி எஸ். மகராஜன் தலைமையில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை (பக்கம் 20-21) என்ன கூறுகிறது? படியுங்கள்.

1. ஆகமங்களில் காமிகம், காரணம், அஜிதம், சகஸ்ரம், சுப்ரபேதம், ரவுரவம், மகுடம், மதங்கம், கிரணம் வாதுளம் என்பவற்றின் பகுதிகள் சமஸ்கிருதத் தில் அச்சில் வெளி வந்துள்ளன. 28 ஆகமங்களில் புதுச்சேரி பிரஞ்சு ஆராய்ச்சி நிலையத்தில் (குசநஉ ஐளேவவைரவந டிக ஐனேடிடடிபல) 23 ஆகம ஏட்டுச் சுவடிகள் இதுவரை கிடைத்துள்ளன. உபாகமங்களில் பவுஷ்கரம், பிருகேத் திரம், குமாரதந்திரம் என்பனவும் அச்சாகியுள்ளன.

2. கிடைக்கின்ற ஆகம ஏட்டுச் சுவடிகள் யாவும் நெடுங்காலத்துக்கு முன்னமே தொடங்கி, ஒன்றைப் பார்த்து ஒன்றை எழுதித் தொடர்பாக வந்தன வாகும். இவற்றைப் பெரும்பாலும் சிவாச்சாரியார்களே வைத்திருந் தார்கள். காலப் போக்கில் ஒரு ஏடு சிதிலமாகிப் போகின்ற நிலையில், ஒருவர் அதைப் பார்த்து மற்றொன்றை எழுதி வைத்துக் கொண்டபோது, தான் அவசியம் என்று கருதியவற்றையும் புதிதாக எழுதிச் சேர்த்துக் கொண் டனர் என்று நினைக்க இடமுண்டு. ஆகவே நமக்கு இன்று கிடைக்கின்ற ஆகமச் சுவடிகள் மூலச் சுவடிகள் அல்ல. வழிபாடு என்பது மாறிக் கொண்டே வருகின்ற ஒரு நெறி. அதைக் கூறுகின்ற ஆகமமும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஓர் உதாரணம் கூறலாம்.

தமிழ் ஓவியா said...

3. மாரியம்மன் என்ற தேவதை வழிபாடு சிறுதேவதை வழிபாட்டைச் சேர்ந்தது. எந்தச் சிவாயலத்தின் உள்ளும் மாரியம்மன் சிலை வைப்ப தில்லை. மாரி ஒரு காவல் தெய்வம். ஊரின் வெளியெல்லையில்தான் இதற்குக் கோயில் உள்ளது. ஆனால் சிவ வழிபாட்டைச் சொல்லுகின்ற விரிந்த ஒரு நூல் ஆகிய காரணாக மத்தில் இன்றைய அச்சுப் புத்தகத்தில் மாரிப் பிரதிட்டா விதி என்ற ஓர் அத்தியாயம் உள்ளது. (காரணாகமம், கொன்னூர் சண்முகசுந்தர முதலியா ரால் 1920ஆம் ஆண்டில் அச்சிடப் பட்டது) மாரிப் பிரதிட்டை சிவாகமத் தில் சொல்ல வேண்டிய பொருளல்ல. ஆயினும் பிற்காலத்தில் ஒரு சிவாச் சாரியார் தம் கைச்சுவடியில் இதை எழுதி வைத்துக் கொள்ள இதுவும் காரணாகமத்தின் ஒரு பகுதியாக இடம் பெற்றுள்ளது. இது இடைச் செருகல் என்பது தெளிவு. இந்தப் பதிப்பாளர் காரணாகமத்தில் இறுதியில் பத்திர காளி உற்சவம், நாகப்பிரதிட்டை என்ற இரண்டு அத்தியாயங்கள் (108 சுலோ கங்கள்) இந்த ஆகம ஏட்டுச் சுவடியில், வேறு இடத்திலிருந்து எடுத்து சேர்க்கப்பட்டிருக்கிறதைக் கண்டு, அவற்றை ஓர் அநுபந்தமாய் அச்சிடுவ தாகச் சொல்லியிருக்கின்றார். ஆனால் இவைகளும் காரணாகமத்தின் ஒரு பகுதி என்றே மற்றவர்கள் கருது வார்கள். இதுபோன்ற வேறு சில பகுதிகளும் இருக்கக் கூடும். நமக்கு இன்று வேறுபாடு தெரியாமல் எல்லாம் ஒன்றாகி விட்டன. மாரி என்ற தமிழ்ப் பெயர் இன்று மகாமாரி என்றும், வடமொழியில் சீதலாதேவி என்றும் பெயர் பெற்று விட்டது.
4. காமிகாகமம் ஸ்நான விதிப் படலம் 109ஆவது சுலோகத்தில் புத்தர் (சாக்கியர்), சமணர் (நிர்கந்தர்) ஆகி யோரின் நிர்மால்யத்தைப் புசிப்பவர், பிற மதத்தவர் முதலியோரால் தீண்டப்பட்டால், ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இக்கருத்தையே சில ஆகமங்கள் சமண பௌத்த சமயங்களைக் குறை கூறுவதாக எஸ்.எஸ். சூரியநாராயண சாஸ்திரியும் தெரிவித்துள்ளார். (சிகண் டரின் சிவாத்துவைதம்) தமிழ்நாட்டில் இம்மதங்களின் தொடர்பு சுமார் கி.மு. 3-2ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டது என்று ஆன்றோர் கருதுகின்றனர்.

இவர்கள் பற்றிய குறிப்பு ஆகம நூலில் இடம் பெறுகிறது என்றால், அக்கருத் துக்கள் இன்னும் சில நூற்றாண்டுகள் பிற்பட்டே இடம் பெற்றிருக்க வேண்டும். அதாவது சமணர் மதுரையில் ஆதிக் கம் பெற்றிருந்த காலமாகிய கி.பி. 3-6ஆம் நூற்றாண்டுகளில் இத்தகைய விதிகள் வகுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது. ஆனால் காமி கம், காரணம் போன்ற பிரதானமான சில ஆகமங்கள் பல காரணங்களால் கி.மு. 6-5 நூற்றாண்டுகளுக்கு முற் பட்டிருக்க வேண்டும் என்று கொள்ள இடமிருக்கிறது. ஆகவே காமிகாகமத் தில் இப்படி ஒரு விதியை நாம் இப்போது காணும்போது, இது மிகவும் பிற்பட்ட காலத்தில் ஆகமத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றே முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆதலால் ஆகமங்களில் இடைச்செருகல் நிகழ்ந்துள்ளன என்று எண்ணுவதற்கு இதுவும் மற்றமொரு சான்றாகிறது.

5. வைணவ சமயத்தில் பாஞ்ச ராத்திர ஆகமம் ஈசுவர சம்மிதையில் 11ஆவது அத்தியாயத்தில் காணும் ஒரு கருத்து இங்குக் கருதத் தக்கது.

ருக் யசுஸ் சாம வேதாம்ஸ் படத்பி: பிருஷ்டத: சிதை:

காயத் பி: அக்ரே தேவஸ்ய திரமிடீம், சுருதிம் உத்தமாம்
(சுலோகம் 231, 232)

இதன் பொருளாவது, ரிக் யஜுர் சாம வேதங்களைப் பாராயணம் செய்பவர்கள் திருமாலின் பின்புறத்தில் இருந்து கொண்டு சொல்ல வேண் டும்... உத்தமமான திராவிட வேதமாகிய திவ்வியப் பிரபந்தங்களை அனுசந்திப் பவர்கள் திருமாலுக்கு முன்புறமாக இந்து அனுசந்திக்க வேண்டும். இதிலிருந்து திவ்வியப் பிரபந்தம் பாடிய ஆழ்வார்கள், திருவாய்மொழி பாடிய நம்மாழ்வாரின் காலத்துக்குப் பிறகு (அதாவது 9ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்துக்குப் பிறகு) இந்த ஈசுவர சம்மிதை தொகுக்கப் பெற்றி ருக்க வேண்டும். இது ஆகமங்களில் அவ்வப்போது பக்த சமூகத்தின் தேவைக்கு ஏற்ப மாறுதல் செய்யப் பெற்று வந்தன என்பதும், அவற்றில் சொல்லப்பட்ட கருத்துக்கள் எல்லாம் பழமையானவை அல்ல என்பதும், அவற்றில் இடைச் செருகல்கள் நிகழ்ந் திருக்கின்றன என்றும் தெளிவா கின்றன. இதிலிருந்து வைணவ ஆகமங்கள் வேதத்தைவிட திராவிட வேதத்துக்கு அளித்திருக்கின்ற ஏற்றம் நன்கு புலப்படும்.

6. ஒரே ஆகமத்திற்குப் பல இடங் களிலிருந்து கிடைக்கின்ற வெவ்வேறு பிரதிகள் வெவ்வேறான அத்தியாயங் களையும், சுலோகங்களையும் பெற்றி ருக்கக் காண்கிறோம். இதனால் மூல ஆகமம் பலர் கைப்பட்டுப் பலவிதமாக மாறி வந்திருக்கின்றது என்றும் உறுதியாகிறது. (பிருகேந்திராகமப் பதிப்புகள்.)

தமிழ் ஓவியா said...


7. ஆகமங்களை உலகுக்கு வெளிப்படுத்திய ரிஷிகளுடைய குலத்தை ஆராய்ந்தால், இடைச் செருகல் இருந்திருக்கும் என்பதற்குச் சான்று கிடைக்கிறது. சிவபெருமான் தமது ஐந்து முகங்களிலிருந்தும், 28 ஆகமங்களை, ரிஷிகளுக்கு உபதேசித் தார் என்று காமிகம் முதலான பல ஆகமங்களில் சொல்லப் பெற்றுள்ளது. மாணிக்கவாசகரும் மற்று அவை தம்மை மகேந்திரத்திலிருந்து உற்ற ஐம்முகங்களால் பணித்தருளியும் என்று கூறுமிடத்து, இக்கருத்தை ஏற்றே பாடுகின்றார். இவ்வைத்து முகங்களாவன: சத்தியோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகியவை. இவற்றுள் முதல் நான்கு முகங்கள் ஒவ்வொன்றும் ஐந்து ஆகமங்கள் வீதம் 20 ஆகமங்களையும், ஈசான முகம் 8 ஆகமங்களையும், ஆக 28 ஆகமங்களை உபதேசித்ததாக ஆகம வரலாறு. இந்த முகங்களில் உபதேசம் பெற்ற ரிஷிகள் முறையே கௌசிகர் காசியபர், பாரத்து வாஜர் கௌதமர், அகஸ்தியர் என்போர். இதன் விளக்கத்தைக் காமிகம், காரணம் முதலியவற்றின் தந்திராவ தாரப் படலத்தில் காணலாம். இவர்கள் பாரத்துவாஜர் பிராமணர். ஏனை நால்வரும் பிராமணர் அல்லர். காசியபர் (கொல்லர் மரபு), கௌதமர் (நாவிதர் மரபு), அகத்தியர் (வேடர் மரபு), இவ்வாறு பிராமணர் அல்லாத, அல்லது சிவப்பிராமணர் அல்லாத வேறு குலங்களில் பிறந்த இந்த ரிஷிகளே உபதேசம் பெற்று உலகத்தில் வெளிப்படுத்தினார்களே அன்றி, சிவப்பிராமணர்கள் அல்லர். இவ்வாறு சொல்லும் பகுதிகள் பிற்காலத்தில் சிவாச்சாரியர்களால் சேர்த்துக் கொள்ளப்பட்டன என்று நினைக்க இடமிருக்கிறது. ஆகமங்களில் இடைச் செருகல் நிகழ்ந்திருக்கிறது என்று கருதுவதற்கு இதுவும் ஓர் ஆதார மாகும்.

தமிழ் ஓவியா said...


தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரையாடல் கூட்டம்


டெசோ தலைவர் கலைஞர் தலைமையில்
தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ)
கலந்துரையாடல் கூட்டம்

டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 16.7.2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணியளவில் தமிழ்ஈழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரை யாடல் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

தமிழ் ஓவியா said...


அரசியல்வாதிகளின் அடி வயிற்றைக் கலக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு!


கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றால் பதவிகள் பறி போகும்!

புதுடில்லி, ஜூலை 11-கிரிமினல் வழக்குகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவியில் நீடிக்க முடி யாது. மேல்முறையீடு செய்தாலும் பதவியில் நீடிக்கும் தகுதி அவர் களுக்கு கிடையாது. உடனடியாக பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கிரிமினல் வழக்கு களில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதிக் கப்பட்டவர்கள் தேர் தலில் போட்டியிடும் தகுதியை இழக்கின்றனர். தண்டனை காலம் முடிந்த பிறகும், அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர் தலில் அவர்கள் போட் டியிட முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 8 (3)இல் கூறப்பட்டுள்ளது. அதே நேரம், பதவியில் இருக் கும் எம்.பி., எம்எல்ஏ.க் களுக்கு நீதிமன்றங்கள் தண்டனை விதித்தாலும் கூட, 3 மாதங்களுக்கு அவர்களை தகுதியிழப்பு செய்யக் கூடாது. அதற் குள் மேல் நீதிமன்றங் களில் அவர்கள் மேல் முறையீடு செய்தால், அந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் தகுதியிழப்பு செய்யக் கூடாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 8(4)இல் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், லில்லி தாமஸ் என்ற வழக் குரைஞரும், லோக் பிரஹரி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயலாளர் என்.சுக்லா வும், மக்கள் பிரதிநிதித் துவ சட்டப் பிரிவுகள் 8 (3), 8(4)இல் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தண் டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை பதவியில் நீடிக்க அனு மதித்தால், அரசியலில் குற்றவாளிகளின் ஆதிக் கம் மேலோங்க ஊக்கம் அளித்ததுபோல் ஆகி விடும். மேலும், தண் டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை பதவியில் நீடிக்க அனு மதிப்பது, அரசியல் சட்டத்துக்கு விரோத மானது. எனவே, நீதிமன் றங்களில் தண்டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவியை உடனடியாக பறிக்கும் படி உத்தரவிட வேண் டும் என்று மனுவில் அவர்கள் கோரினர்.

நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், எஸ்.ஜே. முகோபாத்யா ஆகி யோர் அடங்கிய டிவி ஷன் அமர்வு இதை விசாரித்து நேற்று அளித்த தீர்ப்பில், குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., எம்எல்ஏ.க்கள் பதவியில் நீடிக்க கூடாது. மேல் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்தாலும் பதவியில் நீடிக்க முடி யாது. தண்டனை விதிக் கப்பட்ட தினத்தில் இருந்தே, அவர்கள் தகுதியிழப்பு பெற்று விடுவார்கள். இந்த தீர்ப் புக்கு முன்பாக தண் டனை பெற்று, மேல் முறையீடு செய்துள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த தீர்ப்பு பொருந் தாது என்று உத்தர விட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக் கும், கிரிமினல் வழக்கு களில் சிக்கியுள்ள எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கும், உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு அதிர்ச்சியை அளித் துள்ளது.

தலைவர்களின் கருத்துகள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி பல்வேறு கட்சி தலைவர்கள் கூறிய கருத்து:

கபில்சிபல் (மத்திய சட்ட அமைச்சர்): முத லில் தீர்ப்பை முழுமை யாக படிக்க வேண்டி யிருக்கிறது. அதன் பிறகு, இந்த தீர்ப்பால் அரசி யலில் ஏற்படும் பாதிப் புகளை பார்க்க வேண் டும். தீர்ப்பை மறுபரி சீலனை செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது உட் பட அனைத்து அம்சங் கள் பற்றியும் அரசியல் கட்சிகள் உட்பட அனைவரிடமும் கருத்து கேட்ட பிறகு தெரிவிக் கப்படும்.

ரவிசங்கர் பிரசாத் (பாஜ தகவல் தொடர் பாளர்): அரசியலை தூய்மையாக்கும் எந்த நடவடிக்கையையும் பாஜ ஆதரிக்கும்.

டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர்): இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் இதை எவ்வாறு கையாள போகின்றன என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

162 எம்.பி.க்கள் பதவிக்கு ஆபத்து

நாடாளுமன்றத்தில் தற்போது எம்.பி.க்களாக உள்ள 543 பேரில், 162 பேர் மீது நீதிமன்றங் களில் கிரிமினல் வழக் குகள் நடந்து வரு கின்றன. இவர்களில் 76 பேர், 5 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கக் கூடிய குற் றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட் டுள்ளது. அதேபோல், நாடு முழுவதும் 1,460 எம்எல்ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 30 சதவீதம், 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்க கூடியவை. இந்த வழக்கு களில் இவர்களுக்கு எதிராக தீர்ப்பு அமை யும் பட்சத்தில் இவர் களின் பதவி உடனடி யாக காலியாகி விடும்.

தமிழ் ஓவியா said...


எந்த தேசத்திலும்...இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனையற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றமும் இங்கு தாண்டவமாடுகின்றன.
(விடுதலை, 30.4.1958)