Search This Blog

21.7.13

ஆரியர்களே கொக்கரியுங்கள்! கொக்கரியுங்கள்!

ஆரியர்களே கொக்கரியுங்கள்! கொக்கரியுங்கள்!!


"கூவுங்கள் ஆரியர்களே, கொக்கரியுங்கள்! தமிழரின் முயற்சிக்கெல்லாம் தடை செய் யுங்கள். தமிழ் மொழியைத் தழைக்க விடாதீர்கள். தமிழிலே வட மொழியை, ஆங்கிலத்தை, இந் தியைக் கலக்கிக் குழப்புங்கள். தமிழன் தன்னைத் தமிழன் என்று ரைத்தால் சீறுங்கள், தமிழ் மொழி யில் இசை இருக்கட்டும் என்றால் எதிர்த்துப் பேசுங்கள். கலைச் சொற் ளுக்கு வடமொழியே இருக்க வேண்டும் என்று வாதாடுங்கள். தமிழனைத் தாழ்ந்த ஜாதி என்று சொல்லுங்கள். கோயிலிலும், குளத்திலும் இழிவுபடுத்துங்கள்.
சாப்பாட்டு விடுதிகளிலும் சாக்கடை இடத்தையே தமிழருக்குத் தாருங்கள்.  உமது ஆணவச் செயலை தமிழ் வாதத்தை ஆரியத்தை நாம் வரவேற்கிறோம்.
ஆம்! உமது எதிர்ப்பு வளர வளரத்தான் தமிழரின் உள்ளத்தில் வேதனை பிறக்கும். வேதனை வளர்ந்தால் அவன் வேல்பட்ட புலி போலச் சீறுவான்... அந்தச் சீற்றம் கிளம்பி விட்டால் நாங்கள் ஜெயமுண்டு பயமில்லை மனமே! என்று பாடும் காலம் பிறக்கும். தமிழ்நாடு தமிழருக்கே என்ற எண்ணம் உருவமாக அமையும் காலம் தோன்றும். சேரனும், சோழ னும் செந்தமிழ் நாட்டில், தமிழ ராட்சி தோன்றும், ஆகவே ஆரியர் களே, ஆரம்பியுங்கள் உங்கள் போரை என்று நாம் ஆரியரை அறைகூவி அழைக்கின்றோம்!"
----------------------------------------------------------(நூல்: தமிழரின் மறுமலர்ச்சி)

என்று அறிஞர் அண்ணா கூறியது இப்பொழுதும் பொருந்துகிறது. இந்த வார துக்ளக் இதழில் (24.7.2013 பக்கம் 14) துர்வாசர் என்ற புனைப் பெயரில் புகுந்து கொண்டு பூணூல் திருமேனி திருவாளர் சோ ராமசாமி காய்ச்சிய இரும்புக் கம்பி கொண்டு தமிழர் களையும், தமிழையும் வரி வரியாகச் சூடு போடும் போக்கிரிதனத்தை ஒரு முறை படித்துப் பார்த்தால் அன்று அண்ணா சொன் னாரே _- எதிர்பார்த்தாரே. அந்தச் சீற்றம் கிளம்பத் தான் செய்யும்.

1) பார்த்தார்கள் திராவிடர் கழகத்தினர் அவர் களும் போராட்டத்தில் குதித்து விட்டார்கள்.  அதுவும் ஒரு நாள், அரை நாள் போராட்ட மல்ல; மூன்று கட்டப் போராட்டம் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று வீரமணியும், அவரது தொண்டர்களும் சூளுரைத்து விட்டார்கள்.

தமிழ்நாட்டில் தெரு வெல்லாம் பால் வழிந் தோடுகிறது, தேன் வழிந் தோடாதது தான் பாக்கி. எல்லா ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று ஆகிவிட்டால், பாலுடன் தேனும் சேர்ந்து தமிழ்நாட்டுத் தெருக்களில் ஓடும். அதற்கு  தான் வீரமணியின் இந்தச் சூளுரையும் இந்தப் போராட்டமும் - என்று எழுதித் தள்ளுகிறார்.

திராவிடர் கழகம் தொடங்கியுள்ள இந்தப் போராட்டம் பார்ப்பனர்களை ரொம்பவும்தான் படாத பாடுபடுத்தி யிருக்கிறது - ரத்தக் கொதிப்பை உசுப்பி விட்டிருக்கிறது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று வந்து விட்டால் அவர்களின் அஸ்திவாரம் கலைந்து விடுமே, ஆணிவேர் அறுந்து விழுந்து விடுமே என்ற ஆத்திரத்தில் திருவாளர் சோ எழும்பிக் குதிக்கிறார்.
கற்பகம்பாள் கோயிலில் அம்மாவாசை அர்ச்சகராகி விட்டால், ஆராவமுத அய்யர்வாள் கம்பியின் வெளியில் நின்று கொண்டு சாமி என் பெயரால் அர்ச்சனை செய்யுங்கோ! என்று விண்ணப்பிக்கும் நிலைமை ஏற்பட்டு விடுமே இதைவிட விபரீதம் வேதிய புரத்தாருக்கு வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்?

போச்சு போச்சு எல்லாம் போச்சு! கோயில் கர்ப்பக்கிரகம் ஒன்றுதானே கொஞ்ச நஞ்ச மரியாதையை நம்மிடம் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. குடியரசு தலைவராக இருந்தாலும் கோயிலுக்குள் வந்துவிட்டால் எங்கள் முன் மண்டியிட்டு தானே நிற்க வேண்டும்; இந்த ஒரே ஒரு இடம் தானே எங்களிடம் எஞ்சி இருக்கும் ஆதிக்கச் சொத்து; அதிலும் கை வைக்கக் கருஞ்சட்டைக் கூட்டம் கச்சைகட்டி நிற்கிறதே! என்கிற ஆத்திரம்  அய்யர்வாளின் எழுத்துக் களில் துள்ளிக் குதிக்கிறது.

ஏதோ திராவிடர் கழகத்தாருக்கு இப்பொழுதுதான் இந்தப் போராட் டத்தில் தொடர்பு இருப்பது போன்ற பொய்யான தகவலை அவிழ்த்து விட்டுள்ளார் _ இந்தக் கோயபெல்சு.

1970இல் தந்தை பெரியார் அவர் களால் தொடங்கப்பட்ட போராட்டம் இது. இன்னும் சொல்லப் போனால் எனது இறுதிப் போராட்டம் என்று தந்தை பெரியார் அவர்களால் அறிவிக்கப்பட்ட போராட்டம்! கடந்த 41 ஆண்டு காலமாக நடைபெறும் தொடர் போராட்டம்!  அரசே சட்டம் செய்தும் அதனை ஆரியப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று முடக்கியதால், தொடர் போராட்டமாக நடந்து கொண்டி ருக்கிறது.

தமிழன் கட்டிய கோயிலில், தமிழர்கள் பெரும்பாலும் வாழும் நாட்டில், தமிழர்கள் அர்ச்சகராகக் கூடாது, தமிழன் அர்ச்சனை செய்யக்கூடாது என்று ஒரு கூட்டம் கூப்பாடு போடுகிறது என்றால் அதன் பொருள் _ தமிழன் இன்னும் சோற் றாலடித்த பிண்டமாக இருக்கிறான், பக்தி என்னும் போதையில் சுருண்டு கிடக்கிறான். அவன் தலையில் எவ் வளவு வேண்டுமானாலும் மிளகாய் அரைக்கலாம் என்ற இறுமாப்பு அவாள் மத்தியிலே திமிர் கொழுத்து நிற்கிறது - என்பதுதான் சோ எழுத்து களில் அடங்கி இருக்கும் மிதந்து குதிக்கும் ஆணவம்!

பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற போராட்டம் கிளம்பும் என்பதை 1930ஆம் ஆண்டிலேயே திருவாளர் சத்திய மூர்த்தி அய்யர் எதிர்பார்த்ததுண்டே!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டுவந்த தேவதாசி ஒழிப்பு மசோதாமீது உரையாற்றிய அவர் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டால் பிராமணரல்லாதோர் கோயிலில் உள்ள பிராமண பூசாரிகளை அகற்றுவதற்கும் இராமசாமி நாயக்கர் போராடுகின்ற நிலைமை உருவாகி விடும் என்று பேசினாரே!

இதுபோன்ற உரிமைகள் வெடித் துக் கிளம்புவதை சோ பார்ப்பனர் களின் கேலி பேச்சுகள் மேலும் ஊக்கம் கொடுத்து உசுப்பிவிடும் என்று எச்சரிக்கை செய்கிறோம்!

தந்தை பெரியார் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக்கூட உதாசீனம் செய்த திருவாளர் சோ ராமசாமி அய்யர், கடைசியில் தன் துக்ளக் இதழிலேயே அதைப் பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டதை மறந்துவிட வேண்டாம்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரானால் பாலாறும் தேனாறும் ஓடப் போகிறது பாருங்கள் என்று கேலி செய்கிறார்.

தமிழர் பண்பாட்டுத் தடத்தில் ஆரியப் பண்பாட்டை வீழ்த்தும் இடங்களில் எல்லாம் இதே வாசகங்களைப் பயன்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டு இருக் கிறார்கள்.

பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறந்தபோதும் சரி, தமிழ் செம்மொழியாக கொண்டு வந்த கால கட்டத்திலும் சரி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று திமுக ஆட்சியில் சட்டம் செய்யப் பட்ட போதும்சரி, சொல்லி வைத்தது போல பார்ப்பனர்கள் - அவர்களின் ஊடகங்கள் இதே வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி வந்திருப்பதைத் தமிழர்கள் கவனிக்க வேண்டும் - _ ஏன் குறித்தும் வைத் துக் கொள்ள வேண்டும்.

நாரதன் என்ற ஆண் கடவு ளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த பிள்ளைகள் தான் 60 தமிழ் வருஷங்கள் என்கிற ஆரியக் கலாச்சாரக் சாக்கடையில் உருண்டு புரண்டால்தான் நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடும் என்று சொல்கிறார்களா?

ஊர் தோறும் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்கிறார்களே. அதனால் என்ன நாட்டில் பாலாறும் தேனாறும், கரும்பு சாறுமா கரையுடைத்துப் பொங்கி வழிகிறது? நம்மால் கேட்க முடியாதா?

தமிழ், தமிழன், தமிழன் பண்பாடு என்றால் பார்ப்பனர்களுக்கு அஸ்தியில் ஜுரம் கண்டு விடுகிறது _ மூளையில் கோபம் புரையேறுகிறது.

இந்தப் பார்ப்பனர்களையும் தமிழர்கள் என்று கக்கத்தில் தூக்கி வைத்துக் கொஞ்சும் தமிழ்த் தேசிய வியாதிகளை என்னவென்று சொல்லுவது!

சதா ஹிந்துக்களின் மீதும், ஹிந்து மதத்தின் மீதும் மோதுவதென்றால், பெரியாருக்கும் அவரது வாரிசு களுக்கும் கொண்டாட்டம். சர்வ ஜாதியினரையும் அர்ச்சகர்களாக்கும் அதி நவீன புரட்சிகரத் தொழில் திட்டத்தை, டாக்டர் கலைஞர் முத்தமிழ் வித்தகர் கருணாநிதியே தனது ஆட்சியில் கொண்டு வந்து பார்த்தார். பிராமணர் அல்லாத பிற ஜாதி யினருக்கு அரசு செலவில் பயிற்சிகள் கூடத் தரப்பட்டன. ஆனால், அந்தப் பயிற்சிகளில் தேறியவர்களெல்லாம் பூஜை செய்யக் கோவில்கள் இல்லாமல், மூட்டை தூக்குவதிலிருந்து காய்கறி வியாபாரம் வரை ஏதேதோ தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். தை முதல் தேதியை தமிழ்ப் புத் தாண்டாகக் கொண்டாட வேண்டு மென்கிற கனவு மாதிரி, சகல ஜாதி யினரையும் அர்ச்சகர்களாக்கும் கருணாநிதியின் கனவும் பலிக்க வில்லை. இப்போது அந்தப் பலிக்காத கருணாநிதியின் கனவைத்தான் வீரமணி தூசி தட்டி எடுத்துப் போராட்டம், இல்லையேல் வீரமரணம் என்கிறார்.

--------------------------------------------_ இவையும் சோவின் எழுத்துக் கள்தான்.

சர்வஜாதியினரையும் அர்ச்சகர் களாக்கும் அதி நவீன புரட்சிகரத் தொழில் திட்டம் என்று அடை மொழிகளைக் கொடுக்கிறார்.

அவாள் நடத்தும் பச்சையான புரோகித சுரண்டல் தொழிலுக்கு ஆபத்து வரும்போது அதன்மீது விழும் இடியை எப்படிதான் தாங்கிக் கொள்வார்கள்?
ஒன்று மட்டும் அதற்குள் நிச்சய மாக ஒளிந்திருக்கிறது. அமாவாசை களை கருவறைக்குள் அமர்த்திப் பூசை செய்ய வைத்து, சோ ராமசாமி அய்யர், வைத்தியநாதய்யர்வாள்களை  காமகோடிகளை வெளியே நிற்க வைத்து, அர்ச்சகர் அமாவாசையிடம் தத்தம் பெயரில் அர்ச்சனை செய்யக் கோருவது பெரிய புரட்சித் திட்டம் தானே! அந்த எண்ணத்தில் அய்யர் வாள் எழுதாமலிருக்கலாம்; ஆனாலும் அதுதானே உண்மை!

சகல ஜாதியினரையும் அர்ச்சகர் களாக்கும் கருணாநிதியின் கனவும் பலிக்கவில்லை. இப்போது அந்தப் பலிக்காத கருணாநிதியின் கனவைத் தான் வீரமணி தூசி தட்டி எடுத்துப் போராட்டம் இல்லையேல் வீர மரணம் என்கிறார் என்று பூணூல் எழுதுகோல் கொண்டு தீட்டுகிறார் திருவாளர்.

கொஞ்சம் பொறுங்கள். இறுதியில் யார் சிரிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்!
புரோகிதப் பார்ப்பானை அழைத் தால்தான், அவன் வந்து மந்திரம் சொன்னால் தான், சப்தபதி அடி எடுத்து வைத்தால்தான் திருமணம் செல்லுபடியாகும் என்று மஞ்சள் குளித்த கூட்டம் தான் சோ கூட்டம்.

ஏன்? சுயமரியாதைத் திருமணம் செல்லவே செல்லாது என்று தீர்ப்பு வழங்கியதும் இந்தத் திரிநூல் கூட்டம் தானே!

அதனை ஜெயித்துக் காட்ட வில்லையா? அதேபோல அர்ச்சகர் பிரச்சினையில் கிடைத்திருக்கிற  தற்காலிக வெற்றியிலே தலை கால் புரியாமல்  குதிக்கலாம். வட்டியும் முதலுமாக யார் அனுபவிக்கப் போகிறார்கள் என்பதையும் பார்க்கத்தானே போகிறோம்.

திருவாங்கூர் தேவஸ்தான போர்டுமீது போடப்பட்ட வழக்கில் 2002-இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாவதற்கு முன் கடைப்பிடிக்கப் பட்டு வந்த நடைமுறைகளையே இப்போதும் பின்பற்ற முடியாது.

ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் அர்ச்சகராக இருக்க வேண்டும் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் துரைசாமி ராஜு, ராஜேந்திரபாபு ஆகியோர் அமர்வு தீர்ப்பு எழுதவில்லையா? ஆரியர்களே கொக்கரியுங்கள்! கொக்கரியுங்கள்!

நீங்கள் கொக்கரிக்க கொக்கரிக்கத் தான் ஆரியர் - திராவிடர் போராட்டத்தின் கொதி நிலை விரைந்து வரும்.

(சோவின் திருகு தாளங்களுக்குப் பதிலடி அடுத்த இதழிலும் உண்டு)

 -------------------------- மின்சாரம் அவர்கள் 20-7-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

73 comments:

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட்டம்!


முக்கிய அறிவிப்பு

கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே, ஆகஸ்டு முதல் தேதி, ஆர்ப்பாட்டம் அனைத்து மக்களின் ஆதரவையும் ஒருங்கே பெற்றுள்ளது. இதனை எதிர்ப்பார் குறிப்பிடத்தக்க வகையில் எவரும் இலர்.

1.8.2013 காலை 11 மணிக்கு எங்கும் நடைபெற வேண்டும். நடக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடத்திடக் காவல்துறைக்கு இன்றே அனுமதி கேட்டு எழுதிக் கொடுக்க வேண்டும்.

கழகம் முன்னின்று நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேராதரவு அளிக்க முன் வந்துள்ள தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ஆதரவு தருவோர்களை முன்னிலை என்றும், தொடக்கவுரை என்றும் குறிப்பிட்டு, துண்டறிக்கைகளை, விளம்பரப் பதாகைகளை, சுவர் எழுத்துகளைத் துவக்கி விட்டீர்களா?

தந்தை பெரியார் அறிவித்த மரண சாசனம் போன்ற போராட்டம் தமிழர் சமுதாய இன இழிவை ஒழிக்கும் போராட்டம்!

மிகுந்த உணர்வோடு, கொள்கைத் தாகத்தோடு முனைந்து செயல்படுவீர்!

அனைத்துக் கழக மாவட்டங்களிலும் இது நடைபெற வேண்டும். கழகத் தோழர்கள் அத்தனைப் பேரும் (விடுபடவே கூடாது) குடும்பம் குடும்பமாகப் பங்கேற்க வேண்டும். ஆதரவுக் கரம் நீட்டும் அன்புத் தோழர்களை பிற அமைப்புகளை அணுகுங்கள் - முக்கியம்! முக்கியம்!!

தமிழ் ஓவியா said...


கிரகங்களால் பாதிப்பு ஏற்படுமா?


பூமியிலிருந்து கிரகங்களின் தூரம்

1. புதன் - 5 கோடியே 70 லட்சம் மைல்

2. வெள்ளி (சுக்கிரன்) - 2 கோடியே 60 லட்சம் மைல்

3. செவ்வாய் 4 கோடியே 85 லட்சம் மைல்

4. வியாழன் (குரு) 39 கோடியே 3 லட்சம் மைல்

5. சனி 79 கோடியே 31 லட்சம் மைல்

6. யுரேனஸ் - 169 கோடியே 40 லட்சம் மைல்

7. பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள தூரம் - 9 கோடியே 30 லட்சம் மைல்

8. பூமிக்கும், சந்திரனுக்கும் உள்ள தூரம் - 2 லட்சத்து நாற்பதாயிரம் மைல்

எல்லா கிரகங்களும் சூரியனை மய்யமாக வைத்து நீள் வட்டப் பாதை யில் சுற்றி வருவதால் கிரகங்களின் தூரம் சற்று வேறுபடக் கூடும்.

கிரகங்கள் எல்லாம் பூமியிலிருந்து வெகு தொலைவில் அதாவது கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருப்பதால் அக்கிரகங்களின் ஈர்ப்பு விசை பூமியை நோக்கி குறிப் பிட்ட தூரம் வரை மட்டுமே இருக்கும். ஆகையால் அந்த ஈர்ப்பு விசை பூமியை எட்ட வாய்ப்பில்லை. எனவே, பூமியில் இருக்கும் மனிதர்களுக்கு கிரகங்கள் எந்த மாற்றத்தையோ, ஏற்றத்தையோ உண்டாக்குவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை.

பலன்கள் மனிதனுக்கு தானாகவே ஏற்படுவதா? அல்லது உழைப்பினால் ஏற்படுவதா? கிரகத்தின் தன்மையால் ஏற்படுவதா? அல்லது முன் ஜென் மத்தில் செய்த கருமத்தின் பலனாய் ஏற்படுவதா? பகவத் கீதையில் முன் ஜென்மத்து பலனுக்கேற்ப நம்முடைய வாழ்வில் செயல்கள் எல்லாம் தலைவிதியின்படி நடக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அந்த தலைவிதியை படைத்த அந்த கடவுளாலே கூட இதை மாற்ற முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. (கீதை, அத்யாயம் -_ 4, சுலோகம் _ 13, அத்யாயம் _ 3, சுலோகம் _ சுலோகம் _ 35) எனவே பூசைகள் செய்து பலன்களை மாற்ற முடியும் என்பது அடிபட்டு அறுத்துப் போய்விடுகிறது. ஏன் இந்த முரண் பாடுகள்? ஒவ்வொரு கேட்டுக்கும், குற்றத்திற்கும் கிரகப் பலன்கள் காரணம் என்றால், மனிதர்களைக் குற்றப்படுத்த என்ன இருக்கிறது? மனிதனைத் தண்டிப்பதில்தான் அர்த் தம் உண்டா?

பூமியின் ஈர்ப்பு விசையில் 6இல் 1 பங்குதான் (1/6) துணைக்கிரகம் சந்திரனுக்கு இருக்கிறது. அதுபோலவே மற்ற கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை மாறுபடும். துணைக் கிரகம் சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக இருப்பதால் அதன் ஈர்ப்பு விசையால் சில மாறுதல்கள் பூமியில் உள்ள கடல் நீருக்கு சில சமயங்களில் ஏற்படலாம்.

தமிழ் ஓவியா said...

2003ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் தேதி செவ்வாய்க் கிரகம் பூமிக்கு அருகில் வந்தது. பூமியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை! சனிக்கிரகம் 2003ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் பூமிக்கு அருகில் வந்தது. பூமியைவிட 7.55 மடங்கு பெரிய சனிக்கிரகத்தால் கூட அப்போது பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. நம் காலத்தில் தானே இரு கிரகங்களும் பூமியை நெருங்கி வந்தன. சோதிடர்கள் செவ் வாய் தோஷமென்றும், சனி தோஷ மென்றும் நம்மிடத்தில் கூறியதை நினைவுபடுத்திப் பாருங்கள். அறிவியல் முடிவுகளை ஏற்று துணிச்சலோடு செயல்படுவதே வாழ்வில் சிறந்த வழியாகும். தோஷம் என்பதெல்லாம் மோசம்.

ஜோதிடர்கள் சென்ற ஆண்டு 21.12.2012, உலகம் அழிந்து விடும் என்று ஊடகங்கள் மூலம் மக்களை அச்சுறுத்தி வந்தனர். ஆனால் ஒன்றுமே பூமிக்கு கேடு ஏற்படவில்லை என்பதை எல்லோரும் அறிவோம். மூடநம்பிக்கை முறியடிக்கப்பட்டு, பூமி சுற்றும், உலகம் வாழும் என்பது நிறுவிக்கப்பட்டது.

கிரகங்கள் பூமியில் இருக்கும் மனி தர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்று வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், பெண் கருவுற்று அவள் வயிற்றில் புதிய உயிர் ஏற்படும் போது அந்தக் குழுந்தையின் முன் வினைப்படி எல்லா பாதிப்புகளையும் கிரகங்கள் உருவாக்க வாய்ப்புகள் இருக்கின்றன. பிறகு ஏன் பத்து மாதங்கள் காத்திருந்து குழந்தை தாய் வயிற்றை விட்டு பிரிந்த உடனேயே காவல்துறை ஒரு குற்றவாளியைப் பிடிக்க முற்படுவது போல் கிரகங்கள் வானத்தில் இருந்து கொண்டு அந்தக் குழந்தையைத் தாக்கி பாதிப்பைக் கொடுக்கின்றன? பல கோடி மைல் தூரத்திலுள்ள கிரகங்கள் மனிதர்களைப் பாதிக்கிறது என்ற வாதத்தை தகுந்த ஆதாரமில்லாமல் எப்படி நம்புவது?

ஒரு குழந்தை பிறந்தால் அந்தக் குடும்பத்திற்கு ஒரு வாரிசு கிடைத்தது என்று சந்தோஷப்படுவது சிறந்ததா? அல்லது சோதிடம் பார்த்து குழந்தை யின் பிறப்பால் குடும்பத்தில் தாய் மாமனுக்குக் கெட்டது ஏற்படும். தாய் தந்தையருக்கு நோயைக் கொடுக்கும். குடும்பத்தில் சிக்கல் ஏற்படும் என்று குழப்பமடைந்து பொருளற்ற பரிகார பூசை செய்து துன்பப்படுவது சிறந்ததா? இவை இரண்டில் எது சிறந்தது என்று அறிவின்பால் சிந்தித்து முடிவெடுப்பது உங்களிடமே விடப்பட்டுள்ளது.

பெண்ணின் ஜன்ம நட்சத்திர பலன், ருதுப்பலன், திருமணப் பொருத்தம், ஜோதிட பலன் கிரகங்களின் பாதிப்பு ஆகியவைகளைப் பற்றி சிறந்த சோதி டர்கள், அறிவியலாளர்கள், ஊடகத் தார்கள் முதலானோர் எடுத்துரைத்த கருத்துக்களை இங்கு பார்த்தோம். சோதிடர் கூறும் கோட்பாடுகளை வேறு மதத்தவர்கள் நம்புவதில்லை. அவர்கள் என்ன சீர்கெட்டா போய் விட்டனர்? இனி இந்து மதம் பெண் களின் பிறப்பைப் பற்றி என்ன கூறு கிறது என்பதைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம்.

பிரம்மசூத்திரம், சிறீபாஷ்யம்

இந்து மதத்தின் பெருந்தலைவர் களில் ஒருவரான இராமானுஜர் விசிஷ்ட்டாத் வைதம்) பிரம்ம சூத்திரத் திற்கு தான் எழுதிய உரையின் சிறீபாஷ் யம்) முகப்பிலேயே பின்வருமாறு கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

பகவத் பலன தானக் ருதாம்
விஸ்தீரணாம் ப்ரம்மசூத்ரா வ்விருத்திம்
பூர்வாச்சாரியாஹா சஞ்சிக்டிபூஹி
தன்மதானு சாரேந சூத்ரா அக்ஹதாரீ
வ்யாக்யாஸ்யந்தே
அதாவது

பூர்வாச்சாரியார்கள், அதாவது பிரம்ம சூத்திரத்தைப் பண்ணிய ஆச் சாரியார்கள் என்ன சொன்னார்களோ அதை அப்படியே நான் (இராமானுஜர்) இங்கு தருகிறேன். இதில் என் கருத்தென எதுவும் இல்லை. அவர்கள் சொன்னதுதான் நான் சொன்னதும் என்று முன்னோர்கள் மொழிந்ததை அப்படியே ஏற்றுக் கொண்டுவிட்டார் இராமானுஜர்.

பிரம்ம சூத்திரத்திற்கு இராமானுஜர் எழுதிய சிறீபாஷ்யத்தின் (உரையின்) அபசூத்ராபிஹாரணம் என்ற பகுதியில் சொல்வது இதுதான்:

பகவானின் உருவத்தை நித்யமும் தியானித்து உபாஸனம் செய்பவர் களுக்குத்தான் மோட்சம். நான் சொல் வது பிராமணர்களுக்கு மட்டும்தான். பிராமணர் அல்லாத சூத்ரர்கள் மோட்சம் வேண்டுமென்றால் இந்தப் பிறவியை இப்படியே கழித்து அடுத்த ஜென்மாவில் பிராமணனாகப் பிறக்க பகவானைப் பிரார்த்திக்க வேண்டும். ஒரு வேளை, அடுத்த பிறவியில் பிராமணனாகப் பிறக்க அவர்களுக்குப் பிராப்தம் கிடைக்குமானால், வேத, உபநிஷத்துகளைக் கற்று பகவானைத் தொடர்ந்து தியானித்து மோட்சம் பெறலாம்.

அதுபோலவே, பிராமண ஸ்த்ரீகளும் சூத்திரர்கள்தான். எனவே, அவர்கள் அடுத்த ஜென்மாவில் பிராமண புரு ஷனாக அதாவது பிராமண ஆணாக அவதரித்தால்தான் மோட்சத்திற்குப் பாடுபடுவதற்குரிய தகுதியே கிடைக்கும் என்கிறார் இராமானுஜர்.

மோட்சமென்றால் அடுத்த ஜென் மம் பிறந்து அவதிப்படாமல் வைகுண் டத்தில் பகவானின் திருவடிகளை அடைந்து நித்ய ஆனந்தம் அனுப விப்பது (அக்னி ஹோத்ரம் ராமானுஜ தத்தாச்சாரியார் - _ இந்து மதம் எங்கே போகிறது என்ற நூல் _ நான்காம் பதிப்பு பக்கம்: 126-_127).

மூடத்தனத்தை முறியடிப்போம்

பெண்கள் மீதான வன்புணர்ச்சிக்குக் காரணம் கிரகப் பலன் என்று கூறுவது எவ்வளவு மூடத்தனம். மதம், ஜாதி, வேதங்கள், சாத்திரங்கள் ஆகிய அனைத்துமே பெண்களை அடக்கி, ஒடுக்கி வைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதையே இந்தக் கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள் ளது. பெண் விடுதலைக்கு பாடுபடும் அமைப்புகள், அனைத்துமே தங்களின் மனச்சாட்சியை விழிப்படையச் செய்து இந்தக் கொடுமையை வெகு விரைவில் சமூகத்திலிருந்து துடைத்தெறிய முன்வர வேண்டும்.

வெறும் பெண் உரிமை பேசுவதும் இடஒதுக்கீடு அளிப்பதும் இந்தக் காலகட்ட சூழ்நிலைக்குப் போதாது. பெண் இழிவினை முதலில் போக்க ஆவன செய்ய வேண்டும். காலம் வெல்லும் என்று காத்திருக்கக் கூடாது.

மனிதனால் உருவாக்கப்பட்ட ஜோதிடம் என்னும் மூடநம்பிக்கை சமுதாயத்தை எவ்வளவு பாழ்படுத்திக் கொண்டு இருக்கிறது என்பது ஆதாரத்துடன் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் திறந்த மனதுடன் (With Open mind) செய்திகளை ஊன்றிப் படித்து உண்மைகளை உணர வேண்டும். இந்த உலகில் நம் நாட்டைத் தவிர, வேறு எந்த நாட்டிலும் இல்லாத, இந்த மூடத்தனம் நமக்கு தேவைதானா?

ஜோதிடம் பொய்; உண்மை என்று நிரூபிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று கர்நாடக விச்சாரவாதி சங்கம், பெங்களூரு - _ சவால் விட்டு பல ஆண்டுகள் ஆகியும், சால்வை தைரியமாக சந்திக்க எந்த ஜோதிடரும் இன்று வரை முன் வரவில்லை, ஏன்? ஜோதிடர்கள் தோல்வியை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்றே கருத வேண்டி இருக்கிறது.

- பேரா. ஏ.எஸ். நடராஜ்

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவைப் பரப்பிடுவோம்


பகுத்தறிவை பக்குவமாய் பரப்பிடுவோம்!
பார்முழுக்க பிரச்சாரம் செய்திடுவோம்!
மக்களுக்கு, கருத்துக்கள் போய்ச் சேர்ந்திடவே!
மனிதநேயத்தை வளர்த்திடுவோம்!
வன்முறை இன்றி கருத்துக்களை
நன்முறையில் விளக்கிக் கூறிடுவோம்!
பெரியாரின் நல்ல பண்புகளை
பெரிதும் கடைப்பிடித்தே வாழ்ந்திடுவோம்!
பெண்ணடிமை ஒழித்து இவ்வுலகில்
தன்மானத்துடன் வாழச் செய்திடுவோம்!
நமது வீட்டு குழந்தைகளை
நன்றாக பகுத்தறிவுவாதி ஆக்கிடுவோம்!
-
கவிஞர் கணக்கப்பா

தமிழ் ஓவியா said...


என்னடா வெங்கட்ட நாயக்கா!


நம் இனம் இந்த உலகில் இருக்கிற வரை இழிவும் நீங்கப் போவது கிடையாது.

இந்த இழிவோடு ரோடு வழியாகப் போகிற பில் கலெக்டர் பார்ப்பான் வருவான்.

என்ன வெங்கட்ட நாயக்கா இன்னக்கி ஒரு பேப்பர் பார்க்கணும்டா சாய்ந்தரம் வாரியா என்று டா போட்டுத்தான் சொல்வான்.

அதற்கு என் தகப்பனார் எழுந்து நின்று ஆகட்டும் சாமி, அவசியம் வருகிறேன் என்று சொல்வார். இத்தனைக்கும் அவன் சாதாரண பில் கலெக்டர். பார்ப்பான் என்கிற ஒன்றைத் தவிர, மற்றபடி அவன் எதிலும் உயர்ந்தவன் அல்லன்.

(குடிஅரசு தொகுதி 17 பக்கம் 267)
க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


வருண பகவானின் உருவ பொம்மை எரித்த பக்தர்கள்பெரும்பாக்கம் கிராம மக்கள், மழை வேண்டி, வருண பக வானின் உருவ பொம்மைக்கு இறுதிச் சடங்கு செய்தனர்.

காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாக்கம் கிராமத் தில், ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. பருவ மழை இல்லாத தால், ஏரிப் பாசனத்தை நம்பி இருந்த விளை நிலங்கள், வறண்டு கிடக்கிறது. பம்பு செட் பாசனம் மூலம் பயிரிடப்பட்ட, நெற் பயிர்கள் தற்போது நிலத்தடிநீர் குறைந்து போனதால், கதிர்விடும் நேரத்தில் கருகி போனது. இதனால், செய்வதறியாமல் தவித்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள், உச்சிவெயிலில் ஒன்றுகூடி, வருண பகவான் உருவ பொம்மைக்கு பாடை கட்டி, இறுதிச் சடங்கு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, மாரியம் மன் கோவில் தெருவில், வருண பகவானின் உருவ பொம்மை செய்து, அதை கட்டிலில் படுக்க வைத்தனர். பின், மாலை அணிவித்து கிராம மக்கள், "பாவி வானம் இடிந்து விழ வேண்டும்' என, ஒப்பாரியில் ஈடுப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, பாடை கட்டி, மாட்டு வண்டியில் உருவ பொம்மையை ஏற்றிக் கொண்டு, மேள தாளத்துடன் அனைத்துத் தெருக்கள் வழியாக, ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். முறைப்படி கொள்ளி சட்டியும் எடுத்து செல்லப்பட்டது. ராகு காலத்திற்கு முன்னதாக, மாலை 4:00 மணிக்கு, சுடுகாட்டிற்குச் சென்று தீயிட்டு இறுதிச் சடங்கைச் செய்தனர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண் டனர். எட்டாம் நாளில் வருண பகவானுக்கு காரியம் செய்தனர். சுடுகாட்டிற்கு பிணத்தை எடுத்து செல்லும் இதுபோன்ற சடங்கை நிறைவேற்றினால், ஓரிரு தினங்களில் மழை பெய்யும் என, பெரும்பாக்கம் கிராம மக்களின் அய்தீகமாக உள்ளது. ஆனால் நடந்தது என்ன? எல்லா சடங்குகளைச் செய்தும் மழையைத் தான் காணோம். கடவுளை நாம் உடைத்தால் எரித்தால் பக்தர்களின் மனம் புண்படும் என்று கதறுகிறார்கள் - காவல் நிலையத்துக்கு ஓடோடிச் சென்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் புகார் மனு கொடுக்கின்றனர். பக்தர்கள் இப்படி வருண பகவானை எரிக்கிறார்களே

- சுடுகாட்டில் அடக்கம் செய் கிறார்களே - இதற்கு என்ன பெயராம்?

தமிழ் ஓவியா said...


குப்பை மேடான கடவுள்!


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த குளமங்கலத்தில் உள்ள அய்யனார்கோயில் குதிரைச் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் மாலைகள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அருகில் உள்ள குளமங்கலத்தில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் என்று ஒரு கோயில் உள்ளது. இக்கோயில் கட்டப் பட்டது கி.பி.1400-வாக்கில் என்று சொல்லப்படுகிறது. மற்றகோயில்களைப் போல்தான் இங்கும் வேலைவெட்டி எதுவும் இல்லாமல் ஒரு குதிரைச்சிலையைக் கட்டி வைத்திருக் கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் அதில் இன்னொன்றும் இருக்கிறது.

பார்ப்பனக்கோயில்கள் எப்படி இருக்கும் பார்ப்பனச் சாமிகளும் கடவுள் கடவுளச்சிகளின் சிலைகளும் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை திராவிடர் கழகம் மட்டும் மேடைக்கு மேடை முழங்கி தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பார்த்தால் இந்த பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் கோயி லுக்கோ சாமி சிலைக்கோ முக்கியத்துவம் தராமல் குதிரைச்சிலைக்கு மட்டும் மக்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.

காரணம் என்னவென்றால் இக்குதிரைச்சிலையின் அமைப்பு ஒரு குதிரை வானத்தில் தாவிப் பாய்வது போன்ற ஒரு தோற்றம் அச்சுப் பிசகாமல் நரம்பு புடைத்து துடிக்கும் அத்தனையும் துல்லியமாகத் தெரியும் வகையில் தமிழனின் கலைத் திறமையை உலகுக்குக் காண்பிக்கும் வகையில் இச்சிலை அமைக் கப் பட்டிருக்கிறது. ஆசியாவிலேயே மிகப் பெரிய குதிரைச்சிலை இதுதான் என்று சொல்லப் படுகிறது. அதனால் ஒரு தமிழனின் கலைவண்ணம் உலகுக்குத் தெரிகிறது என்று சொல்லிக் கொள்ளலாம். அது வேறு விஷயம்.

(ஒரு கோயிலுக்குள் ஒரு பார்ப்பான் புகுந்தால் மற்றவர்களை வெளியேற்றி விடுவான் என்பதற்கு இந்தக்கோயிலும் ஒரு உதாரணம். இக்கோயிலின் பூசகர்கள் என்று சொல்லக்கூடிய படிமாத்தார்கள் பரம்பரை குடியிருப்பே இருந்தும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளூரில் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டும் விவசாயம் செய்து கொண்டும் சென்னைக்குச் சென்று பிழைப்பு நடத்தியும் வருகிறார்கள். ஆனால் இந்தக் கோயிலுக்குள் அர்ச்சகர் என்று சொல்லிக் கொண்டு உட்புகுந்த பார்ப்பான் சில விதிமுறைகளை வகுத் துக் கொண்டு கோயில் நிலத்திலேயே பலலட்ச மதிப்பில் வீடும் கட்டிக் கொண்டு இப்போதைய நிலைக்கு கோடீசுவரனாகி விட்டான் என்பதை இன்றளவும் இந்தக் கிராம மக்களே உணரவில்லை.)

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மாசிமகத் திருவிழாவின்போது சுமார் ரூபாய் 20-ஆயிரம் முதல் 50-ஆயிரம்வரை செலவு செய்து காகிதப்பூமாலை கட்டிக் கொண்டு வந்து குதிரைச் சிலைக்கு அணிவித்து வணங்கி மகிழ்வார்கள். இது வேறு எங்கும் நடக்காத ஒரு செயலாகும். நம் தமிழர்கள் எதைத்தான் விட்டு வைத்திருக்கிறார்கள் குதிரைச்சிலையை விட்டு வைப்பதற்கு?

இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி இப்போது பிளாஸ்டிக் ஒழிப்பில் முனைப்பைக் காட்டி வரும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மனோகரன் இக்கோயில் குதிரைச் சிலைக்கு அணிவிக்கப் பட்டிருக்கும் பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் ஜிகினா மாலைக்கும் தடாபோட்டு விட்ட தோடு குதிரைச்சிலைக்கு இந்த ஆண்டு பக்தர்களால் அணிவிக்கப்பட்ட சுமார் 1200-மாலைகளையும் அப்புறப் படுத்தி மாவட்ட குப்பைக்கிடங்குக்கு அள்ளி வரச் செய்து உத்தரவு பிறப்பித்து விட்டார்.

ஒவ்வொரு மாலைக்கும் ஒவ்வொரு லாரி பிடித்து பக்தர்களால் பெரிதும் போற்றப் பட்டுக் கொண்டு வரப்பட்ட மாலைகள் ஒரே லாரியில் மற்ற குப்பைகளோடு குப்பையாக்கப் பட்டு விட்டது. மேலும் கடந்த ஆண்டுகளில் போடப் பட்ட மாலைகள் அருகில் உள்ள வில்லுணி ஆற்றங்கரையில் அப்படியே மட்காமல் கிடப்பதையும் சுட்டிக் காட்டிய மாவட்ட ஆட்சியர் அனைத்தையும் அக்கிராமத்தை விட்டே அகற்றச் சொல்லி விட்டார். மேலும் வரும் ஆண்டுகளில் ஜிகினா மாலையோ, பிளாஸ்டிக் மாலையோ போடக்கூடாது என்றும் சொல்லி விட்டார். அதனால் அய்யனார் கோபித்துக் கொள்ள மாட்டார் என்பதோடு அவருக்கு பேசும் திறனிருந்தால் மட்காத குப் பையைக் கொண்டு வந்து என் தலையில் கொட்டுகிறீர்களே மக்கான மக்களே என்று வேதனைப் பட்டி ருப்பார். அவர்தான் பேசமாட்டாரே!
- ம.மு.கண்ணன், புதுக்கோட்டை

தமிழ் ஓவியா said...


தற்கொலைகள்


2012இல் இந்தியாவில் 1,34,599 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 37% பேர் தூக்குப் போட்டும், 29.1% பேர் விஷம் குடித்தும், 8.4% பேர் தீ வைத்தும் உயிரை விட்டுள்ளனர். கடந்த ஆண்டு 50,062 பேர் தூக்குப் போட்டு இறந்திருக்கிறார்கள். இதில் ஆண்களின் எண்ணிக்கை 34,631. விஷம் குடித்து இறந்தவர்கள் 19,445 பேர். அதில் 12,286 பேர் ஆண்கள். இதில் தமிழ்நாடு (3,459 பேர்) முதலிடத்தில் உள்ளது. தீ வைத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 11,438. இதிலும் தமிழ்நாட்டுக்குத்தான் முதலிடம். 2,349 பேர் இறந்துள்ளார்கள். பெண்களின் எண்ணிக்கை 1,481. தீ வைத்து இறப்போரில் முதலிடம் பிடித்துள்ள நகரம் கான்பூர். கடந்தாண்டு அங்கு 285 பேர் இறந்துள்ளார்கள். இரண்டாம் இடத்தில் இருக்கும் சென்னையில் 282 பேர் இறந்துள்ளார்கள். இந்தியாவில் குடும்பப் பிரச்சினைக்காக நாளொன்றுக்கு 84 பேர் தற்கொலை செய்கிறார்கள். மொத்த தற்கொலை களில் திருமணம் செய்த ஆண்கள் 71.6 சதவீதம், திருமணம் செய்த பெண்கள் 67.9 சதவீதம், தற்கொலை செய்து கொண்டு இறப்பவர்களில் ஆறில் ஒருவர், இல்லத்தரசி.

தமிழ் ஓவியா said...


அர்ச்சகப் பார்ப்பானும் மகனும் உரையாடல்


கோவில் அர்ச்சகரான தந்தையிடம் பார்ப்பன சிறுவன் அப்பா நம்மை நாடி வரும் பக்தர்களுக்காக பூஜை செய்து கடவுளிடம் வேண்டிக் கொள்கிறீர்கள்.

நானும் என் முன்னேற்றம் குறித்து கடவுளிடம் பேச வேண்டும் கடவுள்இருக்கின்றாரா, பேச முடியுமா?

அர்ச்சகப் பார்ப்பான் மகனிடம் கவிதை வடிவில் பதில் கூறுகிறார்.

கவிதை

கவலை கொள்ளாதே கவலை கொள்ளாதே

நம் முன்னேற்றம் பற்றி

கவலை கொள்ளாதே

நம் ஆரிய முன்னோர் செய்த சதியால் இம்மக்கள் முட்டாள்களாக உலவுகிறார்கள்

சூத்திரன் அறியாமையால்

ஆரியன் வீட்டில் அடுப்பெரிகிறது

இவர்களின் முட்டாள் தனமே நம் மூலதனம்

கடவுள் ஒருவன் இருந்தால் - நாம் களவு செய்யலாகுமா?

சாதரண அறிவு கூட இல்லாத

சந்தைக் கூட்டமடா?

முட்டாள்கள் இருக்கும் வரை

முன்னேற்றம் பற்றி கவலை கொள்ளாதே.

நோகாமல் நுங்கு திங்கும் வித்தை

நாம் காலம் காலமாக கற்ற வித்தை

அறியாமை சூத்திரன் உள்ளவரை -

அரிசி தானியத்திற்குப் பஞ்சமில்லை

ஒரறிவு கூட அற்ற (கடவுளை) கல்லை நட்டு

ஆறறிவு கொண்ட மக்களை

அல்லாட வைக்கும் ஆற்றலை

அல்லவா பெற்றுள்ளோம்.

முட்டாள்கள் உள்ளவரை முன்னேற்றம்

பற்றி கவலை கொள்ளாதே!

கடன் வாங்கி காவடி எடுத்து - நம்

கண்ணீர் துடைப்பான்

பால்குடம் எடுத்து நம் வயிற்றில்

பாலும் வார்ப்பான்.

அவன் சாமி ஆடிக் கொண்டாலும் நம்மைத்தானே

ஆடாமல் அல்லல் படாமல்

வாழவைக்கும் (சூத்திரதாரிகள்)

எங்கு கிடைக்குமடா?

இப்படியொரு அடிமைகள்

உழைத்து தேய்ந்து உடல் கறுத்து

சேர்த்த காசெல்லாம் நம்

ஆரியத்தின் சேமிப்புக்குத் தானே இடுகின்றான்.

பாமரக் கூட்டத்தால் பஞ்சம் நமக்கு இல்லை.

காட்டு மிராண்டிகள் உள்ள வரை

(கடவுள்) கல்லும் சாம்பலும்

ஆரியக் கூட்டத்தை காக்கும்

அற்புத தொழில் நுட்பம்

கருவிலே கூட களங்கத்தை வைத்தோம்

மதிகெட்டு மானமிழந்தாலும் - ஆரியரை

மணத்தோடு நயம் பட வைக்கிறான்

முன்னேற்றம் பற்றி

கவலை கொள்ளாதே! கவலை கொள்ளாதே!

தொடாதே தீட்டு என்றாலும்

தொடர் காணிக்கை தரும்

தொலை நோக்கு மந்தைகள் அல்லவா,

மங்கையர் அணிவகுப்பு

மல்லிகை மலர்களின் சரம் தொடுப்பு

மதிமயங்கும் நறு மணங்கள்

மங்கையர் மூச்சின் மோகம் - உனக்கு

வயது வந்தால் வாழ்வின் ரகசியம் புரியும்

கல்லை காட்டியே கல்லாவை நிரப்பும் சாணக்யம்

மந்தைகள் நிறைந்த மன்றத்தில் - ஆரியர்கள் மேதாவியே

சூடு சொரணை இல்லையென்றாலும் - நமக்கு

சோறிடும் பண்பு மாற மடமைகள்

பால் பழம் நெய் பல வகை - பட்சணங்கள்

பகலவன் படாத தேகம் - பகட்டு வாழ்க்கை

சல்லாபம் உல்லாசம் மலர்மணம் - சுகபோகம்

முன்னேற்றம் பற்றி கவலை கொள்ளாதே! கவலை கொள்ளாதே!

எல்லாம் இருப்பினும் எதிரிக்கூட்டம்

உண்டென்று சொல்வேன்

உள்ளத்தில் வைத்துக் கொள் - கொடும்

உணர்வுடன் பகைத்துக் கொள்

ஈரோட்டுச் சிங்கமொன்று - இடைவிடாது

சிந்தித்ததால் விடையின்றி கிடந்தவன்

வீறு கொண்டு எழுந்தான் - கிழவரின்

பல் முனைத்தாக்குதலால் - ஆரியக் கூட்டம்

பரிதவித்து நின்றோம்.

பூசைகள் யாகங்கள் எத்தனை செய்தாலும் அக்கிழவன்

புத்திக்கு பதில் சொல்ல இயலாது

அவரது நகல்கள் என்றுமே

அசாத்திய சாதனைகளின் பிறப்பிடம்.

எச்சரிக்கை கொள் இருப்பினும்

கவலை கொள்ளாதே! வாழ்வு பற்றி கவலை கொள்ளாதே!- இராமகிருட்டிணன், திருநெல்வேலி

தமிழ் ஓவியா said...


எத்தனை முட்டாள்கள்?
இந்தக் கூட்டத்தில் உள்ளவர்களில் இன்னமும் எத்தனை முட்டாள்கள் திவசம் செய்கிறீர்கள். உன் அப்பன் செத்தான்.

நீதானே குழியில் போட்டுப் புதைத்தாய்?

தீயிட்டுக் கொளுத்தினாய்? அதன்பின் எதற்காக உன் அப்பனுக்குத் திவசம் கொடுக்கிறாய்?

செத்தவன் நரகத்திற்குப் போகிறான்.

சொர்க்கத்திற்குப் போகிறான் என்கிறபோது மறுபிறப்பு, பிதிர்லோகம் என்பது பித்தலாட்டந்தானே? இதன் மூலம் காசு கொடுப்பவன், நாமாகவும், காசு பெறுபவன் பார்ப்பான் தானே?

- தந்தை பெரியார்

(பெரியார் களஞ்சியம் தொகுதி 19 300ஆம் பக்கத்தில் இருப்பது)

தமிழ் ஓவியா said...


அட, பைத்தியங்களே!உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் பரிதாபகரமாகப் பலியானார்கள்.
அதே நேரத்தில் புனித கோயில் களுக்கு எந்த சேதாரமும் இல்லை என்று ஒரு பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர். (கடவுளைக் காப்பாற்று கிறார்களாம்) அதே நேரத்தில் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகத் தகவல்கள் வெளிவர ஆரம்பித்து விட்டன. கேதார் நாத் கோயில் பெரும் சேதத்துக்கு ஆளாகி விட்டதாம். ஆனாலும் கருவறைக்குப் பாதிப்பு இல்லையாம். அப்படியானால் கருவறை மட்டும் தான் கோயிலா? கோயில் என்று இப்பொழுது சொல்கிறார்களே. அதன் வடிவங்கள் _- அவை எல்லாம் வெறும் பில்டப் தானா?

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார்


கணவன் - மனைவி என்பது கிடையாது. ஒருவருக்கொருவர் துணைவர்கள்; கூட்டாளிகள் என்பது தான் உண்மை.
- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...


ஒருதகவல்விரக்தி ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற வெறி ஏற்படுகிறதா? கீழ்க்கண்ட எண்ணோடு தொடர்பு கொள்ளுங்கள் மனமாற்றம் (கவுன்சிலிங்) கிடைக்கும்.

044-24640050

தமிழ் ஓவியா said...


சு.சாமியே நில்! சொல்!


அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்காக நமக்கு சனாதன தர்மம் வர்ணசிரமத்தை அளித்துள்ளது. அது பிறப்பின் அடிப்படையில் இருந்தது இல்லை. சந்திரகுப்த மன்னன் தன் - செயல்களால் க்ஷத்திரியனாகத் திகழ்ந்தான்; பிறப்பினால் அல்ல. பாரத் வர்ஷா (ஆர்யா வர்த்தம்) என்ற, எப்பொழுதும் இருந்திராத, ஒரு தேசத்தை வலுவான தேசத்தை உருவாக்கினான். அன்னியப் படையெடுப் பாளர்கள் நம்மிடையே உள்ள துரோகிகளைக் கொண்டு அதை ஒரு கடுமையான சாதி அமைப்புகளைக் கொண்டதாக மாற்றி விட்டார்கள் (அது மேலை நாட்டினரால் நம்மீது திணிக்கப்பட்டது) அதன் மூலம் இன்று நாம் பார்க்கும் இந்திய சமூகத்தின் சீர்குலைவுகள் ஆரம்பமாகின. இந்தக் கடுமையான நிலையிலிருந்து விடுதலை பெற வீர இந்துவாக ஒன்று படுவோம் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வருங்காலப் பத்தாண்டுகளில் நாம் அழிந்து போகத் தயாராக இருக்க வேண்டும்.

நாம் நமது தேசத்தைச் சீர் செய்ய வேண்டுமென்றால், சனாதன வீர இந்துத்துவாதான் எதிரே நிற்கும் ஒரே வழி.

இவ்வாறு சு.சாமி திருவாய் மலர்ந்துள்ளார்.

பிறப்பின் அடிப்படையில் வருணாசிரமம் இல்லை _ - கிடையாது என்று சு.சாமி அறிவு நாணயத்துடன் நம்புவாரேயானால், சங்கர மடத்தில் சங்கராச்சாரியார் வருவது பிறப்பின் அடிப்படையிலா இல்லையா?

கோயில் அர்ச்சகர்களாகப் பார்ப்பனர்கள் வருவது பிறப்பின் அடிப்படையிலா இல்லையா?

இவற்றை மாற்ற வேண்டும் என்று சு.சாமி அய்யர் சங்கரமடத்தின் முன் மறியல் நடத்துவாரா? கற்பகாம்பாள் கோயில் முன் கண்டனக் கூட்டம் நடத்துவாரா?

சு.சாமி பூணூல் போட்டு இருப்பது பிறப்பின் அடிப்படையிலா? - குணத்தின் அடிப்படையிலா?

நாணயமாகப் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்!

தமிழ் ஓவியா said...


காகம் விரட்டினால் சனி பிடிப்பாராம்! சோதிடரால் பொறியாளர் தற்கொலை!பெங்களூரு, ஜூலை 20-காகம் விரட்டினால் சனி பிடிக்கும் என்று ஜோதிடர் கூறியதால் பொறியாளர் இளைஞர் தற்கொலை செய்து கொண் டார்.

கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டம் லக்ஷ்மேஸ் வரா பகுதியைச் சேர்ந்தவர் விருபாட்சா. இவரது மகன் ஆனந்த் (23). பெங்களூரு எச்ஏஎல் நிறுவனத்தில் பயிற்சி பொறியாளராக வேலை பார்த்து வந்தார். பெங்களூரு அருகே வாடகை வீட்டில் தனது தம்பியுடன் வசித்து வந்தார்.

2 தினங்களுக்கு முன்பு காலையில் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தபோது காகங்கள் அவரை துரத்தி தலையில் தாக்கின. தொடர்ந்து 2 நாட்கள் இப்படி நடந்ததால் வருத்தம் அடைந்த ஆனந்த், சோதிடரிடம் அது பற்றி கேட்டுள்ளார். அதற்கு, சனி பகவான் அவரை விரட்டுவதாகவும், சனி பிடித்தால் விடாது, தொடர்ந்து வீட்டில் கஷ்டங்களை கொடுக்கும் என்றும், அவரது தாய் தந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று பயமுறுத்தியுள்ளார்.

இதனால் வருத்தமடைந்த ஆனந்த், தனது தாய்க்கு போனில் தெரிவித்துள்ளார். அவரும் சோதிடர் சொல்வது போல ஒன்றும் நடக்காது என்று ஆறுதல் கூறினார். தன்னால்தான் தந்தைக்கு உடல்நிலை பாதித்துள்ளது என கருதி, நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத் தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...


மோடிக்கு எதிர்ப்பு நாளும் வலுக்கிறது! வலுக்கிறது!!


மம்தா பானர்ஜி, அன்னாஹசாரே எதிர்ப்பு!

பிரதமர் மதச்சார்பற்றவராகவே இருக்க வேண்டும்!

புதுடில்லி, ஜூலை 20- பிரதமருக்கான வேட் பாளர் மதச் சார்பற்றவ ராகவே இருக்க வேண் டும் - மோடிக்கு எங்கள் ஆதரவு கிடையாது என்று மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அன்னாஹசாரேயும் - திட்டவட்டமாகக் கூறி யுள்ளனர்.

மம்தா பானர்ஜி

பா.ஜ தேர்தல் பிரச் சார குழு தலைவர் நரேந்திர மோடியை, திரிணாமுல் காங்கிரஸ் ஒருபோதும் ஆதரிக் காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்தில் ராம்புர்ஹத் பகுதியில் நடந்த பஞ்சாயத்து தேர் தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

காங்கிரஸ் தலைமை யிலான அய்க்கிய முற் போக்கு கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண் டிருக்கிறது. நரேந்திர மோடி பற்றி எதுவும் கூறாமல் இருந்து வந்த காங்கிரஸ், தற்போது தேர்தல் நெருங்குவதால், நரேந்திர மோடியை தாக்கிப் பேசுகிறது. நாங் கள் மோடியை ஆதரிக்க வில்லை. எதிர்காலத்தி லும் ஆதரிக்கமாட் டோம். காங்கிரஸ் மற்றும் பா.ஜ கட்சிகள் சமரச விளையாட்டில் ஈடுபட்டுள்ளன. ஓட் டுக்களை பெற மார்க் சிஸ்ட் கட்சியும் சமரச விளையாட்டில் ஈடுபடு கிறது. அதனால் அவர் கள் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குதுப்பு தின் அன்சாரியை கொல் கத்தா அழைத்து வந்துள் ளனர். இவ்வாறு மம்தா பேசினார்.

அன்னாஹசாரேவும் கைவிட்டார்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மதச் சார்பற்றவர் என எப் போதும், தான் கூறிய தில்லை என அன்னா ஹசாரே தெரிவித்துள் ளார். பாரதிய ஜனதா மதவாதக் கட்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

அன்னா ஹசாரே செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறிய தாவது:

நரேந்திர மோடியை மதச்சார்பற்றவராகக் கருதுகிறீர்களா? என செய்தியாளர்கள் கேட் டனர். அவருக்கு எதிராக என்னிடம் ஆதாரம் எதுவும் இல்லாததால், இதுபற்றி எதுவும் கூற முடியாது என நான் பதில் அளித்தேன்.

எனது கருத்து தவ றாகப் புரிந்துகொள்ளப் பட்டு, மோடி மதச்சார் பற்றவர் என, தாம் கூறி யதாக சில ஊடகங் களில் செய்தி வெளியாகி யுள்ளது. இது தவறு.

பாரதிய ஜனதா கட்சி ஒரு குறிப்பிட்ட இனத் துக்கு ஆதரவானது. மற்ற இனத்துக்கு எதி ரானது. இன்னும் சொல் லப்போனால், ஒரு குறிப் பிட்ட இனத்துக்கு முற் றிலும் எதிரான கட்சி பாஜக.

மோடியை தேர்தல் பிரசாரக் குழுத் தலைவ ராக பாஜக நியமித்துள் ளது. பாஜகவைச் சேர்ந்த மோடி, அதன் கொள் கைகளைத்தான் பிரதி பலிப்பார். இதற்குமேல் ஒரு தனி நபரைப் பற்றி நான் பேச விரும்ப வில்லை என்றார் அன்னா ஹசாரே.

தமிழ் ஓவியா said...


நன்றி மணக்கும் கடிதமும், நன்கொடையும்


ஈரோடு-18-07-2013 வியாழன் அன்று பிரபல எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் பி.டி.சக்திவேல்-மகப்பேறு மருத்துவர் சவுந்திரம் சக்திவேல் இணையரின் மகன் பிரதீப்குமார் அவர்களுக்கு இந்த ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.

சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றி ஒடுக்கப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புக் கதவைநீதிக்கட்சி ஆட்சி மருத்துவப் படிப்பிற்குத் திறந்தது. அதற்கும் தந்தைபெரியார் தான் காரணம்,அதனைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டிற்காக போராடி, இட ஒதுக்கீடு பெற்றுத்தந்ததும் தந்தைபெரியார்தான் இன்றுவரை தந்தைபெரியாரின் இயக்கமான திராவிடர்கழகம் சமூக நீதிக்காக பல்வேறு களங்களைக்கண்டு மாபெரும் வெற்றிகளைத் தமிழ் சமுதாய ஒடுக்கப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெற்றுத்தந்துள்ளது.குறிப்பாக தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்களின் பணி அளப்பரியது.தந்தை பெரியார், விடுதலை, ஆசிரியர் கி.வீரமணி இவர்களது உழைப்பால் இடஒதுக்கீடு (கல்வி,வேலை வாய்ப்பு) தமிழ்நாட்டிலும்,மண்டல்கமிசன் மூலம் இந்தியாவெங்கும் சிறப்பான முறையில் நடைமுறைக்கு வந்துள்ளது.

இட ஒதுக்கீட்டு முறையில்தான் நானும்,எனது இணையர் சவுந்திரம் அவர்களும் மருத்துவர்களாக படித்து பயன்பெற்றோம்,அதனால் நாங்களும் இச்சமூகத்திற்கு பயன்படுகிறோம். அந்த வகையில் எங்களது மகன் பிரதீப்குமாருக்கு கோவை அரசு மருத்துவக்கல்லூரி யில் 2013-இந்த ஆண்டு இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.எனவே வாழையடி வாழையாக தமிழ் சமூகம் உயர்வதற்கு உழைத்துவரும் விடுதலை" வளர்ச்சிக்கு நன்றியுடன் ரூபாய் 10000/.(பத்தாயிரம்) வங்கிவரையோலையாக வழங்கி மகிழ்கிறோம். நன்றி.

நன்றியுடன் மருத்துவர் பி.டி.சக்திவேல் எம்.பி.பி.எஸ். எம்.எஸ்.ஆர்த்தோ, ஈரோடு. சக்தி நர்சிங்ஹோம், எலும்பு முறிவு மருத்துவமனை, பைபாஸ் சாலை, கொல்லம்பாளையம், ஈரோடு-638002.

18-07-2013 அன்றுமாலை 6 மணியளவில் மருத்துவர் பி.டி.சக்திவேல் அவர்கள் வங்கிவரையோலையை மண்டல தி.க.செயலாளர் ஈரோடுசண்முகம் அவர்களிடம் ஒப்படைத்தார் உடன் மாநகர தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட சு.ம.திருமண அமைப்பாளர் ப.சத்தியமூர்த்தி,மாநகர இளைஞரணித் தலைவர் ஜெபராசுசெல்லத்துரை.

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு முறை கிடையாதா?


நடுவணரசின் கல்வி உரிமைச் சட்டத்தில் பள்ளிகளில் தகுதியுடைய ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் எனக்கூறப்பட்டிருக்கிறது. அது ஆசிரியர் பணிக்கான பயிற்சியைப் பெற்றுத் தேர்ச்சியடைந்து இடைநிலை ஆசிரியருக்கான பட்டயச்சான் றையோ, பட்டதாரி ஆசிரியர்களுக் கான பி.எட் சான்றையோ பெற்றவர் களுக்கு மீண்டும் அவர்களின் தகுதியை சோதிக்க ஒரு தேர்வு (தகுதித்தேர்வு) நடத்த வேண்டும் என்ற பொருளில் சொல்லப்பட்டதல்ல!

உத்தரப்பிரதேசத்தில் 9-ஆவது வகுப்புப் படித்த மாணவர்களையே தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர் களாக நியமித்தார்கள்.

டில்லியிலே பல்கலைக்கழக மாண வர்களை பள்ளிகளில் ரூபாய் 5 ஆயிரம் ஊதியத்தில் பகுதிநேர ஆசிரியர் களாக நியமித்தார்கள்.

பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதாவால் பேசப்பட்டு வரும் நரேந் திரமோடி முதல்வராக உள்ள குஜராத் மாநிலம் பயிற்சி பெறாதவர்களை ஆசிரியர்களாக நியமித்து கல்வியை பாழ்படுத்தி விட்டது என உச்சநீதி மன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது.

அது போன்ற மாநிலங்களில் தான் தகுதித்தேர்வை நடத்தி ஆசிரியர் களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது கல்வி உரிமைச் சட்டத்தின் கருத்தாகும்.

தமிழ்நாட்டிலே நிலைமை அவ்வா றில்லை, இங்கு ஆசிரியர் பணிக்குரிய தகுதியைப் பெற்று 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு 10, 15 ஆண்டுகளாகப் பணிக்காகக் காத்திருக்கிறார்கள்.

கல்வி உரிமைச்சட்டம் 26.8.2009-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு 27.8.2009 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

அதன்பின்னே, தமிழகத்தில் ஈராண்டுகாலம் ஆட்சியிலிருந்த மூதறி ஞர் கலைஞர் தலைமையிலான தி.மு. கழக ஆட்சி - அச்சட்டத்தின் பொருளை உணர்ந்தே, தேவையில் லாத தகுதித் தேர்வை நடத்தாமல், பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் களைத் தேர்ந்து, பணியில் நியமித்து வந்தது.

ஆனால், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு, கலைஞரரசு நிறை வேற்றிய மக்கள் நலத்திட் டங்கள் பலவற்றை முடக் கியும், சிலவற்றை மாற்றிய மைத்தும் - புதிய பெயர் தந்தும் வருவதையொட்டியே தகுதியுள்ள ஆசிரியர்களுக்கே மீண்டும் தகுதித் தேர்வை நடத்திடத் தொடங்கியது.

மேலும், பண்டைய காலம் போல் அல்லாமல் கலைஞர் அரசின் கருணை யினாலே, ஆசிரியர்களின் ஊதியம் நடுவணரசுக்கு இணையாக உயர்ந்து விட்ட சூழலில், உயர்ந்த ஊதியம் பெறும் ஆசிரியர் பணியில், ஒடுக்கப்பட்ட மக்கள் வரக்கூடாது. மேட்டுக்குடியினர் மட்டுமே வரவேண்டும் - என்ற உள்நோக்கத் தோடும், அரசு ஈராண்டுகளுக்கும் மேலாக இதுவரை விளம்பரத்திற்காக அறிவித்துள்ள 96235 ஆசிரியர்களை நியமிக்க மனமில்லாமலும் தகுதித் தேர்வை கையில் எடுத்து இது தமிழக அரசின் கொள்கை முடிவு என நீதிமன் றத்தில் அறிவித்து, தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என சாதித்து வருகிறது.

பிற மாநிலங்களைப் பாரீர்!

அத்தேர்வில் ஒடுக்கப்பட்ட மக்கள் முதல் முன்னேறிவிட்ட மேட்டுக்குடியினர் உட்பட அனைவருமே 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என இட ஒதுக்கீடு, கொள்கைக்கு முரணாக அ.தி.மு.க. அரசு அறிவிப்புத் தந்துள்ளது. ஆனால் இடஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றி தகுதித்தேர்வில்,

தமிழ் ஓவியா said...

ஆந்திராவில்OC60% BC, MBC 50%, SC,ST 40% மும், அஸ்ஸாமில் OC60% Others 55%மும், பீகாரில் OC60% Others 55%மும், ஒடிசாவில் மும் மதிப்பெண் பெற்றால் போதும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

ஆனால் இடஒதுக்கீட்டுக்காக மாபெரும் போரட்டத்தை நடத்தி, அப்போ ராட்டத்தை எதிர்கொள்ள முடியாத ஜவஹர்லால் நேருவை பிரதமாகக் கொண்டிருந்த அன்றைய மத்திய அரசு, முதல்முறையாக இந்திய நாட்டின் அரசி யல் சட்டத்தையே திருத்தி, அச் சலுகையை அறிவிக்கச் செய்த தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டிலே அவ்விட ஒதுக்கீடு மறுக்கப்படுவதற்குக் காரணமே தமிழர்களில் பெரும்பாலோர் மொழி உணர்வும், இன உணர்வும் அற்றவர் களாக மாறிவிட்டதேயாகும்.

தமிழ் ஓவியா said...


அவ்விட ஒதுக்கீட்டை வலியுறுத்தித் தமிழினத் தலைவர் மூதறிஞர் கலைஞர் அவர்களும், தமிழர் தலைவர்ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர் களும் கட்டுரை தீட்டியுள்ளார்கள்.

திராவிடர் கழக மாணவரணி, இடஒதுக்கீட்டை வலியுறுத்தி 5.7.2013 அன்று, சென்னை பெரியார் திடலில் கல்வியாளர்களின் சமூகநீதி பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்றை என் (க.மீனாட்சி சுந்தரம்) தலைமையிலும், அதைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் பங்கேற்ற மாநாடு ஒன்றை ஆசிரியர் கி.வீரமணி தலைமையிலும் நடத்தி அதன் தீர்மானத்தை தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ளது, விடுதலை ஏட்டில் முதல்வருக்கு திறந்த மடல் ஒன்றும் எழுதப்பட்டுள்ளது.

மரபு கருதிய தீர்ப்பா?

இந்நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், மருதூர் தெற்கில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டப் பிரிவைச் சேர்ந்தவரும், கூலிவேலை செய்யும் ஒருவரின் மகனும், மாற்றுத்திறனாளி யுமான கே.குமரவேலு என்பவர் தகுதித் தேர்வில் 83 மதிப்பெண் பெற்றதால், அவர் தேர்ச்சியடையவில்லை என தேர்வு வாரியம் அறிவித்ததை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் அரசின் இட ஒதுக்கீடு கொள்கை அமல்படுத்தப் படாததால் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை நீதிமன்றம் களைய வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்திருந்த வழக்கில், அவருக்காக வாதிட்ட வழக்குரைஞர் காசிநாதபாரதி ஏனைய மாநிலங்களில் இடஒதுக்கீடு கொள்கை அடிப்படையில் தரப்பட்டுள்ள மதிப்பெண் சலுகைகளையும், தமிழ்நாட்டில் அக் கொள்கை புறக்கணிக்கப்பட்டிருப்ப தையும் சுட்டிக்காட்டி வாதிட்ட போது நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள், வழக்கில் உள்ள நியாயத்தை மறுக்க வில்லை. தனக்கு முன்னாலே, தன் தகுதியிலேயே மணியாற்றிய நீதியரசர் சந்துரு அளித்தத் தீர்ப்பில் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டை அளிக்க முடியாது எனக்கூறியுள்ளார், எனவே இதைப்பின்பற்றுகிறேன், இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு கூறியுள்ளார்.

இத்தீர்ப்புப்பற்றி சட்டவல்லுநர்களை கலந்த போது, நீதியரசர் ஒரு மரபு கருதி தன் தகுதியில் பணியாற்றிய சகோதர நீதிரசர் கூறிய தீர்ப்புக்கு மாறாக தன் தீர்ப்பு அமையக்கூடாது எனக் கருதியுள்ளார். தேவை மேல் முறையீடு

எனவே, நாம் இந்த வழக்கை இரு நீதியரசர்களின் அமர்வை கொண்ட டிவிஷன் அமர்வில் அப்பீல் செய்து சீனியர் வழக்குரைஞர்களைக் கொண்டு வாதிட்டால் நிச்சயம் பெற்றபெற வாய்ப்புண்டு எனக்கூறுகிறார்கள்.

எனவே சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வில் அப்பீல் செய்ய உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தில் சார்பில் தெரிவித் துக் கொள்கிறோம். இவ்வாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் க.மீனாட்சிசுந்தரம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கலாமா?இம்மாதம் 16ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களில் இரண்டாவது தீர்மானம் - இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதாகும்.

54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டது இந்தக் காமன் வெல்த்தாகும். சுழற்சி முறையில் இந்தக் காமன்வெல்த் மாநாடு ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுகிறது.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று குரல் உலக நாடுகளில் ஓங்கி ஒலிப்பதற்கு என்ன காரணம் என்பது சிந்திக்கப்பட வேண்டாமா?

காரணம் - அங்கே மிகப் பெரிய இனப்படு கொலை நடந்திருக்கிறது. இனப்படுகொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அவ்வாறு செய்தி ருப்பதை இன்றுவரை நியாயப்படுத்திக் கொண்டும் இருக்கிறது.

குறிப்பாக இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று அழுத்தம் கொடுப்பதற்கு அதிகமான காரணங்களும், நியாயங்களும் இருக்கின்றன.

1983 ஆகஸ்டு 16ஆம் தேதியன்று இந்திய நாடாளுமன்றத்திலேயே அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இலங்கையில் நடப்பது இனப் படுகொலையே என்பதைத் தெரிவித்திருக்கிறார் என்பதை இந்திய அரசு அறியும் பட்சத்தில் அது எப்படி இனப்படுகொலைக்குக் காரணமாகவிருந்த அதிபரின் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்? கலந்து கொள்ளவும் முடியும்?

இந்த அடிப்படையான கேள்விக்கு இந்தியா பதில் சொல்லக் கடமைப்படவில்லையா?

வெளிநாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்த பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் ஒரு பேட்டியில் இலங்கையில் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அங்கு தமிழர்களில் மிதவாதிகள்கூட தீவிரவாதிகளாகும் விபரீதம் ஏற்படும் என்று கூறியுள்ளாரே! (23.9.1984)

இந்திரா காந்தி அவர்களைத் தலைவராகவும், கட்சியின் வழிகாட்டியாகவும் கருதக் கூடிய இன்றைய மத்திய அரசு, அவரின் குரலை - குரலில் அடங்கியுள்ள நியாயத்தை ஆழமாகப் புரிந்து கொண்டு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டாமா?

இனப்படுகொலை நடைபெறும் எந்த நாட்டிலும் மனிதாபிமானம் உள்ள எந்த நாடும் தலையிடுவதற்கு உரிமை உண்டு என்று (ழுநநேஎய ஊடிஎநவேடி - 1948) அய்.நா.வின் சட்ட விதி கூறியிருக்கிறதே.

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க விதிமுறைகளும், நியாயங்களும் ஏராளமான அளவில் குவிந்து கிடக்க, இந்தியா வேறு மாதிரி நடந்து கொள்வது உலக நாடுகள் மத்தியிலும், குறிப்பாக மனித உரிமை விரும்பிகள் மத்தியிலும் அவப் பெயரைத் தேடிக் கொள்வதாகும். இது 120 கோடி இந்திய மக்களுக்கு ஏற்படும் தலைக்குனிவும் ஆகும்.

16ஆம் தேதி டெசோ கூட்டத்தில் பல முக்கிய மான தகவல்கள் எடுத்துக்காட்டவும் பட்டுள்ளன.

கனடா நாடு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதாக கூறியுள்ளது. பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் குறிப்பாக காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு, ஆஸ்திரேலியாவின் மனித உரிமைச் சட்ட மய்யம் முதலியவை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளனவே! காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் ஒருமனதாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனரே!

டெசோ கூட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலும், கருத்தும் மிக மிக முக்கியமானவை.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடை பெறுவது உறுதியாகி விட்ட நிலையில், காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால், அதன் காரணமாகவே அடுத்த இரண்டாண்டு களுக்கு காமன்வெல்த் மாநாட்டின் அவைத் தலைவராக ராஜபக்சே இருப்பாரென்றும், அதனால் 54 நாடு களைக் கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரை நீதி விசாரணைக்கு உட்படுத்துவது இக்கட்டாக ஆகிவிடக் கூடுமென்றும், வலிமையான கருத் துகள் முன் வைக்கப்படுவதால், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா நட்பு நாடு என்று கூறிக் கொண்டு அதிலே கலந்து கொள் ளுமேயானால் அங்கே நடைபெற்ற இனப்படு கொலைகளை இந்தியா ஏற்றுக் கொள்வது போலாகி விடும் என்று டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வரிகள் மிக மிக முக்கியமானவை அல்லவா!

இந்தியா காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப் பதன் மூலம் ஈழப் பிரச்சினையில் இதுவரை சம்பாதித்து வைத்துள்ள அவப் பெயரை - பழியைப் பெரும் அளவில் துடைத்துக் கொள்ள நல்லதோர் வாய்ப்பாக அமையுமே! இந்தியா சிந்திக்குமாக!

தமிழ் ஓவியா said...


பாடுபடுவான்இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாகக் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்குக் கடுகளவு சுயமரியாதையாவது இருக்குமானால், அவன் மனித இழிவைப் போக்கத்தான் முதலில் பாடுபடுவான்.
(குடிஅரசு, 3.5.1936)

தமிழ் ஓவியா said...

கச்சத்தீவு: நடந்ததென்ன? கலைஞர் கடிதம்


சென்னை, ஜூலை 20- கச்சத்தீவு, தி.மு.க. ஆட்சியில் தாரை வார்க்கப்பட்டது என்று குறை கூறுவோருக்கு தி.மு.க தலைவர் கலைஞர் பதிலடி கொடுத்து பல தகவல்களையும் வெளியிட்டுள்ளார். கடிதம் வருமாறு:-

உடன்பிறப்பே,

முதலமைச்சர் ஜெயலலிதா கொடை நாட்டிலே ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறார் என்று எங்கே பத்திரிகைக்காரர்கள் எழுதிவிடப் போகிறார்களோ என்பதற்காக, அன்றாடம் ஏதாவதொரு அறிக்கையை அவர் பெயரால் நாளேடுகளில் வருமாறு பார்த்துக் கொள்கிறார்.

கொடைநாட்டில் அமர்ந்து கொண்டு, அதிகாரி களோடு கலந்தாலோசித்து, அம்மையார் அறிக்கைகளைத் தயாரித்து அனுப்புகிறார் என்று தமிழ்நாட்டு மக்கள் எண்ணிக் கொள்ள வேண்டுமாம்! தமிழ்நாட்டு மக்கள் என்ன அவ்வளவு இளித்தவா யர்களா என்ன? அவர்களுக்கு உண்மை தெரியாதா என்ன? அந்த வரிசையிலேதான் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு விற்பனை குறித்தும், அந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பற்றியும் அறிக்கை மூலமாகவே தீர்த்து வைத்த நமது முதல் அமைச்சருக்கு நேற்றையதினம் அறிக்கை விடுவதற்குப் பொருள் கிடைக்க வில்லைபோலும்! அதுமாத் திரமல்ல; 17ஆம் தேதிய நாளேடுகளில் எல்லாம் - இந்து நாளிதழ் உட்பட, கச்சத்தீவினைத் திரும்பப் பெறுவது பற்றி உச்சநீதி மன்றத்தில் நான் தொடுத்த வழக்கினை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு மத்திய அரசினைப் பதில் கூறுமாறு உத்தரவிட்டுள்ளது என்று விரிவாகச் செய்தி வெளியிட்டதைப் பார்த்தவுடன், பொறுக்க முடியவில்லை! எடுத்தார் பேனாவை; எழுதித் தள்ளி விட்டார் எட்டு பக்கத்திற்கு கச்சத்தீவு பிரச்சினையில் நான் துரோகம் செய்து விட்டதாக! இந்தப் பிரச் சினையில் நான் துரோகம் செய்து விட்டதாக அம்மையார் இதுவரை எத்தனை முறை அறிக்கை விடுத்திருக்கிறார் என்று எண்ணித்தான் பார்க்க வேண்டும்! ஒவ்வொரு முறையும், கச்சத்தீ வினை நானும், மத்திய அரசும் சேர்ந்து கொண்டு தாரை வார்த்து விட்டதாக புகார்களை அடுக்கத் தொடங்கி விடுவார்! முதலமைச்சர் மீது எதிர்க்கட்சிக்காரர்கள் யாராவது பேசினால் போதும்; உடனே அவதூறு வழக்குகள் பாய்ந்து வரும்.

தமிழ் ஓவியா said...

ஆனால் அவர் எதிர்க்கட்சிக் காரர்களைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் அவதூறாகப் பேசுவார். அதைப்பற்றி யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது. துரோகம்! கருணாநிதியின் முதல் துரோகம், இரண்டாவது துரோகம், மூன்றாவது துரோகம் என்று பட்டியல் போடுவார்; கபட நாடகங்கள் என்பார்; கண்துடைப்பு நாடகங்கள் என்பார்; சுய நலம் என்பார்; கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்; ஒப்புக்கு சப்பாணி என்பார்; இதெல்லாம் அவரது அரசியல் பண்பாட்டில் பிறந்து அடிக்கடி பயன்படுத்தும் அழகு தமிழ்ச் சொற்கள் (?) அவருக்கே வழக்கில் வந்த வார்த்தைகள்! இத்தனை பக்கங்கள், இவ்வளவு கடுமை யானதும் கசப்பானதுமான அர்ச்சனைகளை முதலமைச்சர் ஜெயலலிதா என் மீது வாரி இறைத்திருக்கிறாரே; என்ன காரணம்? கச்சத் தீவில் அவர் எதுவுமே செய்யவில்லை என்று நான் எழுதினேனா என்றால் இல்லை! அவர் பிரச்சினைக்கே நான் செல்லவில்லை. நான் செய்ததெல்லாம் உச்ச நீதிமன்றத்தில் கச்சத் தீவு பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வழக்கு தொடுத்தது தான்! அதுகூடக் குற்றம் இல்லை. அந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் ஏற்கப்பட்டு, அதைப்பற்றிச் செய்தி ஏடுகளில் வெளிவந்துவிட்டது. அவரைப் பற்றிய செய்திகள் தவிர, என் தொடர்பான செய்திகள் வரலாமா? எப்படியோ கச்சத் தீவில் நான் துரோகம் செய்து விட்டதாக முதலமைச்சர் எட்டு பக்க அறிக்கை விடுத்தபிறகு, அதற்கு நான் விளக்கம் அளிக்க வேண்டாமா? கடந்த இரண்டு மாதங் களுக்கு முன்பு 3-5-2013 அன்று திடீரென்று கச்சத் தீவுப் பற்றி பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தீர்மானத் தை முன் மொழிந்து, அவரே அந்தத் தீர்மானத்தின் மீது நீண்ட நேரம் பேசி நிறைவேற்றப்பட்டது.

தமிழ் ஓவியா said...

அர்ச்சனைகள்

அந்த உரையில்; தொடக்கம் முதல் முடிகின்ற வரையில் எனக்குச் செய்யப்பட்ட அர்ச்சனை தான்! அப்போது திடீரென்று கச்சத்தீவு பற்றிய தீர்மானம் அம்மையாருக்கு எப்படி நினைவுக்கு வந்தது தெரியுமா? 15-4-2013 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற டெசோ அமைப்பின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் காரணம். அந்தத் தீர்மானத்தின் இறுதியாக 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், டெசோ அமைப்பின் மூலம் உச்ச நீதி மன்றத்தை அணுகுவதென முடிவெடுக்கப் பட்டது என்று குறிப்பிட்டதுதான் காரணம். கச்சத்தீவில் நான் துரோகம் செய்து விட்டதாக அறிக்கை விட்ட அம்மை யாரைக் கேட்கிறேன்; கச்சத்தீவை மீட்பதற்காக நான் எதுவுமே செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறீரே, தற்போது அம்மையாரின் கோபத்திற்குக் காரணமான உச்ச நீதிமன்ற வழக்கை இந்தக் கச்சத்தீவினை மீட்க வேண்டும் என்பதற்காகத் தானே நான் தொடுத்துள் ளேன். இதுவும் ஒரு துரோகமா? கச்சத் தீவை மீட்டே தீருவேன் என்று அம்மையார் ஜெயலலிதா அவர்கள் 1991ஆம் ஆண்டு விடுதலை நாள் விழா உரையில் சூளுரைத்ததைப்போல நானா சூளுரைத்தேன்? அவர் சபதம் செய்துதான் 22 ஆண்டுகள் ஓடிவிட்டனவே! என்ன செய்து கிழித்து விட்டார்? 15-8-1991 அன்று ஜெயலலிதா என்ன பேசினார்? கச்சத் தீவைத் திரும்பப் பெற மத்திய அரசுடன் வாதாடவும், தேவை ஏற்பட்டால் போராடவும் இந்த அரசு தயாராக உள்ளது என்று முழங்கியது நானா? ஜெயலலிதாவா? அப்படிச் சவால்விட்டுவிட்டுத் தற்போது என்னைப் பார்த்து, ஏன் போராடவில்லை என்றும், துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை என்றும் இவர் ஏதோ தூணையே கிள்ளிப் போட்டதைப் போலவும் குற்றம் சாட்டுவது என்ன வகை நியாயம்? 20-4-1992 அன்று இதே சட்டப் பேரவையில் ஜெயலலிதா பேசும்போது, கச்சத் தீவை மீட்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக்கூடிய, நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை என்று கச்சத்தீவுப் பிரச் சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதைப்போலக் கூறியது உண்டா? இல்லையா? அவரே பேரவையில் அவ்வாறு பேசி விட்டு, கச்சத் தீவை மீட்பதற்கு நான் எதுவும் செய்யவில்லை என்று அறிக்கை விடுவதற்கு என்ன பெயர்? நேற்றையதினம் ஜெயலலிதா கச்சத்தீவு பிரச் சினை பற்றி என்மீது கூறிய குற்றச்சாட்டு களை எல் லாம், இரண்டு மாதங்களுக்கு முன்பு பேரவையிலே அவர் பேசியபோதே கூறி அப்போதே நான் அவரது குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமாக பதில் எழுதியிருந் தேன். நியாயப்படுத்திய ஜெயலலிதா

அந்தப் பதிலிலேயே கச்சத்தீவைத் தாரை வார்க்க தி.மு.க. எந்தக் காலத்திலும் ஒப்புக்கொள்ளவும் இல்லை, தாரை வார்க்க உடன்படவும் இல்லை. தி.மு. கழகத்தைப் பொறுத்து மாத்திரமல்ல; தி.மு. கழக ஆட்சியைப் பொறுத்தும் பல நேரங்களில் கச்சத் தீவு பிரச்சினையை எழுப்பி கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள் என்று கேட்கத் தவறியதும் இல்லை. கச்சத் தீவிலே மீனவர் களுக்கு உள்ள உரிமை பாதிக்கப்படுவதை எடுத்துக் காட்டி, அந்தப் பாதிப்பை நிவர்த்திக்க வேண்டு மென்று கேட்கவும் கழக அரசு தவறியது இல்லை என்றெல்லாம் விளக்கிய பிறகும், மீண்டும் அதே குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா எழுப்பியிருக் கிறார் என்றால், அது சரியா? எனது அந்த விளக்கத்தில் ஒன்றை எழுதி யிருந்தேன். 30-9-1994இல் தமிழக முதல மைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போது பிரதமராக இருந்த திரு.நரசிம்ம ராவ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், , கூந உநனபே டிக வாளை வலே ளைடயனே வடி வாந ஐளடயனே சூயவடி யன நெந னடிநே லெ வாந ழுடிஎநசஅநவே டிக ஐனேயை வாந வேநசநளவ டிக நெவவநச டையவநசயட சநடயவடிளே அதாவது, தீவு நாடான இலங்கைக்கு, இந்தச் சின்னஞ் சிறிய தீவினை (கச்சத் தீவை) இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற் காகத் தான் - என்று அப்போதும் முதலமைச்சராக இருந்த ஜெய லலிதா, கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததை நியாயப்படுத்தி குறிப்பிட்டது உண்டா இல்லையா என்று கேட்டிருந்தேனே, அதற்கு ஏன் இன்று வரை பதிலளிக்கவில்லை. பிரதமருக்கு கலைஞர் எழுதிய கடிதம்

தமிழ் ஓவியா said...

முதலமைச்சர் ஜெயலலிதா தனது உரையில்; ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே கச்சத்தீவை இந்தியா தாரை வார்க்கப்போவது தெரிந்திருந்தும் ஏன் எந்தவிதமான நடவடிக் கையையும் கருணாநிதி உடனே எடுக்க வில்லை? என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

இதே கேள்வியை இதுவரை ஜெயலலிதா எத்தனை முறை தான் கேட்டிருக்கிறார். ஒப்பந்தம் 28-6-1974 அன்று கையெழுத்தான உடனேயே 29-6-1974 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நான் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அதில் கச்சத் தீவு பற்றித் தீர்மானம் நிறை வேற்றியது உண்மையா இல் லையா? ஆனால் அ.தி.மு.க. அந்தத் தீர்மானத்தை ஆதரித்துக் கையெழுத்திட அப்போதே மறுத்து விட்டது. அதே 29-6-1974 அன்று நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,

“Dear Prime Minister,
On behalf of the Government of Tamil Nadu and on behalf of the people of Tamil Nadu, I am constrained to express our deep sense of disappointment over the recent Indo-Sri Lanka Agreement, according to which, Sri Lanka’s claim to Kachativu has been conceded by the Government of India. May I express the hope that you will take into consideration the decision contained in the Resolution and take appropriate action?”

தமிழ் ஓவியா said...

- என்று எழுதியிருக்கிறேன். இதுதான் கச்சத் தீவினை நான் தாரை வார்த்துவிட்டேன் என்பதற்கான ஆதா ரமா? இதுதான் நான் துரோகம் செய்ததற்கான அடையாளமா? 24-7-1974 அன்று கச்சத்தீவு பிரச்சினைக் காக தமிழகம் முழுவதும் கண்டனப் போராட்டங் களை தி.மு.க. நடத்தியது பொய்யா? தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டங்களிலே முதல மைச்சராக இருந்த நானே கலந்து கொள்ளவில்லையா? 23-7-1974 அன்று நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை வந்த போது, தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அப்போது தி.மு.கழக உறுப்பினராக இருந்த நண்பர் இரா.செழியன் குறிப்பிட்டாரா இல்லையா? தமிழக அரசைக் கலந்தா லோசிக்காமல், மத்திய அரசு தன்னிச்சையாக இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது ஜனநாயக விரோதப் போக்காகும் என்று மாநிலங்களவையில் கழக உறுப்பினர் நண்பர் எஸ்.எஸ். மாரிசாமி தெரிவித்தாரா இல்லையா? அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்ட மன்றக் கூட்டத்திலேயே, அதாவது 21-8-1974 அன்று பேரவையில் அரசின் சார்பில் என்னால் முன் மொழியப்பட்ட தீர்மானம், இந்தியாவுக்குச் சொந்த மானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து, கச்சத் தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது என்பதாகும். இதெல்லாம் துரோகத்திற்கான ஆதார ஆவணமா? அடுத்து ஜெயலலிதா தனது நீண்ட அறிக் கையில் எடுத்து வைத்திருக்கும் மற்றொரு வாதம் - 1974இல் திரு. கருணாநிதி கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட செய்தியை, பத்திரிகைகளில் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன், பதறிப் போனேன் என்கிறார். ஆனால் 2013இல் ஒப்பந்தம் நிறைவேற்றப் படுவதற்கு முன்பே இவர் சொல்லித்தான் சில ஷரத்துக்கள் சேர்க்கப் பட்டன என்கிறார் - என்பதாகும். இதே கருத்தினை வார்த்தை மாறாமல் கடந்த மே மாதம் பேரவையில் பேசி, அதற்கும் நான் விரிவான பதிலை அப்போதே எழுதினேன். இருந்தாலும் மீண்டும் நேற்றைய அறிக்கை யிலே இதைச் சொல்லியிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

டெசோவின் தீர்மானம்

15-4-2013 அன்று டெசோ சார்பாக நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில், 1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோது, கழக அரசு முதல் நிலையி லேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தான போது, குறைந்தபட்சம் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமையும் அந்த ஒப்பந்தத் தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டுமென்று கழக அரசு வலியுறுத்தி அந்த ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில், கருணாநிதி ஆட்சி அதிகாரம் போன பிறகு அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே டெசோ அமைப்பைப் புதுப்பித்து, கூட்டங்களை நடத்துவது, தீர்மானம் நிறைவேற்றுவது, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது, தமிழக மக்களை ஏமாற்றும் செயல், தான் செய்த தவறை மூடி மறைக்கும் முயற்சி என்றெல்லாம் வெறுப்பு விஷத்தைக் கக்கியிருக்கிறார். நான் மேற் கொள்ளும் நடவடிக்கைகள் எதுவும் தமிழக மக்களை ஏமாற்றுகின்ற செயல் அல்ல; தமிழ் மக்கள் நலனைக் காப்பாற்றும் செயல்களாகும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று பேரவையில் 16-4-2002 அன்று தீர்மானம் கொண்டு வந்து விட்டு, இப்போது இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறாரே; அதுதான் தமிழக மக்களை ஏமாற்றுகின்ற துரோகச் செயல்!

இலங்கையிலே அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று பேரவையில் ஜெயலலிதா முழங்கிவிட்டு, தற்போது இலங்கைத் தமிழர்களுக்காகவும், கச்சத் தீவுக்காகவும் பரிந்து பேசி அறிக்கை விடுகிறாரே, அதுதான் தமிழக மக்களை ஏமாற்றுகின்ற செயல்! தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்தபோது கருணாநிதி கச்சத் தீவை மீட்க ஏன் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை என்று ஜெயலலிதா திரும்பத் திரும்ப கேட்டு வருகிறார். 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலும், 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலும், ஏன் இப்போது 2011 முதலும் ஜெயலலிதா தானே ஆட்சியிலே இருக்கிறார், இவர் ஏன் கச்சத் தீவை மீட்கவில்லை என்று நான் கேட்டிருந்தேனே, அதற்குத் தனது நீண்ட அறிக்கையில் ஜெயலலிதா ஏன் பதில் கூறவில்லை?

தமிழக மக்களை ஏமாற்ற முடியாது

இதே கச்சத்தீவுப் பிரச்சினைக்காக முதலமைச்சர் ஜெயலலிதாவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். டெசோ அமைப்பின் சார்பில் நானும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக் கிறேன். ஆனால் தமிழக மீனவர்களுக்காகவும், தமிழர் களின் நலனுக்காகவும் திரு. கருணாநிதி உச்ச நீதி மன்றத்தில் கச்சத் தீவு வழக்கைத் தாக்கல் செய்யவில்லை என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். இது ஜெயலலிதா! தமிழக மீனவர்களுக்காகவும், தமிழர் களின் நலனுக்காகவும்தான் ஜெயலலிதா உச்ச நீதி மன்றத்தில் கச்சத்தீவு வழக்கைத் தாக்கல் செய்தி ருக்கிறார்; தயவு செய்து நம்புங்கள்! இது கருணாநிதி! தமிழக மக்களை யாரும் ஒருபோதும் ஏமாற்ற முடியாது என்கிறார் ஜெயலலிதா; ஆம், உண்மை தான்; தமிழக மக்களை யாரும் ஒருபோதும் ஏமாற்ற முடியாது! தமிழக மக்கள் யாரிடமும் நிச்சயம் ஏமாற மாட்டார்கள். வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்திருப்பவர் கள்தான் தமிழக மக்கள்!

அன்புள்ள,
மு.க.

(குறிப்பு: கச்சத் தீவு மீட்கபட வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் 29.7.1997 அன்று தமிழர் தலைவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.)

தமிழ் ஓவியா said...

குடிஅரசு வாசகர்களுக்கு ஓர் உண்மையான முன்னறிவிப்பு

அன்புள்ள வாசகர்களே!

இதுசமயம் நமது குடி அரசு வாரா வாரம் 4000 பிரதிகள் வரை போய்க் கொண்டிருந்தாலும், சட்டசபைத் தேர்தல் தீர்ந்த அடுத்த வாரம் முதல் கொண்டே சுமார் 1000 அல்லது 1500 பிரதிகள் திடீரென்று குறைந்து சுமார் 2500 பிரதிகள் போலத் தான் போக நேரிடும். ஏனெனில், சட்டசபைத் தேர்தலின் பொருட்டு நமது பார்ப்பனர் செய்துவரும் பொய்ப் பிரசாரத்தை வெளிப்படுத்த வேண்டி `குடிஅரசுக்கு முன்பணமாக சந்தா வந்தாலும் வராவிட்டாலும் இதுவரை அனுப்பிக் கொண்டே வந்தோம். இதனால் பெருத்த நஷ்டமும் நேரிட்டிருக்குமென்று சொல்லத் தேவையில்லை. ஆதலால் சில பாக்கிதாரருக்கு மாத்திரம் வி.பி.பி மூலம் அனுப்பி பார்க்கவிருக்கிறோம். தேர்தல் முடிந்தவுடன் வி.பி.பி. திருப்பியவர்களுக்கும் சந்தா பாக்கிதாரர்களுக்கும், முன்பணமனுப்பாதவர் களுக்கும் பத்திரிகைகள் அனுப்பப்படமாட்டா. நிற்க, தேர்தல் முடிந்த பின்னர் நமது `குடிஅரசு அரசி யலையே முக்கியமாய்க் கருதாமல் மக்களின் சுயமரியாதையைக் கெடுக்கும் பார்ப்பனியத்திற்கு ஆதாரமான வேதம், சாஸ்திரம், மிருதி, இதிகாசம், புராணம் என்று சொல்லப்பட்ட ஆரிய சம்பந்தமான நூல்களிலும், செயல்களிலுமுள்ள தந்திரங்களையும், புரட்டுகளையும், பட்சபாதகங்களையும், வஞ்சனைகளையும் தெள்ளத்தெளிய விளக்குவதோடு அந்நூல்களிலுள்ள விஷயங்களை நமது பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக எப்படி மறைத்தும், திருத்தியும், தப்பு வியாக்யானப் படுத்திக் கூறியும், நம்மை ஏமாற்றி வருகிறார்கள் என்பதையும் முறையே வெளியிடுதலையே பிரதானமாய்க் கருதி தக்க ஏற்பாடுகள் செய்துள் ளோம். ஆதலால் சந்தா பாக்கியுள்ளவர்கள் சந்தாத் தொகையை அனுப்பியும் மற்றவர்கள் புது சந்தாதாரர்களாக சேர்ந்தும் `குடிஅரசை ஆதரித்து அடுத்த மாத ஆரம்பத்திலிருந்தே வாசித்து வர வேண்டுமென நாம் மனப்பூர்வ விநயமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு - ஆசிரியர் அறிவிப்பு, 17.10.1926

தமிழ் ஓவியா said...

தமிழ் நாட்டிலிருந்து
`மற்றொரு இந்தியத் தலைவர்

பண்டித மோதிலால் நேரு அவர்கள் தனக்கு அசவுகரியம் ஏற்படும் போதெல்லாம் நம் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களில் ஒருவரைத் தான் பதில் (ஆக்டிங்) தலைவராய் நியமிப்பது வழக்கம். அதுபோலவே சென்ற வாரமும் தனக்கு லாகூரில் இருக்க சவுகரியமில் லாததால் ஸ்ரீமான் எஸ். சத்திய மூர்த்தி சாஸ்திரிகளை வந்து தனது தானத்தை ஒப்புக்கொள்ள அழைத்து இருக்கிறார். முதல் தடவை ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு அழைப்பு வந்தது. மறுதடவை ஸ்ரீமான் எ. ரெங்கசாமி அய்யங்காருக்கு அழைப்பு வந்தது. மூன்றாம் தடவை ஸ்ரீமான் எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரிகளுக்கு அழைப்பு வந்திருக்கிறது. இனி நான்காந்தடவை கும்பகோணம் சக்கரவர்த்தி அய்யங்காருக்கு அழைப்பு வருமென்று எண்ணுகிறோம். இந்தியாவின் பாக்கியமே பாக்கியம். அதிலும் தமிழ்நாட்டின் பாக்கியமே பாக்கியம்.
- குடிஅரசு - செய்திக்குறிப்பு, 10.10.1926

தமிழ் ஓவியா said...

செந்தமிழ்ச் செல்வி (மாத வெளியீடு)

நாகரிகத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் பத்திரிகைகள் தலைசிறந்து நிற்கும். மேனாடுகளை நோக்க நமது நாட்டில் பத்திரிகைகளின் தொகையும் செல்வாக்கும் குறைவுதான். பல அறிஞர்களின் உள்ளக் கருத்துக்களை ஒருங்கு திரட்டி உணர்த்தலால் மக்கள் அறிவைப் பண்படுத்துதலில் பத்திரிகைகள் வல்லன. நமது நாட்டில் தினசரி, வாரப் பத்திரிகைகள் அரசியல் கிளர்ச்சியில் பாய்ந்து செல்லும் வேகத்தில் சமூக சீர்திருத்த விஷயத்தில் அசிரத்தை காட்ட வேண்டிய நிலையில் இருக்கின்றன. கல்வி, சமயம், தத்துவம், சமத்துவ உணர்ச்சி ஆகிய விஷயங்களில் எல்லோருக்கும் பயன்படத்தக்க ஒரு திறமான திருத்தம் ஏற்பட்டால்தான் நமது சமூகத்தை பிணித் திருக்கும் குருட்டு நம்பிக்கைகள் ஒழியும். இத்துறையில் வேலை செய்யவல்லன மாத வெளியீடு களே யாகும். ஏனெனில் அறிஞர்கள் சாவதானமாக ஆராய்ந்து கண்ட முடிவுகளே அவற்றில் வெளிவர இயலும். தமிழ்நாட்டில் அத்தகைய திங்கள் வெளியீடுகளிற் சிறந்தது நமது செந்தமிழ் செல்வி எனத் துணிந்து கூறலாம். இதில் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர்களான பேரறிஞர்களின் ஆராய்ச்சி உரைகளே வெளிவருகின்றன. பார்ப்பனியத்தின் மாயப்புரட்டுகள் வெளியாக்கப்படுகின்றன. தமிழர் நாகரிகம் தெள்ளத்தெளிய விளக்கப்படுகிறது. பண்டைய இலக்கிய இலக்கண ஆராய்ச்சிகளும் புதிய மேனாட்டுச் சாஸ்திர முறைகளும் ஆராய்ச்சி வல்லு நரால் பொருத்தமாய் எழுதப்படுகின்றன. மதுரைத் தமிழ்ச் சங்கத்தினின்றும் மாதம்தோறும் வெளியாகும் செந்தமிழ் வெளியீடு பார்ப்பன கோஷ்டி கையிலகப்பட்டுப் பார்ப்பனமயமாகிக் கொண்டிருக்கிறது. அதைத் தோற்றுவித்த ஸ்ரீமான் பாண்டித்துரைத் தேவரவர்களின் உத்தேசம் அடியோடு புறக்கணிக்கப் படுகிறது. பார்ப்பனரல்லாதார் பொருள் ஏராளமாயிருந் தும் சேதுபதி மகாராஜா தலைவராயிருந்தும் தமிழ்ச் சங்கத்தையும் அதைச் சார்ந்த கலாசாலையையும் `செந்தமிழ் மாத சஞ்சிகையையும் பார்ப்பனராதிக்கத்தில் ஒப்படைத்திருப்பது பரிதபிக்கத்தக்கது. இக்குறை களைக் கண்டே பல தமிழபிமானிகள் தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்னும் பெயரால் மற்றொரு உண்மை தமிழ்க் கழகம் கண்டனர். மதுரை தமிழ்ச் சங்கத்தைப் போல் தென் இந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கு புதுக்கோட்டை மகாராஜா, ராமநாதபுரம் மகாராஜா, ஏனைய ஜமீன்தார்கள், நாட்டுக் கோட்டை, நகரத்தார், பிரபுக்கள் முதலியோருடைய நன்கொடைகளும் ஆதரவும் இல்லையாயினும் அது தோன்றிய குறுகிய காலத்துள் நாவலர் பதிப்பு, சங்கப் பதிப்பு ஆகியவைகளையும் தோற்கடிக்கத்தக்க நிலைமையில் பல பழைய புதிய நூல்களை அது வெளியேற்றியிருக்கிறது. ஒரு சிறு பிழையுங்காண முடியாது. பெரும்பாலும் புத்தக கட்டடங்களும் நவீன முறையில் கண்கவர் வனப்பின வாயிருக்கும். நாம் தலைப்பிற் குறித்த `செந்தமிழ்ச் செல்வியும் இக்கழகத்தினின்றும் வெளிவருவதுதான். உயர்திரு வாளர்கள் கா. சுப்பிரமணியப் பிள்ளையவர்கள், எம்.ஏ., எம்.எல்., பா.வே. மாணிக்க நாயக்கர் போன்ற இரு மொழிப் புலவர்களின் பேராதரவு பெற்ற நமது, `செந்தமிழ்ச் செல்வியின் மாட்சியை விளக்கவும் வேண்டுமோ? தமிழ் மக்களின் முன்னேற்றங் கருதி உழைக்கும் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மணி, திருநாவுக்கரசு முதலியாரவர்களே நமது செல்வியின் ஆசிரியராவார்கள்.

வடமொழிக் கலப்பில்லாத `தனிச் செந்தமிழ் நடை படிக்கப் படிக்க இனிக்கும். ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் அன்புடன் வரவேற்று ஆதரிப்பாராக.

வருட சந்தா

உள்நாடு ரூ.3-0-0
வெளிநாடு ரூ.3-8-0
கிடைக்குமிடம்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (லிமிடெட்), 306 லிங்கி செட்டி தெரு, சென்னை.

- குடிஅரசு - நூல்மதிப்புரை - 10.10.1926

தமிழ் ஓவியா said...

நாகப்பட்டினம், ஜூலை 20- கழகத்தைப் பொறுப்பேற்று நடத்திட அடுத்த தலைமுறையினரைத் தயாரிக்க வேண்டும் - பயிற்சியளிக்கவேண்டும் என்றார், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
வேளாங்கண்ணியில் நேற்று (19.7.2013) நடைபெற்ற நாகப்பட்டினம் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத் திற்குத் தலைமை வகித்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

கீழத்தஞ்சை மாவட்டம்
கழகப் பாசறை போன்றது!

இயக்க வரலாற்றில் நாகப்பட்டினம் மாவட்டம் - கீழத்தஞ்சை மாவட்டம் வரலாற்று முத்திரை பொறித்த பகுதியாகும். நாகை, திருவாரூர், மயிலாடுதுறைப் பகுதி கள் என்றால் நமது இயக்கத்தின் பாசறை போன்றதாகும்.

நாகை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு இவ் வளவுப் பேர் வருவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இப்பகுதியில் இயக்கம் சற்றுத் தளர்ச்சியடைந்து விட்டதோ என்று எண்ணிய நேரத்தில், இல்லை, வலுவாகவே இருக்கிறது - இன்னும் சொல்லப்போனால், இளைஞர்களின் பாசறையாகவே இருக்கிறது என்பதை இக்கூட்டம் நிரூபித்திருக்கிறது.

கழகம்பற்றி பெரியார் கணிப்பு

சேலத்தில் 1944 இல் மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில் தான் திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் ஏற்பட்டது. பதவிக்குப் போக ஆசைப்பட்ட சிலர் விலகி னார்கள். அதைப்பற்றியெல்லாம் தந்தை பெரியார் கவலை கொள்ளவில்லை.

அப்பொழுது தந்தை பெரியார் சொன்னார், இயக்கத்தை விட்டுச் சிலர் செல்கிறார்கள் என்றால், எனக்கு என்ன நஷ்டம்? கட்சி பலகீனப்பட்டால்தான் எனக்கு என்ன நஷ்டம்?

தமிழர்களுக்குத்தான் நஷ்டம் - கஷ்டம் என்றார். மேலும், சொன்னார் திராவிடர் கழகம் பனைமரம் மாதிரி; தண்ணீர் ஊற்றினாலும் சரி, ஊற்றாவிட்டாலும் சரி, பனைமரம் எந்த இடத்திலும் வளரும். திராவிடர் கழகம் அதுபோன்றதே!

நம் மக்களுக்குத் தேவையான கொள்கை

இந்தக் கொள்கை நம் மக்களுக்குத் தேவையானது. அதை வளர்ப்பதும், பயன்படுத்திக் கொள்வதும் மக்களின் புத்திசாலித்தனத்தைப் பொறுத்தது - அந்தப் புத்திசாலித் தனத்தை நாம் வளர்த்தும் வருகிறோம் என்று தந்தை பெரியார் சொன்னதுதான் என் நினைவிற்கு வருகிறது.

இந்நாள் - ஜூலை 19 மிக முக்கியமான நாள்; மண்டல் குழுப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவேண்டும் என்று கடுமையாகப் போராடி வெற்றி பெற்றோம். அதன்படி முதல் பணி நியமனம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராஜசேகர ஆசாரி என்ற பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்தது. மண்டல் குழுவின் அடிப்படையில் முதன்முதலாகப் பணி நியமனம் செய்யப்பட்டவர் அவர்தான்.

ஜூலை19:இந்நாள்வரலாற்றுச்சிறப்புநாள்!

அந்த நேரத்தில், சமூகநீதிக் காவலரும், மண்டல் குழுப் பரிந்துரைகளில் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளித்தவருமான பிரதமர் வி.பி.சிங் அப்பொழுது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்தார்.

நான் அவரிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, தங்களின் அரிய செயலால் - வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையால் முதல் பிற்படுத்தப்பட்டவர் இன்று பதவி நாற்காலியில் உட்கார்ந்தார் - உங்களுக்கு நன்றி என்று, நான் சொன்னபொழுது, படுக்கையிலிருந்த வி.பி.சிங் அவர்கள், எழுந்து உட்கார்ந்து, இதைவிட எனக்கு நல்ல மருந்து - உற்சாகம் வேறு இருக்கவே முடியாது என்று கூறியதை இப்பொழுது நான் நினைத்துப் பார்க்கிறேன்.

இந்த ஜூலை 19-க்கு இன்னொரு பெருமையும், சிறப்பும் கிடைத்திருக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் பெரியார் மாவட்டத்தைச் சேர்ந்த - பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த - விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் - சதாசிவம் அவர்கள் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றார் என்கிறபோது, நம் மகிழ்ச்சி இரட்டிப்பு மடங்காகிறது (பலத்த கரவொலி).

தமிழ் ஓவியா said...

நம் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி!

தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்ட உடனேயே அவர் சொன்னார், சமூகநீதிபற்றியும், மேல்மட்ட நீதித்துறைகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்குரிய இடங்கள் கிடைக்கப் பெற வேண்டும் என்று கூறினாரே - அது என்ன சாதாரணமா?
நம் கொள்கை நாளும் வெற்றி பெற்றுதான் வருகிறது - தகுதி, திறமை என்பவை எங்களுக்கே சொந்தம் என்று மார்தட்டியவர்களுக்கு இதுதான் பதில்.

நமது இயக்கம் வளர்ச்சி பெற்று வருகிறது. புதிய புதிய தோழர்கள் பொறுப்புக்கு வரவேண்டும் - அடுத்தகட்டத் தில் இயக்கப் பொறுப்பேற்றுச் செயல்படவேண்டும்.

இயக்கப் பொறுப்பில் அடுத்த தலைமுறையினர்க்குப் பயிற்சி!

நம்மைப் போன்றவர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கும் காலகட்டத்தில், அடுத்தடுத்த தலைமுறையி னரை அறிமுகப்படுத்திப் பொறுப்புகளைக் கொடுத்து, பயிற்சிகள் அளித்து, அடுத்தடுத்து இயக்கப் பணிகள் தொய்வின்றி நடைபெற ஆவன செய்யப்படவேண்டும்.
நாகையிலிருந்து அதனைத் தொடங்குவோம்.

நம் இயக்கத்தில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; இருப்பவர் எப்படி பணியாற்று கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
கொள்கையும், ஒழுக்கமும்!

கொள்கைப் பிடிப்போடு தனி மனித ஒழுக்கம், பொது ஒழுக்கம் உள்ளவர்களாக நமது தோழர்கள் திகழ வேண்டும். வரும் செப்டம்பர் முதல் தேதியன்று சோழங்க நல்லூரில் நமது பெரியார் மருத்துவமனையில் பெரியார் மருத்துவ அணி சார்பாக மருத்துவ முகாம் ஒன்றை நடத்த இருக்கிறோம். காலைமுதல் மாலை வரை பல்வேறு பரி சோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அதனை பொதுமக்களும், குறிப்பாக நமது இயக்கக் குடும்பத்தி னரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


1921 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் - இரண்டு பார்ப்பனர்கல் விவசாய வேலை செய்தார்கள் என்பதற்காக, அவர்கள் ஜாதி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பதும், இதற்கு சங்கராச்சாரியும் உடந்தை எனபதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

சிறந்த நூலிலிருந்துபார்ப்பானீயத்தின் அரசியல் ஆதிக்க வரலாறு

நூல்: இந்துமதக் கொடுங் கோன்மையின் வரலாறு

ஆசிரியர்: தவத்திரு தர்மதீர்த்த அடிகளார்

வெளியீடு: சாளரம், 2/1758 சாரதி நகர், என்ஃபீல்டு அவன்யூ,

மடிப்பாக்கம், சென்னை - 600 091.

செல்பேசி எண்:94451 82142

பக்கங்கள்: 272, விலை: ரூ.120/-

பரமேஸ்வர மேனன் என்னும் இயற்பெயர் கொண்ட தவத்திரு தர்மதீர்த்த அடிகளார், மலையாளத்தில் சுவாமி தர்மதீர்த்த மகராஜ் என்றும் ஆங்கிலத்தில் சுவாமி தர்மதீர்த்த என்றும் அழைக்கப்படுகிறார். இவர் குருவாயூரில் 1893ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதில் தந்தையுடன் கோயிலுக்குச் சென்றபோது, அங்கிருந்த புரோகிதரை வணங்கச் சொல்லி காணிக்கை செலுத்த சொன்னபோது மறுத்தவர்.

வழக்குரைஞரான அடிகளார், நாராயண குருவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, பின்பு இந்தியா முழுவதும் நடந்தே புனிதப் பயணம் மேற்கொண்டார். மூடநம்பிக்கை, ஜாதிவெறி, சுரண்டல், அநீதி இவற்றின் மொத்த வடிவமாக இந்துக் கோயில்கள் இருப்பதைப் புரிந்துகொண்டார். இந்துமதம் தொடர்பான பல்வேறு நூல்களைப் படித்து ஆய்ந்து, 1941இல் ‘The Menace of Hindu Imperialism’ என்னும் நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

இரு பதிப்புகள் வெளிவந்தபின், History of Hindu Imperialism என்று தலைப்பை மாற்றினார். ஆங்கில நூலின் அடிப்படையில் 1969ஆம் ஆண்டு அடிகளாரே ஹைந்தவ துஷ் பிரபுத்துவச் சரித்திரம் என்னும் தலைப்பில் மலையாளத்தில் எழுதினார்.

பார்ப்பன ஆதிக்கக் கொடூரத்தால் சூழப்பட்டுள்ள இந்து மதத்தோடு போராடி, 1949ஆம் ஆண்டு இந்து மதத்தைவிட்டு வெளியேறி இந்து மக்களை விடுதலைப்படுத்தும் நோக்கத்தோடு தமது 85 வயதுவரை பாடுபட்டார்.

மலையாள மொழியிலிருந்து தமிழில் வெ.கோ.பாலகிருஷ்ணன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்துத்துவக் கொடுங்கோன்மை, அதாவது பிராமண மத வரலாறு, பிராமணக் கொடுங்கோன்மை, பிராமண மதம் எவ்வாறு புத்த மதத்தை அழித்தது? பிராமண மதம் தேசிய இயக்கத்தை நொறுக்கியது எப்படி, பிராமண மதம் சிவாஜியின் பேரரசை வீழ்த்தியது என்பது போன்ற 24 தலைப்புகளில் அலசி ஆராயப்பட்டுள்ள இந்நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே....

பிராமணர்கள் தட்சிணை (காணிக்கை) வாங்க எப்போதுமே தயார். சோமபானம் (மது) அருந்த சதா விரும்புவார்கள். சாப்பாட்டுப் பிரியர்கள். தன் விருப்பம்போல எங்கும் சுற்றித் திரிய விரும்புகிறவர்கள். அவர்கள் ஒரு தனி இனத்தைச் சேர்ந்தவர்கள். (Aitreya Brahmana VII : 29, Page 201) மந்திர தந்திரங்களின் வாயிலாக மக்களை அடிமைப்படுத்துவதிலும், மூடப்பழக்கவழக்கங்களைப் புகுத்துவதிலும், கட்டுக் கதைகளைப் பரப்புவதிலும் ஈடுபட்டு, மரியாதை, நீதி போன்றவற்றைப் பாராமல் சதா தின்பதும் குடிப்பதும் கூத்தடிப்பதுமாக இருக்கும் ஒரு ரகசியக் கும்பல்தான் புரோகிதர்கள்! இந்தோ _ ஆரியர்களுக்கிடையே இவ்வாறுதான் சாதி வேற்றுமை தலைதூக்கியது.

யாகம் நடத்துகின்ற புரோகிதர்களைப் பிராமணர்கள் என்று அழைத்தனர். பிற்காலத்தில் அது அவர்களுடைய சாதிப் பெயராகிவிட்டது. புரோகிதத்தை ஒரு பரம்பரைத் தொழிலாக மாற்ற அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைக் கண்டு அந்தக் காலத்தில் யாரும் மிரளவில்லை. அரச பதவி பரம்பரைச் சொத்தாக இருந்தது. சில கலைகளும் தொழில்களும் பரம்பரை பரம்பரையாக முன்னரே இருந்திருக்கக்கூடும். சாதி என்றால் என்னவென்ற உணர்வுகூட அப்போது யாருக்கும் கிடையாது. எனவே புரோகிதர்களின் இந்த முயற்சியால் ஏற்படும் பயங்கரமான கெடுதல்களைத் தொலை-நோக்குடன் யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. பிராமணர்கள் மிக வேகமாக ஒரு அரசியல் சக்தியாக உருவாகுவார்கள் என்றும், அவர்களுடைய கபடதந்திரங்களின் வாயிலாக சத்திரியர்களுக்கு ஆட்சி அதிகாரம் பறிபோய்விடும் என்றும் மன்னர்கள் எதிர்பார்க்க-வில்லை. புரோகிதர்களின் தந்திரங்களால் தங்களுடைய சுதந்திரம் பறிபோய்விடும் என்று மக்களும் அஞ்ச-வில்லை. புரோகிதர்கள்கூட இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்து செய்திருக்க மாட்டார்கள்போலும். அவர்கள் படிப்படியாக அவர்களுடைய தீய ஆசைகளோடு முன்னேறிக் கொண்டிருந்தனர்.

தமிழ் ஓவியா said...

புரோகிதர்களின் அனைத்து மேன்மைகளும் யாகங்களை ஒட்டித்தான் இருந்தன. யாகங்கள் இல்லாவிட்டால் அவர்கள் எல்லாவற்றையும் இழந்திருப்பார்கள். ஆனால் இந்தக் குறுநில மன்னர்களுக்கு யாகங்களில் அவ்வளவாக நம்பிக்கை இருந்ததில்லை. குறுநில மன்னர்களின் பலம் பெருகியது. இது ஆரிய மன்னர்களை அச்சப்படுத்தியது. எனவே சாதி வேற்றுமைகளையும் விதிகளையும் ஏற்படுத்தி, குறுநில மன்னர்களையும் மக்களையும் ஆரியப் பண்பாட்டிற்கு வெளியே இருப்பவர்களான குடியுரிமை இல்லாதவர்களான பெரும்-பான்மையான மக்களை சூத்திர சாதியாக கீழ்மைப்படுத்த புரோகிதர்கள் மேற்கொண்ட முயற்சியை ஆரிய மன்னர்களும் ஆதரித்தனர். அக்காலத்திலும் அதற்குப் பிறகும் அநேக நூற்றாண்டுகளிலும் புரோகிதர்கள் கட்டி-யெழுப்பிய சாதி வேற்றுமை முறைகளின் தலையாய அனைத்துக் குறிக்கோளும், இந்த நாட்டு மக்களைக் கல்வியும் அதிகாரமும் உரிமையுமற்ற கீழ்த்தர மக்களாக நிலைநிறுத்த வேண்டும் என்பதே ஆகும்.

பெண்ணே எழு, இறந்துவிட்ட ஒருவருடன் ஏன் படுத்துக் கிடக்கிறாய்? உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் உலகிற்கு வந்து, உன்னை மணந்து கொள்ள விரும்பி உன்னுடைய கரம் பற்றும் ஒரு ஆண்மகனின் மனைவியாக இரு (Rig Vedam X-18-8) கொடிய உடன்கட்டை ஏறும் வழக்கத்தை நியாயப்படுத்த புரோகிதர்கள் ரிக் வேதத்தையே திருத்தி எழுதவும் தயங்கவில்லை. ரிக் வேதத்தில் (X-18-7)பெண்கள் ஊர்வலமாக மயானத்திற்குச் செல்வதைப்-பற்றி குறிப்பிடப்-பட்டுள்ளது.

விதவையாகி விட்டதனால் எந்தத் துயரமும் இந்தப் பெண்களுக்கு வராமலிருக்கட்டும். இந்தச் சூத்திரத்தில் அக்ரே என்ற ஒரு வார்த்தை இருந்தது. வங்காளத்துப் புரோகிதர்கள் அதை அக்னே என்று திருத்தி உடன்கட்டை-யேறும் வழக்கத்திற்கான பிரமாணமாக மாற்றி-விட்டனர்.

கெட்ட குணமுள்ள புரோகிதர்கள் என்னென்ன நீசச்செயல்கள் புரிவார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாகும். இதோ இங்கு ஒரு சிறு வார்த்தையைப் புரட்டி, பொருளையே மாற்றித் தவறாகப் பயன்படுத்தி, ஆயிரமாயிரம் பெண்களின் உயிர்ப்பலிக்குக் காரணமாக்கிவிட்டனர். (Max Muller) மத விஷயங்களிலும் கல்வி கற்பதிலும் பிராமண பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது. அவர்களும் சூத்திரர்களைப் போன்று ஆகிவிட்டனர். சுதந்திரமும் சொத்துரிமையும் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. இவ்வாறு சொந்த மனைவிகளைக்கூட அடிமைப்படுத்த புரோகித இனம் சற்றேனும் தயங்கவில்லை.

மன்னரின் அரசியல் அதிகாரம் பிராமணனின் ஆன்மீகத் தலைமைக்குக் கீழ்ப்படிந்ததுதான் என்றும், பிராமணர்களின் மீது வரி விதிக்கவோ அவர்களைத் தண்டிக்கவோ யாருக்கும் அதிகாரமில்லையென்றும் அவர்கள் மேலும் கூறிவந்தனர். அவர்களுக்கென்றே உரிய மத நடைமுறைகள், சாதிச் சின்னமாக அவர்கள் அணியும் பூணூல் போன்றவை அவர்களை ஒரு வேறுபட்ட இனமாக்கிவிட்டன. அவர்களைச் சாராதவர்களையெல்லாம் அவர்கள் நிந்தனை செய்யவும் துவங்கினர். ஏனைய பொதுமக்கள் பிழைப்புக்காக மேற்கொண்டுவரும் விவசாயம், கைவேலை தொழில் போன்றவை தமது மதிப்புக்கு ஏற்றதில்லை என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.

தமிழ் ஓவியா said...


இவ்வாறு இந்த நாட்டைச் சுரண்டிக் கொழுத்து வாழும் ஒரு ஆதிக்க வர்க்கமாக பிராமணர்கள் ஒன்று திரண்டனர். மதத்தையும் கல்வியையும் தங்களுடைய இரகசிய உடைமை யாகப் பாதுகாப்பது அவர்களுடைய நோக்கமாக இருந்தது. கல்வியை வளர்ப்பதும், ஒற்றுமை உணர்வைப் பெருக்குவதும் அவர்களுடைய கொள்கைக்கு மாறானதாகும். சாதி வேற்றுமை அமைப்பை நிறுவுவது, புரோகித ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது, பண்பாடு சுதந்திரம் மூலமாக வளர்ந்து முன்னேற்றம் காண விழையும் மக்களின் விழைவுகளைத் தடுப்பது, புரோகிதத்தைச் செல்வம் ஈட்டும் ஒரு தொழிலாக மாற்ற மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்ப்பது போன்றவைதான் அவர்களுடைய தேவையும் விருப்பமுமாக இருந்தன.

யாருக்கிடையில் போர் நடைபெறுகிறது, சத்திரிய மன்னர்களா? சுதேசி குறுநில மன்னர்களா? வெளிநாட்டினரா? யார் யார் வெல்லப் போகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் பிராமணர்கள் கவலைப்பட-வில்லை. யாராக இருந்தாலும் பிராமண ஆதிக்கத்துக்கு ஆதரவானவர்களின் பக்கம் சேருவதுதான் அவர்களுடைய கொள்கையாக இருந்தது. மகாபாரதப் போரில் பகவத் கீதையின் கோட்பாடுகளுக்காகப் போரிட்ட கிருஷ்ணனின் தேசிய அணி வெற்றிபெற்றது என்றாலும் போரில் ஒருவரை ஒருவர் கொன்று மடிந்து போனவர்களெல்லாம் சத்திரிய மன்னர்களும் அவர்களுடைய மக்களும்தான். பிராமணர்களுக்கு அழிவேதும் ஏற்படவில்லை. கிருஷ்ணன் அர்ஜுனன் ஆகியவர்களின் காலத்திற்குப் பிறகு சில ஆண்டுகளுக்குள்ளேயே பயங்கரமான ஒரு கலகச் சூழ்நிலை நாடெங்கிலும் பரவியது. அது பிராமண ஆதிக்கத்திற்கு மேலும் வசதியாக அமைந்துவிட்டது. பாரதப் போருக்குப் பிந்திய மூன்று நான்கு நூற்றாண்டுகளில் பிராமணர் ஆதிக்கப் பிரச்சாரம் பலமாக நடைபெற்றது.

புத்த பிட்சுக்களாக மாறிய பிறகும் சாதி மனப்பான்மையைக் கைவிடாமல், தாங்கள் பிராமணர்கள் என்று பெருமைப்பட்டுக் கொண்டு அடிக்கடி கூட்டத்திலிருந்து விலகி நின்றனர். ஃபாஹியான் என்ற சீனப்பயணி கீழ்வருமாறு கூறியிருக்கிறார்: புத்த தர்மத்தைப் பிரச்சாரம் செய்ய தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்த பெரும் பண்டிதரான ஒரு பிராமணர் பாடலிபுத்திரத்தில் இருந்தார். மன்னர் அவரைச் சந்திக்கச் செல்லும்போது குருவின் கைகளைத் தொட்டு வணங்குவார். உடனே அந்தப் பிராமணன் அங்கிருந்து சென்று தலை முதல் பாதம் வரை தண்ணீரில் தோய குளிப்பது வழக்கம். (Havel) ஒரு புத்த பிட்சுவான பிறகும் பிராமணன் அவனுடைய தீண்டாமையைக் கைவிடவில்லை.

புத்தமதத்தின் எல்லையற்ற மனித நேயச் சமத்துவத்தையும், பிராமணனின் கொடுமையான சாதிப் பாகுபாட்டுணர்வையும் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். புத்த தர்மத்திற்கு நேர்மாறான இந்த சாதியாச்சாரங்களைப் புத்த மடங்களிலேயே பிராமணர்கள் கடைப்பிடித்தனர் என்பதைப் பார்க்கும்போது, அவர்களுடைய புரோகிதத் தந்திரங்களையும் அங்கு தங்குதடையின்றி மேற்கொண்டிருப்பார்கள்தானே! உண்மையில் அதுதான் நடைபெற்றது.

புத்தசங்கங்களில் (மடங்கள்) புகுந்து நிர்வாகத்தைக் கைப்பற்றிய பிராமணப் புரோகிதக் கும்பலால் வேகமாக வீழ்ச்சியைச் சந்தித்தன. பெரும்நிலப் பிரபுக்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் ஏராளமாக நன்கொடை பெற்று நடைபெறும் புத்தம-தாஸ்ரமங்களில், குறிப்பிடத்தக்க வேலை எதுவுமின்றி சுகவாழ்க்கையை மேற்கொள்ளும் கட்டுப்படுத்த முடியாத ஒரு பெருங்கூட்டமாக புத்தபிட்சுக்கள் மாறினர். புத்தரையும் விக்கிரகங்களையும் பூஜிப்பது அவர்களுடைய மதத்தின் நடைமுறையாகிவிட்டது. (R.C.Dutt)

தமிழ் ஓவியா said...

யாக புரோகிதர்கள் என்ற நிலையில் பிராமணர்கள் பல்வேறு தெய்வங்களை வழிபடும் வழக்கத்தை நிலைநாட்டி, புரோகிதர்களுக்கு பெரும் நன்கொடையளிப்பதை அனைத்து மதச் சடங்குகளிலும் தவிர்க்க முடியாத ஒரு நடைமுறையாக உருவாக்கினர். அதைப் போலவே அவர்கள் புத்தமதத்திலும் பல்வேறு போதிசத்துவர்களை, விக்கிரகங்களை பூஜிப்பதையும், பிட்சுக்களுக்குப் பெரும் கொடையளிப்பதையும் வழக்கமாக்கினர். புத்தமதத்தின் தலைமை பாடலிபுத்திரத்தின் குறுநில மன்னர்களிடம் இருந்தபோது அதன் அடிப்படைக் குணாம்சத்தைப் பிராமணர்களால் புரட்ட முடியவில்லை. வெளிநாட்டினர் இந்தியாவுக்கு ஏராளமாக வரத்துவங்கி, அவர்கள் புத்தமதத்தில் சேர்ந்து ஆஸ்ரமங்களைக் கைப்பற்றிய பிறகுதான் புரோகித மந்திர தந்திரங்கள் புத்தமதத்தின் ஆராதனைகளில் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக ஆகிவிட்டன.

இந்தியாவில் சிறிதும் பெரிதுமான ஆயிரக்-கணக்கான கோவில்களில் ஒவ்வொன்றுக்கும், இதைப்போன்ற அல்லது இதைவிடக் கூடுதல் மடத்தனமான பழங்கதைகள் தல புராணங்களாகச் சொல்லப்படுகின்றன. கோவில்களில் நாள்தோறும் நடைபெறும் பூஜை போன்ற சடங்குகள், பந்தி விருந்து, அங்கு குவிக்கப்படும் செல்வம் போன்றவற்றைப் பார்க்கும்போது, கோவில்களை எழுப்பும் நோக்கத்தைப் புரிந்து கொள்வது எளிதாகும். தினமும் ஆறு வேளை பிராமணர்கள் ஜகன்னாதர் விக்கிரகத்தைக் குளிப்பாட்டி புத்தாடை அணிவிக்கின்றனர். அது முடிந்த உடனே ஐம்பத்தாறு பிராமணர்கள் பல்வேறு வகையான உணவுப் பொருள்களை விக்கிரகத்-திற்குப் படையல் போடுகிறார்கள். இவ்வாறு விக்கிரகங்களுக்காக அளிக்கப்படும் உணவுப் பண்டங்களை மொத்தமாகச் சேர்த்தால் இருப-தாயிரம் பேர் உண்ண முடியும். (ஐன் அக்பாரி)

சிவாஜியின் குரு ராமதாசர் என்றழைக்கப் படும் பிராமணராவார். சிவாஜி தன்னுடைய நாட்டை குருவுக்குக் காணிக்கையாக்கிவிட்டு சனாதன தர்மத்தைப் பரிபாலிப்பதற்காகக் குருவிடமிருந்து அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். திருவிதாங்கூர் மன்னர் நாட்டை கோவிலில் இருக்கும் கடவுளுக்குச் சமர்ப்பித்துவிட்டு, கடவுளின் தாசராக இருந்து ஆள்வதற்காக அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இவ்வாறு நாட்டை ஒரு பிரம்மஸ்வம் அதாவது பிராமண ராஜ்யமாக நினைத்துக்கொண்டு ஆட்சி புரியும் பொறுப்பு தனக்கிருப்பதாக சிவாஜி ஒப்புதல் அளித்தார்.

சிவில் - மிலிடெரி ஆட்சியின் முக்கியப் பதவிகள் அனைத்திலும் பிராமணர்கள் அமர்த்தப்பட்டனர். மன்னரின் கீழ் எட்டு அமைச்சர்கள் உள்ளிட்ட ஒரு அமைச்சரவையும் இருந்தது. சிவில் _ மிலிடெரி ஆட்சியின் ஆகப் பெரிய உச்ச அதிகாரியும் பிரதம மந்திரியுமாய் (பேஷ்வா) பிராமணர்தான் இருந்தார். இந்தப் பதவி ஒரு குடும்பப் பரம்பரையுரிமை படைத்ததாக மாறி, சிவாஜியின் காலத்திற்குப் பிறகு பேஷ்வாக்கள் உண்மையான ஆட்சியாளர்களாயினர். சிவாஜியின் முடிசூட்டு விழா காலத்தில் இராணுவத் தலைமைத் தளபதியைத் தவிர மற்ற எல்லா அமைச்சர்களும் பிராமணர்களாக இருந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி சிவாஜிக்கு இருநூறு கோட்டைகளும் ஒவ்வொரு கோட்டையைச் சுற்றி கிராமங்களும் இருந்தன. இவை ஒவ்வொன்றின் சிவில் ஆட்சிக்கும் ஒரு பிராமண சுபேதாரும் ராணுவத் தளபதியாக ஒரு மராட்டிய ஹவில்தாரும் அமர்த்தப்பட்டிருந்தனர். மராமத்துப் பணிகள், கிடங்குகளின் மேற்பார்வைக்கு ஒரு பிரபுவும் இருந்தார். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏறத்தாழ இதைப்போலத்தான் ஆட்சி அமைப்பு இருந்தது. ஒவ்வொரு ராணுவக் குழுவின் தளபதியின் கீழும் பிராமணர்களும் பிரபுக்களும் அதிகாரிகளும் இருந்தனர். பெரிய ராணுவப் படைக்குழுக்களின் தலைவர்களாகவும் பிராமணர்கள் இருந்தனர்.

தன்னுடைய அரசாட்சியை நிறுவ முப்பதாண்டுக்காலம் சிவாஜி இடைவிடாது போராடினார். ராஜபதவியையும் ஆட்சியையும் சட்டபூர்வமாக்கத் தன்னுடைய பட்டாபிஷேகத்தை (முடிசூட்டுவிழா) இந்து சாத்திர முறைப்படி கௌரவமாக மேற்கொள்ள சிவாஜி விரும்பினார். சிவாஜியைப் பிராமண ஆதிக்கத்தை அங்கீகரிக்கும் ஒரு சத்திரியனாக மாற்ற பிராமணர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துவிட்டது.

தமிழ் ஓவியா said...


நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பதினோராயிரம் பிராமணப் பண்டிதர்களை அவர்களுடைய மனைவி மக்கள் உட்பட ஐம்பதாயிரம் பேரை தலைநகருக்கு வரவழைத்து, நான்கு மாதகாலம் அவர்களுக்கெல்லாம் அறுசுவை உணவளித்து உபசரித்ததோடு தங்கமும் பணமும் தானமாக அளித்தார் சிவாஜி. முக்கியப் புரோகிதரான கங்கபட்டனுக்கு மட்டும் ஒரு லட்சம் ரூபாய் கிடைத்ததாம். இந்தப் பட்டாபிஷேக மகோற்சவத்திற்கு ஐம்பது லட்சம் ரூபாய்வரை செலவழிந்ததாக சர் ஜாதுநாத சர்க்கார் கூறுகிறார். வேறு சிலர் ஏழுகோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். சாத்திர முறைப்-படியான பட்டாபிஷேகத்திற்கு ஒரு சத்திரியனுக்கு மட்டுமே உரிமையிருப்பதாக பிராமணர்கள் வாதாடினர். எனவே சிவாஜி உதயப்பூர் நாட்டின் ரஜபுத்திரப் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று சாதிப்பதற்காக ஒரு வம்ச பரம்பரைப் பட்டியலே தயாரிக்கப்பட்டது. அதற்குப் பிறகு புரோகிதர்களுக்கு ஒரு பெருந்தொகை கொடுத்து அவர்களிடமிருந்து உபநயன கர்மத் (பூணூல் அணிதல்) தையும் சிவாஜி ஏற்றுக்கொண்டார்.

இதைத் தவிர சிவாஜியின் போர்களில் பிராமணர்கள் கொல்லப்பட்டதற்குப் பாவ பரிகாரமாக பிராமணர்கள் எட்டாயிரம் ரூபாய் கோரிப் பெற்றனர். இந்த அளவுக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்த பிறகும் தேவமந்திரம் செவிமடுக்க ஒரு கௌரவமான மராட்டியரான சிவாஜியை ஒரு சூத்திரன் என்று கூறிப் புறக்கணித்தனர். பிராமணர்களின் பாதுகாப்புக்கும் நன்மைக்கும் தன்னுடைய வாழ்க்கையைச் சமர்ப்பித்த சிவாஜிக்கு, பிராமணர்களின் இந்த வெட்கக்கேடான அணுகுமுறையைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தன்னை ஒரு சூத்திரனாக எண்ணியதால் ஏற்பட்ட வெறுப்பும் கோபமும் சிவாஜியைக் காயஸ்தத் தலைவரான பாலாஜியிடம் கூட்டுச் சேர வைத்தது. (ஜாதுநாத சர்க்கார்).

நாட்டையும் மக்களையும் திவாலாக்க இன்னொரு காரியத்தையும் செய்தார் மகாராஜா. கனத்த வரியைச் சுமத்தி மக்களிடமிருந்து கசக்கிப் பிழிந்த பொதுச் சொத்துக்களை பத்மநாபஸ்வாமி கோவிலுக்கடியில் இருப்பதாகச் சொல்லப்படும் ஒரு ரகசியச் சுரங்க அறைக்குள் போட்டுவைத்தார். (பி.சிதம்பரம் பிள்ளை). நாட்டின் பொதுச் சொத்திலிருந்து முப்பத்து நான்கு லட்சம் ரூபாய் அரண்மனை கஜானாவுக்கு மாற்றி, அவையெல்லாம் கோவிலில் வழிபாடுகளுக்கும் மற்ற சடங்குகளுக்கும் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு அரண்மனை கஜானாவும் காலியாகிவிட்டது. மாதத்தில் பெரும்பாலான நாட்கள் கோவில் சடங்குகளுக்காகவே கழிந்தன. பெரும் தொகைகள் கோவிலுக்களிக்கப்பட்டன. ஒருமுறை லட்ச ரூபாய் சூரத் நோட்டுக்களாகவே அளிக்கப்பட்டன. அதையெல்லாம் விக்கிரகத்தின் முன் குவித்து மகாராஜாவே பணமூட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து வெள்ளிப் பாத்திரத்தில் கொட்டினார். உடல் நலம் குன்றியவராக இருந்தபோதிலும் இந்தப் பணியைச் செய்து முடிக்க அவர் தயங்கவில்லை. (பி.சிதம்பரம் பிள்ளை).

கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் இவ்வாறு பொதுப் பணம் விரயமாக்கப்பட்டதால் அரசு கருவூலம் காலியாகிவிட்டது. மார்த்தாண்ட வர்மாவுக்குப் பிறகு வந்த மகாராஜா பிரிட்டீஷ் அரசுக்குக் கப்பம் கட்டப் பணமில்லாமல் கோவிலிலிருந்து கடன் பெற்றுக் கப்பம் கட்ட வேண்டியதாயிற்று. பிறகு 50% வட்டியுடன் சேர்த்து அந்தத் தொகை கோவிலுக்குத் திருப்பியளிக்கப்பட்டது. இந்துக்களில் பெரும்பான்மையினராக ஈழவர்களும் பின்தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களும் இருந்தனர். அவர்களுக்கெல்லாம் கோவில்களிலும் கல்விக் கூடங்களிலும் நுழைய உரிமையில்லை. அவர்கள் பொதுச்சாலைகளில் நடக்கவோ, பொதுக் கிணறுகள், குளங்களில் நீர் எடுக்கவோ உரிமையற்ற தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டனர்.

தமிழ் ஓவியா said...

ஜாதி வன்மம் : தீர்வு என்ன?


ஜாதி எவ்வளவு கொடூரமானது; அது என்னவெல்லாம் செய்யும்னு காதலிச்ச பின்னால்தான் நல்லா புரியுது. - இளவரசன்


ஜாதி இல்லாத ஒரு சமூகம் உருவாக வேண்டும் என நான் நினைக்கிறேன். ஆனால், அது உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. வீட்டுக்குத் தெரியாமல் காதல் திருமணம் பண்ணியதை நான் என் தனிப்பட்ட வாழ்க்கையாகத்தான் பார்க்கிறேன். அதை ஏன் இவர்கள் சமூகப் பிரச்சினையாக்குகின்றனர்? அரசியல்வாதிகள் மட்டுமல்ல, யார் ஜாதிவெறி பிடித்து அலைந்தாலும் அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். அவரவரின் வாழ்க்கையை மட்டும் வாழுங்கள்; அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழையாதீர்கள். - திவ்யா


மேலே இருப்பவை திவ்யாவும் இளவரசனும் கடந்த மாதத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் தனித்தனியாக அளித்திருந்த பேட்டிகளில் சொன்னவை. இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்திருக்க வேண்டிய ஒன்றை, சமூகப் பிரச்சினையாக்கி, பெண்ணைப் பெற்றவரைக் கொன்று, ஊர்களைக் கொளுத்தி, எண்ணற்றோரின் வாழ்க்கையைப் பாதிக்கச் செய்து, கலவரமாக்கி, தொடர்ந்த பதட்டச் சூழலை உண்டாக்கி, அந்த இருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள்ளும் புகுந்து, அவர்களையும் பிரித்து, அவர்களில் ஒருவரை உடலாலும், மற்றொருவரை மனதாலும் கொன்றும் போட்டிருக்கிற கொடுமைகளுக்கு மூல காரணம் ஜாதி!தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய், கொண்டாம்பட்டி, நத்தம் காலனி இவை தான் இளவரசனையும், திவ்யாவையும் அதிகபட்சம் அறிந்திருக்கக் கூடிய பகுதிகள். இன்று இவர்கள் இருவரும் ஜாதிக் கொடுமையின் தீவிரத்திற்கு அடையாளங்கள்! இந்த நாட்டில் ஜாதி மறுத்துக் காதலித்து, ஒரு தரப்பிலோ அல்லது இரு தரப்பிலுமோ பெற்றோர் ஆதரவின்றித் தனித்துவாழும் ஆயிரக்கணக்கான இணைகளில் ஒன்றாய் எங்கோ தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கி செழித்திருக்க வேண்டியவர்கள். அக்டோபர் 14, 2012இ-ல் தொடங்கிய இவர்களது வாழ்க்கை ஜூலை 4, 2013 உடன் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. திவ்யா _ -இளவரசன் வீட்டை விட்டு அக்டோபர் 14 அன்று வெளியேறி ஆந்திராவுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டு திரும்பிவந்தனர். நவம்பர் 7-ஆம் தேதி திவ்யாவின் தாய் தேன்மொழி தன் மகளைச் சந்தித்து, வீட்டுக்குத் திரும்ப வரும்படி அழைக்க, தனக்கு திருமணமாகிவிட்டதென்று கூறி, தாயுடன் செல்ல மறுக்கிறார் திவ்யா. அன்றே சில மணிநேரங்களுக்குப் பிறகு (அதாவது திருமணமாகி 24 நாட்களுக்குப் பிறகு) திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டார் என்று செய்தி பரவி, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் 3 கிராமங்கள் ஜாதிவெறி கொண்ட சுமார் ஆயிரம் பேரால் அடித்து நொறுக்கி எரிக்கப்படுகின்றன.


தமிழ் ஓவியா said...

இதற்குப் பிறகு 4 மாதங்கள் தங்கள் வாழ்க்கையைத் தங்கள் போக்கில் வாழ்ந்துவந்தனர் இருவரும். மார்ச் மத்தியில் திவ்யாவின் தாய் தேன்மொழி ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்) ஒன்றைத் தாக்கல் செய்கிறார். அதற்காக உயர் நீதிமன்றத்திற்கு நேரில் வந்த திவ்யா, இளவரசனுடன் தான் வாழவிரும்புவதாகக் கூறுகிறார். ஆள் வந்ததற்குப் பிறகும் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடர்கிறது. அடுத்த விசாரணைக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, தேன்மொழிக்கு உடல்நிலை சரியில்லை என்று திவ்யா மருத்துவமனைக்குச் செல்கிறார்.

ஜூன் 6, 2013 குழப்பமான மனநிலையில், தாயைத் தனித்துவிட முடியவில்லை. தாயையும், தம்பியையும் பாதுகாக்க வேண்டியது தன் பொறுப்பு. எனவே, சில காலம் தாயுடன் இருக்க விரும்புவதாகத் தெரிவிக்கிறார் _- அழுகிறார் _- மயக்கமிட்டு விழுகிறார் _- பா.ம.க.வின் வழக்குரைஞர் வளையத்தால் சூழப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார். அடுத்த 25 நாட்களில் (ஜூலை 1) தாய் விரும்பினால் இளவரசனுடன் வாழ்வேன் என்று நீதிமன்றத்தில் பதிவுசெய்கிறார். அடுத்த இரண்டே நாட்களில் (ஜூலை 3) இளவரசனுடன் சேர்ந்து வாழத் தயாராக இல்லை என்று அதே வழக்குரைஞர் வளையத்தினுள் இருந்தபடி சொல்கிறார் திவ்யா.

நிற்க, இந்தச் சூழலை, திவ்யாவின் மனப் போக்கை, இறுக்கத்தை, பதட்டத்தை, குழப்பத்தைக் கவனிக்கிற யாருக்கும் எழும் இயல்பான சந்தேகம் _- திவ்யாவை இப்படிக் குழம்பச் செய்யும் நெருக்கடியான சூழல் என்ன என்பதே! இதற்குப் பின்னணியில் யார் இருக்கக்கூடும் என்பதை யூகிப்பதோ, அல்லது விசாரணையின் மூலம் தெரிந்துகொள்வதோ நீதிமன்றத்திற்கும், காவல்துறைக்கும் கடினமான ஒன்றல்ல. இன்னும் சொல்லப்போனால் இந்தச் சூழல் குறித்து திவ்யாவின் வாக்குமூலமே அச்சில் பதிவாகியுள்ளது. அந்த வாக்குமூலத்தின் ஒலிவடிவமே கையில் இருப்பதாகத் தெரிவிக்கிறது தலித் முரசு மாத இதழ் (ஜூன் 2013 _- பக்கம் 20, 21)

தமிழ் ஓவியா said...

திவ்யா தலித் முரசுக்கு அளித்த பேட்டியில், ஒரு நாள் எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து இளவரசனுக்குத் தொலைபேசியில் பேசி மகளைப் பார்க்க வேண்டுமெனக் கேட்டார். இளவரசனும் போய்ப் பார்த்துவிட்டு வா என்றார். ஆனால், என் அம்மா பா.ம.க.வைச் சேர்ந்த டாக்டர் செந்தில் வீட்டிற்கு என்னை வரச்சொன்னதும் நாங்கள் போக வேண்டாம் என முடிவெடுத்துவிட்டோம். என் அம்மா தனியாக இல்லை. என் அப்பாவைப் போலவே என் அம்மாவும் யாருக்கோ பயப்படுகிறார். யாரோ அவரை இப்படிச் செய் அப்படிச் செய் என மிரட்டுகின்றனர். அம்மாவிடம் கேட்டால் சொல்ல மறுக்கிறார் என்று குறிப்பிடுகிறார். இவ்வளவு தெளிவாக தன்னுடைய மற்றும் தன் தாயின் சூழல் என்ன என்பதை நீதிமன்றத்திலும், பத்திரிகைகளுக்கு மத்தியிலும், பேட்டியிலும் பதிவு செய்கிறார் திவ்யா. மிரட்டலுக்கும், பயப்படத்தக்க சூழலுக்கும் ஆட்களுக்கும் மத்தியில் நின்றபடி, அவர் காட்டிய குறிப்பை ஏன் நீதிமன்றமோ, அரசோ, காவல்துறையோ கண்டுகொள்ளவில்லை. தமிழகமே கொந்தளிக்கும் ஒரு பிரச்சினையில், மிகப்பெரிய கலவரத்துக்கும், சமூக அமைதிக்கு விடப்பட்ட சவாலுக்கும் காரணமான ஒரு வழக்கில் இத்தனை மெத்தனமாகச் செயல்படுவதா? திவ்யா தன்னாலானவரை, தனக்குத் தெரிந்தவரை துணிச்சலுடனும், அறிவார்ந்த முறையிலும் சூழலைக் கையாண்டுள்ளார். தன் தாய்க்கும் தம்பிக்கும் பாதுகாப்பாகத் தான் இருக்கவேண்டிய கடமை உள்ளது என்பதை எந்தச் சூழலில் அவர் சொல்கிறார் என்பதைக் கண்டுகொள்ள, கருத்தில் கொள்ளத் தவறியது ஏன்? இளவரசன் இது குறித்து குற்றம் சாட்டியும், திவ்யா குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்றும் அதனாலேயே திவ்யா இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என்று திவ்யாவின் குறிப்பை மொழிபெயர்த்துச் சொல்லியும், சுட்டிக் காட்டியும், பேட்டி கொடுத்த போதும் உரிய முறையில் அதனை அணுகாதது ஏன்?
இரண்டு நாட்களுக்கு முன் பேசியதற்கு முற்றிலும் மாறாக ஜூலை 3-ஆம் தேதி திவ்யா பேசுகிறார் என்றால், அப்போதே அவருக்கு கவுன்சிலிங் அளித்து அவரைத் தெளிவுபடுத்த வேண்டும்; அவரிடமிருந்து தெளிவான தகவலைப் பெற வேண்டும் என்ற முடிவுக்கு வராதது ஏன்? திவ்யாவைக் காப்பகத்தில் சேர்த்தோ, அவரது தாய்க்கும், தம்பிக்கும் உரிய பாதுகாப்பை உறுதிசெய்தோ, குறைந்த பட்சம் அவர்களை நேரில் வரவழைத்து அவர்களிடமும் விசாரித்தோ அவர்களுக்கு நம்பிக்கை தந்து, தன் மகள் விரும்பிய வாழ்க்கையைவிட, அவரை மாறாக சிந்திக்கத் தூண்டும் பிரச்சினை என்ன என்பதை அறிந்திருக்க வேண்டாமா?
மிகத் தெளிவாக இந்தப் பிரச்சினையில் பா.ம.க. என்ற அரசியல் கட்சியும், அதன் செயல்பாடுகளுமே இருக்கின்றன என்பதை அக் கட்சியினரே வெளிச்சம் போட்டுக் காட்டிவந்த சூழலில், இந்த வழக்கில் நீதிமன்றமும், காவல்துறையும் கூடுதல் கவனம் எடுத்திருக்க வேண்டாமா? சமூக இயக்கங்களும், ஊடகங்களும் தொடர்ந்து அலறிவந்த நிலையில் இந்த மெத்தனம் யாருடையது?

தமிழ் ஓவியா said...

ஜூலை 4, 2013 _- திட்டமிட்டபடி இளவரசனின் மரணம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. முதலில் வந்த வெகு சாமர்த்தியமான செய்திகளின் வாயிலாக இது தற்கொலை என்று மனதில் பதிய வைக்கப்பட்டது. தொடர்ந்து வரும் செய்திகள் இது திட்டமிட்ட கொலையாக இருப்பதற்கான வாய்ப்புகளை உறுதிசெய்கின்றன. இரயிலே வராத நேரத்தில் இரயிலில் அடிபட்டு ஒருவர் தற்கொலை செய்திருக்கிறார் என்ற விந்தையான செய்தி எப்படிப் பரப்பப்பட்டது என்பதை எண்ணி வியக்க வேண்டியிருக்கிறது. அதிலும் தலையில் மட்டும் அடிபட்டு, வெள்ளைச் சட்டையில் துளி இரத்தக் கறையும் இல்லாமல் இரயிலால் தூக்கி வீசப்பட்டு பக்குவமாகப் படுக்க(!) வைக்கப்பட்டிருக்கிறார். சாதாரணமாக நடக்கவேண்டிய ஒரு பிரேதப் பரிசோதனை ஒழுங்காக நடப்பதற்கும்கூட நீதிமன்றம் சென்று காத்திருக்க வேண்டிய நிலையில்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கான நலன் இருக்கிறது. இளவரசனின் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கேள்விக்கு உண்மையான விடை வெளிவந்தே தீரும். ஆனால், எதுவாயினும் அதற்குக் காரணமானவர்கள் யார்? கொலையானால் அதைச் செய்தவர்கள் யார்? தூண்டியவர்கள் யார்? என்பதும், தற்கொலையாயினும் சரி, அதற்குத் தூண்டியவர்கள் யார் என்பதும் மிக முக்கியமான கேள்விகள். அவர்கள் யாராயினும் அவர்களைத் தூண்டியது ஜாதி தான். ஜாதி வெறி என்று சொல்லி, ஜாதி நல்லது; ஜாதி வெறிதான் கொடியது;

தீண்டாமை மட்டும்தான் கொடியது என்று சொல்ல முனைவது அறிவுடைமை ஆகாது. நிகழ்ந்த அனைத்துக்கும் காரணம் ஜாதிதான். ஜாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் அத்தனைப் பேரும்தான். இளவரசனின் மரணம் மட்டுமல்ல; திவ்யாவின் தந்தை நாகராஜன் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுவதற்கும் காரணம் ஜாதிதான்; இந்த ஜாதிவெறியர்கள்தான் _- ஜாதியர்கள்தான். மகள் மாற்று ஜாதியில் திருமணம் செய்துகொண்டு 24 நாட்களுக்குப் பிறகும், அவரைத் தொடர்ந்து வார்த்தைகளால் வாட்டி, தற்கொலைக்குத் தூண்டியவர்களும் இவர்களே! கலவரத்துக்கும், தீவைப்புக்கும், பொருள் இழப்புக்கும் மட்டுமல்ல, கொலை _- தற்கொலை எதுவாயினும் அதற்குக் காரணமும் ஜாதியே என்னும் நிலையில் இனியாவது உரிய நடவடிக்கைகள் இருக்குமா? அல்லது மேலோட்டமாக கடும்போக்கைக் காட்டிவிட்டு, உள்ளூர நடைபெறும் சிக்கல்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுமா?

ஜாதிப்பசிக்கு இளவரசனைப் பலி கொடுத்துவிட்ட நிலையில் திவ்யாவைக் காக்க வேண்டியது அவசியமாகும். இக்கொடுமைக்கு, கொலைக்கு மூல காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவதும் அவசியமாகும்.

குறிப்பிட்ட இந்த திவ்யா _- இளவரசன் பிரச்சினையின் வாயிலாகவும், இதன் முடிவுகள் வாயிலாகவும் ஜாதி வெறியர்கள் வென்றுவிட்டதாகவும், தாங்கள் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டதாகவும் செய்யும் கொக்கரிப்புகளுக்கு என்ன பதில்? இன்னுமொரு ஜாதி மறுப்புக் காதல் நடந்துவிடக் கூடாது என்பதற்கான வெளிப்படையான மிரட்டலாகவே ஜாதிவெறியர்கள் இதைப் பார்க்கிறார்கள் எனில், இது அரசுக்கும், அரசியல் சட்டத்துக்கும், நீதித்துறைக்கும், காவல்துறைக்கும் சமூக அக்கறை கொண்டோருக்கும், முற்போக்காளர்களுக்கும், சமூக சமத்துவத்துக்கும் விடப்பட்டுள்ள சவால்! இனி யாராவது ஜாதி மாறி திருமணம் செய்தால் இது தான் நடக்கும் என்று காட்டுமிராண்டிகள் விடுத்திருக்கும் எச்சரிக்கை!

ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆயிரமாயிரம் காதல் திருமணங்கள், ஜாதி மறுப்பு _- மதமறுப்புத் திருமணங்களாக நாள்தோறும் நடந்துவருகின்றன. அவற்றைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள் மனிதநேயர்கள். எனினும் இது அரசின் கடமை. ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ள கடமை. தாங்கள் பெற்ற பிள்ளைகளின் விருப்பத்தை -_ வாழ்க்கையை, ஜாதி என்னும் பெயரால் சிதைக்காமல் இருக்க வேண்டியது அவர்களே!

காட்டுமிராண்டிக் கூட்டத்தின் ஜாதி _- மதத் தடைகளை மீறி மனிதர்களாகக் காதல் செய்யும் காதலர்களை, அவர்களின் தனிப்பட்ட வாழ்வை - விருப்பத்தை அங்கீகரிப்போம். அது வீதிக்கு வந்தால், யாராவது அவர்களுக்கு இடையூறு செய்தால் ஒட்டுமொத்த சமூகமாக நின்று அவர்களுக்கு உதவுவோம்.

வீட்டுப் பிரச்சினை வீதிக்கு வந்தால் தலையிடுவோம் என்று வழக்கமாகச் சொல்லும் சமூகம், இந்தப் பிரச்சினையில் வீதிக்கு வரட்டும். இனிய வாழ்க்கைக்கு இடையூறு செய்யும் கும்பலை விரட்டி அடிக்கட்டும். இனியும் அதில் தாமதம் என்றால் இதை அறிவார்ந்த பண்பட்ட சமூகம் என்று எப்படி ஒப்ப முடியும்?

- இளையமகன்

தமிழ் ஓவியா said...

தற்கொலை


விலைமதிப்பற்ற மனித உயிரைத் தற்கொலை செய்து போக்கிக் கொண்டோர் எண்ணிக்கையில் 2012ஆம் ஆண்டில் (19,927) தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தேசிய அளவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குடும்பப் பிரச்சினை, நோய், காதல் பிரச்சினை, வருமானமின்மை, வரதட்சணைக் கொடுமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மனிதர்கள் தற்கொலை முடிவுக்கு வருகின்றனர். இதில் இரண்டாம் இடத்தில் (16,112) மகாராஷ்டிராவும், மூன்றாம் இடத்தில் மேற்கு வங்கமும் (14,957) உள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை உடல்நலக் குறைவால் 3,663 பேர்களும் குடும்பப் பிரச்சினையால் 4,842 பேர்களும் தற்கொலை செய்துள்ளனர். உடல்நலக் குறைவு அடிப்படையில் தேசிய அளவில் மூன்றாம் இடத்தையும் குடும்பப் பிரச்சினை அடிப்படையில் இரண்டாம் இடத்தையும் தமிழகம் பெற்றுள்ளது.

19 வயதிலிருந்து 29 வயதுக்குட்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டதில் மணிப்பூர் (46,635) முதலிடத்தில் இருக்கிறது. 15லிருந்து 29 வயதுக்கு உட்பட்டவர்களில் 43.8 சதவிகிதம் குடும்பப் பெண்களும் 78.8 சதவிகிதம் மாணவர்களும், 30லிருந்து 44 வயதுவரை உள்ளவர்களில் 36.7 சதவிகிதம் விவசாயிகளும் 35.2 சதவிகிதம் வேலைவாய்ப்பற்றவர்களும் தற்கொலை செய்துள்ளனர்.

திருமணமானவர்களே அதிக அளவில் தற்கொலை செய்துள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

முருகன் ஆலயத்தில் பெரியார்1942-ஆம் ஆண்டு டி.கே.சி.யிடம் செயலராகப் பணிபுரிந்த எஸ்.வேங்கட சுப்பிரமணியம் (எஸ்.வி.எஸ்.) குற்றாலத்தில் டி.கே.சி.யின் இல்லத்தில் தங்கி இருந்தார். ஒருநாள் நண்பகலில் பெரியார் ராமசாமி மாட்டு வண்டியில் டி.கே.சி.யின் இல்லத்தைக் கடந்து சென்றதை எஸ்.வி.எஸ். கண்ணுற்றார். இதனை டி.கே.சி.யிடம் தெரிவித்தார். உடனே டி.கே.சி. எஸ்.வி.எஸ்ஸிடம் பெரியார் எவ்விடத்தில் தங்குகிறார் என்பதனை அறிந்து வருமாறு பணித்தார். எஸ்.வி.எஸ். அதனை ஏற்று அருகில் உள்ள பங்களாவில் பெரியார் தங்கியிருக்கிற செய்தியினை டி.கே.சி.யிடம் தெரிவித்தார்.

மீண்டும் டி.கே.சி. எஸ்.வி.எஸ்ஸை நோக்கி, பெரியாரிடம் சென்று மதிய உணவு உண்டுவிட்டாரா? இல்லையெனில் தமது இல்லத்தில் இருந்து அனுப்பி வைக்கலாமா? என்பதை அறிந்துவருமாறு கூறினார்.

பெரியார் கடந்து சென்றதை ஏன்தான் டி.கே.சி.யிடம் சொன்னோமோ என்று எஸ்.வி.எஸ். தமக்குள்ளேயே முணு முணுத்தார். பெரியார் பிராமண குலத்துக்குப் பரமவைரி; காங்கிரஸ் கொள்கைகளை அறவே பிடிக்காதவர். கம்ப ராமாயணத்தையே தீயிட்டுக் கொளுத்தியவர். இச்செயல்களால் அவருக்குப் பெரியாரைச் சிறிதும் பிடிக்காது. தமக்குப் பிடிக்காத கொள்கைகளைக் கொண்ட பெரியார் மீது கம்ப ராமாயணத்தை உயிர் மூச்சாகக் கொண்ட டி.கே.சி. எல்லையற்ற பாசத்தைக் கொட்டுகிறாரே! நல் உபசரிப்பையும் நல்குகிறாரே என நினைத்துப் பெரிதும் வேதனையுற்றார்.

இதனைக் குறிப்பால் உணர்ந்த டி.கே.சி. பெரியாரின் கொள்கைகளைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அவர் ஒரு லட்சியவாதி. சீர்திருத்தச் செம்மல். தள்ளாத வயதிலும் நாடெங்கிலும் அயராது தம் கொள்கைகளைப் பரப்பி வருகிறார். இத்தகு பெரியாரை நாம் உபசரிப்பதில் என்ன தவறு? என்று கூறி உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.

வேறு வழியின்றி வேண்டா வெறுப்புடன் எஸ்.வி.எஸ். பெரியாரிடம் சென்று டி.கே.சி. கூறிய விபரத்தைச் சொன்னார். பெரியாரும் மதியம் வீட்டிலிருந்து உணவு அனுப்புங்கள் என்றார். அதற்கிணங்க டி.கே.சி. வீட்டிலிருந்து அறுசுவை உணவு பெரியாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பசியுடன் இருந்த பெரியாரும் உணவைச் சுவைத்து உண்டு மகிழ்ந்தார்.

அதே ஆண்டு மற்றொரு சமயம் பெரியார் ராமசாமி குற்றாலத்தின்கண் அமைந்த டி.கே.சி.யின் இல்லத்திற்கு வருகை தந்தார். டி.கே.சி. தமது மணிவிழாவினைக் கொண்டாட அவ்வமயம் திருவிலஞ்சிக் குமரன் கோவிலுக்குச் சென்றுள்ளதை அறிந்தார். உடனே தமது வண்டியை நேராகத் திருவிலஞ்சிக் குமரன் கோவிலுக்கு ஓட்டிச் செல்லுமாறு பணித்தார். உடன் இருந்த பெரியாரின் நாத்திகத் தொண்டர்கள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாயினர். அவர்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தும்கூட பெரியார் அதனைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. நேராகத் திருவிலஞ்சிக் குமரன் ஆலயத்திற்குள்ளேயே சென்றார்.

பெரியார் பெரிய நாத்திகவாதி. கடவுள் நம்பிக்கை அறவே இல்லாதவர். இருப்பினும் டி.கே.சி. மீது கொண்ட அளப்பரிய அன்பினாலும், மட்டற்ற மதிப்பினாலும் ஆலயத்திற்குள்ளேயே சென்று அவரைக் கட்டித் தழுவி வாழ்த்துக் கூறி அக மகிழ்ந்தார்.உடனிருந்த நாத்திகத் தொண்டர்கள் பெரியாரிடம் தணிந்த குரலில், அய்யா, தாங்கள் முருகன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கலாமா? என வினவினர். உடனே பெரியாரும், அறுபதாம் கல்யாணம் முருகனுக்கு இல்லையப்பா! நம்ம முதலியார்வாளுக்குத்தானே! அதுல நான் கலந்துக்கறதல என்னப்பா தவறு? என மறுத்துரைத்தார்.

பின்பு பெரியார் டி.கே.சி.யோடும், நண்பர் களோடும் பந்தியில் அமர்ந்து சித்திரான்னங்களை விரும்பி ருசித்து உண்டுவிட்டுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

பெரியார் தெய்வ மறுப்புக் கொள்கை உடையவராயினும், டி.கே.சி.யின் நட்புக்கு அதிக மதிப்புக் கொடுத்தார் என்பதை உணர்ந்து, உடன்வந்தோர் அனைவரும் ஆறுதல் அடைந்தனர்.

தமிழ் ஓவியா said...

மோடியின் மோசடி
மோடியின் மோசடி

Print
Email

உத்ரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 21 அன்று ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் பல்வேறு சிரமங்களுக்கிடையில் போராடி 10 நாட்களில் சுமார் 40,000 மக்களை மீட்டுள்ளனர்.

இப்படியொரு சூழ்நிலையில், குஜராத் மாநிலத்தின் முதல் அமைச்சர் நரேந்திர மோடி திறமையான அதிகாரிகள் சிலருடன் டேராடூன் நகருக்கு வந்து, உத்ரகாண்ட் பகுதிகளில் தவித்துக் கொண்டிருந்த 15,000 குஜராத் மக்களைக் காப்பாற்றி அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததாக செய்தி வெளிவந்தது.

80 இன்னோவா கார்களைப் பயன்படுத்தித் தமது நாட்டு மக்களைக் காப்பாற்றியதாக செய்திகள் கூறுகின்றன. மழை, வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுப் பேரழிவிற்குட்பட்ட இடத்தில் குஜராத் முதலமைச்சரால் அனுப்பப்பட்ட கார்கள் எப்படிப் பயணம் செய்தன?

மேலும், ஒரு காரில் ஓட்டுநர் உட்பட 7 பேர்களே செல்ல முடியும். வேண்டுமானால் உடன் 2 பேரினை அதிகமாக ஏற்றிச் செல்லலாம். 80 கார்கள் டேராடூனிலிருந்து ஒரு தடவைக்கு 720 பேர்களைத்தான் கொண்டு செல்ல முடியும். 15,000 பேர்களை மலைப்பகுதிகளிலிருந்து கீழே கொண்டு வர, போக வர என்று சேர்த்து 21 தடவைகள் பயணம் செய்ய வேண்டும்.

கேதார்நாத்திலிருந்து டேராடூன் 221 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. எனவே, 21 முறை என்று கணக்கிடும்போது ஒவ்வொரு காரும் சுமார் 9,300 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். சாதாரணமாகவே மலைப்பகுதிகளில் பயணம் செய்யும்போது நேரம் அதிகமாகும்.

சராசரியாக மணிக்கு 40 கிலோ மீட்டர் என்று வைத்துக் கொண்டால்கூட 233 மணி நேரப் பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும். ஒரு வினாடிகூட ஓய்வில்லாமல், குஜராத் மக்களை மட்டும் தேடிக் கண்டுபிடித்துக் காப்பாற்றி பிற நாட்டு மக்களாக இருப்பின் எப்படியும் போங்கள் என்று தவிக்கவிட்டு வந்த மோடியின் வீரச்செயலினை என்னவென்பது? நன்றி: ஜிவீனீமீ ஷீயீ மிஸீபீவீணீ

தமிழ் ஓவியா said...

இவர்தான் மோடி

இந்தியப் பெண்களின் சக்திக்குத் தலை வணங்குகிறேன்: மோடி அன்னையர் தினத்தில் வீண் பேச்சு

இந்தியப் பெண்களுக்குத் தான் தலை வணங்குவதாக நர.மோடி தனது திருவாய் மலர்ந்து மற்றொருமுறை பொய்யுரைத்துள்ளார். இவர் எவ்வாறு எல்லாம் தலைவணங்கி இருக்கிறார் என்பதைக் கீழே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

(1) முன்னர் இவர்... தனது மனைவி யசோதா பாய் மோடியைத் திருமணம் முடித்து... பின்னர்.. .கை கழுவி... கழட்டிவிட்டதன் மூலமாக.. தனது மனைவிக்குத் தலை வணங்கி இருக்கிறார்....(நர.மோடி ஒரு பிரமச்சாரி என்று இன்றும் நம்பிவருகின்றனர் நர.மோடியின் கொள்கைக் -கோடாரிகள்.)

(2) குஜராத்தில் பல கலவரங்களைத் தூண்டிவிட்டு... கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து சிசுக்களைக் கொன்றது மூலமாகவும்... கர்ப்பிணிப் பெண்களுக்கு, தாய்களுக்குத் தலைவணங்கி இருக்கிறார்...

(3) கலவரங்களில் பெண்கள் காவி தீவிரவாதிகளால்... கற்பழிப்பு செய்யப்படுவதை..... பலாத்காரம் செய்யப்படுவதைத் தடுக்காமல்.... அதை அடக்காமல்.. வேடிக்கை பார்க்குமாறு... காவல் துறையினருக்குக் கட்டளையிட்டதின் மூலம்... இளம்பெண்களுக்குத் தலைவணங்கி இருக்கிறார்...

(4) தனது சொந்த மாநிலத்திலேயே... தலித்தாக இருக்கும் ஒரே காரணத்திற்காக... குடிநீர்... மின்சாரம்.. மற்றும் அடிப்படை வசதிகள்கூட செய்து தராமல்... தாழ்த்தப்பட்ட பெண்களுக்குத் தலைவணங்கி இருக்கிறார்...

(5) இஷ்ரத் ஜஹான்.... ஷொராபுதீன்... போலி என்கவுண்டர்கள் மூலம்... அநியாயமாக மனிதப் படுகொலைகள் செய்து... நியாயத்திற்குத் தலைவணங்கி இருக்கிறார்....

(6) குஜராத்தில் 30,000-திற்கும் மேலதிகமான பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.... இதன் மூலம் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் பெண்களுக்குத் தலை வணங்கி இருக்கிறார்...

(7) சிறு தொழில்... குறு தொழில்... மற்றும் சாமான்ய மக்களுக்கு தொழில்துறை... வேலை வாய்ப்புகளை அளிக்காமல்.. பன்னாட்டு மற்றும் இந்திய பெருமுதலைகளுக்கு... தனது மாநில விவசாய நிலங்களை அழித்து... பெருமுதலாளிகளுக்கு தொழிற்சாலைகள் கட்ட அனுமதித்ததின் மூலம் ஒட்டு மொத்த ஆண்கள்.. பெண்கள்... விவசாயிகள்.. சிறு..குறு.. தொழிலாளர்கள்... அன்றாடம் காய்ச்சிகள்... வாயில் மண்ணள்ளிப் போட்டு... ஒட்டுமொத்தமாக ஆண், பெண் பாகுபாடு இல்லாமல்...தலைவணங்கி இருக்கிறார்...

-_ கு.கார்த்திகேயன், முகநூலில்...

தமிழ் ஓவியா said...

யாகம் நடத்துவது அறநிலையத்துறையின் வேலையா?

இந்த ஆண்டு, சரியான மழை _- காலத்தே பெய்யும் பருவ மழை போதிய அளவு இல்லை என்பதால் வறட்சி நிலவுகிறது. வடமாநிலங்களில் அபரிமிதமான மழை, வெள்ளக்காடு _- பல்லாயிரம் பேர்களைப் பலி கொள்ளும் அளவுக்கு அங்கே!

இந்நிலையில், மழையை வரவழைக்க இந்து அறநிலையத் துறை தன்கீழ் உள்ள கோவில்களில் யாகம் நடத்தியும், வருண ஜெபம் நடத்தியும் சில கோவில் குளங்களில் (அங்கேயே பல குளங்கள் _- தீர்த்தங்களில் தண்ணீரே இல்லை) முழங்கால் அளவு, அரை நிர்வாணக் கோலத்துடன் திடசரீரம் உள்ள பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிச் சின்னமான பூணூலைக் காட்டிக் கொண்டு, சமஸ்கிருத மொழியில் வேத மந்திரங்களைக் கூவிக் கொண்டு, யாகம் என்ற பெயரில் புது வருவாய்க்கு வழிதேடும் வழியை வகுத்துக் கொடுத்திருக்கிறது!

இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் மழை வேண்டி யாகம் என்றால், உலகத்தின் பகுத்தறிவுள்ள மக்கள் கை கொட்டிச் சிரிக்க மாட்டார்களா?

இந்த மூடநம்பிக்கைகளை _- பக்தி வேஷம் போட்டு பரதக் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் பார்ப்பனர்களுக்கு தொழில் வளம் ஏற்படுத்த தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை துணை போவது மிக மிகக் கண்டனத்திற்குரியதாகும்!

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை (Secular) கொள்கைக்கும் 51A(h) பிரிவில் உள்ள அடிப்படைக் கடமைகளைப் பரப்புதல் என்ற தலைப்பில், ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை (Scientific Temper) கேள்வி கேட்கும் அறிவை மனித நேயத்தை, சீர்திருத்தத்தைப் பரப்புவது அடிப்படைக் கடமை என்று இருக்கும்போது,அதைச் செய்யத் தவறுவதைவிட பெருங் குற்றமும் உண்டோ? அரசுத் துறையே அறிவியல் மனப்போக்குக்கும், சீர்திருத்தத்திற்கும் முரணாக இப்படி மழை வேண்டி யாகம் செய்ய அதன் நிதியைச் செலவிட்டு, மூடநம்பிக்கையைப் பரப்பும் மோசமான எதிர்மறைச் செயலில் ஈடுபடலாமா?

இதைவிட (அரசியல்) சட்ட விரோத நடவடிக்கை வேறு என்ன?

மழை வேண்டி _ -பருவக் காற்று துவங்கும் காலத்தில் மிகச் சாமர்த்தியமாக யாகம் நடத்துவது வருண ஜெபம் நடத்துவது, என்பது யாரை ஏமாற்ற?

சில கேள்விகளை அத்தகைய பெரும் உலக மகா யாக அறிவாளிகளுக்கு நாம் வைக்கிறோம்.

1. மழை எப்படி வருகிறது என்பது 4,5ஆவது வகுப்பு மாணவனுக்கு வகுப்பில் விஞ்ஞானம் சொல்லிக் கொடுத்துவிட்டு, இப்படி யாகம் செய்தால் அது இரட்டை வேடம் _- மோசடி அல்லவா?

2. யாகம் நடத்தும் எவராவது கையில் குடையோடு சென்றுள்ளார்களா? உத்தரவாதம் தருவார்களா?

3. மழை வேண்டி வருண ஜெபம், யாகம், பூஜை புனஸ்காரம், முழங்கால் தண்ணீரில் நின்று சமஸ்கிருத வேத மந்திரங்கள், அல்லது அமிர்தவர்ஷணி ராகம் பாடுவதாலோ! ஆனந்த பைரவி வாசிப்பதாலோ மழை வரும் என்றால், கச்சேரி மூலமே மழைப் பிரச்சினையைத் தீர்த்து விடலாமே! _- எதற்காக உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் காவிரி நீருக்காக?

உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்கள் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வகையில் மீண்டும் மிரட்டும் மழையைத் தடுக்க எந்த யாகம்? எந்த பூஜை? எந்த ஜெபம்? _- சொல்லட்டுமே பார்க்கலாம்!

அறியாமையைவிட மிகப் பெரிய நோய் மனித குலத்திற்கு வேறு இல்லை என்றார் அமெரிக்க நாட்டுப் பகுத்தறிவாளர் ராபர்ட் ஜி. இங்கர்சால்!

இந்த அறியாமையைத் தமிழக அரசே ஊக்குவிக்கலாமா? பரப்பலாமா? அதுவும் அண்ணா பெயரில் உள்ள அரசு?

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை நீதிக்கட்சி ஆட்சிதான் 1924 வாக்கில் உருவாக்கியது. அதன் விவாதங்கள் சட்ட-மன்றத்தின் நூலகத்தில் உள்ளதை இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும், அமைச்சரும், முதல் அமைச்சரும் படிக்க வேண்டும்.

கணக்குத் தணிக்கை (Audit) தான் அதன் பிரதான நோக்கமே தவிர, பக்தி பரப்பும் இலாகாவாக இந்து அறநிலையத் துறை செயல்படுவது அச்சட்ட விரோதமே! சாயமடிப்பதோ, கும்பாபிஷேகம் செய்வதோ, தேர் இழுப்பதோ இத்துறை அதிகாரிகளின் வேலை அல்ல!

இப்போது மதச் சார்பின்மையைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, பல மாவட்டங்களில் ஆட்சியாளர்களும், (Collector), மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களும் (போலீஸ் எஸ்.பி.க்களும்) தேருக்கு வடம் பிடிப்பது, கும்பாபிஷேகத்தில் பக்தி வேஷம் போட்டுக் காட்டிக் கொள்ளுவது, என்பது பகிரங்கமான சட்ட விரோதச் செயல்!

இது உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் அறப் போர்கள் ஒருமுனையிலும், பொது நல வழக்கு மறுமுனையிலும், பிரச்சாரங்கள் மூன்றாவது முனையிலும் நடத்தப்படும் என்பதை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

கி.வீரமணி,

ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

ருணவிமோசகர் சாமியோவ்...!
ருணவிமோசகர் சாமியோவ்...!

-பிரதிபா

தஞ்சாவூரில் உள்ள ஆயிரமாவது ஆண்டுப் பழைமையான கோயிலான (ராஜராஜசோழனால் கட்டப்பட்ட) தஞ்சைப் பெரிய கோயிலையும்விட மிகப் பழைமையான கோயில் திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராஜர் சாமி திருக்கோயில்.

ஆரூராதியாகேசா...

இச்சாமிதான் திருவாரூரின் சிறப்புமிக்கதான தேரில் பவனி வரும் சாமி. தியாகராஜருக்கு கமலாம்பிகை என்ற காதலி உண்டு. அக்காதலிக்கும் தியாகராஜரின் மூலஸ்தானத்துக்கும் அருகில் ஒரு மண்டபத்தில் சிலையாக கமலாம்பிகை அமைக்கப்பட்டு, எல்லோராலும் (தியாகராஜரைவிட கமலாம்பிகையைத்தான்) முக்கியமாக வணங்கப்பட்டும் வருகிறது.

அவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. திருவாரூரில் மூன்று விசயம் நடந்தால் தியாகராஜர் காதலி கமலாம்பிகையைக் கைப்பிடிப்பார் என்பது அய்தீகமாம்.

அதாவது, முதல் விசயமாக தியாகராஜர் தன் பாதங்களை முழுமையாகக் காட்ட வேண்டும். (வருடத்தில் ஒருநாள் தியாகராஜரின் ஒருபாதம் மட்டும் அபிஷேகத்துக்குக் காண்பிக்கப்படும். மற்றநாட்கள் எல்லாம் அவர் தன் பாதங்களை யாருக்கும் காண்பிப்பது இல்லை.)

இரண்டாவது, கமலாலயக் குளம் வற்ற வேண்டும். (கோயிலுக்கு முன்னால் குளம் ஒன்று உள்ளது. அக்குளத்தில் எப்போதும் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும், வற்றாது).

மூன்றாவது, கல்தேர் நகர வேண்டும். (கன்றினைக் கொன்றதால் தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக்கொன்ற மனுநீதிச் சோழன் வரலாற்றைச் சொல்லும்வகையில் திருவாரூரில் கல்தேர் ஒன்று செய்து வைத்து இருப்பார்கள்.) அந்தக் கல்தேர் எப்படித் தானாக நகரும்?

இம்மூன்றும் நடந்தால் கமலாம்பிகையைத் திருமணம் செய்துகொள்வதாக தியாகராஜர் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

ஆக., இம்மூன்றுமே நடக்காது என்று தெரிந்தும் கமலாம்பிகையை ஏமாற்றி ஈவ் டீசிங் செய்து இருக்கிறார் தியாகராஜர். சோ, அவர்மீது ஈ.பி.கோவின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சரி அத விடுங்க, தியாகராஜராவது பரவாயில்ல... ஆயிரம் ஆண்டுகளா ஒரு பொண்ணத்தான் ஏமாத்திட்டு இருக்கார். பட், நம்ம ருணவிமோசகர் இல்ல... அதாங்க கடைசியா சாமி கும்பிட்டுப் போகும்போது கைத்தட்டிட்டு காது கேட்குதான்னு கிண்டல் பண்ணிட்டுப் போவோம்ல... அந்தச் சாமிதான், அது கேட்பார் நாதியற்றுப் பாழடைந்து கிடந்தது திருவாரூர் கோயிலில் ஓர் ஓரமாக...

சமீபத்தில், அக்கோயிலுக்குச் சென்று பார்த்தோம். வெள்ளிக்கவசம் அணிந்து, வெள்ளிக்கொடை எல்லாம் வைத்து, சாமிக்கு லைட் எல்லாம் போட்டு ஜெகஜோதிலட்சுமியாய்... சாரி, ஜோதியாய் மின்னினார்.

என்னங்கய்யா திடீர்னு ஆச்சு, இச்சாமிக்கு வந்த வாழ்வைப் பாரேன் என்று தியாகராஜரே பொறாமைப்படும் அளவுக்கு வளர்ந்துட்டார் ருணவிமோசகர்.

எவனோ கிளப்பிவிட்டு இருக்கான். இந்தச் சாமியைக் கும்பிட்டா கடன் தொல்லை அடைந்து, மனதில் இருக்கும் பாரம் எல்லாம் இறங்கி சந்தோஷ வாழ்வு கிடைக்கும் என்று.

உடனே நம்ம மக்கள்கிட்ட கேட்கவா வேணும்... ஓடி ஓடி அச்சாமிக்குக் காணிக்கை செய்கிறார்கள். இதனால் ஆசாமிகள் கொழிக்கிறார்களோ இல்லையோ, ருணவிமோசகர் நன்றாகக் கொழிக்கிறார்.

தினமும் பாலில் அபிசேகம்தான், பொங்கல்தான், வெள்ளி ஆடைதான், கொடைதான், பளிச்சுனு லைட்டுத்தான், கலக்குற சந்துரு லெவலுக்குக் கலக்குறாரு நம்ம ருணு...

ருணவிமோசகரிடம் திருநீறு வாங்கிப் பூசிக்கொண்டோம்னா உங்க கடன் தொல்லை கண்டிப்பா நீங்கிடும்.

அதுனால, இனிமே பேங்க்லகூட கடன் வாங்கிட்டு நம்ம ருணுகிட்ட திருநீறு வாங்கிப் பூசிக்கோங்க... அப்புறம் பாருங்க மகிமையை, பேங்க்காரவங்ககூட கடனைத் திருப்பிக் கேட்க மாட்டாங்க..

நீங்க எஸ்கேப் ஆயிடலாம். மீறிக் கடனைத் திருப்பிக் கேட்டா எல்லாம் ருணவிமோசகர்தான்னு அவரைக் கைக்காட்டிவிட்டுடலாம்.

நமக்குத் தேவை கடன் பத்திரம் அல்ல...அல்ல...அல்ல...ருணவிமோசகருடைய திருநீறுப் பொட்டலம்... பொட்டலம்... பொட்டலம்.!

தமிழ் ஓவியா said...


நாம் இன்னும் சூத்திரர்களா? அமெரிக்காவிலிருந்து ஒரு குரல்!


அனைவரும் அர்ச்சகர் போராட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்தது !

இதில் அனைவரையும் பங்கேற்க வைக்க வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் ஆழமாகச் சிந்தித்துச் செயல்படுத்துபவர்.

தமிழனின் சூத்திரப் பட்டத்தை அடியோடு ஒழிக்கும் செயல் இந்தப் போராட்டம்.

அனைவரும் சமம் என்று பேசித் திரிந்தால் போதாது. பேசுவோர் அனைவரையும் பங்கேற்க செய்ய வேண்டும். கிராமத்துக் குழந்தைகள் முதல் கல்லூரிப் பேராசிரியர்கள் ,மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியியல் மற்றும் பல்துறை வல்லுநர்களைப் பங்கேற்கச் செய்ய வே ண்டும். அனைவரும் மானமுள்ள மனிதர்களாக வாழ வேண்டுமா அல்லது சூத்திரர்களாக வாழ வேண்டுமா?

இது கடவுள் எதிர்ப்புப் போராட்டமல்ல. இந்தப் போராட்டம் பக்தியை எதிர்த்தல்ல. புத்திக்கானப் போராட்டம். நீ எவ்வளவு பெரிய மனிதனாகப், படித்துப் பட்டம் பெற்ற அறிஞனாக இருந்தாலும், கோவில் கட்ட வாரி வழங்கியிருந் தாலும் உன்னைச் சார்ந்தோர் அர்ச்சகர் ஆக முடியுமா?
உலகில் இந்தக் கொடுமை வேறு எங்காவது உண்டா? தென் அமெரிக்காவிலே பிறந்தவர் உலக கத்தோலிக்கர்களின் போப்பாண்டவர். தஞ்சையிலே பிறந்த தமிழன்! தஞ்சைக் கோவிலில் சூத்திரன். மதுரையிலே பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ள தமிழன் மதுரையிலேயே சூத்திரன்! பொங்க வேண்டாமா உள்ளம்? யார் செய்த வேலை என்பதைவிட இப்பொழுது நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம். இதில் பங்கேற்காதவர்கள் தங்களைச் சூத்திரன் என்று ஒப்புக்கொள்கின்றார்களா ?.

அனைவரும் தயவு செய்து சிந்தியுங்கள். உங்கள் குழந்தைகளைச் சூத்திரனாக இருக்கச் சொல்லலாமா?அதற்காகத்தான் இந்தப் போராட்டம்.

ஆயிரமாண்டு அசிங்கத்தை இன்று களை வோம். நாம் கட்டிய கோவில்களில் நாம்தான் உரிமையுடையவர்கள். இது திராவிடர் கழகப் போராட்டம் என்றிருக்கலாமா?

அனைத்துத் தமிழர்களின் போராட்டம். தமிழன், தமிழ் என்று பேசிப் பயனில்லை. மான முள்ள தமிழனாக வாழவேண்டுமென்கிற போராட்டம். நீங்கள் மானமுள்ள தமிழன் என்பதைப் பறைசாற்றும் போராட்டம்.

அனைவரும் சமம் என்று அகிலமே பாடும்; பொது அடிமைப் புத்தியை அகற்றிடும் போராட் டம். அடிமைத்தளை உடையட்டும் .

அனைவரும் அர்ச்சகராக அரசு செயல்படட்டும்!

வாழ்க பெரியார் !
- சோம.இளங்கோவன், சிகாகோ

தமிழ் ஓவியா said...


சாமி கும்பிட கட்டணமா? இந்து அமைப்புகள் போர்க்கொடி!

சென்னை, ஜூலை 21- கோவில்களில், தரிசன கட்டணம் வசூலிப்ப தற்கு எதிராக, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட் டம் நடத்த, பல்வேறு இந்து இயக்கங்கள் முடிவு செய்துள்ளன. அதற்கான முதற்கட்ட போராட்டம், இன்று (21ஆம் தேதி) துவங்குகிறது.

தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறை யின் கட்டுப்பாட்டில், 39 ஆயிரம் கோவில்கள் உள் ளன. இக்கோவில்கள், மாத வருவாயின் அடிப் படையில் பிரிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்றன. இக்கோவில்களில், பண் டிகை, சிறப்பு நாட்களில், கட்டண அடிப்படை யில், தரிசனத்துக்கான வரிசை பிரிக்கப்படு கிறது. 1,000 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட் டணம் நிர்ணயிக்கப் படுகிறது. இக்கட்டணத்துக்கு, பக்தர்களிடையே பலத்த எதிர்ப்பு வந்த போதும், அறநிலையத் துறை தரிசன கட்டண முறையை, தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டு களாக, பல்வேறு இந்து இயக்கங்கள், இதற்கு எதிராக போராடி வரு கின்றன. அதன் ஒரு பகுதியாக, கையெழுத்து இயக்கம் நடந்து வரு கிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும், இன்று போராட்டம் நடத்த, இந்து முன்னணி உள்ளிட்ட, பல்வேறு இந்து இயக்கங்கள் போராட்டம் நடத்து கின்றன.

இதுகுறித்து, இந்து இயக்கங்களின் நிர்வாகி கள் கூறியதாவது: இறை வனுக்கு முன், அனை வரும் சமம். இறைவனை தரிசிக்க கட்டணம் நிர்ணயித்தால், காசு உள்ளவனுக்கு மட்டுமே, கடவுளின் தரிசனம் என்ற நிலை வந்துவிடும். இது, இந்து மதத்தின் அடிப்படை தத்து வத்தையே தகர்த்து விடும். இதனால், மேலும் ஏற்றத் தாழ்வுகள் உரு வாகும். தமிழகத்தில், "டாஸ்மாக்' நிறுவனத் துக்கு பின், அதிக அளவி லான வருமானம், கோவில்களில் இருந்தே வருகிறது என்று கூறி யுள்ளனர்.

பக்தி ஒரு பிசினஸ் என்று ஏற்கெனவே சங்க ராச்சாரியார் கிருபானந் தவாரியார் போன்றவர் களே சொல்லி விட்டார்கள்.

ஆங்கிலப் புத்தாண் டுக்கே இரவு நேரத்தில் கூட கோயில்களைத் திறந்து வைத்துக் கட்டா யம் வசூலிக்கிறார்கள்.

திருப்பதி போன்ற கோயில்களில் அதிக கட் டணம் செலுத்த செலுத்த வெகு வெகு சீக்கிரத்தில் தரிசனம் கிடைக்க ஏற் பாடு செய்யப்பட்டுள் ளது. காசேதான் கடவு ளப்பா என்பது இது தானோ!

தமிழ் ஓவியா said...


இதோ, பாரம்பரிய அர்ச்சகரின் வன்முறை பக்திப் பரவசம்!


- ஊசி மிளகாய்

தகுதி, திறமை பேசும் பார்ப்பனர்களுக்கு, ஏனோ அர்ச்சகரைத் தகுதி, திறமைக்கு உரியவர்களாக்கி, முறைப்படி, ஆகமங்கள் அதுவும்கூட சிவன் கோயிலுக்கு சிவாகமம், வைஷ்ணவ கோயிலுக்கு வைகனாச ஆகமங்கள் மற்றும் பஞ்சாராத்திரம் போன்றவைகளையும், (சம்பிரதாய நடைமுறை களையும்) அர்ச்சனை பற்றிய முழுக் கல்வியைக் கற்றுத் தேர்வு செய்தவர்களையும் ஏன் இன்னும் கோயில் கருவறைக்குள் விடு வதைத் தடுக்க வேண்டும்?

பார்ப்பன அர்ச்சகர்களின் பரம்பரைக் கொள்ளை, சுவாகா சுய தொழில் தடையின்றி நடைபெற வேண்டும் என்ற பேராசைதானே ஒரே காரணம்?

உச்சநீதிமன்றத்தின் இரண்டு முக்கிய தீர்ப்புகள் (பல நீதிபதிகள் அமர்வுகள் அதில் உண்டு) - அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவது அரசியல் சட்ட விரோதமல்ல; மத விஷயங்களில் குறுக்கீடு ஆகாது; அரசியல் சட்ட விதிகள் 25, 26ஆவது பிரிவுக்குட்பட்ட சட்ட பூர்வ நடவடிக்கைகளே என்று தெளிவான தீர்ப்புகள் 1971-லும் 2002லும் வந்து விட்டன! இரண்டு ஆட்சிகளில் (எம்.ஜி.ஆர். கலைஞர் ஆட்சிகளில் - அதிமுக, திமுக ஆட்சிகளில்) இரண்டு உயர்நீதிமன்ற நீதியரசர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அவர்கள் பரிந்துரையும் இதை ஏற்றுக் கொண்டு விட்டது!

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் முறையான பாட திட்டத்தின்கீழ், 69 சதவிகித தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு சட்டப் படியே பயிற்சி பெற்று 206 பேர்கள் உள்ளனரே!

பிறகு ஏன் இன்னமும் இந்த முட்டுக்கட்டை முயற்சிகள்?

பாரம்பரிய அர்ச்சகர், பார்ப்பனர்களின் ஒழுக்கம் என்பது எப்படிப்பட்டது?

ஆச்சாரம் போச்சு, அனுஷ்டானம் போச்சு என்று ஒப்பாரி வைக்கும் துக்ளக் துருவாச முனிவர்களின் துருப்பிடித்த சாபம் எல்லாம் பொருள் உள்ளதா?

இந்த அர்ச்சகர்கள் எப்படிப்பட்டவர்கள்? இந்திய அரசு டாக்டர் சர். சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் அமைத்த இந்து அறநிலைய ஆய்வுக் கமிட்டி அறிக்கை முதல் துவங்கி,
ஜஸ்டிஸ் மகராஜன் தலைமையில் (எம்.ஜி.ஆர். அரசு) போட்ட கமிஷன் அறிக்கையும் சரி,

நடைமுறையில் காஞ்சிபுரம் கோயில் கருவறையை விபச்சார கேந்திரமாகப் பயன்படுத்தி, பல குடும்பப் பெண்களை எல்லாம் செல்போன் அருளால் படம் எடுத்து பயமுறுத்தி தொடர் கற்பழிப்புத் திருப்பணி செய்த அர்ச்சகர் தேவநாதன் வரை ஏராளம் சொல்ல முடியும் சம்பவங்கள் வரை எத்தனைத் திருப்பணிகள்!

சி.பி. ராமசாமி அய்யர் கமிஷன் அறிக்கைகள் அரைபாட்டில் சாராயத்திற்கு சாமி சிலையை விற்ற அர்ச்சகர்கள் கதையெல்லாம் கூறப்பட்டுள்ளதே!

நேற்று சுடச்சுட - ஒரு சம்பவம் பூரி ஜெகன்நாதர் தேரோட்டம் நடை பெறுகிறது ஒடிசாவில்.

அங்கு சென்ற இத்தாலிய நாட்டு நாட்டிய மாதுவின் தோளை தொட்டுப் பார்த்துள்ளனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு விரிவான செய்தியாக இன்று முதல் பக்கத்தில் வெளியிட் டுள்ளது!

அந்த அம்மையாரிடம் 1000 ரூபாய் தட்சணை கேட்டுள்ளார் அந்த அர்ச்சகர்; இவர் மிக அதிகம் என்று கூறி மறுத்துள்ளார்!

அதற்காக அவரை ஓங்கிக் கன்னத்தில் அறைந் துள்ளார் அந்தப் பார்ப்பன அர்ச்சகர்!

அந்த அம்மையாரின் கையைப் பிடித்து முறுக்கி, தோள் பட்டையை அழுத்தி ஆபாச வார்த்தைகளில் அந்த அம்மையாரை அர்ச்சனை செய்துள்ளார் அந்தப் பார்ப்பனர்.

ஆத்திரம் பொங்க, காவல்துறை அதிகாரி களிடம் ஆங்கிலத்தில் புகார் கொடுத்துள்ள அந்த அம்மையார் இத்தாலிய நாட்டுக்காரர்; பெரிய பிரபல நாட்டியப் பயிற்சியாளரும்கூட!
எப்படிப் போகிறது பார்த்தீர்களா? அர்ச்சகர் பக்தி, ஒழுக்கம் எல்லாம்!

பக்திப் பரசவம் இதுதானோ?

பேராசைக் காரனடா பார்ப்பான் - நம்மைப் பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்
என்ற (பார்ப்பன) பாரதியின் கவிதைக்கு ஒடிசாவும் எடுத்துக்காட்டு போலும்!

தமிழ் ஓவியா said...


கவனிக்கவேண்டும்


மதத்தைக் காப்பாற்றவே கோயில் களும், சொத்துகளும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.
_ (விடுதலை,3.12.1962)

தமிழ் ஓவியா said...


சிங்களமயமாக்கல்!


ஜூலை 16ஆம் தேதி டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 4ஆவது தீர்மானம் தமிழர் பகுதிகளில் சிங்களவர் களுக்கு உருவாக்கப்பட்டுள்ள புது மாவட்டம் பற்றியதாகும்.

வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டத்திற்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த இணைப்பைத் துண்டிக்கும் வகையிலும், சிங்களப் பகுதியான அனுராதபுரம் மாவட்டத்தோடு இணைந் திருக்கும் வகையிலும் வெளி ஓயா என்ற சிங்களப் பெயரிலேயே ஒரு புதிய மாவட்டத்தை சிங்கள அரசு உருவாக்கி, அங்கே சிங்கள வர்களை மட்டுமே குடியேற்றி வருகின்ற நிகழ்வுகளும் தற்போது நடைபெற்று வருவதை டெசோ இயக்கம் சுட்டிக்காட்டி அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானத்தின்படி பொதுத் தேர் தல்கள் நடைபெறும் காலத்தில் இது போன்ற மாவட்டங்களை உருவாக்குவதோ, எல்லை களை மாற்றுவதோ, புதிய குடியேற்றத்தை ஊக்குவிப்பதோ கூடாது என்று திட்டவட்டமாக கூறப்பட்ட போதிலும்; அதை மீறுகின்ற வகையில் சிங்கள அரசு ஈடுபடுவதையும் இந்திய அரசு கவனத்தில் கொண்டு, இதனை உலக நாடுகள் மற்றும் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றின் கவனத் திற்கு எடுத்துச் சென்று, உடனடியாகத் தடுத்து நிறுத்திட ஆவன செய்ய வேண்டுமென்று இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது என்ற டெசோவின் 4ஆம் தீர்மானம், இலங்கையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தமிழினத்தின் அடையாளத்தையே முற்றிலுமாக அழிக்கும் பேராபத்தைச் சுட்டிக் காட்டியுள்ளது.

தொடர்ந்து 1948ஆம் ஆண்டு முதலே கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய அளவில் தமிழ் ஈழத்தில் 9 ஆயிரம் சதுர மைல்களில் 2000 சதுர மைல்களை ஆக்கிரமித்துள்ளது.

தமிழர்கள் வீடுகளிலேயேகூட சிங்கள வர்கள் குடியேறிய கொடுமையை இலங்கையில் அப்பொழுது இருந்த இந்திய அமைதிப் படை (ஐ.ஞ.மு.கு.) நிருவாகிகளிடம் புகார் செய்யப்பட்டது. ஆனாலும் எந்தப் பரிகாரமும் கிட்டவில்லை. இப்பொழுது 89 தமிழ் ஊர்களின் பெயர்கள் சிங்கள மயமாக்கப்பட்டுள்ளன. (தமிழ்நாட்டில் தமிழ் ஊர்கள் சமஸ்கிருத மயம் ஆக்கப் பட்டதையும் நினைவில் கொண்டால் சிங்கள வர்கள் ஆரியர்களே என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அவர்களின் அணுகுமுறைகள் ஒன்றாகவே இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்)

இலங்கையில் தமிழர் பகுதிகள் ஆக்கிர மிக்கப்படுவதை எதிர்த்தும், சர்வதேச அளவில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சேர்க்கவும் தமிழக மக்கள் பேரவைத் தலைவர் திருச்சேத்தி தலைமையில் பிரான்சு நாட்டு தமிழீழ மக்கள் பேரவை சார்பில் பாரீசில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டதும் உண்டு (ஜூன் - 2012) வாரா வாரம் பல வாரங்கள் அப்படி நடத்தினர்.

நியாயமான இந்த அறவழிப் போராட்டங் களையெல்லாம் இலங்கைப் பாசிச அரசு கிஞ்சிற்றும் பொருட்படுத்தவில்லை. தான் நினைத்த - விரும்பிய தமிழீழ அழிப்பை மூர்க்கத் தனமாகவே செய்து கொண்டு இருக்கிறது. அதனைத் தடுத்து நிறுத்தும் கடமை இந்திய அரசுக்கு இல்லையா? அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இப்படிப் பச்சையாக இலங்கை அரசு நடந்து கொண்டுள்ளதே - இதன்மீது நடவடிக்கை என்ன?

டெசோ இதனைத்தான் சுட்டிக் காட்டு கிறது; உலக நாடுகள் மத்தியில் இவற்றைக் கொண்டு செல்ல வரும் ஆகஸ்டு 8ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் டெசோ நடத்த இருக்கும் அறவழி ஆர்ப்பாட்டம் நல்ல அளவுக் குத் திருப்பத்தைத் தரும் என்று எதிர் பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...


முன்னாள் அமைச்சர் வி.வி. சாமிநாதன் எழுதுகிறார்


தந்தை பெரியாரின் பிரதிநிதி தி.க. தலைவர் கி.வீரமணி ஆகஸ்ட் முதல் நாள் அனைத்து சாதியினரும் அர்ச்சக ராகலாம் என்று தமிழ்நாட்டில் அரசு அமல்படுத்த அறிவித்த போராட்டம் ஆகஸ்ட் சுதந்திர போராட்டத்திற்கு ஒப்பானது.

உண்மையில் சாதி பேதம் உயர்வு தாழ்வு கூடாது என்பதை உளமார நம்பினால் தி.மு.க. ஆதரவு தந்தது போல் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க., இடதுசாரி கம்யூனிஸ்ட்டுகளும் திரு. கி.வீரமணி அவர்களின் ஆகஸ்ட் போராட்டத்தை ஆதரிக்க முன் வர வேண்டும். மாநில மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு தமிழ் எழுத்தாளர் முற்போக்கு சங்கம் போன்ற அமைப் புகளும், திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரிஅனந்தன், சேகர் முதலியவர்கள் கை கோக்க வேண்டும். மண் விடுதலையடைந்தால் போதாது. மூடப் பழக்க வழக்கங்களிலிருந்து மனம் விடுதலையடைய வேண்டும். வைக்கம் போராட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தந்தை பெரியார் போராட் டத்தை தொடர்ந்து தீண்டாமை ஒழிய சிறை சென்று வெற்றி பெற்று வைக்கம் வீரர் என்ற பட்டத்துடன் தமிழகம் திரும்பினார். ஆனால், அதே மலை யாள நாட்டில் எர்ணாகுளம் மாவட்டம் ஆரங்காடு என்ற கிராமத்தில் 1993இல் ஒரு சிவன் கோயில் கருவறைக்குள் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் நடத்தும் பயிற்சிப் பள்ளியில் மந்திரம் கற்றுத் தேர்ந்த திறமையான ஆனால் பார்ப்பனரல்லாத ஈழ வகுப்பு அர்ச் சகரை கருவறைக்குள் நுழைய நம் பூதிரி பார்ப்பனர்கள் மறுத்து விட்டனர். கேரள நாட்டு அரசும், அறநிலையத் துறையும், பொது மக்களும், தாழ்ந்த குலமானாலும் தகுதியுடைய அர்ச்சகர் ஆதித்தியன் நியமனத்தை ஆதரித் தன. இருந்தாலும் வேந்தனும், வேதி யர்களுக்கு துரும்பு என்று உயர்சாதி வெறி பிடித்த நம்பூதிரி பிராமணர்கள் கேரள உயர்நீதிமன்ற புல்பெஞ்ச் சட்டப்படி செல்லும் என்று சொல்லியும் அரசை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு போன வழக்கு வரலாற்று சிறப்பு மிக்க வழக்கு; ஆதித்தியன் கே. திருவிதாங்கூர் சமஸ்தானம் என்ற வழக்கில் 3.10.2002இல் இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அது சட்டப்படி செல்லும் நியாயமானதே என தீர்ப்பளித்தது. தமிழர்களுக்கு முன்பே அதிகம் படித்த அய்யர், அய்யங்கார், அர்ச்சகர்களுக்கு இது தெரியாது என்று சொல்ல முடியாது. தந்தை பெரியார் உயிருடன் இருக்கும் போதே கோயில் நுழைவுப் போராட்டம் அரசியல் சாசன சட்டம் போன்றவை களால் அரசு கோயில்களில் உள்ள கருவறைகளுக்குள் ஒளிந்து கொண்டு இருக்கும் தீண்டாமையை ஒழிக்க ஆன்மீகவாதிகளோ ஆ.ஞ., ஆ.டு.ஹ., ஆக போட்டியிடும் அரசியல் கட்சிகளோ வாய் திறக்கவே இல்லை. எனவே பெரியார் 26.1.1970 ராஜமன்னார்குடி ராஜகோபால சாமி பெருமாள் கோயில் கர்ப்பக்கிரக நுழைவு போராட்டத்தை துவக்கப் போவ தாக அறிவித்து விட்டார்கள். அன்று தி.மு.க.வின் முதல் முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா இறந்து கலைஞர் முதலமைச்சராக இருந்த காலம் அண்ணாவால் நியமிக்கப்பட்ட அற நிலையத்துறை அமைச்சர் கே.வி. சுப்பைய்யா மூலம் அனைத்து சாதி யினரும் அர்ச்சகராகலாம் என சட்ட சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றியதால் பெரியார் 26.1.1970இல் அறப் போராட்டத்தை ஓத்தி வைத்தார்கள். ஆனால் அரசியலில் ஏற்பட்ட சுனாமி யால் சட்டம் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்ததால் 5ஆவது தடவை முதலமைச் சரானவுடன் கலைஞர் 2006இல் பெரியாரின் கொள்கையை அமல்படுத்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக லாம் என சட்டத்தை மீண்டும் நிறைவேற்றினார்.

தமிழ் ஓவியா said...

கேரள நாட்டில் 2002இல் நம் பூதிரி பிராமணர்கள் கொட்டம் அடங்கியும் 2006இல் கூட தமிழ்நாட்டில் உள்ள ஸ்மார்த்த பிராமண அய்யர் மற்றும் அய்யங்கார் அர்ச்சகர்கள் உயர் ஜாதி வெறி தலைதூக்கி ஆடியது. மரபு, பழைய பழக்க வழக்கங்கள் என கூறி 2006இல் நேரிடையாகவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சமூக நீதி சட்டம் அமல் செய்ய முடியாமல் இடைக்கால தடை வாங்கி இன்று வரை ஏழு ஆண்டு களாக பார்ப்பனரல்லாத எல்லா தகுதி களும் உடைய வகுப்பினர்கள் தமிழ் நாட்டில் அரசு ஆலயங்களில் கருவறை கதவுகளைத் தட்டினாலும் திறக்காமல் பார்ப்பன அர்ச்சகர்கள் தடுத்துக் கொண்டு வருகிறார்கள். தமிழ் மடாதி பதிகளுக்கு வெட்கமில்லை தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடு வதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இருக்கிறார்கள்.

தமிழ் பல்கலைக் கழகங்கள் தோன்றி அதை அலங்கரிக்கும் முன்னாள் இந்நாள் துணைவேந்தர்கள் கவலையில்லாமல் இருக்கிறார்கள். ஆன்மீகத்திற்கு அவ மானம் மனித உரிமைகள் மதிக்கப்பட வில்லை. இந்திய அரசியல் சாசன அடிப் படை உரிமை ஷரத்துக்கள் 13,14,15,16 மற்றும் 17 மீறப்படுகின்றன. தீண்டாமைத் தடுப்பு தண்டனை தரும் சட்டம் செத்த பாம்பாகி விட்டது. விவேகானந்தர் தினம் கொண்டாடும்போது கோயிலில் கருவ றைக்குள் கடைப்பிடிக்கும் தீண் டாமையை ஏன் பேச விவேகிகள் மறுக்கிறார்கள்?

ஆலயங்களில் இலவச அன்னதான திட்டம் கோயில்களுக்கு கொடிக் கம்பங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி கோயிலுக்குள் கடவுள்கள் வாழும் கருவறைக்குள் பொது புனித மண் வழிபாட்டு இடத்தில் சாதி வேற்றுமை தாண்டவமாடுவதை மறைக்கப் பார்ப்பது மன்னிக்க முடியாத குற்றம் மக்களை ஏமாற்ற முடியாது யாரும்.

மாது தீட்டானால் கங்கையில் குளிக் கலாம் கங்கைக்கே தீட்டாகியிருக்கிறதே 3.10.2002-ஆம் தேதியன்று உச்சநீதி மன்றம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கடைப்பிடிக்கப்படும் பழக்க வழக்கமா னாலும், மரபு ஆனாலும், அரசு உத்தரவே ஆனாலும் அது கோயிலானாலும் சரி அவை மக்கள் சமத்துவம் சகோதரத் துவம், நாகரிகம், முன்னேற்றம் முதலிய கொள்கைகளுக்கு முரணாக இருந்தால் அவை சட்டப்படி செல்லாது என உச்சநீதிமன்றமே 3.10.2002ஆம் தேதி கொடுத்த தீர்ப்பை அவமதிப்பது போல் இருக்கும்போது 2006இல் இடைக்காலத் தடை பார்ப்பன அர்ச்சகர்களுக்கு கொடுத்தது அதிசயம்! அதைவிட அதி சயம் 7 ஆண்டுகள் ஆகியும் தடையை நீக்கி இறுதித் தீர்ப்பு வழங்காமல் இருப் பதுதான். நீதி வழங்க தாமதமானால் நீதி வழங்க மறுப்பதற்கு சமமென்ற பழமொழி தெரியாதா?

எனவே 1.8.2013ஆம் தேதியன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராக லாம் என்ற பெரியார் கொள்கையை தமிழ்நாடு அரசு பெரியார் பிறந்த தினத்திற்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி தி.க. தலைவர் கி.வீரமணி நடத்தும் போராட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும். பெரியார், தீண்டாமையை பூரணமாக ஒழிக்க ஏற்றிய தீபத்தை அணையாமல் ஏந்தும் கி.வீரமணி வாழ்க!

தமிழ் ஓவியா said...


தகுதியானதா தகுதித் தேர்வு?


ஆசிரியர் பணிக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தகுதித் தேர்வு குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டும் கல்வித் துறை அசைந்து கொடுப்பதாக இல்லை. எனினும் மீண்டும் ஒரு முறை பரிசீலித்தால் நல்லது.

ஆசிரியர் பணிக்கு வருகிறவர் பாட அறிவைவிட கற்பித்தலில் சிறந்து விளங்க வேண்டும். அதாவது தனது பாட அறிவை, சரியான முறையில் கற்பித்தால்தான் மாணவர்களின் புரிந்து கொள்ளும் ஆற்றலை வளர்க்க முடியும்.

மாணவர்களுக்குப் பாடங்களைச் சரியாகப் புரிய வைப்பதில்தான் ஆசிரியரின் வெற்றியே இருக்கிறது. அவ்வாறெனில் தகுதித் தேர்வு, போதனை முறைக் குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும். அதைவிடுத்து மீண்டும் மீண்டும் பாட அறிவையே சோதிப்பதால் எப்படி தகுதியான ஆசிரியர் கிடைத்துவிடுவார்?

உதாரணமாக ஆங்கில மொழிப் பாடத்தில் மொத்த முள்ள 30 வினாக்களில் 29 வினாக்கள் இலக்கண அறிவைச் சோதிப்பதாகவே உள்ளன. கற்பித்தல் முறையைச் சோதிக்கும் கேள்வி ஒன்றே ஒன்று தான்.

கற்பித்தல் முறைகளான புரிந்துகொள்ளும் திறன், எழுத்தாற்றல், வாக்கியங்களை அமைக்கும் திறன், பேச்சுத் திறன், பல்வேறு கற்பித்தல் முறைகளில் திறன், உச்சரிக்கும் திறன் ஆகியவற்றைச் சோதிக்கும் கேள்வி கள் அந்தத் தாள்களில் இல்லையே? ஆசிரியர்களின் கற்பித்தல் ஆற்றலையும், மாணவர்களின் கற்கும் ஆற்றலையும் எவ்வாறு கணக்கிடுவது?

இடைநிலை ஆசிரியர்களுக்கு முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையுள்ள பாடத் திட்டத்திலி ருந்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலுள்ள பாடத்திட்டத்திலிருந்தும்தானே கேள்விகள் இடம் பெற வேண்டும்? இதைக் கவனத்தில் கொள்ளாமல் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி களைக் கேட்டால் என்னாவது?
இப்படிக் கேட்பது ஆசிரியர்களின் தரத்தைச் சோதிப்பதைவிட வேலைவாய்ப்பில் வடிகட்ட மட்டுமே உதவும்.

சிறந்த முறையில் ஆசிரியப் பயிற்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தகுதித் தேர்வு தேவையில்லை. வேலை வாய்ப்பை மனதில் கொண்டு தேர்வு வைப்பதானால் சிறந்த கற்பித்தல் திறன்பெற்ற ஆசிரிய வல்லுநர்களைக் கொண்டு வினாத்தாள் தயாரிக்கட்டும். அதுவும் அந்தந்த நிலை பாடத்திட்டத்திலிருந்து கற்பித்தல் முறை குறித்து அதிக வினாக்கள் இருக்க வேண்டும். இத்தகைய தேர்வு முறையே ஆசிரியர் தகுதித் தேர்வின் தீர்வாக இருக்க முடியும்

- கலைப்பித்தன், கடலூர்
நன்றி: தினமணி, 22.7.2013

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டு சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது!


கூலிப்படைகள் அட்டகாசம் தாங்க முடியவில்லை! அவற்றின் பின்னணிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்!

முதல் அமைச்சர் அவசர அவசியமாகத் தலையிட்டு நடவடிக்கை தேவை!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழங்கு சீர் கெட்டுப் போய் விட்டது; கூலிப்படைகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. தமிழ்நாடு முதல் அமைச்சர் அவசர அவசியமாகத் தலையிட்டுச் சீர் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் எல்லாம் விலையேற்றத்தோடு நாளும் இருக்கையில், மிகவும் மலிவாகக் கிடைப்பது கூலிப்படைகள்தான்! கொலை செய்வதற்காக ஆங்காங்கே - (கார்ப்பரேட் கம்பெனிகள்போல்) இயங்கி வருவதாகவும், அவர்களை அழைத்துப் பேசி இப்படிப்பட்ட கொடுமைக்கள் அரங்கேற்ற திட்டமிடப்படு கின்றன என்றும் சாதாரணமான மக்களி டையேகூட பேச்சுக்கள் அடிபடுகின்றன!

தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு?

கொலைகளும், கொள்ளைச் சம்பவங்களும் அன்றாட அவலங்களாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு சீர்கேடாக உள்ளது.

இதை மறைப்பதோ, பூசிமெழுகுவதோ கூடாது; சில குற்றங்களைப் பதிவு செய்வதுகூட தவிர்க்கப்படுவதனால், குற்ற எண்ணிக் கையைப் புள்ளி விவர ரீதியாக குறைத்துக்கூட தமிழக அரசு கூறலாம்; ஆனால் பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் அறிய மாட்டார்களா?

ஏடுகளை எடுத்தால், தொலைக்காட்சி களைத் திறந்தால்., அன்றாடம் கொலை, கொள்ளைகள், திருட்டுகள் இவற்றைத் தாண்டி சாலை விபத்துக்கள் இவைதான் செய்தி களாகப் படமெடுத்தாடுகின்றன!

சேலம் - பிஜேபி பிரமுகர் படுகொலை கண்டிக்கத்தக்கது!

சேலத்தில் ஆடிட்டர் இரமேஷ் என்ற பா.ஜ.க.வின் தமிழகப் பொதுச் செயலாளர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும்.

இதற்கு மூல காரணம் யார் எது என்று கண்டறியப்படுவது, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதைவிட முக்கியமாகும்.

இதற்கு சில வாரங்கள் முன் வேலூரில் இதே கட்சியின் ஒருவரும் வெட்டிக் கொல்லப் பட்டார் என்ற வேதனைக்குரிய செய்தியும் வெளிவந்தது!

நம்மைப் பொறுத்தவரை, பொது வாழ்வில் உள்ள எவராயினும் கருத்துப் போர் நிகழ்த்தலாமே தவிர, வன்முறை வெறியாட்டங்களிலோ கொலை வெறித் தாக்குதலிலோ ஈடுபடுவது கூடாது! நியாயப்படுத்தவே முடியாது!

காந்தியாரைச் சுட்டுக் கொன்றபோதே தந்தை பெரியார் என்ன சொன்னார்?

அண்ணல் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே நிகழ்வுபற்றிக்கூட, தந்தை பெரியார் அவர்கள் தனி நபர் செயல் அல்ல அது என்று கூறி, அதன் பின்னே இருக்கிற வெறிக்குரிய காரணம் கண்டறிந்து அதனைப் போக்க, அல்லது தடுக்க வேண்டும் என்று தனது முதிர்ந்த அனுபவத்தால் அறிவுரை வழங் கினார்கள்.

பெரியார் தந்த புத்தியின் அடிப்படையோடு நாமும் கூறுகிறோம்; கூலிப்படைகளால் கொலைகள் நடைபெறுகின்றன என்னும்போது அவற்றிற்கு மூலவர்கள் யார் என்பது அல்லவா முக்கியம்?

கூலிப்படைகள்! கூலிப்படைகள்!!

தமிழ்நாட்டில் பல கொலைகளுக்கு ரியல் எஸ்டேட்டு தகராறுகள், தொழில் போட்டி பொறாமை, தவறான உறவுகள் தங்களைக் காக்க கூலிப்படைகளை ஏவுகணைகளாக்கிக் கொள்ளும் நிலை மலிந்து காணப்படுகிறது!

எல்லாம் ஒரே வகையில் (அதாவது வெட்டிச் சாய்ப்பதுதான் பெரும்பான்மையாக உள்ளது) என்கிறபோது, வெறும் அரிவாள்கள் உற்பத் திக்குத் தடை விதித்தால் மட்டும் போதுமா?

கூலிப்படைகளை அடையாளம் காணுவ தோடு களையெடுத்து, தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்றவும் முயற்சிக்க வேண்டாமா தமிழக அரசு?

காவல்துறை பொறுப்பேற்க வேண்டும்

அரசியல் தலைவர்களுக்குப் போதிய பாது காப்பு வழங்குவது முக்கியம்தான் என்றாலும், அதைவிட முக்கியம் கூலிப்படைகளையும், அதற் காக முக்கிய தலைமைகள் பற்றிய தகவல் களைத் திரட்டி, கூர்மையான நடவடிக்கை களும் உடனே செய்ய தமிழக அரசின் உள்துறை, குறிப்பாக காவல்துறை முன்வர வேண்டும்.

குற்றங்கள் நிகழ்வுக்குக் காவல்துறை அதிகாரிகள் போதிய பொறுப்பேற்குமாறு ஆணைகளை அரசு வழங்க வேண்டும். எந்த கொலைக் குற்றங்களும் குறிப்பிட்ட கால வரைக்குள் துப்பு துலக்கப்பட்டாக வேண்டும் என்பதை அரசு வற்புறுத்திட வேண்டும்.

தொடர்ந்து பல்வேறு பொறுப்பாளர்களை இழந்து வரும் பா.ஜ.க. கட்சியினருக்கு (நாம் கொள்கை லட்சியங்களில் வேறுபட்டவர்கள் என்பதை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு) மனிதநேயத்தோடு, ஆழ்ந்த இரங்கலைத் தெரி விப்பதோடு, மறைந்தவரின் குடும்பத்தின ருக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

முதல் அமைச்சரின் கடமை

பதற்றங்களைத் தணிக்க மூல காரணங்கள் கண்டறியும் வண்ணமும், மேலும் இனிமேல் இச்சம்பவங்கள் நிகழாவண்ணமும் எக்கட்சித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் உட்பட அனைத்து மக்களது பாதுகாப்பும் உறுதி செய்யப்படல் வேண்டும்!

தமிழக முதல் அமைச்சர் உடனே அவசர அவசியமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அமைதியை ஏற்படுத்தஆவன செய்ய முன் வர வேண்டும்.கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
23.7.2013

தமிழ் ஓவியா said...


பதினாறு குண்டு வெடிப்புகளுக்கு நாங்கள் தான் காரணம் - காவி பயங்கரவாதி பரபரப்பு வாக்குமூலம்!


***பீகார் புத்தர் கோயில் குண்டு வெடிப்பும் இதுவரை நடந்த மற்ற குண்டு வெடிப்புகளும்***

பதினாறு குண்டு வெடிப்புகளுக்கு நாங்கள் தான் காரணம் -காவி பயங்கரவாதி பரபரப்பு வாக்குமூலம்.....

இந்தியாவில் இது வரை நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 16 குண்டுவெடிப்புகளை காவி பயங்கரவாத இந் துத்துவ தீவிரவாதிகள் நிகழ்த்தியதாக வாக்கு மூலங்கள் வெளிவந்துள் ளன, இதன் மூலம் இந்தி யாவில் நிகழ்ந்த பல் வேறு குண்டுவெடிப்பு களில் இந்துத்துவ தீவிர வாதிகளுக்கு பங்கிருப் பது தெரியவந்துள்ளது,

மலேகான், சம் ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, 2-ஆவது மலே கான் உள்ளிட்ட குண்டு வெடிப்புகளில் தொடர்புடையதாக, அண்மையில் தேசிய பாதுகாப்புப் படை யினரால் கைது செய் யப்பட்ட இந்துத்துவா தீவிரவாதி ஒருவன் இதனை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்,

2007 ஆம் ஆண்டு சம்ஜோதாஎக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் குண்டுவைத்த ராஜேந்தர் சவுத்ரி அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் இருந்து கைது செய்யப்பட்டார், இதையடுத்தே இந்த உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன,

இந்துத்துவா தீவிர வாத குழுக்கள் குண்டு வெடிப்புகளை நடத்தி விட்டு, முஸ்லிம்கள் மீது பழியை சுமத்திவிட்ட உண்மை இந்த வாக்கு மூலங்களின் வழியாக வெளிவந்து கொண்டி ருக்கிறது,

2004 ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள பீர் மித்தா அஹ்லே ஹதீஸ் மசூதியில் வெள்ளிக் கிழமை தொழுகைக்குத் திரண்டவர்கள் மீது வெளியே இருந்து க்ரே னேடை வீசியவர்கள் தங்களின் குழுவைச் சார்ந்தவர்கள் தாம் என்பதை இந்துத்துவ தீவிரவாதிகள் தற் போதைய வாக்குமூலத் தில் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் க்ரேனைடு வெடித்து 2 பேர் பலியானார்கள்
ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.

எனினும் இச்சம்பவம் காஷ்மீர் தீவிரவாதிகளின் சதிவேலையாகவே அப்போது பார்க்கப்பட்டது, தெஹ்ரீக்குல் முஜாஹிதீன் என்ற அமைப்பு இச்சம்பவத்திற்கு காரணம் என்று அன்று காவல்துறை கூறி யிருந்தது.

மேற்கண்ட சம்பவம் வழக்கு தொடர்பான விசாரணை அறிக் கையை காஷ்மீர் காவல்துறையினரி டம் தேசிய பாதுகாப்புப் படை கேட்டுள்ளது. விசாரணை அறிக் கையில் இந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து ஏதேனும் விவரங்கள் கூறப்பட்டுள்ளனவா? என்பதை ஆராயவே இந்த அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது,

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர் புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் சுனில் ஜோஷி கொலை, பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் ஜிலானியை கொல்ல முயன்றது உள்ளிட்ட வழக்குகளில் இந்துத்துவத்திற்கு தொடர்பிருப் பதையும் ராஜேந்தர் சௌத்ரியின் வாக்குமூலம் தெரிவித்துள்ளது.

நன்றி செய்தி : இந்நேரம்.காம்

தமிழ் ஓவியா said...

அறிவியல்

ஆள் நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிந்தன்ஷாவடி உருவாக்கியுள்ளார்.

மனிதர்கள் நடமாடும் போது மட்டுமல்ல; வாகனங்கள் சென்றாலும் அந்த நேரத்தில் திடீர் என்று வெளிச்சம் கிடைக்கும் வகையில் இதனை உருவாக்கியுள்ளார்.

இதனால் மின்சாரமும் மிச்சமா கிறது. இருட்டில் பேய், பிசாசு என்று அவிழ்த்து விடும் பொய் மூட்டை களும் அவிழ்ந்து கொட்டி விடும் அல்லவா!

தமிழ் ஓவியா said...

கோயில் என்றால்

ஆந்திர மாவட்டம் காளஹஸ்தி கோயிலின் கோபுரம் 28.5.2010 அன்று இடிந்து விழுந்தது. (இதற்குப் பெயர்தான் கடவுள் சக்தி! - நம்பித் தொலையுங்கள்!) புதிய ராஜகோபுரம் கட்டுவதாகக் கூறி அக்கம் பக்கத்தில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப் பட்டன. அதற்குப் பதிலாக பரத்வாஜ தீர்த்தம் பகுதியில் நிலங்கள் அளிக் கப்படும் என்று உறுதி அளிக்கப் பட்டது. ஆனால் இதுவரை கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படாத காரணத்தால் சுங்கி ரெட்டி என்பவர் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி, நிலங்கள் வழங் கப்படும் வரை ராஜ கோபுரக் கட்டு மான பணியினை நிறுத்திட நீதி மன்றம் ஆணை பிறப்பித்து விட்டது.

கோயில் சம்பந்தப்பட்டது என்ப தால் அதன் தர்ம கர்த்தர்கள் நாணய மாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான்; தெய்வ காரியம்தானே எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நம்பினால் படுமோசம்தான்.
கோயில் தர்மகர்த்தாக்களின் அறிவு நாணயம் எப்படிப்பட்டது என்பதற்கு இது ஒரு சின்ன எடுத் துக்காட்டு, அவ்வளவுதான்.

சுங்கி ரெட்டி உஷார் பேர் வழி - பாராட்டுகள்!

தமிழ் ஓவியா said...

விசா வேண்டுமாம்!

குஜராத்தில் 2002இல் நடந்த கல வரத்தைத் தொடர்ந்து மோடிக்கு விசா அளிக்க அமெ ரிக்கா மறுத்து வந்தது. இந்தத் தடையை விலக்கிக் கொள்ளும்படி அமெரிக்க அதிகாரிகளிடம் வற்புறுத் துவேன் என்று பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

வற்புறுத்துவது ஒரு புறம் இருக் கட்டும்; அமெரிக்கா விசா மறுத் ததற்கான காரணங்களிலிருந்து மோடி விடுபட்டு விட்டாரா? இன்று வரை குஜராத் கலவரத்தை நியாயப் படுத்திக் கொண்டு தானே இருக் கிறார்.

குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் வாஜ்பேயி எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளி நாடுகளுக்குச் செல் லுவேன்? என்று புலம்ப வில்லையா? இந்தியாவுக்குள்ளேயே கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியுள் ளதே! கூட் டணிக் கட் சிக்குள்ளேயே விரிசல் ஏற்பட்டு விட்டதே!

இந்தியாவுக்குள்கூட டில்லி பல்கலைக்கழக மாணவர்கள் மோடியை அனுமதிக்கவில்லையே!

இந்த நிலையில் அமெரிக்க அதிகாரிகளிடம் மோடிக்கு விசா வழங்க வற்புறுத்தப் போவதாக பிஜேபியின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறுவது ஓர் அர்த்தமற்ற பேச்சு தானே?

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியாரின் தமிழ் நேசம்!

சென்னை சேத்துப்பட்டு காஞ்சி காமகோடி பீடம் சங்கராலயத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தமிழ் வழி பாடசாலை தொடங் கப்பட்டுள்ளது. விழா வைத் தொடங்கி வைத்து உரையாற்றிய ஜூனியர் சங்கராச்சாரி யார் விஜயேந்திர சரஸ்வதி! தமிழை ஆன்மீக உணர்வுடன், தூய்மை மற்றும் புனிதத் தன்மை யோடு கற்றுக் கொள்ள வேண்டும்; இறைவன் பெருமையை அதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

என்னே தமிழ்நேசம் - பாசம்! ஆன்மீக உணர்வோடு தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டுமாம். மெத்த சரி, அந்தத் தெய்வத் தமிழைக் கோயிலில் அர்ச்சனை மொழியாக அனுமதிக்க முடியாது என்று அடம் பிடிக்கிறீர்களே அது ஏன் என்று ஒரு கேள்வியை முன் வைத்தால், சங்க ராச்சாரியாரின் போலித் தமிழ்ப் பற்றின் முகமூடி கிழிந்து தொங்கி விடுமே!

இன்றுவரை சங்கராச் சாரியின் சீடர் திருவாளர் சோ ராமசாமி தமிழில் அர்ச்சனை செய்தால் பொருள் இருக்கும்; அதே நேரத்தில் அருள் இருக் காது என்று எழுது கிறாரே - அவருக்குப் புத்தி மதியை காஞ்சி மடத்தார் சொல்லக் கூடாதா?

பூஜை வேளைகளில் சங்கராச்சாரி யார் நீஷ பாஷையை (தமிழை) பேச மாட்டார் என்ற நிலையிலிருந்து சங்கராச்சாரியார்கள் மாறி விட் டார்களா?

தமிழ் ஓவியா said...


நிரந்தர விரோதி


நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கிறது.
_ (குடிஅரசு, 13.4.1930)

தமிழ் ஓவியா said...


மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ? - காற்றுதான் சிலரை நீக்கி வீசுமோ?


தந்தை பெரியார் அவர்களைத் தரணிக்கு தந்த ஈரோடு பெரு நகரத்தில், இரண்டு அற்புத இன்றைய இருபால் இணையர்களை மருத்துவமனைக்கு சென்று கண்டு, மகிழ்ந்தேன் - சில ஆண்டுகளுக்கு முன் - அவரது பெரியார் பற்று - அதைவிட ஆழமான அவரது நன்றிப் பெருக்கு, நானிலமே போற்றிப் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று அல்லவா!

அதற்குரிய சான்றுதான் இந்தக் கடிதம்!
ஈரோடு - 18.07.2013 வியாழன் அன்று பிரபல எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் பி.டி.சக்திவேல்-மகப்பேறு மருத்துவர் சவுந்திரம் சக்திவேல் இணையரின் மகன் பிரதீப்குமார் அவர்களுக்கு இந்த ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.

சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றி ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புக் கதவை நீதிக்கட்சி ஆட்சி மருத்துவப் படிப்பிற்குத் திறந்தது. அதற்கும் தந்தை பெரியார்தான் காரணம், அதனைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டிற்காக போராடி, இட ஒதுக்கீடு பெற்றுத்தந்ததும் தந்தை பெரியார்தான்; இன்றுவரை தந்தைபெரியாரின் இயக்கமான திராவிடர் கழகம் சமூக நீதிக்காக பல்வேறு களங்களைக்கண்டு மாபெரும் வெற்றிகளைத் தமிழ்ச் சமுதாய ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்களின் பணி அளப்பரியது.தந்தை பெரியார், விடுதலை, ஆசிரியர் கி.வீரமணி இவர்களது உழைப்பால் இடஒதுக்கீடு (கல்வி,வேலை வாய்ப்பு) தமிழ் நாட்டிலும்,மண்டல்கமிசன் மூலம் இந்தியா வெங்கும் சிறப்பான முறையில் நடைமுறைக்கு வந்துள்ளது.

இட ஒதுக்கீட்டு முறையில்தான் நானும், எனது இணையர் சவுந்திரம் அவர்களும் மருத்துவர்களாக படித்து பயன்பெற்றோம்,அதனால் நாங்களும் இச்சமூகத்திற்குப் பயன்படுகிறோம். அந்த வகையில் எங்களது மகன் பிரதீப் குமாருக்குக் கோவை அரசு மருத்துவக்கல்லூரி யில் 2013-இந்த ஆண்டு இடஒதுக்கீடு அடிப் படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத் துள்ளது. எனவே வாழையடி வாழையாக தமிழ்ச் சமூகம் உயர்வதற்கு உழைத்துவரும் விடுதலை" வளர்ச்சிக்கு நன்றியுடன் ரூபாய் 10000/- (பத்தாயிரம்) வங்கிவரைவோலையாக வழங்கி மகிழ்கிறோம். நன்றி.

நன்றியுடன் மருத்துவர் பி.டி.சக்திவேல் எம்.பி.பி.எஸ். எம்.எஸ்.ஆர்த்தோ, ஈரோடு.

அறிவு ஆசான் கல்வி வள்ளலாக இருந்து பரிந் துரைக் கடிதங்களை நூற்றுக்கணக்கில் ஆயிரக் கணக்கில் கடந்த பல ஆண்டுகளாகத் தந்து - அவர்கள் வாழ்ந்த காலத்தில் கல்வியாண்டு துவக்கப் பருவத்தில் எழுதி, எழுதிக் கொடுப்பார்கள் - எங்களைப் போன்ற உதவியாளர்களுக்கு, அத்தகவலை உரியவர்களை நேரில் பார்த்து அய்யாவின் விருப்பத்தை அப்படியே எடுத்துக்கூறி, அதன் காரணமாக மருத்துவத்தில், பொறியியலில், கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் இடம் பெற்று, பட்டதாரிகள் ஆனவர்கள் பல்லாயிரவர் இருந் திருப்பார்கள்; இருக்கிறார்கள் இன்றும்கூட!

பயன் பெற்றோர் பலரும் தவறாது தமிழன் என்றொரு இனமுண்டு.

தனியே அவர்க்கொரு குணமுண்டு என்ற நாமக்கல் கவிஞரின் கருத்துக்கு ஏற்ப, நன்றி கூற மறந்தவர்களும், தவறியவர்களுமே அநேகர்!

அது தமிழனின் தனிக்குணம் போலும்!

நன்றி விசுவாசம் காட்டுவதும் நயவஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு என்பது தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு.

இதில்அத்தி பூத்ததுபோல், தவறாது நன்றி சொன்னவர்கள், செய்பவர்களும் இல்லாமல் இல்லை! நன்றி மறந்த இந்தப் பரந்த பாலைவனத்தில், அத்தகையவர்கள் ஒயாசிஸ் - சோலைகள் போன்றவர்கள் ஆவார்கள்!

அதற்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டுதான் மேலே காட்டிய டாக்டர் இணையர்களின் எடுத்துக் காட்டான கடிதமும், நன்கொடையும்!

தந்தை பெரியார் தந்த பரிந்துரைகளால் பயன் பெற்ற - இடம் கிடைக்கப் பெற்ற தோழர், தோழி யர்கள் விடுதலை நாளேட்டிற்கு ஒரு சந்தா கட்டி னால் இன்று பல லட்சம் பிரதிகள் சர்க்குலேஷன் ஆகிக் கொண்டிருக்குமே!

என்ன செய்வது! நம் இனத்தின் கூறுபாடு இது! அதற்காக நாம் நமது தொண்டறத்தை, மனிதநேய அடிப்படையிலான கல்விக்கண் பெற வைத்தல், உத்தி யோக மண்டலக் கதவுத் திறக்க உழைத்தல் போன்ற பணிகளை நிறுத்திவிட முடியுமா?

மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?

காற்றுதான் சிலரை நீக்கி வீசுமோ?

நம் பணி என்றும் தொண்டறம் தானே!

நன்றி என்பது பயனடைந்தவர் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்க வேண்டிய ஒன்றல்ல; அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமே

- 1931இல் தந்தை பெரியார் அன்று குடிஅரசு ஏட்டில் எழுதிய வரிகள் இவை.

எனவேதான் இந்த நன்றி பாராத (Thankless Jobs) என்ற பயனுறு பணி செய்யும் பாதையான ஈரோட்டுப் பாதையில் என்றும் எப்போதும், எந் நிலையிலும் பயணிக்கிறோம்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


பூனைக்குட்டி வெளியில் வந்தது!


நரேந்திர மோடிக்குத்தான் பிரதமர் ஆகும் தகுதி உள்ளதாம்
சொல்கிறார் காஞ்சி ஜெயேந்திரர்

சென்னை, ஜூலை 24-நரேந்திர மோடிதான் பிரதமராக வரவேண்டுமாம் - சொல்லி இருப்பவர் காஞ்சி சங்கராச்சாரியார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்காக பாரதீய ஜனதா முன் நிறுத்தினால் அது வரவேற்கத்தக்கது. நரேந்திரமோடி தகுதியான வேட்பாளர். நிர்வாக திறமை மிக்கவர். அவருக்கு கடவுள் அருளாசி உண்டு. எனது வாழ்த்துக்கள்!

ஆனால் சோனியாகாந்தி வெளிநாட்டுக்காரர் என்பதால் அவரது மகன் ராகுல் காந்திக்கு இந்தியாவுக்குத் தலைமை தாங்கும் தகுதி கிடையாது என்றே கருத வேண்டியுள்ளது.

நரேந்திரமோடி - ராகுல்காந்தி இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நரேந்திர மோடிக்குத்தான் முதலிடம் கிடைக்கும். நிர்வாகத் திறமை ஆற்றல் படைத்த மனிதர். மிகப்பெரிய சாதனையாளர். குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவர். மதச்சார்பற்ற ஆட்சியை அவர் தருவது நிச்சயம். - இவ்வாறு காஞ்சி சங்கராச்சரியார்(?) ஜெயேந்திரர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


விளம்பரம்


ஊடகங்களில் இடம் பெறும் விளம்பரங்கள் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின் றன என்பது மாநில, மத்திய அரசுகளுக்குத் தெரியாதா?

தெரிந்திருந்தால், ஊட கங்களில் குறிப்பாக தொலைக்காட்சிகளில் இடம்பெறும் விளம்பரங்கள் குறித்துக் கவனம் செலுத்தி இருக்கவேண்டுமே!

ஒரு தனியார் தொலைக் காட்சியில் ஒரு விளம்பரம் (நாய் விற்ற காசு குரைக் கவா போகிறது?)

தனலட்சுமி என்ற எந்திரம்; அதை வாங்கி வீட்டில் வைத்துக்கொண் டால் அந்த வீட்டில் செல் வம் அப்படியே பொங்கி வழியுமாம்.

வியாபாரி ஒருவர் தன லட்சுமி எந்திரத்தை வாங்கிக் கடையில் வைத் ததால், நட்டத்தில் மூழ்கிப் போய்க் கொண்டிருந்த வியாபாரம் ஓகோவென்று லாபம் கொழிக்க ஆரம் பித்துவிட்டதாம்.

மக்களைச் சோம்பேறி யாக்கும், அவர்களின் பணத்தை மோசடி செய்யும் - வழிப்பறி போன்ற குற்ற மல்லவா இது! இவற்றை அனுமதிக்கலாமா?

இதே நேரத்தில் இலண் டனிலிருந்து ஒரு தகவல்:

கோகோகோலா விளம் பரத்தைத் தடை செய்த செய்தி அது-

கோகோகோலா குடிப்ப தால் உடம்பில் உள்ள அதிகப்படியான கலோரி கள் எரிக்கப்படுவதாகக் கூறும் விளம்பரம் அது. அதனை எதிர்த்துப் புகார் கிளம்பியதுதான் தாமதம்; அந்த விளம்பரத்தை உட னடியாகத் தடை செய்தது இங்கிலாந்து அரசு.

அதல்லவா மக்கள் நல அரசு! அதேபோல, பிரிட் டனில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியான எம்.ஏ.டி.வி. கணேஷ் ருத் திராட்சப் பதக்கம் குறித்து விளம்பரம் ஒன்றை ஒளி பரப்பியது. இதனை அணிந்துகொண்டால் கெட்ட ஆவிகள் அண்டாது என்று இரு பெண்கள் பேசுவதுபோல் அந்தக் காட்சி!

இதனை நிரூபிக்க ஆதாரம் உண்டா என்ற வினாக் கணைகள் வெடித் துக் கிளம்பின. விளைவு அந்த மூட நம்பிக்கை விளம் பரம் தடை செய்யப்பட்டது.
(ஆதாரம்: தினமலர், 23.2.2008)

அது அல்லவோ நாடு- அது அல்லவோ மக்கள் நல அரசு! இந்தியாவிலும் அத்தகு நடைமுறைகள் தேவை.

விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்கவேண்டும் என்று (51-ஏ(எச்)) வெறும் ஏட்டில் எழுதி வைத்தால் போதுமா? - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


அமர்த்தியா சென்னின் கருத்து பேரலையாய் வீசும்!


பிரபல பொருளாதார அறிஞரும், அத்துறையில் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் - பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திர மோடி குறித்துத் தெரிவித்துள்ள கருத்து - இந்திய அளவில் பெரிய இமாலய அலையாய் வீசப் போகிறது என்பதில் அய்யமில்லை.

அவர் ஒன்றும் அரசியல்வாதியல்ல; எந்த அரசியல் கட்சியோடும் தொடர்புடையவரும் அல்லர்.

பிரதமருக்கான வேட்பாளர் மதச் சார்பற்றவராக இருக்கவேண்டும்; மோடியைப் பொறுத்தவரை சிறுபான்மை மக்களின் நலனையும், பாதுகாப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாதவர் என்று மய்யப் படுத்தித்தான் அவரின் குற்றச்சாற்று அமைந் துள்ளது.

இதே குற்றச்சாற்றைத்தான் பிரபல சிந்தனை யாளர் இராமச்சந்திர குகா, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ போன்ற வர்கள் வைத்திருக்கின்றனர். ஏன், அன்னா ஹசாரே கூட இந்த வகையில் வாய்த் திறந்துவிட்டாரே!

இதே குற்றச்சாற்றைத்தான் - பி.ஜே.பி.யின் கூட்டணியில் அங்கம் வகித்த அய்க்கிய ஜனதா தளத்தின் - குறிப்பாக அக்கட்சியின் சார்பாக பிகாரில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிதிஷ் குமாரும் முன்வைத்துள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மிக முக்கியமான கொள்கைகளில் முற்றிலும் மாறுபட்ட வர் எப்படிப் பிரதமராக வர முடியும் என்ற கேள்வி மோடியின் கழுத்தை மிகவும் நெருக்கிப் பிடித்து அழுத்திக் கொண்டிருக்கிறது.

இதே காரணத்திற்காகத்தான் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் செல்ல விசா மறுக்கப்பட்டது.

இதே காரணத்தைச் சொல்லிதான் அன்றைய பிரதமரும் - சொந்தக் கட்சியைச் சேர்ந்தவருமான அடல்பிகாரி வாஜ்பேயியும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாட்டுக்குச் செல்வேன்? என்று புலம்பினார்.

இவ்வளவுக்குப் பிறகும், அரசியல் நாகரிகத் துக்காகக்கூட தன்னைச் சரிப்படுத்திக் கொள்ள மோடி தயாராகவில்லை.

சிறுபான்மை மக்களை - குறிப்பாக முஸ்லிம் களைக் குறிப்பிடும்பொழுதெல்லாம் தம் வன்ம உணர்வை வெளிப்படுத்திடத் தவறுவதில்லை. அம்மக்கள் சார்ந்த இடத்தில், பரிவர்த்தனைக்காகக் குல்லாயைக் கொடுத்தபோதுகூட ஒரு நாகரிகத் துக்காகக்கூட சற்று நேரம்கூட அதனை அணிந்து கொள்ளத் தயாராக இல்லையே!

முஸ்லிம்கள்பற்றிக் குறிப்பிடும்பொழுது அவருக் குக் கிடைத்த உதாரணம் நாய்க்குட்டிதான்; ஏன் நாயைக் குறிப்பிடுகிறார் தெரியுமா? முசுலிம்கள் பொதுவாக நாய்களை வளர்க்கமாட்டார்கள் - எனவே, அதைச் சொல்லி வம்பு வளர்க்கும் அற்பப் புத்தி.

காங்கிரசைக் குறிப்பிடும்பொழுது மதச்சார் பின்மை என்னும் பர்தாவுக்குள் தன்னை மறைப்பதாக, அந்தப் பர்தா என்னும் முசுலிம் பெண்கள் அணியும் உடையைப் பயன்படுத்துகிறார்.

மதச்சார்பின்மை என்னும் போர்வை அல்லது முகமூடி என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம்; அப்படிச் சொன்னால், மோடியின் இந்துத்துவா வெறி ஆசுவாசம் கொள்ளாதே!

அவர் முதலமைச்சராக இருக்கும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் ஒரே ஒரு முசுலிம்கூட வேட்பாளராக நிறுத்தப்படாததிலிருந்தே அந்த மனிதனின் கோர ரூபத்தை அடையாளம் காணலாமே!

சும்மாவா சொன்னார் - உச்சநீதிமன்ற நீதிபதி நீரோ மன்னன் என்று மோடியை?

120 கோடி மக்களைக் கொண்ட இந்தியா என்னும் துணைக் கண்டத்திற்குப் பிரதமராக வரக்கூடியவர் மதச் சார்பற்றவராக இருக்கவேண்டும் என்று இந் தியாவுக்குள் உள்ள மக்கள் மட்டுமல்லர்; இந்தியா வைத் தாண்டியுள்ள மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் கூடப் பெறத் தகுதியில்லாதவர் நரேந்திர மோடி என்பதால், தொடக்கத்தின் தேர்விலேயே இந்தியத் துணைக் கண்ட மக்களால் தள்ளுபடி செய்யப்படக் கூடிய வராகவே ஆகிவிட்டார்.

அதுவும், அமர்த்தியாசென் போன்றவர்கள் கூறிய பிறகு இந்தக் கருத்துப் பேருரு பெற்று - புதிய திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக்கொண்டு விடலாம்.

தமிழ் ஓவியா said...


அவசியம்கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும், அவசியமுமாகும்.
(விடுதலை, 17.6.1970)

தமிழ் ஓவியா said...


நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்க முடியாது!


நோபல் அறிஞர் அமர்த்தியா சென் திட்டவட்டமான கருத்து

புதுடில்லி, ஜூலை 24- குஜராத் முதல்வர் நரேந் திர மோடி பிரதமராக வருவதை ஏற்கமுடியாது என நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அறிவித்துள்ளார்.

நரேந்திர மோடிதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்பதை யும் கிட்டத்தட்ட அறி வித்துவிட்டது பாஜக. மோடியை முன் நிறுத் துவதை பாஜவுக்குள் ளேயே ஒரு பிரிவினர் எதிர்த்து வரும் நிலை யில், நாட்டின் சமூக ஆர்வலர்கள், மத நல்லி ணக்கவாதிகள், பொரு ளாதார அறிஞர்கள் என பல மட்டங்களி லும் மோடிக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வரு கிறது.

நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென் கடுமையாக எதிர்த் துள்ளார் மோடியை. அவர் அளித்த பேட்டியில்,

மதநல்லிணக்கத்துக்கு எதிரான ஒரு மனிதரை எப்படி நாட்டின் பிரத மராக ஏற்க முடியும்? ஒரு இந்தியக் குடிமகன் என்ற முறையில் அவர் பிரதமராவதை நான் கடு மையாக எதிர்க்கிறேன். சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்பு டன் இருக்கிறோம் என உணரும் வகையில் அவர் எதையுமே சொல்ல வில்லை. சிறுபான்மை யினருக்கு மட்டும் என் றல்ல... நான் சிறுபான் மையில் ஒருவன் இல்லை... பெரும் பான்மை மக்களுக்கும் கூட அவர் என்ன செய்துவிட்டார்? வன்முறைக்குச்சட்ட அங்கீகாரமா?

2002 இல் அவர் செய் தது திட்டமிட்ட வன் முறை. மோடியை அங் கீகரிப்பதன் மூலம் அந்த வன்முறைக்கு சட்ட அங்கீகாரம் தரப்போகி றார்கள் என்றுதான் அர்த்தம்.

இந்திய பிரதமராக விரும்பும் எந்த இந்திய குடிமகனுக்கும் இல்லாத பயங்கரமான வன்முறை பின்னணி மோடிக்கு உள்ளது. அவரை ஏற்கக் கூடாது.குஜராத்தில் சில உள்கட்டமைப்புகள் நன்றாக இருக்கலாம். ஆனால் கல்வி மற்றும் சுகாதாரத்தில் அந்த மாநி லம் கடந்து வர வேண்டிய தூரம் நிறைய உள்ளது.

சகிப்புத் தன்மையில் நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்தியாவில், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான நிலை உள்ளது என பெரும் பான்மை மக்கள் எண் ணுமளவுக்கு மோடி நடந்து கொள்ளவில்லை என்றார்.

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்

திருநெல்வேலியில் திருப்பம்

தமிழர் தலைவர் அவர்களுக்கு, வணக்கம். அய்யா வருகின்ற சூலை மாதம் 28 ஆம் தேதி திருநெல்வேலியில் மன்றல் (ஜாதி மறுப்பு இணை தேடல்) நடை பெறுவது சம்பந்தமாக நானும், மாவட்டத் தலைவர் இரா.காசி அய்யாவும், துண்டறிக்கையை கொடுத்து நிதி உதவி கோரி பல நண்பர்களை சந்தித்தபோது ஏற் பட்ட அனுபவங்களை தங்களிடம் தெரிவிக்க விரும்பி இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

நாங்கள் இருவரும் அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை யின் இயக்குநர் பொறியாளர் ஆர். ஆதிலிங்கம் அய்யா அவர்களை சந்தித்து துண்டறிக்கையை கொடுத்தபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அவர் கூறிய வார்த் தைகள் பெரியார் இல்லை என் றால் இங்கு ஒன்றுமே இல்லை அதேபோல் காந்திமதி மருத்துவ மனையின் நிறுவனர் டாக்டர் தங்கராஜ் அய்யா அவர்களை சந்தித்தோம். எங்களால் முடியாத காரியத்தை தங்களுடைய இயக்கம் தான் செய்ய முடிகின்றது என பாராட்டி, ஜாதி மறுப்பு திருமணம் செய்கின்றவர்களுக்கு பொருளா தார நெருக்கடி ஏற்பட்டால் முழு மையாக நான் உதவி செய்கின்றேன் என எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.

பின்பு விடிவெள்ளி மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் சந்திரசேகர் அவர்களைச் சந்தித் தோம். அவர் இப்படிப்பட்ட புரட் சிகரமான திட்டங்களை தங்களால் எப்படி செய்ய முடிகின்றது? எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்களுடைய உழைப்பையும், நேரத் தையும் செலவழிக்கின்றீர்கள் என வியந்து பாராட்டினார். அவரே துண்டறிக்கை, சுவரொட்டி முத லியவற்றை எனக்கு அனுப் புங்கள், நான் பிரச்சாரம் செய்கிறேன் எனக் கூறி அதன்படியும் செய்தார். மண்டலச் செயலாளர் மா.பால் இராசேந்திரம் எங்களை வழி நடத்தினார்.

இந்நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற வேண்டும்; என முடிவு செய்து 74 வயது இளைஞர் இரா.காசி எனது டிவிஎஸ்-50-இல் உட்கார்ந்து கொண்டு காலையில் இருந்து மாலை வரை, என்னுடன் தொண்டு செய்வது எனக்கே ஆச்சரியம்.

அதேபோல் தென்காசி மாவட் டத் தலைவர் டேவிட் செல்லத் துரை அவர்கள், நேரிடையாக நெல்லைக்கே வந்து செய்ய வேண் டிய, செய்த பணிகளை திட்டமிட்டு ஒழுங்குபடுத்திவிட்டு சென்றது, நெல்லை மாநகரத் தலைவர் பி.இரத்தினசாமி, தன் முதுமையை பொருட்படுத்தாது நாங்கள் அழைத்தபோது வந்து பங்கேற்றது, குறிப்பாக கீழப்பாவூர் தோழர் அருண் தன் தொழில் சம்பந்தமாக தொடர்புடைய நண்பர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு எங்களுக்கு பொருளாதார வசதி செய்தது, தூத்துக்குடி மாவட்ட தலைவர் கனகராஜ் செல்போனில் தொடர்பு கொண்டு, நாங்கள் தோழர்களுடன் நெல்லைக்கு வரு கின்றோம், துண்டறிக்கையை கொடுத்து மக்களிடத்தில் பிரச் சாரம் செய்வோம் என எனக்கு உற் சாகப்படுத்தியது எல்லாம், அவர் கள் பெரியாருக்கு செய்த நன்றி.

நன்றி என்பது பலன் அடைந்த வர்கள் காட்டவேண்டிய கடமையே தவிர, உதவி செய்தவர்கள் எதிர் பார்ப்பது சிறுமைக் குணமே என்ற தந்தை பெரியாரின் பொன்மொழி என் நினைவுக்கு வருகின்றது.

தங்களின் விசுவாசமுள்ள ஊழியன்

- ச.இராசேந்திரன்
திருநெல்வேலி

தமிழ் ஓவியா said...


பசித்திரு - அறியத் துடித்திடு!


ஆப்பிள் கம்ப்யூட்டர் குழுமத்தை ஆலமரமாக வளர்த்தெடுத்த அதன் நிறுவனத் தலைவரான ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) அவர்கள் குறுகிய காலத்தில் புகழ் செல்வத்தையும், தொழிற் செல்வத்தையும் அடைந்து மறைந்தும், மறையாமல் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும் அவரது படைப்புகள், படையெடுப்புகளாக வெற்றி கரமாக சாம்ராஜ்யத்தை அமைத்துவிடும் அளவுக்கு உயர்ந்தார்!

அவர் அமெரிக்காவில் உள்ள பிரபல ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகப் (Stanford University) பட்டமளிப்பு விழாவில் குறிப்பிட்ட பட்டதாரிகளுக்கு வழங்கிய அறிவுரை - இரண்டு வாக்கியங்கள் - உலகம் முழுவதும் பிரபலமாகிப் பயன்படுத்தப்படும் வாசகங்களாக, பொன்மொழி களாக ஆகிவிட்டன!

‘‘Stay Hungry
Stay Foolish’’

‘‘என்றும் அறிவுப் பசியோடு இருங்கள்;

‘‘என்றும் அறியாமையைப் புரிந்து அறிந்து
(கற்று) கொள்ளும் நிலையிலேயே இருங்கள்!’’

இவ்விரண்டு வாக்கியங்களுக்குள், திருவள்ளு வரின் திருக்குறள்போல, ஆழமான முத்தான கருத்துக்கள் புதைந்துள்ளன - அல்லவா?

என்றும் பசியோடு இருப்பவன்தான் எப்போதும் உழைத்திட வேண்டும் என்ற உறுதியோடு அன்றாடம் தன் கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பான்.

பசியோடு இருப்பவன் என்றால் நலம் குன்றாத மனிதன் என்கிற பொருளிலும்கூட இதைப் புரிந்து கூறிய ஸ்டீவ் ஜாப்ஸ் எவ்வளவு பாராட்டுக்குரியவர்!

அவர் பசி என்பது உடல் உணவுக்காக அல்ல; உள்ளத்துப் பசி - அறிவுத்தாகம் கொண்டு அலை வது ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதைச் சுட்டிக் காட்டவே ஆகும்!

அறிவுக்கு எல்லை ஏது? மேலும் மேலும் பல்வேறு செய்திகளை நாம் அறிந்துகொண்டே ஆர்வம் குன்றாத ஆர்வமாக அமைதல்தான் நம்மை பல்முனைகளிலும் உயர்த்திட உதவும்.

இன்றைய புதுமை - வியப்பு!

நாளை அதுவே பழைமை - சாதாரணமாகி விடுகிறது!

வள்ளலார் அவர்கள் பசித்திரு என்று ஒரு சொல்லில் கூறியதை அவரது பக்தர்கள் பலரும் வெறும் அன்னதானத்திற்கு மட்டுமே உரியது என்று ஒரு குறுகிய சிமிழுக்குள் அடைத்துவிட்டனர்!

பசித்திருத்தல் - எல்லாத் துறைகளிலும் தேவை!

எல்லா வயதினருக்கும் தேவை!

எல்லாக் காலங்களிலும் தேவை!!

அடுத்து, நம் அறியாமையை நாம் அறிந்தும் அறிந்துகொண்டும் வளரவேண்டும் என்று அவா வுறுதலும், ஆர்வங்கொண்டு அலைவதும் அவசியம்; மனிதகுல முன்னேற்றத்திற்குரிய முக்கியத் தேவைகள் ஆகும்!

எனக்குத் தெரிந்ததெல்லாம் என் அறியாமை ஒன்றுதான் என்று மிகுந்த தன்னடக்கத்தின் உச்சியில் நின்று, தணியாத அறிவு வேட்கையைப் புலப்படுத்தினார்-

மனித குல மாணிக்கம் உண்மைத் தியாகி

கிரேக்கத்துச் சாக்ரட்டீஸ் அவர்கள்!

நமக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவமும்!

நான் என்ற அகம்பாவமும், நமது, நாங்கள் என்பதைக் கைவிட்டு - நான், எனது என்ற அகங்கார உச்சரிப்பும் வளர்ச்சியைத் தடுக்கும் உச்சகட்ட முட்டுக்கட்டை.

இதைத்தான் அறிவை விரிவு செய் - அகண்ட மாக்கு என்றார் புரட்சிக்கவிஞர்.

அறிதோறும் அறியாமை என்று வள்ளுவர் சொன்னார்.

புதிய பருவங்களில் புதிய சொற்றொடர்கள் புதையல்களாகக் கிடைக்கின்றன நமக்கு!

போற்றுவது முக்கியமல்ல!

பின்பற்றுவதே - அதிமுக்கியமானது - தேவையானது! -----கி.வீரமணி