Search This Blog

1.7.13

உலக மருத்துவர் நாளில் உரத்த சிந்தனை தேவை!


இன்று உலக மருத்துவர் நாள் என்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியச் சூழலில் இதுபற்றி சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்தியாவில் ஆண்களின் சராசரி வயது 68 ஆகவும், பெண்களின் சராசரி வயது 71 ஆகவும் இருந்து வருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையைவிட இது குறிப்பிடத்தக்க வளர்ச்சிதான் என்பதில் அய்யமில்லை. ஆனாலும் உலகளவில் ஒப்பிட்டுப் பார்க்கையில் நம் வளர்ச்சி பின்னடைவில் தான் உள்ளது.

ஒரு கால கட்டத்தில் அம்மை என்றால் அது மாரியாத்தாள் கோபம் என்று மாரியம்மன் கோயிலில் கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள். நோயாளியின் தலை மாட்டில் மாரியம்மன் தாலாட்டு என்னும் பாட்டுப் புத்தகத்திலிருந்து பாட்டுகளைப் பாடுவார்கள்.

காலரா என்னும் நோய் கடுமையாகத் தாக்கும். அப்பொழுது காளியம்மன் கோயிலில் கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள்.

காரணம் அறியாமையே - மூடநம்பிக்கையே! நோய்களுக்குக் காரணம் ஒரு வகை கிருமிகள் தான் என்று அறியாத காலம்; கடவுளின் சீற்றத்தால்தான் நோய்கள் வருகின்றன, என்ற மூடநம்பிக்கையில், சிக்கிக் கிடந்தார்கள்.
இப்பொழுது அம்மைத் தடுப்பு, காலரா தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மாரியாத் தாளும் காளியாத்தாளும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.

இன்றைக்கும்கூட இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைந்த குழந்தைகள் 44 விழுக்காடாகும். வறுமைக்கோலம் தலை விரித்தாடுகிறது என்று கூறப்படும் ஆப்பிரிக்காவில்கூட இது 25 விழுக்காடே யாகும். இந்தியாவில் ஊட்டச் சத்துக் குறைவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் குஜராத்துதான் -இந்தியாவின் சோமாலியா என்றும் அம்மாநிலத்தை வருணிக்கிறார்கள். (இந்த மாநிலத்தின் முதல் அமைச்சர்தான் இந்தியாவைக் கட்டி ஆளும் பிரதமராக வர வேண்டுமாம்; வெட்கக் கேடு!)

அய்.நா.வின் யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணம் இந்தியாவைப் பொறுத்தவரையில் உலகளவில் 49 ஆவது இடத்தில் இருக்கிறது. ஆயிரத்துக்கு 32 சிசு மரணம் இந்தியாவில் என்பது ஆரோக்கியமானதல்ல.

பெருகிவரும் மக்கள் தொகைக்கும் மருத்துவர் எண்ணிக்கைக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லை. நகரப் புறங்களைவிட கிராமப்புறங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிராமங்களில் முக்கியமானவை. ஆனாலும் கிராமங்கள் என்கிற காரணத்தால் அங்கு போய் பணியாற்ற மருத்துவர்கள் முன் வருவதில்லை.

இதில் வருந்தத்தக்கது என்னவென்றால் கிராமங்களில் பிறந்து வளர்ந்து பிறகு டாக்டர்கள் ஆனவர்கள்கூட கிராமங்களில் பணியாற்ற முன் வருவதில்லை
மனிதநேயமே மருத்துவம்!  என்ற குரலை பெரியார் மருத்துவ அணி முன் வைத்துள்ளது.

நேற்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் மருத்துவ அணியின் கூட்டத்தில் இந்த அமைப்புக்கான குறிக்கோள் சொல்லாக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இவ்வாறு அறிவித்தது  பொருள் பொதிந்த ஆழமான கருத்துச் செறிந்த வாசகமாகும்.
மருத்துவம் என்பது மனிதத் தொண்டு என்ற மனிதநேயம் காய்ந்து போய், அதுவும் பணம் சம்பாதிக்கும் தொழிலைச் சார்ந்திருப்பது - மனிதம் இன்னும் வளர்ச்சி பெறவில்லை - செழுமை பெறவில்லை என்பதற்கான அடையாளமாகும்.

அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகள் வளர்ந்துவருகின்றன. அரசு மருத்துவமனையில் எல்லா வகையான வசதிகள் இருந்தும்கூட அவை முழுமையாகப் பயன்படுத்தப் படாத நிலைதான்; அரசு மருத்துவமனையில் பணி யாற்றும் மருத்துவர்களே தனிக் கடை  வைப்பதுபோல தனியாக வைத்தியம் பார்க்கிறார்கள். அங்குதான் நன்றாக பார்ப்பார்கள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்றால் இதன் தன்மையை சமுதாய நோக்கோடு எண்ணிப் பார்க்க வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல லட்சம் ரூபாய் கொடுத்துதான் சேர்கிறார்கள். அவர்கள் மருத்துவர்களாகும்போது, தாம் போட்ட முதலுக்கு வட்டியும் இலாபமும் தேட வேண்டும் என்ற வர்த்தக மனப்பான்மை நிலவி வருகிறது.

நோய் நாடி, நோய் முதல் நாடி இதற்கொரு தீர்வு காணப்பட்டாலொழிய இத்துறையில் மாற்றத்தைக் காண்பது அரிதே!

உலக மருத்துவர் நாளில் உரத்த முறையில் இவை குறித்தெல்லாம் அரசும், மக்களும், அமைப்புகளும் மருத்துவர்களும் சிந்திப்பார்களாக!

             ---------------------------”விடுதலை” தலையங்கம் 1-7-2013

19 comments:

தமிழ் ஓவியா said...


ஆதி பராசக்தி


கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட் பார்க்குப் புத்தி எங்கே போச்சு? என்ற பழமொழி நாட்டில் புழக்கத்தில் இருப் பது எல்லோருக்கும் தெரி யும்.
தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் 12ஆவது வார்டில், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி மடத்தில் மாட்டியிருந்த கடவுளர் படத்தில் தேன் வடிகின்றது என்ற புரளியைக் கிளப்பி விட்டனர்.

உண்மைத் தகவல் களைவிட புரளிகளுக்குத் தானே இறக்கைகள் அதி கம். மக்கள் கூடிட ஆரம் பித்து விட்டனர்.

கருஞ்சட்டைத் தோழர் கள் களத்தில் இறங்கினர். மக்களுக்கு விளக்கம் அளித்தனர். காவல்துறைக் கும் தகவல் அறிவிக்கப்பட் டது. செய்தியாளர்களும் கூடினர்; கழகத்தின் விளக் கத்தை அனைவரும் ஏற் றனர்.

நேரில் சென்று பார்த்த போது பொய் மூட்டை என்பதும் தெளிவானது.

காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஊத்துக்கோட்டை என்.பி. சாலையில், நாகவல்லி யம்மன் கோயில் வளா கத்தில் புற்று அருகில் இரண்டு அம்மன் சிலைகள் இருந்தன. ஒரு அம்மன் சிலை, பால் குடித்ததாக புரளி அவிழ்த்து விடப்பட் டது - ஊரே திரண்டது.

செய்தியைக் கேள்விப்பட்ட மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பா ளர் (டி.எஸ்.பி.) பாலச் சந்திரன், ஆய்வாளர் நாக லிங்கம் ஆகியோர் சம்பந் தப்பட்ட கோயிலுக்குள் சென்று, ஒரு கரண்டியின் மூலம் சிலைக்குப் பால் கொடுத்துப் பார்த்தனர். பால் குடிக்கவில்லை - புரட்டு அம்பலமானது.

பூசாரியைக் காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்று இனிமேல் இது போன்ற தவறுகளைச் செய்ய மாட்டேன் என்று பூசாரியிடம் எழுதி வாங்கிக் கொண்டனர். (விடுதலை 14.8.2010).

அதுபோன்ற நேர் மையாக சட்டத்தைக் காப்பாற்றும் காவல்துறை அதிகாரிகள் இருந்தால் இந்த மூடநம்பிக்கை வியா பாரிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடு வார்கள்.

1990 ஆகஸ்டில் இதே மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி தொடர்பாக ஒரு துண்டு அறிக்கை வெளி யிடப்பட்டது. ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! என்ற தலைப்பிட்டு, இது ஆதி பராசக்தியிடமிருந்து வரும் கடிதம். இது போன்று 20 அல்லது 50 நகல்கள் எடுத்து தெரிந்தவர் களுக்கு அனுப்பினால் ஆதி பராசக்தியின் அருள் கிட்டும் என்று அதில் அச்சிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் மேல் மருவத்தூருக்குக் கடிதம் எழுதப்பட்டது.

4.8.1990 நாளிட்டு பதில் கடிதம் வந்தது. அந்தத் துண்டறிக்கை களை நம்ப வேண்டாம் என்று எழுதப்பட்டு இருந் ததை நினைவூட்டுகிறோம்.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


விநாயகனிடம் மனு; சபாஷ் சரியான அய்டியா!சென்னை - கஜவரத பெருமாள் கோயில் ஆலய மீட்புக் குழுவினர் ஒரு வேலையைச் செய்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் சிலையிடம் மனு கொடுக்கச் சென்றனராம்.

ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எண்ணிக் கொண்டு காவல்துறையினரும் கணிசமான எண்ணிக்கையில் பாதுகாப்புக்காக வந்திருந்தனர்.

புஸ் என்று போனது - வந்த பக்தர்கள் வெறும் ஆறு பேர்கள் தானாம்; விநாயகரிடம் மனு கொடுத்துச் சென்று விட்டனராம்.

இது முட்டாள்தனம்தான் என்றாலும் அந்தப் பக்தர்களின் அறிவு நாணயத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.

கடவுள்மீது உண்மையிலேயே பக்தி உள்ளவர்கள் கடவுள் நம்மைக் காப்பார் என்பதில் கண்டிப்பான வகையில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்.

அயோத்தியில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்று துடிக்கிற பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., வகையறாக் கள்கூட என்ன செய்ய வேண்டும்? சென்னை கஜவரத பெருமாள் பக்தர்கள், விநாயகரிடம் மனு கொடுத் திருப்பதுபோல ராமனிடம் மனு கொடுக்க வேண்டும்.

அதுபோல சேது சமுத்திரத் திட்டத்தை செயல் படுத்தக் கூடாது - ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கோஷம் போடுபவர்கள் நீதிமன்றம் சென்றி ருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிறீமான் இராமச்சந்திரமூர்த்தி அவர்களே! உங்களுக்காகத் தான் நாங்கள் பாபர் மசூதியை இடித்தோம். உங்கள் பேரால் உள்ள பாலம் இடிபடக் கூடாது என்பதற்காகத்தான் உச்சநீதிமன்றமும் சென்றுள்ளோம்.

சென்னைவாசிகளின் நடவடிக்கை எங்கள் கண்களைத் திறந்து விட்டது. இனிமேல் நீதிமன்றம், அரசு மன்றம், வீதி மன்றம் என்று செல்லாமல், கொடி பிடித்துக் கோஷம் போடாமல், நேரடியாக கடவுளாகிய தங்களிடம் மனு கொடுப்பது - அதாவது கோரிக்கை வைப்பது என்று முடிவு செய்து விட்டோம் என்று முடிவு செய்வார்களேயானால் அவர்களின் அறிவு நாணயத்தைக் கூடப் பாராட்டலாம்.

அப்படி கடவுள் சிலைகளிடம் மனு கொடுத்துக் காரியம் ஆகவில்லையென்றால், அந்தக் கடவுள்களை என்ன செய்யலாம் என்பதை சம்பந்தப்பட்ட பக்தர்களே ஒன்றுகூடி, கலந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வரலாம்.

முடிவுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டால், அந்தக் கால கட்டத்தில் கருஞ்சட்டைத் தோழர்களை அணுகலாம் - அப்பொழுது நல்லதோர் தீர்வினை, முடிவினைக் கொடுப்பதற்கு நாங்கள் தாராளமாகவே இருக்கிறோம்!

சரிதானே?

தமிழ் ஓவியா said...


நெய்வேலி நிலக்கரிப் பிரச்சினை:


5 சதவீத பங்குகளைத் தமிழக அரசு வாங்கிக் கொள்ள
தயார் என்ற முதல் அமைச்சரின் கருத்தை வரவேற்கிறோம்!

மத்திய அரசு விற்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யட்டும்!

தமிழர் தலைவர் அறிக்கை

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு களைத் தனியார்க்கு விற்பதைவிட, தமிழ்நாடு அரசே அதனை வாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித் திருப்பதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை மறு பரிசீலனை செய்து, கைவிட வேண்டுமென்று, தமிழ்நாடே ஒட்டு மொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசுக்கு - ஜனநாயகத்திலும், சமதர்மத்திலும் நம்பிக்கை இருக்குமானால் இதுகுறித்துச் சிந்தித்து இருக்க வேண்டும். ஆனால் பிடிவாதமாக விற்றே தீருவோம் என்று கூறி, தமிழக மக்களின் ஏகோபித்த அதிருப்தியை விலைக்கு வாங்குவது தேவைதானா? அரசியல் சாதுர்யமும் ஆகாது!

நெய்வேலி தொழிலாளர்களின் எச்சரிக்கை மணி!

நெய்வேலி தொழிலாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அபாய அறிவிப்பு எச்சரிக்கை மணியை அடித்துள்ளார்கள்!

இதன் மூலம் அனல் மின் நிலையம் இயங்காது; அதன் விளைவு...? மின் பற்றாக் குறை நாட்டில் பயங்கரமாக இருக்கும் நிலையில், மிகப் பெரும் மின் இழப்பும் பொது அமைதிக்குக் கேடும் ஏற்படும் என்ற நிலை உள்ளது.

இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்; மீண்டும் மீண்டும் மத்திய அமைச்சர்கள் சிலர் தொழிலாளர்களுக்கு நல்லது; நெய்வேலி நிறுவன வளர்ச்சிக்காகத்தான் இதைச் செய்கிறோம்! என்று பழைய பல்லவியைத் திரும்பத் திரும்ப பாடுவதால் பயன் ஏதும் விளையாது.

முதல் அமைச்சரின் கருத்து

வெல்லத்தில் பிள்ளையார் செய்து, அதில் ஒரு சிறு துண்டை வெட்டி எடுத்து, பிள்ளையாருக்கு வேண்டுதலை நிறைவேற்றிட பிள்ளையாரையே ஏமாற்ற முனைந்த பக்தன் கதை என்று வைதீகர்கள் கூறும் பழமொழிக் கொப்பான கேலிக் கூத்து இது.

அவர்கள் அப்படி 5 சதவீத பங்குகளை விற்றே தீர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் இறுதி முடிவானால் அதை மாநில அரசுக்கே விற்கும்படி தமிழக முதல் அமைச்சர் கேட்டுள்ளார்.

அதன்மூலம் பொதுத்துறை நிறுவனத்தின் தன்மையை மெல்ல மெல்ல தனியார் நிறுவனமாக மாற்றிடும் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க இயலும் என்பதாலும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழக அரசின் அதிகாரமும் ஓரளவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்பதாலும் நாம் (திராவிடர் கழகம்) இதனை வரவேற்கிறோம்.

தேவை மறுபரிசீலனை!

இதுபற்றி மத்திய அரசு உடனடியாக காலதாமதம் செய்யாமல் முடிவைக் கூற வேண்டும்.

மத்திய அரசுக்குக் கட்டுப்பட்ட சில செபி போன்ற அமைப்புகளைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்ள மத்திய அரசு முயலக் கூடாது.

தனது முடிவைத் தாமதிக்காமல் வெளியிட வேண்டியதும் - மறுபரிசீலனை செய்ய வேண்டியதும் அவசர அவசியமாகும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
1.7.2013

தமிழ் ஓவியா said...


நெய்வேலி நிலக்கரிப் பிரச்சினை:


5 சதவீத பங்குகளைத் தமிழக அரசு வாங்கிக் கொள்ள
தயார் என்ற முதல் அமைச்சரின் கருத்தை வரவேற்கிறோம்!

மத்திய அரசு விற்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யட்டும்!

தமிழர் தலைவர் அறிக்கை

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு களைத் தனியார்க்கு விற்பதைவிட, தமிழ்நாடு அரசே அதனை வாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித் திருப்பதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை மறு பரிசீலனை செய்து, கைவிட வேண்டுமென்று, தமிழ்நாடே ஒட்டு மொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசுக்கு - ஜனநாயகத்திலும், சமதர்மத்திலும் நம்பிக்கை இருக்குமானால் இதுகுறித்துச் சிந்தித்து இருக்க வேண்டும். ஆனால் பிடிவாதமாக விற்றே தீருவோம் என்று கூறி, தமிழக மக்களின் ஏகோபித்த அதிருப்தியை விலைக்கு வாங்குவது தேவைதானா? அரசியல் சாதுர்யமும் ஆகாது!

நெய்வேலி தொழிலாளர்களின் எச்சரிக்கை மணி!

நெய்வேலி தொழிலாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அபாய அறிவிப்பு எச்சரிக்கை மணியை அடித்துள்ளார்கள்!

இதன் மூலம் அனல் மின் நிலையம் இயங்காது; அதன் விளைவு...? மின் பற்றாக் குறை நாட்டில் பயங்கரமாக இருக்கும் நிலையில், மிகப் பெரும் மின் இழப்பும் பொது அமைதிக்குக் கேடும் ஏற்படும் என்ற நிலை உள்ளது.

இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்; மீண்டும் மீண்டும் மத்திய அமைச்சர்கள் சிலர் தொழிலாளர்களுக்கு நல்லது; நெய்வேலி நிறுவன வளர்ச்சிக்காகத்தான் இதைச் செய்கிறோம்! என்று பழைய பல்லவியைத் திரும்பத் திரும்ப பாடுவதால் பயன் ஏதும் விளையாது.

முதல் அமைச்சரின் கருத்து

வெல்லத்தில் பிள்ளையார் செய்து, அதில் ஒரு சிறு துண்டை வெட்டி எடுத்து, பிள்ளையாருக்கு வேண்டுதலை நிறைவேற்றிட பிள்ளையாரையே ஏமாற்ற முனைந்த பக்தன் கதை என்று வைதீகர்கள் கூறும் பழமொழிக் கொப்பான கேலிக் கூத்து இது.

அவர்கள் அப்படி 5 சதவீத பங்குகளை விற்றே தீர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் இறுதி முடிவானால் அதை மாநில அரசுக்கே விற்கும்படி தமிழக முதல் அமைச்சர் கேட்டுள்ளார்.

அதன்மூலம் பொதுத்துறை நிறுவனத்தின் தன்மையை மெல்ல மெல்ல தனியார் நிறுவனமாக மாற்றிடும் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க இயலும் என்பதாலும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழக அரசின் அதிகாரமும் ஓரளவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்பதாலும் நாம் (திராவிடர் கழகம்) இதனை வரவேற்கிறோம்.

தேவை மறுபரிசீலனை!

இதுபற்றி மத்திய அரசு உடனடியாக காலதாமதம் செய்யாமல் முடிவைக் கூற வேண்டும்.

மத்திய அரசுக்குக் கட்டுப்பட்ட சில செபி போன்ற அமைப்புகளைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்ள மத்திய அரசு முயலக் கூடாது.

தனது முடிவைத் தாமதிக்காமல் வெளியிட வேண்டியதும் - மறுபரிசீலனை செய்ய வேண்டியதும் அவசர அவசியமாகும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
1.7.2013

தமிழ் ஓவியா said...

முதல் கடமை

செய்தி: சேதம் அடைந்த கேதார்நாத் கோவில் புனரமைப்பு வேலையைச் செய்ய நாங்கள்தயார்! குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி

சிந்தனை: குஜராத் தில் ஊட்டச்சத்துக் குறைவால் செத்துக் கொண்டிருக்கும் குஜ ராத் மாநில சிசுக்களைக் காப்பாற்றும் வேலையில் குஜராத் முதல் அமைச் சர் மோடி உடனடியாக இறங்குவதுதான் மிக முக்கியம்.

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்

பாராட்டத்தக்க யோசனை

மய்ய அமைச்சரவை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் அய்ந்து விழுக்காட்டுப் பங்குகளை விற்க மேற்கொண்ட முடிவு நெய்வேலித் தொழிலாளர் களை மட்டுமல்லாது, தமிழ் நாட்டு மக்களையே கவலைக்கு உள்ளாக்கியது.

அது மட்டுமல்லாது, காங்கிரசு தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும் மய்ய அரசின் இந்த முடிவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டன.

தி.மு.க. தலைவர் கலைஞரும், திராவிட முன்னேற்றக் கழக தொழிற்சங்கங்களும் முதலில் கண்டனக்குரல் எழுப்பத் தவறவில்லை. மாநில அரசும் கண்டித்தது. ஜூலை 2-ஆம் நாள் ஆர்ப்பாட்டம் என்று அறிவிப்புவிடுத்து. நெய்வேலி அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்று சேர்ந்து படிப்படியான போராட்டங்களை அறிவித்து, முதலில் எதிர்ப்பு அட்டை அணிந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தமிழக அமைச்சரவையில் புதிதாக அமைச்ச ராகியுள்ள சுதர்சன நாச்சியப்பன் நீண்டகாலமாகவே அனைத்து இந்திய அளவில் பிற்பட்டோர் நலனின் அக்கறையுடன் செயல்படுபவர். கதர்ச்சட்டைக்குள் முற்போக்குச் சிந்தனை உடையவராகவும், சமதர்மக் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவராகவும் கருதப் படுபவர்.

இன்று சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறிய கருத்துதான் பாராட்டுக்குரியது.

நெய்வேலியின் அய்ந்து சதவீதப் பங்குகளைப் பண முதலாளிக்குக்கோ, வட நாட்டவருக்கோ, வெளி நாட்டவருக்கோ விற்க வேண்டியதில்லை. தமிழக அரசே அதை வாங்கிக் கொள்ளலாம். இதில் ஆட்சேபனை ஏதுமில்லை.

தமிழக அரசு வாங்கவில்லையா? தொழிலாளர்களே அவற்றை வாங்கிக் கொள்ளலாம். நம் சொத்து நம்மிடையே தான் இருக்கும். வெளியில் எவருக்கும் போய் விடாது. நம்மை விட்டுப் போகாது என்றார்.

இந்த யோசனை நல்ல யோசனை மட்டுமல்ல. தமிழக நலனுக்கு உகந்த யோசனை. தமிழக அரசு போராட்டம், நடத்துவதற்குப் பதிலாக, பங்குகளை வாங்கிக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடும். ஏற்கெனவே தமிழக அரசின் இரண்டு இயக்குநர்கள் நெய்வேலி நிறுவனத்தில் இருக்கிறார்கள். இந்தப் பங்குகளைத் தமிழக அரசு வாங்குவதன் வாயிலாக மூன்றாவது இயக்குநர் ஒருவரும் கிடைப்பார். நெய்வேலி நிறுவனம் மய்ய மாநில அரசின் கூட்டு நிறுவனமாகும்.
எதிர்காலத்தில் மின்சாரத்தின் தேவை அதிகமாகும் போது தமிழக அரசின் கை ஓங்கும்.

தமிழக அரசுக்கு இந்த நானூறு கோடிப் பங்கு விலை ஒன்றும் அதிகமில்லை. எவ்வளவோ ரூபாய்களை மதுவில் சம்பாதித்துத் தமிழகத்தைச் சீரழிக்கும் அரசு இந்த நல்ல காரியத்தைச் செய்யலாமே.

தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே நெய்வேலி பங்குகள் விற்கப்பட்ட முன் மாதிரியும் அங்கே இருக் கிறது. எனவே தொழிற் சங்கங்கள் ஒன்று சேர்ந்து அப்பங்குகளை வாங்கினால், தொழிலாளர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கையில் ஆதரவுக் குரல் எழும்புமே.
தமிழர் தலைவர்தான் நரிமணம் பெட்ரோலுக்கு ராயல்டி கொடுக்கும் மய்ய அரசு, நெய்வேலி நிலக் கரிக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றுத் தந்தவர்.

மூன்று நான்கு மாதங்களுக்கு முன் நெய்வேலி மின்சாரத்தின் முழுப் பயனும் தமிழகத்திற்குக் கிடைக்கத் தாமும், தம் வாழ்விணையர் மோகனா அம்மையாருடன் போராட்டம் நடத்திக் கைது ஆனவர்.

எனவே, மய்ய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனின் இந்த அறிவிப்பும் நம் தமிழர் தலைவரின் பாராட்டையும், வரவேற்பையும் பெறும் என்பதில் அய்யமில்லை.
தமிழர் தலைவர் நினைவு வராமல் நெய்வேலி எந்தப் பிரச்சியும் சிந்திக்க வியலாத அளவுக்கு அவருடைய பங்கு மகத்தானது.
- முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்

தமிழ் ஓவியா said...


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

பிறஇதழ்களிலிருந்து....

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது பதினைந்து நீதிபதிகள் இடம் காலியாக உள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்திற்கான நிரந்தர தலைமை நீதிபதியும் இன்று வரை நியமிக்கப்பட வில்லை. இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் பெரு மளவிற்குத் தேங்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

நீதிபதிகளைத் தேர்வு செய்வதற்குத் தற்போ துள்ள நடைமுறைப்படி சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியும் அவருடன் மூத்த நீதிபதிகள் சேர்ந்த குழுவும், தகுதி வாய்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த மாவட்ட நீதிபதிகளைத் தேர்வு செய்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்ப வேண்டும். அங்கு தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் குழு உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்க தகுதி வாய்ந்தவர்களைத் தேர்வு செய்து மத்திய சட்டத்துறை மற்றும் பிரதமர் வழியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நிரந்தர தலைமை நீதிபதியை விரைந்து நியமிக்க வேண்டும். அப்போது தான் நீதிபதிகளை நியமிக்கும் பணிகள் விரைந்து நடைபெறுவதற்கு ஏதுவாகும்.

நீதிபதி நியமனம் குறித்து இந்தியா முழுவதும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதற்கான காரணம் 1947இல் இருந்து 1973 வரையில் நீதிபதிகள் நியமனம் சுமுகமாக நடைபெற்று வந்தது. 1973இல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நான்காவது நீதிபதியாக இருந்த நீதிபதி ஏ.என்.ரே என்பவர் நியமிக்கப்பட்டார். முதன் முதலாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பணி மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யாமல் மத்திய அரசு திறமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது. இதனால் பெரும் சர்ச்சைகள் கிளம்பின. அதைப் போல சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி எம்.எம்.இஸ்மாமியல் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து கேரள உயர்நீதிமன்றத்திற்கு 1981இல் மாற்றப்பட்டார். இதுவும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. பிறகு உயர்நீதிமன்ற நீதிபதிகளில் மூன்றில் ஒரு பங்கு வெளிமாநிலத்தில் இருந்து நீதிபதிகளை நியமிப்பது என்றும் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவோர் எப்போதும் வெளிமாநிலத்தை சேர்ந்தவராக இருப்பார் என்றும் முடிவெடுக்கப்பட்டு நடை முறைக்கு வந்தது. இதுகுறித்து வழக்கறிஞர் சங்கங்கள், நீதிபதிகள், மாநில கட்சிகள், சட்ட வல்லுநர்கள் எனப் பலரும் பெரிதும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். நீதிபதிகள் மாறுதல், தலைமை நீதிபதியாக வேறு மாநிலத்தவரை நியமிப்பது, பணி மூப்பு முறையில் உச்சநீதிமன்ற நீதிபதியை நியமிக்காமல் திறமை அடிப்படையில் நியமிப்பது குறித்து எதிர்ப்பு எழுந்தது.

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் மருத்துவர்கள் எண்ணிக்கை போதாது

இந்தியாவில் மருத்துவர்கள் எண்ணிக்கை போதாது என்று மருத்துவத் துறையினர் கூறுகின்றனர். மருத்துவத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில் தற்போது சுமார் 10 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதமே உள்ளது.

நாட்டில் பல கிராமங்கள் மற்றும் மலைப்பிரதேசங்களில் ஆரம்ப சுகாதார வசதிகள் கூட இல்லை. இதனால், அங்குள்ள மக்கள் அவசர சிகிச்சை பெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மருத்துவம் படிக்கும் மாணவர்கள், கிராமங்களில் பணி செய்ய முன்வர வேண்டும்.

அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

தமிழ் ஓவியா said...


ஒன்பது வயது சிறுமியின் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையால் நிமிர்ந்தது
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு வளர்ச்சி அடையக்கூடிய வளைவு கம்பி பொருத்திய முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை செய்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள் ளனர்.

போரூரைச் சேர்ந்தவர் பிரபு (35). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களது மகள் அபிதா (9). அபிதாவுக்கு முதுகு தண்டுவடத்தில் பிரச்சினை இருந்துள்ளது. சிறுமியை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர்.

அபிதாவை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவளின் முதுகுத் தண்டுவடத்தில் வளைவு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதற்கு முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சிறுமியின் பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்து, கடந்த மார்ச் மாதம் அபிதாவுக்கு முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இது குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையின் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் நல்லியுவராஜ் கூறியது:

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை துறையின் கீழ் இதுவரை 15-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் கடந்த ஓராண்டில் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை குழந்தைகளுக்கு இது போன்ற அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. இதுவே முதல்முறை. அபிதாவுக்கு முதுகு தண்டுவடம் பக்கவாட்டில் வளைந் திருந்தது. இவ்வாறு இருக்கும் போது குழந்தை வளர வளர நுரையீரல் வளர்ச்சி, இதயம், நெஞ்சக வளர்ச்சி ஆகியவை பாதிக்கப்படும். இதனால், முதுகு தண்டுவடத்தை நேர் செய்யும் அறுவை சிகிச்சை செய்யப்படும்.

அபிதா 9 வயது சிறுமி என்பதால் அவருக்கு வளர்ச்சி அடையக்கூடிய வளரும் கம்பி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தை வளர வளர கம்பியின் நீளமும் உயரும் வகையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 16 வயதுக்குப் பிறகு முதுகு தண்டுவடத்தில் வளர்ச்சி பெரிய அளவில் இருக்காது என்பதால் அதன்பிறகு இந்தக் கம்பிகளை அகற்றி விடலாம்.

இதற்காக 25 செ.மீ. நீளமுள்ள வளையக்கூடிய கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதுவே குழந்தைகளுக்காக செய்யப்பட்ட முதல் தண்டுவட அறுவை சிகிச்சை ஆகும் என்றார் அவர்.

தமிழ் ஓவியா said...

வேலூர், சேலம், சோழங்கநல்லூர், சென்னையில் பெரியார் மருத்துவ அணி சார்பில்
மருத்துவ முகாம் - கருத்தரங்கங்கள்!
மனிதநேயமே மருத்துவம்! எனும் குறிக்கோள் வாசகம் ஏற்பு

சென்னை, ஜூலை 1- பெரியார் மருத்துவ அணியின் சார்பில் வேலூர், சேலம், சோழங்கநல்லூர், சென்னையில் மருத்துவ முகாமும், மருத்துவ விழிப்புணர்வுக் கருத்தரங்கமும் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

30.6.2013 ஞாயிறு பிற்பகல் ஒரு மணிக்கு சென்னை பெரியார் திடலில் பெரியார் மருத்துவ அணியின் கூட்டம், அதன் புரவலர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு டாக்டர்கள் சி.மீனாம்பாள், சரோஜா பழனியப்பன், கவுதமன், பிறைநுதல்செல்வி, ஜெகன்பாபு, புகழேந்தி, எழிலன், இனியன், வே.கமலசேகரன், அ.சாந்தா, மா.வேல்துரை, திராவிடன் அம்பேத்கர், சக்திராசன், வி.எஸ்.குமார், ஆர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

1. பெரியார் மருத்துவ அணியின் செயல்பாடுகள் ஏழை - எளிய மக்கள் குறிப்பாகக் கிராமப்புற மக்களுக்குக் கிடைப்பது குறித்து விரிவாகப் பேசப்பட்டது.

2. வரும் ஆகஸ்ட் 11 அன்று வேலூரிலும், செப்டம்பர் முதல் தேதியன்று திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூரிலும், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று சென்னையிலும், செப்டம்பர் 22 அன்று சேலத்திலும் மருத்துவ முகாமும், விழிப்புணர்வுக் கருத்தரங்கமும் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

மருத்துவர்கள் பெரியார் மருத்துவ அணி உண்டியல் ஒன்றை தங்கள் அறையில் வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இவற்றின் ஒருங்கிணைப்பாளராக குன்னூர் மருத்துவர் ஆர்.கவுதமன் இருப்பதெனவும், அமைப்பின் துணைத் தலைவராக மருத்துவர் சக்திராசன், அமைப்பாளராக மருத்துவர் க.பி.இனியன் செயல்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

நமது தோழர்களுக்கு ஆங்காங்கே மருத்துவ உதவி மற்றும் வழிகாட்டுதல்களைத் தருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மனிதநேயமே மருத்துவம் என்ற குறிக்கோள் வாசகத்தை நமது அணிக்கு ஏற்படுத்திக் கொள்வது என்று அமைப்பின் புரவலர் கி.வீரமணி அவர்கள் கூறியது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழ் ஓவியா said...


என்னே உணர்வு!


இதயம் வெளியில் தெரிவதில்லை, இதயத் துடிப்பும் வெளியில் கேட்பதில்லை. மனசாட்சி வெளியில் தெரிவதில்லை. மனசாட்சியின் குரலும் வெளியில் கேட்பதில்லை. விடுதலையும் தமிழர் தலைவரும் தமிழகத்தின் உயிரும் உடலும், வாழ்க தமிழர் தலைவர்! வளர்க விடுதலையின் யுகப் புரட்சி! ஆகஸ்ட் ஒன்றை எதிர்நோக்கியுள்ளேன்.

- த. ஆதிசிவம், பெரம்பலூர்

விடுதலைக்கு ஆறு மாத சந்தாவுக்கான காசோ லையை அனுப்பி வைத்த பெரம்பலூர் வெங்கடேச புரம் தோழர் மானமிகு ஆதிசிவம் பி.ஏ., அவர்கள் மேற்கண்ட கடிதத்தையும் எழுதி அதில் இணைத் திருந்தார்.

இதனைப் படிக்கும் தோழர்கள் ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டும்; யாரும் அவரைப் போய் சந்தா கேட்டு வற்புறுத்த வில்லை. தாமாகவே சந்தா பணம் அனுப்பி வைத்த தோடு அல்லாமல் தன் உணர்வுகளையும் எவ்வ ளவு அழகாக வெளிப்படுத் திக் கொண்டிருக்கிறார்.

இந்த இயக்கத்திற்கு எது பலம் என்றால், இதுபோன்ற அப்பழுக்கற்ற சிப்பாய்களான தொண்டர் களின் பலம்தான்.

இயக்கம் எனக்கு என்ன செய்தது? என்று கேட்க மாட்டார்கள் - இயக் கத்திற்கு நான் இன்னது செய்வேன்! என்று கூறும் இத்தகு இலட்சிய உறு திக்கு முன் துப்பாக்கி களின் ரவைகள்தான் என்ன செய்யும்?

1980ஆம் ஆண்டில் பாளையங்கோட்டையிலிருந்து ஒரு கடிதம் விடுதலை ஆசிரியர்கள் அவர்களுக்கு வந்தது. பாளையங்கோட்டை என்பது அவரின் ஊரோ வீடோ அல்ல! பாளையங் கோட்டை சிறையில் ஆயுள் கைதியாக இருக்கக் கூடிய தோழரின் கடிதம் அது.

எனது பெரு மதிப் பிற்கும் மரியாதைக்கும் உரிய மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு மானமிகு தம்பி அ. பக்கிரி முகம்மது எழுதும் விவரம்:

வணக்கம். அய்யா, நான் ஆயுள் தண்டனை யில் இருக்கிறேன். 12 வருஷம் ஆகிறது. அப்படி இருந்தும் பகுத்தறிவுப் பணிக்கு வேன் நிதிக்காக என்னால் முடிந்த அளவு ரூபாய் 15 அனுப்பி இருக் கிறேன். தாங்கள் பெற்றுக் கொண்டதற்கு உடன் கடிதம் எழுதுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

விடுதலை இதழ் வந்து கொண்டு இருக்கிறது மிகவும் நன்றி.
- அ. பக்கிரிமுகம்மது
சி.என்.ஓ. 264
மத்திய சிறை, பாளை

33 ஆண்டுகளுக்கு முன் பாளை சிறையில் இருந்த ஆயுள் தண்ட னைக் கைதியின் உணர்வு தான் சாதாரணமானதா?

தந்தை பெரியார் உருவாக்கிய கொள்கையும், அந்தக் கொள்கையில் தோழர்கள் கொண்ட உணர் வும் தொடர்கிறது என்று நினைக்கும் பொழுது நம்மை அறியாமலேயே நம் தலைகள் நிமிர்கின்றன. மார்பு புடைக்கிறது - நம்மை வெற்றி கொள்ள யார் இருக்கிறார்கள்? எது இருக்கிறது? என்ற எண் ணமே மேலோங்கி நிற்கிறது. தொண்டர்களின் பலமே இந்த இயக்கத்தின் உண்மைப் பலம் என்பதி லும் அய்யம் உண்டோ!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்ற கொள்கை முடிவுக்குக் கண்டனம் தமிழர் தலைவர் அறிக்கை

நேற்று டீசல் மேலும் விலை உயர்த்தப்பட்டு (ஒரு லிட்டருக்கு 61 காசுகள்) ஒரு லிட்டர் ரூ.54.15 விலை என்று சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இது 6ஆவது முறை உயர்த்தல் ஆகும்!

இதுபோல பெட்ரோல், இயற்கை எரிவாயு விலைகளும் திடீர் திடீரென்று இரண்டொரு நாள் இடைவெளியில் அறிவிக்கப்படுகிறது.

இது மக்கள் விரோதச் செயலாகும்! உலக நிலவரத்திற்கேற்ப, அந்தந்த நிறுவனங்களே அவ்வப்போது விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை இந்திய அரசு அளித்துள்ள கொள்கை முடிவு மிகவும் தவறானது.

அத்தனைக் கட்சிகளும், தலைவர்களும் எதிர்ப்பு!

இதை திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பல மாதங்களுக்கு முன்பே சுட்டிக் காட்டியுள்ளார். அதுபோலவே தமிழ்நாடு முதல் அமைச்சரும் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்தனைக் கட்சிகளும் இந்தக் கொள்கை முடிவைக் கண்டிக்கத் தவறவில்லை. இவற்றையும் மீறி ஏழை - எளிய சாமான்ய மக்கள் வயிற்றில் அடிக்கும் ஒரு செயலை மத்திய அரசு செய்யலாமா?

இயற்கை எரிவாயு, டீசல் போன்றவை இன்று விவசாயிகளும் பயன்படுத்தும் அளவுக்கு இன்றியமையாததாகி விட்டது!

பல மணி நேரம் மின்வெட்டு என்ற நிலையில், பம்புசெட் விவசாயத்திற்கு டீசல்தான் பயன்படுத்தப் படுகின்றது; அதன் விலையை இப்படி ஆறு தடவை ஒரே ஆண்டில் ஏற்றி வேடிக்கை பார்ப்பது என்பது நியாயம்தானா?

வேதனை, வேதனை - வெட்கமும்கூட! இதனை மத்திய அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சகம் தலையிட்டு திரும்பப் பெற வேண்டும்.

இப்பொருள்களின் விலை நிர்ணயக் கொள்கை களையே மறு ஆய்வுக்கு உட்படுத்துதல் அவசரம் அவசியம் ஆகும்!

எப்போது விடியல்?

காய்கறி விலைகள் உட்பட, சமையல், எண்ணெய் விலை உட்பட உயர்ந்துள்ள நிலையில் அடித்தள மக்களுக்கு எப்போது விடியல்?

என்னதான் விடை - பெருகும் தற்கொலைகள் தானா?

மத்திய, மாநில அரசுகள் சிந்திக்கட்டும்!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
2.7.2013

தமிழ் ஓவியா said...


கல்யாணம்

மனிதன் மிருகப் பிராயத்தி லிருந்தபோது காட்டுமிராண்டி யாக இருந்த காலத்தில் மனிதன் தன் மூர்க்கத்தனத்தைக் காட்டப் பெண்ணை அடக்கியாள பெண்ணைத் தனக்கு அடிமையாக்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தக் கல்யாணம்.

(விடுதலை, 10.8.1968)

தமிழ் ஓவியா said...


நரேந்திர மோடி யார்? ப.சிதம்பரம் படப்பிடிப்பு


குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரிவினையை ஏற்படுத்துபவர் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பது: பாஜக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவே இல்லை. அவர்களது நோக்கம் மதச்சார் பின்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. எனவே அடுத்த மக்களவைத் தேர்தலிலும் மக்கள் அக்கட்சியை நிராகரிப்பார்கள். பொதுசிவில் சட்டம், அயோத்தி விவகாரம், காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கும் அரசியல்சாசன சட்டப் பிரிவு 370-அய் நீக்குவது என்பது போன்ற பிரிவினைவாத பிரச்சினைகளை பாஜக தொடர்ந்து எழுப்பி வருகிறது என்று சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

பாஜக நிராகரிக்கப்படும்: மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதா? என்ற கேள்விக்கு, "இது பொருத்தமில்லாத கேள்வி. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என்றால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும். மக்கள் சரியான முடிவை அளிப்பார்கள்.

காங்கிரஸ் எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் போராடப் போவது இல்லை. 2004, 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக நிராகரிக்கப்பட்டது போல், அடுத்த ஆண்டு தேர்தலிலும் நிராகரிக்கப்படும்' என்று சிதம்பரம் பதிலளித்தார்.

மோடி பிரிவினையை ஏற்படுத்துபவர்

மோடி, பாஜக தேர்தல் பிரசாரக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், "மோடி பிரிவினையை ஏற்படுத்துபவர். பாஜகவின் உயர் நிலை தலைவர் களில் பலர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவரால் பாஜகவிலேயே பிரிவினை ஏற்பட்டுள்ளது' என்றார். மோடியை எதிர்த்து எல்.கே. அத்வானி பதவி விலகியதை சிதம்பரம் இவ்வாறு குறிப் பிட்டார்.

யார் இரும்பு மனிதர்? மோடி இரும்பு மனிதர், பலம் வாய்ந்த தலைவர் என்று வர்ணிக்கப்படுவது குறித்த கேள்விக்கு, "இரும்புத் தலைவர் என்று வர்ணிக்கப்படுபவர் (அத்வானி) தலைமையில்தான் 2009 ஆம் ஆண்டு தேர்தலை பாஜக சந்தித்தது. ஆனால் தேர்தலில் முன்பைவிட குறைவான இடங் களையே அவர்கள் பெற முடிந்தது. வலுவானவர், பலவீனமானவர் என்று ஊடகங்களே ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன' என்று பதில ளித்தார்.

குஜராத் வளர்ச்சி ஒரு மாயை:

குஜராத் மாநிலத்தை மோடி வளர்ச்சி பெறச் செய்துள்ளார் என்பது உண்மைக்குப் புறம்பாக மிகைப்படுத்தப் பட்ட தவறான தகவல். குஜராத்தில் அவர்கள் காட்டும் வளர்ச்சி, ஒருங்கிணைந்த வளர்ச்சியல்ல. பெரும்பான்மையான குஜராத் மக்களை பின்னுக்குத் தள்ளி ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சி. அது ஒரு மாயை. குஜராத் போன்ற மாநிலத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு வேண்டுமானால் பொருந்துவதாக இருக்கலாம். ஆனால் நாடு முழுவதற்கும் இந்த வளர்ச்சித் திட்டம் பொருந்தாது.

மோடியின் கட்டுக்கதை:

உத்தரகாண்ட் வெள்ளத்தில் குஜராத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் பேரை மோடி மீட்டதாகக் கூறுகிறார்கள். அது கட்டுக்கதை. அவரது மேலாளர்களும், பணியாளர் களும் ஒன்றரை லட்சம் பேரைக் காப்பாற்றியதாகக் கூட கூறுவார்கள். அவர்கள் கொண்டு வந்ததாகக் கூறும் 80 கார்கள், 4 விமானங்களில் அதிகபட்சமாக 2,300 பேரை வேண்டுமானால் அழைத்துச் செல்ல முடியும் என்று சிதம்பரம் கூறினார்.

பிரதமர் வேட்பாளராக...

பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கை தொடர்ந்து அதே துறையில் சிறந்த நீங்களும் பிரதமராக முடியு மல்லவா என்ற கேள்விக்கு, எனது குறைபாடுகள் என்ன என்பது எனக்குத் தெரியும். அதற்கு உள்பட்டுதான் நான் பணியாற்ற முடியும். எனது குறைபாடுகளால் பிரச்சினை ஏற்படும் நிலையில், எழுத்து, வாசிப்பு, பயணம் என மாறிவிடுவேன் என்றார் சிதம்பரம்.

உலக வங்கியில் கடன்: உத்தரகாண்ட் மறு நிருமாணப் பணிகளுக்கு உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து கடனுதவி கேட்கப் பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் உத்தர காண்ட் மாநிலத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கி யுள்ளார். இதில் ரூ.145 கோடி உடனடியாக அளிக்கப் பட்டுள்ளது.

மறுநிர்மாணப் பணிகள் தொடர்பாக மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சகம் ஆகியவை அம்மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் சிதம்பரம் தெரிவித்தார். சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை ஏமாற்று வேலை என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி விமர்சித்திருப்பது முதிர்ச்சியற்ற பேச்சு என்று சிதம்பரம் கூறினார்.

தமிழ் ஓவியா said...


மதச்சார்பின்மையின் இலட்சணம் இதுதானா?


இந்திய ரிசர்வ் வங்கி வைஷ்ணவதேவி உருவம் பொறித்த ரூபாய் நாணயத்தை வெளி யிட்டுள்ளது.

படத்திற்குமேல் சிறீமாதா வைஷ்ணவதேவி கோவில் வாரியம் என்று தேவனாகிரி மொழியில் எழுதுக்கள் இடம்பெற்றுள்ளன. படத்தின் கீழ்ப் பகுதியில் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. படத்துக்கும் கீழே 2012 என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

யார் இந்த வைஷ்ணவதேவி? எதற்காக ரூபாய் நாணயத்தில் பொறிக்கப்பட்டு இருக் கிறது?

யார் இந்த வைஷ்ணவதேவி? அபிதான சிந்தாமணி என்ன கூறுகிறது!

1. வைஷ்ணவதேவி ஒரு மாயா தேவி. இவள் கருட வாகனத்தில் எழுந்தருளியவளாய் சங்கு, சக்கரம், கதை, வரதம் உடையவளாய் இருப்பாள்.

2. மத்தியான காலத்தில் தியானிக்கப்படும் சந்தியா தேவதை, யௌவனமுள்ளவளாய், வெண்ணிறத்தவளாய், வெண்பட்டுடுத்து வநமாலை, பூணூல், சங்கு சக்கரம் இடக் கரங்களிலும், கதை, அபயம் வலக்கரங்களிலும் உள்ளவளாய் கருட வாகனத்தில் பதுமாசனத்தில் இருப்பவளாய் மகாலக்ஷ்மி உருவமாய் தியானிக் கப்படுபவள் வைஷ்ணவதேவி என்று கூறுகிறது அபிதான சிந்தாமணி.

ஆக, இந்து மதத்தின் ஒரு பிரிவுக்குரிய வர்களால் வணங்கப்படும் கடவுளச்சிதான் இந்த வைஷ்ணவதேவி.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசமைப்புச் சட்டம் தெளிவாகவே கூறுகிறது.

இந்நிலையில், குறிப்பிட்ட ஒரு மதத்தின் உட் பிரிவைச் சார்ந்த ஒரு கற்பனைப் பொம்மையை ரூபாய் நாணயத்தில் பொறிப்பது நாணயமா?

அரசமைப்புச் சட்டம் எதைத்தான் சொல்லட்டுமே! அதைப் பற்றிக் கவலையில்லை என்று கருதும் பார்ப்பன ஆதிக்கம் இந்தியாவில் இருக்கும் மட்டும் அவர்கள் வைத்ததுதானே சட்டம்.

இவர்கள் வைத்த சட்டத்தின்முன் அண்ணல் அம்பேத்கர் எழுதிய சட்டம் எந்த மூலை?

1925 இல் சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசியதை இப் பொழுது மறுமுறை நினைவு கூர்ந்து பாருங்கள்.

While Speaking at a public meeting at Salem E.V.Ramasamy Naiker said the Brahmin question even while the British Supremacy lasted, otherwise they would have to suffer under the tyranny of what he called Brahminocracy (A Hundred of the Hindu
page 337)

சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருக்கும் போதே, பார்ப்பனர்கள் பிரச்சினைக்கு ஒரு முடிவை ஏற்படுத்திவிடவேண்டும்; இல்லாவிடில் இந்தியாவில் உள்ள மக்கள் பார்ப்பன ஆதிக்கத்தின் கொடுங் கோன்மையின் கீழ் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும் என்று கூறினார் என்று இந்து ஏடு வெளி யிட்ட நூறாவது ஆண்டு மலரில் இடம்பெற்றுள்ளது.

பார்ப்பன வல்லாண்மைக்கு பிராமிணோகிரசி என்ற சொல்லை புதிதாகக் கையாண்டுள்ளார் என்றும் இந்து ஏடு குறிப்பிட்டுள்ளது.

தந்தை பெரியார் கணித்துச் சொன்னது எத்தகைய உண்மை என்பதற்கு பார்ப்பனீயக் கலாச்சாரத்தின் வடிவமான வைஷ்ணவியின் உருவம் பொறித்த ரூபாய் நாணயம் வெளியிட்டு இருப்பது ஒன்று போதாதா?

தமிழ் ஓவியா said...


சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் கர்ணன் அவர்களின் புரட்சிகரத் தீர்ப்பைத் தொடர்ந்து உச்சநீதிமன்றமும் வேறொரு வழக்கிலும் உறுதி!


புதுடில்லி, ஜூலை 3- திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து பெண்ணின் சம்மதத்துடன் அவருடன் உறவு கொண்டவரை நிரபராதி என விடுவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது பாலியல் வன்முறை குற்றத்தை சாட்டி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப் பையும் உச்சநீதிமன்றம் உறுதி செய் துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், ஜெகதீஸ்சிங் கேஹர் அடங் கிய அமர்வு இவ்வாறு தீர்ப்புக் கூறியுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக வாக் குறுதி அளித்து, பெண்ணுடன் கார்த்திக் பாலியல்ரீதியாக உறவு வைத்துள்ளார். இதுபோன்று பல முறை நிகழ்ந்துள்ளது. பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் கூறியபோது, மறுத்துள்ளார். இந்த சம்பவம் 2003 ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ளது. அப்பெண் தரப்பில் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கார்த் திக் மீது கைது நடவடிக்கை எடுக்கப் பட்டது.

நீதிமன்றத்தில் கார்த்திக் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு உறுதி செய்யப் பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை கார்த்திக் நாடினார். அங்கும் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திருமணம் செய்துகொள்வதாக பொய் யாக வாக்குறுதி அளித்து பெண்ணிடம் பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் பாலியல் வன்முறை குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடு விக்க வேண்டுமென்ற அவரது கோரிக் கையை ஏற்க முடி யாது என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.

நீதியரசர் கர்ணன் அவர்களின் புரட்சிகரமான தீர்ப்புபற்றிய விவரம்

இரண்டு குழந்தைகள் பெற்ற ஆண் திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட முடியாது என்று குடும்ப நல நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கில் நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவு (17.6.2013) வருமாறு: சட்டபூர்வ வயதை அடைந்த ஆண், பெண் இரண்டு பேர் (ஏற்கனவே திருமணம் ஆகாதவர்கள்) பாலியல் உறவுகளை வைத்துக் கொண்டால் அவர்களின் செயல் பாட்டை திருமணம் என்றும் அவர்கள் இருவரையும் கணவன் - மனைவி என்றும் கருதலாம் சட்டப் பூர்வமான வயதைக் கடந்த பிறகு கிடைக்கும் சுதந்திரத்தின் அடிப்படையில் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்கின்றனர்.

தாலி கட்டுவது மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம் மதச் சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை திருப்திப்படுத்தவதற்காகத்தான் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும் கணவன் மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.

எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்ட பூர்வமான ஆதாரம் என்ன வென்றால் அது அந்த இணையர்க்கு இடையே உள்ள பாலியல் உறவுதான் என தீர்ப்பில் கூறியுள்ளார்.

பெண்ணிடம் பாலியல் உறவு கொண்டு ஏமாற்றும் ஆண்களுக்கு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சரியான பாடங்கள் ஆகும்.

தமிழ் ஓவியா said...


ஏமாறாதே!


வறுமையையும், அறி யாமையையும் மய்யப் படுத்தி மூட நம்பிக்கை மாடுகள் மேய ஆரம் பித்துவிடும்.
அப்படித்தான் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் புதிய மூட நம்பிக்கை நான்கு கால் பாய்ச்சலாகச் சுற்றித் திரிகிறது.

மழை இல்லை - வயல் வெளிகள் எல்லாம் வறண்டு கிடக்கின்றன. கிணறுகள் எல்லாம் காய்ந்து கிடக்கின்றன.

நெல் பயிரிட முடியாத நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் தென்னை யைப் பயிரிடத் தொடங்கி விட்டனர்.

மூன்று மாதங்களாக தண்ணீர் இல்லாமல் அவையும் தவித்து நிற் கின்றன - வளர்ந்தால் அல்லவா அது தலை யாலே தரும் இளநீரை!

நிலத்தடி நீரும் கிடைக் காத அவலம் பிடுங்கித் தின்கிறது. நூறு அடிக் குக்கீழ் போனால்தான் தண்ணீர் தட்டுத்தடு மாறிக் கிடைக்கும் நிலை!

குழாய்ப் போட குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் தேவைப் படுகிறது.

இந்தச் சந்தர்ப்பத் தைப் பயன்படுத்தி மூட நம்பிக்கை வியாபாரிகள் புறப்பட்டுள்ளனர்.

எந்த இடத்தில் எளி தில் தண்ணீர் கிடைக் கும் என்று கண்டு பிடித் துச் சொல்கிறர்களாம்.

குச்சி சுத்தி, தேங் காய்ச் சுத்தி, கடிகாரச் சுத்தி என்று தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துள்ளனராம்.

நீரோட்டம் கண்டு பிடித்துச் சொல்லுகிறார் களாம். அதற்காக ஆயிரம், இரண்டாயிரம் என்று ரூபாய்களை கறக்கிறார் களாம்.

தனக்குத் தேவை என்கிற வெறி கிளம்பு கிறபோது அறிவைப் பயன்படுத்துகிறவர்கள் எத்தனைப் பேர்?

காக்கை உட்கார்ந் தது பனம் பழம் விழுந் தது என்பதுபோல நூறு இடத்தில் சொன்னால், ஓரிரு இடத்தில் பலித்து விடாதா? சோதிடம்போல குருட்டுத்தனம்தான்.

98 இடத்தில் தோல்வி என்பதுபற்றி யாரும் பேச மாட்டார்கள்; இரண்டு இடத்தில் சொன்னது நடந்தது என்பதைத்தான் விளம்பரப்படுத்துவார்கள்.

ஏமாறுகிறவன் இருக் கின்றவரைக்கும் ஏமாற் றுகிறவனும் இருக்கத் தான் செய்வான். நமது தோழர்கள் இதுபற்றி விழிப்புணர்வுப் பிரச் சாரத்தை நடத்தலாமே!

- மயிலாடன்

குறிப்பு: தகவல் நாமக்கல் மண்டல திராவிடர் கழகத் தலைவர் வை.நடராஜன்.

தமிழ் ஓவியா said...


பயத்தால்...


அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததைப் பயத்தால் நம்பு கிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.
(விடுதலை, 20.3.1956)

தமிழ் ஓவியா said...


எச்சரிக்கை!


நீங்கள் குளிர்பானம் அருந்துபவர்களா? நீரிழிவு நோயை நீங்கள் விரைவில் எதிர்நோக்கலாம்.

நாள் ஒன்றுக்கு 40 முதல் 70 மில்லிவரை குளிர் பானம் அருந்தும் சிறுவனுக்கு ஆண்டு ஒன்றுக்கு 3 முதல் 5 கிலோ வரை எடை எகிறும். தண்ணீர் குடிப்பதையும் புறந்தள்ளிவிட்டு, குளிர்பானம் அருந் தினால், 40 வயதில் வரும் சில நோய்கள் பத்து வயதிலேயே வரக்கூடும் என்கிறார் மும்பை இருதய ஆய்வு மய்ய மருத்துவர் ராமகாந்த பாண்டா!