Search This Blog

13.7.13

ஓம் என்றால் என்ன பொருள் என்று தெரியுமா?


பிஜேபி இப்படி ஒரு கோஷத்தை முன் வைத்திருக்கிறது. மத்தியப் பிர தேசத்தின் ஆர்.எஸ்.எஸ். காரரும் ஒருங்கிணைப்புச் செயலாளருமான அரவிந்த் மேனன் என்பவர்தான் இப்படி ஒரு கோஷத்தைக் கொடுத் துள்ளார்.

ஓம் என்றால் பா.ஜ.க., தொண்டர்களாம். நமோ என்றால் மோடியாம்! சிவா என்றால் மத்தியப் பிரதேச முதல் அமைச்சரான சிவராஜ் சவுகானாம்.
எப்படி இருக்கிறது? இவர்களின் சிந்தனை எல்லாம் சீழ்பிடித்த இந்து மதக் குட்டையின் கரையைத்தாண்டி வெளியே வருவதேயில்லை.

முதலில் ஓம் என்றால் என்ன பொருள் என்று தெரியுமா?

தாந்திரிகம் என்ற வழிபாட்டு முறையில் ஆண் - பெண் பாலியல் ஆற்றல் ஏன் அவ்வளவு முக்கியத்துவமாய் இருக்கிறது?

தாந்திரீகர்கள் கிட்டத் தட்ட உலக நாடுகள் அனைத் திலும் பாலியல் புணர்ச்சி வணக்கத்திற்குரியதாகி வந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். 

பிரம்மாவும், மாயாவும்போல, சிவனும் பார்வதியும் போலத் தெய்வங்களுங்கூடத் தங்களுக்கு இணை துணைகளைப் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் உள்ளதை விட, வேறெந்த நாட்டிலும் ஆண் - பெண் கலப்பினை சின்னமாகக் கொண்ட இயற்கை சக்தி வழிபாடு அதிக அளவில் நடைமுறைப் படுத்தப் பெறவில்லை.

இலிங்கமும் (ஆண்குறி) யோனியும் (பெண்குறி) இன்னும் இவ்விரண்டின் இணைப்பு அடையாளங் களும் சிவசக்திக் கலாச்சாரமாக இலட்சக்கணக்கான இந்திய மக்களால் வணங்கப் பெறுகின்றன.

எனவே, இந்த வழிபாடு உண்மையில் சக்தி தேவதையின் வாயிலாக வெளிப் படும் இயற்கையின் பெண் சக்தியை அல்லது பார்வதி யென்றும், தேவியென்றும், துர்க்கையென்றும், பவானி யென்றும், மீனாட்சி என்றும், மகாகாளியென்றும் அறியப் படுகின்ற சிவக் கடவுளின் இணைகளின் ஆற்றல் விசையை வணங்குதல் என்பதேயாகும்.

ஓம் என்னும் அடையாள மும் ஓம்காரமும் இவ்வுலகத்தில் இன்றுவரை வாழ முடிந்துள்ள வேறெந்த சின்னத்தைக் காட்டிலும் காலத்தால் முந்தியது என்பதைத் தாந்திரீகர்கள் வலியுறுத்து கின்றனர். மேலும், இந்தியா, தென் கிழக்கு ஆசியா, நேபாளம், மங்கோலியா, சைனா, ஜப்பான் ஆகிய நாடுகளையும்விட - தென் அமெரிக்கர்களின் பழைய நாகரிகங்களையும் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் ஓம் என்பதையோ ஓம்காரம் என்பதையோ, ஆண்  - பெண் கூட்டினை வற்புறுத்தும்  உட்பொருள் கொண்ட சின்னமாக நம்புகின்றனர்! 

முட்டாள்கள் உலகெங்கும் உண்டே! ஆபாசமான அருவருப்பான சமாச்சாரங்களைத் தவிர இந்து மதத்தில் என்ன இருக்கிறது? இந்துத்துவா வாதிகளும் அந்தக் கேவலமான வட்டத்தை மீறி எப்படித்தான் சிந்திப்பார்கள்?
இங்கிலாந்தில் விவேகானந்தர் மாக்ஸ் முல்லருடன் விவாதம் செய்த போது இந்துக்கள் மதத்தை ஆராய்ச்சி செய்தால் சுவாசமிடும் நுரையீரல் எரிந்து விடும் என்றாராம்.

வைதீகம் என்றாலே வேதம் சம்பந்தப்பட்டதாகும். அதனைப் புதுப்பிக்கத்தான் ஓம் கோஷம் போட்டுப் புறப்பட்டுள்ளனர் - எச்சரிக்கை!

--------------------------- மயிலாடன் அவர்கள் 12-7-2013 “விடுதலை” யிலெழுதிய கட்டுரை

52 comments:

தமிழ் ஓவியா said...


சிவன் கோயில்களில் பூசை செய்ய பார்ப்பனருக்கு அதிகாரமில்லை!

சிவாலயங்களில் பூசை செய்ய, தன்னைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்ளும் சுமார்த்தப் பிராமணர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், அப்படி அவர்கள் பூசை செய்வார்களேயானால், நாட்டுக்குப் பெருங்கேடு என்று ஆகமங்கள் கூறுவதாக நீதிபதி மகராசன் தலைமையில் அமைந்த குழு கருத்து தெரிவித்துள்ளது. அதன் விவரம் இதோ:

1. சில சொற்பொருள்கள்

பிராமணர் என்ற பெயர் சாதி அடிப் படையில் அல்லாமல், பிரம்மத்தை உணர்ந் தவன் என்ற அடிப்படையில்தான் வழங்கப் பட்டது.

பட்டர் என்ற சொல், சாத்திரத்தை நன்கு உணர்ந்தவர் ஞானி தபோதனர், பூசகர் என்ற பொருளைக் கொண்டது என்று சுப்தகல் பத்ருமம் என்னும் வடமொழி நிகண்டில் (பக்கம் 478, பாகம் 3) விளக்கப் பெற்றிருக்கிறது.

அவ்வாறு அல்லாமல், தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொண்டு ஜீவிப் போரை பிராம்மணப்ருவன் (சொல் மாத்திரத்தில் பிராமணன்) என்று அதே சப்தகல் பத்ருமத்தில் (பக்கம் 460. பகுதி 3) சொல்லப்பட்டுள்ளது. வாழ்க அந்தணர் (திருஞான சம்பந்தர் தேவாரம்) அந்தணர் என்போர் அறவோர் (திருக்குறள்) என்ற தொடர்களில் அந்தணர் என்ற சொல் சாதியின்பாற்பட்டதல்ல என்பது ஆன்றோர் கருத்து. பேர் கொண்ட பார்ப்பான் (திருமூலர்) பரார்த்த பூசையில் சிவனைத் தீண்டினாலும் பூசித்தாலும் தேவலகத்துவதோஷம் (ஊதியத்துக் காகப் பூசை செய்தல் என்ற குற்றம்) பிறக்கும். பாங்கில்லை தீண்ருப் பரார்த்தம், அவர் தீண்டில் தங்கு உலகுக்காம் என்று தேறு என்ற மறைஞான சம்பந்தர் சைவ சமய நெறி என்ற நூலில் (பாடல் 437) கூறியுள்ள கருத்து அறிதற்பாலது.

2. சிவாச்சாரியாரும் சுமார்த்தப் பிராமணரும்

சிவாச்சாரியார் அல்லது சிவத்து விஜர் அல்லது ஆதிசைவர் என்போர் சுமார்த்தப் பிராமணர் அல்லர். அவர்கள் சிவப்பிராமணர் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆதி சைவராகிய சிவப் பிராமணர்கள் அனாதி சைவர் என்று சொல்லப்பட்ட சிவபெருமா னுடைய அய்ந்து முகங்களிலிருந்து தோன்றி, சிவப்பிரானையே வழிபடு கிறவர் என்றும், சுமார்த்தப் பிராமணர் பிரம்மாவினுடைய நான்கு முகங்களி லிருந்து தோன்றி, பிரமத்தையே வழிபடுகிறவர்கள் என்றும் சிவ சிருஷ்டியின் பாற்பட்ட சிவப்பிராமணர் அல்லாமல், பிரம சிருஷ்டியில் தோன் றிய சுமார்த்தப் பிராமணர் சிவாலயங் களில் பூசை செய்யத் தகுதியற்றவர்கள் என்றும் ஆகமங்களில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவே சிவால யங்களில் பரார்த்த பூசை ஆதி சைவர்களாகிய சிவாச்சாரியர் தவிர, இதர பிராமணர் செய்யக் கூடாது என ஆகமங்களில் கீழ்க்காணுமாறு விதிக் கப்பட்டுள்ளது.

சித்தாந்த சாத்திரம் உணர்ந்த ஆதி சைவர்கள், அரசர் ஊர் எஜமானர் இவர்களுடைய சேமத்தின் பொருட்டு, சிவலிங்கப் பிரதிட்டை செய்து பூசிக்க வேண்டியது. ஆதி சைவர் ஆன்மார்த்த, பரார்த்தங்களுக்கு அதிகாரமுடையவர். இல்லறத்திலுள்ள ஆதி சைவ பிராம்ம ணோத்தமர் சர்வ காரியங்களிலும் அதிகாரிகளாகச் செய்யலாம். ஆன் மார்த்த பரார்த்தங்களிலும் சிவயாகத் திலும் சிவத்துவிஜர்களாகிய ஆதி சைவர்களே அதிகாரமுடையவர். ஏனை யோர் ஆன்மார்த்தமே செய்யத்தக்கவர். அரசனுடைய உலோபத் தன்மையால் ஏனையோர் பரார்த்தமும் செய்வாரா யின், அரசனுக்கும் அவனால் காக்கப்படும் நாட்டிற்கும் உடனே கேடு சூழும் என்பதில் சந்தேகமில்லை (காமிகாகமம் தென்னிந்திய அர்ச்சகர் சங்க வெளியீடு, பக்கம் 31-32)
- மகராசன் குழு அறிக்கை பக்கம் 7,8

தமிழ் ஓவியா said...


விதவையரை மணக்க முன்வரும் புரட்சியாளர்கள்
சிர்சா, ஜூலை 12- உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச் சரிவுகளில் கணவனை இழந்த விதவை பெண் களை திருமணம் செய்து கொள்ள தேராசஷா சவுதா அமைப்பைச் சேர்ந்த 1500 பேர் தயாராக உள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் தெரிவித்துள் ளார். தேராசஷாசவுதா அமைப்பின் சார்பில் 33 லாரிகளில் கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்களை வழங்கிய பின் இவ்வாறு தெரிவித் துள்ளார். மேலும் டியோலி-பிரம்கிராம் கிராமங்களில் பெரும் பாலான ஆண்கள் வெள் ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அது விதவைப் பெண்களின் கிராமமாக உள்ளது எனவும், கேதார்நாத் கோயில் பணிகளுக்காக சென்ற அவர்கள் அடித் துச் செல்லப்பட்டுள்ள னர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வாழ்க்கையை இழந்த பெண்களுக்கு மறு வாழ்வு அளிக்க 1500 பேர் தயாராக உள்ளதாக வும், மறு திருமணம் செய்து கொள்ள விரும் பாதவர்கள் தங்கள் வாழ்க்கையை சீரமைக்க தேவையான அனைத்து உதவிகளும் செய்யப் படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


ஜாதிகளின் பெயரால் அரசியல் கட்சிகளின் பேரணி, பொதுக் கூட்டங்களுக்குத் தடை!


உத்தரப்பிரதேச உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லக்னோ, ஜூலை.12- உத்தரபிரதேச மாநிலத் தில், ஜாதி பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

நாட்டிலேயே பெரிய மாநிலமாக திகழ்கிற உத்தரபிரதேசத்தில் ஜாதி அரசியல் முக்கிய இடம் வகிக்கிறது. அரசி யல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு ஜாதி அடிப்படையி லான பேரணிகளை நடத்தி வருகின்றன.

சமீபத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, தேர்தலில் பார்ப்பனர் களின் ஓட்டுக்களை பெறுவதற்காக பார்ப் பன சமூகத்தினரின் பேரணியை 40 மாவட் டங்களில் நடத்தியது. அதில் ஒரு பேரணியில் மாயாவதி கலந்து கொண்டு பேசினார். இதேபோன்று முலாயம் சிங் தலைமையிலான ஆளும் சமாஜ்வாடி கட்சியும் சமீபத்தில் இப்படி ஒரு பேரணியை நடத்தியது. முஸ்லிம்கள் பேரணி ஒன்றும் நடத் தப்பட்டது.

இத்தகைய பேரணி களுக்கு எதிராக மோதி லால் யாதவ் என்ற வழக் குரைஞர் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பிரிவில் பொது நல வழக்கு தாக்கல் செய் தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

உத்தரபிரதேச மாநி லத்தில் ஜாதி அடிப் படையிலான பேரணி கள் நடந்து வருகின்றன. பார்ப்பனர், சத்திரியர், வைசியர் என்று பல் வேறு ஜாதிகளின் பெய ரால் அரசியல் கட்சிகள் இத்தகைய பேரணி களுக்கு ஏற்பாடு செய் கின்றன.

இத்தகைய ஜாதி பேரணிகளால் சமூகத் தில் ஒற்றுமையும், நல் லிணக்கமும் பாதிக் கிறது. இது அரசியல் சட்டத்துக்கு எதிராக சமூகத்தை கறைப்படுத் துகிறது.

எனவே இத் தகைய பேரணிகளை, பொதுக்கூட்டங்களை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதி பதிகள் உமாநாத் சிங், மகேந்திர தயாள் ஆகி யோர் அடங்கிய அமர் வின் முன் நேற்று விசா ரணைக்கு வந்தது. அப் போது நீதிபதிகள் உத் தரபிரதேசத்தில் ஜாதி அடிப்படையிலான பேரணி, பொதுக்கூட் டங்களுக்கு உடனடி தடை விதித்து உத்தர விட்டனர்.

மேலும், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் காங்கிரஸ், பாரதீய ஜனதா, பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் பதில் மனு தாக்கல் செய்ய தாக்கீது அனுப்பு மாறும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு, உடனடி யாக அமலுக்கு வந்துள் ளது.

தமிழ் ஓவியா said...


மணவழகர் மன்ற விழாவில், தமிழர் தலைவர் சூளுரை!


கோயில் கருவறைத் தீண்டாமை ஒழிப்போம்!

66 ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகும்
இன்னொரு சுதந்திரம் தேவை!

மணவழகர் மன்ற விழாவில், தமிழர் தலைவர் சூளுரை!

சென்னை, ஜூலை 12- சுதந்திரம் அடைந்த 66 ஆண்டுகள் ஓடி விட்டன; இன்னும் கோயில் கருவறையில் ஜாதி - தீண்டாமை இருக்கிறதே - இதனையும் ஒழிப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை அரசர் அண்ணாமலை மன்றத்தில் மண வழகர் மன்றத்தின் 57 ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், நாம் விடுதலை பெற வேண்டும் என்ற தலைப்பில், நேற்று உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

57 ஆண்டு காலமாக ஒரு நிறுவனம் தொடர்ந்து நடக்கிறது என்றால், அது சாதாரணமானதல்ல. தமிழ்த் தொண்டு, பகுத்தறிவுத் தொண்டு, இனமானத் தொண்டு, தன்மானத் தொண்டுகளைத் தொண்டறமாகக் கொண்ட மணவழகர் மன்றத்தின் பணிகளைப் பாராட்டுகிறேன். அதற்குக் காரணமாக இருக்கக் கூடிய நீதிபதி பு.ரா. கோகுலகிருஷ்ணன் அவர்களையும், பொறுப்பாளர் களையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

நாம் விடுதலை பெற வேண்டும்!

நாம் விடுதலை பெற வேண்டும் என்ற நல்ல தலைப்பு எனக்கு அளிக்கப்பட்டுள்ளது - மகிழ்ச்சி.

திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் எனும் நூலின் முடிவுரையிலிருந்து என் உரையைத் தொடங்குகிறேன்.

என் வாழ்க்கைக் குறிப்புக்கள் சிலவற்றைப் பொது மக்கள் முன்னே கிடத்தியுள்ளேன்; இன்னுஞ் சில குறிப் புக்கள் என் கருவிலுள்ளன. காகித நெருக்குத் தீர்ந்த பின்னை அவையும் வெளி வரலாம்.

பல திறத் தொல்லைகளிடை என் வாழ்க்கை வளர்ந்தது. அதனால் அது பொருட் பெருக்கில் புரளாததாயிற்று; தொண்டின் பெருக்கில் புரள்வதாயிற்று. வாழ்க்கையின் அடைவு பொருட் பெருக்காயின் என்னுடையது தோல்வி எய்திய தாகும்; தொண்டாயின் அது வெற்றி எய்தியதாகும்.

தொண்டின் சேய் எது? அந்தண்மை, தொண்டு, அந்தண்மை ஊற்றைத் திறந்தது. அந்தண்மை அருவியாய் ஓடுகிறது. அது வெள்ளமாதல் வேண்டும். எனது வாழ்க்கை ஒரோ வழி அந்தணச் செல்வத்தைப் பெற்றது. அவ்வந்தணச் செல்வம் முழுநிலை எய்தும் முயற்சியில் எனது வாழ்க்கையின் எஞ்சிய பகுதியும் ஈடுபடுமாறு ஆண்டவன் அருள் சுரப்பானாக.

இப்பிறவியில் எனது வாழ்க்கை அந்தணச் செல்வம் பெறுவதற்குத் துணை நின்ற கல்வி கேள்விகட்கும், நல்லிணக்கத்துக்கும், இல்வாழ்க் கைக்கும், இயக்கங்கட்கும் பிறவற்றிற்கும் எனது வாழ்த்து உரியதாக என்கிறார் திரு.வி.க.

செல்வத்தில் புரள்வதுதான் வாழ்க்கை என்று கருதும் இந்தக் காலத்தில் தொண்டில் புரள்வதுதான் நல் வாழ்க்கை என்பது சாதாரணமானதல்ல. தொண்டால் மதிக்கப்படுவதுதான் மதிப்புறு வாழ்க்கை.

முதலில் மனிதனுக்கு இந்தச் சிந்தனை விடுதலை தேவை.

நமக்கு முதலில் தேவையான விடுதலை - ஜாதி என்னும் அமைப்பு முற்றாக ஒழிந்து மனிதனாக விடுதலை பெற வேண்டும்.

இருட்டறையில் உள்ளதடா உலகம்!
இருட்டறையில் உள்ளதடா உலகம்
ஜாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே
என்று உரத்துப் பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

இன்றைக்கு ஜாதி என்பது பிணத்தின்மீது மறுபரிசோதனை தேவை என்கிற அளவுக்குப் போய் விட்டதே! உலகில் வேறு எங்கும் இல்லாத நோய் இந்த ஜாதி நோய்!

பிறக்கும் போதே பார்ப்பான், பறையன் எந்த நாட்டில் உண்டு?

உலகில் எந்த நாட்டிலும் பிறக்கும்போதே பார்ப்பான் பிறக்கவில்லை, பறையன் பிறக்கவில்லை.

இங்குதான் இறக்கும்போதுகூட அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அதில் நாம் இருவரும் ஒரே ஜாதியில் பிறந்து காதலித்துத் திருமணம் செய்து கொள்வோம் என்று எழுதி வைத்து விட்டுச் சாவது உலகில் வேறு எங்கும் உண்டா?

தமிழ் ஓவியா said...

பாழாய்ப் போன வாக்கு வங்கி அரசியல் நாட்டை என்ன பாடுபடுத்துகிறது!

தந்தை பெரியாரும் திரு.வி.க.வும் காட்டும் நெறிகள் தான் இதற்கெல்லாம் தீர்வு; விடுதலை அவர்களின் வெளிச்சத்தின் வழிதான் கிடைத்தாக வேண்டும்.

அந்தணர் என்பவர் யார்?

புதிதாக ஒரு சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அந்தணர் என்ற சொல் பார்ப்பனர்கள் அந்தணர்களாம்.

அந்தணர் என்பதற்குத் திருவள்ளுவர் இலக்கணம் தந்துள்ளார்.

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்
என்கிறார் வள்ளுவர்.

செந்தண்மை என்பது என்ன? மனிதனை மனிதனாகப் பார்க்காமல் ஜாதிக் கண் கொண்டு பார்த்து வெறுப்பது தானா? சட்டம் என்ன சொல்லுகிறது?

இன்றைக்கு ஜாதி - தீண்டாமை என்பது கடைசியாகக் கோயில் கருவறைக்குள் பதுங்கி இருக்கின்றன. இந்திய அரசமைப்புச் சட்டம் 17ஆவது பிரிவு என்ன கூறுகிறது? தீண்டாமை ஒழிக்கப்படுகிறது. அது எந்த வடிவத்தில் கடைப்பிடிக்கப்பட்டாலும் சட்டப்படி குற்றம் என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். ஆனால் கோயில் கருவறையில் இந்தத் தீண்டாமை அனுசரிக்கப்படுகிறதே - அதனையும் ஒழித்தால் தானே உண்மையான விடுதலை?
66 ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகும் இன்னொரு முக்கிய விடுதலை தேவைப்படுகிறதே! இந்தியாவில் இந்தியனைக் காணவில்லையே!

பீலர்லி நிக்கோலஸ் என்பவர் அமெரிக்கக்காரர்; இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தார். இந்தியா முழுமையும் சுற்றிப் பார்த்து விட்டு ஹ ஏநசனஉவ டிக ஐனேயை என்ற நூலை எழுதினார், அதில் குறிப்பிடுகிறார்.

இந்தியா முழுமையும் நான் சுற்றிப் பார்த்தேன்; ஆனால் ஒரே ஒரு இந்தியனைக்கூட நான் பார்க்கவில்லை. நான் சந்தித்த ஒவ்வொருவரும் தன் ஜாதிப் பெயரைத்தான் சொன்னான் என்றாரே!

வழக்கறிஞர்கள் சங்கத்தில் இரு குடி நீர்ப் பானைகள் இருந்ததுண்டு. மாணவர்கள் விடுதிகளில் இரு குடி நீர்ப் பானைகள் இருந்ததுண்டு அதனை உடைத்துதான் திராவிடர் மாணவர் கழகம் தோன்றியது.

1968இல் தலைமைச் செயலகத்தில் இந்தப் பாகுபாடு இருந்தது என்று பாபு ஜெகஜீவன்ராம் சொன்னாரே!

இராணுவ அமைச்சருக்கே ஏற்பட்ட அவலம்!

இந்தியாவின் இராணுவ அமைச்சராக இருந்த நிலையில் காசியில் சம்பூர்ணானந்து சிலையைப் பாபு ஜெகஜீவன்ராம் திறந்தார். சம்பூர்ணானந்து காயஸ்தர் - உயர் ஜாதிக்காரர் பார்ப்பனர் அல்லர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜெகஜீவன்ராம் திறந்தார் என்பதால் அந்த உயர் ஜாதிக்காரரின் சிலை தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி, காசிப் பல்கலைக் கழக பார்ப்பன மாணவர்கள் கங்கை நீரைக் கொண்டு வந்து அந்தச் சிலையைக் கழுவினார்களே! அரசியல் விடுதலை கிடைத்தாலும் இன்னும் சமுதாய விடுதலை கிடைக்க வில்லையே! சமுதாய விடுதலை கிடைத்திருந்தால் இந்த அவலம் நேர்ந்திருக்குமா?

செருப்பு தைப்பவன் எல்லாம் மந்திரியானால் எங்களுக்குச் செருப்புத் தைப்பவர்கள் யார்? என்றல்லவா முழக்கம் போட்டனர்.

அந்த அவலம் நடந்த மறுநாள் பாபு ஜெகஜீவன் ராம் சென்னைக்கு வந்தார். மயிலாப்பூர் மாங்கொல்லையில் குமுறினாரே! தன் மனக்கொதிப்பைக் கொட்டினாரே! பெரியார் பிறந்த மண்ணில் என் உணர்வைத் தெரிவிக் காமல் வேறு எங்கு போய்த் தெரிவிப்பேன் என்று பேசவில்லையா?

தமிழ் ஓவியா said...

சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்!

1925இல் தமிழ்நாட்டில் சேரன்மாதேவியில் என்ன நடந்தது? பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்ற பேதம் இடம் பெறவில்லையா? தந்தை பெரியாரோடு இணைந்து போர்க்கொடி துவக்கியவர்தானே நமது திரு.வி.க.

அன்றைக்கு அதனை முறியடித்தோம். இன்று கோயில்களில் கருவறைகளில் உள்ள அந்தப் பேதத்தை முறியடிக்க வேண்டமா?

பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம்!

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம் தான் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது.

கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராகவிருந்தபோது 1972 இல் அதற்காக ஒரு சட்டமே கொண்டு வந்தார் உச்சநீதிமன்றம் வரை சென்று முடக்கி விட்டார்களே. 2006லும் கொண்டு வந்தார்.

206 பேர்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்றுத் தயாராக உள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

போராடுவோம் - வெற்றி பெறுவோம்!

இந்த இழிவு துடைக்கப்படவில்லையானால் விடுதலை யும் கெடுதலையும் ஒன்றே!

எனவே விடுதலை பெற்றே தீர வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம்.
போராடுவோம் வெற்றி பெறுவோம்! தந்தை பெரியாரும், தமிழ்த் தென்றல் திரு.வி.க.வும் காண விரும்பிய அந்த விடுதலையைப் பெறுவோம் என்று கூறி முடித்தார்.

தமிழ் ஓவியா said...


இடைநிலை ஆசிரியர்களின் நிலை என்ன?


மத்திய அரசு கடந்த 2010 ஏப்ரல் 1ஆம் தேதி கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டில் உள்ளது போல் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இல்லாததைக் கருத்தில் கொண்டு இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் திற்கு தகுதித்தேர்வை நடத்த அறிவுறுத்தியது.

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இருந்து வருவதால் தமிழக அரசு 2010 மே மாதம் 32 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனத்திற்கு வேண்டி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது. தேசிய கல்வி கழகத்தின் அறிவுறுத்தல்படி தமிழக அரசு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு தகுதித்தேர்வை அறிவித்தது.

(15.11.2011) திருமங்கலத்தை சேர்ந்த மாயா உட்பட மூவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் போட்டதன் பேரில் பழைய பதிவு மூப்பு அடிப் படையிலேயே இடைநிலை ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய வேண்டும் என்று 2011 நவம்பர் 24இல் மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப் பாணை எண் 5281/ஆ4/2010 (பார்வை: 1.அரசாணை (நிலை) எண்.220 பள்ளிக்கல்வித் (எஸ்-2)துறை,நாள் 10.11.2008, 2.அரசாணை (நிலை) எண்.153 பள்ளிக்கல்வித்(வ.செ-2)துறை,நாள் 03.06.2010, எனக் குறிப்பிட்டு 2010-11ஆம் ஆண்டு தொடக்கக் கல்வித்துறை பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்க்கும் அழைப்புக் கடிதத்தை அதே 2011 நவம்பர் 24 தேதியில் அனுப்பியது. மேற்கண்ட அழைப்பின்பேரில் 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் 3.12.2011இல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து வேலைவாய்ப்பு உத்தர விற்காகக் காத்திருந்தனர்.

இந்த நிலையில் 9.7.2013 அன்று சென்னை உயர் நீதிமன்றம் 2010 மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதையே அறிவுறுத்தலாகக் கொண்டு 2011 இல் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களையும் தமிழக அரசு பணியில் அமர்த்துவதுதான் சரியானதாக இருக்க முடியும். தலைக்கொரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காய் என்ற முறையில் ஓர் அரசு நடந்து கொள்ள முடியாது.

இந்தப்பிரச்சினை குறித்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விரிவான அறிக்கை ஒன்றினை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே வெளியிட்டார் (விடுதலை 2.4.2013).

தொடர்ந்து விடுதலை இந்தத் திசையில் பல தலையங்கங்களைத் தீட்டியதுண்டு. இதுகுறித்து கடந்த 6ஆம் தேதியன்று முதல் அமைச்சருக்குத் திறந்த மடலையும் எழுதியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்றுகூட ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த 5ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக மாணவரணி சார்பில் கருத் தரங்கமும், பொது மாநாடும் நடைபெற்றன. திராவிடர் கழகத் தலைவர் உட்பட பல தலைவர் களும், கல்வியாளர்களும் கலந்து கொண்டனர். முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கடந்த10ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவிலும் இந்த வகையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட் டுள்ளது. வரும் 18ஆம் தேதி சென்னையில் இது தொடர்பான ஆர்ப்பாட்டத்தையும் கழகம் நடத்திட உள்ளது. இதற்கிடையே இதனை வலுப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை ஆதாரப்படுத்தி தகுதித் தேர்வைப் புறந்தள்ளி, பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் செய்வதே சரியானதாக இருக்க முடியும். இல்லை யெனில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நீதிமன்றம் சென்றால் அரசுக்கு எதிராகவே தீர்ப்புக் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ளுமா? எங்கே பார்ப்போம்.

தமிழ் ஓவியா said...


இந்த ஆபத்தான அகப் பகைவனை அடையாளம் காண்போம்!புறப் பகைவர்களையே தேடிக் கொண்டிருக்கும் வழமை - வாடிக்கை நம்மில் பலருக்கும் உண்டு. அகப்பகைவர்கள் பற்றி பல நேரங்களில் கவலைப்படாத வாழ்வே வாழ்கிறோம்!

அகப்பகைவர்கள் என்னும்போது, ஒரு அமைப்பு, நிறுவனம், கட்சி, இயக்கம் ஆகியவற்றில் உள்ள வீபீஷணர்கள், சுக்ரீவன்கள், அனுமார்கள், பிரகலாதன்கள், யூதாஸ்கள், எட்டப்பன்கள், குவிஸ்லிங்குகள் (இரண்டாம் உலகப் போரின்போது அய்ரோப்பிய நாட்டில் நேச நாடுகளுக்கான உள் ரகசியங்களைக் காட்டிக் கொடுத்து பிரபலமானவர்) போன்றவர்களை மட்டும் நினைத்துக் கொண்டி ராதீர்கள்!

அவர்கள் ஆபத்தானவர்கள்தான் - பயிர்களில் முளைத்த களைகளைப் போன்று!

நம்முள் உள்ள மற்றொரு முக்கிய அகப்பகைவன் யார் தெரியுமா?

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி சிலரது உடலும், உள்ளமும் இந்த அகப்பகைவனிடம் சிக்கிக் கொண்டால், அவர்களைப் பாடாய்ப்படுத்தி விடும்!

எவ்வகையிலெல்லாம் கேடு வரும் என்பதை அறிவியல், உளவியல், வாழ்வியல் பூர்வமாக படம் பிடித்துக் காட்டி அறிவுறுத்தியுள்ளார் ஒப்பற்ற அறிவுரை - அறவுரையாளரான திருவள்ளுவர் அவர்கள்!

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் (குறள் 303)

பொருள்: ஒருவன், யாரொருவரிடத்திலும் சினம் கொள்ளாமல் அந்த சினத்தை அறவே மறந்து விட வேண்டும்; இல்லையென்றால் அந்த சினத்தால் தீமையான விளைவுகள்தாம் அவனுக்கு ஏற்படும்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற (குறள் (304)

பொருள்: ஒருவனது முகத்தில் வெளிப்படும் சிரிப்பையும், அகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியையும் அடியோடு அழிக்கின்ற சினத்தை விட, அவனுக்குப் பகையாக விளங்கும் பொருள், வேறு ஏதொன்றும் இருக்க முடியாது.

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் (குறள் 305)

பொருள்: ஒருவன், தன்னைத்தானே காத்துக் கொள்ள விரும்புவானேயானால், தனக்குச் சினம் ஏற்படாமல் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; அப்படி அவன் தன்னைக் காத்துக் கொள்ளாவிட்டால், அந்தச் சினமே அவனைக் கொன்றுவிடும்.

நமது கோபம் - பல நேரங்களில் ஆத்திரம் கொப்பளிக்க வெடிக்கிறது.

நம்மால் கட்டுப்படுத்தப்படாத பழக்கம் காரணமாக, நாம் அதனை பல்வேறு கட்டங்களில் ஏன் உச்சக் கட்டம் செல்லும் நிலையிலும், பார்ப்போர் அருகில் உள்ளோர் அருவருப்புக் கொண்டு முகஞ் சுளிக்கும் அளவுக்குக் கூட, எல்லை தாண்டிய வேகத்தோடு நாம் நடந்து கொள்வது - யாரைப் பார்த்து நாம் இப்படிக் கோபத்தைக் கொப்பளிக்கிறோமோ, அவர்களுக்கு ஏற்படும் கெடுதி, இழப்பைவிட, கோபத்தை அடக்காத நமக்கே அது உலை வைப்பதாக ஆகிவிடுகிறது.

பிரபல அமெரிக்க இதய நோய் அமைப்பினை நடத்தும்(The American Journal of Cardiology)
என்ற மருத்துவ ஏட்டில் - உள்ள ஒரு அரிய தகவல் இதோ:

1. கோபமாக நாம் வெளியிடும் அந்த ஆத்திரத்தின் வெடிப்பு, அடுத்த 2 மணி நேரம் வரை, மாரடைப்பு (Heart Attack)
ஏற்படும் அபாயத்தைத் தோற்றுவிக்கக்கூடிய ஒன்றாகும்.

2. இந்த ஆத்திரம் ஓர் அளவுக்குள் அமைவதா யிருப்பின் அந்த அபாயம் 1.7 மடங்கு கூடுதலாக உள்ளதாக இருக்கும்.

3. சிலர் பற்களை நரநரவெனக் கடித்துக் கொண்டு, கை முஷ்டிகளை ஓங்கிக் கொண்டு உடல் மிகவும் (தசைகள்) இறுக்கமாக்கிக் கொண்ட நிலை யில் கோபத்தின் அதி ஆவேசத்தில் இறங்கும்போது, இந்த மாரடைப்பு - இதயநோய் தாக்கும் அபாயம் 2.3 மடங்கு ஆக இருக்கும்.

4. சிலர் கோபத்தின் உச்சத்திற்கே சென்று தனது நிதானத்தையே இழந்து, கையில் கிடைக்கும் பொருள்களை எடுத்து வாரி வீசி, மற்றவர்களை காயப் படுத்தியோ அல்லது தன்னை காயப்படுத்திக் கொண்டே உள்ளவர்களுக்கு இந்த அபாயம் 4.5 மடங்கு ஆக ஆகிவிடும்.

வள்ளுவத்தின் அறிவியல், உளவியல் எவ்வளவு வியக்கத்தக்கது பார்த்தீர்களா?

கோபம் வந்தால் அடக்கி ஆளுவோம்; வாழுவோம்; எழுதும் எனக்கும் சேர்த்தே தான் இவ்வெச்சரிக்கை! படிக்கும் உங்களுக்கு மட்டுமல்ல வாசகர்களே!

சினத்தை அடக்குவோம்!

சினம் நம்மை ஆளவிடாமல் நாம் அதனைஅடக்கி ஆளுவோம்!!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


பெரிய நன்மை


நீதி முறையையும், நீதி இலாகா வையும் திருத்தினால் புற்று நோய்க்கும், சயரோக நோய்க்கும் மருந்து கண்டு பிடித்தது போன்ற அவ்வளவு பெரிய நன்மை மனிதச் சமுதாய ஒழுக்கத்திற்கு ஏற்பட்டு விடும். - (விடுதலை, 17.10.1969)

தமிழ் ஓவியா said...


காலம் தோறும் பார்ப்பனீயம்!


3.7.2013 விடுதலை தலையங்கம், பல சிந்தனைகளை உண்டாக்கி யுள்ளது. சார்தாம் (கங்கோத்திரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத்), புனித யாத்திரையில் முதலில் கூறி யுள்ள 3 இடங்களைப் பார்த்து விட்டு தான் கேதார்நாத் செல்ல வேண்டு மாம். தினமணியும், புதிய தலைமுறை இதழும் கேதார்நாத் அழிவைப்பற்றித் தான் கூக்குரல் இடுகிறார்கள். ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போன ஆதிசங்கரரின் சமாதியை மீண்டும் புதுப்பித்து நினைவுச் சின்னம் அமைப்பதுதான் இவாளின் இலை மறை நோக்கமாகும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில், கேதார்நாத் அருகில் மணிகார் (ஆயழுயசா) என்ற இடம் உள்ளது. இங்குதான் மிகவும் பழைமையான தான சீக்கியர்களின் வழிப்பாட்டுத் தலமான குருத்வாரா உள்ளது. இங்கு அவர்களுடைய பழைமை வாய்ந்த புனித நூலான கிரந்தம் வைத்து வழிபடுகின்றனர். இந்த இடமும் இயற்கைச் சீற்றத்தினால் பாழ்பட் டுள்ளது. இதை தினமணியும், புதிய தலைமுறை இதழும் வசதியாக மறைத்துவிட்டு கேதார் நாத் இடத்தை மட்டும் தூக்கிப் பிடிக்கின்றனர். இந்த இடத்தில் (குருத்வாராவில்) பார்ப் பனீயம் எடுபடாது. அதனால் கழி விரக்கமற்றவர்களான பார்ப்பனர் களும், பார்ப்பன ஏடுகளும் மறைத்து விடுகின்றன. இதுதான் இந்தியாவின் இவர்கள் கூறும் கலாச்சாரம். காலம் தோறும் பார்ப்பனீயம் இதுதான்!

- அ.நா. பாலகிருஷ்ணன்
சிந்திரிப்பேட்டை, சென்னை-2

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் காலத்திலேயே ஜாதியை ஒழிப்போம்! ஆகஸ்டு 1இல் அறப்போருக்கு திரள்க!திருப்பூரில் பொதுச்செயலாளர் பிறைநுதல் செல்வி எழுச்சியுரை!

திருப்பூர், ஜூன் 12- எதிர்வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தமிழர் தலைவர் அவர்களால் அறிவிக் கப்பட்டு நடைபெறவிருக்கின்ற அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கக் கோரும் அறப் போராட்ட நிகழ்வுக்கு போராட்ட வீரர்கள் பட்டியல் தயார் செய் வது மற்றும் அறப்போராட் டத்தை விளக்கி பொதுமக்கள் மத்தியில் சிறப்பாக பல முனை களில் பிரச்சாரங்கள் மேற் கொள்வது சம்பந்தமாக 7.7.2013 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருப்பூர் பழைய பேருந்து நிலையம், பெரியார் புத்தக நிலையத்தில் திருப்பூர் மாவட்ட திக கலந் துரையாடல் கூட்டம் மாவட்ட திக இளைஞரணிச் செயலாளர் ச.மணிகண்டன் கடவுள் மறுப்பு கூறவும் மாவட்ட திக தலைவர் இரா.ஆறுமுகம் தலைமையேற் கவும் சிறப்போடு தொடங்கி நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பாக பங்கேற்று எழுச்சியுரையாற்றிய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் பிறை நுதல் செல்வி அவர்கள் குறிப் பிட்டதாவது:

நாம் பிரச்சினையான கால கட்டத்தில் பயணித்துக் கொண் டிருக்கிறோம். ஜாதி மறுப்புத் திருமணம் நடைபெற்றது என்ப தற்காக ஜாதி வெறியர்களால் தருமபுரியில் தாழ்த்தப்பட்ட மக்களுடைய வீடுகள் எரித்து அழிக்கப்பட்டன. ஜாதி மறுப் புத் திருமணம் செய்து கொண் டவர்கள் பிரிக்கப்பட்டனர். இதன் விளைவு 19 வயது இளை ஞன் இளவரசனின் மரணம். இது ஒருதனிப்பட்ட விசயம் அல்ல. ஒரு சமுதாயத்தையே மரணமடையச் செய்ததற்குச் சமமானதாகும். இது கொலையா? தற்கொலையா? என்பது நீதிமன் றத்தால் முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

காரணம் என்ன?

கொள்கைகள் இல்லாத அரசியல் ஓட்டு வேட்டைக் கட்சிகள் அரசியல் நோக்கத் திற்காக ஜாதியைக் கையில் எடுத்துக் கொண்டதே தருமபுரி தீ வைப்பிற்கும், தருமபுரி இளைஞன் சாவிற்கும் காரண மாகும்.

ஜாதி வெறியின் உச்சம்

ஜாதி இன்று வரை ஒழிய வில்லை, அழிக்கப்படவில்லை. சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி வருகிறது. இரட்டை குவளை முறை, தலையில செருப்பை வைத்து நடக்கச் சொல்வது, பெண்னை நிர்வாணப்படுத்தி ஊரைச் சுற்றி வரச்செய்வது, கட்டாயப்படுத்தி மலம் தின்ன வைப்பது இப்படியாக பல கோரமுகங்களுடன் ஜாதி - தீண்டாமை இன்றும் நடனமா டிக் கொண்டுதான் இருக்கிறது. இது அணையாமல் பற்றி எரி யக்கூடிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது.

பிரச்சாரம்

ஜாதி மறுப்புத் திருமணங் கள் எல்லா இடங்களிலும் நடைபெற வேண்டும். அதற்கு மன்றல் நிகழ்ச்சியை ஊர் தோறும் நடத்த வேண்டும் மேலோட்டமாக ஜாதி மறுப் புத் திருமணம் என்று அறி வித்து ஜாதியக் கண்ணோட் டத்தோடு நடத்தப்படக்கூடிய நிகழ்வுகளையும் அவற்றின் மாய் மாலங்களையும் நாம் ஒரு புறம் கவனித்தாக வேண்டும்.

கோவையில் மகத்தான வெற்றியை ஈட்டிய மன்றல் நிகழ்வு அடுத்து திருநெல்வேலி யில் நடைபெறவுள்ளது.

தமிழ் ஓவியா said...

வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நடைபெறவிருக்கின்ற அறப்போராட்டத்தை விளக்கி தெரு முனைக்கூட்டம், சுவரெ ழுத்து, துண்டறிக்கை, போராட்ட விளக்க கையேடு ஆகியவற்றின் மூலம் மாவட்டத்தின் முழு மைக்கும் பொதுமக்கள் மத்தி யில் பிரச்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும். வீண் செலவைத் தவிர்த்தல் வேண்டும் பிரச்சாரத்திற்கு உண்டியல் ஏந்திச் செல்ல வேண்டும்.

1970-இன் தொடர்ச்சியே

தன் வாழ் நாள் முழுவதும் ஜாதியை ஒழிக்க தந்தை பெரியார் போராடினார். ஓட்டல்கள், இரயில்வே உணவு விடுதிகள், பள்ளிகள் போன்ற இடங்களில் போராட்டத்தின் மூலமும் ஆர்ப்பாட்டத்தின் மூலமும் தந்தை பெரியார் அவர்கள் ஜாதி வெறியைத் தூண்டும் வர்க்க பேதத்தை ஒழித்தார்கள். 1970-இல் சமு தாய இழிவு ஒழிப்புப் போராட் டத்தையும் அறிவித்தார்கள். அதன் தொடர்ச்சியாக அய்யா வின் அடியொற்றி வருகின்ற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நடை பெறும் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போருக்கு தமிழர் தலைவர் காலத்திலேயே ஜாதியை ஒழிப்போம் என சபதமேற்று முழக்கமிட்டு பெரு எண்ணிக் கையில் திரள்க! ஒத்த கருத் துடைய தோழர்களையும் போராட்டக்களத்திற்கு அழைத்து வருக! இவ்வாறு அவர் உரை யாற்றினார்.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நடைபெறவிருக்கின்ற ஜாதி, தீண்டாமை ஒழிப்பு அறப் போரை விளக்கும் விதமாக தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ரூ. 5/- விலையுள்ள கையேட்டிற்கு திருப்பூர் மாவட்ட கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளரி டம் 650 கையேடுகளுக்கு ரூ.3,250/- வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருப்பூர் மாநகர திக தலைவர் யாழ் ஆறுச்சாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கோவை மண்டலச் செயலாளர் வழக்கு ரைஞர் ஆ.பாண்டியன், திருப் பூர் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் நா.சக்திவேல், அமைப்பாளர் வீ.சிவகாமி, மாவட்ட இளைஞரணி தலை வர் சோழமாதேவி நா.மாய வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலமலை மாவட்டத் தலைவர் கருணாகரன், தோழி யர் க.சோதி, மாவட்ட இளை ஞரணி துணைத்தலைவர் பா.மா.கருணாகரன், திராவிடர் மாணவர் கழக மாவட்டச் செயலாளர் கு.திலீபன், மாநகர செயலாளர் இல.பாலகிருட் டிணன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அண்ணாதுரை, திருப்பூர் ஒன்றிய கழக செயலா ளர் ஆசிரியர் முத்து.முருகேசன், காங்கேயம் ஒன்றிய தலைவர் நத்தக்காடையூர் மு.திருஞானம், தாராபுரம் நகர இளைஞரணி தலைவர் வி.தி.மோகன், வளை யன் காடு அன்பழகன், இளை ஞரணித் தோழர்கள் மணி, வெங்கடேசு, மனோசு ஆகி யோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

கூட்ட முடிவில் மாநகர இளைஞரணிச் செயலாளர் தே.மயில்மணி நன்றி கூறினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

தீர்மானம் 1: ஜாதி, தீண் டாமை கொடுமை காரணமாக 4.7.2013 அன்று தருமபுரி மாவட் டத்தைச் சார்ந்த இளைஞர் இளவரசன் அவர்களின் மறை வுக்கு இக்கலந்துரையாடல் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2: 15.6.2013 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுத் தீர்மானங் களை ஏற்றுச் செயல்படுத்துவ தென தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3: எதிர்வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நடை பெறவிருக்கும் ஜாதி, தீண் டாமை ஒழிப்பு அறப்போர் குறித்து காங்கேயம், வெள்ள கோயில் ஒன்றியங்கள் சார்பில் தலா 2 கூட்டங்களும், உடுமலை ஒன்றியக் கழகத்தின் சார்பில் 3 கூட்டங்களும், தாராபுரம் ஒன் றியத்தின் சார்பில் 3 கூட்டங் களும், திருப்பூர் ஒன்றியக் கழ கத்தின் சார்பில் 4 கூட்டங் களும் மொத்தம் 14 தெரு முனைப் பிரச்சாரக் கூட்டத் தினையும் 26.7.2013-ஆம் தேதிக் குள் நடத்தி முடிப்பதென தீர் மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4: அறப்போரை விளக்கி கூட்டம் நடைபெறும் இடங்களில் சுவரெழுத்து பிரச் சாரம் செய்தும், பதாகைகள் அமைத்தும், புத்தகம் (கையேடு) வழங்கியும் அறப்போர் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைப் பதென தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 5: ஆகஸ்ட் ஒன் றாம் தேதி நடைபெறும் அறப் போராட்டத்திற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் பெருந்திர ளாகச் சிறை செல்வதென முடிவு செய்யப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


நீர் பொங்குமாம்!


12 வருடத்திற்கு ஒருமுறை மகாமகக் குளத்தில் நீர் பொங்கி வருவதாக நேரில் பார்த்ததாகவே சிலர் கூறுகிறார்கள்.

தண்ணீரை நெருப்பில் வைத்துக் காய்ச்சினா லல்லது பொங்குகிற வஸ்துவை அதில் போட்டாலல்லது தண்ணீர் எப்படிப் பொங்கமுடியும்? மாமாங்கத் தினத்தன்று தண்ணீர் குளத்தில் விட்டு வைத்த அளவுக்கு மேல் அதிகமாகக் காணப்படுவதாக சில பார்ப்பனர்கள் கதை கட்டி விடுகிறார்கள்.

மக்களைத் தண்ணீருக்குள் இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தி பிறகு தண்ணீரை பார்த்தால் அப்போது அது பொங்குகிறதா இல்லையா என்பதின் உண்மை கண்டுபிடிக்க முடியும். அப்படிக்கில்லாமல் பதினாயிரக் கணக்கான மக்களைக் குளிக்கவிட்டு, அதன் பிறகு தண்ணீர் அதிகமாகி இருக்கிறது என்று சொன்னால் அதை எப்படி தண்ணீர் என்றே சொல்ல முடியும்?

குளிக்கப்போகும் மக்கள் அந்தக் குளிரில் தங்கள் சிறுநீரைக் கழிக்க அந்தக் கூட்டத்தில் குளக்கரையில் எங்கு இடம் காண முடியும்?

ஆதலால் குளிக்கிறவர்கள் அவசர அவசரமாகத் தண் ணீரில் இறங்கி அங்கு சிறுநீர் கழிக்க ஏற்பட்டு விடுவதன் மூலம் குளத்தின் தண்ணீர் பெருகி இருக்கலாம்.
அந்த சிறுநீரின் தன்மையால் குளத்தில் இறங்குவதாலும் தண்ணீர் உயர்ந்து இருக்கலாம். இந்த மாதிரி காரணங்களால் தண்ணீர் மட்டம் 4, 2 படிக்கட்டுகளுக்கு உயர்ந்து விட்டால், அதைப் பொங்கிற்று என்று சொல்லுவது அறிவுடைமையாகுமா என்று கேட்கிறோம்.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

கடவுளும் மின்சாரமும்!

கேள்வி: an you live without god? (கடவுள் இல்லாமல் உங்களால் வாழ முடியுமா?)

பதில்: Yes. I can live without god, but I cannot live without electricity. (கடவுள் இல்லாமல் நான் வாழ முடியும். ஆனால் மின்சாரம் இல்லாமல் நான் வாழ முடியாது) சிரிப்பு. அமெரிக்காவில் ஒருநாள் திடீரென மின்தடையை ஏற்படுத்தினார்கள். அமெரிக்கா முழுவதும் மக்கள் சில நிமிடங்கள் அவதிப்பட்டு பின்னர், மீண்டும் மின் ஓட்டத்தை இயக்கி விட்டு, வானொலியில் அறிவித்தார்கள், சில நிமிடங்கள் மின் சாரம் இல்லாவிடில் எவ்வளவு அவஸ்தை? இப்போது புரிகிறதா மின் சாரத்தைக் கண்டுபிடித்த ஆல்வா எடிசனின் பெருமை? இன்று அந்த ஆல்வா எடிசனின் நூற் றாண்டு நினைவு நாள்! என்று.

(மதுரை பல்கலைக்கழக மாலை நேரக் கல்லூரி பகுத்தறிவுச் சிந்தனை கலந்துரையாடலில் கழக தலைவர் கூறியது) தகவல்: மதுரை தமிழரசன்

தமிழ் ஓவியா said...


மகாமகத்தின் வரலாறு


ஆதிகாலத்தில் உலகப் பிரளயம் நேரிடுவதற்கு முன்பு, பிரம்மதேவர் அப்பிரளயத்தினால் சகல சிருஷ்டிகளும் அழிந்து போகக் கூடிய நிலைமையைக் குறித்து கவலையுற்று, அதைத் தவிர்க்க கருதி, கைலாசநாதனான சிவபெருமானைக் குறித்து துதித்தார். அவரும் பிரம்மதேவனின் வேண்டுகோளுக்கிணங்கி அவ்வித அழிவை நிவர்த்திக்கும் பொருட்டு, சிருஷ்டி பீஜத்தை அமிர்தத்துடன் கலந்து அமிர்தம் நிறைந்த ஒரு குடத்திற்குள் வைத்து குடத்தைத் தேங்காய், மாவிலை, வில்வம், பூணூல் இவைகளால் அலங்கரித்து மூடி, மகா பிரளயத்தில் விட்டு விடும்படி பிரம்மதேவரிடம் சொன்னார். அவ்வாறே பிரம்மதேவரும் பிரளயகாலத்தில் அந்த அமிர்த குடத்தை மிதக்க விட்டதாகவும், அக்கும்பம் இந்த சேத்திரத்தில் மிதந்து வந்து தங்கலுற்றதாகவும், பிரளய முடிவில் பிரம்மதேவர் முதலியோர் அக்குடத்தைக் கண்டு மறுமுறை சிவபிரானைத் துதிக்கவும், அவர் அச்சமயம் வேடரூபத்துடன் பிரசன்னமாகி, ஓர் பாணத்தை எய்து, அவ்வமிர்த கும்பத்தை உடைக்கவே, அதனுள்ளிருந்த அமிர்தம் இப்பிரதேசத்தில் பரவியது பற்றி இச்சேத் திரத்திற்கு கும்பகோணம் எனப் பெயர் வழங்கலாயிற் றென்பது புராண வரலாறு. அக்குடத்தினின்றும் வெளிப்பட்ட அமிர்தமானது இருகூபங்களாக (கிண றுகள்) தங்கலுற்றது. அவைகளில் ஒன்று மகாமகக் குளம் என்றும், மற்றொன்று ஹேமபுஷ்கரணி (பொற்றாமரை) என்று வழங்கப் பெற்று வருகின்றன.

முன்பு விவரித்தபடி சிவபெருமானால் உடைக்கப்பட்ட குடத்தின் பாகங்கள் அதிலிருந்த அமிர்தத்தைக் கொண் டே பிசையப் பெற்று, ஓர் லிங்கபூர்வமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டதாகவும், அவரே கும்பேஸ்வரர் என்று வழங்கப் பெற்றதாகவும் புராணம் சொல்லுகிறது.

அமிர்த குடத்தின் மேல் மூடப்பட்ட அலங்கார சாமான்களான தேங்காய், மாவிலை, வில்வம், பூணூல் முதலியவை முறையே இப்பிரதேசத்தைச் சுற்றிப் பரவி எழுந்து அவை யாவும் அங்கங்கே சிவசேத்திரங் களாக ஏற்பட்டு, பூஜார்ஹமாக விளங்கி வருகின்றன.

இந்நகரம் முக்கிய சிவசேத்திரமாக இருப்பதுமன்றி, முக்கிய விஷ்ணுசேத்திரமாகவும், புண்ணிய தீர்த்தங் களையுடையதாகவும், தொன்று தொட்டு விளங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பு: இது சுதேசமித்தரன் 19.2.1945ஆம் தேதி இதழில் காணப்படுகிறது. இதைக் கண்ணுறும் எவரும் இது எவ்வளவு ஆபாசக்களஞ்சியம் என்பதையும், இதையும் இந்த 20ஆம் நூற்றாண்டில் நம் மக்கள் நம்பி வருகிறார்களே என்றும் எவர்தான் வருந்தாமல் இருக்கமுடியும்? இவ்வளவு கூட பகுத்தறிவு இல்லாத மக்கள் அடிமையாக இருப்பதில் ஆச்சரியமென்ன?

(24.2.1945 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை)

தமிழ் ஓவியா said...

ஒரு பார்ப்பனரே சொல்லுகிறார்

தீண்டாமை என்பது சமயம் சம்பந்தப்பட்டு இருக்கின்றது. அதைச் சமய சம்பந்தத்தினால் தீர்க்கமுடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைவன் என்ற முறையிலும், உங்களிடம் பேசுகின்றேன். நல்ல ஒழுக்கமுள்ள ஹரிஜன் எப்போது சங்கராச்சாரியார் பீடத்தில் அமருகின்றாரோ, அப்போதுதான் தீண்டாமை ஒழிந்ததாக கருதமுடியும்.

- டாக்டர் கலேல்கார்

ஆதாரம்: பெரியார் படைக்க விரும்பிய மனிதன், பக்கம் 123

தமிழ் ஓவியா said...


சென்னை மணவழகர் மன்றத்தின் 57 ஆம் ஆண்டு முத்தமிழ் விழா


பெண்கள் முன்னேற்றம் அடைந்தால்தான் சமுதாயம் வளர்ச்சியடையும்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.தமிழ்வாணன்

சென்னை மணவழகர் மன்ற விழாவில் பங்கேற்ற அறிஞர் பெருமக்கள் (சென்னை,11.7.2013)

சென்னை, ஜூலை 12- பெண்கள் முன்னேற்றம் அடைந்தால்தான் சமுதாயம் வளர்ச்சியடையும் என்று மணவழகர் மன்ற விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.தமிழ்வாணன் பங்கேற்று உரையாற்றினார்.

சென்னை மணவழகர் மன்றத்தின் 57 ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று, தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

மணவழகர் மன்றம் முத்தமிழ் விழா அறக்கட் டளையும், ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் மணவழகர் மன்றத்தின் 57 ஆம் ஆண்டு முத்தமிழ் விழா மற்றும் மறைவுற்ற டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் அவர்களின் படத் திறப்பு விழா ஜூலை 11 மற்றும் 12 ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.

சென்னை மணவழகர் மன்றத்தின் 57 ஆம் ஆண்டு முத்தமிழ் விழா முதல் நாள் நிகழ்வு நேற்று (11.7.2013) வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களை, மணவழகர் மன்றத்தின் செயலாளர் கே.கன்னி யப்பன் வரவேற்றுப் பேசினார். நீதிபதி எஸ்.தமிழ்வாணன்

தமிழ் ஓவியா said...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.தமிழ் வாணன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.

அவர் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

தமிழ்த் தென்றல், திரு.வி.க. என்று உலக தமிழர்களால் அழைக்கப்பட்ட கல்யாணசுந்தரம் தமிழின் பால் கொண்டிருந்த ஈர்ப்பு காரணமாக தன்னுடைய பெயரை மணவழகர் என்றும், மறைமலை அடிகள் வேதாசலம் என்ற தன்னுடைய பெயரை மறைமலை அடிகள் என்றும், சூரிய நாராயண சாஸ்திரி தன்னுடைய பெயரை பரிதிமாற் கலைஞர் என்றும் மாற்றிக்கொண்டனர். மனித உரிமை பிரகடனம் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதில் அரசியல மைப்பு சட்டத்தின்படி அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் பரந்த சிந்தனை கொண்ட திரு.வி.க., வள்ளுவர், பாரதியார் போன்ற நம்முடைய முன் னோர்கள் ஆண், பெண் சமம் என்று இலக்கி யங்களில் எழுதியுள்ளனர்.

தமிழ்நாட்டில் சீர்திருத்தம் ஏற்படுவதற்குக் கார ணமாக இருந்தவர் தந்தை பெரியார்தான். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் பெரியாரைப் போற்று வதற்குக் காரணம் அவரின் சமுதாயத் தொண்டுதான்.

எனவே, தந்தை பெரியாரிடம் திரு.வி.க. தொடர்பு வைத்திருந்தார். இந்தியாவில் மதம் என்று ஒன்று முன்பு இல்லை. ஆரம்ப காலத்தில் ஜாதிகள் இல்லை; பெண்ணடிமை இல்லை என்று தந்தை பெரியாரும், விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் அடிக்கடி கூட்டத்தில் உரையாற்றும் பொழுது சொல்வார்கள்.

திரு.வி.க. பெண்களை பற்றி பல நூல்களை எழுதியுள்ளார். அதில் பெண்களின் பெருமை, சிறப்புகளை கூறியிருக்கிறார். துணிவான, தெளி வான சிந்தனைகள் திரு.வி.க.விடம் இருந்தது. மனிதநேயம் எல்லாவற்றையும் விட பெரியது, ஆனால் உலக அளவில் அதை பார்க்க முடிவ தில்லை. சாதி எனும் குறுகிய வட்டாரத்தில் இருந்து மக்கள் விழித்தெழ வேண்டும். பெண்கள் சமுதாயத் தில் முன்னேற்றம் அடைந்தால் தான் சமுதாயம் வளர்ச்சி அடையும்.

இவ்வாறு நீதிபதி எஸ்.தமிழ்வாணன் பேசினார்.

முன்னாள் நீதிபதி கோகுலகிருஷ்ணன்

சென்னை மணவழகர் மன்றத்தின் காப்பாளர் முன்னாள் தலைமை நீதிபதி டாக்டர் பு.ரா.கோகுல கிருஷ்ணன் அவர்கள் தலைமையுரையாற்றினார்.

அவர் தமதுரையில்:

திரு.வி.க. தமிழுக்காக மட்டுமின்றி, தொழிலாளர் களின் நலனுக்காகவும் பாடுபட்டவர். ஆண், பெண் சமம் என்று உலகிற்கு எடுத்துரைத்தவர் திரு.வி.க. தனி மனித உரிமை, பெண்கள் உரிமை, காதல் போன்றவைகளுக்காக வழக்கறிஞர்களை விட அதிகம் வாதாடியவர். இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் திரு.வி.க. எழுதிய புத்தகங்களில் உள்ள கருத்துக்களையும், தத்துவங்களை பரப்பி னாலே நாடு வளர்ச்சி அடையும். என்றார்.

மணவழகரின் சிறப்புகள்

மணவழகர் திரு.வி.க. அவர்களின் தமிழ்த் தொண்டு, பொதுத்தொண்டு மற்றும் அவரின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில், புறநானூற்றுப் புதையல் என்ற தலைப்பில், சென்னை தொலைக்காட்சி முன்னாள் உதவி இயக்குநர் முனைவர் வெ.நல்லதம்பி சிறப்புரையாற் றினார்.

தமிழ் உள்ளம் தேடி அலைவது என்ற தலைப்பில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., சிறப்புரையாற் றினார்.

பொதுமைப் பொலிவு என்ற தலைப்பில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் அவ்வை நடராசன் சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி

இறுதியாக, நாம் விடுதலை பெறவேண்டும் என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

மணவழகர் மன்றத்தின் துணைச் செயலாளர் சு.கருணாநிதி நன்றி கூற, விழா நிறைவுற்றது.
பங்கேற்றோர்

இவ்விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்ட ளையின் செயலாளர் ஏ.ஆர்.ராமசாமி மற்றும் கல்வியாளர்கள், வழக்குரைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர் பிரச்சினை:


மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க கலைஞர் வேண்டுகோள்!

சென்னை, ஜூலை 12- இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப் படுவதும் நின்றபாடில்லையே என தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (12.7.2013) முரசொலியில் எழுதியுள்ள கேள்வி - பதில்கள் பகுதியில் கூறியிருப்ப தாவது:

கேள்வி: மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் எத்தனையோ வேண்டுகோள் விடுத்த பிறகும், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் நின்றபாடில்லையே?

கலைஞர்: தமிழக மீனவர்கள் இவ்வாறு இலங்கைக் கடற்படையினரால் கடத்தப்படுவதும், தாக்கப்படுவதும் கடந்த பல ஆண்டு காலமாகத் தொடர்கதையாக நீடித்துக் கொண்டே வருகிறது. தொடர்கதைகளுக்குக்கூட முடிவு உண்டு. ஆனால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் நின்றபாடில்லை. இராமேஸ் வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் 29.11.2011 முதல் இலங்கை நீதித் துறைக் காவலிலே கைதிகளாக இருந்து வருகிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டுமென்று வைக்கப் பட்ட கோரிக்கைகள் நிறைவேறவில்லை. கடந்த 5.6.2013 அன்று கைது செய்யப்பட்ட 49 மீனவர்கள், ஒரு மாதம் இலங்கையிலே சிறையிலே வைக்கப்பட்ட பிறகு 2.7.2013 அன்று 24 மீனவர்களும், 3.7.2013 அன்று 25 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 15.6.2013 அன்று கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் இலங்கைச் சிறையிலே இன்னமும் இருந்து வருகிறார்கள். தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் இதுபற்றி மத்திய அரசின் கவனத்திற்கு தொடர்ந்து கடிதம் மூலமாக எழுதிக் கொண்டே இருக்கிறார். ஆனால் உறுதியாக இதுவரை எதுவும் சொல்லப் படவும் இல்லை. ஒவ்வொரு முறையும் மீனவர்கள் இவ் வாறு கைது செய்யப்படும் போதெல்லாம், தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் அறிக்கைகளை வெளியிடுவதும், தமிழக அரசின் சார்பில் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும் எந்த விளைவையும் இலங்கை அரசிடம் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. எனவே மத்திய அரசு உறுதியானதொரு நடவடிக் கையை, தமிழகத்தின் மீனவர்கள் பிரச்சினை ஒட்டுமொத்தமாகத் தீருகின்ற வகையில் உடனடியாக எடுக்க வேண்டுமென்று மீண்டும் ஒருமுறை மத்திய அரசினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

ராவணன் said...

மற்றவர்களின் பதில் இங்கே வராது என்று தெளிவாக கூறிவிட்டு பதிவுகள் எழுதலாம்.

உன்னைப் போன்றவர்கள் பெரியாரைப் பற்றி எழுதுவது பெரியாருக்கு இழுக்கு.

ராவணன் said...

ஓம் என்றால் உனக்குத் தெரியுமா? தமிழின் பெருமை உனக்குப் புரியுமா?

ஓம் என்றால் தமிழில் ஒற்றுமை...கூட்டுறவு.

செய்வோம்...பேசுவோம்...பாடுவோம்..இருப்போம்...காண்போம்...இசைப்போம்...என்று தமிழில் இருந்து சுட்ட அந்த ஓம் பிராமணர்களின் வாயில் வேறு மாதிரி வாந்தியாக வந்துவிட்டது. பிராமணர்கள் எடுத்த வாந்தியை நீயும் எடுத்தால் நீயும் பிராமண இனமே.

தமிழ் ஓவியா said...


ஜாதிக் கலவரம் யாருக்கு லாபம்?


ஜாதி கலவரம் இருந்தால் தான் ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினருடன் மோதுவார்கள். அதனால் பலர் செத்து மடிவார்கள். செத்தவர் களின் வீட்டில் காரியம், தெவசம், திதி போன்ற வையும் காலமெல்லாம் நடத்திக் கொள்ளலாம் என்பதற்காகவே ஜாதி ஆரியர்களால் ஏற்படுத்தப் பட்டது.

மேலும் இல்லாத ஒன்றை இருப்பதாகவும் அது கடவுள் உன்னை காப்பாற்றுவார். அதற்கு ஆறுகால பூஜை நடத்தினால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்று கோயிலும் வீடும் கட்டவைத்து குடியேறி நீ கருவறைக்குள் நுழைந்தால் கடவுள் தீட்டாகிவிடும் என்று பயத்தையும், பக்தியையும் ஊட்டிவிட்டார்கள்.

பிறந்த குழந்தை முதல் தொட்டிலில் போடுவது பெயர் சூட்டுவது, பூணூல் போடுவது, பள்ளிக்கு செல்வது, கல்யாணம், சாவுவரை மந்திரம் தந்திரத்தால் மக்களை மறைமுகமாக தெரியாத பாஷையில் திட்டி, பணம், பொருள் ஈட்டவே ஜாதி பிரிவினைகளையும், கல்யாணம், கருமாதிகளை உண்டாக்கி கடவுள் கற்பனைகளை ஏற்படுத்தி பிழைக்கிறார்கள்.
கல்யாண மந்திரம்

கல்யாணம் ஆகும் மணப்பெண் முதலாவதாக சோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாக கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள் மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்தாள், நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்துக்கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள்.

சிரார்த்த மந்திரம்

சீரார்த்த மந்திரம் என்று சொல்வது யன்மே மாதா பிரலுவோபா சரதிஅன்று விரதா என்கிற மந்திரத்தின் விளக்கத்தைத் சுவாமி சிவானந்த சரசுவதி ஞான சூரியனில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார்.

தகப்பன் செத்த பிறகு அவருக்காக அவன் செய்யும் கருமாதி திதி காலங்களில் கொல்லப்படும் மந்திரமானது. எனது தாயானவள் சந்தேகத்திற்கு உரியவள். தன் கணவனுக்கு உண்மை யாக நடக்காதவள், மற்றவரிடம் உடல் தொடர்பு வைத்திருந்தவள் என்று நம் தாயை விபச்சாரி என்று கூறி பொருள், பணம் பெற்று வருகிறது ஒரு கூட்டம். இந்த மந்திரங்களை கேட்டு மகிழும் தமிழினமே பெரியார் எழுதிய சுயமரியாதைத் திருமணம் ஏன்? என்கிற புத்தகத்தை படித்து பகுத்தறிவு கொள்ளுங்கள்.

- வணங்காமுடி

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர் நிலை


பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும் அவன் நீதி செலுத்தலாம்.
சூத்திரன் ஒருபோதும் நீதி செலுத்தலாகாது.

சூத்திரர்கள் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமையுடையதா யிருக்கும்.

சூத்திரனாகவும், மிலேச்சனாக வும் பன்றியாகவும் பிறப்பது தமோகுணத்தின் கதி
ஸ்திரீகள் புணர்ச்சி விஷயத் திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை

நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனை சத்தியமாகச் சொல்லச் சொல்ல வேண்டும்.

(குடிஅரசு தொகுதி பக்கம் 122)

_- க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


சொல்லில் புதைந்துள்ள கதை


இலத்தீன் மொழியில் சப்ரோசா (SUBROSA) என்ற சொல் ஒன்று உள்ளது. எழுத்தில் வழக்கமாக பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. இதன் நேரிடைப் பொருள் ரோஜாவின் கீழ் என்பதாகும். ஆனால் நடைமுறைப் பயன்பாட்டில், மறைவாக, தனியாக (PRIVATELY)
பொருள்படும் முறையில் கையாளப்படுகிறது. இந்த சொல்லின் பின்னணியில் உள்ள கதை. கிரேக்க நாட்டு பழங்கதையின்படி காதலின் பெண் கடவுள் (கல்விக்குக் கடவுள் சரஸ்வதி என்று கூறி வைத்துள்ளது போல்) அபரோடைட். அவள் தன் மகன் எரோசுக்கு ஒரு அழகான ரோஜா மலரைக் கொடுத்தாள். அந்த மகன் எரோஸ் காதலின் கடவுள் என்று அறியப்பட்டவன். அவன் தனக்கு கொடுக்கப்பட்ட ரோஜா மலரை, மவுனக்கடவுளுக்கு (ஹர்போகிரேடு) கொடுத்தான். ஏன்கொடுத்தான் என்றால், தன்னுடைய தாயின் மற்ற கடவுள்களுடனான விவேகமற்ற நடத்தையைப் பற்றி பேசாமல் மறைத்து வைப்பதற்காக,

காலப்போக்கில் ரோஜாமலர், மவுனம், ரகசியம் குறிக்கும் அடையாளமாக (Emblem) அமைந்துவிட்டது. இடைக்கால நூற்றாண்டில் முக்கிய அலுவல் கூட்ட அரங்கில் ஒரு ரோஜா மலரைத் தொங்க வைக்கும் பழக்கம் வந்தது. அந்த கூட்டத்தில் உள்ள அனைவரும், ரகசியம் காக்கும் உறுதிமொழியைக் கடைப்பிடிக்க வேண்டியவர்கள் என்பதைச் சுட்டிகாட்டுவதற்காக (சப்ரோசா). அவர்கள் அனைவரும் மவுனக் கடவுள் போல, கூட்டத்தில் பார்த்ததையும், கேட்டதையும், மவுனம் காக்க வேண்டும் என்பதாகும்.

நன்றி: தி இந்து - 7.5.2013 (Know your english)

- மு.வி.சோமசுந்தரம்

தமிழ் ஓவியா said...


இது தான் இந்தியா


உலகில் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அரசின் கொள்கைகள் முறையாக நடைமுறைப் படுத்தப்படாததால் குறைவான எடை கொண்ட குழந்தைகள் எண்ணிக்கையில் நாற்பது விழுக்காட்டினர் இந்தியாவில் உள்ளனர். வளரும் பொருளாதார வல்லரசு என்று அழைக்கப்படும் இந்தியா சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகிய அம்சங்களில் பிரேசில், நேபாளம், வங்கதேசம், சீனா ஆகியவற்றை விட பின்தங்கியுள்ளது என்று கனடாவைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான மைக்ரோநியூட்ரியண்ட் இனிஷியேடிவ் அமைப்பின் தலைவரான எம்.ஜி. வெங்கடேஷ் மன்னார் கூறியுள்ளார்.

இந்தியாவில் இவற்றுக்குரிய அனைத்து திட்டங்களும் உள்ளன. அதற்குரிய கொள்கைகளும் வகுக்கப்பட் டுள்ளன. ஆனால் அவை முறையாக நடைமுறைப்படுத்தப் படவில்லை. இதில் மத்திய சுகாதாரம், மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம், கல்வி, கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் ஊடாடி வருகின்றன. ஆயினும் இவற்றை முன்னின்று நடத்தும் பொறுப்பாளர்கள் இல்லை. செயல்களுக்கும், நடவடிக் கைகளுக்கும் விளக்கம் கூறும் ஆட்களும் இல்லை என்று அந்த அமைப்பு கூறுகிறது. மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பும் இல்லை. 2005ஆம் ஆண்டு முதல் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நடத்தப்படவில்லை என்பது திகைப்பளிக்கும் விஷயமாகும். பழைய புள்ளிவிவரங்கள் மட்டும் கையில் உள்ளதால் இவ்விஷயங்களில் நாம் முன்னேறியிருக்கிறோமா என்று அறியமுடியவில்லை என்று அமைப்பின் ஆய்வு கூறுகிறது. இந்திய நாடு தனது முன்னோடிகளை தேடி, அலைய வேண் டியதில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குரிய கொள்கைகளும், திட்டங்களும், ஆதாரங்களும் அதனிடம் உள்ளன. எனவே அரசு நடவடிக்கை களை தொடங்க வேண்டியது மட்டுமே பாக்கி என்று மன்னார் சொல்கிறார். யுனிசெப் தயாரித்த 2013-ஆம் ஆண்டில் உலக குழந்தைகள் அறிக்கையில் அய்ந்து வயதுக்குட்பட்டவர்கள் இறப்பு விகிதத்தில் இந்திய 49-ஆவது இடத்தில் இருப்பதாக கூறுகிறது. அதே வேளையில் நேபாளம், வங்கதேசம் ஆகியவை முறையே 57, 60-ஆம் இடங்களில் உள்ளன. இந்தியாவில் உயிருடன் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளுக்கு நடுவில் 32 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன என்று அந்த அறிக்கை சொல்கிறது. அதே வேளையில் பிரேசிலில் அந்த விகிதாசாரம் 10 ஆகவும் வங்கதேசத்தில் 26 ஆகவும் உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. இந்திவில் பிறந்த சிசுக்கள் இறப்பு விகிதம் 1990-இல் 81 விழுக்காடாக இருந்தது. 2011-இல் இது 47 ஆக குறைந்துள்ளது இதே காலகட் டத்தில் இந்த விகிதம் பிரேசிலில் 49-இல் இருந்து 14 ஆக குறைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக ஆண்டுக்கு எட்டு விழுக்காடாக உள்ளது. இந்த வளர்ச்சி மத்திய தர வர்க்கத்தின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்தியுள்ளது. பிரிட் டனை விட அதிகமாக கோடீஸ்வரர் கள் உருவாகியுள்ளனர். அதே வேளை யில் குழந்தைகளுக்கு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் இரண்டு லட்சம் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மடிகின்றனர். அசுத்தமான தண்ணீர், முறையான துப்புரவு வசதிகள் இல் லாமை ஆகிய காரணங்களால் உரு வாகும் வயிற்றுப்போக்கு வியாதியால் இவை மடிகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது, நீரால் உருவாகும் வியாதிகள் உற்பத்தியையும் பாதிக் கின்றன, ஆண்டு தோறும் 7.3 கோடி வேலைநாட்கள் இதனால் இழப்புக்கு ஆளாகின்றன.

சுகாதாரமற்ற சூழலில் வாழும் குழந்தைகள் கிருமிகளையும் உள் வாங்கிக் கொள்கிறார்கள். இவை குழந்தைகளின் குடல், இரைப்பை போன்ற பகுதிகளில் குடியேறுகின்றன. குடல் பகுதிகளில் உள்ள பாதுகாப்பு வளையங்களால் இவை உருவாக்கும் அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை. இக்கிருமிகள் ஊட்டச்சத்துகள் குடல் சுவர்கள் மூலமாக ரத்தத்துக்குள் உறிஞ்சப்படுவதை தடுத்து விடுகின்றன. எனவே ஊட்டச்சத்து எவ்வளவு கொடுத்தாலும் அது குழந்தைகள் மத்தியில் பிரதிபலிப்பதில்லை என்று பில் அண்ட மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் நடத்திய ஆய்வு கூறு கிறது. இந்த நிலைமையை தூய்மையான குடிநீர் வழங்குவதாலும், ஆரோக்கிய மான இலவச உணவை வழங்குவது மூலம் அகற்ற முடியும். இந்தியாவில் நாள்தோறும் 600 கோடி காலந் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. அதில் 26 விழுக்காடு மட்டுமே சுத்திகரிக் கப்படுகிறது. இந்தியாவில் போதுமான கழிப்பறை வசதிகள், துப்புரவு வசதிகள் இல்லை என்றும் அறிக்கை சுட்டிக் காட்டுகின்றன.

கடந்த அறுபது ஆண்டுகளில் குடிநீர், துப்புரவு வசதிகள் திட்டங் களுக்காக இந்தியா சுமார் 2800 கோடி டாலர்களை செலவிட்டுள்ளது. ஆயினும் அதிகரிக்கும் மக்கள் தொகையின் தேவைகளை ஈடுகட்டுவது பெரும் போராட்டமாகவே உள்ளது. அரசின் மெத்தனமும், அதிகாரிகள் - அரசியல்வாதிகள் - மோசடி பேர்வழி களின் கூட்டு இவற்றில் பெரும் தொகையை ஏப்பம் விட்டுள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.

நன்றி: தீக்கதிர் 2.7.2013

தமிழ் ஓவியா said...

நாத்து...

சம்பா நாத்து,
குருவை நாத்து,
கத்திரி நாத்து,
எல்லா நாத்தும்;
மழையில்லாம,
அதைவிட
காவிரியிலே
தண்ணீர் இல்லாம,
காயிது இங்கே
தெரிஞ்சிருந்தும்,
பத்திரிநாத்து; கோதாரிநாத்து...
பக்திப் பயணமாம்.
புத்தி?

- கருவூர் அன்பரசர்

தமிழ் ஓவியா said...


எல்லார் நெஞ்சிலும் பெரியார்!


- சிவகாசி மணியம்

டாக்டர் வரதராஜூலு நாயுடு பெரியார் ஈ.வெ.ராவின் நண்பர் என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். அது தவறு என்று தினமணி வைத்தியநாதய்யர் ஒரு நிகழ்ச்சியில் திருவாய் மலர்ந்து தொலைக்க, விடுதலை (26.5.2013) ஞாயிறு மலரில் நம் மின்சாரத்திடம் சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டார். அடுக்கடுக்கான ஆதார அறிவாயு தங் களால் அவாளின் பிதற்றலை அக்கு வேறு ஆணிவேராக கழற்றி எறிந்து விட்டார். மிகச்சரியான நெற்றியடி! டாக்டர் நாயுடு தந்தை பெரியாரின் நம்பிக்கைக்குரிய நண்பரே என்பது அவாளுக்கு புரிந்தால் சரி.

வரலாற்றுப் பதிவுகளைத் திரிபு வாதம் செய்து புரட்டிப் போடத் துடிக்கும் புளுகர்களிடத்திலும் பெரியார் புகுந்து குத்தலும் குடைச்சலும் கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்ப தற்கு இது ஒரு சான்று. எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் அவர் எதைப்பற்றி எழுதினாலும் பேசினா லும் பெரியாரை அலட்சியப்படுத்தி விட்டு எளிதில் கடந்து போய் விட முடியாது. தினமலர் - வாரமலர் (26.5.2013) அதைத்தான் சொல்கிறது.

மாடர்ன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம் பற்றிய தொடரில் ஒரு பழைய சம்ப வத்தை கட்டுரையாளர் கூறக் கேட்போம்.

ஆரவல்லி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயம்... டி.ஆர்.சுந் தரத்திற்கு உதவியாக இருந்தவர் கோ.தா.சண்முகசுந்தரம் எனும் மேதாவி. ஒரு காட்சியில் ஆரவல்லியை வெல்வ தற்காக பீமன் தன் நண்பனுடன் அந்த நகருக்கு வந்து ஒரு கோயிலில் படுத் திருக்கிறான். அப்போது அங்கே வந்த பொதுமக்களில் சிலர் ஆரவல்லியின் சூரத்தனத்தைப் பற்றி புகழ்ந்து இவளை வெற்றி கொள்ள யாருமே வரமாட் டார்களா? என்று பேசிக் கொண்டனர். இதைக்கேட்டுக் கொண்டே எழுந்த பீமனுக்கு அடங்காத கோபம் வருகிறது. அவளை நான் வெற்றி கொண்டே தீருவேன் என்று சபதம் போட்டு அறைகூவல் விடுத்தபின் கையிலிருந்த கதையை பலமாக வீசுவான். அப்போது அருகிலிருந்த ஒரு விநாயகர்சிலை கதை பட்டு உடைந்து விடுகிறது. காட்சி நன்றாக அமைந்து விட்டது என்று எல்லோருக்கும் திருப்தி.

படம் முடிவடைந்துவிட்டால் அதைச் சிலருக்கு போட்டுக் காட்டுவது ஸ்டுடியோவின் வாடிக்கை. ஸ்டுடியோ தொழிலாளர்கள் உள்பட சில வெளி யுலக பிரபலங்களும் அங்கே அழைக்கப் படுவதுண்டு. இவர்களில் சில முக்கிய நபர்கள் தங்களது விமர்சனத்தை எழுதிக்கொடுப்பர்.

ஆரவல்லி படம் பார்த்த குழுவின ருள் ஒரு முக்கிய நபர் எழுதிய விமர் சனம் டி.ஆர்.சுந்தரத்தின் கவனத்திற்குக் கொண்டு போகப்பட்டது. அவர் அதைப் படித்து பார்த்தார். பெரியார் ஈ.வெ.ரா.விநாயகர் சிலைகளை உடைத்துக் கொண்டுவரும் இந்தக்கால கட்டத்தில், பீமனின் கதைபட்டு ஒரு பிள்ளையார் சிலை உடைவது பெரியார் ஈ.வெ.ராவின் கொள்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. அதனால் இப்படிப்பட்ட ஒரு காட்சி தேவை இல்லை என்பது என் கருத்து. ஏனெனில் மக்களின் விமர்சனத்திற்கு நிச்சயம் இது தப்பாது. பீமன் தன் கதையை வீசுவதோடு நிறுத்திக் கொண்டால் போதும்.. என்று எழுதியிருந்தார் அவர். சுந்தரத்திற்கும் இது சரி என்றே பட்டது. அந்தக் காட்சியை படத்திலிருந்து வெட்டி விடச் சொன்னார். ஆனால் அவரின் உதவியாளராக இருந்த நபருக்கு அதை நீக்க விருப்பமில்லை, பிடிவாதமாக விவாதித்தார், பயன் இல்லை. அந்த நபரோ தன் உத்தியோகத்தை ராஜி னாமா செய்யப்போவதாக அறிவித்தார். அன்றே வெளியேறிவிட்டார்.
அப்படி போனவர் மேதாவி என்று அழைக்கப்பட்ட பிரபல நாவலாசிரியர் கோ.தா.சண்முக சுந்தரம். சுந்தரத்திடம் வில்லங்க விமர்சனத்தை எழுதி நீட்டியவர் அவாளேதான்! எழுத்தாளர் மகரிஷி! (இதுதான் பார்ப்பனியம்!)

கட்டுரையாளர் ரா.வேங்கட சாமிக்கு நன்றி. படித்தாலே புரிந்து போகும். பதவுரை, பொழிப்புரை தேவை இல்லை.

இல்லாத இடமே இல்லை என் கிறார்கள் இல்லாத கடவுளை! ஆனால் பகுத்தறிவாளர்கள், சுயமரி யாதைக்காரர்களிடம் மட்டுமல்ல. குறைமதியாளர்கள், குருட்டு நம்பிக் கையாளர்கள் நெஞ்சங்களையும் பெரியார் ஆக்கிரமித்திருக்கிறார் என்பதே உண்மை.

தமிழ் ஓவியா said...


சின்னஞ் சிறுகதை


இப்படியும் நடக்கலாம்!

காவல் நிலையத்திற்கு வழக்கு ஒன்று வந்தது. பக்கத்து டீக் கடைக்காரர்மீது புகார் கொடுத் தவர் ஒரு மருந்துக் கடைக்காரர்.

குறிப்பிட்ட பாடல் ஒன்றை தனது டீக் கடையில் அடிக்கடி ஒலிபரப்பி தனது வாடிக்கை யாளர்களின் மனதை திசை திருப்புவதாகவும் இதனால் தமது மருந்துக் கடை, பேரிழப்பைச் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் குற்றச்சாட்டு. மனுதாரருக்கு ஆதரவாக சில மருத்துவர்களும் தொலைபேசியில் குரல் கொடுத்தனர்.

காவல் நிலையத்துக்கு டீக் கடைக்காரர் வரவழைக்கப்பட்டார்.

அவரோட வியாபாரத்தை பாதிக்கிற பாட்டுனு சொல்றாரே.. அது என்ன பாட்டு? என்று கேட்டார் இன்ஸ்பெக்டர். டீக்கடைக்காரர் கொஞ்சமும் தாமதிக்கவில்லை. தலைக்கு மேலே சுழலும் விசிறியை அண்ணாந்து பார்த்தபடி உரத்த குரலெடுத்து கந்தன் திருநீறு அணிந்தால் கண்ட பிணி ஓடி விடும் என்று பாட காவல் நிலை யமே வெடிச் சிரிப்பில் குலுங்கிற்று.

- சிவகாசிமணியம்

தமிழ் ஓவியா said...

தெரியுமா உங்களுக்கு?

ஏழை களின் ஆப்பிள் கொய்யா! இது வெறும் உணவு மட்டுமல்ல மருந்துமாகும்.

அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ் அல்ல. அவருக்கு 75 ஆண்டுகளுக்கு முன் அதனைக் கண்டுபிடித்தவர். அட்மிரல்ஜங் என்ற சீன நாட்டின் கடற்படைத் தளபதி (ஆண்டு 1421).

தமிழ் ஓவியா said...


ஏசி.யா?


ஏசி.யில் அதிக நேரம் இருப்பது மக்களைக் கைதிகள் ஆக்கிவிடுகிறது. ஏசியின் கைதி ஆனவர்கள் வெளியே செல்ல விரும்புவதேயில்லை என்கிறார் எஸ்.கே.சாப்ரா. இவர் டில்லியில் உள்ள வல்லபாய் படேல் மார்பக நோய் நிறுவனத்தில் இதய-சுவாச நோய்த் துறையின் தலைவராகப் பணியாற்று கிறார். பிள்ளைகளைச் சேர்க்க வருப வர்கள் வகுப்பறையில் ஏசி இருக்கிறதா என்று கேட்கிறார்கள். போட்டிதான் இன்றைய உலகம். அதனால் முழுமையும் குளிர்பதனம் செய்யப்பட்ட பள்ளிகளுக்குத் தனி மவுசு இருக்கிறது. என்கிறார் ரிச்சா. இவர் இந்தியாவின் மிகப்பெரும் மழலையர் பள்ளி சங்கிலித் தொடரான யூரோ கிட்சின் ஆலோசகராக உள்ளார். இந்தியாவில் கடுங்கோடையின்போது மட்டும் ஏசியைப் பயன்படுத்தினால் போதும் என்று சில கட்டுமான நிபுணர்கள் சொல்கிறார்கள். நல்ல காற்றோட்டமுள்ள அறையில், நல்ல வேகத் தில் ஓடும் ஒரு மின் விசிறி இருந்தால் ஆண் டின் பிற மாதங்களில் போதுமான வசதி கிடைக்கும் என்று அவர்கள் சொல்கிறார்கள். மெல்லிய துணிகள் அணிவது, மிதமாகச் சாப்பிடு வது, மாலையில் சற்று நேரம் தூங்குவது போன்ற பாரம்பரிய முறைகள் தற்போது நடப்பில் இல்லை. நவீன மோகம் மரபான அறிவை காலிசெய்து விட்டது.

வெப்ப நிலை மாறுபாட்டுக்கு ஆளாவது உடலின் தாங் கும் திறனை அதிகப்படுத் துகிறது என்று நவீன மருத்துவம் சொல்கிறது. ஆனால் செயற்கையான குளிர்விப்பின் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் இருப் பதையே இன்று மனிதர் கள் விரும்புகிறார்கள் என்று சொல்கிறார் கட்டு மான நிபுணர் கவுரவ் சோரி, இன்று கோட்டு, சூட், பேண்ட் அணிகி றார்கள் அல்லது இறுக்க மான ஜீன்ஸ் அணிகிறார்கள். உடல் வெப்பமாக இருக்கிறது என்று புலம்பிக் கொண்டு ஏசியை 19 டிகிரியில் ஓட விடுகிறார்கள். வெள்ளை நிற மெல்லிய குர்தா அணிந்தால் இந்தத் தேவையே இல்லை என்ற அவர் சுட்டிக் காட்டுகிறார்.

தமிழ் ஓவியா said...


காமராசரின் கணக்கு


3ஆம் வகுப்பில் ஆசிரியர் கணக்கு சொல்லித் தருகையில் கூட்டல் முறை தெரிய ஒரு கணக்கு சொன்னார். தாய் கடைக்குப் போய் முட்டை வாங்குவதாகவும், அப்பாவுக்கு 1, அம்மாவுக்கு 1. மகனுக்கு 1. மகளுக்கு 1 ஆக மொத்தம் எத்தனை முட்டைகள் வாங்க வேண்டும் என கேட்க, அனைவரும் அவரவர் சிலேட்டில் 4 என விடை எழுதினர். ஒருவன் மட்டும் அருகிலுள்ள சிலேட்டுகளை பார்த்தும் 3 என எழுதினான்.

ஏன் தம்பி, பக்கத்திலே பார்த்தும் தப்பா எழுதியிருக்கே? என ஆசிரியர் கேட்க, அவன் எனக்குத்தான் அப்பா உயிரோடு இல்லையே அய்யா எனச் சொன்னான். அந்த மாணவன்தான் பின்னாளில் கர்மவீரர் காமராஜர் எனப் போற்றப்படுபவரானார்.

நன்றி: திருக்குறிப்புத் தொண்டர்

தமிழ் ஓவியா said...


தடையோ தடை!1977 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட அனால்ஜிர் மாத்திரையை இந்தியா இப்பொழுதுதான் தடை செய்துள்ளது.

பியாக்லிடாசோஸ் எனும் மாத்திரை நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் மிக முக்கியமான மாத்திரை 30 லட்சம் நோயாளிகள் இந்தியாவில் பயன்படுத்தும் இந்த மாத்திரையை பிரான்ஸ் 2011ஆம் ஆண்டிலேயே தடை செய்து விட்டது. இந்தியாவோ இப்பொழுதுதான் தடை செய்துள்ளது. இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.600 கோடி விற்பனையானது என்ற தகவல் எவ்வளவுக் கொடுமையானது. இதில் என்ன கொடுமை தெரியுமா?

2011இல் பிரான்சு தடை செய்தது. அதே ஆண்டில்தான் இந்தியா அம்மாத்திரைக்குக் கதவு திறந்து விட்டது

தமிழ் ஓவியா said...

ஜாதி ஒழிப்பு இணையர்க்குப் பாதுகாப்பு தேவை! சேலத்தில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்


அர்ச்சகர் பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும்
ஜாதி ஒழிப்பு இணையர்க்குப் பாதுகாப்பு தேவை!
சேலத்தில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

சேலம், ஜூலை 13- அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதில் அரசு தீர்வு காண வேண்டும்; ஜாதி ஒழிப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு உரிய பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தைப் பொறுத்தவரையிலே முதற்கட்டம் போராட்டம் ஆர்ப்பாட்டமாக நடைபெறும் முக்கியமான பெருநகரங்களில் கழக மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும். தமிழ் நாடு முழுக்க ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதற்கட்டமாக போராட்டம் நடைபெறும்.

இரண்டாவது கட்டமாக, ஒத்தக் கருத்துள்ளவர் களை அழைத்து கருத்தரங்கம், மாநாடுகளை நடத்தவுள்ளோம்.

மூன்றாவது கட்டமாக, அதுவரை நீடிக்காது என்று நினைக்கிறேன்; அதற்குள்ளே இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை; உச்சநீதிமன்றம் இரண்டு வழக்குகளில் ஏற்கெனவே சாதகமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

உச்சநீதிமன்றம் இதற்கு மாற்றுக் கருத்தைத் தருவதற்கு வாய்ப்பில்லை. எந்தெந்த எதிர்ப்புகளை எல்லாம் மனுதாரர்கள் சொல்லி யிருக்கிறார்களோ, ஏற்கெனவே போட்ட வழக்கு களில் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது உச்சநீதிமன்றத் தில். இப்போது ஏன் தமிழக அரசு குறுக்கே நிற்கிறது என்றால், தமிழக அரசு சார்பாக, ஒரு அபிடவிட் போட்டதால்தான் இப்போது முட்டுக்கட்டை; அதை அவர் நீக்கிவிட்டாலே இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும்.

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பிரச்சினையில், தமிழக அரசு வெளியில் சுமூகமாகத் தீர்த்துக் கொள்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.


கிராமக் கோவில் பூசாரிகளாக இப்போது பயிற்சி பெற்றவர்களை நியமித்துவிடக்கூடாது. 69 சதவிகித இட ஒதுக்கீடுபடி பயிற்சி பெற்றவர்களான 206 பேர்களுக்கு பணி நியமனம் வேண்டும்.
அதோடு, ஒவ்வொரு ஆண்டும் சட்டக்கல்லூரி யிலே, மருத்துவக் கல்லூரியிலே அரசாங்கத்தால் நடத்தப்படுகிறதோ, அதேபோல், அர்ச்சகர் பயிற்சி யும் 69 சதவிகித அடிப்படையில் நடத்தப் பட வேண்டும். தற்போது நிறுத்தப்பட்டுள்ளது; அது மீண்டும் தொடங்கப்படவேண்டும்.

தருமபுரி நடவடிக்கைள் பற்றி திராவிடர் கழகத் தலைவர் கூறியதாவது:

தமிழ் ஓவியா said...


நீதியரசர், நீதி விசாரணை என்பதை தமிழக அரசு போட்டிருக்கிறது. அது வரவேற்கத்தக்கது.

இதில் உண்மைகள் வெளிவரவேண்டும்; ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு, காதல் திருமணம் செய்துகொண்டவர்களுக்குப் பாது காப்பு இருக்கவேண்டும். தனி மனிதர்களுக்கே பாதுகாப்பு தேவை; சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக இதனைப் பார்க்காமல், தமிழக அரசு இதை ஒரு சமூகப் பிரச்சினையாக, நீண்ட கால பிரச்சினையாக பார்த்து, அதற்குத் தேவையான செயல்களைச் செய்யவேண்டும்.

சட்டபூர்வமாகப் பார்த்தீர்களேயானால், அரசியல் சமத்துவம் வந்தாயிற்று; ஆனால், சமூக சமத்துவம் வந்திருக்கிறதா? இது மிகப்பெரிய வேறுபாடாகும். இதைத்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அரசியல் சட்டம் அமலான அன்றைக்கே சொன்னார். ஒருவருக்கு ஒரு ஓட்டு வித்தியாசம் இல்லாமல் வந்துவிடும்; ஜாதி அடிப் படை இருக்காது; ஆனால், ஜாதி அதே நிலையில் இருக்கும். அதற்கு மாற்று செய்தால் ஒழிய, சமூக சமத்துவம் வராது என்றார்.

எனவே, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பினை தரவேண்டும்.

தலைவர்களுக்கு 144 தடை உத்தரவுபற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழர் தலைவர் அளித்த பதில் வருமாறு:

பொதுவாகவே, தமிழ்நாட்டில் இதுவரை தலைவர்கள் யாருக்கும் உள்ளே நுழையக்கூடாது என்று தடை உத்தரவு போட்டது கிடையாது. அப்படி போடவேண்டிய அவசியம் இல்லை. தலைவர்களின் பேச்சால் ஏதாவது தவறு நடந்தால், அவர்கள்மீது வழக்கு போடலாமே தவிர, அவர்கள் உள்ளேயே வரக்கூடாது என்று தடை உத்தரவு போடுவது ஏற்புடையதல்ல.

தமிழில் வாதாடக்கூடாது என்று வழக்கை தள்ளுபடி செய்திருப்பதைப்பற்றி கூறியதாவது:

சட்டத்தை மாற்றவேண்டும். கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருக்கும்பொழுதுகூட, குடியரசுத் தலைவர்வரை போய் அது நிலுவையில் இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் ஏற்கெனவே வழக்கு போட்டு அங்கே வாதம் செய்துகொண்டிருக்கிறார்கள். அரசியல் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மொழி என்பதால், பெரும்பாலான வட மாநிலங்களில் இந்தியில் வாதாடிக் கொண்டிருக்கிறார்கள். நீதிபதி சொன்னதில் தவறில்லை; மத்திய அரசில் சட்டத் திருத்தம் வரவேண்டும். இது நீண்ட காலப் போராட் டமாக இருக்கிறது. ஆட்சி மொழியாக அந்தந்த பகுதியில் இருக்கின்ற மொழிகள் வரவேண்டும். குறிப்பாக தமிழ் செம்மொழி போன்ற மொழி களுக்கு இந்த வாய்ப்பில்லை என்பது வருந்தப்பட வேண்டியதும், வெட்கப்படக்கூடிய ஒரு செய்தி யாகும். எனவே, அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவரவேண்டும். அதை உடனடியாக மத்திய அரசு இதில் கவனம் செலுத்தவேண்டும். இந்தப் பிரச்சினை குடியரசுத் தலைவர் வரை சென்று நிலுவையில் இருக்கிறது. அரசியல் சட்டம் மாற்றப் படவேண்டும்; திருத்தப்படவேண்டும்.

தமிழ் ஓவியா said...


புத்தம், மதமாக்கப்பட்டதால் ஏற்பட்ட விபரீதம்!


உலகில் உள்ள புகழ் பெற்ற பாரம்பரியச் சின்னங்களுள்(World Heritage Site) முக்கிய மானது பீகார் மாநிலத்தில் புத்தகயாவில் உள்ள மகாபோதி விகார்!

7.7.2013 அதிகாலை அது, குண்டு வீச்சுக்கு இலக்கானது என்கிற செய்தி அனைவரையும் அதிர்ச்சி வீச்சுக்கு ஆளாக்கி விட்டது.

இந்த வன்முறை கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். உலகில் மிக உயர்ந்த சீலங்களை வாரி வழங்கிய கவுதமப் புத்தரின் நினைவுக் குறிப்புக்கான இடத்தைத் தாக்கியவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இதன் பின்னணியில் மதவாதம் இருக் கிறதா? அரசியல் இருக்கிறதா? என்ற சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

வழக்கம் போல தீவிரவாத இஸ்லாமிய அமைப்புதான் இதன் பின்னணியில் இருக் கிறது என்று ஒரு பக்கம் செய்திப் பரப்பல்;

மியான்மாவில் முஸ்லீம்களை பவுத்த மதத்தினர் தாக்கினார்கள். அதன் எதிரொ லியே இந்தத் துயர நிகழ்வு என்று விளக்கம்;

இன்னொரு பக்கம் பீகாரில் அய்க்கிய ஜனதா தளம் ஆட்சி நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த நிதிஷ்குமார் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி என்று அறிவிக்கப்பட்டதால், அதனை ஏற்றுக் கொள்ளாமல் கூட்டணியிலிருந்து வெளியேறி னார். அதற்குப் பதிலடியே பீகாரில் இந்த வன்முறை - பின்னணியில் மோடியின் கை இருக்கிறது என்று இன்னொரு தரப்பின் குற்றச்சாற்று!

இதற்கிடையே மூன்றாவது சிந்தனை ஒன்றுண்டு; மானுடத்தின் நல்வாழ்வுக்கு அறநெறிப் பண்புகளை - பஞ்ச சீலங்களை வழங்கிய பகுத்தறிவுச் சிந்தனையாளர் கவுதம புத்தர். அவர் நிறுவியது மதமல்ல - ஒரு நெறி! அதனை மதமாக்கி வெறியூட்டிய காரணத் தால்தான் இலங்கையில் சிங்கள வெறித்தனம் கொம்பு முளைத்து, ஈழத் தமிழர்களை வேட்டை யாடித் தீர்த்தது. புத்தர் சிலைகள் தமிழர்களின் ரத்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டன!

யாகம் என்ற பெயரால் உயிர்களைப் பலி கொடுக்கக் கூடாது என்று சொன்னவர் சித்தார்த்தனாகிய புத்தன்!

உயிர்களைக் கொன்று மோட்சம் போக முடியுமென்றால், உன் தகப்பனைக் கொன்று மோட்சம் போகாமல் உம்மைத் தடுத்தது எது? என்ற வினாவை எழுப்பி, சிந்தனையில் புது வெளிச்சத்தை ஏற்படுத்திய புத்தன் சிலை யையே ரத்தத்தால் குளிப்பாட்டிய கொடுமை களை என்னென்று சொல்லுவது!

மனிதனாகிய புத்தனைக் கடவுளாக்கி, மதச் சடங்குகளைத் திணித்து சீரழித்து விட்டனர்.

புத்தரை ஒரு மதத் தலைவராக்கி, பவுத் தத்தை மதமாக்கிய காரணத்தால் உலகில் உள்ள எத்தனையோ மதங்களுள் புத்த மதமும் ஒன்று என்றாகி விட்டது.

முஸ்லிம்கள் - பவுத்தர்கள் மோதல்கள் என்றெல்லாம் செய்திகள் வர ஆரம்பித்து விட்டனவே!

பார்ப்பனர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று புத்தர், மகா விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் என்று கதை கட்டி விட்டனர்.

ஒரு கொள்கையை ஒழிக்க வேண்டுமானால் அதற்கு மதச்சாயம் பூசினால் போதுமே!

தந்தை பெரியார் சிலையை நிறுவும் இடங்களில் எல்லாம் அதன் பீடத்தில் மறக்காமல் கடவுள் மறுப்பு வாசகங்களைப் பொறிப்பதன் நோக்கம் புரிகிறதா?

தமிழ் ஓவியா said...


காலத்துக்கேற்ற...காலத்துக்கேற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனா வான்.
_ (குடிஅரசு,26.1.1936)

தமிழ் ஓவியா said...


இலங்கை அரசமைப்புச் சட்டத் திருத்தம்:


டெசோ கூட்டத்தில் விவாதிக்கப்படும்
கலைஞர் அறிவிப்பு

சென்னை, ஜூலை 13- இலங்கை அரசமைப்புச் சட்டத் திருத்தம் இலங்கை அரசின் நிலைப்பாடு குறித்து 16ஆம் தேதி நடக்கவுள்ள டெசோ கூட்டத்தில் விவாதிக்கப் படும் என்று எழுதியுள்ளார் டெசோ தலைவர் கலைஞர். இதுகுறித்து முர சொலியில் (12.7.2013) எழுதி இருப் பதாவது:

கேள்வி :- அரசியல் சட்டத் திருத் தப்படி அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா கண்டிப்பாகக் கூறியிருப்ப தாக ஒரு செய்தி வந்துள்ளதே?

கலைஞர் :- இலங்கைத் தமிழர் பிரச் சினைக்குத் தீர்வு காண்பதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 1987ஆம் ஆண்டு ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர் களும், இலங்கை அதிபர் ஜெய வர்த்தனே அவர்களும் கையெழுத் திட்ட அந்த உடன்பாட்டின்படி, மாகாணக் கவுன்சில்களுடன் அதிகாரப் பகிர்வு செய்து கொள்ள, வழிவகை செய்யும் வகையில் இலங்கை அரசியல் சட்டத்தின் 13-ஏ பிரிவு திருத்தப்பட்டது. ஆனால் இன்றைய இலங்கை அதிபர் ராஜ பக்சே அரசு அதை நடைமுறைப் படுத்தாமல், அதனை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையை மேற் கொள்வதில் தீவிரமாக இருக்கிறது. இந்தப் பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் சீத்தாராம் யெச்சூரி எழுதிய கடிதத் திற்கு அளித்த பதிலில், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் குறித்த யெச் சூரியின் கருத்துக்களை அறிந்த தாகவும், இதுகுறித்து இலங்கையில் தமிழ் மக்கள் மற்றும் இதர சமூகங் களைச் சேர்ந்த மக்கள் சமமாகவும் சுயமரியாதையுடனும் நடத்தப்படு வதை உறுதி செய்ய முயற்சித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சில நாட்களுக்கு முன் இலங்கைக்குச் சென்றார். அங்கே அவர், இலங்கை அதிபர் ராஜபக்சே, பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சர் பசில் ராஜபக்சே, இராணுவ அமைச்சர் கோத்தபய ராஜபக்சே ஆகியோரி டம் பேசினார். அதன் தொடர்ச்சியாக இலங் கையிலே உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துக் குடி மக்களும் சமத்து வம், சமநீதி, சுயமரியாதையுடன் வாழ வேண்டும்;

இதை இந்தியா உறுதி செய்ய விரும்புகிறது. அந்த வகையில் இலங்கையில் (இனப்பிரச்சினையில்) விரைவான அரசியல் தீர்வு காண்ப தற்கு, 13ஆவது அரசியல் சட்டத் திருத் தத்துக்கும் அப்பால், இந்திய அரசுக் கும், சர்வதேச சமுதாயத்துக்கும் அளித்த வாக்குறுதியினை இலங்கை பின்பற்றி அதிகாரப் பகிர்வு வழங் குவது அவசியம்; இதை இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் சிவசங்கர் மேனன் இந்தியாவின் சார்பில் வலியு றுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மை யாகவும், நம்பத் தகுந்த விதத்திலும் நடத்தப்படும் என நம்புகிறோம். இந்திய மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்தும் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் பேசப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் வன்முறையில் இறங் காமல் மனிதநேய அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது என்று தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரை எந்த ஒப்பந்தத்தையும் உறுதி மொழியையும் காப்பாற்றாத இலங்கை அரசு, சிவசங்கர மேனன் அவர்களிடம் இலங்கை அதிபர் தெரிவித்த உறுதிமொழியை எந்த அளவிற்குக் காப்பாற்றப் போகிறது என்பதுதான் பிரச்சினை.

சிவசங்கர மேனனை தாங்கள் நம்பவில்லை என்று இலங்கைத் தமிழர்கள் கருத்துத் தெரிவித்திருப்ப தாகவும் செய்திகள் வந்துள்ளன. எனவே சிவசங்கர மேனன் கூறுவது உண்மையா? அது உண்மையாக இருந்தாலும், அவருக்கு உறுதிமொழி அளித்த தாகக் கூறப்பட்டிருப்பது உண்மையா? ஏனெனில் அவர்கள் பின்பற்றிய கடந்த கால நடை முறைகள் எதுவும் நம்பகத்தன்மை கொண்டதாக இல்லை.

எனினும் தற்போது அளித்துள்ள உறுதிமொழி களாவது காப்பாற்றப்படுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதுகுறித்து சென்னையில் 16ஆம் தேதியன்று நடைபெறவுள்ள டெசோ கூட்டத்தில் விரிவாக விவா திக்கப்படும்.

தமிழ் ஓவியா said...


திரு.வி.க. என்ற தென்றலின் குளுமை இதோ!


சென்னை என்ற நமது தமிழ் நாட்டுத் தலைநகரில் (கடந்த) 57 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு பொதுமன்றம் - தமிழ்மொழி உணர்வு டனும், இன உணர்வுடனும், பண்பாடு பரப்பும் பாசறையாகவும் நடத்தப்பட்டு வருகிறது என்றால் அது தமிழ்த் தென்றல், திரு. வி.க. அவர்களது பெயரில் நடைபெற்று வரும் மணவழகர் மன்றமே ஆகும்.

நல்ல ஆளுமைக்குழு, சிறந்த புரவலர்கள், தங்களை முன்னி றுத்தாது, தங்களது தொண்ட றத்தையே முன்னிறுத்திடும் தகை மைசால் நீதியரசர், பெரியார் மண்ணி லிருந்து காந்தி மண்ணுக்கு நீதி சொல்ல அனுப்பப்பட்ட குஜராத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன் அவர்களும், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகி அரும் பெரும் நீதிகளை வழங்கிய நீதிபதி முதுமுனைவர் அரு.லட்சு மணன் அவர்களும், செயலாளராக செம்மையான பணி செய்யும் கன்னித் தமிழ்க் குடிமகன் கன்னியப்பன் அவர் களும், அவர் தம் ஆளுமைக் குழுவினரும், தொய்வின்றி இந்த தொண்டு அமைப்பு நடைபெறுவதற்குத் தங்கள் அரிய உழைப்பைத்தந்து, உலகுக்கு திரு.வி.க.வின் தொண்டு மறக்கப்படாத ஒன்று என்று நிலை நிறுத்தி வருகிறார்கள்; அவர்களையும் அமைப்பினர்களையும் எவ்வளவு வேண்டுமானலும் பாராட்டலாம்.

தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் தமிழ் நடை படிக்கப் படிக்கத் தெவிட் டாத தேன் ஆகும். அவரது தன்னடக் கத்திற்கு ஒப்புவமை எளிதில் கண்டு பிடிக்க இயலாது.

அவரது தனி வாழ்க்கை என்பதை விட பொதுவாழ்க்கை தூய்மையிலும், தொண் டிலும், எளிமையிலும் அமைந்த ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கை.

இன்றைய பகட்டு உலகம், வெளிச்சம் போட்டு வாழ்வதே தங்களது விளம்பர வாழ்வு - ஆடம்பர மோக முள்ளில் சிக்கிய பின் சீரழிவு வாழ்க்கை என்ற நிலையில், தந்தை பெரியார், திரு.வி.க. போன்றவர்கள் வாழ்க்கை எளிமையின் குடியிருப்புகளாகும்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத்தெரியாத உண்மை நெறி வயப்பட்ட வாழ்க்கை அவ்விரு பெரியார்களின் வாழ்க்கை! பல கருத்துக்கள், நம்பிக்கைகளில் இருவரும் இருவேறு நிலைப்பாட்டினர்; ஆனால் நட்பிலோ இணை பிரியாத காதலர்கள், ஊடல்கள் வந்தபின்னும் அன்பின் நட்புறவு கூடல்களாக இறுதி வரை மாறா இருநிலை; அவர்கள் இருவ ருடையதும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்திற்குச் சரியான எடுத்துக்காட்டு ஆகும்.

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை இயக்கம் தான் தமிழ் நாட்டை, இந்தியாவையே புரட்டிப்போட்ட புரட்சி இயக்கம்!

மனிதகுல சமத்துவத்திற்காகப் போராடிய - புது உலகம் காண உழைக் கும் சமூக இயக்கம். அது பற்றி வாழ்க் கைக் குறிப்பு நூலில் திரு.வி.க. அவர்கள்.

நாயக்கர் சுயமரியாதை இயக்கம் எனது சன்மார்க்க இயக்கத்தினின்று பிறந்தது. அதற்கும் இதற்கும் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு ஒற்றுமை, பத்துப் பங்கு வேற்றுமை. வேற்றுமை எங்களுக் குள் போர் மூட்டியது. வேற்றுமைப் பகுதி ஆக்கம் பெறவில்லை. ஆக்கம் பெறாமை யும் எங்கள் போர் நிறுத்தத்திற்கு ஒரு காரணம் (பக்கம் 254)

.... வைக்கத்தில் (1924) தீண்டாமைப் போராட்டம் எழுந்தது. நாயக்கர் அங்கே சென்று சத்தியாகிரகம் செய்தார். திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைப்படுத்தியது. அப்பொழுது நான் வைக்கம் வீரர் என்ற தலைப்பீந்து நாயக்கரின் தியாகத்தை வியந்து வியந்து நவசக்தியில் எழுதுவேன். வைக்கம் வீரர் என்பது நாயக்கருக்கொரு பட்ட மாகவே வழங்கலாயிற்று (பக்கம் 355)

57 ஆண்டுகளில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மற்ற தமிழ் அறிஞர்கள் இலக்கிய மேதைகள், நீதியரசர்கள் என்ற பலவாக சான்றோர்களும் ஆண்டு விழாக்களில் கலந்து அறிவு விருந்தளித்து மக்களை மகிழ்வித்துள்ளனர்.

கடந்த வியாழனன்று (11.7.2013) அன்று நடைபெற்ற ஆண்டு விழாவைத் துவக்கி வைத்த சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதிபதி தமிழ்வாணன் அவர்களும் தலைமையேற்ற மாண்புமிகு புரவலர் நீதியரசர் பு.ரா.கோகுல கிருஷ்ணன் அவர்களும் ஔவை நடராசனார். டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. சென்னை வானொலி நிலைய மேனாள் உதவி இயக்குநர் நல்லதம்பி அவர்களும் கலந்து கொண்டு சிறந்த தோர் கருத்து விருந்து அளித்தனர்.

திரு.வி.க. அவர்களது எழுத்தில் ஒரு பகுதியை -திரு.வி.க.வின் சமுதாய நோக்குப்பற்றி விளக்குகையில் மேற் கோளாகக்காட்டி கூடியிருந்தோருக்கு கொள்கை விருந்தளித்தார் - மேனாள் தலைமை நீதீபதி பு.பு.ரா. அவர்கள்.

சரித்திர உலகை நோக்கினால் புரோகிதர் உலகக் கொடுமை நன்கு புலனாகும். புரோகிதர் உலகால் அழிந்த ராஜ்யங்கள் பல, சமூகங்கள் பல, கலைகள் பல, நாகரிகங்கள் பல. எக்காரணம் பற்றி புரோகித உலகம் ஏற்பட்டதோ, அக்காரணம் பற்றி அவ் வுலகம் இப்பொழுது இயங்கவில்லை.

அதனால் இவ்வுலகம் தொல்லை விளைவித்து வருகிறது. புரோகிதர் உலகம் இனிச்சீர்திருத்தம் பெறல் வேண்டும், இல்லையேல் அஃது அழிதல் வேண்டும். பொருள் ஆசை காரணமாகவே புரோகிதர் உலகம் தீயவழியில் புகுகிறது இப்படி தென் னாட்டுக்குரல் பல ஆண்டுகளுக்கு முன்பே கேட்டது.

அதே பாணியில் (அதற்கு சற்று முந்தைய) காலகட்டத்திலும் கூட, விவேகானந்தர் கடுமையான மொழி யில் புரோகிதர்களைச் சாடினார்.

வடக்கே, கிழக்கே கேட்ட குரல்கள் பற்றி நாம் சிந்திக்கிறபோது, அத் தீமையிலிருந்து உலகம் விடுபட நமது பல்சால்பு என்னவென்று சிந்தித்து, செயலாற்ற வேண்டாமா?

கொடுமைகளைக் கண்டு கொதித் தெழுவது முதற்கட்டம்; அதனை மாற்றி புதுயுகம் படைக்க வேண்டாமா?- இது தான் அப்பெரியார்களுக்கு நாம் காட்டும் உண்மையான மதிப்பும் மரியாதையும்!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை இயக்கம் தான் தமிழ் நாட்டை, இந்தியாவையே புரட்டிப்போட்ட புரட்சி இயக்கம்!

மனிதகுல சமத்துவத்திற்காகப் போராடிய - புது உலகம் காண உழைக் கும் சமூக இயக்கம். அது பற்றி வாழ்க் கைக் குறிப்பு நூலில் திரு.வி.க. அவர்கள்.

நாயக்கர் சுயமரியாதை இயக்கம் எனது சன்மார்க்க இயக்கத்தினின்று பிறந்தது. அதற்கும் இதற்கும் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு ஒற்றுமை, பத்துப் பங்கு வேற்றுமை. வேற்றுமை எங்களுக் குள் போர் மூட்டியது. வேற்றுமைப் பகுதி ஆக்கம் பெறவில்லை. ஆக்கம் பெறாமை யும் எங்கள் போர் நிறுத்தத்திற்கு ஒரு காரணம் (பக்கம் 254)

.... வைக்கத்தில் (1924) தீண்டாமைப் போராட்டம் எழுந்தது. நாயக்கர் அங்கே சென்று சத்தியாகிரகம் செய்தார். திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைப்படுத்தியது. அப்பொழுது நான் வைக்கம் வீரர் என்ற தலைப்பீந்து நாயக்கரின் தியாகத்தை வியந்து வியந்து நவசக்தியில் எழுதுவேன். வைக்கம் வீரர் என்பது நாயக்கருக்கொரு பட்ட மாகவே வழங்கலாயிற்று (பக்கம் 355)

57 ஆண்டுகளில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மற்ற தமிழ் அறிஞர்கள் இலக்கிய மேதைகள், நீதியரசர்கள் என்ற பலவாக சான்றோர்களும் ஆண்டு விழாக்களில் கலந்து அறிவு விருந்தளித்து மக்களை மகிழ்வித்துள்ளனர்.

கடந்த வியாழனன்று (11.7.2013) அன்று நடைபெற்ற ஆண்டு விழாவைத் துவக்கி வைத்த சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதிபதி தமிழ்வாணன் அவர்களும் தலைமையேற்ற மாண்புமிகு புரவலர் நீதியரசர் பு.ரா.கோகுல கிருஷ்ணன் அவர்களும் ஔவை நடராசனார். டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. சென்னை வானொலி நிலைய மேனாள் உதவி இயக்குநர் நல்லதம்பி அவர்களும் கலந்து கொண்டு சிறந்த தோர் கருத்து விருந்து அளித்தனர்.

திரு.வி.க. அவர்களது எழுத்தில் ஒரு பகுதியை -திரு.வி.க.வின் சமுதாய நோக்குப்பற்றி விளக்குகையில் மேற் கோளாகக்காட்டி கூடியிருந்தோருக்கு கொள்கை விருந்தளித்தார் - மேனாள் தலைமை நீதீபதி பு.பு.ரா. அவர்கள்.

சரித்திர உலகை நோக்கினால் புரோகிதர் உலகக் கொடுமை நன்கு புலனாகும். புரோகிதர் உலகால் அழிந்த ராஜ்யங்கள் பல, சமூகங்கள் பல, கலைகள் பல, நாகரிகங்கள் பல. எக்காரணம் பற்றி புரோகித உலகம் ஏற்பட்டதோ, அக்காரணம் பற்றி அவ் வுலகம் இப்பொழுது இயங்கவில்லை.

அதனால் இவ்வுலகம் தொல்லை விளைவித்து வருகிறது. புரோகிதர் உலகம் இனிச்சீர்திருத்தம் பெறல் வேண்டும், இல்லையேல் அஃது அழிதல் வேண்டும். பொருள் ஆசை காரணமாகவே புரோகிதர் உலகம் தீயவழியில் புகுகிறது இப்படி தென் னாட்டுக்குரல் பல ஆண்டுகளுக்கு முன்பே கேட்டது.

அதே பாணியில் (அதற்கு சற்று முந்தைய) காலகட்டத்திலும் கூட, விவேகானந்தர் கடுமையான மொழி யில் புரோகிதர்களைச் சாடினார்.

வடக்கே, கிழக்கே கேட்ட குரல்கள் பற்றி நாம் சிந்திக்கிறபோது, அத் தீமையிலிருந்து உலகம் விடுபட நமது பல்சால்பு என்னவென்று சிந்தித்து, செயலாற்ற வேண்டாமா?

கொடுமைகளைக் கண்டு கொதித் தெழுவது முதற்கட்டம்; அதனை மாற்றி புதுயுகம் படைக்க வேண்டாமா?- இது தான் அப்பெரியார்களுக்கு நாம் காட்டும் உண்மையான மதிப்பும் மரியாதையும்!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


டாக்டர் வரதராஜூலு நாயுடுவுக்குப் பூச்சாண்டி காட்டல்


ஸ்ரீமான் டாக்டர் வரதராஜுலு நாயுடு சுயராஜ்யக் கட்சியைப் பார்ப்பனர் கட்சி என்றும், அதை ஒழிக்க வேண்டும் என்றும், தேர்தலில் சுயராஜ்யக் கட்சி வெற்றி பெற்றால் பார்ப்பன ஆதிக்கம் ஓங்கு வதுடன் பார்ப்பனரல்லாதாருக்கு மீளாத ஆபத்து வரும் என்றும் சொன்னதிலி ருந்து, நமது பார்ப்பனரும், அவர்களிடம் கூலி பெற்று வயிறு வளர்க்கும் கூலிகளும், பத்திரிகைகளும் டாக்டர் நாயுடுவுக்குப் பூச்சாண்டி காட்ட ஆரம்பித்து விட் டார்கள். அதாவது நாயுடு சங்கதியை வெளிப் படுத்தப் போகிறோம். அவர் ஜெயிலில் நடந்து கொண் டதை வெளிப்படுத்துகிறோம் என்று என்ன என்னமோ ஈனத்தனமாய்க் கூச்சல் போடுகின்றார்கள். அப்படி யானால் டாக்டர் நாயுடுவின் செய்கை என்ன என்பதை ஒரு கை பார்த்தே விடலாம். சுயராஜ்யக் கட்சித் தலைவர்களைப் போல் கள், சாராயம், பிராந்தி, சாப்பிடுகிறாரா? சுயராஜ்யக் கட்சி பிரதானிகள் போல் தேவடியாளைக் கூட்டிக் கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறாரா? அல்லது போன இடங்களி லெல்லாம் குச்சு புகுந்து அடிபட்டாரா? சாராயம் பிராந்தி விற்றுப் பணம் சம்பாதிக்கிறாரா? பத்திரிகையில் பேர் போடுவதாகவும் படம் போடுவதாகவும் சொல்லிப் பணம் சம்பாதித்தாரா? பத்திரிகைச் செல்வாக்கை உபயோகித்து மடாதிபதிகளிடம் பணம் வாங்கினாரா? மகனுக்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டாரா? வாங்கின கடனை ஏமாற்றினாரா? அல்லது வீட்டில் மல் துணியும் பெண் ஜாதிக்கு பட்டு, சல்லா முதலிய அந்நிய நாட்டுத் துணிகளையும் உபயோகித்துக் கொண்டு மேடைக்கு வரும்போது கதர் கட்டிக்கொண்டு வந்து பொது ஜனங்களை ஏமாற்று கிறாரா? திருட்டுத்தனமாய் சர்க்கார் அதிகாரிகளிடம் கெஞ்சி ஏதாவது தயவு பெற்றுக் கொண்டாரா? மந்திரி உத்தியோகம் வேண்டுமென்று யார் காலிலாவது விழுந்தாரா? பெரிய பெரிய உத்தி யோகங்களையும், பதவிகளையும் பெறலாமென்று தனது உத்தியோ கத்தை ராஜினாமா கொடுத்து ஜனங் களை ஏமாற்றினாரா? அல்லது இன்ன மும் தனக்கு ஏதாவது ஒரு உத்தி யோகமோ, பதவியோ கிடைக்கு மென்று எதிர்பார்க்கிறரா? எந்த விதத் தில் அவர் பூளவாக்கை வெளிப்படுத் தக் கூடும் என்பது நமக்கு விளங்க வில்லை. ஆதியில் பார்ப்பனரல்லாதார் கட்சி பலமாய் ஆரம்பித்த காலத்திலும், அதைக் கொல்ல இம்மாதிரியே சுக்கிரீவனைப் போலவும், விபூஷணனைப் போலவும், அனுமார்களைப் போலவும் ஸ்ரீமான்கள் டாக்டர் வரதராஜுலு நாயுடுவையும், கலியாணசுந்தர முதலி யாரையும் மற்றும் பல பேர்களையும் தாங்கள் சுவாதீனப் படுத்திக்கொண்டு அவர்களுக்கு ஜாதி, குல அபிமானம் இல்லாமல் செய்தும், அவர்கள் மூலமாய் பார்ப்பனரல் லாதார் கட்சியைத் தலையெடுக்க வொட்டாமல் செய்ய பாடுபட்டதுமல்லாமல் இப்பொழுதும் அவர்களை மிரட் டிப் பூச்சாண்டி காட்டுவதானால் இவர்கள் பூச் சாண்டிக்கு யார்தான் பயப்படுவார்கள்? இவர்கள், இவர்களைப் பற்றி வெளியாக்கப் போகும் விஷயம் என்னவென்றுதான் ஒரு கை பார்க்கலாம் என்றே தயாராயிருக்கிறோம். இதன் பலனாகவாவது அரசியல் துறையிலுள்ள எல்லாருடைய யோக்கியதையும் வெளி யாக்கக் கூடுமென நினைத்தே அவற்றை மனப்பூர்வமாய் வரவேற்கிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 10.10.1926

தமிழ் ஓவியா said...


5000 ரூபாய் இனாம்


தமிழ்நாட்டு சார்பாக இந்திய சட்டசபைக்குச் சென்ற தடவை ஒருவர் தவிர எல்லோரும் அய்யங்கார் பார்ப்பனர்களாகவே நின்றார்கள். இந்தத் தடவையும் அதேமாதிரி எல்லோரும் அய்யங்கார் பார்ப்பனர் களாகவே நிற்கிறார்கள், பார்ப்பனரல்லாதார் சார்பாய் இந்தியா சட்டசபைக்கு சென்னை நகரத் தொகுதிக்கு நிற்கும் ஸ்ரீமான் சக்கரை செட்டியாருக்கு விரோதமாய் ஸ்ரீமான் எ. சீனிவாசய்யங்கார் நிற்கிறார். எப்படியாவது ஸ்ரீமான் சக்கரை செட்டி யாரைத் தோற்கடித்துத் தான் வெற்றி பெற ஆசைப் பட்டு பணம் கொடுத்து ஆள்களைச் சேர்த்து பொய்ப் பிரசாரம் செய்கிறார். இதற்காகத் தன்னைப் பெரிய தியாகி என்று சொல்லச் சொல்லுகிறார்; தனக்கு ஓட்டுக் கொடுத்தால் சீக்கிரம் சுயராஜ்யம் வருமென்று சொல்லச் சொல்லுகிறார். ஆனால் ஒருவராவது இது வரை அய்யங்கார் என்ன தியாகம் செய்தார் என்று சொல்லவில்லை. ஒருவராவது இதுவரை அய்யங் காரின் சுயராஜ்யத் திட்டம் இன்னது என்று சொல்ல வில்லை. அய்யங்கார் தியாகமெல்லாம் வக்கீல் உத்தியோகத்தில் மாதம் பத்தாயிரம் இரு பதாயிரம் சம்பாதித்துப் பணம் சேர்த்து வருவதோடு, காலி ஆசாமிகளுக்குக் கொஞ்சம் கூலி கொடுத்து பார்ப்பன ரல்லாதார் கட்சியையும் பார்ப்பனரல்லாதார் தலைவர் களையும் திட்டும்படி சொல்லுவதும், கூட்டங் களில் கலகம் செய்யச் செய்வதும், பணம் கொடுத்துப் பிரசாரம் செய்து காங்கிரஸ் தலைவர் பதவி பெற்றது மானவை தவிர வேறு என்ன என்ன தியாகங்கள் செய்திருக்கிறார் என்று சொல்லுகிறவர்களுக்கு 5,00 ரூபாய் இனாம்.

ஸ்ரீமான் அய்யங்காரின் சுயராஜ்யத் திட்டம் பார்ப்பனரல்லாத கட்சியை ஒழித்து, பார்ப்பனரல்லாத மந்திரிகளைத் தள்ளிவிட்டு, அந்த தானத்தில் தாங்களும் தங்கள் இனத்தாரும் உட்கார்ந்து கொண்டு, பார்ப்பனரல்லாதார் அனுபவித்து வருவதாய்ச் சொல்லும் அதிகாரங்களையும், வேறு பதவிகளையும், உத்தி யோகங்களையும் பிடுங்கிப் பார்ப்பனர்களுக்குக் கொடுத்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதைத் தவிர உண்மையான சுயராஜ்யத் திட்டம் ஏதாவது அவருள்ளத்தில் இருக்கிறதா என்று கண்டுபிடித்துச் சொல்லுகிறவர்களுக்கு 1,000 ரூபாய் இனாம்.

ஸ்ரீமான் அய்யங்காருக்காகப் பிரசாரம் செய்கிற வர்களிலாவது, மேடைமேல் நின்று பேசுகிறவர்களி லாவது, பத்திரிகையில் எழுதிகிறவர் களிலாவது ஸ்ரீமான் அய்யங்காரிடம் கூலி வாங்காமல் பேசுகிற எழுதுகிற ஒரு நபரையாவது காட்டுபவர்களுக்கு 1,500 ரூபாய் இனாம்.

இப்போது அவர் கூலி கொடுத்து பொய்ப் பிரசாரம் செய்விக்கும் ஆள்களையாவது கூட்டத்தில் கலகம் செய்விக்கும் ஆள்களையாவது நவம்பர் மாதம் 8-ந் தேதி (எலெக்ஷன்) ஆனபிறகு கிட்டத்தில் சேர்ப்பார் என்று நிரூபிப்பவருக்கு 2,000 ரூபாய் இனாம்,

சென்னைவாசிகளே! சக்கரை செட்டியாரின் தோல்வி பார்ப்பனரல்லாதாரின் தோல்வியாகும். அய்யங்காரின் வெற்றி பார்ப்பன ஆதிக்கத்திற்கு வெற்றி ஆகும். ஆதலால் வீணாகக் கூலிக்கு மாரடிப்பவர்கள் வார்த்தைகளை நம்பி மோசம் போகாதீர்கள்.
- குடிஅரசு - கட்டுரை, 10.10.1926

தமிழ் ஓவியா said...

சென்னைத் தொழிலாளர்களும் தேர்தல் கூட்டங்களும்

ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் அவர்கள் தொழி லாளர்களுக்கு நமது ஸ்ரீமான் முதலியார் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகு சென்னையில் ஜஸ்டிஸ் கட்சியார்களால் ஏற்படுத்தப் படும் கூட்டங் களில் ஆலைத் தொழிலாளர்கள் கலகம் செய்வதாக `திராவிடனில் காணப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, ஆனாலும் நாம் நமது தொழிலாளர், பார்ப்பனரல்லாதார் ஆகிய சகோதர் களை ஒன்று கேட்கிறோம். அதாவது, நவம்பர் மாதம் 8 ந் தேதி(சட்டசபைத் தேர்தல் தீர்ந்ததற்குப்) பிறகு இந்தப் பார்ப்பனர்கள் நமது தொழிலாள சகோதரர்களை யாவது மற்றும் இப்போது அவர்கள் நியமித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார்களையாவது திரும்பிப் பார்ப்பார்களா, கவனிப்பார்களா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பார்க்கும்படி வேண்டு கிறோம். - குடிஅரசு - செய்திக்குறிப்பு, 03.10.1926

தமிழ் ஓவியா said...


ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள் திருச்சி பெல் நிறுவனத்துக்காக போராடியவர் காமராஜர்

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மின்உற்பத்தி, தொழில், போக்குவரத்து மறுசுழற்சி ஆற்றல், இயற்கை எரிவாயு போன்ற துறைகளில் தீவிர கவனம் செலுத்தப்பட்டது. இதற்காக பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு அந்த குழுக்கள் ஒவ்வொரு மாநிலமாகச் சென்று ஆய்வு செய்தன.

அந்த வகையில் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான பாய் லர்கள், ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்யும் பெல் நிறுவனத்தை (பாரதமிகு மின் நிறுவனம்) செக் குடியரசு நாட்டு உதவியுடன் இந்தியாவில் எங்கெங்கு தொடங்கலாம் என்பது பற்றி ஆய்வு செய்ய ஒரு குழு உருவாக்கப்பட்டது. அந்தக்குழுவினர் வட மாநிலங்களில் சுற்றிக் கொண்டிருந்தனர். இதை அறிந்த பெருந்தலைவர் காமராஜர் அந்தக்குழுவை தமிழ்நாட்டுக்கு வந்து பார்க்கும்படி கூறினார். அந்தக் குழுவும் வந்தது தமிழ்நாடு முழுக்க சுற்றி பார்த்தது. கடைசியில் காமராஜரை சந்தித்தது. பெல் நிறுவனம் கட்ட தமிழ்நாட்டில் ஏற்ற இடம் எங்கும் இல்லை என்று கூறியது. உடனே அந்தக்குழு உறுப்பினர்களிடம் காமராஜர், நீங்கள் தமிழ்நாட்டில் எந்தெந்த ஊருக்கு போனீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் சென்ற ஊர்களை எல்லாம் கூறினார்கள்.

திருச்சி திருவெறும்பூருக்கு போனீர்களா? என்றார் டெல்லி குழு வினர் இல்லை என்றனர்.

உடனே காமராஜர், நீங்கள் எல்லோரும் அங்கு போய் பாருங்கள் நீங்கள் விரும்பும் அளவுக்கு இட வசதி உள்ளது. தண்ணீர் அருகில் உள்ள காவிரி நதியிலிருந்து எவ்வளவு வேண் டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்றார். மறுநாள் திருச்சிக்கு சென்ற அந்தக்குழு திருவெறும்பூர் பகுதியைப் பார்த்துவிட்டு, பெல் தொழிற்சாலை அமைக்க இந்தியாவில் இதைவிட வேறு சிறந்த இடம் இல்லை என்று சான்றிதழ் கொடுத்தது. இதன் விளைவாக அங்கு உடனே பெல் நிறுவனம் நிறுவப்பட்டது.

மத்திய அரசுக்கு மிகுந்த லாபத்தை தரும் நவரத்னா நிறுவனங்களில் திருச்சி பெல் நிறுவனம் குறிப்பிடத்தக்க இடத் தில் உள்ளது. இங்கு மின் உற்பத்தி செய்வதற்கான பாய்லர்கள், டர்பைன் எனப்படும் சுழலிகள், டர்போ ஜெனரேட் டர்கள், தூசு வடிகட்டிகள் மற்றும் எண் ணெய், சிமெண்ட் நிறுவனங்களுக்குத் தேவையான துணைக்கருவிகள் தயாரிக் கப்படுகின்றன.

கடந்த 2010-ஆம் ஆண்டு கணக் குப்படி பெல் நிறுவனத்தின் வருமானம் ரூ. 43.451 கோடி. பல லட்சம் கோடிக்கு இந்த நிறுவனத்துக்கு என சொத்துக்கள் உள்ளன. இந்த நிறுவனத்தில் தற்போது சுமார் 15 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள்.

திருச்சி பெல் நிறுவனம் புதுக் கோட்டை மாவட்டம் திருமயத்தில் பாய் லர்களுக்கான குழாய்கள் தயாரிக்கும் பிரிவை தொடங்கியுள்ளது. இங்கும் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத் துள்ளது.

இந்த நிறுவனம் தமிழ்நாட்டுக்கு கிடைத்ததால் ஏராளமான பேர் வேலை பெற்றனர். பல சிறு தொழில்கள் பெல் நிறு வனத்தை நம்பி தொடங்கப்பட்டுள்ளன. காமராஜர் அன்று சமயோசிதமாக எடுத்த முடிவால்தான் இவ்வளவு பெரிய நிறுவனம் நமக்கு கிடைத்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

1954-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14-ஆம் நாள் தமிழ் புத்தாண்டு தினத்தன்று தமிழக முதல்வர் பதவி ஏற்றார். அப்பொழுது அவர் தமிழக சட்டமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தால் குடியாத்தம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டார். அப்பொழுது தி.மு.க. தாமாக முன் வந்து அவரை ஆதரித்தது. தந்தை பெரியாரும் காமராஜரை பச்சைத் தமிழன் எனக்கூறி ஆதரித்தார். இந்தியாவிலேயே ஒரு தலைவரை எதிர்க்கட்சியைச் சேர்ந்த வர்கள் தாமாகவே முன் வந்து ஆதரித்து வாக்களித்து வெற்றி பெறச் செய்தது அதுவே முதலும் கடைசியுமாகும். நாம் உயிருள்ளவரை பெருந்தலைவர் காம ராஜரின் நினைவோடு நிலைத்து வாழவேண்டும் அவரை போல இனிமேல் எந்த அரசியல்வாதியும் இல்லை என்ற கேள்விகுறி? முதன் முதலில் நேரு அமைச்சரவையில் டாக்டர் அம்பேத்கர் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பின்னால் காமராஜர் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இவருக்குப் பின்னால் வருங்கால பிரத மர், மாண்புமிகு ராம்விலாஸ் பாஸ் வான்ஜி மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மக்களுக்கு இந்தியாவின் வழிகாட்டி ராம்விலாஸ் பாஸ்வான்ஜி அவர்கள், கென்னடி மறைந்தபோது இரங்கல் செய்தியில் காமராஜர் சொன்னார். சாதாரண மனிதர்கள் சாகிறார்கள். ஆனால் தன்னலம் துறந்த தியாகிகள் மக்களின் மனங்களில் நிரந்தரமாக வாழ்கிறார்கள் ஆம் உண்மைதான் அவர் வாய் மலர்ந்த வாசகம் அவருக்கே அழகாகப் பொருந்துகிறது.

நன்றி: நீதிக்கான விடியல் நவம்பர் 2012, பக்கம்: 22-23

தமிழ் ஓவியா said...


விடுதலை வாசகரின் மனந்திறந்த பாராட்டு


மானமிகு அய்யா,

வணக்கம் என் சொந்த ஊர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். தற்போது என் மகனுடன் பெங்களூருவில் வசித்து வருகிறேன்.

நான் சிறுவயதில் தந்தை பெரியார் அவர்களின் உரையைக் கேட்டு பார்ப்பன எதிர்ப்பும் கடவுள் இன்மை கொள்கையும் என் உள்ளத்தில் பதிந்து விட்ட காரணத்தால் என் திருமணம் 14.7.1968-இல் பார்ப்பான் இல்லாமல் சுயமரியாதைத் திருமணமாக நடந்தது.

நான்கு குழந்தைகள் பிறந்த போதும் பார்ப்பானை அழைத்து புண்ணியதானம் செய்யவில்லை. என் தந்தை, தாய் இறந்ததற்காக பார்ப்பானை அழைத்து கருமகாரியம் செய்யவில்லை. அவர்களின் (என் தந்தை, தாய்) படத்திறப்பு நிகழ்ச்சி மட்டும் தான்.

என் பிள்ளைகளுக்கும் பார்ப்பான் இல்லாமல் சுயமரியாதைத் திருமணம் தான்.

என் மருமகளின் பெரியம்மாவின் கணவர் ஜானகி ராமன் அவர்கள், திராவிடர் கழக பெங்களரூ மாநிலத் தலைவர் ஆவார். அவர்களின் வற்புறுத்தலின் பேரில் தான், சென்ற ஆண்டு விடுதலை சந்தாதாரர் ஆனேன். கடந்த ஓராண்டாக படித்து வந்ததில், பல உண்மைச் செய்திகளையும், அரிய தகவல்களையும் தெரிந்து கொண்டேன்.

உதாரணமாக:

1) பார்ப்பனர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக செய்து வரும் சதி வேலைகள், 2) கோட்சே என்பவன் இஸ்மாயில் என பெயரை மாற்றிக் கொண்டு காந்தியாரை சுட்டுக் கொன்ற உண்மைச் செய்தி 3) வாஞ்சிநாதன் ஆஷ் துரையை ஏன் கொன்றான் என்ற உண்மை, 4) ஒற்றைப்பத்தி, 5) ஊசி மிளகாய், 6) இளைஞர் அரங்கம், 7) மகளிர் அரங்கம், 8) பகுத்தறிவுக் களஞ்சியம், 9) வரலாற்றுச் சுவடுகள், 10) நீதிக்கட்சியின் வரலாறு ஆட்சியில் இருந்த போது செய்த நன்மைகள், 11) தமிழர் தலைவரின் சொற்பொழிவுகள், அறிக்கைகள், வாழ்வியல் சிந்தனைகள்.
இத்தனை செய்திகளையும் படித்தறிந்த பிறகு தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் விடுதலை இதழ் படிக்காமல் இருந்து விட்டோமே என்ற குற்ற உணர்வு என் மனதை வாட்டியது மட்டுமல்லாமல் இனிவரும் ஆண்டுகளில் சந்தா முடிவதற்கு முன்பே சந்தா தொகை அனுப்பி சந்தாதாரராக வேண்டும் என்ற உறுதி எடுத்துக் கொண்டுவிட்டேன்.

தமிழர் தலைவர் அய்யா அவர்களை, 4.11.1985-இல் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் நானும் என்போன்ற ஆசிரிய கைதிகளும் (தமிழக அரசு ஆணையின் நகலை எரித்ததற்காகக் கைதானோம்) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நாளை இன்று வரை மறக்க முடியவில்லை.

ஜாதி, சமயம் ஒழியவும், சமஉரிமை பெறவும் ஆரியத்தை - பார்ப்பனீயத்தை எதிர்த்து இன்னும் பல நூறு ஆண்டுகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந் தால் தான் தமிழினம் வாழும் வளரும்.
அதனைச் செய்து கொண்டிருக்கிறது திராவிடர் கழகம்,. விடுதலை நாளிதழ். இதழ் வளர்ச்சிக்கு என் சிறிய பங்களிப்பாகவும், எங்கள் 46-ஆவது மணநாள் (14.7.2013) மகிழ்வாகவும் ரூ. 500/- அனுப்பியுள்ளேன் என்னையும், என் வாழ்விணையரையும் வாழ்த்த வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் தங்கள் கொள்கை நிழலில் - இரா.இராசாராம் - இரா.சாவித்திரி வாழ்விணையர்.

தமிழ் ஓவியா said...

சேலம், ஜூலை 14- ஜாதி-தீண்டாமை ஒழிப்பு, அனைத்து ஜாதியினரும் அர்ச் சகராகும் சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 13-07-2013 அன்று சேலம் கோட்டை மைதானத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் போராட்ட விளக்கக் கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை ஆற்றினார். அவரது உரையில் "பிறவி இழிவான ஜாதி தீண்டாமை 21ஆம் நூற்றாண்டில் இன்னும் இருக்கிறதே!

இங்குமட்டும் மனிதன் - பிறவியில் பார்ப்பானாக பிறக்கிறான், பறைய னாக பிறக்கிறான், இன்னும் மனிதன் மட்டும் பிறக்கவில்லையே? ஏன்? என்ற அறிவுப் பூர்வமான வினாவைத் தொடுத்து, அடுக்கடுக்கான ஆதாரங்க ளுடன் "ஆதிதிராவிடன் அய்.ஏ.எஸ் ஆகலாம், ஆதி திராவிடன் அய்.பி.எஸ் ஆகலாம், ஏன் அய்க்கோர்ட் நீதிபதி யாகலாம், உச்ச நீதிமன்ற நீதிபதியாக கூட ஆகலாம்.

ஆனால் அர்ச்சகர் ஆகமுடியாத நிலை இன்னும் இருக் கிறது, உச்ச நீதிமன்ற பதவியைவிட அர்ச்சகர் பதவி உயர்ந்ததா. காதல் திருமணம் செய்துகொண்ட தருமபுரி இளைஞன் ஜாதி-தீண்டாமை கொடு மைக்குப் பலியானானே? இளவரசன்-திவ்யா இவர்களுக்கு ஏற்பட்ட நிலை இனி தொடரக்கூடாது. எனவே ஜாதி-தீண்டாமை எந்த வடிவிலும் வந் தாலும் அதை ஒழிக்கவேண்டும், அதற் காகத்தான் வரும் ஆகஸ்ட் 1ஆம் நாள் முதல் கட்டமாக ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது, அனைவரும் ஜாதி, அரசி யலைக் கடந்து போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டுகிறேன்" என்றார்.

தமிழ் ஓவியா said...


இதோ ஒரு இந்துத் தேசியவாதி!


இந்துத் தேசியவாதி ஒருவர் இந்தியாவின் பிரதமராக வரத் துடிதுடித்துக் கொண்டு இருக்கிறார். குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி வாய் சும்மா இருக்காது. தனது இந்துத்துவா வெறியை எந்த வகையிலும் மறைக்க முடியாத அளவுக்கு அதி வெறி பிடித்தவர்.

கடந்த 12ஆம் தேதி அவர் அளித்துள்ள பேட்டி ஊடகங்களில் முதன்மையான இடத்தைப் பிடித் துள்ளது.

நான் தேசியவாதி; நான் ஒரு தேசப் பக்தர். இதில் ஒன்றும் தவறு இல்லை. நான் இந்துவாகப் பிறந்தவன் எனவே இந்துத் தேசியவாதி என்று நீங்கள் கூறிக் கொள்ளலாம் என்று இவ்வளவுப் பச்சையாகவே கூறியுள்ளார்.

இந்தியாவில் எத்தனைத் தேசியங்கள் இருக் கின்றன என்ற கேள்வி எழுகிறது!

ஒரே ... இந்தியத் தேசியம் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. இன்னும் சொல்லப் போனால் காங்கிரசைவிட பிஜேபியினர் தங்களை 22 காரட் தேசியவாதிகள் என்று மார்தட்டக் கூடியவர்கள்தான். அவர்கள் அப்படி சொல்லுவது, இந்துத் தேசியம் என்ற அடிப்படையில்தான் என்பது, இதன் மூலம் அம்பலமாகி விட்டதே!

இந்தியாவில் இந்து மதம் என்ற ஒரு மதம் மட்டுமல்ல; பல மதங்கள் உள்ளன. மத நம்பிக் கையற்ற மக்களும் வாழுகின்றனர்.

இந்த நிலையில் தான் இந்தியா மதச் சார்பற்ற நாடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதி படுத்துகிறது. ஆனால் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியோ தன்னை இந்துத் தேசியவாதி என்று பிரகடனப்படுத்தியுள்ளார்.
அவர் அப்படிப்பட்டவர்தான் என்பதைத் தன் நடவடிக்கைகள் மூலம் அவ்வப்போது காட்டிக் கொண்டும் வருகிறார்.

இந்தியாவில் உள்ள இந்துக்கள் அல்லாத மற்ற மதக்காரர்கள் தங்கள் மதங்களையும், கடவுள் களையும் இந்துத்துவமயமாக்கிக் கொள்ள வேண்டும்; கிறிஸ்துவர்கள் கிருஷ்ணனை வணங்க வேண்டும். ராமனை வணங்க வேண்டும் என்று சொல்பவர்கள் என்பதை நினைவு கூர்ந்தால் மோடி கூறியதன் சூட்சுமம் விளங்கும்.

அதன் அடிப்படையில் தான் மோடி கோத்ரா கலவரத்தின் போது செயல்பட்டும் இருக்கிறார்; பொடா சட்டத்தின் கீழ் 287 பேர் அம்மாநிலத்தில் சிறைபடுத்தப்பட்டனர். அதில் 286 பேர் முசுலிம்கள் ஒருவர் சீக்கியர்.

பாதிப்புக்குக் காரணமான இந்துக்கள் சிறைப்படுத்தப்படவில்லை. மாறாகப் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் தான் கைது செய்யப்பட் டுள்ளனர் என்பதிலிருந்தே மோடி நடைமுறையில், யதார்த்தத்தில் இந்துத் தேசியவாதியாக - முதல்வராகச் செயல்பட்டு இருக்கிறார் என்பது விளங்கவில்லையா?

மோடியின் பேட்டியில் கண்டுள்ள இன்னொரு கருத்தும் கவனிக்கத்தக்கது.

எனது பார்வையில் மதச்சார்பின்மை என்பது அனைவருக்கும் நீதி, யாரையும் தாஜா செய்வதாக இருக்கக் கூடாது என்று சொல்லுவதில் உள்ள விஷமத்தைக் கணிக்க வேண்டும்.

சிறுபான்மை மக்களின் உரிமைகள், நலன்கள் பற்றி ஓர் அரசு அக்கறை கொண்டால் அது அம் மக்களைத் தாஜா செய்வது என்று கூறகிறார் மோடி.

இந்தியப் பிரதமரின் அமைச்சகத்தில் சிறுபான் மையினரின் நலனுக்காகவே ஒரு பிரிவு உண்டு. சிறுபான்மை மக்களுக்காக இந்தப் பிரிவு ரூபாய் பத்துக் கோடியை ஒதுக்கியது. ஆனால் மோடி என்ன செய்தார் தெரியுமா?

அந்தத் தொகையை சிறு பான்மை மக்களுக்காகப் பயன்படுத்தாமல், நிதியை அப்படியே திருப்பி அனுப்பி விட்டார். இது பாகுபாடு காட்டுகிறது - இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அடித்துக் கூறிவிட்டார்.

இதுபோல சிறுபான்மையினரின் கல்வியில் கை வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வரு கிறார். குஜராத்தைப் பொறுத்தவரை மெட்ரிக்குலேசன் வரை படிக்கக் கூடிய முஸ்லிம்கள் வெறும் 26 சதவீதம்தான்; முசுலிம் அல்லாதவர்களோ இது 41 சதவீதமாகும்.

மோடி தன்னை இந்துத் தேசியவாதி என்று அறிமுகப்படுத்தியதன் பொருள் இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே!

மதச் சார்பற்ற அரசமைப்புச் சட்டம் நிலவும் இந்தியாவுக்குப் பிரதமராக ஒரு இந்துத் தேசியவாதி வர முடியுமா? வரலாமா? அது சட்ட விரோதம் அல்லவா? நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்!

தமிழ் ஓவியா said...


அறிவு பெற முடியாமல்....


தெரியாததை, இல்லாததை நம்பவேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடு கிறான்.
(விடுதலை, 2.6.1970)

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினரும், அர்ச்சகராக நியமிக்கப்படவேண்டும்!


திராவிடர் கழகம் நடத்தும் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்!

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, ஜூலை 16- அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமை கோரும் திராவிடர் கழ கம் நடத்தும் ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட் டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை விடுத்துள் ளார். அறிக்கை வருமாறு:

தீண்டாமை என்பது சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்டு விட் டாலும் ஆலயங்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதி யினர் மட்டுமே அர்ச்ச கராக இருக்க முடியும் எனச் சொல்லி தொடர்ந்து தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு கடைபிடிக்கப்பட்டுவரும் தீண்டாமையை ஒழித்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு வழி செய்து கடந்த தி.மு.க ஆட்சியின் போது சட் டம் இயற்றப்பட்டது. அனைத்துச் ஜாதிகளைச் சேர்ந்த இளைஞர் களுக்கு அர்ச்சகருக் கான பயிற்சியும் அர சாங்கத்தால் வழங்கப் பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் சென்று சிலர் தடை ஆணை பெற்ற தால், முறையான அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 பேர் இப்போது வேலையின்றித் தவிக் கின்றனர். தமிழக அர சின் சட்டத்தின் மீதான தடை ஆணையை ரத்து செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அவர் களுக்காக பிரபல வழக்கறிஞர்கள் அந்தி அர்ஜுனாவும், காலின் கான்ஸலஸும் வாதாடி வருகின்றனர். ஆனால் தேதி குறிப்பிடப்படா மல் ஒத்திவைக்கப்பட்ட அந்த வழக்கு கடந்த அய்ந்து ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட் டுள்ளது. இதை அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக உச்சநீதிமன் றம் கருதாதது வேதனை அளிக்கிறது. அந்த வழக்கை விரைந்து முடித்து சமூக நீதியை நிலைநாட்டிட தமிழக அரசும் முனைப்புக் காட்டவில்லை. முன் னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு அவர்கள் பெண்களும் அர்ச்சகராக இருக்கலா மென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக் கிறார். அந்தத் தீர்ப்பு இப் போதும் நடை முறையில்தான் இருக் கிறது. எனவே, அனைத் துச் ஜாதியினர் மட்டு மின்றி பெண்களும் அர்ச்சக ராகலாம் என்ற கோரிக்கையையும் விடு தலைச் சிறுத்தைகள் கட்சி சேர்த்து முன் மொழிகிறது.

திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போர்

அரசியல் கட்சிகள் ஜாதியின் பெயரால் பேரணி நடத்தக்கூடாது என முற்போக்காக தீர்ப்பு வழங்கும் உச்சநீதி மன்றம் இன்னும் ஆல யங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படு வதை எவ்வாறு அனு மதிக்கிறது என்பது புரியவில்லை. இது வேலை வாய்ப்பு தொடர் பான பிரச்சினை அல்ல. சமத்துவம், சமூக நீதி குறித்த பிரச்சினையா கும். இதற்காக திராவி டர் கழகம் அறிவித் துள்ள போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. தமிழக மெங்கும் ஆகஸ்டு மாதம் 1 ஆம் தேதி நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் விடு தலைச் சிறுத்தைகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு போராட் டத்தை வெற்றிபெறச் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார் தொல். திருமாவளவன்

தமிழ் ஓவியா said...


தொண்டுசுக போகத்தினால் இன்பம் காணுவதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காணுவதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்காகவும், தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்கவேண்டும் என்று கருதவேண்டும்.
(விடுதலை, 2.7.1962)

தமிழ் ஓவியா said...


திருத்தப்படவே முடியாத மதவெறியர் மோடி!

நீ இந்து என்றால் எனக்கு வாக்களிக்கவும் என்பதுதான் நரேந்திரமோடியின் பிரச்சாரமாக இருந்தது. இந்துத்துவாவை குஜராத்தின் பெருமை என்று குஜராத்திகளிடம் மோடி விற்பனை செய்தார். குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதிதான் இந்தியா என்று குஜராத்திகளை மோடி நம்ப வைத்து விட்டார். குஜராத்துதான் இந்தியா என்ற கோஷத்தை நானும் எனது செவிகளால் கேட்டேன்.

- பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார்

குலதீப் நய்யார் போன்றவர்களுக்கு அரசியல் முத்திரையை யாரும் குத்தி விட முடியாது. மோடியின் முகத்தை மிகச் சரியான வகையில் தானாகவே சாட்சியாகவே இருந்து, படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

இப்படி எதற்கெடுத்தாலும் இந்து என்று கூறி, ஒரு வெறியைக் கிளப்பி அரசியல் நடத்தக் கூடியவர் இந்தியாவின் பிரதமருக்கான வேட்பாளர் என்று முன்னிறுத்தப்படும் அறிமுக நிலையிலேயே அது தள்ளுபடி செய்யப்பட வேண்டாமா?

நாம் ஒரு காரை ஓட்டிச் சென்றால் அல்லது வேறு ஒருவர் ஓட்ட நாம் பின்னால் அமர்ந்து செல்லும்போது எதிர்பாரா விதமாக காரின் சக்கரத்தில் ஒரு நாய்க்குட்டி (Puppy) சிக்கிக் கொண்டால்கூட மனதுக்கு கஷ்டமாக இருக்குமா? இருக்காதா? நிச்சயம் அது வேதனை அளிப்பதாகத் தானிருக்கும். நான் முதல் அமைச்சராக இருக்கிறேனோ இல்லையோ, நான் ஒரு மனிதன். எங்கு எந்த கெட்ட விஷயம் நடந்தாலும் மனதுக்கு வேதனை யாகத் தானிருக்கும் என்றும் தன் பேட்டியிலே குறிப்பிட்டுள்ள நரேந்திரமோடி.

குஜராத்தில் முசுலிம்கள் கொல்லப்பட்டது - விபத்தில் நாய்க் குட்டி சிக்கியதற்குச் சமமாக மோடி விளக்கம் அளித்தது மூலம் அவர் எவ்வளவுப் பெரிய மனநோயாளி என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

இதுபற்றிக் கடுமையான வகையில் எதிர்ப்புப் புயல் வெடித்து எழுந்த நிலையில், அதற்குச் சமாதானம் கூறுவதாக நினைத்துக் கொண்டு வெளியிட்ட வார்த்தைகள் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போலிருக்கிறது.

நமது கலாச்சாரத்தில் அனைத்துவிதமான உயிர்களும் மதிக்கப்படுகின்றன என்று குறிப்பிட் டுள்ளார்.

அதாவது நாய் என்றால் அற்பமாக நினைத்து விடாதீர்கள்! நாயும் ஓர் உயிர்தானே என்று முஸ்லிம்களின் உயிரோடு நாயின் உயிரை ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் குஜராத்தில் ஒரே ஒரு முசுலிமுக்குக்கூட பிஜேபி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லையே! மோடி மனப் பான்மைக்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

இந்த மனிதனை எதைக் கொண்டும் திருத்த முடியாது - திருத்தவே முடியாது என்பது மிக மிக வெளிப்படை! இந்துக்கள் அல்லாத பிற மதத்தவர் மதம் அற்றவர்கள் மோடியை நிராகரிக்க வேண்டும் என்பதை விட உண்மையிலேயே இந்துக்கள் என்பவர்கள்தான் மோடியை ஒதுக்க வேண்டும்.

அவர் கூறும் இந்துத்துவாவாதத்தில் மக்களிடையே கடும் பிளவுகளை ஏற்படுத்திப் பெரும் மோதலை ஏற்படுத்தக் கூடிய அபாயம் இருக்கிறது; அமைதியான இந்தியா வேண்டுமா? அமளியான இந்தியா வேண்டுமா என்ற முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு இந்திய மக்களுக்கு இருக்கிறது.

இந்தியா - குஜராத்தாக மாற வேண்டும் என்று கூறுவது எந்தப் பொருளில் என்பது புரியாத புதிராக இருக்கிறது; கோத்ராவைத் தொடர்ந்து அரச பயங்கரவாதமாக சிறுபான்மை மக்கள் நர வேட்டை ஆடப் பட்டார்களே - அந்த குஜராத்தாக இந்தியா மாற வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லுகிறார்களா என்று தெரியவில்லை.

ஒருக்கால் குஜராத் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முண்டியடித்துக் கொண்டு முதல் வரிசையில் தலையைத் தூக்கி நிற்கிறது என்று ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே அந்த எண்ணத்தில் சொல்கிறார்களா?

அதுவும்கூட அவர்களுக்கே உரித்தான கோய பெல்சுப் பிரச்சாரம்தான்! இந்தியாவின் சோமாலியா குஜராத் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அந்த அளவுக்கு ஊட்டச் சத்துக் குறைவால் குழந்தைகள் 44.6 சதவீதத்தினர் குஜராத் மாநிலத்தில் அவதிப்படு கின்றனர்.

பிஜேபிக்குப் பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திர மோடிதான் கிடைத்திருக்கிறார் என்பது அக்கட்சியின் பரிதாப நிலையையும், பலகீனத்தையும் தான் வெளிப்படுத்தும்.

பிரதமருக்கான வேட்பாளர் என்று விளம்பரப் படுத்தப்பட்டுள்ள இந்தக் கால கட்டத்தில், மோடியின் பேச்சு எப்படி இருக்கிறது தெரியுமா? எனக்குப் பைத்தியம் தெளிந்து விட்டது. உலக்கையைக் கொண்டு வா! கோவணம் கட்டிக் கொள்கிறேன்! என்ற ரீதியில் தான் இருக்கிறது. மோடி அப்படித்தான் - அவர் திருந்தப் போவதில்லை. பொது மக்கள்தான் தங்கள் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்ளாமல் விழிப்பாக இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


இஸ்லாமியர்களை நாய்கள் என இழிவுபடுத்திய நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்!


தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 16- இஸ்லாமியர்களை நாய்க்கு ஒப் பிட்டுக் கூறிய நரேந்திரமோடி மன்னிப்புக் கோர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தை கட்சி யின் தலைவர் தொல்.திருமா வளவன் அறிக்கை விடுத் துள்ளார். அறிக்கை வருமாறு:

சிலநாட்களுக்கு முன் ராய்ட் டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த நரேந்திர மோடி இஸ்லா மியர்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். 2002ஆம் ஆண்டு மோடி முதல் வராக இருந்தபோது குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரம் குறித்து பேட்டியில் கேள்வி எழுப்பியுள் ளனர். அந்தக் கலவரத்துக்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? என அந்த நிருபர் கேட்டபோது யா ராவது காரை ஓட்டிக்கொண்டு போகிறார்கள். நாம் பின் இருக் கையில் அமர்ந்திருக்கிறோம். அப் போதுகூட கார் சக்கரத்தின் கீழே நாய்க்குட்டி ஒன்று ஓடிவந்து அடிபட்டு செத்துப் போனால் அது வருத்தம் அளிக்குமா இல் லையா? வருத்தம் தரும். என்று அவர் பதில் அளித்திருக்கிறார். குஜ ராத்தில் நடத்தப்பட்டது இஸ் லாமியர்களுக்கு எதிரான திட்ட மிட்ட இனப்படுகொலை என்ப தைப் பல் வேறு மனித உரிமை அமைப்புகளும் தெளிவுபடுத்தி யுள்ளன. அதற்குக் காரணமான வர் அன்றைக்கு அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிதான் என்பதை உலகம் அறியும். அங்கு நடத்தப்பட்ட போலி என்கவுண்ட் டரில் இஷ்ரத் ஜஹான் என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இப் போது தான் சி.பி.அய் குற்றப்பத் திரிகை தாக்கல் செய்திருக்கிறது. அந்த வழக்கில் மோடியும் குற்றவாளியாக சேர்க்கப் படலாம் என சொல்லப் படுகிறது. அவரது கரத்தில் ரத்தக் கறை படிந்திருப் பதால்தான் அமெரிக்கா அவரைத் தனது நாட்டுக்குள் அனு மதிக்க வில்லை. தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் தலையீட்டால் பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாள ராக மோடி முன் நிறுத்தப் படுகிறார். வளர்ச்சி, முன்னேற்றம் என மாய்மாலம் பேசி வந்த மோடி இப்போது வெளிப் படையாகத் தனது இந்துத்துவா முகத்தைக் காட்ட ஆரம்பித் திருக்கிறார். அதன் ஒரு அங்கம் தான் இஸ்லா மியர்களை இழிவு படுத்தும் இந்த நேர்காணல். இத்தகையவர் பிரதமராக வந்தால் இந்த நாட்டில் மதக் கலவரங் கள்தான் நடக்கும். குஜராத் மாடலை இந்தியா முழு மைக்கும் பரிசோதித்துப் பார்க்க சங்கப் பரிவாரங்கள் தயாராகி விட்டன என்பதைத்தான் மோடியின் நேர் காணல் காட்டுகிறது. இதை ஜனநாயக சக்திகள் அனுமதிக்கக் கூடாது. இஸ்லாமியர்களை இனப் படுகொலை செய்ததோடல்லா மல் அவர்களை நாயுடன் ஒப் பிட்டுப் பேசி இழிவுபடுத்தியிருக் கும் நரேந்திர மோடி தனது பேச்சுக்குப் பகிரங்கமாக மன் னிப்புக் கோரவேண்டும். அல்லது அவர் மீது மத்திய அரசு சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண் டும் என விடுதலைச் சிறுத்தை கள் கட்சி சார்பில் வலியுறுத்து கிறேன் என்று குறிப்பிட்ட எழுச்சித் தமிழர் திருமாவளவன் அறிக் கையில் கூறினார்.