Search This Blog

28.7.13

இந்துத்துவா - நேற்று - இன்று - நாளை - ஹிந்துராஷ்டிரம் வந்தால்... எச்சரிக்கிறார் தமிழர் தலைவர் கி.வீரமணி !

முதல் மணி அடித்தார் தலைவர் வீரமணி!

சென்னை - பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் முதல் மணி அடிக்கப்பட்டது. இந்தியாவில் இந்துராஜ்ஜியத்தை நிறுவுவோம் என்று சூளுரைத்துப் புறப்பட்டுள்ளது ஒரு கூட்டம்.
இதற்கு முன்பு அரசல்புரசலாகப் பேசிவந்த அந்தக் கூட்டம் இப்பொழுது தேர்தல் நேரத்தில் வெளிப் படையாக மணி அடித்துக் கிளம்பிவிட்டது.
இந்த அபாயத்தைச் சுட்டிக்காட்டும் எச்சரிக்கை மணியை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஒலித்தார்.
இந்துத்துவா - நேற்று - இன்று - நாளை எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் நேற்று (25.7.2013) மாலை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்தான் எச்சரிக்கை மணியை ஒலித்தார்.
ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருக்கக்கூடிய மோகன்பகவத் கடந்த ஞாயிறன்று குரு பூர்ணிமா நிகழ்ச்சியில் குறிப்பிட்டதை எடுத்துக்காட்டினார்.
இந்தியாவின் அடையாளம் என்பதே இந்துத்து வாதான் என்று அவர் பேசியிருப்பதை எடுத்துக் காட்டினார். வெகுகாலமாக இந்த அடையாளம் இருப்பதாக பகவத் சொன்னதில் உண்மை உண்டா?இந்தியா என்பது ஒரு நாடா? துணைக் கண்டமா? இந்தியா என்ற பெயர் எப்பொழுது வந்தது? 56 தேசங் களாகப் பிரிந்து கிடந்த நாட்டை ஒரு குடையின்கீழ் துப்பாக்கி முனையில் கொண்டு வந்தவன் வெள்ளைக் காரன் அல்லவா!
இந்தியாவில் எத்தனை எத்தனை இனங்கள், எத்தனை எத்தனை மொழிகள், எத்தனை எத்தனை பண்பாடுகள்!
இவற்றையெல்லாம் மறந்துவிட்டு இந்துத்துவா என்கிற அடையாளம்தான் இந்தியாவுக்கு என்பது எவ்வளவு பெரிய இமயமலைப் பொய் மூட்டை!
முதலில் இந்து என்றால் என்ன என்பதை விளக் கட்டுமே பார்க்கலாம் - அதை விளக்கி விட்டல்லவா அதன் அடையாளத்தைப் பற்றிப் பேசவேண்டும்? என்று ஆணிவேரில் பலத்த அடி கொடுத்தார் ஆசிரியர்.
இந்து என்ற சொல் இந்தியாவில் எந்த மொழியில் உண்டு? என்ன ஆதாரம் கூற முடியுமா?
இந்து என்ற பெயரை வெள்ளைக்காரன் கொடுத் தானோ, நாம் பிழைத்தோமோ என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சொல்லவில்லையா?
இந்த நிலையில் எங்கிருந்து குதித்தது இந்து அடையாளமும் - இந்துக் கலாச்சாரமும்?
இந்து என்ற சொல்லுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ள விளக்கத்தை திராவிடர் கழகத் தலைவர் எடுத்துச் சொன்னபொழுது கூட்டமே கலகலத்தது.

யார் யாரெல்லாம் கிறித்தவர் அல்லவோ, யார் யார் எல்லாம் முசுலிம் அல்லவோ, பார்சி அல்லவோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று சொல்லுவதன்மூலம் இந்து என்பதற்கு எந்த ஒரு தனித்துவமும் இல்லை என்று விளங்கவில்லையா?
எது ஒலி பெருக்கி என்று கேட்டால், எது மேசை அல்லவோ எது புத்தகம் அல்லவோ, எது பேனா அல்லவோ அதுதான் ஒலிபெருக்கி என்று சொன்னால், எப்படி இருக்கும்? என்று தமிழர் தலைவர் சொன்ன பொழுது, சிரிப்பும், கரவொலியும் கலந்து வந்தன.
தனித்துவம் இல்லாத ஒன்று ஒரு நாட்டு மக்களுக்கு அடையாளமாக இருக்க முடியுமா?
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கிருத்தவனாக இருக்க முடியாது; முசுலீமாகவும் இருக்க முடியாது. ஆனால், அர்த்தமுள்ள இந்து மதத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவனும் இந்து, நம்பிக்கை இல்லாதவனும் இந்துவாம்!
(கூட்டத்தில் ஒரே சிரிப்பு!).
ஹிந்துத்வா எப்படி வந்தது? 1924 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதனை அறிமுகப்படுத்திய ஆசாமி யார் என்பதை ஆதாரத்தோடு தெரியப்படுத்தினார் ஆசிரியர்.
வெளிநாட்டில் சென்று படித்து வந்த வி.டி. சாவர்க்கர் தான் இதன் தந்தை.
Hindus are a nation bound by
a common culture,
a common history,
a common language,
a common country
and a common religion
பொதுக் கலாச்சாரம்
பொது வரலாறு
பொது மொழி
பொது நாடு
பொது மதம் - இவை அய்ந்தும் சேர்ந்ததுதான் இந்துத்துவா என்கிறார் சவர்க்கார்.
இந்த அய்ந்து பொது அம்சங்களும் இந்தியாவில் எங்கு இருக்கின்றன? ஹிந்து என்பதில்கூட எத்தனை எத்தனைப் பிரிவுகள் - பிளவுகள் - பிணக்குகள்! எத்தனை எத்தனை முரண்பட்ட அம்சங்கள்!
எப்படி கொண்டு போகிறார்கள்? ஆர்.எஸ்.எஸின் தலைவராகவிருந்த மோகன் பகவத் கூறுகிறார்: யூதர்களும், பார்சிகளும் தவிர இந்தியாவிலுள்ள அனைத்து மதக்காரர்களும் இந்துக்கள்தானாம். இந்த பகவத் மட்டுமல்ல, இவருக்கு முன்னர் இருந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் கு.சி.சுதர்சன் (குப்பஹள்ளி சீதாராமய்யா சுதர்சன்) ஆக்ராவில் நடைபெற்ற (15.10.2000) தேசியப் பாதுகாப்பு முகாமின் நிறைவு விழாவில் என்ன கூறினார்?
பூர்வீகத்தில் நாங்கள் இந்துக்கள் என்ற கருத்தையும், பிற மதங்களின் கருத்தையும், பிற மதங்களின் கருத்து களுக்கு மதிப்பளிக்கும் தன்மையையும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஏற்று தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும்.
ஸ்ரீராமபிரான், ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆகியோ ருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ளவேண்டும் (தினமணி, 16.10.2000) என்று பேசவில்லையா? நேற்றைய கூட்டத்தில் இதனை எடுத்துக்காட்டிய திராவிடர் கழகத் தலைவர் ஓர் வினாவை எழுப்பவும் தவறவில்லை.
இப்பொழுதுள்ள முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் நமது முன்னோர்கள் என்று ஒப்புக்கொண்டுவிட்ட பிறகு - அவர்களை ஏன் பிரித்துப் பேசவேண்டும்? நம் சகோதரர்கள் என்ற உணர்வு ஏன் வரவில்லை என்ற வினாவை எழுப்பினாரே பார்க்கலாம்.

கிறித்தவர்கள் ராமனையும், முஸ்லிம்கள், கிருஷ் ணனையும்
வணங்கவேண்டும் என்று சொல்லுவ தோடு நிற்கவில்லை. குருஜி கோல்வாக்கரின் வரையறுக்கப்பட்ட தேசியம் எனும் நூலில் இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். அவர்கள் தங்களை அயல் நாட்டினராகக் கருதக்கூடாது; அல்லது இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரித்து வாழவேண்டும்; எதையும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடிமக்களின் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும் என்று எழுதி வைத்திருப்பவர்தானே இந்த இந்துத் துவாவாதிகளின் குருஜியான கோல்வால்கரின் கருத்து.
ஹிந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போவதாகச் சொல்லும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நிலைதானே ஏற்படும்?
அவர்கள் கூறும் ஹிந்துத்துவாவில் கூறிய படி ஒரே நாடு என்றால் மாநிலங்களே கூடாது - ஒரே நாடாகத் தானிருக்கும் - சமஸ்கிருதம்தான் ஒரே மொழி - பார்ப்பனக் கலாச்சாரம் ஒன்று மட்டும்தான் அங்கீ கரிக்கப்படும்.
மதுரையிலே விசுவ ஹிந்து பரிஷத்துக்காரர்களின் மாநாட்டில் போடப்பட்ட தீர்மானத்தைக் கழகத் தலைவர் எடுத்துக்காட்டினார்.
ஹிந்து ராஜ்ஜியம் வந்தால் இந்திய அரசமைப்புச் சட்டம் தூக்கி எறியப்படும்; மனுஸ்மிருதிதான் அரசமைப்புச் சட்டமாகும் என்று சொல்லவில்லையா? என்ற தகவலைச் சொன்னபொழுது பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சி கலந்த அமைதி நிலைகொண்டது!
நமது அரசர்கள் எல்லாம் என்ன சொல்லுவார்கள்? மந்திரி மாதம் மும்மாரி பொழிகிறதா? மனுதர்மப்படி ஆட்சி நடக்கிறதா? என்றுதானே கேட்பார்கள்.
அந்த நிலை எப்படி மாறியது? எப்பொழுது மாறியது? கல்வி உரிமை நமக்கு வந்த வரலாறு என்ன? யார் காரணம்? என்ற வினாவை எழுப்பிய தமிழர் தலைவர் அதற்கு விடையையும் தந்தார். தந்தை பெரியார், திராவிடர் இயக்கம்- தன்மான இயக்கம் தோன்றிய பிறகே இந்த நிலைமைகள் மாறின என்று குறிப்பிட்ட பொழுது பலத்த கைதட்டல்!
ஹிந்துத்துவாவை அரங்கேற்றிய வி.டி.சாவர்க்கர் இந்து ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்கிறார்? அதனை ஆதாரத்தோடு எடுத்துக்காட்டினார் ஆசிரியர்.
சதர்வர்ணாய வியவஸ்தாபன்
யாஸ்மின்தேஷ் ஹிக நாவித்யத்தே;
தாம் மிலேச்சதேஷ்ம் ஜன்யதார் ஆரிய வர்த்தாஷ் பரே
The land where the system of Four Varnas does not exit should be known as the Mellach country Aryavart lies away from it’’
எந்த நாட்டில் நால் வருணம் இல்லையோ, அந்த நாடு மிலேச்சர்களின் நாடு என்று பொருள். ஆரிய வர்த்தம் என்பது அதற்கு மாறுபட்டது என்றுகூறுகிறார் வி.டி.சாவர்க்கர்.
இதில் கிறித்தவர்களாக மாறியவர்கள் மத்தியில் இன்னும் ஜாதி ஒட்டிக் கொண்டுள்ளது. ஜாதியை முற்றிலும் நிராகரித்தவர்கள் முஸ்லிம்கள் மட்டுமே!
மோடி ராஜ்ஜியம் வந்தால் அது அசல் மனுதர்ம ராஜ்ஜியமாக ஆரிய வர்த்தமாகத்தான் இருக்கும்.
இதுவரை பின்னணியில் இருந்து இயக்கி வந்த ஆர்.எஸ்.எஸ். - சங் பரிவார்கள் இப்பொழுது முன்னணி யிலே வந்து நரேந்திர மோடியை முன்னிறுத்துகின்றன. தேர்தல் களத்திலேயே முன்னிறுத்த முனைந்து விட்டனர்!

தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது இந்துத் தேசியவாதி என்று மோடி சொல்லுவதன் இரகசியம் இதுதான்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை (Preamble) என்ன சொல்லுகிறது?
We, the people of India having solemnly resolved to constitute India in to (Sovereign Socialist Secular Democratic Republic) and to secure to all its citizens Justice, Social, Economic and Political என்றுதான் தொடங்குகிறது. மதச் சார்பற்ற, சோசலிசக் குடியரசை அமைப்பது என்பதுதானே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை.
இந்த மதச் சார்பற்ற தன்மையை ஏற்றுக்கொள்ளாத - தன்னை ஒரு இந்துத் தேசியவாதி என்று கூறும் ஒருவர் இந்தியாவின் பிரதமர் என்று சொல்லும் ஹிந்துத்துவா சக்திகளை முறியடிக்கவேண்டாமா? மோடி கூறுவது சட்ட விரோதம் அல்லவா? என்றார் தமிழர் தலைவர்.
இந்தியாவுக்கே முதல் மணியை - எச்சரிக்கை மணியை பெரியார் திடல் ஒலிக்கிறது; இது தொடக்கம்தான்.
மத்தியில் இருக்கும் ஆட்சியின்மீது இருக்கும் சில அதிருப்தி உணர்வுகளைப் பயன்படுத்தி, இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி ஹிந்துத்துவாவை அரங்கேற்ற லாம் என்று நினைக்கிறார்கள்.
வெறும் கோபத்தினால் மக்கள் தவறான முடிவை எடுத்தால் அதன் விளைவு - மனுதர்மம்தான் நம்மை மீண்டும் ஆளக்கூடிய அபாயம் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது என்று எச்சரித்தார்; ஆம், முதல் மணியை அடித்தார் தமிழர் தலைவர்.
75 நிமிடங்கள் உரையாற்றினார். தொடக்கத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.
நடிகவேள் ராதா மன்றம் நிரம்பி வழிந்தது - பலதரப்பினரும் இந்த ஆய்வுரையைச் செவிமடுத்தனர். உரை நிகழ்த்திய பிறகு பல தரப்பினரும் தமிழர் தலைவரைச் சுற்றி நின்று தங்கள் பாராட்டுகளை, உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் இதுவரை அறிந்திராத பல புதிய தகவல்களை அறிந்தேன் என்று கூறி, இந்துத்துவாவின் பேராபத்தை முழுவதும் தாங்கள் உணர்ந்துள்ள அளவுக்கு வேறு எவரையும் என்னால் நினைக்க முடியவில்லை என்று மனந்திறந்து பாராட்டினார். இந்தவுரை முன்னுரைதான் - சில நாட்களில் தொடரும்.
                                                                               ------------------------------------------(வளரும்)
**********************************************************************************
இந்து மதம்பற்றி நீதிபதி ராஜமன்னார்
இந்து மதம்பற்றி நான் பேசுகையில், அந்தச் சொல்லினுடைய தெளிவில்லாத - கட்டுப்பாடற்ற - பொருள் விளக்கம்பற்றிய உணர்வோடுதான் இருக்கிறேன் என ஒளிவு - மறைவு இல்லாமல் வெளிப்படுத்தித் தீரவேண்டியிருந்தது.
(‘‘When I speak of Hindu religion I am actually conscious of the vague connotation of that word’’ Michael vs Venkateswaran case: MLJ 239/1952-1)
தம்முடைய நிலைக்குப் பக்கத் துணையாக  நீதிபதி ராஜமன்னார் அவர்கள் இந்தியப் பண்பாட்டு மரபு என்னும் நூலிருந்து கீழ்வருவதைச் சான்று காட்டினார்.
மதம் என்ற சொல்லை இப்போது நாம் புரிந்துகொள்ளும் பொருளின்படி இந்துவியல் என்பது ஒரு மதம் இல்லை. அச்சொல் இந்திய மூலத்தைக் கொண்டதன்று. அல்லது இந்துக்கள் என்பவர்களால் அச்சொல் தங்களின் மதத்திற்குப் பெயராக ஒருபோதும் பயன்படுத்தப் பெற்றதே கிடையாது.
(‘‘Hinduism is not a religion in the sense in which we now understand the word. The word is not Indian in origin; nor was it ever used by the Hindus as the name of their religion’’ The Cultural Heritage of India; Haridass Battacharia; ILR 1953 (Madras)- 106).
சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் இதனை எடுத்துக்காட்டினார்.
******************************************************************************
                       ----------------------------------------26-7-2013
ஹிந்துராஷ்டிரம் வந்தால்... எச்சரிக்கிறார் தமிழர் தலைவர்!
இந்துத்துவா - நேற்று - இன்று - நாளை எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எடுத்து வைத்த தகவல்கள் (25.7.2013) பலவும் பார்வையாளர்களுக்குப் புத்தம் புதியதாகவே இருந்தன. நேபாளம் முதல் கேரளா வரை இந்து ராஜ்ஜியம் எப்படி கொடிகட்டி ஆண்டது என்பதை எடுத்துச் சொன்னால், ஹிந்துராஷ்டிராவின் ஆபத்தை உணரலாம் என்ற பீடிகையோடு பல்வேறு ஆதாரங்களையும் எடுத்துக்காட்டினார்.

20 ஆம் நூற்றாண்டுவரை இந்துக்களுக்கு என்று ஒரு ராஜ்ஜியம் இருந்து வந்தது; அதுதான் நேபாளம் - இந்து மன்னர்களின் கைகளில் அந்த ஆட்சி இருந்து வந்தது. மாவோயிஸ் டுகள் தலைதூக்கி அந்த ராஜ் ஜியத்தைத் தரை மட்டமாக்கினர்.

ஹிந்துராஷ்டிராவை அமைக்கப் போவதாக இந்தியாவில் உள்ள காவிகள் - சங்பரிவார்கள் முஷ்டி யைத் தூக்கிக்கொண்டு அரட்டைக் கச்சேரிகளை நடத்துகிறார்களே, மீண்டும் மனுதர்மக் கொடியைப் பறக்கவிட்டுக் குளிர்காயலாம் என்று ஆரிய நரிகள் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைகின் றனவே - அப்படி ஓர் இந்து ராஜ்ஜியம் வந்தால் அது எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்காட்டவே இந்து ராஜ்ஜியமாக இருந்த நேபாளம் எப்படி இருந்தது என்பதை எடுத்துக்காட்டினார் - எதையும் ஆதாரத் துடன் மேடைகளில் பேசுவதை தம் இயல்பாகக் கொண்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்,

நேபாளத்தைப் பாரீர்!

மகா தவிரா சங்கராசி
ஸ்த்ரா (Maha sthavira sangharakshita) என்ற புத்த பிக்கு விசுவ ஹிந்து பரிஷத்தினர் ஏற்பாடு செய்த டில்லிக் கூட்டத்தில் (23.2.1982) பேசிய பேச்சினை ஆதாரப்படுத்தினார்.

இதோ புத்தப் பிக்குப் பேசுகிறார்:

1949 மற்றும் 1952-களில் நான் நேபாளம் சென்றதுண்டு. ஜாதி முறை எப்படியெல்லாம் அங்கே கடைபிடிக்கப்படுகிறது என்பதை நேரில் கண்டேன். ஜாதி முறையைப் பின்பற்றவில்லையென்றால், அவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் - அபராதமும் விதிக்கப்படுவார்கள்.
நான் நேபாளத்தில் ஒரு புத்த மடத்தில் தங்கி இருந்தேன். நடு ராத்திரியில் ஒருவர் கதவைத் தட்டினார்; இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் வெளியில் நின்று கொண்டிருந்தார். நான் இந்த இரவு இங்கே தங்கலாமா? அனுமதிப்பீர்களா? என்று கேட்டார்.

ஏன்? என்ன அவசியம்? என்று கேட்டேன். அதற்கு அந்த இந்து மதக்காரர் என்ன சொன்னார் தெரியுமா? நான் என் ஜாதியை இழந்துவிட்டேன்; ஜாதிக்கு விரோ தமாக நடந்துகொண்டு விட்டேன். அதனால் நான் என் வீட்டுக்குச் செல்ல முடியாது; என் மனைவியும், என் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டாள்; அப்படி அவள் அனுமதித்தாலும் அவளும் ஜாதியை இழந்துவிடுவாள்!

ஏன் அப்படி என்று நான் கேட்டேன். அதற்கு அந்த இந்து ஆசாமி சொன்ன பதில்: வியா பார நிமித்தமாக நான் வெளியூருக்குச் சென்றிருந்த இடத்தில் நான் உடல்நலம் பாதிக்கப்பட்டேன். ஒரு சத்திரத்தில் தங்கினேன் - தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவர் எனக்கு உதவினார். எனக்கு வேறு யாரும் உதவ முன்வரவில்லை; அந்தத் தாழ்ந்த ஜாதிக்காரன் தந்ததையும் சாப்பிட்டேன்; அதனால் என் ஜாதி என்னை விட்டுப் போய் விட்டது. எனவே, என்னைத் தயவு செய்து இந்த இரவு தங்கிட அனுமதியுங்கள் என்றான்.

நாளை நானே நேரில் போலீஸ் ஸ்டேசனுக்குச் சென்று நடந்ததைச் சொல்லி அபராதம் கட்டி, இழந்த என் ஜாதியை மீண்டும் பெறுவேன். என் மனைவியும் அப்பொழுது என்னை ஏற்றுக்கொள்வாள் என்று கூறியவற்றையெல்லாம் விசுவ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் அந்தப் பவுத்த பிக்கு சொன்னதை கழகத் தலைவர் 25.7.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுத்துக்காட்டினார்.

-------------------(ஆதாரம்: Religion and secularism - a lecture given to vishva Hindu Parishad)

இந்தப் பகுதியை எடுத்துக்காட்டிய தமிழர் தலைவர் - இந்தியாவில் ஹிந்து ராஜ்ஜியம் வந்தால், இங்கும் அந்த நிலைதான் ஏற்படும் என்று எச்சரித்தார்.
அப்படி ஒரு ராஜ்ஜியம் வந்தால் நம் மக்களும் சூத்திரப் பட்டத்தை நல்ல இடத்தில் குத்துங்கள் என்று முகத்தைக் காட்டினாலும் காட்டுவார்கள் என்று தமிழர் தலைவர் சொன்னபொழுது, அனைவருக்கும் ஒரே மன இறுக்கம் தான்!

மகாராட்டிரத்தைப் பாரீர்!

நேபாளம் அப்படி என்றால், மகாராட்டிரத்தின் நிலை என்ன?
மலை எலி என்று கூறப்படும் சிவாஜி, யுத்தம் பல வென்று ஒரு புது சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினான்.

களம் பல வென்ற அந்த மாவீரன் சிவாஜி முடிசூட்டிக் கொள்ள முடிந்ததா என்றால், முடியவில்லை; காரணம் சிவாஜி சூத்திரனாம்; இந்து மதத்தின் வருண தர்மத்தின்படி சூத்திரன் முடிசூட்டிக் கொள்ள முடியாது - சத்திரியன்தான் அரசாள முடியும்.

முடி சூட என்ன வழி என்று சிவாஜி கேட்டபோது, சில பிராயச்சித்தங்களை நடத்தி சத்திரியனாக்கி முடிசூட்டும் தகுதியைப் பெறலாம் என்றனர். அதற்கு என்ன செய்யவேண்டும்? யாகங்கள் செய்யவேண்டும் என்றனர்- பார்ப்பனர்கள்!
கங்கைக்கரைப் பகுதியிலிருந்து பார்ப்பனர்கள் வரவழைக்கப்பட்டனர். ஒருவர் அல்லர், இருவர் அல்லர், 11 ஆயிரம் பார்ப்பனர்கள் அழைத்து வரப்பட்டனர். கங்க பட்டர் என்ற பார்ப்பனர் காசியிலிருந்து வரவழைக்கப் பட்டார். அவர்தான் தலைமைப் புரோகிதர்.

1674 மே 28 ஆம் தேதியன்று கங்கப்பட்டன் என்ற அந்தப் புரோகிதன், சிவாஜியின் காதில் காயத்ரி மந்திரங்களை ஓதி, சூத்திரன் சிவாஜியை சத்திரியனாக மாற்றினானாம்.

சிவாஜியின் 300 ஆவது ஆண்டு விழா கொண்டா டப்பட்டபோது, டாக்டர் ஏ.இராமசாமி முதலியார் நீதிக்கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான ஜஸ்டிஸ் ஏட்டில் மூன்று அற்புதத் தலையங்கங்களை அற்புதமான ஆங்கிலத்தில் எழுதினார்.

18 மாதங்கள் யாகங்கள் நடத்தப்பட்டன. விளைவு சிவாஜியின் கஜானா காலியனதுதான் மிச்சம்!

மிக அழகாக டாக்டர் இராமசாமி முதலியார் எழுதி னார். சுரண்டிக் கொழுத்த பார்ப்பனர்களுக்கு ஏகபோக ஆதிக்கக்காரர்களுக்கு - அவர் இட்ட பெயர் மோனோ பொலிஸ்ட்ஸ் (Mono polists) They got the lost pie out of his treasury.
சிவாஜியின் கஜானாவிலிருந்து கடைசிப் பைசாவைக் கூட பார்ப்பனர்கள் சுரண்டிக் கொண்டு விட்டனர் என்று எழுதினாரே!

அறிஞர் அண்ணா அவர்கள் சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் எனும் நாடகத்தை எழுதினார். அதில் சிவாஜி எப்படி யெல்லாம் பார்ப்பனர்க ளால் ஆட்டி வைக்கப் பட்டான். அவன் செல்வம் எப்படியெல்லாம் சுரண் டப்பட்டது என்பதை நாடக வடிவத்தில் விளக் கினார். அந்த நாடகத் தில் அண்ணா அவர் களே காகப்பட்டராக அருமையாக நடித்திருக் கிறார்.
சிவாஜியின் அந்திம கால வாழ்வு மிகவும் பரி தாபகரமானது. சிவாஜிக் குப் பிறகு ராஜ்ஜியம் பேஷ் வாக்கள் எனும் பார்ப் பனர்களின் கைக்குச் சென்றது.
சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்பது இந்தி யாவுக்கு ஒரு சரியான எச்சரிக்கையான பாட மாகும்! என்றார் திரா விடர் கழகத் தலைவர்.

கேரளாவைக் காணீர்!

அடுத்து தெற்கே கேரள மாநிலத்தை எடுத்துக் கொள்ளலாம்.
ஹிந்துத்துவா அங்கே எப்படி ஆட்கொண்டது என்பதும் முக்கியமானதாகும்.
Missionaries and a Hindu State Travancore 1858-1936  எனும் தலைப்பில் ஜப்பானிய நாட்டின் பல்கலைக் கழகப் பேராசிரியர் கோஜி கவாஷிமா (Kogi Kawashima) என்பவர் எழுதியுள்ளார்.

அந்த நூலைப்பற்றிப் பேராசிரியர் ஆ.சிவசுப்பிர மணியன் அவர்கள் 2013 ஜூன் திங்கள் உங்கள் நூலகம் எனும் அருமையான இதழில் சிறப்பான கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளார்.

திருவாங்கூர் அரசை ஓர் இந்து அரசு என வரை யறுத்துவிட்டு, சமய வேறுபாடுகளுக்கிடையில் கல்வி மருத்துவ வளர்ச்சியில் திருவிதாங்கூர் அரசும் மிஷனரி களும் செயல்பட்ட முறை குறித்தும், திருவிதாங்கூர் பகுதியின் அடித்தள மக்கள் பிரிவினர் மீதான அரசு மற்றும் மிஷினரிகளின் அணுகுமுறை குறித்தும் இந்நூல் ஆராய்கிறது.

இதோ கட்டுரை தொடர்கிறது:

இந்து அரசு

மன்னர்களால் ஆளப்பட்ட திருவிதாங்கூர்ப் பகுதியில் வேணாட்டு மரபு என்ற பெயரிலான ஆட்சி மரபைத் தோற்றுவித்தவர் மார்த்தாண்ட வர்மா (1729-1758). ஆட்சி அதிகாரத்திற்கான போராட் டத்தில் தனக்கு முந்தைய மன்னனின் மகன்களைக் கொலை செய்ததுடன், தனக்கு எதிராகச் செயல்பட்ட 42 பேர்களைத் தூக்கிலிட்டார். அத் துடன் நில்லாது அவர்களின் பரம்பரையே அற்றுப் போகவேண்டி அவர்களது குடும்பப் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக ஏலமிட்டார். மனுதர்மம் அனுமதிக்காது என்பதால், தனக்கு எதிராகச் செயல்பட்ட பிராமணர்களைக் கொலை செய்யாது, பிராமண ஜாதிக்குப் புறம்பாக்கி அவர் களது நெற்றியில் நாய்ச் சின்னத்தைப் பொறித்தார்.

மற்றொரு பக்கம் சில நிர்வாகச் சீர்திருத்தங் களும் மேற்கொள்ளப்பட்டன. நாடெங்கிலும் நிலங்கள் முறையாக அளக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டன. மிளகு வாணிபம் அரசின் ஏகபோக உரிமையானது.

இவையெல்லாவற்றையும்விட 1750 ஆம் ஆண்டில் அவர் செய்த ஒரு செயல் திருவிதாங்கூர் வரலாற்றில் மிக முக்கியமான செயலாக அமைந்தது. அரசர் தன் குடும்பத்தினரும் அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் புடைசூழ திருவனந்தபுரத் திலுள்ள பத்மனாபசாமி கோவிலுக்குள் சென்று, தன்னை பத்மனாபசாமியின் அடிமையாக அவர் அறிவித்துக் கொண்டார். அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற சொல்லை அக் கடவுளின் பெயருடன் இணைத்து பத்மனாபதாசன் என்ற பெயரைத் தம் இயற்பெயருடன் இணைத்துக் கொண்டார். (இவரையடுத்து வந்த ஏழு மன்னர் களும் பத்மனாபதாசன் என்ற பட்டத்தைத் தாங்கியே ஆட்சி புரிந்தனர்).
பத்மனாப சாமியிடம் நில மானியம் பெற்ற குடி ஆளாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டார். பத்மனாபசாமியே உண்மையான ஆட்சியதிகாரம் பெற்றவர் என்று வெளிப்படுத்தியதன் வாயிலாக அவரது ஆட்சி தெய்வீகமயமாக்கப்பட்டது.

பத்மனாபசாமியின் தாசன் என்பதை மக்களுக்கு நினைவூட்டிக் கொள்ளும் வகையில் புதிதாகப் பதவியேற்கும் மன்னர் படியேத்தம் என்ற சடங்கு ஒன்றை நிகழ்த்துவார். இச் சடங்கின்படி கோவிலின் முன்புள்ள பீடத்தில் தன் வாளை அவர் வைத்துவிடுவார். கோவிலில் பூசை செய்யும் போத்தி வாளை எடுத்துச் சென்று கருவறைக்குள் இறைவனின் முன்வைத்து பூசை நடத்திவிட்டு அதை எடுத்து வந்து மன்னரிடம் தருவார். இச்சடங்கு மன்னன் என்பவன் தெய்வத்தின் பிரதிநிதி என்பதை மக்களுக்கு நினைவூட்டி வந்தது. திருவிதாங்கூரின் திவா னாக இருந்த சர்.சி.பி.ராமசாமி அய்யர், பத்மனாபசாமியே உண்மையில் ஆட்சி புரிபவர் என்றும், ஆட்சியை நிர்வகிக்கும் வைசிராய்தான் திருவாங்கூர் மன்னர் என்றும் நவீன அரசியல் மொழியில் குறிப்பிட்டார். மன்னரை விமர்சிப்பது சுவாமித் துரோகம் என்றானது.

இந்து சமயம் சார்ந்தவர் என்ற முறையில், இரண்யகர்ப்பதானம் துலாபுருஷதானம் என்ற இரு தானங்கள் திருவிதாங்கூர் மன்னர்களால் வழங்கப்பட்டன. இவற்றுள் இரண்யகர்ப்பதானம் பின்வருமாறு நிகழும்.
பெரிய வடிவிலான தாமரை மலர் ஒன்று தங்கத்தால் செய்யப்படும். இதனுள் பஞ்சகவ்வியம் (பசுவின் பால், தயிர், வெண்ணெய், சிறுநீர், சாணம் ஆகியனவற்றின் கலவை) ஊற்றப்படும். மலர் வடிவிலான இப்பாத்திரத்தில் மன்னர் நுழைவார். அதன்பின் இம்மலர் மூடப்படும். பஞ்ச கவ்வியத்துள் அய்ந்து முறை மூழ்கி மன்னர் வெளிவருவார். இதன் பின்னரே அவருக்கு முடி சூட்டப்படும். இதன்பின் தங்கத் தாமரையைத் துண்டு துண்டாக வெட்டியெடுத்து மன்னரின் அந்தரங்க ஊழியர்களுக்கும், பிராமணர் களுக்கும் கொடையாக வழங்குவர்.

துலாபுருஷதானம் என்பது மன்னரின் எடைக்கு இணையான தங்கத்தை பிராமணர் களுக்குக் கொடையாக வழங்குவதாகும்.

முறஅய்ப்பம் என்பது அரசின் மற்றொரு முக்கிய சடங்காகும். தலைநகரான திருவனந்த புரத்திலுள்ள பத்மனாபசாமி கோவிலில் மன்ன ராட்சியால் நடத்தப்படும் இச்சடங்கின் நோக்கம், போரின்போது மேற்கொள்ளப்பட்ட செயல் களினால் ஏற்படும் பாவங்களைப் போக்கிக் கொள்வதும், நாடு செழிக்கவேண்டும் என்பதும் தான். இச்சடங்கில் நம்பூதிரிப் பிராமணர்களும் போத்தி என்றழைக்கப்படும் பிராமணர்களும் மட்டுமே கலந்துகொள்ள அழைக்கப்படுவர்.

இச்சடங்கின்போது தலைமைப் புரோகிதர் வீற்றிருக்கும் பல்லக்கை, சிறிது தூரம் மன்னர் சுமப்பார். பின் அவரது காலில் விழுந்து வணங்கி அவரைத் தங்க சிம்மாசனத்தில் அமரச் செய்து, அவரது பாதங்களைக் கழுவுவார். இச்சடங்கில் கலந்துகொள்ளும் பிராமணர்களுக்கான தங்கு மிடம், உணவு, தட்சிணை ஆகியவற்றுக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். 1875-76 இல் 182,009 ரூபாய் இச்சடங்கிற்குச் செலவானது.

இது அந்த ஆண்டு கல்விக்காகச் செலவிடப்பட்ட தொகையைவிட அதிகமாகும். 1911 ஆம் ஆண்டில் அய்ந்து லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.
இது அரசின் அந்த ஆண்டுச் செலவில் நாலு விழுக் காடாகும். இவை தவிர வருடத்திற்கு இருமுறை நிகழும் ஆராட்டுத் திருவிழாவின்போது கடலில் நீராட, ஊர்வலமாக பத்மனாபசுவாமியின் உலோகப் படிமம் எடுத்துச் செல்லப்படும். இவ் வூர்வலத்தை உருவிய வாளுடன் தலைமையேற்று நடத்திச் செல்பவர் திருவிதாங்கூர் மன்னர்தான். மன்னருடன் அரசு உயர் அதிகாரிகளும் செல்வர்.

இவையெல்லாம் திருவிதாங்கூர் மன்னராட்சி யானது ஓர் இந்து ஆட்சியாக விளங்கியதன் அடையாளங்களாகும்.

        ------------------------(நூல்: திருவிதாங்கூர் இந்து ராஜ்ஜியமும் மிஷனரிகளும்)

மேற்கண்ட தகவல்களை தமிழர் தலைவர் அடுக் கடுக்காக வெளியிட்டார்.

நேபாளம்முதல் திருவனந்தபுரம்வரை...

நேபாளம் தொடங்கி மகாராட்டிரம் உள்ளிட்டு, திருவனந்தபுரம், கேரளம்வரை ஹிந்து சாம்ராஜ்ஜியம் எப்படியெல்லாம் தலைவிரித்தாடியது; பார்ப்பனர்கள் கொட்டம் போட்டனர் என்பதை நல்ல வண்ணம் விளக்கினார் விடுதலை ஆசிரியர்.

ஹிந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போவதாகக் கூறிப் புறப்பட்டுள்ள காவிகளின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றால், நேபாளத்திலும், மகாராட்டிரத்திலும், திருவனந்தபுரத்திலும் என்ன நடந்ததோ, பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தினார்களோ, அதே நிலைதான் இந்தியா முழுவதும் ஏற்பட்டுவிடும் என்று எச்சரித்தார் தமிழர் தலைவர்.

ஹிந்துத்துவாவைக் கையில் எடுத்துக்கொண்டு காவி சக்திகள் இந்தியா முழுமையும் புறப்பட்டுச் செல்லுமானால், அதனை எதிர்த்து முறியடிக்கக் கூடியது தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் தான். திராவிடர் இயக்கத் தத்துவம்தான் - அதன் தொடக்க நிகழ்ச்சிதான் இது என்று வெகுநேர்த்தியாக தன் உரையை அமைத்து முடித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
***********************************************************************************

அரசன் தோன்றியது - ஏன்?

அரச பதவியின் தோற்றத்தைக் குறித்து சாந்தி பருவத்தில் (மகாபாரதம்) அடங்கியிருக்கும் இரு கருத்துக்களுமே, ராஜ்ஜியத்தின் தோற்றத்தைப் போற்றிய ஒப்பந்தத் தத்துவத்தை உள்ளடக்கியதாகப் பொருள் கொள்ளத் தக்கன. இந்தக் கருத்துக்களின் நோக்கங்கள் முற்றிலும் மாறுபட்டவை, முற்றிலும் முரண்பட்டவை. ஆகையால், இவை ராஜதர்மம் என்ற தலைப்பில் ஒரே காலத்தில் எழுதப்பட்டனவா என்பது நமக்குத் தெரியாது. தண்டம், தண்டநீதி என்பனபற்றிய நீண்ட விவாதத்துடன் தொடங்கும் 59 ஆம் அதிகாரத்தில் முதல் கருத்து இடம்பெறுகிறது. ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்காக, விஷ்ணு தன் மனத்திலிருந்து ஒரு மகனைத் தோற்றுவித்து உண்டாக்கினான் என்றும், ஆனால், அவன் பின்னோர்கள் உலகப் பற்று நீங்கினர் என்றும், அதனால் வேணனின் கொடுங்கோலாட்சி ஏற்பட்டதாயும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த அரசனின் உயிருக்கு முனிவர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர் என்றும், அவனுடைய வலது தொடையிலிருந்து பிருதுவை உண்டாக்கினர் என்றும் கூறப்படுகிறது. பிருது, விஷ்ணுவின் எட்டாவது சந்ததி. எந்த அடிப்படையில் பிருது வைன்ய என்பவன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கலாம் என்பதை முனிவர்கள் தெளிவாக எழுதி வைத்தார்கள்.

(1) தண்ட நீதிக் கொள்கையின்படி அரசாள்வேன் (2) பிராமணர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்கமாட்டேன் (3) ஜாதிக் கலப்பு ஏற்படாதபடி உலகைக் காப்பாற்றுவேன் என்று மூன்று உறுதிமொழிகளைச் சத்தியம் செய்து கொடுக்கும்படி முனிவர்கள் அவனை வேண்டினார்கள்.

மனிதர்களுக்குள் காளைகள் போன்று விளங்குவதால், பிராமணர்களைப் பெரிதும் மதித்து அவர்களை வணங்கி வழிபடுவதாக, பிருது, முனிவர்களிடம் கடவுள் சாட்சியாகச் சத்தியம் செய்தார். அரசாங்க இயலுக்கு ஏற்பவும், நியாயமாகவும் செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்வதாக அவன் ஏற்கெனவே உறுதி மொழி கொடுத்திருந்தான்.

(பழங்கால இந்தியாவின் அரசியல் கொள்கைகள் - நிலையங்கள் சில தோற்றங்கள் (பக்கம் 90) - ஆர்.எஸ்.சர்மா)
*********************************************************************************
                                            --------------------------------தொகுப்பு: மின்சாரம்-"விடுதலை” 27-7-2013

52 comments:

தமிழ் ஓவியா said...


குறும்பா


தேள் கொட்டினால்
விஷம் தீண்டினால்..
கோயிலுக்கா போகிறார்கள்?
கடவுளையா வேண்டுகிறார்கள்?
ஆஸ்பத்திரிக்குப் போகிறார்கள்
டாக்டரை அணுகுகிறார்கள்!
இதைத்தான் சொன்னார்
பெரியார்!
கடவுளை மற
மனிதனை நினை என்று!!

- கோ.கலியபெருமாள்,
மன்னார்குடி

தமிழ் ஓவியா said...


சொல்லும் அதில் புதைந்துள்ள கதையும்-மு.வி.சோமசுந்தரம்

கோர்டியன் முடுச்சி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடக்கூடிய சொல்லின் தோற்றக் கதையும் விளக்கத்தையும் காணுவோம்.

கிரேக்க பழமை இலக்கியத்துடன் தொடர்பு கொண்டது. இந்த சொல், கோர்டியஸ் ஒரு குடியானவர். அவன் பிறகு பிரிகியா என்ற நாட்டின் அரசனாவதற்கு முன்னதாக, தன்னுடைய வண்டி யில் நுகத்தடியில் காளை மாட்டை சிக்கலான முடிச்சை பயன்படுத்தி பூட்டினான். அவன் அந்த வண்டியை குறி சொல்லும் கிரேக்கக் கடவுள் சீயஸ் 99 தலத்தில் காணிக்கையாக செலுத்தினான். சீயஸ். யார் இந்த நுகத்தடி முடிச்சை அவிழ்க்கிறார்களோ அவர் ஆசியாவின் அரசனாவார். என்று குறி சொல்லியது. பலர் முயற்சித்தனர். தோல்வியே கண்டனர். அலெக்ஸாண்டர் கோர்டியான் பகுதிக்கு வந்தபோது, சீயஸின் விசித்திரமான குறியைப் பற்றி கேள்வி பட்டு, சீயஸ் கோயில் தலத்துக்குச் சென் றான். சிக்கல் முடிச்சை அவிழ்ப்பதற்குப் பதிலாக, தன்னுடைய வாளை எடுத்து அந்த முடிச்சை வெட்டினான். தொடர்ந்த படையெடுப்பின் மூலம் ஆசியாவின் பேரரசனானான்.

இந்த சொல்லானது, சிக்கலான ஒரு பிரச்சினைக்கு, சாதுரியமான தீர்வை கையாளுவதைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. அதாவது விரைவாகவும் துணிச் சலுடனும் செயல்படுவதைக் குறிக்கும்.

எடுத்துக்காட்டாக நிர்வாகத்தில் சிக்கலும் சச்சரவையும் ஏற்படுத்தும் ஊழி யர்களை நிர்வாகத் தலைவர் அவர்கள் அனை வரையும் வேலையைவிட்டு நீக்கினார்.

(நன்றி: தி இந்து, Know Your English)

தமிழ் ஓவியா said...

தனிக்கட்டையின் தவிப்பு

- வச்சலா சோமசுந்தரம்

கேரி வாக்கியருக்கு மன உளைச் சல் பணி மனையிலும் சங்கடமான சூழ்நிலை நாள் முழுவதும் அலு வலகத்தில் தனி ஆணாக 120 பெண் களுடன் இயங்கும் அலுவலகத்தில் செயல்பட வேண்டிய கட்டாய நிலையில் கேரி வாக்கியர் இருந்தார்.

கேரி வாக்கியர் ஆறடி உயரத் தினராக எழிலான தோற்றத்துடன், தலைமை அஞ்சலகத்தில் கணக்கு பிரிவில் பணியாற்றும் பிரம்மச்சாரி வயது 18 தான், பணி செய்யும் பெண்கள் அவரைத் தொல்லையின் எல்லைக்கே தள்ளிவிட்டனர். அலுவலகத் தொழிற்சங்கத்தில், தன்னை வேறு அறைக்கு மாற்றம் செய்யும்படி வேண்டுகிறார் பணித் தொல்லை என்பதைக் காரணமாக மனுவில் குறிப்பிட்டார்.

என்னைத் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். நான் பெண்களைப் போற்றுகிறேன், என்று சமாதானம் வேறு கூறினார். 120-க்கிடையில் ஒன்று இருப்பது அச்சப்பட வேண்டிய ஒன்று தானே நாள் முழுவதும் அலுவலகத்தில் உப்பு சப்பற்ற பேச்சு, சிரிப்பு சத்தம் எங்கும் நறுமணம் கவ்வியிருக்கும். சங்கடமும், சித்தரவதையும் தாங்க முடியவில்லை. ஆனாலும் கேரி சகித்துக்கொண்டுதான் இருக்க வேண்டும். ஏன்? மாற்றம் கேட்டு விண்ணப்பித்த கேரியின் மனு ஏற்கப்படவில்லை.

(நன்றி: தி இந்து 3.4.2013 - 50 ஆண்டுகளுக்கு முன் பகுதி செய்தி)

தமிழ் ஓவியா said...


படுகொலைகளும் - பின்னணிகளும்!


கடந்த ஓராண்டில் பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் நடுரோட்டில் ஓடஓட விரட்டி படுகொலை செய்யப் பட்டுள்ளனர் . இந்த கொலைகள் நடந்தவுடன் வழக்கம் போல ஊடகங்களும் இந்து முன்னணி காவி பண்டாரங்களும் முஸ்லிம்களின் மீது பழி போட்டு பேருந்து எரிப்பு ,கடை யடைப்பு நடத்தி அரசியல் ஆதாயம் அடைகின்றன.

சில நாட்கள் கழித்து இந்த கொலை கள் தொடர்பான உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இந்த கொலை தொடர்பான கேவல மான பின்னணி தெரிய வரும்போது , இதனை பத்திரிகைகள் சிறிய செய்தியாக வெளியிடுகின்றன.

தற்போது சேலத்தில் பிஜேபி பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட நிலையில் , ''ஏற்கெனவே பிஜேபி இந்து முன்னணி பிரமுகர்கள் வேலூர் அரவிந்த் ரெட்டி, கோயம்மேடு விட்டல் ,பரமக்குடி முருகன், நாகை புகழேந்தி ,ராமேஸ்வரம் குட்டநம்பு, வேலூர் வெள்ளையப்பன் ஆகியோரைக் கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகளே ஆடிட்டர் ரமேசையும் கொலை செய் திருக்கிறார்கள் '' என மோடி முதல் ராமகோபால அய்யர் வரை கூறி திங்கள் கிழமை தமிழகத்தில் கடை யடைப்பு நடத்துகிறார்கள்.

உண்மையில் மேற்படி கொலை களை யார் எதற்காக செய்தார்கள் ?

கோயம்பேடு விட்டல் கொலை 27.4.2012 .

சென்னை விருகம்பாக்கம் சாய் நகரைச் சேர்ந்தவர் விட்டல் (35). இவர் 127ஆ-வது வட்ட பா.ஜனதா தலை வராக இருந்தார்.கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட் டிக்கு பணம் கொடுத்து வந்தார்.27.4.2012 .அன்று இரவு கோயம்பேடு மார்க் கெட்டின் பின்புறம் கை துண்டிக்கப்பட்டு உடல் முழுவதும் பலத்த வெட் டுக்காயங்களுடன் விட்டல் பிணமாகக் கிடந்தார்.

கடந்த ஒரு வருடத் துக்கு முன்பு சுந்தர பாண்டியன் என்பவருக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத் துள்ளார். அந்த பணத்தை சுந்தரபாண்டியன் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் அடிக்கடி விட்டல் சுந்தர பாண்டியன் வீட்டுக்குச் சென்று வீட்டுப் பெண் களை ஆபாசமாக பேசி யுள்ளான் .இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுந்தரபாண்டியன் அவரது அண்ணன் முருகன் மற்றும் நண்பர் கங்காதரன் ஆகியோர் சேர்ந்து விட்டலை வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை 23.10.12.

தமிழ் ஓவியா said...

வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல டாக்டர் அரவிந்த் ரெட்டி (38). பாஜ மாநில மருத்துவர் அணி செய லாளராக இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதி பாஜ வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த மாதம் 24ஆம் தேதி இரவு 7.30 மணியளவில்,பைக்கில் வந்த 3 பேர் அரவிந்த் ரெட்டியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர் .

கொலை நடந்த இடத்தில் ஸ்பிரேயர் பாட்டிலில் தயார் செய்த நாட்டு வெடி குண்டை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் . உடனே முஸ்லிம் தீவிரவாதி கள்தான் இந்த கொலையை செய்ததாக பந்த் நடத்தினார்கள் .

விசாரணையில் பெண் விவகாரத் தால் கொலை நடந்தது தெரிய வந்தது .இந்த கொலைக்கான சதித்திட்டத்தை குண்டர் சட்டத்தின்கீழ் வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி வசூல் ராஜா தீட்டியுள்ளார் .

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த தங்கராஜ் (26), பிச்சை பெரு மாள் (28) மேலும், இந்த கொலையில் ஓல்டு டவுன் உதயா என்ற உதயகுமார் (28), சின்னா என்ற சந்திரன் (25), அரியூர் ராஜா (எ) ராஜ்குமார் (எ) எம்எல்ஏ ராஜா (32), சோளிங்கர் தரணி என்ற தரணிகுமார் (24) ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் .

நாகப்பட்டினம் புகழேந்தி கொலை 5.7.12 நாகப்பட்டினத்தில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்த புகழேந்தி (53),காலை நடைபயணம் சென்ற போது ஆட் டோவில் வந்த 4 மர்ம நபர்களால் வெட்டி படு கொலை செய்யப்பட்டார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியது :-

கடந்த 30 ஆண்டுகளாக இந்து மக்களுக்காக போராடி வந்தவர் புகழேந்தி. இவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரபலமான கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததை எதிர்த்து போராடியவர் .இதனால் இந்த கொலை நடந்ததாக கூறினார் ஆனால் காவல்துறை விசாரணையில் .

கொலை செய்யப்பட்ட புகழேந்தி, கட்டப்பஞ்சாயத்து நில ஆக்கிரமிப்பு அடாவடி செயலில் ஈடுபடுவதும், சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவர் வீட்டை அபகரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்தது . இவனால் பாதிக்கப்பட்ட முனீஸ்வரன் என்பவர் இந்த கொலையை செய்ததும் தெரியவந்தது . முனீஸ்வரன் சேலம் நீதி மன்றத்தில் சரணடைந்தார்.
பரமக்குடி முருகன் கொலை 19.3.13

பரமக்குடி. பாரதீய ஜனதா முன்னாள் கவுன்சிலரான முருகன்இவர் வாஜ்பாய் மன்ற தலைவராகவும் இருந்து வந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் பைப்வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

காவல்துறை விசாரணையில் 6 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பாக ராஜ பாண்டி மனோகரன் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

வேலூர் வெள்ளையப்பன் கொலை 1.7.2013

இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மோட் டார் சைக்கிளில் வெள்ளையப்பன் சென்ற போது இந்த சம்பவம் நடந்தது.

வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் அருகே 4 பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைப் பற்றினர் .

இது தொடர்பாக ஜூலை 02,2013 வெளிவந்த தினமலர் செய்தியில் ''

வேலூர், புது பேருந்து நிலையம் அருகே, இந்து முன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன், 45, மர்ம நபர்களால் படுகொலை செய்யப் பட்டார். .. ......கொலை நடந்த இடத்தில், கறுப்பு நிற பை கண்டெடுக்கப்பட்டது. அந்த பையில், ஐந்து பைப் வெடிகுண்டுகள் இருந்தன. பேட்டரி இணைக்கப்பட்டிருந்த வெடி குண்டை, கொலைக்கு அல்லது தப்பிச் செல்லும் போது, பயன்படுத்த திட்டமிட்டி ருக்கலாம் என, காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். பைப் வெடி குண்டுகள், தென்மாவட்டங்களில் பிரபலம் என்பதால், தென் மாவட் டத்தை சேர்ந்த கூலிப்படையினர், இதில் ஈடுபட்டிருக்கலாம் என, காவல் துறையினர் கருதுகின்றனர். ராமேசுவரம் குட்டநம்பு கொலை 7.7.13

ராமேசுவரத்தை சேர்ந்தவர் குட்டநம்பு இந்து முன்னணி ஒன்றிய துணைத்தலைவராக இருந்து வந்தார் .சம்பவத்தன்று மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் ரெயில்வே ரோடு பகுதியில் குடிபோதையில் குட்டநம்பு தகராறு செய்ததால் ஊர்மக்கள் கல்லால் அடித்து கொன்றது தெரியவந்தது .இது தொடர்பாக ராமச்சந்திரன் என்பவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர் .

இப்படியாக இந்த பிஜேபி இந்து முன்னணி நாதாரி நாய்கள் குடிபோதை கந்துவட்டி கள்ளத்தொடர்பு நில ஆக்கிரமிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு பாதிகப்பட்டவனால் துரத்தித் துரத்தி வெட்டி கொலை செய்யப்பட்டபோது அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டு, பேருந்து எரிப்பு கடை யடைப்பு பந்த் நடத்தி அரசியல் ஆதாயம் அடைகின்றனர் .இவர்களை அடக்கி ஒடுக்காமல் அதிமுக அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது என்று புரியவில்லை.

நன்றி: www.tamilwebdunia.com

தமிழ் ஓவியா said...


பாவலர் சாமி.பழனியப்பன்பற்றி

பாரதிதாசன் பரம்பரைக் கவிஞரும், திரைப்பா ஆசிரியர் திரு. பழநிபாரதி அவர்களின் தந்தையாருமான அய்யா சாமி.பழனியப்பன் அவர்கள் நேற்று (20.07.2013) சனிக்கிழமை இரவு தம் 82 ஆம் அகவையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த துயருற் றேன். 16, 17 08 - 1993 இல் இருமுறை அய்யா சாமி பழனியப்பன் அவர்களை உவமைக்கவிஞர் சுரதா அவர்களுடன் சென்னையில் அவர் இல்லம் சென்று சந்தித்துள்ளேன். பழகுவதற்கு இனிய பண்பாளர். ஊற்றமான கொள்கைப் பிடிப்பாளர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக்கவிஞர் பாரதி தாசன், கலைஞர், தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட தமிழகத்துப் பெரியோர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.

பொன்னி இதழில் அமைதி கொள்வாய் என்ற தலைப்பில் இவர் எழுதிய பாடல் (1947, நவம்பர்) இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது. இலங் கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி இதழில் இவர் துணையாசிரியராகப் பணியாற்றியவர்.

சாமி.பழனியப்பன் அவர்களின் தந்தையார் உ.வே.சாமிநாதன் அவர்கள் தீவிரமான சுயமரியாதைக்காரர். எனவே சாமி. பழனியப்பனுக்கு இளமையிலிருந்து சுயமரியாதை உணர்வு சிறப்பாக அமைய வாய்ப்பு ஏற்பட்டது. சாமி. பழனியப்பன் அவர்கள் மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றவர். இவர்தம் இளம் வகுப்புத் தோழர்களாக முடியரசன், தமிழண் ணல், மெ. சுந்தரம் முதலானவர்கள் விளங்கினார்கள். பள்ளி, கல்லூரிகளில் பயின்றபொழுதே இலக்கிய மன்றங் களில் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டவர். இளமையில் கரந்தைக் கவியரசு இரா. வேங்கடாசலம் பிள்ளையின் தலைமையில் நான் விரும்பும் கவிஞர் என்னும் தலைப்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனைப் பற்றிச் சொற்பொழிவாற்றிய பெருமைக் குரியவர். இவர் குமரன், பொன்னி, வீரகேசரி, திராவிடநாடு, வாரச்செய்தி (காரைக்குடி), தென்றல் முதலான இதழ்களில் எழுதியவர்.

சிரிக்கும் வையம் என்ற தலைப்பில் இவர் இயற்றிய இந்தி எதிர்ப்புப்பாடல் அடங்கிய நூல் வெளிவந்துள்ளது. பாரதிதாசனுடன் இரண்டாண்டுகள் தங்கி அவர் உதவியாளராகவும், திருக்குறள் புரட்சி உரை அச்சுப்பணி பொறுப்பாளராகவும் செயல்பட்டவர். இவர் பாவேந்தர்மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதற்கு அடையாள மாகப் பாரதியாரையும், பாரதிதாசனை யும் ஒப்பிட்டு 1953 இல் பாரதியும் பாரதிதாசனும் என்ற தலைப்பில் சிறிய நூலை வெளியிட்டவர். சாமி.பழனியப் பன் கவிதைகள் என்ற இவர்தம் நூல் இவர் மிகச்சிறந்த கவிஞர் என்பதை மெய்ப்பிக்கும் சான்றாக உள்ளது.

தமிழ் ஓவியா said...


பொன்னியில் வெளிவந்த சாமி. பழனியப்பன் கவிதைஅமைதி கொள்வாய்!
அலைகடலே! இவ்வுலகின் பெரும்பகுதி தன்னை
ஆளுகிறோ மென்கின்ற ஆணவத்தி னாலா
நிலைகெட்டுச் சினக்கின்றாய்? உன்னா லிந்த
நீணிலத்திற் கெள்ளளவும் நன்மை யுண்டா?
அலைகளைநீ அடுக்கடுக்கா யனுப்பு கின்றாய்,
அன்னவையோ மடிந்துபடும் ஒவ்வொன் றாக,
நிலைமறந்தே, உயர்வானைப் பிடிக்க ஏனோ
நினைக்கின்றாய்! மறந்துவிடு! அமைதி கொள்வாய்!

வறுமைமிகு தொழிலாள ருணர்வு பெற்று,
வஞ்சகரின் நெஞ்சுகளில் வாள்பு குத்தப்
புறப்பட்டா ரெனக்கூறும் வகையில் நீயும்
பொங்குகின்றா யென்றாலும் மறுக ணத்தில்
இறந்துவிடு கின்றனையே! புறப்பட்டோரின்
இறுதிநிலை யுணர்த்துவதா யெண்ணம் போலும்!
மறந்துவிடு! தொழிலாளர் புரட்சி தன்னை
மாய்க்கவொணா திவ்வையம்! அமைதி கொள்வாய்!

மணித்துளிகள் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சென்று
மடிதலுக்கோர் எடுத்துக்காட்டாய்விளங்கும்
அணிவகுத்துச் சென்றழியும் அலைகள் யாவும்!
ஆர்ந்துள்ள இவ்வுலகில் பெண்ணொ ருத்தி,
கணிகையென ஆகின்றாள் சிலரைச் சேர்ந்தால்!
காரிகைகள் பல்லோரை ஒருவன் சேர்ந்தால்
கணிகனென அன்னவனைக் கழற மாட்டார்!
கடலே! அத்துணிவாலா நீயு மிந்நாள்,

திங்களினைக் கண்டதுமே மேலெழும்பித்
தீராத காதலினைத் தீர்க்க எண்ணிப்,
பொங்குகின்றாய்? அதனாலே பயனென் கண்டாய்?
புன்மைக்கும் அன்னவளோ ஒப்ப வில்லை.
மங்காத காதல்கொண்ட அல்லி என்னும்
மலர்வனிதை தனைக்கலந்த பின்னர் வேறு
நங்கையினைக் காதலித்தல் தவறாமென்று
நகைத்தலினைக் கண்டிடுவாய், அமைதி கொள்வாய்!

பொன்னி 1: 10, நவம்பர்,1947, பக்கம் 84,85

தமிழ் ஓவியா said...


காய்கறியில் என்ன இருக்கு?

வாழைத் தண்டு: கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்கள், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளன. இது சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருந்தால் கரைக்க உதவும்.

வாழைப்பூ: கால்சியம், பாஸ்பரஸ், புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி உள்ளன. மலச்சிக்கலை போக்க உதவும்.
வாழைக்காய்: இரும்புச் சத்து, போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. கருவுற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகையைத் தடுக்க உதவும்.

பீட்ரூட்: இதில் துத்தநாகம், கால்சியம், சோடியம், பொட்டாசியம் ஆகியவை உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும். உடல் வளர்ச்சிக்கு ஏற்றது.
உருளைக்கிழங்கு: இதில் மாவுச் சத்து அதிகமாக உள்ளது. வைட்டமின் ஏ, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.
பாகற்காய்: இந்த காயில் வைட்ட மின் சி, ஏ, பி, பாஸ்பரஸ், கால்சியம் உள்ளன. இந்த காயை சாப்பிடுவதன் மூலம் பசி அதிகரிக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.

கேரட்: இதில் வைட்டமின் ஏ அதிக மாக உள்ளது. குழந்தைகளின் உணவில் அதிகமாக சேர்த்தால், பிற்காலத்தில் பார்வை கோளாறு எதுவும் வராது. மாலைக்கண் நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.

கத்தரிக்காய்: பாஸ்பரஸ், போலிக் ஆசிட், வைட்டமின் பி, சி உள்ளன. ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வெண்டைக்காய்: போலிக் ஆசிட், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளது. மூளை வளர்ச்சிக்கு உதவும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும். தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கில் புலி ஆகலாம்.

பீன்ஸ்: புரதச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

புடலங்காய்: வைட்டமின் ஏ, பி, இரும்புச் சத்து, தாமிரம், கால்சியம் உள்ளன. எலும்பு உறுதிக்கு இதை சாப்பிடலாம்.

அவரைக்காய்: புரதச்சத்து, நார்ச் சத்து உள்ளன, உடல் வளர்ச்சி பெறும், மலச்சிக்கலை போக்கும்.

முருங்கைக்காய்: வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளன. ஆண்களுக்கு விந்து அதிகரிக்க உதவும், பெண்களுக்கு உதிரப் போக்கை கட்டுப்படுத்தும்.

வெங்காயம்: இரும்புச்சத்து, கால் சியம் உள்ளன. தினமும் சாப்பாட்டில் வெங்காயம் சேர்த்தால், உடல் கொழுப்பை கரைக்க உதவும்.

சுண்டைக்காய்: புரதச்சத்து, இரும் புச்சத்து, வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன. எலும்புகளுக்கு வலு சேர்க் கவும், ரத்தசோகை வராமல் தடுக்கவும் உதவும்.

கருணைக் கிழங்கு: கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி ஆகியவை உள்ளன. இதை சாப்பிட்டால், உடல் வளர்ச்சிக்கு நல்லது. மூல நோய் வரா மல் தடுக்கவும், மூலத்தை கட்டுப் படுத்தவும் உதவும்.

தக்காளி: வைட்டமின், ஏ, பி, சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. உடல் உறுதிக்கும், ரத்தவிருத்திக்கும் உதவும்.

தமிழ் ஓவியா said...


பழமைக்குப் பாலம் கட்டும் ஊடகங்கள்ஊடக மென்பது ஒருபெரும் மக்கள்
சார்ந்த அறிவியல் சாதனம்
நாடகம் திரைப்படம் தொலைக்காட்சி யாவும்
காட்சி ஊடக மென்பர்
ஏட்டில் எழுத்தில் செய்தித்தாள் புத்தகம்
போன்றவை அச்சு ஊடகம்
நாட்டு நடப்பை உணர்த்தும் ஊடகங்கள்
பெரும்பாலும் உயர்சாதி கையில்!
ஊடக வளர்ச்சியால் உலக நிகழ்வுகள்
ஓர் நொடிக்குள் வெளிச்சமிட இருந்தும்
மூடநம் பிக்கை மூலைமுடுக் கெல்லாம்
முறியடிக்க முடியாப் பெருந்தீமை
கடவுள் பேரால் காசடிமோசடி
செய்யும் கயவர் கூட்டம்
பாடாய்ப் படுத்தும் புரோகிதச் சுரண்டல்
பட்டும் கெட்டும் திருந்தவில்லை!
ஊடகங்கள் உண்மையைப் பொய்யாக்கிப் பொய்யை
உண்மையாக்கி ஊதிப்பெருக்கிட
மாடாய் உழைக்கும் மக்களை மதமவுடி
கத்தில் ஆழ்த்தும் கொடுமை!
அட்டைபோல் உறிஞ்சும் அரசியல் வாதிகள்
கையில் கட்சி அதிகாரம்
நாட்டுக்கு நாடு நிலைமை இதுதான்
உலகமயம் உணர்த்தும் உண்மை!
ஊழல் ஊழலென்று உரத்து முழக் கமிட்ட
அன்னா அசாரே போன்றோரை
ஊழல் ஒழிப்புத் திலகமாய் உயர்த்திப்
பிடிக்கக் கிடுகிடு போராட்டம் ஊடகங்கள் உச்ச வெளிச்சத்தில் கொட்டிக்
குவித்தனர் பணத்திமிங் கிலங்கள்
கோடனு கோடி சுருட்டிக் கொண்டார்
ஆள்அரவ மின்றி அடங்கிற்று!
உயர்சாதிப் பிடியில் ஊடகங்கள் நாட்டு
மக்கள் வாழ்வு மலர்ந்ததா?
அயர்வு நீங்கி அல்லல் தீர்ந்ததா?
ஆண்பெண் சமத்துவம் வந்ததா?
உயர்வு தாழ்வு கற்பிக்கும் சாதிமத
சனாதனச் சழக்கு ஒழிந்ததா?
கோயில்குளம் குத்துக்கல் என்று பழமைக்கும்
பாலம் கட்டுவது ஊடகமே!

- கவிஞர் இனியன், திருச்சி

தமிழ் ஓவியா said...


வெள்ளை நிறக் குழந்தை வேண்டி, வெள்ளை நிற இனத்தாரின் சினை முட்டை தேடும் இந்தியர்கள்!மயூரி சிங்காலுக்கு 36 வயதாகிறது. அவள் ஒரு நல்ல நிறமான குடும்பத்தில் தான் வாழ்க்கைப் பட்டிருந்தாள். கல்யாண விளம்பரங்களில்கூட அவள் தன்னைப்பற்றி கோதுமை நிறம் என்று தான் குறிப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளால் கருத்தரிக்க முடியாமல் போன போது, அவள் நேரே ஒரு செயற்கை கருத்தரித்தல் மய்யம் சென்று, ஒரு வெள்ளைக் குழந்தை வேண்டுமென்ற தன் கோரிக்கையை முன் வைத்தாள்.

இணைய தளத்தில், வெள்ளை நிறமுடைய ஒரு சினைக் கொடை யாளியை ஒருவர் பெற முடியுமென்ற செய்தியை நான் படித்தேன். அதன்படி, நான் எனது குடும்பத்தில் அம்மாதிரி வெள்ளைக் குழந்தையை கலப்படம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றாள்.

உலக சுகாதார அமைப்பின் கணிப் புப்படி, இந்தியாவில் 10 மில்லியன் தொகை அளவில், குழந்தை வளம் இல்லாத தம்பதியினர் உள்ளனர். அவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. சோதனைக் குழாய் முறையில் கருத்தரிப்பு செய்து கொள்ள விரும்பும் இணையர்கள், சினை முட்டை அளிப்பவர்கள் படித்தவர்களாகவும், நல்ல நிறம் உடையவர்களாகவும், நீல நிறக் கண்கள் உடையவர்களாகவும் இருக்க வேண்டுமென்றும் விரும்புகின்றனர் என்று செயற்கை முறைக் கருவூட்டல் வல்லுநரான டாக்டர் ரீடா பக்ஷி தெரிவித்துள்ளார். வாடிக்கையா ளர்களில் 70 விழுக்காடு வெள்ளை நிற சினை முட்டைக் கொடையாளிகளை வேண்டுகின்றனர்.

தமிழ் ஓவியா said...


செயற்கை முறைக் கருவூட்டல் வல்லுநர்கள் இப்படித் திட்டமிட்டு விரும்பப்படியான குழந்தைகள் (டிசைனர் பேபி) பெறுதல் மவுனமான தும், செறிவு நிறைந்ததுமாகும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள். மும்பையில் உள்ள ஒரு குழந்தைகள் வள வல்லு நரான அஞ்சலி மல்பானி இது ஏராள மான காகித வேலைகளையும் அனுமதி களையும் கொண்டது என்று எச் சரிக்கை செய்கிறார். ஒரு அய்ரோப்பிய சினை முட்டைக் கொடையாளி 1000 டாலரிலிருந்து உத்தேசமாக 5000 டாலர் வரை (ரூபாய் 6000லிருந்து 30 ஆயிரம் வரை) உடல் நலவாகு, கல்விச் சூழ் நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கேட்கக் கூடும் என்கிறார். ஒரு கருவூட்டல் மய்யத்தின் டைரக்டர் டாக்டர் மனித பேங்கர்,

நல்ல நிறமுடைய கொடையா ளர்களை நாடுவது வளர்ந்து வரும் ஒரு நடைமுறை. இணையர்கள் வழக்கமாக நீல நிற அல்லது பிரஷன் நிறக் கண்களையுடைய கொடையாளி களைத்தான் கேட்கிறார்கள். ஒழுங் கான முறையில் சில ஆவணங்களைக் கொண்டு செயற்கைக் கருவூட்டல் நிலையங்கள் உறைய வைக்கப்பட்ட மனித உயிர்ச்செதில்களை இறக்குமதி செய்ய அனுமதி பெற வேண்டும். வெள்ளை நிற இன மனிதர்களின் சினை முட்டைகள், ஸ்பெயின் மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலிருந்து பெற முடியும் என்று டில்லியைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் பக்க்ஷி மேலும், அதற்காக நீங்கள் சட்டப்படியான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, சினைக் கொடை கொள்ள விரும்பும் பெற்றோர்கள், அந்த செயற்கைக் கருவூட்டல் மய்யம், ஆகியோர் கையெழுத்திட்ட ஒப்பந்தம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் (ICMR) பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். நேரிடையாக இந்தியாவில் இருக்கும் போது, கொடை விரும்பும் பெற்றோர் களின் கையெழுத்துடன், மனித உயிர்ச் செதிலை இறக்குமதி செய்ய கருவூட்டல் மய்யம் ஒரு தடையில்லாச் சான்றிதழ் (Noc) வழங்க வேண்டும். சில கொரியர் நிறுவனங்கள், உயிர் அணு பாதுகாக்கும் அமைப்புகள் உள்பட பலர் அப்படிப் பட்ட உயிரியல் பொருள்களை எடுத்து வருகின்றனர். அதுபற்றி நாட்டுக்கு நாடு சட்டங்கள் வேறுபடுகின்றன. உதார ணமாக, கனடா, அவ்வித கொடை களுக்கு எவ்வித பொருளியல் பயனும் வாங்கப்படுவதைத் தடை செய்கிறது. ஆனால் அமெரிக்காவில் அதை ஒழுங்குபடுத்துவதற்கு, கொடையாளிக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டு மென்பதை ஒழுங்குபடுத்தி எந்தச் சட்டமும் இல்லை.

ஆனாலும் 2012இல் மனித உயிர் வளம் மற்றும் உயிர்ச் செல் கண்காணிப்பு அதிகார அமைப்பு (Fertility Watch dog Human fertility and Embryology Authority) பிரிட்டனின் கொடையாளிகள் ஒரு சுழற்சிக்கு 500லிருந்து 750 பவுண்டுகள் (ரூபாய் 22,600 முதல் 67,800 வரை) மட்டுமே வாங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

ஆனாலும், இடையே தூரம் சட்டப் பிரச்சினைகள் ஆகியன உள்ளன. 2010-_இல் நடந்த ஒரு நிகழ்ச்சியை டாக்டர் மால்பானி நினைவூட்டுகிறார். மனித உயிர்ச் செதில்களைக் கொண்ட (Human Embryos) ஒரு பெட்டி அமெரிக்கா விலிருந்து மும்பை நகருக்கு வந்தது. விமான நிலைய சுங்கத் துறை அதி காரிகளால் அது பறிமுதல் செய்யப்பட்டு அமெரிக்காவிற்கே திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் 2010இன் ARJ மசோதாவின்படி, மனித உயிர்ச் செதில்கள் (Embryos) இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அதை சுங்க இலாகா இறக்குமதி தீர்வைப் புத்தகத்தில் புதுப்பித்துப் புகுத்திக் கொண்டிருக்கவில்லை.

டாக்டர் மால்பானி வெள்ளை நிறக் குழந்தைகளுக்கான வேண்டுகோள்கள், காஷ்மீரிகள், பார்சிகள், மற்றும் பஞ்சாபி யினரிடமிருந்து வந்துள்ளதாகத் தெரி விக்கிறார்.

குறிப்பு: இந்தியர்களுக்கு இந்த விஷயத்தில் மட்டும் இந்தியர் இந்து, கலாச்சாரம் இன்னோரன்ன சமாச் சாரங்கள் குறுக்கிடவில்லையோ!

தமிழ் ஓவியா said...


பிராமணன் என்றால்...


பிராமணன் என்றால் ஆங்கில அகராதியில் இந்துக்களில் உயர்ந்த ஜாதியான் என்று போட்டிருக்கிறது.

தமிழ் அகராதிகளில் பிராமணன் என்றால் பார்ப்பான் என்றும்,
புரோகிதன் என்றும்,
முதல் ஜாதியான் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

இந்து மத ஆதாரங்களில் சிரேஷ்டமானவர்கள் என்றும்,

கடவுள் முகத்தில் தோன்றியவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, அவர்களுக்குப் பல உயர்வும், மற்றவர்களுக்கு இல்லாத தனி உரிமையும் அளிக்கப்பட்டிருக்கின்றன.

உழைப்பாளிகளையும், சேமிப்பு ஆட்களையும் ஏய்த்துச் சுருண்டுவதுதான் இவர்களது வாழ்க்கைத் தருமம்.

(குடிஅரசு தொகுதி 35 பக்கம் 88).

தமிழ் ஓவியா said...


அவனும் நீயும் (தமிழ் அடிமை)


பார்ப்பானைப் பார்த்து, நீ ஏன் பொறாமைப் படுகிறாய்.

அவன் கட்டுப்பாடான சமூகத்தைச் சேர்ந்தவன். நீ கட்டுப்பாட்டை வெறுக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவன். அவன் கட்டுப்பாட்டுக்கு உழைப்பவன்.
நீ கட்டுப்பாட்டை உடைப்பதற்குக் கூலி வாங்குபவன். அவன் இன நலத்தைப் பார்ப்பவன் நீ சுயநலத்தைப் பார்ப்பவன். அவன் மதத்தில் அவன் ஜாதி உயர்வு. உன் மதத்தில் உன் ஜாதி தாழ்வு.

- க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...

பீர் பாட்டிலும் புத்தரும்

தாய்லாந்தில் ஒரு புத்தர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. எதைக் கொண்டு தெரியுமா? 15 லட்சம் பீர் பாட்டில்களைக் கொண்டு; இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படவில்லையாம். பீர் பாட்டில்களால் புத்தர் கோயில் எழுப் பப்பட்டதற்கு வேறு சிறப்பான காரணங்கள் இல்லையாம்!

தமிழ் ஓவியா said...


நாவலர் பாரதியார்


..என்னுடைய 14 வயதிலே எனக்கு கல் யாணம் நடந்தபோது நேரிட் டதைச் சொல்கிறேன். எட்டையபுர சமஸ்தானத் தில் ஓர் கிராமத்திலே, நாகரிக உணர்ச்சி பரவ முடியாத ஊரிலே எனக்குக் கல்யாணம். நான் வைதீக உணர்ச்சி உள்ளவன். நல்ல சைவன். இப்போது இருக் கும்சைவம் போன்றதல்ல. என்னுடைய சிவ நெறி வேறு. இன்று சைவப் பண் டிதர்கள் கூறும் சைவம் நான் கொள்வதல்ல. உண் மையே எனக்குச் சிவம். எனக்குக் கல்யாணம் பார்ப்பனரை வைத்துச் செய்வதாக கூறினார்கள். அப்படிப்பட்ட கலியாணம் எனக்கு வேண்டாம் என் றேன். சைவ ஆகமங்களின் படி பார்ப்பனர்களைச் சண்டாளர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. கோயில்களிலே அவர்கள் துவஜஸ்தம்பத்துக்கு அப்புறம் நுழையக்கூடாது. வந்தால் தீட்டாகி விடும் என்று ஆகமம் கூறுவதால், அப்படிப்பட்ட சண்டாளர் களைக் கொண்டு நான் கலியாணம் செய்து கொள்ள மாட்டேன் என்றேன். என் குடும்பத்தார் திருநெல் வேலிக்கும், மதுரைக்கும் போய் பண்டிதர்களைக் கேட்டார்கள். திருநெல் வேலி பண்டிதர்கள்கூட சரியாகச் சொல்லவில்லை. மதுரையிலிருந்த பண்டிதர் கள் பையன் சொல்லுவது உண்மைதான். ஆகமம் அப்படித்தான் கூறுகிறது என்று சொன்னார்கள்.

- நாவலர் சோமசுந்தர பாரதியார்

(நாவலர் பாரதியார் - அறிஞர் அண்ணா இராமா யணச் சொற்போர் 14.3.1948 - சேலம். நூல்: தீ பரவட்டும் - பக்கம் 52).

நாவலர் பாரதியாரின் இந்தக் கருத்தை இன்று நினைவூட்டுவதற்குக் காரணம் - அவரின் பிறந்த நாள் (1876) இந்நாள்!

பார்ப்பனர்கள் தான் சகலமும் கற்றவர்கள்; அவர்கள்தான் கோயில் கருவறைகளுக்குள் செல்லும் தகுதி பிறப்பின் அடிப்படையில் பெற்ற வர்கள் என்று அரட்டை அடிக்கிறார்கள் அல்லவா!

அது எத்தகைய பொய் மூட்டை என்பதை அவிழ்த் துக் கொட்டுவதற்குத்தான் நாவலர் அவர்களை இங்கு அழைத்துள்ளோம்.

கோயில்களில் பார்ப் பனர்கள் துவஜஸ்தம்பத் துக்கு அப்புறம் நுழையக் கூடாது என்று சொல்லு பவர் சாதாரணமான வரல்லர்; மெத்த படித்தவர் - பன்மொழி அறிந்தவர் -சைவ மெய்யன்பர் என் பதை நினைவூட்டுகிறோம்.

1938இல் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங் கியபோது தோன்றாத் துணையாக நின்ற அந்தப் பெரு மகனாரை இந்நாளில் நன்றி உணர்வுடன் நினைவு கூர்வோம்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆர்ப்பாட்டம்!


அனைத்துத் தரப்புகளிலிருந்தும், பேராதரவு குவிகிறது
இடையில் நான்கே நாட்கள் விரைந்து செயல்படுவீர்!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

தமிழர் தலைவரின் எழுச்சிமிகு அறிக்கைஆகஸ்டு முதல் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட் டமான, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆர்ப்பாட் டத்திற்கு இடையில், இன்னும் நான்கு நாட்களே உள்ளன; அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் ஆர்ப்பாட் டம் வெற்றிகரமாக நடைபெற கழகத் தோழர்கள் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினர்களே!

அனைவருக்கும் அன்பு வணக்கம். ஆகஸ்ட் 1 ஆம் தேதி நெருங்கி விட்டது!

இன்னும் நான்கே நாள்கள்தான்!

நாடெங்கும் அடைமழைப் பிரச்சாரங்கள்!

இந்த இடைவெளி நாள்களில்தான் கழகப் பொறுப்பாளர்கள் ஜாதி தீண்டாமை, ஒழிப்புக்கான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் - சட்டத்தை சரியான முறை யில் செயல்படுத்த, நமது கழகம் அறிவித்த முதல் கட்டப் போராட்டமான அறப் போராட்டத்தைச் சிறப்பாக நடத்திட நாடெங்கும் அடைமழைப் பிரச்சாரங்கள் மிகச் சிறப்பாக - தெரு முனைப் பிரச்சாரம் தொடங்கி, பொதுக் கூட்டங்கள், கருத் தரங்குகள், வட்டார மாநாடுகள் என்று பல முனைகளிலும் மிக எழுச்சியோடு நடைபெற்று வருகின்றன!
இந்தப் போராட்டத்தை விளக்கி, நமது இயக்கம் வெளியிட்டுள்ள அறப்போர் விளக்க ஆவணம் போன்ற கையேடு - நூல் - இதுவரை லட்சம் படிகளுக்கு மேல் பரப்பப்பட்டுள்ளது!

துண்டறிக்கைகள் விநியோகமோ, பல லட்சக் கணக்கில்!!

ஜாதி மோதல்கள் - தீண்டாமையை இன்னமும் ஆழ் மனதில் வைத்துக் கொண்டு ஒப்புக்கு சப்பாணி! யாக இருக்கும் பலருக்கும் நமது அறப்போர் நல்லதோர் விளக்கத்தை அளித்துள்ளது!

எந்த விலையும் கொடுப்போம்!

கடந்த 43 ஆண்டுகளுக்குமேல் இந்தப் பிரச்சினையில் நமது இயக்கம் - ஜாதி - தீண்டாமை ஒழிப்பு என்பது நமது உயிர் மூச்சுக் கொள்கை; ஆனபடியால் உறுதியாக நின்று வென்றே தீருவது என்ற திடசித்தத்துடன், எந்த விலையையும் கொடுக்கத் தயார் என்று நாளும் பாடுபட்டு களங்காண, களைப்பின்றிக் கடமையாற்றி வருகிறோம்!

தீர்ப்புகளும், நீதிபதிகளின் பரிந்துரைகளும்

(அ) இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புக் கள் ஆதி திராவிடர் உட்பட அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனம் சட்டப்படி சரி என்றுதான் கூறி, இதன் நியாயத் தையும், தேவையையும் ஏற்றிருக்கின்றன.

(ஆ) இரண்டு முறை இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் இந்து அறநிலையத்துறை அறிஞர்களைக் கொண்டு குழுக்கள் - முறையே எம்.ஜி.ஆர். கலைஞர் ஆகியவர்களின் தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க., தி.மு.க. அரசுகளால் நியமிக்கப்பட்டு (ஜஸ்டீஸ் மகாராசன் குழு) அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்து ஜாதி அர்ச்சகர்கள், ஆகமப் பயிற்சியை தக்க முறையில் பெற்று - தயார் நிலையில் இப்போது உள்ளனர்!

ஜஸ்டீஸ் திரு. ஏ.கே. ராஜன் அவர் களின் தலைமையிலும், தி.மு.க. ஆட்சி காலத்தில் குழு அமைக்கப்பட்டு உரிய பரிந்துரைகள் பெறப்பட்டன.
மூன்று முதல் அமைச்சர்களின் ஆதரவு!

(இ) மூன்று முதல் அமைச்சர்கள்,
மாண்புமிகு கலைஞர்,
மாண்புமிகு எம்.ஜி.ஆர்.,
மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா,
ஆகியோர்தம் ஆட்சியில் தமிழக சட்டமன்றத்திலேயே உறுதி அளிக்கப்பட்டு சட்டங்கள் வந்தன!

தமிழ் ஓவியா said...

இன்றைய உச்சநீதிமன்ற குறுக்கீடுகள் தற்காலிகத் தடைதான்.

பயிற்சி பெற்றவர்கள் தயார்!

தமிழக அரசு, அது ஏற்கெனவே தந்த உறுதிப்படி, 69 சதவிகித அடிப்படையில் தேர்வு செய்து, ஆகமங்களில் உரிய பயிற்சியைப் பெற்று விட்டு, வைணவ, சிவன் கோயில்களில் தற்போதுள்ள ஆகமம் அறியாத அர்ச்சகர்கள் போல் இன்றி, அப்பாடத் திட்டத்தை முறையாக கற்று, வெற்றி பெற்று பட்டயச் சான்றையும் பெற்றவர்களை நியமிப்பதற்கு எந்த மறுப்பும் சட்டப்படியும், நியாயப்படியும் இருக்கவே முடியாது!

இப்போதைய பார்ப்பனீயத்தின் கடைசி முயற்சி, அது ஒருக்காலும் வெற்றி பெற முடியாது. தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் பேராதரவு!

இச்சட்டத்தை தந்தை பெரியார் தம் பெரு விருப்பப்படி இயற்றி, ஒருமுறை அல்ல, இரண்டு முறை ஆட்சியில் இருந்தபோது செயல்படுத்த அத்துணை சட்டத் தேவைகளையும் நிறைவேற்றிய நமது தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், அண்ணா சொன்ன இரட்டைக் குழலாக இரு கழகங் களும் (தி.க.; தி.மு.க.) இயங்குகின்றன என்பதை நாட்டிற்கு அறிவிக்கும் வண்ணம், இந்த அறப் போராட்டத்தில் தி.மு.க. கலந்து கொள்ளும் என்று அறி வித்துள்ளார்கள்; அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அருமையான ஒத் துழைப்பை நல்கி, ஒருங்கிணைப்புப் பணிக்கு உறுதுணையாகி களங்காண ஆயத்தமாகியுள்ளனர் இது நமக்குப் பெருமித உணர்வை உண்டாக்கியுள்ளது.

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் ஆதரவு

அதுபோலவே எப்போதும் நம்முடன் ஒன்றியுள்ள பிரிக்க இயலாத சகோதர பாச உணர்வு பொங்கும் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்களும், அந்த இயக்கமும் முதல் தேதி அறப்போரில் பங்கேற்கும் என்று அறி வித்து, அவர்தம் தோழர்களை ஆயத்தப் படுத்தி வருகிறார்கள்.

பக்தர்கள் ஆதரவு

இதில் ஒரு தனிச்சிறப்பு - பக்தர்கள் பலரும் நமது போராட்டத்திற்குப் பரவ சத்துடன் ஆதரவு தந்து கைகோக்க முனைந்துள்ளார்கள்!
எங்கெங்கும் உற்சாகப் பெரு, வாழ்வு! உணர்ச்சிக் கொப்பளிப்பு!!

ஆயத்தமாவீர் ஆயத்தமாவீர்!!

அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!!

இப்படை தோற்கின்

எப்படை வெல்லும்?

எவர் ஒத்த கருத்துடன் நம்மோடு கைகோக்க முனைந்தாலும் இருகரம் நீட்டி வரவேற்போம்.
காரணம், இது ஒரு கட்சிப் போராட்டம் அல்ல!

இது ஒரு இன இழிவு ஒழிப்புப் போராட்டம்!

மாபெரும் மனித உரிமைக்காகப் போராடும் மனிதநேயப் போராட்டம்!
எனவே அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
27.7.2013

தமிழ் ஓவியா said...


ஆன்மீகவாதிகளிடமிருந்தும் ஆதரவு!


அன்புள்ள அய்யா கி. வீரமணி அவர் களுக்கு,

தாங்கள், அடுத்த மாதத் தொடக் கத்தில் (ஆகஸ்டு ஒன்றில்); எல்லாச் ஜாதியினரும், அர்ச்சகர் ஆகலாம் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக போராட்டம் நிகழ்த்த இருப்பதாகப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன். நல்லதொரு கொள்கைப் போராட் டம்; நிகழ்த்த வேண்டியதே; வெற்றி பெற என் நல் வாழ்த்துக்கள்.

அக்கொள்கைப் போராட்டத்தில், கலந்து கொள்ளவும் - கருத்துக் கூற வும்; எல்லாத் தகுதியும் உடையவன் - நான்!

தாங்கள் விரும் பினால் - நேரில் சந்திக்கவும் - கலந்து கொள்ளவும் - தயாராய் உள் ளேன். பிற - பின்பு - பதில் பார்த்து!.

எல்லாம் வல்ல சொக்க நாயகி உடனுறை சொக்க நாதப் பெருமான்; தங்களுக்கு எல்லா நலமும் அருள்வானாகுக!!

தங்கள்,

அலங்கை வே. அன்பரசவேள் பி.ஏ.,

(ஆன்மீகச் சொற்பொழிவாளர் அலங்காநல்லூர் , மதுரை)

தமிழ் ஓவியா said...


பீடை!மகன்: ஆடி மாதம் தெய்வீக மாதம் என் றும் 12 மாதங்களில் அதுதான் சிறந்தது என்றும் தினமணி கூறுகிறதே அப்பா!

அப்பா: அப்படியா! ஆடி மாதம் பீடை மாதம் என்றும் அம்மாதங்களில் கல்யாணங்கள் செய் யக் கூடாது என்று சொல்லுவதும் இவர் களின் மதம் தானே மகனே!

தமிழ் ஓவியா said...


இடையில் நான்கே நாட்களே!

எந்த மதத்திலும் இல்லாத பெருங்கொடுமை இந்து மதத்தில்தான் இருக்கிறது. ஒரே மதத்தைச் சேர்ந்திருந்தாலும் தங்களைத் தவிர வேறு யாரும் அர்ச்சகர் ஆக முடியாது என்று அடம் பிடிக்கின்றனர் பார்ப்பனர்கள்.

அரசு சட்டம் போட்டாலும், பார்ப்பனர்களுக் குள்ள வசதிகள் வாய்ப்புகள் காரணமாக உச்சநீதிமன்றம் வரை சென்று காரியங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள்.

கோயிலுக்குள் அர்ச்சகராக அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காக திராவிடர் கழகம் கொடி பிடிப்பது - ஏதோ மிகப் பெரிய உத்தியோகம் என்ற எண்ணத்தால் அல்ல.

பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகர் ஆகக் கூடாது என்பதற்குச் சொல்லப்படும் காரணம் தான்; இவர்கள் சூத்திரர்கள் - இவர்கள் கருவறைக்குள் நுழைந்தால் சாமி தீட்டுப்பட்டு விடும் - தோஷம் ஏற்பட்டு விடும்; அதனைத் தொடர்ந்து பிராயச் சித்தங்கள் செய்யப்பட வேண்டும் - தீட்டுக் கழிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்களே. இந்த இழிவைத் துடைப்பது தான் இந்தப் போராட்டத்தின் நோக்கம். இது ஒரு மனித உரிமைப் போராட்டம்!

எனவே தோழர்களே! எழுமின்! எழுமின்!! ஆகஸ்டு முதல் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் 60 முக்கிய இடங்களில் அறவழி ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம். இழிவைத் துடைத்தெறியும் இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து இடங்களிலும் வெகு மக்கள் இயக்கமாக நடைபெற வேண்டும்; பொது மக்களுக்கு விளக்கித் துண்டு அறிக்கைகள், சுவர் எழுத்துகள், பதாகைகள், தெருமுனைக் கூட்டங்கள் மூலம் பிரச்சாரம்! பிரச்சாரம்!! நடக்கட்டும்! நடக்கட்டும்!!

பக்தி நம்பிக்கையுள்ள நம் தமிழர்கள்கூட இன்னும் புரியாத நிலையில் இருக்கக்கூடும். அவர்கள் புரிந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க ஆர்வமுடன் முனைந்து வரும் அளவுக்கு நமது பிரச்சாரம் கடைகோடிக்குப் போய்ச் சேர்ந்திட வேண்டும்.

தி.மு.க. தோழர்களும், விடுதலைச் சிறுத்தைக் கட்சித் தோழர்களும் எல்லா மய்யங்களிலும் பங்கேற்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள். முறைப்படி நீங்களும் தொடர்பு கொள்ளுங்கள்.

இடையில் இன்னும் நான்கு நாட்களே உள்ளன. சுறுசுறுப்பாக விறுவிறுப்பாகப் பணியாற்றுங்கள். பொது மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும் அளவுக்குத் தகவல்கள் போய்ச் சேர வேண்டும்.

சந்திக்கும் தோழர்களிடத்தில் எல்லாம் வாய்ப்புக் கேற்ற வகையில் நாம் நடத்தவுள்ள போராட்டத்தின் நோக்கத்தை எடுத்துச் சொல் லுங்கள். இரயிலில், பேருந்தில், ஆட்டோக்களில் பயணம் செய்யும் பொழுதுகூட, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் சென்ற இடத்தில் கூட இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று பக்குவமாகப் போராட்டத்தின் நோக்கத்தை எடுத்துக் கூறுங்கள்.

உங்கள் பகுதியில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர் இருந்தால் அவர்களுடனும் தொடர்பு கொண்டு, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புக் கொடுங்கள். ஒட்டு மொத்தமான தமிழர்களின் இழிவு ஒழிக்கும் போராட்டம் இது.

உங்களைச் சூத்திரர்களாக விட்டு விட்டுப் போகிறேனே என்று தந்தை பெரியார் தெரிவித் ததை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். மின்சாரம் உடலில் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்படும்; ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட்டம் தொடக்கம்தான். அடுத்தடுத்து பல கட்டங் களில் பல வடிவங்களில் போராட இருக்கிறோம். இந்தப் பிரச்சினையில் முடிவு எட்டப்படும் வரை நாம் ஓயப் போவதில்லை.

கழகத் தோழர்களின் வீட்டில் உள்ள அனைத்து மக்களும் (பெரியார் பிஞ்சுகள் உட்பட) ஆர்ப்பாட்டக் களத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
என்ன சரிதானே?

பணி முடிப்போம் - பெரியார் பணி முடிப்போம்!

பணி முடிப்போம்!!

தமிழ் ஓவியா said...


தொடர்பு


மதம் மதத்தைச் சேர்ந்த வர்களிடம்தான் தொடர்பு கொண் டிருக்கிறது. பகுத்தறிவு மனிதச் சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொள்கிறது. (விடுதலை, 14.10.1971)

தமிழ் ஓவியா said...

நெல்லையில் தமிழகத்தின் மாபெரும் ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா - மன்றல் 2013


என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை ஏந்தவேண் டும் வெளிநாட்டில் என்ற இந்த தத்துவ பாடல் வரிகளுக்கு முற்றி லும் பொருத்தமான நாடு நம் தமிழ் நாடு. இதே நேரத்தில் தமிழ்நாட்டில் மாவட்டவாரியாக பார்க்கும் போது அனைத்து வளங்களும் ஒருங்கே காணப்படுவது திருநெல்வேலி மாவட்டமாகும், இன்றும் தமிழ கத்தில் ஒரு வழக்கு மொழி உண்டு மூவகைத்தொழில் முனை வோர்(மீன்பிடி, உழவு, வேடர்) திரு நெல்வேலிக்கு சென்றால் சிறப்பாக வாழ்வார்கள் என்பதுதான்

இந்த வழக்குமொழிக்கேற்ப திரு நெல்வேலியின் கிழக்கே கடற்கரை, மத்தியில் செழிப்பான தாமிரபரணி பாயும் வண்டல் வளம் மிகுந்த மண், மேற்கே உலகின் மிகவும் அபூர்வ வகை மூலிகை மரங்கள், குரங்கி னங்கள் மற்றும் தென்னிந்தியாவின் புலிகள் சரணாலயம் கொண்ட மேற்குத்தொடர்ச்சி மலை, என செழிப்புடன் இருப்பதால் தான் ஒருகாலத்தில் திருநல்வாழி என அழைப்பட்ட ஊர் மருவி திருநெல் வேலியாக மாறியிருக்க கூடுமோ என்ற அய்யம் இன்றும் தமிழார் வலர்களுக்கு உள்ளது. திருநெல் வேலியைப் பொருத்தவரை பெரும் பாலும் அனைத்துத் தரப்பு மக்களும் கடின உழைப்பாளிகள் மேலும் இம்மாவட்டத்தைச்சேர்ந்த பெண்கள் குடும்ப நிர்வாகத்திலும் நிதிதிட்டமிடுதலிலும் சிறந்து விளங்குகின்றனர் என்பது பொது வான கருத்து. பொதுவாக இந்தியா முழுவதும் நடுத்தர வர்க்கப்பெண் கள் தங்களின் குடும்ப வருமானத்தை திட்டமிட்டு செலவு செய்வதில் வல்லமைபெற்றவர்கள் தான். ஆனால் திருநெல்வேலி மாவட்ட பெண்களைப்பொறுத்தவரை இந்த மாவட்டத்தில் தொடர்ந்து திடீர் ஏற்ற இறக்கங்களை காணும் பொருளாதாரச்சூழலில் குடும்பத் தை தகுந்தவாறு நிர்வாகிக்க திட்ட மிடுதல் என்பதை வாழ்க்கையின் முக்கிய அங்கமாக ஆக்கிக்கொண் டார்கள். இந்த மாவட்டத்தின் பொருளாதார சங்கிலிப்பிணைப்பு அனைத்து கிராமம் மற்றும் நகரங் களை இணைக்கிறது.

ஆனால் இந்த பொருளாதார சூழல் தொடர் நிகழ்வல்ல சில மாதங்கள் வணிகம் தொய்வடைந்து இருக்கும் போது சேமிப்பை வைத்து வாழ்க்கையை கழிக்கவேண்டிய சூழலில் நீண்ட காலம் வாழ்ந்து விட்டமையால் நிதி மேலாண்மை யும் திருநெல்வேலிமாவட்ட பெண் களுக்கு கைவந்த கலையாயிற்று. 1400-களின் இறுதியில் கேரளத்தின் கரையில் இறங்கிய போர்ச்சுகீசி யர்கள் கோவாவை நோக்கி ஆதிக் கத்தின் கவனம் செலுத்தினாலும் அவர்களுடன் வந்த ரோமன் கத் தோலிக்க பாதிரியார்கள் கல்வி தொடர்பான சேவைகளை தென் தமிழகத்தில் துவங்கினார்கள், இந்தியாவிலேயே பெண்கள் மட்டுமே படிக்கும் கல்விச் சாலை 1887ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாசரேத்தில் துவங்கப் பட்டது, அதே போல் பெண்கள் தங்கி படிக்க விடுதியுடன் கூடிய பள்ளிக்கூடமும் 1897ஆம் ஆண்டு நாரைக்கிணறு என்னும் ஊரில் துவங்கப்பட்டது.(தற்போது இரண்டு ஊர்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

தமிழ் ஓவியா said...

சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கான கல்விச்சாலைகள் அதிகம் உள்ள மாவட்டமும் திருநெல்வேலிதான் என்பது வரலாற்றுச்சிறப்பு.
சமயவிதிகளை புறந்தள்ளிய பெண்கள் 10ஆம் நூற்றாண்டிற்கு பிறகு இந்தியா முழுவதுமே சமயவிதி களின் தாக்கம் காரணமாக பெண் கள் பணிக்கு செல்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டு ஒரு சாரர் வருமானத்தை மாத்திரமே சார்ந்து இருக்கவேண்டிய சூழல். மேல் மட்ட மக்களின் வாழ்க்கையில் பொருளாதார சிக்கல் சமாளிக்கத் தகுந்த நிலையில் இருந்தது ஆனால் நடுத்தரமக்களின் வாழ்க்கை சமய விதிகளின் காரணமாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்ததுவங்கியது, பெண்கள் வீட்டில் முடங்கியதால் ஒரு சார்பு வருமானம் அதைக் கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழல், ஆனால் திருநெல் வேலி மக்களை சமயவிதிகள் அவ்வளவாக கட்டுப்படுத்தவில்லை என்றே கூற முடியும், முக்கியமாக பெண்கள் சுதந்திரத்தை எதிர்பார்த் தனர். சமய அழுத்தங்கள் 10ஆம் நூற்றாண்டில் முழுமையடைய துவங்கினாலும் அவை மெல்ல மெல்ல அடித்தள மக்கள் வரை சென்றடைய 300 நூற்றாண்டுகள் வரை ஆனது, இந்த காலகட்டத்தில் இஸ்லாம் மற்றும் கிருஸ்தவம் மெல்ல மெல்ல பரவிக்கொண்டு இருந்த காலம் இதனால் அடித்தள மக்கள் விரைவாக கிருஸ்தவத்தை ஏற்றுக்கொண்டனர், முக்கியமாக மீனவர் இந்தியாவின் கடற்கரைப் பகுதியில் வாழும் மீனவர்களின் பெரும்பாலானோர் கிருஸ்தமத் தைத் தழுவியவர்கள் காரணம் இந்து மதத்தில் கடல்சார்ந்த தொழில் செய்ய அனுமதி இல்லை, இதன் காரணமாக கடல்சார்ந்த தொழில் செய்த அனைவரும் மிகவும் விரை வாக கிருஸ்தவத்தை ஏற்றுக்கொண் டனர். இதன் துவக்கம் தென் இந்தியாவின் திருநெல்வேலியில் இருந்துதான் துவங்கியது. முத்தெடுக்கும் தொழில் சிறந்து விளங்கிய 18-ஆம் நூற்றாண்டுகள் வரை பெண்களும் முத்துகுளிக்க ஆழ்கடலிலிறங்கியதற்கான ஆதா ரங்கள் உள்ளன. மீனவப் பெண் களின் உழைப்பின் தாக்கம் சமவெளிப்பகுதிபெண்களிடமும் தொற்றிக்கொள்ள அவர்களும் தங்களுக்கு ஏற்ற பணிகளை செய்ய முன்வந்தனர், கணவரின் தொழிலில் தானும் இணைந்து பங்கேற்பது (பனைத்தொழில், விவசாயம், நெசவு) போன்றவை இம்மாவட்ட பெண் களிடம் இருந்து மெல்ல மெல்ல தமிழகம் முழுவதும் பரவியிருக் கலாம், இன்று பொருளாதார மேலாண்மை பட்டப்படிப்பில் பயிற்றுவிக்கப்படும் நிதிதிட்ட மிடல் அடித்தட்டு மக்களின் வாழ்க் கையில் இருந்து தான் பெற்றது, இதற்கு பெண்கள் தலையாய காரணமாக இருந்தனர். முக்கியமாக சமய இறுக்கங்கள் காரணமாக ஜாதிய முறைகள் எல்லா பகுதிகளிலும் பரவினாலும் இங்கு தொழிம் மற்றும் பொருளா தார போட்டிகாரணமாக திருநெல் வேலிமாவட்டம் சாதியத்தில் மிகவும் இறுக்கமான மாவட்டமாக மிகவும் விரைவாக மாறத் துவங் கியது, இதன் பாதிப்பு பெண் களிடம் காணப்பட்டது, திறமை கள் இருப்பினும் அதை சுதந்திரமாக பயன்படுத்த இயலாத நிலை திறமைகள் இருந்தும் அதை வெளி யே காட்டாத ஒரு சிறைவாழ்க்கை வாழும் சூழலில் கடந்த 300 ஆண்டுகள் கழிக்கவேண்டியதா யிருக்கு, இருப்பினும் தங்களின் உரிமைகளுக்காக நீண்டதொரு தொடர்போராட்டங்களை திருநெல்வேலிமாவட்டப்பெண்கள் கண்டுள்ளனர். முக்கியமாக சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாவட்ட மாநாடு 28.11.1927-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் தான் துவங்கியது. என்பது வரலாறு இந்த மாவட்டத் தின் மற்றொரு பெருமை இத்தகைய பெருமைகளை ஒருங்கே கொண்ட திருநெல்வேலியில் தந்தை பெரி யாரின் நீண்ட நாள் கனவான சுய மரியாதைத்திருமணம் என்ற அமைப்பின் மூலம் மக்கள் எல்லோ ரையும் சுயமாக சிந்திக்கவும் செயல் படவும் பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டி தன் வாழ்நாள் முழுவதும் உலகத்தில் எங்குமே கிடைக்கப்பெறாத சுயமரியாதை என்ற அனைத்து தரப்பு மக்களும் பெறவேண்டும் என்ற தாகத்தால் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். தனித்து இயங்குவதாலும் தகுந்த தளமின்றி இயங்குவதாலும் எந்த ஒரு போராட்டமும் வெற்றி பெறாது, இதை கருத்தில் கொண்டு தான் அறிவாசான் தந்தை பெரியார் திராவிட இனத்தை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கி தனது வாழ் நாளிலேயே அதில் வெற்றியும் கண்டார். மக்களை ஜாதிமதவேறுபாடு களுடன் இணைக்கும் போராட் டத்தை பெண்களிடம் இருந்து துவங்கவேண்டும் என்பது அவரது கருத்து, இதன் காரணமாகத்தான் அவர் ஆரம்பம் முதலே பெண் ணடிமையை உடைத்தெரியும் பணி யை தனது தலையாய கடமையாக கொண்டு பயணித்தார், அதில் சுயமரியாதைத்திருமணமும் ஒன்றாகும் தகுதியான சட்டவிதி களின் படி வயதுக்குவந்த ஆணும் பெண்ணும் தங்கள் எதிகாலத்தை நிர்ணயிக்க உரிமையுண்டு இதில் சமய சாம்பிராணிகள் ஜாதி சாக் கடைகளுக்கும் இடம் தரக்கூடாது, பெரியாரின் இந்த கருத்தை நினைவில் கொண்டு மன்றல் நிகழ்வு தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை என வெற்றிகரமாக நடந்த மன்றல் நிகழ்வு தற்போது நெல்லையிலும் வெற்றிகரமாக நடந்தேற உள்ளது. வளமான திரா விட சமுதாயம் காண முனைப் போடு களமிறங்கிய மன்றலின் பணியினை அனைத்து மக்களி டமும் கொண்டு சேர்க்கும் கடமை நம்முடையதே வாழ்க பெரியார்! வளர்க அவரது தொண்டு!

சரவணா இராசேந்திரன்

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும்!


> இளவரசன் சாவை குற்றப்புலனாய்வுக்கு உட்படுத்துக!

> அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை:

திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயற்குழுவில் தீர்மானங்கள்


சென்னை, ஜூலை 27- திராவிடர் கழகம் ஆகஸ்டு முதல் தேதி நடத்தும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும் என்பது உள்பட பல முக்கிய தீர்மானங்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு நேற்று (26-7-2013) காலை 10 மணியளவில் சென்னை, வேளச்சேரியிலுள்ள தாய்மண் அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்செயற்குழுவில் பின்வரும் தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. தருமபுரி இளவரசன் சாவைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் விடுத்த வேண்டுகோளை அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசு நீதி விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்பதுடன் தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள் கிறோம். அதேவேளையில், நீதி விசாரணையானது நீதியரசர் சிங்காரவேலு அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்டிருப்பதற்கு மாற்றுக் கருத்து எழுந்துள்ளது. இதனை தமிழக அரசு மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், இந்த நீதி விசாரணை இளவரசன் இறப்பை மட்டுமே முன்னிறுத்தாமல், திவ்யா-இளவரசன் ஊரைவிட்டு வெளியேறிய 2012 அக் டோபர் 8 ஆம் நாளிலிருந்து அதனைத் தொடர்ந்து நடந்த ஜாதிவெறியாட்டங்கள், திவ்யா தந்தை நாகராஜன் சாவு, இளவரசனிடமிருந்து திவ்யாவைப் பிரித்து கடத்தியது, 4-7-2013 இளவரசன் சாவு வரையில் நடைபெற்ற அனைத்துப் பின்னணி களையும் முழுமையாக விசாரிக்க தமிழக அரசு ஆணையிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தை களின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.

2. தருமபுரி இளவரசன் சாவில் ஏராளமான அய்யங்கள் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை வல்லுநர்களாலேயே எழுப்பப்பட்டுள்ளன. அது தற்கொலைதான் என அய்யத்திற்கிடமின்றி உறுதியாகத் தெரிவித்திட இயலாத நிலை உள்ளது. விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரையில் அது படுகொலைதான் எனக் கருதுகிறோம். இந்நிலையில், அது படுகொலை இல்லை என்று அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. தமிழகத்தையே உலுக்கியிருக்கும் உணர்ச்சிபூர்வமான பிரச்சினை என்பதால் இளவரசன் சாவை அறிவியல்பூர்வமான முறையில் குற்றப்புலனாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும், தடய அறிவியல் துறையின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் புலனாய்வு நடத்திட ஆணையிட வேண்டுமென்றும் தமிழக அரசை இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...

3. அண்மைக் காலமாக ஜாதியவாத சக்திகள் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் வெளிப்படையாக ஜாதிவெறியைத் தூண்டும்படி செயல்பட்டு வந்தனர். தருமபுரி, மரக் காணம் உள்பட வடமாவட்டங்களில் தலித் மக் களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் கட்ட விழ்த்துவிடப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு கடந்த சில மாதங்களாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக குற்றவியல் நடைமுறைச்சட்டம் 144 ஆவது பிரிவின்படி தடையாணை பிறப்பித்துள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு மற்றும் வன்முறை களுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத விடுதலைச் சிறுத்தைகளுக்கு, குறிப்பாக கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், விழுப் புரம் மாவட்டத்தில் நுழையவே கூடாது எனத் தடை விதித்திருப்பது முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும். அத்துடன், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் அவருக்கான உரிமைகளையும் இந்த ஆணை பறித்துள்ளது. மேலும் தருமபுரி இளவரசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவிடாமலும் தடைவிதித்து ஜனநாயகத்தை நசுக்கியுள்ளது. தமிழக அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகளின் மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளையில், தமிழக அரசு இரு மாவட்டங்களிலும் விதிக்கப்பட்டுள்ள 144-தடை யாணையை உடனடியாகத் திரும்பப் பெற்று ஜன நாயகத்தைப் பாதுகாத்திட முன்வரவேண்டுமென இச்செயற்குழு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

4. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 5 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய இந்திய அரசு முனைந்தபோது அவ்வாறு விற்பனை செய்யக்கூடாது எனக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததோடு, விற்பனை செய்வதைத் தவிர்க்க இயலாத நிலை இருப்பின் அதனைத் தமிழக அரசுக்கே விற்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை விடுத்தது. எமது கோரிக்கையை ஏற்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக முன்வந்து தாமே வாங்கிக்கொள்வதாக இந்திய அரசுக்கு மடல் எழுதியது. அதன்படி, தற்போது தமிழக அரசு அதனைப் பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு இந்தி யாவுக்கே ஒரு முன்னோடியாக வழிகாட்டியுள்ளது. இதன் மூலம் பொதுத்துறைகளை மெல்ல மெல்ல தனியார்மயப்படுத்தும் முயற்சி முறியடிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முன்மாதிரியான நிலைப்பாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

5. வரும் ஆகஸ்ட் 17, 18 ஆகிய நாள்களில் ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்த தமிழக அரசு அறிவிப்புச் செய்துள்ளது. அத்தேர்வில் 60 விழுக்காடு மதிப் பெண் பெற்றவர் களே தகுதி பெற் றவர்களாக அறி விக்கப்படுவர் என்று அர சாணை எண் 181-இல் கூறப்பட்டுள் ளது. அத்துடன், கல்வித் தகுதியின் அடிப்படையில் வெயிட்டேஜ் என்னும் பெயரில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசாணை எண் 252-இன்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு அரசாணைகளும் எளிய மக்களுக்கு மறைமுகமாக சமூகநீதியை மறுக்கும் சதி முயற்சியாகவே அமைந்துள்ளது. தலித்துகள்-பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு அரசாணை எண் 252-அய் முழுமையாகத் திரும்பப் பெற வேண் டும் எனவும், அண்டை மாநிலங்களில் உள்ளதைப்போல, தலித் துகள்-பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு தகுதித் தேர்வுக்கான மதிப்பெண்ணில் தளர்வு அளிக்கும் வகையில் அரசாணை எண் 181-அய் திருத்தம் செய்ய வேண்டும் எனவும் இம்மாநிலச் செயற்குழு தமிழக அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

6. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதற்கான சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்த வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் ஒன்றாம் நாள் திராவிடர் கழகத்தின் சார்பில் ஒருங் கிணைக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் பெருந் திரளாகக் கலந்துகொள்வது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

7. டெசோ அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 8ஆம் நாள் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் விடு தலைச் சிறுத்தைகள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக, கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திருவள்ளூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். அப்போராட்டத்தில் திமுக, திக ஆகிய கட்சித் தோழர்களுடன் இணைந்து செயலாற்றிட வேண்டுமென திருவள்ளூர் மாவட்டத் தோழர்களுக்கு இச்செயற்குழு வழிகாட்டுகிறது.

8. எதிர்வரும் செப்டம்பரில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தை அங்கே நடைபெறவிடாமல் தடுப்ப தற்கு இந்திய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. அதேவேளையில், இம்மாநாட்டைத் தடுத்திட இயலாதநிலை இருப்பின், அம்மாநாட்டில் இந்திய அரசு, கலந்துகொள்ளாமல் தவிர்க்க வேண்டுமென இந்திய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

9. ஈழத்தில் வடக்கு மாகாணத்தில் நடை பெறவுள்ள மாகாணத் தேர்தலில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான தமிழர் களும் வாக்களிக்க உரிமை வழங்கிட இந்திய அரசு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்டவாறு செயற்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் ஓவியா said...


கோயமுத்தூர் ஜில்லா தேர்தல்


கோயமுத்தூர் ஜில்லாவின் சார்பாக சென்னை சட்டசபைக்குப் பார்ப்பனரல்லாத அபேட்சகர்கள் மூன்று பேரும் பார்ப்பன அபேட்சகர் ஒருவரும் ஆக நான்கு அபேட் சகர்கள் நிற்கிறார்கள். இந்நான்கு கன வான்களும் பெயருக்கு மாத்திரம் தனித் தனிக் கட்சியைச் சேர்ந்ததாகச் சொல்லிக் கொண்டாலும் தத்துவத்தில் பார்ப்பனரல் லாத கட்சிக்கு மூன்று பேரும், பார்ப்பனக் கட்சிக்கு ஒருவருமாய் இருக் கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக, ஸ்ரீமான் அய்யங்கார் தேவதான மசோதா வையும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தையும் எதிர்ப்பதினாலும், ஸ்ரீமான் செட்டி யார் முதலானவர்கள் இவ்விரண்டையும் மனப்பூர்வமாய் ஆதரிப்பதினாலும் தெரிந் துக் கொள்ளலாம். நாம் இதற்கு முன் பல தடவைகளில் எழுதி வந்தது போலவே சட்டசபைகள் மூலம் குடிமக்களுக்கு எவ்வித அரசியல் நன்மையும் செய்ய முடியவே முடியாது என்பதை இப்பொழுதும் சொல்லுகிறோம். ஆனால் வேளாள குடி மக்கள் இந்நாட்டில் உள்ள மற்ற எல்லா மக்களைவிட உயர்ந்த தன்மை உடையவர் களாயிருந்தாலும் பார்ப்பன ஆதிக்கத்தில் சிக்கி விவகாரம் முதலியவைகளால் குடி கெடுவதையும் வைதீகச் சடங்குகளால் தாழ்த்தப்பட்டு அடிமைகளாவதிலிருந்தும் தப்புவிக்க உபயோகப்படுத்திக் கொள்ள லாம் என்று சொல்லுவோம்.

ஆனால் பல காரியங்கள் செய்திருப்ப தாய் ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்கார் போன்ற பல பார்ப்பனர்கள் பத்திரிகைகள் மூலமும் விளம்பரங்கள் மூலமும் பறையடிப்ப தெல்லாம் குடியான மக்களை ஏமாற்றச் செய்யும் வெறும் மோசடியே தவிர வே றில்லை. அதுபோலவே அதைப் பார்த்து பார்ப்பனரல்லாத அபேட்சகர்களும் குடி யானவர்களை ஏமாற்ற பார்ப்பனர்களைப் பின்பற்றி பொய் விளம்பரம் செய்ய வேண்டி ஏற்படுகிறது. உண்மையில் ஸ்ரீமான் வெங் கிட்டர மணய்யங்கார் போன்றவர்கள் வெளிப் படுத்தி இருக்கும் வேலைகளின் இரகசியங் களை அறிந்தால் அது ஸ்ரீமான் அய்யங் காரால் நடந்ததா? அல்லது ஸ்ரீமான்கள் டி.எ. இராமலிங்கம் செட்டியார், சி.எ. இரத்தினசபாபதி முதலியார் போன்ற வர்களின் பிரயத்தனத்தால் நடந்ததா என்பது நன்றாய் விளங்கும். ஸ்ரீமான் அய் யங்கார் விளம்பரம் செய்து கொள்வதில் அதிக ஆசை உள்ளவராகவும் அதைப்பற்றி பிறத்தியார் தன்னை எவ்வளவு கேவல மாகப் பேசினாலும் அதைக் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் எப்படியாவது சட்ட சபைக்குப் போனால் போதும் என்கிற கவலை உள்ளவருமானதால் எவ்வளவு தூரம் குடியானவர்களை ஏய்க்கலாமோ அவ்வளவு தூரம் விளம்பரப்படுத்திக் கொள்ளுகிறார்.

ஸ்ரீமான்கள் செட்டியாரும், முதலியாரும் தங்களைப் புத்திசாலிகள் கேவலமாய் நினைப்பார்களே என்று பயப்படுவதாலும் தற்புகழ்ச்சி செய்து கொள்ள வெட்கப் படுவதாலும் அவர்களின் உண்மையான பெருமைகளும் செய்த வேலைகளும் கூட வெளியாருக்குத் தெரிவதற்கிட மில்லாமல் இருக்கிறது. ஸ்ரீமான் வேணுவுடையாக் கவுண்டர் அவர்களுக்கு இதில் அனுபோகமில்லாத தாலும் அவரும் விளம்பரம் செய்து கொள்ள வெட்கப்படுவதாலும் அவரது நிலைமையும் சரிவர ஓட்டர்கள் உணர்வதற் கில்லாமல் இருக்கிறது. ஆதலால் பார்ப்பனரல்லாத ஓட்டர்கள் வெறும் விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல் பார்ப்பனரல்லாத அபேட்சகர்களையே ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். குறிப் பாய் இந்த ஜில்லா வேளாளக் கவுண்டர் கனவான்கள் எவ்வளவுக் கெவ்வளவு தங்களுடைய ஓட்டுகளைப் பார்ப்பன அபேட்சகருக்குக் கொடுக் கிறார்களோ அவ்வளவுக் கவ்வளவு தங்கள் வகுப்புத் தலைவராகிய ஸ்ரீமான் பட்டக்காரர் வேணு வுடையாக் கவுண்டர் அவர்கள் சட்ட சபைக்குத் தெரிந்தெடுக்கப்படுவதைக் கண்டிப்பாய் தடைபடுத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 17.10.1926

தமிழ் ஓவியா said...


ஸ்ரீமான் சீனிவாச சாதிரியார் கொல்லத் தெருவில் ஊசி விற்பனை


ஸ்ரீமான் சீனிவாச சாதிரியார் கொல்லத் தெருவில் ஊசி விற்பனை

மகா மகாகனம் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் வரப்போகும் தேர்தலில் பார்ப்பனர்களுக்கு வெற்றி கிடைப்பதற்காக ஊர் ஊராய் பிரசங்கம் செய்து வருகிறார். இந்த முறையில் கோய முத்தூருக்கும் வந்து மாணவர் சங்கத்திலும் வகுப்பு வாதத்தால் ஏற்படும் தீங்கு என்பதைப் பற்றி பேசியிருக்கிறார். வகுப்பு வாதத்திற்கு ஏற்பட்ட கட்சி தன்னை ஜனநாயக் கட்சியென் றும், தேசியக் கட்சி என்றும் சொல்லிக் கொள்வது தகாது என்றும், இதைப்போல் இந்திய ராஜீயத் துறையில் அதிகமாக கேட்டை விளைவிப்பது வேறெதுவுமில்லை என்றும் கூறுகிறார்.

இதில் எவ்வளவு புரட்டுகள் இருக்கின்றன என்பதை யோசியுங்கள். முதலாவது, ஸ்ரீமான் சாஸ்திரி இந்திய மக்களின் சார்பாக பேசுவதற்கே யோக் கியதை அற்றவர் என்பதே நமதபிப்பிராயம். அவர் நமது சர்க்காருக்கு உள் உளவாயிருந்து தனக்குப் பெரிய அந்தஸ்தும் பட்டமும் பதவியும் பெற்றுக் கொண்டு தன்னுடைய பிள்ளை குட்டிகளுக்கும் பெரிய பெரிய உத்தியோகத்தை வாங்கிக் கொண்டவர். அல்லாமலும், தேசத்திற்காகவும் ஜனநாயக தத்துவத்திற்காகவும் பாடுபட வந்த அவதார மூர்த்தி யாகிய மகாத்மா காந்தியை `அராஜகர் என்றும் அவரை சும்மா வைத்துக் கொண்டிருந் தால் ராஜ்யமே கெட்டுப் போய்விடும் என்றும், சர்க்காருக்கு உபதேசித்து அவரை ஜெயிலில் வைக்கச் சர்க்காருக்கு உதவியாயிருப்பதற்காக பதவி பெற்றவர். ஜனநாயக தத்துவ முறையை அடைவதற்காக பாரதமாதா முடிவு செய்து கொண்டு அதன் மக்கள் பதினாயிரக்கணக் கான பேரை ஜெயிலுக்குள் தள்ளிக் கொண் டிருக்கும் பொழுது வெள்ளைக்காரருக்கு அனுகூலமாய்ப் பேசிக் கொண்டும் மகாத்மாவை அடக்கினால் தான் இவ்வியக்கம் அடங்கு மென்றும் சொல்லிக்கொண்டு, தான் மேல்நாடு களில் உல்லாசப் பிரயாணம் செய்து வெள்ளைக் காரருடன் விருந்துண்டு கொண்டு கேளிக்கை யாயிருந்தவர், ஜனநாயக தத்துவத்திற்காக நாளிதுவரை ஸ்ரீமான். ஸ்ரீநிவாச சாஸ்திரி யாரால் ஒரு காதொடிந்த ஊசிக்குச் சமானமான உதவியாவது உண்டா? வகுப்புவாதம் கூடாது என்று சொல்ல பிராமணருக்கு யோக்கியதை ஏது? பிராமணன் வகுப்பு வாதத்தையே அடிப் படையாகக் கொண்டவன்; எப்பொழுது ஒரு மனிதன் தான் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளுகிறானோ அப் பொழுதே அவனிடத்தில் அவனுடைய வகுப்பு உயர்ந்த வகுப்பு மற்றவர்கள் தன்னிலும் தாழ்ந்த வகுப்பு என்கிற வகுப்புவாதம் இருக்கிறதா இல்லையா? முதலில், தான் அதை விட்டு விட்டுப் பார்ப்பனர்களையும் இதை விடச் செய்த பிறகு வகுப்பு வாதம் கூடாது என்று உபதேசிக்க வந்தால் அப்போது ஸ்ரீமான் சாஸ்திரியாருக்குப் பேச உரிமை உண்டு.

தங்கள் வகுப்பு உயர்ந்த வகுப்பு என்பதைப் பற்றி யாரும் ஆட்சேபிக்கக்கூடாது; அது அப்படியே இருக்க வேண்டும். அதற்கு வேண்டிய பிரயத்தனமும் செய்யவேண்டும். மற்றவர்கள் மாத்திரம் வகுப்பைப் பற்றிப் பேசக்கூடாது. தாழ்ந்த வகுப்பாராகவே இருக்க வேண்டும் என்று சாஸ்திரியார் கனவு கண்டால் அதற்கு மற்றவர்கள் இடம் கொடுப்பார்கள் என்று சாஸ்திரியார் நினைக்கிறார் போல இருக்கிறது. அல்லாமலும் பிராமணனால்தான் வகுப்புவாதம் ஏற்பட்டது. ஆதலால் அவனிடத்தில் இருப்பதை ஒழித்தால் தான் வகுப்புப் பிசாசு நம் நாட்டை விட்டுத் தொலையும் என்று நாம் சொல்லும் போது பிராமணன் வந்து இதில் நியாயாதிபதியா யிருக்க இடமேது. திருடனையே தன் திருட்டுக்கு நியாயதி பதியாய் வைத்தால் அவன் தன்னை தண்டித்துக் கொள்வானா? அதுபோல் பார்ப்பனன் குற்றவாளி என்றால் பார்ப்பனனே வந்து நான் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு சொல்லிக் கொள்ள பாத்தியமேது? சாஸ்திரியார் பார்ப்பனன் என்கிற முறையில் வேண்டுமானால் தன்னிடம் குற்றமில்லை என்று வாதாடிக் கொள்ளலாமேயொழிய, தான் நடுநிலை மைக்காரர் போல் வேஷம் போட்டுக் கொண்டு மாணவர்களுக்கு உபதேசம் பண்ண யோக்கி யதை ஏது? என்றுதான் நாம் கேட்கி றோம். ஆனால் இதிலும் அதிகமான பார்ப்பன சூழ்ச்சிகளைக் கண்டு தேறியிருக்கும் கோவை பார்ப்பனரல்லாத மாணாக்கர் முன்னிலையில் பார்ப்பன சாஸ்திரியரின் உபதேசம் `கொல்லத் தெருவில் ஊசி விற்கப் போனதற்குச் சமானமே யொழிய வேறில்லை என்பதே நமதபிப்பிராயம்.

- குடிஅரசு - கட்டுரை - 17.10.1926

தமிழ் ஓவியா said...

தமிழ்ப் பொழில் அன்பர்கட்கு வேண்டுகோள்

தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச்சங்கத்தினின்றும் தமிழ்ப் பொழில் என்னும் பெயரிய ஒரு திங்கள் வெளியீடு தமிழறிஞர் திருவாளர் ஆர். வேங்கடாசலம் பிள்ளையவர்களை ஆசிரியராகக் கொண்டு ஓராண்டு வெளிப் போந்து நற்பயன் அளித்தமை நேயர்களுணர்ந்திருக்கலாம். என்றும் இடையறாது உரிய காலங்களில் வெளிவரற்குறிய சில முன் ஏற்பாடுகள் செய்தற் பொருட்டுப் `பொழில் சிறிது காலந்தாழ்ந்து வெளிவரும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்க்குள்ள அலுவல் மிகுதியால் சிறிய கால அளவு கொஞ்சம் பெரிதாக நீண்டது. முன் ஏற்பாடுகள் முன்னரே செய்யப்பட்டிருக்கின்றன. நிற்க, `தமிழ்ப் பொழிலின் முன்னேற்றங் கருதி உழைக்க ஆங்கிலமும் தமிழும் கற்றுவல்ல அறிஞராகிய திருவாளர்கள் நீ. கந்தசாமிப் பிள்ளையவர்கள், எம்.ஆர்.ஏ.எ., அரசர்மடம் பள்ளிக்கூட தமிழாசிரியர் சாமி சிதம்பர உடையாரவர்கள் ஆகிய இருவரும் முன் வந்துள்ளார்கள். இவருள் முன்னவர் உதவி ஆசிரியர், பின்னவர் உடனின்று துணை செய்தலேயன்றி வெளியிடங்கட்குச் சென்று பொழிற்கு அன்பர்களைத் திரட்டும் உதவியாளர் ஆவார். திருவாளர் உடையாரவர்கள் தாம் எய்தி வந்த ஊதியத்தினையும் விட்டு விட்டுத் (தமது சுருங்கிய செலவுகளை மட்டும் பெற்றுக் கொண்டு) தொண்டு செய்ய முன்வந்திருப்பது மிகப் பாராட்டற்பாலது. செந்தமிழ்ச் செல்வர்கள், ஊதியம் கருதாது தமிழ்த் தொண்டொன்றே கருதித் தனித் தீந்தமிழில் வெளிவரும் பொழிலைப் புரந்து தமிழ்த்தாயைப் போற்றி வருமாறு வேண்டுகிறோம்

- குடிஅரசு - வேண்டுகோள் - 24.10.1926

தமிழ் ஓவியா said...


ஒரே நிமிடம்!நம் மக்களை இந்தப் பாழாய்ப் போன பக்தி என்ன பாடுபடுத்து கிறது! எவ்வளவு பட் டாலும் புத்தி வரவில் லையே என்று எண்ணும் போது குருதி கொதிக் கிறது; இன்னொரு பக்கத்தில் வேதனை விலா எலும்புகளை முறிக்கிறது.

அமர்நாத்தில் பனி லிங்கமாம்! லிங்கத் தில்தான் எத்தனை வகை! தயிர்வடை, மசால் வடை, மெது வடை என்பது மாதிரி - எத்தனை எத்தனை வகை; பிடித்து வைத் தால் போண்டா - தட்டி வைத்தால் வடை என் பது மாதிரி.

குளிர் காலத்தில் பனி நீர் கசிவதால் இறுகி செங்குத்தாக ஒன்று நிற்கிறது - அது தான் பனி லிங்கமாம் - அருகில் ஸ்டவ் பற்ற வைத்தால் பனி உருகி ஓடி விடுகிறது.

எல்லாம் தெரிந்தும் பனி லிங்கத்தைத் தரி சிக்கச் செல்லுகிறார் களாம்; ஜூன் 28 தொடங்கியது இந்தக் கூத்து, இந்நாள் வரை இவ்வாண்டில் மூன் றரை லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்குப் போனார்களாம்.

போனவர்களுக்குப் பாவம் நீங்கிப் புண் ணியம் கிடைப்பது ஒரு புறம் இருக்கட்டும். இந்த ஆண்டில் மட்டும் 10 யாத்திரிகர்கள், ஓர் உதவியாளர் உட்பட 11 பேர் மரணம் அடைந் துள்ளனர். கடந்த ஆண்டில் 6 லட்சத்து 21,145 பேர் போனார் களாம். அவர்களில் 93 பேர் உடல் நலக் குறைவு காரணமாகவும், 42 பேர் விபத்துக்கள் காரண மாகவும் பலியானார் களாம்.

2011ஆம் ஆண்டில் 2 லட்சத்து 35611 பேர் சாமி கும்பிட அங்குச் சென்றார்களாம். அவர் களில் 106 பேர் மாண் டார்களாம்.

தம்மை நாடி வந்த வர்களைக் காக்க முடியாத கடவுள் என்ன கடவுள் - மண்ணாங் கட்டிக் கடவுள் - என்ற சிந்தனைப் பொறி வெடித்துக் கிளம்ப வேண்டாமா?

மடிந்தவர்கள் பக்தர்கள் என்பதால் நாம் மகிழவில்லை. விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் இப்படி மலிவாக, நாசமாகப் போகிறதே என்ற மன சங்கடத்தால்தான் எழுதுகிறோம்.
ஒரு கணம் ஒழுங்காகப் புத்தியைப் பயன்படுத்தினால் போதும் - இந்த நம் பிக்கை எனும் பனி உருகி ஓடிவிடுமே! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் அர்ச்சகர் பார்ப்பனர்களின் யோக்கியதை என்ன? - 9

ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற வர்கள், அவற்றை நன்கு அறிந்தவர்கள் தான் பூசை செய்யலாம் என்பது ஆகம விதி. ஆனால், தற்போது கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களில் பெரும்பாலா னோர் அதற்கான பயிற்சி பெற்றவர்கள் அல்லர். பெரும்பாலான பூசாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோர் சாதாரணமாக பக்தர்கள் வேண்டுகோள்களுக்கேற்ப செய்யப்படும் அர்ச்சனை செய்யத் தேவையான 108 நாமாவளிகள் மட்டுமே தெரிந்தவர்களாக உள்ளனர். மிகப் பெரிய கோயில்களில்கூட, ஒருசில அர்ச்சகர்கள் மட்டுமே ஆகமப் பயிற்சி பெற்றவர்கள் அல்லது ஆகமம் பற்றிய முழுமையான அறிவு பெற்றுள்ளனர்.

சென்னை கபாலீஸ்வரர் கோயில், வடபழநி முருகன் கோயில், திருவண்ணா மலை அருணாசலேசுவரர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில் போன்ற பெரிய கோயில் களில்கூட, பணிபுரியும் அர்ச்சகர்களில் மிகச் சிலரே அனைத்துப் பூசை முறை களையும் கற்றுத் தேர்ந்தவர்கள். கபாலீசு வரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் 4 அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆகம விதி கள் தெரிந்துள்ளன. மற்றவர்களுக்கு அஷ்டோத்திரம், குறிப்பான சில மந்திரங் கள், நாமாவளிகள், மட்டுமே தெரியும்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 116 அர்ச்சகர்களுள் ஆகமம் பயின்றவர்கள் 28 நபர்கள் மட்டுமே. 15 நாள் புத்தொளிப் பயிற்சி பெற்றவர்கள் 22 நபர்கள் மட்டுமே. இதர 66 அர்ச்சகர்கள் தங்களது தந்தை வழியாக ஆகமங்களைப் பயின்றவர்கள். அவர்களுடைய தந்தையார் செய்யும் பூசை முறைகளைப் பார்த்துப் பெற்ற அனு பவத்தை மட்டுமே பெற்றவர்கள். அவர்கள் முறையாக ஆகம அனுஷ்டானம் அறிந்த வர்கள் என்று சொல்ல இயலாது.

பெரும்பாலான மற்றக் கோயில்களிலும் இதே நிலைதான். கோயில்களில் பூசாரியாகப் பணிபுரியும் ஒவ்வொருவரும் தங்களது பிள்ளைகளுக்கு வழி வழியாக நடைமுறைகளைத்தான் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார்கள். சுமார் 30,40 ஆண்டுகளுக்கு முன்புவரை ஆகமங் களை பயிற்றுவிப்பதற்கான முறையான பயிற்சி நிலையங்கள் எதுவும் இல்லை.

வடபழநி முருகன் கோயிலில் குமார தந்திரமும், காமிக ஆகமமும் பின்பற்றப் படுகின்றன. முறைப்படி நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர்களுக்கு உதவியாக உள்ளவர்கள் அவர் களின் உறவினர்கள் என்பதால், அவர்களுடன் பணியாற்றுவதால், உடனிருப்பதிலிருந்து அறிந்து கொண்ட அஷ்டோத்திரம் மட்டுமே தெரிந்தவர்கள். இருப்பினும், அவர்கள் அனைவரும் பூசை செய்கின்றனர். அத்துடன் பக்தர்கள் அதிகம் வருகின்ற காரணத்தால், அர்ச்சகர்களின் தேவை அதிகமாக உள்ளதால், அர்ச்சகர்களாக நிய மிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களுடைய உறவினர் பலரை அழைத்து வந்து அர்ச்சகராகப் பணியாற்ற வைத்துள் ளனர். நாள் ஒன்றுக்கு ரூ.2/- கோயிலுக்குச் செலுத்திவிட்டு கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்து வருகிறார்கள். இவ்வாறு ரூ.2/- கட்டணம் செலுத்திவிட்டு கோயிலுக்குள் சென்று அர்ச்சனை செய்பவர்கள் அஷ்டோத்திரம் மட்டும் செய்பவர்கள். அவர்கள் தீட்சை பெற்றுள்ளார்களா என்பதே ஐயத் திற்குட்பட்டதாக உள்ளது. அவர்கள் ஆகம விதிகள் தெரிந்தவர்கள் அல்ல. அவ்வாறானவர்களே அக்கோயிலில் பூசை செய்து வருகிறார்கள். அதா வது பணி நியமனம் செய்யப்பட்ட ஒருவரின் உறவினர் என்ற ஒரே தகுதியில், ஆகமம் தெரியும் என்று அவர்களே கொடுத்த வாக்குமூலத் தின் அடிப்படையில், பணிபுரி கிறார்கள். இத்தகைய தற்காலிக அர்ச்சகர்கள்கூட கோயிலுக்கு உள்ளே சென்று பூசை செய்கிறார் கள். பல வைணவக் கோயில்களிலும் அர்ச்சகர்கள் இதே நிலையில்தான் உள்ளார்கள். ஆகமம் கற்றறியாத வர்கள், செய்முறை மற்றும் நாமா வளிகள் மட்டுமே தெரிந்தவர்கள் தான் பூசை செய்கிறார்கள்.
தற்போது தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் நடைபெறும் பூசைகள் அனைத்தும் ஆகம முறைப்படியான பூசைகள் அல்ல. தேவை மற்றும் சூழ்நிலைக்கேற்ப பூசை முறைகள் மாற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான அர்ச்சகர்கள் ஆகமக் கல்விப் பயிற்சி பெற்றவர்கள் அல்லர். சில பெரிய கோயில்களைத் தவிர மற்ற கோயில்களில், திருவிழாக் காலங்கள் போன்ற சமயங்களில் மட்டுமே ஆகமங்கள் பின்பற்றப்படு கின்றன. பெரும்பாலான கோயில் களில் அவ்வாறுகூட நடைபெறுவது இல்லை. சில நடுத்தரக் கோயில் களில் திருவிழாக் காலங்களில் மட்டுமே ஓரளவுக்கு ஆகமப் பூசைகள் நடைபெற்று வருகின்றன.

-நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன்
(நூல்: கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்)

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பங்கேற்கும் சுப. வீரபாண்டியன் அறிவிப்புசென்னை, ஜூலை 28- அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராகும் உரி மையைக் கோரி வரும் ஆகஸ்ட் முதல் நாள் (01.08.2013) திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் இன்று (28.07.2013) விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:

ஏற்றத் தாழ்வுகள் அற்ற, சமத்துவச் சமுதாயம் நோக்கிய பயணத்திற்கு இவ்வறப் போராட்டம் மிகப் பெரும் தேவை யாக உள்ளது. எனவே இந்த ஆர்ப்பாட்டத் தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் பகுதியில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்.

தமிழ் ஓவியா said...


முடியாது


உண்மையாக ஜாதிப் பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணா சிரமத் தர்மத்தையும், சூத்திரத் தன்மையையும் ஒழிக்கவேண்டுமானால், எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
(குடிஅரசு, 19.1.1936)

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யின் வியூகம்!


இந்துத்துவா வெறி அமைப்பான பிஜேபி நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வியூகங்களில் வேகமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த இரு முறை தொடர்ந்து காங்கிரஸ் தலைமையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி தொடர்ந்து இருந்து வந்திருப்பதாலும் எதிர்ப்புணர்ச்சி (Anti Incumbency) தங்களுக்கு சாதகமாக அமையும்; விலைவாசி உயர்வு போன்ற வையும் கை கொடுக்கும் என்ற எண்ணத்தில் கோயபல்ஸ் பாணியில் பொய் மூட்டைகளை அவிழ்த்து கொட்டுவார்கள் - கொட்டவும் ஆரம்பித்து விட்டனர்.

நரேந்திர மோடி முதல் அமைச்சராகவிருக்கும் குஜராத் மாநிலம்தான் இந்தியாவிலேயே வளம் கொழிக்கும் மாநிலம், பாலாறும், தேனாறும் பெருகி ஓடுகிறது என்று பிரச்சாரம் செய்யப்படவில்லையா?

பொருளாதார மேதை அமர்த்தியாசென் போன்றவர்கள் அதன் பொய்த் திரையைக் கிழித்துக் காட்டி விட்டார்களே! கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலம்தான் குஜராத் என்பதைப் புள்ளி விவரங் களே போதுமான அளவிற்குத் தெரிவிக்கின்றனவே.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்குக் குழந்தைகள் நலன் என்பது முக்கிய அளவீடாகக் கருதப்படும். இதில் இந்தியாவின் சோமாலியா குஜராத் என்று சொல்லப்படுகிறது. இதனை எல்லாம் மறைத்துவிட்டு குஜராத்துதான் இந்தியாவின் முன் மாதிரியான மாநிலம் என்று பலூனுக்குக் காற்றடித்து ஆகாயத் தில் பறக்க விடுவது போல பம்மாத்து வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மதவாத சக்தி ஆட்சிக்கு வரக் கூடாது என்பதிலே அக்கறை உள்ளவர்கள், ஆர்வம் உள்ளவர்கள் இவற் றையெல்லாம் அம்பலப்படுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

இன்னொரு அதி முக்கிய கடமை இந்தியா முழுமையும் உள்ள வாக்காளர்களுக்கு இருக்கிறது. அதுதான் இந்திய அரசமைப்புச் சட்டப் பீடிகை உத்தரவாதப்படுத்தியுள்ள மதச் சார்பின்மை என்பதாகும்.

இந்த மதச் சார்பின்மையை முற்றிலும் அழித்து, அதன்மீது இந்துத்துவா என்னும் மதவெறி நாடாக மாற்றி, மனுதர்மக் கொடியைப் பறக்கவிடத் துடித்துக் கொண்டிருக்கும் பிஜேபியை - நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் மண்ணும் மண்ணடி வேருமின்றித் தூக்கி எறிய வேண்டாமா?
அறிவியல் நுணுக்களைப் பயன்படுத்தி, இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பல யுக்திகளைக் கையாள இருக்கிறார்கள். அதற்காகப் பெருந் தொகை செலவு செய்து பிரச்சார வெள்ளத்தைப் பெருக்கெடுக்கச் செய்து, மக்களை மயக்கி விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டுள்ளனர் - பிஜேபி.யினர்.

உலகம் பிரச்சாரத்திற்கு அடிமை என்று சொல்லுவார்கள். அதில் அதிக நம்பிக்கை கொண்ட பிற்போக்குச் சக்திகளைத் தூக்கி வீசிட ஒவ்வொரு வாக்காளரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் (25.7.2013) திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெளிவாக எடுத்து விளக்கியுள்ளார்.

பிஜேபி - அதன் ஆணி வேர், சல்லி வேர் - பக்க வேர்களான சங்பரிவார்கள் இந்தியாவில் இதுவரை நடத்தி வந்திருக்கும் மதக் கலவரங்கள், வன் முறைகள் அமைதிச் சீர்குலைவுகளைப் பட்டியல் போட்டு, வீதி வீதியாக தெருமுனைக் கூட்டங்கள் போட்டு அம்பலப்படுத்தியாக வேண்டும். இது ஒரு கட்சிப் பிரச்சினையல்ல.

மதச் சார்பற்ற தன்மையில் அனைத்து மத நம்பிக்கையாளர்களும், மத நம்பிக்கையற்றவர்களும் அவரவர்களுக்குள்ள உரிமைகளோடும், வாழ்க்கை உத்தரவாதத்தோடும் அமைதித் தென்றல் வீசும் நாடாக அமைய அனுமதிக்கப் போகிறோமா அல்லது இந்தியாவை குஜராத்போல மதவாதப் பூமியாக்கி அன்றாடம் மனித ரத்தத்தை ஓட விடப் போகிறோமா என்பதுதான் இன்று இந்திய மக்கள் ஒவ்வொரு வரின் முன்பும் எழுந்து நிற்கும் மிக முக்கியமான வினாவாகும்.

மக்களை ஏமாற்ற ஏராளமான திட்டங்களைக் கையில் வைத்துள்ள ஒரு சக்தியை முறியடிக்க தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள் ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மதச் சார்பின்மைச் சக்திகள் பிளவுபட்டு, வேண்டாத சக்திக்குச் சிவப்புக் கம்பளத்தை விரித்து விடக் கூடாது.

தமிழ் ஓவியா said...


ஓதியும் ஓதார் - இருந்தும் வறியார் - புரிந்து கொள்வோம்


பகுத்தறிவுப் புலவர் டாக்டர் மா. நன்னன் அவர்களது நன்னன்குடி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும், மறைந்த அவர்தம் மகன் ந.அண்ணல் நினைவையொட்டி ஜூலை 30-இல் நடைபெறும் நிகழ்வில் நன்னன் அவர்கள் எழுதிய புதிய நூல்கள் வெளியீடும், சொற்பொழிவு களும், நல்ல இலக்கியப் படைப்பாளி களுக்குப் பரிசுகளும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்தோரைப் பாராட்டி ஊக்கப்படுத்துவதும் போன்ற ஆக்கச் செயல்கள் பலவும் நடத்தப் பெறு கின்றன.

இவ்வாண்டு (நாளை) நடைபெற விருக்கும் புதிய (அவரது) நூல் வெளியீடுகளில் ஒன்றான நாலடியார் மூலமும், பொழிப்பு விளக்க உரை களும் என்ற நூல் நேற்றுப் படித்தேன்; சுவைத்தேன். தெவிட்டவில்லை.

திருக்குறளுக்கு அடுத்தபடி, நல்ல அறநூல் நாலடியார் ஆகும்.

சமணப் புலவர்கள் பலரது பாடல்கள் - ஒழுக்க நெறிகளை மிகவும் ஆழமாகச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்கள்போல உள்ளன. நாலும் தெரிந்தவர் என்ற சொல்லுக்கு என்ன சரியான பொருளோ நாம் அறியோம்; ஆனால் நாலடியார் செய்யுள்களை அறிந்தால் பொது அறிவும், வாழ்வி யலில் அறிந்து கொள்ள வேண்டி யவைகளை அறிந்தும், புரிந்து கொள்ள வேண்டியவைகளையும் புரிந்தும் வாழ் வில் வெற்றி பெறலாம். அறிவின்மை என்ற ஒரு தலைப்பில் உள்ள பாடல்களில் ஒன்று இதோ: ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல!

ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார் - தூயதாக
நல்கூர்ந்துச் செல்வர் இரவாதார் செல்வரும் நல்கூர்ந்தர் ஈயா ரெனின்.

இதன் பொருள்: அறிவிலிகள் கற்றி ருந்தாலும் கல்லாரே; அறிஞர்களோ கற்காதவராயினும் கற்றாரேயாவர். முழுமையாக வறுமையுறினும் இரந்து கைநீட்டாதார் செல்வர்களே; செல்வர் களும் தக்கார்க்கொன்று ஈயாராயினும் வறியோரே.

வாழ்க்கையில் பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அடிப்படைப் பாடம் இது.

ஏராளமாக (மெத்தப்) படித்தவர் இவர் என்று ஒருவரை அறிமுகப்படுத்தினால் உடனே அவர் மரியாதைக்குரியவ ராகிவிட மாட்டார்; காரணம் படிப்பு வேறு; அறிவு வேறு; படித்து முடித்த காரணத் தாலேயே அவர்கள் அறிவாளிகள் ஆகிவிட மாட்டார்கள். அனுபவம், பொது அறிவு, பண்பாடு, பிறரைப் புரிந்து கொள் ளுதலில் தடுமாற்றம், தம்மைவிட குறைந்தவராயின் எதில் இருந்தாலும் - அதற்காக அவர் களை அலட்சியப் பார்வையுடன் பார்ப்பது என்பதன் மூலம், இவரின் அறிவுதான் கேள்விக்குறியாகி விடுகிறது!

தந்தை பெரியார் படித்த பாமரர்கள் அல்லது படித்த தற்குறிகள் என்ற மிகப் பொருத்தமான சொற்றொடர்களைக் கையாளுவார்; இத்தகைய கற்றறி மூடர்களைக் கண்டு; நுண்ணறிவு வேறு; நூலறிவு வேறு; வேண்டுமானால் நுண் ணறிவினை மேலும் கூர்மையாக்கிக் கொள்ள நூலறிவு பற்பல நேரங்களில் பயன்படுமே தவிர, எல்லா நிலை களுக்கும் பொருந்திவராது!

ஓதியும் ஓதார்! என்னே அருமை யான சொற்றொடர்!

இருந்தும் இல்லாதவர் இரண்டு வகையினரும் மிகவும் முக்கியம்.

செல்வத்தின் சிறப்பே பயன் பாட்டைப் பொறுத்ததுதான். புதைந்து கிடக்கும் புதையலால் யாருக்கும் பயன் எப்படி கிடைக்காதோ அதுபோல செல்வம், தேவைப்படுவோருக்கு பயன் படாது இருப்பின் அதைவிட அதைக் கொடுத்து மிகுந்த மனநிறைவை மகிழ்ச்சியைப் பெறாமல் கேடு கெட்ட மானிடராக, வறியார்க்கொன்று ஈயாத வராக வாழ்ந்தவரால் அவருக்கும் பயன் இல்லை; பிறருக்கும் பயன் இல்லை.

அதை எவ்வளவு அழகாக உண்மையாக எவர் வறுமையாளர் என்பதை நாலடியார் விளக்குகிறது?

எவருக்கும் ஈயாது; ஈய்ந்து மகிழ்ச் சியைப் பெற்று உற்சாகமாக வாழத் தெரியாதவர்களுக்கு, எத்தனை கோடிகள் இருந்தும் என்ன பயன்?
அவரை யார் அறிவர்? யார் மதிப்பர்?

தமது செல்வம் முழுவதையும், மக் களுக்கே சேரும்படிச் செய்த தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியாருக்குள்ள பெருமை - அவர்தம் சுயநலம் இல்லாப் பொது நலத்தோடு எல்லாவற்றையும் பொது மக்களுக்குத் தந்துள்ளார்.

தொண்டறத்தால் சிறந்தோங்கி நிற்கும் கல்வி வள்ளல் காமராசரை, பகுத்தறிவுப் பகலவன் பெரியாரை படிக்காதவர்கள் என்றார்களே,

அவ்விருத் தலைவர்களின் அறிவும், மதி நுட்பமும் எளிதானதல்லவே!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


ஆகமங்கள் மாற்றமடைந்தது கிடையாதா?


பூஜை முறையை பரம்பரை பரம் பரையாக எங்கள் முன்னோர்களிட மிருந்து கற்று வருகிறோம். ஆகம முறைப்படி கோயில் பூஜையை செய்வதற்கு எங்கள் ஜாதிக்கு மட்டுமே உரிமையுண்டு - என்று சொல்ல எந்த சிவாச்சாரியருக்கும் அருகதை இல்லை, என்றே சொல்ல லாம். தில்லை நடராஜரையும் ஸ்ரீரங்க நாதரையும் பூஜை செய்வதற்கு எங்களுக்கும், எங்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே உரிமை யுண்டு என்று சொல்ல எவருக்குமே அருகதை இல்லை.

காரணம், பூஜை என்பது ஒரு புனிதமான தொழில் என்று காலம் காலமாக ஏமாற்றி வந்த காலம் என்றோ மலையேறி விட்டது. இப் பொழுது இது ஒரு பக்கா பிசினஸ் என்று எல்லோருக்குமே தெரிய ஆரம்பித்து விட்டது.

ஆம்.

இன்று நம் கண் முன்னே ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் முதல், ஒழுக்கம் கெட்டவர்கள் வரை கடவுளாகி விட்டார்கள். உனக்கு மார்க்கெட் செய்யத் தெரியுமா? நீ யாரை வேண்டுமானாலும் கடவு ளாக்கி, உன் செலவில் கோவில் கட்டு. நான் குண்டத்துல உக்காந்து நெய்ய ஊத்தி கும்பாபிஷேகம் செய்யறேன் என்ற தவறான முன் னுதாரண நிலைக்கு வந்துவிட்டார் கள் சிவாச்சாரியர்கள். மேலும் நீ எங்க வேண்டுமானாலும் கோயில் கட்டு - எனக்கு தேவை துட்டு என்ற வியாபார நிலைக்கும் வந்து விட்டார்கள் சிவாச்சாரியர்கள்.

இல்லையென்றால் - ஆகமத் திற்கு புறம்பாக அதிக அளவில் அதாவது 77,450 கோயில்களை பொது மக்களுக்கு இடையூறாக, பொது இடங்கள் மற்றும் நடை பாதையில் கோயில் கட்டுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் மாநிலம் என்று சாதனை படைக்குமா?

இதற்கு மூலகாரணம் யார்? சிவாச்சாரியார்கள்தானே!

அது மட்டுமா?

ஒரு சில திரைப்படங்களுக்கு ஞயசவ - ஐஐ வெளிவருவது போல - புராணங்களை தூசித்தட்டி, அதில் ஒரு கடவுளை தேர்வு செய்து, சிறந்த முறையில் திரைக்கதை வசனம் எழுதி ஞயசவ - ஐஐ உருவாக்கினாலும் - அதற்கும் - நாங்கள் ஆகமமுறைப் படி பூஜை செய்கிறோம் என்று நீங்கள் மணிகண்டனுக்கு கொடுத்த ஆதர வால் நாடு அடைந்த பலன் என்ன?

ஏறத்தாழ 70 ஆண்டுகளில் ஐயா யிரத்திற்கும் அதிகமான வீடுகளில் இழவு விழுந்ததுதான் மிச்சம்.

அது மட்டுமா?

இந்த ஐயப்பன் கோயில்களில் சிவாச்சாரியர்கள் பூஜை செய்கின்ற அழகைப் பார்க்க வேண்டுமே! அட.. அட... அட.. காண கண் கோடி வேண்டுமே!

அடி மடியில் கை வைத்தால் ஆகமம்.. ஆகமம் என்று அலறிக் கொண்டே உச்சநீதிமன்றம் வரை ஓடி ஐயா நீதியரசரே... இந்த பூஜை முறையை எங்கள் முன்னோர்களிட மிருந்து வழி வழியாக கற்று வருகிறோம் என்று கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் கூப்பாடு போடு கின்றீர்களே...! இந்த ஐயப்பனை பூஜை செய்வதற்கு எந்த முன்னோர் களிடமிருந்து கற்றுக் கொண் டீர்கள்? சொல்ல முடியுமா?

அதிகபட்சமாக தாத்தாவிட மிருந்து கற்றுக் கொண்டிருப்பீர்கள் அவ்வளவுதானே! இப்பொழுது சொல்லுங்கள். பூஜை தொழில் புனிதமானதா!

பக்கா பிசினஸ்தானே! எப்பொ ழுது ஒரு தொழில் வியாபாரம் என்ற நிலைக்கு வந்துவிட்டதோ - அப்பொழுதே அந்தத் தொழில் அனைவருக்கும் சொந்தமானது தான். எனவே அனைத்து சாதி யினரும் அர்ச்சகராவதில் தவறே இல்லை. எனவே அரசாங்கம் அனைத்து சாதியினருக்கும் அர்ச் சகர் தொழிலில் பயிற்சி அளித்து, பின் பரீட்சை செய்து, வெற்றி பெற்ற எவரையும் அர்ச்சகராக்குவதில் தவறே இல்லை, என்ற உயர்ந்த நோக்கத்தோடு உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

- குமார் ராமசாமி
நூல்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாமா?

தமிழ் ஓவியா said...

ஓம் சக்தி கட்டளைப்படி
கணவனைக் கொன்ற மனைவி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே லாலா பேட்டைப் பேர்வழி பரதன் (வயது 44) மனைவி உஷாராணி (வயது 38).

கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வருமாம். ஆத்திரம் அடைந்த மனைவி தூங்கிக் கொண்டிருந்த கணவன் தலையில், அம்மிக்கல்லை போட்டுக் கொலை செய்ய முயன்றார். கணவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென் றனர். பிழைக்கவில்லை; ஆசாமி மண்டையைப் போட்டு விட்டார். காவல்துறையினர் மனைவியைக் கைது செய்து விசாரித்தனர். அப்பொழுது அந்தப் பெண் சொன்னார். கொலை நடந்த அன்று என் கணவன் என்னைத் தாக்கினார். பின்னர் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டார். நான் அழுது கொண்டிருந்தேன். அப்பொ ழுது என் கனவில் ஒம் சக்தித் தாய் தோன்றினாள். உன் கணவனை அடித்துக் கொன்று விடு என்று சொன்னதால் குழவிக் கல்லை எடுத்து என் கணவன் தலையில் போட்டேன் என்றார் உஷாராணி.

சபாஷ்! ஓம் சக்தி எதற்கெல்லாம் பயன்படுகிறது பார்த்தீர்களா?

யாரும் யாரையும் கொலை செய்துவிட்டு கடவுள் மீது பாரத்தைப் போட்டு விடலாம். கடவுள் கூப்பிட்டால் சாட்சிக் கூண்டுக்கு வரவா போகிறார்?

தமிழ் ஓவியா said...

சபாஷ்! கடவுளைக் கண்டுபிடித்து விட்டார்கள்?

உத்தரகாண்டில் கொத்துக் கொத்தாக மக்களை வெள்ளம் அடித்துச் சென்றது. தப்பியவர்கள் ஆயிரக்கணக்கில் மலை முகடுகளில் தொற்றிக் கொண்டு தொங்கியபடி மீட்புக்காகக் காத்துக் கிடந்தார்கள். இரு கரைகளுக்கும் கம்பிகளை கட்டி இராணுவ வீரர்கள் வரிசையாக அதில் குறுக்கே படுத்துக் கொண்டார்கள். தங்கள் முதுகின்மீது வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்களை நடக்கச் செய்து கரை சேர்த்தார்கள். இதில் இந்திய இராணுவ வீரர்களின் சேவையின் மூலம் பேரிடர் பூமியில் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளை நேரில் உணர்ந்தார்கள். இப்படி ஒரு விளம்பரம் தனியார் நிறுவனத்தின் சார்பில் நாளேட்டில் வெளி வந்துள்ளது.

உத்தரகாண்டில் கடவுளைத் தேடிச் சென்றவர்கள் பெரு வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்கள் எந்தக் கடவுளும் ஓடி வந்து காப்பாற்றவில்லை.

இராணுவத்தினர் தான் காப்பாற்றினார்கள் அவர் களுக்குத்தானே நன்றி சொல்ல வேண்டும். ஆனால் காக்கத் தவறிய கடவுளை இந்த இராணுவத்தினர் உருவில் கண்டார்களாம். எப்படி இருக்கிறது. எப்படியோ மனிதனைக் கடவுள் காப்பாற்றா விட்டாலும் மனிதன் கடவுளைக் காப்பாற்ற வேண்டியவனாகி விட்டான் - பாவம் கடவுள்!

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவு தான்!


கோயில் சிலைகளை பாதுகாக்க கேமராவாம் : அறநிலையத்துறை நடவடிக்கை

நெல்லை: தமிழகத்தில் விலை உயர்ந்த அய்ம்பொன் சிலைகள் உள்ள அனைத்து கோயில்களிலும் அலாரம் மற்றும் சுழலும் கேமரா அமைக்க அற நிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் அற நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 36 ஆயிரத்து 425 கோயில்கள் மற்றும் 56 மடங்கள் உள்ளன. இந்த கோயில்களில் விலை மதிப்பு மிக்க அய்ம்பொன் னால் ஆன கடவுள் சிலைகள் மற்றும் நகைகள் உள்ளன. சில கோயில்களில் சிலைகள் கொள்ளை போகும் சம்பவம் நடை பெற்றதை அடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நெல்லை யப்பர் கோயில், திருவாரூர் கோயில் உள்ளிட்ட பெரிய கோயில்களில் சிலை பாதுகாப்பு மய்யங்கள் அமைக்கப்பட்டன. கேமரா, அலாரம் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மய்யங்களின் அருகே உள்ள பல கோயில்களின் திருவிழாக்காலங் களில் மட்டும் பயன்படுத்தப்படும் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து திருவிழா நேரங்களில் இவை எடுத்துச் செல்லப்பட்டு திருவிழா முடிந்த பின்னர் மீண்டும் பாதுகாப்பாக வைக்கப்படுவது வழக்கம். இந்த சிலை பாதுகாப்பு மய்யங்களில் கேமரா, அலாரம் மற்றும் அதிநவீன பூட்டு, காவலர்கள் போன்ற வசதி செய்யப்பட்டுள்ளன.

ஆயினும் உற்சவர் உள்ளிட்ட முக்கிய அய்ம்பொன் சிலைகளும் குறைந்த அளவிலான நகைகளும் கோயில்களிலேயே நிரந்தரமாக வைக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சிலைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்கிறது. குறைந்த அள விலான சிலை இருந்தாலும் அனைத்து கோயில்களிலும் வங்கி களில் இருப்பது போன்ற அலாரம் மற்றும் சுழலும் வீடியோ கண் காணிப்பு கேமரா அமைக்க அற நிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தேவையான இடங்களில் இரவுக் காவலர்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேமரா, அலாரம் போன்ற வசதிகள் அமைக்க நிதி வசதி இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து மேல் நடவடிக்கை எடுத்து உடனடியாக பாதுகாப்பை பலப்படுத்த அறிவு றுத்தப்பட்டுள்ளனர்.

காவடி சுமந்து பாத யாத்திரை சென்ற பக்தர்கள் நான்கு பேர் ரயில் மோதி பலி

ராணிப்பேட்டை: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து பாத யாத்திரை செல்கின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள மேல்பட்டி லட்சுமி அம்மாள் புரத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது45) தேநீர்க் கடை வைத் திருந்தார். மேல்கார்கூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ்(18) பாலிடெக்னிக் மாணவர், தர்மபுரி மாவட்டம் இருமத்தூர் கொண்டா ரம்பட்டியை சேர்ந்த சிங்கார வேல் (20) கல்லூரி மாணவர் இவர்கள் உள்பட பக்தர்கள் திருத்தணிக்கு காவடி சுமந்து கொண்டு பாத யாத்திரை புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு வேலூர் அருகே உள்ள பொய்கையில் தங்கினர். அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு வாலாஜா ரோடு ரயில் நிலையத்தை அடைந் தனர்.

அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத் தனர். அப்போது ஆனந்தன், ஜெக தீஷ், சிங்காரவேல் மற்றும் ஆம்பூரை சேர்ந்த நவீன் (18) ஆகியோர் காலைக் கடன் கழிக்க தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப் போது காலை 5.30 மணிக்கு சென்னை நோக்கி வந்த ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்தன், ஜெகதீஷ், சிங்காரவேல் 3 பேரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர். நவீன் படுகாயம் அடைந்தார். நவீனை மீட்டு வேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்தவர்கள் உடல் பிரேத பரிசோ தனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட் டது. காட்பாடி ரயில்வே காவல் துறை யினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


வரவேற்கிறோம்.... ஆனால்...


மருத்துவக் கல்விக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக மத்திய நல் வாழ்வுத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, திராவிடர் கழகம் தொடக்கத் திலேயே கருத்துத் தெரிவித்துள்ளது. இந்தியா வின் வேறு பகுதிகளில்கூட, எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைவர் கலைஞர் அவர்கள் இந்த வகையிலே ஏற்கெனவே கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களும் இப்போது இதனை ஒட்டியே கருத்துத் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நுழைவுத் தேர்வு சட்டப்படியாக, திமுக ஆட்சியில் ஒழிக்கப் பட்டு விட்டது.

கல்வியைப் பொதுப் பட்டியலில் நெருக்கடி காலத்தில் கொண்டு சென்ற மத்திய அரசு, தேவையில்லாமல் மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிட்டு வருகிறது.

மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு பிரச்சினையை முன் வைத்தாவது கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுவது நல்லது; மத்திய அரசும் இணங்கி வரவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

தமிழ்நாடு முதல் அமைச்சர் மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு தேவையில்லை; மேல் முறையீடும் செய்யக் கூடாது என்று வற்புறுத்தும் அதே வேளையில், ஆசிரியர் தகுதித் தேர்விலும், பணி நியமனத்திலும், சமூகநீதிக்கு விரோதமாகச் செயல்பட்டு வருவது பற்றியும், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே, நமது முக்கியமான வேண்டுகோளாகும்.

இந்தப் பிரச்சினையில் இந்தியாவுக்கே வழி காட்டக் கடமைப்பட்டுள்ள தமிழ்நாடு முதல் அமைச்சர், ஆந்திர மாநிலம், பீகார், அஸ்ஸாம், கேரள மாநிலங்கள் பின்பற்றும் சமூக நீதியைக்கூடக் கடைபிடிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இந்தப் பிரச்சினையில் திராவிடர் கழகம் முன்னின்று போராடி வருகிறது; முக்கிய எதிர்க் கட்சியான கலைஞர் அவர்களும் வலுவான கருத்தினை வெளியிட்டுள்ளார்.

பல்வேறு அமைப்புகளும், தத்தம் வழியில் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றன. இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக் கப்பட்டு வருகின்றன.

இவ்வளவுக்குப் பிறகும் - தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு என்று தவறான முடிவின்மீது கருத்துத் தெரிவித்து விட்டது.

சமூகநீதியில் இவ்வரசுக்கு இருக்கும் அந் தரங்கச் சுத்தியையே சந்தேகத்துக்கு உள்ளாக்கி விட்டதே!

30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்று பல்வேறு கல்வி நிபுணர்களின் குழுக்கள் ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளன. அதன்படி ஆசிரியர்களை நியமனம் செய்தால் இப்பொழுது ஆசிரியர் பயிற்சி பெற்று அரசுப் பணிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அத்தனை பேர்களுக் கும் பணி வாய்ப்புப் பெற விசாலமான வாய்ப்பு உண்டு. அந்த நிலையில் தகுதித் தேர்வு பிரச்சினைக்கும் இடம் இல்லாமலேயே போகும். அதுபற்றியும்கூட இ.அ.அ.தி.மு.க. அரசு சிந்திப் பது நல்லது; உடனடியாக அதனைச் செயல்படுத்த முடியாத பட்சத்தில், தகுதித் தேர்வில் செய்துள்ள குளறுபடிகளைச் சரி செய்ய முன்வரவேண்டும்.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முன் னேறிய ஜாதியினருக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரி சேர்க்கைகளில்கூட வெவ்வேறு சத வீதத்தில் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும் பொழுது, ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் அந்த முறை கடைபிடிக்கப்படாதது ஏன் என்ற கேள்விக்கு அரசு தரப்பிலிருந்து இதுவரை நியாயமான பதில் இல்லாத திலிருந்தே அரசு தரப்பில் தவறு நடந்திருக்கிறது என்பது வெளிப் படையாகவில்லையா? வீண் பிடிவாதம் எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்று எச்சரிக் கின்றோம்.

தமிழ் ஓவியா said...


நாடுநாடு என்று எதைச் சொல்ல வேண்டும் என்றால், அது பொரு ளாதாரச் சுதந்திரமுடைய நாடாக இருத்தல் வேண்டும்; அது இல்லாத நாடு அடிமை நாடு என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, சுதந்திர நாடு என்று சொல்ல முடியாது.
(விடுதலை, 2.12.1958)

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம்! (ஜாதி - தீண்டாமை ஒழிப்பு) 1.8.2013 - முழக்கங்கள் (1)


வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(2) பணி முடிப்போம் பணி முடிப்போம்!
மரண சாசனமாக மரண சாசனமாக
பெரியார் அறிவித்த பெரியார் அறிவித்த
அனைத்து ஜாதியினருக்கும்
அனைத்து ஜாதியினருக்கும்
அர்ச்சகர் உரிமை அர்ச்சகர் உரிமை
பணி முடிப்போம் - பணி முடிப்போம்

(3) ஒழிக ஒழிக ஒழிகவே!
வருணா சிரமம் வருணா சிரமம்
ஒழிக ஒழிக ஒழிகவே!

(4) ஒழிக ஒழிக ஒழிகவே
ஜாதியும் - தீண்டாமையும்
ஜாதியும் தீண்டாமையும்
ஒழிக ஒழிக ஒழிகவே!

(5) கோயில் கருவறையில் கோயில் கருவறையில்
தீண்டாமை தீண்டாமை ஒழிக ஒழிக ஒழிகவே!

(6) அர்ச்சகராக்கு அர்ச்சகராக்கு!
அனைத்து ஜாதியினரையும்
அனைத்து ஜாதியினரையும்
அர்ச்சகர் ஆக்கு அர்ச்சகர் ஆக்கு!

(7) பேதம் வேண்டாம் பேதம் வேண்டாம்
பக்தியின் பெயரால் பக்தியின் பெயரால்
மதத்தின் பெயரால் மதத்தின் பெயரால்
பேதம் வேண்டாம் பேதம் வேண்டாம்!

(8) பார்ப்பான் மட்டும் பார்ப்பான் மட்டும்
அர்ச்சகனா? அர்ச்சகனா?
தமிழன் மட்டும் தமிழன் மட்டும்
சூத்திரனா? சூத்திரனா?

(9) கோயில் கட்டும் கோயில் கட்டும்
தமிழன் எல்லாம் தமிழன் எல்லாம்
வீதியிலா? வீதியிலா?
குருக்கள் மட்டும் குருக்கள் மட்டும்
கருவறையிலா கருவறையிலா?

(10) தாழ்த்தப்பட்டோரும்
பிற்படுத்தப்பட்டோரும்
தாழ்த்தப்பட்டோரும்
பிற்படுத்தப்பட்டோரும்
அய்.ஏ.எஸ். ஆகலாம்
அய்.ஏ.எஸ். ஆகலாம்
நீதிபதியாகலாம் நீதிபதியாகலாம்
அர்ச்சகர் ஆக அர்ச்சகர் ஆக
கூடாதா? கூடாதா?
முடியாதா? முடியாதா?

(11) ஆண்டவன் அனைவருக்கும்
ஆண்டவன் அனைவருக்கும்
பொது என்றால் பொது என்றால்
பிராமணன் என்றும் சூத்திரன் என்றும்
பிராமணன் என்றும் சூத்திரன் என்றும்
பேதங்கள் ஏன்? பேதங்கள் ஏன்?

(12) பெரியார் நெஞ்சில் பெரியார் நெஞ்சில்
தைத்த முள்ளை தைத்த முள்ளை
மானமிகு கலைஞர் மானமிகு கலைஞர்
சட்டம் இயற்றி சட்டம் இயற்றி
நீக்கினார் நீக்கினார்
உச்சநீதிமன்றமே உச்சநீதிமன்றமே
தடையை நீக்கு - தடையை நீக்கு!

(13) கட்சியில்லை கட்சியில்லை
ஜாதியில்லை ஜாதியில்லை
உரிமைப் போர் உரிமைப் போர்
மனித உரிமைப் போர் மனித உரிமைப் போர்!

(14) தமிழா தமிழா ஒன்றுபடு-
தமிழா தமிழா ஒன்றுபடு!
தமிழன் பகையை
தமிழன் பகையை
வென்று விடு - வென்று விடு!

(15) வெல்லட்டும் வெல்லட்டும்!
மனித உரிமை மனித உரிமை
வெல்லட்டும் - வெல்லட்டும்!

(15) போராடுவோம் - போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம் - போராடுவோம்!
வெற்றி பெறுவோம்
வெற்றி பெறுவோம்!

(17) வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(18) வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!

(19) வாழ்க வாழ்க வாழ்கவே
அறிஞர் அண்ணா வாழ்கவே!

(20) வெல்க வெல்க வெல்கவே
தமிழர் உரிமை வெல்கவே!
- தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம்! (ஜாதி - தீண்டாமை ஒழிப்பு) 1.8.2013 - முழக்கங்கள் (1)


வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(2) பணி முடிப்போம் பணி முடிப்போம்!
மரண சாசனமாக மரண சாசனமாக
பெரியார் அறிவித்த பெரியார் அறிவித்த
அனைத்து ஜாதியினருக்கும்
அனைத்து ஜாதியினருக்கும்
அர்ச்சகர் உரிமை அர்ச்சகர் உரிமை
பணி முடிப்போம் - பணி முடிப்போம்

(3) ஒழிக ஒழிக ஒழிகவே!
வருணா சிரமம் வருணா சிரமம்
ஒழிக ஒழிக ஒழிகவே!

(4) ஒழிக ஒழிக ஒழிகவே
ஜாதியும் - தீண்டாமையும்
ஜாதியும் தீண்டாமையும்
ஒழிக ஒழிக ஒழிகவே!

(5) கோயில் கருவறையில் கோயில் கருவறையில்
தீண்டாமை தீண்டாமை ஒழிக ஒழிக ஒழிகவே!

(6) அர்ச்சகராக்கு அர்ச்சகராக்கு!
அனைத்து ஜாதியினரையும்
அனைத்து ஜாதியினரையும்
அர்ச்சகர் ஆக்கு அர்ச்சகர் ஆக்கு!

(7) பேதம் வேண்டாம் பேதம் வேண்டாம்
பக்தியின் பெயரால் பக்தியின் பெயரால்
மதத்தின் பெயரால் மதத்தின் பெயரால்
பேதம் வேண்டாம் பேதம் வேண்டாம்!

(8) பார்ப்பான் மட்டும் பார்ப்பான் மட்டும்
அர்ச்சகனா? அர்ச்சகனா?
தமிழன் மட்டும் தமிழன் மட்டும்
சூத்திரனா? சூத்திரனா?

(9) கோயில் கட்டும் கோயில் கட்டும்
தமிழன் எல்லாம் தமிழன் எல்லாம்
வீதியிலா? வீதியிலா?
குருக்கள் மட்டும் குருக்கள் மட்டும்
கருவறையிலா கருவறையிலா?

(10) தாழ்த்தப்பட்டோரும்
பிற்படுத்தப்பட்டோரும்
தாழ்த்தப்பட்டோரும்
பிற்படுத்தப்பட்டோரும்
அய்.ஏ.எஸ். ஆகலாம்
அய்.ஏ.எஸ். ஆகலாம்
நீதிபதியாகலாம் நீதிபதியாகலாம்
அர்ச்சகர் ஆக அர்ச்சகர் ஆக
கூடாதா? கூடாதா?
முடியாதா? முடியாதா?

(11) ஆண்டவன் அனைவருக்கும்
ஆண்டவன் அனைவருக்கும்
பொது என்றால் பொது என்றால்
பிராமணன் என்றும் சூத்திரன் என்றும்
பிராமணன் என்றும் சூத்திரன் என்றும்
பேதங்கள் ஏன்? பேதங்கள் ஏன்?

(12) பெரியார் நெஞ்சில் பெரியார் நெஞ்சில்
தைத்த முள்ளை தைத்த முள்ளை
மானமிகு கலைஞர் மானமிகு கலைஞர்
சட்டம் இயற்றி சட்டம் இயற்றி
நீக்கினார் நீக்கினார்
உச்சநீதிமன்றமே உச்சநீதிமன்றமே
தடையை நீக்கு - தடையை நீக்கு!

(13) கட்சியில்லை கட்சியில்லை
ஜாதியில்லை ஜாதியில்லை
உரிமைப் போர் உரிமைப் போர்
மனித உரிமைப் போர் மனித உரிமைப் போர்!

(14) தமிழா தமிழா ஒன்றுபடு-
தமிழா தமிழா ஒன்றுபடு!
தமிழன் பகையை
தமிழன் பகையை
வென்று விடு - வென்று விடு!

(15) வெல்லட்டும் வெல்லட்டும்!
மனித உரிமை மனித உரிமை
வெல்லட்டும் - வெல்லட்டும்!

(15) போராடுவோம் - போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம் - போராடுவோம்!
வெற்றி பெறுவோம்
வெற்றி பெறுவோம்!

(17) வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(18) வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!

(19) வாழ்க வாழ்க வாழ்கவே
அறிஞர் அண்ணா வாழ்கவே!

(20) வெல்க வெல்க வெல்கவே
தமிழர் உரிமை வெல்கவே!
- தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

ஆகமவிதி மீறல்.... (12)


கோயில்கள் இன்ன இன்ன இடத்தில்தான் இருக்க வேண்டும் என்கிறது ஆகமம். ஆனால் இன்று கண்ட கண்ட இடத்தில் கட்டப்படுகிறது. சிவா விஷ்ணு என்று கோயில் அமைப்பது சைவாகமத்திலோ வைணவாக மத்திலோ சொல்லப்படவில்லை.

- இப்படியொரு ஆகமவிதி

உண்மைதான். இன்று கண்ட கண்ட இடங்களில் கோயில்களைக்கட்டுகின்றார்கள். தெருக்குத்தல் தொடங்கி, ஆட்டோ ஸ்டாண்ட் வரை, கோயில்கள் கட்டுகின்றார்கள். இதில் என்ன தவறு? இவ்வாறு கட்டி னால் என்னவாகும்? கடவுள் ஓடிப்போய் விடுவாரா? அல்லது அந்த இடம் புனிதம் கெட்டுவிடுமா? அப்படி யென்றால் இன்று கண்ட கண்ட இடங்களில் கோயில் கள் இருப்பதால், கடவுளின் புனிதம் கெட்டு வெறும் கல்தான் இருக்கின்றதா! ஆகமத்தை மீறி இத்தனை நபர்கள் கோயில் கட்டி வழிபாடு நடத்துகின்றார்களே அவர்கள் எல்லாம் என்ன முட்டாள்களா?

பக்தர்கள் ஆகமத்தை மீறிவிட்டதால் இதுவரை என்னென்ன இழப்பு ஏற்பட்டுவிட்டது பட்டியலிட முடியுமா? சென்னையில் அஷ்டலெட்சுமி என்றொரு கோயில், ஒன்றின் மேல் ஒன்றை அடுக்கி வைத்தது போல கட்டியிருக்கிறார்களே! இது ஆகமப்படி தவறு. இதனால் என்ன இழப்பு ஏற்பட்டுவிட்டது. கடல் தண்ணீர் கோயிலுக்குள் நுழைந்து விட்டதா?

நடப்பது என்ன?

எட்டு லட்சுமியும் ஒரே இடத்தில் இருந்தல்லவா, பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகின்றது. இது போலதானே அறுபடை முருகனும் ஒரே இடத்தில் இருந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றது.

சரி இத்தனை ஆகம மீறல்களுக்கும் சிவாச்சாரி யார்கள்தானே துணை போகின்றார்கள்! இன்று கண்ட கண்ட இடங்களில் கட்டப்படும் கோயில்களுக்கு சிவாச் சாரியார்கள்தானே கும்பாபிஷேகம் செய்து வைக் கிறார்கள்.

இந்த கோயில் ஆகம விதிகளுக்கு புறம்பாக, ஆகம விதிகளை மீறி கட்டப்பட்ட கோயில். இந்த கோயிலுக்கு நானோ அல்லது என் சமூகத்தைச் சார்ந்த எந்த சிவாச்சாரியரும் கும்பாபிஷேகம் செய்யமாட்டோம் என்று எந்த சிவாச்சரியாராவது, ஏதாவது ஒரு இடத்திலாவது சொல்லியிருக்கிறார்களா?

இதைவிட ஒரு பெரிய கொடுமை இந்தக் கோயிலை நான் கும்பாபிஷேகம் செய்து தருகிறேன் 50,000 ரூபாய் கொடு என்று சிவாச்சாரியார் காண்டிராக்ட் பேசி னால்.. அவருக்குத் தெரியாமல் இன்னொரு சிவாச்சாரி யார் அங்கு சென்று எனக்கு 30,000 ரூபாய் கொடு அவரைவிட சிறப்பாக பண்ணித்தருகிறேன் என் றல்லவா போட்டி போடுகிறார்கள்.

சிவா விஷ்ணு என்று கோயில் அமைப்பது சைவாக மத்திலோ வைணவாகமத்திலோ சொல்லப்படவில்லை.

உருவாக்கப்படாத, விதியை மீறி இன்று உலகம் முழுவதும் சிவா விஷ்ணு கோயில் கட்டப்பட்டுள்ளது. அந்தக் கோயில்களில் எல்லாம் சிவாச்சாரியார்களும், பட்டாச்சாரியர்களும் ஒற்றுமையாகத்தானே பூஜை செய்து வருகின்றார்கள்.
இதனால் என்ன இழப்பு ஏற்பட்டு விட்டது? பட்டியலிட முடியுமா? சிவா விஷ்ணு கோயில் அமைப்பது பற்றி எந்த ஆகமத்திலும் ஏன் சொல்லப்படவில்லை?

உண்மை என்ன தெரியுமா?

அவ்வளவு குரோதம்.

சைவத்திற்கும், வைணவத்திற்கும் அவ்வளவு குரோதம். அதனால்தான் அப்படியொரு விதியை உருவாக்கவில்லை என்பதுதான் உண்மை.

தமிழ் ஓவியா said...

அடுத்து - இப்பொழுது புதிதாக கட்டுகின்ற கோயில்களில் அல்லது புதுப்பிக்கின்ற கோயில்களில் எல்லாம் லேட்டஸ்ட் கடவுளான ஸ்ரீரடி சாய்பாபா இடம் பிடித்து விட்டாரே!

சிவன் விஷ்ணுவையாவது நாம் புராணங்களில் படித்திருக்கிறோம். ஆனால் இந்த ஸ்ரீரடி சாய்பாபா யார்? அவருக்கு எப்படி கோயில்களில் புராணகால கடவுளுக்கு இணையான சீட் கிடைத்தது. இது ஆகம மீறல் இல்லையா?

இந்த ஆகம மீறல்களால் எதை இழந்தோம்! பட்டியலிட முடியுமா?

லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வருமானத்தை யல்லவா பெற்று இருக்கிறோம். எத்தனையோ பக்தர் களுக்கு ஸ்ரீரடி சாய்பாபா கனவிலும், நேரிலும் அருள் புரிவதாகச் சொல்லுகிறார்களே!

ஆக இந்த ஆகம மீறல்களால் எத்தனையோ பக்தர்கள் சந்தோஷமாகத்தானே இருக்கிறார்கள்.
அடுத்து,

இதைவிட பெரிய அசிங்கம் இன்னும் கொஞ்சகாலத் தில் அதாவது 21-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரங்கேறப் போகிறதே! அதற்கு நாம் எங்கே போய் முட்டிக்கொள்வது?

ஆம்!

இன்று நம் கண் முன்னால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக உலகம் முழுவதும் விமர்சனங்களுக்கு ஆளாகி, தெய்வமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிற புட்டபர்த்தி சாய்பாபாவிற்கு தனியாக கோயிலும், புதிதாக கட்டப்போகின்ற கோயில்களில் தனி இடமும், புதுப்பிக்கின்ற கோயில்களில் தனி இடமும் கிடைக்கப் போவது உறுதி!

அப்பொழுது என்ன ஆகப்போகிறது இந்த ஆகமவிதி?

உலகம் அழிந்துவிடுமா? அல்லது எதையாவது ஒரு பகுதியை இழந்து விடுவோமா! அப்பொழுது நிலைமை எப்படி இருக்கும் தெரியுமா? கோடிக்கணக்கில் கோயி லுக்கு வருமானம் கொட்டோ கொட்டு என்று கொட்டப் போவது உறுதி. அதுமட்டுமல்ல - அங்கே அதிகாலை புட்டபர்த்தியை சுப்ரபாதம் சொல்லி எழுப்பி அபிஷேகம், அர்ச்சனை, சகஸ்ரநாமம் சொல்லும் அர்ச்சகர்கள் கோடீஸ்வரனாக ஆகப்போவது உறுதி. இதிலிருந்து என்ன தெரிகிறது?

கண்ட கண்ட இடத்தில் கோயில் கட்டுவதையும், ஆகம விதியில் சொல்லப்படாத கடவுள்களை ஒன்று சேர்ப்பதையும், புராணக் கடவுள்களுக்கு இணையாக நம் கண்முன்னே மலம் போகும் மனிதர்களை கடவுளாக்கி ஒன்று சேர்ப்பதையும் - ஆகமம் ஏற்கவில்லை என்ற ஆகம விதியும், பொய்தானே!

- குமார் ராமசாமி

நூல்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாமா?

தமிழ் ஓவியா said...


பெரியார் சுயமரி யாதைத் திருமண நிலை யத்தின் சார்பில் தமிழகம் முழுக்க நடத்தப்படும் ஜாதி மறுப்பு இணை தேடல் நிகழ்ச்சியான மன்றல் - நெல்லை மண்ட லத்தில் 28.7.2013 அன்று திருநெல்வேலி மாநகரில் ஆர்.கே.வி. மஹாலில் நடைபெற்றது. காலை முதலே ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற் றனர். பகல் முழுவதும் பதிவுகள் ஏற்கப்பெற்று மணமக்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. மதிய உணவுக்குப் பின் னும் அறிமுக நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணை யருக்கான பாராட்டும் நிகழ்ச்சியின் இடையி டையே செய்யப்பட்டது. ஜாதி மறுப்பு இணை யர்களான திருநெல்வேலி இ.தமிழ்மணி- இ.சுகந்தி, தூத்துக்குடி பொ.முருகன் - இ.அருணா, கீழப்பாவூர் ச.தமிழன் - த.கலாவதி, நாகர்கோவில் மு.இராசேந் திரகுமார் - வி.விஜி, நெல்லை பொ.சக்திவேல் - திருமலைகுமாரி ஆகி யோருக்கு பெரியார் சுய மரியாதைத் திருமண நிலையத்தின் மாநில அமைப்பாளரும், தலை மைச் செயற்குழு உறுப் பினருமான திருமகள் பாராட்டுக் கேடயத்தினை வழங்கினார். அனைவருக் கும் கழகப் பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ் அவர் கள் பாராட்டுத் தெரி வித்தார்.

நிறைவு விழாவில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டோரைப் பாராட்டியும், மன்றல் நிகழ்ச்சி சிறக்க உழைத் தோரைப் பாராட்டியும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் "கூட்டுமுயற்சியால் வெற்றி பெற முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த நெல்லை மன்றல். நமது தோழர்கள் கடுமை யாக உழைத்து இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். அடுத்த மன்றல் நெல் லையில் நடத்தப்பட வேண்டும் என்று தமிழர் தலைவர் அவர்கள் ஆண யிட்டபோது, நெல்லை யிலா? என்று சிலர் வியந் தார்கள். எங்கே தேவைப் படுகிறதோ, அங்கே தானே நடத்த வேண்டும். எனவே நெல்லையில் தான். ஆனால் உடனடி பலன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அவசியமாக நடத்தப்பட வேண்டிய பகுதி என்றார் தழிழர் தலைவர் அவர்கள். அதன் படி தான் இங்கே அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. மற்ற ஊர்களோடு ஒப்பிடுகை யில் நெல்லையில் பதிவு குறைவாக இருக்கிறதே என்று கூட நம் தோ ழர்கள் வருத்தப்பட்டார் கள்.

ஆனால், இது ஒரு நல்ல தொடக்கம். ஜாதி யினாலும், மூடநம்பிக்கை யாலும் சூழப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வருவது என்பது சாதாரண பணி யல்ல. இதே பகுதியில் தோழர்கள் எதிர்பார்த் ததை விட அதிகமான பதிவுகள் வரும் வரை, இந்தப் பணியை நாங்கள் விடுவதாக இல்லை. தொடர் பிரச்சாரத்தின் வாயிலாகவும், அடுத் தடுத்த தலைமுறையிட மும் இந்தக் கொள்கை யையும், தந்தை பெரியா ரையும் கொண்டு செல்வ தன் வாயிலாகவும் மட்டு மே நாம் வென்றெடுக்க முடியும். அதற்கான திட்ட மிடலோடு செயலாற்று வோம். மீண்டும் மீண்டும் இப்பகுதியில் மன்றல் நடத்தப்படும். தமிழகத் தின் அனைத்துப் பகுதி களிலும் மன்றல் நிகழ்வு களை தொடர்ந்து வெற்றி கரமாக நடத்தி நாம் செய்துவரும் சமூகப் புரட்சி தொடரும் என்று குறிப்பிட்டார். மன்றல் சிறக்க உதவிய, தொண் டாற்றிய அனைவருக்கும் பயனாடை அணிவித்துச் சிறப்பித்தார்.

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆர்ப்பாட்டம்!


ஆர்ப்பரித்து எழுகிறது அரிமா தமிழினம்!

சென்னையில் தமிழர் தலைவர் தலைமை தாங்குகிறார்


சென்னை, ஜூலை 31- திராவிடர் கழகத்தின் சார்பில் நாளை (1.8.2013) காலை தமிழகம் முழுவதும் கழக மாவட்டத் தலைநகரங்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத் தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., (தி.மு.க.), தொல்.திருமாவளவன் எம்.பி., (வி.சி.க.), சுப.வீரபாண் டியன் (தி.இ.த.பே.) ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்

தந்தை பெரியார்தம் வாழ்நாளில் இறுதியாக அறிவித்த தீண்டாமை ஒழிப்பு - ஜாதி ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு இதனைச் செயல்படுத்தும் வகை யில் நடவடிக்கை எடுக்கவேண்டும்; உச்சநீதிமன் றத்தில் வழக்கைச் சிறப்பாக நடத்தவேண்டும்; வெற்றி பெறவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் பல கட்டப் போராட்டங்களை நடத்து வது என்று சென்னையில் 9.7.2013 அன்று நடை பெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 43 ஆண்டுகளுக்குமேல் இந்தப் பிரச்சினை யில் திராவிடர் கழகம் - ஜாதி - தீண்டாமை ஒழிப்பு என்பது இந்த இயக்கத்தின் உயிர் மூச்சுக் கொள்கை என்பதால், உறுதியாக நின்று வென்றே தீருவது என்ற திட சித்தத்துடன், எந்த விலையையும் கொடுக்கத் தயார் என்று நாளும் பாடுபட்டு களங்காண, களைப்பின்றிக் கடமையாற்றி வருகின்றது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன் வேண்டும் என்பதை விளக்கி திராவிடர் கழகப் பேச்சாளர்கள் தமிழகமெங்கும் பட்டிதொட்டி யெல்லாம் சென்று தெருமுனைக் கூட்டங்களை நடத்திப் பிரச்சாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில், அதனடிப்படையில் முதற்கட்ட மாக நாளை (1.8.2013) திராவிடர் கழகத்தின் அனைத்துக் கழக மாவட்டத் தலைநகரங்களில் (புதுச்சேரி, காரைக்கால் உள்பட) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

61 இடங்களில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் உள்ள கழக மாவட்டங்களான 61 இடங்களில் நடைபெறும், இந்தத் தீண்டாமை ஜாதி ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டத் தில் திராவிடர் கழகத்துடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற் கின்றனர்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரி தமிழ்நாடெங்கும் நாளை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தோழர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன் னாள் மத்திய - மாநில அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர்கள் என பெருந் திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர்.

சென்னை - சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம்!

சென்னை - சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நாளை (1.8.2013) காலை 11 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங் கோன் எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தென் சென்னை தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜெ.அன் பழகன் எம்.எல்.ஏ., வடசென்னை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் பங்கேற் கின்றனர்.

தமிழ் ஓவியா said...


கிரிக்கெட் சூதாட்டம்: மூக்கை உடைத்தது மும்பை நீதிமன்றம்மும்பை, ஜூலை 31-சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது சூதாட்ட குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதுகுறித்து முன்னாள் நீதிபதிகள் ஜெயராம் சவுதா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய விசாரணை குழுவை கிரிக்கெட் வாரியம் நியமித்தது.

இந்த விசாரணை அறிக்கையில் குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் மீதான சூதாட்ட புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் இந்த விசாரணை குழுவை எதிர்த்து ஜார்க்கண்ட், பீகார் மாநில கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் கிரிக்கெட் வாரியத்துக்குக் கண்டனம் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த விசாரணை குழு சட்ட விரோதமானது. ஒரு தலை பட்சமானது என்று தெரிவித்தது.

மேலும் புதிய குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தர விட்டது.

அய்.பி.எல். சூதாட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை அய்.பி.எல். சூதாட்டம் தொடர்பாக டில்லி காவல்துறையினர் விசாரண நடத்தி வருகின்றனர். சூதாட்டத்தில் ஈடுபட்டு கைதான கிரிக்கெட் வீரர்களின் தொலைபேசி உரையாடல்களை மத்திய தடயவியல் ஆய்வு செய்தபோது, இந்த சூதாட்டத்தில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய டில்லி காவல்துறை, நேற்று டில்லி கூடுதல் அமர்வு நீதிபதி வினய்குமார் கன்னா முன்னிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 6000 பக்கம் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், தாவூத் இப்ராகிம், அவனது நெருங்கிய கூட்டாளி சோட்டா ஷகீல், பணி நீக்கம் செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் சிறீசாந்த், அன்கீத் சவான், அஜித் சண்டிலா, ஏஜெண்டுகள் அஷ்வனி அகர்வால், ரமேஷ் வியாஸ், தீபக் குமார், சுனில் பாட்டியா மற்றும் பைரோஸ் பாரித் அன்சாரி, முன்னாள் ரஞ்சி வீரர் பாபுராவ் யாதவ் உள்ளிட்ட 39 பேரின் பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த 39 பேரில் 8 பேர் நீதிமன்றக் காவலில் உள்ளனர். 21 பேர் பிணையில் வெளியே வந்துவிட்டனர். 10 பேர் தலை மறைவாக உள்ளனர்.

தமிழ் ஓவியா said...


பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்முறைத் தடுப்புச் சட்டம்


பணி புரியும் இடங்களில் பெண்களைப் பாது காக்கும் வகையில் சட்டத்தில் புதிய விதிகள் உரு வாக்கப்பட்டுள்ளன. அதன்படி பெண்களுக்குப் பாலியல் தொல்லை தருபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

இதுதொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடை முறைக்கு வந்துள்ள பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லைகள் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம்-2013 இல், பெண்கள் மற்றும் குழந் தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ள வரைவு சட்ட விதிகள் வருமாறு:

பெண் பணியாளர்களை பாலியல் தொல்லை களுக்கு உள்படுத்துபவர்களுக்கு பணி நீக்கம், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை நிறுத்தி வைத்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.

பாலியல் புகார் அளிக்கும் பெண் பணியாள ருக்கு தகுந்த இழப்பீட்டுத் தொகை வழங்குவது என்றும் கூறப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை குறித்து பொய்யான தகவல் அளித்தால், பாலியல் குற்றத்துக்கு குற்றவாளிக்கு என்ன தண்டனை அளிக்கப்படுமோ, அதே தண்டனை பெண்ணுக்கும் கிடைக்கும்.

புகார்களை பெறுவதற்காக உள்ளூர் புகார்கள் குழுவை அமைக்கவேண்டும். அதில் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சமூகசேவகர் ஒருவரும், தொழிலாளர், வேலைவாய்ப்பு, சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு களில் நன்கு கைதேர்ந்த ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தவிர, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாது காப்புத் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தை நிறுவி, மேற் கண்ட குழுவிற்கு தார்மிக ஆதரவு அளிக்க வேண்டும்.

விசாரணையின் போது குற்றம் சாட்டியவர், குற்றம்சாட்டப்பட்டவர் இருவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குற்றச்சாட்டுக்கு ஆளானவர், புகார் அளித்த பெண்ணுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ மிரட்டல் விடுக்கவோ, ஆசை வார்த்தை கள் கூறவோ முயற்சிக்கக் கூடாது என எச்சரிக் கப்பட வேண்டும் போன்ற விதிமுறைகள் உருவாக்கப் பட்டுள்ளன.

இது உண்மையில் வரவேற்கப்படவேண்டிய சட்டமாகும். பெண்கள் என்றால், பாலியல் பதுமை என்ற மனப்பான்மை, ஆண்களிடத்தில் உள்ளது. ஆண் ஒருவன் 7 நிமிடத்திற்கு ஒருமுறை, பாலுணர்வுபற்றி யோசிக்கிறான்- என்கிறது ஓர் ஆய்வு.

பெண்கள் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் என்பது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அருமையான சட்டம். அது எந்த வகையில் செயல்வடிவத்தில் இருக்கிறது என்பது கேள்விக்குறிதான்.

பாதிப்புக்கு ஆளான பெண்கள் காவல் நிலையத்திற்குச் சென்று துணிவாகப் புகார் கொடுப்பது போன்ற துணிவு, போதுமான அளவுக்கு ஏற்படவில்லை.

இதில் இன்னொன்று - இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்கிற விழிப்புணர்வுகூட சமுதாயத்தில் ஏற்படவில்லை. வெறும் சட்டத்தை நிறைவேற்றினால் மட்டும் போதாது - அதுபற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் நாடு தழுவிய அளவில் செய்ய அரசே திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.

அரசு தொலைக்காட்சியிலாவது இதுகுறித்து, விளக்கம் அளிக்கலாமே! நாடு தழுவிய அளவில் விவாதங்களை உருவாக்கலாமே!

பல்கலைக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள், இதுகுறித்துக் கருத்தரங்குகளை நடத்திடவேண்டும்.

அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது சர்வசாதாரணம். அதனைத் தடுக்கவும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்கவும் ஏற்கெனவே சட்டம் இருக்கத்தான் செய்கிறது.

2012 டிசம்பரில் இத்தகைய சட்டம் குறித்து உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் கூறியது இங்கு நினைவூட்டத்தக்கதாகும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு, ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனைவரை, சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட (திருத்த) மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு மசோதா ஒன்றும் 2011 ஆம் ஆண்டிலேயே பேசப்பட்ட ஒன்று.

குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் பணியில் ஈடுபட்ட ராஜஸ்தான் அரசு ஊழியர் பான்வாரி கன்னத்தில் அறையப்பட்ட நிகழ்ச்சி இந்திய அளவில் பெரிய அதிர்வை உண்டாக்கியது. அது தொடர்பான வழக்கில் 1997 இல் உச்சநீதிமன்றத்தால் வழிகாட்டுதல் அம்சங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டம் அலுவலக நடைமுறைக்கே உரித்தான தாமதத்துடன் சட்டம் இப் பொழுதுதான் தலைகாட்டுகிறது.

ஒவ்வொரு நிறுவனத்திலும் புகார்க் குழு அமைக்கப்பட வேண்டும். புகார்க் குழுவின் தலைவராக மூத்த (சீனியர்) பெண்மணி நியமிக்கப்படவேண்டும். தன்னார்வ அமைப்புப் பிரதிநிதி ஒருவரும் அதில் இடம்பெறவேண்டும் என்றெல் லாம் தாராளமாக விதிமுறைகள் உண்டு.

இவை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் உயிருள்ள மின்னோட்டமாக இருப்பது அவசியமாகும்.

தமிழ் ஓவியா said...


பொது மக்கள் நலன்!இது நம்முடைய நாடு; இதன் நலனில் நமக்குப் பொறுப்பும், அக்கறையும் உண்டு. நாம் பொதுமக்கள் நலனுக் காகத் தொழில் செய்கிறோமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் நலனுக்காக அல்ல.
(குடிஅரசு, 25.8.1940)

தமிழ் ஓவியா said...


திருமுல்லைவாயல் வாசிகளின் குறைபாடு


ஆசிரியருக்குக் கடிதம்

திருமுல்லைவாயல் வாசிகளின் குறைபாடு

கடந்த 2.7.2011 அன்று திருமுல்லைவாயலில் (ஆவடி மாவட்டம்) தந்தை பெரியார் அறிஞர் அண்ணா இவர்களின் பெயரில், சாலைகள் திறக்கப்பட்டன. துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், நகராட்சி தலைவர் ச.மு.நாசர், முன்னாள் நகராட்சி தலைவர் எம்.விக்டரிமோகன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் சிறப்பான விழா எடுத்து திறந்து வைக்கப்பட்ட சாலையில், 7 ஆவது வார்டு அ.தி.மு.க. நகர மன்ற உறுப்பினர், வேறு ஒரு பெயரில் சாலைக்கு பெயர் வைத்து போர்டு நடப்பட்டுள்ளது (அதன் பெயர் குளக்கரை சாலை, திருமுல்லைவாயல், ஆவடி நகராட்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது) என்பதைத் தங்கள் மேலான கருத்திற்கு தெரியப்படுத்துகிறேன்.

மேலும் அய்யா அறிவது, திருமுல்லைவாயல் பகுதியில் சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள், அவர்கள் போக்குவரத்திற்கு பேருந்து வசதி கிடையாது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ஒரு பேருந்து வந்தது; அதுவும் இப்பொழுது இல்லை, காரணம் சாலை சரியில்லை, குண்டும் குழியுமாக இருக்கிறது என்று நிறுத்தி விட்டார்கள், கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மழைக் காலங்களில் சாலையில் நடக்க முடியவில்லை. வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒரு முதியவர் நடந்து வரும்போது வழுக்கி விழும்போது, லாரி ஒன்று அவர் காலில் ஏறியதில் கால் முறிந்து கொஞ்சம் நாள் கால் வலியால் துயரப்பட்டு இறந்து விட்டார். பல பேர் விழுந்து எழுந்து செல்கிறார்கள். இன்னும் அந்தச்சாலை சீர் செய்யப்படவில்லை. பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதோடு, திருமுல்லைவாயல், பேரறிஞர் அண்ணாவின் துணைவியார் ராணி அண்ணாதுரை வாழ்ந்த ஊர் என்பதும், பேரறிஞர் அண்ணா எங்கள் ஊரின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: எல்லா இடங்களுக்கும் பேருந்து வசதி உண்டு, திருமுல்லைவாயலில் மட்டும் இதுவரை பேருந்து இல்லை என்பது வருந்தத்தக்க ஒன்றாகும். தவறாமல் வாக்குப்பதிவு அதிகமாக நடப்பதும் இந்த ஊரில்தான். தேர்தல் வாக் குறுதி இலவசங்கள் கடந்த 15 ஆண்டுகளாக பெறாத ஊரும் இதுதான். இந்த மக்கள் இலவசத்தை இதுவரை கேட்டது கிடையாது. ஆனால் கொடுத்தால் வாங்குவதற்குத் தயார்! ஏன் கொடுக்கவில்லை என்பதுதான் கேள்வி!

- க.இரணியன், பகுத்தறிவாளர் கழகம், திருமுல்லைவாயல்

தமிழ் ஓவியா said...

நாகை மாவட்ட திராவிடர் கழக முன்னாள் தலைவர் வி.எஸ்.டி. அழகப்பன் அவர்கள் தமக்குப் பிறகு தமது மகன் இந்த இயக்கத்தில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று மருத்துவமனையில் அவர் இருந்த போது கையைப் பிடித்து என்னிடம் ஒப்படைத்தார் - அதனை உறுதி செய்யவே இங்கு வந்துள்ளேன் என்றார் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் திராவிடர் கழக முன்னாள் தலைவர் வேளாங்கண்ணி வி.எஸ்.டி. அழகப்பன் அவர்களின் நினைவுநாளையொட்டி படத்திறப்பு நிகழ்ச்சி 19.7.2013 அன்று காலை 10.30 மணிக்கு அவரது இல்லத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கொட்டகையில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது.

படத்தினை திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். உரையில் குறிப்பிட்டதாவது:

இயக்க வரலாற்றில் நாகை

நாகைக்கு இயக்க வரலாற்றில் பல சரித்திர சிறப்புகள் உண்டு. ஆர்.வி.கோபால், நாகை மணி, வழக்குரைஞர் டி.கே.விஜயராகவலு, வி.பி.கே.காயா ரோகணம், எஸ்.ஆர். ஆறுமுகம், நாகை கணேசன், பாவா நவநீதகிருஷ்ணன், நாத்திகன் நாகூர் ஆர்.சின்ன தம்பி, அவரது இணையர் ருக்மணியம்மாள், சோழங்க நல்லூர் அந்தோணிசாமி என்று எண்ணற்ற வீரர்கள் பாடுபட்ட தியாகம் செய்த பகுதி நாகைப் பகுதி.

இந்த நாகையில் குலக்கல்வி திட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இங்கிருந்துதான் குலக்கல்வி திட்ட ஒழிப்பு பிரச்சாரப் படை புறப்பட்டது.

மறைந்த வி.எஸ்.டி.அழகப்பன் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்த போது, அவரது மகன் நெப்போலியனின் கைப் பிடித்து என்னிடம் ஒப் படைத்தார். இயக்கத்திற்கு தமக்குப் பிறகு இவர் பயன் படுவார், பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

அதனை உறுதி செய்து கொள்வதற்காகவே இங்கு நான் வந்திருக்கிறேன்.

கொள்கை இருப்பிடம் என்றால்...

சில வீடுகளில் தான் மட்டும் கொள்கைவாதிகளாக இருப்பார்கள்; அவர் மறைந்ததற்கு பிறகு நெற்றியில் 1 ரூபாய் நாணயத்தை வைத்து விடுவார்கள், திருநீறு பூசி விடுவார்கள், நாமமும் போட்டு விடுவார்கள். சங்கு ஊதுவார்கள். ஆனால் நமது வி.எஸ்.டி. அவர்கள் குடும்பம் கொள்கை குடும்பம் - அவர் ஏற்று கொண்ட கொள்கை தொடர்கிறது.

அதற்காக இயக்கம் இந்த குடும்பத்தாருக்கு தலை தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

மற்றவர்கள் தம்முடைய சொத்துக்களுக்காக உயில் எழுதி வைப்பார்கள். கழகக் கொள்கைகளை ஏற்று கொண்டவர்களோ தம் மறைவிற்குப் பிறகு தனது உடலுக்கு எந்தவித மதச் சடங்குகளும் நடைபெற்று விடக்கூடாது என்று உறுதி செய்யும் வண்ணம் உயில் எழுதி வைப்பார்கள். சிலர் தம் உடலை மருத்துவ மனைக்குக் கொடையாக வழங்குவதற்கு உயில் எழுதி வைத்துச் செல்வார்கள்.

வாழ்நாள் முழுவதும் கொள்கைக்காக வாழ்ந்தவர், கொள்கைக்காரராகவே மறைய வேண்டும் என்பதிலே உறுதியாக இருப்பவர்கள் கருஞ்சட்டைத் தோழர்கள்.

இந்த இயக்கம் கொள்கைகளை மட்டும் சொல்லிக் கொடுக்கவில்லை. தனி ஒழுக்கத்தையும், பொது ஒழுக்கத்தையும் சொல்லிக் கொடுக்கும் இயக்கம். கொள்கையும் - ஒழுக்கமும்

பெற்றோர்கள் கூட சொல்லுவார்கள் - எங்கள் பிள்ளைகள் தி.க.வில் இருக்க வேண்டும். அவர்கள் கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள் ஆயிற்றே என்று சொன்னால், பரவாயில்லை. அங்கு சென்றால் ஒழுக்கத்தோடு இருப்பார்கள் என்று சொல்லக் கூடிய இயக்கம் இது.

120 கோடி பேர் உள்ள இந்தியாவில் 1 சதவிகித பேர் தான் இராணுவத்தில் இருக்கிறார்கள். அதைப் போல இந்தச் சமுதாயத்தைப் பாதுகாப்பது திராவிடர் கழகமே!

நாகைப் பகுதியயை மறுபடியும் கழகக் கோட்டை யாக்க வேண்டும். மறைந்த வி.எஸ்.டி.அழகப்பன் அவர்களுக்குச் செய்யக்கூடிய காட்டக்கூடிய மரி யாதை என்பது அது தான்.

அழகப்பனாரின் இரு ஆசைகள்

வி.எஸ்.டி. அவர்களின் இரு விருப்பம். ஒன்று அவரது மகன் நெப்போலியன் தமக்குப் பிறகு இந்த இயக்கத்தில் இருந்து கொள்கைகளோடு பணியாற்ற வேண்டும். இரண்டாவது நாகை கோட்டை வாசல் பெரியார் சிலைக்கு அருகில் பெரியார் படிப்பகம் அமைக்க வேண்டும் என்பதாகும். அதற்காக ரூ.50 ஆயிரம், தம் சொந்த பொறுப்பில் அளித்துள்ளார்.

அவரின் பெயரும் இடம் பெறும் வண்ணம் விரைவில் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன். அவர் இருந்தால் எப்படி இந்தக் குடும்பம் கழக குடும்பமாக இருக்குமோ அது தொடர வேண்டும் என்று கூறினார்.