Search This Blog

17.7.13

கடவுளைக் காப்பாற்றிட மனிதர்கள் செய்யும் தந்திரங்கள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்துக்களின் புனித கோயில் பகுதிகளில் கடும் வெள்ளம் ஆயிரம் ஆயிரம் கரங்களால் பக்தர் களை வாரி அணைத்து வாய்க்குள் போட்டுக் கொண்டதற்கு அறிவியல் ரீதியாகப் பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. இயற்கை வளங்களை வீழ்த் தியதால் ஏற்பட்ட விபரீதம் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலி கொண்டு விட்டது என்று கடிந்து கொண்டார்கள்.

இனிமேலாவது ஒழுங் காக நடந்து கொள்ளுங்கள் என்று இயற்கை எச்சரித்துள் ளது என்றெல்லாம் கூறிய துண்டு. இதில் ஒரு சிக்கல் ஆன்மீகவாதிகளுக்கு சக்தியுள்ள கடவுள்களைத் தேடிச் சென்ற பக்தர்கள் பரிதாபகரமான முறையில் மாண்டு மடிந்து விட்டனரே - மக்கள் மத்தியில் கடவுள் பக்தியின் கதி என்னாவது என்ற கவலை பக்தி வியா பாரிகளுக்கு.
இது முதலில்லா வியா பாரம் ஆயிற்றே! கடவுள்மீது மக்கள் நம்பிக்கை இழந்தால் இவர்களின் கதி என்னாவது என்ற கவலை பாடாய்ப்படுத்தி யது. இந்த நிலையில் புதுப் புதுக் கதைகளை அவிழ்த் துக் கொட்ட ஆரம்பித்து விட் டனர்.

 உத்தரகாண்ட் மாநிலம், அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ளது தாரி தேவி கோயில் - பத்ரிநாத் போகும் வழியில் அமைந்துள்ள தாரி கிராமத்திலிருந்து தொங்கு பாலம் வழியே இந்தக் கோயிலுக்குச் செல்லலாம் - இது ஒரு திறந்த வெளி கோயில்.

சிறீமத் தேவி பாகவ தத்தில் கூறப்பட்டுள்ள 108 சக்தி கோயில்களில் இதுவும் ஒன்றாம். இந்தக் காளியின் முகம் நேரத்துக்கு நேரம் மாறும் என்று ஒரு கதை.

ஒரு முறை ஆற்று வெள் ளம் தாரி தேவியை அடித் துக் கொண்டு போனது. ஒரு பாறையில் சிக்கி நின்றுவிட் டது. அப்பொழுது பெண்ணின் அழு குரல் கேட்டதாம். மக்கள் ஓடிப் போய்ப் பார்த் தனராம். அப்பொழுது வானத் திலிருந்து ஒரு அசரீரி கூறியதாம். தாரி தேவியைப் பழைய இடத்தில் மீண்டும் நிறுவுங்கள் என்றதாம் அந்தக் குரல். இதையடுத்து மக்கள் உடனே அதனைச் செய்தனராம்.

பசியாத வரம் தாரேன் தாயே! பழைய சோறு இருந்தால் கொஞ்சம் போடு!  என்றானாம் ஒரு பரதேசி. அப்படி ஒரு வரம்தரும் சக்தியிருந்தால் அவன் ஏன் பழைய சோறு கேட்டுப் பிச்சை எடுக்க வேண்டும்? என்று யாரும் கேட்பதில்லை. தாரிதேவியின் கதையும் அப்படித்தான் இருக்கிறது.

காளிக்குக் களேபரமான சக்தியிருந்தால் அதனை வெள்ளம் அடித்து கொண்டு போக முடியுமா என்று எந்தப் பக்தனும் சிந்திக்க வில்லையே!

மேலும் ஒரு கதையை அவிழ்த்து விட்டுள்ளனர். காளி கோயிலை அப்புறப் படுத்தி விட்டு அப்பகுதியில் அணை ஒன்றைக் கட்ட முயற்சிக்கப்பட்டதாம். காளி யின் இரு பகுதி உருவங் களுக்கிடையேயான தூரத்தை அதிகப்படுத்திய தாலும், தாரியிலிருந்து, காளிமத்தை நோக்கி காளி கால் நீட்டிப் படுத்திருப்ப தாலும், அதன் தலைப் பகுதி கோணத்தை மாற்றியதாலும் காளியின் கோபம் அதிகமாக இந்த வெள்ளம் ஏற்பட்டதாம்.
எப்படி? காளிக்குக் கோபம் வந்தால், அதனை அப்புறப்படுத்திய போதே தடுத்திருக்கலாமே - அவர்களின் கைகளை விளங்காமல் செய்திருக்கலாமே.
யாரோ செய்த தவறுக்காக அப்பாவிப் பக்தர்களைப் பலி வாங்குவதுதான் கடவுள் செயலா?

பாவம்! கடவுளைக் காப்பாற்றிட இந்த மனிதர்கள் எவ்வளவுத் தந்திரங்களைத் தான் செய்ய வேண்டியுள்ளது! 

--------------------------- மயிலாடன் அவர்கள் 16-7-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

56 comments:

தமிழ் ஓவியா said...

டெசோ நிறைவேற்றிய தீர்மானங்கள்


இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் 13ஆவது திருத்தம் தேவை! டஇலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது!

தமிழக மீனவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு அவசியம்! டஇலங்கைத் தமிழர் பகுதியில் சிங்களவர் குடியேற்றம் கூடாது!

நான்கு பிரச்சினைகளையும் வலியுறுத்தி ஆகஸ்டு 8இல் மாவட்ட தலைநகரங்களில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

டெசோ நிறைவேற்றிய தீர்மானங்கள்

சென்னை, ஜூலை 16- நான்கு முக்கிய பிரச்சினைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்டு 8ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் டெசோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று டெசோ கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் இன்று (16-7-2013) காலை 10 மணியளவில் சென்னை - அண்ணா அறிவாலயத்தில் தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப் பின் (டெசோ) கூட்டம் நடை பெற் றது. கூட்டத்தில் டெசோ அமைப் பின் உறுப்பினர்களான தமிழர் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், பேராசிரியர் சுப. வீர பாண்டியன் மற்றும் சிறப்பு அழைப் பாளர்களாக கழகப் பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின், நாடாளு மன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி., கலி. பூங்குன்றன், ரவிக்குமார், வழக்கறி ஞர்கள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், அசன் முகமது ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விரிவான விவாதத் திற்குப் பிறகு பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன :-

தமிழ் ஓவியா said...

தீர்மானம் - 1

இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் 13ஆவது திருத்தம்

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இந்தியாவுக்கும் -இலங்கைக்கும் இடையே 1987ஆம் ஆண்டு ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே அவர்களும் கையெ ழுத்திட்ட அந்த உடன்பாட்டின்படி, மாகாண கவுன்சில்களுடன் அதிகாரப் பகிர்வு செய்து கொள்ள, வழி வகை செய்யும் வகையில் இலங்கை அரசி யல் அமைப்புச் சட்டத்தில் 13வது திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் இன்றைய இலங்கை அதிபர் ராஜபக்சே அரசு அதை முழுமையாக நடைமுறைப் படுத்தாமல், நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதில் தீவிரமாக இருக்கிறது. இந்தப் பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் அவர்கள், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தை உருக்குலைத் திட நடக்கும் முயற்சிகள் குறித்து அறிந்திருப்பதாகவும், இலங் கையில் தமிழ் மக்கள் மற்றும் இதர சமூகங்களைச் சேர்ந்த மக்கள் சமமாகவும் சுயமரியாதை யுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்ய முயற்சித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து, இந்தி யாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தமிழகச் சட்டப் பேரவை யிலேயே தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவே தற்போது அவற்றை யெல்லாம் மறந்து விட்டு, இலங்கை யிலே 13ஆவது திருத்தம் நீர்த்துப் போகா மல் பாதுகாக்கப்பட வேண்டு மென்று; இப்போது பிரதமருக்கு அவசரக் கடிதம் எழுதுகிறார் என் றால், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை எந்த அளவிற்கு முக்கியத் துவம் பெற்றுள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளலாம். இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சில நாட்களுக்கு முன் இலங்கைக்குச் சென்று, இலங்கை அதிபர் ராஜபக்சே அவர்களைச் சந்தித்ததின் தொடர்ச் சியாக இலங்கையிலே உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துக் குடிமக்களும் சமத்துவம், சமநீதி, சுயமரியாதை யுடன் வாழ வேண்டும்; இதை இந்தியா உறுதி செய்ய விரும்புகிறது. அந்த வகையில் இலங்கையில் (இனப் பிரச்சினையில்) விரைவான அரசியல் தீர்வு காண் பதற்கு, 13வது அரசியல் சட்டத் திருத்தத்துக்கும் கூடுதலாக, இந்திய அரசுக்கும், சர்வ தேச சமுதாயத் துக்கும் அளித்த வாக்குறுதியினை இலங்கை பின்பற்றி அதிகாரப் பகிர்வு வழங்குவது அவசியம்; இதை இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் சிவசங்கர் மேனன் இந்தியாவின் சார்பில் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நம்பத் தகுந்த விதத்திலும் நடத் தப்படும் என நம்புகிறோம். இந்திய மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்தும் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் பேசப்பட்டுள்ளது. எந்த நிலையி லும் வன்முறையில் இறங்காமல் மனித நேய அடிப் படையில் செயல்பட வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த ஒப்பந்தத்தையும் உறுதி மொழியையும் காப்பாற்றாத இலங்கை அரசு, தற்போது சிவசங்கர மேனன் அவர்களிடம் இலங்கை அதிபர் தெரிவித்த உறுதி மொழியை எந்த அளவிற்குக் காப்பாற்றப் போகிறது என்பது தான் கேள்விக் குறியாகும். 1987ஆம் ஆண்டில் கையொப்ப மிடப்பட்ட ஒப்பந்தத்தில், தற்போ தைய இலங்கை அரசு இந்தியாவின் அனுமதியின்றித் தன்னிச்சையாகத் திருத்தங்கள் மேற்கொள்ளவிருப்ப தாக, இலங்கை அதிபர் இராஜபக் சேயின் சகோதரரும், இலங்கை அமைச்சருமான பசில் இராஜபக்சே தெரிவித்திருக்கிறார். மேலும், 13ஆவது சட்டத் திருத்தத்தை ஏற்றுக் கொள்வதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற கருத்தினை இலங்கை அதிபர் ராஜபக்சேவும், அவரது சகோ தரரும் - இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சருமான கோத்தபய ராஜபக்சேவும் வெளிப்படையாக தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவரும் தமிழர்கள், இலங்கை யின் பூர்வக் குடிமக்களாக விளங்கிய போதும், அவர்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு இரண் டாந்தரக் குடிமக்களாகக் கருதப் படுகிற இன்றைய நிலைக்கு எதிராக நடத்திய பல்வகை தொடர் போராட் டங்கள் பயன்தராத நிலையிலும், இலங்கை அரசின் அடக்குமுறை காரணமாகவும், இலட்சக்கணக்கா னோர் சொந்த நாட்டிலேயே அடிமை களாக வாழவும், மேலும் பல இலட் சக்கணக்கானோர் இந்தியா உள் ளிட்ட பல்வேறு நாடுகளில் அகதி களாகத் தஞ்சம் புகுந்து வாழவும் வேண்டியிருக்கிறது.
இந்தச் சூழலில் அகதிகளாக ஏறத் தாழ மூன்று இலட்சம் ஈழத் தமிழர்கள் இந்தியாவில் குடியேறிய தால், அவர்களைப் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பு இந்திய அரசுக்கு ஏற்பட்டது.

தமிழ் ஓவியா said...


இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் வாழும் தமிழர்கள் உரிமை களோடும் பாதுகாப்போடும் வாழும் நிலை ஏற்பட்டால்தான் இந்திய அரசுக்கு ஏற்படும் கூடுதல் பொறுப் பிலிருந்து இந்தியா விடுபட இயலும் என்ற நிலையில் இரு நாடுகளின் நன்மையைக் கருதி ராஜீவ் - ஜெய வர்த்தனே ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டது.
ஒப்பந்தத்தில், பிரிவு 2.14ன்படி கூந ழுடிஎநசஅநவே டிக ஐனேயை றடைட ரனேநசறசவைந யனே பரயசயவேநந வாந சநளடிடரவடிளே யனே உடி-டியீநசயவந வாந அயீடநஅநவேயவடி டிக வாநளந யீசடியீடிளயடள அதாவது, இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதற்குப் பொறுப்பேற் கவும், உறுதியளிக்கவும், ஒத்துழைக்க வும் இந்திய அரசு ஒப்புக்கொள் கிறது என்று இலங்கையோடு செய்து கொண்ட ஒப்பந்தத்திலேயே இந்திய அரசு கையொப்பமிட்டுள்ளது.

இரண்டு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக மீறுவதற்கோ திருத்தம் செய்வதற்கோ எந்த ஒரு நாட்டுக்கும் அதிகாரம் கிடையாது. காரணம், மேற்படி ஒப்பந்தத்தில் இந்திய நாட்டின் நலனும் அடங்கி யுள்ளது. இந்தச் சூழ்நிலையில், பசில் ராஜபக்சேயின் அறிவிப்பு உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு எதிராக அமைந் துள்ளது.

13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது என்பதும்; இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்களிடையே பொது வாக் கெடுப்பு நடத்தி, அவர்களுடைய கருத்தினைக் கேட்டுத் தீர்வு காண் பதுதான், ஈழத் தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும் என்பதும்தான், டெசோ அமைப் பின் நிலைப்பாடாகும். இருப்பினும் தற்காலிகத் தீர்வாகவாவது, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பயன்பட வேண்டும் என்று டெசோ அமைப்பு கருதுகிறது.

மேலும், இலங்கை அதிபர் மற்றும் அவருடைய அமைச்சரவை யில் உள்ளவர்கள் தெரிவித்து வரும் கருத்துக்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, இந்திய அரசு அந்த ஒப்பந்தத்தில் கண்டுள்ள வாறு, எந்தவித திருத்தங்களும் இல்லாமல் 1987 ஒப்பந்தம் நிறை வேற்றப்படுவதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று டெசோ அமைப் பின் இந்தக் கூட்டம் வலியுறுத்து கிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் - 2

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது!

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், டெசோ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தமிழகத் தலைவர்களும், பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் இன உணர் வாளர்களும் வலியுறுத்திய பிறகும்; டெசோ இயக்கத்தின் சார்பில் காமன்வெல்த் நாடுகளின் தூதுவர் களையெல்லாம் சந்தித்து, வேண்டு கோளையும் அதற்கான விளக்கத் தையும் அளித்த பிறகும்; கனடா நாட்டின் சார்பில் இலங்கை காமன்வெல்த் மாநாட் டினைப் புறக்கணிப்பது எனத் தெரிவிக்கப்பட்டு விட்ட பிறகும்; பல்வேறு மனித உரிமை அமைப் புகள் - குறிப்பாக காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு, ஆஸ்தி ரேலிய மனித உரிமை சட்ட மையம் போன்றவை இலங்கையில் இந்த மாநாட்டினை நடத்தக் கூடாதென எதிர்ப்பு தெரிவித்த பிறகும்;
காமன்வெல்த் மாநாட்டை இலங் கையில் நடத்தக் கூடாது என்பதற் காக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் பிரேசர் ஆதரவு தெரிவித்த பிறகும்; காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் ஒருமன தாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிறகும்;

இலங்கையிலே அந்த மாநாடு நடைபெறுவது உறுதியாகி விட்ட நிலையில் - காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால், அதன் காரணமாகவே அடுத்த இரண்டாண் டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் அவைத் தலைவராக ராஜபக்சே இருப்பாரென்றும்; அதனால் 54 நாடுகளைக் கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரை நீதி விசாரணைக்கு உட் படுத்துவது இக்கட்டாக ஆகி விடக் கூடுமென்றும்; வலிமையான கருத் துகள் முன் வைக்கப்பட்டு வருவதால், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா நட்பு நாடு என்று கூறிக் கொண்டு, அதிலே கலந்து கொள்ளுமேயானால், அங்கே நடைபெற்ற இனப்படு கொலைகளை இந்தியா ஏற்றுக் கொள்வது போலாகி விடும். அம் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது எனும் அழுத்தமான வேண்டுகோளை தொடர்ந்து நாம் டெசோ சார்பில் வலியுறுத்தி வருகிறோம். தமிழக மக்களும் மற்றும் உலகத் தமிழர்களும் ஒருமுகமாக முன் வைத்திடும் இந்த வேண்டுகோளை இந்தியா ஏற்று - இலங்கையில் நடை பெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்ற அறிவிப்பினை உடனடியாகச் செய்ய வேண்டுமென இக்கூட்டம் இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. தீர்மானம் - 3
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு!

இந்திய மத்திய அரசுக்கு தமிழகத் தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் எத்தனையோ வேண்டுகோள் விடுத்த பிறகும், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப் படுவதும், தாக்கப்படுவதும் நின்ற பாடில்லை. இத்தகைய கொடுமை யான நிகழ்வுகள் கடந்த பல ஆண்டு காலமாகவே தொடர் கதையாக நீடித்துக் கொண்டே வருகின்றன.

தமிழ் ஓவியா said...

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் 29-11-2011 முதல் இலங்கை நீதி மன்றக் காவலிலே கைதிகளாக இருந்து வருகிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டுமென்று வைக்கப் பட்ட கோரிக்கைகள் நிறைவேற வில்லை. கடந்த 5-6-2013 அன்று கைது செய்யப்பட்ட 49 மீனவர்கள், ஒரு மாதம் இலங்கையிலே சிறை யிலே வைக்கப்பட்ட பிறகு 2-7-2013 அன்று 24 மீனவர்களும், 3-7-2013 அன்று 25 மீனவர்களும் விடுவிக்கப் பட்டுள்ளனர். 15-6-2013 அன்று கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் இலங் கைச் சிறையிலே இன்னமும் இருந்து வருகிறார்கள். ராமேஸ்வரம், மண் டபத்தைச் சேர்ந்த 29 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் இலங் கைச் சிறையில் வாடுவதாகவும், இலங்கை கடற்படையினர் இது வரை இந்த ஆண்டில் மட்டும் 11 முறை பெரிய அளவில் தாக்குதல் நடத்தியதன் காரணமாக தமிழக மீனவர்கள் பலர் கடும் காயமடைந் துள்ளார்கள் என்றும், இலங்கை அரசால் பொய் வழக்குகள் புனையப் பட்டு தங்கச்சிமடம் மீனவர்கள் 7 பேரும், நாகை மீனவர்கள் 3 பேரும் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக இலங்கைச் சிறையிலே வைக்கப்பட்டுள்ளனர் என்றும் செய் திகள் வந்துள்ளன. ராமேஸ்வரத்திலி ருந்து 13-7-2013 அன்று 600க்கு மேற் பட்ட விசைப்படகுகளில் சென்ற தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண் டிருந்த போது திடீரென்று அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் மீன் பிடிப்பு படகுகளைச் சுற்றி வளைத்து அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையெல்லாம் கொள் ளையடித்ததோடு வலைகளை அறுத்து கடலில் வீசி எறிந்திருக்கிறார்கள். மேலும் படகுகளில் இருந்த மீனவர் களை இரும்புக் கம்பிகளால் தாக்கி படுகாயப்படுத்தி விட்டு சென்றிருக் கிறார்கள். இந்த ஆண்டு மட்டும் ஜனவரி முதல் ஜுலை மாதம் வரை ஏழு மாதங்களில் நாகை, காரைக்கால், மண்டபம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீன வர்கள் 169 பேர் இலங்கைக் கடற் படையினரால் சிறை பிடிக்கப் பட்டுள்ளனர். ஒவ்வொரு முறை மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்படும் போதெல்லாம், தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் அறிக்கைகளை வெளியிடுவதும், டெசோ அமைப் பின் சார்பில் கண்டனத் தீர்மானங் கள் நிறைவேற்றி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும், தமிழக அரசின் சார்பில் பிரதமருக்கு கடிதம் எழுது வதும் எந்த விளைவையும் இலங்கை அரசிடம் ஏற்படுத்துவதாகத் தெரிய வில்லை. மீனவர்கள் சங்கங்களின் சார்பில் டெல்லி சென்று கடந்த வாரம் ராஜபக்சேயின் சகோதரர் பசில் ராஜபக்சே அவர்களையும், திருமதி சோனியா காந்தி அவர்களையும் நேரில் சந்தித்து இலங்கை கடற் படையினர் நடத்தி வரும் அத்து மீறல்களை யெல்லாம் முறையிட்ட தற்கு பிறகும் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் சிறிதும் குறைய வில்லை.

தமிழ் ஓவியா said...


எனவே மத்திய அரசு இனி யாவது உறுதியானதொரு நடவடிக் கையை, தமிழகத்தின் மீனவர்கள் பிரச்சினை ஒட்டுமொத்தமாக தீரு கின்ற வகையில் உடனடியாக எடுக்க வேண்டுமென்று இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 4
தமிழர் பகுதிகளில் சிங்களவர்களுக்கான புது மாவட்டமா?

இலங்கையில் பன்னெடுங்கால மாகத் தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் சிங்களவர்களைக் குடியேற் றும் கொடுமை தொடர்வதைப் பற்றியும், தமிழர் பகுதிகளில் உள்ள ஊர்ப் பெயர்களை தமிழிலிருந்து சிங்களத்திற்கு மாற்றுவதைப் பற்றியும், தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து எழுதிவருவதை நிரூபித் திடும் வண்ணம், வடக்கு மாகாணத் தில் உள்ள வவுனியா மாவட்டத் திற்கும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டத்திற்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த இணைப்பைத் துண்டித்திடும் வகை யிலும், சிங்களப் பகுதியான அனுராத புரா மாவட்டத்தோடு இணைந்தி ருக்கும் வகையிலும், வெளிஓயா என்ற சிங்களப் பெயரிலேயே ஒரு புதிய மாவட்டத்தை சிங்கள அரசு உருவாக்கி, அங்கே சிங்களவர்களை மட்டுமே குடியேற்றி வருகின்ற நிகழ்வு களும் தற்போது நடைபெறுவதை, டெசோ இயக்கம் சுட்டிக்காட்டி, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத் தின்படி, பொதுத் தேர்தல்கள் நடைபெறும் காலத்தில் இதுபோன்ற மாவட்டங்களை உருவாக்குவதோ, எல்லைகளை மாற்றுவதோ, புதிய குடியேற்றத்தை ஊக்குவிப்பதோ கூடாது என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டிருந்த போதிலும், அதை மீறுகின்ற வகையில் சிங்கள அரசு செயல்படுவதையும் இந்திய அரசு கவனத்தில் கொண்டு, இதனை உலக நாடுகள், மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, உடன டியாகத் தடுத்து நிறுத்திட ஆவன செய்திட வேண்டுமென்று, இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 5

ஆகஸ்டு 8இல் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசமைப்புச் சட்டத் தின் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும்,

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வற்புறுத்தியும்,
தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டி யும்,

இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியும்,

நிறைவேற்றப்பட்டுள்ள நான்கு தீர்மானங்களையும், தமிழக மக் களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும்,

இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும்,

சிங்கள ஆதிக்க வெறிக்கு எதிராக தமிழர் எழுச்சியை ஒன்று திரட்டவும்,

டெசோ இயக்கத்தின் சார்பில் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வியாழக் கிழமை காலை 10 மணியளவில்,

தமிழகம் முழுதும் உள்ள மாவட் டத் தலைநகரங்களில், தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத் துவதென டெசோவின் இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது.

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினரும், அர்ச்சகராக நியமிக்கப்படவேண்டும்!


திராவிடர் கழகம் நடத்தும் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்!

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, ஜூலை 16- அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமை கோரும் திராவிடர் கழ கம் நடத்தும் ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட் டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை விடுத்துள் ளார். அறிக்கை வருமாறு:

தீண்டாமை என்பது சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்டு விட் டாலும் ஆலயங்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதி யினர் மட்டுமே அர்ச்ச கராக இருக்க முடியும் எனச் சொல்லி தொடர்ந்து தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு கடைபிடிக்கப்பட்டுவரும் தீண்டாமையை ஒழித்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு வழி செய்து கடந்த தி.மு.க ஆட்சியின் போது சட் டம் இயற்றப்பட்டது. அனைத்துச் ஜாதிகளைச் சேர்ந்த இளைஞர் களுக்கு அர்ச்சகருக் கான பயிற்சியும் அர சாங்கத்தால் வழங்கப் பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் சென்று சிலர் தடை ஆணை பெற்ற தால், முறையான அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 பேர் இப்போது வேலையின்றித் தவிக் கின்றனர். தமிழக அர சின் சட்டத்தின் மீதான தடை ஆணையை ரத்து செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அவர் களுக்காக பிரபல வழக்கறிஞர்கள் அந்தி அர்ஜுனாவும், காலின் கான்ஸலஸும் வாதாடி வருகின்றனர். ஆனால் தேதி குறிப்பிடப்படா மல் ஒத்திவைக்கப்பட்ட அந்த வழக்கு கடந்த அய்ந்து ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட் டுள்ளது. இதை அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக உச்சநீதிமன் றம் கருதாதது வேதனை அளிக்கிறது. அந்த வழக்கை விரைந்து முடித்து சமூக நீதியை நிலைநாட்டிட தமிழக அரசும் முனைப்புக் காட்டவில்லை. முன் னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு அவர்கள் பெண்களும் அர்ச்சகராக இருக்கலா மென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக் கிறார். அந்தத் தீர்ப்பு இப் போதும் நடை முறையில்தான் இருக் கிறது. எனவே, அனைத் துச் ஜாதியினர் மட்டு மின்றி பெண்களும் அர்ச்சக ராகலாம் என்ற கோரிக்கையையும் விடு தலைச் சிறுத்தைகள் கட்சி சேர்த்து முன் மொழிகிறது.

திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போர்

அரசியல் கட்சிகள் ஜாதியின் பெயரால் பேரணி நடத்தக்கூடாது என முற்போக்காக தீர்ப்பு வழங்கும் உச்சநீதி மன்றம் இன்னும் ஆல யங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படு வதை எவ்வாறு அனு மதிக்கிறது என்பது புரியவில்லை. இது வேலை வாய்ப்பு தொடர் பான பிரச்சினை அல்ல. சமத்துவம், சமூக நீதி குறித்த பிரச்சினையா கும். இதற்காக திராவி டர் கழகம் அறிவித் துள்ள போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. தமிழக மெங்கும் ஆகஸ்டு மாதம் 1 ஆம் தேதி நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் விடு தலைச் சிறுத்தைகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு போராட் டத்தை வெற்றிபெறச் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார் தொல். திருமாவளவன்

தமிழ் ஓவியா said...


தொண்டுசுக போகத்தினால் இன்பம் காணுவதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காணுவதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்காகவும், தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்கவேண்டும் என்று கருதவேண்டும்.
(விடுதலை, 2.7.1962)

தமிழ் ஓவியா said...


திருத்தப்படவே முடியாத மதவெறியர் மோடி!

நீ இந்து என்றால் எனக்கு வாக்களிக்கவும் என்பதுதான் நரேந்திரமோடியின் பிரச்சாரமாக இருந்தது. இந்துத்துவாவை குஜராத்தின் பெருமை என்று குஜராத்திகளிடம் மோடி விற்பனை செய்தார். குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதிதான் இந்தியா என்று குஜராத்திகளை மோடி நம்ப வைத்து விட்டார். குஜராத்துதான் இந்தியா என்ற கோஷத்தை நானும் எனது செவிகளால் கேட்டேன்.

- பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார்

குலதீப் நய்யார் போன்றவர்களுக்கு அரசியல் முத்திரையை யாரும் குத்தி விட முடியாது. மோடியின் முகத்தை மிகச் சரியான வகையில் தானாகவே சாட்சியாகவே இருந்து, படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

இப்படி எதற்கெடுத்தாலும் இந்து என்று கூறி, ஒரு வெறியைக் கிளப்பி அரசியல் நடத்தக் கூடியவர் இந்தியாவின் பிரதமருக்கான வேட்பாளர் என்று முன்னிறுத்தப்படும் அறிமுக நிலையிலேயே அது தள்ளுபடி செய்யப்பட வேண்டாமா?

நாம் ஒரு காரை ஓட்டிச் சென்றால் அல்லது வேறு ஒருவர் ஓட்ட நாம் பின்னால் அமர்ந்து செல்லும்போது எதிர்பாரா விதமாக காரின் சக்கரத்தில் ஒரு நாய்க்குட்டி (Puppy) சிக்கிக் கொண்டால்கூட மனதுக்கு கஷ்டமாக இருக்குமா? இருக்காதா? நிச்சயம் அது வேதனை அளிப்பதாகத் தானிருக்கும். நான் முதல் அமைச்சராக இருக்கிறேனோ இல்லையோ, நான் ஒரு மனிதன். எங்கு எந்த கெட்ட விஷயம் நடந்தாலும் மனதுக்கு வேதனை யாகத் தானிருக்கும் என்றும் தன் பேட்டியிலே குறிப்பிட்டுள்ள நரேந்திரமோடி.

குஜராத்தில் முசுலிம்கள் கொல்லப்பட்டது - விபத்தில் நாய்க் குட்டி சிக்கியதற்குச் சமமாக மோடி விளக்கம் அளித்தது மூலம் அவர் எவ்வளவுப் பெரிய மனநோயாளி என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

இதுபற்றிக் கடுமையான வகையில் எதிர்ப்புப் புயல் வெடித்து எழுந்த நிலையில், அதற்குச் சமாதானம் கூறுவதாக நினைத்துக் கொண்டு வெளியிட்ட வார்த்தைகள் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போலிருக்கிறது.

நமது கலாச்சாரத்தில் அனைத்துவிதமான உயிர்களும் மதிக்கப்படுகின்றன என்று குறிப்பிட் டுள்ளார்.

அதாவது நாய் என்றால் அற்பமாக நினைத்து விடாதீர்கள்! நாயும் ஓர் உயிர்தானே என்று முஸ்லிம்களின் உயிரோடு நாயின் உயிரை ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் குஜராத்தில் ஒரே ஒரு முசுலிமுக்குக்கூட பிஜேபி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லையே! மோடி மனப் பான்மைக்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

இந்த மனிதனை எதைக் கொண்டும் திருத்த முடியாது - திருத்தவே முடியாது என்பது மிக மிக வெளிப்படை! இந்துக்கள் அல்லாத பிற மதத்தவர் மதம் அற்றவர்கள் மோடியை நிராகரிக்க வேண்டும் என்பதை விட உண்மையிலேயே இந்துக்கள் என்பவர்கள்தான் மோடியை ஒதுக்க வேண்டும்.

அவர் கூறும் இந்துத்துவாவாதத்தில் மக்களிடையே கடும் பிளவுகளை ஏற்படுத்திப் பெரும் மோதலை ஏற்படுத்தக் கூடிய அபாயம் இருக்கிறது; அமைதியான இந்தியா வேண்டுமா? அமளியான இந்தியா வேண்டுமா என்ற முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு இந்திய மக்களுக்கு இருக்கிறது.

இந்தியா - குஜராத்தாக மாற வேண்டும் என்று கூறுவது எந்தப் பொருளில் என்பது புரியாத புதிராக இருக்கிறது; கோத்ராவைத் தொடர்ந்து அரச பயங்கரவாதமாக சிறுபான்மை மக்கள் நர வேட்டை ஆடப் பட்டார்களே - அந்த குஜராத்தாக இந்தியா மாற வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லுகிறார்களா என்று தெரியவில்லை.

ஒருக்கால் குஜராத் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முண்டியடித்துக் கொண்டு முதல் வரிசையில் தலையைத் தூக்கி நிற்கிறது என்று ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே அந்த எண்ணத்தில் சொல்கிறார்களா?

அதுவும்கூட அவர்களுக்கே உரித்தான கோய பெல்சுப் பிரச்சாரம்தான்! இந்தியாவின் சோமாலியா குஜராத் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அந்த அளவுக்கு ஊட்டச் சத்துக் குறைவால் குழந்தைகள் 44.6 சதவீதத்தினர் குஜராத் மாநிலத்தில் அவதிப்படு கின்றனர்.

பிஜேபிக்குப் பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திர மோடிதான் கிடைத்திருக்கிறார் என்பது அக்கட்சியின் பரிதாப நிலையையும், பலகீனத்தையும் தான் வெளிப்படுத்தும்.

பிரதமருக்கான வேட்பாளர் என்று விளம்பரப் படுத்தப்பட்டுள்ள இந்தக் கால கட்டத்தில், மோடியின் பேச்சு எப்படி இருக்கிறது தெரியுமா? எனக்குப் பைத்தியம் தெளிந்து விட்டது. உலக்கையைக் கொண்டு வா! கோவணம் கட்டிக் கொள்கிறேன்! என்ற ரீதியில் தான் இருக்கிறது. மோடி அப்படித்தான் - அவர் திருந்தப் போவதில்லை. பொது மக்கள்தான் தங்கள் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்ளாமல் விழிப்பாக இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


இஸ்லாமியர்களை நாய்கள் என இழிவுபடுத்திய நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்!


தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 16- இஸ்லாமியர்களை நாய்க்கு ஒப் பிட்டுக் கூறிய நரேந்திரமோடி மன்னிப்புக் கோர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தை கட்சி யின் தலைவர் தொல்.திருமா வளவன் அறிக்கை விடுத் துள்ளார். அறிக்கை வருமாறு:

சிலநாட்களுக்கு முன் ராய்ட் டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த நரேந்திர மோடி இஸ்லா மியர்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். 2002ஆம் ஆண்டு மோடி முதல் வராக இருந்தபோது குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரம் குறித்து பேட்டியில் கேள்வி எழுப்பியுள் ளனர். அந்தக் கலவரத்துக்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? என அந்த நிருபர் கேட்டபோது யா ராவது காரை ஓட்டிக்கொண்டு போகிறார்கள். நாம் பின் இருக் கையில் அமர்ந்திருக்கிறோம். அப் போதுகூட கார் சக்கரத்தின் கீழே நாய்க்குட்டி ஒன்று ஓடிவந்து அடிபட்டு செத்துப் போனால் அது வருத்தம் அளிக்குமா இல் லையா? வருத்தம் தரும். என்று அவர் பதில் அளித்திருக்கிறார். குஜ ராத்தில் நடத்தப்பட்டது இஸ் லாமியர்களுக்கு எதிரான திட்ட மிட்ட இனப்படுகொலை என்ப தைப் பல் வேறு மனித உரிமை அமைப்புகளும் தெளிவுபடுத்தி யுள்ளன. அதற்குக் காரணமான வர் அன்றைக்கு அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிதான் என்பதை உலகம் அறியும். அங்கு நடத்தப்பட்ட போலி என்கவுண்ட் டரில் இஷ்ரத் ஜஹான் என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இப் போது தான் சி.பி.அய் குற்றப்பத் திரிகை தாக்கல் செய்திருக்கிறது. அந்த வழக்கில் மோடியும் குற்றவாளியாக சேர்க்கப் படலாம் என சொல்லப் படுகிறது. அவரது கரத்தில் ரத்தக் கறை படிந்திருப் பதால்தான் அமெரிக்கா அவரைத் தனது நாட்டுக்குள் அனு மதிக்க வில்லை. தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் தலையீட்டால் பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாள ராக மோடி முன் நிறுத்தப் படுகிறார். வளர்ச்சி, முன்னேற்றம் என மாய்மாலம் பேசி வந்த மோடி இப்போது வெளிப் படையாகத் தனது இந்துத்துவா முகத்தைக் காட்ட ஆரம்பித் திருக்கிறார். அதன் ஒரு அங்கம் தான் இஸ்லா மியர்களை இழிவு படுத்தும் இந்த நேர்காணல். இத்தகையவர் பிரதமராக வந்தால் இந்த நாட்டில் மதக் கலவரங் கள்தான் நடக்கும். குஜராத் மாடலை இந்தியா முழு மைக்கும் பரிசோதித்துப் பார்க்க சங்கப் பரிவாரங்கள் தயாராகி விட்டன என்பதைத்தான் மோடியின் நேர் காணல் காட்டுகிறது. இதை ஜனநாயக சக்திகள் அனுமதிக்கக் கூடாது. இஸ்லாமியர்களை இனப் படுகொலை செய்ததோடல்லா மல் அவர்களை நாயுடன் ஒப் பிட்டுப் பேசி இழிவுபடுத்தியிருக் கும் நரேந்திர மோடி தனது பேச்சுக்குப் பகிரங்கமாக மன் னிப்புக் கோரவேண்டும். அல்லது அவர் மீது மத்திய அரசு சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண் டும் என விடுதலைச் சிறுத்தை கள் கட்சி சார்பில் வலியுறுத்து கிறேன் என்று குறிப்பிட்ட எழுச்சித் தமிழர் திருமாவளவன் அறிக் கையில் கூறினார்.

தமிழ் ஓவியா said...


கலைஞர் தொலைக்காட்சியிலே ஒரு விவாதம்...


கலைஞர் தொலைக்காட்சியில் நேற்றிரவு (15.7.2013) ஒரு விவாதம். திரு. தம்பிராஜா அவர்கள் ஒருங் கிணைத்தார்.

1. குஜராத் முதலமைச்சர் நரேந்திர தாஸ் தாமோ தரபாய் மோடி அண்மைக்காலமாகப் பேசிவரும் பேச்சினை மய்யப்படுத்தியே பெரும்பாலும் விவாதம் நடைபெற்றது.

2. உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி ஆர்.எஸ்.எஸ். - சங் பரிவார் அமைப்புகளைத் தடை செய்யவேண்டும் என்று கூறியது குறித்தும் சுழன்றது விவாதம்.

காங்கிரஸ், பி.ஜே.பி., பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விவாதத்தில் குதித்தனர்.

பி.ஜே.பி.யைப் பொறுத்தவரையில் வழக்கமான பாணியில் பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி யது.

மோடியைப் பிரதமராக நாங்கள் அறிவிக்க வில்லையே என்று ஒரு போடு போட்டார் பி.ஜே.பி.,காரர்.


தமிழ் ஓவியா said...

அப்படியா? அத்வானியா? மோடியா? என்ற சண்டை எந்த மய்யப் புள்ளியை வைத்து? பிரச்சாரக் குழுத் தலைவராக மோடி அறிவிக்கப்பட்டுள்ளாரே - அதற்காகவா சண்டை?

ஆம் எனில் பிரச்சாரப் பணிக்காக ஒருவரை நியமித்ததற்காக இப்படி உக்கிரமாக சண்டை போடும் கட்சியா பி.ஜே.பி. என்ற கேள்விக்கு விடை கூறியாக வேண்டும்.

அல்லது பிரதமருக்கான வேட்பாளராக மோடியை அறிவிக்கவுள்ளோம் - அதற்கு முதல்படிதான் பிரச் சாரக் குழுவிற்கு அவரைத் தலைவராக நியமித்துள் ளோம் என்று அறிவு நாணயமாக ஒப்புக்கொள்ள வேண்டும்.

மோடியை, வரக்கூடாது, வரக்கூடாது என்று சொல்லச் சொல்ல அவர்தான் வருவார் என்று கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்தார் பி.ஜே.பி.,காரர்.

இதற்குமுன் தேர்தலில் யார் எல்லாம் வரவேண்டும் என்பதே முக்கியமானதாக இருக்கும். நடக்கவிருக்கும் தேர்தலிலோ யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியமானதாக ஆகி இருக்கிறது என்றால், இது எப்படி பி.ஜே.பி,க்கோ, மோடிக்கோ பெருமை சேர்ப்பதாக இருக்க முடியும்?

வெட்கக்கேட்டுக்கு, வெற்றி மாலை சூட்டத் துடிக்கும் அற்பத்தை என்ன சொல்ல!

ஜாதி மதம் பார்க்காமல் உறுப்பினர்களைச் சேர்க்கும் ஒரே கட்சி - ஆர்.எஸ்.எஸ்.தான் என்று போட்டாரே ஒரு போடு!

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் முதலில் அவர்களின் குருநாதரான கோல்வால்கர் எழுதிய வேத நூலான Bunch of Thoughts என்பதை முதலில் படிக்கட்டும்! வர்ணாசிரமத்துக்கும், ஜாதிக்கும் விழுந்து விழுந்து தண்டம் போட்டு எழுதி இருப்பதைக் காணலாம்.

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸை உண்டாக்கிய அய்ந்து பேரும் சித்பவன் பார்ப்பனர்களே!

ஆர்.எஸ்.எஸின் தலைவர்களாக வரக்கூடியவர்கள் ஒன்றிரண்டு விதி விலக்கைத் தவிர, அத்தனைப் பேரும் பார்ப்பனர்கள்தானே - அதிலும் குறிப்பாக சித்பவன் பார்ப்பனர்தானே.

கோல்வால்கர் சொல்லுகிறார் - அவர்கள் ஆரியர் களாம்! அதாவது அறிவுத்திறம் மிக்கவர்களாம்! அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்களாம்!

இந்த யோக்கியதையில் உள்ள ஒரு கூட்டம் தங்களுக்கு ஜாதியில் நம்பிக்கை இல்லை என்று சொல்லுகிறது என்றால், அதற்குக் காரணம், வேறு வழியில்லை; சொல்லித் தீரவேண்டிய விழி பிதுங்கி நிற்கும் பரிதாப நிலை!

உமாபாரதி, கல்யாண்சிங் போன்றவர்களைக் கேட்டால், அக்கட்சியின் பார்ப்பனத் தன்மையை வண்டி வண்டியாகச் சொல்லுவார்களே - சொல்லியும் இருக் கிறார்களே!

தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யின் தலைவராக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் கிருபாநிதி, இந்தப் பார்ப்பனர்களிடம் சிக்கி என்ன பாடுபட்டார்? திருவாளர் இல.கணேசன் அய்யர்வாள் அவரின் கையைப் பிடித்து முறுக்கும் அளவுக்குச் சென்றதுண்டே! குமுறிக் குமுறிப் பேட்டி கொடுத்தாரே! கடைசியில் கட்சியை விட்டே வெளியேறி தி.மு.க.வில் சேர்ந்தாரா - இல்லையா?

ஆர்.எஸ்.எஸின் அடிப்படைதான் தெரியவில்லை. அல்லது தெரிந்திருந்தும் பொய் சொல்லியே தப்பிப் பிழைக்கவேண்டிய பரிதாபம்!

நேற்று நடந்த அரசியல் நிகழ்வுகள்கூடத் தெரிய வில்லையே - வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தது இரட்டை உறுப்பினர் நிலைக்காகவாம்!

ஜனதா ஆட்சியில் பிரதமராக மொரார்ஜி தேசாய் இருந்தபோது நடந்ததையும், வி.பி.சிங் தலைமையில் அமைந்த தேசிய முன்னணி (National Front) ஆட்சியில் நடந்ததையும் ஒன்றோடு ஒன்று போட்டுக் குழப்பினாரே பார்க்கலாம்... (இவாள் எல்லாம் அறிவு ஜீவிகளாம்!)

மோடி இந்து தேசியவாதியா? இந்திய தேசியவாதியா? தன்னை இந்து தேசியவாதி என்று கூறி இருப்பதன்மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிரானவர் - இந்த நிலையில் உள்ளவர் தேர்தலில் போட்டியிடுவதற்கேகூட தகுதியிழந்தவர் ஆகிடவில்லையா?

அந்த இடத்திலே பொய் சொல்லி பதவிப் பிரமாணம் எடுத்து - சட்டத்தையே உடைக்கக் கூடிய மோசடிக்காரர்களா இவர்கள்!

முசுலிம்களை நாய்க்குட்டிக்கு ஒப்பிடுவதும் காங்கிரசைப்பற்றிச் சொல்லும்பொழுதுகூட மதச் சார்பின்மை என்னும் பர்தாவுக்குள் (திரை என்றோ, முகமூடி என்றோ சொல்லவில்லை - அதில்கூட முசுலிம் பெண்கள் அணியும் பர்தாவைச் சுட்டிக் காட்டுவதைக் கவனிக்கத் தவறக்கூடாது!) ஒளிந் திருப்பதாகச் சொல்லுவதும், ஆரிய ஆர்.எஸ்.எஸ் நச்சரவத்தின் படமெடுப்புதானே!

நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் ஒரே ஒரு முசுலிம்கூட நிறுத்தி வைக்கப்படாதது எதைக் காட்டுகிறது?

இந்த முறை மோடியோ அல்லது வேறொரு மோடி மஸ்தானோ பிரதமராக வரும் நிலை உருவானால், (உருவாக வாய்ப்பு இல்லை என்பது வேறு சங்கதி!) அதுவே அவர்களின் இறுதி அத்தியாயமாக இருக்கும் ஆர்.எஸ்.எஸின் அத்துமீறல்களால் அவ்வாட்சி குறைப் பிரசவத்தில்தான் முடிவுறும்.

கலைஞர் தொலைக்காட்சியில் காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்ட இதயதுல்லா அவர்கள் தலையெழுத் தைப்பற்றிப் பேசியது எல்லாம் விவாத முறை இலக்கணத்துக்குப் புறம்பானதாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமானதாகும்.

சோனியாவை வெளிநாட்டுக்காரர் என்ற பொருளில் உங்களின் அந்நியரே வெளியேறு முழக்கம் என்னா யிற்று? என்ற கேள்விக்கு இடுப்பொடியும் வகையில் விவாத முறையில் இடித்துக் கூற வாய்ப்பு இருந்தது - அதைக் கோட்டை விட்டுவிட்டாரே காங்கிரஸ் தோழர்!

சோனியா, இந்திராவின் மருமகளாகி, இந்தியக் குடியுரிமையும் பெற்றுவிட்டவர், அதைக் குத்திக் காட்டுவது தாழ்வான சிந்தனையே!

அப்படிப் பார்க்கப் போனால், இவர்கள் யார்? மத்திய ஆசியாவிலிருந்து வந்த அந்நியர்கள்தானே? அத்வானியும் அந்நியர்தானே?
பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் பேசியவர் நல்ல கருத்துகளை எடுத்து வைத்தாலும், கான்சிராமின் பகுஜன் போய் சர்வஜன் வந்துவிட்டதே - இதுவா கான்ஷிராமின் தத்துவம்?

பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பை முன்னெடுத்துச் சென்ற கான்ஷிராம் எங்கே?

பார்ப்பன மாநாட்டையும், பேரணியையும் நடத்தி பார்ப்பனரையே பி.எஸ்.பி.யின் பொதுச்செயலாள ராக்கிய இன்றைய கட்சியின் நிலை எங்கே?

பொதுவாக ஒருங்கிணைப்பாளர் திரு.தம்பிராஜா அவர்கள் சாத்வீகமாக விவாதப் போரை சமர்த்தாக முடித்துவிட்டாரோ!

- கருஞ்சட்டை -

தமிழ் ஓவியா said...


தி.மு.க. தலைமைக் கழக அறிவிப்பு


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி
திராவிடர் கழகம், மாவட்டத் தலைநகரங்களில் நடத்தும் போராட்டத்தில்
தி.மு. கழகத்தினர் திரளாகப் பங்கேற்க வேண்டுகோள்!அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு இதனைச் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று வற்புறுத்தும் வகையிலும் ஆகஸ்ட் முதல் தேதியன்று திராவிடர் கழகம் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம்; இதில் ஒத்த கருத்துள்ளவர்களை அழைத்து மாநாடு ஒன்றினை நடத்துவது; மாவட்டத் தலைநகரங்களில் கருத்தரங்குகள் நடத்துவது; மூன்றாவது கட்டமாக மறியல் போராட்டத்தை நடத்துவது என்றெல்லாம் முடிவெடுத்து அறிவித்திருக்கிறார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற முடிவுக்கு தொடக்கம்முதல் ஆதரவாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் நிறைவேற்றியிருக்கும் இந்தத் தீர்மானத்திற்கும் ஆதரவாக இருக்கும் என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் 13.7.2013 அன்று உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். திராவிடர் கழகத் தீர்மானத்தின்படி, கழக மாவட்டச் செயலாளர்கள், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு அந்தப் போராட்டத்திற்கு எழுச்சியூட்டும் வகையில் தேவையான நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டுமென்று தலைமைக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

அண்ணா அறிவாலயம் தலைமைக் கழகம்,

சென்னை-18 நாள்: 16.7.2013 திராவிட முன்னேற்றக் கழகம்

குறிப்பு: திராவிடர் கழக மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டு ஆகஸ்ட் முதல் தேதி நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


பனி லிங்கம் போயே போச்சே!


காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் பனிலிங்கம் இருக்கிறது என்று பிரச்சாரம் செய்து மக்கள் கூட்டத்தை வரவழைத்துப் பக்தி வியாபாரம் நடக்கும்.

பனிக் காலத்தில் குகை ஒன்றில் இடுக்கு வழியாக சொட்டுகின்ற தண்ணீர்த் துளிகள் கடுங்குளிரால் பனிக்கட்டியாகிறது - அந்த உருவத்தைத்தான் பனி லிங்கம் என்று விளம்பரம் செய்து மக்களை நம்ப வைத்துள்ளார்கள்.
பனிக்காலத்தில்தானே இது நடக்கிறது? கோடையில் ஏன் நிகழவில்லை என்பதற்குப் பதில் இல்லை. ஆகஸ்ட் மாதம் வரை இந்த உருவம் தெரியும்.

இந்தாண்டு இப்பொழுதே பனி லிங்கத்தைக் காணவில்லை - உருகி ஓடிவிட்டது - சீதோஷ்ண நிலை காரணமாக! பக்தர்கள் காஸ் அடுப்பைப் பயன்படுத்தியதும் காரணமாம்!

கடவுள் உருவம் என்றால், நிலைத்து இருக்க வேண்டாமா? பக்தியால், புத்தியைப் பறிகொடுத்த மக்கள், சிவலிங்கம் உருகி ஓடிவிட்ட நிலையிலும்கூட பய ணத்தைத் தொடர்கிறார்களாம்! குடி போதையைவிட மோசமானது பக்தி போதை ஆயிற்றே!

தமிழ் ஓவியா said...


காவிரி மேலாண்மை வாரியம்-காவிரி ஒழுங்குமுறை ஆணையங்களை உடனடியாக ஏற்படுத்துக!


மத்திய அரசுக்குத் தமிழர் தலைவர் வற்புறுத்தல்

காவிரி நடுவர் மன்றம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே ஆணையிட்டும், தாமதமாக கெசட்டில் தீர்ப்பை வெளியிட்ட மத்திய அரசு - அதன் தொடர்ச்சியாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை ஆணையங்களை ஏற்படுத்தாமல் காலங்கடத்திவருவதை மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டி மேலும் காலதாமதமின்றி அவற்றை ஏற்படுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்து பல ஆண்டுகளுக்குப் பின்பே, அதன் சட்டப் படிக்கான தொடர் நடவடிக்கையான நிரந்தரமான சுதந்தரமான நிபுணர் களைக் கொண்ட காவிரி ஆணையம் உருவாக்கப்பட வில்லை; காவிரி நீர் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய அதிகாரம் பெற்ற அந்த ஆணையத்தை அமைக்காமல் இன்னமும் மத்திய அரசு காலந்தாழ்த்தி வருவது மிகவும் கண்டனத்திற்குரிய ஒன்றாகும்.

மத்திய கெசட்டில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை வெளியிடுவதற்கே, பல ஆண்டு கால தாமதம் ஆனது; தமிழ்நாட்டுத் தலைவர்கள், விவசாயிகளின் தொடர் குரல்கள்; தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு; இவற்றைத் தொடர்ந்து மத்திய அரசினை உச்சநீதிமன்றம் தனதுதீர்ப்பு ஆணை மூலம் வற்புறுத்திய பின்னர் - இந்த சாதாரண சட்ட நடவடிக்கையெடுத்தது மத்திய அரசு.

கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் அரசு பதவிக்கு வருவதற்கே இந்த மெத்தனம்; பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதுபோல கெசட் செய்யா மலேயே, சட்டபூர்வ உரிமையான தமிழ்நாடு காவிரி நீர்ப் பங்கீடு பெறுவதை - தவிர்த்து தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்தது மத்திய அரசு! பிறகு எப்படியோ கெசட்டில் வெளியிடப்பட்டு விட்டது.

2007 பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டது.

காலதாமதம்!

காலதாமதமாகித்தான் - மத்திய அரசு கெசட்டில் வெளியிட்டது - அதுவும் உச்சநீதிமன்றம் சுரீரென்று தட்டிக் கேட்ட பிறகே - தமிழக முதல்வர் போட்ட வழக்கில்.

ஆனால் இன்னமும் காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நிர்வாக ஒழுங்குமுறை ஆணையமும் மத்திய அரசால் நியமிக்கப்படவே இல்லை!

இதனால் ஒரு தற்காலிக ஏற்பாடாக இடைக் காலத்தில் - காவிரி மேற்பார்வைக் குழு என்ற ஒன்று உரு வாக்கப்பட்டு, அதில் அந்த மாநில தலைமைச் செய லாளர்கள், மத்திய அரசின் நீர்வளத் துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது!

தேவை நிரந்தர ஆணையம்

நிரந்தர ஆணையம் உடனடியாக அமைக்க தமிழ்நாட்டில் உள்ள ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் கெஞ்சுதல், கொஞ்சுதல் எல்லாம் இல்லாமல், நாம் நமது காவிரி நீர் உரிமையை நிலை நாட்டிட முடியும். அது அவசரம் அவசியம்!

ஏற்கெனவே காவிரி டெல்டா விவசாயிகள் சம்பா பயிர் சாகுபடியைச் சரிவரச் செய்யாமல் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்!

அடுத்த குறுவை சாகுபடி என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்ட கொடுமைகள் தொடர்ந்தன!

நிலத்தடி நீர் வறண்டுவிட்டது; பம்புசெட் விவசாயத் திற்கோ வாய்ப்பே குறைவு; காரணம் தொடர் மின்வெட்டு, டீசல் விலை ஏற்றம் - இப்படி அடுக்கடுக்காக விவசாயிகள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டி விட்டார்கள்.
கர்நாடக நீர்பிடிப்புப் பகுதியில் நல்ல மழை பெய்தும், ஏதோ பிச்சை போடுவது போல கர்நாடக அரசு கூறுவது வேதனைக்குரியது!

குறுவை சாகுபடிக்கு வழி செய்க!

தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்ட நமது உரிமைப்படி நமக்குச் சேர வேண்டிய 50 டி.எம்.சி. தண்ணீரை ஏற்கெனவே பாக்கி வைத்த 100 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டியது கர்நாடகத்தின் பொறுப்பு.

தற்போதைய குழுவினர் நேற்று நடைபெற்ற (டில்லி) கூட்டத்தில்கூட, தமிழகத்திற்கு ஏராளம் தந்துவிட்டோம்; மேலும் இப்போது தர இயலாது என்று அதிகப் பிரசிங்கித்தனமாகக் கூறியுள்ளதாவது நமது வாதத்திற்கு வலிமை சேர்க்கிறது.

ஆனால் கர்நாடக செயலாளர் ஏற்கெனவே வழங்க வேண்டிய 34 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்கிவிட்டது;

இன்னும் 10 டி.எம்.சி., இம்மாத இறுதிக்குள் திறந்து விடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு நிரந்தர விடியல் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்கு முறை ஆணையங்களை (நிபுணர்கள், நிதித்துறை வல்லுநர்களைக் கொண்டவை) மத்திய அரசு மேலும் கால தாமதமின்றி நியமித்து, நீதி வழங்கி, காவிரி டெல்டா குறுவை சாகுபடியாவது சரியாக நடந்திட உதவிட வேண்டுகிறோம்.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
17.7.2013

தமிழ் ஓவியா said...இருந்து வரும்


பார்ப்பனச் சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும் வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்து வரும்.
(விடுதலை, 29.5.1973)

தமிழ் ஓவியா said...


டெசோவின் தீர்மானங்கள் (1)நேற்று (16.7.2013) சென்னை அண்ணா அறிவால யத்தில் டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர் களின் தலைமையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் நான்கு நறுக்கான தீர்மானங்களும் அவற்றை நிறை வேற்றிட மத்திய அரசை வலியுறுத்தும் வண்ணம் அய்ந்தாவதாக போராட்ட வடிவ தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.

2012 ஏப்ரல் 30 ஆம் தேதி இரண்டாவது முறையாக டெசோ புது வடிவம் பெற்று செயல்பட்ட இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமானது.

போருக்கு முன் டெசோவின் பணி என்பது ஒரு வகையானது; போருக்குப் பின் டெசோவின் பணி இன்னொரு வகையானது. போரினால் பெரும் பாதிப்புக்கு ஆளான ஈழத் தமிழர்களின் - சுயமரியாதை வாழ்வு மீள்குடியேற்றம் - வாழ்வுரிமை, அரசியல் தீர்வுகளை உள்ளடக்கமாகக் கொண்டதாகும்.

இந்திய அளவிலும் சரி உலகளவிலும் சரி டெசோ வின் எழுச்சிக்குப் பிறகு தேக்க நிலைகள் உடைக்கப்பட்டன.

இலங்கை அரசைப் பொறுத்தவரை ஏதோ பெரும் போரில் வெற்றி பெற்றுவிட்டது போன்ற மனப்பான்மை யுடன் வெறிபிடித்துத் திரிகிறது - எந்த வகையிலும் ஈழத் தமிழர்கள் மீண்டும் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் திடமாக உள்ளது.

இந்திய அரசின் உறுதியற்ற தன்மை அதற்கு இலகுவாகப் போய்விட்டது. சீனா, ருசியா, கியூபா போன்ற இடதுசாரி நாடுகளும், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் தன்பக்கம் இருக்கும் இறுமாப்பில் இந்தியாவின் வார்த்தைகளுக்கு உரிய மதிப்பும் கொடுப்பதில்லை.

ஈழப் பிரச்சினைக்காக இருமுறை ஆட்சியை இழந்த தி.மு.க. அதே பிரச்சினைக்காகவே இப்பொழுது காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்து விலகிக் கொண்டு விட்டது.

கொஞ்ச நஞ்சம் இருந்த தர்மசங்கடமும் பறந்து ஓடிவிட்டது. இந்திய அரசு எதைச் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதில், போராடுவதில் டெசோதான் முன்னணி அமைப்பாக இருந்து வருகிறது.

நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் செறிவானவை. ஈழத் தமிழர்ப் பிரச்சினையாகவிருந் தாலும், தமிழக மீனவர் பிரச்சினையாகவிருந்தாலும் சரி இந்தத் தீர்மானங்களின் உள்ளடக்கத்தைத் தவிர, விடுபட்டது ஒன்றும் இருக்க முடியாது, என்கிற அளவுக்குத் தெளிவானவையும், திட்டவட்டமானவையு மாகும்.
குறிப்பாக, முதல் தீர்மானம் அரசியல் தீர்வு என்று பேசப்படும் 13 ஆவது சட்டத் திருத்தம்பற்றியதாகும்.

1987 இல் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையிலான சட்டத் திருத்தம் அது. இலங்கை என்றால் ஒரே அரசு (ருவையசல ளுவயவந) என்ற நிலைக்குப் பதிலாக மாநிலங்களுக்கும் சற்றுப் பரவலான அதிகாரங்களை அளிக்கும் சட்டத் திருத்தம் அது.

26 ஆண்டுகள் ஓடிய நிலையிலும், அதனைச் செயல்படுத்தவேண்டும் என்று இலங்கை அரசை வற்புறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால், இலங்கை அரசின் நேர்மையற்ற போக்கை எளிதில் தெரிந்துகொள் ளலாமே!

அந்தப் பிரிவில் அடங்கியுள்ள மாநிலங்களுக்கான உரிமைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சி யில் இப்பொழுது இலங்கை அரசு இறங்கியுள்ளது.

இரண்டு நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக மாற்றிக் கொள்ளக்கூடிய அதிகாரம் இலங்கைக்கு உண்டா என்பது முக்கியமான கேள்வி யாகும்.

வடக்கு - கிழக்கு மாநிலங்கள் இணைப்பு என்பது அந்த ஒப்பந்தத்தில் காணப்படும் முக்கிய அம்சமாகும். இலங்கை ஆளும் கட்சியின் கூட்டணியான ஜெவிபி (கம்யூனிஸ்டு என்னும் போர்வை வேறு!) மூலம் இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, சாதகமான தீர்வினையும் பெற்றுக்கொண்ட வஞ்சகத்தை என்னென்று சொல்லுவது!

இலங்கை அரசு பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டிக்கொள்ளும் விலாங்குத் தன்மையில் நடந்துகொண்டு வருகிறது.

நியாயமாக இந்தப் பிரச்சினையில் இந்திய அரசுக்குக் கூடுதலான பொறுப்புண்டு. இந்திய அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அவமதிக்கிறது, தூக்கி எறிகிறது இலங்கை அரசு என்றால் - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேற்றைய தொலைக்காட்சிப் பேட்டியில் குறிப்பிட்டதுபோல, இந்தியாவின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் அல்லவா இது!

அந்த வகையில் டெசோவின் தீர்மானம் ஈழத் தமிழர் களின் வாழ்வுரிமைக்கு மட்டுமல்ல; இந்திய அரசின் சுயமரியாதைக்குக்கூட தேவையானதாகும்.

இன்னும் சொல்லப்போனால், அய்.நா. மற்றும் உலக நாடுகளின் மரியாதையும், மனித உரிமையின் அடையாள மும்கூட டெசோவின் தீர்மானங்களில் உள்ளடக்கமாக இடம்பெற்றுள்ளன.

எனவே, இந்தத் தீர்மானங்களைக் கட்சிக் கண்ணோட்டத்துடன் பார்க்கத் தேவையில்லை.

இந்திய அரசு இதுவரை எப்படி நடந்துகொண்டு இருந்தாலும், இனியாவது விழித்துக்கொண்டு, மூடுமந்திரமில்லாமல் செயல்படட்டும்!

தமிழ் ஓவியா said...


வாய்க்கொழுப்பு மோடி வம்பில் சிக்கினார்!

மோடி: நாய்க்குட்டி கருத்து எதிரொலி: டில்லி பா.ஜ.க. துணைத் தலைவர் அமீர் ரசா ஹுசைன் பதவி விலகல்!

புதுடில்லி, ஜூலை 17- குஜராத் மாநில முதல் அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் பிரச்சாக்குழு தலை வருமான நரேந்திர மோடி, 2002 ஆம் ஆண்டு கலவரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அப்போது நாய்க் குட்டி காரில் அடிபடுவதை கலவரத் தில் இறந்தவர்களுடன் ஒப்பிட்டுக் கூறியதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் டில்லி பிரிவின் துணைத் தலைவரான அமீர் ரசா ஹுசைன் தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது மோடியின் இந்த கருத்து இழிவானது, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தக் கூடியது. இதுபோல் பேசினால் இஸ்லாமியர் களின் ஆதரவை அவர் எப்போதும் பெற முடியாது. மோடி பாரதீய ஜனதா கட்சியின் தலைவர். என்னு டைய தலைவர் இல்லை என்று கூறி யிருந்தார். இது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுத்துப்பூர்வ புகார்களும் எழுந்தன. இந்நிலையில் ஹுசைன் நேற்று தனது பதவி விலகல் கடி தத்தை கட்சி மேலிடத்திடம் வழங் கினார். அதை டில்லி பா.ஜ.க. தலைவர் ஏற்றுக்கொண்டார்.

பதவி விலகல் குறித்து அவர் கூறியதாவது:-

என்னைப்போல் பல சிறுபான் மையினர் காங்கிரஸ் அல்லாத மாற்று கட்சிகளை எதிர்பார்க்கிறோம். அதை வாஜ்பாய் அல்லது அத்வானி யால் வழங்க முடிந் தது. மோடியை முன்னிலைப்படுத் துவதன் மூலம் எங் களுக்கிருந்த மாற்று வழியை பா.ஜ.க. தடை செய்து விட்டது. எல்.கே. அத்வா னியோ அல்லது சுஷ்மா சுவராஜோ பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றே இஸ்லாமியர்கள் விரும்பு கின்றனர். மோடி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். எனவே கட்சியில் இருந்து விலக எனக்கு முழு உரிமை உள்ளது. - இவ்வாறு அவர் கூறினார்.

வளர்ப்பு நாய் குறித்த கருத்து: மோடி மீது வழக்கு பதிவு

பாட்னா, ஜூலை 17- குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, ஒரு பேட்டியில் கோத்ரா கலவர சம்பவம் குறித்து வருத்தம் உண்டா? என்ற கேள்விக்கு வளர்ப்பு நாயை ஒப்பிட் டுப் பதில் அளித்தார். இதனை சுட்டிக்காட்டி நரேந்திரமோடி மீது பாட்னா பல்கலைக்கழக புள்ளியியல் துறை ஆசிரியர் பினெய் குமார்சிங் என்பவர் பாட்னா தலைமை ஜுடீசி யல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அவதூறு மற்றும் தேச துரோக வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். முதல் வகுப்பு ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத் திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கை வருகிற 31 ஆம் தேதி அன்று நீதிபதி குமரோ கியாதிசிங் விசாரிக்கிறார்.

தமிழ் ஓவியா said...


மண்டலங்கள் தோறும் மன்றல் விழா


சென்னை, திருச்சி, மதுரை, கோவை மண்டலங்களில் மிகச் சிறப் பாக மன்றல் விழாக்கள் நடந்து முடிந்தன.

மன்றல் விழாக்களில் கலந்து கொள்ளும் நபர்கள், நம் இயக்கத் தவர்கள் அல்லர். முற்றிலும் மாறுபட்ட மக்களே! விழாக்களில் கலந்து கொள்ளும் நபர்கள் ஆயிரத்திற்கும் குறையாமல் வருகிறார்கள். வந்த வர்கள் சிறிது நேரம் அமர்ந்து பின் எழுந்து போகிறவர்களாகவும் இல்லை. அப்படியே அமர்ந்து ஆவலுடன் நிகழ்வினை பார்க்கிறார்கள். அடுத்த மன்றல் எங்கே? எப்பொழுது என்ற வினாக்கள் வந்த வண்ணமாகவே இருக் கின்றன.

என் பிள்ளைகளுக்கு இணை தேடு வது பெரும் தலைவலியாக இருந்தது. இன்று ஏதோ ஒரு காரணத்திற்காக ஜாதி மறுப்புத் திருமணம், திருமணமே செய்யாமல் இன்றைக்கு வரை வாழ்ந்து விட்டோம் அதனால் எங்களிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ள சங்கடப்படுகிறார்கள். எங்களைப் போன்றோர்க்கு இந்த மன்றல் விழா மாமருந்தாக அமையப் பெற்றதாகக் கருதுகிறோம்.

திராவிடர் கழகத்தார் இப்படிச் செய்வதைப் பார்த்தால் ஆச்சரியமாகவும், வியப்பாகவும் இருக்கின்றது. மனதார, மனம் திறந்து பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று புகழாரம் சூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

மேலும் சிலர் அய்யா போட்டுத் தந்த பாதையில் இன்று வரை அடி பிறழாமல் நடந்து, அய்யா சொன்ன சொற்களையும், அவரின் உள்ளத்தில் என்னென்ன செயல் பாடுகள் இருந்தனவோ அத்தனையையும் இன்று செய்து வரும் தமிழர் தலைவரை வாழ்த்தாமல், பாராட்டாமல் இருக்க முடியாது என்று கூறும் பலர் உள்ளனர் என்பதையும் அறிவித்துக் கொள்கிறோம்.

இச்செயல்களை செய்யும் உங்களோடு, நாங்களும் செயல்பட வருவோம். எங்களின் ஆதரவு உதவிகள் கட்டாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் பணியினைத் தொடருங்கள் என்று கூறும் ஒரு சிலரையும் சொல் லாமல் இருக்க முடியவில்லை.

வரும் ஜூலை இருபத்தெட்டாம் நாள் நெல்லையில் இணை தேடும் பெரும் விழாவை நடத்த ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் கூறி விடை பெறுகிறேன். நன்றி! வணக்கம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- திருமகள்

தமிழ் ஓவியா said...


சக்தி வாய்ந்த (?) கடவுள் எங்கே போனான்?


கோவிலில் ரூ.1 கோடி அய்ம்பொன் சிலைகள் கொள்ளை!

அய்ம்பொன் சிலைகள் திருடப்பட்ட கோவிலை படத்தில் காணலாம்.

திருப்போரூர், ஜூலை 17- திருப்போரூர் அருகே கோவிலில் ரூ.1 கோடி அய்ம்பொன் சிலைகள் கொள் ளையடிக்கப்பட்டது.

திருப்போரூரை அடுத்துள்ளது சிறுதாவூர் கிராமம். இங்கு சுமார் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூதகிரீஸ் வரர் சிவன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் அய்ம்பொன் னால் ஆன பூதகிரீஸ்வரர் சிலை, அம்மன் சிலை, ஆரவல்லி சிலை மற்றும் அப்பர் சிலை ஆகிய சிலைகள் உள்ளன. பூதகிரீஸ்வரர் கோவிலை சீரமைக்க சிறுதாவூர் கிராம மக்கள் முடிவு செய்தனர். எனவே கோவிலில் இருந்த மூலவர் உள்ளிட்ட 4 சிலைகளும் பழமை வாய்ந்த மதிப்புமிக்க அய்ம்பொன் சிலைகள் என்பதால் பாதுகாப்பு கருதி அருகில் உள்ள பஜனைக்கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.

நேற்று காலை அர்ச்சகர் பஜனை கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலின் பூட்டு திறக்கப்பட்டு கதவு திறந்தே இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் கோவில் திறந்து கிடப்பது குறித்து பொதுமக் களிடம் கூறினார். ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கோவில் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலின் உள்ளே பாதுகாக்கப்பட்டு வைத் திருந்த பூதகிரீஸ்வரர் உள்ளிட்ட 4 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டி ருந்தன.

இது குறித்து தகவல் அறிந்த சம் பவ இடத்திற்கு சென்று தீவிர விசா ரணை நடத்தினர்.

விசாரணையில் கோவிலின் பூட்டை கள்ளச்சாவி கொண்டு திறந்து சிலை களை சில ஆசாமிகள் கொள்ளை யடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட 4 சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந் தவை. இந்த 4 சிலைகளும் 150 கிலோ எடை கொண்டதாகவும், இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்போரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

கோவில் பெட்டக அறை பூட்டை உடைத்து வெள்ளி நகைகள் கொள்ளை!அம்பத்தூர், ஜூலை 17- சென்னை முகப்பேரில் கோவில் பெட்டக அறை பூட்டை உடைத்து, ரூ.15 லட்சம் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப் பட்டன.

சென்னை முகப்பேர் கிழக்கு, 5-வது பிளாக், மறைமலை அடிகளார் சாலையில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருமாரியம்ம னுக்கும் தனியாக சன்னதி உள்ளது. இந்த சன்னதிக்கு எதிரில் அமைந் துள்ள மண்டபத்தில் 2 பெட்டக அறைகள் உள்ளன. ஒரு அறையில் அய்ம்பொன்னால் ஆன 5 உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.

மற்றொரு அறையில் 3 பீரோக்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த பீரோக்களில், பண்டிகை நாட்களில் 2 அம்மனுக்கும் அணிவிக்கப்படும் அலங்கார கிரீடம், மார்பு கவசம், அங்கவஸ்திரம் மற்றும் பூஜை சாமான் கள் உள்ளன. மற்றும் விலை உயர்ந்த பட்டுசேலைகளும் வைக்கப்பட்டு இருந்தன.

பூட்டை உடைத்து நேற்று முன்தினம் மாலை அர்ச்சகர் சுப்பிரமணி, கணக்காளர் கோபால் ஆகியோர், சாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளை முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு அனைத்து சன்னதி மற்றும் அறைகளை பூட்டி விட்டு, கோவிலின் வெளிப்பக்கமும் பூட்டி விட்டு, சென்று விட்டனர். நேற்று அதிகாலையில் வழக்கம் போல அர்ச்சகர் சுப்பிரமணி கோவி லுக்கு சென்றார். கோவிலுக்குள், ராஜராஜேஸ்வரி அம்மன், கருமாரியம் மன் சன்னதி, 2 பெட்டக அறைகளின் பூட்டும் உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அம்மன் சன்னதியில் இருந்தவை எல்லாம் அப்படியே இருந்தன. உண்டியலும் உடைக்கப்படவில்லை. ஆனால், 2 அறைகளில் இருந்த 3 பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தன. உடனே அவர், கோவில் நிர்வாகி களுக்கு தகவல் தெரிவித்தார். அவர் கள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 22 கிலோ வெள்ளி நகைகள், பட்டுசேலைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் சென்று திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை தேடி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


அருகதையற்றவர்கள்பேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும், ஸ்தாப னங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு கொள்ள வேண்டும். இந்தத் துணிவு கொள் ளாத எவரும் சமதர்ம முயற்சிக்கு அருகதை அற்றவர்களே ஆவார்கள்.
(விடுதலை, 7.7.1965)

தமிழ் ஓவியா said...


சென்னையில் (18.7.2013) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்


ஆசிரியர் தகுதித் தேர்வு பணி: நியமனத்தில் சமூகநீதிகோரி சென்னையில் (18.7.2013) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்

(1) வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(2) வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!

(3) காப்போம், காப்போம்!
சமூக நீதியை
சமூக நீதியை
காப்போம் - காப்போம்!

(4) தமிழ்நாடு அரசே
தமிழ்நாடு அரசே
ஆசிரியர் தகுதித் தேர்வில்
ஆசிரியர் தகுதித் தேர்வில்
சமூக நீதி சமூக நீதி
தேவை, தேவை!
கட்டாயம் தேவை -
கட்டாயம் தேவை!

(5) உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்
ஒரே அளவுகோலா?
ஒரே அளவுகோலா?
மதிப்பெண்ணில் மதிப்பெண்ணில்
ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா?

(6) உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
மாற்றுத் திறனாளிக்கும்
மாற்றுத் திறனாளிக்கும்
ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா?
மதிப்பெண்ணில் மதிப்பெண்ணில்
ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா?

(7) உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும்
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும்
ஒரே அளவு கோலா?
ஒரே அளவுகோலா?
மதிப்பெண்ணில் மதிப்பெண்ணில்
ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா?

(8) பீகாரிலும் ஆந்திராவிலும்
பீகாரிலும் ஆந்திராவிலும்
சமூக நீதிக் கொடி
சமூக நீதிக் கொடி
பறக்குது! பறக்குது!!
பெரியார் பிறந்த மண்ணிலே
பெரியார் பிறந்த மண்ணிலே
சமூக நீதிக்கு சமூக நீதிக்கு
சவக்குழியா? சவக்குழியா?

(9) அனுமதியோம் - அனுமதியோம்!
சமூக அநீதியை சமூக அநீதியை
அனுமதியோம் - அனுமதியோம்!

(10) போராடுவோம் - போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம் - போராடுவோம்!

(11) தந்தை பெரியார் தந்தை பெரியார்
பெரும்படையும் பெரும்படையும்
அண்ணல் அம்பேத்கர் அண்ணல் அம்பேத்கர்
பெரும்படையும் பெரும்படையும்
புறப்பட்டோம் - புறப்பட்டோம்!

(12) தமிழக அரசே தமிழக அரசே
அமல்படுத்து அமல்படுத்து!
சமூக நீதியை சமூக நீதியை
அமல்படுத்து அமல்படுத்து!

(13) பணி முடிப்போம் - பணி முடிப்போம!
தமிழர் தலைவர் தலைமையிலே
தமிழர் தலைவர் தலைமையிலே
பணி முடிப்போம்! பணி முடிப்போம்!
தந்தை பெரியார் தந்தை பெரியார்
பணி முடிப்போம்! பணி முடிப்போம்!

தமிழ் ஓவியா said...


உச்சநீதிமன்றத்தின் அரிய தீர்ப்பு!


மருத்துவக் கல்லூரி சேர்க்கை: நீண்ட நாள் கழகக் கோரிக்கைக்கு வெற்றி!

அகில இந்திய நுழைவுத் தேர்வு தேவையில்லை

உச்சநீதிமன்றத்தின் அரிய தீர்ப்பு!

புதுடில்லி, ஜூலை 18- அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க் கைக்கு (எம்.பி.பி.எஸ்.,) ஒரே நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்துக்கு உச்சநீதி மன்றம் மறுப்புத் தெரிவித்து ஆணை பிறப்பித்து விட்டது. அகில இந்திய மருத் துவக் கவுன்சிலின் முடிவை, தொடர்ந்து எதிர்த்து வருவது திராவிடர் கழகமே என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு கொண்டு வரும் மருத் துவ கவுன்சிலின் முடிவுக்கு உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் அந்தந்த மாநிலங்களே மருத்துவ படிப்புக் கான நுழைவுத் தேர்வை முடிவு செய்து கொள்ள லாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ மாண வர்கள் தேசிய அளவிலான மருத்துவ தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( என்.இ. இ.டி) மருத்துவ கவுன்சில் கொண்டு வர வேண்டும் என விரும்பியது. மேலும் தகுதி இல்லாத நபர்கள் பணம் பெற்று சேர்க்கப்படுவதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு பல்வேறு மாநிலங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவானது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தேர்வு முறையே பின்பற்ற லாம் என இடைக்கால தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப் பட்டது. அல்டாமஸ் கபீர் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. இதன்படி நாட்டில் ஒரே மாதிரியான தகுதி நுழைவுத்தேர்வு தேவையில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர், அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். இதில் 2 நீதிபதிகள் மருத்துவ கவுன்சிலின் முடிவை எதிர்த்தனர்.ஒரு நீதிபதி மட்டும் ஆதரித்தார். கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் மத்தியில் பாதிப்பு, வேறுபாடுகளை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவை பல்வேறு அரசுகள் மற்றும் தனியார் கல்லூரிகள் வரவேற்றுள்ளன.

தமிழ் ஓவியா said...


சேலம் இரயில்வே கோட்டத்தை மங்களூருவுடன் இணைப்பதா? தடுத்து நிறுத்துக!தென்னகத்தில் ரயில்வேக்கள் விரிவாக்கம் - அகல இரயில் பாதை போன்ற முயற்சிகள் தி.மு.க. தலைவர் கலைஞர், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, உறுப்பினர்கள், முந்தைய மத்திய அமைச்சர் பெருமக்கள் மற்றும் சேலம் வீரபாண்டிய ஆறுமுகம் ஆகியோர்களின் சீரிய முயற்சிகள் காரணமாக, சில டிவிஷன் களைத் தனியே உருவாக்கியதன் மூலம் வளர்ச்சிக்கும், புதிய வேலை வாய்ப்புக்கும் பெரிதும் வழி வகுத்தன.

மங்களூருவோடு இணைக்க திட்டமா?

எடுத்துக்காட்டாக கேரள மாநிலம், பாலக் காட்டோடு இணைக்கப்பட்ட டிவிஷன்களி லிருந்து ஒரு பெரும் பகுதியைப் பிரித்து சேலம் தனி ரயில்வே கோட்டம் - ரயில்வே டிவிஷன் அமைக்க அரும்பாடுபட்ட பிறகே, லாலு பிரசாத் அவர்கள் ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தில், சேலம் டிவிஷன் என்று தனியே சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புது டிவிஷன் உருவாக்கப்பட்டது. அப்படி உருவான பிறகும்கூட அதை முழு அளவில் வளர்ச்சியடைய வைக்க மனமின்றி. கேரளத்துச் செல்வாக்கு, மத்தியில் அதிகமாக இருப்பதன் காரணமாக, பெயரளவில் தனி அலுவலகம் போல சில ஆண்டுகள் இயங்க விட்டு, ஓரளவு வளர்ந்து வரும் நிலையில் திடீரென்று இப்போது இந்த சேலம் டிவிஷனை மங்களூருவுடன் (கர்நாடகத் துடன்) இணைக்க ரகசியமாகப் பல முயற்சிகள் நடைபெற்று வருவது குறித்து சேலத்துப் பெரு மக்களும், ரயில்வே தொழிலாளர் தோழர்களும் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

அவர்களது நியாயமான இந்த அச்சத்தைப் போக்கி, வெகுவாகப் பாடுபட்டு, வராது வந்த சேலம் ரயில்வே கோட்டம் மீண்டும் காணாமற் போகும் அவலநிலை ஏற்பட்டு விடக் கூடாது! கூடவே கூடாது!!

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு..

இதுபற்றி ரயில்வே நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் திரு. டி.ஆர். பாலு அவர்களும், நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பெரு மக்களும், காங்கிரஸ் மத்திய அமைச்சர்களும் இதில் தனி அக்கறை செலுத்தி, சேலம் டிவிஷன் வழமைபோல் தனித்தியங்குவதோடு அதை மேலும் பலப்படுத்தவும் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இன்றேல் மக்கள் கிளர்ச்சி வெடிப்பது உறுதி! உறுதி!!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
18.7.2013

தமிழ் ஓவியா said...


உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் எஸ்.சி., எஸ்.டி., பி.சி. மற்றும் பெண் நீதிபதிகள் உரிய எண்ணிக்கையில் வருவதை நான் வரவேற்கிறேன்!நீதியரசர் ப.சதாசிவம் பேட்டி

புதுடில்லி, ஜூன் 19- மேல் மட்ட நீதிமன்றங் களில் தாழ்த்தப்பட் டோர், மலை வாழ் மக்கள் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் பெண்கள் உரிய எண்ணிக்கையில் நீதிபதிகளாக வர வேண் டும்; அதனை நான் வரவேற்கிறேன் என்று உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இன்று (ஜூலை 19) பதவி யேற்ற நீதியரசர் ப. சதா சிவம் நேற்று முன்தினம் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டுக்கு அளித்த பேட் டியில் கூறினார்.

பேட்டியில் கூறியதாவது:

மேல் நிலை நீதி மன்றங்களில் நீதிபதி பதவிகள் நிரப்புவதில், நிலவி வரும் முறை களிலிருந்து சற்று தளர்வு ஏற்படுத்தி, உச்சநீதி மன்றத்திலும், உயர்நீதி மன்றங்களிலும் பெண் களிடமிருந்தும், தாழ்த் தப்பட்டவர்களிடமிருந்தும், பழங்குடியினரிடமிருந்தும், மற்றுமுள்ள பிற்படுத்தப் பட்ட மக்களிடமிருந் தும் மேல் நிலை நீதி மன்றங்களுக்குத் தேர்ந் தெடுக்கப்படுவதை தான் வரவேற்பதாக கூறியுள் ளார். மேல் நிலை நீதி மன்றங்களில் பெண் களுக்கோ இதர பிற் படுத்தப்பட்டோர் களுக்கோ நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு இடஒதுக்கீடு இல்லை. நீண்ட நாட்களாகவே உயர்நிலை நீதிமன்றங் களில், பெண்கள், பிற்படுத்தப்பட் டோர் ஆகியோர்க்கான இடம் மிகக் குறைவு. அவர் களை உச்சநீதிமன்றத் திலும், உயர்நீதிமன்றங் களிலும், அடிப்படை தகுதி உரிமையை சமரசம் செய்து கொள் ளாமல் நியமனம் செய் தால், நாட்டின் பன்முக சமுதாய வேறுபாடுகள் பிரதிபலிக்கப்படுவதோடு, சமுதாயத்தில் பெரு மளவிற்கு ஒருவளமான அடையாளத்தை அளிக்கும். தேர்வு முறைகளில் மாற்றம் செய்ய நான் விரும்புகிறேன். பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு ஒரு சிறு உதவியாக, பிற் படுத்தப்பட்ட வகுப்பு களில் உள்ள நற்றகுதி பெற்றுள்ளவர்கள் தேர்வு பெறுவதற்கு மேல் நீதிமன்றத் தேர் வாளர்களை ஒத்துக் கொள்ள வைப்பதற் கான பொறுப்பு அடுத்த தலைமை நீதிபதி என்ற முறையில் எனக்கிருக் கிறது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பு உறுப்பினர்கள், சட்டத்தைப் படித்து விட்டு நீதிபதியாக விரும் புபவர்கள் தங்கள் அடிப்படைத் தேவை களை நிறைவுபடுத்திக் கொள்ள தாங்களே முன் வர வேண்டும். அது உயர்நீதிமன்ற அதிகாரி கள் முன் தங்கள் பற்றிய தகவல்களை எடுத் துரைக்க, தங்களுக்குண் டான வேலைப் பகு தியைக் கேட்டுப் பெற உச்சநீதிமன்ற தேர்வுக் குழு நீதிபதிகளிடம் சில கொள்கைகள் சில இணக்கங்களை ஏற் படுத்தித் தர உதவும் என்று விளக்கினார்.

உச்சநீதிமன்றத்தில், 63 ஆண்டுக் காலத்தில், பெண் நீதியரசர்களுக் குப் பற்றாக் குறை நிலவு கிறது. அமர்ந்து இருக் கும் இரண்டு பெண் நீதிபதிகளையும் சேர்த்து, குயான் சுதா மிஸ்ரா, ரஞ் சனா பி. தேசாய் ஆகியோ ரையும் சேர்த்து 5 பேர் தான் இருக்கிறார்கள். இந்தியாவின் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி யாக முதல் தாழ்த்தப் பட்ட இனம் சேர்ந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் 2007இல் பதவி ஏற்றார். ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடமிருந்து நீதிபதிகள் தேர்ந்தெடுப் பது மிக மிக அபூர்வம்.

நீதியரசர் சதாசிவம், நீதிபதிகளின் அரசியல் சார்புகளையும், கடுமை யாகப் பேசினார். அவர் கள் அரசியல் தொடர்பு களைத் தவிர்த்து, சார்பு நிலைகளையும் நீக்கிக் கொள்ள வேண்டும். அவர் அரசியலுடன் இணைக்கப்பட்டிருக்க லாகாது என்று நீதியர சர்களாக விரும்புபவர் களுக்குச் சொன்னார்.

தமிழ் ஓவியா said...


மற்றொரு திவ்யா - இளவரசன் இணை காவல்துறை என்ன செய்கிறது?


- நமது சிறப்புச் செய்தியாளர்

தருமபுரி, ஜூலை 19- தருமபுரி மாவட்டம் பொம்மிடி காவல் சரகத் திற்குட்பட்ட வேப்ப மரத்தூர் கிராமத்தில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கோபால் மகன் சுரேஷ் என்பவரும் அரூர் வட்டம் பறையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ப வரின் மகள் சுதா என்ப வரும் (தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்) காதலித்து கடந்த மூன் றாண்டுகளுக்கு முன் 21.4.2010-ஆம் தேதி சின்ன திருப்பதி கோயிலில் திரு மணம் செய்து கொண்டு அரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டுள்ள னர்.

கடந்த 3 ஆண்டு களாக சுரேஷ் பெற்றோ ருடன் கூட்டுக் குடும்ப மாக வாழ்ந்து வந்ததோடு ஜாதி மறுப்புத் திரு மணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் காதலின் சாட்சி யாக ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது.

மூன்றாண்டுகளுக்குப் பிறகும்...

இந்த நிலையில் இவர் கள் செய்து கொண்டது. காதல் திருமணம் என்று நம்பிய ஊரார். காலப் போக்கில் சுதாவின் சமூகம் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் சமூ கத்தை சார்ந்தவர் என்று தெரிய வரவே ஜாதியின் கோர முகம் தெரிய வந்தது. 3 ஆண்டுகளாக வேப்பமரத்தூரில் கூட்டுக்குடும்பமாக மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த நிலையில் நத்தம் இளவரசன் - திவ்யா காதல் விவகாரத்தில் ஜாதி வெறியர்களின் பிடி இறுகியது.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநா தன் (ஊர் கவுண்டர்) பெரியசாமி கோல்கரை (கவுண்டர்) தங்கராஜ் உட்பட்டோர் தலைமை யின் கீழ் ஊர் பஞ்சாயத் தினர் ஒன்றுகூடி வன் னிய இனத்தை சேர்ந்த பையன் தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஊரில் வசிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஜாதிக்கு ஏற்பட்ட இழுக்காகும் எனவே அந்தப் பெண்ணைத் துரத்திவிட்டு வரவும். அப்படி ஜாதி கெட்டு கீழ் ஜாதிப் பெண்ணு டன் வாழ்ந்தால் உங்கள் குடும்பத்தின் மீது ஊர் கட்டுப்பாடு கொண்டு வருவோம் என கூறி ஊர் திருவிழாவுக்கு கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுத்து ஊர்நிதியில் இருந்து சுரேஷ் வாங்கி இருந்த பணத்தையும் கட்டவைத்ததுடன், ஊர்திருவிழாவில், ஊரில் நடக்கும் திருமணம், சாவு போன்ற நிகழ்வு களில் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள் ளக் கூடாது. ஊராரும் இவர்களை சேர்க்கக் கூடாது. பொதுகுழாயில் தண்ணீர் எடுக்கக் கூடாது கடைகளில் பொருள் வாங்கவோ கொடுக் கவோ கூடாது என ஊர் (கட்ட) பஞ்சாயத்து பேசி சுரேசு குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளதாக ஜாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தெரிவித் தனர்.

அதிலும் வேறு எந்த ஜாதிப்பெண்ணாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறுதியாக தெரி வித்துள்ளதாக கூறியது டன் இளவரசன் - திவ்யா வாழ்க்கை மாதிரி ஆக்கி விடுவோம் என்று மிரட் டியதாகவும் செய்தியா ளர்களிடம் தெரிவித்தனர்.

காவல்துறை என்ன செய்கிறது?

இந்த ஜாதி வெறி பிடித்தவர்களின் மிரட் டலுக்கு பயந்து சுரேஷ் - சுதா ஆகியோர் 22.6.2013-இல் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் (குற்ற எண் 234/2013) இருந்தும் இதன் மீது காவல் துறை யின் நடவடிக்கை ஏதும் இல்லாததால் தினம் தினம் எங்கள் குடும்பத்தி னரை மிரட்டி வருகிறார் கள். ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்காத தால் 17.7.2013-இல் உயி ருக்கு பயந்து மாவட்ட காவல்துறைக் கண்கா ணிப்பாளரிடம் (2ஆவது முறையாக) புகார் மனு கொடுக்க வந்துள்ளோம் என்று தம்பதிகள் தெரி வித்தனர் எங்களது வாழ்க்கை இன்னொரு நத்தம் இளவரசன் - திவ்யா வாழ்வைபோல ஆகிவிடக் கூடாது என்றனர்.

தமிழ் ஓவியா said...


திராவிடர்கள்தான்பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர் கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப் படிக் கூறுகிறோம். - (விடுதலை, 24.2.1954)

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் என்றும் தேவை சுயமரியாதைத் திருமணம்


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்!

ஜூன்26 குடந்தை மாவட்ட கழக வரலாற்றில் மட்டுமல்ல, கழகத் தோழர்களின் குடும்ப வரலாற்றிலும் மறக்க முடியாத, கோலாகல ஒரு கொள்கைத் திருநாள்! ஆம்! குடந்தை கழக மாவட்டத்தில் தோழர்கள் வரவேற்பு - சந்திப்பு என்று தாங்களே மகிழ்ச்சி பொங்க எழுதியும் பாசமிகு கழகக் குடும்பத் தினரைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்த பொன்னாள்! தாங்கள் குறிப்பிட்டி ருந்தபடி ஒவ்வொரு கழகக் குடும்பத் தினருக்கும் ஒவ்வொரு தியாக வர லாறு இருக்கிறது!!

மலரும் நினைவுகளாக அவை களை நினைவு கூர்வதற்கும் ஏஞ்சிய காலத்தில் உறுதியோடும் உற்சாகத் தோடும் பணியாற்றுவதற்கும் கழகக் குடும்பங்களுக்கிடையே ஒரு பாசப் பிணைப்பை ஏற்படுத்துவதற்கும் இளைஞர்களிடையே ஒரு எழுச்சி யையும், விழிப்புணர்ச்சியையும் உருவாக்குவதற்கும் தங்களின் இந்த வருகை மிகவும் பயன்பட்டிருக்கிறது!

கொள்கை உறுதி படைத்த வர்களுக்கு கொடிய பாம்பும், கொடியில் தொங்கும் புடலங்காயே என்ற திண்ணிய உள்ளம் படைத்த கொள்கை மறவர்களின் அறப்போர் பாசறையே அய்யா வளர்த்த அன்புப் பாசறை என்பதை அன்று அனைவரும் உணர்ந்தனர்!

1963-ஆம் ஆண்டில் தாலி கூட அணிவிக்காமல் ஒரு சுயமரியாதைத் திருமணத்தை செய்து கொள்வ தென்றால் எத்தகைய எதிர்ப்புகளை எண்ணங்களை எதிர்கொள்ள வேண் டியிருக்கும் என்பதையும், அதை யெல்லாம் தாண்டி, எப்படி வெற்றி கரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதையும் என் இணையரும் நானும் முடிவெடுத்து கடந்த 50 ஆண்டு காலமாக இகழ்ந்திட்ட உள்ளத்தினரும் இறுதியில் இன்று கை குலுக்கி வாழ்த்துகின்ற நிலையைப் பெற்றிருக்கிறோ மென்றால்... அதற்கு, சுயமரியாதைக் கொள்கை மீது கொண்ட உறுதியும் அய்யா, அண்ணா, கலைஞர் தாங்கள் தந்த துணிவும், தொண்டறமுமே காரணம்!

தாங்கள் எங்களுக்கு சால்வை அணிவித்தபோது... இதுவரை நாங்கள் அனுபவித்த தொல்லைகள் துயரங்கள் அத்தனையும் எங்கோ ஓடிமறைந்தன!

பணியாற்றிய காலங்களில் நாங் கள் இருவருமே நேர்மையானவர் கள்... ஒழுக்கமுள்ளவர்கள்... நாணய மானவர்கள், கொள்கை உறுதி படைத்தவர்கள் என்ற பாராட்டைப் பெற்றிருக்கிறோமென்றால் இது ஒரு சுயமரியாதைக் குடும்பத்திற்குக் கிடைத்ததாகவே கருதுகிறோம்!

இது தற்புகழ்ச்சிக்காக அல்ல; வருங்கால வீறுகொண்ட இளைய சமுதாயமும் சுயமரியாதைப் பாதை யிலே வெற்றி நடைபோட வேண்டும் என்ற அளவற்ற ஆசையினாலே தான்! வேண்டும் என்பதற்காகத் தான்!!

தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் போல் இன்று, தாங் களும் முத்தமிழறிஞர் கலைஞரும் தமிழினத்தின் இருகண்கள்!... ஆனால் பார்வை ஒன்றே! சுயமரியாதைப் பார்வை!!

அந்தப்பார்வை காட்டும் வழியே இறுதி வரை போராடுவோம்! எங்களை எனது 80-ஆவது அகவையில் பாராட்டி பயனாடை அணிவித்த தங்களுக்கும், அம்மாவுக்கும், கழகத்திற்கும் என்றென் றும் நம்பிக்கைக்குரியவர்களாக இருப் போம் என்ற உறுதியையும் தெரி வித்துக்கொள்வோம்!.

நன்றி! நன்றி!! வணக்கம்.

வாழ்க பெரியார்!.

- நெய்வேலி தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


ஆகாயத்தில்...


ஆகாயத்தில் எங்கோ அந்தர உலகத்தில் கடவுள் என்ற ஒருவன் உட்கார்ந்து கொண்டு இவ்விதமாக வெல் லாம் சிருஷ்டி செய்கின்றார் என்று சொல்லப் படுமானால் அத்தகைய பட்சாதாபமுடைய கடவுளை கஷ்டப்படுகிற உலகினர் கழுத்தை பிடித்துக் கீழே தள்ளி மிதித்து விடுவார்கள்.

அத்தகைய கடவுள் இப்படி மிதிபடுவதற்குத் தகுதியானவரே! புதிதாகச் சிருஷ்டிக்கும் ஜீவனை அவலட்சணமாக, அறிவீன னாக ஆரோக்கிய ஹீனமாக சிருஷ்டிக்கும் கடவுள் கொடுங்கோலர் அல்லவா?

(சுப்பிரமணிய சிவா எழுதிய மோட்ச சாதன ரகசியம் என்ற நூலிலிருந்து)

தமிழ் ஓவியா said...

ஒரு பார்ப்பனரின் கணிப்பு

தீண்டாமை என்பது சமய சம் பந்தப்பட்டிருக்கிறது. அதை சமய சம்பந்தத்தினால் தான் தீர்க்க முடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும் ஒடுக்கப்பட்ட மக் களுக்கு தலைவன் என்ற முறை யிலும் உங்களிடம் பேசுகிறேன். நல்ல ஒழுக்கமுள்ள அரிஜன் எப்பொழுது சங்கராச்சாரி பீடத்தில் அமருகின்றாரோ அப்பொழுது தான் தீண்டாமை ஒழிந்த தாகக் கருதமுடியும்.

(காகா கலேல்கார், ஆதாரம்: பெரியார் படைக்க விரும்பிய புதிய மனிதன் என்ற நூல்.)

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி பாரதியார்

தமிழ்நாட்டில் சாஸ்திரங்கள் இல்லை. உண்மை யான சாஸ்திரங்களை வளர்க்காமல் இருப்பனவற்றையும் மறந்து விட்டு, தமிழ்நாட்டு பார்ப்பனர் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள். - காற்று என்ற பாட்டில் பாரதியார் கூறியுள்ளது

தமிழ் ஓவியா said...


கடவுள்


தோழர்களே! நபி அவர்களை நான் ஒரு மகான் என்றோ, அமானுஷ்ய சக்தி படைத்தவர் என்றோ கருதவில்லை. என்னைப் பொறுத்தவரையில், நபி அவர்களை ஒரு மனிதத் தன்மை படைத்த சிறந்த மனிதராகத்தான் கருதுகிறேனேயல்லாமல், அதற்கு மேற்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில் கருதவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முகமது நபி அவர்களுடைய முக்கியமான கருத்துகளிலே தெய்வீகத் தன்மை என்பதை ஒப்புக் கொள்ள முடியாத நம் போன்றவர்களும் மற்றும் பல மதங்களைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகளும் ஆதரவு கொடுப்பதற்கும் ஒப்புக் கொள்வதற்கும் மேற்கொள்வதாக எடுத்துக் காட்டுவதற்கும் பல கருத்துக்கள் இருக்கின்றன.

அவர் என்ன சொன்னார்? ஒரு கடவுள்தான் உண்டு. பல கடவுள்கள் இல்லை என் றார். நீங்கள் கேட்கலாம், நபி அப்படி அதாவது ஒரு கடவுள் என்று சொன்னார்; இதைப் பற்றி உன் கருத்து என்ன? என்று என்னை பொறுத்தவரையில் நான் சொல்கிறேன்;

கடவுள் என்று மக்கள், ஆயிரக்கணக்கான கடவுள்களைக் கட்டி அழுகிறவர்களைவிட நபி அவர்கள் எவ்வளவோ மேலானவர் என்பேன்.

தந்தை பெரியார், 20.12.1953

தமிழ் ஓவியா said...

திதி மந்திரமும் - அதன் பொருளும்

மந்திரம்: என்மே மாதா ப்ரலுலோபசரதி

அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா
பிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யநாம...

பொருள்: நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்ற வர்கள் சொல்வதால் நான் இன்னா ருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்ப வேண்டியுள்ளது. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டு போய் சேர்ப்பீர் என்பது இதன் பொருள்.

இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தமென்ன?

தன் தாயானவள் சந்தேகத்திற்கு உரியவள். தன் கணவனுக்கு உண்மையாக நடக்காதவள். மாற்றானிடம் உடல் தொடர்பு வைத்திருந்தவள் என்ற அடிப்படையில் இந்த மந்திரம் சொல்லப் படுகின்றது. இதைத்தான் மந்திரம் ஓதும் புரோகிதர் சொல்ல திதி கொடுக்கும் மகன் திருப்பி சொல்கின்றான்.

ஆதாரம்: அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாசாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது... பாகம் -1 - பக்கம் 157, நக்கீரன் வெளியீடு.

எனவே இந்துமதப்படி பெற்றோர் களுக்கு நீ திதி கொடுத்தால் உன் தாய் ஒரு விபச்சாரி என்று பொருள். இதைத் தான் இந்து மதம் கூறுகிறது.

தமிழ் ஓவியா said...


மந்திர நீரும் - முடிவெட்டுவோர் நீரும்


பொதுமக்களே! நீங்கள் பார்ப்பனர்களுக்கு பொன்னும் பொருளும் தருகின்றீர்கள். அந்த பார்ப்பனர்கள் உங்களிடம் பொருள் பெற்று தம் கல்வியை பெருக்கி கொள்கின்றனர். பொது மக்கள் அனைவருக்கும் கல்வி அறிவையும் மெய்ப்பொருள் தெளிவையும் கற்றுத் தருவார் களானால், நீங்கள் அவர்களுக்கு பொன்னும் பொருளும் தருவது தகும்.

தெய்வத்தன்மை பொருந்திய நீர் நிலை களிலும், ஆறுகளிலும், வேள்விகளின் போது தலையை மொட்டை அடித்துக் கொள்கின் றீர்கள். அதனால் என்ன பலன்? நீர் நிலை களில் நீராடியதால் தீவினை அகன்றிருந்தால் மொட்டையடித்துக் கொள்வது தேவை இல்லை.

மொட்டை அடிப்பவன் கையால் தெளிக்கும் நீரால் அவர்கள் செய்த தீவினை அகல்வதாக இருக்கும் நிலையைப் பார்த்தால் போற்றத்தக்க நீர்நிலைகளைவிட தலை மழிப்பவனின் கையில் உள்ள நீரே பெருமையுடையதாகிறது. மந்திர நீரைவிட முடி மழிப்பவனின்கை நீர் மேன்மையானது.

தலை மொட்டையானாலும், தாழ்வான எண்ணங்களும் ஜாதி வேறுபாட்டு உணர்வுகளும் மொட்டையடிக்கப் படுவதில்லை அல்லவா? ஆந்திர சீர்திருத்த ஞானி வேமண்ணா

தமிழ் ஓவியா said...

காசியில் இறக்க முக்தி

சில தொண தொண பேர் வழிகள் எதையாவது எழுதிக் கொண்டு வந்து தங் களது அந்தக் கவிதையை சரிபார்த்துத் தரும்படியோ அல்லது அதற்கு மதிப்புரை தரும்படியோ புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம் தொல்லை தருவார்கள்.

காசியில் இறக்க முக்தி, கைலையில் பிறக்க முக்தி என்று இப்படியாக 3 அடிகள் எழுதிய ஒருவர், 4ஆவது அடி தமக்கு வரவில்லை என்றும் அதை முடித்துத் தரவேண்டும் என்று ஒருவர் புரட்சி கவிஞரிடம் வேண்டினார்.

கவிஞர் தமக்குள் சிரித்துக் கொண்டே எனும் புராணக்கூற்றினை ஏற்பதில் இல்லை புத்தி என்று கடைசி வரியை முடித்துக் கவிதையை வந்தவன் கையில் கொடுத்தார். வந்தவன் முகத்தில் வழிந்த அசட்டுத் தனத்தைப் பார்க்க வேண்டுமே!

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட்டம்!


முக்கிய அறிவிப்பு

கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே, ஆகஸ்டு முதல் தேதி, ஆர்ப்பாட்டம் அனைத்து மக்களின் ஆதரவையும் ஒருங்கே பெற்றுள்ளது. இதனை எதிர்ப்பார் குறிப்பிடத்தக்க வகையில் எவரும் இலர்.

1.8.2013 காலை 11 மணிக்கு எங்கும் நடைபெற வேண்டும். நடக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடத்திடக் காவல்துறைக்கு இன்றே அனுமதி கேட்டு எழுதிக் கொடுக்க வேண்டும்.

கழகம் முன்னின்று நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேராதரவு அளிக்க முன் வந்துள்ள தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ஆதரவு தருவோர்களை முன்னிலை என்றும், தொடக்கவுரை என்றும் குறிப்பிட்டு, துண்டறிக்கைகளை, விளம்பரப் பதாகைகளை, சுவர் எழுத்துகளைத் துவக்கி விட்டீர்களா?

தந்தை பெரியார் அறிவித்த மரண சாசனம் போன்ற போராட்டம் தமிழர் சமுதாய இன இழிவை ஒழிக்கும் போராட்டம்!

மிகுந்த உணர்வோடு, கொள்கைத் தாகத்தோடு முனைந்து செயல்படுவீர்!

அனைத்துக் கழக மாவட்டங்களிலும் இது நடைபெற வேண்டும். கழகத் தோழர்கள் அத்தனைப் பேரும் (விடுபடவே கூடாது) குடும்பம் குடும்பமாகப் பங்கேற்க வேண்டும். ஆதரவுக் கரம் நீட்டும் அன்புத் தோழர்களை பிற அமைப்புகளை அணுகுங்கள் - முக்கியம்! முக்கியம்!!

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவைப் பரப்பிடுவோம்


பகுத்தறிவை பக்குவமாய் பரப்பிடுவோம்!
பார்முழுக்க பிரச்சாரம் செய்திடுவோம்!
மக்களுக்கு, கருத்துக்கள் போய்ச் சேர்ந்திடவே!
மனிதநேயத்தை வளர்த்திடுவோம்!
வன்முறை இன்றி கருத்துக்களை
நன்முறையில் விளக்கிக் கூறிடுவோம்!
பெரியாரின் நல்ல பண்புகளை
பெரிதும் கடைப்பிடித்தே வாழ்ந்திடுவோம்!
பெண்ணடிமை ஒழித்து இவ்வுலகில்
தன்மானத்துடன் வாழச் செய்திடுவோம்!
நமது வீட்டு குழந்தைகளை
நன்றாக பகுத்தறிவுவாதி ஆக்கிடுவோம்!
-
கவிஞர் கணக்கப்பா

தமிழ் ஓவியா said...


என்னடா வெங்கட்ட நாயக்கா!


நம் இனம் இந்த உலகில் இருக்கிற வரை இழிவும் நீங்கப் போவது கிடையாது.

இந்த இழிவோடு ரோடு வழியாகப் போகிற பில் கலெக்டர் பார்ப்பான் வருவான்.

என்ன வெங்கட்ட நாயக்கா இன்னக்கி ஒரு பேப்பர் பார்க்கணும்டா சாய்ந்தரம் வாரியா என்று டா போட்டுத்தான் சொல்வான்.

அதற்கு என் தகப்பனார் எழுந்து நின்று ஆகட்டும் சாமி, அவசியம் வருகிறேன் என்று சொல்வார். இத்தனைக்கும் அவன் சாதாரண பில் கலெக்டர். பார்ப்பான் என்கிற ஒன்றைத் தவிர, மற்றபடி அவன் எதிலும் உயர்ந்தவன் அல்லன்.

(குடிஅரசு தொகுதி 17 பக்கம் 267)
க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


குப்பை மேடான கடவுள்!


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த குளமங்கலத்தில் உள்ள அய்யனார்கோயில் குதிரைச் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் மாலைகள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அருகில் உள்ள குளமங்கலத்தில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் என்று ஒரு கோயில் உள்ளது. இக்கோயில் கட்டப் பட்டது கி.பி.1400-வாக்கில் என்று சொல்லப்படுகிறது. மற்றகோயில்களைப் போல்தான் இங்கும் வேலைவெட்டி எதுவும் இல்லாமல் ஒரு குதிரைச்சிலையைக் கட்டி வைத்திருக் கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் அதில் இன்னொன்றும் இருக்கிறது.

பார்ப்பனக்கோயில்கள் எப்படி இருக்கும் பார்ப்பனச் சாமிகளும் கடவுள் கடவுளச்சிகளின் சிலைகளும் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை திராவிடர் கழகம் மட்டும் மேடைக்கு மேடை முழங்கி தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பார்த்தால் இந்த பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் கோயி லுக்கோ சாமி சிலைக்கோ முக்கியத்துவம் தராமல் குதிரைச்சிலைக்கு மட்டும் மக்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.

காரணம் என்னவென்றால் இக்குதிரைச்சிலையின் அமைப்பு ஒரு குதிரை வானத்தில் தாவிப் பாய்வது போன்ற ஒரு தோற்றம் அச்சுப் பிசகாமல் நரம்பு புடைத்து துடிக்கும் அத்தனையும் துல்லியமாகத் தெரியும் வகையில் தமிழனின் கலைத் திறமையை உலகுக்குக் காண்பிக்கும் வகையில் இச்சிலை அமைக் கப் பட்டிருக்கிறது. ஆசியாவிலேயே மிகப் பெரிய குதிரைச்சிலை இதுதான் என்று சொல்லப் படுகிறது. அதனால் ஒரு தமிழனின் கலைவண்ணம் உலகுக்குத் தெரிகிறது என்று சொல்லிக் கொள்ளலாம். அது வேறு விஷயம்.

(ஒரு கோயிலுக்குள் ஒரு பார்ப்பான் புகுந்தால் மற்றவர்களை வெளியேற்றி விடுவான் என்பதற்கு இந்தக்கோயிலும் ஒரு உதாரணம். இக்கோயிலின் பூசகர்கள் என்று சொல்லக்கூடிய படிமாத்தார்கள் பரம்பரை குடியிருப்பே இருந்தும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளூரில் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டும் விவசாயம் செய்து கொண்டும் சென்னைக்குச் சென்று பிழைப்பு நடத்தியும் வருகிறார்கள். ஆனால் இந்தக் கோயிலுக்குள் அர்ச்சகர் என்று சொல்லிக் கொண்டு உட்புகுந்த பார்ப்பான் சில விதிமுறைகளை வகுத் துக் கொண்டு கோயில் நிலத்திலேயே பலலட்ச மதிப்பில் வீடும் கட்டிக் கொண்டு இப்போதைய நிலைக்கு கோடீசுவரனாகி விட்டான் என்பதை இன்றளவும் இந்தக் கிராம மக்களே உணரவில்லை.)

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மாசிமகத் திருவிழாவின்போது சுமார் ரூபாய் 20-ஆயிரம் முதல் 50-ஆயிரம்வரை செலவு செய்து காகிதப்பூமாலை கட்டிக் கொண்டு வந்து குதிரைச் சிலைக்கு அணிவித்து வணங்கி மகிழ்வார்கள். இது வேறு எங்கும் நடக்காத ஒரு செயலாகும். நம் தமிழர்கள் எதைத்தான் விட்டு வைத்திருக்கிறார்கள் குதிரைச்சிலையை விட்டு வைப்பதற்கு?

இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி இப்போது பிளாஸ்டிக் ஒழிப்பில் முனைப்பைக் காட்டி வரும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மனோகரன் இக்கோயில் குதிரைச் சிலைக்கு அணிவிக்கப் பட்டிருக்கும் பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் ஜிகினா மாலைக்கும் தடாபோட்டு விட்ட தோடு குதிரைச்சிலைக்கு இந்த ஆண்டு பக்தர்களால் அணிவிக்கப்பட்ட சுமார் 1200-மாலைகளையும் அப்புறப் படுத்தி மாவட்ட குப்பைக்கிடங்குக்கு அள்ளி வரச் செய்து உத்தரவு பிறப்பித்து விட்டார்.

ஒவ்வொரு மாலைக்கும் ஒவ்வொரு லாரி பிடித்து பக்தர்களால் பெரிதும் போற்றப் பட்டுக் கொண்டு வரப்பட்ட மாலைகள் ஒரே லாரியில் மற்ற குப்பைகளோடு குப்பையாக்கப் பட்டு விட்டது. மேலும் கடந்த ஆண்டுகளில் போடப் பட்ட மாலைகள் அருகில் உள்ள வில்லுணி ஆற்றங்கரையில் அப்படியே மட்காமல் கிடப்பதையும் சுட்டிக் காட்டிய மாவட்ட ஆட்சியர் அனைத்தையும் அக்கிராமத்தை விட்டே அகற்றச் சொல்லி விட்டார். மேலும் வரும் ஆண்டுகளில் ஜிகினா மாலையோ, பிளாஸ்டிக் மாலையோ போடக்கூடாது என்றும் சொல்லி விட்டார். அதனால் அய்யனார் கோபித்துக் கொள்ள மாட்டார் என்பதோடு அவருக்கு பேசும் திறனிருந்தால் மட்காத குப் பையைக் கொண்டு வந்து என் தலையில் கொட்டுகிறீர்களே மக்கான மக்களே என்று வேதனைப் பட்டி ருப்பார். அவர்தான் பேசமாட்டாரே!
- ம.மு.கண்ணன், புதுக்கோட்டை

தமிழ் ஓவியா said...


அர்ச்சகப் பார்ப்பானும் மகனும் உரையாடல்


கோவில் அர்ச்சகரான தந்தையிடம் பார்ப்பன சிறுவன் அப்பா நம்மை நாடி வரும் பக்தர்களுக்காக பூஜை செய்து கடவுளிடம் வேண்டிக் கொள்கிறீர்கள்.

நானும் என் முன்னேற்றம் குறித்து கடவுளிடம் பேச வேண்டும் கடவுள்இருக்கின்றாரா, பேச முடியுமா?

அர்ச்சகப் பார்ப்பான் மகனிடம் கவிதை வடிவில் பதில் கூறுகிறார்.

கவிதை

கவலை கொள்ளாதே கவலை கொள்ளாதே

நம் முன்னேற்றம் பற்றி

கவலை கொள்ளாதே

நம் ஆரிய முன்னோர் செய்த சதியால் இம்மக்கள் முட்டாள்களாக உலவுகிறார்கள்

சூத்திரன் அறியாமையால்

ஆரியன் வீட்டில் அடுப்பெரிகிறது

இவர்களின் முட்டாள் தனமே நம் மூலதனம்

கடவுள் ஒருவன் இருந்தால் - நாம் களவு செய்யலாகுமா?

சாதரண அறிவு கூட இல்லாத

சந்தைக் கூட்டமடா?

முட்டாள்கள் இருக்கும் வரை

முன்னேற்றம் பற்றி கவலை கொள்ளாதே.

நோகாமல் நுங்கு திங்கும் வித்தை

நாம் காலம் காலமாக கற்ற வித்தை

அறியாமை சூத்திரன் உள்ளவரை -

அரிசி தானியத்திற்குப் பஞ்சமில்லை

ஒரறிவு கூட அற்ற (கடவுளை) கல்லை நட்டு

ஆறறிவு கொண்ட மக்களை

அல்லாட வைக்கும் ஆற்றலை

அல்லவா பெற்றுள்ளோம்.

முட்டாள்கள் உள்ளவரை முன்னேற்றம்

பற்றி கவலை கொள்ளாதே!

கடன் வாங்கி காவடி எடுத்து - நம்

கண்ணீர் துடைப்பான்

பால்குடம் எடுத்து நம் வயிற்றில்

பாலும் வார்ப்பான்.

அவன் சாமி ஆடிக் கொண்டாலும் நம்மைத்தானே

ஆடாமல் அல்லல் படாமல்

வாழவைக்கும் (சூத்திரதாரிகள்)

எங்கு கிடைக்குமடா?

இப்படியொரு அடிமைகள்

உழைத்து தேய்ந்து உடல் கறுத்து

சேர்த்த காசெல்லாம் நம்

ஆரியத்தின் சேமிப்புக்குத் தானே இடுகின்றான்.

பாமரக் கூட்டத்தால் பஞ்சம் நமக்கு இல்லை.

காட்டு மிராண்டிகள் உள்ள வரை

(கடவுள்) கல்லும் சாம்பலும்

ஆரியக் கூட்டத்தை காக்கும்

அற்புத தொழில் நுட்பம்

கருவிலே கூட களங்கத்தை வைத்தோம்

மதிகெட்டு மானமிழந்தாலும் - ஆரியரை

மணத்தோடு நயம் பட வைக்கிறான்

முன்னேற்றம் பற்றி

கவலை கொள்ளாதே! கவலை கொள்ளாதே!

தொடாதே தீட்டு என்றாலும்

தொடர் காணிக்கை தரும்

தொலை நோக்கு மந்தைகள் அல்லவா,

மங்கையர் அணிவகுப்பு

மல்லிகை மலர்களின் சரம் தொடுப்பு

மதிமயங்கும் நறு மணங்கள்

மங்கையர் மூச்சின் மோகம் - உனக்கு

வயது வந்தால் வாழ்வின் ரகசியம் புரியும்

கல்லை காட்டியே கல்லாவை நிரப்பும் சாணக்யம்

மந்தைகள் நிறைந்த மன்றத்தில் - ஆரியர்கள் மேதாவியே

சூடு சொரணை இல்லையென்றாலும் - நமக்கு

சோறிடும் பண்பு மாற மடமைகள்

பால் பழம் நெய் பல வகை - பட்சணங்கள்

பகலவன் படாத தேகம் - பகட்டு வாழ்க்கை

சல்லாபம் உல்லாசம் மலர்மணம் - சுகபோகம்

முன்னேற்றம் பற்றி கவலை கொள்ளாதே! கவலை கொள்ளாதே!

எல்லாம் இருப்பினும் எதிரிக்கூட்டம்

உண்டென்று சொல்வேன்

உள்ளத்தில் வைத்துக் கொள் - கொடும்

உணர்வுடன் பகைத்துக் கொள்

ஈரோட்டுச் சிங்கமொன்று - இடைவிடாது

சிந்தித்ததால் விடையின்றி கிடந்தவன்

வீறு கொண்டு எழுந்தான் - கிழவரின்

பல் முனைத்தாக்குதலால் - ஆரியக் கூட்டம்

பரிதவித்து நின்றோம்.

பூசைகள் யாகங்கள் எத்தனை செய்தாலும் அக்கிழவன்

புத்திக்கு பதில் சொல்ல இயலாது

அவரது நகல்கள் என்றுமே

அசாத்திய சாதனைகளின் பிறப்பிடம்.

எச்சரிக்கை கொள் இருப்பினும்

கவலை கொள்ளாதே! வாழ்வு பற்றி கவலை கொள்ளாதே!- இராமகிருட்டிணன், திருநெல்வேலி

தமிழ் ஓவியா said...


எத்தனை முட்டாள்கள்?
இந்தக் கூட்டத்தில் உள்ளவர்களில் இன்னமும் எத்தனை முட்டாள்கள் திவசம் செய்கிறீர்கள். உன் அப்பன் செத்தான்.

நீதானே குழியில் போட்டுப் புதைத்தாய்?

தீயிட்டுக் கொளுத்தினாய்? அதன்பின் எதற்காக உன் அப்பனுக்குத் திவசம் கொடுக்கிறாய்?

செத்தவன் நரகத்திற்குப் போகிறான்.

சொர்க்கத்திற்குப் போகிறான் என்கிறபோது மறுபிறப்பு, பிதிர்லோகம் என்பது பித்தலாட்டந்தானே? இதன் மூலம் காசு கொடுப்பவன், நாமாகவும், காசு பெறுபவன் பார்ப்பான் தானே?

- தந்தை பெரியார்

(பெரியார் களஞ்சியம் தொகுதி 19 300ஆம் பக்கத்தில் இருப்பது)

தமிழ் ஓவியா said...


அட, பைத்தியங்களே!உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் பரிதாபகரமாகப் பலியானார்கள்.
அதே நேரத்தில் புனித கோயில் களுக்கு எந்த சேதாரமும் இல்லை என்று ஒரு பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர். (கடவுளைக் காப்பாற்று கிறார்களாம்) அதே நேரத்தில் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகத் தகவல்கள் வெளிவர ஆரம்பித்து விட்டன. கேதார் நாத் கோயில் பெரும் சேதத்துக்கு ஆளாகி விட்டதாம். ஆனாலும் கருவறைக்குப் பாதிப்பு இல்லையாம். அப்படியானால் கருவறை மட்டும் தான் கோயிலா? கோயில் என்று இப்பொழுது சொல்கிறார்களே. அதன் வடிவங்கள் _- அவை எல்லாம் வெறும் பில்டப் தானா?

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார்


கணவன் - மனைவி என்பது கிடையாது. ஒருவருக்கொருவர் துணைவர்கள்; கூட்டாளிகள் என்பது தான் உண்மை.
- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...


சு.சாமியே நில்! சொல்!


அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்காக நமக்கு சனாதன தர்மம் வர்ணசிரமத்தை அளித்துள்ளது. அது பிறப்பின் அடிப்படையில் இருந்தது இல்லை. சந்திரகுப்த மன்னன் தன் - செயல்களால் க்ஷத்திரியனாகத் திகழ்ந்தான்; பிறப்பினால் அல்ல. பாரத் வர்ஷா (ஆர்யா வர்த்தம்) என்ற, எப்பொழுதும் இருந்திராத, ஒரு தேசத்தை வலுவான தேசத்தை உருவாக்கினான். அன்னியப் படையெடுப் பாளர்கள் நம்மிடையே உள்ள துரோகிகளைக் கொண்டு அதை ஒரு கடுமையான சாதி அமைப்புகளைக் கொண்டதாக மாற்றி விட்டார்கள் (அது மேலை நாட்டினரால் நம்மீது திணிக்கப்பட்டது) அதன் மூலம் இன்று நாம் பார்க்கும் இந்திய சமூகத்தின் சீர்குலைவுகள் ஆரம்பமாகின. இந்தக் கடுமையான நிலையிலிருந்து விடுதலை பெற வீர இந்துவாக ஒன்று படுவோம் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வருங்காலப் பத்தாண்டுகளில் நாம் அழிந்து போகத் தயாராக இருக்க வேண்டும்.

நாம் நமது தேசத்தைச் சீர் செய்ய வேண்டுமென்றால், சனாதன வீர இந்துத்துவாதான் எதிரே நிற்கும் ஒரே வழி.

இவ்வாறு சு.சாமி திருவாய் மலர்ந்துள்ளார்.

பிறப்பின் அடிப்படையில் வருணாசிரமம் இல்லை _ - கிடையாது என்று சு.சாமி அறிவு நாணயத்துடன் நம்புவாரேயானால், சங்கர மடத்தில் சங்கராச்சாரியார் வருவது பிறப்பின் அடிப்படையிலா இல்லையா?

கோயில் அர்ச்சகர்களாகப் பார்ப்பனர்கள் வருவது பிறப்பின் அடிப்படையிலா இல்லையா?

இவற்றை மாற்ற வேண்டும் என்று சு.சாமி அய்யர் சங்கரமடத்தின் முன் மறியல் நடத்துவாரா? கற்பகாம்பாள் கோயில் முன் கண்டனக் கூட்டம் நடத்துவாரா?

சு.சாமி பூணூல் போட்டு இருப்பது பிறப்பின் அடிப்படையிலா? - குணத்தின் அடிப்படையிலா?

நாணயமாகப் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்!

தமிழ் ஓவியா said...


நன்றி மணக்கும் கடிதமும், நன்கொடையும்


ஈரோடு-18-07-2013 வியாழன் அன்று பிரபல எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் பி.டி.சக்திவேல்-மகப்பேறு மருத்துவர் சவுந்திரம் சக்திவேல் இணையரின் மகன் பிரதீப்குமார் அவர்களுக்கு இந்த ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.

சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றி ஒடுக்கப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புக் கதவைநீதிக்கட்சி ஆட்சி மருத்துவப் படிப்பிற்குத் திறந்தது. அதற்கும் தந்தைபெரியார் தான் காரணம்,அதனைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டிற்காக போராடி, இட ஒதுக்கீடு பெற்றுத்தந்ததும் தந்தைபெரியார்தான் இன்றுவரை தந்தைபெரியாரின் இயக்கமான திராவிடர்கழகம் சமூக நீதிக்காக பல்வேறு களங்களைக்கண்டு மாபெரும் வெற்றிகளைத் தமிழ் சமுதாய ஒடுக்கப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெற்றுத்தந்துள்ளது.குறிப்பாக தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்களின் பணி அளப்பரியது.தந்தை பெரியார், விடுதலை, ஆசிரியர் கி.வீரமணி இவர்களது உழைப்பால் இடஒதுக்கீடு (கல்வி,வேலை வாய்ப்பு) தமிழ்நாட்டிலும்,மண்டல்கமிசன் மூலம் இந்தியாவெங்கும் சிறப்பான முறையில் நடைமுறைக்கு வந்துள்ளது.

இட ஒதுக்கீட்டு முறையில்தான் நானும்,எனது இணையர் சவுந்திரம் அவர்களும் மருத்துவர்களாக படித்து பயன்பெற்றோம்,அதனால் நாங்களும் இச்சமூகத்திற்கு பயன்படுகிறோம். அந்த வகையில் எங்களது மகன் பிரதீப்குமாருக்கு கோவை அரசு மருத்துவக்கல்லூரி யில் 2013-இந்த ஆண்டு இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.எனவே வாழையடி வாழையாக தமிழ் சமூகம் உயர்வதற்கு உழைத்துவரும் விடுதலை" வளர்ச்சிக்கு நன்றியுடன் ரூபாய் 10000/.(பத்தாயிரம்) வங்கிவரையோலையாக வழங்கி மகிழ்கிறோம். நன்றி.

நன்றியுடன் மருத்துவர் பி.டி.சக்திவேல் எம்.பி.பி.எஸ். எம்.எஸ்.ஆர்த்தோ, ஈரோடு. சக்தி நர்சிங்ஹோம், எலும்பு முறிவு மருத்துவமனை, பைபாஸ் சாலை, கொல்லம்பாளையம், ஈரோடு-638002.

18-07-2013 அன்றுமாலை 6 மணியளவில் மருத்துவர் பி.டி.சக்திவேல் அவர்கள் வங்கிவரையோலையை மண்டல தி.க.செயலாளர் ஈரோடுசண்முகம் அவர்களிடம் ஒப்படைத்தார் உடன் மாநகர தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட சு.ம.திருமண அமைப்பாளர் ப.சத்தியமூர்த்தி,மாநகர இளைஞரணித் தலைவர் ஜெபராசுசெல்லத்துரை.

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கலாமா?இம்மாதம் 16ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களில் இரண்டாவது தீர்மானம் - இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதாகும்.

54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டது இந்தக் காமன் வெல்த்தாகும். சுழற்சி முறையில் இந்தக் காமன்வெல்த் மாநாடு ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுகிறது.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று குரல் உலக நாடுகளில் ஓங்கி ஒலிப்பதற்கு என்ன காரணம் என்பது சிந்திக்கப்பட வேண்டாமா?

காரணம் - அங்கே மிகப் பெரிய இனப்படு கொலை நடந்திருக்கிறது. இனப்படுகொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அவ்வாறு செய்தி ருப்பதை இன்றுவரை நியாயப்படுத்திக் கொண்டும் இருக்கிறது.

குறிப்பாக இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று அழுத்தம் கொடுப்பதற்கு அதிகமான காரணங்களும், நியாயங்களும் இருக்கின்றன.

1983 ஆகஸ்டு 16ஆம் தேதியன்று இந்திய நாடாளுமன்றத்திலேயே அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இலங்கையில் நடப்பது இனப் படுகொலையே என்பதைத் தெரிவித்திருக்கிறார் என்பதை இந்திய அரசு அறியும் பட்சத்தில் அது எப்படி இனப்படுகொலைக்குக் காரணமாகவிருந்த அதிபரின் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்? கலந்து கொள்ளவும் முடியும்?

இந்த அடிப்படையான கேள்விக்கு இந்தியா பதில் சொல்லக் கடமைப்படவில்லையா?

வெளிநாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்த பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் ஒரு பேட்டியில் இலங்கையில் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அங்கு தமிழர்களில் மிதவாதிகள்கூட தீவிரவாதிகளாகும் விபரீதம் ஏற்படும் என்று கூறியுள்ளாரே! (23.9.1984)

இந்திரா காந்தி அவர்களைத் தலைவராகவும், கட்சியின் வழிகாட்டியாகவும் கருதக் கூடிய இன்றைய மத்திய அரசு, அவரின் குரலை - குரலில் அடங்கியுள்ள நியாயத்தை ஆழமாகப் புரிந்து கொண்டு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டாமா?

இனப்படுகொலை நடைபெறும் எந்த நாட்டிலும் மனிதாபிமானம் உள்ள எந்த நாடும் தலையிடுவதற்கு உரிமை உண்டு என்று (ழுநநேஎய ஊடிஎநவேடி - 1948) அய்.நா.வின் சட்ட விதி கூறியிருக்கிறதே.

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க விதிமுறைகளும், நியாயங்களும் ஏராளமான அளவில் குவிந்து கிடக்க, இந்தியா வேறு மாதிரி நடந்து கொள்வது உலக நாடுகள் மத்தியிலும், குறிப்பாக மனித உரிமை விரும்பிகள் மத்தியிலும் அவப் பெயரைத் தேடிக் கொள்வதாகும். இது 120 கோடி இந்திய மக்களுக்கு ஏற்படும் தலைக்குனிவும் ஆகும்.

16ஆம் தேதி டெசோ கூட்டத்தில் பல முக்கிய மான தகவல்கள் எடுத்துக்காட்டவும் பட்டுள்ளன.

கனடா நாடு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதாக கூறியுள்ளது. பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் குறிப்பாக காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு, ஆஸ்திரேலியாவின் மனித உரிமைச் சட்ட மய்யம் முதலியவை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளனவே! காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் ஒருமனதாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனரே!

டெசோ கூட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலும், கருத்தும் மிக மிக முக்கியமானவை.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடை பெறுவது உறுதியாகி விட்ட நிலையில், காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால், அதன் காரணமாகவே அடுத்த இரண்டாண்டு களுக்கு காமன்வெல்த் மாநாட்டின் அவைத் தலைவராக ராஜபக்சே இருப்பாரென்றும், அதனால் 54 நாடு களைக் கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரை நீதி விசாரணைக்கு உட்படுத்துவது இக்கட்டாக ஆகிவிடக் கூடுமென்றும், வலிமையான கருத் துகள் முன் வைக்கப்படுவதால், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா நட்பு நாடு என்று கூறிக் கொண்டு அதிலே கலந்து கொள் ளுமேயானால் அங்கே நடைபெற்ற இனப்படு கொலைகளை இந்தியா ஏற்றுக் கொள்வது போலாகி விடும் என்று டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வரிகள் மிக மிக முக்கியமானவை அல்லவா!

இந்தியா காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப் பதன் மூலம் ஈழப் பிரச்சினையில் இதுவரை சம்பாதித்து வைத்துள்ள அவப் பெயரை - பழியைப் பெரும் அளவில் துடைத்துக் கொள்ள நல்லதோர் வாய்ப்பாக அமையுமே! இந்தியா சிந்திக்குமாக!

தமிழ் ஓவியா said...


பாடுபடுவான்இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாகக் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்குக் கடுகளவு சுயமரியாதையாவது இருக்குமானால், அவன் மனித இழிவைப் போக்கத்தான் முதலில் பாடுபடுவான்.
(குடிஅரசு, 3.5.1936)

தமிழ் ஓவியா said...

குடிஅரசு வாசகர்களுக்கு ஓர் உண்மையான முன்னறிவிப்பு

அன்புள்ள வாசகர்களே!

இதுசமயம் நமது குடி அரசு வாரா வாரம் 4000 பிரதிகள் வரை போய்க் கொண்டிருந்தாலும், சட்டசபைத் தேர்தல் தீர்ந்த அடுத்த வாரம் முதல் கொண்டே சுமார் 1000 அல்லது 1500 பிரதிகள் திடீரென்று குறைந்து சுமார் 2500 பிரதிகள் போலத் தான் போக நேரிடும். ஏனெனில், சட்டசபைத் தேர்தலின் பொருட்டு நமது பார்ப்பனர் செய்துவரும் பொய்ப் பிரசாரத்தை வெளிப்படுத்த வேண்டி `குடிஅரசுக்கு முன்பணமாக சந்தா வந்தாலும் வராவிட்டாலும் இதுவரை அனுப்பிக் கொண்டே வந்தோம். இதனால் பெருத்த நஷ்டமும் நேரிட்டிருக்குமென்று சொல்லத் தேவையில்லை. ஆதலால் சில பாக்கிதாரருக்கு மாத்திரம் வி.பி.பி மூலம் அனுப்பி பார்க்கவிருக்கிறோம். தேர்தல் முடிந்தவுடன் வி.பி.பி. திருப்பியவர்களுக்கும் சந்தா பாக்கிதாரர்களுக்கும், முன்பணமனுப்பாதவர் களுக்கும் பத்திரிகைகள் அனுப்பப்படமாட்டா. நிற்க, தேர்தல் முடிந்த பின்னர் நமது `குடிஅரசு அரசி யலையே முக்கியமாய்க் கருதாமல் மக்களின் சுயமரியாதையைக் கெடுக்கும் பார்ப்பனியத்திற்கு ஆதாரமான வேதம், சாஸ்திரம், மிருதி, இதிகாசம், புராணம் என்று சொல்லப்பட்ட ஆரிய சம்பந்தமான நூல்களிலும், செயல்களிலுமுள்ள தந்திரங்களையும், புரட்டுகளையும், பட்சபாதகங்களையும், வஞ்சனைகளையும் தெள்ளத்தெளிய விளக்குவதோடு அந்நூல்களிலுள்ள விஷயங்களை நமது பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக எப்படி மறைத்தும், திருத்தியும், தப்பு வியாக்யானப் படுத்திக் கூறியும், நம்மை ஏமாற்றி வருகிறார்கள் என்பதையும் முறையே வெளியிடுதலையே பிரதானமாய்க் கருதி தக்க ஏற்பாடுகள் செய்துள் ளோம். ஆதலால் சந்தா பாக்கியுள்ளவர்கள் சந்தாத் தொகையை அனுப்பியும் மற்றவர்கள் புது சந்தாதாரர்களாக சேர்ந்தும் `குடிஅரசை ஆதரித்து அடுத்த மாத ஆரம்பத்திலிருந்தே வாசித்து வர வேண்டுமென நாம் மனப்பூர்வ விநயமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு - ஆசிரியர் அறிவிப்பு, 17.10.1926

தமிழ் ஓவியா said...

தமிழ் நாட்டிலிருந்து
`மற்றொரு இந்தியத் தலைவர்

பண்டித மோதிலால் நேரு அவர்கள் தனக்கு அசவுகரியம் ஏற்படும் போதெல்லாம் நம் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களில் ஒருவரைத் தான் பதில் (ஆக்டிங்) தலைவராய் நியமிப்பது வழக்கம். அதுபோலவே சென்ற வாரமும் தனக்கு லாகூரில் இருக்க சவுகரியமில் லாததால் ஸ்ரீமான் எஸ். சத்திய மூர்த்தி சாஸ்திரிகளை வந்து தனது தானத்தை ஒப்புக்கொள்ள அழைத்து இருக்கிறார். முதல் தடவை ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு அழைப்பு வந்தது. மறுதடவை ஸ்ரீமான் எ. ரெங்கசாமி அய்யங்காருக்கு அழைப்பு வந்தது. மூன்றாம் தடவை ஸ்ரீமான் எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரிகளுக்கு அழைப்பு வந்திருக்கிறது. இனி நான்காந்தடவை கும்பகோணம் சக்கரவர்த்தி அய்யங்காருக்கு அழைப்பு வருமென்று எண்ணுகிறோம். இந்தியாவின் பாக்கியமே பாக்கியம். அதிலும் தமிழ்நாட்டின் பாக்கியமே பாக்கியம்.
- குடிஅரசு - செய்திக்குறிப்பு, 10.10.1926

தமிழ் ஓவியா said...

செந்தமிழ்ச் செல்வி (மாத வெளியீடு)

நாகரிகத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் பத்திரிகைகள் தலைசிறந்து நிற்கும். மேனாடுகளை நோக்க நமது நாட்டில் பத்திரிகைகளின் தொகையும் செல்வாக்கும் குறைவுதான். பல அறிஞர்களின் உள்ளக் கருத்துக்களை ஒருங்கு திரட்டி உணர்த்தலால் மக்கள் அறிவைப் பண்படுத்துதலில் பத்திரிகைகள் வல்லன. நமது நாட்டில் தினசரி, வாரப் பத்திரிகைகள் அரசியல் கிளர்ச்சியில் பாய்ந்து செல்லும் வேகத்தில் சமூக சீர்திருத்த விஷயத்தில் அசிரத்தை காட்ட வேண்டிய நிலையில் இருக்கின்றன. கல்வி, சமயம், தத்துவம், சமத்துவ உணர்ச்சி ஆகிய விஷயங்களில் எல்லோருக்கும் பயன்படத்தக்க ஒரு திறமான திருத்தம் ஏற்பட்டால்தான் நமது சமூகத்தை பிணித் திருக்கும் குருட்டு நம்பிக்கைகள் ஒழியும். இத்துறையில் வேலை செய்யவல்லன மாத வெளியீடு களே யாகும். ஏனெனில் அறிஞர்கள் சாவதானமாக ஆராய்ந்து கண்ட முடிவுகளே அவற்றில் வெளிவர இயலும். தமிழ்நாட்டில் அத்தகைய திங்கள் வெளியீடுகளிற் சிறந்தது நமது செந்தமிழ் செல்வி எனத் துணிந்து கூறலாம். இதில் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர்களான பேரறிஞர்களின் ஆராய்ச்சி உரைகளே வெளிவருகின்றன. பார்ப்பனியத்தின் மாயப்புரட்டுகள் வெளியாக்கப்படுகின்றன. தமிழர் நாகரிகம் தெள்ளத்தெளிய விளக்கப்படுகிறது. பண்டைய இலக்கிய இலக்கண ஆராய்ச்சிகளும் புதிய மேனாட்டுச் சாஸ்திர முறைகளும் ஆராய்ச்சி வல்லு நரால் பொருத்தமாய் எழுதப்படுகின்றன. மதுரைத் தமிழ்ச் சங்கத்தினின்றும் மாதம்தோறும் வெளியாகும் செந்தமிழ் வெளியீடு பார்ப்பன கோஷ்டி கையிலகப்பட்டுப் பார்ப்பனமயமாகிக் கொண்டிருக்கிறது. அதைத் தோற்றுவித்த ஸ்ரீமான் பாண்டித்துரைத் தேவரவர்களின் உத்தேசம் அடியோடு புறக்கணிக்கப் படுகிறது. பார்ப்பனரல்லாதார் பொருள் ஏராளமாயிருந் தும் சேதுபதி மகாராஜா தலைவராயிருந்தும் தமிழ்ச் சங்கத்தையும் அதைச் சார்ந்த கலாசாலையையும் `செந்தமிழ் மாத சஞ்சிகையையும் பார்ப்பனராதிக்கத்தில் ஒப்படைத்திருப்பது பரிதபிக்கத்தக்கது. இக்குறை களைக் கண்டே பல தமிழபிமானிகள் தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்னும் பெயரால் மற்றொரு உண்மை தமிழ்க் கழகம் கண்டனர். மதுரை தமிழ்ச் சங்கத்தைப் போல் தென் இந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கு புதுக்கோட்டை மகாராஜா, ராமநாதபுரம் மகாராஜா, ஏனைய ஜமீன்தார்கள், நாட்டுக் கோட்டை, நகரத்தார், பிரபுக்கள் முதலியோருடைய நன்கொடைகளும் ஆதரவும் இல்லையாயினும் அது தோன்றிய குறுகிய காலத்துள் நாவலர் பதிப்பு, சங்கப் பதிப்பு ஆகியவைகளையும் தோற்கடிக்கத்தக்க நிலைமையில் பல பழைய புதிய நூல்களை அது வெளியேற்றியிருக்கிறது. ஒரு சிறு பிழையுங்காண முடியாது. பெரும்பாலும் புத்தக கட்டடங்களும் நவீன முறையில் கண்கவர் வனப்பின வாயிருக்கும். நாம் தலைப்பிற் குறித்த `செந்தமிழ்ச் செல்வியும் இக்கழகத்தினின்றும் வெளிவருவதுதான். உயர்திரு வாளர்கள் கா. சுப்பிரமணியப் பிள்ளையவர்கள், எம்.ஏ., எம்.எல்., பா.வே. மாணிக்க நாயக்கர் போன்ற இரு மொழிப் புலவர்களின் பேராதரவு பெற்ற நமது, `செந்தமிழ்ச் செல்வியின் மாட்சியை விளக்கவும் வேண்டுமோ? தமிழ் மக்களின் முன்னேற்றங் கருதி உழைக்கும் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மணி, திருநாவுக்கரசு முதலியாரவர்களே நமது செல்வியின் ஆசிரியராவார்கள்.

வடமொழிக் கலப்பில்லாத `தனிச் செந்தமிழ் நடை படிக்கப் படிக்க இனிக்கும். ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் அன்புடன் வரவேற்று ஆதரிப்பாராக.

வருட சந்தா

உள்நாடு ரூ.3-0-0
வெளிநாடு ரூ.3-8-0
கிடைக்குமிடம்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (லிமிடெட்), 306 லிங்கி செட்டி தெரு, சென்னை.

- குடிஅரசு - நூல்மதிப்புரை - 10.10.1926

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


1921 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் - இரண்டு பார்ப்பனர்கல் விவசாய வேலை செய்தார்கள் என்பதற்காக, அவர்கள் ஜாதி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பதும், இதற்கு சங்கராச்சாரியும் உடந்தை எனபதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

தற்கொலை


விலைமதிப்பற்ற மனித உயிரைத் தற்கொலை செய்து போக்கிக் கொண்டோர் எண்ணிக்கையில் 2012ஆம் ஆண்டில் (19,927) தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தேசிய அளவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குடும்பப் பிரச்சினை, நோய், காதல் பிரச்சினை, வருமானமின்மை, வரதட்சணைக் கொடுமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மனிதர்கள் தற்கொலை முடிவுக்கு வருகின்றனர். இதில் இரண்டாம் இடத்தில் (16,112) மகாராஷ்டிராவும், மூன்றாம் இடத்தில் மேற்கு வங்கமும் (14,957) உள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை உடல்நலக் குறைவால் 3,663 பேர்களும் குடும்பப் பிரச்சினையால் 4,842 பேர்களும் தற்கொலை செய்துள்ளனர். உடல்நலக் குறைவு அடிப்படையில் தேசிய அளவில் மூன்றாம் இடத்தையும் குடும்பப் பிரச்சினை அடிப்படையில் இரண்டாம் இடத்தையும் தமிழகம் பெற்றுள்ளது.

19 வயதிலிருந்து 29 வயதுக்குட்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டதில் மணிப்பூர் (46,635) முதலிடத்தில் இருக்கிறது. 15லிருந்து 29 வயதுக்கு உட்பட்டவர்களில் 43.8 சதவிகிதம் குடும்பப் பெண்களும் 78.8 சதவிகிதம் மாணவர்களும், 30லிருந்து 44 வயதுவரை உள்ளவர்களில் 36.7 சதவிகிதம் விவசாயிகளும் 35.2 சதவிகிதம் வேலைவாய்ப்பற்றவர்களும் தற்கொலை செய்துள்ளனர்.

திருமணமானவர்களே அதிக அளவில் தற்கொலை செய்துள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

முருகன் ஆலயத்தில் பெரியார்1942-ஆம் ஆண்டு டி.கே.சி.யிடம் செயலராகப் பணிபுரிந்த எஸ்.வேங்கட சுப்பிரமணியம் (எஸ்.வி.எஸ்.) குற்றாலத்தில் டி.கே.சி.யின் இல்லத்தில் தங்கி இருந்தார். ஒருநாள் நண்பகலில் பெரியார் ராமசாமி மாட்டு வண்டியில் டி.கே.சி.யின் இல்லத்தைக் கடந்து சென்றதை எஸ்.வி.எஸ். கண்ணுற்றார். இதனை டி.கே.சி.யிடம் தெரிவித்தார். உடனே டி.கே.சி. எஸ்.வி.எஸ்ஸிடம் பெரியார் எவ்விடத்தில் தங்குகிறார் என்பதனை அறிந்து வருமாறு பணித்தார். எஸ்.வி.எஸ். அதனை ஏற்று அருகில் உள்ள பங்களாவில் பெரியார் தங்கியிருக்கிற செய்தியினை டி.கே.சி.யிடம் தெரிவித்தார்.

மீண்டும் டி.கே.சி. எஸ்.வி.எஸ்ஸை நோக்கி, பெரியாரிடம் சென்று மதிய உணவு உண்டுவிட்டாரா? இல்லையெனில் தமது இல்லத்தில் இருந்து அனுப்பி வைக்கலாமா? என்பதை அறிந்துவருமாறு கூறினார்.

பெரியார் கடந்து சென்றதை ஏன்தான் டி.கே.சி.யிடம் சொன்னோமோ என்று எஸ்.வி.எஸ். தமக்குள்ளேயே முணு முணுத்தார். பெரியார் பிராமண குலத்துக்குப் பரமவைரி; காங்கிரஸ் கொள்கைகளை அறவே பிடிக்காதவர். கம்ப ராமாயணத்தையே தீயிட்டுக் கொளுத்தியவர். இச்செயல்களால் அவருக்குப் பெரியாரைச் சிறிதும் பிடிக்காது. தமக்குப் பிடிக்காத கொள்கைகளைக் கொண்ட பெரியார் மீது கம்ப ராமாயணத்தை உயிர் மூச்சாகக் கொண்ட டி.கே.சி. எல்லையற்ற பாசத்தைக் கொட்டுகிறாரே! நல் உபசரிப்பையும் நல்குகிறாரே என நினைத்துப் பெரிதும் வேதனையுற்றார்.

இதனைக் குறிப்பால் உணர்ந்த டி.கே.சி. பெரியாரின் கொள்கைகளைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அவர் ஒரு லட்சியவாதி. சீர்திருத்தச் செம்மல். தள்ளாத வயதிலும் நாடெங்கிலும் அயராது தம் கொள்கைகளைப் பரப்பி வருகிறார். இத்தகு பெரியாரை நாம் உபசரிப்பதில் என்ன தவறு? என்று கூறி உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.

வேறு வழியின்றி வேண்டா வெறுப்புடன் எஸ்.வி.எஸ். பெரியாரிடம் சென்று டி.கே.சி. கூறிய விபரத்தைச் சொன்னார். பெரியாரும் மதியம் வீட்டிலிருந்து உணவு அனுப்புங்கள் என்றார். அதற்கிணங்க டி.கே.சி. வீட்டிலிருந்து அறுசுவை உணவு பெரியாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பசியுடன் இருந்த பெரியாரும் உணவைச் சுவைத்து உண்டு மகிழ்ந்தார்.

அதே ஆண்டு மற்றொரு சமயம் பெரியார் ராமசாமி குற்றாலத்தின்கண் அமைந்த டி.கே.சி.யின் இல்லத்திற்கு வருகை தந்தார். டி.கே.சி. தமது மணிவிழாவினைக் கொண்டாட அவ்வமயம் திருவிலஞ்சிக் குமரன் கோவிலுக்குச் சென்றுள்ளதை அறிந்தார். உடனே தமது வண்டியை நேராகத் திருவிலஞ்சிக் குமரன் கோவிலுக்கு ஓட்டிச் செல்லுமாறு பணித்தார். உடன் இருந்த பெரியாரின் நாத்திகத் தொண்டர்கள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாயினர். அவர்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தும்கூட பெரியார் அதனைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. நேராகத் திருவிலஞ்சிக் குமரன் ஆலயத்திற்குள்ளேயே சென்றார்.

பெரியார் பெரிய நாத்திகவாதி. கடவுள் நம்பிக்கை அறவே இல்லாதவர். இருப்பினும் டி.கே.சி. மீது கொண்ட அளப்பரிய அன்பினாலும், மட்டற்ற மதிப்பினாலும் ஆலயத்திற்குள்ளேயே சென்று அவரைக் கட்டித் தழுவி வாழ்த்துக் கூறி அக மகிழ்ந்தார்.உடனிருந்த நாத்திகத் தொண்டர்கள் பெரியாரிடம் தணிந்த குரலில், அய்யா, தாங்கள் முருகன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கலாமா? என வினவினர். உடனே பெரியாரும், அறுபதாம் கல்யாணம் முருகனுக்கு இல்லையப்பா! நம்ம முதலியார்வாளுக்குத்தானே! அதுல நான் கலந்துக்கறதல என்னப்பா தவறு? என மறுத்துரைத்தார்.

பின்பு பெரியார் டி.கே.சி.யோடும், நண்பர் களோடும் பந்தியில் அமர்ந்து சித்திரான்னங்களை விரும்பி ருசித்து உண்டுவிட்டுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

பெரியார் தெய்வ மறுப்புக் கொள்கை உடையவராயினும், டி.கே.சி.யின் நட்புக்கு அதிக மதிப்புக் கொடுத்தார் என்பதை உணர்ந்து, உடன்வந்தோர் அனைவரும் ஆறுதல் அடைந்தனர்.

தமிழ் ஓவியா said...

யாகம் நடத்துவது அறநிலையத்துறையின் வேலையா?

இந்த ஆண்டு, சரியான மழை _- காலத்தே பெய்யும் பருவ மழை போதிய அளவு இல்லை என்பதால் வறட்சி நிலவுகிறது. வடமாநிலங்களில் அபரிமிதமான மழை, வெள்ளக்காடு _- பல்லாயிரம் பேர்களைப் பலி கொள்ளும் அளவுக்கு அங்கே!

இந்நிலையில், மழையை வரவழைக்க இந்து அறநிலையத் துறை தன்கீழ் உள்ள கோவில்களில் யாகம் நடத்தியும், வருண ஜெபம் நடத்தியும் சில கோவில் குளங்களில் (அங்கேயே பல குளங்கள் _- தீர்த்தங்களில் தண்ணீரே இல்லை) முழங்கால் அளவு, அரை நிர்வாணக் கோலத்துடன் திடசரீரம் உள்ள பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிச் சின்னமான பூணூலைக் காட்டிக் கொண்டு, சமஸ்கிருத மொழியில் வேத மந்திரங்களைக் கூவிக் கொண்டு, யாகம் என்ற பெயரில் புது வருவாய்க்கு வழிதேடும் வழியை வகுத்துக் கொடுத்திருக்கிறது!

இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் மழை வேண்டி யாகம் என்றால், உலகத்தின் பகுத்தறிவுள்ள மக்கள் கை கொட்டிச் சிரிக்க மாட்டார்களா?

இந்த மூடநம்பிக்கைகளை _- பக்தி வேஷம் போட்டு பரதக் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் பார்ப்பனர்களுக்கு தொழில் வளம் ஏற்படுத்த தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை துணை போவது மிக மிகக் கண்டனத்திற்குரியதாகும்!

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை (Secular) கொள்கைக்கும் 51A(h) பிரிவில் உள்ள அடிப்படைக் கடமைகளைப் பரப்புதல் என்ற தலைப்பில், ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை (Scientific Temper) கேள்வி கேட்கும் அறிவை மனித நேயத்தை, சீர்திருத்தத்தைப் பரப்புவது அடிப்படைக் கடமை என்று இருக்கும்போது,அதைச் செய்யத் தவறுவதைவிட பெருங் குற்றமும் உண்டோ? அரசுத் துறையே அறிவியல் மனப்போக்குக்கும், சீர்திருத்தத்திற்கும் முரணாக இப்படி மழை வேண்டி யாகம் செய்ய அதன் நிதியைச் செலவிட்டு, மூடநம்பிக்கையைப் பரப்பும் மோசமான எதிர்மறைச் செயலில் ஈடுபடலாமா?

இதைவிட (அரசியல்) சட்ட விரோத நடவடிக்கை வேறு என்ன?

மழை வேண்டி _ -பருவக் காற்று துவங்கும் காலத்தில் மிகச் சாமர்த்தியமாக யாகம் நடத்துவது வருண ஜெபம் நடத்துவது, என்பது யாரை ஏமாற்ற?

சில கேள்விகளை அத்தகைய பெரும் உலக மகா யாக அறிவாளிகளுக்கு நாம் வைக்கிறோம்.

1. மழை எப்படி வருகிறது என்பது 4,5ஆவது வகுப்பு மாணவனுக்கு வகுப்பில் விஞ்ஞானம் சொல்லிக் கொடுத்துவிட்டு, இப்படி யாகம் செய்தால் அது இரட்டை வேடம் _- மோசடி அல்லவா?

2. யாகம் நடத்தும் எவராவது கையில் குடையோடு சென்றுள்ளார்களா? உத்தரவாதம் தருவார்களா?

3. மழை வேண்டி வருண ஜெபம், யாகம், பூஜை புனஸ்காரம், முழங்கால் தண்ணீரில் நின்று சமஸ்கிருத வேத மந்திரங்கள், அல்லது அமிர்தவர்ஷணி ராகம் பாடுவதாலோ! ஆனந்த பைரவி வாசிப்பதாலோ மழை வரும் என்றால், கச்சேரி மூலமே மழைப் பிரச்சினையைத் தீர்த்து விடலாமே! _- எதற்காக உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் காவிரி நீருக்காக?

உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்கள் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வகையில் மீண்டும் மிரட்டும் மழையைத் தடுக்க எந்த யாகம்? எந்த பூஜை? எந்த ஜெபம்? _- சொல்லட்டுமே பார்க்கலாம்!

அறியாமையைவிட மிகப் பெரிய நோய் மனித குலத்திற்கு வேறு இல்லை என்றார் அமெரிக்க நாட்டுப் பகுத்தறிவாளர் ராபர்ட் ஜி. இங்கர்சால்!

இந்த அறியாமையைத் தமிழக அரசே ஊக்குவிக்கலாமா? பரப்பலாமா? அதுவும் அண்ணா பெயரில் உள்ள அரசு?

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை நீதிக்கட்சி ஆட்சிதான் 1924 வாக்கில் உருவாக்கியது. அதன் விவாதங்கள் சட்ட-மன்றத்தின் நூலகத்தில் உள்ளதை இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும், அமைச்சரும், முதல் அமைச்சரும் படிக்க வேண்டும்.

கணக்குத் தணிக்கை (Audit) தான் அதன் பிரதான நோக்கமே தவிர, பக்தி பரப்பும் இலாகாவாக இந்து அறநிலையத் துறை செயல்படுவது அச்சட்ட விரோதமே! சாயமடிப்பதோ, கும்பாபிஷேகம் செய்வதோ, தேர் இழுப்பதோ இத்துறை அதிகாரிகளின் வேலை அல்ல!

இப்போது மதச் சார்பின்மையைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, பல மாவட்டங்களில் ஆட்சியாளர்களும், (Collector), மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களும் (போலீஸ் எஸ்.பி.க்களும்) தேருக்கு வடம் பிடிப்பது, கும்பாபிஷேகத்தில் பக்தி வேஷம் போட்டுக் காட்டிக் கொள்ளுவது, என்பது பகிரங்கமான சட்ட விரோதச் செயல்!

இது உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் அறப் போர்கள் ஒருமுனையிலும், பொது நல வழக்கு மறுமுனையிலும், பிரச்சாரங்கள் மூன்றாவது முனையிலும் நடத்தப்படும் என்பதை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

கி.வீரமணி,

ஆசிரியர்