Search This Blog

30.7.13

சோ ராமசாமிக்கு சர்.சி.பி. ராமசாமி அய்யர் பதிலடி!


அர்ச்சகர் வேலை என்பது வெறுமனே சுவாமி சிலையின்மீது பூக்களை விட்டெறிகிற வேலையல்ல. அதற்கென்று தனியான படிப்பு இருக்கிறது. ஸம்ஸ்கிருத மந்திரங்களின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். பூஜை விதி முறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும். இதற்கு ஆழ்ந்த சமஸ்கிருத, சாஸ் திர அறிவு தேவை. இவற்றையெல்லாம் வகுப்பெடுத்துச் சொல்லித் தந்துவிட முடியாது. அது இயல்பாகவே வர வேண் டிய ஒன்று. சங்கீதம், நடனம் மாதிரித்தான் புரோகிதம் செய்வதும் அர்ச்சகராவதும்
                   ------------------------------------------(துக்ளக் 24.7.2013 பக்கம் 141)
என்று சாதிக்கப் பார்க்கிறது துக்ளக்.
அர்ச்சகர் வேலைக்கென்று தனியான படிப்பு இருக்கிறது என்று எடுத்த எடுப்பிலேயே குறிப்பிடுகிறார் சோ.
நாம் கேட்பதுகூட, அர்ச்சகர்களுக் கென்று உருவாக்கப்பட்ட பயிற்சிப் பள்ளி யில் படித்தவர்களுக்குத்தானே தவிர, ஏதோ வீதியில் சென்று கொண்டிருக்கும் குப்பனையும், சுப்பனையும் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து -_ கருவறைக்குள் திணித்து அர்ச்சனை செய்யப்பா! என்றா சொல்லுகிறோம்?
சைவப் பயிற்சிப் பள்ளிகள் கீழ்க் கண்ட இடங்களில் இந்து அறநிலையத் துறையால் அமைக்கப்பட்டன. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மதுரை, தண்டாயுதபாணி கோயில் _ - பழனி, சுப்பிர மணிய சாமி கோவில் _ திருச்செந்தூர், அருணாசலேசுவரர் கோயில் _ திரு வண்ணாமலை, வைணவப் பயிற்சி மய்யங்கள் பார்த்தசாரதி கோயில் _ சென்னை திருவல்லிக்கேணி அரங்கநாத சாமி கோயில், சிறீரங்கம் (திருச்சி)
ஆகிய கோயில்களில்தானே முறைப் படி பயிற்சி அளிக்கப்பட்டது; பயிற்சி அளித்தவர்கள் சாதாரணமானவர்களா?
பயிற்சி ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர் களாக இருக்க வேண்டும் என்பதுபற்றியும் தமிழ்நாடு அரசாணை கூறுகிறதே! (தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் அறநிலையத்துறை (அ-_நி_4_2) துறை நாள் 2.1.2007.
அந்த ஆணை என்ன கூறுகிறது?
பயிற்சி நிலையத் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தேர்வில் அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நீண்ட கால அனுபவமும், பயிற்சியும் கற்றறிவும் பெற்றவர்களைத் தேர்வு செய்து அவர்களை நியமிக்க வேண்டும். அவர்களின் பொதுக் கல்வித் தகுதிகள் முக்கியமாகக் கருதக் கூடாது. நாளி தழ்களிலும் விளம்பரம் செய்து தகுதி யுள்ளவர்களை ஆசிரியர்களாகத் தேர்வு செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, அதனடிப்படையில் அல்லவா பயிற்சிப் பள்ளி ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு, 69 சதவீத அடிப்படையில் முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டு 206 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர் (திருவண்ணாமலையில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்த பார்ப்பன ஆசிரியரையே திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் அர்ச்சகர் பார்ப்பனர்கள் தாக்கினர் என்பதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்).
அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள்பற்றி தி இந்து ஏடு (29.8.2008 பக்.8) ஒரு சிறப்புச் செய்தியையே வெளியிட்டதே!
“Priests - in - Waiting Search for Alternative Avenues” என்ற தலைப்பில் அது வெளி வந்துள்ளது. பயிற்சி பெற்ற சிலரையும் பயிற்சி அளித்தவரையும் பேட்டி கண்டு தி இந்து வெளியிட்டது. டி முருகன் என்பவர் பயிற்சி பெற்ற வர்களில் ஒருவர்; அரசுப் பணி வரும் போது வரட்டும் என்னும் இவர் ஆத்தூரைச் சேர்ந்தவர் (சேலம் மாவட்டம்) சுற்றியுள்ள பகுதிகளில் தினப்படி பூஜை செய்து வருகிறார். இவர் வன்னிய ஜாதி; அர்ச்சகர் பயிற்சியில் சேர விரும்பிய இவரை இவரது பெற்றோர் பரம்பரையாக அர்ச்சகர்களாக உள்ள பார்ப்பனர் களுக்குச் சமமாக வர முடியுமா எனச் சந்தேகப்பட்டனர். முருகன் சரளமாக தங்குத் தடையின்றி சமஸ்கிருத, தமிழ் மந்திரங்களைக் கூறி அசத்துகிறார். மந்தி ரங்களை நல்ல முறையில் மனப்பாடம் செய்து பயிற்சி பெற்றிருக்கிறார்
நான் அர்ச்சகராக இருக்கும் கோயில் களுக்கு வரும் பக்தர்கள் நான் என்ன ஜாதி என்று பார்ப்பதில்லை. நான் பூஜை செய்யும் நேர்த்தியைத்தான் பார்க் கிறார்கள். உண்மையில் பல பார்ப்பன அர்ச்சகர்கள் என்னிடம் வந்து அவர்களுக்கு மந்திரங்களைச் சொல்லிக் கொடுக்கும்படி கேட்டார்கள். நானும் ஒத்துக் கொண்டு கற்றுக் கொடுத்து வருகிறேன் என்றார் முருகன்.
எழுதுவது விடுதலை அல்ல; இந்து ஏடுதான் என்பதை துக்ளக் அய்யர் வாளுக்கு நினைவூட்டுகிறோம்.
அதோடு நின்று விடவில்லை.  பயிற்சி அளித்த ஆசிரியரையும் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. சீரங்கம் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் வைணவ ஆகமம் கற்பித்த எஸ்.கே ரங்கராஜபட்டர் என்பவர் கூறுகையில், ஆகமம் வழிபாட்டு அர்ச்சனை முறைகளைக் கற்றுக் கொள்ள ஜாதி தடையில்லை; நான் ஆகமம் கற்பித்த மாணவர்கள் மிக நல்ல முறையில் ஆகமங்களையும், சடங்கு களையும் கற்றுக் கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார் என்று இந்து வெளியிட்டுள்ளதே!
அத்துடனும் நிற்கவில்லை இந்து ஏடு. மதுரை மீனாட்சிக் கோயில் ராஜூ குருக் கள் என்று அழைக்கப்படும் சங்கரன் சிவாச்சாரியார் அய்ந்து மாத காலம் சைவ ஆகமப் பள்ளியில் ஆசிரியப் பணியில் இருந்தவரும்கூட; ஆகமங்களைக் கற்றுக் கொள்ள ஜாதி தடையில்லை என்றார் என்று இந்து எடுத்துக்காட்டியுள்ளதே!
இதற்கு மேலும் திருவாளர் சோ ராமசாமி அய்யர் அகங்காரத்துடன் துள்ளிக் குதிக்கிறார் என்றால், அது அவரின் ஜாதி ஆணவத்தையும் கட்டுங்கடங்காப் பூணூல் கோத்திரப் புத்தியையும்தான் வெளிப் படுத்தும்.
சங்கீதம், நடனம் மாதிரிதான் புரோகிதம் செய்வதும், அர்ச்சகராவதும் என்று பெரிய அளவு விவாதத்தை எடுத்து வைத்துள்ளார்.

சங்கீதமும், நடனமும் என்ன ஒரு ஜாதி கூட்டுக்குள்ளா அடைபட்டு கிடக் கின்றன? அவற்றைப் பல ஜாதியினரும் கற்றுத் தேர்ந்து உச்சநிலையில் இருக்க வில்லையா? சங்கீதத்தில் மதுரை சோமுவும், தியாகராய பாகவதரும் கே.பி. சுந்தரம்பாளும் ஜேசுதாசும் முறையாகப் பயின்று கொடி கட்டி ஆளவில்லையா?
பெண்களுக்கே உரித்தானது என்று கருதப்பட நடனத்தில் இன்று ஆண்களே பயிற்சி பெற்றுப் பட்டொளி வீச வில்லையா?
சோ பெரிய விவாதத்தில் பெரிய புலி(ளி) என்று அக்ரகாரம் வாண வேடிக்கை விட்டுப் பிரச்சாரம் செய்கிறதே _ அது எவ்வளவு ஓட்டையானது என்பது இந்த உதாரணத்தின் மூலம் உடைபட்டுப் போகவில்லையா?
அடேயப்பா, சமஸ்கிருத மந்திரங் களின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டிருக்க வேண்டுமாம். பூஜை விதிமுறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமாம். இதற்கு ஆழ்ந்த சமஸ் கிருத அறிவு தேவையாம். இவற்றை யெல்லாம் வகுப்பெடுத்துச் சொல்லி தந்துவிட முடியாதாம். அது இயல்பாகவே வரவேண்டுமாம்!
எழுதுகிறார் திருவாளர் சோ
சாமர்த்தியமாக எழுதுவதாக நினைப்பு ஆம் அந்த நினைப்புதான் பொழைப்பை கெடுக்கும்.
கோயில்களில் இருக்கும் அர்ச்சகர் பார்ப்பனர்கள் சோ சொல்லும் தகுதியில் இருக்கக் கூடியவர்கள் தானா?
சர் சி.பி. இராமசாமி அய்யர் குழு, கோயில் அர்ச்சகர் பார்ப்பனர்களின் குருக்கள் பார்ப்பனர்களின் குடுமியை ஆட்டி அவர்களின் அறியாமையைத் தோலுரித்துக் காட்டி விட்டதே!
நாங்கள் தேசத்தின் பல்வேறு பகுதி களுக்குச் சுற்றுப் பயணம் செய்தபோது ஏராளமான கோயில்களுக்கு நேரடியாகப் போய்ப் பார்த்தோம்.
அர்ச்சகர்களும், பூசாரிகளும் ஒன்று கல்வி அறிவற்ற தற்குறிகளாக இருக் கின்றனர்; அல்லது அரைகுறை படித்த வர்களாக இருக்கின்றனர். இவர்கள் வழக்கமாகவே பணம் பறிப்பவர் களாகவும் இருக்கின்றனர். அவர்கள் ஓதும் மந்திரங்களில் அவர்களின் உச்சரிப்பும், உச்சாடனமும் பதியத் தக்கதாக இல்லை. தப்பும் தவறுமாக இருக்கின்றன. தாங்கள் முழங்கும் இந்த மந்திரங்களின் சிறப்பையோ அல்லது பொருளையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது வருந்துதற்குரியது என்று அவாள் ஆத்துத் திலகம் சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையிலான குழுவே வெள்ளை வெள்ளையாக நொறுக்கிக் காட்டி விட்டதே! இதற்கு என்ன பதில்?
பார்ப்பனர் அல்லாதவர்கள்மீது பார்ப் பனக் கூட்டம் இன்றுவரை தேக்கி வைத் திருக்கும் வெறுப்பு விஷம்தான் சோவின் எழுத்துக்களில் வழிந்தோடுகிறது. கோயில் என்பது தங்களின் ஜாதி ஆதிக்கக் கோட்டை! அதைக் கோட்டை விட அவர்கள் தயாராக இல்லை என்பதை இதற்கு மேலும் தமிழர்கள் உணரத் தயாராக இல்லை என்றால் அவர்களைவிட ஏமாளிகள் வேறு யாராக இருக்க முடியும்?

தமிழர்களே, பார்ப்பனர்களைப் புரிந்து கொள்வீர்!
************************************************************************************
தமிழ் அர்ச்சனை: சோ பதில் கூறுவாரா?

தமிழ் நாட்டிலுள்ள  பல கோவில்களில் இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப் படும் என்று போர்டுகள் தூண்களில் தொங்குகின்றன. ஆனால் கோவில்களிலுள்ள பல்லிகூட தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்வதில்லை. தமிழ் அர்ச்சனை என்பது நூற்றுக்கு நூற்றுப் பத்து சதவிகிதம் தோற்றுப் போன ஒரு சமாச்சாரம். எல்லோரும் தங்கள் குழந்தைகள் ஆங்கில வழியில்தான் படிக்க வேண்டும் என்று ஆசைபடுவதுபோல் கோவில்களில் சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். மக்களின் விருப்பம் இது                                                   (துக்ளக் 24.7.2013 பக்கம் 14).
தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழன் அர்ச்சகன் என்றால் தணலாகக் கொதிப்பு! தமிழில் வழிபடுதல் என்றால் தடித்தனமான வார்த்தைகள் பிரயோகம்!
கோவில்களில் உள்ள பல்லி கூடத் தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்வதில்லையாம். அப்படி என்றால் கோவில்களில் சம்ஸ்கிருதம் பல்லி சொல்லிதான் புழக்கத்தில் உள்ளதா?
என்ன திமிர் இருந்தால் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழால் பிழைத்துக் கொண்டே இவ்வளவு கேவலமாகக் கொச்சைப்படுத்துவார்கள் இந்த சோ பார்ப்பனர்கள்.
கோவில்களில் சம்ஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களாம்.

அதாவது உண்மையா?
தமிழ்நாட்டுக் கோவில்களில் அர்ச்சனை மொழியாக தமிழ் இருக்க வேண்டுமா? அல்லது சமஸ்கிருதம் இருக்க வேண்டுமா? என்பதுபற்றி பக்தர்களின் விருப்பத்தை அறிவதற்காக மதுரை, இராமேசுவரம், சிதம்பரம், பழனி, கன்னியாகுமரி, சென்னை, வடபழனி, திருவரங்கம், தஞ்சாவூர், கோவை ஆகிய ஊர்களில் ஒன்பது கோவில்களில் 27.11.1998 காலை 6 மணி முதல் 9 மணி வரை பக்தர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கடவுள் நம்பிக்கையுள்ள மதுரை பழ. நெடுமாறன் அவர்கள்தான் தமிழர் தேசிய இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்தார்.
18,700 பக்தர்கள் அதில் கலந்து கொண்டனர். தமிழுக்கு ஆதரவாக 17,695 பக்தர்களும், சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக 823 பக்தர்களும், இரு மொழிகளும் இருக்கலாம் என 182 பக்தர்களும் வாக்களித்தனர். அர்ச்சனை மொழிபற்றி பக்தர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கருத்துக் கூறுவோர் இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் (தென்செய்தி நாள் 15.121998 பக்கம் 4).
சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் விரும்புவதாக சாதிக்கப் பார்க்கிறாரே திருவாளர் சோ _ இதற்கு என்ன பதில் சொல்லுவார்?
சோ. ராமசாமிகளுக்குப் புரியும்படி, பக்திப் பாஷையிலேயே சொல்ல முடியும்.
சொல்லுவதைப் பொருள் தெரிந்து சொல்ல வேண்டும் என்ற கருத்துத் திருமுறைகள் அனைத்திலும் சொல்லப்பட்டுள்ளது. சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தில் உள்ளார். சிவனடிக் கீழ் என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் (இவரும் ஒரு பார்ப்பனர்தான்!) பாடியதை சோக்களால் மறுக்க முடியுமா?
பொருளை நன்றாகத் தெரிந்து சொல்லாவிட்டால் அறிவில் உள்ள இருளைச் சிவபெருமான் போக்க மாட்டார் என்றும் அவர் சொல்லி இருக்கிறார். சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்திருளை வாங்காதானை! (மாணிக்க வாசகரின் கீழ்வேளூர்த் திருத்தாண்டகம்)
அர்ச்சனை பாட்டாகும், ஆதலால் மண் மேல் நம்மைச் சொற்றமிழ்ப் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் பாடி இருப்பதைக் கிழித்தெறியப் போகிறாரா திருவாளர் சோ அய்யர்?
மொழி ஆர்வமா? மத துவேஷமா? எனும் தலைப்பில் இதே சோ துக்ளக்கின் (18.11.1998) தலையங்கப் பகுதியில் என்ன எழுதினார்?
நாயன்மார்களும் ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும். அருள் இருக்காது. ரிஷிகளும், பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ்கிருத துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும் புனிதம் இருக்காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல, ஒலிக்கு! என்று எழுதினாரே!
இப்படி சொல்ல சோவுக்கு என்ன தகுதி இருக்கிறது? தமிழில் கரை கண்டவரா? சமஸ்கிருதத்தில் கற்றுத் துறை போனவரா? மாணிக்கவாசகரை விடத் தான் பக்தியில் குளித்து முத்து எடுத்தவரா?
சர்வ சக்தி வாய்ந்தவராகக் கடவுளைக் கூறி, அவர் குறிப்பிட்ட ஒரு மொழியின் ஒலிக்குத்தான் ஆட்படுவார் என்று சொல்லுவதுகூட அந்தக் கடவுளைக் கொச்சைப்படுத்துவதும் பலவீனப்படுத்துவதும் ஆகாதா?
மற்றமற்ற பிரச்சினைகளில் எல்லாம் நீதிமன்றம் என்ன சொல்லுகிறது? மோடியைக் குற்றவாளி என்று சொல்லி இருக்கிறதா நீதிமன்றம் என்று பூணூலை முறுக்கிக் கொண்டு பேனா தூக்கும் திருவாளர் சோ பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.
இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோச மங்கை கோயிலின் அர்ச்சகப் பார்ப்பனர் பிச்சை என்பவரும் இந்துக் கோயில் பாதுகாப்புக் குழு எனும் அமைப்பின் தலைவர் எனக் கூறும் சிவகுமார் என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து தமிழ் மொழியில் அர்ச்சனையும், பூஜையும் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர். கோயில்களில் நடக்கும் வழிபாட்டிலும், பூஜை சடங்குகளிலும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளிலும் அரசு தலையிடக் கூடாது என உத்தரவிடக் கோரி இருந்தனர்.
இந்த இரண்டு வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் தர்மராவ் மற்றும் கே. சந்துரு ஆகியோர் விசாரித்துத் தீர்ப்பு வழங்கினர்.
கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாது என்று எந்த ஆகமத்திலும் கூறப்படவில்லை. எந்தவிதமான மத சாத்திரங்களிலோ குறிப்புகள் இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறி விட்டார்களே (20.3.2008). எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் நீதிமன்றம் என்றுகூறி பயமுறுத்தும் சோ இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
************************************************************************************
--------------------"விடுதலை” ஞாயிறுமலர் 27-7-2013 இதழில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

36 comments:

தமிழ் ஓவியா said...


முடியாது


உண்மையாக ஜாதிப் பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணா சிரமத் தர்மத்தையும், சூத்திரத் தன்மையையும் ஒழிக்கவேண்டுமானால், எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
(குடிஅரசு, 19.1.1936)

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யின் வியூகம்!


இந்துத்துவா வெறி அமைப்பான பிஜேபி நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வியூகங்களில் வேகமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த இரு முறை தொடர்ந்து காங்கிரஸ் தலைமையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி தொடர்ந்து இருந்து வந்திருப்பதாலும் எதிர்ப்புணர்ச்சி (Anti Incumbency) தங்களுக்கு சாதகமாக அமையும்; விலைவாசி உயர்வு போன்ற வையும் கை கொடுக்கும் என்ற எண்ணத்தில் கோயபல்ஸ் பாணியில் பொய் மூட்டைகளை அவிழ்த்து கொட்டுவார்கள் - கொட்டவும் ஆரம்பித்து விட்டனர்.

நரேந்திர மோடி முதல் அமைச்சராகவிருக்கும் குஜராத் மாநிலம்தான் இந்தியாவிலேயே வளம் கொழிக்கும் மாநிலம், பாலாறும், தேனாறும் பெருகி ஓடுகிறது என்று பிரச்சாரம் செய்யப்படவில்லையா?

பொருளாதார மேதை அமர்த்தியாசென் போன்றவர்கள் அதன் பொய்த் திரையைக் கிழித்துக் காட்டி விட்டார்களே! கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலம்தான் குஜராத் என்பதைப் புள்ளி விவரங் களே போதுமான அளவிற்குத் தெரிவிக்கின்றனவே.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்குக் குழந்தைகள் நலன் என்பது முக்கிய அளவீடாகக் கருதப்படும். இதில் இந்தியாவின் சோமாலியா குஜராத் என்று சொல்லப்படுகிறது. இதனை எல்லாம் மறைத்துவிட்டு குஜராத்துதான் இந்தியாவின் முன் மாதிரியான மாநிலம் என்று பலூனுக்குக் காற்றடித்து ஆகாயத் தில் பறக்க விடுவது போல பம்மாத்து வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மதவாத சக்தி ஆட்சிக்கு வரக் கூடாது என்பதிலே அக்கறை உள்ளவர்கள், ஆர்வம் உள்ளவர்கள் இவற் றையெல்லாம் அம்பலப்படுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

இன்னொரு அதி முக்கிய கடமை இந்தியா முழுமையும் உள்ள வாக்காளர்களுக்கு இருக்கிறது. அதுதான் இந்திய அரசமைப்புச் சட்டப் பீடிகை உத்தரவாதப்படுத்தியுள்ள மதச் சார்பின்மை என்பதாகும்.

இந்த மதச் சார்பின்மையை முற்றிலும் அழித்து, அதன்மீது இந்துத்துவா என்னும் மதவெறி நாடாக மாற்றி, மனுதர்மக் கொடியைப் பறக்கவிடத் துடித்துக் கொண்டிருக்கும் பிஜேபியை - நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் மண்ணும் மண்ணடி வேருமின்றித் தூக்கி எறிய வேண்டாமா?
அறிவியல் நுணுக்களைப் பயன்படுத்தி, இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பல யுக்திகளைக் கையாள இருக்கிறார்கள். அதற்காகப் பெருந் தொகை செலவு செய்து பிரச்சார வெள்ளத்தைப் பெருக்கெடுக்கச் செய்து, மக்களை மயக்கி விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டுள்ளனர் - பிஜேபி.யினர்.

உலகம் பிரச்சாரத்திற்கு அடிமை என்று சொல்லுவார்கள். அதில் அதிக நம்பிக்கை கொண்ட பிற்போக்குச் சக்திகளைத் தூக்கி வீசிட ஒவ்வொரு வாக்காளரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் (25.7.2013) திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெளிவாக எடுத்து விளக்கியுள்ளார்.

பிஜேபி - அதன் ஆணி வேர், சல்லி வேர் - பக்க வேர்களான சங்பரிவார்கள் இந்தியாவில் இதுவரை நடத்தி வந்திருக்கும் மதக் கலவரங்கள், வன் முறைகள் அமைதிச் சீர்குலைவுகளைப் பட்டியல் போட்டு, வீதி வீதியாக தெருமுனைக் கூட்டங்கள் போட்டு அம்பலப்படுத்தியாக வேண்டும். இது ஒரு கட்சிப் பிரச்சினையல்ல.

மதச் சார்பற்ற தன்மையில் அனைத்து மத நம்பிக்கையாளர்களும், மத நம்பிக்கையற்றவர்களும் அவரவர்களுக்குள்ள உரிமைகளோடும், வாழ்க்கை உத்தரவாதத்தோடும் அமைதித் தென்றல் வீசும் நாடாக அமைய அனுமதிக்கப் போகிறோமா அல்லது இந்தியாவை குஜராத்போல மதவாதப் பூமியாக்கி அன்றாடம் மனித ரத்தத்தை ஓட விடப் போகிறோமா என்பதுதான் இன்று இந்திய மக்கள் ஒவ்வொரு வரின் முன்பும் எழுந்து நிற்கும் மிக முக்கியமான வினாவாகும்.

மக்களை ஏமாற்ற ஏராளமான திட்டங்களைக் கையில் வைத்துள்ள ஒரு சக்தியை முறியடிக்க தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள் ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மதச் சார்பின்மைச் சக்திகள் பிளவுபட்டு, வேண்டாத சக்திக்குச் சிவப்புக் கம்பளத்தை விரித்து விடக் கூடாது.

தமிழ் ஓவியா said...


ஓதியும் ஓதார் - இருந்தும் வறியார் - புரிந்து கொள்வோம்


பகுத்தறிவுப் புலவர் டாக்டர் மா. நன்னன் அவர்களது நன்னன்குடி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும், மறைந்த அவர்தம் மகன் ந.அண்ணல் நினைவையொட்டி ஜூலை 30-இல் நடைபெறும் நிகழ்வில் நன்னன் அவர்கள் எழுதிய புதிய நூல்கள் வெளியீடும், சொற்பொழிவு களும், நல்ல இலக்கியப் படைப்பாளி களுக்குப் பரிசுகளும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்தோரைப் பாராட்டி ஊக்கப்படுத்துவதும் போன்ற ஆக்கச் செயல்கள் பலவும் நடத்தப் பெறு கின்றன.

இவ்வாண்டு (நாளை) நடைபெற விருக்கும் புதிய (அவரது) நூல் வெளியீடுகளில் ஒன்றான நாலடியார் மூலமும், பொழிப்பு விளக்க உரை களும் என்ற நூல் நேற்றுப் படித்தேன்; சுவைத்தேன். தெவிட்டவில்லை.

திருக்குறளுக்கு அடுத்தபடி, நல்ல அறநூல் நாலடியார் ஆகும்.

சமணப் புலவர்கள் பலரது பாடல்கள் - ஒழுக்க நெறிகளை மிகவும் ஆழமாகச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்கள்போல உள்ளன. நாலும் தெரிந்தவர் என்ற சொல்லுக்கு என்ன சரியான பொருளோ நாம் அறியோம்; ஆனால் நாலடியார் செய்யுள்களை அறிந்தால் பொது அறிவும், வாழ்வி யலில் அறிந்து கொள்ள வேண்டி யவைகளை அறிந்தும், புரிந்து கொள்ள வேண்டியவைகளையும் புரிந்தும் வாழ் வில் வெற்றி பெறலாம். அறிவின்மை என்ற ஒரு தலைப்பில் உள்ள பாடல்களில் ஒன்று இதோ: ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல!

ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார் - தூயதாக
நல்கூர்ந்துச் செல்வர் இரவாதார் செல்வரும் நல்கூர்ந்தர் ஈயா ரெனின்.

இதன் பொருள்: அறிவிலிகள் கற்றி ருந்தாலும் கல்லாரே; அறிஞர்களோ கற்காதவராயினும் கற்றாரேயாவர். முழுமையாக வறுமையுறினும் இரந்து கைநீட்டாதார் செல்வர்களே; செல்வர் களும் தக்கார்க்கொன்று ஈயாராயினும் வறியோரே.

வாழ்க்கையில் பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அடிப்படைப் பாடம் இது.

ஏராளமாக (மெத்தப்) படித்தவர் இவர் என்று ஒருவரை அறிமுகப்படுத்தினால் உடனே அவர் மரியாதைக்குரியவ ராகிவிட மாட்டார்; காரணம் படிப்பு வேறு; அறிவு வேறு; படித்து முடித்த காரணத் தாலேயே அவர்கள் அறிவாளிகள் ஆகிவிட மாட்டார்கள். அனுபவம், பொது அறிவு, பண்பாடு, பிறரைப் புரிந்து கொள் ளுதலில் தடுமாற்றம், தம்மைவிட குறைந்தவராயின் எதில் இருந்தாலும் - அதற்காக அவர் களை அலட்சியப் பார்வையுடன் பார்ப்பது என்பதன் மூலம், இவரின் அறிவுதான் கேள்விக்குறியாகி விடுகிறது!

தந்தை பெரியார் படித்த பாமரர்கள் அல்லது படித்த தற்குறிகள் என்ற மிகப் பொருத்தமான சொற்றொடர்களைக் கையாளுவார்; இத்தகைய கற்றறி மூடர்களைக் கண்டு; நுண்ணறிவு வேறு; நூலறிவு வேறு; வேண்டுமானால் நுண் ணறிவினை மேலும் கூர்மையாக்கிக் கொள்ள நூலறிவு பற்பல நேரங்களில் பயன்படுமே தவிர, எல்லா நிலை களுக்கும் பொருந்திவராது!

ஓதியும் ஓதார்! என்னே அருமை யான சொற்றொடர்!

இருந்தும் இல்லாதவர் இரண்டு வகையினரும் மிகவும் முக்கியம்.

செல்வத்தின் சிறப்பே பயன் பாட்டைப் பொறுத்ததுதான். புதைந்து கிடக்கும் புதையலால் யாருக்கும் பயன் எப்படி கிடைக்காதோ அதுபோல செல்வம், தேவைப்படுவோருக்கு பயன் படாது இருப்பின் அதைவிட அதைக் கொடுத்து மிகுந்த மனநிறைவை மகிழ்ச்சியைப் பெறாமல் கேடு கெட்ட மானிடராக, வறியார்க்கொன்று ஈயாத வராக வாழ்ந்தவரால் அவருக்கும் பயன் இல்லை; பிறருக்கும் பயன் இல்லை.

அதை எவ்வளவு அழகாக உண்மையாக எவர் வறுமையாளர் என்பதை நாலடியார் விளக்குகிறது?

எவருக்கும் ஈயாது; ஈய்ந்து மகிழ்ச் சியைப் பெற்று உற்சாகமாக வாழத் தெரியாதவர்களுக்கு, எத்தனை கோடிகள் இருந்தும் என்ன பயன்?
அவரை யார் அறிவர்? யார் மதிப்பர்?

தமது செல்வம் முழுவதையும், மக் களுக்கே சேரும்படிச் செய்த தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியாருக்குள்ள பெருமை - அவர்தம் சுயநலம் இல்லாப் பொது நலத்தோடு எல்லாவற்றையும் பொது மக்களுக்குத் தந்துள்ளார்.

தொண்டறத்தால் சிறந்தோங்கி நிற்கும் கல்வி வள்ளல் காமராசரை, பகுத்தறிவுப் பகலவன் பெரியாரை படிக்காதவர்கள் என்றார்களே,

அவ்விருத் தலைவர்களின் அறிவும், மதி நுட்பமும் எளிதானதல்லவே!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


ஆகமங்கள் மாற்றமடைந்தது கிடையாதா?


பூஜை முறையை பரம்பரை பரம் பரையாக எங்கள் முன்னோர்களிட மிருந்து கற்று வருகிறோம். ஆகம முறைப்படி கோயில் பூஜையை செய்வதற்கு எங்கள் ஜாதிக்கு மட்டுமே உரிமையுண்டு - என்று சொல்ல எந்த சிவாச்சாரியருக்கும் அருகதை இல்லை, என்றே சொல்ல லாம். தில்லை நடராஜரையும் ஸ்ரீரங்க நாதரையும் பூஜை செய்வதற்கு எங்களுக்கும், எங்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே உரிமை யுண்டு என்று சொல்ல எவருக்குமே அருகதை இல்லை.

காரணம், பூஜை என்பது ஒரு புனிதமான தொழில் என்று காலம் காலமாக ஏமாற்றி வந்த காலம் என்றோ மலையேறி விட்டது. இப் பொழுது இது ஒரு பக்கா பிசினஸ் என்று எல்லோருக்குமே தெரிய ஆரம்பித்து விட்டது.

ஆம்.

இன்று நம் கண் முன்னே ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் முதல், ஒழுக்கம் கெட்டவர்கள் வரை கடவுளாகி விட்டார்கள். உனக்கு மார்க்கெட் செய்யத் தெரியுமா? நீ யாரை வேண்டுமானாலும் கடவு ளாக்கி, உன் செலவில் கோவில் கட்டு. நான் குண்டத்துல உக்காந்து நெய்ய ஊத்தி கும்பாபிஷேகம் செய்யறேன் என்ற தவறான முன் னுதாரண நிலைக்கு வந்துவிட்டார் கள் சிவாச்சாரியர்கள். மேலும் நீ எங்க வேண்டுமானாலும் கோயில் கட்டு - எனக்கு தேவை துட்டு என்ற வியாபார நிலைக்கும் வந்து விட்டார்கள் சிவாச்சாரியர்கள்.

இல்லையென்றால் - ஆகமத் திற்கு புறம்பாக அதிக அளவில் அதாவது 77,450 கோயில்களை பொது மக்களுக்கு இடையூறாக, பொது இடங்கள் மற்றும் நடை பாதையில் கோயில் கட்டுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் மாநிலம் என்று சாதனை படைக்குமா?

இதற்கு மூலகாரணம் யார்? சிவாச்சாரியார்கள்தானே!

அது மட்டுமா?

ஒரு சில திரைப்படங்களுக்கு ஞயசவ - ஐஐ வெளிவருவது போல - புராணங்களை தூசித்தட்டி, அதில் ஒரு கடவுளை தேர்வு செய்து, சிறந்த முறையில் திரைக்கதை வசனம் எழுதி ஞயசவ - ஐஐ உருவாக்கினாலும் - அதற்கும் - நாங்கள் ஆகமமுறைப் படி பூஜை செய்கிறோம் என்று நீங்கள் மணிகண்டனுக்கு கொடுத்த ஆதர வால் நாடு அடைந்த பலன் என்ன?

ஏறத்தாழ 70 ஆண்டுகளில் ஐயா யிரத்திற்கும் அதிகமான வீடுகளில் இழவு விழுந்ததுதான் மிச்சம்.

அது மட்டுமா?

இந்த ஐயப்பன் கோயில்களில் சிவாச்சாரியர்கள் பூஜை செய்கின்ற அழகைப் பார்க்க வேண்டுமே! அட.. அட... அட.. காண கண் கோடி வேண்டுமே!

அடி மடியில் கை வைத்தால் ஆகமம்.. ஆகமம் என்று அலறிக் கொண்டே உச்சநீதிமன்றம் வரை ஓடி ஐயா நீதியரசரே... இந்த பூஜை முறையை எங்கள் முன்னோர்களிட மிருந்து வழி வழியாக கற்று வருகிறோம் என்று கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் கூப்பாடு போடு கின்றீர்களே...! இந்த ஐயப்பனை பூஜை செய்வதற்கு எந்த முன்னோர் களிடமிருந்து கற்றுக் கொண் டீர்கள்? சொல்ல முடியுமா?

அதிகபட்சமாக தாத்தாவிட மிருந்து கற்றுக் கொண்டிருப்பீர்கள் அவ்வளவுதானே! இப்பொழுது சொல்லுங்கள். பூஜை தொழில் புனிதமானதா!

பக்கா பிசினஸ்தானே! எப்பொ ழுது ஒரு தொழில் வியாபாரம் என்ற நிலைக்கு வந்துவிட்டதோ - அப்பொழுதே அந்தத் தொழில் அனைவருக்கும் சொந்தமானது தான். எனவே அனைத்து சாதி யினரும் அர்ச்சகராவதில் தவறே இல்லை. எனவே அரசாங்கம் அனைத்து சாதியினருக்கும் அர்ச் சகர் தொழிலில் பயிற்சி அளித்து, பின் பரீட்சை செய்து, வெற்றி பெற்ற எவரையும் அர்ச்சகராக்குவதில் தவறே இல்லை, என்ற உயர்ந்த நோக்கத்தோடு உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

- குமார் ராமசாமி
நூல்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாமா?

தமிழ் ஓவியா said...

ஓம் சக்தி கட்டளைப்படி
கணவனைக் கொன்ற மனைவி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே லாலா பேட்டைப் பேர்வழி பரதன் (வயது 44) மனைவி உஷாராணி (வயது 38).

கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வருமாம். ஆத்திரம் அடைந்த மனைவி தூங்கிக் கொண்டிருந்த கணவன் தலையில், அம்மிக்கல்லை போட்டுக் கொலை செய்ய முயன்றார். கணவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென் றனர். பிழைக்கவில்லை; ஆசாமி மண்டையைப் போட்டு விட்டார். காவல்துறையினர் மனைவியைக் கைது செய்து விசாரித்தனர். அப்பொழுது அந்தப் பெண் சொன்னார். கொலை நடந்த அன்று என் கணவன் என்னைத் தாக்கினார். பின்னர் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டார். நான் அழுது கொண்டிருந்தேன். அப்பொ ழுது என் கனவில் ஒம் சக்தித் தாய் தோன்றினாள். உன் கணவனை அடித்துக் கொன்று விடு என்று சொன்னதால் குழவிக் கல்லை எடுத்து என் கணவன் தலையில் போட்டேன் என்றார் உஷாராணி.

சபாஷ்! ஓம் சக்தி எதற்கெல்லாம் பயன்படுகிறது பார்த்தீர்களா?

யாரும் யாரையும் கொலை செய்துவிட்டு கடவுள் மீது பாரத்தைப் போட்டு விடலாம். கடவுள் கூப்பிட்டால் சாட்சிக் கூண்டுக்கு வரவா போகிறார்?

தமிழ் ஓவியா said...

சபாஷ்! கடவுளைக் கண்டுபிடித்து விட்டார்கள்?

உத்தரகாண்டில் கொத்துக் கொத்தாக மக்களை வெள்ளம் அடித்துச் சென்றது. தப்பியவர்கள் ஆயிரக்கணக்கில் மலை முகடுகளில் தொற்றிக் கொண்டு தொங்கியபடி மீட்புக்காகக் காத்துக் கிடந்தார்கள். இரு கரைகளுக்கும் கம்பிகளை கட்டி இராணுவ வீரர்கள் வரிசையாக அதில் குறுக்கே படுத்துக் கொண்டார்கள். தங்கள் முதுகின்மீது வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்களை நடக்கச் செய்து கரை சேர்த்தார்கள். இதில் இந்திய இராணுவ வீரர்களின் சேவையின் மூலம் பேரிடர் பூமியில் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளை நேரில் உணர்ந்தார்கள். இப்படி ஒரு விளம்பரம் தனியார் நிறுவனத்தின் சார்பில் நாளேட்டில் வெளி வந்துள்ளது.

உத்தரகாண்டில் கடவுளைத் தேடிச் சென்றவர்கள் பெரு வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்கள் எந்தக் கடவுளும் ஓடி வந்து காப்பாற்றவில்லை.

இராணுவத்தினர் தான் காப்பாற்றினார்கள் அவர் களுக்குத்தானே நன்றி சொல்ல வேண்டும். ஆனால் காக்கத் தவறிய கடவுளை இந்த இராணுவத்தினர் உருவில் கண்டார்களாம். எப்படி இருக்கிறது. எப்படியோ மனிதனைக் கடவுள் காப்பாற்றா விட்டாலும் மனிதன் கடவுளைக் காப்பாற்ற வேண்டியவனாகி விட்டான் - பாவம் கடவுள்!

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவு தான்!


கோயில் சிலைகளை பாதுகாக்க கேமராவாம் : அறநிலையத்துறை நடவடிக்கை

நெல்லை: தமிழகத்தில் விலை உயர்ந்த அய்ம்பொன் சிலைகள் உள்ள அனைத்து கோயில்களிலும் அலாரம் மற்றும் சுழலும் கேமரா அமைக்க அற நிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் அற நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 36 ஆயிரத்து 425 கோயில்கள் மற்றும் 56 மடங்கள் உள்ளன. இந்த கோயில்களில் விலை மதிப்பு மிக்க அய்ம்பொன் னால் ஆன கடவுள் சிலைகள் மற்றும் நகைகள் உள்ளன. சில கோயில்களில் சிலைகள் கொள்ளை போகும் சம்பவம் நடை பெற்றதை அடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நெல்லை யப்பர் கோயில், திருவாரூர் கோயில் உள்ளிட்ட பெரிய கோயில்களில் சிலை பாதுகாப்பு மய்யங்கள் அமைக்கப்பட்டன. கேமரா, அலாரம் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மய்யங்களின் அருகே உள்ள பல கோயில்களின் திருவிழாக்காலங் களில் மட்டும் பயன்படுத்தப்படும் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து திருவிழா நேரங்களில் இவை எடுத்துச் செல்லப்பட்டு திருவிழா முடிந்த பின்னர் மீண்டும் பாதுகாப்பாக வைக்கப்படுவது வழக்கம். இந்த சிலை பாதுகாப்பு மய்யங்களில் கேமரா, அலாரம் மற்றும் அதிநவீன பூட்டு, காவலர்கள் போன்ற வசதி செய்யப்பட்டுள்ளன.

ஆயினும் உற்சவர் உள்ளிட்ட முக்கிய அய்ம்பொன் சிலைகளும் குறைந்த அளவிலான நகைகளும் கோயில்களிலேயே நிரந்தரமாக வைக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சிலைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்கிறது. குறைந்த அள விலான சிலை இருந்தாலும் அனைத்து கோயில்களிலும் வங்கி களில் இருப்பது போன்ற அலாரம் மற்றும் சுழலும் வீடியோ கண் காணிப்பு கேமரா அமைக்க அற நிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தேவையான இடங்களில் இரவுக் காவலர்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேமரா, அலாரம் போன்ற வசதிகள் அமைக்க நிதி வசதி இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து மேல் நடவடிக்கை எடுத்து உடனடியாக பாதுகாப்பை பலப்படுத்த அறிவு றுத்தப்பட்டுள்ளனர்.

காவடி சுமந்து பாத யாத்திரை சென்ற பக்தர்கள் நான்கு பேர் ரயில் மோதி பலி

ராணிப்பேட்டை: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து பாத யாத்திரை செல்கின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள மேல்பட்டி லட்சுமி அம்மாள் புரத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது45) தேநீர்க் கடை வைத் திருந்தார். மேல்கார்கூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ்(18) பாலிடெக்னிக் மாணவர், தர்மபுரி மாவட்டம் இருமத்தூர் கொண்டா ரம்பட்டியை சேர்ந்த சிங்கார வேல் (20) கல்லூரி மாணவர் இவர்கள் உள்பட பக்தர்கள் திருத்தணிக்கு காவடி சுமந்து கொண்டு பாத யாத்திரை புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு வேலூர் அருகே உள்ள பொய்கையில் தங்கினர். அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு வாலாஜா ரோடு ரயில் நிலையத்தை அடைந் தனர்.

அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத் தனர். அப்போது ஆனந்தன், ஜெக தீஷ், சிங்காரவேல் மற்றும் ஆம்பூரை சேர்ந்த நவீன் (18) ஆகியோர் காலைக் கடன் கழிக்க தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப் போது காலை 5.30 மணிக்கு சென்னை நோக்கி வந்த ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்தன், ஜெகதீஷ், சிங்காரவேல் 3 பேரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர். நவீன் படுகாயம் அடைந்தார். நவீனை மீட்டு வேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்தவர்கள் உடல் பிரேத பரிசோ தனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட் டது. காட்பாடி ரயில்வே காவல் துறை யினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


வரவேற்கிறோம்.... ஆனால்...


மருத்துவக் கல்விக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக மத்திய நல் வாழ்வுத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, திராவிடர் கழகம் தொடக்கத் திலேயே கருத்துத் தெரிவித்துள்ளது. இந்தியா வின் வேறு பகுதிகளில்கூட, எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைவர் கலைஞர் அவர்கள் இந்த வகையிலே ஏற்கெனவே கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களும் இப்போது இதனை ஒட்டியே கருத்துத் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நுழைவுத் தேர்வு சட்டப்படியாக, திமுக ஆட்சியில் ஒழிக்கப் பட்டு விட்டது.

கல்வியைப் பொதுப் பட்டியலில் நெருக்கடி காலத்தில் கொண்டு சென்ற மத்திய அரசு, தேவையில்லாமல் மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிட்டு வருகிறது.

மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு பிரச்சினையை முன் வைத்தாவது கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுவது நல்லது; மத்திய அரசும் இணங்கி வரவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

தமிழ்நாடு முதல் அமைச்சர் மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு தேவையில்லை; மேல் முறையீடும் செய்யக் கூடாது என்று வற்புறுத்தும் அதே வேளையில், ஆசிரியர் தகுதித் தேர்விலும், பணி நியமனத்திலும், சமூகநீதிக்கு விரோதமாகச் செயல்பட்டு வருவது பற்றியும், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே, நமது முக்கியமான வேண்டுகோளாகும்.

இந்தப் பிரச்சினையில் இந்தியாவுக்கே வழி காட்டக் கடமைப்பட்டுள்ள தமிழ்நாடு முதல் அமைச்சர், ஆந்திர மாநிலம், பீகார், அஸ்ஸாம், கேரள மாநிலங்கள் பின்பற்றும் சமூக நீதியைக்கூடக் கடைபிடிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இந்தப் பிரச்சினையில் திராவிடர் கழகம் முன்னின்று போராடி வருகிறது; முக்கிய எதிர்க் கட்சியான கலைஞர் அவர்களும் வலுவான கருத்தினை வெளியிட்டுள்ளார்.

பல்வேறு அமைப்புகளும், தத்தம் வழியில் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றன. இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக் கப்பட்டு வருகின்றன.

இவ்வளவுக்குப் பிறகும் - தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு என்று தவறான முடிவின்மீது கருத்துத் தெரிவித்து விட்டது.

சமூகநீதியில் இவ்வரசுக்கு இருக்கும் அந் தரங்கச் சுத்தியையே சந்தேகத்துக்கு உள்ளாக்கி விட்டதே!

30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்று பல்வேறு கல்வி நிபுணர்களின் குழுக்கள் ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளன. அதன்படி ஆசிரியர்களை நியமனம் செய்தால் இப்பொழுது ஆசிரியர் பயிற்சி பெற்று அரசுப் பணிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அத்தனை பேர்களுக் கும் பணி வாய்ப்புப் பெற விசாலமான வாய்ப்பு உண்டு. அந்த நிலையில் தகுதித் தேர்வு பிரச்சினைக்கும் இடம் இல்லாமலேயே போகும். அதுபற்றியும்கூட இ.அ.அ.தி.மு.க. அரசு சிந்திப் பது நல்லது; உடனடியாக அதனைச் செயல்படுத்த முடியாத பட்சத்தில், தகுதித் தேர்வில் செய்துள்ள குளறுபடிகளைச் சரி செய்ய முன்வரவேண்டும்.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முன் னேறிய ஜாதியினருக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரி சேர்க்கைகளில்கூட வெவ்வேறு சத வீதத்தில் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும் பொழுது, ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் அந்த முறை கடைபிடிக்கப்படாதது ஏன் என்ற கேள்விக்கு அரசு தரப்பிலிருந்து இதுவரை நியாயமான பதில் இல்லாத திலிருந்தே அரசு தரப்பில் தவறு நடந்திருக்கிறது என்பது வெளிப் படையாகவில்லையா? வீண் பிடிவாதம் எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்று எச்சரிக் கின்றோம்.

தமிழ் ஓவியா said...


நாடுநாடு என்று எதைச் சொல்ல வேண்டும் என்றால், அது பொரு ளாதாரச் சுதந்திரமுடைய நாடாக இருத்தல் வேண்டும்; அது இல்லாத நாடு அடிமை நாடு என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, சுதந்திர நாடு என்று சொல்ல முடியாது.
(விடுதலை, 2.12.1958)

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம்! (ஜாதி - தீண்டாமை ஒழிப்பு) 1.8.2013 - முழக்கங்கள் (1)


வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(2) பணி முடிப்போம் பணி முடிப்போம்!
மரண சாசனமாக மரண சாசனமாக
பெரியார் அறிவித்த பெரியார் அறிவித்த
அனைத்து ஜாதியினருக்கும்
அனைத்து ஜாதியினருக்கும்
அர்ச்சகர் உரிமை அர்ச்சகர் உரிமை
பணி முடிப்போம் - பணி முடிப்போம்

(3) ஒழிக ஒழிக ஒழிகவே!
வருணா சிரமம் வருணா சிரமம்
ஒழிக ஒழிக ஒழிகவே!

(4) ஒழிக ஒழிக ஒழிகவே
ஜாதியும் - தீண்டாமையும்
ஜாதியும் தீண்டாமையும்
ஒழிக ஒழிக ஒழிகவே!

(5) கோயில் கருவறையில் கோயில் கருவறையில்
தீண்டாமை தீண்டாமை ஒழிக ஒழிக ஒழிகவே!

(6) அர்ச்சகராக்கு அர்ச்சகராக்கு!
அனைத்து ஜாதியினரையும்
அனைத்து ஜாதியினரையும்
அர்ச்சகர் ஆக்கு அர்ச்சகர் ஆக்கு!

(7) பேதம் வேண்டாம் பேதம் வேண்டாம்
பக்தியின் பெயரால் பக்தியின் பெயரால்
மதத்தின் பெயரால் மதத்தின் பெயரால்
பேதம் வேண்டாம் பேதம் வேண்டாம்!

(8) பார்ப்பான் மட்டும் பார்ப்பான் மட்டும்
அர்ச்சகனா? அர்ச்சகனா?
தமிழன் மட்டும் தமிழன் மட்டும்
சூத்திரனா? சூத்திரனா?

(9) கோயில் கட்டும் கோயில் கட்டும்
தமிழன் எல்லாம் தமிழன் எல்லாம்
வீதியிலா? வீதியிலா?
குருக்கள் மட்டும் குருக்கள் மட்டும்
கருவறையிலா கருவறையிலா?

(10) தாழ்த்தப்பட்டோரும்
பிற்படுத்தப்பட்டோரும்
தாழ்த்தப்பட்டோரும்
பிற்படுத்தப்பட்டோரும்
அய்.ஏ.எஸ். ஆகலாம்
அய்.ஏ.எஸ். ஆகலாம்
நீதிபதியாகலாம் நீதிபதியாகலாம்
அர்ச்சகர் ஆக அர்ச்சகர் ஆக
கூடாதா? கூடாதா?
முடியாதா? முடியாதா?

(11) ஆண்டவன் அனைவருக்கும்
ஆண்டவன் அனைவருக்கும்
பொது என்றால் பொது என்றால்
பிராமணன் என்றும் சூத்திரன் என்றும்
பிராமணன் என்றும் சூத்திரன் என்றும்
பேதங்கள் ஏன்? பேதங்கள் ஏன்?

(12) பெரியார் நெஞ்சில் பெரியார் நெஞ்சில்
தைத்த முள்ளை தைத்த முள்ளை
மானமிகு கலைஞர் மானமிகு கலைஞர்
சட்டம் இயற்றி சட்டம் இயற்றி
நீக்கினார் நீக்கினார்
உச்சநீதிமன்றமே உச்சநீதிமன்றமே
தடையை நீக்கு - தடையை நீக்கு!

(13) கட்சியில்லை கட்சியில்லை
ஜாதியில்லை ஜாதியில்லை
உரிமைப் போர் உரிமைப் போர்
மனித உரிமைப் போர் மனித உரிமைப் போர்!

(14) தமிழா தமிழா ஒன்றுபடு-
தமிழா தமிழா ஒன்றுபடு!
தமிழன் பகையை
தமிழன் பகையை
வென்று விடு - வென்று விடு!

(15) வெல்லட்டும் வெல்லட்டும்!
மனித உரிமை மனித உரிமை
வெல்லட்டும் - வெல்லட்டும்!

(15) போராடுவோம் - போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம் - போராடுவோம்!
வெற்றி பெறுவோம்
வெற்றி பெறுவோம்!

(17) வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(18) வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!

(19) வாழ்க வாழ்க வாழ்கவே
அறிஞர் அண்ணா வாழ்கவே!

(20) வெல்க வெல்க வெல்கவே
தமிழர் உரிமை வெல்கவே!
- தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம்! (ஜாதி - தீண்டாமை ஒழிப்பு) 1.8.2013 - முழக்கங்கள் (1)


வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(2) பணி முடிப்போம் பணி முடிப்போம்!
மரண சாசனமாக மரண சாசனமாக
பெரியார் அறிவித்த பெரியார் அறிவித்த
அனைத்து ஜாதியினருக்கும்
அனைத்து ஜாதியினருக்கும்
அர்ச்சகர் உரிமை அர்ச்சகர் உரிமை
பணி முடிப்போம் - பணி முடிப்போம்

(3) ஒழிக ஒழிக ஒழிகவே!
வருணா சிரமம் வருணா சிரமம்
ஒழிக ஒழிக ஒழிகவே!

(4) ஒழிக ஒழிக ஒழிகவே
ஜாதியும் - தீண்டாமையும்
ஜாதியும் தீண்டாமையும்
ஒழிக ஒழிக ஒழிகவே!

(5) கோயில் கருவறையில் கோயில் கருவறையில்
தீண்டாமை தீண்டாமை ஒழிக ஒழிக ஒழிகவே!

(6) அர்ச்சகராக்கு அர்ச்சகராக்கு!
அனைத்து ஜாதியினரையும்
அனைத்து ஜாதியினரையும்
அர்ச்சகர் ஆக்கு அர்ச்சகர் ஆக்கு!

(7) பேதம் வேண்டாம் பேதம் வேண்டாம்
பக்தியின் பெயரால் பக்தியின் பெயரால்
மதத்தின் பெயரால் மதத்தின் பெயரால்
பேதம் வேண்டாம் பேதம் வேண்டாம்!

(8) பார்ப்பான் மட்டும் பார்ப்பான் மட்டும்
அர்ச்சகனா? அர்ச்சகனா?
தமிழன் மட்டும் தமிழன் மட்டும்
சூத்திரனா? சூத்திரனா?

(9) கோயில் கட்டும் கோயில் கட்டும்
தமிழன் எல்லாம் தமிழன் எல்லாம்
வீதியிலா? வீதியிலா?
குருக்கள் மட்டும் குருக்கள் மட்டும்
கருவறையிலா கருவறையிலா?

(10) தாழ்த்தப்பட்டோரும்
பிற்படுத்தப்பட்டோரும்
தாழ்த்தப்பட்டோரும்
பிற்படுத்தப்பட்டோரும்
அய்.ஏ.எஸ். ஆகலாம்
அய்.ஏ.எஸ். ஆகலாம்
நீதிபதியாகலாம் நீதிபதியாகலாம்
அர்ச்சகர் ஆக அர்ச்சகர் ஆக
கூடாதா? கூடாதா?
முடியாதா? முடியாதா?

(11) ஆண்டவன் அனைவருக்கும்
ஆண்டவன் அனைவருக்கும்
பொது என்றால் பொது என்றால்
பிராமணன் என்றும் சூத்திரன் என்றும்
பிராமணன் என்றும் சூத்திரன் என்றும்
பேதங்கள் ஏன்? பேதங்கள் ஏன்?

(12) பெரியார் நெஞ்சில் பெரியார் நெஞ்சில்
தைத்த முள்ளை தைத்த முள்ளை
மானமிகு கலைஞர் மானமிகு கலைஞர்
சட்டம் இயற்றி சட்டம் இயற்றி
நீக்கினார் நீக்கினார்
உச்சநீதிமன்றமே உச்சநீதிமன்றமே
தடையை நீக்கு - தடையை நீக்கு!

(13) கட்சியில்லை கட்சியில்லை
ஜாதியில்லை ஜாதியில்லை
உரிமைப் போர் உரிமைப் போர்
மனித உரிமைப் போர் மனித உரிமைப் போர்!

(14) தமிழா தமிழா ஒன்றுபடு-
தமிழா தமிழா ஒன்றுபடு!
தமிழன் பகையை
தமிழன் பகையை
வென்று விடு - வென்று விடு!

(15) வெல்லட்டும் வெல்லட்டும்!
மனித உரிமை மனித உரிமை
வெல்லட்டும் - வெல்லட்டும்!

(15) போராடுவோம் - போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம் - போராடுவோம்!
வெற்றி பெறுவோம்
வெற்றி பெறுவோம்!

(17) வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(18) வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!

(19) வாழ்க வாழ்க வாழ்கவே
அறிஞர் அண்ணா வாழ்கவே!

(20) வெல்க வெல்க வெல்கவே
தமிழர் உரிமை வெல்கவே!
- தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

ஆகமவிதி மீறல்.... (12)


கோயில்கள் இன்ன இன்ன இடத்தில்தான் இருக்க வேண்டும் என்கிறது ஆகமம். ஆனால் இன்று கண்ட கண்ட இடத்தில் கட்டப்படுகிறது. சிவா விஷ்ணு என்று கோயில் அமைப்பது சைவாகமத்திலோ வைணவாக மத்திலோ சொல்லப்படவில்லை.

- இப்படியொரு ஆகமவிதி

உண்மைதான். இன்று கண்ட கண்ட இடங்களில் கோயில்களைக்கட்டுகின்றார்கள். தெருக்குத்தல் தொடங்கி, ஆட்டோ ஸ்டாண்ட் வரை, கோயில்கள் கட்டுகின்றார்கள். இதில் என்ன தவறு? இவ்வாறு கட்டி னால் என்னவாகும்? கடவுள் ஓடிப்போய் விடுவாரா? அல்லது அந்த இடம் புனிதம் கெட்டுவிடுமா? அப்படி யென்றால் இன்று கண்ட கண்ட இடங்களில் கோயில் கள் இருப்பதால், கடவுளின் புனிதம் கெட்டு வெறும் கல்தான் இருக்கின்றதா! ஆகமத்தை மீறி இத்தனை நபர்கள் கோயில் கட்டி வழிபாடு நடத்துகின்றார்களே அவர்கள் எல்லாம் என்ன முட்டாள்களா?

பக்தர்கள் ஆகமத்தை மீறிவிட்டதால் இதுவரை என்னென்ன இழப்பு ஏற்பட்டுவிட்டது பட்டியலிட முடியுமா? சென்னையில் அஷ்டலெட்சுமி என்றொரு கோயில், ஒன்றின் மேல் ஒன்றை அடுக்கி வைத்தது போல கட்டியிருக்கிறார்களே! இது ஆகமப்படி தவறு. இதனால் என்ன இழப்பு ஏற்பட்டுவிட்டது. கடல் தண்ணீர் கோயிலுக்குள் நுழைந்து விட்டதா?

நடப்பது என்ன?

எட்டு லட்சுமியும் ஒரே இடத்தில் இருந்தல்லவா, பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகின்றது. இது போலதானே அறுபடை முருகனும் ஒரே இடத்தில் இருந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றது.

சரி இத்தனை ஆகம மீறல்களுக்கும் சிவாச்சாரி யார்கள்தானே துணை போகின்றார்கள்! இன்று கண்ட கண்ட இடங்களில் கட்டப்படும் கோயில்களுக்கு சிவாச் சாரியார்கள்தானே கும்பாபிஷேகம் செய்து வைக் கிறார்கள்.

இந்த கோயில் ஆகம விதிகளுக்கு புறம்பாக, ஆகம விதிகளை மீறி கட்டப்பட்ட கோயில். இந்த கோயிலுக்கு நானோ அல்லது என் சமூகத்தைச் சார்ந்த எந்த சிவாச்சாரியரும் கும்பாபிஷேகம் செய்யமாட்டோம் என்று எந்த சிவாச்சரியாராவது, ஏதாவது ஒரு இடத்திலாவது சொல்லியிருக்கிறார்களா?

இதைவிட ஒரு பெரிய கொடுமை இந்தக் கோயிலை நான் கும்பாபிஷேகம் செய்து தருகிறேன் 50,000 ரூபாய் கொடு என்று சிவாச்சாரியார் காண்டிராக்ட் பேசி னால்.. அவருக்குத் தெரியாமல் இன்னொரு சிவாச்சாரி யார் அங்கு சென்று எனக்கு 30,000 ரூபாய் கொடு அவரைவிட சிறப்பாக பண்ணித்தருகிறேன் என் றல்லவா போட்டி போடுகிறார்கள்.

சிவா விஷ்ணு என்று கோயில் அமைப்பது சைவாக மத்திலோ வைணவாகமத்திலோ சொல்லப்படவில்லை.

உருவாக்கப்படாத, விதியை மீறி இன்று உலகம் முழுவதும் சிவா விஷ்ணு கோயில் கட்டப்பட்டுள்ளது. அந்தக் கோயில்களில் எல்லாம் சிவாச்சாரியார்களும், பட்டாச்சாரியர்களும் ஒற்றுமையாகத்தானே பூஜை செய்து வருகின்றார்கள்.
இதனால் என்ன இழப்பு ஏற்பட்டு விட்டது? பட்டியலிட முடியுமா? சிவா விஷ்ணு கோயில் அமைப்பது பற்றி எந்த ஆகமத்திலும் ஏன் சொல்லப்படவில்லை?

தமிழ் ஓவியா said...


உண்மை என்ன தெரியுமா?

அவ்வளவு குரோதம்.

சைவத்திற்கும், வைணவத்திற்கும் அவ்வளவு குரோதம். அதனால்தான் அப்படியொரு விதியை உருவாக்கவில்லை என்பதுதான் உண்மை.
அடுத்து - இப்பொழுது புதிதாக கட்டுகின்ற கோயில்களில் அல்லது புதுப்பிக்கின்ற கோயில்களில் எல்லாம் லேட்டஸ்ட் கடவுளான ஸ்ரீரடி சாய்பாபா இடம் பிடித்து விட்டாரே!

சிவன் விஷ்ணுவையாவது நாம் புராணங்களில் படித்திருக்கிறோம். ஆனால் இந்த ஸ்ரீரடி சாய்பாபா யார்? அவருக்கு எப்படி கோயில்களில் புராணகால கடவுளுக்கு இணையான சீட் கிடைத்தது. இது ஆகம மீறல் இல்லையா?

இந்த ஆகம மீறல்களால் எதை இழந்தோம்! பட்டியலிட முடியுமா?

லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வருமானத்தை யல்லவா பெற்று இருக்கிறோம். எத்தனையோ பக்தர் களுக்கு ஸ்ரீரடி சாய்பாபா கனவிலும், நேரிலும் அருள் புரிவதாகச் சொல்லுகிறார்களே!

ஆக இந்த ஆகம மீறல்களால் எத்தனையோ பக்தர்கள் சந்தோஷமாகத்தானே இருக்கிறார்கள்.
அடுத்து,

இதைவிட பெரிய அசிங்கம் இன்னும் கொஞ்சகாலத் தில் அதாவது 21-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரங்கேறப் போகிறதே! அதற்கு நாம் எங்கே போய் முட்டிக்கொள்வது?

ஆம்!

இன்று நம் கண் முன்னால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக உலகம் முழுவதும் விமர்சனங்களுக்கு ஆளாகி, தெய்வமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிற புட்டபர்த்தி சாய்பாபாவிற்கு தனியாக கோயிலும், புதிதாக கட்டப்போகின்ற கோயில்களில் தனி இடமும், புதுப்பிக்கின்ற கோயில்களில் தனி இடமும் கிடைக்கப் போவது உறுதி!

அப்பொழுது என்ன ஆகப்போகிறது இந்த ஆகமவிதி?

உலகம் அழிந்துவிடுமா? அல்லது எதையாவது ஒரு பகுதியை இழந்து விடுவோமா! அப்பொழுது நிலைமை எப்படி இருக்கும் தெரியுமா? கோடிக்கணக்கில் கோயி லுக்கு வருமானம் கொட்டோ கொட்டு என்று கொட்டப் போவது உறுதி. அதுமட்டுமல்ல - அங்கே அதிகாலை புட்டபர்த்தியை சுப்ரபாதம் சொல்லி எழுப்பி அபிஷேகம், அர்ச்சனை, சகஸ்ரநாமம் சொல்லும் அர்ச்சகர்கள் கோடீஸ்வரனாக ஆகப்போவது உறுதி. இதிலிருந்து என்ன தெரிகிறது?

கண்ட கண்ட இடத்தில் கோயில் கட்டுவதையும், ஆகம விதியில் சொல்லப்படாத கடவுள்களை ஒன்று சேர்ப்பதையும், புராணக் கடவுள்களுக்கு இணையாக நம் கண்முன்னே மலம் போகும் மனிதர்களை கடவுளாக்கி ஒன்று சேர்ப்பதையும் - ஆகமம் ஏற்கவில்லை என்ற ஆகம விதியும், பொய்தானே!

- குமார் ராமசாமி

நூல்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாமா?

தமிழ் ஓவியா said...


பெரியார் சுயமரி யாதைத் திருமண நிலை யத்தின் சார்பில் தமிழகம் முழுக்க நடத்தப்படும் ஜாதி மறுப்பு இணை தேடல் நிகழ்ச்சியான மன்றல் - நெல்லை மண்ட லத்தில் 28.7.2013 அன்று திருநெல்வேலி மாநகரில் ஆர்.கே.வி. மஹாலில் நடைபெற்றது. காலை முதலே ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற் றனர். பகல் முழுவதும் பதிவுகள் ஏற்கப்பெற்று மணமக்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. மதிய உணவுக்குப் பின் னும் அறிமுக நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணை யருக்கான பாராட்டும் நிகழ்ச்சியின் இடையி டையே செய்யப்பட்டது. ஜாதி மறுப்பு இணை யர்களான திருநெல்வேலி இ.தமிழ்மணி- இ.சுகந்தி, தூத்துக்குடி பொ.முருகன் - இ.அருணா, கீழப்பாவூர் ச.தமிழன் - த.கலாவதி, நாகர்கோவில் மு.இராசேந் திரகுமார் - வி.விஜி, நெல்லை பொ.சக்திவேல் - திருமலைகுமாரி ஆகி யோருக்கு பெரியார் சுய மரியாதைத் திருமண நிலையத்தின் மாநில அமைப்பாளரும், தலை மைச் செயற்குழு உறுப் பினருமான திருமகள் பாராட்டுக் கேடயத்தினை வழங்கினார். அனைவருக் கும் கழகப் பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ் அவர் கள் பாராட்டுத் தெரி வித்தார்.

நிறைவு விழாவில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டோரைப் பாராட்டியும், மன்றல் நிகழ்ச்சி சிறக்க உழைத் தோரைப் பாராட்டியும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் "கூட்டுமுயற்சியால் வெற்றி பெற முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த நெல்லை மன்றல். நமது தோழர்கள் கடுமை யாக உழைத்து இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். அடுத்த மன்றல் நெல் லையில் நடத்தப்பட வேண்டும் என்று தமிழர் தலைவர் அவர்கள் ஆண யிட்டபோது, நெல்லை யிலா? என்று சிலர் வியந் தார்கள். எங்கே தேவைப் படுகிறதோ, அங்கே தானே நடத்த வேண்டும். எனவே நெல்லையில் தான். ஆனால் உடனடி பலன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அவசியமாக நடத்தப்பட வேண்டிய பகுதி என்றார் தழிழர் தலைவர் அவர்கள். அதன் படி தான் இங்கே அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. மற்ற ஊர்களோடு ஒப்பிடுகை யில் நெல்லையில் பதிவு குறைவாக இருக்கிறதே என்று கூட நம் தோ ழர்கள் வருத்தப்பட்டார் கள்.

ஆனால், இது ஒரு நல்ல தொடக்கம். ஜாதி யினாலும், மூடநம்பிக்கை யாலும் சூழப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வருவது என்பது சாதாரண பணி யல்ல. இதே பகுதியில் தோழர்கள் எதிர்பார்த் ததை விட அதிகமான பதிவுகள் வரும் வரை, இந்தப் பணியை நாங்கள் விடுவதாக இல்லை. தொடர் பிரச்சாரத்தின் வாயிலாகவும், அடுத் தடுத்த தலைமுறையிட மும் இந்தக் கொள்கை யையும், தந்தை பெரியா ரையும் கொண்டு செல்வ தன் வாயிலாகவும் மட்டு மே நாம் வென்றெடுக்க முடியும். அதற்கான திட்ட மிடலோடு செயலாற்று வோம். மீண்டும் மீண்டும் இப்பகுதியில் மன்றல் நடத்தப்படும். தமிழகத் தின் அனைத்துப் பகுதி களிலும் மன்றல் நிகழ்வு களை தொடர்ந்து வெற்றி கரமாக நடத்தி நாம் செய்துவரும் சமூகப் புரட்சி தொடரும் என்று குறிப்பிட்டார். மன்றல் சிறக்க உதவிய, தொண் டாற்றிய அனைவருக்கும் பயனாடை அணிவித்துச் சிறப்பித்தார்.

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆர்ப்பாட்டம்!


ஆர்ப்பரித்து எழுகிறது அரிமா தமிழினம்!

சென்னையில் தமிழர் தலைவர் தலைமை தாங்குகிறார்


சென்னை, ஜூலை 31- திராவிடர் கழகத்தின் சார்பில் நாளை (1.8.2013) காலை தமிழகம் முழுவதும் கழக மாவட்டத் தலைநகரங்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத் தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., (தி.மு.க.), தொல்.திருமாவளவன் எம்.பி., (வி.சி.க.), சுப.வீரபாண் டியன் (தி.இ.த.பே.) ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்

தந்தை பெரியார்தம் வாழ்நாளில் இறுதியாக அறிவித்த தீண்டாமை ஒழிப்பு - ஜாதி ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு இதனைச் செயல்படுத்தும் வகை யில் நடவடிக்கை எடுக்கவேண்டும்; உச்சநீதிமன் றத்தில் வழக்கைச் சிறப்பாக நடத்தவேண்டும்; வெற்றி பெறவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் பல கட்டப் போராட்டங்களை நடத்து வது என்று சென்னையில் 9.7.2013 அன்று நடை பெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 43 ஆண்டுகளுக்குமேல் இந்தப் பிரச்சினை யில் திராவிடர் கழகம் - ஜாதி - தீண்டாமை ஒழிப்பு என்பது இந்த இயக்கத்தின் உயிர் மூச்சுக் கொள்கை என்பதால், உறுதியாக நின்று வென்றே தீருவது என்ற திட சித்தத்துடன், எந்த விலையையும் கொடுக்கத் தயார் என்று நாளும் பாடுபட்டு களங்காண, களைப்பின்றிக் கடமையாற்றி வருகின்றது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன் வேண்டும் என்பதை விளக்கி திராவிடர் கழகப் பேச்சாளர்கள் தமிழகமெங்கும் பட்டிதொட்டி யெல்லாம் சென்று தெருமுனைக் கூட்டங்களை நடத்திப் பிரச்சாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில், அதனடிப்படையில் முதற்கட்ட மாக நாளை (1.8.2013) திராவிடர் கழகத்தின் அனைத்துக் கழக மாவட்டத் தலைநகரங்களில் (புதுச்சேரி, காரைக்கால் உள்பட) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

61 இடங்களில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் உள்ள கழக மாவட்டங்களான 61 இடங்களில் நடைபெறும், இந்தத் தீண்டாமை ஜாதி ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டத் தில் திராவிடர் கழகத்துடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற் கின்றனர்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரி தமிழ்நாடெங்கும் நாளை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தோழர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன் னாள் மத்திய - மாநில அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர்கள் என பெருந் திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர்.

சென்னை - சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம்!

சென்னை - சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நாளை (1.8.2013) காலை 11 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங் கோன் எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தென் சென்னை தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜெ.அன் பழகன் எம்.எல்.ஏ., வடசென்னை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் பங்கேற் கின்றனர்.

தமிழ் ஓவியா said...


கிரிக்கெட் சூதாட்டம்: மூக்கை உடைத்தது மும்பை நீதிமன்றம்மும்பை, ஜூலை 31-சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது சூதாட்ட குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதுகுறித்து முன்னாள் நீதிபதிகள் ஜெயராம் சவுதா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய விசாரணை குழுவை கிரிக்கெட் வாரியம் நியமித்தது.

இந்த விசாரணை அறிக்கையில் குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் மீதான சூதாட்ட புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் இந்த விசாரணை குழுவை எதிர்த்து ஜார்க்கண்ட், பீகார் மாநில கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் கிரிக்கெட் வாரியத்துக்குக் கண்டனம் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த விசாரணை குழு சட்ட விரோதமானது. ஒரு தலை பட்சமானது என்று தெரிவித்தது.

மேலும் புதிய குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தர விட்டது.

அய்.பி.எல். சூதாட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை அய்.பி.எல். சூதாட்டம் தொடர்பாக டில்லி காவல்துறையினர் விசாரண நடத்தி வருகின்றனர். சூதாட்டத்தில் ஈடுபட்டு கைதான கிரிக்கெட் வீரர்களின் தொலைபேசி உரையாடல்களை மத்திய தடயவியல் ஆய்வு செய்தபோது, இந்த சூதாட்டத்தில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய டில்லி காவல்துறை, நேற்று டில்லி கூடுதல் அமர்வு நீதிபதி வினய்குமார் கன்னா முன்னிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 6000 பக்கம் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், தாவூத் இப்ராகிம், அவனது நெருங்கிய கூட்டாளி சோட்டா ஷகீல், பணி நீக்கம் செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் சிறீசாந்த், அன்கீத் சவான், அஜித் சண்டிலா, ஏஜெண்டுகள் அஷ்வனி அகர்வால், ரமேஷ் வியாஸ், தீபக் குமார், சுனில் பாட்டியா மற்றும் பைரோஸ் பாரித் அன்சாரி, முன்னாள் ரஞ்சி வீரர் பாபுராவ் யாதவ் உள்ளிட்ட 39 பேரின் பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த 39 பேரில் 8 பேர் நீதிமன்றக் காவலில் உள்ளனர். 21 பேர் பிணையில் வெளியே வந்துவிட்டனர். 10 பேர் தலை மறைவாக உள்ளனர்.

தமிழ் ஓவியா said...


பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்முறைத் தடுப்புச் சட்டம்


பணி புரியும் இடங்களில் பெண்களைப் பாது காக்கும் வகையில் சட்டத்தில் புதிய விதிகள் உரு வாக்கப்பட்டுள்ளன. அதன்படி பெண்களுக்குப் பாலியல் தொல்லை தருபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

இதுதொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடை முறைக்கு வந்துள்ள பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லைகள் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம்-2013 இல், பெண்கள் மற்றும் குழந் தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ள வரைவு சட்ட விதிகள் வருமாறு:

பெண் பணியாளர்களை பாலியல் தொல்லை களுக்கு உள்படுத்துபவர்களுக்கு பணி நீக்கம், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை நிறுத்தி வைத்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.

பாலியல் புகார் அளிக்கும் பெண் பணியாள ருக்கு தகுந்த இழப்பீட்டுத் தொகை வழங்குவது என்றும் கூறப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை குறித்து பொய்யான தகவல் அளித்தால், பாலியல் குற்றத்துக்கு குற்றவாளிக்கு என்ன தண்டனை அளிக்கப்படுமோ, அதே தண்டனை பெண்ணுக்கும் கிடைக்கும்.

புகார்களை பெறுவதற்காக உள்ளூர் புகார்கள் குழுவை அமைக்கவேண்டும். அதில் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சமூகசேவகர் ஒருவரும், தொழிலாளர், வேலைவாய்ப்பு, சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு களில் நன்கு கைதேர்ந்த ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தவிர, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாது காப்புத் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தை நிறுவி, மேற் கண்ட குழுவிற்கு தார்மிக ஆதரவு அளிக்க வேண்டும்.

விசாரணையின் போது குற்றம் சாட்டியவர், குற்றம்சாட்டப்பட்டவர் இருவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குற்றச்சாட்டுக்கு ஆளானவர், புகார் அளித்த பெண்ணுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ மிரட்டல் விடுக்கவோ, ஆசை வார்த்தை கள் கூறவோ முயற்சிக்கக் கூடாது என எச்சரிக் கப்பட வேண்டும் போன்ற விதிமுறைகள் உருவாக்கப் பட்டுள்ளன.

இது உண்மையில் வரவேற்கப்படவேண்டிய சட்டமாகும். பெண்கள் என்றால், பாலியல் பதுமை என்ற மனப்பான்மை, ஆண்களிடத்தில் உள்ளது. ஆண் ஒருவன் 7 நிமிடத்திற்கு ஒருமுறை, பாலுணர்வுபற்றி யோசிக்கிறான்- என்கிறது ஓர் ஆய்வு.

பெண்கள் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் என்பது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அருமையான சட்டம். அது எந்த வகையில் செயல்வடிவத்தில் இருக்கிறது என்பது கேள்விக்குறிதான்.

பாதிப்புக்கு ஆளான பெண்கள் காவல் நிலையத்திற்குச் சென்று துணிவாகப் புகார் கொடுப்பது போன்ற துணிவு, போதுமான அளவுக்கு ஏற்படவில்லை.

இதில் இன்னொன்று - இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்கிற விழிப்புணர்வுகூட சமுதாயத்தில் ஏற்படவில்லை. வெறும் சட்டத்தை நிறைவேற்றினால் மட்டும் போதாது - அதுபற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் நாடு தழுவிய அளவில் செய்ய அரசே திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.

அரசு தொலைக்காட்சியிலாவது இதுகுறித்து, விளக்கம் அளிக்கலாமே! நாடு தழுவிய அளவில் விவாதங்களை உருவாக்கலாமே!

பல்கலைக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள், இதுகுறித்துக் கருத்தரங்குகளை நடத்திடவேண்டும்.

அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது சர்வசாதாரணம். அதனைத் தடுக்கவும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்கவும் ஏற்கெனவே சட்டம் இருக்கத்தான் செய்கிறது.

2012 டிசம்பரில் இத்தகைய சட்டம் குறித்து உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் கூறியது இங்கு நினைவூட்டத்தக்கதாகும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு, ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனைவரை, சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட (திருத்த) மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு மசோதா ஒன்றும் 2011 ஆம் ஆண்டிலேயே பேசப்பட்ட ஒன்று.

குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் பணியில் ஈடுபட்ட ராஜஸ்தான் அரசு ஊழியர் பான்வாரி கன்னத்தில் அறையப்பட்ட நிகழ்ச்சி இந்திய அளவில் பெரிய அதிர்வை உண்டாக்கியது. அது தொடர்பான வழக்கில் 1997 இல் உச்சநீதிமன்றத்தால் வழிகாட்டுதல் அம்சங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டம் அலுவலக நடைமுறைக்கே உரித்தான தாமதத்துடன் சட்டம் இப் பொழுதுதான் தலைகாட்டுகிறது.

ஒவ்வொரு நிறுவனத்திலும் புகார்க் குழு அமைக்கப்பட வேண்டும். புகார்க் குழுவின் தலைவராக மூத்த (சீனியர்) பெண்மணி நியமிக்கப்படவேண்டும். தன்னார்வ அமைப்புப் பிரதிநிதி ஒருவரும் அதில் இடம்பெறவேண்டும் என்றெல் லாம் தாராளமாக விதிமுறைகள் உண்டு.

இவை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் உயிருள்ள மின்னோட்டமாக இருப்பது அவசியமாகும்.

தமிழ் ஓவியா said...


பொது மக்கள் நலன்!இது நம்முடைய நாடு; இதன் நலனில் நமக்குப் பொறுப்பும், அக்கறையும் உண்டு. நாம் பொதுமக்கள் நலனுக் காகத் தொழில் செய்கிறோமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் நலனுக்காக அல்ல.
(குடிஅரசு, 25.8.1940)

தமிழ் ஓவியா said...


திருமுல்லைவாயல் வாசிகளின் குறைபாடு


ஆசிரியருக்குக் கடிதம்

திருமுல்லைவாயல் வாசிகளின் குறைபாடு

கடந்த 2.7.2011 அன்று திருமுல்லைவாயலில் (ஆவடி மாவட்டம்) தந்தை பெரியார் அறிஞர் அண்ணா இவர்களின் பெயரில், சாலைகள் திறக்கப்பட்டன. துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், நகராட்சி தலைவர் ச.மு.நாசர், முன்னாள் நகராட்சி தலைவர் எம்.விக்டரிமோகன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் சிறப்பான விழா எடுத்து திறந்து வைக்கப்பட்ட சாலையில், 7 ஆவது வார்டு அ.தி.மு.க. நகர மன்ற உறுப்பினர், வேறு ஒரு பெயரில் சாலைக்கு பெயர் வைத்து போர்டு நடப்பட்டுள்ளது (அதன் பெயர் குளக்கரை சாலை, திருமுல்லைவாயல், ஆவடி நகராட்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது) என்பதைத் தங்கள் மேலான கருத்திற்கு தெரியப்படுத்துகிறேன்.

மேலும் அய்யா அறிவது, திருமுல்லைவாயல் பகுதியில் சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள், அவர்கள் போக்குவரத்திற்கு பேருந்து வசதி கிடையாது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ஒரு பேருந்து வந்தது; அதுவும் இப்பொழுது இல்லை, காரணம் சாலை சரியில்லை, குண்டும் குழியுமாக இருக்கிறது என்று நிறுத்தி விட்டார்கள், கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மழைக் காலங்களில் சாலையில் நடக்க முடியவில்லை. வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒரு முதியவர் நடந்து வரும்போது வழுக்கி விழும்போது, லாரி ஒன்று அவர் காலில் ஏறியதில் கால் முறிந்து கொஞ்சம் நாள் கால் வலியால் துயரப்பட்டு இறந்து விட்டார். பல பேர் விழுந்து எழுந்து செல்கிறார்கள். இன்னும் அந்தச்சாலை சீர் செய்யப்படவில்லை. பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதோடு, திருமுல்லைவாயல், பேரறிஞர் அண்ணாவின் துணைவியார் ராணி அண்ணாதுரை வாழ்ந்த ஊர் என்பதும், பேரறிஞர் அண்ணா எங்கள் ஊரின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: எல்லா இடங்களுக்கும் பேருந்து வசதி உண்டு, திருமுல்லைவாயலில் மட்டும் இதுவரை பேருந்து இல்லை என்பது வருந்தத்தக்க ஒன்றாகும். தவறாமல் வாக்குப்பதிவு அதிகமாக நடப்பதும் இந்த ஊரில்தான். தேர்தல் வாக் குறுதி இலவசங்கள் கடந்த 15 ஆண்டுகளாக பெறாத ஊரும் இதுதான். இந்த மக்கள் இலவசத்தை இதுவரை கேட்டது கிடையாது. ஆனால் கொடுத்தால் வாங்குவதற்குத் தயார்! ஏன் கொடுக்கவில்லை என்பதுதான் கேள்வி!

- க.இரணியன், பகுத்தறிவாளர் கழகம், திருமுல்லைவாயல்

தமிழ் ஓவியா said...

நாகை மாவட்ட திராவிடர் கழக முன்னாள் தலைவர் வி.எஸ்.டி. அழகப்பன் அவர்கள் தமக்குப் பிறகு தமது மகன் இந்த இயக்கத்தில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று மருத்துவமனையில் அவர் இருந்த போது கையைப் பிடித்து என்னிடம் ஒப்படைத்தார் - அதனை உறுதி செய்யவே இங்கு வந்துள்ளேன் என்றார் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் திராவிடர் கழக முன்னாள் தலைவர் வேளாங்கண்ணி வி.எஸ்.டி. அழகப்பன் அவர்களின் நினைவுநாளையொட்டி படத்திறப்பு நிகழ்ச்சி 19.7.2013 அன்று காலை 10.30 மணிக்கு அவரது இல்லத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கொட்டகையில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது.

படத்தினை திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். உரையில் குறிப்பிட்டதாவது:

இயக்க வரலாற்றில் நாகை

நாகைக்கு இயக்க வரலாற்றில் பல சரித்திர சிறப்புகள் உண்டு. ஆர்.வி.கோபால், நாகை மணி, வழக்குரைஞர் டி.கே.விஜயராகவலு, வி.பி.கே.காயா ரோகணம், எஸ்.ஆர். ஆறுமுகம், நாகை கணேசன், பாவா நவநீதகிருஷ்ணன், நாத்திகன் நாகூர் ஆர்.சின்ன தம்பி, அவரது இணையர் ருக்மணியம்மாள், சோழங்க நல்லூர் அந்தோணிசாமி என்று எண்ணற்ற வீரர்கள் பாடுபட்ட தியாகம் செய்த பகுதி நாகைப் பகுதி.

இந்த நாகையில் குலக்கல்வி திட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இங்கிருந்துதான் குலக்கல்வி திட்ட ஒழிப்பு பிரச்சாரப் படை புறப்பட்டது.

மறைந்த வி.எஸ்.டி.அழகப்பன் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்த போது, அவரது மகன் நெப்போலியனின் கைப் பிடித்து என்னிடம் ஒப் படைத்தார். இயக்கத்திற்கு தமக்குப் பிறகு இவர் பயன் படுவார், பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

அதனை உறுதி செய்து கொள்வதற்காகவே இங்கு நான் வந்திருக்கிறேன்.

கொள்கை இருப்பிடம் என்றால்...

சில வீடுகளில் தான் மட்டும் கொள்கைவாதிகளாக இருப்பார்கள்; அவர் மறைந்ததற்கு பிறகு நெற்றியில் 1 ரூபாய் நாணயத்தை வைத்து விடுவார்கள், திருநீறு பூசி விடுவார்கள், நாமமும் போட்டு விடுவார்கள். சங்கு ஊதுவார்கள். ஆனால் நமது வி.எஸ்.டி. அவர்கள் குடும்பம் கொள்கை குடும்பம் - அவர் ஏற்று கொண்ட கொள்கை தொடர்கிறது.

அதற்காக இயக்கம் இந்த குடும்பத்தாருக்கு தலை தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

மற்றவர்கள் தம்முடைய சொத்துக்களுக்காக உயில் எழுதி வைப்பார்கள். கழகக் கொள்கைகளை ஏற்று கொண்டவர்களோ தம் மறைவிற்குப் பிறகு தனது உடலுக்கு எந்தவித மதச் சடங்குகளும் நடைபெற்று விடக்கூடாது என்று உறுதி செய்யும் வண்ணம் உயில் எழுதி வைப்பார்கள். சிலர் தம் உடலை மருத்துவ மனைக்குக் கொடையாக வழங்குவதற்கு உயில் எழுதி வைத்துச் செல்வார்கள்.

வாழ்நாள் முழுவதும் கொள்கைக்காக வாழ்ந்தவர், கொள்கைக்காரராகவே மறைய வேண்டும் என்பதிலே உறுதியாக இருப்பவர்கள் கருஞ்சட்டைத் தோழர்கள்.

இந்த இயக்கம் கொள்கைகளை மட்டும் சொல்லிக் கொடுக்கவில்லை. தனி ஒழுக்கத்தையும், பொது ஒழுக்கத்தையும் சொல்லிக் கொடுக்கும் இயக்கம். கொள்கையும் - ஒழுக்கமும்

பெற்றோர்கள் கூட சொல்லுவார்கள் - எங்கள் பிள்ளைகள் தி.க.வில் இருக்க வேண்டும். அவர்கள் கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள் ஆயிற்றே என்று சொன்னால், பரவாயில்லை. அங்கு சென்றால் ஒழுக்கத்தோடு இருப்பார்கள் என்று சொல்லக் கூடிய இயக்கம் இது.

120 கோடி பேர் உள்ள இந்தியாவில் 1 சதவிகித பேர் தான் இராணுவத்தில் இருக்கிறார்கள். அதைப் போல இந்தச் சமுதாயத்தைப் பாதுகாப்பது திராவிடர் கழகமே!

நாகைப் பகுதியயை மறுபடியும் கழகக் கோட்டை யாக்க வேண்டும். மறைந்த வி.எஸ்.டி.அழகப்பன் அவர்களுக்குச் செய்யக்கூடிய காட்டக்கூடிய மரி யாதை என்பது அது தான்.

அழகப்பனாரின் இரு ஆசைகள்

வி.எஸ்.டி. அவர்களின் இரு விருப்பம். ஒன்று அவரது மகன் நெப்போலியன் தமக்குப் பிறகு இந்த இயக்கத்தில் இருந்து கொள்கைகளோடு பணியாற்ற வேண்டும். இரண்டாவது நாகை கோட்டை வாசல் பெரியார் சிலைக்கு அருகில் பெரியார் படிப்பகம் அமைக்க வேண்டும் என்பதாகும். அதற்காக ரூ.50 ஆயிரம், தம் சொந்த பொறுப்பில் அளித்துள்ளார்.

அவரின் பெயரும் இடம் பெறும் வண்ணம் விரைவில் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன். அவர் இருந்தால் எப்படி இந்தக் குடும்பம் கழக குடும்பமாக இருக்குமோ அது தொடர வேண்டும் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...


தமிழர் பெரும்படை!


சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தத் தான் முதலில் இந்தியைத் திணிக்கிறேன் என்றார் அன்றைய சென்னை மாநிலப் பிரதமர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி).

தந்தை பெரியார் தலை மையில் தமிழர்கள் கிளர்ந் தெழுந்தனர். முதல் அறி விப்பினை ஆகஸ்டு 10இல் (1937) கொடுத்தார் ராஜாஜி.

தமிழ் மண் கந்தகப் பூமி யாயிற்று! திருச்சி, காஞ்சி என்று மாநாடுகள் நடத்தப் பட்டு, தமிழர்கள் தங்கள் எரிமலை உணர்வை வெளிப்படுத்தினர்.

மக்கள் குரலை எல்லாம் மதிக்கும் மதியுடையோர் அல்லவே ஆச்சாரியார்! - மனு வழி வழி வந்தவரா யிற்றே! பிடிவாதம் காட் டினார் - அதன் விளைவு தான் வந்த வேகத்திலேயே வெளியேறும் நிலைக்கு ஆளானார்.

அந்த இந்தி எதிர்ப்பு வரலாற்றில் இந்நாள் (1.8.1938) எழுச்சிமிகு நாள். இந்நாளில் தான் திருச்சியிலிருந்து தமிழர் பெரும் படை புறப்பட்டது.

பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி, படைத் தளபதி! (இராணுவத்தில் பணியாற்றியவர் அல்லவா!) தஞ்சை அய். குமாரசாமி பிள்ளை, படைத் தலைவர். பெருந்சோற்றுத் தலைவி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். அந்த நூறு பேரில் இவர் ஒருவரே பெண் போராளி. எண்ணிப் பாரீர்!

திருச்சியில் பய ணத்தைத் தொடங்கிய இந்தத் தமிழர் பெரும் படை வழி நெடுக இந்தியை எதிர்த்து எக்காளமிட்டு வந்தது. தந்தை பெரியார் தலைமையில் வழியனுப்பி விழா ஓகோ என்று திருச்சியில் நடைபெற்றது.

படை இன்ன தேதியில் இத்தனை மணிக்கு இந்த ஊருக்கு வரும் என்ற தகவலை விடுதலை நாள்தோறும் வெளியிட்டு அதன்படி அட்சரம் பிறழா மல் படை வீர நடைபோட்டு வந்தது.

வழி நெடுகத் தமிழர்கள் பெரும் படைக்குச் சீர்மிகு வரவேற்பு. ஆகஸ்டு முதல் தேதி திருச்சி உறையூரி லிருந்து புறப்பட்ட தமிழர் பெரும் படை செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையை வந்தடைந்தது.

திருவல்லிக்கேணி கடற்கரையிலே ஒன்றரை லட்சம் மக்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலை மையில் கூடி மாபெரும் வரவேற்பினை அளித் தனரே!
இங்கே தலைகள்! அங்கே அலைகள்! அப்படி ஒரு காணரும் காட்சி! அந்தக் கூட்டத்தில்தான் முதன் முதலாக தமிழ்நாடு தமிழருக்கே! என்ற முழக்கத்தைத் தந்தை பெரியார் முன் வைத்தார் என்பதை அறிக!

- மயிலாடன்

குறிப்பு: ராமர் படம் எரிப்புப் போராட்டம் நடத்தப் பட்டதும் இதே ஆகஸ்டு ஒன்றில் தான் (1956).

தமிழ் ஓவியா said...


இன்னொரு சேரன்மாதேவியா!


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பல வகைகளிலும் பிரச்சினைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அக்கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்கிற பிரச்சினை வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்ட போதிலிருந்தே ஆரம்பித்தது. இலண்டன் பிரிவிகவுன்சில் வரை வழக்கு சென்றதுண்டு.

சென்னை உயர்நீதிமன்றமோ ஒரு வாரம் வடகலை நாமம் - இன்னொரு வாரம் தென்கலை நாமம் போட்டுக் கொள்ளலாம் என்ற சமரசத் தீர்ப்பினை வழங்கி வழக்கின் கோப்பை முடித்துக் கொண்டது. அக்கோயிலில்தான் மேலாளர் சங்கரராமன் பட்டப் பகலிலே படுகொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைச் சாலைக்குச் சென்று இப்பொழுது பிணையில் நடமாடிக் கொண்டு திரிகிறார்கள்.

அந்தக் கோயிலில் இன்று வரை பச்சையாக தீண்டாமை அனுசரிக்கப்படுகிறது என்பதுதான் மிகவும் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.

கோயிலுக்குள் செல்வதற்குக்கூட இரண்டு வாயில்களை வைத்துள்ளனர். ஒரு பாதையில் பிர்மாவின் நெற்றியில் பிறந்ததாகப் பம்மாத்து அடித்துக் கொள்ளும் பார்ப்பனர்கள் செல்லு கிறார்கள். இன்னொரு வாயில் வழியாகத்தான் பார்ப்பனர் அல்லாதார் கோயிலுக்குச் செல்லுமாறு ஏற்பாடுகள் செய்து வைத்துள்ளனர்.

கோயில் பிரசாதம் வழங்குவதில்கூடப் பாரபட்சம் காட்டப்படுகிறது. பார்ப்பனர்கள் மரியாதையாக அமர வைக்கப்பட்டு பவ்வியமாக பிரசாதத்தை வழங்கி வருகின்றனர், கோயில் அர்ச்சகர் பார்ப்பனர்கள்.

பார்ப்பனரல்லாதவர்களுக்கும், பெண்களுக்கும் கோயிலுக்கு வெளியே நிறுத்திப் பிரசாதம் வழங்கப்படுகிறது. (நேற்றைய விடுதலையில் படத்துடன் அதனை வெளிப்படுத்தினோம்!)

இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட திருநெல்வேலி மாவட்டம், சேரன் மாதேவியில்தான் இத்தகைய பாகுபாடுகள் காட்டப்பட்டன.

பார்ப்பன மாணவர்களுக்குத் தனிப் பந்தியும், பார்ப்பனர் அல்லாதாருக்குத் தனிப் பந்தியும் வைக்கப்பட்டன; பரிமாறுவதில் வழங்கப்பட்ட உணவில்கூட பாரபட்சம் காட்டப்பட்டது.
காங்கிரசின் செயலாளராகவிருந்த தந்தை பெரியாரும், தலைவராக இருந்த டாக்டர் வரதராஜூலு நாயுடுவும், திரு.வி.க.வும் கிளர்ந்தெழுந்தல்லவா அந்தப் பாரபட்சத்தை ஒழித்துக் கட்டினர்.

இப்பொழுது அண்ணா பிறந்த காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதாரிடையே பச்சையான பாகுபாடு காட்டப்பட்டுள்ளது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாதாரே இந்த நிலையை வெளிப்படுத்தியுள்ளனர். கோயில் கருவறைக்குள் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காகப் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஒரு பக்கத்தில் - அதனை எதிர்த் துப் பார்ப்பனர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர்.

இன்னொரு பக்கம் கோயிலில் பிரசாதம் என்ப தில்கூட நம் மக்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்றால் அதனை எப்படி அனுமதிக்க முடியும்? இது சட்டப்படியும் தவறு, நியாயப்படியும் தவறு அல்லவா; இந்து அறநிலையத்துறை இதில் தலையிட்டுப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டும்; இல்லையேல் இதற்காகவே தனிப் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றோம்.

இன்றளவிலும் பச்சையாக தீண்டாமையும், ஜாதியும் தலை விரித்தாடும் இடம் கோயிலாகத் தானிருக்கிறது.

கோயில் என்பது கடவுள் பக்திக்காக அல்ல - ஜாதியைப் பாதுகாக்கத்தான் என்பது விளங்க வில்லையா? தமிழர்களே, இவற்றை இன்னும் எவ்வளவு காலத்திற்கு அனுமதிக்கப் போகிறீர்கள்?

தமிழ் ஓவியா said...


சுயமரியாதைத் திருமணம்சுயமரியாதைத் திருமணம் தந்தை பெரியார் வரலாற்றில் 1928-ஆம் ஆண்டு 28-ஆம் தேதி தொடங்கி அவருடைய கருத்துக்கள் 26.8.1953 சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு பார்ப்பன நீதிபதிகள் சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்த பின்னும் தொடர்ந்து சுயமரியாதைத் திருமணத்தை நடத்தியே வந்தார் பெரியார்.
சிலர் சட்டத்தைக் கவனியாமலும் அதனால் சட்ட ரீதியான இழப்புகளைப் புறந்தள்ளியும் எல்லாவற்றிற்கும் துணிந்து பலர் சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்ள முன்வருவதை நாம் காண்கிறோம். ஆகவே இம்மாதிரித் திருமணங்களில் சுயமரியாதைக்காரர்களுக்கு கொள்கைப் பிசகோ, நியாயப்பிசகோ இருப்பதாக நமக்குத்தோன்றவில்லை என்று தலையங்கம் எழுதினார் (குடிஅரசு 12.10.1930) அந்த நீதியே 84 ஆண்டுகளுக்குப்பின்னும் நிலைத்து வெற்றி பெற்று வருகிறது.
நமது அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் 21.8.1967-இல் சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்று சட்ட மன்றத்தில் முன் தேதியிட்டு நிறைவேற்றப்பட்டது. 17.6.2013-இல் நீதியரசர் கர்ணன் அவர்களின் தீர்ப்பு, பெரியார் கருத்து உலகமயமாகி வருகிறது என்பதற்கு அடையாளம் என்று 20.6.2013-ஆம் தேதி நமது விடுதலையில் தலைவர் கி.வீரமணி அவர்களின் பாராட்டு அறிக்கை மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம் ஜெகதீஷ்சிங் ஆகியோர் உறுதிப்படுத்திய தீர்ப்பும் வரலாற்றுச் சிறப்புடையதாகும். இந்த வரலாறு வரிசைப்படுத்தி எங்கள் எல்லோருக்கும் நூல் வடிவில் வெளியிட வேண்டுகிறேன்.

- அ.இனியன் பத்மநாதன், ஈரோடு

தமிழ் ஓவியா said...


குறைந்துபோகும்!மக்களின் அறிவைக் கிளறி விட்டு, மக்களுக்கு அறிவுச் சுதந் திரத்தை உண்டாக்கித் தாராளமாக எந்தச் சங்கதியையும் ஆராயும் படிச் செய்துவிட்டால், மூட நம்பிக்கைகள் நாளாவட்டத்தில் குறைந்தே போகும்.

- (விடுதலை, 16.10.1960)

தமிழ் ஓவியா said...

ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்திட ஆதரவு அளித்த அத்தனை கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் நன்றி! நன்றி!!


மூன்று முதல்வர்கள், மூன்று நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்

இது அரசியல் பிரச்சினையல்ல; மெத்தனம் காட்ட வேண்டாம்

தமிழக முதல் அமைச்சர் செயலாற்றிட முனைந்திட வேண்டும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை நிறைவேற்றச் செய்தால் ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கு உறு துணையாக இருக்கும்; இது அரசியல் பிரச்சினை அல்ல. தமிழக அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஜாதி - தீண்டாமை ஒழிப்பை அடிப்படையாகக் கொண்டு அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த இறுதிப் போராட்டமான அர்ச்சகர் போராட்டம் - இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது!

கடந்த 44 ஆண்டுகளாக, பல்வேறு கட்டங் களில் தடை ஓட்டப் பந்தயம் போல நடந்து கொண்டுள்ளது.

1970ஆம் ஆண்டு முதல்

1970இல் தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த மானமிகு கலைஞர் அவர்கள் சட்டம் இயற்றினார்கள்; இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு பார்ப்பன மட அதிபதிகள், அர்ச்சகர்கள் வழக்குத் தொடர்ந்து, சட்டம் செல்லாது மத விஷயங்களில் அரசு குறுக்கிடுகிறது என்று வாதாடினார்கள்.

ஆனால், அந்த உச்சநீதிமன்றத்தின் அய்ந்து அமர்வு நீதிபதிகள் ஏற்காமல், சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்து விட்டு, அந்த அர்ச்சகரின் தகுதி ஆகமம் படித்தவர்களுக்கு மட்டுமே உண்டு என்று கூறி ஒரு புள்ளி வைத்து விட்டனர்.
கிடப்பில் கிடக்கிறதே!

அதற்காக திராவிடர் கழகம் அய்யா, அன்னை மணியம்மையார், காலத்திற்குப் பின்னரும் தொடர்ந்து போராடியதால், எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்த போதும், அதன் பிறகு செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும், இதைக் கொள்கை அளவில் ஏற்று, 69 சதவிகிதப்படி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்து அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க ஒப்புதல் தந்தனர். (9.4.1992 சட்டமன்றத்தில்)

ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை. கிடப்பில் இருந்தது; அய்ந்தாம் முறை (தி.மு.க.) முதல்வராக வந்த கலைஞர் அவர்கள் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில் குழு போட்டு, அவர்களே பல பரிந்துரைகளைத் தந்தார். சைவ, வைணவக் கோயில்களுக்குரிய ஆகமங்கள், சடங்குகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டு 69 சதவீத அடிப்படையில் 206 பேர்கள் படித்து பட்டயம் பெற்று விட்டு, அர்ச்சகராக நியமனம் பெறும் நுழைவாயிலில் செல்லும் நிலையில், தடையாணையைப் போட்டு விட்டனர். உச்சநீதிமன்றத்தில் படையெடுத்துள்ளனர்; இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் கடந்த 4 ஆண்டுகளாக உள்ளது.

இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைதான் இதனை வற்புறுத்திட வேண்டிய துறை; ஏதோ வாய்தா வாங்கி நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்ப்பதாகக் கூறியுள்ளது.

இது அரசு சார்பில் மக்களுக்கு விளக்கப்பட வேண்டியதாகும்.

இரண்டு தீர்ப்புகள் உள்ளனவே!

ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் இப்பிரச்சினையை ஏற்று 2 முக்கிய சாதகமான தீர்ப்புகள் உள்ளன; எனவே வெற்றி அரசுக்கு உறுதியாகும். ஏனோ இப்படி ஒரு நிலை என்பதுதான் புரியவில்லை!

இப்பிரச்சினை 44 ஆண்டு கால தொடர் போராட்ட விளைவுகளை ஏற்படுத்தும் பிரச்சினை.
இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு பரிந்துரைகள், மூன்று முதல் அமைச்சர்களின் முயற்சிகளும், உறுதியும் உள்ளடக்கமாகக் கொண்டது - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் பிரச்சினை.

அன்றைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அரசில் 1969 இளைய பெருமாள் கமிட்டி என்ற தீண்டாமை ஒழிப்பு (மத்திய அரசு போட்ட) கமிட்டியின் பரிந்துரையை செய லாக்கிய சட்டம் அனைத்து ஜாதியினரும் - ஆதி திரா விடர் உட்பட - நிறைவேற்றப்பட்ட சட்டம்!

ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்குப் பயன்படும்

தந்தை பெரியார் தம் இறுதி விருப்பத்தைச் செயலாக் கிட கோயில் கருவறைத் தீண்டாமை ஒழிக்கப்பட சட்ட பூர்வமாக - அமைதி அறவழியில் - தீர்க்கும் அருமையான சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த தமிழக (அதிமுக) அரசு தயக்கம் காட்டாமல் உடனடியாக செயல்படுத் தினால், ஜாதி மோதல்கள், தீண்டாமையை அடிப்படை யாகக் கொண்ட கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க அதுவே உதவிடும் என்பதனை வற்புறுத்தவே ஆகஸ்ட் 1-இல் நாடு தழுவிய போராட்டம். மிக வெற்றிகரமாக எந்த ஒரு அசம்பாவிதமோ பொது மக்களுக்கு இடையூறோ இன்றி, அரசுக்கு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கானவர்கள் திருத்தணி தொடங்கி, குமரி வரை சிறப்பாக நடத்தியுள்ளனர்!

திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி

தமிழ் ஓவியா said...

தி.மு.க. தலைவர், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆணையை ஏற்று தி.மு.க.வும்

இரட்டைக் குழலாக கிளர்ச்சியில் பல்லாயிரவர் பங்கேற்றுள்ளனர்.

அதுபோலவே எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் ஆணையை ஏற்று, விடுதலை சிறுத்தைகளும் சிறப்பாக ஆங்காங்கே பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் மானமிகு பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் அறிவித்தபடி பங்கேற்றுள்ளனர்!

ஒத்த கருத்துள்ள ஆத்திகர்கள், பக்தர்கள்கூட பல ஊர்களில் பங்கேற்றுள்ளனர்!

நன்றி! நன்றி!

முதற் கட்டம் முடிந்துள்ளது. தமிழக அரசு அலட்சிய மாகக் கருதாமல் உடனடியாக இதற்கு விடை காண வேண்டும்.

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட முனைப்புடன் உதவிடும் அனைவருக்கும் இயக்கத்த வருக்கும் பக்தர்களுக்கும் எமது உளங் கனிந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இதுபோலவே நாட்டையே சமத்துவபுரமாக்கும் இந்த நல்ல முயற்சிக்கு தொடர் ஆதரவைத் தர வேண்டும் என்று அனைவரையும் தலை தாழ்த்திக் கேட்டுக் கொள்கிறோம்.
இது ஒரு கட்சிப் பிரச்சினை அல்ல,

இது மானப் பிரச்சினை - மனித உரிமைப் பிரச்சினை!

ஜாதி, தீண்டாமை ஒழிப்பு என்ற லட்சியப் பிரச்சினை,

புதியதோர் உலகு செய்ய, புது வெளிச்சம் இதன் மூலமே காண வேண்டிய பிரச்சினை.

தமிழக அரசு மெத்தனம் காட்ட வேண்டாம்!

எனவே அரசியல் பார்வையின்றி, சமூகப் புரட்சியைச் சரித்திரமாக்கிடும் மவுனப் புரட்சியாகும் இது!

எனவே, இனியும் தமிழக அரசு மெத்தனம் காட்டாமல் செயலாற்ற விரைந்திட வேண்டுகிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
2.8.2013

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு அரசின் கடமை


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் மனித உரிமைப் போராட்டத்தை தந்தை பெரியார் தொடங்கினார்.

அந்தப் போராட்டம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று தமிழ்நாடு தழுவிய அளவில் 60 கழக மாவட்டங்களில் அறவழி ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது.

தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் - எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்களும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு சுப. வீரபாண்டியன் அவர்களும் ஆதரவு தெரிவித்து, அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிறப்பாகக் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான வர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தினர்.

தமிழ்நாட்டில், தமிழர்கள் கட்டிய கோயிலில் தமிழன் அர்ச்சகனாக உரிமை வேண்டும் என்று போராட வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பது வெட்கக் கேடானதே - மிகப் பெரிய இனத்தில் தன்மான உணர்வுக்கு மிகப் பெரிய சவால் இது.

இதனை எதிர்க்கக் கூடியவர்கள் பார்ப்பனர்களே தவிர வேறு யாருமிலர். ஆரியர் - திராவிடர் போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இது ஒன்றே போதுமானது.

மூன்று அரசுகள் ஆதரவாக இருந்தும், தி.மு.க. ஆட்சியில் இரண்டு முறை சட்டம் இயற்றியும், மூன்று நீதிபதிகள் எஸ். மகாராசன், கிருஷ்ணசாமி ரெட்டியார், ஏ.கே. ராஜன் ஆகியோர் பரிந்துரைகள் கொடுத்தும், இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

இதே உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் கேரளா வழக்கு ஒன்றில் பார்ப்பனர் அல்லாதார் ஆகமங் களைக் கற்றுத் தேர்ந்திருந்தால் அவர்கள் அர்ச்சகர்களாக ஆகத் தடையில்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

குறிப்பிட்ட கடவுளுக்கு செய்ய வேண்டிய சடங்குகள், ஓத வேண்டிய மந்திரங்கள் தெரிந்த ஒருவர் பூசாரியாக (கேரளாவில் இவர்களுக்குப் பெயர் சந்திகாரன்) இருக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்க்கப்படுகிறது. மரபுப்படி எந்த ஒரு கோயிலும் காலம் காலமாக பார்ப்பனர் மட்டுமே பூசை செய்து கொண்டிருக்கலாம், அல்லது சந்திக் காரனாக செயல்பட்டிருக்கலாம். அதற்காகப் பார்ப்பனர் அல்லாதார் பூசை செய்யக் கூடாது என்பது பொருள் அல்ல; சொல்ல வேண்டிய மந்திரங்களைக் கற்றுக் கொள்ள அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதுதான் காரணம் பார்ப்பனர் அல்லாதவர்கள் வேதங்களைப் படிக்கவும், சடங்குகள் செய்யவும், பூணூல் அணியவும் தடை செய்யப் பட்டிருந்தனர். இந்தச் சூழ்நிலையில் பார்ப்பனர் அல்லாதார் சந்திகாரனாக (அர்ச்சகராக) நியமிக்கப் படாமல் இருக்கலாம். இதை வைத்துக் கொண்டு பார்ப்பனர் மட்டும்தான் கோயில்களில் சடங்குகள் செய்யலாம் எனக் கூறுவது நியாயம் அன்று. அரசமைப்புச் சட்டம் 17ஆவது சரத்தில் வெளிப் படுத்தப்பட்டிருக்கிறது (தீண்டாமை ஒழிக்கப்படு கிறது; அது எந்த வடிவத்தில் பின்பற்றப்பட்டாலும் குற்றமானது என்று அந்தப் பிரிவு கூறுகிறது)

என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராஜேந்திரபாபு, துரைசாமி ராஜு ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 2002 அக்டோபர் முதல் வாரத்தில் தீர்ப்புக் கூறியது.

இப்பொழுது கேரள மாநிலத்தில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்கப்பட்டு, அர்ச்சகர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

அதன் அடிப்படையிலேயே தமிழ்நாட்டிலும் செயல்படுத்தலாமே! உச்சநீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ள அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் தமிழ்நாடு அரசின் சட்டம் தொடர்பான வழக்கைத் துரிதப்படுத்தி, வழக்காடி, தந்தை பெரியார் இறுதியாக, மரண சாசனமாக அறிவித்த இந்த மனித உரிமைப் போரில் வெற்றி தேடித் தர வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும்.

இந்த உணர்வைத்தான் தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் உணர்த்துகிறது. ஜனநாயக முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த உணர்வைத் தமிழ்நாடு அரசு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். இது ஒரு கட்சிப் பிரச்சினையல்ல - ஒட்டு மொத்தமான மனித உரிமைப் போராட்டம் என்பதையும் அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...


உண்டாக்க வேண்டும்


மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்.

- (விடுதலை, 1.10.1967)

தமிழ் ஓவியா said...


மாணவர்கள் உண்டு ஆசிரியர்கள் இல்லை... டும்! டும்!! டும்!!!


கேள்வி :- 2012-2013ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் அனைவருக்கும் இடை நிலைக்கல்வித் திட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பல பள்ளிகளில் தமிழகத்தில் ஆசிரியர்களே இல்லை என்ற குறைபாடு பெரிதாகச் சுட்டிக்காட்டப்பட்டி ருப்பதாகக் கூறுகிறார்களே?

கலைஞர் :- ஆமாம்; அந்த அறிக்கையில் விழுப்புரம், சென்னை, வேலூர், நீலகிரி, கோயம் புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 16 பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்களே இல்லை என்று கூறப்பட் டுள்ளது. தமிழகத்திலே உள்ள 2,253 பள்ளிகளில்; ஒவ்வொரு பள்ளியிலும் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தான் பணியிலே இருக்கிறாராம்.

விழுப்புரம் மாவட் டத்தில் 113, சிவகங்கை 134, வேலூர் 127, திருவண்ணா மலை 159, தர்மபுரி 131, கிருஷ்ணகிரி 195 என்ற அள விற்கு பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகளாகச் செயல் படுகின்றன. ஓராசிரியர் பள்ளிகளில் மட்டும் 83,641 மாணவர்கள் படிக்கிறார்களாம். ஆரம்பப் பள்ளி கள் ஓராசிரியர் பள்ளிகளாக இயங்குவதில் தவறில்லை. ஆனால் ப்ளஸ் 2 வரையிலே உள்ள இடை நிலைக் கல்விச் சாலை ஒன்றில் 765 மாணவர்கள் ஒரே ஒரு ஆசிரியரால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள 16,421 பள்ளிகளில் இரண்டே இரண்டு ஆசிரியர்கள்தான் இருக்கிறார் களாம். மாநில, மத்திய, தனியார் பள்ளிக் கூடங்கள் அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், மூன்றில் ஒரு பகுதிப் பள்ளிக் கூடங்களில் மூன்றுக்கும் குறைவான ஆசிரியர்கள்தான் பணியாற்றுகிறார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கற்பிக்கும் ஆசிரியர்கள் தேவையான எண்ணிக்கையில் இல்லாத கல்வி, கடையாணி இல்லாத வண்டியைப் போல் திசை மாறிச் சென்று விடும் என்பதை எண்ணிப் பார்த்திட வேண்டும்.

-கலைஞர் (முரசொலி, 2.8.2013)

தமிழ் ஓவியா said...


இங்கர்சால் மணிமொழிகள்


தேவலோகம் என்று ஒன்று இருக்கு மானால் - அதில் எல்லையற்ற இறைவன் இருப்பது உண்மை யானால் அவர் கோழைகளின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார். நயவஞ்சகர் களின் செயல்களைக் கண்டு மகிழ மாட்டார். இந்த வஞ்சகர்களைக் கண்டு ஒருக்காலும் திருப்தியடையமாட்டார்.

@@@@@@@@@@@@@@@

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியை பிரித்து விடும் மதங்கள் அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்களைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி, தூரப் போடுங் கள். சிந்திக்காதே அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்பிராயம் எந்த மூலையில் எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்

@@@@@@@@@@@@@@@

அறியாமை - இரகசியத்தின் தாய்; துன்பத்தின் பிறப்பிடம் குருட்டு நம்பிக்கையின் அன்னை; சங்கடம் தோன்றிய இடம்; அழிவும், மறுமையும் வாழும் தாயகம்.

@@@@@@@@@@@@@@@

முடிவில்லாத முதல்வன் இருப்பது உண்மை யானால் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான எண்ணம் உடையவராய் இருக்க வேண்டும் என்று அவர் கருதுவாரானால் ஏன் அவன் ஒருவனுக்கு குறைந்த அறிவும், மற்றொருவனுக்கு அதிக அறிவும் கொடுத்தான். அனைவரும் ஒரே மாதிரியாக எண்ண வேண்டும்; ஒரே மாதிரியாக உணரவேண்டும் என்பது அவன் நோக்கமானால் அறிவு வித்தியாசங்கள் ஏன்?

@@@@@@@@@@@@@@@

எனக்கு இந்த உரிமைகள் வேண்டும் என்று கூறுகின்றவர் அதே உரிமையை மற்றவர் விரும்பும் போது அளிக்க மறுத்தால் அவன் எந்த பாகத்திலிருந்தாலும் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என்று கூறினாலும் அவன் காட்டுமிராண்டியின் நிலைக்குச் சமீபத்தில் வசித்தவன் என்று நான் கூறுவேன்.

@@@@@@@@@@@@@@@

மனித குலம் கூவிய கூக்குரலும் கோரிக்கைகளும் பக்தியும் பைத்தியகாரத் தன்மையும் கடவுள்களுக்குத் திருப்தியை உண்டு பண்ணியதா?இல்லை. இல்லவே இல்லை. மனித இனத்திற்கு வரவிருந்த எந்த விபத்தாவது தவிர்க்கப்பட்டுவிட்டதா? புதிய வரப்பிரசாதம் ஏதும் கிடைத்ததா? இல்லை அப்படியிருக்க இந்த ஆண்ட வனுக்கு - இந்தக் கண்மூடிக் கபோதி ஆண்டவனுக்கு நாம் நன்றி செலுத்தலாமா? கைகூப்பி வணங்கலாமா? தேவை இல்லை.

தொகுப்பு: மு.இராசசேகரன், கணியூர்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர் மதம் - தர்மம்


பார்ப்பனர்கள் எந்த காரியத்திலானாலும் எந்தத்துறையிலானாலும் தங்கள் சொந்த ஜாதி (உயர்வு) நலனை அடிப்படையாகக் கொண்டுதான் பார்ப்பார்களே தவிர, மக்களின் பொது நலனைப் பற்றிய கவலையே அவர்களுக்கு ஏற்படுவதில்லை. பார்ப்பனர்களுக்கு மதம் தர்மம் என்பதே அவர்களது ஜாதி பாதுகாப்பாகத்தான் ஆகிவிட்டது.

- தந்தை பெரியார், 22-5-1967 விடுதலை தலையங்கத்தில் ஒரு பகுதி

தமிழ் ஓவியா said...

ஆரியக் கூலி கம்பனால் விளைந்த கேடு!

கம்பர், நடவாத பொய்க் கதையாகிய இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துச் செய்தமையால் வடமொழிப் பொய் வழக்கில் பழகிவிட்ட அவரது நா, அதன்கண் இலக்கியச்சுவை தோன்ற கூற வேண்டிய இடங்களிலும் பொய்யானவனவே புனைந்து கூறி இழுக்கினார்.

இங்ஙனமே, கம்பர்க்கு பின் வந்த தமிழ்ப்புலவர்களெல்லோரும், பொதுமக்களை ஏமாற்றுதற் பொருட்டுப் பார்ப்பனருங் கோயிற் குருக்கண் மாரும் வடமொழியில் வரைந்து வைத்த பொய்யான புராணங்களையும் தல புராணங்களையுமே பெரும்பாலும் தமிழில் மொழி பெயர்த்து வைத்துப் பண்டைத் தண்டமிழ் மெய் வழக்கினை அடியோடழித்து விட்டனர்.

இப்பிற்காலமொழி பெயர்ப்பு நூல்களிலும் ஒரோவிடங் களிலும் இலக்கியச் சுவை காணப்படுமேனும், முதலிலிருந்து முடிவரையில் அவற்றினைப் பொய்யாகவே தொடுக்கப்பட்டிருந்தலால், அவற்றின் பயிற்சி மக்கட்கு மெய்யுணர்வினையும் மெய்யறிவு விளக்கத்தினையுந்தராது.

- மறைமலையடிகள் (முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவர் பக்கம் -145

தமிழ் ஓவியா said...


பாத பூஜைக்கு வேண்டிய சாமான்கள்


மஞ்சள் பொடி -10 கிராம், குங்குமம் - 100 கிராம், பசும்பால் -அரை லிட்டர், பசும்தயிர் - அரை லிட்டர், தேன் - 250 கிராம், அ.ஜீனி (சர்க்கரை) - 250 கிராம், திராட்சை - 250 கிராம், பேரீட்சை - 250 கிராம், வாழைப்பழம் - 25, தேங்காய் - 4, வெற்றிலை -25, பாக்கு -10 கிராம், உதிரி புஷ்பம் - 2 அல்லது 4 கிலோ கிராம், அரை முழம் புஷ்ப மாலை -2, பழவகைகள்: (ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி), நிவேதனம்: சர்க்கரைப் பொங்கல் (அல்லது) ரவா கேசரி, வடை.

குறிப்பு: (வஸ்திரம் சமர்ப்பணம் செய்வதாக இருந்தால்), சிறீசிறீ மஹாசந்நிதானம் அவர்களுக்கு மல் 10மீ சிறீசிறீ சந்நிதானம் அவர்களுக்கு ஜரிகை வேஷ்டி 8 முழம் 1 ஜோடி.

3.4.1980 அன்று உடுமலைக்கு வருகை தந்த சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கு பாதபூசை செய்ய விரும்புபவர்கள் மேற்கண்ட பொருள்களுடன் வரவேண்டுமென்று உடுமலையில் துண்டு வெளியீடு அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. (மாடர்ன் பிரிண்டர்ஸ், உடுமலை),

பாத பூசை செய்ய இவ்வளவு பொருள்களாம் உருப்படுமா நாடு?

தமிழ் ஓவியா said...


விஞ்ஞானியும் பார்ப்பானும்


ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சி சாலையில் கண் டறிந்த உண்மையானது, மறு நாளே விளையாட்டுச் சாமான் செய்யும் தொழிலாளியையும் கூட 8 அணா சம்பாதிக்க வைக் கும்படி மேல் நாட்டில் வசதி ஏற்பட்டிருக்கிறது.

நமது நாட்டிலோ கோயில் பார்ப்பனன் ஏற்பாடு செய்த புஷ்பப் பல்லக்குக்கு மறுநாளே ஆயிரக்கணக் கான மைல் தூரமுள்ள ஏழைகளின் பணத்தையும் இழக்க வசதி உண்டு.

- புரட்சிக்கவிஞர்

தமிழ் ஓவியா said...

புரோகிதன் போடும் விலங்கு

அரசன் கைகளுக்கு விலங்கு போடுகிறான். புரோகிதன் அறிவுக்கு விலங்கு போடுகிறான்.

-இங்கர்சால்

தமிழ் ஓவியா said...

சாயிபாபா பற்றி ரஜனீஷ்?

பெண் இன்பத்தின் மூலமே இறைவனை அடைய முடியும் என்பதைத் தத்துவார்த்தமாக ஆக்கிக் கொண்டிருக்கும் பக வான் என்று பக்தர்களால் போற்றப்படும் புனே சாமியார் பகவான் ரஜனீஷ் சாயிபா பாவைப் பற்றி கூறியிருப்ப தாவது: சாயிபாபா ஆணிடம் ஆண் உடலுறவு கொள்ளும் (ஹோமோசெக்ஸ்) வகையைச் சேர்ந்தவர் மட்டுமல்ல; தன்னிடமே ஆண் - பெண் உறுப்புகளைக் கொண்டுள்ளவர் Herma Phrodite) ஆவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆண் -பெண் உறுப்பு ஒருவர் கொண்டுள்ளதற்கு மண்புழுவை உதாரணமாக சொல்லி இருக்கிறார். ரஜனீஷ் (மண்புழு தன் உடலிலேயே ஆண் -பெண் ஆகிய உறுப்புகளைக் கொண்டு உடலுறவு செய்து இன விருத்தி செய்யும் பல உயிரினங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது)

ஆதாரம்: சண்டே 11.2.1979.