Search This Blog

20.10.12

அண்ணா திமுகவை, துக்ளக் சோ வும், தினமலரும், தினமணியும் தூக்கிக் கொண்டு ஆடுவதன் சூட்சமம் புரிகிறதா?

அந்தோ பாவம்! நமது எம்.ஜி.ஆர்!
(Dr. நமது எம்.ஜி.ஆர். 2.10.2012) இதே படமும், கட்டுரையும் இதற்கு முன்பும் (13.3.2012) வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாவது முறையும் படத்தோடு வெளியிடப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. அதுவும் பூணூலைத் தூக்கிப் பிடித்து இறுமாப்புடன் காட்டுவது போல படம் வெளியிட்டு இருப்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது. இதுதான் இன்றைய அண்ணா திமுகவை, துக்ளக் சோ ராமசாமியும், தினமலரும், தினமணியும் தூக்கிக் கொண்டு ஆடுவதன் சூட்சமம் புரிகிறதா?

கடைசியாக உள்ள பத்தியைக் கவனியுங்கள். சுலபமாக மலஜலம் கழிக்க பூணூலைக் காதுகளில் சுற்றிக் கொள்ள சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் நிலையைப் பார்த்தீர்களா?

ராமனைக் காட்டி சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வது துரோகம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சொல்லி விட்டாராம். 

அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ நாளேடான Dr. நமது எம்.ஜி.ஆர். அத்திரிபாட்சா கொழுக்கட்டை! மாதிரித் தாவிக் குதிக்கிறது (19.10.2012 Dr. நமது எம்.ஜி.ஆர்.)

திராவிடர் கழகத் தலைவர் கூறிய குற்றச்சாட்டுக்குப் பதில் கூறத் துப்பில்லாத நிலையில் கலைஞரிடம் தாவுகிறது.

நீ ஏன் பரிட்சையில் ஃபெயில் என்று கேட்டபோது பக்கத்து வீட்டு பக்கிரிசாமியும் ஃபெயில் எனும் பையன் மாதிரி பதில் சொல்லலாமா? பெரும்பான்மை இந்து மக்களின் இறை நம்பிக்கையோடு தொடர்புடைய ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் மாற்று வழியில் சேது சமுத்திரத் திட்டத்தை மேற்கொள்ளலாம் என்னும் ஏகோபித்த மக்களின் கருத்தையே எங்கள் புரட்சித் தலைவி அம்மா அவர்களும் பிரதிபலிக்கிறார்கள் என்று எழுதுகிறது நமது எம்.ஜி.ஆர்.

ஓ, அப்படியா? திடீர் ஞானோதயமா இது? ராமபிரான் செல்வி ஜெயலலிதாவின் கனவில் தோன்றி என்னைக் காப்பாற்றுத் தாயே! என்று கண்ணீர் விட்டுக் கதறினாரா?

இதற்குமுன் இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தியே தீர வேண்டும் என்று அச்சிட்டுக் கொடுத்த அண்ணா தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்னாயிற்று?

2001 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் (பக்கம் 84) மணல்மேடுகள், பாறைகள் என்று சொன்னதோடு நின்று இருந்தாலும் பரவாயில்லை. அந்தப் பகுதிக்கு ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு விட்டு, இப்பொழுது ராமன்பாலம் என்று திடீர் அவதாரம் எடுத்தது எப்படி?
ஆடம் என்ற கிறிஸ்தவர் ராமன் எனும் இந்து மதத்துக்கு மாறி விட்டாரோ!
பெரும்பான்மை மக்களின் இறை நம்பிக்கையாம் - ஏகோபித்த முடிவாம் - அதனைத்தான் அவர்களின் புரட்சித் தலைவி எதிரொலிக்கிறாராம்!
எந்த பெரும்பான்மை மக்கள் கியூவில் நின்று ஏகோபித்தவகையில் தங்கள் நம்பிக்கையைச் சொன்னார்களாம்?

கட்சியின் 41ஆம் ஆண்டு விழாவில் கொடியேற்றி இலட்சிய முழக்கம் செய்தாரே - கட்சியின் பொதுச் செயலாளர் _ அதில் என்ன பேசினார்?
தந்தை பெரியாரைக் குறிப்பிட்டுள்ளாரே, அறிஞர் அண்ணாவைக் குறிப்பிட்டுள்ளாரே - அந்த இரு தலைவர்களின் வழி நடப்பதாகப் பறைபிடித்து முழங்கியுள்ளாரே!

அந்தத் தலைவர்களின் ராமன் பற்றிய கருத்தென்ன? பெரும்பான்மை மக்களின் ஆற்றோடு அடித்துச் சென்றார்களா? அல்லது எதிர் நீச்சல் போட்டு இலட்சியக் கருத்துக்களை எடுத்துச் சொன்னார்களா?

இராமாயணத்தை கொளுத்த வேண்டும் என்று டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளையோடும், நாவலர் சோம சுந்தர பாரதியாரோடு வாதிட்டு வென்றவர் அறிஞர் அண்ணாவின் வரலாறு தெரியுமா?

இராமன் படத்தையும், இராமாய ணத்தையும் கொளுத்தும் போராட் டத்தை நடத்திய போர் தலைவர் பகுத் தறிவுப் பகலவன் பெரியார் என்ற வர லாற்றின் நுனிப் புல்லாவது புரியுமா?

இராமாயணம் என்பது ஆரியர் _ திராவிடர் போராட்டமே என்ற வரலாற்று உண்மையை வெளியில் கொண்டு வந்தது திராவிடர் இயக்கம் என்பது தெரியுமா? ஆரியத் தலைமை புரட்டிப் போடுகிறதா? அண்ணாவின் தீ பரவட்டும் படித்ததுண்டா? தந்தை பெரியார் அவர்களின் இராமாயணப் பாத்தி ரங்கள் என்ற நூலைப்பற்றிக் கேள்விப்பட்டதாவது உண்டா?
அது ஆங்கிலத்திலும் இந்தியிலும் கூட மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்ற தகவலாவது தெரியுமா?

இவற்றின் அரிச்சுவடி கூட தெரியாதவர்கள் பெரியார் பெயரையும், அண்ணா பெயரையும்  திராவிட என்ற இனப் பண்பாட்டுப் பெயரையும் உச்சரிக்க உரிமை உண்டா?

புத்தர் இயக்கத்தில் ஆரியம் ஊடுருவுவதுபோல திராவிடர் இயக்கத் தில் ஆரியம் ஊடுருவி விட்டது என்று சொன்னால், அதனை மறுக்க முடியுமா?
அதற்கு ஆதாரத்தை வெகுதூரம் சென்று தேட வேண்டிய அவசிய மில்லை; அ.இ.அ.தி.மு.கவின் அதிகாரப் பூர்வ நாளேடான Dr. நமது எம்.ஜி.ஆர். ஏட்டிலிருந்தே எடுத்துக் கூற முடியுமே!
கையில் எடுத்துக் கொள்ளுங்கள் அந்த ஏட்டை நாள் 2.10.2012 11ஆம் பக்கத்தைப் புரட்டுங்கள்! தலைப்பு என்ன தெரியுமா?
பூணூல் அணிவதன் தத்துவம்
என்ன சொல்லப்பட்டுள்ளது தெரியுமா? பூணூல் அறுப்புப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு, எல்லோரும் காயத்ரி மந்திரம் உபதேசம் செய்து பூணூல் அணிவிப்பது நல்ல விளைவை ஏற்படுத்தும்

சபாஷ்! பூணூலை அறுக்கக் கூடாதாம்!- எல்லோரும் பூணூலை அணிந்து கொள்ள வேண்டுமாம்; திருவாளர் சோ சொன்ன அதே கருத்தை நமது எம்.ஜி.ஆரும் கூறு கிறதே _ ஒருக்கால் இந்தக் கட்டு ரையை எழுதியதே சோ தானோ! திரை மறைவில் என்னென்னவெல்லாம் நடக்கிறதோ! இனி அண்ணா திமுக வெளியிடும் அண்ணா,  தந்தை பெரியார் படங் களுக்குப்  பூணூல் போட்டாலும் ஆச் சரியம் இல்லை. பார்க்கப் போகிறது நாடு.
காயத்ரி மந்திரத்தையும் படிக்க வேண்டுமாம். பெரியார் இப்படித் தான் எழுதி இருக்கிறார் -_ அறிஞர் அண் ணாவும் இப்படித்தான் பேசி இருக்கிறார் என்று சொன்னாலும் சொல்வார்கள். திருநீற்றின் மகிமை பற்றியும் இன்னொரு நாள் (9.10.2012 பக்கம் 11) எழுதப்பட்டுள்ளது.

இந்தக் காயத்ரிகளையும், பூணூலையும் பற்றி எத்தனை எத்தனைக் கட்டுரைகளில் சொற்பொழிவுகளில் புரட்டிப் புரட்டி எடுத்திருப்பார்கள் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும்? என்ன தைரியம் இருந்தால் நமது தலைமுறையிலேயே ஆரியமும், அதன் தொங்கு சதைகளும் பெரியார் அண்ணா கொள்கைகளையே திரிபுவாதம் செய்வார்கள்? அவர்களின் பெயர்களை உச்சரித்துக் கொண்டே அவர்களின் கொள்கைகளைக் கொச்சைப்படுத்துவார்கள்!

இந்த நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் ராமனைக் காட்டி சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வது துரோகம் என்று கூறி விட்டாராம் _ துள்ளிக் குதிக்கிறது நமது எம்.ஜி.ஆர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செய லாளருக்குத் தனிப்பட்ட முறையில் பக்தி இருக்கலாம்; மூடநம்பிக்கைவாதியாக இருக்கலாம்; யாகத்தில் அசாத்திய பிடிப்பு! இருக்கலாம். அதனை அண்ணா பெயரில் உள்ள கட்சியின் கொள்கையாக எப்படி திணிக்கலாம்? அந்த உரிமையை அவருக்குக் கொடுத்தது யார்?

வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம்; கட்சியில் அண்ணா என்ற பெயரை எடுத்துவிடலாம்; கொடியில் பொறிக்கப்பட்ட அண்ணாவின் உருவத்தையும் அகற்றி விடலாம்; மேலும், கூடுதலாக கட்சியில் உள்ள திராவிட என்ற இனச் சுட்டுப் பண்பாட்டு அடையாளத்தையும் தூக்கி எறியலாம்; அதற்குப் பதிலாக அக்கிரகார முன்னேற்றக் கழகம் என்றோ, ஆன்மீக முன்னேற்றக் கழகம் என்றோ பெயர் சூட்டிக் கொள்ளலாம்.

இன்னொரு முக்கிய நிபந்தனை; தப்பித் தவறிக்கூட தந்தை பெரியாரையோ, அறிஞர்அண்ணா பெயரையோ பயன்படுத்தக் கூடாது _ உச்சரிக்கவும் கூடாது.
இப்படியெல்லாம் கொள்கையைப் பற்றி எண்ணக் கூடிய, கவலைப்படக் கூடிய ஒரே ஒரு தொண்டர்கூட அக்கட்சியில் இல்லாது போனதற்கு எத்தனை எத்தனைப் பரிதாபம் வேண்டுமானாலும், போடலாம்!

நமது எம்.ஜி.ஆர். ஏட்டுக்குக் கடைசியாக ஒன்று  கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப் பட வேண்டாம்!

----------------------- மின்சாரம் அவர்கள் 20-10-2012 “விடுதலை”யிலெழுதிய கட்டுரை

27 comments:

தமிழ் ஓவியா said...


ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியின் நூலாலயம்!

(ஒரு பொதுவுடைமைவாதியின் பொக்கிஷம், ஓய்வு பெற்ற ஆசிரியரின் அரியபணி)

புதுக்கோட்டை ஞானாலயா என்றால் அனைவருக்கும் நன்கு தெரியும். நூல்வாசிப்புப் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்திருக்கும் இடம். புதுக்கோட்டை பழனியப்பா நகரில் அமைந்திருக்கும் ஞானாலயா. அதை உருவாக்கி வைத்திருப்பவர் கிருஷ்ண மூர்த்தி. தனது ஆசிரியர் பணிக் காலத்தை நிறைவு செய்திருந்தாலும், தான் படித்த அத்தனை நூல்களையும் சேமித்து வைத்திருக்கிறார்.

அவ்வாறு வாசித்ததும், சேமித்ததும் ஒன்றல்ல, நூறல்ல ஆயிரமல்ல. எண்பத்தைந்தாயிரம் நூல்களாகும்! அவற்றைப் பாதுகாப்பதற்கு ஆண் டொன்றிற்கு ரூபாய் இரண்டரை லட்சம் வரை செலவு செய்கிறார். அந்த நூலகத்தை அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முதல் ஏராளமானோர் பார்வையிட்டிருக்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், ஆராய்ச்சி மாணவர்களும் வந்து பார்த்துப் படித்துச் செல்கின்றனர். அவர்களுக்கு தேவையான குறிப்புகளை எடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் தங்கிப் படிப்பதற்கும் அறைகள் ஒதுக்கித் தந்திருக்கிறார்.

எண்பத்தைந்தாயிரம் புத்தகங் களையும் மிக கவனமாகப் பாதுகாத்து வருகிறார். அந்த நூல்கள் முதல் முதலாக தமிழில் அச்சேறிய 1578 ஆம் ஆண்டு வெளியான தம்பிரான் வணக்கம் முதல் இந்த மாதம் வெளியான புத்தகங்கள் வரை சேமித்து வைத்திருக்கிறார். அவற்றை தர வரிசைப்படுத்தியும் மொழிவகைப்படுத் தியும் பாதுகாத்து வருகிறார்.

புத்தகத்தின் பெயரைச் சொன்னால் அடுத்த ஒரு நிமிடத்தில் நம் கைக்கு கிடைக்கச் செய்கிறார். அவரது துணை வியார் டோரதி கிருஷ்ணமூர்த்தி. அவர்கள் கல்லூரிப் பேராசிரியராகவும், துணை முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். கிருஷ்ணமூர்த்தியின் அனைத்து செயல்களுக்கும் ஊக்கமும், ஆக்கமுமாக இருந்து வருகிறார். அங்கிருக்கும் நைந்து போன புத்தகங் களையும் தன் கையாலேயே அழகுற கட்டமைப்பு (பைண்டிங்) செய்து பாதுகாத்து வருகிறார்கள். இவர்கள் மதமறுப்பு திருமணம் செய்து கொண் டவர்கள்.

பாராட்டு

இந்த நூலகத்தை நம் பெரியார் கல்வி வளாக ஒருங்கிணைப்பாளர் மானமிகு பேராசிரியர் ப.சுப்பிரமணியன் புதுக்கோட்டை மாவட்ட தி.க. தலைவர் மு.அறிவொளியுடன் அண் மையில் பார்வையிட்டுப் பாராட்டினார். அப்போது கிருஷ்ணமூர்த்தியும் அவரது துணைவியார் டோரதி கிருஷ்ணமூர்த்தியும் வரவேற்று நூலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப் போது நம் பேராசிரியர் சுப்பிரமணியத்திடம் கிருஷ்ணமூர்த்தி இந்நூலகத்தை பற்றி கூறும் போது:

வரலாற்று உண்மைகள் தமிழில் உள்ள அனைத்து முதல் பதிப்புகளையும் இங்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த நூலகம் தொடங்கப்பட்டது. என் தந்தையார் என்னிடம் சில ஆயிரம் நூல்களைக் கொடுத்தார். ஏற்கெனவே நல்ல வாசிப்பு பழக்கத்தையும் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறார். அதன் தொடர்ச் சியாக சேமித்தவைதான் இவ்வளவு நூல்களும். முதல் பதிப்பு நூல்களைக் கொண்டு வரவேண்டும் என்கிற அவசியம் என்னவென்றால் அறிஞர் அண்ணா எழுதிய புத்தகங்கள் போடு கிறார்கள். 120 பக்கம் உள்ள ஒரு நூல் அதே பெயரில் இப்போது வெறும் 45 பக்கங்கள் மட்டுமே இருக்கிறது. காலத்திற்கேற்றவாறு தங்கள் கருத் துகளை மாற்றி வெளியிடுகிறார்கள். அப்படி என்றால் அறிஞர் அண்ணா இந்த சமூகத்திற்கு என்ன சொல்லி வைத்தாரோ அது மறைக்கப்பட்டு விட்டன என்பதுதான் உண்மை. அவை எல்லா நூல்களிலும் நடந்து விடக்கூடும் என்பதால் முதல் பதிப்பு நூல்களைச் சேமித்து வைக்கிறேன்.

நூல்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏனென்றால் அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்வது இந்த புத்தகங்கள் மட்டும் தான். அடுத்து வரும் தலைமுறையினர் உறுதி யான வரலாறுகளை அறிந்திருக்க வேண்டும். அதற்கு என்னாலான முயற் சியே இந்த நூலகம். பெரும்பாலும் புகழ் பெற்றவர்கள் இதழ்களில் எழுதி யவையே பின்னாளில் புத்தகங்களாக வெளியிடுகிறார்கள். ஆனால் சிற்றி தழ்கள் அப்படி அல்ல. சிற்றிதழ்களும் கருத்துப் பெட்டகங்கள்தான். அதனால் தான் அவற்றையும் சேமித்துப் பாதுகாத்து வருகிறேன்.

தமிழ் ஓவியா said...


பெரியார் - காமராசர்

இந்த மக்களுக்காக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் பெரும் பாலும் காமராஜர் ஆட்சியில் நடத்திருக்கின்றன. ஆனாலும் தந்தை பெரியார் அவர்கள் காமராஜரை ஆதரித்தே வந்திருக்கிறார். தந்தை பெரியார் என்றால் கடவுள் மறுப் பாளர் என்றும் பகுத்தறிவுச் சிந்தனைக் குச் சொந்தக்காரர் என்று மட்டுமே அனைவரும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அவரைப் பற்றி முழுமையாக எந்த அரசியல் கட்சியும் சொல்லிக் கொள்வதும் இல்லை, அறிந்திருக்கவும் இல்லை.

தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் போராட்டம் , குருகுல பேராட்டம் நடத்திய போது அவர் வகித்து வந்த பதவி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் என்கிற மிகப் பெரிய பதவி. காங்கிரசில் இருந்து காங்கிரசின் வளர்ச்சிக்குப் பாடுபட்டதை காங் கிரஸ்காரர்கள் சொல்ல வேண்டும். இன்றைக்கு எத்தனை காங்கிரஸ்காரர் கள் இந்த வரலாறுகளை சொல்லி வைத்திருக்கிறார்கள். மற்ற கட்சிக் காரர்களுக்குச் சொல்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்? அதன் வரலாற்றை சொல்ல வேண்டுமல்லவா!

புதுக்கோட்டையில் இருந்த பார்ப்பனர்கள் எங்கே?

புதுக்கோட்டையை பார்ப்பனர் களின் கோட்டை என்று அய்யா சொல் வார்கள். நான்கு வீதிகளிலும் அவர்கள் தான் இருப்பார்கள். பார்ப்பனர்கள் இருந்த இடமெல்லாம் இன்றைக்கு இல்லாமல் போய்விட்டன. அவர்கள் வேறு தொழில்கள் பார்க்கச் சென்று விட்டார்கள். பார்ப்பனர்கள் வசித்து வந்த இடங்கள் இன்று (மாமிச) கறிக் கடைகளாக மாறி இருக்கின்றன. பார்ப்பனீயம் ஒழிக்கப்பட்டு இருக்கிறது.

1960இல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புக் கிளம்பிய போது மாண வர்கள் மத்தியில் பெரும் புரட்சி ஏற் பட்டது. அதன் விளைவாக தமிழுக்கு ஆதரவாக மாணவர்கள் கிளர்ந்தெழுந் தனர். போராட்டங்கள் நடத்தப்பட் டன. அப்போது முதன் முதலாக (65 ஆம் ஆண்டு) பார்ப்பனர்கள் சங்கம் கொண்டு வந்தார்கள். அதன்பிறகு தமிழுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கி விட்டது. ஏராளமான ஜாதிச் சங்கங்கள் வளர்ந்து விட்டன. வரலாற்று உண்மைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில்: புதுக்கோட்டையில் திருக்குறள் பேரவையைத் தோற்றுவித் தவர் அண்ணல் சுப்பிரமணியன் என் பவர். திருக்குறள் பேரவையில் இருப் பவர்கள் அதை இப்போது சொல்வ தில்லை. சொல்லி வைத்தால்தானே அடுத்த தலைமுறைக்கு தெரியும்.

பொது வாழ்க்கைக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் தங்கள் துணைவியை அழைத்து வந்தவர்கள் தந்தை பெரியாரும், காந்தியும் தான். மற்றவர் கள் அழைத்து வருவதில்லை. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு இந்த சமூகத்தை பற்றி விளக்க வேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் அவர்கள் திருமண வாழ்த் துரை என்பதைத் தொடங்கி வைத்தார். அதை பிரச்சார மேடைக்களமாக மாற்றிக் கொண்டார். தந்தை பெரியார் எழுதிய நூல்களில் மிக சிறந்த நூல்களாக இரண்டு நூல்களைச் சொல்வேன். இனிவரும் உலகம், தத்துவ விளக்கம் என்கிற அந்த இரண்டு நூல்களை திருமணங்களில் பரிசாக வாங்கி அனைவருக்கும் கொடுக்க வேண்டும். வெறும் கடவுள் மறுப்பாள ராக மட்டுமே பரப்புரை செய்யப்பட் டிருக்கும் அவரை அவர் எவ்வளவு பெரிய அறிஞர் என்பதைப் பற்றியும் அறிவிக்கவும் முயற்சியாக இந்த நூல்கள் இருக்கின்றன. அவர் இனிவரும் உலகம் புத்தகத்தில் சொன்ன கருத்துகள் தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் மின்சாரம் என்றால் என்னவென்றே அறியாத காலத்தில் தந்தை பெரியார் அவர்கள் சொன்ன தாகும். அவர் சொன்னது இப்போது நடப்பில் இருக்கிறது. அவரது தத்துவ விளக்கம் படித்தால் சமூக சிந்தனை ஏற்படும். திருச்சியில் இருந்த போது தந்தை பெரியார் அவர்கள் வரு கிறார்கள் என்றால் அவரது பேச்சைக் கேட்க கிளம்பி விடுவோம். காவல்துறையினர் அனுமதிக்கும் நேரம் வரை பேசிக் கொண்டிருப்பார். அனுமதி நேரம் முடிந்தபிறகு அந்த மைக்கை எடுத்து அந்தப் பக்கம் வைங்க என்று சொல்லி விட்டு சந்தேகம் கேட்பவர்கள் எல்லாம் பக்கத்தில் வாங்க என்று சொல்லி விட்டு அதன்பிறகு ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருப்பார். அதுபோல் பலமுறை அவரது பேச்சு கேட்டு அரசியல் தெளிவு பெற்றிருக்கிறேன்.

தமிழ் ஓவியா said...

1967இல் மண்ணச்சநல்லூரில் டாக்டர் குப்பாச்சாமி தலைமையில் தந்தை பெரியார் அவர்களை அழைத்து வந்து விழா நடத்தியதையும் அந்த விழாவிற்கென்று ஒரு மலர் தயாரித்து வெளியிட்டதையும் அந்த மேடையில், நான் பேசியதையும் பெருமையாக கருதுகிறேன். வரலாறுகள் எப்படி திரித்துக் கூறப்பட்டு விடுகின்றன என்பதற்கும் உண்மை வரலாறுகள் தெரிய வேண்டும் என்பதற்கும் ஓர் உதாரணம் சொல்கிறேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு நிதி கொடுப் பதை தந்தை பெரியார் எதிர்த்தார் என்று ஒரு கருத்து உலா வருகிறது. அது எந்த நேரத்தில் ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். கவிஞரின் நிலை கண்டு அவருக்கு ஏதாவது நிதி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கு நிதி வசூலிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது தந்தை பெரியார் அவர்கள் முதல் நிதியாக ரூ. 150 கொடுத்தார். தொடர்ந்து வசூலான தொகையையும் சேர்த்து பாரதிதா சனுக்கு வழங்கப்பட்ட.து. இது நடந்தது 1946 ஆம் ஆண்டு.

தந்தை பெரியார் மேதமை

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் மறைந்த தலைவர்களுக்கு அய்யா அவர்கள் விடுத்த அறிக்கைகளைப் பார்த்தால் அதில் புலமை இருக்காது அய்யாவின் மேதமை தெரியும். மற்றவர் களின் அறிக்கைகளுக்கும் அய்யாவின் அறிக்கைகளுக்கும் அதுதான் வித்தி யாசம். அய்யாவின் மேதமை யாருக்கும் வராது. (தனது வாழ்க்கைத் துணைவியார்) அன்னை நாகம்மையார் மறைவின் போதும் காந்தியார் மறை வின் போதும் விடுத்த அறிக்கை களானது அவரது மேதமையை அனை வரும் வியக்கும் வண்ணம் நன்கு உணர்த்தும்)

அய்யா அவர்கள் மேடையில் பேசும் போது: நான் இங்கு பேசிக் கொண்டி ருக்கிறேன். எனது புத்தகங்கள் மூலைக் கடையில் விற்பனையாகிக் கொண்டி ருக்கின்றன. புத்தகத்தின் விலை ஒரு அணா. அருகில் உள்ள டீக்கடையில் விற்கும் டீயும் ஒரு அணாதான். டீக் குடித்தால் சிறிது நேரத்தில் காணாமல் போய்விடும். என் புத்தகத்தை வாங்கி னால் அரசியலில் தெளிவு பெறலாம். சமூக மாற்றத்தில் தன்னை இணைத்துக் கொள்ளலாம். நான் பேசுவதில் தவறு இருந்தால் மறுமுறை இங்கு நான் வரும் போது விவாதம் செய்யலாம். அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லலாம் என்பார்.

தமிழ் ஓவியா said...

எதையும் உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதில் தந்தை பெரியார் அவர்கள் மிகச் சரியாக இருப்பார். ராமாயணத்தில் ராமன் கடைசியில் சரயு நதியில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதாக இருக்கிறது. ஆனால் நம்மவர்கள் எதையும் சுபமாகத்தான் முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆயிற்றே! அதனால் ராமாயணம் சுபமாக முடிக்கப்பட்டிருக்கிறது. உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது. அந்த உண்மையைக் கூட நம்மைப் போன்றவர்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

நூல்களைப் பாதுகாக்கும் பெரியார்

மற்ற தலைவர்களுக்கும் தந்தை பெரியார் அவர்களுக்கும் உள்ள ஒரு வித்தியாசத்திற்கு இந்த ஞானாலயத்தில் உள்ள நூல்களில் இருந்து உண் மையைச் சொல்ல விரும்புகிறேன். 1968இல் தந்தை பெரியார் அவர்கள் ஓர் அறிக்கை விடுகிறார். அந்த அறிக்கையில் என்னிடமிருந்த அபிதான சிந்தாமணி என்கிற நூலை யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள். எனக்கு இப்போது அந்த புத்தகம் தேவைப்படு கிறது. அதை எடுத்துச் சென்றவர்கள் இந்த அறிக்கையைப் படித்தவுடன் என் னிடம் கொண்டு வந்து கொடுத்து விடுங்கள். அதற்கு உரிய விலையைத் தந்துவிடுகிறேன் என்று அறிக்கை விட்டார். அவரிடம் இருந்த நூல்களை எப்படி பாதுகாத்து வந்தார் என்பதற்கு அவரது நேர்மைக்கும் இது உதாரணம். தலைவர்களும், தொண்டர்களும் மற்ற தலைவர்களும் நினைவாக கொடுத்த நூல்கள் பல, பழைய புத்தகக் கடை களுக்கு போய்விட்டு இந்த நூலகத் திற்கு வந்து விட்டன. தலைவர்கள் வைத்துக் கொள்ள வேண்டிய பல நூல்களை நான் பாதுகாத்து வருவதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

1835 ஆம் ஆண்டு தான் புத்தகங் கள் அச்சிடும் உரிமையை பிரிட்டிசார் நமக்கு வழங்கினார்கள். 1873 ஆம் ஆண்டு பச்சையப்பன் பள்ளியில் தமி ழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. தமிழகத்தில் காமராசர் ஆட்சியில் ஏராளமான தமிழ்நூல்கள் புதுப்பிக்கப் பட்டன. காமராசருக்கு உதவியாக இருந்தவர் ராஜகோபால். மொழிப் பெயர்ப்பாளராக இருந்தவர் வெங்கட் ராமன். பிற்காலத்தில் குடியரசுத் தலைவராக இருந்தார்.

ஜெயின்ஸ் இந்து என்று சொல்லிக் கொள்வார்கள். அவர்கள் ஏற்றுக் கொண்ட நூல் சீவகசிந்தாமணிதான்.

உ.வே.சா. அய்யர் தமிழில் புலமை பெற்றிருந்தார் என்றால் அவர் பயிற்று மொழி,பேசும் மொழி எல்லாம் தமிழாக இருந்தது தான்! இங்கு பலரும் பயின்ற மொழி ஒன்று, வீட்டில் பேசும் மொழி ஒன்று, பயன்படுத்தும் மொழி ஒன்றாக இருப்பதால் தான் பலருக்கும் மொழிக்குழப்பம் உண்டு. தமிழின் அருமை தெரிய வேண்டும் என்றாலும் பழைய நூல்களை பாதுகாக்கவும் பயிலவும் வேண்டும்.

வெளிநாடுகளில் தமிழர்கள் பல வகையிலும் உயர்ந்திருக்கிறார்கள். உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் நிர்வாகம் நடத் துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் சிரமப்படக் கூடும். ஆனால் அவர்கள் இரண்டாம் குடிமகனாகத்தான் நடத்தப்படுகிறார்கள். அவற்றை யெல்லாம் இன்றைய தொழில்நுட்பத் தின் வாயிலாக அறிந்திருக்கக் கூடும். ஆனால் பழைய புத்தகங்களில் உள்ள வற்றை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும். நான் இந்த நூலகத்தை நன்கு பாதுகாத்து வருகிறேன். இதைப் பாதுக்க இன்னும் பலரும் முன்வர வேண்டுமென்றார்.

நூலகத்தில் பெரியாரின் நூல்கள்

இந்த நூலகத்தில் தந்தை பெரியார் முதன் முதலாக எழுதிய ஞானசூரியன் முதல் அனைத்து பிரதிகளும் வைத்திருக்கிறார். 14.4.1949 முதல் 6.9.1952 வரை விடுதலையில் வெளிவந்த பேப்பர் கட்டிங் செய்திகளும் 1.4.1956 முதல் 30.10.1956 உள்ள விடுதலை நாளிதழின் பிரதிகளும் பைண்டிங் செய்யப்பட்டு, பாதுகாப்பட்டு வருகிறது. இதுபோல் ஏராளமான விடுதலை நாளிதழ்களின் தொகுப்புகளும் கட்டமைப்பு (பைண்டிங்) செய்யப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மறுபதிப்பு செய்வதற்காக பதிப்பகங் களுக்கு மூல நூல்களை வழங்குகிறார் எதையும் மாற்றக் கூடாது என்கிற நிபந்தனையோடு. இதுவரை இரண்டா யிரத்துக்கும் அதிகமான நூல்களை வழங்கியிருக்கிறார்.

மிகப் பெரிய நூலகத்தைக் கண்ட மகிழ்ச்சியுடனும், பார்த்து வியந்த நெகிழ்ச்சியுடனும் நன்றி கூறி அங்கி ருந்து விடை பெற்றோம். இவ்வளவு அரிய பணியையும் ஏற்று தனது வயதுக்கு மீறிய பணிச்சுமையையும் ஏற்று தனது வருமானம் அனைத்தை யும் இந்த நூலகத்திற்கே செலவு செய்து நூலகத்தை நடத்தி வரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது வாழ்க்கைத் துணைவியார் டோரதி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு நம்மா லான உதவிகளை ஒவ்வொருவரும் செய்ய முன்வர வேண்டும்

- ம.மு.கண்ணன் 20-10-2012

தமிழ் ஓவியா said...


ஆணி வேரையே அறுக்கலாமா?


தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முற்றம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான மாத இதழ். சுற்றுலா பற்றிய சிறப்பு இதழில் 8ஆம் பக்கத்தில் கல்லணை என்பதில் காவிரியின் குறுக்கே 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ராஜசோழனால் கட்டப்பட்ட கல்லணை இன்றும் கம்பீரமாக நிற்பது தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. (செப்டம்பர் 2012 இதழ்) என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் ஆட்சியில் வரலாற்றில்கூட எத்தகைய குளறுபடி! கல்லணை கட்டியவன் கரிகாற்சோழனா? ராஜராஜசோழனா?... உண்மையை உரைப்பதுதானே, வரலாறு! இதிலேயும் கலப்படம் செய்து வரலாற்றையும் புராண மாக்க நினைக்கலாமா? அதுவும் சுற்றலா பயணிகளுக்கு தவறான தகவல்களைத் தரலாமா? வரலாற்றின் ஆணிவேரையே அறுத்தெறியும் இந்த முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இல்லா விட்டால் வரலாறும், இந்தஆட்சியில் புராணமாகி விடும்!...

- நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
20-10-2012

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடு மின்னோட்டம் - ஓர் கண்ணோட்டம்!


2001 முதல் 2011 வரை மின் ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு பின் தங்கியது எப்படி?

மின் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பின்னடைவு மிக மிக மோசமாக உள்ளது என்றே கூறலாம்.

இன்றைய நிலையில் தமிழ்நாட் டுக்குத் தேவையான மின் ஆற்றல் அளவு 11,000 மெகாவாட் ஆகும். இது அன்றாட தேவைகளுக்கு மிக மிக அவசி யம். ஆனால் தமிழ்நாட்டின் தேவைக்கு குறைவாக கிடைக்கும். மின் ஆற்றலின் அளவு 4000 மெகாவாட். இக்குறைபாடு மிக மிக அதிகம். மற்ற மாநிலங்களின் மின் உற்பத்தியின் அதிகரிப்புடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மின் உற்பத்தியில் அடைந்துள்ள முன்னேற் றம் கவலை தரத் தக்கதாக உள்ளது. மற்ற மாநிலங்கள் மின் உற்பத்தியில் வெகு விரைவாக முன்னேறிக் கொண் டிருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளில் மின் உற்பத்தியில் தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றம் வெறும் 483 மெகாவாட் மட்டுமே. இது 2001-க்கும் 2010க்கும் இடையே விளைவிக்கப்பட்ட முன்னேற் றம். ஆனால் இதே காலக் கட்டத்தில் நமது அண்டை மாநிலங்களான கர்நா டகாவிலும் ஆந்திராவிலும் ஏற்பட் டுள்ள மின் உற்பத்தியின் அதிகரிப்பு 2000 மெகாவாட்டைவிட அதிகம்.

தமிழ்நாட்டில் தொழில் துறை மற்றும் வீடுகளுக்குத் தேவையான மின் ஆற்றலின் அளவு மிக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் தமிழ் நாட்டின் மின் உற்பத்தியின் கொள்கை தவறான பாதையில் சென்று கொண்டி ருக்கின்றது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளது.

2001இல் தமிழ்நாட்டின் மின் ஆற்றலின் தேவை 6000 மெகாவாட். ஆனால் அதன் தேவை 10,000 மெகா வாட்டாக தற்போது உயர்ந்துள்ளது.

ஆக தற்போது, அதாவது 2012 தமிழ் நாட்டின் தேவை 11000 மெகாவாட்டாக உள்ளது. இன்றைய நிலையில் தமிழ்நாடு காற்று மூலம் கிடைக்கும் மின் ஆற்றலை நம்பிக் கொண்டிருக்கின்றது. காற்றின் மூலம் கிடைக்கும் மின் ஆற்றல் தொடர்ச்சியானது அல்ல. காற்றின் மீது நம்பிக்கை வைத்தால் மின் ஆற்றல் உற்பத்தி கூடுதாகும் பதிலாக குறையவே செய்யும்.

நடுவணரசு திட்டக் குழுவின் அறிக்கையில் உள்ள புள்ளி விவரங் களின்படி 2001இல் தமிழ்நாட்டின் நிலை நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி யின் அளவு 5222 மெகாவாட்டாக இருந்தது. இதில் நடுவணரசின் திட்டங்களும் காற்றின் மூலம் கிடைத்த மின் ஆற்றலும் அடக்கம். 2010இல் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டுள்ள சாதனங்களின் மூலம் கிடைக்கும் மின் ஆற்றல் அளவு 5,705 மெகாவாட்டு ஆகும்.
அதே கால கட்டத்தில் (2001 முதல் 2010 வரை) ஆந்திராவில் அதிகரிக்கப் பட்ட மின் ஆற்றலின் அளவு 2605 மெகாவாட். கர்நாடகாவின் அதிகரிப்பு 2496 மெகாவாடாகும்.

தமிழ் ஓவியா said...

2007க்கும் 2009க்கும் இடையே தமிழ்நாட்டின் பல அனல் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட் டன. ஆனால் பல காரணங்களால் மேற்கண்ட மின் திட்டங்கள் தாமத மடைந்தன.

இன்றைய தினம் நிலவும் மின் தட்டுப்பாடு 2013 ஜூன் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கால கட்டத்தில் மேலே குறிப் பிடப்பட்டுள்ள அனல் மின் நிலையங் களும், கூடங்குளம் அணு மின் நிலைய மும் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2001க்கும் 2010க்கும் இடையே மின் ஆற்றலின் தேவை 4500 மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆனால் இத்தேவையை ஈடு செய்யும் அளவுக்கு மின் உற்பத்தி இல்லை என்றே கூற வேண்டும்.

காற்றின் மூலம் கிடைக்கும் மின் ஆற்றலில் மீது தமிழ்நாடு நம்பிக்கை வைத்திருக்கின்றது. ஆனால் அது தொடர்ச்சி ஆனது அல்ல. குறிப்பிட்ட வேகமுள்ள காற்று வீசுவதென்பது முன் கூட்டியே நிர்ணயிக்கப்படுவது அல்ல.

7000 மெகாவாட் அளவுத்திறன் காற்றின் மூலம் கிடைக்கும் நிலை யங்கள் தமிழ்நாட்டில் நிறுவப்பட் டுள்ளதாவது. மின்துறை அதிகாரி கூறுகிறார்.

2007-_08இல் அரசு மின் தேவையை ஈடு செய்வதற்காக பல அனல் மின் நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

மின் உற்பத்தி நிலையங்கள் தொடங் கப்படுவதில் ஏற்படும் கால தாமதத்திற் கான காரணங்கள் பின்வருமாறு விளக்கப்படுகின்றன.

நிலம் கையகப்படுத்தல், சுற்றுப்புறச் சூழ்நிலைத் துறையின் அனுமதி கிடைப்பது ஆகியன தாமதத்திற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

2009இல் டெல்லியில் மாநிலங்களில் மின்துறை அமைச்சர்களின் மாநாடு கூட்டப்பட்டது. அப்போது மாநில அரசின் மின்துறை அமைச்சராக இருந்த ஆர்க்காடு வீராசாமி அவர்கள் பதினோராம் ஐந்தாண்டு திட்டத்தில் (2007_12) குறிப்பிட்டுள்ள இலக்கு தமிழ் நாடு அடைந்துள்ளதாக குறிப்பிட்டார். அதற்கான வேலைத் திட்டங்கள் எதிர்பார்த்ததைவிட துரிதமாக நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.

அத்திட்டங்கள் மூலம் 6000 மெகாவாட்டு அளவுக்கு மின் ஆற்றல் கிடைக்கும் என்றும் கூறினார். அவர் குறிப்பிட்ட திட்டங்களில் வட சென்னை மேட்டூர், வள்ளுர், தூத்துக் குடி, உடன்குடி ஆகிய இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்களும், சில புனல் மின்நிலையங்களும் அடங்கும். ஆனால் மேற்கண்ட நிலையங்களில் மின் உற்பத்தி தாமதிக்கப்படுகிறது.

2007ஆம் ஆண்டு வரை, நடுவணரசு திட்டமாகிய இராம குண்டத்திலிருந்து 2000 மெகாவாட் மின் ஆற்றல் தமிழ்நாட்டுக்குக் கிடைத்து வந்தது. ஆனால் அதற்கு ஈடாக மாநிலத்தில் தன் அளவுக்கு உற்பத்தி அதிகரிக்கப் படவில்லை என தமிழ்நாடு மின் ஆற்றல் ஒழுங்கு முறை துறையைச் சார்ந்த அலுவலர் கூறுகிறார்.

பொதுவாக ஓர் அனல்மின் நிலையம் செயல்பட தொடங்குவதற்கு குறைந்தது 36 மாதங்கள் ஆகும். ஆனால் திட்டம் தொடங்கப்பட்டு 60 மாதங்கள் ஆகியும், மின் உற்பத்தி தமிழ்நாட்டில் தொடங் கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணமாக நிலம் கையகப்படுத்துதல், அதற்கு புறச் சூழ்நிலை துறையின் அனுமதி, கொதிகலன்கள் கிடைப்பதில் உள்ள தாமதம் ஆகியன குறிப்பிடப் படுகின்றன. போதுமான அளவுக்கு கொதிகலன்கள் வழங்குவதில் பொதுத் துறை நிறுவனமாகிய திருச்சி கொதி கலன் தொழிற்சாலை (பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்) தாமதம் காட்டுகிறது.

- பாலா 20-10-2012

தமிழ் ஓவியா said...


பெண்களே, கவனம் கொள்வீர்!

மத்திய நிலக்கரி அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், நாளாக நாளாக மனைவியும் அலுத்துவிட்டது போல் பேசியதாகவும் நடிகை ராக்கி சவந்த் என்பவரை இணைத்துப் புகைப்படம் போட்டதற்காக பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். பெண்களுக்கு வீட்டுச் சொத்திலும், பணி வாய்ப்பிலும் சமஉரிமை வழங்க வேண்டும் என்று போராடிய பெரியார் தொண்டர்களான நாம் வெகுவாக பெண்கள் போராட்டத்தை பாராட்டலாம்.

ஆனால், திருஞானசம்பந்தர் மண்ணகத்திலும் வானிலும் என்கிற பாடலில் சமணர், புத்தர் ஆகியவர் பெண்களை தான் கற்பழிக்க அருள் செய்வாயாக எனப் பாடியிருப்பதற்கும், படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை பெண்கள் பொருட்டே மனு கற்பித்தார் (மனு அத்.9 சு.17), பெண்கள் தன் சுவாதீனமாக இருக்கக் கூடாது. (மனு அத்.5 -148), பிள்ளை இல்லாதிருந்தால் 7ஆவது தலைமுறைக்குட்பட்ட பங்காளியைப் புணர்ந்து பிள்ளையைப் பெறலாம். (மனு அத்9-சு.59) என்று மனுதர்மத்தில் குறிப்பிட்டுள்ளதற்கும், கவுதம முனிவரின் மனைவியைக் கற்பழித்த இந்திரன், பெட்டைக் குதிரையாயிருந்த சஞ்சிகையை கூடியதாகவும், பிரம்மன் தன் மகளாகிய சரஸ்வதியைக் கூடியதாகவும், ருசுவாகாத மச்சகந்தியை பராசர முனிவனும், பருவமடையாத குந்தியை சூரியனும் கற்பழித்ததாகவும் தாருகாவனத்து ரிஷி பத்தினிகளின் முன்னர் காமவெறிக் கொண்டு கோவணமின்றி திரிந்ததால் சிவனுக்கு பிச்சாடனமூர்த்தி என்று பெயர் வந்ததாகவும் மனுதர்மம், புராணங்களில் உள்ளதை பெண்கள் அமைப்பினர் படித்து பெருமை கொள்வார்களா?
- மா. சென்றாயன், தருமபுரி

தமிழ் ஓவியா said...


கிரீன் டீ


இது ஒரு சிறந்த ஆரோக்கியமான பானங்களில் ஒன்று இதனால் சருமத்திற்கு மட்டும் நல்லதல்ல. உடலுக்கும் நல்லது. டயட்டில் இருப் போர் அனைவரையும் பார்த்தால் தினமும் 24 கப் கிரீன் டீ குடிக் கின்றனர்.

ஏனெனில் அது உடலில் இருக்கும் அளவுக்கு அதிகமான கொழுப்புகளை கரைத்துவிடுகிறது.

ஏனென்றால் கிரீன் டீயில் சருமத்திற்கும், கூந்தலுக்கும் ஏற்ற பொருளான பாலிஃபினால் மற்றும் ணி.நி.சி.நி. (ஆன்டி ஆக்ஸிடன்ட்) இருக்கிறது. ஆகவே கூந்தல் அடர்த் தியாக வளர, சரும சுருக்கங்கள் குறைய உடல் நல்ல பிட்டாக இருக்க தினமும் ஒரு டம்ளர் கிரீன் டீ குடித்தால் போதும்.

புத்துணர்ச்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டு களாக இருந்துவரும் வழக்கம் தேநீரில் பல வகைகள் காணபபட்டாலும் அனைவராலும் விரும்பப்படுவது மூன்று வகைகள் ஆகும்.

1 கிரீன் டீ 2 ஊலாய் 3 பிளாக் டீ.

கிரீன் டீ - கேமிலியா சைனஸ்ஸிஸ் எனப்படும் தாவரத்தின் இலைகளில் இருந்து பெறப்படுகிறது. கிரீன் டீயில் ஆறு விதமான பாலிபீனால்கள் உள்ளன.
அவைகள்.

1. எபிகேட்சின்

2 கேலோகேட் சின்

3 கேட்சின்

4 எபிகேட்சின் கேஸ்ட்

5. எபிகேட் சின்கேகேட்சின் 6 எபிகேலோ கேட்சின்

மேலும் கேஃபின் தியோபுரோமின் தியாஃபிலின் போன்ற ஆல்கலாய்டு களும் உள்ளன. இவை மனித உடலுக்கு புத்துணர்ச்சி தருவது மட்டுமில்லாமல் மனித உயிர்களைக் காக்கும் சஞ்சீவிகளாக உள்ளன.

கிரீன் செய்யும் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து விஞ்ஞானிகளால் பரிந் துரை செய்யப்படுவது ஆகும். விஞ் ஞானிகள் பரிந்துரைத்த சில பரிந் துரைகள்.

வாழ்நாளை அதிகப்படுத்த கிரீன் டீயில் அதிகமாக காணப்படும் ஆண்டிஆகஸிடன்ட்கள் வயது முதிர்வை தாமதப்படுத்தி இளமை யையும் ஆரோக்கியத்தையும் நீடிக்கச் செய்கிறது.

உடல் எடையை குறைக்க....

உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடலினை சமச்சீராக பராமரிக்கிறது நினைவுத்திறன் அதிகப்படுத்த கிரீன் டீயில் உள்ள எபிகேலோ கேட் சின் மூளையின் செயல்திறனை அதிகரித்து நினைவாற்றலை பெருக்குகிறது.

புற்றுநோய்களுடன் போராடுகிறது...

கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால் கள் புற்று நோய் செல்களை வளர விடாமல் அழிக்கிறது தீங்கிழைக்கும் என்சைம்களின் வளர்ச்சியை தடுத்து ரத்தப்புற்று, நுரையீரல் புற்று, தொண்டைப்புற்று, வயிறு, குடல், ஈரல் புற்று மற்றும் மார்கப்புற்று போன்றவற்றின் தீவிரத்தைக் குறைக் கிறது.

சர்க்கரை நோயைக் குறைக்க...

கிரீன் டீயில் உள்ள தியோ பிளவின்கள் இரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து குளுகோஸ் வினையை ஊக்கப்படுத்துகிறது.

மனஅமைதிக்கு...

கிரீன் டீயில் உள்ள பாலிஃபீ னால்கள் மன இறுக்கத்தைப் போக்கி மூளையில் ஆல்பா அலைகளைத் தூண்டி மனதுக்கு அமைதியைத் தருகிறது.

தோல் பாதுகாப்பு..

முகப்பரு, வறண்ட சருமம், சரும அலர்ஜி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் தருகிறது.

இரத்த அழுத்தம், பக்கவாதம் அல்சைமர் போன்றவற்றைத் தவிர்க் கிறது. எலும்புகள் பலமடையவும் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் செய்கிறது.

- புதிய பார்வை அக்டோபர் 1-15, 2012

தமிழ் ஓவியா said...


நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள்


மருத்துவம்

பிரிட்டனைச் சேர்ந்த ஜான் குர்டன் (79). ஜப்பானைச் சேர்ந்த சின்யா யமனன்கா (50) ஆகிய இரு விஞ்ஞானிகளும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஸ்டெம் செல் ஆராய்ச்சி இவர்களது பங்களிப்புக்காக இவர்கள் இருவரும் இந்த உயரிய விருதைப் பெறுகின்றனர். அவர்களுக்கு 1.2 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும்.

இயற்பியல்

அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் வின்லேண்ட் மற்றும் பிரான்ஸின் சேர்ஜ் ஹாரோச் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. ஒளி மற்றும் திடப் பொருள் தொடர்பில் குவாண்டம் துகள்களை சிதைக்காமல், தனிப்பட்ட துகளை அளவிட முடியும் என்பது இவர்களின் கண்டுபிடிப்பு. கணினித் துறையில் மிக முக்கியமாகக் கருதப்படும் குவாண்டர் பௌதீகவியலில் இவர்களது கண்டுபிடிப்புகள், அதி வேகக் கணினிகள் தயாரிப்புக்குப் பயன்படும்.

வேதியியல்

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ராபர்ட் லெஃப்கோலீட்ஸ் மற்றும் பிரையன் கோபில்காவுக்கு கிடைத்துள்ளது. வெளிப்புறத் தூண்டல்களை நமது உடலில் உள்ள செல்கள் உணர்ந்து, அதற்குத் தக்கவாறு எதிர்வினையாற்ற வைக்கும் புரதங்களைக் கண்டுபிடித்ததற்காக இந்த விருது அளிக்கப்படுகிறது. கொலம்பியா மற்றும் ஹார்வர்டு பல்கலைக் கழகங்களில் மருத்துவம் படித்த ராபர்ட், மருத்துவ விஞ்ஞானி. யேல் மற்றும் மினிசோட்டா பல்கலைக் கழகங்களில் படித்த பிரையன் கோபில்கா, ஸ்டான்ஃபோர்டு மருத்துவப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

தமிழ் ஓவியா said...


5 முதல் 55 வரை


கும்பகோணம் பெரியார் மாளிகையில் இரவுக் காப்பாளராக பணிபுரியும் தோழர் சி. கோவிந்தராசு தன்னுடைய 5 வயதில் பள்ளிக் கூடத்திலேயே போட்ட கருப்புச் சட்டை வீரர். இவர் தன்னை பெரியார் பெருந்தொண்டர் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறார்.
உங்கள் சொந்த வாழ்க்கையைப்பற்றி...

கும்பகோணம் அருகிலுள்ள பெரியார் நகரில் சின்னதம்பி யோகாம்பாள் ஆகியோருக்குப் பிறந்தேன். 5 வயதில் பள்ளிக் கூடத்திலேயே போட ஆரம்பித்த கருப்புச்சட்டை 55 வயதிலும் கருப்புச்சட்டையைப் போடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சட்டையைப் போட்டுக் கொண்டு எங்கு சென்றாலும் தனி மரியாதை மக்கள் தருகிறார்கள்.

இயக்கத்தில் முதல் தொடர்பு எப்படி ஏற்பட்டது?

தாராசுரத்தில் இருந்து டேப் தங்கராசு சீதை வேடம் போட்டுக் கொண்டு குடத்தைபாணாதுறை வரை ஊர்வலமாக சென்று அங்கு தந்தை பெரியார் கூட்டத்தில் கலந்து கொண்டதுதான்.

போராட்டங்களில் கலந்து கொண்டதுபற்றி...

இந்தி அழிப்பு போராட்டம், காவிரி நதிநீர் போராட்டம், ஜாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம், ரயில் மறியல் போராட்டம், மற்றும் தி.க. நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளேன்.

சிறை வாழ்க்கை பற்றி... உச்சநீதிமன்ற நீதிபதி கொடும்பாவி எரித்து கடலூர் சிறை சென்றது.

நேர்காணல்: கா. இராமநாதன், திராவிடர் கழகம், கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


இப்படியும் ஒரு தலைப்பு!

குருவாயூரப்பனால் குழந்தை பிறந்தது! தலைப்பைப் படித்ததும் மனசு தடக் என்றது. குறும்பு, வம்பு தும்புகளுக்குள் நுழையும் எண்ணம் நமக்கு இல்லை. பழகும் பகுத்தறிவு எழுப்பும் அய்யம் .அவ்வளவே! பாடகி நித்யசிறீயுடன் ஒரு நெகிழ்வான சந்திப்பு என்பதை குமுதம் (26.9.2012) இப்படித் தான் விளிக்கிறது. வெட்கமோ, கூச் சமோ சிறிதுமின்றி படித்துப் பக்கு வப்பட்டவர்கள்கூட பாமரத்தனமாய், அசட்டுத்தனமாய் பேசுவதைக் கேட்டு அறிவுலகம் கைகொட்டிச் சிரிக்கிறது.

குருவாயூரப்பன் மீது ஏன் அப்படி ஒரு பக்தி என்பதுதான் கேள்வி. மட மடவென தன்னை அணைத்திருக்கும் மடமைப் பிணியின் மாண்பினை வெட்ட வெளிச்சமாக்குகிறார் டி.கே. பட்டம்மாளின் பெயர்த்தி!

கல்யாணம் ஆகி ஏழு வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தேன். தெய்வ புருசர் போல ஒரு பெரியார் வந்து நவம்பர் ஒன்றாம் தேதிக் குள் குருவாயூர் சென்று அப்பனைத் தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றார். என் கணவரிடம் இதைச் சொன்னேன். எவ்வளவோ பிரார்த்தனைகளைச் செய்தாகிவிட்டது. விடு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.


தமிழ் ஓவியா said...

எதேச்சையாக (அக்டோபர் 30ல்) கொச்சினில் கச்சேரி அமைந்தது. என் கணவரைக் கேட்காமலேயே எங்கள் இருவருக்கும் டிக்கெட் புக் செய்தேன். சனிக்கிழமை கச்சேரியை முடித்துக் கொண்டு ஞாயிறு காலை குருவா யூருக்குச் சென்றோம். கோயிலின் உள்ளே பெரும் கூட்டம். சுவாமியைத் தரிசிக்க முடியவில்லை. சரி திரும்பு வோம், மூன்று மணிக்கு இரயிலைப் பிடிக்க வேண்டும் என்றார் கணவர். அப்பொழுது காவலர் உடையில் இருந்த ஒருவர் திடீரென்று வந்து, நீங்க நித்யசிறீ தானே. குருவாயூரப்பனை தரிசிக்கணுமா? என்று கேட்டு எங்களை அழைத்துச் சென்று அய்ந்தாவது நிமிடம் சன்னதியில் குருவாயூரப்பன் முன் நிறுத்தி விட்டார். மனமுருகிப் பிரார்த்தித்துத் திரும்பினேன். ஜனவரி மாதம் என் முதல் மகளை கருவில் சுமந்தேன். குருவாயூரப்பனின் சக்தியை எண்ணி மனம் சிலிர்த்தேன். இப்பொ ழுது எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் என்று முடிக்கிறார்.

காந்தி படத்தைக் காட்டினால், காசை விட்டெறிந்தால் அடுத்த சில நொடிகளில் கருவறையின் அருகில் கொண்டு போய் நிறுத்தி விடும் வல்லமை உள்ளவர்கள் திருப்பதியி லிருந்து திருச்செந்தூர் வரை, காசியி லிருந்து கைலாயம் வரை இருக் கிறார்கள் என்ற உண்மை பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியுமே! சன்னதியில் குருவாயூரப்பன் முன் அய்ந்து நிமிடத்தில் நிறுத்தினாரே காவலர். அப்படி ஒரு அதிகா ரத்தை அவருக்கு யார் கொடுத்தது? ப(க்)தர்கள் முட்டி மோதும் கோயில் களிலெல்லாம் வரிசையைக் கண்டு மலைத்து நிற்கும் சீமான் சீமாட்டி களைக் கண்டறிந்து குறுக்கு வழிகாட் டும் தரகர்களுக்கா பஞ்சம்? போலீஸ் உடையிலிருப்பவர்களும் இதே வேலையைத்தான் செய்கிறார்கள் என்ற செய்தி ஒன்றும் புதிதல்ல. ஒழுங்கும் கட்டுப்பாடும் அங்கே காத்துக் கிடக்கும் சாமான்யர்களுக்குத்தான். அந்தக் காவலர் இந்தப் பெண்மணியிடம் எவ்வளவு கறந்தார் என்ற விபரத்தையும் சொல்லியிருக்கலாம்.

கண் மூடிப்பழக்க வழக்கங்களைத் தூக்கிக் கடாசிவிட்டு சிந்தனைச் சுதந்திர வானில் சிறகடித்துப் பறக்க தாய்க்குலம் துணிவு பெற வேண்டும். இன்னும் எத்தனை காலம்தான் பழமைச் சேற்றில் மூழ்கிக் கிடப்பது? எல்லாம் அவன் செயல். அவனன்றி அணுவும் அசையாது எனும் பத்தாம் பசலி மூடநம்பிக்கைகளிலிருந்து உடனடியாக மீட்சி பெற வேண்டாமா?

பெண்களிடம் மலிந்து கிடக்கும் பேதைமையை விளக்க ஒரு சிறு எடுத்துக்காட்டு பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்த வளர் இளம்பெண் அவள். ஒரு நாள் வீட்டில் வாந்தி எடுப் பதைக் கண்டு பெற்ற தாய் பதறிப் போனாள். அவசர அவசரமாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டியபோது மூன்று மாத கர்ப்பம் என்றார் அவர். தலையில் இடி விழுந் ததுபோல் துடித்துப் போன அந்தத் தாயின் அடி வயிற்றிலிருந்து அட கடவுளே... என் பிள்ளைய இப்படி பண்ணிட்டியே என்ற வார்த்தைகள் வந்து விழுந்தன. அவலக் குரல்தான் என்றாலும் அபத்தமாய் அமைந்தது. மடமை நோயின் தாக்கம் எந்த அள விற்கு அந்தத் தாயை பாதித்திருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

உள்ளதை உள்ளபடி எடுத்துக் காட்டும் நல்ல உள்ளங்களும் உண்டு. இதே தேதியிட்ட (26.9.2012) ஆனந்த விகடனில் வட்டியும் முதலுமாய்ப் போட்டு வாங்கும் ராஜு முருகனின் கட்டு ரையில் ஒரு பகுதியை இங்கே பார்ப்போம்.

தமிழ் ஓவியா said...

ஒரு நண்பனின் மனைவிக்கு மனநலன் குன்றிவிட்டது. பல்லைக் கடித்துக் கொண்டு, கை கால்களை முறுக்கிக் கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொள்கிறார். தெருவே எழும் பக் கத்துகிறார். மாறி மாறி ஆஸ்பத் திரிகளுக்குப் போயும் சரியாகவில்லை. யாரோ சொல்லி கேரளத்தில் பகவதிஅம்மன் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டனர். அங்கே சாட்டையால் அடித்து, நெருப்பு வைத்து எதேதோ செய்திருக்கிறார்கள். இவன் கண் முன்னாலேயே துவண்டு கிடந்தவரை வீட்டில் கொண்டு வந்து போட்டிருந்தார்கள். நான் போய்ப் பார்த்துவிட்டு கண்டபடி திட்டினேன். நீயெல்லாம் மனுஷனாடா... என்னடா பண்ணிட்டு வந்திருக்க என்றதற்கு அவன் சட்டென்று என் கையைப் பிடித்துக் கொண்டு அழுதான். என்ன பண்றதுனு தெரியலைடா.. எல்லாம் பண்ணியாச்சு. ஒண்ணும் நடக்கலே. பாக்க முடியல. அதுதான் இதையும் எண்ணிப் பார்த்துரலாம்னு... அவன் பெரியப்பா வந்து அவனை ஓங்கி ஓர் அறைவிட்டார். கம்னாட்டி அந்தப் புள்ளைய நா கொண்டு போறண்டா... என அவரே ஊருக்கு அழைத்துப் போய் விட்டார் என்று போகிறது கதை.

கொடிய நோய் குணமாக வேண்டுமா அதற்கொரு மலையாள பகவதி அம்மன்!

குழந்தை இல்லாக் குறை நீங்க வேண்டுமா அதற்கொரு மலையாள குருவாயூரப்பன்!

48 நாள் விரதம் இருந்து சாமியே சரணம் சொல்ல விருப்பமா அதற் கொரு மலையாள சபரிமலை சாஸ்தா!

தீராத வினையெல்லாம் தீர்த்து செல்வம் பெருக்க வேண்டுமா அதற் கோர் ஆந்திரா திருப்பதி! மருத்துவத் துறையில்தான் ஸ்பெசலிஸ்ட்கள் இருப்பார்கள். அதற்கென தனித்தனி சிறப்பு பயிற்சி பெற்றவர்கள்.

குருவி உட்கார பனம் பழம் விழுந் தது. கரு உண்டாவதும், குருவாயூர் போனதும் ஒரே நேரத்தில் நடந்துள் ளது. இதில் கடவுளின் வல்லமை எங்கே இருக்கிறது? நித்யசிறீ சொல்வது உண்மை என்று உலகம் ஏற்குமானால் குழந்தைப் பேறு இல்லாத பெண்களின் கூட்டம் குருவாயூரில் குழுமியிருக்குமே? அப்படி நடந்து குழந்தை பெற்றெடுத்த வர்கள் வேறு யாரையாவது காட்ட முடியுமா?

இங்கே நமக்கு அருகில் இருக்கிற சாமிகளை குலதெய்வங்களை யாரும் கை காட்டுவதில்லையே ஏன்? இங்குள்ள பொம்மைக் கடவுள்களுக்கு எந்த சக்தியும் இல்லை என்பதை இதிலிருந்தாவது பக்தர்கள் தெரிந்து, தெளிந்து, திருந்த வேண்டாமா?

- சிவகாசி மணியம் 20-10-2012

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர் புரட்டு


1971 தேர்தலின்போது சென்னை தியாகராயர் நகரில் போட்டியிட்ட திருவாளர் கே.எம். சுப்பிரமணியன் என்ற பார்ப்பனர் அவாளுக்குள் சுற்றறிக்கையாக அனுப்பியது என்ன?

இதோ படியுங்கள்.

பிராமண தர்மம் ஓங்குக!

பிரியமுள்ள பிராமண குலத்தில் வந்த எல்லோர் கவனத்துக்கும்;

இப்போது நடைபெறப் போகும் தேர்தல் ஏதோ அரசியல் தேர்தல் என்று விஷய ஞானம் உள்ளவர்கள் நினைத்தால் ஏமாந்து போவோம்!

ஸ்லோகம் சொல்வது போல் பெரியவர்கள் இது தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடைபெறும் யுத்தம் என்று சொல்லியிருக்கிறார்கள்!

இதனுடைய பாஷ்யம் என்ன என்பதை நீங்களே உணர்ந்து கொள் ளலாம். தி.மு.க.காரன் ஆட்சி என்றால் என்ன அர்த்தம்? நான்காம் வர்ணத்துக் காரன் சூத்திரன் ஆட்சி என்று அர்த்தம்!

அஸிங்கம் பிடித்த குடிசை, சேரிக் காரர்கள், ரிக்ஷாக்காரர்கள், கேவல மான ஜாதிக்காரர்கள் திமிர் பிடித்து அலைகிறார்கள், இந்த ஆட்சியில்!

அவாளுக்கெல்லாம் ஆதரவு கருணாநிதி!

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உழைப்பேன் என்று கருணாநிதி சொல்கிறாரே, அர்த்தம் என்ன?

சூத்திரன் நான்; சூத்திரர்களுக் காகவே உழைப்பேன்! என்பதுதானே!

இப்படிச் சொன்ன பிறகு பிரா மணர்களாகிய நாம், பிரம்மாவின் முகத்தில் அவதரித்தோம் என்று வேதங்களால் சொல்லப்படும் நாம் சும்மா இருக்கலாமா?

சூத்திரன் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரலாமா?

சேரியிலும் அசுத்தத் தெருவிலும் வசிக்கும் சூத்திரர்கள் ஆட்சிக்கு வரலாமா?

சூத்திரர்களை நாம் அவ்வப் போது வாலை நறுக்கி வைக்க வேண்டும்.

சூத்ர பாஷையான தமிழை ஒழித்து வேத பாஷையான ஸமஸ் கிருதத்தைப் பரப்ப வேண்டும். இந்த பிராமண புனருத்தாரணத் துக்குத்தான் ஸ்ரீசோ பாடுபட்டு வருகிறார்.

இந்த சூத்திரர்களால்தான் நமஸ் காரம் ஒழிந்து வணக்கம் பிரபல மானது.

பூணூலேந்திய சிரேஷ்டர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்க லாம். ஆனால் சூத்திரர்கள் எண் ணிக்கை அதிகம்தான்.

இருந்தாலும் நாம் முடிந்த அளவு சூத்திரர்கள் மனதை மாற்றி, நாம் நினைக்கிற நம் எடுபிடிகள் ராஜாங் கத்தை உருவாக்க வேண்டும்.

காந்தியை கோட்சே ஏன் சுட் டான்?

அவர் ஆரிய தர்மத்துக்கு விரோதமாக மிலேச்சர்களான முசுலிம்களுக்கு உதவ முயன்றதால் தான் அதற்குப் பிறகுதான் ஆதரிப் போர் கொட்டம் கொஞ்சம் அடங்கியது.

காந்திஜியே அப்படி என்றால் இந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் நமக்கு எம்மாத்திரம்?

மறுபடியும் நாம் ஆரிய தர்மத்தை நிலைநாட்டியே ஆக வேண்டும்.

இந்த புனித காரியத்தில் ஜனசங்க மும் உதவுவார்கள்.

சூத்திரன் கொட்டம் ஒடுக்க நாலாஞ் ஜாதிக்காரர்களை நசுக்க பிராமண தர்மம் ஓங்க, மிலேச்ச பாஷையான தமிழ் ஒழிய, ஆரிய பாஷையான சமஸ் கிருதத்தை வளர்க்க பிராமணர்களே ஒன்று படுங்கள்!

பிரியமுள்ள
கே.எம். சுப்பிரமணியம்
தியாகராயர் நகர் அசெம்பிளி அபேட்சகன்
(நூல்: பார்ப்பனப் புரட்டுக்குப் பதிலடி)

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை இயக்கத்தின் இலட்சியம்


1. பிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்தும் இந்தியாவை பூரண விடுதலை அடையச் செய்வது.

2. தேசத்தின் பேரால் கொடுக்கப்பட வேண்டிய எல்லாக் கடன்களையும் ரத்து செய்வது.

3. எல்லாத் தொழிற்சாலைகளையும், இரயில்வேக்களையும், பாங்கிகளையும், கப்பல், படகு, நீர் வழிப் போக்குவரத்துச் சாதனங்களையும் தேசிய மயமாக்குவது.

4. எந்தவித பிரதி பிரயோசனமும் கொடுபடாமல் தேசத்தில் உள்ள எல்லா விவசாய நிலங்களையும், காடுகளையும் மற்ற தாவர சொத்துக்களையும் பொது ஜனங்களுக்கு உரிமையாக்குவது.

5. குடியானவர்களும், தொழிலாளிகளும், லேவாதேவிக்காரர்களிடம் பட்டிருக்கும் கடன்களையெல்லாம் (கேன்சல்) செல்லுபடியற்றதாக ஆக்கி விடுவது அடிமை ஒப்பந்தங்களை ரத்து செய்துவிடுவது.

6. சுதேச சமஸ்தானங்கள் என்பவைகளையெல்லாம், மாற்றி இந்தியா முழுவதையும் தொழிலாளிகள், குடியானவர்கள், சரீர வேலைக்காரர்கள் என்பவர்களுடைய நேரடியான ஆட்சிக்கு கொண்டு வருவது.

7. தொழில் செய்பவர்கள் 7 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக் கூடாது என்பதுடன் அவர்களுடைய வாழ்க்கை நிலை உயர்த்தப்படுவது, தொழிலாளிகளுக்கு கூலியை உயர்த்தி, அவர்களது சுக வாழ்க்கைக்கு வேண்டிய சவுகரியங்களை (-இலவச நூல் நிலையங்கள், மருத்துவமனைகள், பொழுது போக்கு இடங்கள் முதலிய வசதிகளையும்) ஏற்படுத்துவது தொழில் இல்லாமல் இருக்கின்றவர்களை சர்க்கார் போஷிக்கும்படியும் செய்வது என்பவைகள் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான இலட்சியங்களாகும்.

- தந்தை பெரியார் - குடிஅரசு தலையங்கம் 1.1.1933

தமிழ் ஓவியா said...

நவராத்திரியை நாம் கொண்டாடலாமா?

சரசுவதி பூஜை கொண்டாடும் நம் நாட்டில் 100-க்கு 50 பேர் தற்குறி களாக - கை நாட்டுப் பேர் வழிகளாக இருப்பது - ஏன்?

சரசுவதி பூஜை கொண்டாடாத மேலை நாடுகளில் நூற்றுக்கு நூறு பேரும் படித்திருக்க - கல்வி அறிவு பெற்றிருக்க என்ன காரணம்?

தமிழ்நாட்டுக் கல்விக் கடவுள் சரசுவதி என்றால், ஆங்கில நாட்டுக் கல்விக் கடவுள் - அய்ரோப்பிய நாட் டுக் கல்விக் கடவுள் - ஆஸ்திரேலிய நாட்டுக் கல்விக் கடவுள் யாவர்?

உலகம் முழுவதும் ஒரே சூரியன் என்பதுபோல், உலகம் முழுவதும் ஒரே சந்திரன் என்பதுபோல் உலக முழுமைக்கும் கல்விக்குப் பொறுப்பான ஒரே கடவுள் சரசுவதி என்றால், ஏன் அந்தச் சரசுவதி வணக்கம் உலகம் முழுமையும் அனைத்து மக்களாலும் அந்த ஒரு குறிப்பிட்ட நாளில் கொண் டாடப்படவில்லை? அல்லது நாட்டுக்கு நாடு வேறு ஒரு நாளிலாவது கொண் டாடப்படவில்லை? ஏன் அவ்வாறு கொண்டாடப்படலாம் அல்லவா? சரசுவதியே இல்லை என்கிறபோது விழா என்பது ஏது என்பது தானே சிக்கல்!

ஆத்திகக் கம்பனுக்கும், காளிதா சனுக்கும் நாவிலே அருள் பாலித்தது சரசுவதி என்றால் அகில உலகப் புகழ் பெற்ற நாத்திகத் தந்தை பெரியாருக் கும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக் கும், அறிஞர் அண்ணாவுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் நாவிலே அருள்பாலித்தது யார்? அயலக நாத்திக அறிஞர்களான இங்கர்சா லுக்கும், சாக்ரடீசுக்கும், பெட்ரன்ட்ர சலுக்கும், சார்லஸ் பிராட்லாவுக்கும், பெர்னாட்ஷாவுக்கும் நாவிலே அருள்பாலித்தது யார்?

ஆத்திக்க அறிவை அருள் பாலிக்க ஒரு கடவுளும், நாத்திக அறிவை அருள் பாலிக்கப் பிறிதோர் கடவுளு மாக இருவர் உள்ளனரா?சரசுவதியை வணங்கியே கல்வி, அறிவு பெறலாம் என்றால் பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும், ஆசிரியர் களும், பாடத் திட்டங்களும், பாடப் புத்தகங்களும், உதவிக் கல்வி அலுவலர்களும், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், கல்வி இயக்குநரும், கல்வி அமைச்சரும், தேர்வு முறைகளும், கல்வி தொடர்பான இன்ன பிற செலவினங்களும் தேவை இல்லைதானே?

பெற்ற தந்தை பிரம்ம னாலேயே பெண்டாளப்பட்ட (மனைவியாக ஏற்று அனுபவிக் கப்பட்ட) சரசுவதியா நமக்குக் கல்விக் கடவுள்? அந்தக் கடவுளும், கல்வியும் ஒழுக்கத்தைப் போதிக்குமா?

சரசுவதி கல்விக் கடவுளா? அல்லது கலவிக் கடவுளா? சகலகலாவல்லி சரசுவதி என்றால், அவள் ரஷிய, சீன, அமெரிக்க, சப்பான், இங்கிலாந்துக் கல்வி முறைகளையும், கலைத் தன்மை களையும் முற்றும் அறிந்தவளா? புரிந்தவளா? உணர்ந்தவளா? நவராத்திரி தமிழர் விழா என்பதற்கு ஆதாரமான இலக்கிய - இலக்கணச் சான்று ஏதேனும் உண்டா? பழந்தமிழர் சங்க நூல்களிலாவது, தமிழர்மறை என்று சொல்லப்படுகின்ற திருக்குறளிலாவது நவராத்திரி விழாவுக்கு ஆதாரம் உள்ளதா?

நவராத்திரி, பண்டிகை, ஆயுதம், பூஜை, விஜயம், தசமி முதலிய அனைத் துச் சொற்களும் வடமொழிச் சொற்களாக இருக்க இவை எப்படித் தமிழுக்கு, தமிழர்க்கு, தமிழ்நாட்டிற்கு ஏற்ற விழா வாக அமைய முடியும்?

தமிழ் ஓவியா said...

நவராத்திரி சைவ சமயப் பண்டி கையா? அன்றி வைணவ சமயப் பண்டி கையா? இரண்டும் சார்ந்த பொதுவான இந்து மதப் பண்டிகை எனில், அது ஏன் வைணவ ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படவில்லை?

ஆயுத பூஜை கொண்டாடும் இந்து மதப் பக்தத் தமிழா! நீ இன்றுவரை கண்டுபிடித்து ஊருக்கும், உலகிற்கும் வழங்கிய ஆயுதம்தான் எது?

தொலைக்காட்சி, தொலைபேசி, தொலைவரி (தந்தி), தொடர்வண்டி, பேருந்து, மின்சாரம் போன்ற சமுதாய மனநல மேம்பாட்டு வாழ்வுக்குப் பயன் படும் அனைத்துக் கருவிகளையும் ஆயுத பூஜை கொண்டாடாத அயல்நாட்டுக் காரர்களே கண்டுபிடித்திருக்க, ஆயுத பூஜை கொண்டாடும் இந்து மதப் பக்தத் தமிழா! நீ இன்றுவரைக் கண்டுபிடித்த ஆயுதம் கருவி என்பது விபூதியும், நாமக் கட்டியும், துளசியும், தர்ப்பைப் புல்லும் தானே!

ஆத்திக பக்தர்களே! விபூதியும், நாமக்கட்டியும், துளசியும் அரிய மருந்துப் பொருள்களான கருவிகள் என வாதிட லாம் என்று தயவு செய்து கருதாதீர்கள். காரணம் அவற்றை வெல்லும் அரிய - எளிய மருந்துப் பொருள்களை நாத்திகத் தின் ஒரு கூறான அறிவியல் கண்டு பிடித்து வெற்றியும் பெற்றுள்ளது என்பதை மறவாது நினைவிற் கொள்ளுங்கள்!

தலையிலே உள்ள நீரை உறிஞ்சுவதற்காக நெற்றியிலே திருநீற்று விபூதிப் பட்டையை அறிவியல் காரண மாக (சமய மதக் காரணம் அன்றாடம்) பூசுகிறோம் என்று கதை விடுகிற ஆத்திக பக்தனே! மரக் கல்லாப் பெட்டிக்கும், மரப் பீரோவுக்கும், மரநிலைக் கதவுப் படிக்கும் திருநீற்று விபூதிப் பட்டை போடுகிறாயே, என்ன காரணம்? அவற்றிற்கு நீர் பிடித்திருக்கிறதா? ஏன் இந்த ஏமாற் றுத் தில்லுமுல்லு? நாத்திகர்களாகிய எங்களை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு, ஆத்திக பக்த தமிழனே, உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே!

காசு என்னும் லட்சுமி இருந்தால் அதைக் கொண்டும், கொடுத்தும் கல்வி என்னும் சரசுவதியை விலை கொடுத்து வாங்கிவிடலாம் - அடக்கி விடலாம் - மடக்கி விடலாம் என்று பக்தப் பிரமுகர்களே பேசிக் கொள்வது எங்கள் காதுகளில் விழுந்த வண்ணம் உள்ளதே!

நடைமுறையில் இது உண்மை யாகவும்தானே இருக்கிறது? எத்தனை பணக்காரப் பயல்கள் லஞ்சக் காசு கொடுத்து, கல்விப் பட்டத்தைச் சுலப மாகப் பெற்று விடுகிறார்கள். இதுதான் ஒழுக்கமா? நேர்மையா? நீதியா?

கல்வித் துறையின், அறிவு என்னும் படிப்புத் துறையின் அவசியக் கூறு களாக விளங்குகிற அச்சு இயந்திரம், தாள், அட்டை, மை, கணினி, தட்டெழுத்து இயந்திரம், ஆப்செட், லித்தோ, அச்சு எழுத்து முதலியவற்றை ஆயுத பூசை கொண்டாடாத மேலை நாட்டவன்தானே கண்டுபிடித்துள் ளான்.

நீ கண்டுபிடித்த ஆயுதத்தை - கருவியை (அதாவது விபூதியையும், நாமக் கட்டியையும், துளசியையும், தர்ப்பைப் புல்லையும்) அயல்நாட்டார், பிற நாட்டார் பயன்படுத்தாது ஏன்? அவர்கட்கு நாம் கண்டுபிடித்தது பயன்படாதது ஏன்?

அணுக்குண்டையும், அய்ட்ரஜன் குண்டையும், ஆகாய விமானத்தையும் கண்டுபிடித்தவன் கொண்டாடாத ஆயுத பூஜை, பிள்ளைப் பேற்றைக் கருதி அரச மரத்தையும், அத்தி மரத்தையும், ஆல மரத்தையும் சுற்றி வருபவனுக்கு - சுற்றி வருபவர்களுக்கு ஒரு கேடா?

ஆயுதங்களைக் கண்டுபிடிப்பவன் மேல் நாட்டான் எனினும், அவன் கண்டுபிடித்த ஆயுதங்களுக்கு எண் ணெய் இட்டு, முழுக்காட்டிப் பொட் டிட்டு, பூவிட்டு, குங்குமம் வைத்துக் கும்பிட்டு மகிழ்வது மட்டும் நீயா?

தமிழா, நீ மடமைத்தனத்தில் நினைத்து வீழ்ந்தது போதும்! உன் னைக் கொன்று ஒழித்ததே ஆரியரின் பொல்லாத சூதும், வாதும்! தோள் தட்டி, கையுயர்த்தி அறிவு வீச்சுடன் கிளம்பு! இனிப் பெரியாரியமே நமை உயர்த்தும் என விளம்பு!
20-10-2012

தமிழ் ஓவியா said...


முதுமையும் ஏற்க இயலாத முடிவுகளும்!



இன்றைய நாளேட்டில் ஒரு வேதனை தரும் செய்தி. நெல்லையைச் சேர்ந்த 80 வயது நிறைந்த பிரபல டாக்டர் ஒருவர் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்!

நெல்லை சந்திப்புப் பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்தியவர் அந்த டாக்டர் (நாம் பெயர் குறிப்பிட விரும்பவில்லை)

இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனராம்! அவர்களில் ஒருவர் முடக்கியல் டாக்டராகவும், மற்ற இரு பிள்ளைகள் தொழிலதிபர்களாகவும் உள்ளனராம்!

நெல்லைப்பேட்டைப் பகுதியில் அமைந்த ஒரு நகரில் (பெயர் கோடீசுவரன் நகராம்) தனியே வசித்து வந்த அவர் இப்படி ஒரு முடிவை அவரே தேடிக் கொண்டாராம்!

அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் வயது முதிர்ந்த நிலையில் என்னைக் கவனிக்க யாரும் இல்லை. தற்போது பார்வை குறைந்ததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாராம்!

என்னே கொடுமை!

வறுமை, கடன் தொல்லை, காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி என்பது போன்ற காரணங்களால் நிகழும் தற்கொலைகளைக்கூட பகுத்தறிவாளர் களால் ஏற்க முடிவதில்லை. இருட்டுக்குப் பின் வெளிச்சம் உண்டு - இரவுக்குப் பின் வெள்ளி முளைத்து விடியல் வருவது உறுதி. இரவே இருபத்து நான்கு மணி நேரமும் நீடிக்காது என்பது தானே இயற்கை நியதி? புரிந்து கொள்ள பலர் மறந்து விடுகிறார்களே!

ஆனால் வளமை - வசதி - வாய்ந்த - குறையில்லாத போதும் தனிமையும் உதவி செய்ய எவரும் முன் வரவில்லையே என்ற ஆதங்கமும் அந்த டாக்டரை தற்கொலை முடிவுக்குத் துரத்தியது எவ்வளவு வேதனையானதொரு செய்தி! அது மட்டுமா? அவர் பிள்ளைகள் அவ்வளவு பெரும் நிலையில் உள்ளார்கள் என்றால் அதற்கு இந்த தந்தையின் கடும் உழைப்பும், உதவியும் அல்லவா?

முதுமை எல்லோருக்கும் வருவது என்பது காலத்தின் கட்டாயம்; இயற்கை யின் நியதி; இதைக் கண்டு இப்படி ஒரு முடிவுக்கு வந்து தமது இன்னுயிரைப் போக்கிக் கொள்ளும் முடிவை எடுத்தது புத்திசாலித்தனமா?

நல்ல நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு, வாழத் திட்டமிட்டி ருக்கலாமே!

அல்லது வயதானவர்களுக்கென்று பல நகரங்களில் அமைந்துள்ள முதியோர் இல்லங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து, அதில் பணம் கட்டியாவது சேர்ந்து வாழ்ந்திருக்கலாமே! இந்த அவசரப்பட்ட முடிவுக்கு அவர் வந்தது - ஒரு கெட்ட வாய்ப்பு என்றே நினைத்து வருந்த வேண்டும்! ஆண் பிள்ளைகள் மூவர் - சம்பாதிப்பவர்கள் தங்களை ஆளாக்கியவரை, அம்போ என்று விட்டு விட்டார்களே என்ற பழி அல்லவா அவர்கள்மீது வீழ்ந்துவிட்டது!

ஒரு தரப்பு வாக்குமூலத்தை வைத்தே தீர்ப்பு எழுத நாம் விரும்பவில்லை என்றா லும் பொதுவாக நாட்டில் இன்றுள்ள நிலை என்னவென்றால், நம் நாட்டில் இப்போதைய தேவை கைவிடப்பட்ட அனாதைக் குழந்தைகள் இல்லம் அல்ல.

மாறாக, கைவிடப்பட்ட முதியோர் பாதுகாப்பு பராமரிப்பு இல்லங்களே யாகும்!

பெற்றோர்களைத் தங்களிடம் வைத் துப் பராமரிக்கும்போது அந்த முதியவர் களும் சற்று அந்தக் குடும்பத்திற்கு உதவிகரமான நீக்குப் போக்குடன் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, அங்கு நான்தான் வயதில் மூத்த குடும்பத்தின் தலைவன் என்ற பழைய ஆதிக்க நினைப்பிலேயே அதிகாரம் செலுத்தவோ, ஆணைகள் பிறப்பிப் பதோ இல்லாமல், அவர்களுக்கு இன்றுள்ள நிலையில் (ஏனெனில் மகன் மருமகள் ஆகிய இருவரும் வேலைக் குப் போகின்றவர்கள்; அவர்களுக்கும் குழந்தைகளை ஆளாக்கும் கடமை இப்படி பல உண்டு என்பதை மனதில் நிறுத்தி) அன்போடு நடந்து கொண்டு அரவணைப்பு அணுகுமுறை தேவை.

பிள்ளைகளும், தங்களுக்கும் முதுமை வரும்; இதே கதி நமக்கு வருங்காலத்தில் நமது பிள்ளைகளால் ஏற்பட்டால் நம் நிலையும் தற்கொலை யில் தான் முடிய வேண்டுமோ என்று ஒரு கண நேரம் சிந்தித்தால், முதியவர் களின் தவறுகளைப் பெரிதாக்காமல், தக்கதோர் அன்பு, பாசம், கடமை உணர்வினால் கட்டுண்டு, பல முதி யோர்களை காப்பகத்தில் புகாமலோ, தற்கொலை முடிவுக்கு துரத்துதலோ இன்றி வாழ வைக்க முடியும்! யோசிப் பார்களா?

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

விளையாட்டு மைதானமா கோயிலா? எது முக்கியம்?


பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலின், ஒரு பகுதியை, கோவிலுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரின் மய்ய பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 80 ஆண்டு பழைமையான இப்பள்ளியில், 3,000 மாணவர்கள் படிக்கின் றனர். பள்ளிக்கு சொந்தமாக, 4 ஏக்கர் விளையாட்டுத் திடல் உள்ளது.

இந்த திடலில், ஈரோடு மாவட்ட அளவில் மற்றும் பெருந்துறை வட்டார விளையாட்டு போட்டி நடக்கும்; காலை, மாலையில் ஏராளமானோர், நடைப்பயிற்சி மேற்கொள் கின்றனர்.

மைதானத்தில், 30 சென்ட் இடத்தை, அருகில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. கோவிலைச் சேர்ந்த சிலர், இம்மாதம் 15ஆம் தேதி, விளையாட்டு மைதானத்தை அளவீடு செய்து, கல் நட்டனர். கட்டட பணிக்காக மணல் கொண்டு வந்து கொட்டியதால், மைதானம் பறி போவதை அறிந்த மாணவர்கள், சென்னை - கொச்சி தேசிய நெடுஞ்சாலை, குன்னத்தூர் நான்கு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பெருந்துறை காவல்துறை அதிகாரி இதுபற்றி அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளோம்; உங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும், என கூறியதை தொடர்ந்து, வகுப்புக்கு மாணவர்கள் திரும்பினர். மறியலால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

இந்தச் செய்தி தெரிவிப்பது என்ன? பள்ளி மாணவர் களுக்கு விளையாட்டு மைதானம் முக்கியமல்ல; கோயில்தான் முக்கியம் என்று கருதுகின்ற அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்பொழுதெல்லாம் குறிப்பாக சென்னை பெரு நகரம் போன்ற பகுதிகளில் விளையாட்டு மைதானங்கள் என்பது அறவே கிடையாது.

தமிழ் ஓவியா said...

சில பள்ளிகளில் மாலை விளையாட்டு என்பது கிடையாது. காலையில் ஒரு வகுப்பு - விளையாட்டுக்கென்று ஒதுக்குவதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. விளையாட்டை வெறும் விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. மாலை நேரம்தான் விளையாட்டுக்கு உகந்தது.

மாணவர்களுக்குக் கல்வி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் விளையாட்டு என்பதாகும். விளையாட்டு என்பது தனி மனித உணர்வை வெளியேற்றி கூட்டுணர்வை (Team Spirit) உண்டாக்கக் கூடியதாகும்.மனதிற்குள் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கும் பண்பைக் கொண்டது; உடல் திறனையும் வளர்க்கக் கூடியது.

மாணவர் பருவத்தில் அளிக்கப்படும் உடல் ரீதியான பயிற்சி என்பது எதிர்காலத்தில் அவர்களின் உடல் நலம் பாதுகாப்புக்கு உத்தரவாதமாகும்.

சமச்சீர் கல்வியில் வெறும் எழுத்துத் தேர்வுக்கு மட்டு மல்ல; விளையாட்டு, கைத்திறன் உள்ளிட்டவைகளுக்கும் மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன.

இவ்வளவ முக்கிய அம்சங்கள் மாணவர்களுக்கு இருக்கும் பொழுது ஒரு விளையாட்டு மைதானத்தை கோயில் கட்ட ஒப்படைப்பது எவ்வளவுப் பெரிய கீழ்க்குணமும், பொறுப்பற்றதும் ஆகும்.

மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சில நாட்களுக்குமுன் நாட்டுக்குத் தேவை கழிவறைகளே தவிர கோயில்கள் அல்ல என்ற அருமையான கருத்தினைத் தெரிவித்தார். அதன் தன்மையை உணர்ந்து கொள்ளாத ஆரோக்கியமற்ற மனப்பான்மையினர் கண்டனம் தெரிவித்தனர்.

கோயில்களுக்கு என்ன நாட்டில் பஞ்சமா? தடுக்கி விழும் இடத்தில் எல்லாம் கோயில்கள் தானே?

முதலில்லா வியாபாரம் ஒன்று உண்டென்றால் அது கோயில் தொழில்தானே. நடைப் பாதையில் ஒரு கல்லை நட்டு வைத்து, அதில் குங்குமத்தை அப்பி, ஒரு மாலையைப் போட்டு, பக்கத்தில் ஓர் உண்டியல் வைத்தால் போதுமே! பண மழை கொட்டுமே! இரவில் அதை உடைத்து சமூக விரோதிகள் சர்வ தீர்த்த சல்லாபத்தில் மூழ்கி விடுகிறார்கள்.

கடவுள்தான் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பாரே - (பக்தர்கள் அப்படித்தானே சொல்லுகிறார்கள்) அப்படிபட்டவருக்குத் தனியாக வீடு - அதாவது கோயில் எதற்கு?.

கடவுளுக்குக் கோயில் கட்டுவது கடவுளை அமவதிப்ப தாகும். கடவுள் எங்கும் நிறைந்தவர் அல்ல. குறிப்பிட்ட இடத்தில் குடி இருப்பவர் என்று ஆக்குவது கடவுளுக்கு இழைக்கப்படும் அவமானமும் சிறுமையும் அல்லவா!

சட்டம் இருக்கிறது, விதிமுறைகள் இருக்கின்றன. அனுமதியின்றி பொது இடத்தில் கோயில் கட்டக் கூடாது என்று; உச்சநீதிமன்றமேகூட தெளிவாக ஆணையிட் டுள்ளது.

இந்தியாவில் பொது இடங்களை ஆக்ரமித்து கட்டப்பட்ட கோயில்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு; அவை அகற்றப்பட வேண்டும்; அந்த விவரத்தை நேரில் வந்து தமிழக அரசின் தலைமை செயலாளர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் எம்.கே. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. சட்டத்தை மீறி கோயில் கட்டப்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்தநிலையில் பெருந்துறையில் பள்ளி மைதானத்தை கோயில் கட்ட கருத்துரு கொடுத்த அதிகாரிகள்மீது விசா ரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டால், மற்ற மற்ற இடங்களிலும் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுக்கப்படும்.20-10-2012

தமிழ் ஓவியா said...


பாரத நாட்டின் பெருமை பாரீர்! பாரீர்!!


- ஊசி மிளகாய் -


ஊழல், லஞ்சம் இவைகளை ஒழிப்பதற் காகவே நாங்கள் கூட்டணியாக வந்துள் ளோம். எங்களுக்கு மண் ஆசை, பொன் ஆசை, பெண்ணாசை ஆகிய மூவகை ஆசை களும் கிடையாது. (எதிர்கால பதவி ஆசை இதில் சேராது). இந்தியாவின் பரிசுத்த யோவன்கள் நாங்களே என்ற தம்பட்டம் அடித்துக் கிளம்பி, இங்கிலிஷ் டி.வி. சேனல் கள், இங்கிலிஷ் நாளேடுகளில் திடீரென்று அபார விளம்பரம் வெளிச்சம் பெற்றுக் கொண்டே ஹீரோக்கள், ஹீரோயின்கள் சாயம் இவ்வளவு சீக்கிரத்தில் வெளுத்துப் போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை!

பிறரைக் குற்றம் சுமத்தி ஒரு விரலை நீட்டுமுன் உன்பக்கம் மீதி விரல்கள் உள்ளன என்பதை ஏனோ மறந்துவிட்டீர்கள் என்ற கேள்வி அகிலத்தில் மிக நீண்ட காலத்திற்கு முன்பே எழுந்த அதிரடிக் கேள்வியாகும்!

ஹாசாரே என்ற மும்பையைச் சேர்ந்த நவீன காந்திக் குல்லாய் உத்தமர் (!) ஏனோ இப்போது தனிமைப்படுத்தப் பட்டு அட்ரஸ் தேடவேண்டியவராகிவிட்டார்.

இன்னொருவருமான வரித்துறை மாஜி அதிகாரியின் வால் (அதாவது கெஜ்ரிவால்) தனியே ஊழல் ஒழிப்பு பிராஞ்ச் என்று கூறாமல் தனிக்கட்சி - குழு துவக்கி விளம்பர வெளிச்சத்தில் அன்றாடம் குளித்து மகிழ்கிறார்!

காங்கிரஸ், பா.ஜ.க. என்று எல்லோர் மீதும் சொன்னவர் ஏன் சரத்பவாரை விட்டார். ஏதாவது மர்மம் உள்ளதோ என்ற கேள்விக் கணைகள் பறக்கத் துவங்கிவிட்டன!

அதற்கு ஏதோ சமாதானம் வந்த நிலை. இவர் அணியில் கூசநந ஆரளமநவநநசள மூன்று போர் வீரர்கள் மீதும் ஊழல் ஊழல் பாணங்கள் மற்றவர்களால் பாய்ச்சப்பட்ட போது, இந்த வால் அவரின் மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்து இந்த மூவரை யும் விசாரிக்கப் பரிந்துரை செய்கிறார்கள்!

உச்சநீதிமன்றம் வரை சென்று தூள் கிளப்பி, ஹீரோவாக வலம் வரும் நபர் பிரசாந்த் பூஷன் (அய்யர்) ஊழலுக்கு எதிராக இந்தியர் இயக்க முப்பெரும் தளபதிகளில் ஒருவர்.

(1) தன் தொண்டு நிறுவனத்திற்காக, இமாச்சல பிரதேசத்தில் பெரிய அளவில் நிலம் வாங்கியதாக புகார். வெளி மாநிலத் தவர் எவரும் அங்கே நிலம் வாங்க முடியாது, (காஷ்மீரைப் போலவே) என்பது சட்டம். இவர் டில்லிவாசி எப்படி வாங்கினார் என்பதே வெடித்துக் கிளம்பியுள்ள குற்றச்சாற்று.

(2) அதுபோலவே அஞ்சலிதமான்யா என்ற அம்மையார் ஹசாரே, கெஜ்ரிவாலுடன் சேர்ந்து உண்ணாவிரதம், பேரணி என்று முழங்கி வரும் பெண்மணி ஆவார்.

மும்பையைச் சேர்ந்த இவர் விவசாயி களிடம் ஏழு ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு - பாமர பாஷையில் சொல்வதா னால் அடிமாட்டு விலைக்கு - வாங்கி, அதைக் குடியிருப்பு வளாகம் கட்ட பெரும் தொகைக்கு விற்றுவிட்டதாக புகார் கிளம்பியுள்ளது.

மூன்றாவது மயக்க காந்தி - காந்தி பெயரை வாலாக ஒட்டிக்கொண்டு வால் அணியில் உள்ள தளகர்த்தர் இவர்!

இவருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு களைகட்டும் நிறுவனங்களுக்கும் தொடர்பு உள்ளதாகவும் அதில் முறைகேடுகள் நடந் துள்ளதாகவும் குற்றஞ் சாற்றப்பட்டுள்ளது.

பலே பலே, இனி ஓய்வுபெற்ற நீதிபதி களுக்கு ஓய்வே இருக்காது என்று கூறலாம்!
இந்த அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் கொஞ்சம் நாளில் ஹாசரே காணாமற் போனது போல் போய் விடுவார் என்று அருள் வாக்கு கூறி சபித்துள்ளார் சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே!

நம் நாட்டை ஞானபூமி புண்ணிய பூமி - பாரத நாடு பழம் பெரும் நாடு, நீர் இதன் புதல்வர் என்ற நினைவகற்றாதீர் என்று பாரத பெருமை பாடியது போய், எங்கும் ஊழல், எதிலும் ஊழல், ஊழலோ ஊழல் என்று வெளிச்சம் போட்டுக் கூவிக் கூவி, இப்படியா இந்தியாவின் மானம், மரியாதை, கவுரவம் எல்லாம் இப்படியா பறப்பது? இவர்களை தேசிய கவுரவ ஒழிப்புத் தடைச் சட்டத்தின்கீழ் கொண்டு வந்து 3 ஆண்டுகள் தண்டனை தரவேண்டும் என்கிறார் ஒரு 24 கேரட் தேசபக்தர். சரிதானா?20-10-2012

தமிழ் ஓவியா said...


நஞ்சு கக்கும் பார்ப்பன ஏட்டுக்கு முனைவர் மறைமலை இலக்குவன் பதிலடி!



காந்தி அடிகளாரும் கோயில்களில் வழிபாடும் காந்தி அடிகளார் வடமொழியில் வழிபடுவதே ஏற்றது எனக் கூறியதாகவும் அவர் கொள்கையைப் போற்ற விரும்புவோர் தமிழில் வழிபாடு வேண்டும் இயக்கத்தில் இடம்பெறக்கூடாது எனவும் அறிவுறுத்தி ஓர் எழுத்தாளர் இன்று (20.10.12) ஒரு நாளிதழில் எழுதியுள்ளார். (வேறு எந்த ஏடு) வைத்தியநாதய்யரின் தினமணிதான்)

அவர் எழுதியுள்ளதைப் படித்தால் காந்தி அடிகளார் வலியுறுத்திய அனைத்துக் கொள்கைக ளையும் எல்லோரும் பின்பற்றிவருவதைப் போல வும் கோயிலில் வழிபடும்போது வடமொழியே ஏற்றது என்னும் கொள்கையை மட்டும் நாம் புறக்கணிப் பதைப் போலவும் தமிழில் வழிபாடு வேண்டும் என்று கேட்பது காந்தி அடிகளாரின் கொள்கைக்கு முரண்படுவதாக அமையும் எனவும் பொருள்கொள்ள வேண்டியுள்ளது.

மொழிக்கொள்கை என எடுத்துக்கொண்டால் காந்தி அடிகளார் மிகவும் வலியுறுத்தியது தாய் மொழிவழிக்கல்வி ஆகும். ஆட்சியையும் அதிகாரத் தையும் அறவே விரும்பாத காந்தி அடிகளார்நான் ஒரு சர்வாதிகாரியானால்... எனக் கூறத் துணிந்தது எதனால்?

நான் ஒரு சர்வாதிகாரியானால் உடனடியாகத் தாய்மொழிக் கல்வியை நடைமுறைப் படுத்துவேன். எதிர்ப்புத் தெரிவிப்போரைச் சிறையில் தள்ளு வேன்என மிகவும் வலியுறுத்திக் கூறிய அந்தக் கொள்கைக்காக மேற்படி எழுத்தாளரோ அவரை உச்சிக்கு மேல் வைத்துக் கொண்டாடும் நாளிதழோ என்றைக்காவது குரல் கொடுத்ததுண்டா?

காந்தி அடிகளார் கூறிய அனைத்துமே நடை முறைக்குப் பொருந்துவனவா?அங்ஙனம் பொருந்தா தவற்றை அவர் இன்றிருந்தால் மாற்றிக் கொள் வாரல்லவா?
எடுத்துக்காட்டுக்கு அவர் இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்துச்தானி மொழியே விளங்க வேண்டும் என்றார்.

இந்திமொழியும் உருது மொழியும் கலந்த கலவையாகிய இந்துச்தானி மொழி இன்று காணாமல் போய்விட்டதே!இதற்காக அந்த எழுத் தாளர் கவலைப்பட்டதுண்டா?

இந்திமொழியில் எஞ்சிநிற்கும் உருதுச்சொற் களையும் முற்றாக ஒழித்துக்கட்டிவிட்டு அவற்றிற்கு இணையான சமற்கிருதச் சொற்களை அறிமுகப் படுத்துவதே மத்திய அரசின் கொள்கையாகக் கடந்த 1947 முதல் கடந்த அறுபத்தைந்து ஆண்டு களாக நடைமுறையில் உள் ளது.மொழிவழிச் சமய ஒருமைப்பாடு நிலை நாட்ட விரும்பி இந்தியும் உருதுவும் கலந்த கலவையை அடி களார் போற்றினாரே என்ப தற்காகவாவது உருது மொழிச் சொற்களை நம் மத்திய அரசு பொறுத்துக் கொண்டிருக் கலாமே! அவ்வாறின்றித் தூயமொழி பேணும் நோக் கில் அவற்றை அகற்றினார் களே! அப்போது இந்த எழுத்தாளர் கூக்குரல் எழுப்பி யிருக்கவேண்டுமே! ஏன் அமைதியாக இருந்தார்?

எடுத்துக்காட்டுக்கு மசோதா என்னும் சொல் ஆட்சிச்சொற்கோவையில் உள்ளது.அனைவருக்கும் அறிமுகமான இந்தச் சொல் உருது என்பதால் இதனை அகற்றிவிட்டு பிராரூம் என்னும் வட மொழிச் சொல் புகுத்தப்பட்டுள்ளது. இது போன்று எண்ணற்ற சொற்களைக் கூறலாம்.புகுத்தப்படுவது வடமொழி என்பதால் இந்த எழுத்தாளர் காந்திய டிகள் கொள் கையைப் பற்றிக் கவலைப்படவில்லை என்பதுதானே உண்மை?

கோயில் கொடியவர்களின் கூடாரமாகத் திகழ்கிறது எனக் காந்திஅடிகள் கவலைப்பட்டாரே அந்தக் கவலையைப் போக்க வழிகாணவேண்டும் என இந்த எழுத்தாளர் என்றைக்காவது முனைந் தாரா?

ஆலயம் அனைவருக்கும் பொதுவானதாக விளங்க வேண்டும் எனக் காந்திஅடிகள் போராடி னாரே! இன்னும் அங்ஙனம் பொதுவாக அமைய வில்லை. அதற்காக இந்த எழுத்தாளர் பாடுபட முன்வருவாரா?

நீச மொழிகளால் கோவில் தீட்டுப்படக்கூடாது எனக் கருதிக் கூக்குரல் எழும் இந்தப் பிற்போக்கு எழுத்தாளர்தான் 2011இல் ஆட்சிமாற்றம் ஏற் பட்டதும் உடனடியாகத் திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பு தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கப்பட்ட தனைத் திரும்பப் பெறவேண்டும் என இதே நாளிதழில் அறிக்கை வெளியிட்டு அங்ஙனமே அரசு ஆணை வெளிவரவும் காரணமாக இருந்தார். இவர் யார்? இவரது பொதுத்தன்மை எத்தகையது என்பதற்கு இந்தச் சான்று போதுமானது.

தமிழன்பர்கள் வாளாவிருப்பதும் தமிழ்ப் பகைவர்கள் சுறுசுறுப்பாகச் செயற்படுவதும்தான் தமிழ்நாட்டில் வாடிக்கை என்றால் இனமும் மொழியும் அழிய நீண்டநாள்கள் ஆகாது என்ற எச்சரிக்கையைத் தெரிவிக்கவே இந்தக் கட்டுரை.

-பேரா.முனைவர் மறைமலை இலக்குவன்.

தமிழ் ஓவியா said...


அக்டோபர் 22 ஆர்ப்பாட்டம், அலைகடல்போல் நடக்கட்டும்!

அருமைத் தோழர்களே, தோழர்களே! நாம் நான்காம் வருணத்தவர் களாம் - அதாவது - சூத்திரர்களாம் - அதாவது பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்களாம். நாம் கட்டிய கோயில் கருவறைக்குள் நாமாகிய தமிழர்கள் சென்றால் சாமி தீட்டாகிவிடுமாம்.

இந்த 2012ஆம் ஆண்டிலும் இந்த நிலை - வெட்கக் கேடு! வெட்கக் கேடு!! இந்த இழிவை ஒழிக்கும் போர்க் களத்தில் நின்றபோது தான் நமது அருமைத் தலைவர் - அறிவுலக ஆசான் இறுதி மூச்சைத் துறந்தார். 39 ஆண்டுகள் ஓடிவிட்டன. சட்டம் இருந்தும் பார்ப்பனர்களின் சதியால் உச்சநீதி மன்றத்தில் முடக்கம்! முடக்கம்!!

இனியும் அனுமதிக்கலாமா? இழிவை ஒழிக்கும் போரினில் ஒரு கை பார்ப்போம், இதில் ஒரு கட்டம் நாளை மறுநாள் (22.10.2012) தமிழ்நாடெங்கும் நடக்கும் - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான எழுச்சி ஆர்ப்பாட்டம்! அலைகடலென ஆர்ப்பரித்து நடக்கட்டும் - நடக்கட்டும் - இன இழிவு ஒழிப்பு அறப்போர்!20-10-2012

தமிழ் ஓவியா said...


மதுரை மடத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட நித்யானந்தா!


மதுரை, அக்.20-மதுரை ஆதீன விவகாரத்தில் நேற்றிரவு எதிர்பாராத திடீர் திருப்பம் ஏற்பட்டது. ஆதீன பதவியில் நித்யானந்தா அமர அனும திக்க முடியாது என்று உயர்நீதி மன்றத்தில் அரசு அதிரடி வாதம் செய்த சூழ்நிலையில், நேற்றிரவு, நித்யானந்தாவை இளைய மடாதிபதி பொறுப்பில் இருந்து மதுரை அதீனம் அருணகிரி நாதர் நீக்கி விட்டார். மதுரை ஆதீன மடத்தின் 293ஆவது இளைய ஆதீனமாக நித்யானந்தாவை கடந்த ஏப்ரல் மாதம் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நியமித்தார். நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச சிடி வெளியான சர்ச்சையில் சிக்கி, கர்நாடக மாநில சிறையில் இருந்த நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமிக்க கூடாது என மடத்தின் பக்தர்கள் சமூக அமைப்புகள், மடாதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக பல்வேறு போராட்டம், உண்ணாவிரதம் நடத் தப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. இதற்கிடையே தமிழக அரசு மிகவும் தாமதமாக ஆதீன சர்ச்சையில் தலையிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற தொடரப் பட்ட வழக்கில், தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தது சட்ட விரோதம், அவர் எந்த மடத்திற்கும் தலைமை ஏற்க அருகதை இல்லாதவர் என குறிப் பிட்டது.

மேலும், ஆதீனத்தின் சொத்துக்கள் அறநிலையத் துறையின் அனுமதி இல்லாமல் விற்கப்பட்டுள்ளன உட் பட விதி மீறல்கள் ஏராளமாக நடந் துள்ளன. எனவே மதுரை ஆதீன மடத்தை அரசு ஏற்க வேண்டும் என இந்து அறநிலையத் துறை ஆணையர் தனபால் மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை வரும் 29ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நேற்றிரவு பரபரப்பான அறிக்கை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:

சைவ சமயகுருமார்கள் நால்வர் களில் முதல்வரும் தமிழ் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவரும் சிவபெரு மான் - பார்வதி தேவியாரின் ஈடில்லா இறைதூதருமாகிய சீர்காழியில் அவதரித்த அருள்மிகு திருஞான சம்பந்த பெருமான் 6ஆம் நூற்றாண் டில் தோற்றுவித்த மதுரை ஆதீனத் தின் 293ஆவது வாரிசாக பெங்களூரு பிடதி ஆசிரம நிறுவனர் நித்யானந்தா கடந்த ஏப்ரல் 27இல் என்னால் நியமனம் செய்யப்பட்டார். அவரை இன்று (19.10.2012) வாரிசு பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டு அறிவிக் கிறேன்.

1500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆதீனத்தின் நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. யாருடைய தூண்டுதலோ, வற்புறுத்தலோ இன்றி நான் இந்த உத்தரவை பிறப்பித்துள் ளேன். ஆதீனத்தில் நடைபெறும் பூஜைகளிலும், விழாக்களிலும் பக்தர்கள் பங்கேற்று அருளாசி பெறும்படி கேட்டுக்கொள்கிறேன். ஆதீனத்திற்கு பக்தர்கள் பக்கபலமாக இருந்திட வேண்டும். இவ்வாறு அருணகிரிநாதர் கூறியுள்ளார். ஆதீனம் அருணகிரிநாதர் சார்பில் மதுரை காவல்துறை ஆணையர் சஞ்சய் மாத்தூரிடம் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

ஆதீன வாரிசு பொறுப்பில் இருந்து நித்யானந்தாவை எனது அதிகாரத்தை பயன்படுத்தி நீக்கிவிட்டேன். தற் போது ஆதீன மடத்தில் நித்தியானந் தாவின் சீடர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். அவர்களால் என்னு டைய உயிருக்கும் உடைமைகளுக்கும் ஆபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. எனவே அவர்களை வெளியேற்றி எனது உயிருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள் ளார்.

மேலும் ஆதீனம் அருணகிரிநாதர் கூறுகையில். நித்யானந்தாவை நான் நியமித்தது தவறு என்பதை இப்போது உணருகிறேன். அவர் ஆதீன மடத் திற்கு களங்கத்தை உண்டாக்கி விட்டார்.

என்னால் நியமிக்கப்பட்ட அவரை நீக்க முழு அதிகாரம் எனக்கு உண்டு. அவர் நீக்கப்பட்ட தகவல் அவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய குணங்களை நான் அறிந்து கொண்டேன்.

எதற்காக நீக்கியிருக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரிந்ததது தான், அவருடைய சீடர்கள் அடியாட் கள் போல் இருப்பதால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும், அவரும் தொலைபேசியில் என்னை மிரட் டுகிறார், எனவே என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சம் ஏற்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். அவரை பற்றிய ரகசிய விவரத்தை வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த புகார் மனு நேற்றிரவு விளக்குத்தூண் காவல் நிலையத்திற்கு வழக்குரைஞர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆதீன மடத் தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. மடத்தில் இருந்து 4 பெண்கள் உள்பட 13 சீடர்களை காவல்துறை வெளியேற்றியது.
20-10-201

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திர திட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் ஜி.கே.வாசன் பேட்டி


திருச்சி, அக்.20- சேது சமுத்திர திட்டம் தென் மாவட்ட மக் களின் கனவு திட்டம் ஆகும். இது தொடர் பான வழக்கில் உச்சநீதி மன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

இன்று திருச்சியில் அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் மின் பற் றாக்குறை முதன்மை யான பிரச்னையாக உள்ளது. இதனை அனைத்து தரப்பினரும் 100 சதவீதம் உணர்ந் துள்ளனர். எனவே கூடங் குளம் எதிர்ப்பாளர்கள் இதனை புரிந்து கொண்டு போராட்டத்தை கை விட வேண்டும்.

தமிழ்நாட்டில் தடை யில்லா மின்சாரம் கிடைக்க கூடங்குளம் அணு உலை எந்த அளவு முக்கியமானது என மத்திய அரசு அப்பகுதி மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் விளக்கம் அளித்து வருகிறது. எனவே பிற கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.சேது சமுத்திர திட்டம் தென் மாவட்ட மக்களின் கனவு திட்டம் ஆகும். நாட்டின் பொரு ளாதாரத்தை உயர்த்தும் திட்டம். இத்திட்டத்தை தடுக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம் பிக்கை உள்ளது. இவ் வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

தமிழ் ஓவியா said...

தேன்கூட்டில் கல்லெறிய வேண்டாம்!



ஆளும் அ.இ.அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேடான Dr.நமது எம்.ஜி.ஆர். திராவிடர் கழகத் தலைவர் அவர்களை மய்யப்படுத்தி இரண்டு கார்ட்டூன்களை வெளியிட்டுள்ளது.

ஒன்று

செல்லும் ஆண்டு பல்வேறு அதிர்வு களையும், வேதனைகளையும் மக்களுக்குத் தந்த சோதனை மிக்க ஆண்டு என்று வீரமணி கூறிவிட்டாராம். அதற்குத்தான் நக்கலும் - முக்கலும்!

இதில் கட்சிகளின் பெயர்களையோ நபர்களின் பெயர்களையோ குறிப்பிடாத நிலையில், இந்த அ.இ.அ.தி.மு.க. பத்திரிகை மட்டும் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்

கொள்வானேன்? எங்களப்பன் ஒன்பதாம் நம்பர் குதிருக்குள் இல்லை என்று உளறுவானேன்?

தலித் என்று சொல்லி ராஜாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோமாம். கோபால புரத்துக்கு ஜால்ரா போடுகிறோமாம்.

ஒன்றை ஆதரிப்பதால், ஜால்ரா என்றால் ஜெயலலிதாவை ஆதரித்தபோது அது ஆனந்த பைரவியாக இருந்ததோ!

திராவிடர் கழகத்தின் ஆதரவும், எதிர்ப்பும் கொள்கை வழிச் சிந்தனையின் அடிப்படையில்தான் என்பது - கொள்கை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நபர்களுக்குத் தெரியாதே!

இரண்டு

கலைஞரும், திராவிடர் கழகத் தலை வரும் பேசிக் கொண்டிருக்கிறார்களாம். 2011 நமக்கும், நம்ம மக்களுக்கும் ரொம்ப வேதனைகளையும், சோதனைகளையும் தந்த வருஷம்தானே என்று திராவிடர் கழகத் தலைவர் சொல்லுவது போலவும், அதற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், ச்சே மானம் போச்சு, மகுடம் போச்சு, அடிச்சு வச்சிருக்கிற சொத்துக் களைத் தவிர அத்தனையும் போச்சு என்று சொல்லுவது போலவும் ஒரு கார்ட்டூன்.

இதே பாணியில் கற்பனையில் யாரை வேண்டுமானாலும் மய்யப்படுத்தி எழுத முடியாதா, என்ன? இப்படியெல்லாம் எழு துவதற்கு முதுகில் கை முளைத்திருக்க வேண்டுமோ?

நீதிமன்றங்களுக்கும் செல்ல நேர்ந் தது. அப்படிச் செல்லும்பொழுது ஏதோ சாதனை படைக்கப் போகிறவர்கள் அணி வகுத்துப் போவது போல நூற்றுக்கணக் கான கார்கள்

அணிவகுத்தையெல்லாம் கேலி செய்து எழுதுவதற்கு எத்தனை நிமிடம் பிடிக்கும்?

கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிவது புத்திசாலித்தனம் அல்லவே!

மூன்றாவது

சித்திரை முதல் நாளை புத்தாண்டாய் கொண்டாடும் தமிழர்களை கருணாநிதி ஆரிய-திராவிடர் பேசி அவமதிக்கிறாரே என்ற தலைப்பில் ஒன்று.

ஆரியர் - திராவிடப் பிரச்சினை என் பது தி.மு.க. தலைவர் கலைஞராகப் பார்த்து இட்டுக் கட்டிய கதையல்ல!

துணிவிருந்தால், தந்தை பெரியாரின் - அறிஞர் அண்ணாவின் கருத்துகளை நேரடியாக எதிர்த்து எழுத முன்வரட்டும்.

ஆரிய மாயை என்னும் ஒரு நூலே எழுதியிருக்கிறாரே அறிஞர் அண்ணா - கேள்விப்பட்டதுதான் உண்டா? முதலில் அதைப் படிக்கட்டும் இந்தப் படிக்காசுப் புலவர். அண்ணா பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு அவர் உருவத்தைக் கொடியிலும் பொறித்துக் கொண்டு, அவர் ஊட்டிய இனவுணர்வு - பகுத்தறிவு உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டு, அண்ணா நாமம் வாழ்க என்று உதட்டளவில் உச்சரிப்பவர்கள் எல்லாம் கொள்கையைப் பற்றிப் பேசலாமா?

தைமுதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் என்பதை அறுதியிட்டவர்கள் தமிழறிஞர்கள் - 500 பேர்களுக்கு மேல்.

அவர்களின் கருத்துக்களைக் குற்றப் படுத்தி மேடை போட்டுப் பேசுங்கள் பார்க் கலாம்! கலைஞரைக் கொச்சைப்படுத்தும் பேரில், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, மறைமலை அடிகள், திரு.வி.க. போன்ற தமிழினத்தின் கண்மணிகளைக் கேவலப்படுத்தி எழுதலாமா?

பிரபவ - தொடங்கி அட்சய என்பதில் முடியும் 60 ஆண்டுகளில் மருந்துக்காவது ஒரே ஒரு ஆண்டு பெயராவது தமிழில் உண்டா? இது ஆரியமயமாக்கப்பட்ட ஏற்பாடு அல்லவா!

கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக் கும், நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும் புணர்ந்து பெற்ற பிள்ளைகளின் பெயர் கள்தான் இந்த 60 ஆண்டுகள் என்பதை ஏற்றுக்கொள்ள அண்ணாவின் பெயரைப் பயன்படுத்தவேண்டுமா? திராவிட என்ற இனப் பெயர் சித்தாந்தம் துணைக்கழைக் கப்பட வேண்டுமா?

ராசிபலன் வெளியிட்டுக் கொண்டு, மண்சோறு தின்றுகொண்டு, பேனா பிடிப்பவர்கள் எல்லாம் முதலில் கொடியிலிருந்தும், கட்சியிலிருந்தும் அண்ணா பெயரை விலக்கிக் கொள்ளட்டும். பிறகு எழுதட்டும்!

தேன்கூட்டில் கல்லெறிய ஆசைப்பட வேண்டாம் - மூடப் பேனாக்கள். 2-1-2012